Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே இனியவன் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்

காதலிக்காமல் இறந்துவிட கூடாது ...

சரியா தவறா ...?
ஏற்போமா ஏற்பாளா ....?
இதயத்தில் ஆயிரம் ....
கேள்விகள் சந்தேகங்கள் ....
காதல் என்றால் சந்தோசம் ...
இல்லை என்றால் என்னில் ....
எனக்கே சந்தேகம் .....?

காதல் 
கிடைப்பது பெரித்தில்லை ....
காப்பாற்றுவதே பெரிது .....
திருமணமாகாமல் இறக்கலாம் ....
காதலிக்காமல் இறந்துவிட கூடாது ...
பிறப்பின் பிறவிபயனே....
இறந்து விடும் .......!!!

  • Replies 390
  • Views 39.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

காற்றோடு போராடுவது -பஞ்சின் வாழ்க்கை

நினைவோடு போராடுவது-காதலின் வாழ்க்கை

பசியோடு போராடுவது-ஏழையின் வாழ்க்கை

பூனையுடன் போராடுவது-எலியின் வாழ்க்கை

கடனோடு போராடுவது-விவசாயியின் வாழ்க்கை

சூரியனோடு போராடுவது-பூவின் வாழ்க்கை

தமிழோடு போராடுவது- கவிதையின் வாழ்க்கை

உரிமைக்காய் போராடுவது தமிழன் வாழ்க்கை

உயிர் வாழ போராடுகிறது மனித வாழ்க்கை ....!!!

  • தொடங்கியவர்

தண்ணீரில் மூழ்கினால் கூட-இவ்வளவு
தண்ணீரை  கண்டிராது என் கண்கள் ......
கண்கள் குளமாகியபோது உணர்ந்தேன் ....!!!

+
மூன்று வரிக்கவிதை 
கே இனியவன் 

  • தொடங்கியவர்

நீ ஓடி விளையாடுவது என் இரத்த ஓட்டத்தில்
நீ ஒழித்து என் மூட்டு எலும்புகளில்

நீ வீணை வாசிப்பது என் நரம்பு தொகுதியில்
நீ நடந்து திரிவதுஎன் இதய வீதியில்

நீ கூதல் காய்வது என் மூச்சு காற்றில்
நீ கோபப்படுவது என் வியர்வையில் தெரியும்

நீ சந்தோசப் படும் போது என் உடல் சிலுக்கும்
நீ தூங்கி எழுவது இதய அறையில்

நீ சொல் நான் இல்லாமல் நீ வாழமுடியுமா ..?
நீ இல்லாமல் நான்தான் வாழமுடியுமா ..?

நீ வெறுக்கும் அளவுக்கு அசிங்கமானவன்
நீ ஒதுக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லாதவன்
நீ நினைக்கும் அளவுக்கு ஒழுக்கமில்லாதவன்
நீ எதற்க்காக என்னை காதலிக்கிறாய் ..?

"எதுவுமே இல்லாத ஒருவனை விரும்பினால் தான்
எல்லாம் இருக்கின்ற என்னை உயிராய் நினைப்பாய்"

  • தொடங்கியவர்

நிமிடத்துக்கு துடிக்கும் .....
என் இதயம் .....
எதிர்பார்த்து நிற்கையில்
பலமணி துடிக்க விரும்புகிறது ....
உன்னை கண்டவுடன் ......
ஜென்மம் துடிக்க விரும்புகிறது ....

துடிப்பது என் இதயம்,,,
உனக்கு எப்படி விளங்கும்
நீ என்னை விட்டு செல்லும் .....
நிமிடத்தில் இறங்குமுகமாய் ....
துடிக்கிறது .....!!!

நான் எழுதும் கவிதை
உனக்குவிளங்கினால் போதும்
சங்கதமிழ்  தமிழ் பித்தனுமில்லை
முத்தமிழ்  நக்கீரனும் இல்லை
கண்ட இடத்தில் கண்டதை 
பொறுக்கும்  தமிழ் பொறுக்கி.....!!!

கவிதை உணர்வுகளின் சுகம் ....
உணர்வுகள் உணர்பவர்களுக்கே ....
உணரமுடியும் ......!!!

  • தொடங்கியவர்

எந்தத்தவறும் இல்லை ...

என்னவனிடம் .....
எந்தத்தவறும் இல்லை ...
நன்கு அறிவேன் ....
செல்ல சண்டையே ....
போடுகிறேன் ....!!!

செல்ல சண்டை தானே ...
கூடலையும் ஊடலையும் .....
கடல் போல் பெருக்கும்....!!!

+
குறள் 1321
+
ஊடலுவகை
+
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 241

  • தொடங்கியவர்

கொடும் குற்றமில்லை ....!!!

என்னவனோடு .....
நான் செய்யும் சிறு சண்டை ....
ஊடலின் போது ஏற்பட்டாலும் ....
அதுவென்றும் கொடும் ....
குற்றமில்லை ....!!!

காதல் என்றால் ,,,,,
கூடலும் சண்டையும் ....
கொஞ்சலும் இருக்கத்தானே ....
செய்யும் ....!!!

+
குறள் 1322
+
ஊடலுவகை
+
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 242

தேவலோகத்தில் கூட கிடைக்குமோ ....?

நிலத்தோடு நீர்கலந்தால் ....
நீரெது நிலமெது....?
இரண்டற கலந்துவிடும் ....!!!

என்னவனோடு .....
ஊடல் செய்யும்போது ....
கிடைக்கும் இன்பம் ....
தேவலோகத்தில் கூட ....
கிடைக்குமோ ....?

+
குறள் 1323
+
ஊடலுவகை
+
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 243

  • தொடங்கியவர்

ரகசிய மந்திரம் ....!!!

ஊடல் ஊடல் ...?
ஊடலென்றால் ...?
என்னவனும் நானும் ....
இறுககட்டி பிடிக்க உதவும் .... 
ரகசிய மந்திரம் ....!!!

ஊடலையும் ....
கலைத்துவிடும் .....
மனநிலையும் மனதில் ....
மறைந்துதான் இருக்கிறது ....!!!

+
குறள் 1324
+
ஊடலுவகை
+
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 244

கோபத்திலும் அழகு இருக்கு 

என்னவனில் ....
தவறில்லை எனக்கு ...
நன்றாக புரிகிறது .....
என்றாலும் ஊடலில் ....
சின்ன சண்டையும் அழகு ....!!!

என் 
மீது உள்ள கோபத்தில் ....
என் மெல்லிய தோளை....
தொடாமல் இருக்கும் ...
என்னவனில் கோபத்திலும் ....
ஒரு அழகு இருக்கத்தான் ..
செய்கிறது 

+
குறள் 1325
+
ஊடலுவகை
+
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 245

அருமையான கவிதைகள். 

காதலின் வலிகளை சிறப்பாக எடுத்தியம்புகின்றன.

நன்றி. தொடருங்கள் 

  • தொடங்கியவர்

அருமையான கவிதைகள். 

காதலின் வலிகளை சிறப்பாக எடுத்தியம்புகின்றன.

நன்றி. தொடருங்கள் 

நன்றி நன்றி நன்றி

  • தொடங்கியவர்

உண்ட உணவு செரிக்கவேண்டும் .....!!!

விருப்பமான உணவை ....
உண்பதை விட -உண்ட உணவு 
செரிக்கவேண்டும் .....!!!

இன்பத்தில் இன்பம் ....
கூடல் செய்வதல்ல .....
கூடலுக்கு முன் ஊடல் ....
செய்வதே ....!!!

+
குறள் 1326
+
ஊடலுவகை
+
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.


+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 246

  • தொடங்கியவர்

யாருக்கு வெற்றி ? யாருக்கு தோல்வி ?

யாருக்கு வெற்றி ...?
யாருக்கு தோல்வி ...?
ஊடலில் தோற்றவரே ....
வென்றவர் ஆவார் ....!!!

எப்படி தெரியும் ....?
கூடி பெறும் இன்பத்தில் ...
இறுதியில் ஊடலின் ...
வென்றவர் இனம் ...
காணப்படுவர் .....!!!

+
குறள் 1327
+
ஊடலுவகை
+
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 247

இன்பம் கிடைக்குமோ ....?

வியர்வை வரும்வரை ...
விரும்பியவருடன் ....
கூடிபெற்ற இன்பம் ....
இன்னுமொருமுறை ....
கிடைக்குமோ .....?

இன்னொருமுறை ....
ஊடல் செய்தால் ....
முன் பெற்ற கலவி ....
இன்பம் கிடைக்குமோ ....?

+
குறள் 1328
+
ஊடலுவகை
+
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 248

  • தொடங்கியவர்

எனக்கொரு உதவி செய்வாயோ .....?

நிலா ஒளி முகத்தால் ....
ஒளியில் மின்னுகிறாள்.....
ஆவலுடன் நான் பெறும் ....
ஊடல் இன்பம் இன்னும் ...
தொடரனும் .....!!!

ஏய் இரவே ....
எனக்கொரு உதவி ....
செய்வாயோ .....?
இன்று நீ விடியாமல் ....
நீண்டுருப்பாயோ....?

+
குறள் 1329
+
ஊடலுவகை
+
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 249

  • தொடங்கியவர்

சின்னனாய் விலகியிருப்பது ஊடல்

சின்ன சண்டையிட்டு .....
சின்ன கோபத்துடன் ....
சின்னனாய் விலகியிருப்பது ...
ஊடல் எனப்படும் ....!!!

ஊடலின் அதிக இன்னமே ....
கூடலின் அதிக இன்பமாகும் ....
கூடலின் ஒரு செயலே ....
ஊடல் ஆகும் ......!!!

+
குறள் 1330
+
ஊடலுவகை
+
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 250

அன்பு கவிதை வாசகர்களே
----------------------------

திருக்குறளை கவிதையாக அமைக்கும் எனது சின்ன முயற்சியில் தற்போது "இன்பத்துப்பால் " என்னும் 
பகுதியில் 250 குறள்கள் அமைந்துள்ளன . அவற்றை ஒவ்வொன்றாக கவிதையாக்கி அதற்கு பொருத்தமான தலைப்பிட்டு கடந்த பலமாதமாய் கவிதை வடிவத்தில் அமைத்துள்ளேன் .

இந்தவகையில் கவிதை முறையை யான் இதுவரை வேறு எங்கும் பார்த்ததில்லை . என் மொத்த கவிதை அனைத்தும் சொந்த கவிதையே இன்று 19.09.2015 வரை எழுத்து தளத்தில் 6300 கவிதை எழுதியுள்ளேன் .

அதில் 250 கவிதை இன்பத்துப்பால் கவிதையாக அமைவதில் மிக்க சந்தோசம் .ஆனால் வாசக பெருமக்களே இதுபோன்ற கவிதைக்கு தரும் ஊக்கம் போதாது என்றே கூறுவேன் . இன்று இந்த 
திருக்குறள் கவிதை ஒரு சின்ன விடயமாக இருக்கலாம் . என்றோ ஒருநாள் தமிழ் ஆவலர் .திருக்குறள் 
ஆவலர் கண்ணில் இது படும்போது இதன் முக்கியத்துவம் உணரப்படும் என்று நம்புகிறேன் .
இன்னுமொரு எழுத்தாளர் " இதைவிட சிறப்பாக எழுதுவதற்கு இது உதவலாம் " என்ற மகிழ்சியுடன் 
என் எண்ணத்தை முடிக்கிறேன் 

நன்றி 
கே இனியவன்

  • தொடங்கியவர்

உன்னை இன்பபடுத்த
என்னிடம் இருக்கும்
ஒரே சொத்து
கவிதை

 

காணமல் போன என்னை
உன்னிடம் கேட்ட 
ஒரு முட்டாள்
நான்....!!!

காகிதத்தில்  வரிகள் 
வலிக்கிறது 
கவிதையில்
காதல் வலிக்கிறது ...!!!

  • தொடங்கியவர்

உன் 
மீது கொண்ட ....
ஆசையும் ....
இன்பமும்  ....
காதலின் வலிக்கு....
காரணம் என்பதை ....
உணர்ந்தேன் .....!!!

காதலுக்கு ....
இரு வலிகள் ..
உன்னால் எனக்கு ....
வரும் வலி ....
என்னால் எனக்கு ....
வரும் வலி .....!!!

 

  • தொடங்கியவர்

பெண் ஒருத்தி ....
தன் காதலை காப்பாற்ற  ....
எத்தனை துன்பங்களையும் ....
தாங்கிக்கொள்வாள் .....!!!

ஆண் ஒருவன் .....
தன் காதலை காப்பாற்ற  ....
எத்தனை அவமானங்களையும் ....
தாங்கிக்கொள்வான் ....!!!

+
காதல் இன்பமும் துன்பமும் 

  • தொடங்கியவர்

என்னவளே உறக்கத்தை 
தொலைக்கும் அளவுக்கு ....
நினைவுகளை தந்துவிட்டு .....
கனவில் இன்று வருவேன் ...
காத்திரு என்கிறாயே .....!!!

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை 
கவிதை எண் 18

  • தொடங்கியவர்

சிரித்து சிரித்து பேசியவள் ....
மற்றவர்கள் சிரிக்கும் படி .....
வைத்துவிட்டாள்.....!!!
நான் அழகில்லை தான் ...
நீ அழகாக இருப்பதால் ....!!!

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை 
கவிதை எண் 19

நீ காரணத்தோடு பிரிந்தாலும் .....
நான் காலமெல்லாம் காதலிப்பேன் ....
எப்படியும் வாழ்வது உன் புத்தி ....
உன்னோடே வாழ்வது என் பக்தி ....
தனியே இருந்தாலும் நினைவில் -நீ 

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை 
கவிதை எண் 20

  • தொடங்கியவர்

கண்ணால் தோன்றிய காதலுக்கு  .....
கண்ணுறு பட்டுவிட்டது .....
கண்ணுக்கு தெரியாத காதலுக்கு ....
கனவு தான் மிஞ்சியது .....
காதல் பிரியாத புதிராய் ....!!!

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை 
கவிதை எண் 21

இரும்பை காந்தம் கவரும் .....
எறும்பை கரும்பு கவரும் .....
காரணம் இல்லாமல் பேசினேன் .....
காதலிக்கிறாயா ...? 
கண்டுபிடித்துவிட்டான் நண்பன் ....!!!

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை 
கவிதை எண் 22

  • தொடங்கியவர்

எதிர் பார்க்கும் விடயங்கள் ....
என்னிடம் எள்ளளவேனும் .....
இல்லாமல் இருக்கலாம் ....
எதிர்பார்க்காத அளவு ....
காதல் உண்டு காதல் செய் ...!!!

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை 
கவிதை எண் 23

  • தொடங்கியவர்

பைத்தியம் .......
மாதிரி பேசாதே என்கிறாள்..... 
என்னை 
பைத்தியமாக்கியவள் .....!!!
+
கே இனியவன் 
மைக்ரோ கவிதைகள்

மலரோடு ஆரம்பித்தவள் 
மலர் வளையத்தோடு ....
முடித்துவைக்கிறாள் ......!!!
+
கே இனியவன் 
மைக்ரோ கவிதைகள்

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

நீ வெறுத்து சென்றாலும்...
உன்னை தொடருவேன்.....
காதல் நம்பிக்கை 
+
கே இனியவன் 
மைக்ரோ கவிதைகள்

  • தொடங்கியவர்

என்னை தவிர யாரையும்
உன்னைத்தவிர யாரையும் 
காதலிப்பதே தோல்வி ....!!!

+
கே இனியவன் 
மைக்ரோ கவிதைகள்

அகங்காரத்தால் காதலை ....
கருக்கிவிட்டாய் ....
கவலை படப்போகிறாயே....!!!

+
கே இனியவன் 
மைக்ரோ கவிதைகள்

  • தொடங்கியவர்
சினம் அடங்க காதல் செய் ....
சித்திபெற காதல் செய் ....
சித்தம் பித்தமாகினும் காதல் செய் .....!!!

+
கே இனியவன் 
மைக்ரோ கவிதைகள்
 

எல்லோரையும் மறக்கவைத்தவள் ....
என்னையே என்னில் மறக்கவைத்தவள் ....
எல்லாவற்றையும் மறந்துவிட்டாள் ....!!!
+
கே இனியவன் 
மைக்ரோ கவிதைகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.