Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
குற்றம் களைந்த வாழ்வே இறை தரிசனம்
 
 

article_1480908762-fhgh.jpgஎல்லோரிடத்திலும் கடவுள் இருக்கின்றார். ஆனால், அவரை வெளிப்படுத்தி உணர்ந்து, சூவீகாரம் செய்வதற்குத் தடையாக அமைவது, மனிதரின் தவறுதான். 

அற்பமான விடயங்களுக்கே சந்தேகம் கொள்ளும் மனிதன், ஆழமான சங்கதிகளை எவ்வாறு நம்பப் போகின்றான். 

காணாத பொருள் உள்ளே இருக்கும் பொருள் என்றால், கண்டுகொள்வது எப்படி? நம்பிக்கையற்ற வழிபாடுகளால் பிரயோசனம் இல்லை. பக்தனுக்குள் பிரவாகிக்கும் நெஞ்சத்துப் புழகாங்கிதம், அவனுக்கே தெரியும் அற்புத ஸ்பரிசமாகும். பக்தர்களை பித்துப் பிடித்தவர்கள் போலானவர்கள் என்றும் சொல்வார்கள். பக்திப் பரவசப்படும் மானுடர்கள் அடுத்த சில நிமிடங்களில் சாதாரண நிலைக்கு வந்தவுடன் எல்லாமே மறந்து பழையபடி, பாவம் செய்யவும் தலைப்படுகின்றனர். 

இந்த நிலை அறுந்து என்றும் சாஸ்வதமான தெளிவுடன் இறைபக்தி உருவாக்க முனைதல் பிறவிக் கடமையாகும். குற்றம் களைந்த வாழ்வே இறை தரிசனத்துக்கு மேன்மை தரும். 

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வெற்றி, தோல்வியை மட்டுமா தருகின்றன போட்டிகள்! செல்லமே செல்லம் #GoodParenting

வெற்றி

அன்புள்ள தோழி புனிதாவிற்கு,

நலம். ஹரிசாய் மற்றும் கார்த்திக் நலமா? ஹரிசாய் பள்ளியில் சுற்றுச்சூழல் சம்பந்தமான போட்டியில் அவன் சமர்ப்பித்த ப்ராஜெக்ட் சிறப்பாக இருந்ததா?

கடந்த வாரம் குழலியை, பள்ளிகளுக்கு இடையே நடந்த ஒரு போட்டிக்கு அழைத்துச் சென்றேன். நம் பள்ளி நாட்களில் நாம் மற்ற பள்ளிகளுக்குச் சென்று போட்டிகளில் கலந்துகொண்டு மேடையேறியது நினைவுக்கு வந்தது. அற்புதமான அனுபவங்கள் அவை!

நான் குழலியை அழைத்துச் சென்ற நிகழ்வில், கவிதை சொல்லுதல், திருக்குறள் கூறுதல், ஒளவையார் பாடல்கள் பாடுதல், தனி நபர் நடிப்பு, ஓவியப்போட்டி, கதை சொல்லுதல், மாறுவேடப்போட்டி என  குழந்தைகளுக்கு சுமார் 10 போட்டிகள், வேறு வேறு அறைகளில் நடத்தப்பட்டன. வெற்றி, தோல்வி என பிரிக்கும் போட்டிகளின் பின்னால் நாம் நம் பிள்ளைகளை ஓடவைக்க வேண்டாம் என நினைத்தாலும், அதுபோன்ற போட்டிகளில் கலந்துகொள்ளும் அனுபவம் குழலிக்குக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆர்வத்துடன் சென்றோம். ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியது.

avl55c_10024.jpg

ஒரு போட்டியில் கலந்துகொள்வது என்பது, திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்று பரிசு பெறுவதற்கு மட்டுமல்ல. அதனுடன் ஏராளமான விஷயங்கள் உள்ளடங்கி இருக்கின்றன.  ஓவியப்போட்டியில் கலந்துகொள்வதன் நோக்கம், ஓவியம் வரைந்து சமர்ப்பித்துவிட்டு வருவது மட்டுமல்ல. அந்தப் போட்டியில் பங்குபெரும் மற்ற பள்ளி மாணவர்களுடனான அறிமுகம் கிடைக்கும், அவர்கள் என்ன வரைகிறார்கள், என்ன விதமான கருத்தினை தங்கள் ஓவியம் மூலம் வெளிப்படுத்துகிறார்கள், அதற்காக அவர்கள் என்னென்ன பயிற்சிகளை மேற்கொண்டார்கள் என மாணவர்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொள்வதற்கான சூழல் கிடைக்கும். ஆனால் அங்கோ, இதற்கெல்லாம் வாய்ப்பே அளிக்கப்படவில்லை. மற்ற குழந்தைகளின் ஓவியங்களைப் பார்க்கக்கூட ஏற்பாடு செய்யப்படவில்லை. சம்பிரதாயத்துக்காகப் போட்டிகள் நடத்தினார்களே தவிர, அது குழந்தைகளின் ஆன்மாவை தொட முயற்சிக்கவில்லை.

பேச்சுப் போட்டியில், ஒரு குழந்தை பேசிவிட்டு வெளியே வருகிறது. அதன் தாய் சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் அதனிடம், 'வீட்ல எவ்வளவு நல்லா சொன்ன? இங்க வந்து இப்படி கேவலமா சொல்ற. உன்னை எல்லாம்...' எனக் கடுமையாக, சத்தமாக கடிந்துகொள்கிறார். அந்தக் குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும்? தன் நண்பர்கள் முன்னிலையில் இந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள முடியுமா? அந்தக் கலையில் மேலும் முன்னேறும் முனைப்புதான் அதற்குக் கிடைக்குமா? 'இனி நமக்கு போட்டியும் வேண்டாம், திட்டும் வேண்டாம்' என்ற முடிவுதான் அதன் மனதில் தோன்றும்.

குழந்தையை போட்டி, கலை நிகழ்ச்சி என ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள வைக்கும் அடிப்படையை பெற்றோர்களும், பள்ளி நிர்வாகமும் புரிந்துகொள்வதில்லை என்பது வருத்தமானது. கையில் வாங்கி வரும் பரிசு, சான்றிதழ் மட்டுமல்ல அதன் நோக்கம். வெற்றி, தோல்வி, சக போட்டியாளர்களை மதிப்பது, அவர்களிடம் நட்பு ஏற்படுத்திக்கொள்வது மற்றும் அவர்களிடம் உள்ள சிறந்த விஷயங்களை தாங்கள் கற்றுக்கொள்வது என... அந்த அனுபவம்தான் வென்று வாங்கிவரும் பரிசைவிடப் பொக்கிஷம். ஆனால், இங்கு நடக்கும் போட்டிகளிலோ, வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தத்தை குழந்தைகளிடம் திணித்து, தோல்வியுற்றால் வசைபாடி... என குழந்தைளின் உள்ளே சுடர்விட ஆரம்பிக்கும் தன்னம்பிக்கையை  முற்றிலுமாக அழிக்கும் வேலைதான் பெரும்பாலும் நடக்கின்றது.

p%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0

கதை சொல்லுதல் போட்டி, மிக இயல்பாக நடக்க வேண்டிய ஒன்று. அது குழந்தைகளின் கற்பனைகளை தட்டிவிட வேண்டும். அதற்கு நாம் குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களையும் அறிமுகப் படுத்த வேண்டும். போடிகளிலில் நடுவர் அருகே சென்று அவர் காதினில் மட்டுமே கதை சொல்லப்பட்டது. மேலும், அவ்வறையில் கதை சொல்லும் போட்டிக்கான போட்டியாளர்கள் மட்டுமே அமர வைக்கப்பட்டிருந்தனர். அதிகபட்சம் 4-5 பேர். இது எந்தவித திறமையையும் வளர்த்துவிடாது. அடுத்தகட்ட நகர்தலுக்கு ஒரு பயனும் அளிக்காது. மேலும், போட்டியின் தலைப்பு – நீதிக்கதைகள். குழலி ஒரு ஃபேன்டசி கதை கூறினாள். ' 'குழந்தைகளுக்கான கதைகளில் கட்டாயமாக நீதி இருக்க வேண்டும் என்று அவசியமில்லை' எனக்கூறி கடைசியில் முடி' எனச் சொல்லி அவளை அனுப்பியிருந்தேன். ஆனால் 'ஒரு போட்டியில் பங்கேற்பதே முக்கியம், வெற்றி பெறுவதல்ல' என்ற நீதியுடன் முடித்தாள் அவள்.

மீண்டும் நம் பால்யத்தை, போட்டிகளுக்குச் சென்ற நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். குழந்தைகளுக்கான போட்டி நிகழ்வுகளில், போட்டியைவிட அதனைச் சார்ந்து கிடைக்கும் அனுபவங்கள் அலாதியானவை என்பதை நேரடியாக உணர்ந்தவர்கள் நாம். போட்டி நடக்கும் இடத்தினை தேடிச்செல்வது, அங்கே பெயரை பதிவது, அந்த பள்ளி /இடத்தை சுற்றிப்பார்ப்பது, புதிய நண்பர்களை கண்டெடுப்பது, நாம் பயிலும் கலையில் மற்ற மாணவர்களின் நிலை அறிவது, ஆளுமைத்திறன் வளர்ப்பது, ஒரு விழாவை எப்படி நடத்த வேண்டும் என்று கற்றுக்கொள்வது என... எத்தனை அனுபவங்கள் பெற்றோம்? அவையெல்லாம் நம் பால்யத்தின் பெரும் நினைவுகள் இல்லையா? அது இன்றைய தலைமுறை குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டாமா?

பெற்றோர்களும் பள்ளி நிர்வாகமும் இதனைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப குழந்தைகளுக்கான போட்டிகளை நெறிப்படுத்த வேண்டும்.

புனிதா, உன்னுடைய கம்பீரமான மேடைப்பேச்சுகள் இன்னும் பசுமையாக நினைவிருக்கின்றது. ஹரிசாய் செய்த ப்ராஜெக்டினைப் பற்றி அவனே விளக்கிச் சொல்லி ஒரு வீடியோ எடுத்து அனுப்பி வைக்கவும். அவனுக்கு அன்பும் ப்ரியமும்!

vikatan

  • தொடங்கியவர்

இந்த வருடம் மார்க் சக்கர்பெர்க் எத்தனை ''லைக்'' பண்ணிருக்காரு தெரியுமா?

ஃபேஸ்புக்ல காலைல எழுந்து யாருக்காவது லைக் போடணும், இல்ல நமக்கு எத்தனை லைக் வந்திருக்குனு பாக்கணும். இது தினசரி வாழ்க்கைல தவிர்க்க முடியாத விஷயமா மாறிடுச்சு. நமக்கே இப்படின்னா ஃபேஸ்புக்க கண்டுபுடிச்ச மார்க் சக்கர்பெர்க் யாருக்கெல்லாம் லைக் போடுவாரு? இது தான் பல பேரோட கேள்வி.

இந்த வருஷம் நடந்த முக்கிய நிகழ்வுகள் எல்லாத்தையும் வீடியோவா தொகுத்து வழங்குற yearinreview2016 வசதிய ஃபேஸ்புக் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வெளியிட்டது. இதில் இந்த வருடத்தில் நாம் பதிவிட்ட சிறந்த புகைப்படங்கள், நாம் எத்தனை பேரை லைக் செய்திருக்கிறோம். அதிக லைக் வாங்கிய புகைப்படங்கள் என 70 நொடிகள் கொண்ட தொகுப்பாக வீடியோவை ஃபேஸ்புக் தயாரித்து தரும்.

தனது yearinreview2016- ஐ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள மார்க் சக்கர்பெர்க், இந்த வருடத்தில் மட்டும் 7,800 பதிவுகளுக்கு லைக் போட்டிருக்கிறார். லட்ச கணக்கில் லைக் வாங்கும் மனிதர் 7800 பதிவுகளை இந்த ஒரு வருடத்தில் லைக் செய்திருப்பது கொஞ்சம் ஆச்சர்யம் தான்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தன் மகள் குறித்த பதிவுகளை பதிவிட்டு வந்த மார்க் சக்கர்பெர்க் பின்னர் பருவநிலை, நோயற்ற உலகம், அமெரிக்க தேர்தல், ஆகுமென்டட் ரியாலிட்டி, கல்வி என பல பதிவுகளை பதிவு செய்து டம்லைன் கில்லியாகவே இருந்துள்ளார். குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் இடயேயான டி20 போட்டிக்கு ஸ்டேட்டஸ் தட்டியதெல்லாம் வேற லெவல் வைரல்

இந்த வருடத்தில் மார்க்கின் முக்கிய நிகழ்வுகள்:

1. மார்க் சக்கர்பெர்க் தன் மகள் மேக்ஸுடன் தடுப்பூசி போடுவதற்காக அமர்ந்திருக்கும் புகைப்படம் தான் அவரது இந்த வருடத்தின் சிறந்த பதிவாக உள்ளது.

12523064_10102586759120781_6301684509450

2. ஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ள ஆக்மென்டட் ரியாலிட்டி புகைப்படங்களை மார்க் வெளியிட்ட படம்

14495473_10103154393207521_8532406275404

3.நோயற்ற உலகை உருவாக்குவதற்காக சான்-சக்கர்பெர்க் பவுண்டேஷன் மூலம் உதவிகளை செய்யவிருப்பத்தை அறிவித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்

14434927_10103121033670301_6175966939445

4. காபி வித் செலினா கோம்ஸ் - இன்ஸ்டாகிராமின் மிகப்பெரிய ஸ்டாருடன் ஒரு காபி சந்திப்பு

மார்க்

5. சான் ஃப்ரான்சிஸ்கோவில் நடைபெற்ற மாரத்தானில் ஓடியது

13909159_10103002930185631_3122822857795

6.  சான்-சக்கர்பெர்க் இனிஷியேட்டிவ் பற்றி போப் ஆண்டவரிடம் விளக்கிய தருணம்

14202650_10103066185217041_3952047939163

7. 13 வருங்களுக்கு முன்பு தன் மனைவியுடனான முதல் காதல் சந்திப்பு

15032074_10103256761755131_6494316009792

8. நைஜீரிய குழந்தைகளுடனான சம்மர் கோடிங் கேம்ப்

 

14138806_10103069173423651_6344352463424

9. ஹாலோவீன் டே ட்ரெஸ்ஸிங் வித் ஃபேமிலி

14938257_10103220363123281_2369637631766

10. இந்த வருடம் மொத்தம் 7800 பதிவுகளை லைக் செய்துள்ளார் மார்க்

 

 

இது தான் மார்க் சக்கர்பெர்க்கின் 2016 மறக்க முடியாத 10 நிகழ்வுகளாக ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது. இதே போன்று உங்களது டாப் தருணங்களை பகிர்ந்து கொள்ள facebook.com/yearinreview2016 என்ற லின்க்கில் தெரிந்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் இதே போன்று முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் இந்த வருடம் புதிதாக எத்தனை பேருக்கு லைக் செய்துள்ளோம் என்பதையும், புதிதாக எத்தனை நண்பர்களை பெற்றுள்ளோம் என்பதையும் காட்டுகிறது. மேலும் ஹார்ட், ஹஹா, வாவ், சோகம், ஆங்ரி இமோஜிகள் எத்தனை அளித்துள்ளோன்ம் என்பதையும் காட்டுவது ஆஸம்...ஆஸம்...இதேபோல் உங்களுக்கு இந்த வருடத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை கமெண்ட்டில் தெரிவியுங்களேன். 

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலகத்தையே உளவு பார்த்தவர்களை உளவு பார்த்தவர்! - ஒரு உளவு அமைப்பின் கதை #MustRead

 

உளவு

ல்லா நாடுகளிலுமே ராணுவம், காவல் துறைக்கு அடுத்தபடியாக முன்னிறுத்தப்படுவது உளவுத் துறைதான். வேறு நாட்டுக்குப் போய் உளவுபார்த்து மாட்டிக்கொண்டாலும், அவ்வளவு சீக்கிரத்தில் உளவாளிகளை அனுப்பிய நாடு அதை ஒப்புக்கொள்ளாது. அதுதெரிந்தும் நாட்டின் பாதுகாப்புக்காக வெவ்வேறு பெயர்களில், அடையாளங்களில், பல்வேறு நாடுகளில் உளவு வேலையில் ஏராளமானோர் ஈடுபடத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு உளவு அமைப்பை பற்றிய கதை தான் இது...,         

ரஷ்யாவில் நடந்து வந்த ஜார் மன்னராட்சியில், புரட்சியாளர்களையும், அரசரின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியவர்களையும் ஒடுக்கவும், அத்தகையவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் "ஒக்ரானா" என்ற ரகசிய உளவு அமைப்பு செயல்பட்டு வந்தது. மன்னரையும் அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்பதே இவர்களது முக்கியப் பணியாக இருந்தாலும், மன்னராட்சிக்கு எதிராக செயல்படும் புரட்சிக் குழுக்களை கண்டறிந்து, அவர்களின் செயல்பாடுகளை முடக்கும் பணியையும் அவர்கள் மேற்கொண்டு வந்தனர். மன்னராட்சிக்கு எதிராக புரட்சி மேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்த காலம். எந்த நேரத்திலும் புரட்சியாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எண்ணிக்கை குறைவாக இருந்ததாலும், செயல் திட்டங்களில் திறமை குறைந்திருந்ததாலும் ஒக்ரா உளவு அமைப்பினால் பெரிய அளவில் புரட்சிப் போராட்டங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. என்றாலும், புரட்சியாளர்களை ஒரு பதற்ற நிலையிலேயே வைத்திருக்க இந்த அமைப்பு உதவியது என்றுதான் சொல்ல வேண்டும்.

தொடர்ச்சியான பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர், ஜார் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு லெனின் தலைமையிலான கம்யூனிச புரட்சியாளர்களின் போல்ஷ்விக் அரசு பொறுப்பேற்றது. அதன் பின்னர் ஒக்ரா அமைப்புக்கு அந்நாட்டில் வேலை இருக்காது என்றுதான் பலரும் நினைத்தனர். மன்னராட்சியை விட, எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும்போது நாட்டில் திருட்டு, குற்றங்கள், புரட்சிகள் போன்றவை நடக்காது என நினைத்தனர் கம்யூனிஸ்ட் தோழர்கள். ஆனால் புதிய அரசு அமைந்து, லெனின் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட ஆறு வாரங்களில், "செகா" என்ற ரஷ்யப் பாதுகாப்பு அமைப்பு தொடங்கப்பட்டதுதான் ஆச்சரியம்.

அர்னால்ட் டாய்ச்

ஜார் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு, கம்யூனிச சித்தாந்தங்களின் அடிப்படையிலான அரசு அமைந்து விட்டாலும், இந்த அரசைத் தொடர்ந்து நிலை நிறுத்திக்கொள்ள இதுபோன்ற அமைப்புகள் தற்காலிகமாக தேவை என நினைத்தார் லெனின்.  இப்படி தற்காலிக தேவைக்கென 1917, டிசம்பர் 20-ல் தொடங்கப்பட்ட "செகா" பின்னாளில் ரஷ்யாவின் மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்ததோடு மட்டுமல்லாமல், அரசியல் ஆயுதமாகவும் மாறியது. செகாவில் பணியாற்றிவர்கள் தங்களை "செக்கிஸ்டுகள்" என அழைப்பதில் பெருமை கொண்டனர். செகாவின் உளவாளிகள் ஏறத்தாழ உலகின் எல்லா நாடுகளிலும் பரவியிருந்தனர். சோவியத் ரஷ்யாவிற்குத் தேவையான அல்லது சம்பந்தமே இல்லாத தகவல்கள் என எல்லா தகவல்களும் உடனுக்குடனாக, மாஸ்கோவிற்கு அனுப்பப்பட்டது. உலகின் பெரிய நாடுகள் அவ்வளவாக இதுபோன்ற உளவு வேலைகளில் கவனம் செலுத்தாத நிலையில், தன்னுடைய ஊழியர்களை அங்கே அனுப்பி வைப்பது, பெரிய காரியமாக இல்லை. பெரும்பாலும் நல்ல திறமையான, அனுபவம் மிக்கவர்கள் மட்டுமே இதுபோன்ற வெளிநாட்டுப் உளவுப் பணிகளுக்கு அனுப்பபட்டனர்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த அமைப்புக்கு கொடுக்கப்பட்ட பணிகளில் மாற்றங்கள் இருந்த அதே நேரத்தில் GPU, OGPU, GUGB, 2_11252.jpgNKGB, MGB, MVD என அதன் நேம் போர்டுகளும் மாறிக் கொண்டேயிருந்தன. பெயர்கள் தான் மாறியதே தவிர, அதன் செயல்பாடுகள் ஒன்றாகவே இருந்தன. இதில் அதிக ஆண்டுகள் பெயரையும், புகழையும் தக்க வைத்துக்கொண்டது 1954-ல் தொடங்கப்பட்ட KGB தான். இது, பின்னாளில் சோவியத் பாதுகாப்பு மற்றும் உளவுச்சேவை நிறுவனமாக மாற்றம் கண்டது.

1917-ல் தொடங்கப்பட்டபோது, செகாவின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 23 மட்டுமே. இந்த எண்ணிக்கை 1973-ல் 4.9 லட்சமாகவும், 1986-ல் 7 லட்சமாகவும் அதிகரித்தது. தகவல் சேகரிப்புப் பிரிவு, நிர்வாகப் பிரிவு, எதிர் உளவுப்பிரிவு, ஊழல் தடுப்புப் பிரிவு. என தன்னுடைய செயல்பாடுகளை தெளிவாக வகுத்துக்கொண்டு செயல்படத் தொடங்கியது செகா. இந்த திட்டமிடல்கள்தான் கே.ஜி.பி-யையும் உலகின் முன்னணி உளவு நிறுவனமாக முன்னேற்றியது எனலாம். மேற்கத்திய நாடுகள் சூழ்ச்சிசெய்து எப்போது வேண்டுமானாலும் சோவியத் ரஷ்யாவை வீழ்த்தி விட வாய்ப்பிருக்கிறது என்ற போல்ஷ்விக் தலைவர்களின் பயம்தான் செகா போன்ற ஒரு உளவு நிறுவனம் உயிர்ப்போடு இருக்கக் காரணம். இதனால் பல்வேறு காலக் கட்டங்களில் மக்களும் பாதிக்கப்பட்டார்கள் என்பதும் உண்மை.

உதாரணமாக, ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில், "இருவர் சாலையில் பேசிக்கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கும்போது செக்கிஸ்டுகள், அவர்களை வழிமறித்து தனித்தனியே கூட்டிச் செல்வார்களாம். இருவரிடமும் ஒரே கேள்வி, "கடைசியாக என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள்!?" இதற்கு இருவரும் ஒரே பதிலைச் சொன்னால் தப்பித்தார்கள். கொஞ்சம் மாற்றிச்சொன்னாலோ அல்லது பயத்தில் யோசித்தாலோ புரட்சி செய்யப் பார்த்தார்கள் எனச்சொல்லி சிறையில் அடைத்தார்கள் "

இப்படி செக்கிஸ்டுகளால் உள்நாட்டில் நிறைய பிரச்சினைகள் வந்தாலும், பிற நாடுகளின் கே.ஜி.பி ஊழியர்கள், தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி உளவுச் செய்திகளை அனுப்பி வந்தார்கள். அவற்றில் முக்கியமானது  இங்கிலாந்தில் உளவாளியாகச் செயல்பட்ட அர்னால்ட் டாய்ச் என்ற செக்கிஸ்டின் "கேம்பிரிட்ஜ் ஃபைவ்" (Cambridge five) திட்டம். 

ரொம்ப அலட்டிக் கொள்ளாமல் எளிமையான ஒரு திட்டத்தை தீட்டினார் அர்னால்ட் டாய்ச்.ஏற்கெனவே, அரசுத் துறைகளில் வேலை பார்ப்பவர்களை உளவாளிகளாக மாற்றி தகவல் பெறுவதையே பெரும்பாலும் எல்லா உளவு நிறுவனங்களும் செய்துவந்த நிலையில், புதிதாக அரசுத் துறைகளுக்கு வேலையில் சேரப்போகும் மாணவர்களின் மீது தன் கவனத்தை திருப்பினார். அப்படிக் கிடைத்த ஒருவர்தான் கிம் ஃபில்பி. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவரான கிம் ஃபில்பிக்கு, ஆரம்பத்திலிருந்தே அரசின் மீதும் குடும்பத்தின் மீதும் வெறுப்பு இருந்தது. அவரிடம் பேசினார் டாய்ச். திட்டத்திற்கு ஒத்துழைப்பதாக கூறி, இணைந்து கொண்டார் கிம் ஃபில்பி . படிப்பை முடித்து அரசுத் துறைகளில் பணியாற்றத் தொடங்கிய ஃபில்பி போலவே இன்னும் நான்கு மாணவர்கள் இதில் இணைந்து கொண்டு செயல்படத் தொடங்கினர். பிரிட்டிஷ் அரசுத்துறை சார்ந்த தகவல்கள், மாஸ்கோவிற்கு பறந்தன. இதில் இன்னொரு சுவாரசிய சம்பவமும் நடந்தது. பிரிட்டிஷ் உளவுத்துறையில் கிம் ஃபில்பிக்கு வேலை கிடைத்ததுதான். ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் தகவல்களைத் திருடி அனுப்பியதில் மாட்டிக்கொண்டார். வழக்கு தொடுக்கப்பட்டது, ஆனால் அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கபடாததால் அதிகபட்சமாக அவரிடமிருந்து ராஜினாமா கடிதம் மட்டும் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தது பிரிட்டிஷ் அரசு. மாஸ்கோ சென்றவருக்கு, கே.ஜி.பி-யில் பணி காத்துக்கொண்டிருந்தது.

5_11432.jpg

செக்கிஸ்டுகளின் இன்னொரு சாதனை, அமெரிக்காவின் யுரேனியம் - புளுட்டோனியம் அணுகுண்டு சோதனையின் அத்தனை விவரங்களையும் சேகரித்து அனுப்பியதுதான். இதனால் அடுத்த நான்கே வருடங்களில் ரஷ்யாவும் அணுகுண்டை வெடிக்கச் செய்து, தன் பலத்தை நிரூபிக்க முடிந்தது. அவ்வளவு ஏன்? அமெரிக்காவுக்கும், சோவியத் ரஷ்யாவுக்கும் பனிப்போர் நிகழ்ந்து வந்த சமயத்தில் அமெரிக்காவின் முக்கியப் பாதுகாப்பு அமைப்புகளான CIA , FBI-யின் உயர்மட்ட பதவிகளில் கூட ரஷ்ய உளவாளிகள் ஊடுருவியிருந்ததாக சொல்லப்படுகிறது. 

இப்படி செம கில்லாடிகளாக விளங்கிய செக்கிஸ்டுகளின் உளவு வேலைகள் அனைத்தையும் வெளிக்கொண்டு வந்தது மிட்ரோகின் ஆவணங்கள். செகாவின் உளவு வேலை குறித்த ஆவணங்களை பாதுகாக்கும் பிரிவில் வேலைசெய்து கொண்டிருந்தார் மிட்ரோகின். அதில் இருந்த அத்தனை தகவல்களும் ஒரு நாட்டின் அதிகாரத்தையே அசைத்துப் பார்க்கக் கூடியவை. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலையே படவில்லை மிட்ரோகின். ஆவணங்களை மொத்தமாக எடுத்துச் சென்று ஜெராக்ஸ் போட்டுக் கொண்டு வந்துவிட முடியாது. ஆவணங்களில் இருந்த தகவல்களை சிறு சிறு குறிப்புகளாக எழுதி, அதை தன் காலுறையில் வைத்துக் கடத்தி கொண்டிருந்தார். அவர் மேல் யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை. இப்படி மொத்தம் 12 வருடங்கள் அவர் இந்த வேலையை செய்ததாகச் சொல்லப்பட்டது. இந்தக் குறிப்புகள் அனைத்தும் சோவியத் யூனியன் கலைந்த பிறகு "மிட்ரோகின் ஆவணங்கள்" என வெளிவந்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

4_11131.jpg

1991-ல் சோவியத் யூனியன் கலைக்கப்படுவதற்கு சில வாரங்கள் முன்னர் வரை கே.ஜி.பி இயங்கி வந்தது. 1991 அக்டோபர் 24-ம் தேதி கே.ஜி.பி கலைக்கப்பட்டது. சுதந்திர ரஷ்யா உருவாக்கப்பட்ட பிறகும், இப்படியான உளவு நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுதான் உள்ளன. 

vikatan

  • தொடங்கியவர்
குதிரை பந்தயம்
 
 

article_1481605821-IMG_0310.jpg

நத்தாரை முன்னிட்டு நுவரெலியாவில், குதிரை பந்தயம் மற்றும் நவநாகரீக ஆடை அலங்கார கண்காட்சி ஞாயிற்றுக்கிழமைஇடம்பெற்றது.\

article_1481605836-IMG_0125.jpg

article_1481605844-IMG_0052.jpg

article_1481605853-IMG_0027.jpg

article_1481605865-IMG_9940.jpg

article_1481605873-IMG_0163.jpg

article_1481605883-IMG_0192.jpg

article_1481605990-IMG_9884.jpg

article_1481606030-IMG_0077.jpg

article_1481606041-IMG_0067.jpg

article_1481606060-IMG_0016.jpg

article_1481606070-IMG_9917.jpg

article_1481606087-IMG_0486.jpg

article_1481606096-IMG_0552.jpg

article_1481606108-123.jpg

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பேசும் படம்: காலத்தின் துரு ஏறாத ஆலை!

 
படம்: ஏ.எஃப்.பி.
படம்: ஏ.எஃப்.பி.
 
 

பிரான்ஸின் க்ரெய் நகரில் உள்ள ரிவியே ஆணி தொழிற்சாலை சரித்திரப் புகழ் பெற்றது. 1888-ல் தியோடர் ரிவியே என்பவரால் தொடங்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை, இன்று வரை தொடர்ந்து இயங்கிவருகிறது. தொடங்கிய நாள் முதல் அதே கட்டிடத்தில் இயங்கும் இந்தத் தொழிற்சாலை, 'வாழும் பாரம்பரிய நிறுவனம்' என்று பிரான்ஸ் அரசால் அறிவிக்கப்பட்ட பெருமைக்குரியது.

2,800 வகையான ஆணிகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் சில வகை ஆணிகள் உலகில் வேறெங்கும் கிடைக்காத வகையில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுபவை. பிரான்ஸ் மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள பெரிய தொழிற்சாலைகளில் இந்த ஆணிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆணி தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார் தொழிலாளர் ஒருவர்.

படம்: ஏ.எஃப்.பி.

tamil.thehindu

  • தொடங்கியவர்

அதிவேகமாக பர்கர் சாப்பிட்டு சாதனை..!

 

 

ஜப்பானின் டக்கெரு கொபயாஷி 3 நிமிடங்களில் 12 ஹாம் பர்கர்கள் சாப்பிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். அவரின் முந்தைய சாதனையான 3 நிமிடங்களில் 11 பர்கர் சாப்பிட்டதை அவரே முறியடித்துள்ளார். இது மட்டுமின்றி, 3 நிமிடங்களில் 6 ஹாட்டாக்ஸ் சாப்பிட்டும், ஒரு நிமிடத்தில் 29 மீட்-பால் சாப்பிட்டும் இவர் சாதனை இவர் நிகழ்த்தியுள்ளார். இத்தாலியில் கின்னஸ் உலக சாதனை அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் முன்னிலையில் அவர் 3 நிமிடங்களில் 12 பர்கர்கள் சாப்பிட்டு சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

vikatan

  • தொடங்கியவர்

‘தலை’விதியை மாத்தலாம்!

 

 

தயம், நுரையீரல் வரிசையில் அடுத்ததாகத் தலையையே வேறு ஒருவருக்கு மாற்றிப் பொருத்தும் உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சைக்குத் தயாராகிவிட்டார்கள் மருத்துவர்கள். பார்த்ததுமே பதறுதா? அட ஆமாங்க. இத்தாலியைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் செர்ஜியோ கேனவெரோதான் இந்த முதல் தலைமாற்று அறுவைச் சிகிச்சையைச் செய்யப்போகிறாராம். அடுத்த ஆண்டு நடைபெறப்போகும் இந்த ஆபரேஷனுக்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம்!

p831.jpg

மரபியல் உடற்குறைபாடு உடைய ரஷ்யாவைச் சேர்ந்த வேலரி ஸ்பிரிடோனோவ் என்பவர்,  இந்த ஆபரேஷனுக்குத் தாமாகவே முன்வந்து, முதல் உறுப்பு மாற்றாளராகச் சேர்ந்திருக்கிறாராம். ஆனால், `ஒருவரின் தலையை இன்னொருவரின் உடலோடு பொருத்துவது எளிதல்ல' என உயிரி- மருத்துவத்துறைப் பேராசிரியர்கள் தெரிவித்திருக்கிறார்கள். டாக்டர் செர்ஜியோ கேனவெரோ இந்த ஆபரேஷனுக்காக, `உலகிலேயே முதல்முறையாக நோயாளியின் புரோட்டாகாலை உருவாக்க விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் பல புதுமைகளைப் புகுத்தியிருக்கிறோம்' என்கிறார்.

வரும் ஜனவரியில் ஒரு குரங்கை வைத்து இந்த முயற்சிகளைச் சோதித்துப் பார்க்கப் போகிறார்களாம். இதுசாத்தியமானால் மருத்துவத் துறையின் மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.

அடி ஆத்தீ!

vikatan

  • தொடங்கியவர்

இன்று திருக்கார்த்திகைத் திருநாள்

இன்று திருக்கார்த்திகைத் திருநாள்

  • தொடங்கியவர்

ஈவா பெரோன் - அர்ஜென்டினாவின் இரும்பு மங்கை! #EvaPeron

 

ஈவா


'எவிட்டா (Evita)' என வெகுமக்களால் அன்புடன் நினைவுகூறப்படும் ஈவா பெரோன் (Eva Peron), இலத்தீன் அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஒரு நட்சத்திரம். பாடகி, நடிகை, அரசியல்வாதி எனப் படிப்படியாக முன்னேறிய பெண் ஆளுமையான அவர், கவர்ச்சிமிக்க இலட்சியத் தலைவியாகத் திகழ்ந்தவர். அவர் உடுத்திய உடைகள், அவர் அணிந்த தொப்பி, அவரது உதட்டசைவு, அவரது நகைகள், அவரது உள்ளாடைகள் உட்பட, அனைத்தும் அர்ஜென்டின ஏழை மக்களுக்கு வழிபாட்டுக்கு உரியதாகவும் பெருமிதத்திற்கு உரியதாகவும் இருந்தன. புற்றுநோய் பாதிப்பால் 1952ம் ஆண்டு எவிட்டா இறந்தபோது, அவருக்கு வயது 33. சுவாரஸ்யமும் ஆச்சர்யங்களும் நிறைந்தது அவரின் வாழ்க்கை.

முதல் பார்வையில் எவிட்டாவை இமல்டா மார்க்கோஸ், இளவரசி டயானா, மார்கரட் தாட்சர் போன்றவர்களோடு இணைவைத்துப் பார்க்க முடியும். காரணம், இவர்களது ஆடம்பரமான கவர்ச்சிகரமான வாழ்வு. அடித்தட்டு மக்களை கவர்ந்திழுக்கும் பேச்சு சாதுர்யத்துடன், அரசியலில் முக்கியமான நபர்களாக அதிகாரம் பெற்றவர்கள் இவர்கள். தங்களை அபலைகளாக, கையறு நிலையில் உள்ளவர்களாகக் காட்டிக்கொண்டவர்கள். இவர்களது ஆடம்பர வாழ்வுக்கு ஆதாரமாக இருந்தவை... சாதாரண மனிதனின் உழைப்பும், அவர்களது உழைப்பில் பெருக்கிய மூலதனம் கொடுத்த இலாபமும்தான். சாதாரண மனிதனின் இரங்கத்தக்க நிலைமீதுதான் இவர்களது அதிகாரம் கட்டமைக்கப்பட்டது. எவிட்டாவின் கதையும் அப்படித்தான்.

378542_113908322062796_1340937437_n_1200

சல்லிக்காசுகூட இல்லாத ஒரு சாதாரண விவசாயியின் சட்டப்பூர்வமற்ற மகளாகப் பிறந்த கிராமத்துச் சிறுமியான எவிட்டா, எவ்வாறு மாபெரும் அரசியல் சக்தியாக அர்ஜென்டினா மக்களின் இதயங்களில் இடம்பெற்றார்? எந்த சக்தி அவரைத் தொழிலாளி வர்க்கத்தை, தொழிற்சங்க இயக்கத்தை தனது முறைசாரா கணவனான பெரோனுக்கு ஆதரவாகத் திரும்பச் செய்ய வைத்தது? ஏன் நிலபிரபுக்களும், பணம் படைத்தவர்களும் இவரை வெறுத்தார்கள்?

1936ம் ஆண்டு தனது 16 வயதில் அர்ஜென்டினத் தலைநகர் புவனஸ் அயர்சுக்கு, பாடகன் ஒருவனோடு வரும் எவிட்டா, பல்வேறு ஆட்சியாளர்களோடு தொடர்புகொண்டு அரசியல் வாழ்வின் உச்சநிலைக்குச் செல்கிறார். திரைப்பட நடிகை, பாடகி எனும் அறிமுகங்களோடு ராணுவத்தினரோடு தொடர்பு கொண்டு இறுதியில், அன்றைய அர்ஜென்டின அரசுத் தலைவர் பெரானைச் சந்தித்து, அதிகாரத்தைத் தன் வசம் எடுக்கிறார். தன் பெயரில் பள்ளிக்கூடம், மருத்துவமனை, உதவி அமைப்புகள் என நிறுவுகிறார். சேரி மக்கள், தொழுநோயாளிகள்,  ஏழைக் குழந்தைகள் எனத் தெருவில் இறங்கி முத்தமிடுகிறார். தொழிற்சங்கங்களில் உரையாற்றி தொழிலாளிகளை எழுச்சிகொள்ள வைக்கிறார். கைது செய்யப்படும் தனது முறைசாரா கணவன் பெரானை, மக்களைத் திரட்டி விடுவிக்கிறார். தன்னை எதிர்ப்போர் எவராயினும் அவர்களை அடக்குமுறைக்கு ஆளாக்குகிறார்.

நூற்றுக்கணக்கான செருப்புகள், ஆபரணங்கள், பகட்டான உடைகளுக்கு ஆயிரமாயிரமாய் பணம் செலவிடுகிறார் எவிட்டா. சர்ச்சுக்குப் போகிறார். ஜனாதிபதி மாளிகையில் பால்கனியில் நின்று ‘நான் மக்களை நேசிக்கிறேன்’ என உருக்கமாக உரையாற்றி, மக்கள் தன்னையும், தனது முறைசாரா கணவனான பெரோனையும் நேசிக்கும்படி மன்றாடுகிறார்.
 
எழுத்தாளர் வி.எஸ். நைபால், எவிட்டா பற்றி இப்படிச் சொல்கிறார்...

“எவிட்டா வழிபாட்டுக்கான லத்தீன் அமெரிக்க மக்களின் உளவியல் என்ன? பெண் அர்ப்பணிப்பு உணர்வை, பெண்ணின் பாலியல் வெளிப்பாட்டுடன் இணைப்பது அம்மக்களின் விருப்பார்வம். உதவி ஜனாதிபதி பதவியைத் தன் கணவனுக்காக ஈவா துறப்பது, பெண் புனிதத்துவத்தின் உச்சமாகிறது. அந்தக் கட்டுமுறையற்ற அதிகாரம், காதலினால் நியாயப்படுகிறது!”

பெரானுக்குப் பின் எழுந்த எதிரிகள், எவிட்டாவை வேசி என்றார்கள். அவரது உள்ளாடைகளை வேடிக்கைப் பொருளாக்கினார்கள். அந்த உள்ளாடைகள்கூட மக்களால் புனிதம் எனப் போற்றப்படும் சின்னமானதுதான் சிறப்பு. எவிட்டாவை புனிதப் பிறவியாக அறிவிக்கும்படி வாட்டிகனிடம் அர்ஜன்டினத் தொழிற்சங்க அமைப்புகள் விண்ணப்பித்த வரலாறும் உண்டு.

“எவிட்டா மதச்சார்பற்ற புனிதப் பிறவி. தனிமனித வழிபாடு என்பது  இதுதான். மதச் சார்பற்ற புனித அங்கீகாரம் எந்தத் திருச்சபை சார்ந்ததும் அல்ல. அது வாசகர்களின், பார்வையாளர்களின், வெகுக்களின், கேட்பவர்களின் மனங்களைச் சார்ந்துதான் நிலவுகிறது” என்கிறார் சைமன் ஜெங்கின்ஸ்.

383860_113991215387840_1329132630_n_1225

சின்னஞ்சிறு பெண் குழந்தையாக எவிட்டா இருந்தபோது, அவரது தாயும், சகோதரிகளும் அவர் தந்தையின் மரணச் சடங்குக்குச் செல்லும்போது அனுமதி மறுக்கப்படுகிறார்கள். ‘இவர்கள் முறை தவறிப் பிறந்தவர்கள்’ என ஏசுகிறார்கள்  எவிட்டா தகப்பனின் அதிகாரப்பூர்வ மனைவியின் மக்கள். ‘உனக்கு இங்கு வர என்ன உரிமை இருக்கிறது?' என்பதுதான் அவர்கள் எவிட்டாவின் தாயை நோக்கிக் கேட்கும் கேள்வி. முறைதவறிப் பிறந்த எவிட்டாவை வாழ்நாளெல்லாம் உலுக்கிய கேள்வி இதுதான்:  ‘சாதாரண மக்கள்போல் வாழ -அதிகாரம் பெற முறைதவறிப் பிறந்த எனக்கு என்ன தகுதி அல்லது உரிமை தேவைப்படுகிறது?' இந்தத் தகுதியையும் உரிமையையும் தனக்குக் கிடைத்த அதிகாரத்தின் மூலம் நிலைநாட்டத் துடித்தார் எவிட்டா.

உச்சபட்சத் தகுதியாகவும், உரிமையாகவும் நாட்டின் உப ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுகிறார் எவிட்டா.  அதிகாரமுள்ளவர்கள், பணக்காரர்கள், ஒழுக்கவாதிகள் போன்றோருக்கு எதிரானவராக, ஏழைமக்களின் அரசியாக எவிட்டா உருவானது இப்படித்தான்.

எவிட்டா இறந்த பின் அவரது உடலைத் தேடி அழித்துவிட முயன்றது அர்ஜென்டின இராணுவம். அவரது உடல் பாதுகாக்கப்பட்டது. பெரான் ஸ்பெயின் சென்று தங்கியிருந்தபோது எவிட்டாவின் உடல் அங்கு எடுத்துச் செல்லப்பட்டது. பாதுகாக்கப்பட்ட எவிட்டாவின் உடலைப் பார்த்து ‘அதிசயம்’ என்று வணங்கத் தொடங்கினர் அர்ஜன்டின மக்கள். இறுதியாக, எவிட்டாவின் உடல் நாடு திரும்பியது. அர்ஜென்டினாவில் அடக்கம் செய்யப்பட்டது எவிட்டாவின் உடல். கீழ்த்தட்டு மக்களின் யாத்திரைத் தலமாக இன்றும் அவரது கல்லறை இருக்கிறது.  அவர் உருவாக்கிய மருத்துவமனைகளும் குழந்தைப் பராமரிப்பு இல்லங்களும், இன்றளவும் கீழ்த்தட்டு மக்களுக்கு சேவை செய்பவையாக விளங்குகின்றன.

எவிட்டாவின் வாழ்வு, அதே பெயரில் புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகி மடோனா நடிக்க, பிரித்தானிய இயக்குநர் அலன் பார்க்கர் இயக்கத்தில் திரைப்படமாக வெளியானது. எவிட்டாவை விமர்சனங்கள் இன்னும் தொடர்ந்தபடிதான் இருக்கின்றன. ஆனால், கீழ்த்தட்டு மக்களுக்கும் பெண்களுக்கும் எவிட்டா புனிதப் பிறவி!

vikatan

  • தொடங்கியவர்

யூத்தாகலாம் வாங்க!

 

 

p75a.jpg

னிதர்களின் தலையாய பிரச்னைகளில் ஒன்று முதுமை! வயது முதிர்வதைத் தடுக்க சஞ்சீவினி மூலிகை எல்லாம் இப்போ மார்க்கெட்ல கிடைக்கிறதில்லைங்கிறதால விஞ்ஞானிகள் மூளையைப் பிராண்டி ஒரு கருவியைக் கண்டுபிடிச்சிருக்காங்க. வாங்க, என்னன்னு பார்ப்போம்!

p75b.jpg

`மூட்டைப் பூச்சியைக் கொல்லும் நவீன மெஷின்' மாதிரி ஏதோ இருக்கும் போலன்னு விசாரிச்சுப் பார்த்தா, சின்னப்புள்ளைக விளையாடுற காத்தாடி மாதிரி அமைப்புல பேட்டரியால் ஓடும் ஒரு கருவியைக் காட்டுகிறார்கள். அதில் பேட்டரி அளவில் இருக்கும் நடுப்பகுதியை வாயில் கடித்தபடி தலையை மேலும் கீழும் ஒரு நிமிடம் தொடர்ந்து அசைக்க வேண்டுமாம். இப்படியே தொடர்ந்து செய்துவந்தால் இந்தப் பயிற்சியின் விளைவால் தசைப்பகுதிகள் வயதானாலும் சுருக்கமற்று இளமையான தோற்றத்தைக் கொடுக்குமாம். இதனால் நீண்ட வருடம் இளமையாகவே இருக்கலாம் என அந்த நிறுவனம் சொல்லியிருக்கிறது. இதைத் தயாரித்திருக்கும் PAO நிறுவனத்தின் விளம்பரத்தில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நடித்திருப்பதுதான் அங்கே ஹைலைட்.

எப்படியெல்லாம் கிளம்புறாய்ங்க?

  • தொடங்கியவர்

p28a1.jpg

லக சீரியல் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த சீரியல் `தி வாக்கிங் டெட்' அதில் நடிக்கும் அலனா மாஸ்டர்ஸன்னுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக அவரின் உடல் எடையைக் கிண்டலடித்து சிலர் விமர்சனம் செய்ய, பொங்கி எழுந்துவிட்டார் அலனா. `குழந்தை பிறந்தபின் பெண்கள் எடை அதிகரிப்பது சகஜம்தான். இது தெரியாதவர்கள் அவர்கள் வீட்டுப் பெண்களிடம் கேட்டுக்கொள்ளவும்' என அவர் ஸ்டேட்டஸ் தட்ட, விவாதம் சூடு பிடிக்கிறது. #அம்மாடா

p28b.jpg

red-dot2.jpg `செம தில்லுதான் இந்தப் பொண்ணுக்கு' என ஹார்ட் முழுக்க ஆச்சரியம் வழிய கிகி ஹாடிட்டைப் புகழ்கிறார்கள் ரசிகர்கள். மதிப்புமிக்க விக்டோரியா ஃபேஷன் ஷோவில் ரேம்ப் வாக் போகும் வாய்ப்பு கிகிக்குக் கிடைத்தது. ஆனால் அப்படி நடக்கும்போது சட்டென மேலாடை நழுவிவிட, கொஞ்சமும் அசராமல் நிலைமையை சமாளித்து நடைபோட்டார் கிகி. `இந்த ஷோவில் கலந்துகொள்வது என் கனவு. அதை ஆடைக் கோளாறுகளுக்காக எல்லாம் விட்டுத்தர முடியாது' என அவர் கொடுத்த ஸ்டேட்மென்ட்தான் இந்தப் புகழ்மாலைகளுக்குக் காரணம். #கிழிகிழி

p28c.jpg

red-dot2.jpg ஸ்னாப்சாட் ரசிகர்கள் எல்லாம் செம குஷியாக இருக்கிறார்கள். காரணம் லேட்டஸ்ட் வரவான ஜெனிஃபர் அனிஸ்டன். சோஷியல் மீடியாக்களில் ஜெனிஃபர் பயங்கர ஆக்டிவ். இப்போது ஸ்னாப்சாட்டிலும் கால் பதித்து செல்ஃபிகளைத் தட்டுகிறார். வாயைக் குவித்து டக் போஸ் தந்து அவர் போட்ட முதல் செல்ஃபிக்கே எக்கச்சக்க லைக்ஸ் தட்டுகிறார்கள் நெட்டிசன்ஸ். #க்ளிக்.

p28d.jpg

red-dot2.jpg ஹாலிவுட்டின் ஸ்டார் ஜோடியான ஜானி டெப்பும் ஆம்பர் ஹெர்டும் பரஸ்பரப் புரிதலோடு பிரிவதாக அறிவித்தார்கள். அப்போதே விவாகரத்து மூலம் கிடைக்கப்போகும் பணத்தைத் தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்க இருப்பதாக அறிவித்தார் ஆம்பர். இப்போது விவாகரத்து முடிவான நிலையில் முதல் கட்டமாக மூன்றரை லட்சம் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்திருக்கிறார் ஆம்பர். #நல்ல மனம் வாழ்க.

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

டிசம்பர் - 14

 

1577 : சேர் பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்தின் பிளைமவுத்தில் இருந்து தனது உலகத்தைச் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்தார்.

 

1642 : ஏபெல் டாஸ்மான் நியூஸிலாந்தை அடைந்தார்.

 

8652012--shooting.jpg1937 : சீனாவின் நான்ஜிங் நகரம் ஜப்பானியரிடம் வீழ்ந்ததை அடுத்து அங்கு பல பொதுமக்கள் கொல்லப்பட்டும் பாலியல் வதைக்கும் உள்ளாக்கப்பட்டனர்.

 

1941 : இரண்டாம் உலகப் போரில் ஹங்கேரி, ருமேனியா ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தன.

 

1943 : ஐக்கிய அமெரிக்காவின் 710 போர் விமானங்கள் ஜேர்மனியின் கீல் நகர் மீது தாக்குதலை நடத்தின.

 

1949 : இஸ்ரேலின் சட்டசபை நாட்டின் தலைநகரை ஜெருஸலேம் நகருக்கு மாற்ற முடிவெடுத்தது.

 

1959 : மக்காரியோஸ், சைப்பிரஸின் முதலாவது ஜனாதிபதியானார்.

 

1972 : அப்பலோ 17 விண்வெளி வீரர்கள் யூஜீன் செர்னன், ஹரிசன் ஸ்மித் ஆகியோர் சந்திரனில் தங்கள் கடைசிக்கட்ட செயற்பாடுகளை ஆரம்பித்தனர். இதுவரை சந்திரனில் மனிதர்கள் கால்பதித்த கடைசி மனிதர்கள் இவர்களே.

 

1974 : மோல்ட்டா குடியரசானது.

 

8651972--last-man-on-the-mooon.jpg1981 : போலந்தில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

 

1988 : பலஸ்தீன விடுதலை இயக்கத்தலைவர் யஸீர் அரபாத்துக்கு அமெரிக்க விஸா வழங்க அமெரிக்க அதிகாரிகள் மறுத்ததால் அவர் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரிலுள்ள ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றினார். 

 

1996 : ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கொபி அனான் தெரிவு செய்யப்பட்டார்.

 


2001 : இந்திய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலில் தீவிரவாதிகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.

 

2003 : ஈராக்கில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட  சதாம் ஹுஸைன் அவரது சொந்த ஊரான திக்ரித்துக்கு அருகே அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

 

2004 : முன்னாள் சிலி சர்வாதிகாரி ஆகுஸ்டோ பினோச்சே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

 

2006 : பாய்ஜீ என்ற சீன ஆற்று டொல்ஃபின் அருகிய இனமாக அறிவிக்கப்பட்டது.

 

2013 : ஹிக்கடுவையில் 10 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டது. அப்போது தென் மாகாணத்தில் கைப்பற்றப்பட் மிகப் பெருமளவான ஹெரோய்னாக அது இருந்தது.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

குளோஸ் ஃப்ரெண்டு... கிறுக்கு ஃப்ரெண்டு... பக்கத்து வீட்டு ஃப்ரெண்டு! #Nanbendaa

ஃப்ரெண்டு


இந்த ஜென் Z-க்கு ஃபிரெண்ட்ஸ் இல்லாத லைஃப், தண்ணி இல்லாத பைப் மாதிரி. ஜியோ சிம்கார்டு மாதிரி அன்லிமிட்டடா அன்பக் கொட்டும் இவங்க கூட ட்ராவல் பண்றதே ஒரு ரகளையான அனுபவம். எவ்வளவு கோபப்பட்டாலும் திரும்ப வந்து பேசறது, விக்கல், தும்மலுக்கு கூட ட்ரீட் கேக்கறதுனு இந்தக் கெமிஸ்ட்ரிக்கு இருக்கும் வரலாற எட்டு எட்டா கணக்குப் பண்ணிடலாம்... 

1. குளோஸ் ஃப்ரெண்டு: 

நம்மளப் பத்தி அ முதல் ஆஹா வரை எல்லாம் தெரிஞ்சு நம்மள குளோஸ் பண்றவங்கதான் இந்த குளோஸ் ஃப்ரெண்டு. "பிடிச்சிருந்தா பாரு பிடிக்கலனா எந்திரிச்சு ஓடு!"னு கே.எஸ்.ஆர் மாதிரி என்னாதான் விரட்டினாலும், மிரட்டினாலும் ஏ.டி.எம்ல 100 ரூபாய் வர்றதப் பார்த்த மாதிரி சிரிச்சிகிட்டே நம்மகூடவே இருப்பாங்க. நம்மள விட்டு கொடுக்காத குறை சொல்லாத இவங்க, அச்சம் என்பது மடமையாடா சிம்புக்கு ஒரு சதீஷ் மாதிரி. உசுரக்குடுப்பாய்ங்க....

2. கிறுக்குத்தனமான ஃப்ரெண்டு: 

நாம எப்பவும் நம்மள சுத்தி மெல்லிசான கோட்டை வளைச்சு ஒரு சர்கிள் வரைஞ்சு வெச்சி அதுக்குள்ளயே நாமளும் நிப்போம். நம்ம மண்டைல தட்டி அதுல இருந்து வெளிய கொண்டு வரவங்க தான் இந்த டைப் ஃபிரண்ட்ஸ். முட்டுனா கொம்பு முளைக்கும், எறும்பு சாப்பிட்டா கண்ணுக்கு நல்லது, தக்காளில இருந்து கரண்ட் எடுத்து மொபைலுக்கு சார்ஜ் போடுறதுனு புதுசு புதுசா அறிவியல் கண்டுபிடிப்புகளக் கண்டுபிடிச்சிட்டே இருப்பானுங்க. விஷயத்த தினமும் இவங்க கிட்ட கத்துகிட்டே இருப்போம். ஊற வெச்ச துணிய துவைக்கலயே, பின் வீல்ல காத்து கம்மியா இருக்கேனு சின்னச் சின்ன விஷத்துக்கெல்லாம் டென்ஷனாகும் நமக்கு இவனுங்களோட சேர்ந்து பண்ணும் லூசுத்தனம் எல்லாம் பொக்கிஷ மெமரீஸ். 

3. பட்டு டப்பு ஃப்ரெண்டு: 

இவனுங்கள மாதிரி ஃபிரெண்ட்ஸ் கிடைக்க  எட்டு ஜென்மமா (மொத்தம் ஏழுதானோ, அட விடுங்க டியுட்) மலை உச்சியில நின்னு மா தவம் பண்ணியிருக்கணும். நாம செய்யற செயல் நல்லா இல்லைனா, தப்பா இருக்குனு உடனே சொல்லி உஷார் ஆக்குவாங்க. ஐயோ இவன் பேசிட்டே இருக்கும்போது காதக் கடிச்சிருவானேனு, தப்ப சுட்டிக் காட்டாம இருக்கவங்க மத்தியில் இவங்க ஒரு காஸ்ட்யூம் மாத்திட்டு வந்த கடவுள் போல!


4. அட்வைஸ் அலர்ட் ஃப்ரெண்டு:

"வாழ்க்கைங்கறது வானவில் மாதிரி, வளைஞ்சு நெளிஞ்சு இருந்தாலும் கலர்ஃபுல்லா இருக்கும். ஆனா, மழை பெய்யிறப்ப தான் வரும்"னு வாய்க்கு வந்ததை அடிச்சுவிட்டு அட்வைஸ் பண்ணுவானுங்க. அப்போ தான் தோணும், இவ்வளோ மொக்கையா அட்வைஸ் பண்றவனுங்களே உலாத்துறப்போ, நமக்கெல்லாம் என்ன கேடுனு. அப்சட் ஆகி இருக்கற நேரத்துல இதுதான் நம்பிள்கி எனர்ஜி கொடுத்து நிக்க வைக்கும். அட்லிஸ்ட் உட்காரவாது வைக்கும். அப்பிடி தெம்பா உட்காரும் போது 'மச்சி இப்போ இதக் கேளேன்'னு டியர் ஜிந்தகி ஷாரூக் மாதிரி ஃபீல் பண்ணி இன்னொரு அட்வைஸ்ல அரள வைப்பாணுங்க... இதுல இவனுங்கல்லாம் வேற லெவல். 

5. வேற்று கலாசார ஃப்ரெண்டு:

 நம்முடையது தான் கலாசாரம் நினைக்கவிடாம பண்றது இவனுங்க தான். மத்த ஊர் மாடு எல்லாம், சின்னம்மான்னா கத்துது... ம்ம்மானு தான் கத்தும்னு புரிய வெப்பானுங்க. என்ன மாநிலம்னு கேட்காம தண்ணி கேன் தீர்ந்ததும், தண்ணி கொடுத்து தாகம் தீர்ப்பானுங்க. பிரெண்ட்சா இருக்கனுமேனு இருக்கா, டேய் நொன்னைகளானு சசிக்குமாருக்கே டஃப் கொடுக்கும் நட்பு உள்ளவங்களா இருப்பானுங்க...


6. ஆப்போசிட் ஜென்டர் ஃப்ரெண்டு: 

 பொண்ணுங்கன்னா லிப்ஸ்டிக், ஐலைனர் மட்டும் இல்லனு பசங்களுக்கும், பசங்கன்னா ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ, பாலாபிஷேகம் மட்டும் இல்லனு கத்துக் கொடுக்கும் ஃப்ரெண்ட். நம்ம ஹேர் ஸ்டைல்ல இருந்து நம்ம நடக்கற விதம் வரை  தெரிஞ்சுகிட்டு 'இதுக்கு லைக்ஸ் வருவது கடினம் ஃப்ரெண்ட்'னு நம்மள அப்டேட் பண்ண உதவுவாங்க. நமக்கு சின்ன பிரச்னை வந்தா கூட இவங்க பெருசா எடுத்துகிட்டு, காதும்மா ஆர் யூ ஓகே பேபினு சொல்றதும், தெறி பேபினு பாராட்றதும்னு.... லவ்வர், அண்ணன், தங்கச்சி இல்லாம அதையும் தாண்டி புனிதமான ரிலேஷன்ஷிப் இது..


7. பக்கத்து விட்டு ஃப்ரெண்டு: 

அண்ணன் தம்பி மாதிரி உரிமை எடுத்துகறதுல இவங்கள அடிச்சிக்க முடியாது. காலைல சாப்ட்ட உளுந்த வடைல ஆரம்பிச்சு, உலக சினிமா, தீவிர இலக்கியம், மூலிகைல இருந்து பெட்ரோல் எடுக்கறதுனு எதப்பத்தி பேசினாலும் சுவாரஸ்யமா பேசிட்டே இருக்கலாம். நம்மள விடச் சின்னப் பசங்களா இருந்தா எண்டர்டெயின்மென்ட்டே வேற லெவல், அடுத்து எங்க படிக்கனு கூட கேட்டுதான் சேருவாங்க. என்ன ஒன்னு பேசிட்டே இருக்கும்போது "ண்ணா, சரி அம்மா கொழம்பு கிண்ணத்தை வாங்கிட்டு வர சொல்லுச்சி"னு  படார்னு கேக்கறது தான் சோகம் ஆஃப் இண்டியா...

8. வர்க் அண்ட் பேசன் ஃப்ரெண்டு: 

நாம பாதி நேரம் வேலை பத்தி பேசி இவங்க கூட தான் அதிக நேரம் லிவிங்ஸ்டன். பெர்சனல் தாண்டி ப்ரஃபஷன் வழியா அடுத்த கட்டத்துக்கு நம்மள அலேக்கா துக்கிட்டுப் போறது இந்தப் தோஸ்த்து படா தோஸ்த்து தான். வேலைல கஷ்டம்னாலும் சரி, வேற வேலைக்குப் போறதுனாலும் சரி இவங்க கொடுக்கும் கான்டாக்ட்ஸும், கைடன்சும் முரட்டுத் தனமா இருக்கும். இவ்வாறாக இந்த எட்டு பிரெண்ட்ஸ்ச ஃபாலோ பண்ணா நாம எங்கயோ போகலாம். இப்போதைக்கு நெக்ஸ்ட் ஃபேஜாவது போகலாம்...

vikatan

  • தொடங்கியவர்

'குட்டி' ஆப்கன் ரசிகனை சந்தித்த மெஸ்ஸி

thumb_large_Lionel-Messi-with-Murtaza-Ahmadi-before-the-friendly-match-in-Doha.jpg

messi_06359.jpg

ஆப்கானிஸ்தானின் 6 வயது சிறுவன் முர்தாஸா அஹமதி, அர்ஜென்ட்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் தீவிர ரசிகன் . பாலித்தீன் கவரில் மெஸ்ஸி என எழுதி அதை டீ-ஷர்ட்டாக அணிந்து அஹமதி விளையாடியது உலகளவில் வைரலானது. இதை அறிந்த மெஸ்ஸியும் தான் கையெழுத்திட்ட டி-ஷர்ட்டை, அஹமதிக்கு அனுப்பி வைத்தார்.

CzksatZWIAACPwT_06236.jpg

இந்நிலையில், பார்சிலோனா அணிக்காக கத்தாருக்கு விளையாட வந்தபோது, முர்தாஸாவை நேரில் சந்தித்தார் மெஸ்ஸி. அவனது கையை பிடித்தபடி மெஸ்ஸி கால்பந்து அரங்கத்துக்குள் நுழைந்தபோது ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளந்தது. 

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பேசும் படம்: ஏடிஎம் காத்திருப்பு நீடிப்பு

 

 
இடம்: டெல்லி | படம்: சுஷில் குமார் வர்மா
இடம்: டெல்லி | படம்: சுஷில் குமார் வர்மா
 
 

பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஒரு மாத காலம் ஆகியும், நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் பணத்தை ஏடிஎம்களில் எடுப்பதில் சிரமம் நீடிக்கிறது.

பணத்தட்டுப்பாடு இன்னும்கூட சீராகாத நிலையில், டெல்லியின் ஆதர்ஷ் நகர் பகுதியில் உள்ள வங்கி ஏடிஎம் ஒன்றில் புதன்கிழமை அதிகாலையில் இருந்தே வரிசையில் காத்திருக்கும் மக்களை இந்தப் படங்களில் பார்க்கலாம்.

atm1_3103648a.jpg

ஏடிஎம்களில் பணம் நிரப்பப்பட்ட சில மணி நேரங்களில் பணம் தீர்ந்துவிடுவதால், அவ்வாறு நிரப்பப்படும் முன்னரே மக்கள் வரிசையில் காத்திருப்பதும் நீடிக்கிறது.

tamil.thehindu

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Text

Bild könnte enthalten: 3 Personen, Sonnenbrille und Text

நடிகை சமீரா ரெட்டியின் பிறந்தநாள்.
Happy Birthday Sameera Reddy

 
  • தொடங்கியவர்
ஐ.எஸ்.யூ. குரோன் ப்றீ ஃபிகர் ஸ்கேட்டிங் போட்டிகளில்...
 

ஐ.எஸ்.யூ. குரோன் ப்றீ ஃபிகர் ஸ்கேட்டிங் இறுதிச் சுற்றுப் போட்டிகள் பிரா ன்ஸின் மார்செய்ல் நகரில் கடந்த வார இறுதியில் நடைபெற்றன. இப் போட்டி களில் பங்குபற்றிய போட்டியாளர்கள் சிலரை படங்களில் காணலாம்.

 

1712016-12-09T193523Z_226365012_LR1ECC91

 

1712016-12-10T163242Z_858240369_LR1ECCA1

 

171627013-01-02.jpg

 

171_627148-01-02.jpg

 

171_627738-01-02.jpg

 

171_632024-01-02.jpg

 

171_1.jpg

 

171_2.jpg

 

171_2016-12-10T172446Z_1299723963_LR1ECC

 

 

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலகில் சுமார் 18,000 பறவை இனங்கள் இருப்பதாக புதிய ஆய்வில் தகவல்

 

உலகில் சுமார் 18,000 பறவை இனங்கள் இருப்பதாக புதிய ஆய்வில் தகவல்

உலகில் சுமார் 18,000 பறவை இனங்கள் இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுவரை ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்று கருதப்பட்டு வந்த பல பறவைகள், தனி இனங்களைச் சேர்ந்தவை என்று இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதாவது, ஒரே தோற்றமுடைய பல பறவைகள் குறிப்பிட்ட இனத்தின் உட்பிரிவைச் சேர்ந்தவை என்று கருதப்பட்டு வந்தது.

தற்போது அவை தனி இனங்களைச் சேர்ந்தவை என அறியப்பட்டுள்ளதால், உலகில் சுமார் 18,000 பறவை இனங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், தனி இனங்களையும், ஒரு இனத்தின் உட்பிரிவுகளையும் எவ்வாறு தரம் பிரித்து அறிய வேண்டும்; அந்தந்த இனங்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது போன்றவற்றில் புதிய ஆய்வு முறைகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது.

பறவைகளின் உருவம், சிறகுகளின் நிறம் ஆகியவற்றைப் பகுப்பாய்வதில் மாற்று முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அனைத்து பறவை இனங்களும் பெருகும் வகையில், இயற்கைக் சூழலைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு மனிதர்க்கு உள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

http://newsfirst.lk/

  • தொடங்கியவர்

கப்பல்தான் வீடு... லண்டன்வாசிகளின் புதிய வாழ்க்கை!

 

லண்டன்

அழகான ஒரு மாலை நேரம் . சில வாத்துகள் அந்த கால்வாயில் நீந்தி விளையாடிக் கொண்டிருக்கின்றன.  கால்வாயை ஒட்டி இருக்கும் மரங்களில் இருந்து மஞ்சள் இலைகள் நீரில் விழுந்து மிதக்கின்றன. அகலம் கம்மியான, நீளம் அதிகமான பல படகுகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு கூட்டம் அந்தப் படகுகளில் சமைத்துக் கொண்டிருக்கிறது, சிலர் சுற்றி உட்கார்ந்துக் கொண்டு கிடார் வாசித்து பாட்டு பாடிக் கொண்டிருக்கின்றனர். சில குழந்தைகள் கால்வாயின் ஓரம் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் சமர்த்தாக உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் இந்திய முகமாகத் தெரியும் அந்தப் பெண் ஒரு படகின் மேல் தளத்தில் உட்கார்ந்துக் கொண்டு, சில கைவினைப் பொருட்களைத் தயாரித்துக் கொண்டிருந்தார். இந்தக் காட்சிகள் நடப்பது இங்கிலந்தின் லண்டன் நகர்ப்பகுதியின் தேம்ஸ் நதியை ஒட்டியிருக்கக் கூடிய கால்வாயில்...

லண்டன்... நமக்கு மட்டுமல்ல ஐரோப்பியவாசிகளுக்கேக் கூட கொஞ்சம் காஸ்ட்லியான நகரம் தான். இங்கிலந்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் பிழைப்பிற்காக மக்கள் லண்டன் வருவது வழக்கம். உலகின் பல பகுதிகளிலிருந்து மாணவர்கள் லண்டனுக்குப் படிக்கச் செல்வதும் நடக்கும். இப்படி சாமானிய மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் லண்டன், அவர்களை அத்தனை எளிதாக அங்கு வாழவைப்பதில்லை. கடந்த 2009ற்குப் பிறகு, லண்டனில் வீடுகளின் விலை கிட்டத்தட்ட 86% அளவிற்கு உயர்ந்துள்ளது. எவ்வளவு உழைத்து சம்பாதித்தாலும், வாழலாம் ஆனால், சேமிக்க முடியாது என்ற நிலை. இதற்கான மாற்று வழி தான் இந்த "HouseBoats". 

1700களில் இங்கிலந்தில் தொழிற்புரட்சி ஏற்பட்டிருந்த சமயம். தொழிற்சாலைகளிலிருந்து பொருட்களை துறைமுகத்திற்குக் கொண்டு போக, அன்றைய அரசாங்கம் பல கால்வாய்களை வெட்டுகிறது. கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளாக இந்தக் கால்வாயில் பொருட்களை ஏற்றி செல்லும் படகுகள் பயணித்து வந்தன. 1900களில் இந்தப் படகு போக்குவரத்து கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்பட்டது. இருந்தும் இந்தப் படகுகள் இங்கிலந்து மக்களின் உணர்வுகளோடு கலந்திருந்தது. பின்னர், சுற்றுலாவிற்காக இந்தப் படகுகளில் மக்கள் போய்வர ஆரம்பித்தனர். உபயோகத்தில் இருந்த பல நூறு படகுகள் உபயோகமற்றுக் கிடக்க, லண்டனின் விலைவாசியும் விண்ணை நோக்கி செல்ல, மக்கள் இந்தப் பழைய படகுகளை வாங்கி ஹவுஸ் போட்டாக மாற்றம் செய்யத் தொடங்கினர். 2010யில் லண்டன் நகர்ப்பகுதியில் 413 ஹவுஸ் போட்கள் இருந்தன. இன்று 1615 ஹவுஸ் போட்கள் இருப்பதாக CRT எனப்படும் Canal & River Trust சொல்கிறது. இவர்கள் தான் இந்தப் படகுகளுக்கான உரிமம் வழங்குவது, கால்வாயை பேட்ரோல் செய்வது போன்ற விஷயங்களைச் செய்கிறார்கள்.

சாதாரணமாக ஒரு ஹவுஸ் போட்டை உருவாக்க 5 லட்ச ரூபாய்த் தான் ஆகும். நல்ல சொகுசான ஒரு ஹவுஸ் போட்டிற்கு 20 லட்சம் வரை ஆகும். லண்டனில் ஒரு சாதாரண அப்பார்ட்மெண்ட் மாத வாடகை மட்டுமே குறைந்தது 70 ஆயிரம் ரூபாய் ஆகும். ஹவுஸ் போட்டில் சோலார் மூலமும், எஞ்சின் பேட்டரி மூலமும் கரண்ட் எடுத்துக் கொள்ளலாம். மேலும், CRT ஆங்காங்கே அமைத்திருக்கும் கரண்ட் கம்பங்களில், குறைந்த அளவிலான கரண்டினை எடுத்து அவசியத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

கால்வாயின் அகலம் குறைவாக இருப்பதால், இந்தப் படகுகளின் அகலமும் 8 அடி வரை தான் இருக்கும். நீளம் அதிகபட்சம் 50அடி வரை இருக்கும். இடம் குறைவாக இருப்பதால் தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்க முடியாது. இதனாலும், ஒரு குறிப்பிட்டத் தொகையை சேமிக்க முடியும். CRT உருவாக்கியிருக்கும் சட்டத்தின் படி ஒரு ஹவுஸ் போட் ஒரே இடத்தில் 14 நாட்களுக்கு மேல் தங்கக் கூடாது. அப்படி தங்க வேண்டுமென்றால், அதற்கென ஒரு குறிப்பிட்டத் தொகையை வாடகையாக செலுத்த வேண்டும். லண்டனின் இந்தக் கால்வாய் கிட்டத்தட்ட 97 கிமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது. 

இப்படி பல அழகான விஷயங்கள் இருந்தாலும், இந்த வாழ்க்கையை எல்லோராலும் வாழ்ந்திட முடியாது. கம்மியான இடத்தில் புழங்க வேண்டும். வாரமொரு முறை படகை சுத்தம் செய்ய வேண்டும். மாதம் ஒரு முறை டாய்லெட் டேங்கின் கழிவுகளை வெளியேற்ற வேண்டும் போன்ற விஷயங்கள் சொகுசு வாழ்க்கை வாழ விரும்புபவர்களால் செய்ய இயலாது. இந்த வாழ்க்கைக் குறித்து எடுக்கப்பட்டிருக்கும் ஓர் ஆவணப்படத்தில் இந்தியாவைச் சேர்ந்த தங்கம்மா கரியப்பா தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
" நான் இந்த ஹவுஸ் போட் வாழ்க்கைக்கு வந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆகிறது. இந்தியாவில் இருந்து வந்து, இங்கிருக்கும் வாடகைகளைக் கேட்டு அதிர்ந்துவிட்டேன். ஆனால், ஹவுஸ் போட் வாழ்க்கையில் என்னால் நிறைய சேமிக்க முடிகிறது. அந்தப் பணத்தைக் கொண்டு எனக்குப் பிடித்த மற்ற விஷயங்களை செய்ய முடிகிறது. குளிர்காலத்தில் மட்டும் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். நான் கலைப் பொருட்களை எல்லாம் செய்து விற்பனை செய்கிறேன். பணத்தையும் சேமிக்க முடிகிறது, ஒரு வித்தியாசமான, அழகான வாழ்க்கையை வாழவும் முடிகிறது..." என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார். 

collage_02_compressed_18137.jpg


வாழ்வதற்கு ஒரு இடம் நமக்குத் தேவைப்படுகிறது. ஆனால், நம்மில் பெரும்பாலானோர் அந்த இடத்திற்காக... நாம் வாழ்வதையே மறந்து, வாழ்வையே இழந்து விடுகிறோம். ஒரு வீடு கட்ட வாங்கப்படும் கடனை அடைப்பதற்கு, ஒரு தலைமுறையின் தியாகம் தேவைப்படுகிறது.பெரிய இடத்தில் கடன் சுமையோடு நிம்மதியில்லாமல் வாழ்வதா?, இல்லை சின்ன இடமென்றாலும் நமக்குப் பிடித்த வகையில் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதா? என்கிற வாழ்க்கைக்கான தேர்வு நம்மிடம் தான் இருக்கிறது. 

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு கனவு வந்தது... சென்னை லண்டனானது. கூவம் தேம்ஸ் ஆனது. கால்வாய்களில் ஹவுஸ் போட்கள் நின்று கொண்டிருந்தன. கரைகளில் பச்சை மரங்கள்... மாலை நேர காகங்கள்... பம்பரம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள்... காற்றில் காரக் குழம்பு வாசம்... ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள்... ஒரு ஹவுஸ் போட்டின் கூரையில் உட்கார்ந்துக் கொண்டு இதை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்!!!

vikatan

  • தொடங்கியவர்

மைக்ரோசாஃப்ட்டின் பேசும் 'பாட்கள்'..!

 

skyp_2_600_17330.jpg

மைக்ரோசாஃப்ட் நிறுவனம், வீடியோ காலிங் செய்ய பயன்படும் ஸ்கைப்பில் 'பேசும் பாட்களை' (talking bots) அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பாட்கள் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், ப்ரோக்ராம் செய்தபடி மனிதர்களுக்கு தானாக பாட்கள் கால் செய்து பேசுமாம். இந்த வசதியை பயன்படுத்தி, பெரும் நிறுவனங்கள் அதன் சேவைகளை பாட்டின் மூலமே அளித்துவிட முடியும். அடுத்த ஆண்டு இந்த பாட்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

vikatan

  • தொடங்கியவர்

நோலனின் அடுத்த படமான டன்க்ரிக் டிரெய்லர்

 

இரண்டாம் உலகப்போரின் போது ஒருகட்டத்தில், வடக்கு ஃப்ரான்ஸின் டன்கிர்க் என்ற இடத்தில், பெல்ஜியம்-பிரிட்டன்-ஃப்ரான்ஸ் படைவீரர்களை ஜெர்மன் வீரர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். எட்டுநாட்கள் போராட்டத்திற்குப் பிறகு அங்கிருந்து மீட்டெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது. இதுதான் டன்கிர்க் வெளியேற்றம் என்ற நிகழ்வு. இதைத் தான் சினிமாவாக்கிக் கொண்டிருக்கிறார் நோலன். முந்தைய படத்தைப் போலவே இதற்கும் ஒளிப்பதிவு ஹாய்ட் வேன் ஹாய்டமா, இசை ஹான்ஸ் ஸிம்மர் தான். படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.

 

 

 

 

vikatan

  • தொடங்கியவர்

உலகை உலுக்கிய நாஸ்ட்ராடமஸ்ஸுக்கு இன்று பிறந்தநாள்

 

 

குறி சொல்லும் நிபுணர், இயற்பியலாளர், இயற்கை மருத்துவர் நாஸ்ட்ராடமஸ்ஸுக்கு இன்று பிறந்தநாள். ஹிட்லர் தனது சர்வாதிகாரத்தால் பெற்ற வெற்றி, செப்டம்பர் பதினொன்று தாக்குதல், முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர், ஹிரோஷிமா, நாகசகி அணுகுண்டுத் தாக்குதல் உள்ளிட்டவை நாஸ்ட்ராடமஸ்ஸின் கணிப்பின்படியே நடந்துள்ள பகீர் சம்பவங்கள். கடந்த நான்கு நூற்றாண்டுகளாக நாஸ்ட்ராடமஸ் கூறிய அனைத்து சம்பவங்களும் நடைபெற்றதால் இனி வரும் காலங்களிலும் அவர் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் கண்டிப்பாக நடந்தே தீரும் என உலகம் முழுதும் ஒருசாரரால் நம்பப்பட்டு வருகிறது.

ரஷ்ய-அமெரிக்க உறவு முறிவு, இஸ்லாமிய கிருத்துவ நாடுகளுக்கிடையே நடக்கப்போகும் மூன்றாம் உலகப்போர், துருவப் பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் கடல்மட்ட உயர்வு போன்ற அவரது எதிர்கால கணிப்புகள் சில நாட்டு மக்களையும் அரசியல் தலைவர்களையும் உள்ளுக்குள் பீதி அடையச்செய்கின்றன. இப்படி உலகத்தையே உலுக்கும் உண்மைகளை வெளிக்கொண்டுவரும் 'தி ப்ரோபேசீஸ்' புத்தகத்தின் ஆசிரியர் நாஸ்ட்ராடமஸ்ஸின் வாழ்க்கை வரலாறு பற்றி நாமும் தெரிந்துகொள்வோம்.

நாஸ்ட்ராடமஸ்ஸின் இயற்பெயர் மைக்கேல் டி நாஸ்ட்ராடேம் (Michel de Nostredame). 1503-ம் ஆண்டு டிசம்பர் 14 அன்று, ஃபிரான்ஸ் நாட்டின் செயின்ட்-ரெமி-டி மாகாணத்தில், ஜாக்வஸ் டீ நாஸ்ட்ராடேம் ( Jacques de Nostredame ), ரேனைர் ( Reynière) தம்பதியருக்கு மகனாகப்பிறந்தார். யூதப்பூர்வீகம் கொண்ட இவரது முன்னோர்கள் கிருத்துவமதத்தின் கத்தோலிக்கப் பிரிவில் இணைந்தனர். நாஸ்ட்ராடமஸ், பள்ளி முடித்ததும் தனது பதினைந்தாவது வயதில் அவிக்னன் பல்கலைக்கழகத்தில் வானவியல், கணிதம், ஜோதிடம், இயற்பியல் பாடங்கள் பயின்றார். அப்போது பிரான்சில் பிளேக் நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதற்கு இயற்கை மூலிகை மருத்துவத்தின் மூலமாக மருந்து கண்டுபிடிக்க 1521-ம் ஆண்டுமுதல், எட்டு வருடங்கள் ஃஃபிரான்ஸ் நாட்டின் கிராமப்புறங்களில் பயணம் செய்தார். பின்னர் மாண்ட்பெல்லியார் பல்கலைக்கழகத்தில் (University of Montpellier) மருத்துவம் பயின்றார்.

 

 

ஓவியர் ஜூல்ஸ் ஸீசர் ஸ்காலிகர் (Jules-César Scaliger) அழைப்பின் பேரில் ஏகன் (Agen) நகருக்குச்சென்ற நாஸ்ட்ராடமஸ், அங்கு தனது வருங்கால மனைவி ஹென்ரிட் டி என்காஸ்ஸை (Henriette d'Encausse) சந்தித்தார். இருவருக்குள்ளும் இருந்த நட்பு காதலாக மலர, நாஸ்ட்ராடமஸ் ஹென்ரிட்டைக்கரம் பிடித்தார். இந்தத் தம்பதியருக்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தனர். ஃபிரான்ஸ் முழுவதும் பரவிய பிளேக் நோய் நாஸ்ட்ராடமஸ்ஸின் குடும்பத்தினரையும் விட்டுவைக்கவில்லை. திருமணமான மூன்றே ஆண்டுகளில் மனைவி, இரண்டு குழந்தைகள் ஆகியோர் பிளேக் நோயின் தாக்கத்தால் மரணமடைந்தனர். துக்கத்தில் ஆழந்த நாஸ்ட்ராடமஸ், ஃபிரான்ஸில் இருந்து இத்தாலி நோக்கிப் பயணம் செய்தார்.

11 வருடத் தொடர்பயணத்தின் முடிவில் 1545-ம் ஆண்டு மருத்துவர் லூயிஸ் சேர்ரேவுடன் (Louis Serre) சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு, பிளேக் நோய்க்கு, தடுப்புமருத்து கண்டுபிடித்தார். இந்தத் தடுப்புமருந்தை, பின்னாட்களில் தான் வாழ்ந்த ஃபிரான்சின் சலோன் டி மாகாணம் (Salon-de-Provence) முழுவதும் பரப்பினர். இதனால் மக்களிடையே பிளேக் தாக்கம் குறைந்தது. அந்த நகரத்தில் வாழ்ந்த ஆன் போன்சார்ட் (Anne Ponsarde) என்ற பணக்கார விதவையை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உட்பட ஆறு குழந்தைகள் பிறந்தனர். இந்த காலத்தில் நாஸ்ட்ராடமஸ் தன் வாழ்வில் செல்வசெழிப்பில் திளைத்தார்.

இதுவரை மருத்துவத்தின்மேல் ஈர்ப்பு கொண்டிருந்த நாஸ்ட்ராடமஸ் பின்னர் ஒருமுறை இத்தாலி சென்றபோது தனக்குக் குறி சொல்லும் கலை மேல் ஆர்வமும் திறமையும் உள்ளதென்பதை உணர்ந்தார். இதனையடுத்து 1550ம் ஆண்டுக்கான எதிர்காலத்தைக் கணிக்கும் புத்தகத்தை எழுதினார். ஆல்மனாக் (Almanac) என்று கூறப்படும் இப்புத்தகத்தில் பருவமாற்றங்கள், விவசாயிகள் பயிர்நட ஏற்ற காலங்கள், நல்லநேரம், கெட்டநேரம் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றது. நாஸ்ட்ராடமஸ்ஸின் குறிசொல்லும் திறமையைப்பார்த்து வியந்த இரண்டாம் ஹென்ரி மன்னரின் மனைவி, அவரது வாழ்நாளின் இறுதி காலமான 1566ம் ஆண்டு, அவரைத்தனது குழந்தைகளுக்கு ஆசிரியராக நியமித்தார். ஜூலை ஒன்றாம் தேதி மாலை நாஸ்ட்ராடமஸ், தன் பணியாளர் ஜீன் டி சாவிங்கியிடம் (Jean de Chavigny) 'நாளை சூரியன் உதிக்கும் போது என்னை நீ உயிரோடு பார்க்க முடியாது' என்று கூறிச் சென்றார். அவர் சொன்னதுபோலவே மறுநாள் காலை முட்டு வாதத்தால் பாதிக்கப்பட்டு அவரது படுக்கைக்கு அருகே இறந்துகிடந்தார்.

 

 

தனது மரணத்தையே கணிக்கும் ஆற்றல் பெற்றவர் என்று புகழப்பட்டாலும் விமர்சனங்கள், சர்ச்சைகள் மற்றும் மாற்றுக்கருத்துக்களுக்கு பஞ்சமே இல்லாததுதான் நாஸ்ட்ராடமஸ்ஸின் கணிப்புகள். நாஸ்ட்ராடமஸ்ஸின் குறிசொல்லும் பாணி, ஒருதலைப்பட்சமாக உள்ளது, கிருத்துவ மதத்தின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக உள்ளது என்ற விமர்சனம் அவர் வாழ்ந்த காலத்திலேயே எதிராளிகளிடமிருந்து கிளம்பியது. இன்றளவும் புகழ்பெற்ற இவரது குறி சொல்லும் புத்தகமான 'தி ப்ரோபேசீஸ்' (The Prophecies) பிற மதத்தினரை இழிவுபடுத்துவதாக நினைத்த சிலர் இவரை மனநலம் பாதிக்கப்பட்டவர், முட்டாள் என்று கடுமையாக விமர்சித்தனர். லத்தின், கிரீக் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்ட இவரது குறி சொல்லும் வாசகங்கள் நான்கு வரிகள் கொண்ட குழப்பமான கவிதை வடிவிலே இருக்கும். இவை குவாட்ரெய்ன்ஸ் (quatrains) என்று அழைக்கப்படும்.

'தி ப்ரோபேசீஸ்' நூலில் இடம்பெற்றுள்ள குவாட்ரெய்ன்ஸ் கவிதைகளைப் படித்து, எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களின் இடம், காலம், நேரம் போன்ற விவரங்களை சரியாத்தெரிந்துகொள்வது கடினம். தான் வாழ்ந்த காலத்தில் தனது எதிராளிகளால் தனக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற நோக்கிலேயே நாஸ்ட்ரடமஸ் இவ்வாறு யாருக்கும் எளிதில் புரியாத கணிப்புகளை எழுதினார் என்ற கருத்தும் நிலவிவருகிறது.

நாஸ்ட்ராடமஸ் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த கிரகஅமைப்புகளை வைத்து எதிர்காலத்தைக் கணிக்கிறார். இது சரியான கணிப்பாகாது என்று இன்றளவிலும் பிரபல ஜோதிடர்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். மற்றொரு சாரார், அவரை இறைதூதராகவே எண்ணுகின்றனர். அவரது கணிப்பின் மேல் அசாத்திய நம்பிக்கை வைத்துள்ளனர். இன்றளவும் நாஸ்ட்ராடமஸ்ஸின் ' தி ப்ரோபேசீஸ்' புத்தகத்தின் மூன்று பாகங்களுக்கு, பல உலகஅறிஞர்கள், ஜோதிடர்கள் விளக்கஉரை எழுதிக்கொண்டிருக்கின்றனர். பல உலக மொழிகளில் அவரது புத்தகங்கள் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. நாஸ்ட்ராடமஸ் கணிப்பு குறித்த சர்ச்சைகள் ஒருபக்கம் இருந்தாலும், சில நாட்களுக்கு முன், நம்மைக் கடந்துபோன 'வர்தா' புயல் உட்பட கனமழை, பஞ்சம், போர், நிலநடுக்கம் ஆகிய நிகழ்காலப் பேரிடர்கள், நாஸ்ட்ராடமஸ்ஸின் புத்தகத்தில் இடம்பெற்றிருக்குமா? என்ற சந்தேகம் நம்மில் பலர் மனதில் எழுவதைத் தவிர்க்க இயலாது.

vikatan

  • தொடங்கியவர்

உலகின் விந்தைத் தாவரங்கள்!

 
ulagain_3103621f.jpg
 
 
 

உலகில் இயற்கை விந்தைகள் ஏராளம் உள்ளன. விலங்குகள், பறவைகள், மலைகள், கடல்கள் என பல விந்தைகளை இதற்கு முன்பு பார்த்திருக்கிறோம். அதுபோலத் தாவரங்களில்கூட விந்தையான தாவரங்கள் நிறைய உள்ளன. அவற்றில் சிலவற்றை இந்த வாரம் பார்ப்போமா?

நூறு குதிரைகள் மரம்

மத்திய தரைக் கடலிலுள்ள மிகப் பெரிய தீவு சிசிலி. அங்கு இன்னும் உயிர்ப்போடு ஓர் எரிமலை உள்ளது. எட்னா என்ற அழைக்கப்படும் இந்த எரிமலை உள்ள இடத்தில் ‘நூறு குதிரைகள்’ என்ற பெயரில் ஒரு மரம் உள்ளது. இந்த மரத்தின் வயது 4,000 ஆண்டுகள். ஒரு முறை ராணுவ வீரர்கள் நூறு பேரும் அவர்களின் குதிரைகளோடு இடியிலிருந்து தப்பிக்க இந்த மரத்தின் கீழ் ஒதுங்கிக்கொண்டார்களாம். அதனால்தான் இந்த மரத்துக்கு இந்தப் பெயர்.

tree_3103612a.png

பூச்சிகளைக் கொல்லும் தாவரம்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள ஒரு தாவரம் குடுவை (Pitcher plant). இந்தத் தாவரத்தில் குழல் வடிவ இலைகளில் உள்ள தேன் சுரக்கும் சுரப்பிகள் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கக்கூடியது. தப்பித் தவறி தாவரத்தில் பூச்சிகள் உட்கார்ந்தால் கீழே உள்ள திரவத்தில் மூழ்கி இறந்துவிடும். மண்ணிலிருந்து கிடைக்கும் நைட்ரேட் போன்ற உணவூட்டத்தைச் சமன் செய்யப் பூச்சிகளின் மாமிசத்தை இந்தத் தாவரம் பயன்படுத்திக்கொள்கிறது.

poochu12_3103615a.png

இரட்டை தென்னை விதை

இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ள தீவு நாடு ஷெஷல்ஸ். இந்தத் தீவில் கோக்டெமர் (Cocdemer) என்ற தென்னை மரம் உள்ளது. இந்தத் தென்னையிலிருந்து கிடைக்கும் இரட்டை தென்னை விதையே உலகின் மிகப் பெரிய விதை.

vihai_3103616a.png

பழமையான மரம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ளது சில்வர் மவுன்டெயின் என்ற ஊர். இங்கே உலகின் மிகவும் பழமையான இரண்டு மரங்கள் உள்ளன. இப்போதும் உள்ள அந்த இரு மரங்களில் ஒன்று 4,845 ஆண்டுகள் பழமையானது. அந்த மரத்தின் பெயர் ப்ரிஸ்டில் கோன் பைன் ( Bristle cone pine). இந்த மரத்துக்கு ‘மெத்தூஸெல்லா’ எனப் பட்டப் பெயரும் உள்ளது. விவிலியத்தில் மெத்தூஸெல்லா என்பவர் 969 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த பெரியவர். நீண்ட நாள் வாழ்ந்த பெரியவரைப் போலவே இந்த மரமும் வாழ்வதால் இந்த மரத்துக்கு இந்தப் பட்டப்பெயர் சூட்டப்பட்டது.

pazha_3103617a.png

விநோத ஒட்டுண்ணி

மிதவெப்ப மண்டல நாடுகளில் காணப்படும் ஒரு தாவரம் டாடர் (Dodder). இதற்கு இலை இல்லை. மெல்லிய கொடியாக வளர்ந்து மற்ற தாவரங்களைத் தொற்றிக்கொண்டு வாழும் ஒட்டுண்ணி ரகம். இதனால், மற்ற தாவரங்களை இது சேதப்படுத்தி அழித்துவிடுகிறது. இப்படியும் ஒரு தாவரம்.

chedi_3103618a.png

விஷத் தாவரம்

விஷம் ஐவி (Posion ivy) என்ற ஒரு வகை தாவரம் வட அமெரிக்காவில் உள்ளது. இந்தத் தாவரம் உண்டாக்கும் எண்ணெய் தோலில் பட்டால் அவ்வளவுதான். கடுமையான வீக்கமும் கொப்புளமும் ஏற்படும். விஷம் ஐவி பட்ட ஆடைகளை பல ஆண்டுகள் கழித்து உடுத்தினாலும் பாதிப்பு ஏற்படும்.

last_3103619a.png

tamil.thehindu

  • தொடங்கியவர்

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம் *மகாத்மா*

கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் *தந்தை பெரியார்*

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் *ஜவஹர்லால் நேரு*

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் *பெட்ரண்ட் ரஸல்*

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் *ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்*

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் *நெல்சன் மண்டேலா*

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி *லெனின்* கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் *சார்லிசாப்லின்*

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் *வின்ஸ்டன் சர்ச்சில்*

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் *மார்டின் லூதர்சிங்*

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் *பகத்சிங்*

புத்தகங்களை
பரிசளிப்போம்..... வாசிப்போம்!

Bild könnte enthalten: Personen, die sitzen

 

(Whatsapp)

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.