Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

இன்று அன்று | 1917 டிசம்பர் 4: போரின் அதிர்வுகள்!

 
indru_andru_2644948f.jpg
 

முதல் உலகப் போரினால் நேரடியாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது. காயமடைந்தவர்கள், உடலுறுப்புகளை இழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கில்லாதது. போரில் பங்குபெற்ற வீரர்கள் சந்தித்த இன்னொரு பாதிப்பு ஒன்று உண்டு.

1917 டிசம்பர் 4-ல் ஸ்காட்லாந்தில் உள்ள க்ரெய்க்லாக்ஹார்ட் போர் மருத்துவமனையில் நடத்திய ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார் பிரபல உளவியல் நிபுணர் டபிள்யூ.ஹெச். ரிவர்ஸ். தங்கள் அருகில் வெடித்த வெடிகுண்டுகள் தந்த அதிர்ச்சி காரணமாக மனநிலை பாதிக்கப்பட்ட வீரர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு அது.

அந்த பாதிப்புக்கு ‘ஷெல் ஷாக்’ என்று அழைக்கப்பட்டது. பிரிட்டன் ராணுவத்தில் மட்டும் சுமார் 80,000 பேருக்கு இந்த பாதிப்பு இருந்தது. இவர்களுக்குத் தகுந்த சிகிச்சை யளித்து மீண்டும் பணிக்கு அனுப்பும் பணி டபிள்யூ.ஹெச். ரிவர்ஸ் உள்ளிட்ட மருத்துவர் களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

எனினும், ஐந்தில் ஒரு பகுதி வீரர்கள் மட்டும்தான் அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. - சரித்திரன்.

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-1917-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7948347.ece

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
ஆரம்பக் காலத்தில் வினோதமாக காணப்பட்ட மருத்துவ முறையின் அரிய புகைப்படங்கள்!!!
 

10-1436503703-18creepyvintagemedicalphot

 1885ஆம் ஆண்டு காலகட்டத்தில், மயக்க மருந்துக் கொடுத்து இவ்வாறு தான் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாம்.

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12341119_1032332716825518_21434821521590

 

டிச.5: நெஞ்சில் நிறைந்த நெல்சன் மண்டேலா நினைவு தின சிறப்பு பகிர்வு!

நம் நெஞ்சத்தில் நிலைத்து இருக்கும் நெல்சன் மண்டேலா சிறுவயதில் கழுதை, மீது சவாரி செய்துகொண்டு இருந்தார் மண்டேலா. அப்போது கழுதை அவரைக் கீழே தள்ளிவிட்டது. மண்டேலாவின் உடலில் முட்கள் குத்தி, ரத்தம் கசிந்தது. சுற்றி இருந்தவர்கள் கிண்டல்செய்து சிரித்தார்கள். ஒருவர் தோற்றால், மற்றவர்கள் எப்படிக் காயப்படுத்துவார்கள் என்பதை அப்போது உணர்ந்தார். நாம் அப்படி யாரையும் வருத்தப்படுத்தக் கூடாது என்று உறுதி எடுத்தார். அவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 10 பாடங்கள்.....

வாழ்க்கையைக் கொண்டாடு!

சிறுவயதில் தேனடை சேகரித்தல், மாடு மேய்க்கும்போது... சக நண்பர்களுடன் குத்துச்சண்டை விளையாட்டு என வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார் மண்டேலா. அவரது 70-வது வயதில் நடைபெற்ற தேர்தலில் வென்றபோது, ஜாலியாக ஒரு டான்ஸ் போட்டார்.

தோல்விக்குத் துவளாதே!

மூன்று முறை வழக்கறிஞர் ஆக நடந்த தேர்வில் தோற்றார். பெரிதும் முயன்று, அட்டர்னி ஆனார். தோல்விகள் துரத்திய போதும் ஆப்ரிக்க பூர்வக் குடிகளுக்கு இலவச சட்ட உதவி வழங்கி, புகழ்பெற்றார்.

கற்றுக்கொண்டே இரு!

தனிமைச் சிறையில் 27 ஆண்டுகள் இருந்த காலத்தில், அவரைப் பார்க்க வரும் மனைவி வின்னி மூலம் உலக நடப்புகளைக் கேட்டுத் தெரிந்துகொள்வார். ஷேக்ஸ்பியரின் எல்லா நூல்களையும், சர்ச்சிலின் உலகப் போர் நினைவலைகளையும் சிறையில் இருந்த சமயம் படித்து முடித்தார்.

ஊருக்கு உழைத்திடு!

மேற்படிப்புப் படிக்க, தென் ஆப்ரிக்காவின் நகர்ப்புறம் நோக்கி வந்தார் மண்டேலா. அரசரின் மகனான அவர் மீதே எச்சில் துப்பினார்கள். கடைக்காரர்கள் பொருட்களைத் தர மறுத்தார்கள். நன்கு படித்திருந்தும் ஒரு முட்டாளைப் போல அவரை வெள்ளையர்கள் பார்த்தார்கள். இவற்றைத் 'தன்னுடைய சிக்கல்’ என்று எண்ணாமல், 'தன் சக மக்களின் சிக்கல்’ என்று எல்லாருக்காகவும் போராடினார்.

அன்பே அழகானது!

ஜனாதிபதியாக இருந்தபோது மண்டேலா, உலகக் கோப்பை ரக்பி கால்பந்து இறுதிப் போட்டியைப் பார்வையிட வந்தார். பெரும்பான்மையினர் வெள்ளையின வீரர்கள். உற்சாகமாக தன் நாட்டின் அணியை ஊக்கப்படுத்தினார். கறுப்பின மக்கள் என்றால், வெள்ளையர்கள் இல்லாத அணியையே ஆதரிப்பார்கள் என்ற எண்ணத்தைத் தனது அன்பால் உடைத்தார். போட்டியைக் காண வந்திருந்த 60 ஆயிரம் மக்களும் எழுந்து நின்று அவரின் பெயரை உச்சரித்தார்கள்.

தன்னலத்தைத் தவிர்!

வாய்ப்பு இருந்தும் ஜனாதிபதி பதவியை இன்னொரு முறை ஏற்காமல் கம்பீரமாக விலகினார். அவரது சொந்த மகன் எய்ட்ஸ் நோயால் இறந்துவிட, அந்த வலியைத் தாங்கிக்கொண்டு, எய்ட்ஸ் விழிப்பு உணர்வுக்காக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தார் மண்டேலா.

வலிகளை வெல்!

50 வயதுக்கு மேலே வந்த காசநோய், இறுதி வரை மண்டேலாவுக்கு இருந்தது. சிறையில் இருந்தபோது, சுண்ணாம்புக் கல் சுரங்கங்களில் வேலைபார்த்தது, கண் பார்வையைப் பாதித்தது. புற்றுநோயும் வாட்டியது. 'நான், கேன்சரால் வெல்லப் பட்டாலும் சொர்க்கம் சென்று, அங்கே நம் கட்சி அலுவலகத்தில் என் உறுப்பினர் அட்டையைப் புதுப்பித்துக்கொள்வேன்!' என்று சிரிப்புடன் சொன்னார்.

வெறுப்பை விடு!

''எதிரிகளை வெல்ல ,அவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்'' என்பார் மண்டேலா. அவர் விடுதலையானதும், நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன. தொலைக்காட்சியில் தோன்றி, மக்களை அமைதிகாக்கச் செய்தார். அமைதியாகத் தேர்தலை நடத்தி, எல்லாருக்குமான அரசை அமைத்தார்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

கறுப்பின மக்கள் அதிகமாக இருந்தபோதும் தனது அமைச்சரவையில் வெள்ளையர்கள், இஸ்லாமியர்கள், இந்தியர்கள், லிபரல்கள் என்று எல்லாரையும் இணைத்துக்கொண்டார். 'நான் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தையும் எதிர்க்கிறேன்; கறுப்பின ஆதிக்கத்தையும் நிராகரிக்கிறேன்' என்று உறுதியாகச் சொன்னார்.

இன்று புதிதாகப் பிறந்தோம்!

27 வருட சிறை வாழ்க்கைக்குப் பின் வெளியே வந்ததை எப்படிப் பார்த்தார் தெரியுமா அவர்? 'நான் சிறைக் கதவுகளைக் கடந்து, இறுதி முறையாக நடந்தேன். 70 வயதில் எல்லாம் புதிதாக தொடங்குவதாக உணர்கிறேன். என்னுடைய 10,000 நாட்கள் சிறைவாசம் முடிந்தது. இன்று புதிதாகப் பிறந்திருக்கிறேன்.'

vikatan.com

  • தொடங்கியவர்

12241771_950734081641953_245894421814059

Mickey Mouse, Donald Duck இன்னும் பல காலத்தால் அழியாத கார்ட்டூன் பாத்திரங்களைப் படைத்த ஓவியர் வோல்ட் டிஸ்னியின் பிறந்த நாள் இன்று.

  • தொடங்கியவர்

டாக்டர்: உங்களுக்கு பார்த்த சிகிச்சைக்குத் தாத்தாவிடம் பணம் வாங்கிக்கச் சொல்கிறீர்களே ஏன்?
          நோயாளி: நீங்கதானே டாக்டர் பரம்பரை நோய் என்றீர்கள்?


ஒருத்தி: உன்னிடம் 66 புடவைகள் இருக்குன்னு சொல்ற.. மூணு புடவையைத்தானே மாற்றி மாற்றி கட்டுற..?

  மற்றவள்: ஆமாடி... 6+6=12 ; 1+2=3 அவ்வளவுதான்.


"ராஜான்னு அடுத்த தெருவுல ஒரு டாக்டர் இருக்கார். மோசமான கண்டிஷன்ல போறவங்களைக்கூட பிரமாதமா ஆக்கிடுவார்...''

            "இந்த டாக்டர் எப்படி...?''

          "சின்ன பிரச்சினையோடு போறவங்களைக்கூட  பிரேதமாக்கித்தான்              அனுப்புவார்''

 

7 hours ago, நவீனன் said:

நெஞ்சில் நிறைந்த நெல்சன் மண்டேலா நினைவு தின சிறப்பு பகிர்வு!

நன்றி நவீனன் நினைப்பூட்டியதற்கு. எனக்குப் பிடித்த தலைவர். இவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே எனக்கு பெருமைதான்.

  • தொடங்கியவர்

12291938_950735701641791_113197316185652

இந்திய அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷீகார் தவானின் பிறந்தநாள் இன்று

  • தொடங்கியவர்

‘றெக்கை' கட்டி பறக்குது பார்...

 
 
  • c_2645223g.jpg
     
  • c1_2645222g.jpg
     

‘ஆவோ

ஜி... ஆவோ... சாரஸ் க்ரேன் தேக்கோ...'

‘ஜி... இதர் தேக்கோ... சர்பென்ட் ஈகிள்...'

காக்கிச் சட்டை யூனிஃபார்ம். இந்தி, ஆங்கிலம்... இன்னும் சிலர் பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் கூட உரையாடுகிறார்கள். பறவையியலாளர்கள் பலருக்கே தெரியாத அரிய பறவை இனங்களின் வழக்குப் பெயர்கள்,

அறிவியல் பெயர்களைக் கூட தெரிந்து வைத்திருக்கிறார்கள். பைனாக்குலர்கள் இல்லாமலேயே இந்தப் பகுதியில் இந்தப் பறவை இருக்கும் என்பதை அவ்வளவு துல்லியமாகச் சொல்கிறார்கள்.

ஆனால் இவர்கள் யாரும் பறவையியல் துறையில் பி.எச்.டி. பட்டம் பெற்றவர்கள் இல்லை. பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் வறுமை காரணமாகப் பள்ளிப் படிப்பை இடைநிறுத்தியவர்கள்.

இவர்கள் யாரென்று நினைக்கிறீர்கள்? சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள்!

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் உள்ள ‘கேவ்லாதேவ் பறவையியல் சரணாலயத்தில்' இவர்களைப் பார்க்கலாம். சுற்றுலாவாசிகளுக்குத்தான் இவர்கள் சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள். ஆனால் சூழலியல் ஆர்வலர்களுக்கு இவர்கள் ‘பேர்ஃபூட் நேச்சுரலிஸ்ட்ஸ்'! அதாவது, பாமர இயற்கைப் பாதுகாவலர்கள்.

"இங்க மொத்தம் 123 சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள் இருக்காங்க. இவர்களில் சரிபாதிப் பேர் இளைஞர்கள்தான்!" என்று அறிமுகம் தருகிறார், ஜித்தேந்திரா. இவரும் ஒரு சைக்கிள் ரிக்ஷாகாரர்தான்.

பலருக்கும் ராஜஸ்தான் என்றால் பாலைவனமும் ஒட்டகமும்தான் நினைவுக்கு வரும். ஆனால் அங்கு 29 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்திருக்கிறது கேவ்லாதேவ் பறவைகள் சரணாலயம். அழிந்து வரும் நிலையில் உள்ள வலசைப் பறவைகளான சரசக் கொக்குகள், உலகில் மத்திய இந்தியாவில் மட்டுமே காணப்படும் பச்சை சில்லை உள்ளிட்ட பல அரிய வகைப் பறவைகளை இங்கு காண முடியும்.

பலருக்கும் ராஜஸ்தான் என்றால் பாலைவனமும் ஒட்டகமும்தான் நினைவுக்கு வரும். ஆனால் அங்கு 29 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்திருக்கிறது கேவ்லாதேவ் பறவைகள் சரணாலயம். அழிந்து வரும் நிலையில் உள்ள வலசைப் பறவைகளான சரசக் கொக்குகள், உலகில் மத்திய இந்தியாவில் மட்டுமே காணப்படும் பச்சை சில்லை உள்ளிட்ட பல அரிய வகைப் பறவைகளை இங்கு காண முடியும்.

ஒரு காலத்தில் சைபீரியக் கொக்குகளும் இங்கு வந்து சென்றிருக்கின்றன. இந்தக் காரணங்களால் 1985ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு இந்த சரணாலயத்தை ‘உலக பாரம்பரியச் சின்னமாக' அறிவித்தது. கடந்த மாதம் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை ‘உலக பாரம்பரியச் சின்ன வாரம்' நடைபெற்றது. அதையொட்டி, இந்தச் சரணாலயத்தில் பணியாற்றும் சைக்கிள் ரிக்ஷாக்காரர்களைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...

"இந்தப் பார்க்குல சைக்கிள் ரிக்ஷா ஓட்டணும்னா, ஸ்டேட் கவர்மென்ட்டுக்கிட்ட லைசென்ஸ் வாங்கணும். லைசென்ஸ் மட்டும்தான் அது கொடுக்கும். சம்பளம் எல்லாம் தராது. உங்கள மாதிரி டூரிஸ்ட்டுங்க வந்தாத்தான் எங்களுக்குப் பொழப்பு. பார்க்கை ரவுண்ட் அடிக்க ஒரு மணி நேரத்துக்கு நூறு ரூபா. ரெண்டு பேருக்கு மேல ரிக்ஷாவுல ஒரே சமயத்துல ஏத்தமாட்டோம்" என்கிறார் ஜிதேந்திரா.

அந்த லைசென்ஸும் அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்துவிடாது. இவர்களுக்கு அரசு, ஒரு தேர்வு நடத்தும். அதில் தேர்ச்சி பெற வேண்டும். அந்தத் தேர்வுக்குத் தயாராக இவர்களுக்கு மூன்று மாதங்கள் இலவசப் பயிற்சி தரப்படுகிறது.

"பறவைகள பத்தின புக்ஸ், ஃபீல்ட் கைட்ஸ், சயின்டிஸ்ட்டுகளோட டிஸ்கசன், அப்புறம் இந்த பார்க்குல ரொம்ப வருஷமா ரிக்ஷா ஓட்டிக்கிட்டிருக்கிற சீனியர்கள்னு பல விதங்கள்ல எங்களுக்கான அறிவை நாங்க மேம்படுத்திக்கிறோம். அப்புறம், போகப் போக எக்ஸ்பீரியன்ஸ் ஆகிடும்ல. அப்ப, ஒரு பறவை இந்த பார்க்குல எங்க இருக்கும், அதனோட பேர் என்னங்கிறதுனு பல தகவல்களை நாங்க கரெக்ட்டா சொல்லிடுவோம்" என்கிறார் இன்னொரு ரிக்ஷாக்காரரான குர்மீத் சிங்.

காலை 6.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த ரிக்ஷாக்கள் இயங்கும். இவர்களுக்கென்று தனியாக‌ விடுமுறை நாட்கள் எல்லாம் கிடையாது. எப்போது தேவையோ அப்போது அவர்கள் விடுப்பு எடுத்துக்கொள்கிறார்கள்.

"வருஷம் முழுக்க ஓட்டினாலும், அக்டோபர் மாசம் முதல் மார்ச் மாசம் வரைதான் எங்களுக்கு ‘பிஸினஸ்' மாசம். அந்த டைம்லதான் பறவைகளும் இங்கு அதிகமா வரும். டூரிஸ்ட்டுகளும் அதிகமா வருவாங்க" என்றார் குர்மீத்.

புகை, இரைச்சல் என சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லாத காரணத்தால்தான் இன்று வரை இந்தச் சரணாலயத்தில் சைக்கிள் ரிக்ஷாக்கள் தாக்குப் பிடிக்கின்றன. ஆனால் அதை ஒழித்துக் கட்டும் விதமாக பேட்டரியில் இயங்கும் கார்களை மெல்ல மெல்ல அறிமுகப்படுத்தி வருகிறது ராஜஸ்தான் அரசு.

"பேட்டரி காரில் சென்றால், அணில்கள், சிறு பறவைகள் உள்ளிட்டவை கார் சக்கரங்களில் சிக்கி உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. மேலும், காரின் இரைச்சலும் பறவைகளை தொந்தரவு செய்யும். தவிர, சைக்கிள் ரிக்ஷாவில் பயணிப்பது போல, சுற்றுலாவாசிகள் ஒவ்வொரு இடமாக நின்று பறவைகளைப் பார்த்து ரசிக்க இயலாமல் போகும்" என்கிறார் பறவையியலாளர் ஒருவர்.

"அப்புறம் என்ன சார்... ஒரு ‘ரைட்' போலாமா" என்றவரிடம் தலையசைத்து ரிக்ஷாவில் பயணித்தபோது அந்த ரிக்ஷாவுக்கு இறகுகள் முளைத்துப் பறப்பதைப் போல உணர முடிந்தது.

http://tamil.thehindu.com/society/lifestyle/%E0%AE%B1%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article7948715.ece

 

  • தொடங்கியவர்

12347768_950735868308441_799366852565791

"நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழ் எங்கே சுருதி எங்கே?'
என்று போற்றிப்புகழப்படும் ஆறுமுக நாவலர் நினைவு தினம்.

தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம்,நல்லூரில் தோன்றி, தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர்.

  • தொடங்கியவர்

காகித மோட்டார் சைக்கிள்...

 

 

காகித மோட்டார் சைக்கிள்...

 

கலை வெளிப்பாடுகளை வெளிக்கொண்டுவர பல விநோத கைப்பணி பொருட்களை செய்து வரும் நுவரெலியா கந்தபளை கல்பாலம என்ற பகுதியில் வசிக்கும் ஒருவர் கடதாசி தாள்களை கொண்டு அழகான மோட்டார் சைக்கிள் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

சாதாரண விவசாயியான 32 வயதுடைய சந்திக அருண சாந்த என்ற இளைஞர் மக்களை வியக்கவைக்கும் அளவில் பத்தாயிரம் ஏ4 வர்ண கடதாசி தாள்களை கொண்டு இந்த அழகான மோட்டார் சைக்கிளை உருவமைத்துள்ளார்.

இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தாரரின் உதவியுடன் இவ்வாறான அற்புதமான வேலைப்பாடுகளை செய்து வருகின்றார்.

இவர் செய்துள்ள கைப்பணி வேலைகளை தினமும் இப்பகுதி மக்கள் பார்வையிடுகின்றனர்.

அத்துடன் இவற்றை விலை கொடுத்து கொள்வனவும் செய்கின்றனர்.

இவரின் இந்த திறமை குறித்து விடயமறிந்த செய்தியாளர்கள் இவரின் வீட்டிற்கு இன்று விஜயத்தை மேற்கொண்டனர்.

அங்கு இவர் செய்து வைத்திருந்த கைப்பணி வேலைகளை பார்வையிட்டதுடன் சந்திக அருண சாந்தவிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டறிந்து கொண்டனர்.

நவீன உலகில் நாமும் ஆக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்கினை கொண்டு இவ்வாறான வேலைப்பாடுகளை செய்து வருவதாக சந்திக அருண சாந்த செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இப்போது உருவாக்கியிருக்கும் இந்த மோட்டர் சைக்கிளிற்காக சுமார் 30,000 ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும், இதனை செய்வதற்கு 5 மாதங்கள் எடுத்ததாகவும் அவர் கூறுகின்றார்.
  • தொடங்கியவர்

12347914_738518602949637_700243185277106

  • தொடங்கியவர்

செவ்வாய் கிரகத்திற்கு கடிதம் அனுப்ப 17,000 டொலர்

செவ்வாய் கிரகத்திற்கு கடிதம் அனுப்ப எவ்வளவு செலவாகும் எனும் 5 வயதான ஆலிவர் கிட்டிங்ஸின் கேள்விக்கு பிரிட்டனின் தபால்துறை, நாசாவுடன் இணைந்து இதற்கான தொகையை கணக்கிட்டு 17,000 டொலர் செலவாகும் என பதிலளித்துள்ளது.

letter-to-mars-.jpg

விண்வெளி வீரராக வேண்டும் எனும் ஆசையுள்ள ஆலிவர் கிட்டிங்ஸின் இந்தக் கேள்வியை கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்திற்குக் கடிதம் அனுப்ப அதிகமான முத்திரைகள் ஒட்ட வேண்டுமே எனக் கவலை வேறு வந்துவிட்டதாம் அந்த சிறுவனுக்கு.

http://www.virakesari.lk/article/759

  • தொடங்கியவர்

12346523_10154122568194578_5471757257197

 

12291271_951239398258088_486540105255475

இந்திய கிரிக்கெட் அணியில் கலக்கி வரும் நட்சத்திர சகலதுறை வீரர், இப்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் கலக்கல் சுழல்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவின் பிறந்தநாள்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வேலூரின் இளம் விஞ்ஞானி!

 

வேலூர் சத்துவாச்சாரியில் இயங்கி வரும் ஹோலி க்ராஸ் மெட்ரிக் மேனிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் இளம் விஞ்ஞானியான ஜி. ஸ்ருதிசரஸ்வதி,  கடந்த அக்டோபர் மாதம் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த 'இன்ஸ்பியர் அவார்டு' அறிவியல் கண்காட்சியில், தனது மூன்று விதமான  கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்தார். அதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகளால்,  மாநில அளவில் முதல் மாணவியாக தேர்வுசெய்யப்பட்டு தங்கப்பதக்கம் வென்றார்.

sruthisaraswathi.jpg

 கண்டுபிடிப்புகள் பின்வருமாறு:

1.வாகனம் செல்லும்போது உணறிகள் (Sensor) மூலமாக தானாகவே மின்சாரம் சேமிக்கும் கருவி. சாலைபகுதியில் வாகனம் அல்லது மனித நடமாட்டம் இருக்கும்போது சாலை ஓரங்களில் இருக்கும் மின்விளக்கு தானாக ஒளிரும்.  மாறாக எந்தவித நடமாட்டம் இல்லாதபோது ஒளிராது.  இதுவே உணறிகள்(Sensor) மூலம் கட்டுப்படுத்தும் கருவி.

 2. சாலை விபத்துகளை தடுக்க, சிவப்பு விளக்கு எறிந்தாலும் சில வாகனங்கள் சென்றுவிடுவதுண்டு இதனை தடுக்க,   உணறிகள் (Sensor) மூலமாக  தானியங்கி தடை உண்டாக்கும் கருவி சாலையில் பொருத்தப்பட்டிருக்கும்.  பச்சை விளக்கு ஒளிரும்போது தானாக அந்த தடை மறைந்துவிடும்.   

3. அவசர ஊர்தி (Ambulance) மற்றும் தீயணைப்பு (Fire-Engine) வாகனம் செல்லும்போது,  சாலையில் வைக்கப்பட்டிருக்கும் IR Transmitter (உணறிகள்) மூலமாக வாகன நெரிசல் இல்லாமல் செல்ல பச்சை விளக்கு தானாக ஒளிரும்.  இதனால் தடையின்றி வாகனம் செல்லும்.

மாநில அளவில் தேர்வான இளம் விஞ்ஞானிகளுக்கான ஆய்வு கூட்டம், வருகின்ற 5,6 மற்றும் 7-ம் தேதிகளில், இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள  IIT வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த அறிவியல் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு, தனது கண்டுபிடிப்புகளை சமர்ப்பிக்க உள்ளார் ஸ்ருதி சரஸ்வதி.

http://www.vikatan.com/news/agriculture/55926-student-sruthisaraswathi-invention.art

  • தொடங்கியவர்

சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு

 

 
செல்வா, ஆதீஸ்வரி தம்பதி
செல்வா, ஆதீஸ்வரி தம்பதி

வெள்ளத்தில் தத்தளிக்கிறது சென்னை. வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றிருந்தபோது செல்வா ஆதீஸ்வரி தம்பதியைச் சந்திக்க நேர்ந்தது.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் இல்லத்துக்குப் பின்புறம் உள்ள கோபு சாலையில் வரிசையாக இருக்கின்றன குடிசை வீடுகள். அதில் இரண்டு ஆட்கள் நின்று பேசும் அளவுக்கான உயரத்தில் மூன்று பேர் அமர்ந்து பேசும் அகலத்தில் ஒரு குடிசை வீடு.

"இது வீடில்லைங்க. எங்க இஸ்திரி கடை. எங்க வீடு தண்ணீல போய்டிச்சி. இப்ப இங்கதான் நாங்க இருக்கோம்" என்கிறார் செல்வா.

"பூனைங்க எல்லாம் உங்களுதா..?"

"ஆமாங்க. நாங்களே வளக்குறோம். இதுங்க நம்ம கொழந்தைங்க மாதிரி" ஆதீஸ்வரி.

"உங்களுக்குக் குழந்தைங்க இருக்கா..?"

"நாலு பேருங்க..." ஆதீஸ்வரி.

"சரி... நீங்களே வீடில்லாம கஷ்டப்படுறீங்க. இப்ப பூனைங்க எல்லாம் தேவையா?" என்று செயற்கைத்தனமாய் கேட்டேன்.

"என்ன பண்றதுங்க... வாயில்லா ஜீவனுங்க. இதுங்களுக்கு சாப்பாடு கொடுக்கறதால மனசுல ஒரு சந்தோஷங்க" செல்வா.

பேரிடர் சார்ந்த களப் பணியாற்றுவோரின் பார்வையில் படுகின்ற பல்லாயிரக்கணக்கான நி(நெ)கிழ்வுகளுள் இது ஒற்றைத் துளி.

இன்னும் எத்தனை முறை மழை வந்தாலும் சென்னை ஏன் அழியாது என்பதற்கு வேறு காரணம் வேண்டுமா?

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/article7955096.ece

  • தொடங்கியவர்

12107730_951239738258054_116193007206972

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் R.P.சிங்கின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்

12316275_1135265116492583_91780789397859

  • தொடங்கியவர்

அம்பேத்கர் எனும் இணையற்ற தலைவரின் நினைவு நாள் - சிறப்பு பகிர்வு

 

டிசம்பர் 6: அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளையொட்டி சிறப்பு பகிர்வு..

டுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமே போராடினார் அவர் என்கிற பொது பிம்பத்தில் இருப்பது வருத்தத்துக்குரியது . எண்ணற்ற இன்னல்களுக்கு உள்ளாகி இருட்டில்,துன்பத்தில்,அடக்குமுறையில் உழன்று கொண்டிருந்த இந்த தன் சக மக்களின் துயரத்துக்கு என்ன காரணம் ,சாதிகள் எப்படி தோன்றின ,சாதியம் எப்படி சக மனிதனை சமமானவனாக கருதாத துயர் மிகுந்த போக்கை வளர்த்தது
என்பதைப்பற்றி அவர் செய்த ஆய்வு அதைத்தொடர்ந்து எழுதிய நூல்கள் எல்லாமும் அசாத்தியமானவை .

எந்த இடத்திலும் எதையும் ஆதாரம் இல்லாமல் சொல்லக்கூடாது என்பதற்காக வரிக்கு வரி அவர் கொடுத்திருக்கும் அடிக்குறிப்புகள் எந்த வெறுப்புணர்வும் இல்லாமல் உண்மையை மட்டும் ambedtkar1.jpgஒடுக்கப்பட்டவர்களின் ஆன்மாவின் தீனக்குரலாக எழுப்பிய அற்புதம் அவரால் செய்யப்பட்டது . வர்க்கத்துக்கும் வர்ணத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஆங்கிலேயருக்கு அவர் எடுத்துக்காட்டும் புள்ளி அற்புதமானது. அது சமூகத்துக்கு எதிரானது அல்ல, பணம் பெற்றால் ஒருவர் முன்னேறி வர்க்க அடுக்கில் மேலே போய் விடலாம்-இங்கே அது சாத்தியம் இல்லை என்று தெளிவாக பதிவு செய்தார் அண்ணல்.

எப்படி கல்விக்கூடங்கள்,அரசின் கவுன்சில்கள்,வேலை செய்யும் இடங்கள்,வர்த்தகம் என்று பல்வேறு புள்ளிகளில் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று ஆதாரங்களோடு அவர் அடுக்கும் பொழுது அட
போடுவீர்கள் நீங்கள் பலருக்கு தெரியாத தகவல் இந்தியாவின் ரிசர்வ் வங்கி உருவானது அண்ணலின்
வழிகாட்டுதலில் தான் .காந்தி தேசத்தின் விடுதலைக்கு பின் சமூகம் சார்ந்த விடுதலையை முன்னெடுப்பதை பார்ப்போம் என்ற பொழுது அவரோடு எண்ணற்ற உரையாடல்கள் நிகழ்த்திய அண்ணலின் பொறுமையை நாம் கற்க வேண்டும் .பூனா ஒப்பந்தத்தை காந்தி தன் உண்ணாநோன்பின் மூலம் மாற்ற முயன்ற பொழுது துயரத்தோடு விட்டு கொடுத்த அண்ணலின் கருணை பெரும்பாலான தலைவர்களுக்கு இல்லாதது .

அவருக்கிருந்த பல்துறை புலமை இன்றைக்கும் சிலிர்ப்பை உண்டு செய்கிறது .பொருளாதாரம், சட்டம், வரலாறு, சமூகவியல்,புவியியல் என எண்ணற்ற துறைகளில் தனக்கான தேடலை விடாமல் செய்தவர் அவர் .

இந்திய அரசியல் சட்டத்தை உடனிருந்த உறுப்பினர்கள் பலர் நகர்ந்து கொள்ள ஒற்றை ஆளாக கிட்டத்தட்ட செதுக்கி உருவாக்கிய பெருமை அண்ணல் அவர்களையே சாரும்.அதற்கு பின்னும் ஒரு முன்கதை உண்டு .இந்தியாவின் முதல் அமைச்சரவை பட்டியலோடு காந்தியை பார்க்க நேரு போன பொழுது அதில் அண்ணலின் பெயர் இல்லை ;"எங்கே அம்பேத்கர் அவர்களின் பெயர் ?"என காந்தி கண்களை குறுக்கி கேட்டார் .நேரு அண்ணலை சட்ட அமைச்சராக ஆக்கினார் .

கிராம சுயராஜ்யம் என்கிற காந்தியின் வழியில் போனால் சாதியம் ஊற்றெடுக்கிற மண்ணாக இம்மண் போய் விடும் என்பதில் அண்ணல் தெளிவாக இருந்தார் .அவர் இயற்றிய சட்டங்களின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு எனும் கனி கிடைக்கபெற்றது .அதையும் தொடர்ந்து அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று அண்ணல் சொல்லவில்லை என்பதை குறித்துக்கொள்ள வேண்டும் .அவர் இயற்றிய அரசியலமைப்பு சட்டம் தான் இந்த நாட்டை செலுத்தும் வாகனம் என்றால் அது மிகையில்லை .இந்த நாட்டின் ஜனநாயகம் இன்னமும் உயிர்திருப்பதற்கு அண்ணலின்
தொலைநோக்கு முக்கிய காரணம் .

பொதுவான இந்து சிவில் சட்டத்தை கொண்டு வர அவர் எடுத்த முயற்சிக்கு மதவாத சக்திகள் கடும் எதிர்ப்பை கிளப்பின .நேருஒத்துழைக்க வில்லை என எண்ணி அண்ணல் பதவி விலகினார் .அவர் மரணமடைந்த சில மாதங்களில் அதை நேரு ஆறு தனித்தனி சட்டங்களின் மூலம் செய்து அண்ணலுக்கு அஞ்சலி செலுத்தினார்  அண்ணலிடம் இருந்து படிக்கவேண்டிய மிகமுக்கிய பாடம் உண்டு .எதையும் அறிவுப்பூர்வமாக அவர் கையாண்டார் .வெறுப்பால் எதையும் கட்டமைக்கவில்லை
அவர் .அவர் எழுதிய எந்த கட்டுரையிலும் இந்த நாட்டின் மீது வெறுப்பை உமிழ்கிற வார்த்தைகளை நீங்கள் பார்க்க முடியாது .மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியும் என்கிற முனைப்பு அவரின் எழுத்தில் சிந்தனையில் தெரியும் .சமூக விடுதலைக்காக ஏன் இந்த நாட்டின் இயக்கத்துக்கான விதை
போட்ட அண்ணலை நினைவு கூர்வோம்.

http://www.vikatan.com/news/article.php?module=news&aid=21993

  • தொடங்கியவர்

11226208_951237761591585_115531863604002

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர், சகலதுறை வீரர் அன்றூ பிளின்டொப்பின் பிறந்தநாள் இன்று

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...

டிசம்பர் - 07

 

618varalaru-2.jpgகிமு 43 : ரோம அர­சி­யல்­வாதி மார்க்கஸ் டலியாஸ் சிசேரோ படு­கொலை செய்­யப்­பட்டான்.

 

1724 : போலந்தின் டொரூன் என்ற இடத்தில் ஒன்­பது புரட்­டஸ்­தாந்து மதத்­தி­ன­ருக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டதை அடுத்து அங்கு கல­வரம் மூண்­டது.

 

1787 : டெல­வெயர் முதலாவது மாநி­ல­மாக ஐக்­கிய அமெ­ரிக்­காவில் இணைந்­தது.

 

1815 : நெப்­போ­லி­ய­னுக்கு ஆத­ர­வாக இருந்த பிரெஞ்சுத் தள­பதி மிக்கேல் நேய் என்­ப­வ­ருக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.

 

1900 : மாக்ஸ் பிளாங்க் தனது பேர்லின் இல்­லத்தில் வைத்து புகழ்­பெற்ற கரும்­பொருள் வெளி­யேற்ற விதியைக் கண்­டு­பி­டித்தார்.

 

1917 : முதலாம் உலகப் போர்: ஆஸ்­தி­ரி­யா-­, ஹங்­கேரி மீது ஐக்­கிய அமெ­ரிக்கா போரை அறி­வித்­தது.

 

1941 : இரண்டாம் உலகப் போர்: பின்­லாந்து, ஹங்­கேரி, போலந்து, ருமே­னியா ஆகி­ய­வற்­றுக்கு எதி­ராக கனடா போர்ப் பிர­க­டனம் செய்­தது.

 

1941 : அமெ­ரிக்­காவின் ஹவாய் தீவி­லுள்ள பேர்ள் துறை­மு­கத்தில் அமெ­ரிக்க கடற்­படை கப்­பல்கள் மீது ஜப்­பா­னிய படை­யினர் அதி­ரடி தாக்­கு­தலை நடத்­தினர்.

 

1946 : அமெ­ரிக்­காவின் ஜோர்­ஜி­யாவின் அட்­லாண்­டாவில் உண­வு­வி­டுதி ஒன்றில் இடம்­பெற்ற தீவி­பத்தில் 119 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1949 : சீனக் குடி­ய­ரசின் அரசு நான்கிங் நகரில் இருந்து தாய்­வா­னுக்கு மாறி­யது.

 

618varalaru-1.jpg1966 : துருக்­கியில் இரா­ணுவ முகாம் ஒன்றில் இடம்­பெற்ற தீ விபத்தில் 68 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1971 : பாகிஸ்­தானில் நூருல் அமீன் பிர­த­ம­ரா­கவும் சுல்­பிக்கார் அலி பூட்­டோவை உதவிப் பிர­த­ம­ரா­கவும் கொண்ட கூட்­டணி அர­சாங்­கத்தை ஜனா­தி­பதி  யஹ்யா கான் அறி­வித்தார்.

 

1972 : அப்­போலோ திட்­டத்தின் கடைசி விண்­கலம் "அப்­போலோ 17" சந்­தி­ரனை நோக்கி ஏவப்­பட்­டது.

 

1975 : கிழக்குத் தீமோரை இந்­தோ­னேஷியா முற்­று­கை­யிட்­டது.

 

1983 : ஸ்பெயின் மட்ரிட் நகரில் இரண்டு விமா­னங்கள் மோதி­யதில் 93 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1987 : கலி­போர்­னி­யாவில் பறந்து கொண்­டி­ருந்த விமா­னத்தில் பயணி ஒருவன், தனது முன்னாள் மேல­தி­கா­ரி­யையும் விமான ஓட்­டி­யையும் சுட்டுக் கொன்­றபின் தன்னைத் தானே சுட்டுக் கொன்றான். இதனால் விமானம் தரையில் மோதி­யதில் அதில் பயணம் செய்த 43 பேரும் கொல்­லப்­பட்­டனர்.

 

1988 : ஆர்­மீ­னி­யாவில்  6.9 ரிச்டர் அள­வி­லான பூகம்­பத்தில் சுமார் 25,000 பேர் கொல்­லப்­பட்டு 3 லட்சம் பேர் காய­ம­டைந்­த­துடன் 400,000 பேர் வீடு­களை இழந்­தனர்.

 

1988 : பலஸ்­தீன விடு­தலை இயக்­கத்தின் தலைவர் யாசர் அரபாத், இஸ்­ரேலை ஒரு நாடாக அங்­கீ­க­ரித்தார்.

 

1995 : கலி­லியோ விண்­கலம் விண்­ணுக்கு ஏவப்­பட்டு 6 ஆண்­டு­களின் பின்னர் வியா­ழனை அடைந்தது.

 

2012 : பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்க மீதான குற்­றச்­சாட்­டு­களை விசா­ரிப்­ப­தற்கு நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த நாடா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வி­லி­ருந்து எதிர்க்­கட்சி உறுப்பினர்கள் விலகினர். 

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=618#sthash.YCtpY2wX.dpuf
  • தொடங்கியவர்

திருடன் ஒருத்தன், ஒரு பணக்காரரின் வீட்டில் புகுந்து திருடுற நோக்கத்தோடு, பெரிய காம்பௌண்ட் சுவர் மேல ஏறி, உள்ளே குதிச்சான். அவன் குதிச்ச இடம், மரங்களும் செடி கொடிகளும் அடங்கிய, பெரிய நந்தவனம் மாதிரியான தோட்டம்! 

தன் வீட்டுத் தோட்டத்தில் திருடன் நுழைஞ்சிருக்கிற விஷயம் பணக்காரருக்குத் தெரிஞ்சுபோச்சு. அவர் உடனே தன் வேலையாட்களை அனுப்பிப் பார்க்கச் சொன்னார். அவங்க ஆளுக்கொரு கழி, கட்டையை எடுத்துக்கிட்டு, திருடன் மட்டும் கையில சிக்கினான்னா அடிச்சு நொறுக்கிடறதுங்கிற முடிவோடு, தோட்டத்தில் புகுந்து தேடினாங்க.

திருடன் பதறிப்போனான். என்ன செய்யறதுன்னு, எப்படித் தப்பிக்கிறதுன்னு புரியாம முழிச்சான். கொஞ்சம் தள்ளி, சாம்பல் மேடு மாதிரி ஒண்ணு கண்ணுல பட்டுது. கிடுகிடுன்னு அங்கே ஓடினான். அந்த சாம்பல் மேட்டுல படுத்து உருண்டான். கையால முடிஞ்ச மட்டும் சாம்பலை அள்ளி அள்ளி, முகத்துலயும் உடம்பு முழுக்கவும் பூசிக்கிட்டான். அப்புறம், அங்கே இருந்த ஒரு மரத்தின் அடியில் சப்பணக்கால் போட்டு உட்கார்ந்து, கண்களை இறுக்க மூடிக்கிட்டான்.

தோட்டத்தின் உள்ளே நுழைஞ்ச வேலையாட்கள் அங்கே இங்கே தேடிப் பார்த்துட்டு, கடைசியில் அவன் உட்கார்ந்திருந்த மரத்தடிக்கு வந்தாங்க. ஆடாம அசையாம கண் மூடி உட்கார்ந்திருந்த திருடனைப் பார்த்து, யாரோ முனிவர்தான் தவம் பண்ணிட்டு இருக்கார்போலன்னு நினைச்சு, ஆயுதங்களைக் கீழே போட்டுட்டு, பயபக்தியோடு வணங்கி நின்னாங்க.

p98a.jpg

பொழுது விடிஞ்சுது.

இந்த 'முனிவர்’ விஷயம் வெளியில பரவிச்சு. அந்தப் பணக்காரரும் வந்து மரியாதை செலுத்தினார். ஊர் ஜனங்கள் எல்லாம் பழத் தட்டுகள், மலர்த் தட்டுகளோடு கும்பல் கும்பலா வந்து, சாம்பல் பூசிய மேனியனாக இருந்த அவன் முன் சாஷ்டாங்கமா விழுந்து வணங்கிட்டுப் போனாங்க.

திருடன் யோசிச்சான். வெறுமே சாம்பலைப் பூசிக்கிட்டு உட்கார்ந்ததுக்கே தனக்கு இத்தனை மரியாதை கிடைக்குதுன்னா, உண்மையான துறவியாவே மாறிட்டா உலகம் தன்னை எந்த அளவுக்கு மதிக்கும்னு நினைச்சுப் பார்த்தான். அந்த நிமிஷமே அந்தத் திருடன் மனசிலிருந்து திருட்டுப் புத்தி காணாம போச்சு. ஆமாம், நிஜமாவே முழுத் துறவியா ஆயிட்டான் அவன்.

பகவான் ராமகிருஷ்ணர் சொன்ன குட்டிக் கதை இது.

மனுஷனுக்குக் கண்ணியமான தோற்றம் முக்கியம். ஆனா, புறத் தோற்றத்தில் மட்டும் கண்ணியத்தை வெச்சுக்கிட்டு, மனசை மோசமான குணங்களின் உறைவிடமா வெச்சிருக்கிறதால எந்தப் பயனும் இல்லை. அகத்தின் அழகுதான் புறத்தில் பிரதிபலிக்கணும்.

ஓர் அதிகாரி அல்லது முதலாளி கார்ல போகும்போது எதிர்ப்படுற ஊழியர்கள் சல்யூட் அடிச்சு மரியாதை செலுத்தினாங்கன்னா, அந்த மரியாதை அந்த முதலாளிக்குதானே தவிர, காரை ஓட்டிட்டுப் போற டிரைவருக்கு இல்லை. அது மாதிரி, கண்ணியமான உடையில், தோற்றத்தில் இருக்கும் ஒருவரை ஜனங்கள் மரியாதையா நடத்துறாங்கன்னா, அந்த மரியாதை அந்த நபரின் கண்ணிய குணத்துக்குதானே தவிர, அவரின் உடைக்கு இல்லை.

உடை ஓர் அடையாளம் மட்டும்தான். உள்ளம் செம்மையுற வேண்டும். அதுதான் முக்கியம்!

  • தொடங்கியவர்

12313596_1033340650058058_58788773786047

இப்படியும் ஆடுவார் ஏலியன்!

  • தொடங்கியவர்

சக்கரம் கட்டிப் பறக்கும் பெண்கள்!

 
 
  • van_2647025g.jpg
     
  • tiffin_2647026g.jpg
     

இந்தியாவில் பெண்கள் கல்வியறிவு அதிகபட்சமாக 92.7 சதவீதம் கொண்ட மாநிலம் கேரளம்தான். ஆனால் இந்தியாவிலேயே வேலைவாய்ப்பில் குறைந்தபட்சமாக 20.2 சதவீதம் பெண்களே இருக்கும் முரண்பாடு நிலவுவதும் கேரளத்தில்தான்.

இந்நிலையில் கேரளத்தை ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு, ‘புட் ஆன் வீல்ஸ்’ மொபைல் உணவகங்கள் மூலம் பெண்கள் பொருளாதாரரீதியாகத் தன்னிறைவு பெறுவதற்கான முன்னோடித் திட்டம் ஒன்றைச் செயல்படுத்திவருகிறது.

கேரள அரசின் சமூகநீதித் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஜென்டர் பார்க் நிறுவனம் ‘புட் ஆன் வீல்ஸ்’ திட்டத்துக்கு செயல்வடிவம் தந்துள்ளது. கேரளத்தின் பெருநகரங்களிலும் சிறிய நகரங்களிலும் ஆரோக்கியமான உணவை மொபைல் உணவகங்கள் வழியாக வழங்குவதன் மூலம் வர்த்தக ரீதியாக நல்ல சூழலை உருவாக்கும் திட்டம் இது.

கேரளம் முழுவதும் 2 ஆயிரத்து 500 பெண்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சிகளை அளித்துவரும் ஜென்டர் பார்க் நிறுவனம் ‘புட் ஆன் வீல்ஸ்’ சேவையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படும் இடங்களில் இந்த ‘புட் ஆன் வீல்ஸ்’ உணவகங்கள் இருக்கும்.

இயற்கையான முறையில் ஆரோக்கியத்துக்குத் தீங்கில்லாத வகையில் அதிக எண்ணெய்ப் பொருட்களைச் சேர்க்காமல் ருசிக்கான கூடுதல் இடுபொருட்களைப் பயன்படுத்தாமல் சுடச்சுட இந்த உணவகங்களில் உணவு பரிமாறப்படும். உணவைத் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் கொடுக்கும் வகையில் உணவையும் சமையலையும் கையாள்வதற்கு சர்வதேச அளவிலான தரக்கட்டுப்பாட்டுப் பயிற்சிகளும் இத்திட்டத்தில் தரப்படுகின்றன.

‘புட் ஆன் வீல்ஸ்’ மொபைல் உணவகங்களில் தரப்படும் உணவுப்பட்டியலை இறுதி செய்யும் வகையில் மருத்துவர்கள், உணவூட்ட நிபுணர்கள் மற்றும் சமையல் நிபுணர்கள் அடங்கிய குழு திட்டமிட்டுவருகிறது. உணவுகள் அனைத்தும் பொதுவான சமையலறைகளில் செய்யப்பட்டு தேவைக்கேற்ப உணவகங்களுக்கு அவ்வப்போது வழங்கப்படும். ‘புட் ஆன் வீல்ஸ்’ திட்டம் முதலில் திருவனந்தபுரத்தில் தொடங்கி பின்னர் அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இத்திட்டத்தின் அடிப்படையில் உணவகங்களை நிர்வகிக்கும் பெண்களுக்கு அரசு மானியமோ நிதி உதவியோ தராது என்கிறார் ஜென்டர் பார்க்கின் சிஇஓவான சுனிஷ்.

பெண் தொழில்முனைவோருக்குப் பயிற்சியளித்து சரியான வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதோடு அரசின் உதவி முடிந்துவிடுவதாக கூறும் சுஷிஷ், ஏற்கெனவே நிதியுதவி அளித்துச் செயல்படுத்திய திட்டங்கள் சரியாக வெற்றிபெறவில்லை என்ற காரணத்தைக் குறிப்பிடுகிறார். “சந்தையில் போட்டி போட்டு பெண்களே செழிக்க வேண்டும்” என்கிறார்.

ஜென்டர் பார்க் நிறுவனம் சென்ற ஆண்டு அறிமுகப் படுத்திய ‘ஷீ டாக்சி’ திட்டம் ஏற்கெனவே வெற்றி பெற்ற ஒன்று. பெண்களுக்காகப் பெண்களே டாக்சி ஓட்டும் 24 மணிநேர டாக்சி சேவைத்திட்டத் தில் தற்போது 50 பெண்கள் மாநிலம் முழுவதும் சொந்தமாக டாக்சிகளை ஓட்டுவதன் மூலம் மாதம் சராசரியாக 50 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கின்றனர்.

தற்போது ‘ஷீ டாக்சி’ திட்டம் நாடுகடந்த அங்கீகாரத்தைப் பெற்று, தெற்காசிய நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட உலக வங்கியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

‘புட் ஆன் வீல்ஸ்’ திட்டத்துக்கான உணவளிக்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வண்ணம் பேட்டரியில் இயங்குபவையாக இருக்கும். இதற்காக டெல்லியி லிருந்து விரைவில் வாகனங்கள் கேரளத்துக்கு வரவுள்ளன.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இருக்கும் இடங்களில் மட்டுமின்றி, நகரங்களில் இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் பிரதான இடங்களில் இரவு ஏழு மணி முதல் நள்ளிரவு இரண்டு மணிவரை வாகனங்களை வரிசையாக நிறுத்தி உணவுகளை விற்கும் திட்டமும் உள்ளது.

நகர்புறங்களில் இருக்கும் இரவு வாழ்க்கையை உற்சாகமாக்கும் வண்ணம் இந்த உணவு வாகனங்களின் அருகில் அறிமுக இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் உணவுடன் சுவை சேர்க்கும் வண்ணம் சேர்ந்து நிகழ்த்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கென கலை, கலாச்சார நடவடிக்கைகள் அதிகம் காணப்படும் கோழிக்கோடு, கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் இந்த இரவு உணவுக் கடைகள் தொடக்கக் கட்டமாகச் செயல்படும். முன்செல்லட்டும் பெண்களின் நம்பிக்கைச் சக்கரம்!

http://tamil.thehindu.com/society/women/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7954883.ece

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

டிசம்பர் - 08

 

619saarc-flags.jpg1609 : இத்­தா­லியின் மிலான் நகரில் அம்­பு­ரோ­ரி­யானோ நூலகம் திறக்­கப்­பட்­டது. இதுவே ஐரோப்­பாவின் இரண்­டா­வது பொது நூலகம் ஆகும்.

 

1864 : இங்­கி­லாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்­கப்­பட்­டது.

 

1881 : ஆஸ்­தி­ரி­யாவில் வியன்னா நகரில்  அரங்­கொன்றில் ஏற்­பட்ட தீயினால் 620 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1912 : அல்­பே­னி­யாவின் "கோர்சே" நகரை ஒட்­டோமான் படை­யிடம் இருந்து கிரேக்­கர்கள் கைப்­பற்­றினர்.

 

1941 : இரண்டாம் உலகப் போர்: ஜப்­பா­னி­யர்கள் ஹொங்கொங், மலாயா ஆகி­ய­வற்றைத் தாக்­கினர்.

 

1941 : பசிபிக் போர்: பேர்ள் துறை­மு­கத்தை ஜப்பான் தாக்­கி­யதை அடுத்து ஐக்­கிய அமெ­ரிக்கா ஜப்­பா­னுக்கு எதி­ராக போர்ப் பிர­க­டனம் செய்­தது.

 

1941 : ஜப்­பா­னுக்கு எதி­ராக சீனக் குடி­ய­ரசு போர் பிர­க­டனம் செய்­தது.

 

1941 : பசிபிக் போர்: சீனாவில் அமைக்­கப்­பட்­டி­ருந்த கொரிய அரசு ஜப்பான் மற்றும் ஜேர்­மனி மீது போரை அறி­வித்­தது.

 

1941 : பெரும் இன அழிப்பு: போலந்தின் லோட்ச் என்ற இடத்தில் யூதர்­களைக் கொல்­லு­வ­தற்கு நாசிகள் முதன் முத­லாக நச்சு வாயு பஸ்ஸை பயன்­ப­டுத்­தினர்.

 

1942 : யுக்­ரைனின் "டேர்­னோப்பில்" என்ற இடத்தில் நாஸி ஜேர்­ம­னி­யர்கள் அங்­கி­ருந்த 1,400 பேர் கொண்ட கடைசித் தொகுதி யூதர்­களை பெல்செக் வதை முகா­மிற்கு அனுப்­பினர்.

 

1953 : அணு அமை­திக்கே என்று அமெ­ரிக்க அதிபர் டுவைட் டி. ஐச­னோவர் அறி­வித்தார்.

 

1963 : அமெ­ரிக்­காவின் மேரி­லாந்தில் அமெ­ரிக்க விமானம் ஒன்று வீழ்ந்­ததில் 81 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1966 : கிரேக்கக் கப்பல் ஒன்று மத்­திய தரைக் கடலில்  மூழ்­கி­யதில் 200 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1969 : கிரேக்­கத்தில் விமானம் ஒன்று வீழ்ந்­ததில் 93 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1972 : அமெ­ரிக்­காவின் சிக்­கா­கோவில் விமா­ன­மொன்று விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 45 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1980 : பிர­பல பீட்டில்ஸ் இசைக்­கு­ழுவைச் சேர்ந்த ஜோன் லெனன் நியூயோர்க்கில் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.
1982 : சூரி­னாமில் இரா­ணுவ ஆட்­சிக்கு எதி­ராகக் கிளர்ச்­சியில் ஈடு­பட்ட பலர் கொல்­லப்­பட்­டனர்.

 

1985 : இலங்கை, இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ், நேபாளம், மாலை­தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடு­க­ளினால் சார்க் அமைப்பு  உரு­வாக்­கப்­பட்­டது.

 

1987 : பெருவின் தலை­நகர் லீமா­வுக்கு அருகில் சென்று கொண்­டி­ருந்த விமானம் கடலில் வீழ்ந்து மூழ்­கி­யதில் அதில் பயணம் செய்த பெருவின் கால்­பந்­தாட்ட அணி­யொன்றின் அனைத்து வீரர்­களும் கொல்­லப்­பட்­டனர்.

 

1991 : சோவியத் ஒன்­றி­யத்தைக் கலைப்­ப­தென ரஷ்யா, பெலாரஸ், யுக்ரைன் ஆகிய நாடு­களின் தலை­வர்கள் கூடி முடி­வெ­டுத்­தனர்.

 

1998 : அல்­ஜீ­ரி­யாவில் 81 பேர் ஆயுதக் குழு­வொன்­றினால் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

 

2009 : ஈராக்கின் பாக்தாத் நகரில் இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தலில் 127 கொல்­லப்­பட்­டனர்.

 

2013 : சிங்­கப்பூரில் பஸ் விபத்து ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து இரு மணித்தியாலயங்கள் பாரிய வன்முறைகள் இடம்பெற்றன. 1969 ஆம் ஆண்டின் பின்னர் சிங்கப்பூரில் இடம்பெற்ற இத்தகைய முதலாவது வன்முறை இதுவாகும். 

 

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=619#sthash.ujrURpeI.dpuf
  • தொடங்கியவர்
ஆரம்பக் காலத்தில் வினோதமாக காணப்பட்ட மருத்துவ முறையின் அரிய புகைப்படங்கள்!!!
10-1436503691-16creepyvintagemedicalphot
வால்டர் ரீட் பிசியோதெரபி வால்டர் ரீட் பிசியோதெரபி சிகிச்சை முறையின் ஆரம்பகால கருவியின் புகைப்படம்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.