Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடாபியின் தோளில் கைபோட்டதால் தான் போரில் வெற்றி பெற்றோம்! - என்கிறார் மஹிந்த.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐ.நா மனித உரிமை பேரவையில் அமெரிக்காவின் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை இலங்கைக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றியென அரசாங்கம் கூறுவதை தன்னால் ஏற்ப முடியாது என்று  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமை பேரவையில் அமெரிக்காவின் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை இலங்கைக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றியென அரசாங்கம் கூறுவதை தன்னால் ஏற்ப முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

   

மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஸ்தாபிக்கப்படும் விசாரணைப் பொறிமுறையில் பாதுகாப்பு படையினரில், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என்று சந்தேகப்படுவோர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அளவுக்கு சாட்சியங்கள் இல்லை என்றால், நிர்வாக ரீதியான செயற்பாடுகள் மூலம் விலக்கப்படுவார். வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணை அதிகாரிகள், சட்டத்தரணிகளை கொண்ட, இலங்கையின் போர் காலம் பற்றி விசாரணை நடத்த ஸ்தாபிக்கப்படும் பொறிமுறைக்கும் வெளிநாடுகளில் இருந்து நிதி வசதிகளை பெற இடம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை விசாரணை பொறிமுறை கட்டமைப்பானது பலமிக்க சர்வதேச நாடுகளின் நிதியில் இயங்கும் நிறுவனமாக மாறும்.

இலங்கையில் போரை நிறுத்த வெளிநாட்டு முக்கிய பிரமுகர்கள் வந்த சந்தர்ப்பத்தில், அவர்களை எம்பிலிப்பிட்டியவுக்கு அழைத்துச் சென்று மரவள்ளி கிழங்கை சாப்பிட கொடுத்து வேண்டுமொன்றே அவர்களை அவமானப்படுத்தியதால், மேற்குலக நாடுகள் எமது நாட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதாக கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறு அன்று இலங்கைக்கு வந்த பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் அமைச்சர்களுக்கு எந்த உணவு வழங்கப்பட்டது என்பது எனக்கு நினைவில் இல்லை.

ஆனால், இராணுவ நடவடிக்கையை நிறுத்த நான் மறுத்தேன். வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிப்பணியாத காரணத்தினாலேயே தற்போது பயங்கரவாதமற்ற நாட்டில் வாழ முடிந்துள்ளது. நான் லிபிய தலைவர் முஹம்மர் கடாபியின் தோளில் கைபோட்டுக் கொண்டதால், மேற்குலக நாடுகள் இலங்கையுடன் கோபித்து கொண்டதாக சிலர் கூறுகின்றனர். எனினும் குறித்த புகைப்படத்தில் கடாபி எனது தோளில் கைபோட்டுக் கொண்டிருக்கின்றார்.

2009 ஆம் ஆண்டு போரின் இறுதி சில மாதங்களில் உலக நாடுகளில் பொருளாதாரம் சீர்குலைந்து, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பும் வீழ்ச்சியடைந்து வந்தது. அந்த சந்தர்ப்பத்தில் மேற்குலக நாடுகளில் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள் காரணமாக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கிடைக்க வேண்டிய கடனுதவி கிடைப்பது தாமதமாகியது. அந்த சந்தர்ப்பத்தில் நான் எடுத்த ஒரு தொலைபேசி அழைப்பை அடுத்து கடாபி, இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க இணங்கினார். இந்த வாக்குறுதி கிடைத்திருக்காது போனால், போரில் வெற்றி பெறுவதற்கு முன்னர் பொருளாதாரம் வீழ்ச்சியடைய வாய்ப்பிருந்தது எனவும் ராஜபக்ச தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=141656&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.