Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

15000205_1182253151823377_75742832907621

ஹொலிவூட்டின் காதல் காவியம் டைட்டானிக் ஜக்கின் அதாவது Titanic நாயகன் லியர்னாடொ டீ காப்ரியோவின் பிறந்த நாள்.
Happy Birthday Leonardo DiCaprio
தொடர்ந்தும் சிறப்பாக நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருகின்ற லியர்னாடொவுக்கு மிக நீண்ட போராட்டம், கடுமையான முயற்சிக்குப் பிறகு இந்த வருடம் திரைப்படத்துக்காக ஒஸ்கார் விருது கிடைத்தது.

நம்ம 'ஜாக்'க்குக்கு பர்த்டே! #HBDleonardoDiCaprio

லியோ

சில படங்கள்தான் தலைமுறைகள் கடந்தும்,  தமிழ் ரசிகர்களின் மனதில் டெலீட் செய்ய முடியாத அந்தஸ்தை பெறும். மாற்று மொழி படங்கள் என்றால் அது இன்னும் கஷ்டம். அப்படியொரு ஹாலிவுட் படம்தான் டைட்டானிக். அழகு, ரொமாண்ட்டிக் என்பதையெல்லாம் தாண்டி ரோஸம்மா வின்ஸ்லெட்டை விட , ஜாக் பையன் லியோனார்டோ டிகாப்ரியோவுக்கு ஸ்பெஷல் இடம் தந்தவன் தமிழ் ரசிகன்.

லியோக்கு இன்று 41வது பிறந்த நாள். காத்திருந்து காத்திருந்து இந்த ஆண்டுதான் ஆஸ்கார் பொம்மை,  லியோவின் கைரேகையை  ஸ்கேன் செய்திருக்கிறது. 

‘காட்டு எருமையின் ஈரல்’ போலவே ஒரு டூப்ளிகேட்டைத் தயாரித்து வைத்திருந்தது ‘ரெவனென்ட்' படப்பிடிப்புக் குழு. லியோ அதைக் கடித்துத் தின்பதுபோல காட்சி. கசப்பு இருக்கக்கூடாது என இனிப்பாக போலி ஈரல் ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தனர். அதை வாங்கிப் பார்த்த லியோ, `இது வேண்டாம்' என மறுத்துவிட்டார். ‘எனக்கு நிஜ லிவர் கிடைக்குமா?’ கேட்டதும் அத்தனை பேருக்கும் அதிர்ச்சி. காரணம், லியோ சுத்தமான வெஜ்ஜி; அடுத்து, அதை அசைவம் சாப்பிடுபவரால்கூட முகர்ந்துபார்க்க முடியாது. 

‘எனக்கு நிஜ லிவர்தான் வேண்டும். ரெடி பண்ணுங்க’ என உறுதியாகச் சொல்லிவிட, இரண்டொரு நாட்களில் படப்பிடிப்புக் குழு தயார்செய்து தந்தது. மூச்சைப் பிடித்துக்கொண்டு அந்த ரத்தம் சொட்டும் துர்நாற்றம் அடிக்கும் காட்டு எருமையின் ஈரலை, மூக்குக்கு அருகே கொண்டுசெல்ல கொடூரமாக குமட்டுகிறது. மீண்டும் மீண்டும் எனப் பலமுறை அந்தக் காட்சிக்காக மெனக்கெடுகிறார். சரியாக வரவில்லை. -40 டிகிரி குளிரில் நடுங்கியபடி இப்படி ஒரு விஷயத்தைச் செய்யவேண்டிய அவசியம் லியோனார்டோவுக்கு இல்லவே இல்லை. பாப்புலாரிட்டி கோபுரத்தின் மொட்டைமாடியில் நிற்கும் மிஸ்டர் ஹாலிவுட் அவர். ஆனால், `எத்தனை முறையானாலும் செத்தேபோனாலும் செய்தே தீருவேன்' என அந்த ரத்தம் வழியும் பச்சை ஈரலைக் கடித்துத் தின்ன ஆரம்பிக்கிறார். அதுதான் லியோ.

unnamed_23322.jpg

வெற்றி எப்போதும், யாருக்கும் எளிதில் கிடைக்காதுதான். லியோவுக்கு எக்ஸ்ட்ரா கஷ்டத்தை தந்துதான் வெற்றி அணைத்தது. 

பார்ன் வித் சில்வர் ஸ்பூன் இல்லை. அரிவாளும், கையடக்க துப்பாக்கிகளும்தான் லியோவின் குழந்தை காலம். பிறந்த இடமே ரவுடிகளின் கூடாரம். தெருவுக்கு தெரு விபச்சாரம். பள்ளிகளில் மாணவர்கள் என்ற பெயரில் இருந்த எல்லோருமே சைல்ட் அக்யூஸ்டுகள். நினைத்தால் வாழ்க்கையை தொலைக்க ஒரு சில நொடிகளே போதுமானதாக இருந்தது லியோவுக்கு. ஆனால், அவரது ஆசை, எண்ணம் எல்லாமே கலையாக இருந்ததுதான் ஆச்சர்யம். "சயின்ஸ் வேணாம்மா.. மேக்கப் போட்டுக்கிறேன்" என்ற லியோவை அவரது அம்மா அடிக்கவில்லை; அணைத்தார். அவரே ஆடிஷன்களுக்கு அழைத்துச் சென்றார். அம்மாவின் ஆசியை பெற்றறவன் தோற்க முடியுமா?

லியோவின் ஆஸ்தான நடிகர் ராபர்ட் டிநீரோ. அவரேதான் தி பாய்ஸ் லைஃப் படத்துக்காக லியோவை தேர்ந்தெடுத்தவர். அன்றிலிருந்தே லியோவின் அர்ப்பணிப்பு பயணம் தொடங்கியது. எந்த ரோலோ, எந்த படமோ.. அதில் லியோவின் பங்களிப்பும், ஆர்வமும் 100%க்கு குறைந்தது கிடையாது.

1996-ம் ஆண்டில் வெளியான ‘ரோமியோ + ஜூலியட்’ அவரை சாக்லேட் ஹீரோவாக, இளசுகளின் டார்லிங்காக மாற்றியது. `டைட்டானிக்' அவர் மேல் பித்துப்பிடிக்கவைத்தது. `டைட்டானிக்'குக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை என்றதும், ‘ஓட்டுக்களை ஒழுங்கா எண்ணுங்கடா’ என ஆஸ்கர் கமிட்டிக்கு  இமெயில் அனுப்பி தெறிக்கவிட்டனர் அவரது ரசிகர்கள்.

2002-ம் ஆண்டில் `கேங்ஸ் ஆஃப் நியூயார்க்', கொஞ்சம் வளர்ந்த வேறு ஒரு லியோவை அறிமுகப்படுத்தியது. 

2004-ம் ஆண்டில் வெளியான `ஏவியேட்டர்' மெச்சூர்டு நடிகனாக நிலைநிறுத்தியது. வயது ஏற ஏற, சவாலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார். புகழின் உச்சியில் இருக்கும்போதே ‘ஜாங்கோ அன்செயின்ட்’ படத்தில் கொடூரமான கொலைகார ஸ்மைலிங் வில்லனாக நடிப்பதற்கு எல்லாம் தனி கெத்து வேண்டும்.

ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு வயதிலும் அதற்கேயுரிய கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து மிரட்டியிருக்கிறார். எல்லா ஹாலிவுட் நடிகர்களுக்கும் 40 வயதுக்கு மேல்தான் அதிரிபுதிரி படங்கள் அமைந்திருக்கிகின்றன. அந்த ஹிஸ்டரிபடி பார்த்தால், இனிதான் லியோவின் பெஸ்ட் வரவிருக்கிறது. அந்த பெஸ்ட்டை எப்படியும் பெட்டராக செய்வார். 

வாழ்த்துகள் லியோ!

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இணையத்தைக் கலக்கும் கிராமத்து செஃப்!

 

126p1.jpg

`உப்பு தேவையான அளவு, கடுகு தேவையான அளவு' என நாம் வழக்கமாக பார்க்கும் சமையல் நிகழ்ச்சி அல்ல இது! எந்தவித அரிதாரமும் இல்லாமல் அருவிப்பாதையில் நண்டுக் குழம்பு, தோப்புக்குள் தலைக்கறிக் குழம்பு என கிராமத்து சமையலைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் அறுபது வயது ஆறுமுகம். மெலிந்த தேகம் நரைத்த முடி என நம் கிராமத்துச் சொந்தங்களை நினைவுபடுத்தும் ஆறுமுகத்தின் வீடியோவுக்கு இப்போது ஏகப்பட்ட லைக்ஸ்! ஒவ்வொரு வீடியோவையும் குறைந்த பட்சம் மூணு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்திருக்கிறார்கள். `Village food factory' என இவர் மகன் கோபிநாத் நடத்தும் யூடியூப் சேனல்தான் இப்போது இணையத்தின் ஹாட் டாபிக். திருப்பூரில் இருந்தவர்களுடன் ஒரு பேட்டி...

``யார் நீங்க... எப்போதிருந்து இப்படி ஆரம்பிச்சீங்க?''

``எனக்கு வயசு அறுபது ஆயிடுச்சுப்பா. சொந்த ஊரு போடிநாயக்கனூர் னாலும் இப்போ இருக்குறது திருப்பூர் நாச்சிபாளையம். வயசுப்பையனா இருந்தப்போ ஜவுளி வியாபாரம் பார்த்தேன். செங்கல்பட்டுல இருந்தப்போ கல்யாண வீட்டுக்கெல்லாம் சமைச்சுக் கொடுத்துக்கிட்டு இருந்தேன். எல்லாத்தையும் விட்டுட்டு திருப்பூர்ல பெயிண்டர் வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன்.  எனக்கு ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு. மூத்த பையன் காலேஜ் முடிச்சுட்டு சினிமாவுல சேரப்போறேன்னு மெட்ராசுக்குப் போச்சு. திடீர்னு ஒரு நாள் கேமிரா எல்லாம் எடுத்துட்டு, `என்கூட வாங்கப்பா'ன்னு கூட்டிப்போயி என்னைய சமைக்கச் சொல்லி வீடியோப்படம் எடுத்துச்சு'' எனச் சொல்லும்போதே மகன் கோபிநாத் தொடர்கிறார்.

``டிப்ளமோ முடிச்சிட்டு சினிமால உதவி இயக்குநரா இருந்தேன். அந்தப் படம் ரிலீஸ் ஆகல. ஊருக்கு வந்த நேரத்துல யூ-டியூப் சேனல் நெறய பார்க்க ஆரம்பிச்சேன். சமையல் நிகழ்ச்சிகள் பற்றிய சேனல்கள் நிறைய இருந்துச்சு. `நாம மறந்துபோன கிராமத்து சமையலை ஏன் நிகழ்ச்சியா  பண்ணக்கூடாது'ன்னு தோணுனப்ப வந்த யோசனைதான்இது. அப்பாவுக்கு நல்லா சமையல் வரும்.  அதனால வேற யாரையும் வெச்சு பண்றதுக்கு மனசு இடம் கொடுக்கல.

அப்பா கூடப் பொறந்தவங்க எல்லாம், வறுமையைக் காரணம்  காட்டி  ஒதுக்கி வெச்சுத் தான் பார்ப்பாங்க. அவங்க எல்லோரும் அப்பாவைத் திரும்பிப் பார்க்கணும் அப்படிங்கிற எண்ணம் இருந்துச்சு. அதனால அப்பாவை வெச்சே நிகழ்ச்சியைத் தொடங்கிட்டேன்.''

126p2.jpg

``செய்முறை வீடியோ  எல்லாம் பியர் கிரில்ஸ் அளவிலே இருக்கே?''

 ``இங்க எல்லாரோட வாழ்க்கை முறையும் மாறிடுச்சு. நமக்கு நல்ல சாப்பாடு சாப்பிட ணும்னு தோணும். ஆனா அதை எப்படி செய்யணும்னு தெரியாது. உதாரணத்துக்கு நமக்கு  நண்டு சாப்பிடணும்போல இருக்கும். எப்படி சுத்தம் பண்ணணும்னு தெரியாமல் ஓட்டலுக்கே போயிடுவோம்.  ஒரு சமையலை அதனோட ஆரம்பக்கட்டத்துல இருந்து எல்லாத்தையும் பதிவு பண்ணணும்னு முடிவு பண்ணுனோம். பார்க்கிறவங்க முகம் சுளிக்காம ஏத்துப்பாங்களான்னு ஆரம்பத்துல ஒருவித தயக்கம் இருந்துச்சு. ஆனா வீடியோ அப்லோடு பண்ணுன பிறகு அதுக்கென நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது.''

``முழு ஆட்டை அண்டாவுக்குள்ள புதைக்கிறீங்க. முந்நூறு முட்டைல குழம்பு வைக்கிறீங்க..! கடைசில ரெண்டு மூணு பேருதான் சப்பிடுறீங்க. சாப்பாட்டை வேஸ்ட் பண்ணலாமா?''

``ஆரம்பத்துல நாலு அஞ்சு பேரு சாப்பிடுற அளவுக்குத்தான் பண்ணினோம். யூ-டியூப்ல அதுக்குக் கிடைச்ச வரவேற்புல எங்களுக்கு வருமானம் வர ஆரம்பிச்சது. வருமானம் வருதே, பெரிய அளவில பண்ணலாம்னு முடிவு பண்ணி சமையல் பண்ணினோம் . அந்த சாப்பாட்டை எல்லாம் திருப்பூர் பஸ் ஸ்டாண்ட் பகுதிகள்ல சாப்பாடு இல்லாம இருக்கிறவங்களுக்கு நாங்களே போயி கொடுத்துட்டு வந்துருவோம். அதனால சாப்பாடு எல்லாம் வீணடிக்கிற பழக்கம் இல்ல.''

126P3.jpg

``அப்பாவை வீடியோ முன்னால கொண்டு வந்ததுக்கான நோக்கம் நிறைவேறிடுச்சா?''

``இந்த சேனல் ஆரம்பிச்சே ஆறுமாசம்தான் ஆகுது. இதுவரை 42 வீடியோ போட்ருக்கோம். இன்னும் நாம மறந்துபோன சமையல் எல்லாத்தையும் திரும்பவும் எல்லார்கிட்டயும் கொண்டுபோயி சேர்க்கணும். அதே நேரத்துல என்னோட சினிமா கனவுகளுக்கும் உயிர் கொடுக்கணும். ஒரு தடவை பொண்ண காம்பியரா வெச்சு பண்ணுன சமையல் வீடியோவ அப்லோடு பண்ணினேன். பலபேரு கோபப்பட ஆரம்பிச்சிட்டாங்க. `அப்பா சமையலுக்காகத்தான் பார்க்கிறோம் தம்பி... நீங்க ரூட்டு மாறுற மாதிரி தெரியுதே'ன்னு ஆதங்கப்பட்டாங்க. வீடியோ பார்த்தவங்க எல்லாம் அப்பாவை அவங்க அப்பா மாதிரியே நினைக்கிறாங்க. `அப்பா சமையல் சூப்பர்' `அப்பா பின்றார்'னு சொல்றப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு. அந்த வார்த்தைகள் எல்லாம் அப்பாவை அவமானப்படுத்தினவங்க காதுகளில் போயி சேரணும்'' எனச் சொல்லும்போது ஆறுமுகம் குறுக்கிடுகிறார், `` `மாசம் நாலு வீடியோ பண்ணிக்கலாம்ப்பா... இனிமே நீங்க பெயின்ட் அடிக்கப் போகவேணாம்'னு தம்பி சொன்னதுமே வேலைய நிப்பாட்டிட்டேன்''  என  மகனை நினைத்துப் பூரித்து நிற்கிறார் ஆறுமுகம்.

village food factory சேனலின் வீடியோக்களுக்கு  https://www.youtube.com/channel/UC-j7LP4at37y3uNTdWLq-vQ

vikatan

  • தொடங்கியவர்

அலாஸ்கா நீர்பரப்பில் அன்புச்சண்டையிடும் பனிக்கரடிகள் (படங்கள் இணைப்பு)

 

அலாஸ்கா நீர்பரப்பில் இரண்டு பனிக்கரடிகள் அன்புச்சண்டையிடும்  புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

3A3A6D5A00000578-0-image-m-1_14787960775

குறித்த இரண்டு பனிக்கரடிகளும் சகோதரர்கள்.

பனிக்கரடியானது பனிப்பிரதேசங்களில் வேட்டையாடும் விலங்குகளில் மிக சக்திவாய்ந்த வேட்டையாடும் விலங்காக கொள்ளப்படுகின்றது.

குறித்த இரண்டு சகோதர கரடிகளும் தங்களது வேட்டையாடும் திறனை வளர்த்துக்கொள்வதற்காக தங்களுக்குள் பயிற்சி செய்து வருகின்றது.

3A3A6E5F00000578-0-image-m-17_1478797343

பயிற்சி முடிந்ததும் தங்களை கட்டிப்பிடித்து வாழ்த்திக் கொள்கின்றன இந்த பனிக்கரடிகள் இரண்டும்.

இந்த அழாகன புகைப்படங்கள் இணையத்தளங்களில் அதிகமாக பேசப்படுகின்றன.

3A3A6E0200000578-0-image-m-7_14787969127

3A3A6E1400000578-0-image-m-11_1478797034

3A3A6E4300000578-0-image-m-13_1478797208

3A3A688D00000578-0-image-m-9_14787969796

3A3A693B00000578-0-image-m-15_1478797290

3A3A688500000578-0-image-m-3_14787964433

3A3A695700000578-0-image-m-5_14787967702

.virakesari.lk

  • தொடங்கியவர்

உலகின் வேகமாக பறக்கும்  பாலூட்டி விலங்கு இதுதான்


உலகில் பாலூட்டி வகை விலங்குகளில்  அதிவேகமாக பறக்கும் வௌவாலை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகில் வேகமாக பறக்கும் பாலூட்டி விலங்குகள் குறித்த ஆய்வை அமெரிக்க மற்றும் ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டிருந்தனர். அப்போது பிரேசிலின் வால் இல்லாத 7 வௌவால்களை ஆராய்ச்சியாளர்கள் சோதனை செய்து பார்த்துள்ளனர்.  அதில் இந்த வகை வௌவால்கள் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பறப்பதாக தெரியவந்துள்ளது.

flying_bat_20299.jpg


குறிப்பாக இந்த வௌவால்கள் சாதரணமாக பறந்தாலே மணிக்கு 110 கி.மீ வேகத்தில் பறக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.  தற்போது உலகில் அதிவேகமாக பறக்கக் கூடிய பாலூட்டி வகை விலங்கு இதுதான். இதன் இறகுகள் மற்றும் உடல்வாகு மற்ற வௌவால்களிடம் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இருப்பதாகவும், முக்கியமாக காற்றில் பறப்பதற்கு ஏதுவாக இருப்பதால் இந்த வேகத்தில் பறக்க முடிகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள் .
 

vikatan

  • தொடங்கியவர்

 

”இயந்திர பூச்சிகள்” - காணொளி
-------------------------------------------------
ஆளில்லா விமான செயல்பாட்டை பூச்சிகளை கொண்டு நிறைவேற்றலாமா?

BBC

  • தொடங்கியவர்

வரலாற்றை எழுதினார்.. வரலாறாய் நின்றார் - சாண்டில்யன் பிறந்ததின பகிர்வு

சாண்டில்யன்

ரலாற்று நாவல்களின் தன்மையை வடிவமைத்த எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் பிறந்த நாள் இன்று. 

நாகப்பட்டினம் மாவட்டம்,  திருஇந்தளூரில் 1910 -ஆம் ஆண்டு நவம்பர் 10 -ஆம் தேதி பிறந்தார் சாண்டில்யன். அவரது இயற்பெயர் பாஷ்யம்.  பெற்றோர் பெயர் , சடகோபன் அய்யங்கார், பூங்கோதைவல்லி. 

திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்த  சாண்டில்யனுக்கு 1929 -ல் திருமணம் நடந்தது. மனைவி பெயர்  ரங்கநாயகி.  சில வருடங்களில் குடும்பத்தோடு சென்னைக்கு வந்து தி.நகரில் குடியேறினார். சென்னையில் கல்கி, வெ.சாமிநாத சர்மா போன்ற ஆளுமைகளின் நட்பு கிடைத்தது. அந்த நட்பு சாண்டில்யனின் வாழ்க்கையை மாற்றியது.  அவ்வப்போது சிறு சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்த சாண்டில்யனை 'திராவிடன்' பத்திரிக்கையில் பணியாற்றிய  நண்பர் சுப்பிரமணியன்  சிறுகதை எழுதத் தூண்டினார்.  சாண்டில்யன் எழுதிய முதல் சிறுகதை 'சாந்தசீலன்'. அந்தச் சிறுகதையைப் படித்த பலரும் பாராட்டினார்கள். கதையைப் படித்த எழுத்தாளர் கல்கி  எழுத்து நடையும்., சிறுகதையின் யுத்தியும் வித்தியாசமாக இருந்ததால்   ஆனந்த விகடனில்  சிறுகதைகள் எழுதும் வாய்ப்பை அளித்தார். 'கண்ணம்மாவின் காதலி' , 'அதிர்ஷ்டம்' போன்ற சிறுகதைகள் ஆனந்த விகடனில் வெளிவந்தன. எழுத்தார்வம் அதீதமாக, அது சார்ந்த துறையிலேயே பயணிக்க விரும்பிய சாண்டில்யன்,  சுதேசமித்திரன் இதழில் சேர்ந்தார் .  1935 முதல்  1945 வரை  நிருபராகவும், உதவி ஆசிரியராகவும் பணிபுரிந்தார். சென்னை உயர்நீதிமன்ற செய்திகளை எழுதும் பணி சாண்டில்யனுக்கு கொடுக்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியைப் பேட்டி எடுத்தப் பெருமையும் சாண்டில்யனுக்கு உண்டு. 

சாண்டில்யன்

ழுத்துத் துறையில் இமயம் தொட்ட சாண்டில்யன்,  அதன் தொடர்ச்சியாக திரைப்படத் துறையிலும் கால்பதித்தார். 'அம்மா' 'தியாகய்யா' 'என் வீடு' போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதைகள் எழுதினார். சினிமா சார்ந்த தனது அனுபவங்களை 'சினிமா வளர்ந்த கதை' என்ற பெயரில் எழுதவும் செய்தார்.  தொடக்கத்தில் சமூகக் கதைகளையும், தேசிய உணர்வு, விடுதலைப் போராட்டம் சார்ந்த கதைகளையும் எழுதிய சாண்டில்யன் காலப்போக்கில் சரித்திர நாவல்களின் பக்கம் நகர்ந்தார்.  அவரது சரித்திர கதைகள் பல்வேறு இதழ்களில் வெளிவரத் துவங்கின. 

48 வரலாற்று புதினங்களை எழுதியிருக்கிறார் சாண்டில்யன். இதுதவிர, 'புரட்சி பெண்' என்ற அரசியல் புதினத்தையும், நிறைய சிறுகதைகளும் கூட  எழுதியுள்ளார். 'கடல் புறா', 'யவன ராணி' 'கன்னி மாடம்','ராஜ திலகம்', 'ராஜ பேரிகை' போன்ற நூல்கள் இப்பொழுதும் விற்பனையில் முன்னணியில் உள்ளன.   

சாண்டில்யன் 

சாண்டில்யன் எழுத்தின் சிறப்பே, காட்சி நிகழ்விடத்தைப் பற்றிய விவரணை தான். வாசகனை அந்த சூழலுக்கு உள்ளேயே இழுத்துச் செல்லும் சக்தி மிகுந்த எழுத்து அவருடையது. 

கடல் புறாவின் முதல் பாகத்தின் இறுதி அத்தியாயத்தில் வரும் சாண்டில்யனின் வரிகள் இவை.., 

'அந்தத் தூரத்திலும் முரட்டுப் புரவிகளின் கனைப்புக் கேட்டது அவள் காதுகளுக்கு. காவற் படகுகள் பல சங்கமப் பகுதியில் எங்கும் விரைந்து கொண்டிருந்தன. கப்பல் செல்ல முற்பட்டு விட்டதைக் கண்ட காவற்படகுகளின் எரியம்புகள் அந்தக் கப்பலின் மீது சரமாரியாக வரத் தொடங்கின. அவளைச் சுற்றிலும் பறந்தன. அவற்றைச் சிறிதும் அலட்சியம் செய்யாமல் கடற்கரையைப் பார்த்துக் கொண்டே நின்றாள் கடாரத்தின் இளவரசி'.

இந்த வரிகளைக் கடக்கும்போது, ஒரு போர் வீரனாக கடாரத்தின் இளவரசியோடு களம் காணும் உணர்வு வாசகனுக்கு ஏற்படும். 

இந்த யுத்தி தான்  நெடுங்காலம் கடந்தும் சாண்டில்யனின் எழுத்துகளை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. 

vikatan

  • தொடங்கியவர்

 

11 கிலோமீட்டர் நீள பனி உருண்டை கடல்!

கண்ணுக்கெட்டிய தொலைவு கடல் நெடுக பிரம்மாண்ட பனி உருண்டைகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

ரஷ்ய கடலோரம் காண்பவர்களை ஆச்சரியப்படுத்தி வரும் இயற்கையின் இந்த அதிசயத்தின் பின்னுள்ள அறிவியல் செய்தி என்ன?

BBC

  • தொடங்கியவர்

Monday டென்ஷன் குறைக்க Sunday என்ன பண்ணனும்? #WowWeekEnds

மண்டே

வெள்ளிக்கிழமை சாயந்திரம் ஆனாலே ஆஹா ஓஹோனு மைண்ட் குஜாலாகறதும், மண்டே மார்னிங்னா அய்யோ அம்மான்னு கூவறதும் வாடிக்கையாவே போச்சு நமக்கு! காரணம் என்னன்னு என்னைக்காச்சும் யோசிச்சிருக்கீங்களா? காரணம்.. வீக் எண்ட் வீக்கா ஹேண்டில் பண்றதுதான்னு ஒரு ஆராய்ச்சி சொல்லுது! யெஸ் பாஸ்! வார இறுதிகள்ல / லீவு நாட்கள்ல  நாம வழக்கமா பண்றது கீழ இருக்கறதாத்தான் இருக்கும். பெரும்பாலும்.

01. லேஏஏஏஎட்டா எழுந்திருக்கறது. 'ன்னா இப்போ?' அப்டிங்கற ஒரு மனநிலை.

02. நேரத்துக்கு சாப்பிடாம இருக்கறது. வழக்கமா, வார நாட்கள்லயே இப்டிதான்.. வீக் எண்ட் ல இன்னும் ஓவர்!

03. காஃபி, டீ அல்லது ஸ்நாக்ஸ் கண்ட நேரத்துக்கு சாப்பிடறது.

04. 'இதை லீவு நாள்ல பண்ணணும்'னு ப்ளான் பண்ணி வெச்சத, சனி காலை அல்லது ஞாயிறு காலைல ஆரம்பிக்காம ஞாயிறு சாயந்திரமா அடடடான்னு அதை ஆரம்பிக்கறது.

05. வழக்கத்தைவிட லேட்ட்டா தூங்கறது

06. வழக்கத்தைவிட அதிகமா சமூக வலைதளங்கள்ல புரட்சி பண்றது

இப்டி லிஸ்ட் பெரிசா போகும். சரி. வார இறுதிகளை கொஞ்சம் மாத்தியோசிச்சு, உபயோகமா பண்ணினா, வாரம் முழுமைக்குமான புத்துணர்ச்சி கிடைக்குமாம் முயற்சி பண்ணுவோமா?

 

01. நீண்ட பகலை உருவாக்குங்கள்

அதெப்படினு தோணுதா? லேட்டா எந்திரிக்காம கொஞ்சம் முன்னால எழுந்து, சும்மா வெளில ஒரு வாக் போய்ட்டு வாங்க. 100 அடினாலும் அன்றைய தினம் ஆரம்பிச்சுடும். 

எந்திரிச்சுட்டேன்.. அப்டியே பெட்ல இருந்தேன்னு சொல்லிடாதீங்க. அது அனுஷ்கா படத்தை கண்ணை மூடிட்டு பார்க்கறதுக்கு சமம். வேஸ்ட்!

 

02. ஃபர்ஸ்ட் 3 மணி நேரம் செல்ஃபோனுக்கு ரெஸ்ட் 

எந்திரிச்சதுமே நம்மளை சிறைபிடிக்கறது அலைபேசிதான். அதுனால வார இறுதிகள்ல எழுந்ததும் அதைத் தொடாம இருங்க. அப்பதான் என்ன பண்லாம்னு யோசிக்கச் சொல்லும். ஃபோன் பேச தடை இல்ல. வந்தா பேசுங்க.. ஆனா வள வளன்னு பேசிட்டிருக்கற அழைப்புகளுக்கு அல்ல. முக்கியம்னா மட்டும். 

 

03. ஜாலி ஹாபி

செஸ், கேரம், ஷட்டில்னு நண்பர்கள்கூட விளையாடற விளையாட்டுக்களோ, அல்லது ஓவியம், கீபோர்ட், கிடார்னு தனியா பண்றதோ - உங்களுக்குப் பிடிச்ச எதையாவது - தினமும் பண்லைன்னாலும் வார இறுதிகள்ல நிச்சயம் செய்ங்க. ரொம்ப பெரிய பிரபலங்கள் சிலர் ஃபுட்பால், கோல்ஃப், பியானோ, ஓவியம்னு தங்களோட தொழிலுக்கு சம்பந்தமில்லாத ஒரு ஹாபிதான் தங்களை லைவ்லியா வைக்கறதாவும், இது அவங்க கிரியேட்டிவிட்டியை ஊக்கப்படுத்தறதாகவும் சொல்லிருக்காங்க. 

 

04. ஒரே ஒரு ஃபோன்கால்

நம்ம எல்லாருக்குமே சில நண்பர்கள் எப்ப பேசினாலுன் உற்சாகம் தர்றவங்களா பேசுவாங்க. 'மேனேஜர் வெரிகுட் சொன்னார் மச்சி'ன்னா, 'சூப்பர்டா.. நீ எப்பயுமே செய்ற வேலைல பெஸ்டைக் குடுப்பியே'ன்னு நம்மளை உற்சாகப்படுத்துவாங்க. அப்படி ஒருத்தர்கிட்ட எந்த இடையூறும் இல்லாம கொஞ்ச நேரம் பேசுங்க. 

 

05. ப்ளான் பண்ணுங்க

என்னடா இது.. வார இறுதிக்கும் ப்ளானான்னு கேட்காதீங்க. வார இறுதிகளை திட்டமிடப் பழகிட்டா நெறைய பலன் கிடைக்கும். இந்த சண்டே இதைப் பண்ணணும்னு நெனைக்கறப்பவே ஒரு Post Itல எழுது ஒட்ட வெச்சுடுங்க. 100% ப்ளானிங் இல்லைன்னாலும் சின்ன திட்டமிடல் அவசியம். 

 

06. குட்டித்தூக்கம் அவசியம்

மதியம் சாப்பிட்ட பின்னாடி குட்டித்தூக்கம் போடுங்க. அந்த நேரம் கிளம்பி வெளில போகறது, உங்களை டயர்டாக்கி, விடுமுறை நாளுக்கான மகிழ்ச்சியையே கெடுத்துடும்.

 

07. டெக்கியா இருக்காதீங்க

திரும்பத் திரும்ப பல ஆய்வுகள்ல சொல்லப்படறது இது. வார இறுதிகள்ல செல்ஃபோன் மாதிரியான டெக்னாலஜி சாதனங்கள்ல இருந்து கொஞ்சம் விலகி இருக்கறது. ஹாபி சார்ந்து உருப்படியா, ஃபோகஸா ஒரு விஷயம்னா கூட ஓகே.. மத்தபடி சாட்டிங், இணையத்தை சும்மா மேயறதெல்லாம்.. வேணாமே!

 

08. இது மிகவும் முக்கியம் 

மண்டே ப்ளூ-ல இருந்து தப்பிக்க இது ரொம்ப ரொம்ப அவசியம்.. அதாவது ஞாயிறு மாலைல ஒரு நல்ல ஹாபியை அல்லது உங்களை உற்சாகமா வெச்சுக்கற ஒரு விஷயத்தை செஞ்சபிறகு, சீக்கிரமா உறங்கச் செல்வது! எதுக்காகன்னா, உற்சாக மனநிலைல உறங்கச் சென்றவனுக்கு அடுத்தநாள் காலைல எழும்போதும் அந்த மனநிலை இருக்குமாம். இது, அந்த வாரத்தையே எனர்ஜியா துவங்க வைக்கும்! 

vikatan

  • தொடங்கியவர்

அழகிய அரண்மனை போன்று காட்சியளிக்கும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப்பின் வாசஸ்தலம்.

14947637_1343736042303790_74896695438291

15037117_1343736078970453_20577892955422

15036531_1343736128970448_87552483288944

15036266_1343736168970444_24448204665706

15078518_1343736208970440_11367320400867

15032168_1343736242303770_71264513977311

15078910_1343736262303768_88602110274747

15055738_1343736285637099_18385421917625

15027809_1343736308970430_12038336431116

14962645_1343736338970427_88509618061041

15036164_1343736368970424_34749040956659

15079092_1343736385637089_27942263123043

15037313_1343736402303754_53104380771575

15078842_1343736425637085_61535656568846

15032303_1343736452303749_10573773406487

15037064_1343736498970411_61110723249443

15056450_1343736522303742_62900144965186

15056225_1343736552303739_83583340426680

15032149_1343736572303737_33167075715309

15056234_1343736592303735_31625905226155

 

 

Sooriyan.FM

  • தொடங்கியவர்

 

“பறக்கும் பாய்மரம்” - காணொளி
-------------------------------------------------
விமான இறக்கையின் நீளத்திற்கு சமமான நீள இறக்கையுடைய பாய்மரத்தில் பறப்பது போன்ற வேகத்தில் ஒரு பாய்மர படகு போட்டி

  • தொடங்கியவர்

மார்க் சக்கர்பெர்க் 'இறந்துவிட்டாரா? பீதியை கிளப்பிய ஃபேஸ்புக்

இன்று ஃபேஸ்புக் தவறுதலாக, மார்க் சக்கர்பெர்க் இறந்துவிட்டதாக, அவரது பக்கத்திலேயே தகவல் வெளியிட்டது. 

FB%202_12549.jpg

 

அவர் மட்டுமின்றி இன்னும், இருபது லட்சம் பேருக்கு, அவர்கள் 'இறந்துவிட்டதாக' தவறான தகவலை, சம்பந்தப்பட்டவர்களின் முகப்பு பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளது ஃபேஸ்புக். 


இது பற்றி அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'இறந்தவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்ற வேண்டிய தகவலை, தவறுதலாக உயிரோடு இருக்கும் பலரது பக்கத்தில் பதிவேற்றிவிட்டோம். ஆனால், சிறிது நேரத்துக்குப் பின்பு இந்த பிரச்னை சரி செய்யப்பட்டுவிட்டது' என்று கூறினார்.

vikatan

  • தொடங்கியவர்

புதிய பர்தா ஸ்டேட்மென்ட்! - ஃபேஷனில் அசத்தும் சம்மர் அல் பார்சா

சம்மர் அல் பார்சா

பர்தா உடையிலும், ஃபேஷன் டிரெண்ட் செய்ய முடியும் என நிருபித்திருக்கிறார் சம்மர் அல் பார்சா (Summer Al Barcha). சிரியா நாட்டை சேர்ந்தவர். பர்தாவில் டிரெண்டியான ஸ்டைல் மற்றும் கலாச்சாரப் பின்ணனி கொண்டவர்களை, பிரெஞ்ச் மொழியில் Bourgeois-Bohemian என்றும், ஆங்கிலத்தில் Hipster எனவும் சொல்கிறார்கள். இவர்களுக்கு எந்தெந்த இடங்களுக்கு, எப்படிப்பட்ட காஸ்ட்யூமில் போகலாம் என்பது அப்டேட்டாக தெரியும். Hipster-களின் முக்கிய நோக்கமே, இன்றைய  டிரெண்டைப் பின்பற்றாமல், புதிதாக ஸ்டைல் ஒன்றை உருவாக்கி கெத்து காட்டுவதுதான்.

இணையத்தில் டிரெண்டி ஃபேஷன் இளவரசிகள் பலர் வலம் வருவதால், பட்டென இந்த ஸ்டைல் வைரலாகப் பரவுகிறது. உண்மையில் பலருக்கு ஆடை என்பது, தங்கள் குணாதிசியத்தையும், எனர்ஜி லெவலையும் காட்டுவதற்கு ஏற்ற வழியாகக் கருதுகிறார்கள். ஒருவர் அணிந்த உடை வாயிலாக ஒருவர் அளவிடப்படுவது/அறியப்படுவதுதான் இன்றைய உலகம். அதனால், இதை எல்லாம் மனதில் வைத்து கலாச்சாரத்தையும் விட்டுக்கொடுக்காமல், அதே சமயம் டிரெண்டையும் பிடித்து கவனிக்க வைத்துவிட்டார் சம்மர் அல் பார்சா, 'Hijabi Hipster' எனப்படும் அமைப்பின் நிறுவனர்.

சம்மர் அல் பார்சாவின் பிளாக்கையும், இன்ஸ்டாகிராம் பக்கங்களையும் புரட்டியபடி வலம் வந்தால், ஃபேஷன் டிப்ஸ் மற்றும் போட்டோவுக்குள் போட்டோ கொட்டிக்கிடக்கின்றன. இவர் பயன்படுத்தும் ஒவ்வொரு பேன்ட் மற்றும் ஸ்கர்ட் ஆகியவை சிம்பிளாக இருந்தாலும், ரஜினி போல சின்ன ஸ்டைலையும் அதில் புகுத்தி இருக்கிறார். முஸ்லீம் பெண்கள் கட்டாயம் உடுத்தக்கூடிய ஹிஜாப் (Hijab) எனப்படும் தலையைச் சுற்றி மூடும் துணியிலும் வித்தியாசம் காட்டி இருப்பதுதான் ஆச்சரியம்.

Screen+Shot+2016-10-11+at+11.53.35+AM_15

சரி, யார் இந்த சம்மர் அல் பார்சா?

சிரியா நகரில் பிறந்து, அமெரிக்காவில் வளர்ந்தவர். எனவே இரு நாட்டும் கலாச்சாரத்திலும்,உடையிலும் இவருக்கு நல்ல புரிதல் உண்டு. சிறுவயதிலேயே அவர் வைத்திருந்த பார்பி பொம்மைகளுக்கான உடைகளை அவரே பலவிதமாக டிசைன் செய்து அசத்துவார். சின்ன வயதில் எற்பட்ட இந்த ஆர்வம்தான் இவரை பேஷன் துறைக்கு இழுத்து வந்திருக்கிறது. பிஸினஸ் மேனேஜ்மென்ட் படித்துள்ளவர் என்பதால், மார்க்கெட்டை வசப்படுத்தும் யுக்தியையும் தெரிந்து வைத்து இருக்கிறார். இவர் வளர்ந்ததும், ஹிஜாப் உடுத்தவேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், அவருக்கு பழைய ஸ்டைலில் பர்தா அணிய இஷ்டமில்லை. ஆனால், கடவுள் மீதான பக்தி அவரை அணிய தூண்டியது. அதற்கான தீர்வுதான் இந்த புதிய பர்தா ஸ்டேடென்ட். 'இன்றைய ஃபேஷனுடன் சேர்த்து, ஹிஜாப்பைக் கட்டாயம் பின்பற்ற முடியும் என்பதை உறுதியாக நம்பியதன் வெளிப்பாடே நான் உடுத்தும் எளிமையான உடைகள்' என அடக்கமாகவே சொல்கிறார். ஒரு உடையை முழுமைப் படுத்துவது, ஒருவர் அணியும்வாட்ச் என்பது இவரது கருத்து.

Hijabi Hipster :

சாதாரணமான, ஆனால் மாடர்ன்னான, எளிதான உடையுடன் அணிய கூடிய பர்தா தான் இந்த ஹிஜாப். நாள் முழுக்க இந்த பர்தாவை உடுத்தினாலும், அது அணிவதற்க வசதியாவும் மாடர்னாகவும் இருந்ததால்தான் இவரது பேஷன் ஹிட் அடித்திருக்கிறது. இதற்காக, பார்சிலோனா, ஸ்பெயின், மிலன், இத்தாலி, ஜகார்த்தா, இந்தோனேஷியா எனப் பல நகரங்களை சுற்றி வந்திருக்கிறார். அங்கேயும் இந்த ஹிப்ஸ்டர் டிரெண்டை உருவாக்கி இருக்கிறார். இவர் ஷாப்பிங்கிற்கு என தனியாக ஏதும் திட்டங்களை வைத்திருக்கமாட்டார். பெரும்பாலும் கடைகளுக்கு நேரடியாகச் சென்று, தனக்கு விருப்பமானதை செலக்ட் செய்து, தேவைப்படும் அளவுக்கு வாங்கிக் கொள்கிறார். உடைகளில் இவருக்குப் பிடித்த நிறம் க்ரீம். அதே சமயத்தில் முகத்தில் மேக்-அப் போடுவது அறவே பிடிக்காது. அதற்கான காரணம் கேட்டால், "அது டிசைன் செய்வதைவிட மிகவும் கடினமான வேலை" எனச் சொல்கிறார்.

பர்தாவில் அப்படி என்ன பேஷன் டிசைன் செய்திருக்கிறார்?

பர்தாவில் பேஷன் என்றதும் கலர்கலர் ஜிகினா போடுவதோ, சின்ன கண்ணாடிகளால் டிசைன் பொருத்துவதோ, எம்பிராய்டரி நூல் வேலைப்பாடுகள் மட்டும் இல்லை. ஸ்கர்ட்டுக்கு தகுந்த கலரில் பர்தா; வெவ்வேறு மெட்டிரியலில் கிராண்ட் லுக் காட்டுவது; கருப்பு கலரில் மட்டும் இல்லாமல், வயலெட், பிரவுன், ஆரஞ்சு, நீலம் எனப்பல வண்ணங்களில் பர்தா உருவாக்கி இருக்கிறார். தவிர அதை அணியும் விதத்திலும் ரிச் லுக் காட்டி அசத்துவது என இஞ்ச் பை இஞ்ச் பர்தாவை செதுக்கி இருக்கிறார் சம்மர் அல் பார்சா.

'இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் @ascia_akf, @somethingnavy, Chiarra Ferragni ஆகியோர்தான் என் ஸ்டைல் ஸ்டேட்மென்டுக்கு ரோல் மாடல்கள். இதுதவிர H&M உடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். ஏனெனில் அவர்கள்ஃபேஷன் துறையில் முக்கியமானவர்கள் என்பதுடன், என்னைப் போன்ற இளம் பெண்களுக்குப் பிடித்தபடி கலெக்‌ஷன்கள் வடிவமைப்பதில் சிறந்தவர்கள். இன்னும் பலப் புதுமையான பேஷனை உருவாக்கணும். அதில் டிரெண்ட் செட்டராக இருக்கணும். அதுதான் என் ஆசை.' என கன்னத்தில் குழி விழுகச் சிரிக்கிறார் சம்மர் அல் பார்சா.

இனி என்ன சம்மர், விண்டர்னு; எல்லா நாளும் பேஷன் பர்தா அணிந்து அசத்துங்க லேடீஸ்!

vikatan

  • தொடங்கியவர்

 

“அகதி குழந்தையின் கடினமான பயணம்”

“அகதி குழந்தையின் கடினமான பயணம்” -காணொளி

BBC

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

p35.jpg

`தமிழ்நாடு அரசியலில், மு.க.அழகிரிக்கு சீஸன்-2 ­தொடங்கிவிட்டது' என்பதுதான் கோபாலபுரத்தின் சமீபத்திய ஸ்கூப் தகவல். ஒரே வாரத்தில் கருணாநிதியை இரண்டு முறை சென்னை வந்து சந்தித்த அழகிரி, `அப்பா, அன்பாகவும் ஆதரவாகவும் பேசினார். எனக்கு அவர் மீது எப்போதுமே கோபம் இல்லை. அவருக்கும் என் மேல் கோபம் இல்லை' என்று கட்சி சீனியர்களிடம் கூறியிருக்கிறார். தற்போது அமெரிக்காவில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்றுள்ள அழகிரி, தமிழகம் வந்ததும் கட்சிக்குள் மீண்டும் சேர்க்கப்படுவார் என்று உடன்பிறப்புகள் எதிர்பார்க்கிறார்கள். `ஆனா' ரிட்டர்ன்ஸ்!

ராணுவ அமைச்சர்கள், பொதுவாக அமைதியாக இருப்பதுதான் வழக்கம். ஆனால், தற்போதைய ராணுவ அமைச்சர் மனோகர் பாரீக்கருக்கு, ஏதாவது பேசி பிரச்னையில் மாட்டிகொள்வதே வழக்கமாகிவிட்டது. பாகிஸ்தான் எல்லையில் `சர்ஜ்ஜிக்கல் அட்டாக்' நடந்ததும் பாரீக்கரின் படத்தை போஸ்டரில் போட்டு, உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க-வினர் விளம்பரம் செய்ய, அதிர்ந்துபோனார் பிரதமர் மோடி. இதற்கிடையே சொந்த மாநிலமான கோவாவில், பாரீக்கரைப் பாராட்டி அவரது ஆதரவாளர்கள் மாபெரும் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்ய, உடனடியாக அமித்ஷா மூலம் பேரணிக்குத் தடா போட்டுவிட்டார் மோடி. `பாரீக்கர், அதிக நாட்கள் மத்திய அமைச்சராக இருக்க மாட்டார். மீண்டும் கோவாவுக்கே அனுப்பப்படுவார்' என்பதுதான் டெல்லி சொல்லும் செய்தி. ஏத்திவிட்டு ஏத்திவிட்டே..!

p35a.jpg

ப்பா சிரஞ்சீவி வீட்டில் இருந்து வெளியே தனி வீட்டுக்கு வருகிறார் ராம்சரண் தேஜா. அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபாசனாவைத் திருமணம் செய்துள்ள ராம்சரண், 80 கோடி ரூபாய் செலவில் புதிய வீட்டைக்  கட்டியிருக்கிறார். இந்த சொகுசு பங்களா, ஜிம், நீச்சல் குளம், டென்னிஸ் கோர்ட், தியேட்டர்... என சகல வசதிகளுடன் தயாராகிவருகிறது. இவ்ளோவும் தனி ஒருவனுக்கா!

p35b.jpg

`எனக்கு பாலிவுட்டில் நடிக்க மிகவும் பிடிக்கும். ஆனால், வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம். கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டால் அது நம்மை உயர்த்தும். இல்லையென்றால், பாலிவுட் மொத்தமாக நம்மை சினிமாவைவிட்டே துரத்திவிடும்' என ஃபீலிங் ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார் இலியானா. பாலிவுட் பிராப்ளம்ஸ்!

p35c.jpg

`26 வயதான என்னால், மீண்டும் களம் திரும்ப முடியாது. எனது விளையாட்டு வாழ்க்கை இத்துடன் முடிந்துவிட்டது என்று சிலர் நினைக்கிறார்கள். என் ஆழ்மனதிலும் எனது பேட்மின்டன் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதோ என்கிற எண்ணம் வரும். ஆனால், விளையாட்டில் நாளை என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்? அறுவைசிகிச்சை முடிந்ததும் மீண்டும் உடல் தகுதியைப் பெறுவதற்கான பயிற்சிகளில் இருக்கிறேன். காயங்கள் மிகவும் வேதனையானவை. ஒலிம்பிக்கில் காயம் அடைந்தது, என் விளையாட்டு வாழ்க்கையை அசைத்துப்போட்டுவிட்டது. இன்னும் 5-6 ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று அல்ல, அடுத்த ஆண்டு எப்படிச் செயல்பட முடியும் என்பதில்தான் என் எண்ணம் இருக்கிறது' என சாய்னா நேவால் பேட்டி கொடுக்க, விளையாட்டு உலகமே திரண்டு வந்து `சாய்னா நீங்க மீண்டும் விளையாடுவீங்க... ஜெயிப்பீங்க..!' என நம்பிக்கை அளித்திருக்கிறது. பழைய சாய்னாவா வரணும்!

p35d.jpg

யுவராஜ் வெட்டிங் இன்வைட்தான் இப்போது வைரல். `யுவராஜ் - ஹேசல் பிரீமியர் லீக்' என திருமணத்துக்குப் பெயர் வைத்ததில் தொடங்கி, மணமக்கள் கிரிக்கெட் ஆடுவது போன்ற கேரிகேச்சர், மேட்ச் ஃபிக்ஸிங் என முழுக்க கிரிக்கெட் தீமில் பத்திரிகை அடித்துக் கலக்கியிருக்கிறார்கள். மணமக்கள் பஞ்சாபி-இந்து கலப்பு என்பதால், நவம்பர் 30-ம் தேதி பஞ்சாபி பாணியில் ஒருமுறையும், டிசம்பர் 2-ம் தேதி கோவாவில் இந்து முறைப்படி ஒருமுறையும் என இரண்டு முறை மேளம் கொட்டப்போகிறார் யுவி. இன்னிங்ஸ் சிறக்கட்டும்!

vikatan

  • தொடங்கியவர்
‘உணர்ச்சியின் பாதையில் பயணிக்கக்கூடாது’
 
 

article_1478671860-ghiyoo.jpgஅறிவையும் மீறி உணர்ச்சியின் பாதையில் பயணிக்கக்கூடாது. 

அதீத உணர்ச்சி வெளிப்பாடு சில சமயம் எம்மைக் கேலிக்குரிய நபராகவும் சிலரால் கருதவைத்துவிடும்.  

நியாய பூர்வமான உணர்வின் வெளிப்பாடுகள் பிரமாதமான பயன்களையும் நல்கிட வல்லது. ஆனால், இவை அறிவுக்கு இடம்தர வேண்டும். நிதான புத்தியில்லாமல் நற்காரியங்களை எம்மால் செய்திட முடியுமா? 

எங்கள் செய்கையின் பின்விளைவு ஏனையோருக்குத் துன்பங்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்துதல் கூடாது அல்லவா? 

மற்றவர்ககளின் உணர்வை, உணர்ச்சிகளைப் புரியாமல், தனி ஒரு மனிதனின் முடிவு கொடிய எதிர்த்தாக்கத்தை ஏற்படுத்தலாம். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
கின்னஸ் சாதனைக்காக நடனம்
 

சீனாவின் சோங்கிங் நக­ரி­லுள்ள கால்­பந்­தாட்ட மைதானம் ஒன்றில் அண்மையில் ஒரே நிறத்­தி­லான ஆடை­களை அணிந்த பெரும் எண்­ணிக்­கை­யான மக்கள் நட­ன­மா­டினர்.

 

2058369.jpg

 

புதிய கின் னஸ் சாத­னை­யொன்றை படைக்கும் நோக்­குடன் இந்த நிகழ்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

20583_chna.jpg

 

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வாழ்க்கை நெறியை கற்று தரும் திருமந்திரம்... திருமூலர் திருநட்சத்திர தின பகிர்வு #Thirumoolar

thirumular_15236.jpg

"ஒன்றே குலமும், ஒருவனே தேவன்..."என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சமுதாயத்திற்கு வேண்டிய நல்லிணக்க செய்திகள் திருமந்திரத்தில் அழகாக விளக்கியவர் திருமூலர். ஆன்மிகம், மருத்துவம், விஞ்ஞானம், தத்துவம், உளவியல்  என திருமூலர் தொடாத துறைகளே இல்லை. திருமூலர் இயற்றிய மூவாயிரம் பாடல்களைக் கொண்ட திருமந்திர பாடல்களே இதற்கு சான்றாகும்.


தேவர் குறளும், திருநான்மறை முடிவும்
மூவர் தமிழும், முனிமொழியும் - கோவை
திருவாசகமும், திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர் - இது ஔவையார் பாடல்.


திருக்குறள், நால்வேதங்கள், மூவரின் தேவாரம், மணிவாசகர் திருவாசகம், திருக்கோவையார், திருமந்திரம் ஆகிய 11 நூல்களின் கருத்தும் மனிதரைப் புனிதம் ஆக்கும் ஒரே வழியையே காட்டுகின்றன என்று ஔவையார் பாடியுள்ளதே திருமந்திரத்தின் சிறப்புக்கு  சாட்சியாகும். திருமந்திரம் சைவ சமயத்திற்கு மட்டும் உரிய ஒரு சமய நூலாக அமையாது. உலக மக்களுக்கெல்லாம் அறத்தையும், ஆன்மிகத்தையும், மருத்துவத்தையும் எடுத்துரைக்கும் பொது நூலாக அமைந்துள்ளது.  


இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமந்திரம் ஆன்மிக வட்டத்திலேயே முடங்கி கிடக்கிறது. இதனை சமூகத்துக்கு பயன்பட வேண்டி, பலர் உரையெழுதியும், சொற்பொழிவாகவும் மக்களை சென்றடைய செய்கிறார்கள். அந்த வரிசையில் கடந்த முப்பது ஆண்டுகளாக திருமந்திர விளக்கவுரையாற்றி வரும்  ஆன்மிக சொற்பொழிவாளர் மா.கி.இரமணன், இன்று திருமூலரின் திருநட்சத்திரத்தையொட்டி, திருமூலரைப் பற்றி பல அரிய தகவல்களையும், அவர் காட்டிய வாழ்க்கை நெறியையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

makiramanan_15510.jpgஅகத்தியர், போகர், கோரக்கர், கைலாசநாதர், சட்டைமுனி, திருமூலர், நந்தி, கூன்கண்ணர், கொங்கணர், மச்சமுனி, வாசமுனி, கூர்மமுனி, கமலமுனி, இடைக்காடர், புண்ணாக்கீசர், சுந்தரானந்தர், ரோமரிஷி மற்றும் பிரமமுனி ஆகிய 18 சித்தர்களில் இவர் ஒருவரே, நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். தவத்தால் ஞானம் பெற்ற சித்தர்கள் மவுனம் ஆகி விடுவார்கள். ஆனால் ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் உயர் நோக்கில், தான் பெற்ற ஞானத்தை நமக்கு அளித்து மகிழ்ந்தார் திருமூலர். அவருடைய வரலாறு அற்புதமானது. இவரது வரலாற்றை 28 பாடல்களில் பெரிய புராணத்தில் அழகாகப் பாடியுள்ளார் சேக்கிழார்.

வரலாறு

முழுமுதற்கடவுள் சிவபெருமான். இவரிடம் சிவஞான உபதேசம் பெற்ற நந்திபெருமானிடம் உபதேசம் பெற்றவர் சுந்தரநாதர். இவர் தான் அறிந்தது போக, மேலும் எண்வகை சித்திகளையும், யோகங் களையும் கற்கும் பொருட்டு, தமிழகத்தின் பொதிகை மலையில் வாழ்ந்த அகத்தியரைத் தரிசிக்க வந்தார். அந்த பயணத்தின்போது, வழியில் திருவாவடுதுறைக்கு அருகில் சாத்தனூரில் பசுமாடுகள் மேய்க்கும் ‘மூலன்’ என்பவன் இறந்து கிடந்தான். அதனால் கலங்கி நின்ற பசுக்களின் கண்ணீரைத் தாங்காத சுந்தரநாதர், ‘தன் உடலை மறைத்து, மூலன் உடலுக்குள் பரகாயப்பிரவேசம் செய்தார். பசுக்கள் மகிழ்வில் ஆனந்தக் கண்ணீர் விட்டன. மூலனின் மனைவி வீட்டுக்கு அழைத்தாள். ஆனால் திருவாவடுதுறை கோயிலில் போதிமர மாகிய அரசமரத்தின் கீழ், ஐம்புலனை அடக்கி தவநெறியில் யோகியாக அமர்ந்தார் மூலனாகிய சுந்தரநாதர். ‘தவராஜயோகி’ ஆகி மவுனம் காத்தார்.
ஒரு வருடம் தவமிருப்பார் திருமூலர். ஒரு பாடலைப் பாடுவார். மீண்டும் தவத்தில் மூழ்குவார். ஒருவருடம் முடிந்ததும் தவத்தால் தாம் பெற்ற அனுபவத்தை ஒரு பாடலாகப் பாடுவார். அப்படி மூவாயிரம் ஆண்டுகள் தவமியற்றி மூவாயிரம் திருமந்திரப் பாடல்களை அருளிச் செய்தார்கள் திருமூல நாயனார். மேலும்  ‘தன்னை நன்றாகத் தமிழ் செய்ய என்னை நன்றாக இறைவன் படைத்தான்’ என்று தன் வாழ்வின் நோக்கத்தை அறிவித்தார்.


முதல் மொழிபெயர்ப்பாளர்

சதாசிவன் வடமொழியில் 28 ஆகமங்களை உபதேசித்தார். அவற்றில் காலத்திற்கு தேவையான காரணம், காமிகம், வீரம், சிந்தம், வாதுளம், காலோத்தரம், சுப்பிரபேதம், மகுடம், வியாமளம் என்னும் 9 வடமொழி ஆகமங்களை தமிழாக்கி எளிதாக்கித் தந்தார். இது பத்தாம் திருமுறையாக போற்றப்படுகிறது.

siva2_15048.jpg


அன்பே சிவம்


திருமந்திரம் ஆகமத்தின் சாரமாக அமைந்திருந்தாலும் அனைவரும் அறியக்கூடிய எளிமையும், இனிமையும் உடைய பாடல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.  ‘அன்பே சிவம்’ என்ற தொடரைப் பலரும் அறிவோம். மனிதர்கள் ஏனைய மனிதர்கள்பால் செலுத்தும் அன்பில்தான் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலகத்தில் தோன்றிய கடவுள் சார்புடைய மதங்களும், கடவுள் மறுப்புச் சமயங்களும் கூட அன்பினைப் பெரிதும் போற்றியே உரைக்கின்றன. இதைதான் நீங்கள் பிறர் மீது அன்பு செலுத்தினால் இறைவன் உங்கள் மேல் அன்பு செலுத்துவார் என்று திருமூலரும் வலியுறுத்தியுள்ளார்.


அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்
- திருமந்திரம் 270


உள்ளமே கோயில்

இறைவனை அறிவதற்கும் அடைவதற்கும் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அக வழிபாடு, மற்றொன்று புற வழிபாடு. இதில் அக வழிபாடு தியானம் அதாவது தவம், அதேபோல புற வழிபாடு பூஜை, தொண்டு ஆகியவைதான். உள்ளம் பெருங்கோயில் எனக்கூறிய ஆன்ம நேய அருட்கவி திருமூலர். கடவுள் வெளியே இல்லை உன் உள்ளேயும் இருக்கிறார் என்பது தான் கடவுள் பற்றிய இவரது ஒற்றை வரி கண்டுபிடிப்பாகும்.  இதைதான் அகம்பிரம்மா என்று வேதம் கூறுகிறது. எனவே உள்ளத்தில் அன்பு இல்லாமல் கூடைகூடையாய் கோயிலுக்கு லட்சார்ச்சனை செய்வதை விட, உள்ளன்போடு கடவுளை வணங்கினால் போதுமானது என்கிறார்.


அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி
என்போன் மணியினை எய்த ஒண்ணாதே - திருமந்திரம் 272

 

கோயிலுக்குச் செல்வது, பூஜை செய்வது, மந்திரம் சொல்வது, படையல் வைப்பது போன்றவையெல்லாம் முக்கியம்தான். ஆனால் அவற்றையெல்லாம்விட, உண்மையான அன்பு வேண்டும். அதனால் உங்கள் உள்மனம் குழைந்து அவனை வணங்கிச் சரணடைய வேண்டும். அப்போதுதான் ஒப்பற்ற மணியாகிய அவனது திருவருள் உங்களுக்குக் கிடைக்கும்.


அதேபோல விண்வெளியையும், கோள்களையும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் நவீன வாழ்க்கை முறையில் முதலில் தன்னை யார் என்பதை அறிந்த கொள்ள யாரும் முற்படுவதில்லை. எனவே முதலில் உன்னை நீயே அறிந்துகொள்,  அப்படி அறிந்துகொண்டால்,  அனைத்தும் அறியலாம் என்கிறார் திருமூலர்.


என்னை அறிந்திலேன்
இத்தனை காலமும்
என்னை அறிந்தபின் ஏதும்  
அறிந்திலேன்   - திருமந்திரம் 2366


ஆன்மிக விஞ்ஞானி

ஆன்மிகமும் அறிவியலும் வேறன்று, இரண்டும் ஒன்றென்றார். ஆன்மிகத்தால் தான் பெற்ற அறிவியல் கருத்துக்களை விதைத்தார்.
குறிப்பாக மருத்துவ அறிவியலுக்கு முன்னோட்டமாக, பல வியத்தகு அறிவியல் அற்புதங்களை விளக்குவதாக உள்ளன. திருமந்திரம் இரண்டாம் தந்திரத்தில் ‘கரு உற்பத்தி’ எனும் தலைப்பில் உள்ள 41 பாடல்களை  இன்றைய மகப்பேறு குறித்தும் பாடியுள்ளார்.
சேர்க்கையின்போது, பெண் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால் குழந்தை மந்தனாகப் பிறக்கும். சிறுநீர் தேங்கியிருந்தால், ஊமைக் குழந்தையும், இரண்டுமே இருந்தால் குழந்தை குருடாகவும் பிறக்கும் என்று 481-ஆம் பாடலில் சொல்கிறார் திருமூலர். எனவே சேர்க்கைபோது தூய்மையுடனும், உயர் எண்ணங்களுடனும் தம்பதிகள் இருந்தால் நல்ல பிள்ளை உருவாகும் என்கிறார்.


எல்லா உயிர்களையும் நேசி


யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது
        ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்உரை தானே

- திருமந்திரம் 252


எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும். பசுவுக்குப் புல் தருவது, ஏழைக்கு ஒரு கவளம் உணவு தருவது, துன்பத்தில் உள்ளவருக்கு ஆறுதல் சொல்வது, பெற்றோரைக் காப்பது, மற்றவருக்கு உதவுவது ஆகியன தர்மங்கள் என்கிறது திருமந்திரம்.
ஆக, நாம் திருமந்திரம் காட்டும் வழிப்படி தர்மங்கள் செய்வோம்;  பொல்லாப் பிணியும், சொல்லொணா துயரங்களும் இல்லாத வாழ்வை பெற்று மகிழ்வோம்.

sivam_15334.jpg


ஆற்றரு நோய்மிக்கு,
      அவனிமழை இன்றிப்
போற்ற அருமன்னரும்     
      போர்வலிகுன்றுவர்
கூற்று உதைத்தான்
        திருக்கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில்தானே
- திருமந்திரம் 517


சிவாலயங்களில் பூசைகள் குறைந்தால் நோய் மிகும், மழை குறையும், மன்னர் கெடுவர் என்கிறார் திருமூலர். திருக்கோயிலை முன்னோர்கள் பக்தியுடன் கட்டினர். அதற்கு பலகோடி சொத்துக்களையும் தந்தனர். ஆனால் அந்தச் சொத்துகளை இன்றைய மக்கள் அபகரித்து வாழ்கிறார்கள். கோயில்களை வியாபார நோக்கில் செயல்படும் மையங்களாக மாற்றி வருகிறார்கள். அதனால்தான் வளம் குன்றி மழையை இழந்தோம்; துயரங்களை அனுபவிக்கிறோம்.

அதேபோல மனிதன் இயற்கையை கடவுளாக வணங்கியவரை அதுவும் இயல்பாக உதவியது. இன்று இயற்கையை அழித்து, மாசுபடுத்துவதால் இயற்கை பேரிடர்கள் உருவாகின்றன. எனவே  ஆலய பூசைகளை முறைப்படி செய்வோம்; மழை பெறுவோம்!


திருமூலர்  காட்டும் வழி

நம்மால் ஞானியர் போன்று பாவபுண்ணியங்களைக் கடக்க இயலா விட்டாலும், பாவங்கள் செய்வதையாவது தவிர்ப்போம். இயன்றவரையிலும் தான-தருமங்கள் செய்து, ஞானநூல்கள் காட்டும் அறவழியில் வாழ்வோம். அப்போது நம் மனவளமும் வாழ்க்கையும் சிறக்கும்.

நவம்பர் 13,  திருமூலர் நினைவு தினம்.

vikatan

  • தொடங்கியவர்

 

“புனிதமான இனிப்பு” - காணொளி

  • தொடங்கியவர்
Madam President: திரைப்படங்கள், தொலைக்காட்சிகளில் அமெரிக்க பெண் ஜனாதிபதிகள்
 

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஹிலாரி கிளின்டன் தெரி­வா­குவார் என்ற கனவு கலைந்­து ­விட்­ட­து.

 

2058412.jpg

 

200 வரு­டங்­க­ளுக்கு மேலாக நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்சி நடத்தும் அந்நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக பெண்கள் எவரும் தெரி­வா­க­வில்­லை.

 

எனினும், ஹொலிவூட் திரைப்­ப­டங்களில் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக பெண்கள் சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்­ளனர்.

 

20584_13.jpg

அமெ­ரிக்க தொலைக்­காட்சித் தொடர்­க­ளிலும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பாத்­தி­ரத்தில் பெண்கள் நடித்­துள்­ளனர்.

 

1953 ஆம் ஆண்டு வெளி­யான புரொ ஜெக்ட் மூன்பேஸ் எனம் திரைப்­ப­ட­மா­னது அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக பெண் ஒரு­வரை காண்­பித்த முதல் திரைப்­ப­ட­மாகும்.

 

20584_15.jpg

 

அது ஒரு கறுப்பு வெள்ளை விஞ்­ஞான புனைக்­கதை படம். இப்­ப­டத்தில் நடிகை எமி ஸ்டைன் பெரியர், அமெ­ரிக்க  ஜனா­தி­ப­தி­யாக நடித்தார். 

 

1985 ஆம் ஆண்டு அமெ­ரிக்­காவின் ஏபிசி அலை­வ­ரி­சையில் ஒளி­ப­ரப்­பான “ஹெய்ல் டு த சீவ்” எனும் தொடரில், ஜனா­தி­பதி ஜூலியா மேன்ஸ்பீல்ட் எனும் பாத்­தி­ரத்தில் நடிகை பெட்டி டியூக் நடித்தார்.

 

20584_14.jpg

 

1997 ஆம் ஆண்டு வெளி­யான “எயார் போர்ஸ் வன்” படத்தில் கடத்­தப்­பட்ட ஜனா­தி­ ப­தியை விடு­விப்­ப­தற்­காக ரஷ்ய தீவி­ர­வா­தி­க­ளுடன் பேச்சு நடத்தும் பெண் உப ஜனா­தி­ப­தி­யாக நடிகை கிளென் குளோஸ் நடித்தார்.

 

பேட்­டில் ஸ்டார் கெலஸ்­டிகா தொட ரில் ஜனா­தி­பதி மேரி மெக்­டொனால் எனும் பாத்­தி­ரத்தில் லோரா ரோஸ்லின் நடித்தார்.

 

 

20584_11.jpg

 

2005 ஆம் ஆண்டு ஒளி­ப­ரப்­பான “கொமா ண்டர் இன் சீவ்” தொடரில் மெக்­கன்ஸி அலன் எனும் ஜனா­தி­ப­தி­யாக நடிகை கீனா டேவிஸ் நடித்தார். 


“24” எனும் தொலைக்­காட் சித் தொடரில் பெண் ஜனா­தி­ப­தி­யாக நடிகை செரி ஜோன்ஸ் நடித்தார்.

 

எச்.பீ.ஓ. அலை­வ­ரி­சையின் “வீப்” தொடரில் ஜனா­தி­பதி செலினா மேயர் எனும் பாத்­தி­ரத்தில் நடிகை ஜூலியா லூயிஸ் நடித்தார்.

 

ஏ.பி.சி. அலை­வ­ரி­சையின் ''ஸ்கெண்டல்'' தொடரில் ஜனா­தி­பதி கிராண்­டுக்கு கோமா ஏற்­பட்­ட­வுடன் சிறிது காலத்­துக்கு ஜனா­தி­பதி பொறுப்பை ஏற்கும் உப ஜனா­தி­பதி சாலி லாங்ஸ்டன் எனும் வேடத்தில் நடிகை கேட் பார்ட்டன் நடித்தார்.

 

20584_stae-of-affairs-woman-president.jp

 

ஸ்டேட் ஒவ் அஃபெயர்” - அல்­பிரே வூடார்ட்


 

 

2014 முதல் என்.­பி.சி அலை­வரிசையில் ஒளி­ப­ரப்­பான “ஸ்டேட் ஒவ் அஃபெயர்” தொட ரில் அமெரிக்க ஜனாதிபதி கொன்ஸ்டன்ஸ் பெய்ட்டன் எனும் பாத்திரத்தில் நடிகை அல்­பிரே வூடார்ட், நடித்தார்.

இது அமெரிக்கா வின் முதல் கறுப்பின பெண் ஜனாதிபதி பாத்திரமாக சித்திரிக்கப் பட்டிருந்தது.

 

 

20584_metro-plus-2.jpg

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

“நாணல் படகு பயணம்”- காணொளி
நவீன காலத்தில் முற்கால கடலோடிகள் போல கடல் பயணம்

  • தொடங்கியவர்

15027921_1182255988489760_90636287057907

தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத அற்புதப் பின்னணிப் பாடகியான P.சுசீலாவின் பிறந்தநாள் இன்று.

தசாப்தங்கள் பல கடந்து பாடியவர்.
தாய்மையும் இனிமையும் குரலில் நிரம்பி வழியும்.
ஆனால் அன்பும் தன்னடக்கமும் நிறைந்த ஒரு அதிசயம் - இந்த உச்சம் தொட்ட நட்சத்திரப் பாடகி.

என்றும் மனதில் நிற்கும் பாடல்கள் தந்த சுசீலா அம்மையாருக்கு  வாழ்த்துக்கள்.

 

‘சுகமான குரல்... அது பி.சுசீலாவின் குரல்...' - பி.சுசீலா பிறந்ததினம்

பி சுசீலா

 

'தமிழுக்கும் அமுதென்று பேர்...' எனப் பாடியவர் பி.சுசீலா. அவர் பாடிய அத்தனை பாடல்களுமே நமக்கு அமுத கானங்கள்தான்.

 ‘சுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்றேன்... எனக்கும் அந்தக் குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்...’  & இது 'யூத்' படத்தில் 'சர்க்கரை நிலவே...' பாடலின் இடையில் வரும் வரிகள்.

சுசீலாவின் குரலுக்கு மயங்காதவர் யாரேனும் இருக்க முடியுமா?

'உயர்ந்த மனிதன்' படத்தில் 'பால் போலவே' பாடலுக்காக பின்னணிப் பாடகருக்கான முதல் தேசிய விருதை பெற்றவர். அதன் பிறகு 5 முறை தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

பத்மபூஷண் விருது இவரால் பெருமை அடைந்திருக்கிறது. 

தனிப்பாடல், டூயட், கோரஸ் என எல்லாம் சேர்த்து  மொத்தம் 17,695 பாடல்களைப் பாடிய சாதனையாளர் என கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் இவரை சமீபத்தில் கவுரவித்திருக்கிறது.
இந்தக் கணக்கு முழுமையானதல்ல. 

‘‘துலு, ஒரியா உள்பட 12 மொழிகளில் பாடியிருக்கிறேன். அத்தனை மொழிகளிலும் நான் பாடிய பாடல்களின் பட்டியலைத் தயாரிக்கிற வேலையை என் ரசிகர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் நான் பாடிய தனிப்பட்ட ஆல்பங்களும் அடக்கம். 30 ஆயிரத்தைத் தாண்டிவிடும் எனச் சொல்கிறார்கள். அந்தக் காலத்தில் என் வேலை வெறுமனே பாடுவது மட்டும்தான் என்பதால் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை...’’ அடக்கமாகச் சொல்கிறார் குரலரசி. 

இத்தனைக்கும் இவரது தாய்மொழி தெலுங்கு. அட்சர சுத்தமான தமிழில் அவர் பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் பாடகர்களுக்கு தமிழில் எப்படிப் பாட வேண்டும் என்பதற்கு மட்டுமல்ல, தமிழ் வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்கும் பாலபாடங்கள்!

''ஒரு பாடகருக்கு உச்சரிப்பு எத்தனை முக்கியம் என்பதை நான் சங்கீதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்த நாட்களிலேயே உணர்ந்து கொண்டேன். ஒரு பாடலின் வெற்றிக்கு இசையும், வரிகளும் மட்டுமல்ல, வரிகளை சரியாக உச்சரிப்பதுகூட அவசியம் என்பது என் கருத்து...'' என்கிற சுசீலா, பாடகியான பிறகே தமிழ், மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் கற்றுக் கொண்டிருக்கிறார்.

''ஏ.வி.எம் நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் வேலை பார்த்திருக்கிறேன். ஏ.வி. மெய்யப்பன் அவர்கள் எனக்கு தமிழ் கற்றுக் கொடுக்க ஒரு ஆசிரியரையும் வைத்தார். மலையாளத்தில் பாட வாய்ப்புகள் வந்த போது, அந்த மொழியும் எனக்குப் பரிச்சயமில்லாததாகவே இருந்தது. இசையமைப்பாளர்கள் எனக்கு பாடல் வரிகளை மொழி பெயர்த்துச் சொல்வார்கள்...'' தன்னடக்கத்துடன் சொல்கிற சுசீலா, விஜயநகரத்தில் இசையில் டிப்ளமா முடித்தவர். தனது 14 வயதில் முதல் கர்நாடக சங்கீத கச்சேரி செய்தவர். ஆதிநாராயண ராவ், ராஜேஸ்வரராவ், பெண்டியாலா மாதிரியான ஜாம்பவான்களிடம் ஹிந்துஸ்தானி பாணி கற்றுக் கொண்டவர்.

''அந்தக் காலத்தில் டி.எம்.எஸ்., பி.பி.ஸ்ரீனிவாஸ், ஏ.எம்.ராஜா, ஜிக்கி, கண்டசாலா, பி.லீலா எல்லாருக்குமே இருந்த தனித்தன்மை பாராட்டத்தக்கது. ஒருவரின் நிழல்கூட மற்றவரின் மேல் படாது. இப்போது சில  கலைஞர்களிடம் மட்டுமே அதைப் பார்க்க முடிகிறது... பாடகர்களுக்குத் தனித்தன்மை தேவை...'' என்கிற சுசீலா, 'பி.சுசீலா டிரஸ்ட்' என்கிற பெயரில், சத்தமின்றி சேவையில் ஈடுபட்டு வருவது பலரும் அறியாதது.

''அது நலிந்த இசைக் கலைஞர்களுக்காக நடத்தப்படுவது. ஒவ்வொரு மாதமும் கலைஞர்களுக்கு பென்ஷன் கொடுக்கப்படுகிறது. வருடா வருடம் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி, முக்கியமான கலைஞர்களை கவுரவித்து அதில் வரும் பணத்தை டிரஸ்ட் கணக்கில் சேர்த்து விடுகிறோம். பல கலைஞர்களுக்கு மருத்துவ வசதியும் செய்து கொடுத்திருக்கிறோம்...’’ என்பவர் அதை விளம்பரப்படுத்திக் கொள்வதில் விருப்பமின்றி வியக்க வைக்கிறார்.

தனக்கு குறையொன்றும் இல்லை என்கிற சுசீலா, இந்தத் தலைமுறை இசைக் கலைஞர்களைக் குறை சொல்லவும் விரும்பாதவர்.
''அந்தக் காலத்து இசையை, இந்தக் காலத்து இசையுடன் ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. எல்லா கலைஞர்களுமே உழைக்கிறார்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் போன்ற இசை ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றுகிற மிகப் பெரிய அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. இதையும்விட சிறப்பாக ஏதேனும் செய்திருக்கலாமோ... தொழில்நுட்பங்கள் முன்னேறியிருக்கிற இந்தத் தலைமுறையில் பிறந்திருக்கலாமோ என்றெல்லாம் நான் நினைத்ததுகூட இல்லை.  அந்தக் காலத்து இசையமைப்பாளர்கள் அத்தனை சுலபத்தில் திருப்தி அடைய மாட்டார்கள். எங்களால் இவ்வளவுதான் முடியும் என நாங்கள் நம்புவதைப் போல பத்து மடங்கு அதிகமாக எங்களிடமிருந்து வேலை வாங்குவார்கள். அவர்கள் நினைத்தது வருகிற வரை ஓயமாட்டார்கள். 

தனது சக இசைக்கலைஞர்களுடனான நட்பு, ரசிகர்களை சந்திப்பது, டிவோஷனல் ஆல்பம் தயாரிப்பது, ஃபேஸ்புக்கில் பாடல்களைக் கேட்பது என இந்த வயதிலும் பிசியாகவே இருக்கிறார் பி.சுசீலா. அந்த நட்புப் பட்டியலில் ஜேசுதாஸும், ஜெயச்சந்திரனும் முக்கியமானவர்கள். எம்.எஸ்.வி உயிருடன் இருக்கும்வரை அடிக்கடி அவரை சந்தித்துப் பேசி, மலரும் நினைவுகளில் மூழ்குவது சுசீலாவுக்குப் பிடித்தமான செயலாக இருந்திருக்கிறது.

vikatan

  • தொடங்கியவர்

இன்று இரவு ‘சூப்பர்' நிலாச் சோறு சாப்பிடலாமா..?!

Thiruvannamalai_14419.jpg

‘நிலா நிலா ஓடி வா... நில்லாமல் ஓடிவா’ எனக் குழந்தைகளுக்கு அம்மாக்கள் சாதம் ஊட்டுவார்கள். அப்போதெல்லாம் நிலா வராமல் போகும். ஆனால், 69 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இரவு பூமிக்கு நிலா வராது என்றாலும், பூமிக்கு மிக அருகில் வரப்போகிறது. நிச்சயம் இன்று மொட்டை மாடிக்குப்போய் குழந்தைகளுடன் 'நிலாச் சோறு' சாப்பிடுங்கள். வழக்கத்தைவிட நிலா பெரியதாக இருக்கும்... இல்லை பெரியதாக இருக்காது... பெரியதாகத் தெரியும். 

இது பற்றி நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘1948-ம் ஆண்டுக்குப் பிறகு நிலா பூமிக்கு மிக அருகில் வருவது இப்போதுதான். அதாவது இன்று ஞாயிற்றுக் கிழமை (13-11-2016) இரவுதான். ‘இன்று மிகவும் மேக மூட்டமாக இருந்து நிலாவை முழுமையாகப் பார்க்க முடியாவிட்டால், நாளை காலை 6:22 மணிக்குப் பார்க்கலாம்’ என்கிறார்கள். காலையில்தான் ரொம்பப் பெரியதாகவும் அழகாகவும் இருக்கும்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே  நீள்வட்டச் சுற்றுப்பாதையில் வரும் நிலா வழக்கத்தைவிட 30 சதவிகிதம் கூடுதலான ஒளிப்பிழம்பில் பூமியைக் குளிக்கச் செய்யப் போகிறது... இல்லை குளிர்விக்கப்போகிறது. இத்தனைக்கும் இந்த ஆண்டு அக்டோபர் 16, நவம்பர் 13மற்றும் டிசம்பர் 14 என மூன்று 'சூப்பர் மூன்கள்' வந்தாலும், நவம்பர் மாதத்தில் வரும் இந்த சூப்பர் மூன்தான் பெரியது. ‘இன்று நீங்கள் பார்க்கத் தவறினால், வரும் 2034-ம் ஆண்டு நவம்பர் 25 வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்’ என்று அறிவித்திருக்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள். 
வழக்கமாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் 14 கி.மீ மலையை கிரிவலம் வருவார்கள். மாதாந்திர பௌர்ணமியன்று மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையாக உள்ள சிவனை வலம் வருவார்கள். ‘பௌர்ணமி அன்று வலம் வந்தால், அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும்’ என்பது மக்களின் நம்பிக்கை. அதுவும் இன்றைய தினம் நிலா ரொம்பவே பூமிக்கு அருகில் வருகிறது.

 

Super%20Moon_14052.jpg

ஜோதிட ரிதீயாக மனோகாரகனான சந்திரன், பூமிக்காரகனான செவ்வாய்க்கு அருகே வரும்போது என்னவிதமான நிகழ்வுகள் நடக்கும் என்பது பற்றி ஜோதிட நிபுணர் மீனாட்சி அழகப்பனிடம் கேட்டோம். “சூரியன் துலாம் ராசியிலிருந்து விருச்சிகத்துக்குச் செல்கிறது. சந்திரன் பரணி நட்சத்திரத்திலிருந்து கிருத்திகை நட்சத்திரத்துக்குச் செல்கிறது.

பொதுவாக, பூமியின் துணைக் கிரகமான சந்திரன் பூமிக்கு அருகில் வரும்போது கடல் அலைகள் மிகவும் அதிகமாக இருக்கும். மனோகாரகனான சந்திரன் மனதில் ஆயிரம் எழுச்சிகளைத் தோற்றுவிக்கும். மக்களுக்கு சுபிட்சம் கிடைக்கும். செடிகொடிகள் நன்றாகவும் வேகமாகவும் வளரும். இன்னும் பதினைந்து நாட்களுக்கு கீரைகள், காய்கறிகளில் அதிக அளவில் சத்துக்கள் சேகரமாகியிருக்கும். பூமியில் வாழும் எல்லா உயிர்களுக்கும் வழக்கமான நாட்களைவிட 'எனர்ஜி லெவல்' கூடுதலாகக் கிடைக்கும். இதனால், மலை முழுவதும் அண்ணாமலையாக இருக்கும் திருவண்ணாமலையை இந்த நாளில் கிரிவலம் வந்தால் பெரிய அளவில் பலன்கள் கிடைக்கும். மனம் ரீ ஸ்டார்ட் செய்யப்பட்ட கம்ப்யூட்டர்போல் ரெஃப்ரெஷ் ஆகிவிடும்.

 

moon%20with%20tv%20malai_14570.jpg

பரணி, கார்த்திகை, ரோஹிணி, பூரம், உத்திரம், ஹஸ்தம், பூராடம், உத்திராடம் மற்றும் திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு மனதில் பலவிதமான எழுச்சிமிக்க சிந்தனைகள் உருவாகும். இன்று அவர்கள் கிரிவலம் வந்தால், நெடுநாட்களாக இருந்து வந்த பிரச்னைகளுக்கு தீர்க்கமான முடிவுகளை எடுப்பார்கள். மூளையும் மனமும் நல்லவிதமாக ட்யூனாகும். எதிர்காலம் குறித்து தெளிவான முடிவெடுப்பார்கள்” என்று தெரிவித்தார். அதனால், இந்த கிரிவல நாளில் வலம்  வந்து அண்ணாமலையார் அருளைப் பெறுவோம்.

vikatan

  • தொடங்கியவர்

ஸோம்பிகாரன்!

 

p78b.jpg

ரு மனிதனை இறந்த நிலைக்குக் கொண்டுசென்று மீண்டும் உயிரோடு பிழைக்க வைக்க முடியுமா? ஆம். முடியும். சுயநினைவற்ற அவர்களைத் தங்களுக்கு அடிமைகளாகப் பயன்படுத்த முடியும் என்றும், முழுக்க முழுக்க மூர்க்க குணம் கொண்ட அந்த அடிமைகள்தான் `ஸோம்பிகள்' என்றும் நம்பப்படுகின்றனர். இந்த ஸோம்பிகள் அளவில்லா வலிமையோடு அருவருப்பான தோற்றம் கொண்டவை. காட்டேரிகளைப் போல நரமாமிசத்திற்காய் அலைபவை எனவும் கருதப்படுகின்றன. கனடாவைச் சேர்ந்த ரிக் கெனெஸ்ட் எனும் இளைஞர் தன்னை ஒரு ஸோம்பியாக அடையாளப்படுத்திக்கொண்டு இவ்வாறாக சுற்றித் திரிகிறார். வாங்க, என்னன்னு பார்ப்போம்!

p78a.jpg

பொதுவாக, அனைவரும் சூப்பர் ஹீரோவாகி மக்களுக்கு உதவ வேண்டும் என்றுதான் நினைப்போம். ஆனால், இவர் சிறுவயதிலிருந்தே ஸோம்பியாக வேண்டும் என்கிற ஆசையால் தனது முகம் உட்பட உடலின் அனைத்துப் பாகங்களிலும் விதவிதமான டாட்டூஸ்களை வரைந்துகொண்டு அபாயகரமான தோற்றத்தோடு காணப்படுகிறார்.

p78c.jpg

தனக்குப் பதினாறு வயது தொடங்கியது முதலே டாட்டூ குத்திக்கொள்ள ஆரம்பித்ததாகவும் அதன் மூலமாகவே பல நிறுவனங்களுக்கு மாடலாகப் பணியாற்றி வருவதா கவும் தெரிவிக்கிறார். நாடோடி வாழ்க்கை முறையில் வாழ்ந்துவரும் ரிக், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் சுற்றித் திரிந்து பெரும்பாலானோரை பயமுறுத்திக்கொண்டி ருக்கிறார். இவர், லேடி காகாவின் `Born this way' பாடல் வீடியோவுக்காக நடித்தும் இருக்கிறாராம். தான் டாட்டூ குத்திக்கொள்ளும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாகவும், மற்றவர்கள் தன்னைப் பார்த்து பயப்படுவதையும் `ஸோம்பி' எனக் கத்திக்கோண்டு ஓடுவதையும் ரசிப்பதாக இவர் கூறியிருக்கிறார். அதனாலேயே ஸோம்பி' போலவே கடைசிவரை வாழ விரும்புகிறாராம்.

ஊர்ல இருக்கிற வங்களை எல்லாம் பயமுறுத்துறது வெளையாட் டாய்யா..?

vikatan

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

 

 

110p4.jpg

facebook.com/வெ. பூபதி: நெஞ்சுரம் கொண்டவர்க ளையும் கலங்கவைத்து விடுகிறது குழந்தையின் ஜுரம்!

facebook.com/jv.balaji: கூரை மேல சோறு போட்டா காக்கா வருதோ இல்லையோ, வீட்டுக்காரன் வர்றான்... அசிங்கமா திட்டிக்கிட்டு. #வாடகை வீடு அட்ராசிட்டீஸ்!

facebook.com/rasanaikkaaran: நான் வளர்ற காலத்துல `அப்பா மூட்அவுட்ல இருக்கார். ஏதும் கேட்டு வாங்கிக் கட்டிக்காதே'னு எச்சரிக்கை செய்வார் அம்மா. இப்ப, `பாப்பா மூட் சரியில்லை. அவகிட்ட பேச்சு குடுக்காத'னு தங்ஸ்கிட்டேருந்து எச்சரிக்கை வருது. ஒரு குடும்பத் தலைவருக்கு நாட்டுல மரியாதை இல்லியா?!

 

110p1.jpg

facebook.com/venkatesh.arumugam1: திருட்டுத் தனமா லவ் பண்றவன், லவ்வரோடு தியேட்டருக்குப் போய் படம் பார்க்கிறான். ஊரறிய கல்யாணம் பண்ணவன், குடும்பத்தோடு திருட்டு வி.சி.டி-யில் படம் பார்க்கிறான்!

twitter.com/mokrish:  இந்த டச் போனில் படித்ததில் பிடித்ததை `வெட்டி'னால் அதை வேறு இடத்தில் ஓட்டும் வரை எல்லா சொற்களும் விரல் நுனியில் இருப்பதுபோல் ஒரு ஃபீலிங்.

twitter.com/gowtwits: புலம்புறதுக்கு ரெண்டே காரணங்கள்தான். நமக்கு மட்டும் ஏன் எதுவுமே நடக்க மாட்டேங்குது? நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது?

twitter.com/Aruns212:  தனியாக வீட்டில் இருக்கும்போது, டிஸ்கவரி சேனல் பார்ப்பவனை விடவா சிறந்த யோக்கியன் இந்த உலகில் இருந்துவிடப்போகிறான்!?

 

110p2.jpg

twitter.com/Jvs2020:  சில சம்பவங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்... அது உங்களுக்கு தீர்க்கமான சில முடிவுகளைக்கூடக் கொடுக்கலாம்!

twitter.com/mrithulaM: பேசாமல் முறுக்கிக் கொண்டிருக்கும் கணவனைப் பேச வைப்பது சுலபம், முக்கியமான பொருளை ஒளித்துவைத்தால் போதும்!

twitter.com/withkaran: டிஸ்ப்ளே பிக்சரில் ஜிகினா வேலை காட்டிக்கொண்டிருந்தவர்களுக்கு, நூறு நாள் சேலை மற்றும் டப்ஸ்மாஷ் யுவதிகளின் வருகை அடிவயிற்றில் புகைச்சலைக் கிளப்பியிருக்கும்!

twitter.com/ThePayon: உலகிலேயே மிகச்சிறியது... ஞாயிற்றுக்கிழமை!

twitter.com/Tparavai:  எங்க அம்மாகூடச் சேர்ந்து சீரியல் பார்த்து ரொம்பக் கெட்டுப்போயிட்டா வெண்ணிலா.ஏதாச்சும் தப்பு பண்ணினா, காலில் விழுந்து `மன்னிச்சுடுங்க'னு அழறா... # அவ்வ்!

110p3.jpg

twitter.com/naaraju: ``என்ன மாப்ளே... மழை தூறுது. செல்போனை நோண்டிக்கிட்டே வர்றீங்க... நனைஞ்சுடப் போகுது!’’ # தப்பித் தவறிகூட உன்னையப் பார்த்துரக் கூடாதுனுதான்யா!

twitter.com/sathyathetruth:  நல்ல ட்விட்ட 140-க்குள்ள கொண்டுவர்றதுக்கு, `அந்நியன்’ பிரகாஷ்ராஜ் மாதிரி எல்லாம் யோசிக்கவேண்டியிருக்கு #அகூம்பதம், அந்தகூபம், கூபமந்தாஆ

vikatan

  • தொடங்கியவர்

ஈ.வெ.ரா. பெரியார் ஆன தினம் இன்று..

konjam-manam2e_10256.jpg

பெண்களுக்கு கல்வி சொத்துரிமை போன்றவைகள் அடிப்படை தேவை என்றும் கைம்மை வாழ்வு வரதட்சணை கொடுமை போன்றவை அகற்றப்பட வேண்டியவை என்றும் கர்ஜித்த  ஈ.வெ.ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட பகுத்தறிவு பகலவனுக்கு பெரியார் பட்டம் வழங்கப்பட்டது இதே தினத்தில்தான். கடந்த 1938 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 13 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் அவருக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இம்மாநாட்டில் தருமாம்பாள் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.