Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

50 நிமிடங்களில் 3 பரோட்டா சாப்பிட்டால்.. வாழ்நாளுக்கும் பரோட்டா ஃப்ரீ! எங்கே?

‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படத்தில் சூரி, ‘கோட்டையெல்லாம் அழி; திரும்பப் போடு’ என்று மாவு தீர்ந்து போகும் அளவிற்கு பரோட்டா சாப்பிடுவாரே ஞாபகம் இருக்கிறதா? சினிமாவில் மட்டும்தான் போட்டிக்கு பரோட்டா சாப்பிடுவதெல்லாம் நடக்கும் என்று தப்புக் கணக்குப் போட்டுவிடாதீர்கள். பக்காவாக‘பரோட்டா சாப்பிடும் போட்டி’ நடைபெறும் ஒரு புகழ்பெற்ற ஹோட்டலே இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

பரோட்டா சூரி

ஹரியானா மாநிலம், ரோக்தக்கில் அமைந்துள்ளது மேற்படி ‘பரோட்டா ஃபேமஸ்’ ஹோட்டல். அவர்களுடைய பேச்சுவழக்கில் ‘பராத்தா’. இந்த ஹோட்டலின் சிறப்பே பரோட்டாக்கள்தான். சொல்லப் போனால் பரோட்டாவிற்காக ஹோட்டலா, ஹோட்டலுக்காக பரோட்டாவா என்று பட்டிமன்றமே நடத்தலாம். அந்தளவிற்கு ‘ஒன்லி பரோட்டா’ உணவகம் இந்த ‘தபஸ்யா பராத்தா ஜங்ஷன்’ ஹோட்டல். இங்குதான் அந்தப் ‘படுபயங்கர’ போட்டி நடைபெறுகிறது ஃப்ரண்ட்ஸ்.

சாப்பிடற போட்டியா? நான் ரெடி...நான் ரெடி என்று பறக்காதீர்கள் பரோட்டா பிரியர்களே. முதலில் போட்டியின் விதிகளைப் பற்றியும், அதன் சூட்சுமங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கப்புறம்தான் நீங்கள் பரோட்டா சூரி ஆகமுடியுமா, முடியாதா என்பதெல்லாம். 

போட்டி விதிமுறையின்படி, ஒரு நபர் 50 நிமிட கால அளவுக்குள் 3 பரோட்டாக்களைச்  சாப்பிட்டாக வேண்டும். ’மூன்றே மூன்று பரோட்டாதானே கப்புனு பிச்சு, சால்னா தொட்டு வயித்துக்குள் தள்ளிடலாம்’என்று நினைத்தால் கொஞ்சமே கொஞ்சம் தார் சாப்பிட்டு வயிறு வீங்கிக் கிடக்கும் வடிவேலுவின் போட்டோவை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் சாப்பிடப் போகும் ஒரு பரோட்டாவின் சராசரி அளவு 24 இன்ச். அதாவது, ஒரு பரோட்டாவிற்கான மாவில் உங்கள் கணவனோ, மனைவியோ தாராளமாக நான்கு பரோட்டாக்கள் போட முடியும்.

அப்புறம்...?.’நீங்கள் மட்டும் மூன்று பரோட்டாக்களை முக்கி முக்கி, ஐம்பது நிமிடங்களுக்குள் சாப்பிட்டுவிட்டால் உங்களுக்கு வாழ்நாள் முழுவதற்குமான பரோட்டாக்கள் ஃப்ரீ...ஃப்ரீ. அதுமட்டுமின்றி, ஒரு லட்ச ரூபாய்க்கு இன்ஷூரன்ஸும் எடுத்துத் தருகிறோம்’ என்று ஆர்வமூட்டுகிறார் ‘தபஸ்யா பராத்தா’ ஹோட்டல் ஓனர் முகேஷ். 

பரோட்டா சூரி

கோதுமை மாவை நன்றாகப் பிசைந்து, நான்கு பரோட்டாக்களுக்குத் தேவையான மாவினை ஒரே உருண்டையாக உருட்டிக் கொள்கிறார்கள். அதை நன்றாகத் தேய்த்து, இரண்டு பெரிய பரோட்டாக்களைத் தயார் செய்கிறார்கள். ஒரு பரோட்டாவின் நடுவில் காய்கறி, மசாலா, உருளைக்கிழங்கு கலந்த கலவையைப் பெரிய உருண்டையாக வைத்து நிரப்பி, மற்றொரு பரோட்டாவை மேலே போட்டு மீண்டும் நன்றாக சப்பாத்திக் கட்டையால் தேய்த்து அப்படியே பெரிய ராட்சச சைஸ் அடுப்பில் சுட்டு எடுக்கிறார்கள். பரோட்டா வேகும்போதே, அதன்மீது ஒரு கால்படி நெய்யை வேறு கொட்டுகிறார்கள். நறுக்கிய உலர்ந்த திரட்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா எக்ஸ்ட்ராவாக மேலே தூவப்படுகின்றன. இதைப்பார்க்கும்போதே நமக்கு முக்கால் வயிறு நிறைந்துவிடும். பரிமாறும்போது கூடவே தயிர்ப் பச்சடி, வெண்ணெய், க்ரீன் சட்னி. 

’ஊரே உக்கார்ந்து சாப்பிட்டாலும்...’ என்பதுபோல முதல் பரோட்டாவினைப் பாதி முடிக்கும்போதே முதல் பாலில் அவுட் ஆகும் பேட்ஸ்மேன் போல டயர்டாகி அமர்ந்துவிடுகின்றனர் போட்டியாளர்கள். ஆனால், இந்த ரணகளப் போட்டியிலும் இதுவரை இரண்டு பேர் வெற்றிவாகை சூடியுள்ளனர் என்பது ஆச்சர்யம் அளிக்கிறது. அஸ்வினி குமார், மகாராஜா ஆகியோர்தான் அந்த இருவர். அஸ்வினி குமார் 40 நிமிடங்களில் 3 பரோட்டாக்களையும், மகாராஜா 50 நிமிடங்களில் 4 பரோட்டாக்களையும் சாப்பிட்டு ‘பரோட்டா கிங்’ என்று நிரூபித்துள்ளனர். 

’ஒரு நாளைக்கு 150 பரோட்டாக்களுக்கும் மேல் இங்கு விற்பனையாகிறது. கிட்டதட்ட 50க்கும் மேற்பட்ட வெரைட்டிகளில் எங்களிடம் பரோட்டாக்கள் கிடைக்கும். உருளை - வெங்காயம், உருளை -காலிஃப்ளவர், ஆனியன், சீஸ், ஆனியன் காட்டேஜ் சீஸ் பரோட்டா, காளிஃப்ளவர் சீஸ் பரோட்டா என்று அந்த லிஸ்ட் ரொம்பப் பெரியது. தினமும் பரோட்டா விற்பனைக்கு எங்களுக்கு 50 முதல் 60 கிலோ மாவு, 50 முதல் 60 கிலோ உருளைக்கிழங்கு, 40 முதல் 50 கிலோ வெங்காயம், 2 முதல் 3 கிலோ உலர்ந்த பருப்புகள், பழங்கள் தேவைப்படுகின்றன’ என்று பிரமிப்பூட்டுகிறார் முகேஷ்.

அப்புறமென்ன? உணவுப்பிரியர்கள் ஹரியானாவிற்கு ஒரு பரோட்டா ட்ரிப் அடிச்சு, தபஸ்யா பரோட்டாவை ருசி பார்க்க வேண்டியதுதான் பாக்கி பாஸ்!

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பெண்களின் காலண்டரில் ஞாயிற்றுக்கிழமையே இல்லையா?

பெண்


"நாளும் கிழமையும்
நலிந்தோருக்கு இல்லை
ஞாயிற்றுக்கிழமையும்
பெண்களுக்கு இல்லை"

- கந்தர்வன்.

வெள்ளிக்கிழமை விடிந்ததுமே 'வீக் எண்ட்' கொண்டாட்ட மனநிலையும் பிறந்துவிடும். சனி, ஞாயிறு கிழமைகளின் விடுமுறையை எப்படிக் கொண்டாடலாம் என்கிற யோசனைகள் உதிக்க தொடங்கி விடும். அதனால் வெள்ளிக்கிழமை சீக்கிரமாக செல்வதுபோல இருக்கும். ஞாயிறு மட்டும் விடுமுறை இருப்பவர்களுக்கு இவற்றை அப்படியே சனிக்கிழமைக்குப் பொருத்திப் பார்க்கலாம்.

வாரம் முழுவதும் உழைப்பவர்கள் விடுமுறையைக் கொண்டாடுவது இயல்புதான். அது தேவையானதுதான். ஏனெனில், நீண்ட ஓட்டத்தில் சிறிது ரிலாக்ஸ் செய்தால், உற்சாகத்தோடு ஓட்டத்தைத் தொடர முடியும். ஆனால், இந்தக் கொண்டாட்டம் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாக இருக்கிறதா?

ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெண்களின் வழக்கமான வேலைகளின் பட்டியல் நீண்டு விடும். விடுமுறை நாள்தானே என்று ஆண்கள் தாமதமாக தூக்கம் கலைப்பார்கள். ஆனால் அவர்கள் எழுந்ததுமே பசிக்கும். அதற்கு தயாராக காபி, டிபன் செய்ய வேண்டியது அந்த வீட்டின் பெண்கள்தான். அதனால் அவர்களால் விடுமுறையன்றும் அதிக நேரம் தூங்க முடியாது. ஆண்கள் டிபன் சாப்பிட்டு விட்டு, டி.வி பார்ப்பது, வெளியே செல்வது என்று 'பிஸி (!) ஆகிவிடுவார்கள். பெண்களுக்கு அடுத்த வேலை காத்திருக்கும்.

ஒரு வாரம் சேர்த்து வைத்த அழுக்குத் துணிகள் குவியலாக சேர்ந்திருக்கும். அதைப் பார்க்கும்போதே மலைப்பு வந்துவிடும். அவற்றை ஊற வைத்து, துவைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். அவற்றை உலர வைக்க மொட்டை மாடியில் தூக்கிச் செல்வது இன்னொரு போராட்டம். மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கும்போதே மதிய சமையலுக்காக இறைச்சி வங்கப்பட்டு தயராக இருக்கும்.

மதிய உணவு மீன் என்றால், அதை சுத்தம் செய்து சமைக்க இன்னும் நேரம் பிடிக்கும். இதற்கு இடையில் பிள்ளைகளைக் குளிக்க வைப்பது, படிக்கச் சொல்வதும் நடந்துகொண்டிருக்கும். ஒரு வழியாக மதிய உணவு முடிந்து 'அப்பாடா' என பெருமூச்சு விடும் பெண்களுக்கு சமையலறையில் குவிந்திருக்கும் பாத்திரங்கள் வெல்கம் சொல்லும். 'அதெல்லாம் அப்பறம் பார்த்துக்கொள்ளலாம், கொஞ்ச நேரம் தூங்கலாம்' என்றால், பூனைகள் பாத்திரங்களை உருட்ட ஆரம்பித்து விடும். பாத்திரங்களைத் துலக்கி முடித்து, மொட்டை மாடியில் உலரும் துணிகளை எடுத்து வந்து மடித்து வைத்தால், சூரியன் 'கிளம்பட்டுமா?' என்றுக் கேட்கும். இதற்குள் குழந்தைகள் விளையாடி, சில செல்ல சண்டைகள் போட்டு வர, அதற்கு பஞ்சாயத்துகளையும் பார்க்க வேண்டும்.  மறுபடியும் மாலை நேர காபி, இரவு டிபன் தயாரித்தல்... என அந்த நாள் முடியும். ஞாயிற்றுக்கிழமையை விட வார நாட்கள் பரவாயில்லையோ எனத் தோன்றிவிடும் பெண்களுக்கு.

அப்படியெனில், பெண்களின் காலண்டரில் ஞாயிற்றுக்கிழமை என்பதே கிடையாதா... அல்லது அது வழக்கமான இன்னொரு நாள்தானா?

உண்மையை ஒப்புக்கொள்வதெனில், பெண்கள் ஞாயிற்றுக்கிழமையைப் பார்த்து அச்சப்படும் அளவுக்கு வேலைகள் குவிந்துவிடுகின்றன. அதனால் விடுமுறைத் தினத்தை வரவேற்கும் மனநிலையில் இருப்பதில்லை. இந்தச் சூழல் மாற வேண்டும் அல்லவா?

நிச்சயம் மாறவேண்டும் என்பவர்கள். வீட்டு வேலைகளை பெண்கள் மட்டுமே செய்யவேண்டும் மன நிலையிலிருந்து வெளியேற வேண்டும். தொடக்கத்தில் தயக்கம் இருக்கத்தான் செய்யும். இந்தத் தயக்கம் ஆண்டாண்டு காலமாய் ஆண்கள் மனதில் ஏற்றப்பட்ட ஒன்று. அதை ஓரிரு நாட்களில் இறக்கி வைத்துவிட முடியாது. ஆனாலும் இப்போது தொடங்க விட்டால், அடுத்த தலைமுறைக்கும் இந்த வேலைப் பாகுபாடு பரவிவிடும். வீட்டு வேலைகளில் எல்லோரும் பங்கெடுக்கும்போது, வேலைகள் விரைந்து முடிக்கப்பட்டு, எல்லோருக்குமான ஓய்வு நேரம் கிடைக்கும். அப்படி அமையும் பட்சத்தில் திங்கள் கிழமையை எதிர்கொள்வதை பெண்களால் திட்டமிட முடியும்.

இனி ஞாயிற்றுக்கிழமை ஓய்வும் கொண்டாட்டமும் பெண்களுக்கும் இருக்கட்டும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சட்டசபையில் சட்டைகிழியாமல் இருக்க முத்தான யோசனைகள்!

கிழிக்கிறாங்களா கிழிச்சிக்கிறாங்களான்னு தெரியலை. சட்டசபையில சட்டை கிழியிறது பெரிய பிரச்னையா இருக்குது. இதுக்கெல்லாம் ஒரு முடிவுகட்ட... என்னெல்லாம் பண்ணலாம்னு உட்கார்ந்து யோசிச்சதில் கிடைச்ச ஐடியாதான் இது..!

தை எதையோ அமேசன் காடுகளிலிருந்து எடுத்து தயாரிக்கும் கம்பெனிகளிடம் எளிதில் கிழியாத சட்டைகளை செய்து தரச்சொல்லி எளிதில் ஆர்டர் செய்யலாம். சட்டசபைக்கு வரும் எம்.எல்.ஏக்கள் எல்லாம் இதைத்தான் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என விதி எண் 7072 என உருவாக்கி அறிவிக்கலாம்!

சட்டை

ரெண்டாவது விஷயம் சட்டையில் பாக்கெட் இருப்பதனால்தான் தொரட்டிக்கம்பில் புளியம்பழத்தை இழுப்பது போல லாவகமாக இழுத்து கிழித்து விடுகிறார்கள். ஆகவே, பாக்கெட் இல்லாத ஷர்ட்டை அணிந்து வந்தால் ஓரளவு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து பங்கம் வராமல் தப்பிக்கலாம்!

ட்டை போட்டு வருவதால்தானே இவ்வளவு பிரச்னை... பேசாமல் சட்டையே போடாமல் சட்டசபைக்கு வரலாம். பதறாதீங்க... பதறாதீங்க! அதாவது ஷர்ட்டுக்குப் பதிலாக குர்தா, கோட்,  பேட்மேன், சூப்பர்மேன் டீசர்ட்டுகள் என போட்டுவரலாம். அல்லது மெட்டல் ஜாக்கெட்டுகளை அணிந்து வரலாம்!

குதர்க்கமாக யோசிச்சதில் இப்படியும் ஒரு ஐடியா தோன்றியது. யாராவது  சட்டையைக் கிழிச்சாதானே இந்தப் பிரச்னையே? அதுக்குப்பதிலாக ஆல்ரெடி கிழிச்சதையே உள்ளே போட்டு வரும்போது அப்புறம் எப்படி கிழிக்க முடியும்? நோ கிழிப்பு... நோ அமளி.. நோ ஒத்திவைப்பு...னு ஈசிஆர்ல போற என்ஃபீல்டு மாதிரி சட்டசபை ஸ்மூத்தா போகுமே!

ப்படியும் இல்லையென்றால் இரண்டு ஸ்டெப்கள் இறங்கிவந்து, 'என்னிடம் இரண்டே இரண்டு தான் இருக்கிறது பார்த்துப் பண்ணவும் மக்களே...' என கைப்பட எழுதி ஆளுக்கொரு காப்பியை  வெள்ளை அறிக்கையாக அனுப்பிவைத்துப் பார்க்கலாம்.

சட்டை

தற்கும் ரெஸ்பான்ஸ் இல்லையென்றால் `தமிழ்நாட்டுல இருக்குற பருத்தி ஆலைகளோட எண்ணிக்கை இத்தனை ஆயிரம். அதுல ஒரு சட்டைக்கு தேவையான பருத்தியோட அளவு இவ்வளவு. ஒரு ஷர்ட்டைத்தயாரிக்க ஆகுற நூல் செலவு இவ்வளவு. அதை வெள்ளாவி வச்சு வெளுத்தெடுத்து அயர்ன் பண்ண ஆகுற செலவு இவ்வளவு ரூபாய்'னு வேற ரமணாவாக மாறிக் கணக்கெடுத்து சட்டசபை வெளியிலேயே டீட்டெயிலாக எழுதி ஒட்டிவைத்துவிடலாம். அதைப்பார்த்தாவது சிலர் மனம் மாற வாய்ப்புகள் உண்டு.

வ்வளவு செஞ்சும் சட்டை கிழிஞ்சிடுச்சுனா... வேற என்ன? `சட்டசபையில கிழியாத சட்டை எங்கே இருக்கு?'னு சொல்லிட்டு  கடையைச் சாத்திட்டு நடையைக்கட்ட வேண்டியதுதான்!

  • தொடங்கியவர்

C48XvvMWEAAkoTK.jpg

தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்-எடப்பா(டு)டி நாங்க மகிழ்ச்சியா இருக்கோம் நீ பாத்த த்த்தா டே

C5AaK9fWIAEOuXe.jpg

 

C5ARP-PWMAEEKaE.jpg

Breaking News எங்கடா..? ????

 

  • தொடங்கியவர்

‘சிங்கம்’ சூர்யா மாதிரி ஃப்ளைட்டை ஓவர்டேக் செய்யும் உலகின் அதிவேக 10 கார்கள்! #DriveFast

‘இப்படியெல்லாம் நடக்க முடியுமா?!’ என்று நீங்கள் ஆச்சரியப்படும் ஒரு விஷயம், நிச்சயம் தமிழ் சினிமாக்களில் நடக்கும். அதிலும் கார்களைக் காலி பண்ணி ஜோலியை முடிப்பதிலும், காமெடி செய்வதிலும் தமிழ் சினிமாவுக்கு அரிய பங்குண்டு. சுந்தர்.சி.யும் ஹரியும் இதில் தெறி ரகம். ‘ஆம்பள’ படத்தில் 1,900 கிலோ உள்ள சுமோவை கடல் மட்டத்தில் இருந்து சுமார் ஆயிரம் அடிகளுக்குப் பறக்கவிட்டு வீலிங் பண்ணுவது... கோவை சரளாவிடம் அடி வாங்கிய வடிவேலு மாதிரி ‘கிறு கிறு கிறு’வென கார்களைச் சுத்தவிடுவது.... என்று காருக்குக் கண் மட்டும் இருந்தா ‘வேணாம் வலிக்குது... அழுதுருவேன்’னு புலம்பியிருக்கும். பறக்கும் கார்களெல்லாம் உண்டு என்றாலும், படங்களில் காண்பிப்பது வேற லெவல்ல இருக்கும். 

கார்

லேட்டஸ்ட்டாக வெளிவந்த சூர்யாவின் ‘சிங்கம் 3’ படத்தில், டொயோட்டா ஃபார்ச்சூனர் கார், ஹரிக்கும் சூர்யாவுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. பின்னே... 200 கி.மீ வேகத்தில் ரன்வேயில் சென்று கொண்டிருக்கும் விமானத்தை, ஃபார்ச்சூனர் கார் எதிர்ப்புறமாக வந்து ஓவர்டேக் செய்கிறது என்றால் சும்மாவா? டவுன்பஸ்ஸில் இருந்து வேடிக்கை பார்ப்பதுபோல், ‘யார்றா அவன்; நம்மளையே ஓவர்டேக் பண்றான்’னு ஃப்ளைட்ல பைலட்டுங்க எல்லாம் ஆச்சரியத்தோட பார்க்கிறதெல்லாம்... ஃபார்ச்சூனருக்குக் கிடைத்த பெருமையே அன்றி வேறென்ன? ‘ஃபார்ச்சூனரின் அதிகபட்ச வேகமே 160தான்... அதிலும் 0-100 கி.மீ போறதுக்கே 14 செகண்ட் ஆகிடும்... இது எப்படி ஃப்ளைட்டை ஓவர்டேக்’ என்பதை மறந்துவிட்டு விஷயத்துக்கு வருவோம். நிஜத்தில் இப்படி ரன்வேயில் விமானங்களை முந்துகிற கார்கள் இருக்கின்றனவா? 

ஆம்! இதற்குப் பெயர் ஹைப்பர் கார்கள். கிட்டத்தட்ட விமானத்தையே ஓவர்டேக் செய்யக்கூடிய வேகம் கொண்ட டாப்-10 ஹைப்பர் கார்களைப் பற்றி ஒரு ட்ரெய்லர்...


1. கொயினிக்ஸேக் அகேரா R
விலை: சுமார் 10 கோடி
டாப் ஸ்பீடு: 440 கி.மீ
இன்ஜின்: 5.0 லிட்டர், 8 சிலிண்டர்

கார்

‘இது ஏதோ வீட்டு உபயோகப் பொருள் நிறுவனம் மாதிரி இருக்கே’ என்று நினைத்தீர்கள் என்றால்... பிறகு ரொம்பவும் வருத்தப்படுவீர்கள். ஒருவகையில், இந்த ‘கொயினிக்ஸேக்’ கார் நிறுவனத்தை சிவகார்த்திகேயன் என்றுகூடச் சொல்லலாம். அதாவது, ஷார்ட் பீரியட்டில் மிகப் பெரிய ஓப்பனிங் கிடைத்தது மாதிரி ‘கொயினிக்ஸேக்’ நிறுவனம், மார்க்கெட்டில் இருக்கும் சூப்பர் மற்றும் ஹைப்பர் கார்களுக்குச் செமத்தியான போட்டியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் ‘அகேரா R’ என்னும் இந்த மாடல், வெறித்தனத்தின் உச்சம். புகாட்டி, ஃபெராரி, மெக்லாரன் போன்ற அதிவேக சூப்பர் கார்களையே பின்னுக்குத் தள்ளிவிட்டு ‘உலகின் அதிவேக கார்’ என்ற டேக்குடன் முன்னால் பறக்கிறது அகேரா. 5 லிட்டர், ட்வின் டர்போ சார்ஜ்டு, DOHC அமைப்பு கொண்ட இந்த இன்ஜினில் 8 சிலிண்டர்கள் இருக்கின்றன. இதன் பவர் 1,140 bhp. டார்க் 165 kgm. வெறும் 2.5 விநாடிகளில் 0-100 கி.மீயை எட்டும் என்றால், இதன் வேகத்தைக் கற்பனை செய்து பாருங்கள். மூச்சை அடக்கிக் கொள்ளுங்கள். 0-400 கி.மீ-யை வெறும் 11 விநாடிகளுக்குள் கடக்கும் இந்த அகேரா R. 

இந்தப் பேய் வேகத்துக்குக் காரணம், இதிலுள்ள டூயல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன்தான். கியர் ஷிஃப்ட்டிங்கும் ஆக்ஸிலரேஷனும் மின்னலுக்கு அண்ணன் வேகத்தில் நடப்பதால், இந்த வேகம் சாத்தியமாகிறது. அடுத்த வருடம் வரும் புதிய காரில், கார்பன் ஃபைபர் வீல்கள் சேர்க்க இருக்கிறதாம் கொயினிக்ஸேக். அப்படியென்றால், விமானம் இல்லை... ஜெட் வேகம்தான்!


2. ஹெனெஸ்ஸி வெனோம் GT
விலை: சுமார் 8.8 கோடி
டாப் ஸ்பீடு: 435 கி.மீ
இன்ஜின்: 7.0 லிட்டர், 8 சிலிண்டர்

கார்

லோட்டஸ் EXIGE காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இதுதான் உலகின் இரண்டாவது வேகமான கார். இதன் டாப் ஸ்பீடு, மணிக்கு 435 கி.மீ. அகேரா காரைவிட வெறும் 5 கி.மீதான் குறைவு. ஆங்கிலத்தில் ‘பீஸ்ட்’ என்று ஒரு வார்த்தை உண்டு. அதாவது, 'மிருகத்தனமான குணம் கொண்ட' என்று அர்த்தம். தோற்றத்திலும் இது அப்படியே! கண்ணை மூடித் திறப்பதற்குள் 2.8 விநாடிகளில் இது 0-100 கி.மீயை எட்டிவிடும். இதில் இருப்பது 8 சிலிண்டர், 7.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின். இன்ஜினுக்கு உள்ளே இருக்கும் அப்கிரேடு செய்யப்பட்ட இன்டர்கூலரும், சிங்கிள் க்ளட்ச் ஷிஃப்ட் சிஸ்டமும் இதற்கு பக்கா பார்ட்னர்கள். அகேராவைவிட 5 கி.மீ மட்டுமே வேகம் குறைவாக இருந்தாலும், விலையில் பல லட்சங்கள் அதைவிடக் குறைவு.

3. புகாட்டி வெய்ரான் சூப்பர் ஸ்போர்ட்
விலை: சுமார் 11.42 கோடி 
டாப் ஸ்பீடு: 431 கி.மீ
இன்ஜின்: 8.0 லிட்டர், 8 சிலிண்டர்

கார்

‘பைக்னா டுகாட்டி; கார்னா புகாட்டி’ என்றொரு ஆட்டோமொபைல் வழக்கே உண்டு. ஆம்! கார் என்றாலே அது புகாட்டிதான். மல்ட்டி மில்லியனர்கள் ஆகத் துடிக்கும் மில்லியனர்களின் கனவு கார் புகாட்டியாகத்தான் இருக்கும். காரணம், வேகமானவற்றில் முக்கியமானது புகாட்டி சூப்பர் ஸ்போர்ட்தான். ரேஸுக்கு ராஸி, பாடி பில்டிங்குக்கு அர்னால்டுபோல தொடர்ச்சியாக வேகப் போட்டியில் சாம்பியன் பட்டம் தட்டியது புகாட்டிதான். அதேபோல், முதன் முதலில் 400 கி.மீ வேகத்தைத் தொடும்படி தயாரிக்கப்பட்ட காரும் இதுவே! சில டெக்னிக்கல் குழப்படிகளால் கொயினிக்ஸேக் கார்களிடம் புகாட்டி பின்வாங்கியதை உலகமே ‘உச்’ கொட்டியது. கோபமான புகாட்டி, தனது சூப்பர் ஸ்போர்ட் என்னும் அதிவேக காரைப் பறக்க விட்டது. இதில் அகேராவைவிட 3,000 சிசி அதிகபட்சமாக, அதாவது 8,000சிசியில் 8 சிலிண்டருடனும், 1,200bhp பவரிலும் இதன் இன்ஜின் உருவாக்கப்பட்டது. 0-100 கி.மீ-யை 2.4 விநாடிகளில் கடந்தாலும், அகோரா காரைவிட 9 கி.மீ பின்தங்கியிருக்கிறது புகாட்டி வெய்ரான் சூப்பர் ஸ்போர்ட்.


4. 9FF GT9-R
விலை: சுமார் 8 கோடி
டாப் ஸ்பீடு: 413.5 கி.மீ
இன்ஜின்: 4.0 லிட்டர், 6 சிலிண்டர்

கார்

‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ பால்வாக்கரை நினைவிருக்கிறதா? அவரின் ஃபேவரைட் காரான போர்ஷே 911 காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதுதான் இந்த 9FF GT9-R. போர்ஷே என்றாலே ஜெர்மனிதானே! ஜெர்மன் தயாரிப்பான இது, புகாட்டி வெய்ரான் காரைவிட வேகம் அதிகமாகவும், புகாட்டி வெய்ரான் சூப்பர் ஸ்போர்ட்டைவிட குறைவான வேகமும் கொண்ட கார். இரட்டை இலக்கத்தில் 3 சிலிண்டர்களைக்கொண்டு படுக்கைவசமாக அமைக்கப்பட்டிருக்கும் இதன் இன்ஜின், வெறும் 4.0 லிட்டர்தான். ஆனால், பவர் விஷயத்தில் புகாட்டி கார்களுக்கு இணையாக 1,120 bhp கொண்டிருக்கிறது. 16 விநாடிகளில் 305 கி.மீ வேகத்தை எட்டும் இந்த காரை, நல்ல சாலைகளில் விரட்டினால், கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்தில் சென்னையில் இருந்து மதுரையை ரீச் ஆகலாம். ‘டூ கலர்ஸ்தான் ஆப்ஷன்.. இதில் அலாய் இந்த டிசைன்தான் வரும்’ போன்ற கண்டிஷன்கள் எல்லாம் இதில் கிடையாது. உங்களுக்குப் பிடித்த கலரில், டிஸைனில் நீங்கள் காரை விரும்பினால், உங்கள் விருப்பப்படியே 9FF GT9-R டெலிவரி கிடைக்கும்.


5. SSC அல்ட்டிமேட் AERO
விலை: சுமார் 4 கோடி
டாப் ஸ்பீடு: 412 கி.மீ
இன்ஜின்: 6.3 லிட்டர், 8 சிலிண்டர்

கார்

வட அமெரிக்காவின் (SSC) ‘ஷெல்பி சூப்பர் கார்’ பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த நிறுவனத்தின் தயாரிப்புதான் இந்த அல்ட்டிமேட் AERO. SSC-க்கு அப்படி என்ன ஸ்பெஷல்? 2007-ல் இருந்து 2010 வரை தொடர்ந்து 4 வருடம் உலகின் அதிவேக காரைத் தயாரித்த நிறுவனம் என்று கின்னஸில் பெயர் வாங்கிய நிறுவனம் SSC. ஆனால், அதெல்லாம் புகாட்டி சூப்பர் ஸ்போர்ட் கார் வருவதற்கு முன்னால். இருந்தாலும், 2013-ல் நடந்த கின்னஸ் ரெக்கார்டில், ஒரு சின்ன டெக்னிக்கல் குளறுபடியால் புகாட்டி பின்வாங்க, 2013-ன் வேகமான கார் என்று பெயரெடுத்து SSC-யைக் காப்பாற்றியது இந்த அல்ட்டிமேட் AERO. 6.3 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜ்டு 8 சிலிண்டர் இன்ஜினும், 1,287 bhp பவரும் கொண்ட இது, GT9-R காரைவிட, வேகப்போட்டியில் 1.5 கி.மீதான் பின்தங்கியிருக்கிறது. இதன் வேகத்தில் புளகாங்கிதம் அடையும் வாடிக்கையாளர்கள் இருந்தாலும், பாதுகாப்பு விஷயத்தில் அல்ட்டிமேட் AERO காரில் நிறைய பேர் திருப்தியடையவில்லை.


6. கொயினிக்ஸெக் CCR & CCX 
விலை: 6.7 கோடி
டாப் ஸ்பீடு: 390 கி.மீ
இன்ஜின்: 4.7 லிட்டர், 8 சிலிண்டர்

கார்

டாப்-10 வேகப்போட்டியில் மீண்டும் ஒருமுறை கொயினிக்ஸெக். காரணம், இந்த CCR கார். புகாட்டி வெய்ரான் வருவதற்கு முன்பு இதுவும் ‘வேகமான கார்’ டைட்டிலைத் தட்டியது உண்மைதான். மிட் ரேஞ்ச் ஸ்போர்ட்ஸ் காரான இந்த காரை, ஒருதடவை இத்தாலியில் உள்ள ‘நர்டோ ரிங்’ ரேஸ் டிராக்கில் இதன் டாப் ஸ்பீடான 390 கி.மீ-ல் விரட்டி ட்ரையல் பார்த்தார் மைக்கேல் ஷூமேக்கர். அதற்குப் பிறகு CCR-ன் மவுசு இதன் டாப் ஸ்பீடை விட அதிகமாக எகிறியது. ஃபெராரி, மெக்லாரன் விரும்பிகள் எல்லாம் செட்டாக CCR-க்கு டிரான்ஸ்ஃபர் ஆனார்கள். வேகப் போட்டியில் மெக்லாரனைப் பின்னுக்குத் தள்ளியது இந்த CCR. 806 bhp பவரும், 4.7 லிட்டரையும் கொண்ட இந்த ட்வின் டர்போ இன்ஜின், 8 சிலிண்டர் கொண்டிருக்கிறது. 3.7 விநாடிகளில் 100 கி.மீ-யை எட்டும் இந்த கொயினிக்ஸெக் CCR போலவே, CCX காரும் தெறி ரகம்தான். CCX-ம் இந்த வேகப் போட்டியில் டிஸ்டிங்ஷன் அடிக்கிறது.


7. மெக்லாரன் F1
விலை: தயாரிப்பில் இல்லை
டாப் ஸ்பீடு: 387 கி.மீ
இன்ஜின்: 6.1 லிட்டர், 12 சிலிண்டர்

கார்

ரஜினி ஒரு படத்தில் ‘கூல்’ என்பாரே... அது மெக்லாரனுக்குப் பொருந்தும். உலகின் ‘கூலான கார்’ என்று சொல்லப்படும் மெக்லாரனின் ஸ்பெஷலே, இதன் இன்டீரியர் டிஸைன்தான். இந்த காரின் சீட்கள் மொத்தம் 3. மற்ற கார்களில் இருப்பதுபோல், வல/இடப் பக்கம் என்றில்லாமல், டிரைவர் சீட் நட்ட நடுவே சிங்கிளாக இருப்பதை உலகமே கூலாகப் பார்க்கிறது. தங்க நிறத்தில் ஜொலி ஜொலிக்கும் இந்த காருக்கு ரசிகர்கள் எக்கச்சக்கம். ஆனால், இது தயாரிப்பில் இல்லை. ஆனால் கடந்த 2013-ல், 066 என்னும் சேஸி எண் கொண்ட மெக்லாரன் மாடல், அதிகபட்சமாக 56 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. கார்பன் ஃபைபர் பேனல் கொண்டு, மிகச் சரியான ஏரோ-டைனமிக் டிசைனில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த மெக்லாரன் F1, ஓடாது... பறக்கும். இதை அடிப்படையாக வைத்துத்தான் ஃபார்முலா-1 கார்கள் தயாரிக்கப்பட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 6.1 லிட்டரும், 670 bhp பவரும் கொண்ட இந்த மெக்லாரன்... 12 சிலிண்டர் இன்ஜின் கொண்ட கார். 23 வயது ஆனாலும், ரஜினி-கமல் மாதிரி இன்றும் வேகப்போட்டியில் நின்று விளையாடுவது மெக்லாரனின் ஸ்பெஷல்.


8.ஸென்வோ ST-1
விலை: 4.79 கோடி
டாப் ஸ்பீடு: 375 கி.மீ
இன்ஜின்: 6.8 லிட்டர், 8 சிலிண்டர்

கார்

‘மூர்த்தி சிறுசு; கீர்த்தி பெருசு’ - இந்தப் பழமொழி ஸென்வோ நிறுவனத்துக்குப் பொருந்தும். டேனிஷ் நிறுவனமான இதில் தயாரிக்கப்படும் கார்கள் அனைத்துமே ஹேண்ட்மேடாக, அதுவும் குறைவான நபர்கள் கொண்ட சின்னக் குழுவால் தயாரிக்கப்படுபவை. அதனால், இதன் ஃபிட் அண்ட் ஃபினிஷ் மற்றும் தயாரிப்புக் குறைபாடுகளில் இதுவரை எந்த கம்ப்ளெய்ன்ட்டுமே வராததற்கு... வெல்டன் ஸென்வோ! 2009-ல் அறிமுகமான இந்த காரின் டாப் ஸ்பீடு 375 கி.மீ. 100 கி.மீ-யை வெறும் ‘3 எண்றதுக்குள்ள’ தொட்டுவிடும். மெக்லாரனுக்குப் பிறகு ஷார்ப்பான ஏரோ-டைனமிக் டிசைன் கொண்ட ST-1 - நேரான சாலை என்றால், வெறும் ‘10 எண்றதுக்குள்ள’ டாப் ஸ்பீடான 375 கி.மீ-யைத் தொட்டுவிடுமாம். 6,800 சிசியும், 8 சிலிண்டரும், 1,104bhp பவரும் இதற்கு தெறி பார்ட்னர்ஷிப் கொடுக்கின்றன. கிட்டத்தட்ட 4.79 கோடி ரூபாய்க்குக் கிடைக்கும் இதில் டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல், கீலெஸ் என்ட்ரி சிஸ்டம் போன்ற அம்சமான விஷயங்களும் இருக்கின்றன.


9. பகானி ஹூயரா
விலை: சுமார் 7.12 கோடி
டாப் ஸ்பீடு: 370 கி.மீ
இன்ஜின்: 6 லிட்டர், 12 சிலிண்டர்

கார்

தனது ஸோண்டா கார்கள் மூலம், 1,999-ம் ஆண்டில் இத்தாலியில் அடியெடுத்து வைத்தது பகானி நிறுவனம். ‘நடிப்புனா கமல் மாதிரி இருக்கணும்’ என்பதுபோல், ‘கார் பில்டு குவாலிட்டினா பகானி மாதிரி இருக்கணும்’ என்று குறுகிய காலத்தில் பெயரெடுத்தது பகானி. இத்தாலிய கார்களுக்கு, ஏற்கெனவே உலகில் நல்ல பெயர். இதில் பகானியும் சேர்ந்துகொள்ள, உற்சாகமாக அதிவேக கார்களைத் தயாரித்தது இந்நிறுவனம். அதில் லேட்டஸ்டாக 2016 மார்ச்சில், ஜெனிவா மோட்டார் ஷோவில் ஹூயராவைக் காட்சிக்கு வைத்தது. ‘இது ஹைப்பர் காரா’ என்று பார்ப்பவர்கள் அனைவரும் வியந்து போனார்கள். காரணம், கட்டுமானத் தரம் மட்டுமல்ல; ஹைப்பர் கார் ஸ்டைலும் பகானியின் ஸ்பெஷல். நிஜமாகவே ஹைப்பர் காராகவே வந்தது ஹூயரா. 6,000 சிசி, 12 சிலிண்டர், 730bhp பவர் என்று அதிரடியான பெர்ஃபாமென்ஸைக் காட்டும் ஹூயரா, ஹஅரி பீட்டை ஏற்றும் ஹைப்பர் கார் அல்லாமல் வேறென்ன?


10. ஆஸ்ட்டன் மார்ட்டின் ONE-77
விலை: 9.38 கோடி
டாப் ஸ்பீடு: 354 கி.மீ
இன்ஜின்: 7.3 லிட்டர், 12 சிலிண்டர்

கார்

ஆஸ்ட்டன் மார்ட்டின் என்றால் ஞாபகம் வராது; ஜேம்ஸ்பாண்ட் கார் என்றால் ‘ஓ... அதுவா’ என்று மெடுல்லா ஆப்லேங்கேட்டாவை ரீவைண்ட் செய்வார்கள். ஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ்பாண்டின் ஃபேவரைட் கார், பிரிட்டிஷ் தயாரிப்பான ஆஸ்ட்டன் மார்ட்டின்தான். ஆனால், இது அதையெல்லாம்விட வேற லெவல் ஆஸ்ட்டன். இது தயாரிக்கப்படும் பிளாட்ஃபார்மே வேறு! மெக்லாரன்போல் லைட் வெயிட்டான கார்பன் ஃபைபரும் அலுமினியமும் கொண்டு மோனோகாக் சேஸியில் தயாரிக்கப்பட்டிருக்கும் இது, மணிக்கு 354 கி.மீ வேகம் வரை பறக்கும். ‘அதென்ன ONE-77’ என்றொரு கேள்வி உங்கள் மனதில் முளைக்கலாம். அதற்குப் பதில் இதுதான். மொத்தம் 77 கார்கள் மட்டும்தான் இந்த மாடலில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 2012-லேயே இதன் 77-வது கார் விற்பனையாகிவிட்டது. இனிமேல், ஆஸ்டன் மார்ட்டின் ONE-77 மாடலில் பார்ட்-2 ஏதாவது வந்தால் பார்க்கலாம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இணையத்தை கலக்கும் 'குட்டி டிரம்ப்' மீம்கள்

 
 
Doctored image showing Trump as so tiny his feet dangle from his chair, listening to a regular-sized Barack Obamaபடத்தின் காப்புரிமைALAMY Image captionபெரும்பாலான இந்த திருத்தப்பட்ட புகைப்படங்கள் சமீபத்திய செய்திகளை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு மிகவும் பரிச்சயமானதாக இருக்கும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கைகளின் அளவு குறித்து எழுந்த கருத்துகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதில் சொல்லியதை அவருடைய எதிர்ப்பாளர்கள் அறிந்திருப்பார்கள்.

தற்போது, சில இணையதள பயன்பாட்டாளர்கள் ஒருபடி மேலே சென்று டொனால்ட் டிரம்பின் புகைப்படங்களில் திருத்தங்களை செய்து அவரது உடல் சிறியதாக தோன்றும்படி செய்துள்ளனர்.

அவரை மிகவும் குட்டியாக காட்ட வேண்டும் என்பதால் டிரம்பின் பெரும்பாலான படங்கள் திருத்தப்பட்டுள்ளன.

தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றன.

இந்த புகைப்படங்கள் குறித்து அமெரிக்க அதிபர் இன்னும் தன் கருத்துக்களை தெரிவிக்கவில்லை

A doctored, small Trump on the steps of an airplane, with thumbs held aloft. Twitter user @ClintFalin tweets: OMG I didn't realize just how small Donald Trump is until now.படத்தின் காப்புரிமை@CLINTFALIN A small Trump holding up a child's picture, with his daughter Tiffany doing a thumbs up over his shoulderபடத்தின் காப்புரிமைENZAIT Image captionடிரம்ப் தன்னுடைய மகள் டிஃப்பனியுடன் அமர்ந்திருக்கும் இந்த புகைப்படத்தை யாரோ திருத்தியுள்ளார். அதில், ஒரு குழந்தையின் ஓவியத்தை டிரம்ப் பெருமையோடு பிடித்திருக்கும்படி தோன்றுவது போல மாற்றப்பட்டுள்ளது. Justine Trudeau and a tiny Mr Trump in front of a White House fireplaceபடத்தின் காப்புரிமைMYG0T_0 Image captionகடந்த வாரம் வெள்ளை மாளிகைக்கு வந்திருந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் புகைப்படத்தையும் குறும்புக்காரர்கள் திருத்தியுள்ளனர். Trump's head pasted on that of a baby in Hillary Clinton's armsபடத்தின் காப்புரிமை@B.I.G_PAIGE Image captionஅதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிராக போட்டியிட்ட ஹிலரி கிளிண்டன் கையில் இருக்கும் குழந்தையின் தலையை திருத்தி டிரம்பின் தலை இணைக்கப்பட்டதன் மூலம் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களும் இந்த விஷயத்தில் நுழைந்துள்ளனர். paper cutout of Trump, smaller than the Pepsi bottle it's next to for size comparison; caption readsபடத்தின் காப்புரிமை@P4K9 Image captionகுறைந்த தொழில்நுட்பம் வழி ஒன்றின் மூலம் இந்த மீம்மை மீள் உருவாக்கம் செய்துள்ளார் இந்த இஸ்டாகிராம் பயன்பாட்டாளர். Vice-President Mike Pence, next to the top of Trump's head and his hand, smaller than usual, wavingபடத்தின் காப்புரிமைSMELLY_JIM Image captionஎன்னால் செய்ய முடிந்திருந்தால், டிரம்ப் இந்தப் படத்தில் என் கவனத்தின் மையமாக இருந்திருக்கமாட்டார் என்பதால் இந்த புகைப்படத்திலிருந்து டிரம்பின் தலையை முழுவதுமாக வெட்டியுள்ளதாக இந்த பயன்பாட்டாளர் தெரிவித்துள்ளார். Time magazine cover, mocked up to look like Trump is behind a desk at least 10 times too big for himபடத்தின் காப்புரிமைCOYOTE_LOST Image captionடைம் நாளிதழின் தற்போதைய பிரதியில் வெளியான முதல் பக்கத்திலிருந்த டிரம்ப் புகைப்படத்தை அவர் அமர்ந்திருக்கும் நாற்காலியை காட்டிலும் மிகவும் சிறியதாக மாற்றியுள்ளார் இந்த பயன்பாட்டாளர்.

 

 

http://www.bbc.com

  • தொடங்கியவர்

இதுதான் திருநங்கைக்கான முதல் பொம்மை!

உலகில் திருநங்கைக்கான முதல் பொம்மை, நியூயார்க் பொம்மை கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜாஸ் ஜென்னிங்ஸ் என்ற திருநங்கையை மாடலாக வைத்து இந்த பொம்மை உருவாக்கப்பட்டுள்ளது.

16 வயதாகும் ஜாஸ் திருநங்கைகளின் உரிமைக்காக குரல் கொடுத்து வருபவர் ஆவார். அவரை கவுரவிக்கும் விதமாக இந்த பொம்மை வெளியிடப்பட்டுள்ளது.

Worlds first transgender doll

டோனர் என்ற பொம்மை தயாரிப்பு நிறுவனம் இந்த பொம்மையை தயாரித்துள்ளனர்.45 செ.மீ உயரத்தில் உள்ள இந்த பொம்மையின் மதிப்பு 89 டாலர். இது குறித்து ஜென்னிங்ஸ், "எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது சமூகத்தில் திருநங்கைகள் குறித்த பார்வையை கவுரவப்படுத்தும்" என்றார்.

 

 

கூவத்தூர் ரிசார்ட் பில் ரூ.60 லட்சம்: பாக்கி ரூ.55 லட்சம்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த அரசியல் அசாதாரண சூழலால் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், அவர்கள் தங்கிய 11 நாட்களுக்கு மொத்தம் ரூ 60 லட்சம் கட்டணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Kuvathur resort

ஆனால், அவற்றில் ரூ. 5 லட்சம்தான் கட்டப்பட்டுள்ளதாகவும், ரூ. 55 லட்சம் கட்டணம் இன்றுவரை செலுத்தப்பட்வில்லை என்றும் கூறப்படுகின்றது.

மீதி தொகையை எவ்வாறு வசூல் செய்வது என்று தெரியாமல், ரிசார்ட் நிர்வாகம் விழி பிதுங்கி வருகிறார்களாம். நேற்று நம்பிக்கை வாக்கெடுப்புக்காக அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் இருந்து புறப்பட்ட பிறகு, ரிசார்ட் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

காதல் - உங்களுடைய புகைப்படங்கள்

 

ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஒவ்வொரு வாரமும் வாசகர்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறோம். இந்த வார தலைப்பு “காதல்”

  • இதய வடிவிலான பலூன்கள்DORIS ENDERS

    இதய வடிவிலான பலூன்கள் பறக்கும் புகைப்படம் - எடுத்தவர் டோரிஸ் என்டர்ஸ்

  • பாலத்தின் மேல் ஒரு பூட்டுTIBOR ACS

    திபோர் அக்ஸ்: பூதபெஸ்டிலுள்ள செச்செய்னீ சங்கிலி பாலத்தின் மேலுள்ள காதல் பூட்டுக்கள். ஹங்கேரியிலுள்ள மிகவும் அழகான பாலங்களில் இதுவும் ஒன்று

  • சாக்ஸாஃபோன் இசைக்கும் ஒருவர்HELEN JANE HOLMAN

    ஹெலன் ஜானி ஹோல்மான்: “ஓர் இசைக்கலைஞருக்கும் அவரது இசைக்கருவிக்கும் இடையிலுள்ள பிணைப்பு என்பது உண்மையிலேயே தனித்தன்மையான காதல்தான். இந்த இசைக்கருவியை வாசிக்கின்றபோது அவருக்கு இருக்கும் உணர்ச்சியைப் பார்த்து நான் அவர் மீது காதலில் விழுகிறேன்”.

  • காதல் ஜோடியான நீள் கழுத்து வாத்துகள் (ஸ்வான்)JON AMES

    ஜோன் அமெஸ்: பவாரியன் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் நிழலில் ம்யூனிக்கின் தெற்கிலுள்ள கோச்செல்சியில் காதல் ஜோடியான நீள் கழுத்து வாத்துகள் (ஸ்வான்). ஆண் வாத்து இன்னொரு ஆண் பறவையோடு பறந்தும், நீரிலும் நடத்திய கண்கவர் சண்டைக்கு பின்னர், காதல் ஜோடியான பெண் வாத்தோடு நெருங்கி உருவான இதய வடிவத்தை பாதுகாக்கிறது. தனது துணையின் வெற்றியில் அந்த பெண் பறவை மகிழ்ச்சியடைவது தெளிவாக தெரிகிறது.

  • சிலைANGELA BURTON

    ஏங்கெலா பர்டன்: இதுவொரு சிலையின் படம். இது பளிங்கு கல்லில் செதுக்கப்பட்டிருந்தாலும், தாய்க்கும் சேய்க்கும் இடையிலான அன்பை நமக்கு உணர வைப்பதாக எனக்கு தோன்றுகிறது.

  • இரண்டு யானைகள்IAN SALISBURY

    இயன் சலிஸ்பெரி: “யானைகளிடம் மனித பண்புகள் பல உள்ளன. ஜாம்பியாவிலுள்ள தென் லுயான்க்வா தேசிய பூங்காவில், இந்த இரு யானைகளும் காதல் வயப்பட்டுள்ளதை துதிக்கைகளை இணைத்து வெளிக்காட்டுகின்றன.

  • காதலை முன்மொழியும் ஒரு ஜோடிALICE BEDFORD

    ரோமிலுள்ள டிரிவி நீரூற்றில், பொதுவிடத்தில் வைத்து காதலை தெரிவிக்கும் காட்சி அலீஸ் பெட்.போர்டு என்பவரால் படம் எடுக்கப்பட்டது.

  • இதய வடிவ பூட்டுகள்CAROL CHAN

    கடைசியாக, கரோல் சான் படம்பிடித்த இதய வடிவ பூட்டுகள்

 

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

திருக்குறளை வைத்து அரசியல் பேசிய வைரமுத்து!

vairamuthu_New_00211.jpg

மதுரையில் திருக்குறளை வைத்து கவிஞர் வைரமுத்து, அரசியல் பேசியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தமிழக அரசியல் சூழல் குறித்து, பல்வேறு பிரபலங்களும் பலவிதமான கருத்துகளை முன்மொழிந்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, தமிழக அரசியல் சூழல் குறித்து மதுரையில் நையாண்டியாக பேசியுள்ளார். மதுரையில் தமிழ் இசை மன்றம் சார்பில் நடைபெற்ற  திருக்குறள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து, "திருக்குறள், எக்காலத்துக்கும் பொருந்துகின்ற கருத்துகளை கொண்டுள்ளது. நேற்று கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை ஒவ்வொருவராக வண்டியில் ஏற்றியபோது, யாராவது பாத்ரூமில் இருக்கிறார்களா என்று உள்ளே புகுந்து தேடியிருக்கிறார்கள். அதைத்தான் வள்ளுவர், 'எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு' என்று கூறியுள்ளார். இன்று நீங்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பதற்கு, 'உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்' என்றும், நாளை நடக்கவுள்ளதற்கும் குறள்களில் சரியான கருத்துகளை அன்றே திருவள்ளூவர் பதிவு செய்துள்ளார்" என்று குறளும், கவிதையும், அரசியலும், நையாண்டியுமாக பேசியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

http://www.vikatan.com

காணாமல் போன போயிங்-777 கண்டுபிடிக்கப்பட்டது!

boeing-777x_00576.jpg

கடந்த வியாழன் அன்று மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட போயிங்-777 விமானமானது திடீரென்று கட்டுபாட்டு அறையிடம் இருந்து தொடர்ப்பை இழந்தது.கட்டுபாட்டை இழக்கும் சில மணிநேரங்களுக்கு முன்பு விமானம் ஜெர்மனியின் எல்லையை அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ஜெர்மனின் விமானப்படை தனது தேடுதல் பணியை முடுக்கிவிட்டது. தற்போது கட்டுபாட்டு அறையின் தொடர்பு இன்றி பறந்து கொண்டு இருந்த அந்த போயிங் 777 விமானம் ஜெர்மன் விமானப்படையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பயணிகள் லண்டன் நகருக்கு அதே விமானத்தில் லண்டன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

http://www.vikatan.com

வைரலாகும் குட்டி டொனால்ட் டிரம்ப்!

_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புகைப்படங்கள், நெட்டிசன்களால் சிறியதாக்கப்பட்டு வைரலாகி வருகின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கைகளின் அளவு குறித்து, கடந்த வாரம் சர்ச்சைக்குரிய கருத்துகள் எழுந்தது. இதனால், அமெரிக்கா நெட்டிசன்கள், அதிபர் டொனால்ட் டிரம்பின் புகைப்படங்களைத் திருத்தங்கள் செய்து, அவரது உருவத்தை சிறியதாகத் தோன்றும்படி செய்துள்ளனர்.

_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0

அமெரிக்க அதிகர் டிரம்பை மிகவும் குட்டியாக காட்ட வேண்டும் என்பதால், டிரம்பின் பெரும்பாலான படங்களை நெட்டிசன்கள் திருத்தி அமைத்துள்ளனர். தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாகி, வைரலாகி வருகின்றன. 

_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? #PhotoStory #Astrology

தூங்கும்போது நம் மனம் காணும் கனவுகளைச் சொல்லில் அடக்கிவிட முடியாது. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வண்ண ஜாலங்களாகக் கனவுகள் நம் வாழ்வில் இடம்பிடிக்கின்றன. நாம் காணும் கனவுகளும் அவற்றின் பலன்களும் எப்படி இருக்கும் என்று ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம். அப்போது அவர் கூறிய பதில்களின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக... 

கனவு பலன்   

கனவு காணுங்கள் என்றார் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாம். கனவுகளே வாழ்க்கை இல்லை... கனவுகள் இல்லாமலும் கே.பி.வித்யாதரன்வாழ்க்கை இல்லை என்றார் கமல்ஹாசன். இந்தக் கனவை நாம் நினைத்த மாத்திரத்தில் கண்டு விட முடியுமா? ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது நாமே அறியாத வேளையில் வருவதுதான் கனவு. 

எல்லாக் கனவுகளுக்கும் பலன் உண்டு என்று சொல்லி விட முடியாது குறிப்பிட்ட சில நேரங்களில்,  நாம் ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. அப்படிப்பட்ட கனவை நாம் காணும்போது, பெரும்பாலும் நமக்கு விழிப்பு ஏற்பட்டு விடும். அப்படிப்பட்ட வேளைகளில் நாம் எழுந்து, படுக்கையில் அமர்ந்தபடியேகூட சுவாமியை சிறிது நேரம் வணங்கி விட்டு, பிறகு உறங்கச் செல்லலாம். 

நாம் காணும் கனவில் வரும், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றுக்கேற்ப பலன்களும் மாறும். என்ன வகையான விலங்குகளுக்கு என்ன மாதிரியான பலன்கள் என்பது பற்றிப் பார்ப்போம். 

புலி  

 
* புலி, சிங்கம் போன்ற வனவிலங்குகளை நாம் வேட்டையாடி வெற்றி பெறுவதுபோல் கனவு வந்தால் நமக்கு வந்த எதிர்ப்புகளை முறியடித்து நாம் வெற்றி பெறப்போகிறோம் என்று அர்த்தம். 

முயல்கள்  


* கனவில் முயல்கள் துள்ளிக்குதித்து விளையாடுவது போல் கனவு வந்தால், நாம் சொந்த ஊருக்குச் சென்று நம் உறவினர்களைச் சந்திப்போம். இல்லாவிட்டால் அவர்கள், நம்மைப்பார்க்க வரப்போகிறார்கள் என்று பொருள்.   


* நரி கனவில் வந்தால் சொந்த ஊரை விட்டுச் சென்று வேறு ஊரில் பிழைப்பு நடத்த வேண்டி வரும்.

குதிரை சவாரி 


* குதிரை கனவில் வந்தால், வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குதிரையின் மீது ஏறி சவாரி செய்வது போல் கனவு வந்தால் நமக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். 

பசு மாடு 


*பசுக்கள் மேய்ச்சல் நிலத்தில் மேய்வது போலக் கனவுகள் வந்தால், புதிய சொத்துக்கள் வாங்குவோம். 

காளை  


* காளை மாடு துரத்துவது போல் கனவுவந்தால், வீண் பிரச்னைகள் வந்துபோகும். 

* ஆடுகள் நம் கனவுகளில் வந்தால் புதிதாகக் காரோ, பைக்கோ வாங்கப்போகிறோம் என்று நாம் அறியலாம். 

பாம்பு 


* பாம்பு கனவில் வந்தால், பெரிய அளவில் நமக்குத் தொல்லை தந்து வந்த கடன் பிரச்னைகள் நம்மை விட்டு விலகும். 

 

நாய்   


* நாய்கள் குரைப்பது போல் கனவு வந்தால் வீண்பழி வந்து சேரும். 

குரங்கு  


* குரங்குகள் கனவில் வந்தால் வீட்டிலோ, நண்பர்களிடமோ தேவையற்ற வாக்குவாதங்கள் வரும். கடன் பிரச்னை அதிகரிக்கும். 

யானை 

* யானை நமது கனவில் வந்தால் நமக்குப் பெரும் செல்வம் ஏதோ ஒரு வகையில் கிடைக்கப் போகிறதென்று பொருள். யானையின் மீது உட்கார்ந்துகொண்டு சவாரி செய்வது போல் கனவு வந்தால் நமக்குப் பதவி உயர்வு கிடைக்கலாம். சொந்தமாக வீடு வாங்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கலாம். 

மயில் 

* மயில் அகவுவது போல் கனவு வந்தால், கணவன் மனைவி இடையே அன்பு மிகுதியாகும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.  


* வானத்தில் கூட்டமாகப் பறவைகள் பறந்து செல்வது போல் கனவுகள் வந்தால் நெடுநாட்களாக நமக்கு இருந்து வந்த துன்பம் நம்மை விட்டு விலகும். புதிய பதவி தேடி வரும். புகழ் கூடும். 

பறவைகள்  


* கிளிகள் பறந்து மரத்துக்கு மரம் செல்வதுபோலக் கனவு கண்டால், பால்ய நண்பர்களைச் சந்தித்து உரையாடுவீர்கள். மனம் ரொம்பவே லேசாகிப்போகும். புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

http://www.vikatan.com/

  • கருத்துக்கள உறவுகள்

ஜோசியர் இது வரையில் மிருகங்களை கனவு காணவில்லை என்றே தோன்றுகிறது.

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று: பெப்ரவரி 20

 

1798 : பாப்­ப­ரசர் ஆறாம் பயஸ் பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டார்.

1835 : சிலியின் கொன்­செப்­சியோன் நகரம்  பூகம்­பத்தால் அழிந்­தது.

1910 : எகிப்­தியப் பிர­தமர் பூட்ரோஸ் காலி  கொல்­லப்­பட்டார்.

1933: ஜேர்­ம­னியில் நடை­பெ­ற­வி­ருந்த தேர்­த­லின்­போது தனது நாஸி கட்­சிக்கு நிதி­யு­தவி செய்­யு­மாறு கோரு­வ­தற்­காக அந்­நாட்டு தொழி­ல­தி­பர்­களை அடோல்வ் ஹிட்லர் இர­க­சி­ய மாக சந்­தித்தார்.

1935: அந்­தார்ட்­டி­காவில் காலடி பதித்த முதல் பெண் எனும் பெரு­மையை கரோலின் மிகெல்சன் என்­பவர் பெற்றார்.

1944: ஜேர்மன் விமானத் தயா­ரிப்பு நிலை­யங்கள் மீது அமெ­ரிக்கா குண்­டுத்­தாக்­குதல் நடத்த ஆரம்­பித்­தது.

1962 : மேர்க்­குரி திட்டம்: ஜோன் கிளென் பூமியை மூன்று முறை சுற்றி பூமியைச் சுற்­றிய முத­லா­வது அமெ­ரிக்கர் என்ற புகழைப் பெற்றார்.

1965 : அப்­பலோ விண்­க­லங்கள் சந்­தி­ரனில் இறங்­கு­வ­தற்­கான இடங்­களை வெற்­றி­க­ர­மாகப் படம்­பி­டித்த ரேஞ்சர் 8 விண்­கலம் சந்­தி­ர­னுடன் மோதி­யது.


varalaru-20-021986: சோவியத் ஒன்­றியம் தனது மிர் விண்­க­லத்தை விண்­வெ­ளிக்கு அனுப்­பி­யது. 15 வரு­ட­காலம் அது  விண்­வெளி நிலை­ய­மாக இயங்­கி­யது.

1987 : இந்­தி­யாவின் அரு­ணா­சலப் பிர­தேசம், அசாமில் இருந்து பிரிந்து தனி மாநி­ல­மா­கி­யது.

1989: இங்­கி­லாந்தின் டேர்ன்ஹில் எனும் இடத்தில் பிரித்­தா­னிய இரா­ணுவத் தள­மொன்றின் மீது ஐ.ஆர்.ஏ. இயக்கம் குண்­டுத்­தாக்­குதல் நடத்­தி­யது.

1998: அமெ­ரிக்க பிகர் ஸ்கேட்டிங் வீராங்­கனை தாரா லிபின்ஸ்கி, குளிர்­கால ஒலிம்­பிக்கில் தங்­கப்­ப­தக்கம் பெற்ற மிக இள­மை­யான (15 வயது) போட்­டி­யா­ள­ரானார்.

2002 : எகிப்தில் ரயில் ஒன்று தீப்­பி­டித்­ததில் 370 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2005: ஐரோப்­பிய ஒன்­றிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­திய முதல் நாடா­கி­யது ஸ்பெய்ன்.

2009: தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் இரு விமா­னங்கள் கொழும்­பிலும்
நீர்­கொ­ழும்­பிலும் சுட்­டு­வீழ்த்­தப்­பட்­டன.

2010: போர்த்­துக்­கலில் ஏற்­பட்ட பாரிய வெள்­ளப்­பெ­ருக்கு மற்றும் மண் சரி­வினால் 43 பேர் உயிரிழந்தனர்.

2013: கெப்ளர் 37பி எனும் சிறிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது.

2015: சுவிட்ஸர்லாந்தில் இரு ரயில்கள் மோதிக்கொண்டதால் 49 பேர் காயமடைந்தனர்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், தனபால் மற்றும் மக்களுக்கு, மிஸ்டர் K பரிந்துரைக்கும் 11 திருக்குறள்கள்! #MorningMotivation

'ஒரு தர்பூசணிக் கதை சொல்றேன் கேளு’ என்று ஆரம்பித்தான் மிஸ்டர் K. சமீபத்திய அரசியல் நிகழ்வுகளால் ஒரு மாதிரி டென்ஷனாகவே இருந்தான். ஜெயலலிதா, ஓ,பன்னீர்செல்வம், சசிகலா, எடப்பாடி பழனிசாமி என்று பேசிக்கொண்டிருந்தபோதுதான் அந்தக் கதையை ஆரம்பித்தான். 

மிஸ்டர் K

'ஒரு கிராமத்துல வருஷா வருஷம் தர்பூசணி சாப்பிடுற போட்டி நடக்கும். அந்தக் கிராமத்துல பெரிய தர்பூசணித் தோட்டம் வெச்சிருக்கிற ஒரு விவசாயி, ரொம்ப சிரத்தையா அதை நடத்துவாரு. நம்மாளும் அதுல கலந்துப்பான். சிவப்பா, இனிப்பா, பெரிய பெரிய தர்பூசணிகள் சாப்பிடக் கிடைக்கும். ஒரே விதி, அதில் உள்ள விதைகளைப் பக்கத்துல இருக்கிற கிண்ணத்துல போட்டுடணும். குறிப்பிட்ட நேரத்துல அதிகமா சாப்பிடுறவங்களுக்கு பரிசு. தோற்றவங்களுக்கு, சுவையான தர்பூசணி சாப்பிட்ட மகிழ்ச்சி. அவ்வளவுதான். 

தர்பூசணிப் பிரியனான நம்ம பையன், போட்டியில விடாம கலந்துப்பான்.  கொஞ்சம் பெரியவனானதும் மேற்படிப்புக்கு வெளியூர் போயிடுறான். 10 வருஷம் கழிச்சு திரும்ப வர்றான். ஆர்வமா, போட்டில கலந்துக்கப்போனா, அவனுக்கு பெரிய ஏமாற்றம். தர்பூசணிப் பழங்கள் ரொம்பச் சின்ன சைஸ்ல இருக்கு. பெரிசா சுவையும் இல்ல. எப்படி வெறும் 10 வருஷத்துல இப்படி மாறிச்சினு யோசிக்கிறான். ரெண்டு நாள்ல கண்டுபிடிச்சிடுறான்.

விஷயம் என்னன்னா... அந்த விவசாயி இறந்துட்டார். அவர் மகன்தான் 10 வருஷமா போட்டி நடத்துறது. ‘அப்பா பண்ணியது முட்டாள்தனம்.  எவ்ளோ தர்பூசணி ஓசில போகுது!  பெரிய பெரிய தர்பூசணிகளை விற்பனைக்கு அனுப்பினா நல்ல காசு’ன்னு அதையெல்லாம் விற்பனைக்கு அனுப்பி, சின்னச்சின்ன தர்பூசணிகளைப் போட்டிக்கு வெச்சான். அதனால, சின்னச்சின்ன பழங்களை விளைவிக்கக்கூடிய விதைகள்தான் அவனுக்கு மிஞ்சியது. பெரிய பழங்கள் எல்லாம் வெளியூர்களுக்கு விற்பனைக்குப் போயாச்சே. அப்படியே வருஷா வருஷம் சைஸும் குறைஞ்சு, சுவையும் குறைஞ்சு இப்ப இதத்தான் சாப்பிட்டாகணும்னு நிலை. அவங்கப்பா போட்டி வெச்சு மக்களையும் சந்தோஷப்படுத்தினார். தானும் பலன் அடைஞ்சார். அந்த சிஸ்டம் என்னன்னு தெரிஞ்சுக்காம மாத்தினதால, இப்ப யாருக்கும் உபயோகமில்லாத சுவையில்லாத தர்பூசணிகள்தான் மிச்சம்!’

மிஸ்டர் K பூடகமாகச் சொல்லவந்த விஷயம் புரிந்தது.  ’நல்ல கதைதான். எல்லாருக்குமா வேற எதுவும் சொல்லலாமே ’ என்று கேட்டேன்.

திருவள்ளுவர் 

‘திருவள்ளுவர் சொல்லாததா? ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், தனபால்னு அவங்கவங்களுக்குப் பொருந்துற மாதிரி 10 குறள்கள் சொல்றேன். சாலமன் பாப்பையா, மு.வரதராசனார் இருவருக்கும் நன்றியோட...
 
1.
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் 
பொருத்தலும் வல்ல தமைச்சு. (633)

பகைவர்க்குத் துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்தவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.

2.
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர் 
எழுபது கோடி உறும். (639)

தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும் நாட்டு நலனை எண்ணாமல், தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்.

3.
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் 
வகையறியார் வல்லதூஉம் இல். (713)

தம் பேச்சைக் கேட்கும் சபையின் இயல்பை அறியாமல் தொடர்ந்து பேசத் தொடங்குபவர், சொற்களின் கூறும் தெரியாதவர்; சொல்லும் திறமும் இல்லாதவர்.

4.
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே 
வேந்தமை வில்லாத நாடு (740)

மேலே சொல்லப்பட்ட எல்லாம் இருந்தாலும் குடிமக்கள் மீது அன்பு இல்லாத அரசு அமைந்துவிட்டால், அதனால் ஒரு நன்மையும் இல்லை.

5.
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் 
இல்லாயின் வெல்லும் படை. (769)

எண்ணிக்கையில் சிறுமை, அரசி்ன் மீது மனத்தை விட்டு விலகாத வெறுப்பு, வறுமை இவை எல்லாம் இல்லை என்றால், அந்தப் படை வெற்றிபெறும்.  

6.
கான முயலெய்த அம்பினில் யானை 
பிழைத்தவேல் ஏந்தல் இனிது. (772)

காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது.

7.
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ 
மன்றில் பழிப்பார் தொடர்பு. (820)

தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்துப் பேசுவோரின் நட்பை, எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும்.

8.
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் 
ஏதம் பலவும் தரும். (885)

 சொந்தக் கட்சிக்காரனே உட்பகையானால், அது சாவோடு கூடிய குற்றம் பலவற்றையும் உண்டாக்கும்.

9.
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் 
தன்நெஞ்சே தன்னைச் சுடும். (293)

பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டாம். சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது, தன் மனமே தன்னைச் சுடும்.

10.
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் 
நடுவொரீஇ அல்ல செயின். (116)

தன் நெஞ்சம், நடுவுநிலை நீங்கித் தவறுசெய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகிறேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.

எதெது, யார் யாருக்குச் சொல்றான்னு நான் யோசித்துக்கொண்டிருக்கும்போதே... ‘இந்தா இது நமக்கு’ என்று ஒரு குறளைக் கொடுத்தான் மிஸ்டர் K ;


இடுக்கண் வருங்கால் நகுக அதனை 
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

 
அதுசரி! 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மும்பை அருகே சீருடை அணிந்து, புத்தக பையை சுமந்தபடி 60 வயதில் பள்ளிக்கு செல்லும் பாட்டிகள்

 
மும்பையை அடுத்த பங்கனே கிராமத்தில் உள்ள சிறப்புப் பள்ளியில் பாடம் கற்கும் பாட்டிகள். | படம்: பிடிஐ
மும்பையை அடுத்த பங்கனே கிராமத்தில் உள்ள சிறப்புப் பள்ளியில் பாடம் கற்கும் பாட்டிகள். | படம்: பிடிஐ
 
 

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பள்ளிக் குழந்தை களைப் போல, 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் முதுகில் புத்தக பையை மாட்டிக் கொண்டு தினமும் பள்ளிக்குச் செல்கின்றனர்.

மும்பையை அடுத்த தானே பகுதியில் உள்ள பங்கனே கிராமத்தில் ஒரு சிறப்பு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 60 முதல் 90 வயதுக்குட்பட்ட சுமார் 30 பெண்கள் பயின்று வருகின்றனர். இவர்கள், இளஞ்சிவப்பு நிற சீருடை அணிந்துகொண்டு, பலகை, பலபம் ஆகியவை அடங்கிய பையை மாட்டிக்கொண்டு தினமும் பள்ளிக்குச் செல்கின்றனர்.

பள்ளிக்கூடங்களைப் போலவே இறை வணக்கத்துடன் வகுப்புகள் தொடங்குகின்றன. இங்கு குழந்தைகளுக்கான பாடல்கள், அடிப்படை கணிதம், மராத்தி எழுத்துகள் மற்றும் சரியான உச்சரிப்பு உள்ளிட்ட தொடக்கக் கல்வி கற்றுத் தரப்படுகிறது.

வேளாண் தொழிலை முதன்மையாகக் கொண்ட இந்த கிராமத்தைச் சேர்ந்த அனைத்து பாட்டிகளும் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்தனர். இதை அறிந்த யோகேந்திர பங்கர் (45), மோதிராம் அறக்கட்டளையுடன் இணைந்து இந்தப் பள்ளியை நடத்தி வருகிறார். இவர் அந்த கிராமத்தின் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இதுகுறித்து பங்கர் கூறும்போது, “என்னுடைய முயற்சியால் இந்த கிராமம் 100 சதவீதம் கல்வியறிவு பெற்றுள்ளது. மேலும் இவர்கள் மத்தியில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதுகுறித்து இந்தப் பள்ளியில் பயிலும் காந்தா கூறும்போது, “முதலில் பள்ளிக்கு வர தயங்கினேன். என்னைப் போன்ற பெண்கள் படிப்பதை அறிந்த பிறகு பள்ளியில் சேர்ந்தேன். இப்போது எனது தாய் மொழியில் (மராத்தி) எழுதப் படிக்க கற்றுக்கொண்டேன்” என்றார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

C5BQbxyUcAEwsKd.jpg இந்த தில் அந்த 122 பேர்க்கு இருக்கா???

 

C5B_1VPVYAE6BDB.jpg

அவன் "ஞானி"யாகத்தான் இருக்க முடியும்..

 

C5BU53BWMAAE7DC.jpg

ஏரியில் வீசப்பட்ட குழந்தையை காப்பாற்றி பசிக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண் போலிஸ் தாய்மையை போற்றுவோம்..

C4XYnZ-UoAEYp8q.jpg

 

C4RLTJtUoAEYNDD.jpg:large

 

 

C5CKoTLWIAAAAjy.jpg

 

  • தொடங்கியவர்

மாப்பிள்ளையாக சபதம் எடுக்கணுமா? - இது ட்ரெண்டி கல்யாணம்!

ந்தக் காலத்து ட்ரெண்டில் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டுமென்றால் ஒருவேளை இந்தத் தகுதியெல்லாம் எதிர்பார்ப்பாங்களோ? தட் கல்யாணம் நடந்த மாதிரி தான் மொமெண்ட்!

மூன்று முறை சபதம் எடுக்க வேண்டும் :

மாப்பிள்ளை

பொண்ணு பார்க்கப்போய் பொண்ணு பிடித்துப் போனால் தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் வேகமா ஒரு பஸ்ஸைப் பிடிச்சு சென்னை, மெரினாவுக்கு வந்திடணும். வந்துட்டு மூணு தடவை அம்மா சமாதியில் எனக்கு வர்றப்போற பொண்ணை நல்லாப் பார்த்துக்குவேன், கஷ்டப்படுத்த மாட்டேன், கேட்கிறதெல்லாம் வாங்கித் தருவேன் என்ற இந்த மூன்று சபதங்களும் செய்தால் மட்டுமே இந்தக் கல்யாணம் நடக்கும். டிசைன்ல இருக்கு பாஸ்! 

சொந்தமா ரிசார்ட் இருக்க வேண்டும் :

மாப்பிள்ளை

கல்யாணம் பண்ணனும்னா கோடி கோடியா சொத்துகள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒன்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு ரிசார்ட் மட்டும் இருந்தால் போதும். குடும்பத்துடன் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொண்டால் தப்பிக்கிறதுக்கு அங்கே போய் இருக்கலாம், லீவ் நாட்கள்ல குழந்தை குட்டியோட அங்கே போய் சந்தோஷமாக இருக்கலாம், சம்மர் காலங்களில் ஜாலியாக நீச்சல் குளத்தில் குத்தாட்டம் போட்டுச் சூட்டை தணிக்கலாம். இது போன்று நிறைய விஷயங்களைச் செய்யலாம். 

காளையை அடக்க வேண்டும் :

மாப்பிள்ளை

ஜல்லிக்கட்டு தடை நீங்கிய பிறகு இதுவும் நடைமுறைக்கு வந்தாச்சு. பொங்கல் பண்டிகையில் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நடக்கும். முக்கியமாக மதுரைப் பக்கம் போய் பார்த்தால் சின்னச் சின்ன கிராமங்களில்கூட ஜல்லிக்கட்டு நடக்கும். அதுக்கெல்லாம் பயிற்சி எடுத்து மாட்டை அடக்கினால்தான் கல்யாணம் ஆகும் ஃப்ரெண்ட்ஸ். காளையை அடக்குங்க... கல்யாணம் பண்ணுங்க. 

தியானம் செய்ய வேண்டும் :

மாப்பிள்ளை

தியானம் செய்தால் உடலுக்கு மட்டும் நல்லது இல்லை. கல்யாணமெல்லாம்கூட நடக்குமே. எப்படியும் கல்யாணம் ஆன பிறகு சண்டையெல்லாம் நடக்கும், நிறைய டென்ஷன்கள் வந்து போகும். எனவே அதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் இந்தத் தகுதி. கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணணும்னு தியானம் பண்ண வேண்டும். பண்ணின பிறகு ஏன்டா பண்ணோம்னு தியானம் பண்ண வேண்டும். இப்போ இருந்தே ஆரம்பிங்க மக்களே. பின்னாடி யூஸ் ஆகும்.

கமல் ட்வீட்டிற்கு அர்த்தம் சொல்ல வேண்டும் :

மாப்பிள்ளை

மேற்கூறிய அனைத்தையும் ஏதாவது குரங்கு பல்டி அடித்துக்கூடச் செய்துவிடலாம். ஆனால் இது நம்ம பசங்களுக்கு சவாலான ஒரு காரியம்தான். ஏனென்றால் விடை தெரியாத கேள்விகளுக்குக்கூட ஏதாவது விடை சொல்லித் தப்பித்து விடலாம். ஆனால் கமல் போடும் ட்வீட்டுகளுக்கு கேள்வியே தெரியாதே. அப்படி ஒவ்வொன்றும் வேற லெவல் ப்ரோ. இவர் போடும் ட்வீட்டுகளுக்கு அர்த்தம் சொன்னால்தான் கல்யாணம் என்றால் எவருக்குமே கல்யாணம் என்பது கனவுதான். 

மணவறையில் கிழிந்த சட்டையுடன் உட்கார வேண்டும் :

மாப்பிள்ளை

கல்யாண நேரம் கைகூடி வரும்போது தாலி கட்ட மணவறையில் உட்கார்ந்திருக்கும்போது சட்டையைக் கிழித்துக்கொண்டுதான் உட்கார வேண்டும். அது அவரது அரசியல் வாழ்க்கைக்கு ஒரு பிள்ளையார் சுழியாகக்கூட இருக்கலாம். அதோடு பாவம் மாப்பிள்ளை கிழிந்த சட்டையுடன் இருக்கிறார் என்று பார்ப்பவர்கள் மத்தியில் சிம்பதி க்ரியேட் பண்ணி மொய் பணமும் கொட்டோ கொட்டுனு கொட்டும். அப்படியே ஃபேஸ்புக்ல போடும் மீம்களுக்கும் டெம்ப்ளேட் ஆகிவிடலாம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இந்தியா, உலகுக்கு அளித்த நன்கொடைகள்!

 

உலகில் எவ்வளவோ நாடுகள், எத்தனையோ வகையான மக்கள், எண்ணற்ற மொழிகள் இருந்தாலும், இந்தியா என்றாலே எப்போதும் ஸ்பெஷல்தான். நமது இந்தியா உலகுக்கு மொழி, கலாசாரம், பண்பாடு மற்றும் அறிவியல்  என அளித்த நன்கொடைகளைப் பற்றி ஒரு சிறுபார்வை.

இந்தியா

 

* கணித எண் முறை இந்தியாவில்தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இன்று கணினிகளுக்கெல்லாம் அத்தியாவசியமாகிவிட்ட பூஜ்ஜியம் ஆர்யப்பட்டரால் கண்டுபிடிக்கப்பட்டதே.

* உலகின் முதல் பல்கலைக்கழகம் கி.மு.700-ல் தட்சசீலத்தில் நிறுவப்பட்டது. உலகெங்கிலும் இருந்து வந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள்  பல்வேறு துறைகளில் இங்கு கல்வி கற்றனர்.

* கி.மு. 4-ம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட நாளாந்தா பல்கலைக்கழகம் கல்வித்துறையில் பண்டைய பாரதத்தின் மிகப்பெரும் சாதனையாக வரலாற்று ஆய்வாளர்களால் பார்க்கப்படுகின்றது.

 

குமரிமுனை

* உலகில் தோன்றிய முதல் மருத்துவ முறை. சித்த மருத்துவ முறையாகும். இது பழந்தமிழ்நாடான குமரிக் கண்டத்தை தொடர்ந்து, தற்போதைய தமிழகம் மட்டுமல்லாமல் உலகின் பல பாகங்களிலும் மக்கள் நலத்தைப் பேணி வருகின்றது. 

* அகத்தியரின் சீடர்களில் ஒருவரான தேரையர், ஒரு மனிதனின் கபாலத்துக்குள் சென்றிருந்த தேரையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி இப்பெயரைப் பெற்றார்.

.கல்வி

* ஆயுர்வேத மருத்துவ முறை 2,500 வருடங்களுக்கு முன்பே சரகரால் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.

* இன்றைய நவீன யுகத்தின் பிரதிபலிப்பு இந்தியாவை ஏழ்மையான மற்றும் வளரும் நாடாகப் படம் பிடித்துக் காட்டினாலும், 17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டனின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் வரை பாரதம் செல்வச் செழிப்புள்ள நாடாகவே திகழ்ந்துள்ளது. மேற்கத்திய நாகரிகத்தை நாம் பின்பற்றத் தொடங்கிய பிறகுதான் நமக்குப் பற்றாக்குறை என்பதே தெரியவந்தது.

* கப்பலைச் செலுத்தும் கலையானது சுமார் 6,000 வருடங்களுக்கு முன்பே சிந்து நதிக்கரையில் பிறந்த ஒன்றாகும். நேவிகேஷன் (Navigation) என்ற சொல் 'நவ்கத்' (Navgath) என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்து வந்ததாகும். 'நேவி என்ற சொல்லும் 'நோவ் என்ற சமஸ்கிருதச் சொல்லின் பிரதிபலிப்பே.

* கி.பி 5-ம் நூற்றாண்டிலேயே பாஸ்கராச்சரியார், பூமி சூரியனைத் தன் சுற்றுப்பாதையில் சுற்றிவர ஆகும் நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறியுள்ளார். 

* 'உலக பொதுமறை' என அழைக்கப்படும் 'திருக்குறள்' தமிழ் மொழியில் எழுதப்பட்ட மிகச் சிறந்த நூலாகும். இதற்கு இணையான நூல் வேறொன்றுமில்லை என சொல்லதக்க வகையில் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய 'கலைக்களஞ்சியம்' இதுவாகும். இத்திருக்குறள் திருவள்ளுவரால் 2,000 வருடங்களுக்கு முன்பு இயற்றப்பட்டது.

சிதம்பரம் கோயில் 

 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஹேன்ஸ் ஸிம்மர், ஜான் வில்லியம்ஸ் - இரு இசைப் பிசாசுகள் (பிதாமகன்கள்) கதை..!

உங்களுக்கு இவர்களைத் தெரிந்திருக்கும். இல்லாவிட்டாலும் இவர்கள் இசை நமக்கு முன்னமே பரிட்சயமாகி இருக்கும். உலக அளவில் திரைப்பட இசையில் மிக முக்கிய பங்காற்றிய இரு வேறு இசைக் கலைஞர்கள் இவர்கள். நாம் பெரும்பாலும் ரசித்து அனுபவித்த ஃபேன்டசி, சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஹாலிவுட் திரைப்படங்களில் இவர்கள் நிச்சயம் இருந்திருப்பார்கள். அடுத்தடுத்த பாகங்களில் இயக்குனர்கள் மாறினால் கூட இந்த இசையமைப்பாளர்கள் மாற மாட்டார்கள். தங்கள் இசையின் மூலம் ஒரு காட்சியின் உணர்வுக்கு நிறம் பூசுகிற இந்த  இருவருக்கும் தனித்தனி ஸ்டைல் இருக்கிறது.

ஹேன்ஸ் ஸிம்மர் ஜான் வில்லியம்ஸ்- இசைப் பிசாசுகள்

" When words fail,music speaks"

           - Hans Christian Anderson

ஹேன்ஸ் ஸிம்மர் (Hans zimmer) 

ஹேன்ஸ் ஸிம்மர்

`பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்’ என்றவுடன் அந்த துள்ளலான தீம் நினைவுக்கு வருகிறதல்லவா! ஜேக் ஸ்பேரோவின் சாகசத்தையும், ஷெர்லாக் ஹோம்ஸின் துப்பறியும் நுணுக்கத்தையும், பேட்மேனின் கோதம் சிட்டியின் இருளையும், அதன்பிறகான எழுச்சியையும் தன் இசையின் மூலம் பேசியவர் ஸிம்மர். வாழ்ந்து கொண்டிருக்கும் நூறு அறிவாளிகள் பட்டியலில் இருக்கும் ஹேன்ஸ் ஸிம்மர் தான்  தனித்துவமான படங்களின் மூலம்,தரமான இயக்குநராய் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட கிறிஸ்டோபர் நோலனின் ஆஸ்தான இசையமைப்பாளர்.

`தின் ரெட் லைன்’, `கிளாடியேட்டர்’,  `தி லாஸ்ட் சாமுராய்’, `டாவின்சி கோட்’, நோலன் இயக்கிய `பேட்மேன்’ - மூன்று  பாகங்கள், `இன்செப்ஷன்’, `இண்டெர்ஸ்டெல்லார்’ என ஹாலிவுட்டின் டாப் மோஸ்ட் படங்கள் உட்பட 150 படங்களுக்கு ஸிம்மர் இசையமைத்துள்ளார். 1980 களிலிருந்து தன் இசையால் உலக அளவில் ரசிகர்களை மயக்கி வரும் ஹேன்ஸ் ஸிம்மர் வீட்டு, ஷோ கேஸில் (show Case) ஒரு ஆஸ்கர், நான்கு கிராமி விருதுகள், இரண்டு கோல்டன் க்ளோப் விருதுகள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

இன்னொரு சிறப்பான விஷயம்... ஸிம்மர் முறையான இசைப் பயிற்சிகளை விரும்பியவரல்ல. மியூஸிக் பள்ளிக்குக் கூட செல்லாத ஸிம்மர், இசையில் செய்த மாயம் ஏராளம். `Gladiator’ திரைப்படத்தின் `Now We Are Free’ தீம் நம் மனதை உருகி ஓடவைக்கும் (பாலாஜி சக்திவேல் இயக்கிய சாமுராய் படத்தில் இதே இசையை எடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் பயன்படுத்தி இருப்பார்)

டாவின்சி கோட் படத்தின் Sang Real Theme, ரகசியங்கள் அவிழ்க்கப்படும்போது நம்மை அறியாமல் உணர்வெழுச்சியை ஏற்படுத்தி கரைய வைக்கும். `ஷெர்லாக் ஹோம்ஸ்’ படத்தின் `Romanian Holiday’ தீம் ஏற்படுத்தும் பூரிப்பை ஒரு வகையில் அடக்க முடியாது. மனதை இரண்டாகப் பிரித்து நடுவே தாண்டவமாடும் இசை அது. இப்படி ஏராளம் சொல்லலாம். காட்சியின் பின்னெழும் இசைக்கு மிக முக்கிய கடமை அந்த காட்சியின் உணர்வைப் பாதிக்காமல் இருப்பது. ஒரு திரைப்படத்தில், சில காட்சிகளில் இசை பேசும். சில இடங்களில் அமைதியே மேல். ஆக, எந்த இடத்தில் பின்னணி தேவை, எந்த இடத்தில் தேவையில்லை என்ற விஷயங்களில் ஹேன்ஸ் ஸிம்மர்  உச்சம் தொட்டவர்.

ஜான் வில்லியம்ஸ் (John Williams)

ஜான் வில்லியம்ஸ் -

ஸிம்மரை விட சீனியரான ஜான் வில்லியம்ஸ் வாங்கியவை  ஐந்து ஆஸ்கர்கள்  (ஆஸ்கருக்கு ஐம்பது முறை நாமினேட் ஆனது தனிக்கதை), நான்கு கோல்டன் க்ளோப், 23 கிராமி!  ஸிம்மருக்கு நோலன் என்றால், ஜான் வில்லியம்ஸுக்கு ஸ்பீல்பெர்க். 1952-ல் இருந்து இன்று வரை இசையமைத்து வரும் இந்த 85 வயது ஜான் வில்லியம்ஸ்,  E.T ,Schindler's list தொடங்கி சமீபத்தில் வெளிவந்த BFG வரை ஸ்பீல்பெர்க்கின் திரைபடங்களுக்கு வலு சேர்த்தவர். இவர் வாங்கிய ஐந்து ஆஸ்கர்களில் மூன்று விருதுகள் ஸ்பீல்பெர்க் படங்களுக்கு வழங்கப்பட்டதுதான். உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற துப்பறியும் அகழ்வாராய்ச்சியாளர்  இண்டியானா ஜோன்ஸுக்கு இவர் போட்ட தீம், உலகின் அனைத்து இண்டியானா ஜோன்ஸ் ரசிகர்களை துள்ளி எழ வைக்கும்.

`ஸ்டார் வார்ஸ்’, `ஹோம் அலோன்’, `ஹாரிப்பாட்டர்’ என ஜான் வில்லியம்ஸ் இசையமைத்த படங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை. ஹாரிப்பாட்டரின் இசை பற்றி சொல்லவே தேவையில்லை. ஹாக்வேர்ட்ஸ் ஸ்கூல் பிரம்மாண்டமாய் காட்டப்பட்டு ஸூம் இன் ஆகும் போது வரும் ஹெட்விக் தீம் இன்றும் உலகெங்கிலும் உள்ள ஹாரிப்பாட்டர் ரசிகர்களை எப்போது எங்கு கேட்டாலும் மெய்சிலிர்க்க வைத்துக் கொண்டிருக்கிறது.

`ஜூராஸிக் பார்க்’ முதல் பாகத்தில் முதன்முதலாக டைனோசார் காட்டப்படும் காட்சியின் பின்னணி இசையைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். 1992-க்கு முன் வரை கிங்காங் உள்ளிட்ட படங்களில் பொம்மைகள் போல் காட்டப்பட்டு வந்த டைனோசாரை, மக்கள் முதன்முதலில் ஒரிஜினலுக்கு மிக அருகில் உள்ள உருவ அமைப்பில் தியேட்டரில் `ஜூராசிக் பார்க்’ படத்தின் முதல் காட்சியில்தான் பார்த்தார்கள். மிக நீண்ட கழுத்துடைய அந்த சைவ உண்ணி டைனோசாரை மக்கள் காணும் போது பின்னணியில் எழுந்த வயலின் இசை அத்தனை மக்களையும் இன்ப அதிர்ச்சியின் உச்சத்தை தொடவைத்தது.

இசை தான் நம்மை என்னென்ன செய்கிறது! 

இந்த இருவேறு இசைப்பிசாசுகள் உண்மையில் திரைப்பட பின்னணி இசையிலும் வேறொரு பரிமாணத்தை தொட்ட பிதாமகன்கள். என்றாவது இவர்கள் இசையை நாம் கேட்க ஆரம்பித்தோம் என்றால் நம் கை பிடித்து அழைத்துச் செல்வார்கள்.

"Without music, Life would be a mistake"

                   - நீட்ஷே

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

'எம்பெருமான் வாக்கு... அப்படிப் போட்டுத் தாக்கு!' - TPL ஏல கும்மாங்குத்து

.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு நடைபெறும் ஏலம் போல தமிழக அரசியல்வாதிகளையும் வைத்து டி.பி.எல் (TPL) ஏலம் நடத்தப் படுகிறது. ஏலத்தொகையாகத் தொகுதிகளை நிர்ணயித்தால், அவர்களை எந்தெந்தக் கட்சிகள் ஏலத்தில் எடுக்கும் என எக்குத்தப்பாக யோசித்துப் பார்த்தோம். கொஞ்சம் இல்லை ரொம்பவே ரணகளமாத்தான் இருக்கு... 

TPL

ஏல விதிமுறைகள் : (1) சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர்கள் ஏலத்தில் கலந்துகொள்ளும் தகுதியை இழக்கிறார்கள். 
(2) அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் அவர்களின் விருப்பத்தின் பேரில் ஏலத்தில் கலந்துகொள்ளலாம். 
(3) ஏலத்தொகைக்குப் பதில் தொகுதியை வைத்து மட்டுமே கேட்க வேண்டும். (டிஜிட்டல் இந்தியா)

பெரிய தலைகள் அரங்கில்கூட, தமிழ்நாடு பொலிடிகல் லீக் (TPL) ஏலம் தொடங்குகிறது. ஏலத்தில் விடப்படுபவர்கள் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். முதல் வரிசையிலிருந்து ஏலம் தொடங்குகிறது. நாஞ்சில் சம்பத், சீமான், தா.பாண்டியன் என அரசியல் கட்டதுரைகள் அனைவரும் அமர்ந்திருக்கிறார்கள். 

" சசிகலா முதல்வராகக் கட்சி ஆதரவு இருக்கும்போது மக்கள் ஆதரவு எதுக்கு? " எனக் கருத்தாழமிக்கக் கேள்வியை மக்களின் மூக்கைக் குறிவைத்துக் கேட்ட நாஞ்சிலார்தான் முதல் ரவுண்டு ஏலத்திற்கு வருகிறார். சொல்வித்தைப் புரியும் சொல்லின் செல்வரைச் சொந்தக்கட்சிக்காரர்கள் விட்டுக்கொடுக்க மனமில்லாமல் ஏலத்தில் கேட்கிறார்கள். ' எந்த ஊர் ஆளா இருந்தாலும் எங்க கட்சிக்கு வந்து சென்னையில் நின்னாக்கூட ஜெயிக்கலாம். கோகுல இந்திராவே ஜெயிச்சு அமைச்சரான அண்ணாநகர் தொகுதிக்கு அண்ணன்தான் வேணும்' என அடம்பிடிக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். நாசா 'ம்ம்ஹூம்... இல்லப்பே அது முடியாதுப்பே..' எனத் தலையை ரெண்டுபக்கமும் ஆட்ட, தி.மு.க-வினர் திகுதிகுவெனக் குதிக்கிறார்கள் ஏலத்தில்... 

அண்ணன் பிறந்த நாஞ்சில் மண்ணையே வரும் தேர்தலில் அன்பளிப்பாக அவருக்குத் தருகிறோம் எனக் கேட்க, யோசிக்கிறார் சம்பத். 'அப்படியே ட்ராவல் பேட்டாவோட ஒரு இன்னோவா..' என மறுபடியும் கண்ணைக் காட்ட, 'சரிடே... அப்படியே ஒரு அஞ்சு உளுந்தவடை கட்டிக்கொண்டாந்துடுடே தம்பி...' என்றபடி அதே இடத்திலேயே அணி தாவுகிறார் நாஞ்சிலார். 

அடுத்த ஆள் சீமானை அவையில் இறக்க, கொதிக்கும் ரத்தத்தை உறையவைத்துக்கொண்டு வழக்கத்தை மீறி அமைதியாக அமர்ந்திருக்கிறார். அ.தி.மு.க அவருக்கு ஏற்கெனவே நின்ற கடலூர் தொகுதியைத் தருவதாகச் சொல்ல, 'ஏன்ணே... அங்க வாங்கினது பத்தாதா..?' எனப் பாவமாகப் பார்க்கிறார். தி.மு.க உள்ளே குதித்து, தனி ஈழம் வேண்டிப் போராடும் தம்பிக்கு ராமேஸ்வரம் தொகுதியைக் கொடுப்போம். அப்படியே அவர் வெற்றி பெற்றதும், ராமேஸ்வரத்தைத் தலைநகராக்கி பாம்பன் வரைக்கும் கோட்டைப் போட்டு பார்டரைத் தனி நாடாக்குவோம். தமிழனை ஆட்சியமைக்க வைப்போம்' என அவர் போக்கிலேயே போய்ச் சூளுரைக்க, 'ஐ இந்த டீலிங் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு...' என ஒத்துக் கொள்கிறார். 

இரண்டாவது வரிசையில் ஓரமாக ஒளிந்திருக்கும் சிவப்புத்துண்டைக் கூப்பிட்டு முன்னால் அமரவைக்கிறார்கள். ஏலம் தொடங்குகிறது. 'தோழருக்கு மாநகரத்தில் ஒரு சீட்டு நிச்சயம்; மேற்கொண்டு அவர் கேட்பதைத் தருவது லட்சியம்' எனச் சொல்லி இந்த முறை தி.மு.க-வே ஆட்டத்தை அரம்பிக்க, மண்டையைச் சொறிகிறார் தோழர். 

அ.தி.மு.க ஆட்கள் குறுக்கே புகுந்து,  'கொள்கைமாறாத் தலைவனுக்குக் கோட்டைக்குப் போகும் ஆசையெல்லாம் இருக்காது. ஆளும்வரை அம்மா; அதற்குப் பின்னே சின்னம்மா..!' என்றழைக்க குதூகலமாக டெம்போவில் ஏறிக் குத்தவைக்கிறார் தா.பா.

டி.பி.எல்

ஞான சங்கரும் ரெண்டாவது வரிசையில் ஏலம்போகக் காத்திருக்கிறார். 'அநீதிகளை வெளக்குமாறைப் போட்டுக் கூட்டிப் பெருக்குவோம்' எனக் கொந்தளித்தவரைக் கூட்டிவந்து 'ஜாடிக்குத் தகுந்த மூடி. கழகத்தில் ஒரு கவுன்சிலர் பதவி' எனக் கவுத்து வண்டியில் ஏத்துகிறார்கள் அ.தி.மு.க-வினர்.

காதுக்கு மேலே தலையைச் சுற்றி ருத்ராட்சைக் கொட்டை சுற்றி ஒருவர் ஏலத்திற்கு வருகிறார். அறிமுகம் தேவைப்படாத அவரை 'முந்தாநாள் கனவுல சிவன் வந்து உங்களை திருவண்ணாமலை தொகுதியில் நிற்கச் சொன்னார்...' எனச் சொல்லிவிட்டு ஈஸ்வரா என மேலே பார்க்க, 'எம்பெருமான் வாக்கு... அப்படிப் போட்டுத் தாக்கு..!' எனத் தாளம்போட்டுக் கொண்டே அண்ணா நாமம் போட்ட வண்டியில் ஓடிவந்து தொற்றிக் கொள்கிறார் ஆதீனம். 

மூணாவது வரிசையில் அமர்ந்திருக்கிறார் கருப்புத் தங்கம் நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால். 'நானும் மதுரைக்காரன்தாண்டா..!னு தொண்டை கிழியக் கத்தினவருக்கு, 'மதுரை மத்தி பார்சல்' என எடுத்த எடுப்பிலேயே ஒரு உடன்பிறப்பு கூடையைப் போட்டு மூட, பம்மியபடி அப்படியே திருட்டு வி.சி.டி ஒழிப்புத்துறையையும்... என இழுக்க, 'இந்தா வெச்சுக்க...' என அக்ரிமென்ட்டில் கையெழுத்து வாங்கி உள்ளே இழுத்துப் போடுகிறது தி.மு.க படை.  

'மணி இப்பவே ஆறாச்சு... என்னையும் கேளுங்கய்யா யாராச்சும்...' எனப் பின் வரிசையிலிருந்து ஒரு கொடூரமான குரல் ஒலிக்க, மிச்சம் இருப்பவர்களை அப்படியே விட்டுவிட்டு TPL ஏலக் கம்பெனிக்காரர்களும், கரைவேட்டிக்காரர்களும் தெறித்து ஓடுகிறார்கள். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

100p1.jpg

twitter.com/ZhaGoD:  இன்னிய தேதிக்கு ஓ.பி.எஸ் பக்கம் ஒண்ணாங்கிளாஸ் பையன் போனாக்கூட, `அருமை அண்ணன் குட்டிப்பையன் அவர்களே'ன்னுதான் வரவேற்பார்போல!

twitter.com/BoopatyMurugesh: `இந்த மாசம் ஏதாவது கவர்மென்ட் ஹாலிடே இருக்கா?’னு கேக்குறான். # இந்த மாசம் கவர்மென்ட்டே ஹாலிடேவுலதான்டா இருக்கு!

twitter.com/thoatta: ஏதோ நடக்கப் போகுது. அப்புறம் என்ன அதேதான், `ஒரு வாரத்துக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிவைத்துக்கொள்ளவும் :-))

twitter.com/roflmaxx: ஓ.பி.எஸ் இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு, சசிகலாவை ஒவ்வோர் இடமாக அனுப்புகிறார் # முதல் வெற்றி!

100p2.jpg

twitter.com/thoatta: மாஃபா பாண்டியராஜன் வந்தவுடனே ஓ.பி.எஸ் மைண்ட்ல இதுதான் தோணியிருக்கும், `எங்க பக்கமும் இங்கிலீஷ் பேச ஆள் இருக்கப்பு'!

twitter.com/Prabinraj1: அப்போலோ ரெட்டியும் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, `அப்போலோவில் ஜெயலலிதாவைப் பார்க்க, சசிகலா எங்களை அனுமதிக்கவில்லை'ன்னு பேட்டி கொடுக்கப்போறார் :)

twitter.com/naatupurathan: எது எப்படியோ, கூடியசீக்கிரமே மக்கள்கிட்ட நம்ம கருணாஸ் பொதுவெளியில் வாங்கபோறது கன்ஃபர்ம்!

twitter.com/BoopatyMurugesh:  ரிசார்ட்ல நைட் டின்னர் உப்புமானு ஓ.பி.எஸ் புரளியைக் கிளப்பிவிட்டா, இன்னும் பத்து பேர் ஓடி வர வாய்ப்பிருக்கு!

twitter.com/ashoker: நாமளே போய்ப் பார்த்துடுவோம். அவிய்ங்களை வரச் சொன்னா, வழியிலேயே இறங்கி ஓடிருவாய்ங்க. # அதானடா? அதேதான்க்கா!

100p3.jpg

twitter.com/VignaSuresh: அரசியலில் நிகழ்வது எதுவுமே தெரியாத ஒரு பேரலல் உலகம் இருக்கிறது. அதில் ஒரு ஜீவன் ஹோம்வொர்க் நோட்டை வீட்டில் விட்டுச் சென்றுவிட்டது!

twitter.com/thoatta:  `அ.தி.மு.க-வின் உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன்'னு சொன்ன மனிதக் கடவுள், கேப்டனின் கட்சியையா உடைச்சீங்க?

twitter.com/iindran: தமிழ்நாட்டோட பொறுப்பு ஆளுநர் குரலை, இதுவரைக்கும் யாராச்சும் கேட்டிருக்கீங்களா? வர வர செல்லக் குரலுக்கானத் தேடலாகவே நம்ம பொழப்பு போய்க்கிட்டிருக்கு!

twitter.com/roflkanth: `இன்னும் எவ்ளோ நாள் ரிசார்ட்ல இருக்கப்போறீங்க?'னு ஒரு கேள்வி... # அநேகமா ரிசார்ட் ஓனர்தான் பத்திரிகையாளர்களுக்கு இடையில் இருந்து கேட்டிருப்பார்.

twitter.com/athisha: ஜெ. தன்னுடைய ஊழல்களால் எம்.ஜி.ஆரைப் புனிதமாக்கினார். சசி-ஓ.பி.எஸ் வகையறா தங்களுடைய ஊழல்களால் ஜெ-வைப் புனிதமாக்குகிறார்கள்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
குழந்தைகள் கூட, நமக்கு ஆசான்கள் தான்
 
 

article_1487654142-poyupo.jpgகுழந்தைகள் எதனைச் செய்தாலும் அது அழகுதான். அவர்களின் குறும்புகளை இரசித்துப் பார்ப்பதற்கு ஆயிரம் கண்கள் போதாது.

நாங்கள் குழந்தைகளில் அதீதமான இரசனை உணர்வையும் அறிவையும் அவதானித்துப் பிரமித்துப் போகின்றோம்.

இன்று ஒரு வயதுப் பாப்பா, தொலைக்காட்சிப் பெட்டியை ‘றிமோட்’ மூலம் இயக்குகின்றது. அதன் மூலம் தொலைக்காட்சிப் பெட்டியின் இயக்கத்தை நிறுத்தியும் விடுகின்றது.

தனது இரண்டு வயதுக்குப் பல வார்த்தைகளையும் புரிந்த, அழகாக மழலை மூலம் வெளிப்படுத்தி எங்கள் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டுவிடுகின்றது.

இன்னும் ஒரு முக்கியமான விடயம், பெரியவர்களை விட, அன்பைப் பேதம் பார்க்காது அனைவரிடத்தும் பொழிகின்ற பண்பு, இயல்பிலேயே குழந்தைகளிடம் உண்டு. 

குழந்தைகள் கூட, நமக்கு ஆசான்கள் தான். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்த நாளில் இப்படியெல்லாம் இருந்து பாருங்களேன்! #MorningMotivation

Morning Motivation

ங்களை உற்சாகப்படுத்துகின்ற நிகழ்வுகள் என்னென்ன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த வகையில், உங்களுடைய நாட்களை நீங்கள் நகர்த்திச்சென்றால், எப்பவுமே சந்தோஷம்தானே? சரி, எப்படி எல்லாம் ஒவ்வொரு நாளையும் சிறப்பானதாக அமைத்துக்கொள்ளலாம் எனக் கொஞ்சம் பார்ப்போமா…

உங்களுடைய  லட்சியங்களை ஒவ்வொன்றாக எழுதிவைத்துக்கொண்டே வாருங்கள். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் அதை எடுத்துப் பார்க்க, உங்களது மூளை அதை நினைவில் வைத்துக்கொள்ளுமாம்.  சிம்பிளா சொல்லணும்னா, சத்தியராஜ்  ஒரு படத்தில் காலையில கண் விழிச்சதும் காதலியின் புகைப்படத்தை எடுத்துப் பார்ப்பாரே... அதே அதே!!

அடுத்ததாக, இன்றைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள். ஏனென்றால், இந்தக் காலைப்பொழுது இருக்கிறதே... இது ஒரு கடினத் தன்மையுடைய நேரம். இரவில் கண்ட கனவு,நேற்றைய நிகழ்வு என நம் மனதை அலைபாயவிடும். எனவே, அன்றைய நாளில் முக்கியமாகச் செய்யப்படவேண்டியவற்றை மட்டும் மனதில் பதியவைத்துக்கொள்வது அவசியம். 

உடற்பயிற்சியுடன் நாளை ஆரம்பிக்கலாம். ‘நம்முடைய மகிழ்ச்சியான தருணங்களை இழக்கச்செய்கின்ற கெமிக்கல் ரியாக்‌ஷனை ஃபீல் குட்-ஆகச் செய்கின்ற பயாலாஜிக்கல் ரியாக்‌ஷனாக மாற்றுவதே உடற்பயிற்சிகள்தான்" என்று சொல்கின்றன, அறிவியல் ஆய்வுகள். அது மட்டுமல்ல, இது உடலின் நன்னிலையிலான ஆரோக்கியத்தையும் அமைப்பையும் டபுள் டமாக்கா ஆஃபராகத்  தருகிறதாம்.

உங்களுடைய செயல்களை எல்லாம் ஒழுங்குபடுத்திக்கொள்ளப் பழகிக்கொள்ளுங்கள். சோஷியல் மீடியாக்கள்  எல்லாம் பல தகவல்களைத் தந்துகொண்டுதான் இருக்கும். இருப்பினும் அதையெல்லாம் கொஞ்ச நேரத்திற்கு ஆஃப் செய்துவிட்டு, முதலில் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பது நல்லது. 

கொஞ்சம் இடைவெளிகள் தரலாம், தப்பில்லை. ஒவ்வொரு பணியின்போதும்  ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வாக்கிங், ஒரு கப் டீ (அ) காபி போன்றவற்றுக்காக நேரத்தைச் செலவிடுங்கள். வேலையில் இன்னும் கிரியேட்டிவிட்டி கூடி, நீங்கள் ராக் ஸ்டார் ஆகலாம்! ஆனா ஒண்ணு பாஸ்!  ஒரு மணிநேரம் வேலைசெய்துவிட்டு, 10 நிமிடம் பிரேக் போகலாம். ஆனால், இருபது நிமிட  வேலைக்கு 10 நிமிட இடைவெளி விடக்கூடாது. அது தவறு. புரிஞ்சுதோ? 

உங்களுடைய மனதின் கவலைகளையும் நினைவுகளையும் உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் அடிக்கடி பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டிருந்தால், அழுக்கு சேர்ந்து, 'திமிரு' பட வடிவேலின் மண்டைபோல வீங்கிவிடும். பகிர்ந்து கொண்டால், உணர்வுகள் புதுப்பிக்கப்பட்டு ஆற்றலை உருவாக்கும். ஷேரிங் நல்லது! 

உடல் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள் ஃப்ரண்ட்ஸ்! உடல் ஆரோக்கியத்தைச் சீராக அமைத்துக்கொண்டால்தான், இன்று நாம் நன்றாக இருக்கிறோம் என்கிற நிறைவுணர்வு ஏற்படும். உங்களுக்கு எது பொருந்துமோ அதை அணியுங்கள். இயற்கையாகவே அது உங்களுக்கு நல்ல மன ஓட்டத்தைக் கொடுக்கும். 

ஒவ்வொரு நாளும், உங்களை நீங்கள் புதுப்பித்துக்கொண்டே இருங்கள். எல்லோரும் எல்லாமும் கற்றிருக்கவில்லை. நாம் ஒன்றில் வெற்றிகொண்டால், அதோடு அதை நிறுத்திக்கொள்ளக் கூடாது. அதன் அடுத்த பாதையை நோக்கி நகர்ந்து செல்ல வேண்டும். அடுத்த நிலைக்கான மைல்கற்கள் உண்டு என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.  துணிக் கடைகளில் பொம்மைகளுக்கு ஓர் ஆடை நன்றாக இருக்கிறதென்றால், அதை அப்படியேவா விட்டுவிடுகிறார்கள். நாளுக்கு நாள் உடைமாற்றி அழகு பார்க்கிறார்கள் அல்லவா... அது போலத்தான். 

ஒரு செயலில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்றால், முழுக்க முழுக்க அந்த நாள் முழுதும் அதிலேயே இருக்க வேண்டும் என்பதில்லை. கொஞ்சம் சிரிப்பு,கொஞ்சம் கலகலப்பு எல்லாமே இருக்கலாம்.   

ஒவ்வொரு நாளிலும் 24மணி நேரமுண்டு. அதில் ஒரு மணி நேரத்தைப் புதிய செய்தி ஒன்றை அறிந்துகொள்ள முயற்சி செய்யலாமே? இது, உங்களது சுய தரத்தை மதிப்பீடுசெய்யும்  நம்பிக்கையைக் கொடுக்கும்.

வாழ்க்கையில இன்பதுன்பம் இருக்கத்தான் செய்யும். ஆனா அதுக்காக, சோர்ந்துட்டோம்னா சுவாரஸ்யமே இல்லாம இருக்கும். புதிய களங்கள் எப்போதுமே நமக்காகக் காத்திருக்கிறது. நாம்தான் அதில் பயணிக்க முனைப்புக் காட்டவேண்டும். அதேபோல எல்லா நெடிய பயணங்களும் ஒரு அடியில்தானே துவங்கும். முதல் அடியை எடுத்துவைக்க நீங்கள் தயாரா? 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

முகம் மட்டுமல்ல... குரலும் எங்களுடையதுதான்... நடிகைகள் பாடிய பாடல்கள்!

நடிகை

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடிகைகள் முத்திரை பதித்து வருகின்றனர். சிறந்த நடிப்பு, நடனம், வசனம், இயக்கம் எனப் பல பிரிவுகளில் நடிகைகள், ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிடுகின்றனர்.

பாடல்கள் பாடுவதிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர் நடிகைகள். பழம்பெரும் நடிகை பானுமதி தொடங்கி இன்றைக்கு ஆண்ட்ரியா வரை நடிப்பதோடு, பாடல்களைப் பாடுவதிலும் ஜொலிக்கின்றனர். அவற்றில் சிலரின் பாடல்கள் இதோ!

பானுமதி:

'அன்னை' திரைப்படம் 1962 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படத்தை கிருஷ்ணன் - பஞ்சு இயக்கினர். இந்தப் படத்தில் நடிகை பானுமதி பாடிய 'பூவாகி காயாகி கனிந்த மரம்' என்ற பாடல் ரசிகர்களைக் கவர்ந்த பாடல்:

 

 

ஜெயலலிதா:

கே.சங்கர் இயக்கி, 1969 ஆம் ஆண்டு வெளியான படம் அடிமைப் பெண். இதில் ஜெயலலிதா பாடிய 'அம்மா என்றால் அன்பு' எனும் பாடல் இன்றுவரை ரசிகர்களால் விரும்பி கேட்கப்படும் பாடல்.

 

 

மனோரமா:

பழம்பெரும் நடிகையான மனோரமா பல பாடல்களைப் பாடியுள்ளார். பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மே மாதம் திரைப்படத்தில் இவர் பாடிய 'மெட்ராஸைச் சுத்திப் பார்க்கப் போறேன்' பாடலைச் சிறப்பாக பாடியிருப்பார்.

 

 

ஷாலினி:

சின்ன வயதிலேயே திரைத் துறையில் நுழைந்தவர் ஷாலினி. பேபி ஷாலினியாக எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர். பின்னர், ஷாலினி கதாநாயகியாக நடித்த அமர்க்களம் பெரும் வெற்றிப் பெற்றது. அதில் 'சொந்தக் குரலில் பாட' எனும் பாடலைப் பாடினார். இதுவே அந்தப் படத்தில் இவரின் அறிமுகக் காட்சிப் பாடலாக அமைந்திருந்தது.

 

 

ஆன்ட்ரியா:

நடிப்பிலும் பாடல் பாடுவதில் அசத்தி வருபவர் ஆன்ட்ரியா. தான் நடிக்கும் படங்களில் மட்டுமல்லாமல் மற்ற படங்களிலும் பாடிவருகிறார். 'கோவா' படத்தில் 'இதுவரை இல்லாத' எனும் பாடல் பலரின் ஃபேவரைட். இவர் கதாநாயகியாக நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் பாடிய இந்தப் பாடலும் ஹிட்.

 

 

ஸ்ருதி ஹாசன்:

இசையில் தனி கவனம் செலுத்தி வரும் ஸ்ருதி, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பாடியுள்ளார். தேவர் மகனில் 'போற்றி பாடடி பெண்ணே' பாடல் பாடியபோது இவருக்கு வயது 6. விஜயுடன் சேர்ந்து நடித்த 'புலி' பாடத்தில் அவரோடு இணைந்து பாடிய இந்தப் பாடல் செம ஹிட்.

 

 

  • தொடங்கியவர்

வங்கதேசம் உதிக்க காரணம் தாய் மொழிப்பற்று! #InternationalMotherLanguageDay #தாய்மொழிதினம்

மனிதன் கண்டுபிடித்த அற்புதமான விஷயங்களில் மொழிகளுக்குதான் முதலிடம். தாய்மொழி இல்லையென்றால் நாம் என்ன செய்வோம்... யோசித்துக் கூட பார்க்க முடியாது. உலகில் செழுமையும் பழமையும் கலந்த பல மொழிகள் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ், சமஸ்கிருதம் போன்றவை முதன்மையானவை. எழுத்துரு இல்லாத மொழிகள் எளிதில் மக்களிடையே இருந்து மறைந்து விடும். புத்தர் பேசிய மகாதி மொழி கூட அப்படித்தான் அழிந்து போனது.

வங்கதேசத்தின் தாய் மொழி பற்று

இந்த நூற்றாண்டுக்குள், இன்னும் பல பழமையான மொழிகள் அழிந்து போகும் நிலையில் உள்ளன. மொழிகளைக் காக்க உலகம் முழுக்க பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன. இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன.  ஒரு மொழியைத் திணிப்பது இன்னொரு மொழியை அழிப்பதற்குச் சமம் என்பதுதான் பொதுவான நம்பிக்கை. அதனால், தங்களது விருப்பத்தை மீறி ஒரு மொழி திணிக்கப்படும்போது போராட்டங்கள் வெடிக்கின்றன. 

இன்று உலக தாய் மொழி தினம். இப்படி ஒரு தினம் பிறக்கக் காரணமாக அமைந்ததும், ஒரு போராட்டமும் உயிர்  தியாகமும்தான். 
வங்க தேசம் என்றால் உடனே 1971-ல் நடந்த போர்தான் நமக்கு நினைவுக்கு வரும். பாகிஸ்தானிடம் போரிட்டு வங்கதேசம் என்ற நாட்டை உருவாக்கியது இந்தியாதான். ஆனால், அந்த பிரிவினைக்கான போராட்டம் வெடிக்க முக்கிய காரணமாக இருந்தது வங்கதேச மக்களின் தாய் மொழிப்பற்று. இயற்கையாகவே வங்க தேசம் நம் மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள பகுதி. அதனால்தான் மேற்கு வங்கம், கிழக்கு வங்கம் என முன்னர் அழைப்போம். இங்கு வசிக்கும் பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள் என்றாலும் அவர்களது தாய்மொழி வங்காளம். அதே வேளையில் பாகிஸ்தானில் வசிக்கும் மக்களின் தாய் மொழி உருது.

பாகிஸ்தான் விடுதலைக்குப் பிறகு, பாகிஸ்தான் முழுமைக்கும் உருது தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டது. மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் இரண்டுக்குமே உருது மட்டுமே தேசிய மொழி என சட்டம் இயற்றப்பட்டது. பாகிஸ்தான் நாட்டு கரன்சியில் இருந்து வங்க மொழி அகற்றப்பட்டது. பாகிஸ்தான் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், வங்க மொழியை அங்கீகரிக்கப்பட்ட மொழியில் இருந்து நீக்கியது 

இதனால் கிழக்கு பாகிஸ்தானில் வங்க மொழியை தாய்மொழியாகக் கொண்ட மக்கள் கடும் கோபம் கொண்டனர். 1947 செப்டம்பர் 15-ல் தாய் மொழியைக் காக்க வேண்டுமென கருதி Tamuddun Majlish என்ற அமைப்பு உருவானது. வங்க மொழியைச் சேர்ந்த எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் போராட்டத்தைக் கையில் எடுத்தனர். இந்த அமைப்பின் தலைவராக டாக்கா பல்கலையின் இயற்பியல் பேராசிரியர் அபுல் காசிம் என்பவர் இருந்தார். மாணவர்களிடையே போராட்ட குணத்தை விதைத்தார். மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். களம் சூடானது.

போராட்டம் தீவிரமடையவே,  1948 மார்ச் 19-ல் பாகிஸ்தான் அதிபர் முகமது அலி ஜின்னா, டாக்கா வந்தார். மார்ச் 24-ல் டாக்கா பல்கலைக்கழகத்தில்  மாணவர்களிடையே ஜின்னா உரையாற்றினார். அப்போது, ''முஸ்லிம்களைப் பொறுத்தவரை உருதுதான் ஒரே மொழி. அதனை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு விரோதிகள்''  என்றார். பின்னர் மாணவர்களிடத்திலும் தேசிய மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பேசினார். ஆனால், மாணவர்கள் மசியவில்லை. 1947-ம் ஆண்டு தொடங்கிய போராட்டம் நடந்து கொண்டேதான் இருந்தது. இந்தப் போராட்டத்தில் 'வங்கதேசத்தின் தந்தை ' என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானும் முக்கிய பங்காற்றினார். 

மாணவர்கள் போராட்டத்துக்கு டாக்கா மருத்துவப் பல்கலைக்கழகம்தான் முக்கிய ஸ்தலமாக இருக்கிறது என  பாகிஸ்தான் கருதியது. 1952 பிப்ரவரி 21-ம் தேதி அந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், முகமது சலாலூதீன், அப்துல் ஜபார், அப்துல் பெர்கத், ரிஃப்லுதீன் அகமது, அப்துல் சலாம் ஆகிய மாணவர்கள் பலியாகினர். உலகின் முதல் மொழிப்போர் தியாகிகள் இவர்கள்தான். மாணவர்கள் பலியானதையடுத்து, டாக்கா முழுவதுமே கலவரம் பரவியது. அடுத்த நாள் மக்கள் வெகுண்டெழுந்து போராட்டத்தில் குதித்தனர். அப்போதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 4 பேர் இறந்தனர். வங்கதேசமே ரணகளமாகிப் போனது. வங்க தேச அரசியல் தலைவர்களையும், மாணவர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

ஆயிரக்கணக்கானோர் துன்புறுத்தப்பட்டனர். ஆனாலும் மொழிப்பற்று மிக்க மாணவர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. 1954 மே 7-ம் தேதி வங்க மொழியை பாகிஸ்தான், அரசு மொழிகளில் ஒன்றாக அங்கீகரித்தது. 1956-ம் ஆண்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் வங்க மொழியை ஆட்சி மொழிகளுல் ஒன்றாக அங்கீகரித்து சட்டம் இயற்றியது. ஒரு கட்டத்தில் இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே போர் நடந்தது. 1971-ல் கிழக்கு பாகிஸ்தான் மேற்கில் இருந்து பிரிந்தது. தாய்மொழி மீது கொண்ட பற்றால் வங்கதேசம் என்ற புதிய நாடும் பிறந்தது. 

இன்று உலக தாய் மொழி தினம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

முட்டை ஓட்டில் பிரமாண்ட ஓவியம்... சத்யபாமா பல்கலைக்கழக மாணவி கின்னஸ் சாதனை..!

சத்யபாமா மாணவி கின்னஸ் சாதனை

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் பயிலும் நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவி மேரி சௌம்யா, 15,045 முட்டை ஓடுகளைப் பயன்படுத்தி பிரமாண்ட ஓவியம் வரைந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். 

சிறுவயதிலிருந்தே கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தவருக்கு முட்டை ஓடுகளின் மீது வரையப்படும் ஓவியங்களில் தனிப்பிரியம். பத்தாம் வகுப்பு படிக்கும்போதிருந்தே முட்டை ஓடுகளின் மீது வரைவதை பொழுதுபோக்காக வைத்திருந்தார். உலக அளவில் மிகப்பெரிய சுவரோவியம் அதுவும் முட்டை ஓடுகளைப் பயன்படுத்தி வரைந்தால் என்ன என்றொரு ஐடியா அவர் மனதில் ஃப்ளாஷ் அடிக்க உடனடியாக களத்தில் இறங்கினார். 

முட்டை ஓடுகளைத் தயார் செய்வது, வர்ணம் தீட்டுவது என தன் வேலையை இரண்டு பகுதிகளாக பிரித்துக் கொண்டு மொத்தம் நான்கு மாதங்கள் இந்த ஓவியத்தை உருவாக்க எடுத்துக் கொண்டார். 

unnamed_13500.jpg

முட்டையில் மஞ்சள் கரு, வெள்ளை கருவை நீக்குவது, நான்கு முறை கழுவுவது, காயவைப்பது என முட்டை ஓடுகளைத் தயார் செய்வதற்கே நாள் ஒன்றுக்கு ஆறு மணி நேரம் என நான்கு மாதங்களை செலவு செய்தார். பிறகு 288 சதுரஅடி ப்ளைவுட்டில் வரையத் தொடங்கினார்.  அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை முட்டை ஓடுகளில் வண்ணம் தீட்டி அதை ப்ளைவுட்டில் ஒட்டி “Just fill the Plate with the Right food” மற்றும் ”Fudo e Pretious” (Food is Precious) என்ற இரு வாசகங்கள் அடங்கிய ஓவியத்தை வரைந்து முடித்தார். இதை ஒட்டுவதற்கு மட்டுமே கிட்டத்தட்ட 30 கிலோ பசை தேவைப்பட்டது. 18 லிட்டர் பெயின்ட் உபயோகித்து 15,045 முட்டைகள் மூலம் உருவாக்கப்பட்ட இந்த பிரமாண்ட ஓவியத்தை,  “முட்டை ஓடுகளை வைத்து வரையப்பட்ட மிகப்பெரிய சுவரோவியம்” என்று கின்னஸ் புத்தகம் மற்றும் லிம்கா புத்தகம் இதனை அங்கீகரித்துள்ளன.

unnamed_%281%29_13217.jpgunnamed_%282%29_13493.jpg

இந்த ஓவியத்தினை தனது பெற்றோருக்கும், தனது கனவு நினைவேற துணை நின்ற சத்யபாமா யுனிவர்சிட்டிக்கும் அர்ப்பணிப்பதாக சௌம்யா தெரிவித்தார். 

http://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.