Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

1893 : பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை வழங்­கிய முதல் நாடா­கி­யது நியூஸிலாந்து

வரலாற்றில் இன்று….

செப்டெம்பர் – 19

 

634 : சிரி­யாவின் டமஸ்கஸ் நகரை பைஸான்டைன் ராஜ்­ஜி­யத்­தி­ட­ மி­ருந்து காலித் இபின் அல் வலித் தலை­மை­யி­லான அரே­பிய படை­யினர் கைப்­பற்­றினர்.


1881 : ஜூலை 2 ஆம் திகதி சுடப்­பட்டு படு­கா­ய­ம­டைந்த அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜேம்ஸ் கார்ஃபீல்ட் இறந்தார்.


1893 : சுவாமி விவே­கா­னந்தர் சிக்­கா­கோவில் உலக சமய மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற சொற்
­பொ­ழிவை நிகழ்த்­தினார்.


varalu1893 : நியூ­ஸி­லாந்து  பெண்க­ளுக்கு வாக்­கு­ரிமை வழங்­கிய முத­லா­வது நாடா­கி­யது.


1942 : மேற்கு யுக்­ரைனில் புரோடி என்ற இடத்தில் கிட்­டத்­தட்ட 2,500 யூதர்கள் நாஸி­களின் வதை­மு­கா­முக்கு அனுப்­பப்­பட்­டனர்.


1944 : பின்­லாந்­துக்கும் சோவியத் ஒன்­றி­யத்­துக்கும் இடையில் சமா­தான ஒப்­பந்தம் ஏற்­பட்­டது.


1952 : சார்ளி சப்ளின் இங்­கி­லாந்து சென்­று­விட்டு அமெ­ரிக்க திரும்­பு­ வ­தற்கு அமெ­ரிக்கா தடை விதித்­தது.


1957 : ஐக்­கிய அமெ­ரிக்கா தனது மண்ணில் நிலத்­துக்­க­டி­யி­லான  முத­லா­வது அணு­குண்டுச் 
சோத­னையை நடத்­தி­யது.


1959 : சோவியத் அதிபர் நிகிட்டா குருசேவ் அமெ­ரிக்­காவின் டிஸ்­னி­லாண்­டுக்கு செல்­வ­தி­லி­ருந்து பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக தடுக்­கப்­பட்டார்.


1976 : தெற்கு துருக்­கியில் போயிங் விமானம் ஒன்று மலை ஒன்­றுடன் மோதி­யதில் 155 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1978 : ஐ.நா.வில் சொலமன் தீவுகள் இணைந்­தன.


1983 : சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ், ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து சுதந்­திரம் பெற்­றது.


1985 : மெக்­ஸி­கோவில் இடம்­பெற்ற 7.8 ரிக்டர் நில­ந­டுக்­கத்­தினால் குறைந்­தது 9,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1989 : நைஜர் நாட்டில் பிரெஞ்சு விமா­ன­மொன்றில் குண்டு வெடித்­த­தனால் 171 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1997 : அல்­ஜீ­ரி­யாவில் தீவி­ர­ வாதிகள் 53 கிராம மக்­களைப் படு­கொலை செய்­தனர்.


2006 : தாய்­லாந்தில் இரா­ணுவப் புரட்­சியில் இரா­ணுவத் தள­பதி சோந்தி பூன்யா ரத்­கிலின் 
ஆட்­சியைக் கைப்­பற்­றினார்.


2010 : அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத் தில் 'டீப் வோட்டர் ஹொரைஸன்' எனும் எண்ணெய் அகழ்வு நிலை­யத்தில் ஏற்­பட்ட பாரிய கசிவு அடைக்­கப்­பட்­டது. இதனால் 11 பேர் இறந்­த­துடன் 49 லட்சம் பீப்பா அளவு எண்ணெய் கடலில் கசிந்­தது.

http://metronews.lk/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கணவனை பேஸ்புக்கில் விற்க முயன்ற மனைவி : காரணம் இதுவா ?

இலண்டனை சேர்ந்த ஒரு பெண்மணி தனது கணவரை பேஸ்புக் மூலம் விற்க முயன்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெரேசா, ராப் தம்பதியினர் இலண்டனில் வசித்து வருகின்றனர்.

Local_News.jpg

தெரேசாவிற்கு எவராவது சத்தமாக சூயிங்கம் மெல்வது  பிடிக்காத விடயமாம், அவ்வாறு யாரேனும் செய்தால் கோபத்தால் கொதிப்படைந்து விடுவாராம்.

தெரேசாவின் கணவர் ராப் தான் சூயிங்கத்தை சத்தமாக மெல்லும் வீடியோவை இணையத் தளத்தில் வெளியிட்டு தனது மனைவியை வெறுப்பேற்றும் முயற்சியில் இணையத் தளத்தில் வெளியிட முன்னர்  அந்த வீடியோவை தனது மனைவியிடம் அடிக்கடி போட்டு காண்பித்திருக்கிறார். 

இதைக்கண்டு எரிச்சலடைந்த தெரேசா  வீடியோவை நிறுத்துமாறும், சத்தத்தை குறைக்குமாறும் சொல்லியும் ராப் அதனை நிறுத்தாததால் பழிவாங்கும் முயற்சில் தனது கணவனை பேஸ்புக் மூலம் விற்றுவிடலாம் என முடிவு செய்துள்ளார் தெரேசா, 

பேஸ்புக்கில்,  ராப் கழிவறை வேலைகளை நன்றாக செய்வார் என்றும் அவரை நீங்கள் இலவசமாக வாங்கிக்கொள்ளலாம் என்பது போன்ற செய்திகளை பதிவேற்றியுள்ளார்.

இதைக்கண்டு மக்கள் சிரிப்பார்கள் என்று எதிர்பார்த்த அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது, 33 வயதான தனது கணவனை இலவசமாக திருடி செல்ல தெரேசா பதிவேற்றிய போஸ்ட்க்கு கமெண்ட்கள் வந்து குவிந்துள்ளது. 

இதை கண்டு அதிர்ந்த தெரேசா அந்த பதிவை உடனே நீக்கியுள்ளார்.

இந்த பதிவை கண்டு ராப் எந்த கோபமும் அடையவில்லையாம் என்பது தான் தெரேசாவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திவிட்டது என தெரேசா தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

ஆழ்குகையில் பறவைக்கூடுகள்... உயிரைப் பணயம் வைத்து அதை எடுக்கும் மனிதர்கள்... ஏன்?

 

கூடு  திரும்புதல் என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒன்று. நாம் வீடு திரும்புதல் போலத்தான் பறவைகளுக்கு கூடு திரும்புதல். தூக்கணாங்குருவி கூட்டிலிருந்து இருவாச்சி பறவைகளின் கூடுகள் வரை எல்லா கூடுகளுமே ஆச்சர்யங்கள் நிறைந்தவை. உலகின் மிகச்சிறந்த பொறியாளர்கள் எல்லாம் பறவை இனத்தின் கூடுகளில் இருந்துதான் தங்களை அப்டேட் செய்திருக்கிறார்கள்.  

கூடு


கற்பனை செய்துகொள்ளுங்கள். கடல்மட்டத்தில் இருந்து 2800 அடி உயரத்தில் இருக்கிற  மிகப் பெரிய காடு அது. அங்கே  இரண்டு நூற்றாண்டுக்கும் மேலாக  தண்ணீர் பாய்கிற உயரமான இடத்தில் இயற்கையாகவே  ஒரு குகை உருவாகிறது. எல்லாக் காலங்களிலும் ஈரப்பதத்தோடு இருக்கிற மிகப் பெரிய குகை. இருள் சூழ்ந்து வெளிச்சம் போகாத வண்ணம் அதன் வடிவமைப்பு அமைந்திருக்கிறது. குறிப்பிட்ட ஒரு வகையான பறவைகளின் கீச்கீச் சத்தங்கள் மட்டுமே அந்தக் குகைக்குள் நிரம்பி இருக்கிறது. இருளில் பறவைகளின் சத்தங்கள்தான் அவற்றுக்கான தகவல் தொடர்பு  மொழி. அப்பறவைகள் இனப்பெருக்கத்துக்கு முந்தையக் காலக்கட்டத்தில் கூடு கட்ட அக்குகையின் உயரமான ஓர் இடத்தை  தேர்ந்தெடுக்கின்றன.  

பறவை

ஆண் பறவை பெண் பறவை என இரண்டு இணைப்பறவைகளும் கூடு கட்டுவதற்கான செயலில் ஈடுபடுகின்றன. கூடு கட்டுவதற்கான எந்த பொருள்களும் அவற்றிடம் இல்லை. எந்த மூலப் பொருள்களும் இல்லாமல் வெறுமனே  கூட்டை கட்டத் தொடங்குகின்றன. எச்சிலில் இருக்கிற ஒரு வகையான திரவத்தை மூலதனமாக்கி கூட்டை கட்டுகின்றன. இரண்டு பறவைகளும் விடா முயற்சியில் இரண்டு மாதங்களில் கூட்டை கட்டி முடித்து விடுகின்றன. குடுவை வடிவில் வெண்மையான நிறத்தில் கூடு இருக்கிறது. காற்றுப் பட்டதும்  ஈரம் காய்ந்து கூடு பாறையைப் போல இறுகி விடுகிறது. 

கூடு கட்டி முடித்த பிறகே ஆண் பறவையும் பெண் பறவையும்  இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. (கழிப்பறை இருந்தால்தான் திருமணத்துக்கு சம்மதிப்பேன் என்கிற 'ஜோக்கர்' படத்தின் அடிப்படை விதியேதான் இங்கேயும்) முட்டையைக் கூட்டில் பத்திரப்படுத்தி அடைக்காக்கின்றன. அடைகாத்து  முட்டையிலிருந்து குஞ்சு  வெளி வருகிற காலம் வரை அந்த கூட்டுக்கு இரண்டு பறவைகளும் காவலுக்கு இருக்கின்றன. எதிரிகள் எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பாக அவை வளர்க்கப்படுகின்றன. இப்படி அந்தக் குகை முழுமைக்கும் நூற்றுக்கணக்கான பறவைகளும் பல நூறு கூடுகளும் இருக்கின்றன. எச்சிலில் கூடு கட்டுகிற அப்பறவையின் பெயர் எடிபில்  நெஸ்ட்  ஸ்விப்ட்லெட். 

பறவை

ஸ்விப்ட்லெட் பறவை இனங்களில் ஒருவகையாகிய இப்பறவைகள் தென்கிழக்கு ஆசியாவில் போர்னியோ தீவுகளிலும் சுமத்ரா தீவுகளிலும் மலேசியாவின் வட  கிழக்கு கடலோரப் பகுதிகளிலுள்ள உள்ள உயரமான குகைகளில் வசிக்கிறன. ஆண் பெண் என இணைந்து வாழக்கூடிய இப்பறவைகள் பகல் நேரங்களில் இரைதேடி சென்று இரவு கூடு திரும்புகின்றன. இந்தப் பறவைகள் இருண்ட குகைகளில் தங்கள் இணையை கண்டுபிடிப்பதற்கு எதிரொலியைப் பயன்படுத்துகின்றன. இனப்பெருக்க காலத்தில் ஒன்றிலிருந்து இரண்டு முட்டைகள் வரை இடும் இப்பறவைகள் இனப்பெருக்க காலம் முடிந்ததும் கூட்டை அப்படியே விட்டுவிடுகின்றன. பல நூறு ஆண்டுகளாக, கணக்கில்லாத ஸ்விப்ட்லெட்டுகள்  இங்கே  இனப்பெருக்கம் செய்கின்றன. 

பறவை


கூடுகள் கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. ஸ்விப்ட்லெட் பறவையின் கூடு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும்,  நுரையீரலை வலுப்படுத்தவும், இருமலைத் தடுக்கவும் உதவுவதாக பல நாடுகளிலும் நம்பப்படுகிறது. சீனாவில் ஆரம்பித்து மலேசியா, வியட்நாம் என உலகெங்கிலும் கூட்டின் விலை பல ஆயிரங்கள். பல ஆயிரங்களில் விலை இருக்கும் கூடுகளை சும்மா விடுவார்களா மனிதர்கள்? அக்கூடுகளை எடுக்க குகைகளின் ஆழமான பகுதிகளில்  உயிரைப் பணயம் வைத்து அறுவடை செய்துகொண்டிருக்கிறார்கள். 

பறவை

கடற்கரை மற்றும் மலை குகைகளுக்குள்ளே ஆழமாக காணப்படும் கூடுகளை அடைய  ஆபத்தான கட்டமைப்புகள், கிரேன்கள், ஏணிகள், கயிறுகள் என  குகை வாசலில் இணைக்கப்பட்டிருக்கின்றன. பார்வைக்கு ஒரு பதற்றமான இடமாகவே காட்சியளிக்கிறது. எந்த பிடிமானமும் இல்லாத உயரமான குகைக்குள் சென்றுவருவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பாசிப் படர்ந்த பாறைகளில் கயிறுகள் மூலம் பயணிப்பது, உயிரைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாதவர்களால் மட்டுமே செய்ய முடிகிற காரியம். குகைக்குள் மரத்தாலான ஒரு நடைபாதை இருக்கிறது.  ஒவ்வொரு படியும் மிகவும் கவனமாக வைக்க  வேண்டும். பாறைகளில் இருந்து கொட்டுகிற நீர் பலகைகளில் வழிந்து வழுக்கும் தன்மையுடன் இருக்கும். பதினெட்டு வயதிலிருந்து ஐம்பது வயதான முதியவர்கள் வரை கூட்டை எடுப்பதற்கு இரவு பகலென வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஏப்ரல் மாதம் இனப்பெருக்க காலத்தின் கடைசி காலம் என்பதால் அங்கேயே தங்கி கூடுகளை எடுக்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் ஸ்விப்ட்லெட் பறவையும் இருக்கிறது. கூடுகளை எடுப்பதை அரசு தடை செய்திருந்தாலும் கூடு வேட்டை இப்போதும்  மிகத்  தீவிரமாக நடந்து வருகிறது. 

 

உலகின் உள்ள எல்லா உயிருக்கும் ஒரு தொடக்கமும் முடிவும் இயற்கையிடம் இருக்கிறது. அவற்றின் சில முடிவுகள்  மட்டும்தான் மனிதனிடம் இருக்கிறது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஆஃப்கன் பெண்களின் புகைப்படங்கள்

ஆஃப்கன் பெண்படத்தின் காப்புரிமைFATIMA HUSSAINI

கலாசார பன்முகத்தன்மையை கொண்ட நாடு ஆப்கானிஸ்தான் அதன் ஒவ்வொரு மாகாணத்திற்கும், ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தன்மை, தனிப்பட்ட காலநிலை உண்டு. ஆஃப்கானிஸ்தானின் சில பகுதிகள் சமவெளியாகவும், சில பகுதிகள் விண்ணைத் தொடும் உயரம் கொண்ட மலைகளை கொண்டதாகவும் இருக்கிறது.

ஆஃப்கன் பெண்படத்தின் காப்புரிமைFATIMA HUSSAINI

இந்த பன்முகத்தன்மையால், நாட்டின் வெவ்வேறு இடங்களில் வசிப்பவர்கள் மாறுபட்ட அடையாளங்களை கொண்டிருப்பார்கள் என்பதும் புரிந்து கொள்ளக்கூடியதுதான். உண்ணும் உணவு, உடுத்தும் உடைகள், அருந்தும் பானங்கள் என அனைத்துமே இடத்திற்கு இடம் மாறுபடும்.

ஆஃப்கன் பெண்படத்தின் காப்புரிமைFATIMA HUSSAINI

ஃபாத்திமா ஹுசைனி, ஈரானில் புகைப்படம் தொடர்பான கல்வியை பயின்ற மாணவி. அவர் ஆஃப்கன் பெண்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானில் 2016-17 இல் தன்னுடைய புகைப்படங்களை கொண்டு, அவர் பல புகைப்பட கண்காட்சிகளை நடத்தினார்.

ஆஃப்கன் பெண்படத்தின் காப்புரிமைFATIMA HUSSAINI

பிபிசி பாரசீக பிரிவுக்கு சில புகைப்படங்களை வழங்கியிருக்கிறார் ஃபாத்திமா.

தனது புகைப்படங்களின் மூலம், பல்வேறு இடங்களை சேர்ந்த ஆப்கானிய பெண்களின் முகங்களையும் அவர்களுடைய வாழ்க்கை சூழலையும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார் ஃபாத்திமா.

ஆஃப்கன் பெண்படத்தின் காப்புரிமைFATIMA HUSSAINI

வெவ்வேறு ஜிர்காக்களாக பிரிக்கப்பட்டுள்ள ஆஃப்கானிஸ்தானில் பல்வேறு வகையான பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர்.

தெஹ்ரானில் உள்ள ஒரு ஸ்டுடியோவில், பக்தூன், தாஜிக், உஸ்பெக், கிஜீபாஷ் இனப் பெண்களின் புகைப்படங்களை எடுத்தார் ஃபாத்திமா.

ஆஃப்கன் பெண்படத்தின் காப்புரிமைFATIMA HUSSAINI

பாரம்பரிய, பழைய நம்பிக்கைகளை கொண்ட பெண்கள் புர்காக்களில் இருந்தாலும், தங்களுடைய வித்தியாசமான தனித்துவமான அழகை, அடையாளத்தை பதிவு செய்யவைக்க ஃபாத்திமா இந்த முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்த முயற்சியில் ஒரு பகுதியாக, பெண்களை தங்கள் பிரத்யேக பாரம்பரிய உடைகளில் புகைப்படங்கள் எடுத்தார்.

ஆஃப்கன் பெண்படத்தின் காப்புரிமைFATIMA HUSSAINI

புகைப்படத் துறையில் பட்டப்படிப்பு பயின்றுவரும் ஃபாத்திமா, தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு ஆஃப்கன் பெண்கள்.

ஆஃப்கன் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக வசதியாக வண்ணமயமான வாழ்க்கையை வாழ்ந்துவருவதாக ஃபாத்திமா கூறுகிறார்.

ஆஃப்கன் பெண்படத்தின் காப்புரிமைFATIMA HUSSAINI

நீண்ட காலமாக வன்முறை மற்றும் அடக்குமுறை ஆஃபாகானிஸ்தானை பாதித்திருந்தாலும், இந்த பெண்களிடமிருந்து அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை பறிக்கப்படவில்லை.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

பார்வையற்றவர்களுக்கு தற்காப்பு பயிற்சி தரும் பார்வையற்ற மாஸ்டர்

  • தொடங்கியவர்

அமேசான் அற்புதங்களை கொண்ட பிரேசிலின் பிரம்மாண்டம்!

அமேசான்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிரேசில்,பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் உலகின் ஐந்தாவது பெரிய நாடாக இருந்தாலும், வளமையான நீர் ஆதாரங்களையும், செழுமையான பல்லுயிர் பெருக்கத்தை கொண்ட நாடுகளில் முதலாவதாக திகழ்கிறது.

மழைக்காடுகளை இயற்கையின் கொடையாக பெற்றுள்ள பிரேசில், உலகில் உள்ள மழைக்காடுகளில் மூன்றில் ஒரு பகுதியை தன்னகத்தே கொண்டது. பல்வேறு வகையான வெவ்வேறு உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை பிரேசிலில் நிலவுகிறது.

பூமியில் வசிக்கும் உயிரினங்களில் 30 சதவிகிதம் அமேசான் மழைக்காடுகளில் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெவ்வேறு விதமான 40 ஆயிரம் தாவர இனங்கள், 430 வகை பாலூட்டிகள், இரண்டரை மில்லியனுக்கும் அதிகமான பூச்சி வகைகளை உள்ளடக்கிய அமேசான் மழைக்காடுகளில் ஆண்டுதோறும் புதிய வகை உயிரினங்கள் கண்டறியப்படுவது குறிப்பிடத்தக்கது.

அமேசான்படத்தின் காப்புரிமைAFP

இவற்றில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு, உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளை கொண்ட பிரேசிலில் காணப்படுகிறது. இந்த தனித்துவமான வாழ்விடத்தில் அனைத்துவிதமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை ஒன்றிணைக்கின்ற ஒற்றை விஷயம் இங்கு பெய்யும் மழையே.

பூமியின் கீழ்ப்பகுதியில் இருப்பதால் அமேசான் பகுதியில் அதீத மழைப் பொழிவு காணப்படுகிறது. பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் காடுகளில் இருந்து வெளிவரும் வெப்பம், அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும் ஈரப்பதத்தை ஆவியாக்குகிறது.

பிறகு அது கிழக்கு வணிகக்காற்றால் கொண்டு செல்லப்படுகிறது. ஆவியாகும் நீர் மேலே சென்று, சுருங்கி நிலையான மழை மேகங்களாக உருமாறுகிறது, மழை மேகங்கள் கனமழையை பொழிகின்றன. இது மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் தொடர்வதால் அமேசானில் மழைவளம் அதிகமாக இருக்கிறது.

அமேசான் ஆற்றின் டால்பின், ரியோ நீக்ரோ நதியில்படத்தின் காப்புரிமைKEVIN SCHAFER

மழைக்காடுகளின் வழியாக சுமார் 400 மைல்கள் பயணித்து கடலில் கலக்கும் அமேசான் ஆறு உலகின் இரண்டாவது நீளமான நதியாகும். கொண்டு வரும் நீரின் அளவின் அடிப்படையில் பார்த்தால், அமேசானே உலகின் மிகப்பெரிய ஆறாகும். இளஞ்சிவப்பு டால்பின்கள், போடோ, சிவப்பு வண்ண பிரானாக்கள் போன்ற தனிப்பட்ட இனங்கள் அமேசானில் வாழ்கின்றன. இந்தப் பகுதியின் நீர் சுழற்சியில் அமேசான் நதி முக்கிய பங்காற்றுகிறது. வனத்தில் இருக்கும் அளவுக்கு அதிகமான நீரை, காட்டில் இருந்து கடலுக்கு கொண்டு செல்கிறது அமேசான்.

அமேசான் படுகையின் தெற்கில் இருந்து பயணித்தால், உலகின் மிகப்பெரிய, நன்னீர் ஈரநில அமைப்புகளில் ஒன்றான வாஸ்ட் பந்த்தானல் (vast Pantanal)ஐ பார்க்கலாம். பராகுவே நதி மற்றும் அதன் துணையாறுகளால் உருவாக்கப்பட்டிருக்கும் சதுப்பு நிலங்கள் மற்றும் ஏரிகளால் பிலானாட்லோ (Planalto) மலைப்பகுதிகள் பிரிந்துள்ளன.

இந்த சமவெளி பிரதேசத்தில் நிலவும் தட்பவெட்பநிலை, வழக்கமான வெள்ளம் மற்றும் வறட்சி அமைப்பானது, ஹெலிகாப்டர் டேம்செல்ஃபீஸ் (helicopter damselflies) போன்ற பூச்சியினங்கள், நதி நீர்நாய்கள் (giant river otters), ஜாகுவார்கள், செந்நீல ஐவண்ணக்கிளி (Hyacinth Macaws) போன்ற அற்புதமான, தனித்துவமான உயிரின்ங்களுக்கு வாழ்விடமாக இருக்கிறது.

அமேசான்படத்தின் காப்புரிமைEPA

மேலும் தெற்காக பயணித்தால், அர்ஜெண்டினா எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் ஆனந்த அதிர்ச்சியூட்டும் இகுவாசு நீர்வீழ்ச்சியை (Iguazu Falls) காணலாம்.

குதிரை வடிவத்தில் அமைந்துள்ள இகுவாசு நீர்வீழ்ச்சி, 275 தனிப்பட்ட அருவிகளை உள்ளடக்கியது. பெரிய ஆண்டீடெர்ஸ் (Giant anteaters), தும்பிக்கை பன்றி அல்லது தும்பிப்பன்றி (tapir), ஹாவ்லர் இன பபூன் குரங்குகள் (howler monkeys) போன்ற விலங்குகளும், இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து தெறிக்கும் நீரால் ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்ளும் இந்த துணை வெப்பமண்டல மழைக்காடுகளில் வாழ்கின்றன.

உலகின் மிகப்பெரிய நாடுகள் பட்டியலில் பிரேசில் ஐந்தாவது இடத்தில் இருந்தாலும், ஈரப்பதம் மற்றும் காடுகளைக் கொண்ட பரப்பளவு அதிகம்.

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

வைரலாகும் விஜய் நடிக்கும் மெர்சல் படத்தின் டீசர் போஸ்டர்..!

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் டீசர் போஸ்டர் வெளியாகியுள்ளது.

DKGJOkQU8AACEQD_21331.jpg


விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தை அட்லி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேல், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியானது. படத்தின் டீசரை ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.  அட்லியின் பிறந்தநாளான செப்டம்பர் 21-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதற்கு முன்னதாக டீசர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் போஸ்டரில் காளை மேல் விஜய் கை வைத்து நிற்க, அருகில் நித்யாமேனன் ஒரு குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு உட்காந்திருக்கிறார். அந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது. 

  • தொடங்கியவர்

உலகின் வயதான பெண்மணி காலமானார்

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர் வயலட் பிரவுன். உலகின் வயதான மனிதராக அறியப்பட்டிருந்த இவர் இன்று காலமானார். இவர் வயது 117.

உலகின் அதிக வயது வரை வாழும் மனிதர்களில் இத்தாலியைச் சேர்ந்த எம்மா மொரானோ என்ற பெண்மணியே இருந்து வந்தார். இவர் சில தினங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். இதையடுத்து, உலகில் வாழும் வயதான மனிதராக ஜமைக்காவைச் சேர்ந்த வயலட் பிரவுன் அறியப்பட்டிருந்தார். 1900-ம் வருடம் பிறந்த இவருக்கு இந்த வருடம்தான் 117 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. உலகின் வயதான மனிதருக்கான கின்னஸ் ரெக்கார்டையும் இவர் பெற்றுள்ளார்.

காலமானார்

 

இவர் பன்றிக்கறி, கோழி இறைச்சியைத் தவிர அனைத்து உணவுகளையும் விரும்பி உண்பதாகக் கூறியிருந்தார். தன்னுடைய உணவுப் பழக்கவழக்கங்களில் இவர் மிகவும் கவனமாக இருப்பாராம். ஜமைக்காவில் தனது 97 வயது மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்த வயலட் பிரவுன் இன்று காலமானார். இவர் விக்டோரியா மகாராணி வாழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

கோலிக்குப் பாகிஸ்தான் போலீஸ் விட்ட தூது!

 

ரன் மெஷின், சேஸிங் கில்லி, கெத்து கேப்டன் என்று கிரிக்கெட் உலகின் ராக்ஸ்டாராக வலம் வந்துகொண்டிருப்பவர் கோலி. இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பல கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளே கோலிக்குத் தீவிர ரசிகர்களாக உள்ளனர். குறிப்பாக, கோலி இந்திய கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு அவரது புகழ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவ ஆரம்பித்தது.

பாகிஸ்தான் போலீஸ்காரர்

 


இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனையான டேனியல் வட், கோலிக்கு லவ் ப்ரப்போஸ் செய்திருந்தார். இந்நிலையில், கோலிக்கு இம்முறை பாகிஸ்தானிலிருந்து ப்ரப்போஸல் வந்துள்ளது. பாகிஸ்தானில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வாரம் பாகிஸ்தான் அணிக்கும் உலக லெவன் அணிக்கும் இடையே டி20 தொடர் நடைபெற்றது. இதனிடையே, கடந்த 15-ம் தேதி லாகூரில் நடைபெற்ற போட்டியின்போது அங்கு ஏராளமான ரசிகர்கள் இந்திய வீரர்களின் பெயர்கள் குறித்த பதாகைகளை வைத்திருந்தனர். குறிப்பாக, வீ மிஸ் தோனி, கோலி... பாகிஸ்தானில் விளையாடுங்கள் என்று கூறியிருந்தனர். ஆனால், இதையெல்லாம் தாண்டி கவனத்தை ஈர்த்தவர் ஒரு போலீஸ். அவர் தன் கையில் இருந்த பேனரில், கோலி என்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள் (Kohli Marry Me) என்று கூறியிருந்தார். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பொருள் புதுசு: மடக்கும் போன்

 

 
phonejpg

சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டில் மடக்கும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. கேலக்சி நோட் வரிசையில் இது வெளியாகும். ஓஎல்இடி தொழில்நுட்பத்தில் இதன் தொடுதிரை இருக்கும்.

ரோபோ நடனம்

 

robojpg
 

சீனாவில் 1069 ரோபோக்களை நடனம் ஆட வைத்து கின்னஸ் சாதனை செய்துள்ளனர். டபிள்யூ எல் என்கிற நிறுவனம் தயாரிக்கும் இந்த ரோபோ குரல் வழி கட்டளைக்கு ஏற்ப இயங்கும்.

ஒளிரும் கீ போர்ட்

 

keyboardjpg
 

எக்ஸ்-பவுஸ் என்கிற நிறுவனம் விரல்களில் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ற வகையில், புதிய கீ போர்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த கீ போர்ட் எல்இடி விளக்கில் ஒளிரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பறக்கும் கார்

 

carjpg
 

சீனாவைச் சேர்ந்த டென்செண்ட் நிறுவனம் பறக்கும் கார் தயாரிப்பதற்காக ஜெர்மனைச் சேர்ந்த லில்லியன் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் 600 கோடி முதலீடு செய்துள்ளது. முதற்கட்டமாக 2 பேர் பயணிக்கும் பறக்கும் காரை சோதித்துள்ள இந்த நிறுவனம் அடுத்த கட்டமாக 5 பேர் பயணிக்கும் பறக்கும் காரை உருவாக்கி வருகிறது. தரையிலிருந்து நேரடியாக உயரே எழும்பும் இந்த கார், 300 கிலோமீட்டார் வேகத்தில் பறக்கும். மின்சார பேட்டரி மூலம் இயங்குவதால் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு இருக்காது. டிவிட்டர், ஸ்கைப் நிறுவனங்களின் இணை நிறுவனர்களிடமிருந்து லில்லியன் நிதி திரட்டி உள்ளது.

நீளமான நகரும் பாதை

 

wayjpg
 

உலகின் மிக நீளமான நகரும் நடைபாதை ஹாங்காங்கின் மத்திய பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் நகரத்தின் குயின் ரோடு, கண்டிட் ரோடி, மிட் லெவல் என பல முக்கிய வர்த்தக மையங்களை இந்த நகரும் பாதை இணைக்கும். 800 மீட்டர் நீளத்துக்கு இது அமைக்கபட்டுள்ளது. இந்த நகரும் நடைபாதை சில இடங்களில் மேலே ஏறும் படிக்கட்டுகளாகவும் இருக்கும். 78,000 பாதாசாரிகள் இதை தினசரி பயன்படுத்துகின்றனர். 1993-ல் திறக்கப்பட்ட இந்த நடைபாதை இப்போது முழுவதும் நகரும் பாதையாக உருவாகியுள்ளது

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ஜிம்மிக்கி கம்மல் ஷெரில் என்ன சொல்றாங்கனு பாருங்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, நவீனன் said:

கணவனை பேஸ்புக்கில் விற்க முயன்ற மனைவி : காரணம் இதுவா ?

இலண்டனை சேர்ந்த ஒரு பெண்மணி தனது கணவரை பேஸ்புக் மூலம் விற்க முயன்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெரேசா, ராப் தம்பதியினர் இலண்டனில் வசித்து வருகின்றனர்.

Local_News.jpg

தெரேசாவிற்கு எவராவது சத்தமாக சூயிங்கம் மெல்வது  பிடிக்காத விடயமாம், அவ்வாறு யாரேனும் செய்தால் கோபத்தால் கொதிப்படைந்து விடுவாராம்.

தெரேசாவின் கணவர் ராப் தான் சூயிங்கத்தை சத்தமாக மெல்லும் வீடியோவை இணையத் தளத்தில் வெளியிட்டு தனது மனைவியை வெறுப்பேற்றும் முயற்சியில் இணையத் தளத்தில் வெளியிட முன்னர்  அந்த வீடியோவை தனது மனைவியிடம் அடிக்கடி போட்டு காண்பித்திருக்கிறார். 

இதைக்கண்டு எரிச்சலடைந்த தெரேசா  வீடியோவை நிறுத்துமாறும், சத்தத்தை குறைக்குமாறும் சொல்லியும் ராப் அதனை நிறுத்தாததால் பழிவாங்கும் முயற்சில் தனது கணவனை பேஸ்புக் மூலம் விற்றுவிடலாம் என முடிவு செய்துள்ளார் தெரேசா, 

பேஸ்புக்கில்,  ராப் கழிவறை வேலைகளை நன்றாக செய்வார் என்றும் அவரை நீங்கள் இலவசமாக வாங்கிக்கொள்ளலாம் என்பது போன்ற செய்திகளை பதிவேற்றியுள்ளார்.

இதைக்கண்டு மக்கள் சிரிப்பார்கள் என்று எதிர்பார்த்த அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது, 33 வயதான தனது கணவனை இலவசமாக திருடி செல்ல தெரேசா பதிவேற்றிய போஸ்ட்க்கு கமெண்ட்கள் வந்து குவிந்துள்ளது. 

இதை கண்டு அதிர்ந்த தெரேசா அந்த பதிவை உடனே நீக்கியுள்ளார்.

இந்த பதிவை கண்டு ராப் எந்த கோபமும் அடையவில்லையாம் என்பது தான் தெரேசாவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திவிட்டது என தெரேசா தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk

கோபுரத்தின் அழகு கிட்ட இருந்து பார்த்தால் தெரிவதில்லை எண்டதுக்கு இந்த செய்தி நல்ல உதாரணம் கண்டியளோ. :grin:

  • தொடங்கியவர்
இதயம் காற்றாகிக் கரைய வேண்டுமா?
 

image_1de8b00c12.jpgகால வரையறைக்குட்பட்டு வாழுகின்ற நாம், அவற்றுக்கு அப்பால் எங்கள் அறிவுக்குப் புலப்படாத இறைவனை எப்படி உணர முடியும்? 

இந்த இறை சக்தியை எமது பக்தி மூலமே உணர முடியும். பக்தி கூட ஒரு வைராக்கிய சிந்தனையுடன் பிறப்பதாகும்.  

‘சர்வக்ஞனான’ எல்லாம் தெரிந்த ஈசன், எங்களது தேவைகளை உணர்ந்தவனுமாவான். எமது ஜென்மப் பிறவிப்பயனை அனுபவிக்க வைப்பவனும் இவன்தான். 

பக்தி, மனதைக் கசியச்செய்யும் தன்மையுடையது. மனத்தில் இறுக்கம் இருந்தால், பிறரிடம் மட்டுமல்ல, எந்த உயிரிடமும் இரக்கம் தோன்றாது. நெஞ்சம் மரத்த நிலையில் வாழ்க்கையே பிடிப்பு இல்லாமல் போய்விடும்.  

எனவே, நாம் எங்களை ஸ்திரப்படுத்த, ஒரு பலமான சக்தியிடம் லயிப்பை ஏற்படுத்தியே ஆகவேண்டும். அதற்கு உகந்த இடம் இறைவன் சந்நிதானம் ஆகும். இதயம் காற்றாகிக் கரைய வேண்டுமா? அங்கே செல்லுங்கள். 

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று….

செப்டெம்பர் – 20

 

1187 : எகிப்து, சிரி­யாவின் முத­லா­வது சுல்­தா­னான  சலாடின் ஜெரு­ஸலேம் மீதான முற்­று­கையை ஆரம்­பித்தார்.


1519 : போர்த்­துக்­கேய கட­லோடி பேர்­டினண்ட் மகலன் 270 பேருடன் ஸ்பெயின் நாட்டின் சான்­லூகர் டி பர­மேடா என்ற இடத்தில் இருந்து உலகைச் சுற்­றி­வரப் புறப்­பட்டார்.


varalru11633 : சூரி­யனைப் பூமி சுற்­று­வ­தாகத் தெரி­வித்த இத்­தா­லிய விஞ்­ஞானி கலி­லியோ கலிலி, கத்­தோ­லிக்க மத­குரு மாடத்தின் முன்னால் விசா­ரிக்­கப்­பட்டார்.


1697 : ஒன்­ப­தாண்டுப் போரை (1688:1697) முடி­வுக்குக் கொண்­டு­வரும் பொருட்டு பிரான்ஸ், இங்­கி­லாந்து, ஸ்பெயின், புனித ரோமப் பேர­ரசு, டச்சுக் குடி­ய­ரசு ஆகி­ய­வற்­றிற்­கி­டையில் சமா­தான உடன்­பாடு எட்­டப்­பட்­டது. 


1854 : பிரித்­தா­னியா மற்றும் பிரெஞ்சுப் படை­யினர் கிறி­மி­யாவில் இடம்­பெற்ற போரில் ரஷ்­யர்­களைத் தோற்­க­டித்­தனர்.


1857 : கிழக்­கிந்­தியக் கம்­ப­னிக்கு விசு­வா­ச­மான படைகள் டெல்­லியைக் கைப்­பற்­றினர். சிப்பாய் எழுச்சி முடி­வுக்கு வந்­தது.


1881 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜேம்ஸ் கார்பீல்ட் கொலை செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து  அந்­நாட்டின் 21 ஆவது ஜனா­தி­ப­தி­யாக செஸ்டர் ஏ. ஆர்தர் பத­வி­யேற்றார்.


1932 : மகாத்மா காந்தி புனே சிறையில் உண்­ணா­வி­ர­தத்தை ஆரம்­பித்தார்.


1945 : மகாத்மா காந்­தியும், ஜவ­கர்லால் நேருவும் பிரித்­தா­னியப் படை­களை இந்­தி­யா­வி­லி­ருந்து வெளி­யேறக் கோரினர்.


1966 : சேர்­வெயர் 2 விண்­கலம் சந்­தி­ரனை நோக்கிச் செலுத்­தப்­பட்­டது.


1976 : துருக்­கியில் விமானம் ஒன்று வீழ்ந்­ததில் அதில் பயணம் செய்த 155 பேரும் கொல்­லப்­பட்­டனர்.


1977 : வடக்கு வியட்நாம் ஐநாவில் இணைந்­தது.


1979 : மத்­திய ஆபி­ரிக்கக் குடி­ய­ரசில் இடம்­பெற்ற இரா­ணுவப் புரட்­சியை அடுத்து பேர­ரசன் முதலாம் பொக்­காசா பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டார்.


1984 : லெப­னானில் பெய்ரூத் நகரில் அமெ­ரிக்க தூத­ர­கத்தின் மீது நடத்­தப்­பட்ட  தற்­கொலைத் தாக்­கு­தலில் 22 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1990 : தெற்கு ஒசே­ஷியா ஜோர்­ஜி­யா­விடம் இருந்து பிரி­வ­தாக சுதந்­திரப் பிர­க­டனம் செய்­து, அறி­வித்­தது. ஆனால் எந்த நாடும் அங்­கீ­க­ரிக்­க­வில்லை.


2001 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் “பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான யுத்­தத்தை” பிர­க­டனம் செய்தார்.


2008 : பாகிஸ்தான் தலை­நகர் இஸ்­லா­மா­பாத்­தி­லுள்ள “மெரியொட்” ஹோட்­ட­லுக்கு முன்னால் இடம்­பெற்ற குண்­டுகள் நிரப்­பப்­பட்ட லொறியொன்று வெடித்ததில் 54 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 266 பேர் காயமடைந்தனர்.


2011 : அமெரிக்கப் படையினர்  ஓரின சேர்க்கை பழக்கம் குறித்து வெளிப்படையாக பேசுவதற்கான தடையை அமெரிக்கா நீக்கியது.
 

http://metronews.lk

  • தொடங்கியவர்

ஒருநாளின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க குழந்தைகளுடன் இப்படி திட்டமிடலாமா? #GoodParenting

 
 

குழந்தை

காலையில் கண் விழித்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் செல்ல வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் விருப்பம். அனைத்து வீடுகளில் அதற்கான திட்டமிடுவார்கள். அந்தத் திட்டமிடலில் கணவன், மனைவி, வீட்டிலுள்ள மூத்தவர்கள் இடம்பெறுவர். ஆனால், அந்தப் பட்டியலில் அநேக வீடுகளில் குழந்தைகளைச் சேர்ப்பதில்லை. இது சரியான விதம் இல்லை. ஏனெனில், நமக்குப் பெரும் சந்தோஷத்தை அளிப்பவர்கள் குழந்தைகளே. எனவே, அவர்களையும் இணைத்துக்கொண்டு ஒருநாளுக்கான திட்டமிடலை எப்படிச் செய்யலாம் எனப் பார்ப்போம்.

காலையில் குழந்தைகளை எழுப்புவதே பெரிய வேலை என்று பல பெற்றோர்கள் கூறுவதுண்டு. அதைப் பெற்றோர் தன் வேலையாக அமைத்துகொள்ளாமல் பிள்ளைகள் தாங்களாவே எழுந்திருக்க வைக்கச் செய்யலாம். உதாரணமாக... வீட்டின் தோட்டத்தில் மூன்று விதமான செடிகள் நடுங்கள். அதில் ஒன்று அல்லது இரண்டு செடிகளை 'உங்களுடையவை' எனப் பிள்ளைகளிடம் கூறுங்கள். சூரிய உதயத்துக்கு முன் அவரவர் செடிகளுக்கு நீர் ஊற்ற வேண்டும் என்பதாக முடிவெடுங்கள். அடுத்த நாள் காலையில் உறங்கிகொண்டிருக்கும் குழந்தையிடம், 'எங்களுடைய செடிகளுக்கு நீர் ஊற்றினோம். இலைகளை அசைத்து 'தேங்க்ஸ்' சொல்லின. உன்னுடைய செடி மட்டும் பாவம் நீர் இல்லாமல் தவிக்கிறது' எனக் கூறுங்கள். அதைக்கேட்டு அவர்கள் தானாகவே எழுந்திருக்கத் தொடங்கிவிடுவர். 

செய்தித்தாள் என்பது பெரியவர்களுக்கானது மட்டுமல்ல. குழந்தைகளுக்கும் அதில் படிப்பதற்குச் செய்திகள் உள்ளன. அதனால், அவர்களுக்கான செய்திகள் எதுவென நீங்கள் நினைக்கிறீர்களோ, அவற்றைச் சுற்றி வட்டமிடுங்கள் அல்லது கார், விமானம் படத்தை வரையுங்கள். பின், செய்தித்தாளை உங்கள் பிள்ளைகளிடம் கொடுத்தால் ஆர்வமாகப் படிப்பார்கள்.

குழந்தைகளை, காலை டிபனைச் சாப்பிட வைப்பதற்குள் போதும்போதும் என்றாகி விடுகிறது எனக் கவலைப்படும் பெற்றோர் இருக்கின்றனர். அவர்கள், உணவைச் சமைக்கும் முன் குழந்தைகளின் விருப்பதைக் கேட்டுச் சமைக்கலாம். ஒருவேளை அவர்கள் விரும்பியதைச் சமைக்க முடியாத நிலை என்றால் (ஜங்க் ஃபுட் கேட்கும்போது) நீங்கள் செய்யும் உணவு வகையை அவர்கள் விரும்பும் வகையில் பரிமாறலாம். தோசையின் மீது வெண்டை, வெங்காயம், வெள்ளரியை நறுக்கி மனிதன் போல உருவம் செய்துகாட்டி உணவின் மீது ஆர்வத்தை ஈர்க்கலாம். அதேபோல மதிய உணவையும் லஞ்ச் பாக்ஸில் அழகாக டெக்கரேட் செய்து வைக்கும்போது, பார்த்தவுடனே சாப்பிடும் எண்ணம் உருவாகும். இதனால், பாதி உணவை மட்டும் சாப்பிடும் பழக்கம் உங்கள் குழந்தையிடமிருந்து விலகும். உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, மாலை நேரத்தில் அந்த லஞ்ச் பாக்ஸைப் பார்த்தவுடனே உங்களுக்கு வரும் கோபத்துக்கு விடைக்கொடுக்கலாம்.

children

பள்ளி வேனில் அனுப்புவதை விடவும், அலுவலகம் செல்லும்போது குழந்தைகளைப் பள்ளிவிட்டுச் செல்வது நல்ல பழக்கம். அப்போது போக்குவரத்து நெரிசல் இல்லாத இடங்களில் ஏதேனும் பேசிக்கொண்டும், பாடிக்கொண்டும் செல்வது பள்ளிக்குச் செல்லும்போது குழந்தைகளுக்கு இருக்கும் பயத்தைக் குறைக்கும். 

மாலையில் வெளியே செல்வது என்றால், எங்குச் செல்வது எனத் திட்டமிடும்போது குழந்தைகளின் அபிப்பிராயத்தையும் கேளுங்கள். அந்த இடத்தின் அருகில் உங்களின் நண்பர் வீடு இருக்கிறது, விலை குறைவாக இருக்கும் என்பதை மட்டும் பார்க்காமல், குழந்தைகள் அங்கு செல்ல விரும்புகிறார்களா என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடிக்காத இடம் என்றால், விரைவிலேயே சோர்ந்து, வீட்டுக்கு அழைத்துக்கொண்டே இருப்பார்கள். அதனால் நீங்கள் வாங்க நினைத்த அல்லது செலவிட நினைத்த நேரத்தை அங்கே செலவிட முடியாது. அதனால், வெளியே சென்று வந்த மகிழ்ச்சியும் உங்களுக்குக் கிடைக்காது. 

ஒருநாளின் முடிவில் உடல் மற்றும் மனம் ரீதியான களைப்பு இருக்கவே செய்யும். அதற்காகத் தனித்தனியான ரிலாக்ஸ் முயற்சிகளில் ஈடுபடாமல், குழந்தைகளோடு சேர்ந்து ஏதேனும் விளையாடுவது, கதை சொல்வது போன்றவற்றில் ஈடுபடலாம். ஏனெனில் ஒரு நாள் முடிவு என்பது குழந்தைகளுக்கும்தான். பள்ளியில், நண்பர்களிடம், செல்லும் வழியில்... பல இடங்களில் சோர்ந்து போகச் செய்யும் சம்பவங்கள் குழந்தைகளுக்கு நேர்ந்திருக்கலாம். அதிலிருந்து மீள்வதற்குப் பெற்றோர்தான் உதவ வேண்டும். 

 

குழந்தை வளர்ப்பு என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும் என்றாலும் சில அடிப்படை விஷயங்கள் பெரிய அளவில் மாறாது. எனவே அவர்களின் எண்ணவோட்டத்தைப் புரிந்துகொண்டு பெற்றோரும் சில தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சமந்தா திருமணம்: வைரலாகும் புகைப்படங்கள்!

சமந்தா திருமணம்: வைரலாகும் புகைப்படங்கள்!

 

கர்ஷா பஜாஜ் வடிவமைத்த ஆடையில் கலக்கும் சமந்தாவின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2010-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் சமந்தா, நாக சைதன்யாவின் நடிப்பில் வந்த தெலுங்கு படம் "ஏ மாய சேசவே". இப்படத்தில் முதல் முதலாக இணைந்து நடித்ததன் மூலம் இருவரும் காதலிக்க தொடங்கினர். 

இதையடுத்து, நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி 29-ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிச்சயதார்த்தம் நிகழ்ச்சியில் மிகவும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 6, 7 ஆகிய தேதிகளில் இவர்களது திருமணம் நடக்கயிருக்கிறது. இதன் விளைவாக இரு வீட்டாரும் வரும் 1-ம் தேதி கோவா செல்ல உள்ளனர். இந்த திருமணத்திற்கு வெறும் 150 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த திருமணத்தைத் தொடர்ந்து வரும் 10-ம் தேதி ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கயிருக்கிறது. இதில், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

திருமணத்திற்க்கு இன்னும் இரு வாரங்கள் உள்ள நிலையில், இப்போதிலிருந்தே திருமண ஆடைகளில் வலம் வர தொடங்கிவிட்டார் நடிகை சமந்தார். அந்த வகையில் சமந்தாவின் திருமண ஆடை வடிவமைக்கும் பணியில் கர்ஷா பஜாஜ் ஈடுபட்டு வருகிறார். அவர் வடிவமைக்கும் ஒவ்வொரு ஆடையிலும் தற்போது சமந்தா ட்ரையல் பார்த்து வருகிறார். 

http://zeenews.india.com

21903460_1603724789687496_205085013_n.pn

21905303_1603727143020594_1370040261_n.p

21935230_1603727303020578_611078037_n.pn

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முதலாம் உலகப் போரில் இந்தியர்களின் அளப்பறிய பங்கு!

  • தொடங்கியவர்

பொதுவாக விடிகாலையில்தான் வேட்டைக்கு கிளம்புகிறது

 

பனிச் சிறுத்தைகள் அழியும் நிலையைத் தாண்டியுள்ளதாக , பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது . அழிவில் விளிம்பில் இருந்த ஒரு காட்டு விலங்கு , தப்பிப் பிழைத்து கொஞ்சம் முன்னேற்றமான நிலைக்கு வந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . . இந்த நிலை வந்தும் களவில் வேட்டையாடுபவர்களால் கொல்லப்படுவது ஒருபுறம் இருக்க  , இவை வாழும் காட்டுப் பிராந்தியங்களை அழிப்பதாலும், ஆபத்தான நிலை மீண்டும் வரலாமென வல்லுனர்கள் எச்சரித்துள்ளார்கள்.

பொதுவாக விடிகாலையில்தான் வேட்டைக்கு கிளம்புகிறது

மத்திய ஆசியாவின் மலைப் பிராந்தியங்களில் வாழ்கின்ற இவை ,  1972இல் முதல் தடவையாக அழிவின் விளிம்பில் உள்ள காடு விலங்கு என்று பிரகடனப்படுத்தப்பட்டது .ஒரு காலத்தில்  2,500 வளர்ந்த புலிகளே இருந்திருக்கின்றன . இவை சீக்கிரம் அழிந்து விடும் என்று சொல்லப்பட்டது . ஆனால் இந்த நிலை இன்று மாறி இருப்பதாக கூறுகிறார்கள் .சமீப காலங்களில் ,இவை  வாழும் பிரதேசங்களும் அதிகரித்திருப்பதாக அவதானிகள் கருதுகிறார்கள் .

பொதுவாக விடிகாலையில்தான் வேட்டைக்கு கிளம்புகிறது

கால்நடைப் பண்ணைகள் இன்றைய நாட்களில் நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் இருப்பதால் , புலிகள் கால்நடைகளைக் கொல்வதோ அல்லது பழிக்குப் பழியாக மனிதர்களால்  புலிகள் கொல்லப்படுவதோ இப்போது இல்லாமையும் , இந்த விலங்குகள் அதிகரிப்புக்கு ஒரு காரணமாக எடுத்துள்ளார்கள் .மிக அரிதாக மனிதர்களுக்கு தென்படும் இந்தப் பனிச் சிறுத்தைகள் இமாலயா, ரஷ்ய மலைப் பிராந்தியங்களில் காணப்படுகின்றன . நேபாளம் , மொங்கோலியா. பாகிஸ்தான் , சீனா , ஆபுகானிஸ்தான் ஆகிய நாடுகளில் பனிப் புலிகளைக் காணமுடியும் . 12உலக நாடுகளில்  1.8மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இவை வாழ்கின்றன என்று கணித்துள்ளார்கள்.

பொதுவாக விடிகாலையில்தான் வேட்டைக்கு கிளம்புகிறது

தனியானகவே திரியும் இந்த விலங்கு, பொதுவாக விடிகாலையில்தான் வேட்டைக்கு கிளம்புகிறது . அதே போல இருட்டிக் கொண்டுவரும் கருக்கல் நேரத்திலும் இது வேட்டையாட விரும்புகிறது . தன்னை விட மூன்று  மடங்கு அதிக எடை கொண்ட இரையை இதானால் கொல்ல முடியும் என்கிறார்கள் . உரோமத்துக்காகவே இதனை வேட்டையாடுகிறார்கள் .இதன் உடலை வெப்பமாக வைத்திருக்க உதவும் இந்த தடித்த உரோமத்தின் நிறம் காலத்துக்கேற்றவாறு மாறும் தன்மை கொண்டது . பொதுவாக 3,000-4,500மீட்டர் உயரத்திலேயே இவை காணப்படும்   என்கிறார்கள்.  கொல்லும் ஆசை இல்லையென்றால் எல்லாமே நலந்தான்!

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்

 
 

செரினா வில்லியம்ஸ்

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், இப்போது தாய்மையை முழுமையாக அனுபவித்துக்கொண்டிருக்கிறார். செப்டம்பர் முதல் தேதி, அவருக்குப் பெண் குழந்தைப் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு, அலெக்ஸிஸ் ஒலிம்பியா ஓஹானியன் ஜுனியர் (Alexis Olympia Ohanian Junior) என்று பெயர் சூட்டியிருக்கிறார் செரினா. தாய்மையைக் கொண்டாடும்விதமாக, தனது குழந்தைக்காக இன்ஸ்டாகிராமில் பக்கம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். தன் குழந்தையை அணுஅணுவாக ரசிக்கும் செரினா, தன் தாய் ஒரசினி ப்ரெஸிற்கு (Oracene Price) உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருப்பது இணையத்தில் செம்ம ஹிட்!  செரினாவின் அம்மா ஒரு டென்னிஸ் பயிற்சியாளர். செரினா வில்லியம்ஸிற்கும் அவரின் சகோதரி வீன்ஸ் வில்லியம்ஸிற்கும்  பயிற்சியாளராக இருந்திருக்கிறார்.  அந்தக் கடிதத்தின் தமிழாக்கம்... 

அன்புள்ள அம்மாவுக்கு... 

எனக்குத் தெரிந்து, நீங்கள்தான் மிகவும் உறுதியான பெண் அம்மா. இப்போது நான் என் மகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் (ஓ மை காட்! எனக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது). அவளுக்கு என்னைப்போலவே கைகளும் கால்களும் இருக்கின்றன. மிகவும் உறுதியான, திடமான, சக்திகொண்ட கைகளும் உடலும் அவளுக்கு இருக்கிறது. நான் 15 வயது முதல் இன்று வரை என் வாழ்க்கையில் என்னென்ன அனுபவித்தேனோ, அவற்றை எல்லாம் இவள் எதிர்கொண்டால், என்ன செய்வாள் என்று சிந்தித்துப் பார்க்கிறேன். 

என்னைப் பலமுறை ஆண் என்று இந்த உலகம் அழைத்திருக்கிறது. நான் மிகவும் உறுதியானவளாகத் திகழ்ந்தேன். நான் போதை மருந்து உட்கொள்கிறேன் என்று கூறினார்கள். (இல்லை! ஒரு வெற்றியை அடைவதற்கு, நேர்மையற்று நடந்துகொள்ளவேண்டும் என்று அவசியமில்லை.) பெண்கள் பிரிவில் நான் இருக்கக்கூடாது, ஆடவர் பிரிவில் விளையாட வேண்டும் என்று கூறினார்கள். ஏனென்றால், பல பெண் வீராங்கனைகளைவிட நான் மிகவும் வலிமையாக இருக்கிறேனாம். (இல்லை! நான் மிகவும் கடினமாக உழைக்கிறேன். நான் வலிமையான உடலுடன் பிறந்தேன். அதை நினைத்து மிகவும் பெருமைகொள்கிறேன்) ஆனால், அம்மா! கறுப்பினப் பெண்களின் வலிமையை அறியாதவர்களை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் ஒவ்வொரு பத்திரிகையாளரையும் அறிவிப்பாளரையும் எப்படி எதிர்கொண்டீர்கள் என்று சிந்தித்துப் பார்க்கிறேன். 

கறுப்பினப் பெண்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தியதில் நான் பெருமையடைகிறேன். நாம் அனைவரும் ஒரேவிதமாக இருப்பதில்லை. சிலர் நளினமாகவும், சிலர் குட்டையாகவும், சிலர் வலிமையாகவும், சிலர் நெட்டையாகவும், மேலும் சிலர் உறுதியாகவும் இருக்கிறோம். ஆனால், பெண் என்ற ஓர் விஷயத்தில் நாம் அனைவருமே ஒன்றுதான். 

அம்மா! நீங்கள் மிகவும் கம்பீரமானவர். நான் உங்களைப் பின்பற்றவே விரும்புகிறேன். அதாவது, உங்களைப்போல இருக்க முயல்கிறேன். இந்த உலகத்திலேயே உறுதியான பெண் நீங்கள்தான். நான் மிகவும் நீண்ட தூரம் செல்லவேண்டியிருக்கிறது. எனக்கு ஒரு ரோல் மாடலாக நீங்கள் இருந்ததற்கு நன்றி. ஒரு காலத்தில் நான் சந்தித்த கஷ்டங்களை எல்லாம் உங்களின் துணையுடனே கடந்துவந்தேன். அதையேதான் என் குழந்தை அலெக்ஸிஸ் ஒலிம்பியாவுக்கும் கற்றுக்கொடுக்க விரும்புகிறேன். 

எனக்கான உங்களின் உதவியை நீங்கள் தொடர்வீர்கள் என்று சத்தியம் செய்யுங்கள் அம்மா. உங்களைப்போல நான் பொறுமையாகவும், வலிமையாகவும் இருப்பேனா என்று தெரியவில்லை. ஆனால், ஒருநாள் நான் அந்த இடத்தை அடைவேன் என்று நம்புகிறேன். உங்களை மிகவும் நேசிக்கிறேன் அம்மா! 

அன்புடன்

செரினா வில்லியம்ஸ்

http://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

"செரினா வில்லி"  உங்களுக்கு அப்பா பற்றி சொல்ல ஒரு வார்த்தை கிடைக்கலையா.உப்படித்தான் உங்கள் மகளிடமும் அப்பாவை மறைக்கப் போகிறீர்களா....!  tw_blush:

  • தொடங்கியவர்

 

வீட்டுக்குள் விவசாயம் செய்யும் பொறியியல் பட்டதாரி அர்ச்சனா ஸ்டாலின்

ஒருவர் உண்ணும் உணவை அவரே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என கூறி அர்ச்சனா ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

மாடித்தோட்டம் அமைத்துக் கொடுப்பதையே தற்போது தொழிலாகவும் கொண்டுள்ளார் அர்ச்சனா.

நகரத்து பெண்களின் மன வலிமையை மேம்படுத்தவும் இந்த தோட்டக்கலை பயிற்சி உதவுவதாக அர்ச்சனா கூறுகிறார்.

ஐ.டி. துறையில் பணியாற்றிய அர்ச்சனா, பின்னர் சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், நீர் நிலைகளை மீட்டெடுத்தல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

அர்ச்சனாவின் கணவர் ஸ்டாலின் அவரது கல்லூரித்தோழன், பொறியியல் பட்டதாரியான அவரும் ஒரு முழுநேர விவசாயி.

மாநகரங்களில் மரக்கன்றுகளை நடுவதற்கு இடம் பிடிப்பது மற்றும் அவற்றை பராமரிப்பது கடினம் என்பதால், விதை, தொட்டி, இயற்கை உரம் உள்ளிட்ட மாடித்தோட்டம் அமைக்க தேவையான பொருட்களையும் பெட்டியிலடைத்து, அவற்றை பரிசு பொருளாக அளிக்கலாம் என்பது அர்ச்சனாவின் கருத்து. அப்படி ஒரு 'ஃகிப்ட் பாக்ஸ்'-ஐயும் அவர் உருவாக்குகிறார்.

  • தொடங்கியவர்
சியத மிஸ்வேல்ட் ஸ்ரீ லங்கா 2017
 

 image_8f86354a1a.jpgimage_0b3cae5157.jpgimage_114314ec15.jpgimage_d1e9c51c11.jpgimage_16b749c331.jpgimage_3e93745b8e.jpgimage_6e6c15873c.jpgimage_9f22881190.jpgimage_453bdec09c.jpgimage_e0c481389d.jpgimage_7fa91b48f6.jpgimage_14e15ffbc7.jpgimage_40d69da1b3.jpgimage_ac6b30a633.jpgimage_dc8dc01ce5.jpgimage_71bd047947.jpgசியத மிஸ் வேல்ட் ஸ்ரீ லங்கா 2017 எனும் தொனிப்பொருளிலான இலங்கை அழகிகள் போட்டி, கொழும்பில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் 12 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்ததுடன் இவர்களில், 2017ஆம் ஆண்டுக்கான இலங்கை அழகியாக, துஷேனி மியுரங்கி டீ சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர், இம்முறை சீனாவில் நடைபெறவுள்ள உலக அழகிப் போட்டியில், இலங்கையின் போட்டியாளராக பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு: குஷான் பதிராஜா)

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

 

உலகின் நீளமான சறுக்கு சுரங்கம் கட்டப்பட்டது எப்படி?

உலகிலே நீளமான சறுக்கு சுரங்கம் லண்டனில் அமைந்துள்ளது. இதில், உயரத்தில் இருந்து சறுக்கிகொண்டே கீழே வருவது பரவச அனுபவத்தை தரக்கூடியது. இதைப் பற்றிய காணொளி.

  • தொடங்கியவர்

உலகின் நீளமான இமை முடிகளைக் கொண்ட கின்னஸ் சாதனைப் பெண்

 

 

உலகின் நீளமான இமை முடிகளைக் கொண்ட கின்னஸ் சாதனைப் பெண்
 

சீனாவைச் சேர்ந்த 48 வயதான யு ஜியான்ஸியாவின் இமை முடிகள் கற்பனைக்கு எட்டாத அளவு மிக நீளமானவை.

சாதாரணமாக மனிதர்களின் இமை முடிகள் 0.8 முதல் 1.2 சென்டிமீட்டர் வரை தான் நீளமாக இருக்கும்.

ஆனால், ஜியான்ஸியாவின் இமை முடிகள் 12.4 சென்டிமீட்டர் நீளம் கொண்டவை.

உலகின் மிக நீளமான இமை முடிகளைக் கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையையும் ஜியான்ஸியா நிலைநாட்டியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் அவரின் பெயர் இடம்பெறவுள்ளது.

உலகம் முழுவதும் 500 பேர் இந்தப் பிரிவில் போட்டியிட்டுள்ளனர்.

தனது இந்த சாதனை குறித்து ஜியான்ஸியா தெரிவித்துள்ளதாவது,

எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு நீளமாக இமை முடிகள் வளர்கின்றன என ஆச்சரியமாக உள்ளது. நான் கோடிக்கணக்கில் பணம்புரளும் மிகப்பெரிய நிறுவனத்தின் தலைவராகப் பதவி வகித்து வந்தேன். 2013 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டேன். இயற்கை மீது தீராத ஆர்வம் எனக்குண்டு. அதனால் மிகப்பெரிய தோட்டத்தை உருவாக்கினேன். அதில் 1,600 வகை ரோஜா செடிகளை வளர்த்து வந்தேன். அப்போதுதான் என் இமை முடிகள் மிக நீளமாக வளர ஆரம்பித்தன. அதற்கு முன்பு வரை நான் சாதாரணமாகத்தான் இருந்தேன். தோட்டத்துக்கும் என் இமை முடிகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று கூட யோசித்திருக்கிறேன். நீளமாக வளர ஆரம்பித்தவுடன் அதை வெட்டாமல் விட்டுவிட்டேன். என் வாய் வரை வளர்ந்துவிட்டன. எல்லோரும் இது எனக்குக் கஷ்டமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். நான் ஒருநாளும் எந்தவித அசவுகரியத்தையும் உணர்ந்ததில்லை. உலகிலேயே நீளமான இமை முடிகளுக்குச் சொந்தக்காரி என்பதில் எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது. தவறுதலாக முடிக்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். நீளமான இமை முடிகள் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் குறிப்பதாகப் படித்திருக்கிறேன். ஒவ்வொரு தடவை முகத்தைச் சுத்தம் செய்யும்போதும் கவனமாக இருக்கிறேன்

tmp_pjKtCe_6b6c918a70fe60ab_longesteyelashes1-768x512

74bcc3627b1376b9b88dfc5f927fe09c

You Jianxia - Longest Eyelash Guinness World Records 2016 Photo Credit: Jonathan Browning/Guinness World Records

http://newsfirst.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
விசாலங்களை அறிய முடியுமோ?
 

image_6512274fd4.jpg‘ஜகத்’ என்றால் மாறும் தன்மையுடையது. இந்த உலகம் மாறும் தன்மை கொண்டது என்பதால், ‘ஜகம்’ என்று அழைக்கின்றோம்.  

பூமி, சூரியனைச் சுற்றி வலம் வந்து கொண்டே இருக்கிறது. இரவு, பகல், காலமாற்றங்கள், உயிர்களின் பிறப்பு, இறப்பு, இயற்கைப் பேரழிவுகள், கண்டங்கள் இடம்பெயர்தல் என எல்லாமே இங்கே நிகழ்ந்த வண்ணமாய் உள்ளன. மனிதர்களுக்கு எந்தப் பலமும் இல்லை. 

இங்கு எதுவுமே நிலையாக இல்லை. ஆனால், இதனை உருவாக்கியவர், நிலையாக நின்று, சகலதையும் செய்வித்த வண்ணமாயிருக்கின்றமை, எம் அறிவுக்கு எட்டாத ஒன்றுதான். எப்படி இவை எல்லாம் நடந்தேறுகின்றன. இதை உணரச் சித்தத்துக்குச் சக்தி இல்லை.  

இந்த ஒரு பூமிக்குள் இத்தனையும் நிகழும்போது, பலகோடி சூரியர்கள், கிரகங்கள், அண்டங்கள், பேரண்டங்களின் பேருண்மை, அதன் விசாலங்களை அறிய முடியுமோ? 

  • தொடங்கியவர்

2013: வட மாகாண சபையின் முத­லா­வது தேர்­தலில் தமி­ழ­ரசுக் கட்சி வெற்றி

வரலாற்றில் இன்று….

செப்டெம்பர் – 21

 

1776 : பிரித்­தா­னிய படை­க­ளினால் கைப்­பற்­றப்­பட்ட நியூயோர்க் நக­ரத்தின் ஒரு பகுதி தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டது.


1792 : பிரான்ஸில் முடி­யாட்சி அகற்­றப்­பட்டு குடி­ய­ரசு நிறு­வப்­பட்­டது.


Wigneswaran-with-Sambanthan1860 : இரண்­டா­வது ஓப்­பியம் போரில் சீனப் படை­களை ஆங்­கி­லேய, பிரெஞ்சுப் படைகள் தோற்­க­டித்­தனர்.


1896 : சூடானின் டொங்­கோலா நகரை பிரித்­தா­னியப் படைகள் கைப்­பற்­றின.


1921 : ஜேர்­ம­னியில் தொழிற்­சாலை ஒன்றில் இடம்­பெற்ற பெரும் வெடி விபத்தில் சிக்கி ஐநூ­றுக்கும் மேற்­பட்­ட­வர்கள் கொல்­லப்­பட்­டனர்.


1934 : ஜப்­பானில் மேற்கு ஹொன்சூ என்ற இடத்தில் இடம்­பெற்ற சூறா­வளி கார­ண­மாக 3,036 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1938 : நியூ யோர்க்கின் லோங் தீவில் சூறா­வளி கார­ண­மாக 500 முதல் 700 வரை­யானோர் கொல்­லப்­பட்­டனர்.


1939 : ருமே­னி­யாவின் பிர­தமர் ஆர்மண்ட் கலி­னெஸ்கு தீவி­ர­வா­தி­களால் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.


1942 : மேற்கு யுக்­ரைனில் 2500 யூதர்கள் நாஸி­க­ளினால் கொல்­லப்­பட்­டனர்.


1964 : ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து மோல்டா, சுதந்­திரம் பெற்­றது.


varalru---France1972 : பிலிப்பைன்ஸ் ஜனா­தி­பதி பேர்­டினண்ட் மார்க்கொஸ் முழு நாட்­டிலும் இரா­ணுவ ஆட்­சியைப் பிறப்­பித்தார்.


1981 : ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து, மத்­திய அமெ­ரிக்க நாடான பெலீஸ் சுதந்­திரம் பெற்­றது.


1989 : இலங்­கையின் மனித உரிமை செயற்­பாட்­டாளர் ராஜினி திர­ண­கம யாழ்ப்­பா­ணத்தில் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.


1990 : மட்­டக்­க­ளப்பு ஆரை­யம்­ப­தியில் புதுக்­கு­டி­யி­ருப்பு கிரா­மத்தில் 17 தமி­ழர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.


1991 : ஆர்­மே­னியா, சோவியத் ஒன்­றி­யத்­திடம் இருந்து விடு­தலை அடைந்­தது.


1999 : தாய்­வானில் ஏற்­பட்ட நில­ந­டுக்­கத்தில் 2,400 பேர் கொல்­லப்­பட்­டனர்.


2001 : நாசாவின் டீப் ஸ்பேஸ் 1 விண்­கலம் பொரெல்லி வால்­வெள்­ளிக்கு 2,200 கிமீ தூரத்­திற்குள் சென்­றது.


2003 : கலி­லியோ விண்­கலத் திட்டம் இடை­நி­றுத்­தப்­பட்டு அது வியாழன் கோளின் வளி­மண்­ட­லத்­தினுள் அனுப்­பப்­பட்டு அத­னுடன் மோத­வி­டப்­பட்­டது.


2013 : வட மாகாண சபையின் முத­லா­வது தேர்தல் நடை­பெற்­றது. அகில இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி அமோக வெற்­றி­யீட்­டி­யது. வடமேல் மாகாண சபை, மத்திய மாகாண சபைத் தேர்தல்களில் ஐ.ம.சு.கூட்டமைப்பு வென்றது. 


2013 : கென்யாவின் நைரோபி நகரில் வர்த்தக நிலையமொன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 67 பேர் பேர் பலி.

http://metronews.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.