Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
பொருந்தாத ஆலோசனைகளால் பயனேதுமில்லை
 

article_1493004657-thirumana-vazhkai-magபிறரது விமர்சனத்துக்குப் பயந்து, தங்களது இயல்பான எளியவாழ்வு முறைமையில் இருந்து, நழுவி ஆடம்பர வாழ்க்கையினுள் நுழையும் குடும்பங்கள் ஏராளம்! ஏராளம்!!

கிராமத்திலிருந்து நகரத்தில் வாழத் தலைப்படும்போது, எக்காரணம் கொண்டும், தங்கள் சீரிய வாழ்க்கையினை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை.

பொருந்தாத ஆலோசனைகளால் பயனேதுமில்லை. மனம் விரும்பாமல், பிறர்போல் நடிக்க முற்பட்டால், புதுப்பிரச்சினைகள்தான் எழுந்துவிடும்.

ஜீரணிக்க முடியாத உணவினை, இந்த உடல் ஏற்றுக் கொள்வதுமில்லை. அவரவர்களுக்கு ஏற்றபடியே உணவுகளும் அமையும்.

கலாசாரப் பண்புகள் எங்கள் பரம்பரையுடன் இயைபுபட்டது. உள்மனம் ஆணித்தரமானதும் மென்மையானதுமாகும். எனவே, எமக்கு உகந்தபடி, பிறர் வியக்கும் வண்ணம், இயல்புடன் வாழ்வோமாக.

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உங்களுக்குள் இருக்கும் எதிரி யார் என்று தெரியுமா? #MorningMotivation

 
 

Morning motivation

கடினப்பட்டு வேலைசெய்து உங்கள் இலக்கை அடைய நினைத்தாலும் அடைய முடியவில்லையா... செய்யும் வேலைகளில் உங்களுக்கே நிறைவு இல்லையா? அப்படியெனில், உங்களுக்குள் மிகப்பெரிய ஓர் எதிரி இருக்கிறான். அவனை அழித்தால் மட்டுமே உங்களால் கனவு வாழ்க்கையை நினைவாக்கிட முடியும். அதற்கான #Morningmotivationதான் இது.

அந்த எதிரியின் பெயர் 'Sleep Inertia' என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் `தூக்கமின்மை'. இது, உங்கள் வேலையை மட்டும் பாதிக்கவில்லை... உங்களின் உடல்நலத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது. `பல் பிரச்னையில் தொடங்கி இதயப் பிரச்னை வரை பல நோய்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுப்பதே இந்தத் தூக்கமின்மைதான்' என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தத் தூக்கமின்மையை வெல்ல, ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது அதிகாலையில் எழுவது. “சீக்கிரம் எந்திரிச்சா எப்படிங்க நல்லா தூக்கம் வரும்? செம உடான்ஸா இருக்கே!” என்கிற உங்கள் மைண்ட்வாய்ஸ் எனக்கும் கேட்கிறது. ஆனால், அதுதான் உண்மை.  அப்படி அதிகாலையில் எழுவதற்கும், தூக்கமின்மையை வெல்வதற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவை....

  • 1. தேவை ஆழ்ந்த தூக்கம்:  முக்கியமான டிப்ஸ் என்பது, சீக்கிரம் தூங்குவது. “தூக்கம் வந்தா தூங்க மாட்டோமா... என்ன பாஸ்!” என உங்களின்  ஆதங்கம் புரிகிறது. ஆனால், தூக்கத்தை வரவழைக்க இன்றைய நவீன வாழ்க்கையில் சில விஷயங்களைச் செய்தாலே போதும். அதில் முதலில் செய்யவேண்டியது, உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே இரவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.  ஆழ்ந்த தூக்கம்கொள்ளும் பெரும்பாலானோர், இந்த முறையைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். 

  • 2. நெட்டு கட்டு: படுக்கைக்குப் போவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் சாப்பிடுவது எவ்வளவு நல்லதோ, அதே அளவுக்கு மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்வதும் நல்லது. ஆஃப் செய்ய முடியாது என்பவர்கள், குறைந்தபட்சம் வைஃபை மற்றும் மொபைல் டேட்டாவையாவது தயவுதாட்சண்யம் இல்லாமல் நிறுத்திவைப்பது நல்லது. கண்கள் சொருகும் நேரத்தில் அலெர்ட் டோனோ, நோட்டிஃபிகேஷன் சவுண்டோ அன்றைய தூக்கத்தின் பாதியைக் குறைக்கலாம். மேலும், தூங்கப்போகும் இரண்டு மணி நேரத்துக்கு முன் மொபைலை அப்பால் வைத்தால் தூக்கமின்மையை விரட்ட முடிகிறது என ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

  • 3. கொட்டாவிப் படிப்பு: `சாப்பிட்டாயிற்று... மொபைல் நெட் இல்லாமல் செய்தாயிற்று, தூக்கம் வரும் வரை டிவி பார்க்கலாம்' என ப்ளான் போடுகிறீர்களா? அதுவும் கூடாது. ஆனால், படிக்கலாம். இதுதான் சாக்கு எனக் கிண்டில், இ-புக் என எலெக்ட்ரானிக் ஏரியா பக்கம் போகவே கூடாது. புத்தகத்தில் வாசிக்கலாம். இல்லையென்றால் குடும்பத்துடன் பேசிக்கொண்டிருக்கலாம்.

  • 4. ஆரோக்கியமான உடற்பயிற்சி: இதுவரை நாம் படித்த  மூன்றையும் செய்யத் தொடங்கினாலே அதிகாலை விழிப்பு இலகுவாகிவிடும். 

  • இனி, காலையில் எழுந்தவுடன் செய்யவேண்டியது. உடனே ஃப்ரெஷ்ஷாகி வாங்கிங், ஜாக்கிங் அல்லது சைக்கிளிங் என உடலுக்குப் பயிற்சி கொடுப்பது. உடலில் உள்ள கலோரிகள் காலையில் செய்யும் உடற்பயிற்சிகளால்தான் அதிகம் எரிக்கப்படுகின்றன. 

  • 5. சன்னுக்கு ஹாய்:  காலையில் எழுந்தவுடன் வெளிச்சத்தை நோக்கிப் போக வேண்டும். வெளிச்சத்தை உணர்ந்தவுடன்தான் உங்கள் மனம் அலெர்ட் நிலைக்கு வரும். என்னதான் காலையில் சரியான நேரத்துக்கு எழுந்து யோகா, உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டாலும் இது முக்கியம். காலையில் எழுந்தவுடன் வெளிச்சத்தைப் பார்ப்பது இரவில் சரியான நேரத்துக்குத் தூக்கத்தைக் கொடுக்கும்.

  • 6. ஹெவி பிரேக்ஃபாஸ்ட்: முதல் நாள் இரவு எட்டு மணிக்குச் சாப்பிட்டிருப்பீர்கள். காலையில் பெயருக்கு எதையாவது வயிற்றுக்கு அள்ளிப் போட்டுக்கொண்டு, லன்ச் பாக்ஸில் சோற்றை அடைத்துக்கொண்டு ஓடாதீர்கள். காலையில் விரைவாக எழுவதால் பரபரப்பு இருக்காது. எனவே, காலையில் நிதானமாகச் சாப்பிடவும். மதியம் அளவாகச் சாப்பிட்டு வெயிட்டை பேலன்ஸ் செய்யலாம். 

 

மேலே தூங்குவதற்கான ஐடியாக்கள் மூன்று, தூங்கி எழுந்த பிறகு செய்யவேண்டிய மூன்று என ஆறு பாயின்ட்கள் உள்ளன. இவற்றில் மொபைல் நெட்டை எட்டு மணிக்கு கட் செய்தாலே தூக்கம் தன்னால் வந்துவிடும் என்பது சொந்த அனுபவ

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தமிழில் வெளியான முதல் புத்தகத்தின் நகலைக் காணலாமா?

 

நூல்களின் கால இயந்திரத்தில் பயணிக்க ஆசைப்படுபவர்கள், கன்னிமாரா நூலகத்தில் நடந்து வரும் '500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அரிய நூல்கள் கண்காட்சி'யில் கலந்துகொள்ளலாம். நம் வரலாற்றுடன், நூல்களின் பரிணாம வளர்ச்சியையும் காணும் வண்ணம், நூல்களை மலையாக அடுக்கி வைத்திருந்தார்கள்.

தமிழ், ஆங்கிலம், இந்தி  எனப் பல்வேறு மொழிகளைச் சார்ந்த நூல்கள் இந்த அரிய வகை நூல்கள் கண்காட்சியில் உள்ளன. தமிழில் வெளியான முதல் புத்தகத்தின் நகல் நம்மை வரவேற்கிறது. காந்தி பிறப்பதற்கு முன்பே இந்தியாவைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள் கண்ணாடிப் பெட்டிகளில் இருந்துகொண்டு கதை சொல்கின்றன. பிரிட்டிஷ் மாணவர்கள் தமிழகத்தில் நடத்திய ஆய்வுக் கட்டுரைகள், அந்தக் காலத்திலேயே அழகாகத் தொகுக்கப்பட்டு புத்தகமாக வந்திருக்கிறது. ஆங்கிலேயர்களின் 'அரசு புகைப்படக்காரர்'களால் எடுக்கப்பட்ட அன்றைய இந்தியாவின் பல்வேறு புகைப்படங்கள், 'கறுப்பு வெள்ளை'ப் படங்களாக காலம் கடந்தும் நிற்கின்றன. 

கன்னிமாரா நூலகம்

புகைப்படம் எடுக்க முடியாத காலகட்டங்களில்... இந்தியாவில் இருந்த பறவைகள், விலங்குகள், மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் ஓவியங்களாக வரையப்பட்டு தொகுப்பாக இருக்கிறது. ஓவியங்களோடு, ஒவ்வொரு உயிரினத்துக்கான விளக்கமும் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. தவிர, அடிமை இந்தியாவில் ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்புகள் புத்தக வடிவில் இருக்கிறது. அஜந்தா, எல்லோரா குகைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் நம்மைப் பின்நோக்கிக் கடத்துகின்றன.

அரிய நூல்கள் கண்காட்சி

1781-ம் ஆண்டு தரங்கம்பாடியில் நிறுவப்பட்ட தமிழகத்தின் முதல் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்ட 'ஞானமுறமைகளின் விளக்கம்' கன்னிமாரா பொதுநூலகத்தில் இருக்கும் பழைமையான நூல்களில் ஒன்று. திருச்சபை வழக்கங்களை விளக்கும் இந்நூல், இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கிறது. 1913-களில் தென்னிந்தியாவின் சிலை வடிவமைப்பாளர்களைப் பற்றிப் பேசும் புத்தகம் இருக்கிறது. இந்தியர்களின் கட்டடக்கலை பற்றிப் பேசும், 'இந்தியன் ஆர்கிடெக்சர்' புத்தகம் 1921-ல் வெளிவந்திருக்கிறது. இதுதவிர, டாவின்ஸியின் ஒட்டுமொத்த ஓவியங்களையும் உள்ளடக்கிய 'Leonardo da vinci - the complete paintings and drawings' புத்தகம் கண்காட்சியில் இருக்கிறது. 

தவிர, பண்டைய இந்தியாவின் நில அமைப்புகள், இயற்கை வளங்கள் குறித்த தொகுப்புகள், விலங்கியல், தாவரவியல் சார்ந்து வெளியான புத்தகங்களும் இருக்கிறது. 'மிலிட்டரி காஸ்ட்யூம்ஸ் ஆஃப் இந்தியா' என்ற புத்தகம், ராணுவ வீரர்களின் உடைகள் எப்படியெல்லாம் பரிணாமம் பெற்றது என்பதை விளக்கும் 'pigeons post' என்ற புத்தகம், இந்தியத் தபால் துறையின் பரிணாமங்களைக் கலர் கலர் படங்களில் விவரித்திருக்கிறது. ஓட்டத் தூதுவர்களாக இருந்த 'தபால்காரர்'கள் பயன்படுத்திய உடை, ஆயுதங்கள் எல்லாம் வாசிப்போடு சேர்ந்து பிரமிப்பையும் கொடுக்கிறது. 

அரிய நூல்கள் கண்காட்சி

பதினைந்து ரவுண்ட் டேபிள் போட்டு புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு புத்தகத்தின் வெளியே மட்டும் அட்டை போட்டு இருக்கிறார்கள். இதில், சில புத்தகங்கள் தொட்டாலே உதிரும் நிலையில் இருந்தாலும்... பெரிய மனசுக்காரர்களாக  அந்தப் புத்தகத்தைத் தொடவும், திருப்பிப்பார்த்து போட்டோ எடுக்கவும், ஏன் செல்ஃபி எடுக்கவுமே அனுமதிக்கிறார்கள்.  கண்காட்சியைப் பார்க்கப் பார்க்க... நம் தமிழ்நாட்டின் கடந்த கால சரித்திரத்தை, நிகழ்காலத்தில் நின்றபடியே அணு அணுவாகச் சுவைக்க முடிந்தது. ஆழ்கடலில் தேடித் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்களாக இருந்தது இந்த அரிய நூல்கள். 

கன்னிமாரா நூலகத்தின் இயக்குநர் மீனாட்சி சுந்திரம், "ஒவ்வொரு ஆண்டும் உலக புத்தக தினத்தை முன்னிட்டுதான் இந்தக் கண்காட்சியை நடத்துகிறோம். இந்த ஆண்டும் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அறிவுறுத்தலின்படி இந்தக் கண்காட்சி நடக்கிறது. எங்களிடம் அரிய நூல்கள்னு கிட்டத்தட்ட 25,000 நூல்களுக்கு மேல இருக்கிறது. அது அத்தனையும் வைக்க முடியாது என்பதால், அதில் தேர்ந்தெடுத்து 300 நூல்களை மட்டும் வைத்திருக்கிறோம். இந்த  நூல்களை, இந்தத் தலைமுறையினர் பார்க்க வேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கம். 

மீனாட்சி சுந்தரம்

இந்த கண்காட்சியில் 1545-ம் ஆண்டு வெளியான நூல்கள் முதல் 1920-ம் ஆண்டு வெளியான நூல்கள் வரை வைத்திருக்கிறோம். 1808-ம் ஆண்டு வெளியான பைபிள். 1858-ம் ஆண்டு மதுரை, புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். சென்னை மாகாண வரலாறு, இந்திய வரலாறு, கல்வி வளர்ச்சி போன்ற நூல்களும் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 23-ம் தேதி புத்தக தினம். அதில் இருந்து 29-ம் தேதி வரை கண்காட்சி நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். காலை 10.30 மணிமுதல் மாலை 5 மணி வரை இந்தக் கண்காட்சி நடக்கும். சென்னை மட்டும் இல்லாமல் பல ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து இந்தக் கண்காட்சியைப் பார்க்கவேண்டும்." எனத் தன் வேண்டுகோளையும் வைத்தார் மீனாட்சி சுந்தரம். 

அரிய நூல்கள் கண்காட்சி

 

பல அரிய நூல்களின் பக்கங்கள் உதிரும் நிலையில் உள்ளன. அதைக் கண்காட்சியில் பார்க்கும் பலரும் அவற்றைத் தொட்டுப்பார்க்கிறார்கள். புத்தகத்துக்கு அருகிலேயே ஊழியர்கள் நின்றாலும், பார்வையாளர்கள் நூல்களைப் புரட்டிப்பார்ப்பதும், புகைப்படம் எடுத்துக்கொள்வது, செல்ஃபி எடுப்பதுமாய் இருந்தார்கள். இவ்வளவு அரிய நூல்களை மக்கள் பார்வைக்கு வைப்பது பாராட்டுக்குரியது. வரும் வாசகர்களும் அதை உணர்ந்துகொண்டு, புரட்டிப்பார்க்கும்போதும்,  புகைப்படம் எடுக்கும்போதும் கவனமாகக் கையாள்வது மிக முக்கியம்! 

http://www.vikatan.com

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எலி பர்ஸ்!
2a.jpg
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஜேக் லோகன். 3டி டிசைன் படிக்கும் மாணவரான இவர், தன்னை நிரூபிக்க ஒரு காரியம் செய்திருக்கிறார். வேறொன்றுமில்லை. இறந்த எலியைப் பதப்படுத்தி, அதன் உடம்பில் பென்சில் பர்ஸ் தயாரித்து ஊரையே அலற வைத்திருக்கிறார்! எலிக் காய்ச்சல் இதன் வழியாகப் பரவாதாம்!

ட்ரைவிங் பண்ணாதீங்க! நூடுல்ஸ் தர்றோம்!

இப்படி எங்காவது போலீசே அறிவிக்குமா? ஜப்பானில் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கின்றன. காரணம், வயதானவர்கள் வண்டி ஓட்டுவது. இதை தடுக்கவே இந்த நடவடிக்கை. லைசென்ஸை போலீசிடம் கொடுத்துவிட்டால் கூப்பன் தருவார்கள். அதை வைத்து ‘கட்டை ரேட்’டுக்கு நூடுல்ஸ் வாங்கிச் சாப்பிடலாம்.

ஸ்டோன் ஃபுட்ஸ்!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் பக்கிரப்பா குனகுந்தி. இவருக்கு வயது 30. கடந்த 20 வருடங்களாக கல்லையும் மண்ணையும் மட்டும்தான் தினசரி உண்கிறார். ஒரு வேளைக்கு 3 கிலோ கற்களாம்!

நோ ஜீன்ஸ்!

இன்டர்நெட், ஆல்கஹால், டிவி, இசை இவையெல்லாம் இல்லாத நாடு ஒன் அண்ட் ஒன்லி வடகொரியா. இதனுடன் கூடவே இன்னொன்றுக்கும் ‘நோ’ சொல்லியிருக்கிறார்கள். அது, ஜீன்ஸ்! ஏன்? அமெரிக்காவின் அடையாளமாம்! அப்படியானால் ஜாக்கி ஜட்டியை என்ன செய்வது?!

பிறந்த நாளில் அரஸ்ட்!

டச்சுப் பெண் ஒருவரை போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர். ஏன்? தனது 100வது பிறந்தநாளை லாக்கப்பில் கொண்டாட வேண்டும் என்பது அந்த அன்னி பாட்டியின் ஆசை! அதைத்தான் காவலர்கள் தீர்த்து வைத்திருக்கிறார்கள். பின்னே, காவல்துறை உங்கள் நண்பன் என்றால் சும்மாவா?!

kungumam.co

  • தொடங்கியவர்

ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த கிஃப்ட்... நெகிழ்ந்த சச்சின்!

சச்சின் டெண்டுல்கருக்கு பிறந்தநாள் பரிசாக, 'சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்’ படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளார், ஏ.ஆர்.ரகுமான்.

sachin , a.r.rahman
 

சச்சினின் வாழ்க்கையை மையமாகவைத்து, ’Sachin: A Billion Dreams’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஜேம்ஸ் எர்ஸ்கின்  இயக்கத்தில் வெளியாக உள்ள இந்தத் திரைப்படத்துக்கு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.  இந்தப் படம், அடுத்த மாதம் 26-ம் தேதி வெளியாகிறது. நேற்று, சச்சினின் 44-வது பிறந்தநாள். சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. இந்த நிலையில், சச்சின் படத்தின் முதல் பாடலை தனது ட்விட்டரில் வெளியிட்டார், ஏ.ஆர்.ரகுமான். 

Here's the 1st song of @SachinTheFilm, my tribute to one of the greatest son of the soil @sachin_rt. Happy Birthday!http://bit.ly/Hind_Mere_Jind 

 

We’ve all been blessed by the Almighty to be the sons of India. Thanks for your amazing music which will continue to enthrall a billion ears https://twitter.com/arrahman/status/856504170332905477 

ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்த வாழ்த்துச் செய்தியில், “இது சச்சின் படத்தின் முதல் பாடல். இந்த மண்ணின் தலைசிறந்த மகனுக்கு இதைப் பிறந்தநாள் பரிசாக சமர்ப்பிக்கிறேன்”, என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

ரகுமானின் பாடலுக்கு நன்றி தெரிவித்துப் பதிவிட்டுள்ள சச்சின், 'இந்த மண்ணில் பிறந்தது கடவுள் கொடுத்த வரம். உங்கள் பாடல் கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் இனி ஒலிக்கும்' எனக் கூறியுள்ளார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

ஏப்ரல் – 25

 

1607 : எண்­ப­தாண்டுப் போர்: ஜிப்­ரால்ட்­டரில் டச்சுக் கடற்­ப­டை­யினர் ஸ்பானிய கடற்­படைக் கப்­பலைத் தாக்கி அழித்­தனர்.


1829 : மேற்கு அவுஸ்­தி­ரே­லி­யாவில் சார்ள்ஸ் ஃபிரெ­மாண்டில் சலேஞ்சர் என்ற கப்­பலில் வந்து தரை­யி­றங்கி சுவான் ஆற்று குடி­யேற்­றத்தை ஆரம்­பித்தார்.


1864 : அமெ­ரிக்க உள்­நாட்டுப் போர்: ஆர்­கன்சஸ் மாநி­லத்தில் இடம்­பெற்ற போரில் கூட்­ட­மைப்­பினர் பெரும் வெற்றி பெற்­றனர்.

varalaru-25-04-2017

1898 : ஐக்­கிய அமெ­ரிக்கா ஸ்பெயின் மீது போரை அறி­வித்­தது.


1915 : முதலாம் உலகப் போர்: அவுஸ்­தி­ரே­லியா, பிரித்­தா­னியா, நியூ­ஸி­லாந்து மற்றும் பிரெஞ்சுப் படைகள் துருக்­கியின் கலிப்­பொ­லியை முற்­று­கை­யிட்­டன.


1916 : அயர்­லாந்தில் இரா­ணுவச் சட்­டத்தை ஐக்­கிய இராச்­சியம் பிறப்­பித்­தது.


1945 : நாஸி ஆக்­கி­ர­மிப்பு இரா­ணு வம் வடக்கு இத்­தா­லியில் இருந்து வில­கி­யது.


1966 : உஸ்­பெ­கிஸ்தான் தாஷ்கெண்ட் நக­ரத்தின் பெரும் பகுதி நில­ந­டுக்­கத்தால் அழிந்­தது. 300,000 பேர் வீடு­களை இழந்­தனர்.


1974 : போர்த்­துக்­கலில் 40 ஆண்­டு­க­ளுக்கு மேலாக ஆட்சி செய்த பாசிச அரசு கவிழ்க்­கப்­பட்டு மக்­க­ளாட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.


1982 : கேம்ப் டேவிட் ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டையில் இஸ்­ரே­லியப் படைகள் முழு­வ­து­மாக சினாய் தீப­கற்­பத்தில் இருந்து வெளி­யே­றி­ன.


1983 : பய­னியர் 10 விண்­கலம் புளூட்டோ கிர­கத்தின் சுற்­றுப்பா­தையைத் தாண்டிச் சென்­றது.


1983 : ஹிட்­லரால் எழு­தப்­பட்­ட­தாகச் சொல்­லப்­படும் "ஹிட்­லரின் நாட்­கு­றிப்­புகள்" நூலின் முதல் பகு­தியை ஜேர்­ம­னியின் "ஸ்டேர்ன்" இதழ் வெளி­யிட்­டது.


1986 : சுவா­ஸி­லாந்தின் மன்­ன­னாக மூன்றாம் முசு­வாட்டி முடி­சூ­டினார்.


2005 : இத்­தா­லிய ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­களால் 1937 இல் திரு­டப்­பட்ட 1700-ஆண்­டுகள் பழ­மை­யான சதுர நினை­வுத்­தூ­பியின் கடைசித் துண்டு எதி­யோப்­பி­யா­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது.


2005 : ஜப்­பான் ரயில் விபத்தில் 107 பேர் உயி­ரி­ழந்­தனர்.

sarath-fonseka
2006 : கொழும்பில் இரா­ணுவத் தலை­மை­ய­கத்தில் தற்­கொ­லை­தா­ரி­யினால் மேற்­கொள்­ளப்­பட்ட குண்­டு­வெ­டிப்பில் அப்­போ­தைய இரா­ணுவத் தள­பதி சரத் பொன்­சேகா படு­கா­யம­டைந்­த­துடன் 9 பேர் உயிரிழந்தனர்.


2015 : நேபாளத்தில் ஏற்பட்ட 7.8 ரிச்டர் அளவிலான பாரிய பூகம்பத்தினால் சுமார் 9000 பேர் இறந்தனர். மேலும் 22,000 பேர் காயமடைந்தனர் 35 லட்சம் மக்கள் வீடுகளை இழந்தனர். 

 

http://metronews.lk

  • தொடங்கியவர்

'சிறுகதை மன்னன்' புதுமைப்பித்தன் பிறந்த தினம்!

 

புதுமைப்பித்தன்

தமிழ் இலக்கியத்தில் தனித்த புகழ்கொண்டவர், புதுமைப்பித்தன். தமிழ்ச் சிறுகதைகளின் பிதாமகனாகக் கொண்டாடப்படுபவர். எளிமையான மொழிநடையில், நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் எழுதி, வாசகர்களிடையே நீங்கா இடம்பிடித்த புதுமைப்பித்தன் பிறந்த தினம் இன்று. 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியதோடு, 50-க்கும் மேற்பட்ட படைப்புகளைப் பிற மொழியிலிருந்து தமிழுக்கு மொழியாக்கமும் செய்திருக்கிறார்.

  • தொடங்கியவர்

விண்ணில் செலுத்தப்பட்ட கால்பந்து மைதானம் அளவிலான நாசாவின் 'சூப்பர்' பலூன்!

நியூசிலாந்தில் உள்ள வனாகா நகரத்தில் நாசாவின் 'சூப்பர்' பலூன் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த பலூன் 100 நாள்கள் விண்வெளியில் பறந்து அறிவியல் பூர்வமான தகவல்களைச் சேகரிக்கும்.

NASA super balloon

காஸ்மிக் கதிர்கள் பூமியின் மேற்பரப்பில் உள்ள காற்றின் நைட்ரஜன் மூலக்கூறுகளுடன் இணைந்து ஒளிரும் புற ஊதா ஒளியை உருவாக்குகின்றன. ஆற்றல் மிகுந்த இந்த காஸ்மிக் கதிர்கள் குறித்தும், புற ஊதா ஒளி குறித்தும் துருவப் பகுதியில் பறக்கவிருக்கும் இந்த சூப்பர் பலூன் ஆய்வு செய்து தகவல்களை அனுப்பும்.

நீடித்து உழைக்கக்கூடிய பாலி எத்திலீன் ஃபிலிம் கலவையால் இந்த உயர் அழுத்த பலூன் உருவாக்கப்பட்டுள்ளது. தடிமன் குறைவானது என்றாலும் வலிமையானதாக இந்த பலூனின் மேற்பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 18.8 மில்லியன் கியூபிக் அடி கொள்ளளவு கொண்ட இந்த பலூன், பூமியில் இருந்து சுமார் 33.5 கிலோமீட்டர் (1,10,000 அடி) உயரத்தில் விண்வெளியில் பறக்கவிருக்கிறது.

இதற்கு முன்னர் ஏழு முறை திட்டமிடப்பட்டு, மிக மோசமான வானிலை காரணமாக இந்த பலூன் விண்ணில் செலுத்தப்படுவது கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பூமி காக்கப் போராடும் 83 வயது பச்சை அழகி!

இரா.கலைச் செல்வன்
 
 

அது ஆஸ்திரேலியாவின், கேம்பர்வெல் கிராமம். அங்கிருப்பது வெண்டி போமேன். "ஏன்? அங்க வேற யாருமே இல்லையா?" என்று கேட்டால். "ஆம். அங்கு வேறு யாருமில்லை. வெண்டி போமேன் மட்டும் தான் அங்கிருக்கிறார்... அவர் மட்டும் தனியாக. மொத்த கிராமத்திலேயே..." . அதோ... அங்கு மாடுகளுக்கு குனிந்து தீவனத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பொறுமையாக நிமிர்கிறார். இடுப்பில் கைவைத்தபடியே, கால்களை மெதுவாக தாங்கி, தாங்கி நடந்து அந்தப் பக்கம் போகிறார். தண்ணீர் குழாயைத் திறந்துவிடுகிறார். ஆடுகள் ஓடி வந்து தண்ணீர் குடிக்கின்றன. அங்கிருக்கும் ப்ரொக்கோலி தோட்டத்திற்கு அவர் நடக்கும் போது தான் முகம் தெளிவாகத் தெரிகிறது. முகம் முழுக்க சுருக்கங்கள். ஆம்... ரொம்ப நிறைய சுருக்கங்கள். அவருக்கு வயது 83. முகத்தைப் பார்த்தால் நம்பலாம். ஆனால், இன்னும் நடந்து, குனிந்து, நிமிர்ந்து வேலை செய்வதைப் பார்த்தால் நம்பமுடியவில்லை. வென்டி போமேன் " பச்சை நோபல்" எனப்படும் " கோல்டுமேன் சூழலியல் விருதை" வென்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் "தனியொருத்தியாக", பூமியை சுரண்டும் சுரங்க நிறுவனங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடியதால் அவருக்கு அந்த விருது அளிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் சுரங்கத்திற்கு எதிராகப் பேராடும் வெண்டி பூமி

ஸ்காட்லாந்தைப் பூர்வீகமாகக் கொண்ட வெண்டி குடும்பம் 1700களில் ஆஸ்திரேலியாவில் குடியேறியது. விவசாயமும், கால்நடை வளர்ப்பும் தான் குடும்பத் தொழில். சுற்றி  மலைகளின் நடுவே இருக்கும் ஒரு அழகான பள்ளத்தாக்கு. கிரமங்கள், விவசாயம், அன்பான மக்கள் என இருக்கும் அந்த வாழ்க்கையில் வெண்டி லயித்துப் போயிருக்கிறார். அது 1984ம் ஆண்டு... திடீரென ஏற்பட்ட ஒரு விபத்தில் வெண்டியின் கணவர் மரணமடைகிறார். 50 வயதில் விதவையாகிறார் வெண்டி. அதே ஆண்டு, அந்தப் பகுதியில் நிலக்கரிச் சுரங்கங்கள் அமைக்க அரசு அனுமதியோடு நுழைகின்றன சில பன்னாட்டு நிறுவனங்கள். சுரங்கம் தோண்டப்படுகின்றன. பாறைகள் வெடித்துச் சிதறும் சத்தம் மலைகளில் பட்டு எதிரொலிக்கின்றன. ஒவ்வொரு நிமிடமும் நெஞ்சம் பதைபதைக்கும். கணவனை இழந்த நிலையில் தன் மூன்று பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு வெண்டிக்கு. சுரங்கம் செயல்படத் தொடங்குகிறது. புகை மேகங்கள் விவசாய நிலங்கள் மீது படர்கின்றன. கால்நடைகள் பல நோய்களால் தாக்கப்பட்டு உயிரிழக்கத் தொடங்குகின்றன. 

ஆஸ்திரேலியாவில் சுரங்கத்திற்கு எதிராகப் பேராடும் வெண்டி

பெரு நிறுவனங்களின் பேராசை சுரண்டல் தொடங்குகிறது. எளியவர்களை, ஏமாந்தவர்களையும் பணத்தால் அடிக்கிறார்கள். எதிர்ப்பவர்களை... அடிக்கிறார்கள். கடந்த 30 வருடங்களில் அந்தப் பகுதியில் இருந்த 12க்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலுமாக காலி செய்யப்பட்டுள்ளன. அதாவது, ஆஸ்திரேலிய வரைபடத்திலிருந்தே அந்த கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகள் முழுவதையும் நிலகரிச் சுரங்க நிறுவனங்கள் வாங்கி விட்டார்கள். இந்தப் பெரு நிறுவனங்களை எதிர்த்து தனியொருத்தியாக கடந்த 30 வருடங்களுக்கும் மேலாகப் போராடி வருகிறார் வெண்டி போமேன். 

மாஸ்திரேலியாவின் நிலக்கரிச் சுரங்கம்

விவசாயத்தையும், விவசாயிகளையும் நாட்டின் ரத்த நாளங்களாக கொண்டிருந்த  ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் 40% விவசாயிகள், விவசாயத்தை விட்டு வெளியேறி இருக்கின்றனர். கேம்பர்வெல்லைச் சுற்றியிருந்த விவசாய நிலங்களை நிறுவனங்கள் வாங்கும் போதெல்லாம் அதைத் தடுக்க வெண்டி பல முயற்சிகளை மேற்கொள்வார். ஆனால், நிறுவனம் கொடுக்கும் அதிகப்படியான பணத்திற்கோ, மிரட்டல்களுக்காகவோ விவசாயிகள் தங்கள் நிலங்களை ஒப்படைத்து விடுவர். இந்த நிறுவனங்களை இவ்வளவு உறுதியாக எதிர்க்க, பொருளாதார பின்புலமும் வெண்டிக்கு இருந்தது முக்கிய விஷயம். வெண்டிக்கு சொந்தமாக 470 ஏக்கர் நிலம் இருக்கிறது. தன் தோட்டத்திற்கு "ரோஸ்டேல்" என்று அவர் பெயரிட்டுள்ளார். கிட்டத்தட்ட 100 கால்நடைகளை வளர்க்கிறார். 

அந்தப் பகுதியில் இருந்து அனைவருமே வெளியேறிவிட, வெண்டி மட்டும் தனியாக விவசாயம் பார்த்துக் கொண்டு அங்கேயே வாழ்ந்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்னர், அங்கு நிலக்கரிச் சுரங்கம் அமைத்திருக்கும் சீன நிறுவனமான " யான் கோல்", சுரங்கத்தை விரிவுபடுத்த வேண்டி நீதிமன்றத்தை நாடியது. அதில் வெண்டியின் நிலத்தினடியில் தரமான நிலக்கரி இருப்பதால், அவரின் நிலத்தை வாங்க அனுமதிக்க வேண்டும். அதற்கு உரிய தொகையை நிறுவனம் கொடுத்துவிடும் என்று கோரியிருந்தனர். மேலும், தன் நிறுவன ஊழியர்களை ஏஜெண்ட்களாக்கி, பல நூறு கோடிகள் வரை வெண்டிக்கு தருவதாக விலை பேசபட்டது. ஆனால், வெண்டி எதற்கும் அசையவில்லை. 

ஆஸ்திரேலியாவின் நிலக்கரிச் சுரங்கம்

சுரங்கத்தால் அந்தப் பகுதியில் இயற்கைக்கு எதிரான பெரும் யுத்தம் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஹண்டர் என்ற ஆறு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகால விசாரணைகளுக்குப் பிறகு, சில மாதங்களுக்கு முன்னர் இந்த வழக்கில் தீர்ப்பு வந்தது. "வெண்டி தாமாக முன்வந்து முழு மனதோடு தன் நிலங்களை விற்க முன்வந்தால் மட்டுமே, அந்தப் பகுதியில் சுரங்கம் விரிவாக்கம் செய்யப்படும். " என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவருக்கான "க்ரீன் நோபல்" விருது அறிவிக்கப்படும் வரை அவருக்கு அந்த விருது என்னவென்பது கூடத் தெரியாது.

ஆஸ்திரேலியாவில் சுரங்கத்திற்கு எதிராகப் பேராடும் வெண்டி

"என் மண் வளம் மிக்கது. நிறுவனங்கள் நடத்திய அத்தனை யுத்தங்களையும் எதிர்த்து தன் வளத்தைக் காத்துக் கொண்டு நிற்கிறது. நான் என் நிலத்தைக் காத்துக் கொண்டு நிற்கிறேன். எனக்குப் பணம் முக்கியமல்ல... விரைவாக நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனிதப் பேராசைகள், நம் சந்ததியினருக்குச் சொந்தமான இயற்கையை முற்றிலும் அழிக்கின்றன. எனக்கு 83 வயதாகிவிட்டது. இதுவரை வயது குறித்து நான் கவலைக் கொண்டதில். இப்போது தோன்றுகிறது எனக்கு ஒரு 50 வயதாக இருக்கக் கூடாதா? என்னால் இன்னும் தொடர்ந்துப் போராடியிருக்க முடியுமே !" என்று அவர் சொல்வதும், வெண்டியின் போராட்டக் கதையும் நம்மில் பலருக்கு போரடிக்கலாம்.  "என்னடா இது சும்மா... நிறுவனங்கள், இயற்கை, அழிவு, போராட்டம்ன்னு... எப்பப் பார்த்தாலும்... " என்ற எண்ணம் தோன்றலாம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சச்சின், கெயில், அஃப்ரிடி இவங்களோட இன்னொரு முகம் தெரியுமா? #Funfacts

 
 

பல வருசமா கிரிக்கெட் பார்க்கும் உங்களுக்கு கிரிக்கெட்டின் இந்தச் சுவாரஸ்யமான நிகழ்வுகள் எல்லாம் ஞாபகம் இருக்கா மக்கழே..? #CricketFunFacts

வல்லவனுக்கு வல்லவன் ஈ லோகத்தில் உண்டு!

அஃப்ரிடி

1996-ல் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தில் அஃப்ரிடிக்குத் தன் ஆட்டத்தை வெளிப்படுத்த சரியான பேட் இல்லை. அதையறிந்த வக்கார் யூனிஸ் சச்சின் பயன்படுத்திய பேட்டைக் கொடுத்தார். கிரிக்கெட் வெறி ஏறிப் போன அந்த பேட்டைப் பயன்படுத்தி 11 சிக்ஸர்களையும், 6 பவுண்டரிகளையும் அடித்து விளாசினார் அஃப்ரிடி.. ஆட்டத்தின் முடிவில் 37 பந்துகளில் சதம் அடித்துக் கலக்கினார். வேகமாக சதம் அடித்தவர்கள் லிஸ்டில் முதல் ஆளாக வந்தார் அஃப்ரிடி. அதற்குப் பின் ஆடிய கோரி ஆண்டர்ஸன் 36 பந்துகளிலும், டிவில்லியர்ஸ் 31 பந்துகளில் சதம் அடித்து அஃப்ரிடி ரெக்கார்டை முறியடித்தனர். 

கெயில் கெயில்தான்ய்யா!

கிறிஸ் கெயில்

பொதுவாக டெஸ்ட் மேட்ச் என்றாலே 'ஸ்லோ அண்ட் ஸ்டடி வின்ஸ் தி ரேஸ்' கதைதான். எவ்வளவு பெரிய அக்ரெஸிவ் பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவர் சந்திக்கும் முதல் பந்தை கட்டை வைத்துதான் ஆரம்பிப்பார். ஆனால் கிட்டத்தட்ட 140 வருட கிரிக்கெட் வரலாற்றில் 2012-ல் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் தான் சந்தித்த முதல் பந்தினை சிக்ஸருக்கு விரட்டிய ஒரே ப்ளேயர் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த க்றிஸ் கெயில் மட்டும்தான். என்னதான் ஒரு நாள் போட்டி, டி-20 போட்டிகளில் அடித்து நொறுக்கினாலும் டெஸ்ட் மேட்சில் முதல் பந்தில் சிக்ஸர் அடிக்கும் திறமையையும், தைரியமும் அண்ணன் ஒருவருக்குத்தான் உண்டு. 

என்னா சலம்பல்!

1960-ல் இந்தியாவைச் சேர்ந்த அப்பாஸ் அலி பெய்க் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தனது அரை சதத்தைப் பதிவு செய்தார். அந்த நேரத்தில் சற்றும் எதிர்பாராமல்  ஆடியன்ஸ் கேலரியில் இருந்த ஒரு இளம்பெண் மைதானத்திற்குள் ஓடி வந்து வாழ்த்தும் வகையில் அப்பாஸ் அலியின் கன்னத்தில் முத்தமிட்டார். கிரிக்கெட் வரலாற்றில் இந்த நிகழ்வு அதிர்ச்சி ரகம். #யய்யாடீ

நம்ம ஊர் காமன் பேட்ஸ்மேன்!

இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான இஃப்திகார் அலி கான் ஆறு டெஸ்ட் மேட்ச்களில் விளையாடியுள்ளார். அதில் மூன்று மேட்சில் இங்கிலாந்தின் கேப்டனாகவும், மூன்று மேட்ச் இந்தியாவின் கேப்டனாகவும் விளையாடியுள்ளார். இரண்டு டீம்களில் விளையாடிய குறிப்பிட்ட வீரர்களுள் இவரும் ஒருவர். அதுமட்டுமின்றி பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் சயிஃப் அலி கான் மற்றும் சோஹா அலி கானின் தாத்தாவும் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முடியுமா நடக்குமா..?

கிரிக்கெட் விதிமுறையின் கீழ் இரண்டு டீம்களுக்கும் சரி சமமாக ஓவர் நிர்ணயித்தனர். அதில் முன்னதாக 60 ஓவர்கள் வரை மேட்ச் நடந்ததும் உண்டு. சில நேரங்களில் 40, 45, 50, 55 என்ற ஓவர்கள் அளவில் கூட மேட்ச்கள் நடைபெற்றிருக்கின்றன. 1983-ல் இந்தியா உலகக் கோப்பையினை வென்றது. அது மட்டுமில்லாமல் 60 ஓவர், 50 ஓவர், 20 ஓவர் ஆகிய அனைத்து ஓவர்களிலும் உலகக் கோப்பைகளை வென்ற ஒரே அணி இந்தியாதான் என்ற பெருமையும் நமக்குள்ளது. 

என்னய்யா சொல்றீங்க?

சச்சின் - கிரிக்கெட்

சச்சின் இந்தியாவுக்கு முன்னதாக பாகிஸ்தான் அணிக்கு விளையாடியுள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுதா பாஸ்? ஆமாம்... இந்தச் சம்பவம் 1987-ல் இந்தியா - பாகிஸ்தான் காட்சி ஆட்டத்தில் நிகழ்ந்தது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஜேவத் மற்றும் அப்துல் காதர் மதிய உணவிற்காக சாப்பிடச் சென்றுவிட்டனர். அந்த நேரத்தில் சச்சின் பாகிஸ்தான் அணிக்காக சப்ஸ்டிட்யூட் ப்ளேயராக விளையாடியுள்ளார். 

தொடவே முடியாதாம்!

இந்தியாவைச் சேர்ந்த சுழல் பந்துவீச்சாளர் பபு நட்கார்னி. இவர் சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் தொடர்ச்சியாக 21 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார்.

கடவுளே தஞ்சம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி பிறந்த நாள்: ஏப்.25-1874

 

மார்க்கோனி என்ற குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை எனப்படுபவர். கம்பியற்ற தகவல்தொடர்பு முறை மற்றும் மார்க்கோனி விதி ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897-ல் மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர், வானொலி'மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.

 
 
வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி பிறந்த நாள்: ஏப்.25-1874
 
மார்க்கோனி என்ற குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை எனப்படுபவர். கம்பியற்ற தகவல்தொடர்பு முறை மற்றும் மார்க்கோனி விதி ஆகியவற்றை உருவாக்கியவர்.

இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897-ல் மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர், வானொலி'மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.

மார்க்கோனி 1874-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ல் இத்தாலிய நாட்டில் பொலொனா நகரில் பிறந்தவர். தந்தை கைசப் மார்க்கோனி. தயார் ஆனி ஜேம்சன்-அயர்லாந்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை ஓர் இத்தாலியப் பெருமகன். எனவே, மார்க்கோனி இளமையிலேயே வசதியான வாழ்க்கையைப் பெற்றார். போலக்னோ, புளோரன்ஸ், லெகார்ன் முதலிய ஊர்களில் தனிப்பட்ட முறையில் இவருடைய ஆரம்பக் கல்வி அமைந்தது.

இளமைப் பருவத்தில் இவர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகம். வீட்டிலேயே இருந்து நூல் நிலையத்தில் இருந்த அறிவியல் நூல்களைப் படித்தறிந்தார். வளர்ந்த பிறகும் இவர் பல்கலைக் கழகக் கல்வி எதனையும் பயிலவில்லை. இவருக்கு வீட்டிலேயே ஆசிரியர்கள் வந்து கல்வி கற்பித்தனர். இயற்பியலில் குறிப்பாக மின்சார இயலில் இவருக்கு அதிக நாட்டம் ஏற்பட்டது. 1905-ல் மார்க்கோனி ஓபிரெயின் என்பவரை மணந்தார். இவர்களுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் பிறந்தனர். ஒரு மகள் சில வாரங்களிலேயே இறந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் இருவரும் திருமண முறிவு செய்து கொண்டு பிரிந்தனர்.

மார்க்கோனி தன் இல்லத்திலும் தனியே ஆய்வுகளைச் செய்து வந்தார். எப்பொருளின் மூலமாக வேண்டுமானாலும் மின்காந்த அலைகள் பாயும் என்ற கருத்தை தன் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தினார். 1894-ல் மின் அலைகள் மூலமாக சைகைகளை (சிக்னல்) அனுப்பிக் காட்டினார். வானொலி அலைகளைக் கொண்டு கம்பியில்லாத் தந்தி முறையை உருவாக்குவதில் ஈடுபட்டார். இந்த முறையை இவருக்கு முன்பே 50 ஆண்டுகளாகப் பலரும் முயற்சி செய்து வந்தாலும் அதற்கான முடிவுகள் எட்டப்படவில்லை. ஆனால் மார்க்கோனி அதற்கான 1895-ம் ஆண்டு ஏறத்தாழ ஒன்றரை கி.மீ அளவுக்குச் செய்தியை அனுப்பக்கூடிய திசைதிரும்பும் மின்கம்பம் (Directional Antenna) என்ற கருவி மூலம் தொடர்பு ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றார். இந்த அரிய முயற்சியில் இத்தாலி அரசாங்கம் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை.

எனவே, லண்டன் சென்ற மார்க்கோனி அங்கு தன்னுடைய ஆய்வினைப் பற்றிய செய்திகளை விளக்கினார். ஆங்கில அஞ்சல் நிலையத்தின் முதன்மைப் பொறியாளர் வில்லியம் ஃப்ரீஸ் என்பவர் இவருடைய ஆய்வுகளில் ஆர்வம் செலுத்தி ஊக்கம் கொடுத்தார். பல தொடர் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 1897-ம் ஆண்டு மார்ச் மாதம் மோர்ஸ் அலை வடிவை 6 கி.மீ தூர அளவுக்குச் செலுத்தும் வகையில் மின்காந்த அலை பரப்பியை (Transmitter) உருவாக்கினார். 1897-ல் மே 13-ந்தேதி நீரின் வழியாக நீங்கள் தயாரா? என்ற செய்தியை சுமார் 14 கி. மீ தூரத்திற்கு செலுத்துகின்ற ஒலிபரப்பியை உருவாக்கினார்.

இவருடைய இந்த ஆய்வில் மனங்கவர்ந்த ஃப்ரீல் பொது மக்களிடையே கம்பியில்லாத் தந்தி முறை (Telegraph without wire) என்ற தலைப்பில் 11 டிசம்பர் 1896-ல் டாய்ன்பீ கூடத்தில் சொற்பொழிவாற்றி விளக்க ஏற்பாடு செய்தார். பிறகு அதன் விளக்கங்களை ராயல் கழகத்திற்கு வழங்கவும் துணை புரிந்தார். 1897-ல் 'மார்க்கோனி நிறுவனம்' இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.1897-ல் கரையிலிருந்து கப்பலுக்கு 18 மைல் தூரம் தொடர்பு அமைத்துக் காட்டினார். 1899-ல் ஆங்கிலக் கால்வாயைத் தாண்டி இங்கிலாந்திற்கும் ஃபிரான்சுக்கும், எந்தவிதக் கால நிலையிலும் இயங்கும், கம்பியிலாத் தொடர்பை 200 மைல் சுற்றளவுக்கு உண்டாக்கினார்.

இவற்றைக் கவனித்த இத்தாலி அரசாங்கம், பிறகுதான் மார்க்கோனி மீது கவனத்தைச் செலுத்தியது. அதன் விளைவாக இவர் பிறந்த மண்ணில் 1897-ல் ஜூலை மாதம் லாஸ்பீசியா(La Spezia) என்ற இடத்தில் தன்னுடைய ஆய்வு பற்றிய பல சோதனைகளைச் செய்து காண்பித்தார். அங்கு அரசு தனக்களித்த உதவியுடன் ஸ்டீசர் என்னுமிடத்தில் மார்க்கோனி, வானொலி நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். அவர் அங்கிருந்து செய்தி சுமார் 20.கி.மீ. அப்பால் இருந்த போர்க்கப்பல்களுக்கு எட்டியது. 1898-ல் கிழக்குக் காட்வின் என்ற கப்பலில் தன்னுடைய நிறுவனத்தின் பெயரில் வானொலிக்கருவி ஒன்றை அமைத்திருந்தார். சில காலத்திற்குப் பிறகு அக்கப்பலின் மேல் மற்றொரு மரக்கலம் மோதியது. அதனால் அக்கப்பல் மூழ்கும் நிலை ஏற்பட்டது. உடனே மார்க்கோனி அதில் அமைந்திருந்த வானொலிச் சாதனம் மூலம் அதில் இருந்தவர்கள் கடலில் மூழ்கும் அபாய நிலையைக் குறித்த செய்தியைப் பரப்பினார்.

அதை அறிந்த கலங்கரை விளக்கப் பகுதியில் இருந்த உயிர் மீட்புப் படகுகள் அவர்களைக் காப்பாற்றினர். 1905-ல் வர்த்தகக் கப்பல்கள், போர்க் கப்பல்கள் பல மார்க்கோனியின் கம்பியற்ற தகவல் தொடர்பு கருவியை நிறுவி, கரை நிலையங்களுடன் தொடர்பு கொண்டன. மார்க்கோனியின் அரிய சாதனங்கள் அடுத்து இங்கிலாந்து மற்றும் இத்தாலி கடற்படைக்கு அதிகமாகப் பயன்பட்டன.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

பாம்ப கண்டா இலைய காணோம்... இலைய கண்டா பாம்ப காணோம்... புரியாத புதிர்!

sNAKE__1_21239.jpgPhoto Credits (Jerry Davis)

இங்கே இருக்கும் புகைப்படத்தில் ஒரு பாம்பு இருக்கிறது. உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா? தெரியவில்லையா? பரவாயில்லை, ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் இந்தப் புகைப்படத்தில் இருக்கும் பாம்பை பலரால் கண்டுபிடிக்கவில்லை என்பது உங்களுக்குச் சற்று ஆறுதலாக இருக்கலாம்.

அமெரிக்காவில் இருக்கும் ஃப்ளோரிடா மாகாணத்தில் உயிரியில் மாணவராக பயின்று வருகிறார் ஹெலன். அவரின் நண்பர் ஒருவர், உதிர்ந்த இலைகளுக்கு நடுவில் ஒரு பாம்பு தவழ்ந்து செல்வதை தத்ரூபமாக புகைப்படம் எடுத்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் இருக்கும் பாம்பு, இலையின் நிறத்துடன் ஒன்றிவிட்டதால், பாம்பு எது இலை எது என்பதையே சட்டென கண்டுபிடிக்க முடியவில்லை.

இதை ஹெலன் ட்விட்டரில் போஸ்ட் செய்ய, உலகில் இருக்கும் முன்னணி பத்திரிகை நிறுவனங்கள் எல்லாம் வரிசையில் நின்று 'இந்த புகைப்படத்தை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாமா?' என்று விடாமல் கமென்ட் செய்திருக்கின்றனர். ஹெலனும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே தற்போது, உலக அளவில் ஓவர் நைட் ட்ரெண்டாகி விட்டார். ஆனால், எவ்வளவு தான் சொன்னாலும், அதை பாம்பு என நம்ப பலர் நம்ப மறுக்கின்றனர். ஹெலனின் புகைப்படம் ஃபோட்டோஷாப் என்னும் பட்சத்தில் உலகையே ஏமாற்றிவிட்டார் என்று சொல்லலாம். 

 

For everyone enjoying this puzzle, please remember: Snakes deserve to live just as we do. Treat them with care & respect, not hate & fear. https://t.co/ZjDFfXn0HP

— Helen

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சாதனைப் பாட்டி
-----------------------------
இவர் 93 வயதில்தான் ஓட ஆரம்பித்தார். உலகப் போட்டி ஒன்றில் இப்போது தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

  • தொடங்கியவர்

பலமிக்க மனிதர்களின் தனிப்பட்ட கார்களும், விமானங்களும்! (வீடியோ)

 

பலமிக்க மனிதர்களின் தனிப்பட்ட கார்களும், விமானங்களும்! (வீடியோ)

 

 
 
உலகின் பலமிக்க மனிதர்களின் தனிப்பட்ட கார்களும், விமானங்களும் உங்களை வியக்க வைத்தால் நாங்கள் பொறுப்பில்லை.

அவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகளும், ஆடம்பரமான கட்டமைப்பும், பலமிக்க தோற்றமும் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.

அரச தலைவர்கள் முதல் இந்திய தனவந்தர்கள் தாம் பயன்படுத்தும் கார்கள் மற்றும் விமானங்களின் தன்மையையும், பெறுமதியையும் நீங்களே பாருங்கள்
  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஏப்ரல் 26
 
 

article_1493183613-27.jpg1942: சீனாவில் இடம்பெற்ற சுரங்க விபத்தொன்றில், 1549 பேர் உயிரிழந்தனர்.

1956: உலகின் முதலாவது கொள்கலன் கபப்லான எஸ்.எஸ். ஐடெக்ஸ் எக்ஸ், அமெரிக்காவின் நியூஜேர்ஸி நகர துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.

1960: ஏப்ரல் புரட்சியின் காரணமாக, தென்கொரிய ஜனாதிபதி சிங்மன் றீ ராஜினாமா செய்தார்.

1962: நாஸாவின் ரேஞ்சர் -4 விண்கலம் சந்திரனின் மீது மோதியது.

1963: லிபியாவில் அரசியலமைப்பு திருதத்தப்பட்டது. பெண்களும் தேர்தலில் பங்குபற்ற அனுமதிக்கப்பட்டனர்.

1964: தான்கானிகா மற்றும் ஸான்ஸிபார் நாடுகள் ஒன்றிணைந்து தான்ஸானியா நாடு உருவாக்கப்பட்டது,

1986: சோவியத் யூனியனின் செர்னோபில் அணுஉலையில் பாரிய வெடிப்பு ஏற்பட்டது. உலகின் மிக மோசமான அணுஉலை விபத்து இதுவாகும்.

1977: இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) காலமானார்.

1981: மட்டக்களப்பு, பட்டித்திடல் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1982: தென் கொரியாவில் முன்னாள் காவல்துறையினன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் 57 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

1986: உக்ரைனில் செர்னோபில் அணுமின் உலையில் பெரும் விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.

1989: பங்களாதேஷில் டோர்னடோ சுழல்காற்றின் காரணமாக 1300 பேர் பலியாகினர்.

1994: சீன விமானமொன்று ஜப்பானில் விபத்துக்குள்ளானதால் 271 பயணிகளில் 264 பேர் பலியாகினர்.

1994: உச்சி குவார்க் (Top Quark) உபஅணுத் துணிக்கை ஓன்றைத் தாம் அவதானித்ததாக இயற்பியலாளர்கள் அறிவித்தனர்.

2005: 29 ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் சிரியா தனது 14,000 இராணுவத்தினரை லெபனானில் இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது.

2016: இலங்கையின் 14ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் (1989 மார்ச் 9 முதல் 1994 ஜூன் 24 வரை) முகம்மது அனீஃபா மொகம்மது, தனது 95ஆவது வயதில் காலமானார்.

.tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஊரைச் சுற்றிவந்த உருளைக்கிழங்கு வண்டியின் கதை! #MorningMotivation #MisterK

 
 

மீசைக்கார மன்னாரு கடும் கோபமாக இருந்தார். எல்லா கமிஷன் மண்டிகளின் வண்டிகளும் வந்து கொண்டிருந்தன. இவரது லாரி மட்டும் வந்த பாட்டைக் காணோம். ‘வாரா வாரம் இவனுக்கு இதே வேலையாப் போச்சு’ என்று கொஞ்சம் சத்தமாகவே அலுத்துக் கொண்டார்.  

”என்ன மன்னாரு.. ஒங்க மிஸ்டர் கே இன்னைக்கும் சோதிக்கறானா?” - பக்கத்து மண்டி பரமசிவம்தான் கேட்டது.

“ஆமா.. நீ உன் வேலையப் பாருய்யா...”

”என்கிட்ட கோச்சுட்டு என்ன பண்ண? அவனை வேலைக்குச் சேத்தப்பவே சொன்னேன். கொஞ்சம் ஓவராப் பேசற பயலா இருக்கான்னு. ரெண்டு வாரமா லேட்டா வந்தான் சரி. இன்னமும் அப்டின்னா என்ன அர்த்தம்? இந்தா இருக்கற உப்பிலிபாளையத்துல இருந்து வர ஒரு மணிநேரம் பண்ணுவானாக்கும்?  கொஞ்சம் அதட்டி வை”

மன்னாரு திரும்பிப் பார்த்தார். பரமசிவம் மண்டியில் உருளைக்கிழங்கு லோடு இறங்கி, பத்து பேர் ஆளுக்கொரு மூட்டையைப் பிரித்து சைஸுக்கு ஏற்ற வகைகளாகப் பிரிக்க ஆரம்பித்திருந்தனர். 

”உன் வண்டி வந்து வேலைய ஆரம்பிச்சுட்டீல்ல? போய் அதப்பாரு. அவன் வந்தா நான் கேட்டுக்கறேன்.. போ போ...” - என்றார் மன்னாரு. என்ன இருந்தாலும் மிஸ்டர் K மேல் அவருக்கு ஒரு தனி கரிசனம். அவன் வேலைக்கு சேர்ந்து ஒருமாதம்தான் ஆகிறது. கொஞ்சம் கோக்குமாக்கு செய்தாலும், எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் வைத்திருப்பான்.

மிஸ்டர் K

சரியாக முக்கால் மணிநேரம் கழித்து உருளைக்கிழங்கு லோடுடன் மினி லாரியை ஓட்டிக் கொண்டு வந்தான் மிஸ்டர் K. வண்டியை திருப்பி நிறுத்திவிட்டு இறங்கினான். மன்னார் கோபமாக வந்தவர், அவன் இறங்கிய வேகத்தைப் பார்த்து அப்புறம் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்.

மிஸ்டர் K பெரிய தார்ப்பாயை விரித்து, லோடை இறக்கச் சொன்னான். மூட்டை போடப்பட்டிருக்கவில்லை. மினி லாரியிலிருந்து கொஞ்சம் இறக்கி, தார்ப்பாயை மாற்றி, அடுத்த தார்ப்பாயை விரித்து அதில் கொஞ்சம் கொட்டி இப்படி மினி லாரியைக் காலியாக்கினார்கள். பிறகு வண்டியை தள்ளி நிறுத்தினான். 

ஐந்தாறு ஆட்களை அழைத்துக் கொண்டான்.  உருளைக்கிழங்கை பெரிய சைஸ், நடுத்தரம், சின்ன சைஸ் என்று பிரிக்க ஆரம்பித்தார்கள். ஒரு மணிநேரத்தில் வேலை முடிந்ததும் மூட்டை போட்டார்கள். அடுக்கி வைத்து, வியாபாரிகள் வர, விலை பேச ஆரம்பித்தார்கள். ஒரு மணிநேரத்தில் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிட மன்னாரு, மிஸ்டர் Kஐ தனியாக அழைத்தார்.

“இங்கன வா... கொஞ்சம் பேசணும்”

“சொல்லுங்க மொதலாளி” என்றான் மிஸ்டர் K பவ்யமாக.

“இந்தா இருக்குது உப்பிலிபாளையம். அங்கிருந்து வர்ற மினி லாரிலாம் இந்த டவுன் மண்டிக்கு கால் மணிநேரத்துல வருது. நீ அவங்களை மாதிரி மூட்டைகூட போடறதில்ல.. நெலத்துல இருந்து உருளைக்கிழங்கை வண்டில அள்ளிப்போட்டுட்டு  கிளம்பி வர்ற, ஆனாலும் லேட்டா வர்ற. ஏன் இப்டி? எங்கதான் சுத்திட்டு வருவ?”

“மொதலாளி... நான் எப்ப வந்தா என்ன.. மத்த மண்டிக்காரங்களுக்கு முன்னாலயே நாம விக்க ஆரம்பிச்சுடறோம்ல?”

“அதான் என்ன பண்றன்னு கேட்டேன்!?”

“ஒண்ணுமில்ல மொதலாளி... அவிங்கள்லாம் அங்க மூட்டை போட்டுட்டு வந்து, இங்க அதக் கொட்டி பெரிசு, மீடியம், சின்னதுனு இங்க வந்து பிரிக்கறாங்க. நான் என்ன பண்ணுவேன்னா, அங்க மூட்டை போடமாட்டேன். மொத்தமா வண்டில கொட்டிடுவேன். அப்பறமா நேர்ரோட்ல வராம, ஊரைச் சுத்தி  வருவேன். ரோடே இருக்காது. இருக்கற ரோடும் மேடு பள்ளமா இருக்குமா.. உருளைக்கிழங்கெல்லாம் உருண்டு சின்னது கீழ, பெரிசு மேலனு அததுவா செட்டாகிடும். வந்து கொஞ்சம் பார்த்து இறக்கினா போதும்.  மத்த கடைக்காரங்க 10-15 பேர் வெச்சுப் பிரிப்பாங்க. நான் அதையே அஞ்சாறு ஆள் வெச்சு முடிச்சுடுவேன். ஏன்னா முக்காவாசி சைஸ் பிரிச்ச மாதிரிதான் இருக்கும்.. ஆள் கூலியும் மிச்சம். புரியுதா மொதலாளி?” என்றான்.

****************************************************************

 

செல்லூர் ராஜுவின் நீர் - ஆவி- தெர்மாகோல் திட்டமாகட்டும், அண்ணா சாலை  அதளபாதாள சாலை ஆனதாகட்டும் - காரணம் என்ன?  தெளிவான திட்டமிடல் இல்லாமை! திட்டமிட்டால் எந்தச் செயலையும் சிறப்பாக முடிக்கலாம் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் மேலே மிஸ்டர் K செயல்படுத்தியது.

ஒரு மிகப்பிரபலமான இயக்குநரிடம், ‘உங்கள் அடுத்த பட வேலைகள் எந்த நிலையில் இருக்கிறது?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னாராம். 

“இன்னும் 10% தான் பாக்கி”

“ஷுட்டிங் ஆரம்பித்தமாதிரியே தெரியவில்லையே?”

“எஸ். ஷுட்டிங் மட்டும்தான் பாக்கி” 

ஆம். அவர்கள் முழுமையான ஸ்கிரிப்ட் தயார் செய்துவிட்டுதான் வேலையையே ஆரம்பிப்பார்கள். ஒரு மாற்றமும் தேவையிராது. திட்டமிட்டு முடிக்கும் செயலுக்கு வெற்றி நிச்சயம். 

இவ்வளவு பெரிய கட்டுரையை வடிவேலு ஸ்டைலில் ஏழே வார்த்தைகளில் சொல்லிவிடலாம்!

‘எந்த ஒரு விஷயத்தையும்  ப்ளான் பண்ணிப் பண்ணணும்! வோக்கே?’

http://www.vikatan.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

உலகின் ஒரே சொமாலிய அருங்காட்சியகம் அமெரிக்காவில் உருவானதேன்?

ஆப்ரிக்காவுக்கு வெளியே மினிசோட்டாவில் தான் அதிகமான சொமாலியர்கள் வாழ்கிறார்கள்.


தாய்நாட்டிலிருந்து வெகுதொலைவில் வாழும் இவர்கள், தம் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்க விரும்புகிறார்கள்.


அந்த நோக்கத்துடன் அவர்கள் உலகின் ஒரே சொமாலிய அருங்காட்சியகத்தை அங்கே உருவாக்கியிருக்கிறார்கள்.


மினியாபோலிஸிலுள்ள அந்த அருங்காட்சியகத்திற்கு நேரில் சென்ற பிபிசி அது குறித்து தயாரித்துள்ள காணொளி.

  • தொடங்கியவர்

ஓவியங்களோடு விளையாடி தனிமையைக் கழிக்கும்! #MyLifeAsACourgette

 

சிறுவன் 

My Life as a Courgette - இதுவொரு பிரெஞ்சு மொழி அனிமேஷன் திரைப்படம். ஸ்விஸ்-பிரான்ஸ் தயாரிப்பு. 'சிறந்த அனிமேஷன் திரைப்பட' வரிசையில் ஆஸ்கர் விருதிற்காக நாமினேஷனில் இடம்பிடித்திருந்தது. Gilles Paris எழுதிய Autobiographie d'une Courgette எனும் நூலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட படைப்பு. சிறுவன் ஒருவனே பிரதான பாத்திரம். இதன் கருப்பொருள் சர்வதேசத்தன்மை வாய்ந்தது. பெற்றோர்களின் தீய பழக்கங்களினாலும் சச்சரவுகளினாலும் கைவிடப்படும் பிள்ளைகளின் மனஉளைச்சல்களை அதற்கே உரிய சோக நகைச்சுவையுடன் சித்தரிக்கும் திரைப்படம். சில நிமிடக் காட்சிகள் மட்டும் சிறார் காணத் தகுந்த எல்லையைத் தாண்டியுள்ளன. அவற்றை அந்தப் பின்னணியிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

சிறுவன்


Icare எனும் சிறுவன் தன் தாயுடன் வளர்பவன். தன்னை விட்டுச் சென்ற கணவனை சபித்தப் படி நாள் முழுவதும் குடித்துக் கொண்டிருப்பவள் அவனுடைய தாய். எனவே, தான் வரையும் ஓவியங்களைக் கொண்டு தனிமையில் விளையாடிக் கொண்டிருப்பான் Icare. தன் தந்தையின் உருவத்தை காற்றாடியில் வரைந்து அதைப் பறக்கவிட்டு வேடிக்கைப் பார்ப்பது அவனது பொழுதுபோக்குகளுள் ஒன்று. ஒருநாள், சிறுவன் செய்யும் குறும்பு காரணமாக தாய் அவனை தண்டிப்பதற்காக ஆவேசமாக வருகிறாள். பயந்து போகும் சிறுவன் தற்காப்பிற்காக தன்னிச்சையாக செய்யும் செயல் தாயின் மரணத்திற்கு காரணமாகி விடுகிறது. அச்சமும் துயரமும் சிறுவனைச் சூழ்கிறது.
ரேமண்ட் எனும் காவல் துறை அதிகாரி இந்த மரணத்தைப் பற்றி விசாரிக்க வருகிறார். பயத்தின் காரணமாக Icare தான் செய்ததை மறைத்து விடுகிறான். எவருமில்லாத அவனது நிலைமையைக் கண்டு அனுதாபப்படுகிறார் ரேமண்ட். அவனிடம் ஆதரவாகப் பேசுகிறார். தன்னுடைய இயற்பெயரை விட 'Courgette' என்றே தான் அழைக்கப்பட விரும்புகிறான் சிறுவன். அவனுடைய தாய் வைத்த செல்லப் பெயர் அது.

ரேமண்ட் அவனை சிறாருக்கான பாதுகாப்பு முகாமில் சேர்க்கிறார். தான் அவ்வப்போது வந்து அவனைப் பார்த்துச் செல்வதாக சொல்கிறார். சிறுவனின் துவக்க கால முகாம் அனுபவங்கள் அத்தனை உவப்பானதாக இருப்பதில்லை. சிமன் என்கிற குறும்புக்காரன் இவனைச் சீண்டிக் கொண்டேயிருக்கிறான். சிறுவனின் காற்றாடியை எடுத்து சிமன் விளையாட அதுவரை மெளனமாக இருந்த Courgette ஆத்திரத்துடன் சிமனிடம் சண்டை போடுகிறான்.  பிறகு இருவரும் நட்பாகிறார்கள். அந்த முகாமில் உள்ள சக பிள்ளைகளைப் பற்றிய பின்னணிகளை சொல்கிறான் சிமன். "நீ எப்படி இங்கு வந்தாய்?" என்று கேட்கிறான். தற்செயலான விபத்தில் தன்னுடைய தாய் மரணம் அடைந்த ரகசியத்தை அவனிடம் சொல்கிறான் Courgette.  முகாமில் தான் அடையும் மகிழ்ச்சிகரமான தருணங்களை ஓவியங்களாகத் தீட்டி காவல் துறை அதிகாரி ரேமண்ட்டிற்கு அனுப்புகிறான்.
 

சிறுவன்

அந்த முகாமிற்கு புதிதாக ஓர் உறுப்பினர் வந்து சேர்கிறாள். அவள் பெயர் கமிலி. அவளைப் பார்த்தவுடனேயே சிறுவனுக்கு இனம்புரியாத ஈர்ப்பு ஏற்படுகிறது. வழக்கம் போல் அவளுடைய பின்னணியையும் ஆராய்ந்து சொல்கிறான் சிமன். அவளுடைய தாய்க்கு இன்னொருவருடன் பழக்கம் ஏற்பட,  அவளைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறார் அவளின் தந்தை. சிறுவனுக்கு அவள் மீது பரிதாபம் உண்டாகிறது. சிமனின் குறும்புத்தனங்களை எளிதாக சமாளிக்கும் சாமர்த்தியம் உள்ளவளாக இருக்கிறாள் கமிலி.
முகாமில் இன்பச் சுற்றுலா சொல்கிறார்கள். பனிப்பிரதேசத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார்கள். அந்த நாளின் இரவில் தன்னைப் பற்றிய விவரங்களை கமிலி சிறுவனிடம் கூறுகிறாள். இருவருக்கும் நட்பு இறுக்கமாகிறது.

பாதுகாவலர்கள் சில நாட்களுக்கு தங்களின் வசிப்பிடங்களில் பிள்ளைகளை வைத்துக் கொள்ளலாம் என்கிற ஏற்பாட்டின்படி காவல் அதிகாரி ரேமண்ட் சிறுவனை அழைத்துச் செல்கிறார். அந்த வண்டியில் கமிலியை ரகசியமாக ஒளிந்திருக்கச் செல்கிறான் சிறுவன். செல்லும் வழியில் குட்டு வெளிப்பட ரேமண்ட் இதை ஆட்சேபிக்கிறார். கமிலியின் அத்தை கடுமையானவள். அவளுடன் செல்ல கமிலிக்குப் பிடிக்காததால் தன்னுடன் வந்திருப்பதாகவும், இதற்கு சம்மதிக்குமாறும் கெஞ்சுகிறான் சிறுவன். ரேமண்ட் சம்மதிக்கிறார். இந்தத் தகவலை முகாமிற்கு தெரிவிக்கிறார்.

ரேமண்ட்டும் இரண்டு சிறார்களும் மகிழ்ச்சியான பொழுதுபோக்குகளில் ஈடுபடுகிறார்கள். இதற்கிடையில் கமிலியின் அத்தை, முகாமிற்கு சென்று சண்டை போடுகிறாள். 'என்னுடைய பாதுகாப்பில் அனுப்பாமல் எப்படி இன்னொருவருடன் அனுப்பலாம்?' என்று முகாம் அலுவலர்களைக் கோபித்துக் கொள்கிறாள். நடந்ததைச் சொன்னாலும் அவள் நம்புவதில்லை. ரேமண்ட்டின் இருப்பிடத்திற்கு வந்து கமிலியை இழுத்துச் செல்கிறாள். சோகமடையும் சிறுவனை ஆறுதல்படுத்துகிறார் ரேமண்ட்.

children movie


கமிலியை தன்னுடைய பாதுகாப்பிலேயே வைத்துக் கொள்வதாகவும் அவளை நல்லபடியாக பார்த்துக் கொள்வதாகவும் முகாம் அதிகாரிகளிடம் சொல்கிறாள் கமிலியின் அத்தை. வரும் வழியில் அத்தை தன்னை திட்டிக் கொண்டே வந்ததையெல்லாம் பதிவு செய்து வைத்திருந்த கமலி அந்த உரையாடலை ஒலிக்கச் செய்கிறாள். சிமன் முன்பே செய்து வைத்திருந்த ஏற்பாடு அது. குட்டு வெளிப்பட்ட கோபத்தில் அத்தை கோபமாக வெளியேறுகிறாள்.

காவல் அதிகாரியான ரேமண்ட், சிறுவனையும் கமிலியையும் தத்தெடுத்துக் கொள்ள முடிவு செய்கிறார். இருவரும் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்கள் செல்லப் போவதை அறிந்து இதர சிறுவர்கள் சோகமடைகிறார்கள். குறிப்பாக சிமன் வருத்தமடைகிறான். :"நான் வேண்டுமானால் இங்கேயே இருந்து விடுகிறேன். நீ வருத்தப்படாதே" என்கிறான் சிறுவன். "போடா. முட்டாள். இது போன்ற அதிர்ஷ்டம் அமையாது. சென்று வா" என்று தைரியம் சொல்கிறான் சிமன்.

சிறுவனும் கமிலியும் முகாமை விட்டுச் செல்வதை இதர சிறுவர்கள் ஒருபக்கம் மகிழ்ச்சியாகவும் இன்னொருபுறம் சோகமாகவும் பார்க்கிறார்கள். முகாமிற்கு புதியதாக ஒரு குழந்தை வந்து சேருகிறது. அதைப் பற்றி சிறுவர்கள் விசாரிப்பதோடு படம் நிறைகிறது. ரேமண்ட்டின் ஏற்பாட்டில் Courgette-ம் கமிலியும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

children movie

ஹாலிவுட் உருவாக்கும் அனிமேஷன் திரைப்படங்களுக்கும் இதர தேசத்து அனிமேஷன் படைப்புகளுக்கும் உருவாக்க முறையில் நிறைய வித்தியாசம் இருப்பதை கவனிக்க முடிகிறது. ஹாலிவுட் தயாரிப்புகளில் வண்ணங்களும் கொண்டாட்டங்களும் சுவாரஸ்யமும் நிறைந்திருக்கும். இந்த பிரெஞ்சு அனிமேஷன் திரைப்படத்தில் துயரத்தின் கசப்பும் நகைச்சுவையின் இனிப்பும் சரிசமாக கலந்திருக்கிறது. க்ரேயான் பென்சிலால் அழுத்தமாக வரையப்பட்டது போன்ற உருவங்கள். நிதானமான அசைவுகள். சோகம் ததும்பும் சிறுவனின் கண்களைப் பார்க்கும் போது நமக்கே அவன் மீது பிரியமும் பரிதாபமும் ஏற்படுகிறது.

முகாமின் வாசலில் எந்த வண்டியின் சத்தம் ஒலித்தாலும் 'மம்மி' என்று உற்சாகமாக ஓடிவந்து ஏமாறும் சிறுமி, தன் தந்தை சிறையில் இருப்பதால், ரேமண்ட் வரும் போதெல்லாம் மேலேயிருந்து அவர் தலையில் தண்ணீர் ஊற்றும் சிறுவன், குறும்புக்கார சிமன், அவனுடைய பின்னணியில் உள்ள சோகம் என்று பல கலவையான சுவாரசிய சித்திரங்கள்.

குழந்தைகளை விட பெற்றோர்களுக்கே இந்த அனிமேஷன் திரைப்படம் ஒரு படிப்பினையாக அமையும். அவர்களுக்கு இடையேயான பிரச்சினைகளால் கைவிடப்படும் பிள்ளைகள், அன்பையும் ஆதரவையும் இழந்து தனிமைத் துயரில் அல்லலுரும் உணர்வுகளை இந்த அனிமேஷன் திரைப்படம் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது.

குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் பார்க்க வேண்டிய திரைப்படம். அற்புதமான இயக்கம் Claude Barras. இந்த கோடை விடுமுறையில் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் இதையும் அவசியம் சேர்த்துவிடுங்கள்.

My Life as a Courgette - திரைப்படத்தின் டிரைலர்:

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தந்தை செல்வாவின் 40 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு...

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகரான தந்தை செல்வா தொடர்பில்  தொகுப்பு...

  • தொடங்கியவர்

கடலில் வீசும் பிளாஸ்டிக் பாட்டில் மட்க 450 வருடங்களாகுமாம்! அதிர்ச்சி தகவல்கள் #VikatanInfographics

 
 

மட்கி போக ஆகும் காலம்

டைட்டானிக் கப்பல் 1914ம் ஆண்டு கடலில் மூழ்கியது நமக்கு நினைவிருக்கலாம். ஆனால் இன்னமும் அதன் பாகங்கள் கடலுக்கடியில் ஆய்வுகளின் போது எப்படி சிக்குகின்றன. 104 வருடங்களாக ஒரு பொருள் கடலுக்கடியில் இருக்குமா? என்ற கேள்வி பலருக்கும் இருந்து கொண்டே இருக்கும். ஆம் அது உண்மை தான் கடலில் தங்கும் பொருட்கள் நீரில் மட்கி போக நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும். ஒவ்வொரு பொருளுக்கும் அதன் மட்கும் காலம் மாறுபடும்.

கடலில் நேரடியாகவோ அல்லது நதிகள் மூலமாகவோ, புயல் மற்றும் இயற்கை பேரழிவுகள் மூலமாக கடலுக்குள் சேரும் கழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 1990ம் ஆண்டு பசிபிக் பெருங்கடலில் வீசிய புயலில் 5 கண்டெய்னர்கள் மற்றும் படகுகள் நீரில் மூழ்கின. அவற்றின் பகுதியாக 1994ம் ஆண்டு 34000 பொருட்களாக எடுக்கப்பட்டன. இவை அனைத்தும் கடலில் கழிவுகளாக தங்கி இருந்துள்ளன. 

உலகம் முழுவதும் 5 பிரிவுகளாக கடலில் உள்ள கழிவுகள் பற்றிய ஆராய்ச்சி நடந்து வருகிறது வடக்கு அட்லாண்டிக், தெற்கு அட்லாண்டிக், வடக்கு பசிபிக், தெற்கு பசிபிக், இந்திய பெருங்கடல் பகுதிகள் என 5 பகுதிகளில் கடல் கழிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. க்ரேட் பசிபிக் கார்பேஜ் ஆராய்ச்சியில் மட்டும் 20 மில்லியன் சதுர கிலோ மீட்டரில் டன்கணக்கில் கழிவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் ப்ளாஸ்டிக், இரும்பு மற்றும் மனிதனின் அன்றாட பயன்பாட்டில் இருக்கும் பொருட்கள் கழிவுகளாக மாறியுள்ளன.

அமெரிக்காவில் உள்ள ஹோனுலுலு பகுதியில் மட்டும் ஒரு லட்சம் பவுண்ட் கடல் குப்பைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மனிதனின் பொருட்கள் பயன்பாடும் அதனை கண்ட இடங்களில் கொட்டுவதன் மூலமாகவும் இவ்வளவு குப்பைகள் கடல் பரப்பில் விழுந்த கடல் உயிரினங்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன. 

கடலின் அடி ஆழம் வரை சென்று தங்கும் இந்த பொருட்கள் மிகப்பெரிய திமிங்களை கூட கொல்லும் அளவுக்கு சக்தி வாய்ந்தவை என்கின்றனர் கடல் ஆய்வாளர்கள். சமீபத்தில் ஒரு ஆமையின் மூக்கில் இரும்பு கம்பி மாட்டியதும் அதனை அதிலிருந்து கஷ்டப்பட்டு சூழலியலாளர்கள் காப்பாறறியதும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. 

இப்படி கடலில் போடப்படும் பொருட்கள் கடலில் மட்கி போக ஆகும் காலம் எவ்வளவு தெரியுமா? 

கடல் குப்பை


என்.ஓ.ஏ.ஏ தகவலின் படி ஆப்பிள்  - 2 மாதம், சாக்ஸ் - 1-5 வருடம், டீ கப் - 50 வருடம், மீன் பிடிக்கும் கம்பி - 600 வருடம், பலூன் - 50 வருடம், செய்தி தாள் - 2 மாதம், பிளாஸ்டிக் கேரி பேக் - 20 வருடம், ப்ளைவுட் - 3 வருடம், டயாப்பர் - 450 வருடம், ப்ளாஸ்டிக் பாட்டில் - 450 வருடம், அலுமினியம் கேன் - 200 வருடம், சிகரெட் துண்டு - 1- 5 வருடம், குளிர்பானம் வைக்கும் ட்ரே - 400 வருடம், காட்டன் சட்டை - 5 மாதம், கண்ணாடி பாட்டில் -  வரையறையிட்டு கூறமுடியாது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இனி வாங்கி குடிக்கும் குளிர்பான பாட்டிலை கடலில் வீசி எறிந்தால் அது மட்கி போக 450 வருடம் ஆகும் என்று நினைத்து பார்த்தால் அதனை தூக்கி கடலுக்கு எறிய மனம் வராது. அது மட்டுமின்றி அந்த பாட்டில் உங்கள் உணவு சங்கிலியில் ஆதாரமாக இருக்கும் மீன் மற்றும் மற்ற கடல் உணவுகளுக்கு ஆபத்தாகவும் மாறும் நிலை உள்ளது. கடல் பரப்பை குப்பையால் மூடாமல் பாதுகாப்போம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகில் எஞ்சியுள்ள ஒற்றை காண்டாமிருகம்

உலகில் வாழும் ஒரே ஒரு ஆப்ரிக்க வெள்ளை ஆண் காண்டாமிருகத்துக்கு பெண்துணை தேவை.


இந்த ரக அபூர்வமான ஆப்ரிக்க வெள்ளை காண்டாமிருக இனம் அழிந்து விடாமல் காக்க அது ஒன்றே வழி.

  • தொடங்கியவர்

கோப்பை வெல்ல ராயல் சேலஞ்சர்ஸுக்கு சில காரசார டிப்ஸ்..!

ஐ.பி.எல் கோப்பையைக் கைப்பற்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி என்னனென்னமோ பண்ணிப் பார்க்குது. ஆனாலும் உருப்படியா ஒண்ணும் நடந்த பாடு இல்லை. அப்படியே இவற்றையும் பண்ணிப் பார்த்தாலாவது கோப்பையைத் தூக்கும் வாய்ப்பு அமையுமானு பார்க்கலாம். 

ராயல் சேலஞ்சர்ஸ்

நிறுத்தணும் இதை முதலில் நிறுத்தணும் :

ரசிகர்களுக்காக கிரிக்கெட் விளையாடுவதை விட்டுவிட்டு உங்களுக்காக ஒரு மேட்சாவது விளையாடுங்க பாஸ். வான வேடிக்கை காட்டுறது, குறைவான பந்துளில் பெரிய ஸ்கோர் அடிக்கிறது மாதிரி ஜிகினா வேலைகளைக் காட்டுறது இதையெல்லாம் மொதல்ல நிறுத்தணும். அப்போதான் மேட்ச்ல ஜெயிக்க முடியும். சின்ன டார்கெட்டைக் கூட அப்போதான் சுலபமா சேஸ் பண்ண முடியும். என்டர்டெயின்மென்ட் என்கிற வார்த்தையை முதலில் உங்க அகராதியில இருந்து தூக்குங்க. அப்புறம் கோப்பையை அழகாகத் தூக்கலாம். எதற்கெடுத்தாலும் இறக்கி வைத்த இட்லி சட்டியினைப் போல் கோஹ்லி கோவப்படுவதைக் கொஞ்சம் குறைக்கவேண்டும்.  

யூனிஃபாரம் : 

ஸ்கூலுக்குப் போற குழந்தை மாதிரி அடிக்கடி ஜெர்ஸி மாற்றுவதை நிறுத்துங்க. டீமுக்கு முக்கியமே அவங்க ரசிகர்களோட கை தட்டலும், பாராட்டுகளும்தான். பல மேட்ச்களில் உங்க ரசிகர்களுக்கே உங்களை அடையாளம் தெரியாமல் யாரோ விளையாடுறங்கனு அப்படியே இருக்குறாங்க. இனிமேல் இதுதான் எங்க ஜெர்ஸினு அடிச்சு சத்தியம் பண்ணிட்டு அதிகாரப்பூர்வமான தகவலை மக்களுக்குச் சொல்லிட்டு அந்த ஜெர்ஸியை பயன்படுத்துவது ரொம்ப நல்லது. அட... ரசிகர்களுக்கு அடையாளம் தெரியலைன்னா பரவாயில்லை. கோஹ்லி காதலிக்கிற அனுஷ்கா ஷர்மாவுக்கே அடையாளம் தெரியலைன்னா எப்படி?

பரிகாரம் அவசியம் :

நாள், நட்சத்திரமெல்லாம் பார்த்து ஒரு நல்ல ஜோசியரை அணுகி உங்க குறைகளைச் சொல்லி அனுகூலமான திசை, ராசியான எண், நேரம் காலமெல்லாம் தெரிந்து அவற்றின்படி நடந்துக்கலாம். பெரிய நம்பர் ஸ்கோர்களை அறவே ஒதுக்குவது நல்லது. ஜெர்ஸியில் உள்ள நம்பரை எடுத்துவிட்டு ஜோசியர் பரிந்துரைக்கும் நம்பரை உபயோகிப்பது இன்னும் சிறப்பு. இது எல்லாவற்றையும் விட, வாரம் ஒருமுறை அணியினரோடு சேர்ந்து டீமுக்கு ஒரு அர்ச்சனையைப் போட்டால் கோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். பரிகாரம் எதுவும் செய்யவேண்டி இருந்தால் அதையும் கையோடு முடித்துவிடுதல் சுபிட்சம். 

ராசி பலன் :

மேட்ச் இருக்கும் நாள்களில் மட்டுமல்லாமல் தினமும் நியூஸ் பேப்பர் படிப்பது நல்லது. முக்கியமாக ராசி பலன் பக்கத்தை ஸ்கிப் பண்ணாமல் ஒவ்வொரு ப்ளேயர்களுக்கும் எப்படி பலன் இருக்கிறது? நியூஸ் பேப்பர் இல்லாத தருவாயில் நிறைய சேனல்களில் பலன் சொல்லும் ப்ரோகிராம்கள் தினசரி ஓடிக்கொண்டேதான் இருக்கும். அதில் அன்றைய பலன் என்னவென்று பார்த்து எதாவது சிக்கல்கள் இருந்தால் எதாவது பூஜையைப் போட்டுவிடலாம். முக்கியமாக டீமின் கேப்டன் கோஹ்லி தவறாமல் ராசி பலன்களைப் பார்ப்பதோடு இல்லாமல் கோவத்தைக் குறைக்க தியானம், யோகா, மெடிடேஷன் போன்றவற்றையெல்லாம் செய்திட வேண்டும். அங்கு செய்யும் தியானம் எடுபடவில்லையென்றால் நேராகக் கிளம்பி சென்னை மெரினா பீச்சுக்குக் கூட வந்துவிடலாம். 

ராயல் சேலஞ்சர்ஸ்

 

நேற்று கொல்கத்தாவுடன் பெங்களூர் அணி ஆடிய மேட்ச்சைப் பார்க்க டி.வி சுவிட்சை ஆன் செய்வதற்குள் மொத்த ஆட்டமும் முடிந்தேவிட்டது. மல்லையா பெயில் வாங்குவதைவிட வேகமாய் இருந்தால் எப்படி? போன வருடம் இதே நேரம் ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக ரன்களை இதே அணி குவித்தது. ஆனால் நேற்றோ அதே அணி குறைவான ரன் அடித்த டீம் என்ற பெயரையும் பெற்றிருக்கிறது. 'எஜமான்' படத்தில் நெப்போலியன் சொல்லும் டயலாக்தான் நினைவிற்கு வருகிறது. ஆக... என்டர்டெயின்மென்ட் செய்வதை நிறுத்திவிட்டு மேலே குறிப்பிட்ட விஷயங்களை கருத்தில் கொண்டு செயல்பட்டால் மட்டுமே மீம் க்ரியேட்டர்களின் என்டர்டெயின்மென்ட் வளையத்துக்குள் சிக்காமல் தப்பிக்க முடியும். பார்த்துப் பொழைச்சுக்கோங்க ராயல்ஸ்..!

  • தொடங்கியவர்

இரண்டு உலகப்போர்களைப் பார்த்த நேரு குடும்ப மூத்த உறுப்பினர் காலமானார்!

 
 

ஜவஹர்லால் நேருவின் உறவினர் பி.கே.நேருவின் மனைவி ஷோபா, ஷிம்லாவில் நேற்று காலமானார். அவருக்கு வயது 108.

Shoba nehru

ஷோபா நேரு 1908-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி புடாபெஸ்ட் (Budapest) நகரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஃபோரி. 1930-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒன்றாகப் படித்தபோது ஃபோரிக்கும், பி.கே.நேருவுக்கும் காதல் தோன்றியது. 1935-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு இவர் தனது பெயரை ஷோபா நேரு என மாற்றிக்கொண்டார். ஷோபாதான் நேரு குடும்பத்தின் முதல் வெளிநாட்டு பிரஜை. இவர் இரண்டு உலகப்போர்களைப் பார்த்துவிட்டார். சுதந்திரத்துக்கு முற்பட்ட இந்தியா, அதற்குப் பிறகான இந்தியா என இரண்டையும் பார்த்துவிட்டார். ஷோபா நேருவுக்கு மூன்று மகன்கள்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகின் சுத்தமான இந்த நாட்டில் தூசு இல்லை; சுங்கவரி இல்லை!!

 
 

காலையில் வீட்டிலிருந்து வெளியே போகும்போது தமன்னா கலரில் ஃப்ரெஷ்ஷாகக் கிளம்பினால், திரும்ப வீட்டுக்கு வரும்போது ‘ஃப்ரெண்ட்ஸ்’ பட வடிவேலு மாதிரி மூஞ்சியெல்லாம் கரி பூசி கறுகறுவெனத்தான் திரும்ப முடியும். இது நம் ஊர் ஸ்பெஷல். 20:20 மேட்ச்சில் கெயில்கூட சொதப்பலாம்; ஆனால், வெயில் பின்னியெடுத்து விடும். வெயிலை விட்டுத் தள்ளுங்கள். அதைத் தாண்டி முக்கியக் காரணம், ‘சுந்தரா டிராவல்ஸ்’ பஸ்கள் மாதிரி வாகனங்களில் இருந்து வரும் கரும்புகை, சுற்றுச்சூழலை ஒரு வழி பண்ணிவிடுகிறது. அதற்குத்தான் BS3 தடை, BS4 வாகனங்களுக்கு என்ட்ரி என்று என்னென்னவோ பண்ணிப் பார்க்கிறது அரசு.

நார்வே நாடு

பெங்களூரில் ‘ஆட்-ஈவன் டிரைவிங் சிஸ்டம்’ என்று ஒரு நாள் விட்டு ஒரு நாள் வாகனம் பயன்படுத்தும் முறையைக் கொண்டு வந்தார்கள். டெல்லியில் ஒரு படி மேலே போய், 2,000 சிசி-க்கு மேற்பட்ட கார்களுக்குத் தடையெல்லாம் விதித்து விட்டார்கள். என்ன செய்தாலும் சுற்றுச்சூழல் பல்லிளித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், நார்வேயில் சத்தமில்லாமல் சுற்றுச்சூழல் மாசுவுக்கு செக் வைத்து விட்டார்கள். இப்போது உலகில் தூசி, புகை, இல்லாத நாடு, நார்வே!

அப்படியென்றால், கார்களே ஓடாதா என்றால், ‘ஆம்’ என்றும் சொல்லலாம். ஆம்! நார்வேயில் பெட்ரோல்/டீசல் கார்களுக்குத் தடை விதித்து விட்டார்கள். முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் கார்கள்தான். விளைவு - இப்போது உலகின் ‘எக்கோ நாடு’ நார்வேதான். அதாவது, காற்றை மாசுபடுத்தாத சுத்தமான நாடு. நம் ஊரில் ‘எக்கோ டூரிஸம்’ என்று வாகனங்கள் ஓடாத ஒன்றிரண்டு டூரிஸ்ட் ஸ்பாட்கள் இருக்கும். ஆனால், முழுக்க முழுக்க நார்வே எக்கோ நாடு ஆனது எப்படி?

இத்தனைக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இந்த அறிவிப்பை வெளியிட்டது நார்வே அரசாங்கம். ‘‘இனிமேல் பெட்ரோல்/டீசல் கொண்ட கார்கள் நார்வேயில் ஓடாது’’ என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கான மார்க்கெட் சூடு பிடிக்கத் தொடங்கியது. குட்டி நாடான நார்வேயில் மக்கள் தொகை ரொம்பவும் கம்மிதான். ஆனால், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் கார்கள் இங்கு ஓடுகின்றனவாம்.

 

Norway

சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்ப்பதற்குக் கண்டுபிடிக்கப்பட்டவைதான் எலெக்ட்ரிக் கார்கள். முழுக்க முழுக்க பேட்டரியில் ஓடுவதால், இதில் எக்ஸாஸ்ட் - அதாவது சைலன்ஸரே இருக்காது. இதில் இருக்கும் ஒரே பிரச்னை - இதை சார்ஜ் ஏற்றுவதுதான். 8 மணி நேரம் சார்ஜ் ஏற்றினால், அதிகபட்சம் 120 கி.மீ வரை பயணிக்கலாம் என்பதுதான் இதில் மைனஸ். ஆரம்பத்தில் இந்த அறிவிப்பை நார்வே போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டபோது, ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பின. ‘‘டீசல்/பெட்ரோல் விற்பனை ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நார்வே இனி பொருளாதாரத்தில் அவ்வளவுதான்!’’ என்று வியாபார காந்தங்கள் பொங்க ஆரம்பித்தார்கள். ஆனால், இப்போது உலகிலேயே எலெக்ட்ரிக் கார்களை அதிகமாக விற்பனை செய்யும் நாடு - நார்வேதான். 

அதற்காக அரசாங்கம் அளித்த சலுகைகள் கொஞ்சநஞ்சமல்ல. முதலில் கார் வாங்கும்போது பர்ச்சேஸ் வரி, பல் விளக்க வரி என்று பரவலாக இருந்த எல்லா வரிகளையும் காலி செய்தது அரசு. அதாவது, அந்த ஊரின் எக்ஸ்ஷோரூம் விலைக்கே கார் வாங்கலாம். (நம் ஊரில் எக்ஸ் ஷோரூம் விலை 5 லட்சம் என்றால், ஆன்ரோடு விலை 6.5 லட்சம் வரும்!) அப்புறம், சார்ஜிங் பிரச்னையைத் தவிர்ப்பதற்காக, நாடு முழுவதும் 5,000-த்துக்கும் மேற்பட்ட சார்ஜிங் ஸ்டேஷன்கள் ஏற்படுத்தினார்கள். சார்ஜ் பண்ணுவதற்குக் கட்டணமே கிடையாது. அதற்குப் பிறகு நார்வேயில் டோல்கேட் கட்டணத்தையும் இலவசமாக்கினார்கள். அதேபோல், நம் ஊரைப்போல் கக்கத்தில் கைப்பையைச் சொருகிக்கொண்டு பார்க்கிங் வசூலிக்கும் சிஸ்டத்துக்கும் அடுத்து பெப்பே காட்டினார்கள். அப்புறமென்ன, ‘சர் சர்’ என 60 கி.மீ வேகத்தில் நார்வே லேன்களில் புகுந்து புறப்பட ஆரம்பித்து விட்டன எலெக்ட்ரிக் கார்கள். நிஸான், டெஸ்லா, செவர்லே, ஃபோக்ஸ்வாகன் போன்ற நிறுவனங்களின் கார்கள்தான் நார்வேயில் லீடிங். இப்போது இங்கே கார்பன் எமிஷன்களின் அளவு, 5%-க்கும் கீழாகக் குறைந்திருக்கிறதாம். காரணம், Plug and Drive சிஸ்டம். பஸ்களுக்கும் இந்த சிஸ்டம் வரவிருக்கிறது. 

 

Norway

 

‘‘2020-க்குள் 0% கார்பன் எமிஷன் நாடாக நார்வே இருக்கும். எலெக்ட்ரிக் கார் பயன்பாட்டில் மட்டுமல்ல; இன்னும் இரண்டு வருடங்களில் 4 லட்சம் பேட்டரி எலெக்ட்ரிக் வாகனங்கள் ஓடும். இதற்கு ஒத்துழைத்த நார்வே அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் மிக்க நன்றி!’’ என்று அண்மையில் நடந்த விழாவில் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்திருக்கிறார், எலெக்ட்ரிக் கார் விற்பனை அசோஸியேஷன் தலைவர் ‘கிரிஸ்டினா பு’ என்பவர்.

இதைப் பார்த்துவிட்டோ என்னவோ, அமெரிக்காவில் எலெக்ட்ரிக் கார்களுக்கென 10,000 இலவச எலெக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவப் போகிறார்களாம். 

நம் ஊரில் ஓபிஎஸ், யுபிஎஸ் பிரச்னை முதலில் சுமுகமாக முடியட்டும்! அட்லீஸ்ட், Drunk and Drive சிஸ்டத்தையாவது முழுமையாக ஒழிக்கலாம்; அப்புறம் Plug and Drive சிஸ்டத்துக்கு வரலாம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

பிளாஸ்டிக் சாலைகள்: இங்கிலாந்துக்கு வழிகாட்டிய இந்தியா

இந்தியாவில் சாலைகளின் பள்ளங்களை நிரப்ப பழைய பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதைப்பார்த்த பிரிட்டிஷ் தொழிலதிபர் அதை ஒரு தொழிலாக செய்து இங்கிலாந்தில் உள்ளூராட்சிகளுக்கு பிளாஸ்டிக் சாலைகளை போட்டு வருகிறார்.


இந்த பிளாஸ்டிக் சாலைகள் குறைவான செலவில் வலுவானவையாக இருப்பதோடு, ஏராளமாக குவியும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முடியாமல் திணறும் உள்ளூராட்சிகளின் பிரச்சனைக்கு தீர்வாக திகழ்வதாகவும் தெரிவித்தார்.


உலகில் மொத்தம் 40 மில்லியன் கிமீ சாலைகள் உள்ளன. அவற்றை உருவாக்க பல மில்லியன் பெட்ரோலிய கச்சா எண்ணெய் பயன்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் பொறியாளர் மெக்கார்ட்னியின் நிறுவனம் வீணாகும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி சாலைகள் அமைக்கிறது.
தனது இந்த முயற்சிக்கு இந்தியாவே வழிகாட்டியதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
வீணாகும் பிளாஸ்டிக்கை சாலைப்பள்ளங்களில் போட்டு எரியூட்டி சாலைப்பள்ளங்களை இந்தியர்கள் நிரப்புவதை இவர் நேரில் பார்த்தார். அதை தொழிற்சாலைகள் மூலம் செய்யும் வழியை இவர் உருவாக்கினார்.
பொதுவாக சாலைகள் 90% கல், ஜெல்லி, மணலும் அவற்றை இணைக்கும் 10% தாரும் இணைந்து போடப்படுகின்றன.
அந்த தார் கச்சா எண்ணெயிலிருந்து பெறப்படுகிறது. அதற்கு பதிலாக மிகச்சிறிய பிளாஸ்டிக் சில்லுகளை பயன்படுத்த முடியும் என்பதை இவர் செய்துகாட்டியிருக்கிறார்.
வீடுகள், தொழிற்சாலைகளில் வீணாகும் பிளாஸ்டிக் பொருட்களை சின்னஞ்சிறு சில்லுகளாக மாற்றி இப்படி பயன்படுத்தலாம்.
இந்த பிளாஸ்டிக் குப்பைகள் எல்லாமே வீணாக மண்ணில் கொட்டப்படுபவை. அதற்கு பதில் அவை இப்படி மறுசுழற்சியாக்கப்படுவது நல்லது என்கிறார் இவர்.
இங்கிலாந்திலுள்ள இரண்டு உள்ளூராட்சிகள் பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்தி சாலைகள் போட ஆரம்பித்துள்ளன.
மெக்கார்ட்னி நிறுவனம் சிறியது மற்றும் புதியது என்றாலும் தான்போடும் சாலைகள் மலிவானவை, வலுவானவை, சுற்றுச்சூழலுக்கும் நன்மை செய்யக்கூடியவை என்கிறார் அவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.