Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று….

ஏப்ரல் – 02

 

1519 : இத்­தா­லிய ஓவியர், சிற்பி, பொறி­யி­ய­லாளர் என பல்­துறை விற்­பன்­ன­ராக விளங்­கிய லிய­னார்டோ டாவின்ஸி கால­மானார்.


1536 : இங்­கி­லாந்து மன்னர் 8 ஆம் ஹென்­றியின் மனை­வி­யான ராணி ஆன் போலெய்ன் ஒழுக்­கக்­கேடு, தேசத்­து­ரோகம், மாந்­தி­ரிக நட­வ­டிக்­கைளில் ஈடு­பட்­ட­தாக குற்றம் சுமத்­தப்­பட்டு கைது செய்­யப்­பட்டார்.


1933 : ஜேர்­ம­னியில் தொழிற்­சங்­கங்­க­ளுக்கு அடோல்வ் ஹிட்­ல­ரினால் தடை விதிக்­கப்­பட்­டது.


osama_bin_laden_portrait1936 : எத்­தி­யோப்­பிய மன்னர் ஹிலி செலாஸ்ஸி, நாட்­டை­விட்டு வெளி­யே­றினார்.


1945 : 2 ஆம் உலக யுத்­தத்­தின்­போது ஜேர்­ம­னியின் பேர்லின் நகரம் கைப்­பற்­றப்­பட்­ட­தாக சோவியத் யூனியன் அறி­வித்­தது.


1952 : ஜெட் இயந்­தி­ரங்கள் மூலம் இயங்கும் உலகின் முத­லா­வது விமா­ன­மான டி ஹாவா­லிலேன்ட் கொமட் விமானம் தனது முதல் பறப்பை லண்­ட­னி­லி­ருந்து ஜொஹான்னர்ஸ் பேர்க் நக­ருக்கு மேற்­கொண்­டது.


1969 : உலகின் மிகப்­பெ­ரிய பய­ணிகள் கப்­பல்­களில் ஒன்­றான “குயின் எலி­ஸபெத் 2” லண்­ட­னி­லி­ருந்து நியூயோர்க்­கிற்கு முத­லா­வது பய­ணத்தை ஆரம்­பித்­தது.


1982 : பாக்­லாந்து யுத்­தத்தில் ஆர்­ஜென்­டீன யுத்த கப்­ப­லான ஏ.ஆர்.ஏ. ஜெனரல் பெல்­கி­ரா­னோவை பிரித்­தா­னிய அணு­சக்தி நீர்­மூழ்­கி­யொன்று மூழ்­க­டித்­தது.

 

1989 : ஆஸ்­தி­ரிய எல்­லை­யி­லுள்ள தனது வேலையை ஹங்­கேரி அகற்றத் தொடங்­கி­யது. இதனால் பெரும் எண்­ணிக்­கை­யான கிழக்கு ஜேர்­ம­னி­யர்கள் நாட்­டை­விட்டு வெளி­யே­றினர்.


1994 : போலந்தில் இடம்­பெற்ற பஸ் விபத்தொன்றில் 32 பேர் பலி­யா­கினர்.


1994 : தென் ஆபி­ரிக்­காவில் இன­வெறி ஆட்­சியை முடி­வுக்கு கொண்­டு­வரும் வித­மாக அனை­வ­ருக்கும் வாக்­கு­ரி­மை­ய­ளிக்­கப்­பட்டு நடத்­தப்­பட்ட பொதுத் தேர்­தலில், நெல்சன் மண்­டே­லாவின் ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் கட்சி வெற்றி பெற்­றது.


1998 : ஐரோப்­பிய மத்­திய வங்­கி­யா­னது பெல்­ஜி­யத்தின் தலை­நகர் பிர­சல்ஸில் திறக்­கப்­பட்­டது.


1999 : பனா­மாவின் முதல் பெண் ஜனா­தி­ப­தி­யாக மிரேயா மொஸ்­கோசோ தெரி­வானார்.


2000 : அமெ­ரிக்­காவில் படை­யி­ன­ருக்கு மாத்­திரம் அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டி­ருந்த ஜி.பி.எஸ். கருவி பாவனை கட்­டுப்­பாடு நீக்­கப்­ப­டு­வ­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி பில் கிளின்டன் அறி­வித்தார்.


2008 : மியன்­மாரில் சூறா­வளி, மண் சரிவு கார­ண­மாக 138,000 பேர் உயி­ரி­ழந்­தனர்.  மில்­லியன் கணக்­கான மக்கள் வீடு­க­ளை­விட்டு இடம்­பெ­யர்ந்­தனர்.


2008 : சிலியில் எரி­ம­லை­யொன்று வெடித்­ததால் சுமார் 4500 பேர் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டனர்.


2011 : அல் கைதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன், பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் வைத்து அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


2012 : ஆப்கானிஸ்தானின் பதாக் ஷான் மாகாணத்தில் இடம்பெற்ற மண் சரிவுகளில் சுமார் 2700 பேர் பலி.

http://metronews.lk

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ராஜமௌலி பாகுபலி மூலம் சொன்ன பாடங்கள் இவைதான்! #TuesdayThoughts

 
 

‘ஒரு படம் வந்தா போதுமே.. அதைப் பத்தியே எழுதிட்டிருக்க வேண்டியது’ அப்டினு யோசிக்காம, ஒரு விஷயம் நடந்துட்டிருக்கறப்ப அதை வெச்சு சொன்னாதான் மனசுல ‘பச்சக்’னு ஒட்டிக்கும்னு நம்பி மேல படிங்க! எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்துல பாகுபலி - 2 வந்து, பரபரன்னு ஓடிட்டிருக்கு. அதில இருந்து நாம எடுத்துக்க சில பாடங்கள் இருக்கு. அதையெல்லாம் பார்ப்போம்.


1.  பெரிய ப்ராஜக்ட்னா டைம் ஆகும் பாஸ்

பாகுபலி

நம்ம பாஸ் அல்லது மேனேஜர் ஒரு பெரிய ப்ராஜக்ட் எடுத்துட்டு வந்து, “Guys... ” அப்டினு ஆரம்பிச்சு ஒரு ஸ்பீச் குடுத்து, ‘ஒரு மாசம் டைம்’னு சொல்வாங்க. நமக்கும் “யோவ்.. இதுக்கு ஆறு மாசத்துக்கு மேல ஆகும்யா”னு சொல்ல வாய் துடிக்கும். அப்டியே யாராவது சொன்னாலும், “டீம் சைஸை அதிகப்படுத்தலாம். இன்னும் 4 பேர் அந்த டீம்ல இருந்து வருவாங்க”ம்பாரு. “யோவ்.. ஒரு பொண்ணு 9 மாசத்துல புள்ளை பெற முடியும். அதுக்காக 9 பொண்ணுக சேர்ந்து  ஒரே மாசத்துல புள்ளை கொடுக்க முடியுமாய்யா?”ன்னு கேட்கத் தோணும். கேட்க மாட்டோம். அவங்களுக்கெல்லாம் இந்தப் படம் ஒரு பாடம். 2011ல பேச்சு ஆரம்பிச்சு, 2013ல ஷூட் ஆரம்பிச்ச படம். இது கொஞ்சம் பெரிய லெவல்னு அவங்களுக்கு புரிஞ்சதுமே, 2 பாகமா ப்ளான் பண்ணி, 2015ல ஒரு பாகம், 2017ல ஒரு பாகம்னு பக்காவா முடிச்சு, குடுத்திருக்காங்க.

 2, கற்பனையை கண் முன்னால கொண்டு வாங்க!

 

S.S.Rajamouli

சரித்திரப்படம்னாலே கற்பனைதான். எஸ்.எஸ்.ராஜமௌலி மனசுல உள்ள கற்பனையை மத்தவங்களுக்கு எப்டி சொல்றது? ரெண்டு விஷயம் பண்ணினார் ராஜமௌலி.

ஸ்டோரி போர்டு. கிட்டத்தட்ட 15000 டிராயிங் வரையப்பட்டது. இந்திய சினிமாவுல ஒரு படத்துக்கு இத்தனை ஸ்கெட்சஸ் வரைஞ்சது இதுக்குதான்னு சொல்றாங்க. 

ரெண்டாவது: டிஸ்கஷன். விவாதம். கதை விவாதம். வழக்கமா இயக்குநர், உதவி இயக்குநர்கள் மட்டும் இருக்கற விவாதங்கள் அல்ல. முழுக்கதையும் தயரான பின்னால, பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னானு படத்துல நடிக்கற எல்லாரையும் உட்கார வெச்சு கதை சொல்லல் நடந்தது. Script Reading Sessions அப்டினு சொல்றாங்க இதை. பாடலாசிரியர் உட்பட பலரும் இதுல கலந்துட்டு தினமும் கதையைக் கேட்டு உள்வாங்கிகிட்டாங்க. 
  
3. தலைமையை நம்புங்க!

Baahubali Director

எஸ்.எஸ்.ராஜமௌலிதான் கேப்டன். அவரை முழுமையா நம்பி, எல்லாரும் வேலை செஞ்சாங்க. ஒரு எதிர்கேள்வி இல்லை. இங்க பார்க்கணும், இப்படிப் பண்ணணும்னு அவர் என்ன சொன்னாரோ அதைச் செஞ்சாங்க. ”அவர் சொல்கிற ஒவ்வொரு விஷயத்திலும் ஏதேனும் ஒரு அர்த்தம் இருக்கும், அது எங்களுக்குத்தான் பெயர் வாங்கித் தரும் என்று நம்பி செயல்பட்டோம்.” இது படத்தில் பணிபுரிந்த டெக்னிஷியன்ஸ், நடிக, நடிகர்கள் பலரது பேட்டிகளில் வந்த வாசகம். அதன் பலன் ரிசல்டில் தெரிந்தது.


4. டீம் ப்ளேயரா இருங்க! 

எஸ்.எஸ்.ராஜமௌலி

பலரும் பலமுறை சொன்ன விஷயம்தான். குழுவா இருந்தா, வெற்றி நிச்சயம். ‘அவனுக்கு ஏன் முக்கியத்துவம், இவன் ஏன் இப்படி?’ மாதிரியான எந்தக் கேள்விகளும் இல்லாம ‘எனக்கு குடுத்தத நான் செய்யறேன்’ அப்டினு இருக்கறவங்கதான் டீம் ப்ளேயர். இந்தப் படத்தைப் பொறுத்தவரை எல்லாரும் இதைப் பின்பற்றி இருக்காங்கனு புரிஞ்சுக்க முடியும். பிரபாஸுக்கு அப்பா, மகன்னு 2 வேடம். ராணாவுக்கு ஒரே வேடம்தான். முதல் பாதில தமன்னாதான் அதிகம் வருவாங்க. இரண்டாம் பாதில அனுஷ்காதான் அதிகம். ஆனா யாருக்கும் யாரைப் பத்தின புகார், ஈகோ இருந்ததா தெரியலைங்கறது படத்துல தெரிஞ்சது. இதுதான் டீம் வொர்க்ல ரொம்ப முக்கியம்! 
  

 
 

படத்துல சின்ன டெக்னீஷியன்ல ஆரம்பிச்சு, டைரக்டர் வரைக்கும் எல்லாரும் காட்டின  அர்ப்பணிப்பு, பெர்ஃபெக்‌ஷன் அப்டினு பலதும் இருக்கு. ஆனா இந்த நாலும் முக்கியம். ரொம்ப ரொம்ப முக்கியம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Tinder-க்கு வந்த காண்டாமிருகம்... காரணம் என்ன?

பிரபல டேட்டிங் ஆப் ஆன டிண்டர் பற்றி அறியாத இளைஞர்களே இருக்க முடியாது. அந்த அளவு இளைஞர்களிடம் பிரபலமான ஆப் இந்த டிண்டர். ஆப்-ஐத் திறந்தவுடன் சிங்கிள் ஸ்வைப் செய்தாலே போதும்; உங்களுடன் 'மேட்ச்' ஆகும் நபர்களுடன் நீங்கள் உரையாடலாம். இப்படி யூத் ஃபுல்லான ஆப்பில் தற்போது புதிதாக ஒரு வி.ஐ.பி இணைந்துள்ளார். ஆப்பிரிக்க வடக்கு வெள்ளைக் காண்டாமிருகம்தான் அந்த வி.ஐ.பி. அவர் பெயர் சூடான். பிற காண்டாமிருகங்கள் போல அல்லாமல் சூடான் ரொம்பவும் ஸ்பெஷல். ஏன் தெரியுமா?

உலகின் அரிய வெள்ளை காண்டாமிருகம் சூடான்

யார் இந்த சூடான்?

கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கென்யாவின் ஒல் பெஜெட்டா என்னும் விலங்குகள் காப்பகத்தில் இருக்கும் வெள்ளைக் காண்டாமிருகம்தான் இந்த சூடான். உலகில் கடைசியாக எஞ்சியிருக்கும் ஒரே ஒரு ஆண் வெள்ளைக் காண்டாமிருகமும் இந்த சூடான்தான். இதன் இனம் மொத்தமும் கொம்புகளுக்காக கொடூர வேட்டைக்காரர்களிடம் பலியாக, தனது இனத்தைக் காப்பாற்றுவதற்காக அழிவின் விளிம்பில் நின்று போராடி வருகிறது இந்த சூடான். இவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதால், இந்தக் காண்டாமிருகத்தைக் காப்பாற்ற ராணுவ பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது எந்நேரமும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களின் மத்தியில்தான் வாழ்ந்து வருகிறது இந்த சூடான். தற்போது டிண்டரில் இணைந்திருப்பது கூட, இதற்காகத்தான்.

43 வயதாகும் சூடான் தனது இறுதிக் காலங்களில் இருக்கிறது. சூடான் இனப்பெருக்கம் செய்தால் மட்டுமே அழிவின் விளிம்பில் இருக்கும் ஆப்பிரிக்க வடக்கு வெள்ளைக்காண்டாமிருகங்கள் தப்பும். இல்லையெனில் சூடானோடு இந்த இனம் அழிந்துவிடும். இதற்காக தற்போது இதன் இனத்தில் இருக்கும் இரண்டு பெண் காண்டாமிருகங்களோடு இணை சேர்க்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அதில் வெற்றி கிட்டவில்லை. எனவே மருத்துவர்களிடம் தற்போது இருக்கும் ஒரே தீர்வு IVF எனப்படும் செயற்கை கருத்தரித்தல் முறைதான். ஆனால் இந்த முறை இதற்கு முன்பு எந்தக் காண்டாமிருகங்களுக்கும் செய்யப்பட்டது கிடையாது. எனவே காண்டாமிருகங்களுக்கு எனப் பிரத்யேகமான IVF முறையினை உருவாக்க நிதி திரட்டி வருகின்றனர் உயிரியல் பூங்காவினர். அதற்கான நிதியை மக்களிடம் இருந்து திரட்டுவதற்காகத்தான் டிண்டர் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது பூங்கா நிர்வாகம்.

"செயற்கை கருத்தரிக்கும் முறையை இதுவரை காண்டாமிருகங்களுக்கு செய்தது கிடையாது. இதுதான் முதல்முறை. எங்களால் இயன்றவரை சூடானைக் காப்போம். ஆனால் காலத்திற்கு எதிராகத்தான் நாங்கள் போராட வேண்டியிருக்கிறது" என்கிறார் ஒல் பெஜட்டா பூங்காவின் தலைவர் ரிச்சர்ட் விக்னே. டிண்டர் ஆப் மூலமாக சூடானைப் பற்றி 190 நாடுகளில், 40 மொழிகளில் மக்கள் தெரிந்துகொள்ள முடியுமாம். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சூடானைப் பற்றி என்ன கூறியிருக்கிறார்கள் தெரியுமா? ‘The Most Eligible Bachelor in the World’. மேலும் டிண்டரில் சூடான் பற்றிய புரொஃபைல் இதுதான். 

காண்டாமிருகத்தின் டிண்டர் புரொபைல்

 

தங்கத்தை விடவும் விலைமதிப்பு மிக்கவை காண்டாமிருகங்களின் கொம்புகள். அவற்றுக்காக சூடானின் இனம் தன்னையே பலிகொடுத்துவிட்டது. மனிதனின் பேராசைக்கு பலியான இனங்களில் ஒன்றாக, தவறுகளில் ஒன்றாக வரலாற்றில் இதுவும் பதிவாகும். ஆனால் விலங்குகளாக, பறவைகளாக, நீர்நிலைகளாக மனிதனின் தவறுகளும், பேராசையும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்...இருக்கிறது. அஃறினை என மிருகங்களுக்குப் பெயர் மட்டும் வைத்துவிட்டு அவற்றின் குணங்களை நாம் ஏந்தி நிற்கிறோம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்று நியூயார்க்கின் ஹாட் டாபிக் இதுதானாம்!

 
 

பேஷன் உலகின் ராணி பிரியங்கா சோப்ரா. பிரியங்கா அணியும் பேஷன் ஆடைகளைப் பற்றி ஒரு படமே எடுக்கலாம். அந்த அளவுக்கு பேஷன் உலகை காதலிப்பவர் பிரியங்கா. 

C-xv4fMXYAEzYA__14223.jpg

நியூயார்க்கில் உள்ள மெட் கலாவில் (Met Gala) நடந்த  நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரியங்கா. இதில் அவர் அணிந்து வந்த 'ட்ரென்ஸ்கோட்' அனைவரையும் 'வாவ்' சொல்ல வைத்தது. தலை முதல் கால் வரை இவரின் சிகை அலங்காரங்கள் மிகவும் நேர்த்தியாக இருந்தது. பிரியங்காவின் முடி அலங்காரம் மற்றும் கணுக்காலில் அவர் அணிந்திருந்த கறுப்பு நிற பூட்ஸ் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

பிரியங்காவின் இந்த ட்ரென்ஸ்கோட்டை வடிவமைத்தவர் ரால்ப் லாரன். இவர் விழாவில் பிரியங்காவின் கூடவே இருந்தார். பேஷன் அன்ட் லைப் இதழில்  பிரியங்காவின் இந்த ஆடை சிறந்த ஆடையாக இடம்பெற்றது. பிரியங்காவின் இந்த ட்ரென்ஸ்கோட்டை  பற்றி ட்விட்டரில் பலதரப்பட்ட விவாதங்கள் நடந்து வருகின்றன. சிலர், இந்த ஆடை துப்பறிவாளர் மாதிரி உள்ளது எனவும், இன்னும் சிலர் பிரியங்கா பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக இருப்பார் போல எனவும் ட்விட்டுகளை தட்டியுள்ளனர். யார் என்ன சொன்னாலும் இன்று நியூயார்க் நகரின் டாப் செய்தி பிரியங்காவின் இந்த ட்ரென்ஸ்கோட் தான்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

’பாகுபலி’ ராஜமாதாவும்... ‘போயஸ் கார்டன்’ ஜெயலலிதாவும்... அப்பப்பா அப்படியே இருக்கிறதே!

 
 

newbh1_13159.jpg

இது சினிமா விமர்சனம் அல்ல. சினிமா பார்த்துக் கொண்டு இருந்தபோது தோன்றிய விமர்சனம்!

அந்த மகிழ்மதி தேசத்தைக் காப்பாற்ற ஒரு மகேந்திர பாகுபலி இருந்தான். இந்த மதிகெட்ட தேசத்து மக்களைக் காப்பாற்றப்போகும் மகேந்திர பாகுபலி யார்?

ராஜமாதா சிவகாமி அம்மாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் கொஞ்சம்தான் வித்தியாசம். தான் நினைத்ததே சரி, தான் நினைத்தது உடனே நடந்துவிட வேண்டும் என்று நினைப்பவர் அந்த ராஜமாதா. தனது மகன் பல்வாள் தேவனுக்கு பட்டம் சூட்டாமல், அமரேந்திர பாகுபலிக்கு பட்டம் சூட்ட நினைக்கிறார். தனக்கு பட்டம் சூட்டப்படவில்லை என்று மகன் நினைத்துவிடக்கூடாது என்பதற்காக அவனுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து மனம் மாற்றம் செய்ய நினைக்கிறார். தனக்கு அடங்கிய பிள்ளையாக பாகுபலி இருக்கும் வரை தான் அவனுக்கும் செல்லம் கொடுக்கிறார். அவன் தனது எண்ணத்துக்கு மாறாக நடந்ததும், பழையபடி தன் மகன் பல்வாள்  தேவனுக்குப் பட்டம் சூட்டுகிறார். தேவன் கைமீறியதும் அவனை எதிர்க்கிறார். தேவசேனாவை தன் மகனுக்கு மனம் முடிக்க துடிக்கிறார். அவள் அதை மறுத்ததும் அவளையே சிறை பிடிக்கிறாள் சிவகாமி. அந்த நாட்டின் மீதும் போர் தொடுக்கிறார்.  கடைசியில் தேவசேனா காலில் விழுந்து மன்னிப்பும் கேட்கிறாள். எந்தக் கொள்கையும் இல்லாமல் தன் மனம்போன போக்கில் யாகம், பூஜைகள் வைத்து ராஜ்யம் செய்கிறார் அந்த ராஜமாதா.

 அதேநேரத்தில் அவளைச் சுற்றி உறவுகள் உட்கார்ந்து  அவளது சம்பாத்தியத்தையே சாப்பிட்டுக் கொண்டு அவளுக்கு எதிராகவே  சதிவேலை பார்த்து அவளையே கொல்கின்றன.  மகனைக் கைது செய்ய அம்மா நினைப்பதும். அம்மாவை மகனே கொல்வதும் .. முடியரசுகளில் மட்டுமல்ல குடியரசுகளிலும் தொடர்கிறது. தன்னை பாதுகாக்க ஒரு ஒரு வலை பின்னி, அந்த வலைக்குள் இருந்து விடுபட முடியாமல் துடித்தது ராஜமாதா மட்டுமல்ல, ஜெயலலிதாவும் தான். சிவகாமி வாழ்க்கை அலையில் முடிந்தது. ஜெயலலிதா வாழ்க்கை அப்போலோவில் முடிந்தது. அம்பு எய்தல் அறிந்தோம். அறை எண் 2008 அறிந்தோம் இல்லை. பிரமாண்ட படங்களை எடுப்பதில் ராஜமெளலிகளை தோற்கடிப்பார்கள் போயஸ் மாந்தர்கள்.

சாகும்போது, 'அம்மா ஜாக்கிரதை' என்கிறான் பாகுபலி. சொந்த அம்மாவை மட்டுமல்ல வெந்த அம்மாவையும் சேர்த்துத்தான்.

தி.மு.க., அ.தி.மு.க. இரண்டிலும் நடப்பது சகோதரச் சண்டைகள் தான். மகிழ்மதி தேசம் மட்டுமல்ல தமிழ்தேசமும் குடும்ப யுத்தங்களால் newbh2_13445.jpgஉருக்குலைகிறது.ஜெயலலிதாவை முன்வைத்து சசிகலா குடும்பத்துக்குள் நடப்பதும், கருணாநிதியை முன் வைத்து கோபாலபுர குடும்பத்துக்குள் நடந்ததும் காட்சிகளாய் விரிகின்றன. தா.கிருஷ்ணன் கொலை முதல் ராஜஜெயம் கொலை வரை அனுஷ்காவின் மாமன் கொலையாகவே இருக்கின்றன. படத்தில் நடந்த கொலைக்கு காரணம் தெரிகிறது. நடப்பு கொலைக்கு காரணம் தெரியவில்லை.

யாரென்றே தெரியாத ஒருவனிடம் 50 கோடி கொடுத்து இரட்டை இலையை வாங்க முயற்சித்தது போல, மகன் விரும்பிவிட்டான் என்பதால் அறிமுகம் இல்லாத ஒரு நாட்டுக்கு கோடிக்கணக்கான பணத்தை நகைகளை வைர வைடூரியங்களை அனுப்புகிறார் ராஜமாதா. ஆனால், சுயமரியாதை சுனாமியாக அதையெல்லாம் மறுத்து எதிர்க்கிறாள் தேவசேனா. அப்படியொரு ஆத்மா இப்போது தமிழக அரசியல் களத்துக்கும் அவசியம் தேவை. 

கட்டப்பாக்களுக்கு ராஜவிசுவாசம் வேண்டும் தான். ஆனால் சுயசிந்தனையை அடமானம் வைத்துவிட்ட விசுவாசம் எங்கும் எந்த இடத்திலும் இருக்கக்கூடாது.அடிமையின் குணம் விசுவாசம். அது அநியாயத்தை எதிர்க்கும் குணம் அல்ல. நாட்டுக்காகச் சாவது தான் வீரம். அநியாயத்துக்கு எதிராக வீழ்வதே வீரம். ஆனால் பங்காளிச் சண்டைக்கும் பகையாளிச் சண்டைக்கும் உயிரைக் கொடுப்பது வீரமும் அல்ல. அதில் அடைவது வெற்றியும் அல்ல. 

இந்தப் படத்தில் நிலப்பிரபுத்துவம் இருக்கிறது. காலனியாதிக்க குணாம்சம் இருக்கிறது. மதவாத, பழைமை வாதமும் சாதியவாதமும் கூச்சமில்லாமல் நியாயப்படுத்தப்படுகின்றன. அதையும் மீறி மன்னராட்சி கால எச்சங்களாக இன்றைய நடப்புகள் இருப்பதை பாகுபலி காட்டுவதால் கவனிக்க வேண்டி இருக்கிறது.

"நடப்பது யாகம். நீ அதில் ஒரு விறகு" என்கிறார் நாசர். பாசிச யாகத்துக்கு மக்கள் விறகாகிவிடக்கூடாது. பாசிசம் விறகாக வேண்டும்.

மறுபடியும் சொல்கிறேன்... இது சினிமா விமர்சனம் அல்ல. சினிமா பார்த்துக் கொண்டு இருந்தபோது தோன்றிய விமர்சனம்

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

’இப்படியொரு கியூட்னஸ் நான் பார்த்ததே இல்ல'. நெகிழும் விராட் கோலி!

ஹர்பஜன் சிங்கின் குழந்தை, ஹினாயாவுடன் விராட் கோலி எடுத்துக்கொண்ட செல்ஃபிதான் இன்று இணையத்தின் வைரல் புகைப்படம்.

Kohli, hinaya

ஹினாயா உடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த கோலி, 'ஹினாயா, என் தாடியில் எதையோ தேடுகிறாள். ஹினாயாவின் கியூட்னஸ் என்னை வியக்கவைக்கிறது. ஹர்பஜனும் அவரின் மனைவியும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்', என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

  • தொடங்கியவர்

தேசிய கொடியுடன் தெறிக்கவிடும் 'விஸ்வரூபம் 2' ஃப்ர்ஸ்ட் லுக்!

 
 

கமலஹாசன் நடித்து இயக்கியுள்ள ’விஸ்வரூபம் 2’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இத்திரைப்படம்,  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகும் என்று கமல் அறிவித்துள்ளார்.

கமல்

2013-ம் ஆண்டு, கமல்ஹாசன் இயக்கத்தில் உருவான 'விஸ்வரூபம்' திரைப்படம், பல தடைகளுக்குப் பிறகு  வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகம் எடுக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான 40 சதவீத படப்பிடிப்பும் எடுக்கப்பட்டது. இதையடுத்து 3 வருடங்களுக்கு மேலாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம், இந்தாண்டுக்குள் வெளியாகும் என கமல் அறிவித்திருந்தார்.

 இந்நிலையில் ’விஸ்வரூபம் 2’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியை போல உடையணிந்து, இந்திய தேசியக் கொடியை தனது இதயத்தில் தாங்குவது போல கமல் வெளியிட்டிருக்கும் ஃப்ர்ஸ்ட் லுக் சமூக வலைதளங்களில் தற்போது ட்ரென்ட் ஆகி வருகிறது. அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் என முதல் பாகத்தில் பட்டையை கிளப்பிய கமல், இந்த வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் மூலம் எதிர்ப்பார்ப்பை எகிறவிடுகிறார். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகின் முதல் ஜெட் விமானம் பறந்த நாள்: மே 2- 1952

உலகின் முதன் ஜெட் விமானம் டி ஹாவிலண்ட் கொமெட் 1 முதற்தடவையாக லண்டனுக்கும் ஜோகன்னஸ்பர்க் நகருக்கும் இடையில் 1952-ம் ஆண்டு மே 2-ந்தேதி பறந்தது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1808 - மாட்ரிட் மக்கள் பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளருக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். * 1814 - முதலாவது மெதடிஸ்த ஆயர் தோமஸ் கோக் தமது மதத்தைப் பரப்புதற்காக கப்பலில் இங்கிலாந்தில் இருந்து

 
 
 
 
உலகின் முதல் ஜெட் விமானம் பறந்த நாள்: மே 2- 1952
 
உலகின் முதன் ஜெட் விமானம் டி ஹாவிலண்ட் கொமெட் 1  முதற்தடவையாக லண்டனுக்கும் ஜோகன்னஸ்பர்க் நகருக்கும் இடையில் 1952-ம் ஆண்டு மே 2-ந்தேதி பறந்தது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1808 - மாட்ரிட் மக்கள் பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளருக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்
 
* 1814 - முதலாவது மெதடிஸ்த ஆயர் தோமஸ் கோக் தமது மதத்தைப் பரப்புதற்காக கப்பலில் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வரும் வழியில் காலமானார்.
 
* 1876 - பல்கேரியாவில் ஏப்ரல் கிளர்ச்சி ஆரம்பித்தது.
 
* 1885 - புல்ஜிய மன்னர் இரண்டாம் லெயொபோல்ட் கொங்கோ சுதந்திர நாட்டை அமைத்தான்.
 
* 1889 - எதியோப்பியாவின் அரசன் இரண்டாம் மெனெலிக் என்பவன் இத்தாலியுடன் செய்துகொண்ட அமைதி உடன்படிக்கையின்படி எரித்திரியாவின் முழுப் பகுதியும் இத்தாலிக்குத் தரப்பட்டது.
 
* 1928 - அமெரிக்காவின் பிரபல கேலிச்சித்திர ஓவியரான வோல்ட் டிஸ்னி பிரபல கேலிச்சித்திரக் கதாபாத்திரமான மிக்கி எலியின் படத்தினை வரைந்தார்.

* 1933 - ஹிட்லர் தொழிற்சங்கங்களை தடை செய்தார்.
 
* 1945 - இரண்டாம் உலகப் போர்: பேர்லினைத் தாம் கைப்பற்றியதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது. ஜெர்மனியப் படைகள் இத்தாலியில் சரணடைந்தனர்.
 
* 1952 - உலகின் முதலாவது ஜெட் விமானம், டி ஹாவிலண்ட் கொமெட் 1, முதற்தடவையாக லண்டனுக்கும் ஜொகான்னஸ்பேர்க் நகருக்கும் இடையில் பறந்தது.
 
* 1964 - வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அமெரிக்கக் கப்பல் ஒன்று குண்டுவெடிப்பில் மூழ்கியது.
 
* 1964 - 8,027 மீட்டர் உயர ஷிஷபங்குமா மலையின் உச்சியை சீனாவின் இரு மலையேறிகள் எட்டினர்.
 
* 1982 - போக்லாந்து போர்: பிரித்தானியாவின் எச்.எம்.எஸ் கொன்கரர் என்ற நீர்மூழ்கிக் கப்பல் ஆர்ஜெண்டீனாவின் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.

* 2002 - கேரளாவில் பாலக்காடு நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 8 இந்துக்கள் கொல்லப்பட்டனர். * 2004 - நைஜீரியாவில் 630 முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களால் கொல்லப்பட்டனர்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

சத்யஜித் ரேயின் வாழ்வை மாற்றிய இத்தாலித் திரைப்படம்! #SatyajitRay

 
 

இந்திய திரைத் துறையின் பெருமிதம்மிக்க அடையாளம் சத்யஜித் ரே. இவரின்  96-வது பிறந்த நாள் இன்று. இயக்குநர், எழுத்தாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் எனப் பன்முகம்கொண்ட ரே, தன் திரை சாதனைக்காக ஆஸ்கர், மகசேசே போன்ற உலகளாவிய அங்கீகாரங்களைப்  பெற்றவர்.

சத்யஜித் ரே

1921-ம் ஆண்டு, மே 2-ம் தேதி  கொல்கத்தாவில் பிறந்தார் சத்யஜித் ரே. இவரின் தந்தை சுகுமார் ரே, சிறு வியாபாரி;  சிறந்த எழுத்தாளரும்கூட. நடமாடும் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த சத்யஜித் ரேவின் தாத்தா கிஷோர் ரே, ஓவியம், கவிதை, இசை  போன்ற நுண்கலைகளில் வல்லுநர்.
ரே-க்கு மூன்று வயதானபோது தந்தை இறந்துவிட்டார். மாமாவின் அரவணைப்பில் வளர்ந்தார்.  1930-ம் ஆண்டில் அப்போது இருந்த `கல்கத்தா மாநிலக் கல்லூரி'யில் பட்டப்படிப்பை முடித்த ரே,  ரவீந்திரநாத் தாகூரின் கல்விக்கூடமான சாந்தி நிகேதனில் மூன்று ஆண்டுகள் ஓவியக்கலை பயின்றார்.  சாந்தி நிகேதன்தான் ரே-யின் மனதில் திரைப்படம் பற்றியக் கனவுகளை விதைத்தது. 

1943-ம் ஆண்டில் ஆங்கில விளம்பர நிறுவனம் ஒன்றில் ஓவியராகப் பணியில் சேர்ந்தார் ரே. இவரின் ஆர்வத்தையும் உழைப்பையும் கவனித்த அந்த நிறுவனம், பதவி உயர்வு அளித்து லண்டனில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்பியது.  லண்டனில் சுமார் ஆறு மாதங்கள் பணியாற்றினார். இத்தாலி நாட்டுத் தயாரிப்பான ‘சைக்கிள் திருடன்’ என்ற திரைப்படம்தான், ரேயின் வாழ்க்கையையே மாற்றியது. ` `சைக்கிள் திருடன்'போல வாழ்க்கையில் ஒரு திரைப்படமாவது எடுத்துவிட வேண்டும்' என்ற இலக்கோடு இந்தியா திரும்பினார் ரே. 

பிரபல வங்க எழுத்தாளர் விபுதி பூஷண் பந்தியோபதெயே எழுதிய ‘பதேர் பாஞ்சாலி’ என்ற கதையை விலைக்கு வாங்கினார். அதைப் படமாக்குவதற்காக ரே பட்டபாடு கொஞ்சநஞ்சம் அல்ல. எந்தத் தயாரிப்பாளரும் அவரது முயற்சிக்கு ஆதரவு தரவில்லை; பலர் கேலிசெய்தர். மனம் தளராத ரே, தன் நண்பர்களிடம் 15,000 ரூபாய் கடன் வாங்கி கனு பானர்ஜி, கருணா பானர்ஜி, சுபிர் பானர்ஜி, உமா தாஸ்குப்தா, சன்னிபாலா தேவி, ரேபா தேவி போன்ற கவனம் பெறாத நடிகர்களைக்கொண்டு படப்பிடிப்பைத் தொடங்கினார். 

அரைகுறையாகத் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தைப் பார்த்த பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜான் ஹஸ்டன், `இந்தப் படம் நிச்சயம் வரலாற்றில் இடம்பிடிக்கும்' எனக் கூறி, நிதி உதவி செய்தார். வங்க அமைச்சர் பி.சி.ராய், படத்தின் உரிமையைப் பெற்றுக்கொள்வதாகக் கூறி,  ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கினார்.

 
1952-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘பதேர் பாஞ்சாலி’, 1955-ம் ஆண்டில் பல்வேறு இன்னல்களுக்கிடையே முடிவடைந்தது. ஆனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆயினும், திரைத் துறை, எழுத்துத் துறை சார்ந்த பல ஆளுமைகள் ரேயின் முயற்சியைப் பாராட்டினர் . ஹாலிவுட் இயக்குநர் ஜான் ஹஸ்டன் ஏற்பாட்டில் அமெரிக்காவில் உள்ள ‘இந்தியப் பொருட்காட்சிச் சாலை' -யில் படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த அமெரிக்கர்கள், ரே-யைக் கொண்டாடினர்.  கேன்ஸ் திரைப்பட விழா, சான்ஃப்ரான்சிஸ்கோ திரைப்பட விழா உள்ளிட்ட பல உலகப் பட விழாக்களில் `பதேர் பாஞ்சாலி' திரையிடப்பட்டு விருதுகளைக் குவித்தது. குறிப்பாக, கேன்ஸ் திரைப்பட விழாவில் `மனித வாழ்வின் நிறங்களை ஆவணப்படுத்தியுள்ள சிறந்த படைப்பு' என அறிவித்து விருது வழங்கப்பட்டது. இந்தப் படம் நியூயார்க் நகரில் உள்ள ஒரு திரையரங்கில் ஒன்பது மாதங்கள் தொடர்ந்து ஓடி, புதிய சாதனையைப் பதிவுசெய்தது. 

பதேர் பாஞ்சாலி


‘பதேர் பாஞ்சாலி’ சாதாரண கதைதான். ஆயினும், மனித வாழ்வில் ஏற்படக்கூடிய சோகம், மகிழ்ச்சி, விரக்தி, வெறுப்பு, ஜீவ-மரணப் போராட்டம் முதலியவற்றை உணர்ச்சிபூர்வமாகச் சித்திரித்திருந்தார் ரே . அப்பு என்கிற மனிதனின் பால்யம், வாலிபப் பருவம், முதுமை ஆகிய மூன்று பருவங்களையும் அழகுறக் காட்சிப்படுத்தியிருந்தார். 
`பதேர் பாஞ்சாலி'க்குப் பிறகு, உலக கவனம் பெற்ற ரே, தொடர்ந்து சிறந்த படங்களை இயக்கினார்.  `அகந்துக்', `ஷகா புரொஷகா', `ஞானஷத்ரு', `சுகுமார் ராய்', `காரே பைரே', `பிக்கூர் டைரி', `கிலாடி', `பாலா', `கூப்பி கைன் பாகா பைன்', `ரவீந்திரநாத் தாகூர்', `பரஷ் பதர்', `அபராஜிதோ' உள்பட 29  திரைப்படங்களும் எட்டு ஆவணப்படங்களும் எடுத்துள்ள ரே, ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். உயிருடன் இருந்த காலத்திலேயே இவரைப் பற்றி 15-க்கும் மேற்பட்ட ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டன. 

பிரான்ஸ் நாட்டின் லிஜியன் டி விருது, பிலிப்பைன்ஸ் நாட்டின் மகசேசே விருது, இந்தியாவின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருது உள்ளிட்ட பல கௌரவங்களைப் பெற்றிருக்கிறார். 
1991-ம் ஆண்டில் சிறந்த திரைப்பட இயக்குநருக்கான `ஆஸ்கர்' விருது ரே-க்கு அறிவிக்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் ரேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். ஆஸ்கர் பரிசை அவரிடம் ஒப்படைக்க, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து ஒரு குழு கொல்கத்தாவுக்கு வந்தது. குடும்பத்தினர் மற்றும்  சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முன்னிலையில் அந்த விருதை கண்ணீர் மல்கப் பெற்றுக்கொண்டார் ரே. 

 மூன்று மாதகாலம் தீவிர சிகிச்சைப் பிரிவில்  இருந்த அவர், 23.4.1992 மாலை 5:45 மணிக்கு காலமானார்.  
இந்திய திரைத் துறை வரலாற்றை, சத்யஜித் ரே-வுக்கு முன்னர், சத்யஜித் ரே-வுக்குப் பின்னர் என இரண்டாகப் பிரிக்கலாம். அவர் காலத்துக்குப் பிறகான அத்தனை திரையுலகக் கலைஞர்களுக்கும் அவர்தான் ஆதர்சம். அவரது படைப்புகள் நல்ல சினிமாவுக்கு இன்றளவும் உதாரணமாகக் காட்டப்படுகின்றன. சமூகத்தின்பால் அக்கறையுள்ள படைப்பாளியும் , கலையம்சம் குலையாமல் உருவாக்கப்படும் படைப்புகளும் காலம் கடந்தும் நிற்கும் என்பதற்கு ரேயும் அவரின் திரைப்படங்களுமே உதாரணம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
தர்மம் செய்தலே நிம்மதி தரும்
 
 

article_1493698559-index.jpgநல்லெண்ணெங்கள் பூக்கும்போது, அதனை நிறுத்தாதீர்கள்; அதனுடன் சஞ்சாரம் செய்யுங்கள். 

இந்த எண்ணங்களே உங்களை அறியாமல் அதனைச் செயல் உருவில் கொண்டுவர விழைவீர்கள். நல்ல விடயங்கள் சுவாரஷ்யமானவைதான்.

இவற்றை நீங்கள் சிரமம்பாராமல் செய்யும்போது, உங்களுடன் அனைவரும் இணையத் தயாராகிவிடுவார்கள்.

எல்லோருக்கும் ஏதோ ஒரு தருணத்தில், ஏதாவது நன்மையான காரியங்களைச் செய்ய எண்ணம் வரலாம். ஆனால், இதனைச் சட்டென மறந்து வேறு பணிகளில் மூளையைச் செலுத்துவார்கள். 

புண்ணியம் செய்தலே மகா பாவமான காரியம் என எண்ணும் துஷ்டர்களும் இருக்கின்றார்கள். 

மனம் மாறுமுன் ஈகைசெய்தலே உத்தமமானது. நிலையற்ற மனித வாழ்வில், நல்ல சந்தர்ப்பங்களை நல்ல காரியங்கள் செய்தலை நழுவவிடவேண்டாம். தர்மம் செய்தலே நிம்மதி தரும். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்த நாய்குட்டி ஏன் வைரல் தெரியுமா? 

 
 

அமெரிக்காவில், மிச்சிகன் நகரில் வசித்துவரும் அட்ரியானா என்பவர், இரண்டு நாய்களை செல்லமாக வளர்த்துவருகிறார். அவை, 'ஹேன்க்' என்கிற 10 வயது பெரிய நாய் மற்றும் 'பெல்லா' என்கிற ஒரு வயது குட்டி நாய். ஹேன்க் உருவத்தில் பெரியதானாலும் குட்டியான பெல்லாவைப் பார்த்தால் பயந்து நடுங்குமாம். பெல்லா குட்டியாக இருப்பதால், பிறரின் கவனத்தை ஈர்க்க ஹேன்க் மீது ஏறி நிற்க, தானாகக் கற்றுக்கொண்டது. பெல்லா, ஹேன்க் மீது ஏறி நின்று உணவு கேட்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டது. 

bella

இதுகுறித்து அட்ரியானா கூறுகையில், 'பெல்லாவுக்குப் பசி எடுத்தால், ஹேன்க் மீது ஏறி நின்று, என்னைப் பாவமாகப் பார்க்கும். ஒரு வயது மட்டுமே நிரம்பிய பெல்லா, தன்னைவிட பல மடங்கு பெரிய நாயின் மீது ஏறி நிற்பது, முதலில் எங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பெல்லாவின்  'attitude’க்கு நிறையா ரசிகர்கள் குவிந்துவிட்டனர். டிவி சேனலில் இருந்து பெல்லாவைப் படம் எடுக்க வருகிறார்கள். பெல்லா, யாரைப் பார்த்தும் பயப்படுவது இல்லை' என்கிறார்.

Can we just talk about how my dog begs for food?

C4-rR0GXUAEOSMf.jpg
C4-rR0FWAAQBbBn.jpg
C4-rR0EWcAEqtYH.jpg

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
 

அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்! #WednesdayWisdom

 
 

பாகுபலி

‘பாகுபலி' படத்தின் 2-வது பாகம் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. `இந்தப் படம் தற்போதைய தமிழக அரசியல் சூழலுக்குச் சரியாகப் பொருந்தும்விதத்தில் உள்ளது' என நெட்டிசன்களால் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, இந்தப் படம் கார்ப்பரேட் ஆளுமைகளுக்கும் மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது. இந்தப் படத்தின் கதாநாயகனான அமரேந்திர பாகுபலி, நமக்குக்  கற்றுத்தரும் ஐந்து கார்ப்பரேட் பாடங்கள் இதோ....

அப்ரைசலை எதிர்க்காதீர்கள்:

சில நேரங்களில் நீங்கள்தான் பதவி உயர்வுக்குத் தகுதியான நபர் என மொத்த அலுவலகமும் கொண்டாடும். நிர்வாகமும் அதையே நினைக்கும். கடைசி நிமிடத்தில் சில காரணங்களுக்காக, பதவி உயர்வு இன்னொருவருக்கு மாற்றப்படலாம். அதை விமர்சிக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் தகுதியான நபராக இருந்தால் அந்தப் பதவி உங்களைத் தேடி தானாக வரும். அலுவலகமும் அந்தப் பதவியில் யார் ஒருவர் இருந்தாலும் உங்களையே அந்தப் பதவியிலிருந்து செயல்படுவதாக நினைக்கும். திடீரென அரசப் பதவியிலிருந்து விலகி, சேனாதிபதியாக `பாகுபலி'யை அறிவித்தபோதும் அதைச் சரியாக ஏற்றுக்கொண்டதுதான் பாகுபலியைத் தலைவனாகப் பார்க்கவைத்தது.

சுட்டிக்காட்டத் தயங்காதீர்கள்:

ஒரு தவறைச் செய்தது சிஇஓ-வாக இருந்தாலும்கூட அதைச் சுட்டிக்காட்ட தயங்காதீர்கள். உங்கள் முடிவு 100 சதவிகிதம் சரியானது அல்லது தவறு இல்லாதது என்று உங்களுக்குத் தோன்றினால், அதை யாராக இருந்தாலும் தெரிவிக்கத் தயங்காதீர்கள். அது உங்களுக்கு புராஜெக்ட் வழங்கிய க்ளைன்ட் தொடங்கி சிஇஓ வரை யாராக இருந்தாலும் சரி. இதைத்தான் சிவகாமியின் தவறான முடிவுக்கு, பாகுபலியின் நேரடி எதிர்ப்பாக அமையும். கொள்கைகள், வேலைகளுக்கு இருக்க வேண்டும். தனிநபர் சார்ந்து இருக்கக் கூடாது என்பதை உணர்த்துங்கள்.

bahubali

24*7 தலைவனாக இருங்கள்:

ஒரு செயலை அல்லது சரியான பாதையில் திட்டத்தை வழிநடத்த நீங்கள் தலைவனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. உங்களிடம் தலைமைப் பண்பு இருந்தாலே போதும். அதே விஷயத்தை நீங்கள் தலைவனாக இல்லாமலும் நிறைவேற்ற முடியும். பாகுபலியைக் கோட்டையை விட்டு வெளியே அனுப்பியபோதும்  மக்களுக்குத் தேவைப்படும் விஷயங்களைச் சரியாகச் செய்துவந்தார். அதேபோல் அலுவலகத்துக்கு நன்மைபயக்கும் விஷயங்களை உங்களால் செய்ய முடியும் என்றால், அதைத் தலைமைப் பதவிக்கு வந்துதான் செய்ய வேண்டும் என்றில்லை. செய்துகாட்டுங்கள் அது உங்களை அலுவலகத்தில் அமரேந்திர பாகுபலியாக்கும்.

ஸ்கோர் செய்ய நினைக்காதீர்கள்:

அலுவலகத்தில் `எனக்கு இதெல்லாம் தெரியும், இவ்வளவு வேலை செய்கிறேன்' என்று ஸ்கோர் செய்ய நினைக்காதீர்கள். சில சமயங்களில் நிர்வாகம் அதை விரும்பாது. அதேபோல் மற்றவர்களுக்கு உங்கள் திறனைக் கற்றுக்கொடுங்கள். அதிலும் `எனக்குத் தெரியும்' என்று ஸ்கோர் செய்ய நினைக்காதீர்கள். பாகுபலி தேவசேனாவின் நாட்டில் எதுவும் தெரியாதவராக இருந்ததும், குமார வர்மனுக்கு தனக்குத் தெரிந்தவற்றைக் கற்றுக்கொடுத்ததும்தான் இதற்கு உதாரணங்கள்.

அணியின் பலத்தை உத்திகளாக்குங்கள்:

உங்கள் அணி ஒருவேளை சிறிய அணியாக இருக்கலாம். அதை வைத்து மிகப்பெரிய இலக்குகளை எட்டுவது கடினம் என்று நிர்வாகமும் நினைக்கலாம். ஆனால், உங்கள் அணியின் பலம் உங்களுக்கு நன்றாகத் தெரியும் அதன் முழுத் திறனையும் (Optimum Output) பயன்படுத்தி இலக்கை நோக்கி நகருங்கள். பாகுபலி தேவசேனா நாட்டில் போர் செய்தபோதும் இதே உத்தியைத்தான் கையாண்டிருப்பார். மேலும், அணியின் வேகம் குறையும்போது தலைவன் முழு வேகத்தில் செயல்பட வேண்டும் என்பதையும் உணர்த்தியிருப்பார்.

 

அப்பறம் என்ன பாஸ்...இவ்ளோ விஷயங்களையும் பெர்ஃபெக்ட்டா பண்ற ஆளா நீங்க.... சீக்கிரமே `அமரேந்திர பாகுபலியாகிய நான்...'னு பதவியேற்கும் நாள் ரொம்ப தூரத்துல இல்லை!

  • தொடங்கியவர்

பிரியங்கா சோப்ராவின் பிரமாண்ட ஆடை

அமெ­ரிக்­காவின் நியூயோர்க் நகரில் நடை­பெற்ற விழா­வொன்றில் இந்­திய நடிகை பிரி­யங்கா சோப்ரா பிர­மாண்டமான ஆடை­யொன்றை அணிந்து வந்தார்.

2017-05-01T232354Z_2103319977_HP1ED511SZTGT_RTRMADP_3_FASHION-METGALA
நியூ­யேர்க்கின் மெட்­ரோ­பொ­லிட் டன் ஆடை வடி­மைப்புக் கலை நூத­ன­சா­லையின் வரு­டாந்த பெஷன் விழா (Met Gala) நேற்­று­முன்­தினம் நடை­பெற்­றது. இவ்­வி­ழாவில் மிக நீண்ட வாற்­ப­குதி கொண்ட ஆடையை பிரி­யங்கா சோப்ரா அணிந்­தி­ருந்தார்.  அமெ­ரிக்­காவின் பிர­பல பெஷன் டிஷைனர் ரல்வ் லொரே­னினால் வடி­வ­மைக்­கப்­பட்ட ஆடை இது.  பொலிவூட் மற்றும் ஹொலிவூட் நடி­கை­யான பிரி­யங்கா சோப்ரா (34) இந்த ஆடையை அணிந்­து­வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 

VRA-20170502-m06-MED2

(Visited 7 times, 8 visits today)

http://metronews.lk

  • தொடங்கியவர்

ஹெலன் கெல்லர் நயாகரா அருவியைப் பார்த்தது இப்படித்தான்!

 
 

ஹெலன் கெல்லர்

ஹெலன் கெல்லர் - தன்னம்பிக்கை ஒளியைப் பிரகாசமாய் பாய்ச்சிய ஒரு பெயர். வாழ்க்கை எந்தளவு தன்னைப் பின்னுக்கு இழுத்தாலும் அதைக் கண்டு துளியும் அஞ்சாமல் போராடியவர்.

ஹெலன் கெல்லரின் பெற்றோர் ஆர்த்தர் கெல்லர், கேட் ஆடம்ஸ். ஹெலன் கெல்லர் பிறந்தபோது, எல்லா குழந்தைகளையும் போல இயல்பாகவே இருந்தார். ஆனால், 19 மாதங்களில் கடுமையான விஷக் காய்ச்சலுக்கு உள்ளானார். அதன்பின் ஹெலனின் வாழ்வில் ஒட்டிக்கொண்டது சோகம். அந்தக் காய்ச்சலில் ஹெலன் கண் பார்வையைப் பறிகொடுத்ததோடு, பேசும் திறனும் கேட்கும் திறனையும் இழந்தார்.

தன் தேவைகளைக்கூட வெளிப்படுத்தவியலாத ஹெலனை அவரது அம்மா மார்போடு அணைத்துக்கொண்டிருப்பார். அம்மாவின் அன்பு மிகுந்த ஸ்பரிசத்தை மட்டுமே ஹெலனால் உணர முடிந்தது. ஆனாலும், ஒவ்வொரு பொருளையும் தொட்டுப் பார்த்து அதன் தன்மையை உணர்ந்துகொண்டார். தலையை ஆட்டி அழைக்கவும் போகவும் சொல்லத் தொடங்கினார். சைகைகளை உருவாக்கிக்கொண்டார். தனக்கு ரொட்டித் துண்டுகள் வேண்டுமெனில் கைகளில் அதைக் காட்டச் செய்தார். இந்த சைகை மொழியைக் கொண்டு நண்பர்களிடம் உரையாடினார். ஹெலனுக்கு தங்கை பிறந்தாள். நாட்கள் செல்ல செல்ல, ஹெலனிடம் முரட்டுக்குணம் அதிகமானது. கிரஹாம் பெல்லைச் சந்தித்தனர் பெற்றோர். அவரது வழிகாட்டலில் ஆசிரியர் ஒருவர் ஹெலனுக்குக் கிடைத்தார். அவர் வெறும் ஆசிரியர் மட்டுமா... இல்லை ஹெலனின் எல்லாமுமாக மாறிபோனார்.

ஹெலன் கெல்லர்

ஹெலனின் கையில் வைத்திருக்கும் பொம்மையிலிருந்தே பாடத்தைத் தொடங்கினார் ஆசிரியர் ஆன் சல்லிவன். அதன்பின் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஹெலனுடன் தன் வாழ்க்கையை இணைத்துக்கொண்டார் சல்லிவன். மெள்ள, மெள்ள கற்றலை மேற்கொண்டார் ஹெலன். தொப்பியை எடுத்து தன் தலையில் ஆசிரியர் வைத்தால், வெளியே செல்லப்போகிறோம் என்று அர்த்தம். ஆசிரியரிடம் கடுமையாக கோபப்பட்டார் ஹெலன். ஆனால், சல்லிவன் ஹெலனை நன்கு புரிந்துகொண்டதால் வருத்தப்பட வில்லை. ஏனெனில் சல்லிவனின் கதையும் ஹெலன் கதைபோல தான். அவருக்கு எட்டு வயதாக இருக்கும்போது பார்வைப் பறிபோனது. தான் உயிராக நேசித்த தம்பியையும் இழந்தார். பின், கடும்முயற்சிக்குப் பிறகு கல்விக் கற்றார். அந்த அனுபவத்தின் வழியாக ஹெலனை நன்கு புரிந்துகொண்டார். தண்ணீர் கொட்டும் நீர் குழாயில் ஹெலனின் கையைக் காட்டி, w a t e r எனக் கற்பித்தார்.

ஹெலனுக்கு 13 வயதாக இருக்கும்போது நயாகரா அருவியைப் பார்க்க, ஆசிரியருடன் சென்றார். பார்க்கும், கேட்கும், பேசும் திறனற்ற ஹெலனால் நயாகரா அருவியினை நேராக பார்த்த நிறைவை அடையச் செய்தது ஆசிரியரால்தான். ஹெலன் உடலில் அதிர்வினால் அருவியைப் பற்றிய வர்ணனையைச் சொன்னார் ஆசிரியர். ஹெலனின் மனக்கண்களில் மாபெரும் அருவி தன் குளிர்ந்த நீரலையை வீசச் செய்து, பெரும் சத்தத்தோடு வீழ்ந்துகொண்டிருந்தது.

ஹெலன் ஆசிரியரின் உதவியோடு பிரெய்லி முறையில் பல மொழிகளைக் கற்றுக்கொண்டார். நிறைய நூல்களை எழுதினார். தனது சுயசரிதையாக 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்' எனும் நூலை எழுதினார். அதில் தனது ஆசிரியர் சல்லிவனை வானளாவ புகழ்ந்திருந்தார். தனது 24 வது வயதில் இளங்கலை பட்டத்தைப் பெற்றார். பார்க்க, கேட்க, பேச திறனற்ற மாற்றுத் திறனாளி ஒருவர் பட்டம் பெற்றது அதுவே முதன்முறை. ஒரு கட்டத்தில் ஆசிரியரின் உடல்நிலை மோசமாக, வேறொருவர் ஹெலனின் உதவியாளராக நியமிக்கப்பட்டார். 1936 ஆம் ஆண்டு ஆசிரியர் சல்லிவன் தன் இறுதி மூச்சை ஹெலனின் கைகளைப் பற்றியப்படியே முடித்துக்கொண்டார்.

ஹெலன் அரசியலிலும் ஈடுபட்டார். மாற்றுத்திறனாளிகான உரிமைகளுக்காக தனது மகத்தான பங்களிப்பை நிகழ்த்தினார். தன் நண்பருடன் இணைந்து ஹெலன் கெல்லர் சர்வதேச அமைப்பு' (HKI) எனும் அமைப்பைத் தொடங்கினார். அதில் பலவித ஆய்வுகளை மேற்கொண்டனர். இப்படி, ஹெலனின் எண்ணற்ற சாதனைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.

 

முயற்சியை இறுகப்பற்றிக்கொண்டால் எதுவுமே நம்மால் சாதிக்க முடியும் என்பதற்கு ஹெலன் கெல்லர் மிகச் சிறந்த உதாரணம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

மே – 03

_38611905_srilanka2_238

1481 : ஐரோப்­பாவின் ரொட்ஸ் தீவில் ஏற்­பட்ட பூகம்பம் கார­ண­மாக சுமார் 30,000 பேர் உயி­ரி­ழந்­தனர்.


1788 : முதல் மாலை நேர நாளி­த­ழான ‘த ஸ்டார்’ லண்­ட­னி­லி­ருந்து வெளி­வர ஆரம்­பித்­தது.


1802 : அமெ­ரிக்­காவின் வாஷிங்டன் டி.சி. நகரம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.


1837 : ஏதென்ஸ் பல்­க­லைக்­க­ழகம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.


1860 : சுவீடன் மன்­ன­ராக நான்காம் சார்ள்ஸ் முடி­சூ­டப்­பட்டார்.


1913 : இந்­தி­யாவின் முதல் முழு நீள திரைப்­ப­ட­மான ராஜா ஹரிச்­சந்­திரா வெளி­யா­கி­யது.


1921 : அயர்­லாந்து தீவு வட அயர்­லாந்து, தென் அயர்­லாந்து என இரண்­டாக பிரிக்­கப்­பட்­டது. தற்­போது தென் அயர்­லாந்து சுதந்­திர நாடா­கவும் வட அயர்­லாந்து பிரிட்­டனின் ஒரு பிராந்­தி­ய­மா­கவும் உள்­ளன.


1939 : நேதாஜி சுபாஸ் சந்­தி­ர­போ­ஸினால் அகில  இந்­தியா போவார்ட் பிளொக் கட்சி ஸ்தாபிக்­கப்­பட்­டது.


1942 : விமா­னந்­தாங்கி கப்­ப­லி­லி­ருந்து முதல் விமானப் போர் அமெ­ரிக்­கா­வுக்கும் ஜப்­பா­னுக்கும் இடையில் நடை­பெற்­றது.

 

margaret-thatcher

1945 : லட்­சுமி காந்தன் கொலை வழக்கில், தமிழ் திரைப்­பட உலகில் அன்­றைய முடி­சூடா மன்­ன­னாகத் திகழ்ந்த எம்.கே.தியா­க­ராஜ பாக­வ­த­ருக்கும் பிர­பல நகைச்­சுவை நடிகர் என்.எஸ். கிருஷ்­ண­னுக்கும் ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.


1947 : ஜப்­பானில் 2 ஆம் உலக யுத்­தத்­துக்குப் பின்­ன­ரான அர­சி­ய­ல­மைப்பு அமு­லுக்கு வந்­தது.


1969 : சென்னை மாநி­லத்­துக்கு தமிழ்­நாடு என பெய­ரி­டப்­பட்­டது.


1973 : அமெ­ரிக்­காவின் சிக்காக்கோ நகரில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட 108 மாடி­க­கைளக் கொண்ட சீயர்ஸ் கோபுரம் உலகின் அப்­போ­தைய மிக உய­ர­மான கட்­டிடம் என்ற பெரு­மையை பெற்­றது.


1978 : முத­லா­வது ஸ்பாம் மின்­னஞ்சல் தொகுதி, அமெ­ரிக்­காவின் டிஜிட்டல் ஈக்­கியூப்மன்ட் கோர்ப்­ப­ரேஷன் நிறு­வ­னத்தின் சந்­தைப்­ப­டுத்தல் பிர­தி­நி­தி­யொ­ரு­வரால் பெரும் எண்­ணிக்­கை­யா­னோ­ருக்கு அனுப்­பப்­பட்­டது.


1978 : பிரிட்­டனின் முத­லா­வது பெண் பிர­த­ம­ராக மார்­கரெட் தட்சர் தெரி­வானார்.


1986 : பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் ‘எயார் லங்கா’ நிறு­வ­னத்தின் விமா­ன­மொன்றில் குண்டு வெடித்­ததால் 21 பேர் பலி­யா­ன­துடன்  41 பேர் காய­ம­டைந்­தனர்.


1999: அமெ­ரிக்­காவின் ஒக்­ல­ஹாமா மாநி­லத்தில் வீசிய சூறா­வ­ளி­யினால் 45 பேர் பலி­யா­ன­துடன் 665 பேர் காய­ ம­டைந்­தனர்.

 

Sri-Lanka-Parliament-Fight--Sandith-samarasinghe

2001 : 1947 ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யகம் ஸ்தாபிக்­கப்­பட்ட பின்னர் அவ்­வ­மைப்பில் அமெ­ரிக்கா முதல் தட­வை­யாக தனது ஆச­னத்தை இழந்­தது.


2002 : இந்­தி­யாவின் ராஜஸ்தான் மாநி­லத்தில் மிக் 21 ரக விமா­ன­மொன்று வீழ்ந்­ததால் 8 பேர் உயி­ரி­ழந்­தனர். 


2016 : முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான இராணுவப் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டமை தொடர்பாக நாடாளுமன்றத்தில் எம்.பிகளிடையே மோதல் ஏற்பட்டது. 

 

இதன்போது ஐ.தே.க. எம்.பி. சந்தீத் சமரசிங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

மே 3 : அழகியலையும் அறிவியலையும் குழைத்து தந்த எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம் இன்று..

சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்…

* ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3.

* நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிஇருக்கிறார் சுஜாதா. புத்தகங்கள் எல்லாமே பல பதிப்புகள் கண்டவை. இன்னமும் விற்பனைப் புரட்சி செய்பவை. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு ‘நைலான் ரதங்கள்’!

* முதல் சிறுகதை 1958-ல் ‘சிவாஜி’ பத்திரிகையில் வெளிவந்தது. அந்தப் பிரதி அவர் கைவசம் இல்லை. ‘கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில் பாதியும், எனது மகளையும் திருமணம் செய்துவைக்கிறேன்’ என நகைச்சுவையாக எழுதினார். அடுத்த சிறுகதை ‘இடது ஓரத்தில்’ 1967-ல் வெளிவந்தது. முதல் நாவல் நைலான் கயிறு!

* பண்டிதர்களின் சுமையை நீக்கி புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்களோடு உரை எழுதினார் சுஜாதா. பெருத்த வரவேற்பைப் பெற்றன இந்த உரைகள்!

* இரண்டு நாய்க் குட்டிகளைச் செல்லமாக வளர்த் தார். பெயர் மிமி, கிவி. அமெரிக்கா செல்லும்போது அந்த நாய்க் குட்டிகளை பாலுமகேந்திராவின் வீட்டில் விட்டுச் சென்ற அனுபவம்கூட உண்டு. வயதாகி, அந்த நாய்கள் இறந்த பிறகு மீண்டும் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்த்துவிட்டார்!

* முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது!

* 20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்!

* சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் ‘எந்திரன்’. கமலுக்காக எழுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்!

* ஒரே சமயத்தில் தமிழகத்தில் ஏழு பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டு இருந்தார் சுஜாதா. எப்படிச் சாத்தியம் எனக் கேட்டதற்கு, ஒரு வாரத்துக்கு 28 பக்கங்கள் எழுத முடியாதா எனத் திருப்பிக் கேட்டு அதைச் சுலபமாக்கிவிடுவார்!

* தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுஜாதாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற ‘வாஸ்விக்’ விருது பெற்றார். பின்னாளில் அதன் மீது எவ்வளவோ குறைகள் எழுந்தாலும், அவை எதுவும் நிரூபணமாகவில்லை என்பதுதான் உண்மை!

* சுஜாதாவின் கம்ப்யூட்டர், லேப்டாப் இரண்டையும் திறந்தால் உடனே தெரிவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் கோபுர தரிசனம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், அதை மாற்றவே இல்லை!

* சுஜாதாவின் கணேஷ், வஸந்த் கதாபாத்திரங் கள் தமிழகக் குடும்பங்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ், வஸந்த் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த காலங்கள் உண்டு. கணேஷ், வஸந்த் கதையில் வஸந்த் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அவர் என்ன பிளட் குரூப் என விசாரித்து சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்தன!

* கணையாழி இலக்கிய இதழில் 35 வருடங்கள் கடைசிப் பக்கம் என்று பத்தியைத் தொடர்ந்து எழுதினார். ஓர் எழுத்தாளர் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பத்தி எழுதியது சாதனை!

* ஒரு காலத்தில் விடாது புகைப்பார். பிறகு, ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டதும் திடீரென புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். அதை முன்வைத்து விகடனில் எழுதிய கட்டுரை பிரசித்தி பெற்றது!

* உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்துகாட்ட சிரத்தையோடுமுயற்சி செய்தவர்!

* புனைகதை எழுத்தாளராக இருந்தும் நூற்றுக்கணக்கான புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். சுஜாதாவின் அறிமுகக் கண்பட்டவர்கள் இன்று உச்சத்தில் இருப்பது ஆச்சர்யமானது!

* ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா!

* 1993-ல் மைய அரசின் அறிவியல் தொழில்நுட்ப விருதான என்.சி.டி.சி. விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையைப் பரப்பியதற்காக சுஜாதாவுக்கு அளிக்கப்பட்டது!

* சுஜாதா எழுதின நாடகங்கள் பலவற்றை பூர்ணம் விஸ்வநாதன்தான் மேடையேற்றினார். அவர் எழுதிய நாடகங்களின் தொகுப்பு 900 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. ‘கடவுள் வந்திருந்தார்’ நாடகம் பரபரப்பு பெற்றது!

* இறப்பதற்கு நாலு மாதங்களுக்கு முன்பே மூத்த மகனைக் கூப்பிட்டு, ‘அம்மாவைப் பார்த்துக்கோ’ என்று சொன்னார். அதன் அர்த்தம் யாரும் புரிந்துகொள்ளாத தருணம் அது!

* அப்பா இறக்கிற வரை மீசை வைத்திருந்தார் சுஜாதா. அவர் இறந்தபோது, மீசையை எடுத்தவர் மீண்டும் வைத்துக்கொள்ளவில்லை!

* பெண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் சுஜாதாவுக்கு இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால், அப்படி எந்த வருத்தமும் அவருக்கு இருந்தது இல்லை என மனைவி சுஜாதா குறிப்பிடுகிறார்!

 
Bild könnte enthalten: 1 Person, Text und Nahaufnahme

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

 

 
  • 1 கப் டீ தயாரிக்க 27 லிட்டர் தண்ணீர் தேவை என்பது தெரியுமா? #VikatanPhotoCards
  • தொடங்கியவர்

விரைவில் இந்த நாடுகளில் கார்களே ஓடாது! #CarBan

 

ஹார்ன் அடித்துக் கடுப்பேற்றும் கார்கள், ‘வ்வ்ர்ர்ரூம்’ எனக் கக்கத்தின் பக்கத்தில் கடந்து செல்லும் பைக்குகள், கரி அள்ளித் துப்பும் பஸ்/லாரிகள் எதுவுமே இல்லாத உலகத்தை நினைத்துப்பாருங்கள். சற்று கடினமாகவே இருந்தாலும், ‘திரும்பவும் அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி’ என்பதுபோல், சில நாடுகளில் அந்தக் காலத்துக்கே திரும்ப இருக்கிறார்கள். ஆம்! கார், பைக்குகளைத் தடைசெய்ய இருக்கின்றன சில நாடுகள். இதற்கு ஒரே காரணம், சுற்றுச்சூழல் மாசு. சில நகரங்களில் இப்போதே ‘கார்களுடன் யாரும் அன்னம், தண்ணி புழங்கக் கூடாது’ என்று அந்தந்த ஊர் நாட்டாமைகள் அறிவித்தே விட்டார்கள். கிட்டத்தட்ட 2020-ம் ஆண்டுக்குள் கார்களைத் தடைசெய்ய இருக்கும் நாடுகளின் பட்டியல்...

oslo norway

ஓஸ்லோ, நார்வே

இப்போதைக்கு, கிட்டத்தட்ட உலகின் சுத்தமான நாடு நார்வேதான். இப்போதே அங்கு முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் கார்கள் மட்டும்தான் ஓடுகின்றன. இதனால், நார்வேயில் புகை, தூசு போன்ற வஸ்துகளுக்கு இடமே இல்லை. நம் ஊரில் பெட்ரோல் பங்க்குகள் இருப்பதுபோல், அங்கு எலெக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருக்கின்றன. நீங்கள் விரும்பும் இடத்தில் இலவசமாக சார்ஜ் போட்டுவிட்டு, ஜூட் விடலாம். நார்வேயின் தலைநகரான ஓஸ்லோவில் இருந்துதான், கார்களின் தடையை முதலில் தொடங்க இருக்கிறது நார்வே அரசாங்கம். 2019-ம் ஆண்டுக்குள் நார்வேயில் இனி எந்த கார்களையும் பார்க்க முடியாது. அநேகமாக, குதிரை வண்டி, மாட்டு வண்டி, சைக்கிள் மற்றும் நடைப்பயணம்தான்.

பாரீஸ்

இங்கு இப்போதிருந்தே அதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியாவில் சில ஊர்களில் ‘ODD / EVEN சிஸ்டம்’ மாதிரி, லண்டனில் ‘Car Free Sunday’ எனும் சிஸ்டம் வந்துவிட்டது. அதாவது, ஞாயிற்றுக்கிழமைகளில் காரை எடுத்தால் அதிகப்படியான அபராதம். ‘அப்போ ஞாயிற்றுக்கிழமை எங்க  சொந்தக்காரங்களை எப்படிப் பார்க்கிறது?’ என்பவர்கள், வேண்டுமானால் பழைய வின்டேஜ் கார்களை வாங்கிக்கொள்ளலாம். அதேமாதிரி, வின்டேஜ் கார்களுக்கு வார நாள்களில் தடா!

london vintage

லண்டன்

லண்டனில் முதலில் டீசல் கார்களுக்கு ஆப்பு விழக் காத்திருக்கிறது. லண்டன் மேயர் சாதிக் கான் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு, பலரின் எதிர்ப்புக்கு உள்ளானார். லண்டனில் அதிகமாகப் புகை கக்கும் வாகனங்களுக்கு 10 யூரோக்கள் வரை அபராதம் விதித்து அதிரடி கிளப்பினார். அதற்குப் பிறகு மர அடுப்புகளுக்கும் தடா போட்டார். லண்டனில் ‘ஸ்க்ராப்பேஜ் ஸ்கீம்’ 2009-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, 12 மாதங்களுக்கு மேல் பயன்படுத்திய வாகனத்தை எக்ஸேஞ்ஜில்  புது கார் வாங்கினால் கணிசமான தள்ளுபடி உண்டு. லண்டனில் 2020-ம் ஆண்டுக்குள் டீசல் கார்களை எங்கும் பார்க்க முடியாது.

மேட்ரிட், ஸ்பெயின்

ஸ்பெயினின் தலைநகரமான மேட்ரிட் நகரில், முதலில் இந்தத் தடை அமலுக்கு வரும். ‘ஒவ்வொரு வியாழக்கிழமை காலை 6.30 முதல் இரவு 9 மணி வரை டீசல் கார்கள் ஓடக் கூடாது' என்று டிசம்பரில் தடை விதித்தார்கள். அதற்குப் பிறகு `ஒற்றை/இரட்டை இலக்கம்கொண்ட கார்கள், அந்தந்த இலக்க தேதிகளில்தான் ஓட வேண்டும்' என்று அறிவித்தனர். மீறினால், 50 டாலர்கள் அபராதம். 2020-ம் ஆண்டுக்குள் முழுவதுமாக கார்களே ஓடாது. ஆனால், ஊனமுற்றோருக்கான வாகனங்கள், பஸ்கள், டாக்ஸிகள், எமர்ஜென்சி வாகனங்களுக்கு விதிவிலக்கு உண்டு.

ஹேம்பர்க், ஜெர்மனி

ஜெர்மனியில் சைக்கிள் மற்றும் நடைப்பயணம் செல்பவர்களைத் தெய்வமாகப் பார்க்கிறார்கள். அடுத்த தலைமுறையில் இங்கு கார்களின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்திருக்கும். வெறும் பாதசாரிகளும் பைக்கர்களும் மட்டும்தான் இருப்பார்கள். இந்தத் திட்டத்துக்கு ‘கிரீன் நெட்வொர்க்’ என்று பெயர். 2035-ம் ஆண்டுக்குள் ஹேம்பர்க் நகரத்துக்குள் பார்க்குகள், விளையாட்டு மைதானங்கள், சுடுகாடு எல்லாமே கிரீன் நெட்வொர்க்குக்கு மாறியிருக்கும்.

 

hamburg city germany

கோப்பன்ஹேகன், டேனிஷ்

ஐரோப்பாவில் குறைந்த எண்ணிக்கையில் கார் ஓனர்கள் இருக்கும் நகரம் இதுதான். டேனிஷின் தலைநகரான இதில், பைக்/கார் லேன்களைவிட சைக்கிள் லேன்கள்தான் அதிகம். கிட்டத்தட்ட 350 கி.மீ-க்கு கோப்பன்ஹேகனில் சைக்கிள் லேன் இருக்கிறதாம். இதுபோக, சைக்கிள்களுக்கான ‘சூப்பர் ஹைவே’ எனும் பாலம் கட்டுவதற்கும் திட்டம் தீட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. 2025-க்குள் ‘கார்பன் ஃப்ரீ’ நகரமாக வேண்டும் என்பதுதான் கோப்பன்ஹேகன் நகரத்தின் லட்சியம்.

மெக்ஸிகோ, வட அமெரிக்கா

வார நாள்களில் இரண்டு தினங்கள், மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகள் மட்டும்தான் கார்கள் சாலையில் ஓட வேண்டும். இது சுழற்சி முறையில் நடைபெறும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் மெக்ஸிகோவில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பெரிய நகரமான மெக்ஸிகோவில் மொத்தம் 20 லட்சத்துக்கும் மேல் கார்கள் ஓடுகின்றன. விரைவில் ‘Smoke Free’ நகரமாக மெக்ஸிகோ மாறும் என்று அறிவித்திருக்கிறது மெக்ஸிகோ அரசு.

ஏதென்ஸ், கிரீஸ்

கிரீஸ் தலைநகரான ஏதென்ஸிலும் நம்பர் பிளேட் சிஸ்டம்தான். ‘‘சுத்தமான காற்றுதான் சுத்தமான நகரத்துக்கு ஆதாரம். அதுதான் இந்தத் திட்டம். 2025-ம் ஆண்டுக்குள் ஏதென்ஸ், உலகின் சுத்தமான நகரமாக மாறும்’’ என்று இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில்தான் சபதம் எடுத்திருக்கிறார் ஏதென்ஸ் மேயர், கியார்கோஸ் காமினிஸ். நகரத்தின் முக்கியப் பகுதிகளில் இப்போதே கார்கள் ஓடக் கூடாதாம்.

புரூஸெல்ஸ், பெல்ஜியம்

சிட்டி ஸ்கொயர், ஸ்டாக் எக்சேஞ்ஜ், ரியூநியூவ் என்ற மிகப்பெரிய ஷாப்பிங் மால் போன்ற புரூஸெல்ஸில் பல முக்கியத் தெருக்கள் இப்போதே ‘Car Free Zone’ ஆகத்தான் காட்சியளிக்கின்றன. ஆம்! இங்கு முழுக்க முழுக்க நடைபாதைவாசிகளுக்குத்தான் அனுமதி. கோப்பன்ஹேகனுக்குப் பிறகு இரண்டாவது ‘கார் ஃப்ரீ ஜோன்’ புரூஸெல்ஸ்தான். ‘மொபிலிட்டி வீக்’ என்பதும் புரூஸெல்ஸில் பிரசித்தம். அதாவது, வாரத்தில் ஒரு நாளாவது பப்ளிக் டிரான்ஸ்போர்ட்டைப் பயன்படுத்த வேண்டும். 2018-ம் ஆண்டுக்குள் டீசல் கார்களுக்கு இங்கு வேலையே இருக்காது.

Bulgim

நியூயார்க், அமெரிக்கா

நாளை, அடுத்த வாரம், அடுத்த மாதம், அடுத்த வருடம் என்று எப்போது வேண்டுமானாலும் டீசல் கார்களுக்குத் தடை விதிக்கத் தயாராக இருக்கிறது அமெரிக்காவின் நியூயார்க் நகரம். டைம்ஸ் ஸ்கொயர், ஹெரால்டு ஸ்கொயர், மேடிஸன் ஸ்கொயர் பார்க் என்று பிரபலமான ஏரியாக்களில் எல்லாம் கார்களே தென்படவில்லை. ஆகஸ்ட் 2016-ம் ஆண்டில் சென்ட்ரல் பார்க்கிலிருந்து புரூக்ளின் பிரிட்ஜ் வரை லட்சக்கணக்கான மக்கள் நடைப்பயணம் செய்து கார்களுக்கான தடையை அங்கீகரித்திருக்கிறார்கள். பெடஸ்ட்ரியன்களை உற்சாகப்படுத்த இன்னும் நிறைய பெடஸ்ட்ரியன் பிளாசாக்கள் நியூயார்க்கில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.

வான்கூவர், கனடா

!

‘கார் தடையை அப்புறம் பார்ப்போம். முதலில் எல்லோரும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள்’ என்று மென்மையாக அறிவித்திருக்கிறது வான்கூவர் நகராட்சி. ஒவ்வொரு ஜூன் மாதத்தையும் ‘கார் ஃப்ரீ மாதமாகக்’ கொண்டாடுகிறார்கள் வான்கூவர் மக்கள். ‘ஜூன் மாதம் மட்டும் யாருமே கார்களுடன் அன்னம், தண்ணி புழங்கக் கூடாது’ என்பது வான்கூவர் நாட்டாமையின் தீர்ப்பு.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பெண்களுக்குப் பிடிக்காத  மோசமான காதலர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இருக்கிறதா? #Love

 
 

‘நீ இல்லன்னா நான் இல்ல...ஐ லவ் யூ...என்னை விட்டுட்டுப் போய்டமாட்டியே...இப்படி இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் ரிப்பீட் காதல் வசனங்களைப் பேசிக்கொண்டே இருப்பது... அடுத்து லெவலுக்கு அப்டேட் ஆகணும்ல ப்ரோ...?  அதனாலதான் 1500 காதலிகளிடம் தன்னுடைய காதலர்கள் எப்படி இருக்கிறார்கள்...அவங்களுக்குள்ள நடக்குற ‘காதல், ஊடல், காமம் எல்லாம் திருப்திகரமா இருக்கா...? அவங்க எந்த அளவுக்கு சந்தோஷமா இருக்காங்க...?’ என்று  சர்வே நடத்தியிருக்கிறது ஒரு ஆய்வு நிறுவனம். காதலிகள் கூறிய பதில்களில் இருந்து எந்த நாட்டு காதலர்கள் மிகச்சிறந்தவர்கள்  என்று ஒரு பட்டியலையே தயாரித்து உள்ளது. (நம்ம ஊரு பசங்க கிட்ட  இத சொல்லி பாருங்க... காதலுக்கு ஏதுய்யா ஊரு, பேரு, நாடு... அப்டீன்னு பெரிய பாடமே எடுப்பாங்க. )

காதல்

சரி, இந்த சர்வே படி உலகத்தின் மிகச்சிறந்த காதலர்களை கொண்ட நாடு ஸ்பெயின் என்று அங்கீகரித்திருக்கிறார்கள்....ஸ்பெயின் பசங்களுக்கு ஏன் அவ்வளோ மவுசுன்னு கேட்டா...அவர்களின் அழகுக்கும், ஆண்மைக்கும் பெண்கள் பார்த்த மாத்திரத்திலேயே மயங்கிவிடுவார்களாம். அதனால ஸ்பெயின் பசங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டா குழந்தை அழகாக  பிறக்கும் என்று கூறுகிறார்கள் அந்நாட்டு காதல் கண்மணிகள். மேலும் இவர்கள் காமத்தில் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் செயல்படும் ஆண்கள். 'எந்த இடத்தில் சுகம் மிக அதிகம் கண்டுபிடித்தேன்'  என்று ஜல்சா வித்தையெல்லாம் காட்டுறாங்கன்னா பாத்துக்கோங்க...#ஸ்பெயினுக்கு ஒரு டிக்கெட் பார்சல்...

'பெஸ்ட்' என்ற ஒன்று இருந்தால், 'ஒர்ஸ்ட்' என்ற ஒன்று இருக்கத்தானே செய்யும். அதன்படி பெண்களுக்கு பிடிக்காத  மிக மோசமான காதலர்களை கொண்ட நாடுகளையும் பட்டியலிட்டிருக்கிறார்கள். கூடவே அதற்கான காரணங்களையும் சொல்லியிருக்கிறார்கள். மோசமான பட்டியலில் முதலில் இருக்கும் நாடு,

1. ஜெர்மனி 

ஜெர்மனியில் குளிர் எப்போதும் வாட்டி எடுக்கும் அளவுக்கு மிக அதிகம். அதனால் குளிக்கும் வாய்ப்புகளும் மிக குறைவு. காதலிகள் அனைவரும் தனது ஜெர்மன் காதலன் அருகே வந்தாலே துர்நாற்றம் அதிகமாக இருக்கிறது. இதனால் இன்டிமசி குறைகிறது என்று கூறியிருக்கிறார்கள். சிக்மண்ட் பிராயிடே, 'காம உணர்ச்சிகளை தூண்டுவது நல்ல நறுமணம் தான். அது சென்டாக இருக்கலாம்...பெர்ஃப்யூமாக இருக்கலாம்.' என்று கூறியிருக்கிறார். அதனால ஜெர்மன் பசங்களா நல்ல சென்ட் அடிக்க கத்துக்கோங்க...

2. இங்கிலாந்து 

இங்கிலாந்து காதலர்களின் எதிரி சோம்பல் தான். படுக்கையில் ஒன்று கூடி எழுவது ஏழேழு ஜென்மம் எடுத்த மாதிரி என்று ஏக்கத்தோடு சொல்கிறார்கள் இங்கிலாந்து காதலிகள். #எல்லா கோட்டையும் அழி மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிப்போம் அப்டீன்னு விளையாடிருந்தா இந்நேரம் இந்த பிரச்னை வந்துருக்குமா? 

3. ஸ்வீடன் 

ஸ்வீடன் காதலர்கள் இங்கிலாந்து காதலர்களுக்கு நேரெதிர். எல்லாத்துலயும் எடுத்தேன், கவிழ்த்தேன் பேர்வழிகள். இவர்களுக்கு காதலில் இருந்து காமம் வரை அதிரடி வேகம் தான். பிரேக்-அப் கூட இப்படித்தான் இவர்களுக்கு என்று வருத்தம் தெரிவித்துள்ளார்கள் இவர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத இங்கிலாந்து காதலிகள். 

4.  ஹாலந்து 

ஹாலந்து காதலர்கள் தங்களது காதலிகள் மீது அளவுக்கதிகமான அதிகாரத்தை செலுத்துகிறார்களாம். இது காதலிகளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எங்களுக்கு ஒரு ஈக்குவல் ரிலேஷன்ஷிப் தான் வேணும் என்று கதறுகிறார்கள் காற்று வெளியிடை  நாயகிகள். #அதிகாரத்தை உங்கள் டிக்ஷ்னரியில் இருந்து தூக்கிவிடுங்கள் உங்கள் காதல் கண்மணிகளுக்காக..ப்ளீஸ்..

அமெரிக்கா

5. அமெரிக்கா 

அமெரிக்கா காதலர்கள் பலான படங்களை பார்த்துவிட்டு அதே பாணியை காதலிகளிடம் காண்பிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படியான முரட்டுத்தனத்தை தாங்க முடியாத காதலிகள் தனது காதலர்களை மோசமானவர்கள் என்றும்  கூறுகிறார்கள். 

 

6. கிரீஸ் 

கிரீஸ் காதலர்களுக்கு குரங்கு கையில் பூமாலையை கொடுத்த கதைதான் .இவர்களிடம் காதலிகள் மாட்டிக்கொண்டு படும்பாடு... பெரும்பாடு. எப்போதும் அன்புத்தொல்லைகளை கொடுத்து அலைக்கழித்து விடுவார்கள். #எப்படியோ நல்லா இருந்தா சரித்தான். 

 

துருக்கி7. வேல்ஸ் 

வேல்ஸ் நாட்டு காதலர்கள் சுயநலவாதிகள். இவர்களின் சுயநலம் காதலிகளுக்கு  சுத்தமாக பிடிக்கவில்லை. இவர்கள் இப்படி இருந்தால் எப்படி இவர்களை நம்பி குழந்தைகளை பெற்றெடுத்து வளர்ப்பது என்று குழப்பத்தில் இருக்கிறார்கள். #என்னதான் தெய்வீக காதலா இருந்தாலும் எத்தனை நாளைக்கு தான் இவங்க ரெண்டு பேரு முகத்தையே ஒருத்தருக்கு ஒருத்தர் மாத்தி மாத்தி பாத்துக்கிட்டே இருக்குறது. மூனாவதா பாக்க ஒரு குழந்தை முகம் வேணும்ல..

 

8. ஸ்காட்லாந்து 

ஸ்காட்லாந்து காதலர்கள் பெரிய லௌட் ஸ்பீக்கரை முழுங்கியது போல் எப்போதும் கத்தி பேசும் ரகம். இவர்களுக்கு  அந்தரங்கள் பேசப்படும் ஹஸ்கி வாய்ஸ் மிஸ்ஸிங். கத்தி பேசும் இவர்களை உலகம் நாகரீகமற்றவர்களாகத்  தான் பார்க்கிறது.  

9.  துருக்கி 

துருக்கி மிக வெப்பமான நாடு என்பதால் வியர்வை அதிகம். இந்த அதிகப்படியான வியர்வை நாற்றம் காதலிகளை தள்ளி வைக்கிறது. #வியர்வை சிந்தி உழைக்கிறார்கள் போல. அடிக்கடி குளு குளு தேனிலவுக்கு கூட்டிட்டு போய்  வந்தா இந்த பிரச்னையே வராது. . 

10. ரஷ்யா 

ரஷ்ய காதலர்கள் உடம்பில் இருக்கும் அடர்த்தியான ரோமங்கள் காதலிகளுக்கு பிடிக்கவில்லை. இப்படிப்பட்ட ஆண்களை சாதாரணமாக பெண்கள் விரும்புவதும்  இல்லை.

சரி, அப்படி என்றால் இந்திய காதலர்களை என்ன சொல்வது...? என்ற கேள்விக்கு இந்திய ஆண்களை நல்லவர்கள் என்று கொண்டாடவும் முடியாது, மோசமானவர்கள் என்று முத்திரை குத்தவும் முடியாது. இவர்கள் இரண்டிற்கும் இடைப்பட்டவர்கள். அதனால் தான் மோசமான நாடுகளிலும் இந்தியா இல்லை. சிறந்த நாடுகளிலும் இல்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது...? சரியான இடத்தில் சரியான உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தும் காதல் மன்னர்கள் இந்தியர்கள். #ரசனைகாரங்கய்யா நம்ம ஊர்காரங்க.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
 

இன்பாக்ஸ்

 

p37a.jpg

லகிலேயே அதிகம் சம்பாதிக்கும் தமிழர்களில் உச்சத்தில் இருக்கிறார் சுந்தர் பிச்சை. கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையின் கடந்த ஆண்டு வருமானம்  மொத்தம் 1260 கோடிக்கும் மேல்...  ஒரு நாளுக்கு 3.52 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார் சுந்தர். அம்பூட்டாப்பு


p37b.jpg

மூக வலைதளங்களில் அதிகம் தலைகாட்டாத, பாலிவுட் நடிகை கேத்ரினா கைஃப், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். சில  மணிநேரங்களிலேயே, இவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டிவிட்டதாம்! வெல்கம் கேத்ரினா!


டெல்லியில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பாரதிய ஜனதா கட்சியிடம் படுதோல்வியை சந்திக்க, ``எல்லாம் வாக்குப்பெட்டிகளில் நடந்த குளறுபடி'' என்று முதல்நாள் பேட்டி கொடுத்தார் அர்விந்த் கெஜ்ரிவால். அடுத்தநாள் ஆம் ஆத்மி சார்பில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களிடம், ``கட்சித் தாவிவிடாதீர்கள். உங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு துரோகம் இழைத்துவிடாதீர்கள்'' என்றவர், மூன்றாவது நாளில் ``நாங்கள் சில தவறுகள் செய்துவிட்டோம். அந்தத் தவறுகளை விரைவில் திருத்திக்கொள்கிறோம்'' என்று பாவமாகப் பேட்டி கொடுத்துக்கொண்டே இருக்கிறார். தினம் ஒரு புலம்பல்


p37c.jpg

திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் `கோவிந்தா ஆப்’ என்கிற ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த ஆப்பின் உதவியோடு, திருப்பதியில் சிறப்பு தரிசனம் செய்வதற்கான முன்பதிவை இருந்த இடத்தில் இருந்தே புக் செய்துகொள்ளலாம். அதுமட்டுமல்ல... வெங்கடாஜலபதியின் உண்டியலில் காணிக்கை செலுத்தலாம்; நன்கொடை வழங்கலாம்; தங்கும் இடத்துக்கு ரிசர்வ் செய்துகொள்ளலாம். ஆப் வெளியான அடுத்த நொடியிலேயே ஆயிரக்கணக்கில் டவுன்லோட் ஆகி ஹிட் அடித்திருக்கிறது இந்த செயலி. ஆண்ட்ராய்டு தரிசனம்!


p37d.jpg

ஹீரோயின்கள்  ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கும் சீஸன் இது. கடந்தவாரம் கத்திச்சண்டையில் ஸ்ருதி வாள் சுழற்ற, இந்தவாரம் சிலம்பத்தில் சிக்ஸர் அடித்திருக்கிறார் சமந்தா. சிவகார்த்திகேயனுடன் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தில் சிலம்பம் சுழற்றும் பெண்ணாக நடிப்பதால் 10 மாதங்களாக சிலம்ப சுழற்றலில் இறங்கியிருக்கிறார் சமந்தா. கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன்ன்ன்...


p37e.jpg

`மாப்பிள்ளை' சீரியலில் எல்லோரையும் மிரட்டிக்கொண்டிருக்கும் ரம்யா, இப்போது செம சந்தோஷத்தில் இருக்கிறார். மீடியாவுக்கு மாடலிங் புகைப்படக்காரராக என்ட்ரியானவர் இன்று சீரியல் ஹீரோயின்கள் பட்டியலில் மோஸ்ட் வான்டட். இப்போது இயக்குநர் பாலாவின் நாச்சியார் படத்திலும் நடிக்கிறார். விசாரித்தால் ``நிஜம்தான் பாஸ், ஆனா படத்துல நான் என்ன கேரக்டர்னு இப்ப சொல்ல மாட்டேன். அது படம் வர்ற வரைக்கும் சஸ்பென்ஸ்'' என்கிறார்.  டபுள்ப்ரமோஷன்

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் சவுதியின் "கருப்பழகி"
இவரது அழகுக்குறிப்புகளுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.

  • தொடங்கியவர்

பெண்களைப் பெரிதும் கவர்ந்து வரும் பாஹுபலி சேலைகள்!

கோடிக்கணக்கான பாஹுபலி ரசிகைகளுள் ஒருவரான தெலுங்கு பெண் எழுத்தாளர் ரஜினி சகுந்தலா, பாஹுபலி இரண்டாம் பாகத்தை முன்னிட்டு விசேடமாக சேலையொன்றை வடிவமைத்து அணிந்துகொண்டமை சமூக வலைதளங்களில் பிரசித்தமாகி வருகிறது.

3_V_Bahubali_Sarees.jpg

பாஹுபலி இரண்டாம் பாகம் வெளியாகவிருந்ததைக் கொண்டாடும் வகையில் ரஜினி மற்றும் அவரது தோழியர் சிலர், பிரபாஸ் மற்றும் அனுஷ்கா தோன்றும் ஒரு காட்சியை சேலை தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் மூலம் சேலையில் வடிவமைத்து, பாஹுபலி வெளியான அன்று அவற்றை அணிந்துகொண்டனர்.

முதலில், நெருங்கிய தோழியர்களுக்கிடையே வினியோகிக்கவென ஐம்பது சேலைகளை மட்டுமே தயாரித்து வாங்கிக்கொண்ட ரஜினி, தோழியருடன் அந்தச் சேலைகளை அணிந்துகொண்டு புகைப்படம் பிடித்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்.

அதைக் கண்ட பலரும் தமக்கும் அது போன்ற சேலைகளை வாங்கித் தருமாறு கேட்கவே, அடுத்து 500 சேலைகள் தயாரிக்கப்பட்டன. தற்போது, இதுவே ஒரு புதிய போக்காக மாறி, தெலங்கானா மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலும் பாஹுபலி சேலைகள் விரும்பி அணியப்பட்டு வருகின்றன. இதனால், பாஹுபலி சேலைகளின் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

இதற்கான காப்புரிமை எதையும் தான் வாங்கவில்லை என்று கூறும் ரஜினி, இதை ஒரு வியாபாரியாக இல்லாமல் ஒரு ரசிகையாகவே தயாரித்து அணிந்துகொண்டேன் என்றும் கூறுகிறார்.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்
உழைக்கும் எண்ணத்துக்கு ஆசைகள் அத்திபாரம்
 

article_1493818164-op%5Bkipo%5B.jpgஆசை, அதிகாரம் செய்தால், அறிவு உறங்கிப் போகும். தன்நிலை உணராமல் ஆசையின் வலையில் வீழ்வது கேலிக்குரியதும் கூட.

முயற்சி செய்பவனுக்கே ஆசைப்படுகின்ற வல்லமையும் அதிகாரமும் உண்டு. நாங்கள் எதனை நோக்கிப் போகின்றோம் என்பதைத் தீர்மானிக்காமல், கண்டதையும் நோக்கி அவாவுறுதல், தன்னைத்தான் ஏமாற்றுவதும் ஓர் ஏக்க நிலையையும் உருவாக்கிவிடும்.

இதனால் பெறப்படும் ஏமாற்றங்கள் மனநிலையில் பெரும்பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். இந்தத் தொல்லைகள் எதற்கு? அதனை விட நியாயபூர்வமாக, அறிவின் துணைகொண்டு, மெய்வருந்தி உழைப்பதே மேலானதாகும். 

எதற்கும் ஏங்கித் துவழ்வதைவிட, சந்தோசமாகப் பணிசெய்தால் எந்தப் பிணிகளும் எமக்கு நேர்ந்து விடப்போவதில்லை. உழைக்கும் எண்ணத்துக்கு ஆசைகள்தான் அத்திபாரம் ஆகின்றன. 

ஏற்றுக்கொள்ளத்தக்க ஆசைகளே நிறைவேறக் கூடியவைகளாக இருக்கும்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அகிலத்தின் மூலதனம் கார்ல் மார்க்ஸ்! பிறந்த தின சிறப்புப் பகிர்வு

 
 

கார்ல் மார்க்ஸ்

''மக்களால் நான்... மக்களுக்காகவே நான்'' என்ற உணர்ச்சிமிகுந்த வார்த்தைகளை அடிக்கடி மக்களிடம் உரக்கச் சொல்லி, அவர்களுடைய உள்ளங்களில் வாழ்ந்து மறைந்தவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர், கட்சி நிகழ்வுகளிலும் அவருடைய கட்சியினர்வைக்கும் சுப நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு குட்டிக்கதைகள் சொல்வது வழக்கம். அது, அப்போதைய காலத்தைக் குறிக்கும்வகையிலோ அல்லது எதிர்க்கட்சியைத் தாக்கும்வகையிலோ இருக்கக்கூடும். சில நேரங்களில், தம்பதிகள் குறித்த கதைகளாகக்கூட இருக்கும். இப்படியான ஒரு நிகழ்வின்போதுதான் தம்பதியருக்கு ஏற்ற ஓர் அழகான குட்டிக்கதையைச் சொல்லியிருப்பார். குடும்பத்தில் ஒரு தம்பதியினர் அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டு எப்படி ஒருமித்த கருத்துடனும், உள்ளன்போடும் வாழ்கிறார்கள் என்பதைப் பிரதிபலிப்பதே அந்தக் கதை... 

ஜெ. சொன்ன குட்டிக்கதை!

''வேலைக்குச் சென்ற கணவனை எதிர்பார்த்து வீட்டில் காத்திருக்கிறாள் அவனுடைய அன்பு மனைவி. தாமும் தம் கணவனும் சாப்பிடுவதற்காக, இருக்கும் இட்லிமாவைக் கொண்டு இட்லி சுடுகிறாள். மொத்தம் 12 இட்லிகள் இருக்கின்றன. 'சரி, கணவன் சாப்பிட்டதுபோக மீதியை நாம் சாப்பிடலாம்' என்று அவளுடைய எண்ண ஓட்டம் இருந்தது. இந்த நிலையில், வேலைக்குச் சென்ற கணவன், திடீரென்று அவனுடைய நண்பனை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறான். மனைவியோ இதைக்கண்டு திகைத்துப் போகிறாள். கணவனோ, 'எங்கள் இருவருக்கும் உணவு எடுத்து வா' என்கிறான். அவளோ, 'மொத்தமே 12 இட்லிகள்தான் இருக்கின்றன. இதை எப்படி அவரிடம் புரியவைப்பது' என்ற குழப்பமான மனநிலையிலேயே இருவருக்கும் தலா 4 இட்லிகளைவைத்து உணவு பரிமாறுகிறாள். மீதமிருக்கும் 4 இட்லிகளை யாருக்குவைப்பது என்கிற குழப்பத்தில் அவள் இருக்கும்போது... கணவன் தனக்குவைத்த இட்லிகளை விரைவாகச் சாப்பிட்டுவிடுகிறான். அதனால், மேலும் இரண்டு இட்லிகளை எடுத்துவைக்கப்போன மனைவியிடம்... அவனோ, 'நாலு இட்லிக்கு மேலேயா சாப்பிடுவது' எனச்சொல்ல... இன்னும் இரண்டு இட்லிகள் அதிகமாகச் சாப்பிடலாம் என்று நினைத்துக்கொண்டு அருகில் சாப்பிட்டுக்கொண்டிருந்த நண்பனுக்கோ, அவன் சொன்னதைக் கேட்டவுடன் பகீர் என்றது. அந்தச் சமயத்தில்... இவளோ, 'அண்ணா... உங்களுக்கு' என்று கேட்க, நண்பனோ... 'போதும்... போதும்... நான் எப்போதும் மூன்று இட்லிகள்தான் சாப்பிடுவேன். இன்று உன் கைப்பக்குவம் அருமை. அதனால் நான்கு இட்லிகளைச் சாப்பிட்டுவிட்டேன்மா' என்று சொல்லி எழுந்தான். பின்னர் தன் மனைவியைப் பார்த்த கணவன், 'மீதமுள்ள இட்லியை நீ சாப்பிட்டுவிடு' என்றான். தம் எண்ணங்களைச் சரியாய்க் கணித்து விடை கண்ட கணவனை நினைத்து இப்போது மனைவி ஆனந்தத்தின் எல்லைக்கே சென்றாள்.'' இந்தக் கதை உணர்த்துவது என்ன? இருப்பதைக் கொண்டு இருவரும் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கும் என்பதுதான். இந்தக் கதையில் வாழும் கதைமாந்தர்களைப்போன்றதுதான் கார்ல்மார்க்ஸ் - ஜென்னியின் காதல் கதையும்... 

கார்ல் மார்க்ஸ்

மார்க்ஸுக்குத் துணை!

''மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை. மாற்றங்களை எதிர்கொள்ள மன உறுதி வேண்டும். மாற்றம் என்பதைத் தவிர, மாறாதது உலகில் இல்லை'' என்று சொன்ன கார்ல் மார்க்ஸ்தான், உலக விடியலுக்கான மாற்றத்தையே படைத்தார். அவருடைய பிறந்த தினம் இன்று. 

''அன்பே...  உங்கள் பேனாவைக் காகிதத்தின் மீது மென்மையாக ஓடவிடுங்கள். சில சமயங்களில் உங்கள் பேனா, தடுக்கிவிழுந்துவிடுமானால், அதோடு சேர்ந்து உங்கள் வாக்கியம் மட்டுமின்றி நீங்களும் விழ நேரலாம். கவலை வேண்டாம். உங்கள் சிந்தனைகள் பழைய காலத்துப் படைவீரர்களைப்போல அதிகமான உறுதியுடனும் துணிவுடனும் விறைப்பாக நிற்கின்றன. அவர்களைப்போல அவை சாகும். ஆனால், சரணடைய மாட்டா (elle meure, mais elle ne se rende pas)'' என அவருடைய எதிர்கால சிந்தனை எப்போதும் தடைப்பட்டுவிடாத அளவுக்கு மார்க்ஸுக்குத் துணையாக இருந்தார் ஜென்னி.

மார்க்ஸ் - ஜென்னி காதல்!

இந்த ஜென்னி வேறு யாருமல்ல... மார்க்ஸின் அடுத்த வீட்டில் இருந்த இளங்குமரி; பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த பேரழகி. ஜென்னியின் அழகில் மயங்கியவர்களும், அவளுடைய வருகைக்காகத் தவம்கிடந்தவர்களும் எத்தனையோ ஆயிரம் பேர்? அவர்களுக்கு எல்லாம் கிடைக்காத ஜென்னியின் காதல் இதயம்,  காணச் சகிக்க முடியாத தோற்றத்துடனும், கறுப்பு நிறத்துடனும் காட்சியளித்த மார்க்ஸுக்குக் கிடைத்தது. அவருடைய சிந்தனையும், கருத்துமே ஜென்னியின் இதயத்தைச் சிறைபிடித்தது; சிறகு விரித்தது; சேர்ந்துவாழத் துடித்தது. இனம், மதம், மொழி, வயது... இவை எதுவும் இல்லாமல் வருவதுதானே காதல்? தங்களுடைய மெளன மொழியில் இரண்டு இதயங்களும் பேசிக்கொண்டன; இரண்டு விழிகளும் பார்த்துக்கொண்டன; இணைவதற்கான முயற்சியில் இறங்கின. மார்க்ஸைவிட ஜென்னி நான்கு வயது மூத்தவர். ஆனால், மனதில் காதல் வந்துவிட்டால் வயதாவது... வசதியாவது?  இப்போது, இருவருடைய இதயங்களையும் காதல் களவாடியிருந்தது. ஜென்னி என்னும் கன்னி தன் இதயத்துக்குள் நுழைந்த பிறகுதான்.. பல கஷ்டநஷ்டங்களையும் தாண்டி அவருடைய வாழ்க்கை மின்னச் செய்தது. தத்துவம் படித்து டாக்டர் பட்டம் பெறுவதற்காகக் காதலியைப் பிரிந்தார், மார்க்ஸ். ஓர் ஆண்டோ... ஈராண்டோ அல்ல... ஏழு ஆண்டுகள். தங்களுடைய காதலுக்காக இருவருமே காத்துக்கிடந்தனர். காதல் என்றால் காத்திருப்புகளும், இழப்புகளும் வருவது சகஜம்தானே. ஆனாலும், காதலின் தவிப்பு காதலர்களுக்குத்தான் தெரியும். மற்றவர்கள் ஏதேதோ சொன்ன செய்திகளால் நிலைகுலைந்துபோனது ஜென்னியின் இதயம். மார்க்ஸின் தந்தைகூட, தன் மகனை மறந்துவிடும்படி வேண்டுகோள்வைத்தார். இது, எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை ஜென்னி. காதலனை நினைத்து வருந்தினார்; கண்ணீர் வடித்தார்; அவருடைய கடிதத்துக்காகக் காத்திருந்தார். 

கார்ல் மார்க்ஸ்

மார்க்ஸின் கடிதம்!

மார்க்ஸிடமிருந்து வந்த கடிதம் அவர் மனதைத் தேற்றியது; மகிழ்ச்சியைத் தந்தது; மனதைரியத்தைக் கொடுத்தது. ''இனிவரும் நூற்றாண்டுகள் அனைத்துக்கும் காதல் என்றால் ஜென்னி... ஜென்னி என்றால் காதல்'' என்று தன் மனநாயகியை நினைத்து மார்க்ஸ் வடித்திருந்த வரிகள் கடைசிவரை ஜென்னியின் மனதை மாற்றவில்லை. வாழ்க்கை என்ற கால சக்கரத்துக்குள் அவர்கள் வாழ முற்பட்டபோது வறுமை அவர்களை வாட்டிவதைத்தது; வயிறுகளைச் சுருங்கவைத்தது; வாரிசுகளை அள்ளிச் சென்றது. கறுப்புக் காபியுடனும், சிகரெட் புகையுடனும் தன்னுடைய சிந்தனைகளை வார்த்தெடுப்பதற்காக அல்லும்பகலும் அயராது உழைத்துக்கொண்டிருந்த கார்ல் மார்க்ஸுக்கு ஆதரவாக ஜென்னி, வறுமையிலும் தம் வாழ்க்கையைச் செம்மையாக நடத்திக்கொண்டிருந்தார். ஒருமுறை, தன் தாயாரின் மரணம் காரணமாக ஜெர்மனிக்குச் சென்றிருந்த ஜென்னியின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத மார்க்ஸ், ''உன் பிரிவு எனக்குள் மிகுந்த மனக்கிளர்ச்சியை உருவாக்குகிறது. எனது சக்திகள் அனைத்தும் அதில் கரைந்துபோவதைக் கண்கூடாகப் பார்க்கிறேன். ஒருமுறை மீண்டும் உன்னை என் இதயத்தோடு அணைத்துக்கொண்டால் போதும். என் இதயம் அமைதியாகிவிடும். அதன்பிறகு, எனக்கு இந்த உலகில் எதுவும் வேண்டியிருக்காது'' என வேதனையுடன் கடிதம் எழுதினார். 

அகிலத்தின் மூலதனம்!

ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதையில் வரும் கதைமாந்தர்களைப் போன்றே ஒருகட்டத்தில் மார்க்ஸும் - ஜென்னியும் வாழ்ந்திருக்கிறார்கள். இருக்கும் உணவைத் தன் குழந்தைகளுக்கும், தன் கணவருக்கும் பங்கிட்டுக் கொடுத்திருக்கிறார், ஜென்னி. இப்படி அவர்கள் இருவரும் மனம்கோணாதபடி இணைந்திருந்ததால்தான், இன்று கார்ல் மார்க்ஸ் - ஜென்னியின் காதல் காவியம் நமக்குக் கிடைத்திருக்கிறது.வறுமையினால், தன்னுடைய முதல் குழந்தை இறந்த சமயத்தில்கூட, ஜென்னி தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில், ''இதுபோன்ற அற்ப சங்கடங்களில் எல்லாம் நான் ஒருபோதும் தளர்வடைவதில்லை. எனக்கு என் கணவர் அருகில் இருக்கிறார். இப்படி ஒரு மனிதரைக் கணவராகப் பெற்றமைக்காக நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை'' என்று தன் காதல் நாயகனை எங்கேயும் எப்போதும் விட்டுக்கொடுக்காத அளவுக்கு நேசித்துக்கொண்டிருந்தார். ''கொஞ்சமாவது மூலதனத்தைச் சேர்த்தால் சிறப்பு'' என்று தன் தாயார் சொன்னபோதும்... கொஞ்சமும் மூலதனமே இல்லாமல் வாழ்ந்துகொண்டிருந்த மார்க்ஸ், 'ஜென்னி - ஏங்கெல்ஸ்' என்ற மூலதனத்தாலும்... தன் சிந்தனையின் மூலதனத்தாலும் பின்னாளில் உலகத்துக்கே தேவையான 'மூலதன'த்தைப் படைத்தார். 

இன்று, 'மூலதன'த்தைப் படைத்த கார்ல் மார்க்ஸ் என்ற மூலதனம், நம்மிடம் இல்லாதபோதும்... அவருடைய, 'மூலதனம்'தான் அகிலத்துக்கே மூலதனமாக இருக்கிறது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வைரல் : தோனி இப்படி விளையாடிப் பார்த்திருக்கீங்களா?

 
 

ஐபிஎல் போட்டிகளில் வழக்கம்போல, ஒவ்வொரு நாளும் பரபரப்பு கூடிக்கொண்டுவருகிறது. இந்த நிலையில், புனே அணியின்       கேப்டன்ஷிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டது. மோசமான ஃபார்ம் ஆகிய காரணங்களைக் கூறி, தோனி வழக்கம்போல விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டார். குறிப்பாக, புனே அணியின் உரிமையாளர்களே தோனியை மறைமுகமாகத் தாக்கினர்.

Dhoni, Imran Tahir SOn


ஆனால், இந்த விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி, தோல்வியடைந்துவிடுவோம் என்று எதிர்பார்க்கப்பட்ட  ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விஸ்வரூபம் எடுத்த தோனி, அந்தப் போட்டியில் புனேவை வெற்றிபெறச்செய்தார்; விமர்சனம் செய்தவர்களின் வாயை அடைத்தார்.

 

 


இந்த நிலையில், புனே அணியின் சக வீரர் இம்ரான் தாஹீரின் மகனுடன், விமானநிலையம் ஒன்றில் விளையாடியுள்ளார். தாஹீரின் மகனுடன் தோனி தரையில் அமர்ந்து விளையாட, இதை விமான நிலைய ஊழியர்களும்  மக்களும் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர். யூடியூபில் செம வைரலாகிவருகிறது இந்த வீடியோ.

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.