Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலாவின் மெய்ப்பாதுகாவலர் பாலாவைப் பற்றிப் பேசுகிறார்

Featured Replies

pala

(உரையாடியவர் ஜெரா)

பாலச்சந்திரன். பாலா என்ற பெயருடன் செல்லமாக அறியப்பட்டவன். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கடைசி புதல்வன். ஈழத் தமிழினத்தின் மீது நடத்தப்பட்ட மொத்த அழிவின் சாட்சியாகவும் அவனது கண்களைக் கொடுத்துவிட்டுச் சென்றவன். இன்று அவனின் 19 ஆவது பிறந்த நாளும், சர்வசே சிறுவர் தினமும் ஆகும்.
பாலா என்ற இன்முகம் மாறாத குழந்தை எப்படி வளர்ந்தது? எப்பிடி வாழ்ந்தது? அவனின் மெய்க்காப்பாளருடனான உரையாடல்..

அவர் பாலாவின் மெய்ப்பாதுகாவலர். இப்போதிருக்கும் இடம், அவரின் பெயர் என அனைத்து சுய அடையாளங்களும் மறைத்துக் கொண்ட இனந்தெரியாத நபராகவே தனது அனுபவத்தை பதிவிடுகின்றார். ‘தலைவர்’ வீட்டுக்கு 1987 ஆம் ஆண்டுகளி;ல் மெய்ப்பாதுகாவலுக்காக போகின்றார். மட்டக்களப்பு, மலையகம் பகுதிகளைச் சேர்ந்த அதிக இளைஞர்கள் அப்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து நேரமது. இவரும் மட்டக்களப்புக்காரர். ‘தலைவர்’ அதிகம் நேசித்த ஊர்க்காரர் தான் என்றபடியால் தன்னையும் மெய்ப்பாதுகாப்புப் பணியில் இணைத்துக் கொண்டதாகக் குறிப்பிடுகின்றார். இன்னும் சில காலத்தில் ‘தலைவரின்’; குடும்பத்துக்கான பாதுகாவலராக்கப்படுகின்றார்.

பாலா வீட்டு அனுபவத்த சுருக்கமா சொல்லுங்களன் என்றபோது அமைதியாகிவிட்டார். 
 
ஆரம்பத்தில் தனக்கும் ‘அவர்’; என்றால் பயமும், பீதியும் அதற்கு அடுத்ததான வில்லங்கங்களும் தான் முதலாவதாக வரும். குடும்பத்துடன் நெருக்கமாக ‘அவர் வீடு வரும் நாளுக்காககவும், ‘அவரின் கையால் சமைத்துப் போடும் கோழிக்கறிக்கும் சக இடியப்பத்துக்காகவும் காத்திருப்பதாக அந்தக் கால நினைவில் நனைகின்றார். ‘அக்கா’ (பிரபாகரனின் மனைவி) அன்று சமைக்கமாட்டார். அல்லது சமைக்க விடமாட்டார். எல்லாருக்கும் தன்கையால் சமைத்து தானே பகிர்வார். சில வேளைகளில் அவருக்கே இடியப்பம் இல்லாமல் போகும். அந்த அதிசய மனிதருக்குள் இவ்வளவு அபரீதமான சமையல் கலையை கற்பித்தது யார் என்ற வினாக்களுக்கான விடை தேடுதலில் பல நாள் இரவுக் காவலரண் பொழுதுகள் முடிந்திதிருக்கும்.
 
பிள்ளைகளைப் பற்றி சொல்லுங்களேன்.
 
“ தலைவரின் ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு மாதிரி பழகுவாங்க. நாங்க முதலில் கண்டது தம்பிய (சார்ள்ஸை சொல்கின்றார்) தான். தம்பி சின்னதில கொஞ்சம் சோம்பேறி. நல்ல குண்டா இருப்பார். அவ்வளவு குழப்படி இல்ல. பாண்டியன் ஸ்பெசல் ஐஸ் கிறீம்ல ஒரே நேரத்தில 2 சாப்பிடுவார். கராத்தே, விளையாட்டு ஓடுறது, பாடுறது என்று எல்லாத்திலயும் பெரிய வல்லமையானவர் அவரில்ல. வளர வளர கொம்பியூட்டரோட தான் அதிகமா இருப்பார். அதுக்குப் பிறகு தங்கச்சி. படிப்பைத் தவிர அவவுக்கு வேற எதுவும் தெரியாது. புத்தகங்களுக்குள்ள நாள்கள முடிச்சிருவா. அதுக்குப் பிறகு தான் பாலா. யாருமே எதிர்பாக்கத நேரத்தில பிறந்ததாக சொல்லுவாங்க. அவனும் ஆச்சரியம் தான்” .

 பாலாவை பற்றி?
 
அப்போதும் அமைதி இடைவெளியை தந்தார். பின்னர் தொடங்கினார். 1996 ஆம் ஆண்டுதான் பாலா பூமிக்கு வந்தான். சண்டை கிளை கொண்டிருந்த நேரம். வன்னியில் பல இடங்களிலிலும் தாக்குதல் களங்கள் திறக்கப்பட்டிருந்தன. முள்ளியவளையில் பாலா பிறந்தான். அப்பா அதிக நாள் பாலாவை பார்க்க வரவில்லை. ஆனாலும் அப்பம்மா, அப்பப்பா (பிரபாகரனின் பெற்றோர்) பாலாவின் வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டிருந்தனர். மற்றைய பிள்ளைகளைவிட இவனில் மூத்தவர்களின் பார்வை அதிகம் இருந்தது. பாலா அங்கிள், அனிரீ கூட சில காலம் இருந்தார்கள். இவர்கள் யாரையும் பாலா அதிகம் விரும்பாமல் வளர்ந்தது தான் ஆச்சரியம். தீத்தி விடும் உணவைப் அதிகம் நிராகரிப்பவன் பாலா.

ம்.. தொடர்ந்தார்

அம்மாவின் சாப்பாட்டை அதிகம் விரும்பமாட்டான். முட்டை பிடிக்காது. நடக்கத் தொடங்கும் போதே சாப்பாட்டுக் கோப்பையில் தனியே சாப்பிட தொடங்கினான். 3 வயதிருக்கும் போது சாப்பாட்டு நேரம் காவலரணுக்கு ஓடி வந்து விடுவான். எத்தனைக் கோப்பையில் சாப்பாடு கொடுத்தாலும் மாமாக்களாகிய எங்கள் கோப்பைச் சாப்பாட்டையே அதிகம் விரும்புவான். காலப் போக்கில் எங்கள் ஒவ்வொருவரினதும் சாப்பாடு தான் அவனாலும் விரும்பி உண்ணப்படும் சாப்பாடாகியது. ஆதற்குப் பின்னர் அவன் தகர அடைப்பு வேலிக்குள்ளும், பனையோலை வேலி அடைப்பு வீட்டுக்குள்ளும் வாழ விரும்பவில்லை. காவலரண்களுக்கு ஓடி வந்து விடுவான். வீட்டாரை விட வெளியாரை அதிகம் நேசித்தான்.

பாலாவுக்கும் அவனின் அப்பாவும் சந்திக்கும் நேரங்கள் எப்படியிருக்கும் என்ற போது சிரித்தார். 
 
அவ்வளவு சந்தோசமான பொழுதா அது? எந்தக் கேள்விக்கும் நின்று நிதானித்து பதில் தந்தவர் இதற்கு மட்டும் சிரிப்பை தந்தார். அதற்கான காரணம் சந்தோசம் தான் என்றார். பாலா பிறந்து சில காலங்களின் பின்னரே ‘தலைவர்’ வந்து பார்த்தார். வீட்டுக்கு வந்ததும் இடுப்புக்கு மேலாக சரத்தைத் தூக்கிக் கட்டிக் கொண்டு கதிரையில் அமர்ந்தார். பாலா சொல்லி வைத்தால் போல அப்பாவின் மடியை நாசம் செய்தான். அதுவே அவன் வெளிப்படுத்திய அப்பா மீதான முதல் கோபம் என்றார் அம்மா. அப்பா கோபிக்கவில்லை. தானே அதனை சுத்தப் படுத்தினார். எல்லோரும் ஓடிவந்து பாலாவையும், அப்பாவையும் சுத்தப்படு;த்த முனைந்தர்கள். ‘தலைவர்’ சொன்;னார், என்ர பிள்ள நானே செய்யிறன்’.அன்று முதல் பல தடவைகள் பாலாவை சுத்தப்படுத்திய பல சம்பவங்களைப் பார்த்திருக்கின்றேன். ஆக, நல்ல அப்பா!
அப்பா ஒரு முறை வீடு வந்திருந்தார். யாருமே தொடாத தனது பிஸ்டலை மேசை லாச்சிக்குள் வைத்து விட்டு பாத்ரூம் போய்விட்டார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பாலா யாரும் கவனிக்காத நேரத்தில் பிஸ்டலை விளையாட்டுப் பொருளாக்கினான். வீட்டிலிருந்த அனைவரும் அலறினார்கள். அப்பா அப்போதும் எந்தப் பயமும் காட்டாது இலகுவாக எடுத்துக் கொண்டார் பாலாவுக்கு கிடைத்த அப்பாவின் ‘விளையாட்டுப் பொருளை’,என்கின்றவரிடம் இன்னும் அதிகம் கேட்க விரும்பவில்லை.

அது சரி, பாலா யாரோடு விளையாடப் போவான்? சின்னப்புள்ளத்தனமான கேள்வி பறந்தது.

அது எப்போதும், எல்லாருக்கும் இருந்த கவலை தான். பாலாவுடன் விளையாட சொர்ணம் அண்ணை, சங்கர் அண்ணை வீட்டுப் பிள்ளைகள் எப்போதாவது வருவார்கள். அவனுக்கு அவர்களுடனான விளையாட்டு போதுமானனதாக இருக்காது. எங்கள் எல்லா வேலைகளையும் விட்டு விளையாட வரச் சொல்வான். வுராவிட்டார் வேலிக்கு வெளியே போகப் போவதாக வெருட்டுவான். வெருட்டியதை செய்தும் இருக்கின்றான். நாங்கள் வீட்டு சமையலுக்காக விறகு வெட்டப் போவோம். ‘மாமா நானும் உங்களோட வரட்டே’ என்ற கெஞ்சலைக் அள்ளிவீசுவான். அனைவரும் பொறுப்பெடு;த்து கூட்டிப்போவோம். மரக் குற்றியில் அமர்ந்திருந்தபடி வேலியற்ற வெளியை ரசித்துக் கொண்டிருப்பான் பாலா. அவன் வெளியில் போய் எல்லாப் பிள்ளைகளையும் போல வாழவே அதிகம் விரும்பினான்.

பள்ளிக்கூடம்?


ஆரம்பக் கற்றலை புதுக்குடியிருப்பில் உள்ள ஒரு பாடசாலையில் தான் பாலா படிக்கத் தொடங்கினான். எல்லாப் பிள்ளைகளையும் போல அதிகம் படிக்க ஆசைப்பட்டான் பாலா. வகுப்பறை மேசைகளிலும், கறும்பலகையிலும் அ,ஆ வை கிறுக்கி விளையாட அவன் ஆசைபட்டான். அங்கு சில நண்பர்கள் பாடசாலைப் படலை வரை மட்டும் கிடைத்தார்கள். பிறகு கிளிநொச்சியில் உள்ள ஒரு பாடசாலையில் சேர்க்கப்பட்டான். முதலை விட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. வகுப்பறையில் அதிகம் அமைதி காத்தான். அதற்கான காரணத்தை அவன் சொல்லவேயில்லை. பாலா அதிகம் கேள்விகள் கேட்டான். வகுப்பறையில் சேமிக்கப்பட்ட முழுச் சந்தேகங்களுக்குமான விடைகளை எம்மிடம் தேடினான்.

அந்தக் காலத்தில் பாலாவுக்கு காலை சாப்பாட்டைக் பொக்ஸில் கொடுத்து விடுவது வழக்கம். பெரும்பாலும் தானிய சாப்பாடு தான் இருக்கும். அங்கு சாப்பிடுவதற்கு அவனுக்கு பெரும் வெட்கம். எல்லா பிள்ளைகளும் சர்வசாதாரணமாக சாப்பிடுவார்கள்.  பாலா அசாதாரணமாக சாப்பிடுவான். புத்தக பையினுள்ளும், புத்தகங்களுக்கும் மறைத்து வைத்து சாப்பிடுவதில் மகா கெட்டிக்காரன். பொது இடங்களில் அதிகம் வெட்கம், பயம் கொண்டவானாக பாலா வளர்ந்தான், என்கிறார் அவர். ஒரு முறை அவனுக்கு பிறந்த நாள் வந்தது. நண்பர்களுக்கும், ஆசரியர்களுக்கும் ரொபி கொடுக்க விரும்பினான். நாமும் வாங்கிக் கொடுத்தோம். அதைக் கொடுக்கும் போது சில ஆசிரியர்கள் இரண்டு,மூன்று எடுத்தனர். ‘எல்லாருக்கும் குடுக்க வேணும், ஒன்டு மட்டும் எடுங்க’ என்று சொல்லி ஏனையவற்றை வாங்கி வைத்துக் கொண்டான் பாலா.
 

அவன் மீது தாக்குதல் ஏதும்..?

பெரிதாக நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. கிளிநொச்சியில் ஒருமுறை பாலா வசித்த வீட்டுக்கு அருகில் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் அங்கிருந்த இரண்டு மகன்மாரும் ஆசிரியரான தாயும் கொல்லப்பட்டார்கள். அதற்குப் பக்கத்து வீட்டில் பாலாவும், அக்காவும், தங்கச்சியும் இருந்தார்கள். அந்த சம்பவத்தோடு வட்டக்கச்சி, விசுவமடு, புதுக்குடியிருப்பு, இறுதியாக முள்ளிவாய்க்கால் என வீடு மாறினான் பாலா என்று முடித்துக் கொள்வதாகக் கூறியவரை மறுபடியும் இழுத்துவர வேண்டியிருந்தது.
 

இறுதியில் என்ன நடந்தது?
 

என்ன நடந்தது என்று எனக்கு தெரியேல்ல. நான் கடைசி நேரத்தில பாலாவோட இருக்கேல்ல.

http://www.colombomirror.com/tamil/?p=6037

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் பெற்றோர் இந்தியாவிலிருந்து வன்னிக்குச் சென்றது 2003 இல் என நினைக்கிறேன். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.