Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

உலக ரத்த கொடையாளிகள் தினம்

உயிர் காப்போம்!

p26b.jpg

சாலையில் ஓரு குழந்தை விளையாடிக்கொண்டிருக்கிறது... சில நாட்களுக்கு முன்பு உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த அந்தக் குழந்தைக்கு ரத்ததானம் செய்தது நீங்கள்தான் என்றால், எப்படி உணர்வீர்கள்... நினைக்கும்போதே பெருமிதமாக இருக்கும்தானே. உயிரைக் காப்பாற்றும் ரத்ததானம் என்று நாம் பேசுகிறோம்... உண்மையில் அது நம்மை மற்றவர்களுடன் இணைக்கிறது. இந்த இணைப்பைப் புரிந்துகொண்டாலே போதும் அதிக அளவில் ரத்ததானம் செய்ய மக்கள் முன் வருவார்கள். ஒரு நாட்டின் மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் பேர் ரத்ததானம் செய்தாலே போதும்... அந்த நாட்டின் ரத்தத் தேவையைப் பூர்த்திசெய்ய முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.


மக்கள் ரத்ததானம் செய்ய முன்வராததற்குக் காரணம், போதிய விழிப்புஉணர்வு இன்மையும், தானம் பற்றிய தெளிவின்மையும்தான். ரத்ததானம் செய்வது குறித்துத் தேவையற்ற பயமும் குழப்பமும் இருக்கின்றன

ரத்ததானம்... சில குறிப்புகள்!

 p27a1.jpg

பொதுவாக, 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்களிடம் இருந்து மட்டுமே ரத்தம் பெறப்படுகிறது. இருப்பினும், சில நாடுகளில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரத்ததானம் செய்ய அனுமதி உண்டு.

ரத்ததானம் செய்பவரின் நலனும் மிக முக்கியம் என்பதில் அனைத்து நாடுகளும் உறுதிபூண்டுள்ளன. ரத்ததானம் பெறும் பை (கவர்) மற்றும் ஊசி தொற்று நீக்கப்பட்டடு (Sterilized) மிகவும் பாதுகாப்பானதாக இருக்கிறது. எனவே, தொற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை. பயப்படத் தேவை இல்லை.

பதின் வயதைத் தாண்டிய அனைவருக்கும் சராசரியாக 4-5 லிட்டர் ரத்தம் உடலில் இருக்கிறது. இதில், சராசரியாக 10 சதவிகிதம் அளவில்தான் ரத்தம் எடுக்கப்படுகிறது. பொதுவாக, உலகம் முழுவதும் ஒரு யூனிட் ரத்தம் (450 மி.லி) எடுக்கப்படும்.

ஆரோக்கியமான ஒருவர், ஒவ்வொரு மூன்று - நான்கு மாதங்களுக்கும் ஒரு முறை ரத்ததானம் செய்யலாம். ரத்தம் மற்றும் அதில் இருந்து எடுக்கப்படும் உப பொருட்களைக் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே பாதுக்காப்பாக வைத்திருக்க முடியும். எனவே, ரத்தத்தின் தேவை எப்போதுமே அதிகம்.

ரத்ததானம் செய்பவர்கள் அதற்கு முந்தைய ஆறு மணி நேரத்தில் மிகவும் அதிகமான உணவுகளைச் சாப்பிடக் கூடாது. மிதமான அளவுகளில் சாப்பிடுவதே சிறந்தது. நன்றாகத் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். உணவுக்குப் பதிலாக ஜூஸும் குடிக்கலாம்.

ரத்ததானம் செய்யும்போது செலுத்தப்படும் ஊசியால் வலி அதிகம் இருக்காது. முள் குத்திய உணர்வுதான் இருக்கும். அரை மணி நேரத்தில் அந்த வலியும் சரியாகிவிடும்.

ஒரு முறை ரத்ததானம் செய்வதால், உங்களால் நான்கு உயிர்கள் வரை காப்பாற்றப்படுகிறது. மேலும், இது உங்கள் உடலுக்கும் நல்லது. புது ரத்தம் உடலுக்குள் உருவாவது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.

 

vikatan

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

13458609_1062008740514486_82612810530755

நியூ சீலாந்து அணியின் முன்னாள் சகலதுறை கிரிக்கெட் நட்சத்திரம் க்றிஸ் கெயார்ன்ஸின் பிறந்தநாள்.

நியூ சீலாந்துக்கு மிக முக்கியமான வீரராக விளங்கிய கெயார்ன்ஸ் அண்மைக்காலத்தில் சூதாட்ட சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார்.

  • தொடங்கியவர்

தோற்றவர்களின் கதை - 1

சுசி திருஞானம்தொடர்

 

p30a.jpg

வமானகரமான படுதோல்விகளைச் சந்தித்த ‘தோல்வியின் சிகரங்கள்’ பற்றி எழுதப் போகிறேன். எல்லா உடைமைகளையும் இழந்தபோதும், எல்லா உறவுகளாலும் பரிகசிக்கப்பட்டபோதும், இலக்கை நோக்கி அசராமல் உழைத்தவர்களின் கதைகளை இங்கே விவரிக்க இருக்கிறேன்.

இவர்களின் பிரமாண்டமான வெற்றியைப் பற்றி மட்டும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், தோல்வி என்ற உலைக்கூடத்தில் இவர்கள் வாங்கிய மரண அடிகள், ரண வேதனைகள், கேவலங்கள் பற்றி யாரும் அதிகம் பேசியது இல்லை. தம்மீது வீசப்பட்ட தோல்விக் கற்களை ஒன்றுகுவித்து, படிக்கட்டுகளாக எப்படி இவர்கள் மாற்றினார்கள் என்பதை மட்டுமே இங்கே விவரிக்க இருக்கிறேன்.

ஹோண்டாவின் வெற்றிப் பயணம்!

“பிழைக்கத் தெரியாத முட்டாள்” என்று அந்த 18 வயது இளைஞனைத் திட்டினார் அவனது அப்பா. “தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன்” என்று கேலி பேசினர் அவனது நண்பர்கள்.

அவன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை முடிவுக்குப் போயிருக்கக்கூடும்.அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியைச் சாதித்த அந்த மாமனிதர் சாய்க்கிரோ ஹோண்டா. தனது வாழ்க்கை அனுபத்தைச் சாறுபிழிந்து சொன்னார்: “வெற்றி என்பது 99 சதவிகிதம் தோல்வி.”

டொயோட்டா கம்பெனிக்கு பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு. யாருக்காகவும் அவர் காத்திருக்கவில்லை. அப்பாவின் வசவு, சக மாணவர்களின் பரிகசிப்புக்கு இடையே, மாதிரி உலைக்கூடம் ஒன்றை 1928-ம் ஆண்டு உருவாக்கினார். இரவு பகலாக உழைத்தார்.

p30.jpgஓராண்டு உழைத்து உருவாக்கிய, மாதிரி பிஸ்டனை பெரும் எதிர்பார்ப்புடன் டொயோட்டா கம்பெனிக்கு எடுத்துச் சென்றார். “எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது பிஸ்டன் இல்லை” என்று நிராகரித்துவிட்டார்கள் பொறியாளர்கள். முதலாவது கனவுத் திட்டம் படுதோல்வி அடைந்தது. மனம் பாரமாக இருந்தது. திரட்டிவைத்த முதலீடு மொத்தமும் காலி. எல்லோரும் வசைமாரி பொழிந்தார்கள்.

புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனப் பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார். மேலும் பல மாதங்கள் விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய பிஸ்டன் மாதிரியை டொயோட்டா கம்பெனி, “அருமை” என்று பாராட்டி ஏற்றுக்கொண்டது. தயாரிப்புக்கு கான்ட்ராக்ட் கொடுக்கப்பட்டது. மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு. பெரிய தொழிற்கூடம் கட்டினால்தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையில் பிஸ்டன் தயாரிக்க முடியும். எனவே, கட்டடம் கட்டத் திட்டமிட்டார் ஹோண்டா.  அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால், அங்கே வரலாறு காணாத சிமென்ட் தட்டுப்பாடு. எவ்வளவோ முயற்சி செய்தபோதும் 10 மூட்டை சிமென்ட்கூட கிடைக்கவில்லை.

“ஒழுங்காக ஏதாவது வேலையில் போய்ச் சேர்ந்துவிடு” - அப்பா.

“வாழ்க்கை முழுவதுமா ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருப்பாய்?” - உயிர் நண்பன்.

தனது நலன் விரும்பிகளுடன் விவாதித்து, சிமென்ட் கலவைக்கு இணையான மாற்றுக் கலவையை உருவாக்கும் ஃபார்முலாவை கண்டுபிடித்தார் ஹோண்டா. ஆங்காங்கே கடன் வாங்கி, அடுத்த சில மாதங்களில் பெரிய தொழிற்சாலையை கட்டி முடித்தார். தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, பிஸ்டன் தயாரிக்கும் தொழில் அமர்க்களமாகத் தொடங்கியது.

கூடவே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது. அமெரிக்கா போட்ட குண்டு, ஹோண்டாவின் தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்துச் சுக்குநூறாக்கியது. ஹோண்டாவின் வாழ்க்கை முடிந்தது என்று பேசிக் கொண்டார்கள் நண்பர்கள். ஆனால், தனது மொத்தத் தொழிலாளர்களையும் திரட்டிக்கொண்டு, தானே களமிறங்கி இடிபாடுகளைச் சீர்செய்து, தொழிற்சாலையை மீண்டும் இயக்கிக் காட்டினார் ஹோண்டா. 

ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகம். ஒரு நாள் திடீரெனத் தாக்கிய நிலநடுக்கம் ஹோண்டாவின் தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கிவிட்டது. மொத்தத் தொழிற்சாலையையும் திருப்பிக்கட்ட முடியாத அவலநிலை. வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மூலப்பொருட்களைக் கிடைத்த விலைக்கு டொயோட்டா கம்பெனிக்கு விற்றுவிட்டார் ஹோண்டா.    இப்படிப்பட்ட நிலைமையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப் பாருங்கள். ஹோண்டா தனது அப்போதைய நிலைமை பற்றிச் சொல்கிறார். “நான் ஆசைப்பட்ட ஒரு திட்டம் தோல்வி அடைந்தால், துளிகூட கவலைப்பட மாட்டேன்... இருக்கிற நிலைமையை எப்படி மாற்றலாம் என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கி விடுவேன்.”

p30b.jpg

இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம். ஜப்பான் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலகட்டம். எங்கும் பெட்ரோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன. எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிள் மிதிக்கிறார்கள். சாய்க்கிரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார். அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது. அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டாவுக்கு ஒரு புத்தம்புது ஐடியா பளிச்சிட்டது.

அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்தியபோது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது.  அதை எடுத்துக்கொண்டு ஜம்மென்று சுற்றி வந்தார் ஹோண்டா.

‘‘அதேபோன்று எனக்கும் செய்துகொடு’’ என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள். அவரும் சளைக்காமல் செய்துகொடுத்தார். விளைவு? அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா. கையில் பணமில்லை. வங்கிகள் கடன் தரத் தயாரில்லை. ‘ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன்’ என்று எல்லோரும் சான்றிதழ் கொடுத்துவைத்திருந்தார்கள். கலங்கவில்லை ஹோண்டா. தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார். முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார். 5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள் முன்வந்து பண உதவி செய்தனர்.  ஹோண்டா மோட்டார் சைக்கிள் கம்பெனி உதயமானது. முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்து விமர்சனங்கள் வந்தபோது, தானே உலைக்கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள் ரகங்களைக் கொண்டுவந்தார்.

அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்கிரோ ஹோண்டா. இப்போது ஹோண்டா கம்பெனி ஆண்டுக்கு சுமார் 2 கோடி மோட்டார் பைக்குகளைத் தயாரிக்கிறது. ஹோண்டா கார்களுக்கு மேலை நாடுகளிலும் பெரும் வரவேற்பு. எத்தனையோ வகை வகையான தயாரிப்புகளில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது இந்த நிறுவனம்.

ஹோண்டா தயாரிப்புகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது, அதன் பிதாமகன் சாய்க்கிரோ ஹோண்டா தனது வாழ்க்கை அனுபவங்களைச் சாறுபிழிந்து சொன்ன வார்த்தைகள்தான்: “வெற்றி என்பது 99 சதவிகிதம் தோல்வி.”

(இன்னும் வெல்வோம்)

p30c.jpg

சுசி திருஞானம்: ஊடகத் துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ‘கிட்ஸ் புன்னகை’, ‘ஜீனியஸ் புன்னகை’ கல்வி மாத இதழ்களின் ஆசிரியர். சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்.

‘என்.டி.டி.வி - விஜய் செய்திகள்’, ‘சன் நியூஸ்’ சேனல் ஆகியவற்றின் முன்னாள் செய்தி ஆசிரியர். ‘வெற்றியின் அறிவியல்’, ‘நேர நிர்வாகம்’, ‘உனக்குள் ஒரு மேதை’ ஆகிய நூல்களை எழுதியவர். ஆக்கபூர்வமான ஊடகவியலாளர் என்று டாக்டர் அப்துல் கலாமால் பாராட்டப்பட்டவர்.

vikatan

  • தொடங்கியவர்

வாயு பலூனில் வானில் பறந்தவாறு 50 ஜோடிகள் ஒரேசமயத்தில் திருமணம் 

 

வானில் வாயு பலூன்களில் பறந்தவாறு ஒரேசமயத்தில் 50 ஜோடிகள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

3532178000000578-3638147-Taking_love_to_

ஜியாங்ஸு மாகாணத்தின் தலைநகரான நன்ஜிங்கில் கடந்த வெள்ளிக்கழமை இடம்பெற்ற இந்த திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள்  செய்திகளை வெளியிட்டுள்ளன. 

வாயுபலூன்கள் தரையிறங்கியதும் புதுமண ஜோடிகள் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றியவாறு வீதியில் ஓடி தமது திருமணத்தைக் கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

353217C400000578-3638147-That_s_the_way_

3532179000000578-3638147-Love_in_the_sky

3532178400000578-3638147-Love_in_the_sky

353217A800000578-3638147-Give_me_a_highe

353217CA00000578-3638147-Excited_One_tou

353217B100000578-3638147-High_love_This_

3532177700000578-3638147-Give_me_a_highe

353217D300000578-3638147-Love_lifts_us_u

353217DC00000578-3638147-Love_is_in_the_

virakesari.lk

  • தொடங்கியவர்

ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்

 
 
maxwell_2892956f.jpg
 

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த கணிதவியலாளரும், கோட்பாட்டு இயற்பியலாளருமான ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் (James Clerk Maxwell) பிறந்த தினம் இன்று (ஜுன் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்கில் பிறந்தார் (1831). தந்தை ஒரு வழக்கறிஞர். மூன்று வயது முதலே நகரும், ஓடும், தான் பார்க்கும், அல்லது சத்தம் எழுப்பும் எல்லா விஷயங்களுமே குழந்தையின் கவனத்தைக் கவர்ந்தன. ‘என்ன?’ ‘ஏன்?’ ‘எப்படி?’ என்று கேள்வி கேட்டவாறே இருந்தான்.

* குழந்தையின் அறிவுக்கூர்மை யால் பெருமிதம் கொண்ட பெற்றோரும் குழந்தை கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் பொறுமையாக பதில் கூறிவந்தனர். குழந்தைப் பருவம் முதலே இயற்கையோடு இயைந்த வாழ்வின் மீதே விருப்பம் இருந்தது.

* அம்மாவிடம் வீட்டிலேயே ஆரம்பக் கல்வி கற்றார். பிறகு எடின்பர்க் அகாடமியில் சேர்ந்தார். 14-வது வயதில் முதல் அறிவியல் கட்டுரையை எழுதினார். 1847-ல் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணிதம், இயற்கை தத்துவம் எனக் குறிப்பிடப்பட்ட இயற்பியல் மற்றும் தத்துவமும் பயின்றார்.

* தனிப்பட்ட முறையில் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தொடர்ந்து அறிவியல் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். கணிதத் திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். 1850-ம் ஆண்டில் கேம்ப்ரிட்ஜ், ட்ரினிட்டி கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றார்.

* நிறங்களின் தன்மைகள் குறித்து ஆராய்ந்தார். தனது ஆய்வு குறித்து ராயல் சொசைட்டி ஆஃப் எடின்பர்கில் முதல் விரிவுரையை நிகழ்த்தினார். விரைவில் அபெர்தீன் பல்கலைக்கழகத்தின் மாரிஸ் கல் கல்லூரியில் இயற்கை தத்துவத் துறையின் தலைவராகப் பதவியேற்றார்.

* மின் காந்தவியல் குறித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். முதன் முதலில் மின்காந்த அலைகள் இருப்பதற்கான ஆதாரங்களைப் பரிசோதனை மூலம் நிரூபித்தார்.

* மின்னியல், காந்தவியல் மற்றும் ஒளியியல் சார்ந்த, ஒன்றுக் கொன்று தொடர்பற்ற முந்தைய ஆய்வுகள், சோதனைகள், சமன்பாடு கள் ஆகியவற்றை இணைத்து 1870-ல் மின்காந்தவியல் கோட்பாடு ஒன்றை உருவாக்கினார். மின்காந்த அலைகளுக்கான ஒருங்கிணைந்த சமன்பாடுகளை உருவாக்கினார். மாக்ஸ்வெல் சமன்பாடுகள் எனக் குறிப்பிடப்பட்ட இது மின்சாரம், காந்தப்புலம், ஒளி அனைத்துமே ஒரே தோற்றப்பாட்டின் வெளிப்பாடுகளே என்பதை விளக்கின.

* வாயுக்களின் இயக்கக் கோட்பாட்டு (kinetic theory of gases) அம்சங்களை விளக்குவதற்காகப் புள்ளியியல் முறை ஒன்றை உருவாக்கினார். இது மாக்ஸ்வெல் விநியோகம் (Maxwell's distribution) எனக் குறிப்பிடப்படுகிறது.

* ரம்ஃபோர்ட் பதக்கம், கீத் பரிசு, ஹாப்கின்ஸ் பரிசு, ஆடம் பரிசு உள்ளிட்ட பல விருதுகள், கவுரவங்கள், பரிசுகளை இவர் பெற்றார். இவரது பெயரில் பல விருதுகள் வழங்கப்பட்டன. பல பல்கலைக்கழகங்களின் அறிவியல் துறை ஆய்வு மையங்கள், அறிவியல் அமைப்புகளுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டன.

* நீச்சல், மலையேற்றம், குதிரை சவாரி ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்தமானவை. கவிதை எழுதும் திறனும் பெற்றிருந்தார். இறுதிவரை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவந்தவரும் தலைசிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவராகப் போற்றப்பட்டவருமான ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல், புற்றுநோய் கண்டு 1879-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 48-வது வயதில் மறைந்தார்.

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: ஸ்யாம்

 

p301.jpg

செல்ஃபி

விருந்துக்கு வந்தவர்கள், சுற்றி நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டனர் கருப்பராயனுக்காக வெட்டப்போகும் கிடாவுடன்!

- சி.சாமிநாதன்


p302.jpg

டிஜிட்டல் விஷன்

தியேட்டரில் புதுப் படத்துக்கான டிக்கெட்களைக் கொடுத்து முடித்தவுடன், மொபைலில் படம் பார்த்துக்கொண்டிருந்தான் தினேஷ்!

- வெ.சென்னப்பன்


p303.jpg

கன்டெய்னர் பொம்மை

``இத்தனை கார்  பொம்மை காட்டியாச்சுல்ல. என்னதான் வேணும் உனக்கு?'' - அப்பா கோபப்பட, ``கன்டெய்னர்'' என்றான் வாண்டு!

- அ.ரியாஸ்


p304.jpg

தெரியாதது தெரிந்தது

ஆயிரம் ஆண்டுகள் பிரசித்திபெற்ற கோயிலைக் கட்டியது யார் எனத் தெரியாத சுற்றுலாப் பயணிக்கு, ஃப்யூஸ் போன டியூப்லைட்டை யார் கொடுத்தார்கள் என்பது மட்டும் தெரிந்தது!

- நந்த குமார்


p305.jpg

அழைப்பு

வீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும் கணவனின் செல்போன் சிணுங்க, எடுத்துப் பார்த்தாள் மனைவி.

அதில் `Home Calling' என்று இருந்தது!

- லக்ஷ்மி சிவராஜன்


p306.jpg

விளையாட்டு

``ஓடியாடி விளையாடி விழுந்துதொலைக்கப் போறீங்க, ஒழுங்கா போய் கார்ட்டூன் சேனலைப் பாருங்க'' என்று குழந்தைகளை விரட்டினாள் பாரதி செல்வி!

- தினேஷ் சரவணன்.


p307.jpg

பிழைப்பு

வெயிலைப் பொருட்படுத்தாமல் சுற்றினான், ஐஸ் வண்டிக்காரன்!

- பெ.பாண்டியன்


p308.jpg

சந்தர்ப்பம்

“வீட்ல நடக்கிற சண்டையை எல்லாம் வெளியில சொல்லிக்கிட்டு இருக்கா!'' - எதிர்வரிசையில் இருக்கும் மனைவியைத் திட்டினார் கணவர், டி.வி விவாத நிகழ்ச்சியில்!

- எஸ்.நந்தகுமார்


p309.jpg

இருக்கை

பேரன் ஈஸி சேரில் ஓய்வாகச் சாய்ந்துபடுக்க, தாத்தா அவனது பீன்பேக்கில் உட்கார்ந்தார்!

- பாளைபசும்பொன்


p3010.jpg

பொறுப்பா... பயமா?

``அந்த ஜோசியர் ராசியான ஆள்தானா?'' - ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டார், பொருத்தம் பார்க்கச் சென்ற பெண்ணின் அப்பா!

vikatan

  • தொடங்கியவர்

13416853_1062006653848028_54547254640787

முன்னணி இளம் இசையமைப்பாளரும் பாடகரும் நடிகருமான G.V.பிரகாஷ் குமாருக்கு இன்று பிறந்தநாள்.

கடந்த இரு வருடங்களில் அதிக திரைப்படங்களில் இசையமைத்தவர்களில் ஒருவரான GVP இனிமையான பல பாடல்களையும் பாடியுள்ளார்.
இப்போது பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.

  • தொடங்கியவர்

கலக்கலாய்... கலர்ஃபுல்லாய்...

 

கீழே உள்ள படங்களை 3D-யில் காண, ஒவ்வொரு படங்களையும் க்ளிக் செய்யவும்

p51a.jpg

p52a.jpg

p53a.jpg

p54a.jpg

p55a.jpg

p56a.jpg

p57a.jpg

p58a.jpg

p59a.jpg

p60a.jpg

p61a.jpg

p62a.jpg

p63a.jpg

p64a.jpg

p65a.jpg

p66a.jpg

p67a.jpg

p68a.jpg

p69a.jpg

p70a.jpg

p71a.jpg

p72a.jpg

p73a.jpg

 
  • தொடங்கியவர்

நாட்டுக்கொரு பாட்டு 7 - இலங்கை தேசிய கீதமும் தாகூரும்!

 
 
  • 3_2867529g.jpg
     
  • Untitled_2867524g.jpg
     

இந்திய தேசிய கீதத்தை இயற்றியவர் யார்? ரவீந்திரநாத் தாகூர் இல்லையா? சரி, இலங்கை, பங்களாதேஷ் தேசிய கீதங்களை இயற்றியது யார்? அதுவும் தாகூர்தான்!

நெருங்கிய உறவு

இலங்கை நம் பக்கத்து நாடு மட்டுமல்ல; நம் கலாச்சாரத்தோடு நெருங்கிய நாடு. நமக்கு சுதந்திரம் கிடைத்து ஆறு மாதங்கள் கழித்து, 1948 பிப்ரவரி 4 அன்று இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையின் தேசிய கீதம் இயற்றப்பட்டுவிட்டது. ஆனால், அதுதான் இலங்கையின் தேசிய கீதமாகப் போகிறது என்று அப்போது யாருக்கும் தெரியாது.

குரு - சிஷ்யன்

இலங்கையைச் சேர்ந்தவர் கவிஞர் சமரகூன். கவிஞர் தாகூரின் மாணவர். இந்தியாவில் தாகூருடன் தங்கிப் பாடம் படித்தவர். சமரகூன், 1939-ல் இலங்கை திரும்பினார். 1940-ம் ஆண்டு ஒரு கல்லூரியில் அவர் வேலை பார்த்தார். அப்போது, இலங்கை தெற்கு பிராந்தியத்தின் பள்ளி அதிகாரி ஜெயசூரியா, ஒரு பாடல் எழுதித் தருமாறு கவிஞரைக் கேட்டார்.

குருவின் கைவண்ணம்

உடனே சமரகூன் தாகூரை அணுகினார். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 'பெங்காலி' மொழியில் ஒரு பாடல் எழுதி இசையமைத்துக் கொடுத்தார் தாகூர். சமரகூன் அதை சிங்களத்தில் மொழிபெயர்த்தார். இதை எந்த ஆண்டு எழுதினார் என்ற தகவல் இல்லை. ஆனால், பாடலை இயற்றியவர்கள் தாகூர், சமரகூன்தான். கல்லூரி நிக்ழ்ச்சி ஒன்றில் 'கோரஸ்' ஆக இப்பாடல் பாடப்பட்டது. எல்லோருக்கும் பிடித்துப்போனது.

போட்டி - தேர்வு

விடுதலைக்கு முன்பாக, ‘லங்கா கந்தர்வ சபா' என்ற அமைப்பு, தேசிய கீதத்துக்காக ஒரு போட்டி வைத்தது. போட்டிக்கு வந்தவைகளில், சமரகூனின் ‘நமோ நமோ மாதா' வும், லங்கசிங்கே & லேனல் இதிரிசின்கே இயற்றிய ‘ லங்கா மாதா' வும் இருந்தன. இரண்டாவது பாடல் தேர்வானது. 1948 பிப் 4, சுதந்திர நாளன்று சிலோன் ரேடியோவில் இது ஒலிபரப்பானது. ஆனால், இப்பாடல் பற்றி சர்ச்சை எழுந்ததால் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பாடப்படவில்லை.

கோரிக்கை

1950-ல், இலங்கையின் நிதியமைச்சர் ஜே.ஆர்.ஜயவர்தனே, கவிஞர் சமரகூன் எழுதிய ‘நமோ நமோ..' பாடலை அதிகாரபூர்வ தேசிய கீதமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதன் பிறகு, தேசிய கீதத்தைத் தேர்வு செய்து பரிந்துரைக்க, ஒரு குழு அமைக்கப்பட்டது. பல பாடல்கள் பரிசீலனைக்கு வந்தன. இறுதியில், சில மாற்றங்கள் செய்து, ‘நமோ நமோ...' பாடல் பரிந்துரைக்கப்பட்டது. 1951 நவம்பர் 22 அன்று இலங்கை அரசு இதை ஏற்றுக்கொண்டது.

இலங்கையைச் சேர்ந்த தமிழ்க் கவிஞர் எம். நல்லத்தம்பி, இப்பாடலைத் தமிழில் மொழி பெயர்த்தார். 1952 சுதந்திர நாளன்று, 'தேசிய கீதம்' என்ற அந்தஸ்துடன் முதன் முறையாக இப்பாடல் இசைக்கப்பட்டது. இந்த வரலாறு இத்துடன் முடிந்துவிடவில்லை.

சோகம்

இலங்கையில் இரண்டு பிரதமர்கள் அகால மரணம் அடைந்ததற்கு, தேசிய கீதத்தின் முதல் வரியே காரணம் என்று சிலர் கருதினர். அதனால், பாடல் வரிகளை மாற்ற கோரிக்கை எழுந்தது. ஆனால், மாற்றத்துக்கு சமரகூன் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், அதையும் மீறி 1961 பிப்ரவரியில் பாடலில் கொஞ்சம் மாற்றம் செய்யப்பட்டது. தனது பாடல் சிதைக்கப் பட்டுவிட்டது என்று எழுதி வைத்து விட்டு, 1962 ஏப்ரல் மாதம், கவிஞர் சமரகூன் தற்கொலை செய்துகொண்டது தனிக்கதை.

சரி, என்ன சொல்கிறது இலங்கையின் தேசிய கீதம்?

2_2867526a.jpg

ஸ்ரீ லங்கா மாதா அப் ஸ்ரீ லங்கா

நமோ நமோ நமோ நமோ மாதா

சுந்தர சிரி பரணி

சுரேந்தி அதி சோபமான லங்கா

தான்ய தன யாலேக மல்பலதுரு பிரி,

ஜய பூமி ய ரம்யா

அப் ஹத் சப் சிரி சேத் சதனா

ஜீவ் நயி மாதா!

பிலிஹனு மெனு அபு

பக்தி பூஜா

நமோ நமோ மாதா

அபு ஸ்ரீலங்கா

நமோ நமோ நமோ நமோ மாதா.

ஒபவே அபு வித்யா

ஒபுமய அபு சத்யா

ஒபுவே அபு ஷக்தி

அபு ஹூட துல பக்தி

ஒப அபு ஆலூகே

அபுகே அனு ப்ரானே

ஒபு அபு ஜீவன வே

அபு முக்தய பேவே

நவ ஜீவன டெமினே

நிந்தின அப

புபுடு கரன் மாதா

ஞான வீர்ய வதவமினா

ரகெனா யனு மென ஜய பூமி

எகமவ குகடரு கலா பாவினா

யாமு யாமு வீ நொபமா

ப்ரேம வதா சம பேத

துராரா தா

நமோ நமோ மாதா

அபு ஸ்ரீலங்கா

நமோ நமோ நமோ நமோ மாதா.

 

தமிழாக்கம்

ஸ்ரீ லங்கா தாயே - நம ஸ்ரீ லங்கா.

நமோ நமோ நமோ நமோ தாயே.

நல்லெழில் பொலி சீரணி

நலங்கள் யாவும்

நிறைவாய் மணி லங்கா

ஞாலம் புகழ் வளவயல்

நதிமலை மலர்நறுஞ்

சோலைகொள் லங்கா

நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்.

நமதுதி ஏல் தாயே

நமதலை நினதடி மேல் வைத்தோமே

நமதுயிரே தாயே - நம ஸ்ரீ லங்கா

நமோ நமோ நமோ நமோ தாயே.

நமதாரருள் ஆனாய்

நவை தவிர் உணர்வானாய்.

நமதேர் வலியானாய்.

நவில் சுதந்திரம் ஆனாய்.

நமதிளமையை நாட்டே

நகுமடி தனையோட்டே

அமைவுறும் அறிவுடனே

அடல்செறி துணைவருளே.

நமதோர் ஒளிவளமே

நறியமலர் என

நிலவும் தாயே.

யாமெலாம் ஓருயிர் கருணை

அனை பயந்த

எழில்கொள் சேய்கள் எனவே

இயலுறு பிளவுகள் தமை அறவே

இழிவென நீக்கிடுவோம்.

ஈழ சிரோண்மணி வாழ்வுறு பூமணி

நமோ நமோ தாயே - நம் ஸ்ரீலங்கா

நமோ நமோ நமோ நமோ தாயே.

(தேசிய கீதங்கள் ஒலிக்கும்)

tamil.thehindu.

  • தொடங்கியவர்
 

வரலாற்றில் இன்று.....

ஜுன் - 14

 

1276 :  மொங்­கோ­லிய ஆக்­கி­ர­மிப்புப் படை­யி­ன­ரி­ட­மி­ருந்து சீனாவின்  சோங் வம்ச அரச குடும்­பத்­தினர் 8 வய­தான ஸாயோ ஷீயை மன்­ன­ராக்கி முடி­சூ­டினர். 

 

1645 : பிரித்­தா­னிய மன்­ன­ருக்கு ஆத­ர­வான 12,000 பேர் கொண்ட படையை நாடா­ளு­மன்­றத்­துக்கு ஆத­ர­வான 15,000 பேர் கொண்ட படை தோற்­க­டித்­தது.

 

747space-monkey.jpg1777 : நட்­சத்­தி­ரங்­களும் கோடு­களும் கொண்ட கொடி அமெ­ரிக்க தேசிய கொடி­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது.

 

1800 : நெப்­போ­லி­யனின் படைகள் இத்­தா­லியை மீண்டும் கைப்­பற்­றின.

 

1807 : நெப்­போ­லி­ய­னின் படைகள் போலந்தில் ரஷ்ய படை­களை தோற்­க­டித்­தன.

 

1830 : அல்­ஜீ­ரியா மீது படை­யெ­டுத்த 34,000 பிரெஞ்சு துருப்­பினர் அல்­ஜீ­ரி­யாவில் தரை­யி­றங்க ஆரம்­பித்­தனர்.

 

1846 : மெக்­ஸிகோ வச­மி­ருந்த கலி­போர்­னி­யாவின் சோனோமா நகரில் மெக்­ஸிகோ ஆட்­சிக்கு எதி­ராக கிளர்ச்சி ஏற்­பட்டு கலி­போர்­னியா குடி­ய­ரசு பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. பின்னர் அப்­ப­கு­தியை அமெ­ரிக்கா கைப்­பற்­றி­யது.

 

1872 : கன­டாவில் தொழிற்­சங்­கங்கள் சட்­டபூர்வமா­ன­தாக்­கப்­பட்­டன.

 

1900 : ஹவாய் தீவு அமெ­ரிக்­காவின் ஒரு பிராந்­தி­ய­மாக்­கப்­பட்­டது.

 

1907 :  நோர்­வேயில் பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை அளிக்­கப்­பட்­டது.

 

1926 : முதலாம் உலக யுத்­தத்­தின்பின் அமைக்­கப்­பட்ட லீக் ஒவ் நேசன்ஸ் அமைப்­பி­லி­ருந்து பிரேஸில் வெளி­யே­றி­யது.

 

1940 : பிரான்ஸின் தலை­நகர் பாரிஸை ஜேர்மன் படைகள் கைப்­பற்­றின.

 

1940 : சோவியத் யூனியன் விதித்த நிபந்­த­னைகள், காலக்­கெ­டு­வினால் லித்­து­வே­னியா சுதந்­தி­ரத்தை இழந்­தது.

 

1949 : 2 ஆம் அல்பேர்ட் எனும் பெய­ரு­டைய குரங்­கொன்று அமெ­ரிக்­கா­வினால் விண்­வெ­ளிக்கு அனுப்­பப்­பட்­டது. விண்­வெ­ளிக்கு சென்ற  முதல் குரங்கு இது.

 

1959 : டொமி­னிக்கன் குடி­ய­ரசில் ரபாயெல் ட்ருஜி­லோவில் ஆட்­சியைக் கவிழ்ப்­ப­தற்­காக கியூபாவி­லி­ருந்து டொமி­னிக்கன் குழு­வொன்று புறப்­பட்­டது. இக்­கு­ழுவில் நால்­வரைத் தவிர ஏனையோர் கொல்­லப்­பட்­டனர்.

 

1962 : ஐரோப்­பிய விண்­வெளி முகவரகம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

1967 : சீனா தனது முத­லா­வது ஐத­ரசன் குண்டை பரி­சோ­தித்­தது.

 

1985 : கிறீஸின் ஏதென்ஸ் நக­ரி­லி­ருந்து புறப்­பட்ட விமா­ன­மொன்று ஹிஸ்­புல்லா  கிளர்ச்­சி­யா­ளர்­களால் கடத்­தப்­பட்­டது.

 

1994 : கன­டாவின் வன்­கூவர் நகரில் நடை­பெற்ற ஹொக்கி போட்­டி­யொன்றின் பின் ஏற்­பட்ட வன்­மு­றை­க­ளை­ய­டுத்து 200 பேர் கைது செய்­யப்­பட்­டனர்.

 

2002 : பூமியி­லி­ருந்து 121,000 கிலோமீற்றர் தூரத்தில் விண்கல்லொன்று கடந்து சென்றது. இது சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்காகும்.

2014 : யுக்ரைனில் அந்நாட்டு விமானப்படை விமானமொன்று சுட்டுவீழ்த்தப்பட்டதால் 49 பேர் உயிரிழந்தனர்.
 
metro.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13413496_1156321414426647_61915045180420

13417607_1062640477117979_84405147999152

 

ஜேர்மனியைச் சேர்ந்த முன்னாள் மகளிர் டென்னிஸ் சம்பியன் ஸ்டெஃபி க்ராஃப் (Steffi Graf) பிறந்த தினம்.

இவர் அமெரிக்க ஆண்கள் டென்னிஸ் சம்பியன் அன்றே அகாஸியின் மனைவியாவார்.
Happy Birthday Stefi Graf

  • தொடங்கியவர்

நண்பருடன் 2 ஆண்டுகளாக கடலில் உலகைச் சுற்றும் கோழி (ஆச்சர்ய வீடியோ)

மோனிக் என்ற கோழி, தனது நண்பருடன் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக கடல் மூலம் உலகைச் சுற்றி வருகிறது.

பிரான்ஸைச் சேர்ந்த 24 வயது இளைஞரான கியூரக் சவுடீ என்பவர், தனது சிறிய படகில் உலகைச் சுற்றத் திட்டமிட்டார். இதற்காக அவர் துணையாகத் தேர்ந்தெடுத்தது மோனிக் என்ற கோழியை. கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அந்த கோழியுடன் உலகை அவர் சுற்றி வருகிறார். உலகின் மிகவும் வெப்பமான கடல்பகுதிகள் முதல், சூரியனே பல மாதங்கள் உதிக்காத கடல் பகுதி வரை பல பகுதிகளைச் சுற்றி வந்துவிட்டனர்.



 

பிரான்ஸின் கேனேரி தீவுகளில் தொடங்கிய அவர்களது கடல் பயணம், ஸ்பெயின் கடல்பகுதி கடந்து கரீபியக் கடற்பகுதி வழியாக ஆர்டிக் கடலுக்குள் தங்களது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். மோனிக் உடனான பயணம் சிறப்பானதாக இருப்பதாக சவுடீ தெரிவித்துள்ளார்.

vikatan

  • தொடங்கியவர்

13458584_1062638627118164_39776761854728

சமூக சிந்தனையாளரும், புரட்சியாளரும், அடக்குமுறைக்கு எதிரான போராளியாகவும் விளங்கிய சே குவேராவின் பிறந்த தினம்.

Vikatan EMagazines Foto.
 

ஜூன் 14: போராளி சே குவேரா பிறந்த தினம் இன்று - சிறப்பு பகிர்வு..

அநியாயங்களிடையே பிறக்கிறான் 'சே' !

"கோழையே, சுடு! நீ சுடுவது 'சே'வை அல்ல; ஒரு சாதாரண மனிதனைத்தான்!" தன் கால்தடம் பதியும் நிலபரப்பு எல்லாம் என் தேசமே என்று முழங்கிய 'சே'வின் இறப்பில் பிறந்த செவ்வரிகள் இவை.

'சிரிக்கும் கண்கள், புகைக்கும் உதடுகள், சீவி முடியாத தலைமயிர்,பயணித்து கொண்டேயிருக்கும் கால்கள், ஓயாத போராட்டங்கள்' இதுவே எர்னெஸ்டோ 'சே'குவேராவின் முத்திரைகள்.

உலக வரலாற்றில் 'சே'வின் போராட்ட பேச்சுகள் அழுத்தமானவை,அவையாவும் ஏகாதிபத்தியத்தை துரத்தி அடிக்கக்கூடியவை.இப்படியிருந்தது அவரின் பேச்சுகள் "ரஷ்ய ஏவுகணைகள் கியூபாவில் இறங்கினால் அது முதலில் அமெரிக்க நகரங்களையே குறிவைக்கும். அமெரிக்கா ஒரு கழுதைப்புலி, இதனின் கொடிய ஏகாதிபத்தியத்தை வேரறுப்பேன்"என சவாலிட்டார்.'அமெரிக்காவால் பாதிக்கப்படும் சிறிய நாடுகளுக்கு உதவுவது ரஷ்யாவின் கடமை'என ரஷ்யாவுக்கும் அறிவுரைத்தார்.

'சே'வின் கால்தடங்கள் லத்தீன் அமெரிக்க பகுதிகள்,ஆப்பிரிக்க நாடுகள்,ஆசிய நாடுகள் என அநியாயங்களின் பிறப்பிடத்தில் எல்லாம் பதிந்தது.கியூபா விடுதலையை கண்டதே 'சே'வின் புரட்சியால் தான்.

"சாவை எண்ணி ஒருபோதும் நான் கவலை கொள்வதில்லை, என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை தூக்கிக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும் !" என்ற 'சே'மரணத்தை கண்ட அஞ்சிடாத மனிதராகவே வாழ்ந்து வந்தார்.

இப்படியான 'சே'ஒரு மருத்துவர்.ஆஸ்துமாவின் பாதிப்போடே அடர்ந்த காடுகளில் போராடியவர்.
'மனிதனுக்கு மனிதன் எவனும் இங்கு அடிமையில்லை' என்பதே 'சே'வின் கோட்பாடு. இவ்வுலகத்தை குலுக்கிய பெருந்தலைவர்களின் ஆயுட்காலம் மிகக்குறைவே,அவர்களது மரணமும் மர்மமானதே.ஆனால் அவர்களது சித்தாந்தத்திலேயே அநியாயங்களின் உலகம் தோற்கடிக்கப்படுகின்றது. இவ்வுலகத்தை குலுக்கும் எந்தவொரு தேசப்போராட்டமும் வர்கப்போராட்டமும் இவர்களை மறப்பதில்லை.மாவீரம் என்பது வீரத்தால் முடிசூடப்படுவதல்ல,எண்ணத்தால் - செயல்பாட்டால் - மனிதத்தால் முடிசூடப்படுவது.

இவ்வுலகத்தில் சீறி சினந்த தோட்டாக்கள் யாவுமே தன் சொந்த நாட்டு மக்களுக்காக பாய்ந்தது.'சே'வின் தோட்டாக்கள் மட்டுமே இனங்கள் மறந்து மொழிகள் அற்று நாடுகளின் எல்லைகள் அறியாமல் அநியாயங்களிடையே சிக்கித்தவித்த மனிதனுக்காக பாய்ந்தது. மாவீரர்களை மரணம் புதைப்பதில்லை,விதைக்கிறது !

இன்றும் கியூபா பள்ளி மாணவர்கள் பள்ளிகளில் தினந்தோறும் சொல்வது என்ன தெரியுமா ? 'எங்கள் முன்னோர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தார்கள்,நாங்கள் 'சே'வை போல் இருப்போம்' என்பதுவே !

நாமும் 'சே'வைப் போல் இருப்போம் மனிதனாக...நல்ல தோழனாக.

vikatan

  • தொடங்கியவர்
அழகோவியம்s Foto.

ஒரு குட்டிக் கதை!


ஆற்றங்கரைக்குத் தன் மனைவியை அழைத்துப் போயிருந்தார் ஒருவர். அவளிடம் ஒரு பையைக் கொடுத்தார். பெரிய பெரிய கற்களைக் காண்பித்தார்.
“இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு” என்றார். மனைவி நிரப்பி எடுத்து வந்தாள். “இதற்கு மேல் நிரப்ப முடியாது” என்றாள்.
கணவர் கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார். அதே பையில் போட்டுக் குலுக்கினார்.
அவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின.
ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை. “இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா?” கேட்டான் மனைவி.
கணவர் அங்கேயிருந்த மணலை அள்ளிப் பையில் போட்டார். பையை மேலும் குலுக்கினார். கற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது. “இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால், பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா?
என்று கணவர் கேட்டபோது இருந்திருக்காது என்று ஒப்புக் கொண்டாள் மனைவி
“வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய அன்பு, கருணை, உடல்நலம், மனநலம் போன்ற உன்னதமான விஷயங்கள் பெரிய கற்கள் போன்றவை.
வேலை, வீடு, கார் போன்ற செல்வங்கள் கூழாங்கற்களுக்குச் சமமானவை.
கேளிக்கை, வீண் அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை.
முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடுங்கள். அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும். ஆனால், உங்கள் வாழ்க்கையை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால், முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது.
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
நல்லதையே செய்வோம் நல்லோராய்
வாழ்வோம்

  • தொடங்கியவர்
சேற்றுத் தின ஓட்டம்
 

சேறு, முட்­கம்­பிகள் மற்றும் பல்­வேறு தடை­களைக் கடந்து ஓடும் ஓட்டப் போட்டி­யொன்று ஸ்பெய்னில் அண்­மையில் நடை­பெற்­றது.

 

17307m1.jpg

 

17307m3.jpg

 

“சேற்றுத் தின ஓட்டம்” எனும் இப்­ போட்டி ஸ்பானிய தலை­நகர் மட்­றிட்­டி­லுள்ள எல் கொலோசோ இரா­ணுவத் தளத்தில் நடை­பெற்­றது.

 

17307m2.jpg

 

17307m4.jpg

 

பெரும் எண்­ணிக்­கை­யான ஆண்­களும் பெண்­களும் இப்­ போட்­டியில் பங்­கு­பற்­றினர்.                                     

 

17307mud.jpg

 

(படங்கள்: ரோய்ட்டர்ஸ்)

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
 
 
 
Vikatan EMagazines Foto.
 

ஜூன் 14: இன்று உலக ரத்த தானம் செய்வோர் தினம்


** வழிகாட்டியை இருந்திடுங்கள்... **

உடலில் புகுந்து,
உயிராய் கலந்து,
நமக்கே தெரியாமல்
எங்கோ எவரோ
உயிர் பிழைக்க
உதவும்
இந்த இரத்தம்!!

ஓடும்
இந்த இரத்தம்
புதிதாய் ஊற்றெடுக்கடும்,
பல உடம்பு
மாறி ஓடட்டும்
வரம்புகள் இன்றி.....

பெருமை
கொள்ளுங்கள்....
உங்கள் இரத்தம்
ஒரு உயிரை காத்தது என்று...

கர்வமாய் சொல்லுங்கள்,
உங்களை போன்ற
வள்ளல்கள்
ஆயிரம் பேரை
உருவாக்கினேன் என்று...

இரத்த தானம் செய்யுங்கள்,
பிறர் செய்ய
வழிகாட்டியை இருந்திடுங்கள்...

  • தொடங்கியவர்

சே தினமும் பிறந்து கொண்டிருக்கிறான்...!

Che.jpg

வாலேகிராண்டாவில், 'சே' புதைக்கப்பட்ட இடத்தின் அருகில் இருந்த தபால் தந்தி அலுவலக சுவற்றில் இப்படி எழுதப்பட்டு இருந்தது, ''அவர்கள் நினைத்ததுபோல் இல்லாமல் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் சே..." எவ்வளவு அர்த்தம் பொதிந்த வாக்கியம் இது...? இந்த ஒரு வரியில் எவ்வளவு நம்பிக்கையும், கம்பீரமும் வெளிப்படுகிறது. இந்த உலகத்தின் எல்லைகள் கடந்து, அரசியலை புரிந்துகொள்ள இந்த ஒரு வாக்கியத்தை அதன் முழு அர்த்தத்தில் நாம் புரிந்துகொண்டாலே போதும்.

ஆம். இந்த வாக்கியத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள். உங்களுக்குள் கேள்வி கேளுங்கள், அவர்கள் யார்...? அவர்கள் ஏன் 'சே' சாக வேண்டும் என்று நினைத்தார்கள்...? 'சே'வின் பூத உடல் மட்டும் அல்ல, அவன் குறித்த நினைவுகள்கூட ஏன் மரித்துப்போக வேண்டும் என்று விரும்பினார்கள்...? ஏன் ‘சே’ என்னும் ஒற்றை எழுத்தை வரலாற்றின் பக்கங்களில் இருந்து கிழித்துவிட வேண்டும் என்று துடித்தார்கள்...?  இந்த கேள்வியின் சரியான விடையில்தான், உலகத்தின் மொத்த அரசியலும் இருக்கிறது.

அவர்கள் நம்மை விட  ‘சே’ வை நன்கு புரிந்து வைத்திருந்தார்கள்...

'சே'வை விரும்புபவர்கள், 'சே'வை பின்பற்றுபவர்கள், 'சே'வை தங்கள் குருவாக ஏற்றுக்கொண்டவர்களைவிட, அவனை இல்லாமல் செய்துவிட வேண்டும் என்று விரும்பிய, அந்த அவர்கள்தான் 'சே'வை நன்கு புரிந்து வைத்திருந்தார்கள். அந்த அவர்களுக்கு தெரிந்து இருந்தது 'சே' என்பது வெறும் பெயர்ச்சொல் அல்ல. அது ஒரு இயக்கம் என்பது. அந்த இயக்கம் குறித்த நம்பிக்கை மக்களிடம் பரவுமென்றால், தாங்கள் பரிதாபமாக தோற்போம் என்பது, அந்த அவர்களுக்கு தெரிந்தே இருந்தது. அதனால், 'சே'வை யாருக்கும் தெரியாமல் கொன்று புதைத்துவிட வேண்டும் என்று விரும்பினார்கள்.

அவன் புதைக்கப்பட்ட இடம் கூட யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்று நினைத்தார்கள். அப்படி செய்துவிட்டதாக சில காலம் நம்பவும் செய்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்தது போல் இல்லாமல், 'சே' இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் உடல் இவ்வுலகில் நடமாடிய காலத்தைவிட அவன் இன்று உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

cheeeee.jpg



அவர்களுக்கு 'சே' இன்னும் அச்சமூட்டுபவனாக இருக்கிறான்.  அவனின் கண்களைக் கண்டு அவர்கள் இன்னும் நடுங்குகிறார்கள். ஆனால், அந்த  அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் மீண்டும் 'சே' மீது ஒரு தாக்குதல் தொடுக்கிறார்கள். 'சே' குறித்த பிம்பத்தை மாற்றத் துடிக்கிறார்கள். அவனை சித்தாந்தமற்ற சாகசக்காரனாக சித்தரித்து, அவனை ஒரு பண்டமாக ஆக்க பார்க்கிறார்கள்.  சட்டை, தேநீர் கோப்பை, ஏன் பீர் பாட்டில் வரை அவன் படத்தை அச்சடித்து, அவன் முகத்தை காட்டி லாபம் சம்பாதிக்க துடிக்கிறார்கள். அவர்களின் நோக்கம், இதன் மூலம் 'சே' முன்மொழிந்த சித்தாந்தத்தை பரவலாக்குவது அல்ல. 'சே'வின் சித்தாந்தத்தை மங்கலாக்கி, அவனை ஒரு திரைப்பட சாகசக்காரனாக மட்டுமே சித்தரிப்பது.

சிட்னியை சேர்ந்த கட்டுரையாளர் ரேச்சல் ராபர்ட், தன் நெஞ்சில் இல்லாவிட்டாலும், மார்புகளில் சேகுவேரா வசிக்கிறார் என்னும் கட்டுரையில்  இவ்வாறாக எழுதுகிறார், " என்னுடைய சொந்த நகரமான பைரான்பேயில் சேகுவேரா வாழ்ந்து, மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறார். நான் வழக்கமாக அவரை பார்க்க முடிகிறது. சில நேரங்களில் இரவில் ரயில்வே பாருக்கு வந்து குடித்துவிட்டு இசையைக் கேட்டுச் செல்கிறார். சில நேரங்களில் நண்பர்களோடு டீக்கடையில் நின்று அரட்டை அடிக்கிறார்."

இதில் ரேச்சல் குறிப்பிடுவது, ‘சே’ முகம் பதித்த டீ -சர்ட் அணிந்து இருந்தவர்களை.

'சே'வை ஒரு காலமும் வெல்ல முடியாது என்று முடிவுக்கு வந்த பின், 'சே'வை அவர்கள் உள்வாங்க துவங்கிவிட்டார்கள். 'சே'வை உள்வாங்குவது என்றால், அவன் சித்தாந்தத்தை அல்ல... அவனை ஒரு சாகசக்காரனாக சித்தரித்து பணம் பார்ப்பது மட்டும்தான் அவர்கள் நோக்கம். இதன் மூலம் 'சே' குறித்த பிம்பத்தை மாற்றிவிட முடியும் என்று நம்புகிறார்கள்.

நாம் அவர்களை புரிந்துகொள்வோம்...

'சே' நிச்சயம் ஒரு சாகசக்காரன் அல்ல... நிச்சயம் சித்தாந்தமற்ற சாகசக்காரன், மரணத்தைக் கண்டு அஞ்சுவான். ஆனால் 'சே', கொல்லப்படுவதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன், அவருக்கு அந்தப் பள்ளிக்கூடத்தில் உணவு கொடுத்து பேசிக்கொண்டிருந்த ஆசிரியை ஜூலியஸ் கோர்ட்டஸ் என்னும் பத்தொன்பது வயது பெண்மணியிடம், பள்ளிக்கூடச் சூழலை பார்த்துவிட்டு இவ்வாறாக சொல்கிறான், 'இதுபோன்ற சூழலில் எப்படி குழந்தைகள் இங்கு படிப்பார்கள்? ஒருவேளை  நான் பிழைத்திருந்தால் நான் உங்களுக்கு நல்ல பள்ளிக்கூடம் கட்டித் தருகிறேன்..' இப்படி நிச்சயம் வெறும் சாகசக்காரனால் பேச முடியாது.

CheGuevera.png

'சே' தன் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறாக எழுதி இருக்கிறார், ''பலர் என்னை சாகசக்காரனாக அழைக்கலாம். ஒரு வித்தியாசம். தன்னுடைய நம்பிக்கைகளை உண்மையென்று காட்ட தன்னையே பணயம் வைக்கிற சாகசக்காரன்தான் நான்..."
 
ஆனால், அவர்கள் 'சே'வின் நம்பிக்கைகள் என்னவென்று மக்கள் தெரிந்துக் கொள்வதை விரும்புவதில்லை. அவர்களுக்கு 'சே'வும் ஒரு பண்டம்.  அவ்வளவே.

'விளைவுகளை ஏற்படுத்தாத வார்த்தைகள் முக்கியமற்றவை...' என்பார் சே. அவன் நம்பிக்கையையும், சித்தாந்தத்தையும் புரிந்துகொள்ளாமல் வெறும் டி-சர்ட் அணிந்துகொள்வதால் மட்டும் எதுவும் நடந்துவிடப்போவதில்லை.

எப்படி அவர்கள் நம்மைவிட 'சே'வை அதிகம் புரிந்து வைத்திருக்கிறார்களோ... அதன் மூலம்  'சே'வை  வீழ்த்த, உள்வாங்க துடிக்கிறார்களோ... நாமும் அதுபோல் அவர்களை அதிகம் புரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களை வெல்ல முடியும்!

சே குவேரா என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா இதே நாளில்தான் 1928 ம் ஆண்டு  அர்ஜென்டீனாவில் பிறந்தார்

vikatan

  • தொடங்கியவர்

555 நாட்கள் இதயம் இல்லாமல் வாழ்ந்த வாலிபர்!

 

H1.jpg

ம் உடலில் கை, கால், மூளை, நுரையீரல் முதலான அனைத்து உறுப்புகளுக்குமே ஒரே சீராக ரத்தத்தை உந்தித்தள்ளி, நம்மை இயக்கி வரும் இயந்திரமே இதயம்தான். இதயம் இல்லாமல் நம்மால் சில நொடிகள், ஏன் ஒரு நொடிகூட இயங்க முடியாது. ஆனால், Stan Larkin அப்படி இல்லை!

மிச்சிகனைச் (Michigan) சேர்ந்த லார்கினுக்கு 16 வயது இருக்கும் போது, அவருக்கு ARVD (arrhythmogenic right ventricular dysplasia) என்னும் இதய நோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இவரது இதயத்துடிப்பு ஒழுங்கற்றதாக இருந்தது. இது மிகவும் ஆபத்தானது என்ற காரணத்தினால், இவரது உடலில் இதயத்துடிப்பைச் சீராக்க ஒரு அதிர்வு கருவி பொருத்தப்பட்டது. இதனால் இவர் அதிகமான வேலைகளைச் செய்ய முடியாமல் போனது.

இத்துடன் விதி,  தன் விளையாட்டை நிறுத்தவில்லை. ஏப்ரல் 2012 ல், லார்கினின் இதயம் சுத்தமாக செயலிழந்தது. ஏற்கெனவே இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக, பொருத்தமான இதயத்திற்காகக் காத்திருந்த நூற்றுக்கணக்கானவரோடு, இவரும் காத்திருந்தார். USA வில் இதயத்திற்காக காத்திருந்தவர்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 22 பேர் மரணத்தைத் தழுவினார்கள்.

 

H2.jpg

இவரது உடல் செயலிழந்து கொண்டு வருவதை உணர்ந்த மருத்துவர்கள், நவம்பர் 2014 ல் இவரது இதயத்தை அகற்றிவிட்டு 'Big Blue'  என்ற  இயந்திரத்தைப் பொருத்தினார்கள். இந்த இயந்திரம் இவர் ரத்தத்தை சீராக உந்தித்தள்ளி, உயிர்வாழச் செய்தது. ஆனால் படுத்த படுக்கையாக இருந்தார். பிறகு, Freedom portable என்னும் இயந்திரத்தைப் பொருத்தினார்கள். இதை ஒரு பேக்கினுள் வைத்து விடலாம். அவ்வளவு சிறியது.

இதுகுறித்து லார்கின் கூறுகையில், "இது நிஜ இதயத்தைப் போன்றதுதான். என்ன... நம் உடலினுள் சில குழாய்கள் சென்று வரும். மற்றபடி நிஜ இதயத்தைப் போலத்தான் இருக்கும். பள்ளிக்குச் செல்லும் போது அணியும் பேக் போலத்தான் அணிந்து இருந்தேன்!"

லார்கின் 24×7 அந்த பையை அணிந்து இருந்தார். இவரது தினசரி வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதை அணிந்து கொண்டே கூடைப்பந்து விளையாட்டையும் விளையாடியுள்ளார். பிறகு, மே 2016 ல் 555 நாட்களுக்குப் பிறகு இவருக்கு இதயம் பொருத்தப்பட்டது.

இவரது தம்பி Domonique க்கும் இதே நோய் ஏற்பட்டுள்ளது. இது ஒரு பரம்பரை நோய். Domonique வின் மூன்றில் இரண்டு குழந்தைகளும் இந்நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டனர். ஆனால் லார்கினை போன்றே  Domonique ம் இதயம் பொருத்தப்பட்டு வாழ்ந்து வருகிறார்.  "இது தங்களுக்கு ஒரு மறுவாழ்வு!" என இரு சகோதரர்களும் வியக்கின்றனர்!

vikatan

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p106a.jpg

facebook.com/Suba Barathi: பேசாமல் உள்ளூர் காய்கறிக் கடைகள்லயும் ‘Cards Accepted’ போர்டு போட்டு வியாபாரம் பண்ணலாம். எவ்வளவு கொண்டுபோனாலும் போத மாட்டேங்குது!

Whatsapp: TV-க்கு ரிமோட்டைக் கண்டுபிடிச்சது வேணும்னா வெளிநாட்டுக்காரனா இருக்கலாம். ஆனா, அதைப் பின்னாடித் தட்டினா நல்லா வேலைசெய்யும்னு கண்டுபிடிச்சது நம்ம ஊர்க்காரன்தான்!

twitter.com/withkaran: லேஸ் பாக்கெட்டைப் பிரிச்சு, பாதி தின்னுட்டு மீதி வைக்கிற அளவுக்குக் கட்டுப்பாடு இருந்தா போதும், எந்த டயட்டையும் ஃபாலோ பண்ணலாம்.

twitter.com/Mayavi_: ஒவ்வொரு கேப்/கார் டிரைவருக்குள்ளேயும் சில லட்சங்களை இழந்த தொழிலதிபர் இருக்கிறார்.

twitter.com/teakkadai: இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள், 80 சதவிகிதம் தமிழக சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இ.எம்.ஐ முறையில் ஃபீஸ் வசூலிக்கத் தலைப்பட்டுவிடும்.

twitter.com/nesamani89: ஆடம்பரப் பொருட்கள் என்ன, அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல்கூட சந்தோஷமாக வாழ்ந்துவிட முடிகிறது கிராமத்தினால்.

twitter.com/settuofficial: புது நம்பர்ல இருந்து கால் வந்துச்சேனு சேவ் பண்ணி வாட்ஸ்அப்ல போட்டோ பார்த்தா, எவனோ எருமை மாடு மாதிரி நிக்குறான். ச்சே...நமக்குனு வரானுங்க பாரு!

twitter.com/rajaa_official : லவ்வுக்காக உசுரைக் குடுங்க... ஏன் password எல்லாம் குடுக்கிறீங்க?

twitter.com/amshanthini: ‘செல்லம்’ கொடுக்கிறவங்களைவிட, ‘செல்லை’க் கொடுக்கிறவங்களைத்தான் குழந்தைகளுக்குப் பிடிக்கிறது.

twitter.com/udaya_Jisnu: “மச்சி, உன் வண்டி சாவி தொலைஞ்சிடுச்சு.”

“பரவாயில்லை மச்சி, டூப்ளிகேட் சாவி இருக்கு. வண்டி எங்கே மச்சி?”

“சாவிய வண்டியிலதா மச்சி வெச்சிருந்தேன்.''

p106b.jpg

twitter.com/ChainTweter: வாழ்கையின் மிக நீளமான ஐந்து விநாடிகள்... யூ டியூபில் Skip Ad-க்காகக் காத்திருப்பதுதான்.

twitter.com/teakkadai: உலகத்திலேயே ஒரு கல்வி நிறுவனத்தின் பிசினஸ் மாடலில் விளம்பரத்துக்கான உச்சபட்ச ஒதுக்கீடு இருப்பது சென்னை அமிர்தாவாகத்தான் இருக்கும்போல.

twitter.com/bommaiya: விஜயகாந்தை சென்னை மேயராக்குவோம் - வைகோ... #அவரை எங்ககிட்ட அனுப்புங்க... `மானாட மயிலாட' ஜட்ஜ் ஆக்குறோம்.

twitter.com/vithuvaan: நம்ம ஆளுங்க, பொறுமையைக்கூட சீக்கிரமா கத்துக்க ஆசைப்படுறாங்க!

twitter.com/ponkulanthai: பெரும்பாலான அம்மாக்களுக்கு, பிள்ளைகள் வளர்வதாகத் தெரிவது இல்லை. சட்டைகள்தான் சிறியதாகிவிடுகின்றன!

twitter.com/bri2o : நீங்க எல்லாம் கல்யாணம் பண்ணி தமிழ்நாட்டுப் பொண்ணுகளோட வாழ்க்கையை ஏன்டா கெடுக்கிறீங்க? - தட் சேலம் சிவராஜ் மொமன்ட்கள் #இறைவி

twitter.com/indirajithguru: உலகத்திலேயே அதிக அறிவுரைகளை எதிர்கொள்பவர்கள்...

1) புது சீக்காளி

2) ப்ளஸ் டூ எழுதிய மாணவர்கள்

3) தி.மு.க

p106c.jpg

twitter.com/therkr80: மருத்துவராக இருப்பதன் மிகப் பெரிய பலன்... வாழ்வின் நிலையற்றத் தன்மையை நாளும் உணர கிடைக்கும் வாய்ப்பே.

twitter.com/udanpirappe: ஸ்கூல் ஃபீஸ் கட்டிட்டுத் திரும்புறப்ப, `குழந்தைக்கு வீட்டுல நல்லா சொல்லிக்கொடுங்க'னு சொல்லி அனுப்புறாய்ங்க!

அடேய் அதை நாங்க சொல்லணும்டா!

twitter.com/oorkkaaran: இந்தி திணிக்க நினைப்பவர்களுக்கு ஒண்ணு சொல்றேன், 400 வருஷமா திணிச்சுப்பார்த்தும் எங்களுக்கு இங்கிலீஷே முழுசா ஏறலைடா அப்ரசன்டிகளா!

p106d.jpg

twitter.com/BoopatyMurugesh: ஆபீஸ்ல டீம் லன்ச். ரெஸ்டாரன்ட்ல இருக்கிற எல்லா அயிட்டத்துலயும் ஒண்ணு ஆர்டர் பண்ணியிருக்கேன்.

இருங்கடா அப்ரைசல்ல விட்டதை, இதுல புடிக்கிறேன்!

twitter.com/withkaran:  தமிழ்நாட்டுல வேட்டி கட்டுற ஆண்கள் சதவிகிதம் எவ்வளவு? ஏன் இத்தனை வேட்டி விளம்பரங்கள்? விளம்பரம் போட்டே ஒரு நல்ல வேட்டி 1,000 ரூபாய் ஆக்கிட்டானுங்க!

vikatan

  • தொடங்கியவர்
Vikatan EMagazines Foto.
 

கார்ல் லேண்ட்ஸ்டேயினர் ரத்த வகைகளை கண்டறிந்த அற்புத மருத்துவர்.. சிறப்பு பகிர்வு..

ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுதே தந்தையை இழந்த இவர் அன்னையின் அரவணைப்பில் வளர்ந்தார். மருத்துவம் பயின்ற பின்னர் அவர் உயிரிவேதியியல் துறையில் தன்னுடைய ஆர்வத்தை திருப்பினார். நாம் உண்ணும் உணவு எப்படி நம்முடைய ரத்தத்தில் இருக்கும் வெவ்வேறு தனிமங்களின் அளவை தீர்மானிக்கிறது என்று ஆய்ந்து சொன்னார்.

நோய் எதிர்ப்பியல் மற்றும் ஆண்டிபாடிகள் பற்றியும் தீவிரமாக் ஆய்வுகள் செய்தார் அவர். நோய்க்கிருமிகளின் உடற்கூறியல் துறையிலும் ஓயாத உழைப்பை செலுத்திய இவர் நோய் எதிர்ப்புக்கு காரணமான ஹெப்டான்களை கண்டுபிடித்தார். இவரின் ஆய்வு ஆர்வம் எந்த அளவுக்கு இருந்தது என்பதை ஒரு சம்பவத்தின் மூலம் விளக்கலாம். போலியோ மைலிடிஸ் நோயைப்பற்றி ஆய்வுகள் செய்து கொண்டிருந்த இவர் அந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்த குழந்தைகளின் மண்டையோட்டை அரைத்து குரங்குகளுக்குள் செலுத்திய பொழுது அவையும் அந்நோயால் பாதிக்கப்பட்டன என்பதைக்கண்டார். அதன் மூலம் நோய் எதிர்ப்பியலை எப்படி அந்நோய்க்கு எதிராக வளர்ப்பது என்று ஆய்வுகள் செய்ய முனைந்த அவருக்கு போதுமான குரங்குகள் கிடைக்கவில்லை. ஆகவே,ஆஸ்திரியாவின் வியன்னா நகரைவிட்டு நீங்கி பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகர பாஸ்டர் ஆய்வகத்தில் ஆய்வுகள் செய்தார்.

லெண்டாயிஸ் எனும் அறிவியல் அறிஞர் 1875 ஆம் ஆண்டு பிற பாலூட்டிகளின் ரத்தத்தை மனிதர்களுக்கு செலுத்தினால் அவை ரத்த குழாய்களில் அடைத்துக்கொள்வதொடு மட்டுமல்லாமல்,ரத்த செல்கள் வெடித்து ஹீமோகுளோபின் வெளியேறுவதை கண்டார். இந்த ஆய்வை மேலும் முன்னெடுத்த லேண்ட்ஸ்டேயினர் மனிதர்களுக்குள்ளும் அப்படி ரத்தம் செலுத்தினால் எதிர்ப்புகள் உண்டாவதை கண்டறிந்து சொன்னதோடு நில்லாமல் வெவ்வேறு ரத்தப்பிரிவுகளே அதற்கு காரணம் என்றும் அறிவித்தார். இந்த ரத்தப்பிரிவுகளை கொண்டு யார் பிறக்கிற பிள்ளையின் பெற்றோர் என்றும் உறுதி செய்ய முடியும் என்றும் அவர் சொன்னார். அவருக்கு இந்த கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. எண்ணற்ற விபத்துகளில் உயிர்கள் காப்பாற்றப்பட காரணமான ரத்த பிரிவை கண்டறிதலை முதன்முதலில் செய்து மனித குலத்துக்கு மிகப்பெரிய தொண்டாற்றிய இவர் என்றைக்கும் நினைவில் கொள்ளப்படவேண்டியவர்.. அவரின் பிறந்த தினம் இன்று...

vikatan

  • தொடங்கியவர்

நாட்டுக்கொரு பாட்டு 8: மலேசியாவில் பிரெஞ்சுக்கு மரியாதை

 

 
malaysia_2876965f.jpg
 

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று, மலேசியா. தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளில் இதுவும் ஒன்று. மலேசியா 1957-ல் சுதந்திரம் பெற்றது. மலேசியாவுக்கென தனி தேசிய கீதம் இல்லாமல் இருந்தது. ஆனால், மலேசியாவின் பல மாநிலங்கள், தங்களுக்கென பாடல்களை வைத்திருந்தன.

மலேசியாவின் பெராக் என்ற மாநிலத்தின் பாடல் ரொம்ப பிரபலமாக இருந்தது. அது பாடல்கூட இல்லை. பாடலுக்கான இசை (மெட்டு) மட்டுமே.

பிரெஞ்சு இசை உண்மையில் இந்த ‘மெட்டு' பிரெஞ்சு இசையமைப்பாளர் பியர் ஜீன் து பெராஞ்சே இயற்றியது. 1920 30-ம் ஆண்டு காலகட்டத்தில், ரொம்ப விரும்பிக் கேட்கப்பட்ட ‘லா ரோஸலி' பாடலின் இசைக் கோவை ஆகும்.

அது சரி, இது ‘பெராக்' மாநிலத்துக்கு எப்படி வந்தது? பெராக் மாகாணத்தின் சுல்தான், சில காலம் செஷல்ஸ் தீவில், தஞ்சம் அடைந்திருந்தார். அங்கே இருந்தபோது, ஒரு பொது நிகழ்ச்சியில், பிரெஞ்சுப் பாடலின் இசையைக் கேட்டு, அதில் மயங்கினார். சில ஆண்டுகள் கழிந்தன. பெராக் மாகாணத்தின் பாடல் என்று வரிகள் ஏதும் இல்லாத அந்தப் பிரெஞ்சுப் பாடலின் இசையை அறிவித்தார்.

பாதுகாப்பு

1901-ம் ஆண்டில் மன்னர் ஏழாம் எட்வர்டின் முடிசூட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பெராக் சுல்தானும் கலந்துகொண்டார். அப்போது, சுல்தானின் பாதுகாப்பு அதிகாரியிடம் ‘உங்கள் மாகாணத்தின் பாடல் என்ன..?' என்று கேட்டார்களாம். ‘அப்படி ஒன்றும் இல்லை' என்று சொல்லத் தயங்கியிருக்கிறார். பிறகு சட்டென்று நினைவுக்கு வந்த பிரெஞ்சுப் பாடலின் இசையைப் பாடிக் காட்டினாராம்.

தேர்வுக் குழு

மலேசிய நாடு, சுதந்திரம் பெற்ற பிறகு தேசிய கீதம் ஒன்றைத் தேர்வு செய்ய விரும்பினார்கள். இதற்காக அப்போதைய மலேசிய உள்துறை அமைச்சர் தும்குர் அப்துர் ரஹ்மான், தலைமையில் குழு அமைக்கப்பட்டது. பாடல் எழுதித் தருமாறு போட்டி அறிவிக்கப்பட்டது. போட்டிக்கு 514 பாடல்கள் வந்தன. ஆனால், எதுவும் தேர்வாகவில்லை.

இதேபோல, இசை அமைத்துத்தருமாறு உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களை மலேசியா அணுகியது. ராணி இரண்டாம் எலிசபெத் முடிசூட்டு விழாவுக்கு இசையமைத்த சர் வில்லியம் வால்டன்; சுபிர் சையது (நினைவுக்கு வருகிறதா?, சிங்கப்பூரின் தேசிய கீதத்துக்கு இசையமைத்தவர்!) ஆகியோர் உதவினர்.

national_anthem_2876964a.jpg

மலேசியாவில் பிரெஞ்சுக்கு மரியாதை!

இதேபோல, இசை அமைத்துத்தருமாறு உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களை மலேசியா அணுகியது. ராணி இரண்டாம் எலிசபெத் முடிசூட்டு விழாவுக்கு இசையமைத்த சர் வில்லியம் வால்டன்; சுபிர் சையது (நினைவுக்கு வருகிறதா?, சிங்கப்பூரின் தேசிய கீதத்துக்கு இசையமைத்தவர்!) ஆகியோர் உதவினர்.

ஊஹூம்... ‘எதுவுமே சரியில்லை' என நிராகரிக்கப்பட்டன. அதேசமயம் பெராக் மாகாண பாடலின் இசையில், ‘பாரம்பரிய கலவை’ இருப்பதாகத் தேர்வுக் குழு கருதியது. 1957 ஆகஸ்ட் 5 அன்று இது நடந்தது.

இதைத் தொடர்ந்து அந்த இசைக்கேற்ப பாடல் எழுதும் பணி தொடங்கியது. மெட்டுக்கு ஏற்ப பாட்டு எழுதப்பட்டது. குழுவின் தலைவராக இருந்த தும்குர் உட்பட பலரும் சேர்ந்து பாடலை எழுதினார்கள். அதுவே, இன்றுள்ள மலேசிய நாட்டின் தேசிய கீதம்.

பிரான்ஸ் நாட்டின் பியர் ஜீன் து பெராஞ்சே இசையமைத்த, தும்குர் அப்துர் ரஹ்மானும் பலரும் சேர்ந்து இயற்றிய மலேசியாவின் தேசிய கீதம் எப்படி இருக்கும்?

pier_2876962a.jpg - பியர் ஜீன் து பெராஞ்சே

நே.. கா.. ராகூ

தானா தும்பா ன் யா தா... ரகூ..

ராக் யாத் ஹீ.. டூ

பேர்ஸட்டு டான் மஜூ

ராஹ்மாத் பாஹ்யா

தூஹான் கூர்னியாகான்

ராஜா க்கீட்டா

ஸேலாமாத் பேர் டாக்..கா

ராஹ்மாத் பாஹ்யா

தூஹான் கூர்னியாகான்

ராஜா க்கீட்டா

ஸேலாமாத் பேர் டாக்..கா.

தமிழாக்கம் என்ன?

எனது தேசம்...

எனது உதிரம் அங்கே

பரவி இருக்கிறது...

ஒன்றுபட்டு முற்போக்காய்

அங்கே மக்கள் வாழ்கின்றனர்.....

இறைவன் பொழியட்டும் -

ஆசிகளையும் ஆனந்தத்தையும்.

நமது ஆட்சியாளர்

வெற்றிகர ஆட்சி அடையட்டும்.

இறைவன் பொழியட்டும் -

ஆசிகளையும் ஆனந்தத்தையும்.

நமது ஆட்சியாளர்

வெற்றிகர ஆட்சி அடையட்டும்.

(தேசிய கீதம் ஒலிக்கும்)

tamil.thehindu

  • தொடங்கியவர்

டொனால்ட் ட்ரம்ப்பின் பிறந்தநாள் இன்று

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப்பின் பிறந்தநாள் இன்று. இவர்மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும், 'எவ்வளவுக்கு எவ்வளவு உழைக்கிறேனோ அவ்வளவுக்கு அவ்வளவு எனக்கு அதிர்ஷ்டம் உண்டு' என்று சொல்பவர். 'இவர் அதிபரானால்?' என்று ஒரு கூட்டம் பயந்தபடி உள்ளது. இவரது பிறந்தநாளுக்காக ஒரு ஜாலி வைரல் வீடியோ இங்கே!

 

11 hours ago, நவீனன் said:

சமூக சிந்தனையாளரும், புரட்சியாளரும், அடக்குமுறைக்கு எதிரான போராளியாகவும் விளங்கிய சே குவேராவின் பிறந்த தினம்.

நவீனன் போட மறந்த படம்.

goshan_che

  • தொடங்கியவர்

 

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

 

p92a.jpg

கவல் நம்பர் ஒண்ணு: ‘உலகம் இப்போ எங்கோ போகுது’னு இளையராஜா பாடினாலும், இன்னும் ஊருக்குள்ள அரைகுயர் நோட்டை இலவசமா கொடுத்து, சமூகசேவை பண்ற பழக்கம் இருக்கு. ஸ்கூல்ல அரைகுயர் நோட்டுலதான் வீட்டுப்பாடம் எழுதணும்ங்கிற வழக்கமும் இருக்கு. தகவல் நம்பர் ரெண்டு: கம்ப்யூட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், சாட்டிங், டேட்டிங்னு வாழ்றவங்களுக்கு கையெழுத்துனா என்னனு மறந்து போயிருக்கும். கைப்பட எழுதுற பழக்கமும் போயிருக்கும். சரி, அதுக்கு என்ன பண்ணலாம்? ஆண்ட்ராய்டு வழங்கும் ‘ரைட்’ அப்ளிகேஷனை இன்ஸ்டால் பண்ணுங்க. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிங்க!

நோட்டில் எழுதுவதுபோல, கைப்பட எழுதுவதுதான் அப்ளிகேஷனின் கான்செஃப்ட். விதவிதமான பென்சில், பேனாவை வெச்சு ஒரு நோட்டில் எழுதுவீங்க. இந்த ஒரு ஆப்ல எல்லாமே அடக்கம். தலைப்புக்கு கலர் கொடுக்கலாம். முக்கியமான பாயின்டுக்கு ஹைலைட் கொடுக்கலாம். கைப்படவே எழுதலாம், கிராஃப் போடலாம், படம் வரைந்து பாகங்களைக் குறிக்கலாம். சிம்பிளா சொன்னா, நோட்டுக்குப் பதில் இந்த மொபைல் ஆப்! அப்புறமென்ன? மாசத்துக்கு ஒரு நோட்டு வாங்க வேண்டிய அவசியம் இல்லை. எழுதிக்கிட்டே இருக்கும்போது பேனா மை தீர்ந்துபோனா, பக்கத்தில் இருக்கிறவனைச் சுரண்டி ‘ஒரு துளி’ ஓசி வாங்குவோமே... அந்த அவமானம் இல்லை. கோடு போட்டது, கோடு போடாதது, நாலு கோடு போட்டதுனு மளிகைச் சாமான் லிஸ்ட் மாதிரி, வாத்தியார் சொல்ற வகைவகையான நோட்டுகளை வாங்கி அடுக்கணும்னு அவசியம் இல்லை. இன்னும் நிறைய ‘இல்லை’கள் இருக்கு பாஸ்! அடுத்து, கையெழுத்தே மறந்துபோன கோஷ்டிக்கு வருவோம்.

கடைசியா கைப்பட எழுதியது எப்போனு உங்களுக்கே மறந்து போயிருக்கும். அதுக்காகவே இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் பண்ணி கைப்பட எழுதிப்பார்க்கலாம். ‘சின்ன வயசுல என் கையெழுத்து குண்டு குண்டா அழகா இருக்கும்னு டீச்சர்ஸ் சொல்வாங்க. இப்போ கையெழுத்தே வரலை’னு தேம்பி அழாம, திரும்பவும் ஃபுல் ஃபார்முக்குத் திரும்பலாம். பெர்சனல் ‘டைரி’யைக்கூட டைப் பண்ணி, டாக்குமென்டா சேவ் பண்றவங்க, இனி கைப்பட டைரி எழுதலாம். அப்புறமென்ன பாஸ்? உங்க ‘முதல் நாள் முதல் கையெழுத்தை’ ஆரம்பிச்சு வைங்க!

டவுன்லோடு லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.styluslabs.write

  • தொடங்கியவர்
1904 : நியூ யோர்க்கில் கப்பலொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 1021 பேர் கொல்லப்பட்டனர்
 

வரலாற்றில் இன்று

ஜுன் - 15

 

கிமு763 : மெசொப்­பெத்­தே­மி­யாவின் வர­லாற்றுக் காலக்­கோட்டைக் கண்­ட­றிய உத­விய சூரிய கிர­கணம் ஒன்றை அசீ­ரி­யர்கள் பதிவு செய்தனர். 

 

923 : பிரான்ஸின் முதலாம் ரொபேர்ட் 1184 நோர்­வேயின் ஐந்தாம் மாக்னஸ் மன்னன் ஃபிம்­ரெயிட் என்ற இடத்தில் இடம்­பெற்ற போரில் கொல்­லப்­பட்டான்.

 

748varalaru-15-06.jpg1389 : கொசோ­வோவில் இடம்­பெற்ற சமரில் ஒட்­டோமான் படைகள் செர்­பி­யர்­க­ளையும், பொஸ்­னி­யர்­க­ளையும் தோற்­க­டித்­தன.

 

1667 : சான் பாப்டிஸ்ட் டெனிஸ் என்ற பிரெஞ்ச் மருத்­துவர் முதன் முதலில் மனித இரத்த மாற்­றீட்டை செயற்­ப­டுத்­தினார்.

 

1752 :  மின்னல் ஒரு மின்­சாரம் என்­பதை பெஞ்­சமின் பிராங்­கிளின் நிறு­வினார்.

 

1775 : அமெ­ரிக்கப் புரட்சிப் போரின்­போது, ஜோர்ஜ் வொஷிங்டன் அமெ­ரிக்கத் தரைப்­படைத் தள­ப­தி­யாக நிய­மனம் பெற்றார்.

 

1808 : பிரெஞ்சு மன்னன் ஜோசப் போனபார்ட் ஸ்பெயின் மன்­ன­னாக முடி சூடினார்

 

1904 : நியூ யோர்க்கில்  கப்­ப­லொன்றில் ஏற்­பட்ட தீவி­பத்தில் 1021 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1938 : பிரித்­தா­னி­யாவில் லாஸ்லோ பைரோ குமிழ் முனைப் பேனாவை கண்டு­பி­டித்தார்.

 

1954 : ஐரோப்­பிய கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் ஒன்­றியம்   சுவிட்­ஸர்­லாந்தில் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

1996 : ஐக்­கிய இராச்­சியம், மான்­செஸ்­டரில் இடம்­பெற்ற தீவி­ர­வா­தி­களின் குண்­டுத்­தாக்­கு­தலில் 200 பேர் காய­ம­டைந்­தனர். நகரின் மத்­திய பகுதி பெரும் சேதத்­துக்­குள்­ளா­னது.

 

2001 : சீனா, ரஷ்யா, கஸகஸ்தான், கிர்­கிஸ்தான், தஜி­கிஸ்தான், உஸ்­பெ­கிஸ்தான் ஆகிய நாடு­களின் தலை­வர்கள் இணைந்து ஷாங்காய் ஒத்­து­ழைப்பு அமைப்பை ஸ்தாபித்­தனர். 

 

2012 :  நிக் வெலன்டா என்­பவர் முதல் தட­வை­யாக நயா­கரா நீர்­வீழ்ச்­சிக்கு மேலாக கயிற்றில் நடந்து சாதனை படைத்தார். 

 

2013 : பாகிஸ்­தானின் குவேட்டா நகரில் பஸ் ஒன்றில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 25 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

2014 : பாகிஸ்­தானின் வடக்கு வஸிரிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக பாரிய இராணுவ நடவடிக்கையை பாகிஸ்தான் அரசாங்கம் ஆரம்பித்தது.

metronews.lk

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.