Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
‘வாழும் உரிமை எமக்கேயானது’
 

image_842b9f6313.jpgசின்னஞ்சிறு வயதிலே உன்னைச் சுற்றிச்சுற்றி வந்து விளையாடிய பையன், என் முதுமையிலும் உன்னுடன் என, கடைசிக்காலம் வரை இணைவேன் எனக் கனவிலும் கருதவில்லை.  

எமக்குள் இருவருமே, சங்கமித்த இதயம்பற்றி, புரிந்துகொள்ளப் பராயத்துக்குப் புரிவதில்லை. ஜாதி, பேதம் பேசத் தெரியாது. உள்ளத்தில் உருவங்கள் பரஸ்பரம் விஷ்வரூபமாகின. காலம் உருண்டோட இளமைக்காலத்தில் புதுத்தேசம் புறப்பட்டேன். வசனம் பேசாது, வாயடைத்துப் பிரிந்தோம். திரும்பி நான் வந்தபோது, எங்கள் கரங்களைப் பிணைத்தார்கள் பெற்றோர்.  

உறவினர் தூற்றினர். “என்ன துணிச்சல் சாதிவிட்டுப்போனீர்கள்?” காற்றில் கரைந்தது இவர்கள் பேச்சு. வாழ்வது நாங்கள்; இவர்களுக்கு என்ன ஆயிற்று?  தூற்றிய உறவுகள் எங்கள் பிள்ளைகளைச் சம்பந்தம் கேட்டு வந்தார்கள். சுயநலம் வந்தால் பழைய கதை மறந்துபோகும்.  

நான் திட்டுவதற்கு வாய் எடுத்தபோது, என் மனைவி என் வாயடைத்தாள். “தேடி வரும் உறவைத் திருப்பி அனுப்பாதீர். சரியோ, பிழையோ அவர்களுக்கானது. பிள்ளைகள் விருப்பம் எதுவோ, அதுவே நடக்கும்” என்றாள். 

வாழும் உரிமையும் அதைத் தேடும் வலிமையும் எமக்கேயானது. பிறருக்கு அல்ல. 

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று:செப்டெம்பர் 09
 

1945: சீனாவிடம் ஜப்பான் சரணடைந்தது.

1948: கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (வடகொரியா) ஸ்தாபிக்கப்பட்டதை கிம் இல் பிரகடனப்படுத்தினார்.

1791: அமெரிக்க முதல் ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டனை கௌரவிக்கும் முகமாக அமெரிக்க தலைநகருக்கு வாஷிங்டன் டி.சி. என பெயரிடப்பட்டது.

1969: கனடாவில் ஆங்கிலத்திற்கு சமமாக பிரெஞ்சும் உத்தியோகபூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டம் அமுலுக்கு வந்தது.

1990: மட்டக்களப்பு சத்துருகொண்டானில் 184 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1991: தஜிகிஸ்தான் சுதந்திரம் பெற்றது.

1993: இஸ்ரேலை பலஸ்தீன விடுதலை இயக்கம் அங்கீகரித்தது.

2001: ஆப்கானிஸ்தானில் தேசிய முன்னணித் தலைவர் அகமது ஷா மசூட் கொலை செய்யப்பட்டார்.

2004: இந்தோனீசியா, ஜகார்த்தாவில் அவுஸ்திரேலிய தூதரகத்துக்கு முன்னால் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

2006: திறந்த அமெரிக்க டென்னிஸ் பந்தயத்தில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரப்போவா வெற்றி பெற்றார்.

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

கனடா பூராகவும் வானில் தெரிந்த விசித்திர ஒளி! இப்படியும் இயற்கையா??

625.500.560.350.160.300.053.800.900.160.
 

முன் கணித்தது போன்று வடமுனை சுடரொளி வெளிச்சங்கள் வானம் பூராகவும் வியாழக்கிழமை இரவு நடனமாடியுள்ளன. இக்கண்கவர் காட்சி அதிகமான மக்களால் படம் பிடிக்க கூடியதாக இருந்துள்ளது.

சூரியனிலிருந்து வெளிப்ட்ட ஒரு சக்தி வாய்ந்த வெடிப்பை தொடர்ந்து புதன் மற்றும் வியாழக்கிழமை இடம்பெற்ற செயற்பாடுகள் காரணமாக இந்த வடமுனை சுடரொளி ஏற்பட்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை இது வெளிப்படையாகாத போதிலும் வியாழக்கிழமை இரவு இரண்டு பலமான வெடிப்புக்கள் பூமியுடன் மோதியுள்ளதாக கூறப்படுகின்றது.

இக்காட்சிகள் கனடா பூராகவும் காட்சியளித்துள்ளது. தெற்கு ஒன்ராறியோவின் தென் பகுதியிலும் கூட தெரிந்துள்ளது.

யு.எஸ்சின் வட பகுதிகளிலும் காணக்கூடியதாக இருந்துள்ளது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பிரகாசமான நிலவொளியிலும் உலகம் பூராகவும் மக்களால் காணக்கூடியதாக இருந்துள்ளது.

மண்ணியல் புயல் வெள்ளிக்கிழமை சிறிது குறைந்து விட்ட போதிலும் வெள்ளிக்கிழமை மீண்டும் தீவிரமாக அதிகரித்துள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

சந்தர்ப்பத்தை நீங்கள் தவறவிட்டிருந்தால் மற்றொரு சந்தர்ப்பம் வெள்ளிக்கிழமை சனிக்கிழமைகளில் உள்ளதென கூறப்பட்டுள்ளது.

 

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

http://www.canadamirror.com

  • தொடங்கியவர்

அட... இதையா கூகுளில் இவ்வளவு பேர் தேடியிருக்கின்றனர்? #GoogleSearch

 

வீட்டின் சுவர்க் கடிகாரத்தில் மணி பார்க்க, எப்படிக் கற்றுக்கொண்டீர்கள் என உங்களுக்கு நினைவிருக்கிறதா? அடுத்து இன்னொரு கேள்வி; குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்டி கீழே விழுந்து, விழுப்புண் பெற்ற அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? 

"இவையெல்லாம் இப்போது எதற்கு? 'இவற்றைச் செய்த கடைசி தலைமுறை நாம்தான்' என ஸ்டேட்டஸ் தட்டும் அளவுக்கு, இவையெல்லாம் இன்னும் பழசாகி விடவில்லையே?" என நினைக்கிறீர்களா? நீங்கள் நினைப்பது சரிதான். ஆனால், மேலே நாம் பார்த்தவற்றிற்கும், இந்தக் கட்டுரைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. 

மேலே சொன்ன இரண்டு விஷயங்களும் பால்ய வயதில் பெற்றோர்கள் மூலமாகவோ, நண்பர்கள் மூலமாகவோ கற்றுக்கொண்ட விஷயங்களாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளி, வீடு, நண்பர்கள் ஆகியோர்தான் வாழ்வின் ஆசிரியர்களாக இருந்தார்கள். கிணற்றில் நீச்சல் அடிப்பதில் தொடங்கி, மரத்தில் ஏறி மாங்காய் பறிப்பது வரை இப்படித்தான் கற்றுக்கொண்டோம். ஆனால் தற்போது நடப்பதே வேறு.

சட்டையை எப்படி அயர்ன் செய்வது, சிக்கனை எப்படி சமைப்பது, வீட்டின் கழிவறையை எப்படி சுத்தம் செய்வது என சின்ன சின்ன வீட்டு வேலைகளாக இருந்தாலும் சரி; கல்லூரியில் புரியாத கணக்குப் பாடங்களாக இருந்தாலும் சரி. அத்தனைக்கும் விடை சொல்லிக்கொண்டிருக்கிறார் ஓர் ஆசிரியர். தேடி வருபவர்களை என்றுமே திட்டாதவர்; இது உனக்குத் தேவையில்லாத விஷயம் என எதற்கும் தலையில் குட்டாதவர்; இன்டர்நெட் யுகத்தின் இன்ஸ்டன்ட் ஆசிரியரான கூகுள்தான் அவர்.

கூகுள் சர்ச்

எந்தப் புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றாலும், எதுபற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றாலும் பலருக்கும் கூகுள்தான் தற்போது முதல் சாய்ஸாக இருக்கிறது. 'How to....' என கூகுள் சர்ச்சில் டைப் செய்தாலே போதும். இப்படி மக்கள் கூகுளில் தேடிய விஷயங்கள் வந்துகொட்டும். மக்கள் அதிகம் பேர் தேடிய விஷயங்கள், தேடிய புகைப்படங்கள், தேடிய வார்த்தை போன்றவற்றை ஒவ்வொரு வருடமும் இறுதியில் கூகுள் வெளியிடும். அதேபோல எந்த விஷயத்தை கற்றுக்கொள்ள மக்கள் அதிகம்பேர் கூகுளில் தேடியுள்ளனர் என்ற தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது கூகுள். ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு மாதிரியான முடிவுகள் வெளிவந்துள்ளன. ஒட்டுமொத்தமாக உலகில் அதிகம்பேர் கூகுளில் How to போட்டு தேடிய விஷயம் எது தெரியுமா? இந்த டாப் 10 விஷயங்களைப் பாருங்கள்.

10. how to lose belly fat

9. how to make french toast

8. how to write a cover letter

7. how to make pancakes

6. how to make money

5. how to draw

4. how to lose weight

3. how to get pregnant

2. how to kiss

1. how to tie a tie

ஆமாம் பாஸ்... டை கட்டுறது எப்படின்னுதான் உலகம் முழுக்க அதிகம்பேர் கூகுள்ல தேடியிருக்காங்க. இரண்டாவதாக இருக்கும் விஷயம் அடுத்த சுவாரஸ்யம். இதுதவிர எப்படி ஃப்ரைட் ரைஸ் சமைப்பது, எப்படி மகிழ்ச்சியாக இருப்பது, எப்படி சிக்ஸ்பேக் வைப்பது, எப்படி கேர்ள் ஃப்ரண்டை இம்ப்ரஸ் செய்வது, எப்படி ஆம்லெட் போடுவது என வகைவகையான முடிவுகள் டாப் 100 பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

google how to search

ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைப்பது எப்படி, மொபைலை ரூட் செய்வது எப்படி, ஆபரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்வது எப்படி, வருமானவரி தாக்கல் செய்வது எப்படி என்பது போன்ற சீரியஸான தேடல்களும் கூகுளில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலானோர் கூகுளை ஜாலியாகத்தான் டீல் செய்துள்ளனர். கற்றுக்கொள்வதற்காக How to எனப் போட்டு அதிகம்பேர், எவை தொடர்பாக தேடியுள்ளனர் தெரியுமா? டாப் 5 விஷயங்கள் இவைதாம்.

5. ஆரோக்கியம் 

4. தொழில்நுட்ப விஷயங்கள்

3. வயது வந்தோர்க்கான விஷயங்கள்

2. காதல் தொடர்பான கேள்விகள்

1. சமையல் தொடர்பான விஷயங்கள்

கூகுள் தேடல்

 

கூகுளில் லட்சோபலட்சம் தகவல்கள் கொட்டிக்கிடந்தாலும் மக்களின் ஆதரவு என்னவோ சமையல் குறிப்புகளுக்குதான். இவற்றைக் கற்றுக்கொள்ளத்தான் பலரும் கூகுளை நாடியுள்ளனர். இப்படி வெறும் பொதுவான தகவல்களைத் தேடுபவர்கள் போலவே  'How to....' எனத் தேடுபவர்களின் எண்ணிக்கையும் 2004-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில்140% உயர்ந்திருக்கிறது என்கிறது கூகுள். எப்பேர்ப்பட்ட பெரிய டெக்னாலஜியாக இருந்தாலும், அது மக்களின் அன்றாட வாழ்க்கையோடு ஒன்றியிருப்பதில்தான் அதன் வெற்றி இருக்கிறது. கூகுள் எப்படி மென்மேலும் வளர்கிறது என இப்போது தெரிகிறதா?

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பாடசாலைக்கு செல்லும் இளவரசர் ஜோர்ஜ்

தனது பாடசாலை வாழ்க்கையை இங்கிலாந்தின் இளவரசர் ஜோர்ஜ் ஆரம்பித்துள்ளார்.

Prince-George.jpg

நான்கு வயதாகும் இளவரசர் ஜோர்ஜ், முதலாவது பாடசாலை நாளில் தனது தந்தையான இளவரசர் வில்லியம்ஸுடன் செல்லும் புகைப்படம் இணையத்தளங்களில் பரவிவருகின்றது.

DJHZze8UwAAxfnL.jpg

DJHZymUUwAA68-f.jpg

DJHZzg1UIAML_im.jpg

 

 

 
  • தொடங்கியவர்

குடிமகனை மணக்கும் ஜப்பானிய இளவரசியின் கதை!

 

ஜாப்பானிய இளவரசி

Photo courtesy: Reuters

 

ப்பான்  இளவரசி மகோவின் காதல்தான், தற்போது வெளிநாட்டு ஊடகங்களில் டாப் டாபிக். தனது காதலர்  கே கோமுரோவுடன் அடுத்த ஆண்டு கரம் கோக்கவிருக்கும் மகோ, அதற்காக தனது 'ராயல்’ அந்தஸ்தையும், இளவரசிப் பட்டத்தையும் துறக்கவிருக்கிறார் என்ற செய்தி,  உலகத்தை அவர் பக்கம் திருப்பியிருக்கிறது. 

ஜப்பானிய சட்டத்தின்படி, அரச குடும்பத்திற்கு வெளியில் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் அரச குடும்ப அந்தஸ்தை துறக்க வேண்டும். ஆனால், அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆண் வாரிசுகளுக்கு  இத்தகைய வரையறைகள் இல்லை. அவர்கள் சாமானிய பெண்களை மணந்தாலும், தங்களது அரச அந்தஸ்தை இழக்கமாட்டார்கள். இந்த மண விதி கொண்ட ராயல் குடும்பத்தில் பிறந்த மகோவுக்கு, ஒரு சாமனியருடன் காதல் ஏற்பட்டது. தற்போது ஐந்து வயதாகும் தன் காதலுக்காக, தன்னுடைய அரச அடையாளத்தைத்  துறக்கும் முடிவெடுத்திருக்கும் மகோவை, 'தேவதை' என்று கொண்டாடுகிறார்கள் உலகக் காதலர்கள். 

ஜப்பானிய இளவரசிகடந்த 2012ம் ஆண்டு,டோக்கியோ இன்டர்நேஷனல் கிறிஸ்டியன் பல்கலைகழகத்தில் மகோவும் கே கோமுரோவும் முதன்முறையாகச் சந்தித்துக்கொண்டனர். 2013ம் ஆண்டு டிசம்பர், கோமுரோ தனது காதலை  மகோவிடம் தெரிவித்திருக்கிறார். டோக்கியோ  பல்கலைக்கழகத்தில், இளவரசி மகோ பொருட்காட்சியக ஆய்வாளராகப் பணிபுரிக்கிறார். கோமுரோ வணிக  சம்பந்தமான சட்டப்படிப்பு படித்துவிட்டு, சட்ட ஆலோசகராகப் பணியாற்றுகிறார். தற்போது தங்களின் திருமணம் குறித்து இந்த ஜோடி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க, உலகக் கேமராக்களின் ஃபிளேஷ் அவர்கள் மேல் விழுந்துகொண்டிருக்கின்றன. 

மகோவின் காதலர் கே கோமுரோ, “மகோ என்னை அமைதியாக கவனிப்பார்... ஒரு நிலவைப்போல!  நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள  சம்மதித்த ஜப்பானிய அரச குடும்பத்துக்கு எங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். குறிப்பாக, இளவரசி மகோவின் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார். 

இளவரசி மகோ, “கே கோமுரோவை முதன்முறையாக பார்த்தபோது, அவர் ஒரு சூரியனைப்போல் சிரித்தது இன்றும் என் நெஞ்சில் இருக்கிறது. அரச குடும்பத்தைச் சேர்ந்தவளாக எனது கடமைகளை நிறைவேற்றியிருக்கிறேன். அதே சமயம், என் தனிப்பட்ட வாழ்க்கையும் எனக்கு முக்கியம். ஒரு புதிய குடும்பத்தை உருவாக்கும் பொறுப்பு, இப்போது என் கற்பனைக்கு எட்டாத விஷயமாக இருக்கிறது. என்றாலும், இந்தப் புதிய வாழ்க்கையை நான் நிறைந்த புன்னகையுடன் வரவேற்கிறேன்” என்றவர் தன் காதலுக்குக் கொடுக்கும் விலை பற்றிச் சொல்லும்போது, ''எனக்கு சாமானியருடன் திருமணம் நடந்தால், என் அரச  அந்தஸ்தை இழப்பேன் என்பது சிறுவயதிலேயே எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதை நான் ஏற்கிறேன்'' என்கிறார் மாறாத புன்னகையுடன். 

இந்தச் சட்டத்தினால் ஜப்பானிய அரச குடும்பங்களைச் சேர்ந்த 11 கிளைக் குடும்பங்கள் ஏற்கெனவே ‘அரச’ அந்தஸ்திலிருந்து விலகப்பட்டிருக்கின்றன. இது அரச குடும்பச் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாகவும் விமர்சிக்கப்பட்டது. இன்னொரு பக்கம், அரச குடும்பப் பெண்களை மணப்பதற்கு, அதே அந்தஸ்துடன் இருக்கும் ஆண்கள் தற்போது எவரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய ஜப்பான் அரசர், மகோவின்  தாத்தா அகிஷிதோ. 83 வயதாகும் அவர், வரும் 2018ம் ஆண்டிற்கு பின் தனது அரச பொறுப்புகளை மகோவின்  தந்தை, க்ரோன் இளவரசர்  நருஹிதோவிடம் ஒப்படைக்கவிருக்கிறார். அதன் பின்னர், நருஹிதோவின் தம்பி அகிஷினோ மற்றும் அவரது 10 வயது மகன் ஹிசஹிதோ அரச பொறுப்புகளை ஏற்பர்.  
 
இதற்கு முன், அரசர் அகிதோவின் ஒரே மகளும், இளவரசி மகோவின் அத்தையுமான சயகோ, 2005ம் ஆண்டு சாமானியரான யோஷிகி  குரோடாவை மணந்து, தனது அரச அந்தஸ்தை துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரண்மனைக் கிளிகள் கூடுடைத்து வருகிறார்கள் அன்புக்காக!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சிலி: நெருப்பும் பனியும் நிறைந்த புவியியல் அற்புதம்

சிலியின் வரைபடத்தை பார்த்தால், அது நீண்ட, மெல்லிய தெர்மாமீட்டரை ஒத்திருக்கிறது. அனல் வீசும் வெப்பம் மற்றும் நடுங்க வைக்கும் குளிரை கொண்ட இந்த நாட்டில் பிரதான பேச்சுமொழி ஆங்கிலம். மாறுபட்ட இரு வேறு வெப்பநிலைகளை இயற்கையாக கொண்டது சிலி.

நெருப்பும் பனியும் நிறைந்த சிலி

தென் அமெரிக்காவின் மேற்கு கரையில், ஆண்டஸ் மலைகள் மற்றும் பசிபிக் கடலுக்கும் இடையே அமைந்துள்ள சிலி, வடக்கில் பெருவையும், வடகிழக்கில் பொலிவியாவையும், கிழக்கு எல்லையாக அர்ஜெண்டினாவையும் கொண்டிருக்கிறது. தாழ்வான பாலைவனம், செழிப்பான மழைக்காடுகள் என 2,700 மைல் நீளமான நிலப்பகுதியை கொண்டுள்ளது சிலி.

தென் அமெரிக்க நிலத்தட்டுக்களின் கீழே அமைந்திருக்கும் நாஜ்கா மற்றும் அண்டார்டிக் நில அடுக்குகளும், எரிமலைகள் கொதிநிலையில் இருக்கும் பகுதியில் அமைந்துள்ள சிலி ஒரு வெப்பப் பிரதேசம்.

உலகில் அதிகமான எரிமலைகளை கொண்ட நாடுகளில் 2,000 தொடர் எரிமலைகளைக் கொண்டிருக்கும் சிலி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இங்கு, இருக்கும் 500 எரிமலைகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் உள்ளதாக நம்பப்படுகிறது.

வடக்கு சிலியில் எல் டைட்டோவில், எரிமலைகள் வெடிக்கும்போது அங்கிருக்கும் 80 வெந்நீரூற்றுகள், கொதிநிலையில் உள்ள வெந்நீரை மேல்நோக்கி தள்ளுகின்றன.

நாட்டின் மிகவும் வறட்சியான பகுதியை வடக்குப்பகுதியில் பார்க்கலாம். பூமியின் மிக உயரமான இடத்தில், துருவப் பகுதிக்கு வெளியே அமைந்துள்ள வறண்ட, அச்சம் விளைவிக்கக்கூடிய 'அடகாமா' பாலைவனத்தையும் பார்க்கலாம்.

இந்தப் பகுதியின் மழைப் பொழிவு ஆண்டுக்கு 15 மி.மீட்டர் மட்டும்தான். சில பருவநிலை கண்காணிப்பகங்களில் இதுவரை மழையே பதிவு செய்யப்படவில்லை.

ஆண்டெஸ் மற்றும் சிலியின் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள மலைப்பகுதிகளுக்கு இடையில் 600 மைல்கள் அளவுக்கு பரந்து விரிந்திருக்கிறது அடகாமா பாலைவனம்.

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட சிலியின் மலை பனிப்பாறைகளின் புகைப்படம். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட சிலியின் மலை பனிப்பாறைகளின் புகைப்படம்.

பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களால் சூழப்பட்டிருப்பதால் இங்கு ஈரப்பதமும் அரிதே. இந்த பாலைவனத்தின் 'வாலே டி ல லுனெ', (Valle de la Lune) மற்றொரு உலகில் இருக்கும் உறைந்த உப்பு ஏரிகள், காற்றால் பாதிக்கப்படுகிற கல் மற்றும் மணல் அமைப்புகளுடன் ஒத்திருக்கிறது.

தென் அமெரிக்க பூமித்தட்டுப் பகுதியால் மேற்கு முனை அழுத்தப்படும் ஆண்டெஸ், உலகிலேயே மிக நீளமான கண்ட மலைப்பகுதியாகும். தென் அமெரிக்காவின் முதுகெலும்பு என அறியப்படும் இது, உயிர்கள்அனைத்திற்கும் தடையாக செயல்பட்டாலும், பறவைகளை மட்டும் பாதுகாக்கிறது.

அதாவது, சிலி நாட்டின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் பெரும்பாலானவை, உயர் நிலப்பகுதி முழுவதும் பயணம் செய்வதை மலைப்பகுதி தடுப்பதால் அவை இந்த நாட்டிற்கு மட்டுமே உரியவை என்ற தனித்துவமான சிறப்பை பெறுகின்றன.

 

நாட்டின் தெற்குப் பகுதியை நோக்கி பயணித்தால், எரிமலை சாம்பல் மற்றும் உருகிவரும் நீரால் வளம் பெற்றிருக்கும் பசுமையான தாழ்நிலங்களை காணமுடியும். குவாணோக்கள் போன்ற பொதி ஒட்டகம், உலகின் மிகச் சிறிய மான் பியூடு போன்றவற்றிற்கு தாயகமாக விளங்குகிறது சிலி.

தெற்கு பேதகொனியன் பனிவெளியில் (ice field) இருந்து, மலைகளின் குறுக்கே பனிப்பாறை ஆறு பாய்கிறது. டோரஸ் டெல் பைன் தேசிய பூங்காவில் முடிவடையும் 40 மைல் நீளமுள்ள ப்ருக்கென் பனியாறு இவற்றில் நீளமானது.

தெற்கு எல்லைப்பகுதியில் தெற்கு பகுதி பெருங்கடலில், பனிக்கட்டியால் சேதப்படுத்தப்பட்ட மலைகள் முடிவடையும் இடம் கேப் ஹார்ன் என்று அழைக்கப்படுகிறது.

ஆழ்கடல்களாலும், சூறைக்காற்றுகளாலும், பனிப்பாறைகளாலும் இப்போதும் மாலுமிகளின் ரத்தத்தை உறைய வைக்கும் சிலி, தீயும், பனியும் என நேரெதிர் இயற்கை பரிணாமங்களை வடக்கில் இருந்து தெற்கு வரை தன்னகத்தே கொண்டுள்ளது.

வடக்கு முதல் தெற்கு வரை உண்மையாகவே நெருப்பும் பனியும் நிறைந்த நாடுதான் சிலி.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

மகள் குளிர்காய 2 மில்லியன் டாலரை நெருப்பில் எரித்த அப்பாவை பற்றி நீங்கள் அறிவீர்களா?

 

 
pablo-escobar-with-daughter

 

கொலாம்பியாவை சேர்ந்த பாப்லோ எஸ்கோபர் என்கிற இவர் 1980-களில் பல வல்லரசு நாடுகளுக்கே சவால் விட்ட ஒரு பெரிய கல்ல கடத்தல் கூட்டத்தின் தலைவன். உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய பணக்கார குற்றவாளியும் இவர்தான்.

ஒரு கால கட்டத்தில் உலகின் 80% கொக்கைன் கடத்தல் மற்றும் சட்ட விரோத பண பரிவர்த்தனைகளை நிகழ்த்தியது இந்தக் கூட்டம்தான். அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் 7-வது இடத்தை இவர் பிடித்தார். இந்தச் செய்தி வெளியானதும் அந்தப் பத்திரிகை நிறுவனத்தை அலைப்பேசியில் அழைத்த எஸ்கோபரின் மகன் செபஸ்டின் செய்தியில் குறிப்பிட்டிருந்த சொத்து விவரம் அவர்களிடம் இருக்கும் சொத்தில் கால் பங்கு கூட கிடையாது என்று சொல்லி சிரித்தாராம்.

pablo_escobar_football.jpg

பாப்லோ ஒவ்வொரு மாதமும் சுமார் 2,500 டாலர்களை அவரிடம் இருக்கும் பணக் கட்டுகளை கட்ட ரப்பர் பேண்ட் வாங்குவதற்குச் செலவழித்தாராம். இவருடைய 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள பணக் கட்டுகளை எலிகள் கடித்து வீணடித்துவிட்டதாக ஒரு தகவல் சொல்கிறது.

ஒரு முறை காவலர்களிடம் இருந்து தப்பித்து ஓடும்போது பாப்லோவும் இவரது குடும்பமும் எதிர்பாராத விதமாகக் காட்டிற்குள் இருக்கும் ஒரு சிறு வீட்டில் சிக்கிக் கொண்டார்களாம். அன்று இரவு கடும் குளிர் காரணமாக அவருடைய மகள் மனுவேலா எஸ்கோபர் குளிரில் நடுங்கியதால், சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலர் பணக் கட்டுகளை நெருப்பில் கொளுத்தி மகளைக் குளிர்காய செய்தாராம். 

17.10_.16-Money-burn_.jpg

பல்லாயிரம் காவலர்கள், 200-க்கும் மேற்பட்ட நீதிபதிகள், அரசாங்க உயர் அதிகாரிகள் எனப் பல பேரைக் கொலை செய்த குற்றச்சாட்டு இவர் மீது இருந்தது. இதனால் இவரைக் கைது செய்ய கொலாம்பியா அரசு உத்தரவிட்ட போது 1.6 பில்லியன் டாலராக இருந்த நாட்டின் மொத்த கடனையும் தான் அடைப்பதாக இவர் முன் வந்தார், ஆனால் கொலாம்பியா அரசாங்கம் அதை மறுத்துவிட்டது. 

20 சதுர.கிமீ நிலத்தில் தனது குடும்பத்திற்காக ஒரு பிரம்மாண்ட வீட்டை இவர் நிர்மாணித்து உள்ளார், அதில் ஆடம்பர அலங்காரங்களுக்கும் ஒரு படி மேலே சென்று உயிரியல் பூங்கா ஒன்றையே அதனுள் அவர் அமைத்துள்ளார். அந்தப் பூங்காவில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சிங்கம், புலி, சிறுத்தை உட்படப் பல அரிய வகை மிருகங்களும் இருந்தன. மேலும் இமாலயன் எகரட்ஸ் என்கிற பறவைகள் ஒரே மரத்தில் தங்குவதற்கு 1 மில்லியன் டாலர் செலவில் பயிற்சி அளித்தாராம். உலகம் முழுவதிலும் இவருக்குச் சொந்தமாக 800 வீடுகளும், 14 வில்லாக்களும், ஒரு தீவும் இருந்தது.

cats.jpg

மேலே நாடுகளில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பினாடாஸ் எனப்படும் கன்னை கட்டிக் கொண்டு மேலே தொங்கும் பொம்மையைத் தடியை வைத்து அடித்து உடைத்து அதிலிருந்து சாக்லேட்டுகளை கொட்டச் செய்யும் விளையாட்டு  மிகவும் பிரசித்திபெற்றது. ஆனால் இவருடைய குழந்தைகளின் பிறந்த நாள் விழாக்களில் அந்த பினாடாஸில் சாக்லேட்டுகளுக்கு பதிலாக பணத்தை கொட்டி நிரப்பினாராம்.

1993-ம் ஆண்டு டிசம்பர் 1 தன்னுடைய 44-வது பிறந்த நாளை பாப்லோ கொண்டாடி முடித்திருந்த நிலையில் அதற்கு அடுத்த நாள் டிசம்பர் 2, 16 மாத தேடலுக்கு பின்பு பாப்லோவை சுட்டுக் கொன்றனர். ஆனால் பலரும் அவர் தற்கொலை செய்து கொண்டாதவும் கூறுகிறார்கள். பிரத பரிசோதனையின் போது அவரது மரணத்திற்குக் காரணம் காதின் வழியே நுழைந்த தோட்டா என்று கூறப்பட்டுள்ளது, ஆனால் அந்தத் தோட்டா எந்தத் துப்பாக்கியில் இருந்து சுடப்பட்டது என்பது இன்றும் புதிராகவே உள்ளது. அவருக்கு நெருக்கமானவர்கள் ஒரு வேளைத் தப்பிக்க முடியாமல் தான் காவலர்களிடம் சிக்கிக் கொண்டால் துப்பாக்கியால் தன் காதில் சுட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று அவரே கூறியதாக தெரிவிக்கிறார்கள்.

0009859508.jpg

இன்றைய உலகத்தில் அனைவரும் தேடி ஓடும் பண நோட்டுகளைச் சர்வ சாதாரணமாகத் திகட்டும் அளவிற்குக் கையாண்டவர் இவர். தவறான வழியில் பணம் ஈட்டியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்ட போது “நான் ஒரு கண்ணியமானவன், பூக்களைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்கிறேன்” என்று பதிலளித்துள்ளார் பாப்லோ எஸ்கோபர். 

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சூறாவளியின் ரகசியம் என்ன?
========================
எர்மா சூறாவளியால் ஏற்கனவே பன்னிரெண்டு லட்சம் மக்கள் தாக்கப்பட்டிருப்பதாகவும் இன்னும் பல லட்சக் கணக்கானவர்கள் சூறாவளியால் தாக்கப்படக் கூடிய அச்சத்தில் இருப்பதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

இதனால் இதுவரை 14 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் இரு சூறாவளிகளான ஹோசே மற்றும் கட்யா ஆகியவையும் இதனை தொடருகின்றன.

இந்த சூறாவளிகள் ஏன் அடிக்கடி தாக்குகின்றன என்பதை அறிய விஞ்ஞானிகள் முயற்சிக்கிறார்கள்.

அவர்களின் அந்த ஆய்வுகள் குறித்த பிபிசியின் காணொளி.

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

சைபர் ஸ்பைடர்

 

16p1.jpg

twitter.com/thoatta 

எல்லா பேட்டிங் ரெக்கார்டுகளையும் பார்த்து கோஹ்லி ‘என்னம்மா அங்க சத்தம்’ங்கிறார்.

twitter.com/Baashhu 

அனிதா மரணம் 10 நாள் முன்பு நடந்திருந்தா, உத்தமர் ஒ.பி.எஸ் அதையும் எடப்பாடி தலையில கட்டி நீதி கேட்டுப் போராடியிருப்பார்.

twitter.com/Pon_Madhu

`அனிதா  சாவுல அரசியல் பண்ணாதீங் க’ன்னு சொல்றவங்கலாம் யாருன்னு பாத்தா, சுவாதி கொலையில அரசியல் பண்ணினவங்கதான்.

twitter.com/manipmp 

கம்மியா மார்க் எடுத்துத் தற்கொலை செய்த காலம் போய்... இப்போ அதிகமா மார்க் எடுத்துத் தற்கொலை பண்ணிக்கிற காலம் வந்திருச்சி! #புதிய இந்தியா.

twitter.com/karthik_twittz 

எவ்ளோ மழை வந்தாலும், சரியான நேரத்துல வர்ற பால்காரர் வியப்பின் சரித்திரக் குறியீடு!

twitter.com/Senthilbds 

 உண்மையில் தரம் வேணும்னு நினைக்கிறவனுங்க, 600 மார்க் எடுத்துட்டுக் காசு கொடுத்து மருத்துவம் படிக்கிறவனையில்ல தடுக்கணும்.

twitter.com/Kozhiyaar

இனிக் குழந்தைகளிடம் ‘என்னவாகப் போகிறாய்?’ என்று கேட்பதை நிறுத்திக் கொள்வது நலம்.

twitter.com/SingHem 

ஓலா கேப் அண்ணே.. ரைட்ல போங்க அங்கதான் வீடு.

முடியாது, மேப் நேராப் போகச் சொல்லுது அப்படித்தான் போவேன்.

#தட் தலைகீழாகத்தான் குதிப்பேன் மொமென்ட்.

16p2.jpg

twitter.com/ashoker

 சுப்ரீம்கோர்ட் போறதுக்கு யாரு ஸ்பான்சர்னு ஒரு அறிவுஜீவி கேள்வி. எளியோர் பணம் இல்லாம கோர்ட் போக  முடியாதுங்கறதுக்கே நீங்க வெக்கப்படணும்.

twitter.com/Bhoobalan_twitz

நான் ஒரிஜினல் லைசன்ஸைக் காட்டுறேன்.

உங்களால தமிழ்நாட்டோட ஒரிஜினல் முதல்வரைக் காட்ட முடியுங்களா ஆபீஸரே?

twitter.com/Aruns212 

விவசாயிகள் மகிழ்ச்சி’ என்று செய்தித்தாளில் வர வைப்பதற்கு, ஆண்டாண்டு காலமாக ‘மழையால் மட்டுமே முடிகிறது.

twitter.com/chithradevi_91 

இனி அரசு மருத்துவமனைக்குப் போகணும்னா, வெறும் நோயோட மட்டுமில்ல...  இந்திப் பேசுற வாயோடவும் போகணும்.

twitter.com/KabilanVai 

அடிப்படை உரிமைகளைக்கூட வீதிக்கு வந்து போராடித்தான் பெற வேண்டும் என்ற சூழலுக்குப் பெயர் ஜனநாயகம் அல்ல. போர்க்களம்.

twitter.com/mohandreamer 

தமிழக அரசே... நீ போராடு. இல்லை எங்களைப் போராடவிட்டு ஒதுங்கி நில். உங்கள் 150 பேர் சுயநலத்திற்காக எங்கள் ஏழு கோடிப் பேரை வதைக்காதே.

twitter.com/BoopatyMurugesh 

 டெல்லிக்காரன் சொல்றதை அப்படியே எங்ககிட்ட சொல்ல எதுக்கு மாநில அரசு? அதுக்கு டி.வி போதாதா?

twitter.com/udanpirappe

RBI: 99 சதவிகிதம் பணம் பேங்குக்குத் திரும்ப வந்திருச்சு, ஓவர் ஓவர்.

அப்போ கருப்பு பணம்?

RBI: அது பத்திரமா சுவிஸ் பேங்க்ல இருக்கு, ஓவர் ஓவர்.

twitter.com/thoatta 

விஜயகாந்தின் புரிதல் நல்லாயிருக்கு. ஆனா, டெலிவரிதான் நெஹ்ரா மாதிரி இருக்கு.

twitter.com/thirumarant 

 செயல்படாத அரசை விட இந்த untrust worthy அரசு மிகவும் ஆபத்தானது... பொய்யான நம்பிக்கைகள், அறிக்கைகள், பேட்டிகள். முற்றிலும் நம்பகத் தன்மையற்ற அரசு

16p3.jpg

facebook.com/Narain Rajagopalan

Pachyderm

Tusker

Mastodon

கூகுளிடாமல், டிக்‌ஷனரி பார்க்காமல் இந்த மூன்று சொற்களுக்கான பொருள் என்ன என்று இன்ஸ்டன்டாகச் சொல்ல முடியுமா?

பதில்: பெரும்பாலானவர்களால் முடியாது.

பொருள்: யானை.

ஆக யானை என்கின்ற விலங்கு தெரிந்த எல்லோருக்கும் மேற்சொன்ன மூன்று ஆங்கிலச் சொற்கள் அதைத் தான் குறிக்கின்றன என்பது தெரியாது. அவ்வளவே.

யானையைத் தெரியாமல் இருக்க முடியாது. ஆனால், அதையே நாம் படிக்காத மொழியில், நமக்குத் தெரியாத வழிமுறையில் கேட்டால் நாம் திருதிருவென முழிப்போம். இதனால் நமக்கு ‘யானை’ தெரியாது என்கிற அர்த்தமில்லை. யானை என்கிற பெயர்ச்சொல் இதுநாள்வரை நாம் கேட்டிராத, படித்திராத, பார்த்திராத வழிமுறையில் வரும்போது தான் நமக்குத் தெரியாமல் போகிறது.

இதைத்தான் சமூக நீதி பேசும் எல்லோரும் சொல்கிறோம். எங்கள் குழந்தைகளுக்குப் பொருள் தெரியாமலோ, அதன் ஆழம் புரியாமலோ இல்லை. ஆனால், அதைப் புரியாத சூழலில், பிடிபடாத மொழியில், படித்திராத வழிமுறையில் கேட்டால் திணறத்தான் செய்வார்கள்.
அதற்குப் பொருள், எங்கள் குழந்தைகள் திறனற்றவர்களோ, படிப்பறிவற்றவர்களோ, புரிதல் சக்தியற்றவர்களோ கிடையாது. அவர்களுக்குத் தெரிந்த, புரிந்த, கற்றுக்கொண்ட சூழலின் வழியே கேட்டால் இந்தத் தகுதித் தேர்வல்ல, உலகின் எந்தக் கடினமான தகுதித் தேர்வையும் எதிர்கொண்டு வெல்வார்கள்.

நாங்கள் கேட்பது இதைத்தான். இது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவின் எல்லா மாநிலங் களுக்கும், அந்தந்த மாநில மொழியில் ப்ளஸ் டூ வரை கல்வி கற்றவர்களுக்கும் பொருந்தும். இதைத்தான் நாங்கள் உரத்துக் கேட்கிறோம். தேசிய மாயையில் மயங்கிக் கிடக்கும் மற்றவர்கள் கேட்காமல் மயங்கிக் கிடக்கிறார்கள்.

இத்தனை தசாம்சங்களாகச் சிறந்த மருத்துவர்களை உருவாக்கத் தெரிந்த எங்களுக்கு இனிமேலும் சிறப்பான மருத்துவர்களை உருவாக்கத் தெரியும். நியாயமாய்ப் பார்த்தால், எங்களுடைய இந்த மாடலைத்தான் தேசிய அரசு ‘best practice’ ஆக கையில் எடுத்துக்கொண்டு இந்திய யூனியன் முழுக்கக் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால், இங்கே நடப்பது தலைகீழாக இருக்கிறது. அதனால் தான் நீக்கச் சொல்கிறோம். It’s plain simple common sense. Period.

உலகின் எல்லா குழந்தைகளுக்கும் யானைகள் தெரியும். அவர்களை சிஸ்டம் வழியாகத் தங்களுக்கு தெரியாது, புரியாது, கடினமான விஷயமிது எனப் பிரம்மைகளையும், குற்றவுணர்ச்சியையும், தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்கிக் கொல்லாதீர்கள்.

facebook.com/Sa Na Kannan

இந்தியா - இலங்கை ஒருநாள் போட்டியை ஒளிபரப்பி வரும் சோனி சிக்ஸ், ஓர் ஆங்கிலத் தொலைக்காட்சி. இந்திக்கெனத் தனியாக இன்னொரு தொலைக்காட்சியும் உண்டு. அதனாலெல்லாம் இந்தியைத் திணிக்காமல் இருந்து விடுவார்களா என்ன? சோனி சிக்ஸில் கிரிக்கெட் போட்டியின் இடைவேளையில் ஒளிபரப்பாகிற நிபுணர்கள் கலந்துரையாடலின் போது பாதி ஆங்கிலம், பாதி இந்தி என்று கொஞ்சம்கூட லஜ்ஜையே இல்லாமல்தான் பேசுகிறார்கள். நாட்டில் பலருக்கு இந்தி புரியாதே, அப்படியே புரிந்தாலும் இது ஓர் ஆங்கிலத் தொலைக்காட்சியாச்சே, இந்தியை நுழைப்பது எவ்விதத்தில் முறையானது என்கிற கேள்விகளுக்கெல்லாம் அங்கு இடமில்லை. அந்தளவுக்கு மொழி வெறி. இந்தி தேசிய மொழி, நீ அதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்கிற சர்வாதிகாரப் போக்கின் வெளிப்பாடு. இவ்விதத் திணிப்பை
ஐ.பி.எல்-லில் ஆரம்பித்தார்கள். சரி, ஏதோ உள்ளூர் போட்டி என்று விட்டுவைத்தால் சர்வதேசப் போட்டிகளிலும் நைஸாக இந்தியை இப்போது நுழைத்துள்ளார்கள். அடுத்தகட்டமாக ஆங்கில வர்ணனைக்கு நடுவில் ஹர்ஷா போக்ளேவும் கவாஸ்கரும் இந்தியில் உரையாடினாலும் ஆச்சர்யப்பட வேண்டாம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘புரியாத ஆச்சரியமூட்டும் தேவதைகள்’
 

image_f169b77d76.jpgநவரசக் கலப்புகள் நிறைந்ததே வாழ்க்கையாகும். இவை உணர்வுபூர்வமானவை. அடிக்கடி மாறும் இயல்பு கொண்டவை. சில பொழுது மென்மையாகவும் சில சமயங்களில் தன் இயல்பை வன்மையாகவும் மாற்றியமைப்பதே பொதுவான குணமும் கொண்டது. இதற்குள் புகுந்து கொள்ளாதவர் எவரும் இல்லை. 

பெண்களிடத்தில் இந்தக் குணங்கள் மிகையானவை. எப்பொழுதும் மென்மை, சாந்தம், இரக்கச் சுபாவங்கள் இயல்பாக உள்ளமையினால் உணர்வு, உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஏனெனில், இவர்கள் தாய். 

இவர்களைப் புரிந்துகொள்வதே ரொம்பவும் கடினமானது என்கின்றார்கள். வீரமும் விவேகமும் இருக்கும் கனிவும் நிரம்ப இருப்பதால், சூழ்நிலையைப் புரிந்து கொள்ளும் அறிவைப் பெற்றிருப்பார்கள். இது சமானிய விடயம் அல்ல. 

பெண்களின் மன ஆழம் அதிசயிக்கக் கூடியது. இது ஆண்களுக்குப் புரியாமல் இருப்பது புதுமையும் அல்ல. நவரசங்களினால் தன்னைத்தான் சுவீகரித்து, சமூக நடப்புகளையும் அனுசரித்து வாழும் புனிதப் பிறவிகள்! புரியாத ஆச்சரியமூட்டும் தேவதைகள், இந்தப் பெண் பிறவிகள். 

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று:செப்டெம்பர் 10
 

1939: பிரித்தானிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலான எச்.எம்.எஸ். ஒக்ஸ்லே, பிரித்தானியாவின் மற்றொரு நீர்மூழ்கி கப்பலினால் தவறுதலாக மூழ்கடிக்கப்பட்டது.

1939: ஜேர்மனிக்கு எதிராக கனடா போர்ப் பிரகடனம் செய்தது.

1972: ஜேர்மனியில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் கூடைப்பந்தாட்டத் தொடரின் சர்ச்சைக்குரிய இறுதிப்போட்டியில் சோவியத் யூனியனிடம் அமெரிக்கா தோல்வியுற்றது. அமெரிக்க கூடைப்பந்தாட்ட அணி ஒலிம்பிக் போட்டியொன்றில் தோல்வியுற்றமைஅதுவே முதல் தடவையாகும்.

1976: யூகோஸ்லாவியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 176 பேர் பலி.

2002: சுவிட்ஸர்லாந்து ஐ.நாவில் இணைந்தது.

2003: சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கத்தியால் குத்தி படுகாயமடைந்தார். மறுநாள் அவர் மரணமடைந்தார்.

2007: பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி நவாஸ் ஷெரீப் 1999 ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டு, 8 வருடகாலம் வெளிநாட்டில் வசித்த பின் மீண்டும் தாயகம் திரும்பினார்.

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

ஸ்காட்லாந்து கடற்கரையில் கண்கவர் வண்ண ஒளிவட்டம் (புகைப்படத் தொகுப்பு)

ஸ்காட்லாந்தின் தென் குயின்ஃபெர்ரிக்கு மேலே வானத்தில் தோன்றிய வண்ண வளையம். பால் பாரலோஸ் என்பவர் இந்தப் படத்தை எடுத்தார்.

ஸ்காட்லாந்தின் தென் குயின்ஃபெர்ரிக்கு மேலே வானத்தில் தோன்றிய வண்ண வளையம். பால் பாரலோஸ் என்பவர் இந்தப் படத்தை எடுத்தார்.

 

ஸ்காட்லாந்தின் கிழக்கு கடற்கரையில் தெரியும் வண்ண ஒளிவட்டத்தின் கண்கவர் காட்சி.

பிபிசியின் ஸ்காட்லாந்து செய்தி இணையதள வாசகர்கள், கிழக்கு கடற்கரை, எடின்பர்க் மற்றும் வடக்கு பெர்விக்கில் தோன்றிய 'நார்தன் லைட்ஸ்' என அழைக்கப்படும் வண்ண ஒளி வட்டத்தின் (அரோரா போரியலிஸின்) புகைப்படங்களை அனுப்பிகொண்டிருந்தனர்.

டுன்டீயில் நற்றிரவு 2 மணிக்கு மார்டா கராகோவிக்கா இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

டுன்டீயில் நற்றிரவு 2 மணிக்கு மார்டா கராகோவிக்கா இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

 

இந்த 'நார்த்தன் லைட்ஸ்' எனப்படும் வண்ண ஒளிவட்டத்தைக் கண்டுகளிக்க ஸ்காட்லாந்து மிகச் சிறந்த இடமாகும். ஆனால், வழக்கமாக வடக்கில் வெகு தொலைவில் காணப்படும்.

மின்னூட்டம் பெற்றத் துகள்கள் தொடர்ச்சியாக சூரியனில் இருந்து வெளியேறுவதை சூரியக் காற்று என்பர். இந்த சூரியக் காற்றில் ஏற்படும் ஒளிச் சிதறல் மற்றும் புவியின் காந்தப் புலம் ஆகியவை இணைந்து இந்த நார்த்தன் லைட்ஸை தோற்றுவிக்கின்றன.

இந்த துகள்களில் சிலவற்றை கிரகித்து கொள்ளும் பூமியின் காந்தப்புலம், அவற்றை வளிமண்டலத்திலுள்ள மூலக்கூறுகளோடு மோதவிடுகிறது.

இவ்வாறு தொடர்ந்து மீண்டும் மீண்டும் நடைபெறும் சிறிய உரசல்களால் ஆற்றல் ஒளி வடிவத்தில் வெளியாகிறது.

இஸ்லா டாவியஸ்

நார்த்தன் லைட்ஸ் எனும் வண்ண ஒளிவட்டத்தைப் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை ஏறக்குறைய இழந்துவிட்ட இஸ்லா டாவியஸ் மேகங்கள் கலைந்து வானம் தெளிவாகியபோது இந்த புகைப்படத்தை எடுத்தார். மேற்கு வளைகுடாவில் உள்ள வடக்கு பெர்விக்கில் எடுக்கப்பட்டது.

 

இந்த புகைப்படத்தை எடுத்த ஆலென் ஒ'டோன்னெல் இக்காட்சி ஒரு மணிநேரத்திற்கு மேலாக நீடித்தது என்கிறார்.

இந்த புகைப்படத்தை எடுத்த ஆலென் ஒ'டோன்னெல் இக்காட்சி ஒரு மணிநேரத்திற்கு மேலாக நீடித்தது என்கிறார்.

மேற்கு கடற்கரையில் இருக்கின்ற ஒபான் உள்பட ஸ்காட்லாந்தின் பிற பகுதிகளிலும் இந்த வண்ண ஒளிவட்டம் தெரிந்தது.

ஒபானில், புல்பிட் குன்றில் இருந்து நள்ளிரவு 1.30 மணிக்கு நிக் எடிங்டன் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

ஒபானில், புல்பிட் குன்றில் இருந்து நள்ளிரவு 1.30 மணிக்கு நிக் எடிங்டன் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

 

ஐஸ்லாந்திலும், ஃபின்லாந்திலும் நார்த்தன் லைட்ஸைப் பார்க்கத் தேடியலைந்த ஃபியோனா பகெருக்கு அப்போது அதிருஷ்டம் வாய்க்கவில்லை. ஆனால், விடுமுறையில் ஐக்கிய ராஜ்ஜியத்தில் பயணம் மேற்கொண்டபோது, இந்த வண்ண ஒளிக்கனலை பார்ப்பார் என்று அவர் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஸ்காட்லாந்தில் ஒபானிலுள்ள டுனோலி கோட்டையைப் பார்த்தப்படி அதிகாலை 1.30 மணிக்கு அவர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

ஐஸ்லாந்திலும், ஃபின்லாந்திலும் நார்த்தன் லைட்ஸைப் பார்க்கத் தேடியலைந்த ஃபியோனா பகெருக்கு அப்போது அதிருஷ்டம் வாய்க்கவில்லை. ஆனால், விடுமுறையில் ஐக்கிய ராஜ்ஜியத்தில் பயணம் மேற்கொண்டபோது, இந்த வண்ண ஒளிக்கனலை பார்ப்பார் என்று அவர் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஸ்காட்லாந்தில் ஒபானிலுள்ள டுனோலி கோட்டையைப் பார்த்தப்படி அதிகாலை 1.30 மணிக்கு அவர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சிறந்த படப்பிடிப்பாளருக்கு 5000பவுண்ட்ஸ் பரிசு

 

இரண்டாவது வருடமாக தொடர்ந்து இடம்பெற்ற சர்வதேச பறவைப் படப் பிடிப்பாளர்கள் போட்டியில் , அலெஜாண்ட்ரோ பரீட்டோ ரோஜாஸ் என்பவர் முதல் பரிசான  5,000 பவுண்ட்ஸ் தொகையை வென்றெடுத்துள்ளார் . இவர் பிளெமிங்கோ பறவைகள் தமது குஞ்சுகளுக்கு இரைகொடுப்பதை தத்ரூபமாக  படம் எடுத்துள்ளார் . வருடாந்தம் இந்தப்பறவைகள் திரளாக ஒன்றுகூடி தமது குஞ்சுகளுக்கு இரை கொடுப்பது வழமையில் உள்ளது .

சிறந்த படப்பிடிப்பாளருக்கு 5000பவுண்ட்ஸ் பரிசு

தாய்ப் பறவைகளின் நிறத்தை இந்த பிளெமிங்கோ குஞ்சுகள் பிறக்கும்போது கொண்டிருப்பதில்லை . இவை பிறக்குபோது சாம்பர் நிறத்தில் உடலும் , சிறகுகள் வெண் நிறத்திலும் இருக்கும் . ஒன்றோ அல்லது இரண்டு வருடங்கள் கழித்தே  இவை தாய்ப்பறவையின் ரோஜா வர்ணத்துக்கு மாறுகின்றன . இந்த வேறுபாட்டை உயிரோட்டமாக இவர் படம் காட்டுவதாக நடுவர்கள் புகழ்ந்துள்ளனர் . இந்த போட்டோவை  இவர் மெக்சிக்கோ நகரில் எடுத்துள்ளதாக கூறி இருக்கிறார் .

சிறந்த படப்பிடிப்பாளருக்கு 5000பவுண்ட்ஸ் பரிசு

பிரிட்டனின் ஓர் அமைப்பு  வேறு சில அமைப்புகளுடன் இணைந்து , ஆண்டுக்கு ஒரு தடவை இந்தப் போட்டிகளை நடாத்தி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

வைரலாகிவரும் ’ஜிமிக்கி கம்மல்’ வீடியோக்களின் தொகுப்பு!

 

மோகன்லால் நடிப்பில் ஓணம் தினத்தன்று வெளியான திரைப்படம் ’வெளிப்பாடிண்டே புஸ்தகம்’. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ’ஜிமிக்கி கம்மல்’ என்ற பாடலின் வீடியோவை, படத்தின் ரிலீஸுக்கு முன்னரே வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ கேரளா மக்களுக்கு மட்டுமல்லாது மற்ற மாநிலத்துக்கு மக்களுக்கும் பிடித்திருந்தது.

’வெளிப்பாடிண்டே புஸ்தகம்’ படத்தில் இடம்பெற்றிருந்த ’ஜிமிக்கி கம்மல்’ பாடல் வீடியோ 

எர்ணாகுளத்தில் இருக்கும் புனித தெரசா கல்லூரி மாணவிகளும் ஆசிரியர்களும் இணைந்து ஓணம் திருநாளைக் கொண்டாடும் வகையில், இந்த ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு குழுவாக நடனம் ஆடினர். அதை வீடியோ எடுத்து இணையத்திலும் பதிவேற்றம் செய்துள்ளனர். அது பலருக்கும் பிடித்துப்போக இணையத்தில் ட்ரெண்டானது. அந்த வீடியோவைப் பார்த்து பலரும் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினரோடு நடனமாடி அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து புது ட்ரெண்ட் அடித்துள்ளனர். இணையத்தில் பலராலும் பார்த்து, பகிரப்பட்ட வீடியோக்களின் தொகுப்பு இதோ. 

 

 

 
  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
On 8.9.2017 at 5:54 PM, நவீனன் said:

வைரலாகும் கேரள பெண்களின் ஜிமிக்கி கம்மல் நடனம்

 

 
keralaPNG

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டர்கிராம் என அனைத்து சமூக ஊடகங்களில் வைரலாக பரவி கொண்டிருக்கிறது ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடிய கேரள கல்லூரி பெண்கள்  நடனம்.

கேரளாவில் உள்ள ISC  கல்லூரியைச் சேர்ந்த பெண்கள் ஒணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'வெலிபாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெற்றுள்ள ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர்.

 

தற்போது இந்த நடனம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

நெடிசன்கள் ஸ்டேடஸ்களாலும், மீம்ஸ்களாலும் இந்த பெண்களின் நடனத்தை தினமும் ட்ரண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழக இளைஞர்கள் பலர் இப்பெண்களின் நடனத்தைக் பகிர்ந்து தமிழ்ப் பெண்களை வம்புக்கிழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

யூ டியூப்பில் இந்த வீடியோவை சுமார் 3 கோடிக்கு அதிகமானவர்கள் கண்டிருக்கிறார்கள். 50,000க்கும் அதிகமானவர்கள் விருப்பம் குறியிட்டிருக்கிறார்கள். 1,000க்கு மேற்பட்டவர்கள் பதிவிட்டிருக்கிறார்கள்.

http://tamil.thehindu.com

தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்த 'ஜிமிக்கி கம்மல்' ஷார்லின்

 

தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்த

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த படம் "வெளிப்படிந்தே  புஸ்தகம்". இப்படத்தில் வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் ரஞ்சித் உன்னி பாடிய ஜிமிக்கி கம்மல் பாடல் மிகவும் பிரபலமாகியுள்ளது.

ஓணம் பண்டிகையின் போது கேரளாவை சேர்ந்த சில பெண்கள் ஒன்று கூடி அப்பாடலிற்கு நடனமாடினர். அதன் விடியோவானது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு  தற்போது வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.

தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்த

முக்கியமாக இந்த வீடியோ காட்சியானது தமிழர்களால் அதிகம் பிரபலமானது. இதுகுறித்து அந்த பாடலில் நடனமாடிய ஷெர்லின் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில், "உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி, அதுவும் தமிழ் மக்கள். ஆனால் நீங்கள் அனிதா பிரச்சனைக்கு ஆதரவு தர வேண்டும் அது தான் முக்கியம்... என கூறியுள்ளார்.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்
கவர்ச்சியான உயிரினங்கள்
 

உலகத்தில் பல்வேறு வகையான வித்தியாசமான, விசித்திரமான உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அவை அனைத்தையும் பற்றி முழுமையாக அறிந்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு.

கவர்ச்சியான நிறங்களைக் கொண்ட உயிரினங்கள் சிலவற்றின் புகைப்படங்களை National Geographic சஞ்சிகை அண்மையில் வெளியிட்டிருந்தது.

பறவைகள், விலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள் என பல வகையான உயிரினங்கள் பல்வேறு நிற அமைப்புகளைக் கொண்டு விளங்குகின்றன. அவை இயற்கையிலேயே ஏதோவொரு காரணத்துக்காகவே அமையப்பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பறவைகள் சில மிகக் கவர்ச்சியான நிறங்களைக் கொண்டிருப்பதற்கான காரணம், அவை பாலியல் சேர்க்கையில் ஈடுபடுவதே என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது அவற்றின் நிறங்களால் ஒன்றையொன்று ஈர்த்துக்கொள்கின்றன.

இதேவேளை, ஒக்டோபஸ் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் கடலின் ஆழத்தில் கதிர்வீச்சு நிறங்களைக் கொண்டிருக்கின்றன. அந்த நிறங்களின் ஊடாக ஒருவகை நச்சுப் பதார்த்தம் சுரக்கப்படுவதாகவும் அவை, எதிரிகளை கொன்று உணவாகுவதற்கு ஏதுவாக அமைவதாகவும் கூறப்படுகிறது.

ஏனைய சில உயிரினங்கள் எதிரிகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இயற்கையோடு ஒத்திசைந்த வர்ணங்களைக் கொண்டிருக்கின்றன.

image_b1c30ac8d7.jpgimage_34b813ddde.jpgimage_be26b73d2a.jpgimage_96057ae656.jpgimage_64d93e89a4.jpgimage_70736cd2ea.jpgimage_cf9152dc8e.jpgimage_6a7f5c5b81.jpgimage_f2b3c01e70.jpgimage_45dd4074b8.jpgimage_3cf736cdf8.jpgimage_b3501336d6.jpgimage_9ad2b47287.jpgimage_d41ed6e613.jpgimage_8c010e1721.jpgimage_4f9996cfe8.jpgimage_01843fa85c.jpgimage_3cf8d7e1af.jpg

  •  

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

கூகுள் தெரியும், டக்டக்கோ தெரியுமா?

 

 
Duckduckgo

மா

ற்றுத் தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ‘டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? கூகுளுக்கு சவால் விடக்கூடிய அளவுக்கு பெரிய தேடியந்திரம் இல்லை என்றாலும், கடந்த 7 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கிறது ‘டக்டக்கோ’. இதற்கு முக்கிய காரணம், டக்டக்கோ இணையவாசிகளின் தனியுரிமையை மதிக்கும் வகையில் செயல்படுவதுதான். இணையவாசிகளின் தேடலைக் கண்காணிக்காமல் இருப்பதும், அவர்களைப் பற்றி தகவல்களை திரட்டி விளம்பர வலை விரிக்காமல் இருப்பதுமே டக்டக்கோவின் தனிச்சிறப்பு. இந்த அனாமதேய தன்மையை பிரைவசி ஆர்வலர்கள் கொண்டாடியும் வருகின்றனர்.

எனவே, உங்கள் இணைய தேடல் அனாமதேயமாக இருக்க வேண்டும் என விரும்பினால் நீங்களும் டக்டக்கோவை பயன்படுத்திப் பார்க்கலாம். பிரைவசி பாதுகாப்பு முதன்மை அம்சம் என்றாலும், டக்டக்கோவுக்கு மாற்றிக்கொள்ள மேலும் பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு தேடியந்திரமாக டக்டக்கோ பல தனித்தன்மையான சேவைகளை வழங்கி வருகிறது. இவற்றில் பல பிரத்யேகமானவை.

 

ஸ்டாப் வாட்ச்

நீங்கள் விரும்பினால் டக்டக்கோவை ஸ்டாப் வாட்சாக பயன்படுத்தலாம். இதன் கட்டத்தில் ஸ்டாப் வாட்ச் என டைப் செய்தால் போதும், அதற்கான கடிகாரம் தோன்றும். அதில் உங்களுக்குத் தேவையான நேரத்தை அமைத்துக்கொள்ளலாம். அது மட்டுமல்ல, அடுத்தடுத்து வேலைகள் இருந்தால், லேப் வசதி மூலம் தொடச்சியாகப் பயன்படுத்தலாம். இதே முறையில் டைமர் சேவையையும் பயன்படுத்தலாம். டைமரில் நேரம் முடிந்ததும் அலாரமும் ஒலிக்கும்.

ஆங்கில வாசகங்களில் தேவையான இடங்களில் கேபிட்டல் எழுத்துகளை அமைக்க விரும்பினால், அதற்கான வசதியையும் இந்தத் தேடியந்திரம் வழங்குகிறது. வாசகத்தை டைப் செய்து அதற்கு முன் ‘டைட்டில் கேஸ்’ என குறிப்பிட்டு இடைவெளி விடுவதன் மூலம் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். எழுத்துகளை லோயர் கேஸ் அல்லது அப்பர் கேஸாக மாற்றவும் பயன்படுத்தலாம். மாணவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

செய்திகளைத் தேட

கூகுளில் தகவல்களைத் தேடும்போது, தொடர்புடைய செய்திகளும் இடம்பெற்றிருக்கும். ஆனால், டக்டக்கோ தேடல் முடிவுகளை மட்டுமே அளிக்கிறது. இருப்பினும் செய்திகளும் இடம்பெற விரும்பினால், தேடலுக்கான கீவேர்டு முன் அல்லது முடிவில் நியூஸ் என சேர்த்துக்கொண்டால் போதும், தொடர்புடைய செய்திகளையும் காணலாம். 100-க்கும் மேற்பட்ட தளங்களிலிருந்து செய்திகள் பட்டியலிடப்படுகின்றன.

டக்டக்கோவில் எச்.டி.எம்.எல். கோப்புகளையும் எளிதாகத் தேடலாம். எச்.டி.எம்.எல். என குறிப்பிட்டால் பொருத்தமான முடிவுகளைக் காணலாம். புரோகிராமிங் சிறப்பு குறியீடுகளையும் தேடலாம். இதேபோல பிடிஎப் கோப்புகள் அல்லது மின் புத்தகங்களை எதிர்பார்க்கும்போது, கீவேர்டுடன் பிடிஎப் எனும் வார்த்தையைச் சேர்த்துக்கொண்டால் போதும், கோப்புகளை மட்டும் தேடலாம்.

 

உடனடி பதில்கள்

சில நேரம் ஒட்டுமொத்த இணைய கடலிலும் தேட விரும்பாமல் குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் தேட விரும்பலாம். இதற்கும் டக்டக்கோவில் வழி உண்டு. இந்த வசதி ‘ஐபேங்க்’ என சொல்லப்படுகிறது. தேடல் பதத்துக்கு முன் ஆச்சரியக்குறியைச் சேர்த்து, குறிப்பிட்ட தளத்துக்கான முதல் எழுத்தை குறிப்பிட்டால் போதும், அந்த ஒரு தளத்தில் மட்டும் தேடலாம். உதாரணத்துக்கு !a என்றால் அமேசான் தளத்தில் தேடலாம். இப்படி நூற்றுக்கணக்கான தளங்களில் நேரடியாக தேடும் வசதியை அளிக்கிறது. இதற்கான நீண்ட பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆய்வுப் பிரிவிலும் தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு இந்தச் சேவை மிகவும் பயனளிக்கும். இவ்வளவு ஏன், இந்த வசதியை பயன்படுத்தி கூகுளிலும் தேடலாம்.

‘இன்ஸ்டண்ட் ஆன்சர்ஸ்’ எனும் பெயரில் உடனடி பதில்களையும் டக்டக்கோ வழங்கி வருகிறது. குறிப்பிட்ட பல கேள்விகள் அல்லது பதங்களுக்கு தேடல் வார்த்தையை டைப் செய்ததுமே பொருத்தமான பதிலை காணலாம். கிளிக் செய்யாமலே தேடும் வசதி எனும் வர்ணனையோடு டக்டக்கோ இதை அறிமுகம் செய்தது. ‘கூகுள் நாலெட்ச் கிராஃப்’ எனும் பெயரில் இதுபோன்ற வசதியை வழங்கினாலும், முதலில் டக்டக்கோதான் இதை அறிமுகம் செய்தது.

 

வீடியோ தேடல்

வீடியோ கோப்புகள் மட்டும்தான் தேவை என்றால், தேடல் பதத்துக்கு முன் வீடியோ என சேர்த்துக்கொண்டால் 28 வீடியோக்கள் வந்து நிற்கின்றன. மேலும் வீடியோக்கள் தேவையெனில் அதற்கான வசதியை கிளிக் செய்யலாம். சமையல் குறிப்பு வீடியோக்கள் என்று குறிப்பிட்டும் தேடலாம். இந்த முடிவுகள் யூடியூப்பை மட்டுமே சார்ந்திருப்பதுதான் ஒரே குறை.

இணையசேவைகளுக்கான கீபோர்டு சார்ந்த குறுக்கு வழிகள் தேவை எனில், சீட்ஷீட் வசதியைப் பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு போட்டோஷாப் சீட்ஷீட் என தேடினால் போட்டோஷாப் தொடர்பான குறுக்கு வழிகளைப் பெறலாம். புரோகிராமிங் தொடர்பான தகவல்களையும் எளிதாக தேடலாம்.

டக்டக்கோவில் இன்னும்கூடப் பல அம்சங்கள் இருக்கின்றன. எல்லாம் சரி, கூகுள்போல வருமா எனக் கேட்பவர்களுக்காக கூகுள் தொடர்புடைய சுவாரஸ்யமான தகவல் ஒன்று. கூகுளில் ஏதேனும் பிரச்சினையா எனும் பொருள்பட, ‘ஈஸ் கூகுள் டவுன்’ என கூகுளில் கேட்டால், இல்லை (நோ) என பதில் பளிச் எனத் தோன்றுகிறது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

கரை ஒதுங்கிய திமிங்கிலங்கள்... விண்வெளி வரை நீளும் காரணங்கள்!

 

ஸ்பெர்ம் திமிங்கலங்கள்

வானை அளப்பது பறவைகள். கடலை அளப்பது திமிங்கலங்கள். இரண்டுக்கும் என்ன ஒற்றுமை இருந்து விடப் போகிறது? 

“பறவைகள் எவ்வாறு ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குப் பறந்து செல்கிறது?”

“கண்களால் பார்த்து…”

“இல்லை... இல்லை… நீண்ட தூரம் எப்படிச் சரியாக சென்று திரும்புகிறது?”

“காந்தப்புலம்! பறவையின் மூளையில் இருக்கும் அயனிகள் பூமியின் காந்தப்புலத்துடன் தன்னை நேர்படுத்திக் கொள்கிறது.”

“The Core” என்ற ஆங்கிலப் படத்தில் வரும் காட்சி இது. பூமியின் அழிவைச் சுற்றி மையப்படுத்தப்பட்டிருக்கும் இதில், புறாக்கள் உள்ளிட்ட பறவைகள் தொடர்ந்து வித்தியாசமான செயல்களைச் செய்யத் தொடங்கும். பறக்க முடியாமல், வழி தெரியாமல் சிக்கித் திணறி இறந்து விடும். காரணம், பூமியின் காந்த உள்ளகம் (Magnetic Core) பாதிப்படைந்து இருக்கும். அதை எப்படிச் சரி செய்கிறார்கள் என்பதே கதை.

பறவைகளைப் போலவே, ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் (Sperm Whales) எனப்படும் ஓர் இனமும், இடம்பெயர்தலுக்கும், நெடும் பயணங்களுக்கும் பூமியின் காந்தப்புலத்தையே நம்பி இருக்கிறது. எளிமையாக விளக்க வேண்டுமானால், நமக்கு GPS எப்படியோ அப்படித்தான் திமிங்கலங்களுக்குக் காந்தப்புலன்.

கரை ஒதுங்கிய திமிங்கிலம்

கடந்த 2016ஆம் வருடம், வட கடலில் (North sea) இந்த ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் பல இறந்த நிலையில் கரை ஒதுங்கின. வந்த அலையில், Spermaceti எனப்படும் திமிங்கிலத்திலை எண்ணெய்க் கொழுப்பும் நிறைய இருந்தது. அதாவது, ஒதுங்கிய பிணங்களை விட அதிக அளவில் திமிங்கிலங்கள் இறந்துள்ளன என்று சொல்லாமல் சொல்லின அந்த அலைகள். இதற்கான காரணம் என்னவென்று யாருக்கும் அப்போது தெரியவில்லை. ஏதோ சில விஷமிகள் இரக்கம் இல்லாமல் செய்த வேலையாக இருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. ஆனால், இப்போது அவை இயற்கை மரணங்கள் மட்டுமல்ல, இயற்கையே செய்த மரணங்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் இறப்பிற்கான காரணம் அக்கடலில் இருந்து பல கோடி கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் விண்வெளியில் நடந்த ஒரு நிகழ்வுதான் என்று கண்டுபிடித்துள்ளனர்.

வடமுனைச் சுடரொளி (Northern Lights) பற்றி கேள்விப்பட்டிருக்கீர்களா? அதாங்க அரோரா (Aurora). பொதுவாக வடக்கு அல்லது தெற்கு காந்தத் துருவத்திற்கு அருகே வானத்தில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலந்த ஒளிகள் தோன்றும். இது ஓர் இயற்கையான மின்சார நிகழ்வு. சூரியன் சில சமயங்களில் அதிக அளவில் சூரிய புயல்களை (Solar Storms) உருவாக்கும். இந்த விண்வெளி வானிலை மாற்றத்தால் சூரியனில் இருந்து வெளியேறும் இந்தக் கதிர்கள் மின்னூட்டத் துகள்களாக (Charged Particles) இருக்கும். இவை பூமியின் வட மற்றும் தெற்கு துருவங்களைக் கடக்கும் போது, பூமியின் காந்த மண்டலத்தில் (Magnetosphere) சில பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்தப் பாதிப்புகளின் வெளிப்பாடுதான் அரோரா பொரியலிஸ் என்ற ஒளியால் தீட்டப்பட்ட இந்த விந்தையான ஓவியம். (படம் கீழே)

அரோரா பொரியலிஸ்

இதுவரை சூரியப் புயல் இந்த அதிசயத்தை மட்டும்தான் நிகழ்த்துகிறது என்று நினைத்திருந்தனர் விஞ்ஞானிகள். ஆனால், சமீபத்திய ஆராய்ச்சியின்படி, இது தோன்றும் போதெல்லாம் பூமியின் காந்தப் புலன்களில் நிலையற்ற தன்மை, அதாவது சிறிய அளவில் மாறுதல்களோ, தடங்கல்களோ ஏற்படுகின்றன. இப்படி ஏற்படும் போதெல்லாம் பூமியின் காந்தப் புலன்களையே நம்பிக் கொண்டு நெடும்பயணம் மேற்கொள்ளும் ஸ்பெர்ம் திமிங்கிலங்களும் பாதிக்கப்படுகின்றன. வழி தெரியாமல் தட்டுத் தடுமாறி ஆபத்தில் மாட்டிக் கொள்கின்றன. இதனால்தான், சென்ற வருடம் அவ்வளவு திமிங்கலங்கள் இறந்திருக்கக் கூடும் என்று விளக்கம் அளித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

 

 

 

காந்த மண்டலத்தில் உள்ள தடைகளால், திமிங்கிலங்கள் பெரும் குழப்பம் அடைகின்றன. பாறைகள் மற்றும் தடைகளில் மோதிக் கொள்கின்றன. சூரியப் புயலின் வீரியம் அதிகமாகும் போது, புறாக்கள் உள்ளிட்ட பறவைகளும் நிச்சயம் பாதிக்கப்படும். வடமுனைச் சுடரொளிக்கும், விண்வெளி வானிலைக்கும், இந்தத் திமிங்கில இறப்பிற்கும் மும்முனை தொடர்பு இருக்கும் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். இது தசாவதார கேயாஸ் தியரி (Chaos Theory) கதையைப் போலதான். பத்துக் கதாப்பாத்திரங்களின் வேலைகளையும் இங்கு இயற்கையே தனி ஆளாகச் செய்து விடுகிறது என்பதுதான் வித்தியாசம். இதைத் தடுத்து நிறுத்த அந்தக் கொதிக்கும் சூரியனால் மட்டுமே முடியும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
‘கிடைத்த வாழ்க்கையே நிச்சயமானது’
 

image_384f7da876.jpgதன்னைப் பார்க்காது என்னைப் பார்த்து, “எப்படியடா இப்படி வளர்ந்து விட்டாய்”? என்றாள். “குஞ்சுப் பெண்ணாய் இருந்த நீ குண்டுப் பெண்ணாகி விட்டாயே” என்று அவளைக் கேட்டபோது, வெட்கம் மீதூர, “நான் கேட்டது தப்பு; விட்டுவிடு என்னை” என்றாள். கடந்த காலத்தில் நடந்தேறிய காதல் இது. 

சின்ன வயதில் சண்டையிட்டோம். பெரியவர்கள் அதைப் பெரிதாக்கிப் பிரிந்து போனார்கள். என்னைப் பார்த்துப் பேசக் கூசினர். விட்டேனா நான்! முறைசொல்லி அவர்கள் மனத்துக்குள் இடம்பிடிக்க முயன்றேன்.  

என்னிடம் கேட்காமலே என் விதி எழுதப்பட்டது. யாரோ ஒருத்தி கழுத்தை நீட்டினாள். அழாத நான் அழுது ஓய்ந்தேன். எனது மனைவி என்னை மாற்றினாள்; புது உருவம் தீட்டினாள்.  

நீண்ட காலம் நெடிய பயணம்; பாரீஸ் மாநகரில் கணவர், குழந்தைகளுடன் குதூகலமாய் அவள் தோற்றம். “ஹாய்” என்றாள். உடன் அவள் கணவனும் “ஹாய்” என்றான்.  

எனது மனைவி குறும்புடன் பார்க்க என் மகன் விழித்தான். புன்முறுவலுடன் பிரிந்து சென்றோம். கிடைத்த வாழ்க்கையே நிச்சயமானது. புரிந்து கொள்க; இன்பம் பெருகிட வாழ்க. 

  • தொடங்கியவர்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே…

 

இன்­றைய தமிழ் சினி­மா­வின் வளர்ச்சி எப்­ப­டிச் சாத்­தி­ய­மா­னது…? அது சடு­தி­யாக வளர்ந்­தெ­ழுந்த ஒன்றா…? இல்­லவே இல்லை. ஊமைப்­ப­டங்­க­ளாக இருந்து இசைப்­பா­டல்­கள் நிறைந்த பட­மாக மாறி, ஸ்ரூடி­யோவை விட்டு வெளியே வந்து வளர்ந்து, எழுந்­த­துவே இன்­றைய தமிழ் சினிமா. இன்­றைக்கு அது உயர்ந்து நிற்­கி­றது.

சினிமா மாத்­தி­ர­மன்றி இலக்­கி­யம், எழுத்­துச் சூழ­லின் நிலை­யும் அவ்­வா­றா­னதே. நவீ­னத்­து­வம், பின்­ந­வீ­னத்­து­வம், ‘வாதம்’­கள் பல­வாக இன்­றைக்­குக் கிளை­விட்­டுப் பரந்­துள்ள இதன் ஆரம்­பம் ஒரு சில­ருக்கே சொந்­த­மா­ன­தா­யி­ருக்­கி­றது.

அந்த ஆரம்­பம் இல்­லா­மல் இன்­றைய வளர்ச்சி ஒரு­போ­தும் சாத்­தி­ய­மில்லை. ஆனால் எழுத்­துச் சூழ­லில் அந்த ஆரம்­பத்­தையே தொடர்ந்­தும் கொண்­டாட வேண்­டி­யி­ருக்­கி­றது.

கார­ணம் அன்­றைய எழுத்­துக்­க­ளின் ஆரம்­பமே அவ்­வ­ளவு உச்­ச­மாக இருந்­தி­ருக்­கி­றது. ‘‘ஒள­வை­யும் ஆண்­டா­ளும் சொல்­லாத எதை­யும் நாங்­கள் இப்­போது புதி­தா­கச் சொல்­லி­வி­ட­வில்லை. அவர்­க­ளின் நீட்­சி­தான் நாங்­கள். அதன் அச்சு பெண் படைப்­பா­ளி­க­ளான எங்­க­ளி­டம் இருக்­கி­றது’’ என்­கி­றார் தமி­ழக எழுத்­தா­ளர் தங்­க­பாண்­டி­யன் தமி­ழச்சி.

அப்­ப­டி­யான ஒரு நிலை­யில் வைத்­துத்­தான் நாம் புரட்­சிக் கவி­ஞன் பார­தி­யை­யும் பார்க்க வேண்­டும். பெண்­ணி­யம் பேச­வும், விடு­த­லைக்­காக வாதி­ட­வும், சாதி பேதத்தை, ஏற்­றத் தாழ்வை முன்­னின்று எதிர்க்­க­வும் முத­லில் துணிந்­த­வன் அவனே.

யாரும் முன்­வ­ராத, துணி­யாத காலத்­தில் தீண்­டாமை குறித்­தும் பெண்­ணிய விடு­தலை வேட்­கை­கொண்­டும் தன் எழுத்­துக்­க­ளால் முன்­னின்று முழங்­கி­யி­ருந்­த­வன் பாரதி. அவன் ஆரம்­பித்து வைத்த மேற்­போந்த உணர்­வு­களே இன்­றைய பெண்­ணி­யம்­பே­சும் அனை­வ­ரும் கொண்­டா­டிக் கொண்­டி­ருக்­கின்ற கொள்­கை­க­ளும் கோட்­பா­டு­க­ளு­மாக இருக்­கின்­றன.

காலத்­துக்கு முன்­பாக மாத்­தி­ர­மன்றி இன்­றை­ய­வர்­க­ளின் எழுத்­துக்கு முன்­பா­க­வும் பார­தியே சிரிக்­கின்­றான்.பார­தி­யின் வரி­க­ளுக்கு அர்த்­தங்­கள் இன்­றைக்­கும் தேடப்­ப­டு­கின்­றன.

அக்­கி­னிக்­குஞ்சு பற்­றிய ஆராய்ச்­சி­க­ளும், பாரதி உரு­வ­கப்­ப­டுத்த முனைந்­தது எது என்­பது பற்­றி­யும் முற்­றுப்­பெ­றாத ஆராய்ச்­சி­கள் இன்­றைக்­கும் உண்டு.

விடு­தலை வேட்கை என்று அதற்கு முற்­றுப்­புள்ளி வைத்­து­விட்ட ஒரு பகு­தி­யின­ருக்­குக்­கூட அது திருப்­தி­யாக இருக்­க­வில்லை.

இன்­னும் விடை­தே­டு­கின்­ற­னர் ‘அக்­கி­னிக்­குஞ்­சு’க்கு. ஒரு ஆண் மக­னாக இருந்­து­கொண்டு முதன் முத­லில் பெண் சுதந்­தி­ரத்­துக்­கா­கக் குரல் கொடுத்­த­வன் என்ற பெரு­மை­யும் பார­திக்­கே­யு­ரி­யது. பெண் விடு­தலை பற்­றிப் பெண்­கள் தான் பேச­வேண்­டும் என்­றில்லை. நீதி­யைப் பேசு­வ­தற்கு ஆண் -, பெண் என்ற பேதம் தேவை­யற்­றது.

முத­லில் பெண்­க­ளுக்­கா­கக் கரம் நீட்­டி­ய­தன் மூலம் பாரதி இன்­றைய பெண் ‘கூக்­கு­ரல்’­க­ளுக்­கும் ஒரு கருத்­தைச் கூறி ­விட்­டுள்­ளான். பெண்­கள் ஒடுக்­கப்­ப­டு­வ­தற்­கும் அவர்­க­ளுக்­கான சுதந்­தி­ரங்­கள் பறிக்­கப்­ப­டு­வ­தற்­கும் முழு ஆண்­க­ளும் கார­ண­மல்ல என்­பதே அது.

தன்­னைப்­போன்றே அதை எதிர்க்­கும் ஏரா­ளம் ஆண்­கள் சமூ­கத்­தில் இருக்­கி­றார்­கள் என்­ப­தற்­கும் அவனே முன்­னு­தா­ர­ணம். பெண்­கள் ஒடுக்­கப்­ப­டு­வ­தற்­கும் ஒடுங்­கிப்­போ­வ­தற்­கும் சில ஆண்­கள் இருப்­ப­தைப்­போ­லவே சில பெண்­க­ளும் கார­ண­மா­கி­றார்­கள் என்­பதை இன்­றைய சமூக நிலை­மை­க­ளி­லி­ருந்து நாமே நேர­டி­யாக உணர்ந்து கொள்ள முடி­யும், சீத­னம் எனும் கொடுமை நமது பெண் களைக் காவு­கொண்­ட­படி வளர்­கி­றது. சீத­னச் சந்­தை­யில் தள­ப­தி­யா­கத் தொடர்ந்­தும் சிம்­மா­ச­னத்­தி ­லேயே இருக்­கி­றார் ‘‘மாமி­’’யார்.

மாதர்க்கு வேண்­டும் சுதந்­தி­ரம் என்­று­ரைக்­கும் பாரதி ஆணும் பெண்­ணும் சம­மெ­னக் கொள்­ளும்­போதே இந்­தச் சமூ­கம் நன்­னி­லையை அடை­யும் என்­கி­றான்.

தன்­னி­னப் பெண்­க­ளின் எதிர்­கா­லத்­தில் கரி­சனை கொண்­டி­ருந்த பாரதி ஏரா­ளம் ஏரா­ளம் எதிர்­பார்ப்­புக்­க­ளு­ட­னேயே மறைந்து போயி­ருக்­கி­றான். அதி­லி­ருக்­கும் ஆச்­ச­ரி­யம் என்­ன­வெ­னில் அவன் கன­வு­கள் இன்­றைக்கு மெல்ல மெல்ல நிஜ­மாகி வரு­வதே…

‘‘…உலக வாழ்க்­கை­யின் நுட்­பங்­கள் தேர­வும்,
ஓது பற்­பல நூல்­வகை கற்­க­வும்,
இலகு சீருடை நாற்­றிசை நாடு­கள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்­திங்கே
தேச மோங்க உழைத்­தி­டல் வேண்­டு­மாம்;
விலகி வீட்­டி­லோர் பொந்­தில் வளர்­வதை
வீரப் பெண்­கள் விரை­வில் ஒழிப்­ப­ராம்.
சாத்­தி­ரங்­கள் பல­பல கற்­ப­ராம்
சவு­ரி­யங்­கள் பல­பல செய்­வ­ராம்
மூத்த பொய்­மை­கள் யாவும் அழிப்­ப­ராம்
மூடக் கட்­டுக்­கள் யாவுந் தகர்ப்­ப­ராம்
காத்து மானி­டர் செய்கை யனைத்­தை­யும்
கடவு ளர்க்­கினி தாகச் சமைப்­ப­ராம்
ஏத்தி ஆண்­மக்­கள் போற்­றிட வாழ்­வ­ராம்…’’

என்­ப­தா­கப் பாரதி அன்று கண்ட கன­வு­கள் அனைத்­தும் இன்­றைக்கு நடந்­தே­றத் தொடங்­கி­விட்­டன.

பெண்­கள் பல துறை­க­ளி­லும் கால்­ப­திக்­கத் தொடங்­கி­விட்­ட­னர். ஆணுக்கு நிக­ரா­கச் சமூ­கத்­தில் உயர்ந்து நிற்­கின்­ற­னர். சடு­தி­யான வளர்ச்­சி­யா­க­வும் அனைத்து சமூ­கங்­க­ளி­லும் ஒரு­மித்த பர­வ­லா­க­வும் இது இல்­லா­வி­டி­னும் அன்­றைய சமூக நிலை­யை­யும் இன்­றைய சமூக நிலை­யை­யும் ஒப்­பிட்டு நோக்­கி­னால் பெண்­க­ளு­டைய வளர்ச்சி தெளி­வா­கப் புரி­யும்.

ஆனாலோ பாரதி பெண்­க­ளோடு மட்­டும் நின்­று­வி­ட­ வில்லை தீண்­டா­மைக்­கா­க­ வும் குரல் கொடுத்­தான். அவன் பெண்­க­ளுக்­கா­கக் கொடுத்த குர­லுக்கு இன்­றைக்கு ஓர­ள­வா­வது பய­னி­ருப்­பது உண­ரப்­பட்­டா­லும் மனி­தர்­க­ளுக்­கி­டை­யி­லான ஏற்­றத்­தாழ்­வு­கள் இன்­ன­மும் அப்­ப­டி­யே­தான் இருக்­கின்­றன. அல்­லது அவை இன்­ன­மும் உயர்ந்­தி­ருக்­கின்­றன என்­றும் சொல்­ல­லாம்.

‘‘ஏழை யென்­றும் அடிமை யென்­றும்
எவ­னும் இல்லை ஜாதி­யில்,
இழிவு கொண்ட மனித ரென்­பது
இந்தி யாவில் இல்­லையே…’’

என்று தொடர்­கி­றது அவ­னு­டைய முழக்­கம். ஆனால் இந்­தியா மட்­டு­மன்றி தமி­ழர் தேச­மான யாழ்ப்­பா­ணத்­தி­லும்­கூட இந்­தச் ‘சாதி’ எனும் தீண்­டாமை இன்­றைக்­கும் நீடிக்­கத்­தான் செய்­கின்­றது.

அது பற்­றிப் பேசு­ப­வர்­க­ளும் எதிர்த்­துக் குரல் கொடுப்­ப­வர்­க­ளும் சாதி­யத்­தி­லி­ருந்து கட்­டு­டைத்­துக்­கொள்­ளாத அந்த விலங்­குச் சமூ­கத்­தால் நசுக்­கப்­பட்­டுக் கொண்­டு­தா­னி­ருக்­கி­றார்­கள்.

பத்­தி­ரி­கை­யா­னா­க­வி­ருந்து சமூ­கத்­தில் நல்ல பல கருத்­துக்­களை விதைக்க முனைந்த பார­தி­யின் தேசத்­தில் அது இன்­ன­மும் உச்­சத்­தில் இருப்­ப­தா­கவே தோன்­று­கின்­றது. சாதி­யம், இந்­துத்­து­வத்­துக்­கெ­தி­ராக உரத்­துக் குரல்­கொ­டுத்த பெண் பத்­தி­ரி­கை­யா­ளர் ஒரு­வர் அண்­மை­யில்­தான் அங்கு சுட்­டுக்­கொல் பப்­பட்­டி­ருக்­கி­றார்.

இப்­ப­டி­யா­கச் சமூ­கத்­தின் பல பேத­மை­க­ளை­யும் புடம்­போட்­டுக் காட்ட முனைந்த எழுத்­துக்­கள் பார­திக்கே சொந்­த­மா­னவை.

என்­றைக்­குமே அவன் ஒரு புரட்­சிக் கவி­ஞனே. அவ­னைப்­போன்று நல்­ல­தொர் உல­கம் செய்ய நாமும் இனிப் புறப்­ப­டு­வோம்.

பாரதியாரின் 95 ஆவது நினைவு தினம்

  • தொடங்கியவர்

அமெரிக்காவில் உலக வர்த்தக மைய கட்டடம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட நாள்: 11-9-2001

 

2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே தேதியில் பயணிகள் விமானங்களை தீவிரவாதிகள் கடத்தி அமெரிக்காவில் உலக வர்த்தக மையக் கட்டடங்கள் மீது மோதச் செய்தனர். அடுத்தடுத்து விமானங்கள் கட்டடங்கள் மீது மோதியதில் கட்டடம் இடிந்து தரைமட்டமானது. தென்கோபுரம் 56 நிமிடங்கள் எரிந்து பிறகு நொறுங்கி விழுந்தது. வடகோபுரம் 102 நிமிடங்கள் எரிந்து நொறுங்கியது. இந்த கோர சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த

 
அமெரிக்காவில் உலக வர்த்தக மைய கட்டடம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட நாள்: 11-9-2001
 
2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே தேதியில் பயணிகள் விமானங்களை தீவிரவாதிகள் கடத்தி அமெரிக்காவில் உலக வர்த்தக மையக் கட்டடங்கள் மீது மோதச் செய்தனர். அடுத்தடுத்து விமானங்கள் கட்டடங்கள் மீது மோதியதில் கட்டடம் இடிந்து தரைமட்டமானது. தென்கோபுரம் 56 நிமிடங்கள் எரிந்து பிறகு நொறுங்கி விழுந்தது. வடகோபுரம் 102 நிமிடங்கள் எரிந்து நொறுங்கியது.

இந்த கோர சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 246 பொதுமக்கள், 19 தீவிரவாதிகள் உள்பட மொத்தம் 2973 பேர் கொல்லப்பட்டனர். இதில் 300 பேர் வெளிநாட்டவர் ஆவர். இந்த தாக்குதலுக்கு பின்லேடனின் அல்கொய்தா இயக்கம் பொறுப்பேற்றது.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

ஜனாதிபதி மடியில் துள்ளி விளையாடிய சிறுமி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறுமி ஒருவரை மடியில் வைத்து கொஞ்சும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக வலம் வந்து கொண்டுள்ளன.

Local_News.jpg

பொலன்னறுவை கவுடுல்ல மிரிஸ்ஹேன பகுதியில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் “குளத்தோடு கூடிய கிராமம்” வேலை திட்டத்தின் 50ஆவது நிகழ்ச்சி நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்ச்சி நடைப்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் “மைத்திரி தாத்தா” என அழைத்துக் கொண்டு  பொதுமக்கள் மத்தியிலிருந்து ஒரு சிறுமி மேடைக்கு ஓடிச்சென்றுள்ளார்.

மெய்ப்பாதுகாவலர்கள் தடுக்க முயற்சித்த போது ஜனாதிபதி சிறுமியை தடுக்க வேண்டாம் என உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதியிடம் ஓடிச்சென்ற  சிறுமி நிகழ்ச்சி முடியும் வரை  ஜனாதிபதியின்   மடியில் துள்ளி விளையாண்டுள்ளார்.

5__3_.jpg

ஜனாதிபதியும் சிறுமியும் செல்லக் கலந்துரையாடலுடனும் சிரிப்புடனும் நேரத்தை கழித்துள்ளனர்.

6__1_.jpg

 

 

http://www.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.