Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

545253_213228498843673_1911110066_n.jpg?

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இன்று அன்று | 28 அக்டோபர் 1955: உழைப்பால் வென்ற இந்திரா!

 

 
 
INDRA_NOOYI_553274_2599739h.jpg
 

பெப்சிகோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்ற மகிழ்ச்சியுடன் அமெரிக்காவில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினார் இந்திரா நூயி.

அந்தச் செய்தியைத் தன்னுடைய அம்மாவுக்குச் சொல்ல நினைத்தார். அப்போது அவரது அம்மா அவரிடம், “ராஜ் கிஷன் (இந்திரா நூயியின் கணவர்) அலுவலகத்திலிருந்து வந்திருக்கிறார். அவருக்குக் கொஞ்சம் பால் வாங்கி வா” என்றாராம். கோபம் வந்தாலும் அடக்கிக்கொண்டு பால் பாக்கெட்டை வாங்கி வந்தாராம் இந்திரா.

“அம்மா அத்தனை கண்டிப்பானவர்” என்று சொல்லும் அதே இந்திராதான் அம்மாவின் கட்டுப்பாடுகளையும் தாண்டி, சென்னையிலிருந்து அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்கச் சென்றவர்.

1955 அக்டோபர் 28-ல் சென்னையில் பிறந்தவர் இவர். உலகின் அதிகாரமிக்க 50 பெண்களில் ஒருவராக ஃபார்ச்சூன் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அயராத உழைப்பால் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் இந்திரா, தூக்கத்தைவிட உழைப்புக்கே முக்கியத்துவம் தருவேன் என்று கூறுகிறார். ஆம், தினமும் நான்கே நான்கு மணி நேரம்தான் தூக்கத்துக்கு ஒதுக்குகிறார் இந்திரா!

http://tamil.thehindu.com/opinion/blogs/இன்று-அன்று-28-அக்டோபர்-1955-உழைப்பால்-வென்ற-இந்திரா/article7813032.ece?homepage=true

  • தொடங்கியவர்

போனஸ் பிறந்த கதை!

 

ண்டிகை காலம் நெருங்கி விட்டது. பெரும்பாலான நிறுவனங்களில் போனஸ் வழங்கப்பட்டு வருகின்றன. சரி இந்த போனஸ் வழங்கும் முறை எப்படி வந்தது.?

bonus.jpg

இதற்கு ஒரு சரித்திர பின்னணி உள்ளது. இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வாரச் சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்துள்ளது.ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்தான் மாத சம்பள முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதாவது  4 வாரங்களுக்கு ஒரு முறை  சம்பளம்  கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்பட்டது.

அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் ஒரு வருடத்திற்கு 52 வாரங்கள் வருகிறது. அப்படியென்றால் 13 மாத சம்பளங்கள் வர வேண்டுமல்லாவா? இதனால் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதாக 1930ஆம் ஆண்டு வாக்கில் மகராஸ்ட்ராவில் உள்ள சில தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தொடங்கின.  தங்களுக்கு ஒரு மாத சம்பளம் தராமல் வஞ்சிக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராடின.10 ஆண்டு காலம் இந்த போராட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஒரு மாத சம்பளத்தை வழங்குவது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பிரிட்டிஷ் அரசு ஆலோசனை நடத்தியது. இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் போது மக்களுக்கு அதிக பணத் தேவை இருக்கும் என்றும், அந்த சமயத்தில் போனஸ் வழங்கப்பட்டால் பொருத்தமாக இருக்கும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து 1940ஆம் வருடன் ஜுன் மாதம் 30ஆம் தேதி இந்தியாவில் முதன் முதலாக இந்தியாவில் போனஸ் வழங்கப்பட்டது. இதுதான் போனஸ் பிறந்த கதை.

http://www.vikatan.com/news/article.php?aid=54333

  • தொடங்கியவர்

இயற்கை விந்தை: இப்படியும் ஒரு மரம்!

 
 
tree_2599805f.jpg
 

சந்தன மரம் என்றாலே அதன் வாசனையும் மதிப்பும்தான் எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வரும். ஆனால், சந்தன மரம் வளரும் விதத்தை அறிந்தால், அதுதான் இனிமேல் உங்களுக்கு ஞாபகம் வரும்.

வேப்பம் மரம், புங்க மரம் என விரும்பும் மரத்தை நினைத்த இடத்தில் தனியாக வளர்க்கிறோம் இல்லையா? ஆனால், சந்தன மரத்தை இப்படித் தனியாக வளர்க்க முடியாது. சந்தன மரத்தை வேறு மரங்களுக்குப் பக்கத்தில்தான் வளர்க்க முடியும். அதற்குக் காரணம் இருக்கிறது. சந்தன மரத்தின் வேர் ஒரு ஒட்டுண்ணி. அதனால், ஒரு மரத்துக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துகளையும் மண்ணிலிருந்து அவற்றால் நேரடியாகப் பெற முடியாது. நிலத்துக்கு அடியில் இதன் பக்கத்தில் உள்ள வேறு மரத்தின் வேரைத் தேடிச்சென்று ஒட்டிக்கொள்ளும்.

அப்படி ஒட்டிக்கொள்ளும்போது, இதன் வேரில் ‘பௌஸ்டோரியா’என்னும் உறுப்பு வளரும். அது பக்கத்தில் உள்ள மர வேரைத் துளைத்துச் சென்று உயிர் வாழத் தேவையான நைட்ரஜனையும் பாஸ்பரஸையும் எடுத்துக்கொள்ளும். அதோடு விட்டுவிடாது, தனக்கு ஊட்டம் தரும் அந்த மரத்தையும் பாதிப்படையச் செய்துவிடும். இதனால் சந்தன மரக்காடுகளில் உள்ள மற்ற மரங்கள் கொஞ்சம் நோஞ்சானாகவே இருக்கும்.

சந்தன மரம் மெதுவாக வளரும் தன்மைக்கொண்டது. அது ஓரளவு வளரும்வரை மற்றத் தாவரங்கள் எல்லாமே சந்தன மரத்தின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டே ஆக வேண்டும். மூக்கைத் துளைக்கும் அளவுக்கு வாசம் வீசும் சந்தன மரக்கட்டையின் இந்தச் செயல், இயற்கையின் விந்தை இல்லையா?

தகவல் திரட்டியவர்: ஆ. ஹரிணி, 6- ம் வகுப்பு, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம்.

http://tamil.thehindu.com/society/kids/இயற்கை-விந்தை-இப்படியும்-ஒரு-மரம்/article7813354.ece

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: கேர்ள் பிரெண்டும் ஸ்மார்ட்போனும்

 
1_2587044f.jpg
 

2_2587042a.jpg

3_2587041a.jpg

 

5_2587039a.jpg

  • தொடங்கியவர்

கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்...!

 

mirror.jpg'வாட்ஸ் அப்'பில் அவ்வப்போது சில தகவல்கள் வைரலாக பரவி அனைவரையும் கவர்வதுண்டு. அந்த வரிசையில் கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள் என்ற ஒரு செய்தி தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறது.

அது இங்கே...

'நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ, கறையோ பட்டுவிட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளதை உள்ளபடி காட்டுகிறது அல்லவா? அதேபோல், உன் சகோதரனிடம், நண்பனிடம், கணவரிடம், மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!

கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். அதேபோல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாதபோது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!

ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா? இல்லையே…! அதேபோல், நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!

இனி கண்ணாடி முன்னால் நின்று முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் உங்கள் மனதை அலங்கரிக்கட்டும்".

http://www.vikatan.com/news/article.php?aid=51933

  • தொடங்கியவர்

12185057_935140603201301_490672931889926

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணித்தலைவரும், சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான மைக்கேல் வோனின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்

பன்றி உண்டியல் பிரபலமானது ஏன்?

 

 
piggy_bank_2599815f.jpg
 

அக்.31 - உலக சேமிப்பு நாள்

நாம் காசு சேர்க்க உண்டியலைப் பயன்படுத்துகிறோம் இல்லையா? வெளிநாடுகளில் குழந்தைகள் காசு சேர்க்க 'பிக்கி பேங்க்' என்றழைக்கப்படும் பன்றி வடிவ உண்டியலையே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்களே, அது ஏன்? அதற்குக் காரணம் இருக்கிறது. அத்துடன் உலக சேமிப்பு நாள் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?

பண்டைய கிரேக்க, ரோமானிய நாகரிகங்களில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் காசு சேர்க்கப் பயன்படுத்தப்பட்ட உண்டியல்கள் கிடைத்துள்ளன. இந்த உண்டியல்கள் களிமண்ணிலோ, மரத்திலோ செய்யப்பட்டிருந்தன. பெரும்பாலும் பானை வடிவம், ஜாடி வடிவத்தில் காசு போடுவதற்கான துளையுடன் அவை இருந்தன.

உண்டியல் துளையைத் தலைகீழாகக் கவிழ்த்து ஓரிரு காசுகளை எடுக்கலாம் என்றாலும், மொத்தக் காசையும் எடுக்க வேண்டுமென்றால், உண்டியலை உடைக்கவே வேண்டும். அதற்குப் பிறகு அந்த உண்டியலை தூக்கிபோட்டுவிட வேண்டியதுதான்.

மத்திய காலத்தில்தான் உண்டியல்களின் வடிவமும் களிமண்ணும் மாறின. அந்தக் காலத்தில் உண்டியல் செய்ய ஆரஞ்சு வண்ணக் களிமண் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலத்தில் அதன் பெயர் 'Pygg' (பிக்). இந்தக் களிமண்ணில் செய்யப்பட்ட உண்டியல்கள் 17-ம் நூற்றாண்டில் மிகப் பிரபலம். அது 'Pygg Bank' எனப்பட்டது. காலப்போக்கில் அது மருவி 'Piggy Bank' என்றாகிவிட்டது. பெயர் மருவிய பிறகுதான் பன்றி வடிவ உண்டியல்கள் பிரபலமடைந்தன.

உலகின் பல பகுதிகளில் பன்றிகள் அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும் கருதப்படுகின்றன. ஜெர்மனியிலும் நெதர்லாந்திலும் பன்றி உண்டியல்கள் அதிர்ஷ்டப் பரிசாகவும், புத்தாண்டுப் பரிசாகவும் கொடுக்கப்படுகின்றன.

இன்றைக்கு களிமண்ணைத் தவிர மற்ற பொருட்களிலும், பன்றியைத் தவிர்த்த மற்ற வடிவங்களிலும் உண்டியல்கள் செய்யப்படுகின்றன. ஆனால், ஆங்கிலத்தில் உண்டியல் பெரும்பாலும் 'பிக்கி பேங்க்' என்றே அழைக்கப்படுகிறது.

ஜப்பானில் மனேகி நெகோ எனப்படும் காசுப் பூனை அதிர்ஷ்டத்துக்காகவும், நல்ல எதிர்காலத்துக்காகவும் வீடுகளில் வைக்கப்படுகிறது. இதுவும் ஒரு வகை உண்டியலே.

ஐரோப்பாவில் பீங்கானிலும், அழகான பொம்மைகளைப் போலவும் செய்யப்படும் உண்டியல்கள் காசு சேர்ப்பதற்காக மட்டுமல்லாமல் அலங்காரப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

19-ம் நூற்றாண்டின் மத்தியில் உலோக உண்டியல்கள் அறிமுகமாகின. 1920 - 30-களில் தகரத்தில் செய்யப்பட்ட உண்டியல்கள் வெளிநாடுகளில் பிரபலமாக இருந்தன. 1945-க்குப் பிறகு பிளாஸ்டிக் உண்டியல்கள் அறிமுகமாகின.

உலகப் போருக்கு முன்னதாக வாடிக்கையாளர்களிடம் சேமிப்புப் பழக்கத்தை அதிகரிக்க வங்கிகள் உண்டியல்களை வழங்கி வந்தன. தனியார் நிறுவனங்களும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இலவச உண்டியல்களை வழங்குவது பிறகு வழக்கமானது.

இன்றைக்கு பன்றி உண்டியல்கள் பிளாஸ்டிக்கில் கிடைத்தாலும், பீங்கானில் செய்யப்படுவதே வழக்கம். இந்த உண்டியல்கள் பழைய காலத்தைப் போல் இல்லாமல், அடியில் மூடியுடன் வருகின்றன. அதனால், உடைக்க வேண்டிய அவசியம் ஏற்படுவது இல்லை.

இன்றைக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகெங்கும் பல்வேறு உயிரினங்கள், பழங்கள், பொருட்கள் வடிவில் உண்டியல்கள் கிடைக்கின்றன. நம் ஊரில் பானை செய்பவர்களும் பொம்மை செய்பவர்களும் பல்வேறு வடிவங்களில் மண் உண்டியல்களை விற்பதைப் பார்த்திருக்கலாம்.

இந்தியாவில் ஏன் மாறியது?

இத்தாலியில் உள்ள மிலானோ நகரில் 1924 அக்டோபர் 31-ம் தேதி உலகின் 'முதல் சர்வதேச வங்கி சேமிப்பு மாநாடு' நடந்தது. அப்போது முதல் ‘உலக சேமிப்பு நாள்’ அனுசரிப்பது தொடங்கியது. அந்த மாநாட்டின் கடைசி நாளில் இத்தாலிய பேராசிரியர் ஃபிலிப்போ ராவிஸா 'சர்வதேச சேமிப்பு நாளை' அறிவித்தார். அதற்கு முன்னர் 'உலக சிக்கன நாள்' என்று அது அழைக்கப்பட்டு வந்தது.

இந்தியாவில் 1984-ம் ஆண்டு வரை அக்டோபர் 31-ம் தேதியே உலக சேமிப்பு நாள் அனுசரிக்கப்பட்டு வந்தது. ஆனால், 1984-க்குப் பிறகு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளும் அக்டோபர் 31-ம் தேதி வந்ததால், அக்டோபர் 30-ம் தேதி சேமிப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

http://tamil.thehindu.com/society/kids/பன்றி-உண்டியல்-பிரபலமானது-ஏன்/article7813400.ece

  • தொடங்கியவர்

12195014_935130249869003_772422198032631

ஆயிரம் பல்லாயிரம் பாடல்கள் எழுதிய வாலிபக் கவிஞர் வாலியின் பிறந்தநாள்...

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

12185177_935127979869230_167707445083754

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மத்தியூ ஹெய்டனின் பிறந்த தினம் இன்று.
டெஸ்ட் போட்டியில் தனிநபர் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை உலக சாதனை (380) இவர் வசம் சில காலம் இருந்தமை பெருமைக்குரிய ஒரு விஷயம்.

  • தொடங்கியவர்

குழந்தைகள் அல்லவா முதியோர்கள்...!

 

னிதனுடைய வளர்ச்சியை 3  காலகட்டங்களாக பிரிக்கலாம். குழந்தை பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவம். 60 வயதை கடந்தவர்கள் முதுமை பருவத்தினராக அறியப்படுகிறார்கள் அல்லது மூத்த குடிமக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

நம்மை குழந்தையிலிருந்து பாதுகாத்து சீராட்டி வளர்த்த நம் பெற்றோரை முதியோர் இல்லங்களில் அடைக்கலாமா?அவர்கள் நம் தலைமுறையின் ஆணிவேர்கள். இவர்கள் கண்ணியமாக மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக அக்டோபர் 1 உலக முதியவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

1990- ம் ஆண்டு ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி இது கடைபிடிக்கப்படுகிறது 1991லிருந்து ஒவ்வொரு ஆண்டும் முதியவர்கள் தினம் கடைபிடித்து வருகிறோம்.கடந்த 2002-ம் ஆண்டு முதியவர்களுக்கான புதிய செயல்திட்டம் வகுக்கப்பட்டு முதியோர் நலன், சுதந்திரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தற்போது உலகம் முழுவதும் 60கோடி முதியவர்கள் இருப்பதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏன் இந்த முதியவர்கள் தினம் கடைபிடிக்கிறோம்?

இன்று முதியவர்களின் நிலை சமூகத்தில்  மிகவும் மோசமாக உள்ளது.

oldnedws_vc1.jpg


முதியவர்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்னைகள்:

வயதான காலத்தில் வரக்கூடிய உடல்நலம் சார்ந்த பிரச்னைகளும், மனநலம் சார்ந்த பிரச்னைகளும்தான் இவர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்னைகள். உடல்நலக்குறைவு ஏற்பட்டால் இவர்களை மருத்துவமனைக்கு  அழைத்துச் செல்ல யாரும் இல்லை. தினம் தினம் அரசு மருத்துவமனைகளில் பார்க்கலாம், பல முதியவர்கள் வெயில் என்றும் பாராமல் காத்துக் கிடந்து மருந்து மாத்திரைகள் வாங்கிச் செல்வர். இதில் பலபேர் வீட்டில் உறவுகள் இருந்தும் தனிமையில் வந்திருப்பர்.

அடுத்ததாக இவர்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்னை மரியாதைக் குறைவு.'நீ எல்லாம் இருந்து என்ன  பண்ண  போற... பேசாம செத்து தொலைய வேண்டியதுதானே..?' போன்ற வசவுகள். பேருந்தில் பயணம் செய்ய சென்றால் அங்கு 'நீயெல்லாம் வரலனு யார் அழுதா..? இங்க வந்து நம்ம உயிர வாங்கிக்கிட்டு' என்ற வசனங்களை கடந்துதான் செல்கிறார்கள்.

இவ்வாறு செய்வதால் என்ன பயன். இவர்கள் யார்? அனுபவத்திலும் ,வயதிலும் மூத்தவர்கள்.
இளைமையின் வாழ்கையை பிள்ளைகளுக்காக செலவழித்துவிட்டு கடைசியில் ஓய்வு எடுக்கும் இவர்களின் உலகம், வேறு எந்நேரமும் தன்னையொத்த வயதினரிடம் கலகலப்பாக பேசி மகிழ்ந்து, பழைய நினைவுகளை மெல்ல அசைபோட்டு, புதுமையை பார்த்து வியப்படைவர். இவர்களுக்கு தேவை அமைதியும், மகிழ்ச்சியும் மட்டுமே. ஆதரிக்க மகன் இருந்தும், அன்பு காட்ட எவரும் இல்லையே என்று புலம்புகின்றனர்.

oldnedws_vc2.jpg



இவர்களுக்காக நாம் செய்ய வேண்டியது:

மதிக்கப்பட வேண்டியவர்கள் இன்று மிதிக்கப்படுகிறார்கள். மூத்த குடிமக்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் அவர்கள் நம்மை விதைத்த விதைகள். மகன்கள் தன் பெற்றோரை தனிமையில் விடாமல் தன்னுடன் வைத்து பாதுகாக்க வேண்டும். சிறிய வயதில் நமக்கு ஒன்று என்றால் துடித்த தந்தை, இப்போது குழந்தை. அவருக்கு உடல்நலமில்லை என்றால் நாம் அருகில் இருந்து கவனித்தால் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்.

நாமும் ஒரு நாள் முதியவனாகும் காலம் வரும். அன்று நமக்கு இதே நிலைமை நம் பிள்ளைகளால் ஏற்படாது என்பது என்ன நிச்சயம்? இதை உணர்ந்து செயல்பட்டாலே கண்டிப்பாக காப்பாற்றும் உணர்வு வரும். முதலில்  செய்ய வேண்டியது நம் பெற்றோரை இல்லங்களில் சேர்த்திருந்தால்.அவர்களை அழைத்து வந்து தன்னுடன் வைத்து, கடைசி காலங்களில் பேணி காத்திடுங்கள்.

இது நம் கடமை. தன் மகன் தன்னிடம் ஒருநாள் பேசாமல் இருந்தாலும் தவித்திடும் தாயை பிரிந்து இருப்பதை காட்டிலும், அவர்களை ஆதரித்து அன்பு செலுத்துங்கள். இந்த முதியவர்கள் தினம் மூத்தக் குடி மக்களுக்காக கொண்டாடப்படுகிறது. அவர்களுக்கென பல்வேறு சலுகைகள் உள்ளன. ஆனால் அதை அனுபவிக்க முடியாதா நிலைதான் இங்குள்ளது.

இனிமேலாவது தன்னுடைய பெற்றோர்களை பாதுகாக்க வேண்டும். சமூகத்தில் அவர்கள் மரியாதையாக மதிக்கப்படவேண்டும். அவர்களின் மனதை புரிந்து அன்பு செலுத்தினாலே போதும்.

இன்று முதியவர்கள் தினம். இன்றிலிருந்து முடிவெடுத்து, 'முதியோர்களை மதிப்போம்; அவர்களை பாதுகாப்போம்!' என்று உறுதிமொழி ஏற்போம்.

http://www.vikatan.com/news/article.php?aid=53117

  • தொடங்கியவர்

சொந்தம் எப்போதும் தொடர் கதைதான்

 

  • தொடங்கியவர்

11059849_10154027166844578_4416359522900:grin::D:

  • தொடங்கியவர்

12182839_935504396498255_407665679048299

உலக கால்பந்து வரலாற்றில் மிகக் சிறந்த கால்பந்து நட்சத்திரமாகக் கருதப்படும் டீகோ மரடோனாவின் பிறந்தநாள்.
ஆர்ஜென்டீன அணிக்கு 1986ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வென்றுகொடுத்த கால்பந்து சக்கரவர்த்தி மரடோனா

  • தொடங்கியவர்

கின்னஸ் சாதனை: ஜோர்டானில் ஒரு ஜாலி வாட்டர் ஸ்லைடர்! (வீடியோ)

 

லகிலேயே மிக நீளமான வாட்டர் ஸ்லைடர், தொடங்கப்பட்டதுமே கின்னஸ் சாதனை படைத்துவிட்டது. அது எப்படி என்று தெரிந்துகொள்ளலாமா...?

ஜோர்டானின் தலைநகர் அம்மானில், ஒரு சாலையில் திடீரென வாட்டர் ஸ்லைடரைப் பார்த்த நகர மக்களுக்கு இன்ப அதிர்ச்சி. பாய்ந்தோடும் தண்ணீரில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்ர்ர்ர்னு சறுக்கி விளையாட போட்டிபோடுகின்றனர். அதைப் பார்த்த கின்னஸ் நிர்வாகிகள், உலகிலேயே நீளமான வாட்டர் ஸ்லைடர் இதுதான் எனப் பட்டம் தந்துவிட்டார்கள்.

 'லாங்கஸ்ட் ஸ்லிப் அண்டு ஸ்லைட்' (longest slip and slide) என்று அழைக்கப்படும் இதன் ஸ்லைடரின் நீளம், சுமார் 2007 அடிகள். கால்வாய் போல அமைந்திருக்கும் ஸ்லைடரில் தண்ணீர் விட்டு, ரப்பர் டியூப்களைக் கொண்டு அதில் சறுக்கிச் செல்லலாம். மணிக்கு 30 கி.மீ வேகத்தில், இரண்டே நிமிடங்களில் மறுமுனையை அடையலாம். பிளாஸ்டிக் பேப்பர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்லைடரின் எடை, சுமார் 6 டன்கள்.

 சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில், 'ஸ்லைட் ஜோர்டான்' என்ற பெயரில், ஜோர்டானில் உள்ள எல்லா நகரங்களுக்கும் செல்ல இருக்கிறதாம் இந்த ஸ்லைடர். இந்த ஸ்லைடரை மலைச் சரிவு, சாலைகள், மைதானங்களிலும்கூட அமைத்துக்கொள்ளலாம் என்பதால், இந்த ஸ்லைடருக்கு வரவேற்புக் கூடுகிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=54428

  • தொடங்கியவர்

https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/t31.0-8/12185191_935505253164836_3718988535592140906_o.jpg

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர், அணித்தலைவர் கோர்ட்னி வோல்ஷின் பிறந்தநாள்.

அதிக டெஸ்ட் விக்கெட்டுக்கள் வீழ்த்திய உலக சாதனையும் இவர் வசம் இருந்தது.
கனவான் தன்மைக்குப் பெயர்பெற்றவர் வோல்ஷ்.

  • தொடங்கியவர்

அன்னையின் தேகங்கள் - ஒரு அசத்தல் ஆல்பம்!

 

தாய்மையின் புனிதத்தையும், பெண்மையின் அழகியலையும் வெளிப்படுத்தும் முயற்சியாக 'Bodies Of Mothers' எனும் புகைப்பட ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார் பிரபல புகைப்படக் கலைஞர் ஜேட் பியல்.

29-1446119008-kasthuri-ss-600.jpg

உலகம் முழுக்க 80 தாய்மார்கள் பங்கெடுத்த  இந்த முயற்சியில், தமிழகத்தைச் சேர்ந்த நடிகை கஸ்தூரி, தன் குழந்தையுடன் போஸ் கொடுத்துள்ளார். ‘A Beautiful Body’ என்ற தலைப்பில் அந்த ஆல்பம் உருவாகியிருக்கிறது.  ஜேட் பியல் என்ற பிரபல புகைப்படக் கலைஞர் தனது வாழ்நாள் புராஜெக்டாக உருவாக்கியிருக்கும் இந்த ஆல்பம், பெண்கள் தற்போது உலகில் அனுபவிக்கும் பிரச்னைகள், வன்கொடுமைகளைக் கடந்து, எதிர்காலத்தில் எந்த பிரச்னையும் இன்றி தங்களது இயற்கையான அழகை உணர்ந்து வாழ வேண்டும் என்பதை மையமாகக் கொண்டிருக்கிறது.

29-1446119220-kasthurihot-600.jpg

 இந்த புகைப்படத் தொகுப்புகளுக்காக சுமார் ஒரு லட்சம் பெண்களுக்கும் மேல் ஜேட் புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் அவர்களின் உணர்வுகள், அனுபவங்கள் என அனைத்தும் அந்தப் புத்தகத்தில் பகிரப்பட்டுள்ளன. மேலாடையின்றி தன் குழந்தையை அணைத்துக் கொண்டிருக்கும் அந்தப் படங்களில் துளி ஆபாசம், கவர்ச்சி, விரசம் என எதுவும் இல்லை. பசுமையான பள்ளத்தாக்கு, சலசலத்து ஓடும் நதி என இயற்கையை தரிசிக்கும் அழகுதான் அப்படங்களில் வெளிப்படுகிறது.

jadee.jpg

இந்தப் பார்வையில் பெண்கள் உடல்கள் எப்போதும்  மதிக்கப்பட, கொண்டாடப்பட வேண்டும் என்பதே ஜேட் பியலின் எண்ணம்! ’தனது புகைப்படக் கருவியில் எப்போதும் உண்மைகளைப் படம்பிடிப்பதே நோக்கம்’ எனக் கூறுகிறார் ஜேட்.  

jade_photographer.jpg

http://www.vikatan.com/news/article.php?aid=54417

 

  • தொடங்கியவர்

ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர்.
மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு,
"உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்" என்கிறது.


மூவருக்கும் ஆச்சரியம்!
உடனே கேஷியர் முந்திக்கொண்டு,
"நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்" என்கிறார்.
பூதமும் "அவ்வாறே நடக்கட்டும்" என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்துவிடுகிறார்.


அடுத்து சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ்…
"அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்" என்றார்.
அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது.


கடைசியாக மேனேஜர்,
"நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?" என்றது பூதம்.
அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர்,
"ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!"
:)

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12189454_935515683163793_423348624123285

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் டிமிட்ரி மச்கரெனாசின் பிறந்தநாள்.
தனது தாத்தா வழியாக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் இவர்.

  • தொடங்கியவர்

ஹென்றி டூனன்ட் நினைவு தினம் - சிறப்பு பகிர்வு

 

அக்டோபர் 30, செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய ஹென்றி டூனன்ட் நினைவு தினம் இன்று

ஹென்றி டூனன்ட் என்கிற ஒப்பற்ற மனிதர் மறைந்த தினம் இன்று. சுவிட்சர்லாந்து நாட்டில் மிகப்பெரிய செல்வவளம் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர் இவர் ;இளம் வயதிலேயே வியாபாரத்தில் ஆர்வம் கொண்டு இருந்தவர்;வடக்கு ஆப்ரிக்காவில் மிகப்பெரிய ஒரு முதலீட்டு திட்டத்தோடு அங்கே நீர்வள பயன்பாட்டு உரிமையை பெறுவதற்காக கிளம்பினார்.  அங்கே ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருந்த பிரான்ஸ் தேசத்து மன்னரை சந்திக்க போனார். அங்கே  போரில் எப்படியெல்லாம் வீரர்களும் மக்களும் துன்பப்படுகிறார்கள் என பார்த்து மனம் நொந்து போனார்.

hendry.jpg

போரில் துன்பப்படும் ,காயப்படும் ஜீவன்களை காப்பாற்ற ஒரு நடுநிலையான அமைப்பை உண்டாக்கி காயப்பட்டவர்களின் உயிர் காக்க,உதவி செய்ய உருவாக்க வேண்டும் என அவர் எடுத்த முன்னெடுப்பு தான் செஞ்சிலுவை சங்கம்;தன் ஒட்டுமொத்த வருமானத்தையும் போட்டு அதை நடத்தினார்; பல்வேறு நாடுகளை அதில் இணைத்தார் .நடுவே பிசினஸ் படுத்து தொலைத்தது;எல்லாம் போனது-பிச்சைக்காரன் போல வாழ்வு வாழ்ந்தார்-எங்கே இவர் என்றே யாருக்கும் தெரியாது.மனிதர்
இறந்தே போனார் என பலரும் நினைத்தார்கள்.

அவர் வரிகளிலேயே பாருங்கள்," நான் ஓரிரு ரொட்டித்துண்டுகளில் வாழ்கிறேன். என்னுடைய சாயம் போன கோட்டை செஞ்சிலுவை சங்கத்துக்கு உதவி கேட்க போகும் பொழுது மையால் கருப்பாக்கி கொள்கிறேன்; எங்கேனும் இருக்கும் கதவுகளின் ஓரமாக [படுத்து இரவில் தூங்கிக்கொள்கிறேன்.

முதல் நோபல் பரிசு அறிவிக்கபட்ட பொழுது அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.அதையும் முழுக்க செஞ்சிலுவை சங்கம் சிறப்பாக செயல்பட கொடுத்துவிட்டார்  ஒரே ஒரு அறையில் அனாதையாக வாழ்ந்தார் ; தனியாளாக தன் அறையில் இறந்து போனார். எனினும் இன்றைக்கும் பலபேரின் உயிர்களை காப்பாற்றி அவரின் கனவை நிலைபெற செய்து இருக்கிறது செஞ்சிலுவை சங்கம்;

அதுதானே வெற்றி

http://www.vikatan.com/news/article.php?aid=20807

  • தொடங்கியவர்

Thai beauty's touching moment of thanking mother

குப்பை அள்ளி வளர்த்த தாயின் காலில் விழுந்து வணங்கிய மிஸ் தாய்லாந்து

 
  • தொடங்கியவர்

கனடாவின் ‘ப்ரைம் மிஸ்டர்'

 
prime_2602713h.jpg
 

இளமைத் துடிப்பு, நவநாகரிகம், புதுமை, முற்போக்கு இவை எல்லாம் இணைந்த ஒரு பிரதமர் கிடைத்தால் எப்படி இருக்கும்? நன்றாகத்தான் இருக்கும். ஆனால், அதற்கு நீங்கள் கனடாவில் இருக்க வேண்டும்!

ஆம், கனடாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ள ஜஸ்டின் ட்ரூடோதான் மேலே சொல்லப்பட்டிருக்கும் அத்தனை தன்மைகளும் கொண்டவர். அப்படி அவர் பதவியேற்கும் பட்சத்தில், கனடாவின் அரசியல் வரலாற்றில், மிக இளம் வயதில் பிரதமராகப் பதவியேற்ற‌ இரண்டாவது நப‌ர் இவர் என்ற பெருமையைப் பெறுவார் என்பது இன்னும் ஸ்பெஷல்.

1971-ல் பிறந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அரசியல் புதிதல்ல. அவருடைய அப்பா பியர் ட்ரூடோ கனடாவின் 15-வது பிரதமர். ஜஸ்டின் ட்ரூடோ நான்கு மாதக் குழந்தையாக இருந்தபோது, அதாவது 1972-ல், அவர் கனடாவின் வருங்காலப் பிரதமராக ஆவதற்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து தெரிவித்தவர் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. அமெரிக்காவின் அப்போதைய பிரதமர் நிக்ஸன்தான்.

ஆங்கில இலக்கியமும் கல்வியியல் படிப்பும் படித்த ஜஸ்டின் ட்ரூடோ ஆச்சர்யமூட்டும் விஷயங்களின் கலவை.

2000-ல் தனது தந்தையின் மரணத்துக்குப் பிறகுதான் ஜஸ்டின் அரசியலில் தீவிரம் காட்டினார். அவர் சார்ந்திருந்த ‘தாராளவாதக் கட்சி’ 2011 தேர்தலில் பழமைவாதக் கட்சியிடம் தோல்வியடைந்திருந்தது. அப்போது ஒரு தர்ம காரியத்துக் காக நடந்த குத்துச்சண்டைப் போட்டியில் பழமைவாதக் கட்சியின் உறுப்பினரை ஜஸ்டின் தோற்கடித்தார்.

குத்துச்சண்டை மட்டுமல்ல தர்ம காரியத்துக்காக மாடலிங்கும் செய்திருக்கிறார். கூடுதலாக, உடலில் 'டாட்டூ' இட்டுக்கொண்ட‌ முதல் பிரதமரும் கனடாவுக்கு இப்போது கிடைத்திருக்கிறார். இதையெல்லாம் பார்த்துவிட்டு இவர் ஒரு மாடலாக இருக்கத்தான் முடியும், நல்ல பிரதமராக இருக்க முடியுமா என்றெல்லாம் கேள்வி எழுந்திருக்கிறது. அதுவும் முடியும் என்பதைத் தன் முற்போக்கான கருத்துக்கள் மூலம் நம்பிக்கை அளிக்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ.

குத்துச்சண்டையில் ஆர்வமுள்ள வராகவும், ஆணழகராக இருந்தாலும் பெண்ணியத்துக்கு ஆதரவானவர் ஜஸ்டின். “பெண்கள் தங்கள் உடலை என்ன செய்துகொள்ள வேண்டும் என்பதைப் பெண்களிடமே விட்டுவிட வேண்டும். இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தினர் தலையிடக் கூடாது” என்று ஜஸ்டின் கூறியிருக்கிறார்.

ஜஸ்டினுடைய முற்போக்கு எண்ணங்களுக்கு முன்னுதாரணம் அவரது தந்தைதான். ஆம், கனடா கண்ட ஆராவாரமிக்க, அறிவுஜீவி அரசியல்வாதிகளுள் ஒருவர் அவர். விவாகரத்து, தன்பாலுறவு, கருக்கலைப்பு போன்றவை தொடர்பான புரட்சிகரமான சட்டங்களை இயற்றியவர் அவர். அவரது வழியில் ஜஸ்டினும் செல்வார் என்பதே அவரது வெற்றிக்கான காரணங்களுள் ஒன்று.

அவர் குறித்த ஒரு வீடியோவைப் பார்க்க இங்கே சொடுக்கவும்:

http://tamil.thehindu.com/society/lifestyle/கனடாவின்-ப்ரைம்-மிஸ்டர்/article7821958.ece

  • தொடங்கியவர்

12189963_936008999781128_146832529238367

முன்னாள் இந்தியப் பிரதமர் (இன்று வரை இந்தியாவின் ஒரே பெண் பிரதமர்) இந்திரா காந்தி அவர்களது நினைவுதினம்.

இவர் தன்னுடைய மெய்ப்பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.