Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

 

"சாபத்தை முடித்தல்" - காணொளி
108 ஆண்டுகள் காத்திருப்பு நனவான சம்பவம்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சுதந்திரமாகக் கண்டபடி நடப்பவர்கள்…
 

article_1478149787-7er67657.jpgகட்டுக்களை உடைத்தல் என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. சுதந்திரமாகக் கண்டபடி நடப்பவர்கள் தங்கள் கட்டுக்கள் அவிழ்க்கப்பட்டதாகக் கருதுகின்றார்கள். 

விருப்பப்படி, சுதந்திரம் எனும் பெயரில் சுற்றித் திரிந்து அடாத செயல் புரிவது, அவிழ்க்க முடியாத கட்டுகளை தங்கள் ஆன்மாவுக்குள் இறுக்கிக் கொள்வதாகும். 

பண்பற்று வாழும் இன்றைய இளைய சமூகத்தில் சிலர் தங்கள் வினைக்குள், தாங்களே அகப்பட்டுச் சீரழிந்து போகின்றார்கள். 

தீய சிந்தனைகளை, தீய செயல்களை அறுத்து, உண்மை வழியில் சதா இயங்குவதே கட்டு உடைத்தலின் சீரிய கருத்துமாகும். அரசியல் சீர்திருத்தம், சமூக நலனுக்கான விழிப்புணர்வு, மூடக்கொள்கைகளை ஒடித்தல் எல்லாமே நாம் ஆற்ற வேண்டிய அரும் பணிகளுமாகும். செய்திடுவீர்! 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தைவான் வீடுகள்: கடை விரித்தாற்போல வீடுகள்

 

 
தைப்பே 101 கட்டிடம்
தைப்பே 101 கட்டிடம்

முகில் தவழும் மலைத் தொடர்களும் ஆர்ப்பரிக்கும் கடலும் சூழ்ந்த அழகிய குட்டித் தீவு நாடு தைவான். அதன் முக்கிய நகரங்களான தைப்பே (தலைநகரம்), தைநான், கவுசிங், தைச்சுங், கெண்ட்டிங், பிண்ட்டுங், யூச்சி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. உலக அளவில் 6-வது உயர்ந்த கட்டிடமும் தைவானின் மிக உயர்ந்த கட்டிடமுமான ‘தைப்பே 101’ உள்ளிட்ட பிரம்மாண்டமான வானுயர் கட்டுமானங்களைப் பார்வையிடுதலும் எங்கள் பயணத் திட்டத்தில் முக்கிய இடம் வகித்தது.

வழிதவறியதால் கண்டது!

எங்கு பார்த்தாலும் நீர் நிலைகள் கொண்ட தைவானின் மிகப் பெரிய நீர்த்தேக்கம் யூச்சி நகரில் உள்ள சன் மூன் லேக் (Sun Moon Lake). ஏரியைச் சுற்றி வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த அழகிய குட்டி நகரம் இரவு நேரச் சந்தைக்கும் பிரசித்தி பெற்றது. தெருவோரக் கடைகளில் கிடைக்கும் உணவு, விதவிதமான சாவிக்கொத்து, ஆடை, ஆபரணங்கள், காலணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என ஏகப்பட்ட தைவான் தயாரிப்புகள் இங்கு மலிவான விலையில் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றைப் பார்க்கவும் வாங்கவும் சென்ற சிலர் வழி தவறிப்போனோம். தங்கியிருந்த விடுதியின் பெயரும் சன் மூன் லேக் ஹோட்டல் என்பதால் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம் என லேசான பனி விழும் இரவிலும் நம்பினோம்.

ஆனால் ஆள் அரவமில்லா நீண்ட சாலைகளை நெடு நேரம் கடக்க வேண்டியிருந்தது. வீதியோரக் கடைகளெல்லாம் மூடப்பட்ட பிறகு யூச்சி நகரின் வீடுகள் தெள்ளத்தெளிவாகக் கண்களுக்குத் தெரிந்தன. பகல் நேரத்திலும் இது போன்ற வீடுகளை நாங்கள் கடந்து சென்றோம். ஆனால் அவை வீடுகள் என்றே எங்களுக்கு உறைக்கவில்லை. காரணம், அவற்றின் அமைப்பு. வீட்டின் வரவேற்பறையில் டிவி, சோஃபா, நாற்காலி மட்டுமல்லாமல் ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷின், சைக்கிள், ஸ்கூட்டர், கார் என அத்தனையும் நிறுத்தப்பட்டிருந்தன.

t4_3070017a.jpg
கவுசிங் நகர வீதியில் ஒரு வீடு

ஒரு விடு இரண்டு வீடு அல்ல. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடை பயணத்தில் பார்த்த வீடுகளெல்லாம் பொருட்களின் குவியலாக இருந்தன. சில வீடுகளின் முகப்பறையிலேயே சமயலறைப் பாத்திரங்கள்கூட அடுக்கப்பட்டிருந்தன. இத்தனைக்கும் இடையில் இல்லத்தரசியும் இல்லத்தரசரும் குழந்தைகளும் அவர்களுடைய வழக்கமான வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்கள்.

கண்ணாடிச் சுவர்

அட, வீதியில் நடந்த எங்களுக்கு இவ்வளவும் எப்படித் தெரிந்தது என்கிற யோசனை எழுகிறதல்லவா! ஆமாம் தைவானின் வீடுகளின் தனித்துவம் அதுதான். கண்ணாடிச் சுவர் கொண்ட வீடுகள்! வீட்டின் முன்புறம் கடைகளில் இருப்பதுபோலக் கண்ணாடிக் கதவுகளும், கண்ணாடிச் சுவர்களும் கொண்டிருந்தன. ஆகையால், வரவேற்பறையில் இருக்கும் அத்தனையும் காட்சிப் பொருள்கள்போல் தெருவில் இருப்பவர்களுக்குத் தெரிகின்றன. ஷோரூம் போல இருக்கும் இந்த வீட்டுக்குப் பாதுகாப்பு ஏது? அதுவும் கடைகளில் உள்ளதுபோலவேதான். இரும்பு ஷட்டர் கதவுகள்.

வாகனங்களை நிறுத்தும் இடமோ, வீட்டுக்கு முன்பாக வாசல்; மதில் சுவரெல்லாம் கிடையாது. இட நெருக்கடி காரணமாகவும் திருட்டுப் பயத்தினாலும் வாகனங்களை வீட்டுக்குள்ளேயே பூட்டிவைக்கிறார்கள்.

தமிழகத்தின் பரப்பளவோடு ஒப்பிட்டால் மூன்றில் ஒரு பங்குதான் தைவான். மக்கள் தொகை 2 கோடியே 351 லட்சம்தான். ஆனாலும் பெருவாரியான பகுதிகள் மலையால் சூழப்பட்டிருப்பதால் குடியிருப்புப் பகுதிகளைக் கட்டியெழுப்புவது அவர்களுக்குச் சவாலாக உள்ளது. பொருளாதார ரீதியாக மளமளவென வளர்ந்துவரும் இந்நாட்டின் விலைவாசியும் இந்தியாவோடு ஒப்பிட்டால் பல மடங்கு.

t3_3070018a.jpg
சன் மூன் லேக் அருகே உள்ள வீடுகள்

ஆகையால் குடியிருக்க வீடு கிடைப்பதே கடினம். கார், ஸ்கூட்டர் எனச் சொந்தமாக வாகனம் வைத்துக்கொள்ள வசதியிருந்தாலும் அவற்றை நிறுத்த இடம் இல்லை. பாதுகாப்பு அச்சுறுத்தலும் இருப்பதால் ஜன்னல்களெல்லாம் கம்பிகளால் பூட்டப் பட்டிருக்கின்றன. பெரும்பாலான வீடுகள் இரண்டு அடுக்கு மாடி வீடுகளாக இருப்பதால். வரவேற்பறை தவிர மற்ற எல்லா அறைகளும் மாடியில் கட்டப் பட்டிருக்கின்றன. அதிலும் கவுசிங் நகரில் பெருவாரியான வீடுகள் கடைகளுக்கு மேலேயே கட்டப் பட்டிருக்கின்றன.

இட நெருக்கடி, திருட்டு பயம் என இத்தனை சிக்கல்கள் இருந்தும் ஏன் கடை விரித்தாற்போல கண்ணாடி போட்டு வரவேற்பறையில் இருக்கும் அத்தனையையும் தைவான் மக்கள் காட்டுகிறார்கள் என்பது மட்டும் புரியவில்லை. ஆனால் இத்தனை நெருக்கடியிலும் ஒவ்வொரு வீட்டிலும் ஏதோ ஒரு செடி, கொடி வளர்க்கப் பட்டிருப்பதை பார்க்க ஆச்சரியமான படிப்பினையாக இருந்தது!

t2_3070019a.jpg
கவுசிங் நகரில் கடைகளுக்கு மேல் வீடுகள்

.thehindu.com

  • தொடங்கியவர்

நம்ம எல்லாருக்கும் ஒரு பேர் இருக்கு! என்னன்னு தெரிஞ்சுக்கலாமா..!?

காலையில் நாலு மணிக்கே ரூம் கதவைத் தட்டி பேஸ்ட் கேட்கிறது, மச்சி கொஞ்சம் வைஃபை ஆன் பண்ண முடியுமானு கடன் கேட்கிறது, அவன் என்னை பார்க்கிறான்டினு  பொலம்புறது, எக்ஸாம்ல இஸ் இஸ்னு கூப்பிட்டு பிட் கேட்கிறதுனு எல்லாரோட ஃப்ரெண்ட் சர்க்கிள்லேயும் ஒரே மாதிரி கேரக்டர் உள்ள ஃப்ரெண்ட்ஸ் நிறையப் பேர் இருப்பாங்க. காலேஜ்ல, ஆபீஸ்ல, ட்ரெயின்ல, பஸ் ஸ்டாண்ட்ல, ஹாஸ்பிட்டல்ல, சுடுகாட்டுல... இப்படி எங்கே போனாலும் இந்த மாதிரி ஒரு ஆளை நீங்க பார்த்துடலாம். ஏன் நீங்களேகூட இப்படி ஒரு ஆளா இருக்கலாம். உங்க எல்லோரையும் கூப்பிட என்ன மாதிரி பெயர் இருக்கு தெரியுமா.....? நீங்களே படிச்சுத் தெரிஞ்சிக்குங்க மக்கழே.

டென்ட் கொட்டாய் :

%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%

இந்த டென்ட் கொட்டாய் டைப் மக்கள் வேற யாரும் இல்லங்க, உங்ககூடவே இருப்பாங்களே 'உலக சினிமா பைத்தியங்கள்' அவங்களேதான். எந்நேரமும் டொரன்ட்ல ஏதாவது படத்தை டவுண்லோட் பண்ணிப் பார்த்துட்டு, 'அந்த ஈரானியன் டைரக்டர் என்ன சொல்றார்னா, சூப்பர் சிங்கர்ல பாடினவரே ஒரு சூப்பர் சிங்கர்தாங்கிறாரு'னு புதுசு புதுசா தத்துவம் சொல்வானுங்க. இவங்களைலாம் நைட் ரெண்டு மணிக்கு எழுப்பிக் கேட்டாகூட 'என்னடா இது லைட்டிங்கே சரியில்லை'னு சொல்லிட்டுத் தூங்கிடுவாங்க. எந்தத் தமிழ்ப்படம் பார்த்தாலும் இது அதுல சுட்டது, அது இதுல பொறிச்சதுனு கம்ப்ளைன்ட் பண்ணி ஒரே டார்ச்சர்ஸ் ஆஃப் தண்ணிவண்டியா இருப்பானுங்க.

டவுசர் பாண்டிஸ் :

trousers%20pandi_20402.jpg

தங்களை எப்பவும் அப்டேடட் யூத்னு நினைச்சுக்கிட்டு காமெடி பண்ற எல்லாரும் டவுசர் பாண்டிஸ்தான். டிசைன் டிசைனா ஹேர் கட் பண்றது, பார்க்கவே சகிக்காத கலர்ல டிரெஸ் போடுறது, 'இப்ப விழுமோ அப்ப விழுமோனு' பயப்படுற அளவுக்கு பேன்ட் போடுறது, கிளாஸ் ரூமுக்குக்கூட ஸ்லிப்பர்ஸ் போடுறதுனு புதுசு புதுசா எதாவது ட்ரெண்ட் க்ரியேட் பண்றதுதான் இவங்க வேலை. கடைக்குப் பால் வாங்கப் போனாலும் சரி, டைம் பாஸ் பண்ண மாலுக்குப் போனாலும் சரி... எல்லா இடத்துக்கும் அரை டவுசர் போடுறவங்கதான் இவங்க. இதுதான் பெயர்க் காரணம். இவங்ககூடலாம் சேராதீங்க ஃப்ரெண்ட்ச். அப்பறம் நீங்களும்......பச்.

பாலா படம் :

bala%20padam_20224.jpg

நீங்க எங்கே இருந்தாலும் சரி, உங்ககூட இப்படி ஒருத்தர் கண்டிப்பா இருப்பார். காலையில் மூணு தடவைக் குளிச்சிட்டு வந்தாகூட மூணு மாசம் முன்னாடி குளிச்சிட்டு வந்த மாதிரி லுக்லயே இருப்பாங்க. பாலா பட க்ளைமாக்ஸ்ல வர ஹீரோ கணக்கா எப்போ யாரைக் கடிச்சுத் திங்கலாம்ங்கிற மாதிரியே இருப்பாங்க. தாடி வெச்சாலும் சரி, நாலு மாசம் ஜிம்முக்குப் போய் பாடி வெச்சாலும் சரி... இவங்களுக்கு மட்டும்  அந்த கெத்து லுக் வரவே வராது. அட வாட்ஸ் அப் ஸ்டேடஸ்கூட 'கேரளா முழுக்கா சேச்சி. எனக்கு என்னமோ ஆச்சி'னு ஃபீலிங்கா (???) வைப்பானுங்க. இப்படி வருத்தப்படுற வாலிபாஸ் எல்லாருமே பாலா படம்தான்.

நெட் பேக்கு :

net%20packu_20416.jpg

எப்பவும் நெட் யூஸ் பண்ணிட்டே இருக்கீங்களா? பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவைதான் மொபைலை விட்டுக் கண்ணை எடுக்குறீங்களா? எந்நேரமும் நோட்டிஃபிகேஷன் செக் பண்றீங்களா? ஃப்ரெண்ட்கூட கடலை மிட்டாய் சப்பிட்டதுக்குக்கூட 'பீலிங் ஆஸம் வாங்கித் தந்தவனுக்கு எவ்ளோ பாசம்' அப்படினு ஸ்டேட்டஸ் போடுறீங்களா, இதோ இதைப் படிச்சிட்டு அதை அப்படியே காப்பி பண்ணி ஃபேஸ்புக்ல எழுதுறீங்களா? ப்ளூ டிக்குக்காக வெயிட் பண்றீங்களா? கை காசு எல்லாம் நெட் கார்ட் வாங்கியே காலி பண்றீங்களா? நீங்க.....நீங்க.....நீங்க ஒரு நெட் பேக்கு ப்ரோ. பேக் இல்ல ப்ரோ பேக்கு.

ஸ்லீப்பர் செல் :

sleeper%20cell_20002.jpg

கிளாஸ்ல எது நடந்தாலும் சரி, ஏன்... டீச்சர் அதிசயமா புரியற மாதிரி பாடம் நடத்தினாகூட சரி, எப்பவும் ஸ்லீப்பிங் மோட்லயே இருக்கிறவங்கதான் இந்த ஸ்லீப்பர் செல். நைட் ஃபுல்லா குல்லா போடாத கூர்க்கா கணக்கா நின்னு மொபைல் யூஸ் பண்ணிட்டு காலைல ஆபீஸ்லேயும், கிளாஸ்லேயும் தூங்குற பழக்கம் உங்களுக்கு இருக்கா... அப்படினா  நீங்களும் ஸ்லீப்பர் செல்தான். இப்படியே நைட்ல தூங்காம பகல்ல தூங்கினா சீக்கிரமே இன்சோம்னியா வருமாம் மக்கழே... 'ஸ்லீப்பர் செல்ஸ் எல்லோரும் நாட்டுக்குக் கெடுதல்'னு நம்ம விஜய் அண்ணா சொன்னதைக் கேளுங்க ஃப்ரெண்ட்ஸ்.

செல்ஃபி சேகர் :

selfie%20sekar_20058.jpg


ஒரு முகமோ இரு முகமோ அப்படினு  ஃபீல் பண்ணிட்டு விதவிதமா போஸ் கொடுத்து செல்ஃபி எடுக்கிறவங்க எல்லாரும் செல்ஃபி சேகர்தான். கோணவாய் செல்ஃபி, கொலை பண்ற செல்ஃபி, மலை மேல நிற்கிற செல்ஃபி, அப்படியே மலையிலேர்ந்து விழுற செல்ஃபினு விதவிதமா செல்ஃபி எடுக்கிற பொண்ணுங்க பசங்க எல்லோரும் செல்ஃபி சேகர் வகைதான். செல்ஃபி சேகர் அப்படினு உங்களை யார் கிண்டல் பண்ணாலும் கவலைப்படாதீங்க பாஸ்.......ஏன்னா உன் செல்ஃபி உன் உரிமை.

கல்யாண் ஜூவல்லர்ஸ் :

kalyanam%20jwellers_20220.jpg

இது வேற யாரும் இல்லைங்க. ஃபேஸ்புக்ல, ட்விட்டர்ல, வாட்ஸ் அப்லலாம் எப்பவும் புரட்சி மோட்லயே கம்பு சுத்திட்டு இருக்கிறவங்கதான் இந்த கல்யாண் ஜூவல்லர்ஸ். எது நடந்தாலும் சரி. (த்ரிஷாவுக்கு எறும்பு கடிச்சாகூட) உடனே போராளியா மாறி இது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அப்படினு ஃபேஸ்புக்ல நாலு ஸ்டேட்டஸ் போடுவாங்க. 'இட்லிக்கு காரப்பொடி இல்லை, இதுக்கு மேல நான் மனுசனே இல்லை'னு மொக்கை ரைமிங்கில் ஏதாவது பேசி கல்யாண் ஜூவல்லர்ஸ் பிரபு கணக்கா எப்பவும் 'இது ஒரு புரட்சிப் போராட்டம்' அப்படினு கத்திக்கிட்டு இருக்கிறவங்களைத் தாராளமா கல்யாண் ஜூவல்லர்ஸ்னு சொல்லலாம்.

பாம்பே பொண்ணு :

bomboy%20ponnu_20459.jpg

அட! இந்த மாதிரிப் பொண்ணுங்களை நீங்க தினம் தினம் பஸ் ஸ்டாண்ட்ல பார்க்கலாம். செவ்வாய் கிரகத்தில் செடி நட்டுக்கிட்டு இருக்கிறவன்கூட இவங்க ஹேர் ஸ்பிரே வாசத்துல மயங்கி விழுந்துடுவான். தமிழ்ப்பட பேய்கூட இவங்க மேக்கப் பார்த்து தெறிச்சி ஓடிடும், ஷங்கர் ரோட்டுல அடிக்கிற பெயின்ட் பூரா இவங்க முகத்துலதான் இருக்கும். இப்படி ஓவர் மேக்கப் போட்டுக்கிற பொண்ணுங்க எல்லோரும் 'பாம்பே பொண்ணு' தான். பார்த்த உடனே ப்ப்ப்ப்ப்ப்பா னு சொல்லத் தோனுதா அப்படின்னா கண்டிப்பா அவங்க பாம்பே பொண்ணுதான். இதே மாதிரி ஓவர் மேக்கப் போடுற பசங்களுக்கு ஆம்பள அனுஷ்கானு ஒரு பெயர் இருக்கு ஃப்ரெண்ட்ஸ்.

மங்கள்யான் :

mangalyaan_20047.jpg

கம்யூட்டரைக் கல்யாணம் பண்ணிட்டு ஹார்ட்வேர்கூட குடும்பம் நடத்திட்டு சாப்பிடறப்போகூட சாஃப்ட்வேர் பற்றிப் பேசுறவங்கதான் இந்த மங்கள்யான் டைப் பீப்பிள். எப்போதும் கம்ப்யூட்டர் கையுமா சிட்டி ரோபோட் கணக்கா புரியாத மாதிரி எதையாவது பேசிட்டே இருக்கிறவங்க எல்லோரும் இவங்கதான். கம்ப்யூட்டரே லைஃப், வைஃபையே வொய்ஃப் அப்படினு சின்சியரா தத்துவம் பேசிட்டு எப்பவும் சயிண்டிபிக் பேச்சு பேசுறவங்கதான் இந்த மங்கள்யான்ஸ்......ரொம்ப சிக்கலானவங்க.

foreign%20mappillai_20054.png

அமெரிக்க மாப்பிள்ளை

காலையில் டீயில சுகர் இல்லைனாலும் சரி, பக்கத்து வீட்ல பார்க்கிற மாதிரி ஃபிகர் இல்லைனாலும் சரி எல்லாத்துக்கும் 'ச்சே இந்த இந்தியாவே இப்படித்தான் வெளிநாட்ல எப்படித் தெரியுமா'னு எப்போதும் 'ஃபீலிங் அமெரிக்கா' மோட்லயே இருக்கிறவங்கதான் இந்த அமெரிக்க மாப்பிள்ளை. அவங்க சவுதி, சிங்கப்பூர்னு  எங்கே வேலை பார்த்தாலும் ஃபாரீன் பெருமை பேசினா, அவங்க அமெரிக்க மாப்பிள்ளைதான். ஃபாரீன்ல பவர் ஸ்டார் கணக்கா காமெடி பீஸா இருந்தாலும் உள்ளூர்ல இட்லியைக்கூட ஸ்பூன்லதான் சாப்பிடுவாங்க. மிஸ்டர் அமெரிக்க மாப்பிள்ளைஸ்... நீங்க வேற நாடு நாங்க வேற நாடு இல்லை பாஸ். எல்லாம் ஒரே நாடு இந்தியா!

vikatan

  • தொடங்கியவர்

டபுள் வெல்கம்!

 

p108.jpg

ரு குழந்தை ஒருமுறைதான் பிறக்கும்கிறதுலாம் அந்தக்காலம், ரெண்டாவது தடவையும் பிறக்கும். என்ன பாஸ் அதிர்ச்சியா இருக்கா? மேலே படிங்க....

p108a.jpg

இந்தச் சம்பவம் நடந்துருப்பது அமெரிக்காவில் ஆம், மார்கரேட் போயிமர் என்கிற பெண்மணி 16 வார கர்ப்பத்துடன் மருத்துவமனைக்கு சோதனைக்காகச் சென்றிருக்கிறார். குழந்தைக்கு ஏதோ கட்டி வளர்வதாகவும் உயிருக்கே ஆபத்தானது என்றும் தெரிவிக்க. 23வது வாரத்தில் குழந்தையை அறுவைசிகிச்சை மூலம் வெளியே எடுத்து 5மணி நேரத்துக்கு மேலாக போராடி அறுவை சிகிச்சை செய்து அந்தக் கட்டியை நீக்கி இருக்கின்றனர். கட்டியை நீக்கியதும் முழுவளர்ச்சி அடைந்திடாத அந்தக்குழந்தையை மறுபடி தாயின் வயிற்றுக்குள்ளேயே வைத்து கர்ப்பப் பை தைக்கப்பட்டு பின் அனுப்பிவைத்திருக்கின்றனர்

p108b.jpg

அந்த அறுவைசிகிச்சை முடிந்து அடுத்த 12 வாரங்களுக்குப்பின் முற்றிலும் நல்ல ஆரோக்கியத்துடன் அறுவைசிகிச்சை மூலம் இரண்டாவது முறையாக அந்தக் குழந்தை பிறந்திருக்கிறது. இருமுறை பிறந்த உலகின் அதிர்ஷ்டசாலிக் குழந்தையான அதற்கு லின்னி எனப் பெயர் சூட்டியிருக் கிறார்களாம்!

யூ ஆர் வெல்கம்!

 

vikatan

  • தொடங்கியவர்

 

இறகு கலைஞர்

கோழி இறகுகளை கொண்டு ஓவியம் வரையும் இந்த கலைஞரின் படைப்புகள் லண்டனின் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இடம்பெறவுள்ளன.

  • தொடங்கியவர்

6 வயதில், 1330 திருக்குறள்கள்... அசத்தும் காரைக்குடி மாணவி!

 

 

 

காரைக்குடி, அழகப்பா அகாடமியில் முதல் வகுப்பு ஆங்கில வழியில் படிக்கும் வைஷ்ணவி, திருவள்ளுவரின் அத்தனை (1330) குறள்களையும் அருவிபோல சொல்லி,
அனைவரையும் வியக்கவைக்கிறார். 'எப்படி இவளால எல்லா குறளையும் படிக்க முடிஞ்சது' என்று, வைஷ்ணவியின் வகுப்பு மாணவர்களுக்கும்
பள்ளியின் மற்ற மாணவர்களுக்கும் வந்துபோகிறது வியப்பு. 10 குறள்கள் படிக்க, பெரிய  வகுப்பு மாணவர்களே தலையை உருட்டுவார்கள். ஆனால்,
முதல் வகுப்பிலேயே அனைத்துக் குறள்களையும் மனப்பாடமாகச் சொல்வதோடு, சுமார் 50 குறள்களுக்குத் தெளிவுரையும் சொல்கிறார். அதையே ஆங்கிலத்திலும் சொல்வதுதான் ஹைலைட்.


வைஷ்ணவிக்கு திருக்குறளை எப்படிப் பிடித்தது?


''அம்மாதான் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க, அவங்ககிட்டயே கேளுங்க'' என்றார் மழலைக் குரலில் வைஷ்ணவி..
''முதல்ல, நான் சொல்லிக்கொடுத்ததையெல்லாம் ஞாபகம் வெச்சுக்கிட்டு சொன்னாங்க. அதனால, ரெண்டு வயசுலயே கடவுள் வாழ்த்து பத்து குறளையும் சொல்லிக்கொடுத்துட்டேன்.
அப்புறம், LKG முடிச்ச லீவுல மற்ற குறள்களையும் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன். அதுல இருந்து ஒரு வருஷத்துக்குள்ள எல்லாக் குறளையும் மனப்பாடம் பண்ணிட்டாங்க.

vishnavi%20%287%29_14226.JPG


கட்டாயப்படுத்தி சொல்லிக்கொடுக்கக் கூடாது. அவங்க ஃப்ரீ மைண்டா இருக்கணும். கலரிங் பண்ணும்போது... விளையாடும்போது சொல்லிக்கொடுத்தா, மனசுல ஈஸியா எடுத்துக்குவாங்க.
ஒரு அதிகாரத்தைத் தெளிவுபடுத்த, சின்னதா ஒரு கதை சொல்வேன், புரிஞ்சிக்குவாங்க. முதல்ல, ல,ள எழுத்து உச்சரிப்பை சரியா சொல்லிக்கொடுத்துட்டு, குறளை
ரெக்கார்டு பண்ணிப் போட்டுவிட்டுட்டா, மனப்பாடம் ஆகிடும். முதல் வார்த்தையை எடுத்துக்கொடுத்தா போதும் எந்தக் குறளா இருந்தாலும் சொல்லிடுவாங்க. நம்பர் சொன்னா, குறள்
சொல்ல பயிற்சி எடுத்துக்கிட்டிருக்காங்க'' என்கிறார் அம்மா லதா, பெருமையாக.

-

vikatan

  • தொடங்கியவர்

'உலகின் மிக அழகான மகள்' - அமிதாப் பச்சன் பெருமிதம்

amitabh_17480.png

பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகள் ஷ்வேதாபச்சன் நந்தா, நேற்று ஆடை வடிவமைப்பாளர்களுக்கான நிகழ்வு ஒன்றில் பங்கு பெற்று, பிரமாண்டமான வெள்ளை கவுன், தலையில் க்ரீடம் என தேவதை உடையில் ரேம்ப் வாக் செய்தார்.

 

CwclHt4XEAAdjhl.jpg

 

 

அந்த நிகழ்வில் பங்குபெற்ற அமிதாப்,” உலகின் மிக அழகான மகள்” என தன் மகளின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்து, தந்தையாக மிகவும் பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டிருக்கிறார். 

vikatan

  • தொடங்கியவர்

சிசுவின் இதய துடிப்பை கேட்க ஒரு மொபைல் ஆப்..!

பெல்லாபீட் என்ற நிறுவனம், 'ஷெல்' என்ற மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த மொபைல் ஆப் பயன்படுத்த ஒரு இணைப்பு கொடுக்கப்படுகிறது. அந்த இணைப்பை ஃபோனின் அடியில் மாட்டிவிட்டு, கர்ப்பமாக உள்ள பெண் வயிற்றில் வைத்து குழந்தையின் இதய துடிப்பை ரெக்கார்ட் செய்து கேட்க முடியும். மற்றவர்களுடன், ரெக்கார்ட் செய்த குழந்தையின் இதய துடிப்பைக் பகிரவும் முடியும். உங்கள் பிறக்காத குழந்தையின் இதய துடிப்பைக் கேட்க வேண்டுமா? ஆப்-ஐ தரவிறக்கம் செய்து கேளுங்கள்...

 

 

 

 

vikatan

  • தொடங்கியவர்

துப்பாக்கி பாட்டி!

 

14p1.jpg

`பாட்டிய வெத்தல பாக்கு நசுக்கிப் பாத்திருப்ப. சமையல் செஞ்சு பாத்திருப்ப... ஏன் தடிய எடுத்துட்டு அடிக்க ஓடி வர்றதக்கூட பாத்திருப்ப. துப்பாக்கி எடுத்து சுடுறதை பார்த்திருக்கியா?' என்று பஞ்ச் பேசலாம் போல் இருக்கிறது சந்திரா தாமஸ் பாட்டியைப் பார்க்கும்போது! உத்திரப்பிரேதசம் மாநிலத்தில் வசிக்கும் இந்தப்பாட்டி தினமும் காலை 8 மணியிலிருந்து 12 மணி வரையிலும் துப்பாக்கி சுடுவதில் பிஸி! 78 வயது ஆகும் பாட்டிக்கு ஆறு பசங்களும் 15 பேரக் குழந்தைங்களும் இருக்கிறார்கள். குறி பார்த்து சுடுவதில் கில்லியான இந்தப் பாட்டி துப்பாக்கியைப் பிடிக்க ஆரம்பித்ததே 65 வயதில் தானாம்!

14p2.jpg

பேத்திக்கு 11 வயதாக இருக்கும்போது துப்பாக்கி சுடும் பயிற்சிக்குத் துணையாக பாட்டியும் போயிருக்கிறார். பேத்தி பயந்து நடுங்குவதைப் பார்த்து கடுப்பான பாட்டி ஒரு கட்டத்தில் நேராக ரேஞ்சுக்குள் போய் துப்பாக்கியைக் கையில் எடுத்து `டுமீல் டுமீல்' என இலக்கைக் குறிவைத்து சுட்டிருக்கிறார். ஷார்ப்பான அந்த ஷாட்ஸைப் பார்த்த பயிற்சியாளர் ஆச்சர்யமாகி பேத்திக்குப் பதில் பாட்டிக்குக் கோச்சிங் கொடுக்க 78 வயசிலும் உ.பி அறிந்த பிரபலமாகி விட்டார் பாட்டி!  40 வயசானாலே கை நடுங்கும்போது இந்தப் பாட்டி எப்டி இப்டி? ``ராத்திரில எல்லாரும் தூங்கினதுக்கு அப்புறம் ஒரு கைல ஜக்கில் தண்ணிய வெச்சிட்டு ஒரு மணி நேரம் நின்னு பிராக்டீஸ் செய்றது பிடிக்கும். ஒரு சொட்டு தண்ணிகூட சிந்தாது'' என்று சொல்லும் பாட்டிதான் அந்தக் குடும்பத்துக்கு மூத்த மருமகளாம்! இவங்களைப் பார்த்து `இன்ஸ்பையர்' ஆன இந்தக் குடும்பத்தோட இளைய மருமகளும் துப்பாக்கி சுடுவதில் ஆர்வமாக ஈடுபட ஒரே துப்பாக்கி சத்தம்தான் போங்க..! தாத்தாக்களோட வீரத்தைச் சொல்ற மாதிரி யாராச்சும் பாட்டிங்களோட வீரத்தைச் சொல்ற படம் எடுத்தா இந்தப் பாட்டி நிச்சயம் ஒரு ரோல் மாடலா இருப்பாங்க..!

vilkatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...
நவம்பர் - 07

 

1492 : பிரான்ஸின் அல்சாஸ் பிராந்தியத்தில் விண்கல்லொன்று வீழ்ந்தது. உலகில் பதிவு செய்யப்பட்ட மிகப் பழைமையான விண்கல் மோதல் இதுவாகும்.


1502 : ஹொண்டூராஸ் கரையை கொலம்பஸ் அடைந்தார்.


1665 : இப்போதும் வெளிவரும் உலகின் மிகப் பழமையான பத்திரிகையான “த லண்டன் கசெட்”  முதலாவது இதழ் வெளியானது.


843varalaru.jpg1893 : அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.


1910 : உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை ரைட் சகோதரர்களால் ஒஹையோவில் ஆரம்பிக்கப்பட்டது.


1917 : அக்டோபர் புரட்சி: விளாடிமிர் லெனின் தலைமையில் கம்யூனிஷப் புரட்சியாளர்கள் ரஷ்யாவின் இடைக்கால அரசாங்கத்தைக் கவிழ்த்தனர். (பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது அக்டோபர் 25 ஆம் திகதியாகும்).


1917 : முதலாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் ஓட்டோமான் பேரரசிடம் இருந்து காஸா பகுதியைக் கைப்பற்றின.


1918 : மேற்கு சமோவாவில் பரவிய ஒரு வித வைரஸ் நோய் காரணமாக 7,542 பேர் ஆண்டு முடிவிற்குள் இறந்தனர்.


1931 : மா சே துங் சீன சோவியத் குடியரசை அக்டோபர் புரட்சியின் நினைவு நாளில் அறிவித்தார்.


1941 : இரண்டாம் உலகப் போர்: "ஆர்மேனியா" என்ற சோவியத் மருத்துவக் கப்பல் ஜேர்மனிய விமானங்களின் குண்டுவீச்சில் மூழ்கியது. 5,000 பேர் வரையில் இதில் கொல்லப்பட்டனர்.


1941 : நாசி ஜேர்மனியர் உக்ரேனில் நெமிடீவ் என்ற இடத்தில் 2580 யூதர்களைக் கொன்றனர்.


1944: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் தொடர்ச்சியாக 4 ஆவது தடவையாக வென்று சாதனை படைத்தார். (பின்னர் இரு தடவைகளுக்கு மேல் ஒருவர் இப்பதவியை வகிக்க முடியாது என சட்டத் திருத்தம் செய்யப்பட்டது).


1956 : சுயஸ் கால்வாய் பிரச்சினை: எகிப்தில் இருந்து உடனடியாக ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், இஸ் ரேல் படைகளை வெளி யேறுமாறு ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


1983 : ஐக்கிய அமெரிக்காவின் செனட் கட்டட த்தில் குண்டு வெடித்தது.


1987: டுனீஷியாவில் ஜனாதிபதி ஹபிப் போர்குய்பா, பிரதமர் பென் அலியினால் பதவி கவிழ்க்கப்பட்டார்.


1989: கிழக்கு ஜேர்மனியில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அமைச்சரவை கலைக்கப்பட்டது.


1990: அயர்லாந்தின் முதல் பெண் ஜனாதிபதியாக மேரி ரொபின்சன் தெரிவானார்.


1991 : அமெரிக்காவின் புகழ்பெற்ற கூடைப்பந்தாட்ட வீரரான மெஜிக் ஜோன்சன் தாம் எச்.ஐ.வி. தோற்றுக்குள்ளாகியிருப்பதாக அறிவித்து அமெரிக்க தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கத்திலிருந்து (என்.பி.ஏ.) வெளியேறினார்.


1996: செவ்வாய் கிரகத்துக்கான “மார்ஸ் குளோபல் சர்வேயர்” விண்கலத்தை நாஸா ஏவியது.


1996 : நைஜீரிய விமானமொன்று லாகோஸ் அருகே வீழ்ந்ததில் 143 பேர் கொல்லப்பட்டனர்.


2000: அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தல் பெறுபேறு ஜோர்ஜ் டபிள்யூ புஷ், அல் கோர் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட சர்ச்சை உயர்நீதிமன்றத்தின் மூலம் பின்னர் தீர்க்கப்பட்டது.  


2000: ஹிலாரி கிளின்டன் நியூயோர்க் செனட்டர் பதவிக்கான தேர்தலில் வென்றார். அமெ ரிக்க முதற்பெண்மணியாக விளங்கிய ஒருவர் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானமை இதுவே முதல் தடவையாகும்.

 

2002 : அமெரிக்கப் பொருட்களின் விளம்பரங்களை அறிவிப்பதற்கு  ஈரான் தடை விதித்தது.


2004: ஈராக்கில் கிளர்ச்சியாளர்களின் கோட்டையான பலுஜாவில் அமெரிக்கப் படைகள் பாரிய தாக்குதலை ஆரம்பித்ததையடுத்து ஈராக்கிய இடைக்கால அரசாங்கம் 60 நாள் அவசர பிரகடனம் செய்தது.


2007: பின்லாந்தில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத் தினால் 9 பேர் உயிரிழந்தனர்.


2012: குவாத்தமாலாவில் ஏற்பட்ட யூகம்பத்தினால் 52 பேர் உயிரிழந்தனர்.

 

metronews.lk

  • தொடங்கியவர்

பயந்துகிட்டே இருந்தா ஜெயிக்க முடியாது - பிக்ஸாரின் அனிமேஷன் ப(பா)டம்  #MondayMotivation

piper_09054.jpg

ஒரு விஷயம் எப்படி இருக்கும்னே தெரியாம பயந்துகிட்டே இருந்தா... அந்த விஷயம் என்னனு கத்துக்கவே முடியாது. எல்லாருக்கும் வாழ்க்கைல ஒரு இலக்கு இருக்கும் அதை அடைய பயம்தான் முதல் எதிரி. இந்த விஷயத்த‌ அழகா தனது புதிய ஷார்ட் ஃபிலிம் மூலம் சொல்லி இருக்கிறது ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய அனிமேஷன் நிறுவனமான பிக்ஸார்.

கடல் ஓரத்துல வாழுற சாண்ட் பைபெர் பறவைகள் கடல் அலை வரும்போது கரையை நோக்கி ஓடி வந்துடும் அலை திரும்ப போனவுடன் அங்கு உள்ள கடல் உணவுகளை உண்ணும். புதிதாக பிறந்து இருக்கும் பேபி  சாண்ட் பைபெருக்கு இறை தேட கத்துக்கொடுக்கும் தாய்  சாண்ட் பைபெர் தைரியம பேபியை கடலுக்கு அழைக்க, தண்ணீரில் நனைந்து மிரண்டு விடுகிறது பேபி  சாண்ட் பைபெர்.

ஒருநாள் அதிக பசியோட கடல் அலைகளை பாத்துட்டு இருக்கும்போது. நத்தை அலைகள்ல இருந்து எப்படி பாதுகாத்துக்குதுணு வேடிக்கை பாக்குற பேபி  சாண்ட் பைபெர் . தானும் அதே ட்ரிக்கை கையில் எடுக்குது. அப்பற என்ன பயம் போய் தண்ணில செம கெத்தா ஆட்டம் போடுது. அவ்வளவு நாளா அலைகளை பாத்து ஓடின அனைத்து சாண்ட் பைபெர்களுக்கும் இந்த பேபி  சாண்ட் பைபெர் தான் ஹீரோ!

வாழ்க்கைல எல்லா விஷயத்துக்கும் பயந்துகிட்டே இருந்தா ஜெயிக்க முடியாதுங்கிற விஷயத்தோட செம கெத்தா உங்க வாரத்த ஆரம்பிச்சா நீங்களும் ஹீரா தான் பாஸ்!

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

15003268_1177829492265743_49406389619505

'உலக நாயகன்' கமல்ஹாசன்...
நடிகர் திலகத்தின் கலையுலக வாரிசு - இப்போது இவரும் செவாலியே..

தமிழ்த் திரையுலகின் தலைமகன்.
சகலதுறைக் கலைமகன்.

கலையுலகின் திரையுலகின் ஆழம் தொட்ட கலைஞானி
சிகரங்கள் தொட்டு விருதுகள் பெற்ற உலக நாயகன்...
புதுமைகள் படைக்கும் அறிவுஜீவி..



Happy Birthday Kamal Haasan

சொல்லித் தீராத சுவாரஸ்யங்கள்! கமல் ஸ்பெஷல் #HBDKamal

கமல்

கமல்ஹாசன் பற்றிய சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு இது.

* கமலுக்கு சினிமா சென்டிமென்டுகளில் எப்போதுமே நம்பிக்கை கிடையாது. ‘ஹே ராம்’ படத்தின் தொடக்கக் காட்சியில், முதல் வசனமே இப்படித்தான் இருக்கும்... ‘சாகேத்ராம், திஸ் ஈஸ் பேக்-அப் டைம்’.

* நடிகர்கள் பெண் வேடமிட்டு திரையில் தோன்றுவது அவ்வப்போது நிகழக்கூடியதுதான். அவையெல்லாம் ஒரு சில காட்சிகள்தான் இருக்கும். ஆனால், கமல்ஹாசன்தான், படம் முழுவதும் பெண் வேடமிட்டு நடித்தார். சிறுவயதில், தான் குருகுலவாசம் செய்த அவ்வை டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகக் குழுவின் மேல் கொண்ட பற்றினாலும், குருவின் மேல் கொண்ட பக்தியினாலும், தனது படத்துக்கு ‘அவ்வை சண்முகி’ என்றே பெயர் வைத்தார்.

* காலையில் ஆறு மணிக்கு எழுந்திருப்பார். உடற்பயிற்சி செய்வதற்கு எப்போதும் தவறுவதே இல்லை. காலை உணவு இட்லி, தோசை சாப்பிடுவார். பிரட் டோஸ்ட், ஆஃபாயில், முட்டை, காபி, டீ, சாப்பிடுவதில்லை.

* கேரளாவின் சிவப்பு அரிசி சாதத்தை விரும்பி சாப்பிடுவார். நான்-வெஜ்ஜில் கமலுக்கு மிகவும் பிடித்தது மீன். அதுவும் கேரளாவில் கிடைக்கும் மீன் என்றால், ரொம்பவே இஷ்டம்.

* எம்.ஜி.ஆருக்கு ‘நான் ஏன் பிறந்தேன்’ திரைப்படத்திலும், ஜெயலலிதாவுக்கு ‘அன்பு தங்கை’ படத்திலும், சிவாஜிக்கு சவாலே சமாளி படத்திலும் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி இருக்கிறார். அப்போது எம்.ஜி.ஆருக்கு, சிவாஜிக்குரிய நடன அசைவுகளை வைத்து இருக்கிறார் ‘குறும்புக்காரா...’ என்று செல்லமாக எம்.ஜி.ஆர். கோபித்துக் கொண்டாராம்.

* கமலுக்கு திரைப்படங்களைப் பார்ப்பதை விட அதீத ஆர்வம் புத்தகங்களை வாசிப்பதில் உண்டு. இதிகாசங்களில் இருந்து, நவீன இலக்கியங்கள் வரை எல்லாவற்றிலும் புகுந்து புறப்பட்டு வருவார். அதேபோல் திரைப்படத்துறையின் லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்.

CVnD72UVEAACE-r_12534.jpg

* ‘ரஜினியும் நானும் கிளாஸ்மெட் மாதிரி. இன்னும் சொல்லப் போனால், ஒரே பெஞ்ச்மெட் கே.பாலசந்தர் என்கிற பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் என்ற பாசம் எங்களிடையே உண்டு. எனினும், கபில்தேவ், இம்ரான்கான் மாதிரி ஆரோக்கியமான போட்டியும் உண்டு’ என்று கூறுவர்.

* பேசும் சினிமா வந்து ஐம்பத்தைந்து ஆண்டுகளான பிறகு, பேசாத படத்தில் நடித்து சாதனை படைத்தார். அந்தப் படம், ‘பேசும்படம்’. படம் பேசியது.

* சினிமாவில் பல நல்ல திறமையாளர்களைக் கண்டறிந்து ஊக்குவித்த பெருமை அவருக்குண்டு. சுரேஷ்கிருஷ்ணாவை ‘சத்யா’ படத்தின் மூலம் இயக்குநராக்கினார். சத்யராஜ், நாசர், சந்தானபாரதி, கரண், டெல்லிகணேஷ் போன்றவர்களெல்லாம், கமலின் படங்களில் நடிப்பதையே பெருமையாகக் கொண்டவர்கள்.

* கமல் குடும்பத்தைச் சேர்ந்த அவரது அண்ணன் சாருஹாசனும், அவரது மகள் சுஹாசினியும், ஆக மூன்று பேருமே தேசிய விருது பெற்றவர்கள்.

* ‘அந்த நாள்’ (வீணை பாலசந்தர்) படத்துக்குப் பிறகு பாடல்களே இல்லாத படம், ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. சத்யராஜ் நடித்த இந்தப் படம் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தைத் தயாரித்தவர் கமல்.

* கமல் மெட்ராஸ் பாஷை பேசி நடித்த படங்கள் ‘சட்டம் என் கையில்’, ‘அபூர்வ சகோதர்கள்’ ஆகிய இரண்டு படங்களுமே மெகா ஹிட். மெட்ராஸ் பாஷையை பேசும் விதத்தை நடிகர்  லூஸ் மோகனிடம் கேட்டு அறிந்துகொண்டாராம். மெட்ராஸ் பாஷையைப் பேசி நடிப்பதென்றால், இருவருமே திருநெல்வேலி அல்வா சாப்பிடுவது போல் நடிப்பார்கள்.

* கமலின் தந்தைக்கும் கமலுக்கும் உள்ள உறவு, தேர்ந்த இரு நண்பர்களுக்கு இடையே இருக்கும் நட்பைப் போன்றதாகவே இருந்தது. இருவரும் பரஸ்பரம் அதிகம் பேசிக் கொள்ளாவிட்டாலும், கமலின் உள்ளுணர்களை மிகத் துல்லியமாகப் புரிந்து கொண்டு பேசுவார்.
* கமல்ஹாசன் திருவல்லிக்கேணி இந்து ஹை-ஸ்கூலில் படித்தவர்.

* களத்தூர் கண்ணம்மா, ஆனந்த ஜோதி, பார்த்தால் பசி தீரும், பாதகாணிக்கை, வானம்பாடி ஆகிய 5 படங்களில் நடித்திருந்த நிலையில், கமலின் அப்பா சீனிவாசன், அவ்வை டி.கே. சண்முகம் அவர்களைப் பார்க்க வந்தார். ‘சாருஹாசன், சந்திரஹாசன் இரண்டு பேரும் நல்லா படிக்கிறாங்க. இவனைத்தான், என்ன பண்றதுன்னு தெரியலை. படிப்பை விட கலைத் துறையில ஆர்வமா இருக்கான். அதனால உங்கக்கிட்டே கொண்டு வந்துட்டேன்’ என்று கூறி விட்டுச் சென்றார்.

collage1_12414.jpg

* டி.கே.எஸ். நாடகக் குழுவில் கிடைத்த பயிற்சியால்தான், கமல் உச்சஸ்தாயில் பாட வேண்டிய பாடல்களைக் கூட சர்வ அலட்சியமாக பாட அவரால் முடிந்தது.

* கமலுக்கு, தான் ஃபிலிம் இன்ஸ்ட்டியூட்டில் படிக்க வில்லையே என்ற ஏக்கம் உண்டு. அந்த ஏக்கமே அவரை சினிமாவின் அத்தனை தொழில் நுட்பங்களிலும் கைதேர்ந்தவராக உருவாக்கியது.

* நடிகனாக வேண்டும் என்ற ஆவலில் சினிமாத்துறைக்கு கமல் வரவில்லை, இயக்குநராக வேண்டும் என்ற ஆவலுடன் தான் திரைப்படத்துறைக்கு வந்தார். ஆனால், அவர் இயக்குநாரகி இருந்தால், நல்ல திரைப்படங்கள் கிடைத்திருக்கும். ஆனால், சிவாஜிக்கு பிறகு சிறந்த நடிகர் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே கிடைக்காமல் போயிருக்கும். இவரைப் போலவே காமிரா உமனாக வந்த சுஹாசினி நடிகையாகி சிறந்த நடிகை விருதையும் பெற்றார்.

* பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா என்று தமிழ்ச் சினிமாவின் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய கமல், என்ன காரணத்தினாலோ, மகேந்திரனின் இயக்கத்தில் நடிக்கவில்லை.

* தமிழ் சினிமாவில் முதன்முதலில் முத்தக் காட்சியில் நடித்தவர் என்ற பெருமையும் இவருக்கே உண்டு. படம்: சட்டம் என் கையில்.

* கமலின் தந்தையின் உடல் தகனத்துக்காக மயானத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. கமலும் அவருக்கு நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே உடனிருக்கிறார்கள். இறுதிச் சடங்குகள் ஒவ்வொன்றாக நடக்கின்றன. சாருஹாசன், சந்திரஹாசன், கமலஹாசன் ஆகிய மூவரும் சிதையின் அருகில் நிற்கிறார்கள். திரும்பிப் பார்த்த கமல், ‘அண்ணா நீங்களும் வாங்க’ என்று இருவரையும் அழைக்கிறார். அவர்கள், ஆர்.சி.சக்தி, ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா. அவர்களையும் கொள்ளி வைக்கச் சொல்கிறார் கமல். கதறி துடித்தபடியே அவர்களும் கொள்ளி வைக்கிறார்கள். என் தந்தையை நேசித்த நீங்கள் என்றும் என் சகோதரர்களே’ என்று மவுனமாக கூறினார் கமல்.

* நாகேஷ், மனோரமா, வி.கே.ஆர். ஆகிய மூவரிடமும் மாறாத பாசம் கொண்டவர் கமல். தன்னுடைய தயாரிப்புகளில், தான் நடிக்கும் படங்களில் இவர்கள் இருப்பதை பெரிதும் விரும்புவார்.

* கே.பாலசந்தரின் படங்களில் ஏராளமாக கமல் நடித்தார். அவரது பட்டறையில் அவர் நடித்த படங்கள் எல்லாம் வித்தியாசமான பரிமாணங்களை கொண்டவை. ‘மை டியர் ராஸ்கல்’ என்று விளித்துத்தான் கே.பி. அவர்கள் அவருக்கு கடிதம் எழுதுவார்.

kamalh_12098.jpg

* கமல், டான்ஸ் மாஸ்டராக, பாடகராக, கதாசிரியராக, திரைக்கதை ஆசிரியராக, வசனகர்த்தாவாக, இயக்குநராக, குழந்தை நட்சத்திரமாக, கதாநாயகனாக, வில்லனாக என்று பல அவதாரங்களை திரைப்படத்துறையில் எடுத்தவர். பிலிம்ஃபேர் விருதை 17 முறை வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமல்.

* எண்பதுகளின் மத்தியில் ‘மய்யம்’ என்ற பத்திரிகையும், இவரது நற்பணி இயக்கத்தினரால் தொடங்கி நடத்தப்பட்டது.

* எழுத்தாளர் சுஜாதா, சந்தானபாரதி, அனந்து, ஆர்.சி.சக்தி, ஆகியோர் கமலுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள். இவர்களிடம் கதை குறித்த விவாதங்கள், நவீன சினிமாவைப் பற்றிய விமர்சனங்களை காரசாரமாக எடுத்து வைப்பார்.

அனைத்தையும் அட்வான்ஸாக செய்யும் கமலுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள்

இந்திய சினிமாவின் முக்கிய கலைஞனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

vikatan

  • தொடங்கியவர்

’இதுதான் இந்தியா...! இவர்கள்தான் இந்தியா...!’ - அசத்தல் ஓவியங்கள் (ஆல்பம்)

1_15297.jpg

ஓவியங்களின் தொகுப்பை காண படத்தை க்ளிக் செய்யவும்

ம்மால் நிஜத்தில் காண முடியாத பல்வேறு விஷயங்களையும் தங்கள் கற்பனைத் திறத்தின் மூலம் வெளிப்படுத்தும் திறமை ஓவியர்களுக்கு உண்டு. இருப்பதை உள்ளபடியே வரைவது ஒரு சில ஓவியக் கலைஞர்களின் திறமை. மற்றும் சிலர் தேவைக்கேற்ப இருப்பதை மாற்றி வரைந்து அந்த ஓவியங்களுக்கு மேலும் மெருகேற்றி விடுவர். இயற்கை சார்ந்த விஷயங்களை வரைவது ஒரு சில கலைஞர்களின் விருப்பம். ஆனால் இன்று வளர்ந்து வரும் கலைஞர்கள், திரைப்படப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் போன்ற தெரிந்த முகங்களை வரைவதில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

கிழக்குக் கடற்கரைசாலை, முட்டுக்காட்டில் அமைந்துள்ள வரலாற்று அருங்காட்சியம் ஆன தக்‌ஷின் சித்ராவில் பழங்கால வீடுகளின் வரலாறு, அந்த வீடுகளில் உபயோகிக்கபட்ட பொருட்கள் என அனைத்தும் பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும். அங்கு ஆண்டு முழுவதும் ஓவியர்கள், புகைப்பட கலைஞர்கள் என பலர், தங்களின் படைப்புத் திறமைகளை காட்சிக்கு வைக்கிறார்கள். கண்காட்சியை நடத்த தக்‌ஷின்சித்ரா, எந்தவிதமான கட்டணமும் வாங்கப்படுவதில்லை என்பது அந்த அருங்காட்சியகத்தின் கூடுதல் சிறப்பு. 

5_15573.jpg

ஓவியங்களின் தொகுப்பை காண படத்தை க்ளிக் செய்யவும்

தமிழகத்துக்கு என தனித்தன்மை எப்போதும் இருக்கும். அந்தந்த இடத்துக்கு ஏற்ப பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் தொடர்ந்து பின்பற்றுபவர்கள் ஒரு சிலரே. மக்கள் நாகரீகம் என்ற பெயரில் தங்களின் சொந்த அடையாளத்தையே இழந்து கொண்டிருக்கிறார்கள். பாரம்பரியங்களை பின்பற்றும் மக்களைத் தொடர்ந்து கவனித்து, அவர்களை புகைப்படம் எடுத்து, அவற்றை ஓவியங்களாக மாற்றி இன்னும் அழகுபடுத்தியிருக்கிறார்கள் ஓவியக் கலைஞர்கள் அந்தோணி ராஜ் மற்றும் ராமு.

அவர்கள் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி இந்தியாவின் பழமையை “Traditions of India" என்ற தலைப்பில் அமைத்திருக்கிறார்கள். நவம்பர் 3-ம் தேதி தொடங்கியுள்ளது. இக்கண்காட்சி வரும் 30-ம் தேதி வரை தக்‌ஷின் சித்ராவில் நடைபெறும். அவர்கள் வரைந்த ஓவிங்களைப் பார்த்துவிட்டு, ஓவியக் கலைஞர்களாக அவர்கள் மாறியதற்கான பின்னணி பற்றியும், அவர்கள் வாழ்க்கை பற்றியும் தெரிந்து கொள்ள, அவர்களை நேரில் சந்தித்தோம்..

3_15037.jpg

அந்தோணி ராஜ், ராமு

அந்தோணி ராஜ்

“சீர்காழி அருகே இருக்கும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். பள்ளியில் பாடங்கள் படிப்பதைவிட வரைவதில்தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. பாடங்கள் படிக்கும் நேரத்தில்கூட ஓவியங்கள்தான் வரைந்து கொண்டிருப்பேன். நண்பர்களுக்கு ஓவியங்கள் வரைந்து காட்டி, அதன் மூலம் கதைசொல்வது எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம். பள்ளியில் மற்ற ஆசிரியர்களைவிட 'ட்ராயிங்' டீச்சரைத் தான் எனக்குப் பிடிக்கும். அவர் வகுப்பை மட்டும் ஆர்வத்தோடு கவனிப்பேன். 12-ம் வகுப்பு முடித்த பிறகு பள்ளிக்குச் செல்ல வேண்டியது இல்லை என்ற சந்தோஷம்தான் அதிகம் இருந்தது. அப்போது ஒருநாள் பல கலைஞர்கள் வரைந்த ஓவியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, மார்க் என்ற ஓவியர் வரைந்த ஓவியம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, என் நண்பர் ஒருவர் மார்க்கை அவருக்கு நன்றாக தெரியும் என்றும், கூடிய சீக்கிரத்தில் அறிமுகம் செய்து வைப்பதாகவும் சொன்னார். அவர் சொன்ன மாதிரியே ஒரே வாரத்தில் அவரைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அவர் என்னை, சென்னையில் உள்ள கவின் கலைக் கல்லூரியில் சேர்ந்து படிக்கச் சொன்னார். அதன்படி நானும் கல்லூரி சேர முயற்சி செய்து கல்லூரியில் சீட்டும் வாங்கினேன். பிரபலங்களை வரைவதை விட நம்மைச் சுற்றி இருப்பவையே அழகு மிகுந்தது, அவற்றை இன்னும் அழகாக்க வேண்டும் என்று நினைத்து, மனிதர்களை அவர்களின் பாரம்பரியத்தோடு, அடையாளம் மாறுபடாமல் புகைப்படம் எடுத்து அவர்களை வரையத் தொடங்கினேன். அழகு என்பது வெள்ளையாக இருப்பதாலோ அதிகம் வசதியாக இருப்பதாலோ மட்டும் கிடைத்துவிடாது. நாம் வைத்திருக்கும் பொருட்களையும், சுற்றி இருப்பவர்களை சந்தோசமாக வைத்திருப்பதில் தான் இருக்கிறது என அவர்களை வரையும்போது தான் எனக்குப் புரிந்தது” என்றார் அந்தோணி ராஜ்.

2_15178.jpg

ஓவியங்களின் தொகுப்பை காண படத்தை க்ளிக் செய்யவும்

ராமு

“காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறில் பிறந்தேன். அங்கு தான் பள்ளிப் படிப்பையும் முடித்தேன். பள்ளிக்கூட காலத்தில் இருந்தே வரைவது தான் எனக்குப் பிடித்த ஒன்று. என் அண்ணன் வரைவதைப் பார்த்து வரைவதில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. அவர் வரைந்த ஓவியங்களைப் பார்த்து நானும் அதேபோல் வரைய வேண்டும் என்று முயற்சித்தேன். பின்பு பள்ளி முடிந்த பிறகு கும்பகோணத்தில் பயிற்சி எடுத்து தேர்வு எழுதினேன், அதன்படி எனக்கு பாண்டிச்சேரி கல்லூரியில் சீட் கிடைத்தது. பிரபலமானவர்களை வரைவதில் எனக்கு ஈடுபாடு இல்லை, எனக்குப் பிடித்தது, சிறுவயதில் இருந்து நான் பார்த்துப் பழகியவர்களை வரைய ஆரம்பித்தேன். என்னைச் சுற்றியுள்ள, எனக்கு சம்பந்தபட்ட விஷயங்களைத் தான் வரைவதில் ஆர்வம் செலுத்தினேன். இதுபோன்ற ஓவியங்கள் பெரிதாக விற்கவில்லை என்றாலும், அவற்றை வரையும்போது எனக்கு சந்தோஷம் அதிகமாக இருக்கும். ஓவியங்கள் விற்காத சமயங்களில், 'வொர்க் ஷாப்' போன்ற வகுப்புகள் எடுத்து செலவுக்கான பணத்தை சம்பாதிக்க வேண்டியிருக்கும்” என்றார் ராமு.

கும்பகோணத்தில் பயிற்சி எடுக்கும்போதே, இவர்கள் இருவரும் நண்பர்கள். 2014-ம் ஆண்டிலும் தக்‌ஷின் சித்ராவில் தங்களது ஓவியக் கண்காட்சியை நடத்தியுள்ளனர். அவர்கள் வரையும் ஓவியங்களின் அழகைப் பாராட்டி வெளிநாட்டு மக்கள் அதை ஆர்வத்துடன் பார்த்தும், வாங்கியும் செல்கின்றனர். ஆனால் நம்முடைய பாரம்பரியத்தை பார்த்து ரசிக்கக் கூட நமக்கு நேரம் இருப்பதில்லை. வளரும் ஓவியக் கலைஞர்களுக்கு நல்ல அங்கீகாரத்தை உருவாக்கிக் கொடுக்கும் வாய்ப்பு நம்மிடமே உள்ளது.

ஓவியங்களின் தொகுப்பை காண படத்தை க்ளிக் செய்யவும்

vikatan

  • தொடங்கியவர்

இரண்டு சக்கரத்தில் 20 கிலோ மீட்டர் தூரம் கார் ஓட்டிய சீனர்

ஜெர்மனியில் நடைபெற்ற கார் ரேஸில் சீனாவைச் சேர்ந்த யுப் ஹன் என்பவர் இரண்டு சக்கரத்தில் 20 கி.மீ தூரம் கார் ஓட்டி சாதனை படைத்துள்ளார். அதாவது இடது புறத்தில் உள்ள இரண்டு சக்கரங்களை மட்டும் பயன்படுத்தி இவர் கார் ஓட்டியுள்ளார். மினி கூப்பர் காரில் 46 நிமிடங்களில்  20.8 கி.மீ தூரம் கடந்து சாதனை செய்துள்ளார். சராசரியாக 27 கி.மீ வேகத்தில் இவர் பயணித்துள்ளார். இதில் 73 வளைவுகள் அடக்கம்.அந்த வீடியோ கீழே.
 

 

 

vikatan

  • தொடங்கியவர்

இவரும் ஒரு நாயன்மாரே! -  கிருபானந்த வாரியார் நினைவு தினப் பகிர்வு !

 

 

 

அழகு தமிழால் அழகன் முருகனின் புகழ் பாடியவர்; அமுதனைய தம்முடைய சொற்பொழிவுகளால் மக்களிடையே பக்திப் பயிர் வளர்த்தவர்; தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர்; மிகச் சிறந்த முருக பக்தர்; உலகத் தமிழர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.

இளமைப் பருவம்

வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்த காங்கேயநல்லூர் கிராமத்தில் செங்குந்த வீர சைவ மரபில் வந்த மல்லையதாசர் - கனகவல்லி தம்பதியருக்கு 1906 - ம் ஆண்டு ஆகஸ்ட் 25 - ம் தேதி நான்காவது குழந்தையாக, இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 4:37 மணி அளவில், சுக்லபட்சம், சஷ்டி திதி, சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி கடக லக்கினத்தில் பிறந்தவர் கிருபானந்த வாரியார். இவர் பெயருக்கு அழகான ஒரு காரணம் உண்டு.

‘கிருபை’ என்றால் கருணை; ‘ஆனந்தம்’ என்றால் இன்பம்; ‘வாரி’ என்றால் பெருங்கடல் என்று பொருள். இவர் பெயருக்கேற்ப கருணையே உருவாக, பிறரைத் தன் சொற்பொழிவால் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பெருங்கடலாகத் திகழ்ந்தார். தமிழ் இலக்கியத்திலும் ஆன்மிகத்திலும் தனித் திறன் பெற்றிருந்தார். எட்டு வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றவர். தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் மனப்பாடம் செய்திருந்தார்.

p140_19351.jpg

சொற்பொழிவாளராக

தந்தை மல்லையதாசர் இசை மற்றும் புராணச் சொற்பொழிவாற்றி வந்தார். ஒருநாள் அவருக்கு சொற்பொழிவு நிகழ்ச்சிக்குப் போக முடியாத நிலை. தந்தைக்குப் பதிலாக வாரியார் சென்றார். சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், ‘மல்லையதாசர் சொற்பொழிவுக்கு வருவதாக ஒப்புக்கொண்டு, தான் வராமல் இளம் வயது மகனை அனுப்பிவைத்திருக்கிறாரே’ என்று வருத்தப்பட்டனர். ஆனால், அன்று முதன்முதலாக வாரியார் செய்த சொற்பொழிவைக் கேட்ட பிறகு அசந்துபோய்விட்டார்கள். ‘இந்த இளம் வயதில் இவ்வளவு அனுபவமா?’ என நெகிழ்ந்து போனார்கள். பதினெட்டு வயதில் சொற்பொழிவைத் தொடங்கிய வாரியாரின் பேச்சு, எளிமையான உரைநடையில் இருந்ததால், அதைப் படிப்பறிவே இல்லாதவர்கள்கூட எளிமையாகப் புரிந்துகொண்டார்கள். சிறுபிள்ளைகள்கூட இவருடைய சொற்பொழிவைக் கேட்க விரும்புவார்கள். எளிமையாக, அதிகமான நகைச்சுவை கலந்திருக்கும் சொற்பொழிவு.

கலையும் கூட்டத்தையும் தடுத்து நிறுத்தும் திறமை

வாரியார் சொற்பொழிவில் கூட்டம் கலைவது என்பது வெகு குறைவே. அப்படியே கலையும் கூட்டத்தையும் தக்கவைக்கும் கலையையும் அவர் கற்றிருந்தார். ஒருமுறை, ஓர் ஊரில் சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தார். அவர் பேசிக்கொண்டிருந்தபோதே ஒவ்வொருவராக எழுந்து போய்க்கொண்டிருந்தனர்.

அப்போது வாரியார் சொன்னார்... ''ராமாயணத்தில் அனுமனை ‘சொல்லின் செல்வர்’ என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.'' போய்க் கொண்டிருந்தவர்கள் யாரைச் சொல்லப் போகிறார் என்று தெரிந்துகொள்ளும் ஆவலுடன் தயங்கி நின்றனர். வாரியார், ''நான் பல நல்ல விஷயங்களைச் சொல்லினும், அதைக் கேட்காமல் செல்பவரைத்தான் சொல்கிறேன்'' என்றார். எழுந்து சென்றவர்கள் மீண்டும் அவர்கள் இடத்தில் வந்து அமர்ந்தனர்.

p91a_19216.jpg

 

பெண்களை மதித்தவர்

வாரியார் சொற்பொழிவில் கூட்டத்தில் பெண்கள் எண்ணிக்கைக்கும் குறைவு இருக்காது. பெண்களைக் குறைவாகப் பேசுவதை வாரியார் விரும்ப மாட்டார். பெண்களை அடிமையாக நினைக்கும் ஆண்களை எச்சரிக்கும்விதமாக “மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக் கூடாது. மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது” என்று அவர் சொல்வதுண்டு. ‘குழந்தைகளுக்குப் தாயின் பெயரை முதலெழுத்தாக (இன்ஷியலாக) போட வேண்டும்’ என்று பெண்களை முன்னிறுத்தும் கருத்தை முதன்முதலாகச் சொன்னவரும் கிருபானந்த வாரியார்தான். பல சொற்பொழிவுகளில் மனைவியை கணவன் மதிப்புடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவார். ‘மனைவியிடம் மென்மையாகப் பேச வேண்டும். நான்கு பேர் இருக்கும்போது மனைவியைச் சத்தம் போட்டுக் கூப்பிடக் கூடாது. அப்படிக் கூப்பிட்டால் மனைவிக்குக் கூச்சமாக இருக்கும்’ என்பதையெல்லாம் விளக்குவார்.

சைவ சித்தாந்தம்

சுவாமிகள் சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர். அபரிதமான நினைவாற்றலும், நாவன்மையும் பெற்றவர். அவர் கூறும் நுட்பங்களைக் கேட்டு, கல்வியில் சிறந்த புலவர்களும் தங்களுக்கு இது தெரியாதே என்று வியந்து பாராட்டியிருக்கிறார்கள். “வாரியார் வாக்கு, கங்கை நதியின் பிரவாகம்போலப் பெருக்கெடுத்தோடுகிறது; மிக உயர்ந்த முத்துக்கள் அவர் வாக்கிலிருந்து உதிர்கின்றன’’ என்று அறிஞர்கள் புகழ்ந்தார்கள். இவருடைய இசை ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்றத்தினர் வெள்ளி விழாவின்போது அவருக்கு, ‘இசைப் பேரறிஞர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தனர்.

kiruba_vc1_19317.jpg


சமய சர்ச்சையைத் தடுத்தவர்

ஒருமுறை திருப்பரங்குன்றத்தில் வாரியார் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து நின்று, ‘‘சுவாமி! இந்தத் திருப்பரங்குன்றத்தை ‘சிக்கந்தர் மலை’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்துத் தங்களின் கருத்து என்ன?’’ என்று கேட்டார். 

அதற்கு வாரியார், “இதில் என்ன தவறு இருக்கிறது. அவர்கள் சிக்கந்தர் மலை என்று பெயர் வைத்தால் வைத்துக்கொள்ளட்டுமே” என்றார். அனைவரும் “அது எவ்வாறு பொருந்தும்? என்ன சுவாமி தாங்களே இவ்வாறு கூறினால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்பட்டு சமயச் சண்டையாக இது மாறிவிடாதா?” என்று கேட்டனர்.

அதற்கு வாரியார், “முருகனின் தந்தையார் பெயர் என்ன? சிவபெருமான். முருகனுக்கு வழங்கும் வேறு பெயர் என்ன? கந்தன். இதனைத்தான் சி.கந்தன், ‘சிக்கந்தர்’ என்று குறிப்பிட்டு ‘சிக்கந்தர் மலை’ என்று கூற முற்படுகின்றனர். இதில் தவறில்லை” என்று கூற, கூட்டத்தினர் ஆராவாரித்து மகிழ்ந்தனர். யாரும் எதிர்பார்க்காத இந்த விடை, மக்களைச் சிந்திக்கச் செய்தது. இறைவன் ஒருவரே என்ற எண்ணத்தையும் அவர்களின் உள்ளத்தில் விதைத்தது. இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கு மாற்று மதத்தவர்களும் ரசிகர்கள்தான். அதேபோல் மாற்று மதத்தவர் கருத்தாக இருந்தாலும், சிறப்பானதை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார் என்பதும் உண்மை.

p139_19035.jpg


வேலூரில் உரை நிகழ்த்த வாரியார் வந்து இருந்தார். அப்போது திராவிடர் கழகத்தினர் ‘கிருபானந்த `லாரி’ வருகிறது’ என்று கிண்டல் அடித்துத் தட்டிவைத்திருந்தார்கள். தற்செயலாக வேறு ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த தந்தை பெரியார், அவர் தங்கியிருந்த வீட்டுச் ஜன்னல் வழியே வாரியாரின் விரிவுரையைக் கேட்க நேர்ந்தது. “வாரியாரும் நம்மைப்போல தமிழ் வளர்க்கும் முயற்சியிலும், சமுதாயத்தை மேம்படுத்தவுமே பாடுபடுகிறார். அவரைக் கேலி செய்வதா? உடனே, தட்டியையெல்லாம் அகற்றுங்கள்!” என்று தன் தொண்டர்களிடம் கடுமையாக உத்தரவு போட்டார் பெரியார்.

எழுத்தாளராக

வாரியார் இலக்கியம் மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் மட்டுமல்லாமல் எழுதுவதிலும் சிறப்பு பெற்று விளங்கினார். சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்துகொள்ளும்படியாக 500 - க்கும் அதிகமான ஆன்மிகக் கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை அனைத்தும் இலக்கியத் தரம் வாய்ந்தவை; தெளிவான நடையில் அமைந்தவை. 

p20b_18138.jpg

 

எம்.ஜி.ஆருக்கு வாரியார் கொடுத்த பட்டம்!

திரைப்பட நடிகராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் இருந்த எம்.ஜி.ஆருக்குப் ‘பொன்மனச் செம்மல்’ என்ற பட்டத்தை அளித்தார் வாரியார். எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அனைவராலும் அதிகமாக பயன்படுத்தப்பட்ட பட்டப் பெயர் இதுதான். வாரியார் எழுத்துத் துறையில் மட்டும் அல்லாமல், தமிழ்த் திரைப்படத் துறையிலும் தன்னைச் சேர்த்துக்கொண்டார். தியாகராஜ பாகவதர் நடித்த ‘சிவகவி’ படத்துக்கு வசனங்கள் எழுதினார். தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் வேண்டுகோளுக்கேற்ப ‘துணைவன்’, ‘திருவருள்’, ‘தெய்வம்’, போன்ற சில தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்தார்.

p139b_19497.jpg p139b.m_19267.jpg

இறைவழிபாடும் சேவையும்

வாரியார், வாழ்நாள் முழுவதும் கோயில், பூஜை, சொற்பொழிவு என ஆன்மிக வழியில் சரியாகச் சென்றுகொண்டிருந்தார். ஒருநாள்கூட முருகனுக்குப் பூஜை செய்யாமல் இருந்ததில்லை. இவரின் மூச்சுக் காற்றுகூட‘முருகா! முருகா!!’ என்றுதான் இருந்தது. வயலூர் முருகன் மீது அவருக்குத் தனி ஈடுபாடு. “வயலூர் எம்பெருமான்” என்று கூறித்தான் அவர் தன் சொற்பொழிவைத் துவங்குவது வழக்கம். ஏராளமான கோயில்களுக்குத் திருப்பணி செய்து கொடுத்த பெருமையும் இவருக்கு உண்டு. இவர் திருப்பணி செய்ய உதவி புரிந்த கோயில்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை.

முருகன் திருவடியில்

உள்நாட்டில் மட்டுமின்றி, நேபாளம், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, லண்டன், சுவிட்சர்லாந்து எனப் பல நாடுகளில் சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருக்கிறார். இதற்காகப் பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவற்றில் கலைமாமணி, திருப்புகழ்ஜோதி, பிரவசன சாம்ராட், இசைப்பேரரசர், அருள்மொழி அரசு போன்றவற்றைக் குறிப்பிடலாம். வாரியார், 1993-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் லண்டன் நகருக்குச் சொற்பொழிவாற்றச் சென்றார். அங்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுக்கொண்டு, நவம்பர் மாதம் 6-ம் தேதி லண்டனிலிருந்து திரும்பினார். 7-ம் தேதி அதிகாலை மும்பை வந்து சேர்ந்தார். அங்கிருந்து காலை 6 மணிக்கு சென்னைக்கு விமானத்தில் கிளம்பினார். சென்னை வருவதற்கு முன்பாகவே அவர் உயிர் இறைவனிடம் சென்று சேர்ந்துவிட்டிருந்தது. நவம்பர் 8-ம் தேதி அவர் சமாதி நிலையடைந்தார்.

“ஆன்மீக தமிழ்ப்பழம், அனைத்து நாட்டுத் தமிழர்களையும் கவலைக்குள்ளாக்கி இதோ தருவில் இருந்து உதிர்ந்துவிட்டது. அந்த சிவந்த மேனியில் சினம் அரும்பிப் பார்த்ததில்லை. எதனையும் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ளும் இனிய இயல்புக்குச் சொந்தக்காரரான வாரியார், ஆன்மிகத் தமிழ்ப் பழமாக விளங்கி, என்றும் அழியாத புகழை நிலைநாட்டிவிட்டு, இயற்கைத் தாயின் மடியில் விழுந்துவிட்டார்” என்றார் கருணாநிதி. வாரியார் இறந்தபோது, ‘தமிழ்ப் பெருங்கடல்’ என்று நாத்திகரான கலைஞர் கருணாநிதியே போற்றினார்.

p139a_19572.jpg


ஜெயலலிதா வெளியிட்ட அனுதாபச் செய்தியில், “முருகப்பெருமானின் பெருமைகளைப் பரப்புவதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு நம்மிடையே வாழ்ந்து வந்த வாரியார் சுவாமிகள் அவர்களின் மறைவு ஆன்மிகத் துறைக்கு மட்டுமின்றி தமிழ் மொழிக்கும் தமிழ் இசைக்கும் ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு” என்று குறிப்பிட்டார். இவர்களைப்போல் அரசியல் தலைவர்கள், அனைத்து சமயப் பெரியோர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் இவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று குறிப்பிட்டார்கள்.

காங்கேயநல்லூரில் அவர் வாழ்ந்த வீடு இன்று நினைவு இல்லமாக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அரசு இவருடைய உருவம் பொறித்த தபால் தலையை 2006 - ம் ஆண்டில் வெளியிட்டு சிறப்பு செய்திருக்கிறது.

p78_19250.jpg


64-வது நாயன்மார்

நாயன்மார்கள், தினம் மூன்று வேளை கோயிலுக்குப் போவார்கள். ஆனால், சிவபெருமானைப் பார்த்து, ‘பொன்னைக் கொடு; பொருளைக் கொடு, எனக்கு செல்வத்தைக் கொடு, மக்களைக் கொடு, வழக்கில் வெற்றியடைய வேண்டும், பதவி உயர்வு வேண்டும்’ என்று ஒருநாளும் கேட்க மாட்டார்கள். நாயன்மார்கள் ஆண்டவனிடத்திலே இதுவரை ஒன்றையும் கேட்டதில்லை. வாரியாரும் நாயன்மார்களைப்போல் இறைவனிடம் எதையும் வேண்டாத பெரியாராகவேதான் வாழ்ந்தார். அந்த வகையில் வாரியார் சுவாமிகளை `64 - வது நாயன்மார்’ என்று சொல்வது மிகவும் பொருத்தம் தானே!

மனித வாழ்க்கையில் பிற்காலத்திலும் நினைத்துப் போற்றக்கூடியவர்களாக வாழ்பவர்கள் சிலரே. அந்த மிகச் சிலருள் திருமுருக கிருபானந்த வாரியாரும் ஒருவர் என்பதை நாமும் நினைவில்கொள்வோம்.

vikatan

  • தொடங்கியவர்

14991189_1177836375598388_75433423054213

உயரமான அழகி, தமிழின் முன்னணி நடிகை..
பலபேரின் கனவுக்கன்னி நடிகை அனுஷ்காவின் பிறந்தநாள்
Happy Birthday Anushka Shetty

இஞ்சி இடுப்பழகியும், 400 கோடி ரகசியமும்! #HappyBirthdayAnushkaShetty

அனுஷ்கா

ஸ்வீட்டியின் குழந்தை முதல் இன்று வரையிலான ஃபோட்டோ ஆல்பத்தை காண க்ளிக் செய்க

அனுஷ்கா!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பெயர். தவறியும் விடக்கூடாத பெயர். அம்மன் வேடத்தில் இருந்து அம்மா வேடம் வரை எதை ஏற்றாலும், அதை நம்ப வைக்கும் தோற்றமும், நடிப்பும் அனுஷ்கா ஸ்பெஷல்.

சினிமாவுக்காக உடல் எடை ஏற்றிய நடிகர்களை தெரியும். நடிகையை தெரியுமா? இஞ்சி இடுப்பழகி படத்துக்காக 17 கிலோ எடை ஏற்றினார் அனுஷ்கா. ஏன் என்ற கேள்விக்கு, அவர் சொன்ன பதில்தான் டாப். “ஃபிகர்தான் ஒரு பெண்ணுக்கு அழகு என நம்புகிறார்கள் இந்தக் காலத்து பெண்கள். ஆரோக்கியமாக இருப்பதுதான் முக்கியமே தவிர, ஸ்ட்ரக்சர் இல்லை என சொல்ல விரும்பினேன்” . அதுதான் அனுஷ்கா. கமர்ஷியல் விஷயங்களை எல்லாம் தாண்டி ஒரு நடிகை சில மாத இடைவெளியில் எடை ஏற்றி இறக்குவதெல்லாம் ரிஸ்க். ஆனால், ஸ்வீட்டிக்கு அந்த பயமும் இல்லை.

“She knows how to carry herself" என்பார்கள். அனுஷ்காவுக்கு எந்த இடத்தில், எந்த உடையில் எப்படி இருக்க வேண்டும் என்பது நன்றாக தெரியும். 

lay%2010_13579.jpg

படப்பிடிப்பில் அனுஷ்காவை பார்த்தவர்கள் வாய்பிளப்பது அவர் அழகை பார்த்து இல்லை என்பதுதான் நிஜம். காலை 9 மணிக்கு மேக்கப் முடிந்து கேரவானை விட்டு இறங்கினால், மீண்டும் மதிய உணவு வரை ஸ்பாட்டில் தான் இருப்பார். அவருக்கு, ஷாட் இருக்கிறதோ இல்லையோ. ஸ்பாட்டில் தான் இருப்பார்.

அதிகம் கிசுகிசுக்களில் சிக்காத நடிகை அனுஷ்கா. கோபிசந்துடன் கெமிஸ்ட்ரி பத்திக்க, நிஜத்திலும் நல்ல ஜோடி என்றார்கள். இருவரும் மறுத்ததும் மங்கியது அந்தச் செய்தி. அதன் பின் பெரிதாக எந்த கிசுகிசுக்களிலும் சிக்கவில்லை அனுஷ்கா.

அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, ருத்ரமாதேவி உட்பட பல பெண்களை மையமாக கொண்ட பல படங்களில் நடித்தவர் அனுஷ்கா. ஏறத்தாழ 400 கோடி ரூபாய் இந்தப் படங்கள் மூலம் வசூல் ஆனது. அந்த வகையில் ’பணக்கார’ நடிகை என்றால் அது அனுஷ்காதான்.

lay%2040_13175.jpg

 

அனுஷ்கா ஒரு செம பைக் டிரைவர். ஆரம்பக்கால தெலுங்கு படங்களில் அதை அதிகம் காட்சிப்படுத்தினார்கள். இப்போது பைக்குக்கு ஓய்வு தந்துவிட்டார் அனுஷ்கா.

ஸ்வீட்டியின் குழந்தை முதல் இன்று வரையிலான ஃபோட்டோ ஆல்பத்தை பார்த்ததில் ஒன்று புரிந்தது. அனுஷ்காவின் அழகுக்கு வயதே கிடையாது. ஏனெனில் ஸ்வீட்டியின் அழகு அகம் சார்ந்தது. லவ் யூ ஸ்வீட்டி!

 

 

 

 

vikatan

  • தொடங்கியவர்

கல்யாண பத்திரிகைலயும் கிரிக்கெட்டுடன் களமிறங்கிய யுவராஜ்

581816734_21456.jpg

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நடிகை ஹசீல் கீச் திருமணம் 30-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் இவர்களது திருமண அழைப்பிதழ்களை பலவித டிசைன்களில் அடித்துள்ளனர். இதில் இரண்டு அழைப்பிதழ்களை கிரிக்கெட் டிசைனிலேயே அடித்துள்ளனர். குறிப்பாக இதில் யுவராஜ், ஹசீல் ப்ரீமியர் லீக் என்று குறிப்பிட்டு உருவாக்கியுள்ளனர். ஹ்யூமருக்காக இப்படி உருவாக்கப்பட்டது என்கின்றனர் இதன் வடிவமைப்பாளர்கள். யுவராஜ், ஹசீலுக்கு இரண்டு முறைப்படி திருமணம் நடக்கிறது. அதன்படி, இந்துமுறைப்படியான திருமணம் கோவாவில் டிசம்பர்-2 ம் தேதி நடக்கிறது. மேலும், பிரம்மாண்ட வரவேற்பை டிச.,5-ம் தேதி நடத்துகிறார்களாம்.

  • தொடங்கியவர்

சீனா ஷாப்பிங் மாலில் கணவர்களுக்கான ஓய்வறை

சீனா ஷாப்பிங்மாலில் கணவர்களுக்கான ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது.

16110239_20374.jpg


பொதுவாக மனைவியுடன் துணி எடுக்கச் செல்வது ஷாப்பிங் செல்வது என்றாலே நம்ம ஊர் கணவர்கள் ஜர்க் ஆவார்கள். காரணம் யார் மணிக்கணக்கில் நிற்பது? என்றுதான். இந்த பிரச்னை உலகம் முழுவதுமே உள்ளது.  ஆனால், கணவர்களின் வேதனையை நன்கு உணர்ந்தது சீன நாட்டவர்கள்தான். சீனாவில் ஷாங்காயில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் கணவர்களுக்கான பிரத்யேக ஓய்வறையை அமைத்துள்ளனர். இதில் வார இதழ்கள், டி.வி.கள் என சகல வசதிகளும் உள்ளனவாம்.

vikatan

  • தொடங்கியவர்

‘புரட்சி’ என்ற வார்த்தையை வன்புணர்கிறோம்! நவம்பர் புரட்சி சிறப்புப் பகிர்வு!

November%20Revolution_11304.jpg

மீபகாலத்தில் அதிகம் வன்புணர்வு செய்யப்பட்ட வார்த்தைகளில் புரட்சியும் ஒன்று. புரட்சி என்ற பதத்தின் ஆழமான பொருளை புரிந்துகொள்ளாமலே, எதற்கெடுத்தாலும் புரட்சி என்ற சொல் இப்போது அதிகம் பயன்படுத்தப்படுகிறது... அடைமொழியாகச் சூட்டிக்கொள்ளப்படுகிறது. ஒரு சொல் எங்கு, எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதில்தான், அதன் சொல்லின் வலிமை அடங்கி இருக்கிறது. வரலாற்றை நம் காலத்திலிருந்து தொடங்கிப் படிக்கும் நாளைய தலைமுறை, ‘புரட்சி’ என்ற வார்த்தை எங்கெல்லாம், எந்தச் சூழலில் எல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று பார்க்கும்... ஆய்வு செய்யும். இறுதியில், இதற்கு இவ்வளவு மொன்னையான பொருளா என்று...? நம் சமகாலச் சுழலின் பின்னணியிலிருந்தே அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும். ஆம், சமகாலத் தலைமுறையின் பங்களிப்பு ஓர் உயிர்ப்பான சொல்லின் பொருளைக் கொன்றது அல்லது அதன் பொருளை மாற்றியது. நிச்சயம், இதை மகிழ்ச்சிகரமான ஒன்றாக வரலாறு பதிவுசெய்யாது. காகிதத்துக்கு உயிர் இருந்தால், நிச்சயம் நம் முகத்தில் காறி உமிழத்தான் செய்யும். புரட்சி என்ற வார்த்தை ஆழமான, அடர்த்தியான பொருளைக் கொண்டது. வரலாற்றில் அது பயன்படுத்தப்பட்டிருக்கும் இடங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே அந்தச் சொல்லின் அதிர்வு புரியும். அதன் பின்னால் மக்கள் விரோத அரசுகளை, மன்னர்களை நடுங்கவைத்த காட்சி விரியும். அதற்கு ஓர் உதாரணம் ரஷ்யாவில் நிகழ்ந்த நவம்பர் புரட்சி.

‘நவம்பர் புரட்சி!’

001_11476.jpgஎங்கும் பசி, பட்டினி... மக்கள் கொத்துக்கொத்தாகச் செத்துக்கொண்டிருக்கிறார்கள். ஜார் அரசர் இதைப் பற்றியெல்லாம் கவலைகொள்ளவில்லை. அவருக்கு அப்போதும் ரஷ்ய மக்கள்தொகையில் ஒரு சதவிகிதம்கூட இல்லாத பெருமுதலாளிகளின் நலன்தான் முக்கியமாக இருந்தது. ‘மக்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள், நமக்காகத்தானே மன்னர்... நம் நலன்களைக் காக்கத்தானே அவருக்கு அதிகாரங்கள்...? வாருங்கள், ஒன்றுகூடுவோம். அரசருக்கு நாம் படும் அவலங்களைப் புரியவைப்போம்’ என்று ஏறத்தாழ ஒரு லட்சம் ரஷ்ய குடிகள், கப்பான் என்ற கிறிஸ்தவ போதகர் தலைமையில், மன்னர் தங்கியிருந்த குளிர்கால அரண்மனையை நோக்கி அமைதியாக ஊர்வலம் போகிறார்கள். இதனால், மன்னர் அலெக்சாண்டர் நிக்கோலஸ் கோபம் தலைக்கேறியது. அவர் இவ்வாறாக யோசித்தார், “மன்னனுக்காகத்தானே மக்கள். மன்னன் சுகபோக வாழ்வுக்காகத்தானே அவர்கள். அடிமைகள் எப்படிக் கிளர்ந்தெழலாம்..?” என்று அமைதி ஊர்வலம் சென்றவர்கள் மீது வன்முறையை ஏவினார். துப்பாக்கியால் சுட்டார். ஆயிரக்கணக்கில் மக்கள் கொத்துக்கொத்தாக செத்து வீழ்ந்தார்கள். இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்ததால், வரலாற்றின் குருதி தோய்ந்த பக்கங்கள், இதை ‘ரத்த ஞாயிறு’ என்று பதிவுசெய்திருக்கிறது.

மக்கள் இதற்குப்பின் தன்னிச்சையாகக் கிளர்ந்தெழுந்தார்கள். ராணுவத்தின் ஒரு பகுதியும் மக்களுடன் இணைந்தது. மன்னர் வீழ்த்தப்பட்டார். ஆனால், ஆட்சியும் அதிகாரமும் கெரன்ஸி கையில் சென்றது. ஜார், மன்னராக இருந்து என்ன செய்தாரோ... அதையேதான் கெரன்ஸியும் செய்தார். மக்களின் அவலம் தொடரத்தான் செய்தது. அந்தச் சமயத்தில் சுவிட்ஸர்லாந்தில் தலைமறைவாக இருந்த லெனின் ரஷ்யா திரும்புகிறார்.

“தத்துவங்கள் மீது கட்டமைக்கப்படாத எந்தப் புரட்சியும் நல்விளைவுகளைத் தராது. அது, உள்ளீடற்ற ஆடையைப் போன்றது” என்று மக்களுக்குப் புரியவைக்கிறார் லெனின். மார்க்சியத்தை ரஷ்ய புரட்சியின் தத்துவமாக சுவீகரித்துக்கொண்டு, இப்போது கெரன்ஸிக்கு எதிராக மக்களைத் திரட்டுகிறார். அவருக்கு அது கடினமாக இருக்கவில்லை, லட்சக்கணக்கான மக்கள் லெனின் தலைமையின் கீழ் திரண்டார்கள். கிராமங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்த சோவியத்துக்களில் தங்களைப் பதிவுசெய்யத் தொடங்குகிறார்கள். ராணுவத்தின் பெரும் பகுதியும் லெனினின் அழைப்புக்காகக் காத்திருந்தது. நவம்பர் 7-ம் தேதி, லெனினின் போல்ஷ்விக் கட்சி, ஆட்சியைக் கைப்பற்றுகிறது. ஆட்சியைக் கைப்பற்றுகிறது என்று ஒற்றை வாக்கியத்தில் எழுதிவிட்டாலும்... ஆட்சி அவ்வளவு இலகுவாக கைமாறவில்லை... சொல்லப்போனால் நவம்பர் 7-ம் தேதிதான் புரட்சியே தொடங்குகிறது. ஏறத்தாழ 10 நாட்கள் போல்ஷ்விக் கட்சியும், எளிய விவசாய மற்றும் ஏழைத் தொழிலாளர்களும் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை எல்லாம் எதிர்த்துப் போராடினர். இது மட்டுமல்லாமல் உலகப் போர், அமெரிக்க தலையீடு வேறு என மக்கள் அதிகம் ரத்தம் சிந்தினர். அந்தக் குளிர்பிரதேசத்தில் எங்கும் குருதி... இப்படியாகத்தான் அங்கு புரட்சி வெடித்து, மக்கள் விரும்பிய ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

வன்புணர்வு செய்யப்பட்ட வார்த்தை!

002_11303.jpg

மூன்று பத்தியில் சுருங்கச் சொல்லியிருந்தாலும், ரஷ்ய புரட்சி என்ற பதத்தின் பின்னால் ரத்தம் தோய்ந்த வரலாறு இருக்கிறது. புரட்சி, அங்கு தத்துவத்தால் வழிநடத்தப்பட்டது. மக்கள் மாற்றத்துக்காக அந்தத் தத்துவத்தை உள்வாங்கி, தங்களை அதில் முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார்கள்; அதற்காக வலிகளைச் சுமந்தார்கள்; வென்றெடுத்தார்கள்.

இப்போது அப்படியே தமிழகத்தின் நிலைக்கு வாருங்கள். இங்கு எந்தச் சூழலில் எல்லாம் புரட்சி என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது என்று பாருங்கள். ஒரு வார்த்தையை நாம் எப்படிச் சிதைத்துக்கொண்டிருக்கிறோம் என்பது நன்கு புரியும். தத்துவங்கள் எந்தக் கடையில் கிடைக்கும் என்று கேட்பவர்கள் எல்லாம் புரட்சி அடைமொழியாகச் சூடிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்துக்காக, அதன் நலனுக்காக உண்மையில் எந்தப் பலனையும் எதிர்பாராமல் போராடிய ஜீவா, பெரியார், ம.பொ.சிவஞானம் எல்லாம் தனக்குத்தானே ‘புரட்சி’ என்ற அடைமொழியைச் சூட்டிக்கொள்ளவில்லை. இந்தத் தள்ளாத வயதிலும் காவிரிக்காவும், தாமிரபரணிக்காகவும் சிறை செல்லும் நல்லக்கண்ணு ‘புரட்சி’ என்ற பதத்தைத் தன் பெயருக்கு முன்னால் பயன்படுத்தவில்லை. ஹூம்... நம்மைநாமே நொந்துக்கொள்ள வேண்டியதுதான்...!

தம் சொந்த நலனுக்காக ‘புரட்சி’ என்ற பதத்தை மெல்லச் சிதைப்பவர்கள்... ஏதாவது செய்துகொண்டு போகட்டும். நாம் நம் பிள்ளைகளுக்கு இந்தியாவின், தமிழகத்தின் உண்மையான வீரம் செறிந்த புரட்சி, புரட்சியாளர்கள் வரலாற்றைச் சொல்வோம்...! அவர்கள் புரட்சிக்குத் தவறான பொருள் கொள்ளும் முன் குறைந்தபட்சம் அந்த வார்த்தையையாவது மீட்போம்...!

vikatan

  • தொடங்கியவர்

14962606_1279859082072879_16352610980743

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: நவம்பர் 08
 

article_1446785145-5.jpg1520 - டென்மார்க் படைகள் சுவீடனை முற்றுகையிட்டன. சுமார் 100 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1889 - மொன்டானா ஐக்கிய அமெரிக்காவின் 41வது மாநிலமாக இணைந்தது.

1895 - எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்.

1917 - ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியை அடுத்து லெனின், ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின் ஆகியோருக்கு முழு அதிகாரமும் தரப்பட்டது.

1923 - மியூனிக் நகரில் ஹிட்லர் தலைமையில் நாசிகள் ஜெர்மனிய அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

1938 - பாரிஸ் நகரில் ஜெர்மனிய தூதுவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் யூதர்களுக்கு எதிராக வன்முறைகள் கிளம்பின.

1939 - மியூனிக் நகரில் ஹிட்லரைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.

1942 - மேற்கு உக்ரேனின் தெர்னோப்பில் நகரில் நாசி ஜேர்மனியினர் 2,400 யூதர்களை பெல்செக் நகரில் இருந்த வதை முகாமுக்கு அனுப்பினர்.

1950 - கொரியப் போர்: ஐக்கிய அமெரிக்க வான்படையினர் வட கொரிய மிக் விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தினர்.

1965 - பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது.

1977 - கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மன்னன் இரண்டாம் பிலிப்பு என்பவனின் சமாதி மனோலிஸ் அண்ட்ரோனிக்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1987 - வடக்கு அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவ நினைவு நிகழ்வொன்றில் ஐரியக் குடியரசு இராணுவத்தினரின் குண்டு வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

2006 - வாகரை குண்டுத்தாக்குதல்: மட்டக்களப்பு வாகரையில் இலங்கை இராணுவத்தினர் ஏவிய பல்குழல் எறிகணை வீச்சுத் தாக்குதலில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2006 - பாகிஸ்தானில் தர்காய் என்ற இடத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ; விண்வெளியிலிருந்து வாக்குப்பதிவு

 

 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக  அந்நாட்டு மக்கள் தங்களின் வாக்களிக்குகளை பதிய துவங்கியுள்ளனர். அதேபோல், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் விண்வெளியில் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் விண்வெளி வீரர் ஷேன் கிம்ப்ரோவும் தனது வாக்கினை பதிவு செய்ததாக நாசா தெரிவித்துள்ளது. 

ஆனால் அவர் எந்த முறையில் வாக்கினை பதிவு செய்தார் என்று நாசா அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளி ஆராய்ச்சிக்காக இரு ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் இணைந்து கடந்த மாதம் 19 ஆம் திகதி கிம்ப்ரோ சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார்.

நான்கு மாதங்கள் அவர் விண்வெளியில் தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொள்கிறார். 

கடந்த 1997 ஆம் ஆண்டு விண்வெளி வீரர்கள் வாக்குபதிவு செய்யும் வகையில் அமெரிக்காவில் சட்டம் கொண்டு வரப்பட்டது. டேவிட் வால்ப் என்ற விண்வெளி வீரர் முதல் முறையாக தனது வாக்கினை விண்வெளியில் இருந்து பதிவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

NASA-ASTRO1.jpg

.virakesari.lk

  • தொடங்கியவர்
Miss Global Beauty Queen 2016
 

மிஸ் குளோபல் பியூட்டி குயின் 2016 (Miss Global Beauty Queen 2016) அழ­கு­ரா­ணி­யாக வியட்­நா­மிய அழ­கு­ரா­ணி­யான என்­குயென் தீ என்கொக் டுயென் தெரி­வு ­செய்­யப்­பட்­டுள்ளார்.

 

204982.jpg

 

20498ngoc-duyen-miss-1477325648.jpg

 

2049814633384_1134108010004334_117547945

 

தென் கொரி­யாவின் சியோல் நகரில் அண்­மையில் இப்­ போட்டி நடை­பெற்­றது. இப்­ போட்­டியில் 50 இற்கும் அதி­க­மான நாடு­களின் அழ­கு­ரா­ணிகள் பங்­கு­பற்­றினர்.

 

2049814717332_1255975637797489_770165550

 

இவர்­களில் என்­குயென் தீ என்கொக் டுயென் முத­லிடம் பெற்று மிஸ் குளோபல் பியூட்டி குயின் 2016 அழ­குராணியாக தெரி­வானார்.

 

2049814720494_1132622706819531_221962806

 

சர்­வ­தேச அழ­கு­ராணி போட்­டி­யொன்றில் வியட்­நா­முக்கு கிடைத்த முதல் பட் டம் இது­வாகும்.

 

20499vietnamese-beauty-queen9.jpg

 

இதற்­கு முன் கடந்த வருடம் ஜப்­பானில் நடை­பெற்ற மிஸ் இன்­டர்­நெ­ஷனல் போட்­டியில் வியட்நாமைச் சேர்ந்த துய் வான் 3 ஆம் இடம் பெற்றிருந்தார்.

 

20498_1.jpg

 
 
metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மருத்துவத் துறையின் மைல்கல் - உலக எக்ஸ்-ரே தினம் இன்று!

xray_14273.jpg

நவீன மருத்துவ முன்னேற்றத்துக்கு எக்ஸ் கதிர்களின் (X rays) கண்டுபிடிப்பு ஒரு முக்கிய திருப்புமுனை ஆகும். மருத்துவ வரலாற்றில், இந்த கண்டுபிடிப்பு ஒரு மைல்கல். விபத்து, எலும்பு முறிவு என்றால் மருத்துவர் பரிந்துரைக்கும் முதல் பரிசோதனை 'எக்ஸ்-ரே' தான். இதுதவிர, முழு உடல் பரிசோதனையில் நுரையீரல் பாதிப்பை கண்டறிய 'எக்ஸ்-ரே' பரிந்துரைக்கப்படும். இதனாலேயே, பெரும்பாலான மக்களிடையே மிகவும் பரிச்சயமான பரிசோதனையாக மாறிவிட்டது ‘எக்ஸ்-ரே’.

இன்றைய மருத்துவ உலகில் ‘எக்ஸ்-ரே’  பரிசோதனை கண்டுபிடிப்பானது, அதிகம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நோயின் தன்மையை அறிய பெரிதும் பயன்படக் கூடியதே ‘எக்ஸ்-ரே’ கதிரியக்க முறை. உடலின் உள்ளே ஊடுருவிச் செல்லும் இந்த கதிர்கள், பாதித்த பகுதியின் தன்மையினைப் துல்லியமாக படம்பிடித்துக் காட்டும். குறிப்பாக நமது உடலில் உள்ள எலும்புகளுக்கோ நரம்புகளுக்கோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கு இந்த பரிசோதனை உதவும். வயிற்றில் உள்ள கட்டிகள், சிறுநீரகக் கற்கள், பித்தப்பைக் கற்கள் கண்டறிய என பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளில் உதவுகிறது. புற்றுநோய்க்கான சிகிச்சையிலும் பெரிதும் பயன்படுகின்றன.  

மேலும் பெரிய கட்டடங்கள், இரும்புப் பாலங்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதைப் பார்த்துச் சரி செய்வதற்கும் என பல செயல்பாடுகளுக்கும் இக்கதிர்கள் பயன்படுகின்றன.


இத்தகைய பெருமை வாய்ந்த ‘எக்ஸ்-ரே’  கண்டுபிடித்த நாளின் நினைவாகவும், மருத்துவப் படிமவியலின் பயன்களை அறியச் செய்தவதற்காகவும் வருடந்தோறும் உலக ‘எக்ஸ்-ரே’ தினம் கடைபிடிக்கப்படுகிறது.

‘எக்ஸ்-ரே’  கண்டுபிடிப்பு


1895-ல், குறைந்த அழுத்தத்தில் உள்ள வாயுவின் ஊடாக மின்சாரத்தை செலுத்தினால் ஏற்படும் மாற்றங்கள் பற்றி ரான்ட்ஜென் ஆய்வு செய்தார். அதே ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, இருட்டறையில் தனது ஆய்வுகளை மேற்கொண்ட ரான்ட்ஜென், ‘பேரியம் பிளாட்டினோ சயனைடு’ எனும் வேதிப் பொருள் தடவப்பட்ட திரையை வைத்து ஆராய்ச்சி செய்தார். அப்போது இரண்டு மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு பென்சிலின் நிழல் ஒளிர்வதைக் கண்டார். உடனே பல்வேறு தடிமன்களில் பொருட்களை வைத்து அந்தக் கதிர்களை ஆராய்ச்சி செய்து, ஒவ்வொரு தடிமனும் ஒவ்வொரு நிழலை (பிம்பத்தை) உருவாக்குகின்றன என்பதைக் கண்டறிந்தார். 'எக்ஸ்-ரே' கண்டு பிடிக்கப்பட்ட தினமான நவம்பர் 8-ம் தேதி 'எக்ஸ்-ரே' தினமாகக் கொண்டாடப்படுகிறது.


பெயர் வந்த கதை
இதற்கு எக்ஸ்-ரே என ரான்ட்ஜென் பெயரிட்ட காரணம் விசித்திரமானது. பொதுவாக, கணிதத்தில் தெரியாத ஒரு எண்ணை ‘X’ என வைத்துகொள்வது போல, இந்தக் கதிர்களின் பண்புகளை உடனடியாக அறிந்திராத நிலையில் ரான்ட்ஜென் ‘எக்ஸ்-ரே’ எனப் பெயரிட்டார். எல்லா ஒளிக்கதிர்களும் போட்டோ தகடுகளில் படியும் தன்மை கொண்டுள்ளதால், இவர் கண்டுபிடித்த கதிர்களையும் தகடுகளில் பதியவைக்க ஆசைப்பட்டார்.  அதற்காக, இக்கதிர்களை போட்டோ தகட்டில் வைத்திருந்த மனைவியின் கை மீது செலுத்திப் பார்த்தார். செலுத்தியபின் அந்தத் தகட்டிலுள்ள கருவியைப் பார்த்தார். அதில், அவரது மனைவியின் கை எலும்புகளும் அவர் அணிந்திருந்த மோதிரமும் தெரிந்தன.  ஆக மனித உடல்களின் மெல்லிய திசுக்களின் வழியாக ஊடுருவிச் செல்லும் இக்கதிர்கள், எலும்பு போன்ற கடினமான பொருள்களின் வழியாக ஊடுருவிச் செல்லாது என்பதை கண்டறிந்தார்.
காப்புரிமை வாங்காத ரான்ட்ஜென்
தனது அரிய கண்டுபிடிப்பால் மருத்துவ உலகின் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ரான்ட்ஜென், தனது கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை கோரவில்லை. ‘எக்ஸ்-ரே ஏழை மக்களுக்குப் பயன்பட வேண்டும். அதற்கு காப்புரிமை தேவையில்லை. அதை ரான்ட்ஜென் கதிர்கள் என்று அழைக்க வேண்டிய அவசியமும் இல்லை’ என பெருந்தன்மை காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

 

l_shutterstock_doctor-x-ray_1200x675_151

‘எக்ஸ்-ரே’ பற்றிய தகவல்கள்


* முதன் முதலாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டவர், ரான்ட்ஜெனின் மனைவி.
* ரான்ட்ஜெனுக்கு இந்தக் கண்டுபிடிப்புக்காக 1901-ம் ஆண்டில்  உலகின் இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
* இக்கதிர் அடிக்கடி ஊடுருவினால் உடலுக்குப் பெரும் பாதிப்பு உண்டாகும். ரான்ட்ஜென் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். ஆனால், 'எக்ஸ்-ரே' கதிர்வீச்சு அதற்கு காரணம் அல்ல. மிகவும் பாதுகாப்பான முறையில்தான் அவர் அந்த ஆய்வை மேற்கொண்டார். ஆனால், மேரி கியூரி காரீயத் தடுப்புகள் பயன்படுத்தாததால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
* எக்ஸ்-ரே மிகவும் அவசியப்பட்டால் மட்டுமே எடுக்க வேண்டும். அதிலும் கர்ப்பிணிகளுக்கு முதல் ஏழு வாரங்களில் ‘எக்ஸ்-ரே’ எடுக்கவே கூடாது.
* குழந்தைகளுக்கு முதல் மூன்று மாதங்களில், தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர, ‘எக்ஸ்-ரே’ பரிசோதனையை மேற்கொள்ளக்கூடாது.

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.