Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஜூலை 10: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலாவதாக 10,000 ரன்களை கடந்து சாதனை படைத்த சுனில் கவாஸ்கர் பிறந்தநாள் இன்று

13567514_1173723776019744_50800576239738

13613697_1078354048879955_18011905311104

உலகின் அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்கள் குவித்த சாதனையை முன்னர் வைத்திருந்த, 10000 டெஸ்ட் ஓட்டங்களைப் பெற்ற முதல் துடுப்பாட்ட வீரரும் இந்திய அணியின் முன்னாள் தலைவருமான சுனில் கவாஸ்கரின் பிறந்த தினம் இன்று.
Happy Birthday Sunil Gavaskar

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நம்ப முடிகிறதா?- ஆயிரம் ஆண்டு சுற்றும் தண்ணீர்!

 
 
3_2912839f.jpg
 

பூமிப் பந்தின் மேற்பரப்பில் 70 சதவீதம் பெருங்கடல்களால் சூழப்பட்டிருக்கிறது.

பெருங்கடல்களில் ஓரிடத்தில் புறப்படும் தண்ணீர் உலகெங்கும் சுற்றி மீண்டும் அதே இடத்தை வந்தடைய 1000 ஆண்டுகள் ஆகும் என்று கணித்திருக்கிறார்கள்.

பூமியில் உள்ள ஐந்து பெருங்கடல்களில் மிகப் பெரியது பசிஃபிக். பூமியின் மேற்பரப்பில் 30 சதவீதத்துக்கு இது சூழ்ந்திருக்கிறது.

பசிபிக் கடலைக் கடக்கும்போது மெகல்லன் ‘Mar Pacifico’ என்று அழைத்தார். போர்த்துக்கீசிய மொழியில் ‘அமைதியான கடல்’ என்று அர்த்தம். இதிலிருந்து உருவானதுதான் ‘பசிஃபிக்’ என்ற பெயர்.

பல்வேறு சுற்றுச்சூழல் மாற்றங்கள் காரணமாக அட்லாண்டிக் பெருங்கடல் பெரிதாகிறது, பசிஃபிக் பெருங்கடலோ இப்போது சுருங்கி வருகிறது.

பெருங்கடல்களின் ஆழமான பகுதி ‘மரியானா டிரெஞ்ச்’. அதன் ஆழம் 11 கி.மீ.. எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8.6 கி.மீ.. அப்படிப் பார்த்தால் பூமியின் உயரமான புள்ளியைவிட, ஆழமான புள்ளி பெரியது.

உலகின் மிக நீண்ட மலைத்தொடர் தரைப் பகுதியில் இல்லை. கடலுக்கு அடியில்தான் இருக்கிறது. பூமிப் பந்தின் மத்தியில் கடலுக்குக் கீழே உள்ள மிட் ஒசியானிக் ரிட்ஜில் 56,000 கி.மீ. நீளம் கொண்ட இந்த மலைத்தொடர் உள்ளது.

பெருங்கடல்களில் தனித்துவிடப்பட்ட தீவுப் புள்ளி பாயிண்ட் நீமோ. தென்னமெரிக்காவுக்கும் ஜப்பானியத் தீவுகளுக்கு இடையே, பக்கத்தில் தரைத் தொடர்பே இல்லாமல் இது அமைந்திருக்கிறது.

நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் பாதிக்கும் மேல் பெருங்கடல்கள்தான் உற்பத்தி செய்கின்றன.

வளிமண்டலத்தைவிட 50 மடங்கு அதிகமான கார்பனைக் கடல்கள் கிரகித்துக்கொள்கின்றன.

உலகின் மிகப் பெரிய உயிருள்ள கட்டமைப்பு கடலுக்கு அடியில்தான் உள்ளது. ஆஸ்திரேலியக் கடற்பகுதியில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப், என்ற பெருந்தடுப்பு பவளத்திட்டுகள்தான் அது. 2,600 கி.மீ. நீளமுள்ள இந்தப் பவளத்திட்டை நிலவிலிருந்துகூடப் பார்க்க முடியும்.

பெருங்கடல்கள் உயிருள்ள அருங்காட்சியகமாகக் கருதப்படுகின்றன. உலகின் அனைத்து அருங்காட்சியகங்களில் உள்ள காட்சிப் பொருள்களைவிட மிக அதிகமான காட்சிப் பொருட்களும் வரலாறும் பெருங்கடல்களின் அடியில் உறைந்து கிடக்கின்றன. சிறந்த எடுத்துக்காட்டு: டைட்டானிக் கப்பல்.

உலகின் மிகப் பெரிய குப்பைத் தொட்டியாக இருப்பதும் கடல்தான். சாதாரண பிளாஸ்டிக் குப்பை முதல் அணுக்கழிவுவரை கொட்டப்படும் இடமாகப் பெருங்கடல்கள் இருக்கின்றன.

உலகப் பெருங்கடல்களில் ஐந்து சதவீதப் பகுதியில் மட்டுமே இதுவரை ஆராய்ச்சி நடந்திருக்கிறது. எஞ்சிய 95 சதவீதப் பகுதியில் பெரிய ஆராய்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை.

பெருங்கடல்களில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள உயிரினங்கள் 25 சதவீதம் மட்டுமே. இன்னும் அடையாளம் காணப்படாத 75 சதவீத உயிரினங்கள் இருக்கின்றன.

tamil.thehindu

  • தொடங்கியவர்

டேஞ்சரோ டேஞ்சர்!

 

p32a.jpg

‘கரணம் தப்பினால் மரணம்’ என நினைக்க வைக்கும் இந்தியாவின் ஆபத்தான சாலைகள் இவை...

ஜோஜி லா கணவாய் சாலை: தப்பான ஒரு வளைவில் கண் இமைக்க மறந்தால், 3,538 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்துவிடும் பேராபத்து இருக்கிறது. காஷ்மீரின் லே லடாக் நகருக்கு ஸ்ரீநகரில் இருந்து செல்லும் பிரதான சாலை இது.

p32.jpg

தேசிய நெடுஞ்சாலை 22: நரகத்தின் நெடுஞ்சாலை என்று அன்போடு அழைக்கப்படுகிறது. சமீபத்தில் இந்தியாவில் பராமரிப்பின்றி உயிருக்கு உலை வைக்கக் காத்திருக்கும் ‘டெட்லியஸ்ட் ரோடு’ லிஸ்ட்டில் முதலிடம் கொடுத்து கௌரவித்து (?) இருக்கிறது ஹிஸ்ட்ரி சேனல்.

சாங் லா கணவாய்: சீனாவுக்கு நெருக்கமாக இருக்கும் இந்தச் சாலை வருடத்தில் பாதி நாட்கள் பனியால் மூடிக்கிடக்கும். மீதி நாட்கள் நிலச்சரிவுகளோடு கூடிய ஆபத்தான சாலையில் ராணுவ மற்றும் சாகச விரும்பிகளின் வாகனங்கள் ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிடும். தேர்ந்த டிரைவர்களே சுவாசக்கோளாறால் மறித்துப்போன கொடூர வரலாறு உண்டு. ஜாக்கிரதை.

p32c.jpg

லே-மணாலி சாலை: பொறுமையை அசைத்துப் பார்க்கும் மிகக்குறுகலான காஷ்மீர் மலைச்சாலை இது. பல நேரங்களில் இடப்பக்கம், வலப்பக்கம் என மாறி மாறி அதல பாதாள பள்ளத்தாக்கோடு நீங்கள் சைடு வாங்கி வழி கொடுத்து முன்னேறிச் செல்ல வேண்டி இருக்கும். அல்லது மணிக்கணக்கில் பனி சூழ்ந்த சாலையில் டிராஃபிக் நெரிசலில் காத்துக்கிடக்க வேண்டி இருக்கும்.

p32d.jpg

சிக்கிம் ஜிக் ஜாக் சாலை: சிக்கிம் மாநிலத்தில் 11,200 அடி உயரம் கடல் மட்டத்திலிருந்து இருக்கும் இந்த ஜிக் ஜாக் வடிவச் சாலை முதல் தடவை பயணம் செய்வோரை பயத்திலேயே உயர் ரத்த அழுத்தம் வரவைத்துவிடும். கழுகுப்பார்வையில் அழகாக இருக்கும் இந்தச் சாலை மிகக் குறுகலானது என்பதால் கவனமாக அனுபவம் வாய்ந்த ஆட்களால் மட்டுமே இதில் ஓட்ட முடியும்.

p32b.jpg

கில்லர்- கிஸ்தாவர் சாலை: காஷ்மீரையும் இமாச்சல் பிரதேசத்தையும் இணைக்கும் இந்தச் சாலை மலையைச் செதுக்கிப் போடப்பட்டது. ஒரு பக்கம் கற்பனை பண்ணவே முடியாத பள்ளத்தாக்கு, மொத்தம் 120 கிலோமீட்டர் வரை நீண்டு நிஜமான வீடியோ கேம் விளையாட்டை லைவ்வாக விளையாடச் சொல்லி பயமுறுத்தும்.

p32e.jpg

நேரல்-மதேரன் ரோடு: மகாராஷ்டிராவின் ராஜ்காட் மாவட்டத்தில் இருக்கும் மதேரன் மலைவாசஸ்தலத்தையும் நேரல் என்ற ஊரையும் இணைக்கும் 8.9 கி.மீ சாலை மிகமிகக் குறுகிய அதிக ஆபத்தான வளைவுகளைக் கொண்டது. ஒரே நேரத்தில் எதிரும் புதிரும் வண்டிகள் வந்தால் ரிவர்ஸில் அரை கிலோமீட்டர் பாம்பைப் போல வளைந்தால் ஒழிய வழி கிடைக்காது.

நாதுலா கணவாய் சாலை: இந்திய சீன எல்லைச் சாலை இது. கோடைகாலத்தைத் தவிர மற்ற நாட்களில் போனால் கபால மோட்சம்தான். பாதி தூரம் போனதும் பனி பகலிலேயே மூடி, ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாத அளவுக்கு சாலையை மறைத்துவிடும் என்பதால் தகுந்த வழிகாட்டி இல்லாமல் இந்தச் சாலையை உங்கள் வாகனம் தொடவேக் கூடாது!

vikatan

  • தொடங்கியவர்

காலஞ்சென்ற இலங்கையின் சிறந்த வானொலி, மேடை நாடகக் கலைஞர்களில் ஒருவரும் எழுத்தாளருமான K.S.பாலச்சந்திரனின் பிறந்த தினம் இன்று.
நினைவு கூர்கிறோம்.

13658956_1078354575546569_37739420383494

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜூலை 10
 
 

article_1436509298-Nallur.jpg1212: லண்டனில் ஏற்பட்ட தீயினால் நகரின் பெரும் பகுதி அழிந்தது.

1947: பாகிஸ்தானின் முதலாவது ஆளுநர் நாயகமாக முஹமட் அலி ஜின்னா நியமிக்கப்பட்டார்.

1956: யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில், வண்ணார்பண்ணை சிவன் கோவில் மற்றும்  வரதராசப்பெருமாள் கோயில் ஆகியவற்றின் உள்ளே முதற்தடவையாக குறைந்த சாதியினர் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டனர்.

1962: உலகின் முதலாவது தகவல்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது.

1973: பஹாமஸ் முழுமையான சுதந்திரம்பெற்றது.

1973: பங்களாதேஷ பாகிஸ்தான் நாடாளுமன்றம் அங்கீகரித்து.

1991: நிறவெறி ஆட்சி முடிவுற்றதையடுத்து. தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.) சேர்கக்ப்பட்டது.

1991: யாழ்ப்பாணம், ஆனையிறவு இராணுவ தளத்தின் மீது விடுதலைப் புலிகள் போர் தொடுத்தனர்.

2000: நைஜீரியாவில் பெற்றோலிய குழாயொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 250 கிராமவாசிகள் பலி.

2006: பாகிஸ்தானின் முல்தான் நகரில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 45பேர் பலி.

2006: இந்தியாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்சாட்௪ செயற்கைக் கோளை ஏற்றிச் சென்ற ஜி.எஸ்.எல்.வி விண்கலம் இயந்திரக் கோளாறினால் கடலில் வீழ்ந்தது.

2008: போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காக மாஸிடோனியாவின் முன்னாள் உள்விவகார அமைச்சர் லிஜுப் பொஸ்கொஸ்கி, ஐ.நா நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.

tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
பின்லாந்தில் மனைவியை சுமந்துகொண்டு ஓடும் போட்டி; ரஷ்ய தம்பதி முதலிடம்
 

மனை­வியை சுமந்­து­கொண்டு ஓடும் வரு­டாந்த போட்டி பின்­லாந்தில் அண்மையில் நடை­பெற்­றது.

 

17879wife-carrying-contest-2016-2.jpg


23 ஆவது தட­வை­யாக இப்­போட்டி ஏற்­பாடு செய்­யப் ­பட்­டி­ருந்­தது. பின்­லாந்தின் சோன்­கா­ஜார்வில் நக ரில் நடை­பெற்ற இப்­போட்­டியில் 12 நாடு­களைச் சேர்ந்த சுமார் 50 தம்­ப­திகள் பங்­கு­பற்­றினர்.

17879wife-carrying-contest-2016-1.jpg


இப்­போட்­டி­யா­ளர்­களில் பலர் தத்­த­மது நாடு­களில் நடை­பெற்ற இத்­த­கைய மனை­வியை சுமந்து கொண்டு ஓடும் போட்­டி­களில் தேசிய சம்­பி­யன்­க­ளாவர்.
மனை­வியை சுமந்­த­வாறு பல்­வேறு தடை­களைக் கடந்து 253.5 மீற்றர் (832 அடி) மீற்றர் தூரம் ஓடு­வ­து தான் இப்­போட்டி. சிலர் தீவி­ர­மாக இப்­போட்­டியில் பங்­கு­பற்­றினர். வேறு சிலர் வேடிக்­கைக்­காக இப்­போட்­டியில் கலந்­து­கொண்­டனர்.

17879wife-carrying-contest-2016-3.jpg

 

17879wife-carrying-contest-2016-4.jpg

 


இம்­முறை ரஷ்ய தம்­ப­தி­க­ளான திமித்ரி சாகல், அனஸ்­டே­சியா லொகி­னோவா ஆகியோர் சம்­பி­யன்­க­ளா­கினர். 5 தட­வைகள் உலக சம்­பி­ய­னான பின்­லாந்து தம்­ப­தி­யான டெஸ்ட்டோ மியெட்­டினென் மற்றும் கிறிஸ்­டினா ஹாபானென் ஆகி­யோரை ரஷ்­யாவின் திமி த்ரி சாகல், அனஸ்­டே­சியா லொகி­னோவா தம்­ப­தி­யினர் 5 விநா­டி­களால் வென்­றனர்.

 

178791st-place.jpg

முதலிடம் பெற்ற  தம்­ப­தி­யினர்


 

19 ஆம் நூற்­றாண்டைச் சேர்ந்த ரொன்­கெய்னென் எனும் கொள்­ளைக்­கூட்ட தலைவன் ஒருவன் தனது சகாக்­க­ளி­டையே தானிய மூடைகள், பன்­றிகள் ஆகி­ய­ வற்றை சுமந்து கொண்டு ஓடும் போட்­டியை நடத்தினா னாம். இப்போட்டியே பின்னர் மனைவியை சுமந்து கொண்டு ஓடும் போட்டியாக மாறியது எனத் தெரிவிக் கப்படுகிறது.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

p67a.jpg

தென்னிந்திய சினிமாக்களின் லேட்டஸ்ட் கவன ஈர்ப்பு அழகிகள் இவர்கள்..!

டோலிவுட் லாரிசா பொனேஸி

பிரேசில்-இந்திய அப்பா அம்மாவின் கூட்டுத் தயாரிப்பு! விளம்பர உலகில் மும்பையில் பிஸியாக இருந்தவர். விவெல் சோப், பிலிப்ஸ், ரேவிஸ், பாண்ட்ஸ் எனப் பல பொருட்களின் விளம்பரங்களில் உலகம் முழுக்கத் தகதகத்தார். 2013-ல் சயிஃப் அலிகானுடன் ‘கோ கோவா கான்’ படத்தில் அறிமுகமானார். சிரஞ்சீவி குடும்பத்து வாரிசுகளில் ஒருவரான சாய் தரம் தேஜுடன் இந்த ஆண்டு டோலிவுட்டில் அறிமுகமான ‘திக்கா’ செமையாய் எட்டுத்திக்கும் பட்டையைக் கிளப்பிக் கொண்டு ஓடியதால் பொண்ணுக்கு டோலிவுட்டில் டிமாண்ட்! 

சாண்டல்வுட் சுக்ருதா வகாலே

p67b.jpg

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த பெங்களூரு அழகுப்புயல். ‘ஜட்டா’ என்ற படத்தில் அறிமுகமானவருக்கு காமெடிப்படம் ‘ஃப்ளாப்’ நல்ல பெயரை வாங்கித்தந்தது. நடனம், தற்காப்புக் கலைகள் எனப் பட்டையைக் கிளப்பும் சுக்ருதாவுக்கு புனீத் ராஜ்குமாரோடு ஜோடி போட வேண்டும் என்பதுதான் பெரிய கனவு. சீக்கிரமே நிறைவேறும் சுக்கு!

மல்லுவுட் ரஸ்னா பவித்ரன்

p67c.jpg

ண்ணூர் பொண்ணு. ஓவியத் தாரகைக்கு பெயின்டிங் என்றால் ஜுஜுபி. இன்டீரியர் டிஸைனிங் பிசினஸ் செய்தவர் மாடலிங்கிற்கு வந்தது அழகிய விபத்து. தமிழில் விஜய் வசந்த்தோடு 2014-ல் ‘தெரியாம உன்னைக் காதலிச்சிட்டேன்’ படம் தான் அறிமுகம். படம் சுமாராகப் போனாலும் மலையாளத்தில் ரிலீஸான ‘மௌனம்’ படம் ஓரளவு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இப்போது மலையாள இண்டஸ்ட்ரியில் பொண்ணு பிஸி. ஐ லவ் யூ ரஸ்னா!

vikatan

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜூலை 11
 

article_1468154445-srebrenica.jpg1919: நெதர்லாந்தில் எட்டு மணித்தியால வேலைநாளும், ஞாயிறு விடுமுறையும் சட்டமாக்கப்பட்டது.

1921: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி வில்லியம் ஹோவார்ட் டவ்ட,; அந்நாட்டின் பிரதம நீதியரசராக பதவியேற்றார். இவ்விரு பதவிகளையும் வகித்த ஒரே நபர் அவராவார்.

1950: சர்வதேச நாணய நிதியத்தில் பாகிஸ்தான் இணைந்தது.

1972: முதலாவது உலக சதுரங்க சம்பியன்ஷிப்போட்டி நடைபெற்றது.

1973: பாரிஸில் நடந்த விமான விபத்தில் 134 பேர் பலி.

1978: ஸ்பெய்னின் டரகோனா நகரில் எரிவாயு ஏற்றிச்சென்ற லொறியொன்று வவிபத்துக்குள்ளாகி வெடித்ததால் 216 சுற்றுலா பயணிகள் பலி.

1987: அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையமான ஸ்கைலாப், பூமிக்குத் திரும்பும் போது உடைந்து சிதறி இந்து சமுத்திரத்தில் விழுந்தது.

1991: சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 261 பேர் பலி.

1995: கியூப விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 44 பேர்பலி.

1995: ஸ்ரேபிரேனிக்கா படுகொலைகள்: ஜூலை 11 முதல் 22ஆம் திகதிவரை  பொஸ்னியாவில் 8000 பொஸ்னிய முஸ்லிம்கள் சேர்பிய படையினரால் கொல்லப்பட்டனர்.

2006: மும்பை நகரில் தொடர் குண்டுவெடிப்புகளால் 209 பேர் பலி.

2007: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள செம்மசூதிக்குள் இருக்கும் தீவிரவாதிகளை வெளியேற்றும் முகமாக, இராணுவத்தினர் மசூதியின் மீது தாக்குதல் நடத்தியதில், மசூதியின் மதகுரு அப்துல் காஸி உட்பட குறைந்தது 50பேர் கொல்லப்பட்டனர்.

2007: குடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சியடைந்தது.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அலுவலகத்தில் உங்களை தலைவனாக்கும் 10 பண்புகள்! #MondayMotivation

leader.jpg

உங்கள் அலுவலகத்தில் எத்தனையோ பேர் வேலை செய்யலாம். ஆனால் அனைவருக்குமே தலைமை பதவியை அடைய வேன்டும் என்பதே இலக்காக இருக்கும். ஒரு நிறுவனத்தில் சி.இ.ஓ வாக அனைவரும், ஆசைப்படும் போது ஒருவர் மட்டுமே சிஇஓ ஆகிறார் . அதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் அவர் மற்றவர்களிடமிருந்து தனித்துத் தெரிவதுதான். இந்தத் திறனை வளர்த்துக்கொண்டால் மட்டுமே தலைவனாக முடியும். நீங்கள் சிறந்த தலைவனாக இருக்கு உங்களிடம் கட்டாயம் இந்த 10 பண்புகள் இருக்க வேண்டும்.
 
முடிவெடுப்பதில் உங்களின் பங்களிப்பை அதிகப்படுத்துங்கள்!
 
அலுவலகம் சில சமயங்களில் எடுக்கும் ஒரு முடிவு சிறப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதனை நிர்வாகத்துக்குப் பயந்து மற்றவர்களும் அதனை ஆதரிக்கலாம். ஆனால், உங்களுக்குச் சரியில்லை என்றால் அதனைத் தெரிவிக்கத் தயங்காதீர்கள். அப்படியே உள்ளதைத் தெரிவியுங்கள். முடிவுகளில் உங்களின் பங்களிப்பை அதிகரியுங்கள், அது உங்களின் தலைமைப் பண்பை வெளிச்சம்போட்டு காட்டும். அலுவலக நிர்வாகமும் இதனைத்தான் விரும்பும். இதற்கு சிறந்த உதாரணம் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னராக இருக்கும் ரகுராம் ராஜன். அவரது பணியில் அரசின் குறுக்கீடு இருந்து தவறை சுட்டிக்காட்ட அவர் தயங்கவில்லை. அது தான் அவரை சிறந்த தலைவனாக உலகிற்கு காட்டியது.
 
புதிய உத்திகளை வகுப்பவராக இருங்கள்!

 
எல்லாரும் செய்வதையே செய்பவர் தலைவனாக இருக்க முடியாது. தலைவன் என்பவர் புதிதாக ஏதாவது ஒன்றை செய்து அதன்மூலம் தன்னைத் தனித்துக் காட்டிக்கொள்ள வேண்டும். அப்படி காட்டிக்கொள்ளாவிட்டால் அவர்கள் தலைவனாக நீண்ட காலம் நிலைக்க முடியாது. அதற்குப் புதிய உத்திகளைக் கையாள வேண்டும். புதிய உத்திகள் ஒருவேளை கண்டுபிடிக்கப்படவில்லை எனில், இன்று நம் கைக்குள் செல்போன் வடிவில் கணினி வந்திருக்காது. ஓர் அறை அளவிலான கணினியாகவே இருந்திருக்கும்.

leader2.jpg
 

அப்டேட் ஆகுங்கள்!
 
உங்களை நீங்களே அப்டேட் செய்து கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு வயதானவராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆறு வயது குழந்தை இன்றைக்கு இணையதளத்தில் அப்டேட்டாக இருக்கும்போது, அந்தப் போட்டியைச் சமாளிக்க அறுபது வயதுகாரரும் கணினி பயில வேண்டியுள்ளது. நீங்கள் அப்டேட் ஆகவில்லை எனில், உங்களைவிட அப்டேட்டாக உள்ள ஒருவர் உங்களைக் கடந்து வெற்றியடைய முடியும். இன்றைக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் தொழிலதிபர்களைவிட, இன்றைக்கு என்ன தேவை என யோசிக்கும் தொழிலதிபர்கள்தான் அதிகம். அப்படி யோசிப்பதால்தான் இன்றும் அவர்கள் தலைவர்களாகத் தங்களை மேம்படுத்திக் கொள்கின்றனர்.
 
ரிஸ்க் எடுங்கள்!
 
சில விஷயங்களில் உங்களைச் சுற்றியுள்ள குழுக்கள் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கூறுவது உண்டு. ஆனால், அதனைப் பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு சரி என்றுபட்ட விஷயத்தில் ரிஸ்க் எடுங்கள். ரிஸ்க் எடுக்கும் விஷயத்தை நன்கு புரிந்துகொண்டு இதனைச் செய்தால் வெற்றி மட்டும்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களிடம் இருந்தால் எவ்வளவு பெரிய ரிஸ்க்கையும் எடுங்கள். அது உங்களது தலைமைப் பண்பை அதிகரிக்கும். ரிஸ்க் எடுப்பது எவ்வளவு வெற்றியை தரும் என்பதற்கு உதாரணம், அனைவரும் இன்டர்நெட் என்ற விஷயத்தைத் தேடலுக்குப் பயன்படுத்தியபோது, இதனை ஒரு சமூக விஷயத்துக்குப் பயன்படுத்த முடியும் என்று களமிறங்கிய மார்க் ஜூக்கர் பெர்க் எடுத்த ரிஸ்க் இன்று, ஃபேஸ்புக் இல்லாமல் இருந்தால் இயங்க முடியாது என்ற மனிதர்களை உருவாக்கியுள்ளது.
 
குறுகிய இலக்குகளில் திருப்தி அடையாதீர்கள்!
 
ஒரு வேலைதான் ஒதுக்கப்பட்டது, அதனைச் செய்துமுடித்துவிட்டேன் என்று குறுகிய இலக்குகளில் திருப்தி அடையாதீர்கள். அலுவலகம் ஒரு விஷயத்தைக் குறுகிய நேரத்தில் அவசரமாக முடிக்கத் திட்டமிட்டால், அதனை முடிப்பவர் நீங்களாக இருக்க வேண்டும் என நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். இந்தச் சூழலை நீங்கள் உருவாக்கிவிட்டால் உங்களது ஆளுமைத்திறன் மீதான நம்பிக்கை அதிகரிக்கும், அது உங்களைத் தலைவனாக்கும்.

 

leader3.jpg


 
சுய மதீப்பீடு தேவை!
 
உங்களுக்கு என்று ஒரு மதிப்பீட்டையும், இலக்கையும் நிர்ணயித்துச் செயல்படுங்கள், அது கட்டாயம் நிறுவனத்தின் இலக்கைவிட சற்று அதிகமாக இருக்கும்படி அமைத்து, அதனை நீங்கள் அடையும்போது உங்கள் திறனும், இலக்குகளைக் கையாளும் விதமும் உங்களது தலைமைப் பண்பை தனித்துக் காட்டும். எல்லாரும் கூகுளில் தங்கள் இணையதளம்தான் முதலில் தோன்ற வேண்டும் என்று நினைக்கும்போது, அவர்கள் இணையதளத்தில் தேட என் இணையதளத்துக்குத்தான் வர வேண்டும் என்று யோசித்த கூகுள் நிறுவனர்களின் தலைமைப் பண்புக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
 
அலுவலகத்தில் கற்றுக்கொள்ளுங்கள்!
 
அலுவலகத்துக்குச் செல்கிறேன். அங்கு எனக்கு வேலை ஒதுக்கப்படுகிறது. அதனைச் சிறப்பாகச் செய்கிறேன் என்று மட்டும் இல்லாமல், அலுவலகச் சூழலில் அதிக மனிதர்களை உயர்மட்ட அதிகாரிகள் எப்படிக் கையாளுகிறார்கள், வேலையைத் தட்டிக்கழிக்கும் நபரிடம் எப்படி வேலை வாங்கப்படுகிறது என்று நுணுக்கமான விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். நேர மேலாண்மை, அலுவலக விதிமுறைகளைப் பின்பற்றுவது போன்ற செயல்களில் இருந்து ஆளுமை பண்பை கற்றுக்கொள்ளுங்கள். அது நீங்கள் தலைவனாகும்போது உங்களது வேலையை எளிமையாக்கும்.
 
குழுவாகச் செயல்படுங்கள்!
 
நான் சிறப்பாக வேலை செய்கிறேன் என்று மட்டும் எண்ணாமல், உங்கள் குழுவில் சற்று குறைவான நிலையில் இருக்கும் சக ஊழியரையும் இலக்குகளை நோக்கி இழுத்துச்செல்லுங்கள்.ஒரு குதிரை வண்டியில் இரண்டு குதிரைகளும் சம வேகத்தில் பயணித்தால்தான் வெற்றி என்பதால் மற்றவர்களையும் உங்கள் வேகத்துக்கு மாற்ற முயற்சி செய்யுங்கள். அப்படி செய்யும்போது உங்கள் தலைமைப் பண்பும், குழுவின் வேலைதிறனும் தனித்துத் தெரியும்.

 

leader4.jpg

 


 
பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்!
 
வேலை செய்வது மட்டும்தான் என் வேலை. அதனால் வரும் லாபம், நஷ்டம் எல்லாம் நிர்வாகம் சம்பந்தப்பட்டது என நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் வேலைதான் உங்கள் நிறுவனத்தின் லாபத்தை நிர்ணயிக்கும். அதேநேரத்தில், உங்கள் நிறுவனம் லாபத்தில் இயங்கினால் மட்டுமே உங்களால் வேலையில் தொடர முடியும். உங்கள் நிறுவனத்தின் லாபமும், உங்கள் செயல்திறனும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதை உணருங்கள். அந்தப் பொறுப்புணர்ச்சி உங்களைத் தலைவனாக்கும்.
 
நீங்களே தலைவன்!
 
நீங்கள் வேலை செய்யும் துறையில் உங்கள் உயர் அதிகாரி உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று கவலைப்படாமல் நீங்கள் அவர் இடத்தில் இருந்து உங்கள் இடத்தில் இருப்பவர் என்ன வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ, அந்த வேலையைச் செய்யுங்கள். அதில் வெற்றியடையும்போது நீங்களே உங்களைத் தலைவனாக உணருவீர்கள்.
 
அலுவலகத்தில் நீங்கள் தலைவனாக பதவியில் இருக்க வேண்டும் என்பது நிர்வாக முடிவுகள், சீனியாரிட்டி என பல விஷயங்களை தாண்டி தான் நிர்னயிக்கப்படும். ஆனால் தலைமைப்பண்போடு செயல்பட முடியும் என்பதை நீங்கள் முடிவு செய்தாலே போதும் உங்களுக்கு நீங்கள் தான் கேப்டன்.

vikatan

  • தொடங்கியவர்

13600018_1735840743341798_81643970455206

  • தொடங்கியவர்

தோற்றவர்களின் கதை - 9

சுசி திருஞானம்தொடர்

 

p18bnig.jpg

சில்வஸ்டர் ஸ்டாலோன்!

1976-ல் தொடங்கி, கால் நூற்றாண்டு காலம் ஹாலிவுட்டைக் கலக்கிய சூப்பர் டூப்பர் ஸ்டார் சில்வஸ்டர் ஸ்டாலோன். ராக்கி, ராம்போ போன்ற கதாபாத்திரங்கள் மூலமாகக் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் அவர். கோடிக்கணக்கான டாலர்களைக் கொட்டி அவரைவைத்துப் படம் எடுக்க தயாரிப்பாளர்கள் போட்டிபோட்டனர்.

அந்த இடத்தைப் பிடிக்க அவர் நடத்திய போராட்டம் வலி நிறைந்தது. அடுக்கடுக்கான தோல்விகள் தன்னைப் புரட்டி எடுத்தபோதும், அசாத்தியமான தன்னம்பிக்கையோடு போராடித் தோல்விகளைத் தோற்கடித்த முன்னுதாரண மனிதர் அவர்.

நியூயார்க் நகரில் 1946-ம் ஆண்டு பிறந்த சில்வஸ்டர் ஸ்டாலோன், பிறவியிலேயே தனது முகத்தின் இடது கீழ் பாகத்தில் பக்கவாதத்தால் தாக்கப்பட்டவர். குழந்தையாக இருந்தபோது பேசுவதற்குச் சிரமப்பட்ட அவர், பள்ளியில் படிக்கும்போது, மற்றவர்களின் கேலிப்பொருளாக இருந்தார். தனது கோணல் முகத்தையோ, தத்திப் பேசும் பேச்சையோ கேலி செய்பவர்களை அடித்துத் துவைத்துவிடுவார். இதற்காகவே குத்துச்சண்டைப் பயிற்சியில் சிறு வயதிலேயே சேர்ந்துகொண்டார். படிப்புச் சரியாக ஏறவில்லை. ‘ரவுடி மாணவன்’ என்ற பட்டம் வேறு சேர்ந்துகொண்டது.   
 
முடிதிருத்தும் தொழிலாளரான ஸ்டாலோன் தந்தை, 9-வது வயதிலேயே ஸ்டாலோனை விட்டுச் சென்றுவிட்டார். தாயின் அரவணைப்பில் வளர்ந்த ஸ்டாலோன், பகுதி நேரமாகச் சலூன்களில் வேலை செய்து, தனது பள்ளிப் படிப்பை முடித்தார். கல்லூரிப் படிப்புப் பாதியில் நின்றது.

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆகவேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்தது. ஒவ்வொரு ஸ்டுடியோவாகப் போய் வேலை கேட்டார். ‘‘கோணலான முகத்தையும், திக்குவாயையும் வைத்துக்கொண்டு, நீ நடிகர் ஆக ஆசைப்படலாமா’’ என்று கேலிசெய்து துரத்திவிட்டனர். தான் குடியிருந்த வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாததால், வீட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்டார்.
சாப்பாடு போட முடியாததால், தான் வளர்த்துவந்த நாயையும் 25 டாலருக்கு விற்றார். வீடில்லாமல் நியூயார்க் துறைமுகப் பேருந்து நிலையத்தில் வாரக்கணக்கில் பசியோடு படுத்திருந்து, வறுமையின் வேதனையை அனுபவித்தார்.

‘‘வேறு வேலை தேடியிருக்கலாம். ஆனால் ஹாலிவுட் ஸ்டார் என்ற கனவு நீர்த்துப் போய்விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். எவ்வளவு சோதனைகள் வந்தாலும் எனது குறிக்கோளில் இருந்து பின்வாங்கக் கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்’’ என்று பின்னாட்களில் குறிப்பிட்டார் சில்வஸ்டர் ஸ்டாலோன்.

p18a.jpg

பல நாட்கள் குளிர் தாங்க முடியாமல் தவித்தார். பகல் வேளைகளில் திறந்திருக்கும் நூலகத்துக்குச் சென்றால் குளிரிலிருந்து தப்பிக்கலாம் என்பதால், அங்கிருந்த நூலகத்துக்குச் செல்ல ஆரம்பித்தார். எட்கர் ஆலன் போ, லியோ டால்ஸ்டாய் போன்ற எழுத்தாளர்களின் நூல்களில் மனதைப் பறிகொடுத்தார். ஆழ்ந்த வாசிப்பு அனுபவம் காரணமாக, திரைப்பட கதை எழுத முயற்சி செய்தார்.

அவர் எழுதிய சில திரைக்கதைகளை, சிறு தொகை கொடுத்து சில ஸ்டுடியோ ஏஜென்ட்கள் வாங்கிக் கொண்டார்கள். ‘‘எனக்கு நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுங்கள்’’ என்று ஸ்டாலோன் கேட்டபோது, அதே ஏஜென்ட்கள் தலைதெறிக்க ஓடத் தொடங்கினார்கள். அவரது நச்சரிப்பைத் தாங்க முடியாத ஒரு ஏஜென்ட், ஒரு திரைப்படத்தில் அடிவாங்கும் ஒரு துணை நடிகர் கதாபாத்திரத்தில் அவரை நடிக்கவைத்தார். இன்னொருமுறை பிக்பாக்கெட் திருடன் கதாபாத்திரத்தில் நடிக்கவைத்தார்.  

1975-ம் ஆண்டு உலக சாம்பியனான முகமது அலிக்கும், ஸுக் வெப்னருக்கும் இடையே நடந்த குத்துச்சண்டையை தொலைக்காட்சியில் பார்த்தார் சில்வஸ்டர் ஸ்டாலோன். தொடக்க ரவுண்டுகளில் ஸுக் வெப்னருக்கு மரண அடிகளைக் கொடுத்துத் துவைத்து எடுப்பார் முகமது அலி. ஆனாலும் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், மெல்ல எழுந்திருந்து திரும்ப அடிப்பார் ஸுக் வெப்னர். இருந்தாலும், இறுதியில் வெற்றி பெறுவார் முகமது அலி. 

அடிமேல் அடி, மரண அடிகளை வாங்கினாலும் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், விடாமல் போராடும் ஒரு சாதாரண குத்துச்சண்டை வீரன் கதாபாத்திரத்தை மனதில்வைத்து, ‘ராக்கி’ திரைப்படக் கதையை உருவாக்கினார் சில்வஸ்டர் ஸ்டாலோன். ஒரே நாளில் 20 மணி நேரம் தொடர்ச்சியாக உட்கார்ந்து, ‘ராக்கி’ திரைப் படத்தின் கதை - வசனத்தை முழுமையாக எழுதி முடித்தார்.

‘ராக்கி’ கதை - வசனத்தை எடுத்துக்கொண்டு ஸ்டுடியோ ஏஜென்ட்களையும் இயக்குநர்களையும் சந்தித்தார். இவர் கதையை விவரிக்கத் தொடங்கியதும் ஏஜென்ட்கள் ‘ஆளை விடு’ என்று ஓடத் தொடங்கினர். ‘‘படத்தில் நான்தான் கதாநாயகன்’’ என்று சில்வஸ்டர் ஸ்டாலோன் சொன்னபோது, ‘‘இந்த உருவத்தையும், குரலையும் வைத்துக்கொண்டு இப்படி நீ ஆசைப்படலாமா... இது நியாயமா?’’ என்று கிண்டல் செய்து அவரை விரட்டிவிட்டனர்.

சுமார் 1,500 இயக்குநர்களிடமும், திரைப்பட ஏஜென்ட்களிடமும் சில்வஸ்டர் ஸ்டாலோன், ராக்கி கதையைச் சொன்னார். அத்தனைப் பேரும், ‘‘இந்தக் கதையைப் படமாக எடுத்தால் ஓடாது’’ என்று சொல்லி நிராகரித்துவிட்டார்கள். 

கடைசியாக ஒரு பட நிறுவனம் அவரது கதைக்கு 1,00,000 டாலர் பணம் தர ஒப்புக்கொண்டது. அந்தக் கதையில் கதாநாயகனாகத் தானே நடிக்க விரும்புவதாக சில்வஸ்டர் ஸ்டாலோன் சொன்னபோது... அந்த இயக்குநர், ‘‘அப்படியெல்லாம் பேராசைப்படாதே. உனக்கு கதாநாயகனுக்குரிய எந்தத் தகுதியும் இல்லை’’ என்று கூறிவிட்டார். ‘‘அப்படியென்றால் வேண்டாம்’’ என்று மறுத்துவிட்டார் சில்வஸ்டர் ஸ்டாலோன். ‘‘வேண்டுமானால் 1,25,000 டாலர் தருகிறோம். கதையை மட்டும் கொடு’’ என்று பேரம் பேசினார் இயக்குநர். ‘முடியாது’ என்று மறுத்துவிட்டார் சில்வஸ்டர் ஸ்டாலோன். 

மற்றொரு படத் தயாரிப்பு நிறுவனம் அந்தக் கதைக்கு 2,50,000 டாலர் தரத் தயார் என்றது. ஆனால், அவர் கதாநாயகன் வாய்ப்புக் கேட்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் பேரம் பேசியது. அடுத்து, அதே நிபந்தனையுடன் 3,60,000 டாலர் தரத் தயார் என்று பேரம் பேசியது. சில்வஸ்டர் ஸ்டாலோனின் நண்பர்கள் அதனை ஏற்க வலியுறுத்தினர். ஆனால், உறுதியாக மறுத்துவிட்டார் சில்வஸ்டர் ஸ்டாலோன். 

p18.jpg

சில்வஸ்டர் ஸ்டாலோனின் உறுதியான முடிவை யாருமே மாற்ற முடியாது என்று புரிந்துகொண்ட அந்த நிறுவனம் அவருக்கு 35,000 டாலர் மட்டும் ஊதியம் தருவதாகவும், மீதித் தொகையை படத்தில் அவரது முதலீடாகக் கொள்வதாகவும், அவரே கதாநாயகனாக நடிக்கலாம் என்றும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது.

1976-ம் ஆண்டில், சில்வஸ்டர் ஸ்டாலோனின் வெறித்தனமான ஈடுபாட்டுடன் ‘ராக்கி’ திரைப்படம் 28 நாட்களில் உருவாக்கப்பட்டது. ஒரு மில்லியன் டாலர் செலவில் தயாரான ‘ராக்கி’ திரைப்படம் 225 மில்லியன் டாலர் வசூலை வாரிக் குவித்தது. ஹாலிவுட்டின் சூப்பர் டூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் சில்வஸ்டர் ஸ்டாலோன்.  

சில்வஸ்டர் ஸ்டாலோன், ராக்கி கதாபாத்தி ரத்தின் மூலமாக இளைஞர்களுக்குச் சொன்ன வார்த்தைகள் இவை: ‘‘இந்த உலகம் வசந்தமும், வானவில்லும் நிறைந்தது எனக் கற்பனை செய்துகொள்ளாதே. இது சுயநலமும் அசிங்கமும் நிறைந்த இடம். நீ எவ்வளவு வலிமையானவனாக இருந்தாலும் இந்த உலகம் உன்னைப் பலமாக அடித்துக் கீழே தள்ளும். எத்தனை பலமான அடி வாங்கினாலும், மனம் தளராமல் உன்னால் முன்னோக்கிச் செல்ல முடியுமானால், நீ வெற்றியாளன்.’’

(இன்னும் வெல்வோம்)

vikatan

  • தொடங்கியவர்

#‎WorldPopulationDay‬ ஜூலை 11; உலக மக்கள் தொகை தினம் இன்று

ஆண்டுதோறும் வேகமாக உயரும் மக்கள் தொகையால் ஏற்படும் பாதிப்புகள், அதைக் கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஜூலை 11ம் தேதி, உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

13612352_1174365725955549_71770423315456

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

p37a.jpg

dot1.jpg10 ஆண்டு பிரேக்குக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாகி இருக்கும் சிரஞ்சீவியின் ஸ்டைலிஸ்ட் யார் தெரியுமா? அவரது மூத்த மகள் சுஷ்மிதா. நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷனில் படித்தவரான சுஷ்மிதா, அப்பாவுக்கான காஸ்ட்யூம் களை வடிவமைப்பதில் செம பிஸி. ``அப்பாவுக்கு இப்போது 60 வயது. தமிழ் `கத்தி'யில் 40 வயது விஜய் ஹீரோவாக நடித்தார். என்னுடைய சேலஞ் எல்லாமே விஜய்யைவிட அப்பாவை இளமையாகக் காட்டவேண்டும் என்பது தான்'' என்கிறார் சுஷ்மிதா. ஸ்டைல் அப்பா... ஸ்டைலிஷ் பொண்ணு!


p37b.jpg

dot1.jpg  தமிழ், தெலுங்கு என ஆரம்பித்து, தற்போது நிரந்தரமாக இந்திப் பக்கம் ஒதுங்கி இருக்கிறார் இலியானா. அக்‌ஷய் குமாரின் `ருஸ்டம்' படத்தின் ஹீரோயின் இலியானாதான். 1959-ம் ஆண்டு நடந்த நானாவதி கொலை வழக்கு, இந்தியா முழுவதும் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட வழக்கு. கடற்படை கமாண்டர்  நானாவதியின் மனைவி அஹுஜா, பிரேம் என்பவரைக் காதலித்தார். இதைக் கண்டுபிடித்த நானாவதி, பிரேமைச் சுட்டுக்கொன்றுவிட, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம். ஆனால், இரண்டே ஆண்டுகளில் நானாவதி விடுதலையானார். மிகவும் பரபரப்பைக் கிளப்பிய இந்த வழக்கைத்தான் `ருஸ்டம்' என படமாக்கி இருக்கிறார்கள். கடந்த வாரம் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர், இதுவரை 50 லட்சம் ஹிட்ஸ்களை அள்ளி இருக்கிறது. ட்ரெய்லர் மெர்சல்!


dot1.jpg `நெய்யப்பம், நட்டெல்லா இரண்டும் இல்லை. ஆண்ட்ராய்டு நெளகட்தான் ஃபைனல்' என அறிவித்துவிட்டது கூகுள். `ஆண்ட்ராய்டு வெர்ஷன்களுக்கு இனிப்புகளின் பெயர்களை வைத்துவரும் கூகுள், அடுத்த வெர்ஷனான ஆண்ட்ராய்டு 7-க்கு இந்திய பெயர் வைக்கும் திட்டம் இருக்கு' எனச் சொன்னார் சுந்தர் பிச்சை. அடுத்த மாடலுக்கு `N' எழுத்தில் பெயர் வைக்கலாம் என அறிவித்து, சமூக வலைதளங்களில் போட்டி நடத்தினார்கள். இதனால் N-ல் தொடங்கும்  நெய்யப்பம், நெய் முறுக்கு பெயர்கள் ட்ரெண்டு அடிக்க, இறுதியாக `நெளகட்' பெயரை வைத்திருக்கிறது கூகுள்.  போட்டியில் அதிக வாக்குகள் வாங்கியது நெய்யப்பம்தான், ஆனால், கூகுள் நிறுவனம் போங்கு ஆட்டம் ஆடிவிட்டது என சோஷியல் மீடியாவில் ஸ்டேட்டஸ்கள் பறக்கின்றன. ஸாரி...மல்லூஸ்!


p37c.jpg

dot1.jpg `நெய்மார், மான்செஸ்டர் அணிக்குத் தாவப்போகிறார்' என செய்திகள் முளைக்க, 1,860 கோடி ரூபாய்க்கு 2021-ம் ஆண்டு வரை அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறது பார்சிலோனா.

2013-ம் ஆண்டில் இருந்து பார்சிலோனா அணிக்காக விளையாடிவருகிறார் பிரேசிலின் நெய்மார். இந்த ஒப்பந்தம் 2018-ம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு நெய்மாரை வாங்க இங்கிலாந்தின் மான்செஸ்டர் அணி முயற்சித்தது. இதனால் ஒப்பந்தம் முடிய இரண்டு ஆண்டுகள் இருக்கும் முன்னரே நெய்மாருடன் டீலை முடித்திருக்கிறது பார்சிலோனா. நெய்மார் ராக்ஸ்!


p37d.jpg

dot1.jpg  தீபிகாவின் சாதனையை சமன் செய்திருக்கிறார் ஜோஷ்னா சின்னப்பா. ஸ்குவாஷ் ரேங்கிங்கில் முதல்முறையாக டாப் டென்னில் இடம்பிடித்தவர் தீபிகா பலிக்கல். இப்போது தீபிகா 19-வது ரேங்குக்குச் சரிய, டாப் டென்னுக்குள் நுழைந்திருக்கிறார் ஜோஷ்னா. ``கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக ஸ்குவாஷ் விளையாடிவருகிறேன். டாப் டென்னுக்குள் நுழைய வேண்டும் என்பது பல ஆண்டுக்கனவு. இதற்கு தாமதமாகிவிட்டது. ஆனால், உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஆக, நீண்டகாலம் எடுத்துக்கொள்ள மாட்டேன்'' என்கிறார் ஜோஷ்னா. ஜோஷ்னா சூப்பர்ப்பா!


dot1.jpg புத்தகமாக வெளிவந்து குழந்தைகள் மனதில் இடம்பிடித்த ‘தி பிக் ஃப்ரெண்ட்லி ஜெயன்ட்’தான் ஆஸ்கர் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் அடுத்த படம். ‘`என்னுடைய முதல் புத்தகமாக நான் படித்தது பி.எஃப்.ஜி-தான். அதை இப்போது படமாக்கும்போது நான் குழந்தைப்போலவே மாறிவிட்டேன்’' என்கிறார் ஸ்பீல்பெர்க். அனிமேஷன் பாதி, ஆட்கள் மீதி என எடுக்கப்பட்டிருக்கும் இந்த மெகா பட்ஜெட் ஃபேன்டசி படத்தின் நாயகி ரூபி பார்ன்ஹில். இந்தியில் இவருக்கு குரல் கொடுத்திருப்பவர் பரிணீதி சோப்ரா.  தி பிக் ஃப்ரெண்ட்லி வாய்ஸ்!


dot1.jpg ஹாலிவுட்டின் வசூல் ராஜாக்களுக்கு மத்தியில் மிகப் பெரிய வசூல் ராணியாக உயர்ந்திருக்கிறார் ஸ்கார்லெட் ஜோஹன்சன். வில்ஸ்மித், மேட் டிமோன், லியாம் நீசனுக்கு அடுத்து சென்ற ஆண்டில் தன் படங்களின் மூலம் அதிக வசூலை வாரிக்குவித்திருப்பது ஸ்கார்லெட்தான். கடந்த ஆண்டு மட்டும் அவருடைய படங்கள் சம்பாதித்திருக்கும் தொகை 3.3 பில்லியன் டாலர்கள். பில்லியன் டாலர் பேபி!


p37e.jpg

dot1.jpg ``என் குழந்தைகளை மீடியாவிடம் இருந்து மட்டும் அல்ல, என்னிடம் இருந்தே தள்ளிவைக்க விரும்புகிறேன். முதலில் என் மகனைப் பற்றிய செய்திகள் ஆன்லைனில் பரவின. இப்போது என் 16 வயது மகள் தன் தம்பியுடன் பீச்சில் இருப்பதை, `ஷாரூக் கான் மகள், பிகினி உடையில்'என அருவருப்பான கமென்ட்டுகளுடன் ஆன்லைனில் பரப்புகிறார்கள்.சாதாரண ஒரு விஷயத்தைக்கூட ஏதோ மிகப் பெரிய தவறு செய்துவிட்டதுபோல அவர்களை நினைக்கவைக்கிறார்கள். எனக்கு என் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பயமாக இருக்கிறது'' என வருத்தப்பட்டிருக்கிறார் ஷாரூக் கான். திருந்துங்கப்பா!


dot1.jpg 33 ஆண்டுகால முயற்சிக்குப் பிறகு முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட சக்திவாய்ந்த, எடை குறைந்த `தேஜாஸ்' போர் விமானம் வெற்றிகரமாக விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ளது. 1983-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த விமானத்தை உருவாக்குவதற்கான முயற்சி, இப்போதுதான் முடிந்தது. 560 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் முடியும்போது 13 ஆயிரம் கோடியைத் தாண்டியிருக்கிறது! ப்ரைடு ஆஃப் இந்தியா

vikatan

  • தொடங்கியவர்

தியடோர் மைமன்

 
th_2928409f.jpg
 

தியடோர் மைமன் - லேசரை கண்டறிந்த அமெரிக்க விஞ்ஞானி

லேசரை கண்டறிந்து வெற்றிகரமாக அதை செயல்படுத்திக் காட்டிய அமெரிக்க இயற்பியலாளர் தியடோர் ஹாரோல்டு டெட் மைமன் (Theodore Harold Ted Maiman) பிறந்த தினம் இன்று (ஜூலை 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் (1927) பிறந்தார். இவர் குழந்தையாக இருந்தபோதே குடும் பம் கொலராடோவில் குடியேறியது. சிறுவயதிலேயே அறிவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

* மின்பொறியாளரான தந்தை, வீட்டில் மின்னணு ஆய்வகம் வைத்திருந்தார். மாணவப் பருவத்திலேயே, தந்தை செய்யும் சோதனைகளுக்கு உதவியாக இருந்தார். இந்த அனுபவம் மூலம் மின் கருவிகள், வானொலி ஆகியவற்றைப் பழுதுபார்த்து வருமானம் ஈட்டினார்.

* நேஷனல் யூனியன் ரேடியோ நிறுவனத்தில் 17 வயதில் பொறியாளராக நியமிக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின்போது, கடற்படையில் பணிபுரிந்தார். கொலராடோ பல்கலைக்கழகத்தில் பொறியியல் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

* ஆற்றலால் தூண்டப்பட்ட ஹீலியம் அணுக்களின் நுண்ணலை - ஒளியியல் அளவீடுகள் குறித்த விரிவான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். ஆய்வுக்கூடத்துக்கு தேவையான பல கருவிகளை உருவாக்கினார்.

* கலிபோர்னியா மாநிலம் மலிபு நகரில் உள்ள ஹ்யூஸ் ஆய்வகத்தில் பணிபுரிந்தார். விஞ்ஞானி ரால் அட்சின்சன் மேம்படுத்திய செயற்கை சிவப்பு ரத்தினக் கல் அல்லது கெம்பு படிகத்தைக் கொண்டு கதிர்வீச்சின் தூண்டு உமிழ்வு மூலம் செறிவூட்டப்பட்ட ஒளி என்கிற சீரொளி (லேசர்) கருவியை உருவாக்கினார். அதை 1960-ல் வெற்றிகரமாக இயக்கிக் காட்டினார். இதன் அறிவியல், தொழில்நுட்பத்தை விளக்கி பல கட்டுரைகள் எழுதினார்.

* லேசரை கண்டறிந்தது யார் என்று சர்ச்சைகள் எழுந்தாலும், முதன்முதலில் கண்டறிந்து, செயல்படுத்திக் காட்டியது இவர்தான் என உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து திரவ லேசர், வளி லேசர், வேதியியல் லேசர், அரைகடத்தி லேசர் என பலவகை லேசர்கள் உருவாக்கப்பட்டன.

* ஹ்யூஸ் ஆய்வகத்தில் பணியாற்றிய பிறகு, குவான்டட்ரான் நிறுவனத் தில் இணைந்து லேசர் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டார். தடிமனான இரும்பை அறுப்பது, அலுமினிய குழாய்களை ஒட்டவைப்பது முதற்கொண்டு, கணினி, டிவிடி, அச்சு இயந்திரங்கள், ஸ்கேனர்கள் என பல துறைகளில் லேசர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

* யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு சொந்தமான கொராட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார். மைமன் அசோசியேட்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். மேஸர், லேசர், லேசர் காட்சிகள், ஆப்டிகல் ஸ்கேனிங் என ஏராளமான கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் பெற்றார். ‘லேசர் ஆடிசி’ என்ற நூலை எழுதியுள்ளார்.

* நோபல் பரிசுக்கு 2 முறை பரிந்துரைக்கப்பட்டார். அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு அமைப்புகளின் உறுப்பினராக செயல்பட்டார். ஆலிவர் பக்லி பரிசு, ஜப்பான் பரிசு உள்ளிட்ட பல பரிசுகளைப் பெற்றார். பல பல்கலைக்கழகங்கள் இவரை கவுரவித்து டாக்டர் பட்டம் வழங்கின.

* லேசர் தொழில்நுட்பத்தின் முன்னோடியான தியடோர் மைமன் 80-வது வயதில் (2007) மறைந்தார். மரணத்துக்குப் பிறகு இவருக்கு ‘ஸ்டான்ஃபோர்டு இன்ஜினீயரிங் ஹீரோ’ என்ற பெயரை சூட்டி கவுரவப்படுத்தியது ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

https://media.giphy.com/media/26BRGwluRGg6F8RaM/giphy.gif

எம்புட்டு டென்ஷனா இருந்திருக்காரு பாருங்க.
‪#‎Ronaldo‬

  • தொடங்கியவர்

சுட்டது நெட்டளவு

 
siramam_2927354f.jpg
 

முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய சீப்பு வியாபாரி இருந்தார். தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தார்.

யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்துக்கு சென்று விற்கிறார்களோ அவன்தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தார். மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா? என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர். ஆனால் பிறகு மூவரும் முயற்சி எடுக்க முடிவெடுத்தனர்.

அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கேட்டனர். சில நாட்களுக்கு பிறகு மூவரும் வியாபாரத்தை முடித்து தந்தையிடம் வந்தனர். ஒரு மகன் “நான் இரண்டு சீப்புகளை புத்த மடாலயத்துக்கு விற்றேன்” என்றான்.

வியாபாரி எப்படி என்று கேட்டார்.

அதற்கு அவன், “புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன். இரண்டு புத்த பிக்குகளுக்கு அது சரியென்று பட்டது. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள் வாங்கினார்கள்” என்றான்.

இரண்டாவது மகன், தான் 10 சீப்புகளை விற்றதாக கூறினான்.

எப்படி என்று வியாபாரி கேட்க, “வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள அந்தப் புத்த மடாலயத்துக்கு செல்பவர் களின் தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது. அப்படிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த மடாலயத்தில் சொன்னேன். ஒரு பெரிய கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால் அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்துகொண்டு புத் தரை தரிசிக்க செல்வது நன்றாக இருக்கும் என்று ஆலோசனையும் சொன்னேன். ஒப்புக் கொண்டு 10 சீப்புகளை வாங்கினார்கள்” என்றான்.

வியாபாரி அந்த மகனைப் பாராட்டினார்.

மூன்றாவது மகன், தான் ஆயிரம் சீப்பு களை விற்றதாக கூறினான். வியாபாரியால் நம்பவே முடியவில்லை. எப்படி விற்றாய் என்று கேட்டார்.

“அந்த புத்த மடாலயத்துக்கு ஏராளமானோர் வந்து பொருளுதவி செய்கிறார்கள். அவர்கள் உதவியை மெச்சி புத்தரின் ஆசிகள் அவர்களை வழிநடத்தும் வண்ணம் அவர்களுக்கு ஏதாவது ஒரு நினைவுப் பரிசு வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்று புத்த பிக்குகளிடம் சொன்னேன். மேலும் இது பலரையும் புத்த மடாலயத்துக்கு உதவி செய்யத் தூண்டும் என்றேன். அந்த மடாலயத் தலைவர் என்ன நினைவுப் பரிசு தரலாம் என்று என்னை கேட்டார்.

நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில சீப்புகளை நீட்டினேன். அந்த சீப்புகளை தினமும் உபயோகிக்கும் பக்தர்களுக்கு அந்த உபதேசங்களைத் தினமும் காணும் வாய்ப்பும் கிடைக்கும்.

அந்த உபதேசங்கள் அவர்களைத் தினமும் வழிநடத்துபவையாகவும் இருக்கும் என்று தெரிவித்தேன். அது நல்ல யோசனை என்று நினைத்த மடாலயத் தலைவர் உடனடியாக அப்படி புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம் சீப்புகள் வாங்க ஒப்புக் கொண்டார்” என்றான்

அந்த வியாபாரி மூன்றாவது மகனைப் பாராட்டி அவனிடம் வியாபாரத்தை ஒப்படைத்தார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

வெயிட்டான ஆளு!

 

p57a.jpg

ங்களுக்கெல்லாம் ஹல்க் தெரியுமா பாஸ்? அதான் பச்சை கலரில் படா சைஸ் உடம்போடு அரை டவுசர் போட்டுக்கொண்டு திரியுமே, அந்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரம்தான். இப்போ ஏன் இதைச் சொல்றேன்னா, ஈரான் நாட்டில் உண்மையிலேயே ‘ஹல்க்’ சைஸில் ‘பல்க்’கா ஒருத்தர் சிக்கியிருக்காப்டி. அவர்தான் சஜாத் காரிபி.

p57b.jpg

p57c.jpg

24 வயதே ஆன பளுதூக்கும் வீரர். பார்ப்பதற்கு முழு ஆட்டை முழுசாக முழுங்குவது போல் இருக்கும் இவரின் எடை 155 கிலோ. ஆத்தி! தனது சட்டையைக் கழட்டிப்போட்டு இன்ஸ்டாகிராமில் சில போட்டோக்களை எடுத்துப்போட ‘யாருய்யா இவரு?’ என உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் மிரள, உலக வைரல் ஆகிவிட்டார். இவருக்கு ‘பெர்சியன் ஹெர்குலஸ்’, ‘ஈரானியன் ஹல்க்’ எனப் பட்டப்பெயர்களை வேறு நெட்டிசன்கள் சூட்ட காரிபி செம பிரபலமாக ஆகிவிட்டார். இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சம் பேர் இவரை ஃபாலோ செய்கிறார்கள். அநேகமாக, இன்னும் சில நாட்களில் இவரை ஏதேனும் தெலுங்குப் படத்தில் க்ளைமாக்ஸில் ஹீரோவோடு சண்டை போடும் அடியாள் வேடத்தில் பார்க்கலாம் என நினைக்கிறேன்!

vikatan

  • தொடங்கியவர்

கதறி அழும் பிரான்ஸ் ரசிகரை தேற்றிய போர்த்துக்கல் குட்டி ரசிகன் (வீடியோ இணைப்பு)

 

பிரான்ஸ் ரசிகர் கதறி அழுதார். இதை பார்த்துக் கொண்டிருந்த போர்த்துக்கல் இளம் ரசிகன் ஒருவன் பிரான்ஸ் ரசிகரின் கண்ணீரை துடைத்து விட்டு, அவருக்கு ஆறுதல் கூறினான்.

  • தொடங்கியவர்

காலை உணவு தயாரிக்கும் இயந்திரம்

 
sunday_2924774f.jpg
 

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் காலையில் உணவு தயாரிப்பது ஒரு போரான வேலை என அலுத்துக்கொள்ளும் நபரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி.

காலை நேர உணவு தயாரிப்பதற்கான ஓர் இயந்திரத்தை இங்கிலாந்தில் பீட்டர் ப்ரௌன் என்னும் மெக்கானிகல் இன்ஜினீயரும், மெர்வின் ஹக்கெட் என்னும் விமான ஓட்டியும் கண்டுபிடித்திருக்கிறார்கள். இருவருமே ஓய்வுபெற்றவர்கள். எனவே சுவாரசியமான ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற ஆசையில் இருந்திருக்கிறார்கள். எனவே இந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி, முட்டை உணவு, ப்ரெட் டோஸ்ட், டீ, காபி போன்ற உணவு வகைகளைத் தயாரித்துக்கொள்ளலாம். இந்த இயந்திரத்தை மூன்று மாத காலங்களில் சுமார் 1,000 மணி நேரத்தைச் செலவழித்து உருவாக்கியிருக்கிறார்கள். காலையில் எழுந்து சமையல் வேலை பார்க்க விரும்பாத தனி ஆள்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சுவிட்சை ஆன் செய்து விட்டு காலைக்கடன்களை முடித்துவிட்டு வருவதற்கு முன்னர் காலை நேர உணவு தயாராகிவிடும். வந்த உடன் சுடச்சுடச் சாப்பிட்டுக்கொள்ளலாம். இந்த இயந்திரத்தின் வீடியோவைக் காண:

 

tamil.thehindu

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஜுன் - 12

 

1543 : இங்­கி­லாந்து மன்னன் 8 ஆம் ஹென்றி தனது 6 ஆவது மனைவி கத்­த­ரினை திரு­மணம் செய்தார்.

 

1799 : லாகூரை வெற்­றி­கொண்ட ரஞ்சித் சிங் பஞ்சாப் மகா ராஜா­வானார்.

 

766pune.jpg1812 : பிரித்­தா­னிய ஆட்­சியின் கீழ் இருந்த கனடா மீது அமெ­ரிக்கா படை­யெ­டுத்­தது.

 

1918 : ஜப்­பா­னிய கடற்­படை கப்­ப­லான கவாச்­சி, மூழ்­கி­யதால் 621 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1920 : லித்­து­வே­னி­யாவின் சுதந்­தி­ரத்தை அங்­கீ­க­ரிக்கும் வகையில் சோவியத் யூனி­யன், லித்­து­வே­னியா நாடு­க­ளுக்­கி­டையில் உடன்­ப­டிக்கை கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

 

1932 : இங்­கி­லாந்தின் நோட்­டின்­காம்­ஷயர் அணி­யு­ட­னான போட்­டியில் யோர்­க்ஷயர் வீரர் ஹெட்லி வெரைட்­டி, 10 ஓட்­டங்­களை மாத்­திரம் கொடுத்து 10 விக்­கெட்­டு­களை வீழ்த்­தினார்.

 

1948 : ரம்லா மற்றும் லோத் நக­ரங்­க­ளி­லி­ருந்து பலஸ்­தீ­னர்­களை வெளி­யேற்­று­மாறு இஸ்­ரே­லிய பிர­தமர் டேவிட் பென் குரியன் உத்­த­ர­விட்டார்.

 

1961 : இரு அணைக்­கட்­டுகள் உடைந்­ததால் இந்­தி­யாவின் புனே நக­ரத்தின் அரைப்­ப­குதி வெள்­ளத்தில் மூழ்­கி­யது. சுமார் 2000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1979 : பிரிட்­ட­னி­ட­மி­ருந்து கிரி­பாட்டி சுதந்­திரம் பெற்­றது.

 

1990 : சோவியத் கம்­யூனிஸ்ட் கட்­சி­யி­லி­ருந்து பொரிஸ் யெல்ட்சின் வில­கி­யதால் கட்­சிக்குள் பிளவு ஏற்பட்டது.

 

2012 : நைஜீரியாவில் எரிபொருள் தாங்கி  வாகனமொன்று விபத்துக்குள்ளானதால் சுமார் 100 பேர் உயிரிழந்தனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜூலை 12: பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடிய மலாலா பிறந்த தினம் இன்று

பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள மிங்கோரா நகரின் பள்ளியில் இருந்து மாணவிகள் வீட்டுக்குத் திரும்பப் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது ஓர் ஆசாமி வந்து, ''உங்களில்
யார் மலாலா?' என்று கேட்டான். மலாலாவைக் காட்டினார்கள். அதை நம்பாமல், மலாலாவோடு சேர்த்து உடன் இருந்த இரு மாணவிகளையும் சுட்டுவிட்டுத் தப்பிவிட்டான். நெற்றியிலும் கழுத்திலும்
தோட்டாவைச் சுமந்த மலாலா சரிந்து விழுந்தாள்.

14 வயது மலாலா யூசுப்சாய் சுடப்படக் காரணம், பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடியதும், ஸ்வாட் பள்ளத்தாக்கில் தாலிபான் பயங்கரவாதிகளின் வெறிச் செயல்களைக் கண்டித்ததும்தான்.
இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் எழுப்பின.

'ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு தெருவிலும், கிராமத்திலும், நாட்டிலும் அமைதி நிலவ வேண்டும் - இது என் கனவு. உலகில் உள்ள ஒவ்வொரு சிறுவனுக்கும் சிறுமிக்கும் கல்வி அவசியம். பள்ளியில்
தோழிகளுடன் உட்கார்ந்து பாடங்களைப் படிப்பது என்னுடைய உரிமை. மனிதகுலத்தில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியின் புன்னகையோடு இருப்பதைப் பார்க்க வேண்டும் என்பது எனது விருப்பம்.' என்று
தனது விருப்பத்தை 'நான் மலாலா’ நூலில் பதிந்திருக்கிறார்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, முதல் பாகிஸ்தானியப் பெண்; முதல் பாஷ்டூன்; மிக இளையவள் என்ற பெருமைகள் மலாலாவுக்கு உண்டு. அவர் பெற்றிருக்கும் சர்வதேச விருதுகளின் பட்டியல் மிக நீளம்.

13606628_1175013722557416_31399340143446

  • தொடங்கியவர்
377,000 ரூபா செலவில் நாய்களுக்கு ஆடம்பர திருமணம்
 

17917dog2.jpgபிரிட்­டனைச் சேர்ந்த பெண்ணொருவர்  தனது நாய்­க­ளுக்கு சுமார் 377,000 ரூபா செலவில் திரு­மணம் நடத்தி வைத்­துள்ளார்.


எல்விஸ் மற்றும் பெல்லா எனும் இரு நாய்­க­ளுக்கே இவ்­வாறு ஆடம்­பர திரு­மணம் நடத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.

 

இந் ­நாய்­களின் உரி­மை­யா­ள­ரான அல்மா பெடி­லியா கூறு­கையில், இவ்­விரு நாய்­களும் இணைந்து வாழ வேண்டும் என விதி உள்­ள­தாக நான் உணர்ந்­து­கொண்ட பின்னர், அவற்­றுக்குத் திரு­மணம் செய்­து­வைப்­ப­தற்கு நான் தீர்­மா­னித்தேன்” எனக் கூறினார்.

 


“எனது திரு­மணம் எளி­மை­யான முறையில் நடை­பெற்­றது. என்னால் அனு­ப­விக்க முடி­யாமல் போன கோலா­க­ல­மான திரு­மண வைப­வத்தை எனது நாய்கள் அனு­ப­விக்க வேண்டும் என நான் விரும்­பினேன்” எனவும் 41 வய­தான அல்மா பெடி­லியா கூறினார்.

 

மன்­செஸ்டர் நக­ரி­லுள்ள நாய்கள் இல்­ல­மொன்றில் கடந்த 2 ஆம் திகதி நடை­பெற்ற இத் ­தி­ரு­மண வைப­வத்­துக்கு விசேட கேக் மற்றும் ஆடைகள் தயா­ரிக்­கப்­பட்­டன.

 

17917_dog-1.jpg

 

திரு­மண “மண்­ட­பமும்” கோலா­க­ல­மாக அலங்­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. இதற்­காக 2000 ஸ்ரேலிங் பவுண்­களை (சுமார் 377,000 ரூபா) அல்மா பெடி­லியா செல­விட்­டுள்ளார்.

 

இத்­ தி­ரு­ம­ணத்­துக்கு முன்னரே, மேற்படி இரு நாய்களும் இணைந்து நாய்க் குட்டிகளை ஈன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p106d.jpg

Whatsapp:

``நீங்க புக்ஸ், யூனிஃபார்ம், ஷூ, சாக்ஸ், பெல்ட், எல்லாமே இங்கே ஸ்கூல்லதான் வாங்கணும்!''

``படிப்பு?''

``அதுக்கு வெளியே டியூஷன் வெச்சுக்கங்க!''

Whatsapp:

வாடிக்கையாளர்: சார், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒண்ணு எடுக்கணும். ஆனால், தலையில் இருந்து செருப்பு வரை தெரியணும்... முடியுமா?
கடைக்காரர்: இதெல்லாம் சப்பை மேட்டர். உன்னோட செருப்பை தலையில வெச்சிட்டு நில்லு. சூப்பரா எடுத்திடலாம்!

twitter.com/ksnagarajan: Whatsapp-ன் தமிழாக்கம் `இன்றென்ன புரளி?'

twitter.com/teakkadai:  மனைவியின் டீன் ஏஜ் புகைப்படம் கணவனுக்குக் கிளுகிளுப்பையும், கணவனின் படம் மனைவிக்கு எரிச்சலையும் தரவல்லது!

twitter.com/oviyachaaral: அது ஏன் யாராச்சும் சறுக்கிக் கீழே விழுந்தா, உடனே பரிதாபம் வராம, டக்குன்னு சிரிப்புப் பொத்துட்டு வருது நமக்கெல்லாம்?

twitter.com/manipmp: வாய்ப்பு கிடைச்சவன் டி.வி-யில் பேசுவான்.கிடைக்காதவன், பேசுறவன் பக்கத்துல இருந்து தலையாட்டுவான்!

twitter.com/teakkadai: ஒரு வாட்ஸ்அப் குரூப்பைக் கலைக்க, அதில் ஒரு எம்.எல்.எம் ஆசாமியைக் கோத்துவிட்டால் போதும்!

twitter.com/kanavey: பெண்கள் மீதான குற்றங்களைக் குறைக்க, தேவை ஆன்மிகக் கல்வி - ராமகோபாலன்  # துள்ளியெழுந்து உக்காரும் ஸ்மைலி by நித்தியானந்தா!

twitter.com/yugarajesh2:  `பேய், பூதம், பூச்சாண்டி' வரிசையில் இந்த அம்மாக்கள் ஸ்கூல் மிஸ்ஸையும் சேர்த்துட்டாங்க

#ஒழுங்கா சாப்பிடுறியா... இல்ல மிஸ்கிட்ட பிடிச்சுத்தரவா!

p106c.jpg

twitter.com/vigneshvicky341:  நாட்டுல விலைவாசி எல்லாம் கன்னாபின்னான்னு ஏறியிருக்கு. அநியாயம் ஒரு சாப்பாடு 120 ரூபா. சாப்பிட்ட எனக்கே இப்படி இருக்கே... பில் கொடுத்தவன் மனசு என்ன பாடுபடும்?

twitter.com/kiramaththan: பின் என்றோ ஒருநாளில், `அதெல்லாம் ஒரு பொற்காலம்' எனச் சொல்லப்போகும் இந்நாளை வெகு சாதாரணமாகக் கடந்து கொண்டிருக்கிறேன்! :(

twitter.com/Ulaganandha:  மஹேந்திரா காலேஜ் விளம்பரத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் மாடல். காப்பி அடிக்க வெச்சாவது பாஸ் பண்ணிவிட்ருவானுக!

twitter.com/kanandchris:  உருது மொழிதான் வலம் இருந்து இடமாகப் படிக்க முடியுமாம். அட போங்க பாஸ்... ஹோட்டல் மெனு கார்டு எல்லாமே நான் அப்படித்தான் படிக்கிறேன்!

twitter.com/sundartsp:  சம்பாதிப்பதற்குப் படிக்கிறோம். கொஞ்ச நாள் கழிச்சு, பசங்க படிக்கிறதுக்குச் சம்பாதிக்க ஆரம்பிச்சுடுறோம்!

twitter.com/Thameem06:  சரக்கடிச்சிட்டுத் தெளிவாப் பேசுறதா நினைப்பதுதான் போதையின் தொடக்கம்!

p106a.jpg

twitter.com/iKappal:  குழந்தையைத் தூங்கவைக்கிறது இருக்கே... கை வலிக்க அரை மணி நேரம் தொட்டிலை ஆட்டி முடிச்ச பிறகு உள்ளே பார்த்தா, `நீ யார்றா கோமாளி?'னு பார்க்கும்!

twitter.com/BoopatyMurugesh:  பக்கத்து வீட்டுக்காரன் ஷூவைத் தரையில தட்றான்... உள்ளே பூச்சி இருக்குமாம். அதுக்குத்தான்டா சாக்ஸையும் உள்ளேயே வைக்கணும். பாம்பே போனாலும் செத்துரும்!

facebook.com/santhosh.narayanan.319:

p106e.jpg

நைஜீரியா எண்ணெய்த் தொழிற்சாலையில் வேலைசெய்யும் நண்பருடன் நேற்று பேசிக்கொண்டிருந்தேன். உலகம் எங்கும் கடலின் நடுவில் செயல்படும் இந்த எண்ணெய்த் தொழிற்சாலைகளின் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்த போது, பிரமாண்ட உலோக டைனோசர்கள் கடல் நடுவில் நிற்கின்றன எனத் தோன்றியது. கடலுக்குச் சம்பந்தம் இல்லாத ஏதோ அந்நிய மிருகங்கள். அதை அப்படியே ஒரு மிக்ஸ்டு மீடியா ஆர்ட்டாக ட்ரை பண்ணினேன்!

p106b.jpg

facebook.com/mani.pmp.5:

இடது கையில் வைத்து போன் பேசும்போது வலது கை ஏதாவது உருப்படியான ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்.

facebook.com/altappu.vinoth:

ஒரு நாளைக்கு 30 நிமிஷம்தான் நியூஸ்னு இருந்தவரைக்கும் நாட்டுல எல்லாம் நல்லவிதமாத்தான் நடந்திட்டிருந்தது.

vikatan

  • தொடங்கியவர்

மரமாகும் பேனா...கேரளாவில் அதிசயம் நிகழ்த்திய லக்ஷ்மி மேனன்! #WhereIsMyGreenWorld

pentree6002.jpg

ம் அன்றாட வாழ்வில் நாம் அடிக்கடி பார்க்கும் பொருட்கள் என்னவெல்லாம் இருக்கும் என ஒரு பட்டியல் போட்டால், மொபைல் ஃபோன்,  பேக், பர்ஸ், பேனா, வாகனங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். இந்த வரிசையில் பேனாவிற்கு எந்த இடம்...? உண்மையில் நாம் அதிகளவில் பார்ப்பதும், பயன்படுத்துவதும் பேனாவைதான். குறிப்பாக Use and throw வகை பால் பாய்ன்ட் பேனா.

வாகனங்கள், பிளாஸ்டிக் குப்பைகள், கெமிக்கல்கள் என பல வழிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது எனக் கூறுகிறோம். ஆனால், பால்பாய்ன்ட் பேனா இதில் முக்கிய இடம் வகிப்பதை நாம் யாரும் கண்டுகொள்வதில்லை. இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம் இது.

ஆம், ஆனால், பிளாஸ்டிக் குப்பைகளில் பைகளுக்கு அடுத்ததாக அதிகமாகக் காணப்படுவது இந்த பேனாக்கள்தான்.

ஒரு பேனா தொலைந்தாலோ, மூடி தொலைந்தாலோ நாம் மாற்றுவது பேனாவைத்தான். ரீஃபில் பேனாக்கள் என்றாலும், மை தீர்ந்ததும் யாரும் ரீஃபில் வாங்க ஓடுவதில்லை. மாறாகப் புதியதாக பேனாவை வாங்கி பாக்கெட்டில் செருகிக்கொள்கிறோம். இதனால் எவ்வளவு பேனாக்கள் குப்பைகளில் சேர்கின்றன என நாம் சற்று யோசித்துப் பார்த்தால் தெரியும்.

pentree6001.jpg

 

நாம் சிந்திக்காத இந்த சிறு விஷயத்தை,கேரளாவைச் சேர்ந்த லக்ஷ்மி மேனன் சிந்தித்துள்ளார். சுற்றுச் சூழலைப் பேணுவதற்கு, பலவித முயற்சிகளை எடுத்து வரும் இவர், டிசைனராக உள்ளார். கேரளாவில் Pure Living எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் நோக்கம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நிலையான வாழ்க்கையை அமைத்து தருவதுதான்.

லக்ஷ்மி, தன்னுடைய டிசைனிங் அறிவையும், சுற்றுச்சூழல் மீதான காதலையும் இணைத்து, பழைய காகிதங்களில் இருந்து பேனா தயாரித்துள்ளார். இந்த பேனாக்களின் அடிப்பகுதியில் ஒரு விதை வைக்கப்பட்டிருக்கும். நாம் உபயோகித்துவிட்டு அப்பேனாவை தூக்கி வீசியெறிந்தாலும் அது ஒரு மரமாக வளரும். நாம் பேனாவைத் தொலைத்தாலும் கவலை இல்லை, அது ஒரு மரக்கன்றாக மாறியிருக்கும்.

இந்த பேனாவிற்கு அவர் வைத்துள்ள பெயர் 'Entree'. அதாவது இயற்கைக்கு பாதிப்பில்லாத, வாழ்க்கைக்கு நாம் entry தருவதைக் குறிப்பதாகும். செய்தித்தாள்களை உபயோகிக்காமல், அச்சகத்தில் உள்ள காகிதக் குப்பைகளைப் பெற்று இவரே தயாரித்த ஒரு இயந்திரத்தில் விட்டு இறுக்கமாக சுழற்றி, பிளாஸ்டிக் பேனாவின் தன்மைக்குக் கொண்டு வருகிறார்.

pentreeright.jpgஇந்த பேனாக்களில் உள்ள விதை அகஸ்தியா எனும் ஒரு வகை மரத்தின் விதை. இந்த மரம் Humming bird எனவும் அழைக்கப்படுகிறது. இது மருத்துவ குணமுள்ள ஒருவகை மரம்.

இந்த பேனாவின் விலை, ரூ.12. ஆனால், சாதாரண பால்பாய்ன்ட் பேனாவின் விலை ரூ.5 தான். ஆனால், இந்த பேனாவில் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் சாதாரண பேனாவில் இருப்பதைவிட ஐந்தில் ஒரு பங்காகும். முழுமையாக பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியவில்லை.

காரணம், ரீஃபில் பிளாஸ்டிக்காகத்தான் இருக்க வேண்டியுள்ளது. சிலர் விரும்பிக் கேட்டால், மெட்டல் வைத்து ரீஃபில் தயாரித்துக் கொடுக்கிறார்.
சுற்றுச்சூழல் மேம்பாட்டின் அடுத்தகட்டமாக இனி பள்ளிகள், கல்லூரிகளில் விழிப்பு உணர்வு முகாம் நடத்த திட்டமிட்டிருக்கிறார்.

இவரது இந்த பேனாவால் 3 பயன்கள்...

1. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கலாம்
2. அரிய வகை மரத்தை வளர்க்கலாம்
3. பெண்கள் இத்தொழிலை செய்யலாம்.

சுற்றுச்சூழல் வேறு, நாம் வேறு இல்லை. அதைப் புரிந்துகொண்டவர்கள் நிச்சயமாக இந்த பேனாவைப் பயன்படுத்த தவற மாட்டார்கள்.

vikatan

  • தொடங்கியவர்

வீட்டையும், வேலையையும் தக்கவைத்துக்கொண்ட லேரி பூனை

 

லேரி பூனை தனது வேலையைத் தக்கவைத்துக் கொள்ளவிருக்கிறது. தனது வீட்டையும்தான் !

160712140420_larry_the_cat_640x360_getty

 லேரி பூனை

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் புதன் கிழமையன்று டௌனிங் தெருவில் இருந்து வெளியேறும்போது லேரியையும் வெளியேற்ற வேண்டாம் என்று முடிவாகியுள்ளது.

2011ல் டௌனிங் தெருவில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு வந்த லேரி ஒரு பிரபலமான முகம்.

கேமரனுக்கு பதிலாக தெரெசா மே, பிரதமராகி, அந்த இல்லத்திற்கு வரும் போது, ''சீப் மௌசர்' (chief mouser)என்று அறியப்படும்' அந்த பூனை அங்கேயே இருக்கும்.

 

160412201430_larry_downing_street_cat_62

 டென் டௌனிங் தெரு இல்லத்தில் லேரி

''இந்த பூனை ஒரு அரசு ஊழியரின் பூனை. கேமரன் குடும்பத்திற்கு சொந்தமானது அல்ல. இங்கேயே அந்த பூனை இருக்கும்,'' என்று அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியின் போது டௌனிங் இல்லத்தில் முன்பக்க கதவு வழியாக ஒரு பெரிய கருப்பு எலி வேகமாக ஓடியதை அடுத்து, லண்டனின் பேட்டர்சீ என்ற பூனை மற்றும் நாய்களுக்கான இல்லத்தில் இருந்து 2011ல் எலிப் பிரச்னையை சமாளிக்கும் வேலை செய்ய இந்த பூனை கொண்டுவரப்பட்டது.

110215211514_3.jpg

 

இந்த பூனை ''தீவிரமாக வேட்டையாடும் உந்துதிறன்' கொண்டது- மேலும் எலி பொம்மைகளோடு விளையாடுவதில் அலாதியான விருப்பம் இருந்ததால் லேரி இந்த வேலைக்கு ஏற்றவர் என்று கருதப்பட்டது.

லேரி அதற்கு முன் 10 டௌனிங் வீதியிலிருந்த பல பூனைகளின் கால்தடத்தை அடுத்து அங்கு பணியில் உள்ளது.

 

110215211525_7.jpg

ஹம்ப்ரி என்ற பூனை 1989ல் மார்கரெட் தாட்சர் பிரதமராக இருந்த போது 10 டௌனிங் தெருவுக்குள் தற்செயலாக நுழைந்தபோது அது தத்தெடுக்கப்பட்டது. அது தான் முதன் முதலாக பணியில் அமர்த்தப்பட்ட பூனையாகும். ஹம்ப்ரி பூனை 1997ல் பணி ஓய்வு பெற்றது.

கேமரன் பேசும்போது, ''லேரியை தனது புது இல்லத்திற்கு வரவேற்க மகிழ்ச்சியோடு'' இருப்பதாகவும், லேரி ''டௌனிங் தெரு இல்லத்தில் ஒரு நல்ல மேலதிக உறுப்பினராக இருப்பார் , அங்கு வருவோர்களைக் கவருவார்” என்று தான் நம்புவதாக தெரிவித்தார்.

BBC

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.