Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

 

“அயர்லாந்தில் பத்தடி மனிதர்கள் வாழ்ந்தது உண்மை”

அயர்லாந்தில் பேருவ மனிதர்கள் குறித்த புராண கதைகளும் நம்பிக்கைகளும் ஏராளம்.

எட்டடி பத்தடி உயர மனிதர்கள் இருந்த கதைகள் அவர்கள் செய்த சாகசங்கள் பற்றிய புனைகதைகளும் இந்த பகுதியில் நிலவுகின்றன.

இவற்றின் பின்னணியில் ஒரு உண்மை ஒளிந்திருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
வட ஐயர்லாந்தின் குறிப்பிட்ட பகுதியில் வாழும் மனிதர்கள் மத்தியில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட மரபணு பேருருவை உருவாக்கும் மரபணுவாக ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
அந்த மரபணு ஆபத்தை ஏற்டுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தெக்கத்தி சினிமா ரசிகர்களின் திரிலோக நாயகிகள் இவர்கள்!

p99.jpg

மல்லுவுட்:  நக்‌ஷத்ரா

தமிழில் பல படங்களில் நடித்த சுமித்ராவின் வாரிசுதான் இந்தப் பொண்ணு. ஒரு நிகழ்ச்சியில் இவரைப் பார்த்த கன்னட இயக்குநர் சுனில்குமார் தேசாய் `நீதான் என் படத்தில் ஹீரோயின்' எனச் சொல்ல, தொடங்கியது கலைப்பயணம். `டூ', `மருதவேலு' போன்ற பிரபல(!) தமிழ்ப் படங்களிலும் தலைகாட்டினார். கண்ணுக்கு லட்சணமாய் கொழுக்மொழுக்கென இருப்பதைப் பார்த்த சேட்டன்கள் இவரை மலையாள சினிமாவிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு `வைடூரியம்', `கிளி பாடும் கிராமம்', `ஃபார் சேல்', `ஃபேர் அண்ட் லவ்லி' என வரிசையாக நடித்துக் கலக்கியவர் இப்போது அடுத்த ரவுண்டிற்காக வெயிட்டிங். #மம்மியைப் போல பொண்ணு!

p99a.jpg

டோலிவுட்: விதிகா ஷேரு

ஆந்திரா பீமாவரத்தில் பிறந்த பார்பி பொம்மை. குழந்தை நட்சத்திரமாய் தெலுங்கு சீரியல்களில் கலக்கிக் கொண்டிருந்தவரை முழுநேர நடிகையாக்கியது கன்னட உலகம். முதல் இரண்டு படங்களுக்குப் பின் தாய்மொழியான தெலுங்கிற்குத் திரும்பியவர், `பிரேமிச்சு ரோஜுலு', `ஜும்மான்டி நாதம்', `பிரேம இஸ்க் காதல்' எனப் பல படங்களில் திறமை காட்டினார். தமிழில் வெளியான `மகாபலிபுரம்' படத்திலும் இந்த அழகிதான் ஹீரோயின். பீமா ஜுவல்லரி, கிராண்ட் மால் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இவர்தான் பிராண்ட் அம்பாசிடர் என்பதால் விளம்பரங்களிலும் பிஸி. #தமிழ் சின்னத்திரை கவனத்திற்கு...!

p99b.jpg

சாண்டல்வுட்: மிலனா நாகராஜ்

பாலாடையில் முக்கி எடுத்த குல்பி ஐஸ் போல் பளபளவென இருக்கும் மிலனா பிறந்தது பெங்களூரில். இன்ஜினீயரிங் முடித்த கையோடு சினிமா பக்கம் வந்தவர்,`நம் துனியா நம் ஸ்டைல்', `பிருந்தவனா', `சார்லி' என வரிசையாகக் கமிட்டானார். நடிப்பு மட்டுமல்ல, நீச்சல் அடிப்பதிலும் மேடம் கில்லி. ஸ்டேட் லெவலில் பல பதக்கங்கள் வாங்கிக் குவித்திருக்கிறது இந்தத் தங்கமீன். இன்னும் பெரிதாக பிரேக் கிடைக்காததால் பொறுமையாகக் காத்திருக்கிறாராம் இந்த பச்சரிசிப் பல்லழகி! #பிரேக் ஆன் தி வே பியூட்டி!

vikatan

  • தொடங்கியவர்

இது சிங்கப்பூர் தீபாவளி!

திருவிழா

 

தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். அதிலும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கொண்டாடித் தீர்ப்பார்கள் இந்தியர்கள். இதில் சிங்கப்பூர் கொஞ்சம் சிறப்பு. ஏன்... இந்தியாவைவிடவே வெகு சிறப்பு! ஆம், தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பாகவே சிங்கப்பூரில் கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடும். தமிழர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள முக்கியமான ஒரு சாலையை வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரித்து அசத்தி விடுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அசத்தல் ஆரம்பமாகி விட்டது.

p137.jpg

தீபாவளியன்று பெரும்பாலான தமிழர்கள் இங்கே கூடி கொண்டாடு வார்கள். அன்றைய தினம் சிங்கப்பூர் அரசின் பிரதமர் அல்லது அமைச்சர் என யாராவது ஒருவர் லிட்டில் இந்தியாவுக்கு வருகை தந்து பட்டாசு வெடிக்கும் வைபவத்தைத் தொடங்கி வைப்பதும் பல ஆண்டுகளாகவே நடக்கிறது.

தீபாவளிக்கு இங்கே விடுமுறை உண்டு. தீபாவளியானது ஞாயிற்றுக் கிழமையில் வந்தால், கூடுதலாக திங்கள்கிழமையன்று விடு முறை கொடுப்பதும் பெரும்பாலும் வழக்கத்தில் இருக்கிறது.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப் பூரில் வேலை பார்க்கும் தமிழர்கள்தான் பெரும்பாலும் லிட்டில் இந்தியாவில் கூடுவார்கள். சிங்கப்பூர் குடியுரிமையோடு இருப்பவர்கள், பெரும்பெரும் அரங்கங் களில் கூடி ஆட்டம் பாட்டம் என தீபாவளியைக் கொண்டாடுவார்கள்!
 லிட்டில் இந்தியா வைபவங்களை, சிங்கப்பூர் அரசின் இந்து அறநிலைய வாரியம் (HEB), சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (STB) ஆகியவற்றின் ஆதரவோடு லிட்டில் இந்தியா வியாபாரிகள் மற்றும் கலாசார அமைப்பு (LISHA) ஒருங்கிணைக்கிறது.

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஒக்டோபர் - 19

 

1216 : இங்­கி­லாந்தின் ஜோன் மன்னன் இறந்­த­தை­ய­டுத்து, அவரின் ஒன்­பது வயது மகன் மூன்றாம் ஹென்றி ஆட்­சிக்கு வந்தான்.

 

1469 : அரகன் நாட்டு இள­வ­ரசன் இரண்டாம் பேர்­டி­னண்­டுக்கும் காஸ்டில் நாட்டின் இள­வ­ரசி இச­பெல்­லா­வுக்கும் திரு­மணம் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வு பின்னர் 1516 இல் ஸ்பெய்ன் நாடு ஒருங்­கி­ணைக்­கப்­பட வழி­கோ­லி­யது.

 

831varalaru2.jpg1806 : ஹெயிட்­டியின் மன்னன் முதலாம் ஜாக் படு­கொலை செய்­யப்­பட்டார்.

 

1812 : பிரான்ஸின் நெப்­போ­லியன் போன­பார்ட்டின் படைகள் ரஷ்­யாவின் மொஸ்­கோவிலிருந்து பின்­வாங்­கின.

 

1813 : ஜேர்­ம­னியின் லைப்சிக் நகரில்   நடை­பெற்ற போரில் பிரான்ஸின் நெப்­போ­லியன் போனபார்ட் பெரும் தோல்­வி­ய­டைந்தார். ரைன் கூட்­ட­மைப்பு முடி­வுக்கு வந்­தது. 

 

1864 : அமெ­ரிக்க உள்­நாட்டுப் போர்: கூட்­ட­மைப்புப் படை­யினர் கன­டாவில் இருந்து வேர்மொண்ட் மாநி­லத்தின் சென் அல்பான்ஸ் நகரைத் தாக்­கினர்.

 

1912 : லிபி­யாவின் திரிப்­போலி நகரை இத்­தா­லியப் படைகள் ஒட்­டோமான் பேர­ர­சிடம் இருந்து கைப்­பற்­றினர்.

 

1921 : லிஸ்பன் நகரில் இடம்­பெற்ற புரட்­சியை அடுத்து போர்த்­துக்கல் பிர­தமர் அந்­தோ­னியோ கிராஞ்சோ உட்­பட பல அர­சி­யல்­வா­திகள் கொல்­லப்­பட்­டனர்.

 

1935 :  எதி­யோப்­பி­யாவை இத்­தாலி கைப்­பற்­றி­யதை அடுத்து நாடு­களின் கூட்­டணி இத்­தாலி மீது பொரு­ளா­தாரத் தடை­களை அறி­வித்­தது.

 

1944 : இரண்டாம் உலகப் போரில் ஐக்­கிய அமெ­ரிக்கப் படைகள் பிலிப்­பைன்சில் தரை­யி­றங்­கின.

 

1956 : சோவியத் ஒன்­றியம், ஜப்பான் ஆகி­ய­வற்­றுக்­கி­டை­யி­லான யுத்­தத்தை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக முடி­வுக்கு கொண்­டு­வரும் வகை­யி­லான கூட்டுப் பிர­க­டனம் வெளி­யி­டப்­பட்­டது. 

 

1960 : கியூபா மீது அமெ­ரிக்கா பொரு­ளா­தார தடை­களை விதித்­தது.

 

1976 : “ சிம்­பன்ஸி, உலகின் அருகி வரும் மிருக இன­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.

 

1983 : கிரெ­ன­டாவில் இடம்­பெற்ற இரா­ணுவப் புரட்­சியை அடுத்து அதன் பிர­தமர் மோரிஸ் பிஷொப் படுகொலை செய்­யப்­பட்டார்.

 

1986 : மொஸாம்பிக் ஜனா­தி­பதி சமோரா மேச்சல் உட்­பட 33 பேர் விமான விபத்­தொன்றில் கொல்­லப்­பட்­டனர்.

 

1991 : வட இத்­தா­லியில் ஏற்­பட்ட 7.0 ரிச்டர் அள­வான நில­ந­டுக்கம் கார­ண­மாக சுமார் 2000 பேர் இறந்­தனர்.

 

2000 :  ஊட­க­வி­ய­லாளர் மயில்­வா­கனம் நிம­ல­ராஜன் யாழ்ப்­பா­ணத்தில் படு­கொலை செய்­யப்­பட்டார்.

 

2001 : 400 அக­தி­களை ஏற்றிச் சென்ற இந்­தோ­னே­ஷியப் படகு கிறிஸ்மஸ் தீவில் கவிழ்ந்­ததில் 353 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

2003 : அன்னை தெரே­சாவை முக்­திப்­பேறு பெற்­ற­வ­ராக பாப்­ப­ரசர் இரண்டாம் அருளப்பர் சின்­னப்பர் பிர­க­ட­னப்­ப­டுத்­தினார்.

 

2005 : மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹ_சேனுக்கு எதிரான வழக்கு ஆரம்பமாகியது.

 

2013 : ஆர்ஜென்டீனாவின் பியூனர்ஸ் அயர்ஸில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 105 பேர் காயமடைந்தனர்.

metronews.lk

  • தொடங்கியவர்

உங்கள் வாட்ஸ்அப்பில் இவர்கள் இருந்தால் என்ன மெசெஜ் அனுப்புவார்கள்? #MorningMotivation

நம்ம வாட்ஸ்அப்ல இருக்கிற நண்பர்கள் தினமும் “நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?”, “அதிகம் பகிருங்களேன் ஃப்ரெண்ட்ஸ்” டைப்பிலே மெசெஜ் அனுப்புவதுதான் வழக்கம். ஒரு சேஞ்சுக்கு,இந்தப் பிரபலங்கள் நம்ம காண்டாக்ட்ல இருந்தா தினமும் காலைல என்ன என்ன மெசெஜ் அனுப்புவாங்க? 

 

 சார்லி சாப்ளின்

சிரிக்காத நாள் என்பது, வீணாக்கப்பட்ட நாள் 

Celebrities-quotes-2-3_large_07398.jpg

 

ப்ரூஸ் லீ

தோல்வி என்பது ஒரு மனநிலை. தோற்றுவிட்டோம் என நாமே ஏற்காத வரை தோற்றதாக அர்த்தம் இல்லை.

men-male-celebrity-quotes-_07043.jpg

 

நெல்சன் மண்டேலா

எதுவுமே செய்து முடிக்கும்வரை இயலாத காரியமாகத்தான் தெரியும்

Awesome_Quote_of_Nelson_Mandela_Popular_

 

ஸ்டீவ் ஜாப்ஸ்

இன்றுதான் உங்கள் வாழ்வில் கடைசி நாளென்றால்,இன்று என்ன செய்ய இருக்கிறீர்களோ அதையேதான் அன்றும் செய்வீர்களா?

1595185551-Famous-Quotes-Steve-Jobs1_070

 

ஜிமி ஹெண்ட்ரிக்ஸ்

அறிவு பேசும்;ஞானம் கவனிக்கும்

jimi_hendrix_quote-3105_07272.png

 

ஏ.ஆர்.ரகுமான்

என் வாழ்க்கையில் எனக்கு இரண்டு சாய்ஸ் இருந்தன. அன்பும் வெறுப்பும். நான் அன்பை தேர்ந்தெடுத்தேன்.இப்போது இங்கே இருக்கிறேன்.

all_my_life_i_have-778-75_07025.jpg

 

நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பப்போகும் / பகிரப்போகும் விஷயம் என்ன????

Have a nice day ahead

 

vikatan

  • தொடங்கியவர்

இணையவாசிகளை வசீகரித்து 'வைரல்' ஆன பாக். டீ மாஸ்டர்!

 
அர்ஷத் கான் | படம்: புகைப்படக்காரர் ஜியா அலியின் இன்ஸ்டாகிராமில் இருந்து.
அர்ஷத் கான் | படம்: புகைப்படக்காரர் ஜியா அலியின் இன்ஸ்டாகிராமில் இருந்து.

திங்கள்கிழமை முழுவதும் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருந்த ஹேஷ்டேகுகளில் ஒன்று #chaiwala. எதற்காக என்று கேட்கிறீர்களா?

இஸ்லாமாபாத்தின் புகழ் பெற்ற சண்டே பஜாரில் டீக்கடை வைத்திருக்கிறார் அர்ஷத் கான் என்ற இளைஞர். அவரது நேர்த்தியான தோற்றத்தைக் கண்ட உள்ளூர் புகைப்படக்காரர் ஒருவர் அர்ஷத்தை புகைப்படம் எடுத்திருக்கிறார். ஜியா அலி என்ற அந்த புகைப்படக்காரர் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் அந்தப் புகைப்படத்தை கடந்த 14-ம் தேதி பகிர்ந்திருந்தார். அன்றுமுதல் இணையத்தில் பிரபலமானார் அர்ஷத் அர்ஷத்தின் அந்த புகைப்படம் இணையத்தில் மிக வைரலாக பரவியது. சில சர்வதேச ஊடகங்கள் அர்ஷத் கான் பற்றியும் அவரது டீக்கடை பற்றியும் செய்திகள் வெளியிட்டன.

இந்நிலையில், பாகிஸ்தானின் உள்ளூர் செய்தித்தாள் தகவலின்படி, அர்ஷத் அந்த டீக்கடையில் சில மாதங்களுக்கு முன்னர்தான் பணியில் சேர்ந்துள்ளார் எனத் தெரிகிறது.

திடீர் பிரபலம், ட்விட்டர் டிரெண்டில் முதலிடன் என மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருக்கும் அர்ஷத், துனியா நியூஸ் என்ற ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "ஒரே இரவில் புகழின் உச்சிக்கு சென்றுவிட்டது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனாலும், நான் டீக்கடையில் வேலையாக இருக்கும்போது என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வருகிறார்கள். அது என் வேலைக்கு தொந்தரவாக இருக்கிறது" என்றார்.

அர்ஷத் தோற்றம் தொடர்பாக ட்விட்டரில் வெளியான சில பதிவுகள்..

பாகிஸ்தானின் டீக்கடைக்காரர்தான் இப்போது இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உலா வருகிறது என ஒரு ட்வீட் பதிவாகியிருந்தது.

மற்றொரு ட்வீட்டில், "இந்தியாவும் - பாகிஸ்தானும் கிரிக்கெட், பயங்கரவாதத்தால் வேறுபட்டிருந்தாலும் இந்த அழகான டீக்கடைக்காரரால் ஒன்றுபட்டிருக்கிறது. இது ஒரு நகைமுரண்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுபோல் பலரும் அர்ஷத் தொடர்பாக ட்வீட்களை பதிவு செய்திருந்த நிலையில் அவர் திங்கள் முழுவதும் ட்ரெண்டிங்கில் இருந்தார்.

tamil.thehindu.

  • தொடங்கியவர்

14691029_1160084644040228_76111650049330

இலங்கை கிரிக்கெட் அணியின் இளைய வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப்பின் பிறந்தநாள்.
Happy Birthday Nuwan Pradeep

  • தொடங்கியவர்

 

“பிரிட்டிஷ் துணை கலாசாரம்” - காணொளி
  • தொடங்கியவர்

`வாவ்டா..!' விளம்பரங்கள்...

 

மக்குத் தெரிஞ்சு வித்தியாசமான விளம்பரம்னா ஞாபகம் வர்றது `புள்ளிராஜாக்கு எய்ட்ஸ் வருமா?'தான். ஃபாரின்ல எல்லாம் ‘அதுக்கும் மேல’ மோட்ல போய்ட்டே இருக்காங்க. அதுல சில அடடே அட்வர்டைஸ் மென்ட்ஸ்...

72p1.jpg

இந்த டேப்ல ஒட்னா நல்லா நிக்கும்ங்கறதை... இவ்ளோ பெரிய ஹோர்டிங்கே அந்த டேப்லதான் நிக்கற மாதிரி என்னா பில்டப்!

72p2.jpg

படத்தைப் பார்த்தாலே புரியும்.. ரேஸருக்கான ஷார்ப் விளம்பரம்!

72p3.jpg

டிரில்லருக்கு இதைவிட பெஸ்ட்டா என்ன சொல்ல!

72p4.jpg

அமெரிக்கன் டிஸெபிளிட்டி அசோஸியேஷன் படிக்கட்டுல செஞ்ச விளம்பரம். ‘சிலருக்கு இது எவெரெஸ்ட்டா இருக்கும்.’

72p5.jpg

பல் ஒளிர்கிறது!

72p6.jpg

காதலர் தினத்துக்கு BMW வைத்த ‘லவ்’லி விளம்பரம்!

72p8.jpg

ஸ்பெயினில் இருக்கும், இந்த ஆளுயர ஸ்டாண்ட்டில் உள்ள சிறுவன் முகம், நேராகப் பார்த்தால் அழகாக இருக்கும். கீழிருந்து பார்த்தால் அடிபட்ட தழும்புகள் இருக்கும். `பாதிக்கப்பட்ட சிறுவர்களே... எங்களை அழையுங்கள்’ என்றது விளம்பரம். பாதிக்கப்பட்டவனுக்குதான் வலி தெரியும்!

72p71.jpg

ஆடி கார் தன் புதிய பிராண்ட்டை அறிமுகம் செய்து ‘அடுத்த மூவ் நீங்கதான்’ என்று ஹோர்டிங் வைக்க, பிஎம்டபிள்யூ, தன் பிராண்டை அதற்கருகிலேயே விளம்பரம் செய்து ‘செக் மேட்’ என்றது!

72p9.jpg

இதுல ஒரு நிமிஷம் உட்கார்ந்தா, நிச்சயம் குடிச்சுட்டு வண்டி ஓட்ட பயமா இருக்கும்!

72p10.jpg

`பல் ஓட்டையா இருந்தா எங்க டூத் பேஸ்ட் யூஸ் பண்ணுங்க'னு ரொம்ப கம்மி செலவுல விளம்பரம்!

72p11.jpg

எனர்ஜி ட்ரிங்க்... USB வைத்து உங்கள் மொபைலுக்கும் எனர்ஜி ஏற்றிக் கொள்ளலாம்!

72p12.jpg

மேல இருந்து கடவுளே எடுக்கிறாராம்!

72p13.jpg

பஸ்ஸுல வாட்ச் கம்பெனி பண்ணின ஐடியா... மாஸ்!

72p14.jpg

ஒவ்வொரு பேப்பரை எடுக்க எடுக்க, பசுமை மறைகிறது!

72p15.jpg

பல் உடைந்தால் மாற்றுவதற்கான இன்ஷூரன்ஸ் நிறுவனம்... பவுலிங் விளையாட்டு அரங்கில் மூக்கு, வாயை மட்டும் வரைந்து இப்படி அசத்தியது!

72p16.jpg

எத்தனை படி ஏறினா எத்தனை கலோரி உடல் எடை குறையும்னு ஜப்பான் அரசாங்கம் மக்களை நடக்க வைக்க பண்ணின ஐடியா!

72p17.jpg

ஒட்டவே ஒட்டாதுங்கற விளம்பரம்கூட ஓட்டலயாம்!

72p18.jpg

நீங்க ஃபிட்டா இருந்தீங்கன்னா... இப்டிக்கா போங்க! சிம்ப்ளி சூப்பர்ப்!

72p19.jpg

வண்டி ஓட்டற ஃபீல் தரும் யமஹா விளம்பரம்!
 

  • தொடங்கியவர்
புவி அழகுராணி 2016 போட்டியில்....
 

புவி அழ­கு­ராணி 2016 (Miss Earth 2016) போட்டி பிலிப்­பைன்ஸில் நடை­பெ­று­கி­றது. 84 நாடுகள், பிராந்­தி­யங்­களின் அழ­கு­ரா­ணிகள் இப்­ போட்­டியில் பங்­கு­பற்­று­கின்­றனர்.

 

2007314724466_1168678216550235_514407339

 

20073_14639672_1168278323256891_55730768

 

2007314708372_1168285119922878_885795659

 

2007314666104_1168678733216850_188576600

 

2007314568153_1168275799923810_807848448

 

இலங்­கையின் சார்பில் திமின்தி எதி­ரி­ரத்ன பங்­கு­பற்­று­கிறார். இலங்கை அழ­கு­ராணி திமின்தி எதி­ரி­ரத்ன பாகிஸ்தான் அழ­கு­ராணி அன்­ஸே­லிக்கா தாஹிர், பலஸ்­தீன அழ­கு­ராணி நட்­டேலி ரன்­திசி உட்­பட போட்டியாளர்கள் சிலரை படங்களில் காணலாம்.

 

2007314713741_1168264313258292_395472885

 

2007314650541_1168678686550188_685149384

metronews.lk

  • தொடங்கியவர்

மினி ஸ்கர்டுக்கு கசைஅடி வாங்கிய ஈரான் பெண், இன்று முன்னணி ஃபேஷன் டிசைனர்!

13707360_658588264299096_1942305421_n_11

தலா ராஷி (Tala Raassi), இஸ்லாமிய மதச் சட்டங்கள் இன்றளவும் வலுவாக இருக்கும் ஈரான் நாட்டுப் பெண். 16 வயது ராஷி, தன் வீட்டில் தன் உறவினரின் பிறந்த நாளை முன்னிட்டு வீட்டுக்குள்ளேயே மினிஸ்கர்ட் அணிந்து பிறந்த நாள் கொண்டாட்டங்களில் மூழ்கி இருந்தாள். திடீரென ஆயுதம் ஏந்திய வீரர்கள் வீட்டுக்குள் புகுந்து அவளை  இழுத்துச் சென்றனர். "என் மகள் என்ன குற்றம் செய்தாள் " என்று அவளின் தந்தை பதறி அடித்து விசாரித்த போது வீரர்களிடமிருந்து வந்த வார்த்தை "மினிஸ்கர்ட்".

ராஷியின் தந்தை எவ்வளவோ கெஞ்சி, கூத்தாடி, மன்னிப்பு கோரியும் மகளை விட மறுத்துவிட்டனர்.  5 நாட்கள் சிறை 40 கசை அடி என்று தண்டனை வழங்கினார்கள். வீட்டுக்குள் கூட பெண்கள், தங்கள் உடலை புர்கா மற்றும் ஹிஜாப் கொண்டு முழுமையாக மறைக்க வேண்டும் என்று ஈரான் அரசு சொல்லாமல் சொல்லியதை ராஷிக்கு உணர்த்தியது. 

ராஷிக்கு அப்போது தான் மனத்தில் கேள்விகள் எழுகின்றன. "நான் என் சொந்த வீட்டில் கூட எப்படி உடை அணிய வேண்டும் என்று நான் தீர்மானிக்க முடியாதா...? அரசின் சட்ட திட்டங்கள் என் வீட்டின் படுக்கை அறை வரை பாயுமா...? தனி மனித சுதந்திரம் என்றால் என்ன..? " என்று கேள்விகள் தொடர்கின்றன. 

14474545_1609754105985370_66639298876250

அன்று அந்த 16 வயது பெண்ணுக்கு விடை தெரியவில்லை, நியூட்டனின் 3-ம் விதி படி ஒவ்வொரு வினைக்கும், சரி சமமான எதிர்வினை உண்டு தானே. அப்படி ஒரு வினையைத் தான் முதலில் ராஷிக்கு ஈரான்  அரசு அதிகாரிகள் கசை அடி மூலம் வினையாற்றினர். அதிகாரிகள் அடித்த கசை அடி ராஷியின் உடல் மீது விழுவில்லை, அவள் மனதில் விழுந்தது. அன்று அவர்கள் அடித்த ஒவ்வொரு கசை அடியும், அவளின் தேடலை அதிகரித்தது. எது சுதந்திரம் என்கிற கேள்விக் கணைகளை அவள் மனதில் தைத்தது. அவளும் விடை தேடிய படியே சில வருடங்களுக்குப் பிறகு குடும்பத்தோடு அமெரிக்காவிற்கு பயணப்பட்டாள்.

கிடைத்தது விடை. ''சுதந்திரம் என்பது நான் விரும்பும் உடை" என்று உரக்கச் சொல்லத் தொடங்கினாள். ''ஆம், என்னை நான் எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை நான் தீர்மானிக்க வேண்டும். என் நம்பிக்கை என்கிற அழகை என் உடைகள் மூலம் வெளிப்படுத்த வேண்டும்" என்று தனக்கான ஆடைகளை தானே வடிவமைக்கத் தொடங்கி, இன்று அமெரிக்காவின் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். குறிப்பாக இவர் பிகினி மற்றும் ஸ்விம் சூட் வகை ஆடைகளை வடிவமைப்பதில் ஸ்பெஷலிஸ்ட்.

தற்போது 35 வயதாகி ஃபேஷன் லைன் என்கிற நிறுவனத்தை நடத்தி வரும் ராஷியை பார்க்கும் போதெல்லாம், அன்று கசை அடி வாங்கிய 16 வயது பெண்ணை  நினைவுப்படுத்துகிறார். 

14241044_1788246088126627_1753738261_n_1

ராஷி அதோடு நின்றுவிடவில்லை. Fashion is Freedom என்கிற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டிருக்கிறார். அமெரிக்க பத்திரிகையான நியூஸ்வீக்கின் "உலகின் பயமற்ற பெண்மணி - 2012 " பட்டத்தை  மிகப் பெரிய ஆளுமைகளான ஒபேரா வின்ஃப்ரே & ஹிலாரி கிளிண்டன் உடன் பகிர்ந்து கொண்டார். அன்று ஈரான் அதிகாரிகள் ஆற்றிய வினைகளுக்கு, தன்னை அறியாமலேயே மிகச் சரியான எதிர்வினையை ஆற்றி உலகை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ராஷி.

இதுவரை படித்துவிட்டு இவர் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கு எதிரானவர் என்று முடிவுக்கு வந்துவிட வேண்டாம். "நான் இஸ்லாமிய பாரம்பரியத்தை பெருமையாக பார்க்கிறேன். இஸ்லாத்தை மதித்து புர்கா மற்றும் ஹிஜாப் அணிபவர்களை நான் மதிக்கிறேன். அதே போல் பல உலக நாடுகளில் இஸ்லாமிய பெண்கள், எந்த உடை அணிய விரும்புகிறார்களோ அந்த உடையை அணிகிறார்கள். (இதில் இந்தியாவும் அடக்கம் என்பதில் மகிழ்ச்சி). நான் அந்த சுதந்திரத்தை தான் கேட்கிறேன்" என்று அமைதியாக தன் கருத்துக்களோடு புன்னகைக்கிறார் ராஷி. 

vikatan

  • தொடங்கியவர்
 
 
 
Bild zeigt Baum, Pflanze, im Freien und Natur
 

அத்தி பழங்களை பறிக்க மரத்தின் உச்சியில் ஏறும் ஒரங்குட்டான்
==================================================
இந்த வருடத்தின் வன உயிர் புகைப்பட போட்டியின் முதல் இடத்தை இந்த புகைப்படம் வென்றுள்ளது.

இந்தோனீஷியாவின் போர்னியோ தீவில் உள்ள குனாங் பலூங் தேசிய பூங்காவில் உள்ள மழைக்காடுகளில், மரங்களின் உச்சி கிளைகளில் வைக்கப்பட்ட தூரத்திலிருந்து இயக்கும் கேமராவைக் கொண்டு அமெரிக்காவைச் சேர்ந்த டிம் லமான் என்பவரால் இந்த காட்சி புகைப்படமாக எடுக்கப்பட்டது.

BBC

  • தொடங்கியவர்

 

மூக்கில் டயர் சிக்கிய காண்டா மிருகம்
=========================
ஸிம்பாப்வேவில் உள்ள இந்த காண்டாமிருகத்தின் மூக்கில் ரப்பர் டயர் சிக்கிக்கொண்டதாம். அதற்கு மயக்க மருந்து வழங்கிய மருத்துவர்கள் அந்த டயரை நீக்கியுள்ளனர்.

  • தொடங்கியவர்

ஒரு குட்டி கதை...

 

14717118_1464983886851351_14115322049655

ஒருத்தன் தன் மனைவி மேல்
அதீத அன்பு வைத்திருந்தான்...
ஆனால் அவனுக்கு சிறு கவலை...
கொஞ்சநாளகவே மனைவிக்கு காது சரிவர
கேட்க்கவில்லை... அவளுக்கே தெரியாமல்
அவளது குறையை போக்க நினைத்தான்...

ஒரு காது டாக்டரை அணுகி... டாக்டர் சார்...
என்மனைவிக்கு காது கேட்கவில்லை..
எனவே அவளுக்கே தெரியாமல் அந்த குறையை.நீங்கள்தான் போக்கவேண்டும்...

டாக்டரும்... ஓகே...ஆனால், உங்கள் மனைவிக்கு எவ்வளவு தூரத்தில் நின்று கூப்பிட்டால் காது கேட்க்க வில்லை என்பது தெரிஞ்சாதானே வைத்தியம் பாக்க வசதியா இருக்கும்....

சுத்தமா கேக்கலையா...?
100அடி தூரத்துல இருந்து கூப்பிட்டா கேட்கலையா...?
10அடி தூரத்திலிருந்தா....இப்படி....?
அதை முதலில் தெரிந்து கொண்டு வா என்றார்...

அவனும்.... சரி என்று
வீட்டுக்கு போனான்....

அவன் மனைவி..கிச்சனில் ஏதோ சமையல்
செய்து கொண்டிருந்தாள்....

இவன் வாசலுக்கு வெளியே நின்று கொண்டு
தன் சோதனையை ஆரம்பித்தான்...

ஹே...ய்....மரகதம்...இன்னைக்கு என்ன டிபன்
காலையில.....

பதில் இல்லை....

சரி கொஞ்சம் பக்கத்துல போய் கேட்ப்போம்ணு...நெனைச்சிக்கிட்டு...

கிச்சனுக்கு வெளியில நின்னுக்கிட்டு...

அடியேய் மரகதம்...இன்னைக்கு என்ன காலை டிபன்.....?

அப்பவும் wife ta இருந்து....
No responce....!
..
என்னடா இதுன்னு நெனைச்சுக்கிட்டு...

மனைவி பக்கத்துல போய்...
நேருக்கு நேர் நின்னுக்கிட்டு....

ஏன் டார்லிங்... நான் கேட்டது உன் காதுல விழலையா...இன்னைக்கு என்ன டிபன்செல்லம்..?

யோவ்...

நீ மொதோவாட்டி கேட்டப்பயே... இன்னைக்கு. உப்புமா... உப்புமா...னு...நாயா..கத்தறேன்...

உன்காதுல..விழாம....ஏன்யா ஏன் உயிர எடுக்குற..ன்னு....

ஹாஹாஹாஹா!

நீதி...

மற்றவர் குறை காணும் முன்
உன்னை சரி செய்!

vikatan

  • தொடங்கியவர்

எல்.சி.டி. திரையுடன் திருமணப் பத்திரிகை.. கர்நாடக முன்னாள் அமைச்சரின் ஆடம்பரம்!

dc8888_15558.jpg

வ்வொரு குடும்பத்தில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளுக்கும் பத்திரிகை அடித்து முறைப்படி வரவேற்பது நம் மரபு. அதுபோல் கோயில் மற்றும் இதர விழாக்களுக்கும் பத்திரிகை அடிக்கப்படுவது உண்டு. ஆதிகாலம் முதல் தற்போதுள்ள நவீன காலம் வரை அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு பத்திரிகைகள் பலவகைகளில் அச்சடிக்கப்படுகின்றன. அந்தவகையில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி அனைவரையும் கவரும் வகையில் எல்.சி.டி திரையில் வரவேற்கும்படியான திருமணப் பத்திரிகைகளை வடிவமைத்திருக்கிறார். அது, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பி.ஜே.பி ஆட்சியில் அமைச்சராக இருந்த கலி ஜனார்த்தன் ரெட்டி, தனது மகளின் திருமணத்துக்காகத் தயாரித்துள்ள பத்திரிகையைப் பார்த்தால் வாயடைத்துப் போவீர்கள்.

சுரங்கத் தொழிலில் பல கோடி லாபம் கொழித்த ஜனார்த்தன் ரெட்டி, தனது மகள் ப்ராமினி திருமணத்துக்காக ஒரு ஸ்பெஷல் கல்யாணப் பத்திரிகையைத் தயாரித்துள்ளார். வழக்கமான வார்த்தைகள் அச்சடிக்கப்பட்ட பத்திரிகையாக இல்லாமல், இது பெரிய பாக்ஸ் போன்று உள்ளது. திருமண பத்திரிகையைத் (பெட்டி) திறந்து பார்த்தால், ஜனார்த்தன் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர், திருமணத்துக்கு அழைக்கும் ஒரு வீடியோ எல்.சி.டி திரையில் ஓடுகிறது.

திருமணத்துக்காக ஒரு நிமிட ஸ்பெஷல் வீடியோவை உருவாக்கியுள்ளனர். அதில் ரெட்டி, அவரது மனைவியுடன் பாட்டு பாடிக்கொண்டு தனது மகளை அறிமுகப்படுத்துகிறார். அதன்பிறகு, மணமகள் ப்ராமினியும், மணமகன் ராஜுவ் ரெட்டியும் டூயட் பாடுகிறார்கள். கடைசியாக, திருமண தேதி மற்றும் இடத்தை, ரெட்டி குடும்பத்தினர் கூறுவதுடன் பாடல் முடிவடைகிறது. பத்திரிகையைத் திறந்த உடன் உள்ளே இருக்கும் எல்.சி.டி திரையில் பாடல் ஆட்டோ ப்ளேவாக ஓடுவதுபோல வைத்துள்ளனர். இந்த பாடல் ஷூட்டிங்குக்காகத் தனியாக செட் போட்டு தயாரித்துள்ளனர்.

நவம்பர் 16-ம் தேதி நடக்கவுள்ள இந்தத் திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், பிரபுதேவா, தமன்னா, கத்ரீனா கைப் ஆகியோர் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கியமான சக்திவாய்ந்த மனிதர்களுள் ஒருவரான கலி ஜனார்த்தன் ரெட்டி, ஒருமுறை சட்டவிரோதச் சுரங்க வழக்கில் கைதாகி மூன்று ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். கடந்த ஆண்டு ஜாமீனில் வெளிவந்து, தற்போது மகளின் திருமணத்தை மிகப் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டு உள்ளார்.

திருமணப் பத்திரிகையே இப்படியா...? என்று தீரும் ஆடம்பர திருமண மோகம்?

vikatan

  • தொடங்கியவர்

850 டன் கற்கள்...35 ஆண்டுகள்... ஒரு முதியவர் - " தி கிரேட் வால் ஆஃப் அலபாமா"

unnamed_12273.jpg

டைம் மிஷினில் கொஞ்சம் ஏறுங்கள்... இது நடப்பது 1830 களில்...

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் இருக்கும் டென்னஸ்ஸி ஆற்றங்கரையோரம். அது நீளமாகவும் அகலமாகவும் இருக்கும். இரு பக்கங்களிலும் அடர்ந்த காடு...பறவைகள் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். அதனாலேயே இதைப் "பாடும் ஆறு" என்று சொல்வார்கள். அந்தக் காடுகளையும், ஆற்றையும் சுதந்திரமாக சுற்றி வருகிறாள் தே - லே - நே என்ற அவள். " நீ பிறந்த போது அறுத்த தொப்புள் கொடியை இந்த ஆற்றில் தான் வீசினேன்... இந்த ஆறு உன் சகோதரி..." என்று அவள் அம்மா சொன்னதை மனதில் திடமாக நிறுத்திக் கொண்டாள்.

 அமெரிக்காவின் பூர்வகுடி இனங்களை அழித்தொழிக்கும் பெரும் திட்டத்தை தீட்டுகிறார்கள் வெள்ளையர்கள். "இயூச்சி" இனத்தைச் சேர்ந்த இவர்களும்... அலபாமாவில் இருந்து துரத்தி அடிக்கப்படுகிறார்கள். ஓக்லஹாமாவை வந்தடைகிறார்கள். ஆனால், அவளுக்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை. தன் சகோதரியான ஆற்றை பார்க்க வேண்டும் என்ற ஆவல்... துணைக்கு யாரும் வரத் தயாராக இல்லை... தனியாக நடக்கிறாள். பல போராட்டங்கள், பல பிரச்சினைகளைக் கடந்து,  5 ஆண்டுகள் கழித்து கடற்கரையை அடைகிறாள். அங்கேயே வாழ்ந்து செத்து மடிகிறாள். 

நிகழ் காலத்திற்கு வாருங்கள்... இது தான் நம் மூதாதையரின் கதை என்று டாம் ஹெண்ட்ரிங்ஸிற்கு சொல்கிறார் அவரின் பாட்டி. அன்றிலிருந்து தன் மூதாதையப் பாட்டிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அதன் பொருட்டு இயூச்சி இனத்தைச் சேர்ந்த பலரையும் சந்திக்கிறார். அப்போது ஒரு முதியவர் " இந்த உலகில் எல்லாம் அழிந்துவிடும்... கற்கள் மட்டுமே நிலைத்திருக்கும்..." என்று சொல்கிறார். 1980 யில் இதைக் கேட்ட டாம், அன்றிலிருந்து இன்று வரை கற்களைக் கொண்டு ஒரு நினைவிடம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். 

" இங்கிருக்கும் ஒவ்வொரு கல்லும், என் பாட்டியின் பயணத்தின் ஒவ்வொரு அடியைக் குறிக்கிறது. சீராக இல்லாமல், உயரமும், குட்டையுமுமாய் இருக்கும் இந்த சுவர் அவர் பயணத்தின் போது சந்தித்த இன்னல்களைக் குறிக்கும்..."

என்று சொல்கிறார்  87 வயதாகும் டாம் ஹெண்ட்ரிக்ஸ்.1980களில் இருந்தே இதை செய்ய ஆரம்பித்தாலும், கடந்த பத்தாண்டுகளாகத் தான் இதைப் பொதுமக்களின் பார்வைக்கு வைத்துள்ளார் டாம். இது குறித்த விளம்பரங்களையும் அவர் செய்ததில்லை. ஒருவர் மூலம் ஒருவர் சொல்லி, இன்று உலகளவு புகழ் பெற்றுள்ளது இந்த " தி கிரேட் வால் ஆஃப் அலபாமா".

தன் பாட்டி குறித்த வரலாறையும், "இயூச்சி" இனத்தின் வரலாறையும் இணைத்து " இஃப் தி லெஜெண்ட்ஸ் ஃபேட்" (If The Legends Fade ) என்ற நாவலை எழுதியுள்ளார் டாம். அன்றைய அமெரிக்க அதிபர் ஆண்ட்ரூ ஜாக்சன் உத்தரவின் பேரில், பூர்வகுடிகளை அவர்களின் நிலத்தை விட்டு அப்புறப்படுத்துகிறார்கள். இதை வரலாற்றில் " கண்ணீர்ப் பாதை" (TRAIL OF TEARS) நிகழ்வாகக் குறிப்பிடுகிறார்கள். கடும் குளிர் காலத்தில் கால்நடையாக பல நூறு மைல்களைக் கடக்க வற்புறுத்தப்பட்டார்கள். இந்த இடப்பெயர்வு காலகட்டத்தில் கிட்டத்தட்ட 4000 பூர்வகுடிகள் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. 

ஒக்லஹோமா நகருக்கு அகதிகளாய் வந்தடையும் அந்த பூர்வகுடிகளுக்கு கழுத்தில் எண் பொறித்த சங்கிலிகள் மாட்டப்படுகின்றன. தே - லே - நே விற்கு எண் 59 கொடுக்கப்படுகிறது. இன்றும் அரசின் ஆவணங்களில், "அலபாமா பெண்மணி - 18 வயது - இறந்துவிட்டார்" என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது.  பல போராட்டங்களைக் கடந்து தன் நிலத்திற்கு வந்து சேரும் தே - லே - நே அங்கு ஜோனதன் என்பவருடன் காதல்வயப்பட்டு, அவரோடு வாழ்ந்து ... அகதியாய் அல்லாமல் அமைதியாய், சுதந்திரத்தோடு இறந்து போகிறார் . இது போன்ற வரலாறுகளைப் படித்துவிட்டு வருபவர்களுக்கு இந்த சுவர் வெறும் கற்களாக மட்டும் தெரிவதில்லை. 

" இங்கிருக்கும் போது எனக்கும், என் மூதாதையருக்குமான ஏதோ ஓர் நெருக்கத்தை உணர முடிகிறது. இதில் ஒரு புனிதத் தன்மை இருக்கிறது..." என்கிறார் ஜெனிஃபர். அமெரிக்க பூர்வகுடியான இவர், அடிக்கடி இந்த சுவரைக் காண வருகிறார். 

unnamed%20%281%29_12501.jpg

" இதுவரை 850 டன் கற்களை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறேன். கடந்த 35 ஆண்டுகளில் 3 ட்ரக்குகளை மாற்றியுள்ளேன். அவைகளுக்கு 22 வீல்களை மாற்றியுள்ளேன். இதுவரை 2,700 ஜோடி கையுறைகளை இதற்காக பயன் படுத்தியுள்ளேன். மூன்று நாய்களை வளர்த்துள்ளேன். எல்லாம் மாறிவிட்டன... மாறாதது நான் மட்டும் தான். ஆனால், இனி கற்கள் எடுப்பதை நிறுத்தப் போகிறேன். வயசாகிவிட்டது ஒன்று. மேலும், உலகம் முழுவதிலுமிருந்து பலர் இதைக் காண வருகிறார்கள். அவர்களை வரவேற்று உபசரிக்க வேண்டும்..." என்று ஆச்சர்யப்படுத்தும் வகையில் பேசுபவரிடம்...

" நீங்கள் யார்? ஒரு கலைஞர்? ஒரு பொறியாளர்?"...என்று கேட்டால்.

" நான் ஒரு வயசான, பைத்தியக்கார கிழவன்..." என்று சொல்லி, சின்ன சிரிப்போடும், பெரும் காதலோடும் அந்த கற்களைத் தடவியபடியே அங்கிருந்து நடக்கிறார்...

கற்கள் சிலிர்த்துக் கொள்கின்றன.

vikatan

  • தொடங்கியவர்

 

 

தொலைக்காட்சி நேரலையில் நுழைந்த பூனைக்குட்டி
===================================
துருக்கியில் உள்ளூரு தொலைக்காட்சி ஒன்றின் நேரலை நிகழ்ச்சியின் நடுவே ஒரு பூனைக்குட்டி நுழைந்துவிட்டது.

  • தொடங்கியவர்

கடலைக் கலக்கும் விநோத மீன்கள்!

 

 
 
  • fish_2_3049834g.jpg
     
  • fish_3_3049833g.jpg
     

கடல் மீன்கள் என்னென்ன உள்ளன? இப்படிக் கேட்டால் நாம் சாப்பிடும் வஞ்சிரம், வாவல், சங்கரா மீன்களின் பெயர்களைச் சொல்லிவிடுவீர்கள். கடலில் இந்த வகை மட்டுமல்ல; ஏராளமான மீன் வகைகள் உள்ளன. இதுவரை நீங்கள் அறிந்திராத சில மீன்களைப் பார்ப்போமா?

விரியன் மீன்

விரியன் மீனைக் (viper fish) கொலைகார மீன் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு மிகவும் மூர்க்கமாக இருக்கும் இந்த மீன். ஆனால், இந்த மீன் இரண்டு அடி நீளம் வரைதான் வளரும். பெரிய கண்களும் ஊசி போன்ற கூர்மையான பற்களும் இந்த மீனுக்கு உண்டு. பிறந்தது முதல் இறக்கும் வரை வாயைத் திறந்தபடியே வைத்திருக்கும். வாயை மூட முடியாத அளவுக்கு இதன் பற்கள் மிக நீளமானவை. சாப்பிடாமல் நீண்ட நாட்கள் உயிர் வாழக் கூடிய ஆற்றல் இந்த மீனுக்கு உண்டு.

சவப்பெட்டி மீன்

சவப்பெட்டி மீன்கள் (coffin fish) தெற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா கடற்கரையோரங்களில் அதிகம் காணப்படுகின்றன. இந்த மீன்கள் 15 செ.மீ. வரை வளரும். அதாவது அரை அடி ஸ்கேல் அளவுக்கு இருக்கும். சிறிய கால்கள் போல் காட்சியளிக்கும் துடுப்புகளைக் கொண்டு தரையில் நடந்து செல்லும் இந்த மீன். இதை ‘கை மீன்’ (hand fish) என்றும் சொல்வதுண்டு. எதிரி தாக்க வந்தால், அவசர அவசரமாக நிறைய தண்ணீரைக் குடித்து, உடலை உப்பச் செய்துவிடும். இதன் உப்பிய உடலை எதிரியால் கடிக்கக்கூட முடியாது.

நீல வளைய ஆக்டோபஸ்

கடல்வாழ் உயிரினங்களில் அதிக விஷம் கொண்ட மீன் நீல வளைய ஆக்டோபஸ்தான் (Blue ringed octopus). ஒரு கோல்ஃப் பந்து அளவே இந்த மீன் இருக்கும். நீளம் 58 அங்குலம் மட்டுமே. ஆள்தான் பார்க்க மிகவும் சிறிது. ஆனால், விஷமோ மனிதர்களைக் கொல்லக் கூடிய அளவு கொடியது. இதன் விஷத்திற்கு மாற்று மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

fish_3049832a.jpg

துடுப்பு மீன்

உலகிலேயே நீளமான, சதைப் பிடிப்பில்லாதது இந்தத் துடுப்பு மீன்தான் (oar fish). 36 அடி நீளம் வரை வளரும். பாம்பின் உடல் போல நீளமாக நீண்டு வளர்ந்திருக்கும். உடல் முழுதும் நீண்டு செல்லும் சிவப்பு துடுப்பு இருக்கும். இதை ரிப்பன் மீன் என்றும் சொல்வதுண்டு. இந்த மீனை மக்கள் கடல் பாம்பு எனத் தவறாக நினைத்துப் பயப்படுவதும் உண்டு.

கல்பர் விலாங்கு

கல்பர் விலாங்கு (gulpe reel) மூன்று முதல் ஆறு அடி நீளம் வரை வளரக்கூடியது. இந்த விலாங்கு மீனுக்கு மிகப் பெரிய வாய் உண்டு. எவ்வளவு பெரிய இரை வந்தாலும் இது தன் வாயை ஒரு வலை போல் விரித்து, இரையை அப்படியே பிடித்துவிடும். பெரிய இரையைத் தாங்கும் அளவு இதன் வயிறும் விரிவடையும். இதற்கு நீண்ட, சாட்டை போன்ற வால் உண்டு.

ராட்சஸக் கணவாய்

மிகப் பெரிய உயிரினங்களில் இதுவும் ஒன்று. சராசரியாக 46 அடி நீளம் வரை வளரும். இதற்கு எட்டு ராட்சஸக் கைகள் உள்ளன. இவற்றின் நுனியில் உறிஞ்சக்கூடிய வகையிலான கப்புகள் இருக்கும். இவற்றை இரையின் மேல் வைத்தால், கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும். கையில் சிக்கும் எதையும் இது விழுங்கி விடும். இந்த ராட்சஸக் கணவாயை (giant squid) யாரும் உயிருடன் பார்த்ததில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: ஷ்யாம்

 

p106a.jpg

வாட்ஸ்அப் காட்சி

`மாட்டுக்கு தீனி போட்டாச்சா?' எனக் கேட்ட முதலாளிக்கு, வாட்ஸ்அப்பில் வந்தது பதில்... `மாடு, தீனி உண்ணும் காட்சி!'

- வி.வெற்றிச்செல்வி


p106b.jpg

வருத்தம்

``ஓட்டுக்கு ஆயிரம் ரெண்டாயிரம்னு பேசிக்கிட்டாங்க...

இப்படி ரத்து பண்ணிட்டாங்களே!''

எனப் புலம்பினாள் பாட்டி.

- கோ.பகவான்


p106c.jpg

வித்தியாசம்

செல்ஃபி எடுக்காமல் தன்னிடம் ஆட்டோகிராஃப் கேட்டவனை, வித்தியாசமாகப் பார்த்தாள் நடிகை.

- விஜயலக்‌ஷ்மி


p106d.jpg

மகிழ்ச்சி

தினமும் மனைவிக்கு பூ வாங்கிச் செல்பவனைப் பார்க்கும்போது எல்லாம் மகிழ்ந்தாள் பூக்காரி.

- பொன்.குமார்


p106e.jpg

சமாளிப்பு

``ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ...'' என்றதும் கால் கட்டாக, பெருமூச்சுவிட்டான் கடன் வாங்கியவன்!

- சி.சாமிநாதன்


p106f.jpg

பகையை மற!

``பழசை எல்லாம் மனசுல வெச்சுக்காதீங்க.

மறக்காம எனக்கு ஓட்டு போட்டுடுங்க''

என்றபடி வாக்கு சேகரித்தார் வேட்பாளர்.

- கோ.பகவான்


p106g.jpg

பாசம்

``அப்பா... போனைப் பார்த்து சிரிச்சுக்கிட்டே இருக்கீங்க. எங்களைப் பார்த்தா மட்டும் ஏன் திட்டுறீங்க?'' என்ற மகனின் கேள்விக்கு, ராகுலிடம் பதில் இல்லை.

- மணிகண்டன்


p106gg.jpg

டிப்ஸ்

``வர்ற கஸ்டமர்கிட்ட யாரும் டிப்ஸ் கேட்கக் கூடாது!'' என்றபடி `தங்களால் இயன்றதை உதவுங்கள்' என்கிற கோயில் நன்கொடை உண்டியலை எடுத்துவைத்தார் ஹோட்டல் முதலாளி.

- கோ.பகவான்


p106ggg.jpg

வசமாய்!

``அப்பா... எதிர்வீட்டு ஆன்ட்டி உங்க ஃப்ரெண்ட் ரிக்வஸ்ட்டை அக்செப்ட் பண்ணிட்டாங்க!'' என்றான் மகன்,அம்மா முன்னிலையில்.

- கோ.பகவான்


p106gggg.jpg

பந்த்

எதிர்க்கட்சிகள் திடீர் பந்த் அறிவிக்க, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது டாஸ்மாக் கடைகளுக்கு.

- கே.சதீஷ்

vikatan

  • தொடங்கியவர்

பல்லேலக்காவும் பிரிட்டன் கலைஞர்களும்!

 

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஒக்டோபர் - 20

 

1803 : லூசியானா மாநிலத்தை பிரான்ஸிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்துக்கு ஐக்கிய அமெரிக்கா ஒப்புதல் அளித்தது.

 

832election-varalaru.jpg1827 : ஒட்டோமான், எகிப்தியப் படைகள் பிரித்தானிய, பிரெஞ்சு, ரஷ்யக் கூட்டுப் படைகள் நவாரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. இது கிரேக்க விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.

 

1941 :  சேர்பியாவின் கிறகுஜேவாச் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் நாஸி ஜேர்மனியர்களினால் கொல்லப்பட்டனர்.

 

1944 : இரண்டாம் உலகப் போரில் சோவியத் இராணுவம் யூகோஸ்லாவியத் தலைநகர் பெல்கிரேட்டை ஜேர்மனியிடமிருந்து மீட்டது.

 

1944 : அமெரிக்காவின் கிளீவ்லன்ட் நகரில் இயற்கை வாயுக் குழாய் வெடிப்பினால் 130 பேர் கொல்லப்பட்டனர்.

 

1947 : அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இராஜ தந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டது.

 

1952 : பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டிருந்த கென்யாவில் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, கிளர்ச்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். பின்னாளில் ஜனாதிபதியாகத் தெரிவான ஜோமோ கென்யாட்டாவும் இவர்களில் ஒருவராவார்.

 

1961: நீர்மூழ்கியிலிருந்து கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோவியத் யூனியன் முதல் தடவையாக பரிசோதித்தது.

 

832Muammar-Gaddafi---varalaru.jpg1962 : இந்தியாவின் எல்லைப்பகுதியில் சீனா தாக்குதல்களை ஆரம்பித்தது. இது இந்திய – சீன யுத்தத்துக்கு வழிவகுத்தது.

 

1976 : அமெரிக்காவின் மிசிசிப்பி ஆற்றில் பயணிகள் கப்பல் ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில் 78 பயணிகள் கொல்லப்பட்டனர். 18 பேர் மட்டும் தப்பினர்.

 

1982 : இலங்கையில் முதன் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.

 

1982 : மொஸ்கோவில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 66 பேர் இறந்தனர்.

 

1991 : இந்தியாவின் உத்ரகாசியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 1000 பேர் உயிரிழந்தனர். 

 

2001 : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கூட்டணிக் கட்சி தொடங்கப்பட்டது.

 

2011 : லிபியாவில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட கேர்ணல் முவம்மர் கடாபி கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

metronews.lk

  • தொடங்கியவர்

14523286_1160975267284499_55060680710193

அவுஸ்திரேலிய அணியின் புதிய சகலதுறை நட்சத்திரம் மிட்செல் மார்ஷின் பிறந்தநாள்.
Happy Birthday Mitchell Marsh

 
  • தொடங்கியவர்

16 வயதில் பைலட் லைசென்ஸ் பெற்ற பள்ளி மாணவி!

Pilot_15523.jpg

தினாறு வயதில் இருசக்கர வாகனத்துக்குக் கூட ஓட்டுநர் உரிமம் தரமாட்டார்கள். ஆனால் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பைலட் லைசென்ஸ் பெற்றிருப்பது  ஆச்சர்யமானதுதானே? குஜராத்தின் வதோதரா நகரைச் சேர்ந்தவர் 16 வயது வரிஜா ஷா, சிறுவயதிலேயே பைலட் லைசென்ஸ் பெற்ற முதல் மாணவி என்ற பெருமையைத் தட்டிச் சென்றிருக்கிறார்.அக்டோபர் 17-ம் தேதிதான் வரிஜா ஷாவுக்கு லைசன்ஸ் கிடைத்தது. அன்றைக்குதான் அவருடைய 16-வது பிறந்த நாள். இந்த பிறந்த நாள் தந்த மகிழ்ச்சியை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்.

'செஸ்னா 152' ரக விமானத்தை வதோதரா நகர் மேல் சீறிப் பறக்கசெய்து, ஆகாயத்தில் வட்டச் செய்து பத்திரமாக தரை இறக்கியுள்ளார் வரிஜா ஷா. தன்னிடம் கற்றதை கொஞ்சமும் தவறில்லாமல் இயக்கிய வரிஜா ஷாவின் திறமையைப் பார்த்து, அசந்துவிட்டார் பயிற்சியாளர்.

வதோதரா நகரில் உள்ள நவ்ரச்சனா (Navrachana) பள்ளியில், வரிஜா ஷா ஏழாம் வகுப்பு படிக்கும்போதே விமானம் ஓட்டவேண்டும் என்ற ஆசை உருவாகியிருக்கிறது. வரிஜா ஷாவின் தந்தை பிரசாந்து மோதி ஷா, விமானம் ஓட்டவேண்டும் என்று கனவு இருந்துள்ளது. ஆனால் சில சூழ்நிலைகள் காரணமாக அவரால் முடியவில்லை. தன்னைப்போல மகளுக்கு பைலட் ஆசை இருப்பதைத் தெரிந்துகொண்டவர், 'குஜராத் ஃப்ளையிங் கிளப்'-ல் சேர்த்துவிட்டார்.

இங்கு தரைப் பயிற்சி, விமானம் ஓட்டும் பயிற்சி என ஓராண்டு பயிற்சிகள் மேற்கொண்டார். ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடன் துல்லியமாக கற்றுக்கொண்ட வரிஜா ஷா, வதோதரா நகரை ஆகாயத்தில் இருந்து பார்க்கவேண்டும் என்று தான் கண்ட கனவை நினைவாக்கியிருக்கிறார்.

Pilot1_15279.jpg

பிறகு என்ன செய்யப் போகிறீர்கள்...

இந்திய விமானப் படையில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்வதே என் லட்சியம் என்று கூறும் வரிஜா ஷா, விமானம் ஓட்டுவதில் இன்னும் அனுபவம் தேவைப்படுகிறது. பிறகு பிரைவேட் பைலட் லைசென்ஸ் பெறவேண்டும். இதற்காக NCC-ல் (National Cadet Corps) சேர தயாராகிக் கொண்டிருக்கிறார்.

வரிஜாவின் இன்னொரு முகம்:

டென்னிஸ் விளையாட்டிலும் கலக்கும் வரிஜா ஷா, மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடத்தப்பட்ட டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகளில் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். பைலட் ஆனது தந்தைக்கு சந்தோஷம். டென்னிஸ் விளையாடுவது அம்மாவின் ஆசை. இப்படி இருவரின் ஆசைகளை நிறைவேற்றிய வரிஜா  ஷா வீட்டில் செல்லப் பெண்ணாகி விட்டார்.
ஆகாயத்திலிருந்து, தரையிறங்கிய வரிஜா ஷாவுக்கு, அவரின் பள்ளி மாணவர்கள் சாக்லெட் மழையால் நனைத்து விட்டார்கள்.

vikatan

  • தொடங்கியவர்

14612515_1160969453951747_74121479992255

இந்திய அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் விரேந்தர் சேவாக்கின் பிறந்தநாள்.
இப்போதெல்லாம் ட்விட்டரில் ரகளையான , கலகலப்பான ட்வீட் மூலம் கலக்கிவருகிறார்.

Happy Birthday Virender Sehwag

 

கொண்டாட்டத்தின் இன்னொரு பெயர் ஷேவாக்! #HappyBirthdayViru

shewag_11582.jpg

சர்வ நிச்சயமாக கிரிக்கெட் வரலாற்றில்  கொண்டாடப்பட வேண்டியவர்  வீரேந்திர ஷேவாக்.  அதிரடி, சரவெடி தீபாவளியை  டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த உலகக்கு அறிமுகப்படுத்தியதே ஷேவாக் தான். கிரிக்கெட்டில் யார் யாரெல்லாம் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் என  ஷேவாக் காலத்தில் கொண்டாடப்பட்டார்களோ அத்தனை பந்துவீச்சாளர்களையும் கதற விட்டவர் ஷேவாக். சென்னை சேப்பாக்கம் ஆகட்டும், பாகிஸ்தானின் மூல்தான் ஆகட்டும், இலங்கையின் கல்லே ஆகட்டும், தென்னாபிரிக்காவின் ஜோக்கன்னஸ்பார்க் ஆகட்டும், ஆஸ்திரேலியாவின் சிட்னி ஆகட்டும், நியூசிலாந்தின் வெலிங்டன் ஆகட்டும் எந்த நாட்டிலும், எந்த வகையிலான பிட்சிலும் ஷேவாக்கின் அதிரடி என்றைக்கும் மாறியதே கிடையாது. இன்னும் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமென்றால் டெஸ்ட், ஒருதின போட்டி, டி20 என எந்த ஃபார்மெட்டாக இருந்தாலும் கவலைப்படாமல் தனது பாணியில் அடித்து நொறுக்கியவர் ஷேவாக். 

பெரிய அளவிலான கால் நகர்த்தல்கள் இல்லாமலேயே சுழற்பந்து மைதானங்களில் முரளிதரன், வார்னேவை புரட்டியெடுக்க ஷேவாக்கால் மட்டுமே முடியும்." எனக்கு இது தான் வரும், என்னுடைய பாணி இது தான், எந்த சாதனை பற்றியும் எனக்கு கவலை இல்லை, எந்தச் சூழ்நிலையிலும் நான் பேட்டிங் செய்யும்போது ஒரு பந்தை பந்துவீச்சாளர் வீசுகிறார் எனில், அதை எப்படி எல்லைக்கோட்டுக்கு அப்பால் அனுப்ப முடியும் என்பதில் தான் என் கவனம் இருக்கும்" ஷேவாக் தனது ஆட்டம் குறித்து சொன்ன வார்த்தைகள் இவை. 

ஷேவாக்கின் ஆட்டம் மட்டுமல்ல ஷேவாக்கை பற்றி பேசுவதே 90 களுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். டி20 போட்டிகள் அறிமுகமாவதற்கு முன்னரே ரசிகர்களுக்கு  தொடர்ந்து விருந்தளித்து வந்தவர் ஷேவாக்.  முதல் ஓவரின் முதல் பந்தையே  பவுண்டரிக்கு விரட்டுவது, அரைசதத்தை பவுண்டரியிலும், சதம், இரட்டை சதம், முச்சதம் என எதுவானாலும் சிக்ஸருக்கு விரட்டி 'நான் தில்லான ஆள்' என கெத்தாக எதிரணிக்கு முன் நிற்கும் ஷேவாக்கை நினைத்தால் இப்போதும் டிவியில் ஷேவாக்கின் ஆட்டத்தை கண்டவர்களுக்கு கூட சிலிர்க்கும். அப்படி ஷேவாக் ரசிகர்களை சிலிர்க்க வைத்த மிக முக்கியமான ஐந்து இன்னிங்ஸ் பற்றிய நறுக் சுருக் ஷேவாக் பாணி குறிப்புகள் இங்கே! 

1. முதல் முச்சதம் கண்ட இந்தியன்

 

 

2004-ல் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது இந்திய அணி. மூல்தானில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸை ஷேவாக்கும், சோப்ராவும் தொடங்கினார்கள். இரண்டாவது ஓவரில் ஷேவாக்குக்கு  பேட்டிங் கிடைத்தது. முதல் மூன்று பந்துகளில் ரன் இல்லை. முகமது சமி வீசிய நான்காவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் ஷேவாக். அந்தச் சமயத்தில் இருந்தே பாகிஸ்தான் வீரர்களுக்கு தலைவலி ஆரம்பித்தது. சச்சின் டெண்டுல்கரின் 194 ரன்கள் எடுத்த அந்த மேட்சில் சச்சினை தவிர்த்துவிட்டு எல்லோரும் ஷேவாக்கை கொண்டாட ஆரம்பித்தார்கள். அதற்கு காரணம் ஷேவாக்கின் கூல் இன்னிங்கிஸ். 375 பந்துகளை சந்தித்து 39 பவுண்டரி, ஆறு சிக்ஸர் உட்பட 309 ரன்கள் எடுத்து  ரசிகர்களை  பரவசப்படுத்தினார் ஷேவாக். 

2.  உலக இறுதிப்போட்டியில் தனி ஒருவன் :- 

 

 

2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டி. ஜோகன்னஸ்பார்க் மைதானத்தில் இந்தியாவும் - ஆஸ்திரேலியாவும் கோப்பைக்கு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தனர். முத்த இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய பந்துவீச்சாளர்களை துவைத்து காயப்போட்டனர். 358 ரன் என்ற இமாலய இலக்கு இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதல் ஓவரிலேயே மெக்ராத்தின் சாதுர்யமான பந்தில் சச்சின் அவுட்டாக, 'நான் இருக்கிறேன்' என இறங்கி விளாசினார் ஷேவாக். கங்குலி 24 ரன்னில் அவுட் ஆனாலும் கூட, இந்திய அணியின் ரன் ரேட் குறையவில்லை. அதற்கு காரணம் ஷேவாக்.மெக்ராத் , பிரட் லீ இரண்டு பேராலும் ஷேவாக்கை ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஷேவாக் களத்தில் இருக்கும் வரை இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது. 24 ஓவரில் 147  ரன் எடுத்திருந்தது இந்திய அணி. அப்போதைய காலகட்டத்தில் 24 ஓவர்களில் இவ்வளவு  ரன்களை குவிப்பது மிகப்பெரிய விஷயம். பந்துவீச்சாளர்கள் ஒருபக்கம் ஷேவாக்கை வீழ்த்தமுடியாமல்  திணறிக்கொண்டிருக்க ஷேவாக் தேவையின்றி ரன் அவுட் ஆனார். இக்கட்டான, எக்கச்சக்க பிரஷர் உள்ள அந்த போட்டியில் 80 பந்தில் 10 பவுண்டரி, மூன்று சிக்ஸர் உட்பட 82 ரன்களை எடுத்தார் ஷேவாக். ஆஸ்திரேலிய வீரர்களில் கண்ணில் இருந்த குழப்பம் ஷேவாக் அவுட்டான பிறகு தான் நீங்கியது. அது தான் ஷேவாக். 

3.  ஆல்டைம் பெஸ்ட் சிட்னி இன்னிங்ஸ்

 

 

ஆஸ்திரேலிய மண்ணில் அந்நாட்டுக்கு எதிராக விளையாடும்போது எதிரணி வீரர்கள் எப்போதுமே திணறுவது வழக்கம். 2003-ம் ஆண்டு மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடந்தது, முதல் இன்னிங்ஸை இந்தியா துவங்கியது. சச்சின் டெண்டுல்கர் உட்பட நான்கு இந்திய வீரர்கள் டக் அவுட்டான டெஸ்ட் போட்டி அது. முதல் இன்னிங்ஸில் இந்தியா அடித்த ரன்கள் 366. அதில் ஷேவாக் குவித்த ரன்கள் 53.27% . முதல் நாள் ஷேவாக் பவுண்டரிகளாக விளாசிக்கொண்டிருந்தார். ஒரே நாளில் இரட்டை சதம் எடுத்து சாதனை புரிவார் என எதிர்பார்த்த சமயம் அது. 195 ரன்கள் இருந்தபோது சிக்ஸர் அடிக்க முயற்சித்து அவுட்டானார் ஷேவாக். இரட்டை சதம் அடிக்க முடியாதது வருத்தமாக இருக்கிறதா என பிற்பாடு ஷேவாக்கிடம் கேட்க, "அந்த ஐந்து ரன்னை விட 195 ரன்கள் பெரியது" என்றார். இன்றளவும் ஆஸ்திரேலிய மண்ணில் அடிக்கப்பட்ட சதங்களில் மிகச்சிறப்பானதாக இது கருதப்படுகிறது. 

4. இரட்டை சதம்   அடித்த இரண்டாவது இந்தியர்

 

 

2011-ம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது வெஸ்ட் இண்டீஸ். சச்சின் டெண்டுல்கர் அடித்த குவாலியர் ஸ்டேடியத்தில் இருந்து 500 கி.மி தொலைவில் இருக்கும் இந்தூரில் சச்சின் சாதனையை உடைத்தார் ஷேவாக். கேப்டனாக பொறுப்பேற்று விளையாடிய அந்த போட்டியில், தனது பாணியில்  இரட்டை சதம் விளாசினார். கீமார் ரோச், சுனில் நரேன், டேரன் சமி, பொல்லார்டு, சாமுவேல்ஸ், ரஸ்ஸல், ராம்பால் என  வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் அனைவரும் வரிசையாக வந்து ஷேவாக்கிடம் வெளுப்பு வாங்கிக் கொண்டு சென்றனர். சச்சின் டெண்டுல்கர் ஐம்பதாவது ஓவரில் இரட்டை சதம் எடுக்க, ஷேவாக்கோ 44 ஓவரிலியே அந்த சீனை முடித்து விட்டார். 46.3 ஓவரில் ஷேவாக் அவுட்டானார். அப்போது இந்திய அணியில் ஸ்கோர் 376. ஷேவாக் எடுத்த ரன்கள் 219. "வாழ்க்கையில் ஒருமுறையாவது முதல் ஓவரில் இருந்து ஐம்பதாவது ஓவர் களத்தில் நின்று ஆட வேண்டும் என்ற ஆசை எனக்குண்டு. அது இன்றும் பலிக்கும் என எதிர்பார்த்தேன். மிஸ்ஸாகி விட்டது" என போட்டி முடிந்த வருத்தப்பட்டுச் சொன்னார் ஷேவாக். ஒருவேளை அன்றைய தினம் ஷேவாக் 50 ஓவர் வரை நின்றிருந்தால்! 

5 . சி.எஸ். கே வை மிரள  வைத்த ஷேவாக்

 

 

ஷேவாக் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்தும்  ஓய்வு பெற்றுவிட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் ஆடிய போட்டிகள் மிகக்குறைவு. ஆனால் இன்று வரை ஐ.பி.எல் போட்டியில் கெயிலுக்கு அடுத்தபடியாக அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பது ஷேவாக் தான். டி20 போட்டிகளில் ஷேவாக் யார் என்பதைச் சொல்ல இந்த புள்ளிவிவரம் போதுமானது. 2014-ம் ஆண்டு ஐ.பி.எல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. பஞ்சாப் அணிக்காக ஷேவாக் அன்று ருத்ர தாண்டவமாடினார். நெஹ்ரா, அஷ்வின், ஜடேஜா, மோஹித் ஷர்மா என ஒருவரையும் விட்டு வைக்க வில்லை. தோனியின் பச்சா ஷேவாக்கிடம் அன்றைய தினம் பலிக்கவில்லை. என்ன ஃபீல்டிங் செட் செய்தாலும் பந்தை பறக்க விடுவதிலேயே குறியாக இருந்தார் ஷேவாக். வெறும் 58 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரி, 8 சிக்ஸர் உட்பட 122 ரன்களை விளாசித்தள்ளினார் ஷேவாக். ஐ.பி.எல் வரலாற்றில் மிரட்டல் இன்னிங்ஸ் இது. 

ஹேப்பி பர்த்டே வீரு!

vikatan

  • தொடங்கியவர்

தோனிக்காக இந்தியாவை ஆதரிக்கும் ஆஸ்திரேலிய ரசிகை!

dhoni_fan_14359.jpg


டில்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சி செய்து கொண்டிருந்தது. அதில் உள்ள தன் ஆதர்ச நாயகனை பார்ப்பதற்காக காத்திருந்தாள் அவள். பயிற்சி முடிவதாக இல்லை. அவளும் கிளம்புவதாக இல்லை. ஒரு மணி நேரத்துக்கும் மேலானது. ஒரு வழியாக பேக் அப் சொல்லி கிளம்பினர் இந்திய வீரர்கள். அவர்கள் வரும் வழியை நோக்கி வேகமாக நகர்ந்தாள் அவள். யாரைப் பார்க்க நினைத்தாளோ அவரைப் பார்த்தும் விட்டாள். அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அவர், கேட்ட முதல் வார்த்தை, ‛ஹலோ... இங்க என்ன பண்ற நீ?...

இருவரும் இதற்கு முன் பல முறை சந்தித்திருக்கிறார்கள்.  ஆஸ்திரேலியாவில் உள்ள அடெிலெய்ட் நகரில் மேலாண்மை நிறுவனத்தில் பணிபுரியும் அந்தப் பெண்ணின் பெயர் லியானி மர்ரே. வயது 24.  முதல் பார்வையிலேயே அவரை வசீகரித்துவிட்ட அந்த வீரர் மகேந்திர சிங் தோனி.  அன்று முதல் இன்று வரை இந்திய அணி செல்லும் இடமெல்லாம் தோனியை துரத்தி வருகிறார். 

கிரிக்கெட் பிரியராக இருந்து ஒரு வீரருக்கு ரசிகனாவது ஒரு வகை. ஒரு வீரரைப் பிடித்துப் போனதற்காக கிரிக்கெட்டை நேசிப்பது இன்னொரு வகை. லியானி மர்ரே இரண்டாவது ரகம். லியானிக்கு கிரிக்கெட் பற்றி எல்லாம் எதுவும் தெரியாது.  முதல் சந்திப்பிலேயே தோனியைப் பிடித்து விட்டது. தோனியைப் பார்த்த பின் கிரிக்கெட்டும் பிடித்து விட்டது.  (இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்குன்னு உங்க மைண்ட் வாய்ஸ் கேட்டாலும் நம்பித்தான் ஆக வேண்டும்)  

இந்திய அணி 2008-ல் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தது. அடிலெய்ட் டெஸ்ட் தொடங்கும் முன், ஓவல் மைதானத்தில் பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தது இந்திய அணி.  தன் நண்பருடன் முதல் முறையாக கிரிக்கெட் மைதானத்துக்கு வந்திருந்த லியானி மர்ரே, தோனியைப் பார்த்ததும் நேராக அவரிடம் ‛வாட் இஸ் யுவர் நேம்’ எனக் கேட்டு விட்டார்.  ‛ஐயம் மகேந்திர சிங் தோனி’ என புன்னகையுடன் நகர்ந்தார் நம் கூல் கேப்டன்.  தோனியின் இந்த வசீகரம்  அடுத்த மூன்று நாட்களும் லியானியை ஸ்டேடியம் வரவைத்தது.   அன்று முதல் எப்போது இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றாலும், தோனியைப் பார்க்க வந்து விடுவார் லியானி மர்ரே. 

அதற்கெல்லாம் ஒரு படி மேலாக, தோனி மீதான பிரியம் இன்று அவரை டெல்லி வரவைத்துள்ளது. நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்காக  புதன்கிழமை இந்திய அணி பயிற்சி செய்து கொண்டிருந்தபோதுதான், தோனியை சந்தித்திருக்கிறார் லியானி. ‛‛இந்தியாவில் என்னைப் பார்த்ததும் தோனி ஆச்சர்யமடைந்து விட்டார். ஆஸ்திரேலியாவில் பல முறை அவரை சந்தித்திருக்கிறேன் என்றாலும்,  இந்தியாவில் அவர் நட்சத்திர வீரர் என்பதால்,  இந்தியாவில் அவரை சந்திக்க வேண்டும் என நினைத்தேன்.  100க்கும் மேற்பட்ட முறை அவரை பார்த்திருக்கிறேன். இன்று அவருடன் கை குலுக்கியது உணர்ச்சிபூர்வமானது’’ என சிலாகிக்கிறார் லியானி.

‛‛ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தேசிய விளையாட்டு. ஆனால், தோனியைப் பார்ப்பதற்கு முன்பு வரை எனக்கு கிரிக்கெட் பற்றி எதுவும் தெரியாது. தோனியை சந்தித்த பின், இந்திய அணியை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடினாலும் நான் இந்திய அணிக்குத்தான் சப்போர்ட் செய்வேன். காரணம் தோனி. அவர் இருக்கும் அந்தஸ்துக்கு சாதாரண ரசிகையான என்னை நினைவில் வைத்து, பெயர் சொல்லி அழைத்ததை இன்னும் நம்பமுடியவில்லை’’ என மெய்சிலிர்க்கிறார். 

இன்னொரு தகவலைச் சொன்னார் லியானி. 2014-15-ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தது. அப்போது உள்ளூர் தொடரில் சான் அபோட் வீசிய பவுன்சர் பந்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் மரணமடைந்தார். இதனால், அடிலெய்டில் நடக்க இருந்த டெஸ்ட் போட்டியின் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால், அந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை ஏற்கெனவே வாங்கி இருந்தார் லியானி. 

‛‛இந்த தகவலை நான் தோனியிடம் சொன்னதும் அவர், ஐந்து நாட்களுக்குரிய டிக்கெட்டுகளை கொடுத்து விட்டு, மெசேஜ் செய்துவிட்டு போனார்.  என்னைப் பொருத்தவரையில் இது பெரிய விஷயம். தோனி அபாரமான ஹியூமர் சென்ஸ் உடையவர். ஐ லைக் தோனி’’ என முடித்தார்  லியானி. 

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.