Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

புத்தாண்டை வரவேற்கும் உலகம்

30CHGOWNEW-YEARCHINA

சீனாவின் ஜியான்சு மகாணத்தில் புத்தாண்டு கொண்டாட்டங் களுக்காக வைக்கப்பட்டிருக்கும் கண்காட்சி. இந்தப் புத்தாண்டின் சீன ஜோதிட ஆண்டு, ‘நாய்’ என்பதால் நாய் கருப்பொருளில் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது.

புத்தாண்டை வரவேற்பதற்காக உலகம் உற்சாகமாகத் தயாராகிக்கொண்டிருக்கிறது. உலகின் முக்கிய கட்டிடங்களும் தெருக்களும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக விழாக்கோலம் பூண்டிருக்கின்றன. உலகின் முக்கிய நகரங்கள் 2018-ம் ஆண்டை வரவேற்க எப்படித் தயாராகியிருக்கின்றன?

30CHGOWBELARUS

பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் நகரத்தின் ஒக்ட்யாப்ரிஸ்க்யா சதுக்கம் புத்தாண்டை வரவேற்கிறது.

30CHGOWJAPAN

ஜப்பான் தலைநகரம் டோக்கியோவின் அஸகுஸா செஞ்ஸோஜி புத்த கோயிலுக்குச் செல்லும் பாதை புத்தாண்டை வரவேற்க அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

30CHGOWJAPAN-NEWYEAR

ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரத்தின் நகமிஸ் கடைத் தெரு புத்தாண்டை வரவேற்க விழாக் கோலம் பூண்டிருக்கிறது.

30CHGOWNEW-YEAR

நியூ யார்க் நகரத்தின் டைம்ஸ் சதுக்கத்தின் மீது புத்தாண்டை வரவேற்கும்விதமாக வைக்கப்படவிருக்கும் 18 எண் அலங்காரம்.

30CHGOWBANGALORE

பெங்களூருவின் பிரிகேட் சாலை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக அலங்காரக் கோலம் பூண்டிருக்கிறது.

30CHGOWNEWYEARBUILDINGS1

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காகத் தயாராகியிருக்கும் போல்ஷோய் தியேட்டர்.

30CHGOWRUSSIANEWYEAR

ரஷ்யாவின் மாஸ்கோ போல்ஷோய் தியேட்டர் முன் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காகச் செய்யப்பட்டிருக்கும் அலங்காரம்.

http://tamil.thehindu.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கோடியைத் தேடித்தந்த `புத்தகப் பெண்ணின்' சாதனைப் பயணம்!

 
  • தொடங்கியவர்

பிபிசி தமிழ் நேயர்களின் மெய் சிலிர்க்க வைக்கும் கானுயிர் காட்சிகள்

பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்

அழகு மயில் ஆட - பாஸ்கரன், சென்னை

பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்

ஆழியாறு அணையில் ஆனந்தக் குளியல்!- ஜெகநாதன், பொள்ளாச்சி

பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்

வேடந்தாங்கலில் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் ஆந்தைகள் - அரவிந்த் ரெங்கராஜ், சென்னை

பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்

எங்களுக்கு எல்லைகள் கிடையாது - முகமது இர்ஷாத்

 

பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்

இது மருத்துவ முத்தமா - கார்த்தி, சென்னை

பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்

மீனை வேட்டையாடும் ஓஸ்பிரே பறவை - தினேஷ் திருஞானசம்பந்தர், ஸ்காட்லாந்து

பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்

காஸிரங்கா பூங்காவின் காண்டா மிருகங்கள் - கண்ணன் ராஜேந்திரன்

பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்

 

இலங்கையின் வில்பத்து தேசிய பூங்காவில் - சிவகஜன் ஆருடச்செல்வம்

பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்

வண்டலூரில் தாகத்தை போக்கிக் கொள்ளும் வங்க புலி - சரவ் சங்கர், திருநெல்வேலி

பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்

ஒய்யார குரங்கு - பி.ஆர். ராஜ்குமார்

பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்

வால்பாறையில் அதிகாலை வேளை - கே.ஏ. தணுபரன்

பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்

ஜெயராம் அழகுதுரை, பொள்ளாச்சி

பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்

துணிச்சல் - ந. கண்ணதாசன்

பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்

எஸ்.சிவகுமார், கன்னியாகுமரி

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

2018 புத்தாண்டை கோலாகலமாக வரவேற்றது நியூஸிலாந்து!

 
newzeland_new_year_2018

 

2018 புத்தாண்டு முன்னிட்டு அனைத்து நாடுகளும் புது வருடத்தை வரவேற்கும் விதமாக விழாக்கோலம் கொண்டுள்ளது.

DSXrgMMU8AA9ML2.jpg

இந்நிலையில், 2018-ம் ஆண்டினை வண்ணமையமான வானவேடிக்கைகளுடன் நியூஸிலாந்து வரவேற்றுள்ளது. அங்குள்ள மக்கள் ஆரவாரமிட்டு புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டு கொண்டாடி வருகின்றனர்.

DSXriz8UEAE24AZ.jpg

உலகில் முதலில் புத்தாண்டு பிறக்கும் இடங்களில் ஒன்றாக நியூயிலாந்து விளங்குகிறது. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் சற்று நேரத்தில் புத்தாண்டு பிறக்க உள்ளது.

 

#WATCH New Zealand's Auckland welcomes New Year 2018 with spectacular fireworks pic.twitter.com/ablPAAsleT

— ANI (@ANI) December 31, 2017

அந்நாட்டின் சிட்னி நகரில் 2018 புது வருடத்தை வரவேற்கும் விதமாக சுமார் 1.5 மில்லியன் மக்கள் திரண்டுள்ளனர். அங்கு வானவில் மாதிரி கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

DSXrkrrUMAER6QS.jpg

 
ஆட்டம், பாட்டம், கோலாகலம்: உலகில் முதன்முதலாக புத்தாண்டை கொண்டாடிய நியூசிலாந்து மக்கள்
 
 
201712311719357533_1_f264dd44-fd9b-4d0b-a09c-168._L_styvpf.jpg
 
 
 
201712311719357533_2_New-Years-newzealand._L_styvpf.jpg

http://www.dinamani.com/

 

Watch Australia bring in the New Year, as it celebrates the beginning of 2018 with a fireworks display over Sydney Harbour.

  • தொடங்கியவர்

2017: சமூக ஊடகங்களில் டாப் டிரெண்டிங்கை பிடித்த வைரல் செய்திகள்

சமூக ஊடகங்களில் இந்த ஆண்டு வைரலாக பேசப்பட்ட சில செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

அலமாரிக்கடியில் சிக்கிய தம்பியைக் காத்த இரண்டு வயது அண்ணன்

அமெரிக்காவின் உடாவில் இரட்டையர்களான பாவ்டியும், ப்ராக் ஷாஃபும் தங்கள் அறையில் விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ப்ராக் மீது அலமாரி ஒன்று விழுந்துள்ளது. சகோதரனை எப்படி மீட்பது என்று சிறிது நேரம் யோசிக்கும் பாவ்டி ஷாஃப் பின்னர் அலமாரியை தள்ளி சகோதரரை காப்பாற்றுகிறார். இந்த காட்சிகள் அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மெய்சிலிர்க்க வைக்கும் இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் உலகளவில் வைரலானது.

அலங்காநல்லூரை அதிரவைத்த ஜல்லிக்கட்டு போராட்டம்

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கடந்த ஆண்டு தமிழகத்தில் பெரும் போராட்டம் வெடித்தது. மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் அமைப்புகள், கட்சிகள் என அனைத்து இயக்கங்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்தன. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் இளைஞர்கள் பெரும் திரளாக செல்லும் இந்த காணொளியை சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

தடைகளை தகர்த்தெறிந்த கார்த்திகேய சேனாபதி

ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்குவதற்கு காரணமான முக்கிய நபர்களில் சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் கார்த்திகேய சேனாபதியும் ஒருவர். ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக அவர் டெல்லி வந்திருந்த போது பிபிசி தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியின் காணொளி இது. அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும், எந்த அரசியல் கட்சியிலும் தான் சேரப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மெரினா போராட்டமும், காவல்துறையின் வன்முறையும்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், கடற்கரையில் கூடியிருந்தவர்களை வெளியேற கோரி ஜனவரி 23 ஆம் தேதி கெடு விதித்திருந்தது தமிழக காவல்துறை. தொடர்ந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸ், கடற்கரையைவிட்டு உடனடியாக கிளம்ப வேண்டும் என்று கூறியது. அதனை ஏற்காத போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக இழுத்து மெரினாவிலிருந்து வெளியேற்றியது காவல்துறை. அதனைத் தொடர்ந்து, பரவிய வன்முறையை படம்பிடிக்க சென்ற பிபிசி தமிழின் சென்னை செய்தியாளர் ஜெயகுமாரின் கேமரா போலீஸாரால் உடைக்கப்பட்டது. அதுகுறித்த காணொளி இது.

 

சுற்றுலா வாகனத்தை தாக்கிய சிங்கங்கள்

பெங்களூரூ அருகேயுள்ள பானர்காட்டா உயிரியல் பூங்காவில் விலங்குகளை பார்ப்பதற்காக சுற்றுலாவாசிகள் இன்னோவா காரில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதாமாக இன்னோவா வாகனத்தை இரண்டு சிங்கங்கள் தாக்கின. சுற்றுலாவாசிகளின் வாகனம் மீது சிங்கங்கள் திடீர் தாக்குதல் நடத்தியது குறித்த காணொளி இது.

 

 

ஜெயலலிதா சமாதியில் பன்னீர்செல்வம் தியானம்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து மாநில முதல்வராக பொறுப்பேற்றார் ஓ.பன்னீர்செல்வம். பின்னர், அதிமுகவின் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியும் ஏற்றுக்கொண்டார் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா. இச்சூழலில்தான், திடீரென தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் ஓ.பி.எஸ். சசிகலா குடும்பத்தாரின் கட்டாயத்தின் பேரில்தான் பதவியை ராஜினாமா செய்தததாக குற்றஞ்சாட்டி மெரினாவிலுள்ள ஜெயலலிதா சமாதியின் தியானம் செய்தார்.

 

சேற்று வெள்ளத்தில் சிக்கி உயிரோடு மீண்ட பெண்

பெரு நாட்டின் லிமாவின் புறநகர்ப்பகுதியில் ஏற்பட்ட சேற்று நீர்ச்சுழியில் சிக்கிப் போராடி உயிர் தப்பியுள்ளார் 32 வயதான இவன்ஜெலினா சாமாரோ டையஸ். பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். சேற்று வெள்ளத்திலிருந்து அவர் வெளியேறும் காணொளி உலகளவில் வைரலாக பரவியது.

விஸ்வரூபம் எடுத்த விவசாயிகள் பிரச்சனை

ஜல்லிக்கட்டு பிரச்சனையடுத்து தமிழகத்தில் அதிகம் பேசப்பட்டது விவசாயிகள் பிரச்சனைதான். விவசாய கடன் தள்ளுபடி, நதி நீர் இணைப்பு உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்து தலைநகர் ஜந்தர் மந்தரில் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சேர்ந்த விவசாயி அய்யாக்கண்ணு போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். விவசாயிகளின் நூதன போராட்டங்கள் மூலம் ஒட்டுமொத்த இந்திய ஊடகங்களையும் தங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.

 

கடலில் கலந்த 100 டன் எண்ணெய்யை பக்கெட்களில் அள்ளிய அவலம்

சென்னை எண்ணூரில் காமராஜர் துறைமுக கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதிக்கொண்டதையடுத்து ஒரு கப்பலிலிருந்த எண்ணெய் கடலில் சசிந்தன. இதனால், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் கடற்பகுகளில் 1 அடி உயரத்திற்கு கடலில் எண்ணெய் மிதக்க ஆரம்பித்தது.இந்த எண்ணெய்ப்படலத்தை அரசு அமைப்புகளும் பெரும் எண்ணிக்கையிலான தன்னார்வலர்களும் அகற்றினர்.

தெர்மோகோல்' அமைச்சர் செல்லூர் ராஜூ

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில், நீர் ஆவியாகாமல் இருப்பதற்காக நீர் மட்டத்தின் மீது தெர்மோகோல் போட்டு மூடும் திட்டத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைத்தார். ஆனால், அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியானபோது, சமூக வலைதளங்களில் "மீம்"களும் கடுமையான கேலிகளும் முன்வைக்கப்பட்டன.

 

ஜெயலலிதா சமாதியில் சசிகலா மும்முறை சபதம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவை சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, பெங்களூரு புறப்படுவதற்குமுன் மெரினாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மலரஞ்சலி செலுத்தினார். பின்னர், மும்முறை சமாதியில் கையால் அறைந்து சபதம் செய்தார். அவர் அப்படி என்ன சபதமெடுத்திருப்பார் என்று சமூக ஊடகங்களில் இது பரவலாக பகிரப்பட்டது.

 

 

மனிதனே மாடாக மாறி ஏர் உழும் ஏழை விவசாயி

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில், சாலம்பாத் கிராமத்தில் வசிக்கும் சீதாராம் என்ற ஏழை விவசாயி மாடு இருக்க வேண்டிய இடத்தில் தன்னைத்தனே ஏரில் பூட்டி தன்னுடய வயலை உழவு செய்தார். அவரது மனைவி முன்னி தேவியும் ஏர்கலப்பையை பிடித்து கணவருக்கு உதவியாக வயலை உழுவு செய்த காணொளி இந்தியா முழுவதும் வைரலாக பரவியது.

 

 

கொலைவெறிக்கு அடுத்து உலகளவில் வைரலான ஜிமிக்கி கம்மல்

மோகன்லால் நடிப்பில் வெளியான 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' என்ற மலையாள படத்தில் வெளியான 'எண்டம்மையிட ஜிமிக்கி கம்மல்' என்ற பாடலை, 'இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ்' கல்வி நிறுவனத்தின் மாணவிகள், ஆசிரியர்கள் நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார்கள். இந்த யு டியூப் காணொளி உலகளவில் மிகவும் வைரலானது.

 

டிரக் ஓட்டுநர் சாமர்த்தியத்தால் நூலிழையில் தப்பிய சிறுவன்

நார்வேயில் சிறுவன் ஒருவன் திடீரென சாலையை கடக்க முற்பட்டபோது நடந்த பதைக்க வைக்கும் காட்சி பதிவு செய்யப்பட்ட காணொளி இது. டிரக் ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் விபத்து தடுக்கப்பட்டது.

 

சர்ச்சையை கிளப்பிய ஜெயலலிதா சிகிச்சை வீடியோ

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருப்பது போன்ற காணொளி ஒன்றை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டிருந்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் இது வெளியானதால், ஊடகங்கள் இந்த காணொளியை ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றதற்கு இந்த காணொளியும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது.

 

 

http://www.bbc.com

  • தொடங்கியவர்

நிலாவுக்கு 'ஒன்ஸ்மோர்', சூரியனுக்குச் செயற்கைகோள்... நாசாவின் 2018 ஆக்ஷன் பிளான்!

 
 

விண்வெளித் துறையைப் பொறுத்தவரையில் சொல்லி அடிப்பதில் கில்லி நாசா. ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும், அடுத்த ஆண்டு என்ன செய்யவிருக்கிறார்கள் என்ற விவரத்தை வெளியிடுவது நாசாவின் வழக்கம். கடந்த சில ஆண்டுகளாகவே இதனை செய்துவருகிறது நாசா. அப்படி 2018-ம் வருடம் என்ன செய்யப்போகிறோம் என்ற வீடியோவை வெளியிட்ட நாசா அதில் பல ஆச்சர்ய நிகழ்வுகளைப் பட்டியலிட்டிருக்கிறது. நாசா பட்டியலிட்ட அடுத்து நடைபெறப்போகும் நிகழ்வுகளில் முக்கியமானவை இதோ.

 செவ்வாய்க்கு ஒரு பயணம்

 

இன்சைட் விண்கலம் - நாசா

ஏற்கெனவே செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கு பல முறை விண்கலங்களை அனுப்பியிருக்கிறது நாசா. தற்பொழுது கியூரியாசிட்டி என்ற விண்கலம் செவ்வாயில் இருக்கிறது. அதேபோல் செவ்வாயில் தரையிறங்கி ஆய்வு செய்யும் இன்சைட் என்ற விண்கலத்தை 2018 மே மாதம் அனுப்புவதற்கு தயாராக இருக்கிறது நாசா. இந்த விண்கலம் செவ்வாயின் உட்புறத்தை ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த விண்கலத்தில் மேலும் ஒரு சுவாரஸ்யமான விஷயமும் இருக்கிறது. இந்த விண்கலத்தோடு மனிதர்களின் பெயர்களும் செவ்வாய்க்குப் பயணப்பட இருக்கிறது. இதில் இருக்கும் மைக்ரோ சிப்பில் பெயர்கள் பதியப்பட்டு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் என்று இந்தத் திட்டம் தொடங்கப்படும் பொழுதே அறிவித்திருந்தது நாசா. நம்மால் செவ்வாய்குத்தான் நேரில் போக முடியவில்லை பெயராவது போகட்டும் என்று நினைத்தார்களோ என்னவோ உலகம் முழுவதுமிருந்து 24 லட்சம் பேர் தங்களது பெயரை இதற்காகப் பதிவு செய்திருக்கிறார்கள் அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களும் அடக்கம்.

சூரியனுக்கு மிக மிக அருகில்

பார்க்கர் சோலார் ப்ரோப்

விண்வெளியில் இதுவரை உலக நாடுகள் நினைத்துக்கூட பார்க்காத ஒன்றை அடுத்த வருடம் செயல்படுத்த இருக்கிறது நாசா. சூரியனை ஆராய்வதற்காக பார்க்கர் சோலார் ப்ரோப் என்ற செயற்கைக்கோளை அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் அனுப்ப திட்டமிட்டுள்ளது. இது சூரியனின் வளிமண்டலத்தின் உள்ளேயே சென்று ஆய்வு நடத்தும். இதுவரை எந்தச் செயற்கைக்கோளும் அதை முயற்சி கூட செய்து பார்த்ததில்லை. சூரியனின் மேலடுக்கு வெப்பநிலை 10000 °F. அதே வேளையில் அதன் வளிமண்டலம் அதை விட மூன்று மடங்கு வெப்பம் அதிகமாக இருக்கும். இது போன்ற அதீத வெப்பத்தை சமாளிக்கும் வகையில் இந்தச் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் சூரியனைப் பற்றிய பல ரகசியங்கள் நமக்குத் தெரியவரலாம்.

விண்வெளித் தொலைநோக்கி

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

நாசா விண்வெளிக்கு அனுப்பிய தொலைநோக்கிகளிலேயே சிறப்பானதாகக் கருதப்படுவது ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி. அது தற்பொழுது வரைக்கும் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அதற்கு அடுத்த தலைமுறை விண்வெளித் தொலைநோக்கியை அடுத்த வருடம் அக்டோபர் மாதம் விண்வெளிக்கு அனுப்ப தயாராக இருக்கிறது நாசா. ஜேம்ஸ் வெப் என்று பெயரிடப்பட்டிருக்கும் இது அடுத்த பத்து வருடத்திற்கு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இது நிலைநிறுத்தப்படும். இது அனுப்பும் புகைப்படங்கள் நமது பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய ஆய்வுகளுக்கு உதவியாக இருக்கும்.

2 கிலோ சாம்பிளின் விலை 800 மில்லியன் டாலர்கள்.

OSIRIS-REx_Artist%E2%80%99s_conception_(ஓஸிரிஸ் ரெக்ஸ்

ஓஸிரிஸ் ரெக்ஸ் எனும் செயற்கைக்கோள் மூலமாக பென்னு என்ற சிறுகோளில் இருந்து பரிசோதனை மாதிரிகளை எடுத்து வர திட்டமிட்டிருக்கிறது நாசா. கடந்த 2016-ல் பூமியிலிருந்து அனுப்பப்பட்ட ஓஸிரிஸ் ரெக்ஸ் இரண்டு வருடங்களுக்கு அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் பென்னுவை மிக அருகில் நெருங்கி, எங்கு மாதிரியை எடுப்பது என்று முடிவு செய்யும். அதன் பின்னர் ஓஸிரிஸ் ரெக்ஸ் செயற்கைகோளிலிருந்து வெளிப்படும் கை போன்ற அமைப்பு பென்னுவின் மேற்பரப்பை உடைத்து மாதிரியைச் சேகரிக்கும். அதன் பின்னர் பூமியை நோக்கி பயணம் செய்ய தொடங்கும் ஓஸிரிஸ் ரெக்ஸ் மார்ச் 2023-ல் அது சேகரித்த பென்னுவின் மாதிரியுடன் பூமிக்குத் திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறது. நமது சூரியக்குடும்பத்தின் வயதை விட மிகப்பழைமையானதாகக் கருதப்படும் பென்னுவிலிருந்து சேகரித்துக் கொண்டு வரப்படும் மாதிரிகள் மூலமாக நமது சூரியக்குடும்பத்தின் தொடக்கம் பற்றி அறிய முடியும். 800 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் சேகரிக்கப்படும் மாதிரியின் எடை அதிகபட்சம் 2 கிலோ மட்டுமே.

இவைதவிர, அடுத்த வருடம் முதல் மீண்டும் மனிதர்களை நிலவிற்கு அனுப்பும் ஆராய்ச்சிகளும் தொடங்கப்பட இருக்கின்றன. செயற்கை கோள் மூலமாக லேசரைப் பயன்படுத்தி பூமியில் இருக்கும் காடுகள், பனிப்பாறைகள், கடல்நீர் மட்டம், ஆகியவற்றின் முப்பரிமாண தகவல்களைச் சேகரித்து வரைபடம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 

விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோள்கள் அதன் திசைகளை மாற்றுவதற்கும், அதிவேகத்தில் செல்லவும் ஏதாவது ஓர் எரிபொருளையே பயன்படுத்துகின்றன. அதற்குப் பதிலாக சூரியனின் ஆற்றலை எப்படிப் பயன்படுத்துவது தொடர்பான ஆய்வுகள் நடைபெறவிருக்கின்றன. அடுத்த வருடம் ஜூலை 29-ம் தேதி நாசாவிற்கு 60-வது பிறந்தநாள். அதைச் சிறப்பான முறையில் கொண்டாடவும் தயாராகி வருகிறது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

புதுவருடத்தை வரவேற்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் நகர மத்தியில் இன்று நள்ளிரவு

  • தொடங்கியவர்

 

துபையில் புத்தாண்டு கொண்டாட்டம்

 

Watch as Dubai welcomes in 2018 with a New Year's Eve fireworks display at the world's tallest building, the Burj Khalifa

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: Text

உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் பிட்காயின்கள் குறித்து நீங்கள் அறிய வேண்டிய சில முக்கியமான விடயங்கள்.

 

  • தொடங்கியவர்

 

From Sydney to Dubai - here's how capital cities around the world welcomed in 2018 in style

 

 
 

 

2018 ஆம் ஆண்டை வண்ணமயமான பட்டாசுகளால் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் வரவேற்றுள்ளன.

புத்தாண்டை வண்ணமயமான பட்டாசுகள் மற்றும் கொண்டாட்டங்களுடன் நியூசிலாந்தின் ஆக்லாந்து மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னி  ஆகிய நகரங்களே முதன் முதலில் வரவேற்றுள்ளன.

47A9508200000578-5224423-image-a-78_1514

 

47A9495A00000578-5224423-image-a-70_1514

47A938FB00000578-5224423-image-a-51_1514

47A933E400000578-5224423-image-a-62_1514

 

47A94AC800000578-5224423-image-a-72_1514

47A94A5C00000578-5224423-image-a-69_1514

47A93A4100000578-5224423-image-a-48_1514

47A93A3D00000578-5224423-image-a-47_1514

47A91A8500000578-5224423-image-a-53_1514

47A90FBE00000578-5224423-image-a-57_1514

47A90FBA00000578-5224423-image-a-54_1514

47A8FB7100000578-5224423-image-a-1_15147

47A8FB6900000578-5224423-image-a-64_1514

47A8F2CD00000578-5224423-image-a-102_151

47A8B97F00000578-5224423-image-a-77_1514

47A8B3A100000578-5224423-Ferry_passenger

47A8B2DA00000578-5224423-image-a-3_15147

47A8AB2900000578-5224423-image-a-43_1514

47A8A55F00000578-5224423-image-a-45_1514

47A8A6FC00000578-5224423-image-a-39_1514

47A8A6C400000578-5224423-image-a-33_1514

  • தொடங்கியவர்

Ähnliches Foto

Bildergebnis für happy new year 2018 gif

Bildergebnis für happy new year 2018 gif

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 
  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜனவரி 01
 

1772: முதலாவது பயணக் காசோலை லண்டனில் விநியோகிக்கப்பட்டது.

1800: டச்சு கிழக்கிந்திய கம்பனி கலைக்கப்பட்டது.

1804: ஹெய்ட்டியில் பிரெஞ்சு ஆட்சி முடிவடைந்தது.

1833: பாக்லாந்து தீவுகளுக்கு பிரிட்டன் உரிமை கோரியது.

1872: இலங்கையில் பிரித்தானிய நாணயத்துக்கு பதிலாக ரூபா நாணயம் பாவனைக்கு வந்தது.

1877: பிரிட்டனின் விக்டோரியா மகாராணியார் இந்தியாவின் ஆட்சித் தலைவராக பிரகடனப்படுத்தப்பட்டார்.

1899: கியூபாவில் ஸ்பானிய ஆட்சி முடிவுற்றது.

1949: இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் நடைபெற்ற யுத்தம் ஐ.நா.வின் போர் நிறுத்த தீர்மானம் மூலம் முடிவுக்கு வந்தது.

1958: ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னோடியாக அமைந்த ஐரோப்பிய பொருளாதார சமூகம் ஸ்தாபிக்கப்பட்டது.

1959: கியூபாவில் பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கிளர்ச்சிப் படைகள் ஜனாதிபதி படிஸ்டாவின் ஆட்சியை கவிழ்த்தன.

1978: எயார் இந்தியா விமானம் மும்பையில் விபத்துக்குள்ளானதால் 213 பேர் பலி.

1984: பிரிட்டனிடமிருந்து புரூணை சுதந்திரம் பெற்றது.

2002: ஐரோப்பிய ஒன்றியத்தின் 12 நாடுகளில் யூரோ நாணயம் சட்டபூர்வமானதாக்கப்பட்டது.

2007: இந்தோனேஷியாவில் 102 பயணிகளுடன் விமானமொன்று காணாமல் போனது.

2008: ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் ,கொழும்பில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.

2009: தாய்லாந்தில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 66 பேர் பலி.

2010: பாகிஸ்தானில் கரப்பந்தாட்டப் போட்டியொன்றின்போது இடம்பெற்ற தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 105 பேர் பலி. நூற்றுக்கும் அதிகமானோர் காயம்.

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

கேப்டவுன் பூங்காவில் நடனமாடிய விராட் கோலி, தவான்! வைரல் வீடியோ

 
 

புத்தாண்டை முன்னிட்டு, தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரின் கடற்கரை அருகிலுள்ள பூங்கா ஒன்றில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் தொடக்க வீரர் ஷிகர் தவானும் நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Virat_11567.jpg

 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு, 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள்கொண்ட தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி, கேப்டவுன் நகரில் வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. போட்டி நடைபெறும் நியூலேண்ட்ஸ் மைதானம் பகுதியில் நேற்று மழை பெய்தது. இதனால், இந்திய வீரர்கள் உள் விளையாட்டரங்குகளில் பயிற்சி மேற்கொண்டனர். 

இந்த நிலையில், கேப்டவுனில் உள்ள விக்டோரியா - ஆல்ஃபிரட் கடற்கரைப் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில், கேப்டன் விராட் கோலியும் ஷிகர் தவானும் நடனமாடுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. புத்தாண்டை முன்னிட்டு, அந்தப் பகுதியில் இசைக்குழு ஒன்று பாடல்களை இசைக்க, அந்த இசைக்கு ஏற்றவாறு கோலியும் தவானும் நடனமாடுகிறார்கள். பிரபலமான பங்காரா நடனத்தையும் அவர்கள் முயற்சித்துப் பார்ப்பதுபோன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. ஷிகர் தவானின் மகன் ஜோராவர், தனது தந்தையின் நடனத்தை நிறுத்தி, அவரை அங்கிருந்து அழைத்துச்செல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 
 

 

 

 

 

 

 

https://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உறைந்துபோன நயாகரா நீர்வீழ்ச்சி! - பனிக்குவியல் பிரதேசத்தைக் காணத் திரளும் மக்கள் 

 

உலகின் எழில் கொஞ்சும் பேரருவிகளில் ஒன்றான நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி, கடந்த சில தினங்களாக பனியில் உறைந்துள்ளது.

niagara

 

நயாகரா நீர்வீழ்ச்சி, வடஅமெரிக்கக் கண்டத்தில் உள்ள  கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துக்கும் ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க்கிற்கும் இடையே அமைந்துள்ளது.

niagara

கடந்த சில தினங்களாக, வட அமெரிக்காவில் கடும் குளிர் நிலவிவருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, அதிகபட்சமாக மவுண்ட் வாஷிங்டனில் மைனஸ் 34 டிகிரி குளிர் நிலவுகிறது. இதனால், சுமார் 220 மில்லியன் வட அமெரிக்க மக்கள் கடுமையான குளிரில் புத்தாண்டை வரவேற்றனர். பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தாலும், நயாகராவின் அழகைக் கண்டுகளிக்க சுற்றுலாவாசிகள் அங்கு குவிந்தவண்ணம் உள்ளனர்.

niagara

 

பிரகாசமான பனிக் குவியல்கள், வெண்மை போர்த்திய மரங்கள் என 'நார்னியா' படத்தில் வரும் பனி தேசம்போல காட்சியளிக்கிறது நயாகரா அருவி.

https://www.vikatan.com

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ....பார்க்கவே நயாகராவில் நீந்தவேனும் போல் இருக்கு.( யாரும் சிரிக்க கூடாது).......!  tw_blush:

சுமார் 66000 பதிவுகளை அண்மிக்கும் இளமை புதுமை பல்சுவைக்கும் புத்தாண்டுடன் சேர்ந்த வாழ்த்துக்கள்......!  tw_blush:

  • தொடங்கியவர்

 

லண்டன் புத்தாண்டு கொண்டாட்டம்!

  • தொடங்கியவர்

எழில்மிகும் மணல் ஓவியத்தால் 2018-ம் ஆண்டை வரவேற்ற சிற்ப கலைஞர்:-

மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில், தனது எழில்மிகும் மணல் ஓவியத்தால், 2018-ம் ஆண்டை வரவேற்றுள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக், மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை, பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி, மக்கள் மனதில் பதியவைத்து வருகிறார்.

தேசிய அளவில் தலைசிறந்த மணல் சிற்ப கலைஞராக திகழும் இவர், சர்வதேச அளவில் பல நாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். இந்தநிலையில் புத்தாண்டையொட்டி பூரி கடற்கரையில் 30 அடி உயர ஜெகநாதர் சிற்பத்தை நேற்று உருவாக்கிய அவர் இந்த சிற்பத்தின் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார்.

அத்துடன் 2018-ம் ஆண்டை பூரி கடற்கரையில் தனது எழில்மிகும் மணல் ஓவியத்தால் வரவேற்றுள்ளார். இந்த இரு ஓவியங்களையும் ஒடிசா மக்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மக்களும் கண்டு களித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  sudarsan-patnaik-sand-art-on-NewYear3.pn

sudarsan-patnaik-sand-art-on-NewYear1.jp

sudarsan-patnaik-sand-art-on-NewYear2.pn

http://globaltamilnews.net

  • தொடங்கியவர்

முதன்முதலாக இலங்கையில் தந்தி சேவை தொடங்கப்பட்ட நாள்: 1-1-1858

 

இலங்கையில் 1858-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி தந்தி சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது கொழும்புக்கும்- கலேக்கும் இடையே முதன்முதலாக தொடங்கியது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1800 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது.

 
 
 
 
முதன்முதலாக இலங்கையில் தந்தி சேவை தொடங்கப்பட்ட நாள்: 1-1-1858
 
இலங்கையில் 1858-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி தந்தி சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது கொழும்புக்கும்- கலேக்கும் இடையே முதன்முதலாக தொடங்கியது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1800 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது. * 1801 - பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்துப் பேரரசு இணைந்து ஐக்கிய இராச்சியம் ஆனது. * 1804 - எயிட்டி பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. * 1806 - பிரெஞ்சு குடியரசு நாள்காட்டி பாவனையிலிருந்து விலக்கப்பட்டது. * 1808 - ஐக்கிய அமெரிக்காவில் அடிமைகளை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது. * 1833 - ஐக்கிய இராச்சியம் போக்லாந்து தீவுகளின் மீது உரிமை கொண்டாடியது. * 1861 - போர்ஃபீரியோ டயஸ் மெக்சிக்கோ நகரைக் கைப்பற்றினான். * 1866 - யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக காவல்துறை அமைக்கப்பட்டது. * 1867 - ஐக்கிய அமெரிக்காவில் ஒஹாயோவின் சின்சினாட்டி நகருக்கும் கென்டக்கியின் கொவிங்டன் நகருக்கும் இடையில் ஜோன் ஏ. ரோப்லிங் தொங்கு பாலம் திறக்கப்பட்டது. இதுவே உலகின் அதி நீளமான தொங்கு பாலமாகும்.

* 1872 - இலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. * 1872 - முதலாவது இந்திய அஞ்சல் (தபால்) சேனீ மலைச் (Mount Cenis) சுரங்கம் ஊடாக சென்றது. * 1877 - இந்தியாவின் மகாராணியாக விக்டோரியா டெல்லியில் அறிவிக்கப்பட்டார். * 1883 - இலங்கையின் தமிழர் தாயகம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. * 1886 - பர்மா விக்டோரியா மகாராணிக்கு அவரது பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது. * 1890 - எரித்திரியா இத்தாலிய குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது. * 1893 - ஜப்பானில் கிரெகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. * 1896 - இலங்கையில் முன்னர் ரொபேர்ட்சன் கம்பெனியின் பொறுப்பில் இருந்த தொலைபேசி சாதனத்தை இலங்கை அரசு கையேற்றது.

* 1899 - கியூபாவில் ஸ்பானிய ஆளுகை முடிவுற்றது. * 1901 - பிரித்தானியக் குடியேற்ற நாடுகளான நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா, தாஸ்மானியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன ஆஸ்திரேலிய பொதுநலவாயம் என்ற ஒரே நாடாக இணைந்தன. அதன் முதலாவது பிரதமராக எட்மண்ட் பார்ட்டன் தெரிவு செய்யப்பட்டார். * 1905 - டிரான்ஸ்- சைபீரியன் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. * 1906 - பிரித்தானிய இந்தியாவில் இந்திய சீர்தர நேரம் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. * 1911 - வட மண்டலம் தெற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து பிரிக்கப்பட்டு ஆஸ்திரேலிய நடுவண் அரசின் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. * 1912 - சீனக் குடியரசு அமைக்கப்பட்டது. * 1919 - ஸ்காட்லாந்தில் அயோலயர் என்ற கப்பல் (HMS Iolaire) மூழ்கியதில் 205 பேர் கொல்லப்பட்டனர். * 1926 - துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது. * 1927 - மெக்சிக்கோவில் கத்தோலிக்க மதத் தடையை எதிர்த்து மதத் தீவிரவாதிகள் அரசுடன் போர் தொடுத்தனர். * 1927 - துருக்கி கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது. இதன்படி 1926, டிசம்பர் 18-ற்கு அடுத்த நாள் ஜனவரி 1, 1927-க மாற்றப்பட்டது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

2017-ல் நடந்த முக்கிய நிகழ்வுகளை விளக்கும் ஆச்சரிய எண்கள்

2017-ல் நடந்த முக்கிய நிகழ்வுகளை விளக்கும் ஆச்சரிய எண்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

2017ம் ஆண்டும் ஜனவரி மாதம் முதல் நிகழ்ந்த பல்வேறு விடயங்களை பலரும் அறியாத ஆச்சரியமளிக்கும் எண்களின் மூலம் விளக்கும் படங்களின் தொகுப்பு.

2017: வருடத்தை விளக்கும் ஆச்சரிய எண்கள்

37,993

இது ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி இராக் மற்றும் சிரியா மீது வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகள் வீசிய எண்ணிக்கை. இதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா அறிவித்துள்ளதைவிட அதிகமான பொதுமக்கள் உயிரிழந்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

2017: வருடத்தை விளக்கும் ஆச்சரிய எண்கள்

127

இது உலகில் அதிக எரிமலைகளுள்ள நாடான இந்தோனேசியாவில் இருக்கும் எரிமலைகளின் எண்ணிக்கையாகும். நவம்பர் மாதத்தில், மவுண்ட் அகுங் என்ற எரிமலை வெடித்து தீப்பிழம்புகளை வெளியேற்ற ஆரம்பித்ததால் அப்பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

2017: வருடத்தை விளக்கும் ஆச்சரிய எண்கள்

1.7 மில்லியன் மக்கள்

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் சம்பந்தப்பட்ட பாலியல் துஷ்பிரயோக விவகாரத்தை கண்டனம் செய்வதற்காக #metoo என்ற ஹாஷ்டேகை 85 நாடுகளை சேர்ந்த பெண்கள் பயன்படுத்தி தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

2017: வருடத்தை விளக்கும் ஆச்சரிய எண்கள்

பூஜ்யம்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், மியான்மரின் நடைமுறை தலைவருமான ஆங் சாங் சூச்சி அந்நாட்டில் ரோஹிஞ்சா முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைக்கு ஒருமுறை கூட கண்டனம் தெரிவிக்கவில்லை.

2017: வருடத்தை விளக்கும் ஆச்சரிய எண்கள்

812 கால்பந்து மைதானங்களுக்கு சமம்

அண்டார்டிகாவில் கடந்த ஜூலை மாதம் உடைந்து விழுந்த ஏ68 என்றழைக்கப்படும் பனிப்பாறையானது அடுத்து நடக்கவுள்ள 12 உலக கோப்பை கால்பந்து போட்டிகளை ஒரே நேரத்தில் நடத்துவதற்குரிய அளவுக்கு பெரியதாகும்.

2017: வருடத்தை விளக்கும் ஆச்சரிய எண்கள்

ஒரு நாளைக்கு 44 சிகரெட்டுகள்

மிகவும் மாசடைந்த நகரங்களில் ஒன்றான புதுடெல்லியில் வாழும் மக்கள் அங்குள்ள காற்றை ஒரு நாளைக்கு சுவாசிப்பதென்பது 44 சிகரெட்டுகளை பிடிப்பதற்கு சமமாகும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

2017: வருடத்தை விளக்கும் ஆச்சரிய எண்கள்

1600%

கடந்த 2016ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிட்காயின்களின் மதிப்பு 1600 சதவீதம் உயர்ந்துள்ளது.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

“எங்கள் ஊரில் குப்பையே கிடையாது” உலகிற்கே பாடம் எடுக்கும் ‘ஜீரோ வேஸ்ட்’ ஜப்பான் கிராமம்! #Kamikatsu

 
 

திண்டுக்கல் என்றால் பூட்டு, திருநெல்வேலி என்றால் அல்வா என்று ஒவ்வோர் ஊரையும் அங்கே கிடைக்கும் பொருளை வைத்து பெருமையாகப் பேசுவார்கள். “உங்க ஊர்ல என்ன கிடைக்கும்?” என்று கேட்பவர்களிடம், நம் ஊரின் பெருமைகளைக் கதைகளாகக் கூறிவிடுவோம். இந்தக் கிராமத்தில், வித்தியாசமாக ஒரு பொருளும் இல்லை. ஆனால், அதை வைத்துத்தான் இந்த ஊரையே அடையாளப்படுத்துகிறார்கள். “ஊரில் என்ன கிடைக்கும்?” என்ற பொதுவான கேள்விக்கு, அவர்கள் ஊரில் கிடைக்காத ஒன்றைப் பற்றிதான் கூறுகிறார்கள். பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள். அந்தப் பொருள், குப்பை. ஆம், இது ஒரு ‘ஜீரோ வேஸ்ட்’ கிராமம். 

ஜீரோ வேஸ்ட் கமிகட்ஸு கிராமம்

 

கமிகட்ஸு (Kamikatsu) என்ற அந்தக் கிராமம், ஜப்பான் நாட்டின் டோகுஷிமா (Tokushima) ப்ரிபெக்சரில் உள்ள கட்ஸுரா (Katsuura) மாவட்டத்தில் அமைந்துள்ளது. 1700 பேர் வசிக்கும்  அந்த அழகான கிராமத்தின் பெருமையே, இங்கே வாழும் மனிதர்களின் பொறுப்புணர்ச்சிதான். சட்ட திட்டங்களை அனுசரித்து நடக்கும் நற்பண்பு இவர்களின் இன்னொரு சிறப்பு. மறுசுழற்சி செய்வதில் இவர்களை மிஞ்ச இந்த உலகத்தில் ஆளே இல்லை. ஒட்டுமொத்த ஜப்பான் நாட்டில், மக்கள் மறுசுழற்சிசெய்வது வெறும் 20 சதவிகிதம் மட்டுமே. ஆனால், கமிகட்ஸு கிராமத்தில் இது 80 சத விகிதத்தைத் தொடுகிறது.

1990 வரை இது உலகிலுள்ள மற்ற கிராமங்களைப் போலத்தான். குப்பையைக் குவித்திருப்பார்கள். மக்கும் குப்பை, மக்காத குப்பை என்றெல்லாம் பிரிக்கவே மாட்டார்கள். நிறையச் சேர்ந்தவுடன், அப்படியே ஒதுக்குப்புறமாகக் குவித்து வைத்துவிடுவார்கள். நிறையச் சேர்ந்தால் எரித்துவிடுவார்கள். 1990-க்குப் பிறகு, கார்பன் மோனாக்ஸைடு காற்றில் அதிகம் கலக்கத் தொடங்க, கால்நடைகளுக்கும் குழந்தைகளுக்கும் நிறையப் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கின. 2003-ம் ஆண்டின்போது இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு எடுத்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது கமிகட்ஸு.

அதன்படி, இலக்காக 2020-ம் ஆண்டை எடுத்துக்கொண்டு, அதற்குள் கிராமத்திலிருக்கும் பழைய குப்பைகளை அகற்ற வேண்டும்; அதுமட்டுமன்றி, தினமும் குப்பைகளை சேர்க்காமல், அனைத்தையும் மறுசுழற்சிசெய்து திரும்பப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; ஒருநாள்கூட குப்பைகள் சேர்ந்துவிடக் கூடாது என்றெல்லாம் உறுதிமொழிகள் எடுத்துக்கொண்டனர். அதாவது, மொத்த கிராமமும் 2020 க்குள்  ‘ஜீரோ வேஸ்ட்’ கிராமமாக மாறியிருக்க வேண்டும். இதைச் சாத்தியப்படுத்த அவர்கள் நிறுவிய ஒரு கட்டமைப்புதான், ‘Zero Waste Facility’.

Zero Waste Facility

இந்த நிறுவனத்தின் அன்றாட வேலையே தினமும் அந்தக் கிராமத்தில் சேரும் குப்பைகளை மறுசுழற்சி செய்து வேறு பணிகளுக்கு பயன்படுத்துவதே. குப்பைகளாகச் சேர்ந்த பொருட்களில் ஒரு சில மீண்டும் பயன்படுத்தி கொள்ளும் நிலையில் இருந்தால் அதை வியாபாரிகள் அல்லது வேறு சில நிறுவனங்கள் வாங்கிக் கொள்வார்கள். அதிசயம் என்னவென்றால், குப்பைகளை இந்த ‘Zero Waste Facility’-க்கு கொண்டுவர, குப்பை லாரிகள் என்று எதுவும் கிராமத்தில் கிடையாது. தினமும் மக்களே தங்கள் குப்பைகளைச் சுத்தப்படுத்தி, பிளாஸ்டிக் அல்லது வேறு திடப்பொருட்கள் இருந்தால் அதைத் தண்ணீர் ஊற்றிக் கழுவி, தங்கள் கைப்பட இங்கே கொடுத்துவிட்டு போகவேண்டும். இங்கே நாம் குப்பைகளை பொதுவாக இரண்டு அல்லது மூன்று வகைகளில் தான் பிரிக்கின்றோம். ஆனால், இங்கே அவர்களின் ‘Zero Waste Facility’-யில் குப்பைகளை 34 முதல் 45 வகைகளாகப் பிரிக்கிறார்கள். அலுமினிய கேன்கள், எஃகு கேன்கள், ஸ்பிரே கேன்கள், உலோகங்கள், ஆடைகள், மரப் பொருட்கள், ஒளிரும் விளக்குகள் என்று அந்தப் பட்டியல் நீள்கிறது. எந்தக் குப்பை எங்கே சேர வேண்டும் என்று வழிகாட்ட அங்கே அதிகாரிகள் எப்போதும் இருக்கிறார்கள்.

ஜீரோ வேஸ்ட் ஜப்பான் கிராமம் செய்யும் மறுசுழற்சி

2003-லிருந்து 14 வருடங்கள் ஓடிவிட்டன. இந்த வருட நிலவரப்படி, கமிகட்ஸு தனது 80 சதவிகித குப்பைகளை மறுசுழற்சி செய்துவிடுகிறது. முதலில், இது ஒரு கடினமான வேலையாக மக்களுக்குத் தோன்றினாலும், பின்னாளில் அதுவே அவர்களின் வாழ்க்கை முறையாகிப்போனது. தற்போது, குப்பை என்பதையே அவர்கள் வேறு கோணத்தில்தான் பார்க்கிறார்கள். ஒரு பொருளை குப்பை என்று குப்பைத் தொட்டிக்குள் போடும் முன்பு, பலமுறை யோசிக்கிறார்கள்.

தக்குயா டகெய்ச்சி (Takuya Takeichi) என்பவர், மளிகை முதலிய அத்தியாவசியப் பொருள்கள் விற்கும் கடை ஒன்றை கமிகட்ஸு கிராமத்தில் வைத்திருக்கிறார். “முதலில், இது ஒரு வேண்டாத வேலையாகத்தான் தோன்றியது. அதிக நேரம் இதற்காகச் செலவிட வேண்டியிருந்தது. பின்னர், அனைவரும் செய்வதைப் பார்த்து என் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டேன். இதன் அவசியத்தை உணர்ந்து கொண்டேன். அதன்பிறகு, கடைக்கு எந்தப் பொருள் வாங்கினாலும், கார்ட் போர்டு அட்டைப்பெட்டிகளில்தான் வாங்குகிறேன். பின்னர் மக்களுக்குப் பொருள்களை சில்லறையாகக் கொடுக்கும்போது, பேக் செய்துகொடுக்கப் பயன்படுத்திவிடுவேன்” என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.

ஜீரோ வேஸ்ட் ஜப்பான் கிராமம் செய்யும் மறுசுழற்சி

அந்தக் கிராமத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் சமையல்காரராக இருக்கும் டைரா ஓமோதேஹாரா (Taira Omotehara) உணவு தயார் செய்யும்போது, இந்த ‘ஜீரோ வேஸ்ட்’-கட்டளையை எப்படிப் பின்பற்றுகிறார் என்று விவரிக்கிறார். “முதலில், இந்தக் கிராமத்தில் நுழைந்த போது, ஆங்காங்கே குப்பைகளை இறைத்துவிடுவேன். உணவு தயார்செய்யும்போது, நிறையக் காய்கறிகள், இதர சமையல் பொருள்கள் மீதமாகிவிடும். ஆனால், பின்னர் பொறுப்புடன் நடந்துகொள்வது எப்படி என்று கற்றுக்கொண்டேன். இது எல்லோரும் சொல்வதுபோல மிகவும் அவசியம் என்று உணர்ந்தேன். எங்கள் ஹோட்டலில் மீதமாகும் உணவுப் பொருள்களைப் பின்பு உரமாகப் பயன்படுத்த இங்கே உள்ளூரில் இருக்கும் விவசாயிகளுக்கு அனுப்பிவிடுவார்கள். அந்த உரத்தைக்கொண்டு விளையும் காய்கறிகளைப் பின்பு நாங்களே விலை கொடுத்து வாங்கிக்கொள்வோம்” என்று ஆச்சர்யப்படுத்துகிறார்.

 

மறுசுழற்சி என்பதை, இந்தக் கிராமத்தைச் சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் நன்கு உணர்கிறார்கள். நிறைய பிளாஸ்டிக் மற்றும் அலுமினியப் பொருள்களைக்கொண்டு வண்ணமயமான கலைப் பொருள்கள் கிடைக்கின்றன; தொப்பி, சங்கிலி உள்ளிட்ட அணிகலன்கள் கிடைக்கின்றன. கமிகட்ஸு மக்கள், இந்த உலகத்திற்குச் சொல்லும் செய்தி ஒன்றே ஒன்றுதான். ஒரு பிரச்னையைத் தீர்க்கவே முடியாது என்று உட்கார்ந்துவிட்டால், அது நமக்கு முன்னால் நிச்சயம் மலையளவு வளர்ந்துவிடும். அந்த செய்யமுடியாத ஒன்றை, அனைவரும் ஒன்றுசேர்ந்து நம்பிக்கையுடனும், அக்கறையுடனும் செய்தால், வெற்றி என்பது சாத்தியமே!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

சர்வாதிகாரி பாடிஸ்டா நாட்டை விட்டே தப்பியோடிய நாள் இன்று

1959-ஆம் ஆண்டு, கியூபாவில் ஃபிடெல் கேஸ்ட்ரோ தலைமையிலான ஜூலை-26 இயக்கத்தின் அரசுக்கு எதிரான புரட்சி வலுவடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ஆதரவுடன் கியூபாவை ஆட்சி செய்து வந்த சர்வாதிகாரி பாடிஸ்டா நாட்டை விட்டே தப்பியோடிய நாள் இன்று.

  • தொடங்கியவர்

தருணங்கள் 2017

 

 
collage-2017-12-30jpg

2017-ன் முக்கியத் தருணங்கள் இவை. போர்கள், இன அழிப்பு, வன்முறைச் சம்பவங்கள் தொடங்கி சர்ச்சைகள் வரை உலகம் எதிர்கொண்ட விஷயங்களை உங்கள் பார்வைக்குத் தந்திருக்கிறோம். அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபர் கிங் ஜோங் உன் தொடங்கி உலகத் தலைவர்களின் அதிரடிப் போக்குகள், ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருந்த மியான்மர் அரசின் கள்ள மெளனம் வரை பல கொடுமைகளைப் பார்த்த ஆண்டு இது. நம்பிக்கை தரும் விஷயங்களும் நடந்தன. 2017-ல் நாம் செய்ய வேண்டிய காரியங்களின் பட்டியல் பெரியது. நம்பிக்கையுடன் வரவேற்போம் இந்தப் புத்தாண்டை!

அதிர்ச்சிகளின் தலைவர்!

2017 ஜனவரி 20 அன்று அமெரிக்காவின் 45-வது அதிபராகப் பதவியேற்றார் டொனால்டு டிரம்ப். சிரியா, ஈரான், இராக் உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்தது தொடங்கி, இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தது வரை டிரம்பின் அறிவிப்புகள் உலகம் பயந்தபடியே, அமெரிக்காவிலும் வெளியிலும் அதிர்வுகளாகப் பரவுகின்றன.

 

பிரியும் தருணம்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முறைப்படி பிரிட்டன் விலக மார்ச் 16 அன்று ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, பிரிட்டனின் வெளியேற்றம் உறுதியானது. அதேசமயம், பிரெக்ஸிட்டுக்கு எதிரான குரல்கள் பிரிட்டனில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. ‘ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்துக்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இறுதி ஒப்புதல் வேண்டும்’ என்று ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி கொண்டுவந்த தீர்மானத்துக்கு 309 ஆதரவு ஓட்டுகள் கிடைத்திருப்பது புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

 

மெய்நிகர் துட்டு!

உலகமே மெய்நிகர் சமூகமாக மாறிவரும் நிலையில், கரன்ஸியும் அப்படி மாறுவதில் என்ன ஆச்சரியம்! 2009-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பிட்காயின்’ 2017-ல் மேல் நோக்கி நகர்ந்தது. ஒருவர் இணையம் மூலம் பிட்காயினைப் பயன்படுத்தி, இன்னொருவரிடமிருந்து பொருட்களை வாங்க முடியும். தன்னிடம் உள்ள தொகையை பிட்காயின் மூலம் இன்னொருவருக்குக் கொடுக்கவும் முடியும். கடவுச்சொல் மூலம் இந்தப் பரிவர்த்தனை பாதுகாப்பாக நடக்கும் என்று சொல்கிறார்கள். கட்டுப் படுத்த மைய வங்கிகள் இல்லை. ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள் இதை அங்கீகரித்திருக்கின்றன என்றாலும், இதன் மூலம் நிறைய முறைகேடுகள் நடப்பதாக சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் எச்சரித்திருக்கின்றன. என்றாலும், பிட்காயின் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்திருக்கிறது.

 

செல்வக் கோமகன்!

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 23 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்துவந்த ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனத் தின் அதிபர் பில் கேட்ஸை இரண்டாம் இடத்துக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்தார் ‘அமேசான் டாட் காம்’ நிறுவன அதிபர் ஜெஃப் பிஸோஸ். ஜூலை 27-ல் அமேசான் நிறுவனத்தின் பங்கு விற்பனை மதிப்பு உயர்ந்ததால், அவரது சொத்து மதிப்பு 90.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்து இந்த இடத்துக்கு அவரை உயர்த்தின!

 

வணக்கம் சோபியா!

உலகிலேயே முதல் முறையாக ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கியது சவுதி அரேபியா. அக்டோபர் 25 அன்று நடிகை அவுட்ரி ஹெப்பர்ன் உருவ அமைப்பில், ரோபோ நிபுணர் டேவிட் ஹன்சன் உருவாக்கிய இந்த ரோபோவின் பெயர் சோபியா. மனிதர்களின் முக பாவனைகளைப் புரிந்துகொண்டு, தகுந்தபடி பதில் சொல்ல வல்லது இது. பேசவும், சிரிக்கவும், அரட்டை அடிக்கவும் சோபியாவால் முடியும்!

 

அதிநாயகி!

பொதுவாகவே, சூப்பர் ஹீரோ பாத்திரங்கள் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், பேட்மேன் என்று ‘மேன்’கள் வகையறாவாகவே இருக்கும். முதல் முறையாக அதீத சக்திகள் கொண்ட ஒரு பெண் பாத்திரத்தை முதன்மையாக வைத்து உருவாக்கப்பட்ட படம் ‘வொண்டர் வுமன்’. புகழ்பெற்ற ‘டி.சி. காமிக்ஸ்’ நிறுவனம் 1940-களில் உருவாக்கிய இந்தப் பாத்திரத்தை அதிரடி சாகச நாயகியாகத் திரைக்குக் கொண்டுவந்தார் பெண் இயக்குநரான பேட்டி ஜெக்கின்ஸ். ஜூன் 2 அன்று வெளியான படம், நாயகி கால் கேடட்டையும் பெரும் நட்சத்திரம் ஆக்கியது!

 

கத்தாரின் மூச்சுத்திணறல்!

பயங்கரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி, கத்தார் நாட்டுடனான உறவை சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து, பஹ்ரைன் ஆகிய அண்டை நாடுகள் ஜூன் மாதம் துண்டித்துக்கொண்டன. ‘அல் ஜசீரா’ செய்தி நிறுவனத்தை மூட வேண்டும் என்பதும் கத்தாருக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடிகளில் ஒன்று என்பது இங்கு குறிப்பிட வேண்டியது. உணவுக்குக்கூட இறக்குமதியை நம்பியிருக்கும் கத்தார் பெரும் அவதிக்கு உள்ளானது. ஈரான் உதவியால் அதன் மூச்சுத்திணறல் இப்போது நின்றிருக்கிறது. அண்டை நாடுகளின் பொருளாதாரத் தடையை எதிர்கொள்ள இப்போது 80 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதாக அறிவித்திருக்கிறது கத்தார்.

 

விபரீத ஆட்டக்காரர்!

ஆண்டின் பல்வேறு தருணங்களிலும் உலகைத் திடுக்கிட வைத்தார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன். ஜூலை 28, நவம்பர் 29-ல் அடுத்தடுத்து கொரியா நடத்திய ஏவுகணைச் சோதனைகள், இதுவரை வட கொரியா காட்டிவந்த ‘அணுகுண்டுப் பூச்சாண்டி’யை இனி அப்படி அணுக முடியாது என்பதை உலகுக்கு உணர்த்திவிட்டது. யதேச்சதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் அதிபர் கிம் எதைச் செய்வார், எப்போது செய்வார் என்ற பதற்றத்தில் இதுவரை தென் கொரியா மட்டுமே இருந்தது போக, இப்போது ஜப்பானையும் சேர்த்துத் தள்ளியது அதன் கடல் எல்லையை அடைந்த ஒரு ஏவுகணை. அமெரிக்காவில் டிரம்ப் அதிபராக இருக்கும் காலகட்டத்தில் கிம் நடத்திக்கொண்டிருக்கும் விபரீத விளையாட்டு எங்கு போய் முடியுமோ என்று பதைபதைப்போடு பார்த்துக்கொண்டிருக்கிறது உலகம்.

 

மீட்கப்பட்ட மனிதம்

ஐஎஸ் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து இராக்கின் மோசுல் நகரம் மீட்கப்பட்டது 2017-ன் ஆறுதல் சம்பவங்களில் ஒன்று. இராக்கின் வலுவிழந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்ட ஐஎஸ் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி, மோசுல் நகரைக் கைப்பற்றினார். பல கொடுமைகள் நடந்தன. 2016-ல் அமெரிக்க ராணுவத்தின் வழிகாட்டலில் அரேபியர்கள், குர்துகள், யாஜிதிக்கள் என்று அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து களமிறங்கினர். பல உயிரிழப்புகளுக்கு இடையில் ஜூலை இறுதியில் மீட்கப்பட்டது மோசுல்.

 

நாடற்றவர்கள்!

ரோஹிங்கியா மொழி பேசும் முஸ்லிம்களை நாடற்றவர்களாக உருமாற்றிக்கொண்டிருக்கிறது மியான்மர். ராணுவம் மற்றும் காவல் துறை ஒத்துழைப்பினூடாகவே ரோஹிங்கியாக்கள் இன அழிப்பைத் திட்டமிட்டு நிகழ்த்துகிறது புத்த பேரினவாதம். இளைஞர்கள் கொலை, நடுத்தர வயதினர் கைது, பெண்கள் மீதான பாலியல் வன்முறை, வீடுகள் தீக்கிரை என்று வன்முறைகளை எதிர்கொள்ள முடியாமல் அண்டை நாடுகளை நோக்கித் தப்பி ஓடினர். அமைதிக்கான நோபல் விருது வாங்கியவரும் மியான்மர் அரசை வழிநடத்துபவருமான ஆங் சான் சூச்சி இதைக் கண்டுகொள்ளாமல் கள்ள மெளனம் சாதித்தது அதிர்ச்சியளித்தது. ஆதரவின்றித் தவிக்கும் மானுடத்தின் ஓலக் குரல் தண்ணீரில் மூழ்குகிறது.

 

வரலாம், வரலாம் வா!

உலகிலேயே பெண்களை கார் ஓட்ட அனுமதிக்காத ஒரே நாடு சவுதி அரேபியா. 25 ஆண்டுகளுக்கும் மேலாக கார் ஓட்டும் அனுமதிக்காகக் குரல்கொடுத்துவந்த பெண்களுக்கு, செப்டம்பர் 26 அன்று பச்சைக் கொடி காட்டியது அந்நாட்டு அரசு. 2018 ஜூனிலிருந்து பெண்களும் இனி அங்கு கார் ஓட்டலாம். அதேபோல, விளையாட்டு மைதானங்களிலும் இனி பார்வையாளர்களாகப் பெண்கள் பங்கேற்கலாம். ஆம், இதற்காகவும்கூட அவர்கள் நீண்ட குரல் கொடுக்க வேண்டியிருந்தது இதுநாள் வரை!

 

முடக்கப்பட்ட சுதந்திர முழக்கம்

ஸ்பெயினின் சுயாட்சிப் பகுதியான கேடலோனியா தனிநாடு கோரிக்கை முழக்கத்துடன் அதிர்ந்தது. தங்கள் பகுதி செல்வ வளத்தைச் சுரண்டிக் கொழுக்கும் ஸ்பெயின் அரசு, தங்களுக்கு எதுவும் செய்வதில்லை என்று குமுறிய கேடலோனியர்கள், பல எதிர்ப்புகளை மீறி அக்டோபர் 1-ல் நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பில் சுதந்திரம் பெறுவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். உடனே, கேடலோனிய அரசைக் கலைத்தது ஸ்பெயின். சுதந்திர முழக்கம் முடக்கப்பட்டது. எனினும், வெவ்வேறு நாடுகளில் சுதந்திரம் கோருபவர்களின் பார்வை கேடலோனியாவில் ஆழப் பதிந்திருக்கிறது!

 

சீனத்தின் ஒற்றைப் பெருஞ்சுவர்!

 

சீன வரலாற்றில் மாசே துங், டெங் ஷியாபிங்குக்கு இணையான, கட்டற்ற அதிகாரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார் அதிபர் ஜின்பிங். அவரது, ‘புதிய சகாப்தத்துக்கான சீன சோஷலிஸம்’ சித்தாந்தத்தைக் கட்சி துளி எதிர்ப்பின்றி ஏற்றது. சீன கம்யூனிஸ்ட் கட்சி, சீன ராணுவமான மக்கள் விடுதலை சேனை, சீர்திருத்தங்களை அமலாக்குவதற்கான மத்திய முன்னணிக் குழு என்று பல அமைப்புகளுக்கு அவரே தலைவர். அக்.18 அன்று கூடிய கட்சி மாநாட்டில் தனது பதவிக்காலத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துக்கொண்டதோடு, இதற்கேற்ப கட்சியின் அரசியல் சாசனத்திலும் திருத்தங்களைக் கொண்டுவந்திருக்கிறார்.

 

முடிவுக்கு வந்த சகாப்தம்!

ஜிம்பாப்வே விடுதலைப் போராட்டத்தில் முன்னின்று நடத்தி, அந்நாட்டின் அதிபராகி 37 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவந்த ராபர்ட் முகாபே, நவம்பர் 14-ல் நடந்த ராணுவக் கலகத்தின் விளைவாக ஆட்சி இழந்தார். அடுத்து அதிபராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட துணை அதிபர் எமர்சன் நங்காக்வாவைப் பதவியிலிருந்து நீக்கி, தன் மனைவி கிரேஸை அதிபராக்கத் திட்டமிட்டிருந்தார் முகாபே. ஆனால், அவரை வீட்டுச் சிறையில் வைத்து ராஜினாமா செய்யவைத்தது ராணுவம். புதிய அதிபரானார் நங்காக்வா!

 

புனித நகர் அரசியல்

ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்கா டிசம்பர் 6-ல் அங்கீகரித்ததைத் தொடர்ந்து பெரும் பதற்றம் உருவானது. ஐ.நா. சபை இதை நிராகரித்துவிட்டதாலும், உலகின் பெரும்பான்மை நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்ததாலும் இஸ்ரேலின் ஓங்கிய கை தணிந்துவிட்டாலும் பாலஸ்தீன் கொந்தளித்துப்போனது. வரலாற்றில் 23 முறை முற்றுகைக்குள்ளாகி, 52 முறை தாக்கப்பட்டு, 44 முறை கைப்பற்றப்பட்டு எப்போதும் அலைக்கழிப்பிலேயே உள்ள புனித நகரமான ஜெருசலேம், இப்போது இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்குமான நகரமாக இருந்துவருகிறது. எப்போதும் அது தொடருமா என்பது கேள்விக்குறியாகியிருக்கிறது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

Kein automatischer Alternativtext verfügbar.

காலண்டர் கண்டுபிடித்தது எங்கு??

கிரேக்கர்கள் தான் முதன்முதலில் காலண்டரை உருவாக்கினர். அவர்களிடம் இருந்து ரோமானியர்கள் இதைக் கற்றுக்கொண்டனர். ஆரம்ப காலத்தில், இன்றுள்ள ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் இல்லை. மார்ச் முதல் டிசம்பர் வரையான
பத்து மாதங்களும், 304 நாட்களுமே இருந்தன.

கி.மு.700ல் ரோமானிய மன்னர் நூமா பாம்பிளியஸ் ஜனவரி, பிப்ரவரி மாதங்களைச் சேர்த்து 12 மாதங்களாக்கினார். ஆனால், இந்த இரண்டு மாதங்களும் ஆண்டின் கடைசி இருமாதங்களாக
(11,12வது மாதங்கள்)இருந்தன.

கி.மு.46ல் ஜுலியஸ் சீசர் சில திருத்தங்கள் செய்து, ஜனவரி, பிப்ரவரியை ஆண்டின் முதல் இருமாதங்கள் ஆக்கினார். இதற்கு ஜுலியன்காலண்டர் என்ற பெயர் சூட்டப்பட்டது.

Kein automatischer Alternativtext verfügbar.

புது வருஷம் என்னமோ காலெண்டர்ல இருக்கற முதல் தேதி போல கலராதான் ஆரம்பிக்குது ஆனா அதுக்கப்புறம்...1f61c.png?1f61d.png?1f60d.png

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
‘அரவணைப்பில் சரணடையுங்கள்; நல்லதே நடக்கும்’
 

image_3e86bffb49.jpgமகாசக்தி சகல வல்லமைகளையும் கொண்டது. இதனால் உலகை மட்டுமல்ல, முழுப் பிரபஞ்சங்களையும் அசைத்துவைக்க முடியும். அதுமட்டுமல்ல, அவைகளை அழிக்கவும் மீண்டும் புதுப்பிக்கவும் வல்லது.

மகாசக்தியின் அளவை மனித மூளையால் அளவிட முடியாது. இதனை இயற்கை என்பர் ஒருசாரார். ஆனால், ஆன்மீகவாதிகளோ, இந்த மகாசக்தியைப் படைத்தவர் கடவுள்தான் என அறுதியிட்டுச் சொல்கின்றனர்.

இது உருவங்களை அருவுருவாக்கும். உயிர்களைப் படைக்கும். அப்புறம் அவைகளையே அழிக்கும். ஆயினும் உயிர்களைச் சுமக்கும் உடலைத்தான் இல்லாமல்ச் செய்கின்றது.இதனையே அழித்தல் என்கின்றோம்.

தீயோருக்கு அதிக பட்ச தண்டனைகளைக் கொடுத்தாலும் கூட, சாந்தசொரூபி, பேரன்பின் முழுவடிவம், கருணையின் உருவம், பக்திக்கு முன் உருகும் மென்மைத் தன்மையது. இதன் அரவணைப்பில் சரணடையுங்கள்; நல்லதே நடக்கும்.

  • தொடங்கியவர்

1993 : கிளாலி படு­கொ­லைகள் இடம்­பெற்­றன

வரலாற்றில் இன்று…

ஜனவரி – 02

 

1492 : ஸ்பெயினில் முஸ்­லிம்­களின் ஆளு­கைக்­குட்­பட்ட கடைசி நக­ர­மான கிர­னடா சர­ண­டைந்­தது.

1757 : இந்­தி­யாவின் கல்­கத்தா நகரை பிரிட்டன் கைப்­பற்­றி­யது.

killali.jpg1782 : கண்டி இராச்­சி­யத்தின் இரண்­டா­வது நாயக்க வம்ச மன்­ன­ரான கீர்த்தி ஸ்ரீ இரா­ஜ­சிங்கன் இறந்தார்.

1793 : ரஷ்­யாவும் பிரஸ்­யாவும் (தற்­போ­தைய ஜேர்­ம­னியின் ஒரு பிராந்­தியம்) போலந்தை பங்­கிட்­டன.

1893 : வட அமெ­ரிக்­காவில் ரயில் பாதை­களில் நேரத்தை அள­விடும் குரோ­னோ­ மீட்­டர்கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன.

1905 : ரஷ்யக் கடற்­ப­டை­யினர் சீனாவின் போர்ட் ஆதரில் ஜப்­பா­னி­ய­ரிடம் சர­ண­டைந்­தனர்.

1921 : ஸ்பெயினின் சாண்டா இசபெல் கப்பல் மூழ்­கி­யதால் 244 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1941 : இரண்டாம் உலகப் போரில் பிரிட்­டனின் வேல்ஸில் லாண்டாஃப் தேவா­லயம் ஜெர்­ம­னி­யரின் குண்­டு­வீச்சில் பலத்த சேதம் அடைந்­தது.

1942 : இரண்டாம் உலகப் போரில் பிலிப்­பைன்ஸின் மணிலா நகரம் ஜப்­பா­னி­ய­ரினால் கைப்­பற்­றப்­பட்­டது.

1955 : பனா­மாவின் ஜனா­தி­பதி ஜோசே அன்­ரோ­னியோ ரெமோன் படு­கொலை செய்­யப்­பட்டார்.

Painting_at_Kelaniya_Raja_Maha_Vihara.jp1959 : சந்­தி­ர­மண்­டல ஆய்­வுத்­திட்­டத்தின் முத­லா­வது செய்­ம­தி­யான லூனா 1, சோவியத் ஒன்­றி­யத்தால் விண்­ணுக்கு ஏவப்­பட்­டது.

1971 : கிளாஸ்­கோவில் கால்­பந்­தாட்ட மைதானம் ஒன்றில் இடம்­பெற்ற விபத்தில் சிறு­வர்கள் உட்­பட 66 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1982 : சோமா­லிய அர­சுக்கு எதி­ரான தமது முத­லா­வது இரா­ணுவ நட­வ­டிக்­கையை சோமா­லிய தேசிய இயக்கம் தொடங்­கி­யது. சோமா­லி­யாவின் வட­ப­கு­தியில் அர­சியல் கைதி­களை விடு­வித்­தனர்.

1993 : கிளாலி கடல் நீரே­ரியில் பய­ணித்த பொது­மக்கள் மீது கடற்­ப­டை­யினர் நடத்­திய தாக்­கு­தலில் சுமார் 50 பேர் இறந்­தனர்.

1999 : அமெ­ரிக்­காவின் விஸ்­கொன்சின் மாநி­லத்தில் இடம்­பெற்ற பலத்த பனிப்­பு­யலில் சிக்கி 68 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2006 : மன்­னாரில் இலுப்­பைக்­க­ட­வையில் இடம்­பெற்ற இலங்கைப் படை­யி­னரின் வான் தாக்­கு­தலில் 8 சிறு­வர்கள் உட்­பட 15 பொது­மக்கள் கொல்­லப்­பட்­டனர். 40 பேர் படு­கா­ய­ம­டைந்­தனர்.

2008 : விடு­தலைப் புலி­க­ளுக்கும் இலங்கை அர­சுக்­கு­மி­டையே 2002 இல் கைச்­சாத்­தி­டப்­பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்தது.

2016 : சவூதி அரேபியாவில் ஷியா மதப் பிரசாரகர் ஷேய்க் நிம்ர் அல் நிம்ர் உட்பட 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

http://metronews.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.