Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிகமுக்கிய பிரமுகரின் மகனின் வங்கிக்கணக்கை முடக்க மறுத்துள்ள துபாய் நீதிமன்றம்

Featured Replies

மிகமுக்கிய பிரமுகரின் மகனின் வங்கிக்கணக்கை முடக்க மறுத்துள்ள துபாய் நீதிமன்றம்

 
மிகமுக்கிய பிரமுகரின் மகனின் வங்கிக்கணக்கை முடக்க மறுத்துள்ள துபாய் நீதிமன்றம்

 

 

 
ஓகஸ்ட் 17 ம்திகதி பாராளுமன்ற தேர்தலிற்கு பத்து நாட்களிற்கு முன்னர் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரிற்கு முன்னாள் மிகமுக்கிய பிரமுகரின் மகனான இளம் அரசியல்வாதி துபாயின் எமிரேட்ஸ் தேசிய வங்கியில் இரகசிய வங்கி கணக்கை வைத்துள்ளத தகவல் கிடைத்தது.
 
இது குறிப்பிடத்தக்க பரபரப்பை ஏற்படுத்தகூடிய விடயம்,அது குறித்த விபரங்களை பெற்று தேர்தல் பிரச்சாரங்களில் அம்பலப்படுத்தினால் அது ஜனாதிபதியின் கீழ் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினதும் ஐக்கிய தேசியகட்சியினதும் வெற்றி வாய்ப்பை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்க கூடும். இதன் அடிப்படையிலேயே கணக்குவைத்துள்ளவரின் விபரங்களை பெற்று அவரிற்கு எதிராக மேலதிக நடவடிக்கைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
இதற்காகதெரிவு செய்யப்பட்டவர் மனிதஉரிமை பணியாளரும் டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் அமைப்பின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளருமான ஜேசி வெலியமுன.அரசாங்கத்தின் ஊழலிற்கு எதிரான நடவடிக்கையில் முன்னணியில் நின்றவர் அவர்.
 
இரகசியகணக்கு குறித்த விடயத்தில் அவர் ஷெர்லாக்கோம்ஸின் பணியை மிகவும் இரகசியமாக ஆற்றினார்,குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை இலங்கைக்கு கொண்டுவருவதும்,பொது எதிரியை தாக்குவதற்கு ஐக்கியதேசிய கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் அரசியல் ஆயுததத்தை வழங்குவதும் அவரது நோக்கமாக காணப்பட்டது.தேர்தலிற்கு முன்னதாகவே இரு தரப்பும் தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் தேர்தலிற்கு முன்னர் இவற்றை நிறைவேற்றும் வெலியமுனவின் முயற்சிகள் தோல்வியடைந்தன.
 
இளம் அரசியல்வாதியின் துபாய் வங்கி கணக்கு குறித்து விசாரணையை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி சிறிசேன ஆவணமொன்றின் மூலம் வெலியமுனவிற்கு அதிகாரத்தை வழங்கினார், துபாய் அதிகாரிகளை கையாள்வதற்கு வெலியமுன பயன்படுத்தப்பட்டார்,மேலும் சிறிசேன துபாய் ஆட்சியாளரிற்கு வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.
 
இதன் பின்னர் வெலியமுன துபாய்க்கும் இலங்கைக்கும் இடையில் பல தடவை விஜயத்தை மேற்கொண்டார்,இலங்கை அரசாங்கம் சார்பில் செயற்படுவதற்கான சட்டநிறுவனம் ஓன்றை கண்டுபிடிப்பதே அவரது முதற்பணியாக காணப்பட்டது.அதற்கு ஏற்ற நிறுவனம் ஓன்றை கண்டுபிடித்ததும் அவர் அதனை இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தினார்.
 
குறிப்பிட்ட பணம் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்டது என்பது நிருபிக்கப்பட்டால் அதனை இலங்கைக்கு திரும்பிக்கொண்டுசெல்வது இலகுவாகிவிடும் என தெரிவித்திருந்தது,பின்னர் வெலியமுனவுடன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்சி விக்கிரமதுங்கவும் இணைந்துகொண்டார்.
 
இதன்பின்னர் விசாரணைகள் இடம்பெறும் செய்தி முன்னாள் மிக முக்கிய பிரமுகரை சென்றடைந்தது,அவர் பொதுநிகழ்வொன்றில் பிரதமரை சந்தித்தவேளை இது குறித்து கேள்;வி எழுப்பியுள்ளார்,எனினும் இது குறித்து தான் எந்த வாக்குறுதிகளையும் வழங்கவில்லை என ரணில்விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளார்.
 
எனினும் இதன் மூலம் வெலியமுன தான் துபாயில் இரகசியமாக மேற்கொள்வதாக கருதிக்கொண்டிருந்த விடயங்கள் இலங்கை வரை தெரியததொடங்கியுள்ளமை புலனாகியது. இந்த விடயம் குறித்து எதனையும் அறியாதிருந்தவர்கள் இலங்கை மக்கள் மாத்திரமே.
 
இதன் பின்னர் குறிப்பிட்ட இளம் அரசியல்வாதி தனது துபாய் வங்கிக்கணக்கிலிருந்த பணத்தை உக்ரைனிற்கு மாற்றும் விடயம் குறித்தும் அரசாங்கம் அறிந்தது.பகாமாhஸ் மற்றும் சீசலஸ்தீவுகளில் உள்ள வங்கிகளிற்கும் பணம் மாற்றப்பட்டது குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கிடைத்துள்ளன.துபாய் வங்கிக்கணக்கில் முன்னர் பில்லியன் டொலர்களாக காணப்பட்ட பணம் தற்போது 500 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
 
இதன் தொடர்ச்சியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்றன,இந்த விசாரணைகளில் இலங்கையின் சார்பில் குறிப்பிட்ட சட்டநிறுவனமும் வெலியமுன மற்றும் தில்ருக்சி ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.வழக்கு குறித்த விபரங்களை வெலியமுன அவ்வப்போது தொலைபேசி மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு தெரிவித்துக்கொண்டிருந்தார்.
 
எனினும் நீதிபதியின் முடிவு வேறு மாதிரியானதாக காணப்பட்டது குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை முடக்குவதற்கு இலங்கை அரசாங்கம் விடுத்தவேண்டுகோளை அவர் நிராகரித்தார்.
குறிப்பிட்ட இளம் அரசியல்வாதிக்கு எதிராக இலங்கையில் வழக்கு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை அவர் தண்டிக்கப்படவுமில்லை, என துபாய் அரச சட்டத்தரணி தீவிரமாக வாதாடினார்.இதனால் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள கூடாது என அவர் குறிப்பிட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.