Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
ஆடுகளுக்கான அழகுப் போட்டி!
 

அழகிய ஆட்டைத் தெரிவு செய்வதற்காக ஆடுகளுக்கான அழகுப் போட்டியொன்று லித்துவேனியாவில் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது.


17632g1.jpg

 

ரெமிகலா எனும் கிராமத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் அலங்கரிக்கப்பட்ட பல ஆடுகள் காட்சிப்படுத்தப்பட்டன. ஆடுகளின் உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்களும் பல்வேறு அலங்காரங்களுடன் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

மனிதர்களின்  அணிவகுப்புகள், நடனங்களும் ரெமிகலா கிராமத்தின் பாரம்பரிய சின்னமாக ஆடு கருதப்படுகிறது. இதனையொட்டி வருடாந்தம் ஆடுகளுக்கான அழகுப் போட்டி அங்கு நடத்தப்படுகிறது.


 17632g2.jpg

 

இம் முறை 16 மாத வயதான டேமித் எனும் ஆடு முதலிடத்தைப் பெற்றது. இந்த ஆட்டின் உரிமையாளர் 74 வயதான பேர்னாண்டஸ் ஆவார். ஓய்வு பெற்ற மிருக வைத்தியரான இவர் ஏற்கெனவே பல தடவைகள் தனது ஆடுகளை இப் போட்டிகளில் கலந்துகொள்ள வைத்திருந்தார்.

 

17632g3.jpg

 

எனினும், தனது ஆடொன்று முதலிடம் பெறுவது இதுவே முதல் தடவை என அவர் தெரிவித்துள்ளார்.

.metronews.lk

 

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தேவதாசி முறை ஒழியப் புரட்சி செய்த மூதாட்டி மூவலூர் இராமாமிர்தம் நினைவு தினம் சிறப்புப் பகிர்வு

13510988_1166056850119770_61692382185238

 

* பெண்களுக்கெதிரான சமயச் சடங்குகளில் மிகக் கொடூரமானது ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்களை பொட்டுக்கட்டி தேவதாசியாக்கும் கருவியாக்கியதுதான்.

* குறிப்பிட்ட சமூகப் பெண்களை கோவிலில் நடனமாடவும், அவர்களை திருமணம் செய்து கொள்ளவிடாமல் பொட்டுக் கட்டும் வழக்கம் கடந்த நூற்றாண்டின் முதல் பகுதி வரை நீடித்தது. இந்த சமூகத்தில் பிறந்த ஆண்கள், நாயனம், மேளம் வாசிப்பதிலும், நட்டுவனார்களாகவும் வாழ்க்கையை நடத்தினர்.

* இக்கொடுமையைக் கண்ட மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூரில் கிருஷ்ணசாமி என்பவர் எதிர்த்தார். இதனால் கடும் எதிர்ப்பு மற்றும் கொலை மிரட்டல் போன்றவற்றால் ஊரைவிட்டே சென்னைக்கு ஓடிவந்துவிட்டார். அவருக்கும் சின்னம்மாள் என்பவருக்கும் 1883-ம் ஆண்டு இராமாமிர்தம் பிறந்தார்.

* ஆச்சிக் கண்ணு என்ற தேவதாசியிடம் 10 ரூபாய்க்கும், ஒரு பழைய புடவைக்கும் விற்றுவிட்டார் சின்னம்மாள். காரணம். குடும்பத்தின் வறுமை. ஆச்சிக் கண்ணுவிடம் 7 வயது முதல் வளர்ந்தார் இராமாமிர்தம். பின்னாளில் தன் இனிஷியலாக ஆ என்று இவர் போட்டுக் கொண்டது இந்த ஆச்சிக் கண்ணுவின் பெயரைத்தான்.

* தன் 17 வயதில் பொட்டுக்கட்டும் சடங்கை வெறுத்துக் கடும் எதிர்ப்பு தெரிவித்த இராமாமிர்தம், பின் உள்ளூர் தேவதாசிகள் எதிர்ப்பால் அது நடைபெறவில்லை.

* 65 வயது பணக்கார மிராசுதாரைத் திருமணம் செய்ய வற்புறுத்தி மீண்டும் தனக்கு வந்த சோதனையை எதிர்த்து, நடனம் சொல்லித் தந்த காங்கிரஸ் பற்றாளர் சுயம்புப் பிள்ளையை ஒரு கோவிலில் நெய் விளக்கின் முன் சத்தியம் பெற்றுத் திருமணம் செய்து கொண்டார். பின் இருவரும் தேவதாசி முறை ஒழிய காங்கிரசில் ஈடுபட்டு தீவிரப் பிரசாரம் செய்தனர்.

* இராஜாஜியின் கடும் எதிர்ப்பையும் மீறி இராமாமிர்தம் நடத்திய மாநாட்டில் காந்தியார் கலந்து கொண்டார்.1925-ம் ஆண்டு நடத்திய மயிலாடுதுறை மாநாட்டில் திரு.வி.க., பெரியார் போன்றோர் கலந்து கொண்டனர்.

* பெண்ணுலகு போற்ற வந்த கற்பகம் என்று இராமாமிர்தத்தை திரு.வி.க. பாராட்டினார். தேவதாசி முறை ஒழிக்கப்பட திட்டம் வகுக்க வேண்டும் என்று காந்தியாருக்கு பல நீண்ட கடிதங்கள் எழுதினார். எதற்கும் காந்தியிடம் இருந்து பதில் வரவில்லை.

* 1925-ம் ஆண்டு காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைப் பெரியார் தொடங்கிய போது, அவருடன் சுயமரியாதை இயக்கத்தில் பங்கு பெற்ற முதல் பெண்மணி இராமாமிர்தம் அம்மையார்.

* முதலாம் இந்தி எதிர்ப்புப் போர் உள்பட பல போராட்டங்கள் என அனைத்துமே அம்மையார் இல்லாமல் நடந்ததில்லை.

* தன் சுயசரிதை போன்று இவர் 1936-ல் எழுதிய நாவல்தான் தாசிகளின் மோசவலை (அ) மதி பெற்ற மைனர் . இதில் தேவதாசி முறைக் கொடுமை பற்றியும், அது ஒழிக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் விளக்கப்பட்டிருந்தது. தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டவர். பல கட்டுரைகள், கதைகளை எழுதி திராவிடர் இயக்கப் பிரச்சாரத்தை யாருக்கும் பயப்படாமல் செய்தார்.

* 1932ம் ஆண்டு தஞ்சையில் நடந்த பிரசார நாடகத்தில் சிலர் புகுந்து கலவரம் செய்ததுடன் அவரின் நீண்ட தலைமுடியை அறுத்து எறிந்தனர். அதன் பின் கிராப்புத் தலையுடனே இறுதி வரை பிரசாரம் மேற்கொண்டார்.

* டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சட்டசபையில் தேவதாசி ஒழிப்பு மசோதாவை அறிமுகம் செய்த போது, சத்தியமூர்த்தி அய்யர் கடும் எதிர்ப்புத் தெரிவிக்க முத்துலெட்சுமி ரெட்டி, அய்யருக்குத் தேவையென்றால் அவரினத்துப் பெண்கள் ஆடட்டும். எங்கள் இனப் பெண்கள் இனி ஆடமாட்டார்கள் என்றபோது, சட்டசபையே அதிர்ந்தது. முத்துலட்சுமி ரெட்டியின் இந்த அறைகூவலுக்குப் பின்னால் இருந்தவர்கள் தந்தை பெரியாரும், இராமாமிர்தம் அம்மையாரும்தான்.

* மூதாட்டி இராமாமிர்தம் அம்மையாரின் நீண்ட போராட்டத்தின் காரணமாக, 1947-ம் ஆண்டு ஓமந்தூர் இராமசாமிரெட்டியார் முதல்வராக பதவியேற்றவுடன், Tamilnadu Act xxxi (The Madras Devadasis (Prevention of Dedication) Act 1947என்ற சட்டம் மூலம் தேவதாசி முறை முற்றாய் ஒழிக்கப்பட்டது.

* 1949ல் திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.கவில் இணைந்து பணியாற்றிய மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் ஜூன் 27-1962ம் ஆண்டு மறைந்தார். அம்மையாரைச் சிறப்புச் செய்யும் முகமாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் ஒன்றை 1989ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

vikatan

  • தொடங்கியவர்

13528144_1070950689620291_83507854005340

பாகிஸ்தானிய வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸின் பிறந்தநாள்
Happy Birthday Wahab Riaz Official

 

 

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p106b.jpg

facebook.com/saravanan.chandran.77:

எங்கோ படித்தது. எப்போதும் எனக்குள் சொல்லிக்கொள்வது... அது ஓர் ஆப்பிரிக்கக் காடு. ஒவ்வொரு நாள் காலையிலும், ஒரு சிங்கம் அங்கு விழித்து எழுகிறது. அதற்குத் தெரியும் இந்தக் காட்டிலேயே வேகமாக ஓடக்கூடிய மானைவிட வேகமாக ஓட வேண்டும். இல்லையெனில், மவனே பட்டினிதான். அதே காட்டில் இன்னொரு மானும் விழிக்கிறது. அதிவேகமாக ஓடக்கூடிய சிங்கத்தைவிட வேகமாக ஓடாவிட்டால், மவனே சாவுதான். நீங்கள் மானாக இருக்கிறீர்களா... சிங்கமாக இருக்கப்போகிறீர்களா? அது கேள்வி அல்ல. காலையில் எழுந்ததும் ஓடத் தொடங்க வேண்டும். அதுதான் முக்கியம்!

twitter.com/9pocfEysiyqjZId:  இந்தி கற்காததால் தமிழகம் நிறைய இழந்துள்ளது - பொன்னார்.

# பானிபூரி சாப்பிடும்போது இந்தி தெரியாததால், எக்ஸ்ட்ரா பானிபூரியை இழந்துள்ளோம்!

twitter.com/Kannan_Twitz:  கடவுளுக்கு அப்புறம் தூணிலும் துரும்பிலும் இருப்பது சி.சி.டி.வி கேமராதான்!

twitter.com/pshiva475: லேடீஸ் துணிக்கடையில சேல்ஸ்மேன்கிட்ட இருந்து திட்டுவாங்காம தப்பிக்கிற ரெண்டு மெத்தட்ஸ்... இந்த கலர்ல வேற டிசைன் இருக்கா, இந்த டிசைன்ல வேற கலர் இருக்கா?

twitter.com/sundartsp:  நடிகர்களுக்கு வயசாவதைவிட, அவர் ரசிகர்களுக்கு வயசாவதுதான் அவர்களுக்குப் பெரிய பிரச்னை!

twitter.com/kiramaththan:  கடவுளாலேயே செகண்ட் லாங்வேஜ் கத்துக்க முடியலைன்னா, நாங்க மட்டும் எப்படிடா தேர்டு லாங்வேஜ் கத்துக்க முடியும்?:)

twitter.com/meera_twits : எல்.கே.ஜி போற குழந்தையைத் தூங்கவைக்கிறது ரொம்ப ஈஸி. ஹோம்வொர்க் எழுத எடுத்ததும் தூங்கியாச்சு!

twitter.com/mrithulaM: `என் அப்பாவே தேவலாம்’னு எனக்கு உணர்த்தினவர்தான் என் பிள்ளைகளின் அப்பா!

p106a.jpg

twitter.com/meenammakayal: எவ்வளவு தீவிரமாக விளையாடிக் கொண்டிருந்தாலும், ஒரு கண்ணை அம்மா மேல் வைத்தே இருக்கிறார்கள் குழந்தைகள்!

twitter.com/sundartsp: முன்னாடி எல்லாம் தெருவிலே இருக்கும் பொண்ணுங்க பேர் கண்டுபிடிக்கக் கஷ்டப்படணும். இப்ப அவங்க அப்பனுங்களே கார்ல  எழுதிடுறாங்க!

twitter.com/supersugumar:  `வந்துட்டேன்னு  சொல்லு... ஆபீஸ்ல இருந்து திரும்பி வந்துட்டேன்னு சொல்லு. சீரியல் பார்த்துட்டு இருக்கிற உன் அம்மாகிட்ட போய்ச் சொல்லு... பசிக்குதுடா!’

twitter.com/kumarfaculty:  `ஒரு போன்கூடவா உன்னால செய்ய முடியலை’ என என்னிடம் கோபப்பட்டவரிடம் போனும் என் நம்பரும் இருந்தன!

twitter.com/mekalapugazh:  மதியம் வீட்டுக்கு வந்து உணவு சாப்பிட்டுவிட்டுச் சென்ற பள்ளிக்காலமும் இருந்தது என்பது, இந்தத் தலைமுறைக்கு நம்ப முடியாத தகவலில்தானே வரும்!

twitter.com/cablesankar மதர்ஸ் டேக்கு ரகசியமாக கிஃப்ட் வாங்கிவைக்கும் புள்ளைங்க,  ஃபாதர்ஸ் டேக்கு வந்து `என்ன ட்ரீட்?’னு கேக்குதுங்க. அப்பனா பொறந்தாலே கஷ்டம்யா!

twitter.com/urs_priya:  கணவனை ஒரு சின்ன வேலையைச் செய்யவைக்க எளிய வழி... அந்த வேலையை மகளைச் செய்ய சொல்வதே :-)

twitter.com/kathirpaappy:  ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே எல்லாம் ஒரே நாள்ல வைக்கணும். ஏன்னா ரெண்டு பேரும் ஒரே நாள்லதானே ஃபாதர் - மதர் ஆகிருப்பாங்க!

twitter.com/NKKannan1:  கரைவேட்டி என்பது...`Party’Wear உடைகளில் ஒன்று!

p106c.jpg

facebook.com/rasanaikkaaran:

பாஸ் அனுப்பிய ஒரு வார அவுட் ஆஃப் ஆபீஸ் இமெயிலை, 'இன்று ஸ்கூல் லீவு' நோட்டீஸ் போர்டைத் திரும்பத் திரும்பப் படிக்கும் சிறுவனின் குதூகலத்தோடு படித்துக்கொண்டிருக்கிறேன்.

facebook.com/guru.shree.16:

இழவு ரெண்டு பேருமே 0-0 இருந்தா குழப்பம்தான். ஒருத்தன் கோல் போட்டப்புறம்தான் தெரியுது, ஓ வெள்ளைச் சட்டைதான் ஹங்கேரியா! ‪#EURO2016‬

facebook.com/shanmugame:

இந்தியாவிலேயே விலை மதிப்புமிக்க ஆவணம்... தமிழனின் ரேஷன் கார்டுதான்.

facebook.com/mani.pmp.5:

சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் ஆண்கள் வாங்கும் முதல் ஆடம்பரப் பொருள்... ‘பாடிஸ்பிரே’.


facebook.com/sa.na.kannan: இன்று, கே டி.வி-யில், `துள்ளாத மனமும் துள்ளும்’. இந்தப் படத்தின் கதை என்ன? சந்திக்காத, அறிமுகம் இல்லாத ஓர் ஆணின் குரலை விரும்புகிறாள் ஒரு பெண். பார்வை பறிபோன பின்னரும், குரல் வழியாகவே அந்த ஆணை அடையாளம் காண்கிறாள். ஆனால், படத்தில் நடப்பது என்ன? எங்கேயோ இருந்து `இன்னிசை பாடிவரும்...’ பாடலை விஜய் பாடுவார். உன்னிகிருஷ்ணன் குரல். சிம்ரனும் அந்தக் குரலை விரும்ப ஆரம்பிப்பார். ரைட்டு.

சிம்ரனின் கவிதை `ஆனந்த விகடன்’ பத்திரிகையில் வெளியாகும். சிம்ரன் காம்பவுண்டுக்கு அந்தப் பக்கம் இருப்பார்; விஜய் இந்தப் பக்கம். கவிதை வெளியானதற்குப் பாராட்டு தெரிவிப்பதற்காக, `மேகமாய் வந்து போகிறேன்...’ பாடலைப் பாடுவார் விஜய். யார் குரலில்?

எஸ்.பி.பி போல பாடியிருக்கும் ராஜேஷ் என்கிற புதிய பாடகரின் குரலில். அந்தப் பக்க காம்பவுண்டில் இருந்து இந்தப் பாடலைக் கேட்கும் சிம்ரன், இது உன்னிகிருஷ்ணன் குரல் அல்ல. ராஜேஷ் குரல் என்றுதானே நினைத்திருக்க வேண்டும். ஆனால், அவரோ, தமக்கு மிகவும் பரிச்சயமான குரல், அதாவது உன்னிகிருஷ்ணன் குரல் என சந்தோஷமாகி, அவரும் அழகாக ஸ்டெப்கள் வைத்து ஆடுவார். என்னய்யா நியாயம் இது?

p106d.jpg

சரி போகட்டும்... விஜய்யால் சிம்ரனின் பார்வை பறிபோய்விடும். ஒரு திருமண விழாவில், `இருபது கோடி நிலவுகள் கூடி...’ பாடலைப் பாடுவார் விஜய். யார் குரலில்? சிம்ரன் கேட்டுப் பழகிய உன்னிகிருஷ்ணன் குரலிலோ, ராஜேஷ் குரலிலோ அல்ல. புதிதாக ஒருவர்... அதாவது ஹரிஹரன் குரலில்! (இதற்கு முன்னர்... கோபால் என்ற ஒரு பாடகரின் குரலில் `பளபளக்குது புது நோட்டு...’ என்ற ஒரு பாடலையும் விஜய் பாடுவார். அந்தப் பாடலை சிம்ரன் கேட்காததால் லூஸில் விட்டுவிடுவோம்.) ஹரிஹரன் குரலில் `இருபது கோடி நிலவுகள் கூடி...’ பாடலைக் கேட்கும் பார்வையற்றவரான சிம்ரன், உடனே இது விஜய்தானே பாடுவது என்பதுபோல அக்கம்பக்கத்தில் விசாரிப்பார். அது எப்படி உன்னிகிருஷ்ணன் குரலும் ஹரிஹரன் குரலும் ஒன்று ஆகும்? சிம்ரன் மேடம், பார்வை மட்டும்தானே போச்சு?

கடைசியில் சிம்ரனுக்குப் பார்வை சரியாகிவிடும். கலெக்டர் ஆகிவிடுவார். க்ளைமாக்ஸிலும், விஜய்க்கு தம் குரல் மூலமாகவே அறிமுகப்படுத்திக் கொள்ளவேண்டிய நெருக்கடி. நல்லவேளை, அப்போது பார்த்து `இன்னிசை பாடி வரும்...’ என உதித் நாராயணன் பாடவில்லை. முதலில் பாடிய உன்னிகிருஷ்ணனே இந்தப் பாடலையும் பாடுவார். சுபம்.

குரல் வழியாகவே ஹீரோ மீது ஹீரோயின் காதல்கொள்கிறார் என்ற ஒரு கதையில்தான் இத்தனை ஓட்டை உடைசல்கள். பாடல், சண்டைக் காட்சிகளில் லாஜிக் பார்க்கக் கூடாது என்பதற்காக இத்தனை எல்லை மீறல்களா?
 

vikatan

  • தொடங்கியவர்
ஹங்கேரியில் தண்ணீர்ச் சமர்
 

ஹங்­கே­ரியில் தலை­நகர் புடா­பெஸ்ட்டில் கடந்த வார இறு­தியில் தண்ணீர் சமர் நடை­பெற்­றது.

 

17633w2.jpg

 

17633w1.jpg

 

பெரும் எண்­ணிக்­கை­யானோர் இந்­ நி­கழ்வில் கலந்­து­கொண்டு ஒருவர் மீதொ­ருவர் தண்­ணீரைப் பாய்ச்­சி­ய­டித்து விளை­யா­டினர்.                    

 

17634w3.jpg

 

17634_water-function.jpg

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நெகிழ்ச்சியான புகைப்படமும் அதன் உருக்கமான பின்னணியும்!

ர்ஜென்டினா நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி ஒருவர் சிரித்தபடியே மரணமடைந்த புகைப்படங்கள் இணையங்களில் பரவி வருகின்றன.

sis.jpg

 

பியூனஸ் அயர்சைச் சேர்ந்த கன்னியாஸ்திரி சிசிலியா மரியாவுக்கு கடந்த 6 மாதங்களுக்க முன் புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அன்பும் கனிவும் நிறைந்த மரியா,நோய் குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து இறை தொண்டாற்றி வந்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இறந்து போனார். அனைவரும் அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று இறக்கும் தருவாயில் சிஸ்டர் மரியா கூறியவாறே உயிரிழந்தார். 

முகத்தில் புன்னகையுடன் உயிரிழந்த சிஸ்டர் மரியாவின் புகைப்படங்கள்தான்  இவை.

vikatan

  • தொடங்கியவர்

13497953_1070950436286983_65905915628879

 
 
பாகிஸ்தானிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து மாயாஜால விற்பன்னரும், தற்போதைய பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளருமான முஷ்டாக் அஹ்மத்தின் பிறந்தநாள்
  • தொடங்கியவர்

கோலிக்கு எதுக்கு ஜெர்மனி ஜெர்ஸி?
13533022_1962588557300878_87479577243877

Thank You @ToniKroos Sending a present for you as well. All The Best for the quarters ?#FirstNeverFollows #Euro16

யூரோ கோப்பை துவங்கும் சமயம் ஜெர்மனி அணியின் ஜெர்ஸி அணிந்து, அந்த அணிக்கு சப்போர்ட் செய்தார் விராட் கோலி. இதைப் பார்த்த ஜெர்மனி வீரர் டோனி க்ரூஸ் விரைவில் உங்களுக்கு ஒரு பரிசு அனுப்புகிறேன் எனக் கூறினார். அதைப் போலவே இன்று 18-ம் எண் கொண்ட ஜெர்மனி ஜெர்ஸியை கோலிக்கு கையெழுத்திட்டு அனுப்பியுள்ளார் டோனி க்ரூஸ்.

  • தொடங்கியவர்

பூச்சிகளை விழுங்கும் செடி!

deadly_2857974f.jpg
 

பூச்சிகளை சிறு உயிரினங்கள் சாப்பிடுவதைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், பூச்சிகளை உண்ணும் தாவரம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அப்படி ஒரு தாவரம் உள்ளது. அதன் பெயர் வீனஸ் ஃப்ளைட்ராப்!

வட அமெரிக்காவில் இந்தத் தாவரம் உள்ளது. ஈரமான சதுப்பு நிலப் பகுதிகளில் இவை வளர்கின்றன. இவற்றின் இலைகள் 3 செ.மீ. முதல் 12 செ.மீ நீளம் வரை வளரக்கூடியது. இலைகளின் அடிப்பாகம் பச்சையாகவும் மேல் பாகம் சிவப்பாகவும் இருக்கும். இலையை இரண்டாக மடிக்கும்படி இருக்கும். ஓரங்களில் நீண்ட முட்கள் வரிசையாக நீட்டிக்கொண்டிக்கும். இலையின் நடுப்பகுதியில் ஜீரணச் சுரப்பிகள்கூட உள்ளன.

இப்படி அழகான சிவப்பு இலைகளைப் பார்த்ததும் பூச்சிகள் ஆவலோடு அருகில் வருகின்றன. இலை மீது அமர்ந்தவுடன், பூச்சியைப் பிடிப்பதற்குத் தயாராகிவிடுகிறது. பூச்சி ஊர்ந்து போகும்போது, இலையில் உள்ள உணர் முடிகளிலிருந்து மின் சமிக்ஞைகள் வெளிவந்து, இலையை மூட வைத்துவிடுகின்றன. பூச்சி சுதாரிப்பதற்குள் மிக வேகமாக இலை மூடிவிடும். இலையின் இரு பக்கங்களிலும் உள்ள முட்கள் ஒன்றோடு ஒன்று இறுக்கிப் பிடித்துக்கொள்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாகப் பூச்சியை இறுக்கிக்கொண்டே போனதும், ஒருகட்டத்தில் பூச்சிகள் இறந்து போய்விடுகின்றன.

இலையில் உள்ள ஜீரணச் சுரப்பிகளில் இருந்து வெளிவரும் நீர், பூச்சியை மெதுவாக ஜீரணம் செய்துவிடுகிறது. பூச்சியின் உடல் ஜீரணமாவதற்கு 5 முதல் 10 நாட்கள்வரை ஆகும். அதுவரை இலை மூடியே இருக்கும். செரிக்கப்படாத பூச்சியின் பாகங்கள் இலை திறந்த பின்னர், வெளியே வந்துவிடும். இலை இறைச்சியை உண்ணுவதில்லை. உடலில் உள்ள நீர்ச் சத்தை மட்டுமே உறிஞ்சிக்கொள்கிறது.

ஓர் இலை அதிகபட்சம் 3 முறையே பூச்சிகளைப் பிடிக்க முடியும். மூன்றாவது தடவை பூச்சியைப் பிடித்த பிறகு, இலை திறப்பதே இல்லை. சிறிது நாட்களில் இலை பழுத்து, உதிர்ந்துவிடும். பொறியைப் போல இலை செயல்படுவதால் இவற்றுக்கு ‘ஃப்ளைட்ராப்’ என்று பெயர். ரோமானியக் கடவுள் வீனஸையும் பெயரோடு சேர்த்துக்கொண்டனர்.

குச்சி விழுந்தால் என்ன ஆகும்?

சிலந்தி, ஈக்கள், கம்பளிப்பூச்சி, வெட்டுக்கிளி, அட்டை போன்றவை இலைக்கு வந்தால் உயிர் தப்பி போக முடியாது. குச்சி, கல் போன்ற உயிரற்ற பொருட்கள் இலை மீது விழுந்தாலும், இலை தானாக மூடிக்கொள்ளும். ஆனால் அவற்றை ஜீரணம் செய்ய முடியாமல், 12 மணி நேரங்களுக்குப் பிறகு இலையை விரிக்கும். காற்றில் குச்சியும் கல்லும் வெளியே விழ வேண்டும். குறும்புக்காக ஒரு பென்சிலை இலைக்குள் வைத்தாலும் அதை எடுப்பதற்கு 12 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

தாவரம் ஏன் பூச்சியைச் சாப்பிடுகிறது?

வீனஸ் ஃப்ளைட்ராப் வளரும் நிலத்தில் தேவையான சத்துகள் கிடைப்பதில்லை. பரிமாண வளர்ச்சியில் காலப்போக்கில் சத்துகளைப் பெறுவதற்கான பண்புகள் உருவாக ஆரம்பித்தன. இலைகளை நாடி வரும் பூச்சிகளிலிருந்து தங்களுக்குத் தேவையான சத்துகளைப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்தன. இப்படித்தான் வீனஸ் ஃப்ளைட்ராப் உட்பட பல பூச்சி உண்ணும் தாவரங்களும் அசைவத்துக்கு மாறின.

புதிய கண்டுபிடிப்பு

ஜெர்மனியில் உள்ள வுர்ஸ்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வீனஸ் ஃப்ளைட்ராப் தாவரத்தைப் பற்றி புதிய ஆராய்ச்சி முடிவை வெளியிட்டிருக்கிறார்கள். பூச்சியின் முதல் தொடுதலில் இலையில் உள்ள ஜீரண நீர் தயாராகிறது. அடுத்தடுத்த தொடுதல்களில் அதிகமாகச் சுரக்க ஆரம்பித்து, ஐந்தாவது தொடுதலில் பூச்சியைப் பிடித்துவிடுகிறது. இலையின் இந்தப் பூச்சி வேட்டை உத்தியை ஆராய்ந்தபோது, பொதுவாகத் தாவரங்களுக்கு இருக்கும் தற்காப்பு அம்சங்களே, வீனஸ் ஃப்ளைட்ராப்புக்கும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

விலங்குகள் இலைகளைச் சாப்பிடாமல் இருப்பதற்காகச் சில தாவரங்கள் முட்களைப் பெற்றுள்ளன. சில தாவரங்கள் மோசமான வாசனையை வெளியிடுகின்றன. அதே போலத்தான் வீனஸ் ஃப்ளைட்ராப் செடிகளும் தங்களைத் தாக்க வரும் பூச்சிகளை எதிர்க்க ஆரம்பித்தன. காலப்போக்கில் இந்தப் பண்பு மரபணுவில் பதிந்து, எதிரியை இரையாக மாற்றும் அளவுக்குப் பரிணாம வளர்ச்சிப் பெற்றுவிட்டது என்கிறார்கள்.

இப்படியும் ஒரு தாவரம்!

tamil.thehindu

  • தொடங்கியவர்
1995 : தென் கொரியாவில் கட்டடம் இடிந்து வீழ்ந்ததால் 501 பேர் பலி!
 

வரலாற்றில் இன்று....

ஜுன் - 29

 

1534 : சாக் கார்ட்­டியே, தற்போ­தைய கனே­டிய மாகா­ண­மான பிரின்ஸ் எட்வேர்ட் தீவை அடைந்த முதல் ஐரோப்­பி­ய­ரானார். 

 

758varalru.jpg1613 : லண்­டனில் குளோப் நாட­க­மா­ளிகை தீயில் எரிந்து அழிந்­தது.

 

1786 : அலெக்­சாண்டர் மாக்­டொனெல் மற்றும் 500 கத்­தோ­லிக்­கர்கள் ஸ்கொட்­லாந்தில் இருந்து சென்று ஒண்­டா­ரி­யோவின் கிளென்­கரி என்ற ஊரில் குடி­யே­றினர்.

 

1814 : மெத­டிஸ்த திருச்­ச­பையைச் சேர்ந்த ஆறு மதப்­ப­ரப்­பு­னர்கள் இலங்­கையின் காலி நகரை வந்­த­டைந்­தனர்.

 

1850 : கன­டாவின் வான்­கூவர் தீவில் நிலக்­கரி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

 

1864 : கன­டாவின்  கியூபெக் மாகா­ணத்தில் இடம்­பெற்ற ரயில் விபத்தில் 99 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

758isabel-peron.jpg1880 : டெஹீட்டி தீவை பிரான்ஸ்  கைப்­பற்­றி­யது.

 

1904 : மொஸ்­கோவை தாக்­கிய சூறா­வ­ளி­யினால் சுமார் 1.500 வீடுகள், கட்­ட­டங்கள் அழிந்­தன.

 

1914 : ரஷ்ய அரச குடும்­பத்தின் நண்­ப­ரான கிரி­கோரி ரஸ்­புட்டீன் சைபீ­ரி­யாவில் தனது வீட்டில் இடம்­பெற்ற கொலை முயற்சி ஒன்றில் தப்­பினார்.

 

1925 : அமெ­ரிக்­காவின் கலி­போர்­னி­யாவில் 6.3 பூகம்பம் ஏற்­பட்­டதில் சாண்டா பார்­பரா என்ற இடம் முற்­றாக அழிந்­தது.

 

1974 : ஆர்­ஜென்­டீன ஜனா­தி­பதி ஜூவான் பெரோன் கால­மா­ன­தை­ய­டுத்து அவரின் மனை­வியும் உப ஜனா­தி­ப­தி­யு­மான இஸபெல் பெரோன், புதிய ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்றார். நாடொன்றின் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த முதல் பெண் இஸபெல் பெரோன் ஆவார்.

 

1975 : அப்பிள் 1 கணினி மாதி­ரியை ஸ்டீவ் வொஸ்­னியாக் சோதித்தார். 

 

1976 : ஐக்­கிய இராச்­சி­யத்தில் இருந்து சீஷெல்ஸ் சுதந்­திரம் பெற்­றது.

 

758isis-caliphate.jpg1995 : அட்­லாண்டிஸ் விண்­ணோடம் ரஷ்­யாவின் மீர் விண்­வெளி நிலை­யத்­துடன் முதற்­த­ட­வை­யாக இணைந்­தது.

 

1995 : தென் கொரி­யாவின் சியோலில் சம்பூங் எனும் சந்தைக் கட்­டடம் இடிந்து வீழ்ந்­ததில் 501 பேர் கொல்­லப்­பட்டு 937 பேர் படு­கா­ய­ம­டைந்­தனர்.

 

2002 : தென் கொரி­யா­வுக்கும் வட கொரி­யா­வுக்கும் இடையில் இடம்­பெற்ற கடல் மோதலில் ஆறு தென் கொரிய மாலு­மிகள் கொல்­லப்­பட்டு ஒரு வட கொரியக் கப்பல் மூழ்­க­டிக்­கப்­பட்­டது.

 

2007 : அப்பிள் நிறு­வனம் தனது முத­லா­வது செல்­லிடத் தொலை­பே­சி­யான  ஐ-போனை வெளியிட்டது.

 

2014 : சிரியா, ஈராக்கின் வட பிராந்தியங்களை உள்ளடக்கிய புதிய  தனிநாட்டை ஐ.எஸ். (இஸ்லாமிய அரசு) அமைப்பு பிரகடனப்படுத்தியது.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் பிறந்த நாள் இன்றாகும்.
இரு பிரதமர்களின் புதல்வி என்ற பெருமையும் இவருக்குரியது.

13537580_1071510639564296_14311713758377

  • தொடங்கியவர்
சீனாவிலுள்ள கண்ணாடிப் பாலத்தின் வலிமையை நிரூபிப்பதற்காக சம்மட்டிகளால் அடித்து, வாகனத்தையும் செலுத்திக் காண்பித்த அதிகாரிகள்
 

17666g3.jpgசீனாவின் ஹுனான் மாகா­ணத்தில் இரு மலைச்­சி­க­ரங்­களை இணைக்கும் வகையில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள கண்­ணாடிப் பாலத்தில் நடந்து செல்ல பலர் அஞ்­சு­கின்­றனர்.

 

இந்­நி­லையில் பாலத்தின் உறுதித் தன்­மையை நிரூ­பிப்­ப­தற்­காக அக்­ கண்­ணாடி மீது பாரிய சம்­மட்­டியால் அடித்து, அதன்பின் அக் ­கண்­ணா­டியினூடாக கார் ஒன்றை செலுத்­திக்­ காட்­டி­யுள்­ளனர் அதி­கா­ரிகள்.


ஸாங்­ஜி­யாஜி தேசிய பூங்காவில் உல்­லாசப் பய­ணி­களை கவர்­வ­தற்­காக நிர்­மா­ணிக்­கப்­பட்ட இப்­ பாலம் தரை­யி­லி­ருந்து 300 மீற்றர் (984 அடி) உய­ரத்தில் உள்­ளது.


இவ்­வ­ளவு உய­ரத்தில் கண்­ணாடி மீது நடந்து செல்­வது என்­பது பல­ருக்கு நினைத் துப் பார்க்­கவே தலை­சுற்ற வைக்க விடயம்.

 

430 மீற்றர் நீள­மான இப் ­பா­லத்தில் நடந்து சென்­று­கொண்­டி­ருக்கும்போது திடீ­ரென கீழே பார்த்து அச்­ச­ம­டைந்து அழுது புலம்­பி­ய­வர்­களும் உள்­ளனர்.


இந்­நி­லையில் இப் ­பா­லத்­தி­லுள்ள கண்­ணாடி சாதா­ரண கண்­ணாடி போன்று உடைந்­து­விடக் கூடி­ய­தல்ல என்­பதை நிரூ­பிப்­ப­தற்­காக சோதனை நிகழ்­வொ ன்றை நடத்த அதி­கா­ரிகள் தீர்­மா­னித்­தனர்.


17666g1.jpg

 

கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற இச்­ சோ­தனை நிகழ்வில் 20 தொண்­டர்கள் பங்­கு ­பற்­றினர். இதன்­போது, பாரிய சம்­மட்­டி­யினால் கண்­ணாடி மீது அடிக்­கு­மாறு தொண்­டர்கள் கோரப்­பட்­டனர்.

 

இதனால் கண்­ணா­டியில் கீறல்கள் ஏற்­பட்­ட­போ­திலும் எவ­ரா­லுமே கண்­ணாடியை முற்­றாக உடைக்க முடி­ய­வில்லை. அதன்பின் பார­மான வாக­ன­மொன்றும் அக்­ கண்­ணாடி மீது செலுத்­தப்­பட்­டது.

 

17666g2.jpg

 

அப்­போதும் அக் ­கண்­ணாடி உடை­ய­வில்லை. அதன்பின் அக்­ கண்­ணாடி மீது தொண்­டர்கள் நடந்து சென்றனர். இக் கண்ணாடி 5 சென்ரிமீற்றர் தடிப்பு கொண் டவை என இப் பாலத்தின் பிரதம பொறியியலாளரான மா லியாங் மேற்படி சோத னைக்கு முன்னர் கூறினார்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆர்.எஸ்.மனோகர் 10

 

 
rsmanohar_2912877h.jpg
 

ஆர்.எஸ்.மனோகர் - நாடக, திரைப்பட நடிகர்

தமிழ் நாடக உலகில் புரட்சியை ஏற்படுத்தி, 'நாடகக் காவலர்' என்று போற்றப்பட்ட நடிகர் ஆர்.எஸ்.மனோகர் (R.S.Manohar) பிறந்த தினம் இன்று (ஜூன் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* நாமக்கல்லில் (1925) பிறந்தவர். தந்தை சுப்பிரமணியன் அஞ்சல் துறையில் பணியாற்றியவர். அவரது பணிமாற்றம் காரணமாக குடும்பம் கர்நாடகாவின் பெல் லாரிக்கு குடிபெயர்ந்தது. அங்கு ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நடத்தி வந்த இயக்குநரும், நடிகருமான ராகவாச்சாரியின் நடிப்பும், வசன உச்சரிப்பும்தான் இவருக்கு உத்வேக சக்தியாக இருந்தது.

* சென்னை பச்சையப்பா கல்லூரியில் பி.ஏ. சமஸ்கிருதம் படித்தார். அப்போது, 'மிருச்சகடிகா' என்ற சமஸ்கிருத நாடகத்தில் கதாநாயகனாக நடித்து, அனைவரையும் கவர்ந்தார். நாடகக் களத்தில் அடியெடுத்து வைத்தவர், சுகுண விலாஸ் சபாவின் 'தோட்டக்காரன்' நாடகத்தில் நடித்தார். 'நாடகத் தந்தை' பம்மல் சம்பந்த முதலியார் நாடகத்தைப் பார்த்து இவரைப் பாராட்டினார்.

* பட்டம் பெற்று, அஞ்சல் துறையில் சேர்ந்தார். 'கானல் நீர்' படத்தில் பட்டதாரி இளைஞனாக நடிக்க நிஜ பட்டதாரியான இவரே தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்லூரி நாடகத்தில் 'மனோகர்' கதாபாத்திரத்தில் நடித்ததால், அதையே தன் பெயராக மாற்றிக்கொண்டு, 'ராமசாமி சுப்பிரமணிய மனோகர்' ஆனார்.

* பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும், நாடகத்தின் மீதான காதலால் 'நேஷனல் தியேட்டர்ஸ்' நாடக நிறுவனத்தை 1954-ல் தொடங்கினார். 'இன்ப நாள்', 'உலகம் சிரிக்கிறது' ஆகிய சமூக நாடகங்களை அரங்கேற்றினார். பின்னர் பிரம்மாண்ட இதிகாச, வரலாற்று நாடகங்களை அரங்கேற்றினார்.

* ராவணன், சூரபத்மன் உள்ளிட்ட எதிர்மறைக் கதாபாத்திரங்களின் மறுபக்கமான ஆக்கபூர்வ அம்சங்களை அற்புதமாகப் படம் பிடித்துக்காட்டும் வகையில் நாடகங்களைப் படைத்தார். சிறப்பான மேடை அமைப்பும், தந்திரக் காட்சிகளும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

* பிரம்மாண்டமாக தயாராகியிருந்த 'இலங்கேஸ்வரன்' நாடகம், மக்களிடம் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி நஷ்டமாகிவிடுமோ என்று பயந்த மனோகர், காஞ்சி பரமாச்சாரியாரை சந்தித்தார். அவர் ''கவலைப்படாதே'' என்று கூறி ஆசீர்வதித்து அனுப்பினார்.

* விரைவிலேயே, இலங்கையில் இந்த நாடகத்தை தொடர்ந்து 21 நாட்கள் நடத்தும் வாய்ப்பு தேடி வந்தது. நாடகத்தைப் பார்த்து வியந்த மக்கள், இவருக்கு 'இலங்கேஸ்வரன்' என்ற பட்டத்தைக் கொடுத்து கவுரவித்தனர். இவரது நாடகங்களிலேயே அதிக முறை (1,800-க்கு தடவைக்கு மேல்) மேடையேறியதும் இந்த நாடகம்தான்.

* 'சாணக்கிய சபதம்', 'சூரபத்மன்', 'சிசுபாலன்', 'இந்திரஜித்', 'நரகா சுரன்', 'சுக்ராச்சாரியார்' உள்ளிட்ட நாடகங்களும் குறிப்பிடத்தக்கவை. சொன்ன நேரத்துக்கு நாடகம் தொடங்கிவிட வேண்டும்; அனைத்தும் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். ஒவ்வொரு நாடகத்துக்கும் 30 நாட்கள் ஒத்திகை பார்ப்பாராம்.

* சினிமா உலகில் கதாநாயகனாக அறிமுகமான பத்து, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் முத்திரை பதித்தவர். 'வண்ணக்கிளி', 'கைதி கண்ணாயிரம்', 'வல்லவனுக்கு வல்லவன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'அடிமைப்பெண்', 'இதயக்கனி' உட்பட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.

* இசைப்பேரறிஞர், நாடகக் காவலர் உட்பட பல விருதுகள், பட்டங்கள் பெற்றவர். தமிழ் நாடகத் துறையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய ஆர்.எஸ்.மனோகர் 81-வது வயதில் (2006) மறைந்தார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

100 பலூன்களை 39.08 நொடிகளில் உடைத்து அமெரிக்க நாய் கின்னஸ் சாதனை (Video)

 

100 பலூன்களை 39.08 நொடிகளில் உடைத்து அமெரிக்க நாய் கின்னஸ் சாதனை (Video)

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ட்விங்கிள் என்ற நாய் 100 பலூன்களை வெறும் 39.08 நொடிகளில் உடைத்து புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.

இதன் மூலம் இங்கிலாந்தைச் சேர்ந்த நாய் ஒன்றின் முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த தி ஓண்டர் என்ற நாய் 100 பலூன்களை 41.67 நொடிகளில் உடைத்து கின்னஸ் உலக சாதனை படைத்திருந்தது.

தி ஓண்டரின் உரிமையாளர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், புதிதாக சாதனை படைத்துள்ள ட்விங்கிளுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மேலும், விரைவில் இந்த சாதனையை முறியடிக்க தனது நாய்க்கு தீவிர பயிற்சி வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

தொட்டாற்சிணுங்கி ஏன் சுருங்குது?

 
8_2912854f.jpg
 

தொட்டாற்சிணுங்கி என்று ஒரு இலையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? தொட்டவுடன் அது சிணுங்கிக்கொண்டு ஒன்றோடொன்று ஒட்டி சுருங்கிவிடும். மனிதர்கள் தொட்டவுடன் ஏன் இப்படி இந்த இலைகள் சிணுங்கி சுருங்கிவிடுகின்றன?

தொட்டாற்சிணுங்கியின் இலைகள் மற்றத் தாவரங்களின் இலைகளைப் போலவே பல செல்களின் ஒருங்கிணைப்பால் ஆனவைதான். ஒவ்வொரு செல்லும் சில திரவப் பொருட்களை இலைக்குள் கொண்டிருக்கும். இந்தத் திரவத்தின் அழுத்தம் காரணமாகத்தான் செல்களும், அவற்றாலான இலையும் நிமிர்ந்து நிற்க முடிகிறது. இலையின் உயிரணுவிலிருந்து திரவம் வெளியேறிவிட்டால், திரவ அழுத்தம் நீங்கி இலையின் உறுதித்தன்மை தளர்ந்துவிடும். புளிய மரம், வேலியோர முள் மரம், தூங்குமூஞ்சி மரம் போன்றவை இரவு நேரத்தில் சுருங்குவது இப்படித்தான்.

தொட்டாற்சிணுங்கி இலையைத் தொடும்போது, அதன் தண்டுப் பகுதி ஒரு வகை அமிலத்தைச் சுரக்கிறது. அதனால் இலையின் கீழ்ப்பகுதி செல்களில் உள்ள திரவத் தன்மை நீங்கிவிடுகிறது. ஆனால், இலையின் மேற்பகுதி செல்களில் உள்ள திரவத்தன்மை நீங்குவது இல்லை. எனவே மேற்பகுதி இலையின் எடை காரணமாக, முழு இலையும் நெகிழ்ந்து வளைந்து கீழே தொங்கி விடுகிறது.

தொட்டாற்சிணுங்கி சிணுங்குவதற்கு இதுதான் காரணம்!

tamil.thehindu

  • தொடங்கியவர்

தோற்றவர்களின் கதை - 6

சுசி திருஞானம்

 

p30a.jpg

‘ஊடக உலகின் ராணி’ என்று போற்றப்படுபவர் அவர். 25 ஆண்டுகளாக உலகின் நம்பர் ஒன் தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தியவர் அவர். அமெரிக்க கறுப்பினத்தவர்களிலேயே சுயமாக முன்னேறிய நம்பர் ஒன் கோடீஸ்வரர் அவர். அமெரிக்காவை, வாசிக்கும் தேசமாக மாற்றியதில் பெரும் பங்கு அவருக்கு உண்டு. சுருங்கச் சொன்னால் தன்னம்பிக்கையின் மறுபெயர் ஓப்ரா வின்ஃப்ரே. வறுமை, வன்கொடுமை, இழிச்சொல் அனைத்தையும் தன்னம்பிக்கையால் வென்றவர் ஓப்ரா வின்ஃப்ரே.

ஓப்ரா வின்ஃப்ரே, அமெரிக்காவின் மிஸிஸிபி மாநிலத்தில் மிகவும் வறுமையான குடும்பத்தில் 1954-ம் ஆண்டில் பிறந்தார். கணவனால் கைவிடப்பட்ட கறுப்பினத் தாயின் வளர்ப்பில் துயரங்களின் மொத்த வலியையும் சுமந்து வளர்ந்தார். அவரது அம்மா அடுத்த வீடுகளில் பாத்திரங்கள் கழுவி, துணி துவைத்துக் கொடுக்கும் இல்லப் பணியாளர். துணி வாங்கக்கூட காசில்லாமல் உருளைக்கிழங்குகளைக் கட்டிவைக்கும் சாக்குப் பையை உடுத்தி வளர்ந்தார் ஓப்ரா வின்ஃப்ரே. மற்ற சிறுவர்களால் எப்போதும் கேலி செய்யப்படும் வேதனையான சூழல் அது.

படிப்பில் படுசுட்டியாக இருந்தபோதும், பள்ளிக்குத் தொடர்ச்சியாகச் செல்ல முடியாத நிலைமை. 9 வயது முதலே வீட்டிலும் வெளியிலும் சிலரின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானார். துன்பத்தை வெளியில் சொன்னால் வசவு, அடி,  உதை. வேதனையைப் பொறுக்க முடியாமல் 13-ம் வயதில் வீட்டைவிட்டு ஓடினார். 14 வயதில் அவருக்கு ஒரு குழந்தை பிறந்து, பின் சில நாட்களில் இறந்துவிட்டது.

இவ்வளவு துயரம் மிக்க வாழ்க்கை தனக்கு அமைந்தது பற்றிப் பின்னாட்களில் அவர் இப்படிக் கூறினார்: “வாழ்க்கையின் மிகமிக மோசமான சம்பவங்களும்கூட, நீங்கள் அச்சத்துக்குப் பதிலாக அன்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை உங்களுக்கு உணர்த்துகின்றன. அத்தனைக் கொடூரங்களை அந்தச் சின்ன வயதில் அனுபவித்ததால், அடுத்தவர்களின் வேதனையையும், வலியையும் என்னால் துல்லியமாக உணரமுடிந்தது. அதுவே, என் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வெற்றிக்கு அடிப்படையாய் அமைந்தது.”

p30b.jpg

14 வயதுவரை, துயரங்கள் சூழ வாழ்ந்த ஓப்ரா வின்ஃப்ரே, அதன்பின் அவரது தந்தை வெர்னான் ஓப்ரேயின் வீட்டுக்கு  அனுப்பி வைக்கப்பட்டார். வெர்னான் ஓப்ரே கட்டுப்பாடு மிக்கவர். படிப்பில் மட்டுமே கவனத்தைக் குவிக்குமாறு ஓப்ரா வின்ஃப்ரேவுக்கு அவர் நிர்ப்பந்தம் கொடுத்தார். படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியபின், வகுப்பில் சிறந்த மாணவியாக ஓப்ரா வின்ஃப்ரே தேர்வு செய்யப்பட்டார். பின்னர் பள்ளி மாணவத் தலைவரானார். பேச்சு, நாடகப் போட்டிகளில் பரிசுகளை வாரிக் குவித்தார்.

வானொலி நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு அவரைத் தேடிவந்தது. தனது திறன்களை அவர் மேலும் மேலும் வளர்த்துக்கொண்டதால் டென்னசி மாநிலப் பல்கலைக்கழகத்தில் அவருக்கு உதவித்தொகையுடன் கூடிய பட்டப் படிப்பு படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கல்லூரிப் படிப்பின்போதே பகுதிநேர வானொலி அறிவிப்பாளர் பணி வாய்ப்பும் கிடைத்தது.

வானொலி நிகழ்ச்சிகளில் தன்னைப் புடம் போட்டுக்கொண்ட அவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற முயற்சித்தார். நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், ஆப்பிரிக்க அமெரிக்கரான அவரது கரிய நிறத்தையும், குண்டான உருவத்தையும் வைத்துக் கேலிபேசினர். “உனது குரலையாவது மக்கள் சகித்துக்கொள்வார்கள், உனது உருவத்தை ஏற்கமாட்டார்கள்” என்றுகூறி அவருக்கு வாய்ப்பளிக்க மறுத்தனர்.

அத்தனை சவால்களையும் தாண்டி, WLAC என்ற உள்ளூர் தொலைக்காட்சியில், முதல் கறுப்பினப் பெண் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார் ஓப்ரா வின்ஃப்ரே. அதுவரை, உணர்ச்சியற்ற ஜடம்போல் செய்தி வாசித்தவர்களையே பார்த்துச் சலித்திருந்த மக்களுக்கு, உயிர்துடிப்புமிக்க ஓப்ரா வின்ஃப்ரேவின் துறுதுறு செய்தி வாசிப்பு மிகவும் பிடித்துப்போனது. 1976-ம் ஆண்டில் பால்டிமோர் WJZ தொலைக்காட்சியில் மாலை 6 மணி செய்திவாசிப்பாளர் ஆனார். ‘மக்கள் மேடை’ என்ற TALK SHOW நடத்தும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. செய்தி வாசிப்பைவிடப் பேச்சரங்கத்தில் வெளுத்துக்கட்டினார் ஓப்ரா வின்ஃப்ரே.

1984-ம் ஆண்டில் சிகாகோ தொலைக்காட்சியில் காலை நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஓப்ராவின் ஈடுபாடுமிக்க பங்கேற்பு காரணமாக, விரைவில் அது சிகாகோவின் நம்பர் ஒன் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக மாறிவிட்டது. ஒரே ஆண்டில் ‘ஓப்ரா வின்ஃப்ரே ஷோ’ என்ற பெயர் மாற்றம் பெற்றதுடன் அமெரிக்கா முழுவதும் ஒருங்கிணைக்கப்பெற்ற மாபெரும் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக வலிமை பெற்றது. விருதுகள் அவரைத் தேடிவந்தன.       

ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கின், ‘The Color Purple’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்தார் ஓப்ரா வின்ஃப்ரே. தனது தொலைக்காட்சி அனுபவங்களும் திரையுலகத் தொடர்புகளும், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு  நிறுவனத்தைத் தொடங்கும் ஆர்வத்தை அவரிடம் உருவாக்கின. 1986-ம் ஆண்டில் ஹார்ப்போ புரொடக்‌ஷன்ஸ்  என்ற  தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் ஓப்ரா வின்ஃப்ரே.

1990-களில் தனது TALK SHOW-க்களை தன்னம்பிக்கை தரும் மகத்தான நிகழ்ச்சிகளாக மாற்றினார். பிரபல மனிதர்கள் தாங்கள் சந்தித்த தோல்விகளை எப்படி வெற்றிகளாக மாற்றினார்கள் என்பது அவரது நிகழ்ச்சிகளில் மிக முக்கிய அங்கமாக அமைந்தது. துயரம் மிக்க சம்பவங்களைத் தனது விருந்தினர் விவரிக்கும்போது, அவரோடு சேர்ந்து தானும் கண்ணீர் சிந்துவது, உற்சாகமான தருணங்களில் கூச்சலிட்டுக் கொண்டாடுவது என்ற அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சி பாணி உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தது.

p30c.jpg

வறுமையின் கொடுமையில் வாடியிருந்த தனக்கு வாழ்க்கை தந்தது வாசிப்புப் பழக்கமே என்று பலமுறை குறிப்பிட்ட அவர், தன்னம்பிக்கை தரும் புத்தகங்களை தனது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வந்தார். அவர் தொலைக்காட்சியில் உருவாக்கிய புக் க்ளப், அமெரிக்கர்களிடையே புத்தக வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டுவதில் பெரும் பங்காற்றியது.

149 நாடுகளில் ஒளிபரப்பப்பட்ட அவரது நிகழ்ச்சிகளில் பல, சுயமுன்னேற்றம், உடல் நலம், குழந்தைகள் மற்றும் மகளிர் முன்னேற்றம் போன்ற உயர்ந்த உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தன. 1993-ம் ஆண்டில் மைக்கேல் ஜாக்சனை அவர் பேட்டி கண்டபோது, உலகம் முழுவதும் 3 கோடியே 65 லட்சம் பேர் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தனர்.

உலகின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘ஓப்ரா வின்ஃப்ரே ஷோ’வை  2011-ம் ஆண்டில் நிறுத்திக்கொண்டார் ஓப்ரா வின்ஃப்ரே. எனினும், தனது ஊடக நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் பிற நிகழ்ச்சிகளில் தேவைக்கேற்ப கலந்துகொள்கிறார்.

2012-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வருகை தந்த அவர் ஆக்ரா, ஜெய்ப்பூர்  உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டபின், “இந்தியா பன்முகத் தன்மைகொண்ட அழகிய நாடு. இது பூலோக சொர்க்கம்’’ என்று பாராட்டினார்.

ஓப்ரா வின்ஃப்ரே அமரிக்காவின் மிகவும் வலிமையான மனிதர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். 2008-ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தலில் பாரக் ஒபாமா பெற்ற வெற்றிக்கு, ஓப்ரா வின்ஃப்ரேவின் பகிரங்க ஆதரவும் ஒரு காரணம் என்று கூறப்படும் அளவுக்கு அவர் மதிக்கப்படுகிறார்.

தொலைக்காட்சி என்பது வெள்ளைத்தோல் கொண்டவர் களுக்கானது என்ற கருத்தாக்கத்தை தவிடுபொடியாக்கிய இந்த ஆப்பிரிக்க அமெரிக்கரின் சொத்து மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அவரது பிரதான இல்லம் 42 ஏக்கர் பரப்பில் உள்ள பசுஞ்சோலைக்கு மத்தியில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், 6 மாகாணங்களில் அவருக்கு வீடுகள் உள்ளன.

வறுமையும், இழிவுபடுத்தலும், துன்புறுத்தலும்  புரட்டியெடுத்த தனது ஆரம்பகால வாழ்க்கையில் தோல்விக்கு மேல் தோல்விகளைச் சந்தித்த இந்த இரும்புப் பெண்மணி கூறுகிறார்:  “தோல்வி என்ற, ஒரு விஷயமே கிடையாது. நமது வாழ்க்கையை வேறு திசைநோக்கித் திருப்பிவிடும் ஒரு சம்பவத்தைத்தான் தோல்வி என்று குறிப்பிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை அது கற்றுக்கொள்ள உதவும் ஒரு வாய்ப்பு.”

p30.jpg

வறுமையான பின்னணிகொண்ட மாணவர்களின் கல்விக்காகவும், பிற நல்ல காரியங்களுக்காகவும் கோடிக்கணக்கில் நன்கொடைகளை வாரிவழங்கும் கொடையாளராகவும் வலம் பெறுகிறார் ஒப்ரா வின்ஃப்ரே.

வாழ்க்கையின் ரகசியம் குறித்து மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அவர் கூறும் முக்கிய அறிவுரை இதுதான்:  “வாழ்க்கையின் மிகப் பெரிய ரகசியம் எது தெரியுமா? அப்படி எந்த ரகசியமும் கிடையாது என்பதுதான். ஒரு குறிக்கோளை மனதில் பற்றிக்கொண்டு, விடாமுயற்சியுடன் உழைக்கும் மனஉறுதி உன்னிடம் இருந்தால் நீ நினைத்ததைச் சாதித்துவிடுவாய்.”

vikatan

  • தொடங்கியவர்

 

 
அரிய வைரம் லண்டனில் ஏலம்
=============================
உலகின் மிகப்பெரிய பட்டை தீட்டப்படாத வைரம் இன்று லண்டனில் ஏலம் விடப்படவுள்ளது.

இந்த 1109 கேரட் வைரம் போட்ஸ்வானாவின் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது போன்ற வைரம் ஒரு பொது ஏலத்தில் விலைபோவது இதுவே முதல் முறை
  • தொடங்கியவர்

நாட்டுக்கொரு பாட்டு- 12: நீதிபதியால் வந்த தேசிய கீதம்!

 
4_2912843f.jpg
 

இந்தியாவுக்குத் தென்மேற்கே இந்தியப் பெருங்கடலில் உள்ளது மாலத்தீவு. இதை, ‘மாலை' தீவு; ‘மலை' தீவு என்று எப்படிச் சொன்னாலும் பொருந்தும். 26 பவழத் தீவுகளின் தொகுப்பு மாலையாக, பவளப் பாறைகளால் நிரம்பியுள்ளது இந்த நாடு. இந்த நாட்டின் மத்தியில் உள்ளது ‘மாலே' தலைநகரம். 1965-ம் ஆண்டில் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது. 1968-ம் ஆண்டில் குடியரசு நாடானது.

சிறப்பு

மாலத்தீவுக்கென சில தனிச்சிறப்புகள் உள்ளன. நிலப்பரப்பிலும் மக்கள் தொகையிலும், ஆசியாவிலேயே இதுதான் மிகச் சிறிய நாடு. அது மட்டுமல்ல, கடல் மட்டத்திலிருந்து வெறும் 1.5 மீட்டர் உயரத்தில் மட்டுமே உள்ள, உலகின் மிகத் தாழ்வான நாடு. நம் நாட்டில் எத்தனை உயரமான மலைகளைப் பார்க்கிறோம். மாலத்தீவிலோ மிக அதிகமான ‘இயற்கை'யின் உயரம் எவ்வளவு தெரியுமா? வெறும் 2.4 மீட்டர்கள்தான்!

பள்ளிக்கூடம்

மாலத்தீவில் முதன்முதலாக அரசுப் பள்ளிக்கூடமான மதீஜியா பள்ளி 1927-ல் தொடங்கப்பட்டது. இந்த நாட்டின் ஆறு குடியரசுத் தலைவர்களில் ஐந்து பேர் இந்தப் பள்ளியில் படித்தவர்கள்தான். இங்கு படித்து, பின்னாளில் சட்ட அமைச்சராகவும், நாட்டின் தலைமை நீதிபதியாகவும் உயர்ந்தவர் - ஷேக் முகமது ஜமீல் தீதி. மாலத்தீவின் மிக உயரிய விருதான ‘உஸ்தஜுல் ஜீல்' (தலைமுறைகளின் ஆசிரியர்) மறைவுக்குப் பின்னர் இவருக்கு வழங்கப்பட்டது. இன்றைக்கும் இவர், மாலத்தீவில் மிகவும் மதிக்கப்படுகிறார்.

கவிஞர்

மாலத் தீவின் நாட்டுப்புற இசைக்காகப் பாடுபட்டவர் ஜமீல் தீதி, தலைசிறந்த கவிஞரும்கூட. 1948-ல் இவர் இயற்றிய பாடல்தான் மாலத்தீவின் தேசிய கீதமாகத் திகழ்கிறது. அதற்கு முன்பு வரிகள் எதுவும் இல்லாமல், வெறுமனே மெல்லிசையாக மட்டுமே மாலத்தீவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ‘சலாமாதி' ராஜாங்க இசைக்குழுவால் அரசு விழாக்களின்போது மட்டும் கீதம் இசைக்கப்பட்டுவந்தது.

ராணியின் விஜயம்

1972-ல் பிரிட்டன் ராணி எலிசபெத், மாலத்தீவுக்கு வந்தார். அதற்குச் சில நாட்கள் முன்பு இலங்கையிலிருந்து இசை மேதை பண்டிதர் வன்னகுவட்டாவடுகே அமரதேவா மாலத்தீவுக்கு வரவழைக்கப்பட்டார். அவருடைய இசையமைப்பில், ஜமீல் தீதியின் வரிகள் புத்துயிர் பெற்றன. நீண்ட பாடலாக இருந்தாலும், முதல் ஆறு வரிகள் மட்டுமே இசைக்கப்படுகின்றன. மாலத்தீவின் தேசிய கீதம் சுமார் 100 விநாடிகள் வரை நீடிக்கும்.

இப்படி ‘ஒலிக்கும்':

க்கௌவ் மி இகுவேரிகன் மதீ திபேகென் குரீமெ ஸலாம்.

க்கௌவ் மீ பஹுன் கினா ஹெயு துஆ குரமுன் குரீமெ சலாம்.

க்கௌவ் மீ நிஷானா ஹுர் மதா எகு போலான்பாய் திபேகின்

ஔதா நகன் லிபிகின் ஏ வா திதா யா குரீமெ சலாம்.

நஸ்ரா நசீபா காமியாபுகே ரம்சக ஹிமெனே

ஃபெஸ்ஸா ரத்தா யுஹுதா எகீ ஃபெனுமுன் குரீமெ சலாம்.

(ஆறு வரிகள் நிறைவு)

ஃபக்ரா சரஃப் கௌவ்மா எ ஹோதாய் தெவ்வி பதலுன்னா

சிக்ரகே மதிவேரி இஹென்தகுன் அதுகை குரீமி சலாம்.

திவெஹீங்கே உம்மென் குரி அராய் சில்மா சலாமாதுகா

திவெஹீங்கே நன் மொல்ஹு வுன் அதாய் திபெகன் குரீமி சலாம்.

மினிவன்கமா மதனிய்யதா லிபிகன் மி ஆலாமுகா

தினிகன் ஹிதாமா தகுன் திபுன் எதிகன் குரீமி சலாம்.

தீனை வெரின்னா ஹெயோ ஹிதுன் ஹுருமே அதா குரமுன்

சீதா வஃபாதெரிகன் மதீ திபகன் குரீமி சலாம்.

தௌலதுகே அபுரா இசதா மதிவெரி வெகன் அபதா

ஔதானா வுன் அதி ஹெயோ துஆ குரமுன் குரீமி சலாம்.

தமிழாக்கம்

தேச ஒற்றுமையால் நினக்கு வணக்கம்.

நல்வாழ்த்துகளுடன் தாய்மொழியால் வணங்குகிறோம்.

தேசிய சின்னத்தை மதித்துத் தலை வணங்குகிறோம்

(அத்துணை) வலிமை வாய்ந்த கொடிக்கு

வணக்கம் செலுத்துகிறோம்.

வாகை அதிர்ஷ்டம் வெற்றியின் களத்தில்,

பச்சை சிவப்பு வெள்ளையுடன் அது இருக்கிறது.

அதனால் அதனை வணங்குகிறோம்.

தேசத்துக்குக் கவுரவமும் பெருமையும்

தேடித் தந்த வீரதீரர்களுக்கு

நினைவுகளின் சுபமான வார்த்தைகளில்

வணக்கம் செலுத்துகிறோம்.

மாலத்தீவர்களின் தேசம்,

காவல், பாதுகாப்பின் கீழ்

மாலத்தீவர்களின் பெயரால்

பெருமை கொள்ளட்டும்.

உலகில் அவர்களின் (மாலத்தீவர்களின்)

சுதந்திரம் மற்றும் முன்னேற்றத்துக்கு வாழ்த்துகிறோம்

துயரங்களிலிருந்து விடுதலைக்காகவும்

நின்னை வணங்குகிறோம்.

நமது மதம் மற்றும் நமது தலைவர்களுக்கு

முழு மரியாதை, உளமார்ந்த ஆசிகளுடன்

நேர்மையால் வாய்மையால் நாங்கள் வணங்குகிறோம்.

சுபமான கவுரவம் மற்றும் மரியாதையை

அரசு எப்போதும் பெற்று இருக்கட்டும்.

உன்னுடைய தொடர் வலிமைக்கு வாழ்த்துகளுடன்,

நின்னை நாங்கள் வணங்குகிறோம்.

(தேசிய கீதம் ஒலிக்கும்)

5_2912844a.jpg -ஜமீல் தீதி

tamil.thehindu

  • தொடங்கியவர்

13559125_1071510382897655_85365480246903

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் பிறந்த நாள் இன்று.

  • தொடங்கியவர்

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

 

p40b.jpg

ல்லோரும் பாட்டுப் போட்டிக்குப் பைத்தியமா கிடக்கிறோம்னா, ஒரே காரணம்தான். எல்லோருக்குள்ளும் ஒரு பாடகனோ, பாடகியோ கண்டிப்பா இருப்பாங்க. ஆனா, என்ன பிரயோஜனம்? அந்தத் திறமை, காலேஜ் படிக்கும்போது ஃபிகரைக் கரெக்ட் பண்ண மேடையேற வெச்சிருக்கும். கோயிலில் பஜனை பாடும்போது, சுதி தப்பாம பாடி, எக்ஸ்ட்ரா ஒரு கரண்டி பொங்கல் வாங்கியிருப்பீங்க. மிஞ்சிப்போனா, பாத்ரூம்ல பாடியிருப்பீங்க. ஆக, உங்களுக்குள்ள இருந்த ஒரு எஸ்.பி.பி, எஸ்.ஜானகியைக் கடைசிவரை கண்டுக்காமலேயே விட்டுட்டீங்க. அதைத் தட்டி எழுப்பவே ஆண்ட்ராய்டு வழங்குகிறது, ‘யோகீ’ என்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன். அப்புறமென்ன? பாட்டாவே பாடிடுவோம்!

p40a.jpg

மொத்தம் 28 மொழிகளில் எண்ணற்ற பாடல்களோடு இருக்கும் அப்ளிகேஷன் இது. நம் ஊர்க்காரங்க பெரும்பாலும் பயன்படுத்தாத காரணத்தினால், தமிழ்ப் பாடல்களை இன்னும் இணைக்கவில்லை. தனிமையில் இருக்கும்போது சுதந்திரமாகப் பாட்டுப்பாடி ஆடுபவர்கள் பலபேர். அவர்களுக்கு மிகப்பெரிய மோட்டிவேஷனாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த அப்ளிகேஷனின் நோக்கம். இதற்காகவே சிறந்த பாடகர்களை ஊக்குவித்து, ‘பெஸ்ட் ஃபெர்பார்மென்ஸ்’களை யூ டியூபில் பதிவேற்றுகிறார்கள். இசைக்கு மொழி ஏது?

‘பார்த்துப் படிக்க பாடல் வரிகள். ரெக்கார்டிங் ஸ்டுடியோ. சுற்றி மியூஸிக் இன்ஸ்ட்ரூமென்ட்ஸை வாசிக்கிறவங்களுக்கு மத்தியில் நின்னு மைக்கைப் பிடிச்சா, நான்லாம் பின்னிப் பெடலெடுத்துடுவேன்’னு சிலாகிக்கிற ஆட்களுக்கு இந்த அப்ளிகேஷன் வரம். டவுன்லோடு செய்துகொண்டு, பாடல் வரிகள் ஸ்க்ரோலிங்கில் ஓடிக்கொண்டிக்க... அதைப் பின்தொடர்ந்து பாடலாம். ஏற்கெனவே பாடிய பாடல்களை உங்களுடைய குரலில் ஒலிப்பதிவு செய்துகொள்ளலாம். பாடல்களில் ஆங்காங்கே சின்னச் சின்ன கரெக்‌ஷன்ஸ் கொடுத்தா நல்லா இருக்கும்னு நினைச்சா, அதையும் நீங்களே பண்ணலாம். தவிர, உங்களுடைய ஃபெர்ஃபார்மென்ஸை உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளலாம். பதிவாகவும் போடலாம். இதெல்லாமே நல்லாப் பாடுற பசங்களுக்கு. தொண்டையில் உருவமில்லா உருண்டை உருள்கிற மாதிரி பாடுறவங்களுக்கும் இந்த அப்ளிகேஷன் பயன்படும். எப்படி?

p40c.jpg

நீங்க பாடுறதுதான் பாட்டுனு வாய்ஸ் ரெக்கார்டரைத் தேய்ச்சு எடுத்திருப்பீங்க. இனி அந்த மாதிரி அசம்பாவிதங்கள்ல ஈடுபடாம, இந்த அப்ளிகேஷனை வெச்சுப் பாடுங்க. இசையோடு சேர்ந்து பாடும்போது உங்களோட குரல் அந்தப் பாட்டுல ஒட்டுதா இல்லையானு நீங்களே நேரடியா தெரிஞ்சுக்கலாம். ஒரு நல்ல பாடலை எப்படிக் குதறியெடுக்கிறோம்னு புரியவைக்கும். எப்படிப் பாடணும்னு தெரியவைக்கும். சுருக்கமா சொன்னா, இதுவரை நீங்க பாடிய பாட்டுக்கு மத்தவங்க காரித் துப்பினதும், கழுவி ஊத்துனதும் கண்ணு முன்னாடி வந்துட்டுப் போகும்.

vikatan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க பாடுறதுதான் பாட்டுனு வாய்ஸ் ரெக்கார்டரைத் தேய்ச்சு எடுத்திருப்பீங்க. இனி அந்த மாதிரி அசம்பாவிதங்கள்ல ஈடுபடாம, இந்த அப்ளிகேஷனை வெச்சுப் பாடுங்க. இசையோடு சேர்ந்து பாடும்போது உங்களோட குரல் அந்தப் பாட்டுல ஒட்டுதா இல்லையானு நீங்களே நேரடியா தெரிஞ்சுக்கலாம். ஒரு நல்ல பாடலை எப்படிக் குதறியெடுக்கிறோம்னு புரியவைக்கும். எப்படிப் பாடணும்னு தெரியவைக்கும். சுருக்கமா சொன்னா, இதுவரை நீங்க பாடிய பாட்டுக்கு மத்தவங்க காரித் துப்பினதும், கழுவி ஊத்துனதும் கண்ணு முன்னாடி வந்துட்டுப் போகும்.

ஐ லைக் இட்.....!

ஒரு டவுட்...., நிஜமாவே அக் கட்டுரையில் இருந்ததா, அல்லது புராணங்களில் செய்யிற இடைச் செருகல்கள் மாதிரி கம்பனியைக் குறிவைத்து உதைச் செருகினதா....!  tw_blush:

 

  • தொடங்கியவர்
1997 : ஹொங்கொங்கை சீனாவிடம் பிரிட்டன் ஒப்படைத்தது
 

வரலாற்றில் இன்று.....

ஜுன் - 30

 

1737 : ரஷ்­யாவின் படைகள் மார்ஷல் மியூனிச் தலை­மையில் துருக்­கியப் படை­களைத் தாக்கி 4,000 துருக்­கி­யர்­களைச் சிறைப்­பி­டித்­தனர்.

 

7591997-hongkong.jpg1882 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜேம்ஸ் கார்­பீல்ட்டை சுட்டுக் கொன்ற "சார்ல்ஸ் கைட்டோ" தூக்­கி­லி­டப்­பட்டான்.

 

1886 : கன­டா­வுக்கு குறுக்­கான முதல் ரயில் பயணம் மொன்ட்­ரீயல் நகரில் ஆரம்­பிக்­கப்­பட்­டது. ஜூலை 4 ஆம் திகதி  போர்ட் மூடி நகரை அந்த ரயில் சென்­ற­டைந்­தது.

 

1905 : சிறப்புச் சார்புக் கோட்­பாட்டை அறி­மு­கப்­ப­டுத்தும் ஐன்ஸ்­டீனின் இயங்கும் பொருட்­களின் மின்­னி­யக்­க­வியல் ஆய்வுக் கட்­டுரை வெளி­வந்­தது.

 

1910 : இலங்­கையில் ஐந்து சத செப்பு நாணயம் பாவ­னையிலிருந்து விலக்­கப்­பட்­டது.

 

1912 : கன­டாவில் ரெஜினா என்ற இடத்தில் சூறா­வளி தாக்­கி­யதில் 28 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1917 : முதல் உலகப் போரில்  அச்சு நாடு­க­ளுக்கு எதி­ராக கிரேக்கம் போர்ப் பிர­க­டனம் செய்­தது.

 

1934 : ஹிட்­லரின் அர­சியல் எதி­ரி­க­ளுக்கு எதி­ரான வன்­முறை "நீள் கத்­தி­க­ளு­டைய இரவு" ஜேர்­ம­னியில் நிகழ்ந்­தது.

 

1937 : உலகின் முத­லா­வது அவ­சரத் தொலை­பேசி எண் (999) லண்­டனில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

 

1941 : இரண்டாம் உலகப் போரில் நாஸி ஜேர்­ம­னி­யினர் யுக்­ரைனின் லுவோவ் நகரைக் கைப்­பற்­றினர்.

 

7592002-Brazil-World-Cup.jpg1944 : இரண்டாம் உலகப் போரில் செர்போர்க் சண்டை முக்­கிய துறை­முகம் அமெ­ரிக்கப் படை­க­ளிடம் வீழ்ந்­ததை அடுத்து முடி­வ­டைந்­தது.

 

1956 : அமெ­ரிக்­காவின் இரண்டு விமா­னங்கள் அரி­சோனா மாநி­லத்தில் மோதிக் கொண்­டதில் 128 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1960 : பெல்­ஜி­யத்­திடம் இருந்து கொங்கோ  சுதந்­திரம் பெற்­றது.

 

1971 : சோவி­யத்தின் சோயுஸ் 11 விண்­க­லத்தில் ஏற்­பட்ட காற்றுக் கசி­வினால் விண்­வெளி வீரர்கள் மூவர் கொல்­லப்­பட்­டனர்.

 

1972 : ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட சர்­வ­தேச நேரத்தில் ஒரு லீப் வினாடி அதி­க­ரிக்­கப்­பட்­டது.

 

1985 : லெபனான் தலை­நகர் பெய்­ரூத்தில் 17 நாட்­க­ளாகக் கடத்­தப்­பட்­டி­ருந்த 39 அமெ­ரிக்க விமானப் பய­ணிகள் விடு­விக்­கப்­பட்­டனர்.

 

1990 : கிழக்கு, மற்றும் மேற்கு ஜேர்­ம­னிகள் தமது பொரு­ளா­தா­ரத்தை ஒருங்­கி­ணைத்­தன.

 

1997 : முத­லா­வது ஹரி பொட்டர் நூல் வெளி­யி­டப்­பட்­டது.

 

1997 : ஹொங்­காங்கின் அதி­கா­ரத்தை சீனா­விடம் பிரிட்டன் ஒப்­ப­டைத்­தது.

 

2002 : உலக கிண்ண கால்­பந்­தாட்­டத்தில் 5 ஆவது தட­வை­யாக பிரேஸில் சம்­பி­ய­னா­கி­யது.

 

2013 : அமெ­ரிக்­காவின் அரி­ஸோனா மாநி­லத்தில் காட்டுத் தீயை அணைக்கப் போரா­டிய 19 தீய­ணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.

 

2015 : இந்தோனேஷியாவில் இராணுவ விமானமொன்று சுமத்ரா பிராந்தியத்தின் குடியிருப்புப் பகுதியொன்றில் வீழ்ந்ததால் தரையிலிருந்த 22 பேர் உட்பட 143 பேர் உயிரிழந்தனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
மகளின் அலங்கோல செல்பி படப்பிடிப்புகளை நிறுத்துவதற்கு தந்தை கையாண்ட விநோத வழி
 

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மகள் கவர்ச்­சி­யான செல்பி படம்­பி­டித்­துக்­கொள்­­வதை நிறுத்­து­வ­தற்கு விநோ­த­மான வழியை கையாண்­டுள்ளார். மகளைப் போன்றே தானும் பிடித்­துக்­கொள்­வதே அவ்­வழி.

 

1768219.jpg

 

கிறிஸ் மார்ட்டின் எனும் இவர் அமெ­ரிக்­காவின் வோஷிங்டன் மாநி­லத்தைச் சேர்ந்த நகைச்­சு­வை­யாளர் ஆவார். 

 

பதின்மர் வய­தான தனது மகள் அலங்­கோ­ல­மான தோற்­றங்­க­ளுடன்  செல்பி படம் பிடித்­துக்­கொள்­வது கிறிஸ் மார்ட்­டி­னுக்குப் பிடிக்­க­வில்லை.

 

1768218.jpg

 

இதை நிறுத்தச் செய்­வ­தற்­காக தனது மகள் பிடித்த செல்பி படங்­களில் உள்­ளதைப் போன்றே தானும் “அலங்­காரம்” செய்­து­கொண்டு செல்பி படம் பிடித்­துக்­கொண்டார் மார்ட்டின்.

 

இவ்­வாறு படம்­பி­டித்­துக்­கொள்ள வேண்­டா­மென மக­ளிடம் கூறு­வ­தற்குப் பதி­லாக, சிறந்த வழி­யொன்றை கையாள்­வ­தற்கு நான் விரும்பினேன்” என கிறிஸ் மார்ட்டின் கூறியுள்ளார்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இலங்கையின் பிரபல நீச்சல் வீரராகத் திகழ்ந்த முருகுப்பிள்ளை நவரத்தினசாமியின் நினைவுதினம்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாதனை வீரராகத் திழந்த இவர், பாக்குநீரிணையை முதன் முதலில் நீந்திக் கடந்தவர் என்ற பெருமை பெற்றவர்.

13439137_1072148166167210_27523754136445

  • தொடங்கியவர்

13507275_10154744427284578_6020111669236

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.