Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

 

சற்று முன் வெள்ளவத்தை கடற்கரையோரம் ஒதுங்கிய மர்ம உயிரினம்..

 

Sooriyan FM

Bild könnte enthalten: Ozean, Himmel, Wasser, im Freien und Natur

Bild könnte enthalten: Ozean, Wasser, Himmel, im Freien und Natur

Bild könnte enthalten: Ozean, Wasser, Himmel, im Freien und Natur

Bild könnte enthalten: Ozean, Wasser, Himmel, im Freien und Natur

வெள்ளவத்தை கடற்கரையில் ஒதுங்கியுள்ள இன்னும் அடையாளம் காணப்படாத உயிரினம் ஒன்று..

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
‘காலத்துக்கும் கௌரவம் வழங்குக’
 
 

article_1495107442-hkjgyi.jpgகாலம், நேரம் பார்த்து கருமங்களைச் செய்ய முற்படுபவர்கள் தொடர்ந்தும் தங்கள் கருமத்தைச் சிரத்தையுடன் செய்கின்றார்களா? 

நாள், நட்சத்திரங்களைப் பார்க்கும் சிலர், அன்றுடன் அதனை மறந்து சோம்பலுடன் உறங்க ஆரம்பிப்பதுண்டு. 

சுப காரியங்களை ஆரம்பிக்கும் போதுள்ள அதேயளவு உற்சாகம், மகிழ்ச்சியைத் தொடர்ந்தும் தங்களுடன் வைத்திருக்க வேண்டும். 

‘நல்லபடி வாழ்க’ என்பதன் அர்த்தம், ஊக்கத்துடன் என்றும் வாழ்க என்பதேயாகும். எமது முன்னோர்கள் எல்லாவற்றையும் காரண, காரியத்துடன்தான் செய்வார்கள். உற்சாகத்துடன் என்றும் பயணிப்பதற்காக வைபவங்கள், விழாக்கள் மூலம் ஆரம்பித்தார்கள். 

 காலத்துக்கும் கௌரவம் வழங்குக. 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

குதிரை சிகிச்சைக்கு 30,000 டாலர் செலவு செய்த பார்வையற்ற பெண்..!

அமெரிக்காவில், பார்வையற்ற ஒரு பெண் தனக்கு வழிகாட்டியாக இருந்துவரும் குதிரையின் சிகிச்சை செலவுக்காக 30,000 டாலர் வரை செலவழித்துள்ளார். 

119702lpr_09541.jpg

கோப்புப்படம்

அமெரிக்கா மற்றும் பல நாடுகளில், பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டியாக நாய்கள் மற்றும் குதிரைகள் இருந்துவருகின்றன. அமெரிக்காவில் மட்டும் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட நாய்கள் வழிகாட்டியாக இருந்துவருகின்றன. வழிகாட்டி நாய்கள் மற்றும் குதிரைகள், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு முன்சென்று வழிகாட்டும். அமெரிக்காவில் ஆன் எடி என்ற பெண்மணி வசித்து வருகிறார். அவர், பிறவியிலிருந்தே பார்வையற்றவர்.

 

அவருக்குப் பாண்டா என்ற குதிரை 14 ஆண்டுகளாக வழிகாட்டியாக இருந்துவருகிறது. ஒரு சில மாதங்களுக்கு முன்னர்,பாண்டாவுக்கு  உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனால் ஆன் எடி, பாண்டாவை சிகிச்சைக்கு அழைத்துச்சென்றார். அதன் குடல் பகுதியில் அடைப்பு ஏற்பட்டிருந்ததாக மருத்துவர்கள் கூறியிருந்தனர். இதையடுத்து, பாண்டாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 30,000 டாலர் வரை செலவாகியுள்ளது. மேலும், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவுசெய்யத் தயாராக இருப்பதாக, ஆன் எடி கூறியுள்ளார். 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

ஜன்னல்: வண்ணத்துப் பூச்சிகளின் வாசல்

 

 
 
Desktop_3166296f.jpg
 
 
 

நாம் வீட்டுக்குள் வந்து செல்ல, கதவுகள் இருக்கின்றன. ஆனால் சின்னஞ்சிறிய வண்ணத்துப் பூச்சியும் காற்றும் வீட்டுக்குள் வந்து செல்லும் கதவுகள் தேவையில்லை. ஜன்னல்கள் போதும். ஜன்னலகளை அவற்றின் கதவுகள் எனலாம். இந்த ஜன்னல்களில் பல வகை உள்ளன. அதன் அமைப்பு, பயன்படுத்தப்படும் இடங்களை வைத்து இந்த வகையைப் பிரிக்கலாம்.

ஜன்னல்களின் கலாச்சாரப் பின்புலத்தை வைத்தும் ஜன்னல்களைப் பிரிக்கலாம். உதாரணமாக இங்கிலாந்து வகை ஜன்னல், அமெரிக்க வகை ஜன்னல், சீன வகை ஜன்னலகள் போன்றவை அந்த நாட்டின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கக்கூடியவை. தமிழ்நாட்டுக் கட்டிடக் கலையில் செட்டிநாட்டு ஜன்னல் வகை பிரத்திபெற்றவை. அதுபோல மரங்களால் ஆன கேரள ஜன்னல் வகையும் தனித்துவமானது. அந்த மாதிரியான ஜன்னல்களின் ஒளிப் படத் தொகுப்பு

1_3166303a.jpg

2_3166302a.jpg

3_3166301a.jpg

4_3166300a.jpg

5_3166299a.jpg

6_3166298a.jpg

7_3166297a.jpg

 
 

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

கேன்ஸ் திரைப்பட விழாவும் வணக்கம் வைத்த இந்திய சின்ட்ரெல்லாவும்! 

 
 

2017 கேன்ஸ் திரைப்பட விழாவின் முதல் நாளான நேற்று, முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அணிந்துவந்த ஆடை பற்றிதான் சமூக வலைதளங்களில் பேச்சு.  #AishwaryaAtCannes,  #AishwaryaRaiBachchan, #Cannes2017 aishwarya போன்ற ஹேஷ் டேக்குகள், நேற்று முதல் ட்ரெண்ட்!

aishwarya rai
 

ஜொலிக்கும் நீல நிற சின்ட்ரெல்லா கவுனில், ரெட் கார்ப்பெட்டை அலகரித்தார், ஐஸ்வர்யா. அவர், ரெட் கார்ப்பெட்டில் வலம் வரும்போது, இந்தியப் பாரம்பர்யத்தை நினைவூட்டும் விதத்தில் வணக்கம் வைத்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டது.

 கடந்த முறை கேன்ஸ் திரைப்பட விழாவில், ஐஸ்வர்யா ராயின் லிப்ஸ்டிக் கலர், ட்ரால் செய்யப்பட்டது. இந்த ஆண்டு, அந்த ட்ரால் முழுவதையும் மறக்கச்செய்து, 'ஐஸ்வர்யா ராய் Back'  என்று புகழாரம் சூட்டவைத்துவிட்டார், முன்னாள் உலக அழகி ஐஸ்! 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தற்கொலை செல்ஃபி!
7a.jpg
சீனாவின் அன்ஹூய் நகரிலுள்ள வூஹூ பகுதியில் தற்கொலை முயற்சி என தீயணைப்பு நிலையத்திற்கு அழைப்பு வந்தது. பிரேக் மிதிக்காமல் சைரன் போட்டு ஸ்பாட்டிற்கு ஃபயர் சர்வீஸ் ஆட்கள் சென்றனர். 15 மாடிக்கட்டிடத்தில் ஜம்ப் முயற்சியில் இருந்த பெண்ணை மைக்ரோ நொடியில் வீரர் காப்பாற்றிய வீடியோ செம த்ரில். இறுதியில் அப்பெண் வீரருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்!

நெஞ்சுக்குள் பேனா!

சீனாவின் ஜியாங்சு நகரிலுள்ள சுசோவ் மருத்துவமனை டாக்டர்களுக்கு தங்களது எக்ஸ்‌ரேவையே நம்பமுடியவில்லை. பின்னே, பேஷண்டின் நெஞ்சுக்கூட்டில் 2 பேனாக்கள் இருந்தால் ஷாக் அடிக்காதா? வாங் என்பவர் தன் பால்யத்தில் பந்தயத்திற்காக தில்லாக விழுங்கிய பேனாக்களை 36 ஆண்டுகள் கழித்து மீட்டிருக்கின்றனர்! டாக்டர்கள் வாழ்க!

போதை சிப்ஸ்!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநில போலீஸ் கூட முதலில் நம்பவில்லை. ஆனால், ஹிடால்கோ கவுண்டி பகுதி கிடங்கில் சிப்ஸ் பாக்கெட்டுகளை கத்தையாக வைத்திருந்த கன்சால்ஸ், மெனாரியல் ஆகிய டீன் ஏஜ் இளைஞர்களின் திருட்டு முழி டவுட் தர, செக் செய்தால், அத்தனையும் கோகைன் பாக்கெட்டுகள்! 147 கிலோ கோகைனின் மதிப்பு 19 மில்லியன் டாலர்கள்!

லாட்டரி தீர்க்கதரிசி!

அமெரிக்காவின் கனெக்டிகட் நகரைச் சேர்ந்த கரோலின் ஓபிரையனுக்கு கோலாகல உற்சாகம். பின்னே, அன்று வாங்கிய சிடி நிறுவனத்தின் லாட்டரியில் திடீரென 3 மில்லியன் டாலர்கள் கிடைத்தால் சந்தோஷம் பொங்காதா? ஆனால் லாட்டரி பரிசைப்பற்றி முன்னமே கூறிய தீர்க்கதரிசியைத்தான் அம்மணி வலைபோட்டுத் தேடிவருகிறார். எங்களுக்கும் விலாசம் சொல்லுங்க!

விபத்துக்கு காரணம் சிலந்தி!

நம்புவார்களோ இல்லையோ, ஆனால் அமெரிக்காவின் மிச்சிகன் நகரைச் சேர்ந்த டிரைவர் அப்படித்தான் சொல்லியிருக்கிறார். லீல்னு கவுண்டி பகுதி சாலையில் காரில் வந்தவரின் தலைக்கு மேல் சிலந்தி தொங்கி தொந்தரவு செய்திருக்கிறது.

டென்ஷனான அவர் அதை அடிக்க முயன்ற நொடியில், கார் மரத்தை நோக்கி பாய்ந்து கவிழ்ந்துவிட்டது. டிரைவருக்கு கீறல்கூட இல்லை. ஆனால், பின்சீட் பயணிக்கு மணிக்கட்டில் சின்ன ஃப்ராக்சர். விசாரித்த போலீசுக்கு அவர் சொன்ன விளக்கம்தான் இந்த பிட்டின் தலைப்பு!

மார்க்கர் பேனா மூலம் அப்டேட்!

ஃப்ளோரிடா போலீசாரின் ஹைவேஸ் ரோந்தில், அவர்களுக்கு முன்னால் பாய்ந்து சென்ற காரை எதேச்சையாகப் பார்த்தனர். அதன் நம்பர் பிளேட் கண்களை உறுத்த, மடக்கி லென்ஸ் வைத்துப் பார்த்தால், அரசுக்கு காசு கட்டாமல் 20 ரூபாய் மார்க்கர் பேனாவிலேயே லைசென்ஸை 2018 வரை அப்டேட் செய்த கோக்குமாக்கு கோளாறு தெரிய வந்தது. போலீஸ் மால் வாங்காமல் வார்னிங் கொடுத்து அனுப்பியிருப்பதுதான் இதில் புதுசு. 
 

www.kungumam.co.

  • தொடங்கியவர்

அதிகப்படியான கொழுப்பு, தொப்பை காரணமாக டயட்டில் இருக்கும் தாய்லாந்து குரங்கு

 
உடல் பருமனால் பாதிக்கப்பட்ட குரங்கு. படம்: சாக்சய் லலித்
உடல் பருமனால் பாதிக்கப்பட்ட குரங்கு. படம்: சாக்சய் லலித்
 
 

சுற்றுலாப் பயணிகள் வீசும் துரித உணவுகளை உண்டு, உடல்பருமனால் அவதிப்பட்டு வந்த தாய்லாந்து குரங்கு மீட்கப்பட்டு, அதற்கு கடுமையான உணவுக் கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தாய்லாந்துக்கு அதிகம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் காடுகளில் சுற்றித் திரியும் குரங்குகளால் ஈர்க்கப்படுகின்றனர்.

அவற்றுடன் விளையாடும் பயணிகள், குரங்குகளுக்கு உணவுகளையும் அளிக்கின்றனர். துரித உணவுகளையும், சோடா பானங்களையும் தொடர்ச்சியாக உண்ணும் குரங்குகள் உடல் பருமனுக்கு ஆளாகின்றன.

சமூக ஊடகங்களில் பிரபலமான குரங்கு

அத்தகைய ஒரு குரங்கின் புகைப்படம் கடந்த மாதம் சமூக வலைதளங்களில் பிரபலமானது. இதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அந்தக் குரங்கைப் பிடித்துப் பரிசோதனை செய்தனர்.

இதுகுறித்துப் பேசிய வனத்துறை அதிகாரி கச்சா புகெம், ''அந்தக் குரங்கு உடல் பருமனால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அதுதான் அந்தப் பகுதியில் இருந்த மற்ற குரங்குகளின் தலைவனாகவும் இருந்தது. மிகுந்த போராட்டத்துக்குப் பிறகே அதைப் பிடிக்க முடிந்தது.

சாதாரணமாக குரங்குகள் 9 கிலோ வரை எடை கொண்டிருக்கும். கொழுப்பால் பாதிக்கப்பட்ட குரங்குகளுக்கு சுமார் 3 மடங்கு வரை எடை கூடும். பிடிபட்ட குரங்கு சுமார் 26 கிலோ எடை இருந்தது.

மற்ற குரங்குகளே அதற்கு உணவு கொண்டு வந்து அளித்துக் கொண்டிருந்தன. அதே நேரத்தில் குட்டிக் குரங்குகளுக்கும் அந்தக் குரங்கு உணவைப் பகிர்ந்து அளித்து வந்தது'' என்றார்.

குரங்குக்கு டயட் முறையை மேற்கொள்ளும் கால்நடை மருத்துவர் பேசும்போது, ''அந்தக் குரங்கு ஆபத்தான நிலையில் உள்ளது. அதற்கு எப்போது வேண்டுமானாலும் இதய நோயும், நீரிழிவும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

தற்போது 400 கிராம் புரதம், பழங்கள், காய்கறிகள் ஆகியவை மட்டுமே ஒரு நாளுக்கு இரு முறை வழங்கப்படுகின்றன'' என்று தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

நம்ம தமிழ் படத்துல வர பாட்டுக்களை எங்கேயிருந்து எல்லாம் ஆட்டைய போட்டு இருக்காங்க தெரியுமா?

  • தொடங்கியவர்

கான் திரைப்பட விழாவில் அசத்திய ஐஸ்வர்யா! (புகைப்படத் தொகுப்பு)

 
 

இந்திய திரைப்பட நடிகையும், அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய் பிரான்ஸில் நடைபெற்றுவரும் 70-ஆவது கான் திரைப்பட விழாவில் சின்ட்ரெல்லா ஆடை அணிந்து சிவப்பு கம்பளத்தில் வலம் வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகின்றன. அதுகுறித்த புகைப்பட தொகுப்பு இது.

கான் திரைப்பட விழாவில் 15வது வருடமாக ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொள்கிறார்.

கான் திரைப்பட விழாவில் 15வது வருடமாக ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொள்கிறார்.

 

 

சிலர் ஐஸ்வர்யாவை சின்ட்ரெல்லா என்றும்,. பார்பி டால் என்றும் சமூக வலைத்தளங்களில் புகழ் பாடி வருகின்றனர்.

சிலர் ஐஸ்வர்யாவை சின்ட்ரெல்லா என்றும்,. பார்பி டால் என்றும் சமூக வலைத்தளங்களில் புகழ் பாடி வருகின்றனர்.

 

 

இன்ஸ்டாகிராமிலும் ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்திருந்த ஆடை குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராமிலும் ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்திருந்த ஆடை குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

 

பிரபல ஆடை வடிமைப்பாளர்களிலிருந்து அழகு கலைஞர்கள் வரை அனைவரும் ஐஸ்வர்யா ராயின் ஆடையை புகழ்ந்து பேசியுள்ளனர்.

பிரபல ஆடை வடிமைப்பாளர்களிலிருந்து அழகு கலைஞர்கள் வரை அனைவரும் ஐஸ்வர்யா ராயின் ஆடையை புகழ்ந்து பேசியுள்ளனர்.

 

ஐஸ்வர்யா ராய் வயது குறித்து இன்ஸ்டாகிராமில், '' ஐஸ்வர்யா ராய்க்கு பத்து வயது குறைந்தது போல் தோன்றவில்லையா ?'' என்று இந்திய பிரிவின் எல்லி நாளிதழ் பதிவிட்டிருந்தது.

ஐஸ்வர்யா ராய் வயது குறித்து இன்ஸ்டாகிராமில், '' ஐஸ்வர்யா ராய்க்கு பத்து வயது குறைந்தது போல் தோன்றவில்லையா ?'' என்று இந்திய பிரிவின் எல்லி நாளிதழ் பதிவிட்டிருந்தது.

 

ஆடை வடிவமைப்பாளர் மைக்கெல் சின்கோ வடிவமைத்திருந்த சின்ட்ரெல்லா ஆடையை ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்திருந்தார்.

ஆடை வடிவமைப்பாளர் மைக்கெல் சின்கோ வடிவமைத்திருந்த சின்ட்ரெல்லா ஆடையை ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்திருந்தார்.

 

2003ல் கான் திரைப்பட விழாவின் ஜூரி குழுவில் முதன்முதலாக இணைந்தார்.

 

2003ல் கான் திரைப்பட விழாவின் ஜூரி குழுவில் முதன்முதலாக இணைந்தார்.

கடந்தாண்டு கான் திரைப்படவிழாவில் பர்ப்பிள் நிற உதட்டு சாயம் போட்டு வந்ததற்காக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.

கடந்தாண்டு கான் திரைப்படவிழாவில் பர்ப்பிள் நிற உதட்டு சாயம் போட்டு வந்ததற்காக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.

 

அனைவருக்கும் இந்தியா முறைப்படி வணக்கம் வைத்த பார்பி டால்

அனைவருக்கும் இந்தியா முறைப்படி வணக்கம் வைத்த பார்பி டால்

 

அவரது ஆடைய தாங்கிச் செல்ல ஐஸ்வர்யா ராய்க்கு பெரும் உதவி தேவைப்பட்டது.

அவரது ஆடைய தாங்கிச் செல்ல ஐஸ்வர்யா ராய்க்கு பெரும் உதவி தேவைப்பட்டது.

தேவைப்பட்டது. அவரது ஆடைய தாங்கிச் செல்ல ஐஸ்வர்யா ராய்க்கு பெரும் உதவி தேவைப்பட்டது.படத்தின்

ஐஸ்வர்யா ராயின் கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சன் சின்ட்ரெல்லா உடையை பாராட்டியுள்ளார்.

 

ஐஸ்வர்யா ராயின் கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சன் சின்ட்ரெல்லா உடையை பாராட்டியுள்ளார். ஐஸ்வர்யா ராயின் கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சன் சின்ட்ரெல்லா உடையை பாராட்டியுள்ளார்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஐஸ்வர்யா ராயின் கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சன் சின்ட்ரெல்லா உடையை பாராட்டியுள்ளார்.

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கொலம்பஸ் இறந்த தினம்: மே 20- 1506

 

இத்தாலிய நாடுகாண் பயணியும் வணிகரும் காலனித்துவவாதியும் ஆவார். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (எசுப்பானியா நாட்டுக்கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தாலியின் செனோவா என்ற குடியரசைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. கொலம்பசு ஆசியாவிற்கு, குறிப்பாக இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, கடைசியில் அவர் அடைந்தது இந்தியா என்றே நம்பினார்.

 
 
கொலம்பஸ் இறந்த தினம்: மே 20- 1506
 
இத்தாலிய நாடுகாண் பயணியும் வணிகரும் காலனித்துவவாதியும் ஆவார். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (எசுப்பானியா நாட்டுக்கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தாலியின் செனோவா என்ற குடியரசைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.

கொலம்பசு ஆசியாவிற்கு, குறிப்பாக இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, கடைசியில் அவர் அடைந்தது இந்தியா என்றே நம்பினார்.

கொலம்பசு அமெரிக்காவைக் கண்டுபிடித்தவராகக் கருதப்படுகின்றார். அவருடைய கடுமையான ஈடுபாட்டின் காரணமாக அமெரிக்காவைப் பற்றி ஐரோப்பா தெரிந்து கொள்ள வழிவகுத்தது. அத்தோடு இன்றைக்கு பல்வேறு கண்டங்களின் உறவிற்கும் அவருடைய கண்டுபிடிப்பே காரணமாகும்

உண்மையாக கொலம்பசு அமெரிக்காவை அடைந்த முதல் மனிதர் அல்லர். ஏனென்றால் அங்கே ஏற்கெனவே மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை அவர் கண்டறிந்தார். முதல் ஐரோப்பியரும் அல்லர். ஏனென்றால் வைக்கிங்கள்,வட ஐரோப்பாவிலிருந்து 11-ம் நூற்றாண்டிலேயே வட அமெரிக்காவிற்குச் சென்றுள்ளனர். இருந்தாலும், கொலம்பசின் பயணமே ஐரோப்பியர்களின் அமெரிக்கக்குடியேற்றத்திற்கு அடிப்படையாகும். அதுவே உரேசியா மற்றும் ஆப்பிரிக்காவை அமெரிக்காவுடன் இணைத்ததற்கு முக்கிய காரணமாகும்.

கொலம்பசு இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவாவில் 1451-ல் பிறந்தார். அவருடைய தந்தை டொமினிகோ கொலம்போ, ஒரு கம்பளித்துணி வியாபாரி. தாய் சுசான்னா போன்டனாரோசா. கொலம்பசிற்கு மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி.

1471-இல் கொலம்பசு எசுபெனோலா ஃபினான்சியர்சு நடத்திய ஒரு கப்பலில் சேர்ந்தார். அவர் கியோஸ் கியோசு (ஏஜியன் கடல்-இல் உள்ள ஒரு தீவு) பகுதியைச் சுற்றி வந்த அக்கப்பலில் ஒரு வருடம் வேலை செய்தார். சில நாட்கள் நாடு திரும்பிய பின் மறுபடியும் கியோசுப் பகுதியில் மற்றோர் ஆண்டு வேலை செய்தார். இக்கால கட்டத்தில் ஏகயன் துருக்கியர் வசம் இருந்தது(இவர்கள் கான்ஸ்டான்டினோபில்-ஐ மே 29, 1453-ல் கைப்பற்றியிருந்தனர்).

1476-இல் கொலம்பசு ஒரு வணிகப்பயணத்தை அட்லாண்டிக் கடலின் மீது மேற்கொண்டார். இந்தக் கப்பல் கேப் ஆஃப் செயின்ட் வின்சென்ட் இன் பிரெஞ்சு பிரைவெட்டீயெர்ஸ்-ஆல் தாக்கப்பட்டது. கொலம்பஸ் கப்பல் எரிந்து போய் அவர் ஆறு மைல்கள் நீந்திக் கரை சேர்ந்தார்.

1477-இல் கொலம்பசு லிஸ்பன் நகரில் வாழ்ந்தார். போர்த்துக்கல் கடல் தொடர்பான நடத்தைகளுக்கு ஒரு மையமாக இங்கிலாந்து, அயர்லாந்து, ஐசுலாந்து, மடீயெரா, த அசோர்சு, ஆப்பிரிக்காக்குச் செல்லும் கப்பல்களுடன் விளங்கியது. கொலம்பசின் உடன்பிறந்தார் பார்த்தலோமியோ லிசுபனில் ஒரு வரைபடங்களை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவ்வமயம் இவ்விரு உடன்பிறந்தவர்களும் வரைபடங்கள் வரைபவர் களாகவும், புத்தகங்களைச் சேமிப்பவர்களாகவும் விளங்கினர்.

கொலம்பசு வணிகக் கடற்பயணியாக போர்ச்சுகீசிய கப்பல்களில் மாறினார். 1477-ல் ஐசுலாந்துக்கும், 1478-இல் மடியெராவிற்கும் சர்க்கரை வாங்கவும், மேற்கு ஆப்பிரிக்க கடலோரங்களுக்கு 1482லும் 1485-இலும், போர்ச்சுகீசிய வணிக எல்லையான ஸாவோ ஜார்ஜ் டா மைனா என்ற கினியாக்கரைக்கும் சென்றார்.

கொலம்பசு பிலிப்பா பெரெசிட்டெல்லோ எ மோனிசு என்ற போர்ச்சுகீசியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்(1479-இல்). அவர்களுக்கு தியெகோ என்ற ஒரு மகன் பிறந்தான். பிலிப்பா 1485-இல் காலமானார். கொலம்பசு பின்னர் பீட்ரிஸ் என்ரிகுவெசு என்ற பெண்ணைத் திருமணம் செய்து (1488-இல்) கொண்டார். அவர்களுக்கு பெர்டினான்ட் என்ற மகன் பிறந்தான்.

கொலம்பசு முதலில் தன்னுடைய திட்டத்தை போர்ச்சுக்கல் அரச சபையில் 1485-இல் தெரிவித்தார். ஆனால் அரசரின் நிபுணர்கள் கொலம்பசின் வழி கொலம்பசு நினைப்பதை விடப் பெரியது என நம்பினர். அதனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். கொலம்பசு பின்னர் எசுப்பானியா அரசவையை நாடினார். ஆனால் பல நாட்கள் அலைக்கழிக்கப்பட்ட பின்னர் 1492-இல் அவர்களுடைய ஒப்புதலைப் பெற்றார். எசுப்பானிய அரசரும் அரசியும்( பெர்டினான்ட் ஆப் ஆரகன், காசிட்டைலின் இசபெல்லா) அப்போது தான் கடைசி முசுலிம் கோட்டையான கிரானாடா-வைக் கைப்பற்றியிருந்தனர். அவர்கள் பயணத்திற்கான செலவை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர். செலவில் பாதியைத் தனியாரிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு ஏற்கெனவே கொலம்பசு திட்டம் வகுத்திருந்தார். கொலம்பசு அலைகடலின் தளபதி என்று பட்டம் சூட்டப்பட்டு, புதிதாகக் கண்டுபிடிக்கும் தீவுகளுக்கு அவரே ஆளுநர் என்ற உறுதிமொழியும், வருவாயில் பெரும்பங்கை அவருக்குக் கொடுக்கவும் அரசவை ஒப்புக்கொண்டது.

அவ்வாண்டு ஆகத்து 3 அன்று, கொலம்பசு பாலோசில் இருந்து மூன்று கப்பல்களில் சாண்டா மரியா, நின்யா, பின்டா புறப்பட்டார். முதலில் அவர் கேனரித்தீவுகளை அடைந்தார். அங்கே ஒரு மாதம் தங்கினார். பின்னர் பெரும் பயணத்தைத் துவக்கினார். அவர் தன்னுடைய குறிப்பேடுகளில் தான் பயணித்த தூரத்தை விடக்குறைவான தூரத்தையே பதிவு செய்து தன்னுடைய மாலுமிகளை ஏமாற்றினார். இன்றைக்கும் அவர் முதலில் அடைந்த தீவு எது என்பதில் சர்ச்சை இருந்தாலும், அவர் பகாமாஸ்-இல் ஒரு தீவையே அடைந்திருக்க வேண்டும் என்பது உறுதி. அவர் அக்டோபர் 12, 1492-இல் கரையேறினார்.

அவர் அங்கிருந்த அமெரிக்கப் பழங்குடிகளை எதிர்கொண்டார். அவர்கள் டையனோ அல்லது ஆராவாக், மிகவும் அமைதியானவர்களாகவும், நட்புணர்வுடனும் விளங்கினர். அக்டோபர் 14, 1492 குறிப்பில் கொலம்பசு எசுப்பானியாவின் அரசர் பெர்டினான்டு, அரசி இசபெல்லா ஆகியோருக்கு டையாகுட்;நோ பற்றி பின்வருமாறு எழுதினார்.

"அரசர் விரும்பினால், அவர்கள் அனைவரையும் காஸ்டைலுக்குக் கொண்டு வரமுடியும்;அல்லது, அவர்களது தீவிலேயே பிணையாளிகளாக ஆக்கமுடியும்.அவர்களில் ஐம்பது பேரை உங்களுடைய பொறுப்பில் விடுகிறேன். நீங்கள் அவர்களை வைத்து என்ன செய்ய வேண்டுமோ செய்யலாம்." *கொலம்பசு அவருடைய முதல் பயணத்தில், கியூபாவிலும், லா எசுப்பானியோலா விலும் பயணத்திருந்தார் (அக்டோபர் 28-இல்).சாண்டா மரியா தரை தட்டியதால், அதை அவர் கைவிட வேண்டியதாயிற்று. கொலம்பசு லா நாவிடாட் என்ற குடியேற்றத்தை அங்கே அமைத்து அங்கே தன்னுடன் வந்த 39 பேரை விட்டு விட்டார்.

சனவரி 4, 1493-இல் அவர் நாடு திரும்பப் பயணப்பட்டார்.ஆனால், புயல் காரணமாக அவர் போர்ச்சுகல்லில் இறங்க வேண்டியதாயிற்று. அப்போது போர்ச்சுகல்லுக்கும், காஸ்டைலுக்குமான உறவு மிகவும் மோசமாக இருந்த படியால் அங்கே அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். பின்னர் மார்ச் 15-இல் அவர் எசுப்பானியாவை அடைந்தார்.

அங்கே அவர் தான் கொண்டு வந்த தங்கம் மற்றும் கொண்டு வந்த அமெரிக்கப்பழங்குடிகள் ஆகியவற்றை அரசவையில் ஒப்படைத்தார். அங்கே அதுவரை அறியப்படாதிருந்த புகையிலையையும், அன்னாசியையும் அன்னாக்கு ஆகியவைகளைப்பற்றி அங்கே விளக்கினார். அங்கே அவர் ஒரு மாவீரராக வரவேற்கப்பட்டார். அவருடைய கண்டுபிடிப்பு பற்றிய செய்தி உலகெங்கும் பரவியது.

மே 20, 1506-ல் கொலம்பஸ் இறந்தார். அப்போது கூட தான் கண்டுபிடித்தது, ஆசியாவின் கிழக்குக்கரை என்று உறுதியாக நம்பினார். அவருடைய இறப்பின் பின்கூட அவரது பயணம் தொடர்ந்தது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

இரான் தேர்தலில் பெண்களின் ஆர்வம் (புகைப்படத் தொகுப்பு)

 
 

இரான் அதிபர் தேர்தலில் சுமார் 40 மில்லியன் வாக்குகள் பதிவான நிலையில், அதிபரைத் தேர்ந்தெடுப்பதில் பெண்கள் காட்டிய ஆர்வம் குறித்த புகைப்படத் தொகுப்பு.

  • An Iranian woman (R) flashes the victory sign as she waits with others to cast her ballot in the Iranian presidential elections at a polling station in Tehran, Iran, 19 May 2017EPA

    வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் சுமார் 56 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.

  • Iranians vote in the twelfth presidential election on May 19, 2017 in the city of Qom, south of the capital Tehran, IranGETTY IMAGES

    குறைந்த எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு குறித்த அச்சங்கள் அடிப்படை ஆதாரமற்றவை என நிரூபணமாகியுள்ளது. சுமார் 70 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

  • A voting card held by a woman in an abaya - Qom, Iran - 19 May 2017GETTY IMAGES

    பழமைவாத மதகுருவான இப்ராகிம் ரைசி மற்றும் மிதவாத அதிபர் ஹசன் ரூஹானி ஆகிய இருவரிடையே போட்டி நிலவியது.

  • Iranians vote in the twelfth presidential election on May 19, 2017 in the city of Qom, south of the capital Tehran, IranGETTY IMAGES

    இரானில் 1963 ஆம் ஆண்டில்தான் முதன்முதலில் வாக்களிக்கும் உரிமையை பெண்கள் பெற்றனர். ஆனால், தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு வந்தனர்.

  • A woman residing in the US shows ink on her finger after casting her vote for the Iran Presidential election on May 19, 2017 at a polling station at Manassas Mosque in Manassas, VirginiaAFP/GETTY IMAGES

    ரூஹானியின் தலைமையின் கீழ், அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை இரான் ஏற்படுத்தியது. இந்த இரானிய பெண் விர்ஜினியாவில் உள்ள மசூதி ஒன்றில் தன்னுடைய வாக்குகளை பதிவு செய்தார்.

  • A veiled little Iranian girl stands in a line with her mother among women queing to vote in the Iranian presidential elections outside a polling station set up in the Abdol Azim shrine in the city of Shahre-Ray, south of the capital Tehran, Iran, 19 May 2017.EPA

    அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் திரண்டதால் வாக்கெடுப்பு பல மணி நேரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

  • Iranians pose fo selfie photos after casting their ballots in the Iranian presidential elections at a polling station in Tehran, Iran, 19 May 2017EPA

    பதிவான வாக்குகளில் சுமார் 58 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை ஹசன் ரூஹானி பெற்றார்.

  • Veiled Iranian women waits in a line to cast their ballots in the Iranian presidential elections at a polling station set up at the Abdol Azim shrine in the city of Shahre-Ray, south of the capital of Tehran, Iran, 19 May 2017EPA

    தெற்கு டெஹரானில் உள்ள ஷெஹர் ரே என்ற நகரத்தில் உள்ள மசூதி ஒன்றில் வாக்களிக்க திரண்டுள்ள பெண்கள் கூட்டம்

  • Woman holds her voting slip in Tehran, Iran - 19 May 2017GETTY IMAGES

    140 நாடுகளில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவர் டெஹ்ரானில் வாக்களித்த பெண்.

  • வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடத்திருப்பதாக ரூஹானியின் போட்டி வேட்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.GETTY IMAGES

    வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடத்திருப்பதாக ரூஹானியின் போட்டி வேட்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

‘தெளிந்த அன்பைப் பெற்றிடுங்கள்’
 

article_1495268509-oup9p9.jpgஎமது நாட்டில் உள்ள அரச அதிகாரிகள், அமைச்சர்களில் பலரும், குறித்த நேரத்தில் பொது நிகழ்ச்சிகள், மாநாடுகளுக்குச் சமூகமளிக்காமல் இருப்பது புதுமையல்ல. 

மிகச் சாதாரணமான நிகழ்ச்சிகளுக்கே பெரிய விளம்பரம் செய்யும் அரசியல்வாதிகள், தங்களுக்கு அதிகூடிய கௌரவம் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள். 

இந்த டாம்பீகமான வாழ்க்கை, எத்தனை நாட்களுக்கு? நாளைக்கு என்ன நடக்கும்? என்பதனை உணர்வதேயில்லை.மிகவும் பகட்டாக வாழ்ந்த ஒரு முன்னாள் அமைச்சர், பின்னாளில் பாண் வாங்குவதற்கு மக்களுடன் வரிசையில் காத்திருக்கும்போது, அவரை எவருமே கண்டுகொள்ளவில்லை. 

கடமையை ஒழுங்காகச் செய்வதுடன், எம்மைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து தெளிந்த அன்பைப் பெற்றிடுங்கள். கடமைகளைப் புறக்கணிப்பது, உலகை ஒதுக்குவது போலாகும்.  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஒவ்வொரு சதுர அடிக்கு 5 பாம்பு... 2500 மீட்டருக்கு தெறிக்கும் எரிமலை... உலகின் ஆபத்தான இடங்கள்! #DangerousPlaces

 
 

உலகின் மிக மோசமான இடங்களைப் பார்க்க ஆசையா?

பாம்பு

கிழக்கு கலிஃபோர்னியாவில் உள்ளது மரணப்பள்ளத்தாக்கு (Death Valley). இந்த உலகம்தான் நம் வீடு என்றால்  வீட்டில் இருக்கும் அடுப்புதான் இந்த இடம். அவ்வளவு வெப்பம். சென்னைவாசிகள் 42 டிகிரிக்கே ஃபிரிட்ஜுக்குள் ஒளிந்து கொள்கிறார்கள் ஆனால், அந்த இடத்தில் கிட்டத்தட்ட 57.7 செல்சியஸ் (134 ஃபேரன்ஹீட்) வரை வெப்பம் பதிவாகியுள்ளது. தண்ணீர் இல்லாமல் அதிகபட்சமாக 14 மணி நேரம்தான் அங்கு உயிருடன் வாழ முடியும்..

பெயர்: Death Valley
இடம்: Eastern California

 

பாம்பு


ஆப்ரிக்கா கண்டத்தில் எத்தியோப்பியாவில் உள்ளது இந்த டானாகில் பாலைவனம்.சராசரி வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் கொண்ட இந்த இடத்தில் எப்போது வேண்டுமானாலும் சீறும் எரிமலைகளும் உண்டு. இலவசமாக நச்சு வாயுக்களை உமிழும் வெந்நீர் ஊற்றுகளும் அடக்கம். எப்போது எது வெடிக்கும் என்றே தெரியாத இந்தக் கொடூரமான இடத்தை ’’உலகின் நரகம்’’ என்கிறார்கள். ஆனாலும் சாகசப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். 

பெயர்: Danakil Desert
இடம்: Ethiopia

 

பாம்பு


உலகிலேயே அதிவேகமான காற்று வீசும் இடம் இந்த மவுண்ட் வாஷிங்டன். அதிகபட்சமாக ஒரு மணிநேரத்திற்கு 203 மைல்கள் வேகத்தில்  இங்கு காற்று வீசியிருக்கிறது. (ஷோயப் அக்தர் போட்டதே மணிக்கு 160 கிமீ தான்) மேலும் மைனஸ் 40 டிகிரிக்கும் கீழ் குளிர், திடீரென்று ஏற்படும் பனிப்பொழிவு என மிகவும் ஆபத்தான இடமாக இருக்கும் இந்த சிகரம், உலகின் உயரமான  (கடல் மட்டத்தில் இருந்து 6,288 அடி) மலைச் சிகரங்களுள் ஒன்று..
பெயர்: Mount Washington (New Hampshire)
இடம்: United States of America

 

பாம்பு


இந்தோனேசியா - சுமத்ரா தீவில் உள்ளது இந்த மாபெரும் மலை.. பார்க்க அவ்வளவு ரம்மியமாக இருக்கும் இந்த மலைதான் கடந்த ஏழு வருடங்களாக அங்கு இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவருகிறது. ஆம், இந்த சினாபுங் மலை ஓர் எரிமலை. வருடத்திற்கு குறைந்தது இரண்டு முறையாவது சீற்றம் கொள்ளாமல் இருந்ததில்லை. கடைசியாக 2016-ஆம் ஆண்டு நவம்பர் வரை தொடர்கிறது. எப்போது சீற்றம் ஏற்படும் என்ற பயத்திலும், சீற்றம் ஏற்பட்டால் சுமார் 2,500 மீட்டர் வரை தெறிக்கும் எரிமலைக் கற்களிலும் , சூழ்ந்துகொள்ளும் புகைமண்டலத்திலும் யார்தான் வாழமுடியும்?

பெயர்: Mount Sinabung
இடம்: Indonesia

 

பாம்பு


இந்தப் படத்தைப் பார்த்த பிறகு விளக்கம் வேறு வேண்டுமா? பிரேசிலில் இருக்கும் குட்டித்தீவுதான் இந்த பாம்புத்தீவு. ஒரு சதுர அடிக்கு ஐந்து பாம்புகள் இருக்கிறதென்றால், இந்தத்தீவில் எத்தனை பாம்புகள் இருக்கும் என யூகித்துக்கொள்ளுங்கள். இங்கு இருக்கும் கலங்கரை விளக்கம்கூட ஆட்டோமேட்டட்தான்.. ஏனென்றால் இங்கிருக்கும் பாம்புகள் அனைத்தும் கொடிய விஷத்தன்மை உடையவை. போனால் மர்கயாதான் என்பதால், பிரேசில் அரசாங்கம் மனிதர்கள் செல்லத் தடை விதித்துள்ளது.

பெயர்: ilha de queimada grande - snake island
இடம்: Brazil

 

பாம்பு


 உலகத்தில் வித்தியாசமான, விதவிதமான உயிரினங்கள் அதிகம் வாழும் இடம் . இங்கிருக்கும் பறவை இனங்கள் மட்டுமே ஆயிரத்தைத் தாண்டுகிறது. கிட்டத்தட்ட அவதார் படத்தில் வரும் உலகின் மினியேச்சர் என்று இந்த இடத்தைச் சொல்லலாம். சரி, பார்த்தாலே சுற்றுலா செல்லத்தூண்டும் இடம் இந்த லிஸ்டில் எப்படி? பார்க்க மட்டும்தான் அழகு. உள்ளே சென்றால் ஆபத்துதான்.. வித்தியாசமான உயிரினங்கள் இருப்பதாலோ என்னவோ, இங்கே செடிகளை உரசினாலே எரிச்சலும், மயக்கமும் வரும் அளவுக்கு தாவரங்களில் தொடங்கி, விலங்குகள் அனைத்தும் மிகவும் ஆபத்தான, விஷத்தன்மை உடைய ஜந்துக்கள். அட எவற்றையும் தொடாமல் பார்த்துவிட்டு வரலாமா என்றால் இங்கு சென்று உடலில் சிறிய கீறல் ஏற்பட்டால் கூட ஒட்டுண்ணிகளால் மரணம் ஏற்படலாம். ரெடியா?

பெயர்: Madidi National Park
இடம்: Bolivia

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட நாள்: மே 21- 1991

 

ராஜீவ் காந்தி (ஆகஸ்ட் 20, 1944 - மே 21, 1991), பிரதமர் இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதி சுட்டுக் கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர். இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பிப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

 
 
 
 
ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட நாள்: மே 21- 1991
 
ராஜீவ் காந்தி (ஆகஸ்ட் 20, 1944 - மே 21, 1991), பிரதமர் இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதி சுட்டுக் கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர்.

இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பிப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்திய அமைதி காக்கும் படையினை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்று தர முயன்றார். இவர் 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.

ராஜீவ் காந்தியின் படுகொலை விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. பின்னர், அவரது உண்மையான பெயர் காயத்ரி என்று தெறியப்பட்டது.

ராஜீவ் காந்தி சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு சென்னை வந்து, பின்னர் ஒரு வெள்ளை அம்பாசிடரில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சார இடங்களை பார்வையிட்டார். அப்போது அவரை நேர்காணலிட வண்டியில் ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளர் அவருடன் பயணித்தார். அவர் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பிரச்சார பேரணியை அடைந்தபோது, அவர் தனது வண்டியை விட்டு வெளியே வந்து மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

வழியில், அவருக்கு பல நலவிரும்பிகள், காங்கிரஸ் கட்சி தொழிலாளர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் மாலை அணுவித்தனர். 22:21 மணிக்கு கொலையாளி தானு, அவரை அணுகி வாழ்த்தினாள். அவள் அவரது கால்களை தொட கீழே குனியும்போது அவளது ஆடையின் அடியே வைத்திருந்த ஆர் டி எக்ஸ் வெடிபொருளை வெடிக்கச் செய்தாள். ராஜீவ் காந்தி மற்றும் 14 மற்றவர்களும் அந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் அங்கிருந்த ஒரு புகைப்படக்காரரின் புகைப்பட கருவியில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி நினைவிடம் ஸ்ரீபெரும்புதூரில் கட்டப்பட்டு இன்று சிறுதொழில் நகரமாக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1851 - கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது.
 
* 1864 - ரஷ்ய-கோக்கசஸ் போர் முடிவடைந்தது.
 
* 1871 - பிரெஞ்சு அரசுப் படைகள் பாரிஸ் கம்யூனைத் தாக்கினார். ஒரு வார முற்றுகையில் 20,000 கொம்யூன் மக்கள் கொல்லப்பட்டு 38,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
* 1894 - 22 வயது பிரெஞ்சு கொடுங்கோலன் எமிலி ஹென்றி கழுத்து துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான்.
 
* 1904 - பாரிசில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) ஆரம்பிக்கப்பட்டது.
 
* 1917 - அட்லாண்டாவில் இடம்பெற்ற பெருந்தீயில் பெரும் அழிவு ஏற்பட்டது.
 
* 1941 - இரண்டாம் உலகப் போர்: பிரேசிலில் இருந்து 950 மைல் தூரத்தில் ரொபின் மூர் என்ற அமெரிக்க போர்க் கப்பல் ஜெர்மனியின் யூ-படகினால் மூழ்கடிக்கப்பட்டது.
 
* 1991 - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார்.

* 1991 - எதியோப்பியாவின் கம்யூனிச அரசுத் தலைவர் மெங்கிஸ்டு ஹைலி மரியாம் நாட்டில் இருந்து தப்பி வெளியேறினார். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
 
* 1994 - ஏமன் மக்களாட்சிக் குடியரசு ஏமன் குடியரசில் இருந்து விலகியது.
 
* 1996 - தான்சானியாவில் பூக்கோவா என்ற என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

* 1998 - 32 ஆண்டுகள் இந்தோனேசியாவை ஆண்ட சுகார்ட்டோ பதவி விலகினார்.
 
* 2003 - வடக்கு அல்ஜீரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
 
* 2006 - மட்டக்களப்பு மாவட்டத் துணைத் தளபதி கேணல் ரமணன் நினைவு நாள்.
 
 

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

பனியில் மூழ்கியது உலக விதை வங்கி!

 
 

இயற்கைப் பேரிடர்களால் அல்லது மனிதர்களால் ஏற்படும் பேராபத்தினால் மனித இனம் உணவில்லாமல் தவிப்பதைத் தடுப்பதற்காக நார்வே அரசு மற்றும் விவசாய அமைப்புகளின்  சார்பில், உலக விதை வங்கி அமைக்கப்பட்டிருந்தது.

உலக விதை வங்கி

இதற்காக நார்வேயின் ஸ்பிட்பெர்ஜென் தீவில், கடந்த 2008 ம் ஆண்டு சுரங்கம் அமைக்கப்பட்டு அதில் விதைகள் அடங்கிய பெட்டிகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த விதைகள் -18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், உலக வெப்பமயமாதல் காரணமாக, அங்கு உருகிய பனிக்கட்டிகள் விதைகள் வைக்கப்பட்டிருந்த சுரங்கத்திற்குள் சென்றது. அங்கு பெய்த கனமழை காரணமாக தண்ணீரும் சேர்ந்து சென்றது. இருப்பினும், அந்த விதைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளை தண்ணீர் பாதிக்கவில்லை. இதனால் தற்போதைக்கு அந்த விதைகள் பாதுகாப்பாக உள்ளது. இருப்பினும், எதிர்பாராவிதமாக நடந்த இந்த இயற்கைச் சீற்றமானது, பெரிய ஆபத்து வந்தால், மனிதர்களுக்கு உணவு கிடைப்பதில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

இதனையடுத்து விதைகளைப் பாதுகாக்கும் வகையில் விஞ்ஞானிகள் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அந்தச் சுரங்கத்திற்ககுள் தண்ணீர் புகாத வகையில், அகழிகள் அமைத்து வருகின்றனர். இதன் மூலம் அங்கு வரும் தண்ணீர் இதன் வழியாகக் கடத்தப்படும். அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்னணு சாதனங்கள் வெப்பத்தை உருவாக்குவதால், அதனையும் அகற்றினர். வெள்ளம் வந்தால் அதனை அகற்றும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பாடும் பறவை... இறந்ததுபோல் ஏன் நடித்தது? - சூஃபி கதையின் தத்துவம்

 
 

சூஃபி கதைகள் ஒரே ஒரு கருத்தையோ, தத்துவத்தையோ மட்டும் வெளிப்படுத்துவதில்லை. வெளிப்படையாகத் தெரிவதையும் தாண்டி, நுட்பமாக அவை உணர்த்தும் கருத்துகள் அபாரமானவை. அப்படிப்பட்ட ஒரு சூஃபி கதை இது... 

சூஃபி

அந்த வியாபாரி, சமூகத்தில் வெற்றிபெற்ற மனிதன். அழகான மனைவி, அன்பான குழந்தைகள், பிரமாண்டமான மாளிகை, செல்வம், ஊரில் செல்வாக்கு... எல்லாம் இருந்தால், சமூகத்தின் பார்வைக்கு வெற்றிபெற்ற மனிதன்தானே! இவை மட்டுமல்ல... அவன் தனக்குத்தானே கர்வப்பட்டுக்கொள்ள யாரிடமும் இல்லாத ஒன்று அவனிடம் இருந்தது; அது ஒரு விசித்திரமான பாடும் பறவை. வீட்டுத் தோட்டத்தில் ஒரு பெரிய கூண்டில், வேண்டிய அனைத்து வசதிகளுடன் அதைப் பாதுகாப்பாக வைத்திருந்தான். அந்தப் பறவைக்குப் பிடித்தமான உணவுகள் அனைத்தையும் கொடுத்து வளர்த்து வந்தான். வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால், அவர்களை பறவையிடம் அழைத்துச் செல்வான். பறவை பாடும். அதைக் கேட்டு, வந்தவர்கள் மெய் மறந்து நிற்பார்கள். வியாபாரி, பெருமையுடன் எல்லோரையும் பார்ப்பான். பிறகு, பறவைக்கு சுவையான நொறுக்குத்தீனிகளை அள்ளி வீசுவான். வீடு திரும்புவான். 

ஒரு நாள் வியாபாரி ஓர் அயல்நாட்டுப் பயணத்துக்காகக் கிளம்பினான். மனைவி, மகள்கள், பிள்ளைகளிடம், வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும்போது என்ன வாங்கி வர வேண்டும் என விசாரித்தான். நகைகள், பட்டு, பொம்மைகள், ஆபரணங்கள்... என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம். அத்தனையையும் கேட்டுக்கொண்டான். தோட்டத்துக்குப் போனான். அவனுடைய செல்லப் பறவையிடம், தான் வெளிநாட்டுப் பயணத்துக்குச் செல்வதைச் சொன்னான். ``உனக்கு என்ன வேண்டுமோ கேள்! வாங்கி வருகிறேன்’’ என்றான்.

``எது கேட்டாலும் கிடைக்குமா?’’ 

``நிச்சயமாக... என்ன வேண்டும் கேள்!’’ 

``வெளிநாட்டில் அல்லது போகும் வழியில் என் இனத்தைச் சேர்ந்த பறவை எதையாவது பார்த்தால், ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும்... முடியுமா?’’ 

``என்ன அது/’’ 

``நான் இங்கே எப்படி இருக்கிறேன், என் நிலை என்ன என்பதை மட்டும் சொன்னால் போதும்.’’

``அதற்கென்ன... சொல்லிவிடுகிறேன். வேறு ஒன்றும் வேண்டாமா? நீ உன்னைப் பார்த்து ரசிக்க தங்கத்தால் அலங்கரித்த கண்ணாடி, விலையுயர்ந்த சுவையான பருப்பு, தானியங்கள்..?’’

``வேண்டாம்.’’ சொல்லிவிட்டு பறவை கூண்டின் உயரே இருந்த மர ஊஞ்சலில் போய் அமர்ந்துகொண்டது. 

சூஃபி கதை

வியாபாரி வெளிநாட்டுக்குப் போனான். வியாபாரம் நல்லபடியாக முடிந்தது. வீட்டில் உள்ளவர்கள் கேட்ட பொருள்களைத் தேடித் தேடி வாங்கினான். எல்லா வேலைகளும் முடிந்தன. இறுதியாக அவன் வளர்த்த பறவையின் விருப்பம் நிறைவேற வேண்டுமே! அதன் இனத்தைச் சேர்ந்த பறவைகள் எங்கேயாவது இருக்கின்றனவா எனத் தேடினான். ஊர் முழுக்க அலைந்த பிறகு, ஒரு நந்தவனத்தில் அவற்றைப் பார்த்தான். ஒரு மரத்தின் மேல், இவன் வளர்க்கும் பறவை இனத்தைச் சேர்ந்த மூன்று பறவைகள் அமர்ந்திருந்தன. அவற்றின் அருகே போனான். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். 

``என் மாளிகையில் உங்கள் இனத்தைச் சேர்ந்த பறவை ஒன்று இருக்கிறது. அது தன் இனத்தைச் சேர்ந்த பறவைகளைப் பார்த்தால் அதன் நிலைமையைச் சொல்லச் சொன்னது. சுகமான மெத்தை, ஊஞ்சல், வேளைக்கு அறுசுவை உணவுகள் அனைத்தையும் கொடுத்து, ஒரு கூண்டில் அதை வளர்த்துவருகிறேன்...’’ 

சூஃபி - பறவைகள்

அவன் முழுமையாகக்கூடச் சொல்லி முடிக்கவில்லை. கேட்டுக்கொண்டிருந்த பறவைகளில் ஒன்றின் உடல் நடுங்கியது. அது மரத்தின் உச்சியில் இருந்து `சொத்’தென்று தரையில் விழுந்தது. லேசாகத் துடித்து, பிறகு மூச்சுப் பேச்சில்லாமல் அடங்கிப்போனது. வியாபாரியால் இதைத் தாங்க முடியவில்லை. அந்தப் பறவை இறந்துபோனதை உணர்ந்தான். `அது ஏன் இறந்தது?’ என்கிற கேள்வி அவன் மனதைப் பிசைந்தது. பெரும் துயரத்தோடு தான் தங்கியிருந்த இடம் நோக்கி நடந்தான். 

திரும்பி வரும் வழியெல்லாம் `அந்தப் பறவை ஏன் இறந்தது?’ என்கிற கேள்வி அவனைத் துளைத்துக்கொண்டே இருந்தது. வியாபாரத்தில் சம்பாதித்த பணம், மனைவி, பிள்ளைகளுக்காக அவன் கொண்டு செல்லும் விலையுயர்ந்த பொருள்கள்... எதுவும் அவன் நினைவில் இல்லை. மரத்தில் இருந்து அந்தப் பறவை இறந்த காட்சி மட்டுமே திரும்பத் திரும்ப வந்து அவனை அலைக்கழித்தது. சாப்பாடு இறங்கவில்லை, கப்பலில் உடன் வந்தவர்களுடன் பேசக்கூடப் பிடிக்கவில்லை. ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தான். 

மனைவி, மகள்கள், பிள்ளைகள் அவன் கொண்டு வந்த பரிசுப் பொருள்களைப் பார்த்து பிரமித்துப் போனார்கள். அவனைப் பாராட்டித் தள்ளினார்கள். அவன் எல்லாவற்றுக்கும் லேசாகத் தலையசைத்து, புன்னகைத்தானே தவிர,  பதில் பேசவில்லை. தன் வளர்ப்புப் பறவையை எப்படிப் பார்க்கப் போகிறோம், அதற்கு எப்படி நடந்ததைச் சொல்வது என்கிற வேதனை அவனை வதைத்துக்கொண்டிருந்தது. 

அடுத்த நாள் ஒருவழியாக, தன்னைத் தேற்றிக்கொண்டு அந்தப் பறவையிடம் போனான். அது, கூண்டின் மேலே இருந்த சிறிய மரக்கட்டை ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தது. வியாபாரி, தயங்கித் தயங்கி, பறவைகளைப் பார்த்ததையும் நடந்ததையும் சொன்னான். அவ்வளவுதான்... கேட்டுக்கொண்டிருந்த பறவையின் உடல் நடுங்கியது; அது ஊஞ்சலில் இருந்து `சொத்’தென்று கீழே கூண்டுக்குள் விழுந்தது. அசைவற்று அப்படியே கிடந்தது. அவன் பதறிப்போனான். அவசர அவசரமாகக் கூண்டைத் திறந்தான். நடுங்கும் கரங்களால் அந்தப் பறவையைத் தூக்கினான். உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு தேம்பி அழ ஆரம்பித்தான். திடீரென்று அது நடந்தது... அந்தப் பறவை சட்டென்று தன் சிறகுகளை அசைத்து, அவன் கைகளில் இருந்து பறந்துபோய் அருகில் இருந்த ஒரு மரத்தின் மேல் அமர்ந்துகொண்டது. 

சூஃபி - பறவை

பறவை தன்னை ஏமாற்றிவிட்டது என்பதை அவன் புரிந்துகொண்டான். பிறகு ஒருவாறாகத் தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டு அதனிடம் கேட்டான்... ``இது என்ன தந்திரம்? உனக்கு நான் என்ன குறை வைத்தேன்? இறந்ததுபோல் ஏன் நடித்தாய்? சொல்!’’ 

``நீ பார்த்தாயே... என் உறவுக்காரப் பறவை... அது என் அழகு, வாழ்க்கை மொத்தமும் இந்தக் கூண்டுக்குள் சிறைவைக்கப்பட்டிருப்பதை எனக்கு உணர்த்திவிட்டது. என் குரலுக்கு மயங்கினாய். பாட வைத்தாய். நீ பாடச் சொல்வதும், அதற்கு இணங்கி நான் பாடுவதும்கூட எனக்குப் பிடித்துத்தான் இருந்தது. ஆனால், எந்தப் பறவையும் கூண்டு வாழ்க்கையை விரும்புவதில்லை. அந்த வாழ்க்கை எனக்கு இனி வேண்டாம். பறத்தல்தான் என் இயல்பு, எனக்கு வேண்டியது சுதந்திரம்...’’ 

அந்தப் பறவை வானில் கிளம்பி, சிறகசைத்துப் பறந்து அவன் கண்ணில் இருந்து மறைந்தது. 

*** 

 

இதைத்தான் கவிஞர் கல்யாண்ஜி, `` `பறவை’ என்றால் `பறக்கும்’ எனும் பாடம் முதலில் படி’ ’என ஒரு கவிதையில் சொல்கிறார். அந்த வியாபாரியைப் பொறுத்தவரை பறவை, ஒரு மதிப்புமிக்க பொருள். பறவைக்கோ சிறை. சுதந்திரமாகப் பறக்க முடியாமல், பாடுவதால் மட்டும் என்ன கிடைத்துவிடும்? ஒரு பக்கம், அவன் தரப்பில், அவனுடைய கர்வத்துக்குக் கிடைத்த தண்டனை என இதைக்கொள்ளலாம். மற்றொருபுறம், பறவையின் தரப்பிலும் ஒரு கருத்து உண்டு. அந்தப் பறவை தன் அழகையும் தன் குரலையும் விரும்பியதைப்போல, நம்மை நாமே விரும்ப ஆரம்பித்தால் காலம் முழுக்க சிறைக்குள்ளேயே இருக்கவேண்டியதுதான்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

எஜமானரின் வீட்டை காக்க கரடியை விரட்டியடிக்கும் நாய்

  • தொடங்கியவர்

21.05.427: கிரேக்க தத்துவ  ஞானி பிளேட்டோ பிறந்த தினம் இன்று!

 

 
plato

 

பிளேட்டோ பெரும் செல்வாக்குள்ள கிரேக்கத் தத்துவஞானியாவார். இவர் சாக்கிரட்டீசின் சீடர், அரிஸ்டாட்டிலின் குரு. பிளாட்டோ தலைசிறந்த கிரேக்க தத்துவஞானி, கணிதவியல் அறிஞராவார். சாக்ரடீஸின் மாணவரான இவர் தத்துவ தர்க்கங்களை எழுதியுள்ளார்.

இவர் மேற்கு உலகின் முதல் கல்விக் கூடமாக ஏதென்ஸ் நகரில் அகாடமியை நிறுவினார். இவர் தனது ஆதரவாளர் சாக்ரடீஸ் மற்றும் தனது மாணவர் அரிஸ்டாட்டிலின் உடன் இணைந்து மேற்குலகின் தத்துவம் மற்றும் அறிவியலுக்கான அடிக்கல்லை நாட்டினார்.

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்.: ஒவ்வொரு அணிகளும் எத்தனை கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தன

 

ஐ.பி.எல். சீசன் 10 தொடரில் ஒவ்வொரு அணிகளும் எத்தனை கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளன என்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

 
 
 
 
ஐ.பி.எல்.: ஒவ்வொரு அணிகளும் எத்தனை கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தன
 
ஐ.பி.எல். சீசன்-10 கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. சுமார் 47 நாட்கள் கொண்ட இந்த தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இந்த தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத் லயன்ஸ் அணி 8 அணிகள் பங்கேற்றன.

ஒவ்வொரு அணிகளும் தங்களது சொந்த மைதானம் மற்றும் வெளியில் என மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதியது. அதனடிப்படையில் ஒவ்வொரு அணிகளும் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடின.

மும்பை, கொல்கத்தா, புனே மற்றும் ஐதராபாத் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறின. எலிமினேட்டர் சுற்றுடன் ஐதராபாத் அணி வெளியேறியது. குவாலியைபர்-2 சுற்றுடன் கொல்கத்தா அணி வெளியேறியுள்ளது.

இன்று மும்பை - புனே அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

போட்டிகள் அனைத்தும் ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, மொகாலி, கான்பூர், புனே, பெங்களூரு, ராஜ்கோட் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இதற்காக 8 அணிகளும் அங்கும்மிங்கும் என பறந்த சென்றன. இப்படி ஒவ்வொரு அணிகளும் எத்தனை கிலோ மீட்டர் பயணம் செய்தன என்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளன.

அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18530 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது. இது டெல்லி டேர்டெவில்ஸ் அணி பயணம் செய்ததை விட இரண்டு மடங்காகும். அத்துடன் உலகின் நீண்ட நேரம் பயணமான நியூசிலாந்து - கத்தாரை விட அதிக தூரமாகும்.

கிங்ஸ் லெவன் பங்சாப் அணி 11936 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது. இது ஆஸ்திரேலியா இந்தியாவில் சுற்றப் பயணம் செய்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதற்காக இந்திய அணி பறந்த தூரத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

குஜராத் லயன்ஸ் அணி 11441 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்துள்ளது. இது அட்லாண்டிக் வழியாக நியூயார்க் - லண்டன் செல்லும் தூரத்தை விட இரண்டு மடங்கு அதிகமான தூரம் ஆகும்.

மும்பை இந்தியன்ஸ் அணி 11 420 கிலோ மீட்டர் தூரமும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 383 கிலோ மீட்டர் தூரமும், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி 9700 கிலோ மீட்டர் தூரமும், டெல்லி டேர்டெவில்ஸ் அணி 9655 கிலோ மீட்டர் தூரமும் பயணம் செய்துள்ளன.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்
‘தெளிந்த அன்பைப் பெற்றிடுங்கள்’
 
 

article_1495268509-oup9p9.jpgஎமது நாட்டில் உள்ள அரச அதிகாரிகள், அமைச்சர்களில் பலரும், குறித்த நேரத்தில் பொது நிகழ்ச்சிகள், மாநாடுகளுக்குச் சமூகமளிக்காமல் இருப்பது புதுமையல்ல. 

மிகச் சாதாரணமான நிகழ்ச்சிகளுக்கே பெரிய விளம்பரம் செய்யும் அரசியல்வாதிகள், தங்களுக்கு அதிகூடிய கௌரவம் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள். 

இந்த டாம்பீகமான வாழ்க்கை, எத்தனை நாட்களுக்கு? நாளைக்கு என்ன நடக்கும்? என்பதனை உணர்வதேயில்லை.மிகவும் பகட்டாக வாழ்ந்த ஒரு முன்னாள் அமைச்சர், பின்னாளில் பாண் வாங்குவதற்கு மக்களுடன் வரிசையில் காத்திருக்கும்போது, அவரை எவருமே கண்டுகொள்ளவில்லை. 

கடமையை ஒழுங்காகச் செய்வதுடன், எம்மைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து தெளிந்த அன்பைப் பெற்றிடுங்கள். கடமைகளைப் புறக்கணிப்பது, உலகை ஒதுக்குவது போலாகும்.  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

100 ஆவது பிறந்தநாளை புகைப்படமெடுத்து கொண்டாடிய இரட்டை சகோதரிகள்..!

 

 

இரட்டை சகோதரிகள் தமது 100ஆவது பிறந்தநாளை புகைப்படமெடுத்து கொண்டாடிய சம்பவம் பிரேசிலில் பதிவாகியுள்ளது. 

100th.jpg

பிரஸிலின் கரியாஷியா பகுதியை சேர்ந்த  மரியா பிக்னேடன் பான்டின் மற்றும் பவுலினா பிக்னேடன் பான்டின் ஆகிய இரட்டை சகோதரிகள் எதிர்வரும் 24 ஆம் திகதி தமது 100ஆவது அகவையில் காலடி வைக்கவுள்ளனர்.

18447050_1389018494524746_27725402465533

18527819_10155783104088812_6486649444296

இந்நிலையில் தமது 100 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கமீலா லீமா என்ற புகைப்பட கலைஞரின் உதவியுடன் பல்வேறு கோணங்களில் புகைப்படங்களை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 

pri_40292939.jpg

மேலும் குறித்த இரட்டை சகோதரிகள் தமது சிறுவயது பருவ நினைவுகளை மீட்கும் வகையிலான உடைகளை அணிந்து புகைப்படத்திற்கு தோற்றமளித்துள்ளதாக புகைப்படக்கலைஞர் தனது சமூகவலைத்தளத்தினுடாக படங்களை பகிர்ந்துள்ளார்.

அத்தோடு குறித்த இரட்டை சகோதரிகள் தமது 100 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரும் விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுமியை அதிரவைத்த கடல் சிங்கம்!

 
 

கனடாவில் மீன்பிடி துறைமுகம் ஒன்றில்,  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை கடல் சிங்கம் ஒன்று கடலுக்குள் இழுத்துச்சென்ற அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. 

sea lion viral video
 

கனடாவின் ரிச்மாண்ட் நகரில் உள்ள  மீன்பிடி துறைமுகத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. துறைமுகத்தில் நீரில் நீந்திக் கொண்டிருந்த கடல் சிங்கத்தை பார்வையாளர்கள் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு சிறுமி துறைமுகத்தில் உள்ள தடுப்பு சுவரில் அமர்ந்து கடல் சிங்கத்தைப் பார்வையிட்டார். அப்போது நீருக்குள் நீந்திக் கொண்டிருந்த அந்த கடல் சிங்கம் திடீரென அந்த சிறுமியின் ஆடையை பிடித்து கடலுக்குள் இழுத்துச்சென்றது. இதையடுத்து அங்கிருந்த ஒருவர் சற்றும் தாமத்திக்காமல் கடலுக்குள் குதித்து சிறுமியைக் காப்பாற்றினார். இந்தக் காட்சியை அங்கிருந்த ஒருவர் பதிவு செய்து, இணையத்தில் பதிவேற்றம் செய்ய, அந்த வீடியோ தற்போது வைரலாகிவிட்டது!

 

 

 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

நம்புங்க... ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த கண்டுபிடிப்பு பீட்சா பாக்ஸ்..! #ApplePizzabox

 
 

ஆப்பிள் பீட்சா பாக்ஸ்

ஐபோன், மேக்புக், ஐபாட் என ஆப்பிளின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் டெக் வரலாற்றில் தவிர்க்க முடியாத மாற்றத்தை உருவாக்கியிருக்கின்றன. அடுத்த தயாரிப்பில் புதிதாக என்ன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தப்போகிறதோ என்று உலகமே காத்துக்கொண்டிருக்க ஆப்பிள் சமீபத்தில் காப்புரிமை பெற்றிருக்கும் பொருளை சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் கடினம். காரணம் அது ஒரு பீட்சா பாக்ஸ்.

சாதாரணமாக பாக்ஸில் இருக்கும் சூடான பீட்சாவில் உள்ள பிரச்சனை என்னவென்றால் சாப்பிடுவதற்கு கொஞ்சம் தாமதமானால் நீர் ஆவியாகி பீட்சா மீதே விழுந்துவிடும்.அதன் வடிவம் மாறிவிடும். மேலும் அதன் சுவையும் கெட்டுவிடும். அந்தப் பிரச்சினை இந்த ஆப்பிளின் பீட்சா பாக்ஸில் கிடையாதாம். எவ்வளவு நேரம் வைத்திருந்தாலும் பீட்சா அப்படியே இருக்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

சரி ஆப்பிள் எதுக்கு இத கண்டுபிடிக்கனும்? ஏதாவது ஒரு விஷயம் இருக்கனுமே என்கிறீர்களா? இருக்குது ஆப்பிள் அலுவலகத்தில் வேலை பாக்குறவங்க கேன்டீன்ல இருந்து பீட்சா வாங்கிட்டு வந்து வேலையெல்லாம் முடிச்சிட்டு சாப்பிடலாம்னு பார்த்தா... அவ்ளோதான். அது பீட்சா மாதிரியே இல்லைனு புகார் கூற அதை சரி  செய்வதற்காகவே புதிய வடிவிலான பீட்சா பாக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டதாம். கலிபோர்னியாவில் புதிதாக கட்டப்பட்ட ஆப்பிள் பார்க் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் அனைவருக்கும் இந்த பீட்சா பாக்ஸை வழங்கப்போகிறார்கள்.

ஆப்பிள் நிறுவனத்தில் புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க மட்டுமில்லாமல் உணவுகளை தயாரிக்க, உணவில் ஏற்படும் குறைகளை களைவதற்கு, புதிய உணவு வகைகளை கண்டுபிடித்து அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு வழங்க என ஒரு தனி டீமே இயங்குகிறது. நம்ம ஊர் கேன்டீன்ல இன்னமும் வடையும், பஜ்ஜியும் தான் கிடைக்குது. நாம இன்னும்  முன்னேறனும் பாஸ்..

பீட்ஸா

இது மட்டுமில்லாமல் கண்ணாடி படிக்கட்டுகள், ஐபாட் ஸ்டேன்ட், மேஜிக் கிளவுஸ், பேப்பர் பேக் என பட்டியல் நீள்கிறது. இவையெல்லாம் வெளி உலகிற்கு அறிமுகம் ஆகாமல் ஆப்பிள் காப்புரிமை வாங்கி வைத்திருக்கும் கண்டுபிடிப்புகள். ஆப்பிள் மொபைல்கள் பேக்கேஜிங் செய்யப்படும் முறைக்கு கூட ஆப்பிள் காப்புரிமை வாங்கி வைத்திருக்கின்றதாம்.

சாம்சங் நிறுவனத்தோடும் இதர நிறுவனங்களோடும் பிரச்சினைகள் வந்த பின்னர் காப்புரிமை விஷயத்தில் ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்கிறது ஆப்பிள் நிறுவனம். அதனாலேயே எதைக் கண்டுபிடித்தாலும் உடனே காப்புரிமை வாங்க விடுகிறது. அது சாதாரண பீட்சா பாக்ஸாக இருந்தாலும்.

ஆப்பிளின் புதிய அலுவலகம்:

 

எப்படி ஆப்பிளின் கேட்ஜெட்ஸில், ஒவ்வொரு பகுதியும், பார்த்துப் பார்த்து துல்லியமாக வடிவமைக்கப்படுகிறதோ, அதைப் போலவே புதிய ஆப்பிள் கட்டடத்தின் ஒவ்வொரு பகுதியும் இழைக்கப்படுகிறது. இந்தக் கட்டுமானப் பணியில் மட்டும் சுமார் 13,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் சுற்றளவு சுமார் 1 மைல். இந்த வளாகத்தில் மொத்தம் 8 கட்டடங்கள் அமையவுள்ளன. 1000 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியமும் இங்கே உருவாகி வருகிறது. இந்த அலுவலகம் திறந்தபின்பு ஆப்பிளின் கீ-நோட் நிகழ்ச்சிகள் இங்கேயே நடக்கவும் வாய்ப்பு அதிகம். ஏற்கனவே கூறியபடி இந்த அலுவலகத்தின் மொத்த மின்சக்தியும் மரபுசாரா ஆற்றல் மூலமே உற்பத்தி செய்யப்படுகிறது. வெறும் அலுவலகமாக மட்டும் காட்சியளிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அலுவலகத்தை சுற்றிலும் 80% அளவுக்கு மரங்கள் நடப்படுகின்றன. இதனால் வெறும் கட்டடமாக இல்லாமல், பச்சைப் பசேல் என குட்டி வனம் போல காட்சியளிக்க உள்ளது இந்த டெக் கேம்பஸ்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு முன் ஜான்டி ரோட்ஸுக்கு கிடைத்த அந்த ஸ்பெஷல் பரிசு பற்றித் தெரியுமா?

 

John_1_16491.jpg

கோலாகலமாக நடந்த ஐபிஎல் 10-வது சீசனின் இறுதிப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் ஒரு ரன் வித்தியாசத்தில் புனே அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையைத் தட்டிச்சென்றது. நேற்று, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு பெரு மகிழ்ச்சியைக் கொடுத்த விஷயம் இது மட்டுமல்ல. அந்த அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸுக்கு, ஆண் குழந்தை பிறந்ததும் ஸ்பெஷல் சம்பவம்தான். 


தென்னாப்ரிக்கா முன்னாள் கிரிக்கெட் வீரரான ஜான்டி ரோட்ஸ், ஐபிஎல் முதன்முறையாக கடந்த 2008-ஆம் ஆண்டு ஆரம்பித்த முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருக்கிறார். இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று முறை, ஐபிஎல் கோப்பையை வென்றதில் அவருக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்தியாவின் மேல் இருக்கும் பாசம் மற்றும் பற்று காரணமாக, ஜான்டி ரோட்ஸ் தனது முதல் பெண் குழந்தைக்கு 'இந்தியா' என்று பெயர் வைத்து அசத்தினார். இந்தியாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி இரண்டாவது பிறந்தநாள் வந்தது. அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார் ரோட்ஸ். இதற்கு யாரும் எதிர்பாராத வகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரி-ட்வீட் செய்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நேற்று தனது இரண்டாவது குழந்தை பிறந்ததை ட்விட்டரில் குழந்தை மற்றும் மனைவி புகைப்படத்துடன் பதிவு செய்திருந்தார் ரோட்ஸ். குழந்தைக்கு நேதன் ஜான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தற்போது ட்விட்டரில் தெறி வைரலாக உள்ளது. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ரைட் சகோதரர்கள் தங்கள் பறக்கும் கருவிக்கு காப்புரிமை பெற்ற நாள்: மே 22-1906

 

ரைட் சகோதரர்கள் தங்கள் பறக்கும் கருவிக்கு 1906-ம் ஆண்டு மே 22-ந்தேதி காப்புரிமை பெற்றனர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1809 - வியன்னாவுக்கு அருகில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் முதற்தடவையாக தோற்கடிக்கப்பட்டன.

* 1834 - இலங்கையில் சட்டசபையின் முதலாவது கூட்டம் கொழும்பில் இடம்பெற்றது.

* 1840 - நியூ சவுத் வேல்சுக்கு பிரித்தானியக் குற்றவாளிகளை நாடு கடத்துதல் நிறுத்தப்பட்டது.

* 1844 - பாரசீக மதகுரு பாப் தனது

 
ரைட் சகோதரர்கள் தங்கள் பறக்கும் கருவிக்கு காப்புரிமை பெற்ற நாள்: மே 22-1906
 
ரைட் சகோதரர்கள் தங்கள் பறக்கும் கருவிக்கு 1906-ம் ஆண்டு மே 22-ந்தேதி காப்புரிமை பெற்றனர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1809 - வியன்னாவுக்கு அருகில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் முதற்தடவையாக தோற்கடிக்கப்பட்டன.
 
* 1834 - இலங்கையில் சட்டசபையின் முதலாவது கூட்டம் கொழும்பில் இடம்பெற்றது.
 
* 1840 - நியூ சவுத் வேல்சுக்கு பிரித்தானியக் குற்றவாளிகளை நாடு கடத்துதல் நிறுத்தப்பட்டது.
 
* 1844 - பாரசீக மதகுரு பாப் தனது பாபிசம் என்ற தனது மதக்கொள்கையை வெளியிட்டார். இவரே பஹாய் சமயத்த்தைத் தோற்றுவித்த பகாவுல்லாவின் முன்னோடி எனக் கருதப்படுகிறது.
 
* 1906 - ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.
 
* 1915 - ஐக்கிய அமெரிக்காவில் லாசன் முனை வெடித்தது.

* 1915 - ஸ்காட்லாந்தில் ஐந்து ரெயில்கள் ஒன்றோடொன்று மோதியதில் 227 பேர் கொல்லப்பட்டனர். 246 பேர் காயமடைந்தனர்.
 
* 1942 - இரண்டாம் உலகப் போர்: மெக்சிகோ நேச நாடுகள் தரப்பில் போரில் குதித்தது.
 
* 1958- இலங்கை இனக்கலவரம்- இலங்கையில் ஏற்பட்ட கலவரங்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
 
* 1960 - தெற்கு சிலியில் நிகழ்ந்த 9.5 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதுவே இதுவரையில் பதியப்பட்ட அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆகும்.
 
* 1967 - பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் கடைத் தொகுதி ஒன்று தீப்பிடித்ததில் 323 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.
 
* 1968 - அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஸ்கார்ப்பியன் மூழ்கியதில் 99 பேர் கொல்லப்பட்டனர்.

* 1972 - இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து குடியரசு ஆகியது. சிலோன், ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றம் பெற்றது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் பெற்றது.
 
* 1990 - வடக்கு ஏமன் மற்றும் தெற்கு ஏமன் ஆகியன இணைந்து ஏமன் குடியரசு ஆகியது.
 
* 1990 - விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.
 
* 2004 - நெப்ராஸ்காவில் இடம்பெற்ற சூறாவளியினால் ஹலாம் நகரம் முற்றிலும் அழிந்தது.
 
 

http://www.maalaimalar.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.