Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

சேவாக் - டெய்லரின் வார்த்தை விளையாட்டு: ஆதார் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பிய சேவாக்

sehwagtaylor

சேவாக்- டெய்லரின் வார்த்தை விளையாட்டைத் தொடர்ந்து, டெய்லருக்கு ஆதார் எண் பெற முடியுமா என்று சேவாக் ஆதார் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் நியூஸிலாந்து அணி அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.

இதுகுறித்து சேவாக், டெய்லர் என்ற பெயரை உருதில் மொழி பெயர்த்து தையல்காரர் என்ற பொருள் கொள்ளும் வகையில் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்,.

இதற்கு இந்தியில் பதிலளித்த நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர், ''ராஜ்கோட் போட்டிக்குப் பிறகு டெய்லர் கடை மூடப்பட்டுள்ளது. அடுத்த தையல் பணி திருவனந்தபுரத்தில் ஆரம்பிக்க உள்ளது. அவசியம் வாருங்கள்'' என்று பதிவிட்டார்.

இதைக் குறிப்பிட்டு சேவாக், ''டெய்லரின் சிறப்பான இந்திப் புலமைக்கு அவரால் ஆதார் எண்ணைப் பெற முடியுமா?'' என்று ஆதார் நிறுவனத்திடம் ட்விட்டரில் கேள்வி கேட்டார்.

இதற்கு பதிலளித்த ஆதார் நிறுவனம், ''மொழி பிரச்சினையல்ல. ஆதார் பயனரின் குடியுரிமையே முக்கியம்'' என்று தெரிவித்துள்ளது.

இது குறித்துப் பதிவிட்ட சேவாக், ''எவ்வளவு வேடிக்கைகளைப் பார்த்தாலும், அரசாங்கத்தின் வேடிக்கைதான் கடைசி புன்னகையை வரவழைக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த ட்வீட்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு, பேசுபொருளாக மாறியுள்ளன.

http://tamil.thehindu.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அமெரிக்காவில் கிம்!


வடகொரியா அதிபர் கிம்முக்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் நடந்து வரும் வார்த்தைப் போர்கள் உலகப்பிரசித்தம். இந்நிலையில் கிம் திடீரென நியூயார்க்கில் ட்ரம்ப் டவருக்கு வந்து கதவைத் தட்டி ட்ரம்பின் நலம் விசாரித்தால் எப்படியிருக்கும்? கிம் ஜாங் உன் போலவே இருக்கும் டூப் நடிகர், நியூயார்க்கில் இருக்கும் ட்ரம்ப் டவருக்கு வந்து அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அப்பாய்ன்ட்மென்ட் கேட்க... வெலவெலத்துப் போனார்கள் பில்டிங் பாதுகாவலர்கள்!
23.jpg
அதற்குள் டூப்பைப் பார்த்து ஆச்சரியமான அமெரிக்கர்கள், ‘ஹாய் ராக்கெட்மேன்! இங்கே என்ன பண்றே?’ என செல்லம் கொஞ்சியபடி செல்ஃபீ எடுத்துக்கொண்டனர். ஜாலியான காமெடி கலாய் நிகழ்ச்சிக்காகத்தான் இந்த கிம் வேஷம். இணையத்தில் 9 லட்சம் பேர்களுக்கு மேல் இந்த வீடியோவைப் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

 

 

சிகரெட்டில் சர்ஃபிங் போர்ட்

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த சர்ஃபிங் வீரரும், இண்டஸ்ட்ரியல் வடிவமைப்பாளருமான டெய்லர் லேன், சுற்றுச்சூழல் லட்சியவாதி. கலிஃபோர்னியா பீச்சை க்ளீனாக்க நினைத்தவர், அங்கு குவிந்திருந்த சிகரெட் குப்பைகளைப் பார்த்தவுடன் மலைத்துவிட்டார். பின் யோசித்தவரின் மூளையில் பல்ப் எரிய உடனே வேலையில் இறங்கினார். என்ன பயன்? சூழலைக் கெடுத்த சிகரெட் குப்பைகளை டஜன் மூட்டைகளாகப் பொறுக்கி வைத்து சர்ஃபிங் போர்ட்டை 3 மாதங்களில் பரபரவென பாடுபட்டு உருவாக்கிவிட்டார்.

15.jpg
மீன் மார்க்கெட்டுகளில் கழிவாகும் தெர்மாகோல்களையும் பயன்படுத்தியுள்ளார். ‘‘நாம் என்ன பயன்படுத்துகிறோம் என்ற விழிப்புணர்வு நம்மில் பலருக்கும் இல்லை என்பதை எடுத்துக்காட்டவே இந்த சர்ஃபிங் போர்டு!’’ என்பவரின் இப்படைப்பு, சான்ஜுவான் கேபிஸ்ட்ரானோவிலுள்ள சூழல் மையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  

www.kungumam.co

  • தொடங்கியவர்

செல்ஃபியோ செல்ஃபி!

 

 
russian%20selfie

இறந்தவர்களுடன் செல்ஃபி

இது செல்ஃபி யுகம். அதற்கேற்ப செல்ஃபி தொடர்பாக அவ்வப்போது செய்திகள் வருவதும் வழக்கம். அப்படி வந்த சில செல்ஃபி தகவல்கள் இவை:

சொர்க்கம் செல்ஃபி

ரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவில் இறந்தவர்களோடு செல்ஃபி எடுத்து அதைச் சமூக ஊடகங்களில் பதிவிட மக்கள் ஆர்வம் காட்டினார்கள். ஏன் தெரியுமா? இறந்தவர்களின் உடல் அருகே புன்னகை மாறாமல் செல்ஃபி எடுத்துக்கொண்டால் அவர்கள் சொர்க்கத்துக்குப் போவார்களாம். இதை வைத்தே ‘இறந்தவர்களோடு செல்ஃபி’ என்ற ஒரு போட்டி இணையதளத்தில் நடந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இப்போதும்கூடப் பலரும் இந்தப் பாணியைக் கைவிடாமல் தொடர்ந்து வருகிறார்களாம்.

indian%20selfie
 

செல்ஃபி புள்ள

லகிலேயே ஒரே சமயத்தில் அதிக செல்ஃபிகள் எடுத்தவர் என்ற சாதனையைப் படைத்தது யார் தெரியுமா? நம் இந்தியர்தான். அவர் பெயர் பானுபிரகாஷ். 2015-ம் ஆண்டு செப்டம்பரில் ஒரே மணி நேரத்தில் 1,700 செல்ஃபிகள் எடுத்து சாதனை படைத்தார். இதற்கு முன்பு அமெரிக்கக் கால்பந்தாட்ட வீரர் பேட்ரிக் பீட்டர்சன், ஒரு மணி நேரத்தில் 1,449 செல்ஃபிகள் எடுத்ததே சாதனையாக இருந்ததாம்.

thailand%20selfiee
செல்ஃபி ராணி

ரேநேரத்தில் அதிக செல்ஃபி எடுத்து பானுபிரகாஷ் சாதனை படைத்தார் என்றால், தாய்லாந்தில் மார்தாவோ மோர்தார் என்பவர் இன்ஸ்டாகிராமில் அதிக செல்ஃபி படங்களைப் பதிவேற்றியவர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பே 12,000 'செல்ஃபி' படங்களைப் பதிவேற்றியிருந்தார். இன்னும் செல்ஃபி மோகம் குறையாமல் படங்களைச் சுட்டுத் தள்ளிக்கொண்டேயிருக்கிறாராம் இவர்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
நயன்தாராவின் ’அறம்’
  • தொடங்கியவர்

ஒரே நாளில் இரு தடவை லொத்தர் பரிசுகளை வென்ற பெண்

lottery.jpgஅமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒரே நாளில் இரு தடவைகள் லொத்தர் சீட்டில் பரிசுகளை வென்றுள்ளார்.

வட கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த கிம்பர்லி மொரிஸ் எனும் இப்பெண்ணே இந்த மாபெரும் அதிஷ்டசாலி ஆவார்.

கடந்த திங்கட்கிழமை அவருக்கு டயமன்ட் டேஸ்லர் எனும் சுரண்டல் லொத்தர் சீட்டில் 10,000 டொலர் (சுமார் 15.3 லட்சம் ரூபா) பரிசு கிடைத்தது, அப்பரிசுப் பணத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பும்போது மற்றொரு லொத்தர் சீட்டையும் கிம்பர்லி மொரிஸ் வாங்கினார்.

அந்த சீட்டில் அவருக்கு 10 லட்சம் டொலர் (சுமார் 15.3 கோடி ரூபா) பரிசு கிடைத்தது.

20 டொலர் பெறுமதியான மேற்படி லொத்தர் சீட்டுகளில் ஒரே நாளில் 10 லட்சம் டொலரையும் 10,000 டொலரையும் பரிசுகளாக வென்ற முதல் நபர் கிம்பர்லி மொரிஸ் ஆவார்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் ட்ரெய்லர்!

'புதிய கீதை', 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் எடுத்திருக்கும் திரைப்படம் 'என் ஆளோட செருப்பக் காணோம்'. 'மெரினா', 'கோலி சோடா' உள்ளிட்ட படங்களில் சின்ன வயது பையனாக நடித்த பக்கோட பாண்டி. ஓ ஸாரி இந்தப் படத்திலிருந்து தமிழ் என்ற பெயரில் அறிமுகமாகும் இவர்தான் படத்தின் ஹீரோவாக நடித்திருக்கிறார். 

என் ஆளோட செருப்பக் காணோம்

 


படத்தின் கதாநாயகியாக 'கயல்' ஆனந்தி நடிக்க காமெடி கதாபாத்திரத்தில் பாலாசரவணன் மற்றும் யோகி பாபு நடித்திருக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார் நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சிறிது நாள்களுக்கு முன்பு வெளியாகி லைக்ஸ் வாங்கியது. இதற்கிடையில் படத்தின் பாடல் உரிமையைக் கெளதம் வாசுதேவ் மேனனின் ஒன்றாக நிறுவனம் வாங்கியிருக்கும் நிலையில் இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியானது. 

 

 
  • தொடங்கியவர்

டோனியின் 179 டிகிரி ரீச்சுக்கு ரசிகர்களின் மீம்ஸ்

 
 
268558.jpg 268559.jpg 268560.jpg 268561.jpg 268562.jpg 268563.jpg 268564.jpg 268565.jpg 268566.jpg 268567.jpg 268568.jpg 268569.jpg 268570.jpg 268571.jpg 268572.jpg 268573.jpg 268574.jpg 268575.jpg 268576.jpg 268577.jpg 268590.jpg 268591.jpg 268592.jpg 268593.jpg 268594.jpg 268595.jpg 268596.jpg 268597.jpg

 

http://www.vikatan.com

 

  • தொடங்கியவர்
‘ஆசான்கள் ஆண்டவனிலும் பெரியவர்கள்’
 

image_a5e30881ae.jpgஆசான்கள் ஆண்டவனிலும் பெரியவர்கள். ஆண்டவன் தனது பிரதிவிம்பத்தை இவர்களுக்கு அளித்தான். இதனாலேயே சிஷ்யர்களின் கல்விக் கண்கள் விரிந்து, ஒளியூட்டிய வண்ணமுள்ளது. 

 ஆசிரியர்களே ஒப்பற்ற மிகப்பெரிய விருதாக எமக்கு வழங்கப்பட்டுள்ளனர். மாணவர்களை உருவாக்கி வரும் இந்தச் சிருஷ்டி கர்த்தாக்கள் அள்ளஅள்ளக் குறையாத அட்சய பாத்திரங்கள். 

புதிய விடயங்களை நல்ல முறையில் கற்பிப்பதே நல் ஆசிரியர்களின் பொறுப்பான கடமையாகும்.  

இறைவனின் வலிமையை நாம் ஆசானூடாகத் தரிசிக்கின்றோம். எனவே, இவர்களே கடவுளின் பிரதிநிதிகளுமாகிறார்கள். 

தமக்குத் தெரிந்த அனைத்தையும் மாணவர்களுக்கு ஊட்டுவதால் சுயநலமற்ற பெரும் தியாகிகளும் இவர்களே. எமது அறிவுக் கண்ணைத் திறந்து, உலகைத் தரிசிக்க வைத்த, குருமார், சுத்தமான ஆத்மாக்கள்.   

  • தொடங்கியவர்

1944 : அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் 4 ஆவது தடவையாக வென்றார்

வரலாற்றில் இன்று…

நவம்பர் – 07

 

1492 : பிரான்ஸின் அல்சாஸ் பிராந்­தி­யத்தில் விண்­கல்­லொன்று வீழ்ந்­தது. உலகில் பதி­வு­ செய்­யப்­பட்ட மிகப் பழை­மை­யான விண்கல் மோதல் இது­வாகும்.

1502 : ஹொண்­டூராஸ் கரையை கொலம்பஸ் அடைந்தார்.

1665 : இப்­போதும் வெளி­வரும் உலகின் மிகப் பழ­மை­யான பத்­தி­ரி­கை­யான “த லண்டன் கசெட்” முத­லா­வது இதழ் வெளி­யா­னது.

1893 : அமெ­ரிக்­காவின் கொல­ராடோ மாநி­லத்தில் பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை வழங்­கப்­பட்­டது.

1910 : உலகின் முத­லா­வது விமானத் தபால் பொதிச் சேவை ரைட் சகோ­த­ரர்­களால் ஒஹை­யோவில் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

1917 : அக்­டோபர் புரட்சி; விளா­டிமிர் லெனின் தலை­மையில் கம்­யூ­னிசப் புரட்­சி­யா­ளர்கள் ரஷ்­யாவின் இடைக்­கால அர­சாங்­கத்தைக் கவிழ்த்­தனர். (பழைய ஜூலியன் நாட்­காட்­டியில் இது அக்­டோபர் 25 ஆம் திக­தி­யாகும்).

varalaru-240x400.jpg1917 : முதலாம் உலகப் போர்: பிரித்­தா­னியப் படைகள் ஓட்­டோமான் பேர­ர­சிடம் இருந்து காஸாப் பகு­தியைக் கைப்­பற்­றின.

1918 : மேற்கு சமோ­வாவில் பர­விய ஒரு வித வைரஸ் நோய் கார­ண­மாக 7,542 பேர் ஆண்டு முடி­விற்குள் இறந்­தனர்.

1931 : மாஓ சே துங் சீன சோவியத் குடி­ய­ரசை அக்­டோபர் புரட்­சியின் நினைவு நாளில் அறி­வித்தார்.

1941 : இரண்டாம் உலகப் போர் “ஆர்­மே­னியா” என்ற சோவியத் மருத்­துவக் கப்பல் ஜேர்­ம­னிய விமா­னங்­களின் குண்­டு­வீச்சில் மூழ்­கி­யது. 5,000 பேர் வரையில் இதில் கொல்­லப்­பட்­டனர்.

1941 : நாசி ஜேர்­ம­னியர் உக்­ரேனில் நெமிடீவ் என்ற இடத்தில் 2580 யூதர்­களைக் கொன்­றனர்.

1944 : அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் தொடர்ச்­சி­யாக 4 ஆவது தட­வை­யாக வென்று சாதனை படைத்தார். (பின்னர் இரு தட­வை­க­ளுக்கு மேல் ஒருவர் இப்­ப­த­வியை வகிக்க முடி­யாது என சட்டத் திருத்தம் செய்­யப்­பட்­டது)

1956 : சுயஸ் கால்வாய் பிரச்­சினை; எகிப்தில் இருந்து உட­ன­டி­யாக ஐக்­கிய இராச்­சியம், பிரான்ஸ், இஸ்ரேல் படை­களை வெளி­யே­று­மாறு ஐநா பொதுச் சபைக் கூட்­டத்தில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

1983 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் செனட் கட்­ட­டத்தில் குண்டு வெடித்­தது.

1987 : துனீ­ஷி­யாவில் ஜனா­தி­பதி ஹபிப் போர்­குய்பா, பிர­தமர் பென் அலி­யினால் பதவி கவிழ்க்­கப்­பட்டார்.

1989 : கிழக்கு ஜேர்­ம­னியில் அரச எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் கார­ண­மாக அமைச்­ச­ரவை கலைக்­கப்­பட்­டது.

1990 : அயர்­லாந்தின் முதல் பெண் ஜனா­தி­ப­தி­யாக மேரி ரொபின்சன் தெரி­வானார்.

1991 : அமெ­ரிக்­காவின் புகழ்­பெற்ற கூடைபந்தாட்ட வீர­ரான மெஜிக் ஜோன்சன் தாம் எச்.ஐ.வி. தோற்­றுக்­குள்­ளா­கி­யி­ருப்­ப­தாக அறி­வித்து அமெ­ரிக்க தேசிய கூடைப்­பந்­தாட்டச் சங்­கத்­தி­லி­ருந்து (என்.பி.ஏ.) வெளி­யே­றினார்.

1996 : செவ்வாய் கிர­கத்­துக்­கான “மார்ஸ் குளோபல் சர்­வேயர்” விண்­க­லத்தை நாஸா ஏவி­யது.

1996 : நைஜீ­ரிய விமா­ன­மொன்று லாகோஸ் அருகே வீழ்ந்­ததில் 143 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2000 : அமெ­ரிக்­காவில் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெற்­றது. இத் தேர்தல் பெறு­பேறு தொடர்பில் ஜோர்ஜ் டபிள்யூ புஷ், அல் கோர் ஆகி­யோ­ருக்கு இடையில் ஏற்­பட்ட சர்ச்சை உயர்­நீ­தி­மன்­றத்தின் மூலம் பின்னர் தீர்க்­கப்­பட்­டது.

2000 : ஹிலாரி கிளின்டன் நியூயோர்க் செனட்டர் பத­விக்­கான தேர்­தலில் வென்றார். அமெ­ரிக்க முதற்­பெண்­ம­ணி­யாக விளங்­கிய ஒருவர் அந்­நாட்டு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தெரி­வா­னமை இதுவே முதல் தட­வை­யாகும்.

2002 : அமெ­ரிக்கப் பொருட்­களின் விளம்­ப­ரங்­களை அறி­விப்­ப­தற்கு ஈரான் தடை விதித்­தது.

2004 : ஈராக்கில் கிளர்ச்­சி­யா­ளர்­களின் கோட்­டை­யான பலு­ஜாவில் அமெ­ரிக்கப் படைகள் பாரிய தாக்குதலை ஆரம்பித்ததையடுத்து ஈராக்கிய இடைக்கால அரசாங்கம் 60 நாள் அவசர பிரகடனம் செய்தது.

2007 : பின்­லாந்தில் பாட­சா­லை­யொன்றில் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்­தினால் 9 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2012 : குவாத்தமாலாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 52 பேர் உயிரிழந்தனர்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

காந்தி தன் இறுதிக்காலம் வரை பாதுகாத்து வைத்திருந்த பொக்கிஷம் எது? #MotivationStory

உன்னை அறிந்தால்...

கொடுப்பதற்கு ஒரு மனது வேண்டும். அது எல்லோருக்கும் இருப்பதில்லை. கர்ணன் தொடங்கி எத்தனையோ வள்ளல்களின் கதைகளை நாம் கேட்டிருப்போம், படித்திருப்போம். அப்படி மகாத்மா காந்தியின் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்று உண்டு. அந்தச் சம்பவம் காந்தியின் வாழ்வில் மிக முக்கியமான தருணம். அன்றைக்குக் கிடைத்த ஒரு பொருளைப் பல ஆண்டுகளுக்குப் பத்திரமாகவைத்திருந்தார், விலைமதிப்பற்றப் பொருளாக அதை நினைத்துப் பாதுகாத்தார் காந்தி. அது என்ன.. பார்க்கலாமா? 

 

காந்தி

இந்தியச் சுதந்திரத்துக்கான காந்தியின் அஹிம்சைப் போராட்டம் பல கட்டங்களைக் கொண்டது. உப்புக்கு அநியாய வரி விதிக்கப்பட்டபோது, உப்புச் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டார். `வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை நடத்தினார். அப்படி காந்தி நடத்திய போராட்டங்களில் முக்கியமான ஒன்று ‘அந்நியத் துணி பகிஷ்கரிப்புப் போராட்டம்.’ ‘இங்கிலாந்தின் மான்செஸ்டரிலும், லங்காஷயரிலும் தயாராகி இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஆங்கிலேயர்களின் ஆடைகளைப் புறக்கணிக்க வேண்டும். சுதேசி ஆடைகளைத்தான் நம் மக்கள் அணிய வேண்டும். அதற்கு நம் கைராட்டையில் ஆரம்பித்து, ஆடை தயாரிப்பை உள்நாட்டிலேயே ஒரு குடிசைத் தொழிலாகச் செய்யலாம். ஒரு கைராட்டையை வைத்து நூல் நூற்பதுகூட ஏழை மக்களுக்குக் கை கொடுக்கும். ஒருவேளை உணவுக்கு உதவும். அது இந்தியாவின் வறுமையைப் போக்கும். இந்திய மக்களை ஓரணியில் திரளச் செய்யும்...’ இப்படியெல்லாம் யோசித்ததால்தான் காந்தி கைராட்டை சங்கத்தை (Charkha Sang) முன்னெடுத்தார். ``கைராட்டை என்பது எளிமை மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்தின் அடையாளம் மட்டுமல்ல; அது அமைதியின் அடையாளம்’’ என்றும் குறிப்பிட்டார். ஆனால், கைராட்டை தொடங்கி பஞ்சு வரை வாங்க எல்லோரிடமும் பணம் இருக்கவேண்டுமே! அதற்காக நிதி திரட்டினார். ராட்டையில் நூல் நூற்க ஆசையும் ஆர்வமும் இருப்பவர்களுக்கு உதவலாம் என்கிற எண்ணம் அவருக்கு.

ராட்டை

கைராட்டை சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காகப் பல நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் நடையாக நடந்துகொண்டிருந்தார் காந்தி. அப்படிச் சென்ற காந்தி ஒருநாள் ஒடிசாவுக்கு (அன்றைய ஒரிஸ்ஸா) வந்தார். அங்கே ஒரு நகரத்தில் அவர் பேச ஏற்பாடாகியிருந்தது. அன்றைக்கு நல்ல கூட்டம். காந்தி தன் மெல்லிய குரலில் பேசினார். கதராடை, கைராட்டை, அது அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியில் எவ்வளவு அவசியம், அந்நியத் துணிகளை ஏன் புறக்கணிக்க வேண்டும், கைராட்டை சங்கம்... அனைத்தையும் மெள்ள மெள்ள எல்லோருக்கும் புரியும் மொழியில் விளக்கினார். கூட்டம் காந்தியின் வார்த்தைகளை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தது. 

தன் உரையை முடிக்கவிருந்த நேரம், காந்தி கூடியிருந்த மக்களிடம் ஒரு கோரிக்கையைவைத்தார். “அன்புக்குரியவர்களே... நான் என்ன காரியமாக இங்கே வந்திருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். கைராட்டை சங்கத்துக்கு நிதி திரட்டிக்கொண்டிருக்கிறேன். உங்களால் இயன்ற உதவியை தாராளமாகச் செய்யுங்கள்!” 

கூட்டத்தில் இருந்தவர்கள் முண்டியடித்துக்கொண்டு மேடையை நோக்கி ஓடினார்கள். சிலர் தொண்டர்களிடமே கைராட்டை நிதிக்காகப் பணத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். கூட்டத்தின் ஓர் ஓரமாக இருந்த ஒரு மூதாட்டி எழுந்தார். நரைத்த தலை, முதுமையில் சுருங்கிப்போன தோல், கூன் விழுந்த முதுகு, உடலைச் சுற்றிக்கட்டியிருந்த பழம் புடைவை... தோற்றமே அவரின் ஏழ்மையையும் முதுமையையும் பறைசாற்றிக்கொண்டிருந்தது. அவர் மேடையில் இருந்த காந்தியை நோக்கிப் போனார். சில தொண்டர்கள் அவரை வழிமறித்தார்கள். “பாட்டி... கூட்டம் ஜாஸ்தியா இருக்கு. மேடைகிட்ட உன்னால போக முடியாது” என்று சொன்னார் தொண்டர் ஒருவர். 

அந்த முதிய பெண் யார் சொல்வதையும் கேட்கத் தயாராக இல்லை. தடுத்தவர்களை மூர்க்கமாக விலக்கினார். “நான் பாபுஜியைப் பார்க்கணும்... பாபுஜியைப் பார்க்கணும்” என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். என்ன இருந்தாலும், ஒரு மூதாட்டியுடன் வெகு நேரத்துக்கு மல்லுக்கட்ட முடியாதுதானே! தொண்டர்கள் அவருக்கு வழிவிட்டார்கள். மூதாட்டி, கூட்டத்தை விலக்கிக்கொண்டு மெள்ள மெள்ள நடந்து காந்திஜியிடம் போனார். காந்தி மேடை விரிப்பில் அமர்ந்திருந்தார். மூதாட்டி, காந்தியின் காலைத் தொட்டார். காந்தியைப் பார்த்த பரவசம் அவருக்கு உற்சாகத்தை வரவழைத்திருந்தது. நேருக்கு நேர் பார்த்துச் சிரித்தார். 

“பாபுஜி... ரொம்ப நல்ல காரியம்லாம் பண்றீங்க. நீங்க நல்லா இருக்கணும். நீங்க நடத்துற எல்லாப் போராட்டமும் வெற்றி பெறணும். இங்கே வந்திருக்குறவங்க நிறையக் குடுப்பாங்க. எனக்கும் நிறையத் தரணும்னு ஆசையிருக்கு. ஆனா, என்கிட்ட நிறையப் பணம் இல்லை. நான் குடுக்குறதை வாங்கிப்பீங்களா?’’ 

காந்தி புன்முறுவலோடு தலையசைத்தார். அந்த மூதாட்டி, தன் புடைவை முந்தானையில் எதையோ தேடினார். அதன் முனையில் எதையோ முடிந்துவைத்திருந்தார். அதில் ஒரு செப்புக்காசு இருந்தது. அதை எடுத்து, தன் தளர்ந்த கரங்களில் வைத்து காந்தியிடம் நீட்டினார். காந்தி அந்தக் காசை வாங்கும்போது அவர் விரல்கள் நடுங்கின. பிறகு அந்தப் பெண்மணி காந்தியை வணங்கிவிட்டுத் திரும்பி நடந்தார். கண்ணிலிருந்து மறையும் வரை அந்தப் பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தார் காந்தி. அவர் கண்பார்வையில் இருந்து மறைந்ததும், அந்தச் செப்புக்காசை எடுத்துப் பத்திரப்படுத்தினார். 

தன்னம்பிக்கைக் கதை

கைராட்டை சங்கத்தின் நிதியை வசூலித்து, கணக்குப் பார்த்து வைக்கும் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் காந்தியிடம் வந்தார். “பாபுஜி... அந்தக் காசைக் கொடுங்கள்... கணக்கில் சேர்க்க வேண்டும்” என்றார். காந்தி பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

திரும்பத் திரும்ப எத்தனை முறை கேட்டும், காந்தி அதைத் தர மறுத்துவிட்டார். பொறுப்பாளருக்கு ஆச்சர்யமாக இருந்தது. ‘என்ன இது... ஒரு குழந்தையைப்போல அடம்பிடிக்கிறார் பாபுஜி?!’ என யோசித்தார். “பாபுஜி... பல ஆயிரக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள செக்கெல்லாம் என்கிட்ட இருக்கு. ஒரு செப்புக்காசுக்கு என்னை நம்ப மாட்டேங்கிறீங்களே?’’ என்றார். 

“இது வெறும் செப்புக் காசில்லை. விலை மதிப்பில்லாதது. லட்சக்கணக்கான ரூபாய் வைத்திருக்கும் ஒருத்தர், ஆயிரம், ரெண்டாயிரம் ரூபாய் கொடுக்குறது பெரிய விஷயமில்லை. ஆனா, அந்த முதிய பெண்கிட்ட இந்தக் காசைத் தவிர வேற எதுவுமே இல்லை. ஏன்... நல்ல ஆடையைக்கூட அவங்க போட்டிருக்கலை. அவங்க நல்ல சாப்பாடு சாப்பிடுறாங்கனுகூட நம்ப முடியாது. ஆனாலும் அவங்ககிட்ட இருந்த மொத்தத்தையும் என்கிட்ட குடுத்துட்டாங்க. இதுவரைக்கும் எனக்குக் கிடைச்சதுலயே பெரிய பொக்கிஷம் இதுதான். இதை நான் யாருக்கும் குடுக்க மாட்டேன்’’ என்றார் காந்தி. 

காந்தி தன் இறுதிக்காலம் வரை அந்தச் செப்புக்காசை பத்திரமாக தன்னுடனேயே வைத்திருந்தார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

‘நீ கொடுத்த வரிகளுக்கோர் நன்றி!’ - முத்(தத்)தமிழ் கொண்டாடும் கவிஞர் கமல்ஹாசன் #HBDKamal

கலை, இலக்கியம், அரசியல், ஊடகம் என அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கிய கருணாநிதியை நடிகவேள் எம்.ஆர்.ராதா 'கலைஞர்' என்ற ஒற்றை வார்த்தையில் அழைத்ததால் அப்படியே அனைவரும் அழைக்கத் தொடங்கினர். அதே கலைஞர் அவரைப்போலவே சகலகலா வல்லவனாக அனைத்துத் தடங்களிலும் முத்திரை பதிக்கும் ஒருவரைப் பார்த்து 'கலைஞானி' என்று அழைத்தார். அந்த கலைஞானியின் பெயர் 'கமல் ஹாசன்'.  தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தடாகத்துத் தாமரை இந்தக் கமல்.

கமல்

 

தமிழ் சினிமாக்களில் முத்தம் தொடங்கி மொத்தத்துக்கும் ரெஃபெரன்ஸாக இருக்கும் கமல்தான்  "எப்போப் பாரு கமல் மாதிரி புரியாமலே பேசிக்கிட்டு" என்று சொல்லும் அளவு குழப்பங்களுக்கும் ரெஃபெரன்ஸாக இருக்கிறார். கமல் பேசுவதும் சரி படமும் சரி எதுவுமே புரியவில்லை என்ற குற்றச்சாட்டு பெரும்பான்மையாக இருந்தாலும், அவரது எழுத்துக்கு மிகப்பெரும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் அவரது எழுத்தின் தனித்துவம். மேடை பேச்சு, பேட்டி, வசனம் என அனைத்தையும் பின்னுக்குத்தள்ளி அவர் திரைப்படங்களில் எழுதிய பாடல்கள் ரசனையின் உச்சம். புரிதலின்மையெனும் அறியாமையென சொல்லி உயிரை ஆத்மாவில் இறங்கச்செய்யும் இவரது பாடல் வரிகள். முத்தமிழைப்போல கமலின் மூன்று தமிழில் மூன்று பாடல்கள் அவரது பானைச்சோற்றுக்கு பதம்.

1) நடைமுறைத்தமிழ் 

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி - ஹே ராம் 

தமிழ் மொழியில் ஒன்றின் மீதான சார்பு நிலையின் தொடக்கமும் முடிவும் நன்றியென்ற சொல்லில் இருக்கிறது. அப்படி அன்பின் ஆரம்பமும், பிரிவின் இறுதி நொடிகளும் 'நன்றி' என்ற ஒற்றைச் சொல்லில் சூழ்ந்திருந்தால் அது நிச்சயம் மனதை ஒரு சமநிலையில் கேள்விகளின்றி சாந்தப்படுத்தும். அன்யோன்ய வாழ்வின் அங்குலங்களை, அதன் ஞாபகங்களை 'நன்றி' யின் மூலத்தில் கமல், சாகேத் ராமாக எழுதியிருந்ததுதான் 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’. 
 
"நான் என்ற சொல் இனி வேண்டாம் 
நீ என்பதே இனி நான் தான் 
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை 
இதுபோல் வேறெங்கும் சொர்க்கமில்லை" 

வாழ்ந்துகொண்டிருக்கும்போது வாழ்வின் நலனில், அக்கறையில் கடவுளிடம் வரம் கேட்கும் மனிதன், தன் மரணத்துக்குப் பின்னும் அந்த நலம் நீடிக்க வேண்டி சொர்க்கமெனும் வரம் கேட்கிறான். அதுபோல தன் அன்பானவளே சொர்க்கமாய் தான் வாழும் காலத்திலேயே இருந்தால் யாருக்குத்தான் வரம் கேட்கத் தோன்றும். நானென்பது 'நீ', நீயென்பது 'வரம்', வரமென்பது 'சொர்க்கம்', மீண்டும் சொர்க்கமென்பது 'நீ' என்று வாழ்வின் சுழற்சிக்கு சாகேத் ராமின் காலம் கடந்த மீள்பதிவுதான், அந்தக் கண்மூடிய பார்வைக்கும், விடிந்துபோன இரவுக்கும் அவர் சொன்ன நன்றிகள்.

 கமலின் தனிவாழ்க்கையும் சினிமா வாழ்க்கையும் வேறு வேறல்ல. அதனால்தான் ‘கமல் 50’ விழாவில் தன் ரசிகர்களுக்கும் இதே நான்கு வரிகளைச் சொல்லி நன்றி சொல்லியிருப்பார். அந்த நன்றியில் ஒரு நேர்மை இருக்கும். அது அவரின் உண்மையும் கூட.  

2) பேச்சுத்தமிழ் 

உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை - விருமாண்டி 

முதல் வரியை இளையராஜா தொடங்கி வைக்க, கமல் முழுவதுமாய் எழுதி முடித்த தேவாமிர்தம் இந்தப் பாடல். ஓர் இரவு நேர தனிமையில் அன்பின் உரையாடல்களை இசையோடு சுமந்துவரும் பாடல் இது.

"உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல  
உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிக்கொள்ள யாருமில்ல"

காதலன், காதலியிடமோ அல்லது காதலி, காதலனிடமோ மிகச் சாதாரணமாக உதிர்த்துவிடும் வலிமையான வார்த்தைகள் இவை. ஆனால், அது எத்தனை உண்மையென்பது அந்தக் காதலின் நீட்சியில்தான் தெரியும். விருமாண்டியோடு சேர முடியாத அன்னலட்சுமி வேறொருவன் கட்டிய தாலியை அறுத்து வீசிவிட்டு, தூக்கில் தொங்கி துடிதுடித்துச் சாகும்போது காற்றோடு பிரியும் உயிரில் புரிந்திருக்கும் இந்த வரிகளின் வலிமிகு உண்மை.

"உன்கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒண்ணு போதுமா
நூறு ஜென்மம் வேணும், கேட்குறேன் சாமிய"

என்று அன்னலட்சுமி கேட்டதும் 'நூறு ஜென்மம் போதுமா' என்று பதில் கேள்வி கேட்பார் விருமாண்டி. 

"நூறு ஜென்மம் நமக்கு போதுமா
வேற வரம் ஏதும் கேட்போமா?
சாகாவரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய" 

'கேக்குறதுதான் கேக்குற, ஏன் 100 ஜென்மம்னு கேக்குற, செத்தாதானே ஜென்மம், அதனால சாகாவரம் கேப்போம்' என்ற தொனியில் பதில் சொல்லி காதலில் முந்துவது கமலுக்கு கைவந்த கலை. ‘அந்த சாமி' என்று சொல்லி ஒரு சுட்டலில் ஏதோவொரு சாமியென்று சீண்டல் செய்திருப்பார் இந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவர். 

கமல்

சினிமாவைத் தனது சொந்த வாழ்க்கையோடு கொண்டுசெல்லும் கமல், இந்தப் பாடலிலும் சில வரிகளில் கையாண்டிருப்பார். 2002 முதல் 2005 வரையிலான காலங்களில் சிம்ரனுடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டாலும், இந்தக் காலக்கட்டத்தில்தான் கமலுக்கும் கௌதமிக்குமான நட்பும் நெருக்கமானது. "அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி" என்று கண்ணதாசன், காமராஜருக்குத் தூது அனுப்பியதுபோல இந்தப் பாடலின் தொடக்கத்தில், "உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை, உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிக்கொள்ள யாரும் இல்லை" என்று கமல்ஹாசன், கௌதமிக்காக எழுதியிருப்பதாகப் பரவலாகப் பேசப்பட்டது. 'சாட்சி சொல்ல சந்திரன் வருவான்டி' என்ற வரியில் சாட்சிக்கு தன் அண்ணன் சந்திரஹாசனை தூக்கி வந்திருப்பார்.

3) ஆழ்வார் தமிழ்  

உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே - விஸ்வரூபம் 

கமல்ஹாசன் தன்னை நாத்திகராக இனங்கண்டவர். தமிழுக்கு ஆத்திகம், நாத்திகம் தெரியாது என்பதன் வெளிப்பாடு இந்தப் பாடல். தன்னிலை மறந்து கண்ணனுக்காக ஆண்டாள் என்னும் ஒரு பெண் நிலையிலிருந்து கமல் எழுதிய பாடல் இது. இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியிலும் காதலும், பெண்மையும், வெட்கமும், ஏக்கமும் கலப்படமில்லாமல் பெண்ணுக்கே உரியவையாகக் கலந்திருக்கும். ஆண்டாளின் ஒப்பீடுகளைப் பாடல் முழுவதும் தெளித்திருப்பார் கமல். கண்ணம்மா, கோதை அனைவருமே காதலுக்குள் பயணிப்பவர்கள். அப்படிப்பட்டகோதையின் காதலை, முழுநேர கவிஞனில்லாத கமல், காதலோடு எழுதியிருப்பது அவரது தமிழின் அழகு.

"பூதகியாக பணித்திடுவாயா
பாவை விரகம் பருகிடுவாயா"

'கொலை செய்வதற்காக ஹம்சனால் அனுப்பப்பட்ட 'பூதகி' என்னும் அரக்கியிடம், எப்படிப் பால் குடிப்பது போல அவளது உயிரைக்குடித்து மோட்சம் கிடைக்கச்செய்தாயோ, அப்படி என்னையும் பூதகியாக நினைத்து, என் விரகதாபங்களைப் பருகிக்கொள்வாயா' எனக் கண்ணனிடம் கேட்கும் கமலின் ஆண்டாள்ரூபம் தொடங்கும் வரிகள் இவை. 

"அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்"

இறைவனுக்காகத் தொடுக்கப்பட்ட மாலைகளை யாருக்கும் தெரியாமல் அணிந்துகொண்டு 'தான் கண்ணனுக்கு ஏற்றவளாக இருக்கிறோமா' என்று கண்ணாடியின் முன்னின்று வெட்கத்துடன் பார்த்துக்கொள்ளும் ஆண்டாளை, அப்படியே பிரதிசெய்துகொள்கிறார் கமல். இப்படி இறைவனுக்கான மலர்களைச் சூடிய பிறகு, இறைவனுக்குக் கொடுத்ததால்தான் ஆண்டாளுக்குச் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்ற பெயர்.

அந்த ஆண்டாளைப்போல, இறைவனைக் கண்டால்  "எவ்வாறு வெட்கமடைவேன், வெட்கத்தில் எனது முகம்  எப்படியிருக்கும்'' என்றெல்லாம் கண்ணாடியில் கமல்ஹாசனின் ஆண்டாள் பார்த்துக்கொள்ளும் வரிகள்  இவை.

"பின்னிருந்து வந்து என்னை
பம்பரமாய் சுழற்றி விட்டு
உலகுண்ட பெரு வாயில் எந்தன்
வாயோடு வாய் பதித்தான்"

இந்த வரிகளின் காட்சி மற்றும் காட்சி சார்ந்த கற்பனைகள் ரசிக்கப்பட வேண்டியவை. பின்னிருந்து கட்டியணைக்கும் கண்ணன் உலகுண்ட அவன் வாயோடு தன் வாயைப்  பதித்து முத்தமிடும்போது, இங்கு உலகமென்று ஒரு பொருள் இருப்பதையே மறந்துவிடுவதாக எழுதியிருக்கிறார் கமல்.

அப்படியே காட்சியில் ஓர் ஆணையும் பெண்ணையும் பொருத்திப் பார்த்தால் இதிலுள்ள காதலென்ற அர்த்தம் கண்ணாடியின் முகத்தைப்போல தெரியும். இறுதியில் கோதையை பூங்கோதையாக்கியிருப்பார். 

"ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று
உன்னித்து எழுந்த என் தட முலைகள்
மானிடவர்க்கு என்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே"

"சக்கரமும் வெண்சங்கும் தாங்கிய இறைவனுக்கென்று படைக்கப்பட்ட என் மார்பகங்கள் மனிதர்களுக்காக என்கிற பேச்சு காதில் பட்டாலே என்னால் வாழ முடியாது" என்ற குணத்தினைக்கொண்ட  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருப்பாவை போல இல்லை இங்கு கமல் எழுதும் திருப்பாவை.

"இது நேராமலே... நான் உன்னை பாராமலே... 
இந்த முழு ஜென்மம் போய் இருந்தால்
என்று அதை எண்ணி வீண் ஏக்கம் ஏங்காமலே
உன்னை மூச்சாக்கி வாழ்வேனடா"

- என்ற வரிகளில் 'கண்ணனை மூச்சாக்கி சுவாசித்து இந்த காற்றிலேயே வாழ்வேன்' என்று நேர்மறையான நிறைவில் பாடலை நிறைவு செய்வார் கவிஞர் கமல்ஹாசன்.

 

இந்த மூன்றைப்போல இன்னும் எத்தனையோ பாடல்கள் இருக்கின்றன. அனைத்திலும் சிறந்ததாகவே நிரூபித்தார்.
கமல் ஒரு சகலகலாவல்லவர். சினிமா, இலக்கியம், இதழியல் தாண்டி அவர் எடுக்கவிருக்கும் அரசியல் அவதாரத்துக்கும் சேர்த்து பிறந்தநாள் வாழ்த்துகள்!

https://cinema.vikatan.com

  • தொடங்கியவர்

கல்லூரி கட்டணத்துக்கு கஷ்டப்பட்டவர் இரண்டு நோபல் வென்ற கதை! #MarieCurieMemories

Marie Curie

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று உலகம் முழுவதும் ரேடியம் முறை சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனால், ஏராளமானவர்கள் நோயிலிருந்து விடுபடவும் செய்கிறார்கள். இந்த மருத்துவப் புரட்சிக்கு வித்திட்டவர் மேரி கியூரி  (Marie Curie). 

 

கல்வி ஒன்று மட்டுமே மனித குலத்தின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தக்கூடியது. ஆனால், கல்வி எல்லோருக்கும் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. அதிலும் பின்தங்கிய பொருளாதாரத்தில் இருக்கும் குடும்பங்களில் பிறந்த குழந்தைகள் கல்வியைப் பெற்று வெளியுலகில் தடம் பதிப்பது என்பது பெரும் போராட்டம்தான். அதுபோன்ற குடும்பம் ஒன்றில் பிறந்தவர்தான் மேரி. ரஷ்யாவின் ஆளுகைக்கு உட்பட்ட போலந்து நாட்டில் 1867-ம் ஆண்டு நவம்பர் 7-நாள் பிறந்தார். ஜார் மன்னரின் கொடுமையான ஆட்சிக்குட்பட்டிருந்த அந்த நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பலரும் ஈடுபட்டிருந்தனர். மேரியின் குடும்பமும் அவற்றில் ஒன்று. இவரின் பெற்றோர் ஆசிரியர்கள். இவருக்கு, பத்து வயதாக இருக்கும்போது அம்மா இறந்துபோகிறார். மேரிக்கு ஆசிரியராகவும் ஓவியராகவும் விளங்கிய அவரின் தாய் இறந்தது அவருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.  

தனது பள்ளிப் படிப்பில் முதல் மாணவியாக மேரி தேர்ச்சிப் பெற்றாலும் கல்லூரிப் படிப்பைப் படிக்க, போதுமான பொருளாதார வசதி இல்லாத சூழலில் குடும்பம் இருந்தது. அதனால், கல்லூரிக்கான பணத்தைக் கட்ட பகுதி நேர வேலைகள் பலவற்றைப் பார்த்தார். இவரின் அக்காவுக்குப் படிப்பின்மீது ஆர்வம் இருந்தும் குடும்பச் சூழலால், வேலைக்காகப் பாரிஸுக்குச் செல்ல வேண்டியிருந்தது. போராடிக் கிடைத்த கல்வியில் முழுக் கவனத்துடன் படித்து, இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். பிரான்ஸ் நாட்டின் முதல் பெண் முனைவர் எனும் பெருமையையும் சூடிக்கொண்டார்.

மேரி பாரிஸில் தன் ஆய்வுகளில் ஈடுபட்டார். அங்குப் பேராசிரியர் பியரி கியூரியைச் சந்திக்கிறார். இருவரும் ஒரு திசையில் பயணிக்கக் கூடியவர்களாக இருந்ததால் இருவரின் எண்ணங்களும் ஒன்றாக, திருமணம் செய்துகொள்கின்றனர். அறிவியல் மீது பேரார்வம் கொண்ட இந்தத் தம்பதி யுரேனியத்தை விடக் கதிரியக்கம் பொலோனியம் மற்றும் ரேடியம் ஆகியவற்றில் அதிகம் எனக் கண்டறிகின்றனர். 1903-ம் ஆண்டு ஹென்றி பெக்கெரலுடன் (Henri Becquerel) இணைந்து கதிரியக்கம் தொடர்பான ஆய்வுக்காக நோபல் பரிசு பெறுகிறார். உலக அளவில் நோபல் பரிசு பெறும் முதல் பெண் எனும் பெருமையைத் தட்டிச்சென்றார்.

அடுத்தடுத்து ஆய்வில் பயணித்துகொண்டிருந்தபோது, மேரி கியூரியின் கணவர் பியரி கியூரி எதிர்பாராதவிதத்தில் இறந்துபோகிறார். உலகமே இருண்டுபோய்விடுகிறது மேரி கியூரிக்கு. சகப் பணியாளர்களின் வார்த்தைகளால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். அப்போதெல்லாம் தனது சொந்த கிராமத்துக்குச் சென்று பழைய நினைவுகளை மீட்டெடுத்துத் தன்னம்பிக்கை கொள்கிறார். 

மேரி கியூரி

 

கணவர் இறந்தபிறகு, மேரி கியூரி தனது ஆய்வில் தொடர்ந்து ஈடுபடுகிறார். ரேடியம் மற்றும் பொலோனியம் தொடர்பாக இவரின் ஆய்வுக்கு 1910-ம் ஆண்டு நோபல் பரிசு கிடைக்கிறது. இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற ஒரே பெண் எனும் பெருமையும் கிடைக்கிறது. தனது மகளையும் ஆய்வில் ஈடுபடச் செய்தார். கேன்சரைக் குணப்படுத்தும் ரேடியத்தை இந்த உலகுக்கு மாபெரும் கொடையாக அளித்தார். ரேடியத்துக்கான காப்புரிமையைப் பெறச் சொல்லி பலரும் வற்புறுத்தியும் மறுத்துவிட்டார். ஏழை எளிய மக்களுக்கான சேவையாக அது அமையட்டும் என விட்டுவிட்டார். தனது அறுபத்தியேழு வயதில் மரணம் அடைந்தார். ஆனாலும் ஒவ்வொரு கேன்சர் நோயாளியின் சிகிச்சையிலும் அவர் உயிர்தெழுகிறார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தனி ஒருவனாக ஏரியை சுத்தம் செய்யும் காஷ்மீர் சிறுவன்

ஜம்மு கஷ்மீரில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரிகளின் ஒன்றான வூலர் ஏரியை தனி ஒருவனாக சுத்தம் செய்யும் 17 வயதான பிலால் அகமது தர் பற்றிய காணொளி.

  • தொடங்கியவர்

சாங்கி விமான நிலையத்தில் புதிய தொழில் நுட்ப சேவை

 
சாங்கி விமான நிலையத்தில் புதிய தொழில் நுட்ப சேவை

உலக பிரசித்தி பெற்ற வானூர்தி நிலையங்களில் ஒன்றான சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையத்தின் (Singapore Changi Airport) டெர்மினல் 4 இல் புதிய தொழில் நுட்ப சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நவீன தொழில்நுட்ப வசதிகள் (fully automated check-in system including facial scanning and computerised baggage drop points) சுமார் 985 மில்லியன் சிங்கப்பூர் டொலர்கள் (723 அமெரிக்க டாலர்கள்)செலவில்அமைக்கப்பட்டுள்ளன.

வருடத்துக்கு சுமார் 16 மில்லியன் பயணிகளை கையாளுகின்றது இந்த சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம்.

இந்தப் புதிய தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பயணிகள் அனைவரும் வானூர்தி நிலைய ஊழியர்கள் யாருடைய உதவியின்றியும் தாமே முக ஸ்கேனிங் செய்து கொண்டு பரிசோதனைகள் (Check-In) , பேக்கேஜ் டிராப் போன்றவைகளை சுயமாக முடித்துக் கொண்டு வானூர்தியில் பயணிக்கலாம்.

இந்த நவீன தொழில் நுட்பம் அறிமுகமான முதல் நாளின் முதல் சேவையாக சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங் செல்லும் கேத்தே பசிபிக் வானூர்திப் பயணிகள் இந்த சுயமுக ஸ்கேனிங் மெஷின்களை உபயோகப்படுத்தக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

எனினும் அவர்களில் சிலரால் சுய ஸ்கேனிங் செய்து கொள்ள இயலாததால் நடைமுறையிலுள்ள நிலையங்களுக்குச் சென்று வழமையான பணிகளை முடித்துக் கொண்டனர்.

இதுபோன்ற நவீன தொழிற்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் ஆசிய அளவில் ஹாங்காங், டுபாய் போன்ற நாடுகளுடனும், அண்டை நாடுகளான மலேசியா, தாய்லாந்து போன்றவற்றுடனும் சிங்கப்பூர் பயணிகளைக் கவரும் பெரும் போட்டியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

http://newuthayan.com

  • தொடங்கியவர்

அறிவியல் ஆய்வுக்காக அரசு வேலையை உதறியவர்..! சர்.சி.வி.ராமன் பிறந்ததினப் பகிர்வு

``கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்னர் தன் மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்ல விரும்புகிறார் ஓர் இளைஞர். அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், உடல்நிலை தகுதிச் சான்று கிடைக்கவில்லை. எனவே, அன்று அவருடைய விருப்பம் நிறைவேறாமல்போனது. அதன் பிறகு இந்தியாவிலேயே படித்து பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டார். 1930-ம் ஆண்டில் தன் `ராமன் விளைவு'க்காக நோபல் பரிசும் பெற்றார். நோபல் பரிசுக் குறிப்பில் இருக்கும் முதல் தமிழ்ப் பெயருக்குச் சொந்தக்காரரான சர் சி.வி.ராமனின் பிறந்த தினம் இன்று.  

வாசிப்பை நேசித்தவர்: 

 

சர்.சி.வி.ராமன்

விளையாட்டுச் சிறுவனாக இருந்தபோதே தன் தந்தையின் அலமாரியில் இருந்த புத்தகங்களின் வசமானார் ராமன். அங்கே இருந்த எண்ணற்ற அறிவியல் புத்தகங்கள், அவரை அறிவியலின் பக்கம் திருப்பின.

ஆசிய ஜோதி - எட்வின் அர்னால்டு

தி எலமண்ட்ஸ் - யூகிலிட்

Sensations Of Tone - Hermann von Helmholtz.

இந்த மூன்று புத்தகங்களும் அவருக்கு மிகவும் நெருக்கமானவை. சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்ற ராமன், 1907-ம் ஆண்டில் நடைபெற்ற நிதித்துறைத் தேர்வில் முதல் இடம் பெற்றார். பிறகு அவரது வாழ்க்கை கொல்கத்தாவில் தலைமைக் கணக்கு அலுவலராகத் தொடர்ந்தது. அந்த வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தபோதும் அவரது அறிவியல் ஆர்வம் காரணமாக தன் ஊதியத்தின் பெரும்பங்கை ஆய்வுக்கே செலவுசெய்தார். அப்போதுதான் அவருக்கு `இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்' பற்றித் தெரியவந்தது. பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு மாலையில் அங்கு சென்று ஆய்வுகள் செய்துபார்ப்பார். ஒருகட்டத்தில் தன்னுடைய வேலையைத் துறந்துவிட்டு முழுநேரமாக ஆய்வை மேற்கொள்ள ஆரம்பித்தார்.

ஆய்வுக் கருவிகள் கண்டுபிடிப்பு: 

சர்.சி.வி.ராமன்

தான் மேற்கொள்ளும் ஆய்வுக்குத் தேவையான சிறுசிறு கருவிகளைத் தானே உருவாக்கினார். முக்கியமான சில கருவிகளை மட்டுமே வெளிநாட்டிலிருந்து வரவழைப்பார். ஆய்வுகளை, மிகவும் சிக்கனமாகச் செய்து முடிப்பார். இவை தவிர, அறிவியல் இதழ் ஒன்றையும் நடத்திவந்தார். Mediterranean Sea வழியாகக் கடற்பயணம் மேற்கொண்டிருக்கும்போதுதான் `கடல் மற்றும் வானம் நீல நிறமாக இருப்பது ஏன்?' என யோசித்ததன் விளைவுதான் `ராமன் விளைவு'க்கு வித்தானது. தன் ஆய்வு மாணவர்களிடம், `அறிவியலை, கற்றலின் வழி மட்டுமே கண்டடைய முடியாது; தொடர்ச்சியான கேள்வி கேட்பதன் மூலமாகத்தான் அடைய முடியும்' என்பார். ராமனின் அந்தத் தொடர் கேள்வி கேட்கும் தன்மைதான் அவரை நோபல் பரிசு வரை அழைத்துச் சென்றது. 

நோபல் பரிசு:

சர்.சி.வி.ராமன்

நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் ஆர்தர் காம்ப்டனின் X- கதிர்கள் குறித்தான ஆய்வு, ராமனை `ராமன் விளைவு' குறித்த ஆய்வுக்குத் தள்ளியது. தொடர்ச்சியான ஆய்வுகளின் வழியே அதில் வெற்றியும் கண்டார். 1954-ம் ஆண்டில் பாரத் ரத்னா விருதும், 1957-ம் ஆண்டில் லெனின் அமைதிப்பரிசும் பெற்றார். இவரது மார்பளவு சிலை ஒன்று கொல்கத்தாவின் பிர்லா இண்டஸ்டரியல் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளது. ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்ட பிப்ரவரி 28-ம் தேதி `தேசிய அறிவியல் தின'மாகக் கொண்டாடப்படுகிறது.

சர்.சி.வி.ராமன்

 

`ஐந்து வயதிலிருந்தே குழந்தைகளை விஞ்ஞானியாக வளர்க்க வேண்டும். அவர்களின் கேள்விகளை மதித்து சலிப்படையாமல், நாம் அதற்குப் பதில் சொல்ல வேண்டும். அவர்களின் கற்றல் அறிவு, புத்தகங்களோடு தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் நாடு அறிவியலில் ஒளிரும்' என்பார் ராமன். சம்பளம், டார்கெட் எனத் தங்கள் கல்வி, அறிவு முழுவதையும் பணம் சம்பாதிக்கப் பலரும் முதலீடு செய்கையில், மிகப்பெரிய வேலையை உதறித் தள்ளிவிட்டு, தனக்கான திறமையும் விருப்பமும் உள்ள ஒன்றில் சிகரம் தொட்ட சர் சி.வி.ராமனும் `உலக நாயகன்'தான்.

http://www.vikatan.com

 

  • தொடங்கியவர்

”ஒரு இயக்குநராகவும், அம்மாவாகவும் இருப்பது மிகவும் கடினம்” - நந்திதா தாஸின் பர்சனல் பக்கங்கள்! #HBDNanditaDas

 
 

நந்திதா

ரு நடிகையாகக் குறிப்பிடுவதைவிட, முற்போக்கான பெண்ணாக அடையாளப்படுத்துவதே அவருக்குப் பொருத்தமாக இருக்கும். ஓரினச் சேர்க்கையாளர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'ஃபயர்’, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையைச் சொல்லும் '1947 யர்த்' என அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள், இந்தியச் சமூகத்தில் பேசத் தயங்கும் விஷயங்களைப் பகிரங்கப்படுத்தியது. அத்தகையத் திரைப்படங்களில் துணிவுடன் நடித்த நந்திதா தாஸின் 47-வது பிறந்தநாள் இன்று.

 

நந்திதாவின் தந்தை, பிரபல ஓவியரான ஜத்தின் தாஸ். அம்மா வர்ஷா, ஓர் எழுத்தாளர். சிறுவயதிலிருந்தே புத்தகங்களுடன் உறவாடி வந்த நந்திதாவுக்கு, பிரெஞ்ச் உள்பட 11 மொழிகள் அத்துப்படி. மும்பை கல்லூரியில் படிக்கும்போதே, நாடகக் குழுவில் இணைந்து தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்தார். பெண்கள் உரிமை, சாதீயம் எனச் சமூகப் பிரச்னைகளை எடுத்துரைக்கும் நாடகங்களில் நடித்தார். புதுடெல்லியில், சமூகப் பணி படிப்பில் முதுகலைப் பட்டம் வாங்கினார். நாடக ஆர்வம், அவரைத் திரைக்குக் கொண்டுவந்தது. 10 மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் நந்திதா தாஸ். 

அது பாலிவுட்டாக இருக்கட்டும், ஹாலிவுட்டாக இருக்கட்டும் வாய்ப்புகளைத் தேடி அவராகச் சென்றதில்லை. தேடிவந்த வாய்ப்புகளையும் மிகக் கவனமாகவே தேர்ந்தெடுத்து நடித்தார். “எனக்கு ஹாலிவுட்டிலிருந்து வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், ஓர் இந்தியப் பெண்ணுக்கு எத்தகைய கதாபாத்திரம் அளிக்கமுடியுமோ, அதையே கொடுக்கிறார்கள். அதனை நான் ஏற்கவேண்டிய அவசியமில்லை” என்று தெளிவாகக் கூறுகிறார் நந்திதா தாஸ். இவர் இயக்குநராகக் களமிறங்கிய ‘ஃபிராக்’ (Firaaq) திரைப்படம், 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற மதக்கலவரத்தை மையப்படுத்தியது. 

நந்திதா2005 முதல் 2013 வரை உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தவர். திரைத்துறையில் இருந்தவாறே அதில் நிலவும் ஒடுக்குமுறைகளை வெளிப்படையாகப் பேசியவர்களில் நந்திதா முக்கியமானவர். இந்தியக் கலாசாரத்தில், கறுப்பாக இருப்பவர்களைத் தாழ்வாக நினைக்கும் போக்கை எதிர்த்து, இவர் ஆரம்பித்த ‘Dark is Beautiful' (கருமை அழகு) பிரசாரம் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தது. இந்திய சினிமாவில் சிவப்பான நடிகைகளுக்கே முக்கியத்துவம் அளித்துவருவதற்கு எதிராகக் குரல் கொடுத்தார். 'எனது இத்தகைய செயற்பாட்டுக்குக் காரணம், என் பெற்றோர்களே. சாதி, மதம், பாலினம் ஆகியவற்றில் வேறுபாடு காட்டாமல் என்னை வளர்த்த அவர்களுக்கு நான் நன்றிகூற வேண்டும்” என்கிறார் நந்திதா தாஸ். 

சொந்த வாழ்விலும் தைரியமாக முடிவெடுப்பதில் தயங்காதவர். 2002-ம் ஆண்டு, செளமியா சென் என்பவரைத் திருமணம் செய்துகொண்டவர், 2007-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். பிறகு, 2010-ம் ஆண்டு சபோத் மஸ்காரா என்ற தொழிலபரை மணந்தார். இப்போது, விஹான் என்ற மகன் இருக்கிறான். “என் வாழ்க்கையை மாற்றிய ஒரு விஷயம் தாய்மை. என் வாழ்க்கையில் நடந்த அற்புதமான ஒன்று, விஹான் பிறந்தது. ஒரே சமயத்தில் இயக்குநராகவும் அம்மாவாகவும் இருப்பது மிகவும் கடினம். சில சமயம், வீட்டில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, 'அம்மா, நீங்க வேலை செய்யாதீங்க' என்று என் லாப்டாப்பை மூடிவிடுவான்” என்று தாய்மை தருணங்களை நெகிழ்ந்து கூறுகிறார். 

தற்போது, தனது இரண்டாவது கணவரையும் பிரிந்து வாழும் நந்திதா, “என் சொந்த வாழ்விலும் எந்த ஒளிவும் மறைவும் இல்லாமல் இருக்கிறேன். திருமணம் என்பது இரண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம். ஆண்-பெண் இருவரும் காதலித்து, திருமணம் செய்துகொண்டு, குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். பிறகு, குழந்தைகளுக்காகவும் சமூகத்துக்காகவும் சேர்ந்து வாழ்கிறார்கள். பிடிக்கவில்லை என்றால், விவாகரத்துச் செய்துகொள்ளும் துணிச்சல் ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கிறது” என்றார். 

 

தற்போது, பிரபல எழுத்தாளர் ஓவியர் மாண்டோ பற்றிய திரைப்படத்தை உருவாக்கிவரும் நந்திதா தாஸ், தனது பிறந்தநாளையும் ’மாண்டோ’ தொடர்பான வேலைகளைச் செய்தவாறே கொண்டாடுகிறேன் என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

ரகசிய கேமரா மூலம் எடுக்கப்படும் ஆபாசப்படங்களை பார்ப்பவர்களுக்கு 'அதிர்ச்சி வைத்தியம்'

தென்கொரியாவில், ரகசிய கேமராக்கள் மூலமாக, ஆபாசப்படம் எடுப்பது, அதிகமாக நடக்கக்கூடிய குற்றமாக உள்ளது. இதை சரிசெய்யவும், ஆபாசப்படம் பார்ப்பவர்களை தடுக்கவும் புதிய யுக்தியை கையாண்டுள்ளது தென்கொரிய காவல்துறை.

  • தொடங்கியவர்

தவறு செய்துவிட்டாய் தேவசேனா... இவ்வளவு அழகும் திறமையும் ஆகுமா?! #HBDAnushkaShetty

 
 

அனுஷ்கா

எனக்கு தெலுங்கு படங்கள் பார்க்கும் பழக்கம் அப்போது இல்லை. அருந்ததி படம் தமிழில் டப் ஆகி வெளியாக, ஏதோ ஓர் ஆர்வத்தில் தியேட்டருக்குள் நுழைந்துவிட்டேன். அந்த நாளை மறக்க முடியாது. அதற்கு அடுத்த ஒரு மாதம் யூடியூபே கதி. அனுஷ்கா நடித்தப் படங்களின் காட்சிகளைத் தேடித்தேடி பார்த்துக்கொண்டிருந்தேன்.

 

அப்போது அனுஷ்கா நடித்துகொண்டிருந்தவை பெரும்பாலும் கிளாமர் ரோல்களே. ஆனால், அதையெல்லாம் தாண்டி அனுஷ்காவிடம் ரசிக்க ஏதோ இருந்தது. அவரது வீடியோக்களை விட்டுவிட்டு அவரைப் பற்றி தேடிப் படிக்க ஆரம்பித்தேன். அனுஷ்காவின் பூர்வீகம் கர்நாடகம். ஐஷ்வர்யா ராயைத் தந்த அதே மங்களூர் நகரம்தான் அனுஷ்காவையும் தந்திருக்கிறது. யோகா டீச்சரான அனுஷ்காவுக்கு சினிமா மீதெல்லாம் ஆர்வமில்லை. எல்லோருக்கும் தெரிந்தது போல, யோகாதான் அவருக்கு எல்லாமே. வீட்டில் பிரஷர். அதனால், சூப்பர் என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பின்... தொட்டதெல்லாம் ஹிட் தான்.

அனுஷ்காவின் வெற்றிக்கு ஒரு காரணம் இருக்கிறது. அவரைப் பற்றிய எல்லாச் செய்திகளிலும் காணப்படும் பொதுவான விஷயம் அதுதான். எந்த வேலை செய்தாலும் அல்லது எந்த வேலை கொடுக்கப்பட்டாலும் அதை முழு ஈடுபாட்டோடு செய்வார். அது நடனமோ, யோகாவோ, நடிப்போ, பேட்டியோ. எதையுமே “ஜஸ்க் லைக் தட்” டீல் செய்வது ஸ்வீட்டிக்குப் பிடிக்காத விஷயம்; அல்லது தெரியாத விஷயம்.

ஆந்திர இண்டஸ்ட்ரியே இவரது வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமைப்பட்ட சமயம். எந்தப் பெரிய ஹீரோ படமும் கைவசமில்லை. அனுஷ்கா கவலைப்படவில்லை. ”வந்தா நடிப்பேன்... இல்லைன்னா ஒதுங்குவேன்” என்றார் தில்லாக. தேவதைகள் கஷ்டப்பட்டால் பூமி தாங்குமா? அப்போது வந்த வாய்ப்புதான் அருந்ததி. அதன்பின், அனுஷ்காவை எதிர்ப்பது புத்திசாலித்தனமல்ல; அரவணைப்பதே சிறந்தது என இறங்கி வந்தது டோலிவுட்.

இளமையான நடிகையாக இருந்தபோது அவரைத் தேடி நல்ல ரோல்கள் அதிகம் வரவில்லை. ஆனால், கடைசி 5 ஆண்டாக ஸ்வீட்டியின் ரோல்களில் அவ்வளவு வெரைட்டி. இஞ்சி இடுப்பழகிக்காக 17 கிலோ ஏற்றினார். 99% இந்திய நடிகர்களே அதையெல்லாம் செய்ய மாட்டார்கள். அடுத்த சில மாதங்களில் பாகுபலி ஷூட்டிங். மீண்டும் எடை குறைக்க வேண்டும். அதையும் செய்தார். பாகுபலி முதல் பாகத்தில் அனுஷ்காவைப் பார்க்க முடியாமல் அவரது ரசிகர்கள் பொங்க, அடுத்த பாகத்தில் கிடைத்தது போனஸ். குதிரையில் ஏறி வாள் சுற்றும் அனுஷ்காவின் நேர்த்தியை இன்னொரு நடிகரிடம் கூட பார்க்க முடியாது.

இதுதான் அனுஷ்கா என அவரை வரையறைக்கவே முடியாது. வானம் படத்தில் பாலியில் தொழிலாளி வேடம். அந்தப் படத்தின் ஒரே ஒரு போஸ்டர் போதும். அவரது கதாபாத்திரம் என்னவென புரிந்துகொள்ள முடியும். திறமையும், குழந்தைத்தனம் கொண்ட அந்த அழகும், மற்றவர்களிடம் அவர் காட்டும் அன்பும்தான் அனுஷ்கா. ஒரு ஹீரோவை அண்ணனாகப் பார்க்கும் ரசிகர்கள் உண்டு. ஆனால், ஒரு நடிகையை அவளது அழகைத் தாண்டி Admire செய்யும், inspire ஆகும் ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். அனுஷ்காவுக்கு மட்டுமே வாய்த்த வரம் அது. அதற்கு 100% தகுதியானவர் ஸ்வீட்டி.

இதோ இன்று அவரது பிறந்த நாள். வழக்கமாக, பிறந்த நாளன்று நடிகைகள் வெளியிடும் படங்கள் எப்படியிருக்கும்? ஆனால், அனுஷ்கா நடிக்கும் பாகமதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் பாருங்கள். அதுதான் அனுஷ்கா. அதுதான் ஸ்வீட்டி.

அனுஷ்கா

 

ஒன்று மட்டும் நிச்சயம். அனுஷ்காவுக்கு வயதாகலாம். ஆனால், அவர் அழகு மட்டும் குறையவே குறையாது. அனுஷ்காவின் அழகு என்பது கண்களிலும் மூக்கிலும் இருப்பதல்ல; இதயத்தில் இருப்பது. அவரது எண்ணங்களில் இருப்பது. வேலையில் அவர் காட்டும் அர்ப்பணிப்பில் இருப்பது.

 

லவ் யூ ஸ்வீட்டி.

https://cinema.vikatan.com

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
‘உணராத வாழ்வில் இனிமை இல்லை’
 

image_f399806c11.jpgகடவுள் கிருபையின் சுகானுபவத்தை அடையாது திணரும் ஆன்மாக்கள், எதைச் செய்தாலும், பூரண திருப்தியைக் காணலாம் என்பதில் முனைப்பாக இருக்கின்றனர்.  

மோட்சத்தை அடைவதற்கு வழிதேடி, ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது, பூஜை புனக்காரங்களை மேற்கொள்வது, சாஸ்திரங்கள் பயில்வது என என்ன செய்தாலும், மனம் என்னவோ சாந்தி பெறவில்லையே எனப் பலரும் சொல்வதுண்டு.  

ஹே மனிதா! இறை அனுபவங்களை  அனுதினம் பெற்றாலும் கூட, அதைப் புரியாமல் அவஸ்தைப்படுகின்றாய்.  

உனது செயல் மூலம், கடவுளிடம் இருந்து பெறும் எல்லாமே அவன் மூலம் கிடைக்கும் இன்ப ஊற்றின் சிறுதுளி என ஏன் உணர்கின்றாய் இல்லையே?  

உனது குழப்பங்கள், சலனங்களை விலக்க, ‘இறை அனுபவங்களை உணரும் வல்லமை தா’ என அவரிடமே கேட்பாயாக. உணராத வாழ்வில் இனிமை இல்லை. 

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

நவம்பர் – 08

 

1520 : டென்மார்க் படைகள் சுவீ­டனை முற்­று­கை­யிட்­டன. இதை­ய­டுத்து சுமார் 100 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1811 : இலங்­கையில் புதிய நீதி­மன்ற சட்டம் இயற்­றப்­பட்­டது.

varalaru-Hiyan-Typhoon.jpg1895 : எதிர்மின் கதிர்­களைச் சோத­னை­யிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் எக்ஸ் கதிர்­களைக் கண்­டு­பி­டித்தார்.

1917 : ரஷ்­யாவில் அக்­டோபர் புரட்­சியை அடுத்து லெனின், ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின் ஆகி­யோ­ருக்கு முழு அதி­கா­ரமும் வழங்­கப்­பட்­டன.

1923 : மியூனிச் நகரில் ஹிட்லர் தலை­மை­யி­லான நாஸிகள் ஜேர்­ம னிய அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்­வியில் முடிந்­தது.

1938 : பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஜேர்­ம­னிய தூதுவர் கொலை செய்­யப்­பட்­டதை அடுத்து ஜேர்­ம­னி­யிலும் ஆஸ்­தி­ரி­யா­விலும் யூதர்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கிளம்­பின.

1939 : மியூனிச் நகரில் ஹிட்­லரைக் கொலை செய்ய எடுக்­கப்­பட்ட முயற்சி தோல்­வி­ய­டைந்­தது.

1942 : மேற்கு உக்­ரேனின் தெர்­னோப்பில் நகரில் நாசி ஜேர்­ம­னி­யினர் 2,400 யூதர்­களை பெல்செக் நகரில் இருந்த வதை முகா­முக்கு அனுப்­பினர்.

1950 : கொரியப் போரில் ஐக்­கிய அமெ­ரிக்க வான் படை­யினர். வட கொரிய மிக் விமா­னங்கள் இரண்டை சுட்டு வீழ்த்­தினர்.

1960 : அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் ரிச்சர்ட் நிக்­ஸனை தோற்­க­டித்து ஜோன் எவ். கென்­னடி வெற்றி பெற்றார்.

varalaru1.jpg1965 : சாகோஸ் தீவுகள், அல்­டப்ரா, பர்­கு­வாஹர், டெஸ் ரோசஸ் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய பிரித்­தா­னிய இந்து சமுத்­திர மண்­டலம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1977 : கி.மு. முதலாம் நூற்­றாண்டைச் சேர்ந்த கிரேக்க மன்னர் இரண்டாம் பிலிப்பு என்­ப­வரின் சமாதி மனோலிஸ் அண்ட்­ரோனிக்ஸ் என்­ப­வரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

1987 : வடக்கு அயர்­லாந்தில் பிரித்­தா­னிய இரா­ணுவ நினைவு நிகழ்­வொன்றில் குண்டு வெடித்ததில் ஐரிஷ் குடி­ய­ரசு இரா­ணு­வத்­தி­னரின் 12 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2002 : ஈராக்­கிய ஜனா­தி­பதி சதாம் ஹுஸைன் ஆயு­தங்­களைக் கைவிட வேண்டுமென்பதை வலி­யு­றுத்தும் ஈராக் தொடர்­பான தீர்­மானம் ஐ.நா. பாது­காப்புச் சபையில் நிறை­வேற்­றப்­பட்­டது.

2006 : வாக­ரையில் எறி­கணை வீச்சுத் தாக்­கு­தலில் 40 பொது­மக்கள் கொல்­லப்­பட்­டனர். 125 இற்கும்
மேற்­பட்டோர் காய­ம­டைந்­தனர்.

2006 : பாகிஸ்­தானில் தர்காய் என்ற இடத்தில் இடம்­பெற்ற தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தலில் 45 இரா­ணு­வத்­தினர் கொல்­லப்­பட்­டனர்.

2011 : விண் கல் ஒன்று பூமியிலிருந்து 324,600 கி.மீ. தூரம் வரை நெருங்கி வந்து பின்பு விலகிச் சென்றது.

2013 : பிலிப்பைன்ஸில் ஹையன் சூறாவளி தாக்கியதால் 6,340 பேர் உயிரிழந்தனர். 1,061 பேர் காணாமல் போயினர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

காது கேட்கலைன்னா ஜெயிக்க முடியாதா என்ன?- 'ஹல்க்' லூ ஃபெர்ரிக்னோவின் கதை! #MotivationStory

 

தன்னம்பிக்கை கதை

ம்மூர் ஆட்களுக்கு மட்டுமல்ல... உலகம் முழுக்கவே சினிமா கனவில் மிதப்பவர்கள் ஏராளம். அழகுடன் கூடிய நல்ல உடற்கட்டு, அறிவு, திறமை எல்லாம் இருந்தாலும்கூட பலரால் திரைத்துறையில் காலூன்றவோ, தனி முத்திரை பதிக்கவோ முடிவதில்லை. இவற்றையும் தாண்டிய செல்வாக்கு, சிபாரிசு, பெரியவர்களின் அறிமுகம்... என என்னென்னவோ தேவைப்படும் துறை அது. இதில், மாற்றுத்திறனாளிகள் என்றால் திரைத்துறைப் பக்கம் காலூன்றக்கூட முடியாது. லூ ஃபெர்ரிக்னோ (Lou Ferrigno) ஒரு மாற்றுத்திறனாளி. `நீயெல்லாம் எங்கே உருப்படப் போறே!’ என்று தன் அப்பாவாலேயே சிறு வயதில் பல முறை விமர்சனத்துக்கும் திட்டுக்கும் ஆளானவர். அவர், ஹாலிவுட் திரையில் புகழ்பெற்ற நட்சத்திரமாக வலம் வந்த கதை இது. 

 

நியூயார்க்கிலிருக்கும் புரூக்ளினில் 1951-ம் ஆண்டில் பிறந்தார் லூ ஃபெர்ரிக்னோ. அப்பா மாட் ஃபெர்ரிக்னோ (Matt Ferrigno) ஒரு போலீஸ்காரர். பிறந்தபோதே லூ ஃபெர்ரிக்னோவுக்கு காதில் ஏதோ ஒரு இன்ஃபெக்‌ஷன். அது தீவிரமாகி, 75-ல் இருந்து 80 சதவிகிதம் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது. சிறு வயதில் ஒரு குழந்தைக்கு காது கேளாமை பிரச்னை வருவது என்பது கொடுமையிலும் கொடுமை. மற்றவர்கள் சொல்வதைக் குழந்தையால் புரிந்துகொள்ள முடியாது. குழந்தை பேசுவது ஏறுக்கு மாறாக இருந்தால், கேட்பவர்களின் கேலிப் பேச்சுக்கு ஆளாக நேரிடும். துரதிர்ஷ்டவசமாக லூ-வின் பெற்றோர், அவருக்கு இந்தப் பிரச்னை இருப்பதை மூன்று வயதில்தான் கண்டுபிடித்தார்கள். அதற்குள் நிரந்தரமாகவே அவருக்கு காது கேட்காமல் போய்விட்டது. 

லூ ஃபெர்ரிக்னோவின் தன்னம்பிக்கை கதை

சக நண்பர்களால் கிண்டல் செய்யப்பட்டார் லூ ஃபெர்ரிக்னோ. என்னதான் காது கேட்காது என்றாலும், தன்னைக் கிண்டல் செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாதா என்ன? பல்லைக்கடித்துக்கொண்டு தாங்கிக்கொள்வார் லூ. பல நேரங்களில் கேலி பேசுவது தெரிந்தாலும், கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார். தன்னைக் கிண்டல் செய்யும் நண்பர்களை, அக்கம்பக்கத்தவர்களை, உறவினர்களை, தெருக்காரர்களை சமாளிப்பதுகூட அவருக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அப்பா உதிர்க்கும் வார்த்தைகள் அவரால் தாங்க முடியாததாக இருந்தன. லூ-வுக்குக் காது கேட்காது என்பதால், அவரைத் தொட்டு அழைத்து சைகை மூலமாகவெல்லாம் திட்டியிருக்கிறார் அவர் தந்தை. `நீயெல்லாம் வாழ்க்கையில எதையும் சாதிக்க மாட்டே!’, `நீ எப்படி உருப்புடுறேனு நானும் பார்க்குறேன்’... என்றெல்லாம் திட்டுவார் லூ-வின் தந்தை. இதற்கெல்லாம் எப்படியாவது பதில் தர வேண்டும், கேலி பேசிய அத்தனை பேரையும் தன்னை வியப்போடு பார்க்கவைக்க வேண்டும் என்பதுதான் லூ-வின் லட்சியமாக இருந்தது. அந்த லட்சியம் மெள்ள மெள்ள மனதில் ஊன்றி, வேர்விட்டு, கிளைபரப்பி, பெரிய ஆலமரமாக வளர்ந்துகொண்டிருந்தது. 

லூ ஃபெர்ரிக்னோ கதை

காதுதான் கேட்கவில்லையே தவிர, லூ-வுக்குத் தன் உடல்மீது அக்கறை இருந்தது. தன் உடலைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்; அதற்கு வலு சேர்க்க வேண்டும்; நல்ல திடகாத்திரமான, வலுவான ஆளாக உலகில் வலம்வர வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆஜானுபாகுவான, பார்ப்பவர்களை மிரட்டுகிற உடல்வாகு வேண்டுமென்றால் அதற்காக இருக்கும் ஒரே பயிற்சி... பளு தூக்கும் பயிற்சி. `சரி... ஒரு பாடி பில்டர் ஆகிவிடுவோம்’ என்று முடிவெடுத்தார் லூ. அவருக்குச் சிறு வயதிலிருந்தே ஹெர்குலஸ் கதை பிடிக்கும். ஹெர்குலஸைப் போல அசாதாரணமான பலம் பெற வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுவார். ஆரம்பத்திலிருந்தே அவருக்கு ரோல் மாடலாக இருந்தவர்கள், ஹேர்குலஸும், அமெரிக்காவின் பிரபல பாடி பில்டரான ஸ்டீவ் ரீவ்ஸும்தான் (Steve Reeves). `ஹெர்குலஸ்’ திரைப்படமானபோது அதில் ரீவ்ஸ்தான் ஹெர்குலஸாக நடித்திருந்தார் என்பதும் ரீவ்ஸை, லூ-வுக்குப் பிடித்துப்போக ஒரு காரணமாக இருக்கலாம். இவர்கள் தவிர `ஸ்பைடர்மேன்’, `தி ஹல்க்’ கதாபாத்திரங்கள் லூ-வுக்கு மிகவும் பிடித்தமானவை. ஓஹியோவில் இருந்த கொலம்பியாவில், பிரபல ஹாலிவுட் நடிக ஆர்னால்டு ஸ்க்வாஷ்நேகரோடு பயிற்சி செய்யும் வாய்ப்பு லூ-வுக்குக் கிடைத்தது. அதுவே பிற்காலத்தில் அடுத்த கட்டத்துக்கு அவர் நகர பெரும் உதவியாக இருந்தது. 

13 வயதிலிருந்து பயிற்சிக்கூடத்தில் கடுமையாகப் பயிற்சி செய்தார் லூ. பெரும்பாலான நேரங்கள் பளு தூக்கும் இடத்திலேயே பழியாகக் கிடந்தார். 1969-ம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்தார். படிப்பை முடித்த கையோடு `பாடி பில்டிங்’ எனப்படும் ஆணழகன் போட்டி. `இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் பாடிபில்டிங் அண்ட் ஃபிட்னெஸ்’ (International Federation of BodyBuilding & Fitness) நடத்திய போட்டியில் `மிஸ்டர் அமெரிக்கா’ பட்டம் வென்றார் லூ. அமெரிக்காவே `யார் இந்தப் பையன்?’ என்று திரும்பிப் பார்க்க ஆரம்பித்திருந்தது. அவருடைய தொடர் பயிற்சி அடுத்த நான்கு வருடங்களில் இன்னொரு பெரிய பெருமையை அவருக்குப் பெற்றுத் தந்தது. அதே `இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் பாடிபில்டிங் அண்ட் ஃபிட்னெஸ்’ நடத்திய போட்டியில் `மிஸ்டர் யுனிவர்ஸ்’ பட்டம் பெற்றார்.   

பச்சை மனிதன்

1974-ம் ஆண்டு, `மிஸ்டர் ஒலிம்பியா’ போட்டி நடந்தபோது இரண்டாம் இடத்தில் இருந்தார் லூ. அதற்கு அடுத்த ஆண்டு நடந்தபோட்டியில் ஆர்னால்டும் கலந்துகொண்டார். ஆர்னால்டை எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்கிற அந்தப் போட்டியில் மூன்றாம் இடம்பிடித்தார் லூ ஃபெர்ரிக்னோ. ஆனால், அது அவருக்கு வாழ்க்கையில் முக்கியமான ஒரு திருப்பம். இந்த நிகழ்வை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட `தி பம்ப்பிங் அயர்ன்’ (The Pumping Iron) என்ற ஆவணப்படம் லூ-வை பிரபலமாக்கியது. ஒரு பக்கம் புகழ் கிடைத்தாலும், மறுபக்கம் வருமானம் போதுமானதாக இல்லை. புரூக்ளினில் இருந்த ஒரு தொழிற்சாலையில் மூன்றாண்டுகள் வேலை பார்த்தார். அந்த வேலை பிடிக்காமல் வெளியேறினார். பிறகு என்னென்னவோ வேலைகள். ஒரு ஃபுட்பால் டீமில் போய்ச் சேர்ந்தார். காலை ஒடித்துக்கொண்டார். இப்படிப் பல வேலைகள்... அப்போதுதான் ஒரு தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 

`தி இன்க்ரெடிபிள் ஹல்க்’ (The Incredible Hulk) அதுதான் அந்தத் தொலைக்காட்சித் தொடரின் பெயர். இந்தத் தொடரில் சாதாரண ஹல்க் பாத்திரத்தில் பில் பிக்ஸ்பி என்பவரும், ஹல்க் பாத்திரத்தில் லூ-வும் நடித்திருந்தார்கள். அந்தத் தொடர் பெரும் வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் நடிக்கும் வாய்ப்புகள் தொடர்ந்துவந்தன. பிறகு, பல வாய்ப்புகள்... சினிமாவிலும் நடித்து அசத்தினார் லூ. `தி அவெஞ்சர்ஸ்’, `மாம்’ஸ் நைட் அவுட்’... எனத் தொடர்ந்து, `தோர்:ரக்னாரோக்’ வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது அவர் பயணம். 

பத்திரிகை, தொலைக்காட்சிப் பேட்டிகளில் லூ அழுத்தமாகச் சொல்லும் ஒரு விஷயம் உண்டு. ``எனக்கு மட்டும் காது நல்லாக் கேட்டிருந்தா, இப்போ இந்த இடத்துக்கு என்னால வந்திருக்க முடியாது. சின்ன வயசுல காது கேட்காம இருந்தப்போ எனக்கு கஷ்டமாத்தான் இருந்தது. ஆனா, அதுக்காக நான் வெட்கப்படலை. காது கேட்காமப் போனதுதான் என்னால எதையும் செய்ய முடியும்கிற மன உறுதியை எனக்குத் தந்தது.’’ 

 

 

வெல்டன் லூ!

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு... சாட்சியங்களாக நிற்கும் படங்களும் எழுத்துகளும்! #RussianRevolution

 

ரசியப் புரட்சி

இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர், ரசியப்புரட்சியின் மூலம் ஆட்சியில் அமர்ந்தது, லெனினின் தலைமையிலான பொதுவுடைமைக் கட்சி. முதல் உலகப் போர்க்கால பாதிப்புகளுக்கு மத்தியில் உருவான புரட்சிகர அரசாங்கம், லெனின் தலைமையில் அதுவரை உலக நாடுகள் காணாத அரசு முறையையும் சமூக, பொருளாதார மாற்றங்களையும் செய்துகாட்டியது. 

 

உழைத்து வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் உரிய வேலைக்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது;  வேலைக்கேற்ற ஊதியம் உறுதிப்படுத்தப்பட்டது. குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பில் சமநிலை பேணப்பட்டது. கல்வி, மருத்துவம், வசிப்பிடம் ஆகியவை அடிப்படை உரிமையாக ஆக்கப்பட்டன. 
இந்தியாவின் 1947-க்குப் பின்னர் தீட்டப்பட்ட ஐந்தாண்டுத் திட்டமானது, சோவியத் ரசிய அரசாங்கம் கொண்டுவந்ததுதான்! முதல் பிரதமர் நேரு காலத்தைய உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கான முன்னோடியும் வழிகாட்டியும் சாட்சாத் சோவியத் ரசிய அரசு செயல்படுத்திக் காட்டிய சாதனைத் திட்டங்கள்தான்! இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கு மட்டுமின்றி, ஐரோப்பா கண்டத்திலும் அரசின் தன்மைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. 

ரசியப் புரட்சி

கல்வி, சுகாதாரம், குழந்தை நலன், முதியோர் நலன், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை போன்றவற்றை வழங்கிவரும், மக்கள்நலன் அரசு( welfare state) எனும் புதிய அரசியல் வகைமையே தோன்றும்படிச் செய்ததும், ரசியப் புரட்சியின் விளைவே என்கிறார்கள், ஐரோப்பிய அரசியல் வரலாற்றியலாளர்கள்.  
சாதனைப் பக்கங்களைக் கொண்ட ரசியப் புரட்சியின் தொடர்ச்சியாக, இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் அந்நாடு கடும் இன்னலைச் சந்திக்க நேரிட்டது. ஆனாலும் விவசாயம், தொழில், இராணுவத் தளவாடம், அறிவியல் தொழில்நுட்பம் என பல துறைகளிலும் சோவியத் ரசியாவின் வளர்ச்சி, இன்றைக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கு முன்னோடியாக நிற்கும் வரலாறாக இருக்கிறது, ரசியப் புரட்சி. 

மனிதகுல வரலாற்றில் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு காலம், புதுவகையான சமூக அமைப்பைக் கட்டியமைத்து, பின்னடைவுக்கு உள்ளாகிப்போனாலும், அந்தப் புரட்சியின் மீது உலகம் முழுவதும் இன்றைக்கும் ஓர் ஈர்ப்பு இருக்கத்தான்செய்கிறது. அதன் உயிர்ப்பான சாட்சியங்கள், அதை சாதித்துக்காட்டிய தலைவர்கள் பற்றிய படைப்புகள், ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனத்தோடும் இன்னும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. 

இவற்றில் பிடித்தமான படைப்புகள் பற்றி உடனே சொல்லமுடியுமா என சிலரிடம்  கேட்டபோது, அவர்கள் கூறியது இங்கே:

எழுத்தாளர், திரைப்பட விமர்சகர் யமுனா ராஜேந்திரன் (இங்கிலாந்து): 

எழுத்து

கவிதையில் மாயகவ்ஸ்கி, புனைவுகளில் மாக்சிம் கார்க்கி. அண்மையாக வெளியானவற்றில் தாரிக் அலியின் ’தி டைலமாஸ் ஆஃப் லெனின் - டெரரிசம், வார், எம்பயர்’, லவ், ரெவல்யூசன்’, சைனா மெவிலின் ‘அக்டோபர்’, ஸ்லோவாஜ் ஜிசெக்கின் ‘லெனின் 2017’ போன்றவை. 

திரைப்படங்கள்

1. தி அசாசினேசன் ஆஃப் ட்ராட்ஸ்கி- டிராட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு பற்றியது, 2. தி ட்ரெய்ன் - சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்து பின்னர் ரசியாவுக்குச் சென்று புரட்சியை நடத்தியதுவரையான லெனினின் பாத்திரம் குறித்தது, 3. தி ஃபால் ஆஃப் பெர்லின்- இரண்டாம் உலகப் போரில் ஸ்டாலினின் பங்களிப்பு பற்றியது, 4. ரெட்ஸ் - ’உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ எழுதிய ஜான்ரீடின் வாழ்க்கை வரலாறு, 5. ஐசன்ஸ்டைன் எடுத்த தொகையான படங்கள் - பேட்டில்ஷிப் பொட்டம்கின், அக்டோபர், ஸ்ட்ரைக்.

’யதார்த்தா’ திரைப்பட இயக்கச் செயற்பாட்டாளர்/ ஓவியர் ஸ்ரீரசா (மதுரை): 

எழுத்து 

1. உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் - ஜான் ரீடு, 2. தாய் - மாக்சிம் கார்க்கி, 3. ருஷ்யப் புரட்சி - வி.பி.சிந்தன், 4. ரஷ்யப்புரட்சி - என். ராமகிருஷ்ணன், 5. மாபெரும் சதி, 6. முதல் ஆசிரியர், அன்னை வயல்- ஜிங்கிஸ் ஜத்மாத்தவ், 7. கன்னி நிலம் - மிகையில் ஷோலகவ், 8. வீரம் விளைந்தது - அந்திரேய் ஓஸ்திரோவ்ஸ்கி. 

திரைப்படங்கள்

1. பேட்டில்ஷிப் பொட்டம்கின், ஸ்டிரைக், அக்டோபர் - ஐசன்ஸ்டைன், 2. தி ஃபால் ஆஃப் ரோமனோவ்ஸ் - ஹெர்பெர்ட் ப்ரெனன், 3. தி ஃபால் ஆஃப் ரோமனோவ் டைனாஸ்டி - எஸ்ஃபிர் ஷப், 4. தி லாஸ்ட் கமாண்ட் - ஜோசெஃப் வன் ஸ்டெர்ன்பெர்க், 5. மதர் - புடோவ்கின், 6. எர்த்- அலெக்சாண்டர் தாவ்சென்கோ. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தியோடிஹூகான்... நன் மாடல்... மர்மங்கள் நீங்காத பழைமையான இடங்கள்!

 

சில கோயில்களின் கட்டமைப்புகளைப் பார்க்கும்போது பிரமிப்பாய் இருக்கும். அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் எப்படி அந்தக் கற்களை சுமந்திருப்பார்கள்? அப்படியொரு பிரம்மாண்டத்தைப் படைக்க அவர்களால் எப்படி முடிந்தது எனப் பல கேள்விகள் எழும். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பெரும்பாலும் ஆய்வுகளை மேற்கொண்டு, அங்கு வாழ்ந்தவர்கள் யார், எந்தவிதமான கலாசாரத்தைப் பின்பற்றினார்கள் என்பதைக் கண்டுபிடித்துவிடுவர். ஆனால், ஆராய்ச்சியாளர்களால் இன்னமும் தெளிவாக விவரிக்க முடியாத மர்மமான, பழைமை வாய்ந்த இடங்களும் இந்தப் பூமியில் உண்டு. அவற்றைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம் .

தியோடிஹூயகான் (Teotihuacan, the real temple of doom):

 

பழமை

By eu (tirada por mim) [Public domain], via Wikimedia Commons

மெக்ஸிகோ நகரத்திற்கு வெளியே, தொலைதூரத்தில் உள்ள பிரமிடுகள் மற்றும் அரண்மனைகளின் நகரமே தியோடிஹூகான். நாகரிக உலகத்திலிருந்து மறைக்கப்படுவதற்காக அஸ்டெக்ஸ்கள் (Aztecs) கண்டுபிடித்த பெயர்தான் தியோடிஹூயகான். ஆனால் தியோடிஹூயகான் இதன் அசல் பெயர் இல்லை. இந்த இடத்தை அஸ்டெக்ஸ் கட்டவுமில்லை.

அப்படி என்றால் அங்கே யார் வாழ்ந்திருப்பார்கள்? அவர்களால் இப்படிப்பட்ட மேம்பட்ட பெரிய படைப்பை எவ்வாறு கட்ட முடிந்தது? ஏன் அவர்கள் இந்த தேசத்தை விட்டு வெளியேறினார்கள் எனப் பல கேள்விகள் விடையின்றி அலைகின்றன. அஸ்டெக்ஸ்குகளால் கூட இந்தப் பரந்த நகரம் எப்படித் தோன்றியிருக்கும் எனப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே, இவர்கள் இந்த இடம் கடவுளால் கட்டப்பட்டது எனக் கருதினர்.( தியோடிஹூயகான் என்பதன் பொருள் "கடவுள்களின் இடம்"). ஏனென்றால் இதைப் பற்றி விவரிக்க எந்தக் கோட்பாடும் இல்லை.

 தியோடிஹூயகான் மிகப்பெரிய மாநகரமாக இருந்திருக்கலாம். (அங்கு 2,50,000 மக்கள் இருந்திருக்கலாம் ). அங்கிருந்த குடிமக்கள் மற்றும் கலைகள் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால், பிரமிடுகள் ஒன்றில் தியாகத்தின் அறிகுறியாக எலும்புக்கூடுகள் மட்டுமே உள்ளன. 

Goseck circle.

Goseck Circle

1999 ஆம் ஆண்டு உள்ளூர் சர்வேயர்கள் வான்வழி புகைப்படங்களின் மூலம் தூங்கும் ஜெர்மன் என அழைக்கப்படும் கோசெக்- ஐ  கண்டுபிடித்தனர். கூடுதலான ஆய்வுகளில் அவர்களால் சரியாக எதுவும் கூற இயலவில்லை. 11 ஆண்டுகளுக்குப் பின்னர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த வட்டம் என்ன என்பதை குறித்து ஒரு முடிவிற்கு வந்தனர். இந்த வட்டம் பண்டைய ஆய்வு மையத்தின் எஞ்சிய பகுதி; சுமார் 250 அடி விட்டம். இதன் நுழைவாயில்கள் சூரியஅஸ்தமனம், உதயம் மற்றும் வடக்கு திசையை நோக்கியுள்ளது. இதை யார் கட்டியிருப்பார்கள் எனத் தெரியவில்லை. இந்த அமைப்பு 7,000 ஆண்டுகள் பழைமையானது, அழகானது. உண்மையில் மூதாதையர்கள் இந்தச் சக்கரங்களைக் கொண்டு எப்படி வேலை பார்த்திருப்பார்கள் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இது ஒரு விரிவான கடிகாரமும் அல்ல. தொல்பொருள் ஆராய்ச்சியார்கள் இங்கே சடங்குகள் மற்றும் மனித எலும்புகள் ஆகியவற்றில் எஞ்சியவைகளை வெட்டுக் குறிப்புகள் மூலம் கண்டுபிடித்தனர். ஆனால், வட்டத்தை கட்டியமைத்த கலாசாரம் பற்றி தெரியவில்லை. 2005-ஆம் ஆண்டில் கோசெக் மக்கள் வட்டத்தை மறுகட்டமைப்பு செய்தனர்.

Nan model (நன் மாடல்) :

நன் மாடல்

By NOAA (http://www.photolib.noaa.gov/htmls/mvey0173.htm) [Public domain], via Wikimedia Commons

ஆயிரம் வருடங்கள் பழைமையான பாழடைந்த டெம்வென் (Temwen) அருகே உள்ள சிறிய தீவு. இந்தத் தீவில் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். மேலும், மக்கள் இந்த இடத்தைச் சுற்றிப் பார்க்க மறுக்கின்றனர். ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை இந்த நகரம் தீயது, சபிக்கப்பட்டது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இவற்றின் பெரும் இடிபாடுகளைக் தேடித் தோற்றங்களைக் கண்டறிய முயல்கின்றனர். ஆனால், அங்கே எந்தக் குறிப்பும் இல்லை. இது சவுதிலூரின் ராஜவம்சத்தின் இடமாக இருக்கலாம். ஆனால், இந்த இடத்தை கட்ட அவர்களை எது தூண்டியது என்பது மர்மமாகவே உள்ளது. நூறு சிறிய மனிதர்களால் உருவாக்கப்பட்ட 200க்கும் அதிகமான ஏக்கர் நிலம் கொண்ட தீவு. இதில் சுமார் 8,00,000 டன் கட்டடப் பொருள்கள் உள்ளன. தனிப்பட்ட பாறைகள் சில 50 டன் எடையுள்ளவை.

நன் மாடல்

நன் மாடல் சுற்றிலும் தண்ணீரால் சூழப்பட்ட சிறிய தீவுகளின் ஒரு கொத்துதான். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த மக்கள் அருகில் உள்ள தீவுகளிலிருந்து வந்திருக்கலாம் என நம்புகிறார்கள். ஆனால் அவற்றை விளக்க முடியவில்லை. அவர்கள் மரத்தாலான தெப்பங்களைக் கொண்டு போக்குவரத்தைப் பெருக்க முயன்றுள்ளனர்.

கலிலேயாக் கடலின் கீழ் இராட்சத பாறை நினைவுச் சின்னம்

கலிலியோ கடல்

 

2003 -ஆம் ஆண்டில் இஸ்ரேலியத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் குழுவானது கலீலி கடலில் ஒரு கடற்படுக்கையைப் பகுப்பாய்வு செய்தனர். கவனமாக ஒழுங்கமைக்கப்பட்ட, தீங்கு விளைவிக்காத ஆயிரக்கணக்கான கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கூம்பு வடிவ சேகரிப்பின் விட்டம் 230 அடி, 39 அடி உயரம், 60,000 டன்  எடை . இது ஸ்டோன்ஹென்ஜை (Stonehenge) விட இரண்டு மடங்கு பெரிதாகும். ஈபிள் கோபுரத்தைவிட ஆறுமடங்கு வலுவானதாக உள்ளது. பெரியது, பழைமையானது, ஆனால் கடலின் அடியில் இயற்கையாக உருவானது அல்ல. இது பற்றி விஞ்ஞானிகள் இப்படிச் சொல்கிறார்கள். “ இது 2000 முதல் 12,000 ஆண்டுகள் பழைமையானது; நிலத்தில் கட்டப்பட்ட இது வெள்ளத்தினால் இங்கு வந்திருக்கலாம். இது செயற்கையாக உருவாக்கப்பட்டிருந்தாலும் இது என்ன என்பது தெரியவில்லை”

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

பெரும் செல்வந்தர்கள் வெளிநாடுகளில் எவ்வாறு பணத்தை மறைத்து வைக்கிறார்கள்

வரிச்சலுகையை பயன்படுத்தி மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பெரும் செல்வந்தர்கள் எவ்வாறு வெளிநாடுகளில் பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளனர் என்பது குறித்த விபரங்கள் அடங்கிய காணொளி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.