Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

கியூபாவில் மில்லியன் கணக்கான நண்டுகளின் படையெடுப்பு  (Photos & Video)

கியூபாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு மில்லியன் கணக்கான நண்டுகள் படையெடுப்பதால் கரையோரங்களில் வசிப்பவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கியூபாவில் மில்லியன் கணக்கான நண்டுகளின் படையெடுப்பு (Photos & Video)

 

சிவப்பு, மஞ்சள் மற்றும் கறுப்பு நிறத்திலான நண்டுகள் கரையோரப் பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றன.

பிக்ஸ் விரிகுடாப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நண்டுகளின் படையெடுப்பு நடைபெற்று வருகிறது.

இனப்பெருக்கம் காரணமாகவே இந்த நண்டுகள் கரைப்பகுதியை நோக்கி அதிகளவில் நகர்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவை இவ்வாறு கரைப் பகுதியை நோக்கி நகரும் போது வாகனங்களில் சிக்கி உயிரிழக்க நேரிடுவதுடன், பறவைகளுக்கும் இரையாகின்றன.

 

1

2

 

4

 

5

6

 

http://newsfirst.lk

 

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சேறு பூசிய ஜீன்ஸ் வேண்டுமா ? 425 டாலர்கள் !

 

ஒரு அமெரிக்க ஆடை நிறுவனம் 'சேறு பூசப்பட்ட' ஒரு ஜீன்ஸ் கால்சட்டையை 425 டாலர்களுக்கு ( சுமார் 27,000 இந்திய ரூபாய்) விற்பதை கேலி செய்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவாகிவருகின்றன.

சேறு பூசியுள்ளது போன்ற வடிவமைப்பிற்கு எதிராக பேஸ்புக் விமர்சகர்கள் காட்டமாக விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.படத்தின் காப்புரிமைNORDSTROM Image captionசேறு பூசியுள்ளது போன்ற வடிவமைப்பிற்கு எதிராக பேஸ்புக் விமர்சகர்கள் காட்டமாக விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

நார்ட்ஸ்ட்ரோமின் வலைத்தளத்தில் ''கரடுமுரடான, அமெரிக்க அலுவலக வேலைக்கான '' மற்றும் ''கடுமையாக உழைப்பை'' பிரதிபலிக்கும் ஆடை என இந்த உடை வர்ணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆடை, கடினமான பணி சூழலுக்கு ஏற்றவிதமாக, சேறு பூசியுள்ளது போன்ற தோற்றத்தை கொண்ட புதிய வடிவமைப்பை கொண்டது என்று அந்த நிறுவனம் விவரிக்கின்றது.

ஆனால் பேஸ்புக் விமர்சகர்கள் இந்த கருத்துக்கு காட்டமாக விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

''உங்கள் வீட்டுத் தோட்டத்தில் நீங்கள் உருண்டு எழுந்தாலே, ( அதாவது இவ்வளவு காசு கொடுக்காமலே) இந்த ஜீன்ஸ் உடையில் உள்ளது போன்ற தோற்றத்தை பெற முடியும்,'' என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

''நீங்கள் வேலை செய்வதற்காக உங்களை அசுத்தபடுத்திக்கொள்ளவும் பயப்படமாட்டீர்கள்'' என்பதை உணர்த்த, சேறு பூசிய வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது என அந்த நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

நார்ட்ஸ்ட்ரோம் நிறுவனம் 'பாராக்குடா ஸ்ட்ரேயிட் லெக் ஜீன்ஸ்' என்று விவரிக்கும் இந்த ஜீன்ஸ் பற்றி பேஸ்புக் பக்கங்களில் விமர்சிப்பவர்களில் ஒருவர், டிஸ்கவரி தொலைகாட்சியின், 'டர்ட்டி ஜாப்ஸ்' என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மைக் ரோவ் .

கடினமான பணிசுழலுக்கு ஏற்றவிதமாக, சேறு அப்பியுள்ளது போன்ற தோற்றத்தை கொண்ட ஜீன்ஸ்படத்தின் காப்புரிமைNORDSTROM

மைக் ரோவ், '' அழுக்கான வேலையை செய்த ஒருவர் அணிந்த உடை போல இது தோற்றமளிக்கிறது. ஆனால் அதுபோன்ற வேலை செய்யாதவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது'' என்று பதிவிட்டுள்ளார்.

'' 'பாராகுடா ஸ்ட்ரேயிட் லெக் ஜீன்ஸ்' கால்சட்டை அல்ல'' என்றும் ''வேலை என்பது நகைமுரணான ஒன்று, அது மதிப்பு வாய்ந்தது அல்ல என்று எண்ணும் பணக்காரர்களுக்காக இந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது'' என்றும் பதிவிட்டுள்ளார்.

நார்ட்ஸ்ட்ரோம் நிறுவனத்திற்காக நியூயார்க் சார்ந்த ஆடம்பர டெனிம் பிராண்ட் பிஆர்பிஎஸ்(PRPS) என்ற நிறுவனம் தயாரித்துள்ள ஜீன்ஸ் ஆடையை பேஸ்புக்கில் ரோவ்வை பின்தொடர்பவர்கள் பலரும் காட்டமாக விமர்சித்துள்ளனர்.

பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளத்தில் கடும் விமர்சனங்கள் பதிவிடப்பட்டுள்ளனபடத்தின் காப்புரிமைTWITTER Image captionபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளத்தில் கடும் விமர்சனங்கள் பதிவிடப்பட்டுள்ளன

'' வெறும் 200 டாலர்கள் என்னிடம் கொடுங்கள். உங்களுக்கு ஏற்றமாதிரி உங்கள் ஜீன்ஸை நான் வடிவமைத்து தருகிறேன். நீங்கள் பல மாதிரிகளில் இருந்து ஒன்றை தேர்வு செய்யலாம். அது குதிரை கொட்டகையில் வேலைசெய்பவர், கோழி பண்ணை கட்டுபவர், டிராக்டர் வண்டியின் கிரீஸ், குயவர்களின் களிமண் என பலவற்றில் ஒன்றை தேர்வு செய்யலாம். 600 டாலர்கள் தந்தால், உங்கள் ஜீன்ஸை ஒரு ஆட்டைக் கடிக்க வைத்து அதில் ஒரு ஓட்டையை ஏற்படுத்தலாம்,'' என்கிறார் ஒருவர்.

ஆனால் எல்லோரும் இந்த புதிய ஜீன்ஸ் ஆடையை நிராகரிக்கவில்லை.

கால் முட்டி பகுதியில் 'ஜன்னல்கள்' உள்ளது போன்ற வடிவமைப்பை கொண்ட ஜீன்ஸ்படத்தின் காப்புரிமைNORDSTROM

சேறு பூசப்பட்ட ஜீன்சை வாங்குவதில் என்ன பிரச்சனை'' என்று ஒருவர் ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ''ஒருவர் 400 டாலர்களை கொண்டு ஒரு அழுக்கான ஜீன்ஸ் உடையை வாங்க முடிந்தால், வாங்கட்டும்'' என்கிறார் அவர்.

கடந்த மாதம் நார்ட்ஸ்ட்ரோம் நிறுவனம் மற்றொரு அசாதாரணமான கால்சட்டை ஜீன்ஸ் உடையை அறிமுகப்படுத்தியது. அதில் கால் முட்டி பகுதியில் 'ஜன்னல்கள்' உள்ளது போன்ற வடிவமைப்பை கொண்டது என்றும் ஆனால் சேறு பூசப்பட்ட மாதிரி ஜீன்சை காட்டிலும் மிகவும் மலிவானது வெறும் 95 டாலர்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டது.

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

கணித மேதை ராமானுசன் மறைந்த தினம்: ஏப்ரல் 26, 1920

கணித மேதை ராமானுசன் 1920-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் மரணமடைந்தார்.

 
கணித மேதை ராமானுசன் மறைந்த தினம்: ஏப்ரல் 26, 1920
 
கணித மேதையான ராமானுசம் சீனிவாசன்-கமலத்தம்மாள் ஆகிய தம்பதியருக்கு 1887-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி ஈரோட்டில் பிறந்தார். இவருக்கு பிறகு இவரது பெற்றோருக்கு மூன்று குழந்தைகள் பிறந்து ஓரிரு ஆண்டுகளிலேயே இறந்து போயினர்.

இராமானுசனின் தந்தையாரும் தந்தை வழி பாட்டனாரும் துணிக்கடைகளில் எழுத்தராக பணியாற்றி வந்தனர். தாய் வழி பாட்டனாரும் ஈரோட்டு முனிசிப் அறமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். ஆகவே அவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் இருந்தார்.

இராமானுசன் தாய் வழி தாத்தா வேலை பார்த்த கடை 1891-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்துக்கு மாறியதால் இவரது குடும்பமும் காஞ்சிபுரம் வந்தது. 1892-ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்தில் இருந்த தொடக்கப்பள்ளி ஒன்றில் ராமானுசன் தொடக்க கல்வியை தொடங்கினார்.

1894-ஆம் ஆண்டு அவர் தெலுங்கு வழி கல்விக்கு மாற்றப்பட்ட ஒரு சில நாட்களிலேயே அவரது குடும்பம் கும்பகோணத்திற்கு இடம்பெயர்ந்தது. அங்கு கல்யாணம் தொடக்க கல்வியில் சேர்ந்து கல்வி கற்றார்.

1897 ஆம் ஆண்டில் மாவட்டத்திலேயே முதலிடம் பெற்று தொடக்கக் கல்வியை நிறைவு செய்தார். 1897-ஆம் ஆண்டில் கும்பகோணம் நகர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அவ்வாண்டிலிருந்து முறையாகக் கணிதம் கற்கத் தொடங்கினார்.

சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914 ஆண்டுக்கும் 1918 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.

1920-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் மரணமடைந்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் ‘The Ramanujan Journal’ என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. 

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

“பேசும் பூமி... நடமாடும் சாம்பல்...!” - செர்னோபில்லும்... இந்திய அரசமைப்பும்! #Chernobyl

 
 

செர்னோபில் அணு உலை விபத்து

ங்களுக்கொரு காதல் இருக்கிறது. ஆதிக்காட்டிலிருந்து ஊற்றெடுத்து அதன் போக்கில் ஓடுமே ஒரு நதி, அதுபோலான காதல்; அந்தக் காட்டின் இலைகள் போர்த்திய நிலம், ஓர் ஈரப்பதத்துடன் இருக்குமே, அப்படியோர் ஈரமான காதல்; புறவுலகின் எந்த அழுக்குகளும் தீண்டாத காதல். ஆனால், விடிந்தும் விடியாத ஒரு நாளில் அந்த ஈரத்தின் மீது, அந்த நதியின் மீது ஒரு கதிர்வீச்சு தாக்குதல் தொடுக்கப்படுகிறது. இப்போது என்ன செய்வீர்கள்...? அந்த நதியை, அந்த ஈரத்தை... அந்தக் காதலைவிட்டு விலகுவீர்களா...? உங்களைத்தான் கேட்கிறேன்... அந்தக் கதிர்வீச்சால் எல்லாம் சிதைந்து, அது உங்களையும் சிதைக்குமென்றானபின் நீங்கள் என்ன செய்வீர்கள்...? உங்களால் உங்கள் காதலனை அல்லது காதலியைவிட்டு விலக முடியுமா..? 

நாம் என்ன செய்வோமென்று தெரியவில்லை. ஆனால், லூட்மில்லா தன் காதலன் வாஸ்யாவைவிட்டு விலகவில்லை... அவன் ஓர் அணு உலையாக மாறி, தன் அருகில் வருபவர்கள் மீது கதிர்வீச்சைப் பீய்ச்சி அடிக்கிறான் என்று தெரிந்தபின்னும், லூட்மில்லாவால் அவனைவிட்டு விலகமுடியவில்லை. மருத்துவர் லூட்மில்லாவிடம், “இந்த நிலையில் அவர் ஒரு மனிதர் இல்லை. அவர் ஓர் அணு உலை. அவரிடம் 1,600 ரோன்ட்ஜன் கதிர்வீச்சு இருக்கிறது. 400 என்பதே அதிகம். நீ ஓர் அணு உலையை இறுக அணைக்க விரும்புகிறாய். நீயும் அவருடன் இணைந்து எரிந்து சாவாய்...” என்று எச்சரித்தபின்னும், அவளால் வாஸ்யாவைவிட்டு விலகமுடியவில்லை.  

இன்னும் ஊடுருவிப் பார்த்தால், அவள் மட்டும் அல்ல... செர்னோபில்லில் அப்போது யாரும், யாரையும் விட்டு விலக விரும்பவில்லை. செல்ல பூனைக்குட்டிகள், உருளைக்கிழங்கு தோட்டம், வளர்ந்த வீடு என அனைத்தும் அந்த விபத்துக்குப் பின் கதிர்வீச்சை உமிழும் அணு உலையாக மாறிய பின்னும், எவரும் அங்கிருந்து விலக விரும்பவில்லை. அந்த மக்கள் சொல்கிறார்கள், “கதிர்வீச்சால் விஷம் நிறைந்த பிரதேசமாக மாறினாலும் இது என் வீடு. பறவைகள்கூடக் கூட்டைத்தானே விரும்பும்...? இது எங்கள் கூடு.” 

அணு உலையாக மாறினார்கள்!

செர்னோபில் அணு உலை விபத்து

“எப்படி அங்கு எல்லோரும் அணு உலையாக மாறினார்கள்...?” உலகமே அதிர்ந்து திரும்பிப் பார்த்து... என்ன தீர்வு என்று தெரியாமல் திக்கற்று நின்ற அந்த அணு உலை விபத்துக்குப் பின்தான். ஆம், டிராகுலாவின் கதைகள் கேட்டிருக்கிறார்களா...? அது நம் கழுத்தில் கடித்தால், நாமும்  டிராகுலாவாக மாறுவோம்தானே. அதுபோலத்தான் செர்னோபில்லில் அந்த விபத்து நடந்தபின், அந்தக் கதிர்வீச்சால் மாண்டு மிச்சமிருப்பவர்கள் எல்லோரும் ஓர் அணு உலையாக மாறிப்போனார்கள். அவர்களின், ஆன்மாகூடக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டிருந்தது.  

அந்த விபத்துக்குப் பின் அவர்களுக்கு வேறு எந்த அடையாளமும் இல்லாமல் போய்விட்டது. மருத்துவர்கள், பொறியாளர்கள், வணிகர்கள், ராணுவ வீரர்கள் ஏன் உக்ரேனியர் என அவர்களுக்கு எந்த அடையாளமும் இல்லாமல் போனது. அவர்கள் செர்னோபில்காரர்கள்; ஆம். அவர்கள் செர்னோபில்காரர்கள் மட்டும்தான். 

“ஏன் அச்சப்படுத்துகிறீர்கள்...?”

“சரி...  வாஸ்யா, பறவைகளின் கூடு, டிராகுல்லாவின் கதைகள் இப்போது ஏன்...? அந்த விபத்து நடந்து மூன்று தசாப்தங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அறிவியல் எவ்வளவோ உச்சங்களைத் தொட்டுவிட்டது. பின்.. மீண்டும் மீண்டும் ஏன் ஒரு தோல்வியின் கதைகளையே பேசிப் பயமுறுத்துகிறீர்கள்... என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. 

நிச்சயம். உங்களை அச்சப்படுத்துவதற்காக, ஒரு பீதியை உண்டாக்குவதற்காக அல்ல இந்தக் கதைகள். தோல்விகளிலிருந்து பாடம் கற்பதற்காகத்தான். ஆம், அணுசக்தி ஒழுங்காற்று வாரிய முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் தனது கட்டுரைகளில் தொடர்ந்து கூடங்குளம் அணு உலையில் இருக்கும் சிக்கலைப் பட்டியலிடுகிறார். இவர் சொல்கிறார், “கூடங்குளம் கேபிள் அமைப்புப் பணிகள் முடிந்துவிட்டன. ஆனால், அவை அதனை அமைப்பதற்கான விதிகளோடு பொருந்திப்போகவில்லை. கேபிள் தேர்வுத்தரம், மின்காந்த இடையீட்டில் இருந்து பாதுகாப்பு அல்லது அதன் இருத்தல் அமைப்பு போன்றவை, ரஷ்ய.. இந்திய அல்லது வேறெந்த தர நிர்ணயங்களோடும் பொருந்திப்போகவில்லை. அதனால், மின்காந்த இடையீடு பிரச்னை இன்னும் நீடிக்கிறது” என்கிறார். இவர் வெறும்  போராட்டக்காரர் அல்ல... அறிவியலாளர். ஆனால், இதைச் சரி செய்யாமல், இவர்களின் நியாயமான கவலைகளுக்குச் செவிமடுக்காமல் நாம் முன்னேறிச் சென்றுக்கொண்டிருக்கிறோம். அணு உலை 3-வது, 4-வது அலகு என விரிவாக்கும் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். 

வளர்ச்சி வேண்டும்தான்... மின்சாரம் வேண்டும்தான்... அறிவியல், விஞ்ஞானம் வேண்டும்தான். ஆனால், அதைவிட முக்கியம், அச்சம் தவிர்த்த வாழ்வு. அதை அந்தப் பகுதி மக்களுக்கு அளிக்காமல் நாம் என்ன செய்யப் போகிறோம்? 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 48-வது பிரிவு, “சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் மற்றும் நாட்டின் காடுகளையும் வன உயிரினங்களைப் பாதுகாக்கவும் முனைதல் வேண்டும்” என்கிறது. ஆனால், நாம் நம் வளர்ச்சித் திட்டங்களின்போது, இதைக் கணக்கில்கொள்ளாமல் முன்னேறிச் செல்கிறோம். 

“வாழ விரும்புகிறேன்... விரும்புகிறோம்!”

செர்னோபில் அணு உலை விபத்து

 

செர்னோபில்காரர் ஒருவர் இப்படிச் சொல்வாராம், “பூமியில்தான் நாம் வசிக்கிறோம்... பூமியில் உள்ளதைத்தான் நாம் உண்கிறோம். அதனால் நாம் அனைவரும் பேசும் பூமி” என்பாராம். அந்த அணு உலை விபத்துக்குப் பின்  விலங்குகளை ‘நடமாடும் சாம்பல்’ என விளித்திருக்கிறார். ஆம், உண்மைத்தானே! நாம் அந்தப் பூமியை நாசப்படுத்தி, நம்மைநாமே நாசப்படுத்திக்கொள்கிறோம். சமூக விலங்காகிய நாம்... நடமாடும் சாம்பலாகத் திரிகிறோம்.

செர்னோபில்லில் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட விலங்குகளை வேட்டையாட வேட்டைக்காரர் ஒருவர், இவ்வாறாகச் சொல்கிறார், “உயிர் வாழக்கூடிய உயிரினங்கள் அனைத்துக்கும், பூச்சிகள் உட்பட, ஆன்மா என்பது இருக்கிறது. காயம்பட்ட மான், இதோ இங்கே விழுந்துக் கிடக்கிறது. நீங்கள் அதைக் கொல்வதற்கு முன் அதற்காக நீங்கள் வருந்த வேண்டும் என்று விரும்புகிறது. இறுதி தருணத்தில்  அதனிடம் ஒரு மனிதத்தன்மை காணப்பட்டது. அது, உங்களை வெறுத்திருக்கும் அல்லது உங்களைப் பார்த்து, ‘என்னை வாழவிடுங்கள்’ என வேண்டியிருக்கும்; ‘நான் வாழ விரும்புகிறேன்’ என்றிருக்கும். ஆம், அவை வாழ விரும்புகின்றன. நாம் வாழ விரும்புகிறோம். 

மனிதகுலத்தின் முந்தைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கவனமாகப் பயணிப்போம்!

(செர்னோபில் அணு உலை விபத்து 1986-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் நாள் நடந்தது. இன்று செர்னோபில் நினைவு நாள்)

பின் குறிப்பு:

செர்னோபில் விபத்தின் முழுப் பரிமாணத்தையும் அறிய செர்னோபிலின் குரல்கள் புத்தகத்தைப் படிக்கலாம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

பிரபலமாகும் பீர் யோகா

எத்தனையோ யோகா பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பீர் யோகா பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
'நடிப்பின் துடிப்பு அடங்கி விடும்'
 
 

article_1493203224-FB_IMG_1459996085041.பழங்களின் சுவை, தேனின் இனிமையை எவருமே அதுபோல் செயற்கையாகச் செய்ய முடியுமா? முடியாது. இயற்கையின் வலுவை மனிதனால் உருவாக்க இயலாது. 

செயற்கைப் பொருட்கள் போலியானவைதான். ஆனால், மனிதனால் அவைகளில் இருந்து மீளமுடியவில்லை.

இயல்பாகவே துஷ்டகுணத்துடன் நடப்பவர்கள், நல்ல மனிதன் போல் வேடமிட்டாலும் அது எடுபடாது. தகுந்த நேரத்தில் நடிப்பின் துடிப்பு அடங்கி விடும்.

நாம் வாழும் பூமியில் எல்லாத் தரத்தினர்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்குள் எவர் நல்லவர்? எவர் கெட்டவர் எனப் புரியாமல் திணறும் மக்கள் அனேகர்.

யாரோ ஓரிரு துஷ்டர்களால் முழு உலகையும் எடை போடக் கூடாது. அறிவு அனுபவங்களினூடாக எம்மை நாம் தெளிவு படுத்தியே தீரவேண்டும். உலகம் ஒரு பரிசோதனைக் கூடமும் அல்ல; நிமிர்ந்து நில்லுங்கள், தீயோர் நிழலும் தீண்டாது.  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

ஏப்ரல் – 27

 

1296 : இங்­கி­லாந்தின் முதலாம் எட்வேர்ட் மன்னர் டன்பார் என்ற இடத்தில் இடம்­பெற்ற போரில் ஸ்கொட்­லாந்­தரைத் தோற்­க­டித்தார்.


1521 : போர்த்­து­கேய நாடுகாண் பயணி பேர்­டினண்ட் மகலன், பிலிப்­பைன்ஸின்  பழங்­கு­டி­யி­னரால் கொல்­லப்­பட்டார்.


1522 : இத்­தா­லியின் மிலான் நகரைக் கைப்­பற்ற இடம்­பெற்ற போரில் பிரெஞ்சு மற்றும் சுவிட்­சர்­லாந்து படை­யி­னரை ஸ்பானியப் படை­யினர் தோற்­க­டித்­தனர்.


South-African-elections-199411565 : பிலிப்­பைன்ஸில் முத­லா­வது ஸ்பானியக் குடி­யேற்றப் பிராந்­தி­ய­மாக  “சேபு” ஸ்தாபிக்­கப்­பட்­டது.


1667 : பார்­வை­யற்ற ஜோன் மில்ட்டன் தான் எழு­திய “பரடைஸ் லொஸ்ட்” என்ற காவி­யத்தின் காப்­பு­ரி­மையை 10 ஸ்ரேலிங் பவுண்­க­ளுக்கு விற்றார்.


1813 : 1812 ஆண்டின் போரில் ஐக்­கிய அமெ­ரிக்கப் படைகள் ஒண்­டா­ரி­யோவின் தலை­நகர் யோர்க்கை கைப்­பற்­றின.


1840 : லண்­டனில் புதிய வெஸ்ட்­மினிஸ்டர் மாளி­கையின் அடிக்கல் நாட்­டப்­பட்­டது.


1865 : 2,400 பேரை ஏற்றிச் சென்ற ஐக்­கிய அமெ­ரிக்­காவின் சுல்­டானா என்ற நீராவிக் கப்பல் மிசி­சிப்பி ஆற்றில் வெடித்து மூழ்­கி­யதில் 1,700 பேர் கொல்­லப்­பட்­டனர். இவர்­களில் பெரும்­பா­லானோர் அமெ­ரிக்க உள்­நாட்டுப் போரில் சிறைப்­பி­டிக்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்ட கூட்­டணிப் படை­யி­ன­ராவார்.


1904 : அவுஸ்­தி­ரே­லி­யாவின் முத­லா­வது தேசிய அரசை அவுஸ்­தி­ரே­லிய தொழிற் கட்சி அமைத்­தது.


1909 : துருக்­கியின் சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீட் பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டு அவரின் சகோ­தரர் ஐந்தாம் மெஹ்மெட் ஆட்­சிக்கு வந்தார்.


1941 : இரண்டாம் உலகப் போர்: ஜேர்­ம­னியப் படைகள் கிரேக்கத் தலை­நகர் ஏதென்ஸை அடைந்­தன.


1945 : இரண்டாம் உலகப் போர்: கடைசி நாஸி ஜேர்மன் படைகள் பின்­லாந்­தி­லி­ருந்து வெளி­யே­றின.


1960 : பிரெஞ்சு நிர்­வா­கத்தின் கீழ் ஐ.நா.வின் நேரடி ஆட்­சியின் கீழி­ருந்த டோகோ விடு­தலை அடைந்­தது.


1961 : ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து சியேரா லியோன் சுதந்­திரம் பெற்­றது.


1974 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி ரிச்சார்ட் நிக்­ச­னுக்­கெ­தி­ராக வோஷிங்டன் டிசி நகரில் 10,000க்கு மேற்­பட்டோர் ஆர்ப்­பாட்ட ஊர்­வலம் சென்­றனர்.


1978 : இரா­ணுவப் புரட்­சியை அடுத்து ஆப்­கா­னிஸ்தான் மக்கள் ஜன­நா­யகக் கட்சி ஆப்­கா­னிஸ்­தானின் ஆட்­சியைக் கைப்­பற்­றி­ய­துடன் ஆப்­கா­னிஸ்­தானில் போர் தொடங்­கி­யது.


1981 : Xerox PARC நிறு­வனம் கணனி மௌஸை  அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.


1992 : சேர்­பியா மற்றும் மொண்­டெ­னே­கி­ரோவை உள்­ள­டக்­கிய யூகோஸ்­லா­விய கூட்டுக் குடி­ய­ரசு அமைக்­கப்­பட்­டது.


1993 : ஆபி­ரிக்­காவின் காபோன் நாட்டில் இடம்­பெற்ற விமான விபத்தில் காம்­பி­யாவின் தேசிய கால்­பந்­தாட்ட அணி­யினர் அனை­வரும் உயி­ரி­ழந்­தனர்.


1994 : தென் ஆபி­ரிக்­காவில் முதற்­ த­ட­வை­யாக கறுப்­பி­னத்­த­வரும் வாக்­க­ளித்த மக்­க­ளாட்சி முறை­யி­லான தேர்தல் இடம்­பெற்­றது.


2005 : எயார் பஸ் நிறு­வ­னத்தின் ஏ380 ரக பிர­மாண்ட விமானம் முதல் தட­வை­யாக பறந்­தது. 


2007 : அமெரிக்காவின் பல மாநிலங்களில் பாரிய சுழற்காற்று தாக்கியது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 


2014 : பாப்பரசர் 23 ஆம் அருளப்பர் மற்றும் பாப்பரசர் 2 ஆம் அருளப்பர் சின்னப்பர் ஆகியோர் புனிதர்களாக பிரகடனப்படுத்தப்பட்டனர். 

http://metronews.lk

  • தொடங்கியவர்

ஜோதிகா, பெண்களுக்குச் சொல்லும் வெற்றியின் ரகசியம் இதுதான்!

 
 

ஜோதிகா

வெற்றிக்கான ரகசியங்கள் எல்லோருக்கும் பொதுவானது அல்ல. ஆனால், அடிப்படையான சில விஷயங்கள் மாறாது. ஒருவர் சொல்லும் சின்ன விஷயம் நமது இலக்கை அடைய பெரும் உதவுவதாக இருக்கக்கூடும். நடிகை ஜோதிகா தான் நடிக்கும் 'மகளிர் மட்டும்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ஒரு விஷயம் பெண்கள் முயற்சிகளுக்கு வெற்றியைத் தேடித் தருவதற்கான ஒரு வழியாக இருந்தது.

வெற்றி எனும் வார்த்தையே அழகானது; மகிழ்ச்சி தருவது; புன்னகைக்க வைப்பது. வெற்றியை அடைவதற்கான காலமும் முயற்சியும் ஒவ்வொருவரின் இலக்குகளைப் பொறுத்தது. அதற்கான திட்டமிடலும் அதைச் சோர்வற்று நடைமுறைப்படுத்துவதிலுமே வெற்றியை அவர்களின் அருகில் வரவழைப்பதற்கான வழிகளாகும்.

வெற்றி, இலக்கு என்றதுமே பெரிய விஷயங்களுக்குத்தான் இதெல்லாம் பொருந்தும் என நினைத்து ஒதுங்கிவிட வேண்டாம். நம்மை ஓர் அடி முன்னகர்த்தும் எதுவுமே நம் வாழ்வின் வெற்றிதான். அதுவும் நமது சமூக அமைப்பில் பெண்களுக்கு ஓர் இலக்கு வைத்துக்கொண்டு அதை நோக்கிப் பயணிப்பது என்பதெல்லாம் எட்டா கனியாகவே இருந்து வருகிறது. அந்தக் கனியை தாங்களும் ருசிக்க முடியும் எனும் நம்பிக்கையை கல்வியே அளிக்கிறது.

கல்விதான் பெண்களுக்கு புதிய புதிய உலகங்களைத் திறந்துகாட்டியது. கண்களைக் கூசச் செய்யுமளவுக்கு ஒளியைத் தந்ததும் கல்விதான். அதனைக் கைப்பற்றியே தங்கள் பயணத்தினை அர்த்தப்பூர்வமாக மாற்றி அமைக்கின்றனர் பெண்கள்.

தன் இலக்கை அடைவதற்கு ஆணை விட, இன்னும் ஒரு மடங்கு கூடுதலாக உழைக்க வேண்டிய சூழல்தான் பெண்களுக்கு. தங்களின் இலக்கை அடைய தங்கள் குடும்பத்தினர் உதவி மிக அவசியம். அந்த உதவிகளைப் பெறுவதை பெண்கள் கவனமாக கையாள வேண்டியவர்களாக உள்ளனர். இது ஆண்களுக்கும் பொருந்து என்றாலும் சமூக மாற்றம் முழுமையடையாத நிலையில் பெண்களின் பக்கத்தின் நின்றே இதைக் கூற வேண்டியிருக்கிறது.

மகளிர் மட்டும்

சரி, நடிகை ஜோதிகா பட விழாவில் கூறிய விஷயத்துக்கு வருவோம். ஜோதிகாவுக்கு திருமணமாகி பத்தாண்டுகளாகி விட்டன. திருமணத்திற்கு முன் பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தவர். பின், குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதில் முழு ஈடுபாடு காட்டினார். பின்னர் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். 36 வயதினிலே எனும் திரைப்படத்தைத் தொடர்ந்து, மகளிர் மட்டும் எனும் படத்தில் நடித்து வருகிறார். அதன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசும்போது,

"பெண்கள் வேலை செய்வதற்கு ஆண்கள் உதவுவது இயல்பு. என் வீட்டில் சூர்யாவின் அம்மா, சூர்யா, கார்த்தி ஆகியரோடு இப்போது எனக்கு மதிய உணவு கொடுத்துவிடுகிறார்கள். காலையில் வேலைக்குச் செல்லும்போது 'என்ஜாய் யுவர் வொர்க்' என உற்சாகமூட்டுவார் அப்பா. அதேபோல சூர்யா, காலையில் நான் சூட்டிங் புறப்படும்போது காரில் ஏறும் வரை இருந்து வழியனுப்புவார். திடீரென ஒருநாள் கார்த்தி வந்து, 'அண்ணி, மகளிர் மட்டும் படத்தில் ஒரு பாட்டு பாடறேன்' எனச் சொல்லிவிட்டு சென்றார். அது ரொம்ப சப்போர்ட்டிங்கா இருந்தது. சிவகுமார் குடும்பத்தின் எல்லா ஆண்களுக்கும் நன்றி"

எனக் குறிப்பிட்டார். இதை ஜோதிகா சொல்லும்போது அவரின் குரலில் அவ்வளவு நெகிழ்வு இருந்தது. மனதிலிருந்து வரும் வார்த்தைகளாக அவை இருந்தன. இந்தக் குணம் முக்கியமானது.

 

 

ஒரு நாளின் இயல்பான வேலைகள் தொடங்கி, ஒவ்வொன்றிலும் நம் குடும்பத்தினரின் உதவிகள் இருக்கும். சில பெண்களின் வீடுகளில் அது இயல்பாக கிடைத்திருக்கும். பலருக்கு போராடிய பிறகே கிடைத்திருக்கும். ஆனாலும் அந்த உதவிகளுக்கான நன்றிகளை தக்க நேரத்தில், அந்த நன்றியின் முழு அர்த்தமும் அவர்களைச் சென்று சேரும் விதத்தில் சொல்லிவிடும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வது நல்லது. பெண்கள் உதவுதற்கு ஆண்கள் நன்றி சொல்கிறார்களா என்ன... எங்கள் வீட்டில் ஒரு முறைக்கூட எங்களுக்கு ஆண்கள் நன்றி சொன்னதே இல்லை... என உங்களுக்குத் தோன்றலாம். ஆனாலும் நீங்கள் சொல்லுங்கள். ஒரு நல்ல பழக்கம் உங்கள் மூலமே தொடங்கட்டும். அதைப் பார்த்து ஆண்களும் தொடர்வதற்கான வாய்ப்பாக அது அமையக்கூடும். நல்ல விஷயங்களைத் தொடங்குவதற்கு தயங்க வேண்டாம்.

இந்த நன்றி சொல்லும் பட்டியல் மெள்ள விரிவடையட்டும். ஒரு பெண்ணின் வெற்றிக்கு இந்த நன்றிகள் பெரிதும் உதவும். ஏனெனில் ஒரு செயலை செய்ய விடாமல் பின்னுக்கு இழுப்பவர்களை அறிந்துகொண்டு அவர்களிடமிருந்து விலகுவதைப் போல, உதவுபவர்களுடன் தோழமை கொள்வது முக்கியமானதே.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

விபத்துக்களை புலனாயும் ஆளில்லா விமானங்கள்

வானிலும் கடலிலும் நடக்கும் விபத்துக்களைத் தடுப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று அந்த விபத்துக்களுக்கான காரணங்கள் என்ன என்பதை கண்டறிவது.


அத்தகைய புலனாய்வில் உலக அளவில் கைதேர்ந்த நிபுணர்கள் பிரிட்டனில் இருக்கிறார்கள்.


அவர்கள் சமீபகாலமாக பயன்படுத்தும் ரகசிய ஆயுதங்கள் ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள்.


ஆளில்லா விமானங்களால் வான் விபத்துக்கள் அதிகரிக்கலாம் என்று உலக அளவில் அச்சங்கள் வெளியாகி வரும் சூழலில், ஆளில்லா விமானங்களை விபத்துக்களை தடுக்கும் கருவிகளாக மாற்றியுள்ளனர் பிரிட்டிஷ் புலனாய்வாளர்கள்.


வான் மற்றும் கடல் விபத்துக்களின் புலனாய்வில் ஆளில்லா விமானங்கள் எப்படி முக்கிய பங்காற்றுகின்றன என்பது குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தித்தொகுப்பு.

  • தொடங்கியவர்

பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த சங்காவிடம் சச்சின் கேட்டது என்ன ?

 

 

தனது 44 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்காருக்கு வாழ்த்துத் தெரிவித்த இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்காரவிடம் பிறந்ததின பரிசொன்றை சச்சின் கேட்டுள்ளார்.

Kumar-Sangakkara-and-Sachin-Tendulkar.jp

கடந்த 24 ஆம் திகதி சச்சின் டெண்டுல்கார் தனது 44 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் குமார் சங்கக்கார டுவிட்டரில் சச்சினுக்கு பிறந்ததின வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

fsafa.JPG

இதையடுத்து சங்காவின் பிறந்த தின வாழ்த்திற்கு நன்றி தெரிவித்து ரீடுவிட் செய்த சச்சின் சங்கவிடம் என்னை எப்போது மினிஸ்ரி ஒவ் ஹார்ப் ( Ministry of Crabs ) ற்கு அழைப்பீர்கள் என கேட்டுள்ளார்.

fsfsa.JPG

 

அதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள சங்கா “ நீங்கள் எப்போதும் வரலாம். நீங்கள் வரும் போது மரியாதையுடன் உபசரிக்கத் தயாராகவுள்ளேன்.“ என  பதிலளித்துள்ளார்.

கொழும்பு கோட்டை டச் ஹொஸ்பிடலில் சங்கா மற்றும் மஹேல ஆகியோர் இணைந்து நடத்தும் கடலுணவுக்கு பிரசித்திபெற்ற ரெஸ்ட்டூரண்டே மினிஸ்ரி ஒவ் ஹார்ப் ( Ministry of Crabs ) என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk

Bildergebnis für ministry of crabs

Bildergebnis für ministry of crabs

  • தொடங்கியவர்

மறக்க நினைப்பதை மூளையில் இருந்து டெலீட்! தொடர்புக்கு: டொரண்டோ விஞ்ஞானிகள்

 
 

மறக்க மூளை

“தீயினால் சுட்ட புண் ஆறினாலும் நாவினால் சுட்ட புண் ஆறாது” என்று கூறிய வள்ளுவர் காலம் முதல் “மறக்கவே நினைக்கிறேன்” என மாரி செல்வராஜ் எழுதும் இந்தக் காலம் வரை மறக்க முடியாத நினைவுகள் என்று பலருக்கும் இருக்கும். அதை எவ்வளவுதான் மறக்க நினைத்தாலும் அது நம் நினைவை விட்டு அகல மறுக்கும். நம்மில் எத்தனைப் பேர் முதல் காதலியின் பெயரை மறக்க முடியாமல் தவித்துக்கொண்டிருப்போம்? நாம் ஒன்றை மறக்க நினைத்தால் மூளை அப்பொழுதுதான் அதை ஆழமாக பதிய வைக்க முயற்சி செய்யும் என்கிறது அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள்.

பொதுவாகவே மூளை எந்த வகையில் நினைவுகளை ஞாபகம் வைத்துக்கொள்கிறது என்பது யாருக்குமே புரியாத புதிர்தான். நாம் தினமும் பார்க்கும், உணரும் அனைத்தும் மூளையின் ஹிப்போதாலமஸ் பகுதியில்  நியூரான்களால் உருவாக்கப்படும் இணைப்புகளால் நமது நினைவுகளாக பதிய வைக்கப்படுகின்றன அந்த நினைவுகளை கூட நிரந்தர நினைவுகள் தற்காலிக நினைவுகள் என்று தனித்தனியே பிரித்து சேர்த்து வைக்கிறது மூளை.

அப்படி மூளை சேர்த்து வைப்பதில் நம் வாழ்வில் நடைபெற்ற மகிழ்ச்சியான தருணங்கள் என்றால் அதை எப்போது வேண்டுமானாலும் நினைத்து சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம். மாறாக நாம் மறக்க நினைக்கும் நம் வாழ்வில் இனிமேல் அப்படி ஒரு நிகழ்வு  நடைபெறக்கூடாது என்று நினைக்கும் நினைவுகள் நிச்சயம் உங்களை வேதனைப்படுத்தலாம்.

ஆனால் இனிமேல் கவலைப்படாதீங்க மக்களே. உங்களுக்காகவே இந்தக் கண்டுபிடிப்பு. இது மூலமாக, உங்கள் கடந்த காலத்தில் உள்ள நினைவுகள் எதையாவது மறக்கனும்னு நினைத்தால் அத மட்டும் அழிச்சிடலாம். அதுக்காக ஒரு வழியை கண்டுபிடித்திருக்கிறார்கள் டொரோன்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.ஹாலிவுட் படங்களில் மட்டுமே நாம் பார்த்து வந்த இது போன்ற காட்சிகள் எதிர்காலத்தில் நமக்கும் சாத்தியமாகலாம்.

இந்தப் புதிய கண்டுபிடிப்பில் உள்ள புதிய தொழில்நுட்பத்தின்  மூலமாக நினைவுகள் சேகரிக்கப்படும் ஹிப்போதாலமாஸ் பகுதியில் சில ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி அதன் மூலமாக நமக்கு தேவையில்லாத நினைவுகளை முற்றிலுமாக அழிக்கலாம் என்று  கூறுகின்றனர் விஞ்ஞானிகள். தற்போது இந்த ஆராய்ச்சியின் முதல் கட்டமாக எலிகளின் மீது இதை செயல்படுத்தி பார்த்ததில் வெற்றிபெற்றிருக்கின்றனர். மனிதர்களின் மீது செயல்படுத்தி பார்க்க அனுமதி கிடைப்பதற்காக காத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள் அதிலும் வெற்றி பெற்று விட்டால் கூடிய விரைவில் இது பயன்பாட்டுக்கு வரலாம்..

பரிசோதனை முயற்சியில் இருக்கும் இந்த தொழில்நுட்பத்திற்கு இப்பொழுதே வரவேற்பு அதிகமாக இருக்கிறது. குண்டு வெடிப்பு ஒன்றில் மனதளவில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு அந்த நினைவில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் ஒரு பெண் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் நபராக தான் இருக்க வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் இதைப்போன்றே பலரும் இது பயன்பாட்டுக்கு வரும் காலத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த கண்டுபிடிப்பின் மூலமாக ராணுவ வீரர்களுக்கு போர்க்களத்தில் ஏற்படும் குற்ற உணர்வு மற்றும் கசப்பான அனுபவங்களை அழித்து அவர்களின் மன உளைச்சலை குறைக்கலாம்

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அந்தச் சம்பவம் மனதில் ஆழமான வலியை ஏற்படுத்தும். அந்தப் பெண் விரும்பினால் அந்தச் சம்பவத்தை அந்த பெண்ணின் நினைவுகளில் இருந்து அழித்து அவர்களை சகஜமாக வாழ வழி செய்யலாம். போதைக்கு அடிமையானவர்களை ஒரே நாளில் குணப்படுத்தலாம் என இதன் சிறப்புகளை பட்டியலிடுகிறார்கள் விஞ்ஞானிகள்.

ஒருவேளை இந்தக் கண்டுபிடிப்பு மனிதர்களிடையே சிக்கலை ஏற்படுத்தினால், கடைசி முறையாக அதை பயன்படுத்தி அந்த ஆராய்ச்சியாளர்கள் மூளையில் இருந்து இந்தக் கண்டுபிடிப்பையே டெலீட் செய்துவிடலாம். இல்லை ப்ரோ?

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

செயற்கை கருப்பை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

குறைமாத ஆட்டுக்கருவை விஞ்ஞானிகள் பலவாரங்களுக்கு செயற்கை கருப்பைக்குள் வைத்து உயிரோடு பாதுகாத்து சாதனை படைத்திருக்கின்ரனர்.


பிளாஸ்டிக் பைக்குள் ஆட்டின் கரு வளரத்தேவையான சத்துக்களடங்கிய பனிக்குடநீர் நிரப்பப்பட்டிருந்தது.


செயற்கையான தொப்புள் கொடியும் இதற்குள் இருந்தது.


இதுபோன்ற செயற்கைக் கருப்பை குறைமாத மனித குழந்தைகளை பாதுகாக்க உதவுமென விஞ்ஞானிகள்நம்புகிறார்கள்.


சில கூடுதல் ஆய்வுகளுக்குப்பின் இதை மனிதக்கருக்களில் சோதிக்க முடியுமென்றும் கருதுகிறார்கள்.


உலகில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை கோடி குறைமாத குழந்தைகள் பிறப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

dot.png கத்தியும் கையுமாகவே திரிகிறார் ஸ்ருதிஹாசன். சுந்தர்.சி இயக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில் இளவரசியாக நடிக்கிறார் ஸ்ருதி. அதற்காகத்தான் 24/7 வாள்வீச்சு, கத்திச் சண்டைப் பயிற்சிகள் ஆனால், பயிற்சிகள் நடப்பது சென்னையில் அல்ல, லண்டனில். மருதநாயகி

p56b.jpg

dot.png வெற்றி மாறன் இயக்கிக்கொண்டிருக்கும் 'வடசென்னை'யில் அமலாபால் நடிக்க இருந்த வேடத்தில் இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ். ``ஆறு வருடங்களாக சினிமாத்துறையில் இருக்கும் எனக்கு
இது பெரிய ஜம்ப்'' என சிலாகிக்கிறார் இந்த காமுக்காப்பட்டி அன்புச்செல்வி! அவார்ட் கன்ஃபார்ம்

p56c.jpg

dot.png அம்மாவாகப்போகிறார் செரீனா வில்லியம்ஸ். 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற செரீனா வில்லியம்ஸ் ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஒப்பனில் சாம்பியன் பட்டம் வென்றதோடு வேறு டென்னிஸ் போட்டிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. முழங்காலில் காயம் என்று மட்டுமே சொல்லிவந்த செரினா கடந்தவாரம் சோஷியல் மீடியாவில் `20 வாரங்கள்...' என தாய்மை சுமையைப் படத்தோடு வெளியிட்டார். ரெடிட் சமூக வலைத்தள அதிபரான அலெக்ஸ் ஓஹனைனுடன் இணைந்து வாழ்ந்துவரும் செரீனா, ஆஸ்திரேலிய ஓப்பனில் சாம்பியன் பட்டம் வெல்லும்போதே கர்ப்ப மாகத்தான் இருந்திருக்கிறார். சூப்பர் சாம்ப்!

p56a1.jpg

dot.png மாஸ்டர் பிளாஸ்டரின் பயோபிக் சச்சின்: `ஏ பில்லியன் டிரீம்’ அடுத்த மாதம் ரிலீஸ். இந்தப் படத்தில் சேர்ப்பதற்காக, சச்சின் விளையாடிய முக்கியமான மேட்ச்களிலிருந்து சில வீடியோக்களை இலவசமாகப் பயன் படுத்திக்கொள்ள பி.சி.சி.ஐயிடம் அனுமதி கோரியது படத் தயாரிப்பு நிறுவனம். ஆனால், நோ சொல்லிவிட்டது பி.சி.சி.ஐ. தோனி பயோபிக் வெளியானபோதும், இதே கோரிக்கை எழுந்தது. அப்போதும், பி.சி.சி.ஐ `நோ’ சொல்லிவிட்டது. நேர்மைன்னா பி.சி.சி.ஐதான்!

dot.png இத்தாலிய தோழிகளுடன் உணவு அருந்தும் ராகுல் காந்தியின் படங்கள்தான் சென்ற வாரத்தின் ஆன்லைன் வைரல். டெல்லியில் மகளிர் காங்கிரஸ் முக்கிய நிர்வாகியான பர்க்கா ஷுக்லா, ``ராகுல் காந்திக்கு பார்ட்டி பண்ண நேரம் இருக்கிறது. ஆனால், தொண்டர்களை சந்திக்க நேரம் இல்லை. ராகுல் காந்தி தொண்டர்களைக் கண்டாலே ஓடி ஒளிகிறார். அவர் துணைத்தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்'' என வெடிக்க, பர்க்காவை கட்சியில் இருந்தே நீக்கிவிட்டது காங்கிரஸ் மேலிடம். ஓ...பார்ட்டி நல்ல பார்ட்டிதான்

dot.png ``இந்தியாவில் மாநிலக் கட்சிகளே இருக்கக்கூடாது. அவற்றை அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக செயல்படுகிறது. இதை எதிர்க்க மாநிலக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்'' எனக் கொந்தளிக்கிறார் மம்தா பானர்ஜி. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட, ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கைச் சந்தித்திருக்கிறார் மம்தா. குடியரசுத் தலைவர் தேர்தலில் எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்துப் பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதுதான் மம்தா-நவீன் பட்நாயக் கூட்டணியின் கோரிக்கை! எதிர்ப்புக்கூட்டணி

 p56.jpg

dot.png சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் 100 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்திருக்கிறார் ரியல் மாட்ரிட் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 94 கோல்களுடன் மெஸ்ஸி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஒரே போட்டியில் தொடர்ந்து மூன்று கோல்கள் அடித்து இந்த இலக்கை எட்டினார் ரொனால்டோ. கோல் மெஷின்!

  • தொடங்கியவர்

‘மிஸ் டீன் யுனிவர்ஸ்’ அழகிப்போட்டி: இந்தியாவின் சிருஷ்டி கவுர் மகுடம் சூடினார்

அமெரிக்காவில் நடந்த இளம் வயதினருக்கான 'மிஸ் யுனிவர்ஸ் 2017’ போட்டியில், இந்தியாவின் சிருஷ்டி கவுர் பட்டத்தை வென்றார்.

 
 
‘மிஸ் டீன் யுனிவர்ஸ்’ அழகிப்போட்டி: இந்தியாவின் சிருஷ்டி கவுர் மகுடம் சூடினார்
 
வாஷிங்டன்:

மத்திய அமெரிக்காவில் உள்ள நிகாராகுவாவின் மனாகுவாவில் இந்த ஆண்டிற்கான இளம் வயதினருக்கான மிஸ் டீன் யுனிவர்ஸ் (15 முதல் 19 வயது) அழகிப்போட்டி நடந்தது. மிஸ் யுனிவர்ஸ் போட்டிகளை நடத்தி வரும் அமைப்பு இளம் வயதினருக்கான அழகிப் போட்டியை நடத்தி வருகிறது.
 
இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் உலக நாடுகளை சேர்ந்த ஏராளமான அழகிகள் கலந்து கொண்டனர். இளம் வயதினருக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற அழகிகள் 25 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தகுதி பெற்றனர். இதில் இந்திய அழகி சிருஷ்டி கவுரும் இடம் பெற்று இருந்தார்.
201704271701330604_Miss-Teen-Universe2._
போட்டியில் உடல் அழகு, தனித்திறன் உள்ளிட்ட பிரிவுகளில் முதலிடம் பிடித்து இளம் வயது மிஸ் யுனிவர்ஸ்-ஆக மகுடம் சூடினார் சிருஷ்டி கவுர். மேலும் சிருஷ்டி கவுர் சிறந்த ஆடை அலங்கார போட்டியிலும் முதல் பரிசு பெற்றார். இந்திய தேசிய பறவையான மயில் போன்று நேர்த்தியான ஆடையை அணிந்து இருந்தார் சிருஷ்டி கவுர்.
 
சிருஷ்டி கவுருக்கு அடுத்த இடங்களை கனடாவை சேர்ந்த சமன்தா பியரியும், மெக்சிகோவை சேர்ந்த டிராவாவும் பெற்றனர். மேலும், பிரபலமானவர்கள் பிரிவில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜிரெல்லி ஆஸ்டின் மற்றும் கவர்ச்சிப் பிரிவில் கோஸ்டாரிகாவை சேர்ந்த நிக்கோல் ஓபான்டோ ஆகியோர் பரிசுகளைத் தட்டி சென்றனர்.
201704271701330604_Miss-Teen-Universe3._
சிருஷ்டி நொய்டாவில் உள்ள லோட்டஸ் வேலி இன்டர்நேஷனலில் பள்ளிப்படிப்பை முடித்தார், இப்போது லண்டன் பேஷன் பள்ளியில் படித்து வருகிறார். 

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

Vinod Khanna

  • தொடங்கியவர்

'முதுமையில் நடனம் மூளைக்கு நல்லது'

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் தமது மூளை செயற்பாட்டை வலுவாக்க வாரத்திற்கு பல முறை, நடனமாடும் பயிற்சி போன்ற எளிமையான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

நீச்சலடிப்பது, சைக்கிலிங் செய்வது, ஓடுவது மற்றும் நடனமாடுவது என பலவிதமான பயிற்சிகளை செய்வது தசைகளை மட்டுமல்ல மூளையையும் வலுப்படுத்துகிறது.

  • தொடங்கியவர்

லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் அரண்மனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள்: ஏப்ரல் 27, 1840

வெஸ்ட் மின்ஸ்டர் அரண்மனை லண்டனில் தேம்ஸ் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த அரண்மையில் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அமர்கின்ற இடமாகும்.

 
 
லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் அரண்மனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள்: ஏப்ரல் 27, 1840
 
வெஸ்ட் மின்ஸ்டர் அரண்மனை லண்டனில் தேம்ஸ் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த அரண்மையில் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அமர்கின்ற இடமாகும்.

1834-ஆம் எரிந்து போன பழைய கட்டிடத்திற்கு மாற்றாக 1840-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் அடிக்கல் நாட்டப்பட்டு இந்த புதிய அரண்மனை அமைக்கப்பட்டது. இந்த அரண்மனை அரசாங்க சடங்குகளுக்கு அரசியின் வசிப்பிடமாக தனது தகுதியையும் கம்பீரத்தை தக்க வைத்துள்ளது.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:

* 1124 - முதலாம் டேவிட் ஸ்கொட்லாந்து மன்னனானான்.

* 1521 - நாடுகாண் பயணி பேர்டினண்ட் மகலன் பிலிப்பீன்சில் பழங்குடியினரால் கொல்லப்பட்டார்.

* 1959 - மக்கள் சீனக் குடியரசில் இருந்து கடைசி கனேடிய மதபரப்புனர் வெளியேறினர்.

* 1961 - சியேரா லியோனி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

* 2002 - நாசாவின் பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தடவையாக தொடர்புகள் கிடைத்தது. 

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

'மேலான பக்தி சீரான வாழ்வைத் தரும்'
 

article_1493276796-surya-namaskar_146547நீங்கள் எப்படிப்பட்ட பெரிய நிலையிலுள்ள மனிதர்களாயினும் சரி, அதனால் உண்மையான பெருமை இல்லை. இறைவனுக்கு அடிமையாக வாழ்வதுவே உயர்ந்த ஆன்ம நிலையாகும். பரம்பொருளை நினைத்து சிரம் தாழ்த்தலே பேரானந்தம்.

எங்கள் ஆசைகள், ஆணவம், அகம்பாவங்கள், கோபம், பொறாமை, காழ்ப்பு எல்லாமே அடங்கி ஒடுங்கி அறவே அகலும் இடம் இறைவன் திருவடி நிழல்தான் என்பதை உணர்வோமாக.

மனிதர்கள் கடவுளிடம் தாழ்ந்து நின்றால் அவர்களை அவரே உயர்த்தி வைப்பார் என்பதில் சந்தேகம் கொள்ளற்க.

ஆண்டவனிடம் பக்தி கொள்பவர்களுக்கு அவர் கருணை மீது சந்தேகம் எழுவதுமில்லை. 

இறுகப் பூட்டிய இதயக் கதவை உடைத்து உள்ளே கருணை பாய்ச்சும் தலைவனைச் சரண் அடைக. மேலான பக்தி சீரான வாழ்வைத் தரும். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் பிறந்த தினம்: ஏப்ரல் 28, 1937

 

ஈராக் நாட்டின் முன்னாள் அதிபரான சதாம் உசேன் 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். ஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய நபரான சதாம் 1968-ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கிய பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் கீழ் துணை அதிபராக பணியாற்றிய சதாம், அரசுக்கும் ஆயுத படைகளுக்கு இடையேயான பிரச்சினைகளை கடுமையாக அடக்கி ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டார். அதிபராக பொறுப்பு வகித்த சதாம், யதேச்சிகார அரசை நடத்தினார். ஈரான்-ஈராக் போர் மற்றும் பெரிசியக் குடாப்போர் நடந்த காலங்களிலும் அதிகாரத்தை தன் கைப்பிடியில் வைத்திருந்தார். இக்காலகட்டங்களில் ஈராக் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்ததோடு அவர்களின் மனித உரிமைகளுக்கும் பங்கம் ஏற்பட்டது.

 
 
 
 
ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் பிறந்த தினம்: ஏப்ரல் 28, 1937
 
ஈராக் நாட்டின் முன்னாள் அதிபரான சதாம் உசேன் 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். ஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய நபரான சதாம் 1968-ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கிய பங்கு வகித்தார்.

தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் கீழ் துணை அதிபராக பணியாற்றிய சதாம், அரசுக்கும் ஆயுத படைகளுக்கு இடையேயான பிரச்சினைகளை கடுமையாக அடக்கி ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டார்.

அதிபராக பொறுப்பு வகித்த சதாம், யதேச்சிகார அரசை நடத்தினார். ஈரான்-ஈராக் போர் மற்றும் பெரிசியக் குடாப்போர் நடந்த காலங்களிலும் அதிகாரத்தை தன் கைப்பிடியில் வைத்திருந்தார். இக்காலகட்டங்களில் ஈராக் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்ததோடு அவர்களின் மனித உரிமைகளுக்கும் பங்கம் ஏற்பட்டது.

மேலை நாடுகளிடம், குறிப்பாக ஐக்கிய அமெரிக்க மாநிலங்களிடம், அவர் காட்டிய எதிர்ப்பை மெச்சி, பல அராபிய மக்கள் அவரை ஒரு பிரபலத் தலைவராகக் கருதினாலும், அனைத்துலக சமுதாயத்தினர் பலரும் அவரை சந்தேகக் கண் கொண்டே நோக்கினர்.

அதுவும் 1991 பெர்சிய குடாப் போருக்கு அடுத்து சில ஈராக்கிய குழுக்கள் சதாமின் பாதுகாப்பு படை குறித்த அச்சத்துடன் வாழ்ந்தனர். அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து மேற்கொண்ட 2003 ஈராக் போருக்கு பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

டிசம்பர் 13, 2003 அன்று திக்ரித்துக்கு வெளியே உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டார்.

நவம்பர் 5, 2006 இல் அவருக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. டிசம்பர் 26, 2006 இல் சதாமின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 30, 2006-ல் அவர் தூக்கிலிடப்பட்டார்.

மேலும் இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள்:

* 1932 - மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

* 1945 - முசோலினியும் அவனது மனைவியும் இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

* 1995 - பலாலியில் அவ்ரோ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு அடுத்த நாள் இன்னுமொரு விமானம் வீழ்த்தப்பட்டது.

* 2001 - கோடீஸ்வரர் டென்னிஸ் டீட்டோ என்பவர் விண்வெளிக்குச் சென்ற முதல் உல்லாசப் பயணியானார்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

உங்களுக்கான ஒரு நாளை 'Weekend’லிருந்து திருடுங்கள்! #WeekendMotivation

சென்னையோ,பெங்களூரோ அல்லது எந்த ஊராக இருந்தாலும் சரி. நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். பேச்சுலராக மேன்சனில் அல்லது நண்பர்களுடன் தங்கியுள்ளீர்கள். உங்களின் வார இறுதி எப்படியானதாக இருக்கும். வழக்கமான அலாரம் இருக்காது. இரவு இரண்டு - மூன்று வரை முழித்திருந்து சினிமாவோ, பார்ட்டியோ சென்று வந்திருப்பீர்கள். அந்தக் களைப்பில் காலம் கடந்த தூக்கம், அடுத்த நாள் டைரக்ட் லஞ்ச், திரும்ப ஒரு  குட்டித்தூக்கம். மாலையில் மீண்டும் அவுட்டிங் என இருக்கும் உங்களின் வீக்கெண்ட் ஷெட்யூல். இதே அமைப்பை மாற்றாமல் உங்களின் வார இறுதியை இன்னும் கொஞ்சம் பயனுள்ளதாக்கலாமா? அந்த  #WeekendMotivation'க்காக சில புல்லட் பாயிண்ட்கள்

#WeekendMotivation

 
  • நன்றாகத் தூங்கி ரெஸ்ட் எடுங்கள். எந்த கமிட்மெண்டையும் அன்று வைத்துக்கொள்ளாதீர்கள். அப்படி எதனையும் சேர்த்தால் அந்த விடுமுறை நாள் இன்னொரு  வார நாளாகிவிடும். 
     
  • உங்களுக்கே உங்களுக்கான பெர்சனல் வேலைகளைச் சோம்பல் முறித்த மதியங்களில் வைத்துக்கொள்ளலாம். துணி துவைப்பது, ஹேர் கட்டிங், அறையைச் சுத்தம் செய்வது போன்றவை துவங்கி நகம் சீரமைப்பு வரை அனைத்தையும் மிச்சமின்றி முடிக்கவும். உணவு சமைக்கும் வாய்ப்பு இருந்தால் பிடித்தமான உணவு வகைகளை வாங்கி வந்து நிதானமாக சமைத்தும் உண்ணலாம். மெஸ்ஸிலும் கேண்டீனிலும்,ஓட்டல்களிலும் வாரம் முழுவதும் சாப்பிட்டு இருப்பீர்கள். ஒரு சேஞ்ச் வேணாமா?
  •  
  • கேளிக்கைகள் கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் உங்களின் கரியரில் எந்த இடத்தில் நீங்கள் உள்ளீர்கள் என நினைத்துப்பாருங்கள். அடுத்த வாரத்தில் செய்யவேண்டிய வேலைகள் குறித்து திட்டமிடுங்கள். முக்கிய வேலை இல்லையென்றால் வேலையை உருவாக்கிக்கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கும் கூடுதல் திறன் கொண்ட எதாவது ஒரு வேலைக்கான குறிப்புகள் எடுக்கலாம். உதாரணமாக Blogging செய்பவர்களானால் அதற்கான யோசனையில் ஈடுபடலாம்.கவிதை எழுதி பார்க்கலாம்.  இவை எல்லாம் உங்களின் மிகப்பெரிய 'ஸ்ட்ரெஸ் பஸ்டர்' என உளவியல் சொல்கிறது. 
  •  
  • ஊருக்குப் போன் செய்து பேசுங்கள். வேலை நாட்களில் பள்ளித்தோழன் அழைத்திருப்பார்.'பிறகு பேசுகிறேன்' என்று சொல்லி கட் செய்திருப்பீர்கள். நண்பர்களுடன் பேசும் போது எழும் நாஸ்டாலஜி உணர்வு உங்களின் மனதுக்கு நல்ல மோட்டிவேஷனை கொடுக்கும். பெற்றோர்களிடம் பேசி அவர்களின் நலனை விசாரியுங்கள். உங்களிடம் சொல்லத்தயங்கும் தேவைகள் பெரும்பாலான பெற்றோரிடம் இருக்கும். தாங்க வேண்டிய குடும்பம் உங்களுக்கு இருப்பதன் உணர்வு உங்களிடம் வந்துவிட்டால் தேவையற்ற முன் கோபம் குறையும். 
     
  • சமூக ஊடகங்களில் இருந்து விடுவித்துக்கொள்ளுங்கள். உங்களை எப்போதும் எங்கேஜ் ஆக வைத்து இருக்கும் சோசியல் மீடியா இல்லாமல் குறைந்தது வாரத்தில் ஒரு நாளாவது இருந்து பழகுங்கள். நல்லதொரு நடை போய் வாருங்கள். நிதானமாக, அவசரமோ பதட்டமோ இல்லாமல் இருக்கட்டும். சைக்கிள் இருந்தால் இன்னும் ஒரு பெரிய ரவுண்ட் அடித்துவிட்டு வரலாம்.  
     
  • உங்களுக்குப் பிடித்த ஒன்றைச் செய்யலாம். அது ஷட்டில் காக் விளையாட்டாக இருந்தாலும் சரி, புத்தக வாசிப்பாக இருந்தாலும் சரி. நாளின் இறுதியில் வைத்துக்கொண்டால் இனிமையான தூக்கத்தை எதிர்கொள்ளலாம். 
  •  

யோசித்துப் பாருங்கள்.இப்படியான ஒரு நாள் சமீபத்தில் உங்களுக்கு வாய்த்ததுண்டா? வார இறுதியான இரண்டு நாட்களில் உங்களின் 'வழக்கமான' வீக்கென்ட் நாளாக ஒன்றை வைத்துக்கொண்டாலும், இப்படியான ஒரு நாள் வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் வரப்போகும் வாரம் சிறப்பான ஒன்றாக அமையும். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஏப்ரல் 28
 
 

article_1430207941-Sivaram300.jpg1792: ஆஸ்திரிய நெதர்லாந்து (தற்போதைய பெல்ஜியம்) மீது பிரான்ஸ் படையெடுத்தது.

1920: சோவியத் யூனியனுடன் அஸர்பைஜான் இணைக்கப்பட்டது.

1930: முதலாவது இரவுநேர கூடைப்பந்தாட்டப்போட்டி அமெரிக்காவின் கான்ஸாஸ் நகரில் நடைபெற்றது. 1932: மனிதர்களின் மஞ்சள் காமாலை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

1945: இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியும் அவரின் சாதலியும் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டனர்.

1952: இரண்டாவது சீன – ஜப்பானிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சீன – ஜப்பானிய சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1969: பிரெஞ்சு ஜனாதிபதி சார்ள்ஸ் டி கோல் ராஜினாமா செய்தார்;.

1970: வியட்நாமில் கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிடுவதற்கு அமெரிக்கத் துருப்புகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன் அதிகாரிமளித்தார்.

1978: ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மொஹமட் தாவூத் கான், கம்யூனிஸ்ட் சார்பு கிளர்ச்pயாளர்களால் சதிப்புரட்சியொன்றில் பதவி கவிழ்க்கப்பட்டு, கொல்லப்பட்டார்.

1995: பலாலியில் அவ்ரோ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு அடுத்த நாள் இன்னுமொரு விமானம் வீழ்த்தப்பட்டது.

1996: அவுஸ்திரேலியா, தாஸ்மேனியாவில் "மார்ட்டின் பிறையன்ட்" என்பவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 35பேர் கொல்லப்பட்டு 37பேர் காயமடைந்தனர்.

2000: இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

2001: அமெரிக்க கோடீஸ்வரர் டென்னிஸ் டிட்டோ முதலாவது விண்வெளி சுற்றுலா பயணியானார்.

2005: பிரபல ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் கொழும்பில் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.

2008: சீனாவில் ஷான்டோங் நகரில் ரயில் விபத்தொன்றில் 72 பேர் பலியாகினர்.

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

42 ஆண்டுகள் கடிதங்களில் மட்டுமே தொடர்ந்த  நட்பு... முதல் சந்திப்பின் அற்புத தருணம்!

 
 

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என சமூக வலைதளங்களின் ஆதிக்கம் நிறைந்த இந்த யுகத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும், கடிதங்கள் வாயிலாக மட்டுமே 42 ஆண்டுகள் நண்பர்களாக இருந்துவந்துள்ளனர்.  அவர்கள், முதல்முறையாக ஏப்ரல் 11ல் நேரில் சந்தித்துக்கொண்டபோது வெளிபடுத்திக்கொண்ட அன்பின் தருணத்தை, ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். 

letter friends
 

நியூயார்க்கைச் சேர்ந்தவர், ஜார்ஜ் கோசன். இவருக்கும் சான் டியாகோவைச் சேர்ந்த லோரி கெர்ட்ஸ் என்ற பெண்ணுக்கும் பள்ளிப் பருவத்தில், கடிதம் வாயிலாக நட்பு மலர்ந்துள்ளது. வாழ்வில், ஒவ்வொரு தருணத்தையும் கடிதம்மூலமாகப் பகிர்ந்துகொள்வது இவர்களின் வழக்கம். லோரிக்கு 18 வயதில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப் பிறகு, குடும்பம், குழந்தைகள்,வேலை என பிஸியானபோதும், ஜார்ஜுக்கு கடிதம் அனுப்பத் தவறுவதில்லை லோரி.  தற்போது அவருக்கு வயது, 54. தன் 18 வயது மகனுடன், ஜார்ஜை சந்திக்க நியூயார்க் வந்துள்ளார். 

letter friends
 

ஜார்ஜின் தாய், 2006 -ம் ஆண்டு உயிரிழந்துள்ளார். தன் தாயின் இறுதிச் சடங்குக்கு விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த ஜார்ஜ், தன் சோகத்தை அருகில் இருந்தவரிடம்கூட வெளிபடுத்தாமல், லோரிக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தாராம். 

 

இத்தனை ஆண்டுகளாக, இவர்கள் இருவரும் ஏன் சந்திக்க முற்படவில்லை... என்ற கேள்வி அனைவருக்குமே தோன்றும். லோரியிடம் அவரின் குடும்பத்தினரே கேட்டுள்ளனர்.  ‘ஜார்ஜுக்கு ஒரு மூட நம்பிக்கை. நேரில் சந்தித்துப் பழகினால், நாங்கள் பிரிந்துவிடுவோம் என்ற பயம் அவருக்கு’, என்று பதில் அளித்துள்ளார் லோரி.

எழுத்துக்கள் வாயிலாக மட்டுமே நட்பைப் பரிமாறிக்கொண்டவர்கள், முதல்முறை நேரில் சந்தித்தபோது, கட்டித்தழுவி அழுதுள்ளனர். இந்த நிகழ்வை, அமெரிக்க செய்தி ஊடகம் ஒன்று வீடியோவாக வெளியிட்டுள்ளது!

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

நெஞ்சைத் தொடும் பாகிஸ்தானின் உணர்வுபூர்வமான விளம்பரம்!

 

 

பல்வேறுபட்ட மக்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கிய அம்சம் உணவு! பல இனத்தவரின் கலாச்சாரப் பரிமாற்றத்தில் முக்கிய இடம் பிடிப்பதும் உணவே! இந்த உணவை மையமாக வைத்து, பாகிஸ்தானிய நிறுவனம் ஒன்று உருவாக்கியிருக்கும் ஒரு விளம்பரம் காண்போரின் கண்களைக் மட்டுமல்லாமல், மனங்களையும் கவர்வதாக அமைந்திருக்கிறது. 

 

பாகிஸ்தானில் பணியாற்றும் ஒரு சீனர், தனது மனைவியை பாகிஸ்தானுக்கு அழைத்து வருகிறார். புதிய இடம், புதிய மொழி என்று அனைத்துமே புதிதாக அமைகிறது அந்தப் பெண்ணுக்கு! ‘இங்கேதான் நம் வாழ்க்கை, தோழிகள் சிலரை உருவாக்கிக்கொள்’ என்று கூறுகிறார் கணவர். ‘எமது பாரம்பரிய உணவே இங்கே கிடைக்காதபோது எதை வைத்து தோழியரை உருவாக்குவது?’ எனக் கேட்கும் அந்தப் பெண்ணுக்கு, உணவை வைத்தே நட்பை வளர்த்தால் என்ன என்று ஒரு எண்ணம் உருவாகிறது.

அதன்படி, பாகிஸ்தானியர்களின் பிரதான உணவான பிரியாணியை அந்தச் சீனப் பெண் தனியாகவே தயாரிக்கிறார். அதை ஒரு பெண்ணுக்கு ருசி பார்க்கவும் கொடுக்கிறார். அதைச் சுவைக்கும் அந்த பாகிஸ்தானியப் பெண், அதன் சுவையில் மயங்கி, சீனப் பெண்ணை தன் வீட்டுக்கே அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துகிறார். அவர்கள் அந்தச் சீனப் பெண்ணை மனப்பூர்வமாக தோழியாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

இதுதான் அந்த விளம்பரத்தின் சாரம்சம்!

உணர்வுபூர்வமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த விளம்பரம், வெளியான ஓரிரு நாட்களுக்குள் 38 இலட்சம் தடவைகள் பார்க்கப்பட்டிருக்கிறது. 48 ஆயிரம் முறை பரிமாறப்பட்டும் இருக்கிறது.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

ரெய்னாவின் குழந்தைக்கு ஐபிஎல் 'ஆரஞ்சு கேப்'!

 
 

தற்போது ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பி வாங்கியிருக்கும் ரெய்னா, அதை தனது மகளுக்கு அர்ப்பணித்துள்ளார்.

raina

ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை கோப்பையை வெல்வது அணியின் இலக்கு. ஆனால், இரு தொப்பிகளை வெல்வதே தனிப்பட்ட வீரர்களின் இலக்கு. ஒவ்வொரு ஐபிஎல் போட்டிகளின்போதும் அதிக ரன்கள் குவித்தவருக்கு ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கு ஊதா தொப்பியும் வழங்கப்படுவது வழக்கமே.

இதனிடையே, நடப்பு ஐபிஎல் தொடரில் தற்போது அதிக ரன்கள் குவித்துள்ள ரெய்னா, ஆரஞ்சு தொப்பியை தனது மகள் கிரேசியாவுக்கு அர்ப்பணித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். நேற்று பெங்களூரு உடன் நடைபெற்ற ஆட்டத்தில் 34 ரன்கள் குவித்து 309 ரன்களுடன் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார் குஜராத் லயன்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா. முதல்முறையாக மைதானத்துக்கு தனது மகளை  பெங்களூரு போட்டியின்போது ரெய்னா அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. 
 

Much needed win for @TheGujaratLions and an orange cap! This one goes to you #Gracia

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஆப்பிளின் புதிய Self-Driving Car இதுதான்!

 
 

கூகுள், ஃபோர்ட், உபெர் நிறுவனங்களைப் போலவே ஆப்பிள் நிறுவனமும் டிரைவர் இல்லாத கார்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஆப்பிள் கார்

'புராஜெக்ட் டைட்டன்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த திட்டத்தின் கீழ் இந்தக் கார்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த செய்திகள் ஏற்கெனவே வெளிவந்த நிலையில், தற்போது ஆப்பிளின் சோதனை காரின் புகைப்படம் ப்ளூம்பெர்க் இணையதளத்தில் வெளிவந்துள்ளது.  இந்த கார் கலிபோர்னியா நகரத்தின் சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சோதனைகளுக்காக டொயோட்டா நிறுவனத்தின் Lexus RX450h SUVமாடலைப் பயன்படுத்தி வருகிறது ஆப்பிள். 

கலிபோர்னியாவின் சாலைகளில் கார்களை சோதித்துப் பார்ப்பதற்காக, கலிபோர்னியா போக்குவரத்துத்துறையிடம் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ஆப்பிள் அனுமதி வாங்கியிருந்தது. தற்போது சிலிக்கான் வேலியின் சாலைகளில் சென்சார்கள் சகிதமாக சோதனை நடந்துவருகிறது. ஏற்கெனவே பல நிறுவனங்கள் டிரைவர் இல்லாத கார்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு டெக்னாலஜி நிறுவனங்கள், புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், கார் நிறுவனங்கள் எனப் பலரும் ஆட்டோமேட்டிக் கார்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கலிபோர்னிய போக்குவரத்து துறை மட்டுமே, இதுவரை 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு ஆட்டோமேட்டிக் கார்களை சோதனை செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. 

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.