Jump to content

நவராத்திரி நல்விருந்து! - அவல் வேர்க்கடலை லட்டு


Recommended Posts

நவராத்திரி நல்விருந்து! - அவல் வேர்க்கடலை லட்டு

 
 
 
 
aval_2581810f.jpg
நவராத்திரி பண்டிகையின் மகத்துவம் ஒன்பது நாட்கள் நடக்கும் தேவி வழிபாடு மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் நிவேதனமாக செய்யப்படும் பலகாரங்களும் சேர்ந்ததுதான்.

 

அவல் வேர்க்கடலை லட்டு

என்னென்ன தேவை?

அவல் - ஒரு கப்

சர்க்கரை - அரை கப்

வேர்க்கடலை, நெய் - தலா கால் கப்

ஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன்

முந்திரி - 10

எப்படிச் செய்வது?

வெறும் வாணலியில் அவலைக் கொட்டி, குறைந்த தீயில் வறுத்தெடுங்கள். வேர்க்கடலையை வறுத்துத் தோலை நீக்குங்கள். இரண்டையும் தனித்தனியாகப் பொடித்துவைத்துக்கொள்ளுங்கள். சர்க்கரையைப் பொடித்து, ஏற்கெனவே பொடித்துவைத்திருக்கும் அவல் மற்றும் வேர்க்கடலையை அதனுடன் கலக்குங்கள். முந்திரியை நெய்விட்டு வறுத்துச் சேருங்கள். ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கலந்து வையுங்கள். நெய்யைச் சூடாக்கி இந்தக் கலவையில் விட்டு நன்றாகக் கலந்து உருண்டை பிடியுங்கள்

http://tamil.thehindu.com/society/recipes/நவராத்திரி-நல்விருந்து-அவல்-வேர்க்கடலை-லாடு/article7753005.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டிகைகளுக்கு நல்ல பட்சணம்...!

என்ன படத்தில அவலும் கடலையும் இருக்கு சக்கரையை காணேல்ல ...! படத்தில போடமுதல் அவசரம்...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க நன்றாகத் தான் இருக்கின்றது.ஆனால் யார் செய்து தருவார்கள்

Link to comment
Share on other sites

பார்க்க நன்றாகத் தான் இருக்கின்றது.ஆனால் யார் செய்து தருவார்கள்

உண்மை ரதி!! 

இணைப்புக்கு நன்றி சகோ!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.