Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

காதலனை கரம் பிடிக்க அரச அந்தஸ்தை தியாகம் செய்யும் ஜப்பான் இளவரசி

 
 

ஜப்பானின் அரச குடும்ப உறுப்பினரான இளவரசி மாகோ, சாதாரண குடிமகன் ஒருவரை மணப்பதன் மூலம் தனது அரச குடும்ப அந்தஸ்தை இழக்கத் தயாராகிவிட்டார்.

காதலுக்காக அரச அந்தஸ்தை தியாகம் செய்யும் இளவரசிபடத்தின் காப்புரிமைREUTERS Image captionகாதலுக்காக அரச அந்தஸ்தை தியாகம் செய்யும் இளவரசி

பேரரசர் அகிஹிட்டோவின் மூத்த பேத்தியான 25 வயதாகும் இளவரசி மாகோவுக்கும், அதே வயதை சேர்ந்த சட்ட நிறுவன ஊழியரான கே கொமுரோவுடன் திருமண நிச்சயமாகவுள்ளது.

இவர்கள் இருவரும் ஒன்றாக பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போதுதான் முதன்முதலில் சந்தித்தனர்.

ஜப்பானின் ஏகாதிபத்திய சட்டத்தின்படி, சாதாரண குடிமகனை மணந்தால் இளவரசி அரச குடும்ப அந்தஸ்தை விட்டு விலக வேண்டும்.

டோக்யோவில் உள்ள சர்வதேச கிறிஸ்துவ பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது கடந்த 2012-ஆம் ஆண்டில், இளவரசி மாகோவும், கே கொமுரோவும் சந்தித்தனர்.

ஜப்பானில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் ''பிரின்ஸ் ஆஃப் தி ஸீ' அமைப்பில் கே கொமுரோ முன்பு ஒருமுறை பணியாற்றினார்.

கடந்த புதன்கிழமையன்று, தங்களின் திருமண நிச்சயதார்த்தம் குறித்து கொமுரோ கூறுகையில், ''இதுகுறித்து பேசுவதற்கு இது சரியான நேரமல்ல. ஆனால், சரியான நேரத்தில் இதுகுறித்து நான் பேசுவேன்'' என்று தெரிவித்தார்.

இளவரசியின் திருமண நிச்சயம் தொடர்பான திட்டங்கள் தற்போது நடந்து கொண்டிருப்பதாக அமெரிக்க ஒலிபரப்பு நிறுவனமான சிஎன்என்னிடம் ஜப்பான் அரச குடும்பம் உறுதி செய்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 83 வயதான பேரரசர் அகிஹிட்டோ தனது கடமைகளை ஆற்றுவதற்கு தன் வயது தடையாக இருக்கலாம் என்பதால் தான் பதவி விலக விரும்புவதாக குறிப்பிட்டார்.

http://www.bbc.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

'கைகள் இல்லையென்றால் என்ன..? முடியாதது எதுவும் இல்லை’: அசரவைக்கும் புதுச்சேரி இளைஞர்!

'இரண்டு கைகளும் ஒத்துழைக்கவில்லை என்றால் என்ன, தன்னம்பிக்கை நிறைந்தே உள்ளது' என நிரூபித்திருக்கிறார், புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் முத்துக்குமார பாண்டியன்.

மாற்றுத்திறனாளி வாலிபர்


புதுச்சேரியைச் சேர்ந்த முத்துக்குமார பாண்டியனுக்கு, பிறந்ததிலிருந்தே கைகளும்  கால்களும் சரியான முறையில் செயல்படவில்லை. ஆனாலும், தன் வேலைகளையாவது தானே செய்ய வேண்டுமென விரும்பும் நம்பிக்கை மனிதர்.

 

தன்னிடம் குறை உள்ளது என்பதை ஒருபோதும் வெளிக்காட்டாமல் இருக்கும் பாண்டியன், சிறுவயதிலிருந்தே தன் வேலைகளைத் தானே செய்துகொள்கிறார். இது மட்டுமல்லாமல், உதவி என யார் கேட்டாலும், அவர்களின் தேவையை உடனடியாகப் பூர்த்திசெய்து கொடுப்பார். தனது சொந்த முயற்சியினாலேயே பலருக்கு அரசின் முதியோர் உதவித்தொகை, விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஊக்கத்தொகை, கல்விக்கடன், உதவித்தொகை என 4,000-த்துக்கும் மேற்பட்டோருக்கு உதவி புரிந்துள்ளார் முத்துக்குமார பாண்டியன்.

யாரையும் எதற்கும் எதிர்பார்க்காமல், தன் வேலைகள் போக மற்றவர்களுக்காகவும் உழைக்கும் தன்னம்பிக்கை நிறைந்த வலிமையான இளைஞர், முத்துக்குமார பாண்டியன், தன் சாதனைப் பயணத்தைத் தொடர வாழ்த்துவோம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

101 வயது ஸ்கைடைவரின் பரவச அனுபவம்

இங்கிலாந்தில் வசிக்கும் 101 வயதுடைய வெர்டன்தான் உலகின் மிக மூத்த ஸ்கைடைவர். வெர்டன் குடும்பத்தை சேர்ந்த பத்து உறுப்பினர்கள் நான்கு தலைமுறைகளாக ஸ்கை டைவிங்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person

காதல் ரசம் பிழியும் கவிதைகள் தந்த ஓமர் கய்யாமின் பிறந்தநாள்.

கவிஞராகப் புகழ்பெற்று விளங்கும் கய்யாம் ஒரு தேர்ந்த கணிதவியலாளரும், மெய்யியலாளரும், வானியலாளரும் ஆவார்.

கவிதைகளுக்காகவே கூடுதலாக அறியப்படுகிற இவர், இயற்கணிதப் புதிர்கள் தொடர்பான செயல்விளக்கம் குறித்த ஆய்வுக்கட்டுரை (Treatise on Demonstration of Problems of Algebra), கணிதவியலில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளில் ஒன்றாகும். இதில் முப்படிச் சமன்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கான வடிவவியல் முறை ஒன்றைக் கொடுத்துள்ளார். இருபடிச் சமன்பாடுகளைத் தீர்க்கும் விதியைத் தந்தார். இவர் இயற்றிய இயற்கணக்கியல் பர்சியாவில் பாடநூலாகப் பயன்பட்டது.காலக்கணிப்பு முறையின் மேம்பாட்டுக்கும் இவர் பங்களிப்புச் செய்துள்ளார். பர்சியக் காலங்காட்டியைத் திருத்தியமைத்தார். இது 365 நாட்களைக் கொண்ட எகிப்தியவகை ஆகும். உயர் வெப்ப தட்ப ஆண்டின் அளவைத் துல்லியமாகக் கணக்கிட்டார்.

  • தொடங்கியவர்

தொலைக்காட்சி, Wi-Fi வசதிகளுடன் திறக்கப்படுகிறது சீனாவின் Ferris Wheel (PHOTOS) 

தொலைக்காட்சி, Wi-Fi வசதிகளுடன் திறக்கப்படுகிறது சீனாவின் Ferris Wheel (PHOTOS) 

சீனாவின் ஷண்டோங் மாகாணத்தில், வெய்ஃபெங் நகரில் பைலாங் ஆற்றின் மேம்பாலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள Ferris Wheel பொதுமக்களின் பார்வைக்காக விரைவில் திறக்கப்படவுள்ளது.

இதில் தொலைக்காட்சி, Wi-Fi அடங்கலான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

36 கார்ட்ஸ் (carts) எனப்படும் அறை வடிவமைப்பு பொருத்தப்பட்டுள்ளதுடன், ஒன்றில் 10 பயணிகள் அமரக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

1771 அடி உயரம் கொண்ட Ferris Wheel ஐக் கட்டமைக்க 4,600 தொன் உருக்குக் கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த Ferris Wheel ஒரு முறை சுற்றி வர சுமார் 28 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். அதாவது, சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுப்பதற்கு ஏதுவாக பொறுமையாக சுற்றி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை, சுற்றி வரும் நேரத்தில் பயணிகளுக்கு சலிப்பு ஏற்பட்டால், அறைக்குள் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

 

636x382_JPG-SINGLE_8488592936801055791

4074F2E300000578-0-image-a-82_1495051065751

4074F25D00000578-0-image-a-75_1495050904709

4074F27400000578-0-image-a-80_1495051049737

nintchdbpict000324390580

nintchdbpict000324390608

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

சுந்தர்.சி இயக்கத்தில் பிரமாண்ட 'சங்கமித்ரா' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!

 

இயக்குநர் சுந்தர் .சி பிரமாண்டமாக இயக்கிக்கொண்டிருக்கும் திரைப்படம், 'சங்கமித்ரா'. இந்தப் படத்தில், 8-ம் நூற்றாண்டின் இளவரசியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும், நடிகர் ஆர்யா மற்றும் ஜெயம் ரவியும் நடிக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். தேனாண்டாள் ஃபிலிம்ஸ் திரைப்படத்தை, தயாரிக்கின்றனர்.

Sangamithra


லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்துவரும் 70-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் சங்கமித்ரா படத்தை அறிமுகம் செய்து இருக்கிறார்கள் படக்குழுவினர். இதுவரை மொத்தம் இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு போஸ்டரில், நடிகர் ஜெயம் ரவி போர்கப்பல் ஒன்றில் காட்சியளிக்கும் போஸ்டரும் மற்றொன்றில் ஸ்ருதிஹாசன் வாளுடன் குதிரையில் இருக்கும் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளன. 

Sangamithra

 


கேன்ஸ் திரைப்பட விழாவையொட்டி, பிரான்ஸில் இருக்கும் முன்னணி பத்திரிகைகள் பலவற்றிலும், சங்கமித்ரா போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

p37a.jpg

ல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், `பாகுபலி'யில் வில்லனாக நடித்திருந்தார் `பல்வாள் தேவன்' ராணா. `பாகுபலி' வெற்றி அவரை நிரந்தர வில்லனாக்கிவிடும் போல் இருக்கிறது. சிரஞ்சீவி நடிக்கும் `உய்யலவாடா நரசிம்ம ரெட்டி' என்ற படத்தில் ராணா மீண்டும் வில்லன் ஆகிறார். சென்ற முறை பிரமாண்டத்திற்காக வில்லன் ஆனவர், இந்த முறை சிரஞ்சீவியின் அன்புக்காகச் சம்மதம் சொல்லி இருக்கிறார்! அன்புக்கு அடிமை!


p37b.jpg

ஜூலான் கோஸ்வாமி இந்தியாவின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளர். 6 அடி உயரமுள்ள ஜூலானின் பெளன்சர்கள் எதிரணி ஆட்டக்காரர்களை நடுநடுங்கவைப்பவை. சமீபத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 181 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனையாக உயர்ந்திருக்கிறார். மேற்கு வங்காள மாநிலத்தின் சக்தஹா என்னும் சிறிய கிராமத்தில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டராக உயர்ந்தவர் ஜூலான். பெளன்சர் பொண்ணு!


p37c.jpg

லையாள நடிகர் திலீப் எந்த நாட்டுக்குப் போனாலும் தன் மகள் மீனாட்சியையும் (முதல் மனைவி மஞ்சுவாரியாரின் மகள்) புது மனைவி காவ்யா மாதவனையும் கூடவே அழைத்துக் கொண்டுபோகிறார். `காவ்யா மாதவனும், மீனாட்சியும் இப்போ செம க்ளோஸ். இருவரும் நண்பர்கள் போல இருக்கிறார்கள்’’ என்கிறார் திலீப். சிறப்பு!


p37d.jpg

சாத்தியம் ‘அவதார்’. ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய இந்தப் படம் வெளியாகி, எட்டு வருடங்கள் நிறை வடைந்துவிட்டன. அவதாரின் அடுத்த நான்கு பார்ட்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. முதல் பார்ட் காட்டில் நடக்கும் கதை என்றால் இரண்டாம் பார்ட் தண்ணீருக்குள். `இரண்டாம் பார்ட் 2020-ம் ஆண்டிலும், மூன்றாம் பார்ட் 2021-லும் நான்காம் பார்ட் 2024-லும் கடைசி பார்ட் 2025-ம் ஆண்டிலும் வெளியாகும்’ என்று அறிவித்துள்ளார் ஜேம்ஸ் கேமரூன். `அவதார்’ டிசம்பரில் வெளியானதால், சென்டிமென்டாக மற்ற அனைத்து பாகங்களையும் அதே மாதத்தில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். பன்டோரா ரிட்டன்ஸ்


p37e.jpg

ச்சினின் பயோபிக்கான ‘சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்’ படத்துக்காக சச்சின் ஆன்தம் ஒன்றை உருவாக்கி மும்பையில் வெளியிட்டார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியிருந்த அந்தப் பாடலை, சுக்வீந்தர் சிங் பாடியிருந்தார். விழாவில் `` ‘சச்சின்... சச்சின்’ என்ற கோஷத்தை முதன்முதலாக எப்போது கேட்டீர்கள்?’' என்ற கேள்வி கேட்கப்பட, ``என்னுடைய அம்மாதான் அதை முதலில் சொன்னார். வீட்டுக்குள் நுழையாமல் கீழே விளையாடிக்கொண்டிருக்கும் என்னை வீட்டுக்கு வரச்சொல்லி மாடியிலிருந்து ‘சச்சின்... சச்சின்’ என அழைப்பார். அதுதான் முதல் கோஷம் என நினைக்கிறேன்'’ என்றார் மாஸ்டர் ப்ளாஸ்டர். சிரிப்பு சிக்ஸர்!


p37f.jpg

 பிரான்ஸ் கால்பந்து வீரர் பால் போக்பா, கடந்த சீஸனில் இத்தாலியின் யுவெண்டஸ் க்ளப்பிலிருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் க்ளப்புக்கு மாறினார். இதற்காக போக்பாவுக்கு மான்செஸ்டர் யுனைடெட் கொடுத்த விலை 623 கோடி ரூபாய். கால்பந்து வரலாற்றில் இது சாதனை. `இவ்ளோ பணத்துக்கு போக்பா தகுதியானவரா?’ என அப்போதே புருவங்கள் உயர்ந்தன. `இதென்ன புதுசு... போக்பாவை இங்கிலாந்துக்குக் கொண்டுவருவதற்காக மட்டும், அவர் ஏஜென்ட் மினோ ரயோலாவுக்கு மான்செஸ்டர் யுனைடெட் 287 கோடி ரூபாய் கொடுத்துள்ளது’ என அதிரவைத்துள்ளது `Football Leaks: The Dirty Business of Football’ என்ற புத்தகம். பதறியடித்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பு.  போங்கு... ஐயா போங்கு...

  • தொடங்கியவர்

 

விண்வெளியிலிருந்து சிதைந்த அலெப்போவின் புகைப்படங்கள்

கடந்த 5 ஆண்டுகளில் சிரியாவின் அலெப்போ நகரில், விளக்குகளின் வெளிச்சம் குறைந்து கொண்டே போனதை விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் காட்டுகின்றன.

  • தொடங்கியவர்
 

கேரளாவின் வயது எட்டு!

லவ்வரின் நினைவாக பிள்ளைக்கு பெயர் வைப்பதெல்லாம் ரொம்பவே பழசு. மனதிற்கு பிடித்த ஸ்பாட்டின் பெயரை தன் பிள்ளைகளுக்கே வைப்பதுதான் இன்றைய வைரல். சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த  சார்லஸ் கிராமர் மற்றும் ப்ரென்னா மூர் தம்பதிகள் ஒரு ஜாலி ட்ரிப்பில் கடவுளின் தேசமான கேரளாவில் கால்பதித்தனர். அதன் அழகில் அசந்துபோய் அடுத்து செய்ததுதான் அமேசிங் அதிரடி.
5.jpg
தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு கேரளா என்றே தில்லாக பெயர் சூட்டிவிட்டார்கள். பின் ஒரு சுபதினத்தில் ‘கேரளா’வைக் கூட்டிக்கொண்டு கேரளாவுக்கே வந்து அச்சிறுமியின் பெயர்க்காரணத்தை விளக்கியிருக்கிறார்கள். கல்வி குறித்த அவர்களது ப்ரொஜெக்டிற்காக  6 கண்டங்களிலுள்ள 20 நாடுகளைச் சுற்றுவதுதான் அடுத்த பிளான். அப்ப, அடுத்த பேபிக்கு பெயர் ரெடி!

www.kungumam.co.

  • தொடங்கியவர்

அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப் நடிக்கும் `இமைக்கா நொடிகள்' டீசர்

 
 

Imakka_1_19398.jpg

டிமான்டி காலனி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் அடுத்த படைப்பு 'இமைக்கா நொடிகள்'. பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதர்வா மற்றும் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா நடிக்கும் இந்தப் படம், ரொமான்டிக் - த்ரில்லர் பாணியாம். தெறி மாஸாக இருக்கும் இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரைப் பார்க்கும்போது, இதில் வரும் கதாபாத்திரங்கள் எத்தனை முறை கண் சிமிட்டுகிறார்கள் என்று எண்ணிப் பாருங்கள்... 

 

 

  • தொடங்கியவர்

'நம்புங்கள்...சொர்க்கம் பூமியில்தான் இருக்கிறது!' - உலகின் மிகவும் தூய்மையான இடங்கள்

 

ரும்புகை கலப்பில்லாத சுத்தமான காற்று, கண்ணாடிதான் உருகி ஒடுகிறதோ என யோசிக்கத் தோன்றும் நீரோடைகள், பொங்கிப் பெருகும் ஊற்றுகள், நெகிழிகள் காணப்படாத ஒரு சுற்றுச்சூழல், பறவைகள் விலங்குகளின் சத்தம் கேட்டாலும் கூட நிலவும்  ஓர் அமைதியான சூழ்நிலை,எல்லைகளே இல்லாமல் பரந்துவிரிந்த காடுகள்... இப்படி இயற்கையின் ரம்மியம் மிளிரும் ஓர் இடத்தை விரும்பாத மனித மனம் ஒன்று இருக்க முடியுமா என்ன? 

தினமும் மாசுபட்ட சுற்றுச்சூழலில் வாழும் நமக்கு இப்படி  ஓர் இடத்தைப் பார்ப்பது சாத்தியமில்லாத ஒன்று என நீங்கள் நினைத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் இன்றைக்கும் கூட மனிதர்களின் காலடித் தடம்கூட பதியாத பல இடங்கள் உலகில் இருக்கின்றன. அவை இன்னும் மாசடையாமல் இயற்கையின் அற்புதத்தை அப்படியே தக்க வைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப் பூலோக சொர்க்கம் என சொக்கி நிற்கும் அளவிற்கான சில இடங்களின் பட்டியல் இங்கே...

பப்புவா நியூ கினியா

பப்புவா நியூ கினியா

பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் அருகே இருக்கிறது பப்புவா நியூ கினியா தீவு. மாசடையாத கடற்கரைகள், மழைக்காடுகள் என தீவு முழுவதுமே காடுகளும் மலைகளும் பரந்து விரிந்து கிடக்கின்றன. கிராமத்து வாழ்வின் அருமையை உணர்ந்தவர்கள் என்பதால் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதம் மக்கள் மட்டுமே நகரத்தில் வாழ்கின்றனர். இந்த தீவின் பெரும்பாலான இடங்களை அந்த ஊர் மக்களே பார்த்திருக்க மாட்டார்கள். மர கங்காரு எனப்படும் விலங்கு பப்புவா நியூ கினியாவில் மட்டுமே இருக்கிறது. இன்னும் வெளி உலகம் அறியாத வகைப்படுத்தப்படாத விலங்குகளும், தாவரங்களும் இங்கே அதிகம் இருக்கின்றன என ஆச்சரியப்படுத்துகின்றனர் ஆய்வாளர்கள்..

சீசெல்ஸ்

உலகின்  தூய்மையான இடங்கள் (சீசெல்ஸ்)

இந்தியப் பெருங்கடலில் ஆப்ரிக்காவின் அருகே அமைந்துள்ளது இந்த இடம். இது பொதுவாக சீசெல்ஸ் என அழைக்கப்பட்டாலும் 115 தீவுகளின் கூட்டமைப்பாக இருக்கிறது நாட்டின் மொத்த மக்கள் தொகை ஒரு லட்சத்திற்கும் கீழ் என்பதால் பெரும்பாலான தீவுகள் மனிதர்கள் நடமாட்டமில்லாமல் காணப்படுகிறது  இங்கே இருக்கும் கடற்கரைகளில் மற்ற இடங்களைப் போல இல்லாமல் சற்று வித்தியாசமான பவுடர் போன்ற மணல் காணப்படுகின்றது கடற்கரைகள் மாசு இல்லாத இடமாக இருக்கின்றது நாட்டின் தேசிய பறவையான கறுப்பு கிளியை வேறு உலகின் எந்த இடத்திலும் பார்க்க முடியாது. இயற்கையளித்த வரத்தைக் காப்பாற்றுவற்கு நாட்டின் 50% கடற்கரைகளைப் பாதுகாக்கப்பட்டவையாக அந்த நாட்டின் அரசு அறிவித்துள்ளது.

நமீபியா பாலைவனம்

நமீபியா பாலைவனம்

தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் இருக்கும் புகழ்பெற்ற நமீபியா பாலைவனம் உலகின் மாசடையாத பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பாலைவனம் என்பதால் இங்கே மனிதர்கள் வந்துபோவது என்பது குறைவுதான். ஆதிகால மனிதர்களால் வரையப்பட்ட ஓவியங்கள், மணல் குன்றுகள் என இந்தப் பாலைவனத்தில் காணப்படும் அதிசயங்கள் ஏராளம், ஆப்பிரிக்காவின் பழைமை மாறாமல் இருக்கும் பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது நமீபியா பாலைவனம்.

கலபகோஸ் தீவுகள்

ஈகுவாடர் நாட்டின் ஆட்சியின் கீழ் வரும் இது கலபகோஸ் 21 சிறு தீவுகள் அடங்கியது. தென் அமெரிக்கா அருகே பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. ஒரு கி.மீட்டருக்கு மூன்று பேர் என்றளவில் மனிதர்கள் அடர்த்தி மிகவும் குறைவாகக் காணப்படுகிறது இங்கே மனிதர்களை விட இகுவானக்கள், வயதான ஆமைகள், டால்பின்கள், கடல் சிங்கங்கள், திமிங்கலங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. 

கலபகோஸ் தீவுகள்


சார்லஸ் டார்வின் ஆய்வு செய்த இடங்களில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மாசடையாமலும், பழைமை மாறாமலும் இருப்பதால் இந்தத் தீவின் பெரும்பாலான இடங்கள் யுனெஸ்கோவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றன.

பியோர்ட்லேன்ட்

நியூசிலாந்து நாட்டில் அமைந்துள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் அமைந்துள்ளது பியோர்ட்லேன்ட் பகுதி. உலகின் சுத்தமான மாசற்ற பகுதிகளில் மற்றொன்று. இங்கே மக்கள் வசிக்க விரும்பினாலும் வசிக்க முடியாத ஒரு இடம். நியூசிலாந்தின் பழங்குடியின மக்கள் மட்டுமே அங்கே சென்று வேட்டையாடிவிட்டு திரும்புவார்கள். அண்டார்டிகாவிற்கு மிக அருகில் அமைந்திருப்பதால் அங்கிருந்து வீசும் சுத்தமான காற்று இங்கே வீசும் பொழுது இந்த இடத்தில் பெய்யும் மழை நீர் கூட தரையைத் தொடுவதற்குள் பனிக்கட்டியாக மாறிவிடும் அளவிற்கு குளிர் இருக்கும்.

டெயின்ட்ரி நேஷனல் பார்க்

ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்த பூங்கா 1200 ச.கி.மீ தொலைவிற்கு பரந்து விரிந்த மழைக்காடுகள் கொண்டது ஆகும்.  இந்தக் காடுகளில் இருக்கும் மரங்கள் 110 மில்லியன் ஆண்டு பழைமையானவை என்பது தனிச்சிறப்பு. அதுமட்டுமின்றி இங்கிருக்கும் தாவர இனங்கள் கூட 2500 ஆண்டுகள் பழைமையானவை.

அட்டகாமா பாலைவனம்

அட்டகாமா பாலைவனம்

 

சிலியில் இருக்கும் அட்டகாமா பாலைவனம் மற்ற பாலைவனங்கள் போல் இல்லாமல் சற்று வித்தியாசமானது. இங்கே மணலை விடவும் உப்பு படுகைகளும், எரிமலை குழம்புப் படிமங்களும் அதிகமாக இருக்கின்றன. பூமியில் காணப்படும் பாலைவன அமைப்புகளிலேயே சற்று வித்தியாசமான தன்மையைக் கொண்டிருப்பதால் நாசா செவ்வாய் கோளில் இருக்கும் நில அமைப்பை அடிப்படையாகக் கொண்டு இங்கே பரிசோதனைகளை நிகழ்த்தும் இடமாக பயன்படுத்துகிறது. 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மே 19
 
 

article_1463635414-image.jpg1536: பிரித்தானிய மன்னர் 8 ஆம் ஹென்ரியின் இரண்டாவது மனைவி ஆன் பேலெய்ன், தேசத்துரோகம் மற்றும் தகாத உறவு குற்றச்சாட்டின் காரணமா சிரச்சேதம் செய்யப்பட்டார்.

1919: துருக்கிய சுதந்திரப் போர் ஆரம்பம்.

1991: குரோஷியர்கள் சுதந்திர தனிநாடாகுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

2009: இலங்கையில் 26 வருடகால யுத்தம் முடிவுற்றதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தல்  உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

2009: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அறிவித்தார்.

2010: தாய்லாந்தில் அரசாங்கத்தற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முறியடிக்கும் நடவடிக்கையை  இராணுவத்தினர் நிறைவு செய்தனர்.

.tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
‘அழுவது அழகு அல்ல; இழிவு’
 
 

article_1495018979-uft.jpgகாதலில் தோற்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றுக் கொள்ள வேண்டும் எனச் சபதம் எடுக்க வேண்டும். அதனை விடுத்துக் கோழைகள்போல் அழுவது அழகு அல்ல; இழிவு. 

உண்மையான காதலில் தோற்றால், கவலை வராதா? அதனை அனுபவித்தால்தான் அதன் அருமை புரியும் எனக் காதலர்கள் புலம்புவதும் வியப்பு அல்ல.

எந்தத் தோல்விக்கும் பின்னர், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்காமல் சோகத்துடன் சிநேகம் கொள்வதனால் என்ன பயன்?  

சாதனைகள் செய்த பலரது வாழ்க்கையிலும் சோதனைகள் ஏற்படாமல் இருக்காது. காதல் தோல்வியால் தன்னை அழிக்க எண்ணுதலே சுயநலப் போக்குத்தான்.  

உலகில் இருந்து எல்லா நலன்களையும் பெற்று விட்டவர்கள், ஒருவிதத்தில் கடன்காரர்கள்தான். கடனைத் திருப்பிச் செலுத்துவது யார்? தோல்வியால் மரணிக்க விரும்புவது துரோகம். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

“காசு முக்கியமில்ல கண்ணுங்களா..!” - மெரினாவைக் கலக்கும் மீன் கடை சுந்தரி அக்கா

 

மெரினா

43 டிகிரி வெயில் சென்னையை கொளுத்தி எடுத்துக்கொண்டிருக்கும் மத்தியான நேரம். விடுமுறைக்கு வந்திருக்கும் தென் தமிழக சுற்றுலா குடும்பம் ஒன்று போலீஸ் எச்சரிக்கையும் மீறி மெரினா கடலில் குளித்து ஈரம் சொட்டச் சொட்ட அந்த தார்ப்பாய் நிழலுக்குள் வந்தது. அதில் இருந்த இளம்பெண் ஒருவர் பசித்த கண்களுடன் மீன் பொரித்துக்கொண்டிருந்த பெண்ணைப்பார்த்து,

"என்னா இருக்கு" என்றார்,

"ம்ம்..கடை கீது"  என்று வந்த சென்னைத்தமிழ் பதிலில் கொஞ்சம் பேஸ்த்தடித்துதான் போய்விட்டார் அந்தப்பெண். 

லேசான கோபத்தோடு நகர்ந்த அந்தக்குடும்பத்தை "அட இன்னாம்மா நீயி.. அக்கா பொறிக்கிற மீன் வாசனை மெரினா பூராம் அடிக்குது. பாத்துகிட்டே கேக்குறீயே" என்றபடி சமாதானம் சொல்லி தட்டில் சோற்றைப் போட்டு  கொடுக்கிறார் சுந்தரி அக்கா. கடலில் குளித்த பசியில் சோற்றை அள்ளி உண்ணும் பெண்ணின் முகம் மாறுகிறது. அதன் ருசி அவரைக் கவர்ந்து விட்டதைக் காட்டிக் கொடுக்கிறது கண்கள். 

"சோறு எவ்வளவு" என்கிறார். 

"30 ரூபாதாம்மா..பயப்படாமா சாப்பிடு" என்கிறார் சுந்தரி 

'சுந்தரி அக்கா' கடைக்கு மதியம் 12 மணியில் இருந்து ஒன்றிரண்டாய் ஆட்கள் வரத்தொடங்கிவிடுகிறார்கள். ஆட்டோக்காரர்கள், கால் டாக்ஸி ஓட்டுநர்கள், சிறுசிறு வியாபாரம் செய்பவர்கள் என அடிமட்ட மக்கள் கூடிவிடுகிறார்கள். இந்தக் கடையில் சாம்பார் முதல் கருவாட்டுக்குழம்பு வரை எதுவுமே சுமார் ரகமில்லை. எல்லாமே சூப்பர்தான். 

"எம் புள்ள கண்ணன்தான் இங்க கடை போடுறதுக்கு காரணம். இவன் சின்ன வயசில ஸ்கூலுக்கு போயிட்டு வந்தவுடன் மெரினாவில இருக்கிற கடைக்கு சாப்பாடு கொடுக்குற வேலைக்கு வந்துடுவான். வீட்டுக்காரரு ட்ரைவர் வேலைக்கு போய்டுவாரு. நான் வீட்டுக்கிட்டவே இட்லிக்கடை போட்டிருந்தேன்." என்று சுந்தரி சொல்லிக்கொண்டிருக்கும்போதே "அக்கா இறா கொடு" என தட்டுடன் ஒருவர் வந்துவிட கண்ணன் தொடர்ந்தார். 

சுந்தரி அக்கா கடை

"அப்பல்லாம் இங்க பகல்ல 'பெரியவர் வீரமணி'  வருவார். அப்படி வரும்போதெல்லாம் என்னை ஸ்கூல் யூனிபார்மோடவே பார்த்திருக்காரு. ஒரு நாள் என்னைப் பக்கத்தில வரச்சொல்லி 'ஒரு வண்டி கொடுக்கச் சொல்றேன். கடை போட்டு வியாபாரம் பார்த்துக்கோ'ன்னு சொல்லிட்டு போய்ட்டார். வண்டியில் திண்பண்டம், டீக்கடைன்னு போட்டு அப்படியே சோத்துக்கடையும் ஆரம்பிச்சாச்சு. அம்மா வந்து கடையை  பாத்துக்கிட்டு, என்னை கேட்டரிங் படிக்க வச்சது. 17 வருஷமா இங்க கடை போட்டிருக்கோம்." என்றார். 

"எதைச் செஞ்சாலும் நம்மால முடிஞ்ச அளவுக்கு ஒழுங்கா செய்யணும்ன்னு நினைப்பேன். எனக்குத் தெரிஞ்சதை சமைச்சு வியாபாரம் பார்த்துகிட்டு இருக்கும்போது, என் ஒரு பையனை கேட்டரிங் படிக்க வச்சேன். அவன் படிச்சு வந்த பிறகுதான் கலப்படம் இல்லாத பொருட்களை எப்படி வாங்குறது; கடையில வாங்குறதைவிட நாமே தயாரிக்கிற மசாலா பொருட்களில்தான் செலவு குறைவு தரம் அதிகம்ன்னு நிறைய விஷயங்கள் கத்துக்கொடுத்தான். நான் இங்க எல்லாத்துக்குமே செக்குல ஆட்டின கடலை எண்ணைதான் பயன்படுத்துறேன். பல ஊருக்காரங்க வர்ற இடம். வேற காரணத்துக்காக வயிறு வலிச்சாலும் சாப்பாடு சரியில்லைன்னுதான் பேசுவாங்க. அதனால லாபம்லாம் கணக்கு பாக்காம, சமைக்கிறது மீன் பொரிக்கிறதுன்னு எல்லாமே கடலை எண்ணையிலதான். எனக்கு காசு முக்கியமில்ல தம்பி" என்றவரிடம் மீன் எப்படி இவ்வளவு டேஸ்டா இருக்கிறதுன்னு கேட்டோம்.   

"காலையில அஞ்சு மணிக்கு எழுந்திருச்சு நேரடியா போய் நல்ல மீனா பார்த்து  வாங்கிட்டு வருவேன். இப்ப மீன்பிடி தடைக்காலம் என்பதால மீன் வரத்தே இல்ல. அலைஞ்சு திரிஞ்சு வள்ளத்துல போய் பிடிச்சு வர்ற மீனுங்களா பார்த்து வாங்கிட்டு வந்தேன். இன்ன மீனுதான் கிடைக்கும், இன்ன விலைதாம் அப்படிங்கிறதே இல்ல. இன்னைக்கு என்ன மீன் ப்ரஷ்சா இருக்கோ அதைதான் வாங்குவேன். மீனு விலைக்கு தகுந்த விலையைதான் வச்சு விக்கிறது. இன்னைக்கு கருப்பு வவ்வால் பொறிச்சது 100 ரூபா. ஆனா இந்த விலைக்கு இவ்வளவு பெரிய மீன் கிடைக்காது. அது ரெகுலரா சாப்பிடுறவங்களுக்குத் தெரியும். நாளைக்கு விலை குறைச்சலா வாங்கினு வந்தா விலை மலிவான பொரிச்ச மீன் கிடைக்கும்" என்றார்.

சுந்தரி அக்கா கடை


எக்ஸ்பிரஸ் அவன்யூவிலும், போனிக்ஸ் மால்களில் மட்டுமே தென்படும் ‘ஹைஃபை’ உடைகளுடன்  அந்த இடத்துக்குப் பொருந்தாமல் கையில் தட்டேந்தி சாப்பிட்ட பெண்  சுந்தரியின் அருகில் வருகிறார். 

"அம்மா..ஊர்ல எங்க பாட்டி வீட்டில சாப்பிட்ட மாதிரியே இருந்துச்சு" என்று கையைப் பிடித்து சொல்லிவிட்டு போனார். 

"டேய்..அந்த பிள்ளைட்ட 20 ரூபா கம்மியா வாங்குடா. என்னை ஃபீலாக்கிடுச்சு" என்று குறும்பாக சொல்லி இறாலை கரண்டியில் அள்ளி தோசைக்கல்லில் போடுகிறார் சுந்தரி அக்கா. 

 

(சுந்தரி அக்காவின் கடை - மெரீனாவில் உள்ள நீச்சல் குளத்தின் வலது பக்கத்தில் உள்ளது.) 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

ஊட்டியில் 121-வது மலர்க் கண்காட்சி கோலாகலம்

 

 

c_3166103f.jpg

284e6263-c4a7-41ec_3166100f.jpg

dd908fc9-9230-4560_3166085f.jpg

d3809577-0e9d-4c2f_3166086f.jpg

c5b40964-477a-45f9_3166087f.jpg

ba57c25e-e8f3-485c_3166088f.jpg

aa133be7-2d86-4bd8_3166089f.jpg

9db68229-1b4c-4483_3166090f.jpg

tamil.thehindu.

  • தொடங்கியவர்

ஜானகி செய்ததை சசிகலா செய்வாரா...? வி.என்.ஜானகி நினைவுதினச் சிறப்பு பகிர்வு!

 
 

ஜானகி

வ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பதாகச் சொல்வார்கள். அப்படி ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் மட்டுமின்றி, அவர் உருவாக்கிய அமைப்பின் வெற்றிக்குப் பின்னாலும் இருந்தவர் வி.என்.ஜானகி. அந்த ஆண் எம்.ஜி.ஆர். என்பதைச் சொல்லவும் வேண்டுமா? 

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வைக்கத்தில், 1923-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 -ம் தேதி பிறந்த வி.என்.ஜானகி, கர்நாடக இசையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியரான பாபநாசம் சிவனின் தம்பி ராஜகோபாலின் மகள். வைக்கம் நாராயணி ஜானகி என்பதுதான் பின்னாளில் வி.என். ஜானகி என்றானது. இவருடன் பிறந்தவர் மணி என்ற நாராயணன். 

பாடலாசிரியரான ராஜகோபாலுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்காததால் சொத்துகள் கொஞ்சம்கொஞ்சமாகக் கரைந்து வறுமைக்கு ஆளானது, குடும்பம். இந்த நிலையில் சென்னையில் தயாரிக்கப்பட்டுவந்த 'மெட்ராஸ் மெயில்' என்ற திரைப்படத்தில், பாடல்கள் எழுத வாய்ப்பு வர, 1936-ம் ஆண்டு நிரந்தரமாக சென்னைக்குக் குடிபெயர்ந்தது ராஜகோபால் குடும்பம். 

இயல்பிலேயே நடனத்தில் ஆர்வம் கொண்டிருந்த ஜானகி, முறையாக ஆசிரியரைக் கொண்டு அவற்றில் தேர்ச்சி பெற்றார். 

சென்னையில் ராஜகோபாலின் குடும்ப நண்பரான பழம்பெரும் இயக்குநர் கே.சுப்ரமணியம், (நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியத்தின் தந்தை) ஜானகியின் நாட்டியத்திறமையைக் கண்டு அவரை, தனது 'நடன கலா சேவா' நாட்டியக்குழுவில்சேர்த்துக்கொண்டார். பிரபலமான இந்தக் குழு, அந்நாளில் இந்தியா முழுவதும் நாட்டிய நாடகங்களை நடத்திவந்தது. நடன கலா சேவாவின் 'வள்ளித்திருமணம்' நாடகத்தில், ஜானகிக்கு முருகன் வேடம். கே.சுப்ரமணியத்தின் துணைவியார் எஸ்.டி சுப்புலட்சுமி இதில் வள்ளியாக நடித்தார். 

நாட்டிய உலகில் புகழ்பெற ஆரம்பித்தபின், ஜானகியை சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் நாடகங்களிலேயே அவர் கவனம் செலுத்தினார். 

1937- ம் ஆண்டு தனது 'மோஷன் பிக்சர்ஸ் புரொடியூசர்ஸ் கம்பைன்ஸ்' நிறுவனம் மூலம் 'இன்பசாகரன்' என்ற திரைப்படத்தைதயாரித்தார், கே. சுப்ரமணியம். இதில் 13 வயது வி.என்.ஜானகியை நாட்டிய நடிகையாக அறிமுகம் செய்தார். துரதிர்ஷ்டவசமாக இந்தப் படத் தயாரிப்பின்போது, கே. சுப்ரமணியத்தின் ஸ்டுடியோ எதிர்பாராதவிதமாக தீவிபத்துக்குள்ளாகி படத்தின் நெகடிவ் உட்பட அனைத்தும் எரிந்து சாம்பலாயின. (இதைத்தான் பின்னாளில் விலைக்கு வாங்கி ஜெமினி ஸ்டுடியோவை கட்டி எழுப்பினார் எஸ்.எஸ்.வாசன்) 

முதற்படம் அபசகுனமாக வெளிவராதுபொனதில்  மனவருத்தத்தில் இருந்தவருக்கு, 1940- ம் ஆண்டு 'கிருஷ்ணன் தூது' என்ற திரைப்படத்தில் மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் ,கே.எஸ். இதில் ஜானகிக்கு நடன மாது வேடம். தொடர்ந்து மன்மத விஜயம், கச்ச தேவயானி, மும்மணிகள், சாவித்திரி, அனந்த சயனம், கங்காவதார், தேவ கன்யா, ராஜா பர்த்ருஹரி, மான சாம்ரட்சனம் , பங்கஜவல்லி உள்பட கே.சுப்ரமணியத்தின் படங்களில் சிறுசிறுவேடங்கள் கிடைத்தன. இவற்றில் அனந்தசயனம்  படத்தில் முதன்முறையாக சில காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1943-ல் வெளியான தேவகன்யா மற்றும் 'சகடயோகம்' படங்களில் இரண்டாவது கதாநாயகி வேடம். அதைத் தொடர்ந்து சித்ர பகாவலி, தியாகி படங்கள் அவரின் நடிப்பில் வெளிவந்தன.

ஜானகி

நடிக்கத் தொடங்கி 10 ஆண்டுகளுக்குப் பின், அவருடைய 18-வது படமான 'ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி'யில் முதன்முறையாக பிரதான கதாநாயகி வேடம் கிடைத்தது.  கதாநாயகன் பி.எஸ். கோவிந்தன். 

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இத்திரைப்படத்தின் கதை சுவாரஸ்யமானது. 

ராஜகுருவான சந்நியாசி ஒரு காமப்பித்தன். தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்வதற்காக அஸ்டமாசித்தியை அடைய பூதத்திடம் வழிகேட்கிறான். 1000 தலைகளைக் கொண்டு யாகம் நடத்துமாறு சொல்கிறது பூதம். இதற்காக தந்திரமாக நாட்டின் இளவரசியான சிந்தாமணியை (ஜானகி )ப் பயன்படுத்திக்கொள்கிறான்அவன். மூன்று கேள்விகளைக்கேட்டு அதற்கு விடை சொல்பவரையே இளவரசி மணப்பதே பொருத்தம் என இளவரசிக்கு யோசனை சொல்கிறான். பதில் சொல்லாதவரை முட்டாளாகக் கருதி கொன்றுவிடச் சொல்கிறான்.  அதன்படி போட்டியில் கலந்துகொள்பவர்களிடம் 3 கேள்விகளைக் கேட்டு பதில் அளிக்காதவர்களை வெட்டிக்கொல்கிறாள் இளவரசி. 999 தலைகள் இப்படி வீழ்த்தப்பட்டநிலையில் அதில் தன் ஐந்து அண்ணன்களை இழந்த கதாநாயகனான கோவிந்தன், சிந்தாமணியைப் பழிவாங்குவதாக சபதம் செய்கிறான். தந்திரமாக சிந்தாமணியின் தோழி செங்கமலத்தின் நட்பைப் பெற்று, இளவரசியின் கேள்விகளை அறிந்துகொண்டு தேசாந்திரம் சென்று பதில்களோடு, இறந்தவர்களை உயிர்பிழைக்கவைக்கும் உபாயத்தையும் அறிந்துவருகிறான். போட்டி நாளில் சிந்தாமணியின் கேள்விகளுக்கு அதிரடியாக பதில்களை அளித்து சிந்தாமணியை திருத்துவதோடு சந்நியாசியின் கபட நாடகத்தையும் அம்பலப்படுத்துகிறான், இளவரசி கதாபாத்திரத்தில் நடித்த வி.என்.ஜானகி நடிப்பில் அசத்தியிருப்பார். 

1947-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம், ஜானகிக்கு ஒரேநாள் இரவில் பெயரும் புகழையும் தேடித் தந்தது. 'வெள்ளித்திரைக்கு அதிஅற்புதமான நடிகை கிடைத்தார்' என சினிமா பத்திரிகைகள் புகழாரம் சூட்டின. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமானார்.

படத்தில் கிடைத்த புகழால், அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்தன. அந்தக் காலத்தில் திரையுலக சூப்பர் ஸ்டாரான தியாகராஜபாகவதருடன் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. 

1948-ல் வெளியான 'ராஜமுக்தி' திரைப்படம் வி.என் ஜானகிக்கு பெரும்புகழைத் தேடிக்கொடுத்ததோடு, அவரின் வாழ்க்கையையும் திசைமாற்றியது. படத்தில் நடித்த துணைநடிகர் ஒருவருடன் அவருக்கு நட்பு உருவானது. பிரபல கதாநாயகி ஜானகி சாதாரண துணை நடிகர் ஒருவரை காதலிப்பதாக பத்திரிகைகள் எழுதின. அதே ஆண்டில் வெளியான மோகினி படத்தில் அந்த நடிகருடன் மீண்டும் இணைந்து நடிக்கும் சூழல் வந்தது. இப்போது துணை நடிகன் கதாநாயகனாக ஆகிவிட்டிருந்தார். நட்பு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. இதனிடையே 'லைலா மஜ்னு', 'வேலைக்காரி' ஆகிய படங்கள் வெளியாகின. இதற்கிடையில், கதாநாயகி ஆகிவிட்ட அந்தத் துணைநடிகர் திரைத்துறையில் உச்சக்கட்ட புகழை அடைந்திருந் தார். அவர் வேறு யார், எம்.ஜி.ஆர்.தான்!

1950-ல் வெளியான 'மருதநாட்டு இளவரசி' திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் - ஜானகி ஜோடி மீண்டும் இணைந்தது. 'நாம்' படத்துடன்  திரையுலகுக்கு முழுக்குப் போட்டுவிட்டு எம்.ஜி.ஆரின் வாழ்க்கைத் துணைவியாக ஆனார் ஜானகி. இந்தத்  திருமணத்துக்கு சாட்சிக் கையெழுத்திட்டவர், தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பத்தேவர்.

எம்.ஜி.ஆரை ஜானகி திருமணம் செய்துகொள்வதற்கு சட்டப்படியான பிரச்னை எழுந்தது. பெரும் போராட்டத்திற்கு இடையில் அந்த வழக்கை வென்று ஜானகியை மணந்தார் எம்.ஜி.ஆர்.

1962-ல் மனைவி சதானந்தவதியின் மறைவுக்குப் பின்னர், ராமாவரம் தோட்டத்துக்கு ஜானகியுடன் குடிபுகுந்தார் எம்ஜி.ஆர். 

எம்.ஜி.ஆரின் திரை மற்றும் அரசியல் வாழ்வில் ஜானகிக்குப் பெரும்பங்கு உண்டு. பிரபலமான கதாநாயகியாக இருந்தாலும் திரைத் துறையில் இருந்து ஒதுங்கிய பின், ஒரு குடும்பப் பெண்மணியாக, எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கு பெரும் பக்கபலமாக இருந்தவர், ஜானகி. மனைவி ஜானகியை ஜானு என்றே அழைப்பார் எம்.ஜி.ஆர். சமையலில் கைத்தேர்ந்த ஜானகியின் கைப்பக்குவத்துக்கு எம்.ஜி.ஆர் தீவிர ரசிகர். ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவரானாலும் அசைவப் பிரியரான எம்.ஜி.ஆருக்காக தன்னை மாற்றிக்கொண்டவர் ஜானகி. பொதுவாக  படப்பிடிப்பில் ஒரு பெரும்கூட்டமாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர் எம்.ஜி.ஆர். இதனால் எப்போதும் பெரிய விருந்துபோல் சமைத்து படப்பிடிப்புக்கு அனுப்பிவைப்பார் ஜானகி. பல நேரங்களில் மதியம் ஒரு மணிக்கு எங்கிருந்தாலும் ராமாவரம் இல்லத்துக்கு வந்துவிடுவார் எம்.ஜி.ஆர். அத்தனை கைப்பக்குவம் ஜானகிக்கு. 

ஜானகி

பின்னாளில் குழந்தையில்லாத குறையைப் போக்க ஜானகியின் தம்பி பிள்ளைகளைத்தான் எம்.ஜி.ஆர்.- ஜானகி வளர்த்தனர். கணவரின் உதவும் குணத்துக்கு ஜானகி எப்போதும் குறுக்கே நின்றதில்லை. தவறு செய்யும் ஊழியர்களிடம் கடுமையாகக் கோபப்படுவார், எம்.ஜி.ஆர். சில சமயங்களில் வேலையிலிருந்தும் அனுப்பிவிடுவார். அப்போது எம்.ஜி.ஆரை சமாதானப்படுத்துவதில் ஈடுபடுவார்,  ஜானகி. 

அண்ணா, கருணாநிதி முதற்கொண்டு எத்தனையோ தலைவர்கள் அவரின் கைச்சமையலை ருசித்தவர்கள். கருணாநிதி அவரை அக்கா என்றழைப்பார். புகழ்பெற்ற நடிகரின் மனைவி, பின்னாளில் முதலமைச்சரின் மனைவி என ஆனபோதும், ஓர் எளிய  குடும்பப் பெண்மணியைப்போலவே எல்லோரிடமும் பழகுவார் ஜானகி. 

’எம்.ஜி.ஆரின் கைகள் கொடுத்துச் சிவந்தவை' என்பார்கள். ஜானகியின் கைகளையும் அப்படிச் சொல்லலாம். பொது இடங்களில் தன் கைகளில் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாலும், வீட்டில் உதவிகேட்டு வருவோருக்கு மனைவி ஜானகியின் கைகளால்தான் கொடுக்கச்செய்வார், எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்தில் எப்போதும் சமையல் அடுப்பு எரிந்த வண்ணம் இருக்கும். ஏழை-எளியவர் ஆனாலும் சொகுசு காரில் வந்திறங்கும் தொழிலதிபர்களானாலும் சாப்பிடவைக்காமல் அனுப்பமாட்டார்கள், எம்.ஜி.ஆர் - ஜானகி தம்பதி.

படப்பிடிப்புக்காக வெளிநாட்டுப் பயணங்களின்போது, மனைவி ஜானகியையும் உடன் அழைத்துச்செல்வார், எம்.ஜி.ஆர். சில நாட்களுக்குகூட மனைவியைப் பிரிந்து அவரால் இருக்கமுடியாது. அந்த அளவுக்கு ஒருவருக்கொருவர் அன்புகொண்டிருந்தனர். 

முதலமைச்சரானபின்னர் எம்.ஜி.ஆர் அரசியலிலும், அரசு நிர்வாகத்திலும் மனைவி ஜானகிக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. ஜானகியும் அவற்றில் குறுக்கிட்டதில்லை.

திருமண நாளன்று வெளியே செல்லாமல் மனைவி ஜானகியுடன் அன்றைய பொழுதைக் கழிப்பது எம்.ஜி.ஆரின் வழக்கம். அரசியல் பரபரப்புகளை மறந்து அன்று தங்களின் சினிமா நாட்களை இருவரும் அசைபோடுவார்கள் . உறவினர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். வெளியாட்களுக்கு அன்று அனுமதி கிடையாது. 

1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நோய்வாய்பட்டு, முதலில் அப்போலோவிலும் பிறகு அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டபோது, ஒரு தாயைப்போல எம்.ஜி.ஆரை அவர் கவனித்துக்கொண்டது மருத்துவர்களையே ஆச்சர்யப்படவைத்தது. எம்.ஜி.ஆர் உடல்நிலை சீராகித் திரும்பிவந்ததற்கு ஜானகி அம்மையார், ஒரு முக்கிய காரணம் என்று பலரும் குறிப்பிட்டார்கள். 

1986-ம் ஆண்டு ஜானகிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்நாளில் எம்.ஜி.ஆர் துடிதுடித்துப் போனார். அன்று முழுவதும் அவர் பூனைக்குட்டி போல, ராமாவரம் தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார். “ஜானுவுக்கு ஒண்ணும் ஆகாதுல்ல” என பார்ப்பவர்களிடம் எல்லாம் பரிதவிப்போடு கேட்டபடி இருந்தார், எம்.ஜி.ஆர். அத்தனை அன்பு, தன் துணைவியார் மீது எம்.ஜி.ஆருக்கு! 

1987 டிசம்பர் 24-ல், தமிழகத்தை நிலைகுலையவைத்த எம்.ஜி.ஆரின் மரணம் நிகழ்ந்த்து.  எதிர்பாராத அந்தச் சூழலில் அடுப்பங்கரையில் இருந்து ஆட்சிக்கட்டிலுக்கு வந்தார் ஜானகி. அற்ப ஆயுசில் ஆட்சி கவிழ்ந்தாலும் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற வரலாற்றுப் பெருமை பெற்றார், ஜானகி.

எம்.ஜி.ஆர். காலத்திலேயே உருவாகிவிட்டிருந்த கோஷ்டி மோதல் இந்த காலத்தில் விஸ்வரூபமெடுத்தது. கணிசமான எம்.எல்.ஏக்களுடன் ஜெயலலிதா கட்சியை உடைத்தார். ஜெயலலிதாவின் பரமவைரியான ஆர்.எம்.வீரப்பன் ஜெயலலிதாவை எதிர்க்க ஜானகியை அவருக்கு நேர் எதிராக நிறுத்தினார். ஜா அணி, ஜெ. அணி எனப் பிரிந்துநின்றது அதிமுக. அரசியல்களத்தை அதகளப்படுத்திய அக்காலகட்டத்தில், ஜானகி அம்மையாருக்கு தூக்கம் இல்லை என்றே சொல்லலாம். பல போராட்டங்களை அந்நாளில் சந்தித்தார் அவர். 

எம்.ஜி.ஆரின் தீவிர அரசியல் களத்தில் அதுவரை வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தவருக்கு களத்தில் முதல் ஆளாக நிற்கும் கட்டாயம் ஏற்பட்டது. அது முற்றிலும் புதிய அனுபவம். அத்தனை களேபரங்களிலும் நாகரிகமாகவே அரசியல் செய்தார் ஜானகி. 

ஆனாலும் ஜெயலிதாவுடன் மல்லுக்கட்டுவதன் மூலம் கணவரின் கட்சி கரைந்துகொண்டிருப்பதை எண்ணி ஒரு கட்டத்தில் அவர் வேதனைப்பட்டார். கணவரின் கடும் உழைப்பாலும், பலரின் போராட்டங்களாலும் உருவான கட்சி சிதைந்துபோய்க்கொண்டிருந்தது அவருக்குக் கவலையை அளித்தது.  இந்த நேரத்தில், 1989-ல் சட்டமன்றத் தேர்தல் வந்தது. எம்.ஜி.ஆர். தோற்றுவித்த கட்சி, அ.தி.மு.க (ஜா), அ.தி.மு.க (ஜெ) என இரண்டு அணிகளாக தேர்தல் களத்தில் நின்றன.

ஜானகி

சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெ. அணி, 27 இடங்களில் வென்றது. ஜானகி அணியில் பி.எச். பாண்டியன் மட்டுமே வென்றார். தேர்தல் தோல்வியை நாகரிகமாக ஏற்றுக்கொண்ட ஜானகி, கழகத்தவரின் ஆதரவு பெருமளவு ஜெயலலிதாவுக்கே உள்ளதை உணர்ந்தார். வீம்புக்காக தொடர்ந்து போராடி, கணவர் உருவாக்கிய கட்சியைக் காணாமல்போகச் செய்வதை விரும்பாமல் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தார். தனது அணியையும், கட்சி அலுவலகத்தையும் முறைப்படி ஒப்படைத்து விட்டு, கவுரவமாக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இத்தனைக்கும் அன்று தலைவர்களின் ஆதரவு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பெருமளவு ஆதரவு அவருக்கே இருந்த்து. ஆனாலும் கட்சியின் நலன்கருதி திடமான இந்த முடிவை எதிர்த்தார்.

இன்று அதிமுகவின் தலைமைக்கழகமாக உள்ள கட்டடம் ஜானகிக்குச் சொந்தமானது. அதையும் மனமுவந்து கட்சிக்காக விட்டுக்கொடுத்தார்  ஜானகி. இதன்பின்னரே கட்சியில் குழப்பம் தீர்ந்து ஒரு தெளிவு பிறந்தது. போட்டி அணி என ஒன்றில்லாததால் ஜெயலலிதாவின் தலைமையில் ஒருங்கிணைந்தனர். வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்தது அதிமுக.

தன் இறுதிக்காலத்தில் பேசமுடியாத்தால் பெரும் சிரமப்பட்ட எம்.ஜி.ஆர் தன்னைப்போன்று அடுத்த தலைமுறை சிரமப்படக்கூடாது என தான் வாழ்ந்த வீட்டையே காதுகேளதாதோர் பள்ளியாக மாற்றினார். கணவரின் இறுதிஆசையை நிறைவேற்ற அந்த பள்ளியின் நிர்வாகத்தினை கவனித்தபடி, தனது இறுதிக்காலத்தைக் கழித்த ஜானகி அம்மையார், 1996 மேமாதம் இதேநாளில் தனது 73-வது வயதில் மறைந்தார். 

கட்சியா...கத்திச்சண்டையா என்ற நிலை உருவானபோது, கட்சியைக் காக்க கவுரமான முடிவை எடுத்தவர் ஜானகி. அவருடைய நினைவுநாள் கடைப்பிடிக்கப்படும் இந்த நாளில், அதிமுகவில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டதைப்போன்ற குழப்பமான ஒரு சூழல் உருவாகியிருப்பது, துரதிர்ஷ்டவசமான ஒற்றுமை. சசிகலா ஒருவரை நீக்கிவிட்டால் கட்சியுடன் இணைவதாகச் சொல்கிறது ஓ.பி.எஸ் தரப்பு. கட்சியின் எதிர்காலம் குறித்த இந்த நிபந்தனைக்கு இன்றுவரை சசிகலா தரப்பிடம் இருந்து இதுவரை எந்த பதிலுமில்லை. ஆளும் அரசின் ஆயுள் குறைவதை உணர்ந்தும் எச்சரிக்கை அடையாமல் முரண்டு பிடிக்கிறது சசி தரப்பு. 

 

பரபரப்புக்காக கத்திவீசிக்கொண்டு கணவரின் கட்சியைக் காணாமல் போகச் செய்யாமல் கவுரவமாக அன்று ஜானகி எடுத்த முடிவுதான் அடுத்த இரண்டு தலைமுறைகளுக்கு அதன் ஆயுளை நீட்டித்தது. மோசமான இந்த பிளவினால் கட்சி அடுத்தடுத்து பிரச்னைகளை சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில், ஜானகி பற்றிய நினைவின் மூலம் தன் கட்சியைக் காப்பாற்ற, இரு அணிகளுக்கும் எம்.ஜி.ஆரின் ஆத்மா தரும் சமிக்ஞை என்று இதை எண்ணலாமோ?

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

714 கோடி ரூபாய்க்கு விலைப்போன ஓவியர் ஷான் மிஷெலின் படைப்பு

 
யுசாகா மேஸாவாபடத்தின் காப்புரிமைYUSAKU2020, INSTAGRAM Image caption714 கோடி ரூபாய் படைப்புடன் ஜப்பானிய ஃபேஷன் தொழில்முனைவர் யுசாகா மேஸாவா

மறைந்த ஓவியர் ஷான் மிஷெல் பாஸ்கியா வரைந்த ஓவியம் ஒன்று நியு யார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 110.5 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையாகியுள்ளது.

இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் 714 கோடி ரூபாய்.

ஓவியர் ஷான் மிஷெலின் முந்தைய மிகவும் விலையுயர்ந்த ஓவியத்தை காட்டிலும் இது கிட்டத்தட்ட இருமடங்கு விலையாகும்.

தற்போது ஓவியத்தை ஏலத்தில் எடுத்துள்ள நபர்தான் ஒரு ஆண்டுக்குமுன், ஷான் மிஷெலின் ஓவியத்தையும் விலைக்கு வாங்கியுள்ளார்.

மேலும், அமெரிக்காவை சேர்ந்த ஓவிய கலைஞர்கள் வரைந்து விற்பனையான படைப்புகளிலேயே இது மிகவும் அதிக விலைக்குப் போன படைப்பாகும். மேலும், பல சாதனைகளையும் இந்த ஓவியம் முறியடித்துள்ளது.

கருப்பின ஓவியர் ஒருவரின் எந்தக் கலைப்படைப்பிலும், மிக அதிக விலை போன படைப்பு இது. மேலும் மிகப்பெரிய தொகையை ஈட்டியுள்ளது மட்டுமின்றி 1980ம் ஆண்டிலிருந்து 100 மில்லியன் டாலருக்கு அதிகமான தொகைக்கு ஏலம் போயுள்ள முதல் ஓவியம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

GETTY IMAGESபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption2006 ஆம் ஆண்டு மிலனில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஷான் மிஷெல் பாஸ்கியாவின் ஓவியம்

பெயரிடப்படாத இந்த ஓவியம் ஆயில் ஸ்டிக், அக்ரிலிக் மற்றும் ஸ்ப்ரே வகை பெயிண்ட்களை கொண்டு வரையப்பட்டுள்ளது.

ஓர் மண்டையோடு வடிவை கொண்ட முகத்தை இந்த ஓவியம் சித்தரிக்கிறது.

ஷான் மிஷெலின் ஓவியத்தை 41 வயதுடைய ஜப்பானிய ஃபேஷன் தொழில்முனைவர் யுசாகா மேஸாவா ஏலத்தில் எடுத்துள்ளார்.

ஓவியர் ஷான் மிஷெலின் படைப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஓவியர் ஷான் மிஷெலின் படைப்பு

யுசாகா தான் பிறந்த நகரான சிபாவில் அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க திட்டமிட்டு வருகிறார்.

சோத்பிஸ் ஏல நிறுவனத்தில் இந்த ஓவியத்திற்காக சுமார் 10 நிமிடங்களுக்கு நடைபெற்ற ஏலம் மிகவும் பரபரப்பாக சென்றது.

இந்த படைப்பு தொலைப்பேசி வழியாக யுசாகாவிற்கு விற்கப்பட்ட போது அறையில் மகிழ்ச்சியும், கைத்தட்டல்களும் ஒலித்தன.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

யூடியூப் சேனல் தேடித்தந்த அடையாளம்!

 

 
tube_3165810f.jpg
 
 
 

திரைப்படத்துறையில் இயக்குநராகச் சாதிக்க வேண்டும் என்பதுதான் கோபிநாத்தின் கனவு. அந்தக் கனவை நனவாக்குவதற்காக நான்கு ஆண்டுகளாக உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். ஆனால், அந்தக் காலகட்டத்தில் நிலையான வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறார். இதற்கிடையில் திருமணமும் ஆகிவிட, குடும்பத்தின் நிலையான வருமானத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்து அவர் தொடங்கிய யூடியூப் சேனல்தான் ‘வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி’(Village Food Factory). இந்த சேனலின் பிரபலம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய இந்த சேனலைத் தற்போது 3,65,000-க்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கிறார்கள். கிராமிய சமையலை அடிப்படையாக வைத்து நடத்தப்படும் இந்த சேனலில் கோபிநாத்தின் தந்தை ஆறுமுகம் சமைக்கும் ஸ்டைலுக்காகவே ஒரு பெரிய ரசிகர் கூட்டமிருக்கிறது. இவர் சமைத்த 300 முட்டை பொடிமாஸ், 100 கோழிக் கால்கள் குழம்பு, ஒரு முழு ஆட்டுக்கறிக் குழம்பு போன்ற வீடியோக்களை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.

பிரம்மாண்ட சமையல்

திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத்துக்குத் தற்போது 26 வயது. இந்த சேனலில் பதிவிடப்படும் வீடியோக்களின் தயாரிப்பு வேலைகளை இவரும் இவருடைய தம்பி மணிகண்டனும் இணைந்து செய்கின்றனர். முதலில், தமிழ்த் திரைப்படத் துறை பற்றிய செய்திகளை வழங்கலாம் என்ற நோக்கத்தில் ‘தமிழ் ஃபேக்டரி’என்ற யூடியூப் சேனலைத் தொடங்கியிருக்கிறார் அவர். ஆனால், ஊரில் இருந்துகொண்டு திரைப்படச் செய்திகளை வழங்குவது அவ்வளவு எளிதானதாக இல்லை.

அதனால், எல்லோருக்கும் பொதுவான ஒரு விஷயத்தை வைத்து ஒரு சேனலை உருவாக்கலாம் என்று யோசித்தபோதுதான் சமையலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்த சேனல் இவ்வளவு பிரபலமாவதற்குக் காரணம் அவருடைய தந்தை ஆறுமுகம் பிரம்மாண்டமான சமையலைக் கையாளும் விதம்தான். அத்துடன், இவர்கள் சமையல் செய்யும் இயற்கையான சூழலும் பார்வையாளர்களை அதிகமாக வசீகரிக்கிறது.

1_3165813a.jpg

“சமையலை அடிப்படையாக வைத்துதான் சேனலைத் தொடங்க வேண்டும் என்று முடிவுசெய்தவுடன் எனக்கு இயங்குநர் ஷங்கரின் படங்கள்தான் ஞாபகத்துக்கு வந்தன. அவருடைய படங்கள் வெற்றிபெறுவதற்கு முக்கியக் காரணம் பிரம்மாண்டம். திரைப்படத்துறையில் பயன்படுத்தும் அந்தப் பிரம்மாண்ட உத்தியை ஏன் சமையலுக்கும் பயன்படுத்தக் கூடாது என்று யோசித்தேன். அப்படி யோசித்துதான் 100 கோழிக்கால்கள் குழம்பு, 300 முட்டைக் குழம்பு, 1000 முட்டை பொடிமாஸ், 100 கிலோ தர்ப்பூசணி சாறு எனப் பிரம்மாண்டமாகச் சமைத்தோம்.

எங்கள் குடும்பத்தில் எல்லோருக்குமே சமையலில் ஆர்வம் அதிகம். நான், அம்மா, அப்பா, தம்பி என எல்லோருமே நல்லா சமைப்போம். முதலில் வீடியோவில் ஆட்களைக் காட்டாமல் சமையலை மட்டும் காட்டலாம் என்றுதான் முடிவுசெய்தேன். ஆனால், அப்பா சமைக்கும் விதம் யதார்த்தமாக கேமராவில் பதிவானதைப் பார்த்தபோது அதில் ஒரு தனித்துவம் இருப்பதை உணர்ந்தேன். அதற்குப் பிறகு, அப்பாவை வைத்தே எல்லா வீடியோக்களையும் எடுக்க ஆரம்பித்தேன். “ என்கிறார் கோபிநாத்.

இவர்கள் சமையல் செய்து அதை அக்கம்பக்கத்தில் இருக்கும் எளிய மக்களுக்குக் கொடுப்பதை ஆரம்பத்திலிருந்தே வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள். ஆனால், அந்தக் காட்சிகள் முதல்கட்டமாக எடுத்த வீடியோக்களில் இடம்பெறவில்லை. அதனால் பல பார்வையாளர்களும் ஏன் இவ்வளவு உணவைச் சமைத்து வீணடிக்கிறீர்கள் என்று தொடர்ந்து கேட்டிருக்கிறார்கள். “இந்த சேனல் ஆரம்பித்ததிலிருந்தே சமைத்த பொருட்கள் எதையும் வீணாக்கவில்லை. ஆனால், பார்வையாளர்கள் தொடர்ந்து இந்தப் பிரச்சினையை எழுப்பியதால், சமைத்த உணவை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதையும் வீடியோவில் சேர்த்துவிட்டோம். அதற்குப் பிறகு, எங்களுடைய சேனலுக்குக் கூடுதல் வரவேற்பு கிடைத்தது” என்கிறார் அவர்.

2_3165812a.jpg

உயர்ந்தது வாழ்க்கைத் தரம்!

இவர்களுடைய சேனலில் ஆரம்பக் கட்டத்தில் இவர்கள் பதிவேற்றிய வீடியோக்களுக்கு மாத வருமானமாக 40,000 ரூபாய் கிடைத்திருக்கிறது. பின்னர், கொஞ்சம்கொஞ்சமாக ‘வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி’யின் ரசிகர்கள் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்கள் பதிவேற்றும் வீடியோக்கள் இரண்டு லட்சம் பார்வையாளர்களைக் கடக்கின்றன. இப்போது இவர்களுடைய மாத வருமானம் லட்சங்களைத் தொட்டிருக்கிறது. இந்த சேனலில் 86 வீடியோக்கள் பதிவேற்றப்பட்டிருக்கின்றன. மூன்று நாட்களுக்கு ஒருமுறை இவர்கள் புதுமையான சமையல் வீடியோக்களைப் பதிவேற்றுகிறார்கள்.

“இது ஒரு கூட்டு முயற்சியின் வெற்றி. என்னுடைய தம்பி மணிகண்டன், அப்பா, அம்மா, மனைவி இவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமாயிருக்காது. எங்களுடைய குடும்பம் சாதாரணக் குடும்பம். என்னுடைய அப்பா வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். பெயிண்ட்டிங், ஜவுளி வியாபாரம் போன்ற தொழில்களைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார். ஜவுளி வியாபாரத்துக்காக இந்தியா முழுக்கச் சுற்றியதால், அப்பாவுக்குப் பதினெட்டு மொழிகளில் சரளமாகப் பேசத் தெரியும். இந்த சேனல் ஆரம்பித்துப் பிரபலமான பிறகு, ஊரில் அப்பாவின் மரியாதை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அப்பாவுக்கு இப்படியொரு அடையாளத்தைத் தேடித்தரும் வாய்ப்புக் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

gopinath_3165811a.jpg

நான் உதவி இயக்குநராக இருந்தபோது முப்பது குறும்படங்களை இயக்கியிருக்கிறேன். ஆனால், ‘போஸ்ட் புரொடக் ஷன்’ செலவுக்குப் பணம் இல்லாமல் அந்தப் படங்கள் எதுவுமே வெளியாகவில்லை. இப்போது இந்த யூடியூப் சேனல் பெரிய ஊக்கத்தை எனக்கு அளித்திருக்கிறது. என்னுடைய திரைப்படக் கனவைப் பின்தொடர்வதற்கு அடித்தளத்தை அமைத்துக்கொடுத்திருக்கிறது” என்று உற்சாகமாகச் சொல்கிறார் கோபிநாத்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

வலைபாயுதே

facebook.com/mani pmp

ரயில் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே மக்களுக்கு இருக்கிற அறியாமை, `அன்ரிசர்வ்டு பெட்டி எங்க இருக்குதுனு தெரியாம ஓடுறதுதான்'!

twitter.com/aroobii_

மன்னிப்பை எதிர்பார்க்கிறீர்கள். கிடைக்காதபட்சத்தில் தண்டனைக்குத் தயாராகிவிடுகிறீர்கள். மற்றபடி நீங்கள் திருந்துவதெல்லாம் நிகழ்வதில்லை.

p101a.jpg

twitter.com/saravananucfc

குழந்தைகளிடம் பேசும்போது “ம் உன் மூஞ்சி''னு அவங்க சொல்றது திட்டா கொஞ்சலானே தெரியாமல் இருக்கிறேன்.

twitter.com/boopatymurugesh

நாட்ல பாகுபலி மட்டும்தான் பொண்டாட்டிகூட சேர்ந்து எதிரியோட சண்டை போடுறான். மத்தவனுக்கெல்லாம் பொண்டாட்டிகூட சண்டை போடவே நேரம் சரியாருக்கு.

twitter.com/jeytwits

எல்லாத்தையும் Take it easy-யா எடுத்துக்கிட்டு சந்தோஷமா வாழ்றவங்களை உலகம் ‘சொரணை கெட்டவன்’ எனப் பொறாமையோடு அழைக்கிறது.

p101c.jpg

twitter.com/mekalapugazh

கருணாநிதியாகணும்னுதான் நினைத்திருப்பார்போல.. வைகோவாகிக்கொண்டிருக்கிறார் சீமான்.

twitter.com/jeytwits

பெரு நகரங்களில் பிரபலமான நகைக்கடை துணிக்கடையின் கிளைகள் சிறு ஊர்களில் ஆரம்பிக்கப்படும்போது, அது ஊரின் வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

twitter.com/HAJAMYDEENNKS

இந்த வங்கிகள் போற போக்கைப் பார்த்தால், இனி ஃபேஸ்புக், ட்விட்டரில் மட்டும்தான் அக்கவுன்ட் ஓப்பன் பண்ண முடியும் போல!

twitter.com/writernaayon 

இதுவரை கேட்கப்பட்ட கேள்வி களிலேயே அதிகப் பதில்களைப் பெற்றிருக்கும் ஒரே கேள்வி...

“ஏன் லேட்டு?”

twitter.com/manipmp

போன் வந்த பிறகுதான் பொய் பேசுவது அதிகமாகியது!

p101d.jpg

twitter.com/KakkaiSithar

பேய்னா... இந்து ஆவி.

சாத்தான்னா... கிறிஸ்தவ ஆவி.

சைத்தான்னா... முஸ்லீம் ஆவி.

ஆவிகளுக்கே இங்க மதம் இருக்கு.

twitter.com/amuduarattai 

அதிகமுறை கட்சி மாறியது குழந்தைகளாகத்தான் இருக்கும்.


p101b.jpg

சென்ற வார இறுதி, உலகின் பல நாடுகளுக்கு நிம்மதியாகப் போகவில்லை. அமெரிக்கா, தனது எதிரி நாடுகளில் இருந்து தகவல்களைத் திருட சில ஹேக்கிங் சாஃப்ட்வேர்களைத் தயாரித்தது. அதை வேற ஒரு குழு திருடி, உலகின் பல கணினிகளை ஹேக் செய்துவிட்டது. இந்த ``ரான்சம்வேர்” அட்டாக் என்பது டிஜிட்டல் கடத்தலைப் போல. அதாவது நமது கணினியின் முழுக்கட்டுப் பாட்டையும் ஹேக்கர்கள் எடுத்துக் கொள்வார்கள். அதை விடுவிக்க, பணம் கேட்பார்கள். “பிட்காயின்” எனப்படும் டிஜிட்டல் கரன்ஸியைத் தந்தால்தான் ஹேக்கர்கள் கணினியை விடுவிப்பார்கள். 90-க்கும் அதிகமான நாடுகள் இந்த அட்டாக்கால் பாதிக்கப்பட்டன. இந்தியாவில் ஆந்திர போலீஸின் சர்வர்களும் சிக்கின. உலகின் மோசமான ஆன்லைன் தாக்குதல்களில் இது முக்கியமானது என்கிறார்கள் கணினி வல்லுநர்கள்.


p101e.jpg

மீட்டிங்... சாட்டிங்!

எப்போதும் ஆன்லைனில் சண்டையும் போட்டு, சமாதானமும் ஆகும் ட்விட்டர்கள், ஆண்டுக்கு ஒரு முறை சந்திப்பதுண்டு. ட்விட்டப் எனப்படும் இது போன்ற சந்திப்புகள் தினம் தினம் நடந்தாலும்,100-க்கும் மேற்பட்ட தமிழ் ட்விட்டர்கள் கூடும் மெகா ட்விட்டப்(TNMegaTweetup) ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடக்கும். இதுவரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர் நகரங்களில் நடந்த மெகா ட்விட்டப், இந்த முறை நெல்லை மாநகரில் நடந்தது. 120 ட்விட்டர்கள் கலந்துகொண்டார்கள். வெர்ச்சுவல் உலகிலேயே பேசி வந்த நண்பர்கள், நிஜத்தில் சந்தித்து பேசுவது மட்டுமே இந்த மெகா ட்விட்டப்பின் நோக்கம் என்கிறார்கள் இதன் ஒருங்கி்ணைப்பாளர்கள். அடுத்த ஆண்டு பாண்டிச்சேரியில் நடத்துவதாக சந்திப்பில் முடிவு செய்திருக்கிறார்கள். கலக்குங்க!

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

கோலியின் ரசிகையாக மாறிய ஜான்டி ரோட்சின் மகள்

தென்ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளருமான ஜான்டி ரோட்ஸின் செல்லமகள் இந்தியா இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் தீவிர ரசிகையாகி இருக்கிறாள்.

 
கோலியின் ரசிகையாக மாறிய ஜான்டி ரோட்சின் மகள்
 
தென்ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளருமான ஜான்டி ரோட்ஸ் இந்தியா மீதுள்ள நேசத்தின் காரணமாக தனது மகளுக்கு ‘இந்தியா’ என்று பெயர் வைத்தார்.

அவரது செல்லமகள் இந்தியா இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் தீவிர ரசிகையாகி இருக்கிறாள். விராட் கோலி போஸ்டரின் பின்னணியில் தனது மகள் இந்தியா இருப்பது போன்ற புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ள ரோட்ஸ், ‘விராட் கோலியின் இன்னொரு தீவிர ரசிகையை பாருங்கள். ‘இந்தியா’வை நாம் குறை சொல்ல முடியாது’ என்று கூறியுள்ளார்.

அதற்கு கோலி, ‘ஆகா... என்னவொரு அழகு. ஒட்டுமொத்த அழகையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த சிறுமி தனது சிறிய பையில் என்ன எடுத்து செல்கிறாள்’ என்று குறிப்பிட்டுள்ளார். கோலி இன்னொரு பதிவில், ‘அடுத்த சீசனில் பெங்களூரு அணி வலுவான அணியாக மீண்டு வரும்’ என்று கூறியிருக்கிறார்.

 

 

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

மலிங்கா, இஷாந்த், கெயில் ஹேர்ஸ்டைல்ல தோனியை பார்த்திருக்கீங்களா?

 
 
227792.jpg 227793.jpg 227794.jpg 227795.jpg 227796.jpg 227797.jpg 227798.jpg 227799.jpg 227800.jpg 227801.jpg 227802.jpg

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Bart und Nahaufnahme

வியட்னாமின் மாபெரும் தலைவர் ஹோ சி மின் பிறந்த நாள்.

வியட்நாம் விடுதலை அடைய முன்னின்று போராடிய போராளி, வியட்நாம் சுதந்திரமடைந்த பிறகு பிரதமராக, பின் ஜனாதிபதியாகப் பதவியேற்றும் இறக்கும் வரை அமெரிக்க வல்லரசுக்கு எதிராக வியட்நாமியப் போரைத் தான் இறக்கும் வரை முன்னின்று நடத்திய வீரத் தளபதி.

இவரது பெயரையே தங்கள் முக்கிய நகருக்குச் சூட்டிப் பெருமைப் படுத்தியுள்ளார்கள் வியட்நாமியர்.

மிகத் துணிச்சலான தலைவரை ஞாபகப்படுத்திக்கொள்வோம்

Bild könnte enthalten: 4 Personen, Personen, die stehen und Text

 
 
தமிழ் திரை உலகின் கலக்கும் அழகு நட்சத்திரம் லக்ஸ்மி மேனனுக்கு இன்று பிறந்த நாள்.
  • தொடங்கியவர்

 

ஒன்றோடொன்று சேராத காதணி ஜோடி 57 மில்லியன் டாலர்கள்!

  • தொடங்கியவர்

திமிங்கிலப் புராணம்!

 
1_3165289f.jpg
 
 
 

# நீலத் திமிங்கிலம் எவ்வளவு நீளத்துக்கு இருக்கும்? கிட்டத்தட்ட ஒரு போயிங் விமானத்தின் நீளத்துக்கு இருக்கும். எடையோ 180 டன் இருக்கும். நன்றாக வளர்ந்த திமிங்கிலங்கள் தினந்தோறும் சராசரியாக 3600 கிலோ எடையுள்ள நீர்வாழ் உயிரினங்களைச் சாப்பிட்டு வாழ்கின்றன. சாதாரணமாக மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நீலத் திமிங்கிலம் நீந்தும். தேவைப்பட்டால் இன்னும் வேகமாகவும் நீந்தும்.

# கொம்பெலும்பு என்ற திமிங்கிலத்துக்கு (Baleen whale) பற்கள் கிடையாது. கொம்பு எலும்பு இதன் அடையாளம்.

# ஸ்பெர்ம் திமிங்கலத்தின் (Sperm whale) தலை சதுர வடிவில் இருக்கும். இவற்றின் நீண்ட மூக்குப் பகுதியில் ஸ்பெர்மாஸெட்டி எனும் வெள்ளை மெழுகு உள்ளது. அந்த மெழுகிற்காக இந்தத் திமிங்கிலங்கள் வேட்டையாடப்படுகின்றன. இவை 15 முதல் 20 வரை திமிங்கிலங்கள் கொண்ட மந்தையாக வாழும் பண்புடையவை.

3_3165287a.jpg

# திமில் முகுதுத் திமிங்கிலங்களுக்கு (Humpback Whale) நீண்டத் துடுப்புகள் இருக்கும். அதிக ஒலி ஏற்படுத்தக்கூடிய திமிங்கிலங்களில் இதுவும் ஒன்று. ஒரே சமயத்தில் 35 நிமிடங்கள் வரைகூட இந்த ஒலியை ஓயாமல் எழுப்பும். துள்ளுவது, குட்டிக் கரணம் போடுவது போன்ற வித்தைகளையும் செய்யும்..

# சேய் திமிங்கலம் (Sei Whale) சராசரியாக 19 மீட்டர் நீளத்திலும் 28 டன் எடையிலும் இருக்கும். ஆர்க்டிக் பெருங்கடல் முதல் அண்டார்டிக் கடல் வரை எல்லாக் கடல்களிலும் காணப்படுகின்றன.

2_3165288a.jpg

# மூர்க்கத் திமிங்கலத்துக்கு (Killer Whales) ஆர்கா என்ற இன்னொரு பெயரும் உண்டு. சீல்களையும் பிற திமிங்கிலங்களையும் கொல்லக்கூடிய சக்தி கொண்டது. மனிதர்களிடம் சாந்தமாக நடந்துகொள்ளும் இவற்றைப் பிடித்துக் கடல்சார் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பயன்படுத்துகிறார்கள்.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

பீட்சா, கேக்... மினியேச்சர் ஆர்ட்டில் கலக்கும் பல் மருத்துவர் கிரித்திகா!

 

மினியேச்சர்

சித்திரமும் கைப்பழக்கம்” என்கிற பழமொழிகளுக்கேற்ப தன் சிறுவயதில் மினியேச்சர் பொருட்களின் மீது ஏற்பட்ட ஆர்வத்தை விடாமல் தொடர்ந்து வருகிறார் பல் மருத்துவரான கிரித்திகா பிரியதர்ஷினி. பென்சில் லெட் ஆர்ட், மெழுகு ஆர்ட், பேப்பர் டால், டாய் க்ளே என்று கலைகளில் அசத்துகிறார் இந்த மருத்துவர்

''என்னுடைய அம்மா சேலையில் எம்பிராய்டரிங் பண்ணுவாங்க. சின்ன வயசுல அம்மா பக்கத்துல உட்கார்ந்து அவங்க பண்ணறதை பாத்துட்டே இருப்பேன். அவங்க இல்லாதப்ப நானே எதையாவது செஞ்சு வீட்டை ரணக்களமாக்குவேன். ஆனா வீட்டுல யாரும் திட்டினதுகூட இல்ல. புள்ள எதோ விளையாடிட்டு இருக்கானு கண்டுக்காம விட்டிருவாங்க. அதுதான் என்னை இந்தளவுக்கு வளர்த்திருக்குனு நினைக்கிறேன். நான் மூணாவது படிக்கிறப்ப ஆரம்பிச்ச பயணம் இப்ப பல் மருத்துவரான பிறகும் தொடருது. வீட்டை விட்டு வெளிய கிளம்பினாலே நான் பார்க்கிற பொருட்களை எல்லாம் எப்படி வடிமைச்சிருப்பாங்கனு யோசிப்பேன். அதை வீட்டுக்கு வந்த பிறகு அப்படியே வடிவமைச்சு பார்ப்பேன்.

மினியேச்சர்

 

மினியேச்சர் மைக்ரோ ஆர்ட், பென்சில் லெட் ஆர்ட், மெழுகு சிலை ஆர்ட், பேப்பர் டால், டாய் க்ளேனு பல வகைகள்ல மினியேச்சர்கள் செய்வேன். இதுக்கான கிளாஸ் எங்க எடுக்கிறாங்கனு கேள்விப்பட்டு சென்னை, மும்பைனு பல இடங்களுக்குப் போய் பயிற்சி எடுத்துகிட்டேன்.

மினியேச்சர்


கிளாஸ்ல கத்துகிடுறதை வீட்ல வந்து செய்து பார்க்கிறப்ப பல பென்சில், மெழுகுனு வேஸ்ட் பண்ணியிருக்கேன். இருந்தாலும் விக்ரமாதியா மாறி விடாம உடைச்சு உடைச்சுதான் இன்னைக்கு பர்பெக்டா கத்துக்க பழகியிருக்கேன்.

கிரித்திகா

 


ஒரு முறை தப்பு பண்ணி அதுக்குப் பிறகு அழகா வடிவமைச்சுட்டோம்னா பிறகு நமக்கே நம்பிக்கை வந்துரும். அப்படிதான் நான் இந்தக் கலைகளை எல்லாம் கத்துகிட்டேன். உண்மையை சொல்லணும்னா நான் பி.டி.எஸ் படிக்கும்போது பற்களை பூச்சு எப்படி அரிக்குதுனு நானே மினியேச்சர்ல செய்ஞ்சு பார்ப்பேன். அப்படி படிச்சதுனால மனப்பாடம் பண்ணாமலேயே படிப்பை முடிக்க முடிஞ்சது. நான் பண்ணினதுலேயே ரொம்ப பிடிச்சதுனா அது கம்பியினால டால்தான். கம்பியை வைச்சு டால் தயாரிச்சு அதன் மேல பேப்பர் ஒட்டிட்டால் கம்பி டால் ரெடி. அதைப் பார்த்த என் கஸ்டமர்ஸ் பாராட்டினாங்க. நான் செய்ற பொருட்களை எல்லாம் என் ஃபேஸ்புக் பேஜ்ல போட்டோவா போஸ்ட் பண்ணுவேன். அப்படிதான் எனக்கு கஸ்டமர்களும் கிடைக்கிறாங்க. பெண்களுக்கு பிடிச்ச வாட்சை முழுக்க முழுக்க ஹேண்ட் மேடா பண்ணினேன். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. 4,500 ரூபாய்க்கு மெட்டீரியல் வாங்கி அதுல ரெண்டு டால் செய்யலாம்.ஒரு பொம்மையை 3500க்கு விற்கலாம். நம்ம எவ்வளவு கடின உழைப்பை இதுல போடுறோமோ, அந்தளவுக்கு நல்ல லாபமும் பார்க்க முடியும். புரொபஷனலா ஒரு ஆர்ட் கேலரி ஆரம்பிக்கணும். கிரியேட்டிவா நிறைய நுட்பக் கலைகளை கத்துக்கணும், பெஸ்ட் கலைஞர்னு பேர் வாங்கணும்.
ஆல் தி பெஸ்ட்..!!

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.