Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ட்விட்டரில் பத்தாவது பிறந்தநாள் கொண்டாடும் ஹேஷ்டேக் #Hashtag10

சமூகவலைதளங்களில் ட்ரெண்ட்டாகும் அனைத்து விஷயங்களும் தவறாமல் பயன்படுத்தும் ஹேஷ்டேக், ட்விட்டரில் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. 

Hashtag_12105.jpg


ஹேஷ்டேக்கை முதன்முதலாகப் பயன்படுத்தி ட்விட்டரின் தலையெழுத்து மாறக் காரணமாக இருந்தவர் கிறிஸ் மெஸ்ஸினா என்ற பொறியாளர். கூகுள் மற்றும் உபெர் ஆகிய நிறுவனங்களில் பொறியாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட மெஸ்ஸினா, கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி ஹாஷ்டேக்குகளை குழுக்களை அடையாளப்படுத்த ஏன் பயன்படுத்தக் கூடாது என்ற கேள்வியுடன் ஒரு ட்வீட் போட்டார். ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களை ஆளும் நிலை வரும் என்று மெஸ்ஸினாவுக்கு அன்றைய தினம் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ட்விட்டரின் வரலாற்றில் ஹேஷ்டேக்குகள் அதிகாரபூர்வமாக பயன்படுத்தப்பட்டது அதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. பத்தாவது ஆண்டைக் குறிக்கும் வகையில் #Hashtag10 என்ற பிரத்யேக ஹேஷ்டேக்குடன் எமோஜி ஒன்றையும் ட்விட்டர் உருவாக்கியுள்ளது. மொத்தமுள்ள 328 மில்லியன் ட்விட்டர் பயனாளர்கள் மாதத்துக்கு 125 மில்லியன் ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்துகின்றனர். 

Tweet_12266.jpg

 

இணையதளத்தின் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கான மெர்ரியம் வெப்ஸ்டர் அகராதி ஹேஷ்டேக் என்ற வார்த்தைக்கு கடந்த 2014-ம் ஆண்டு அதிகாரபூர்வ அங்கீகாரம் அளித்தது. ’# என்ற குறியீட்டுக்குப் பின்னர் பயன்படுத்தப்படும் ஒரு சொல் அல்லது சொற்றொடர், அதனுடன் தொடர்புடைய உரைகளை (ட்வீட்) வகைப்படுத்துவது’ என்று அந்த அகராதி விளக்கம் கொடுத்தது. இதுவரை பயன்படுத்தப்பட்டஹேஷ்டேக்குகளில் அதிகம்பேரால் பயன்படுத்தப்பட்டது #NowPlaying அல்லது #NP. இந்த ஹேஷ்டேக் ஒரு பில்லியனுக்கு மேற்பட்டோரால் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ட்விட்டர் தரவுகள் கூறுகின்றன. சமூக அநீதிகள், சமூக நற்பணிகள், அரசியல் செயல்பாடு என பல்வேறு தளங்களில் ஹேஷ்டேக்குகள் முக்கிய பங்காற்றியுள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தல் முதல் அ.தி.மு.க. அணிகள் இணைப்பு வரை எல்லாமே ஹேஷ்டேக்குகளால் ட்ரெண்டானவையே.

http://www.vikatan.com/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

37p1.jpg 

* விஜய் சேதுபதியை இயக்குகிறார் மணி ரத்னம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருக்கும் இந்தப் படத்தின் ஹீரோயின் தேர்வு அதிதீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. இது முழுக்க முழுக்க `மெட்ராஸை’ மையமாகக் கொண்ட படமாம். வாரே வாவ்!


37p2.jpg

* எம்மா ஸ்டோன்தான் ஹாலிவுட்டின் லீடிங் லேடி. 2017-ல் அதிக சம்பளம் வாங்கிய நடிகையாக முதலிடம் பிடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 180 கோடி ரூபாய் சம்பளம். இதன்மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த ஜெனிஃபர் லாரன்ஸை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் எம்மா. சூப்பர்மா!


37p3.jpg

* ‘ஸ்பைடர்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் மகேஷ்பாபுவுக்காகப் பிரமாண்ட விழா எடுக்கிறது லைகா தயாரிப்பு நிறுவனம். செப்டம்பர் 9-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கும் இந்த விழாவில் ரஜினி, கமல் உள்பட கோலிவுட்டின் டாப்டக்கர்ஸ் அனைவரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அன்றே ஆடியோ ரிலீஸ். வாங்கண்ணா... வணக்கங்கணா!


* இந்திய கிரிக்கெட் வீரர்களைப் பயமுறுத்தும் ஒற்றை வார்த்தை `யோயோ’. ஃபிட்னஸ் என்ட்யூரன்ஸ் டெஸ்ட்டான இந்த யோயோ டெஸ்ட்டில் 21 மார்க் எடுத்தால்தான், இந்திய அணிக்குள் இடம்பிடிக்க முடியும் என விராட் கோஹ்லியும், ரவிசாஸ்திரியும் சொல்ல, 19.5 மார்க் மட்டுமே எடுத்து வெளியே போய்விட்டார்கள் சுரேஷ் ரெய்னாவும், யுவராஜ் சிங்கும். ஃபிட்னஸில் கெத்துகாட்டும் கோஹ்லியே 21 மார்க்குகள் மட்டுமே எடுத்து ஜஸ்ட் பாஸாகியிருக்கிறார். கருணை காட்டுங்க கோஹ்லி!


37p4.jpg

* சன்னிதான் கொச்சியின் லேட்டஸ்ட் சென்சேஷன். கடந்தவாரம் கொச்சியில் நடைபெற்ற ஒரு விழாவுக்கு வந்திருந்தார் சன்னி லியோன். அவர் மேடையில் ஏறவே முடியாத அளவுக்குக் கூட்டம் அலைமோத, சேட்டன்களின் அன்பைக் கண்டு சன்னியே மிரண்டு போனார். ஒரு கட்டத்தில் மேடை பேனர்களை எல்லாம் கிழித்து சன்னியின் தரிசனத்துக்காக ரசிகர்கள் அலைபாய்ந்தனர். ‘`கடவுளின் சொந்ததேசத்துப் பிள்ளைகளின் அன்பிலும் பாசத்திலும் தவித்துப் போனேன்’’ என கேரளாவில் இருந்து ஃப்ளைட் பிடித்ததும் ட்வீட்டியுள்ளார். சன்னின்னா சும்மாவா!


37p5.jpg

* `வேலைக்காரன்’ ரிலீஸூக்குத் தயாராக, பொன்ராம் இயக்கும் அடுத்த படத்தின் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டார் சிவகார்த்திகேயன். `வேலைக்காரனி’ல் நயன்தாரா, அடுத்த படத்தில் சமந்தா என ஹீரோயின்களின் அப்டேஷனும் எகிறிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் முடிந்ததும் `இன்று நேற்று நாளை’ இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் நடிக்கிறார் சிவகா. அடுத்தடுத்த படங்களில் இசையமைப்பாளர் துவங்கி டெக்னீஷியன்ஸ் அனைவருமே வேற லெவலில் இருக்க வேண்டும் என்பது சிவகார்த்திகேயனின் டார்கெட். சிவகா ராக்ஸ்!

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

2 லட்சம் ஆண்டுகளில் மனிதர்கள் பூமியில் எப்படியெல்லாம் பரவினார்கள்? அறிவியலின் டைம்லைன்!

 
 

2016-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உலகின் மொத்த மக்கள் தொகை 7.442 பில்லியன். இப்போது இந்த பூமிப்பந்து முழுவதும் நாம் பரவிக் கிடந்தாலும், மனிதர்கள் தோன்றியபோது இந்த நிலை நிச்சயம் இருந்திருக்காது.

ஆதிகால மனிதர்கள்

வரலாற்று ஆய்வின்படி முதல் மனித இனம் கிழக்கு ஆப்பிரிக்காவிலோ அல்லது, இந்தியாவின் தென்பகுதியிலோ உருவானதாக சொல்லப்படுகின்றது. அங்கிருந்து மனித இனம் எவ்வாறு பூமியின் எல்லா மூலைக்கும் சென்றடைந்தது என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. அப்போது வாழ்ந்த மனிதர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. பிறகு எப்படிச் சரியான வரலாற்றை நாம் அறிய முடியும்?

அறிவியல் ஆராய்ச்சி

இன்றைய அறிவியல், பல ஆராய்ச்சிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மேற்கண்ட கேள்விகளுக்கு விடை காண உதவுகிறது. DNA மூலக்கூறு ஆராய்ச்சி மூலம் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. உதாரணமாக, பண்டைய மனிதனின் ஒரு எலும்பு கிடைத்தால் போதும், அது எந்தக் காலத்தை சேர்ந்த மனிதனுடையது எனவும், அந்த வகை மனித இனம் இப்போது இருக்கிறதா, அதற்கும் நமக்கும் என்னென்ன வேறுபாடுகள் என்பது வரை கண்டறிய முடியும்.

புகழ்பெற்ற நேஷனல் ஜீயோகிராஃபி சேனல் 2005-ம் ஆண்டு “ஜெனோகிராஃபிக் ப்ராஜெக்ட்” என்ற ஒன்றை ஆரம்பிக்கிறது. இதற்கு பல்வேறு நாடுகளில் இருக்கும் மானுடவியலாளர்கள் (Anthropologists) மற்றும் மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சியாளர்கள் (Paleontologists) ஆதரவு தெரிவித்து உதவி வருகின்றனர். எங்கே மனித இனம் தோன்றியது, எப்படி எல்லாம் அவர்கள் இடம்பெயர்ந்தார்கள் என்பது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுக்கு விடை கண்டு வருகின்றனர். மனித இனத்தின் வளர்ச்சி மற்றும் பயணம் பற்றிய ஒரு எளியத் தொகுப்பு இதோ…

2,00,000 வருடங்களுக்கு முன்: 500,000 வருடங்களுக்கு முன்பே பழங்கால மனிதர்கள் தோன்றி இருந்தாலும் அவர்கள் உடலமைப்பில் சற்று வேறுபட்டே இருந்தனர். தற்போது இருக்கும் மனித இனம் ஹோமோ சேபியன்கள் இனத்தைச் சார்ந்தது. இவர்கள் முதன் முதலில் கிழக்கு ஆப்பிரிக்காவில் 200,000 வருடங்களுக்கு முன் உருவாகின்றனர்.

70,000 வருடங்களுக்கு முன்: பனி யுகத்தின் குளிர்ந்த, உலர்ந்த காலத்துக்குள் பூமி நுழைகிறது. பல்வேறு பழங்கால மனித இனங்கள், விலங்கு மற்றும் பறவை இனங்கள் இதில் அழிந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

நாடோடி வாழ்க்கை

60,000 வருடங்களுக்கு முன்: அதுவரை ஆப்பிரிக்காவில் மட்டும் இருந்து வந்த ஒரு சில மனித இனங்கள் முதன்முறையாக அந்தக் கண்டத்தை விட்டு வெளியே வருகின்றனர். கால்நடையாகவே நெடும்பயணம் மேற்கொள்கின்றனர். இப்போது தான் நாடோடி வாழ்க்கையே சிறந்த முறை என்று உணர்கின்றனர்.

50,000 வருடங்களுக்கு முன்: முதன் முறையாக மனித இனம் ஆசியா வழியாகக் கடல் கடந்து ஆஸ்திரேலியாவில் கால் பதிக்கிறது. அதே சமயம், மற்றோரு கூட்டம், முதன் முறையாகச் செங்கடலை கடந்து அதுவரை சென்றிடாத இடங்களுக்கு எல்லாம் ஆச்சர்யங்களுடன் பயணிக்கின்றனர்.

40,000 வருடங்களுக்கு முன்: தென் கிழக்காக பயணப்பட்ட மனிதர்கள் ஐரோப்பாவில் வாழத் தொடங்குகின்றனர். அதே சமயத்தில், நீயாண்டர்தால் (Neanderthals) இன மனிதர்கள் அழியத் தொடங்குகின்றனர். இவர்களுக்கும், நமக்கும் 99.7% DNA ஒற்றுமை உண்டு. அதே போல் மனிதர்கள் மற்றும் சிம்பன்ஸீ குரங்குகளுக்கும் 98.8% DNA பொருத்தம் உண்டு. எனவே, இந்த மூன்று இனங்களும், ஒரு பொதுவான இனத்தில் இருந்து உருவாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

நீயாண்டர்தால்

35,000 வருடங்களுக்கு முன்: இப்போது அவர்கள் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பூமியை ஆக்கிரமித்து வாழத் தொடங்கியிருந்தனர்.

25,000 வருடங்களுக்கு முன்: பனி யுகத்தின் கடைசி அதிகபட்ச பனிப்பொழிவு ஏற்பட்டுப் பல வகை உயிரினங்கள் அழிந்து போயின.

15,000 வருடங்களுக்கு முன்: முதன்முறையாக மனித இனம் பெரிங் ஸ்ட்ரெய்ட்டை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைகிறது. இந்த வழித்தடம், ஒரு குறுகிய கடல் பாதை. பனியுகத்தால் உருவான பாதையான இது ரஷ்யாவில் இருக்கும் சைபீரியாவையும், அமெரிக்காவின் அலாஸ்காவையும் இணைக்கிறது. இதைக் கடந்து வந்ததன் மூலம் மனிதர்கள் பூமியின் அனைத்து வாழக்கூடிய ஸ்தலங்களுக்கும் சென்று ஆக்கிரமித்துவிட்டனர்.

12,000 வருடங்களுக்கு முன்: வேட்டையாடி மட்டும் இனி வாழ முடியாது என்பதை மனிதன் உணர்கிறான். முதன்முறையாக விவசாயம் செய்யத் தொடங்குகிறான். அது புரட்சியாக மாறி, தான் உன்ன விரும்பும் கனி மற்றும் கைகளை தானே பயிரிடும் திறனை வளர்த்துக் கொள்கிறான்.

 

இன்று: எண்ணற்ற விஞ்ஞான வளர்ச்சி மற்றும் அதீத அறிவைப் பெற்றுவிட்ட நாம், அமைதியை மட்டும் பெறமுடியாமல் போராடிக் கொண்டு இருக்கிறோம். மக்கள் தொகை பெருக்கெடுக்க அனைவருக்கும் வாழ்வாதாரம் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அறிவியலும், பூமியை விடுத்து வேறு கிரகங்கள் எங்காவது போய் வாழ முடியுமா என்று தேடிக் கொண்டிருக்கிறோம்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

ஓய்வெடுக்கும் பிக் பென்!

 

 
23CHSUJBIGBEN2

லகப் புகழ்பெற்ற மணிக்கூண்டுகளில் ஒன்று பிக் பென். லண்டன் நகரின் அடையாளமாக இருக்கிறது. 158 ஆண்டுகளாக வேலை செய்துவந்த இந்தக் கடிகாரம், தற்போது பராமரிப்புப் பணிகளுக்காக 4 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. 2021-ம் ஆண்டுதான் இந்தக் கடிகாரத்தின் ஒலியை மீண்டும் லண்டன் மக்களால் கேட்க முடியும்.

மிகப் பிரம்மாண்டமான மணி என்பதைத்தான் பிக் பென் என்று செல்லமாக அழைத்தனர். ‘கிளாக் டவர்’ என்பதுதான் இதன் பெயர். எலிசபெத் ராணி பதவியேற்று, 60 ஆண்டுகள் ஆனதை ஒட்டி 2012-ம் ஆண்டு ‘எலிசபெத் டவர்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

23CHSUJBIGBEN
 

1859-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த மணிக்கூண்டிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மணி ஒலித்துக்கொண்டிருந்தது. ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலேயே பழுது ஏற்பட, 4 ஆண்டுகள் அமைதியாக இருந்தது. 1976-ம் ஆண்டு மிகப் பெரிய பழுது ஏற்பட்டதால், 9 மாதங்கள் மீண்டும் அமைதியானது. 2007-ம் ஆண்டு 7 வாரங்கள் அமைதியாக இருந்த இந்தக் கடிகாரம், தற்போது மீண்டும் 4 ஆண்டுகளுக்கு அமைதியாக இருக்கப்போகிறது.

எலிசபெத் டவர் 315 அடி உயரம்கொண்டது. இதில் 11 மாடிகள் இருக்கின்றன. 334 படிகள் உள்ளன. மணியின் எடை 13.7 டன்கள். 7.2 அடி உயரமும் 8.9 அடி அகலமும் கொண்டது. ஓசை எழுப்பும் சுத்தியலின் எடை 200 கிலோ. கால் மணி நேரத்துக்கு ஒருமுறை 4 சிறிய மணிகளில் இருந்து ஒலி எழுப்பப்படும்.

23CHSUJBIGBEN1

நான்கு பக்கங்களிலும் உள்ள ஒவ்வொரு கடிகாரமும் 23 அடி அகலம் கொண்டவை. 312 கண்ணாடிகள் இவற்றில் பதிக்கப்பட்டிருக்கின்றன. மணி காட்டும் முள் 9.2 அடி நீளமும் நிமிடம் காட்டும் முள் 14 அடி நீளமும் கொண்டுள்ளன.

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் பல முறை ஜெர்மானிய விமானங்கள் இந்தக் கடிகார கோபுத்தைத் தாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால், பெரிய தேசமின்றித் தப்பிவிட்டது. எட்மண்ட் பெக்கெட் டெனிசனும் எட்வர்ட் டென்ட்டும் இந்தக் கடிகாரத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.

பிக் பென்னைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள், தற்போது விக்டோரியாவில் உள்ள லிட்டில் பென்னைப் பார்த்துவிட்டுச் செல்லலாம். 20 அடி உயரம் கொண்ட இந்த லிட்டில் பென், பிக் பென்னின் சிறிய வடிவம்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ஜூலியின் அந்த குணம் மாறவே இல்லை! திமிராக மக்களை மிரட்ட வந்ததாக ஒரு வீடியோ!

 
 
 

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தபோது ஜூலிக்கு தான் மக்கள் இடையில் ஆதரவு அதிகம் திரண்டது. ஆனால் சிறிது நாட்கள் பிறகு ஜூலி அவரது குணங்களை மாற்றிக் கொண்டார். அவர் ஓவியாவிற்கு ஏதிராக நடந்துக் கொண்டார். ஓவியாவிற்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்தனர். ஓவியாவிற்கு ஏதிராக ஜூலி சில விஷயங்கள் செய்ததால் மக்கள் அனைவரும் ஜூலிக்கு ஏதிராக மாறினார்கள். இதைத்தொடர்ந்து, சில நாட்களுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஜூலி வெளியேறினார். தன்னை மாற்றிக்கொண்டு நல்ல பெயருடன் அவர் வெளிவந்தார். அதிலிருந்து வந்த பிறகு ஜூலி Kings of Comedy Juniors என்ற குழந்தைகளுக்கான காமெடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். இதில் எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும் என ஆடியவர் தற்போது வந்துட்டேன்னு சொல்லு, மறுபடியும் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு, ஜூலிடா என பேசி மிரட்டுகிறார்.

 

 
 
599f0af2260e1-IBCTAMIL.jpg
599f0af25b0b0-IBCTAMIL.jpg
599f0af27f28b-IBCTAMIL.jpg

 

  • தொடங்கியவர்

வலையில் சிக்கிய இரட்டைத்தலை கடற்பன்றி (Photos)

 

 

வலையில் சிக்கிய இரட்டைத்தலை கடற்பன்றி (Photos)
 

விலங்குகளில் கூடுதல் உறுப்புகள் ஒட்டி பிறப்பவை மிகவும் அரிதென கருதப்படுகிறது.

இந்நிலையில், கடற்பன்றியொன்று இரட்டைத் தலையுடன் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கடற்பன்றிக்கு முழுமையாக வளர்ச்சியடைந்த இரண்டு தலைகள் உள்ளன.

திமிங்கிலத்திற்கும் டால்ஃபினுக்கும் உயிரியல் வகையில் தொடர்புடைய விலங்காக கடற்பன்றியைக் குறிப்பிடுகின்றனர்.

கடலோரத்திலும், கடலையொட்டிய நீர்நிலைகளிலும் இந்த உயிரினம் வாழ்கின்றது.

இதற்கு முன்னால், இரண்டு காளை மாடுகள் ஓட்டி பிறந்ததுதான் விலங்கினங்கள் இணைந்து பிறந்த சம்பவமாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பிறந்த சற்று நேரத்தில் அந்த இரட்டை உடலுடைய காளை மாடு இறந்து விட்டது.

தற்போது, இந்த நீர்நிலை உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பற்றி ரோட்டர்டாமிலுள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் இருந்து சமீபத்தில் வெளியான ‘டெய்ன்ஸ்’ சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு மே மாதம் பிரிட்டனின் தெற்கிலுள்ள வடக்கு கடலில், மீனவர் குழு ஒன்று இந்த இரட்டை தலையுடைய கடற்பன்றியை நீரில் இருந்து வெளியே எடுத்தது.

இந்த உயிரினத்தை வைத்திருப்பது சட்டவிரோதம் என்று எண்ணிய அந்த மீனவர் குழு, மீண்டும் அதை தண்ணீரில் விட்டுவிட்டார்கள். ஆனால், அதற்கு முன்பாக அதன் புகைப்படத்தை பலரும் எடுத்துள்ளனர்.

திமிங்கிலம் மற்றும் டால்ஃபின் குடும்பம் முழுவதிலும், இவ்வாறு கூடுதல் உறுப்போடு பிறந்த நிகழ்வு இது 10 ஆவது முறையாகும்.

இவ்வாறான உயிரினங்களின் பிறப்புக்கு முன்னரும், பிறப்புக்கு பின்னருமான இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால், எண்ணிக்கை தெளிவாகத் தெரியாமல் போகிறது.

_97480760_p055zxgz_97480761_p055zx4n_97480762_p055zxmy

 

 

 

 
Source:BBC

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் (25-8-1906)

திருமுருக கிருபானந்த வாரியார் சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். அருள்மொழி அரசு, என்றும் திருப்புகழ் ஜோதி என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர். இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ

 
 
 
 
திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் (25-8-1906)
 
திருமுருக கிருபானந்த வாரியார் சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். அருள்மொழி அரசு, என்றும் திருப்புகழ் ஜோதி என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது பிறந்தவர் இவர். செங்குந்த வீர சைவ மரபினர்.

ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் வீர சைவ குல முறைப்படி பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார். வாரியார் சுவாமிகள் அமிர்தலட்சுமியை தனது 19-வது வயதில் கல்யாணம் புரிந்தார்.

இவரது தந்தையார் இசையிலும் இயலிலும் வல்லவர். மாபெரும் புராண வல்லுநர். தந்தையாரே வாரியாருக்கு கல்வி, இசை, இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.

வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை யானைக்கவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார். தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15-ம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார்.

19-ம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது ஆன்மிக மொழி பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர்.

அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக்கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும். சுவாமிகள் 1936-ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து திருப்புகழ் அமிர்தம் என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி கைத்தல நிறைகனி என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது.

சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின.

வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, ராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன. குழந்தைகளுக்கு தாத்தா சொன்ன குட்டிக்கதைகள் என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.

தமிழ் இசைச் சங்கம் இசைப்பேரறிஞர் என்ற விருதை 1967-ம் ஆண்டு வழங்கியது. 1993 அக்டோபர் 19-ம் தேதி வாரியார் சுவாமிகள் லண்டன் பயணமானார். ஆன்மிகத்துக்காகவே பாடுபட்ட வாரியார் சுவாமிகள் 1993-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி விமானப் பயணத்திலேயே காலமானார்.

 

 

 

பிரேசிலிடமிருந்து உருகுவே விடுதலை (25-8-1825)

 

உருகுவை அல்லது உருகுவே தென் அமெரிக்க நாடாகும். இது வடக்கே பிரேசிலுடனும் கிழக்கே அர்ஜெண்டினாவுடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. உருகுவை ஆறும், வெள்ளி ஆறு என்றழைக்கப்படும் ரியோ தெ லா ப்ளாதா என்ற ஆறும் அர்ஜெண்டின எல்லையை ஒட்டி இருக்கின்றன. கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. தென்னமெரிக்கக் கண்டத்தில் நிலப்பரப்பில் இரண்டாவது சிறிய நாடு. உருகுவை என்ற பெயர் பழங்குடி மக்களின் மொழியான குரானி என்பதில் இருந்து வந்தது. இதற்கு பறவைகளின் ஆறு என்று பொருள். 16-ம்

 
 
 
 
பிரேசிலிடமிருந்து உருகுவே விடுதலை (25-8-1825)
 
உருகுவை அல்லது உருகுவே தென் அமெரிக்க நாடாகும். இது வடக்கே பிரேசிலுடனும் கிழக்கே அர்ஜெண்டினாவுடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. உருகுவை ஆறும், வெள்ளி ஆறு என்றழைக்கப்படும் ரியோ தெ லா ப்ளாதா என்ற ஆறும் அர்ஜெண்டின எல்லையை ஒட்டி இருக்கின்றன. கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. தென்னமெரிக்கக் கண்டத்தில் நிலப்பரப்பில் இரண்டாவது சிறிய நாடு.

உருகுவை என்ற பெயர் பழங்குடி மக்களின் மொழியான குரானி என்பதில் இருந்து வந்தது. இதற்கு பறவைகளின் ஆறு என்று பொருள். 16-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பியர்கள் இங்கு வரத் தொடங்கினர். ஸ்பெயினும் போர்ச்சுகலும் உருகுவேயை ஆக்கிரமித்தன.

காலப்போக்கில் உருகுவே ஸ்பெயினின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. தற்போதைய தலைநகரான மாண்டிவிடியோ 18-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருவாக்கப்பட்டது. பொய்னஸ் ஏரிஸ்வர்த்தக மையமாகவும் மாண்டிவிடியோ ராணுவ மையமாகவும் செயல்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருகுவே உட்பட தென் அமெரிக்கா முழுதும் விடுதலை இயக்கங்கள் வலுப்பெற்றன.

பின்னர் அண்டை நாடுகளான பிரேசில் மற்றும் அர்கெந்தீனா என்பவற்றின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. Provincia Cisplatina என்ற பெயரில் பிரேசிலின் ஒரு பகுதியாக இருந்தது. ஆகஸ்ட் 25, 1825 அன்று விடுதலைப் போராட்டம் துவங்கியது. பின்னர் 'மாண்டிவிடியோ உடன்படிக்கையின் மூலம் 1828-ம் ஆண்டு விடுதலை அடைந்தது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1803- யாழ்ப்பாணம் பனங்காமம் பற்று மன்னன் பண்டாரவன்னியன் விடத்தல் தீவைக் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்செண்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது.

* 1830 - பெல்ஜியப் புரட்சி ஆரம்பமானது.

* 1912 - சீனத் தேசியவாதிகளின் குவாமிங்தாங் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

* 1920 - போலந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் ஆகஸ்ட் 13-ல் ஆரம்பித்த போர் செம்படையினரின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.

* 1933 - சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கத்தில் 9 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

* 1944 – இரண்டாம் உலகப் போர்: பாரிஸ் நாசி ஜெர்மனியிடம் இருந்து நட்பு நாடுகளால் விடுவிக்கப்பட்டது.

* 1955 - கடைசி சோவியத் படைகள் ஆஸ்திரியாவை விட்டு வெளியேறின.

* 1981 - வொயேஜர் 2 விண்கலம் சனிக்கு மிகஅருகில் சென்றது.

* 1989 - வொயேஜர் 2 விண்கலம் நெப்டியூனுக்குக் அருகில் சென்றது.

* 1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலருஸ் பிரிந்தது.

* 2003 - மும்பையில் நடைபெற்ற இரண்டு கார் குண்டுவெடிப்புகளில் 52 பேர் கொல்லப்பட்டனர்.

* 2007 - ஐதராபாத் நகரில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வில் 30 பேர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

* 2007- கிறீசில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 53 பேர் கொல்லப்பட்டனர்.

பிறந்த நாள்

* 1929 - எஸ். வரலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை, பாடகி

* 1962 - தஸ்லிமா நசுரீன், வங்காள தேச எழுத்தாளர்

* 1952 - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தமிழ்த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி

இறந்த நாள்

* 1822 - வில்லியம் ஹேர்ச்செல், வானியலாளர் (பி. 1738)

* 1867 - மைக்கேல் பரடே, ஆங்கிலேய அறிவியலாளர் (பி. 1791)

* 1908 - ஹென்றி பெக்கெரல், பிரெஞ்சு இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1852)

* 1976 - எல்விண்ட் ஜோன்சன், சுவீடன் நாட்டு எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1900)

* 2007 - தாதி பிரகாஷ்மணி, பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமை ராஜயோகினி

* 2008 - தா. இராமலிங்கம், ஈழத்துக் கவிஞர் (பி. 1933)

* 2009 - எட்வர்ட் கென்னடி, அமெரிக்க செனட்டர் (பி. 1932)

* 2012 - நீல் ஆம்ஸ்ட்ராங், சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதர் (பி. 1930)

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்
காட்டுக்குள் வசிக்கும் நவீன சந்ததியினர்
 

image_5ca81b3b9d.jpg

நவீன தொழில்நுட்பம் வேண்டாம், பழங்காலத்து வாழ்க்கையே உகந்தது என்று 10 வருடங்களாக காட்டுக்குள் வசிக்கும் குடும்பத்தின் கதை இது.

ஐக்கிய அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் வசித்து வந்த காதலர்கள், இயற்கையோடு ஒன்றித்து காட்டுக்குள் சென்று வாழ்வதற்கு தீர்மானித்தனர்.

அதன் பிரகாரம் காட்டுக்குள் சிறிய குடில் ஒன்றை அமைத்துக்கொண்டு 2007 ஆம் ஆண்டு குடியேறினர். மனித குலத்தின் நோக்கம், நன்றாக உண்டு, உறங்கி அடுத்த சந்ததியினரை தோற்றுவிப்பதாகும் என அவர்கள் அந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்திருந்தனர்.
image_734abdc3c5.jpg

டொட் மற்றும் அவரது காதலியான டெய்லா என்பவருமே திருமணத்தின் பின்னர் இவ்வாறு குடியேறினர்.

2009 ஆம் ஆண்டு இவர்களோடு குடும்பத்தவர்கள் 12 பேர் இணைந்துகொண்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள், மாசுபட்ட இடத்தில், அவசரமான சூழலில் வாழ்வதை விட இந்த காட்டு வாழ்க்கை இன்பம் தருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
image_9635e78577.jpgimage_af278a9016.jpgimage_cbc772be29.jpgimage_8c7ebee09e.jpg

இவர்கள் தற்போது இயற்கை மரங்களிலான குடில் அமைத்து கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.

வாரத்துக்கு ஒரு தடவை ட்ரக் வண்டியின் மூலம் நகரத்துக்குச் சென்று வாசிக சாலையில் கணினிகளை உபயோப்பதையும் பத்திரிகைகளை வாசிப்பதையும் வழமையாகக் கொண்டுள்ளனர்.
image_87c5babac2.jpg
தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு வகையில் சாதகமாக இருக்கின்ற போதிலும் பல்வேறு  வழிகளில் தமக்கு தொந்தரவாக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

image_a7f5a86e20.jpgimage_776f9e4c26.jpg

  •  

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

மெளன உலகின் காதல் மன்னன் மறைந்த நாள் இன்று!

 

1920 காலகட்டங்களில் ஹாலிவுட் உலகின் அன்றைய காதல் மன்னனாகத் திகழ்ந்த ருடால்ஃப் வாலண்டினோவின் நினைவு நாள் இன்று. மெளனத் திரைப்படங்கள் மட்டுமே அறிமுகமாகியிருந்த அந்தக் காலகட்டத்தில், தன் மெளனத்தாலேயே பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைத் தன் வட்டத்துக்குள் இழுத்த காதல் மன்னனின் 91-ம் நினைவு நாள் இன்று.

ருடால்ஃப் வாலண்டினோ

ஹாலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகர்களுள் மிக முக்கியமானவர், ருடால்ஃப் வாலண்டினோ. 1895-ம் ஆண்டில் இத்தாலியில் பிறந்தவர் ருடால்ஃப். தன்னுடைய 18-ம் வயதில், வேலை தேடி அமெரிக்காவின் நியூயார்க் நகரம் வந்தவரின் வாழ்க்கையில் அடுத்தடுத்து புயல்கள் வீசின. ஒரு நடனப் பயிற்றுனராக பணியில் சேர்ந்த ருடால்ஃபின் முதல் காதல் தந்த கசப்பான அனுபவங்களால், அவர் நியூயார்க்கை விட்டு வெளியேறி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடியேறவேண்டிய நிலை உருவானது. 

அங்கும் நடனப் பயிற்றுனராகப் பணியாற்றி வந்தவருக்கு, அடுக்கடுக்காகப் பல தோல்விகள். நடிப்புலகின்மீது ஆர்வம்கொண்டு சென்றவரை உடலமைப்பு, முக லட்சணம் எனக் காரணம்காட்டி நிராகரிக்கப்பட்டார். ஒரு நாள் எதிர்பாராத விதமாக ஜூன் மாத்யூஸ் என்ற திரைக்கதை எழுத்தாளரின் பார்வையில் விழுந்த ருடால்ஃபின் வாழ்க்கையில், ஏற்றங்கள் மட்டுமே நிறைந்து காணப்பட்டது. ஜூன் மாத்யூஸ் எழுத்தில், ‘தி ஃபோர் ஹார்ஸ்மென் ஆஃப் தி ஆப்போகாலிப்ஸ்’ என்ற முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் கொடுத்துவந்த ருடால்ஃபின் வாழ்க்கையை ஒரு மோதிரம் புரட்டிப்போட்டது. சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில் அவர் வாங்கிய ஒரு மோதிரம், ‘சாபம்’ நிறைந்ததாகக் கூறப்படுகிறது. அந்த மோதிரத்தால்தான் ருடால்ஃப் தோல்விகளைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அதே மோதிரத்தால்தான் அவர் அல்சர் நோயால் பாதிக்கப்பட்டு, தனது 31-வது வயதிலேயே காலமானார்.

 

இன்று, அடிவயிற்றில் ஏற்படும் அல்சர் நோய்க்கு, ‘வாலண்டினோ சிண்ட்ரோம்’ என இவரது பெயராலேயே இந்நோய் குறிப்பிடப்படுகிறது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சென்னை 378 ! - விருந்து படைக்கும் மாநகரம்

 

 
foodjpg

நா

வில் எச்சில் ஊறவைக்கும் உணவு வகைகளுக்கும், பசிக்கும் ருசிக்கும் விருந்தே படைக்கும் உணவகங் களுக்கும் புகழ்பெற்ற நகரம் சென்னை. மேன்ஷன்களில் தங்கியிருக்கும் இளைஞர்கள், வாகனங்களில் குடும்பத்துடன் வந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டே உணவருந்தும் நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினர் முதல் பெரும் பணக்காரர்கள் வரை எல்லோருக்கும் இரவு 12 மணிவரைகூடப் பசியாற்றும் பெருநகரம் இது.

தனக்கென்ற பிரத்தியேகமான உணவுகளுடன் பிற மாநிலங்களிலிருந்தும் பிற நாடுகளிடமிருந்தும் வந்துசேர்ந்த உணவுகளையும் தன்னுடையதாக மாற்றிக்கொண்ட அலாதியான உணவுக் கலாச்சாரம் நம் சென்னையுடையது. தெருவுக்குத் தெரு இருக்கும் பிரியாணிக் கடைகளும் பரோட்டா கடைகளும் இதற்குச் சான்று. சென்னை - 378-ஐ முன்னிட்டு, சென்னையில் தங்களுக்குப் பிடித்தமான உணவகங்கள் தொடர்பாக நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்கள் இவர்கள்:

 

அன்னக்கூடையும் அயிரை மீன் குழம்பும்!

பாக்கியம் சங்கர், எழுத்தாளர்.

வட சென்னைவாசிகள் பலருக்கும் அன்னமிட்ட கை கல்யாணி அக்காவின் கை. கல்யாணி அக்கா நடத்திய ‘அன்னக் கூடைச் சோறு’ இங்கு மிகப் பிரபலம். ஒரு பெரிய கூடையில் சாதம் ரொப்பி வைக்கப்பட்டிருக்கும் அந்தக் காட்சியை மறக்கவே முடியாது. பக்கத்தில் மீன் குழம்பு, மாட்டுக்கறிக் குழம்பு என்று மணக்க மணக்கக் குழம்புகள் காத்திருக்கும்.

24chvcmedit2-bakyam%20shankar

எங்களுக்கு அதுதான் நட்சத்திர ஓட்டல். எங்கள் பகுதி மக்களின் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே அந்தக் கடை இருந்தது. கடை என்றுகூட அதைச் சொல்ல முடியாது. எங்களுக்கு வீடு மாதிரிதான். உடல்நிலை சரியில்லை என்றால், ‘நாளிக்கு வா, மத்தி மீன் செஞ்சி வைக்கிறேன்... சாப்புடு. எல்லாம் சரியாய்டும்’ என்பார் கல்யாணி அக்கா. மீன் குழம்பு, கருவாட்டுக் குழம்பு, ரசம் எல்லாம் அத்தனை சுவையாகச் சுடச்சுடக் கிடைக்கும்.

மீன் குழம்பு என்றால், சாதாரண மீன் குழம்பு அல்ல. நான்கு நாட்கள், ஒரு வாரம் என்று மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் (’பாடு’க்குச் செல்வது என்பார்கள் இதை!) மீன் கொண்டுவந்து கொடுத்து, அவர் கையால் சமைத்த மீன் குழம்பைத் தூக்குச் சட்டியில் வாங்கிச் செல்வார்கள். உப்புக் கண்டம், நெய்ச்சோறு, குருமா எல்லாம் அக்கா அத்தனை சுவையாகச் செய்துதருவார்.

அயிரை மீன் குழம்பு சுவை நாவை விட்டு அவ்வளவு எளிதில் போகாது. அயிரை மீன் குழம்பை ஊற்றிப் பிசைந்து, அன்னக்கூடையில் இருக்கும் சாதத்தில் பாதி சாப்பிட்டுவிடும் ஆட்களும் உண்டு. “கல்யாணிக் கடை சாப்பாட்டை அன்னிக்குச் சாப்பிட்டா விசேஷம் இல்லடா. மறுநாள் சாப்பிட்டுப்பாரு... சும்மா அப்டி இருக்கும்” என்பார்கள் பலர்.

கடையில் கடைசி வரை ஃப்ரிட்ஜ் வைத்துக்கொள்ளவே இல்லை. ஓட்டலைப் பொறுத்தவரை அதுதான் ஊழலின் முதல்படி என்றே நினைத்தவர் அவர். எல்லாம் அன்றன்றைக்கே வாங்கிச் சமைத்துவிடுவார். இதெல்லாம் 10 வருடங்களுக்கு முன்பு. இப்போது அக்காவுக்கு வயசாகிவிட்டது. இன்று அவரது வாரிசுகள் அந்தக் கடையைத் தொடர்ந்து நடத்துவார்கள் என்று விரும்புகிறேன்.

 

வாசனை ரசம்

தஞ்சாவூர்க் கவிராயர், எழுத்தாளர்.

தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் 1970-களில் வசித்த காலத்தில்தான் உணவகங்களுடனான எனது உறவு தொடங்கியது. நடேசன் தெருவில் வசித்த எனது நண்பர் ஐராவதம் சுவாமிநாதன் ருசி உலகக் கோட்டையின் கதவுகளைத் திறந்துகாட்டியவர். தியாகராய நகரில் இப்போது ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ் இருக்கும் இடத்தில் முன்பு ‘பட்ஸ்’ ஓட்டல் ஒன்று இருந்தது. கர்நாடகக்கார்கள் நடத்திய ஓட்டல் அது. அங்கு ரசம் அத்தனை பிரசித்தம்.

24chvcmedit2-kavirayar

அதன் மணம் இன்றும் என் நினைவில் இருக்கிறது. மேற்கு மாம்பலத்தில் இருந்த தஞ்சாவூர் மெஸ்ஸில் தஞ்சாவூர்க்காரர்களுக்குப் பிடித்தமான உணவு வகைகளான பொங்கல், நெய் ரவா, வடை, பஜ்ஜி எல்லாம் கிடைக்கும். வாழை இலையில் சுடச்சுடத் தருவார்கள். ரங்கநாதன் தெரு முனையில் கோமதி சங்கர் கடையில் ‘தூத் பேடா’ கிடைக்கும். தஞ்சாவூருக்கே இதை வாங்கிச் செல்வேன்.

திருவல்லிக்கேணியில் தஞ்சாவூரிலிருந்து வந்த ஒரு ராவ் நடத்திய ‘சைடோஜி’ மெஸ்ஸில் விதவிதமான ரசம் கிடைக்கும். ‘தயவுசெஞ்சி சாப்பாட்டை வேஸ்ட் பண்ணாதீங்க’ என்று அன்பாகச் சொல்வார் ராவ். மயிலாப்பூர் ராயர் ஓட்டல் அன்றைக்கு மிகப் பிரபலம். மொத்தமே மூன்று மணி நேரம் தான் திறந்திருக்கும்.

அதற்குள் பஜ்ஜி, கேசரி எல்லாம் விற்றுத் தீர்ந்துவிடும். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் மாமி கடையில் பஜ்ஜி, போண்டா விசேஷம். அந்தப் பகுதியிலேயே ஜன்னல் வழியே பலகாரங்கள் விற்பார்கள். அது இன்றும் பிரசித்தம். மந்தைவெளி வேதாந்தம் பத்துக் கடையின் காஞ்சிபுரம் இட்லி, மேற்கு மாம்பலம் காமாட்சி ஓட்டல் கல்கண்டு பால் என்று எனது பட்டியல் மிக நீண்டது.

 

ஆரோக்கியம் தரும் காய்கறி உணவு!

பா.ராகவன், எழுத்தாளர்.

ஆரோக்கியம் பற்றிய விழிப்பு உணர்வை எனக்குள் ஏற்படுத்திய உணவகம் என்றால், நுங்கம்பாக்கத்தில் இயங்கிவரும் ‘சோலையில் சஞ்சீவனம்’ உணவகத்தைச் சொல்வேன். கேரளத்தவர்கள் நடத்தும் அந்த உணவகத்தின் விசேஷம் ஆயுர்வேத உணவுதான். சாப்பிடு வதற்கு முன்னர், பல வண்ணங்களில் ஐந்து புட்டிகளில் பானங்கள் தருவார்கள். அவற்றை எப்படிக் குடிக்க வேண்டும் என்றும் சொல்லித்தருவார்கள்.

நமக்கு யாராவது சாப்பிடக் கற்றுத்தருவது என்பது எத்தனை சுவாரஸ்யமான விஷயம்! சாப்பாடு என்றால் பச்சைக் காய்கறிகள், பாதி வெந்த காய்கறிகள், முழுக்க வெந்த காய்கறிகள் என்று கிட்டத்தட்ட 20 விதமான காய்கறிகள் பரிமாறுவார்கள். அந்த உணவைச் சாப்பிட்டுவிட்டு, சாதம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே வராது. வேண்டுமென்றால், கேரள அரிசி சாதம், பருப்பு, ரசம் எல்லாம் கிடைக்கும். பெரும்பாலும் அதற்குத் தேவையே இருக்காது.

24chvcmedit2-pa%20ragavan

ஒரு நாளைக்குத் தேவையான கலோரி அந்தக் காய்கறிகளிலேயே நமக்குக் கிடைத்துவிடும். முழுக்க முழுக்க ஆயுர்வேத அடிப்படையில் தயாரிக்கப்படும் அந்த உணவை எவ்வளவு உண்டாலும், வயிறு லேசாக இருப்பதாகவே உணர்வீர்கள்.

கிட்டத்தட்ட அந்த உணவைச் சாப்பிட்டு முடிக்க முக்கால் மணி நேரம் ஆகும். ஆனால், ஒரு முறைகூடத் தண்ணீர் குடிக்க வேண்டிய தேவையே ஏற்படாது. நமது பாரம்பரிய உணவுமுறையின் அடிப்படையே, சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் இருக்கக் கூடாது என்பதுதான்.

அப்படித் தண்ணீர் குடித்தால், சாப்பிடும் வேகம் குறையும் அளவும் குறையும். தேவையான அளவு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கலாம். இடையில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று எண்ணவைக்கும் எந்த உணவுப் பொருளையும் சேர்க்க மாட்டார்கள். என்னைப் பொறுத்தவரை சென்னையில் தரமான, ஆரோக்கியமான உணவு கிடைக்கும் ஒரே உணவகம் அதுதான் என்பேன்.

 

சிக்குபுக்கு குல்ஃபி!

ஜி.வி.பிரகாஷ், இசையமைப்பாளர், நடிகர்.

சென்னையில் எனக்குப் பிடித்தமான நிறைய உணவகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு உணவு வகைக்கும் ஒரு உணவகம் என்று வகை பிரித்துவைத்துச் சாப்பிடும் ஆள் நான்! தோசை என்றால், தி.நகரில் உள்ள பொடி தோசைக் கடைக்குத்தான் செல்வேன்.

மழை நேரத்தில்கூட தலையில் தொப்பி மாட்டிக்கொண்டு அங்கு சென்று சாப்பிடுவேன். அந்தக் கடையில் நெய்யோடு கூடிய பொடி தோசையைச் சாம்பார் ஊற்றிக் கொடுப்பார்கள். அதன் சுவைக்கு ஈடு இணையே கிடையாது!

24CHVCMEDIT2-GVPRAKASHKUMAR

கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கும்பகோணம் டிகிரி காபி கடையில் மணக்க மணக்க அற்புதமான காபி கிடைக்கும். பாரீஸ் கார்னரில் உள்ள நூர் பிரியாணி கடையை மறக்க முடியாது. எத்தனையோ ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பிட்டிருக்கிறேன்.

ஆனால், நூர் பிரியாணி கடை மட்டன் பிரியாணியில் உள்ள சுவையே தனிதான்! மெரினா கடற்கரையில் குல்பி தாத்தா விற்கும் சாக்லெட் குல்பியை ருசிக்கும் தருணங்களில் ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே’ காலத்துச் சிறுவனாகிவிடுவேன்!

 

சாப்பாட்டிலே ரெண்டு வகை!

கேபிள் சங்கர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர்.

சைவத்தைப் பொறுத்தவரை சவுகார்பேட்டை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள சீனாபாய் இட்லிக் கடையின் இட்லிக்கும், நெய் ஊத்தப்பத்துக்கும் நான் அடிமை. சைதாப்பேட்டை சேட்டுக்கடையின் சப்பாத்தியும் அப்படித்தான்.

சைதாப்பேட்டையின் மற்றொரு விசேஷம் மாரி ஓட்டல் வடகறி. சென்னை என்றாலே வடகறி என்று ஆனது என்றால் அதற்கு மாரி ஓட்டல் ஒரு காரணம். திருவல்லிக்கேணி காசி விநாயகாவுக்கு அடிக்கடி செல்வேன்.

அசைவப் பட்டியலில் ஓ.எம்.ஆரின் ‘பேரடைஸ் பிரியாணி’க்கு முதலிடம். பிரியாணி, கபாப் சாப்பிடுவதற்காகவே பலர் வரு வார்கள். மயிலாப்பூர் விஸ்வநாதன் ஓட்டலில் வஞ்சிரம் மீன் அட்டகாசமாக இருக்கும். பெரிய மேடு பகுதியின் அக்பர் மெஸ்ஸில் மட்டன் பிரியாணி சிறப்பு. அங்கப்பநாய்க்கன் தெரு ‘பிஸ்மி’ ஓட்டலின் பரோட்டா, நெய்ச்சோறு மிக சுவையானவை. அங்கு ‘டிங்டாங்’ என்று ஒரு அயிட்டம் உண்டு. முட்டையில் செய்வார்கள்.

24chvcmedit2-cable

எழும்பூரில் ‘ஃபிஷர்மேன்ஸ் ஃபேர்’ உணவகத்தில் சிக்கன், மட்டன் சமோசாக்கள் எனக்கு மிகப் பிடித்தமானவை. தியாகராய நகர் அருளானந்தாவின் நாட்டுக்கோழி, மட்டன் சுக்காவுடன் வேறு எங்கும் கிடைக்காத சுவையில் ரசம் கிடைக்கும். இப்படி எனக்குப் பிடித்த ஓட்டல்கள் பற்றி எனது வலைப்பூவில் எழுதுவேன். அதைப் படித்துவிட்டுப் பலர் அந்த ஓட்டல்களுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு ‘அருமை’ என்பார்கள். அது இன்னொரு சாப்பாடு சாப்பிட்ட திருப்தி தரும்!

 

பொங்கலுக்கு நான் அடிமை

ஸ்ரீதிவ்யா, நடிகை.

படப்பிடிப்பு நாட்களில் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு இரண்டும் எனக்கு ரொம்பவே முக்கியம். ஆனால், சென்னைக்கு வரும்போது உணவுக்கட்டுப்பாட்டில் கொஞ்சம் இடைவெளி விழுந்துவிடும். அதற்கு முக்கியக் காரணம், இங்கே உள்ள உணவு வகைகள்தான். அதிலும் சென்னையில் கிடைக்கும் பொங்கலுக்கு நான் அடிமை.

திரும்பத் திரும்ப சாப்பிட்டுக்கிட்டே இருப்பேன். என்னோட நண்பர்கள் பலரும், ‘ஏய் திவ்யா... பொங்கல் சாப்பிட்டா தூக்க மாத்திரை சாப்பிட்ட மாதிரி இருக்குமே’ன்னு சொல்வாங்க. எனக்கு அப்படியெல்லாம் தூக்கம் வந்ததே இல்லை. அதுவும், சென்னையில் உள்ள அடையாறு ஆனந்த பவன், சரவண பவன் உணவகங்களில் கிடைக்கும் பொங்கல் எனக்கு இன்னும் ஸ்பெஷல்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

101p1.jpg

twitter.com/therkr80

புல்லட் ஓட்டிவரும் ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு மாஸ் பி.ஜி.எம். ஓடிக் கொண்டிருக்கும் என யூகிக்கிறேன்.

twitter.com/amuduarattai

உள்ளொன்று வைத்து, புறமொன்று காட்டும் உருளைக்கிழங்கு போண்டா.

twitter.com/Lokshii 

ஏதோ ரகசியத்தை பென்சிலிடம் துருவி துருவிக் கேட்கிறது ஷார்ப்னர்.

twitter.com/HAJAMYDEENNKS

வேண்டிய அளவுக்குத் தர்மம் கிடைத்தவுடன் ஓ.பி.எஸ். சொன்ன தர்மயுத்தம் கைவிடப்படுகிறது.

twitter.com/Kozhiyar

ஆண்களிடம் தேதிகளைக் கேட்பது ஒரு பாவச்செயல்.

‘உங்க வெட்டிங் டே என்ன சார்?’

twitter.com/laksh_kgm

பிச்சை எடுப்பதையும், திருடுவதையும் பிச்சைக்காரர்களும், திருடர்களும் மட்டும்தான் செய்வதாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

twitter.com/manipmp

ஆற்றில் போட்டாலும் அளந்து போட்ட காலம் போய், இப்போது ஆறே அளந்துதான் போகிறது.

101p2.jpg

twitter.com/HAJAMYDEENNKS

ஏழு கோடித் தமிழர்களும் பா.ஜ.க-வில் இணைய வேண்டும் -பொன்.ராதாகிருஷ்ணன் #ஆதார் கார்டை

பா.ஜ.க-வுடன் இணைத்தால்தான் செல்லும்னு சொல்லப் போறாங்கபோல.

twitter.com/amuduarattai

ஏழைகளுகளின் மருத்துவமனைக்கு, மெடிக்கல் ஷாப் என்று பெயர்.

twitter.com/thirumarant

இந்த ஆட்சியின் ஊழலுக்கு எதிரான எங்கள் தர்மயுத்தம் வென்றது.

எப்படிங்க?

நான் இதே ஆட்சியின் துணை முதல்வர் ஆகிட்டேங்க.

#RIPதர்மயுத்தம்

101p3.jpg

twitter.com/BoopatyMurugesh

ரஜினி ஆட்சியமைப்பார். - தமிழருவி

மெர்சல் ஆஸ்கர் பெறும்.- அபிராமி ராமநாதன்

நான் கட்டிப்புடிக்க வரல.- சினேகன்

போதும் ஒரே நாள்ல என்னல்லாம் கேட்கிறது?

twitter.com/Kayal_Twitz

வேலை இல்லாதவனின் பகலும்

நோயாளியின் இரவும்

மிகவும் நீளமானவை.

twitter.com/Dhrogi

அவளாகக் கொடுக்கும் முத்தத்தை ஈரத்தோடே வைத்திருக்கிறாள்.

twitter.com/kumarfaculty

டச் மொபைலில் கைபட்டு கால் போய் விடுகிறது. காதுபட்டுக் கால் கட் ஆகி விடுகிறது.

twitter.com/CreativeTwitz

தி.மு.க. கட்சிகாரங்கல்லாம் ஸ்டாலினை விட தினகரனைத்தான் ரொம்ப நம்புறாங்களாம் ஏதாவது பண்ணுவாருன்னு.

101p4.jpg

twitter.com/samester_twitz

லவ் பண்ற பசங்க பொண்ணுங்க ஆதார் கார்டெல்லாம் இணைச்சுட்டா, ஒரு லவ்வுக்கு மேல பண்றதைத் தடுத்துடலாம்.

இதைச் சொன்னா, தேசத் துரோகிம்பாங்க.

twitter.com/amuduarattai

உள்ளே போனவர்கள்,வெளியில் நிற்பவர்களின் அவசரம் தெரியாமல், பொறுமையைச் சோதிக்கும் இடம், டாய்லெட்டுக்கு அடுத்து ஏ. டி. எம்- தான்.

twitter.com/thoatta

முதல்வராகச் சென்று துணை முதல்வராக வந்திருக்கிறாரென எண்ண வேண்டாம், SSLC ஃபெயிலைவிட ஏழாவது பாஸ் தான் பெருசு என்பதே புறநானூறு சொல்லும் வரலாறு.

twitter.com/nithya_shre 

வீட்டைத் தர மாட்டேன். - தீபா

கிணற்றைத் தர மாட்டேன். - ஓ.பி.எஸ்.

ஏரியைத் தூர்வார விட மாட்டேன்.

- ஈ.பி.எஸ்.

#பொதுச்சேவை செய்ய வந்த உத்தமர்கள்.

twitter.com/ktamil143 

கட்டிலுக்கு அடியிலும், காலியான அலமாரிகளிலும், இன்னும் சில இடுக்குகளிலும், ஓர் உலகம் இருப்பதை உணர்த்திச் செல்கின்றன குழந்தைகள்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 3 Personen, Personen, die lachen, Text

நிலவில் முதலில் கால் வைத்த பெருமைக்குரிய அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் அவர்களின் நினைவு தினம்.
Neil Armstrong PRF

Bild könnte enthalten: 3 Personen, Personen, die lachen, Text

 
 
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் முகாமையாளருமான டுலிப் மென்டிசின் பிறந்தநாள்.
மென்டிசின் தலைமையிலேயே இலங்கை அணி தனது முதலாவது டெஸ்ட் வெற்றியைப் பெற்றுக்கொண்டது.
Happy Birthday Duleep Mendis

Bild könnte enthalten: 1 Person, auf einer Bühne und Text

பிரபல பின்னணிப் பாடகியும் கர்நாடக சங்கீதப் பாடகியுமான நித்யஸ்ரீ மகாதேவனின் பிறந்தநாள் இன்று.

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text

சமூக வலைத்தளங்களின் ராஜாக்களில் ஒருவர் இவர்..
பறந்து பறந்து அடிக்கும் தமிழ் சினிமா ஹீரோக்களின் முன்னோடி
புகழ்பெற்ற நடிகரும் தற்போதைய தமிழக அரசியல்வாதியுமான 'புரட்சிக் கலைஞர்' விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று.

கேப்டன் அடிக்கடி இணையவெளியிலும் இளைஞர் மத்தியிலும் கலாய்க்கப்பட்டாலும் இன்னும் ஏராளமான ரசிகர்களை வசப்படுத்தி வைத்துள்ளார்.
Happy Birthday Vijayakanth

விஜயகாந்த், புரட்சிக் கலைஞர், கேப்டன்...! #HBDCaptain

 
 
 

எந்த ஒரு பின்புலனும் இல்லாமல், ஒரு சினிமா ஹீரோவுக்கான தோற்றமும் இல்லாமல் `இனிக்கும் இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி 150க்கும் மேற்பட்ட படத்தில் நடித்து இன்று `கேப்டன்' ஆக முன் நிற்கிறார் விஜயகாந்த். 

captain

சுட்டெரிக்கும் மதுரை வீதிகளில் சுற்றிக்கொண்டு இருந்த விஜயராஜ், சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் திரையுலகில் `விஜயகாந்த்' ஆக அறிமுகமானார். கமல், ரஜினி என இரண்டு ஜாம்பவான்கள் திரை உலகில் ஆட்சி செய்து கொண்டு இருந்த சமயத்தில், தனக்கு என்று ஒரு கூட்டத்தை உருவாக்கி கொடிகட்டி பறந்தவர். விஜயகாந்த் என்று சொன்னாலே... `ம்ஹூம்' என நாக்கைக் கடிப்பதும், சிவப்பு கண்களைக் கொண்டு கேமிராவை முறைத்துப் பார்ப்பதுதான் பலருக்கும் தெரியும். ஆனால், விஜயகாந்த் சாதனை பட்டியல் நிச்சயம் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. பரதன், சேதுபதி ஐபிஎஸ், புலன் விசாரணை, ராஜ நடை, செந்தூரப் பூவே, அம்மன் கோவில் கிழக்காலே, வைதேகி கந்திருந்தாள், சின்னக் கவுண்டர், கேப்டன் பிரபாகரன், ஊமை விழிகள் உள்படப் பல படங்களில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்தவர். 

ரஜினி, கமல், சத்தியராஜ், பிரபு, கார்த்தி என அந்த காலத்தின் முன்னணி நட்சத்திரங்களின் 100வது படம் கூட வசூல் ரீதியாக வெற்றிகரமாக ஓடவில்லை. ஆனால், விஜயகாந்தின் 100வது படமான `கேப்டன் பிரபாகரன்' வெள்ளிவிழாவைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது. கடனில் தமிழ் திரைப்பட மூழ்கியிருந்தபோது கடல் கடந்து தமிழ் சினிமா நட்சத்திரங்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று நட்சத்திர கலை விழா நடத்தி கடனை அடைத்தவர் விஜயகாந்த். தனது படங்களில் தேசத் துரோகிகளிடம் கோபமாகப் பேசும்போது அதை எழுதி வைத்த வசனமாகப் படிக்காமல், தனது ஆழ்மனதில் இருந்து வரும் கோபங்களை வசனங்களாகப் பேசி நடிப்பில் அசத்திருப்பார். காமெடி கதாப்பாத்திரம் முதல் ஆக்‌ஷன் காட்சிகள் வரை தனது நடிப்பு மூலமாக ஈர்த்த ரசிகர்கள் ஏராளம். 

சிறந்த  குடிமகன்! 

நடிகர்களில் யாரும் செய்யாத அளவுக்கு ஏழை, எளிய மக்களுக்குப் பல வழிகளில் பெரும் பொருள் உதவி செய்தவர் விஜயகாந்த். இவரது சேவை மனப்பான்மை மற்றும் உதவும் குணத்துக்காக 2001-ல் `சிறந்த இந்திய குடிமகன்' விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டார். ஆனால், இன்று இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் `மீம்ஸ்' போட்டு விஜயகாந்தை கேலி செய்கின்றோம். தரம் தாழ்ந்து விஜயகாந்துக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கிறோம். வேறு எந்த அரசியல்வாதிக்கும் இல்லாத அளவுக்கு, விஜயகாந்தை மட்டும் கட்டம் கட்டுகிறோம். ஆனால், விஜயகாந்தின் செயல்பாடுகளையும், அவரது நடவடிக்கைகளையும் உன்னிப்பாகக் கவனிப்போருக்கு, அவர் மீதான மரியாதை அதிகரிக்குமே தவிர என்றுமே குறையாது. 

விஜயகாந்தின் பலம் மற்றும் பலவீனம் அவரது `சுபாவம்'தான். இவரின் சுபாவத்தை வைத்து நம்மில் பலர் அதிகம் கேளி செய்த தலைவர்தான் விஜயகாந்த். உங்களைக் கிண்டல் செய்தவர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் மன்னிப்பு கோர ஆசைப்படுகிறேன். ஆனால், விஜயகாந்த் பிறரை போலப் பொய்யாக நடிக்கத் தெரியாமல், வெள்ளந்தியான, மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் அரசியல் தலைவர். மற்ற தலைவர்கள் போல் மனதில் இருப்பதை மறைத்துப் பேசுபவர் அல்ல. நிஜ உலகில் நடிக்கத்தெரியாத நல்ல மனிதரான விஜயகாந்தின் தற்போதைய பேச்சாற்றல் கவலையைத் தருகிறது. அவரின் பிரச்னை வயதும், உடல் நலமும்தான். 10 ஆண்டுக்கு முந்தைய விஜயகாந்தின் உடல்நலமும், பேச்சாற்றலும் தற்போது மட்டும் அப்படியே இருந்திருந்தால், இன்று நிலவும் அரசியல் வெற்றிடத்தை மிக எளிதாக நிரப்பி இருப்பார்?

உடல் நலத்தைப் பேணுங்கள் கேப்டன்... உங்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு. 

மீண்டும் அரசியல் களத்தில் உற்சாகமாக இறங்குங்கள். அனைத்து பலமும் பெற்று கணீர் குரலோடு... வரணும்... பழைய பன்னீர்செல்வமாக திரும்பி வரணும்.

 

பிறந்த நாள் வாழ்த்துகள் கேப்டன் #HBDCaptain

 
இன்று பிறந்த நாள்: விஜயகாந்துக்கு தமிழிசை-வைகோ வாழ்த்து
tw_blush:tw_blush:
  • தொடங்கியவர்

இந்தப் பாறைகள் அந்தரத்தில் மிதக்கின்றனவா?

இந்தப் பாறைகள் அந்தரத்தில் நிற்பது எப்படிபடத்தின் காப்புரிமைDAVID QUENTIN

வானத்தை நோக்கித் தூக்கி எறியப்பட்ட கற்கள் கீழே விழுவதை வேற்றுக்கிரக விவகாரம் போல, பாறைகள் வானத்தில் மிதப்பதைப் போலப் படம் பிடித்துள்ளார் லண்டன் நகரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் டேவிட் க்வெண்டின்

வானத்தை நோக்கி கற்களை வீசி எரிந்து அவை எப்படித் தோன்றுகிறது என்பதைப் பார்ப்பதற்காக முதன் முதலில் புகைப்படம் எடுத்தார். பிறகு பிரிட்டன் முழுவதும் பல இடங்களில் இப்படி கற்களையும், கூழாங்கற்களையும் வானத்தில் எறிந்து படமெடுத்து அதைத் தொகுப்பாக்கினார்.

இந்தப் பாறைகள் அந்தரத்தில் நிற்பது எப்படிபடத்தின் காப்புரிமைDAVID QUENTIN

இந்த விசித்திரக் காட்சிகளை @_RocksInTheSky என்ற பெயரின் கீழ் டிவிட்டரில் டேவிட் பதிவிட்டு வருகிறார்.

இந்தப் பாறைகள் அந்தரத்தில் நிற்பது எப்படிபடத்தின் காப்புரிமைDAVID QUENTIN இந்தப் பாறைகள் அந்தரத்தில் நிற்பது எப்படிபடத்தின் காப்புரிமைDAVID QUENTIN

`` ஒரு பகல் நேரத்தில் எனது விந்தையான தூண்டுதல் காரணமாக இத்திட்டத்தை ஆரம்பித்தேன். பல ஃப்லிம் ரோல்களை காலி செய்த பிறகு, இதில் உள்ள தொழில்நுட்ப சவால்களை அறிந்துகொண்டேன். தற்போது இந்த விசித்திரமான புகைப்படங்களின் தொகுப்பு என்னிடம் சேர்ந்துகொண்டே இருக்கிறது`` என்கிறார் டேவிட்.

இந்தப் பாறைகள் அந்தரத்தில் நிற்பது எப்படிபடத்தின் காப்புரிமைDAVID QUENTIN

`` இந்தப் படங்கள் நிச்சயம் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டிருக்கும் என பலர் நினைக்கின்றனர். ஆனால் அப்படி இல்லை. வானத்தை நோக்கி கல்லை வீசுவேன் அல்லது அருகில் இருக்கும் நண்பனை வீசச் சொல்லுவேன். கல் வானத்தில் பறக்கும் போது புகைப்படம் எடுத்துவிடுவேன். அவ்வளவு தான்.

இப்போது நான் செய்வதை விட ஃபோட்டோஷாப் செய்வது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும்.`` என்கிறார் அவர்.

இந்தப் பாறைகள் அந்தரத்தில் நிற்பது எப்படிபடத்தின் காப்புரிமைDAVID QUENTIN இந்தப் பாறைகள் அந்தரத்தில் நிற்பது எப்படிபடத்தின் காப்புரிமைDAVID QUENTIN

`` அதிவேக ஃபிலிம் ரோல்களை பயன்படுத்துவதே இதில் உள்ள உத்தி. காட்சியைப் பதிவு செய்யும் கேமரா ஷட்டரின் வேகத்தை (ஷட்டர் ஸ்பீடு) அதிகரிப்பதால் அந்தரத்தில் கல் அப்படியே நிற்பது போல அழகிய தோற்றம் பெற்றுவிடும். ஷட்டர் வேகம் மட்டும் போதாது, ஒளியை கேமராவுக்கு உள்அனுப்பும் `அபர்ச்சரை` குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் புகைப்படத்தின் முன்னணியும், பின்னணியும் தெளிவாக இருக்கும்.`` என்கிறார் டேவிட்.

இந்தப் பாறைகள் அந்தரத்தில் நிற்பது எப்படிபடத்தின் காப்புரிமைDAVID QUENTIN இந்தப் பாறைகள் அந்தரத்தில் நிற்பது எப்படிபடத்தின் காப்புரிமைDAVID QUENTIN

மேலும் தொடர்ந்த அவர்,`` வானத்தில் தூக்கி வீசப்படும் கல் அசைவில் இருப்பதால், புகைப்படம் எடுக்க சிறிது நேரமே இருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் விரைவாகப் புகைப்படம் எடுக்க வேண்டும்.

வானத்தில் தூக்கி வீசப்படும் கற்கள், உண்மையில் அங்கேயே இருப்பது போல தோன்றுவதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை`` எனவும் கூறுகிறார் டேவிட்.

இந்தப் பாறைகள் அந்தரத்தில் நிற்பது எப்படிபடத்தின் காப்புரிமைDAVID QUENTIN

 

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

கின்னஸ் சாதனை படைக்க ஒரு லட்சம் விநாயகர் உருவ பொருட்களை சேகரிக்க முயற்சி: தீவிர லட்சியத்தில் உதகை நிஷாலி

 

 
25cbssNishali%202

வீட்டில் நிஷாலி சேகரித்து வைத்துள்ள விநாயகர் சிலைகள்.   -  படங்கள்: ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டம் உதகை விஜயநகரில் வசிக்கும் நிஷாலி மஞ்சுபாஷினியின் வீட்டுக்குள் நுழைந்தால், கண்ணில் படும் இடங்களில் எல்லாம் விதவிதமான வடிவங்களில் விநாயகர் காட்சி தருகிறார். வீடு முழுவதும் பல்வேறு பொருட்களாலான விநாயகர் உருவம் ஆக்கிரமித்துள்ளதால், சதுர்த்தி விழா கொண்டாட அக்கம் பக்கத்து வீட்டாரும் தயாராகி வருகின்றனர்.

காகிதம் முதல் தங்கம் வரை அனைத்துப் பொருட்களிலும் விநாயகர் உருவம் மிளிர்கிறது. தற்போது 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை சேகரித்துள்ளார் நிஷாலி. ஒரு லட்சம் விநாயகர் உருவம் பதித்த பொருட்களை சேகரித்து, கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பதே லட்சியம் என்கிறார்.

அவர் மேலும் கூறும்போது, ‘காகிதம், பலவகை உலோகங்கள், பீங்கான், தேங்காய் நார் என ஏராளமான பொருட்களில் கீ செயின், மோதிரங்கள், டாலர்கள், திரைச் சீலைகள், விளக்குகள் என பலவித வடிவங்களில் பொருட்களை சேகரித்து வருகிறேன். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் உருவங்களிலால் ஆன சிலைகள் உள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், 80 ஆயிரம் விநாயகர் சிலைகளை 60 ஆண்டுகளாக சேகரித்திருக்கிறார். இதை முறியடித்து, ஒரு லட்சம் விநாயகர் சிலைகளைச் சேகரித்து கின்னஸ் சாதனை படைப்பதே லட்சியம்’ என்றார்.

25cbssNishali%202%202

விநாயகர் உருவம் பதித்த டி-ஷர்ட், புடவை.

 

 

பாக்கு விநாயகர்

பாக்கில் உருவாக்கப்பட்ட விநாயகர் அரிதானது. சேகரிப்பு குறித்து நேரடியாகவும், முகநூல் வாயிலாகவும் அறிந்தவர்கள், பல்வேறு விநாயகர்களை சிலைகளை வாங்கி அனுப்பியுள்ளனர். துபாயில் இருந்து, ஒருவர் மண்ணால் ஆன பாம்பு வகை விநாயகர் சிலையை அனுப்பியுள்ளார். உலகிலேயே முதன் முறையாக விநாயகர் உருவம் பதித்த புடவையைத் தன்வசமாக்கியுள்ளதாக பெருமை கொள்கிறார் நிஷாலி.

இதற்காக தனியாக ஓர் அறையை ஒதுக்கி, பல்வேறு பொருட்களிலாலான விநாயகர் உருவங்களையும் காட்சிப்படுத்தி உள்ளார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

அன்னை தெரசா பிறந்த நாள் (26-8-1910)

அன்னை தெரசா அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாக கொண்ட இவர் 1910-ம் ஆண்டு அகஸ்டு மாதம் 26-ந்தேதி பிறந்தார். இவர் இந்திய குடியுரிமை பெற்ற ஒரு ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950-ம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர்.

 
 
 
 
அன்னை தெரசா பிறந்த நாள் (26-8-1910)
 
அன்னை தெரசா அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாக கொண்ட இவர் 1910-ம் ஆண்டு அகஸ்டு மாதம் 26-ந்தேதி பிறந்தார். இவர் இந்திய குடியுரிமை பெற்ற ஒரு ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950-ம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார்.

1970-ம் ஆண்டுக்குள் இவரை சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார். இதற்கு மேல்கம் முக்கெரிட்ஜ் என்பவரின் சம்திங்க் பியூடிபுல் பார் காட் என்ற ஆவணப்படம் ஒரு முக்கிய காரணமாகும். இவர் 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980-ல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார். அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எய்ட்ஸ், தொழுநோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும்.

பல்வேறு நபர்கள், அரசுகள் மற்றும் அமைப்புகள் என பலர் இவரை புகழ்ந்து வந்தாலும், பலவிதமான விமர்சனங்களையும் இவர் சந்தித்தார். இத்தகைய விமர்சனங்கள் கிறித்தபர் கிச்சின்சு, மைக்கேல் பேரன்டி, அரூப் சட்டர்ஜி போன்ற நபர்களாலும் விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளாலும் சாட்டப்பட்டது. இவர்கள் அன்னை தெரசாவின் உறுதியான கருக்கலைப்பு எதிர்ப்பு நிலையையும், ஏழ்மை தரும் ஆன்மீக மேன்மையின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும், இறப்பின் வாயிலிலிருப்போருக்கு அவர் ஞானஸ்நானம் அளிக்கிறார் எனவும் குற்றம்சாட்டினர்.

சில செய்தி ஊடகங்கள் அவரது நல்வாழ்வு மையங்களின் மருத்துவ வசதித் தரத்தைப் பற்றி விமர்சிப்பனவாகவும், நன்கொடைப் பணம் செலவு செய்யப்படுவதின் விதத்தைப் பற்றிக் கவலை எழுப்பிவனவாகவும் செய்திகளை வெளியிட்டன. இவரின் இறப்புக்குப் பின் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் முக்திபேறு அடைந்தவராக அறிவிக்கப்பட்டு கொல்கத்தாவின் அருளாளர் தெரசா என்று பட்டம் சூட்டப்பட்டார்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

ஆன்டோனி லாவியோசியர்

 
25CHRGNANTONY

பிரான்ஸின் அறிவியல் அறிஞரும் ‘தற்கால வேதியியலின் தந்தை’ எனப் போற்றப்படுபவருமான ஆன்டோனி லாவியோசியர் (Antoine Lavoisier) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிறந்தார் (1743). 5 வயதில் தாயை இழந்தார். பள்ளியில் படிக்கும்போதே உயிரியியல், வேதியியல், கணிதம் மற்றும் வானியலில் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது ஆசிரியர் இவரை வானியலில் உயர்கல்வி படிக்கும்படி ஊக்கப்படுத்தினார். இவரோ குடும்பத்தினரின் விருப்பப்படி 1764-ல் சட்டம் பயின்று வழக்கறிஞரானார்.

* ஆனால், இவரது ஆர்வம் முழுவதும் அறிவியலில் மையம் கொண்டிருந்தது. 25 வயதில் பிரான்ஸ் நாட்டு அறிவியல் கழகத் தின் உறுப்பினரானார். தவறான பல கொள்கைகள் காரணமாக பின்தங்கியிருந்த வேதியியல், உயிரியல் துறைகளில் புதிய வரலாற்றை உருவாக்கியவர்களுள் இவர் முக்கியமானவர்.

* 1769-ல் பிரான்சின் முதல் புவியியல் வரைபடத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். நெருப்பு எரிவதற்குக் காற்றில் உள்ள பிராணவாயுதான் காரணம் என்பதையும் கண்டறிந்தார். தனது ஆராய்ச்சிகள், சொந்த வாழ்க்கை அனைத்தையும் குறித்து எழுதி வைத்தார். அதை இவர் மனைவி நூலாக வெளியிட்டார்.

* அதில் காணப்பட்ட வேதியியல் தொடர்பான பல கருத்துகள் இன்றும் அறிவியல் ஆய்வுகளுக்குப் பயன்படுகின்றன. அரசாங்க வெடிகுண்டுத் தூள் அதிகாரியாகப் பணியாற்றியபோது, வெடித்தல் மற்றும் எரியும் தன்மை குறித்து ஏராளமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1789-ல் ‘எலிமண்ட்ஸ் ஆஃப் கெமிஸ்ட்ரி’ என்ற பாடநூலை எழுதி வெளியிட்டார்.

* அந்த நூலில் தற்கால வேதியியலுக்கு அடிப்படையாக விளங்கும் கொள்கைகள், கோட்பாடுகளை ஆதாரங்களுடன் விளக்கியிருந்தார். ஓர் உலோகத்தை எரிக்கும்போது அதிலிருந்து கிடைக்கும் சாம்பலின் எடை அந்த உலோகத்தின் ஆரம்ப எடையைவிட அதிகமாக இருக்கும் என்பதை சோதனைகள் மூலம் மெய்ப்பித்தார்.

* வேதியியலுக்கான கலைச்சொல் தொகுதியை உருவாக்கினார். இதையடுத்து, உலகம் முழுவதிலும் உள்ள வேதியியலாளர்கள் ஒரே மாதிரியான கலைச்சொற்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனால் ஒருவருக்கொருவர் தத்தம் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் குறித்து பரிமாறிக்கொள்ள முடிந்தது.

* பிரான்ஸ் முழுவதும் எடை மற்றும் அளவுகளைக் கணக்கிடும் முறையை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். அரசு விஞ்ஞானியாக 20 ஆண்டு காலம் பணியாற்றினார். கந்தகம் உள்ளிட்ட சில பொருட்கள் கூட்டுப் பொருட்கள் அல்ல, அவை தனிமமே என நிரூபித்தார்.

* ஆக்சிஜன், நைட்ரஜன் இரண்டும் கலந்ததுதான் காற்று என்பதையும் ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் கலந்ததுதான் நீர் என்பதையும் ஆதாரங்களுடன் நிறுவினார். பொருட்களின் நிறை குறையாப் பண்பினை (Conservation of Matter) கண்டறிந்தவரும் இவரே. ப்ளோசிட்ரான் குறித்த ஆய்வுதான் இவரது ஆய்வுகளிலேயே மிகவும் புகழ்பெற்ற ஒன்று.

* உயிரினங்கள், சுவாசிக்கும் பிராண வாயுவைக் கொண்டு உடலுக்குள் கரிமப் பொருளை எரித்து, சக்தி பெறுகின்றன என்பதைக் கண்டறிந்து கூறினார். ‘எலிமன்டரி சப்ஸ்டன்சஸ்’ என்ற தனிமங்களின் பட்டியலையும் வெளியிட்டார்.

* பிரெஞ்ச் ராயல் அறிவியல் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் செயல்பட்டார். இயற்பியல், வேதியியல், கணிதம், வானியல் உள்ளிட்ட களங்களில் முக்கியப் பங்களிப்புகளை வழங்கிய அறிவியல் மாமேதை ஆன்டோனி லாவியோசியர், 1794-ம் ஆண்டு, மே மாதம் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 51

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

இது காதல் நேரலை!

 

 
Denis%20Kochanov

டெனிஸ் கோச்சனேவ்

Denis%20Kochanov%202
 
Love%20-2
Love%20-2
Love%20-3
Love%20-3
 
 

டெனிஸ் கோச்சனேவ்

காதலைச் சொல்ல ஏற்ற இடம் எது? சமூக ஊடகங்கள் கொடிகட்டிப் பறக்கும் இந்தக் காலத்தில், இதெல்லாம் ஒரு கேள்வியா என நீங்கள் நினைக்கலாம். இளைஞர்களுக்கு மட்டுமல்ல; இளம் பெண்களுக்கும் விடை தெரியாத கேள்வியாகவே இது இருக்கிறது. காதலைச் சொல்வதற்குத் தைரியம் வந்த பிறகு, அதைக் காதலி அல்லது காதலனிடம் எங்கே, எந்த இடத்தில் சொல்வது என்று இடத்தைத் தேர்வு செய்வது சிக்கல்தான். ஆனால், ரஷ்யாவில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவர், நேரலையிலேயே தன் காதலியிடம், காதலைச் வெளிப்படுத்தி ஆச்சரியமூட்டியிருக்கிறார்.

ரஷ்யாவில் செவெஸ்டா என்ற தொலைக்காட்சியில் அடுத்தடுத்துச் செய்திகளைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார் தொகுப்பாளர் டெனிஸ் கோச்சனோவ் (Denis Kochanov). திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ‘முக்கியமான செய்திகள் எதுவும் தற்போது இல்லை என்பதால் என் காதலிக்கு ஒரு செய்தியைத் தெரியப்படுத்த விரும்புகிறேன்’ என்று கூறி, நாற்காலியிலிருந்து எழுந்து, ஸ்டுடியோவின் மையப் பகுதிக்கு வந்து கேமராவின் முன்பாக நின்றார்.

தனது சட்டை பாக்கெட்டிலிருந்த சிவப்பு நிறப் பெட்டியை எடுத்தார். அதை மெதுவாக கேமரா முன்பாகத் திறந்து காட்டிய அவர், மண்டியிட்டார். பின்னர், தன் காதலியின் பெயரைக் கூறி, ‘என்னைத் திருமணம் செய்துகொள்வாயா?’ என்று மனம் விட்டுக் கேட்டார். நேரலையில் தனது காதலை வெளிப்படுத்திய செய்தி வாசிப்பாளரின் இந்தச் செயல், பார்வையாளர்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. டி.வி.யைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள், இது கனவா நிஜமா என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே, செய்தி நிறைவு பெற்றதாக டைட்டில் கார்டு போடப்பட்டது.

நேரலையில் காதலை வெளிப்படுத்திய விதம் ரஷ்ய சமூக வலைத்தளங்களில் வைரலானது. சமூக ஊடகங்களில் முதலிடம் பிடித்த இந்த விஷயத்துக்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவுக் குரல்கள் எழுந்தன. டெனிஸ் கோச்சனோவுடைய காதலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவரது காதலிக்குக் கோரிக்கையும் வைத்தனர். இன்னொருபுறம் பொறுப்புள்ள வேலையில் இருந்துகொண்டு தொகுப்பாளர் செய்த வேலையைப் பலர் கண்டிக்கவும் செய்தனர்.

சமூக வலைத்தளங்களில் இது அக்கப்போராகிக்கொண்டிருந்த வேளையில், டெனிஸைத் திருமணம் செய்துகொள்ள அவருடைய காதலி சம்மதம் தெரிவித்துவிட்டதாக அவர் பணியாற்றிய தொலைக்காட்சி வாயிலாகச் சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு லைக்குகள் குவிந்தன. காதலர்கள் நீடூழி வாழ வேண்டும் என்று ரஷ்யா நெட்டிசன்கள் வாழ்த்தியவண்ணம் உள்ளனர்.

காதலுக்குக் கண்ணும் இல்லை; நேரலை என்ற பாகுபாடும் இல்லை!

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பாரம்பரிய அறிவியல் நவீன வீடுகள்

 

 
26jkrfootprintearth

லகமயமாக்கலுக்குப் பிறகு, இந்தியா வளர்ச்சி, வளர்ச்சி என்று நகரங்களையும் துணை நகரங்களையும் உருவாக்கிக்கொண்டு செல்கிறது. இந்த உருவாக்கம் கட்டுமானத் துறையில் ஒரு பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதனால் மணல், சிமெண்ட், இரும்புக் கம்பிகள், தண்ணீர் போன்றவற்றுக்கான பெரும் பற்றாக்குறையை நாம் எதிர்கொண்டுவருகிறோம். மேலும் நம் பண்பாடு, சுற்றுச்சூழல், காலநிலை, நம் பாரம்பரிய கட்டுமான வடிவமைப்பு போன்றவற்றிலும் இதன் பாதிப்பு உள்ளது. இவற்றையும் நாம் சமாளித்தாக வேண்டுமே.

             

இவற்றை எப்படிச் சமாளிப்பது என்ற எண்ணத்தின் அடிப்படையில் வளர்ச்சியையும் பாதிக்காமல், இயற்கை வளத்தையும் வீணாக்காமல், நம் பாரம்பரிய கட்டுமான வடிவமைப்பு முறையில், வீடுகளை உருவாக்கும் புதிய தலைமுறைக் கட்டிட வடிவமைப்பாளர்கள் இப்போது அதிகரித்துவருகிறார்கள்.

இவர்கள், பழைய, மறு சுழற்சிக்குள்ளாகும் பொருள்களைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வீடுகளை உருவாக்குகிறார்கள். இந்த மாதிரி வீடுகள், கண்ணைக் கவரும் வகையில் அமையாதோ என்ற அச்சம் ஏற்படலாம்.

ஆனால், இவர்கள் உருவாக்கும் வீடுகள் நவீன வடிவமைப்பில், கண்ணைக் கவரும் வண்ணங்களில், பளபளப்பான தளங்களுடன், மிகவும் உறுதியாக இருக்கும் என்று இந்த வடிவமைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். நமது பண்பாடும், மேற்கத்திய வடிவமப்பையும் இணைந்து மிகவும் அழகியலோடு விளங்கும் இந்த வீடுகள் தற்போது பிரபலமடைந்துவருகின்றன.

இவ்வகைக் கட்டுமான நிறுவனங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்:

26jkrBennyPanFrontElevation0
 

பென்னி குரியகோஸ் சென்னை

குரியகோஸ் தன் வழிகாட்டியான லாரி பேக்கரைப் போன்று, நீண்டகாலம் நிலைத்திருக்கும் பிராந்திய கட்டிட வடிவமைப்பை ஊக்குவிப்பதில் பிரபலமானவர். காலநிலைக்கும் பண்பாட்டுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தகுந்த வண்ணம், இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, குறைந்த செலவில் வீடு கட்டுவது இவரின் சிறப்பு. பழைய வீட்டுப் பாகங்களின் பயன்பாட்டை இவர் பெரிதும் ஊக்குவிப்பார், இவர் வடிவமைப்பு நன்கு இயற்கை ஒளி நிரம்பியதாகவும் காற்றோட்டம் மிக்கதாகவும் பசுமையானதாகவும் பெரிய முற்றம் கொண்டதாகவும் இருக்கும்.

bennyjpg
 

தண்ணல் ஹேண்ட் ஸ்கல்ப்டட் ஹோம் திருவண்ணாமலை

நாம் வசிக்குமிடம், நம் மனதின் நீட்சி என்பது, இதன் நிறுவனர் பிஜு பாஸ்கரின் நம்பிக்கை. உள்ளூரில் கிடைக்கும் எளிய பொருட்களைக் கொண்டு, குறைந்த செலவில், தகுந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தரமான வீடுகளைக் கட்டுவதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதே இவரின் நோக்கம்.

26jkrAuroma
 

த அரோமா குழு புதுச்சேரி

வீடுகளின் வடிவமைப்பு இயற்கையைப் பூர்த்திசெய்வதாக இருக்க வேண்டுமேயன்றி, அதனுடன் போட்டி போடுவதாக இருக்கக் கூடாது என்பதே, திருப்தி தோஷி என்ற கட்டிடக் கலை வல்லுநரால் நிர்வகிக்கப்படும் இந்த நிறுவனத்தின் நோக்கமாகும். புதுச்சேரியைச் சேர்ந்த இவர், உள்ளூரில் கிடைக்கும் ஆட்களையும் பொருட்களையும் கொண்டு, சுற்றுப்புறச் சூழலுக்குப் பாதிப்பின்றி, அங்குள்ள வட்டாரக் கட்டிடக் கலை வடிவமைப்பில் வீடுகளைக் கட்டுவதில் புகழ்பெற்றவர்.

26jkrEugene%20Pandala
 

யூஜீன் பாண்டாலா கொல்லம்

மண் கலவை, இயற்கைப் பொருள்கள் ஆகியவற்றைக் கொண்டு வீடுகள் கட்டுவதில் இவர்கள் மிகவும் பிரசித்தமானவர்கள். மண், சரளைக் கல், கீற்றுக்கட்டு கொண்டு இவர்கள் உருவாக்கும் வீடுகளின் வடிவமைப்பு மிகவும் புத்துணர்வு அளிப்பதாக இருக்கும்.

26jkrBiome%20environmental%20solutions%2
 

பயோம் என்விரான்மெண்டல் சொல்யூஷன்ஸ் பெங்களூரு

சித்ரா விசுவநாதன் எனும் கட்டிடக் கலை வல்லுநரால் நடத்தப்படும் இந்த நிறுவனத்தின் வடிவமைப்பு நீண்டகாலம் நிலைக்கக் கூடியது. காலநிலையைக் கருத்தில் கொண்டு, இயற்கை வளத்தை வீணடிக்காமல், வீடுகளைக் கட்டுவது ரசாயன வண்ணங்கள், சிமெண்ட் கலவைகள் போன்றவை இல்லாமல், வெறும் செம்மண் கலவை, பழைய மரங்கள் ஆகியவற்றைக் கொண்டு வீடுகளை உருவாக்குவதே இவர்களின் சிறப்பு. இவர்கள் உருவாக்கும் வீடுகள் மனதைக் கொள்ளைகொள்ளும். மழை நீர் சேகரிப்பு, சூரிய ஒளி மின்சாரம் போன்றவை இந்த வீடுகளின் இதர சிறப்பு அம்சங்கள்.

26jkrKamath%20design%20Studio
 

காமத் டிசைன் ஸ்டுடியோ புதுடெல்லி

ரேவதி காமாத் என்பவரால் நடத்தப்படும் இந்த நிறுவனம், மண் கலவையாலும் பழைய மரங்களாலும் வீடுகளைக் கட்டிவருகிறது. கைவிடப்பட்ட குவாரியில், அவர் வசிக்கும், வெறும் மண்ணால் கட்டப்பட்ட வீடு, மண் வீடுகளின் மீதான அவரின் காதலுக்குச் சான்றாக உள்ளது

26jkrMozaic
 

மொஸைக் கோவா

டீன் டி குருஸ் என்பரால், 2012-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், கோவாவின் பாரம்பரிய கட்டிட வடிவமைப்பில், குறைந்த செலவில், சுற்றுச்சூழலுக்குக் கேடின்றி, வீடுகளைக் கட்டுவதிலும், பழைய பாரம்பரிய வீடுகளைப் புதுப்பித்தலிலும் மிகவும் திறமைபெற்றது.

நாட்டின் வளர்ச்சி நமக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு நம் நாட்டின் இயற்கை வளங்களும் நமக்கு முக்கியம். ஏனென்றால், இயற்கை வளம் நமக்கு மட்டும் சொந்தமானதில்லை, அது நம் வருங்கால சந்ததிக்கும் சொந்தமானது. அதைப் பாதுகாத்து, வருங்காலத்துக்கு அளிப்பது நம் அனைவரின் கடமையாகும்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

சென்னையில் பழைமையான கார்கள் காட்சி

 

 
VINTAGE31
VINTAGE3
VINTAGE4
VINTAGE5
VINTAGE6
VINTAGE7
VINTAGE8
VINTAGE9
VINTAGE10
VINTAGE11
VINTAGE12
VINTAGE13
VINTAGE14
VINTAGE15
VINTAGE15_1
VINTAGE16
VINTAGE17
VINTAGE18
VINTAGE19
VINTAGE20
VINTAGE21
VINTAGE22
VINTAGE23
VINTAGE24
VINTAGE26
VINTAGE27
VINTAGE28
VINTAGE29
VINTAGE30
VINTAGE31
VINTAGE3
PreviousNext

மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப் சார்பில் சென்னை, திருவான்மியூரில் நடத்தப்பட்ட பழைமையான கார்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் காட்சியை நடிகர் விக்ரம் பிரபு தொடங்கி வைத்தார். 1920 ஆண்டில் இருந்து 1970 வரையிலும் புழக்கத்திலிருந்த "ஜாக்குவார்', "எம் ஜி டாட்ஜ் பிரதர்ஸ்', "செவரலே'," ஃபோர்ட்', "பியுகோ', "ஆஸ்டின்', "மெர்சிடெஸ் போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களின் பழங்கால வாகனங்கள் காட்சியில் இடம்பெற்றன.

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போடும் சில கதைகள்..!

இது முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடும் சில கதைகளின் கதை...

ஹாரிபாட்டரின் சாபம் பெற்ற ஆந்தைகள் :

அழகான ஆந்தைகள். அந்த ஆந்தை இனத்தின் பெயர் "ஹெட்விக்" ( Hedwig ). வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், ஆசியாவின் சில பகுதிகளிலும் காணக்கிடைக்கும் பறவை.  ஹாரிபாட்டர் பட வரிசைகளில் இந்த ஆந்தை முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற்றிருக்கும். அந்தப் படத்தில் 7 ஹெட்விக் ஆந்தைகள்  பயன்படுத்தப்பட்டிருக்கும். அவைகளுக்கு கிஸ்மோ, காஸ்பர், ஊப்ஸ், ஸ்வூப்ஸ், ஓ ஓ, எல்மோ , பாண்டிட் என பெயர்களைக் கொண்டிருக்கும். 

உலகம் முழுக்க பல கோடி ரசிகர்களைக் கொண்ட இந்தப் படம் இந்தோனேசியாவில் வெறித்தனமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. நாடி, நரம்பு, சதை, ரத்தம் என எல்லாவற்றிலும் ஹாரி பாட்டர் வெறி ஏறிப் போன ரசிகர்கள் இந்த ஆந்தையை வாங்குவதில் பெரும் போட்டி போட்டார்கள். இந்த ஆந்தையை வாங்கி வளர்த்தால், தாங்களே ஏதோ ஹாரிபாட்டர் ஆகிவிடும் கணக்காக இதைத் தேடியலைந்தார்கள். இந்தோனேசியாவில் இந்த வகை ஆந்தைகள் கிடையாது. ஆனால், அதையொட்டிய இனமான “புபோ சுமாட்ரனஸ் " ( Bubo Sumatranus ) எனும் வகை ஆந்தைகளை கூண்டில் அடைத்து விற்பனையைத் தொடங்கினார்கள் வியாபாரிகள். வரிசைகட்டி வாங்கித் தீர்க்கிறார்கள் ரசிகர்கள். எந்தளவிற்கு என்றால், அந்த இனமே அந்தப் பகுதியில் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. ஹாரிபாட்டரின் சாபம் பெற்ற இந்த ஆந்தைகளைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள். 

முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடும்  கதை

விவாகரத்திற்குக் காரணமாகும் புறாக்கள் :

இந்தோனேசியாவின் ஜாவா தீவின் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மட்டும் விவாகரத்து கேட்டு 90 பெண்கள் படியேறியுள்ளனர். இதுவே ஜூன் மாதம் 13 பேர் தான் நீதிமன்ற படியேறினார்கள். இந்த 90 பேரில் பெரும்பாலானவர்கள், விவாகரத்திற்கு காரணமாக கைகாட்டும் திசையில் உட்கார்ந்திருக்கின்றன புறாக்கள். 

சமீபகாலமாக இந்தோனேசியாவில் புறா பந்தயம் மிகப் பிரபலமடைந்து வருகிறது. இதனால், பல ஆண்களும் வேலைக்குப் போவதை விடுத்து நாள் முழுக்கப் புறா பந்தயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், பலரும் தினம், தினம் பல நூறு ரூபாய்களை இந்தப் பந்தயங்களில் தோற்கிறார்கள். இது குடும்பப் பெண்களுக்கு கடுமையான கடுப்பை ஏற்படுத்த அவர்கள் நீதிமன்ற படியேறியிருக்கிறார்கள். 

கூடுதல் தகவலாக, ‘இந்தியாவில் பிரபலமாக இருந்த புறா பந்தயம் சமீபகாலங்களில் வெகுவாக குறைந்துள்ளது. பந்தயங்களில் பங்கேற்கும் கணவன்களை வீட்டுக்குள் பெண்கள் சேர்க்காததே இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம்’ என்று சொல்கிறது இந்தியாவின் பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்று. இந்தோனேசியப் பெண்களின் கவனத்திற்கு...

முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடும்  கதை

யானை நண்பனைக் கொன்ற, யானை எதிரிகள் :

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் யானைகள் கொல்லப்படுவது சர்வ சாதாரணம். தந்தங்களுக்காக, தோலுக்காக, பற்களுக்காக, மயிர்களுக்காக, நகங்களுக்காக எனப் பல காரணங்களுக்காக வேட்டையாடப்படும் இந்த யானைகளைக் காக்க பலரும் போராடி வருகிறார்கள். அவர்களில் முக்கியமானவர் வேய்ன் லாட்டர் ( Wayne Lotter ). யானைகள் மற்றும் வனவிலங்குகளைக் காக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த லாட்டர் சமீபத்தில், சுட்டுக் கொல்லப்பட்டார். மனைவியும், அவரின் இரண்டுப் பெண் குழந்தைகளும் ஆதரவற்று நிற்கின்றனர். துப்பாக்கியிலிருந்து வெளிவரும் புகையோடு சில சுருட்டுகளையும் பிடித்தபடி நின்று கொண்டிருக்கிறார்கள் அந்த கொலைகாரர்கள். பெரிய மாளிகைகளில், ஏசி அறையில், பஞ்சு மெத்தையில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் அந்த முதலாளிகள். அவர்களின் கட்டிலுக்கு மேலே சுவற்றிலிருந்து துருத்திக் கொண்டு நிற்கின்றன யானையின் இரு தந்தங்கள். 

முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடும்  கதை

பிளாஸ்டிக் இல்லா லண்டன் மார்க்கெட் :

லண்டன் நகரின் மிகப் பிரபலமான பரோ மார்க்கெட் ( Borough Market ) கொஞ்சம், கொஞ்சமாக இயற்கை வழி நிற்க முயன்றுக் கொண்டிருந்தது. பல வகைகளில் முன்னேற்றத்தைக் கண்டாலும், பிளாஸ்டிக் பாட்டில்கள் குப்பைகளாகக் கிடப்பதை மட்டும் அவர்களால் தடுக்க முடியவில்லை. அதற்கும் ஒரு முடிவை இப்போது எட்டியிருக்கிறார்கள். 

இந்த மார்க்கெட்டில் மொத்தம் 114 கடைகள் அமைந்திருக்கின்றன. மார்க்கெட்டின் மொத்த பரப்பளவு 51 ஆயிரம் சதுர அடி. பல வழிகளில் பிளாஸ்டிக்கை இந்தக் கடைக்காரர்கள், ஆங்காங்கே தண்ணீர் குழாயை வைத்திருப்பதன் மூலம் தற்போது பிளாஸ்டிக் தண்ணிர் பாட்டிலையும் தடை செய்திருக்கிறார்கள். இந்த மார்க்கெட் முழுக்கவே பிளாஸ்டிக் அற்ற இடமாக மாறியிருக்கிறது. பிளாஸ்டிக் தடை என்று சொல்லிவிட்டு 2 ரூபாய், 5 ரூபாய், 7 ரூபாய், 10 ரூபாய் என அளவின் அடிப்படையில் பிளாஸ்டிக் கவர்களை விற்கும் கதையெல்லாம் அங்கு இல்லை. பிளாஸ்டிக் இல்லை என்றால் இல்லைதான்.

முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடும்  கதை 

காண்டாமிருகத்தைக் காப்பாற்ற அதைக் கொல்ல வேண்டும் : 

காண்டாமிருகம் வேட்டையாடுவதை சட்டப் பூர்வமாக்கினால், அது அதிகப்படியாக வேட்டையாடப்படுவது தடுக்கப்படும். காண்டாமிருக இனமே காப்பாற்றப்படும் என்று சொல்லியிருக்கிறார் பிரபல காண்டாமிருகக் கொம்புகள் விற்பனையாளரான ஜான் ஹியூம் ( John Hume ). 

முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடும்  கதை

அகதிகளுக்கு வீடுகளான கூடாரங்கள் :

வார இறுதிகளில் காடுகளுக்கும், பாலைவனங்களுக்கும் செல்லும் தன் நண்பர்களுக்காகத் தானே ஒரு வகையான கூடார வீட்டை ( டெண்ட் - Tent ) வடிவமைத்தார் கிறிஸ்டியன் வெபர். அவர் வடிவமைத்த அந்த கூடார வீடு பெரும் வரவேற்பைப் பெற, கூடாரம் தயாரிக்கும் நிறுவனத்தையே அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கினார். இன்று அவருக்கு அது பல கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும் தொழில். ஆனால், சமீபமாக விடுமுறையைக் கழிக்கப் போகும் பணக்காரர்களைவிடவும், வாழ்வையே கழிக்கும் அகதிகளுக்குத் தான் தன்னுடைய கூடாரம் அதிகம் உதவும் என்பதை உணர்ந்தார். 

முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடும்  கதை

தற்போது, தான் விற்கும் 20 கூடாரங்களுக்கு ஒரு கூடாரத்தை அகதிகளுக்கு இலவசமாகக் கொடுத்து வருகிறார் வெபர். 

 

இந்தக் கதைகளில் உங்களுக்கு முழங்கால் புரிந்தால் முழங்கால்... மொட்டைத்தலைப் புரிந்தால் மொட்டைத் தலை.

 

 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் 'வேலைக்காரன்' பாடல் டீசர்!

வேலைக்காரன் படத்தின் பாடல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 

வேலைக்காரன்


இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம், 'வேலைக்காரன்'. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை '24 AM STUDIOS' தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது.


படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி மியூசிக் வாங்கியுள்ளது. இந்நிலையில், வேலைக்காரன்படத்தின் பாடல் டீசர் ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடல் வருகின்ற திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப்  படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி மியூசிக் வாங்கியுள்ளது. வருகின்ற செப்டம்பர் 29-ம் தேதி படம் வெளியாக உள்ளது

 

  • தொடங்கியவர்

அன்பால் இந்த உலகை வசப்படுத்திய புனிதர் அன்னை தெரசா பிறந்த நாள் பகிர்வு!

 

அது கொல்கத்தா நகரின் ஆதரவற்றோர் இல்லம். அங்குள்ள நோயாளிகளுக்கு சேவை செய்வதற்காக கொல்கத்தா நகரெங்கும் சென்று நன்கொடை பெறுவது அவர்களின் வழக்கம். அப்படி ஒருநாள் அந்த பெண்மணியும் நன்கொடை பெரும் பொருட்டு வீதி வீதியாக ஏறி இறங்குகிறாள். கடைசியாக ஒரு கடைக்காரரிடம் தங்கள் இல்லத்தின் பெயரைச் சொல்லி அங்குள்ள தொழுநோயாளிகளுக்காக நன்கொடை வாங்க கையை நீட்ட, அந்த கடைக்காரர் காறி அவர் கைகளில் உமிழ்ந்து விடுகிறார். அதை கைகளில் வாங்கிய அந்த பெண்மணி, இந்த நன்கொடை எனக்கு போதும். ஆனால், எங்களின் இல்லத்தில் உள்ள தொழுநோயாளிகளுக்கு வேறு ஏதாவது தரமுடியுமா? என்று முகம் கோணாது கேட்க, காறி உமிழ்ந்த அந்த மனம் கூனி குறுகிப் போய் அந்த இல்லத்துக்குத் தன்னால் ஆன உதவியை செய்து அந்தப் பெண்மணியை வாழ்த்தி அனுப்புகிறது.

mothertherasa_09125.jpg

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்“ என்பதற்கேற்ப அன்பால் இந்த உலகை வசப்படுத்திய பெண்மணி வேறு யாருமல்ல "புனிதர் அன்னை தெரசா " அவர்கள்தான். 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி பிறந்த இவருக்கு இது 107-வது பிறந்த நாள் .

தற்போதைய மெசபத்தோமியா நாட்டின் ஸ்காப்ஜி நகரில் பிறந்த இவரின் இயற்பெயர் "ஆக்னஸ் கொன்சகா பொஜாக்சியு". தன்னுடைய 12-வது வயதிலேயே, பிறப்பே ஏழைகளுக்கு உதவி செய்யத்தான் என்பதை உணர்ந்த இவர் லோரேட்டோ கன்னியர் சபையில் சேர்ந்தார். சேவை செய்யும் பொருட்டு இந்தியாவை விரும்பி ஏற்ற இவர் கொல்கத்தாவின் சாலையோர தொழுநோயாளர்களைக் கண்டு மனம் தாங்காது துடிக்க, அவர்களுக்கு சேவை செய்வதையே தன் வாழ்வின் லட்சியமாக்கினார். 

ஒவ்வொரு முறையும் சாலையில் கிடக்கும் பிச்சைக்காரர்களைக் கடந்து போகவே முகம் சுளிக்கும் நம் மத்தியில், தொழுநோயாளிகளை அன்போடு ஏற்று பணிவிடை செய்துவந்த இவர், தொழுநோய் உங்களுக்கும் பரவி விடும் என்று எல்லோரும் எச்சரித்த போதும் அதை அன்போடு கடந்து அந்த தொழுநோயாளிகளின் வாழ்வில் புது மாற்றத்தை தந்தார்.

இவரின் இந்த அரிய சேவைக்காக இவருக்கு வழங்கப்பட்ட  "அமைதிக்கான நோபல் பரிசும்", இந்தியாவின் மிக உயரிய விருதும், இதுவரை வெறும் 45 பெருக்கே வழங்கப்பட்டுள்ளதுமான "பாரத ரத்னா" விருதும் இவரை அலங்கரிக்கத் தவறவில்லை. ஒருமுறை ஐ.நா சபையின் தலைவராக இருந்த பான் கீ மூன் இந்தியாவில் அன்னை தெரசாவை சந்தித்தபோது, அவரின் எளிமையும் அன்பான குணமும் அவருக்கு பெரும் வியப்பை அளித்தன. இவ்வளவு விருதுகளை தனதாக்கிக் கொண்ட இவர் இன்றளவும் டிராம் வண்டிகளிலே பயணிப்பதைக் கண்டு தன் காரை அவருக்கு அன்பளிப்பாக கொடுத்துச் சென்றிருக்கிறார். ஆனால், அன்னை தெரசாவோ அந்தக் காரையும் விற்று அந்த பணத்தையும் தொண்டு நிறுவனத்தின் நிதியில் சேர்த்துக்கொண்டார்.

இருபதாம் நூற்றாண்டின்  அதிசயமாக பார்க்கப்பட்ட இவர்  1995-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி தன் சேவையை இந்த உலகில் இருந்து முடித்துக்கொண்டார். எனினும் இவருக்கு கடந்த வருடமே புனிதர் பட்டம் வழங்கி சிறப்பித்தது கத்தோலிக்க திருச்சபை.

 

 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

உலகின் பார்வையில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருக்கும் 10 விசித்திர வீடுகள்!

 

வாடகை வீடுகளில் இருப்பவர்களுக்கு ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு இன்னும் பெரிய வசதியான வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

நம்முடன் இருக்கும் பொருட்கள் மீதே ஆசை பெரிதாக இருக்கும். அதுனுள் தான் நாமே வாழ்கிறோம் எனும் போது, வீடுகளின் மீதான ஆசை எப்போதும் குறையாது.

Stunning Houses Around The World That Hidden Safely!

இந்த தொகுப்பில் உள்ள வீடுகளின் படங்களை காணும் போது, வாங்க வேண்டும் என்ற ஆசைக்கு பதிலாக, ஒரு தடவையாவது இவற்றுள் ஏதாவது வீட்டில் ஒரு நாளாவது தங்கிவிட வேண்டும் என்ற ஆசை தான் அதிகமானோருக்கு வரும்.

வீடு #1

வீடு #1

இந்த வீடு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்திருக்கிறது.

டக்-அவுட் வீடு!

டக்-அவுட் வீடு!

நிலத்தில் இருந்து 6.5 அடி கீழே இருக்கிறது இந்த வீடு. கூரை மீது புள் பரப்பு போல அமைக்கப்பட்டுள்ளது. தொலைவில் இருந்து பார்த்தால் இது வீடு போலவே தெரியாது. ஆனால், வீட்டின் உள்ளே சகல வசதிகளும் அடங்கி இருக்கிறது.


#2

#2

கனடா, பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருக்கிறது இந்த வீடு.

பைன் மரங்களின் நடுவே...


பைன் மரங்களின் நடுவே...

இதன் கூரை மிகவும் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. தொலைவில் இருந்து பார்த்தால் இங்கே வீடு இருக்கிறதா? என அறிவதே கடினம்...

#3

#3

சீனாவில் ஹுனன் என்ற பகுதியில் இருக்கும் ஒரு ஷாப்பிங் மால் மேலே வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

ஷாப்பிங் மால் மேலே...


ஷாப்பிங் மால் மேலே...

நாற்பது லட்சம் பேர் வாழும் நகரின் மையத்தில் இது அமைந்திருக்கிறது.

#4

#4

அமெரிக்காவின் உதாஹ் எனும் இடத்தில் அமைந்திருக்கிறது இந்த பள்ளத்தாக்கு வீடு.

பள்ளத்தாக்கு வீடு!

பள்ளத்தாக்கு வீடு! இந்த வீடு 1986ல் திருமணமான புதிய தம்பதிகளின் கனவு வீடாக கட்டப்பட்டது.

#5

#5

இப்படி ஒரு ஐடியா வர காரணமே அந்த ஊர் கார்ப்பரேஷன் தான்.


வில்லா வால்ஸ்!

 

வில்லா வால்ஸ்!

மலை போன்ற பகுதியில் கட்டிடம் கட்ட கூடாது என்றதால், குகை போன்ற அமைப்பை தேர்வு செய்து இப்படி ஒரு வீட்டை கட்டியுள்ளனர்.

 

#6

#6

வெளியே இருந்து பார்க்கும் போது நீர்மூழ்கிக் கப்பல் போல தான் தெரியும்.

கிளிஃப் வீடு!


கிளிஃப் வீடு!

இந்த வீட்டில் இரண்டு அடுக்குகள் உள்ளன. கடலை பார்த்து ரசித்தப்படி இருக்கலாம். ரம்மியமான இயற்கை காட்சி சூழ காட்சியளிக்கிறது கிளிஃப் வீடு.


#7

 

#7

நார்வேயில் இருக்கிறது இந்த வீடு. இந்த வீட்டை கட்டுவதில் இருந்து சிரமமே ஒருங்கிணைப்பு தான்.

லேக் ஷாலெட்!

லேக் ஷாலெட்!

கொஞ்சம் கடினமான வடிவம் கொண்ட வீடு இது. இந்த அளவு கட்டியதே பெரிய சவாலுக்கு உரியது தான்.

#8

#8

டெசர்ட் ஒசிஸ் எனும் இந்த வீடு கலிபோர்னியாவில் இருக்கிறது.

பாலைவன வீடு!

பாலைவன வீடு!

இதன் அமைப்பு உதிர்ந்த இறந்த இலைகளின் வடிவம் போன்றதாகும். இது இரும்பு, காப்பர், கண்ணாடிகள் கொண்டு கட்டப்பட்ட வீடு ஆகும்.

 

#9

#9

கண்ணாடி கியூப் போன்ற அமைப்பில் அந்தரத்தில் தொங்கும் வீடு இது.

கண்ணாடி வீடு!

கண்ணாடி வீடு!

அந்தரத்தில் தொங்கும் வீட்டுக்குள் செல்லவே கொஞ்சம் தூரம் மேலே ஏற வேண்டும்


#10

#10

இது இன்னும் கட்டப்படாத வீடு. இந்த ஐடியாவை முதலில் இதை வடிவமைத்த நபர் கூறியபோது நம்பவில்லை.

பென்ட்ஹவுஸ்!

பென்ட்ஹவுஸ்!

ஆனால், இந்த வீட்டின் டிசைன் படங்களை கண்டு இன்வெஸ்ட்டர்கள் குவிந்தனர். இது லெபனான்னில் இருக்கிறது.


கிளிஃப் பிராஜக்ட்!

கிளிஃப் பிராஜக்ட்! கற்பனைக்கு அப்பாற்பட்ட வீடு இது. இது போட்டோஷாப் படமாகும். அலெக்ஸ் ஹோக்ரெபே என்பவர் இதை வடிவமைத்துள்ளார்.


https://tamil.boldsky.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.