Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே இனியவன் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்

இயற்கையின் அற்புதத்தை ....
பார்த்தாயா ....?
மனிதனுக்கு ஓட்சிசனை தந்து ....
வாழவைக்கிறது ....!
மனிதன் வெளியேற்றும் ....
காபனீர் ஓட்சைட்டில் ....
தாவரத்தை வாழவைக்கிறது ....!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
இயற்கை கவிதை 

  • Replies 390
  • Views 39.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

முயற்சியாளன்...
ஆபத்தை சந்திக்கிறான் ....
வெற்றி பெறும்போது ...
மறு முதலீடு செய்கிறான் ....
தோல்வியடையும்போது ....
புதுமையை தேடுகிறான் ....!!!
நான் ஒரு முயற்சியாளன் ...!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
முயற்சி கவிதை 

ஒருவனுக்கு பெரும் ....
பாக்கியம் .....?
தாயின் மடியில் பிறந்தவன் ....
தாய் மடியில் இறப்பதுதான் ....
இறைவா அந்த பாக்கியத்தை ....
எனக்கு தராமல் அன்னையை ....
பறித்துவிட்டாயே....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
அம்மா கவிதை

  • தொடங்கியவர்

ழுந்திரு மனிதா ....
ழுச்சி மிகு வெற்றி காத்திருக்கிறது ....
ன்றும் இனிமையாய் வாழ்வதற்கு .....
ழுந்திரு அதிகாலை - விரைந்திடு ....
ட்டு திசையும் பரப்பிடு பணியை ....!!!

வன் பிறருக்காய் வாழ்கிறானோ .....
வன் பிறர் துன்பம் துடைகிறானோ.....
வனல்ல அவன் - இறைவன் .....!
ல்லோர் இதயத்திலும் இருக்கும் 
ல்லையற்றவன் அவன் ....!!!

ங்கே செல்கிறோம் சரியாக தீர்மானி ....
ப்போது செல்கிறோம் உறுதியாக முடிவெடு ...
தற்கு செல்கிறோம் நிதானமாக இருந்திடு ....
ந்த தடைவரினும் அனைத்தையும் உடைத்தெறி .....
ல்லாம் சிறப்பாக நிச்சயம் அமைந்திடும் ....!!!

திரியென்று ஒருவனை நினைத்துவிடாதே ....
டுப்பார் கைபிள்ளைபோல் வாழ்ந்துவிடாதே .....
ல்லாம் எனக்கே என்று ஆசைபடாதே .....
டுத்த காரியத்தை இடையில் நிறுத்தி விடாதே .....
ல்லாம் வல்ல இறைவன் இருப்பதை மறந்துவிடாதே .......!!!
 

  • தொடங்கியவர்

நடிப்பு நட்பு வேண்டாம் ...

உயிராய் உருகுவதுபோல் 
உனக்கே வாழ்வதுபோல் 
நடிப்பு நட்பு வேண்டாம் ...
அது தீ நட்பு .....!!!

உள்ளத்தில் இருந்து ...
தோன்றாத நடப்பும் 
உதட்டில் தோன்றும் 
நட்பும் வேண்டாம் ....
தீய வளர்வதை -நீ 
வெட்டி விடுவதே .....
நன்றோ நன்று ....!!!
+
குறள் 811
+
தீ நட்பு,
+
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை 
பெருகலிற் குன்றல் இனிது.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -31

  • தொடங்கியவர்
விலக்கும் நட்பும் வேண்டாம் ....!!!

பயன் இருந்தால் பழகும் 
நட்பும் வேண்டாம் ....
பயனில்லாவிட்டால் ....
விலக்கும் நட்பும் வேண்டாம் ....!!!

துன்பத்தில் சரிபாதியும் ....
இன்பத்தில் சரிபாதியும் .....
இணையாத நட்பு ....
இருதென்ன பயன் ....?

+
குறள் 812
+
தீ நட்பு,
+
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை 
பெறினும் இழப்பினும் என்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -32
 

பயனோடு பழகும் நட்பு ....

பயனோடு பழகும் நட்பு ....
திருடர்களோடு பழகுவதும் ....
ஒன்றே ....!!!

பயனோடு பழகும் ....
நட்பானது ....
விலைமாதருக்கு சமனே ...
பயனொடு பழகுவதை ....
பயனற்றதாக்குனதே அறிவு ....!!!

+
குறள் 813
+
தீ நட்பு,
+
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது 
கொள்வாரும் கள்வரும் நேர்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -33

  • தொடங்கியவர்

பேராபத்து நட்பால் வரும் ....

பேராபத்து நட்பால் வரும் ....
இவன் நட்பால் கெடுதல் ...
வரும் என்றால் ஏன் தொடர்கிறாய் ...?
தீய நட்பை ....!!!

போர்க்களத்தில் கலை வாரும் 
என்ற குதிரைமீது -யார் ,,,?
போர் செய்வார்கள் ....?
விலக்கிவிடு அந்த குதிரையை ...!!!

+
குறள் 814
+
தீ நட்பு,
+
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் 
தமரின் தனிமை தலை.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -34

நட்பே வேண்டாம் கேடு நட்பு ....!!!

ஓடி ஓடி உதவி செய்தாலும் ....
எதிர்பாராத உதவி செய்தாலும் ....
யாருமே இதுவரை செய்யாத 
உதவி செய்தாலும் வேண்டாம் 
தீய நட்பு ....!!!

பாதுகாப்பு இல்லாத நட்பு ....
பயனற்ற நட்பாகும் ...
எதற்கு இந்த நட்பு -நட்பே ....
வேண்டாம் இந்த கேடு நட்பு ....!!!

+
குறள் 815
+
தீ நட்பு,
+
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை 
எய்தலின் எய்தாமை நன்று.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -35

  • தொடங்கியவர்

ன் என்று கேள்வி கேள் ....
ளனமாக இருந்துவிடாதே ....
ராளமான பிரச்சனைக்கு காரணம் ....
ன் நமக்கு இந்த வில்லங்கம் என்று ....
ளனமாக இருந்தமையே .....!!!

காதிபத்தியம் பல தோன்றியதால் ....
ழைகளின் வாழ்க்கை இறங்கிசெல்ல....
ற்றமானவர் வாழ்கை ஏறிசெல்கிறது ....
ற்றத்தாழ்வை தோற்றுவித்தது ...
காதிபத்திய பொருளாதாரம் ......!!!

ணிபோல் படிப்படியாக வாழ்கையில் ....
றிசென்று வாழ்க்கை உச்சத்தையடை.....
கலைவன் போல் குருபக்தி கொண்டிரு ....
கன் அடியே போற்றியேன்று சரணடை ...
ழேழு ஜென்மத்துக்கு இன்பமடைவாய் .....!!!

ர் பூட்டிய விவசாயியே ஏகன் ....
டு தொடக்கிய ஆசானும்  ஏகன் .....
மாற்றுபவனை காட்டிலும் ....
மாறுபவனே புத்தி அற்றவன் .....
மாறாதே அத்துடன் ஏமாற்றாதே .....!!!

  • தொடங்கியவர்

மலர்களே 
மறைந்து விடுங்கள் ....
என்னவளின் 
அழகில் வாடிவிடுவீர்கள்...!!!

நட்சத்திரங்களே 
ஓடிவிடுங்கள் ...
என்னவளின் கண் 
சிமிட்டலில் ஒளியை இழந்திடுவீர் 

தென்றலே 
வீசுவதை நிறுத்து ....
என்னவளின் ....
மூச்சு காற்றில் காணாமல் போயிடுவீர்.....!

பனிதுளிகளே 
சிந்துவதை நிறுத்துங்கள்...
என்னவளின் ....
வியர்வை துளியில் மறைந்திடுவீர் ....!

குயில்களே 
பாடுவதை நிறுத்துங்கள் .....
என்னவளின் ...
குரலில் ஓசையில் இழந்திடுவீர்...! 

மயில்களே
தோகை விரிப்பதை நிறுத்துங்கள் ....
என்னவளின் ....
கூந்தல் அழகில் சிக்கி தவிப்பீர்கள் ...!

  • தொடங்கியவர்

கண்களே ...
கலங்காதீர்கள் ...
என்னவளின் இதயம் ...
அழகில்லை காதலும் ...
அழகில்லை ....!!!

இதயமே ....
வருந்தாதே ...
என்னவளிடம் இதயம் ....
இல்லை அவளிடம் ...
காதலும் இல்லை ......!!!

மனசே ....
மயங்காதே ....
என்னவளிடம் மனசே ...
இல்லை மயங்கி ...
நீ வேதனை படாதே ....!!!

கனவுகளே ...
களைந்துவிடுங்கள்...
என்னவளிடன் -என் 
நினைவுகள் இல்லை ...
கனவு வர வாய்ப்பேயில்லை ....!!!

இதயத்தின் ...
அழகே காதலின் ...
அழகு - இதயம் 
உள்ளவர்கள் காதலியுங்கள் ....!!!

  • தொடங்கியவர்

காதலின் வலிமை 
எப்போது புரியும் ...?
காதலின் பிரிவின் ....
போதுதான் ....!!!

நீ அருகில் இருக்கும் ...
நினைவுகளை விட ...
விலகியிருக்கும் ...
நினைவுகள் சுகமானது ...!!!

+
காதல் சிதறல் 
கே இனியவன்

உன் செயல்கள் யாவும் ....
எனக்கு பகையாக இருகிறது ...
என்றாலும் ...
உன் நினைவுகள் என்றும் ...
எனக்கு பசுமையானவை ....!!!
காதல் நாணயத்தின் ...
இருபக்கம்தான் ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

  • தொடங்கியவர்

தொட்டு 
செல்லும் காற்றுபோல் ...
தொட்டு 
சென்றுவிட்டாய் காதலில் ...
விட்டு 
செல்லும் மூச்சைபோல் ...
விட்டு 
சென்று விட்டாய் என்னை ...!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

தினமும் 
உன் நினைவுகள் தான் 
எனக்கு ஆகாரம் ...
உன்னை பற்றிய கவிதையே 
எனக்கு ஊட்ட சத்து ...!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

  • தொடங்கியவர்

நானும் 
நீயும் கை கோர்த்து .....
திரிந்த காலமெல்லாம் ....
கைவிரிச்சு போச்சு ....!!!

உன்னோடு பேசிய ....
வார்த்தையெல்லாம் ....
வீண் பேச்சாய் போச்சு .....!!!

என் இதயம் முழுதும் ....
நிறைந்திருக்கும் ....
நினைவுகள் மட்டும் ...
ஊற்று நீராய் ஊறுதடி ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

  • தொடங்கியவர்

இரத்தம் வெளியில் ....
வராமல் என் இதயத்தை ....
கிழித்து சென்று விட்டாய் ...
பாவம் இதயம் நீ வருவாய் ...
என்று தவமிருக்கிறது ....!!!

காதல் உடலுக்கும் ....
உள்ளத்துக்கும் நன்மை ....
எனக்கேன் நீ விஷமாக்கினாய் ...?
உன் விஷமருந்தியும் ....
இறக்காமல் இருக்கிறேன் ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

  • தொடங்கியவர்

எத்தனை  முறைதான் ...
என்னை பிடிக்காதத்துபோல் ...
நடித்துகொண்டிருப்பாய் ....
தயவு செய்து மௌனத்தை ...
உடைத்து எறிந்துவிடு ....!!!

ஒன்றை மட்டும் நினைவு ....
படுத்திக்கொள் - உனக்கு ...
காதல் வலியே வராது ....
உன் இதயம் என்னிடம் ....
இருப்பதால் ......!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

  • தொடங்கியவர்

என்னிடம் 
நிறைய இருக்கும் ....
காதலை உனக்கு ......
கொஞ்சமாவது ......
தர ஆசைப்படுகிறேன் ...
என்னை காதலித்து விடு ...!!!

வா உயிரே ...
உன்னிடம் வரப்போகும் ....
காதலையும் என்னுடன் ...
இருக்கும் காதலையும் ....
இணைத்து 
காதல் சாம்ராச்சியம் ....
உருவாக்குவோம் .....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

மழையில் 
நனைந்தபடி ....
அழுகிறாய்  -அப்போதும் ...
உன் கண்ணீர் எனக்கு ....
தெரிகிறது ....!!!

தூய 
காதலால் எதையும் ....
மறைக்கவும் முடியாது .....
மறக்கவும் முடியாது ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

  • தொடங்கியவர்

யாரோடு 
உன்னை ஒப்பிடுவேன் ....?
எதனோடு 
உன்னை ஒப்பிடுவேன் ....?
ஒப்பிடப்படும் எல்லாவற்றையும் ....
காட்டிலும் -நீ 
உச்சமாக இருப்பதால் ....!!!
நம் காதலுக்கு நிகர் 
காதல் தான்....!!!
+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
காதல் கவிதை

  • தொடங்கியவர்

பல மொழி வாழும் உலகில் ....
உயிர் மொழி எங்கள் 
தமிழ் மொழி .....

உலகில் 
வாழும் காதலருக்கு .....
ஊட்டசத்தாய் அமைவது ...
கவிதை மொழி ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
ஏனைய கவிதைகள் 

  • தொடங்கியவர்

சிறுவயதில் விழுந்தேன் 
கை கொடுத்து தூக்கினார் 
அம்மா ....!!!

பள்ளி பருவத்தில் விழுந்தேன் 
கை கொடுத்து தூக்கினார் ...
ஆசிரியர் ,.....!!!

பருவ வயதில் விழுந்தேன் 
கை கொடுத்து தூக்கினான் 
உயிர் நண்பன் ....!!!

முதுமை வயதில் விழுந்தேன் ...
கை கொடுத்து தூக்கியது 
முதியோர் இல்லம் ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
வாழ்க்கை கவிதைகள்

  • தொடங்கியவர்

விருந்தன்று விடுமுறை 
---------------------------

உல்லாசப்பயணம்
செய்யும் மந்தைகளுக்கு 
எம் வீட்டில் உல்லாச பயணி 
வந்ததும் விடுமுறை ....
வழங்கப்படும் ....!!!
+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
விருந்தன்று விடுமுறை

  • தொடங்கியவர்

கவலைக்கு மருந்து மதுவா ...?

காதலியை 
மறக்கமுடியவில்லை ...
அவளை மறக்க மது 
அருந்துகிறேன் ....!!!

மதுக்கடையில் கணவன்..
மனைவி கவலையுடன்
முறைப்பாட்டுடன் ....
விவாக ரத்து பத்திரத்துடன் ....!!!
+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
கவலைக்கு மருந்து மதுவா ...?

என்னோடு அழும் நண்பன் 
----

யாரோ
இறந்ததற்றகாக
கண்ணீர் விடும் 
மெழுகுதிரிபோல் ....!!!

என் தோல்விக்காக ...
என்னோடு சேர்ந்து ....
அழுகிறான் ...
என் நண்பன் .....!!!

+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
என்னோடு அழும் நண்பன்

  • தொடங்கியவர்

தொலைபேசி அழைப்பு 

-----

காதுக்குள் பேசுவது
எனக்குப்பிடிக்காது
தொலைபேசியே ....!!!
என்றாலும் காதலியின் ...
பேச்சை எப்போதும் 
கேட்கலாம் ....!!!

உன் தொலைபேசி ...
அழைப்பு மணிதான்... 
எனக்கு - இன்ப ஓசை ....
அபாய மணியாக மாற்றி 
விடாதே அன்பே ....!!!

+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
தொலைபேசி அழைப்பு 

காதலும் உறவுதான் ...!!!
---
பலர் ஏங்குவதும்
ஏங்க வைத்து
பின் ஏமாற்றுவதும்
உறவு ....!!!

காதலும் 
உறவுதான் ...
ஏங்கவைக்கும் 
இன்பம் தரும் ...
ஏமாற்றும் ....!!!

+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
காதலும் உறவுதான் ...!!!

  • தொடங்கியவர்

காதலி -மனைவி ....!!!
---
பூவாய் நிலவாய்
பெயரிட்ட பிரமன்
படைத்த நகல் பிரதி
பெண்.....!!!

உயிராய் உணர்வாய் ....
கனவாய் நினைவாய் ....
உடலாய் குருதியாய் ....
என்னோடு வாழ்பவள் ...
காதலி -மனைவி ....!!!

+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
காதலி -மனைவி ....!!!

  • தொடங்கியவர்

காதலன் -காதலி ...!!!
---

மனிதன் கடவுளிடம்
வாங்கிக் கொண்ட
விலைமதிபற்ற  வரம் 
கனவு.....!!!

மனிதனிடம் இருந்து 
மனிதர்களுக்கு கிடைக்கும் 
அற்புத பொக்கிஷம் ...
காதலன் -காதலி ...!!!

+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
காதலன் -காதலி ...!!!

மழையும் கண்ணீரும் ....!!!

---

முகிலும் முகிலும் .....
காதல் கொண்டு மோதி ...
காயப்பட்டு பூமிக்கு வந்த...
மேக கண்ணீர் - மழை ....!!!

உன் 
கண்ணும் என் கண்ணும் ...
காதலால் மோதி வந்த மழை ....
கண்ணீர் ,,,,!!!

+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
மழையும் கண்ணீரும் ....!!!

  • தொடங்கியவர்

தபால் பெட்டியும் குப்பை தொட்டியும் ....!!!
---
கடிதங்களுக்காக்காத்திருந்து....
காத்திருந்து கடைசியாக மனமுடைந்து.....
தற்கொலை செய்து கொண்டது....
எங்கள் வீட்டுத் தபால்ப்பெட்டி......!!!

உனக்காக கவிதை எழுதி எழுதி ....
கவிதையை திருத்தி திருத்தி .....
நிரம்பி விட்டது என் வீட்டு ....
குப்பை தொட்டி .....!!!

+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
தபால் பெட்டியும் குப்பை தொட்டியும் ....!!!

  • தொடங்கியவர்

ம் பொறியை அடக்கி ....
யங்களை தெளிவுபடுத்தி ....
ம்பூதத்தை வசப்படுத்தி .....
ந்து வகை நிலத்தை ஆழும் ...
யன்- நீ - விழிப்போடு வாழ் மனிதா ....!!!

யங்களை தூக்கி எறிந்து விடு ....
க்கியத்தோடு வாழ்ந்து பழகு ....
யக்காட்சிக்கு இடமளிக்காதே .....
யமின்றிஇனிமையாய் பேசிப்பழகு .....
யங்கரன் என்றும் துணையிருப்பான் ......!!!

சுவரியத்தை  நேர்மையாய் உழை ....
க்கிய உணர்வோடு எப்போது வாழ் .....
யிரண்டு கைவிரலால் கடினமாய் போராடு ....
யிரண்டு கால்விரலால் இலக்கில் பயணம் செய் .....
ம்முகன் ஆசி என்று உனக்கு இருக்கும் ....!!!

யா என்று பணிபோடு முதியோரை அழை ....
யர் (தேவர் ) ஆசீர்வாதம் உனக்கு வரும் ....!
ம்புல அறிவோடு அகிலத்தை நேசி .....
வாய் (சிங்கம் ) போல் அரசனாய் வாழ்வாய் ...!
யனே என் அன்பனே என்றும் இன்பமாய் இரு ...!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.