Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
ஆணவ முனைப்பு இழிவைத் தரும்
 
 

article_1493448847-uyiyuio.jpgஎதிலும் நீங்கள் முதல் நபராக வரவேண்டும் என எண்ணலாம். அவ்வண்ணம் நீங்கள் நினைத்தபடியே உயர் நிலைக்கு வந்துவிடலாம். அதில் தப்பே இல்லை.

ஆனால், உங்களுக்குப் பின்னர், வேறு ஒருவரும் உங்களது நிலைக்கு வரக்கூடாது என எண்ணுதலே மகா தவறாகும்.

தனி ஒருவனை மட்டும் நம்பி இந்த உலகம் இல்லை. ஒருவர் போக இன்னொருவர் அவரை விட உன்னதமானவராக வரலாம். இது ஒன்றும் புதினமானது அல்ல!

குறிப்பிட்ட பல உன்னதமான மனிதர்கள், இங்கு பிறந்து அரும் பெரும் சாதனைகளைச் செய்து முடித்தமையை உலகம் மறப்பதில்லை. 

இப்படியிருக்க, நானே என்றும் இருப்பேன்; என்னைப் போல ஒருவரும் வரக்கூடாது என நினைப்பதுபோல் அறியாமை வேறு ஏது? இத்தகையவர்கள் கௌரவம் இழப்பது உறுதி. ஆணவ முனைப்பு இழிவைத் தரும்.

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சிறைக் கைதிகள் நடத்தும் புத்தக கஃபே

 

 
 
cafe_3158854f.jpg
 
 
 

சிறைக் கைதிகள் என்றால் சிறையில் வரிசையாக நின்று உணவைப் பெற்றுக்கொள்ளும் பிம்பம் நமக்கு ஞாபகம் வரும். ஆனால், சிம்லாவில் ஒரு ஹோட்டலில் சிறைக் கைதிகள் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுகிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியப்படாதீர்கள், அந்த ஹோட்டலையே அவர்கள்தான் நடத்துகிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ செய்த குற்றத்துக்காகத் தண்டனை பெற்றுச் சிறையில் இருக்கும் நான்கு சிறைக் கைதிகள் சேர்ந்து சிம்லாவில் ஒரு புத்தக கஃபேவை தொடங்கியிருக்கிறார்கள். கடந்த வாரம், இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் இந்தப் புத்தக கஃபேவைத் தொடங்கிவைத்திருக்கிறார். இந்த கஃபேவுக்கு வரும் புத்தகப் பிரியர்கள் பீட்சாவையும் குக்கீஸையும் சுவைத்தபடி தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாசிக்கலாம்.

சிம்லாவின் புகழ்பெற்ற ஜக்கு கோவிலுக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த கஃபேவில் நாற்பது பேர் அமர்வதற்கான வசதி இருக்கிறது. அம்மாநிலத்தின் சுற்றுலாத் துறை இருபது லட்சம் ரூபாய் செலவில் இந்த முன்மாதிரி கஃபேவைத் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

சிம்லாவில் ‘கைத்து’ சிறையின் ஆயுள் தண்டனைக் கைதிகளான ஜெய் சந்த், யோக் ராஜ், ராம் லால், ராஜ் குமார் என்ற நான்கு பேர் இந்த கஃபேவைத் தற்போது நடத்திவருகின்றனர். இவர்களுக்கு சிம்லாவின் பிரபல உணவகம் ஒன்று குக்கீஸ் செய்யவும் பீட்சா செய்யவும் கற்றுக்கொடுத்திருக்கிறது. “சிறைக் கைதிகளை நல்வழிப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இதை முன்னெடுத்திருக்கிறோம்” என்று சொல்கிறார் கைத்து சிறையின் பொது இயக்குநர் சோமேஷ் கோயல். இவர் கைதிகள் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாகச் சிறையில் இசை வகுப்புகள் எடுப்பதற்கு ஏற்பாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“உலகத்துடன் தொடர்பில் இருப்பதற்கு இந்த கஃபே எங்களுக்கு ஒரு நல்வாய்ப்பை வழங்கியிருக்கிறது” என்கிறார் ஜெய்சந்த்.

இந்த கஃபேவில் பணியாற்றும் மற்றொரு நபரான யோக் ராஜ், “நாங்கள் விடுதலையானதும் எங்களுக்கு வேலை கிடைப்பதற்கு இந்த அனுபவம் பெரிதும் உதவும். அத்துடன், நாங்கள் நால்வரும் முழு சுதந்திரத்துடன் இந்த கஃபேவில் இயங்குகிறோம். இங்கு வரும் வாடிக்கையாளர்களும் எங்களுடன் வித்தியாசமாக நடந்துகொள்வதில்லை. அதற்கு மாறாக, எங்களுடைய இந்த மாற்றத்தை அவர்கள் அங்கீகரிக்கிறார்கள்” என்கிறார்.

இவர்கள் நான்கு பேரும் காலை பத்து மணி முதல் இரவு ஒன்பது மணி வரை கஃபேவில் பணியாற்றுகிறார்கள். அதற்குப் பிறகு, சிறைக்குச் செல்கிறார்கள்.

‘வைஃபை’ வசதியும், சிறந்த புத்தகங்களும் இருப்பதால் புத்தகப் பிரியர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஆரம்பித்த ஒரே வாரத்திலேயே இந்தப் புத்தக கஃபே பெரிய அளவில் கவர்ந்திருக்கிறது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

கார் பந்தய தடம் கொண்ட உலகின் முதல் கப்பல்

 

 

தற்போது உலகிலேயே முதல்முறையாக உல்லாசக் கப்பல் ஒன்றில் கார் பந்தய தடத்தையே (Race Track) அமைத்து மக்களை வியக்க வைத்துள்ளனர். அமெரிக்காவின் மியாமி நகரைச் சேர்ந்த ‘நார்வீஜியன் க்ரூஸ் லைன்ஸ்' என்ற சொகுசுக் கப்பல் இயக்கும் நிறுவனத்தினரால் இந்த ஆடம்பர கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.

a80ed7e31b0401e312a12257e7254e43.jpg

சீன சந்தைக்காக கட்டமைக்கப்பட்டுள்ள இந்த கப்பலுக்கு ‘நார்வீஜியன் ஜாய்' என பெயரிட்டுள்ளனர்.இந்தக்கப்பலின் மேல்தளங்களில் இரண்டு அடுக்கு பந்தய தடம் அமைக்கப்பட்டுள்ளது.

x26-1493199851-norwegian-joy-to-have-fer

இந்த பந்தய தடம் உலகின் தலைசிறந்த பெராரி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

x26-1493199827-norwegian-joy-to-have-fer

இரண்டு அடுக்கு பந்தய தடத்தில் 10 எலெக்ட்ரிக் கோ-கார்ட் கார்களை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும் என்பது விஷேட அம்சமாகும்.

x26-1493199901-norwegian-joy-to-have-fer

ஜெர்மனியில் உள்ள உலகப் புகழ் பெற்ற ‘மேயர் வெர்ப்ட்' என்ற கப்பல் கட்டும் நிறுவனத்தினரால் இந்த கப்பல் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.

x26-1493199912-norwegian-joy-to-have-fer

நார்வீஜியன் ஜாய் கப்பலில் மொத்தம் 3,850 பயணிகள் பயணிக்கலாம். ஜெர்மனியில் இருந்து ஷாங்காய் நோக்கி வரும் ஜூன் மாதம் 27 ஆம் திகதி இந்த கப்பல் தனது முதல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

x26-1493199876-norwegian-joy-to-have-fer

x26-1493199815-norwegian-joy-to-have-fer

x26-1493199889-norwegian-joy-to-have-fer

x26-1493199950-norwegian-joy-to-have-fer

x26-1493200059-norwegian-joy-to-have-fer

x26-1493200120-norwegian-joy-to-have-fer

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

சினிமா வெளிச்சத்தை மக்கள் பார்க்க தன் வாழ்வை இருட்டில் தோய்த்து கொண்ட தாதா சாகேப் பால்கே பிறந்த தின பகிர்வு

இந்திய சினிமாவின் தந்தை தாதா சாகேப் பால்கே மறைந்த தினம் இன்று .தாதா சாகேப் பால்கே 1870இல் நாசிக் அருகில் உள்ள திரும்பகேஸ்வரில் பிறந்தார். ஓவியம், சிற்பம், அகழ்வாராய்ச்சி என பல விஷயம் கற்றவர், ராஜா ரவிவர்மாவிடம் லித்தோகிராப் வரையும் பணியில் ஈடுபட்டார் . பம்பாய் சர்.ஜே.ஜே. கலைப்பள்ளியில் புகைப்படம் எடுக்கும் முறையையும், இயற்கைக் காட்சிகளைக் கொண்டு சித்திரம் தீட்டும் முறையையும் படிப்படியாகக் கற்றார்.

மேஜிக் செய்து வயிற்று பிழைப்பை ஓட்டினார் . அப்பொழுது தான் லூமியர் சகோதரர்கள் கிறிஸ்துவின் வாழ்வு என்கிற படத்தை மக்களுக்கு போட்டு காட்டினார்கள், இங்கே இதைப்பார்த்து தான் பால்கே அசந்து போனார். படம் எடுக்க வேண்டும் என்று மனிதருக்கு ஆர்வம் பற்றிக்கொண்டது.

அந்த படத்தை போல படமெடுக்க வேண்டும் என சினிமா கொட்டகையில் வேலைபார்த்து பல படங்களை பார்த்தார் . படங்கள் பெரும்பாலும் மவுனம் தான் ;இடையிடையே அலுக்காமல் இருக்க நாடக கலைஞர்கள், இசை வல்லுனர்கள் ஆகியோர் உதவுவார்கள். கதையை விளக்கி சொல்வார்கள். அப்படிதான் போய்க்கொண்டு இருந்தது .

சின்ன சின்ன படங்கள் எடுத்து பழகிய பின் ,இவர் இங்கிலாந்துக்கு கப்பலேறி வால்டன் ஸ்டுடியோவில் சினிமா கற்றுக்கொண்டு திரும்பினார் ; அதோடு நில்லாமல் வில்லியம்சன் கேமரா ஒன்றை வாங்கிக்கொண்டு வந்தார் . இன்றைக்கு போல அன்றைக்கு திரைப்படம் எடுப்பது சுலபமான காரியமில்லை . படத்தில் நடிப்பதை பலர் பாவம் என எண்ணினார்கள் . மக்கள் பெரும்பாலும் நாடகங்களில் மூழ்கி இருந்த காலம் அது .பெண்கள் நாடகங்களில் பெரும்பாலும் நடிக்க அனுமதிக்கப்படாமல் இருந்தார்கள் . இவர் படம் பார்த்து பார்த்து பார்வை மங்கி இந்தியா வந்திருந்தார் .

இவர் சாமான்களை விற்று ராஜா ஹரிச்சந்திரா படம் எடுக்க ஆரம்பித்தார். நடிகர்கள் பஞ்சம் உண்டானது ; பெண் வேடத்திற்கு ஆண்களை பிடித்தார். நடிக்க பலர் வீட்டில் பிள்ளைகளை அனுப்ப மறுத்தார்கள் .ஆகவே தான் நடிப்பு பேக்டரி நடத்துவதாக சொல்லி அவர்களை கூட்டி வந்தார் . ஒரே ஆளாக எடிட்டிங், ஒளிப்பதிவு, இயக்கம், காஸ்ட்யூம், விநியோகம் எல்லாமே இவர் தான்
. நடிகர்களை அந்த கதாபாத்திரமாகவே ஆக்க ரொம்ப பிரயத்தனப்பட்டார் .

பெண் வேடம் பூண்டவனை சேலை கட்டியே நடமாட விட்டார் ;பெண் போன்ற நளினத்தை அவனிடமிருந்து வெளிக்கொணர்ந்தார். ஸ்திரிபார்ட் நடிகர்களின் நடிப்பு இயல்பாக அமைய வேண்டும் என்பதற்காக அவர்கள் நாள் முழுவதும் சமையல்வேலை மற்றும் வீ‘ட்டுவேலைகள் செய்துவர வேண்டும். எப்போதுமே புடவை கட்டிக் கொண்டுதான் இருக்க வேண்டும், கூந்தல் வளர்த்துக் கொள்ள வேணடும் பெயரைக் கூட மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டார் . தனது ஹிந்துஸதான் பிலிம் கம்பெனி மூலம் பால்கே 75 படங்களை தயாரித்தார் அவர் ;பேசும் படங்கள் வந்ததும் இவரால் தாக்குபிடிக்க முடியவில்லை; நொடிந்து போனார் .

இவரின் மனைவி ஏகத்துக்கும் உதவிகரமாக இருந்தார் .அவரே பல தொழில்நுட்ப விஷயங்களை கற்றுக்கொண்டு வேலை பார்த்தார் .கணவர் கேட்ட பொழுதெல்லாம் நகைகளை கொடுத்தார் . பசி வறுமை எல்லாம் வாட்டி எடுத்தன ;வீட்டு சாமான்களை அடமானம் வைத்து ஜீவனம் நடத்தினார் .வறுமையில் நாசிக்கில் கவனிப்பு இன்றி மறைந்து போனார் .அவரை இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்கிறோம் .அவரின் முதல் படம் வந்து நூற்றாண்டு ஆகி விட்டது .அவரின் பெயரால் இந்தியாவின் மிக உயரிய திரை விருது வழங்கப்படுகிறது .

சிவாஜி கணேசன் மற்றும் பாலசந்தர் இவ்விருதை தமிழகத்தில் இருந்து பெற்றிருக்கிறார்கள் .சினிமா வெளிச்சத்தை மக்கள் பார்க்க தன் வாழ்வை இருட்டில் தோய்த்து கொண்டவரின் பிறந்த நாள் இன்று

Bild könnte enthalten: 1 Person, Text
  • தொடங்கியவர்

அதிரவைக்கும் சுந்தர் பிச்சையின் கடந்த ஆண்டு வருமானம்!

 
 

கூகுள்  நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு கடந்த ஆண்டின் பங்குத் தொகையாக 200 மில்லியன் அமெரிக்க டாலர் அளித்துள்ளது அந்த நிறுவனம். இந்தத் தொகை அவர் 2015-ம் ஆண்டு பெற்ற தொகையைவிட இரண்டு மடங்காகும். 

_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0


தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக 2015-ம் ஆண்டு பொறுப்பேற்றார். 2016-ம் ஆண்டுக்கான ஆண்டு வருமானமாக 6,50,000 அமெரிக்க டாலர் அவர் பெற்றுள்ளார். 2015-ம் ஆண்டு வாங்கிய சம்பளத்தைவிட சற்று குறைவாகும். சுந்தர் பிச்சை சி.இ.ஓவாக பதவியேற்ற பிறகு கூகுள் நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க புதிய அறிமுகங்களைப் புகுத்தினார். யூடியூப்பில் விளம்பரங்கள் மூலம் வரும் வருவாயை அதிகப்படுத்தியிருந்தார்.

மேலும் 2016-ம் ஆண்டில் கூகுள் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட் போன்கள், விர்ச்சுவல் ரியாலிட்டி ஹைட்போன், ரவுட்டர், குரல்களைக் கட்டுப்படுத்தும் ஒலிபெருக்கி போன்றவற்றை அறிமுகம் செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். இத்தகைய அறிமுகங்கள் கூகுள் நிறுவனத்தின் வருமானத்தை அதிகப்படுத்தின. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் ஹார்டுவேர் உள்ளிட்ட சேவைகளில் மட்டும் 3.1 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைத்துள்ளது. இந்த வருமானம் கூகுளின் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது 50 சதவீதம் அதிகமாகும்.

இத்தகைய காரணங்களால் 2016-ம் ஆண்டின் பங்குத் தொகையாக சுந்தர் பிச்சைக்கு 200 மில்லியன் அமெரிக்க டாலரை கூகுள் நிறுவனம் வழங்கியது. 2015-ம் ஆண்டில் அவர் பங்குத் தொகையாக 99 மில்லியன் அமெரிக்க டாலர் பெற்றிருந்தார். அதனை ஒப்பிடும் போது இந்த ஆண்டு இரண்டு மடங்கு அதிகமாக சம்பளம் பெற்றுள்ளார். சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனம் வழங்கிய  2016-ம் ஆண்டுக்கான பங்குத் தொகையின் மதிப்பை நீங்கள் இந்திய ரூபாயில் கணக்கிட்டால் உங்களுக்குத் தலைச்சுற்றல் வரலாம்... இந்திய ரூபாயின் மதிப்புக்கு  1,265 கோடி ரூபாய் அவர் கடந்த ஆண்டுக்கான ஊதியமாக பெற்றுள்ளார். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

"சூப்பர் மேன்" மரபணுக்களைக் கொண்டுள்ளார்களா திபெத்தியர்கள் ? #SuperAthlete

 

அந்தக் குளிரை அனுபவத்திராத வரையில் உங்களால் உணர முடியாது. வார்த்தைகளின் வர்ணனைகள் நிச்சயம் அந்த உயரத்தில் இருக்கும் உடல்நிலையை உணர வைக்கவே முடியாது. கடுமையான குளிராக இருக்கும். உங்கள் எலும்புகளின் உள் அந்த குளிர் பாய்ந்து சில்லிட வைக்கும். ஆக்ஸிஜன் அளவோ மிகவும் குறைவு. தலை சுற்றுவது மாதிரியான உணர்வு இருந்துக் கொண்டே இருக்கும். எதையாவது கொஞ்சம் சாப்பிட்டாலும் கூட, உடனடியாக வாந்தி வந்துவிடும். மாலை ஆக, ஆக ... எல்லாம் அதிகமாகும். இரண்டடி தூரம் நடப்பது கூட மிகவும் கடினமாக இருக்கும். உதடுகள் வறண்டு போயிருக்கும். குடல் சுருங்கிப் போயிருக்கும். தலை சுற்ற... படுக்கலாம் என்று நினைத்தால்... நான்கு பேர் கழுத்தை நெறிப்பது போன்ற உணர்வு ஏற்படும். மயக்கத்தில் கண்கள் சொருக ஆரம்பிக்கும். ஆனால், எங்கும் படுக்கவே முடியாது. இமயமலையின் 18 ஆயிரம் அடி உயரத்தில் இப்படித் தான் இருக்கும் நமக்கு. ஆனால், அந்த உயரத்தில் ஒரு இனம் அத்தனை உற்சாகத்தோடு ஃபுட்பால் விளையாடிக் கொண்டிருக்கும். மயக்கத்தில் இருக்கும் நமக்கு அவர்களைப் பார்த்தால்... இவர்கள் உண்மையிலேயே சாதாரண மனிதர்கள் தானா? இல்லை ஏதாவது சூப்பர் ஹீரோக்களா? என்ற சந்தேகம் எழும். அப்படி அந்த உயரத்திலும், அத்தனை உற்சாகமாக இருப்பவர்கள் திபெத்தியர்கள். 

திபெத்தியர்கள் குறித்து மரபணு ஆராய்ச்சி

சந்தேகமே வேண்டாம்... திபெத்தியர்கள் சூப்பர் ஹீரோக்கள் தான் என்பதை உறுதியாக நிரூபித்திருக்கிறது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று. டெக்ஸாஸ் யூனிவர்சிட்டியைச் சேர்ந்த, ஹாவ் ஹூ ( Hao Hu ) மற்றும் சாட் ஹஃப் ( Chad Huff ) ஆகிய இருவரும் சேர்ந்து திபெத்தியர்களின் "மரபணு" ( Gene ) ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இதற்காக இமயமலைப் பகுதிகளில் வாழும் 27 திபெத்தியர்களை தங்கள் ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொண்டனர். அவர்களின் மரபணுக்களை  ஆராய்ச்சி செய்தபோது, சாதாரண மனிதர்களால் வாழ முடியாத இடத்தில் இவர்களால் எப்படி வாழ முடிகிறது என்ற கேள்விக்கான விடை கிடைத்திருக்கிறது. 

திபெத்தியர்கள் குறித்து மரபணு ஆராய்ச்சி

சாதாரண மக்களின் உடலில் காணக்கிடைக்காத 5 புதிய மரபணுக்கள் திபெத்தியர்களிடம் காணப்பட்டன. ஆக்ஸிஜன் குறைவான, கடுங்குளிரான, ஊதாநிற கதிர்வீச்சு அதிகம் இருக்கும் உயரங்களில், உணவுப் பற்றாக்குறை இருக்கும் இடங்களில் வாழ என இந்த மரபணுக்கள் அவர்களுக்கு உதவுகின்றன. 

திபெத்தியர்கள் குறித்து மரபணு ஆராய்ச்சி

இமயமலைப் போன்ற அதிக உயர இடங்களில் வாழ்வதற்கு ஏதுவாக EPAS1 மற்றும் EGLN1 ஆகிய இரண்டு மரபணுக்கள் திபெத்தியர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன. இதில் EPAS1 என்ற மரபணு மனிதர்களின் மூதாதைய கிளையினமான டெனிசோவன்களிடமிருந்து வந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். திபெத்தியர்கள், 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் டெனிசோவன்களுடன் கலந்ததால், அவர்களுக்கு இந்த மரபணு கடத்தப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதை இவர்கள் " சூப்பர் அத்லீட்" ( Super Athlete ) மரபணு என்று செல்லமாக அழைக்கிறார்கள். இது சாதாரண மனிதர்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை திபெத்தியர்கள் செய்ய உதவிடுகிறது. 

உயரமான இடத்தில் எப்படி வாழ்கிறார்கள்?

 

அதேபோல், ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைந்த இடங்களில் உயிர் பிழைக்க PTGIS மற்றும் KCTD122 ஆகிய மரபணுக்கள் திபெத்தியர்களுக்கு உதவுகிறது. அதே போல், விடிஆர் ( VDR ) எனும் மரபணு விட்டமின் - டியை அதிகப்படுத்தி, அவர்களுக்கான நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்குகிறது. இந்த ஆராய்ச்சி , திபெத்தியர்கள் சாதாரண மனிதர்களில் இருந்து வேறுபட்டவர்கள் என்பதோடு அல்லாமல் அவர்களுக்குள் " சூப்பர் ஹீரோ " மரபணுக்கள் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது. இந்த ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தால், திபெத்தியர்கள் குறித்து இன்னும் பல ஆச்சர்யமான தகவல்கள் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. 
 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை

டொமினிக் நான்கு கால்கள் மற்றும் இரண்டு முதுகெலும்புகளுடன் பிறந்தாள்.அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டு ஆறு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு அவளது உடம்பிலிருந்து அது வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

  • தொடங்கியவர்

ஆபத்தான வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு கைதான இளம்பெண் (Photos)

 

ஆபத்தான வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு கைதான இளம்பெண் (Photos)கனடாவில் டொரன்டோவைச் சேர்ந்த மரிசா லாசோ என்ற 22 வயதான இளம்பெண்ணை பொலிஸார் நேற்று முன்தினம் (27) கைது செய்தனர்.

பல அடி உயரம் உள்ள இரும்பு கிரேனில் பல மணி நேரம் தனியாக அமர்ந்திருந்து பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவரைப் பொலிஸார் கைது செய்தனர்.

இது தொடர்பில் விசாரணை நடத்திய போது பல வியக்க வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் பெண் சிறுவயது முதல் வீரதீரச் செயல்களில் அதிகளவில் ஆர்வமுடன் பங்கேற்பார் என்றும், திரில்லாக இருப்பதற்காக யாரும் செய்ய முடியாத பல செயல்களைச் செய்வார் எனவும் தெரியவந்தது.

நண்பர்கள் சிலரிடம் விசாரணை செய்தபோது, இவர் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே படுத்திருப்பது, உயரமான கட்டிடத்தின் உச்சியில் நிற்பது, மின்கம்பிகளுக்கு மத்தியில் கால்களைத் தொங்கவிட்டவாறு அமர்ந்திருப்பது உள்ளிட்ட புகைப்படங்களை பொலிஸாருக்கு வழங்கி, விளக்கியுள்ளனர்.

அவருக்கு துணிச்சல் அதிகமே தவிர யாருக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயற்பட மாட்டார் என நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நிபந்தனைகள் மற்றும் 500 டொலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பல மணி நேரம் கிரேனில் அமர்ந்திருந்த இளம்பெண்ணைப் பற்றித் தான் தற்போது கனடாவில் பரபரப்பாக பேசிவருகிறார்கள்.

GNAPRIL26DROLET_848x480_930510403776

 

1297948840056_ORIGINAL

 

1297948845398_ORIGINAL

 

1297948844270_ORIGINAL

webcropcranewomanjpg.jpg.size.custom.crop.1086x611

 

 

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

அதிசய புகைப்படங்கள்!


#1

#2

#2 சூரிய அஸ்தமனம், ப்ளோரிடாவில் இருக்கும் பென்சகோலா கடற்கரை!

#3


யுன்னான், சீனா

#4


கிங் பென்குயின்கள், தெற்கு ஜியார்ஜியா

#5

ரன்சோ குகமோகாங்கா, கலிபோர்னியா

#6

ரியோ டி ஜெனிரோ, பிரேசில்.

#7

வசந்த காலத்தில், வாஷிங்டன்.
#8

ஒரு காலை பொழுதில், செமரோ லாங், இந்தோனேசியா.

 

#9

 

ஒரு மாயை போன்ற எரிமலை வெடிப்பு!

#10

கென்யாவின் நகரு குலத்தின் ஃப்லமிங்கோஸ் பறவைகள்!

#11

ஆஸ்திரேலியாவின் கல்பர்ரியில் டால்பின்களுடன் நீர் சறுக்கு விளையாட்டு .

#12

கூட்டு சேர்ந்து முயற்சித்தால் எதையும் சாதிக்கலாம்.

#13

ஒலிம்பிக் தேசிய பூங்கா!

#14


ஐ.எஸ்.எஸ்.-ல் இருந்து எடுக்கப்பட்ட மின்னல் தாக்கத்துடனான அரேபியன் பெனின்சுலா.


//tamil.boldsky.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பாகிஸ்தானில் எருமை அழகுப் போட்டி

 

பாகிஸ்தானில் நடைபெற்ற எருமை அழகுப் போட்டியில் பங்கேற்ற மொத்தம் 200 எருமைகளில், அஸிகிலி இன எருமை ஒன்று, மிகவும் அழகான எருமை என்ற பட்டத்தை வென்றிருக்கிறது,

இரு எருமைகள்படத்தின் காப்புரிமைWIKIMEDIA/JUGNI

விவசாயிகளும், எருமைகள் வளர்ப்போரும் பாகிஸ்தானின் வடக்கு பகுதியிலுள்ள ஸ்வாத் மாவட்டத்தின் தலைநகரான மின்கோராவில் மூன்று நாள் நடைபெற்ற இந்த போட்டிக்காக கூடி வந்ததாக டான் செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்வு அமெரிக்க உதவி நிறுவனமான, அமெரிக்க அரசின் குடிமக்கள் வெளிநாட்டு உதவி நிறுவனத்தின் நிதி ஆதரவோடு நடத்தப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான முதல் பரிசு ரூ. 75 ஆயிரமாகும்.

தன்னுடைய மாடு இந்த போட்டியில் திறமையோடு பங்கேற்றதில் மகிழ்ச்சியடைந்தார் இதன் முதல் பரிசை வென்ற லெக் பாடார்.

 

எருமைகளின் மத்தியில் விளையாடும் சிறுவர்கள்படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES

"இதே இனத்தில் 10 எருமைகளை வைத்திருக்கிறேன். அவைகளே என்னுடைய வாழ்வாதாரம். இன்று முதல் பரிசு வென்ற என்னுடைய எருமையால், நான் பெருமிதமடைகிறேன்" என்று அவர் `டான்` செய்தித்தாளிடம் தெரிவித்திருக்கிறார்.

அஸிகிலி எருமை இனம் அழியும் விளம்பில் இருந்து வந்தது. இந்த அழகான விலங்கை இனப்பெருக்கம் செய்வதன் முக்கியத்துவம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வ ஏற்படுத்துவதே இந்த நிகழ்வின் நோக்கம் என்று கால்நடை அமைச்சகத்தின் அதிகாரி முஹிபுல்லா கான், பாகிஸ்தானின் அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தானில் எருமை அழகுப் போட்டி போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறை.

அஸிகிலி இன எருமை ஸ்வாத் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. இந்த பிராந்தியத்தின் குளிர் காலநிலைக்கு தன்னையே தகவமைத்து கொள்ளுகிற ஒரேயொரு இனம் இந்த எருமை இனம் தான்.

அதாவது, குளிர் காலம் வருகின்றபோது, இந்த எருமைகளின் உரிமையாளர்கள் அவற்றை விற்கவோ அல்லது இறைச்சிக்காக வெட்டவோ வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை என்பதை இது குறிக்கிறது.

அஸிகிலி இன எருமைகள் அழகாக இருப்பது மட்டுமல்ல, அதிக பாலையும், சிறந்த இறைச்சியையும் வழங்குவதாக இந்த மின்கோரா எருமை அழகுப் போட்டியில் கலந்து கொண்ட நிபுணர்கள் தெரிவித்ததாக டான் செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

கீரியா, பாறு கழுகா?

 
keeri_3158321f.jpg
 
 
 

கீரிப் பிள்ளை தெரியுமா உங்களுக்கு? கொஞ்சம் பெரிய அணில் மாதிரி இருக்கும் ஒரு விலங்கு இது. நீங்கள் கோடு போடப் பயன்படுத்தும் ஒரு முழு அடி ஸ்கேல் அளவு உயரம் இருக்கும். அதாவது 30 சென்டி மீட்டர். 500 கிராம் எடை கொண்டிருக்கும்.

இந்தக் கீரிப் பிள்ளைகளில் இதைவிடவும் பெரியதாகவோ சிறியதாகவோ பல வகை உள்ளன. இந்தியாவில் உள்ளவை சாம்பல் நிறக் கீரிப் பிள்ளைகள். கீரிப் பிள்ளைகள், சிறு பூச்சிகள், பறவை முட்டை, பல்லி, செடிகள், பழங்கள் போன்றவற்றைச் சாப்பிடும். மண்ணுக்கு அடியில் குழி தோண்டி அதை வீடாக அமைத்துக்கொள்ளும். இதை ‘வளை’ என்று சொல்வோம். தென்னாப் பிரிக்காவில் மீர்காட் (meerkat) என்னும் ஒருவகை கீரிப் பிள்ளை இருக்கிறது. மீர்காட் கீரிப் பிள்ளைகள் பற்றிய கதை இது.

இந்த மாதிரியான மீர்காட் வகை கீரிப் பிள்ளைகள் எல்லாம் சவானா என்ற காட்டுக்குள் வாழ்ந்துவருகின்றன. அந்தக் காட்டுக்குள் இருக்கின்றன பழங்கள் எல்லாம் பறித்துச் சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக இருக்கின்றன. அவற்றுக்கு அந்தக் காட்டில் கிடைக்கும் சிவப்பு நிறப் பழம் ரொம்பவும் பிடிக்கும். ஆனால், அந்தப் பழம் அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. அப்படி ஒரு பழம் கிடைத்தால் இந்த மீர்காட் கீரிப் பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து ஒரு திருவிழாபோல் கொண்டாடும். ஆனால், அதற்காக மீர்காட் கீரிப் பிள்ளைகள் காத்திருக்க வேண்டும். மே மாதம் விடுமுறைக்காக நாம் வருஷம் முழுவதும் காத்திருப்பதுபோல.

அப்படி ஒரு நாள் வந்தது. இந்த மீர்காட் கீரிப் பிள்ளைகளின் வளைகளுக்கு அருகில் உள்ள மரத்தில் ஒரு சிவப்புப் பழம் பழுத்தது. ஒரே ஒரு பழம்தான். கீரிப் பிள்ளைகளுக்கு சந்தோஷம். ஒரே ஓட்டமாக ஓடி மரத்தைச் சுற்றி நின்றுகொண்டன. சில கீரிகள் மரத்தின் மீதேறிப் பழத்தை சந்தோஷமாகத் தடவிக் கொடுத்தன. சில கீரிகள் அந்தப் பழத்தின் வாசனையை நுகர்ந்து பார்த்தன. ஆக, இன்னும் கொஞ்சம் நேரத்தில் பழத்தைச் சாப்பிடப் போறோம் என்ற சந்தோஷம் கீரிகள் கண்களில் தெரிந்தது.

ஆனால், அந்த நேரத்தில் ஒரு சத்தம். கீரிகள் எல்லாம் பயத்துடன் வளைகளுக்குள் பதுங்கின. லேசாகத் தலை தூக்கிப் பார்த்தால், அந்தப் பழத்தை ஒரு பாறு கழுகு (Vulture) நுகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. கீரிகளுக்கு ஏமாற்றமும் கோபமும் ஒன்றாக வந்தன. பாறு கழுகு பழத்தைப் பறித்துக்கொண்டு பறந்தது.

ஆனால், விட முடியுமா? கீரிப்பிள்ளைகள் எல்லாம் ஒன்றுதிரண்டு பழத்தை மீட்கக் பாறு கழுகைத் துரத்திக்கொண்டு போயின. பாறு கழுகும் விடாமல் பறந்துபோகும். கீரிப் பிள்ளைகள் ஒன்றின் மீது ஒன்று ஏறிப் பாறு கழுகை எட்டிப் பிடித்துவிடும். பழத்தையும் பறித்துவிடும். ஆனால், பழம் கைநழுவிக் கீழே விழப் போகும். இப்போது பழத்தை யார் கேட்ச் (catch) பிடிப்பார்கள், பாறு கழுகா, கீரிப் பிள்ளைகளா, இல்லை கிழே விழுந்து மண்ணுக்காகுமா? முடிவை ‘Catch it’ படம் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

இது ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படம்.

 

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ஹரால்டு கிளேட்டன் யூரே

 
 
compu_3159431f.jpg
 
 
 

நோபல் பெற்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர்

வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஹரால்டு கிளேட்டன் யூரே (Harold Clayton Urey) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் இண்டியானா மாநிலத் தில் உள்ள வாக்கர்காட்டன் நகரில் (1893) பிறந்தார். சிறு விவசாயி, பள்ளி ஆசிரியர், மத போதகர் என பல பணிகளைக் கவனித்துவந்த தந்தை, இவருக்கு 6 வயதாக இருந்தபோது இறந்தார்.

* அதன்பிறகு, பாட்டி வீட்டில் வளர்ந்தார். அப்பா தன் பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காக காப்பீடு செய்து வைத்திருந்ததால் படிப்பு தடையின்றித் தொடர்ந்தது. பொறுப்பை உணர்ந்து படித்த இவர், கல்வியில் சிறந்து விளங்கினார். விவாதப் போட்டிகளில் கலந்துகொண்டார். சக மாணவர்கள் இவரை ‘பேராசிரியர்’ என்றுதான் அழைப்பார்கள்.

* மாண்டானா பல்கலைக்கழகத்தில விலங்கியலில் பட்டம் பெற்றார். சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வெப்ப இயக்கவியல் பற்றி ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

* டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள நீல்ஸ்போர் இன்ஸ்டி டியூட்டில் ஃபெலோஷிப் பெற்றார். அணுக் கட்டுமானம் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார். பின்னர் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில் ஆய்வு அசோசியேட்டாக இருந்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அசோசியேட் பேராசிரியராகப் பதவி ஏற்றார்.

* அங்கு ஆய்வுக் குழுவை உருவாக்கி ஆர்தர் ருவார்க்குடன் இணைந்து அணு, மூலக்கூறு, குவான்டம் குறித்த நூலை எழுதி வெளியிட்டார். அணுக்கருவியல் ஆராய்ச்சிகள் குறித்து ஆர்வம் கொண்டார். யுரேனியம் செறிவூட்டல் குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஐசோடோப்களைப் பிரித்தெடுக்கும் ஆய்வில் ஈடுபட்டார்.

* தனது குழுவினருடன் இணைந்து வாயுப் பரவல் கோட்பாட்டைப் பயன்படுத்தி ஐசோடோப்பை பிரித்தெடுக்கும் வழிமுறையை மேம்படுத்தினார். அது ‘ஹெவி ஹைட்ரஜன்’ (டியூட்டிரியம்) கண்டறிய வழிகோலியது. இதற்காக 1934-ல் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

* கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன், கந்தகத்தில் இருந்து கனமான ஐசோடோப்களைப் பிரித்தெடுத்தார். வானியல், நிலவியல், உயிரியல் துறைகளிலும் பல ஆய்வுகளை மேற்கொண்டார். இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது, ஐசோடோப்பை பிரிப்பதில் இவரது நிபுணத்துவம் உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்றது.

* அமெரிக்கா அணுகுண்டு தயாரிக்கும் முடிவை எடுத்ததும், இவரும் அக்குழுவில் இடம்பெற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. போரின்போதும், அதற்கு முன்னதாகவும், ஐரோப்பாவின் பல இடங்களில் இருந்தும் நாஜிக்களின் கட்டுப்பாட்டில் இருந்து யூத விஞ்ஞானிகள் தப்பிச்செல்ல உதவுவதில் சிறப்பாகப் பணியாற்றினார். யுரேனியம் கமிட்டி தலைவராக 1941-ல் நியமிக்கப்பட்டார்.

 மன்ஹாட்டன் திட்டத்தில் 1943-ல் இணைந்தார். அங்கு விஞ்ஞானிகளின் குழுவோடு இணைந்து யுரேனியத்தைப் பிரித்தெடுக்கும் ‘யூரே டிஃப்யூஷன்’ முறையை மேம்படுத்தினார். இத்திட்டத்தில் அணுகுண்டு உருவாக்கத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். உயிரற்ற பொருள்களில் இருந்து உயிருக்குத் தேவையான கரிமப்பொருள்கள் உருவாவது குறித்த கோட்பாடுகளை உருவாக்கியதிலும் சிறந்த பங்களிப்பை வழங்கினார்.

* காஸ்மோ வேதியியல் துறை உருவாக தீவிர முயற்சி மேற்கொண்டார். பல்வேறு பரிசுகள், பதக்கங்கள், விருதுகளைப் பெற்றார். இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த ஹரால்டு கிளேட்டன் யூரே 88-வது வயதில் (1981) மறைந்தார். கோள் அறிவியலில் சாதனை புரிந்தவர்களுக்கு அமெரிக்க வானியல் கழகம் இவரது பெயரில் விருது வழங்கிவருகிறது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

பிரபலமான கலை வேலைப்பாடுகளுக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன?

  • தொடங்கியவர்

மனித குலம் இருக்கும்வரை சரித்திரம் நிலைக்கும்
 
 

article_1493614370-ghfjgi.jpgஇருக்கின்ற உண்மை வரலாறுகளைப் புரட்டிப்போட்டாலும் அவை புதையுண்டு போவதில்லை. அதிகார வர்க்கம் அதனை எண்ணினாலும் அதனைச் செயலாக்க முடியாது. எழுப்பப்பட்ட எல்லா நாடுகளின் சரித்திரங்களும் அனைத்துப் பிரபல நூலகங்கள், இணையத் தளங்களிலும் பதிவு செய்யப்பட்டு விட்டன.

அத்தியாயம் ஒன்று, அத்தியாயம் இரண்டு எனத் தொடர்கதைகளை எழுதுவதுபோல், சரித்திரங்களில் புனைகதைகளை எழுதமுடியாது.

கோட்டை, கொத்தளங்கள், கல்வெட்டுகள், செப்பேட்டுப் பதிவுகள், சுடுமண் உருவங்கள், மட்பாண்டங்கள் வரலாற்றுச் சான்றாதாரங்களுடன் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட விடயங்களுக்கு கறுப்பு வர்ணம் பூசமுடியாது.

ஓர் இனத்தை, மொழியை, சமயத்தை கொச்சைப்படுத்துவதை இச்சையுடன் செய்யும் வஞ்சனையுடன் கருமமாற்றும் கூத்துகள் கேலியுடன் நோக்கப்படும். மனித குலம் இருக்கும்வரை சரித்திரம் நிலைக்கும்.  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

'மலிங்கவின் சகோதரர் கிடைத்தார்' 

 

 

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்­சத்­திர பந்­து­வீச்­சாளர் லசித் மலிங்க போலவே இருக்கும் ஒரு நபரின் புகைப்­ப­டத்தை தனது டுவிட்டர் பக்­கத்தில் பதி­வேற்­றி­யுள்ளார் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜய­வர்­தன.

malinga.JPG

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தற்­போது இந்­தி­யாவின் பல்­வேறு மாநி­லங்­களில் நடை­பெற்று வரு­கி­றது.

கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற போட்­டியில் மும்பை – குஜராத் அணிகள் மோதின. இந்தப் போட்டி குஜ­ராத்தின் ராஜ்கோட் நகரில் நடை­பெற்­றது.

போட்டி முடிந்த பின்னர் மும்பை வீரர் லசித் மலிங்க போன்று அச்சு அசல் உருவம் கொண்ட ஒரு நபர் மலிங்­கவை சந்­தித்து செல்பி புகைப்­படம் எடுத்து கொண்டார்.

 

இந்த புகைப்­ப­டத்தை தனது டுவிட்டர் பக்­கத்தில் பதி­வேற்­றி­யுள்ள மும்பை அணியின் பயிற்­சி­யாளர் மஹேல, வெகு நாட்­க­ளுக்கு முன்னர் தொலைந்து போன தனது சகோ­த­ரரை மலிங்க கண்­டு­பி­டித்து விட்டார் என நகைச்சுவையாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

#HBDBelovedThalaAJITH ஹேப்பி பர்த்டே அஜித்குமார்!

 

 

C-rdBSdV0AA5Ktd_00290.jpg

 

இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடும் 'தல' அஜித் குமாருக்கு, தமிழ் சினிமாவில் இது வெள்ளிவிழா ஆண்டு! தனது ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்துகொண்டிருக்கும் அஜித் குமாருக்கு அனிருத், பிரேம்ஜி, விக்ரம் பிரபு, தனுஷ், ராகுல்தேவ், சிவகார்த்திகேயன், லட்சுமி மேனன், 'சிறுத்தை' சிவா, டி. இமான் போன்ற பல திரைத்துறைப் பிரபலங்கள், ட்விட்டரில் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்! கடந்த 1993-ல், மாருதி ராவ் என்பவரது இயக்கத்தில் வெளியான 'பிரேம புஸ்தகம்' எனும் தெலுங்கு படத்தில், சித்தார்த் எனும் கதாபாத்திரத்தில் திரை அறிமுகம் கண்டார் அஜித்குமார்; பின்னர் அதே ஆண்டில், செல்வாவின் இயக்கத்தில் வெளியான 'அமராவதி' தான், அஜித்தின் முதல் நேரடி தமிழ்ப்படம்!  

 

Aj_1_23385_00289.jpg

 

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சிவா-அஜித் காம்போவில், ஹாட்ரிக் அடிக்கும் முனைப்பில், கிழக்கு ஐரோப்பாவில் விரைவாக உருவாகி வரும் படம்தான் விவேகம். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் அஜித்தின் 57-வது படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அஜித்குமாரின் பர்த்டே ஸ்பெஷல் மற்றும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வெளியான விவேகம் படத்தின் இரண்டாவது போஸ்டர்தான், முன்னே நீங்கள் பார்த்தது! அதில் தனது தோள்பட்டையில், மரம் ஒன்றை தூக்கியபடி மரண மாஸ் லுக்கில் இருக்கிறார் அஜித்குமார். இந்நிலையில் ஆகஸ்ட் 11-ம் தேதி, விவேகம் வெள்ளித்திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தொழிலாளர்கள் புரட்சியில் கார்ல் மார்க்ஸ்! - மே தின பகிர்வு

 

உழைப்பாளர் சிலை

விடை கொடுக்காத தேசத்தில் வீறுகொண்டு எழுந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்கிறபோது அதற்கான வழியைக் கையில் எடுத்துத்தான் ஆகவேண்டும். ஆனால், அதன் விதை அழுகலானதாக இருக்கக்கூடாது; ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் எதுவும் சாத்தியமாகும்; சரித்திரமாகும். அன்று நடந்த தொழிலாளர் புரட்சியில் இதுபோன்ற விதை மிகவும் வலிமையானதாக இருந்ததால்தான் இன்று தொழிலாளர்களுடைய வாழ்க்கை, தூணாய் உயர்ந்துநிற்கிறது. தொழிலாளி இல்லையேல் இவ்வுலகம் இல்லை என்கிற சூழலில், அவர்கள் இன்று ஓரளவுக்குத் தங்களுடைய உரிமைகளுடன் வாழ்கிறபோதிலும், ஒருகாலத்தில் அவர்களுடைய உழைப்பு உறிஞ்சப்பட்டது; ஊதியம் குறைக்கப்பட்டது;  உடல் காயம்பட்டது. அதிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகவும் அவர்கள் புரட்சி செய்ய ஆரம்பித்தனர். அதில், எத்தனையோ இழப்புகள்... சம்பவங்கள் நடந்தேறின. அதன் பயனால்தான் இன்று உலகெங்கிலும் தொழிலாளர் தினம் (மே - 1) சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

தொழிலாளர்களின் தொடர் புரட்சி!

தொழிலாளியின் நிலையை நன்றாகப் புரிந்துகொண்டதால்தான் பேரறிஞர் அண்ணா, ''தொழிலாளி வெறும் உழைப்பாளியாக மட்டும் இருக்கும் நிலை மாறி, அவன், தொழிற்சாலைகளிலே பங்காளியாகவும் ஆக்கப்பட்டால்தான் விஞ்ஞானத்தைத் தன் கூட்டாளி என்று உறவு கொண்டாட முடியும்'' என்றார். 

18-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் நிச்சயமற்ற வேலை, மிகக்குறைந்த சம்பளம்,  நீண்டநேர வேலை என தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகக் கிடந்தனர்;  பசி, பட்டினியுடன் மாடாய் உழைத்துக் கொத்துகொத்தாய் மாண்டனர்; பாரபட்சமின்றி அவர்களை எந்நேரமும் முதலாளித்துவத்தினர் கொடுமைப்படுத்தினர்; ஒருநாளைக்கு 12 முதல் 18 மணி நேரம்வரை வேலை செய்யத் தொழிலாளர்கள்  கட்டாயப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாகத் தொழிலாளர்கள் கொதித்தெழுந்தனர்; முதலாளி வர்க்கத்துக்கு எதிராகக் கொடிபிடித்தனர்; அவர்களுடைய கொடுமைகளிலிருந்து விடுவிக்கப் புரட்சி செய்தனர். இதற்காகப் பல்வேறு நாடுகளில் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழத் தொடங்கின. தொழிலாளர்களின் தொடர் புரட்சியும், தொய்வில்லாத உத்வேகமும் முதலாளித்துவத்தை முட்டிச் சாய்த்தது. முரண்டுபிடித்த அரசுகளை மண்டியிடச் செய்தது; முழு உரிமையையும் வழங்க வகை செய்தது. 

தொழிலாளர்கள்

'முதலாம் அகிலம்' !

இப்படி, அன்றைய காலத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் பல நாடுகள் புரட்சி செய்ததன் விளைவாக இன்று தொழிலாளர் நலனில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதற்கு விடியலாகவும், விடிவெள்ளியாகவும் நின்ற மாபெரும் தலைவர்களில் மாமேதை கார்ல் மார்க்ஸும் ஒருவர். குறிப்பாக அவர்களுடைய நலனில் அக்கறை கொண்டு அதில் வெற்றிபெற்றவர்  கார்ல் மார்க்ஸ். அவர், அகிலம் முழுவதும் தொழிலாளர் வர்க்கக் கட்சிகள் உருவாகக் காரணமாய் இருந்தார். அது தவிர, உலகத் தொழிலாளர்களுக்கு வழிகாட்டும் தத்துவத்தைத் தந்ததுடன், தலைசிறந்த புரட்சியாளராகவும் தொழிலாளி வர்க்க லட்சியத்தின் உறுதியான போராளியாகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். ''எட்டு மணி நேர போராட்டத்தின் வெற்றிக்குப் பின்னால் முதலாளித்துவமே எல்லாப் பிரச்னைகளுக்கும் ஊற்றுக்கண்ணாக விளங்குகிறது'' என்றார். அதை உடைப்பதற்கான ஒரு கருவியாக 1864-ல் 'முதலாம் அகிலம்' என்ற ஒரு தொழிற்சங்கக் கூட்டமைப்பை நிறுவினார். இதன் மேம்பட்ட வடிவத்தை முன்மொழிந்த  அவரது நண்பர் ஏங்கல்ஸ், ''உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்'' என்ற உயிரோட்டமுள்ள உன்னத வார்த்தையை அதன் அடிப்படைக் கோட்பாடாக முன்வைத்தார். கார்ல் மார்க்ஸின் முதலாம் அகிலமும் , ஏங்கெல்ஸின் உன்னத வாசகமும் உலகத் தொழிலாளர்களின் வெற்றிக்கு விடை காணச் செய்தது. அது, உலகத்தொழிலாளர்கள் அனைவரையும் இன்றுவரை ஈர்த்துக்கொண்டிருப்பதுடன், இணைந்து போராடவும் வைத்துக்கொண்டிருக்கிறது.

மார்க்ஸின் எட்டுமணி நேர இயக்கம்! 

தேசிய தொழிற்சங்கத்தின் எட்டுமணி நேர இயக்கம் குறித்து கார்ல் மார்க்ஸ் தன்னுடைய 'மூலதனம்' நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார். ”அமெரிக்க ஐக்கிய குடியரசின் ஒரு பகுதியை அடிமைத்தனம் பிடித்திருக்கும் வரையில் எந்தவிதமான சுயேச்சையான தொழிலாளர் இயக்கமும் முடக்கப்பட்டே இருந்தது. தொழிலாளர்களில் ஒரு பகுதி கறுப்பு இனத்தவர் என்று முத்திரையிடப்பட்டிருக்கும்வரையில் வெள்ளைத் தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே விடுதலை தேடிக்கொள்ள முடியாது. ஆனால், அடிமைத்தனத்தின் அழிவிலிருந்துதான் புதிய உத்வேகமுள்ள வாழ்க்கை பிறந்தது. உள்நாட்டுப் போரின் முதல் பலனே 8 மணி நேர வேலை நாளுக்கான போராட்டமாகும். இது ஓர் இயக்கமாக அதிவேகத்துடன் அட்லாண்டிக் முதல் பசிபிக் வரையிலும், நியூ இங்கிலாந்து முதல் கலிபோர்னியா வரையிலும் பரவியது'' என்று குறிப்பிடுகிறார்.

''எது அடிமைத்தனம்?''

‘'இது, வர்க்கத் தனி உரிமைகளுக்கும் ஏகபோகங்களுக்கும் நடைபெறும் போராட்டம் அல்ல... சமத்துவமான உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் எல்லா வகையான வர்க்க ஆதிக்கத்தை ஒழிப்பதற்கும் நடைபெறுகிற போராட்டம்தான் தொழிலாளர்கள் மேற்கொள்ளவேண்டிய போராட்டம்'' என்பது அவருடைய ஆணித்தரமான வாதமாக இருந்தது. ‘'உழைப்புச் சாதனங்களை... அதாவது, வாழ்க்கையின் ஆதாரங்களை ஏகபோகமாக வைத்திருப்பவரிடம் உழைக்கும் மனிதன் பொருளாதார ரீதியில் கீழ்ப்பட்டிருப்பதே அடிமைத்தனம்'' என்று சொல்லும் மார்க்ஸ், ஒரு தொழிலாளி முதலில் எப்படி ஒடுக்கப்படுகிறான் என்பதை அவன் புரிந்துகொண்டால்தான், தன்னுடைய நிலையை முழுவதுமாக உணரமுடியும் என்கிறார். சர்வதேசத் தொழிலாளர் சங்கத்துக்குச் சில விதிமுறைகளை அவர் உருவாக்கினார். அதில், மிகவும் குறிப்பிடவேண்டிய ஒன்று, ''தொழிலாளர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அடிப்படையில் அவர்களுடைய லட்சியம் ஒன்றாக இருக்கவேண்டும். தொழிலாளி வர்க்கங்களின் பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் பரிபூரண விடுதலை'' என்பதே அது.

கார்ல் மார்க்ஸ்

''தொழிலாளர்களிடம் ஒற்றுமை இல்லை!''

''தொழிலாளி வர்க்கத்தினரின் விடுதலையை அவர்களே வென்றெடுத்துக்கொள்ள வேண்டும்'' என்ற மார்க்ஸின் கருத்து நியாயமானது. ஏனெனில், தொழிலாளியின் பிரச்னை தொழிலாளிக்குத்தான் தெரியும். இதையேதான் அவர்,  ''தொழிலாளிகளுடைய பிரச்னை என்பது குறிப்பிட்ட ஓர் எல்லையின் பிரச்னை அல்ல. அது, உலகம் சார்ந்த சமூகப் பிரச்னை. ஆகவே, அதனை... ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர் பிரிவு, மற்ற நாடுகளில் உள்ள அந்தப் பிரிவினருடன் இணைந்து செயல்படவேண்டும். அப்படித் தொழிலாளர் வர்க்கத்தினரிடையே ஒரு வலிமைமிகுந்த சகோதரப் பிணைப்பு இருந்தால் மட்டும்தான் அடிமைத்தனத்துக்கு எதிராகப் போரிடுவது சாத்தியமாகும்'' என்றார். இது, அவருடைய தீர்க்கமான, திடமானச் சிந்தனையைக் காட்டுகிறது. அதேநேரத்தில், ''தொழிலாளர்கள் இவ்வாறு ஒன்றுபடுவது இதுவரை சாத்தியமாகாமல் இருப்பதற்குக் காரணம்... அவர்களும், அவர்களிடம் ஒற்றுமை இல்லாததும்தான்'' என்று அவர் சொல்வதையும் நாம் கட்டாயம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

செவிடன் காதில் ஊதிய சங்கு!

காலங்கள் பல உருண்டோடிவிட்டன; காவியங்கள் பல உருவாகிவிட்டன; சட்டங்களும் திட்டங்களும் பல உருவாக்கப்பட்டுவிட்டன. ஆனாலும், தொழிலாளர்களின் கண்ணீருக்கு மட்டும் இன்றுவரை விடை கிடைக்கவில்லை. அவர்களுடைய விடுதலை என்பதும் பல விஷயங்களில் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. குறிப்பாக, 'உழைப்பாளியின் கூலியை அவன் வியர்வை உலர்வதற்குமுன் கொடுத்துவிடுங்கள்' என்ற வாசகம், இன்று பல இடங்களில் ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது. அவர்களுடைய வியர்வைக்கு ஏற்ற ஊதியம்  நியாயமாகவும், நேர்மையாகவும் வழங்கப்படவில்லை என்பதே இன்றைய தொழிலாளர்களின் நிலையாக இருக்கிறது. இதற்காக அவர்கள் அரசாங்கத்துக்கு எதிராகவும், பிற இடங்களிலும் போராடி வந்தாலும்,  அவர்களுடைய பிரச்னைகள் என்னவோ செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பாகுபலி2 படத்தின் நகைகள் அறிமுகம்!

 
 

ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி படத்தின் முதல் பாகம் ஜுலை மாதம் 2015ம் ஆண்டு வெளியாகி 500 கோடி வரை வசூல் செய்தது. இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை உலகமே எதிர்ப்பார்த்து கொண்டு இருந்தது. இதன் இரண்டாவது பாகம் ஏப்ரல்  28ம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியானது. 

C-dsGSGVoAAfgMH_12179.jpg


வெளியான முதல் நாளே 122 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து உலக சாதனை படைத்தது பாகுபலி படம் மட்டும் இல்லாமல் பாகுபலி 2 சேலைகளும் நன்றாக விற்பனையாகியுள்ளது. பாகுபலி 2 படத்துக்கு அதிகாரபூரவமாக நகைகள் செய்து கொடுத்த ஹைதாராபாத்தில் உள்ள 'அமர்பள்ளி ஜுவல்லர்ஸ்' இதன் நகைகளை மக்களிடம் அறிமுகம் செய்துள்ளது. கிட்டத்தட்ட படத்தில் பயன்படுத்தபட்ட 1500 வகையான  நகைகளை அறிமுகம் செய்துள்ளது. இவை அனைத்தும் கைகளால் செய்யப்பட்டவை. ரசிகர்களிடம் இந்த நகைகள் நல்ல வரவேற்பை பெற்று உள்ள  நிலையில், நகைகளின் மதிப்பு  600 ரூபாயிலிருந்து 58,000 ரூபாய் வரை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று

மே 01

Ranasinghe-Premadasa

1328 : ஸ்கொட்­லாந்தை தனி­நா­டாக இங்­கி­லாந்து அங்­கீ­க­ரித்­தது. ஸ்கொட்­லாந்து விடு­தலைப் போர் முடி­வுக்கு வந்­தது.


1707 : இங்­கி­லாந்து மற்றும் ஸ்கொட்­லாந்து இணைக்­கப்­பட்டு பெரிய பிரித்­தா­னியா என்ற ஒரு நாடா­கி­யது.

 

1834 : பிரித்­தா­னியக் குடி­யேற்ற நாடுகள் அடிமைத் தொழிலை நிறுத்­தின.


1840 : உலகின் முத­லா­வது அதி­கா­ர­பூர்வ ஒட்­டக்­கூ­டிய தபால்­த­லை­யான பென்னி பிளாக், ஐக்­கிய இராச்­சி­யத்தில் வெளி­யி­டப்­பட்­டது.


1886 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் 8 மணித்­தி­யால வேலை நாளை அறி­விக்கக் கோரி வேலை­நி­றுத்தம் ஆரம்­ப­மா­னது. இந்நாள் பின்னர் மே நாள் எனவும் தொழி­லாளர் நாள் எனவும் உல­கெங்கும் கொண்­டா­டப்­பட்டு வரு­கி­றது.


1891 : பிரான்ஸில் தொழி­லா­ளர்­களின் ஆர்ப்­பாட்ட ஊர்­வலத்­தின்­போது படை­யினர் சுட்­டதில் 9 பேர் கொல்­லப்­பட்டு 30 பேர் காய­முற்­றனர்.


1898 : அமெ­ரிக்க கடற்­ப­டை­யினர் மணிலா விரி­கு­டாவில் ஸ்பானிய கடற்­படைக் கப்­பலை தாக்­கி­ய­ழித்­தனர்.


1915 : ஆர்.எம்.எஸ். லூசிட்­டா­னியா என்ற கப்பல் தனது 202 ஆவதும் கடை­சி­யு­மான பய­ணத்தை நியூயோர்க் நகரில் இருந்து ஆரம்­பித்­தது. இது புறப்­பட்ட ஆறா­வது நாள் அயர்­லாந்துக் கரைக்­க­ருகில் மூழ்­கி­யதில் 1,198 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1925 : சீனாவில் அனைத்து சீன தொழிற்­சங்­கங்­களின் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டது. இதுவே இன்று 134 மில்­லியன் உறுப்­பி­னர்­க­ளுடன் உள்ள உலகின் மிகப்­பெ­ரிய தொழிற்­சங்கம் ஆகும்.


1930 : புளுட்­டோவின் பெயர் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டது.


1931 : நியூயோர்க் நகரில் எம்­பயர் ஸ்டேட் கட்­டிடம் திறந்­து­வைக்­கப்­பட்­டது.


1940 : கோடை கால ஒலிம்பிக் போட்­டிகள் போர் கார­ண­மாக நிறுத்­தப்­பட்­டன.


1945 : சோவியத் இரா­ணு­வத்­தினர் பேர்­லினில் நாடா­ளு­மன்றக் கட்­டி­டத்தில் சோவியத் கொடியை ஏற்­றி­னார்கள்.


1946 : மேற்கு அவுஸ்­தி­ரே­லி­யாவில் பில்­பாரா என்ற இடத்தில் அவுஸ்­தி­ரே­லியப் பழங்­கு­டிகள் மனித உரிமை, போது­மான சம்­பளம் போன்ற கோரிக்­கை­களை முன்­வைத்து 3 ஆண்­டுகள் வேலை நிறுத்தப் போராட்­டத்தை ஆரம்­பித்­தனர்.


1948 : கொரிய மக்கள் ஜன­நா­யகக் குடி­ய­ரசு (வட­கொ­ரியா) ஸ்தாபிக்­கப்­பட்­டது. கிம் உல்-சுங் அதன் முத­லா­வது ஜனா­தி­ப­தி­யானார்.


1956 : அமெ­ரிக்க மருத்­துவர் ஜோனாஸ் சால்க்­கினால் தயா­ரிக்­கப்­பட்ட போலியோ நோய்த் தடுப்பு மருந்து அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.


1960 : இந்­தி­யாவில் மகா­ராஷ்­டிரா மாநிலம் அமைக்­கப்­பட்­டது.


1961 : கியூ­பாவை சோச­லிச நாடாக அதன் பிர­தமர் பிடெல் கஸ்ட்ரோ அறி­வித்தார்.


1977 : தொழி­லாளர் நாள் நிகழ்வின் போது துருக்­கியின் இஸ்­தான்புல் நகரில் 36 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1978 : ஜப்­பா­னி­ய­ரான நவோமி யூமுரா, தன்­னந்­த­னி­யாக வட முனையை அடைந்த முதல் மனி­த­ரானார்.


1987 : இரண்டாம் உலகப் போரின் போது அவுஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்­லப்­பட்ட யூதப் பெண்­ம­த­குரு ஈடித் ஸ்டெயின் பாப்­ப­ர­சரால் புனி­தப்­ப­டுத்­தப்­பட்டார்.


1993 : இலங்கை ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தாசா மே தினப் பேரணியின் போது நடத்தப்பட்ட  குண்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டார். 


2004 : சைப்பிரஸ், செக் குடியரசு, எஸ்தோனியா, ஹங்கேரி, லத்வியா, லித்துவேனியா, மோல்ட்டா, போலந்து, ஸ்லோவாக்கியா,, ஸ்லோவேனியா ஆகியன ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

ஏடிஎம் கார்டு திருமண அழைப்பிதழ்! அசரவைத்த கோவில்பட்டி ஜோடி!

 
 

Wed_500_12255.jpg

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அகமது யூசுப் - அல்ஃபியா சபூர் திருமண ஜோடி தங்களது திருமண அழைப்பிதழை புதுமையாக வடிவமைக்க வேண்டும் என்று எண்ணியுள்ளனர். இது குறித்து அகமது யூசப் கூறுகையில், 'திருமண அழைப்பிதழை எந்த மாதிரி வடிவமைக்கலாம் என்று யோசித்தபோது அனைவரின் மத்தியிலும் பரவலாக பேசப்படும் ஏடிஎம் கார்டே எங்களது சாய்ஸாக அமைந்தது. ஆரம்பத்தில் வீட்டில் உள்ளவர்கள் இதெல்லாம் வேண்டாம் நிக்கா கார்டே அடிக்கலாம் என்று கூறினார்கள். ஆனால், எங்களின் வற்புறுத்தலினால் அவர்கள் சம்மதித்தனர். இப்போது அனைவரும் எங்களது திருமண அழைப்பிதழை பார்த்து வியந்து நல்ல கிரியேட்டிவ்னு பாராட்டுறாங்க' என்று உணர்ச்சி பொங்க கூறினார்.

வட மாநிலங்களில் பரவலாக திருமணத்தில் வாங்கும் மொய்களுக்கு ஸ்வைப்பிங் மிஷினை பயன்படுத்தி வரும் வேலைகளில் இங்கும் அதுபோன்ற விஷயங்களில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனை மக்கள் மனதில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது என்பதற்கு இது போன்ற சம்பவங்களே உதாரணமாக விளங்குகின்றது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 12 Personen, Personen, die lachen, Text

தல - அஜித் !!!
#HappyBirthdayAjith #Thala #Ajith

நடிப்பிற்கு அப்பாற்ப்பட்ட உழைப்பினாலும் தன்னுடைய தீராத தன்னம்பிக்கையினாலும்
வெகுஜன மக்களை மட்டுமல்லாது திரையுலக கலைஞர்களையும் ரசிகர்களாக மாற்றியவர்.

அஜித்!
ஒரு நடிகர் என்றதை கடந்து
தன்னுடைய தனிமனித அந்தஸ்தையும் மீறி ஒரு நல்ல குடிமகன் என்ற பெயரைப் பெற்றவர்.
தன்னுடைய தொழில் அடையாளமாக கிடைத்துள்ள இரசிகர்களை சுயநலமாக பயன்படுத்தாமல் முன்னேறிச் செல்லும் பெருமைக்குரியவர்
தன்னம்பிக்கைக்கும் உழைப்பிற்கும் இளைஞர்களுக்கு உந்துதலா இருக்கும் ஒரு வெற்றி நாயகன். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உதாரணமாக தன்னைத்தானே செதுக்கி கொண்டவர்.

1992 இல் அமராவதி ஆரம்பித்து வைத்தது இவரது அழகான திரையுலக வாழ்க்கையினை
தன் இயல்பான மற்றும் இயற்கையான நடிப்பாலும் அனைவரையும் கவர்ந்த அற்புத நடிகர். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தமிழ் திரையுலகில் நுளைந்து
ரசிகர்கள் மனதில் "தல" என நிலைத்திருப்பவர்.
20 வருடங்களை கடந்த திரையுலக பயணத்திற்கு பின்னால் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவு இன்றும் நீண்டுகொண்டே செல்கிறது.

தடையுடைத்து தலைநிமிர்ந்த "தல"க்கு

 பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தல வெறியன் ....உலகமெங்கும் தல பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள் ..
யாருடா இவன்..நம்மளயே மிஞ்சிருவான் போல..

  • தொடங்கியவர்

புளூட்டோ அதிகாரப்பூர்வ பெயர் பெற்ற நாள்: மே 1- 1930

 

புளூட்டோ என்பது நமது சூரியக் குடும்பத்தில் இரண்டாவது பெரிய குறுங்கோளும், சூரியனை நேரடியாக சுற்றிவரும் பத்தாவது பெரிய விண்பொருளும் ஆகும். இது பெருசிவல் லோவெல் என்பவரால் 1915-ல் கணிக்கப்பட்டு 1930-ல் கிளைடு டோம்பா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. புளூட்டோ ஆரம்பத்தில் சூரியனின் ஒன்பதாவது கோள் எனக் கருதப்பட்டு வந்தது.

 
புளூட்டோ அதிகாரப்பூர்வ பெயர் பெற்ற நாள்: மே 1- 1930
 
புளூட்டோ என்பது நமது சூரியக் குடும்பத்தில் இரண்டாவது பெரிய குறுங்கோளும், சூரியனை நேரடியாக சுற்றிவரும் பத்தாவது பெரிய விண்பொருளும் ஆகும். இது பெருசிவல் லோவெல் என்பவரால் 1915-ல் கணிக்கப்பட்டு 1930-ல் கிளைடு டோம்பா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. புளூட்டோ ஆரம்பத்தில் சூரியனின் ஒன்பதாவது கோள் எனக் கருதப்பட்டு வந்தது.

நெப்டியூனுக்கு வெளியேயுள்ள கைப்பர் பட்டையில் உள்ள பல பெரும் விண்பொருட்களில் ஒன்றே புளூட்டோ எனக் கண்டுபிடிக்கப்பட்டதால் இது குறுங்கோள் ஆகவும் புளூட்டாய்டு ஆகவும் வகைப்படுத்தப்பட்டது. புளூட்டோவிற்கு சாரோன் எனும் ஒரு பெரிய நிலா உட்பட ஐந்து நிலாக்கள் உள்ளன.

1930-ம் ஆண்டு மே 1-ந்தே புளூட்டோ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கலாம்... மாயம் மந்திரமில்லை... முழுக்க அறிவியல்!

 
 

தண்ணீர்

‘சிவகாமி! சிவகாமி!’ தண்ணீரில் கண்டம் என்று கூறி விவேக் நடித்த  நகைச்சுவைக் காட்சி நம் நினைவில் இருக்கும். தற்போது தண்ணீர் பற்றாக் குறை காரணமாக மக்களுக்குக் கண்டம் ஏற்பட்டுள்ளது...

தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது. குடிப்பதற்கும் தண்ணீர் கிடைப்பதில்லை. குழாயைத் திறந்தால் வெறும் காற்று தான் வருகிறது; தண்ணீரைக் காணோம். காணாமல் போன கிணறு கூட கிடைத்து விடுகிறது. ஆனால் தண்ணீர் கிடைப்பதில்லை.

ஒவ்வொரு நாளும் கிராமத்தில் உள்ள பெண்களும் குழந்தைகளும் ஆறு மணி நேரம் தண்ணீரைச் சுமப்பதற்கென்றே செலவிடுவதாக கூறப்படுகின்றது. என்ன தான் சுமந்தாலும் சுத்திகரிக்கப்பட்ட நீரென்பது காண்பதற்கு அரிதானதாகி விட்டது. இந்த நிலைமையால் ஒரு நாளில் உலகில் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகக் கூறப்படுகின்றது.

இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன? என்ற நம் வினாவுக்குத் தீர்வு கண்டுள்ளனர் VICI Labs, UC Berkeley, And National peace corps association. சிவகாமி நம்மேல் இறக்கப்பட்டு இவர்கள் மூளையில் இப்படிப்பட்ட ஒரு தீர்வைக் கொடுத்துள்ளாள் போலும்.

உப்பு நீரைச் சுத்திகரிக்கப்பட்ட நீராக மாற்றுவது என்பது ஒரு மதிப்பு மிக்கசெயல்முறை என்று தான் கூற வேண்டும். ஒன்றில் மூன்று பங்கு மக்களுக்கு இந்த அணுகு முறையில்லை. ஒன்றில் ஐந்து பங்கிலான மக்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையோடு தான் தங்களது வாழ்வை நகர்த்துகின்றனர். இந்த நிலையைத் தீர்க்கும் பொருட்டு அறிவியல் முறையில் அதாவது wind powered device என்று சொல்லக் கூடிய காற்று இயங்கு சாதனம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். இந்த சாதனம் ஒரு நாளைக்கு 37 லிட்டர் அளவிலான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்குமாம் நமக்கு.

 

இதற்குப் பெயர் water seer என்பது.அதாவது தண்ணீர் சீயர். இதனைப் பயன்படுத்தி அவரவர் தனது சுய தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள இயலும். இதனை நம் அறிஞர்கள் புரோட்டோ-டைப் முறைமையில் ஏற்கனவே பரிசீலனை செய்து பார்த்துவிட்டனர். மேலும் இதன் சமீபத்திய மாடல் ஒன்று 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இறுதியாக்கப்பட்டுள்ளது.

சரி, இதை எப்படி செயல்முறைப்படுத்துவது?

இந்த சாதனம் நிலத்திலிருந்து ஆறு அடிக்குக் கீழ் பொறுத்தப்பட வேண்டும். நிலத்தடியில் அமைந்துள்ள மெட்டல் சைடுகள் மணலால் குளிர்ச்சியாக்கப்படும். காற்று டர்பனைச் சுழற்சி செய்து அதிலுள்ள காற்றாடிகள் காற்றை ஒடுக்கிய அறையினுள் (condensation chamber) செலுத்தும். அதனால் குளிர்ச்சியான காற்றானது அந்த அறையையும் குளிர்ச்சிபடுத்தி நீராவியைக் கெட்டியாக்கி ரிசர்வாயரின் உள்ளே ஒழுகச் செய்யும். அந்த ரிசர்வாயரின் உள்ளே பொருத்தப்பட்டுள்ள பம்பு குழாயும் சுத்தமான மற்றும் பாதுகாப்பான நீரை வெளியேற்றும்.

காற்று இல்லை என்றாலும் நம்மால் 24 மணி நேரமும் நீரை உறிஞ்ச முடியுமாம். அதற்கென்று மீண்டும் நாம் தண்ணீரை இஷ்டத்திற்கு பயன்படுத்திவிடக் கூடாது.அளவுக்கு மீறினால் திறம்பவும் இதே கதி தான்.புரிஞ்சுதோ!!!

இது எல்லா சூழ்நிலையிலும் செயல்படாது. 37 லிட்டர் எப்போதும் கிடைக்காது என இந்த முறையை குறை சொல்லியும் பல வீடியோக்களை பார்க்க முடிந்தது. ஆனால், இது நடக்கவே நடக்காத காரியம் என அவர்களாலும் சொல்ல முடியவில்லை. நீரின் அளவு கூடும்.குறையும் எனதான் சொல்கிறார்கள். விரைவில் இது உண்மையாகி, பரவலாக பயன்பாட்டுக்கு வர வேண்டும். எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதுதான்  எல்லோரின் ஆசையும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

வானில் வரையும் ஓவியர்

வானமே அவரது திரை. விமானமே தூரிகை. அசையும் மேகங்களே அவரது ஓவியங்கள்.

  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.