Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டயலொக் கிரிக்கெட் விருதுகள்

Featured Replies

குஷல் ஜனித்துக்கு விருது

குஷல் ஜனித்துக்கு விருது

 

 

இந்த வருடத்தின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் என்ற விருதை குஷல் ஜனித் பெரேரா பெற்றுக் கொண்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெறும் டயலொக் கிரிக்கெட் விருதுகள் வழங்கும் நிகழ்விலேயே அவருக்கு இந்த கௌரவம் கிட்டியுள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=73643

  • தொடங்கியவர்

Photo

'People's Player of the Year'.

Photo

Photo

Photo

Photo

Photo

Photo

நன்றி:http://www.islandcricket.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

Photo

Photo

Photo

  • தொடங்கியவர்

12096334_1709396209091579_31855785367994

12088472_1709396182424915_46713821572165

12105811_1709396515758215_58294076791621

12096273_1709396529091547_51834385486826

 

  • தொடங்கியவர்

12106731_1709366419094558_84227206975136

12096510_1709366469094553_18955656207741

  • கருத்துக்கள உறவுகள்

ஓ மை கோட் நூவான் குலசேகராவுக்கு விருது கொடுப்பது அரவிந்தவா?...என்ன இப்படிப் போயிட்டார்

  • தொடங்கியவர்

11864917_1709598045738062_34902097578865

12113305_1709598359071364_64419214739781

12095033_1709598435738023_35442891936170

11234070_1709601109071089_41937493832946

12140973_1709601189071081_42551244989410

12091471_1709601262404407_30061364073722

 

  • தொடங்கியவர்

ஆண்டின் சிறந்த வீரர் உட்பட நான்கு விருதுகளை தனதாக்கிய மெத்தியூஸ்

 

ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது உட்பட நான்கு விருதுகளை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தனதாக்கிக்கொண்டுள்ளார்.

Sri-Lanka-Cricket.jpg
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடத்தும் வருடாந்த விருது வழங்கும் விழா நேற்று வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் இடம்பெற்றது.

இதன்போதே இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் , ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது உட்பட ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் , ஒரு நாள் போட்டிகளுக்கான சிறந்த வீரர் மற்றும் ஆண்டின் சிறந்த கசலதுறை வீரர் ஆகிய விருதுகளை தனதாக்கிக் கொண்டார்.

12096389_1709572742407259_95874484254777

இதேவேளை, இவ்வாண்டின் சிறந்த ஜனரஞ்சக வீரருக்கான விருதினை குமார் சங்கக்கார தட்டிச் சென்றார்.

14226_1709575992406934_80307294660458296

ஒரு நாள் போட்டிகளுக்கான சிறந்த சகல துறை வீராங்கனையாக இலங்கை  மகளிர் அணியின் முன்னாள் தலைவி சமரி அதபத்து தெரிவு செய்யப்பட்டார்.

12115552_900807610008255_124741039525192

ஆண்டின் வளர்ந்து வரும் சிறந்த வீரர் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளின் சிறந்த வீரருக்கான விருதினை குசல் ஜனித் பெரேரா பெற்றுக் கொண்டதுடன்  இருபதுக்கு - 20 போட்டிகளில் சிறந்த பந்து வீச்சாளாரக நுவன் குலசேகர தெரிவுசெய்யப்பட்டார்.

12119096_1709405882423945_60391717161943

12088319_1709574512407082_49315574595594

 

http://www.virakesari.lk/articles/2015/10/20/ஆண்டின்-சிறந்த-வீரர்-உட்பட-நான்கு-விருதுகளை-தனதாக்கிய-மெத்தியூஸ்

 

  • தொடங்கியவர்
டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா 2015 இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு அதிசிறந்த கிரிக்கெட் வீரர் உட்பட நான்கு விருதுகள்
2015-10-21 09:49:12

(நெவில் அன்தனி) 

 

டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2014- – 15க்கான கிரிக்கெட் பருவகாலத்தில் துடுப்பாட்டத்தில் அபரிமிதமாக பிரகாசித்த ஏஞ்சலோ மெத்யூஸ், இவ் வருடத்தின் அதி சிறந்த டயலொக்- ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர் விருது உட்பட நான்கு விருதுகளை வென்றெடுத்தார்.

 

128311-anjelow-with-wife.jpg

தனது மனைவி சகிதம் டயலொக்-ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகளுடன் இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ்

.....................................................................................................................................

 

ஒரே வருடத்தில் இலங்கையின் அதிசிறந்த கிரிக்கெட் வீரர் விருது உட்பட நான்கு முக்கிய விருதுகளை வென்றதையிட்டு பெரு மகிழ்ச்சி அடைவதாக விழா முடிவில் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார்.

12831_new.jpg

 

அதி சிறந்த டெஸ்ட் துடுப்­பாட்ட வீர­ருக்­கான விருதை மேற்­கிந்­தியத் தீவு­களின் முன்னாள் அணித் தலைவர் க்ளைவ் லொய்­டி­ட­மி­ருந்தும் அதி சிறந்த சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் துடுப்­பாட்ட வீர­ருக்­கான விருதை மேற்­கிந்­தியத் தீவு­களின் மற்­றொரு முன்னாள் அணித் தலைவர் றிச்சி றிச்­சர்ட்­ஸ­னி­ட­மி­ருந்தும் ஏஞ்­சலோ மெத்யூஸ் பெறுகின்றார்.

.......................................................................................................................................

 

 

பத்தரமுல்லை, வோட்டர்ஸ் எஜ் க்ராண்ட் போல்ரூம் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இரவு கண்கவர் டயலொக் கிரிக்கெட் விருது விழா நடைபெற்றது.

 

ஓய்வுபெற்ற குமார் சங்கக்கார, சுழல்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் ஆகிய இருவரிடமிருந்து டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் பலத்த சவாலை எதிர்கொண்டபோதிலும் இறுதியில் பிரதான விருதை தனதாக்கிக்கொண்டார்.

 

12831kumar-dharmasena-special-award-by-s

நடுவர் குமார் தர்­ம­சேன, விசேட பரி­சொன்றை சிதத் வெத்­த­மு­னி­யி­ட­மி­ருந்து பெறு­கிறார்

......................................................................................................................................

 

டயலொக் விருது விழாவுக்கான கிரிக்கெட் பருவகாலத்தில் டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்த மெத்யூஸ் இந்த இரண்டு வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அதி சிறந்த துடுப்பாட்ட வீரர் விருதுகளை வென்றெடுத்தார்.

 

இந்த விருதுகளுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கையின் அதி சிறந்த சகலதுறை வீரர் விருதையும் ஏஞ்சலோ மெத்யூஸ் வென்றெடுத்தார்.

 

128316-ambrose-ajantha.jpg

அதி சிறந்த சர்­வ­தேச ஒருநாள் பந்­து­வீச்­சா­ள­ருக்­கான விருதை மேற்­கிந்­தியத் தீவுகள் முன்னாள் வேகப்­பந்து வீச்­சாளர் கேர்ட்னி அம்ப்­றோ­ஸி­ட­மி­ருந்து அஜன்த மெண்டிஸ் பெறுகின்றார்

.........................................................................................................................................

 

டயலொக் மக்கள் அபிமான வீரர் விருதை தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக குமார் சங்கக்கார வென்றெடுத்தார். 

 

டெஸ்ட் போட்டிகளில் அதி சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதை ரங்கன ஹேரத்தும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதி சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதை அஜன்த மெண்டிஸும் வென்றெடுத்தனர்.

 

128312-Rangana--test-bowler.jpg

அதி­சி­றந்த டெஸ்ட் பந்­து­வீச்­சா­ள­ருக்­கான விருதை மேற்­கிந்­தியத் தீவு­களின் முன்னாள் அணித் தலைவர் க்ளைவ் லொய்­டி­ட­மி­ருந்து ரங்­கன ஹேரத் பெறு கின்றார்.

........................................................................................................................................

 

சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் அதி சிறந்த துடுப்பாட்ட வீரர் விருது குசல் ஜனித் பேரேராவுக்கும் அதி சிறந்த பந்துவீச்சாளர் விருது நுவன் குலசேகரவுக்கும் வழங்கப்பட்டன.

 

முன்னேறிவரும் வீரருக்கான விருதை குசல் ஜனித் பெரேரா வென்றெடுத்தார்.

 

மகளிருக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதி சிறந்த துடுப்பாட்ட வீராங்கனையாக சமரி அத்தபத்துவும் அதி சிறந்த பந்துவீச்சாளினியாக இனோக்கா ரணவீரவும் அதி சிறந்த சகலதுறை வீராங்கனையாக ஏஷானி லொக்குசூரியவும் தெரிவாகி விருதுகளை வென்றெடுத்தனர்.

 

விசேட விருதுகள்


இலங்கையின் கிரிக்கெட் வீரர்களைக் கௌரவிக்கும் வகையில் இவ் வருடம் வழங்கப்பட்ட மூன்று விசேட விருதுகள் திலக்கரட்ண டில்ஷான், குமார் தர்மசேன, ரொஷான் மஹநாம ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

 

ஊடகவியலாளர்கள்


கிரிக்கெட் விளையாட்டுத்துறை சார்ந்த செய்திகளை சிறப்பாக தொகுத்து பத்திரிகைகளில் வெளியிட்டுவரும் ஊடகவியலாளர்கள் மூவருக்கு பாராட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

 

சண்டே டைம்ஸ் விளை யாட்டுத்துறை பத்தியாளர் எஸ். ஆர். பத்திரவித்தான, தினமின பத்திரிகையாளர் வேர்னன் குணசேகர, லக்பிம விளையாட்டுத்துறை ஆசிரியர் மங்கள தர்மப்பிரேம ஆகிய மூவருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

 

இதேவேளை, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் கடந்த ஏழு வருடங்களாக நடத்தப்பட்டுவரும் பிரமாண்ட விருது விழா வைபவத்தில் இவ் வருடம் முதல் தடவையாக பாடசாலை வீரர் ஒருவர் இரண்டு விருதுளை வென்றெடுத்தார். 

 

டொனவன் அண்ட்றீ கிரிக்கெட் போட்டிகளில் அதி சிறந்த துடுப்பாட்ட வீரர், அதி சிறந்த சகலதுறை வீரர் ஆகிய விருதுகளை ஆனந்த கல்லூரி வீரர் சம்மு ஆஷான் தனதாக்கிக்கொண்டார்.

 

இதனைவிட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான இன்னும் பல விருதுகள் வழங்கப்பட்டன.

 

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா 2015

 

12831_a=njelo-matthews.jpg

நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற  டயலொக் - ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது வழங்கல் விழாவில்,  வரு­டத்தின் அதி சிறந்த கிரிக்கெட் வீர­ருக்­கான டயலொக் - ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதை விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­க­ர­வி­ட­மி­ருந்து ஏஞ்­சலோ மெத்யூஸ் பெறு­கின்றார். டயலொக் ஆசி­யாட்டா குழு­மத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி டாக்டர் ஹான்ஸ் விஜ­ய­சூ­ரி­யவும் படத்தில் காணப்படுகின்றார்.

..............................................................................................................................

 

12831_kumar-sanga.jpg

டயலொக் மக்கள் அபிமான வீரருக்கான விருதை தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடமிருந்து குமார் சங்கக்கார பெறுகின்றார்.

............................................................................................................................

 

 

12831_eshani-boon.jpg

மக­ளி­ருக்­கான சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் அதி சிறந்த சக­ல­துறை வீராங்­க­னைக்­கான விருதை போட்டி பொது­மத்­தி­யஸ்தர், முன்னாள் அவுஸ்­தி­ரே­லிய துடுப்­பாட்ட வீரர் டேவிட் பூனிட­மி­ருந்து ஏஷானி லொக்­கு­சூ­ரிய பெறு­கின்றார். 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12831#sthash.8EEVILtZ.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.