Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 05
 

article_1438750765-Action300.jpg1940: லத்வியாவை சோவியத் யூனியன் தன்னுடன் இணைத்துககொண்டது.

1949: ஈக்குவடோரில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 6000 இற்கும் அதிகமானோர் பலி.

1962: தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டார் 28 வருடங்களின் பின்னரே அவர் விடுதலை செய்யப்பட்டார்.

1963: அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன் ஆகியன அணுவாயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1979: ஆப்கானித்தானில் மாவோயிஸ்டுகள் இராணுவப் புரட்சி ஒன்றை முன்னெடுத்தனர்.

1989: நிக்கராகுவாவில் இடம்பெற்ற பொடுத்தேர்தல்களில் சண்டினீஸ்டா வெற்றி பெற்றது.

2003: இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் மரியட் உணவு விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12பேர் கொல்லப்பட்டு 150பேர் காயமடைந்தனர்.

2006: வறுமைக்கு எதிரான அமைப்பின் (Action Fiam) என்ற அரச சார்பற்ற அமைப்பின் 15 பணியாளர்கள் மூதூரில் (ஓகஸ்ட் 4 நள்ளிரவில்) இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

13920212_1095207150527978_75269529451867

இளைஞர் இதயம் கவர்ந்த குதூகல நடிகை ஜெனீலியாவின் பிறந்தநாள் இன்று..
Happy Birthday Genelia D'Souza

  • தொடங்கியவர்

சம்பளத்தைத் தாண்டி, இந்த 3 காரணங்களுக்காகவும் வேலை செய்யுங்கள்! #DailyMotivation

SALARY_SURVEY_SPLASH_3.jpg

ஓவ்வொரு நாளும் நாம் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை நாம் விருப்பத்துக்கும், இலக்குகளுக்கும் ஏற்றவாறு வேலை செய்கிறோம். என்னதான் மாதச் சம்பளம் என்ற ஒரு விஷயம் இருந்தாலும் சில விஷயங்கள் நம்மை சிறப்பாக வேலை செய்ய தூண்டும். அது நம் அலுவலக சூழல் என்பது துவங்கி ஆர்வம், தேவை என பல விஷயங்களை பொருத்து அமைகிறது. ஆனால் இந்த மூன்று காரணங்களுக்காக நீங்கள் வேலை செய்வது சம்பளம், பதவி என்பதைத் தாண்டி உங்களுக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரும்.

1. நீங்கள் கற்றுக் கொள்வது உங்களுக்காக!

அலுவலகத்தில் நீங்கள் கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு மணி நேரமும் உங்களுக்கு நல்ல அனுபவத்தையும், இங்கு கற்கும் விஷயங்கள் அலுவலக இலக்குகளுக்காக மட்டுமல்ல, நீங்கள் கற்றது கண்டிப்பாக உங்கள் வளர்ச்சிக்கும் உதவும் என்ற திறந்த மனதோடு கற்றுக் கொள்ளுங்கள். வயது குறைந்த நபர் எனக்கு பாடம் எடுக்கிறார், இவருக்கு வயதாகிவிட்டது நான் சொல்வது புரியவில்லை என்று நினைக்காமல் எல்லாரிடம் இருந்தும் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் கற்றுக் கொள்வது உங்களுக்காகத் தான். இது உங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். அதிகம் கற்றுக்கொள்ளுங்கள்.

2. நம்பிக்கையை அதிகப்படுத்துங்கள்!

நீங்கள் ஒரே வேலையைச் செய்கிறீர்கள், சம்பளம் மட்டும் மாறுகிறது வேலை அதே வேலை தான் என நினைக்காமல், நீங்கள் செய்யும் வேலைகளை முன்பை விட புதிய உத்திகள், வேகத்தோடு அணுகுங்கள். அந்த வேலையில் நிபுணத்துவம் பெறுங்கள். உங்களுக்கு அது நற்பெயரைக் கொடுக்கும். அந்த நற்பெயர் உங்களது பதவி உயர்வு, சம்பளம் ஆகியவற்றில் தானாகவே தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கெல்லாம் உங்களால் அந்த வேலையை கூடுதல் நிபுணத்துவத்துடன் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை அதிகரியுங்கள்.

meet1.jpg

3. இன்ஃப்ளுயன்ஸ் செய்யுங்கள்!

உங்களது வேலையைத் தாண்டி உங்களது குணத்தைச் சிறப்பாக வெளிப்படுத்துங்கள். அருகில் இருப்பவர்களை இன்ஃப்ளுயன்ஸ் செய்யுங்கள். இது வேலையும் செயல்திறனையும், தனிப்பட்ட முறையில் தலைமைப் பண்பையும் வளர்க்கும். அணியில் சில தவறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டால் நீங்கள் சொல்லும் போது அதனை ஏற்றுக் கொள்ளும் சூழலும், நீங்கள் தவறு செய்யும் போது உங்களிடம் தயக்கமின்றி கூறி அதனை திருத்தவும் அணியினருக்கு இந்த செயல்கள்  உத்வேகத்தை தரும். எப்போதும் அதிகம் இன்ஃப்ளூயன்ஸ் செய்யும் நபராக இருக்க பழகிக் கொள்ளுங்கள். சரியான கொள்கைகளில் நிலையாக இருங்கள்.

இந்த மூன்று காரணங்களை நீங்கள் அலுவலக சூழலில் எளிதில் கற்க முடியும். பணம், இலக்கு, பதவி உயர்வு என்பதைத் தாண்டி இந்த மூன்று காரணங்களுக்காக வேலை செய்யுங்கள். இந்த மூன்றால் மகிழ்ச்சி, உங்களைத் தானாகத் தேடி வரும்.

vikatan

  • தொடங்கியவர்
50 வயதுக்கு மேற்பட்டோருக்கான நீச்சலுடைப் போட்டிகள்
 

50 வய­துக்கு மேற்­பட்­டோ­ருக்­கான நீச்­ச­லுடைப் போட்­டிகள் சீனாவின் தியான்ஜினில் அண்­மையில் நடை­பெற்­றன.

 

1502.jpg

 

1503.jpg

 

150_4.jpg

 

சீனாவின் சிரேஷ்ட பிர­ஜை­க­ளுக்­கான குழுவும் முதி­யோ­ருக்­கான ஹெடோங் மன்­றமும் இணைந்து ஏற்­பாடு செய்த இப்­ போட்­டி­களில் 500 இற்கும் அதி­க­மான பெண்கள் பங்­கு­பற்­றினர்.

 

150_6.jpg

 

150_8.jpg

 

150_7.jpg

 

150_10.jpg

 

150_1.jpg

 

150_11.jpg

 

150_12.jpg

 

150_9.jpg

 

150_5.jpg

 

80 வய­தான பெண்­ணொ­ரு­வரும் இப் ­போட்­டி­களில் பங்குபற்றி யமை குறிப்பிடத்தக்கது.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13909178_1095207960527897_81558310643083

விண்வெளியில் பறந்து சந்திர மண்ணில் கால் பதித்த முதல் மனிதர் என்ற சாதனை படைத்த அமெரிக்க விண்வெளிவீரர் அமரர் நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் பிறந்த நாள் இன்று.
Neil Armstrong

நீல் ஆம்ஸ்ட்ராங்

கோப்புப் படம்: ஏபி
கோப்புப் படம்: ஏபி

நீல் ஆம்ஸ்ட்ராங் - நிலாவில் முதலில் இறங்கிய விண்வெளி வீரர்

நிலாவில் முதல்முறையாக தரையிறங்கிய அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் ஒஹியோ மாநிலம் வாபகெனெட்டா நகரில் (1930) பிறந்தார். முழுப் பெயர் நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங். தந்தை ஆடிட்டர். 6 வயதில் முதன்முதலாக தந்தையுடன் விமானத்தில் பறந்தார். விமானம் ஓட்டும் ஆசை இவருக்கு அப்போதே துளிர்விட்டது.

விமான ஓட்டுநர் உரிமம் பெற்றபோது இவருக்கு வயது 16. பள்ளிப்படிப்பை முடித்ததும், அமெரிக்க கடற்படையின் உதவித்தொகை பெற்று பர்டியூ பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிகல் பொறியியலில் சேர்ந்தார். நடுவில், கொரியப் போரில் அமெரிக்க கடற்படையின் ஜெட் விமான பைலட்டாகப் பணியாற்ற அழைப்பு வந்தது.

* கடற்படையில் 1952 வரை பணியாற்றிய பிறகு, மீண்டும் படிப்பைத் தொடர்ந்து, பட்டம் பெற்றார். தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

* நேஷனல் அட்வைஸரி கமிட்டி ஃபார் ஏரோநாட்டிக்ஸ் அமைப்பின் (தற்போதைய நாசா) விண்வெளித் திட்டத்தில் 1962-ல் இணைந்தார். அங்கு டெஸ்ட் பைலட், பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். அந்த அமைப்பின் கமாண்ட் பைலட்டாகவும் பணியாற்றினார். பல அதிவேக விமானங்களைச் சோதனை செய்தார்.

* மைக்கேல் காலின்ஸ், எட்வர்ட் ஆல்ட்ரின் ஆகியோருடன் 1969-ல் நிலாவில் இறங்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டார். அப்போலோ-11 விண்கலத்தின் கமாண்டராக நியமிக்கப்பட்டார். அதன் குழுத் தலைவராக விண்வெளிக்குச் சென்றார். 1969 ஜூலை 20-ம் தேதி நிலாவில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்தார்.

* நிலாவில் தரையிறங்கிய முதல் மனிதர் என்ற பெருமை பெற்றார். இவரைத் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து எட்வின் ஆல்ட்ரின் இறங்கினார். இருவரும் இணைந்து பல்வேறு சோதனைகளில் ஈடு பட்டனர். அங்குள்ள பாறைத் துகள்களை சேகரித்தனர். தங்களது காலடித் தடங்கள் உட்பட பல புகைப்படங்களை எடுத்தனர்.

* அமெரிக்க தேசியக் கொடியை பறக்கவிட்டனர். இருவரும் சுமார் இரண்டரை மணி நேரம் நிலாவில் கழித்தனர். உலகப் புகழ்பெற்ற இந்த நிகழ்வுக்குப் பிறகு அமெரிக்காவில் ஹீரோவாகப் புகழப்பட்டார்.

* சார்லட்ஸ்வில் நகரில் உள்ள கம்ப்யூட்டிங் டெக்னாலஜிஸ் ஃபார் ஏவியேஷன் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றினார். நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் நிர்வாகியாக 1971 வரை பணியாற்றினார். சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் பொறியியல் பேராசிரியராக 8 ஆண்டுகள் பணியாற்றினார்.

* உலகம் முழுவதும் 17 நாடுகள் இவருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தன. ஏராளமான பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பிரசிடென்ட் மெடல் ஆஃப் ஃப்ரீடம், அமெரிக்க நாடாளுமன்ற தங்கப் பதக்கம், ஸ்பேஸ் கவுரவப் பதக்கம், சிறந்த பணிக்கான நாசா விருது உட்பட பல பரிசுகள், விருதுகள் பெற்றுள்ளார்.

* இவரது வாழ்க்கை வரலாற்று நூலான ‘ஃபர்ஸ்ட் மேன்: த லைஃப் ஆஃப் நீல் ஏ.ஆம்ஸ்ட்ராங்’ 2005-ல் வெளிவந்தது. வானியல் ஆராய்ச்சிகளில் வாழ்நாள் இறுதிவரை ஆர்வம் கொண்டிருந்த நீல் ஆம்ஸ்ட்ராங் 2012 ஆகஸ்ட் 25-ம் தேதி 82-வது வயதில் காலமானார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்
 

ஷாக்கிங் ஸ்பெஷல் - பூமிக்கு அடியில்...

 

மது காலுக்குக் கீழே எண்ணற்ற விந்தைகள் ஒளிந்திருக்கின்றன. அதுக்காகக் குனிஞ்சு காலைத் தூக்கிட்டுத் தரையைப் பார்க்காதீங்க பாஸ். நாம வாழுற பூமிக்குக் கீழே நம்பவே முடியாத ஆயிரம் ஆச்சரியமான விஷயங்கள் இருக்கு. இதுவரை மர்மமாகவே இருக்கும் சில விஷயங்கள் இவை...

எடின்பர்க் குகை:

p126.jpg

ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரத்தின் ஒருபகுதியில் தரைக்கு அடியில் ஒரு குகை 1990-ல் கண்டுபிடிக்கப்பட்டது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தோண்டப்பட்டதாகக் கருதப்படும் அந்தக் குகை யாருக்கும் தெரியாத இடம் என்பதால், கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்த பொருட்களைப் பதுக்கி வைக்கும் இடமாகவும், கொலைக்குற்றவாளிகள் தப்பித்து ஒளிந்துகொள்ளவும் பயன்படுத்தி வந்ததாக பின்னாட்களில் நம்பப்பட்டது. அங்கே இறந்தவர்களின் ஆவி சுற்றித் திரிவதாக பீதி கிளம்பியதையடுத்து பி.பி.சி சேனல் ஒரு சீரியல் தயாரித்தது. அதில் நடித்த நடிகர் ஜோ-ஸ்வாஷ் இரவில் தங்கியிருந்தபோது வித்தியாசமான குரல்கள் கேட்டதாகவும், ஆனால் அங்கே யாருமில்லை எனவும் தெரிவித்தார். தான் அந்தக் குரலை ரெக்கார்ட் செய்தால் பதிவாகவில்லை என அதிர்ச்சி அணுகுண்டையும் கொளுத்திப்போட அந்தக் குகையின் மீதான பயம் அதிகரித்தது. அவர் பதிவு செய்த புகைப்படத்தில் அவருக்குப் பின்னால் இன்னொரு உருவம் நிற்பதைப்போல் தெரிந்ததைப் பார்த்து அலறிப் பேய்கள் இருப்பதைத் தான் நம்புவதாக அறிவித்தார். அவர் சொன்னதை நம்பி இன்னும் மர்மத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் பலர். தேடினா கிடைக்காதது எதுவும் இல்லை. தேடுங்க தேடுங்க!


பாரீஸ் அடிநிலவறை:

p126b.jpg

ஃப்ரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சுரங்கம் ஒன்று இருக்கிறது. அந்தச் சுரங்கத்திற்குள் மனித மண்டை ஓடுகளும், எலும்புகளும் வரிசையாக மதில் சுவரைப்போல் அடுக்கப்பட்டிருக்கிறது. ஆறு மில்லியன் மனிதர்களின் எலும்புகள் அங்கே பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றன. அவை ஏன் அப்படி வைக்கப்படுகின்றன? எப்போதிலிருந்து இந்தப் பழக்கம் தொடங்கியிருக்கிறது? என்பதற்கான தெளிவான பதில்கள் இதுவரை கிடைக்கவில்லை. உலகில் இதுவரை ஆறு மில்லியன் மனிதர்கள் மொத்தமாக அழிவைச் சந்தித்ததில்லை என்பதால், இவை வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்து இறந்துபோனவர்களாகவோ, அல்லது திட்டமிட்டுப் பல ஆண்டுகளாகக் கொலை செய்யப்பட்டவர்களின் எலும்புகளாகவோ இருக்கலாம் எனவும் சந்தேகம் நிலவிவருகிறது. மண்டை ஓடுகளின் மர்மமுடிச்சு இதுவரை அவிழ்க்கப்படாமலேயே இருக்கிறது.


டோகட் சுரங்கப் பாதை:

p126c.jpg

துருக்கியில் உள்ள டோகட் எனும் நகரத்தின் பாதுகாப்பு அரணாக ஒரு மலை இருக்கிறது. அந்த மலைக்குள் ஒரு ரகசியப் பாதை இருக்கிறதாம். பதினைந்தாம் நூற்றாண்டில் அந்த ரகசியப் பாதைக்குள் டிராகுலாக்களை சிறைப்பிடித்து வைத்திருந்தார்கள் என்று நம்பப்படுகிறது. பல வருடங்களாக இந்தச் சுரங்கப்பாதையின் முடிவுப் பகுதியைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.  இன்னும் கிடைத்தபாடில்லை. அதை எட்டினால் மட்டுமே இந்தச் சுரங்கத்தின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முடியும். என்ன அவசரம்... மெதுவா மெதுவா...


ஷின் -ஆ-அவ்:

p126d.jpg

கலிஃபோர்னியாவில் அமைந்திருக்கும் ஷின் ஆ அவ், ‘மரணப் பள்ளத்தாக்கு’ என அழைக்கப்படுகிறது. பூமிக்கு அடியில் முடிவில்லாமல் போய்க் கொண்டேயிருக்கும் பாதையில் சென்றவர்கள் திரும்பி வருவதே இல்லை. வளைவுநெளிவான பாதையில் வழி தவறிவிடுகிறார்கள் எனவும் சொல்லிக்கொள்கிறார்கள். இங்கே பயமுறுத்தும் வகையிலான பதப்படுத்தப்பட்ட மனித உடல்கள் (மம்மி) இருப்பதாக நம்பப்படுகிறது. ஆ... அவ்... அவ்வ்வ்..!

vikatan

  • தொடங்கியவர்

13669508_1095206330528060_49203716781117

ஹிந்தியின் மிகப் பிரபலமான நடிகை & தயாரிப்பாளர் கஜோலின் பிறந்தநாள் இன்று.
தமிழிலும் இன்னும் இவரது மின்சாரக் கனவு நினைவுகள் மின்னலிடுகின்றன.
இப்போது தொலைக்காட்சி விளம்பரங்களில் கலக்கி வரும் அழகான அம்மா.
Happy Birthday Kajol Devgan

 
  • தொடங்கியவர்
 

தோற்றவர்களின் கதை - 17

சுசி திருஞானம்தொடர்

 

p30.jpg

தாமஸ் ஆல்வா எடிசன்

லகின் நம்பர் ஒன் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் படிக்காத மேதை! பிரமாண்டமான கண்டுபிடிப்புத் தொழிற்சாலையை உருவாக்கி, புதிய நுட்பங்களைக் கண்டுபிடிப்பதையே வெற்றிகரமான தொழிலாக நடத்திவந்த வித்தியாசமான விஞ்ஞானி. மின்சார பல்ப் முதல் சினிமா வரை அவர் உருவாக்கிய கண்டுபிடிப்புகள், மனித வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கி உள்ளன.

பள்ளியில் இருந்து ஆசிரியரால் துரத்தப்பட்டது முதல், தனது வாழ்க்கை முழுவதும் ஏராளமான தோல்விகளைச் சந்தித்தவர் எடிசன்.

‘‘வெற்றிகளைப்போலவே தோல்விகளும் மதிப்புக்குரியவை. எதுவெல்லாம் உபயோகமற்றது என்று தெரிந்துகொண்டால்தான் உபயோகமானதைக் கண்டறிய முடியும்’’ என்பது அந்த மேதையின் வாக்கு.

அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் 1847-ம் ஆண்டு பிறந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். தந்தை சாமுவேல், கனடாவிலிருந்து துரத்தப்பட்டு எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். தாய் நான்சி. எடிசன், பள்ளிக்குப் படிக்கப்போனது மொத்தத்தில் மூன்றே மூன்று மாதங்கள் மட்டுமே. எடிசனின் பள்ளி ஆசிரியர், ‘‘எடிசனுக்குக் கவனிக்கும் ஆற்றல் சுத்தமாகக் கிடையாது. எடிசன், பள்ளிப் படிப்புக்கு லாயக்கில்லாதவர்’’ என்று குற்றம்சாட்டினார். கோபமுற்ற எடிசனின் தாய், எடிசனைப் பள்ளியிலிருந்து கூட்டிவந்துவிட்டார். எழுதவும், படிக்கவும், கணிதப் பாடத்திலும் எடிசனுக்குத் தானே பயிற்சி அளித்தார்.  ‘‘நீ அபாரமான புத்திசாலி. எதிர்காலத்தில் எல்லோரும் பாராட்டும் புகழ்பெற்ற மேதையாகத் திகழ்வாய்’’ என்ற தன்னம்பிக்கை விதைகளை எடிசனிடம் அவர் விதைத்தார். சுயமான அறிவுத் தேடல்மிக்க சிறுவனாக எடிசன் வளர்ந்தார்.

p30a.jpg

சொந்தக் காலில் நிற்க விரும்பிய எடிசன், 13 வயதில் ரயிலில் செய்தித்தாள் மற்றும் மிட்டாய் விற்கும் வேலையில் சேர்ந்தார்.  பையில் எப்போதும் இயந்திர மாதிரிகளையும் ரசாயனக் கலவைகளையும் வைத்திருந்தார். ஒருமுறை, ரயிலின் ஓர் ஓரத்தில் ரசாயனக் கலவை கொட்டித் தீப்பிடித்துவிட்டது. பாதுகாவலர், எடிசனின் கன்னத்தில் அறைந்தார். ஏற்கெனவே காய்ச்சலால் அவரது காது மந்தமாகி இருந்தது. இந்தச் சம்பவத்துக்குப் பின், அவரது இடது காதில் 100 சதவிகிதம் கேட்கும் திறன் போய்விட்டது. வலது காதில் 20 சதவிகிதம் மட்டுமே கேட்கும் திறன் இருந்தது. ஆனால், இந்தக் குறைபாட்டை எடிசன் ஒருபோதும் தடங்கலாகக் கருதியதில்லை. மாறாக, தனது ஆராய்ச்சிகளிலிருந்து கவனம் சிதறாமல் மனதை ஒன்றுகுவிக்க முடிவதற்கு இந்தக் குறைபாடே காரணம் என்று பெருமிதமாக அவர் நினைத்தார்.

ஒருமுறை ரயிலில் அடிபட இருந்த, ஸ்டேஷன் மாஸ்டரின் மூன்று வயதுக் குழந்தையை ஓடிச்சென்று எடிசன் காப்பாற்றினார். இதைப் பார்த்த ஸ்டேஷன் மாஸ்டர், எடிசனுக்கு தந்தி இயந்திரத்தின் நுட்பங்களைக் கற்றுக்கொடுத்து, தந்தி ஆபரேட்டர் வேலை போட்டுக் கொடுத்தார். ரயில் நிலைய அலுவலகத்திலும் பகுதி நேர ஆராய்ச்சிகளைச் செய்துகொண்டிருந்தார் எடிசன். ஒருமுறை அமிலம் கீழே கொட்டியதில் ஸ்டேஷன் மாஸ்டரின் சில ஆவணங்கள் எரிந்து பொசுங்கிவிட்டன. கோபமுற்ற ஸ்டேஷன் மாஸ்டர் எடிசனை வேலையிலிருந்து துரத்திவிட்டார்.

p30b.jpg

கையில் காசு கிடையாது. பெற்றோரிடமும் கேட்க முடியாது. எடிசனுக்கு மிகவும் இக்கட்டான நிலை. மற்றொரு மூத்த தந்தி ஆபரேட்டர் லியோனார்டு போப், எடிசனுக்கு ஆதரவளித்தார். அவரது நியூ ஜெர்சி வீட்டில் தங்கியபடி, எடிசன் தனது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.

அமெரிக்க காங்கிரஸில் வாக்கெடுப்புகளுக்கு அதிக நேரம் பிடிப்பதைக் கவனித்த எடிசன், வாக்கு எண்ணும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து காங்கிரஸில் விற்றுவிடலாம் என்று திட்டமிட்டார். இரவு பகலாக உழைத்து, 1869-ம் ஆண்டில் எலெக்ட்ரோ கிராபிக் வாக்கு எண்ணும் இயந்திரத்தை உருவாக்கி அதற்கான காப்புரிமையையும் வாங்கிவிட்டார். அதனை எடுத்துச் சென்று காங்கிரஸ் உறுப்பினர்களிடம் பெருமிதத்துடன் காட்டினார். அந்த அரசியல்வாதிகள், அதனைப் பொருட்படுத்தவே இல்லை. ‘‘தம்பி உனது இயந்திரத்தைக் கொண்டுவந்து வைத்தால், இங்கே எல்லாமே 5 நிமிடங்களில் முடிந்துபோகும். நாங்கள் எப்படி அரசியல் பேசுவது?’’ என்று அவரைத் திருப்பி அனுப்பிவிட்டனர். தனது முதல் கண்டுபிடிப்பு, வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தோல்வியில் முடிந்தது குறித்து மிகுந்த வேதனைப்பட்டார் எடிசன்.

தன்னைத்தானே தேற்றிக்கொண்ட எடிசன், தனக்கு ஆதரவளித்த லியோனார்டு போப் உதவியுடன் பங்குச்சந்தை விலைக் குறியீடு அச்சிடும் இயந்திரத்தை உருவாக்கினார். அது, பங்குச்சந்தை ஏஜென்ட்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஒரே நேரத்தில் நான்கு வகை தகவல்களை எடுத்துச்செல்லும் நான்கு ஒயர் தந்தி முறையைக் கண்டுபிடித்தார். தந்தி நிறுவனங்கள், எடிசன் எதிர்பார்த்ததைவிட அதிக விலை கொடுத்து அதனை வாங்கின.

கண்டுபிடிப்புகளுக்காகவே நியூயார்க் அருகே தனியே ஒரு பெரிய ஆராய்ச்சிக்கூடத்தை உருவாக்கினார் எடிசன். உலகின் முதலாவது தொழில் முறை ஆராய்ச்சிக்கூடம் அது. அங்கே 8 ஆயிரம் வகையான ரசாயனங்கள் இருந்தன. விதவிதமான ஊசிகள், ஆணிகள், பொறியியல் உபகரணங்கள், விலங்குகளின் கொம்புகள், லாடங்கள், பறவை சிறகுகள், பாசிகள், சிப்பிகள் அனைத்தும் அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 1877-ல் ஒலியைப் பதிவுசெய்யும் போனோகிராப் ரெக்கார்டுகளை அவர் கண்டுபிடித்தபோது அதற்கு மிகப் பெரிய வரவேற்பு. அமெரிக்க காங்கிரஸில் அவருக்குப் பாராட்டு மழை. மிக விரைவில் உலகப் புகழ்பெற்றார்.

எலெக்ட்ரிக் பேனா, போனோகிராப் ரெக்கார்டுகள் மூலமாகப் பேசும் பொம்மைகள் என விதவிதமான கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். பல கண்டுபிடிப்புகள் தோல்வியில் முடிந்தாலும் அதனை ஓர் அனுபவப் பாடம் என்று நேர்மறையாக எடுத்துக்கொண்டார்.  

p30c.jpg

நீடித்து நின்று எரியும் மின்சார பல்ப் கண்டுபிடிப்பதில் தனது கவனத்தை எல்லாம் ஒன்றுகுவித்தார். நின்று ஒளிர்வதற்காக, பிளாட்டினம் உள்ளிட்ட எத்தனையோ விதமான இழைகளை முயன்று பார்த்து, கடைசியாக கார்பன் இழைகள் பொருத்தமானவை என்று கண்டுபிடித்தார். 1880-ம் ஆண்டில் அதற்கான காப்புரிமை பெற்றார். மின்சார விளக்கை, விலை மலிவானதாக்குவதே தனது நோக்கம் என அறிவித்தார். ஜே.பி.மார்கன் உள்ளிட்ட பெரும் கோடீஸ்வரர்கள், எடிசன் எலெக்ட்ரிக் பல்ப் தொழிற்சாலை அமைக்க நிதி வழங்க முன்வந்தனர். அவர்களின் நிதி உதவியுடன் ‘எடிசன் எலெக்ட்ரிக் கம்பெனி’யைத் தொடங்கினார் எடிசன்.

எரிவாயு விளக்குகள் கோலோச்சிவந்த காலகட்டம் மறைந்து, மின்சார விளக்குகளின் காலம் தொடங்கிவிட்டதால், மின் விநியோக அமைப்புகளைக் கண்டுபிடிப்பதிலும் நிர்மாணிப்பதிலும் கவனம் செலுத்தினார் எடிசன். அப்போது டி.சி வகை மின்சாரமா... ஏ.சி வகை மின்சாரமா - எது சிறந்தது என்ற சர்ச்சை உருவாகியிருந்தது. டி.சி வகை மின்சாரமே ஆபத்து இல்லாதது என்று எடிசன் தரப்பு வாதிட்டது. ஏ.சி வகை மின்சாரம் விலைமலிவானது, நீண்டதூரம் விநியோகிக்க ஏற்றது என்று எதிர்தரப்பு வாதிட்டது. ஏ.சி வகை மின்சார நிறுவனங்களின் லாபம் அதிகரித்து, எடிசன் கம்பெனியின் லாபம் குறையவே, முதலீட்டாளர்கள் போர்க்கொடி தூக்கினர். முடிவில் எடிசன், அவர் தொடங்கிய கம்பெனியிலிருந்தே வெளியேற்றப்பட்டார். சாதனையிலும் சோதனை. அதே கம்பெனிதான் ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனியாக பின்னர் உருமாறியது. கலங்கவில்லை எடிசன். பிற கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தினார். 1891-ம் ஆண்டில் கைனெட்டோஸ்கோப் என்று அழைக்கப்பட்ட திரைப்பட கேமராவை கண்டுபிடித்தார். ப்ரொஜெக்டோஸ்கோப் என்ற திரைப்பட ப்ரொஜெக்டரையும் கண்டுபிடித்தார். எடிசன் ப்ரொஜெக்டர்கள் மிகவும் பிரபலமாகின. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிறைய தியேட்டர்களில் அவை நிறுவப்பட்டன. எடிசன் திரைப்பட ஸ்டுடியோ தொடங்கப்பட்டு அதன்மூலமாக 1,200 படங்கள் தயாரிக்கப்பட்டன.

அமெரிக்காவில் வளரும் மரங்களில் இருந்து ரப்பர் தயாரிப்பதற்காக ஒரு தாவரவியல் ஆய்வுப் பண்ணையை உருவாக்கினார் எடிசன். 10 ஆயிரம் தோல்விகளுக்குப் பின்னர், கடைசியாக கோல்டன்ராட் வகை தாவரத்திலிருந்து ரப்பர் தயாரிக்கும் முறையை அவர் கண்டுபிடித்தார். இதைப் பற்றிய ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும்போது, ‘‘நான் 10 ஆயிரம் முறை தோற்றதாகக் கூறுவது தவறு. பயன்தராத 10 ஆயிரம் வழிமுறைகளை நான் வெற்றிகரமாகக் கண்டுபிடித்தேன்’’ என்று அவர் சொன்னார். 

p30d.jpg

தனது கடைசி நாட்கள் வரையிலும், அதிதீவிர கண்டுபிடிப்பாளராகவும், கண்டுபிடிப்புகளைத் தூண்டும் அறிவியலாளராகவும் அவர் விளங்கினார். தாமஸ் பைன் என்ற பகுத்தறிவாளர் எழுதிய ‘தி ஏஜ் ஆஃப் ரீஸன்’ என்ற நூலை 12 வயதில் வாசித்து எழுச்சிப்பெற்ற எடிசன், தனது வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவாளராகவே இருந்தார். ‘‘எல்லா மதங்களும் போலியானவை. எல்லாப் புனித நூல்களும் மனிதனால் எழுதப்பட்டவை’’ என்று எடிசன் பேசியபோது பெரும் அதிர்வுகள் ஏற்பட்டன. ஸ்பானிஷ் அமெரிக்கப் போரில் வெற்றி பெற்றதற்காக நன்றிசொல்லும் பிரார்த்தனைக் கூட்டத்தை அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி நடத்தியபோது, ‘‘அதே கடவுள்தான் அமெரிக்காவுக்கு மஞ்சள் காய்ச்சலையும் கொடுத்திருக்கிறார். நமது ஜனாதிபதி அதற்காகவும் கடவுளுக்கு நன்றி சொல்வாரா?’’ என்று கேட்டார் எடிசன்.

கண்டுபிடிப்புகளின் நாயகனான எடிசனிடம், தோல்விக்கும் வெற்றிக்குமான காரணங்கள் பற்றிக் கேட்டபோது தயங்காமல் சொன்னார்: ‘‘நமது மிகப் பெரிய பலவீனமே முயற்சிகளைக் கைவிடுவதுதான். நிறையப் பேர், வெற்றிக்கு அருகில் வந்துவிட்டதை அறியாமல் தமது முயற்சியைக் கைவிட்டுவிட்டு, தோல்வியடைந்ததாக நொந்துகொள்கிறார்கள். இலக்கை நோக்கிய பயணத்தில், மீண்டும் ஒரே ஒருமுறை முயற்சித்துப் பாப்பதுதான் வெற்றிக்கான சூத்திரம்.”

(இன்னும் வெல்வோம்)

vikatan

  • தொடங்கியவர்

செடிகளுக்கும் இருக்கே விருப்புவெறுப்பு!

 
plant_2957177f.jpg
 

விருப்பு வெறுப்பு எல்லாம் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் மட்டும்தான் சொந்தம் என்றுதானே நினைக்கிறீர்கள். ஆனால், அதுதான் இல்லை! தாவரங்களிடமும்கூட விருப்பு வெறுப்பு உண்டு. அதற்குச் சில தாவரங்களை உதாரணமாகச் சொல்கிறார்கள் தாவரவியலாளர்கள்.

உதாரணத்துக்கு வெள்ளைப் பூண்டுச் செடிக்கு அருகில் ரோஜா செடி நட்டு வளர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா? ரோஜாச் செடி நன்றாக வளர்வதுடன், அதன் பூக்களும் பெரிதாகவும் நல்ல வாசனையுடனும் இருக்கும். பூண்டுச் செடிக்குப் பக்கத்தில் உள்ள ரோஜா செடியைப் பூச்சிகளும் தாக்குவதில்லை. இதற்கு என்ன காரணம் என்றுதானே யோசிக்கிறீர்கள்?

அதாவது, வெள்ளைப் பூண்டுச் செடியின் வேர்களிலிருந்து சுரக்கும் ஒரு வகை நீரை, பக்கத்தில் உள்ள ரோஜாச் செடியின் வேர்கள் உறிஞ்சிக்கொள்கின்றன. இதனால்தான் ரோஜாச் செடிக்கு அதிக பலமும் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது. இதன் காரணமாகப் பூண்டும் ரோஜாவும் நேசம் கொள்கின்றன.

பூண்டும் ரோஜாவும் இப்படியென்றால், முட்டைக்கோஸும் பீன்ஸும் நேர்மாறாக உள்ளன. இவை இரண்டும் வேறு உணர்ச்சிகளைக் காண்பிக்கின்றன. வெள்ளைப் பூண்டுக்கு அருகே இச்செடிகளை நட்டால், இவற்றின் வளர்ச்சி தடைபட்டு நலிந்துவிடுகின்றன.

ரூ என்றொரு செடி உள்ளது. இதனை வீடுகளில் ஜன்னல் பக்கம் வளர்த்தால் ஈக்கள் உள்படச் சில பூச்சிகள் வீட்டுக்குள் நுழையாது. ஆனால், இந்தச் செடிக்கும் மற்றச் செடிகளுக்கும் அவ்வளவாக ஒத்துப்போகாது. மற்ற தாவரங்களை வெறுக்கும் இந்தச் செடிக்கு, அத்தியை மட்டும் ரொம்பப் பிடிக்குமாம். இந்தச் செடியின் பக்கத்தில் அத்தியை வளர்த்தால் அது நன்றாக வளர்ந்துவிடும்.

இப்படிச் சில செடிகளுக்கு விருப்புவெறுப்பு இருந்தாலும், அதற்கான முழுமையான காரணத்தை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லையாம்!

tamil.thehindu

  • தொடங்கியவர்

Jaffna Boy, நாயுடன் வோக்கிங்

 

Jaffna Boyயை வீட்டில் உள்ளவர்கள் மாடு மாதிரி என்று இப்போது அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்... அந்த அளவுக்கு Jaffna Boyயின் உடம்பு பெருத்துவிட்டது. தினமும் சற்று தூரம் நடந்துவிட்டு வந்தால் உடம்பு கொஞ்சமாவது குறையும் என  அவரது ஆன்டி யோசனை சொல்கிறார்.

Jaffna Boy, நாயுடன் சுதந்திர சதுக்கத்துக்கு நடந்து செல்கிறார். பெண்கள் மட்டும் எப்படி அவ்வளவு மெலிவாக இருக்கிறார்கள் என்ற யோசனையுடன் வீடு செல்கிறார். கொழும்பு தன்னை நன்றாக குண்டாகிவிட்டது என்று எப்போதும் Jaffna Boy  கவலைப்படுவதுண்டு.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பாரம்பர்ய டிரெஸ்... பராக் பராக்!

 

p57a.jpg

ந்தியாவின் பாரம்பர்ய உடை புடவை, சல்வார். இதுபோல, உலக நாடுகளில் பெண்கள் உடுத்தும் பாரம்பர்ய உடைகளை ஒரு லுக் பார்க்கலாமா?!

ஆ டை (Ao Dai)

‘என்னது... ஆடையை ரெண்டா பிரிச்சு ‘ஆ டை’னு போட்டிருக்காங்களே..?’னு பாக்குறீங்களா? அதுதான் அந்த உடைக்குப் பேரு. இது வியட்நாம் நாட்டோட பாரம்பர்ய உடைகள்ல ஒண்ணு. ‘ஆ’ என்றால் மேற்புறம் அணிகிற உடை, ‘டை’ என்றால் நீளம். பார்க்க நம்ம ஊரு பலாஸோ சல்வார் மாதிரி இருக்குற `ஆ டை', கால்கள் வரை நீண்டிருக்கு. வியட்நாம் நாட்டு புத்தாண்டின்போது, பெண்கள் எல்லோரும் `ஆ டை' உடுத்துறதை வழக்கமா வெச்சுருக்காங்க. இதன் ஆரம்ப விலை, ரூ ` 1,300.

பாஜூ குருங் (Baju Kurung)

p57b.jpg

மலாய் மக்களோட பாரம்பர்ய ஆடையான பாஜூ குருங், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா நாட்டுப் பெண்களால உடுத்தப்படுது. மேற்புறம் கமீஸ் மற்றும் கீழே லாங் ஸ்கர்ட்... இதுதான் பாஜூ குருங்கின் வடிவமைப்பு. 19-ம்  நூற்றாண்டைச் சேர்ந்த ஜோஹர் மன்னர் அபு பக்கரால் பிரபலப்படுத்தப்பட்ட இந்த உடை, சில இடங்களில் இஸ்லாம் பெண்களின் திருமண உடையாகவும் இருக்கு. இந்தியா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகள்ல தயாரிக்கப்படுற பட்டுத் துணியில நெய்யப்படும் ஆடை இது. ரம்ஜான் மாதத்துல பெண்கள் அதிகமா அணிகிற ஆடையான பாஜூ குருங்கின் ஆரம்ப விலை,  ரூ `  1,000.

சியோங்ஸாம் (Cheongsam)

p57c.jpg

பேரைக் கேட்டாலே சீன நாட்டு உடைனு புரியுற சியோங்ஸாம், சீனப் பெண்களின் உடையிலேயே மிகவும் அழகானது. சிவப்பு, பிங்க், நீலம், வெள்ளை போன்ற நிறங்கள்ல தயாரிக்கப்படுற சியோங்ஸாமோட ஆங்கிலப் பேர், ‘மேண்டரின் கவுன்’. கால் வரை நீளமான கவுன், காலத்துக்கு ஏற்றமாதிரி மாற்றம் செய்யப்பட்டு ஷார்ட் கவுன் ஆகிடுச்சு. ஆனாலும், திருமணம், விழாக்களின்போது பாரம்பர்ய சியோங்ஸாம்தான் உடுத்தப்படுது. ஹாங்காங்ல சில பள்ளிகள்ல யூனிஃபார்மே இந்த உடைதான். சீனாவின் சில்க் மெட்டீரியல்ல வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சியோங்ஸாமின் ஆரம்ப விலை,  ரூ `  5000.

ட்ரிண்டில் (Dirndl)

p57d.jpg

ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற நாடுகள்ல உடுத்தப்படுற பாரம்பர்ய ஆடை, ட்ரிண்டில். இது ஒரு ஃபோர் பீஸ் உடை. தெற்கு ஜெர்மனி பகுதியில, `ட்ரிண்டில்'னா இளம்பெண்னு அர்த்தமாம். வெயில் காலத்துல காட்டன் மெட்டீரியல்ல தயாரிக்கப்படுற ட்ரிண்டில், குளிர் காலத்துல லினன், வெல்வெட், கம்பளி போன்ற மெட்டீரியல்கள்ல முழு கையோட தயாரிக்கப்படுது. பார்க்க சிம்பிளா இருக்கும் ட்ரிண்டில், கைகளாலேயே பிரின்ட் செய்யப்பட்ட பட்டுத்துணி கொண்டு டிசைன் செய்யப்படுறதால, இதோட ஆரம்ப விலை, ரூ  `  10,000.

ட்ரஜெ டி ஃப்ளெமெங்கா (Traje de Flamenca)

p57e.jpg

உச்சரிக்கவே கஷ்டமா இருக்கிற ட்ரஜெ டி ஃப்ளெமெங்கா, ஸ்பெயின் நாட்டின் பாரம்பர்ய உடை. முக்கிய விழாக்களின்போது அணியப்படுற இந்த உடை, ஸ்பெயின்ல இருக்கிற ஆண்டலூசியா என்ற பகுதியில மிகவும் பிரபலம். இந்த உடை, டான்ஸர்களுக்கு வசதியா இறுக்கம் குறைவாவும், மற்ற பெண்களுக்கு இறுக்கமாவும் இரு வேறு வகையில தயாரிக்கப்படுது. கை மற்றும் கால் பகுதிகள்ல இருக்கிற மிகப்பெரிய மடிப்புகள்தான் இந்த உடையோட ஸ்பெஷல். இதுக்கு ஷாலும் அணிந்துகொள்ளலாம். இந்த ஆடையின் ஆரம்ப விலை,  ரூ `  15,000 – 20,000.

vikatan

  • தொடங்கியவர்

’ஒலிம்பிக்’ களத்தில் சில திரைப்படங்கள்

 

 
meari_2960066f.jpg
 

எங்கும் ஒலிம்பிக் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. வெற்றி தோல்விக்கிடையே அல்லாடும் பல மனிதர்களின் வாழ்வை ஒலிம்பிக்கின் பின்னணியில் பார்க்க முடியும். உலகமெங்குமிருந்தும் கலவையான மனிதர்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் விளையாட்டுக் களம் உயிரோட்டமான பல கதைகளின் களமாகவும் உள்ளது. அப்படியான கதைகளின் அடிப்படையில் உருவான சில ரசனையான திரைப்படங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஒலிம்பியா (1938)

olmpiya_2960067a.jpg

ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் பெர்லின் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி (1936) Olympia: Festival of Nations மற்றும் Olympia: Festival of Beauty என 2 பாகங்களில் ஆவணத் திரைப்படமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. நடிப்பு, ஒளிப்பதிவு, தயாரிப்பு, நடனம், எடிட்டிங் எனப் பன்முகத்திறமை கொண்ட லெனி ரைஃபென்ஸ்தால் (Leni Riefenstahl) என்ற பெண் இயக்குநரின் ஆக்கத்தில் இப்படங்கள், அதன் தொழில்நுட்ப உத்திகளுக்காக இன்றளவும் பேசப்படுகின்றன.

டோக்யோ ஒலிம்பியாட் (Tokyo Olympiad 1965)

tokiyo_2960068a.jpg

நாஜி ஆட்சிக்கால ஜெர்மனி தன்னை உலகப் பார்வையில் நல்லவிதமாகக் காட்டிக்கொள்ள ஆவணமாக்கிய ‘ஒலிம்பியா’ போல, இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஜப்பான் மேற்கொண்ட முனைப்பே ‘டோக்யோ ஒலிம்பியாட்’ திரைப்படம். டோக்யோவில் (1964) நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் தொடக்கவிழா முதல், நிறைவு விழா வரையிலான நிகழ்வுகளைத் திரைப்படமாக பதிவுசெய்தார்கள். ஒலிம்பியா போல டோக்யோ ஒலிம்பியாடும் இன்னமும் பேசப்பட அதன் ஆவண உத்தியே காரணம்.

சாரியட்ஸ் ஆஃப் ஃபயர் (chariots of Fire 1981)

fiar_2960069a.jpg

1924-ல் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற பிரிட்டன் குழுவில் யூதரான ஹரால்ட் ஆப்ரஹம் மற்றும் கிறிஸ்துவரான எரிக் லிடல் என்ற 2 தடகள வீரர்கள் தயாராகிறார்கள். மதம் மற்றும் இன ரீதியான இடைஞ்சல்கள், பயிற்சியின்போதும் ஒலிம்பிக் களத்திலும் முளைத்த தடைகள்… இவற்றைத் தாண்டி இருவரும் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தார்கள். இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரான இத்திரைப்படம், சிறந்த படம், திரைக்கதை, உடையலங்காரம் மற்றும் இசை என 4 ஆஸ்கர் விருதுகள் உட்பட 18 சர்வதேசத் திரைப்பட விருதுகளை வாங்கிக் குவித்தது. 2012-ல் லண்டன் ஒலிம்பிக்கை முன்னிட்டு, நவீனத் தொழில்நுட்பங்களுடன் இங்கிலாந்தில் இத்திரைப்படம் மீண்டும் வெளியானது.

ரன்னிங் பிரேவ் (Running Brave 1983)

runnaing_2960070a.jpg

அமெரிக்க இந்தியராகப் பிறந்து அந்நாட்டுக்காக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பில்லி மில்ஸின் கதையே ரன்னிவ் பிரேவ் திரைப்படம். வறிய குடும்பம், தாய் தந்தையை இழந்து அநாதையானது ஆகியவற்றைவிட, அமெரிக்க இந்தியராகத் தனக்கான அடையாளத் தேடலே பில்லி மில்ஸை ஓடவைத்தது. குத்துச்சண்டை, கால்பந்து என தனக்கு பயிற்றுவிக்கப்பட்டதைத் தவிர்த்துவிட்டு மில்ஸ் ஓட ஆரம்பித்ததற்கு இதுவே காரணம். இனவெறிப் பாகுபாடுகளைக் கடந்து அமெரிக்க ஒலிம்பிக் அணியில் இடம்பிடித்த மில்ஸ், ஒருவழியாய் டோக்யோ ஒலிம்பிக்கில் 10 கி.மீ. ஓட்டத்தில் பங்கேற்கிறார். ஓட்டக் களத்தில் சக வீரர்களால் நெட்டித்தள்ளப்பட்டும், அசராது மில்ஸ் எல்லைக்கோட்டை தாண்டுவதை ‘ரன்னிங் பிரேவ்’ துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது.

பிரிஃபாண்டெய்ன் (Prefontaine 1997)

prifom_2960071a.jpg

நீண்ட தூர ஓட்டப் பந்தய வீரராக அமெரிக்க தேசத்தால் கொண்டாடப்பட்டவர் ஸ்டீவ் பிரிஃபாண்டெய்ன். தேசிய சாதனைகள் படைத்த இந்த இளைஞர் அமெரிக்கா சார்பில் ம்யூனிக் (1972) ஒலிம்பிக்கில் பங்கேற்றுக் கண நேரத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அடுத்த ஒலிம்பிக்கிற்கு நம்பிக்கையோடு தயாரான ஸ்டீவ், எதிர்பாரா விதமாய் கார் விபத்தொன்றில் பலியானபோது அவருக்கு வயது 24. அமெரிக்க இளைஞர்களை அதிகம் வசீகரித்த இவரது வாழ்க்கையை பிரிஃபாண்டெய்ன் (1997) என்ற படம் பதிவுசெய்தது. இதே பாணியில் தொடர்ந்து வித்தவுட் லிமிட்ஸ் (Without Limits 1998) என்ற படமும் வெளியானது.

மிராகிள் (Miracle 2004)

miracle_2960073a.jpg

அமெரிக்கா-ருஷ்யா இடையே பனிப்போர் தீவிரமான காலத்தில், 1980 குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்ற அமெரிக்க ஆடவர் ஐஸ் ஹாக்கி அணி, ருஷ்யாவை வீழ்த்தி தங்கம் வென்ற பின்னணியில் உருவான படம். அமெரிக்க ஹாக்கி வீரராக இருந்து அந்நாட்டின் ஒலிம்பிக் ஹாக்கி அணியின் பயிற்றுநராக வளர்ந்த ஹெர்ப் ப்ரூக்ஸ் என்பரை மையமாக்கி நகரும் இப்படத்தின் தழுவலே, இந்திய ரசிகர்களுக்காக ஷாருக்கான் நடிப்பில் உருவான ‘சக்தே இந்தியா’ இந்திப் படம்.

ம்யூனிக் (Munich 2005)

munich_2960075a.jpg

ஜெர்மனியின் ம்யூனிக் நகரில் 1972 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வந்திருந்த இஸ்ரேலிய வீரர்கள், பாலஸ்தீன தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாகப் பிடிப்பட்டு படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் ஹாலிவுட் படங்கள் கணிசமாக எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் யூதரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரித்து இயக்கிய ‘ம்யூனிக்’ திரைப்படம் முதன்மையானது. 11 யூத விளையாட்டு வீரர்கள் சாவுக்குக் காரணமான தீவிரவாதிகளை உலகம் முழுக்கத் தேடித் தேடி அழித்தொழிக்கும் இஸ்ரேலின் மொஸாட் உளவுக்குழு ரகசிய நடவடிக்கை பின்னணியில், தீவிரவாதத்துக்கு எதிரான அரச பயங்கரவாதத்தையும் அமைதியாக இப்படம் தோலுரித்தது.

த அதெலெட் (2009)

athalet_2960076a.jpg

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் கறுப்பின ஆப்பிரிக்கரான Abebe Bikila -வின் போராட்ட வாழ்க்கையை செலுலாய்டில் செதுக்கிய படம். 1960 ரோம் மற்றும் 1964 டோக்யோ என அடுத்தடுத்து 2 ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்த எத்தியோப்பிய மாரத்தான் வீரர், தொடர்ந்து நேரிட்ட வாகன விபத்தில் சக்கர நாற்காலியில் முடங்கினார். இருந்தபோதும் நம்பிக்கையைத் தளரவிடாது வில்வித்தையில் பங்கேற்க ஆயத்தமானார். ஆனால் விபத்தில் உறைந்திருந்த மற்றொரு உடல்நல பாதிப்பு அவரது ஒலிம்பிக் கனவை நிராசையாக்கி 41 வயதிலேயே உயிரைப் பறித்தது.

பாக் மில்கா பாக் (2013)

pak_2960077a.jpg

ரோம் (1960) ஒலிம்பிக்கில் நூலிழையில் வெண்கலத்தைப் பறிகொடுத்த இந்திய தடகள வீரரான மில்கா சிங் குறித்து, இந்திய-பாகிஸ்தான் பிரிவினையில் தொடங்கி இந்தியாவின் நிறைவேறாத ஒலிம்பிக் தடகள வெற்றி வாய்ப்பு வரை பேசும் படம். ஜோக்குகளுக்கு அப்பாலும் ‘பறக்கும் சீக்கியர்’ என பாகிஸ்தானால் புகழ் பெற்றவர் மில்கா சிங். இவரது வாழ்க்கையோட்டத்தை, மில்காவின் தந்தை உயிர் அச்சத்தில் ‘ஓடு மில்கா ஓடு’ என்று விரட்டியது ஒலிம்பிக் வரை மில்காவைச் செலுத்தியதையும் இந்த இந்திப் படம் சொல்லும்.

மேரி கோம் (2014)

இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம் உலக மகளிர் குத்துச்சண்டை போட்டிகளில் தொடர்ச்சியாக 5 தங்கம் வென்றதோடு, லண்டன் (2012) ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார். 2 குழந்தைகளின் தாயாக மணிப்பூரிலிருந்து ஒலிம்பிக் வரையிலான மேரி கோமின் கதை, அவரது பெயரிலேயே 2014-ல் படமானது. மேரி கோமாக ப்ரியங்கா சோப்ரா நடித்த வகையிலும் இந்த இந்திப் படம் கவனம் ஈர்த்தது. வணிக ரீதியிலும் எதிர்பார்ப்புகளை ஈடுசெய்த படம்.

tamil.thehindu

  • தொடங்கியவர்
ஆஸி. கடற்கரையில் மிதந்த விநோத பொருள்
 

அவுஸ்­தி­ரே­லிய கடற்­ப­கு­தியில் மிதந்து கொண்­டி­ருந்த பொரு­ளொன்று வேற்று கிர­கத்­தி­லி­ருந்து வந்த விநோத உயி­ரி­னமோ என பலரை வியக்க வைத்­தது.

 

18405whale-1.jpg

 

அவுஸ்­தி­ரே­லி­யாவின் பன்­பரி நக­ருக்கு அரு­கிலுள் கடற்­ப­கு­தியில் இந்த இராட்­சத உருவம் மிதந்­து­கொண்­டி­ருந்­தது. அப் ­ப­கு­தியில் படகில் சென்­று­கொண்­டி­ருந்த உல்­லாசப் பய­ணி­களும் மீன­வர்­களும் இதைப் பார்த்து பெரும் வியப்­ப­டைந்­தனர்.

 

18405whale-2.jpg

 

எனி­னும், அது இறந்த திமிங்­கி­ல­மொன்றின் வாயு நிறைந்த வயிற்றுப் பகுதி என்பது பின்னர் தெரியவந்தது.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆகஸ்ட் 5: இணையற்ற கலைஞன் சந்திரபாபு பிறந்த தினம்

13895530_1193671520691636_19431522984061

 

சந்திரபாபு... தமிழின் சந்தோஷ பாபு. ஆளைப் பார்த்தாலே சிரிப்பு வரும். அவர் பாட்டை ரசித்தால், ஆட்டம் வரும். சொந்தக் கதையைக் கேட்டால் கண்ணீர் வரும். அவரைப் போல இன்னொரு கலைஞன் எப்போது வருவான்?

எம்.ஜி.ஆரை 'மிஸ்டர் எம்.ஜி.ஆர்.' என்று அழைத்த ஒரே ஆள் இவர்தான். சிவாஜியை வாடா, போடா போட்டுக் கூப்பிட்டதும் இவரே. அவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அதுபற்றி இவர் கவலைப்படவும் இல்லை!

ஏழு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிய முதல் காமெடி நடிகர்!

ஆகஸ்ட் 5: இணையற்ற கலைஞன் சந்திரபாபு பிறந்த தினம்! - சிறப்பு பகிர்வு

சந்திரபாபு... தமிழின் சந்தோஷ பாபு. ஆளைப் பார்த்தாலே சிரிப்பு வரும். அவர் பாட்டை ரசித்தால், ஆட்டம் வரும். சொந்தக் கதையைக் கேட்டால் கண்ணீர் வரும். அவரைப் போல இன்னொரு கலைஞன் எப்போது வருவான்?

chandra-babu3.jpg

கொழும்புவில் வாழ்க்கை நடத்த வழியில்லாமல் பாபுவின் பெற்றோர் சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு வந்தார்கள். திருவல்லிக்கேணியில் வீடு. சாந்தோம் கடற்கரையில் இசையமைப்பாளர் வேதா, தபேலா தாமு ஆகியோர் அறிமுகம் கிடைத்தது. இசை ஞானத்தை விதைத்தது இந்த இருவரும்தான்!

காமராஜருக்கு அறிமுகமான குடும்பம். பாபுவின் அப்பா சிறையில் இருந்த காலத்தில், சிறுவனான சந்திரபாபுவை குற்றாலத்துக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி அரவணைத்தவர் காமராஜ். சந்திரபாபு மறைந்தபோது மலர் மாலையுடன் வந்த முதல் ஆளும் காமராஜரே!

சந்திரபாபுவுக்கு ஆங்கில அதிகாரிகள், பிரிட்டிஷ் பெண்கள், அவர்களது உடைகள், பாவனைகள் மீது சிறுவயதில் அலாதியான ஈடுபாடு இருந்தது. ஷர்ட் பேன்ட் இன் செய்து, சுத்தமான உடுப்பை அணியும் ஆசை அப்படித்தான் ஆரம்பித்தது!

மேற்கத்திய இசை கேட்பது, ராக் அண்ட் ரோல் நடனம் ஆடுவது, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவது, ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்ப்பது - பாபுவின் இளமைக் காலப் பொழுதுபோக்குகள். சந்திரபாபுவை கலைவாணி பிலிம்ஸ்க்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவர் சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன். அவருக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்தவர் மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ்.ராமையா!

chanra-babu1.jpgமுதல் படம், 'தன அமராவதி' (1947), கடைசிப் படம் 'பிள்ளைச் செல்வம்' ( 1974). 50-களில் தொடங்கி சுமார் 15 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தார்!

ரப்பரைப்போன்ற உடல்வாகு. எவ்வளவு உயரத்தில் இருந்தும் குதிப்பார். எத்தனை தடவை சொன்னாலும் திரும்பத் திரும்பக் குதிப்பார். அவர் படங்களில் டூப் போட்டது இல்லை!

எம்.ஜி.ஆரை 'மிஸ்டர் எம்.ஜி.ஆர்.' என்று அழைத்த ஒரே ஆள் இவர்தான். சிவாஜியை வாடா, போடா போட்டுக் கூப்பிட்டதும் இவரே. அவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அதுபற்றி இவர் கவலைப்படவும் இல்லை!

ஏழு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிய முதல் காமெடி நடிகர்!

'குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'பம்பரக் கண்ணாலே', 'நானொரு முட்டாளுங்க', 'பிறக்கும்போதும் அழுகின்றான்', 'சிரிப்பு வருது சிரிப்பு வருது', 'ஒண்ணுமே புரியல உலகத்துல', 'பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது', 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை', 'என்னைத் தெரியலையா இன்னும் புரியலையா' ஆகிய 10 பாடல்களும் 50 ஆண்டுகளாக இன்னமும் தமிழகத்தின் இரவு நேரச் சங்கீதம்!

எஸ்.எஸ்.வாசனைச் சந்திக்க முடியாத வருத்தத்தில் ஜெமினி ஸ்டுடியோ வாசலில் மயில் துத்தநாகத்தைக் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவர், தீக்குச்சியை உரசி தன் கையைச் சுட்டுக்கொண்டார். 'நான் தீக்குச்சியைக் கொளுத்தியதை உணரலாம். ஆனால், அந்த சூட்டை உங்களால் உணர முடியாது' என்று நீதிபதிக்குத் தன் துயரத்தை உணர்த்தினார்!

சென்னை பாஷையை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். 'சகோதரி' படத்து பால்காரனைப் பார்த்துத்தான் இப்படியும் ஒரு தமிழ் இருக்கிறது என்பதை தமிழகம் உணர்ந்தது!

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மிக முக்கியமான ரசிகர். இருவரும் மணிக்கணக்கில் பேசுவார்கள். சந்திரபாபு கேட்டு அவருக்காக எழுதிய நாடகம்தான் 'எனக்காக அழு'. ஆனால், அதில் சந்திரபாபு கடைசி வரை நடிக்கவில்லை!

ஷீலா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். முதலிரவின்போதே தனக்கு உள்ள இன்னொரு தொடர்பை அந்தப் பெண் சொன்னார். மறுநாள் காலையில் மனப்பூர்வமாக ஷீலாவை அனுப்பிவைத்துவிட்டார்!

நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது தன்னுடைய பலவீனம் என்ன என்பதைப் பகிரங்கமாக அறிவித்தார். 'சில சமயங்களில் என் திறமையை நினைத்து நானே அடைந்துகொள்ளும் பெருமை எனது முதல் பலவீனம். அடுத்தது, என்னுடைய குடிப்பழக்கம். நான் பெண்களைத் தேடி அலையும் லோலன் அல்ல; அவர்கள் என்னைத் தேடி வரும்போது கதவைத் தாழிட்டுக்கொள்பவனும் அல்ல' என்று சொன்னார்!

மூன்று பேரைத் தனது வழிகாட்டிகளாகச் சொன்னார். 'மனிதனாக வாழ்வது எப்படி என்று போதித்தவன் ஆபிரகாம் லிங்கன். ஒரு மனிதனைச் சாகடிக்காமல் சித்ரவதை செய்வது எப்படி என்பதை எனக்குக் கற்றுத்தந்த என்னுடைய மாமனார், ராஜதந்திரம் என்றால் என்ன என்பதையும் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும் கற்றுத்தந்தவர் ஜெமினிகணேசன்'' என்றவர்!

chandra-babu-2.jpg

'பாபு இஸ் பாபு, ஐ யம் பாபு' என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார். படப்பிடிப்புத் தளத்தில் நுழையும்போது, 'ஓ ஜீசஸ்!' என்று சொல்லியபடிதான் நுழைவார்!

ஜனாதிபதி மாளிகையில் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் முன்னால் 'பிறக்கும் போதும் அழுகின்றான்' பாடலைப் பாடினார். பிரமாதம் என்று அவர் பாராட்ட... உடனே ஓடிப் போய் அவரது மடியில் உட்கார்ந்துகொண்டார் சந்திரபாபு. 'கண்ணா நீ ரசிகன்டா' என்று அவரது தாடையைத் தடவ... ஜனாதிபதியும் மகிழ... உற்சாகமானபொழுது அது!

'தட்டுங்கள் திறக்கப்படும்' அவர் இயக்கிய படம். அதில்தான் கதை, திரைக்கதை, டைரக்ஷனுடன் நடனம் என்றும் சேர்த்துப் போட்டார். அப்படி போட்ட முதல் இயக்குநர் இவர்தான்!

நடிப்பு, பாட்டு, நடனம், இசை, ஓவியம், நாடகம், சிற்பம் ஆகிய அனைத்தின் மீதும் ஈடுபாடும், அது தொடர்பான கலைஞர்கள் அனைவரையும் தேடித் தேடிப் பழகியவரும்கூட. 'ஆனால், எனக்கு நடிப்பைத் தவிர, செல்ஃப் ஷேவிங் மட்டும்தான் தெரியும்' என்று சிரிப்பார்!

'நீ ஒரு கலைஞன், கற்பனைவளம் மிக்கவன், சிந்தனை சக்தி அதிகம் உள்ளவன்' என்ற ஒரு பாராட்டு மட்டுமே தனக்குப் போதும் என்று சந்திரபாபு சொன்னார். இப்படிப் பாராட்டியவர், அவருக்கு ஒருநாள் மட்டுமே மனைவியாக இருந்த ஷீலா!

'என் நடிப்பு மற்றவர்களுக்கு ஒரு சவால்தான். யாராவது இதைப்போல நடித்துக் காட்டட்டும். பார்க்கலாம்!' என்று சவால்விட்டார் சந்திரபாபு. எதிர்கொள்ள இன்று வரை யாரும் இல்லை!

  • தொடங்கியவர்

அறிவை உயிரோடு கலக்கவைக்கும் வித்தை ஞானமுள்ள பேச்சு
 

article_1470286661-index.jpgதெரியும் என்பது போல் சொற்பொழிவாளர்கள் மேடையில் முழங்கக் கூடாது. அரசியல்வாதிகள் உண்மையைப் புட்டுப்போட எத்தனிக்கும்போது, பொய்யான தரவுகளை முன்வைப்பார்கள். இதனை மக்கள் துரதிஷ்டமாக நம்புவதுண்டு.   

தங்கள் பேச்சு வன்மையினால் மக்களின் மூளையினை திசைதிருப்ப எத்தனிப்போர் முடிவில் தங்கள் சுய உருவத்தினைத் தங்கள் அடாத செயல்களினால் வெளிப்படுத்தி விடுகின்றார்கள்.   

என்றுமே மக்களுக்கு ஒன்றுமே தெரியாது என பேச்சாளர்கள் எண்ணிக்கொண்டு பேசுதல் ஆகாது. தங்களை மேலானவர்களாகக் காட்டினால் அது மக்களுக்குப் பிடிக்காது. முதற்கண் இத்தகையோர் உணரவேண்டும்.   

சொல்லில் சுருக்கமும் அர்த்தத்தில் விரிவும் கேட்பதில் இனிமையும் இருந்தால் பேசும் விடயம் கல்லில் எழுதிய வரிகள்போல் ஸ்திரமாகிவிடும். மக்களின் அறிவை உயிரோடு கலக்கவைக்கும் வித்தையை ஞானமுள்ள பேச்சாளர்களால்த்தான் உருவாக்க முடியும்.   

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆகஸ்ட் 6: எண்ணற்ற மக்களின் உயிர் காக்கும் பெனிசிலினை கண்டுபிடித்த அலெக்சாண்டர்
பிளெமிங் பிறந்த தின சிறப்பு பகிர்வு

ஸ்காட்லாந்தில் பிறந்த இவர் இளம் வயதில் தன் தந்தையை இழந்தார். அதன் பின்னர் வறுமையான சூழலிலேயே படித்து வந்தார். போலோ மற்றும் நீச்சலில் அளவில்லாத ஆர்வம் கொண்டவர் இவர். ஒருநாள் நீர்நிலையில் ஒரு சிறுவன் தத்தளிப்பதை பார்த்து உதவினார் இவர், அந்த சிறுவன் பிரபு வீடு பிள்ளை. அவரின் அப்பா பிளெமிங்கின் கல்விச்செலவை ஏற்றுக்கொண்டார். அந்த தத்தளித்த சிறுவன் வருங்காலத்தில் பிரிட்டனின் பிரதமர் ஆன சர்ச்சில் !

பாலிடெக்னிக் படித்துவிட்டு புனித மேரி மருத்துவப்பள்ளியில் மருத்துவ படிப்பை மேற்கொண்ட பின்னர் ஆல்மோத் ரைட் எனும் நுண்ணுயிரி ஆய்வாளரிடம் வேலைக்கு சேர்ந்தார். அங்கே டைபாய்ட் நோய்க்கு தடுப்பூசி போடும் முறையை கண்டறிந்தார். பின் தன் துறை சார்ந்தே பேராசிரியர் ஆனார். லைசோசோம் நோய்களை தடுப்பதையும்,நோய் எதிர்ப்புக்கும் வெள்ளை அணுக்களுக்கு அதில் உள்ள பங்கு பற்றியும் விவரித்தார்.

ஸ்டைபாலோ காகஸ் பாக்டீரியா இருந்த ஒரு தட்டை மூடாமல் அப்படியே திறந்துவிட்டு நகர்ந்துவிட்டார் இவரின் உதவியாளர். அடுத்த நாள் காலையில் அப்படியே திறந்து கிடப்பதை கண்டு உதவியாளரை கடிந்து கொண்டார். அவர் அதை கொட்ட எடுத்துக்கொண்டு போன பொழுது அவசரப்படாமல் அந்த தட்டை வாங்கி நுண்ணோக்கியில் வைத்து பார்த்தார்.

நீல நிறத்தில் எதோ ஒன்று பாக்டீரியவை தின்று தீர்த்து இருந்தது. அந்த நீல நிற பூஞ்சை தான் பெனிசிலின் எனும் அற்புதம். உலகின் முதல் ஆண்டி பயாடிக் கண்டறியப்பட்டது. அந்த பூஞ்சையின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும் வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார். நிமோனியா,தொண்டை அடைப்பான் முதலிய நோய்களுக்கு தீர்வு தருகிற அற்புதத்தை பென்சிலின் செய்கிறது. பதினான்கு வருடங்கள் கழித்து அதை பெரிய அளவில் உற்பத்தி செய்யும் முறையை வேறிரு அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்தார்கள். மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

 

 
Bild zeigt 1 Person , Innenbereich und Essen

vikatan

  • தொடங்கியவர்

கலிபோர்னியாவில் குடும்பத்துடன் நீராடிய கரடியார்


கரடிகளுக்கும் கோடை காலம் உச்ச நிலையில் தான் உள்ளது போலும்! ஒரு கரடிக் குடும்பம் கலிபோர்னியாவில் உள்ள டோஹோ ஏரியின், போப் கரையில், எவரையும் பொருட்படுத்தாது சாவகாசமாக வந்து நீராடிச் சென்றிருக்கிறது.
 
 
 

BBC

  • தொடங்கியவர்

உங்கள் பழைய நண்பர்களை இணையத்தில் கண்டுபிடிப்பது எப்படி? #happy friendship day

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஏற்றமோ அல்லது இறக்கமோ அவை தொடர்ந்து நீடிப்பதற்கோ அல்லது சரி செய்வதற்கோ, உரிய முடிவு எடுப்பதற்கு அல்லது தகுந்த ஆலோசனை வழங்குவதற்கு இவ்வுலகில் சிறந்த உறவாக வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் கிடைக்கக்கூடியது உறவு ஒன்றே ஒன்றுதான்! ஆம்!...அவர்கள் நம் நண்பர்களே!

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை, “பன்னாட்டு நட்பு தினமாக” கொண்டாடப்படுகிறது. அதாவது வரும் 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று இவ்வாண்டின் நட்பு தினக் கொண்டாட்டங்கள் களை கட்டப்போகிறது.

நண்பர்கள் வட்டாரம் என்பது எல்லோருக்கும் உண்டு என்றாலும், சிறந்த நண்பர்களாக அவர்களில் ஒரு சிலர் மட்டுமே இருக்க முடியும். பெரும்பாலும் அவர்கள் நம்முடன் இணைவது நமது பால்ய வயதில்தான். பிற்கால வாழ்க்கைப்போராட்டத்தில் அவர்களை நாம் தொலைத்திருக்கலாம். நீண்ட காலமாக அவர்களின் தொடர்பு முகவரி மற்றும் எண்கள் கிடைக்காமல் வருத்தப்படுவோர் நம்மில் பெரும்பாலானோர் உண்டு.

தற்கால தொழில்நுட்ப வளர்ச்சி பலவற்றை சாத்தியப்படுத்தி வரும் நிலையில், உங்கள் நண்பர்களின் தற்போதைய நிலையை அறிய உதவும் இணையதளங்களை பற்றி இப்போது காணலாம்.

1. Alumni.net

FR_1.jpg

உலகம்  முழுவதும் உள்ள ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் இதில் உறுப்பினர் குழுக்களை ஏற்படுத்தி உள்ளனர். இந்த இணையதளம் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுவதால், அதிகபட்ச தகவல்களை கொண்டுள்ளது. உங்கள் நண்பர்களை தேட வேண்டுமென்றால் முதலில் தளத்தில் நுழைந்தவுடன் உங்களுக்கென கணக்கொன்றை இலவசமாக உருவாக்கிக் கொள்ளுங்கள். பின்பு உலகம்-ஆசியா-இந்தியா-தமிழ்நாடு என வரிசையாக தேர்வு செய்தபின் ஆங்கில அகர வரிசைப்படி இருக்கும் உங்கள் ஊரின் பெயரை தேர்வு செய்யவும்.

நீங்கள் தேர்வு செய்த ஊரில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்களின் பெயர்களை அது காண்பிக்கும்போது உங்களுக்குரியதை தேர்ந்தெடுக்கவும். இப்போது உங்களால் அதன் உறுப்பினர்களை காண இயலும்! பின்ன என்ன உங்கள் நண்பர் அதில் இருந்தால் ஜஸ்ட் ஒரு ''பிரண்ட் ரெக்வெஸ்ட்''  கொடுத்து நட்பை கொண்டாடுங்கள்!

2. Batchmates.com

FR_5.jpgஇந்தியாவை சேர்ந்த சர்வதேச இணையதளமான இது தினமும் 4500 நண்பர்களை இணைத்து வைப்பதாக கூறுகிறது. நீங்களும் உங்கள் நண்பரை தேடுவதற்கு, முதலில் ஒரு பயனர்  கணக்கை இலவசமாக தொடங்கி கொள்ளலாம்.

பிறகு உங்களை பற்றிய தேவையான தகவல்களை பதிவேற்றியபின் இணையதளத்தின் முகப்பில் உள்ள தேடுமிடத்தில் உங்கள் நண்பரின் பெயரையோ அல்லது பள்ளி, கல்லூரி அல்லது நிறுவனத்தின் பெயரையோ இடுவதன் மூலம்  கண்டறியலாம். மேலும், இதில் ஏற்கனவே தொடர்பில் உள்ள  நண்பர்களிடையே புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியும் என்பது தனிச்சிறப்பு.

3. Innfriend.com

FR_2.jpg

ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த இணையதளத்தில் எளிமையாக கணக்கு துவங்கலாம். கணக்கொன்றை துவங்கியபின் தேவையான தகவல்களை  நிரப்பி உங்கள் பக்கத்தை பக்காவாக வைத்திருப்பது நலம். மற்ற தளங்களை போன்று இதிலும் உங்களின் நண்பரை, கொடுக்கப்பட்டுள்ள சாதாரண தேடல் மற்றும் அட்வான்ஸ்ட் ஆப்ஷன்-ஐ பயன்படுத்தி கண்டறியலாம். உங்களின் நண்பர்கள் அவர்களின் முகவரியோ அல்லது ஏதாவது தொடர்பு தகவலை மாற்றினால் உங்களுக்கு தானாக ஒரு நோட்டிபிகேஷன்  வந்துவிடும் என்பது இந்த தளத்தின் தனிச் சிறப்பு.

4. Facebook.com

FR_4.jpgநாம் பொதுவாக நினைப்பதைப்போன்று ஃபேஸ்புக் என்பது வெறும் போஸ்ட்கள் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் எழுத்துக்களை பதிவிடவும், பகிர்ந்து கொள்வதோடு மட்டுமல்லாது நிகழ்ச்சிகளை உருவாக்கவும், விளம்பரப்படுத்தவும், கேம்ஸ் விளையாடவும் மற்றும் உங்கள் பழைய நண்பர்களை தேடும் சிறப்பானதொரு வசதி போன்ற பல்வேறு சேவைகளையும் அளிக்கிறது.

நீங்களும் உங்கள் நண்பரும் படித்த பள்ளி, கல்லூரி, நிறுவனம் அல்லது உங்கள் மின்னஞ்சல் தொடர்புகளை பயன்படுத்தி ஃபேஸ்புக்கின் 171 கோடி பயனர்களில் ஒருவராக உங்கள் நண்பர் இருந்தால் ஒரு சில வினாடிகளில் அவரை கண்டுபிடிக்கலாம். இதற்கு முதலில் உங்கள் பேஸ்புக் அக்கவுன்ட்டில் உள் நுழையவும். அந்த பக்கத்தின் மேற்பகுதியில் இருக்கும் “Find Requests” என்பதை தெரிவு செய்தவுடன் திறக்கும் விண்டோவில் இருக்கும் “Find Friends” என்பதை கிளிக் செய்யவும். அடுத்ததாக திறக்கும் விண்டோவில் வலதுபுறத்தில் இருக்கும் முதல் வாய்ப்பான “Add Personal Contacts” மூலம் உங்கள் மின்னஞ்சல் உரையாடல்களை பயன்படுத்தியும், இரண்டாம் வாய்ப்பாக அதற்கு கீழ் உள்ள “Search for Friends” என்பதை தேர்வு செய்வதன் மூலம் உங்கள் நண்பரின் பள்ளி, கல்லூரி, அலுவலகம் சார்ந்த தகவல் அல்லது கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு விருப்பத்தேர்வை பயன்படுத்துவதன் மூலம் கண்டறிவதற்கான வாய்ப்புகள் பிரகாசம்!

5. Almaconnect.com

FR_3.jpgபுது தில்லியில் வெறும் பத்து இளைஞர்களால் நடத்தப்படும் இந்த தளம், 'இந்தியாவின் முதல் சர்வதேச சமூக வலைத்தளமாகும்'. இந்த தளத்தின் முக்கிய நோக்கமாக, இந்நாள் மாணவர்கள் அந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்களிடமிருந்து ஆலோசனைகள் பெறுதல், வேலைக்கு பரிந்துரைத்தல், பல்வேறு காரணங்களுக்காக நிதி திரட்டுதல் மற்றும் கல்லூரி நிர்வாகம் அதன் முன்னாள் மாணவர்களோடு தொடர்பில் இருப்பதற்கு பயன்படுத்தினாலும் குறிப்பிட்ட கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைவதற்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

உதாரணமாக, உங்கள் கல்லூரியில் படித்த/படிக்கும் மாணவர்களை ஆண்டு, துறைவாரியாக மிக எளிதாக கண்டறிந்து அவர்களோடு உரையாட முடியும். மேலும், இத்தளத்திலுள்ள பதிவுகளை மற்ற சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் லிங்கிடினில் பகிர்வதற்கான வசதியும் உள்ளது.

அப்புறம் என்ன, ஸ்வீட் எடுங்க, நண்பர்களோடு கொண்டாடுங்க!

vikatan

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p104a.jpg

facebook.com/loveguruchennairadiocity:

இன்று தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 80ஆயிரம் பேர் குரூப் 2 தேர்வு எழுதியதாகக் கேள்விப்பட்டேன். நண்பனிடம் கேள்வித்தாளை வாங்கி பார்த்தபோது அதிர்ந்துவிட்டேன். நகர ஆணையர், தொழிலாளர் நல ஆணையர் போன்ற பதவிகளுக்கான இந்தத் தேர்வுக்கும் செய்வினை, செயப்பாட்டு வினை போன்ற கேள்விகளுக்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியவில்லை? இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் `செய்வினை கேள்விகளால்' இளைய சமுதாயத்துக்கு `செய்வினை' வைத்துக்கொண்டிருக்கப்போகிறோம்?

July 30, 2011-ல போட்ட ஸ்டேட்டஸ்; ஐந்து  வருஷத்துல எதுவுமே மாறல!

facebook.com/Kanmani.Pandiyan:

நான் தூங்கப்போறேன் = நான் mobile-ல game வெளாண்டுட்டு, face book பார்த்துட்டு, instagram-ல கொஞ்ச நேரம் இருந்துட்டு, youtube-ல videos பார்த்துட்டு, whatsapp-ல எல்லாரோட last scene updates பார்த்துட்டு, pinterest-ல கொஞ்சம் relax பண்ணிட்டுத் தூங்குவேன்!

Whatsapp:

பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுக்கு ஒழுங்கா சிரிக்கத் தெரியலை, நாமல்லாம் ரஜினி, கமல் நடிப்பைப் பத்தி அசால்டா விமர்சிக்கிறோம்!

facebook.com/vinayaga.moorthy.5070:

கொஞ்சம் அறிவா ஏதாச்சும் பேசினா, எங்கம்மா டக்குனு `எம் புள்ளையைக் கட்டிக்க எந்தச் சிறுக்கிக்குக் கொடுத்துவெச்சிருக்கோ’னு சாதாரணமா சொல்றாங்க. ஆனா, அந்தச் `சிறுக்கி'ங்கிற வார்த்தை செம லவ்லியா இருக்கேனு `Who is that சிறுக்கி?’னு கற்பனையில மூழ்க ஆரம்பிச்சுடுறேன்.

` `வரட்டும் சிறுக்கி’னு மாமியார் இப்பவே ரெடியாகுறாங்க'னு எங்கப்பா கமுக்கமாச் சிரிக்கிறார்.

சிறுக்கி, Is not a word... its an emotion!

facebook.com/jill.kamatchirajan:

பின்வரும் காட்சி சினிமாவில் வந்திருந்தால், நிஜ வாழ்வில் இப்படி நடக்கவே நடக்காதுனு நக்கலடிச்சிருப்பேன். டி.எம்.எஸ்-ஸில் இருந்து நண்பனை பிக்கப் செய்துகொண்டு, செம்மொழிப் பூங்கா போவதற்காக ஜெமினி பிரிட்ஜின் சக்கர வியூகத்தில் நுழைந்தேன். ஒரு வளைவில் `NO ENTRY'. இன்ஸ் வண்டியை நிறுத்தி, கேஸ் எழுத ஆரம்பித்தார். வண்டி டாக்குமென்டை எடுப்பதற்காக pleasure-ன் கருவறையைத் திறந்தேன். உள்ளே `சாதிக்க ஆசைப்படு' சைலேந்திரபாபு IPS எழுதிய புக்... இன்ஸ் என்னைப் பெருமிதமாகப் பார்த்தார். `நீ தன்னம்பிக்கை புக் படிக்கிற ஆசாமியா?'னு நண்பன் பார்த்தான். இந்த ரெண்டு மூட உலகங்களுக்கு நடுவே நான், என் காதலி முதன்முதலாக இந்தப் புத்தகம் வாங்கித் தந்த காலத்துக்கு காதல் இயந்திரத்தில் சென்றுகொண்டிருந்தேன் :-)))

facebook.com/senthil.nithil:

`நைட் 2 மணிக்கு முழிச்சுக்கிட்டு Online-ல என்னடா பண்ற... பேய்கூட Duty முடிஞ்சு போயிருக்குமே?'னு கேட்டா...

`உச்சாப் போக எந்திரிச்சேன்'ங்கிறான். வரவர உச்சாக்கூட Online-லதான் போறாங்க.

(`நீ என்ன பண்ணிட்டிருந்த அந்த நேரத்துக்கு?'னு கேட்கிறவன் ரத்தம் கக்கிச் சாவான்.)

p104b.jpg

facebook.com/suresh.kannan.1806:

ஒரு பத்திரிகை நிறுவனத்தின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரி அவர்.இப்போது அவருடைய அலைபேசி எண் அவசரமாகத் தேவை. அவருடைய பழைய விசிட்டிங் கார்டுகளைத் தேடினேன். கிடைக்கவில்லை. எனவே, அந்த நிறுவனத்தின் இப்போதைய தொடர்பில் உள்ள இளநிலை அதிகாரியை அழைத்து ‘அவருடைய மொபைல் எண் கிடைக்குமா?’ என்றேன்.
அவர் சட்டெனச் சுதாரித்து ‘நான் டிராஃபிக்ல இருக்கேன். என்ன விஷயம் சொல்லுங்க?' என்றார். அவருடைய தற்காப்பு உணர்ச்சி புரிந்தது. நானும் இதை எல்லாம் கடந்தவன்தானே! தன்னைத் தாண்டி ஒரு விஷயம் நடப்பது என்பது ஓர் இழுக்குதானே... அவருடைய மதிப்பு என்னாவது?

சரி என்று இன்னொரு தொடர்பைப் பிடித்தேன். அவரும் இப்படியே ஏதேதோ சால்ஜாப்பு சொன்னார். இப்படியே ஐந்தாறு பரிவாரங்களைக் கடந்து ஒருவழியாக மூலவரின் தொலைபேசி எண்ணைப் பிடித்துவிட்டேன்.

உடனே இதை மொபைலில் சேவ் செய்துகொள்ள வேண்டும் என அவசரம் அவசரமாகச் சேமித்தேன்.

பார்த்தால் இந்தத் தொடர்பு எண், அவருடைய பெயரில் ஏற்கெனவே என் மொபைலில் இருந்தது. நீண்ட நாளாக தொடர்பில் இல்லாததால் உபயோகிக்கும் வாய்ப்பு இல்லை. அப்போதைய பதற்றத்தில் இது நினைவுக்கும் வரவே இல்லை.

ஆட்டை தோளில் போட்டுக்கொண்டு, ஊரெல்லாம் தேடிய இடையனின் நவீன கதை இது!

facebook.com/jayreborn:

Pokemon Go விளையாட, தேவையான பொருட்கள்:

Power Bank 20,000 amph – 2
3G / 4G Data pack : 20 GB – 2
சாதா செல்போன் - 1
டார்ச் லைட் - 1
கைத்தடி + கொடி - 1
மண்வெட்டி, கடப்பாரை, பாண்டு - 1
சுத்தியல் - 1
குடை (அல்லது) ரெயின்கோட் - 1
கொசுவலை - 1
பாய்-தலைகாணி செட் - 1
`என்னை யாரும் தேட வேண்டாம்' காகிதக் குறிப்பு - 1

twitter.com/IamMrBoss:  நம்மளைக் காதலிச்சப் பையன் நல்லா இருக்கணும்னுதான் பல பெண்கள், வீட்ல பார்க்கிற பையனையே கல்யாணம் பண்ணிக்கிறாங்க. நம்ம பசங்களுக்குத்தான் இது புரியலை!

twitter.com/Ulaganandha:  ஹெட்போன்ல வலது இடது இருக்கா?! இந்த விஷயம் தெரியாம 25 வருஷம் வாழ்ந்துட்டோமே... ச்சே!

p104c.jpg

twitter.com/mekalapugazh:  `பாத்ரூம்'னு சொன்ன காலத்துல போனோமா... வந்தோமானுதான் இருந்தாங்க. `ரெஸ்ட்ரூம்'னு பேரை மாத்தினப் பிறகுதான் உள்ளேயே குடித்தனம் நடத்துறானுங்க செல்போனோடு!

twitter.com/Mayavi_: வண்டி புக்கு, இன்ஷூரன்ஸ், ஹெல்மெட் எல்லாம் கரெக்ட்டா இருக்கும்போது போலீஸ் புடிச்சா, Homework முடிச்ச ஸ்கூல் பையன் மாதிரி சந்தோஷமா இருக்கு!

twitter.com/Kounter_twitts:  காலேஜ்ல கட் அடிச்சு, கட் அடிச்சு வெளியே சுத்தப் போனதுக்கு, ஆபீஸ்ல வெச்சு ஓவர்டைமா வேலை வாங்குறாங்கப்பா!

twitter.com/RajendranRaina:  மளிகைக்கடை அண்ணாச்சியிடம் 500 ரூபாய் நோட்டைக் கொடுத்தால் போதும், அப்படியே மேல தூக்கி காந்தி உள்ளே இருக்காரா... இல்லையானு பார்த்தப் பிறகே கல்லாவில் போடுகிறார்!

twitter.com/palanikannan04: ஒரு சட்டையை அயர்ன் பண்ணிக் கொண்டிருக்கும் சமயத்தில் மின்சாரம் நின்றுபோனால், மீதி சட்டையை அயர்ன் பண்ணுவதில் உள்ளது நமது சுறுசுறுப்பு!

twitter.com/iamVariable: `பெரிய டிராஃபிக் ஜாமில், ஒவ்வொரு காரிலும் ஒருவர் மட்டுமே அமர்ந்தபடி `டிராஃபிக்கை கன்ட்ரோல் பண்ண, அரசு ஏதாவது பண்ணணும்' என ஸ்டேட்ஸ் எழுதுகிறார்கள்!

twitter.com/Piramachari: சினிமாவுல சரக்கு, தம் அடிக்கிற சீன் வந்தா, `உடல் நலத்துக்குத் தீங்கு'னு போடுறான். கொலை பண்ற சீன் வந்தா... தீம் மியூஸிக்கைத்  தெறிக்கவிடுறான்!

twitter.com/sathik_twitz: ஒரு செகண்ட்ல கொலவெறி உண்டாக்குறவன்,  டிராஃபிக்கே இல்லாத ரோட்ல பின்னாடி இருந்து ஹார்ன் அடிக்கிறவன்தான்!

twitter.com/withkaran: கொஞ்ச நாள் முன்னாடி அங்கிள்ஸ் எல்லாம் செல்போன் பவுச் ஒண்ணு இடுப்பு பெல்டோடக் கட்டிக்கிட்டுத் திரிஞ்சாங்களே... அந்த ஃபேஷன் முடிஞ்சதா?!

twitter.com/vandavaalam:   செக்யூரிட்டியே ஏழு மொழி பேசுறான்னு சந்தோஷப்படுறதா, இல்லை... ஏழு மொழி தெரிஞ்சவன் செக்யூரிட்டியா இருக்கானேனு வருத்தப்படுறதா?

twitter.com/iam_v_jey: இப்ப பாரதி இருந்து `காணிநிலம் வேண்டும்'னு பாடினார்னா... `எட்டையபுரத்துக்கு மிக அருகில்'னு எர்ணாக்குளத்துல ஒரு ஃப்ளாட்டை  அவருக்கும் வித்திருப்பானுங்க!

twitter.com/dheeviran: அஞ்சு ரூபா பேனாவை, கயிறு கட்டித் தொங்கவிட்ட ஸ்டேட் பேங்க்காரங்கதான், மல்லையாகிட்ட 5,000 கோடி ரூபாயை அனாமத்தா கோட்டைவிட்டாங்க!

twitter.com/karthekarna: எவனாவது சீரியஸா எழவு நியூஸ் சொல்லப்போறான். தாடையைத் தடவிக்கிட்டே ‘மகிழ்ச்சி’னு சொல்லிருவோமோனு பயமா இருக்கு. `கபாலி' ஃபீவர்!

vikatan

  • தொடங்கியவர்
 
 
 
Bild zeigt Wolken und im Freien
 

ஆகஸ்ட் 6: ஹிரோஷிமா நினைவு தினம் இன்று

2ம் உலகப்போரின் போது ஜப்பானின், ஹிரோஷிமா மீது 1945, ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி, அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியதன் நினைவுநாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

அணுகுண்டு பாதிப்பால் ஹிரோஷிமா நகரில் பலியான பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அணு ஆயுதத்தின் பேரழிவை உலகுக்கு உணர்த்தும் நாளாகவும், இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலக வரலாற்றில் அமெரிக்கா தான் முதன் முதலாக அணுகுண்டு தாக்குதலை தொடங்கியது. ஆனால் "லிட்டில்பாய்' என்கிற இந்த அணுகுண்டு வாங்கி உயிர் பலி எவ்வளவு தெரியுமா, ஒரு லட்சத்துக்கும் மேல். மீண்டும் மூன்று நாட்கள் கழித்து ஆகஸ்ட் 9ம் தேதி ஜப்பானின் நாகசாகி நகரின் மீது "பேட்மேன்' என்ற அணுகுண்டை 2வது முறையாக அமெரிக்கா வீசியது. இத்தாக்குதல்களால், இரண்டு நகரங்களும் நிலைகுலைந்தன. கதிர்வீச்சு காரணமாக இறந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தை எட்டியது.

vikatan

நரகத்துக்குள் ‘சொர்க்க’ போகம்!

 

 
photo_2961542f.jpg
 

ஹிரோஷிமா, நாகசாகி நினைவு நாள் ஆகஸ்ட் 6, 9

‘‘சொர்க்கத்தில் இருப்பவர்களிடம் இரண்டு வாய்ப்புகள் முன்வைக்கப்படுகின்றன: ஒன்று, சந்தோஷம் உண்டு, ஆனால் சுதந்திரம் கிடையாது. இரண்டாவது, சுதந்திரம் உண்டு, ஆனால் சந்தோஷம் கிடையாது. மூன்றாவது வாய்ப்பென்று ஏதும் இல்லை.’’ (ரஷ்ய எழுத்தாளர் யெவ்ஜெனி ஜம்யாட்டினின் ‘We’ என்ற நாவலிலிருந்து).

ரஷ்யாவின் ஊரல் மலைத்தொடரின் காட்டுக்குள்ளேதான் இருக்கிறது அஜெர்ஸ்க் நகரம் (Ozersk). விலக்கப்பட்ட நகரம் அது. கடும் கண்காணிப்புடனும் பாதுகாப்புடனும் கம்பிவேலிகள் சூழ இருக்கும் அழகிய புதிர்தான் அஜெர்ஸ்க்; ஏதோ வேறொரு பரிமாணத்தில் இருப்பதாகத் தோன்றும் ஒரு வசிய நகரம்.

‘நகரம்-40' என்று சங்கேதப் பெயரிடப்பட்டிருக்கும் அஜெர்ஸ்க் நகரம்தான் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சோவியத் ரஷ்யாவின் அணு ஆயுத உற்பத்தித் திட்டத்தின் பிறப்பிடம். கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்கள் வசிக்கும் இந்த நகரம், கடந்த 70 ஆண்டுகளாக எந்த வரைபடத்திலும் இடம்பெறவில்லை. இந்த நகரத்தின் குடிமக்கள் பற்றிய தகவல்கள், அடையாளங்கள் சோவியத்தின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன.

இருண்ட ரகசியம்

அழகான ஏரிகள், வாசம் வீசும் மலர்கள், ஓவியங்களில் இருப்பதுபோல நிழற்சாலைகள் என்று இன்று பார்க்கும்போது 1950-களின் அமெரிக்க நகரம் போல் காட்சியளிக்கிறது அஜெர்ஸ்க்.

வழக்கமான நாட்களில், இளம் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை மழலை வண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டு வருவார்கள்; சிறுவர்கள் வீதியில் விளையாடுவார்கள். பதின்பருவப் பையன்களின் ஸ்டீரியோக்களிலிருந்து ஏதாவது பாடல்கள் அலறிக்கொண்டிருக்கும்; கூடவே, இளம் பெண்களைக் கவர்வதற்காகத் தங்கள் சறுக்குப் பலகை வித்தைகளை அவர்கள் காட்டிக்கொண்டிருப்பார்கள்.

சாலையோரங்களில் உள்ளூர்ப் பெண்கள் பழங்களையும் காய்கறிகளையும் விற்றுக்கொண்டிருப்பார்கள். பொருட்களை விற்பதற்கு முன்பு அவற்றைப் பரிசோதிக்கும் கதிர்வீச்சு அளவுமானிகள்தான் (Geiger counters), இந்த அமைதியான நகர்ப்புறக் காட்சிக்குப் பின்னே உறைந்திருக்கும் இருண்ட ரகசியத்தை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.

மாபெரும் கல்லறைத்தோட்டம்

அந்த நகரவாசிகளுக்கு அந்த உண்மை தெரியும்: ஆம், அவர்கள் குடிக்கும் நீர் மாசுபட்டிருக்கிறது, அவர்கள் உண்ணும் காளான்கள், பெர்ரிகள் போன்றவையெல்லாம் நஞ்சாகியிருக்கின்றன, அவர்களின் குழந்தைகள் கடுமையாக நோய்வாய்ப்படலாம்… இந்த உண்மைகள் எல்லாமே அவர்களுக்குத் திட்டவட்டமாகத் தெரியும்.

அஜெர்ஸ்க்கும் அதைச் சூழந்திருக்கும் பகுதியும்தான் பூமியிலேயே மிகவும் மாசுபட்ட பகுதிகள்; சிலர் அதை ‘பூமியின் கல்லறைத் தோட்டம்’ என்று வர்ணிக்கிறார்கள்.

இருந்தும் இந்த நகரவாசிகளில் பெரும்பாலானோர் இந்த நகரத்தை விட்டு வெளியேற விரும்புவதில்லை. ரஷ்யாவின் ‘பிரத்யேகமான செல்லங்கள்’என்று தங்களை அவர்கள் கருதிக்கொள்கிறார்கள். மூடுண்ட அந்த நகரத்தின் குடிமக்களாக இருப்பதில் அவர்களுக்குப் பெருமிதமும் உண்டு. இங்கேதான் அவர்கள் பிறந்தார்கள், திருமணம் செய்துகொண்டார்கள், குடும்பம் நடத்தினார்கள். அவர்களின் பெற்றோர்களையும், ஏன் அவர்களின் மகன்கள், மகள்களையும்கூட இங்கேதான் புதைத்திருக்கிறார்கள்.

‘உலகின் ரட்சகர்கள்’

பிரம்மாண்டமான ‘மாயக்' அணுஉலையைச் சுற்றி, இர்ட்யாஷ் ஏரியின் கரைகளில்தான் 1946-ல் 'நகரம்-40'-ன் கட்டுமானத்தை மிகவும் ரகசியமாகத் தொடங்கியது சோவியத் ரஷ்யா. சோவியத் ஒன்றியத்தின் அணு ஆயுதத் திட்டத்தை முன்னெடுக்கவும் அணுகுண்டு தயாரிக்கவும் ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விஞ்ஞானிகளும் தொழிலாளர்களும் அங்கே அழைத்துவரப்பட்டனர். அவர்கள் அனைவருக்குமான குடியிருப்புதான் அந்த நகரம்.

அஜெர்ஸ்கிலிருந்து 20 நிமிடங்கள் தொலைவில் இருக்கும் ஒரு கிராமத்தில் உள்ள சதுக்கத்தில் ஒரு கடிகாரம் தொங்குகிறது. உள்ளூர் நேரத்தையும் காற்றில் உள்ள கதிரியக்கச் செறிவையும் அந்தக் கடிகாரம் அடுத்தடுத்துக் காட்டிக்கொண்டே இருக்கிறது. செர்னோபில் அணு உலை விபத்தின்போது கதிரியக்கத்தால் அருகிலிருந்த உக்ரைன் மக்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டார்களோ அதைவிட ஐந்து மடங்கு அதிகக் கதிர்வீச்சால் அஜெர்ஸ்க் நகரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வசிக்கும் 5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அஜெர்ஸ்க் நகரின் எல்லையில் ஒரு எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. அந்த நகரத்துக்குள் யாரும் அத்துமீறி நுழையக் கூடாது என்று எச்சரிக்கும் ஆங்கில, ரஷ்ய வாசகங்களை அந்தப் பலகை தாங்கியிருக்கிறது. ரஷ்யாவின் ரகசிய போலீஸின் அனுமதி இல்லாமல் வெளிநாட்டினரோ வெளிநாட்டில் வசிக்கும் ரஷ்யர்களோ இங்கே நுழைய முடியாது. இந்தப் பகுதிக்குள் படமெடுப்பதற்கும் கடுமையாகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

a_2961543a.png

எச்சரிக்கைப் பலகை

சிறப்பு அனுமதி இருந்தால் அஜெர்ஸ்க் நகரவாசிகள் அந்த நகரத்திலிருந்து வேறு இடங்களுக்குச் சென்று வரலாம். அந்த நகரத்துக்குத் திரும்பியே வரப்போவதில்லை என்றாலும்கூட, அங்கிருந்து அவர்கள் வெளியேறலாம். ஆனாலும் சிலரே அப்படிச் செய்கிறார்கள். மூடுண்ட அந்த நகரத்தை விட்டுப் போனால், எல்லா சொகுசு வாழ்க்கை சலுகைகளையும் இழக்க வேண்டிவருமே!

எல்லாம் கிடைக்கும்

தனி அடுக்ககங்கள், ஏராளமான உணவு (வாழைப்பழங்கள், சுண்டிய பால் முதலான வெளிநாட்டு உணவுப் பொருட்கள் உட்பட), நல்ல பள்ளிக்கூடங்கள், சுகாதார, மருத்துவக் கட்டமைப்புகள், பொழுதுபோக்கு, கலாச்சாரச் செயல்பாடுகள் என்று எல்லாமே தேவதைக் கதையில் வருவது போன்ற ஒரு வாழ்க்கை, அதுவும் அழகான ஏரி, காடு ஆகியவற்றின் பின்னணியில்!

இதற்குப் பிரதியுபகாரமாக, அந்த நகரவாசிகள் தங்கள் வாழ்க்கையையும் பணியையும் பற்றிய ரகசியத்தைக் காப்பாற்றுமாறு கட்டளையிடப்பட்டது. ரஷ்யாவின் அணு ஆயுதங்களுக்கு வேண்டிய எல்லாத் தனிமங்களும் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த நகரத்தில், அதன் நகரவாசிகள் முன்பு செய்துகொண்ட ஒப்பந்தத்தை இன்றுவரை கடமை தவறாமல் பின்பற்றுகிறார்கள்.

ஆக, அஜெர்ஸ்க்கில் வாழ்வது என்பதே தனி கவுரவம்! “அறிவுஜீவிகளின் நகரம்” என்றே அந்த நகரவாசிகள் தங்கள் நகரத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால், ‘எல்லாவற்றிலும் சிறந்த விஷயங்கள்’ அவர்களுக்குத்தானே கிடைக்கின்றன! மூடுண்ட ஒரு நகரத்தில் இருப்பதென்பது பாதுகாப்பானது மட்டுமல்லாமல், பொருளாதார நிலைத்தன்மைக்கும் வசதியானது. தங்கள் குழந்தைகளுக்கு வெற்றிகரமான எதிர்காலத்துக்கான வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று அஜெர்ஸ்க் நகரவாசிகள் உறுதியாக நம்புகிறார்கள்.

ஆனால், அவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஆபத்தான பின்விளைவுகளும் இருக்கின்றன. அந்த நகரவாசிகள், அவர்களின் குழந்தைகளுடைய உடலில் எந்த அளவுக்குக் கதிர்வீச்சு தாக்கியிருக்கிறது என்பதையும் அதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகளையும் பற்றிய தகவல்களை சோவியத் ஒன்றியத்தின் அரசியல் தலைமையும் அறிவியல் தலைமையும் மூடிமறைத்தே வந்திருக்கின்றன.

மரண ஏரி

ஆரம்பத்திலிருந்தே 'மாயக்' அணுஉலை அருகே வசிக்கும் மக்கள் மிகவும் ஆபத்தான சூழலிலேயே வாழ்ந்தார்கள். 1940-களின் பிற்பகுதியில் தொடங்கி அங்குள்ள மக்கள் நோய்வாய்ப்படவும் இறக்கவும் ஆரம்பித்தார்கள். கதிரியக்கத்துக்கு நீண்ட காலம் ஆட்பட்டதன் விளைவுதான் இது.

ரகசியத்தை மிகக் கடுமையாக அதிகார மட்டம் காத்துவருகிறது. ஆகவே, எத்தனை பேர் இறந்துபோனார்கள், எத்தனை பேர் நோய்வாய்ப்பட்டார்கள் என்பது குறித்த துல்லியமான தரவுகள் நமக்குக் கிடைப்பதில்லை. அஜெர்ஸ்க்கின் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்ட பிஞ்சு உயிர்கள், இளைஞர்களின் கல்லறைகள்தான் சோவியத் ஒன்றியம் புதைக்க முயன்ற உண்மையின் சாட்சியங்கள்!

ஏராளமான அணுஉலை விபத்துக்களில் அந்த நகரவாசிகள் உயிரிழந்திருக்கிறார்கள். செர்னோபில் அணுஉலை விபத்துக்கு முன்பு நிகழ்ந்தவற்றில் மிக மோசமானதாகக் கருதப்படும் கிஷ்டிம் பேரழிவு 1957-ல் ஏற்பட்டது. எனினும் எல்லாவற்றையும் பெரும் ரகசியமாகவே காத்துவந்தார்கள் சோவியத்காரர்கள்.

‘மாயக்' அணுஉலை நிர்வாகம் அணுஉலைக் கழிவுகளை ஏரிகளிலும் ஆறுகளிலும் கொட்டுகிறது. ஓப் நதியின் வழியாக அந்தக் கழிவுகள் ஓடி ஆர்க்டிக் பெருங்கடலில் கலக்கின்றன. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ‘மாயக்' அணுஉலை தன் சுற்றுச்சூழலில் கொட்டிய கதிரியக்கக் கழிவுகளின் அளவு எவ்வளவு தெரியுமா? 20 கோடி க்யூரிகள் (க்யூரி என்பது கதிர்வீச்சை அளவிடுவதற்கான ஒரு அளவீடு. பியர் க்யூரி, மேரி க்யூரியின் நினைவாக வைக்கப்பட்ட பெயர்). செர்னோபிலைவிட நான்கு மடங்கு அதிக கதிர்வீச்சை ‘மாயக்' வெளிப்படுத்தியிருந்தாலும் அதிகாரத் தரப்பு, இதை எப்போதும் மறுத்தே வந்திருக்கிறது.

russia_2961544a.png

கதிரியக்கக் கழிவுகளைக் கொட்டுவது இன்னமும் தொடர்கிறது என்றே அஜெர்ஸ்க் நகரவாசிகள் தெரிவிக்கிறார்கள். அருகில் உள்ள ஏரிகளில் ஒன்று புளூட்டோனியத்தால் கடுமையாக மாசுபட்டிருப்பதால் அந்த ஏரிக்கு ‘மரண ஏரி’ என்றும் ‘புளுட்டோனியம் ஏரி’ என்றும் உள்ளூர்வாசிகள் பெயரிட்டிருக்கிறார்கள். அந்த ஏரியின் கதிரியக்கச் செறிவு 12 கோடி க்யூரிகளுக்கும் அதிகம் என்று கருதப்படுகிறது. செர்னோபில் வெளிப்படுத்திய கதிர்வீச்சைவிட இரண்டரை மடங்கு அதிகம் இது.

வெளியேற விருப்பாதவர்கள்

அஜெர்ஸ்கிலிருந்து 20 நிமிடங்கள் தொலைவில் இருக்கும் ஒரு கிராமத்தில் உள்ள சதுக்கத்தில் ஒரு கடிகாரம் தொங்குகிறது. உள்ளூர் நேரத்தையும் காற்றில் உள்ள கதிரியக்கச் செறிவையும் அந்தக் கடிகாரம் அடுத்தடுத்துக் காட்டிக்கொண்டே இருக்கிறது. செர்னோபில் அணு உலை விபத்தின்போது கதிரியக்கத்தால் அருகிலிருந்த உக்ரைன் மக்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டார்களோ அதைவிட ஐந்து மடங்கு அதிகக் கதிர்வீச்சால் அஜெர்ஸ்க் நகரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வசிக்கும் 5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

மர்ம சொர்க்கம்

பெரும்பாலான அஜெர்ஸ்க்வாசிகளைப் பொறுத்தவரை நகரத்தைச் சுற்றி இடப்பட்டிருக்கும் கம்பிவேலி என்பது தங்களின் விருப்பத்தை மீறி அங்கே அடைத்துவைப்பதற்கானது அல்ல; தங்கள் சொர்க்க பூமியில் அந்நியர் யாரும் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான். ‘எதிரி’களான அந்நியர்களிடமிருந்து அவர்களைக் காப்பதற்கானதுதான் அந்த வேலி. நகரத்தின் நிலஅடையாளங்களிலிருந்தும் நகரவாசிகளின் மனஅமைப்பிலிருந்தும் நீக்கவே முடியாத ஒரு அங்கமாக அந்த வேலி ஆகியிருக்கிறது.

தங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றுகொண்டிருக்க்கும் ‘நகரம்-40'-ல் அந்த மக்கள் எப்படித்தான் தொடர்ந்து வாழ்கிறார்கள் என்பதை வெளியாட்களால் அவ்வளவு எளிதாகப் புரிந்துகொள்ள முடியாது. தங்களைப் பற்றியும் தங்கள் வாழ்க்கையைப் பற்றியும் வெளியுலகம் என்ன நினைக்கிறது என்பதைப் பற்றி அஜெர்ஸ்க் நகரவாசிகள் பொருட்படுத்துவதில்லை என்று உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் சொல்கிறார்.

“எங்களை அமைதியாகவும், தனியாகவும் வாழ விடுங்கள்” என்றே அந்த நகரவாசிகள் நினைக்கிறார்கள் என்று அந்தப் பத்திரிகையாளர் கூறுகிறார். அவரும்கூட அதையேதான் நினைக்கிறார். ‘கம்பிவேலியிட்ட சொர்க்க'த்தில் சந்தோஷமாக வாழ்கிறார்கள் அஜெர்ஸ்க் நகரவாசிகள்!

கட்டுரையாளர், கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட ‘City 40’ என்ற முழுநீள ஆவணப் படத்தின் இயக்குநர்-தயாரிப்பாளர்.

‘தி கார்டியன்’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை

tamil.thehindu

  • தொடங்கியவர்

“நாக்கால் தட்டச்சு செய்பவர்” - காணொளி

முடமானாலும், முடங்கி விடாமல் தன்னம்பிக்கையோடு பயணிக்கும் இளம் பெண்ணின் கதை. நாக்கால் திரைக்கதை எழுதுபவர், சிறந்த திரைக்கதை எழுத்தாளராக விருப்பம். உடலளவில் முடங்கினாலும் உள்ளத்தளவில் இலட்சியம் நோக்கி பயணிக்கும் அவர் யார்? இந்த காணொளியில் பாருங்கள்

BBC

  • தொடங்கியவர்

டெல்லி டூ ஆப்கானிஸ்தான்... ஒரு இளைஞனின் 'திக் திக்' பயணம்!

AF_3.jpgஸ்டீவ்ஸ் இராட்ரிக்ஸ். விகடனின் முன்னாள் மாணவப் புகைப்பட பத்திரிக்கையாளர். சமீபத்தில் ஆப்கானிஸ்தான் சென்ற அவர், தன் பயண அனுபவத்தை நம் வாசகர்களுக்காக பகிர்ந்து கொள்கிறார்.

“ஆப்கானிஸ்தான் குறித்து ஒரு டாக்குமென்டரி  எடுக்க சமீபத்தில்  ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதை உடனடியாக செயல்படுத்தவேண்டும் என்று சொல்லப்பட்டது. பெரும் சந்தோஷம். டெல்லியில் இருந்து ஆப்கானிஸ்தான் செல்வதற்கு டிக்கெட்டுகள்  தயாராக இருந்தன. எனக்கு விமானப்பயணம் புதிதில்லை என்றாலும், ஆப்கானிஸ்தான் போன்ற நாட்டுக்கு செல்வது மகிழ்ச்சியானதாக இருந்தது. காரணம், என் வாழ்க்கையில் நான் அங்கு ஒருமுறையாவது செல்வேன் என நினைத்துக் கூட பார்த்ததில்லை. அதனால், குஷியாகவே விமானம் ஏறினேன். ஆனால் விமானம் ஏறிய பின்னர் ஒரு வகையான பதற்றம் தொற்றிக் கொண்டது.

அனுதினமும்  குண்டுவெடிப்பு நடப்பதாக வரும் செய்திகள் நினைவுக்கு வந்து போனது. வடிவேலு காமெடி எல்லாம் மண்டைக்குள் கரகரவென ஓடியது. இரண்டு மணி நேர விமானப் பயணத்துக்கு பிறகு, ஒரு வழியாக, ஆப்கானிஸ்தானில் விமானம் தரையிறங்கியது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தேன். விமான நிலையம் இன்னும் திகில் கூட்டியது. அதிக ஆள் அரவமெல்லாம் இல்லை. விமான நிலையத்தில் வரவேற்பவர்கள், வழியனுப்புபவர்கள் இருக்கும் பகுதி மிகத் தொலைவில் இருந்தது. இந்தியாவிலோ, ஐரோப்பாவிலோ இது போன்ற விமான நிலையத்தை பார்த்ததில்லை என்பதால் கொஞ்சம் திகில் கூடியது. ஒரு வழியாக கிட்டத்தட்ட 600 -700 மீட்டர் தூரம் நடந்த பிறகு வரவேற்பறை இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தேன். அவர்களை சந்தித்ததும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனேன்.

கார் மூலமாக தங்க வேண்டிய இடத்துக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது வழியெங்கும் விரவியிருந்த ஆப்கானிஸ்தானின் அழகு மனதைக் கொள்ளை கொண்டது. மணல் வீடுகள் அங்கே எக்கச்சக்கமாக இருந்தன. மணல் வீடுகளில் ஆங்காங்கே ஓட்டைகளும் இருந்தன. விசாரித்து பார்த்தபோது போர், துப்பாக்கிச் சூடு, குண்டு வீச்சு  போன்றவற்றின் காரணமாக பலர் சிமெண்ட் வீடுகளே கட்டுவதில்லை; மணல் வீடுகள்தான் கட்டுகின்றனர் என்பது புரிந்தது. வீடுகளின் மீது சர்வ சாதாரண துப்பாக்கிச் சூடு நடக்கும் என்றார்கள். நொந்து கொண்டே கிளம்பினேன்.

தங்க வேண்டிய இடத்துக்கு வந்த பிறகு முதலில் ஆடையை மாற்ற வேண்டும் என்றார்கள். அப்போது தான் அங்கிருந்தவர்கள் ஆடையை கவனித்தேன். நல்ல குர்தாவும், நான்கைந்து பேர் உள்ளே புகுந்துகொள்ளும் அளவுக்கு பெரிய  தொள தொள பேண்ட்டும் அணிந்திருந்தார்கள். என்னையும் அதேபோல ஒரு ஆடை அணிந்துகொள்ள சொல்லி அறிவுறுத்தினார்கள். உடனடியாக அளவுகள் எடுக்கப்பட்டன. மறுநாளே உடை தயாராகி  கைக்கு வந்தது.

AF_2.jpgவேலை நிமித்தம் அங்கே தங்கியிருந்த நாட்களில் கிடைத்த அனுபவங்கள் சுவாரஸ்யமானவை. இந்தியாவில் நாம் எந்தளவுக்கு சுதந்திரத்தை அனுபவிக்க முடிகிறது என்பதை உணர முடிந்தது. அங்கே பெண்கள், குழந்தைகள் அதிகம் பாதிப்புக்குள்ளாவதை கண்கூடாக காண முடிந்தது. ஒரு முறை எங்கள் குழு கார் பயணத்தில் இருந்தது. ஒரு ஊரில் கிராமத்தலைவர்கள் சிலரும் பேச வேண்டிய சூழ்நிலை. ஆண்கள் நாங்கள் அனைவரும் காரில் இருந்து கீழே இறங்கிப்போய் பேசினோம்.

எங்கள் குழுவில் இருந்த பெண் ஒருவர் ஹிஸாப் அணிந்து காருக்குள் அப்படியே உட்கார்ந்தார். ஏன் வெளியே வரவில்லை என அருகில் இருந்தவர்களில் கேட்டபோது கிடைத்த பதில் அதிர்ச்சிகரமாக  இருந்தது. அங்கே சில இடங்களில் ஆண்கள் முன்பு பெண்கள் வெளியில் வரவே கூடாதாம். குழந்தைத் திருமணம் அங்கே மிக அதிகம். பெண் சுதந்திரம் என்பது கொஞ்சம் கூட இல்லை. அவர்கள் தனியாக சம்பாதிக்கும் வாய்ப்புகளே அங்கே இல்லை. யாரும் பெண்களை, ஆண்கள் வேலை செய்யும் இடங்களில் சேர்த்துக் கொள்வதில்லை. குழந்தைகளின் நிலை இன்னும் மோசமாக இருந்தது. ஊரில் பல பகுதிகளிலும், பாலங்களுக்கு அடியிலும்  அனாதையாக சிறுவர்கள் திரிகிறார்கள். பல இடங்களில் உள்நாட்டு, வெளிநாட்டு என்.ஜி.ஓக்கள் தான் அங்கே 'சைல்ட் சேவ் சென்டர்' மூலமாக குழந்தைகளுக்கு உணவும், கல்வியும் அளித்து வருகிறார்கள். பல குழந்தைகளின் பெற்றோர்கள் இருவரும் தீவிரவாதத் தாக்குதல்களில் இறந்துவிட்டனர் என்பதை அங்கே குழந்தைகளிடம் விசாரித்தபோது தெரிந்து கொண்டேன்.

ஆப்கானிஸ்தானில் மது கிடைப்பது என்பது மிகக் கடினம். தடை செய்யப்பட்டிருக்கிறது. இதனாலோ என்னவோ போதை மருந்துகள் எளிதாக கிடைக்கின்றன. ரோட்டோரங்களில் சர்வ சாதாரணமாக ஹெராயின், ஓபியம் போன்றவை கிடைக்கின்றன. வெட்ட வெளிகளில் சர்வசாதாரணமான போதை மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். கல்வியறிவு என்பது அங்கே  மிகவும் மோசமான அளவில் இருக்கிறது. ஆயிரக்கணக்கிலான  மலாலாக்களின் தேவை இங்கு அவசியம், என்பதை அங்கே புரிந்து கொள்ள முடிந்தது.  

AF_1.jpgஆப்கானிஸ்தானில் உணவுக் கலாசாரம் அருமையாக இருந்தது. பெரும்பாலும் கடினமான ஒரு ரொட்டியும், கபாபும்தான் பெரும்பாலான இடங்களில் எளிதாக கிடைக்கிறது. ஆப்கானிஸ்தான் பார்பீக் சிக்கன், ஆப்கானிஸ்தான் ஸ்பெஷல் பெப்பர் மட்டன் போன்றவை அங்கே மிகவும் பிரபலமான அசைவ உணவுகள். உணவின் தரமும், சுவையும் நன்றாக இருந்ததை உணர முடிந்தது.

நாங்கள் காபூலில் தங்கியிருந்தோம். வேலை காரணமாக ஜலாலாபாத் போகவேண்டிய சூழ்நிலை வந்தது. என்னை சுற்றியிருந்தவர்கள் அந்த பயணம் குறித்து ரொம்பவும் கவலைப்பட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். காபூல் - ஜலாலாபாத் பயணம் குறித்து கூகுளில் தேடியபோது, அதிர்ச்சிகரமான  தகவல்கள் கிடைத்தன. நீண்ட நெடிய அந்தப் பயணப்பாதையில் இறப்பு விகிதம் 9.5/10. உலகின் மிக மோசமான கொடூரமான பயணம் என்பது  இந்த சாலையில் பயணம் செய்வது தான் என்பது புரிந்து கொண்டேன்.

தாலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் அங்கே மிக அதிகம். அவர்கள் உள்நாட்டு மக்களை உள்நோக்கத்துடன் தாக்குவதில்லை. ஆனால், ஐ.நாவின் வாகனங்கள் போன்றவை வந்தால் தாக்காமல் விடுவதே கிடையாது. அந்த பயணம் குறித்த அச்சம் என்னிடம் அதிகமாகவே இருந்தது. உயிருடன் சென்று திரும்பி வந்தால் போதும் என நினைத்தேன். இன்னொரு பக்கம் இப்படியொரு த்ரில் பயணம் செய்துதான் பார்க்க வேண்டும். நம் வாழ்நாளில் கிடைக்காத அரிய வாய்ப்பு இது என்றொரு எண்ணமும் எழுந்தது. அந்த சாலைப் பயணம் ஆரம்பமானது.

மலைகள் மீது ஏறி  இறங்கிய அந்த சாலை பயணம் மிகவும் ஆபத்தானது என ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டேன். சாலைகள் மிக மோசமாக இருந்தன. ஆனால் அந்த சாலையில் ஆப்கானிஸ்தானின் அழகை ரசித்தவாறே பயணிக்கும் போது, இது தான் உலகிலேயே அழகான இடமோ என்ற எண்ணமும் தோன்றியது. அந்த அழகை நான் வெகுவாக ரசித்து கொண்டிருந்தேன். அப்போது தான் எங்களது அருகில் ஐ.நாவின் வாகனம் ஒன்று வந்தது. எல்லோரும் கலவரமானார்கள். எங்கள் காரில் இருந்தவர்கள் வண்டியை நிறுத்திவிட்டு, சில நேரம் நிற்கலாமா, இல்லை சென்றுவிடலாமா என தீவிரமாக விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். ஒருவழியாக எங்களை விட்டு ஐநா வாகனம் சென்றது. அந்த பயணத்தில் விபத்துகள், துப்பாக்கிச் சூடு எதுவும் நடக்காமல் நல்லபடியாக சென்று வந்தோம்.

AF_4.jpg

ஊடகங்கள் தெரிவிப்பதுபோல அங்கே தினம் தினம் துப்பாக்கிச் சூடுகள் நடப்பது கிடையாது. மக்கள் இயல்பாக வாழ்கிறார்கள். ஆனால், எப்போது வேண்டுமானாலும் துப்பாக்கிச் சூடு நேரலாம் என்ற அச்சம் அவர்களிடம்  இருப்பதை அவர்களிடம் உரையாடியபோது, உணர முடிந்தது. ஆனால் உயிர் குறித்து அவர்கள் பெரும் கவலையெல்லாம் கொள்வதில்லை. அங்கே, தெருக்களில் ரோட்டோரங்களில் அரசாங்கத்தில் மிலிட்டரி வாகனங்கள் துப்பாக்கி லோடு ஏற்றி ரோந்திலேயே இருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் வந்த வேலை முடிந்தபிறகு  மீண்டும் டெல்லி கிளம்ப வேண்டிய தருணம் வந்தது.

ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில், பயங்கரமாக சோதனை செய்தார்கள். என் வாழ்நாளை இப்படியொரு சோதனையை நான் பார்த்ததே இல்லை. ஒரே பரிசோதனையை 18க்கும் அதிகமான இடங்களில் செய்தார்கள். ஒரு இடத்தில் எனது கைப்பைகளை எல்லாம் வாங்கி வைத்து கொண்டு, தூரமாக தனியாக நிற்கச் சொன்னார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த சமயத்தில் துணியால் மூடப்பட்ட கூண்டு மாதிரி ஒன்றிருந்ததை  ஒரு அதிகாரி திறந்து விட, பெரிய ஜெர்மன் நாய் ஒன்று வந்து எனது உடைமைகளை சோதித்தது. அந்த நாயை பார்த்த மாத்திரமே நான் பத்து அடி பின்னால் சென்றுவிட்டேன்.

பலத்த செக் அப்புக்கு பிறகு ஒருவழியாக விமானம் ஏறினேன். ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்திருந்தது. எந்த அளவுக்கு மக்கள் மோசமான ஒரு சூழ்நிலையில் இருக்கிறார்கள், என்பதை உணர முடிந்தது. அழகான வளமுள்ள ஒரு நாட்டில் தீவிரவாதம், மக்களின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட்டிருக்கிறது என்பதை பற்றிய சிந்தனை மண்டையில் ஓடிக்கொண்டே இருக்க... டெல்லி வந்துவிட்டது விமானம்.

டெல்லியில் இருந்து பிறகு ஃபிளைட் பிடித்து சென்னை வந்தேன். நன்றாக உறங்கி எழுந்து மறுநாள் வீட்டின் முன் வந்து விழுந்திருந்த செய்தித்தாளை பார்த்தேன். 'ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச் சூட்டுக்கு 28 பேர் பலி' என செய்தித்தாளின் ஒரு ஓரத்தில் பெட்டிச் செய்தி இருந்தது.

செய்தித்தாளை மடித்துவைத்துவிட்டு மீண்டும் என் ஆப்கானிஸ்தான் பயணத்தை மனதிற்குள் பதற்றத்துடன் ஓடவிட்டேன்.

- பு.விவேக் ஆனந்த்
படங்கள்:
ஸ்டீவ்ஸ் இராட்ரிக்ஸ்

ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்ட  A RAY OF HOPE டாக்குமெண்டரி வீடியோவை காண..,

vikatan

  • தொடங்கியவர்

பொம்மைகளைக் கொண்டாடுவோம்

 

toy2_2957126f.jpg
 

பொம்மைகளைப் பிடிக்காத குழந்தைகள் யாரும் உண்டா? தூங்கும்போதுகூட தங்களது பொம்மைகளை விட்டுப் பிரிய மனமில்லாத குழந்தைகள் இருக்கிறார்கள். இதை வாசிக்கும்போது உங்களுக்குப் பிடித்த பொம்மைகள் ஞாபகம் வருகிறதா?

பழங்காலத்தில் மரம், களிமண், தோல், துணி மற்றும் காகிதத்தாலான பொம்மைகள் பிரபலமாக இருந்தன. நம்மூர் தஞ்சாவூர் பொம்மைகள் இதற்கு சிறந்த உதாரணம். இவை சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காதவை. ஆனால், இன்றைய குழந்தைகள் விளையாட பிளாஸ்டிக்கால் ஆன எலக்ட்ரானிக் பொம்மைகளே அதிகம் கிடைக்கின்றன. இந்தப் பொம்மைகள் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பவை.

உங்கள் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டியெல்லாம் மரப்பாச்சிகள், களிமண் பொம்மைகள், தோல் பாவைகள் என விதவிதமாகப் பொம்மைகளை வைத்து விளையாண்டிருப்பார்கள். சிலசமயம் களிமண்ணைப் பிசைந்து பொம்மைகளை அவர்களே உருவாக்கியதும் உண்டு. அந்தப் பொம்மைகள் இடத்தைத் தற்போது பார்பி போன்ற பொம்மைகள் பிடித்துவிட்டன.

பொம்மை தினங்கள்

உலகம் முழுக்க குழந்தைப் பருவத்தில் முக்கிய இடம் வகிக்கும் பொம்மைகளைக் கொண்டாட பிரத்யேக தினங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை பொம்மைகள் தினமாக அமெரிக்கா போன்ற சில நாடுகளில் கொண்டாடுகிறார்கள். இந்த வருடம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 7) பொம்மைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இதைப்போல, ‘உலக பொம்மை தினம்’ ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 2-வது சனிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பார்பி பொம்மைகள், கரடி பொம்மைகள், கார்ட்டூன் பாத்திர பொம்மைகள், சாதனை மனிதர்கள் உள்ளிட்ட பிரபலமான பொம்மைகள் அதிகம் விற்பனையாகும். பெரியவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது உறவினர்கள், நண்பர்களின் குழந்தைகளுக்கும் பொம்மைகளைப் பரிசளிப்பார்கள். குழந்தைகளும் தங்களது பொம்மைகள் சேகரிப்பில் ஒரு சிலவற்றைப் பொம்மைகள் இல்லாத குழந்தைகளுக்குப் பரிசளித்து மகிழ்வார்கள். இந்த உலக பொம்மை தினம் 1986-ம் ஆண்டு தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜப்பான் பொம்மைத் திருவிழா

ஜப்பான் நாடு பொம்மைகளைக் கொண்டாடும் விதமாக, மார்ச் 3 அன்று பொம்மைகள் திருவிழாவைக் கடைப்பிடிக்கிறது. ஜப்பானில் பாரம்பரியமாக இந்தத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தக் காலத்தில் குடும்ப வளர்ச்சிக்காக உழைத்த சிறுமிகளின் உடல் ஆரோக்கியத்துக்காகவும், அவர்களுக்கு நன்றி சொல்லவும் இந்த நாளைக் கடைப்பிடித்தார்கள். நாளடைவில் அந்தத் தினம் பொம்மைத் திருவிழாவாக மாறிப் போனது. ‘ஹினா-மட்சுரி’ (Hina-matsuri) என்ற பெயரில் நடந்து வந்த இந்த விழாவைத் தற்போது ‘சிறுமிகள் தினம்’ என்று ஜப்பானியர்கள் அழைக்கிறார்கள்.

toy3_2957127a.png

உலக பொம்மலாட்ட தினம்

ஜப்பானின் ஹினா-மட்சுரி தினத்தைப் போல இந்தியாவில் நவராத்திரி கொலுவை முன்னிட்டு, விதவிதமான பொம்மைகளை அடுக்கி கொண்டாடுவதைப் பார்த்திருப்பீர்கள். களிமண்ணால் செய்யப்பட்ட இந்தப் பொம்மைகள் அடுக்கப்பட்ட காட்சி கண்களுக்கு விருந்தாக இருக்கும்.

பொம்மைகளை நூலில் கட்டி கதை சொல்லும் பாரம்பரிய கலை நம் நாட்டில் வழக்கில் உள்ளது. இலங்கை, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் பிரபலமான இந்தக் கலையை, பொம்மலாட்டக்கலை எனச் சொல்கிறார்கள். மரம், தோல், துணி இவற்றாலான பொம்மைகளை நூலில் கட்டி, திரைக்கு மறைவில் இயக்குவதன் மூலம் கதை சொல்லப்படுகிறது.

கதைகள், பாட்டு, இதிகாசங்கள் மட்டுமன்றி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித்தரும் கலையாகவும் இந்தப் பொம்மலாட்டக்கலை இருந்திருக்கிறது. தற்போது அழிந்து வரும் இக்கலையின் பெருமையை உணர ‘உலக பொம்மலாட்ட தினம்’ மார்ச் 21 அன்று கடைப்பிடிக்கப் படுகிறது.

tamil.thehindu

  • தொடங்கியவர்

டபுள் டபுளாய்...

 

p102.jpg

கேரளாவின் மலப்புரம் அருகே உள்ளது கோதினி என்ற கிராமம். மொத்தம் 20,000 பேர் வசிக்கும் இந்தக் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் வாழ்கின்றனர். வருடாவருடம் இரட்டைக் குழந்தைகளின் பிறப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக உலக அளவிலான மீடியாவின் கவனம் இந்தக் கிராமத்தின் மீது பதிந்துள்ளது. இந்தியாவில் பொதுவாக இரட்டைக் குழந்தைகள் பிறப்பது அபூர்வமான விஷயமாக இருக்கும்போது, இங்கே அதிக அளவிலான இரட்டைக் குழந்தைகள் பிறப்பது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. உணவுப் பழக்கவழக்கம் அல்லது மரபணுக்கள் காரணமாக இங்கு இரட்டையர் பிறப்பு அதிகமாக உள்ளதாக நம்பப்பட்டாலும், உறுதியான காரணம் இதுவரைக் கண்டறியப்படவில்லை.

 இங்குள்ள இரட்டையர்களை ஆய்வு செய்வதற்கும், அவர்களைப் பற்றி செய்திகளை வெளியிடவும் இந்தக் கிராமத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத எண்ணற்ற இடைத்தரகர்கள் பெருகிவிட்டனர். பணத்திற்கு ஆசைப்பட்டு இரட்டைக் குழந்தைகளின் தனிமனித சுதந்திரத்திற்கு இடையூறு செய்வதால், கடந்த ஆண்டின் இறுதியில் இங்கு ‘இரட்டையர் மற்றும் உறவினர் சங்கம்’ தொடங்கப்பட்டுள்ளது!

vikatan

  • தொடங்கியவர்

 

நல்லூரில் திருவிழா பாடல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.