Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
பிரித்தானிய இளவரசர் ஹரியின் புதிய காதலி
 

பிரித்தானிய இளவரசர் ஹரி, அமெரிக்க நடிகை ஒருவரை காதலிக்கிறார் எனக் கூறப்படுகிறது. இளவரசர் ஹரி கடந்த காலங்களில் பல யுவதிகளை காதலித்தவர்.

 

20338GTY_Prince_harry_ml_150226_15x11_16

 

ஸிம்பாப்வேயை சேர்ந்த சட்டத்தரணி செல்சி டெவியை இளவரசர் ஹரி காதலித்தார். 6 வருட காலத்தில் பல தடவைகள் இவர்கள் பிரிவதும் மீண்டும் இணைவதுமாக இருந்தனர்.

 

20338megan.jpgநடிகை கிறெசிடா பொனாஸ், புளோரஸ் புரூண்டெல் புரூஸ் ஆகியோரை இளவரசர் ஹரி காதலித்தார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

 

ஆனால், இக் காதல்களில் எதுவும் அதிக காலம் நீடிக்க வில்லை.

 

32 வயதான இளவரசர் ஹரி இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

 

இந்நிலையில், அமெரிக்க நடிகை மெகன் மேர்கிள் என் பவரை இளவரசர் ஹரி தற் போது காதலிக்கிறார் என பிரித்தானிய மற்றும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

நடிகை மெகன் மேர்கிள் 35 வயதானவர். 'சூட்ஸ்' எனும் அமெரிக்க தொலைக் காட்சி நாடகத்தில் நடித்ததன் மூலம் அதிக பிரபல் யமானவர் இவர்.

 

20338harry2.jpgஇளவரசர் ஹரியும் நடிகை மெகனும் முதல் தடவையாக கனடாவில் சந்தித்துக் கொண்டனர்.

 

அதன்பின் நடிகை மெகனுடன் இளவரசர் ஹரி காதலில் வீழ்ந்தார் எனக் கூறப்படுகிறது.

 

பிரித்தானிய அரச குடும்பத்தில் 5 ஆவது முடிக்குரிய வாரிசாக இளவரசர் ஹரி விளங்குகிறார்.

 

இளவரசர் ஹரியின் மூத்த சகோதரரும் முடிக்குரிய இளவரசருமான வில்லியம், அவரின் மனைவியான கேம்பிரிட்ஜ் சீமாட்டி (இளவரசி கேட்) ஆகியோரையும் மெகன் மேர்கிள் சந்தித்துப் பேசியுள்ளார் என வும் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

 

எனினும், இளவரசர் ஹரியின் காதல் குறித்து இளவரசர் ஹரியோ அரச குடும்ப த்தினரோ அல்லது நடிகை மெகன் மேர்கிளோ எதுவும் கூறவில்லை.

 

தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து தான் கருத்துத் தெரிவிப்பதில்லை என பிரித்தானிய அரச குடும்பத்தினரின் வாசஸ்தலமான கென்சி ங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது. 

 

20338df3.jpg

செல்சி டெவி, புளோரஸ் புரூஸ், கிறெசிடா பொனாஸ்

 

20338JHP_WLT_pics_001JPG.jpg

'சூட்ஸ்' நாடகத்தில்...


 

நடிகை மெகன் மேர்கிளின் பிரதிநிதிகளும் இக் காதல் தொடர்பாக பேசுவதற்கு மறுத்துள்ளனர். ஆனால், இளவரசர் ஹரி கடந்த சில வருடங்களை விட தற் போது அதிக மகிழ்ச்சியடைந்தவராக காணப்படுகிறார் என அவருக்கு நெருக் கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

203381.jpg

 

metronews.lk/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நெட்டிசன்கள் முதல் பிரபலங்கள் வரை... அதிகரிக்கும் சோஷியல் மீடியா ப்ரேக்-அப்ஸ்!

breakup-704x400_19482.jpg

முன்பெல்லாம் காதல், பிரிவு, ப்ரேக் அப் இதையெல்லாம் சம்பந்தப்பட்ட நபரிடமோ அல்லது அவருடைய நண்பரிடமோ சொல்வது தான் வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் எக்ஸ்க்ளூசிவாக பிரேக் அப்களை அறிவிப்பதும், காதலை சொல்வதும் வழக்கமாகிவிட்டது. இதில் பிரபலங்கள், சாதாரண மக்கள் என்று வித்தியாசப்படுத்த எதுவுமில்லை. இன்றைய டிஜிட்டல் உலகில் இது சர்வ சாதாரணம். ''ஃபீலிங் ப்ரோக்கன்'' என்று அழும் இமோஜியோடு பதிவிட்டு பிரேக் அப்பை அறிவிப்பதும். 'இன் எ ரிலேஷன்ஷிப்' என இதயங்களை பறக்கவிடுவதும் சாதாரணமாகிவிட்டது. 

ஆனால் இவை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகின்றன. ட்விட்டரில் சில நூறு ரீ-ட்விட்களும், ஃபேஸ்புக்கில் ஆயிர கணக்கில் இமோஜிகளை வாங்கி தனது தோல்வியையும், பிரிவையும் கெத்தாக அறிவிக்கும் பிரபலங்களும் சரி, சாமானியர்களும் சரி அந்த நிமிட தாக்கத்தை மட்டுமே பார்க்கிறார்களே தவிர அதன் பின் வரும் விளைவுகளை பார்ப்பதே இல்லை. 

சோஷியல் மீடியா பிரேக் அப் இந்த வார்த்தை இணைய உலகில் சற்று பிரபலமான வார்த்தை. ஜஸ்டின் பைபர் தனக்கு பிரேக் அப் ஆகிவிட்டது என அழுதது துவங்கி இன்று 13 ஆண்டுகளாக கமலுடனான உறவு பிரிந்தது என கவுதமி கூறியது வரை அனைத்துமே இந்த சமூக வலைதளங்களில் தான். இந்த ட்ரெண்ட் சமூக வலைதளங்களின் வளர்ச்சியோடு ஆரம்பித்தது தான். 

blog-image-3_19103.jpg



தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமாக சமூக வலைதளங்கள் மாறியதே பிரேக்-அப் அதிகரிப்புக்கு காரணம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். சமூக வலைதளங்களின் நோக்கமே தனது உணர்வுகளை உலகத்துடன் பகிர்வது தான் என்கின்றனர் சோஷியல் மீடியா சி.இ.ஓக்கள். ஆனால் இந்தியா போன்ற சமூதாய அமைப்பு கொண்ட நாடுகளில் இந்த தாக்கம் சற்று வித்தியாசமானது.

இங்கு சோஷியல் மீடியா ப்ரேக் அப்ஸ் தனிமனிதனின் வாழ்க்கையை ஆழமாக பாதிக்கிறது. ஒருவர் தனக்கு பிரேக்-அப் என அறிவித்தால் அவரை பல காலங்கள் அதே செய்தியை வைத்து விமர்சிப்பதுதான் இப்போதைய வாடிக்கை. பிரபலங்களுகே இப்படி என்றால் சாமானியர்களின் நிலைமையை சொல்லவே வேண்டாம். 

என்ன பிரச்னை?

இணையத்தில், நமது பதிவுகளை மீட்டெடுப்பது மிகவும் சுலபம். இந்த பிரேக் அப் பதிவுகள் திரும்ப திரும்ப வைரலாக பரவும் போது மன அமைதியை கெடுக்கும். பதிவிட்டவரே அழித்துவிட்டாலும் ஸ்க்ரீன் ஷாட் பதிவுகள் தொடர்ந்து பகிர்வதை தடுக்க முடியாது.

அடுத்த ரிலேஷன் ஷிப்புக்குள் செல்லும் போது இந்த பதிவுகளை மறைப்பதும் தவறாகி விடுகிறது. இந்த பதிவுகள் செய்து ஷேர் ஆவதும் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. பல பிரபலங்களின் வாழ்க்கை முறிவு வரை செல்ல இந்த சோஷியல் மீடியாக்கள் காரணமாகியுள்ளன.

mj-618_348_the-new-rule-of-breakups_1942

 

என்ன செய்ய வேண்டும்?

ஷோஷியல் மீடியாக்களில் உங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தவறில்லை. ஆனால் உங்கள் வாழ்க்கையை பாதிக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது.

கூடியமட்டில் பதிவுகளை சம்பந்தப்பட்ட நபருடன் தனிப்பட்ட முறையில் தெரிவியுங்கள். அது உங்களுக்கும், அந்த நபர் இருவருக்குமே உதவியாக இருக்கும்.

தனிநபர் தாக்குதல், ஒருவரை பொது இடத்தில் இகழ்ந்து பேசுவது அனைத்துமே தண்டனைக்குரிய குற்றங்கள் தான். சைபர் க்ரைம் குற்றச்சாட்டுகள் பதியவும் வாய்ப்புள்ளதால் சோஷியல் மீடியா பிரேக் அப்களை தவிர்ப்பது நல்லது.

உறவுகள், காதல் போன்ற விஷயங்களை சமூக வலைதளங்களில் விவாதிக்காமல் இருப்பதும் மீண்டும் நல்ல உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பை அளிக்கும். இந்த சோஷியல் மீடியா ப்ரேக் அப்கள் குறைய வேண்டியது பிரபலங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட சாமானியர்களுக்கும் முக்கியம். உறவுகளில் இருந்து வெளியேறுவது இரு தனி நபர்களுக்கான விஷயமே தவிர உலகமே உலவும் சமூக வலைதளங்களுக்கான விஷயம் அல்ல என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.

vikatan

  • தொடங்கியவர்

https://scontent-frt3-1.xx.fbcdn.net/t31.0-8/14917228_1172062346175791_8850955368834385287_o.jpg

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர், உலகின் மிக நேர்த்தியான துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான VVS லக்ஸ்மனின் பிறந்தநாள்.
Happy Birthday VVS Laxman

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

நவம்பர் - 02 

 

1570 : வட கடலில் ஏற்­பட்ட சூறா­வளி கார­ண­மாக ஒல்­லாந்தில் 1,000 பேர் வரையில் இறந்­தனர்.

 

1834 : முதன்­மு­த­லாக இந்­தி­யாவில் இருந்து 75 ஒப்­பந்தத் தொழி­லா­ளர்கள் மொரீ­சியஸ் சென்­றனர்.

 

840Saud_of_Saudi_Arabia.jpg1868 : நியூ­ஸி­லாந்து சீர் நேரத்தை நாடு முழு­வதும் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

 

1899 : தென் ஆபி­ரிக்­காவில்  பிரித்­தா­னி­யர்கள் வசம் இருந்த லேடிஸ்மித் பகு­தியை போவர் படை­யினர் 188 நாட்கள் பிடித்து வைத்­தி­ருந்­தனர்.

 

1914 : ஓட்­டோமான் பேர­ர­சுக்கு எதி­ராக ரஷ்யா போர் பிர­க­டனம் செய்தது.

 

1917 : பிரித்­தா­னி­யாவின் வெளி­நாட்டு விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான செய­லா­ள­ராக இருந்த ஆதர் பெல்ஃபர் வெளி­யிட்ட பிர­க­ட­னத்­தில் யூதர்­க­ளுக்கு பலஸ்­தீ­னத்தில் ஒரு தேசியத் தாயகம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பதை இங்­கி­லாந்து அரசு ஆத­ரிக்­கி­றது எனக் கூறப்­பட்­டது.

 

1930 : ஹைலி செலாசி எதி­யோப்­பி­யாவின் பேர­ர­ச­னானார்.

 

1936 : இத்­தா­லியின் சர்­வா­தி­காரி முசோ­லினி ரோம்-­பேர்லின் அச்சு என்ற அச்சு அணியை அறி­வித்தார்.

 

1936 : பிபிசி நிறு­வனம் தொலைக்­காட்சி சேவையை ஆரம்­பித்­தது.

 

1949 : டச்சு கிழக்­கிந்­திய கால­னித்­துவ பிராந்­தி­யங்­களை இந்­தோ­னே­ஷி­யா­விடம் கைய­ளிப்­ப­தற்கு நெதர்­லாந்து சம்­ம­தித்­தது.

 

1953 : பாகிஸ்தான், பாகிஸ்தான் இஸ்­லா­மியக் குடி­ய­ரசு எனப் பெயர் மாற்றம் பெற்­றது.

 

1963 : தெற்கு வியட்நாம் ஜனா­தி­பதி நியோ டின் டியெம், இரா­ணுவப் புரட்­சியை அடுத்து கொலை செய்­யப்­பட்டார்.

 

1964 : சவூதி அரே­பிய மன்னர் சௌத், குடும்பப் புரட்­சியின் மூலம் பத­வி­யி­லி­ருந்து அகற்­றப்­பட்டார்.  அவரின் ஒன்­று­விட்ட சகோ­தரர் பைஸால் புதிய மன்­ன­ரானார்.

 

1974 : தென் கொரியத் தலை­நகர் சியோலில் விடுதி ஒன்றில் இடம்­பெற்ற தீ விபத்தில் 78 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

2000 : சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்கு முதன் முத­லாக விண்­வெளி வீரர்கள் சென்­ற­டைந்­தனர்.

 

2007 : இலங்கை வான்­ப­டையின் வான்­குண்டுத் தாக்­கு­தலில் தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் அர­சி­யல்­துறைப் பொறுப்­பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார்.

 

2014 : பாகிஸ்தானில் இந்தி யாவுடனான எல்லையிலுள்ள வாகா கிராமத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில்  60 பேர் உயிரிழந்தனர்.

 

metronews.lk

  • தொடங்கியவர்

நமக்கு என்ன தெரியாது என்பது நமக்குத் தெரியுமா..? #MorningMotivation

dont%20know%203.jpg

பெரும்பாலான வெற்றியாளர்களிடம் உங்கள் வெற்றிக்கான ரகசியம் என்னவெனக் கேட்டால் மிக எளிமையாக "எனக்கு எது தெரியாதுன்னு  எனக்குத் தெரியும்" என்பார்கள். ஆம் ரொம்ப ரொம்ப சாதாரண விஷயம் தான். நமக்கு எது தெரியும் என யோசிக்கும் நாம் பல நேரங்களில் நமக்கு எது தெரியாது என்பதில் கவனம் செலுத்துவதில்லை.

ங்களுக்கு அவ்வளவாக அறிமுகமில்லாத அல்லது தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி உங்கள் உயரதிகாரி கேட்கிறார் என வைத்துக்கொள்வோம். பெரும்பாலானோர்  தனக்கு ஒரு விஷயம் தெரியாது என தயக்கம் இல்லாமல் தைரியமாக சொல்லிவிடுவதில்லை. காரணம் நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன என்ன என்பது நமக்கே தெரிவதில்லை.. அதனால் தான் பல்வேறு சந்தர்ப்பங்களில் குழம்பி இக்கட்டான சூழ்நிலைகளில் மாட்டிக் கொள்கிறோம்.

இந்த இடத்தில்தான் வெற்றியாளர்களுக்கும் சாதாரணமானவர்களுக்குமான வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் தங்களுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை பற்றிய புரிதல் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அதன் மீது கவனம் செலுத்தி கற்றுக் கொள்ளவும் முயற்சி செய்கிறார்கள். அதாவது எந்த விஷயத்திலும் சாதாரணமாக பின் வாங்கி விடுவதில்லை. தங்கள் உழைப்பை முழு அர்ப்பணிப்புடன் தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள கொடுக்கிறார்கள்.

மக்குத் தெரியாத விஷயங்கள் மீது கவனம் செலுத்தும்பொழுது அவற்றை கற்றுக் கொள்ள துவங்குகிறோம். இக்கட்டான தருணத்தில் யாரையாவது அந்த வேலைக்காக தேடுவதைத் தவிர்த்து, நாமே அதை செய்து முடிக்கலாம்.

ங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பொறுத்தவரையில் எதையும் கண்டு பின் வாங்கி விடாமல், அதைச் செய்து முடிக்கும் சூப்பர் ஹீரோவாகத் திகழ்வீர்கள். 

தெரியாத விஷயங்களை கற்றுக்கொள்ளும் பொழுது அடுத்தடுத்த நிலைகளுக்கு உங்களைத் தகுதிப் படுத்திக்கொள்ளலாம். 

தெரியாது

 

தெரியாத விஷயங்களைப் பற்றி யோசிக்கும் அதே நேரம் நமக்கு தெரிந்த விஷயங்களையும் அசைபோட்டுப் பார்ப்போம். இது மனதுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.  

நேரம் கிடைக்கும்பொழுது ஒரு பேப்பர், பேனா எடுத்துக் கொண்டு உங்களுடைய பலம் பலவீனத்தை எந்தவித சமரசமும் இல்லாமல் எழுதிப் பாருங்கள். அல்லது உங்களுக்கு நெருங்கிய நண்பரிடம் கேளுங்கள். ஆரம்பத்தில் இப்படி நம்முடைய பலத்தையும் பலவீனங்களையும் பற்றிய பட்டியல் தயாரிப்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் நமக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பதை விட அதைத் தெரிந்து கொண்டு செயல்படுவது நல்ல பலனைக் கொடுக்கும். 

பேப்பரும், பேனாவும் தயாரா பாஸ்!?

vikatan

  • தொடங்கியவர்

மவுலிவாக்கமும்... உலக அளவிலான 10 உள்வெடிப்பும்!

uuuu_12147.jpg

சென்னை புறநகர்ப் பகுதியான மவுலிவாக்கத்தில் 11 மாடிகள் கொண்ட இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. அரசு விதிமுறைகளை மீறி இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்ட நிலையில், பணிகள் முடிவடையும் முன்பே ஒரு கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த நிலையில், பெரும் அச்சுறுத்தலுடன் இருந்த மற்றொரு கட்டடம் இன்று மாலை இடிக்கப்பட உள்ளது. இதற்காக 70 கிலோ வெடிபொருட்கள், கட்டடத்தின் 150 இடங்களில் நிரப்பப்பட்டுள்ளது. இதைச் சுற்றியுள்ள 200 மீட்டர் பகுதிகள் ஆபத்தானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மவுலிவாக்கம் கட்டடம் போல், உலகம் முழுவதிலும் தகர்க்கப்பட்ட 10 கட்டிடங்களின் தொகுப்பு இங்கே..

1) அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இருந்த லாண்ட் மார்க் ஹோட்டல் 1969-ம் ஆண்டு கட்டப்பட்டது. 525 அறைகள் கொண்ட இந்தப் பிரம்மாண்ட ஹோட்டல், போதிய லாபம் இல்லாததால் 1990-ம் ஆண்டு வெடிவைத்துத் தகர்க்கப்பட்டது.

1_12543.jpg

உலக அளவிலான கட்டட உள்வெடிப்பு (implosion) புகைப்படங்களை காண இங்கே க்ளிக் செய்க

2) அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் 1971-ம் ஆண்டு பல்நோக்கு மைதானம் கட்டப்பட்டது. 32 ஆண்டுகள் பழமையான இந்த மைதானம் 2004-ம் ஆண்டு தகர்க்கப்பட்டது. இ்தைத் தகர்க்க வெறும் 62 வினாடிகளே ஆனது.

2999_12030.jpg

3) அமெரிக்காவில் 1958-ம் ஆண்டு 63 ஏக்கர் பரப்பளவில் ஸ்டார்டஸ்ட் ஹோட்டல் கட்டப்பட்டது. இது, 2007-ம் ஆண்டு வாணவேடிக்கைகளுடன் கண்கவர் வகையில் இடிக்கப்பட்டது. வாணவேடிக்கைகளுடன் தகர்க்கப்பட்ட கட்டடம் இதுவே.

3oooo_12514.jpg

உலக அளவிலான கட்டட உள்வெடிப்பு (implosion) புகைப்படங்களை காண இங்கே க்ளிக் செய்க

4) Rhode Island-ல் உள்ள ஜெம்ஸ்டவின் பாலம் 1940-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தப் பாலம் வலுவிழந்ததால் தகர்க்கப்பட்டது.

4_12135.jpg

உலக அளவிலான கட்டட உள்வெடிப்பு (implosion) புகைப்படங்களை காண இங்கே க்ளிக் செய்க

5) அமெரிக்காவில் கட்டப்பட்ட ‘ஓசன் டவர்’ அபார்ட்மென்ட், 31 மாடிகளைக் கொண்டது. இது, அரசு விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டதால், முழுமையாகக் கட்டி முடிப்பதற்கு முன்பே இடிக்கப்பட்டது.

 

 

6) பிரேசிலில் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தில், பாதுகாப்பு வழிமுறைகள் இல்லாததால் தகர்க்கப்பட்டது. இதைத் தகர்க்க 30 வினாடிகளே ஆனது.

6000_12402.jpg

7) ஆஸ்திரேலியாவில் கட்ட்ப்பட்ட இந்தக் கட்டடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டு, கட்டடத் தூண்களில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்டது. ஆனால், வெடி வெடித்தபோது கட்டடத்தின் தரைத்தளம் மட்டுமே தகர்ந்தது. பிறகு ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் கட்டடம் சாய்க்கப்பட்டது.

 

 

 

8) 1997-ம் ஆண்டு கனடாவில் இருந்த பழமையான Stelco இரும்பு ஆலை தகர்க்கப்பட்டது.

8_12450.jpg

உலக அளவிலான கட்டட உள்வெடிப்பு (implosion) புகைப்படங்களை காண இங்கே க்ளிக் செய்க

9) அமெரிக்காவின் உயரமான சூப்பர் மார்க்கெட் 1998-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. நகரின் மையப் பகுதியில் இது அமைந்திருந்ததால், பெரும் பாதுகாப்புக்கு மத்தியில் தகர்க்கப்பட்டது.

 

 

10) தென் ஆப்ரிக்காவின் ஏத்லோன் மின் நிலையத்தில் உள்ள இரண்டு குளிர்ச்சி டவர்கள், பாதுகாப்புப் பணிகளுக்காக இடிக்கப்பட்டது.

 

 

 

vikatan

  • தொடங்கியவர்

14939619_1173031062745586_80763473415518

KING KHAN என்று பெருமைப்படுத்தப்படும் ஹிந்தி சினிமாவின் ராஜா ஷாருக் கானின் பிறந்தநாள்.
மொழிகடந்து எல்லா மொழி ரசிகர்களாலும் ரசிக்கப்படும் முன்னணி கதாநாயகன், விளம்பரங்கள் பலவற்றுக்கு உயிர் கொடுக்கும் கலகலப்பு நாயகன்..
Happy Birthday Shah Rukh Khan

நெட்டிசன் நோட்ஸ்: ஷாருக் கான் - பாலிவுட் பாட்ஷா!

 

 
sha_3065782f.jpg
 

பாலிவுட்டின் முக்கியத் திரை ஆளுமைகளில் ஒருவரான ஷாருக் கானுக்கு இன்று (நவ. 2) பிறந்தநாள். நெட்டிசன்கள் அவரின் பிறந்த நாளைத் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். அத்துடன், #HBDWorldsBiggestStar என்ற ஹேஷ்டேகை இந்திய அளவில் ட்ரெண்டாக்கி தொடர்ந்து அதில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், "Happy Birthday King Khan", "Happy Birthday Shah Rukh Khan" ஹேஷ்டேகுகளும் ட்ரெண்டாகி உள்ளன.

இந்த ஹேஷ்டேகில் இப்போது வரை 62 ஆயிரம் பேர் பதிவிட்டுள்ள நிலையில், அவற்றில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பதிவுகளின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Show

தன் அறிவு மற்றும் வசீகரத்தால் எல்லோரையும் உற்சாகப்படுத்துகிற, ஊக்கமளிக்கிற, வழிகாட்டுகிற நிரந்தர சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்துகள்.

SHAH RUKH KHAN.

சுமாரான தோற்றத்தில், மத்திய தர குடும்பத்தில் இருந்து வந்த பையன், இன்று பாலிவுட்டின் அழகான நடிகராகவும், உலகின் பணக்கார நபராகவும் மாறி நிற்கிறார்.

TellyTalkIndia

கிங் கானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களின் படங்கள் மூலம், லட்சக்கணக்கான மக்களை வலிமையான ஆளுமைகளாக மாற்றியதற்கு நன்றி.

Sushant Singh Rajput

உண்மையான மேஜிக் உங்களுக்குப் புரியாது. அதைச் செய்யவும் நீங்கள் விரும்ப மாட்டீர்கள். அதை ரசிக்க மட்டுமே ஆசைப்படுவீர்கள். அந்த மேஜிக்... ஷாருக்கான்.

Abhishek Parihar

ஷாருக் கானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொல்வதற்காகவே ட்விட்டர் வந்திருக்கிறேன். வேறு எதற்காகவும் இல்லை.

Funnily Serious

அவர் உற்சாகம், அவர் அன்பு, அவர் வழிபாட்டு உருவம், அவர் அறிவாற்றல், அவர் மனிதர், அவர் மிகப்பெரிய நட்சத்திரம். அவர்.... ஷாருக் கான்.

Joy ‏

காட் ஃபாதர்களின் ஆதரவு எதுவும் இல்லாமல் பாலிவுட்டில் நுழைந்தார்; தனக்கான இடத்தைப் பிடித்தார். பாலிவுட்டின் பாட்ஷா என்று அழைக்கப்படுவதற்கான முழு தகுதியும் உங்களிடம் இருக்கிறது ஷாருக்.

Ravi Kapoor

நவம்பர் 2, எனக்கு எப்போதுமே சிறப்பான நாள்தான். 51 வருடங்களுக்கு முன்னால், சினிமா கோள் எனப்படும் பாலிவுட்டை ஆள ஒரு சிறுவன் பிறந்தான்.

| TEAM SRK |

நானே உருவாக்கிய நிஜத்தில் வாழ்பவன் நான். - ஷாருக்.

Happy SRK DAY !!! ‏

ஷாருக்: தகப்பனாகவும், கணவனாகவும் நான் தோற்றுவிடுவேனோ என்று உணரும்போதெல்லாம், ஒரு பொம்மையும், வைரமும் என்னைக் காப்பாற்றிவிடுகின்றன. #அருமை.

aman akhouri

எனக்குப் புரியவில்லை.

நான் புரிந்துகொள்ளவும் விரும்பவில்லை.

என்னால் புரிந்துகொள்ள முடியாது.

அந்த அதிசயத்தைக் கண்டு என்னால் வியக்க மட்டுமே முடியும்.

அது... எஸ்.ஆர்.கே.!

sha1_3065816a.jpg

Karan Gandhi

இந்தியாவின் செல்ல மகனான ஷாருக்கின் பிறந்தநாள், எந்த விதத்திலும் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்குக் குறைந்ததல்ல.

Ziyan ‏

உலகப் புகழ்பெற்ற க்ரெவின் மியூசியத்தில் காந்திக்குப் பிறகு மெழுகு சிலை அமைக்கப்பட்ட ஒரே இந்தியர்.

Akash lonarkar

20 வருடங்களாக ஒரே படம் (தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே) திரையரங்கில் ஓடிய சாதனைக்குச் சொந்தக்காரர். @iamsrk

‎Kennedy Arumugam‎

மொழிகடந்து எல்லா மொழி ரசிகர்களாலும் ரசிக்கப்படும் முன்னணி கதாநாயகன், விளம்பரங்கள் பலவற்றுக்கு உயிர் கொடுக்கும் கலகலப்பு நாயகன்..

Gayathri Karthik

உயிரே படத்தில் ஷாருக், மனீஷாவை ஒரு பார்வை பார்ப்பார்....பின்னால் ரஹ்மானின் விண்மீன்களை தாண்டி வாழும் காதல் உண்டு என உலுக்கும் ஒரு இசை.... அந்த காட்சியில் உள்ள அழகில், காதலில் உறைந்து போயிற்று மனது.

Amaal Mallik

உங்களின் சினிமா காலத்தில் நானும் வாழ்கிறென் என்பதில் பெருமை அடைகிறேன் ஷாருக். பிறந்தநாள் வாழ்த்துகள்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

கமல்-கௌதமியை கவனித்தீர்களே! இவற்றை கவனித்தீர்களா?

kamal%20gauthami_12059.jpg

‘‘ஹாய்..! உனக்கு விஷயம் தெரியுமா? கௌதமி கமலைப் பிரிஞ்சுட்டாங்களாம்! ப்ச்!’’ என தொலைபேசியில் யாரோ ஒருவரிடம் சோகமாக உரையாடிக்கொண்டிருந்தார் அந்தப் பெண். அவர் மட்டுமல்ல, சிமி கைதிகள் சுடப்பட்ட சம்பவம், அப்போலோவிலிருந்து முதல்வர் எப்போது வருவார் என்னும் கவலை, தமிழ்நாட்டின் 60-வது பிறந்ததினம் என பரபரப்பாக நாட்டைப் பற்றிய நிகழ்வுகளைச் சிந்தித்துக்கொண்டிருந்த மக்களை, ‘13 வருடங்களாக இணைந்துவாழ்ந்த கமலைப் பிரிந்துவிட்டேன்’ என்று வெளியிட்ட தனது ஒரு ப்ளாக் கட்டுரையின் வழியாகத் தன் பக்கம் கவனிக்கவைத்துள்ளார் கௌதமி. திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வதே தவறு என்றும், தனது சுயவாழ்க்கை பற்றி முக்கியப்புள்ளி ஒருவர், தானேவந்து பொதுவில் அறிவிக்கலாமா என்பது குறித்தும் பல கோணங்களில் இதன்மீது விவாதங்கள் தொடர்ந்தபடி இருக்கின்றன. மறுபக்கம், மோடியைச் சந்தித்ததுவிட்டு வந்ததற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று தீவிர கோணங்களில் எல்லாம் மக்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். இது ஒருபுறம் இருக்க, இந்த அதிமுக்கியச் செய்திகளுக்கிடையே மக்கள் கவனிக்காமல் விட்ட வேறுபல செய்திகள் என்னென்ன?

திறந்தவெளிக் கழிப்பறையே இல்லாத மாநிலமாக கேரளா அறிவிப்பு!

open%20defecation_12348.jpg

ஐபோன்-5 அல்லது ஐபோன்-6 என யோசிக்கும் அளவுக்கு டெக்னாலஜியில் வளர்ந்துவிட்டோம். ஆனால் திறந்தவெளியில் ஒரு குழந்தை மலம் கழிப்பதை இந்த நூற்றாண்டிலும் தடுத்துநிறுத்த முடியவில்லை. மூக்கை மூடிக்கொண்டுதான் செல்கிறோம். கிராமங்களில் இன்றும் 52.1 சதவிகிதம் பேர் வரை திறந்தவெளியில்தான் மலம் கழிக்கின்றனர். இதுதொடர்பாகப் பல்வேறு மாநிலங்களும் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தின் அடிப்படையில் கேரள மாநிலத்தில் ஒன்றரை லட்சம் அளவிலான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதையடுத்து திறந்தவெளி புல்வெளிக்கழகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாக கேரளா மாநில பிறப்புத்தினமான இன்று அதன் முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு விலையேற்றம்!

Lpg_12598.jpg

கடந்த ஜூலை தொடங்கி இது ஆறாவது விலையேற்றம்! மானியம் உள்ள எரிவாயு மீதான விலையை இரண்டு ரூபாய் வரையும், மானியம் இல்லாத எரிவாயு மீதான விலையை சிலிண்டருக்கு ரூ.38 வரையிலும் அதிகரித்துள்ளது மத்திய அரசு. இதன்படி தமிழகத்தில் சமையல் எரிவாயு ரூ.538-க்கு விற்கப்படும். நவம்பர் தொடக்கத்தில் தமிழகத்தில் அரிசியின் விலை ஏறலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. எரிவாயு விலையேற்றத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்த உள்ளதாகவும் பலதரப்புகள் அறிவித்துள்ளன. சாமானியன் சமைத்துச் சாப்பிடுவது இனி எப்படி இருந்தாலும் சிக்கல்தான்.

ரேடாரில் சிக்காமல் பறக்கும் சீனாவின் ப்ராடக்ட்!

cchengdu%20j%2020_12405.jpg

இந்தியாவுடனான சீனா மற்றும் பாகிஸ்தானின் எல்லைப் பிரச்னை தொடர்ந்து கொதிநிலையிலேயே இருந்துவருகிறது. இந்த நிலையில் ரேடார் கண்காணிப்பில் தெரியாமல் பறந்து இலக்கைத் தாக்கும் விமானங்களை செங் டூ - ஜே 20 ரக விமானங்களை அறிமுகப்படுத்தியுள்ளது சீனா. இது, மணிக்கு 2,100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்குமாம். ஒளியின் வேகத்தைவிட 150 மடங்கு குறைவு, அவ்வளவே! வாம்மா மின்னல்!

தகர்க்கப்படும் மவுலிவாக்கம் கட்டிடம்!

mouliwakkam%20building_12393.jpg

சென்னை மவுலிவாக்கத்தில் விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ள 11 மாடிக் குடியிருப்புக் கட்டடம் இன்று மாநகராட்சியால் தகர்க்கப்பட இருக்கிறது. இதன் அருகில் இருந்த இதேபோன்ற கட்டடம், 2014-ல் பெய்த கனமழையில் இடிந்துவிழுந்தது. இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் இறந்தனர். அந்தக் கட்டடத்தைப்போலவே இந்தக் கட்டடக் கட்டுமானத்திலும் சிக்கல் எழுந்ததை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

vikatan

  • தொடங்கியவர்
Fashion Pakistan Week (FPW) Winter Festive 2016
2016-11-02 14:36:53

பெஷன் பாகிஸ்தான் வீக் வின்ட்டர் பெஸ்டிவ் 2016 (Fashion Pakistan Week (FPW) Winter Festive 2016,) கண்­காட்சி கராச்சி நகரில் நடை­பெற்­றது.

 

2036725.jpg

 

20367423039-01-02.jpg

 

20367416592-01-02.jpg

 

பெஷன் பாகிஸ்தான் கவுன்­ஸிலின் ஏற்­பாட்டில் நடை­பெற்ற இப்­பெஷன் ஷோவில் மொடல்கள் ஆடை­ய­லங்­கா­ரங்­களை காட்­சிப்­ப­டுத்­து­வதை படங்­களில் காணலாம்.

 

203671808265901.jpg

 

203673655806653.jpg

 

203671.jpg

 

203672.jpg

 

metronews.lk

  • தொடங்கியவர்

'பூமா'-வின் புதிய வகை ஷூ உங்கள் கால்களுக்கு தானாக பொருந்தும்..!

பூமா நிறுவனம், விரைவில் வெளியிட உள்ள ஷூ, அணிந்தவுடன் கால்களுக்கு ஏற்றவாறு கிரிப்பாக பிடித்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 


ஆட்டோடிஸ்க் ஷூ எனப்படும் இவ்வகை காலணிகள், விளையாட்டு வீரர்களுக்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஷூ-வை காலில் போட்டவுடன்  ஸ்மார்ட் ஃபோனின் மூலமும் அட்ஜஸ்ட் செய்யவும் ஆப்ஷன் இருக்குமாம். 

puma-autodisc-%201%20600_15473.jpg


லிமிடெட் எடிஷனாக வரவுள்ள இந்த ஷூவின் விலை எவ்வளவு என்று இதுவரை சொல்லப்படவில்லை. 

vikatan

  • தொடங்கியவர்

குழந்தைக்கு தினமும் சொல்லவேண்டிய 8 மந்திரங்கள்! #ChildCare

HF1_18434.jpg

குழந்தைகளைத் தட்டிக் கொடுத்து; `ஷொட்டு' கொடுத்து வளர்க்க வேண்டும். பாராட்டி, ஊக்குவித்து வளர்க்கப்படும் குழந்தை தன்னம்பிக்கையோடு வளர்கிறது; தனித்துவம் பெறுகிறது. எதிர்காலத்தில் சாதனை படைக்கிறது. மாறாக, எப்போதும் குறை சொல்லி, தலையில் கொட்டி வளர்ப்பது, குழந்தைகளைக் குறுகவைத்துவிடுகிறது. 

``அந்த பையனை பாரு... எப்பவும் ஃபர்ஸ்ட் ரேங்க். நீயும் இருக்கியே!”, ``எப்பப் பாரு விளையாட்டு... நீயெல்லாம் எங்கே முன்னுக்கு வரப்போறே?” இப்படி எப்போதும் அடுத்த குழந்தைகளோடு ஒப்பிட்டு, மட்டம் தட்டி, குறைகூறி, குற்றம் சொல்லிச் சொல்லி குழந்தைகளின் தனித்திறமையை மங்கிப்போகச் செய்துவிடுகிறார்கள் பலர். குழந்தைகளின் இயல்பான ஈடுபாட்டில் இருந்து வேறெங்கோ திசைதிருப்பிவிடுகிறார்கள். அதனாலேயே குழந்தைகள் பிடிவாதக்காரர்களாக, தனித்திறமையோ, தன்னம்பிக்கையோ இல்லாதவர்களாக வளர்கிறார்கள். நம்மைப்போலத்தான் குழந்தைகளும். நம் எல்லோருக்குமே ஏதோ ஓர் அங்கீகாரம் தேவையாக இருக்கிறது. ஒரு சின்ன பாராட்டு, மலையளவு தெம்பைத் தந்துவிடும்; அதுவேதான் குழந்தைகளுக்கும். 
குழந்தைகளிடம் நாம் பேசவேண்டியவை, பேசக் கூடாதவை, அவர்கள் பயன்படுத்தும் பொருட்களில் கவனமாக இருத்தல் எனச் சில விஷயங்கள் இருக்கின்றன. அதை முறையாகக் கடைப்பிடித்தாலே போதும்... குழந்தைகள் உங்களை மட்டுமல்ல, தங்களையும் உணர்ந்துகொள்வார்கள்.

குழந்தைகளுக்கு அன்றாடம் சொல்லவேண்டிய எட்டு விஷயங்கள் இங்கே... 

1. இப்படித்தான் நடந்துக்கணும் செல்லம்!

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை பெரியவர்களுக்கே இருப்பதில்லை. குழந்தைகளுக்கு இருந்தால் அது அபூர்வம், பாராட்டப்படவேண்டிய விஷயம் அல்லவா! அம்மா தன் எட்டு வயது மகளோடு நகரப் பேருந்தில் செல்கிறார். இருவருக்கும் உட்கார இருக்கை கிடைத்துவிடுகிறது. அடுத்த நிறுத்தத்தில், ஒரு தந்தை தன் நான்கு வயது மகனோடு பேருந்தில் ஏறுகிறார். கூட்ட நெரிசல். நிற்பதற்கே தள்ளாடுகிறான் அந்தச் சிறுவன். அப்போது, அந்தச் சிறுமி, “இங்கே வந்து உட்காருப்பா” என்று நகர்ந்து, தன் இருக்கையில் கொஞ்சம் இடம் கொடுக்கிறாள். பேருந்தில் இருந்து இறங்கியதும் அந்தத் தாய், மகளின் தலையை வருடி, “இப்படித்தான் நடந்துக்கணும் செல்லம்!” என்கிறார். குழந்தைகளின் நடத்தையில் நல்ல விஷயங்கள் தென்படும்போது சொல்கிற இந்த வார்த்தைகள் அவர்களை உற்சாகம் கொள்ளவைப்பவை; நன்னடத்தைப் பக்கம் அவர்களைத் திசை திருப்புபவை.  

2. ரொம்ப சந்தோஷமா இருக்குடா பட்டு! 

குழந்தை மாதாந்திரத் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கியதாக இருக்கட்டும்; பள்ளி ஃபுட்பால் போட்டியில் கலந்துகொள்ள பெயரைக் கொடுத்துவிட்டு வந்ததாக இருக்கட்டும்; அவ்வளவு ஏன்... பிரேயரில் அன்றையச் செய்திகளை வாசித்ததாகவே இருக்கட்டும்... “ரொம்ப சந்தோஷமா இருக்குடா பட்டு!” என மனமாரச் சொல்லுங்களேன். இது வெறும் வாசகம் அல்ல; அவர்களுக்குத் தங்கள் மேலான மதிப்பைக் கூட்டும் மாமந்திரம். தொடர்ந்து, இதுபோலப் பல செயல்களில் ஈடுபட வேண்டும் என்கிற உத்வேகம் அவர்களுக்கு எழும்.  

3. உன்னை நினைச்சு ரொம்பப் பெருமைப்படுறேன்!

“அப்பா, டிராயிங் போட்டியில எனக்கு இரண்டாவது பரிசு” என்று வந்து நிற்கிறது குழந்தை. பள்ளி, டியூஷன், ஹோம்வொர்க்... என அன்றாட வேலை பளுக்களைத் தாண்டி குழந்தையின் தனித் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம் அது. அப்போது மறக்காமல், “உன்னை நினைச்சு ரொம்பப் பெருமைப்படுறேன் கண்ணா!” என்று நல்ல வார்த்தைகளைச் சொல்லிப் பாராட்ட வேண்டும். ஒரு நல்ல செயலைச் செய்து முடிக்கும்போது அவர்களுக்கு இது தேவையாக இருக்கிறது. 

4. உன்னால மட்டும்தான்டா இது முடியும்! 

எல்லா வேலைகளையும் எல்லோராலும் சிறப்பாகச் செய்ய முடியாது. ஆளுமைப் பண்போ, விளையாட்டில் சூரத்தனமோ, ஞாபகத்திறனில் அபாரத் தன்மையோ... ஏதோ ஒரு ஸ்பெஷல் அம்சம் குழந்தையிடம் இருக்கலாம். அப்படி ஒரு காரியத்தை அவர்கள் செய்து முடிக்கும்போது, ``உன்னால மட்டும்தான்டா இது முடியும்” எனச் சொல்லிப் பாராட்டுவது, தங்கள் தனித்தன்மையே பலம் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள உதவும். 

5. நான் உன்னை முழுமனசோட நம்புறேன்!

நம்பிக்கை ஏற்படுத்தும் தாக்கம் அபாரமானது. குழந்தையை மனதார நம்புங்கள். அதை அவர்களிடம் தெரிவிக்கவும் செய்யுங்கள். நம்மைப் பெற்றோர் நம்புகிறார்கள் என்கிற எண்ணத்திலேயே தவறு செய்யத் துணிய மாட்டார்கள். நம்பிக்கை என்ற அடித்தளத்தை இடுவது குழந்தைகளை நேர்மையான மனிதனாக வளர்க்கும். 

6. இதை நீ செய்வேங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு! 

தயக்கம் பல நேரங்களில் பெரிய தடை; ஒரு நல்ல தொடக்கத்தையே முடக்கிப்போட்டுவிடும் ஆற்றல் அதற்கு உண்டு. புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளத் தொடங்கும்போது... அது மியூஸிக் கிளாஸோ, கராத்தே பயிற்சியோ, நீச்சலோ... குழந்தை தயங்கினால், அதை உடைக்க வேண்டும். ``இதை நீ செய்வேங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு!” போன்ற வாசகம், அவர்களுக்குத் தாங்கள் எவ்வளவு மதிப்புக்குரியவர்கள், தன் மேல் பெற்றோர் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்த்தும். 

7. இதை செஞ்சு முடிச்சிடுவேன்னு எனக்குத் தெரியும்! 

`குருவி தலையில் பனங்காயை வைப்பதுபோல...’ என ஒரு பழைய பழமொழி உண்டு. இன்றைய பிள்ளைகளின் பாடச்சுமை என்பது அப்படித்தான். இந்தச் சூழலில் குழந்தைகள் செய்கிற ஒவ்வொரு செயலையும் பாராட்டி, அவர்களை ஊக்குவிப்பது மிக அவசியம். இரவு 9 மணி வரை படித்துவிட்டு, குழந்தை “அம்மா... நாளை டெஸ்ட்டுக்கு ரெடியாயிட்டேம்மா!” என்று சொல்கிறது. அப்போது, “வெரிகுட்! நீ படிச்சு முடிச்சிடுவேன்னு எனக்கு நல்லாத் தெரியும்!” என்று அவர்கள் ஒருபோதும் நம்பிக்கை இழக்க முடியாதபடிக்கு சொல்லி உற்சாகப்படுத்தவேண்டியது மிக அவசியம். 

 

 

 

 

8. இதை மறக்கவே மாட்டேன். ரொம்ப நன்றிடா செல்லம்! 

பிறந்த நாள், திருமண நாள் போல குழந்தைகளுக்கும் சில தினங்கள் மறக்க முடியாதவையாக இருக்கும். ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்த தினம், செஸ் போட்டியில் சாதனை படைத்த நாள், பரீட்சையில் நல்ல மதிப்பெண் பெற்ற ரிசல்ட் வந்த தினம்... எதுவாகவும் இருக்கட்டுமே! அதைக் குறித்து வைத்திருந்து, குழந்தைகளிடம் அதைப் பகிர்ந்துகொள்வதை வழக்கமாக வைத்துக்கொள்வது நல்லது. “இதை மறக்கவே மாட்டேன். ரொம்ப நன்றிடா செல்லம்!” என்கிற வாசகம், அந்த நாளை அவர்களுக்குத் தனிச்சிறப்புள்ளதாக மாற்றிவிடும்.

vikatan

  • தொடங்கியவர்

லட்சம் லைக்ஸ் இருக்கா..? நீங்க லட்சாதிபதி! #SocialInfluencer

social_17463.png

எப்ப பார்த்தாலும் ஃபேஸ்புக், ட்விட்டர் , இன்ஸ்டாகிராம்..இதுல போஸ்ட்டு போட்டுட்டு இருக்கியே...இதுக்கு பதிலா ஒரு வேலைக்கு போயிருந்தா நாலு காசு சம்பாதிச்சிருக்கலாம்ல உங்ககிட்ட யாராவது சொன்னா...அவங்களுக்கு இனிமே கெத்தா பதில் சொல்லுங்க லட்சம் லைக்ஸ் இருந்தா நீங்க தான் லட்சாதிபதி,  பத்து லட்சம் லைக்ஸ் இருந்தா நீங்க கோடிஸ்வரன் அப்படினு யாராவது சொன்னா நம்புவீங்களா? ஆனா நம்பி தான் ஆகணும் ஏன் தெரியுமா?

நீங்கள் டிஜிட்டல் இன்ஃப்ளுயன்சர்களாக இருந்தால் உங்களை தொடரும் ஒவ்வோரு நபரும் உங்களுக்கு வருமானமாக மாற வாய்ப்புள்ளது.  மேலாண்மை பாடங்களில் பொசிஷனிங் என்ற ஒரு விஷயம் உள்ளது. அதாவது நீங்கள் ஒரு விஷயத்தை கூறினால் அது சரியான பதிவாக பலரிடத்தில் போய் சேரும் என்ற மனநிலையை மக்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டும். உதாரணமாக சிலர் திரைப்படங்கள், கேட்ஜெட்களை ரிவ்யூ செய்பவர்களாக இருப்பார்கள் அவர்கள் செயல் 90% மக்களுக்கு பிடித்து அவர் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவராக இருந்தால் அவரை அதிக மக்கள் நம்புவார்கள். இந்த நிலையை நீங்கள் அடைந்துவிட்டால் உங்களைப் பின் தொடரும் அனைவரையும் உங்கள் வருமானத்தின் மூலதனம் ஆக்க முடியும்.

அது எப்படி சாத்தியம்?

உங்களை மக்கள் பின் தொடரும் எண்ணிக்கையை பொறுத்து உங்களை டிஜிட்டல் இன்ஃப்ளுயன்சராக  இந்த சந்தை அங்கீகரிக்கிறது. சந்தை நிலவரப்படி ஃபேஸ்புக்கில் 5 லட்சம் ஃபாலோயர்களை வைத்திருந்தால் 4 லட்ச ரூபாயும், 10 லட்சம் ஃபாலோயர்கள் இருந்தால் 8.5 லட்சம் ரூபாயும், 60 லட்சத்துக்கு மேல் இருந்தால் 1 கோடி ரூபாய் வரையும் வருமானம் ஈட்ட முடியும். இவ்வளவு பணத்தை விளம்பரத்தின் மூலம் மட்டுமே பெற முடியும். குறிப்பிட்ட பிராண்ட் அல்லது பொருளை ப்ரமோட் செய்தால் அந்த நிறுவனம் உங்களுக்கு பணம் கொடுக்கும். இது தான் இன்ஃப்ளுயன்சர்  மார்க்கெட்டிங் எனப்படுகிறது.

influencer_megaphone_17058.png

சில நேரங்களில் சமூக வலைதளங்களை நன்கு கவனித்தால்  விராட் கோலி ஏதோ ஒரு ஷூ நிறுவன போஸ்ட்டை ஷேர் செய்திருப்பார், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பக்கத்தில் ஏதாவது ஒரு தயாரிப்பின் பதிவு இருக்கும். இவர்களை அதிக நபர்கள் பின் தொடர்வதே இதற்குக் காரணம். இதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானத்தை இவர்கள் ஈட்டுகிறார்கள். இதனை சில லட்சம் லைக்குகள் வைத்திருக்கும் சினிமா விமர்சகர்கள் துவங்கி தனிநபர்கள் வரை அனைவரும் இதனை தொழிலாக செய்யத் துவங்கியுள்ளனர்.

நியூயார்க்கில் இரண்டு சகோதரிகள் இன்ஸ்டகிராமில் தலா 6 லட்சம் ஃபாலோயர்களை வைத்துள்ளனர். இவர்களது மாத வருமானம் 6 இலக்கத்தில் உள்ளது. வெறும் போஸ்ட்கள் மூலம் வருமானத்தை ஈட்டும் இவர்கள் எந்த வேலைக்கும் செல்வதே இல்லை. இந்த வருமானத்தை ஈட்ட மென்பொருள் இன்ஜினியர் ஒருவர் குறைந்தபட்சம் இரண்டு வருடம் உழைக்க வேண்டும்.

இந்த டிஜிட்டல் இன்ஃப்ளுயெஸிங்கில் இரண்டு வகை உண்டு. ஒன்று உங்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை பொருத்து பணம் வழங்குவது. இரண்டாவது உங்கள் கணக்கில் பதிவிடப்பட்ட பதிவுக்கு வந்த ரெஸ்பான்ஸை பொறுத்து பணம் வழங்குவது. நிறுவனங்கள் இன்ஃப்ளுயென்ஸருக்கு ஏற்ப உத்தியை அமைத்துக்கொள்ளும்.

எப்படி இருக்க வேண்டும் இவர்களது சோஷியல் மீடியா?

1.அடிக்கடி ப்ரோமோட் செய்வதை தவிர்க்க வேண்டும்
2. நம்பகத்தன்மையான பிராண்டுகளை மட்டுமே ப்ரமோட் செய்ய வேண்டும்.
3. விளம்பரதாரர்களுக்கும் சரியான சோஷியல் ரீச்சை வழங்க வேண்டும். ஏனெனில் சிலருக்கு 1000 பேர் ஃபாலோயர்களாக இருப்பார்கள் ஆனால் வெறும் 300 பேர் மட்டுமே ஆக்டிவாக இருப்பார்கள் இந்த மாதிரியான கணக்குகள் இன்ஃப்ளுயன்சர்களாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 
4. குறைந்தபட்சம் 40% ஃபாலோயர்களால் விரும்பப்படும், பகிரப்படும் அல்லது பார்க்கப்படும் விதம் இருக்க வேண்டும்.
5. தனது சோஷியல் கணக்கை மிகவும் ஃப்ரோஃபஷனலாக கையாளுபராக இருப்பது அவசியம்.

using-social-influence-for-motivating-cu

10 லட்சம் ஃபாலோயர்களை கொண்ட நபர்கள் எதில் எவ்வளவு பணம் ஈட்டலாம்:

ஃபேஸ்புக் -  8.5 லட்சம் ரூபாய்

ட்விட்டர் - 2.5 லட்சம் ரூபாய்

இன்ஸ்டாகிராம் - 6.5 லட்சம் ரூபாய்

வைன் - 5 லட்சம் ரூபாய்

ஸ்னாப்சாட் - 6.5 லட்சம் ரூபாய்

யூ-ட்யூப் - 16 லட்சம் ரூபாய்


இப்ப சொல்லுங்க பாஸ், உங்களோட ஒவ்வொரு லைக்ஸும் வியாபாரம் தானே! 

vikatan

  • தொடங்கியவர்
 
 
 
Bild zeigt Pflanze, im Freien und Essen
 

ஒரு குட்டிக் கதை!

ஆற்றங்கரைக்குத் தன் மகனை அழைத்துப் போயிருந்தார் ஒருவர்.

மகனிடம் ஒரு பையைக் கொடுத்தார்.

பெரிய பெரிய கற்களைக் காண்பித்தார்.

“இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு” என்றார்.

நிரப்பி எடுத்து வந்தான் மகன்.

“இதற்கு மேல் நிரப்ப முடியாது” என்றான்.

அப்பா கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார்.

அதே பையில் போட்டுக் குலுக்கினார்.

அவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின.

ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை.

“இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா?” - கேட்டான் மகன்.

அப்பா அங்கே இருந்த மணலை அள்ளிப் பையில் போட்டார்.

பையை மேலும் குலுக்கினார்.

கற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது.

“இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால், பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா?

அப்பா இப்படி கேட்டவுடன் இருந்திருக்காது என்று ஒப்புக் கொண்டான் மகன்.

“வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய அன்பு, கருணை, உடல்நலம், மனநலம் போன்ற உன்னதமான விஷயங்கள் பெரிய கற்கள் போன்றவை.

வேலை, வீடு, கார் போன்ற செல்வங்கள் கூழாங்கற்களுக்குச் சமமானவை.

கேளிக்கை, வீண் அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை.

முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடுங்கள்.

அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும்.

ஆனால், உங்கள் வாழ்க்கையை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால், முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது.

நல்லதே நினைப்போம்...நல்லதே நடக்கும்!

நல்லதையே செய்வோம்... நல்லோராக வாழ்வோம்!

  • தொடங்கியவர்

செத்து செத்து விளையாடும் விலங்கு

 

 
opposum_3065690f.jpg
 

எல்லா உயிரினங்களுமே தங்களுடைய வாழ்க்கைக்காகப் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மனிதர்கள் மட்டுமல்ல, ஒரு செல் உயிரியான அமீபா முதல் மிகப் பெரிய விலங்கான நீலத் திமிங்கலம் வரை எல்லா உயிரினங்களும்தான். தங்களுடைய அன்றாட வாழ்வில் மாபெரும் தடைகளையும் ஆபத்துகளையும் தாண்டியே வாழ்க்கைப் பாதையைக் கடந்து வருகின்றன. ரோஜாவுக்கு முள், எறும்புக்கு பார்மிக் அமிலம் என்று ஒவ்வொரு உயிரிக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல்.

சில விலங்குகள் தங்களிடம் இருக்கும் ஆயுதத்தால் எதிரியை வெட்டி வீழ்த்திவிடுகின்றன. சில விலங்குகள் எதிரிகளிடம் நடித்துத் தங்களைக் காப்பாற்றிக்கொள்கின்றன. என்ன! விலங்குகள் நடிக்குமா என்றுதானே நினைக்கிறீர்கள். இந்த நடிப்பெல்லாம் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத்தான்!

சிறு வயதில் நீங்கள் ஒரு கதை படித்திருப்பீர்கள். ஒரு காட்டில் இரண்டு நண்பர்கள் வழி தெரியாமல் மாட்டிக்கொள்வார்கள். கரடி ஒன்று வந்துவிடும். கரடியிடமிருந்து தப்பிக்க ஒருவன் மரத்தில் ஏறி உச்சிக்குச் சென்று விடுவான். மரம் ஏறத் தெரியாதாவன் மரத்துக்குக் கீழே பிணம் போலக் கிடப்பான். இருவரும் கரடியிடமிருந்து தப்பித்துவிடுவார்கள்.

oposum_3065692a.jpg
இறந்தது போல் கிடக்கும் ஒப்போசம்

பலே ஒப்போசம்

எதிரிகளிடமிருந்து தப்பிக்கக் கிட்டதட்ட இதே வழியைப் பின்பற்றுகிறது ஒப்போசம் என்ற விலங்கு. இது ஒரு சந்தர்ப்பவாத விலங்கு. பழங்கள், காய்கறிகள், மாமிசம் என்று எதையும் விட்டுவைக்காமல் சாப்பிடும். சமயத்துக்கு ஏற்றாற்போலக் கிடைத்ததைச் சாப்பிடும். எலிக்கும் நாய்க்கும் இடைப்பட்ட உருவத்தில் உலவுகிறது இந்த ஒப்போசம் விலங்கு.

இடம் மாறும்

பெரும்பாலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும், கரீபியன் தீவுகளிலும் காணப் படுகின்றன. ஒப்போசம் தனக்குத் தேவையான நீரும், உணவும் கிடைக்கும்வரை மட்டுமே ஓர் இடத்தில் வசிக்கும். உணவு தீர்ந்துவிட்டால் வேறு இடம் நோக்கி ஓடிவிடும். பிற விலங்குகள் கட்டி வைத்திருக்கும் புதர் புற்றுகளை ஆக்கிரமித்து, அதில் வசிக்க ஆரம்பித்துவிடும் இந்த ஒப்போசம். சொந்தமாக வளைகளை உருவாக்கிக்கொள்ள இந்த ஒப்போசம் முயற்சிப்பதும் இல்லை.

ஒரு காலத்தில் அமெரிக்க நாடுகளில் ஒப்போசம் விலங்கை வேட்டையாடி உணவாகச் சாப்பிட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட வேட்டையிலிருந்து தப்பிக்கவும், பிற சிறிய விலங்குகளின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கவும், சீறிப்பாய்ந்து கடிக்கவும் தயங்காது. நாய்கள் போலவே இதுவும் வெறிநோயை (Rabies) பரப்பக்கூடியது.

உலக மகா நடிப்பு

பெரிய விலங்குகளின் தாக்குதல்களிலிருந்து எப்படித் தப்பிக்கிறது என்பதுதான் பெரிய வேடிக்கை. ஆபத்து என்று தெரிந்துவிட்டால் உடனே ஒப்போசம் இறந்ததுபோல் படுத்துவிடும். உடல் முழுவதையும் மயக்கமடைந்த நிலைக்குக் கொண்டுசென்றுவிடும். வாயைப் பிளந்து உதடுகளைப் பிதுக்கிக்கொள்ளும். பற்கள் பிளந்து நிற்கும். கடவாய் வழியாக உமிழ்நீர் வெளியேறும். கண்களைப் பாதியாகவோ முழுமையாகவோ மூடிக்கொள்ளும். கால்களைப் பரப்பிக்கொண்டு கிடக்கும். கழிவு மண்டலத்திலிருந்து கெட்ட வாடையுடன் திரவத்தை வெளியேற்றும். எந்த ஒரு வேட்டைக்கார விலங்கும் செத்துப்போன ( மாதிரி நடிக்கும்) ஒப்போசத்தை நெருங்காமல் ஓடிவிடும்.

கிட்டதட்ட 40 நிமிடங்கள் முதல் 4 மணி நேரம்வரை இப்படித் தற்காலிக மரணத்தைத் தழுவிக்கொள்கிறது ஒப்போசம். மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்து ஆபத்திலிருந்து தப்பித்துவிட்டதை ஊர்ஜிதம் செய்துகொண்டபின் எழுந்து ஓடிவிடும்.

oppo_3065691a.jpg

இந்த காமெடியில் ஒரு சோகம் என்னவென்றால், குட்டி ஒப்போசத்துக்கு இப்படி முழுமையாக நடிக்கத் தெரியாது. நடிக்கத் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே கண்களைத் திறந்து பார்த்துவிடும். மற்ற விலங்குகள் அதனைக் கவ்விக்கொண்டு போய்விடும்.

பல தடைகளைத் தாண்டி, எதிரிகளை வென்று வெற்றிகரமாக வாழ்க்கை நடத்தும் ஒப்போசம் மனிதர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம் ஒப்பற்றது அல்லவா?

(காரணங்களை அலசுவோம்)

tamil.thehindu

  • தொடங்கியவர்

 

“ஹெலிகாப்டரில் விடுமுறை” - காணொளி

  • தொடங்கியவர்
Arab Fashion Weekss
 

அரப் பெஷன் வீக் (Arab Fashion Week)  கண்­காட்சி ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் துபாயில் அண்­மையில் நடை­பெற்­றது.

 

1701.jpg

 

170290204-01-02.jpg

 

170290298-01-02.jpg

 

இக் ­காட்­சியில் இத்­தா­லிய ஆடை வடி­வ­மைப்­பாளர் அல்­பேர்ட்டோ ஸம்­பெ­லி­யினால் வடி­வ­மைக்­கப்­பட்ட ஆடை­களை மொடல்கள் காட்­சிப்­ப­டுத்­து­கின்­றனர்.

 

170290331-01-02.jpg

 

170290332-01-02.jpg

 

 

metronews.lk

  • தொடங்கியவர்

ஒரிஜினல் வைரத்தைக் கண்டறிவது எப்படி?

பர்ச்சேஸ் கைடுஜெ.சாய்ராம்

 

p35a.jpg

வைர ஆபரணங்களின் மீதான மக்களின் ஆர்வம் இப்போது பெருகி வருகிறது. இந்நிலையில், தரம் குறைவான மற்றும் போலி வைர நகைகளின் புழக்கமும் அதிகரித்து வருவது குறிப்பிடப்பட வேண்டியது.

நவரத்தினங்களில் ஒன்றான வைரம் படிக நிலையில் உள்ள, கார்பன் மூலக்கூறுகளால் ஆன கடின மான பொருள். பூமிக்குக் கீழே 140-190 கிலோமீட்டர் ஆழத்தில், 1050-1750 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் தொடர்ந்து பல்லாயிரம் ஆண்டுகள் புதைந்திருக்கும்போது கார்பன் மூலக்கூறுகள் வைரமாக மாறுகின்றன.

எட்டாம் நூற்றாண்டுவாக்கில் இந்தியாவில் ஆந்திரப்பிரதேசத்தின் கோல்கொண்டாவில்தான் முதன்முதலாக வைரம் கிடைக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் மட்டுமே வைரம் பெருமளவில் கிடைக்கிறது.

வைரம் வாங்கும் முன்..!

 வைரத்தின் தரத்தைப் பரிசோதித்து அளிக்கப்படும் GIA, AGS தரச்சான்றிதழ்கள் பெற்றவற்றையே வாங்கவும்.

 உலகம் முழுக்க நான்கு விஷயங்களைப் (4C) பொறுத்தே வைரத்தின் மதிப்பு மற்றும் தரம் தீர்மானிக்கப்படும். அவை...

1. Cut - வெட்டுத் தரம்... வைரத்தின் வெட்டுத் தோற்றத்தைப் பொறுத்து, அது பிரதிபலிக்கும் ஒளியின் அளவும், அதன் மதிப்பும் அதிகரிக்கும். சிறப்பான வெட்டுடைய வைரத்தில் கண்ணுக்குத் தெரியாத கரும்புள்ளிகள் குறைவாக இருக்கும் என்பதால், அதன் விலையும் நிறமும் அதிகம்.

2.  Color - நிறம்... வைரம் இயற்கையில் மஞ்சள் முதல் பச்சை நிறம் வரை பல்வேறு நிறங்களில் கிடைக்கப் பெற்றாலும், நிறமற்றவை எனக் கூறப்படும் வெள்ளை நிற வைரமே அதிக மதிப்புடையது.

3. Clarity - தெளிவு... பெரும்பாலான வைரங்களில் அதன் தரத்தைக் குறைக்கும் காரணிகளான வடுக்கள் மற்றும் வெட்டுக்கள் இருக்கும். எனவே, அவை இல்லாத வைரங்கள் மிகுந்த மதிப்புடையவையாகக் கருதப்படுகின்றன. இந்தக் குறைபாட்டை பிரத்யேகக் கண்ணாடி கொண்டுதான் காண இயலும்.

4. Carat - காரட்... பல ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் வைரத்தின் எடையை கணக்கிட, ஒரே எடையைக் கொண்ட விதையான காரப் விதை (Carob Seeds) பயன்படுத்தப்பட்டது. ஒரு விதையின் எடை 200 மில்லிகிராம் என்பதால், அதை ஒரு காரட் என்று அழைத்தனர். இதுவே வைரத்தின் எடையைக் கணக்கிடும் அளவீடாக அங்கீகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

vikatan

  • தொடங்கியவர்

 

பூச்சிகளால் வலியை உணர முடியுமா?

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...

நவம்பர் - 03

 

644 : இரண்­டா­வது முஸ்லிம் கலீபா உமறு இப்னு அல்-­கத்தாப், மதி­னாவில் ஒரு பார­சீக அடி­மை­யினால் கொல்­லப்­பட்டார்.

 

1493 : கரி­பியன் கடலில் டொமி­னிக்கா தீவை முதன் முதலில் கிறிஸ்­டோபர் கொலம்பஸ் கண்டார்.

 

842varalaru-november-3.jpg1655 : பிரான்ஸும் இங்­கி­லாந்தும் இரா­ணுவப் பொரு­ளா­தார ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டன.

 

1903 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் தூண்­டு­தலை அடுத்து, பனாமா கொலம்­பி­யா­விடம் இருந்து தனது விடு­த­லையை அறி­வித்­தது.

 

1913 :  ஐக்­கிய அமெ­ரிக்கா வரு­மான வரியை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

 

1918 : ரஷ்­யா­விடம் இருந்து சுதந்­திரம் பெறு­வ­தாக போலந்து  பிர­க­டனம் செய்­தது.

 

1943 : இரண்டாம் உலகப் போர்: ஜேர்­ம­னியின் வில்­ஹெம்­ஷாஃபென் துறை­மு­கத்தை அமெ­ரிக்­காவின் சுமார் 500 போர் விமா­னங்கள் தாக்கி அழித்­தன.

 

1957 : உலகில் முதன் முதலில் மிருகம் ஒன்றை (லைக்கா என்னும் நாயை) சோவியத் ஒன்­றியம் ஸ்புட்னிக் 2 விண்­கப்­பலில் விண்­வெ­ளிக்கு அனுப்­பி­யது.

 

1963 : தி.மு.க. செயற்­குழு திரா­விட நாடு, தனி­நாடு கோஷத்தைக் கைவி­டு­வ­தாக அறி­வித்­தது.

 

1963 : ஜெய்ப்­பூரில் நடை­பெற்ற இந்­திய தேசிய காங்­கி­ரஸின் மாநாட்டில் காம­ராஜர் அக்­கட்­சியின் தலை­வ­ராகத் தெரிவு செய்­யப்­பட்டார்.

 

1964 : வொஷிங்டன் டி.சி. நகர மக்கள் முதல் தட­வை­யாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் வாக்­க­ளிக்க அனு­ம­திக்­கப்­பட்­டார்கள்.

 

1973 : மரைனர் 10 என்ற விண் ஓடத்தை புதன் கிர­கத்தை நோக்கி நாசா நிறு­வனம் அனுப்­பி­யது. 1974, மார்ச் 29 இல் அக்­கோளை அடைந்த முத­லா­வது விண்­கலம் இது­வாகும்.

 

1978 : ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து டொமி­னிக்கா  சுதந்­திரம் பெற்­றது.

 

1979 :  அமெ­ரிக்­காவின் வட கரோ­லினா மாநி­லத்தில்  கம்­யூ­னிஸ பாட்­டா­ளிகள் கட்­சியில் 5 உறுப்­பி­னர்கள் வெள்­ளை­யின மேலா­திக்­க­வா­தி­களால் சுட்டுக் கொல்­லப்­பட்­டனர்.

 

1982 : ஆப்­கா­னிஸ்­தானில் சலாங் சுரங்கப் பாதையில் ஏற்­பட்ட தீ விபத் தில் 2,000 பேர் வரையில் கொல்­லப்­பட்­டனர்.

 

1988 : மாலை­தீவு அர­சாங்­கத்தை கவிழ்ப்­ப­தற்கு இலங்­கையின் புளொட் அமைப்பின் அங்­கத்­த­வர்­களால் சதிப்­பு­ரட்சி மேற்­கொள்­ளப்­பட்­டது. மாலை­தீவு  ஜனா­தி­பதி அப்துல் கயூமின் வேண்­டு­கோ­ளை­ய­டுத்துஇந்­திய படை­யினர் 24 மணித்­தி­யா­லங்­களில் இப்­பு­ரட்சி நட­வ­டிக்­கையை முறி­ய­டித்­தனர்.

 

1997 : சூடா­னுக்கு எதி­ராக அமெ­ரிக்கா பொரு­ளா­தாரத் தடை விதித்­தது.

 

2014 : அமெ­ரிக்­காவின் நியூயோர்க் கில் 2001 செப்டெம்பர் 11 தாக்குதல் மூலம் அழிக்கப்பட்ட உலக வர்த்தக நிலையக் கட்டடம் இருந்த இடத்தில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வன் வேர்ல்ட் ட்ரேட் சென்டர் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

metronews.lk

  • தொடங்கியவர்

இல்லத்தரசிகளே... ஒவ்வொரு நாளும் உங்களால்தான் இனிமையாகுகிறது... #MorningMotivation

ratha%20sokai%202_16160_20505.jpg

 

திருமண வீடுகள், பூங்கா, தியேட்டர் போன்ற இடங்களில், நண்பர்கள், 'என்ன செய்கிறீர்கள்?" எனக் கேட்கும்போது, 'ஹவுஸ் வொய்ஃப்தான்' எனத் தயங்கிக்கொண்டே சொல்லும் காலம் மாறிப்போய்விட்டது. தன்னம்பிக்கையுடன், 'ஹோம் மேக்கர்' எனும் சொல்லும் காலத்தில் வாழ்கிறோம். குடும்பத்தினரின் ஒவ்வொரு நாளையும் இனிமையாக்க உங்களால் மட்டுமே முடியும். வழக்கமான வேலைத் திட்டங்களைக் கொஞ்சம் மாற்றி அமைத்தால் கூடுதல் மகிழ்ச்சியுடன் நாளைக் கழிக்கலாமே. அதற்கான சில ஆலோசனைகள் உங்களுக்காக..

news%20paper_20212.jpg

 

குழந்தைகள் தானாகவே செய்தித்தாள் வாசிக்க:

காலையில் அநேகமாக நீங்கள்தான் முதல் எழுவீர்கள். பால் பாக்கெட்டோடு, செய்தித்தாளை எடுத்து வரவும் செய்வீர்கள். செய்தித்தாள் ஆண்களுக்கு மட்டுமல்ல... உங்களுக்கும்தான். செய்தித்தாளை நீங்களும் வாசியுங்கள். அதில் உங்களின் பிள்ளைகள் படிக்க வேண்டிய பகுதிகளைச் சுற்றி, பூனைப்போல, எலியைப் போல அவுட் லைன் வரையுங்கள்.

பிள்ளைகள் எழுந்து, பல் துலக்கி வந்ததும், 'இந்தக் காபியைக் குடித்துக்கொண்டே, பூனைக்குள்ள ஒரு செய்தி இருக்கு படியேன்' எனச் சொல்லும்போது, ஆர்வத்துடன் படிப்பார்கள். காபியுடன் சேர்ந்து, செய்திகளும் அவர்களுக்குள் செல்லும். செய்தித்தாள் படிக்கும் பழக்கமும் உருவாகும்.

p122_20373.jpg

 

வெங்காயம் உரிப்பதில் பங்கு பிரிப்போம்:

காலையில் டிபன் தயாரிக்கும் வேலைகளை எல்லோரும் பங்கிட்டுக் கொள்வதில் தயக்கம் காட்டாதீர்கள். டிவியில் நியூஸ் பார்த்துக்கொண்டிருக்கும் கணவரிடம் வெங்காயத்தை உரிக்கவோ, காய்கறிகளை நறுக்கவோ கொடுங்கள். இதனால் 'இன்று என்ன சமையல்' என்பதை யூகிக்க வைக்கும். தனக்கு கொஞ்சம்கூட பிடிக்காதது என்றால் முன்கூட்டியே சொல்லி, மாற்றிச் செய்ய உதவும்.

இப்படி வேலைகளைப் பங்கிடும்போது உங்களுக்கு என்று ஒதுக்க நேரம் கிடைக்கும். அதில் பிள்ளைகளோடு சேர்ந்து, உடற்பயிற்சி அல்லது யோகாசனம் போன்றவற்றைச் செய்யலாம். குடும்பத்தின் ஆரோக்கியத்தின் பட்டியலில் முதலில் இருப்பது உங்களின் உடல் ஆரோக்கியம்தான்.

மெல்லிசையால் நிறையும் வீடு:

வீட்டில் மெல்லிய ஒலியில் இனிமையான பாடல்களை இசைக்க விடுங்கள். இது அனைவருக்கும் நல்ல மனநிலையைத் தரும். உங்களுக்கு ஆர்வமிருந்தால் அந்தப் பாடலை பாடிக்கொண்டே வேலைகளைச் செய்யுங்கள். உங்களைப் பார்த்து மற்றவர்களுக்கு இந்த நல்லப் பழக்கம் தொற்றிக்கொள்ளும்.  

_20575.jpg

 

ஆப்பிள் தோசை:

குழந்தைகளைப் பற்றிய பெரிய புகாரே சரியாக சாப்பிடுவதில்லை என்பதுதான். அதற்குத் தீர்வை உருவாக்கலாம். அவர்கள் சாப்பிடும் தட்டுகள் ஆப்பிள், மாம்பழம் உள்ளிட்ட பல வடிவங்களில் கிடைக்கின்றன. எனவே அவற்றை வாங்கி, இன்றைக்கு ஆப்பிளில் சாப்பிடுகிறயா.. மாம்பழத்தில் சாப்பிடுகிறாயா.. எனக் கேட்கும்போது குழந்தைகளின் சாப்பிடும் விருப்பம் அதிகரிக்கும்.

மறதிக்கு குட் பை:

மறதி என்பதை எவராலுமே தவிர்க்க முடியாது. முந்தைய அலுவலகம் செல்லும்போது கணவர், பள்ளி செல்லும் பிள்ளைகள் எதையெல்லாம் மறந்தார்கள் என்பதை சின்ன நோட்டில் குறிப்பெடுத்து வையுங்கள். அதை அடுத்த நாள் காலையில் அவர்களுக்கு நினைவூட்டுங்கள். தினமும் மறந்தால்... காலையில் காபி கொடுக்கும்போது, நேற்று மறந்த பொருளின் முதல் எழுத்தைச் சொல்லி கண்டுபிடிக்கச் சொல்லுங்கள். முடியாவிட்டால் குளித்து வந்ததும் அடுத்த எழுத்தைச் சொல்லுங்கள். இப்படி அதை ஒரு விளையாட்டுப் போல செய்யும்போது மறந்துபோகமாட்டார்கள்.

lunch_20289.JPG

 

லஞ்ச் பேக்கில் ஒரு ஸ்வீட் மேஜிக்:

பிள்ளைகளுக்கு, மதிய உணவை மீதம் வைக்காமல் சாப்பிடுவதைப் பழக்கப் படுத்துங்கள். அதற்காக, டிபன் பாக்ஸில் உணவை வைப்பீர்கள் அல்லவா... அதன் உணவின் அடியில் ஏதேனும் சிறிய அளவில் இனிப்பை, பிள்ளைகளுக்குத் தெரியாமல் வைத்துவிடுங்கள். மாலையில் உணவு முழுவதும் சாப்பிட்டாயா எனக் கேட்டால், உண்மையைச் சொன்னால் அந்த இனிப்பு பற்றி சொல்வார்கள். ஒருவேளை, சாப்பிடவில்லை என்றதும் அட்வைஸ் மழை பொழிந்திட வேண்டாம். ஏன் சாப்பிடவில்லை என்ற உண்மையான காரணத்தைத் தேடி சரிசெய்யுங்கள்.

_20507.jpg

 

தினந்தோறும் புதுப்புது உற்சாகம்:

மாலையில், பள்ளி மற்றும் அலுவலகம் முடிந்து சோர்வுடன் கணவன் மற்றும் பிள்ளைகள் வருவார்கள். நீங்களும் வீட்டு வேலைகளை முடித்தும் சோர்வாகவே இருப்பீர்கள். எல்லோருக்கும் தங்களை உற்சாகப் படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும். அதற்காக, பாடல்களை இசைக்க விட்டு நடனம் ஆடலாம். சார்ட்டில் ஒருவர் ஓவியம் வரைய ஆரம்பிக்க, மற்றொருவர் அதைத் தொடர்ந்து வரையலாம். இப்படி வீட்டினர் எல்லோரும் வரைந்துமுடித்ததும் பார்த்தால் வித்தியாசமான ஓவியமாக இருக்கும் அல்லது குறைந்தபட்சம் வாய்விட்டு சிரிக்கும் விதத்திலாவது இருக்கும். தினந்தோறும் இப்படி ஏதேனும் புதிதுபுதிதாக செய்ய வைத்தால் இன்று என்ன செய்யப் போகிறோம் என்று தெரிந்துகொள்ளும் ஆவலே சோம்பலை உதறச் செய்துவிடும். விடுமுறை நாட்களில் பிள்ளைகளின் நண்பர்களை வர வழைத்து, விளையாட்டு, கதைச் சொல்லல் போன்றவற்றையும் செய்யலாம். இது பிள்ளைகளுக்கு இடையே நல்ல உறவை மேம்படுத்தும்.

டி.விக்கு வெளியே விவாதம்:

டி.வி பார்க்கும்போதும், எல்லோருக்கும் பிடித்த சேனல் சிறிது நேரம் பயனுள்ள சேனல் சிறிது நேரம் என மாற்றி மாற்றி வைத்து, அந்த நிகழ்ச்சியின் சாதக, பாதங்களை உரையாடச் செய்யுங்கள்.

காலையில் எத்தனை மணிக்கு எழுந்தால், அடுத்த நாள் வேலைகள் சரியாக இருக்கும் என ஒரு டைம் டேபிள் போட்டு, வீட்டில் ஓர் ஓரத்தில் மாட்டி வையுங்கள்.

Homemaker-logo_20589.jpg

 

தயக்கம் வேண்டாம்:

என்ன இது பெண்கள் என்றவுடனே... வீட்டினைக் கவனித்துக்கொள்ளும் ஆலோசனைகள் தானா என்று யோசிக்க வேண்டாம். குடும்பத்தின் வளர்ச்சியில் இது முதன்மையான பணி. அதனால் தயக்கமின்றி செய்யுங்கள். எந்த இடத்திலும் சுய அடையாளத்தை இழக்காமல் இருக்கவும் செய்யுங்கள். உங்களுக்குள் இருக்கும் திறமைகளை எதன் பொருட்டும் இழந்துவிடாமல் இவற்றைச் செய்யத் திட்டமிடுங்கள்.  

உங்களின் அக்கறையாலும் அன்பாலும் எல்லா நாட்களையும் இனிமையானதாக மாற்றுங்கள்.

vikatan

  • தொடங்கியவர்

புத்தகங்கள் சுமக்கும் குதிரையும் படகும்! ஆச்சரிய நூலகங்கள்

Horse%20Library_10076.jpg

குட புஸ்தகா ( KUDA PUSTAKA ) :

வெள்ளை குறைந்த பழுப்பு நிறம். பிடரி மயிருக்கும், வாலுக்கும் இடையே அழகிப் போட்டி நடக்கிறது, நெற்றியில் சின்ன கிரீடம் அழகாக சூட்டப்பட்டிருக்கிறது. கடலும், காடுகளும் சூழ்ந்த அந்தக் காட்டுப் பாதையில்... முதுகில் இருபக்கமும் மரப்பெட்டிகளோடு, கற்களில் நடந்து வருகிறது. அதன் குளம்படிச் சத்தம் கேட்டதும் குழந்தைகள் குதூகலமாகிறார்கள்."லூனா...லூனா..." என்று கத்தியபடியே ஓடி வருகிறார்கள். தன் எஜமானன் ரித்வான் சுரூரியோடு அங்கு வந்து சேர்கிறது லூனா. அதன் முதுகில் இருக்கும் சுமையைக் கழற்றி அதிலிருக்கும் புத்தகங்களை, வரிசையாக நிற்கும் குழந்தைகளிடம் கொடுக்கிறார் ரித்வான்.


உலகளவில் கல்வியறிவில் பின் தங்கிய நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று. அதுவும் மத்திய ஜாவாவில் மட்டும் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.

முழு நேரமாக குதிரைகளைப் பார்த்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட்டிருந்த ரித்வானுக்கு தம் மக்களுக்கு எப்படியாவது கல்வி புகட்ட வேண்டும் என்ற ஆசை. தனிமனிதனாக தன்னால் என்ன செய்ய முடியும் என்ற நீண்ட நாள் யோசனை, அவருக்கு ஒரு வழியைக் காட்டியது. ஒரு பெரிய பணக்காரரின் மூன்று குதிரைகளைப் பராமரித்து வந்த ரித்வான், அதிலிருந்து தனக்குப் பிடித்த லூனாவை எடுத்துக் கொண்டு, தன்னிடமிருந்த சொற்ப காசைக் கொண்டு சில புத்தகங்களை வாங்கினார். ஒரு "குதிரை நூலகத்தை " (KUDA PUSTAKA)  உருவாக்கினார்.

unnamed%20%282%29.jpg

 
குழந்தைகளுக்கான புத்தகங்கள் மட்டுமல்லாமல் நாவல்கள், பத்திரிகைகள், விவசாயம், குடும்ப நலன், சமையல் குறிப்பு உட்பட பல விதமான புத்தகங்களை, இந்த குதிரை நூலகத்தில் வைத்துள்ளார். இந்த சேவைக்கு அவர் ஏதொரு கட்டணத்தையும் வசூலிப்பதில்லை. வார இறுதிகளில் சுற்றுலாத் தளங்களில் குதிரையை சவாரிக்கு விட்டு, அதில் வரும் வருமானத்தைக் கொண்டே குடும்பம் நடத்துகிறார். இவரின் புத்தகங்களின் உதவியால் பலரும் புதுவிதமான விவசாய முறைகளை கற்றறிந்து செயல்படுத்துகிறார்கள்.

"நான் ஒரு ஏழை. எனக்கு இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை... ஆனால் கொடுப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை. அதனால் தான், என் உழைப்பைக் கொடுக்கிறேன். ஒரு குதிரையை சொந்தமாக வாங்க வேண்டும், வீட்டில் ஒரு நல்ல நூலகத்தை உருவாக்க வேண்டும் என்ற என் கனவு பலிக்குமா, பலிக்காதா என்று தெரியவில்லை... ஆனால், இந்தோனேசியாவின் அடுத்த தலைமுறை நன்கு படித்து, ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்திட வேண்டும். அந்தக் கனவை நோக்கிய பயணத்தின் முதலடி தான் இப்பொழுது நான் செய்து கொண்டிருப்பது." என்று "லூனாவை" தட்டிக் கொடுத்தபடியே சொல்கிறார் ரித்வான். லூனா மீண்டும் அந்த மரப்பெட்டியை தூக்கி நடக்கத் தொடங்குகிறது.


பெரஹு புஸ்தகா ( PERAHU PUSTAKA) :

unnamed%20%283%29.jpg

இந்தோனேசிய பத்திரிகையாளரான முகமது ரித்வான் அலிமுதினுக்கு கடல், கப்பல், புத்தகம், பயணம் எல்லாம் அதிகம் பிடித்தவை. இந்தோனேசியாவின் தென் சுலவேசி ( SOUTH SULAWESI ) காடுகள் நிறைந்த ஒரு தீவுப் பகுதி. அங்கு சில பள்ளிக் கூடங்கள் இருந்தாலும், ஆசிரியர்கள் யாரும்  கடினமான பாதைகளைக் கடந்து, அடிப்படை வசதிகளற்ற அந்தப் பகுதிகளுக்கு வரத் தயாராக இல்லை. அங்கிருக்கும் குழந்தைகளுக்கு தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற முடிவில், ஒரு படகை தயார் செய்யத் தொடங்குகிறார்.


"கையிலிருந்த காசைக் கொண்டு, பக்கோ ( BAQGO) வகையிலான சிறு படகைக் கட்டினேன். படகு தயாரானவுடன், என் வேலையை ராஜினாமா செய்தேன். பலரிடம் நன்கொடையாக பெற்ற புத்தகங்களைக் கொண்டு இந்த படகு நூலகத்தை ( PERAHU PUSTAKA ) உருவாக்கினேன்" என சொல்லும் அலிமுதின் கடற் சார்ந்த கலாசாரத்தை மையப்படுத்தி 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும், பல கடற்பயணங்களை மேற்கொண்டு, இந்தோனேசிய கடல் பகுதியில் வாழும் "மாண்டர்" ( MANDAR ) இன மக்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆவணப்படத்தையும் இயக்கியுள்ளார். 

unnamed.gif


17-ம் நூற்றாண்டில் தெற்கு சுலவேசி பகுதியில் வாழ்ந்து, உலகப் புகழ்பெற்ற "பட்டிங்கலோயங்" ( PATTINGALLOANG ) என்பவரின் பெயரையே தன் படகுக்கு சூட்டியிருக்கிறார் அலிமுதின். படகில் இருந்து இறங்கி, கடுமையான காட்டுப் பாதையில் பல கடினங்களைக் கடந்து புத்தகங்களை வழங்கி வருகிறார் அலிமுதின்.


"கஷ்டம் தான்... ஆனால், நான் கொண்டு போகும் புத்தகத்தை ஒரு குழந்தை வாங்கி அதை மகிழ்ச்சியோடு படித்து, சிரிக்கும்போது... என் அத்தனை கடினங்களும் காணாமல் போய்விடும்" என்று சொல்லியவாறு தன் படகின் பாய்களை விரிக்கிறார். அது காற்றடிக்கும் திசை நோக்கி நகரத் தொடங்குகிறது. 

vikatan

  • தொடங்கியவர்

சொல்லி அடித்த மொபைல்! முடிவுக்கு வருகிறதா டெஸ்க்டாப் கலாசாரம்!

NexoniaExpenses%20new%20UI_12315.jpg

உங்க‌ வீட்ல கம்ப்யூட்டர் இருக்கா? 2000-களின் ஆரம்ப காலத்தில் மிகவும் பிரபலமான கேள்வி, ஆனால் இன்று இதே கேள்வியை யாராவது கேட்டால் ''என்னது உங்க வீட்ல கம்ப்யூட்டர் தான் இருக்கா? '' என மாறியுள்ளது. இதற்குக் காரணம் டெஸ்க்டாப் கணினிகளை விட கையடக்க செல்போன்களே கணினியின் சேவைகளை வழங்க ஆரம்பித்தது தான். சமீபத்திய அறிக்கை ஒன்றும் இதனை உறுதி செய்யும் விதமான புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.

அக்டோபர் மாத இணையதள தேடல் விகிதங்களின் படி டெஸ்க்டாப்பில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 48.7 சதவிகிதமாகவும், மொபைல் போன்களில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 51.3 சதவிகிதமாகவும் கூறப்பட்டுள்ளது.  முதல் முறையாக மொபைல் போன்கள் இணைய பயன்பாட்டில் டெஸ்க்டாப் கணினிகளை பின்னுக்கு தள்ளியுள்ளன.

இந்த வளர்ச்சி கணிக்கப்பட்டது தான் என்றாலும், இதன் வேகம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக உள்ளது. இதற்கு மூன்று காரணங்கள் முக்கியமானதாக கூறப்படுகிறது. 

YPS_1510_WC151015_facebook_1920-800x450_

முதலாவது மொபைல் போன்களின் எண்ணிக்கை - கிட்டத்தட்ட உலக மக்கள் தொகையில் 60 சதவிகித மக்கள் ஏற்கெனவே மொபைல் போன்களை பயன்படுத்த துவங்கிவிட்ட நிலையில் 2017-ம் ஆண்டில் சுமார் 5 பில்லியன் எண்ணிக்கையையும், 2020-ம் ஆண்டுக்குள் மக்கள் தொகையில் முழு அளவான 6.77 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு மொபைல் போன்கள் வேகமாக ஊடுறுவி வருகின்றன. சில நேரங்களில் ஒரு நபரே 2-க்கும் அதிகமான மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர்.

இரண்டாவது காரணம், உலகின் கிராமப்புற பகுதிகள், ரிமோட் ஏரியாக்களுக்கும் இணைய சேவை சென்றடைவது தான். அதே நேரத்தில் குறைந்த விலை போன்களின் மார்க்கெட் அதிகரித்து வருவதும், இணைய சேவை பல பொது இடங்களில் இலவசமாக வழங்கப்படுவதும் தான் என்கிறது புள்ளிவிவரங்கள். சமூக வலைதளங்கள், உடனடி தகவல் பரிமாற்ற ஆப்ஸ்கள் வரை அனைத்துமே யூஸர் ஃப்ரெண்ட்லியாக இருப்பதால் கிராம மக்களையும் எளிதில் சென்றடைந்துவிடுகிறது.

using-social-influence-for-motivating-cu

மூன்றாவது இணையதள நிறுவனங்களின் மொபைல் உத்தி, டெஸ்க்டாப்களில் வழங்கப்படும் சேவை அனுபவம் என்பது மொபைல் போன்களில் வழங்கப்படும் சேவை அனுபவத்தைவிட குறைவாக உள்ளதே ஆகும். நிறுவனங்கள் தெரிந்தே தான் இதனை செய்கின்றன. விளம்பரதாரர்களும் மொபைல் போன்களில் விளம்பரம் செய்வதையே அதிகம் விரும்புகின்றனர் என்கிறது கூகுள். கூகுளின் AMP, ஃபேஸ்புக்கின்  Instant Articles என மொபைல்களை குறிவைக்கும் உத்திகளுக்கு வரவேற்பு அதிகம் உள்ளதும் காரணமாக கூறப்படுகிறது.

முடிவுக்கு வருகிறதா டெஸ்க்டாப் கலாசாரம்:

இணைய வேகம் குறைவாக இருந்தால்கூட செல்போன்களில் வீடியோக்களையும், மற்ற ஃபைல்களையும் பார்க்க முடியும். பயன்படுத்த முடியும். வரும் காலங்களில் டெஸ்க்டாப் பயன்படுத்துவது குறையலாம் என்பதை அறிந்த தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது உத்தியை மாற்ற துவங்கியுள்ளன. விண்டோஸ் சர்ஃபேஸ் கணினியை டச் பேனலுடன் வடிவமைத்தும், ஆப்பிள் தனது மேக் ப்ரோவை அப்டேட் செய்தும் தனது டெஸ்க்டாப் ஸ்பேஸை குறைத்துக் கொள்கின்றன. பழைய கால மிகப்பெரிய டெஸ்க்டாப் கணினிகள் இப்போது அலுவலகங்களில் இருந்து கூட வெளியேறிவிட்டன. எல்.இ.டி ஸ்க்ரீன் கணினிகள் இந்த இடத்தை ஆக்கிரமித்துவிட்டன. சில அலுவலகங்களில் லேப்டாப்பும், மொபைலும் போதும் என்ற நிலைக்கு மாறிவிட்டன.

blog-image-3_12521.jpg

இதுபோன்ற அதிரடி உத்திகளும், யூஸர் ஃப்ரெண்ட்லி விஷயங்களும் டெஸ்க்டாப் கணினிகளை ஓரங்கட்டி ரேஸில் முந்துகின்றன. டெஸ்க்டாப் தயாரிப்பு நிறுவனங்களும் மாற்றங்களை புரிந்துகொண்டு மொபைல் சேவைகளை நோக்கி செல்லத் துவங்கிவிட்டன.  இந்த கட்டுரையை கூட பெரும்பாலானவர்கள் மொபைலில் படித்துக் கொண்டிருக்கலாம். அடுத்த தலைமுறைக்கு கணினி என்பது மிக பழைய தொழில்நுட்பமாக தெரியும் அளவுக்கு வளர்ந்து வருகிறது மொபைல். இனி எல்லாம் மொபைல் மயம்.

vikatan

  • தொடங்கியவர்

வளர்த்தவரின் சமாதியில் வாழும் 'பாசக்கார' பூனை

cat_12266.jpg

வீட்டு விலங்குகளில் நாய்களைப் போலவே  பூனைகளும் பாசமானவை. ஆனால் பூனைகளுக்கு என்று தனி குணம் உண்டு. சற்று வன்மம் நிறைந்ததும் கூட. தனக்கு பிடித்தவர்களிடம் மட்டும்தான் பழகும். போகும் வரும். உணவு வாங்கி சாப்பிடும். அப்படி 'பாசக்கார' பூனை ஒன்றின் கதை இது.

இந்தோனேஷியாவின் மத்திய ஜாவா பகுதியில் இபு குந்தாரி என்ற பெண் ஒருவர் பூனை ஒன்றை பாசத்துடன் வளர்த்து வந்தார். கடந்த வருடத்தில், குந்தாரி இறந்து போனார். குந்தாரியின் இறுதிச் சடங்கு நடந்த இடத்துக்குப் பூனை வந்துள்ளது. அவரது உடலை அடக்கம் செய்தபோது தரையில் விழுந்து 'மியாவ் ' என கத்தியதாக குந்தாரியின் உறவினர்கள் சொல்கின்றனர்.

குந்தாரி இறந்து போய் விட்டாலும் அவர் காட்டிய பாசத்தை அந்த பூனையால் மறக்க முடியவில்லை போலும். இதனால் தற்போது குந்தாரியின் சமாதியிலேயே அந்த பூனை வாழ்ந்து வருகிறது. அவ்வப்போது உணவுக்காக மட்டும் குந்தாரியின் வீட்டுக்கு செல்கிறது. குந்தாரியின் குழந்தைகள் கொடுக்கும் உணவினை சாப்பிட்டு விட்டு மீண்டும் சமாதிக்கு வந்து விடுகிறது.

இந்த பூனை சமாதியின் அருகிலேயே  இருப்பதை பார்த்த கெல்லி கெனின்கானு என்ற 28 வயது இளைஞர், அதனை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், அந்த பூனை கெனின்கானின் வீட்டில் இருந்து வெளியேறி மீண்டும் சமாதிக்கு வந்து விட்டது. இது போன்று பல முறை நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்துதான் கெனின்கானு, பூனையின் நடவடிக்கைகளை கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறார். அப்போதுதான் பூனை சமாதியில் வாழ்வதற்கான பின்னணித் தெரிய வந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், இந்த பூனையையும் அதன் தாய் பூனையையும் குந்தாரி வளர்த்து வந்துள்ளார். தாய்பூனை இறந்த பின்னர், இந்த குட்டி பூனை வீட்டில் இருந்து வெளியேறி சமாதிக்கே வந்து விட்டது. சில நேரங்களில் அழக் கூட செய்கிறது. இரவு நேரத்தில் சமாதியில்தான் படுத்து உறங்குகிறது. அதற்கு யாரும் இல்லை என்று நினைத்துதான் எனது வீட்டுக்கு கொண்டு சென்றேன். ஆனால் உடனே இங்கே வந்து விடும். பிறகுதான் பூனையின் நடவடிக்கைகளை கண்காணிக்கத் தொடங்கினேன். அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி செல்வதையும் அவரது குழந்தைகள் இந்த பூனைக்கு பாசத்துடன் உணவு அளிப்பதையும் பார்த்தேன் ''என்றார்.

hachi%20_13328.jpg

விலங்குகள் இது போன்று வளத்தவர்கள் மீது பாசம் காட்டுவது புதிதல்ல. நம்ப முடியாத அளவுக்கு சில உண்மைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. ஆனால், பூனை விஷயத்தில் சமாதியில் வசிப்பதுதான் புதியத் தகவலாக இருக்கிறது. கடந்த வருடம் தாய்லாந்தில் ஒரு சம்பவம் நடந்தது. ஜோவ் லாங் என்ற மூன்று வயது நாய் தன்னை வளர்த்தவருடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் தவறி விழுந்தது. அதன் உரிமையளரும் அதனை பார்க்காமல் சென்று விட்டார். கடந்த ஒரு ஆண்டு காலமாக ஜோவ் லாங், தன்னை வளர்த்தவர் வந்து அழைத்து செல்வார் என்று எதிர்பார்த்து அதே இடத்தில் பொறுமையுடன் காத்திருந்தது. ஆனால் உரிமையாளர் வரவில்லை. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி அதே இடத்தில் வாகனம் ஒன்றில் அடிபட்டு ஜோவ் லாங் பரிதாபமாக இறந்து போனது.

dog%20_12223.jpg

ஜப்பானில் ஹச்சிகோ என்ற நாயை, டோக்கியோவைச் சேர்ந்த பேராசிரியர் இசாபுரா யூனோ என்பவர் வளர்ந்து வந்தார். ஜப்பானின் அகிதா ரக நாய் இது. ஆதரவற்று தெருவில் நின்று கொண்டிருந்த குட்டியை, ஹச்சிகோ என பெயரிட்டு யூனோ வளர்த்தார் தனது மகனைப் போலவே ஹச்சிகோவை நடத்தினார் யூனோ. ஹச்சிகோவும் பேராசிரியர் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தது. டோக்கியோ நகரில் உள்ள ஷிபுயா ரயில் நிலையத்தில் இருந்துதான் பேராசிரியர் தினமும் பணிக்கு செல்வார். ரயில் நிலையம் வரை சென்று பேராசிரியரை ஹச்சிகோ தினமும் வழி அனுப்பி வைக்கும். மாலையில் அவர் திரும்பும் போதும் ரயில் நிலையத்தில் ஹச்சிகோ அவருக்காக காத்திருப்பதை வழக்கமாக கொண்டிருந்தது.

ஒருநாள் வேலைக்குச் சென்ற யூனோ திரும்பி வரவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்திருந்தார். மீண்டும் அனாதையான ஹச்சிகோவை ஷிபுயா ரயில் நிலைய தோட்ட பராமரிப்பாளர் வளர்து வந்தார். ஆனால், யூனோ திரும்ப வந்து தன்னை அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் தினமும் காலையும் மாலையும் ஷிபுயா ரயில் நிலையம் செல்வதை ஹச்சிக்கோ வழக்கமாக கொண்டிருந்தது. ஆனால் யூனோ வரவில்லை. இப்படியாக 9 ஆண்டுகள் கழிந்தது. கடந்த 1935-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி  ஷிபுயா ரயில் நிலையம் அருகிலேயே ஹச்சிகோவின் உடலில் இருந்து உயிர் ஏமாற்றத்துடன் பிரிந்தது.

ஜப்பானிய மக்கள் ஹச்சிகோவின் விசுவாசத்தை மெச்சி ஷிபுயா ரயில் நிலையத்தில் வெண்கலச் சிலை நிறுவினர். ஹச்சிகோ வாழ்க்கையை மையமாக  வைத்து பல ஜப்பானிய படங்கள் வந்துள்ளன. ஹாலிவுட் படமும் இருக்கிறது. ஜப்பானிய பள்ளிக்குழந்தைகளின் பாடப் புத்தகத்திலும் ஹச்சிகோசின் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றுள்ளது.

vikatan

  • தொடங்கியவர்

அட.. ‘சாண்ட்விச்'க்கு இப்படி ஒரு கதை இருக்கா? #SandwichDay

சாண்ட்விச்

தமிழர்களின் வாழ்வியல் உணவு அரிசிச் சோறும், இட்லி, தோசையும்தான் என்கிற காலமெல்லாம் மலையேறிப் போய் பீட்ஸா, பர்கர், சாண்ட்விச்களின் டைம் இது.

அதிலும் இந்த சாண்ட்விச் இருக்கிறதே...! முக்கால்வாசி குடும்பங்களில் இன்றைக்கு காலை உணவே அதுதான். இரண்டு பிரெட் துண்டுகளுக்கு நடுவில் ஜாம் தடவியோ, காய்கறிக் கலவையை வைத்து டோஸ்டரில் பொறித்தோ உள்ளே தள்ளிவிட்டு அலுவலகத்திற்கும், பள்ளிக்கும் பறந்து கொண்டிருக்கின்றார்கள் பலர்.

அந்த அளவிற்கு வீட்டில் இருக்கும் அம்மாக்களுக்கும், அலுவலகம் செல்லும் பெண்களுக்கும், பேச்சுலர்களுக்கும் காலை நேர பரபரப்பில் கைகொடுக்கும் சாண்ட்விச்சைக் கொண்டாடும் ஒருநாள்தான் இன்று... மகளிர் தினம், அன்னையர் தினம் கேள்விப்பட்டிருக்கிறோம்.. இதுக்கும் ஒரு தினமா என்று சாப்பிட்டுக்கொண்டே யோசிப்பவர்கள் எல்லாம் இதை மறக்காம படிச்சுடுங்க.

சாண்ட்விச் உருவானதே ஒரு செம சுவாரசியமான கதை. இங்கிலாந்தில் உள்ள சாண்ட்விச் என்னும் ஊரினை 1762ல் ஜான் மாண்டேகு என்னும் நிலப்பிரபு ஆட்சி செய்து வந்தார். சீட்டாட்டத்தில் உயிரையே வைத்திருந்த மாண்டேகுவிற்கு சீட்டு விளையாடும் போது சோறு, தண்ணி கூட வேண்டாம். ஆனால், வயிற்றுக்கு வேண்டுமே...பசிக்குமே!

அப்படி பசிக்கும்போது கைகளில் ஒட்டிக் கொண்டு சீட்டுகளைப் பிடிக்கவிடாமல் தடுக்கும், கரண்டி, கத்தி வைத்து சாப்பிடுவதால் சீட்டாட்டத்தை டிஸ்டர்ப் செய்யும் உணவு வகைகளை அவர் வெறுத்தார். இந்த பிரச்னைக்கான தீர்வாக அவர் கண்டுபிடித்த உட்டாலங்கடி ஐடியாதான் ’சாண்ட்விச்’. ஏற்கனவே மக்கள், ரொட்டி - பாலாடைக்கட்டி, ரொட்டி - காய்கறி என்றெல்லாம் சாப்பிட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்.

ஆனால், மாட்டிறைச்சி, இலை, தழை, பொடி வகைகளையெல்லாம் சேர்த்து புதுப்புது சாண்ட்விச் வகைகளை கண்டுபிடித்த பெருமை ஜான் மாண்டேகுவிற்குத்தான். ஒரு கையில் சீட்டுக் கட்டு, மறு கையில் சாண்ட்விச்...இதுதான் ஜான் மாண்டேகு.

மாண்டேகு தலைவராகப் பதவி வகித்த நகரத்தின் பெயரும் அதுவே என்பதால் அவரை சாண்விட்ச் பிரபு என்றுதான் மக்கள் அழைப்பார்களாம். அதனாலேயே ரொட்டித் துண்டுடன் விதவிதமான உணவுப் பொருட்களை இணைத்துச் சாப்பிடும் பதார்த்தத்திற்கும் அந்தப் பெயர் சூட்டப்பட்டது. ஜான் மாண்டேகுவின் பிறந்தநாள்தான் ஒவ்வொரு வருடமும் ‘சாண்ட்விச் தினம்’ என்று கொண்டாடப்படுகிறது. இதுதான் எஸ்டிடி...அய்யோ ‘ஹிஸ்ட்ரி’ பாஸ்!

அதான் ’சாண்ட்விச் டே’ ஹிஸ்ட்ரி தெரிஞ்சுபோச்சே. வேகமா போய், மழைக்கு இதமா பிரெட்டுக்கு நடுவில் சீஸ் தடவி, புதினா சட்னி, தயிர், வெங்காயம், தக்காளி, கரம் மசாலாவெல்லாம் போட்டு சூடா ஒண்ணு சாப்டலாம் வாங்க! 

அப்பறம் இன்னொரு விஷயம்.. நம்ம மிஸ்டர் வேர்ல்ட் ரோஹித் கண்டேல்வால் இதத்தான் சாப்பிடுவாராம்.. பார்த்துக்கங்க!

vikatan

  • தொடங்கியவர்

 

நெரிசல் மிக்க சாலையில் பொம்மை காரை ஓட்டியக் குழந்தை

சீனாவில் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் ஒரு சின்னஞ்சிறு குழந்தை பொம்மை காரை ஓட்டிச் சென்ற காட்சி சிசிடிவியில் படம்பிடிக்கப்பட்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.