Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குண்டுகளை வெடிக்க வைத்தவர்களே தடுப்புக் காவலில் உள்ளனர்

Featured Replies

குண்டுகளை வெடிக்க வைத்தவர்களே தடுப்புக் காவலில் உள்ளனர்

 

குண்டுகளை வெடிக்க வைத்தவர்களும் ஆயுதங்களால் குற்றச் செயல்களை புரிந்தவர்களுமே சிறைச்சாலைகளில் தடுப்புக் காவலில் உள்ளனர் எனத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ அரசியல் கைதிகள் எவரும் இலங்கையில் கிடையாது என்றும் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.Fd5f40dfd.jpg

இது தொடர்பாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ மேலும் கருத்து தெரிவிக்கையில் வட மாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூறுவது போல் எமது சிறைகளில் அரசியல் கைதிகள் எவரும் தடுப்புக்காவலில் இல்லை.

தமிழ் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்டோரும். ஆயுதங்கள் மூலம் குற்றச் செயல்களை புரிந்தவர்களுமே சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறு, சிறு குற்றங்களை புரிந்த தமிழ் கைதிகள் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடும் குற்றங்கள் புரிந்த ஒரு சில தமிழ் கைதிகளே இன்னும் தண்டனை அனுபவிக்கின்றனர்.

இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள். 

நீதி அமைச்சினால் இவர்களை விடுதலை செய்யவும் முடியாது. அவ்விடயத்தில் தலையிடவும் முடியாது. இது தொடர்பாக அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

அத்தோடு இவ்விடயம் நீதி அமைச்சுடன் தொடர்பு பட்டதல்ல.

சிறைச்சாலைகள் மற்றும் புனர் வாழ்வு சட்டம் ஒழுங்கு அமைச்சிற்கு உரியது. 

எனவே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென்ற வடமாகாண முதலமைச்சரின் கருத்தை ஏற்க முடியாது.

மீண்டும் நான் வலியுறுத்துவது இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது என்பதனையே ஆகும் என்றும் அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/articles/2015/10/15/குண்டுகளை-வெடிக்க-வைத்தவர்களே-தடுப்புக்-காவலில்-உள்ளனர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.