Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
ஜகர்த்தா பெஷன் வீக் 2017
2016-10-27 14:59:56

ஜகர்த்தா பெஷன் வீக் 2017 கண்­காட்சி இந்­தோ­னே­ஷி­யாவின் ஜகர்த்தா நகரில் தற்­போது நடை­பெ­று­கி­றது.

 

20247135780922_14774384601531n.jpg

 

202471.jpg

 

இக்­ கண்­காட்­சியில் பங்கு­பற்­றிய மொடல்கள் சிலரை படங்­களில் காணலாம்.

 

20247135780922_14774384602311n.jpg

 

20247_2.jpg

 

20247fashion.jpg

 

metronews.lk

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மெழுகுவர்த்தியால் முடிதிருத்தும் சலூன்! (வீடியோ)

hair%20_18482.jpg

கர்நாடாகவில் சலூன் ஒன்றில் மெழுகுவர்த்தியால் முடிதிருத்தம் செய்யப்படுவது  வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் குல்பர்காவில் தசரத் என்பவர் ராஜ் என்ற பெயரில் சலூன் நடத்தி வருகிறார். இவரது சலூனில் முடி வெட்ட கத்தரி பயன்படுத்துவதில்லை. மெழுவர்த்தியை எரிய விட்டு, அதில்தான்  தனது வாடிக்கையாளர்களுக்கு தசரத் முடி திருத்தம் செய்கிறார். ஆரம்பத்தில் இந்த முறையில் முடி வெட்டிக் கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் பயந்துள்ளனர். ஆனால், தசரத் தனது வித்தியாசமான செயல்முறையை முயற்சியை எடுத்துக் கூறி , மெழுகுவர்த்தியால் முடி திருத்தம் செய்து கொள்ள அனுமதி  வாங்கிவிடுவாராம்.

 

 

தொல்லை தாங்க முடியாமல் வாடிக்கையாளர்கள் சிலர் முதலில் தலை கொடுத்துள்ளனர். ஆனால், இந்த முறையில் முடி வெட்டுவது வாடிக்கையாளர்களுக்கு சற்று வித்தியாசமாக தெரிந்துள்ளது. பிடித்துப் போன பலரும் மெழுகுவர்த்தியால்தான் முடி திருத்தம் செய்து கொள்ள விரும்புகின்றனராம்.

இப்போது  தசரத்தின் ராஜ் சலூனில் முடி வெட்டுவதற்கு ஒருவர் வந்தால், அதனை பார்ப்பதற்கு ஒரு கூட்டமே கூடுகிறது. 

vikatan

  • தொடங்கியவர்

குணத்தை, நடத்தையை மாற்றுமா வண்ணங்கள்? #HowColorsAffectUs

balu%20sathya%201_18064.jpg

`வண்ணங்கள் வெறும் அழகை மட்டும் பிரதிபலிப்பதில்லை. ஒருவர் குணத்திலும் நடத்தையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன! அதனால் அறைக்கு வண்ணம் தீட்டும்போதும், ஆடையைத் தேர்வு செய்யும்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்’ என்கிறார்கள் உளவியலாளர்கள். எனவே, நிறங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தையும் தெரிந்துவைத்திருப்பது மிகவும் முக்கியம். தெரிந்துகொள்வோமா?

மஞ்சள்: மூளைச் செயல்பாட்டைத் தூண்டும்; நரம்புமண்டலத்தைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்; நினைவாற்றலை மேம்படுத்தும். சுயமரியாதை, சுயக்கட்டுப்பாடு, தன்னம்பிக்கை ஆகியவற்றை அதிகரிக்கச் செய்யும்.


பச்சை: மனதையும் உடலையும் ரிலாக்ஸ் ஆக்கி, புத்துணர்ச்சி, சுயக்கட்டுப்பாடு மற்றும் மனதுக்கு இணக்கமான உணர்வுகளைத் தரும். மனஅழுத்தம், தடுமாற்றம், பதற்றம் ஆகியவற்றைக் குறைக்க உதவும். தங்கள் அறையில் வெளிர் பச்சை நிறத்தை பூசலாம். அடர் பச்சை வேண்டாம்.


நீலம்: அமைதியையும் நிதானத்தையும் அளிக்கும். அடக்கம் உள்ளவராகக் காண்பிக்கும். உள்ளுணர்வைத் தூண்டும். படைப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும். மன அழுத்தம், மனப்பதற்றம், தூக்கமின்மையால் அவதியுறுபவர்கள் தங்கள் படுக்கை அறையில் இந்த வண்ணத்தைப் பூசலாம்.


ஊதா: மனதையும் நரம்புகளையும் அமைதிபடுத்தும். ஞானம், ஆன்மிக உணர்வைத் தரும். படைப்பாற்றலை ஊக்குவிக்கும். பதற்றம், தூக்கமின்மை, கொந்தளிப்பான மனநிலை உள்ளவர்கள் தங்கள் அறையில் இந்த வண்ணத்தைப் பூசலாம்.


இளஞ்சிவப்பு: எதிர்த்துப் போராடும் ஆற்றலைத் தரும். ஊக்கம், எதையும் செய்து முடிக்கும் தன்னம்பிக்கையைத் தரும். ரத்த அழுத்தம், மூச்சுவிடுதல், இதயத் துடிப்பு மற்றும் நாடித் துடிப்பு ஆகியவற்றைச் சீராக்கும்; உத்வேகத்தையும் நம்பிக்கையையும் தரும்.


சிவப்பு: மகிழ்ச்சியைக் கூட்டும்; சக்தியைத் தூண்டும்; ரத்த அழுத்தம், மூச்சுவிடுதல், இதயத் துடிப்பு மற்றும் நாடித் துடிப்பு ஆகியவற்றைச் சீராக்கும். பயம், பதற்றம் நீங்கும். அதிக கோபம் கொள்பவர்கள் இந்த நிறத்தைத் தவிர்ப்பது நல்லது.


ஆரஞ்சு: உடல் மற்றும் மனதைத் தூண்டும். புதிய சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். படைப்பாற்றல், மகிழ்ச்சியைத் தூண்டும். சமூகத்தோடு இணைந்து வாழும் உணர்வை ஏற்படுத்தும். மன அழுத்தம், எதிர்மறை எண்ணம் தோன்றுபவர்கள் தங்கள் அறையில் இந்த நிறத்தை அடிக்கலாம்.


கறுப்பு: ஓய்வு மனநிலை மற்றும் வெறுமையை அளிக்கும். தனக்குள்ளே ஆற்றல் பெருகுவதாகவும், எதிலும் சாதகமான சூழல் நிலவுவதாகவும் ஓர் எண்ணத்தை ஏற்படுத்தும்.


வெண்மை: மனத் தெளிவுக்கு உதவும். தடைகளையும் கலக்கத்தையும் சரிசெய்ய நமக்கு ஊக்கமளிக்கும். எண்ணம் மற்றும் செயல்பாடுகளில் துல்லியமான தன்மையை உண்டாக்கும். புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் தரும். 

vikatan

  • தொடங்கியவர்

கைது செய்யப்பட்ட மரமனிதன்
==========================
இவர் ஆஷர் வுட்வர்த். மரம் போல வேடமணிந்து தெருவில் போன இவரை அமெரிக்க போலிஸார் கைது செய்துள்ளனர். வேகமான உலகை தாமதிக்கச் செய்வதுதான் தனது நோக்கம் என்றார் இவர்.

ஆனால், வாகனங்களை மட்டும்தான் இவரால் தாமதிக்கச் செய்ய முடிந்தது. இவரை போலிஸார் கைது செய்துவிட்டனர். அபராதம் அறுபது டாலர்கள்.

BBC

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
இரு தடவைகள் பிறந்த குழந்தை
 

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த குழந்­தை­யொன்று இரு தட­வைகள் பிறந்­துள்­ளது. டெக் ஸாஸ் மாநி­லத்தின் லூவிஸ்­விலே நகரைச் சேர்ந்த இக்­ கு­ழந்தை அதன் தாயின் வயிற்றில் 16 வார சிசு­வாக இருந்­த­போது உயிர்­காப்பு சத்­தி­ர­சி­கிச்சை ஒன்­றுக்­காக தாயின் வயிற்­றி­லி­ருந்து வெளியே எடுக்­கப்­பட்­டது.

 

20221baby34.jpg

 

அச் ­சத்­தி­ர­சி­கிச்­சையின் பின்னர் மீண்டும் தாயின் வயிற்­றுக்குள் வைக்­கப்­பட்டு, தற்­போது முழு­மை­யான கர்ப்­ப­கா­லத்தின் பின்னர் பிர­ச­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

மார்­கரெட் ஹேவ்கின்ஸ் போமர் என்­ப­வரே இக்­ கு­ழந்­தையின் தாய் ஆவார். இவர் 16 வார கர்ப்­பி­ணி­யாக இருந்­த­போது, அவரின் வயிற்­றி­லுள்ள சிசுவின் முள்­ளந்­தண்டில் கட்­டி­யொன்று இருப்­பதை மருத்­து­வர்கள் கண்­டு­பி­டித்­தனர்.

 

பின்னர் இக்­ கு­ழந்­தையின் இத­யத்­து­டிப்பு வீதமும் குறை­வ­டைய ஆரம்­பித்­தது. அதை­ய­டுத்து, அக்­ கட்­டி­யினால் குழந்­தையின் உயி­ருக்கு ஆபத்து ஏற்­ப­டலாம் எனக் கருதி சத்­தி­ர­சி­கிச்சை மூலம் அக் ­கட்­டியை அகற்­று­வ­தற்கு மருத்­து­வர்கள் தீர்­மா­னித்­தனர்.

 

20221baby.jpg

 

இதன்­படி இச் ­சிசு உரு­வாகி 23 ஆவது வாரத்தில் இச் ­சி­சுவை அதன் தாயின் வயிற்­றி­லி­ருந்து மருத்­து­வர்கள் வெளியே எடுத்து, சத்­தி­ர­சி­கிச்சை மூலம் குறித்த கட்­டியை அகற்­றினர்.

 

20 நிமிட நேரம் கர்ப்­பப்­பைக்கு வெளியே இருந்த அச் ­சிசு பின்னர் மீண்டும் அதன் தாயின் வயிற்றில் வைக்­கப்­பட்­டது. அப்­போது வெறும் 530 கிராம் எடை­யு­டை­ய­தாக இந்த சிசு இருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

20221baby2.jpgஅதன்பின் 12 வாரங்­க­ளாக மார்­கெரட் ஹேவ்கிங்ஸ் படுக்­கை யில் ஓய்வில் இருந் தார்.

 

இந்­நி­லையில், 36 வார கர்ப்­ப­காலம் முடி­வ­டைந்­த­வுடன் அண்­மை யில் சிசே­ரியன் முறை யில் இக்­ கு­ழந்தை பிர­ச­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

இதன்மூலம் இது இரு தட­வைகள் பிறந்த குழந்­தை­யா­கி­யுள்­ளது. இக் குழந்தை பிறந்து 8 நாட்களின் பின், மேற்படி கட்டியின் எஞ்சிய பகுதியை அகற்றுவதற்கு மற்றொரு சத்திரசிகிச்சையும் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

metronews.lk

  • தொடங்கியவர்

இயேசுவின் கல்லறை திறப்பு

ஜெருசலேமில் உள்ள Church of the Holy Sepulchre-ல் பல நூற்றாண்டுகள் கழித்து இயேசுவின் கல்லறையாக கருதப்படும் இடம் திறக்கப்பட்டுள்ளது, பராமரிப்பு பணிகளுக்காக திறக்கப்பட்டுள்ள இந்த இடத்தை நேஷனல் ஜியாக்ரஃபிக் பத்திரிகை பிரத்யேகமாக புகைப்படம் எடுத்து, கட்டுரை எழுதியுள்ளது. 

edicule-natgeo_13206.jpg edicule-tomb-jesus_13176.jpg

 

கல்லறையின் மேல் இருந்த மார்பிள் கல் இப்போது அகற்றப்பட்டுள்ளது. அதன் கீழ், இயேசுவின் உடல் கிடத்தப்பட்டதாக நம்பப்படும் கல்லை அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு பார்க்க உள்ளார்கள். 

புகைப்படங்கள் - நேஷனல் ஜியாக்ரஃபிக்

vikatan

  • தொடங்கியவர்

 

‘ஒலியற்ற உரையாடல்‘ - காணொளி
சீனாவின் ரகசிய மாநாடு

BBC

  • தொடங்கியவர்

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரே இந்தியர்...

உலகின் 'மிகவும் மதிப்புமிக்க 40 விளையாட்டு வீரர்கள்' பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றிருக்கும் ஒரே இந்திய விளையாட்டு வீரர் மஹேந்திரா சிங் தோனி மட்டும் தான். இந்த பட்டியல், 'பிராண்ட் வேல்யூ' அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது. தோனியின் பிராண்ட் வேல்யூ 11 மில்லியன் அல்லது 73 கோடியாகும்.

 

dhoni%201%20400_17561.jpg

vikatan

  • தொடங்கியவர்

பெட்ரூம் ஃபோட்டோகிராஃபி - இதுதான் இப்போ செம ஹாட்!

ல்யாணத்துக்கு முன்பும் கல்யாணமான உடனேயும் தம்பதியரின் கெமிஸ்ட்ரியை காட்ட எடுக்கப்படுகிற கேண்டிட் வெட்டிங் ஃபோட்டோகிராஃபிதான் டிரெண்ட்.

இப்போது அதெல்லாம் கொஞ்சம் போர் என நினைக்க ஆரம்பித்திருக்கிற மார்டன் தம்பதியரின் லேட்டஸ்ட் விருப்பம் Boudoir shoots. Boudoir என்றால் ஃப்ரென்ச்சில் பெட்ரூம் என அர்த்தமாம். பெயரைக் கேட்டதும் கற்பனையை கன்னாபின்னாவென அலைய விட வேண்டாம். இது வேற மாதிரி!

மேற்கத்திய நாடுகளின் பிரபலமான இந்த ஃபோட்டோகிராஃபி, மெல்ல இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறது. குறிப்பாக வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடையே இது செம  ஹாட்!

boudoir_11328.jpg

திருமண மண்டபம், ஹனிமூன் ஸ்பாட் போன்ற வழக்கமான லொகேஷன்களில் இந்தப் படங்கள் எடுக்கப்படுவதில்லை. புதுமண தம்பதியர் மட்டுமே தனித்திருக்கும் அந்தரங்கமான இடம்... இன்னும் ஒரு படி முன்னேறி, அவர்களது படுக்கையறை. boudoir  ஃபோட்டோகிராஃபிக்கு ஏற்ற லொகேஷன் இதுதான். 

ஃபோட்டோ எடுக்கப்படும் ஏரியாவுக்குள் சம்பந்தப்பட்ட கணவன்&மனைவியையும், ஃபோட்டோகிராஃபரையும் தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை.

இந்த  Boudoir ஃபோட்டோகிராஃபிக்கென்றே வித்யாசமான காஸ்ட்யூம், பிராப்பர்ட்டிஸ் போன்றவையும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்தப் புகைப்பட ஆல்பம் அந்த இருவர் மட்டுமே பார்த்து ரசிப்பதற்கான பிரைவேட் பொக்கிஷம்.

ஃபோட்டோ எடுப்பதற்கு முன்பே சம்பந்தப்பட்ட ஃபோட்டோகிராஃபர், அந்தப் படங்கள் எக்காரணம் கொண்டும் வேறு யார் பார்வைக்கும் போகாது என்பதற்கான உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். திருமணத்துக்கு முன்போ, திருமணமான உடனேயோ தம்பதியருக்குள் காணப்படுகிற அந்த கெமிஸ்ட்ரியை பதிவு செய்வதே இந்த ஃபோட்டோகிராஃபியின் நோக்கம். பின்னாளில் அது காணாமல் போகும் போது இந்த ஆல்பத்தைப் பார்த்து ஆறுதல் அடையவும் இது ஒரு வாய்ப்பாம்.

திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்களும், புதுமண தம்பதியரும் மட்டுமின்றி, சற்றே வயதான தம்பதியர்கூட இந்த ஃபோட்டோகிராஃபியில் ஆர்வமாக இருப்பது ஆச்சர்யம். காணாமல் போன காதலையும் நெருக்கத்தையும் புதுப்பிக்கும் முயற்சியாக இதற்குத் தயாராகிறார்களாம்.

vikatan

  • தொடங்கியவர்
மக்களுக்கு எதிரான அராஜகப் போர்
 
 

article_1477371838-ktykoyio.jpgவர்த்தகர்கள் மக்களை மயக்கிப் பொய்யான விளம்பர யுக்தியைக் கையாளுவது நீதிக்கு எதிரான அறைகூவலாகும். போலியான வர்த்தக நடவடிக்கைகளைக் கூசாமல் செய்பவர்கள் இறுதியில் பெரும் நஷ்டங்களையும் அவமானங்களையும் சந்திக்க நேரிடும்.  

வர்த்தகப் போட்டி, அதீத இலாபமீட்டும் பேராசைகளே விளம்பரங்களை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கான முக்கியமான காரணமாகும்.  

மிகவும் நேர்மையுள்ள நிறுவனங்கள் இன்று வரை நிலைத்தே இருக்கின்றன.அடுத்த நிறுவனத்தை முடக்கும் எண்ணத்தை விடுத்து, தரமான, நேர்மையான வழங்கல்களை மக்களுக்குக் கொடுத்தலே பெரும் இலாபமீட்டுதலுக்கான ஒரே வழியாகும். தேசிய உற்பத்தியும் உறுதியாகும்.

நேர்மையற்ற வாணிபம் மக்களுக்கு எதிரான அராஜகப் போர்தான். 

  • தொடங்கியவர்

செல்பியில் புதிய உலக சாதனை

 

ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியின் வருகையால் உலகம் முழுவதும் செல்பி எடுப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த செல்பியிலும் மக்கள் உலக சாதனை படைத்து வருகின்றனர்.

donnie_3_tcm25-448324.jpg

இதற்கு முன் 3 நிமிடங்களில் 119 செல்பி எடுத்ததே அதிகபட்ச உலக சாதனையாக இருந்தது. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பாடகர் டோனி வால்பெர்க் 3 நிமிடங்களில் 122 செல்பி எடுத்து புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.

donnie_4_tcm25-448327.jpg

தனது குழுவினர் மற்றும் ரசிகர்களுடன் இணைந்து டோனி வால்பெர்க் எடுத்த செல்பி சமூக வலைத்தளத்தில் தற்போது பரவி வருகிறது.

donnie_2_tcm25-448321.jpg

 

 

virakesari.lk

  • தொடங்கியவர்

குழந்தையின் ஓவியங்களுக்கு 'உயிர்' கொடுக்கும் அப்பா..! வாவ் வைரல்

குழந்தைகள் காணும் உலகை பெற்றோர்களும் காண வேண்டும் என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் தான் இந்த செய்தி. 

ஆறு வயது சிறுவனான டாமுக்கு பேப்பரில் அவனுக்குப் பிடித்ததை வரைவதுதான் பொழுபோக்கு. யானையோ, மீனையோ, குதிரையோ, ஓட்டகமோ, சைக்கிளோ, காரோ, ராக்கெட்டோ அவன் உலகில் எதைப் பார்த்தாலும் உடனே வரைந்து தள்ளிவிடுவான். இந்த ஓவியத்தை அவனது அப்பா அப்படியே ரீகிரியேட் செய்து அந்த ஓவியத்துக்கு மேலும் உயிர் சேர்ப்பார். இப்படி டாம் வரைய... வரைய... இவன் பெயரிலேயே இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் தொடங்கி இந்த ஓவியங்கள் பதிவிட டாம் ஓவியங்கள் ட்ரெண்ட் ஆகிவிட்டன.

இந்த உலகினை குழந்தைகள் எப்படி பார்க்கிறார்கள்? என்பதற்கான பதிலும், நமக்கான ஒரு செய்தியும் இந்த ஓவியங்களில் கொட்டிக்கிடக்கிறன. அது என்ன?

collage1_19103.jpg

collage%202_18487.jpg

collage3_18578.jpg

collage4_19052.jpg

collage5_19132.jpg

collage6_19233.jpg

collage7_19349.jpg

collage8_19434.jpg

collage9_19527.jpg

collage10_19006.jpg

collage11_19091.jpg

collage12_19196.jpg

 

டாம் வரைந்த ஓவியங்களில் கவனித்து பார்த்தால் மனிதன் முதல், எல்லா உயிரினங்களின் முகத்திலும் சின்ன சிரிப்பு ஒட்டி இருக்கும். குழந்தைகள் பாகுபாடு இன்றி அனைத்தையுமே நேசிக்கிறார்கள். எந்த கள்ளம் கபடம் இல்லாமல் சிரிப்புடனே காண்கிறார்கள். நாமும் சிரிப்புடனே உலகை காண்போம். வாழ்வோம். 

மழலை அழகு. அவர்கள் தீட்டும் தூரிகை பேரழகு. 

vikatan

  • தொடங்கியவர்

‘பயிருக்கு மழையாய் வந்த மகள்..!’ - நிவேதிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு...!

Nivedita_11468.jpg

 

‘‘எங்கள் தேசத்துப் பெண்கள் கல்வி பெற உன்னால் உதவ முடியும் என நம்புகிறேன்’’ என்று சொன்ன சுவாமி விவேகானந்தரின் வரிகளுக்கு மதிப்புக் கொடுத்து, உடனே இந்தியா வந்தவர் மார்கரெட் எலிசபெத் நோபிள். இவர் வேறு யாரும் அல்ல... சுவாமி விவேகானந்தரின் முதன்மைச் சீடரும், சமூக சேவகியுமான சகோதரி நிவேதிதா தான். அவருடைய பிறந்த தினம் இன்று.

மேற்கத்திய நாட்டிலிருந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்... நம்முடைய பண்பாட்டின் மீதும் நம் மக்களின் முன்னேற்றத்தின் மீதும் முழு அக்கறையும் அன்பும் மதிப்பும் கொண்டு வாழ்ந்து மறைந்த மார்கரெட் எலிசபெத் நோபிள், அயர்லாந்து நாட்டில் வசித்த மதபோதகரான சாமுவேல் நோபிள் - மேரி ஹாமில்டன் தம்பதியருக்கு 1867-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் நாள் மகளாகப் பிறந்தார். தந்தை உடல்நிலை காரணமாக, சிறுவயதிலேயே இறந்ததால் தன் தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்தார். இசையிலும் நுண்கலையிலும் ஈடுபாடு கொண்டிருந்த மார்கரெட், கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட ஹாலிபாக்ஸ் கல்லூரியில் பயின்றார். கல்லூரிப் படிப்பை முடித்த மார்கரெட், இங்கிலாந்தில் ஆசிரியப் பணியைத் தொடங்கினார். ஏழைகளுக்குச் சேவை செய்வதையே தன் வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். பின்னர், 1892-ல் சொந்தமாகப் பள்ளி ஒன்றை நிறுவி அதனை மென்மேலும் முன்னேற்றினார்.

‘‘அவரை, நீ சந்திக்க வேண்டும்!’’

1895-ம் ஆண்டு மார்கரெட்டின் தோழி ஒருவர், ‘‘என் வீட்டுக்கு இந்தியாவிலிருந்து துறவி ஒருவர் வந்திருக்கிறார். அவரை, நீ சந்திக்க வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று, அங்குசென்ற மார்கரெட், சுவாமி விவேகானந்தரை முதன்முதலில் கண்டார். அவரது தூய்மையும் ஆன்மிக நெறிகளும் அவரது மனதை ஈர்த்தன. அவரைச் சந்தித்து ஆன்மிகம் குறித்து நிறைய சந்தேகங்களைக் கேட்டு, அவரது கவனத்தை ஈர்த்தார். அந்தக் கணமே, தன் நாட்டை விட்டுவிட்டு சுவாமி விவேகானந்தரின் அன்புக் கட்டளையை ஏற்று, இந்தியாவுக்கு வந்தார். ‘‘பொதுவாக உலக மக்கள் சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், ஆங்கிலேயர்கள் அவ்வாறு அல்ல’’ என்றார் மார்கரெட். அதற்கு விவேகானந்தர், ‘‘பொதுவாக உலக மக்கள் குணத்திலிருந்து ஓர் இனத்தை மட்டும் மேம்படுத்திச் சொல்லும் தேசபக்தி... பாவமே தவிர, வேறெதுவும் இல்லை’’ எனச் சொல்லி அவருக்கு மெய்ஞான பயிற்சிகள் அளித்து... பாரத தேசத்துக்குச் சேவையாற்றப் பக்குவப்படுத்தினார்.

நம் நாட்டு ஞானிகளின் உரை, புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றைப் படித்து அதன்மூலம் நம் மக்களுக்கு நன்னெறியும் நல்வழியும் காட்ட அவருக்கு அறிவுரை வழங்கினார்.

மார்கரெட் பெயர் மாற்றம்!

1898-ம் ஆண்டு கொல்கத்தாவில் பெண்களுக்கான ஒரு பள்ளியைத் திறந்து, அவர்களுக்குக் கல்வியறிவைப் போதித்தார். அத்துடன் ஓவியம் வரையவும், தையல் மற்றும் மண்பொம்மை செய்யவும் கற்றுக் கொடுத்தார். அதே ஆண்டு மார்ச் மாதம் 25-ம் நாள் சுவாமி விவேகானந்தர், மார்கரெட்டை ராமகிருஷ்ண மடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு, அவருக்கு இறைவழிபாடு பற்றிப் போதித்தார் சுவாமிஜி. அதன்பிறகு, பிரம்மச்சர்ய நோன்பினை ஏற்கும்படியான தீட்சையும் வழங்கினார். அப்போது, மார்கரெட் என்னும் அவருடைய பெயரை மாற்றி ‘அர்ப்பணிக்கப்பட்டவள்’ எனும் பொருள் புதைந்த ‘நிவேதிதா’ எனும் பெயரைச் சூட்டினார்.

அன்னை சாரதா தேவி, இவரைத் தன் மகளாகவே கருதி அன்பு செலுத்தினார். 1899-ம் ஆண்டு கொல்கத்தாவில் பிளேக் நோய் தாக்கியபோது, ஏழை மக்களுக்கு மருத்துவ உதவிகள் உள்ளிட்ட சேவைகளைச் செய்தார். தெருக்களைச் சுத்தம் செய்யும் பணியில் உள்ளூர் இளைஞர்களையும் ஈடுபடுத்தினார். பிளேக் நோய் நிவாரணம் குறித்தும் சுகாதாரம் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைத்தார். ஒரு பகுதியில் தெருவைச் சுத்தம் செய்ய எவரும் முன்வராதபோது, தானே துடைப்பத்தை எடுத்துச் சுத்தம் செய்தார். அதிகாலையிலிருந்து நள்ளிரவு வரை ஓய்வின்றி அவர் உழைத்தார். பிளேக் நோயாளிகளைத்தானே நேரடியாகக் கவனித்து சிகிச்சைக்கு உதவினார். நிவாரணப் பணிகளுக்குத் தேவையான நிதியையும் அவரே திரட்டினார்.

3_11099.jpg

இந்தியக் கலைக்கு விளக்கம்!

1899-ம் ஆண்டு திருத்தொண்டு ஆற்றுவதற்காக சகோதரி நிவேதிதாவை, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைத்தார் சுவாமி ஜி. அங்கு சென்ற நிவேதிதா, பாரத நாட்டின் பண்பாடுகளையும், பழம்பெருமைகளையும் எடுத்துரைத்து இங்கிலாந்து, அமெரிக்காவில் இந்து மதம் தொடர்பாக நிலவிய தவறான கருத்துகளைப் போக்கினார். ‘‘காந்தாரக் கலை என்பது மேற்கத்திய தாக்கத்தால் ஏற்பட்டது; அது மட்டுமல்ல... இந்தியக் கலை வளர்ச்சியே, மேற்கத்தியக் கலை தாக்கத்தால் ஏற்பட்ட ஒன்றுதான்’’ என்ற ஓர் அயல்நாட்டவரின் கருத்தை மறுத்த சகோதரி நிவேதிதா, ‘‘காந்தாரக் கலையில் உள்ள மேற்கத்திய தாக்கமே அதன் பலவீனம் என்றும், காந்தாரக் கலைக்கு முந்தைய மகத கலையின் இயல்பான சுதேசி வளர்ச்சியை அஜந்தா குகைகளில் காண முடிகிறது என்பதையும், அது அந்தக் காலகட்டத்தின் மேற்கத்திய கலை வளர்ச்சியைக் காட்டிலும் மேன்மையானதாக இருக்கிறது’’ என்பதையும் அசைக்க முடியாத ஆதாரங்களுடன் முன்வைத்தார்.

பள்ளிக்கு நிதி திரட்ட நியூயார்க்கில் ‘ராமகிருஷ்ணா தொண்டர் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினார். அதன்பிறகு, மீண்டும் 1901-ம் ஆண்டு இந்தியா திரும்பினார். 1902-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தரின் மறைவு அவரைப் பேரிடியாய் தாக்கியது. அவருடைய மறைவுக்குப் பிறகு, இந்தியாவில் இன்னும் அதிக உத்வேகத்துடன் சேவையாற்றினார்; அரவிந்தருடன் இணைந்து விடுதலை இயக்கத்தில் பங்கேற்றார்; சொற்பொழிவுகள் பல நிகழ்த்தினார்; நூல்கள் பல எழுதி வெளியிட்டார்; இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்துக் களம் கண்டார்.

பாரதியின் குருஸோத்திரம்!

பெண்கள் குறித்த பாரதியாரின் பார்வையில் ஆக்கபூர்வமான மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தவர் சகோதரி நிவேதிதா. 1907-ம் ஆண்டு நடைபெற்ற பனாரஸ் காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்ற பாரதியாரும் அவரது நண்பர்களும் கொல்கத்தாவில் சிறிது காலம் தங்கியிருந்தனர். அப்போது, தேசப் பக்தர்கள் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், பாரதியாரும் கலந்து கொண்டார். கூட்டம் முடியும் தருவாயில், பாரதி தன்னை சகோதரி நிவேதிதாவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். அத்துடன், தான் இயற்றிய சில பாடல்களையும் பாடிக்காட்டினார். அதனைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்தார் நிவேதிதா. அப்போது, ‘‘உன் கவித் திறமையை பாரத மாதா, சுதேசி சேவைக்கே உபயோகிக்க வேண்டுகிறாள். அன்னையின் விருப்பமும் கட்டளையும் அதுதான். உடனே உன்னை அர்ப்பணம் செய்து, கிடைப்பதற்கரிய மாதாவின் வரப்பிரசாதத்தைப் பெற்றுக்கொள்’’ என்று பாரதியிடம் வேண்டுகோள் வைத்தார் நிவேதிதா. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு... நிவேதிதா, பாரதியின் வழிகாட்டியாய், ஞானகுருவாய் விளங்கினார். பாரதியார் அவரை, ‘அன்னை’ என்றே அழைத்தார். அவருடைய அருள்பெற்றதும் பாரதி,

‘‘அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர்

        கோயிலாய், அடியேன் நெஞ்சில்

இருளுக்கு ஞாயிறாய் எமதுயர் நாடாம்

        பயிர்க்கு மழையாய், இங்கு

பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்

        பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்

சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்

        நிவேதிதையைத் தொழுது நிற்பேன்!’’ - என்று சகோதரி நிவேதிதாவுக்கு குரு ஸோத்திரம் பாடியுள்ளார். 

பாரதியார் உணர்ச்சி ததும்பும் பாடல்களைப் பாடுவதற்கும், தீவிரமாகச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் சகோதரி நிவேதிதாவே காரணமாக இருந்தார்.

‘‘ஆசிரியருக்கு 50 கேள்விகளுக்கு பதில் தெரிந்திருக்க வேண்டும்!’’Untitled-8_11248.jpg

‘‘குழந்தையின் ஒரு கேள்விக்கு திருப்திகரமான பதிலை அளிக்க 50 கேள்விகளுக்கு ஆசிரியருக்கு பதில் தெரிந்திருக்க வேண்டும்’’ என்ற நிவேதிதா, அடிப்படையில் ஒரு கல்வியாளர்; குழந்தைகளுக்குக் கல்வி சொல்லிக் கொடுப்பதில் விருப்பம்கொண்டவர்; மாணவர்கள் கேள்வி கேட்பதை ஊக்குவிக்கும் கல்விமுறையை வலியுறுத்தியவர்; அடித்தட்டு மக்களுக்குக் கல்வி அளிப்பதே உண்மையான விடுதலை என்பதை உணர்ந்தவர். ‘‘குழந்தை எந்த உயிரினத்தைப் பார்த்தும் அருவருப்பு அடைவதோ, அச்சம் கொள்வதோ கூடாது. அதன் பொருட்டு இந்த ஆரம்பக் கால கட்டத்திலிருந்தே சிலந்தி, கொசு, தட்டான், வண்ணத்துப்பூச்சி, நத்தை, புழுக்கள், மரவட்டை ஆகிய உயிரினங்களைக் குழந்தைகள் தெரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும். அவற்றைப் பார்த்து, அவை நம் தோழர்கள் என்ற உணர்வு குழந்தைக்கு ஏற்பட வேண்டும்’’ என்று 100 ஆண்டுகளுக்கு முன்னரே தன்னுடைய கல்வியியல் கோட்பாட்டைக் கூறியவர் நிவேதிதா.

தேசியக்கொடியை உருவாக்க முயற்சி!

முதன்முதலாக இந்தியாவுக்கான தேசியக்கொடியை உருவாக்க முயற்சித்தார் சகோதரி நிவேதிதா. அவர் உருவாக்கிய கொடியில் சிவப்பு, மஞ்சள் நிறங்கள் இருந்தன. சிவப்பு நிறப் பின்னணியில் 108 ஜோதிகள் இருந்தன. மஞ்சள் நிறத்தில் வஜ்ராயுதம் ஒன்றும், கொடியின் இரு புறங்களில் ஒரு பகுதியில் ‘வந்தே’ என்ற சொல்லும் இன்னொரு புறத்தில் ‘மாதரம்’ என்ற சொல்லும் வங்க மொழியில் எழுதப்பட்டிருந்தன.

ரவீந்திரநாத் தாகூரால் ‘லோகமாதா’ எனவும், அரவிந்த் கோஷால் ‘அக்னிசிகா’ எனவும் அழைக்கப்பட்ட சகோதரி நிவேதிதா, தன்னுடைய 44-வது வயதில் மறைந்தார்.

பாரதத்தின் பெருமையைப் பறைசாற்றிய மேற்கத்திய பெண் நிவேதிதா!

vikatan

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: தீபாவளியும் இந்தியா - பாக். மேட்சும்!

 

diwali1_3059982f.jpg
 

தீபாவளி பண்டிகையை ஒட்டி, இணையவாசிகள் பகிர்ந்துகொண்ட 'வெடி'க்கருத்துகள் இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

ஜோ கற்றது தமிழ் ‏

பிள்ளைகளுக்கு துணியும் வெடியும் வாங்கிட்டு வர்றேன்னு சொல்லிட்டு, சம்பள பாக்கிக்காக முதலாளி சொல்லும் வேலைகளை ஓடோடி செய்வது ஆண்களின் தீபாவளி.

Thala Theeran

இனி கிராமங்களில் வளையல் கடைகளிலும், தையல்கடைகளிலும் தேவதைகளின் கூட்டம்- தீபாவளி.

பரட்டை ‏

நமக்கு வருடத்தில் ஒருநாள் தீபாவளி. வறுமையில் வாழும் ஏழைக்கு மூன்று வேளையும் உணவு கிடைக்கும் நாட்கள் மட்டும் தீபாவளி.!

ட்விட்டர் கண்ணாடி ‏

தீபாவளிக்கு மாங்கு மாங்கென்று பலகாரம் செய்து கொண்டிருக்கும் அம்மாக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

புதிய பாரதீ ‏

மாத சம்பளத்தை தீபாவளி செலவு செய்து விட்டு, மாச செலவுக்கு திண்டாட வேண்டாம் மக்கா. ஒரு நாளில் ஓடி விடும் தீபாவளி.

‏jagdishAlex

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்சுக்கு பாகிஸ்தான் வெடிய தூக்கி உள்ள வைக்கிறதும், தீபாவளி அன்னிக்கு மழை பேஞ்சு நாம வெடிய தூக்கி உள்ள வக்கிறதும் புதுசா என்ன?

அவந்திகா தேவி

நாட்டில் ஆயிரம் நரகாசுரன்கள் உலவுகையில் ஒரே ஒரு நரகாசுரனை கொன்று தீபாவளி கொண்டாடி என்ன பயன்? #தீபாவளி

மதுரை சமயன்

சுற்றுச் சூழல் மாசுபாடு காரணமாக எதிர்வரும் தீபாவளி பண்டிகையின் போது நான் பட்டாசு வெடிக்கமாட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.. நீங்களும் அளவோடும் பாதுகாப்போடும் பட்டாசு வெடிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Rajavel R Raja

இப்போதெல்லாம் அம்மா சுட்ட பலகாரத்தை உயர்தர ஸ்வீட் ஸடாலில் அடகு வைத்துவிட்டோம்...

புதிய ஆடையை போட்டுக்கொண்டு நம் தலைவனிடம் காட்ட திரையரங்கு சென்று விட்டோம்...

நம் வீட்டு வாசலில் போட்ட காகிதகோலத்தை பேஸ்புக் ஸ்டேட்டஸ் போட்டு மறைத்துவிட்டோம்...

ஆண்டவனே வந்தாலும் அவரை ஆன்ட்ராய்டு போனில்தான் வரவேற்கிறோம்...

diwali11_3059976a.jpg

Abul Hasan

அந்த நாளில் தன் குடும்பம் மொத்தமும் சந்தோசமாக இருக்க, வருடம் முழுதும் பாடுபடும் குடும்ப தலைவர்கள்/ தலைவிகள் அனைவரும் புனிதமானவர்களே.... #தீபாவளி

Mahendiran Ameeragam

வெடித்த பட்டாசுகளின் பேப்பர்களை அள்ளிக்கொண்டு வந்து, வீட்டுக்கு முன் குப்பைய சேர்த்து, நாங்கதான் இந்த வருஷம் அதிக வெடி வெடிச்சமுனு நண்பன்ட்ட சொல்ற அந்த தீபாவளி யெல்லாம் நமக்கு மட்டுமே கிடைத்த வரமும் சாபமும்..

காஷ்மோரா Kaashmora

படம் வரல, துக்க தீபாவளி என்றவனை நோக்கி தண்ணியே வரல போவியா சும்மா என்று நகர்ந்தார் அந்த ஏழை விவசாயி.

பூ-ப-தி ‏

தீபாவளி பலகாரம் எப்படி செய்றதுனு ஒரு குரூப்பு கெளம்பிருக்குமே!

நாகசோதி நாகமணி ‏

தீபாவளி ஒரு வாரத்திற்கு முன்பே புத்தாடைகள் கிடைக்கும் குழந்தைகளுக்கு மத்தியில், முன்னிரவு வரை புத்தாடைகளுக்கு காத்திருக்கும் குழந்தைகள் உண்டு.

diwali2_3059932a.jpg

மணி

என்னதான் தன் காசில் துணி எடுத்து, வெடி வாங்கி தீபாவளியை வரவேற்றாலும் அப்பா வாங்கி கொடுத்தபோது கிடைத்த தீபாவளி சந்தோசம் இப்போ இல்லை..

Maya Kannan

தீபாவளி பண்டிகை கொண்டாடும் ஒவ்வொரு குடும்பத்தினரும் தயவுசெய்து ,குறைந்தது 500/- ரூபாய்க்காவது கைத்தறி ஆடைகளை வாங்கி, நெசவாளர்களையும் தீபாவளி கொண்டாட வையுங்கள்.

J Sindhu Kumar Skp

சிவகாசி பட்டாசுகளை வாங்கி வெடித்து மகிழுங்கள். சிவகாசி மக்களின் வாழ்க்கையில் தீபஒளியை ஏற்றுங்கள். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

diwali_3059984a.jpg

tamil.thehindu

  • தொடங்கியவர்

ரிசப்ஷனிஸ்ட் டூ பெப்சிகோ சி.இ.ஓ.! இந்திராவின் நூயியின் வெற்றிக்கதை #HBDIndraNooyi

                                nooyi1_17472.jpg

'இந்திரா நூயி'...உலக வர்த்தக மற்றும் பொருளாதாரத்தில் வலிமைமிக்க குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் இவரது பிறந்த நாள் இன்று. உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பானமான நிறுவனமான 'பெப்சிகோ'வின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், தலைவராகவும் பணியாற்றி வரும் இந்திரா நூயியின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணம். 

'முடிந்தால் முடியாதது ஏதுமில்லை' 'மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் சிறியதே' என அடுக்குமொழி வசனங்களை எளிதாகப் பேசலாம். ஆனால் இதெல்லாம் சாத்தியமில்லை எனச் சொல்வோர்க்கு இவர் ஒரு நிகழ்கால சான்று. 1955-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி சென்னையில் பிறந்த இவரது முழுப்பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி. இவரின் வளர்ச்சி மிகவும் நிதானமாகவும் ஆரவாரமின்றியே இன்றியே நிகழ்ந்துள்ளது. சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் பி.எஸ்ஸி படிப்பும், கொல்கத்தா ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ படிப்பும் முடித்த கையோடு சிறிது காலம் ஏ.பி.பி என்னும் வர்த்தக நிறுவனத்திலும், பின் 'ஜான்சன் அண்ட் ஜான்சன்ஸ்' நிறுவனத்தில் புராடக்ட் மேனேஜராகவும் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து சென்னை பியர்ட்செல் ஆடை நிறுவனத்தில் பணி செய்தார். தன்னுடைய பணி வெற்றிகரமாக இருந்தாலும் கார்ப்பரேட் உலகில் நிலவும் போட்டியை எதிர்கொள்ள எம்.பி.ஏ படித்தது போதாது தனக்கு நெருங்கிய பலரிடமும் தெரிவித்தார். அதனால் தனது வேலையை விட்டுவிட்டு, அமெரிக்காவின் 'யேல்' பல்கலைக்கழகத்தில் பப்ளிக் மற்றும் பிரைவேட் மேனேஜ்மென்ட் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்திலேயே படிப்பு செலவுக்காக ஒரு நிறுவனத்தில் பார்ட் டைம் ரிசப்ஷனிஸ்டாக பணியாற்றினார். குறிப்பாக தன்னுடைய ரிசப்ஷனிஸ்ட் பணியை எப்போதும் மறக்க முடியாத அளவுக்கு பல தொழில் அனுபவங்களை அப்பணி எனக்குக் கற்றுக்கொடுத்தது  என அடிக்கடி நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வார். முதுகலைப் பட்டம் பெற்றதும் மோட்டோரோலா, ஏசியா பிரவுன் பொவரி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு இறுதியாக 1994-ம் ஆண்டு பெப்சி குளிர்பான நிறுவனத்தில் Strategic Planning & Development பிரிவின் துணைத் தலைவராக சேர்ந்தார். பெப்சி நிறுவனத்தில் சேர்ந்த பிறகு இவரது வாழ்க்கையும், அந்நிறுவன வளர்ச்சியும் உலகம் முழுக்கவும் புகழ்பெற்றன. 

 

                                  Nooyi-3_18420.jpg


பெப்சி நிறுவனத்தில் சேர்ந்ததும், 'தற்போதைய நம் வளர்ச்சியும், முன்னேற்றமும் போதாது. இன்னும் நம் தயாரிப்புகளை உலகின் அனைத்து பகுதிகளுக்கும் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றாக கூட்டு முயற்சியுடன் பணியாற்ற வேண்டும்' என அடிக்கடி சக ஊழியர்களிடம் சொல்வார். சொல்வதோடு மட்டுமில்லாமல் ஊழியர்களுடன் சேர்ந்து தயாரிப்பு, சேகரிப்பு, விற்பனை, கள ஆய்வு போன்ற பல பணிகளை தானே நேரடியாக களம் இறங்கினார். வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப பெப்சி மற்றும் இதர விற்பனைப் பொருட்களின் வடிவம், அளவு, தரம் ஆகியவற்றில் பல மாறுதல்களைப் புகுத்தினார். இவரது வருகைக்குப் பிறகு 45 ஆண்டுக்கும் மேலான அந்நிறுவன வளர்ச்சி பெரிய முன்னேற்றப் பாதைக்குச் சென்றது. இதனால் 2006-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் ஐந்தாவது தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்தார்.

தொடர்ந்து முந்தைய வேகத்தையெல்லாம் விட கூடுதல் உத்வேகத்துடன் உழைத்தார். உலகின் அனைத்து நாடுகளுக்கும் சென்று, பல தொழிலதிபர்களையும், மக்களையும் சந்தித்துப் பேசினார். தான் சி.இ.ஓ-வாக இருந்தாலும் சக ஊழியர்களுடன் தானும் ஓர் ஊழியர் போலவே எளிமையாகப் பழகினார். உலகம் முழுக்க அந்நிறுவன கிளைகள் அதிகமாகவே நிறுவப்பட்டது. ஒவ்வொரு நாட்டிலும், குறிப்பிட்ட மாநிலங்களுக்குள்ளாக அந்த மக்களுக்குப் பரிட்சயமான பிரபலங்களைக் கொண்டு பெப்சி விளம்பரங்களைப் பல வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தினார். இந்தியாவில் முன்னணி விளையாட்டு வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்களைக் கொண்டு பெப்சி குளிர்பானத்திற்கான விளம்பரங்களை அதிக அளவில் செய்தார். இதனால் உலகம் முழுக்க பெப்சியின் விற்பனை வளர்ச்சி கணிசமாக உயர்ந்தது. குறிப்பாக பெப்சியின் விற்பனை வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு மிக அதிகம். இந்தியாவில் விற்பனையாகும் முதல் ஐந்து குளிர்பானங்களில் பெப்சியும் ஒன்று.

இந்திராவின் திறமைக்கு சி.இ.ஓ பதவியுடன் கூடுதலாக 2007-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைவர் பொறுப்பும் அவரைத் தேடிவந்தது. ஃபார்ச்சுன் பத்திரிகையின் 2006, 2007, 2008, 2009-ம் ஆண்டுகளின் உலகின் வலிமைமிக்க பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்தார். அந்தச் சமயங்களில் ஓர் இந்தியப் பெண்மணியாக உலகம் முழுக்க இவரது பணித் திறன் பெருமையாக பேசப்பட்டது.

                               nooyi%202_18206.jpg


படிப்பைத் தீவிரமாக காதலிப்பவர்; படித்தால்தான் அனைவருமே பல சாதனைகளை புரிய முடியும். குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதால் எளிதாக உயர்வடைய முடியும் எனச் சொல்லும் இவரது பிடித்தமான செயல்பாடு ஓய்வு நேரங்களில் பெரும்பாலும் புத்தகங்கள் படிப்பதுதான். மாறிவரும் காலச்சூழலுக்கும் புதுப்புது ரசனைகளுக்கும் மாற்றங்களுக்கும் ஏற்ப தனிப்பட்ட முறையிலும் ஒரு நிறுவனத்தின் தலைவர் என்ற முறையிலும் தன்னை மேம்படுத்தியும், அப்டேட் செய்து கொண்டேயும் இருப்பார். புதுப்புது விஷயங்களைத் தயக்கமின்றி தெரிந்தவரிடம் கற்றுக்கொள்வார். இதனால்தான் ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து பெப்சி நிறுவனத்தின் தலைவராகவும், உலகின் முன்னணி வர்த்தக ஆளுமைப் பெண்மணியாகவும் திகழ்கிறார். குறிப்பாக பெப்சி குளிர்பானங்களைத் தடைசெய்ய வேண்டும் என இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் எதிர்ப்புகுரல் ஒலிக்கும் அதே வேளையில், அப்பிரச்னைகளை தகர்த்து நிறுவனத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லும் இவரது உறுதியான செயல்பாடு பலரும் பாராட்டும்படியாகவே இருக்கிறது. உலகில் அதிகம் சம்பாதிக்கும் நபர்களில் ஒருவராக கருதப்படும் இந்திரா, ஒரு நிமிடத்திற்கு பல ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக இந்திரா நூயின் வழிநடத்தும் திறனும், தொலைநோக்குத் திறனும், உழைப்பும், இலக்கை சரியாக எய்தும் திறனும், பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறனும், மிகப்பெரிய நிறுவன தலைவராகவும் பெரிய பொறுப்பில் இருக்கிறேன் என்பதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பது இவரது தனிச்சிறப்புகளில் ஒன்று. அத்தகைய குணங்கள்தான் அவரை எளிதாக உயர்வடையச் செய்கிறது என அந்நிறுவன ஊழியர்களும் பல தொழிலதிபர்களும் அடிக்கடி சொல்வார்கள். ஒரு முன்னணி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தலைவர் பொறுப்புகளுக்கு நீ, நான் என ஆண்களுக்குள்ளே நேரடியாகவும், மறைமுகமாகவும் மோதிக்கொள்ளும் காலச்சூழலில் ஒரு பெண்ணாக பெப்சி நிறுவனத்தை நிர்வகிக்கும் இவரது ஆளுமை வியக்கத்தக்கதே. இதுகுறித்து இவரிடம் கேட்டால், "ஒரு பெண்ணாக இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்திருக்கிறீர்களே? இது எப்படி சாத்தியம் எனப் பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். நான் ஓர் ஆணாக இருந்திருந்தால் தற்போதைய வளர்ச்சியை அடைய இதுவரை நான் செலவழித்த உழைப்பில் பாதியை மட்டும் செலவழித்திருந்தாலே போதுமானதாக இருந்திருக்கும். ஆனால் நான் ஒரு பெண்மணியாக இருப்பதால் பல தடைகளைத் தாண்டி ஓர் ஆணை விட இருமடங்குக்கும் அதிகமாகவே உழைத்திருக்கிறேன். என் உழைப்பிற்காக நான் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். ஆனால் இது ஒரு வியக்கத்தக்க வளர்ச்சி அல்ல. இன்னும் சாதிக்க நிறைய இருக்கிறது. இதைவிட பெரிய உயரத்தை அடைய வேண்டும். அதற்குள்ளாக இந்த வளர்ச்சியையே பெரிதாக பேசினால் எப்படி?" என்கிறார். 

இவரது சிகை அலங்காரமும், ஆடைத்தேர்வுகளும் பலரும் ரசிக்கும் வகையில் தனித்துவமாக இருக்கும். குறிப்பாக இவரது சிரிப்பு பலரையும் வெகுவாக ஈர்க்கும் வகையில் இருக்கும் எனப் பலரும் அவரிடமே தெரிவிப்பார்கள். அப்போது அவரது ரியாக்‌ஷன்.... மீண்டும் ஒருமுறை சிரிப்பது மட்டுமே. இவரது கணவர் ராஜ் கிஷான் நூயி. இவரது பிள்ளைகள், பிரீத்தா மற்றும் டாரா. வணிகத்தில் புகழ்பெற்றது போலவே குடும்பத் தலைவியாகவும், தாயாகவும் தன் பணியை சிறப்போடு செய்துவருகிறார். இந்திரா நூயி...பெண்களைப் புகழும் ஓட்டுமொத்த உலகிற்கான குரல்களில் தவிர்க்க முடியாதது. 'மீண்டும் ஒன்ஸ் அகைன் ஹேப்பி பர்த்டே... இந்திரா நூயி'.

* 2008-ம் ஆண்டில் அமெரிக்க இந்திய வணிகக் கவுன்சில் (USIBC) தலைவரானார்.
* 2007-ம் இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதினைப் பெற்றார். 
* போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 2016-ம் ஆண்டிற்கான உலகின் சக்திவாய்ந்த டாப் 25 பெண்கள் பட்டியலில் 15-ம் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விஷயங்கள்.

vikatan

  • தொடங்கியவர்

14633668_1168331829882176_49179988070114

மைக்ரோசாப்ட் நிறுவனர், கணிப்பொறி + மென்பொருள் வல்லுனர், உலகின் மிகப் பெரும் செல்வந்தர் பில் கேட்ஸ் அவர்களின் பிறந்தநாள் இன்று...
Happy Birthday Bill Gates

  • தொடங்கியவர்

சீன ஷாப்பிங் மாலில் உலகின் ”சோகமான பனிக்கரடி”

polar_14440.jpg

சீனாவில் ஷாப்பிங் மால் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பிஸ்ஸா என்னும் பனிக் கரடியை “உலகின் சோகமான பனிக்கரடி” என விலங்கு நல ஆர்வலர்கள் பெயரிட்டுள்ளனர்.

சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள ஷென்ழேன் நகரத்தில், பிரபல ஷாப்பிங் மால் ஒன்றில் வாடிக்கையாளர்களை கவருவதற்காக நூற்றுக்கணக்கான விலங்குகளை கண்ணாடி அறைகளில் அடைத்து வைத்துள்ளனர். இந்த விலங்குகளை பார்வையிட்ட சமூக ஆர்வலர் ஒருவர் அங்கு இருந்த போலார் கரடியின் நடவடிக்கைகளை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

கண்ணாடி அறைக்குள்ளே இருந்து சோகமாக வெறித்து பார்த்தபடி இருந்துள்ளது. அந்த கரடியை புகைப்படம் எடுத்து அந்நகரின் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் வியாபார நோக்கத்துக்காக அடைத்து வைத்துள்ள விலங்குகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கரடியின் புகைப்படம் “உலகின் சோகமான பனிக்கரடி” என்னும் பெயரில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

vikatan

  • தொடங்கியவர்

இந்த நூற்றாண்டின் நவீன நரகாசுரர்கள் யார்...? (வீடியோ...!)

diwalichild_11503.jpg

ண்டிகை உண்மையில் மத்திய தர வர்க்கத்தினருக்கு கொண்டாட்டத்தை தர வேண்டும்... ஆனால், பண்டிகை என்றால் சாமானியன் பதற்றமடைகிறான்... அதுவும் குறிப்பாக அரசாங்கம் சொல்லும் வறுமைக் கோட்டு கணக்கிலிருந்து, சற்றுத்தள்ளி இருப்பவன் பண்டிகைகளைக் கண்டு பயப்படுகிறான்... அது ஏன்...?

பண்டிகைக் காலங்களில் புது ஆடைகள் அணிவது கொண்டாட்டத்தின் குறியீடு. ஆனால், அதையே வணிக நிறுவனங்கள் அதை திண்டாட்டத்தின் குறியீடாக மாற்றி விட்டது... அதுவும், விலை உயர்ந்த ஆடைகள் அணியவில்லை என்றால், ஒரு சாமானியன் வீட்டை விட்டு வெளியே போக முடியாது போல... ஏன் இப்படி...?

நீங்கள் எத்தனையோ விதமான ஆடைகளை கேள்விப்பட்டு இருப்பீர்கள்... ஆனால், உங்களுக்கு ஜன்னல் ஆடை தெரியுமா...?

இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு முப்பது வயதா...? அப்படியானால், கொஞ்சம் விழிகளை மூடி உங்கள் பால்ய நினைவுகளை அசைபோடுங்கள்... எவ்வளவு ரம்மியமான நினைவுகள்... அதுவும், பலகாரம் செய்யும்போது அத்தையிடம் செல்லமாக திட்டு வாங்கிக் கொண்டே முறுக்கை கொரித்தது... லட்டுக்கு நானும் உருண்டை பிடிப்பேன் என்று அடம் பிடித்தது....? எவ்வளவு தித்திக்கும் நினைவுகள்... ஆனால், இவை அனைத்தையும், ஏதோ ஒரு ஸ்வீட் ஸ்டாலில் அடகு வைத்து வேறெங்கோ சந்தோஷத்தை தேடுகிறோமே... அது ஏன்...?

சரி... இந்த நூற்றாண்டின் நவீன நரகாசுரர்கள் யார்...? இதுக்கெல்லாம் விடை தெரிந்து கொள்ள... கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்...!

 

 

 

vikatan

  • தொடங்கியவர்

தாய்ப்பாலைத் தானமாக வழங்கிய 'மா' தாய்!

breast_15214.jpg

த்து மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த பிள்ளை இறந்துவிட்டால், அந்தத் தாயின் வேதனை எப்படி இருக்கும். அதிலிருந்து மீள்வதற்கு வருடங்கள் ஆகும். ஆனால், அமெரிக்காவின் நியூ யார்க் நகரைச் சேர்ந்த வெண்டி க்ரூஸ் சான் என்ற பெண், தான் பெற்ற குழந்தை இறந்துவிட்டதால் தனது தாய்ப்பாலை மற்ற குழந்தைகளுக்குத் தந்து உதவி, தாயின் பேரன்பைப்  உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளார்.

சமீபத்தில் வெண்டி க்ரூஸ் சான், மருத்துவமனையில் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால், அந்தக் குழந்தை எதிர்பாராதவிதமாக பிறந்த உடனே இறந்துவிட்டது.  தன் குழந்தை இறந்த சோகத்திலிருந்து மீண்டு, மூன்று நாட்களிலேயே சாதாரண நிலமைக்குத் திரும்பி, தாய்ப்பால் இல்லாமல் அவதிப்படும் குழந்தைகளுக்குத் தனது பாலைத் தந்து உதவத்  தீர்மானித்தார்.

breast-1_15555.jpg

உடனே, தாய்ப்பால் இல்லாமல் அவதிப்படும் குழந்தைகளை மருத்துவமனை மூலம் தெரிந்துக்கொண்டு, தனது பாலை கவர்களில் பம்ப் செய்து நிரப்பி, அந்தக் குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளார். இப்படி மூன்று மாதங்களில் ஆறு குழந்தைகளுக்கு உதவிவந்த வெண்டி, இதுவரை 59 லிட்டர் பால் கொடுத்து உதவியிருக்கிறார். சில நேரங்களில், மூன்று அல்லது நான்கு மணிநேரம்  குழந்தைகளுக்கு பால் தேவைப்படும். அப்போது, மிகுந்த சிரமத்துக்குள்ளானேன் என்று கூறியுள்ளார்.

இந்தச் செய்தியைத் தனது ஃபேஸ்புக் வலைதளத்தில் போட்டோவுடன் தெரிவித்துள்ளார். வெண்டி க்ரூஸ் சானின் நல்ல உள்ளத்தைக் கண்டு நெட்டிசன்கள் வெண்டியை பாராட்ட வார்த்தைகளே இல்லை எனப் புகழ்ந்து வருகிறார்கள். தான் மறுபடியும் கர்ப்பம் ஆகவேண்டும் என விருப்புவதாகவும், அதனால் தற்போது பால் கொடுப்பதை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். தாயன்பின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டிய வெண்டியை நாமும் பாராட்டுவோம்.

vikatan

  • தொடங்கியவர்

10 மாதம் தொடர்ந்து வானில் பறக்கும் திறன் கொண்ட அதிசய பறவை

cc_18047.jpg

அயராது பத்து மாதங்கள் வரை பறக்கும் திறன் கொண்ட ஸ்விஃப்ட் ரக பறவையை சுவீடன்  விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

இந்த சிறிய பறவை இனம், தரையிரங்காமல் பத்து மாதங்கள் வரை வானில் பறந்து கொண்டிருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வானில் பறந்தப்படியே இறையை தேடிக் கொள்ளுமாம். குறைந்த எடையுள்ள இந்த குட்டி பறவை எப்போது தூங்கும் என்பதை மட்டும் கண்டறிய முடியவில்லை என்கின்றனர் ஆய்வாலர்கள். 

vikatan

  • தொடங்கியவர்

மாவு விற்று மல்ட்டி மில்லியனரான முஸ்தஃபா பாய்

கேரளாவைச் சேர்ந்த முஸ்தஃபா. இவரது தந்தை சின்னச் சின்ன நொறுக்குத் தீனிகள் விற்கும் வியாபாரி. அப்போது சிறுவயதில் 5 பைசா, 10 பைசாவுக்கு ஸ்வீட்ஸ்களை விற்று வந்த முஸ்தஃபா இன்ஜினீயரிங் முடித்து யூ.கே உள்பட பல உலக நாடுகளில் வேலை செய்து, பெங்களூரு ஐ.ஐ.எம்-ல் எம்.பி.ஏ முடித்து சிறிய அளவில் தொடங்கிய ஒரு நிறுவனம்தான்  ID fresh (idly,dosa). 2006-ல் தினசரி 50 மாவுப் பாக்கெட்டுகள் விற்பனையாகி வந்தது. பிறகு முஸ்தஃபாவின் வளர்ச்சி எல்லாமே ஜெட் வேகம்தான்.

gp_19273.jpg

கேரளாவில் தங்களது வீட்டில் இருந்த தங்களது வியாபாரத்தை  பெங்களூருவுக்கு மாற்றினார்கள். இதற்கென ஒரு கிச்சன் ஒதுக்கினார்கள் தினசரி விற்றுவந்த 50 மாவுப்பாக்கெட்டுகள் 500 ஆகியது, 500, 5,000 ஆக மாறியது. தற்போது 2016-ல் இந்த 5,000 - ம் 50 ஆயிரமாக மாறியுள்ளது. பெங்களூருவில் இருந்த வியாபாரம் மைசூரு, சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு வியாபாரம் விரிந்தது.

fg_19555.jpg

சென்ற ஆண்டு மட்டும் இவரது நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வருவாய் வந்துள்ளது. இந்த ஆண்டு வருவாய் ரூ.170 கோடியாக எகிறியுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி வருவாய் என்பது இவர்கள் டார்கெட்டாம்.

  • தொடங்கியவர்

'நெற்றி தொடும் முடியழகா ஒற்றை முடி தாராயோ' !

babyhair_17127.jpg

இங்கிலாந்தின் பிரைட்டன் பகுதியை சேர்ந்த 9 வாரக் குழந்தையின் ஹேர் ஸ்டைல்  இணையத்தை அசத்தி வருகிறது.  பிறந்து ஒன்பது வாரங்களே ஆன இந்த குட்டி ஹீரோவின் முடிக்கு ஹேர் டிரையர் பயன்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  மேலும் #Bouffant #Hair என்னும் ஹேஷ் டேக்கில் ட்ரென்டாகி வருகிறார் இந்த 'கேசவர்தன்'. 

hair_17264.png

vikatan

  • தொடங்கியவர்

 

“ஹாலோவீன்” - காணொளி
மாறுவேடங்களில் நாய்களின் அணிவகுப்பு

BBC

  • தொடங்கியவர்

மனிதச் சாம்பலில் பாத்திரங்களைத் தயாரிக்கும் மெக்சிக்கோ கலைஞர் (Photos)

 

மனிதச் சாம்பலில் பாத்திரங்களைத் தயாரிக்கும் மெக்சிக்கோ கலைஞர் (Photos)

நியூ மெக்சிக்கோவைச் சேர்ந்த கலைஞர் ஜஸ்டின் க்ரோவ், மனிதச் சாம்பலைப் பயன்படுத்தி பாத்திரங்களைச் செய்து வருகிறார்.

”க்ரோனிக்கல் க்ரிமேஷன் டிசைன்” எனும் பெயரில் மனிதச் சாம்பலைப் பயன்படுத்தி தேநீர் கோப்பைகள், தட்டுகள், கிண்ணங்கள் மற்றும் மெழுகுவர்த்தி தாங்கிகள் போன்றவற்றை ஜஸ்டின் க்ரோவ் உருவாக்குகிறார்.

2015 ஆம் ஆண்டில் Project ஒன்றிற்காக 200 மனித எலும்புகளை விலைக்கு வாங்கி அவற்றைத் தூளாக்கி, மண்ணுடன் கலந்து பாத்திரங்களை உருவாக்கியுள்ளார்.

பின்னர், நண்பர்களின் தூண்டுதலால் அதனைத் தற்போது தனது தொழிலாக்கியுள்ளார்.

ஆரம்பத்தில் மனிதச் சாம்பலைக் கேட்டு விளம்பரம் செய்தபோது, எதிர்வினைகள் மிக மோசமாக இருந்ததாகவும் அதனால் இந்தத் திட்டத்தைக் கைவிட எண்ணியதாகவும் ஜஸ்டின் க்ரோவ் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மறுசுழற்சி முறையில் மனித எலும்புகளைப் பயன்படுத்துவதே தனது திட்டம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கென பிரத்தியேகமாக அவர் ஆரம்பித்த நிறுவனம் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது.

பலர் இறந்தவர்களின் எலும்புகளைப் பாத்திரமாக்கி, தங்களுடன் வைத்துக்கொள்ள விரும்புகின்றார்கள்.

”முதிய மனிதர் ஒருவரின் உடலை எரித்தால் 1.8 கிலோவில் இருந்து 2.7 கிலோ வரை சாம்பல் கிடைக்கும். பாத்திரம் செய்வதற்கு 100 கிராம் சாம்பல் மட்டுமே போதுமானது. சாம்பல், மண், தண்ணீர் எல்லாம் சேர்த்து, அழகான பாத்திரங்களை உருவாக்கிவிடுகிறோம். இந்தப் பாத்திரங்களை அடுப்பில் வைக்கலாம். உணவு சமைக்கலாம். கோப்பைகளில் காபி குடிக்கலாம். உங்களுக்கு மட்டுமே இது மனித சாம்பலில் செய்தது என்று தெரியும். மற்றவர்களுக்குச் சாதாரண பீங்கான் பாத்திரங்களாகத்தான் தோன்றும்’ என ஜஸ்டின் க்ரோவ் குறிப்பிட்டுள்ளார்.

1050

1-nourish-chronicle-cremation-designs 4-nourish-chronicle-cremation-designs_orig 1050-1

http://newsfirst.lk/

  • தொடங்கியவர்

 

தற்காலிகமாக மௌனிக்கும் பிக் பென் கடிகாரம்

உலகப் புகழ்பெற்ற லண்டனின் பிக்பென் கடிகாரம், அடுத்த ஆண்டில் பல மாதங்கள் மௌனமாகிவிடும்.

கடிகாரத்திலும், அதன் கட்டிடத்திலும் முக்கிய மராமத்து பணிகள் செய்யப்படவுள்ளன. முப்பத்து ஐந்து மில்லியன் டாலர்கள் இதற்கு செலவிடப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.