Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
1631 : மும்தாஜ் மஹால் மரணம்
 

வரலாற்றில் இன்று.....

ஜுன் - 16

 

1579 : அமெரிக்காவின் நோவா அல்பியன் பிராந்தியம் (தற்போதைய கலிபோர்னியா) இங்கிலாந்துக்குச் சொந்தமானதென சேர் பிரான்சிஸ் ட்ரெக் அறிவித்தார்.

 

750mumtaz_mahal_mp49.jpg1631 : முகலாய மன்னன் ஷாஜகானின் மனைவி மும்தாஜ் மஹால் குழந்தை பிரசவத்தின்போது இறந்தார். அதன்பின் 17 ஆண்டுகளில் தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டிமுடித்தார்.

 

1843 : நியூஸிலாந்தின் மோரி பழங்குடி இனத்தவர்களுக்கும் பிரித்தானிய குடியேற்ற வாசிகளுக்கும் இடையில் முதலாவது பாரிய ஆயுத மோதல் இடம்பெற்றது.

 

1939 : பிரான்ஸில் கொலைக்குற்றவாளியான இயூஜின் வீல்ட்மன் என்பவர் கில்லட்டின் எனும் இயந்திரத்தில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். பிரான்ஸில் தலைதுண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்குள்ளான கடைசி நபர் இவராவார்.

 

1940 : எஸ்டோனியா, லத்வியா,  லித்துவேனியா நாடுகள் சோவியத் யூனியனின் ஆதிக்கத்துக்குள் உள்ளடக்கப்பட்டன.

 

1944 : டென்மார்க்கிடமிருந்து பிரிவதாக ஐஸ்லாந்து சுதந்திரப் பிரகடனம் செய்தது.

 

1848 : அமெரிக்காவில் இடம் பெற்ற விமான விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர்.

 

1953 : கிழக்கு ஜேர்மனியில் தொழிலாளர்களின் கிளர்ச்சியை அடக்குவதாக சோவியத் யூனியன் இராணுவத்தை அனுப்பியது.

 

1963 : வியட்நாமில் மதச் சுதந்திரம் தொடர்பாக பாரிய வன்முறைகள் மூண்டன.

 

1967 : தனது முதலாவது வெப்ப அணுவாயுதத்தை வெற்றிகரமாக பரிசோதித்தாக சீனா அறிவித்தது.

 

1971 : போதைப் பொருட்களுக்கு எதிரான அமெரிக்காவின் “யுத்தத்தை” ஜனாதிபதி ரிச்சர்ட் நிக் ஷன் பிரகடனப்படுத்தினார்.

 

1972 : அமெரிக்க  ஜனநாயகக் கட்சியின் ன் அலுவலகத்துக்குள் சட்டவிரோதமாக கருவிகளை பொருத்த குடியரசுக்கட்சியினர் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக வெள்ளை மாளிகை ஊழியர்கள் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

 

1991 : தென் ஆபிரிக்க மக்களை பிறப்பின்போது இன ரீதியாக வகைப்படுத்தி குறிப்பிட வேண்டும் என்ற சட்டம் இரத்துச்செய்யப்பட்டது.

 

1992 :  ஆயுதக் குறைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்,  ரஷ்ய ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்சின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

 

1994 : மனைவியையும் அவரின் காதலரையும் கொலை செய்த குற்றச்சாட்டுக்குள்ளான அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் ஓ.ஜே. சிம்ஸனை நீண்ட தூரம் துரத்திச்சென்று பொலிஸார் கைது செய்தனர்.

 

2015 : அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்திலுள்ள தேவாலயமொன்றில் நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதால் 9 பேர் உயிரிழந்தனர்.

 

.metronews.lk

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வீனஸ் வில்லியம்ஸ்

 
கோப்புப் படம்: ஏபி
கோப்புப் படம்: ஏபி

வீனஸ் வில்லியம்ஸ் - அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை

இளம் வயதில் பல சாதனைகள் படைத்த அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (Venus Williams) பிறந்த நாள் இன்று (ஜூன் 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லின்வுட்டில் (1980) பிறந்தார். இவருக்கு 10 வயதானபோது, குடும்பம் ஃபுளோரிடாவில் குடியேறியது. தன் 5 மகள்களையும் டென்னிஸ் பயிற்சிக்கு அனுப்பினார் தந்தை. ஆனால் கடைக்குட்டிகள் 2 பேர் (வீனஸ், செரீனா) மட்டுமே சிறந்து விளங்கினர்.

* சகோதரிகளின் அபூர்வ திறனை கவனித்த பயிற்சியாளர், அவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளித்தார். ஓரிரு ஆண்டுகளில் சிறுமி வீனஸ் அமெரிக்க டென்னிஸ் சங்கத்தின் 12 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் பிரிவில் முதலிடம் பிடித்தாள். பள்ளிப்படிப்பு முடிந்ததும், புளோரிடா கலைக் கல்லூரியில் ஃபேஷன் டிசைனிங் பயின்றார்.

* டென்னிஸ் பயிற்சி நிலையத்தில் இனப் பாகுபாடு இருப்பதாக சந்தேகித்த தந்தை, வீட்டிலேயே பயிற்சி அளித்தார். 14 வயதில் தொழில்முறை ஆட்டக்காரராக களமிறங்கினார். பல போட்டிகளில் கலந்துகொண்டு, உலக அளவில் கவனம் பெற்றார்.

* தரவரிசைப் பட்டியலில் 1997-ம் ஆண்டு தொடக்கத்தில் 100-வது இடத்தில் இருந்த வீனஸ், ஆண்டு இறுதிக்குள் 22-வது இடத்துக்கு உயர்ந்தார். அடுத்த ஆண்டில் 5-வது இடத்தைப் பெற்றார்.

* 2000-ல் தொடர்ச்சியாக 35 ஒற்றையர் ஆட்டம், 6 டோர்னமென்ட்களில் வெற்றிபெற்றார். அப்போது உலகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த மார்ட்டினா ஹிங்கிஸை வென்று முதன்முதலாக விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வென்றார்.

* உடல்நலக் குறைவு காரணமாக வேறு போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அதற்குள் 6 ஒற்றையர் பட்டங்களுடன் தரவரிசைப் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்திருந்தார். 2001-ல் முழங்கால் வலி பிரச்சினை இவரது முன்னேற்றத்துக்கு தடையாக இருந்தது. ஆனால், தரவரிசைப் பட்டியலில் 2-வதாக உயர்ந்தார்.

* புது வேகத்துடன் 2002-ல் களமிறங்கியவர், ஆஸ்திரேலியா மகளிர் போட்டி வெற்றியுடன் தன் கணக்கைத் தொடங்கினார். உலகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதன்மூலம் முதலிடத்தைப் பிடித்த முதல் ஆப்பிரிக்க - அமெரிக்கப் பெண் என்ற பெருமை பெற்றார். தங்கை செரீனாவுடன் பல மகளிர் இரட்டையர் போட்டிகளில் வென்றார்.

* பெய்ஜிங் - 2008 ஒலிம்பிக் மகளிர் இரட்டையர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். மிக வேகமான சர்வீஸ் வீசுபவர் என்ற சாதனையை தக்கவைத்துக் கொண்டுள்ளவர்.

* இரட்டையர் ஆட்டங்களில் 13 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 7 ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் உள்ளிட்ட மொத்தம் 72 வெற்றிகளை ஈட்டியுள்ளார். விம்பிள்டன் சாதனை ஆட்டக்காரர், டீன் சாய்ஸ் விருது, ‘எம்மா’ சிறந்த விளையாட்டு வீரர் விருது, ஸ்போர்ட்ஸ் ஸ்டார் விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

* இன்று 36 வயதை நிறைவு செய்திருக்கும் வீனஸ் வில்லியம்ஸ், டென்னிஸ் தவிர, ஃபேஷன் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். பல தடைகள், தடங்கல்கள், வெற்றி, தோல்விகளை எதிர்கொண்டாலும், உலகின் நம்பர் 9 வீராங்கனையாக இருந்து வருகிறார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

நல்ல சந்திப்புக்களை நழுவிடக் கூடாது
 

article_1466136410-lhkuolo.jpgநல்ல நண்பர்களை, பெரியோர்களைச் சந்தித்தால் அவர்களுடன் மீண்டும், மீண்டும் தொடர்புகொள்ள மனம் நாடும். இந்தச் சந்திப்புக்களை நழுவிடக் கூடாது.

இத்தகையவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறுவதே சந்தோஷகரமான விடயம்தான். இந்தப் பரிமாற்றங்களை ஸ்திரமாக்க இப்போது தானே பல வழிகள் உண்டு அல்லவா.

அலைபேசியூடான தொடர்பு, பேஸ்புக், மின்னஞ்சல், ஊடகங்கள் வாயிலான அறிமுகம் மற்றும் இணையத்தளங்களினுடான வழிகளால், தொடர்பாடல்களை ஸ்திரப்படுத்திக்கொள்ளலாம்.

அறிமுகமேயற்ற, அவர்கள் பற்றிய நடத்தைகளை அறியாது எந்தத் தொடர்புகளையும் தொட்டுவிடவேண்டாம். இத்தகையோர்களுடனான, சந்திப்பே பிறர் எம்மை நிந்திக்கும் நிலையினை ஏற்படுத்தி விடலாம்.

முகநூல் நட்பினால் மோசம் போனவர்கள் பற்றி அறிந்திருப்பீர்கள். தேவையற்ற சந்திப்புக்களால், சிந்தை நோவடைதலாகாது.

-

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
Vikatan EMagazines Foto.
 

ஜூன் 17: ஜான்ஸி ராணி லட்சுமிபாய் நினைவு தின சிறப்பு பகிர்வு

 

''போராடி இறப்பது அடங்கிக்கிடப்பதை விட மேல்'' என்று ஆங்கிலேயரை எதிர்த்து உயிர் விட்ட ஜான்சி ராணி லட்சுமி பாய் நினைவு தினம் இன்று..

பித்தூர் மாவட்ட பெஷ்வாவிடம் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார் இவரின் தந்தை. அங்கே சுட்டிப்பெண்ணாக அவரை ஈர்க்கவே இவரை தன் சொந்த மகள் போல பெஷ்வா வளர்த்தார். மணிகர்ணிகா என்று இளம் வயதில் அழைக்கப்பட்ட அவர் ஜான்சியின் அரசர் கங்காதர் ராவுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டார். பிறந்த ஆண் குழந்தை நான்கே மாதங்களில் இறந்து போனது. அதற்கு பின் வாரிசு இல்லாமல் போகக்கூடாது என்பதற்காக உறவுக்கார பையனை தத்தெடுத்து தாமோதர் ராவ் என்று பட்டம் சூட்டினார்கள்.

டல்ஹவுசி இந்தியாவின் கவர்னர் ஜெனரல் ஆகியிருந்தார். ஆங்கிலேய ஆதிக்கத்தை இந்தியா முழுக்க பரப்ப வேண்டும் என்பதில் தெளிவாக இருந்த அவர். ஏற்கனவே கப்பம் கட்டிக்கொண்டும்,அடிபணிந்தும் கொண்டிருந்த அரசுகளை கைப்பற்ற கிளம்பினார். வாரிசுகளை தத்தெடுக்க கூடாது ; அப்படியே எடுத்தாலும் அதற்கு ஆங்கிலேய ஆட்சி அனுமதி தரவேண்டும். அப்படி தரப்படவில்லை என்றால் அந்த அரசு ஆங்கிலேயர் வசம் போய்விடும் என்பது அவரின் புதுக்கொள்கையாக இருந்தது. இதை அவகாசியிலிக் கொள்கை என்று அழைத்தார் அவர்.

சத்தாரா, செய்ப்பூர், சம்பல்பூர் , நாக்பூர் என்று அரசுகளை அள்ளிப்போட்டுக்கொண்டார் டல்ஹவுசி. ஜான்சியும் மன்னரைஇழந்து ஜான்சி ராணி வசம் வந்திருந்தது. அதே காரணத்தை சொல்லி வாரிசை ஏற்காமல் அரியணையை விட்டு நீக்கி அறுபாதாயிரம் ஓய்வுத்தொகை என்றும் அறிவித்தார்கள். அமைதியாக அப்பொழுது இருந்தாலும் காத்திருந்தார் லட்சுமி பாய்

எண்பத்தி ஏழு காலத்துக்குள் பசி என்றால் என்னவென்றே அறியாத இந்தியாவின் பல பகுதிகளில் பெரிதாக பன்னிரெண்டு பஞ்சங்கள் ஏற்பட்டு இருந்தன . முக்கியமான காரணம் இந்தியாவின் விவசாயம் மற்றும் கைவினைத்தொழில்களை ஆங்கிலேய அரசு ஒட்டுமொத்தமாக காலி செய்து இருந்தது . நிலவரியை ஏகத்துக்கும் ஏற்றியது . ஜமிந்தார்களிடம் சிக்கிக்கொண்டு இருந்த மக்கள் இப்பொழுது லேவா தேவி காரர்களிடம் சிக்கி நிலங்களை இழந்தார்கள் . அரசர்களின் இடங்கள் பறிக்கப்பட்ட பொழுது அங்கே வேலை செய்தவர்கள் நடுத்தெருவில் நின்றார்கள். அரசின் சதி ஒழிப்பு முதலிய நடவடிக்கைகள் மற்றும் கிறிஸ்துவ மிஷினரிகளின் மத பிரச்சாரம் நாட்டில் அச்சத்தை உண்டு செய்தது.

சிப்பாய்களுக்கு சம்பளம் குறைவாக இருந்தது ; கடல் கடந்து போகவும் சொல்லி மதநம்பிக்கைக்கு எதிராக கட்டாயப்படுத்தினார்கள். பன்றி மற்றும் மாட்டு கொழுப்பால் ஆகியிருந்த கேட்ரிட்ஜை லோட் செய்ய மறுத்து மீரத்தில் புரட்சி வெடித்தது. மத்திய மற்றும் வட இந்தியாவில் புரட்சி பரவியது

ஜான்சியில் இருந்த ஆங்கிலேயே அதிகாரி எர்கினிடம் தன்னுடைய பாதுகாப்புக்கு படைகள் உருவாக்கிக்கொள்ள ஜான்சி ராணி அனுமதி கேட்டார். கிடைத்தது. ஒரு விழா நடத்தி ஆங்கிலேய அரசை பார்த்து பயப்பட வேண்டாம் என்று மறைமுகமாக மக்களுக்கு கோடிட்டு காட்டினார்.

ஆங்கிலேய படைகள் மற்ற இடங்களில் புரட்சியை அடக்கிவிட்டு ஜான்சி நோக்கி வருவதற்குள் ஜான்சியில் ஆயுதங்கள் பெருக்கப்பட்டு கோட்டை ராணியின் வசம் வந்திருந்தது. ஹூக் ரோஸ் சரணடைய சொல்லி கேட்ட பொழுது ,"போராடி வென்றால் வெற்றி இல்லையேல் மோட்சம் !" என்று கம்பீரமாக விடை அனுப்பினார் ஜான்சி ராணி.

கோட்டையை சுற்றி போர் நடந்து சுவர் தகர்க்கப்பட்டு ஆங்கிலேய அரசு உள்ளே நுழைந்தது. பெண்கள்,குழந்தைகள் என்று பலரும் ஆயுதம் ஏந்தி போர் புரிந்தார்கள். பெண்கள் ஆயுதங்களை தீட்டுவதும்,குதிரைகளை இயக்குவதும் ஆச்சரியம் தருகிறது என்று பதிவு செய்கிறார்கள் ஆங்கிலேயர்கள். சுவரேறி தன் வளர்ப்பு மகனோடு தப்பினார் ஜான்சி ராணி

குவாலியரை தாந்தியா தோப் உதவியோடு கைப்பற்றினார் லட்சுமி பாய். ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்த மகாராஜா சிந்தியா இவரை எதிர்த்த பொழுது சிந்தியாவின் படைகள் அவரை கைவிட்டு இவரோடு இணைந்து வீர முழக்கம் கொட்டின. மீண்டும் ஆங்கிலேயருடன் போர் வந்தது. பிள்ளையை பின்பக்கம் குதிரையில் வைத்துக்கொண்டு போர் செய்தார் ஜான்சி ராணி. பின்புறம் இருந்து ஒருவன் தாக்கி அவரை கொன்றான். அவருடன் அவரின் அந்தரங்க காவலாளியாக இருந்த முஸ்லீம் பெண்ணும் இறந்து போனாள்

இன்னமும் ஜான்சி ராணியைப்பற்றிய வீரக்கதைகள்,நாட்டுப்பாடல்கள் அப்பகுதிகளில் பாடப்பட்டும் சொல்லப்பட்டும் வருகின்றன. அவற்றையெல்லாம் தொகுத்து மகாஸ்வேதா தேவி ஒரு நூலாக்கினார். போராடி இறப்பது அடங்கிக்கிடப்பதை விட மேல் என்று எண்ணிய அவரின் நினைவு தினம் இன்று..

vikatan

  • தொடங்கியவர்

அப்படியே மாறிட்டாங்க!

 

p48a.jpg

விதம்விதமா ஹேர் ஸ்டைல் வெச்சுக்கிறதே ஸ்போர்ட்ஸ்மேன்களின் பொழுதுபோக்குதான். கிரிக்கெட்டும் விதிவிலக்கு இல்லை. ஹேர்  ஸ்டைல் மாறியதற்குப் பிறகு சிலரோட எஸ்டிடி-யே மாறி இருக்கு. அப்படி  மாறிய சிலர்...

மஹேந்திர சிங்க் தோனி:

p48b.jpg

தோனின்னாலே அவரோட நீண்ட ஹேர்ஸ்டைல்தான் ஞாபகத்துக்கு வரும். தன் நீளமான ஹேர்ஸ்டைலைத் தனித்துவமாக கவனிக்க வைத்ததும் அதன் மூலம் துவக்க காலங்களில் ஸ்டாண்டர்டு ஆகி முதல் டி20 போட்டியை வெல்லக் காரணமாகவும் இருந்தது என்றாலும் அதன் பின்னர் டோட்டலாக சேஞ்ச் ஆகி ஷார்ட் ஹேருக்கு மாறிய பின்னர்தான் டி20, ஒருநாள் போட்டி, அசைக்க முடியாத  சென்னை சூப்பர் கிங்ஸ், இப்போது வரை தோனியின் ஹைலைட்டான டெஸ்ட் போட்டிகளின் தரவரிசையில் இந்தியாவை நம்பர் ஒன் ஆக்கியது போன்ற டாப் சாதனைகள் எல்லாம் அரங்கேறியது கவனிக்கத்தக்கது. 2011 உலகக்கோப்பையின் ஃபைனலில் வின்னிங் ஷாட் அடிக்கும்போது நீண்ட கூந்தலை வைத்திருந்தவர் அதை வென்று கையில் வாங்க வரும் அந்த கேப்புக்குள் டோட்டலாக முடியையே எடுத்துவிட்டு வந்ததும், தன் நீண்ட கூந்தலை வெட்டிக்கொண்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது அதை நேரம் வரும்போது சொல்கிறேன் என்றதும் நிஜமாகவே இந்த மேட்டருக்கு மேலும் வலு சேர்க்கும்படி இருக்கிறது.

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்:

p48c.jpg

ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தவர். மார்ட்டின், மைக்கேல் பேவன் என தன் சகாக்களுடன் பதினொன்றில் ஒருவராக இருந்து வந்தவர் ஆபீஸ் போகும் பையன் போல் அடக்க ஒடுக்கமாக இருந்த தன்னுடைய ஹேர்ஸ்டைலை தன் பூர்வீகமான வெஸ்ட் இண்டியன்ஸ் ஹேர் ஸ்டைலுக்கே மாற்றிய நேரம் இவரது கிரிக்கெட் வாழ்வே மாறிப்போனது. தடுப்பாட்டம் ஆடிக்கொண்டிருந்த இவர் அதிரடி பேட்டிங்கில் கணிசமாய் விக்கெட் வீழ்த்தக்கூடிய பகுதி நேரப் பந்து வீச்சாளர் என ஐபிஎல்-களில் ஆளே மாறிப்போனார்.

லசித் மலிங்கா:

p48d.jpg

சமிந்தா வாஸுக்கு அப்புறம் இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர்னு யாரும் சோபிக்காத நேரத்துல டீமுக்கு வந்தவர். இவரும் பெருசா ஏதும் சாதிக்கலைதான். ஆனா சுருள் சுருளாக இவர் ஹேர் ஸ்டைலை சேஞ்ச் பண்ணின நேரம் இப்போது ஐபிஎல்-லில் பேட்ஸ்மேன்களின் கண்களில் தன் துல்லியமான யார்க்கர் பந்துகளால் ரத்தக்கண்ணீர் வர வைத்துக்கொண்டிருப்பவர். மலிங்கா யார்க்கர் என்றும் மலிங்கா ஹேர் ஸ்டைல் என்றும் ஒரு தனி ஸ்டைல் உருவாகும் அளவுக்கு அதிரி புதிரி ஃபேமஸ் இந்த மலிங்கா. அணியில் கண்டும் காணாதவராக இருந்த இவர் தற்போது ஐபிஎல் களில் ஏலம் எடுப்பவர்களின் மோஸ்ட் வான்டட் பெளலர்.

திலக ரத்ன தில்சான்:

p48e.jpg

இலங்கை அணியின் லெவனில், பெளலரா மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனா என  நமக்கும், ஏன் அவருக்குமே தெரியாத ஓர் இடத்தில் ஆடிக்கொண்டிருந்தார். திடீரென தாடியில் கோடுகளை வரைந்துகொண்டு வலம் வர ஆரம்பித்தவர், ஷேவாக்கின் டெல்லி டீமில் பெற்ற அனுபவம், டி20 போட்டிகள் எனக்  கை கொடுக்க இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் என்ற பெயர்களுக்குச் சொந்தக்காரர் ஆனார். தில்சான் போலவே சில யூத்துகள் தாடி வைத்துக்கொண்டு திரிவது தனிக்கதை.

கிறிஸ் கெயில்:

p48f.jpg

சொல்லவே வேண்டாம். வெஸ்ட் இண்டீஸின் தொடக்க ஆட்டக்காரராக சமத்துப்பிள்ளைக்குரிய ஹேர்ஸ்டைலுடன் ஓரளவு நன்றாகவே விளையாடிக்கொண்டிருந்தாலும் ‘என்னமோ ஏதோ’ என்றே கவனிக்கப்பட்டு டீமிலும், உலக கிரிக்கெட்டிலும் இருந்து வந்தவர், கம்பி போன்ற பரட்டைத்தலையுடன் களம் குதித்த பின் ஆடிய, ஆடிக்கொண்டிருக்கும் ருத்ர தாண்டவங்களைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ப்ப்பா என்னா அடி.

ஹ்ம்ம்ம்... ஹேர் ஸ்டைல் சேஞ்ச் பண்ணி காணாமல் போன வீரர்களும் இருக்காங்க அவங்களைப் பற்றி இன்னொரு எபிஸோடுல பார்ப்போம். ஹிஹி!

vikatan

  • தொடங்கியவர்

13412973_1064594470255913_47815719952180

அவுஸ்திரேலிய சகலதுறை கிரிக்கெட் வீரரும் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான ஷேன் வொட்சனின் பிறந்தநாள் இன்று.
Happy Birthday Shane Watson

  • தொடங்கியவர்

 

இதுதான் ஷாங்காயில் உள்ள டிஸ்னி பூங்கா. சீன பெருநிலப்பரப்பில் அந்த நிறுவனத்தின் முதல் பொழுதுபோக்கு பூங்கா இதுவாகும்

  • தொடங்கியவர்
போதையில் 155,000 ரூபா டிப்ஸ் வழங்கிய நபர் மறுநாள் காலை திரும்பி வந்து அப்பணத்தை கோரினார்
 

உணவு விடு­தி­யொன்றில் உணவு பரி­மா­றி­ய­வ­ருக்கு சுமார் 155,000 ரூபா டிப்ஸ் வழங்­கிய நபர் ஒருவர் மறுநாள் காலையில் அவ்­வி­டு­திக்கு வந்து அப்­ப­ணத்தை திருப்பித் தரு­மாறு கோரிய சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. 

 

17389big-tip.jpg

 

தாய்­லாந்­தி­லி­ருந்து அமெ­ரிக்­கா­வுக்கு குடி­பெ­யர்ந்த பீ அனான்­ட­தோவும் அவரின் கணவர் சுராச்சய் சுர­பொட்­ஸோ­பனும் கொல­ராடோ மாநி­லத்தில் உணவு விடு­தி­யொன்றை நடத்தி வரு­கின்­றனர். 

 

அண்­மையில் இந்த உணவு விடு­திக்கு வந்த நபர் ஒரு­வ­ருக்கு பீ பீ அனான்­டதோ உணவு பரி­மா­றினார். சுமார் 60 டொலர்­க­ளுக்­கான கட்­ட­ணத்­துடன் 1088 டொலர்­களை (சுமார்155,000  ரூபா) டிப்­ஸாக பீ அனான்­ட­தோ­வுக்கு மேற்­படி நபர் வழங்­கினார். 

 

தனது சேவைக்கு கிடைத்த இந்த பெருந்­தொகை டிப்ஸ் குறித்து பீ அனான்­டதோ மிக பெரு­மை­ய­டைந்தார்.

 

எனினும், மறுநாள் காலை அவ்­வு­ணவு விடுதி திறக்­கப்­படும் தரு­ணத்தில் மேற்­படி வாடிக்­கை­யாளர் அங்­கு­வந்து, தனது பணத்தை திருப்பித் தரு­மாறு கேட்­டாராம். 

 

பெருந்­தொகை டிப்ஸ் வழங்­கி­ய­போது அந்­நபர் போதையில் இருந்­தாராம். அவர் 100 டொலர் தாள்­களை ஒரு டொலர் தாள்கள் என எண்­ணி­யி­ருக்­கக்­கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வேறு வழியின்றி மேற்படி தம்பதிகள் பணத்தை திருப்பிக்கொடுத்துள்ளனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13475206_1064596020255758_19542457780767

நடிகை சிந்து மேனனின் பிறந்தநாள்
Happy Birthday Sindhu menon

 
  • தொடங்கியவர்

 

 

p10b.jpg

லிஸ் க்ளார்க், 34 வயதான ஆச்சரியப் பெண்மணி. பத்து வருடங்களுக்கு முன்பு, கலிஃபோர்னியாவில் உள்ள சான்டியாகோவில் உள்ள ஒரு மதுக்கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர் திடீரென அந்த வேலையை விட்டுவிட்டார். ஒரு படகை எடுத்துக்கொண்டு உலகம் சுற்ற ஆரம்பித்துவிட்டார். 2013-ம் ஆண்டு க்ளார்க் அவரது சாகசப் பயணங்களை ஆவணப்படுத்தி தர வேண்டும் என்ற நிபந்தனையோடு வேர்ல்டு இன் என்னும் குழுவினர், அவருக்கு கால் 40 எனும் படகை அளித்தனர். அதை வைத்துக்கொண்டு தான் வளர்த்துக்கொண்டிருக்கும் பூனை ‘அமெலியா'வோடு இன்று உலகையே சுற்றி வருகிறார்.

p10c.jpg

p10a.jpg

p10d.jpg

ஆரம்பத்தில் க்ளார்க்கைப் பார்க்கும்போதெல்லாம் ஜெர்க் ஆகிக்கொண்டிருந்த அமெலியா, இப்போது அவருடன் நன்கு பழகிவிட்டது. படகிற்குள்ளேயே ஓடியாடி, குதித்து விளையடிக்கொண்டு பிடிக்கப்பட்ட மீன்களை சாப்பிட்டுக் கொண்டும் மகிழ்ச்சியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறது அமெலியா. பூனையோ நீரைப் பார்த்தாலே அரண்டு ஓடும் என்பார்கள், ஆனால் அமெலியா அப்படியெல்லாம் இல்லை. ‘கேப்டன் லிஸ் க்ளார்க்' எனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பயணங்களின்போது எடுத்த புகைப்படங்களை அப்லோடி வருகிறார். அதில் குறிப்பாக அமெலியாவின் புகைப்படங்களுக்கு லைக்ஸ் அள்ளுகிறது. இது பிரபலமாகவே பிறந்த பூனை பாஸ்!

vikatan

  • தொடங்கியவர்

13412191_1064595306922496_25453493179162

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸின் பிறந்தநாள் இன்று.
Happy Birthday Leander Paes

  • தொடங்கியவர்

'கடற் கொள்ளையன்' ஸ்டீவ் ஜாப்ஸ்!

 

 

 

''போர்ஷ் கம்பெனியின் தயாரிப்பான அந்த காஸ்ட்லி கைக் கடிகாரம்தான் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு மிகவும் பிடிக்கும். அரிதான டைட்டானியம் உலோகத்தால் மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்ட கடிகாரம். யாரேனும், 'அட... சூப்பர் வாட்ச்சாக இருக்கிறதே!’ என்று பாராட்டிவிட்டால் போதும்... உடனே அந்தக் கடிகாரத்தை அவர்களுக்கே பரிசளித்துவிடுவார். 'கடிகாரத்தின் விலை 2,000 டாலராச்சே’ என்றெல்லாம் கொஞ்சமும் யோசிக்க மாட்டார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே ஸ்டீவின் கைகளில் அதே போன்ற இன்னொரு கடிகாரம் மினுமினுக்கும். ஒரு பெட்டி நிறைய அந்த டிசைன் கடிகாரங்கள் அவருடைய அலுவலக அறையில் எப்போதும் இருக்கும். 'எப்படி உங்களால் அந்தக் கடிகாரத்தைப் பாராட்டும் ஒவ்வொருவருக்கும் அதைப் பரிசாக அளிக்க முடிகிறது?’ என்று கேட்டால், 'அந்தக் கடிகாரத்தின் அழகையும் அற்புதத்தையும் உணரும் அவர்களின் ரசனைக்கு என்னுடைய சின்ன மரியாதை அது!’ என்பார் சிரித்துக்கொண்டே...

 அதுதான் ஸ்டீவ் ஜாப்ஸ்!

p30.jpgஎன்னைக் கேட்டால், உலகின் மிக அற்புதமான நுகர்வோர் ஸ்டீவ்தான் என்பேன். காரணம், ஆப்பிள் நிறுவனத்தின் எந்தத் தயாரிப்பும் ஒரு நுகர்வோனாகத் தனக்கு முழு திருப்தி அளித்த பிறகுதான், சந்தையில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதில் தீர்க்கமாக... சமயங்களில் மூர்க்கமாகவும் இருப்பார் ஸ்டீவ். ஆப்பிள் கணினிகள், மேக்கின்டாஷ் கணினிகள், ஐ-போன்கள், ஐ-பேட்கள் என எந்தத் தயாரிப்பையும் ஒரு முதலாளியாக அணுகாமல், நுகர்வோனாக அணுகியதாலேயே ஸ்டீவ் வெற்றியை ருசித்தார்!''

ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் சீனியர் வைஸ் பிரசிடென்ட் ஜே எல்லியட் அந்த நிறுவனத்தின் சேர்மனான ஸ்டீவ் ஜாப்ஸ்பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் புத்தகம் 'தி ஸ்டீவ் ஜாப்ஸ் வே’ (The Steve Jobs Way). தினமும் ஸ்டீவ் ஜாப்ஸுடன் நேரடியாக இணைந்து பணியாற்றிய எல்லியட், மேக்கின்டோஷ் கணினிகள், ஐ-பாட், ஐ-பேட் போன்ற ஆப்பிளின் முத்திரைத் தயாரிப்புகளின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். இனி புத்தகத்தில் இருந்து...

துளித்துளியாய்...

ஸ்டீவுக்கு சின்னச் சின்ன விஷயங்களும் மிக முக்கியம். அதாவது, ஒரு கணினியின் சாஃப்ட்வேர், ஹார்டுவேர் விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்த மாட்டார். ஆர்வமும் ஆசையுமாக மேக்கின்டோஷ் கணினியை வாங்கி, அட்டைப் பெட்டியைப் பிரித்ததும் முதலில் பார்வைக்கு எது தட்டுப்பட வேண்டும், எவ்வளவு விரைவாக பிளக் பாயின்ட்டில் சொருகி கணினியை இயக்க முடியும், கணினி இயங்கத் தொடங்கியதும் முதலில் திரையில் என்ன ஒளிரும் என்பதை எல்லாம் திட்டமிடுவார் ஸ்டீவ். மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிப் பேசி, அதில் இருக்கும் குறைகளை 100 சதவிகிதம் சரிசெய்வதில் மெனக்கெடுவார்.    

p30a.jpg

எதுவும் எளிமையாக இருக்க வேண்டும் அவருக்கு. மேக் கணினிகளுக்கான உபயோகிப்பாளர் கையேடு தயாரிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் அது. அந்தக் கையேட்டை எப்படி எல்லாம் தயாரிக்கலாம் என்று ஆளுக்கு ஒரு ஐடியா சொல்லிக்கொண்டு இருந்தபோது ஒருவர், 'பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காதவர்களுக்கு  எளிதாகப் புரிய வேண்டும். அதனால், பன்னிரண்டாம் கிரேடு அளவுக்கு அதனை எளிமையாக எழுத வேண்டும்!’ என்றார். 'உலகின் அதிநவீன கம்ப்யூட்டரைப் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காதவர் இயக்கி என்ன ஆகப்போகிறது?’ என்ற கேள்வியுடன் அனைவரும் ஸ்டீவ் ஜாப்ஸின் முகத்தை நோக்க, அவர் 'இல்லை’ என்பதுபோல தலையசைத்தார். 'அதானே... இன்னும் உயர்ந்த தரத்தில் அதை அமைக்கச் சொல்வார் ஸ்டீவ்’ என்று அனைவரும், நான் உட்பட எதிர்பார்க்க, 'இல்லை... பன்னிரண்டு என்பது மிக மிக அதிகம். முதல் வகுப்பு தகுதிக்கு அதை எழுதுங்கள்!’ என்று அல்டிமேட் அதிர்ச்சி கொடுத்தார் ஸ்டீவ்.

நம்பாமல் நாங்கள் அவரையே பார்க்க, 'என்னைப் பொறுத்தவரை கையேடே இல்லாமல் ஒவ்வொருவரும் மேக் கணினியை இயக்கும் அளவுக்கு அது எளிமையாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு மின்னணுப் பொருளோடு கையேடு அவசியம் என்பதாலேயே, அப்படி ஒன்றை நாம் வழங்க வேண்டி இருக்கிறது. அதனால், ஒன்றாம் வகுப்புத் தரத்துக்கு நாம் உருவாக்கினால் போதும்!’ என்றார் ஸ்டீவ்.

எவ்வளவு நுணுக்கமான விஷயமும் எளிமையாக இருக்க வேண்டும் ஸ்டீவுக்கு!

கார்ப்பரேட் கலாசாரத்துக்குக் கல்தா!

ஆப்பிள் நிறுவனத்தில் சேர்வதற்கு முன் நான் ஐ.பி.எம். நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டு இருந்தேன். அங்கு அலுவலக பியூனிடம் காபி கொண்டுவரச் சொல்வதற்குக்கூட கார்ப்பரேட் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நிறுவனத்தின் அடுத்த ஆறு மாத நடைமுறைகள் என்று சிலவற்றைப் பட்டியலிட்டு, அதன் பிரகாரம் இயங்கிக்கொண்டு இருப்பார்கள். சமயங்களில் சில நடைமுறைகளால் எந்தப் பயனும் இருக்காது என்பது 'உள்ளங்கை நெல்லிக்கனி’யாகத் தெரிந்தாலும், விடாமல் அதைப் பின்பற்றிக்கொண்டே இருப்பார்கள். ஒருகட்டத்தில், இந்த 'நடைமுறை’ச் சிக்கல் குறித்து எனது மேலதிகாரியிடம் அலுத்துச் சலித்துக்கொண்டேன். அப்போது அவர் சொன்னார், 'ஐ.பி.எம். என்பது மகா பெரிய கன்டெய்னர்களைச் சுமந்து செல்லும் கப்பல் போன்றது. அதை ஒரு சீரான வேகத்தில் முடுக்கிவிட்ட பிறகு, நாம் நினைத்த திசைக்கு எல்லாம் அதை மாற்ற முடியாது. 21 மைல்கள் பயணித்த பிறகுதான் அதன் திசையை மாற்ற முடியும். 16 மைல்கள் பயணித்தால்தான் நிறுத்தவே முடியும்!’

p30b.jpgவிரக்தியின் உச்சத்துக்கே சென்றேன். ஆனால், ஆப்பிளில் நான் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே கடலளவு மாற்றத்தை உணர்ந்தேன். ஆப்பிள் என்பது கடற்கொள்ளையர்கள் படகு போல. நினைத்த நேரத்தில், நினைத்த மாத்திரத்தில் தங்கள் திசையையும் வேகத்தையும் மாற்றிக்கொண்டு பரபரப்பாகப் பயணித்துக்கொண்டே இருந்தனர். ஒரு விஷயம் தப்பு என்று தெரிந்தால், அடுத்த நிமிடமே கொஞ்சமும் யோசிக்காமல், அது எவ்வளவு காஸ்ட்லியான புராஜெக்ட் ஆக இருந் தாலும் நிறுத்திவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள். இந்த விஷயத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் கடற்கொள்ளையர்களின் தலைவன் போலத்தான் செயல்பட்டு வந்தார். அனைவருக்கும் ஒரு பணியை நிர்ணயிப்பார். அவர்கள் அதைச் செய்துகொண்டு இருக்கும்போதே, கொஞ்சம் சாய்ந்து அமர்ந்துகொண்டு அது சரிவருமா என்று ரிலாக்ஸ்டாக யோசிப்பார். 'ஆகாது’ என்று தோன்றினால், அனைவரிடமும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, அந்த புராஜெக்ட்டுக்குச் சுபம் போட்டுவிடுவார்!

vikatan

  • தொடங்கியவர்

13483341_1064593843589309_41846299281382

டென்னிஸ் உலகில் முடிசூடா ராணியாக விளங்கிய அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸின் பிறந்தநாள் இன்று.
Happy Birthday Venus Williams

 
  • தொடங்கியவர்

நாட்டுக்கொரு பாட்டு- 10 : ‘தாய்’ மொழிப் பாடல் !

 
mozhi_2895253f.jpg
 

மலேசியாவுக்கு வடக்கே, மியான் மருக்குத் தெற்கே உள்ள தென் கிழக்கு ஆசிய நாடு தாய்லாந்து. இந்த நாட்டுக்கு, ஒரு சிறப்பு உள்ளது. அயல் நாடுகளுக்குக் கீழ் அடிமை நாடாக இருந்திராத ஒரே தென் கிழக்கு ஆசிய நாடு இதுதான்!

தந்திரம்

தென் கிழக்கு ஆசியாவில் பிரெஞ்சு, இங்கிலாந்து ஆதிக்கம் வலுவாக இருந்ந்தாலும், எப்படி இந்த நாடு மட்டும் அடிமைப்படாமல் போனது? பிரெஞ்சு, ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு இடையே நிலவிய பகைமையை, இந்த நாட்டு மன்னர்கள், மிகவும் சாமர்த்தியமாகவும் சாதகமாகவும் தங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டார்கள். இருவரின் ஆதிக்கத்திலிருந்தும் தப்பித்துக்கொண்டார்கள்.

மாறி... மாறி... மாறி…

‘பாங்காக்'ஐத் தலைநகராகக் கொண்ட இந்த நாட்டுக்கு, ‘சயாம்' என்கிற சமஸ்கிருதப் பெயர்தான் முன்பு இருந்தது. 1939-ம் ஆண்டுதான் ‘தாய்லாந்து' ஆனது.

சில ஆண்டுகள் கழித்து 1945-ல் மீண்டும் ‘சயாம்' ஆனது. திரும்பவும் நான்கு ஆண்டுகள் கழித்து, 1949-ல் தாய்லாந்து என்று பெயர் மாறி, அதுவே நிரந்தரமானது.

பழமை & மரபு

சுமார் நாற்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாட்டில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் உள்ளது. நமது பல்லவ மன்னர்கள் உட்பட பன்னாட்டு அரசர்கள் இந்த நாட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.

ஜனநாயக நாடாக இருந்தபோதும், மன்னர்தான் ‘சம்பிரதாய' தலைமை வகித்துவருகிறார். தற்போது மன்னராக உள்ள பூமிபாய் அதுல்யாதேஜ், 1946-ம் ஆண்டு முதல் 70 ஆண்டுகளாக மன்னராக இருந்துவருகிறார்.

இந்த நவீன காலத்தில் தொடர்ச்சியாக மிக நீண்ட காலமாக மன்னர் பதவி வகித்துவருபவர் இவர்தான். சரி, இந்த நாட்டு தேசிய கீதத்துக்கு வருவோம்.

கீதம்

போலந்தின் தேசிய கீதத்தின் இசையையொட்டியே தாய்லாந்து தேசிய கீதமும் அமைந்துள்ளது. தேசிய கீதத்துக்கு இசையமைத்தவர், ஃப்ரா சென்டுரியாங்.

இவர் ஒரு ஜெர்மானியர். வேறு ஒருவர் எழுதிய வரிகளுடன், 1932-ம் ஆண்டு ஜூலையில் இது முதன்முதலில் ஒலிபரப்பப்பட்டது.

ஆனால், 1939-ல் தாய்லாந்து என்ற பெயர் மாற்றப்பட்ட பிறகுப் புதிய தேசிய கீதம் கேட்டு பாடல் வரிகள், இசை என இரண்டுக்குமே அந்த நாட்டு அரசு போட்டி நடத்தியது. லு ஆங் சரனுப்ரஃபான் எழுதிய பாடல் தேர்வானது.

ஆனாலும், இசை யாரையும் கவரவில்லை. ஜெர்மானியரின் இசையே நன்றாக இருந்ததால், அதே இசையே தொடரட்டும் என்று முடிவானது.

இப்பாடலை இசைக்க ஆகும் நேரம் - சுமார் 45 வினாடிகள். இப்பாடலில் வரும் ‘தாய்’ என்ற சொல், அந்த நாட்டு மொழியை மட்டுமல்ல; நாட்டு மக்களையும் குறிக்கும். ‘தாய்’ என்றால் சுதந்திரமானவன், மனித இனத்தவன் என்று அர்த்தம் கூறப்படுகிறது. தாய்லாந்து தேசிய கீதம் எப்படி ஒலிக்கும்?

mozhii_2895258a.jpg

ரேத தாயி ருவாம் லூதநுவே ச்சாதச்வே த்தாய்

பென்ப்ர ச்சாராத் ஃபதங்கோங் த்தாய்துக் சூவான்

யூதம் ராங் கோங் வய்தய் தாங் முவான்

துவய் த்தாய் லுவான் மாய் ரக்ச மன்கி

த்தாய்நி ரக்சங்கோப் தேதுஅங் ராப்மய் காத்

ஏக்கராத் ச்சாம் அஹய் க்ராய் க்கோமகி

சலா லுவேத் துக் யாத்பன் ச்சாத் ஃபலி

தலாங்ப்ர தேத்ச்சட் த்தாய்த்த வீமி ச்சாய், ச்சயோ.

தமிழாக்கம் என்ன?

எல்லா, ‘தாய்' மக்களையும் தாய்லாந்து, நெஞ்சோடு அணைத்துக்கொள்கிறது

தாய்லாந்தின் ஒவ்வொரு அங்குல மண்ணும் ‘தாய்' மக்களுக்கே

நெடுங்காலமாக அது தன் இறைமையை தக்க வைத்துக்கொண்டுள்ளது

ஏனெனில் தாய்லாந்தினர் எப்பொழுதும் ஒன்றுபட்டே இருக்கின்றனர்

‘தாய்' மக்கள், அமைதியை நேசிக்கிறவர்கள்; ஆனாலும் யுத்தத்தில் அஞ்சுபவர்கள் அல்லர்;

சர்வாதிகாரத்தை அவர்கள் சகித்துக் கொள்ளவே மாட்டார்கள்

தாய்லாந்தினர், ரத்தம் சிந்தவும் சித்தமாய் இருக்கிறார்கள் -

‘தாய்' தேசத்தின் பாதுகாப்பு, சுதந்திரம், வளர்ச்சிக்காக.

(தேசிய கீதம் ஒலிக்கும்)

tamil.thehindu

  • தொடங்கியவர்
'தேகம் நலிந்தால், மனம் துவண்டுவிடும்'
 
 

article_1466048440-hgjgfuti.jpgஎமது தேகத்தின் ஆரோக்கியத்துக்கு, அளவான உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும். உணவைத் திணித்து உடலுக்குள் புகுத்துவது, தேவையற்ற பிணிகளைத் தரும் எனத் தெரிந்தும் உட்கொள்வது, மனிதரின் எல்லையற்ற 'அவா' வினையே எடுத்துக் காட்டுகிறது.

பணம், பொருளைச் சேர்ப்பது போல், உடலின் எடையும் அதிகரிக்க விரும்புவது போல் அறியாமை வேறேது. உண்மை எதுவென அறிந்தும் அதனைப் பொருட்படுத்தாமல் இயங்குவதும் அறியாமையின் ஒரு வடிவம்தான்.

இந்த உடலும் மனமும் இணைந்தாலே சந்தோஷம் உண்டாகும். தேகம் நலிந்தால், மனம் துவண்டுவிடும். அப்புறம் ஏது நல்ல வாழ்க்கை உருவாகப் போகின்றதோ?

செல்வத்தால் பெறமுடியாத சந்தோஷங்களை தேக ஆரோக்கியம் ஈட்டித்தருகிறது.

அளவான உணவு, தூய எண்ணம் என்பன ஆன்மாவை அழகுபடுத்துகின்றன.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஒரு சித்திரம் சில சொற்கள்

 
 
21_2898093f.jpg
 

கல்லறை தோண்டும் போட்டி

17_2898080a.jpg

தலைப்பைப் படித்ததும் எது எதற்குத்தான் போட்டி நடத்துவது என்ற விவஸ்தையே இல்லை என்று நீங்கள் சொல்லக்கூடும். ஆனால் ஹங்கேரியில் நிலைமை அப்படியல்ல. அங்கே கல்லறை தோண்டும் தொழிலில் ஈடுபட இப்போது ஆட்கள் கிடைப்பது அரிதாகிவருகிறது. ஆகவே இளைஞர்கள் மத்தியில் இத்தொழிலுக்கு மரியாதை ஏற்படுத்துவதற்காக தேசிய அளவிலான கல்லறை தோண்டும் போட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இதற்கான முதல் சுற்று போன்ற போட்டி டெப்ரிசென் என்னும் நகரில் நடைபெற்றிருக்கிறது. இருவரை உறுப்பினராகக் கொண்ட 18 டீம்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டிருக்கின்றன. 2 அடி 7 அங்குல அகலமும், 6 அடி 6 அங்குல நீளமும், 5 அடி 3 அங்குல ஆழமும் கொண்ட குழியைத் தோண்ட வேண்டும். இதில் முதலிடம் பிடித்த ஜோடி அரை மணி நேரத்தில் குழியைத் தோண்டியிருக்கிறார்கள். இவர்கள் தேசிய அளவிலான போட்டியில் இடம்பெறத் தகுதி பெற்றிருக்கிறார்கள்.

மணலுக்குக் கிடைத்த தங்கம்

18_2898085a.jpg

ஒடிஷாவைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஸன் பட்நாயக் (39). இவர் தனது மணல் சிற்பங்கள் மூலம் சமூகத்துக்குத் தேவையான விழிப்புணர்வை ஊட்டிவருகிறார்; இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துவருகிறார். இப்போது அவர் இந்தியாவுக்கு மேலும் ஒரு பெருமையைத் தேடித் தந்திருக்கிறார்.

பல்கேரியா நாட்டில் நடைபெற்ற உலக மணல் சிற்பக் கலைஞர்களுக்கான போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். விளையாட்டுப் போட்டியில் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதன் ஆபத்தை உணர்த்தி, அது தொடர்பான விழிப்புணர்வை வளர்ப்பதற்காக அவர் உருவாக்கிய ‘ட்ரக்ஸ் கில்ஸ் ஸ்போர்ட்ஸ்’ என்னும் மணல் சிற்பத்துக்காக இந்தப் பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

செல்ஃபிக்கு ஒரு சிலை

20_2898088a.jpg

ஸ்மார்ட்போன் மலிந்திருக்கும் இந்தக் காலத்தில் மொபைல் போன் வைத்திருப்போரில் செல்ஃபி எடுக்காதவர்கள் என யாருமே இருக்க வாய்ப்பில்லை. எல்லோருக்கும் செல்ஃபி எடுக்கத் தோன்றியது ஆனால் அதற்கு சிலை எடுக்க வேண்டுமென இங்கே யாருக்காவது தோன்றியதா? அமெரிக்கருக்கு அப்படியொரு எண்ணம் தோன்றி செல்ஃபிக்குச் சிலையும் வைத்துவிட்டார்கள். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள நகரம் சுகர் லேண்ட்.

இந்த நகரத்தின் டவுண் ஹாலின் முன்னே வைக்கப்பட்டிருக்கும் சிலை ஒன்று அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. இரண்டு பெண்கள் தங்களை செல்ஃபி எடுத்துக்கொள்ளும் காட்சிதான் அங்கே சிலையாக வடிவம் பெற்றிருக்கிறது. சிலர் இந்தச் சிலை அமைத்ததை வரவேற்றிருக்கிறார்கள் சிலரது எரிச்சலையும் இந்தச் சிலை சம்பாதித்திருக்கிறது.

பேட்மிண்டன் விளையாடும் ரோபோ

19_2898089a.jpg

மனிதர்கள் செய்யும் எல்லா வேலைகளையும் ரோபோக்கள் செய்ய ஆரம்பித்துவிட்டன. மனிதரின் பொழுதுபோக்கான விளையாட்டை மட்டும் விட்டுவைக்குமா என்ன? அவை விளையாடவும் தொடங்கிவிட்டன. சீனாவின் செங்டு நகரத்தின் பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று இப்படிப்பட்ட ரோபோ ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த ரோபோ மனிதருடன் அழகாக பேட்மிண்டன் விளையாடுகிறது. விளையாடத் தேவையான அத்தனை திறனையும் அந்த ரோபோவுக்கு வழங்கியிருக்கிறது நவீனத் தொழில்நுட்பம். ரோபோவும் மனிதரும் விளையாடும் பேட்மிண்டனைப் பார்ப்பதே ஒரு அழகு தான். அந்த வீடியோவைக் காண: http://www.newsflare.com/video/74001/sport/robot-plays-badminton-with-student-in-china

tamil.thehind

 

  • தொடங்கியவர்

13482895_1065144516867575_14456338143079

தமிழ் திரையுலகில் திரை நட்சத்திரம் அரவிந் சாமியின் பிறந்தநாள் இன்று.

90 களின் ஆரம்பம்!
வெள்ளித்திரை எங்கும் சுற்றிவந்த
கலாப காதலன், இளம் கன்னியர்களின் இதயம் கவர்ந்த நாயகன்
ரோஜா திரைப்படம் மூலம் ராஜாவாக எல்லோர் மனங்களிலும் வலம் வந்தவர்

தனியொருவனில் இடம்பிடித்து இரண்டாது இனிங்சை ஆரம்பித்த அபிமன்யு

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அரவிந் சாமிக்கு வாழ்த்துக்கள்.
 
  • தொடங்கியவர்

ஒருத்தருக்கு இவ்வளவு உணவா? நெட்டிசன்களின் கோபத்தில் சிக்கிய விராட் கோலி

1346602610643408436530186334638988005641

முன்பெல்லாம் பேட்டிங் சொதப்பல், அனுஷ்கா ஷர்மா என சர்ச்சையில் சிக்கும் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி இந்த முறை புதுவிதமான சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஐ.பி.எல் போட்டியில் தெறி ஃபார்மில் இருந்த விராட் கோலிக்கு ஜிம்பாப்வே தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்த படம் மூலம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் கோலி.

'தனது முன் உள்ள மேஜையில் முழுக்க உணவுகளுடன் டின்னர் இது தான்' என பதிவிட்டுள்ள கோலியின் புகைப்படத்துக்கு நெட்டிசன்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பல குழந்தைகள் உணவில்லாமல் தவிக்கிறார்கள். ஒருநாள் உணவு என்பதே அவர்களுக்கு கனவாக இருக்கிறது. அவர்களை போன்றவர்களுக்கு உதவுங்கள் ப்ளீஸ் என்றும்,

2-7.png

உங்கள் நாட்டில் நான் இருந்திருந்தால் நான் நிறைய குழந்தைகளுக்கு உதவியிருப்பேன். நீங்கள் ஏன் இப்படி சுயநலவாதியாக இருக்கிறீர்கள் என்றும் கொதித்துள்ளனர். இன்னும் சிலர் விராட் கோலியை பற்றி உங்களுக்கு என்ன தெரியும், அவர் விராட் கோலி பவுண்டேஷன் மூலம் பலருக்கு உதவி வருகிறார். ஒருவரது பர்சனல் விஷயங்களை பொது விஷயங்களோடு ஒப்பிடுவது தவறு என்றும் கூறியுள்ளனர்.

b-1.png

vikatan

  • தொடங்கியவர்

காசு.. பணம்.. துட்டு...

 
rs_2895179f.jpg
 

மனிதர்களின் மிகமிக முக்கியத் தேவை பணம். அந்தப் பணம் பற்றி உலகில் பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. அதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

# கிளிஞ்சல்கள், பட்டு, உப்பு, தேயிலை உட்படப் பலவும், ஒரு காலத்தில் பணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதாவது முதன்மையான பண்டமாற்றுப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டன.

rs1_2895180a.jpg

பண்டமாற்று என்பது ஒரு பொருளைக் கொடுத்து இன்னொரு பொருளைப் பெற்றுக்கொள்வது.

# கிரேக்கப் பெண் கடவுள் ஏத்னாவும் புனிதமாகக் கருதப்பட்ட அவருடைய ஆந்தையும் இடம்பெற்ற நாணயங்கள் 2,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே பண்டைய கிரீஸில் வெளியிடப்பட்டுள்ளன.

உயிரினங்களுக்கும் புராணங்களுக்கும் மனிதர்கள் கொடுத்த முக்கியத்துவத்தையும் மதிப்பையும் இதிலிருந்து அறியலாம். இப்போதும்கூட நம்முடைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகளில் உயிரினங்கள் இடம்பெற்றே வருகின்றன.

# 1636-ம் ஆண்டில் நெதர்லாந்தில் ஒரு பூவைக் கொடுத்தால் ஒரு வீட்டையே வாங்கி விடலாம் என்ற நிலை இருந்தது. உலகப் புகழ்பெற்ற ட்யூலிப் மலர்கள் நெதர்லாந்தில் அந்தக் காலத்தில் அவ்வளவு அதிக விலைக்கு விற்கப்பட்டிருக்கின்றன.

rs3_2895181a.jpg

# கம்போடியத் தலைவர் சிஹானோக் தலைமையிலான ஆட்சியில் 1975-ல் கம்போடிய பணம் மதிப்பற்றதாக அறிவிக்கப்பட்டது. பணப் பரிமாற்றத் தேவை சில காலம் ஒழிக்கப்பட்டிருந்தது. நவீன உலக வரலாற்றில் பணம் மதிப்பற்றதாக அறிவிக்கப்பட்டது இந்த ஒரு முறை மட்டுமே.

# ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள போட்ஸ்வானா பாலைவனங்கள் நிரம்பிய நாடு. அந்த நாட்டில் புழக்கத்தில் உள்ள பணத்தின் பெயர் புலா. அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? மழை என்று அர்த்தம். எவ்வளவு அர்த்தம் மிகுந்த பெயர் இது!

# பொதுவாக நாணயங்கள், ரூபாய் நோட்டுகளில் அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்களே இடம்பெறுவது வழக்கம். பெல்ஜியம் நாட்டிலோ ஒரு கற்பனையுலகச் சிறுவனுக்கு அந்த அங்கீகாரத்தை வழங்கியது.

அந்தச் சிறுவன் பிரபல பெல்ஜிய காமிக்ஸ் நாயகன் டின்டின்னும் அவனுடைய நாய் ஸ்னோயியும். டின்டின் 75-வது ஆண்டையொட்டி இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

# ஜப்பானிய நாட்டுப் பணம் காகிதத்திலிருந்து தயாரிக்கப்படுவதில்லை. அப்புறம்? வாழை மரத்தின் நெருங்கிய உறவினரான அபகா தாவரத்தின் நார்களிலிருந்தே தயாரிக்கப்படுகிறது.

# அமெரிக்க நாணயச்சாலை - பணம் அச்சடிக்கும் நிறுவனம். இங்கே ரூபாய் நோட்டுகளை உற்பத்தி செய்ய ஒரு நாளைக்குப் பயன்படுத்தும் மையின் அளவு 8,500 கிலோ.

tamil.thehindu

  • தொடங்கியவர்

13490680_1065151043533589_87445931729079

தென்னாப்ரிக்காவின் துடுப்பாட்ட வீரர் kyle abbott
இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார்

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

p22a.jpg

தய அறுவைசிகிச்சை காரணமாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் ஓய்வில் இருக்க, நிழல் பிரதமராக இருப்பவர் அவரது மகள் மரியம் நவாஸ். 43 வயதான மரியம்தான் பாகிஸ்தானுக்கு வரும் வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்திப்பது, கட்சியில் முக்கிய முடிவு எடுப்பது என பரபரப்பாக இருக்கிறார். `2018-ம் ஆண்டு தேர்தலில் இம்ரான்கானைச் சமாளிக்க மகள் மரியம் நவாஸே சரியான சாய்ஸாக இருப்பார் என்பதால், அரசியலில் மகளை முன்னிலைப்படுத்துகிறார் நவாஸ் ஷெரிஃப்' என்கிறது கட்சித்தலைமை. `அப்பா ஓ.கே சொன்னால் 2018-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராகவே இருக்கிறேன்' என்று மரியமும் ரேஸுக்கு ரெடியாகிவிட்டார்!


p22b.jpg

ஆர்குட், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எது வந்தாலும் முதலில் சிம்பு அங்கே இருப்பார். சோஷியல் மீடியாவின் லேட்டஸ்ட் அறிமுகமான பெரிஸ்கோப்பில் கடந்த வாரம் லைவ் சாட்டில் வந்தார் சிம்பு. கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு ரசிகர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல், செம கேஷுவலாக பதில் சொன்னார். பேச்சுலர் பாய்ஸுக்கு அட்வைஸ், காதல், கல்யாணம், பீப் சாங்... என எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னவர், சர்ப்ரைஸாக ரஜினி, அஜித்துக்கு அடுத்து, தான் `பில்லா’ படத்தில் நடிக்க இருப்பதாகச் சொல்ல ஆன்லைனில் #பில்லா2018 ட்ரெண்டிங் ஆனது!


p22c.jpg

நான்காவது முறையாக ஃப்ரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட செரீனா வில்லியம்ஸைத் தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தைத் தட்டியிருக்கிறார் ஸ்பெயினின் முகுருஸா. 22 வயதான முகுருஸாவின் உயரம் 6 அடி என்பதால், ஹைஸ்பீடு ஏஸ்களால் எதிரில் விளையாடும் வீராங்கனைகளைத் தெறிக்கவிடுகிறார். ஃப்ரெஞ்சு ஓப்பன் டென்னிஸில் முதல் போட்டியில் இருந்து சாம்பியன் பட்டம் வெல்லும் வரை ஒரே ஒரு செட்டில் மட்டுமே தோல்வியடைந்திருக்கிறார் முகுருஸா. `அடுத்த 10 ஆண்டுகளுக்கு இவர்தான் டென்னிஸ் உலகை ஆள்வார்' என்கிற கணிப்புகளுக்கு இடையே நம்பர் 1 இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார் முகுருஸா.


p22d.jpg

தெருக்களில் விளையாடும் `கல்லி கிரிக்கெட்'போல, கூடைப்பந்தாட்ட மைதானங்களில் நடைபெறும் கால்பந்து போட்டிக்கு `ஃபுட்ஸால்' எனப் பெயர். இப்போது கால்பந்து விளையாட்டில் கலக்கிக்கொண்டிருக்கும் மெஸ்ஸி, ரொனால்டோ, ரூனே என அனைவருமே ஃபுட்ஸால் விளையாடி வந்தவர்கள்தான். இந்த ஃபுட்ஸால் விளையாட்டு லீக், வரும் ஜூலை மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. ஐ.பி.எல்., ஐ.எஸ்.எல் போல சென்னை, பெங்களூர், மும்பை என மொத்தம் 8 அணிகள் இதில் மோதவிருக்கின்றன. இதற்கான தொடக்கப் பாடலை கோஹ்லி பாட, இசையமைத்திருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான்!


p22e.jpg

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க்கின் ட்விட்டர் மற்றும் பின்ட்ரஸ்ட் பாஸ்வேர்டுகள் ஹேக் செய்யப்பட்டுவிட்டன என்பதுதான் கடந்த வார ஆன்லைன் வைரல். ஹேக் செய்யப்பட்டதோடு மட்டும் அல்லாமல் மார்க் ஸூக்கர்பெர்க் `DaDaDa’ என்கிற பாஸ்வேர்டைத்தான் உபயோகித்தார் என்கிற பாஸ்வேர்டு ரகசியத்தையும் உடைத்துவிட்டது ஹேக் செய்த `அவர்மைன்' என்னும் ஹேக்கர்ஸ் டீம். ஹேக் செய்யவே முடியாது என்று கெத்துகாட்டும் பிரபலங்களின் சமூக வலைதளப் பக்கங்களை `சும்மா ஜாலிக்காக' ஹேக் செய்யும் இந்த டீம், ட்விட்டரில் அடுத்து யாருடைய அக்கவுன்ட்டை ஹேக் செய்யலாம் என போட்டி நடத்திக்கொண்டிருக்கிறது.

vikatan

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: முதல் பக்கத்தில் 'சிலை திருட்டு'; 6-ம் பக்கத்தில் 'அணு உலை'!

27_2898105f.jpg

24_2898112a.jpg

25_2898110a.jpg

26_2898109a.jpg

23_2898108a.jpg

22_2898107a.jpg

tamil.thehindu

  • தொடங்கியவர்

பிகினி ஏர்லைன்ஸ்!

 

p12a.jpg

தென்கிழக்கு ஆசியக் கண்டத்தில் இருக்கும் வியட்நாம் சோஷலிச ஆட்சி நடக்கும் நாடுகளுள் ஒன்று. அந்த நாட்டின் க்யோன் தி ப்யோங் தாவ் என்ற பெண்மணிதான் இப்போது உலகின் கவனத்தை வேறு மாதிரி ஈர்த்துள்ளார். அந்நாட்டின் முதல் கோடீஸ்வரி என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார் இவர். ஆம், ‘வியட்ஜெட்’ என்ற விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. ஆனால், சமீபத்தில் அவர் செய்த வினோத வியாபார தந்திரத்தால் உலகின் கவனத்தைக் கவர்ந்திருப்பதோடு பலத்த விவாதத்தையும் கிளப்பி உள்ளார்.

உலகின் முதல் ‘பிகினி கேர்ள்ஸ் ஏர்லைன்ஸ்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உலகச் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விமானப் பணிப்பெண்களுக்கு டூ பீஸ் பிகினி உடைகளை அதிகாரப்பூர்வ ஆடையாக்கி விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை ஜொள்ளுவிட வைத்திருக்கிறார். ‘வியட் ஜெட்’ நிறுவனம்தான் அந்த நாட்டின் முதல் தனியார் விமானச் சேவை நிறுவனம் என்பதும் வியட்நாம் அரசே இப்போது அந்த ஏர்லைன்ஸ் நிறுவனத்தை அரசுடைமையாக்க கோடான கோடிகளில் டீலிங் பேசிக்கொண்டிருக்கிறது என்பதும் ஆச்சரியம்.

‘‘பிகினி ஏர்ஹோஸ்டஸ் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு 30 சதவிகிதம் அதிகமாக இண்டஸ்ட்ரி மார்க்கெட்டை எட்டிப் பிடித்துள்ளோம். அரசின் ‘வியட்நாம் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தை விரைவில் எட்டிப்பிடித்து விடுவோம். இன்னும் அதிக அளவில் பிகினி விமானச் சேவையினை வழங்கத் திட்டமிட்டு இருக்கிறோம். பிகினி இமேஜோடு மக்கள் இதைத் தவறாகக் குழப்பிக்கொள்ள மாட்டார்கள். மக்களை வித்தியாசமாகக் கவரவே இந்தத் திட்டம். பிகினி என்பதை ஆபாசமான ஒன்றாகக் கருதாமல், மாறிவிட்ட கலாசாரச் சூழலுக்கு ஏற்ப நாமும் மாறிக்கொள்ள வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். 40-க்கும் மேற்பட்ட முக்கியமான பீச் லொகேஷன்களுக்குச் செல்லும் விமானச் சேவைகள் எல்லாமே இப்போது பிகினிக்கு மாற்றப்பட்டுள்ளது. பிகினி என்பதை பெண் சுதந்திரத்துக்கான முதல் படிநிலையாக நீங்கள் பார்க்க வேண்டும். பிகினி ஆடையை சுதந்திரத்துக்கான குறியீடாக நினைக்கும் பெண்கள் மிக ஆர்வமாகப் பணிப்பெண்களாக சேர்ந்திருக்கிறார்கள்’’ புன்முறுவலோடு சொல்கிறார் க்யோன் தி ப்யோங் தாவ்.

p12d.jpg

இவர் இப்படிச் சொன்னாலும், ‘சோஷலிச நாட்டில் பெண்களின் ஆடையைக் குறைத்துத் தந்திரமாக வியாபாரத்தைப் பெருக்குவது என்பது பெண்களையே இழிவுபடுத்தும் செயல். அதில் வேலை செய்யும் பணிப்பெண்கள் எல்லோருமே கவர்ச்சிப் பதுமைகளாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்’ எனச் சில ஊடகங்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தன. ட்விட்டர் தளத்திலும் பல உள்ளூர் மற்றும் சர்வதேசப் பிரபலங்கள் தங்கள் ஆதங்கத்தைப் பதிவு செய்திருந்தார்கள். அதற்கும் பொறுமையாகப் பதில் சொல்லி இருக்கிறார் ப்யோங் தாவ்!

p12b.jpg

‘‘ஒரு நிறுவனத்தின் அதிபராய் நான் என் நிறுவன ஊழியர்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் மாற்றங்களைக் கொண்டுவந்து பணம் ஈட்டித் தருவது முதன்மைக் கடமை. இதை வியாபாரத் தந்திரமாகக் கருதத் தேவை இல்லை. உலகின் கவனத்தை ஈர்க்கும் நோக்கம் என்று வேண்டுமானால் விமர்சிக்கட்டும்’’ என்கிறார். இப்படி பிகினி ஆடையில் பணிப்பெண்கள் இருப்பது இது முதன்முறை இல்லை. அயர்லாந்து நாட்டின் ‘ரியான் ஏர்’ நிறுவனம் 2008-ல் தங்கள் நிறுவனத்தின் காலண்டர்களில் பணிப்பெண்களை பிகினி ஆடைகளில் போஸ் கொடுக்கச் செய்தது அந்நாட்டில் பலத்த சர்ச்சையைக் கிளப்பியது. கடைசி நேரத்தில் காலண்டரோடு நிறுத்திவிட்டு பிகினித் திட்டத்தையே ரத்து செய்தது ரியான் ஏர் நிறுவனம்.

அவ்வளவு ஏன்... இதே ‘வியட் ஜெட்’ நிறுவனம் 2012-ல் தங்கள் பணிப்பெண்களுக்கு நடுவானில் விமானத்தில் ‘அழகிப் போட்டி’ நடத்தியதற்காக அந்நாட்டின் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் 1,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவமும் நடந்தது. இப்போது விமானப் பணிப்பெண்களையே பிகினியில் நடமாட வைத்து அந்நாட்டு அரசுக்கே விக்கல் வரவழைத்துள்ளார் அந்த லேடி கில்லி பொயோங் தாவ்!

p12c.jpg

சரி அதெல்லாம் இருக்கட்டும் மக்களே... வியட்நாமுக்கு ஒரு ட்ரிப் போகலாமா?

வியட்நாம் - சில சுவாரஸ்யத் தகவல்கள்...

டிங் டாங்: ஆமாம் பாஸ். அந்த ஊரின் நாணயத்தின் பெயர் ‘டாங்’. நம் ஊர் மதிப்பில் ஒரு ரூபாய்க்கு அங்கு  340 டாங் கிடைக்கும். அப்புறமென்ன டிங் டாங்... நாம வியட்நாமுக்குப் பறப்போம். டிங் டாங்... நாம கை நிறைய சம்பாதிப்போம்

கம்யூனிஸப் பின்னணி: இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் மட்டுமல்ல, வியட்நாமும் அதிகப் பாதிப்புக்கு உள்ளானது. 1955 முதல் 1975 வரை அமெரிக்காவின் தலையீட்டால் உள்நாட்டுப்போர், நாட்டையே கலவர பூமியாக்கிக் கடும் வீழ்ச்சியில் தள்ளியது. 1954-ல் ஹோ சி மின் தலைமையில், கம்யூனிஸ்ட்கள் பதவிக்கு வந்தார்கள். ஐ.நா. ஒப்பந்தப்படி வடக்கு வியட்நாம்-தெற்கு வியட்நாம் என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. வடபகுதி கம்யூனிஸ்ட்களிடமும், தென்பகுதி அமெரிக்க ஆதரவாளர்களிடம் இருந்தது. இரு பகுதியினருக்கும் 1955-ல் கடும்போர் நடைபெற்றது. கம்யூனிஸ்ட்களின் கொரில்லாப் போரைச் சமாளிக்க முடியாமல் அமெரிக்கா திணறியது. அமெரிக்கா பின் வாங்கியதால், யுத்த பூமியில் அமைதி வந்தது. வியட்நாம் சோஷலிசக் குடியரசு (Socialistic Republic of Vietnam) என்னும் தனியொரு நாடு பிறந்தது. ஜப்பானைப் போலவே வியட்நாமும் சாம்பலில் இருந்து எழுந்து வந்திருக்கிறது!

கலாசாரப் பின்னணி: வியட்நாமுக்கும் இந்தியாவுக்கும் கலாசார ரீதியாகப் பல ஒற்றுமைகள் உள்ளன. அங்கிருக்கும் டாணாங் நகரின் சம்பா அருங்காட்சியகத்தில் தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோயிலில் இருப்பதைப்போல பிரமாண்ட சிவலிங்கம் உள்ளது. பஞ்சகச்ச வேட்டியும், தலைப்பாகையும் அணிந்த சம்பா இனத்தவர்களின் வழிபாட்டுக் கோயில் சிலைகள் தமிழர்களைப் போலவே இருக்கின்றன!

எதிர்ப்பின் பின்னணி: ‘தன் வரலாறு தெரியாதவன் பிணத்துக்கு சமம்’ என்று கூறி அமெரிக்காவை ஓட ஓட விரட்டியவர் வியட்நாம் புரட்சியாளர் ஹோ சி மின். ‘பிகினி ஆடை என்பது இப்போது அமெரிக்காவின் கலாசார படையெடுப்பு’ என்ற குரல் பரவலாகக் கேட்கத் தொடங்கி இருக்கிறது. பள்ளிக் குழந்தைகளின் பாடப்புத்தகங்களில் வரையப்படும் குட்டைப்பாவாடை மற்றும் பாப் கட்டிங் சிகையலங்காரப் பெண் உருவங்களுக்கு அங்கு எதிர்ப்பு எழுந்துள்ளதால், இப்போது பாரம்பர்ய ஆடைகளைத் தாங்கிய படங்கள் பாடப்புத்தகங்களில் மாற்றி வரையப்பட்டுள்ளன!

vikatan

  • தொடங்கியவர்

தட் ‘அப்போ இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு?’ மொமென்ட்:

p123b.jpg

ரஜினியில் ஆரம்பிச்சு தனுஷ் வரைக்கும் ஏன் சிகரெட் பிடிக்கிற காட்சிகளில் நடிக்கிறாங்கனு ஆளாளுக்கு வறுத்து எடுக்கிறாங்க. அதிலும் அன்புமணி, ஆ ஊன்னா கடிதம் எழுத ஆரம்பிச்சிடுவார். ஆனா நல்லா யோசிச்சுப் பார்த்தா, பழைய கறுப்பு வெள்ளைப் படங்களில் அநியாயத்துக்கு சிகரெட் குடிச்சிருக்காங்க. இப்போ வர்ற படங்களில் வெளியில்தான் சிகரெட் குடிக்கிறாங்க. ஆனா பழைய படங்களில் வீட்டுக்குள்ளேயே சிகரெட் குடிச்சுப் புகையை ஊதுற காட்சிகள் அதிகம். குறிப்பா எம்.ஆர்.ராதாவும் சிவாஜியும் பண்ணின அட்ராசிட்டி டூ மச். அப்பல்லாம் முகேஷ் இல்லையோ?

தட் ‘பயம்னா இவருக்குப் பயம்’ மொமென்ட்:

p123c.jpg

தேர்தல் முடிவுக்குப் பிறகு சைலன்ட் மோடில் இருந்த விஜயகாந்த் இப்போதான் வாயைத் திறந்திருக்கார். ஆனாலும் ஆரம்பமே அதகளம்தான். ‘எனக்குப் பத்திரிகைகாரங்களைப் பார்த்துப் பயம்னு பல பேர் பேசுறாங்க. எனக்கு எதுக்குப் பயம்? அதே மாதிரி பத்திரிகைகாரங்களும் என்னைப் பார்த்துப் பயப்படாம இருக்கணும்’னு பேசியிருக்கார் கேப்டன். யாரும் பக்கத்துல வர்றதுக்கே பயப்படற அளவுக்கு இருக்கீங்களே கேப்டன். இவர் இப்படினா அதிரடி அண்ணியார் பேசியது ‘அதுக்கும் மேல’. ‘ஃபுட்பால் விளையாடறப்போ பந்தை எல்லாரும் உதைக்கத்தான் செய்வாங்க. ஆனா கடைசியில் பந்து கோலைத் தொட்டா வெற்றிதான்’னு பேசியிருக்காங்க பிரேமலதா. அப்போ வைகோதான் ஃபுட்பால் பிளேயரா?

தட் ‘ஆனாலும் உங்களுக்கு இவ்ளோ அதுப்பு ஆகாது’ மொமென்ட்:

p123d.jpg

‘‘தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட ஏமாற்றம் கருணாநிதியின் சமீபத்திய அறிக்கைகளில் தெரிகிறது’’னு சரத்குமார் சொல்லியிருக்கார். சரிதான். சரத்குமார் கட்சி 200 தொகுதிகளில் போட்டியிட்டு, (அதுவும் சொந்த சின்னத்தில்) 180 தொகுதிகளில் ஜெயிச்சுடுச்சுல்ல, அதுதான் இப்படி!

தட் ‘நல்லா வெச்சீங்கய்யா டைட்டிலு’ மொமென்ட்:

p123e.jpg

‘ ‘சதுரங்க வேட்டை’ பட ஹீரோயின் இஷாரா ‘என் படத்தில் நடிக்க ஒப்பந்தமானாங்க. ஷூட்டிங் ஆரம்பிச்ச ஆரம்பத்தில் சில நாட்கள் வந்தவங்க, அதுக்கப்புறம் வரவே இல்லை; தலைமறைவு ஆயிட்டாங்க’னு தயாரிப்பாளர் ஒருவர் புகார் கொடுத்திருக்கார். படத்தோட டைட்டில் என்ன தெரியுமா? ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’. ரைட்டு!

vikatan

 

  • தொடங்கியவர்
உதவியில் பணிவு...
 

article_1465444803-gyu.jpgஒருவரின் முன் மிகையான பணிவுடன், குழைந்து நெளிந்து நிற்கும் போது, அதனைப் பார்த்தவருக்கு, சங்கடமாகவும் சில சமயம் எரிச்சலாகவும் இருக்கும்.

ஏதோவோர் உதவியைப் பெற்றுக்கொள்ள, நடிப்புடன் கூடிய பணிவு தங்களது நலன்சார்ந்ததாகவே இருக்கும்.

இத்தகைய நபர்கள், தாங்கள் எதிர்பார்த்த உதவியை நல்காவிடின், அவர்களைப் புறங்கூறியும் தூற்றியும் திரிவதுண்டு.

எவரிடமாவது பணிவுடன் கேட்பது தவறல்ல. ஆனால், முகஸ்துதி பாடி, சங்கோஜப்படுவது போல் செயற்கையாகத் தங்களை மாற்றிக் கொள்வதை எவருமே புரிந்து கொள்ளாமல் இருப்பார்கள் என எண்ணுதல் மடமை.

எல்லா நேரத்திலும் எல்லோரிடத்திலும் உதவிகேட்க முடியாது. கொடுப்பவரிடத்திலும் சில சமயம் சந்தர்ப்பமில்லாமல் இருக்கலாம்.

பொருளை ஏற்கும்போது காட்டும் பணிவை, அதனைத் திருப்பிக்கொடுக்கும் போதும் காட்டவேண்டும்.

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.