Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
வலைபாயுதே V 2.0
 
 

 

facebook.com/guru.shree.16:

வந்த வெள்ளத்தில் நண்பர் வீட்டில் தரைத்தளம் மூழ்கிவிட்டது. காஸ்ட்லியான பொருட்கள்  எல்லாவற் றையும் எடுத்துக்கொண்டு முதல் தளத்துக்குச் சென்றுவிட்டனர் நண்பர் குடும்பத்தினர். பாவம்... மழையும் விட வில்லை; வெள்ளமும் வடியவில்லை. நண்பரின் அம்மா கேட்டாராம்... `ஏன்டா... பட்டுப் புடைவைகளை மட்டும் எடுத்து வந்தியே... இந்த நைட்டிக்கு மாத்து நைட்டி எடுத்துட்டு வந்தியா? பட்டுப் புடவையைக் கட்டிக்கிட்டு ஹெலிகாப்டரைப் பார்த்து பொட்டலம் கேட்டா, என்னடா நினைப்பான் பைலட்?’ என்று!

facebook.com/bhopathy : அரசாங்கம், `நல்லது செய்றோம்’னு நம்மளை ஏமாற்றி வரி வாங்குது. கார்ப்பரேட், வரி கட்டாம அரசை ஏமாற்றி கம்பெனி ஆரம்பிக்கிறான். நாம ஆபீஸ்ல வேலைபார்க்காம அவனை ஏமாற்றி சம்பளம் வாங்குறோம். வாழ்க்கை ஒரு வட்டம்டா!

facebook.com/guru.shree.16: பண்டிகைங்க வந்தால்தான் நாம எந்தெந்த வாட்ஸ்அப் குரூப்ல எல்லாம் இருக்கோம்னே தெரியுது!

facebook.com/bhopathy: ‘அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமாகக் கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை’னு ரஜினி சொல்றார். ஆனா பாருங்க... கலைஞரும் அம்மாவும்தான் மாறி மாறி சி.எம் ஆகுறாங்க!

facebook.com/ArumugaSelvamV: ஜல்லிக்கட்டு நடக்க, மாட்டுப் பொங்கல் அவசியம் இல்லை. தேர்தல் மட்டுமே அவசியம் என்பதை உணர்ந்த வருடம் 2016.

p110a.jpg

twitter.com/Ulaganandha:

 நண்பன்: என்ன பாட்டுடா கேட்கிற?

மீ: குளிருக்கு ஹெட்போன் மாட்டிருக் கேன் மாப்ள. # த்தூ!

twitter.com/MrElani Universal Cop: ஆம்... க்ளைமாக்ஸ்ல அனிருத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறதுதான் கதை.  # `சிங்கம்-3’

twitter.com/srinileaks:

பஸ் ஸ்டாண்டுகளில் இருக்கும் கக்கூஸ்களை சிறைச்சாலைகளாகப் பயன்படுத்தினாலே, பாதித் தவறுகள் குறைந்துவிடும் என அவதானிக் கிறேன்!

twitter.com/thedonashok: ஒரு கசாப்புக் கடையில் ரெண்டு ஆடுகளை வெட்டிப் பார்த்திருக்கேன். ஆனா, ஒரே ஆட்டை ரெண்டு கசாப்புக் கடைகளில் வெட்டுறதை நேற்றுதான் பார்த்தேன். # நாஞ்சில் சம்பத்!

twitter.com/chevazhagan1: என் காதல் கதையை சுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டிருந்த மனைவி, ‘என்னங்க, கதையில ஒரு ட்விஸ்ட்டுகூட இல்லை’ என்கிறாள். # அடிப்பாவி... அந்தத் திருப்புமுனையே நீதான்டி!

twitter.com/venkatesh6mugam ‘நெப்போலியன்’ உள்ளே போனதும் ‘சாக்ரடீஸ்’ வெளியே வருகிறார்!

twitter.com/pasakkarapaiyan:  நம் ஊரில் எப்போதும் இருக்கும் ஒரு ஆஃபர், ‘இங்கே கட்டினா 100; கோர்ட்ல கட்டினா 500’!

twitter.com/mani_kuttans: இந்தச் சமூகம், வீட்ல உள்ள நாய்க்குச் சாப்பாடு வெச்சுட்டு, ரோட்ல போற நாயை கல்லால் அடிக்கும்!

p110b.jpg

twitter.com/sanraj2416:  பத்து பேரும் ஓடிவந்து கோல்கீப்பரைத் திட்டுறானுங்க... ‘ஏன்டா விட்டுட்ட?’ `அடேய்... நீங்க பத்து பேரும் விட்ட பிறகுதானடா அவன் விட்டான்!

twitter.com/Itz_rajez: ‘ `அம்மா... தாயே... பழைய ஆண்ட்ராய்டு போன் இருந்தா போடுங்கம்மா’னு பிச்சை கேட்கிற காலம், ரொம்பத் தூரத்தில் இல்லை’ என்று அவதானிக்கிறேன்!

twitter.com/yugarajesh2: சூர்யா, நிஜமாவே சிங்கமாக மாறுகிற வரைக்கும் ஹரி படம் எடுத்துக்கிட்டே இருப்பார்போல! # `சிங்கம்-3’

twitter.com/naiyandi: நீண்ட நேரம் பயணம்செய்து உறவினர் வீட்டுக்குச் சென்றேன்... டி.வி பார்த்துவிட்டு வந்தேன்!

twitter.com/chevazhagan1: சின்ன வயசுல எங்க அப்பாவால வாங்கித் தர முடியாத சைக்கிளை என் மகனுக்கு வாங்கித் தரணும்னு லட்சியமா வெச்சிருந்தேன். ஆனா, அவன் பைக்கு கேட் கிறான்!

twitter.com/withkaran:  மிக்ஸிக்கு ஒரு சைலன்ஸர் கண்டுபிடிங்கய்யா... ‘சட்னி அரைக்கிறேன்’னு காலையிலயே எழுப்பிவிட்டுறாங்க!

twitter.com/Raj_leaks:  ‘உங்க நம்பர் தாங்களேன்...’ என்பதன் அப்டேட்டட் வெர்ஷன்தான் ‘வாட்ஸ்அப்ல இருக்கீங்களா?’ எனக் கேட்பது!

p110c.jpg

twitter.com/GoofyCoder:  ஹெல்மெட்டை வீட்டில் வைத்துச் செல்லாதீர்கள்... திரும்ப எடுக்க வர முடியாதுபோனாலும் போகலாம்!

twitter.com/Asalttu:  அழுக்குச் சட்டை, கிழிந்த வேட்டி அணிந்து ஒரு முதியவர் முன்னால் சைக்கிளில் செல்கிறார். எத்தனை கனவுகளுடன் இவர் இளமைக் காலத்தைத் தொடங்கியிருப்பார்!

twitter.com/chevazhagan1:  திருமலைநாயக்கர் பிறந்த நாள், இந்த ஆண்டு முதல் கொண் டாடப்படும் - ஜெ # ஏன்... அவர் போன வருஷம்தான் பிறந்தாரா?

p110d.jpg

twitter.com/Ulaganandha:  ‘10 எண்றதுக்குள்ள’ படம் விஜய் டி.வி-கிட்ட இருக்கா..?! எண்ட கர்த்தாவே... 2016 பூரா எண்ணு வானே அந்தப் பாழப்போனவன்!

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

12507391_1261819943844596_85161346013151

  • தொடங்கியவர்

ரயில் பாணிக்கு மாறும் விமானங்கள் : விபத்தா? இனி கவலை வேண்டாம் (வீடியோ)

 

யில் என்ஜினில் பெட்டிகள் இணைக்கப்படுவது போல விமானத்தின் கேபின் பகுதியுடன் விமானத்தின் உடல் பகுதியை இணைக்கும் புதிய தொழில்நுட்பத்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளது. விபத்து ஏற்படும் போது பயணிகள் பகுதி மட்டும் தனியே பிரிந்து பாராசூட் உதவியுடன் தரை இறங்கும் வகையில் இந்த தொழில் நுட்பம் அமைந்துள்ளது.
           
ரஷ்யாவை சேர்ந்த டாடெரன்கோ விலாடிமிர் நிகோலெவிக் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக ஆராய்ச்சி  நடத்தி அதில் வெற்றி கண்டுள்ளார். இந்த தொழில் நுட்பத்தின் படி விமானம் பறக்கத் தொடங்கும் போது,  நடு வானில் பறக்கும் போது, தரையிறங்கும் போது என எந்த சூழலிலும் அவசரக் காலங்களில் கேபினில் இருந்து விமானத்தின் உடல் பகுதி அதாவது பயணிகள் இருக்கும் பகுதி தனியே பிரிந்து விடும்.

கடலில் இறங்கினாலும் விமானம் பாராசூட் உதவியுடன் படகு போல மிதக்கத் தொடங்கி விடும். அதுபோல் பயணிகளின் உடைமைகளும் அதே பகுதியில் சேகரித்து வைக்கப்படுவதால்,  அவர்களது உடைமைகளும் பத்திரமாக பாதுகாக்கப்படும் .

ஆனால் இந்த தொழில்நுட்பம் குறித்து இரு வகையிலான கருத்து நிலவுகிறது.  தரையிறங்கும் விமானத்தில் உடல் பகுதி எங்காவது மலையிலோ அல்லது கட்டிடங்களிலோ இறங்க வாய்ப்பு அதிகம் என்றும் இது  அதிகம் செலவு ஏற்படுத்தக் கூடிய திட்டம் என்றும் குறை கூறப்பட்டுள்ளது.

விமானத்தின் உடல் பகுதியை தனியாக பிரித்து அதனை மீண்டும் கேபினுடன் பொருத்துவது என்பது விமான தொழில் நுட்ப பாதுகாப்பையே கேள்விக்குறியதாக்குவதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

vikatan.

  • தொடங்கியவர்

 

 

 

 

 

** உண்மைச் சம்பவங்களும் வாழ்க்கை வரலாறுகளும்தான் இப்போது பாலிவுட்டின் ட்ரெண்ட் சினிமா. இந்த முறை இவர்கள் கண்வைத்திருப்பது பிரதமர் மோடி மீது. `ஸ்கிரிப்ட் தயார். ஆனால் இன்னும் மெருகேற்ற உழைக்கிறோம். அது முழுமையானதும் படப்பிடிப்பு நடக்கும்’ என்கிறார் இந்தி நடிகர் பரேஷ் ராவல். அமிதாப் பச்சனை மோடியாக நடிக்கவைக்கும் முயற்சியும் நடக்கிறது. தில்வாலே மோடி!

**  தமிழில் பேய் பட சீஸன் ஒழிந்தாலும் ஹாலிவுட்டில் ஒழியாது. பேய் பட ரசிகர்களை தியேட்டரில் வைத்து திகிலடித்து அனுப்பிய ‘காஞ்சூரிங்’ படத்தின் அடுத்த பகுதி ஜூன் மாதம்  வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இதன் டீஸர் இணையத்தைப் பதறவைத்தது. அமெரிக்காவில் அமானுஷ்ய நிகழ்வுகள் பற்றி ஆய்வு செய்யும் எட்வர்டு, லொரைன் என்கிற இருவர் சந்தித்த அமானுஷ்யங்கள்தான் கதை.  இது இன்டர்நேஷனல் காஞ்சனா!

p77a.jpg

**  `நானாக்கு ப்ரேமதோ' படத்தில் ஹெப்ஸ்டர் ஸ்டைலில் தாடிவைத்து நடித்திருந்தார் ஜூனியர் என்.டி.ஆர். எங்கே போனாலும் அந்தத் தாடியோடே போனவர், நாகார்ஜுனா நடத்தும் `நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' தெலுங்கு வெர்ஷனுக்கு முரட்டுத் தாடி முழுவதையும் ட்ரிம் செய்துவிட்டு வந்தார். ஜூனியரைப் பார்த்ததும் ஷாக்கான நாகார்ஜுனா `தாடியோட வருவீங்கனு எதிர்பார்த்தேன்' எனக் கேட்க, `என் பையன் பிறந்ததில் இருந்து என்னைத் தாடியோடு பார்த்துப் பழகிட்டான். நான் ஒரிஜினலா எப்படி இருப்பேன்னு அவனுக்குத் தெரியணும்ல. அதான் படம் ரிலீஸ் ஆனதும் தாடியை  எடுத்துட்டேன்' என எமோஷனாகி இருக்கிறார்! தாடி இல்லாத டாடி!

**  `அணுகுண்டைவிட பல மடங்கு சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வெற்றி கரமாகப் பரிசோதித்துப் பார்த்துவிட்டோம்’ என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது வட கொரிய அரசு. `ஹிரோஷிமா அழிவை ஏற்படுத்திய `லிட்டில் பாய்’ அணுகுண்டைவிட இது மிகவும் சக்திவாய்ந்தது. இந்த முறையில் வெடிப்பை நிகழ்த்தினால், அணுகுண்டால் ஏற்படும் அழிவைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும்’என்கிறார்கள் நிபுணர்கள். `மற்ற நாடுகள், எங்கள் நாடு மீது தாக்குதல் நடத்தினால்தான் நாங்கள் இதைப் பயன்படுத்து வோம்' என்கிறார் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன். இந்தியா, அமெரிக்கா உள்பட பல நாடுகள் இதற்குக் கண்டனம் தெரிவித்தபடி அதிர்ச்சியில் ஆழ்ந்திருக் கின்றன. அழிவு அரசியல்!

p77c%281%29.jpg

**  இதுவரை அழகு குட்டி செல்லமாகவே பார்க்கப்பட்ட ஷ்ரதா, இப்போது அதிரடி ஆக்‌ஷன் ஸ்டார். விளம்பரப் படத்துக்காக 32-வது மாடியில் இருந்து குதித்த ஸ்டன்ட் போட்டோஸை, ஷ்ரதா, இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்ய, `பிராவோ பிராவோ' என கமென்ட்டித் தள்ளி விட்டார்கள் நெட்டிசன்ஸ்.  ஏறு... ஏறு... முன்னேறு!

p77b.jpg

** ஜப்பானில் ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஒரு ரயில் நிலையம் செயல்படுகிறது. நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள Hokkaido என்ற தீவுப்பகுதியில் Kami-Shirataki என்ற ரயில் நிலையம் இருக்கிறது. நகரைவிட்டு தொலைவில் அமைந்துள்ள இதை நிரந்தரமாக மூடிவிட மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ரயில்வே துறை முடிவுசெய்தது. ஆனால், இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினமும் பள்ளி மாணவி ஒருவர், பள்ளிக்குச் சென்று திரும்புகிறார். இதனால் ரயில் நிலையத்தை மூடும் முடிவைத் தள்ளிவைத்துவிட்டது ஜப்பான் அரசு. ஒரே ஒரு மாணவியின் கல்விக்காக ரயில் நிலையத்தை மூடாமல் நடத்திவரும் ஜப்பான் அரசுக்கு, உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன. கோடி லைக்ஸ்!

p77d.jpg

** சென்னையில் மழை வெள்ளம் ஓய, ஊட்டியில் வெள்ளை மழை பொழிகிறது. நீலகிரியில் கடந்த வாரம் முழுக்க உறைபனியின் தாக்கம் அதிகரிக்க, பனிப்பொழிவால் காஷ்மீர்போல இருக்கிறது ஊட்டி. அப்பர் பவானி, அவலாஞ்சி, கோரகுந்தா பகுதிகளில் ஜீரோ டிகிரிக்கும் கீழே குளிர் ஊசியாகிக் குத்த நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள் ஊட்டிவாசிகள். ஜில்லி!

vikatan.

  • தொடங்கியவர்

 

இது திருநங்கைகளின் சிக்ஸ்பேக் ஹிட்..!

 

இந்தியாவின் முதன்முறையாக, திருநங்கைகளின் இசைக்குழு ஒன்று துவங்கப்பட்டு யூ-டியூபில் அது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் இந்த முயற்சியை முன்னெடுத்து, ஹிஜ்ரா என்னும் சமூகத்தில் இருந்து, 6 திருநங்கைகளை ஒன்றிணைத்து, சிக்ஸ்பேக் பேண்ட் என்ற பெயரில் இசைக்குழுவைத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவின் முதல் திருநங்கைகள் இசைக்குழுவான இதற்கு, துணையாக இருப்பவர்கள் பாலிவுட்டின் முன்னணி பாடகர் சோனு நிகாம் மற்றும் அனுஷ்கா ஷர்மா.

band%201.jpg

“நான் ஒரு பிரபலமான பாடகராக ஆனது முதலே, இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறேன். இவர்களை சினிமா செட்களில் நிறைய முறை பார்த்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். மிகவும் அப்பாவிகளாக , குழந்தைத்தனமாக இருப்பார்கள். அதனாலேயே இவர்களை மிகவும் பிடிக்கும். நான் ஒரு வேளை, இந்தச் சமூகத்தில் இப்படிப் பிறந்திருந்தால், இந்த உலகம் என்னை எப்படிப் பார்க்கும்? என நினைத்து வருந்தியிருக்கிறேன். நாம் அவர்களுக்கு சரியான, தகுதியான பணிகளையோ, மரியாதையான தொழில்களை அவர்களை செய்யவோ விடுவதில்லை. அதனால்தான் சராசரியான இடங்களில் இவர்களை நாம் பார்க்கவே முடிவதில்லை. இப்படி திறமையான சிலருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதால்தான் இந்த முயற்சி” என்கிறார் சோனு நிகாம்.

“இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும், சம உரிமையும், மரியாதையும் கிடைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அப்படி இவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவும்,இவர்கள் பற்றிய எண்ணங்களை உடைக்கவும், இந்த முயற்சி உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். எங்கெல்லாம், வார்த்தைகள் தோற்கிறதோ, அங்கு இசைதான் பேசும்” என தம்ப்ஸ் அப் காட்டுகிறார் அனுஷ்கா ஷர்மா.

மொத்தம் 6 பாடல்களை, இந்த இசைக்குழு மூலம், ஆல்பமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். அவற்றில்  முதல் பாடலாக, உலக அளவில் ஹிட் ஆன, பேரல் வில்லியம்ஸின் “ஹேப்பி” பாடலை மையமாக வைத்து, “ஹம் ஹைன் ஹேப்பி” என்ற பெயரில் முதல் வீடியோவை  வெளியிட்டிருக்கின்றனர். அனுஷ்கா ஷர்மாவின் குரலோடு வீடியோ தொடங்குகிறது. “மகிழ்ச்சியாக இருப்போம்” என தீம் கொண்டுள்ள, இந்த பாடலுக்கு யூ-டியூபில் ஷொட்டுகள் கொட்டுகின்றன. அடுத்த பாடலை ஜனவரி 26 ல் வெளியிடத் திட்டமாம். இந்தப் பாடல்களுக்கு இசையமைப்பது, ஷமீர் டண்டன்.

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஜனவரி  - 18

 

646German_Empire_---varalaru.jpg1535 : பெருவின் லீமா நகரம் நிறு­வப்­பட்­டது.

 

670 : ஹென்றி மோர்கன் பனா­மாவைக் கைப்­பற்­றினான்.

 

1701 : பிரஷ்­யாவின் (தற்­போ­தைய ஜேர்­ம­னியின் ஒரு பிராந்­தியம்) மன்­ன­னாக முதலாம் பிரெ­டெரிக் முடி சூடினார்.

 

1778 : ஹவாய் தீவு­களைக் கண்­ட­றிந்த முத­லா­வது ஐரோப்­பி­ய­ரான கெப்டன் ஜேம்ஸ் குக். இத்­தீ­வு­க­ளுக்கு சான்ட்விச் தீவுகள் எனப் பெய­ரிட்டார்

 

1788 : இங்­கி­லாந்தில் இருந்து குடி­யேற்­ற­வா­சி­க­ளான 736 கைதி­களைக் கொண்ட முத­லா­வது தொகுதி அவுஸ்­தி­ரே­லி­யாவின் பொட்­டனி விரி­கு­டாவைச் சென்­ற­டைந்­தது.

 

1824 : இலங்­கையின் ஆளு­ந­ராக சேர் எட்வர்ட் பார்ன்ஸ் நிய­மிக்­கப்­பட்டார்.

 

1871 : வடக்கு ஜேர்­மனி கூட்­ட­மைப்பு மற்றும் தெற்கு ஜேர்மன் மாநி­லங்கள் ஆகி­யன ஜேர்மன் பேர­ரசு என்ற பெயரில் இணைந்­தன. முதலாம் வில்ஹெல்ம் அதன் முத­லா­வது மன்­ன­ரானார்

 

1896 : எக்ஸ்றே இயந்­திரம் முதற் தட­வை­யாகக் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டது.

 

1911 : யூஜின் எலி என்­பவர் தனது விமா­னத்தை சான் பிரான்­சிஸ்கோ துறை­மு­கத்தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த யூ.எஸ்.எஸ். பென்­சில்­வா­னியா என்ற கப்­பலின் மீது இறக்­கினார். கப்­ப­லொன்றில் தரை­யி­றக்­கப்­பட்ட முத­லா­வது விமானம் இது­வாகும்.

 

1919 : முதலாம் உலகப் போர் தொடர்­பான பாரிஸ் சமா­தான உச்சி மாநாடு பிரான்சில் வேர்­சாயி நகரில் ஆரம்­ப­மா­னது.

 

1929 : சோவியத் ஒன்­றி­யத்தில் இருந்து லியோன் ட்ரொட்ஸ்கி   வெளி­யேற்­றப்­பட்டார்.

 

1944 : இரண்டாம் உலகப் போர்: மூன்று ஆண்­டு­க­ளாக நாசி­களால் முற்­று­கை­யி­டப்­பட்­டி­ருந்த லெனின்­கிராட் நகரை சோவியத் படைகள் மீட்­டெ­டுத்­தன.

 

1960 : கொங்­கோவின் எதிர்­கா­லத்தைத் தீர்­மா­னிக்கும் முக்­கிய வட்­ட­மேசை மாநாடு பெல்­ஜி­யத்தில் நடை­பெற்­றது.

 

1977 : அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்­னியின் புற­நகர் பகு­தி­யான கிரான்வில் என்ற இடத்தில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்­த­தை­ய­டுத்து, அதன் மேல் சென்று கொண்­டி­ருந்த ரயில் கீழே வீழ்ந்­ததால் 83 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1995 : 17,000 ஆண்­டுகள் பழ­மை­யான குகை ஓவி­யங்கள் தெற்கு பிரான்ஸில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

 

1997 : போர்ஜ் அவுஸ்லாண்ட் என்­பவர் அண்­டார்க்­டிக்­காவை துணை எது­வு­மின்றி முதன் முதலில் கடந்து சாதனை படைத்தார்.

 

2002 : சியேரா லியோ­னியில் உள்­நாட்டுப் போர் முடி­வுக்கு வந்­த­தாக அறி­விக்­கப்­பட்­டது.

 

2003 : அவுஸ்­தி­ரே­லி­யாவின் கென்­ப­ராவில் இடம்­பெற்ற காட்­டுத்­தீயில் 4 பேர் கொல்­லப்­பட்டு 500 வீடுகள் முற்­றாக எரிந்து சேதமடைந்தன.

 

2007 : மேற்கு ஐரோப்பாவின் 20 நாடுகளில் தாக்கிய சூறாவளியினால் 44 பேர் கொல்லப்பட்டனர்.

 

2009 : இஸ்ரேலின் யுத்த நிறுத்த அறிவிப்பை ஏற்றுக்கொண்டு ஹமாஸ் இயக்கம் தாக்குதலை நிறுத்தியது.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=646#sthash.L6jTV78X.dpuf
  • தொடங்கியவர்

குமாரசுவாமி புலவர்

 

 
kp_2700540h.jpg
 

தமிழ் அறிஞர், சொற்பொழிவாளர்

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஒப்பற்ற தொண்டாற்றிய இலங்கை தமிழ் அறிஞர் அ.குமாரசுவாமி புலவர் (A.Kumaraswamy Pulavar) பிறந்த தினம் இன்று (ஜனவரி 18). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l இலங்கையின் யாழ்ப்பாணம் அடுத்த சுண்ணாகம் என்ற ஊரில் (1854) பிறந்தவர். தந்தை தமிழ் அறிஞர், சைவ சமயத்தில் ஈடுபாடு கொண்டவர். தமிழ்ப் புலமை பெற்ற குடும்பத்தில் பிறந்த குமாரசுவாமி 5 வயதில் குலகுரு வேதாரண்யம் நமசிவாய தேசிகரிடம் ஏட்டுக்கல்வி கற்றார்.

l வீட்டில் தந்தையிடம் பல நூல்களை கற்றார். பின்னர் மல்லாகம் ஆங்கிலப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். 4-ம் வகுப்பு படிக்கும் போது, பிள்ளைக்கு ஆங்கிலக் கல்வி தேவையில்லை என்று கருதிய தந்தை, படிப்பை பாதியில் நிறுத்தி, முருகேச பண்டிதரிடம் அனுப்பிவைத்தார்.

l நீதி நூல்கள், யாப்பருங்கலக்காரிகை, தொல்காப்பியம் கற்றுத் தேர்ந்தார். கவி பாடுவது, கட்டுரை எழுதுவது, சொற்பொழிவு நிகழ்த்து வதிலும் திறமை பெற்றிருந்ததால், ‘புலவர்’ என்று அழைக்கப்பட்டார்.

l பன்மொழிப் புலவரும் உறவினருமான நாகநாத பண்டிதரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை விரிவாகக் கற்றதோடு, வடமொழியிலும் புலமை பெற்றார். சமய நூல்களை நமசிவாய தேசிகரிடம் கற்றார்.

l சி.வை.தாமோதரம் பிள்ளையின் சைவப் பிரகாச வித்யாசாலையில் முதலில் உதவி ஆசிரியராகவும் பின்னர் தலைமை ஆசிரியராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார். ஆறுமுக நாவலரின் வண்ணார்ப்பண்ணை சைவப் பிரகாச வித்யாலயத்தில் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். வாழ்நாள் முழுவதும் இங்கு பணியாற்றினார். இவரது முனைப்பால் உயர்கல்வி நிறுவனமாக இது வளர்ச்சி அடைந்தது.

l சென்னை மாகாண அரசு சார்பில் 1913-ல் பாதிரியார் சாண்டிலர் தலைமையில் தயாரிக்கப்பட்ட தமிழ் அகராதியை ஆராய்ந்து திருத்தும் பொறுப்பு இவரிடம் வழங்கப்பட்டது. இவர் கூறிய அனைத்து திருத்தங்களும் அதில் சேர்க்கப்பட்டன.

l யாழ்ப்பாணம் வைதிக சைவ பரிபாலன சபையின் முக்கிய உறுப்பினராக செயல்பட்டவர், பல கோயில்களுக்கு சென்று சைவத்தின் சிறப்பு பற்றி சொற்பொழிவுகள் ஆற்றினார். வதுளைக் கதிரேசன் பதிகம், மாவைப் பதிகம், துணைவை அரசடி விநாயகர் ஊஞ்சல், கைலாயப் பிள்ளையார் ஊஞ்சல், மாவையிரட்டை மணிமாலை, அத்தியடி விநாயகர் அட்டகம் என பலவகை நூல்களைப் படைத்துள்ளார்.

l சூடாமணி நிகண்டு நூல்களில் இடம்பெற்றுள்ள தமிழ், வடமொழிச் சொற்களுக்கு பொருள் விளக்கம் எழுதி 3 நூல்களாக வெளி யிட்டார். யாப்பிலக்கண நூற்பா அகவல் எனப்படும் யாப்பருங்கலம் நூலுக்கு பொழிப்புரை எழுதி வெளியிட்டார். தண்டியலங்காரம் உரைநூல்களில் காணப்பட்ட பிழைகளைத் திருத்தி, தண்டியலங்காரப் புத்துரை என்ற புதிய நூலாகப் படைத்தார்.

l சங்க இலக்கியங்கள், சங்கமருவிய இலக்கியங்களில் இடம்பெற் றுள்ள இலக்கியச் சொற்களைத் தொகுத்து ‘இலக்கியச் சொல்அகராதி’ வெளியிட்டார். பண்டைக்கால இலக்கியங்கள் பயில்வோருக்கு பெரும் துணையாக அமைந்துள்ள நூல் இது.

l நகுலமலைக் குறவஞ்சி நாடகம், ஆசாரக்கோவை, நான்மணிக் கடிகை, ஆத்திச்சூடி வெண்பா, சிவசேத்திரம் விளக்கம், உரிச் சொனிகண்டு உள்ளிட்டவற்றை திருத்த உரையுடனும் திறனாய்வு செய்தும் பதிப்பித்தார். ஆசிரியர், கவிஞர், கட்டுரையாளர், சமயச் சொற்பொழிவாளர், பன்மொழி வல்லுநர் என பன்முகத் திறன் கொண்ட குமாரசுவாமி புலவர் 68-வது வயதில் (1922) மறைந்தார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

ஸின்னியா (Zinnia) - விண்வெளியில் மலர்ந்த மலர்!

 

விண்வெளி எப்போதுமே வியப்பானதுதான். ஆய்வில் ஈடுபட ஈடுபட பல புதிய தகவல்கள் வெளிவரும். பல முயற்சிகள் வெற்றி பெறும். அப்படி கடந்த வருடத்தில் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தி வெற்றி பெற்ற முயற்சிதான், விண்வெளியில் விவசாயம் செய்யப்பட்டு விளைவித்த சிவப்பு கீரை வகைகள்.      

நமது பூமியின் மேற்பரப்பில் அமெரிக்கா, ரஷ்யா போன்ற சில நாடுகள் ஒன்றிணைந்து அமைத்த, சர்வதேச விண்வெளி மையம் உள்ளது. இந்த மையத்தில்தான் நாம் மேற்சொன்ன  விவசாய வேட்டை நடந்து உள்ளது.

15 மாதங்கள் விண்வெளியில் விதைகள் வைத்து,  பின் ‘வெஜ் 01’ எனப் பெயரிடப்பட்டு விளைவித்த அச்சிவப்பு வகை கீரைகளின் சுவையிலும் குறைவில்லை. கீரையைத் தொடர்ந்து இப்போது மலர்களை மலர்வித்தும் வெற்றி கண்டுள்ளனர் விண்வெளி வீரர்கள்.

spaceflower_vc2.jpg

விண்வெளியில் மலர்ந்துள்ள முதல் மலரான ஸின்னியா (Zinnia) மலரானது, கண்ணை பறிக்கும் படியாக பளிச்சென மலர்ந்துள்ளது விண்வெளி வீரர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஸின்னியா மலரானது சவுத்தர்ன் வெஸ்ட் யூனிட்டைட் நாடுகளை தாயகமாக கொண்டது.

இந்த செய்தியை ட்விட்டரில் பதிவிட்டு, நாசா விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி (Scott Kelly@StationCDKelly) தன் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

செடிகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊதா, சிவப்பு நிற ஒளி அலைகளுக்கான எல் இ டி விளக்குகளும், செடிகளின் வளர்ச்சியை கண்காணிக்கும் விண்வெளி வீரர்களுக்கு, பச்சை நிற எல் இ டி விளக்குகளும் பயன்படுத்தப்பட்டன. மேலும் தேவையான நீர் சிரிஞ்சி மூலம் தரப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.    
vikatan.

  • தொடங்கியவர்

சிவாஜி வேடத்தில் எம்.ஜி.ஆர் நடிக்க மறுத்தது ஏன்?

 

mgr%20lefttt%202.jpgறைந்தும் மறையாது மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர் முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர் 1972-ம் ஆண்டு பொம்மை என்ற பிரபல சினிமா இதழுக்காக அவரது ரசிகை ஒருவருக்கு சிறப்பு பேட்டியளித்தார்.

சம்பிரதாயமான கேள்விகளுக்கு வழமையான பதில்களாக இல்லாமல் அவைகளுக்கு ஆழமான பதில்களை அளித்திருப்பார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் வெற்றியின் ரகசியங்களில் இதுவும் ஒன்று.

வெள்ளைத் தொப்பி அணிவது ஏன், மதுவிலக்கு தடை, சினிமாவில் அறிமுகமாகும் பெண்களுக்கு அறிவுரை, குடும்பக் கட்டுப்பாடு, தன் தொழில்முறை போட்டியாளரான சிவாஜியுடனான நட்பு, திமுகவின் தொடர்பு என ஆழமான கருத்துக்களை வெளியிட்ட எம்.ஜி.ஆரின் இந்த பேட்டியை, அவரது 99- வது பிறந்தநாளை முன்னிட்டு விகடன் வாசகர்களுக்காக பிரசுரிக்கிறோம்.

தமிழ்ப் பண்பாடு என்றால் என்ன? மனிதனுக்குரிய லட்சணங்கள் என்ன?

அவன் மற்றவர்கள் தன்னைப் பின் பற்றி நடக்கும் வகையில் ஒரு முன்மாதிரியாக, மனிதத்தன்மையோடு பழகணும், நடக்கணும். தமிழுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் இருக்கு? அதன் உயர்ந்த இலக்கியங்கள் தான். தமிழ் இலக்கியத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கு? மனிதன் மனிதனாக வாழ வழி சொல்லப்பட்டிருக்கு. இவை அத்தனையும் ஒண்ணா சேர்த்து சொன்னால்தான் பண்பாடு பற்றி பூரணமாக அறிய முடியும். அன்புங்கிறது பலதரப்பட்டது. அந்த அன்பை காட்டுவதிலும் பல விதிமுறை, வரம்பு, அளவு எல்லாம் இருக்கு. குழந்தையா இருக்கும் போது பிள்ளையைத் தூக்கி மடியில வெச்சிக்கிட்டு தாய் கொஞ்சுவா. அதே பிள்ளை வளர்ந்து வாலிபனாயிட்டா, இப்படிக் கொஞ்சுவாளா? அதனால அவ அன்பு குறைஞ்சிடுத்துன்னு அர்த்தமாயிடுமா?

நீங்க எவ்வளவோ உதவிகளை செஞ்சிட்டு வர்றீங்க. நீங்க தெய்வமா வணங்கிட்டு வரும் உங்க தாயார் பேர்ல, ஏன் ஒரு பெண்கள் கல்லூரியை கட்டக் கூடாது? சேலத்தில் பெண்கள் படிக்க போதுமான கல்லூரி இல்லை. அதனால தான்?

கல்லூரி கட்ட நிதி கொடுத்தா அதுக்கும் வருமான வரி நான் கட்டணும். ஐம்பதாயிரம் ரூபாய் வரை ஒரு வரி. ஐம்பதாயிரத்து ஒண்ணுலேயிருந்து லட்ச ரூபாய் வரைக்கும் ஒரு வரி. இப்படி ஸ்லாப் சிஸ்டம் இருக்கு. ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறவன், தவறிப் போய் ஐம்பதாயிரத்து ஒண்ணு சம்பாதிச்சிட்டா, லட்ச ரூபாய்க்கான வரிதான் கட்டணும். ஒரு கல்லூரி கட்டணும்னா எவ்வளவோ பணம் நிதியா தர வேண்டியதிருக்கும். அதற்கெல்லாம் இந்த வருமான வரிச் சட்டம் இடம் தராது. ஆனா, வருஷா வருஷம் பல பேருக்கு நான் படிப்புக்காக உதவிக்கிட்டு வர்றேன்.

mgr%20karunanithi%20jaya%20600%202.jpg

தி.மு.க. அரசு மதுவிலக்கை ரத்து செய்துவிட்டதே, இதனாலே மக்களுக்கு கெடுதல்தானே?

அது மத்திய சர்க்காருக்கும் தெரியணும். மது விலக்கினாலே ஏற்படுகிற நஷ்டத்தை ஈடுகட்ட அவங்க முன்வரலே. தவிர, மது விலக்கு அகில இந்தியாவுக்கும் ஒரே மாதிரியா அமல்படுத்தப்படணும். நம்ம பக்கத்து மாகாணத்துல அது இல்லே? இங்கே மட்டும் இருந்து என்ன லாபம்? அங்கே போய் குடிக்கிறாங்க. இல்லேன்னா கண்டதையும் குடிச்சிட்டு உடம்பைக் கெடுத்துக்கிறாங்க. முன்னாலே இருந்த அரசு குடிக்க பெர்மிட் குடுத்தது.

பணக்காரங்க, வசதி படைச்சவங்க இந்த பெர்மிட்டை வாங்கி சட்டத்தின் துணையோடு குடிக்க ஆரம்பிச் சாங்க. ஏழைங்க? மது விலக்கை அரசு ஒத்திவச்சிருக்கறதால குடிக்க பொதுவா மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்குன்னுதானே அர்த்தம். ஆனா, அரசு தான் ஒத்தி வெச்சிருக்கு. தி.மு.க.வின் கொள்கை, 'குடிக்க அனுமதிக்கக் கூடாது. மதுவிலக்கு இருக்கணும்' என்பதுதான். அதனாலே தான் கட்சியின் இந்த கொள்கையை வலியுறுத்த, 'குடிக்கிறது தப்பு. ஆபத்து, கெடுதல், விபத்து வரும்' என்றெல்லாம் மக்களுக்கு தெளிவா பிரசாரம் செய்ய ஒரு குழுவும் அமைத்திருக்கிறோம். நான் அந்த குழுவின் தலைவர் என்கிற முறையில் நான் நடிக்கிற படங்கள்லே மதுவிலக்கு பற்றி பிரசாரம் செய்யப் போறேன்.

mgr%20righttttt.jpg'நான் ஏன் பிறந்தேன்' படத்துலே குடிக்கிறது தப்புன்னு ஒரு பாட்டுல சொல்ல இருக்கேன். 'ஒரு தாய் மக்கள்' படத்துல குடியின் கெடுதலை விளக்கும் வகையிலே ஒரு ஸீனே இருக்கு. இது மட்டுமில்ல, இந்த குழுவின் சார்பில் மது குடிப்பது தவறுன்னு எல்லா வகையிலும் காட்ட முயற்சிப்போம்.

குடியினால் வரும் ஆபத்துகளை விளக்கி, மக்களிடம் அதை தெளிவாக்க மேடையிலே பேசுவோம்.  நாடகங்கள் நடத்துவோம். ரேடியோவில் பேசுவோம். வில்லுப் பாட்டுக்கச்சேரி செய்வோம். ஆங்காங்கே குழுக்கள் அமைத்து தொடர்ந்து சொல்லி வருவோம். மதுவிலக்கு பற்றி பேச என்னை யார் அழைத்தாலும் எந்தக் கட்சி அழைத்தாலும் நான் போய் பேச தயாராக இருக்கிறேன். கட்சிக்கு அப்பாற்பட்டது மது விலக்கு பிரசாரம்.

சமீப காலமாக நீங்கள் தலையில் தொப்பி வைச்சிக்க ஆரம்பிச்சிருக்கீங்க... அதுக்கு என்ன காரணம்?

'அடிமைப்பெண்' படத்தின் வெளிப்புறக் காட்சிக்காக ஜெய்ப்பூருக்குப் போனேன். அங்கே பாலைவனத்திலே படப்பிடிப்பு. ரொம்பவும் வெயிலாக இருந்தது. ஒரு அன்பர் தொப்பியைக் கொடுத்து, தலையிலே வெச்சிக்குங்க என்றார். அவ்வளவுதான். அடுத்தபடியா எலெக் ஷன் வந்தது. இப்படி வெயில், மழை, எல்லாத்துக்கும் சௌகரியமா இருக்கவே தொப்பியை அப்படியே வெச்சிக்கிட்டேன்.

சிலர் இதை வேறு மாதிரியா விமரிசிக்கிறாங்க. அந்த நாள்லே நான் ஜிப்பா போட்டுக்கிட்டிருந்தேன். அப்புறம் காலர் வெச்ச முழுக்கை சட்டை போட ஆரம்பிச்சேன். ஒரு நாள் சட்டை கிழிஞ்சு போய்விட்டது. அதை சுருட்டி விட்டுக்கிட்டேன். உடனே அதைப் பார்த்த சிலர் எம்.ஜி.ஆர். ரவுடி போல சட்டையை சுருட்டி வெச்சிருக்கார்னு சொன்னாங்க. இதுக்கு என்ன சொல்றது. இன்னொருத்தருடைய வற்புறுத்தலுக்காக மற்றவங்க என்ன சொல்வாங்களோ, என்ன நினைப்பாங்களோ என்பதற்காக நமது பண்பைக் கெடுத்துக்கக்கூடாது. அத்தியாவசியமான தேவைகளைக் குறைச்சிக்கக்கூடாது.

உடலமைப்புக்கு, பாதுகாப்புக்கு எது தேவையோ அதைத் தேர்ந்தெடுப்பதில் தவறில்லை. நானே கேட்கிறேன். இப்ப என் தலையில முடியே இல்லைன்னு வெச்சிப்போம். நீங்க அப்போ என்னை எம்.ஜி.ஆர்னு ஏத்துக்க மாட்டீங்களா? வட நாட்டில் வயதில் குறைந்த நடிகர்கள் பலர் இருக்காங்க. அவங்க எல்லாம் தலையில 'விக்' (செயற்கை முடி) வெச்சிக்கிட்டுதான் வெளியிலே வர்றாங்க. இதுக்கெல்லாம் என்ன சொல்றது?

சினிமாவில் நடிக்க வர்ற புதுமுகங்களுக்கு, என்னைப் போன்ற பெண்களுக்கு என்ன தேவைப்படுது?

நடனப் பயிற்சி இருந்து, தமிழ் சுத்தமா பேசத் தெரிஞ்சு, முக வெட்டும் இருந்தாப் போதும். இப்ப என் படத்திலே, என்கூட சில புதுமுகங்கள் நடிக்கிறாங்க. அவங்களுக்கு நடனப்பயிற்சி கொடுத்து வருகிறேன். அதுமட்டுமல்ல, நடனப் பயிற்சி இருந்தாலே நடிப்பும் சுலபமா வந்திடும். ஆனா, இவ்வளவு மட்டும் இருந்தா மட்டும் போதாது. ஆக்ட் பண்ண துணிவும் வேண்டும்.
 

mgr%20janaki%20600%207.jpg

கல்லூரியில படிக்கிறவங்க, நல்ல குடும்பத்திலே இருக்கிறவங்க எல்லாரும் சினிமாவிலே நடிக்க வரணும். ஆனா பயப்படறாங்க. சினிமாவிலே தவறு நடக்கிறதில்லேன்னு சொல்ல மாட்டேன். ஆனா, யாரோ எப்பவோ செய்த தவறை நினைச்சு, எல்லாரையும் தவறா எடைப் போட்டுடக் கூடாது. படிச்ச பெண்கள் நிறையப் பேர் வந்தால் இந்தத் தொழிலுக்கும் தனிக் கௌரவம் கிடைக்கும். நல்ல வருவாயும், புகழும் பெண்களுக்கு கிடைக்கும்.

நீங்க கேரளத்தை சேர்ந்தவராயிருந்தாலும், தமிழ் மொழி மீதும், தமிழ்நாட்டின் மீதும் இவ்வளவு பற்றும் பாசமும் வைத்திருக்கிறீர்களே... ஏன்?

என்னைக் காப்பாத்தறதே தமிழ்தானே? எனக்கு முதல்லே எழுதத் தெரிஞ்சது, பேசத் தெரிஞ்சது எல்லாமே தமிழ்லேதான். என் தந்தையார் காலமானபோது எனக்கு இரண்டரை வயது. அப்புறம் இங்கேயே வந்து படிச்சேன். கேரளத்தில் எங்க அம்மா பேர்ல ஏதோ ஒரு சின்ன நிலம்தான் இருக்கு. அதுகூட எனக்கு சரியா நினைவில் இல்லே.

மலையாளம் உங்களுக்குத் தெரியாதா?

தெரியும்! கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கிட்டேன்.

இந்தி ஆட்சி மொழியா வரக் கூடாதுன்னு உங்க கட்சி சொல்கிறது. ஆனா, நீங்க நடிப்பேன்னு சொல்றீங்களே?

இந்தி ஆட்சி மொழியா வர்றது வேறு. இந்தி கத்துக்கிறதோ, படம் எடுக்கிறதோ வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக்கக் கூடாது.

உங்களை நாடகம் வளர்த்ததா? சினிமா வளர்த்ததா?

பெரிய பதில்தான் தரணும். நாடகம்தான் தாய். சினிமா சேய். சினிமாவிலே நடிக்க வர்றவங்களுக்கு நாடக அனுபவம் இருப்பது நல்லது. அது ரொம்பவும் உதவும். படத்திலே நீங்க பார்க்கிற மாதிரி காட்சிகளை வரிசைக்கிரமமா எடுக்கிறதில்லே. முன்னே, பின்னே, வசதிக்கும் சூழ்நிலைக்கும், நடிகர் நடிகைகளின் நேரத்திற்கேற்ப காட்சிகளை மாற்றி துண்டு துண்டாக எடுப்பாங்க. இப்படி நடிக்க வரும்போது காட்சிகளின் தன்மைக்கேற்ப அழுகிறோம் சிரிக்கிறோம். அழணும்னா உடனே கிளிசரின் தடவிக்குவோம். ஆனா நாடகத்திலே மேடையிலே ஸீன்லே நடிக்கும்போது இப்படி திடீர்னு அழணும்னா கிளிசரின் கேட்கவோ தடவிக்கவோ முடியாது. சிரிச்சிக்கிட்டே இருக்கணும். உடனே அந்த இடத்திலேயே அப்படியே அழணும். அவ்வளவு விரைவாக உணர்ச்சிகளை மாத்தி நடிக்கணும்.

mgr%20ntr%20dhilip.jpg

இங்கே சினிமாவிலே அப்படி கிளிசரின் இல்லாமல் உணர்ச்சியைப் பிரதிபலிக்க இம்மாதிரியான அந்த நாடக மேடை அனுபவம் உதவும். நாடகத்தில் ஒரு நடிகன் தன் சொந்தத் திறமையை மட்டும்தான் அதிகம் நம்பிக்கிட்டு இருக்கணும். சினிமாவிலே மத்தவங்க உதவியிலேதான் அதிக நம்பிக்கை வெச்சிருக்கணும். அதனாலே ரெண்டுமே ஒரு நடிகனை வளர்க்க உதவுவது.

நீங்கள் ஆங்கிலப் படத்தில் நடித்தால் என்ன?

இங்கிலீஷே சரியா தெரியாதுங்க. ஜெய்ப்பூரில், 'அடிமைப் பெண்' படத்துக்காக நான் சென்றிருந்தபோது ராஜஶ்ரீ பிக்சர்ஸ், திரு.தாராசந்த் ஒரு விருந்து கொடுத்தார். அதிலே பேசும்போது நான் இந்திப் படத்திலே நடிக்கணும்னு அவர் குறிப்பிட்டார். அவருக்கு உடனே நான் பதில் சொன்னேன். ''நான் பேசுற இந்தியை தாங்கிக்கிற சக்தி இருக்குமானால் நான் நடிக்கத் தயார்" என்றேன். அதையேதான் இங்கிலீஷ் படத்துக்கும் சொல்லணும்.

குடும்பக் கட்டுப்பாடு திட்டம் பற்றி என்ன நினைக்கறீங்க?

நாட்டுக்குத் தேவையான ஒரு நல்ல திட்டம். அவசியமான திட்டமும்கூட, ஜனத்தொகை பெருகுவதால் ஏற்படும் இட நெருக்கடி, வசதிக்குறைவு, மாறும் இதரத் தொல்லைகள் இதையெல்லாம் மனதில் கொண்டு பார்க்கும்போது நாட்டின் வளர்ச்சிக்காகவும் சொல்லப்போனா உலக நன்மைக்காகவும் எல்லாரும் சேர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய, கட்டுப்பட வேண்டிய திட்டம் இது. ஆனா, குறிப்பிட்ட ஒரு வகுப்பினருக்கு மட்டும்தான் இது என்பதை என்னால் ஏத்துக்க முடியல. இந்தத் திட்டம் உலகம் பூராவுக்குமே, எல்லா வகுப்பினருக்கும் பொதுவான திட்டமா இருக்கணும். மேலும் இத்திட்டம் மனக்கட்டுப்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டால்தான் பூரணமாக வெற்றியைப் பெற முடியும்.

கருச்சிதைவிற்கு சட்டப்பூர்வ அதிகாரம் கொடுத்தா அதைப் பற்றி என்ன நினைக்கறீங்க?

குழந்தை அதிகம் பெறுவதால் பெண்களில் பலர், பல ஆண்டுகள் திடகாத்திரமாக வாழக்கூடியவர்கள்கூட விரைவில் வயோதிகத் தன்மை அடைந்துவிடுவதாகச் சொல்கின்றனர். ஆகவே குழந்தைகளை அளவோடு பெறுவது அவசியமாகிறது. அதற்காக கருச்சிதைவு முறையை அனுமதிப்பதால் வேறு பல பெரிய ஆபத்துகள் எதிர் நோக்கி இருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. நான்கு குழந்தைகள் பெறுவதும், ஒரு முறை கருச்சிதைவு செய்து கொள்வதும் ஒன்று தான் என எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் கூறியிருக்கிறார். அப்படியானால் கருச் சிதைவினால் விரைவில் பெண்களின் உடல்நலம் கெட்டு, அவர்கள் பெரிதும் பலவீனப்பட்டு விடுகிறார்கள் என்பதும் உறுதியாகிறது.

 mgr%20bharath%20600%2011.jpg

அப்படிப் பலவீனப்பட்டுவிடும் பெண் சமுதாயத்தினர் குடும்பப் பணிகளையும் நாட்டுப் பணிகளையும் பூரணமாக ஏற்று செயலாற்ற வேண்டிய தகுதியை இழந்துவிடக் கூடும். இத்தகைய அவலமான ஒரு சூழ்நிலைக்கு கொண்டு வந்துவிடும். கருச்சிதைவு முழு மனத்துடன் ஏற்கக் கூடியதுதானா? மனக்கட்டுப்பாடு, குடும்பக் கட்டுப்பாடு முறைகள் இத்தனையையும் மீறி கருச்சிதைவை மருத்துவர்கள் உடல்நல ஆரோக்கியத்தின் அடிப்படையில் முழு மனதுடன் சிபாரிசு செய்து கணவன் மனைவியரும், தாயின் எதிர் கால உடல்நலத்தையும் குடும்பத்தின் பொருளாதார நிலையையும் கண்டு இருவருக்கும் உள்ள உடன்பாட்டுடன் விரும்பு முன்வந்தால், தவிர்க்க முடியாத அந்நிலையில் வேண்டுமானால் கருச்சிதைவை அனுமதிக்கலாம்.

எனவே, மேலே சொல்லப்பட்டவை போன்ற நன்மை தீமைகளை சீர்தூக்கிப் பார்த்து, பகுத்தறிந்து முறையான விதிகளுடன் எந்த வற்புறுத்தலுக்கும் இடம் ஏற்படாத வகையில் இதற்கான சட்டம் அமைக்கப்பட்டால் ஓரளவுக்கு இயற்றப்பட்டதன் நோக்கம் திருப்தியைத் தரலாம்.

உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்கணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி வாரி வாரி வழங்கிக்கிட்டே இருக்கீங்களே, அதற்கு என்ன காரணம்?

சொத்துக்கள் கடைசிவரை நம்மிடையே இருக்கும்னு நினைக்கிறது தப்புங்கிறது என் கருத்து! என்னை முதன் முதலா கதாநாயகனா போட்டவர் ஜூபிடர் சோமு அவர்கள். ஒரு காலத்தில் இந்த ஸ்டுடியோ அவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் எதிரிலே வந்து நிக்கவே பயப்படுவோம். இப்போ அதே ஸ்டூடியோவுக்கு நான் பங்குதாரரா இருக்கேன். என்னைவிட அனுபவத்திலும் ஆற்றலிலும் பன்மடங்கு உயர்ந்தவரான அவருக்கே அப்படி ஒரு நிலைமை வந்ததுன்னா நான் மட்டும் எத்தனை நாள் இந்த ஸ்டூடியோவுக்கு முதலாளியா இருந்திட முடியும்? எனக்கு இது புரியுது. ஆனா, சில பேரு சட்டத்தின் பாதுகாப்பு நமக்கு இருக்குன்னு சொத்தையும் பணத்தையும் சேர்த்து வெச்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பிலே இல்லாதது, சட்டத்தின் பாதுகாப்பில் எத்தனை நாள் வாழ்ந்திட முடியும்?

அது மாத்திரமல்ல. இந்த செல்வமெல்லாம் யார் தந்தது? அதாவது மக்கள் தந்ததுதானே? அவர்கள் தந்ததிலிருந்துதான் நான் தருகிறேன். தேவைக்கு மேல் பணத்தை சேர்த்து வைப்பதில் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியைவிட பயனுள்ள வகையில் மற்றவர்களுக்கு உதவும் போது அடையும் மகிழ்ச்சியையே நான் பெரிதாக நினைக்கிறேன்.

mgr%20s_s_vasan%20600%203.jpg

நூறு படங்களுக்கு மேல் நடிச்சிருக்கீங்க. நீங்க நடிச்ச படங்களிலேயே உங்களுக்கு பிடித்தமான படம் எது?

என் எண்ணப்படி அமைந்த படங்கள் 'பெற்றால்தான் பிள்ளையா", 'என் தந்தை'. குறிப்பாக 'பெற்றால்தான் பிள்ளையா'வில் நான் போட்ட வேஷம் ரொம்பவும் கவர்ந்தது. நான் பெற்ற பிள்ளைகளுக்கு மட்டும்தான் நான் பாதுகாப்பா இருப்பேன்னு அந்த வேஷம் சொல்லலே. நான் யாரோ பெத்த பிள்ளை. ஆனால், அந்த எல்லாப் பிள்ளைகளையுமே வளர்க்கக் கடமைப்பட்டவன் என்ற நல்ல கருத்தை சொன்ன பாத்திரம் அது.

அண்ணாவைப் பற்றி மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியை நீங்கள் சொல்ல முடியுமா?

தெரிந்தோ தெரியாமலோ நீங்க அண்ணா இருக்காரே என்று சொன்னீர்கள். ஆம். அவர் இறந்தும் இன்றும் நம்மிடையே இருப்பதைப் போன்ற உணர்வை நம்மிடம் உண்டாக்கி இருக்கிறார். அதுதான் அவரது தனிச் சிறப்பு. அண்ணாவை விட்டு யாரும் பிரிய முடியாது. அவரது நினைவை யாரிடமிருந்தும் பிரிக்கவும் முடியாது. அவர் எழுதியது, பேசியது, அவர் செய்தது இப்படி ஒவ்வொன்றும் மறக்கமுடியாத நிகழ்ச்சிகள்தாம். எல்லாருக்கும் நல்லது செய்யணும்கிற எண்ணமே அவரிடம் மேலோங்கி நின்றது.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இப்போது சிவாஜி ரசிகர் மன்ற தலைவராக இருக்கும் சின்ன அண்ணாமலை அவர்கள் சில வருடங்களுக்கு முன்னால் என்னிடம் வந்தார். சிவாஜி வரலாற்றை நான் படமாக்கப் போகிறேன். நீங்கள்தான் இதில் சிவாஜியா நடிக்கணும் என்று அழைத்தார். நான் மறுத்துவிட்டேன். பின்னர் டைரக்டர் திரு.ரமண்ணா அவர்கள் அவர் தயாரிக்கும் சிவாஜி வரலாற்றுப் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று அழைத்தார்.

mgr%20sivaji%20600%205.jpg

''சிவாஜிங்கிற பட்டம் ஏற்கெனவே தம்பி கணேசனுக்கு இருக்கு. ஆகையினால் சிவாஜியின் வரலாற்றிலே, நான் அந்த பாத்திரத்திலே நடிக்கிறதுக்கு என் மனசாட்சி இடம் தரவில்லை" என்று சொல்லிவிட்டேன். இது விஷயமா ராமண்ணா, அண்ணாவைப் பார்க்கப் போகிறார் எனக் கேள்விப்பட்டு அவரை நானே முந்திக்கொண்டு அண்ணா அவர்களிடம் போனேன். அப்போது அண்ணா அவர்கள் சொன்னார், 'ஏற்கெனவே சிவாஜிங்கிர பட்டத்தை தம்பி கணேசனுக்கு கொடுத்தது நம்ம கட்சி. அந்த பட்டம் அவருக்கு நிலைச்சி இருந்தால்தான், நாம் கொடுத்த பட்டத்துக்கு ஒரு கௌரவம் இருக்கும்' என்று சொல்லிவிட்டு, 'நீங்க செய்த முடிவு சரியான முடிவு' என்று சொன்னார். இதுதான் அண்ணா அவர்களின் குண இயல்பு.

நான் உங்களின் ரசிகை. ஆனாலும் திரு.சிவாஜி கணேசன் அவர்களுடைய படங்களையும் விடாமல் பார்ப்பேன். என்ன சொல்கிறீர்கள்?

என்னுடைய ரசிகர்கள் எல்லாருமே இப்படித்தான் இருப்பார்கள். இன்னொருத்தரிடம் இருக்கும் கலையையும், திறமையையும் நாம் ஆதரிக்க வேண்டும். என்னை இழிவுப்படுத்தும் வார்த்தைகளோ, எனது கொள்கைகளை இழிவுபடுத்துவதாகவோ இருந்தால் அந்த மாதிரிப் படங்களுக்குப் போக மாட்டார்கள்!

mgr%20sathileelavathi%20250%201.jpgஉங்களுக்கும் சிவாஜி கணேசனுக்கும் உள்ள தொடர்பு எப்படி?

உள்ளத்தால் இருவரும் அண்ணன், தம்பி என்ற தொடர்பு. ஆனால், நாங்கள் சார்ந்துள்ள கட்சி கொள்கைகள் வேறு. அவ்வளவுதான்.

உங்களது ரசிகர்களும் அவரது ரசிகர்களும் சில சமயங்களில் சண்டையிட்டுக் கொள்கிறார்களே, இது பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?

அப்படிப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இன்னும் பக்குவம் அடைய வேண்டும்.

கழகம் வளர்ந்தது எப்படி?

பலரும் ஆதரித்ததால் வளர்ந்தது. கொள்கை வழி நின்று மக்களுக்கு சேவை செய்யலேன்னா ஒரு கட்சி எப்படி வளர முடியும்? மக்கள் ஆதரவு இல்லேன்னா கொள்கைகளை எப்படி அமல்படுத்த முடியும்?

அதனாலே கழகத்திற்கு மக்கள் ஆதரவு இருக்கு. மக்கள் ஆதரிக்கும் வகையில் நல்ல கொள்கைகள் இருக்கு.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

 

ஓவியங்கள்: செந்தில்

 

p96a%281%29.jpg 

ஹோம்வொர்க்

‘‘டேய்... ஹோம்வொர்க்கை முடிச்சிட்டியா?’’ என்று மகனிடம் குரல்கொடுத்த அதே நேரத்தில், ‘ரிப்போர்ட் ரெடியா?’ என பாஸிடம் இருந்து இமெயில் வந்தது `வொர்க் ஃப்ரம் ஹோம்' ரகுவுக்கு!


 


p96_2%281%29.jpg

கஷ்டம்

இன்ஜினீயரிங் காலேஜ் ஓனர் வருத்தத்துடன் சொன்னார், “நான் கான்வென்ட் ஸ்கூல் நடத்தவேண்டியது தம்பி... தெரியாத்தனமா இன்ஜினீயரிங் காலேஜ் ஓப்பன் பண்ணிட்டேன்.
அதான் கஷ்டப்படுறேன்.”

 


p96_3%281%29.jpg

லைக்

“ஃபேமிலியுடன் ஒரு வாரம் ஃபாரின் டூர் போறேன், feeling happy” என்ற ராஜேஷின் ஸ்டேட்டஸுக்கு, தன் ஃபேக் ஐ.டி-யில் இருந்து லைக் போட்டான் ஏரியா திருடன்!


 


p96_4%281%29.jpg

குழந்தை

ஆண்டுவிழா மேடையில் தவறவிட்ட நாடக வசனத்தை, வீட்டுக்கு வந்து சரியாகச் சொன்னது குழந்தை!


 


p96_5%281%29.jpg

மந்திரி பூதம்

விளக்கைத் தேய்த்ததும் வெளிவந்த பூதம், “என்ன வேண்டும் எஜமானரே... தங்கமா, பணமா?” என்று கேட்க, “அதெல்லாம் நானே சம்பாதிச்சுட்டேன். மாட்டிக்காம மட்டும் பார்த்துக்கணும்” என்றார் மந்திரி!


 


p96_6%281%29.jpg

நவீன பாரி

புதிதாக வாங்கிய காரை பார்க் செய்வதற்காக வீட்டுவாசலில் இருந்த அரசமரத்தை வெட்ட ஆள் அனுப்பினான், தன் தாத்தா தனக்குப் பெயர்வைத்த காரணம் தெரியாத பாரி!


 


p96_7.jpg

வாழ்த்துக் கணக்கு

ஒவ்வொருவருக்கும் தனித்தனியே புத்தாண்டு வாழ்த்து அனுப்பிக்கொண்டு இருந்தார் முருகர். விநாயகரோ, தன் புரொஃபைல் பிக்சரையும் ஸ்டேட்டஸையும் புத்தாண்டு வாழ்த்து என மாற்றினார்!


 


p96_8.jpg

பாஸ்வேர்டு சீக்ரெட்

“காலையில இருந்து நீங்க சொல்றதை எல்லாம் பையன் கேட்கிறானே... என்னங்க செஞ்சீங்க?” என்ற மனைவியிடம், “வைஃபை பாஸ்வேர்டை மாத்திட்டேன்” என்றார் குருபாதம்!


 


p96_9.jpg

காலம்

அரைக்கால் பேன்ட், ஸ்பைக் முடி, கையில் காப்புமாக வந்த தம்பியைத் திட்டிக்கொண்டிருந்த அப்பா, பூபோட்ட சட்டையும், பெல்ஸ் பேன்ட்டும், முன் நெற்றியில் சுருண்டு விழுந்த முடியுமாகச் சிரித்துகொண்டிருக்கிறார் இளவயதுப் புகைப்படத்தில்!

 


p96_10.jpg

அப்பா

அவன் அந்த கம்பெனியின் மேனேஜர். தன் அப்பாவை ஒருநாள் தன் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றான். தனக்குக் கீழே பணிபுரியும் ஊழியர்களை அறிமுகப்படுத்திவிட்டுப் போனதும் அவர்களிடம் கேட்டார் அப்பா... ``என் பையன் ஒழுங்கா வேலைபார்க்கிறானா?’’

vikatan.

  • தொடங்கியவர்

12495000_668247619944450_344939855487321

12495987_668247699944442_333069879583027

12495000_668247619944450_344939855487321

12466334_668247639944448_350519103113228

இது எந்த மகாரஜாவின் அரண்மனையும் அல்ல. தொழிலதிபரின் பங்களாவோ, அலுவலகமோ அல்ல. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்பர்க் பகுதியில் இருக்கும் மெட்ரோ ரயிலின் சுரங்கப் பாதை நிலையம்தான்.

  • தொடங்கியவர்
Vikatan EMagazines Foto.
 

பத்து நிமிட அடமானம்!

டி பன் சாப்பிட்டுக் கை கழுவி, காபியும் குடித்து முடித்து, சர்வர் பில் கொண்டுவரச் சென்றபோதுதான் தூக்கிவாரிப் போட்டது பாஸ்கருக்கு. பேன்ட் பாக்கெட்டில், சட்டைப் பையில் எங்கும் பர்ஸ் இல்லை.

“வித்யா! பர்ஸ் கொண்டு வர மறந்துட்டேன். நீ உடனே ஒரு ஆட்டோ பிடிச்சுக்க. நேரே வீட்டுக்குப் போ. பணம் எடுத்துக்கோ. போன ஆட்டோவிலேயே திரும்பிடு. போக வர முப்பது ரூபாதான் ஆகும். நான் இங்கேயே வெயிட் பண்றேன்” என்றான் தன் மனைவியிடம்.

“ஏங்க, அதுக்கு நீங்க பைக்கிலேயே போயிட்டு வந்துடலாமே?” என்றவளை, “சொன்னதைச் செய்” என்று கடுப்பாகச் சொல்லி விரட்டினான்.

கல்லாவில் உட்கார்ந்திருந்த முதலாளியிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு, ஓரமாக இருந்த நாற்காலி ஒன்றில் உட்கார்ந்துகொண்டான்.

அரை மணியில் வித்யா பணத்துடன் திரும்பினாள். ஓட்டல் பில்லை செட்டில் பண்ணிவிட்டுக்
கிளம்பினார்கள்.

பைக்கில் போகும்போது, “போக வர ஆட்டோவுக்குத் தண்டச் செலவு. எனக்கும் அலைச்சல். நீங்களே பைக்ல போயிட்டு வந்திருந்தா பத்து நிமிஷத்துல வேலை முடிஞ்சிருக்கும். சொன்னா கேட்டாதானே?” என்று சிணுங்கினாள் வித்யா.

சிரித்தான் பாஸ்கர். “மேடத்துக்கு என் மேல ரொம்பக் கோபம் போலிருக்கு?” என்றவன், “யோசிச்சுப் பாரு வித்யா! பத்து நிமிஷமே ஆனாலும், முள்ளுமேல உட்கார்ந்திருக்கிற மாதிரி இருக்காதா உனக்கு? அதோட, கொஞ்ச நேரத்துக்குதான்னாலும் என் அருமைப் பெண்டாட்டியை அடமானம் வெச்சுட்டுப் போக என் மனசு ஒப்புமா, சொல்லு?” என்றான்.

முகநூல்

  • தொடங்கியவர்

12548951_789329507838530_833474920825174

  • தொடங்கியவர்
சுந்தர்.சி. இயக்கவுள்ள அடுத்தத் திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகை நயன்தாரா 3 கோடி இந்திய ரூபாய் சம்பளம் கேட்டுள்ளாராம்.article_1453134312-Nayanthara.jpg

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

ஏன் பிறர் கொட்டாவி விடும் போது நாங்களும் கொட்டாவி விருகின்றோம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, நவீனன் said:
சுந்தர்.சி. இயக்கவுள்ள அடுத்தத் திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகை நயன்தாரா 3 கோடி இந்திய ரூபாய் சம்பளம் கேட்டுள்ளாராம்.article_1453134312-Nayanthara.jpg

இவ ஹிந்திப்பக்கம் போனால் 3 ரூபாயும் குடுக்காங்கள்........  நயன் பூசாரியள் மன்னிக்கவும்.tw_blush:

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஜனவரி - 19

 

647varalru-indira.jpg1788 : இங்­கி­லாந்தில் இருந்து கைதி­களை ஏற்றி வந்த இரண்­டா­வது தொகுதி கப்­பல்கள் அவுஸ்­தி­ரே­லி­யாவின் நியூ சௌத் வேல்ஸின் பொட்­டனி குடா பகு­தியை சென்­ற­டைந்­தன.

 

1806 : நன்­னம்­பிக்கை முனையை பிரித்­தா­னியா பிடித்­தது.

 

1817 : சிலி மற்றும் பெருவை விடு­தலை செய்ய ஜோஸ் டெ சான் மார்ட்டின் தலை­மையில் 5,423 போர் வீரர்கள் கொண்ட படை, ஆர்­ஜென்­டீ­னா­வி­லி­ருந்து அந்தீஸ் மலைத்­தொ­டரை கடந்­தது.

 

1839 : பிரித்­தா­னிய கிழக்­கிந்­தியக் கம்­பனி யேமனின் ஏடென் நகரைக் கைப்­பற்­றி­யது.

 

1899 : ஆங்­கி­லோ-­ எ­கிப்­திய சூடான் அமைக்­கப்­பட்­டது.

 

1903 : ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கும் இங்­கி­லாந்­துக்கும் இடையே முத­லா­வது வானொலி ஒலி­ப­ரப்பு ஆரம்­ப­மா­கி­யது.

 

1917 : லண்­டனில் ஆயுதக் களஞ்­சியம் ஒன்றில் இடம்­பெற்ற வெடி­வி­பத்தில் 73 பேர் உயி­ரி­ழந்­த­துடன் 400 பேர் காய­ம­டைந்­தனர்.

 

1920 : அமெ­ரிக்க செனட் சபை உலக நாடுகள் சங்­கத்தில் சேர்­வ­தற்கு எதி­ராக தீர்­மானம் நிறை­வேற்­றி­யது.

 

1927 : சீனா­வுக்கு பிரித்­தா­னியா  படை­களை அனுப்­பி­யது.

 

1937 : ஹோவார்ட் ஹியூஸ் என்­பவர் லொஸ் ஏஞ்ஸலஸ் இலி­ருந்து நியூயோர்க் நக­ரத்­திற்கு 7 மணி­நேரம், 28 நிமி­டங்கள், 25 விநா­டி­களில் பறந்து சாதனை புரிந்தார்.

 

1941 : இரண்டாம் உலகப் போர்: பிரித்­தா­னியப் படைகள் இத்­தாலி வச­மி­ருந்த எரித்­தி­ரி­யாவைத் தாக்­கின.

 

1942 : இரண்டாம் உலகப் போரின்­போது ஜப்­பா­னியப் படைகள் பர்­மாவை முற்­று­கை­யிட்­டன.

 

1949 : இஸ்­ரேலை கியூபா அங்­கீ­க­ரித்­தது.

 

1966 :  இந்­தி­யாவின் பிர­த­ம­ராக இந்­திரா காந்தி முதல் தட­வை­யாக தெரி­வு­செய்­யப்­பட்டார்.

 

1981 : ஈரானில் 14 மாதங்­க­ளுக்கு முன்னர் பணயக் கைதி­க­ளாகப் பிடிக்­கப்­பட்ட 52 அமெ­ரிக்­கர்­களை விடு­விக்க ஐக்­கிய அமெ­ரிக்­காவும் ஈரானும் ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டன.

 

1983 : நாசி போர்க் குற்­ற­வாளி கிளவுஸ் பார்பி பொலி­வி­யாவில் கைது செய்­யப்­பட்டான்.

 

1986 : முதல் ஐ.பி.எம். ரக கணினி வைர­ஸான (சி) பிரெயின் (உ) Brain) பரவத் தொடங்­கி­யது.

 

1991 : வளை­குடா யுத்­தத்­தின்­போது இஸ்ரேல் மீது தனது இரண்­டா­வது ஸ்கட் ஏவு­க­ணையை ஈராக் ஏவி­யது. இதனால் 15 பேர் காய­ம­டைந்­தனர்.

 

1993 : செக் குடி­ய­ரசு, ஸ்லோவாக்­கியா ஆகி­யன ஐ.நாவில் இணைந்­தன.

 

1997 : யஸிர் அரபாத் 30 ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் பலஸ்­தீன மேற்குக் கரை நக­ரான ஹெப்­ரோ­னுக்குத்  திரும்­பினார்.

 

2006 : ஸ்லோவாக்­கி­யாவின் விமா­னப்­படை விமானம் ஹங்­கே­ரியில் வீழ்ந்து நொறுங்­கி­யது.

 

2006 : புளுட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுலவியை நாசா விண்ணுக்கு ஏவியது.

 

2014 : பாகிஸ்தானின் பனு நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 26 படையினர் பலியானதுடன் 36 பேர் காயமடைந்தனர். 

 

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=647#sthash.ZjQabT7o.dpuf
  • தொடங்கியவர்

 

12552656_972911866090841_212113459696961

காலஞ்சென்ற பிரபல பின்னணிப் பாடகரும், புகழ்பெற்ற கர்நாடக சங்கீத இசைப்பாடகருமான சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பிறந்தநாள்.

சீர்காழி கோவிந்தராஜன்

 
Sirkazhi_S_Govinda_2701652f.jpg
 

வெண்கலக் குரலோன் புகழ்பெற்ற பிரபல கர்னாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகருமான சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் (Sirkazhi S.Govindarajan) பிறந்த தினம் இன்று (ஜனவரி 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l நாகை மாவட்டம் சீர்காழியில் (1933) பிறந்தவர். தந்தை நடத்தும் ராமாயண இசை நாடகத் தில் சிறு வயது ராமனாக நடித்து பாடல்கள் பாடி அனைவரையும் கவர்ந்தார் குழந்தையாக இருந்த கோவிந்தராஜன்.

l சீர்காழி வாணிவிலாஸ் பாட சாலையில் பயின்றார். இளம் வயதில் எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, கிட்டப் பாவின் பாடல்களை விரும்பிக் கேட்டு தானும் பாடுவார். தேவி நாடகக் குழு, பாய்ஸ் நாடக கம்பெனியில் இணைந்து நடிப்புத் திறன், இசைத் திறனை வளர்த்துக்கொண்டார்.

l ‘சினிமா உலகம்’ என்ற பத்திரிகையை நடத்திவந்த பி.எஸ்.செட்டியார், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் துணை நடிகராக இவரை சேர்த்துவிட்டார். ஓய்வு நேரத்தில் இவர் பாடுவதைக் கேட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும், இசையமைப்பாளர் ஜி.ராமநாதனும் இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று வாழ்த்தினார்கள்.

l பி.எஸ்.செட்டியார் அறிவுரையின்படி சென்னை தமிழ் இசைக் கல்லூரியில் சேர்ந்து இசை பயின்றார். 1949-ல் இசைமாமணி பட்டம், 1951-ல் சங்கீத வித்வான் பட்டம் பெற்றார். சிறந்த புல்லாங்குழல் கலைஞர் திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளையிடம் பயிற்சி பெற்று இசைத் திறனை வளர்த்துக்கொண்டார்.

l கச்சேரிகளுக்கு இவரையும் உடன் அழைத்துச் செல்லும் சுவாமிநாத பிள்ளை, இவரை தன் மகன் என்றே மற்றவர்களிடம் அறிமுகம் செய்வாராம். கடும் உழைப்பாளியான சீர்காழி, அயராத சாதகம் மூலம் இசை உலகில் நிலைத்த இடம் பெற்றார். சென்னை மியூசிக் அகாடமியில் 1951-ல் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார்.

l 1953-ல் பொன்வயல் என்ற படத்தில் சுத்தானந்த பாரதியின் ‘சிரிப்புத்தான் வருதையா’ என்ற பாடலை தன் வெண்கலக் குரலில் பாடி தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இதற்கு முன்னரே ஔவையார் திரைப்படத்துக்காக ‘ஆத்திச்சூடி’ பாடியிருந்தார்.

l ‘பட்டணந்தான் போகலாமடி’, ‘அமுதும் தேனும் எதற்கு’, ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’, ‘கண்ணன் வந்தான்’, ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’, ‘தேவன் கோவில் மணியோசை’ போன்ற பாடல்கள் இவருக்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுத் தந்தன. ஏராளமான பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்.

l சங்கீத அகாடமி விருது, இசைப் பேரறிஞர் விருது, பத்ம உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1983-ல் சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. சென்னை தமிழ் இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார்.

l இசை அரங்குகளில் தமிழ்ப் பாடல்களையே பாடியவர். இலங்கை, லண்டன், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் ஏராளமான இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். தெய்வத் திருமணங்கள், அகத்தியர், ராஜராஜசோழன் உள்ளிட்ட பல படங்களில் தனது அபார நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியுள்ளார்.

l 30 ஆண்டுகளுக்கு மேல் திரைப் பாடல்களையும், பக்திப் பாடல்களையும் தனித்துவம் வாய்ந்த தன் குரலால் பாடி, ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட சீர்காழி கோவிந்தராஜன் 55-வது வயதில் மாரடைப்பால் (1988) காலமானார்.

 

tamil.thehindu.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
அசினுக்குக் இன்று டெல்லியில் திருமணம்!
 

மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் தனது திறமையான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அசின். தமிழில் உள்ளம் கேட்குதே படம் மூலம் அறிமுகமானவர் எம்.குமரன் படம் மூலம் பிரபலமானார். தொடர்ந்து கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்கள் பலருடனுடம் நடித்து ஒரு கட்டத்தில் டாப் நடிகைகளில் முதலிடம் வரையிலும் கூட பிடித்தார்.

பின்னர் இந்தியில் சல்மான்கான், அக்‌ஷய் குமார் என பாலிவுட்டிலும் வலம் வந்தவருக்கு மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவுடன் திருமணம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இவருக்கும், ராகுல் ஷர்மாவிற்கும் இன்று டெல்லியில் திருமணம் நடைபெற்றது.

masin-rahul-solitaire.jpg

இன்று காலை சர்ச்சில் கிருஸ்துவர்கள் முறைப்படி திருமணம் நடைபெற்றது, இன்று மாலையே இந்து முறைப்படி தசித் தேவரானா ஹோட்டலில் திருமணம் நடைபெறவுள்ளது. பாலிவுட்டின் பிரபல நடிகர் மற்றும் அசினின் நெருங்கிய நண்பர் அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பலரும் அதில் கலந்துகொள்கிறார்கள்.

ஜனவரி 23 அன்று மும்பையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இவர்கள் திருமணம் நடைபெறும் ஹோட்டலின் புகை படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அசின் இறுதியாக பாலிவுட்டில் நடித்த படம் ஆல் இஸ் வெல்.இனி சினிமாக்களின் அசின் ஆர்வம் காட்டுவாரா என்பது சந்தேகமே.

Asin-Rahul Sharma Enters Wedlock

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள் - ஹோம்வொர்க்

‘‘டேய்... ஹோம்வொர்க்கை முடிச்சிட்டியா?’’ என்று மகனிடம் குரல்கொடுத்த அதே நேரத்தில், ‘ரிப்போர்ட் ரெடியா?’ என பாஸிடம் இருந்து இமெயில் வந்தது `வொர்க் ஃப்ரம் ஹோம்' ரகுவுக்கு!

12321236_1057941974264592_59097399212679

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

62 பேரிடம் குவிந்து கிடக்கும் உலகின் பாதி சொத்து

 
கோப்புப் படம்
கோப்புப் படம்

உலகின் பாதி சொத்து வெறும் 62 பணக்காரர்களிடம் குவிந்து கிடக்கிறது என இங்கிலாந் தைச் சேர்ந்த ஆக்ஸ்போம் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது, பெரும் பணக் காரர்களின் சொத்துமதிப்பு 44 சதவீதம் உயர்ந்துள்ளது. அவர் களின் மொத்த சொத்துமதிப்பு 1.76 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 119 லட்சம் கோடி). இது 350 கோடி ஏழை மக்களின் சொத்துக்கு சமமானது.

ஏழை மக்கள் ஏழையாகிக் கொண்டே இருக்கையில் சிலரிடம் மட்டும் செல்வம் குவிந்து வருகிறது. கடந்த 2010-ம் ஆண்டு உலக மக்கள்தொகையில் பாதி ஏழைகளின் ஒட்டுமொத்த சொத்துகளின் மதிப்பு வெறும் 388 பேரிடம் குவிந்திருந்தது.

அல் ஜஸீரா தொலைக் காட்சிக்கு ஆக்ஸ்போம் அறக்கட்ட ளையின் ஆஸ்திரேலிய தலைமை செயலாளர் ஹெலன் ஸோக் கூறும்போது, “இந்த வளம் சரியான முறையில் பகிர்ந்தளிக்கப் படுகிறதா என்பதைக் கண் காணிக்க முறையான அமைப்பு இல்லை. வரிவிதிப்பில் சீர்திருத் தம் கொண்டுவர, உலக வர்த்தக தலைவர்கள், அரசியல் தலைவர்களிடம் ஈடுபாட்டை எதிர்பார்க்கிறோம். ஏழைகளுக்கும் பணக்காரர் களுக்கும் இடையே இடைவெளி அதிகரித்துக் கொண்டே வருகிறது” என்றார்.

ஆக்ஸ்போம் இங்கிலாந்து தலைவர் மார்க் கோல்டிரிங் கூறும்போது, “உலகில் பாதி ஏழைகளின் சொத்து சொற்ப எண்ணிக்கையிலான நபர்களிடம் குவிந்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. உலகில் ஒன்பதில் ஒருவர் தினமும் இரவு உணவு உண்பதற்கு வழியின்றி உறங்கப் போகிறார்” எனத் தெரிவித்துள் ளார். சுவிட்ஸர்லாந்தின் தாவோஸ் நகரிலுள்ள உலக பொருளாதார கூட்டமைப்பு (டபிள்யுஇஎஃப்) சார்பில் இம்மாத இறுதியில் நடைபெறும் கூட்டத்துக்கு உலக தலைவர்களை ஆக்ஸ்போம் அழைத்துள்ளது. வரிவிதிப்பு, நியாயமான ஊதியம், பொதுச் சேவைகளில் முதலீடு உள்ளிட் டவை தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

உலக சொத்துகளில் பாதியை கைவசம் வைத்துள்ள 62 பணக் காரர்களிடம் சுமார் 514 லட்சம் கோடி சொத்து, பணம் முறையான கணக்கு காட்டப்படாமல் கருப்பு பணமாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஆக்ஸ்போம் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

http://tamil.thehindu.com/

 

  • தொடங்கியவர்

உலகின் அதிக வயதான மனிதர் யசுடரோ கொய்டே காலமானார் (வயது 112)

உலகின் அதிக வயதான மனிதர், ஜப்பானை சேர்ந்த யசுட்ரோ கொய்டே இன்று காலமானார். அவருக்கு வயது 112. 1903ம் ஆண்டு பிறந்த இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் உலகின் அதிக வயதான மனிதர் என்று கின்னஸால் அறிவிக்கப்பட்டிருந்தது

தான் நீண்ட நாள் வாழ்ந்ததற்கு மது அருந்துவது, புகை பிடிப்பதை தவிர்த்ததே முக்கிய காரணம் என்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த பழக்கங்களில் இருந்து விடுபடுவதே நீண்ட நாள் வாழ்வதற்கான ரகசியம் எனவும் முன்னர் இவர் கூறியிருந்தார்.

12508784_1057961537595969_56033175331760

vikatan.

  • தொடங்கியவர்

 

ஏனோ வானிலை மாறுதே...
  • தொடங்கியவர்

12507428_668568249912387_219188194088350

  • தொடங்கியவர்

அழியாத தடங்கள் | உலகம் 2015

 
பாரீஸ் நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய கம்போடிய ஹோட்டல் முன்பு பொதுமக்கள் மலர்க் கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்தினர். உறவினரை இழந்த துக்கம் தாளாமல் ஒரு பெண் கதறி அழுகிறார். படம்: கெட்டி இமேஜஸ்
பாரீஸ் நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய கம்போடிய ஹோட்டல் முன்பு பொதுமக்கள் மலர்க் கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்தினர். உறவினரை இழந்த துக்கம் தாளாமல் ஒரு பெண் கதறி அழுகிறார். படம்: கெட்டி இமேஜஸ்

ஜனவரி

ஜன. 7: பிரான்ஸ் நாட்டுத் தலை நகரான பாரிஸில் உள்ள ‘சார்லி ஹெப்தோ’ பத்திரிகை அலுவலகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர், 4 கார்ட்டூனிஸ்ட்டுகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.

ஜன.8: பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தல் களத்தில் 19 வேட்பாளர்கள் இருந்தபோதும், 3-வது முறையாக அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறீசேன ஆகியோரிடையேதான் கடும் போட்டி நி்லவியது. இதில் மைத்ரிபால சிறீசேன வெற்றிபெற்றார்.

பிப்ரவரி

பிப். 10: எகிப்து நாட்டுத் தலைநகர் கெய்ரோவில் உள்ள ஏர் டிஃபென்ஸ் கால்பந்து மைதானத்தில் ‘எகிப்தியன் பிரிமியர் லீக்’ போட்டியின்போது மைதானத்தில் ஏற்பட்ட வன்முறையில் 30 பேர் உயிரிழந்தனர்.

பிப்.17: இலங்கை இறுதிப் போரில் நடைபெற்ற குற்றங்கள் குறித்த சர்வதேச நிபுணர் குழுவின் விசாரணை அறிக்கை, இலங்கையின் வேண்டுகோளுக்கிணங்க, தாமதமாக வெளியிடப்படும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்தது.

பிப்ரவரி 22: மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கைது செய்யப்பட்டபோது அவரிடம் போலீஸார் ‘முரட்டுத்தனம்' காட்டியதைப் பதிவு செய்த வீடியோ வெளியானதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

 

பிப்ரவரி 27: அடிப்படைவாதத்துக்கு எதிராக ‘முக்தோ மோனா’ என்ற பெயரில் வலைப்பூவில் எதிரான கருத்துகளை எழுதிவந்த அமெரிக்க வாழ் வங்கதேச எழுத்தாளர் அவிஜித் ராய் மத அடிப்படைவாதிகளால் வங்கதேசத்தில் படுகொலை செய்யப்பட்டார். அதில் அவரது மனைவியும் பாதிக்கப்பட்டார்.

மார்ச்

மார்ச் 19: பாகிஸ்தானில் ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சித் தலைவர் ஹாஜி சர்தார் முகமது தலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மார்ச் 23: சிங்கப்பூரின் முதல் பிரதமரும், ‘சிங்கப்பூரின் தந்தை’ என்று அழைக்கப்படுபவருமான லீ க்வான் யூ,உடல்நலக் குறைவால் தனது 91-வது வயதில் காலமானார்.

LEE_KUAN_YEW_23260_2696591a.jpg

ஏப்ரல்

ஏப். 13: ‘டின் ட்ரம்’, ‘பீலிங் தி ஆனியன்’ போன்ற பல புகழ்பெற்ற நூல்களை எழுதிய, நோபல் பரிசு வென்ற ஜெர்மன் எழுத்தாளர் குந்தர் கிராஸ் தனது 87-வது வயதில் காலமானார்.

ஏப். 25: நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தில் சுமார் 8,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

 

மே

மே 28: அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு கால்பந்து போட்டிகளில் சுமார் ரூ.641 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) துணைத் தலைவர் உள்ளிட்ட 7 பேர் ஸ்விட்சர்லாந்தின் ஜூரிக் நகரில் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, உலகக் கால்பந்து கூட்டமைப்பான ‘பிஃபா’ தலைவர் செப் பிளாட்டர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மே 29: மியான்மரில் ரொஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் தீவிரமடைந்தது. அதனால் அந்த நாட்டு முஸ்லிம்கள் மலேசியாவுக்கு ஆள் கடத்தல் கும்பல் மூலம் அழைத்துச் செல்லப்படும்போது பலர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் பெரில்ஸ் வனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.

ஜூன்

ஜூன் 17: ஜப்பானில் 18 வயதுடையவர்கள் வாக்களிக்கும் உரிமை பெறுவதற்கான சட்டம் முழு ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. முன்பு 20 வயது நிரம்பியவர்கள் மட்டுமே வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களாக இருந்தனர்.

ஜூலை

ஜூலை 14: அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகள் மற்றும் ஈரான் இடையேயான அணு ஆயுதத் தடை தொடர்பான ஒப்பந்தம் குறித்து உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி, அணுகுண்டுகளைத் தயாரிப்பதில்லை என ஈரானும், அதன் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கிக்கொள்ளப்படும் என வல்லரசு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

 

ஆகஸ்ட்

ஆக. 13: பாகிஸ்தான் நாட்டில் பெஷாவர் பள்ளி தாக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 6 பேருக்கு அந்நாட்டு ராணுவம் மரண தண்டனை விதித்தது.

அக். 15: ஜமைக்கா நாட்டு எழுத்தாளர் மர்லான் ஜேம்ஸ், இந்த ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசை வென்றார். ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர் இந்தப் பரிசை வென்றது இதுவே முதன்முறை.

ஆக. 30: சிரியா நாட்டில், பால்மைரா நகரத்தில் இருந்த ‘டெம்பிள் ஆஃப் பெல்’ எனும் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னம் ஐ.எஸ். தீவிரவாதிகளால் அழிக்கப்பட்டது.

செப்டம்பர்

செப். 18: ஜெர்மனியைச் சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் கார்களில், புகை அளவு சோதனையைக் காட்டும் மென்பொருளில் நடந்த மோசடியை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த ஆய்வுக் குழுவில் பணியாற்றியவர்களில், தமிழக இளைஞர் அரவிந்த் திருவேங்கடமும் ஒருவர். அமெரிக்காவின் வெஸ்ட் வெர்ஜீனியா பல்கலைக்கழக ஆய்வுமையத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார் அரவிந்த். அவரது குழுவினர் செய்த ஆய்வினால் கார்களில் புகை அளவைத் தெரிவிக்கும் மென்பொருளில் செய்த மோசடி வெடித்தது. இதனையொட்டி ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் (சிஇஓ) மார்டின் வின்டர்கோன் மன்னிப்புக் கேட்டு பதவி விலகினார்.

2_2696590a.jpg

அக்டோபர் 5-9

மருத்துவத்துக்கான நோபல் பரிசை ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வில்லியம் சி.கேம்பல், சதோஷி ஒமுரா மற்றும் சீனாவைச் சேர்ந்த யூயூ டு ஆகியோர் வென்றனர். இயற்பியலுக்கான நோபல் பரிசை டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டகாக்கி கஜிதா, குவின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பி.மெக்டொனால்ட் ஆகியோர் வென்றனர்.வேதியியலுக்கான நோபல் பரிசை ஸ்வீடனின் தாமஸ் லிண்டால், அமெரிக்காவின் பால் மோட்ரிச் மற்றும் துருக்கியின் ஆசிஸ் சன்கார் ஆகியோர் வென்றனர்.இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெலாரஸ் நாட்டின் ஸ்வெட்லானா அலெக்ஸிவிச் வென்றார்.அமைதிக்கான நோபல் பரிசை துனிசியாவைச் சேர்ந்த ‘நேஷனல் டயலாக் குவார்டெட்’ எனும் அமைப்பு வென்றது

1_2696576a.jpg

நவம்பர்

நவ. 12: சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ‘இஸ்லாமிக் ஸ்டேட்’ (ஐ.எஸ்.) இயக்கத்தின் முக்கியத் தீவிரவாதிகளில் ஒருவரான ஜிகாதி ஜான் கொல்லப்பட்டார்.

நவ. 13: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இசைக் கச்சேரி அரங்கு, கால்பந்து மைதானம், ஓட்டல்கள் என 6 இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 130 பேர் கொல்லப்பட்டனர். 352 பேர் காயமடைந்தனர்.

நவ. 9: 25 ஆண்டுகளுக்குப் பிறகு மியான்மர் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் ஆங் சாங் சூச்சியின் ‘நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரசி’ கட்சி வெற்றி பெற்றது.

vbk-28-suu_kyi_170_2696582a.jpg

டிசம்பர்

டிச. 12: ஐ.நா. பருவநிலை மாற்ற சர்வதேச மாநாட்டில் கரியமில வாயு வெளியீட்டின் அளவைக் குறைப்பது தொடர்பான ஒப்பந்தத்தை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன.

டிச. 19: ஸ்பெயின் நாட்டின் மிரியா லாலாகன் ரோயோ உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.