Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
‘வாழ்க்கையை வாழுங்கள்’
 

image_b74aa7b8f1.jpgஇந்த நேரம் இப்படித்தான் இருக்க வேண்டுமென விதிமுறைகளைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள் சில நேரம் நினைத்ததைச் சாதிக்கலாம்.

ஆனால், அவர்கள் வாழ்வது உயிர்ப்புடன் கூடிய வாழ்க்கை அல்ல. உயிரற்ற இயந்திரத்தனமான வாழ்க்கை.

இயந்திரத்தனமாக வாழ்பவர்கள் அதிலேயே மூழ்கடிக்கப்பட்டு சந்தோஷமற்ற முகங்களுடன் வளைய வருவதை நீங்கள் பார்க்கலாம்.

விதிமுறைகளை விட்டுத் தள்ளுங்கள். வாழ்க்கையை அந்தந்தத் தருணத்துக்கு ஏற்றபடி உணர்வுப்பூர்வமாக, முழுமையான விழிப்புணர்வுடன் வாழத் துவங்குங்கள். 

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இயற்கையின் எதிரி பிளாஸ்டிக்கை நண்பனாக்கிய இரு இளைஞர்கள்! #SuccessStory

 
 

பிளாஸ்டிக்

வாழ்நாளில், உங்கள் எதிரிகளை நண்பர்களாக மாற்றுவது ஒரு வித்தை. இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிரியான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை, சுற்றுச்சூழலுக்கு உதவும் நண்பனாக மாற்றி இருக்கிறார்கள் இரண்டு இளைஞர்கள். 

அமித் குமாருக்கு வயது 19, வாரணாசிதான் சொந்த ஊர், அப்பா தையல் கலைஞர். பொருளாதார நெருக்கடி வாட்டி வதைக்க, 10 ஆம் வகுப்புக்கு மேல் தொடர்ந்து படிக்க குடும்ப சூழல் ஒத்துழைக்கவில்லை, இந்நிலையில் வாரணாசியில் இருக்கும் தொண்டு நிறுவனத்தின் உதவி அமித் குமாருக்கு கிடைக்கிறது. அமித் குமார், அங்கு தோட்டக்கலை பற்றிய பயிற்சிகளில் ஆர்வமாக பங்கெடுத்து, தொழில்முனையும் அளவுக்கு உயர்கிறார்.

அப்போது சமூகப் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது என்ற தலைப்பில் பெங்களூரின் ’Ashoka Youth Venturer Program’ எனும் அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுக்கிறார் அமித் குமார். அங்குதான் பெங்களூரு வாழ் தமிழரான சரணை அவர் சந்திக்கிறார். சரணும் பள்ளிப் படிப்பை முடித்தவர், அம்மா வீட்டுவேலை, அப்பா ஐஸ் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். தோட்டக்கலையில் ஆர்வம் கொண்ட சரணையும், அமித் குமாரையும் இணைத்தது பெங்களூரில் நடந்த அந்த நிகழ்வுதான். 

சொந்த ஊரை விட்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பெங்களூரு வந்த இந்த இருஇளைஞர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை தோட்டக்கலை மட்டுமே. தாங்கள் விரும்பும் தோட்டக்கலையில் புதுமைகளை புகுத்த வேண்டும், குறிப்பாக அந்த புதுமை சுற்றுச்சூழலுக்கு தீர்வாக அமைய வேண்டும் என்று விரும்பினார்கள். இதன் விளைவாய் தோன்றியதே இவர்கள் உருவாக்கிய Urban Container Garden. 

பிளாஸ்டிக் 

 நடைமுறையில் பல விதமான செடிகள் வளர்ப்பு முறை இருந்தாலும், இவர்கள் முன்வைக்கும் யோசனை சற்று வித்தியாசமானது. பொதுவாக நம்மில் பலருக்கு, வீட்டில் தோட்டம் அமைக்க வேண்டும் என்கிற ஆசை இருப்பது இயல்புதான். ஆனால் அதற்கான இடவசதிகளோ, போதிய வழிகாட்டுதலோ கிடைப்பதில்லை, தற்போது நகர்புறங்களில் வாழ்பவர்களுக்கு வீட்டில் மணி பிளாண்ட் வளர்ப்பது ஒன்று தான் அருமருந்து. வாடகை வீட்டில் வசிக்கும் பலருக்கு வீட்டுத்தோட்டம் அமைப்பதில் அதிக ஆர்வம் இருந்தாலும், பல காரணங்களால் அது சாத்தியமாவதில்லை.

அமித் குமார்-சரண்

இப்படியான சிக்கல்களுக்கு அமித்-சரண் பின்பற்றியுள்ள தோட்ட அமைப்பு முறை தீர்வைத் தரும். உங்கள் வீட்டு சமையல் அறை, காரிடார், பால்கனி போன்ற எந்த இடத்திலும் நீங்கள் செடிகளை வளர்க்கலாம். இடத்துக்கு ஏற்ப மரபிரேம்களை தயாரித்து அதில் பிளாஸ்டிக் பாட்டில்களை பொருத்தி, பாட்டில்களில் மண்களைக் கொண்டு நிரப்பி, விதைகளை விதைத்து, பராமரித்து செடிகளை வளர்க்க வேண்டியதுதான். பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி, அமித்-சரண்  அமைத்துள்ள இந்த வகை வீட்டுத் தோட்ட அமைப்பு, தற்போது தோட்டக்கலையில் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளதோடு, பலருக்கு வீட்டுத்தோட்டம் அமைக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டியுள்ளது. நம் வீட்டில் அழகாய் பூக்கும் தாவரங்கள் மட்டுமில்லாமல் மூலிகைத் தாவரங்கள், உடல் நலனுக்குக் தேவையான காய்கள், கீரைகள் என அனைத்தையும் நாம் முயற்சி செய்யலாம்.

 

வீட்டுத்தோட்டக் கலையில், அமித்-சரண் தற்போது பெங்களூரை கலக்கி வருகின்றனர். தோட்டம் அமைப்பதில் ஆர்வம் இருப்பவர்களுக்கு ஆலோசனை வழங்குவதோடு, வீடு தேடிச் சென்று சேவையினை வழங்கி வருகின்றனர்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

36 ஆண்டுகளாக காதல்: ரெயில் நிலையத்தை திருமணம் செய்த நூதன பெண்

உலகின் எத்தனையோ நூதன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் தான் நேசித்த ரெயில் நிலையத்தை காதலித்து ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.

 
 
36 ஆண்டுகளாக காதல்: ரெயில் நிலையத்தை திருமணம் செய்த நூதன பெண்
 
கலிபோர்னியா:

உலகின் எத்தனையோ நூதன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் தான் நேசித்த ரெயில் நிலையத்தை காதலித்து ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.

அவரது பெயர் கரோல் சான்டே பி (45). அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர். தன்னார்வ தொண்டு செய்வதில் இவருக்கு அதிக ஈடுபாடு உண்டு.

இவரது வீட்டில் இருந்து 45 நிமிட பஸ் போக்குவரத்து தூரத்தில் ஒரு ரெயில் நிலையம் உள்ளது. அதன் மீது கரோலுக்கு 9 வயதில் இருந்தே தனி அன்பும் ஈர்ப்பும் ஏற்பட்டது.
 
201705271053318238_californian-1._L_styv

அதுவே பின்னர் காதலாக மாறியது. எனவே தினமும் 45 நிமிடம் பஸ்சில் பயணம் செய்து அந்த ரெயில் நிலையத்துக்கு சென்று அங்கு சிறிது நேரம் அமர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று அந்த ரெயில் நிலையத்தை மனதளவில் திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தனது முதல் திருமண நினைவு நாளைக் கொண்டாடி மகிழ்ந்தார்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

கும்கி யானைகள் பற்றிய நூற்றாண்டைத் தாண்டிய சுவாரஸ்ய தகவல்கள்!

 

கும்கி

"விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அட்டகாசம் செய்த காட்டு யானைகள், கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர்.." 

இதுபோன்ற செய்திகளை அடிக்கடி செய்தித்தாள்களில் பார்க்கலாம். அது என்ன கும்கி யானை? காட்டுயானைகளை விரட்டத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்ட யானையின் பெயர் தான் 'கும்கி'. அவ்வளவுதானா கும்கியின் அடையாளம்? நிச்சயமில்லை.

கும்கியின் வரலாறு மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியான நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து துவங்குகிறது. 1910 ஆம் ஆண்டு ஊட்டியில், யானைகள் வளர்ப்பு மற்றும் பயிற்சி முகாம் ஒன்று வனத்துறையால் தொடங்கப்பட்டது. இந்தியாவில், யானைகளுக்கு என்று முதன் முதலாக துவங்கப்பட்ட முகாம் இதுதான். சுமார் 107 ஆண்டுகளுக்கு முன் இங்கு தொடங்கப்பட்ட முகாமிலிருக்கும் யானைகளுக்கு, காட்டில் வெட்டப்பட்ட மரங்களை இழுக்க, மரங்களை லாரிகளில் ஏற்ற மட்டுமே பயிற்சி அளிக்கப்படும். இதைத்தவிர, காட்டு யானைகளைப் பிடிக்கும் முயற்சியிலும் வளர்ப்பு யானைகள் ஈடுபடுத்தப்பட்டன. பிடிக்கப்பட்ட காட்டு யானைகளும் நேராக பயிற்சி முகாம்களுக்குக் கொண்டுவரப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு மரம் தூக்க அனுப்பிவைக்கப்படும். ஒரு புறம் பயிற்சியும், மறுபுறம் வேலையும் நடந்துகொண்டே இருக்கும். 

காட்டு யானைகளைப் பிடிக்க அந்தக்காலத்தில் ஓர் எளிய வழியைக் கடைபிடித்தார்கள். பருவத்துக்கு வந்த பெண் யானையைக் காட்டுக்குள் இருக்கும் ஒரு பெரிய மரத்தில் கட்டி வைப்பார்களாம். அந்தப் பெண் யானையின் உடலிலிருந்து வெளிப்படும் ஒருவகையான வாசனையால் ஈர்க்கப்பட்டு, காட்டுக்குள் சுற்றித்திரியும் ஆண் யானைகள் அந்தப் பெண் யானையைச் சுற்றி வட்டமடிக்கும். காதல் மயக்கத்தில் சுற்றிவரும் அதை அதிகம் சிரமம் இல்லாமல் பிடித்துவிடுவார்கள். இப்படி ஆண் யானைகளைப் பிடிக்க உதவும் பெண் யானைகளைத்தான் ஆரம்ப காலத்தில் 'கும்கி' என அழைத்தனர். கும்கி என்ற வார்த்தைக்கான விளக்கம் கொடுக்கும் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியும் இதைத்தான் சொல்கிறது. ஆனால் இப்போது காட்டு யானைகளை மடக்கிப்பிடிக்கும் ஆண் யானைகளையே 'கும்கி' என்று அழைக்கிறார்கள். இதை யார் எப்போது மாற்றினார்கள் என்ற விவரம் தெரியவில்லை. 

பிடிபட்ட காட்டு யானைகளுக்கான பயிற்சிகள் மிகக்கடுமையாக இருக்கும். யானைகளுக்கான முதல் பயிற்சியாக அதன் துதிக்கையில் ஒரு குச்சியைக் கொடுத்து பாகனுடன் நடந்து வர பழக்குவார்கள். பின்னர், காலை மடக்குவது, முட்டி போடுவது போன்ற பயிற்சிகள் இருக்கும். காதை தும்பிக்கையால் பிடித்துக் கொண்டு இடது, வலது என சுற்ற வைக்கும் பயிற்சியும் உண்டு. யானை சின்னதோ, பெரியதோ, குட்டியோ, வயதானதோ, வா, போ, முட்டி போடு, இதைத் தூக்கு என்று ஒருமையில் மட்டுமே பாகன்கள் அதை அழைப்பார்கள். வயதான பெண் யானையாக இருந்தால் அடிப்படை பயிற்சியோடு சில கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படும். காரணம் பெண் யானைகளுக்குப் புத்திக்கூர்மையும், நுண் உணர்வுகளும் அதிகம். பாகன்களுடன் நெருங்கிப்பழகும் குணம் அவற்றுக்குண்டு. பிடிபட்டது ஆண் யானை என்றால், அது பருவமடைந்த பிறகுதான் பயிற்சிக்கு அனுப்பப்படும். அப்போதுதான் வேகமும், மூர்க்க குணமும் நிறைந்ததாக விளங்கும். 

கும்கி

பயிற்சி கொடுக்கும் பாகனின் உத்தரவுதான் யானையைச் செயல்படத்தூண்டும். மற்ற நேரங்களில் அமைதியாகவே இருக்கும். குரல் கட்டளைகளின் முதல் பாடம், 'ஜமத்'. தன் காலில் கட்டியிருக்கும் இரும்புச்சங்கிலியை இறுக்கமாக பிடித்துக்கொள்ளும் கட்டளையே இது. பாகனிடமிருந்து இந்தக் குரல் வந்ததும் உடனே சங்கிலியை இறுக்கமாக பிடித்துக்கொள்ளும். மரங்களை இரும்புச்சங்கிலியால் கட்டி இழுத்துவரும்போது சங்கிலிக்குக் கொடுக்கும் இறுக்கம்தான் மரங்கள் தவறி கீழே விழாமல் காக்கும். அதற்காகத்தான் இந்தப் பயிற்சி. அடுத்ததாக வெட்டப்பட்ட மரங்களை கீழே சாய்ப்பதும், அதைத் தூக்குவதும், நகர்த்துவதும், இழுத்துவருவதுமாகவே இருக்கும். அதற்கான கட்டளைகளைப் பாகன்கள் சொல்லிக்கொடுப்பார்கள். இப்படிக் கொடுக்கப்படும் அனைத்து அடிப்படியான பயிற்சிகளுமே பாகனுக்குக் கீழ் படிதல் மற்றும் மரங்களுடன் தொடர்பு படுத்துவதாகவே இருக்கும். 

காட்டுயானைகளைப் பிடிக்கும் பயிற்சி வேறு விதமாக இருக்கும். அவை இன்னும் கடுமையானவை. இந்தப் பயிற்சியில் பாகனின் பங்கு அதிகம். ஒவ்வொரு கட்டளையும் யானையை உற்சாகப்படுத்தி வேகமாக செயல்படவைப்பதாக இருக்கும். குறிப்பாக, 'நிர்கே' என்ற கட்டளை. காட்டு யானைகளை மடக்கிப் பிடிக்கும்போது அவை அதிக மூர்க்கமாக இருந்தலோ அல்லது பிடிபடாமல் தப்பிச்செல்ல முயன்றாலோ, பாகன் நிர்கே என்று சொல்வார். அதைக் கேட்டதும், கொஞ்சமும் யோசிக்காமல் எதிரே நிற்கும் காட்டு யானையை முட்டித் தள்ளி கீழே சாய்த்துவிடும். 
 
'கும்கி' என்ற வார்த்தை இந்தி மொழியிலிருந்து உருவாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஒரு சில முரட்டு காட்டு யானைகள் சிறிதும் அச்சமின்றி கும்கி யானைகளை தனது தந்தத்தால் குத்த ஆக்ரோஷத்துடன் ஓடி வரும். அப்படி வரும் யானைகளை இரும்புச் சங்கிலி மற்றும் மரக்கட்டையால் திருப்பித் தாக்கும் டெரர் பயிற்சியும் கும்கிகளுக்கு உண்டு. கும்கி பயிற்சி, தினமும் இருவேளை என்று 15 முதல் 30 தினங்கள் வரை கொடுக்கப்படும். பயிற்சி முடிந்ததும் யானையை முகாமில் வைத்து ஒத்திகை நடக்கும். தமிழகத்தில் முதுமலை மற்றும் டாப்சிலிப் பகுதிகளில் மட்டுமே கும்கிகள் உள்ளன. நமது நாட்டில் மிகச் சிறந்த கும்கி யானைகள் கர்நாடக மாநிலத்தில் உள்ளன. அபிமன்யூ, அர்ஜூனன், கஜேந்திரன் போன்ற கும்கி யானைகள் இந்திய அளவில் பிரபலமானவை. வேட்டைக்கு புறப்பட்டுவிட்டால் வெற்றி மட்டுமே முடிவாக இருக்கும். தென் இந்தியாவில் இருந்து வட மாநில காட்டு யானைகளையும் அடக்க இவை அழைக்கப்படுமாம். இப்படி வெற்றி டேட்டாக்களுக்கு இடையில், களத்துக்குச் சென்ற கும்கி யானையும், அதன் பாகனும் காட்டு யானைகளால் கொல்லப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கிறன. 

 

ஒரு காலத்தில் காடுகளில் வெட்டப்படும் மரங்களைத் தூக்குவதற்காவும், அற்காக தேவைப்படும் யானைகளைப் பிடிக்கவுமே பயன்பட்ட கும்கி யானைகள், இன்று ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்ட பயன்படுவது வரலாற்றுப் பிழையல்ல. மனிதர்களான நாம் செய்த பிழையின் வெளிப்பாடுதான். நகரீயம் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு யானைகளின் வாழிடத்தையும், வழித்தடத்தையும்  ஆக்கிரமித்து யானைகள் மீதான மறைமுகப்போரைத் தொடுத்திருக்கும் நாம் இனியாவது, காடுகளைக் காத்து கும்கிகளை சுதந்திரமாக விடுவோம்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

ஓஎன்வி குருப்

 
phoyo_3168818f.jpg
 
 
 

பிரபல மலையாளக் கவிஞர்

ஞானபீட விருது பெற்ற பிரபல மலையாளக் கவிஞரும், பேராசிரியர், விமர்சகர், அரசியல்வாதி எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவருமான ஓ.என்.வி.குருப் (O.N.V.Kurup) பிறந்த தினம் இன்று (மே 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கேரள மாநிலம் கொல்லம் அருகில் உள்ள சவற என்ற கிராமத்தில் (1931) பிறந்தார். பள்ளிப் படிப்புக்குப் பிறகு பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். மலையாள மொழியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

* எர்ணாகுளம் மஹாராஜா கல்லூரியில் மலையாள விரிவுரை யாளராகப் பணியைத் தொடங்கினார். அரசியல், இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 1946-ல் இவரது ‘முன்னோட்டு’ என்ற கவிதை உள்ளூர் இதழில் வெளிவந்தது. தொடர்ந்து பல கவிதைகள் எழுதினார்.

* இவர் எழுதி 1949-ல் வெளிவந்த ‘அரிவாளும் ராக்குயிலும்’ என்ற கவிதைக்கு கேரள முற்போக்கு இலக்கியப் பேரவையின் ‘சங்ஙம்புழ’ விருது கிடைத்தது. இதன்மூலம் பரந்த மலையாள இலக்கிய உலகில் பிரபலமானார். அதே ஆண்டு ‘போராடுன்ன சவுந்தர்யம்’ என்ற முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது. 1956-ல் வெளிவந்த ‘தாஹிக்குன்ன பானபாத்ரம்’ என்ற கவிதைத் தொகுப்பு மூலம் மலையாளக் கவிதை உலகிலும் புகழ்பெற்றார்.

* பொதுவுடைமை இயக்கத்தோடு நேரடித் தொடர்பு கொண்டிருந்தவர். உலக அரங்கில் பொதுவுடைமை அரசியல் ஏற்படுத்திய மாற்றங்கள், மே தினம், புரட்சி உள்ளிட்ட விஷயங்கள்தான் இவரது ஆரம்பகாலக் கவிதைகளில் அதிகம் இடம்பெற்றன. பின்னர் மனிதநேயம், தத்துவம், சமூகம், இயற்கை, வறுமை, மனித வாழ்வின் துயரங்கள், சுற்றுச்சூழல், காதல் என இவரது களம் விரிந்தது.

* முதன்முதலாக 1950-ல் ‘காலம் மாறுன்னு’ என்ற திரைப்படத்துக்குப் பாடல் எழுதினார். அதற்குக் கிடைத்த வரவேற்பால் தொடர்ந்த பல படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். 232 திரைப்படங்களில் 900 பாடல்களை எழுதியுள்ளார். ஏறக்குறைய அனைத்துப் பாடல்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

* 20-க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ‘சமூக உஜ்ஜைனி’, ‘ஸ்வயம்வரம்’ ஆகிய பாடல் தொகுப்புகள் மிகவும் பிரசித்தம். குழந்தைகளுக்காகவும் ஏராளமான பாடல்களை இயற்றினார். அவை தொகுக்கப்பட்டு ‘வளப்பொட்டுகள்’ என்ற தலைப்பில் வெளியானது.

* சில விமர்சன நூல்களையும் எழுதியுள்ளார். திருவனந்தபுரம், கோழிக்கோடு, தலசேரி எனப் பல்வேறு நகரக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் 1986 வரை பணியாற்றினார். சாகித்ய அகாடமியின் செயற்குழு உறுப்பினர், கேரள கலாமண்டலத்தின் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தார்.

* கேரள மாநில சிறந்த திரைப்படப் பாடலாசிரியர் விருதை 13 முறை பெற்றுள்ளார். ‘வைஷாலி’ என்ற படத்துக்கு இவர் எழுதிய பாடல்களுக்காக 1984-ம் ஆண்டு சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதைப் பெற்றார். 1998-ல் பத்ம விருதும், 2007-ம் ஆண்டுக்கான ஞானபீட விருதும் பெற்றார்.

* கேரள சாகித்ய அகாடமி விருது, வயலார் விருது உட்பட பல விருதுகள், கவுரவங்களைப் பெற்றவர். கேரளப் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. முற்போக்கு எழுத்தாளர், சமூக சித்தாந்த சார்பாளர் எனப் போற்றப்பட்டார்.

* பேராசிரியர், கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், விமர்சகர், அரசியல்வாதி எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட ஓஎன்வி குருப் கடந்த 2016 பிப்ரவரி மாதம் 85-வது வயதில் மறைந்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

’மனைவியால் தவறவிட்டுட்டேன்...’: ட்வீட் தட்டிய சேவாக்..?

 

ட்விட்டரில் எப்போதும் ஒன்றியே இருக்கும் பிரபலங்களுள், கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கும் ஒருவர். சமீபத்திய ஒரு ட்வீட்டில் தன் மனைவியால் தான் தவறவிட்ட ஒரு தருணம் குறித்து நகைச்சுவையாகப் பகிர்ந்துள்ளார்.

சேவாக்


சமீபத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் வாழ்க்கை வரலாறு குறித்த ’சச்சின்: ஏ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற திரைப்படம் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி அத்தனை பேரையும் கவர்ந்துள்ளது. இந்தத் திரைப்படத்தின் பிரிமியர் ஷோ என்னும் சிறப்புக் காட்சி கிரிக்கெட் வீரர்களுக்காக மட்டும் என இரண்டு நாட்களுக்கு முன்னர் திரையிடப்பட்டது. 

சச்சின் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை தோனி, விராட் கோலி என இந்திய கிரிக்கெட் வீரர்கள் அவரவர் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் இணைந்து பார்த்தனர். இங்கிலாந்து தொடருக்காகப் பயணப்பட வேண்டிய கட்டாயம் இருந்தபோதிலும் இந்திய அணியினர் படம் பார்த்த பின்னரே சென்றனர்.

இந்நிலையில், இந்த பிரிமியர் ஷோவில் சேவாக் பங்கேற்கவில்லை. சச்சின் - சேவாக் கூட்டணி இந்திய அணிக்கு பல வெற்றிகளைத் தந்தவர்கள். சச்சின் படம் பார்க்க முடியாதது குறித்து ட்விட்டரில் வீடியோவுடன் கருத்து பதிந்துள்ளார் சேவாக். அதில், ‘கடவுள் என்னை சச்சின் படம் பார்க்க அழைத்தார். ஆனால், மனைவி விடுமுறைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். நிவேதனம் கொடுத்து கடவுளை சரிகட்டிவிடலாம். ஆனால், மனைவியை சமாளிக்க முடியாதே’ என நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்.

 

மேலும், இந்தத் திரைப்படம் சிறுவர்களுக்கான சிறந்த தூண்டுகோலான படமாக இருக்கும். அனைவரும் இத்திரைப்படத்தை பாருங்கள். நானும் அவசியம் பணம் கொடுத்து திரையரங்கில் பார்ப்பேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

உலகின் அதிவேக விமானம்: அமெரிக்க ராணுவம் ரகசிய தயாரிப்பு

 

உலகின் அதிவேக விமானம் அமெரிக்க ராணுவத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விமானம் 2020-ம் ஆண்டு தன் முதல் பயணத்தை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக விமானம்

அமெரிக்க ராணுவத்தின் ரகசியத் தயாரிப்பான எக்ஸ்.எஸ்.1 என்ற போயிங் ரக விமானத்தின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ‘ஃபேன்டம் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயருடன் ‘டார்பா’ நிறுவனம் அமெரிக்க ராணுவத்துக்காக இந்த சிறப்பு விமானத்தை தயாரித்துள்ளது. 


இந்த சிறப்பு விமானத்தின் செயல்பாடுகள் முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது. ஒரு ராக்கெட் போல் பறக்கத் துவங்கும் எக்ஸ்.எஸ்.1, வானில் விண்கலம் போல் பறக்கும். அதே வேளையில் தரையிறங்கும் போது சாதாரண விமானங்களைப் போலவே தரையிறங்கும். 1,360 கிலோ எடை கொண்ட இந்த எக்ஸ்.எஸ்.1 போயிங் ரக விமானம் பலத்த சத்தத்துடன் அதிவேகமாக செல்லும் திறன் உடையது. சாதாரண விமானங்களை விட ஐந்து முதல் பத்து மடங்கு அதிக வேகத்தில் பறக்கும் சிறப்பு தொழில்நுட்பத்துடன் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.

 


அமெரிக்க ராணுவம் சார்பில் உருவாகியிருக்கும் எக்ஸ்.எஸ்.1, வருகிற 2020-ம் ஆண்டு முதல் தன் பயணத்தைத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

வாக்கிங் சென்றால் மூளைக்கு நல்லதாம்...!

தொப்பையைக் குறைப்பதில் ஆரம்பித்து, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் வரை பல நோய்களுக்கு வாக்கிங் பரிந்துரைக்கப்படுகிறது. 

Walking


இப்படி பல்வேறு நோய்களில் இருந்து விடுவிக்கும் நடைபயிற்சியால், மேலும் ஒரு பலன் குறித்து ஆய்வில் தெரியவந்துள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் நடத்திய ஆய்வில், வாக்கிங் செல்வதால், மூளை இயக்கம் சீரடைவதாக தெரியவந்துள்ளது. மூளை பாதிப்பு உள்ளவர்களை வைத்து, வாரத்துக்கு மூன்று மணி நேரம் வீதம், ஆறு மாதத்துக்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முடிவில், அவர்களின் மூளை இயக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது நடத்தப்பட்ட ஆய்வு சிறிய அளவிலானதுதான். விரைவில் இது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. 

http://www.vikatan.com/

 

இந்தியாவின் நீளமான பாலத்தின் பெயர் தெரியுமா..?

 
 

பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்த இந்தியாவின் மிகவும் நீளமான பாலத்திற்கு அசாமின் பிரபல பாடகர் பூபென் ஹசாரிகாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நீளமான பாலம்

அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியிலுள்ள சாதியா என்ற இடத்திலிருந்து அருணாச்சலப்பிரதேசத்தின் இட்டாநகரிலுள்ள தோலா இடையே பிரம்மபுத்திரா, லோஹித் ஆறுகளின் குறுக்கே சுமார் 9.2 கி.மீ தொலைவில் கட்டப்பட்டுள்ள பாலத்தைப் பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பூபென் ஹசாரிகா


அசாமின் பிரபல கவிஞரும், முன்னணி பாடகருமான மறைந்த பூபென் ஹசாரிகாவின் நினைவாக இந்தியாவின் மிக நீளமான பாலத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஹசாரிகா இந்தி மற்றும் அசாம் மொழி இசையில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அசாமில், சடியா என்ற இடத்தில், 1926, செப்., 8-ம் தேதி பிறந்தவர் 2011, மார்ச் 4-ம் தேதி மறைந்தார்.

 


தன் குரலால் பலரையும் வசீகரித்த ஹசாரிக்காவை கவுரவப்படுத்தும் வகையில் கவுகாத்தியில் அவருக்கு சிலை ஒன்று நிறுவப்பட்டது. அந்தச் சிலையினை அவரே திறந்து வைத்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்

 

தென் அமெரிக்க நாடுகளில் இப்போது தவளைகள் இனப்பெருக்கம் செய்யும் காலம்.

  • தொடங்கியவர்

கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்ட நாள்: மே 27, 1937

 

கோல்டன் கேட் பாலம், பசிபிக் பெருங்கடலில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் மொத்த நீளம் 1.7 மைல்கள் ஆகும். 1937-ல் கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலமாக இருந்தது. மேலும் இப்பாலமே சான் பிரான்சிஸ்கோவின் சின்னமாக விளங்கியது. மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-

 
கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்ட நாள்: மே 27, 1937
 
கோல்டன் கேட் பாலம், பசிபிக் பெருங்கடலில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் மொத்த நீளம் 1.7 மைல்கள் ஆகும்.

1937-ல் கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலமாக இருந்தது. மேலும் இப்பாலமே சான் பிரான்சிஸ்கோவின் சின்னமாக விளங்கியது.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-

* 1703 - ரஷ்ய சார் மன்னன் முதலாம் பீட்டர் புனித பீட்டர்ஸ்பெர்க் நகரை அமைத்தான்.

* 1860 - இத்தாலியின் ஒற்றுமைக்காக கரிபால்டி சிசிலியின் பலேர்மோ நகரில் தாக்குதலை ஆரம்பித்தான்.

* 1883 - ரஷ்யாவின் மன்னனாக மூன்றாம் அலெக்சாண்டர் முடி சூடினான்.

* 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் பிஸ்மார்க் போர்க் கப்பல் வட அட்லாண்டிக்கில் மூழ்கடிக்கப்பட்டதில் 2,100 பேர் கொல்லப்பட்டனர்.

* 1960 - துருக்கியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் போது செலால் பயார் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

* 1965 - வியட்நாம் போர்: அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தெற்கு வியட்நாம் மீது குண்டுகள் வீசித் தாக்குதலைத் தொடுத்தன.

* 1994 - சோவியத் அதிருப்தியாளர் அலெக்சாண்டர் சொல்ஷெனிட்சின் 20 ஆண்டுகளுக்கு பின்னர் ரஷ்யா திரும்பினார்.

* 1997 - முல்லைத்தீவுக் கடலில் கடற்புலிகள் படகில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

* 2006 - ஜாவாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 6,000 பேர் வரை பலியாயினர்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Sonnenbrille

Mr.Cricket என்று பாராட்டிப் புகழப்படும் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக் ஹஸியின் பிறந்தநாள்.

Happy Birthday Michael Hussey

 

Bild könnte enthalten: 1 Person, machen Sport, Text und im Freien

 

 
 
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை நட்சத்திரம் ரவி சாஸ்திரியின் பிறந்தநாள் இன்று.

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராகவும் பிரபல நேர்முக வர்ணனையாளராகவும் இருக்கும் சாஸ்திரிக்கு  பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Happy Birthday Ravi Shastri
 
 
 

 

 

Bild könnte enthalten: 1 Person, Text und im Freien

இலங்கை அணியின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான மஹேல ஜெயவர்தனவின் பிறந்தநாள் இன்று.

இலங்கை அணியின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர்

இலங்கை அணிக்காக மிகச்சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களில் மிக முக்கியமானவர்.

டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்க்ஸில் அதிகூடிய ஓட்டங்கள் பெற்ற இலங்கையர் என்ற சாதனையும் மஹேலவிடமே இருக்கிறது.
தற்போது நேர்முக வர்ணனையாளராகக் கடமையாற்றும் மஹேல இறுதியாக Mumbai Indians அணியின் பயிற்சியாளராகவும் செயற்பட்டவர்

உலகின் மிகப் புகழ்பெற்ற வீரர்களில் ஒருவரான மஹேல ஜெயவர்தனவிற்கு  பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Happy Birthday Mahela Jayawardena

  • தொடங்கியவர்

பழசுக்கு குறையாது மவுசு!

அந்த காலத்து கிராமஃபோன், மஹாராஜா ஃபோன் என்றழைக்கப்பட்ட டெலிஃபோன் ஆகியவற்றை சேகரித்து புதுப்பித்து விற்பனை செய்து வருகிறார். கேரளாவைச் சேர்ந்த சமீர். கோவை பாரதிபார்க் சாலையில் இப்போது கடைபோட்டிருக்கிறார். என்னதான் இது ஆண்ட்ராய்டு யுகமாக இருந்தாலும், பழசுக்கு மவுசு குறையவில்லை. கிராமஃபோன் 4000ரூபாய்க்கும், டெலிஃபோன் ரூ.3,500 ரூ.4000க்கும் விற்பனை சக்கைபோடுகிறது.!

  • தொடங்கியவர்
மனித குலம் இருக்கும்வரை சரித்திரம் நிலைக்கும்
 

article_1493614370-ghfjgi.jpgஇருக்கின்ற உண்மை வரலாறுகளைப் புரட்டிப்போட்டாலும் அவை புதையுண்டு போவதில்லை. அதிகார வர்க்கம் அதனை எண்ணினாலும் அதனைச் செயலாக்க முடியாது. எழுப்பப்பட்ட எல்லா நாடுகளின் சரித்திரங்களும் அனைத்துப் பிரபல நூலகங்கள், இணையத் தளங்களிலும் பதிவு செய்யப்பட்டு விட்டன.

அத்தியாயம் ஒன்று, அத்தியாயம் இரண்டு எனத் தொடர்கதைகளை எழுதுவதுபோல், சரித்திரங்களில் புனைகதைகளை எழுதமுடியாது.

கோட்டை, கொத்தளங்கள், கல்வெட்டுகள், செப்பேட்டுப் பதிவுகள், சுடுமண் உருவங்கள், மட்பாண்டங்கள் வரலாற்றுச் சான்றாதாரங்களுடன் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட விடயங்களுக்கு கறுப்பு வர்ணம் பூசமுடியாது.

ஓர் இனத்தை, மொழியை, சமயத்தை கொச்சைப்படுத்துவதை இச்சையுடன் செய்யும் வஞ்சனையுடன் கருமமாற்றும் கூத்துகள் கேலியுடன் நோக்கப்படும். மனித குலம் இருக்கும்வரை சரித்திரம் நிலைக்கும்.  

  • தொடங்கியவர்

சர்வர் சுந்தரம் படத்தின் ட்ரைலர் வெளியானது..!

 
 

server-sundaram-santhanam_640x480_814956

சந்தானம் நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்ததை ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். செல்வகுமார் என்பவர் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். வைபவி என்பவர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தின் பெயர் சர்வர் சுந்தரம் என்று இருந்தாலும், படத்தில் 'செப்' கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார்.

 

  • தொடங்கியவர்

மனைவி படித்த பள்ளிக்கு அவரை அழைத்துச்சென்ற மார்க் ஸக்கர்பெர்க்

 
பட உதவி: மார்க் ஃபேஸ்புக் பக்கம்.
பட உதவி: மார்க் ஃபேஸ்புக் பக்கம்.
 
 

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், தன் மனைவி பிரிசில்லா படித்த மாசசூசெட்ஸ் பள்ளிக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

உலகின் இளம் பணக்காரர்களில் ஒருவரான 33 வயது மார்க் மற்றும் அவரின் மனைவி இருவரும் செவ்வாய்க்கிழமை பாஸ்டன் அருகே, மாசசூசெட்ஸில் உள்ள குவின்ஸி உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றனர்.

குவின்சி பள்ளியில்தான் 2003-ல் பிரிசில்லா தனது படிப்பை முடித்துள்ளார். அங்கு சென்ற இருவரும், பள்ளிக்கு நன்கொடை அளித்தனர். ஆனால் எவ்வளவு தொகை என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

இதுகுறித்து தன் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ள மார்க், ''ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் வழியில் பிரிசில்லா படித்த பள்ளிக்கும் சென்றோம். அவர் படிக்கும்போது பள்ளியின் தலைசிறந்த மாணவியாக இருந்தார். டென்னிஸ் மற்றும் ரோபோட்டிக்ஸ் குழுவின் தலைவியாக இருந்துள்ளார். பிரிசில்லாவின் ஆசிரியர்கள் அவரைப் பற்றி ஏராளமான செய்திகளைப் பகிர்ந்துகொண்டனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

லைவ் வீடியோ

பின்னதாக ஹார்வர்ட் இல்லத்தில் உள்ள தன்னுடைய பழைய ஓய்வறையில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை லைவ் வீடியோ ஒன்றை ஃபேஸ்புக்கில் மார்க் வெளியிட்டார்.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தன்னுடைய தினசரி நடவடிக்கைகளையும், புதிய சந்திப்புகளையும், எதிர்கால திட்டங்களையும் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ஒரு சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது.

கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.
வண்ண வண்ண விளக்குகள்,
அழகான நதிகள்,
மரங்கள்,
எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று
அந்த அற்புத உலகம் மயக்கியது.
எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.

ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை. அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது. காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு
அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன? அவரிடம் குருவி வழி கேட்டது.

“எனக்கு முழு விபரம் தெரியாது. தெரிந்த வரை சொல்கிறேன். அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர். ஒரே ஒரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது. குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது. குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,

அந்த வழியே ஒரு பாம்பு வந்தது. பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி,
“அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது. பாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன். பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய். உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது. இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது. பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.

இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது. அவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள். குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.

முடிவாக, அதோ....கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.
வந்து விட்டோம்.....
வந்தே விட்டோம்......
இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
ஆனால்,
இதென்ன....
ஏன் என்னால் பறக்க முடியவில்லை.
ஐயோ,
என் உடம்பெல்லாம் கனக்கிறதே. கீழே இருந்து காற்றில் எழும்பவே டியவில்லையே என்று கதறியது. மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது. பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.

குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம். ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன். அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது அந்தக் குருவி.

இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது.
“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.
குடும்பத்துடன் வெளியே செல்வது,
பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது,
பிடித்த புத்தகம் படிப்பது,
பிடித்த படம் பார்ப்பது,
பிடித்த கோவிலுக்கு போவது,
பிடித்த உடை உடுத்துவது,
பிடித்த உணவு உண்பது
என்று
எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.
கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது.
ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்."
"இந்த நிமிடம் மட்டுமே இறைவன் நமக்கருளியது".

  • தொடங்கியவர்

ஒற்றைக்கண் தெய்வம்!

 

இந்தியாவைப் பொறுத்தவரை அதிசயங்களுக்கு பஞ்சமேயில்லை. வேப்பமரத்தில் பால், முருகனுக்கு வியர்வை, பிள்ளையார் கையில் கொழுக்கட்டை பிரேக்கிங் நியூஸ் கிடைக்காத நேரம் இந்தியர்களுக்கு கைநடுக்கமே வந்துவிடும். இதுவும் அப்படி ஒரு தெய்வீக சீரிஸின் ஆச்சர்ய அத்தியாயம்தான்.
21.jpg
அசாமில் மே 10ம் தேதி பிறந்த ஆடுதான் இப்போது அப்பகுதி மக்களுக்கு இறைவனின் நேரடி தேவதூதன். சாதாரணமாகப் பிறந்தால் பிரச்னையில்லை. ஆனால், ஒற்றைக் கண்ணோடு பிறந்து, சிங்கிள் இம்சைகளில்லாமல் வாழ்ந்தால் போதாதா தெய்வ அந்தஸ்தில் ஒற்றைக் காலை தூக்கிப்போட்டு பாகுபலியாய் அமருவதற்கு?

‘‘முதலில் ஷாக்காக இருந்தாலும், எங்களது ஒற்றைக்கண் ஆட்டைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்க மந்தை மந்தையாக குவியும் மக்களினால் எங்களுக்கும் கொஞ்சம் பெருமை கிடைத்திருக்கிறதே... இது தெய்வச் செயல்தான்!’’ கிடைத்த இடைவெளியில் காலரை இழுத்துவிட்டு பெருமைப்படுகிறார் ஆட்டின் ஓனர் முகூரிதாஸ்!

http://www.kungumam.co.in

  • தொடங்கியவர்

அமெரிக்காவை அதிரவைக்கப் போகும் பறை முழக்கம்!

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் நடக்க உள்ள ஃபெட்னா 2017  (FETNA) தமிழ் விழாவில் 133 அதிகாரப் பறை முழக்கம் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

 

அமெரிக்காவில் ஜூலை மாதம் ’வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை விழா’ நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில்  அமெரிக்காவிலுள்ள பறைக் குழுக்கள் இணைந்து 133 அதிகாரப் பறை முழக்கம் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளன. இதே விழாவில் பல்வேறு தமிழர் கலை மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. தமிழகத்துக்கு அடுத்தபடியாக பறைக் குழுக்கள் உள்ள நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கனடாவில் 5 வயது சிறுமியின் ஒரு நாள் பிரதமர் கனவு நிறைவேறியது

கனடாவில் ஒருநாள் பிரதமராவதற்காக குழந்தைகளுக்கு நடத்திய கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற 5 வயது மாணவி, தான் கோட்டை கட்ட வேண்டும் என உத்தரவிட்டார்.

 
கனடாவில் 5 வயது சிறுமியின் ஒரு நாள் பிரதமர் கனவு நிறைவேறியது
கனடா பிரதமர் ஜஸ்டின் டிருடியூவுடன் சிறுமி பெல்லா மூஸ்.
ஓட்டாவா:

கனடாவில் ஒருநாள் பிரதமராவதற்காக குழந்தைகளுக்கு கட்டுரை போட்டி நடந்தது. அதில் பெல்லா மூஸ் என்ற 5 வயது சிறுமி வெற்றி பெற்றாள்.

அதை தொடர்ந்து அவள் ஒட்டாவாவில் உள்ள பிரதமர் ஐஸ்டின் டிருயூ அலுவலகம் வந்தாள். அவளை பிரதமர் வரவேற்று அழைத்து சென்று இருக்கையில் அமர வைத்தார்.

அங்கு அவள் ஒரு நாள் பிரதமர் ஆனாள். அதை தொடர்ந்து அவள்தான் ஒரு கோட்டை கட்ட வேண்டும் என உத்தரவிட்டாள்.

201705281330565390_Untitled-1._L_styvpf.

அதை ஏற்றுக் கொண்ட ஜஸ்டின் டிருடியோ தலையணைகள், நாற்காலிகள், மேஜை மற்றும் பலவித ஓவியங்களுடன் கூடிய போர்வையால் கோட்டை கட்டி ஒரு நாள் பிரதமரான சிறுமி பெல்லா மூசிடம் வழங்கினார். அதைப் பார்த்து அவள் மகிழ்ச்சி அடைந்தாள்.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

தண்ணீர்த்தொட்டி ரேடியோ!
16a.jpg
சாதனை என்றால் எதிலும் செய்யலாம்தானே! துபாயில் சேனல் 4 ரேடியோவில் ஆர்ஜே ஆக இருக்கிறார் ஸ்டூ டோலன். இவர் 3 மில்லியன் காலன் நீர்த்தொட்டியில் ஆக்சிஜன் சிலிண்டரை பொருத்தியபடி 5 மணி நேரம் ரேடியோ ஷோ நடத்தி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்!

மியாவ்.. மியாவ் பூனை!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் வாழ்கிறது ஓமர் பூனை. ஓமரின் நீளத்தில் அதன் ஓனர் ஸ்டெபி ஹிர்ஸ்டுக்கே திடீர் டவுட் வர, மீட்டர் வைத்து அளந்ததில் 4 அடியில் உலகின் நீளமான பூனை ஓமர்தான் என உறுதியானது. அவ்வளவுதான், ஸ்டெபிக்கு செம குஷி. 31 பவுண்டுகள் எடையுள்ள மிஸ்டர் மியாவ், கங்காருகள் வீட்டுக்கு வந்தால் உடனே அலர்ட் கொடுக்குமாம். காக்கும் பூனை!

பெப்பர் ஸ்ப்ரே பரிதாபம்!

அமெரிக்காவின் ஓஹியோ நகரிலுள்ள பார்பெர்டன் ஸ்கூலில் கிரிமினல் சயின்ஸ் வகுப்பு. மாணவர்களை சுவரருகே நிறுத்தி ஹாஃப்பா, ஃபுல்லா என டீச்சர் கேட்க, மாணவரின் சாய்ஸ்படி பெப்பர் ஸ்ப்ரேவை முகத்தில் அடிக்கிறார் டீச்சர். சில நொடிகளில் கெத்து கலைந்து எரிச்சல் தாங்காமல் பலரும் ‘மம்மி’ என அலற, பள்ளியோ, மாணவர்களின் பர்மிஷனுடன் நடந்த முயற்சி இது என சமாளித்திருக்கிறது.

உத்தரப்பிரதேச ரிவால்வர் ராணி!

காதலித்து கழற்றிவிட்டால் பெண்கள் விடுவார்களா? உ.பி.யின் பந்தேல்கண்டில் நடந்த மேரேஜில்தான் அந்த ட்விஸ்ட். காரில் வந்திறங்கிய அந்தப்பெண் நேராக மணவறையிலிருந்த தன் முன்னாள் காதலர் அசோக் யாதவின் தலையில் துப்பாக்கியை வைத்து மணக்கோலத்தில் கடத்திச் சென்றுவிட்டார்!

கட் அவுட் ஜீன்ஸ்!

ஜீன்ஸைப் போல புதுமை வேறு எதிலும் செய்யவே முடியாதுதான். ஓபனிங் செரிமனி என்ற ஆன்லைன் நிறுவனம் செய்த ரகளைதான் இன்றைய ட்ரெண்டிங். அறிமுகப்படுத்தியுள்ள பெண்கள் ஜீன்ஸில் பாதியை பிரித்தால் கிளாமரான ஷார்ட்ஸ். பட்டன் போட்டுக்கொண்டால் ஜீன்ஸ் பேண்ட்... என அதிரடி ரிலீஸ் வாயைப் பிளக்க வைக்கிறது.

http://www.kungumam.co.in

  • தொடங்கியவர்

28.05.1908: உலகப்புகழ்பெற்ற 'ஜேம்ஸ் பாண்ட் 007'  கதாபாத்திரத்தை உருவாக்கிய ஐயன் பிளம்மிங் பிறந்த தினம் இன்று..!

 

 
ian_flemming

 

ரகசிய உளவாளி, ஏஜெண்ட்-007, பாண்ட் போன்ற புனைப்பெயர்களால் வர்ணிக்கப்படும் சுவாரசியமான கதாபாத்திரம் 'ஜேம்ஸ் பாண்ட்'. 19-ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை பல நடிகர்களின் வித்தியாசமான நடிப்பில்  ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் உயிர்ப்புடன் துப்பறிந்து வருகிறது.

இத்தகைய அழுத்தமான கதாபாத்திரத்திற்கு சொந்தக்காரர் இங்கிலாந்தை சேர்ந்த 'அயன் பிளமிங்'.

அயன் பிளமிங், இங்கிலாந்தில் உள்ள மே-பேரில் பிறந்தவர். இவரது தந்தை வாலன்டைன் பிளம்மிங், ஹென்லி பகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக செயலாற்றினார். கல்லூரி படிப்பை நிறைவு செய்த பிளமிங் நாளிதழ் ஒன்றில் துணை ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் அங்கிருந்து வெளியேறி தந்தையின் தொழில்களை கவனிக்க ஆரம்பித்தார்.

இரண்டாம் உலக போர் நடைபெற்று கொண்டிருந்த சமயம் அது. ரியர் அட்மிரல் ஜான் காட்பிரை என்ற கடற்படை உளவுப்பிரிவில் அயன் பிளமிங் சேர வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி குறுகிய காலத்திலேயே கமாண்டராக பணி உயர்வு பெற்றார். 1942-ம் ஆண்டில் '30 அசால்ட்ஸ் கமாண்டோ' என்ற சிறப்பு உளவு படைக்கு தலைமை தாங்கும் பொறுப்பு பிளமிங்கிற்கு கிடைத்தது. அங்கு பணியாற்றிய உளவாளிகளின் குணாதிசயங்களை ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாபாத்திரத்தில் நிலைநிறுத்தி 1950-ம் ஆண்டில் 'காசினோ ராயல்' என்ற கதையை எழுதினார். இதுவே ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தின் முதல் கதை.

இதனை தொடர்ந்து 1952-ம் ஆண்டில் 'கோல்டன் ஐ' என்ற புத்தகத்தை எழுதி முடித்தார். பத்திரிகை துறையில் பணியாற்றிய அனுபவம் இவரை தொடர்ச்சியாக எழுத செய்தது. 1953-ம் ஆண்டு முதல் 1966-ம் ஆண்டிற்குள்ளாக 12 புத்தகங்களை எழுதி வெளியிட்டார். இதில் 'மேன் வித் த கோல்டன் கன்', 'ஆக்டோபுசி அண்ட் த டே லைட்' போன்ற கதைகளை ரஷியாவில் பனிபொழிவு பிரதேசங்களில் பணியாற்றிய அனுபவங்களை கொண்டு எழுதினார்.

அயன் பிளமிங்கின் ஜேம்ஸ் பாண்ட் கதைகளுக்கு லண்டன் நாட்டின் பிரபல எழுத்தாளரான ஜோவன் ஹ¨ என்பவர் அச்சு வடிவம் கொடுத்தார். இவரை தவிர மற்றவர்களிடம் பிளமிங் கதைகளை பகிர்ந்து கொண்டது கிடையாது. ஜேம்ஸ் பாண்ட் கதைகள் மீதான மக்களின் ஆர்வம் குறைபடாமல் இருக்க வேண்டும் என்பதில் முழு முனைப்புடன் செயல்பட்டார். கதைகளை எழுதும் போதே ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தின் கற்பனை சித்திரத்தையும் வரைந்தார். அவை ஸ்டைலான தலை முடி, அகன்ற முகம், புகைப்பிடிக்கும் பழக்க வழக்கம் என அயன் பிளமிங்கை இளமை தோற்றத்தில் வரைந்தது போன்று காட்சியளித்தன. புத்தகத்தின் முதல் பக்க அட்டை மற்றும் உள்பக்கத்தில் இடம்பெறும் புகைப்படங்கள் அத்தனையும் தானாகவே உருவாக்கினார். காசினோ ராயல் மூன்று பதிப்புகளாக வெளியிடப்பட்டது. அதற்கு பின்னரும் அச்சிடப்பட்டு வெளியானது. அன்று முதல் இன்று வரை ஜேம்ஸ் பாண்ட் கதைகள் பல்வேறு நவீன மாற்றங்களுடன் நூலகங் களையும், வீடுகளையும் அலங்கரித்து வருகின்றன.

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்
‘காலஓட்டத்துக்கு பாகுபாடில்லை’
 

article_1494482769--%E0%AE%B5%E0%AE%B4%Eநேற்றைய அனுபவங்களும் இன்றைய விடாமுயற்சிகளும் நாளைய வெற்றிகளை நிலையாக உறுதிப்படுத்துகின்றன.

எனினும் இன்றைய நாள்தான், நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் உண்மையான நாள். ஏன் நொடிப்பொழுதில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம்தான் நிச்சமயமானதும் கூட.

பழைய கதைகள் மூலம் பல விடயங்களைக் கற்கமுடியும். ஆனால் அதுபற்றிச் சும்மா பேசிக்கொண்டிருக்கக் கூடாது. அதுபோல, எதிர்காலத்தில் இப்படி இருப்பேன் என கற்பனையை வளர்க்கும் மனிதன் அதனை யதார்த்தமாக நனவாக்காமல் இருப்பது சோம்பேறித்தனமானது.

நல்ல எண்ணங்கள் குதூகலத்தை ஏற்படுத்த வல்லது. அதே குதூகலத்துடன் காரியங்களை ஆற்ற முற்படுக. எந்த நாளும் சிலர் தங்களுக்கு நல்ல காலம் இல்லை என்பார்கள்.

காலஓட்டத்துக்கு பாகுபாடில்லை. எல்லா இரவும் பகலும் சகலருக்கும் பொதுவாகவே ஓடிக்கொண்டிருக்கின்றது.காலத்தைக் கைப்பற்றுங்கள்; நழுவவிடவேண்டாம்.

  • தொடங்கியவர்

அலுவலகத்தில் கில்லி ஆக ஸ்மார்ட்போன் நமக்கு கற்றுத்தரும் ஸ்மார்ட் விஷயங்கள்..! #MondayMotivation

 
 

ஸ்மார்ட்போன்

இந்த சம்மருக்கு எல்லாம் பயந்துடாதீங்க. அடுத்த மாசம் எல்லா அலுவலகங்களும் இன்னும் ஹாட்டா இருக்கும். ஏன்னா ,பெரும்பாலும் ஜூன்ல தான் அப்ரைசல் நடக்கும். எவ்ளோ நல்லா வேலை செஞ்சாலும் கண்டுக்க மாட்றாங்கன்னு எப்பவும் போல அலுத்துக்காம கொஞ்சம் ஸ்மார்ட்டா இருப்போம். ஸ்மார்ட்டா வேலை செய்வோம். எப்படின்னு கேட்கறீங்களா? ஸ்மார்ட்போன வச்சே சொல்றேன்.

பவர் சேவிங் மோடு:

ஸ்மார்ட்போன்ல பேட்டரி 20% கீழ போனா "பவர் சேவிங் மோடு"க்கு மாறவான்னு அதுவே கேட்கும். அந்த மாதிரிதான் நாமளும் இருக்கணும். நமக்கு கொடுக்கபட்ட வேலைகள் அதிகம்னாலும் அதை சொல்லாம மாடு மாதிரி உழைச்சிட்டே இருப்போம். ஒரு கட்டத்துல வேலையும் முடியாது. நாமும் கடுப்பாயிடுவோம். அது நமக்கும் நல்லதில்லை. கம்பெனிக்கும் நல்லதில்லை. அதனால, நம்ம லிமிட்டுக்கு மீறின வேலைகள் நம்ம டேபிள்ல சேர்ந்துட்டா அதை சொல்லிடுங்க. அதுதான் சேஃப். அதுதான் ஸ்மார்ட்.

2G/3G/4G:

மொபைல் நெட்வொர்க்  2G, 3G, 4G, இந்த மூன்றையும் மாத்தி மாத்தி யூஸ் பண்ணும். அந்தந்த இடத்துல எந்த சேவை இருக்கோ அதை பிடிச்சிக்கும். அலுவலக வேலைகள்ல நாமும் அப்படித்தான் இருக்கணும். ஒரு பிராஜெக்ட்ல நாம அதிக முக்கியத்துவம் இருக்கிற ஆளா இருப்போம். இன்னொரு பிராஜெக்ட்ல அவ்ளோ தேவை இருக்காது. நம்ம ரோல் என்னவோ அத புரிஞ்சு பங்கெடுக்கணும். 

அப்டேட் ஆகுங்க:

காலம் போற வேகத்துக்கு அளவே இல்லை. இந்த வருஷ ஸ்மார்ட்போன் அடுத்த வருஷம் மொக்கை போன் ஆகலாம். அப்படி ஆகாம தடுக்கிற ஓர் ஆயுதம் அப்டேட். அடுத்தடுத்த அப்டேட்டை ஏத்துக்கிற போன்தான் தொடர்ந்து பயன்பாட்டுல இருக்கும். இதுக்கு மேல அப்டேட்டை என்னால ஏத்துக்கு முடியாதுன்ற போன olxல கூட விக்க முடியாது. அதனால எப்பவும் அப்டேட்டுக்கு தயாரா இருங்க. தகுதியோட இருங்க.

ஹெல்த்தை பாத்துக்குங்க:

ஆப்பிள் போனோ, ஆண்டிராய்டு போனோ... நம்ம கைக்கு வந்ததும் ஸ்க்ராட்ச் கார்டு போடுறோம். கவர் வாங்குறோம். மொபைலுக்கு எந்த சேதாரமும் இல்லாம பாத்துக்குறோம். அப்பதான் ஸ்மார்ட்போனோட ஸ்மார்ட்னஸை நம்மளால முழுசா அனுபவிக்க முடியும். அதே மாதிரிதான் ஸ்மார்ட் ஸ்டாஃப் ஆன நீங்களும். மனதையும், உடலையும் ஆரோக்கியமா வச்சுக்கோங்க. அப்ரைசல்ல நல்லரேட்டிங் உங்கள தானா தேடி வரும்.

ஷேரிங்:

ஆஃபீஸோ, தனிப்பட்ட வாழ்க்கையோ, சோஷியல் மீடியாவோ... வெற்றிக்கான ஒரு சீக்ரெட் என்ன தெரியுமா? ஷேரிங். தெரிஞ்சத மறைச்சு வச்சா அதுல இருக்கிற தப்பு கூட நமக்கு தெரியாம போகலாம். அதனால தெரிஞ்சத மத்தவங்க கூட ஷேர் செய்யுங்க. பாகுபலி எப்படி அம்பு எய்யணும்னு தேவசேனைக்கு சொல்லிக்கொடுத்ததாலதான் அவங்களுக்கு காதலே வந்துச்சு. இல்லையா?

ஷேர் செய்யுங்க. 

இன்னும் ஏராளமான விஷயங்களை நமக்கு ஸ்மார்ட்போன் சொல்லித்தரும். தேவையாண வெளிச்சத்துக்கு கூட்டி குறைக்கிற பிரைட்னெஸ், கேமராவில் தொடங்கி அவசரத்துக்கு பேப்பர் வெயிட் வரைக்கும் பல விஷயங்களுக்கு உதவுற மல்ட்டி பர்ப்பஸ் குணம்ன்னு நிறைய சொல்லலாம். கடைசியா ஒரு குணம் தான். எதை செய்தாலும் ஸ்மார்ட்டா செய்யணும். அதுதான் முக்கியம்.

 

உங்கள் அப்ரைசலில் நல்ல ரேட்டிங் பெற வாழ்த்துகள்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஒரு ஜார்ஜ், ஒரு மலர் டீச்சர், ஒரே ஒரு பிரேமம்! #2YearsOfPremam

 
 

"ஐந்து பெரிய நிறுவனங்களில் இருந்து பிரேமம் படத்தின் இந்தி ரீமேக்கிற்காக அணுகினார்கள். அதில் இரண்டு நிறுவனங்கள் 'எங்களிடம் திறமையான இயக்குநர்கள் இருக்கிறார்கள். உங்களையும் விட அவர்கள் பர்ஃபெக்ட்டாக படத்தை எடுப்பார்கள்' என்றார்கள். பிரேமம் படத்தின் அழகே, அதன் குறைகள் தான். எனவே படத்தை ரீமேக் செய்ய விரும்புபவர்கள்  ஃபர்ஃபெக்ட் ஷாட்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்." சில தினங்களுக்கு முன் அல்போன்ஸ் புத்திரன் முகநூலில் பதிந்திருந்த ட்வீட் இது. அல்போன்ஸ் சொன்னதுதான் உண்மையும் கூட. வழக்கமான சினிமா ஃபார்மெட்டுக்குள் அடக்காமல், அது போக்கிலேயே போய் பிரேமத்தை படம் பிடித்திருந்ததுதான் படத்தின் அழகும்! அந்த பிரேமம் வெளியாகி இரண்டு வருடம் நிறைவடைகிறது. இன்னுமும் பிரேமம் படம் பார்க்காதவர்கள் இருக்கலாம், ஆனால் படம் பற்றி கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. அதனால்தான் பிரேமம் அவ்வளவு ஸ்பெஷல்.

பிரேமம்

ஒரு சினிமா மொழிகளைக் கடந்து எல்லோரையும் சென்று சேர்வது, எப்போதாவது நிகழும் மேஜிக். அந்த மேஜிக்கை செய்ய படத்தின் இயக்குநர் ராஜமௌலி போல வித்தைக்காரராக இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. அல்போன்ஸ் புத்ரன் போல நண்பர்களுடன் இணைந்து ஜாலியாக ஒரு படத்தை எடுத்து அந்த கொண்டாட்ட உணர்வை ஆடியன்ஸுக்குக் கடத்துபவராகக் கூட இருக்கலாம். கேரளாவை விட அல்லது கேரளாவுக்கு சமமாக இந்தப் படம் மற்ற மொழிகளிலும் கொண்டாடப்பட்டது. சென்னையில் மட்டும் 200 நாட்கள் ஓடியது. காரணம் என்ன? மலர் டீச்சர் மட்டும் தானா? நிச்சயமாக இல்லை. அதைத் தாண்டி இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன.

 

 

 

இதே காதலை அழுத்தமாக ஆட்டோகிராஃபிலும், ஜாலியாக அட்டகத்தியிலும் நாம் பார்த்ததுதான். ஆனால், பிரேமத்தில் இரண்டையும் நாம் பார்க்க முடிந்தது ஒரு ஸ்பெஷல் காரணம்.

Letter

"என்டே சொந்தம் மேரிக்கி, 

நான் உன்ன முதல் முதல்ல சர்ச்சில் பார்த்தேன். அன்னைக்கி நீ ஆரஞ்ச் கலர் சுடிதார் போட்டிருந்த. இல்ல நான் சொல்ல வந்தது சிவப்பு போல இருந்த ஆரஞ்ச் கலர் சுடிதார்..." என அடித்தலும் திருத்தலுமாக காதல் கடிதம் எழுதி பின்பு "ச்சே இவ ஒரு நீலக் கலர் சுடிதார் போட்டுட்டு வந்திருக்கக் கூடாதா" என சலிப்போடு வேறு ஒரு பேப்பரை எடுத்து "என்டே சொந்தம் மேரிக்கி" இப்படி ஆரம்பிக்கும் படத்தின் முதல் காட்சி. இந்த கேன்டிட் உணர்வை படம் முழுக்க தருவதும், அதன் மூலமாகவே காமெடியோ, காதலோ, ஃபீலிங்கையோ கடத்துவது படத்தின் மிகப் பெரிய ப்ளஸ். ஹீரோவான ஜார்ஜின் மூன்று காலகட்டங்கள், அந்த காலகட்டத்தில் அவனின் காதல்தான் படத்தின் கதை. அதுகூடவே மேரி, மலர், செலின், சாம்பு, கோயா, ஆலுவா, ரெட் வெல்வட் கேக், ஜாவா இஸ் சிம்பிளானு, தாடி, கருப்பு சட்டை, வேஷ்டி, கூலர்ஸ், கண்ணு சுவக்கனு, மலரே நின்னே காணாதிருந்தால் என நினைத்து சிலிர்க்கப் பல விஷயங்களை உள்ளே வைத்துக் கொடுத்திருப்பார் இயக்குநர் அல்போன்ஸ். 

Malar

மேரியுடனான காதல் தோல்விக்குப் பிறகு இறுக்கமான முகத்துடனேயே அலையும் ஜார்ஜ் மறுபடி ஒரு காதல் வந்ததும் சகஜமாவார், மலர் டீச்சர் தன்னை மறந்த பின் மறுபடி இறுக்கம், மீண்டும் செலின் மீது காதல் வந்ததும் சகஜமாவார் ஜார்ஜ். இப்படி ரிலேஷன்ஷிப் வைத்து சுவாரஸ்யமான ஆட்டத்தை ஆட படம் முழுக்க ஃப்ரெஷ்ஷான சீன்களைக் கொடுத்து அசத்தியிருப்பார். படத்தின் மற்ற சிறப்புகள் படத்தின் இசை, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங். இயக்குநரானா அல்போன்ஸ் தான் படத்தின் எடிட்டரும் என்பதால் எந்த இடமும் நம்மை உறுத்தாமல் தொந்தரவு செய்யாமல் அடுத்த காட்சிக்கு நகர வைக்கும். படத்தின் பின்னணி இசையோ, பாடல்களோ லேசாக முணுமுணுத்தால் கூட பக்கத்திலிருப்பவரை உரக்கப் பாட வைக்கும் அளவுக்கு கவர்ந்திருந்தது, ராஜேஷ் முருகேசனின் இசை. படம் முழுவதும் இருந்த கேண்டிட் ஃபீல், செலின் கேக் சாப்பிடும் சீனோ, சகதியில் நிவின் சண்டை போடும் சீனோ அத்தனையும் அவ்வளவு அழகு.

Premam

 

நிறைய சிரிக்க வைத்து கொஞ்சம் கலங்க வைத்து, இது மொத்தத்தையும் ரசிக்க வைத்த விதத்தில் பிரேமம் மலையாள சினிமா மட்டும் அல்ல மறக்க முடியாத சினிமா. தெலுங்கில் பிரேமம் ரீமேக் ஆன போது அதற்கு இணையத்தில் அத்தனை எதிர்ப்புகள். குறிப்பாக மலர் டீச்சர் ரோலில் நடித்த ஸ்ருதிக்கு எதிராக அத்தனை மீம்கள். இவ்வளவுக்கும் தெலுங்கு பிரேமம் அத்தனை மோசமும் கிடையாது. ஆனால், பிரேமம் என்றால் அது ஒன்றுதான் இருக்க வேண்டும் என ரசிகர்களின் விருப்பமாக இருந்தது. ஆரம்பத்தில் சொன்னதுபோல பிரேமம் வேறு மொழியில் ரீமேக் செய்து, பிரேமத்தை விட பெட்டரான படத்தைக் கொடுக்க முடியும். ஆனால், அதன் மீது அக்கறைப்பட ஆட்கள் கிடையாது. தவிர இங்கு பிரேமத்தின் பெட்டர் வெர்ஷனை யாரும் விரும்பவும் இல்லை. இங்கு ஒரு ஜார்ஜ், ஒரு மலர் டீச்சர், ஒரே ஒரு பிரேமம்தான்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

அடுத்த உசைன் போல்ட் ரெடி..! - பிறந்த சில மணி நேரத்திலேயே நடை பழகிய குழந்தை

பிறந்து சிலமணி நேரங்களே ஆன குழந்தை நடை பழகும் அழகு காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

 
அடுத்த உசைன் போல்ட் ரெடி..! - பிறந்த சில மணி நேரத்திலேயே நடை பழகிய குழந்தை
 
இந்திய தலைநகர் டெல்லியில், பிறந்து சிறிது நேரங்களே ஆன குழந்தை ஒன்று செவிலியரின் உதவியுடன் நடக்கப் பழகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

பொதுவாக ஒரு குழந்தை பிறந்து சில மாதங்கள் கடந்த பின்னர்தான் தவழ ஆரம்பிக்கும். பின்பு கொஞ்ச நாட்களுக்கு பிறகு உட்காரத்தொடங்கி, பின்புதான் படிப்படியாக நடக்க ஆரம்பிக்கும்.

ஆனால் டெல்லியில் பிறந்த குழந்தை ஒன்று பிறந்து சில மணிநேரங்களிலேயே செவிலியரின் உதவியுடன் நடக்கப் பழகியுள்ளது.

செவிலியர் ஒருவர் தன்னுடைய கைகளில் குழந்தையை தாங்கி பிடிக்க, தன்னுடைய பிஞ்சு கால்களால் அக்குழந்தை நடக்க பழகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக வருகின்றது.
 
 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.