Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

C4mgb7MWcAA4toT.jpg

இப்ப ரோசாப்பூ வாங்கீட்டு அப்பல்லோல இருந்து காதலர் தினத்த கொண்டாட நடராஜன் வந்து சின்னம்மா எங்கனு கேட்டா நாங்க என்னடா சொல்றது!!

:grin:

C4mmaOWXUAAe5E6.jpg ஹலோ நா புலிப்படை எல்லாம் இல்லீங்க சும்மா புளி யாவாரிங்க ~ கருணாஸ்

C4nc33FW8AE-jV7.jpg

C4m6SeLUMAA2D7M.jpg

அனுபவி ராஜா அனுபவி

அவளுக்கென்ன தூங்கிவிட்டாள்... அகப்பட்டவள் நானல்லவா! #Sasikala

C4m0awVXUAAj38K.jpg

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

காதலுக்கென ஒரு தேசம், காதலர்களுக்கென ஒரு தபால் நிலையம்... இது எங்கே?

கடவுளின் தேசம் கேள்விப்பட்டிருக்கிறோம். காதல் தேசம் கேள்விப்பட்டதுண்டா? உண்மையில் இந்த உலகில் காதலுக்கென்று ஒரு தேசம் இருக்கிறது. அதுதான் லவ்லேண்ட் நகரம். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றான கொலராடோ நாட்டின் Larimer County-யில் உள்ள நகரங்களில் ஒன்றுதான் லவ்லேண்ட். மிகப்பெரிய நகரம்.

காதல் தேசம், காதலர்களுக்கு தபால் நிலையம்

காதலர் தினம் வந்துவிட்டால், உலகம் முழுவதும் வாழும் பல காதலர்களின் பார்வை இந்த நகரத்தின் பக்கம் திரும்பும். அப்படி இந்த இடத்தில் என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்தால், இந்த ஒட்டுமொத்த நகரமே நம்மை வியக்க வைக்கிறது.

காதலின் லோகோ என்றால் ஹார்ட் சிம்பலை சொல்லலாம். அன்பைப் பகிர்ந்து கொள்ளவும், காதலை வெளிப்படுத்தவும், ரொமான்டிக் சிம்பலாகவும் ஹார்ட் லோகோ உள்ளது. இப்படிப்பட்ட ஹார்ட் சிம்பலுக்கு லவ்லேண்ட் நகரம் மிகமுக்கிய இடம் கொடுத்திருக்கிறது. அதாவது நகரின் பல முக்கிய இடங்கள் முழுவதிலும் பல வண்ண, அழகிய ஹார்ட் வடிவிலான சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. நகரின் பல முக்கிய அமைப்புகள் ஹார்ட் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அதிலும் Loveland post office உலகிலேயே சற்று வித்தியாசமானது.

காதல் தேசம், காதலர்களுக்கு தபால் நிலையம்

லவ்லேண்ட் நகரில் ‛லவ்லேண்ட் சேம்பர் ஆப் காமர்ஸ்’ எனும் நிறுவனம் கடந்த பல வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் அந்த பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு, கல்வி, தொழில் போன்றவற்றை வழங்கி வருகிறது. இந்த நிறுவனமும், அமெரிக்காவின் தபால் சேவை நிறுவனமும் இணைந்து Loveland தபால் அலுவலகங்களில் காதலர்களுக்கென ‛ரீ மெயிலிங்’ எனும் தபால் திட்டத்தை கடந்த 70 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்தது.

இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், லவ்லேண்ட் தபால் அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் தபால் அச்சு, தபால் தலை அனைத்தும் ஹார்ட் வடிவிலே இருக்கும். தபால் முத்திரை மனதைத் தொடும் காதல் வரிகளைக் கொண்டிருக்கும். 

உங்கள் காதலனுக்கோ, காதலிக்கோ, நீங்கள் ஆசைஆசையாய் வாங்கிய ‛காதலர் தின’ கிரீட்டிங் கார்டில், பெறுநர் முகவரி விவரங்களை வைத்து, Loveland தபால் அலுவலக முகவரிக்கு அனுப்பிவிட்டால் போதும். உங்கள் உறவிடம் தபால் சென்று சேரும்போது அதில் ஹார்ட் வடிவிலான முத்திரை, ஹார்ட் ஸ்டாம்ப் அச்சிடப்பட்டிருக்கும். காதலர்களைக் கவரும் வகையில் இப்படி ஒரு தபால் சேவைத் திட்டம் உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லை.

தற்போது 110 நாடுகளில் இருந்து 1,30,000-க்கும் மேற்பட்ட தபால்கள் வந்து குவிகிறதாம். ஒவ்வொரு ஆண்டும் தபால்கள் கூடுவது போல தபால் முத்திரை, சேவை போன்றவைகளிலும் பல புதுமைகளைப் புகுத்தி வருகின்றனர். உண்மையில் லவ்லேண்ட் நகரம் காதலர்களின் அடையாளம். இன்றைய நிலையில் பாகிஸ்தானில் இருக்கும் காதலன், காஷ்மீரில் உள்ள காதலிக்கு வாழ்த்துச் சொல்ல அமெரிக்காவுக்கு தபால் அனுப்புகிறான். உங்கள் மனதுக்குப் பிடித்தவர் பக்கத்துத் தெருவில் இருந்தாலும் பரவாயில்லை, யோசிக்காமல் லவ்லேண்ட் நகருக்கு உங்கள் கிரீட்டிங் காட்டை அனுப்பிவையுங்கள். ஹார்ட் ஸ்டாம்புடன் கிரீட்டிங் கார்ட் கொடுத்து அசத்துங்கள்.

இதோ முகவரி...

Postmaster - Attention Valentines

446 E. 29th St.

Loveland, CO 80538-9998

காதலுக்காக இதைக் கூடவா செய்ய மாட்டோம்?

  • தொடங்கியவர்

"அடிவாங்கினாதான் ஐ லவ் யூ!”

ப.சூரியராஜ், ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

 

54p1.jpg

பேஸ்புக்கும் லைக்ஸும்போல, பாலும் தண்ணீரும்போல, வடிவேலுவும் மீம்ஸும்போல, தமிழ் சினிமாவும் காதலும் இரண்டறக் கலந்தவை. நம் ஊரில் கதையே இல்லாத படத்தைக்கூடப் பார்த்துவிடலாம். ஆனால், காதல் இல்லாத படம் ரொம்ப சிரமம்.

அப்படி, இருண்டுபோன இரண்டாம் உலகத்திலேயே பூப்பூக்கவைத்துப் பூச்சிகளை வாழவைக்கும் சக்தி படைத்தது தமிழ் சினிமா காதல். அப்படிப்பட்ட சினிமாவில், `காதல்' எனப்படும் கொடிய விலங்கு எந்தெந்தத் தருணத்தில் ஹீரோ - ஹீரோயின்களுக்கு இடையில் `பட்டறையைப் போட்டது’ எனப் பார்ப்போமா ஃப்ரெண்ட்ஸ்?

வழிகள் மூன்று...

வாழையடிவாழையாக தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு இருக்கவேண்டிய மிக முக்கியத் தகுதிகள், `அநியாயத்தைக் கண்டால் பொங்கணும்', `ஆபத்து நேரத்தில் உதவணும்', `அடிமனசை டச் பண்ணணும்'. இந்த மூன்று முத்தான மேட்டர்கள்தான் ஹீரோக்கள் மீது ஹீரோயின்களுக்குக் காதல் வைரஸைத் தாக்கச்செய்கின்றன. அந்தக் காலத்துக் கறுப்பு - வெள்ளை நாயகர்கள், இந்த மூன்று மேட்டர்களில் ஏதாவது ஒன்றை மட்டுமே கையில் எடுப்பார்கள்.

எம்.ஜி.ஆர்., `அநியாயத்தைக் கண்டால் பொங்கணும்' கோட்டாவைக் கையில் எடுத்துப் 54p5.jpgபுகுந்துவிளையாடியவர். வாயில் புகை பைப்போடு திரியும் பணக்காரர்கள், ஏழை மக்களைத் தாக்கும்போதும், நிரபராதிகள் தண்டிக்கப்படும்போதும், சட்டையை மடித்துவிட்டுக்கொண்டு மல்லுக்கட்டுவார். கூட்டத்தின் முன்வரிசையில் நின்று நெகிழ்ந்துபோய் அதைப் பார்க்கும் ஹீரோயின்கள், அவரை ஒருதலையாகக் காதலிக்க ஆரம்பிப்பார்கள். அதேபோல், `அடி மனசை டச் பண்ணணும்' கோட்டாவை எடுத்துக்கொண்டு சென்டிமென்ட் சாறு பிழிவார் சிவாஜி. அதில் உருகி ஹீரோயின்களும் கண்களைக் கசக்க, காதல் துளிர்விட்டு முதல் பாதியிலே குடும்பம் குட்டி என செட்டில் ஆகிவிடுவார். மீதம் இருக்கும், `ஆபத்து நேரத்தில் உதவணும்' கோட்டாவைத் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் பார்த்துக்கொண்டார். அப்போது எல்லாம், இப்படித்தான் ஹீரோயின்களுக்கு ஹீரோக்கள் மீது காதல் வந்தது.

54p2.jpg

ரபரிபரிபரபா...

பெல்பாட்டம் போட்டுத் திரிந்த ஹீரோக்கள் மீது மட்டும் அந்தக்கால ஹீரோயின்களுக்கு ஏனோ காதலே வராது. `எங்கே காதலிப்பது... வீட்டில் தெரிந்தால் காலேஜைவிட்டு நிறுத்தி காரைக்குடியில் இருக்கும் சித்தி வீட்டுக்கு அனுப்பிவிடுவார்களோ!' என்ற பயம்தான், அதற்கு மிக முக்கியமான காரணம். `நீ படிச்சு, பெரிய ஆளா வரணும்’, `உன்னைக் கட்டிக்கப்போற பொண்ணு ரொம்பக் கொடுத்துவெச்சவ' போன்ற டயலாக்குகளை ஹீரோயின்கள் உச்சரிக்க ஆரம்பித்தது அங்குதான். ஆனாலும், வாங்கிய அடியில் வாயில் ரத்தம் சொட்டச்சொட்ட `நான் உன்னைக் காதலிக்கிறேன்' என வசனம் பேசி, எப்படியாவது ஹீரோயின்களைக் காதலிக்க வைத்துவிடுவார்கள் பெல்பாட்டம்வாலாக்கள். ஹீரோயின்களுக்கு ஹீரோவின் கள்ளங்கபடம் இல்லாத மனதைப் பார்த்துதான் காதல் வந்தது.

அதே நேரத்தில், திமிர் பிடித்து அலையும் பணக்கார ஹீரோயினுக்குப் பயம்காட்டியே காதலில் விழவைக்கும் சில ஹீரோக்களும் உள்ளனர். சில ஹீரோயின்கள், `நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?' என ஹீரோவைப் பார்த்துக் கேட்டுவிட, `ஆம்பள' படத்தில் வரும் டாடா சுமோபோல் துள்ளிக்குதித்து வருவார் ஹீரோ. `நான் ஆம்பளைதான்னு நிரூபிச்சுக் காட்டட்டுமா?' என அந்தப் பக்கிகள் செய்யும் செயல்கள் அபசாரம். ஆனாலும், அந்த நேரத்தில்தான் அவர்களுக்கு லவ் வரும் என்பது கோக்குமாக்கான டிசைன்.

54p3.jpg

அடி வாங்கி... மிதி வாங்கி...

54p51.jpgடார்ச்சர் செய்தே லவ் பண்ணவைப்பதுதான் பேகி பேன்ட் ஹீரோக்களின் ஸ்டைல். `நீ போகும் இடம் எல்லாம் நானும் வருவேன்' என ஹீரோயின்கள் பின்னாலேயே சுஸூகி சாமுராயில் சுற்றி, அவர்கள் நிற்கும் பஸ் ஸ்டாப்புக்கு விடியற்காலையிலேயே ஆஜராகி, நெஞ்சில் பச்சைக்குத்தி, ஹீரோயின் அண்ணன்களிடம் அடி வாங்கி... மிதி வாங்கி, போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று, இதுக்கு மேல அடி வாங்கினா இந்த பாடி தாங்காது எனப் பயந்துபோய் ஹீரோயின்கள் ஓ.கே பண்ணிவிடுவார்கள். முக்கியமாக, ஹீரோயினின் ஹேண்ட்பேக்கை அடித்துச் சென்றவனிடம் சண்டைபோட்டு அதை மீட்டுத் தருவது, ஹாஸ்பிட்டலில் முடியாமல் கிடக்கும் குழந்தைகளிடம் கதை சொல்லியே அவர்களைக் காப்பாற்றுவது, கோயிலில் எண்ணெயை ஊற்றி கால் வழுக்கிக் காதலில் விழச்செய்வது, ரத்தத்தில் லெட்டர் எழுதுவது, ரோஜாப் பூவைக் காப்பாற்ற லாரி டயருக்குள் பாய்வது, கிணற்றிலோ கடலிலோ விழுந்த ஹீரோயினைக் காப்பாற்றுவது என உயிரைக் கொடுத்துக் காதலித்த ஹீரோ வம்சம் இது.

54p4.jpg

பஸநிஸநிககரிஸா...

சமகால மில்லினியம் ஹீரோக்கள் வேறு லெவல். தனது முன்னோர்கள் செய்த அனைத்தையும் செய்வது மட்டும் அல்லாது, கூடுதலாகச் சில முயற்சிகளையும் பரிசோதித்துவருகிறார்கள். ஹீரோயின் கண் முன்னால் வேறு ஒரு பெண்ணோடு சிரித்துப் பேசினால், ஹீரோயின்கள் கடுப்பாகி அவர்களே வந்து காதலைச் சொல்வார்கள் என்பதுதான் இவர்கள் கண்டுபிடித்ததிலேயே அதிபயங்கர உத்தி. சமீபமாக சில ஹீரோயின்களுக்கு ஹீரோவைப் பார்த்ததுமே காதல் வந்துவிடுவது ஆறுதல் அளிக்கிறது. அந்தக் காலத்தில் எல்லாம் க்ளைமாக்ஸில் குறுக்கே புகுந்து, கடப்பாரைக் குத்தை வயிற்றில் தாங்கும் செகண்ட் ஹீரோயின்கள்தான் ஹீரோவைப் பார்த்ததும் காதலிப்பார்கள். ஆனால் இப்போதோ, `ஹீரோயின்களே அதைச் செய்வது ஆரோக்கியமான மாற்றம்' என்று தாய்லாந்து உளவியல் நிபுணர் டகாசுகா சொல்கிறார் என வாட்ஸ்அப்பில் சொல்கிறார்கள். மொத்தத்தில், எந்தக் காலமானாலும் ஹீரோயின்களுக்கு லவ் வர ஹீரோக்கள் தென்னைமரம் ஏறித்தான் ஆக வேண்டும்.

ஹீரோக்களுக்கு எப்போது லவ் வரும் என்றால்... கொட்டும் மழையில் நடுரோட்டில் ஹீரோயின்கள் நடனம் ஆடினாலோ, சோப்புக் குமிழ்கள்அல்லது பூக்கள் உதிரும் இடத்தில் ஸ்லோமோஷனில் நடந்து வந்தாலோ, குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தாலோ போதும். சில நேரங்களில் ஹீரோயின் அணிந்திருக்கும் ஜிமிக்கியைப் பார்க்கும்போதுகூட ஹீரோக்களுக்கு `பஸநிஸநிககரிஸா ஸநிதபமகபமகபரி'ன்னு மனசுக்குள்ளே காதல் ரிதம் வாசிக்க ஆரம்பித்துவிடும். அதனால், இந்தப் பயபுள்ளைகளைப் பற்றி பெரிதாகப் பயப்படத் தேவையில்லை.

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: 'சசிகலா தீர்ப்பு'- சட்ட அமைப்பின் வெற்றி!

 
 
3_3132945f.jpg
 
 
 

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்த நெட்டிசன்களின் கருத்து தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..

krishna kumar ‏@kk1987kicha

ஜெயிலுக்கு போறதுக்கு ரிசார்ட்ல ட்ரீட் வச்சது உலகத்துலேயே தமிழ்நாட்டுல தான். #SasikalaConvicted

RajaDinakaran ‏@rrajadinakaran

அம்மாவின் நான்காண்டு சிறை தண்டனையும் சின்னம்மாவுக்கே வழங்கப்படவேண்டும்- சி.ஆர்.சரஸ்வதி வேண்டுகோள்.

லெமூரியா தமிழன் ‏@lemuria_tamilan

மிக முக்கியமாக அப்பலோ மர்மத்தை வெளியே கொண்டு வர வேண்டும்... #SasikalaConvicted

Vikram vicky# ‏@Vikramvicky9962

* சசிகலா: நான் ஒரு சிங்கம் *

.

.

.

.

.

.

 

* நீதிபதி: சரி கூண்டுக்குள்ள போங்க..! *

1_3132948a.jpg

Jackie Sekar

சர்ச் பார்க்ல படிச்சவங்க... வெள்ளையா இருக்காங்க... இங்கிலிஷ் பேசறாங்கன்னு நம்பி போன குத்தம்... முதல் குற்றவாளியா ஜெ எல்லா தப்பையும் பண்ணிட்டு மகராசியா போய் சேர்ந்துட்டாங்க.... இரண்டாம் குற்றவாளியா தானும் மாட்டிக்கிட்டோமேன்னு சசிக்கலா மனசு என்ன பாடுபடும்? இந்த கோணத்திலும் இந்த சொத்துக்குவிப்பு தீர்ப்பு விஷயத்தை அணுகலாம்..

ATHISHA ‏@athisha

அம்மா நல்லவர்தான் சின்னம்மாதான் கெடுத்துட்டாங்க என்பவர், நாளைக்கே சின்னம்மா நல்லவங்கதான் அவங்க குடும்பம்தான் கெடுத்துடுச்சு என்றுசொல்லக்கூடும்.

சி.பிரபாகரன் ‏@prabbakarann

நீங்கள் மட்டும் அன்று சொத்து குவிக்கலைனா இன்னிக்கு சசிகலா சி.எம் ஆகிருப்பாங்க. நன்றி அம்மா.

Dr. Easwar T .R.

ராஜா கைய்ய வைத்தால் அது ராங்கா போனதில்லை...#சசிகலா. #SasikalaConvicted

4_3132944a.jpg

மெத்த வீட்டான் ‏@HAJAMYDEENNKS

கூவத்தூர்ல இருந்து கோட்டைக்கு போவோம்னு சொன்ன சசிகலா, அது திரும்ப வர முடியாத கோட்டைன்னு சொல்லாமல் விட்டுட்டாங்களே..!

ராஜா.வே ‏@Raja41393923

காதலர் தினத்த யார் மறந்தாலும் சசிகலா-னால மட்டும் மறக்கவே முடியாது...!

Guhan ‏@tmguhan

சின்ன ’மக்கள் முதல்வர்’ சசிகலா?

A.G.M.SWAMI ‏@agmswami

அடைக்கப்பட்டிருந்த MLAக்கள் விடுதலையானதும் சசிகலா அடைக்கப்படுவார். சினிமா மாதிரியே கடைசி நேரத்தில் போலீஸும் வந்தது. கதையும் முடிந்தது.

Rana Ayyub

சசிகலா குற்றவாளி என்பதை வரவேற்கும் ஓபிஎஸ், சக குற்றவாளியான ஜெயலலிதாவின் புகழ்பாடுவதைத் தொடர்வது ஏன்? #SasikalaConvicted

5_3132946a.jpg

Archie ‏@Archu243

உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறதோ அதைக் கர்ம வினை சரியாகக் கொடுத்திருக்கிறது. #Shashikala

indhu ‏@indhunachad

தமிழ்நாட்டு பேச்சிலர்களும் இன்றைய தினத்தைக் கொண்டாடுவார்கள்.

ஒற்றன் ‏@jaffvijith111

72 ஆவது நாளில்.

ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு 72-ஆவது நாள் மரணமானார்.

ஜெயலலிதா மரணமடைந்து 72-ஆவது நாள் சசிகலா சிறை செல்கிறார்!

மெட்ராஸ்காரன் ‏@RajeshTwts

இதுல விஷயம் என்னன்னா,

* பெயில் கிடைக்காது

* மேல் முறையீடும் செய்ய முடியாது

* பத்து வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட இயலாது. #SasikalaConvicted

Thirubalaji ‏@thirubalaji88

சசிகலா ADMK லிருந்து நீக்கம்- தமிழக மக்கள்.

IrRitaTinG IdIoT ‏@im_idiotic

நீதிபதி!

இந்த சினம் கொண்ட சிங்கத்த

சிறையில அடைச்சா அது செல்லையே

செதச்சிரும் பரவால்லயா.... #சசிகலா மொமண்ட்.

2_3132947a.jpg

மகிழினி

ஓபிஎஸ்ஸுக்கு சட்டமன்ற வாசல் திறக்கப்பட்டிருக்கிறது.

இராசையா சின்னத்துரை

முதுமையை எட்டிவிட்ட ஒருவருக்கு, அதுவும் ஒரு பெண்ணாக சிறைவாழ்வு கொஞ்சம் சிரமம்தான். சமாளித்துக் கொள்ளுங்கள். ஆனால் கற்றுக்கொள்ள விரும்பினால் தளை வாழ்வு தவம். சுயத்தை தேடி அடையலாம். தனிமையில் சிந்திக்கும்போது சொத்துக்களும் செல்வமும் எந்தப்பயனும் இல்லாதது என்பதை முழுமையாக அறிவீர்கள். பரபரப்பான போயஸ் தோட்டத்து நாட்களில் அதிகாரத்தை சுமந்தவர்களை எவ்வளவு அனாவசியமாக கையாண்டீர்கள் என்பதை நினைத்துப்பாருங்கள்.

எவை சரி எவை தவறு என்பதை தனிமை கற்றுத்தரும். அதிகாரம் நிலைகொண்டிருக்கும் இடத்தில் நீதியின் இருப்பு கேள்விக்குறியதுதான். ஆனால் அதிகாரத்தில் நேரடியாக பங்கு வகிக்காமல் நீங்கள் நடத்திய ''நீதி''முறைகளை நினைவில் தவழ விடுங்கள். இயன்றால் சுயசரிதம் எழுதுங்கள். அது வருங்கால தலைமுறைக்கு அதிக ஆசை ஆபத்து என்பதற்கான வாழ்வியல் பாடமாகலாம்.

jeyachandra hashmi

வாழ்வின் ஆக்டிவான 20 வருடங்கள் குற்றவாளிகளை வெளியே இருக்க விட்டதுதான் இந்த சட்ட அமைப்பின் ஆகப்பெரிய தோல்வி.

சற்றே சாய்ந்து படுக்கலாம் என்று நினைக்கும்போது 20 வருடத்திற்கு பிறகு மொத்த அரசியல் வாழ்விற்கும் ஆப்படித்ததுதான் இந்த சட்ட அமைப்பின் ஆகப்பெரிய வெற்றி!!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

சசிகலாவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து வலம் வரும் மீம்கள்

 

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலை நையாண்டித்தனமாக விமர்சிக்கும் பல மீம்களை சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவலாக காணமுடிகிறது . இன்று சசிகலாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது தொடர்பாகவும் பல மீம்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. அவற்றில் சில.

அதிமுக பிளவு - 1988 திரும்புகிறதா ?

சமூக ஊடகங்களில் வலம் வரும் மீம்கள் சமூக ஊடகங்களில் வலம் வரும் மீம்கள் சமூக ஊடகங்களில் வலம் வரும் மீம்கள் சமூக ஊடகங்களில் வலம் வரும் மீம்கள் சமூக ஊடகங்களில் வலம் வரும் மீம்கள் சமூக ஊடகங்களில் வலம் வரும் மீம்கள் சமூக ஊடகங்களில் வலம் வரும் மீம்கள் சமூக ஊடகங்களில் வலம் வரும் மீம்கள் சமூக ஊடகங்களில் வலம் வரும் மீம்கள் சமூக ஊடகங்களில் வலம் வரும் மீம்கள் சமூக ஊடகங்களில் வலம் வரும் மீம்கள் சமூக ஊடகங்களில் வலம் வரும் மீம்கள் சமூக ஊடகங்களில் வலம் வரும் மீம்கள் சமூக ஊடகங்களில் வலம் வரும் மீம்கள் சமூக ஊடகங்களில் வலம் வரும் மீம்கள் சமூக ஊடகங்களில் வலம் வரும் மீம்கள் சமூக ஊடகங்களில் வலம் வரும் மீம்கள்  

 பிபிசி தமிழ்

  • தொடங்கியவர்

காதலர் தினத்தன்று, தாஜ்மஹாலில் எவ்வளவு ரோஜாக்கள் விற்பனையாகும்? #VikatanInfographic

 

ரோஜா

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

2017-ல காதலிக்கிறவங்களோட காதல் ஸ்பாட்கள் இதுதான் மக்களே!

மக்கு முந்தைய தலைமுறை இளைஞர்கள் தங்களுக்குப் பிடிச்ச பொண்ணுங்களைக் காதலிக்க வைக்கிறதுக்கே படாத பாடு படவேண்டியிருக்கும். டைப்ரைட்டிங் க்ளாஸ், வுமன்ஸ் காலேஜ் வாசல் என சுடிதார்கள் உலாவுற இடமாப் பார்த்து நின்னுக்கிட்டு பாக்கெட் சீப்பை வெச்சு தலையைக் கோதிக்கிட்டிருப்பாய்ங்க. இப்போ எல்லாம் சிட்டி சென்டர், ஃபன் மால்ன்னு பாய்ஸும், கேர்ள்ஸும் கப்பிள்ஸ் ஆகுறதுக்குக் கல்ச்சரே தேவையில்லாமல் கண்டமேனிக்கிப் போய்க்கிட்டு இருக்காங்க. ரத்தத்தில் லவ் லெட்டர் எழுதி, யாருக்கும் தெரியாமல் மறைச்சுவெச்சுக் கொடுத்த காலம் மண்ணாகி மலையேறிப் போச்சு. பிரைவேட் சாட்ல லவ் ப்ரோபோஸ் பண்ணி, ஸ்கைப்பில் காதல் வளர்த்துக் கொண்டிருக்கும் ஜென்-Z யூத்துகளுக்கு ஃபெயிலியர் ஆனாலும் பெரிய ஆபத்து இல்லை. சாட் ஹிஸ்டரியை டெலிட் பண்ணிட்டு 'காதலும் கடந்து போகும் மச்சி!' ன்னு தத்துவத்தோடு ஃப்ரெண்ட்ஸுக்கு 'சிங்கிள் டே' ட்ரீட் கொடுக்கலாம். இந்த நவீன காதலர்களின் காதல் ஸ்தலங்கள் எதெல்லாம் தெரியுமா? வாங்க பார்க்கலாம். 

காதல்

ரொமான்ஸ் ஃபிட்னஸ் சென்டர்ஸ் : 
அந்தக் காலத்தைப் போல பொழுது விடிந்ததும் துளசிமாடங்களைச் சுற்றிவராமல் ஜென்-Z கேர்ள்ஸ் வேகன் டயட், பேலியோ டயட்னு வெஸ்டர்ன் உணவுக் கலாச்சார வகையறாக்களைக் கையில் எடுத்துக் கம்புசுத்த ஃபிட்னஸ் சென்டர்களுக்குச் செல்வார்கள். அவர்களைக் கரெக்ட் செய்ய நாமும் எய்ட் பேக் இல்லைன்னா அட்லீஸ்ட் சிக்ஸ் பேக்குகளையாவது முயற்சி செய்யவேண்டியது கட்டாயம். நகரங்களில் இப்போது ஆங்காங்கே முளைத்துவரும் ஃபிட்னஸ் சென்டர்களில் அட்மிஷன் போட்டு, ஜாக்கி பனியன் அணிந்த இளசுகள் தம்புள்ஸ் தூக்கி ஆர்ம்ஸ் காட்டிக்கொண்டிருப்பார்கள். க்யூட்டாக டி-ஷர்ட் அணிந்த இளம்பெண்கள் க்ராஸ் ஆகும்போது முகத்தில் பயத்தைக் காட்டாமல் ஓவர்லோடட் டிஸ்குகளை அனாயசமாகத் தூக்கி பைசெப்ஸைக் காட்டுவதும், புதிதாக ஜிம்முக்கு வந்திருக்கும் பெண்ணிடம், "இந்தாமா இதை இப்படியெல்லாம் பண்ணினா நாலு நாளைக்குக் கையைத் தூக்கமுடியாமல் லாக் ஆகிரும்"ன்னு சொல்லிப் பயமுறுத்தியும் யூத் பாய்ஸ் ஜிம்மில் நடத்தும் அட்ராசிட்டீஸ் அதகளம். அங்கேயே, இவர்கள் போடும் பிட்டுகளைக் கேட்டுக்கேட்டு ஃபிட் ஆன ஒருவருடன் செட்டாகி செட்டிலாகிவிடுகிறார்களாம். ஜிம்கானா ஜிம்!

'க்ளிக்'கி பார்ட்னர்ஸ் :
பஸ் ஸ்டாப்புகளுக்குப் பக்கத்தில் இருக்கும் குட்டிச் சுவர்களில் அமர்ந்துகொண்டு போகிறவருகிற ஃபிகர்களை ஒரண்டையிழுத்தது போன தலைமுறை. அந்தக் கலாச்சாரம் `அவுட் ஆஃப் டேட்' ஆகி போட்டோகிராபி க்ளாஸ்களிலோ, க்ராப்ட் வகுப்புகளிலோ ஆர்ட் போர்டுகளின் மறைவில் ரொமான்ஸ் செய்து 'இது மாடர்ன் ஆர்ட் மாதிரி... மாடர்ன் லவ்' எனப் படம் காட்டுவார்கள் இந்த இளசுகள். கேண்டிட் போட்டோகிராபி போலப் போகிறபோக்கில் கேண்டிட் காதல்களையும் நாம் பார்க்கலாம். கல்யாண போட்டோக்களிலேயே வானத்தில் பறப்பது போல மேஜிக் செய்யும் போட்டோகிராபி போல 'க்ளிக்'கிக்கொண்டே காதலில் மிதக்கலாம். "வாவ். நீங்க எடுத்த போட்டோவில் அந்தப் புறா மட்டும் கொஞ்சம் ஃபோகஸ்லே வந்திருந்தா செம பிக்சரா இருந்திருக்கும். யூ நோ? உங்களை மாதிரியே எனக்கும் வைல்டு லைஃப் போட்டோகிராபின்னா ரொம்ப இன்ட்ரஸ்ட். அடுத்தவாட்டி அவுட்டிங் போகும்போது ஒரு கால் பண்ணுங்க... சேர்ந்து போய் க்ளிக் பண்ணலாம்." என ஃபிலிம் காட்டுவார்கள் பாய்ஸ். "பை தி பை அது புறா இல்ல... காக்கா.." னு அந்தப் பொண்ணு பல்பு கொடுத்தாலும், லைட்டா ஃப்ளாஷ் அடிச்சா போதும். லவ் மேஜிக்!

காதல்

'ழவ்' மால்ஸ் :
வார இறுதிகளில் பார்க்குகளுக்குப் போய், அங்குவரும் இளம்பெண்களைக் கரெக்ட் பண்ணுவதெல்லாம் இப்போ இருக்கும் பாய்ஸ்களுக்கு ஓல்டு ஸ்டைல். சண்டே வந்துச்சுனா ஒரு மால்க்கு போனாமா... கண்ணுக்குக் குளிர்ச்சியா ஃபிகர்களை சைட் அடிச்சோமா... ஏதாவது ஒரு பொண்ணைப் பிடிச்சுருந்தா முதல் ஃப்ளோரில் 'லூயிஸ் ஃப்லிப்பி' ஷோரூமில் ஆரம்பித்து, மூன்றாவது ஃப்ளோரில் இருக்கும் 'க்ளாசிக் போலோ' வருவதற்குள் காதலைப் ப்ரோபோஸ் செய்து `ஓகே' ஆனால், அடுத்த ஃப்ளோரில் இருக்கும் 'காஃபி டே' வில் கைகோத்தபடி அமர்ந்திருப்பார்கள். நோ சொன்னா? நோ ப்ராப்ளம் ட்யூட். அடுத்த ஃப்ளோருக்கு அப்பீட் ஆகி, 'வுட்லாண்ட்ஸ்' ஷோரூம்மை வேடிக்கை பார்க்கும் ஒரு பெண்ணை உஷார் பண்ணலாம். அங்கே இருக்கும் ஃபிகர்களும் இந்த பாய்ஸைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லையெனில் " 'ஐ' படத்திலே எமி போட்டிருந்த ஹை ஹீல்ஸ் இருக்கா?"ன்னு ஏதாவது ஒரு பொண்ணு கடையில் கேட்டுக்கிட்டு இருக்கும். "ஹாய்... உங்களுக்கும் அதான் வேணுமா? மை சிஸ்டர் லாஸ்ட் வீக் பாட் தட் மாடல் இன் மோச்சி அவுட்லெட்" எனப் பீட்டர் விட்டு அப்படியே அட்ரஸ் சொல்வதாக டெவலெப் செய்துகொண்டே காதலுக்கும் காப்புக் கட்டிவிடுவார்கள். மால் கூல் மஜா!

மெக் டொனால்ட்ஸ் ரோமியோஸ் :
பேலியோ டயட், எய்ட் பேக்ஸ் அக்கப்போர்கள் ஒருபக்கம் இருந்தாலும், வாயைக் கட்டுப்படுத்த முடியாமல் சைனீஸ், அரேபியன் ஐட்டங்களை அள்ளிவீசுவதற்கு ஒரு கூட்டம் எப்போதும் ஃபுட்-கோர்ட்களில் காத்திருக்கும். அந்த ஃபிகர்களை கமுக்கமாக அமுக்க ஃபுட் கார்டுகளில் பேலன்ஸ் வைத்துக்கொண்டு பாய்ஸ்களும் களத்தில் இறங்குவார்கள். "உனக்கும் தந்தூரியா.. எனக்கும் ம்மா.. எந்த கன்ட்ரி டிஷ்னாலும் தந்தூரியோட ஸ்பைஸி வருமா?"ன்னு சிலாகிச்சுக்கிட்டே சிக்கன் பீஸ்களை ட்ரான்ஸ்பர் செய்தபடி காதலுக்கும் ரிங் கொடுக்கலாம். வாயில் நுழையாத சைனீஸ் ஃபுட் ஐட்டங்களின் பெயரைச் சப்புக்கொட்டிக்கொண்டே சொல்லி ஃபுட் லவ்வர்ஸ்களின் நாவில் எச்சில் ஊறவைத்து இன்னொரு ஃபுட் கோர்ட்டுக்கு பைக்கிலேயே அழைத்துச்சென்று இம்ப்ரஸ் செய்வார்கள். "நெக்ஸ்ட் வீக் பீட்ஸா ஹட் ல மீட் பண்ணலாம். பை" எனப் பறக்கும் பச்சைக்கிளி, லவ்-க்கு ஓகே சொல்லிடுச்சுனு நாமளே புரிஞ்சுக்கணும். ஈட்டிங் மீட்டிங் கப்பிள்!

பப் ஹார்ட்டின் :

வெள்ளிக்கிழமையானால், கோவில் பிரகாரத்தைச் சுற்றியபடியே பூப்போட்ட தாவணி அணிந்த பெண்களும், கட்டம் போட்ட சட்டை அணிந்த பாய்ஸ்களும் காதல் செய்ததெல்லாம் அந்தக்காலம். ஐடி துறை இளைஞர்களின் சாட்டர்டே நைட்டுகளை மொத்தமாக லீசுக்கு எடுத்திருக்கும் பப் மற்றும் பார்கள் பல ட்ரெண்டி யூத்ஸின் என்கேஜ்மென்ட் ப்ளேஸ். பார்த்துப், பேசிப், பழகி அடுத்த வீக்கெண்டில் டிஸ்கோவுக்குக் கம்பெனி கொடுக்கும் அளவுக்குக் காதல் வளர்த்து வெஸ்டர்ன் கல்ச்சரை ஓவர்டேக் செய்து போய்க் கொண்டிருக்கிறார்களாம். '3' படத்தில் கூட தனுஷ் ஸ்ருதிக்குத் பப்-ல தானே தாலியே கட்டுவாருன்னு பப் மேரேஜுக்கே அட்சதை போட ஆரம்பிச்சுட்டாய்ங்க. 'பப்'பில் ஆடத் தெரியாமல் சோகத்தோடு நிற்கும் பிகர்களை உஷார் செய்ய ஷகீரா, ஜஸ்டின் பெய்பர் ஆல்பங்களைப் பரிசளித்தும் வீக்கெண்டில் கம்பெனி கொடுத்தும் மெர்சலாகக் காதல் மெசேஜ் தட்டுகிறார்கள் இந்த பாப் மார்லிகள். டிம் லைட் காதல்!

காதல்

லாங் டைம்; நோ சீ ! :

'எங்களுக்கெல்லாம் இடமே தேவையில்லை; 'அலை' வழியாகவே காதல் வலை வீசுவோம்'னு சொல்லும் அடுத்த க்ரூப் ஒண்ணு இருக்கு. அமெரிக்காவுல இருந்துக்கிட்டே கொட்டாம்பட்டியிலிருக்கும் பெண்ணுடன் எல்லைகள் தாண்டிக்(?) காதல் செய்யலாம். வைத்திருக்கும் ரெண்டு இஞ்ச் வாட்ஸ்-அப் டி.பி. யில் முகத்தை முதல்முறையாகப் பார்த்து, சாட்டிலேயே காதல் வளர்த்து, ஸ்கைப், ஐ.எம்.ஓ என ஹைக்கில் பறக்கிறார்கள். 'ஃபீலிங் லோன்லி' என ஒரு பெண் ஸ்டேட்டஸ் போட்டால் "நான் இருக்கேன் டார்லிங் உனக்கு" எனக் கைத்தாங்கலாக நூறு கமென்ட்ஸ் வந்து விழும். இந்த ஜெனரேஷன் பெண்கள் ஒவ்வொரு தருணத்தையும் மற்றவர்களோடு ஷேர் செய்ய விரும்புகிறார்கள் என்பதன் அடையாளமே சோஷியல் மீடியா செல்ஃபி மோகம். லேசாக மழை தூறினால், 'மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா..'ன்னு ஸ்டேட்டஸோடு #Rainy ஹேஸ்டேக் போட, பாய்ஸ்கள், 'மானே.. உன் மாராப்பிலே ஹோய்...'னு எசப்பாட்டுப் பாடியே ஈஸியாகக் கரெக்ட் செய்கிறார்கள். செவ்வாய்க்கே ஸ்ட்ரைட் ராக்கெட்!

வாட்ஸ்-அப்

அதுக்கும் மேலே..!
முன்பு பஸ், ரயில்களில் எதிர்த்த சீட் பெண்களிடம் பேச்சுக்கொடுத்து பேச்சுலர்கள் ஃபேமிலிமேன்களானதைப் போல இப்போது, ட்ராஃபிக்கில் அருகே நிற்கும் ஸ்கூட்டி பெண்களிடம் கிடைக்கிற கேப்பில் சிப்ஸைப் பொறித்து வாட்ஸ்-அப் நம்பர் வாங்கிவிடுகிறார்கள் இந்த வாலன்டைன்  சாஃப்ட்வேர் இளசுகள். இன்னும் கொஞ்சம் இறங்கி விசாரித்தால் பல ஹை-டெக் ஐடியாக்களும் வெளிச்சத்திற்கு வரும். ஐ.டி. கம்பெனிகளிலும், பி.பி.ஓ. க்களிலும் இன்டர்வியூவுக்குச் செல்லும்போது பல பொழுதுகள் பார்த்துக், கண்ணோடு கண்கொண்டு காதல் மொழி பேசி, ஃபேஸ்புக் ஐ.டிகளை பரிமாறிக்கொள்கிறார்களாம். லவ் பண்றதுக்காகவே இன்டர்வியூவுக்குப் போறதெல்லாம் உங்களுக்கே அடுக்குமா ட்யூட்ஸ்..? 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பை கொண்டாடும் விதமாக இணையதளத்தில் வைரலாகும் சசிகலா ரிங்டோன்!
 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

காதலிக்கு ரூ. 2,000 நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட கார்!

valentines-day_14870401192_20165.jpg

காதலர் தினத்தை உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மும்பையில் காதலர் தினத்தையொட்டி, ஒருவர் தனது காதலிக்கு 2,000 ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட காரை பரிசளிக்க முயற்சி செய்தார். இதற்காக 2,000 ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட காரை எடுத்துக் கொண்டு சாலைக்கு வந்துள்ளார். அந்த காரை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அந்தக் காரை தடுத்து நிறுத்தி, அந்த நபரை கைது செய்தனர்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கைராசி குடும்பம் சீரியல், கவுன்ட் டவுன் 1... 2... 3 - சசிகலா தீர்ப்பின்போது ஜெயா பிளஸ்!

பெங்களூரில் நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று வெளியாகும் என தமிழக மக்கள் ஆவலோடு நேற்று முதல் அதீத ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தார்கள். கட்சிப் பாதுகாவலர்கள் அசந்த நேரத்தில் அங்கிருந்து எஸ்கேப் ஆன அ.தி.மு.க எம்.எல்.ஏ சரவணன்  'பன்னீர்' பங்களாவில் தஞ்சம் புகுந்தார். நேற்று மாலை கூவத்தூருக்குச் சென்ற 'சின்னம்மா' தீர்ப்பு வெளியாகும் சூழல் கருதி அங்கேயே தங்குகிறார். இவ்வாறான சூழல் நிலவும் நேரத்தில் இன்று காலை தீர்ப்பு வெளியாகிறது. சிங்கக் குட்டியை 4 ஆண்டுகள் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறது நீதிமன்றம். எல்லா மீடியாக்களும் பரபரப்பாகச் செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் ஜெயா (jaya) ப்ளஸ் சேனல் அவுட் ஆஃப் தி பாக்ஸில் வேறொரு ரூட் பிடித்துப் போய்க் கொண்டிருக்கிறது. 

ஜெயா டிவி

நாலு வருசங்கள் சின்னம்மாவுக்கு ஜெயில்னு தெரிஞ்சதும் சொந்தக் கட்சி எம்.எல்.ஏ க்களே என்ன முடிவெடுக்குறதுன்னு தெரியாம முழிபிதுங்கிக் கிடக்கும்போது, சேனலைத் திருப்பி ஜெயா டி.வி யைப் பார்த்தா... 'கவுண்டவுன் தொடக்கம்' னு ஃப்ளாஷ் போய்க்கிட்டிருக்கு. என்னடா இது ஃப்ளாஷ் நியூஸுக்கு வந்த சோதனைன்னு யோசிக்க,  'பி.எஸ்.எல்வி சி37 ராக்கெட்' நாளைக்கு விண்ணில் ஏவப்படுறதுக்கு கவுண்டவுன் ஸ்டார்ட் பண்ணிருக்காங்களாம். அங்க 'சின்னம்மா' ஜெயிலுக்குப் போறாங்கனு நினைச்சுப் பொதுச் சனங்கள் எல்லாம் அல்லாடுது. இங்கே ராக்கெட்டுக்குக் கவுன்ட் டவுனா..?

'கூவத்தூர் ரிசார்ட்ல எம்.எல்.ஏ க்கள் கைகலப்பில் ஈடுபடுகிறார்கள்'னு மற்ற டி.வி. சேனல்களில் செய்திகள் வந்துக்கிட்டு இருக்கும்போது "கூவத்தூர் நிகழ்வு தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கும். கூவத்தூரில் இருந்து அனைவரும் கோட்டைக்குச் செல்வோம்"னு சின்னம்மா நேத்து கூவத்தூரில் இருந்து கூவுனதை லைவ்னு சொல்லிப் போட்டுகிட்டு இருக்காய்ங்க. இதுதானா உங்க டக்கு?

jaya

''சின்னம்மா தலைமையில் கூட்டம் நடந்துச்சு. எம்.எல்.ஏ க்கள் ஆதரித்தார்கள்னு தட்டுனதையே வறட்டு வறட்டுனு தட்டிக்கிட்டு இருக்கீங்களேய்யா... தீர்ப்புனு ஒண்ணு வந்துச்சே தெரியுமா..? 'சின்னம்மா'வை குற்றவாளின்னு முடிவு பண்ணிச் சிறைத்தண்டனை கொடுத்தது தெரியுமா? அதை விடுங்க... இந்த உச்ச நீதிமன்றம்னு ஒண்ணு இருக்கிறதாவது தெரியுமா? 

சசிகலாவுக்குக் கிடைச்ச தண்டனையால் எம்.எல்.ஏ க்களின் முடிவு எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்க யாராவது ஜெயா டி.வி பார்க்க ஆரம்பிச்சா பார்க்கிறவங்களை எல்லாம் மொத்தமா சிதைச்சுத்தான் அனுப்புவாய்ங்க போல. பிறந்த குழந்தைக்கு 'ஜெயலலிதா'ன்னு பேர் வெச்சு உச்சி முகர்ந்தார் சின்னம்மா ன்னு செய்தி அதுபாட்டுக்கு ஒரு ட்ராக்ல போய்க்கிட்டு இருக்கு. என்னத்தச் சொல்ல..?

நமக்கு ஆதரவா ஒண்ணும் கிடைக்கலையே... எதைத்தான் நியூஸா போடுறதுன்னு திக்குத் தெரியாம திணறிய ஜெயா டி.வி. அப்டேட்டடாக ஒண்ணு கிடைச்சதும் 'அப்பாடா... இந்தா கிடைச்சிடுச்சுல்ல...' என சட்டமன்றக் கட்சித் தலைவராக, எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதையே ரிப்பீட் மோடில் போட்டுப் பொழுதைப் போக்குகிறது. எடப்பாடி பழனிச்சாமியும், 'என்னைத் தேர்த்தெடுத்தாங்க... என்னைத் தேர்ந்தெடுத்தாங்க...'னு சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார். #எத்தனை வாட்டிய்யா தேர்ந்தெடுத்தாங்க?

ஜெயா பிளஸ்

ஜெயா டி.வி யை இப்போ பழனிச்சாமி பார்த்தாலே கடுப்பாகிடுவார் போல. நம்பலைன்னா போய் ஜெயா டி.வி பாருங்க. சின்னம்மா நேத்து பேசினதோ, எடப்பாடி சில மணிநேரத்துக்கு முன்னாடி பேசினதோ மாத்தி மாத்தி ஓடிக்கிட்டிருக்கும். இதுல இன்னொரு கொடுமை என்னன்னா 'கைராசி குடும்பம்'னு ஒரு சீரியல் விளம்பரம் வேற இடையிடையில் வந்து குறியீடாவே சிரிப்புக் காட்டிட்டுப் போகுது. இப்போதைக்கு ஜெயா டி.வி என்டர்டெயின்மென்ட்டுக்கு கியாரண்டி. 

உங்களையெல்லாம் அந்த சுப்ரமணியன் சுவாமி தான் காப்பாத்தணும்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இறுதி வரை போராடு - மோதல் என்றால் இது தான் மோதல்..

  • தொடங்கியவர்

‘இத்தாலியில் சோனியா... இந்தியாவில் ராஜீவ்... '3 ஆண்டுகள் காத்திருந்து கரம் பிடித்த காதல் கதை!

 

d7_09180.jpg

''நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டபோது ஒரு உண்மையை நான் உணர்ந்திருந்தேன். அந்த சந்திப்பில் அவர் மீது நான் காதல் வயப்பட்டேன் என்பது தான் அது." இதைச்சொன்னவர் தற்போதைய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி. அவர் குறிப்பிட்டது முன்னாள் பிரதமரும் தனது கணவருமான ராஜீவ் காந்தி பற்றி. சாதி, மதம், அந்தஸ்து மட்டுமல்லாது மொழி, நாடு என ஏகப்பட்ட வேறுபாடுகளை கடந்து இணைந்த காதல் கதை ராஜீவ் - சோனியாவின் காதல் கதை. பிரபலங்களின் காதல் கதை சுவாரஸ்யமானவை. அவற்றில் ஒன்று ராஜீவ் சோனியாவின் காதல்.

இரு மனங்கள் ஏதோ ஒரு நேரத்தில், ஏதோ ஒரு இடத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி கொள்ளும்போது உருவாகும் சலனமே காதல் என்பார்கள். சாதி, மதம், மொழி, இனம், நாடு, அந்தஸ்து என எதையும் பார்க்க விடாமல், காதல் கண்ணை கட்டி விடும் என்பார்கள். அப்படி கண்ட உடன் காதலித்து, அதற்காக 3 ஆண்டுகள் காத்திருந்து... காதலித்தவரை கரம்பிடித்த கதைதான் இது.

d1_09222.jpg

ராஜீவ் - சோனியா. இவர்களின் முதல் சந்திப்பு நிகழ்ந்த இடம். லண்டனில் உள்ள ஒரு சிற்றுண்டி விடுதி. இந்திரா - பெரோஸ் காந்தி தம்பதியின் மூத்த மகனாக பிறந்த ராஜீவ் காந்தி, டேராடூனில் உள்ள பள்ளியில் படித்து முடித்ததும் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் இம்பீரியல் கல்லூரியில் பொறியியல் படித்தார். அதே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இத்தாலி நாட்டின் புகழ்மிக்க கட்டடக்கலை நிபுணராக விளங்கிய ஸ்டெபனோ மைனோவின் மகளாக பிறந்த சோனியா, ஆங்கிலத்தை முக்கிய பாடமாக எடுத்து பயின்று கொண்டிருந்தார்.

இருவரும் ஒரே பல்கலைக்கழகம் என்றாலும், வெவ்வேறு வகுப்புகள், வெவ்வேறு துறை என்பதால் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட வாய்ப்பிருக்கல்லை. ராஜீவும் சோனியாவும் ஒரு சிற்றுண்டி விடுதியில் தற்செயலாக சந்தித்துக்கொண்டார்கள்.

தங்க நிற கூந்தலையும், கரிய விழிகளையும் கொண்ட சோனியாவை கண்டதும் காதல் ராஜீவ்க்கு. சோனியாவுக்கு அதே நிலைதான். விழிகள் மட்டுமே பேசியது அப்போது. யார் எப்படி பேசிக்கொள்வது என்ற தயக்கம் இருவருக்குமே இருந்தது அப்போது. இந்த நேரத்தில் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. முதல் பார்வையில் ஏற்பட்ட ஈர்ப்பு, இருவரையும் அடுத்தடுத்த சந்திக்க செய்தது. இந்த சந்திப்புகள் இருவருக்குமிடையே புரிதலை ஏற்படுத்த இருவரும் திருமணம் செய்ய தீர்மானித்தனர்.

d2_09451.jpg

ராஜீவ் வீட்டில் எந்த எதிர்ப்பும் இல்லை. லண்டனில் இருந்து தனது தாய் இந்திரா காந்தியை தொடர்பு கொண்ட ராஜுவ்  சோனியா பற்றிய விவரங்களை சொல்லி... அவரை மணந்து கொள்ள விரும்புவதாகவும் சொல்ல... 'நீ யாரை விரும்புகிறாயோ, அந்த பெண்தான் எனது மருமகள். என் வருங்கால மருமகளை பார்க்க விரும்புகிறேன்' என்று காதலும் சம்மதம் தெரிவித்டுள்ளார் இந்திரா காந்தி.

ஆனால் சோனியா காந்தியின் வீட்டில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.சோனியா காந்தி கத்தோலிக்க கிருஸ்தவ மதத்தை சேர்ந்தவர். சோனியாவின் மூத்த சகோதரிகள் மூவருமே கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்களையே மணமுடித்திருந்தனர். ராஜீவ் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், வேறு நாட்டைச் சேர்ந்தவர் என்பது அவரது குடும்பத்தினரின் எதிர்ப்பு காரணமாக இருந்தது.

d5_09085.jpg

சோனியா அதிர்ந்து பேசாதவர். மிக சாதுவானவர். தந்தையின் பேச்சுக்கு எதிராய் அவரால் எதுவும் பேசமுடியவில்லை. அதே சூழலில் 'மணந்தால் ராஜீவைத்தான் மணப்பேன். வேறு எவரையும் மணக்க மாட்டேன்' என்பதில் உறுதியாக இருந்தார். இதற்கிடையே லண்டன் வந்த இந்திரா காந்தி, சோனியா காந்தியை சந்தித்து பேசினார். 'நீ தான் என் மருமகள். உன் வருகைக்காக நான் காத்திருக்கிறேன்' என சோனியாவிடம் சொன்னார் இந்திரா காந்தி.

இந்த சூழலில் ராஜீவ்-ன் படிப்பு முடிந்தது. இந்தியா திரும்பிய ராஜீவ் பைலட் ஆகும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். சோனியாவும் படிப்பை முடித்து விட்டு இத்தாலிக்கு சென்றார். அப்போது சோனியாவுக்கு வயது 18. இந்தியாவில் ராஜீவும், இத்தாலியில் சோனியாவும் இருந்தாலும் அவர்களுக்கிடையேயான காதல் அப்படியே இருந்தது.

d3_09279.jpg

3 ஆண்டுகள் இப்படியே கழிந்தது. சோனியா தனது 21வது வயதை எட்டினார். திருமண வயதை எட்டியதையடுத்து, அவரை இந்தியா அழைத்தார் ராஜீவ். இதையடுத்து 1968ம் ஆண்டு ஜனவரியில் இந்தியா வந்தார் சோனியா. டெல்லியில் சோனியாவை வரவேற்ற ராஜீவ் அவரை உறவினர் வீட்டில் தங்க வைத்தார். அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 25ம் தேதி நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் சோனியாவை ராஜுவ் தனது வாழ்க்கை துணையாக கரம் பிடித்தார். எளிய முறையில் நடந்த இந்த திருமணத்திற்கு பின் இந்திரா காந்தியின் இல்லத்திலேயே ராஜீவ்வும் - சோனியாவும் தங்கள் வாழ்க்கையை துவங்கினர்.

காதல் எல்லோரிடத்திலும் இருக்கும். அதனை முழுமையாக புரிந்து கொள்பவர்களிடம் எப்போதும் வாழும் என்பதன் நேரடி சாட்சிகள் ராஜீவ் - சோனியா தம்பதியினர்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஹேக் செய்யப்பட்டது எமி ஜாக்சனின் போன்!

எமி ஜாக்சனின் போன் ஹேக் செய்யப்பட்டு, அவரது தனிப்பட்ட படங்கள் இணையதளத்தில் லீக் செய்யப்பட்டுள்ளன. எமி எந்திரன்-2 போட்டோ ஷூட்டுக்காக லண்டனில் இருந்து சென்னை வந்துள்ளார். அப்போது, மாற்று விமானத்துக்காக மும்பை விமான நிலையத்துக்கு வந்தபோது சர்வீஸ்ஸுக்காக ஒரு மொபைல் கடையில், அவரது செல்போன் கொடுக்கப்பட்டுள்ளது. அங்குதான் போன் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Amy jackson

இதுகுறித்து எமி ஜாக்சன் கூறுகையில், "எனது தனிப்பட்ட படங்கள் வெளியான உடன் அதிர்ச்சியடைந்தேன். இது தொடர்பாக லண்டன் சைபர் க்ரைமிடம் புகார் அளித்துள்ளேன். மேலும், மும்பை சைபர் க்ரைமிலும் புகார் அளிப்பேன்" என்று கூறியுள்ளார்.

 

 

ரீ-என்ட்ரி ஆகிறது நோக்கியா 3310!

நோக்கியாவின் க்ளாசிக் மாடலான 3310 ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளது. மெகா பேட்டரி லைஃப், ஸ்நேக் கேம் என சக்கை போடு போட்ட நோக்கியா 3310 மாடலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். வருகின்ற 26-ம் தேதி, ஸ்பெயினில் நடைபெறும் நோக்கியாவின் சர்வதேச மொபைல் மாநாட்டில் இந்த போனின் மாடர்ன் வெர்ஷன் அறிமுகமாகிறது. 

Nokia 3310 

இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,200க்கு விற்பனைக்கு வருகிறது. மேலும், அன்றைய தினமே நோக்கியாவின் மூன்று ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களும் உலகுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. பழைய 3310 போனின் பாசிட்டிவ் அம்சங்கள் புதிய மாடலிலும் இருக்கும் என்கிறார்கள் டெக் நபர்கள். 

எல்லாம் பொம்மலாட்டம் தான் #OneMinuteSketch

ஓவியம்: கோ.ராமமூர்த்தி

admkkkks_17147.jpg

ஜம்மு - காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை

images_%281%29_00118.jpg

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உள்ள ஹண்ட்வாரா மாவட்டத்தில்  தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனே, ஜம்மு-காஷ்மீர் மாநில காவல் துறையின் தீவிரவாத ஒழிப்பு சிறப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் அந்த இடத்தை இன்று சுற்றிவளைத்தனர். அந்தப் பகுதிகளை இணைக்கும் நாற்புற சாலை வழிகள் அனைத்தும்  மூடப்பட்டன. பாதுகாப்புப் படையினரை கண்டதும் அங்கு பதுங்கியிருந்த சில தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர்கள். இருதரப்பினருக்கும் இடையில் அங்கே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகவும், இந்த மோதலில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாகவும், ஒரு வீரர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

காற்று வெளியிடை: 'வான் வருவான்' பாடல் லிரிக்ஸ் வீடியோ..!

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி-அதிதி ராவ் நடித்துள்ள படம் காற்று வெளியிடை. இதன் போஸ்டர்கள் மற்றும் டீசர்கள் ரிலீஸாகி இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் காதலர்  தினமான இன்று, ஏற்கெனவே அதன் 'வான் வருவான்' பாடல் டீசர் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், 'வான் வருவான்' பாடலின் முழு லிரிக்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், வைரமுத்து இந்தப் பாடல் எழுதியுள்ளார். சாஷா இந்தப் பாடலை பாடியுள்ளார்.

  • தொடங்கியவர்
காமமும் காதலும் அவனிடத்தே களையப்பட்டால்…
 
 

article_1487047048-kjkjp.jpgமனிதனின் உண்மையான வீரம் என்ன? துறவுதான் மகா வீரம். காமமும் காதலும் அவனிடத்தே களையப்பட்டால், துறது என்பது தானாக வரும். இதனை அகம் சார்ந்தது எனலாம். ஆன்மாவுக்கான சுதந்திரம் எனவும் சொல்லலாம். 

இந்த உலகை ஆட்டுவிப்பதே காதலும் காமமும்தான். எல்லா உயிர்களுக்கும் பொதுவான தேவையுமானது. இதன் அகரபலம் அளவிடற்கரியது.  

ஆனால், இதனால் உயிர்கள் பிறப்பெடுப்பதும் கடும்துயர் அடைவதும் தவிர்க்க முடியாதது. 

ஏனெனில், இந்த உலகம் இயங்க வேண்டியுள்ளது. இது இறை சித்தம்.  

உன்பிறப்பை நீ தூய்மை ஏற்று! பிறப்பதை, இறப்பதைப் பற்றிப் பேசும் நாம், நடுவே உள்ள வாழ்க்கையைச் சீராக்குதலைப் பற்றியும் ஆழமாகச் சிந்தித்து எம்மை வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.  

அறம் பல செய்தல், துறத்தலை விட மேலானது. வாழ்க்கையின் நோக்கமும் இதுவே. 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உண்மையைச் சொன்னதற்காக மன்னிப்புக் கேட்ட பிரபஞ்ச காதலன் இவர்!

கலிலியோ

கடைசியாக எப்போது மணிக்கணக்காக அமர்ந்து  இரவு வானத்தை ஆசை தீரப் பார்த்தீர்கள்?

`வேட்டைக்காரன்  பெல்ட்’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது அணிகலன் அல்ல..! ஒரு நட்சத்திர தொகுதியின் பெயர். இங்கிருந்து பார்ப்பதற்கு ஒரு Stick Man ன் இடுப்பில் இருக்கும் பெல்ட் போன்று தெரிவதால் அப்பெயர்பெற்றது.

சரி அதற்கும் நாம் பேச வந்தவருக்கும் என்ன தொடர்பு?

இருக்கிறது அவர் வானத்தை நேசித்தவர். பிரபஞ்சத்தை காதலித்தவர்.

கிபி 1564 ல் பிறந்த கலீலியோ கலிலி - இத்தாலியின்  புரட்சிக்காரர் .

தொலைநோக்கியைக்  கண்டறிந்தவரை விஞ்ஞானி என்றல்லவா சொல்ல வேண்டும்?

கலீலியோ

இன்று பிரபஞ்சமே ஏற்கிற உண்மை, ஏன் அது பிரபஞ்சத்தைப் பற்றிய உண்மையும் கூட, 16 ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய மதத்தின் நம்பிக்கைக்கு எதிராக இருந்தது என்ற ஒரே காரணத்திற்காக வானவியலின் தந்தை  மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார்.

அந்த உண்மை, "பூமியும், மற்ற கோள்களும் தான் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியன்  தான் மையம்"  என்பதே!

"அதிக எடை கொண்ட பொருளையும், குறைந்த எடையுள்ள பொருளையும் கீழே போடும் போது இரண்டும் ஒரே நேரத்தில் தரையை அடையும்"

கலீலியோ  நிரூபிக்க நினைத்தது இதையும்தான். அதுவரை அரிஸ்டாட்டில் சொன்னதையே வேதவாக்காக எண்ணிக் கொண்டிருந்தவர்கள் கலீலியோ கலிலியை ஏளனமாகப் பார்த்தார்கள். 

ஒரு சிறிய மற்றும் பெரிய குண்டுகளைத் தூக்கிக் கொண்டு, நேரே பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரத்திற்குச் சென்று அங்கிருந்து  கீழே போட்டார். இரண்டும் ஒரே நேரத்தில் விழுவதைக் கண்ட மக்கள் அந்த உண்மையை, கண்கட்டு வித்தை என்று சொன்னார்கள்.

அடிப்படையில் இயற்பியல் மற்றும் கணிதம் பயின்ற கலீலியோ கலிலி, தான் படித்த பிசா பல்கலைகழகத்திலேயே ஆசிரியரானார். மாணவனாய் தான் கேட்ட கேள்விகளுக்கு ஆசிரியராய் ஆன பின்பும் விடை தேடினார். விளைவு மதம் அறிவியலை நசுக்கியது. அவர் பல்கலைகழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.

அவரின் கூற்றுகளை பொய் எனக் கூறி அவரை ஒத்துக்கொள்ள வைத்து அவமானப்படுத்தியது ரோமன் கத்தோலிக்க சபை.

தான் உளமாற உண்மை என நம்பும் ஒன்றை , தவறானது என்று சொல்லும்போது  அவருக்கு எப்படி வலித்திருக்கும்?

அவற்றை எல்லாம்விட குறைவான வலியைத்தான்  உடல்ரீதியான துன்பத்தில் அவர் உணர்ந்திருப்பார்.

1609 ஆம் ஆண்டு அவர் தொலைநோக்கியை கண்டுபிடித்த பிறகு , பல்வேறு உண்மைகளை கண்டறிந்தார்.

"பூமியும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றி வருகிறன .சூரியன் நடுமையமாக உள்ளது" என கிபி 1615-ல், தான் எழுதிய புத்தகத்தின் வாயிலாக சொன்னபோது கத்தோலிக்க சபை அவரை கடுமையாக சாடியது.

கலீலியோ சொல்கிறார்; "உணர்வுகள், ஆறாம்அறிவு ,பகுத்தறிவு இவற்றை எல்லாம் மனிதனுக்கு அளித்த கடவுள் அதனை பயன்படுத்தக்கூடாது என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது" 

பின் பிரான்ஸூக்கு குடிபெயர்ந்த அவர் 1632 ல் "The Dialogue Concerning the two Chief Worlds" என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

சனிக்கோளின் வளையம், வியாழனின் துணைக்கோள்கள் ஆகிவற்றையும் கலீலியோ தன் தொலைநோக்கியின் வாயிலாக கண்டறிந்து சொன்னார். அறிவியல் வளராமல் இருக்க சிலரின் மூட நம்பிக்கைகள்தான் காரணம் என்பது அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கும் கதைதானே... ஆம்.. திருச்சபையை அவமதிக்கிறார் என்று அவரைக் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தனர். 68 ஆம் வயதில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, விடுதலை என்ற பெயருக்கே இடமில்லாமல் 1642ல் தன் 77-வது வயதில் இறந்து போனார் கலிலி.

கலீலியோ கலிலி

எண்ணிப்பாருங்கள்.கிட்டத்தட்ட பத்து வருடங்கள் அவர் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு நாம் சுதந்திரமான இறப்பைக் கூட அளிக்கவில்லை.

2000-ம் ஆண்டின் புத்தாண்டில் போப் இரண்டாம் ஜான்பால் இதுவரை திருச்சபையால் தண்டிக்கப்பட்ட அறிஞர்களுக்காக மன்னிப்பு கேட்டார். ஆனால் கலீலியோ கலிலியின் குரல் நம் காதுகளில் கேட்டுக் கொண்டுதானே இருக்கிறது?

நாம் இன்றிலிருந்து தினமும் அரைமணி நேரமாவது இரவு வானத்தை பார்ப்போம்.அங்கு நட்சத்திரங்களும், பிற கோள்களும் கலீலியோவிற்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றன.

இன்று 15 ஃபிப்ரவரி - கலீலியோவின் பிறந்தநாள்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

‘பேராசைக்கு எதிரான சரியான தீர்ப்பு!’ - மிஸ்டர் K-யின் #WednesdayWisdom கதை

பேராசை பெருநஷ்டம் என்று பழமொழி சொல்லப்பட்டாலும், பேராசையை யாரும் விடுவதாக இல்லை. ‘உன் வயிற்றுப் பசிக்குப் பின்னும் நீ உண்ணும் உணவு இன்னொருவருடையது’ என்பதைப் படித்தாலும் யாரும் புரிந்து கொள்வதில்லை.

மிஸ்டர் K

பெரிய பெரிய சாம்ராஜ்யங்களே அழிந்தது, இந்தப் பேராசையின் காரணமாகத்தான் என்பது கண்கூடு. மகாபாரதம் சொல்லாத நீதி ஏதும் உண்டா என்ன?

பாண்டவர்களுக்கு நாட்டில் பாதி கொடு, ஐந்து நகரம் கொடு, ஐந்து கிராமமாவது கொடு என்று கிருஷ்ணன் தூதுவனாக வந்து கேட்டபின்னும், தன்னோடு சேர்த்து நூறு கௌரவர்கள் சிங்கங்களாக இருக்க, என்னை எதிர்ப்பவர் யார் என்று கர்ஜித்து, எதுவும் தரமுடியாது என்று அனுப்பினான் துரியோதனன். இறுதியில் என்ன ஆயிற்று?  தர்மமே வென்றது. 

சீனாவில் ஒரு கிராமம். அங்கே இருக்கும் மக்கள் எந்த நிலையிலும் அளவுக்கதிகமாகப் பொருட்களைச் சேர்க்க மாட்டார்கள். அதேபோல, தாங்கள் பயன்படுத்திய பொருட்களை சுழற்சி முறையில் பிறருக்குக் கொடுத்து உதவுவார்கள்.  ஒரு பொருளை வெகுகாலத்திற்குப் பயன்படுத்துவது போலத்தான் வாங்கவே செய்வார்களாம். எப்படி என்று ஓர் உதாரணம் சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். 

குளிர்பிரதேசம். பெரிய அளவிலான பூட்ஸ்களோடுதான் நடக்க முடியும். பனிப்பொழிவு இருக்கும். தங்கள் குழந்தைகளுக்கு பூட்ஸ் வாங்கும்போது, இரண்டு அல்லது மூன்று சைஸ் அதிகமான பூட்ஸ்கள்தான் வாங்குவார்கள். சாக்ஸ், அதிகமாக வாங்கிக் கொள்வார்கள். முதலில் 3 சாக்ஸ்கள் அணிந்து பூட்ஸ் அணிவார்களாம். பிறகு கொஞ்சம் வளர்ந்ததும் இரண்டு சாக்ஸ் அணிவார்கள். இப்படியே..  அதே போல, இவர்கள் குழந்தைகள் பயன்படுத்த முடியாத அளவு அவை சிறியதானதும், அக்கம்பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு அளித்துவிடுவார்கள். இவர்களும் புதிதாக வாங்கும் முன், தங்கள் மகன் / மகளைவிட பெரிய வயதுள்ள குழந்தைகள் அக்கம்பக்கத்தில் இருந்தால், அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு, தேவைப்பட்டால் மட்டுமே  புதிதாக வாங்குவார்கள். இதனால் அந்த கிராமத்தில் திருட்டு என்ற ஒன்றே இல்லையாம். பேராசையற்ற ஊரில் திருட்டுக்கு என்ன தேவை இருக்கப் போகிறது.

நில்.. கவனி.. கற்பனை செய்... செல்லாதே!

பேராசையை ஒழிக்க ஒரு எளிய சூத்திரம் பயிலச் சொல்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். நில் கவனி.. கற்பனை செய்.. அதற்கு மேல் வேண்டாம் என்பதே அது. ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருக்கும். இதை ஒரு பயிற்சியாக எடுத்துக் கொண்டால், இட்ஸ் ஈஸி! 

உதாரணமாக நண்பர்களோடு, வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் இன்னொரு நண்பனைப் பார்க்கச் செல்கிறீர்கள். அவன் பெட்டி நிறைய பரிசுகள் வாங்கி வந்து, உங்கள் எல்லோர் முன்னாலும் கொட்டுகிறான். “இதெல்லாம் உங்களுக்குத்தாண்டா வாங்கிட்டு வந்தேன்” என்கிறான். ‘எது கிடைத்தாலும் சரி’ என்று நினைத்தால் அது ஆசை. அதில் உள்ள ஒரு பெரிய பொருள்தான் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் அது பேராசை. அப்படி ஒரு எண்ணம் வரும்போதே.. கற்பனை செய்ய ஆரம்பியுங்கள். ‘அதை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறோம்’  என்று ஆரம்பித்து அந்தப் பொருள் அடுத்த ஐந்து வருடத்தில் என்ன ஆகும் என்று கற்பனை செய்ய ஆரம்பியுங்கள். சும்மா விளையாட்டுக்காகவெல்லாம் இல்லாமல், நிஜமாகவே அப்படி கற்பனை செய்தால், அதன் மீதிருக்கும் ஆவல் ‘ச்சே’ என்று காணாமல் போய்விடுமாம். 

 அது ஒரு கீபோர்ட் என்று வைத்துக் கொண்டால், மேற்சொன்ன மாதிரி கற்பனை செய்தபிறகு, “அஞ்சு வருஷம் கழிச்சு பரண்ல கெடக்கும். எடுத்துட்டுப் போனா என்ன.. எடுக்காட்டி என்ன..” என்று தோன்றிவிடுமாம். 

சரி.. பேராசையைக் கட்டுப்படுத்த வேறென்ன செய்யலாம்? ரெண்டே ரெண்டு விஷயங்களை, அடுத்த 6 மாதத்துக்கு கடைபிடியுங்கள்.

1. உங்கள் வீட்டில் உள்ள, நீங்கள் உபயோகப்படுத்தாத எதாக இருந்தாலும் அதை ஒரு பெட்டியில் போடுங்கள். இன்றிலிருந்து 7 நாட்கள். 7ம் நாள் மாலை, வீட்டில் அனைவரும் அமர்ந்து அந்தப் பெட்டியில் என்னென்ன இருக்கிறது என்று பாருங்கள். வேலை செய்யாத சார்ஜரில் ஆரம்பித்து, ‘நல்லாத்தான் இருக்குல்ல’ என்று நீங்கள் நினைக்கும் கேமரா வரை நிறைய இருக்கும். அவற்றைப் பிரித்து தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்து மகிழுங்கள். அடுத்தமுறை எதாவது வாங்கும் முன் இந்தக் காட்சி மனக்கண்ணில் வந்து மறையும். ஒருவாரம் கழித்து, மீண்டும் இதேபோல செய்யுங்கள். 6 மாதத்தில் வீடும் க்ளீனாகிவிடும்.. உங்கள் மனதும்!

2. ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி’ என்று கண்ணதாசன் சொன்னதுதான். யாரும் தாழ்வில்லை உலகில். ஆனால், உங்களைவிட செல்வத்தில் குறைந்தவர்கள் வீட்டுக்கு அன்போடு ஒரு விசிட் அடியுங்கள். மாதம் ஒரு விசிட் என்று வைத்துக்கொள்ளுங்கள். அது உங்கள் அபார்ட்மென்ட் வாட்ச்மேனாக இருக்கலாம். எதிர் சாலையில் நீங்கள் தினமும் பார்த்துச் சிரிக்கும் பூ விற்கும் பாட்டியாக இருக்கலாம். அப்படிச் செல்வதால், அன்பைப் பகிர்ந்து கொண்டதுபோலவும் இருக்கும். அவர்கள் வீட்டில் உள்ள பொருட்களைப் பார்த்து ‘நம் வீட்டில் இருப்பதெல்லாம் ரொம்ப ஓவர்தான்’ என்ற எண்ணத்தையும் உங்களுக்குத் தந்து, அதிக ஆசையைத் தடுக்கும். யார் கண்டார்கள்.. உங்களுக்கு மேல் இருக்கும் உங்கள் பாஸ் இதைப் படித்துவிட்டு உங்கள் வீட்டுக்கு வந்தாலும் வரலாம்! Be Ready! 

முடிக்கும் முன் வழக்கம்போல, மிஸ்டர்  K வந்தான். சசிகலாவுக்கும்கூட அட்வைஸ் செய்தவனாயிற்றே...  அவனிடம் இன்றைய டாபிக் குறித்து பகிர்ந்து கொண்டேன்; 

“பேராசை பற்றி ஏதும் குட்டிக்கதை ஏதும் இருக்கா மிஸ்டர் K?"

தீர்ப்பு

சிரித்தான். “தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக வந்துவிட்டது அல்லவா? அதுனால தீர்ப்பு சம்பந்தப்பட்ட கதையையே சொல்றேன்” என்று ஆரம்பித்தான்.

ஒரு ஊர்ல ஒரு பெரும் பணக்காரன் இருந்தான். தன்கிட்ட இருக்கற ஏராளமான பணத்தை செலவு பண்ணாம, சேர்த்துகிட்டே இருந்தான். தங்கக்காசுகளா மாத்தி, சின்னச் சின்ன ஜாடில போட்டு அங்கங்க பதுக்கி வெச்சுப்பான். ஒரு தடவை அப்படி அவன் வெச்சிருந்த ஜாடி ஒண்ணு காணாமப் போச்சு. அதுல 50 தங்கக்காசுகள் இருந்தன. 

இவன் அக்கம்பக்கம், வேலையாட்கள்னு எல்லார்கிட்டயும் கேட்டான். கிடைக்கல. 

சிலநாட்கள் கழிச்சு, அந்தப் பணக்காரனுக்கு பக்கத்து தோட்டத்துல இருந்த ஒரு ஏழை விவசாயி வீட்ல இருக்கற பாப்பாவுக்கு ஒரு ஜாடி கெடைச்சது. அத அந்தப் பாப்பா அப்பாகிட்ட காமிச்சப்போ, “ஐயையோ இது அவரோடதாச்சே”ன்னு கொண்டுபோய் உடனே கொடுத்தாரு. 

அந்தப் பணக்காரர் “அப்பாடா”ன்னு மனசளவுல நெனைச்சாலும், அதுல இருக்கற காசுகள் எண்ணிக்கை சரியா இருக்குமானு சந்தேகம். எண்ணினார். 50 இருந்தது. ஆனாலும் எண்ணிட்டு இருக்கும்போதே அவர் மனசுல பேராசை பிடிக்க ஆரம்பிச்சது. எண்ணி முடிச்சதும், “ஐயோ இதுல 75 தங்கக்காசுகள் இருந்தது. ஆனா இப்ப 50தான் இருக்கு. இவன் எடுத்துட்டான்”னு சொல்லி அந்த ஏழை விவசாயியையும், அந்தப் பாப்பாவையும் மன்னர் முன்னாடி நிறுத்தினார். “75 தங்கக்காசு வெச்சிருந்தேன். இப்ப இந்த ஜாடில 50தான் இருக்கு” - இதான் பிராது!

மன்னர் கொஞ்சநேர  விசாரணையிலேயே,  ‘இவன் பேராசைக்காரன்.. பொய் சொல்றான்’னு  கண்டுபிடிச்சுட்டார். உடனே இப்படித் தீர்ப்பு சொன்னாராம்:

”அவர் தொலைச்ச ஜாடில  75 தங்கக்காசுகள் இருந்ததா உறுதியாச் சொல்றார். ஆனா இப்ப கிடைச்சிருக்கற ஜாடில 50தான் இருக்கு. ஆக இது அவர் தொலைச்ச ஜாடி அல்ல. அதுனால அந்த 75 இருக்கற ஜாடி கிடைக்கறவங்க என்கிட்ட வந்து கொடுக்கலாம். 50 தங்கக்காசு தொலைச்சதா யாரும் புகார் தராததால, இந்த 50 தங்கக்காசு இருக்கற ஜாடியை, இந்த விவசாயியின் நேர்மையைப் பாராட்டி அவருக்கே கொடுக்கறேன்”னு சொல்லிக் கொடுத்துட்டாராம்.
 

இதத்தான் ‘உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா’னு எங்க பாட்டி சொல்லுவாங்க!”  

சொல்லிவிட்டு கெக்கபெக்கவென்று சிரித்தான் மிஸ்டர் K! 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

பெப்ரவரி - 15

 

கிமு 399 :  கிரேக்க தத்துவஞானி சோக் கிரட்டீஸுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
590 : பாரசீகத்தின் மன்னனாக இரண்டாம் கொஸ்ராவு முடி சூடினார்.

 

1637 : புனித ரோம் பேரரசின் மன்னராக மூன்றாம் பேர்டினண்ட் முடிசூடினார்.

 

902varalaru-15-02-2016.jpg1898 : ஐக்கிய அமெரிக் காவின் கடற்படைக் கப்பல் யூ.எஸ்.எஸ். மெய்ன். கியூபாவில் ஹவானா துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 260 பேருக்கு மேற்­பட்­­டோர் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வை யடுத்து ஸ்பெயினுக்கு எதிராக அமெரிக்கா போர்ப் பிரகடனம் செய்தது.

 

 1942 : இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் ஜப்பானிடம் வீழ்ந்தது. இந்திய, ஐக்கிய இராச்சியம் மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த சுமார்  80,000  படையினர் போர்க் கைதிகளாக்கப்பட்டனர். 

 

1946 : ENIAC எனும் முதல் தலைமுறைக் கணினி பெல்சில்வேனியா பல்லைக்கழகத்தினால் அறிமுகமானது.

 

1950 : சோவியத் ஒன்றியம், மக்கள் சீனக் குடியரசு ஆகியன பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

 

1961 : பெல்ஜியத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த  73 பேர் கொல்லப்பட்டனர்.

 

1970 : டொமினிக்கன் குடியரசு விமானம் ஒன்று சாண்டோ டொமிங்கோவில் கடலில் மூழ்கியதில் 102 பேர் கொல்லப்பட்டனர்.

 

1989 : ஒன்பது ஆண்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின் ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து சோவியத் படைகளும் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.

 

1996 : சீனாவின் இன்டெல்சாட் செய்மதி ஒன்று ஏவியவுடனேயே கிராமம் ஒன்றில் வீழ்ந்ததில் பலர் கொல்லப்பட்டனர்.

 

1999 : குர்திஸ்தான் உழைப்பாளர் கட்சி எனும் அமைப்பின் அப்துல்லா ஓக்கலன் துருக்கிய இரகசியப் படைகளினால் கென்யாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

 

2013 : ரஷ்ய வான் பரப்பில் விண்கல் ஒன்று வெடித்துச் சிதறியதால் கட்டடங்கள் அதிர்ந்து ஜன்னல்கள் உடைந்தன. இதனால் சுமார் 1500 பேர் காயமடைந்தனரென அறிவிக்கப்பட்டது. 

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
பெப்ரவரி 31' வரை நீடிக்கப்பட்ட பாகிஸ்தானிய கடவுச்சீட்டு
 

22332pakistan-passport.jpgபெப்ரவரி 31 ஆம் திகதிவரை செல்லுடியாகும் என குறிப்பிடப்பட்ட பாகிஸ்தான் கடவுச்சீட்டொன்று விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயிலுள்ள பாகிஸ்தான் துணைத்தூதரகத்தில் இந்த கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

பெப்ரவரி மாதத்தில் 28 தினங்களே காணப்படும்.

 

லீப் வருடத்தில் மாத்திரம் பெப்ரவரியில் 29 தினங்கள்  இருக்கும். இவ்வருடம் பெப்ரவரி மாதத்தில் 28 நாட்களே உள்ளன. 

 

ஆனால், மேற்படி பாகிஸ்தானிய கடவுச்சீட்டின் செல்லுபடி காலம் 2017 பெப்ரவரி 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பாகிஸ்தானுக்கு மாத்திரம் பயணம் செய்வதற்காக இக்கடவுச்சீட்டின் செல்லுபடி காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இக்கடவுச்சீட்டின் புகைப்படமொன்று இணையத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

இப்புகைப்படத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை. 
எனினும், “சமா ரீவி.” உட்பட பல பாகிஸ்தானின் ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன. 

 

.metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இனி ஔியை பயன்படுத்தி அச்சிடலாம்: விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு


இனி ஔியை பயன்படுத்தி அச்சிடலாம்: விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு
 

பாடசாலை, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் பிரிண்ட் எடுத்தல் இன்றியமையாததாக உள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள பிரிண்ட்டிங் தொழில் நுட்பம் செலவு அதிகம் என்பதால், கலிபோர்னிய விஞ்ஞானிகள் ஒளி மூலம் பிரிண்ட் எடுக்கும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தச் செலவை குறைப்பதுடன் மிக எளிமையானது, இதற்காக சிறப்பு பேப்பர் ஒன்று பயன்படுத்தப்படுகிறது. அந்த தாளில் வண்ணத்திற்காக பிரஸ்ஷியன் நீலம் உபயோகப்படுத்தப்படுகிறது.

பேப்பரில் பிரஸ்ஷியன் நீலம் மற்றும் டைட்டேனியம் டைஒக்சைட் என்ற வேதி கலவை மீது எலக்ட்ரான்களை செலுத்தும் போது தாளில் உள்ள எழுத்துக்கள் வெளிவந்து பிரதிபலிக்கிறது.

இதன் மூலம் பேப்பரில் உள்ள எழுத்துக்கள் நீல வடிவில் பிரிண்ட் ஆகிவிடும். எழுத்துக்கள் இல்லாத பிற இடங்கள் வெள்ளை நிறமாக மாறும். இதன் வெப்பநிலையை 120 டிகிரி செல்சியஸ் வரை மாற்றும் போது வெவ்வேறு வண்ணங்களில் எழுத்துக்கள் பிரிண்ட் ஆகிறது.

எழுத்துக்களின் நிறத்திற்காகவே பிரஸ்ஷியன் நீலம் மற்றும் டைட்டேனியம் டைஒக்சைட் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறு பிரிண்ட் செய்யப்படுவது ஒரு வாரத்திற்கு அழியாமல் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதன்பின் பிரிண்ட் அழிந்துவிடும். ஆனால் அந்தப் பேப்பரை மீண்டும் பயன்படுத்தலாம். இந்த நவீன தொழில்நுட்பம் மூலம் அச்சடிக்க பயன்படும் மை, பேப்பர், மற்றும் மின்சாரம் போன்றவை மிச்சப்படுத்தபடுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

http://newsfirst.lk/tamil/

  • தொடங்கியவர்

இவர்களில் யார் சின்ன சின்னம்மா? - அ.தி.மு.க-வினரின் தேடல்?!

அம்மாவுக்கு அடுத்து சின்னம்மா எப்படியோ அதே மாதிரி சின்னம்மாவுக்கு அடுத்துச் சின்ன சின்னம்மா தானே அ.தி.மு.க-ல தலைவரா இருக்க முடியும்! காலங்காலமா அ.தி.மு.க-க் கட்சில அதானே வழக்கம். அதன்படி அ.தி.மு.க-வின் சின்ன சின்னம்மாவா யார் இருப்பாங்கன்னு ரணகளமா உட்கார்ந்து யோசிச்சு பார்த்ததுல இவங்க எல்லாம் மைண்டுக்கு வந்தாங்க. இதோ அ.தி.மு.க-வின் அடுத்தச் செல்ல சின்ன சின்னம்மாவுக்கான தேடல்... 

சின்னம்மா


வளர்மதி : 

அ.தி.மு.க-வோட மிக முக்கியமான உறுப்பினர் யார்ன்னு பார்த்தா கண்டிப்பா அது வளர்மதியாத்தான் இருப்பாங்க. இவங்க பேசுற ஒவ்வொரு புரட்சிகரமான கருத்துக்களையும் கேட்குற மத்த கட்சித் தொண்டன் கூட இவங்களை அ.தி.மு.க-வின் சின்ன சின்னம்மாவா அறிவிச்சிடுவான். அந்த அளவுக்குச் சின்னம்மாவோட செயல்பாடும் இவங்களோட செயல்பாடும் ஒரே மாதிரி இருக்கும்.ரெண்டு பேர் பேசுறதையும் பக்கத்து பக்கதுல வச்சுப் பார்த்தா உங்களுக்கேத் தெரியும் ரெண்டு பேரும் ஒண்ணுதான்னு! அந்த அளவுக்குப் பேசுறப்ப இவங்க முகத்துல சகல அபிநயங்களும் தாண்டவமாடும்! அ.தி.மு.க-வின் சின்ன சின்னம்மாவா வருவதற்கான எல்லாத் தகுதியும் ஒண்ணா இருக்குற வளர்மதிக்கு ஆதரவு தெரிவிக்க ஆசைபட்டீங்கன்னா இவங்களுக்குச் சப்போர்ட் பண்ணி வாட்ஸ்-அப்பில் ஃபார்வேட் மெசேஜ் அனுப்புமாறு சத்தமாகவும், டெரராகவும் கேட்டுக் கொள்கிறோம்! 

அ.தி.மு.கவின் சின்னச் சின்னம்மா


கோகுல இந்திரா : 

அ.தி.மு.க-வின் மிகச் சிறந்த பேச்சாளர்னா அது கண்டிப்பா கோகுல இந்திராவாத்தான் இருக்கும். அந்த அளவுக்கு இவங்க பேச்சு எல்லாத்துலயும் புரட்சிகரமான கருத்துகள் இருக்கும். இவங்க அமைச்சர் பதவியை அழுதுகிட்டே ஏற்றப்பவே நேரா இவங்களைச் சின்னம்மாவா மாத்தி இருக்கணும். ப்ச்ச்ச்.. ஆனால், அதுக்குச் சரியான சூழ்நிலை அமையாததால இப்போதாவது இவங்களைச் சின்ன சின்னம்மாவா அறிவிச்சா நல்லா இருக்கும்.தமிழ்நாடு எங்கும் இருக்கும் அ.தி.மு.க-த் தொண்டர்படைல முக்கால்வாசி பேர் இவர் எப்ப சின்ன சின்னம்மாவா பதவி ஏற்பாங்கன்னுதான் எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருக்காங்க. இவர் அமைச்சரா இருந்தப்போ செய்த மக்கள் சேவைகளையும், நலத்திட்டங்களையும் கருத்தில் கொண்டு இவங்களைச் சீக்கிரமே அ.தி.மு.க-வின் சின்ன சின்னம்மாவா அறிவிக்கணும்.இவருக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புபவர்கள் இவரை வாழ்த்தி ட்விட்டரில் புரியாத மாதிரி ஹேஷ் டேக்குடன் எதையாவது எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அ.தி.மு.கவின் சின்னச் சின்னம்மா

 
சசிகலா புஷ்பா : 

கழகத்தில் இருந்து கொண்டே கலகம் செய்தவர் இவர்! அ.தி.மு.க-வுல இருந்துக்கிட்டே அக்கட்சிக்கு எதிரா பேசுன ஒரே ஆள் சசிகலா புஷ்பாதான். அப்பவே இவரோட ஆதரவாளர்கள்  “எங்க தலைவிக்கு எவ்வளவு தில் பாத்தியா?''னு பேசிக்கிட்டு இருந்தாங்க. அ.தி.மு.க-ல இவங்களுக்குனே தனியா ஒரு ரசிகர் மன்றமே இருக்கு. எப்பவும் எதாவது பிரச்னைல மாட்டி லைம் லைட்லயே இருக்குற சசிகலா புஷ்பா சின்ன சின்னம்மா ஆனா அ.தி.மு.க-வும் கண்டிப்பா எப்பவும் டிரெண்டிங்லயே இருக்கும். இப்ப இருக்குறத விட அகில உலக அளவுல ஃபேமஸ் ஆகணும்னா கண்டிப்பா இவங்கதான் அ.தி.மு.க-வின் சின்ன சின்னம்மா ஆகணும். முக்கியமா இவங்க பேர்ல இருக்குற சசிகலாவே போதும் இவங்களை அடுத்தச் சின்ன சின்னம்மா ஆக்குறதுக்கு. இவங்களுக்கு ஆதரவு தெரிவிக்கணும்னா யூ டியூபில் இவரை வாழ்த்தி வீடியோ போடுமாறு அன்போடும் பண்போடும் கேட்டுக்கொள்கிறோம். 

அ.தி.மு.கவின் சின்னச் சின்னம்மா


தீபா : 

அ.தி.மு.க-ல சசிகலாவுக்கு எவ்வளவு உரிமை இருக்கோ அதே அளவு உரிமை தீபாவுக்கும் இருக்கு. சின்னப் புரட்சித் தலைவி தீபா முறைப்படி பார்த்தா கட்சியோட சின்னம்மாவாத்தான் ஆகி இருக்கணும்.பரவாயில்லை... இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. கட்சியோட சின்னம்மா ஆக முடியாத தீபா எப்படியாவது சின்ன சின்னம்மா ஆனா நல்லாதான் இருக்கும். ஏற்கனவே கட்சியில இவங்களைச் சப்போர்ட் பண்றத்துகுன்னே பெரிய ஃபாலோயர் குரூப் இருக்கு. இவங்க தலைமையை ஏத்துக்கத்தான் தமிழ்நாட்டுல பல அ.தி.மு.க-த் தொண்டர்கள் தவமா தவம் கிடக்குறாங்க. ஆகவே மக்களே இவங்களை அ.தி.மு.க-க் கட்சியில் சின்ன சின்னம்மாவாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமா, யாருமே இல்லாத கூகுள் பிளஸில் உடனடியாகப் பெரிய போஸ்ட் ஒன்றை போடவும்! 

அ.தி.மு.கவின் சின்னச் சின்னம்மா


சி.ஆர்.சரஸ்வதி : 

இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கட்சி உறுப்பினர், பேச்சாளர் கண்டிப்பா சி.ஆர்.சரஸ்வதியாதான் இருப்பாங்க. சிலர் பேசுறது எல்லாம் கேட்குறவங்களுக்குத்தான் புரியாது பட் சி.ஆர்.சரஸ்வதி பேசுறதுலாம் அவங்களுக்கே புரியாது. இவங்க தமிழ்ல பேசுறதைக் கேட்டா ஒரு மாதிரி இருக்கும், இங்கிலீஷ்ல பேசுறதைக் கேட்டா இன்னொரு மாதிரி இருக்கும், மொத்தத்துல இவங்க பேசுறதைக் கேட்டாலே புது மாதிரிதான் இருக்கும். எப்பவும் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாம சம்பந்தமே இல்லாத விஷயத்தைப் பேசி சம்பந்தப் படுத்துற சரஸ்வதி சின்ன சின்னம்மாவா மாறினா அ.தி.மு.க-வ ஒருத்தரும் கேள்வி கேட்க முடியாது. மத்த எல்லாரையும் விட இவங்களுக்குத்தான் சின்ன சின்னம்மா ஆக அதிகத் தகுதி இருக்கு.சி.ஆர்.சரஸ்வதி சின்ன சின்னம்மா ஆக வேண்டுமா உடனடியாகப் ஃபேஸ்புக்கில் அவருக்கு ஆதரவாக மீம் போடுமாறு தாறுமாறாகக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம். 

அதிமுகவின் சின்னச் சின்னம்மா

 

 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

வைரலான புகைப்படத்தை நீக்கிய விராட் கோலி...!

Virat kohli with anushka sharma

இந்திய கேப்டன் விராட் கோலி சற்று நேரத்துக்கு முன்பு தனது காதலி அனுஷ்கா ஷர்மாவுடன் ஒரு புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றினார். புகைப்படமும் செம வைரலாகி வந்தது. என்ன நினைத்தாரோ இந்திய கேப்டன், திடீரென்று அதை நீக்கிவிட்டார். 

Virat Kohli's Facebook tweet

அந்த புகைப்படத்துடன் கோலி, 'நீங்கள் விரும்பினால் ஒவ்வொரு நாளும் காதலர் தினம்தான். உன்னால் எனக்கு ஒவ்வொரு நாளும் காதலர் தினம் போலத்தான் தெரிகிறது' என்று பதிவிட்டு இருந்தார். இதைப் போல் விராட் கோலி ஒரு போஸ்ட்டை சமூக வலைதளங்களில் பதிவேற்றிவிட்டு, உடனடியாக அதை நீக்குவது புதிதல்ல. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ப்ளேபாய் இதழில் மீண்டும் நிர்வாணப் படங்கள்

 

கவர்ச்சிப் பத்திரிகையான ப்ளேபாய் மீண்டும் தனது பதிப்புகளில் நிர்வாணப் படங்களை வெளியிட முடிவு செய்துள்ளது.

பிபிசி

 'மீண்டும் நிர்வாணம்'-ப்ளேபாய் அறிவிப்பு

அப்படியான படங்களை பதிப்பிப்பதில்லை என்ற முடிவை கடந்த ஆண்டுதான் ப்ளேபாய் எடுத்திருந்தது.

தமது பத்திரிகையிலிருந்து நிர்வாணத்தை முற்றாக நீக்குவது தவறான ஒரு முடிவாகும் என்று அதன் புதிய தலைமை வடிவமைப்பு அதிகாரி கூப்பர் ஹெஃப்னர் கூறியுள்ளார்.

"இழந்த அடையாளத்தை மீட்டு நாம் யார் என்பதை மீண்டும் உணர்த்தியுள்ளோம்" என்று ட்வீட் ஒன்றின் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தடாலடி தலைகீழ் மாற்றத்தை சமூக ஊடகங்களில் சிலர் வரவேற்றுள்ளனர். ஆனால் வேறு சிலரோ விற்பனை நெருக்கடியில் இதுவொரு வியாபார யுக்தியே எனக் கூறியுள்ளனர்.

"நிர்வாணம் பிரச்சினை இல்லை"

"நிர்வாணத்தை விற்பதும் அது எளிதில் கிடைப்பதும்" ப்ளேபாயின் முடிவின் மாற்றத்துக்கு ஒரு முக்கியக் காரணமாகவுள்ளது என்று சமூக ஊடகக் கருத்துக்கள் வந்துள்ளன.

ஒருபோதும், "நிர்வாணம் என்பது ஒரு பிரச்சினையாக இருந்ததே இல்லை" என்று ப்ளேபாய் நிறுவனர் ஹ்யூ ஹெஃப்னரின் மகன் கூப்பர் கூறுகிறார்.

ஆனால் மிஸிசிப்பி பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் பேராசிரியராக இருக்கும் சமீர் ஹுஸ்னியோ ப்ளேபாய் நிர்வாணத்தை கைவிட்ட பிறகு அப்பத்திரிகையை ஆதரித்தவர்களைவிட ஒதுக்கியவர்களே அதிகம் என்கிறார்.

"நிர்வாணம் இல்லாத ப்ளேபாய் பத்திரிகை என்பது முரணான ஒரு விஷயம்" என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஆனாலும் டிஜிட்டல் காலகட்டத்தில் நிர்வாணத்தை தவிர்க்க முடியாத சூழலில், இளம் ரசிகர்களை தக்கவைத்துக் கொள்ள ப்ளேபாய் புதிய வழிகளை கையாள வேண்டும் என்றும் ஹுஸ்னி கூறுகிறார்.

மீண்டும் பழைய பல்லவி

தமது அடுத்த இதழில் ஆபாச நகைச்சுவைகள், கிளுகிளுப்பு விஷயங்கள் போன்ற தனது பழைய பல்லவிகளையே ப்ளேயாப் முன்னெடுக்கிறது.

பொது இடங்களில் தாய்ப்பால் கொடுக்கும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், 'மார்பகங்களை விடுவியுங்கள்' என்கிற தலைப்பில் நடிகை ஸ்கார்லெட் பர்ண் எழுதியுள்ள கட்டுரையும் அடுத்த இதழில் வெளியாகிறது.

இருந்தாலும் 'ஆண்களுக்கான கிளுகிளுப்பு' எனும் வாசகத்தை தனது அட்டையில் வெளியிடுவதை நிறுத்துகிறது.

வாழ்வியல் கலாச்சாரத்தை முன்னெடுக்கும் ஒரு பத்திரிகையாகவே ப்ளேபாய் இருக்கும் என்று ஹென்ஃபர் வலியுறுத்தியுள்ளார்.

பிபிச்

 

 ப்ளேபாய் இதழைத் தொடங்கிய ஹ்யூ ஹென்ஃபர்

கடந்த 1953ஆம் ஆண்டு வெளிவரத் தொடங்கிய ப்ளேபாய் பத்திரிகை கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நிர்வாணப் படங்களைப் பிரசுரிப்பதை நிறுத்தியது.

இணையதளத்தில் நிர்வாணம் மலிந்துவிட்டதால், நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் 56 லட்சம் விற்பனையான நிலையில் ப்ளேபாயால் கடந்த ஆண்டு ஏழு லட்சம் இதழ்களையே விற்க முடிந்தது.

ஆனாலும் முயல் ஒன்று கழுத்தில் சிறிய டை ஒன்றை கட்டிக்கொண்டிருக்கும் அதன் சின்னம் உலகளவில் மிகவும் அறியப்பட்ட ஒன்றாக இன்றளவும் உள்ளது.

நகைகள், உயர்வகை மதுபானங்கள், அழகுசாதனப் பொருட்கள் ஆகியவற்றின் உலகளாவிய விற்பனை மூலமே தற்போது ப்ளேபாய் தனது வருமானத்தை ஈட்டுகிறது.

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: அதிமுகவில் தினகரன்- 1 ஓட்டுக்கு 5 முதல்வர்களா?

 
படம்: செந்தூரான்
படம்: செந்தூரான்
 
 

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால், சசிகலா உள்ளிட்டோர் சிறை செல்கின்றனர். சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பின் அதிர்வலைகளுடன் அதிமுகவில் உட்கட்சி பூசலும் வலுத்துவரும் நிலையில் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி. தினகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஒருசில மணி நேரங்களிலேயே கட்சியின் முக்கியப் பொறுப்பு தினகரனுக்கு வழங்கப்பட்டிருப்பது நெட்டிசன்களின் மத்தியில் விமர்சனங்களை எழுப்பி வருகிறது. அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Scoop Story ‏@ScoopStoryIND

அதிமுக சட்ட விதிகளின்படி, பொதுச் செயலாளர் இல்லாதபோது அவரின் அனைத்து அதிகாரமும் துணை பொதுச் செயலாளருக்கும் இருக்கும். #TTVDinakaran

Ashwin Athreya ‏@abiwin21

அதிமுக துணை பொதுச் செயலாளரும், தமிழக முதல்வரும் ஒருவராகவே இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. #TTVDinakaran #OPSvsSasikala

Raaj Kumar ‏@raajkumar85

சில வாரங்களாக ஜெயலலிதா, சசிகலா ட்ரெண்டிங்கில் இருந்தார்கள். இப்போது தினகரன்... குற்றவாளிகளைத் தான் ட்ரெண்ட் ஆக்குகிறோம்.

Ilaya Raja

இப்பதான் உங்களுக்காக அனுதாபப் பட்டு பதிவு போட்டேன் சசிகலா...

அது தப்புன்னு இப்போதான் தெரியுது.

Sridharan J ‏@iamsridharan

குடும்ப அரசியல் இல்லாத கட்சி என்ற பெயரை அதிமுக இழந்துகொண்டு வருகிறது, மறைமுகமாக இருந்தவர்கள் இன்று நடுவீட்டில்.. #TTVDinakaran

SaravananGandhirajan ‏@iamsargandhi

அதிமுக எம்எல்ஏக்களே, மன்னார்குடி கும்பலுக்கு கட்சியை விற்று விட்டீர்கள். ஓட்டுக் கேட்டு தொகுதிப் பக்கம் வந்துவிடாதீர்கள்!

காட்டு பூச்சி ‏@naankaatupoochi

2 மாதங்களில் எடப்பாடி பழனிச்சாமியை ராஜினாமா செய்யச்சொல்லி விட்டு, தினகரன் முதல்வராகத் திட்டமா? 1 ஓட்டுக்கு 5 முதல்வர்களா?

Thiyagarajan K ‏@ThiyagarajanK4

ஒட்டுமொத்த தமிழகமும் சசிகலாவுக்கும் அவரின் குடும்பத்துக்கும் எதிராக நிற்கிறது. இப்படியே போனால், அதிமுக முடிந்தது. #TTVDinakaran

V ‏@arrow_writes

அதிமுகவில் இருந்து மொத்தமாக நீக்கப்பட்டவர்கள் இன்று கட்சியின் அதிகார மையத்தில் இருக்கின்றனர். அதிமுக அண்ணா திமுக இல்லை. அடிமை திமுக! #TTVDinakaran

Tpm Aathick

டி.டி.வி.தினகரன் இன்றுதான் கட்சியில் சேர்த்து கொள்ளப்பட்டார் என்றால், மூன்று நாள் முன்பு ஆளுநரை சந்திக்க சசிகலாவுடன் அவர் எப்படி செல்ல முடியும்?

Em Saravanan

அதிமுக-வின் துணை பொதுச்செயலாளராக டிடிவி.தினகரன் நியமனம்: சசிகலா அறிவிப்பு. உலகத்துலயே கட்சில சேர்ந்த 1 மணி நேரத்துல, துணை பொதுச் செயலாளரா ஆக்குனது நீங்கதான்...

Murali Nagarajan ‏@murali0120

அபகரித்த சொத்துக்களைப் பாதுகாக்க, மன்னார்குடியினருக்கு அதிகாரம் தேவை. #TTVDinakaran

1_3133348a.jpg

karan ‏@karanjhaa

125 எம்எல்ஏக்களை மன்னார்குடி கும்பலால் கூவத்தூரில் கொடுமைப்படுத்த முடியும் என்றால், தனியாக இருந்த ஜெயலலிதாவின் நிலைமையைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

Kadavur Subramani M

இரவில் மன்னிப்பு கடிதம்.

அதிகாலையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

காலையில் துணை பொதுச் செயலாளர்.

நாளை முதல்வர்..

குப்புச்சாமி

அதிமுகவின் அடுத்த கட்ட அழிவு ஆரம்பம்... துணை பொதுச்செயலாளராக தினகரன் நியமனம்.

Bairava Moorthy

ஜெயலலிதாவால நீக்கப்பட்ட தினகரன் கட்சியில் சேர்க்கப்பட்டார். அவர் தேர்ந்தெடுத்த பன்னீர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

Sridharan J ‏@iamsridharan

இவ்ளோ ஓப்பனா பண்றதுக்கு கொஞ்சம் கூட கூச்சமாயில்லையா? #ADMK #TTVDinakaran

இராசையா சின்னத்துரை

தினகரன், வெங்கடேசன் என்று உறவினர்களைக் கட்சி பொறுப்புகளில் நியமித்து சசிகலா தவறுகளைத் தொடர்கிறார். மேலும் தொடரலாம். ஆனால் சசிகலா சிறை வாழ்க்கையில் இருந்து வெளியே வரும்போது சொந்த பந்தங்கள் கட்சியை ஒப்படைக்க போவதில்லை. அநேகமாக சசியை மக்கள் விடலாம். உறவினர்களும் கண்டுகொள்ளமாட்டார்கள். ஏனெனில் அதிகாரம் எந்த இருவரையும் ஒன்றாக இருக்கவிடாது.

Sridharan J ‏@iamsridharan

இப்பொழுதும் அதிமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க தயாராக இல்லையெனில் அவர்கள் சமுதாயத்தில் மரியாதையை இழப்பார்கள். பொதுவெளியில் பெருமையுடன் அவர்களால் ஒருநாளும் இருக்கமுடியாது.

ரோபல்காந்த் ‏@roflkanth

அதிமுகவில் டிடிவி தினகரன், வெங்கடேஷ் ஆகியோர சேர்க்கல; அதிமுகவ தான் தினகரன், வெங்கடேஷ்கிட்ட சேர்த்துட்டு போறாங்க சசிகலா.

shaanthi ‏@shaan_64

தினகரன், சுதாகரன், பாஸ்கரனுக்குத்தான் அந்தம்மா ஒரிஜினல் சின்னம்மா. அவங்களத்தான் வாழ வைப்பாங்க. நீங்கெல்லாம் ஏம்ப்பா சின்னம்மா சின்னம்மானுட்டு?

Jothimani ‏@jothims

டிடிவி தினகரன் போன்ற தியாகிகள் தான் இனி அதிமுகவையும் தமிழகத்தை வழிநடத்தப் போகும் தலைவர்கள்! ஜெவால் நிராகரிக்கப்பட்டவர்கள்.

நாடு எங்க போகுது?? ‏@Piramachari

தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தார்- செய்தி

யாருக்கிட்ட?

ஜெ.கிட்ட மன்னிப்பு கடிதம் கொடுத்து கட்சில சேர்ந்த சசிகலாகிட்ட!

A K MANIKANDAN ‏@akmanikandan001

அ.தி.மு.க துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமனம் - சசிகலா.

இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா எம்ஜிஆர் கட்சியே ஆரம்பிச்சிருக்கமாட்டார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

மேரி க்யூரி தன் நம்பிக்கையை மீட்டெடுக்க என்ன செய்வார் தெரியுமா?

மேரி க்யூரி

ஒரு துறையில் பெண்கள் சாதிப்பது என்பது நாகரிகம் வளார்ந்த இன்றைக்கும் எளிதாக முடிவதில்லை. பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால், அவற்றை தகர்த்துவிட்டு சாதித்தப் பெண்கள் அபூர்வம்தான். அதிலும் அறிவியல் துறையில் வென்று காட்டியவர்கள் மிகச் சொற்பம். அதில் தன் தனித்துவத்தால் இரண்டு நோபல் பரிசுகளை வென்றவர்தான் மேரி க்யூரி.

போலந்து நாட்டில் பிறந்த மேரி க்யூரி சிறுவயதாக இருக்கும்போதே பெண்களை அடக்கி வைக்கும் பொதுப் புத்திக்கு எதிராக யோசிப்பவராக இருந்தார். மேரி க்யூரிக்கும் அவரது அக்காவுக்கும் மருத்துவம் படிக்க ஆசை. குடும்பச் சூழலால், அக்கா வேலைக்குச் செல்ல மேரி க்யூரி படிக்க பாரிஸ்க்குச் சென்றார். மருத்துவம் படிக்காமல் இயற்பியல், வேதியியல் துறைச் சார்ந்து படிக்க நேர்ந்தாலும் முழு ஈடுபாடோடும் அர்ப்பணிப்போடும் படித்து, இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். ஃப்ரான்ஸ் நாட்டின் முதல் பெண் முனைவர் எனும் பெருமையைப் பதித்தார்.

அறிவியலே தன் வாழ்க்கை என மாற்றிக்கொண்ட மேரி க்யூரி தன்னுடன் பணியாற்றிய ப்யாரி க்யூரியுடன் நட்பு கிடைத்தது. நட்பு காதலாகி மாறியது. இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டனர். கதிரியக்கம் தொடர்பான ஆய்வுகள் ஆபத்தானவை என்பதால் பலரும் அதில் ஈடுபடாமல் இருந்த சூழலில் மேரி க்யூரி தம்பதியினர் துணிவோடு மேற்கொண்டனர். கதிரியக்கம் தொடர்பான ஆய்வுக்கே நோபல் பரிசுகள் கிடைத்தன.

மேரி க்யூரி

எல்லாமே நல்லபடியாக சென்றுகொண்டிருந்த சூழலில் மேரி க்யூரியின் வாழ்வில் பெரும் இடி விழுந்தது. தன் வாழ்க்கைக்கும் ஆய்வுக்கும் இணையாக இருந்த தன் கணவர் ப்யாரி ஒரு சாலை விபத்தில் இறந்தார். அந்த இழப்பை மேரி க்யூரியால் தாங்கிகொள்ளவே முடியவில்லை. எவராலும் சமாதானப் படுத்த முடியாத அளவுக்கு சோர்ந்துபோய்விட்டார். ஆனால், தொடர வேண்டிய ஆய்வுகளே அவரை மீண்டும் இயல்புக்குத் திரும்ப அழைத்தன. தானே தன்னைச் சரி செய்துகொண்டு பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டார்.

கணவர் இல்லாமல் ஆய்வுகளைத் தொடர்ந்த மேரி க்யூரிக்கு சுற்றியிருந்தவர்களின் வார்த்தைகள் ஈட்டியாக குத்தின. மேரி க்யூரியுடன் பணியாற்றும் இன்னொரு நபருடன் அவரை இணைத்துப் பேசி வார்த்தையால் காயப்படுத்தினர். கணவர் இறந்துபோனதைச் சுட்டிக்காட்டி இதைப் பேசியபோது, மனதளவில் மீண்டும் சோர்ந்துபோனார். இந்தச் சோர்விலிருந்து மீண்டு வர மேரி க்யூரி செய்தது என்ன தெரியுமா?

தனது மனச் சோர்வைச் சரி செய்யும் மருந்து, தன் கிராமமே என்பதாக கண்டுகொண்டார். அப்படியான மனக்காயம் ஏற்படும் நேரங்களில் தனது கிராமத்துக்குச் சென்று தன் பால்யத்தில் பார்த்து பழகிய மனிதர்களை, இடங்களைப் பார்த்தார். அங்கே நேரங்களைச் செலவழித்தார். மனம் முழுக்க தன்னம்பிக்கையை நிரப்பிக்கொள்வார். அந்தப் புத்துணர்ச்சியோடு ஆய்வகத்துக்கு வருவார். தனது சோர்வைத் தூரத்தில் எறிந்து முழு வேகத்தில் பணிகளைப் பார்த்தார்.

தன் மகளையும் இந்தத் துறையில் ஈடுபடுத்தினார். கேன்சரால் பாதிக்கப்பட்ட நோயாளிக்களுக்கு பிரயோகிப்படும் ரேடியத்தைக் கண்டறிந்து இந்த உலகிற்கு பெரும் கொடையாக கொடுத்தார். இந்த ஆய்வின்போது தன் உடலில் பாயும் கதிர்வீச்சால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். ஆனால், இவ்வுலகிற்கு பலருக்கும் வாழ்வளிக்கப் போகிற ஒன்றிற்காக நாம் பணியாற்றுகிறோம் என்ற எண்ணமே தன் உடலைப் பற்றி கவலைப்படாமல் ஆய்வைத் தொடர வைத்தது.

தன் சோர்வைப் போக்குவது எது என்று தெளிவாக கண்டறிந்த மேரி க்யூரியைப் போல, நம் வாழ்வின் சோர்வுகளைக் கலையும் விஷயங்களைத் தேடி கண்டறிவோம்.

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.