Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

இது ‘மாற்று’ ஃபேஷன் ஷோ!

 
fashion_3083574h.jpg
 

அந்த அரங்கினுள் ஜூலி ராட்ரிக்யூஸ் ஒய்யாரமாய் நடந்து வந்து சுழன்று நின்றபோது பார்வையாளர்கள் கண் இமைக்க மறந்துதான் போனார்கள். இரண்டு கால்கள் உடையவர்களே ஃபேஷன் ஷோக்களில் தடுமாறும்போது, பிறக்கும்போதே கால்களின்றி பிறந்த ஜூலி இயந்திரக்காலில் மயில்போன்று நடந்து வந்தது, பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கொலம்பியாவின் பிரபல ஃபேஷன் டிசைனர் குயோ டி, ஃபேஷன் ஷோவின் காலங்காலமாகத் தொடர்ந்து வரும் வழக்கங்களை மாற்றி நிகழ்ச்சி நடத்துபவர். அதன் தொடர்ச்சியாக, ‘அழகுப் புயல்களின் அணிவகுப்பு… ஆடைகளின் தொகுப்பு’ என்ற வழக்கத்தை ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஃபேஷன் ஷோவைக் கடந்த வாரம் நடத்தியிருக்கிறார். இந்த ‘வாக்வே இன்க்ளூஷன் ஃபேஷன் ஷோ’வில், செயற்கைக் கை, கால்கள் பொருத்திய மாற்றுத் திறனுடையோர், நிறமிக் குறைபாடு, அடர்த்தியான நிறமுடைய ஆப்பிரிக்கப் பழங்குடி மக்கள், ஆண், பெண் தன்பாலின உறவாளர்கள் என வித்தியாசமான மாடல்கள் மேடையை வலம் வர ஃபேஷன் உலகம் சற்று நெகிழ்ந்துதான் போனது. இயந்திரக் கை, கால்கள் பொருத்தப்பட்டவர்கள் மேடையை வலம் வர பார்வையாளர்கள் உற்சாக விசில் எழுப்ப, படு உற்சாகமாய் மாறிப்போனது கலிபோர்னியாவின் காலி நகரம்.

fashion_3083574a.jpg

உலகம் முழுவதும் வித்தியாசமான ஃபேஷன் ஷோக்கள் பரவலாக நடத்தப்பட்டு வரும் நிலையில் மாற்றுத் திறனாளிகள், மாற்றுப்பாலினத்தவர், மட்டுமல்லாமல் ஆப்பிரிக்கப் பழங்குடியின மக்கள் எனச் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட வர்களுக்கான மரியாதையைப் பெற்றுத்தருவதே இந்த நிகழ்வின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் கனவுகளும், ஆசைகளும் இருந்தாலும், தனக்கான கூட்டை விட்டு வெளியே வரத் தயங்கும் இவர்களுக்கான ஒரு வெளி ஏற்படுத்தித் தருவது ஒரு ஆரோக்கியமான சமூக மாற்றமாகத்தான் ஃபேஷன் உலகில் பார்க்கப்படுகிறது!

tamil.thehindu

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வரலாற்று பதிவாக அதிக தொகைக்கு விற்கப்பட்ட சித்திரக்கதை

 

துப்பறியும் சிறுவன் டின்டின்னை சித்தரிக்கும் ஒரு சித்திரக்கதை, 1.6 மில்லியன் டாலர் தொகைக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. சித்திரக்கதை வடிவத்தில் அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ள புதிய வரலாற்று பதிவை இது ஏற்படுத்தியுள்ளது.

துப்பறியும் சிறுவன் டின்டின்னை சித்தரிக்கும் ஒரு சித்திரக்கதை

 

ஹெர்ஜ் என்று அறியப்படும் பெல்ஜிய சித்திரப்பட கலைஞரின் தலைசிறந்த படைப்பு

சீன மையில் கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ள இதன் அசல் தட்டு, 1954 ஆம் ஆண்டு வெளியான "எக்ஸ்புளோர்ரஸ் ஆன் த மூன்" என்ற கதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

"திபெத்தில் டின்டின்" என்ற கதை தொகுப்போடு ஜார்ஜஸ் ரெமி என்ற இயற்பெயரை கொண்ட ஹெர்ஜ் என்று பரவலாக அறியப்படும் பெல்ஜிய சித்திரப்பட கலைஞரின் தலைசிறந்த படைப்பாக இது உள்ளது.

இன்று விற்கப்பட்ட இந்த சித்திக்கதை டின்டின், ஸ்னோயி என்று பொருள்படும் அவனது நாய் மிலூ மற்றும் நண்பர் கேப்டன் ஹெடுடோக் ஆகியோர் விண்வெளி ஆடை அணிந்து நிலவில் நடப்பதை காட்டுகிறது.

இன்னொரு காட்சியில் தொலைவில் இருக்கிற பூமியை ஆச்சரியத்துடன் அவர்கள் பார்ப்பதை காட்டுகிறது.

BBC

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...
நவம்பர் 21

 

1272 : மூன்றாம் ஹென்றி நவம்பர் 16 இல் இறந்ததையடுத்து அவரின் மகன் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னரானார்.


1791 : நெப்போலியன் போனபார்ட் பிரெஞ்சு இராணுவத்தின் தளபதியானார்.


852EdisonPhonograph.jpg1877 : ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராஃப் என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தோமஸ் அல்வா எடிசன் அறிவித்தார்.


1894 : சீனாவின் மஞ்சூரியாவில் ஆர்தர் துறைமுகத்தை ஜப்பான் கைப்பற்றியது.


1905 : ஆற்றலுக்கும் துணிவுக்கும் இடையேயான தொடர்பை விளக்கும் ஆய்வுக் கட்டுரையை அல்பேர்ட் ஐன்ஸ்டைன் வெளியிட்டார்.


1920 : அயர்லாந்தில் கால்பந்து போட்டியொன்றில் பிரித்தானியப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 14 ஐரிஷ் பொதுமக்கள் கொல்லப் பட்டனர்.


1962: இந்தோ - சீனப் போரில் போர் நிறுத்தம் செய்வதாக சீன மக்கள் விடுதலை இராணுவம் ஒருதலைப் பட்சமாக அறிவித்தது.


1969 : ஓக்கினாவா தீவை 1972 இல் ஜப்பானியரிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் அமெரிக்க  ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சனுக்கும் ஜப்பான் பிரதமர் ஐசாக்கு சாட்டோவுக்கும் இடை யில் வொஷிங்டனில் கையெழுத்திடப்பட்டது.
 


1974 : இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் ஐரிஷ் குடியரசு இராணுவத்தினரின் குண்டு வெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர்.


1980 : அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தில் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 87 பேர் கொல்லப்பட்டு 650 பேர் காயமடைந்தனர்.


1990 : மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல் ஆரம்பமானது.


1996 : புவேர்ட்டோ ரிக்கோவில் சான் ஜுவான் நகரில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.


2002: பல்கேரியா, எஸ்டோனியா, லத்வியா, லித்துவேனியா, ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனி ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைந்தன.


2004 : டொமினிக்கா தீவில் இடம்பெற்ற பூகம்பம் காரணமாக போர்ட்ஸ்மவுத் நகரில் பலத்த சேதம் ஏற்பட்டது.


2004: ஈராக் செலுத்த வேண்டிய சுமார் 100 பில்லியன் டொலர் கடன் தொகையை இரத்துச் செய்வதாக பாரிஸ் கழகம் எனும் அமைப்பைச் சேர்ந்த 19 நாடுகள் அறிவித்தன.


2009: சீனாவில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் 108 பேர் உயிரிழந்தனர்.


2013: லத்வியா நாட்டில் வர்த்தக கட்டடமொன்றின் கூரை இடிந்து வீழ்ந்ததால் 54 பேர் உயிரிழந்தனர்.


2015: தாக்குதல் அச்சுறுத்தல் குறித்த தகவல்களையடுத்து, பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில், வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், மூடப்பட்டு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டன.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலக தொலைக்காட்சி தினம் இன்று

 

tv_10507.jpg

நவம்பர் 21,1996-ம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலக தொலைக்காட்சி கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் நவம்பர் 21-ம் தேதியை உலக தொலைக்காட்சி நாளாக அறிவித்தது ஐ.நா. சிறிய கதவுகள் வைத்த டி.விக்கள் 90-களில் படு ஃபேமஸ். தற்போது, அந்த கதவு சைஸிலேயே தொலைக்காட்சி வந்து நம் வீடுகளை அலங்கரித்து வருகிறது.

vikatan

  • தொடங்கியவர்

இந்த 7 விஷயங்கள் தெரிந்தால் நீங்களும் விவசாயி தான்! #MondayMotivation #GoGreen

 

விவசாயி

இன்று உலகமே விவசாயத்தை நோக்கி தன் பார்வையை திருப்பி வருகிறது. தகவல் தொழில்நுட்பத்துறை, பன்னாட்டு நிறுவனங்கள் எனப் பலவற்றில் பணிபுரிந்து கைநிறைய சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள் கூட... சொந்தமாக நிலம் வாங்கி விவசாயம் செய்ய ஆசை கொண்டிருக்கிறார்கள். அதனால், விவசாயம் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படித் தகவல் தேடலில் ஈடுபட்டுள்ளோருக்கான கட்டுரை இது. இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் ஏழு அம்சங்களைத் தெரிந்து கொண்டாலே போதும்... வெற்றிகரமான விவசாயியாக மாறி விடலாம். 

பட்டம்:

'பருவத்தே பயிர் செய்' என்று சொல்வார்கள். ஒவ்வொரு பயிருக்கும் விதைப்பதற்கான பருவம் அல்லது காலகட்டம் உண்டு. அதுதான் 'பட்டம்'. குறிப்பாக பட்டம் என்பது தமிழ் மாதத்தை அடிப்படையாக வைத்து சொல்லப்படும். பாரம்பர்ய விவசாயம் மற்றும் நாட்டு ரக விதைகளுக்கு பட்டம் முக்கியமானது. ஒவ்வொரு பட்டத்திலும்ம் அதற்கான பயிரை மாற்றி மாற்றி சாகுபடி செய்து வரும்போது நிலத்தின் வளம் பாதிக்கப்படாமல் அப்படியே இருக்கும். பொதுவாக ஆடிப்பட்டம் அனைத்து பயிர்களுக்கும் ஏற்றதாக இருக்கும். 


பருவம்:
பட்டத்துக்கும் பருவத்துக்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு. பருவமழை, குளிர்காலம், கோடைகாலம் போன்ற பருவங்களை அடிப்படையாக வைத்துதான் பட்டங்கள் கணக்கிடப்படுகின்றன. அதனால், பருவங்களையும் அதற்கேற்ற பயிர்களையும் தெரிந்து கொள்வது அவசியம். குறிப்பாக பருவமழைக்காலங்களை அறிந்திருக்க வேன்டும். நமக்கு தென்மேற்குப் பருவக்காற்று, வடகிழக்குப் பருவக்காற்று மூலம்தான் மழை கிடைக்கிறது. அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவக்காற்று வீசும். தென்மேற்குப் பருவக்காற்று, ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வீசும். இந்த மழைக்காலங்கள்தான் நமது விவசாயத்துக்கான முக்கிய காலங்கள். 

331425_04369.jpg

விதைநுட்பம்:

சாகுபடிக்கு முன்னர் விதைத்தேர்வு அதிமுக்கியமானது. பெரும்பாலும் நாட்டு விதைகளைத்தேர்வு செய்வது நல்லது. வீரிய ரக விதைகளை விதைப்பது தவறில்லை என்றாலும் நமது நாட்டின் அனைத்து சீதோஷ்ண நிலைகளையும் தாங்கி வளர்பவை நாட்டு விதைகளே. எந்த விதையாக இருந்தாலும் நம்பகமானவர்களிடமிருந்து தரமான விதைகளை வாங்க வேண்டும்.

இடுபொருட்கள் :

இன்றைய காலகட்டத்தில் இயற்கை விளைபொருட்களுக்கு தேவை அதிகரித்து வருவதால், இயற்கை இடுபொருட்கள் குறித்து அறிந்திருப்பது அவசியம். அதிலும், நம் நிலத்தில் இருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டே இடுபொருட்களைத் தயாரிப்பதுதான் தற்சார்பு விவசாயம். நாட்டு மாட்டு எரு, ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, உயிர் உரங்கள், அமுதக் கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டி, தேமோர் கரைசல் எனப் பல இடுபொருட்கள் உள்ளன. இவற்றைத் தயாரிக்கும் விதத்தையும் பயன்படுத்தும் விததையும் தெரிந்து கொள்ள வேண்டும். 

நாட்டு மாடுகள்:

இயற்கை விவசாயத்துக்கு அவசியமானவை நாட்டு மாடுகள். நாட்டு மாடுகளின் சாணம்தான் சிறந்த உரம். தவிர,  நாட்டு மாட்டுப் பாலில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. நாட்டு மாட்டுப் பாலை குடித்து வந்தால் பல நோய்கள் தவிர்க்கப்படும். நாட்டு மாட்டின் சிறுநீர், சாணம் ஆகியவற்றின் மூலம் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் போன்ற இடுபொருட்களைத் தயாரிக்கலாம். காங்கேயம், உம்பளாச்சேரி, சிந்தி, தார்ப்பார்க்கர், சாஹிவால் எனப்பல நாட்டினங்கள் உண்டு.

.

315768_04528.jpg

சீசன் - சந்தை விலை:


எந்த சீசனில் எந்த பொருளுக்குத் தேவை அதிகம் என்பதை அறிந்து அதற்கேற்ப பயிரிட வேண்டும். அப்போதுதான் சந்தையில் நல்ல விலை கிடைக்கும். அதனால், விலை நிலவரம், விளைபொருட்களின் தேவை ஆகியவற்றை தெரிந்து கொள்வது அவசியம்.


மதிப்புக்கூட்டல்:


விளைபொருட்களை அப்படியே விற்பனை செய்யாமல், அவற்றை மதிப்புக் கூட்டும்போது நல்ல லாபம் பார்க்க முடியும். உதாரணமாக, விளைபொருட்களை தூசு தும்பு இல்லாமல் சுத்தப்படுத்தி சந்தைக்கு எடுத்துச்சென்றாலே கூடுதல் விலை கிடைக்கும். அவ்வற்றை பதப்படுத்தி மதிப்புக் கூட்டி பழச்சாறு, ஜாம் போன்ற பொருட்களைத் தயாரிக்கும்போது அதிக லாபம் கிடைக்கும். அதேபோல பாலாக விற்பனை செய்யாமல் வெண்ணெய், நெய், பனீர் எனத் தயாரித்து விற்பனை செய்யும்போது கூடுதல் லாபம் பார்க்கலாம். அதனால் மதிப்புக்கூட்டலையும் அவசியம் அறிந்திருக்க வேண்டும். 

விவசாயமும் ஒரு அறிவியல்தான். அதனால் அது குறித்த அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொண்டு களம் இறங்கும்போது கண்டிப்பாக வெற்றிபெற முடியும்.

vikatan

  • தொடங்கியவர்

நம் வீரத்தை காட்டிய ரேஸிங் விளையாட்டுகள்! #Throwback

 

விளையாட்டா வீரத்தை காமிச்சவங்கள விட, வீரத்தை விளையாட்டுல காமிச்சவங்கதான் அதிகம்.  நீங்கள் 1990-களில் பிறந்தவரா? உங்களது பழைய நினைவுகளுக்கு இட்டுச் செல்லும் ரேஸிங் கேம்கள் இவைதான்!

ரோடு ரேஷ் (1991): 

ரேஸிங்

1990-களில் பிறந்தவராக இருந்துவிட்டு, ரோடு ரேஷ் (Road Rash) கேமை இதுநாள் வரையில் விளையாடியது இல்லை என்றால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அத்தியாவசிய விஷயம் ஒன்றை இழந்துவிட்டீர்கள் என்றே அர்த்தம். ''Vehicular Combat Racing'' பிரிவில் வரும் இந்த விடியோ கேம், எலெக்ட்ரானிக் ஆர்ட்ஸ் (Electronic Arts) நிறுவனத்தின் தயாரிப்பாகும். MB அளவில் இது மிகக் குறைவாகவே இருந்ததால், 1 ஜிபி ரேம் உடன், கிராஃபிக்ஸ் கார்டு கூட இல்லாத கம்ப்யூட்டர்களில்கூட இந்த கேம் சிக்கலின்றி செயல்பட்டது. 1990-களில் தங்களது டீன் ஏஜ் பருவத்தில் இருந்த பலருக்கும், தங்களுக்குள் இருந்த கேமரை உணர்த்தியது ரோடு ரேஷ்தான். பழமையான ரேஸ் டிராக், சாலைகளில் செல்லும் நபர்கள்/வாகனங்களின் மீது மோதுவது, நம்முடன் ரேஸ் ஓட்டுபவர்களை மிதித்துத் தள்ளுவது, சாலையில் வேகமாக பைக் ஓட்டியதற்காக நம்மைத் துரத்தும் போலிஸ்காரரை பேஸ்பால் பேட் - சைக்கிள் செயின் போன்ற ஆயுதத்தால் தாக்குவது என ஒரு பக்கா பேக்கேஜாக இருந்தது ரோடு ரேஷ். இந்த கேமின் மியூசிக், ரேஸர்களின் பெயர்கள், கேம் அமைக்கப்பட்ட விதம் ஆகியவை, காலங்களைக் கடந்தும் மறக்கமுடியாதவை என்றால் அது மிகையில்லை!

ரோடு ஃபைட்டர் (1984): 

Road-Fighter-1_23532.png

1990-களில் பிறந்தவர்கள், தமது வாழ்க்கையின் 15 வருடங்களுக்கு முன்னால் சென்றால், ரோடு ஃபைட்டர் (Road Figher) கேமின் 8 பிட் MIDI சத்தம், உங்கள் காதுக்குள்ளே இந்நேரத்தில் ரிங்காரமிட்டுக் கொண்டிருக்கும். ஸ்கிரீன் சைஸ் சிறிதாக இருந்தாலும், அளவில் பல்க்காக இருக்கும் CRT வகை டிவிக்களில், விடியோ கேம் செட்டை கனெக்ட் செய்து, ஜாய் ஸ்டிக்கை ஒற்றைக் கையில் வைத்துக் கொண்டு விளையாடினால், நேரம் செல்வதே தெரியாது. Arcade வகை விடியோ கேமான இதை, Konami நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் நாம் கன்ட்ரோல் செய்யும் சிவப்பு நிறக் கார், சாலையின் குறுக்கே ஆங்காங்கே இருக்கும் எண்ணெய் திட்டுகளையும், மற்ற வாகனங்களையும் இடிக்காமல் வேகமாகச் செல்ல வேண்டும். எனவே கொடுக்கப்பட்ட நேரம் மற்றும் எரிபொருளில், ஃப்னிஷ் லைனை அடைந்தால் வெற்றி! ரேஸின் இடையே வரும் கலர்ஃபுல்லான காரை நாம் இடித்தால், நமக்குக் கூடுதலாக எரிபொருள் கிடைக்கும். புல் தரை, கடற்கரைக்கு இடையே இருக்கும் பாலம், மலைகள், காடுகள் சூழ்ந்த பகுதி ஆகியவற்றில் ரேஸ் டிராக் அமைக்கப்பட்டு இருக்கும். 

மிட் டவுன் மேட்னெஸ் (1999): 

Midtown-Madness-2-1024x768_23034.jpg

Blitz, Circuit, Checkpoint, Cruise - இந்த வார்த்தைகளை எங்கேயோ கேட்டதுபோல இருக்கிறதா? இவைதான் மிட் டவுன் மேட்னெஸ் (Mid Town Madness) கேமில் இருந்த சிங்கிள் ப்ளேயர் மோடுகள் ஆகும். Arcade வகை விடியோ கேமான இது,  மனநிறைவைத் தருவதில் பெயர் பெற்றது. சிகாகோ நகரத்தில் அமைக்கப்பட்ட இந்த கேமின் முக்கிய நோக்கம் என்னவென்றால், ஸ்ட்ரீட் ரேஸில் பங்கேற்று, அதில் வெற்றி பெற்று போட்டியாளர்களின் காரைப் பெறுவதுதான். க்ரூஸ் மோடில் கார் ஓட்டுவது நல்ல அனுபவமாக இருக்கிறது. தவிர நெரிசம் மிகுந்த சாலைகளில், நமக்குப் பிடித்தமான ஃபோக்ஸ்வாகன் பீட்டில் முதல் சிட்டி பஸ்/டிரக் வரை எதை வேண்டுமானாலும் நாம் ரேஸில் ஓட்டலாம். எனவே சாலையில் செல்பவர்கள் குழம்பிப் போவார்கள். அதைப் பார்த்து நாம் அவர்கள் மீது வாகனத்தை ஏற்ற முயன்றால், அவர்கள் எஸ்கேப் ஆகும் விதம் அழகு. விண்டோஸ் இயங்குதளத்துக்காகத் தயாரிக்கப்பட்ட இந்த விடியோ கேமை, ஏஞ்சல் ஸ்டூடியோஸ் (Angel Studios) வடிவமைத்திருந்தது. மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனம் இதனை வெளிக்கொண்டுவந்தது.

கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ: வைஸ் சிட்டி (2002)

GTA-Vice-City-2-1024x576_23379.jpg

கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ (GTA - Grand Theft Auto) கேமை விளையாடியவர்கள், நிஜத்தில் டிராஃபிக் ஜாமை அழகாக டீல் செய்வார்கள். GTA சிரீஸ் கேம்களில் மாஸ்டர் பீஸாக வைஸ் சிட்டி (Vice City) கருதப்படுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. வைஸ் சிட்டி தொடங்கி மியாமி நகரம் வரையிலான இரண்டு தீவுகளில், நமக்குப் பிடித்தமான வாகனத்தில் நகர்வலம் வரலாம். எனவே விமானத்தை கடத்துவது, சாலையில் செல்பவர்களுடன் சண்டை போடுவது/சுட்டுத் தள்ளுவது, கோஷ்டி மோதல், பணத்துக்காக மற்ற வாகனங்களுடன் ரேஸ் ஓட்டுவது, போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களை வாங்க/விற்க என எதை வேண்டுமானாலும் செய்யலாம். சுருக்கமாகச் சொல்வதென்றால், மாஸ் ஆக்‌ஷன் எபிசோட்களாக இருந்த இந்த கேமில், நாம் காட்ஃபாதர்/கபாலி போல நகரத்தின் டானாக உருவாக முடியும்.  Rockstar San Diego ஸ்டூடியோ வடிவமைத்த இந்த கேம், இசை, கேம் அமைக்கப்பட்ட விதம், விஷுவல்கள் ஆகியவற்றுக்காக கேம் ஆர்வலகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது. ஆனால் கேமை விளையாடுபவர்களின் மனதில் வன்முறை மற்றும் ஜாதி வேறுபாடுகளை இது விதைப்பதாக சர்ச்சை நிலவியதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

இந்தக் கால போக்கிமான்களையும் விட இவற்றிற்கு வெறித்தனமான ரசிகர்கள் இருந்தார்கள் என்பதுதான் உண்மை.

vikatan

  • தொடங்கியவர்
குருவிகளின் நண்பனான மனிதர்
 

பிரிட்­டனைச் சேர்ந்த நபர் ஒரு­வ­ருடன் இரு குரு­விகள் மிக நெருங்­கிய நண்­ப­னாக பழ­கு­கின்­றன. டெரி டெய்லர் என்­பவர், தனது மனைவி 2005 ஆம் ஆண்டு இறந்த பின்னர், தனது வீட்டின் பின்­பு­றத்தில் காணப்­படும் குரு­வி­க­ளுடன் பேச ஆரம்­பித்தார்.

 

20780page-11.jpg

 

சில மணித்­தி­யா­லங்­களின் பின்னர் அவற்றில் இரு குரு­விகள் டெரி டெய்­ல­ருடன் மிகவும் நெருக்­க­மாகி விட்­டன. மேற்­படி குரு­வி­க­ளுக்கு சுஸி மற்றும் மொன்ட்டி என டெரி டெய்லர் பெய­ரிட்­டுள்ளார்.

 

20780robin-bird.jpg

 

இக் ­கு­ரு­விகள், டெய்­லரின் கைக­ளி­லி­ருந்து உணவு உட்­கொள்­வ­துடன் அவரின் முகத்­திலும் வந்து அமர்ந்து கொள்­கின்­றன.

 

20780page-11-2.jpg

 

இக்­ கு­ரு­வி­களை பூங்காக்­க­ளுக்கும் டெரி டெய்லர் அழைத்துச் செல்­கிறார். பாட­சா­லைக்குச் செல்லும் சிறார்கள் இக்­ கு­ரு­வி­களை பார்த்து மிக மகிழ்ச்சியடை கின்றனர் என டெரி டெய்லர் கூறுகிறார்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இன்று உலக மீனவர் தினம்

 

fishermen_07376.jpg

தினந்தோறும் புயலோடு போட்டியிட்டு, அயல்நாட்டு அந்நியரிடம் அடிபட்டு, வயிற்றுக்காக வாழ்க்கையையே அடகு வைத்து, 'இன்று வீடு திரும்புவோமா?' என உறுதி இல்லாமல், உப்புக் காற்றில் நீதி கிடைக்காமல் நாதி இழந்தும், நம்பிக்கையாய் தங்களது டைட்டானிக்கில் மீன் பிடிக்க விரையும் கடல் ராசாக்களுக்கு மீனவர் தின வாழ்த்துகள்.

vikatan

  • தொடங்கியவர்

 

சீனா: வீடு விலையேற்றம் ஏன் விவாகரத்துக்களை அதிகரிக்கின்றது?

  • தொடங்கியவர்

இந்த 90 வயது பாட்டி தினம் எவ்வளவு தூரம் சைக்கிள் ஓட்டுகிறார் தெரியுமா?

 

பாட்டி

வ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும், குறிப்பிட்ட வயதில் ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். ஒரு சிலரோ, இனிமேல் வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்து வீட்டிலேயே முடங்கிக்கிடப்பார்கள். 70 வயதுக்கு மேல் கண்கள் சரிவர தெரியாமல், காது கேட்காமல், நடக்க முடியாமல் மிகவும் சிரமப்படுவார்கள். வயது  முதுமையால், தாத்தா பாட்டிகள் வீட்டைவிட்டு வெளியில் எங்கும் செல்ல பயப்படுவார்கள்.

ஆனால், சிலி நாட்டில் வசித்துவரும் 90 வயது பாட்டியைப் பார்த்து எல்லோரும் 'வாவ்' என்று வாயைப் பிளக்கிறார்கள். சிலியில் உள்ள செரிலாஸ் பகுதியில் வசிக்கும் இந்தப் பாட்டியின் பெயர், எலினா கால்வேஜ், சோர்வும் இல்லாமல் சைக்கிள் ஓட்டுகிறார். இவரைப் பார்த்து, அப்பகுதியில் உள்ள மக்கள் அசந்துபோகிறார்கள். தினமும் 30 கி.மீ தூரம் சைக்கிள் ஓட்டிச் சென்று,  பால், முட்டை போன்ற அத்தியாவசியப் பொருட்களை விற்று, அதில் வரும் பணத்தைக்கொண்டே தன் வாழ்க்கையை நகர்த்துகிறார்.

ஒரு சிறிய பண்ணையில் தனியாக வாழ்ந்துவரும் இந்தப் பாட்டி, கோழிகள், மாடுகளை வளர்த்துப் பாராமரித்துவருகிறார். கோழிகள் இட்ட முட்டைகளையும் மாடுகள் தரும் பாலையும் விற்பதே இவரது தினசரி வேலை. 43 வருடங்களாக கொஞ்சமும் அசராமல் தொடர்ந்து செய்துவருகிறார் இந்த ஆக்டிவ் பாட்டி. இதனால், வாரத்துக்கு நூற்றுக்கணக்கான கி.மீ தூரம் சைக்கிள் மிதித்து தன் வாழ்க்கையைத் தானே பார்த்துக்கொள்ளும் இவரைப் பார்த்துப் பலர் புருவம் உயர்த்துகிறார்கள்.

90 வயதிலும் சைக்கிள் ஓட்டும் பாட்டியின் வீடியோ:

'வயது 90 ஆனாலும், மன உறுதி இருந்தால் எதையும் சாதித்துவிடலாம்' என்று கூறும் இந்த சைக்கிள் பாட்டி, 'எனக்கு நண்பர்கள் யாரும் கிடையாது. நான் இந்த சைக்கிள்தான் எனக்கு நண்பன். மற்றவர்களைப் போல ஆக்டிவாக இருப்பதுக்குக் காரணம், தினமும் சைக்கிள் ஓட்டுவதால்தான்' என்று கூறுகிறார்.

இந்தத் தள்ளாத வயதிலும் பாட்டியின் உழைப்பைப் பார்த்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''சிலர் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித் திரிகிறார்கள். அது மட்டும் அல்ல, பக்கத்துத் தெருவுக்குப் போவதற்கே இளைஞர்கள் பைக்கில்தான் செல்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், இந்தப் பாட்டியின் உழைப்பைப் பார்த்தாவது திருந்த வேண்டும்'' என்கிறார்கள். உண்மைதான் பேரன் பேத்திகளோடு இருக்கவேண்டிய வயதில், தினமும் பல கிலோ மீட்டர்கள் தன் வாழ்வாதாரத்துக்காக சைக்கிள் ஓட்டிகிறார் என்றால் பாட்டியின் தன்னம்பிக்கை பாராட்டக்குரியது!

 

 

vikatan

  • தொடங்கியவர்
தாவரங்களால் ஆடையலங்காரம்
 

கொலம்பியாவின் தலைநகர் கெலியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பயோ பெஷன் (Bio Fashion) எனும் பெஷன் ஷோ ஒன்றில், தாவரங்கள் மற்றும் மீள் சுழற்சிக்குட்பட்ட பொருட்கள் மூலம் உருவாக்கப்பட்ட அலங் காரங்களுடன் மொடல்கள் தோன்றுவதை படங்களில் காணலாம்.

 

207832016-11-20T040101Z_1872918253_S1AEU

 

20783515222-01-02.jpg

 

20783515231-01-02.jpg

 

20783515243-01-02.jpg

 

கொலம்பிய பெஷன் டிஷைனரான பிரையன் கெஸ்டெனா இந்த ஆடை அலங்காரங்களை வடிவமைத்திருந்தார்.   

 

20783515244-01-02.jpg

 

207831.jpg

 

207832.jpg

 

207833.jpg

 

207834.jpg

 

(படங்கள்: ஏ.எவ்.பி, ரோய்ட்டர்ஸ்)

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

இந்த ஆண்டின் கின்னஸ் சாதனைக்காட்சிகளில் சில...
--------------------------------------------------------------------------------------------

73 மீட்டர் உயரத்திலிருந்து தலைகீழாக குதித்து கீழே இருக்கும் தேநீர் கோப்பைக்குள் சரியாக பிஸ்கெட்டை முக்கி எடுக்கும் காட்சி முதல் 16 மீட்டர் தொலைவில் ஒரு காலுக்கு கீழே கூடைப்பந்தை குறிபார்த்து வீசுவது வரை பல்வேறு கின்னஸ் சாதனைக்காட்சிகளின் தொகுப்பு.

BBC

  • தொடங்கியவர்

ஸ்டாலின் முதல் சீமான் வரை - கேப்டனின் கலாய் கவுன்ட்டர்கள்!

 

கேப்டனின் அதிரிபுதிரி பேச்சுகள் சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் பிரபலம்தான். அப்படி சில பல மேடைகளில் கேப்டன் உதித்த டயலாக்குகளை பிரபல அரசியல்வாதிகளுக்கான கவுன்ட்டராக மாற்றி வெளியான வீடியோ செம வைரலானது. அதன் டப்ஸ்மாஷ் வெர்ஷன் இங்கே:

 

  • தொடங்கியவர்

15068995_1191101747605184_88236607832161

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அண்டி கட்டிக்கின் பிறந்தநாள்
Happy Birthday Andy Caddick

  • தொடங்கியவர்

அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் இருக்கும் உலகின் மிகவும் பரபரப்பான நில எல்லைப் பகுதி நிலவரம் குறித்த ஒரு பார்வை.

  • தொடங்கியவர்

இன்னும் என்னவெல்லாம் பண்ண போறாங்களோ.2000 ரூபாய் நோட்டை வைத்து புதுப்புது சோதனைகள் (வீடியோ)

 

2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் வந்ததில் இருந்து, அந்த நோட்டு சாயம் போவதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் 2,000 ரூபாய் நிற விவகாரம் தொடர்பாக மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால், இது சற்று ஆறுதல் தரும் வகையில் இருக்கிறது. அதன்படி, இந்த வீடியோவில் 2,000 ரூபாய் நோட்டை தண்ணீரில் கொதிக்க வைப்பது, குளிர்பானங்களில், போட்டு ஊற வைப்பது, ரூபாய் நோட்டை மெழுகுவத்தி அருகே காட்டுவது, ஐயர்ன் செய்வது என சகட்டு மேனிக்கு சோதித்து பார்க்கின்றனர். ஆனால், நோட்டின் நிறம் மாறவே இல்லை. இந்த வீடியோவை நீங்களே பாருங்களேன்.

 

 

vikatan

  • தொடங்கியவர்

ஸ்மார்ட் போன்களுக்கு எதிராக ஆன்டி ஸ்மார்ட் போனை களமிறக்கும் சீனா!

 

 

light_phone_1479474471291_22267.jpg

ஸ்மார்ட் போன்களுக்கு எதிராக சீன நிறுவனம் ஒன்று 'லைட் போன்' என்ற ஆன்டி ஸ்மார்ட் போன் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. ஸ்மார்ட் போன்களுக்கு எதிராக ஒரு ஏ. டி. எம் கார்ட் அளவில் வெள்ளை நிறத்தில் இருக்கும் போன் நவம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. முக்கியமாக இதில் 2ஜி நானோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியுமாம். இந்திய மதிப்பில் ரூ.7,000-க்கு இந்த போனின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போனில் கேமரா இல்லை. இதில் இன்டர்நெட்டும் பயன்படுத்த முடியாது. ஆனால் ஒருமுறை சார்ஜ் செய்தால், கிட்ட,தட்ட மூன்று வாரங்களுக்கு பேட்டரி நீடிக்கும் என்று சொல்கின்றனர். தற்போது இதை மற்ற நாடுகளுக்கு சந்தைப்படுத்துவதில் சற்று தாமதமாகிறது. இதற்கு அந்நிறுவனம்' ஜனவரிக்‌குள் அனைத்து நாடுகளிலும் இதன் விற்பனை தொடங்கப்படும்' என்று கூறியுள்ளது.

vikatan

  • தொடங்கியவர்

 

வெண்புள்ளிகளை வென்றது எப்படி? மனம் திறக்கும் மாடல்

கேனடா மாடல் வின்னி ஹர்லோ உலகின் முன்னணி மாடலாக உருவெடுத்திருக்கிறார்.

உலக அளவில் அதிகமாக அறியப்பட்ட மாடல்களில் இவரும் ஒருவர்.

நான்கு வயது முதல் வின்னிக்கு வெண்புள்ளிகள் தோன்ற ஆரம்பித்தன. அவர் தோலின் சில பகுதிகள் நிறத்தை இழக்க ஆரம்பித்தன.

பிபிசியின் நூறு பெண்கள் சிறப்பு நிகழ்ச்சித்தொடரின் ஒரு அங்கமாக அவர் தன்னம்பிக்கை குறித்தும், பரிவுகுறித்தும், தனது தோலின் நிறம் தன்னை நிர்ணயிக்கும் அளவுகோலல்ல என்பது குறித்தும் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் விளக்குகிறார்.

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: நவம்பர் 22
 
 

article_1448169581-0.jpg1963: அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ்.கென்னடி, டல்லாஸ் நகரில் காரொன்றில் பயணம் செய்யும்போது துப்பாக்கிதாரியொருவரினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1986: 20 வயதான மைக் டைசன், ட்ரேவர் பேர்பிக்கை தோற்கடித்து உலகின் மிக இளம் அதிபார குத்துச்சண்டை சம்பியன் எனும் பெருமைக்குரியவரானார்.

1990: பிரித்தானிய பிரதமர் பதவியிலிருந்து மார்கரெட் விலகினார்.

2002: நைஜீரியாவில் உலக அழகுராணிப் போட்டியில் பங்குபற்றுபவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர்.

2003: உலகக்கிண்ணத் றக்பி தொடரின் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து  இங்கிலாந்து அணி சம்பியனாகியது.

2005: ஜேர்மனியின் முதலாவது பெண் சான்ஸ்லராக ஏஞ்சலா மார்கெல் பதவியேற்றார்.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இப்படி ஒரு வாழ்க்கை வாழ நீங்கள் தயாரா? #MinimalistLife

 

மினிமலிஸ்ட்

சசாகி ஒரு ஜப்பானிய பெண். 21 வயதாகும் சசாகிக்கு டிவிடி, புத்தகங்கள் சேகரிப்பது பொழுதுபோக்கு. இரண்டு வருடங்களில் பல ஆயிரக்கணக்கான டிவிடிக்களும், புத்தகங்களும் சசாகி வசம் சேர்ந்தன. எல்லாவற்றையும் பார்ப்பதும், படிப்பதும் அவளது பழக்கமல்ல. அவற்றை சேகரிக்க வேண்டும்.அவ்வளவுதான். வீடு முழுவதும் புத்தகங்களும், டிவிடிக்களும் தான். இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு நாள் தனது வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்த சசாகி யோசித்துக் கொண்டிருந்தாள். அவளது யோசனை முழுவதுமே அவளிடம் இன்னும் சேர்ந்திடாத புத்தகங்கள் பற்றியும், டிவிடிக்கள் பற்றியுமே இருந்தது. அவள் வசம் இருந்தவை எவையுமே அவளுக்கு எந்த திருப்தியும் தரவில்லை. அடுத்த சில நாட்கள் அவளிடம் இருந்த புத்தகங்கள், டிவிடிக்களை நண்பர்களுக்கு கொடுக்கத் தொடங்கினாள். அப்போது, அவள் வீட்டில் நிறைய இடம் இருந்தது. ஒரு நாளில் அவளுக்கு கூடுதல் நேரம் இருந்தது. அதை நண்பர்களோடு செலவழிக்கத் தொடங்கினாள். அதிக பயணங்கள் சாத்தியமானது. சசாகி மினிமலிஸ்ட் லைஃபை சந்தோஷமாக வாழத் தொடங்கினாள்.

மினிமலிஸ்ட் லைஃப். தமிழில் ‘சிறுநுகர் வாழ்வு’ என சொல்லலாம். உங்களைச் சுற்றி எத்தனை பொருட்கள் இருக்கின்றன? அல்லது உங்கள் அன்றாட வாழ்க்கைக்கு எத்தனை பொருட்கள் தேவைப்படுகின்றன? பல் தேய்க்கும் பிரஷில் ஆரம்பித்து இரவு கொசு விரட்டும் மிஷின் வரை எல்லாவற்றையும் பட்டியல் இடுங்கள். அதன் எண்ணிக்கை 100க்கும் குறைவாக இருந்தால் நீங்கள் வாழ்வது சிறுநுகர் வாழ்வு. ஆனால், சராசரியாக  100 பொருட்களாவது நாம் பயன்படுத்துகிறோம் என்பதுதான் உண்மை. தேவையில்லாத ஒன்றை நாம் ஏன் வாங்கப் போகிறோம்? எல்லாமே தேவைதானே என்ற கேள்வி எழுகிறதா? 

நீங்கள் இசையை கேட்க என்ன என்ன சாதனங்களை பயன்படுத்துகிறீர்கள்? மொபைலில் கேட்பீர்கள். 5.1 ஸ்பீக்கர் இருக்கலாம். சின்னதாக ஒரு ப்ளூடூத் ஸ்பீக்கர். டிவிடி ப்ளேயர் தனியாக இருக்கக்கூடும். தொலைக்காட்சியில் ரசிக்கலாம். இன்னமும் வாக்மேன் வைத்திருப்பவர்கள் உண்டு. உங்கள் வசம் இருக்கும் விஷயங்களை மட்டும் கணக்கிலிடுங்கள். இதில் எத்தனை பொருட்களை நீங்கள் வாங்கமால் தவிர்த்திருக்கலாம்?

பணக்காரராக இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, நிறைய சம்பாதிப்பது. இன்னொன்று விருப்பங்களை குறைத்துக் கொள்வது என்கிறது ஜென். பிறந்தது முதலே நாம் அடுத்தக்கட்டத்துக்கு நகர்வது குறித்தே போதிக்கப்பட்டிருக்கிறோம். நமக்கு நிறையத் தேவை. அப்படித்தான் நாம் வளர்ந்திருக்கிறோம். அப்பா முதல் ஆசிரியர் வரை, தொலைக்காட்சி முதல் சினிமா வரை எல்லாமே நமக்கு சொல்வது ஒன்றுதான். “அதிகம் இருந்தால் நல்லது”. அதனால்தான் நிறைய சம்பாதிக்க ஓய்வின்றி உழைக்கிறோம். ஆனால், நம் எல்லோருக்குமே ஒரு உண்மை தெரியும். அது, ’நம் சந்தோஷத்தை நம்மால் விலை கொடுத்து வாங்க முடியாது’. அண்ணாச்சி கடை முதல் ஆன்லைன் ஷாப்பிங் தளம் வரை எங்கேயும் அது விற்பதில்லை. ”அதிகம்” என்பது எப்போதும் சிறந்ததல்ல என்பது நமக்கு நன்றாக தெரியும்.

hqdefault_22446.jpg

ஜப்பான் இளைஞர்கள் மத்தியில் இப்போது வேகமாக வளர்ந்து வரும் பேசுபொருள் இந்த மினிமலிஸ்ட் வாழ்வுதான். ஃபேஸ்புக் முதல் சுமோ பயிற்சி மையங்கள் வரை இதுப் பற்றிதான் அவர்கள் நிறைய பேசுகிறார்கள். பலர், சிறுநுகர் வாழ்க்கைக்கு மாறியும் இருக்கிறார்கள். நாம் நினைக்கும் அளவுக்கு இது சிரமம் அல்ல என்பது அவர்களது அனுபவ அறிவுரை. ஏனெனில், நம் எல்லோருக்குமே மகிழ்ச்சியாக வாழ தான் ஆசை. அது எப்படி என்பது தெரியாமல் தான் இருக்கிறோம். அதற்கு தொடக்கமாக ஐந்து விஷயங்களை சொல்கிறார்கள் மினிமலிச மனிதர்கள்

1) எழுதுங்கள்:

   எளிமையாக, மகிழ்ச்சியாக வாழ நினைக்கறீர்களா? அது ஏன் என்பதை முதலில் எழுதுங்கள். தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா? அதை ஒரு பேப்பரில் எழுதுங்கள். குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புகிறீர்களா? அதையும் எழுதுங்கள். உங்கள் மேனேஜரை நீங்கள் வேண்டாம் என விலக்க நினைக்கறீர்களா? எழுதுங்கள். உங்கள் மனதில் இருக்கும் தேடலை எழுதுங்கள். ”ஏன்” என்ற கேள்விதான் உங்களுக்கு தேவையானதை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும்

2) டூப்ளிகேட்களை துரத்துங்கள்:

ஒரு பெரிய பெட்டியை தயார் செய்துக் கொள்ளவும். உங்கள் வீட்டை ஒரு ரவுண்ட் அடிக்கவும். ஒரே படத்தின் இரண்டு சிடி இருக்கிறதா? ஒன்றை பெட்டியில் வைத்து மூடவும். வெள்ளைச்சட்டை மூன்று இருக்கிறதா? இரண்டை பெட்டிக்குத் தள்ளவும். பெல்ட் எத்தனை இருக்கின்றன? அதுவும் பெட்டிக்கே. எல்லாம் முடிந்ததும், அந்தப் பெட்டியை மூடி அதன் மேல் “டூப்ளிகேட்” என எழுதி கண்ணில் படாத இடத்தில் வைத்துவிடுங்கள். 30 நாட்களுக்கு அந்தப் பெட்டியில் இருந்து எதுவுமே உங்களுக்கு தேவையில்லை என்றால், அந்தப் பொருட்களை யாருக்காவது கொடுத்து விடுங்கள்.

3) “லைட்” பயணங்கள்:

  ஒரு நாள் பயணத்துக் சூட்கேஸை எடுக்கும் ஆளா நீங்கள்? ரிலாக்ஸ் பாஸ். வழக்கமாக எடுத்து வைக்கும் பொருட்களில் பாதியை எடுக்கவும். நான்கு நாட்களுக்கு இரண்டு சட்டைகள் போதும். துவைத்து பயன்படுத்தலாம். இரண்டு ஷூக்கள் தேவையில்லை. ஒன்று மட்டும் எடுத்து வையுங்கள். மொபைல், டேப்லட், லேப்டாப் எல்லாம் இருக்கிறதா? எது வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். குறைந்த லக்கேஜுடன் பயணிப்பதன் சுகத்தை அனுபவித்து பாருங்கள்.

4) ரிப்பீட் உணவு:

  மதிய உணவு சாப்பிடும்போதே டின்னர் பற்றி யோசிப்பவர்கள் அதிகம். ஒரு வாரம் முழுக்க தினமும் காலையில் இட்லி. மதியம் எதாவது ஒரே ஒரு வகை சாப்பாடு. இரவில் சப்பாத்தியோ, தயிர் சாதமோ. ஆனால், அந்த வாரம் முழுவதும் அதுதான். ஒரு வாரம் கழித்து யோசித்துப் பாருங்கள். என்ன என்ன பலன்கள், என்ன என்ன குறைகள் என்பதை பட்டியிலிட்டு கவனியுங்கள்:

5) ”கம்மி” உடைகள்:

  ப்ராஜெக்ட் 333 என்பார்கள். மூன்று மாதங்களுக்கு 33 உடைகள் மட்டுமே. அதாவது சட்டை, பேண்ட் ,ஷூ தொடங்கி உள்ளாடை வரை உங்களுக்கு தேவையான காஸ்ட்யூம் வகைகளில் 33 மட்டும் எடுத்து வைக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு அதையேதான் மாற்றி மாற்றி அணிய வேண்டும். முயற்சி செய்து பாருங்கள்.

minimalist-room_23085.jpg

”சிறுநுகர் வாழ்வு நாம் விடுதலை அடைய உதவும் ஒரு கருவி. கவலைகளில் இருந்து, பயத்தில் இருந்து, மன அழுத்தத்தில் இருந்து, குற்ற உணர்வில் இருந்து நமக்கு விடுதலை கொடுக்கும் ஒரு கருவி” என்கிறார் ட்வைலைட் படப்புகழ் ராபர்ட் பேட்டின்சன். பிரபல ஹாலிவுட் நடிகர் ஆக இருந்தபோதும் இவர் சிறுநுகர் வாழ்க்கையையே விரும்பு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். ஆடம்பரத்துக்கு அடையாளமான ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரான மறைந்த ஸ்டீவ் ஜாபஸை அவரது வீட்டில் சந்தித்தவர்களுக்கு ஆச்சர்யமாய் இருந்திருக்கும். அவர் அறையில் ஐன்ஸ்டீன் படம் ஒன்று, ஒரே ஒரு சேர், ஒரு டிஃபானி விளக்கும் மட்டுமே இருக்கும். 

பொருளாதார மந்தநிலை, எதிர்பாராத இயற்கை பேரிடர் என எந்த அசாதாரணமான சூழலையும் சிறுநுகர் வாழ்வால் தைரியமாக சந்திக்க முடியும். ஒரு சுவாரஸ்யமாய, சந்தோஷமான வாழ்க்கையை வாழ முடியும். மற்றவர்களுக்கு பயனுள்ள, நமக்கு திருப்தியான ஒரு மனிதராக நம்மால் இருக்க முடியும். மினிமலிஸத்தில் தான் வாழ்க்கை ”மேக்ஸிமமாக” இருக்கிறது என்றே சொல்லலாம்.

மினிமலிஸ்ட் லைஃப், சிறுநுகர் வாழ்வு - இந்த சொற்களை இதுவரை நாம் கேட்காமல் இருந்திருக்கலாம். ஆனால், நமக்கு தெரிந்த பலரும் இப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்த வருடம்  பல நூறு கோடிகளை சம்பாதித்துக் கொடுத்த  ஒரு விஷயத்தின் முக்கிய காரணகர்த்தா இப்படித்தான் வாழ்கிறார். 

யாரென யூகித்து விட்டீர்களா? மகிழ்ச்சி. 

vikatan

  • தொடங்கியவர்

ஆன்ரே ஜிதே

 

 
french_3089013f.jpg
 
 

உலக புகழ்பெற்ற பிரெஞ்சு படைப்பாளி

இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்ற பிரெஞ்சு படைப்பாளி ஆன்ரே ஜிதே (Andre Gide) பிறந்த தினம் இன்று (நவம்பர் 22). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:

* பாரீஸில் பிறந்தவர் (1869). தந்தை, பாரீஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராகப் பணியாற்றினார். பள்ளியில் சேர்க்கப்பட்ட பிறகு, உடல்நிலைப் பாதிக்கப்பட்டதால் அங்கு படிப்பைத் தொடர முடியவில்லை. 11 வயதில் தந்தை காலமானார். தாய் ஏற்பாடு செய்த ஆசிரியர்களிடம் ஆரம்பக் கல்வி கற்றார்.

* மிகவும் தனிமையான சூழலில் வளர்க்கப்பட்ட இவர், சிறு வயதிலேயே வாசிப்பதிலும் எழுதுவதிலும் மும்முரமாக ஈடுபட்டார். தேவையில்லாத விஷய அறிவைத் திணிக்கும் கல்வி, பல்வேறு சமூகத் தடைகள் ஆகிய சூழலுக்கிடையே, அறிவுசார் நேர்மை யைத் தக்கவைக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டார்.

* இந்த முனைப்பு, இவரது ஆளுமையிலும் படைப்புகளிலும் வெளிப்பட்டதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இவரது 21-வது வயதில் ‘நோட்புக்ஸ் ஆஃப் ஆன்ரே வால்டர்’ என்ற முதல் நாவல் வெளிவந்தது. இது நல்ல வரவேற்பைப் பெற்றது. 1908-ல் ‘தி நியு ஃபிரெஞ்ச் ரெவ்யு’ என்ற இலக்கிய இதழ் தொடங்கப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தார்.

* முதல் உலகப் போர் சமயத்தில் செஞ்சிலுவை சங்கத்தில் இணைந்து சேவை செய்தார். போருக்குப் பின் அகதிகளுக்கு முகாம்கள் ஏற்பாடு செய்யும் பணியிலும் ஈடுபட்டார். தனது படைப்பு களில், மக்களின் பிரச்சினைகளையும் வாழ்க்கை நிலவரங் களையும் உளவியல் சார்ந்த உள்ளுணர்வுடன் வெளிப்படுத்தினார்.

* சமூக நீதி குறித்து ஏராளமாக எழுதினார். சமூக முகமூடிக்குள் மறைக்கப்பட்டிருக்கும் மனிதனின் உண்மையான உருவத்தை இவை பிரதிபலித்தன. 1920-களில் உலகப் புகழ்பெற்ற ஆல்பர்ட் காமஸ் மற்றும் ஜீன் பால் உள்ளிட்ட பல படைப்பாளிகளுக்குத் தூண்டுகோலாக இருந்தார்.

* இவரது பல நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. ‘இஃப் இட் டை’, இவரது வாழ்க்கை வரலாற்று நூல். 1925-க்குப் பிறகு தண்டனை பெற்ற குற்றவாளிகள் மனிதாபிமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். 1926-ல் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.

* அவற்றைக் குறித்து, டிராவல்ஸ் இன் தி காங்கோ, ரிட்டர்ன் ஃபிரம் சாட் மற்றும் இவரது மாஸ்டர் பீஸ் எனப் போற்றப்பட்ட ‘தி இம்மார்டலிஸ்ட்’, ‘தி கவுன்டர்பீடர்ஸ்’, ‘தி நியு ஃபிரெஞ்ச் ரெவ்யு’உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். ஆப்பிரிக்க மக்களின் கடும் உழைப்பை பிரெஞ்சு நிறுவனங்கள் சுரண்டியது குறித்து எழுதினார். காலனி ஆதிக்க எதிர்ப்பு இயக்கங்களில் முக்கியமான தாக்கத்தை இது ஏற்படுத்தியது.

* பிரான்சின் பாரம்பரிய எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்தும் கிடைக்கச் செய்வதற்காகத் தொடங்கப்பட்ட தனிப்பெருமைக்குரிய பதிப்பகத்தின் ‘பிப்லியோதேக் டி லா ப்ளீயட்’ என்ற இதழில், படைப்பாளியின் வாழ்நாளிலேயே அவரது படைப்பு இடம்பெற்ற முதல் எழுத்தாளர் இவர்தான்.

* ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தின் படைப்பாளிகளுடனும் தொடர்பு கொண்டிருந்தார். லத்தீன், ஃபிரெஞ்ச், ஆங்கிலம், ஜெர்மனி உள்ளிட்ட மொழிகளை அறிந்திருந்தார். தலைசிறந்த உரைநடை எழுத்தாளரான இவர், நாவல்கள், நாடகம், மொழிபெயர்ப்பு, இலக் கிய விமர்சனம், கடிதங்கள், கட்டுரைகளும் எழுதினார்.

* 1942-ல் ஆப்பிரிக்கா சென்ற இவர், துனிஸ் நகரில் இரண்டாம் உலகப் போர் முடியும் வரை தங்கியிருந்தார். 1947-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார். 20-ம் நூற்றாண்டின் முக்கிய படைப்பாளிகளுள் ஒருவராகப் போற்றப்பட்ட ஆன்ரே ஜிதே 81-வது வயதில் (1951) மறைந்தார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

இறக்கை உடையணிந்து வானில் பறக்கும் போட்டி
---------------------------------------------------------------------------------------



இறக்கைகளைப்போன்ற உடையணிந்து வானில் பறக்கும் வித்தியாசமான போட்டி ஒன்று அரிசோனா பாலைவனத்திற்கு மேலே வானத்தில் நடந்தது. அதன் சிலிர்க்க வைக்கும் காட்சிகள் சில.

BBC

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

15095690_1191903880858304_30154524820890

பிரபல ஹொலிவூட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சனின் பிறந்தநாள்.
Happy Birthday Scarlett Johansson.

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கு வருகிறது 'Cars and Coffee'

 

உலக கார் ஆர்வலர்களிடையே மிகப்பிரபலமான நிகழ்ச்சி  'Cars and Coffee' . இந்த நிகழ்ச்சியில் சூப்பர் கார்கள், வின்ட்டேஜ் கார்களுடன் அதன் உரிமையாளர்கள் ஒரே இடத்தில் கூடி, ஜாலியாக உரையாடிவிட்டுச் செல்வார்கள். ஒரே இடத்தில் அழகான கார்களைப் பார்க்கலாம். இந்த நிகழ்ச்சி பெங்களூரூவில் 2017-ம் ஆண்டு ஜனவரியில்  நடக்க உள்ளதாம்.
 

400_11360.jpg

பெங்களூரூவில் சூப்பர் கார்கள் அதிகம் என்பதால், அந்த நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 100 கார்களுக்கு மட்டுமே இன்வைட் முறையில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அதில், தென்னிந்தியாவை சேர்ந்த சூப்பர் கார்களுக்கு முக்கியத்துவம் தரப்படுமாம். 

vikatan

  • தொடங்கியவர்
அபுதாபியில் 128 கோடி ரூபாவுக்கு விற்பனையான வாகன இலக்கத் தகடு
 

ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் ‘No 1’   வாகன இலக்கத் தகடு 31 லட்சம் திர்­ஹாம்­க­ளுக்கு (சுமார் 128கோடி ரூபா) ஏலத்தில் விற்­பனை செய்­யப்­பட்­டு­ள­்ளது.

 

20812Jenna-Louise-Driscoll-252.jpg

 

வாக­னங்­க­ளுக்­கான விசேட இலக்கத் தக­டு­களின் ஏல விற்­பனை ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் அபுதாபியில் கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்­றது. இதன்­போது, ‘No 1’ எனும் இலக்கத் தகடை வாங்­கு­வதற்கு கடும் போட்டி நில­வி­யது.

 

750 பேர்  உட்பட இந்த இலக்கத் தகடை வாங்­கு­வ­தற்கு கோடீஸ்­வ­ரர்கள் பலர் போட்­டி­யிட்­டனர். இறு­தியில் 3.1 மில்­லியன் ஐக்கிய அரபு திர்­ஹாம்­க­ளுக்கு (சுமார் 128 கோடி ரூபா) இந்த இலக்கத் தகடு விற்­ப­னை­யா­கி­யது.

 

20812number-plate-dubai-2.jpg

 

32 வய­தான அப்­துல்லா அல் மஹிரி இந்த இலக்­கத்­த­கட்டை வாங்­கினார். இதற்கு அடுத்­த­தாக ‘‘No 7’ எனும் இலக்கத் தகடு அதிக விலைக்கு விற்­ப­னை­யா­கி­யது. 1.34 கோடி திர்­ஹாம்­க­ளுக்கு (55 கோடி ரூபா) 7 எனும் இலக்கத் தகடு விற்­ப­னை­யா­கி­யது.

 

மூன்­றா­வ­தாக ‘No 50 எனும் இலக்கத் தகடு 68 லட்சம் திர்ஹாம் (28 கோடி ரூபா) விலைக்கு விற்­ப­னை­யா­கி­யது. 22, 10, 6, 11, 111, 11111, 1111, 501, 2016 மற்­றும் 1966 ஆகிய இலக்கத் தக­டு­களும்  இந்த ஏலத்தில் அதிக விலைக்கு விற்­ப­னை­யா­கின.

 

இந்த ஏல விற்­ப­னையில் அதிக எண்­ணிக்­கை­யானோர் பங்­கு­பற்­றி­யமை மகிழ்ச்­சி யளிக்­கி­றது என அபுதாபி பொலிஸ் தளபதியான மேஜர் ஜெனரல் மொஹம்மத் கல்பான் அல் ரொமைதி தெரிவித்துள்ளார்.

metronews.lk

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.