Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

``அவளுக்கு என்னைத் தெரியாது... எனக்கு அவளைத் தெரியும்!’’ - நெகிழவைக்கும் காதல் கதை #FeelGoodStory #LetsLove

 
 

கதை

 

`முதிர்ச்சியற்ற காதல் இப்படிச் சொல்லும்: `நான் உன்னைக் காதலிக்கிறேன். ஏனென்றால் நீ எனக்கு வேண்டும்.’ முதிர்ச்சியடைந்த காதல் இப்படிச் சொல்லும்: `எனக்கு நீ வேண்டும். ஏனென்றால், நான் உன்னைக் காதலிக்கிறேன்.’ ‘ - இதைச் சொன்னவர் அமெரிக்க சமூக உளவியலாளர் எரிக் ஃப்ரோம் (Erich Fromm). காதலுக்குத் தேவையான அடிப்படையான மனப்பக்குவம் இதுதான். காதலிப்பவருக்கு அந்த நேரத்தில் தான் எங்கிருக்கிறோம் என்கிற நினைப்போ, தன் மோசமான உடல்நிலையோகூட ஒரு பொருட்டாகத் தோன்றாது. தன் துணைக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல், அந்த நேரத்தில் அவன்/அவளுக்கு எப்படி உதவுவது, கவனித்துக்கொள்வது என்பதிலேயே எண்ணமெல்லாம் இருக்கும். காதலின் உன்னதத்தை உணர்த்தும் ஒரு கதை இது.

 

அது பாரிஸிலிருக்கும் ஒரு கிளினிக். காலை ஏழு மணிக்கெல்லாம் அவர் கிளினிக்குக்கு வந்துவிட்டார். அவருக்கு 65 வயதுக்கு மேலிருக்கும். கட்டை விரலில் கட்டுப்போட்டிருந்தார். அவர்தான் கிளினிக்குக்கு வந்த முதல் நோயாளி. அவரை வரவேற்ற நர்ஸ், அவரின் பெயரைக் கேட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்துகொண்டார். அவரை உட்காரச் சொன்னார்.

அங்கிருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்த அந்த முதியவர் வாட்ச்சைப் பார்த்தார். பிறகு மெதுவாக எழுந்து நர்ஸிடம் வந்தார். ``ஏம்மா...‘’

``சொல்லுங்க சார்...’’

``டாக்டர் வர்றதுக்கு ரொம்ப நேரம் ஆகுமா?’’

``இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். ஆனா, நீங்கதான் முதல்லயே வந்துட்டீங்களே... டாக்டர் வந்தவுடனே பார்த்துடலாம்...’’

அவர் மறுபடியும் போய் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டார். ஆனால், மிகவும் பரபரப்பாக இருந்தார் என்பது அவர் முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது. அதற்குள் ஒரு பெண்மணி தன் குழந்தையுடன் உள்ளே வந்தார். அந்த நர்ஸ் அந்தப் பெண்மணியை கவனிக்க ஆரம்பித்தார். முதியவர் தன் வாட்ச்சைப் பார்த்தார். அவர் உள்ளே வந்து பத்து நிமிடங்கள்தான் ஆகியிருந்தன. இன்னும் டாக்டர் வருவதற்கு 50 நிமிடங்களாவது ஆகும். அவருடைய பரபரப்பு கொஞ்சம் அதிகமாகியிருந்தது. நர்ஸ் அவரை ஒரு கணம் பார்த்தார். பிறகு அருகே வந்தார்.

செவிலியர்

``சார்... ஏன் இவ்வளவு பரபரப்பா இருக்கீங்க? வேற எங்கேயாவது போகவேண்டியிருக்கா?’’

``ஆமா.’’

``சரி... எதுக்காக நீங்க டாக்டரைப் பார்க்க வந்திருக்கீங்க?’’

அந்த முதியவர் தன் கட்டை விரலைக் காட்டினார். ''இதுல அடிபட்டிருந்தது. கட்டுப் போட்டிருக்கேன். அதை டாக்டர்கிட்ட காண்பிக்கணும்...’’

``அப்படியா... நானே பார்க்கிறேன். என்கூட வாங்க...’’என்ற நர்ஸ் அவரைக் கட்டுப்போடும் அறைக்கு அழைத்துச் சென்றார். கட்டை விரலில் போட்டிருந்த கட்டைப் பிரித்தார். அவர் விரலில் பட்டிருந்த காயம் ஆறியிருந்தது. நர்ஸ், மெதுவாகப் பெரியவரிடம் பேச்சுக் கொடுத்தபடியே டிரெஸ்ஸிங் செய்ய ஆரம்பித்தார்.

``அவ்வளவு அவசரமா எங்கே சார் போகப் போறீங்க? யாரையாவது பார்க்க அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருக்கீங்களா?’’

``இல்லை. நான் இன்னொரு நர்ஸிங் ஹோமுக்குப் போகவேண்டியிருக்கு.’’

``ஏன்... அங்கே இன்னொரு டாக்டரைப் பார்க்கணுமா என்ன?’’

``ம்ஹும். அங்கே என் மனைவி இருக்கா. அவளோட சேர்ந்து டிபன் சாப்பிடணும்...’’

``உங்க ஒய்ஃப் மேல உங்களுக்கு அவ்வளவு காதலா?’’

`ஆமாம்’ என்பதுபோல் அவர் தலையசைத்துச் சிரித்தார்.

அல்சைமர்

நர்ஸ் கேட்டார்... ``சரி... உங்க ஒய்ஃப் அங்கே ஏன் இருக்காங்க?’’

``அவளுக்கு உடம்பு சரியில்லை. வயதான சிலருக்கு வர்ற அல்சைமர்’ஸ் டிசீஸ்ங்கிற (Alzheimer's disease) மறதி நோய்...’’

``அடடா... அப்போ நீங்க கொஞ்சம் லேட்டா போனாலும் வருத்தப்படுவாங்க இல்ல?’’

``அதெல்லாம் இல்லை. கடந்த அஞ்சு வருஷமா நான் யாருன்னுகூட அவளுக்கு ஞாபகத்துல இல்லை.’’

காதல்

``அவங்களுக்கே உங்களை அடையாளம் தெரியாதப்போ நீங்க ஏன் அவங்ககூட தினமும் சேர்ந்து சாப்பிடணும்னு நினைக்கிறீங்க?’’

முதியவர் சிரித்தபடி சொன்னார்... ``அவளுக்கு என்னைத் தெரியாமல் இருக்கலாம்... எனக்கு அவளைத் தெரியுமே...’’

https://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மியூசிக்கல் பார்ட்னர்ஸ் முதல் ஹார்ட் டாட்டூ கேம் வரை... இது காதலர்களுக்கான கேம்ஸ்! #ValentinesDay

 
 
Chennai: 

`Where is the Party?'னு குழந்தைப் பிறந்தா பார்ட்டி, பதவி உயர்வுனா பார்ட்டி, திருமணத்துக்கு முன்னர் `பேச்சுலர்ஸ் பார்ட்டி', திருமணத்துக்குப் பிறகு `ஆஃப்டர் வெட்டிங் பார்ட்டி'... இவ்வளவு ஏன், வேலை போனா பார்ட்டி, காதல் தோல்வினா பார்ட்டினு தொட்டதுக்கெல்லாம் `பார்ட்டி' பண்ணும் ட்ரெண்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அலுவலகம், வீடு என இரண்டுக்கும் நடுவில் இயந்திரம்போல் ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு, மிகப்பெரிய ரிலாக்ஸாக இருப்பது பார்ட்டி போன்ற நிகழ்வுகள்தாம். அந்த வகையில் காதல் பொங்கப் பொங்க பார்ட்டி பண்ண காதலர் தினமும் Valentines Day வந்துவிட்டது. இதைக் கொண்டாடும் வகையில் கார்ப்பரேட்டில் பரவிவரும் `வேலன்டைன் பார்ட்டி கேம்ஸ்' டிட்பிட்ஸ் இங்கே...

 

குறிப்பு: இதில் கலந்துகொள்பவர்கள் காதலர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், ஆண் - பெண் பார்ட்னர் அவசியம்.

 

Valentines Day

மியூசிக்கல் பார்ட்னர்ஸ்:

மியூசிக்கல் பார்ட்னர்ஸ் விளையாடுவதற்குத் தேவைப்படுபவை... இரட்டைப்படை எண்களில் ஆள்கள், மியூசிக் பிளேயர் மற்றும் மியூசிக் ஆன்/ஆஃப் செய்வதற்கு ஓர் ஆள். முதலில் ரேண்டமாக ஒரு ஜோடியைத் தேர்வுசெய்து அவர்களை இசைக்கு ஏற்றபடி நடனமாடச் செய்யவேண்டும். இது ரொமான்டிக் பாடலாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. ராப், கானா என எந்த வகையான பாடலாகவும் இருக்கலாம். பாடல்கள் வேறுபட வேடிக்கைகளும் அதிகரிக்கும். பாடலை இடையிடையே நிறுத்தி இருவரையும் வேறொரு பார்ட்னரைத் தேர்ந்தெடுக்கச் செய்து, பிறகு அவர்களுடன் இணைந்து நடனமாட வேண்டும். இவ்வாறு மியூசிக்கால் இணைந்ததால் இவர்கள் `மியூசிக்கல் பார்ட்னர்ஸ்' என்றழைக்கப்படுவர்.

காதல் கவிஞர்கள்:

`என் அன்பே', `ரோஜா', `என்னவள்' போன்ற  25 ரொமான்டிக் வார்த்தைகளை தனித்தனியே துண்டுச்சீட்டில் எழுதி ஒரு பாட்டிலில் நிரப்பிக்கொள்ள வேண்டும். வியாபாரம், போக்குவரத்து, அலுவலகம் போன்ற பொதுவான 25 சொற்களை வேறு துண்டுச்சீட்டில் தனித்தனியே எழுதி, மற்றொரு பாட்டிலில் நிரப்பிக்கொள்ள வேண்டும். போட்டி பங்கேற்பாளர்களை அழைத்து இரண்டு பாட்டில்களிலிருந்தும் ஒவ்வொரு சீட்டை எடுத்து அதிலிருக்கும் சொற்களை உரக்கப் படிக்கச் சொல்ல வேண்டும். கிடைத்த இரு சொற்களை வைத்து ஒரு `ஹைக்கூ' எழுதினால் நீங்களும் கவிஞரே!

உதாரணமாக: ரோஜா, அலுவலகம் என வந்திருந்தால்,

`இன்று மலர்ந்த ரோஜா 

அலுவலகம் வராததேன்!' என எழுதலாம்.

மிக்ஸ் அண்ட் மேட்ச்:

இந்த கேம் விளையாடுவதற்குத் தேவையான பொருள்கள்... போட்டியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்-பெண் இருபாலரும் உடுத்தக்கூடிய வெவ்வேறு அளவுகளில் ஆடை வகைகள், கடிகாரம், செயின் போன்ற அணிகலன்கள் மற்றும் இவற்றைப் பிடித்துக்கொள்ளும் அளவுக்கு ஒரு பெரிய கூடை. இந்தப் போட்டியின் நடுவர் போட்டியைத் தொடங்கியதும், பார்ட்னர் இருவரும் ஓரத்தில் வைக்கப்பட்ட கூடையை நோக்கிச் சென்று அதில் தங்களின் பார்ட்னருக்கு ஏற்ற உடை மற்றும் அணிகலங்களைத் தேர்வுசெய்து அவர்களை மெருகேற்ற வேண்டும். குறுகியகால நேரத்தில் தங்களின் பார்ட்னரின் அழகை மெருகேற்றியவரே இந்தப் போட்டியின் வெற்றியாளர்!

கண்ணாம்மூச்சி ஏனடா?:

ஆண்-பெண் இரு போட்டியாளர்களையும் தனித்தனியே பிரித்து அவர்களின் கண்களை மூடும்படியான மாஸ்க்கை அணிவிக்க வேண்டும். பிறகு, போட்டியாளர்கள் அனைவரையும் ஒரே அறைக்குள் அனுப்ப வேண்டும். வலது, இடது, முன், பின் என இந்த வார்த்தைகளை மட்டுமே உபயோகப்படுத்தி தங்களின் பார்ட்னருக்குத் தாங்கள் இருக்கும் இடத்துக்குத் துப்புக்கொடுக்கலாம். சத்தமாக மியூசிக் போட்டால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். கண்களைக் கட்டிக்கொண்டிருக்கும் இவர்கள், தங்களின் பார்ட்னரைக் கண்டுபிடித்துவிட்டால் அவர்களே வின்னர்!

எனக்கே எனக்கா..?:

இந்த விளையாட்டின் முதல் ரூல் பார்ட்னர்களின் கண்களையும் கைகளையும் கட்டிவிடவேண்டும். பிறகு, ஆண் அல்லது பெண் யாராவது ஒருவர் வாயில் இனிப்புப் பண்டங்களை ஊட்ட வேண்டும். அது கவர்செய்யப்பட்ட சாக்லேட் வகையாகவும் இருக்கலாம் அல்லது ஜாமூன், ஜிலேபி போன்ற கவர் இல்லாத இனிப்பு வகைகளாகவும் இருக்கலாம். கவர்செய்யப்பட்ட இனிப்பு வகை என்றால், அதை எப்படியாவது பிரித்து தன் பார்ட்னருக்கு ஊட்டிவிட வேண்டும். கவர் இல்லாத இனிப்பு வகையை அவர்களே உண்ணலாம்.

ஐஸ்... ஐஸ் பேபி!:

இது ஜாலியான ஐஸ்க்ரீம் கேம். இதில் ஆண்களின் கண்களைக் கட்டி வரிசையாக நிற்கவைக்க வேண்டும். பெண்கள், தங்கள் பார்ட்னருக்கு ஐஸ்க்ரீம் ஊட்டிவிட வேண்டும், கைகளால் அல்ல. பெண்களின் இரு கைகளும் கட்டப்பட்டிருக்கும் நிலையில், மேஜை மீது இருக்கும் ஐஸ்க்ரீமை வாயில் வைத்திருக்கும் ஸ்பூன்கொண்டு தன் பார்ட்னருக்கு ஊட்டிவிட வேண்டும். முதலில் ஐஸ்க்ரீமை காலிசெய்யும் ஜோடியே வெற்றியாளர்கள்!

அழகிய சின்ட்ரெல்லா:

பெண்கள் அனைவரும் தங்களின் காலணிகளைக் கழற்றி குறிப்பிட்ட இடத்தில் வைத்துவிட்டு, ஓரிடத்தில் அமர்ந்திருக்க வேண்டும். பிறகு, காலணிகள் அனைத்தும் கலைக்கப்பட வேண்டும். போட்டியின் நேரம் தொடங்கியதும் ஆண்கள் அனைவரும் பெண்களின் காலணிகள் குவிந்திருக்கும் இடத்துக்குச் சென்று தங்களின் பார்ட்னரின் சரியான காலணியைக் கண்டுபிடித்து அவர்களுக்கு அணிவிக்க வேண்டும். தன் சின்ட்ரெல்லாவின் காலணியை முதலில் கண்டுபிடித்து அணிவிப்பவரே போட்டியின் வெற்றியாளர்.

காதல் விளையாட்டு:

இந்த கேம் விளையாடுவதற்கு ஒரே ஒரு டென்னிஸ் பால் மட்டுமே தேவை. பார்ட்னர் இருவரும் தங்கள் நெற்றியின் நடுவில் டென்னிஸ் பால் வைத்துப் பிடித்துக்கொள்ள வேண்டும். ஓரடி முன் அல்லது பின் குதிக்கவும், சாயவும் என்று போட்டி நடுவரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும். இறுதிவரை நடுவரின் சொற்களைப் பின்பற்றி டென்னிஸ் பாலை நழுவவிடாமல் நெற்றியில் தக்கவைத்தவர்களே இந்தப் போட்டியின் வெற்றியாளர்.

Valentines Day

கப்புள் ரிலே:

இது ரொம்பவே சுவாரஸ்யமான விளையாட்டு. இதற்குத் தேவையானப் பொருள்கள், சாக்லேட் மற்றும் காற்றடைத்த பலூன். போட்டியின் நடுவர் கை அசைத்ததும், ஆண்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்தில் வைத்துள்ள சாக்லேட்டைச் சாப்பிட வேண்டும். பிறகு, தான் சாப்பிட்டு முடித்ததை வேறோரிடத்தில் இருக்கும் தன் பார்ட்னருக்கு நேராகச் சென்று சொல்லாமல் ஏதோ ஒருவகையில் தகவலை அனுப்ப வேண்டும் (இதில்தான் பார்ட்னர்களின் சாமர்த்தியம் ஒளிந்திருக்கிறது). அந்தத் தகவல் சென்றடைந்ததும் பெண்கள், அவர்கள் கைகளிலிருக்கும் காற்றடைத்த பலூனை உடைத்து தன் பார்ட்னரை நோக்கிச் செல்ல வேண்டும். இருவரும் இணைந்த பிறகு போட்டியின் முற்றிடம் சென்றடையும் முதல் ஜோடியே சிறந்த வேலன்டைன் ஜோடி!

ஹார்ட் டாட்டூ கேம்:

இந்த கேம் விளையாடுவதற்கு கலர் மார்க்கர் அல்லது முகச்சாயம், துண்டு ஆகியவை தேவை. இவற்றை வைத்துக்கொண்டு காதலர்கள் தன் பார்ட்னரின் முகம் அல்லது கைகள் மீது குறிப்பிட்ட நேரத்துக்குள் டாட்டூ வரைய வேண்டும். இதன் தீம் காதல்தான். அனைவரையும் வசீகரிக்கச் செய்த டாட்டூவுக்குப் பரிசு!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

வைரலான பிரியா பிரகாஷ் வாரியரின் 'ஒரு அடார் லவ்' படத்தின் கியூட் டீசர்

 
 

நம்ம தமிழ் திரைப்படங்கள்ல கஷ்டப்படுற ஹீரோ ஒரே பாட்டுல வாழ்க்கைல பல பிரச்னைகளைத் தாண்டி மேல வருவாங்க. இந்த டிஜிட்டல் உலகத்துல இப்படி நடக்குறதுக்கான சாத்தியம் நிறையவே இருக்கு. ஆமாம், ஜிமிக்கி கம்மல் பெண்கள் மாதிரி இப்போ ஒரே பாட்டுல ரசிகர்களைக் குவிச்ச மாதிரி இப்போ ட்ரெண்ட் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்தான். ஒரே பாடலில் உலகெங்கும் ஃபேமஸ் ஆகிட்ட பிரியாவுக்கு சமூக வலைதளங்கள்ல ஃபேன்ஸ் எண்ணிக்கை ஜாஸ்த்தியோ ஜாஸ்தி. 

 

priya prakash | பிரியா

 

ஒமர் லுலு இயக்கத்தில் 'ஒரு அடார் லவ்' படத்தின் 'மாணிக்க மலராய பூவி' பாட்டு மூலமா எல்லோரிடமும் ரீச்சான பிரியா பிரகாஷோட பாப்புலாரிட்டிய வீணாக்க வேண்டாம்னு நினைச்ச படக்குழு மீண்டும் ஒரு கியூட் வைரல் வீடியோவை படத்தின்  டீசராக ரிலீஸ் செஞ்சிருக்காங்க. பாடலில் தன்னிடம் கண் சிமிட்டலில் பேசும் அதே பையனுக்கு தற்போது ஃப்ளையிங் கிஸ் கொடுப்பதுபோல் இந்தக் காட்சி  இருக்கிறது. காதலர் தின ஸ்பெஷலா இந்த வீடியோவை வெளியிட்டிருக்கும் இயக்குநரின் க்ரியேட்டிவிட்டிக்கு வாழ்த்துகள். இந்த டீசர் வெளியாகி கொஞ்ச நேரத்தில் செம்ம வைரல்!

 

 
  • தொடங்கியவர்

கௌதம் மேனன் உருவாக்கிய பாடலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சூர்யா

 
 

காதலர் தினத்துகாக கார்த்திக், மதன் கார்க்கி, கௌதம் மேனன் காம்பினேஷனில் உருவாகியுள்ள பாடல் ‘உலவிரவு’ கௌதம் வாசுதேவ் மேனனின்  'ஒன்றாக’ யூ-டியூப் சேனலில்  வெளியானது. இப்பாடலை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

 

சூர்யா - கௌதம் மேனன்- திவய்தர்ஷினி

 

இதில், இன்டிபெண்டன்ட் மியூசிக்கை ஊக்கப்படுத்தும் வகையில், ‘ஒரிஜினல்ஸ்’ என்ற தலைப்பில் பாடல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் கௌதம் மேனன். மலையாள நடிகர் டொவினோ தாமஸ் , திவ்யதர்ஷினி (டிடி) நடித்திருக்கும் இந்த வீடியோவை கௌதம் மேனன்  இயக்கியுள்ளார். இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுத, கார்த்திக் இசையமைத்துப் பாடியுள்ளார்.

 

 

 
  • தொடங்கியவர்

விராட், தோனி, ரெய்னா... ரொமான்ஸ் செய்தது எப்படி? கிரிக்கெட்டர்களின் லவ் ஸ்டோரி!

 
 

என்னதான் கிரிக்கெட்டில் கில்லியாக இருந்தாலும், காதல் என்று வரும்போது தனது விக்கெட்டை (மனதை) பறிகொடுக்கதான் வேண்டும். அப்படி கிரிக்கெட்டில் நடந்த கியூட் காதலை வெளிப்படுத்தி, ஸ்வீட்டாக வாழ்ந்துவரும் கிரிக்கெட் ஜோடிகள் இவர்கள்தான்!

 

ஹர்பஜன் சிங் - கீதா பாஸ்ரா :

 

ஹர்பஜன் - கீதா பாஸ்ரா (கிரிக்கெட்)

கீதா பாஸ்ரா பாலிவுட்டில் சில படங்கள் நடித்திருக்கிறார். இவர் நடித்த `தி டிரெயின்' எனும் படத்தில் `ஓ அஜ்னபி' எனும் பாடலைப் பார்த்த ஹர்பஜன் `பார்த்தவுடன் காதல்' வலைக்குள் விழுந்துவிட்டார். `எப்படியாவது பேசிவிட வேண்டும்' என்று துடித்த ஹர்பஜன், அவரின் நண்பரிடம் `எனக்கு இந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டும்’ எனக் கூறியிருக்கிறார். பின், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 உலகக் கோப்பையை வென்றவுடன் கீதா பாஸ்ராவின் நம்பர் ஹர்பஜனுக்குக் கிடைத்தது. `நான் ஹர்பஜன் சிங், உங்ககூட ஒரு டீ இல்ல காபி குடிக்கலாம்'னு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். மூன்று நாள்கள் ஆகியும் கீதா எந்தவித ரெஸ்பான்ஸும் செய்யவில்லை. தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த ஹர்பஜன் சிங்கிற்கு கீதாவிடம் இருந்து ஒரு மெசேஜ்... `டி-20 உலகக் கோப்பை ஜெயிச்சதுக்கு என்னோட வாழ்த்துகள், இந்திய மண்ணுக்குப் பெருமை சேர்த்து எங்களுக்குப் பெருமை தேடிக் கொடுத்துட்டீங்க' என ரிப்ளை செய்தார். அங்கிருந்துதான் இருவருக்குமிடையே காதல் மலர, நீண்ட நாள் காதலுக்குப் பின் 29, அக்டோபர் 2015 அன்று இவர்களுடைய திருமணம் முடிந்தது.

யுவராஜ் சிங் - ஹேசல் கீச் :

யுவராஜ் - ஹேசல் கீச்

ஹேசல் கீச் `பில்லா' படத்தின் `செய் ஏதாவது செய்' பாடலின் மூலம் நமக்கு பரிச்சயம். மீடியாவுக்கு பயந்து வெளியில் சொல்லாமல் சில ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தார்கள். இவர்கள் காதலித்து வந்தது ஹர்பஜனோடு சேர்த்து யுவராஜின் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும். ஹர்பஜன் `சீக்கிரம் உன் காதல் விஷயத்தை சொல்லிரு' என்று மறைமுகமாக யுவராஜுக்கு ட்வீட் போட்டுள்ளார். அதைத் தொடர்ந்து தனக்கு நெருங்கியவர்களை மட்டும் அழைத்து ஹர்பஜனுக்கு திருமணம் முடிந்த அடுத்த மாதமே தனது நிச்சயதார்த்தையும் முடித்துக்கொண்டார். அதிகாரப்பூர்வமாக இருவரும் தங்களது திருமண செய்தியை ட்விட்டரில் பதிவிட்டுத் தங்களது அன்பை பகிர்ந்துகொண்டனர். யுவாராஜின் வீட்டிலும் ஹேசலை மருமகளாக முழு மனதுடன் ஏற்றுக்கொண்டார்கள். 

ஆயிஷா முகர்ஜி - தவான் :


தவான் - ஆயிஷா

ஆயிஷா முகர்ஜி இந்தியாவில் பிறந்த கொஞ்ச நாளிலேயே தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்டார். எல்லா விளையாட்டுகளின் மீதும் மிகுந்த ஈர்ப்புடையவர் ஆயிஷா. கிக் பாக்ஸிங் பயிற்சியும் பெற்றவர். என்னதான் ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகியிருந்தாலும் இந்திய உணவுகள்தான் இவருக்குப் பிடிக்குமாம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டார். பின், சில ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். ஃபேஸ்புக் மூலம் ஆயிஷாவை தவானுக்கு அறிமுகம் செய்திருக்கிறார் ஹர்பஜன். ஆயிஷாவின் போஸ்டுகள் தவானுக்குப் பிடித்துப்போக, அவருக்கு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பியிருக்கிறார். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். நட்பாக ஆரம்பித்த பழக்கம் காதலாகி மாறி, கல்யாணத்தில் வந்து நின்றது. 2012-ல் இருவரும் திருமணம் செய்துகொண்டர். 

தோனி - சாக்‌ஷி :

தோனி - சாக்‌ஷி

தோனியின் காதல் கதையை அவரது கதையை மையமாக வெளிவந்த `MS Dhoni : The untold story' படத்தை வைத்து நாம் ஒருவிதமாகக் கணித்திருப்போம். ஆனால், தோனி - சாக்‌ஷியின் காதல் கதை அதிலிருந்து சற்று மாறுபட்டது. தோனியும் சாக்‌ஷியும் பால்ய நண்பர்கள். தோனியின் தந்தையும், சாக்‌ஷியின் தந்தையும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்கள். இரண்டு குடும்பங்களும் சுமுகமான உறவைத் தக்கவைத்துக்கொண்டனர். அதன்படி இருவரும் ராஞ்சியில் ஒரே பள்ளியில் சேர்ந்தனர். பின் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சாக்‌ஷியின் குடும்பம் டேராடூனுக்குப் பயணப்பட்டது. தொலைவு இவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்தியது. இருவரும் தங்களது இலக்கை நோக்கி ஓடத்தொடங்கினர். பின் இருவரும் எதிர்பாராதவிதமாக ஹோட்டலில் பார்த்துக்கொள்ளும் தருணம்தான் படத்தில் காட்சியாக இடம்பெற்றிருக்கும். அதன் பின் லவ்வுதான், காதல்தான் கல்யாணம்தான். 

ரித்திகா சஜ்தேஹ் - ரோகித் ஷர்மா :

ரோகித் - ரித்திகா

ரோகித் ஷர்மாவின் மேனேஜராக ரித்திகா சஜ்தேஹ் அவருக்கு அறிமுகமானார். விளையாடும் இடங்கள், ஊர்கள் என எல்லா இடங்களுக்குமே இருவரும் சேர்ந்துதான் பயணிப்பார்கள். வேலையாக ஆரம்பித்த இவர்களது உறவு நட்பாக மாறத் தொடங்கியது. பின், நெருங்கிய நண்பர்களாகப் பழகத் தொடங்கினர். இருவருக்குள்ளும் காதலை உணர்ந்த இவர்கள், அதை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளவில்லை. ஆறு வருடங்கள் கழித்து ஒரு வழியாக தன் காதலை சொல்லிவிடலாம் என முடிவு செய்த ரோகித், தான் விளையாடிய முதல் மைதானத்துக்கு ரித்திகாவை அழைத்துச் சென்றார். பின், முட்டிக்கால் போட்டு பாக்கெட்டில் இருந்த மோதிரத்தை எடுத்து அவர் முன் நீட்டி `Will you marry me' என ப்ரபோஸ் செய்தார். பின் இருவரும் டிசம்பர் 2015-ல் திருமணம் செய்துகொண்டனர். 

சுரேஷ் ரெய்னா - ப்ரியங்கா சௌத்ரி :

ரெய்னா- ப்ரியங்கா

இவர்களது காதல் கதையை கிரிக்கெட்டின் பாணியில் `மேட்ச் ஃபிக்ஸிங்' என செல்லமாகக் கலாய்ப்பார்கள். சுரேஷ் ரெய்னாவும், ப்ரியங்கா சௌத்ரியும் சிறு வயது நண்பர்கள். ப்ரியங்கா குடும்பத்தினரின் பஞ்சாப் பயணம் இருவரின் தொடர்பையும் துண்டித்துவிட்டது. ஆனால், ப்ரியங்காவின் குடும்பமும் ரெய்னாவின் குடும்பமும் தங்களது உறவை தொடர்ந்துகொண்டுதான் இருந்தார்கள். யதேச்சையாக ஒருநாள் இருவரும் டெல்லி ஏர்போர்ட்டில் சந்தித்துக்கொண்டனர். பின் மீண்டும் இருவரும் பழகத் தொடங்கினர். ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை நடந்துகொண்டிருந்த நேரம், நான்கு மாதங்கள் கழித்து அம்மாவிடமிருந்து சுரேஷ் ரெய்னாவுக்கு போன் வந்தது. `உனக்கும், உன் பால்ய தோழி ப்ரியங்காவுக்கும் திருமணம்' என்று கூறி போனை கட் செய்துவிட்டாராம். அதற்குப் பின் எனது திருமணம் `மேட்ச்ஃபிக்ஸிங்' ஆகிவிட்டது என ட்விட்டரில் நக்கலாக பதிவிட்டிருந்தார். 

விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா :

கோலி - அனுஷ்கா

கோலி - அனுஷ்கா சந்திப்பை, 2013-ல் நடந்த டி.வி விளம்பர நிகழ்வு ஏற்படுத்திக் கொடுத்தது. நல்ல நண்பர்களாக இருவரும் பழகத் தொடங்கினர். தங்களுக்குள் இருக்கும் காதலை உணர்ந்து உணர்வுகளுக்கு தைரியம் கொடுத்தாலும், அதை வெளிப்படையாகச் சொல்ல மனம் மறுத்தது. காதலை வெளிக்காட்டுவதற்கான தருணங்கள் கிடைத்தபோதும் அதை வெளிக்காட்டாமலேயே சில தவிப்புகளுடன் நாள்களைக் கடத்தி வந்தனர். அனுஷ்கா பிறந்தநாளுக்கு கோலி சர்ப்ரைஸ் கொடுக்க, கோலி பிறந்தநாளுக்கு இவர் சர்ப்ரைஸ் கொடுக்க என்றே போய்க்கொண்டிருக்கும் நேரத்தில், 2014-ல் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தை இந்திய அணி  வென்றதோடு கோலியும் தன் காதலில் வென்றார். அதற்குப் பின் வெளிப்படையாக அனுஷ்காவுடன் இருக்கும் ரிலிஷேன்ஷிப் குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டார். அதற்குப் பின் எக்கச்சக்க சர்ச்சை, இருவருக்குமான கருத்து வேறுபாடுகள், இந்திய அணியின் தொடர் சரிவு என இருவர் சம்பந்தப்பட்ட விஷயம் எல்லாமே மீடியாவுக்கு செம தீனி. இருப்பினும் ஒருவருக்கொருவர் தங்களை விட்டுக்கொடுக்காமல் தங்கள் காதலை வெளிப்படுத்திய விராத் கோலி - அனுஷ்கா, `விருஷ்கா' என்றானார்கள்! 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

காதலாகி கசிந்துருகி: இன்று காதலர் தினம்

இன்று பெப்­ர­வரி 14 ஆம் திகதி காதலர் தின­மாக (வலன்டைன் தினம்) கொண்­டா­டப்­ப­டு­கி­றது.

Valentines-day-happy-valentine-day.jpg
மனித இனத்­துக்கு களங்­க­மில்­லாத, சுய­ந­ல­மில்­லாத பர­வ­சத்தைத் தரக்­கூடி­யது காதல். ‘நமது ஆழ்­ம­னதை மற்­றொ­ரு­வ­ருக்குத் தரும்­போது பர­வ­ச­மான உணர்வு நம்மை வியாபிக்­கி­றது. அந்த உணர்வின் வெளிப்­பா­டுதான் காதல்’ என்­கி­றார்கள் அறி­ஞர்கள். அது ஏற்­ப­டுத்தும் மயக்கம் அற்­பு­த­மா­னது. உல­கத்­தி­லி­ருந்து விடு­பட வைத்து இரு­வ­ருக்கும் இடையே சுக­மான உணர்வை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது காதல்.

காதலர் தினம் எவ்­வாறு ஆரம்­பித்­தது என்­பது தொடர்பில் பல கதைகள் கூறப்­ப­டு­கின்­றன. புரா­தன ரோமில் ரோமா­னி­யர்கள் லூப்­பர்­கா­லியா என்ற திரு­வி­ழாவை கொண்­டாடி வந்­தனர்.

பெப்­ர­வரி 13 முதல் 15 வரை அனு­ஷ்டிக்­கப்­படும் லூப்­பர்­கா­லியா இன­வி­ருத்­தி­யோடு தொடர்­பு­டைய பழங்­கால விழா­வாகும். லூப்­பர்­கா­லியா ரோம் நகர உள்ளூர் மக்­க­ளுக்­கான ஒரு திரு­விழா. மிகவும் பொது­வான திரு­வி­ழா­வான ஜூனோ ஃபெப்­ருவா, அதா­வது “தூய்­மை­யாக்கும் ஜூனோ” பெப்­ர­வரி 13, 14 ஆகிய நாட்­களில் கொண்­டா­டப்­பட்­டது. இதுவே காதலர் தின­மாக மாறி­யது என சிலர் கூறு­கின்­றனர்.

Valentines-Day-1.jpgபெப்­ர­வரி 14ஆம் திகதி இங்­கி­லாந்தின் மத்­திய பிராந்­தி­யத்தில் பற­வைகள் மூலம் ஜோடி­களைத் தேர்வு செய்த ஆங்­கி­லேய பழ­மை­வா­தி­களின் இந்த தினமே காதலர் தின­மாக கொண்­டா­டு­வ­தாக வேறு சிலர் கூறு­கின்­றனர்.

எனினும், ரோமா­னிய அர­சனின் ஆட்சிக் காலத்­தில்தான் காதலர் தின கொண்­டாட்டம் ஆரம்­ப­மா­கி­ய­மைக்­கான சான்­றுகள் உள்­ள­தாக வர­லாற்று ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

கி.பி.207 ஆம் ஆண்டில் ரோம் நாட்டை ஆண்ட இரண்டாம் கிளா­டியஸ் மன்னன், தனது படை­வீ­ரர்­க­ளுக்கு முட்டாள் தன­மாக உத்­த­ரவு பிறப்­பிப்­பானாம்.

இந்த அர­சனின் நட­வ­டிக்­கையால் படையில் சேர பலர் தயங்­கினர். போர் வீரர்கள் பிரம்­மச்­சா­ரி­க­ளாக இருந் தால் சல­னங்கள் எதுவும் இல்­லாமல் முழு ஆவே­சத்­துடன் போர் புரி­வார்கள் என அவர் கரு­தினான்.

திடீ­ரென ஒருநாள் ‘ரோமா­புரி நாட்டில் இனி எவ­ருமே திரு­மணம் செய்து கொள்ளக்­கூ­டாது, படையில் சேரும் இளை­ஞர்­க­ளுக்கு ‘திரு­மணம் ஆகி­யிருக்கக் கூடாது காத­லிக்­கக்­கூ­டாது என சட்­ட­மி­யற்­றினான்.

இதை மீறு­ப­வர்கள் கைது செய்­யப்­பட்டு இருட்டுச் சிறையில் அடைக்­கப்­ப­டு­வார்கள். பின்னர் பொது இடத்தில் அவர்கள் கல்லால் அடித்து தலை துண்­டித்து கொல்­லப்­ப­டு­வார்கள்’’ என உத்­த­ர­வி­டு­மாறு தனது அமைச்­சருக்கு அறி­வித்தான்.

திரு­ம­ண­மா­ன­வர்கள் மனை­வியை பிரிந்து வரத் தயங்­கு­கி­றார்கள். காதலிக்கும் இளை­ஞர்கள் காதலியை பிரிந்து வர தயங்­கு­கின்­றனர். இவை இரண்டும் இல்­லா­விட்டால் படையில் சேர்­வார்கள் என்று இரண்டாம் கிளா­டியஸ் மன்னன் எண்ணினான். மன்­னனின் அறி­விப்பைக் கேட்ட ரோமா­னி­யர்கள் அதிர்ச்­சி­யடைந்­தனர்.

இந்­நி­லையில், பாதி­ரியார் வலன்டைன் அர­சனின் இந்த அறி­விப்பை மீறி காதல் ஜோடி­க­ளுக்கு இர­க­சி­ய­மாகத் திரு­மணங்­களை நடத்தி வைத்தார். இதை­ய­றிந்த மன்னன் வலன்­டைனை கைது செய்து சிறையில் அடைத்தான். மர­ண­தண்­ட­னையை நிறை­வேற்ற நாளும் நிர்­ண­யிக்­கப்­பட்­டது.

இடைப்­பட்ட காலத்தில் சிறையில் இருந்த பாதி­ரியார் வலன்டைன், அச்­சி­றையின் தலைமைக் காவலர் அஸ்டோ­ரி­யஸின் பார்வை இழந்த மகள் ஜூலி­யாவை குணப்­ப­டுத்­தினார்.

Valentines.jpgஇதை அறிந்த சிறைத் துறைத் தலைவனின் மகளை வீட்டுச் சிறையில் வைத்தான். வலன்­டைனை விடு­விக்க அஸ்­டோ­ரியஸ் முயன்றாள்.

இதை­யெல்லாம் கேள்­விப்­பட்ட மன்­னன் கிளா­டியஸ் கோபம் கொண்டு பாதிரியார் வலன்­டை னின் தலையைச் சீவும்­படி ஆணை­யிட்டான்.

கி.பி.207 பெப்­ர­வரி 14 ஆம் திகதி தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது. அவர் நினை­வாகக் கொண்­டா­டப்­ப­டு­வ­துதான் ‘வலன்டைன்ஸ் டே (Valentine’s Day) எனும் காதலர் தினம்.

காதலர் தினம் குறித்த கட்­டு­ரை­யொன்றில்
அ. செந்­த­மிழ்ச்­செல்வி இவ்­வாறு கூறு­கிறார்: ‘நம் எண்­ணங்­க­ளையும், ஆசை­க­ளையும், கன­வு­க­ளையும், தாபங்­க­ளையும், எதிர்­பார்ப்­பு­க­ளையும் பகிர்ந்­து­கொள்ள ஒரு காதலி அல்­லது காதலன் கிடைத்து ­விட்டால், வாழ்க்கை முழு­மை­யா­கி­விடும்’ என்­கி­றார்கள் உள­வியல் அறி­ஞர்கள்.

வாழ்க்­கையின் அர்த்­தத்தைப் புரிந்து கொண்­ட­வர்­க­ளுக்கே காதலின் சக்தி புரியும். ஒரு­வ­ருக்­கொ­ருவர் உட­மை­யா­வதும், உரிமை கொண்­டா­டு­வதும், ஆளுமை செலுத்­து­வதும் அல்ல காதல்; இரு உள்­ளங்கள் சங்­க­மிக்கும் நிகழ்வு அது.

உண்­மையில், காத­லுக்­காக சுய­ந­லத்­தையும், அகந்­தை­யையும் இழப்­ப­தில் தான் வாழ்க்­கையின் இர­க­சி­யமே அடங்­கி­யி­ருக்­கி­றது. காதலின் ஆச்­ச­ரி­யங்­களில் ஒன்று சர­ணா­கதி. எல்­லா­வற்­றையும் காத­லுக்கு அர்ப்­ப­ணிக்­கும்­போது காத­லர்கள் புதுப்­பி­றவி எடுக்­கி­றார்கள். இதைப் புரிந்­த­வர்கள் புள­காங்­கிதம் அடை­கி­றார்கள். தோற்­ற­வர்கள் சபிக்­கி­றார்கள்.

அதே­வேளை சிலர் இனக்­கி­ளர்ச்­சியை காதல் என உள்­ளர்த்தம் செய்­து­கொள்­கின்­றனர். தமக்கு ‘போய் பிரண்ட்’ ‘கேர்ள் பிரண்ட்’ இல்­லை­யென்றால், நண்­பர்கள் மத்­தியில் சமூக அங்­கீ­காரம் கிடைக்­காதோ என்ற ஏக்­கத்தில் இளையோர் மத்­தியில் “காதல்’’ உரு­வாகி வளர்ந்து வரு­கி­றது. இவ்­வா­றான பல காதல்கள் திரு­மணம் வரை செல்­வ­தில்லை.

திரு­மணம் ஒரு முடிவு அல்ல, ஆரம்பம் என்­கிற நம்­பிக்கை வந்தால் திரு­ம­ணத்­துக்குப் பிறகும் காதலை தொடர முடியும். திரு­ம­ணத்­திற்கு முந்­தைய காதலும், பிந்­தைய காதலும் ஒன்று என்­கிற தவ­றான எண்­ணம்தான் பிரச்சி­னைக்குக் காரணம். தற்­போ­துள்ள பணிச்­சுமை, பொரு­ளா­தார நெருக்­கடி, விட்­டுக்­கொ­டுக்கும் மனப்­பாங்கு இல்­லா­மைதான் காதல் மண­மு­றி­விற்கு அடிப்­படை காரணம்.

Valentine-Day-heart-rose.jpgகணவன், மனை­வி­யான பிறகு தங்­களின் மன அழுத்­தங்­க­ளையும் வெறுப்­பு­க­ளையும் வெளி­யேற்றும் வடி­கா­லாக ஒரு­வ­ரை­யொ­ருவர் பயன்­ப­டுத்­திக்­கொள்­கி­றார்கள். இவ்­வாறு செய்­வது காத­லுக்கு தரும் மரி­யாதை அல்ல.

சுதந்திரமான ‘ரொமான்டிக்’ காதல் வேறு. இல்லறத்தில் புதுப்பிறவி எடுக் கும் காதல் வேறு என்பதைப் புரிந்து கொண்டாலே உங்கள் வாழ்க்கையில் குளிர்ச்சியான தென்றல் வீசும்.

உங்களது இணையை நேசிக்கவும் மதிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். எவ்வளவு நேசம் வைத்துள்ளீர்கள் என்பதை வெளிப்படுத்துங்கள்.

காதலில் வென்றவர்களைவிட தோற்ற வர்கள் அதிகம். கடந்த காலத் தையே நினைத்து பரிதவித்துக் கொண்டு இருந்தால், நிகழ்காலம் கைவிட்டுப் போய் விடும். மாற்றம் என்பது முடிவல்ல, முற்றுப் புள்ளியும் அல்ல புதிய ஆரம்பம் என்று புரிந்துகொள்ள வேண்டும்.”

http://metronews.lk/

  • தொடங்கியவர்

சிவராத்திரியை சிறப்பித்த 108 மணல் சிவலிங்கங்கள்!

 

சிவராத்திரியை சிறப்பித்த 108 மணல் சிவலிங்கங்கள்!


பூரி கடற்கரையில் சிவராத்திரியை முன்னிட்டு 108 சிவலிங்கங்கள் மணலால் உருவாக்கப்பட்டுள்ளது.

சிவராத்திரியை சிறப்பித்த 108 மணல் சிவலிங்கங்கள்!

உலக இந்து மக்கள் அனைவரும் நேற்று சிவராத்திரி தினத்தை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இந்தியாவிலும் நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் சிவராத்திரி தினம் கொண்டாடப்பட்டுள்ளது.

சிவராத்திரியை சிறப்பித்த 108 மணல் சிவலிங்கங்கள்!

இந்த நிலையில் உலக அமைதி வேண்டி ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் 108 சிவலிங்கத்தை வடிவமைத்துள்ளார். இவர் வடிவமைத்த சிவலிங்கங்களில் 5 அடி உயரம் உள்ள சிவலிங்கத்தை சுற்றி ஏனைய சிவலிங்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ் நிகழ்வின் மூலம் மக்களுக்கு உலக அமைதிக்கான விழிப்புணர்வு மேற்கொண்டுள்ளதாக சிற்ப கலைஞன் சுதர்சன் தெரிவித்துள்ளார்.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

ஒலிம்பிக் தடகள வீரர்கள் ஓய்வு நேரத்தில் செய்யும் வினோத சேட்டைகள்

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

குண்டு போடும் வண்டு கற்பனையல்ல... நிஜத்திலும் உண்டு! #BombardierBeetle

 
 

ஒவ்வோர் உயிரினமும் தன்னைக் காத்துக்கொள்ளவும், இன்னோர் உயிரை இரையாக்கிக் கொள்ளவும் பல உத்திகளைக் கையாளுகின்றன. சில உயிரினங்கள் மட்டுமே தனித்துவமான தற்காப்புக் கலையைக் கொண்டிருக்கின்றன. முள்ளம்பன்றிக்கு முற்கள், சிலந்திக்கு வலை, பாம்பிற்கு விஷம் என ஒவ்வோர் உயிரும் ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றன. அப்படி ஒரு டெரர் ஆயுதத்தைக் கொண்ட உயிரினம் “ஜெனோஷிஷ்” பாம்பார்டியர் பீட்டில். குண்டு வீசும் வண்டு என அழைக்கப்படுகிறது. (jessoensis bombardier beetle ) 

 

வாயு வெளியேற்றும் பூச்சி  Beetle

 

இந்த வண்டைத் தொந்தரவு செய்ய நினைத்தால் உடலின் பின் பகுதியில் இருக்கும் தன்னுடைய ஆயுதக் கிடங்கிலிருந்து சூடான திரவத்தை எதிரியை நோக்கிப் பீய்ச்சி அடிக்கிறது. வெளியேறுகிற திரவம் 212 டிகிரி சூடாக இருக்கும். வண்டின் உடலில் இருக்கிற ஒரு வகைச் செல்கள் ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் ஹைட்ரோகுவினோனை இரண்டு திரவங்களையும் உருவாக்குகின்றன. இரண்டு திரவங்களும் உடலின் ஒருபகுதியில் தேக்கி வைக்கப்படுகின்றன. தேக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து வேண்டிய அளவுக்கான திரவங்களை வண்டு தன்னுடைய எக்ஸ்ப்ளோசன் சேம்பரில் சேர்த்து வைக்கிறது. சேம்பரில் ஏற்படுகிற வெப்ப அழுத்தத்தில் வாயுவாக மாறுகிற திரவம் 212 டிகிரி வெப்பத்திற்கு வருகிறது. அப்படியிருக்கிற வாயுவை ஆபத்தான நேரங்களில் பாதுகாப்பிற்காக  வெளியேற்றுகிறது. எந்தக் கோணத்திலும் வெளியேற்றும் அளவிற்கு அதன் உடலமைப்பு அமைந்திருக்கிறது. ஹைட்ரஜன் பெராக்சைடு பல தொழில் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. விமானங்களின் உந்து சக்திக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

பாம்பர்ட் வண்டு


உலகில் குண்டு வீசுகிற வண்டு இனங்கள் 649 உள்ளன. அவற்றில் சில வண்டு இனங்கள் மட்டுமே தற்காப்பு உத்திகளைப் பயன்படுத்துகின்றன. வண்டு பற்றிய புதிய ஆய்வில் உள்ள ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் பூச்சிகளைச் சாப்பிடும் டாட்ஸுக்கு ( தவளை) என்ன நடக்கிறது என்பதை அறிய நேரடிச் சோதனை முயற்சியை மேற்கொள்ள முடிவு செய்கிறார்கள். அதற்காக 37 “ஜெனோஷிஷ்” குண்டு வீசும் வண்டுகளை ஆராய்ச்சி நிலையத்திற்குப் பக்கத்தில் இருக்கிற வனப்பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டன. சோதனைக்குப் பயன்படுத்தப்படும் 37 டோட்ஸ் வகைத் தவளைகளை ஜப்பானின் வாகாயமா வன ஆராய்ச்சி நிலையம் மற்றும் கியோட்டோ பல்கலைக்கழக, கள அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலிருந்தும் கொண்டுவரப்பட்டன. 

பாம்பார்டியர்

ஆராய்ச்சியின் படி ஒரு தவளைக்கு ஒரு வண்டு என ஆராய்ச்சியாளர்கள் உணவாகக் கொடுக்கிறார்கள். டோட்ஸ் தவளைகள் வண்டுகளைப் பார்த்ததும் பிடித்துச் சாப்பிட்டு விடுகின்றன. வண்டுகளை உணவாகக் கொண்ட தவளைகளின் நடவடிக்கையில் மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கிறது. வண்டுகளை உட்கொண்ட 2 மணி நேரத்துக்குள் தவளைகள் உட்கொண்ட வண்டுகளை ஒவ்வொன்றாக வெளியே துப்புகின்றன. வயிற்றுக்குள் போகிற வண்டுகள் ரசாயன வாயுவை வெடிக்கச் செய்கின்றன. 212 டிகிரி சூடாக இருக்கும் திரவம் தவளையின் அடிவயிற்றில் பரவ ஆரம்பிக்கிறது. மீண்டும் மீண்டும் திரவத்தை வண்டுகள் வெளியேற்றுவதால் தவளை திக்கு முக்காடுகிறது. வேறு வழியின்றித் தவளை வண்டுகளை வெளியே துப்புகின்றன. தவளைகளின் செரிமான மண்டலத்தால் கூட வண்டுகளை எதுவும் செய்ய முடியவில்லை. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் 88 நிமிடங்களுக்கு மேலாகத் தவளையின் வயிற்றிலிருந்த வண்டு உயிரோடு வெளியே வந்து விழுகிறது. வண்டை வெளியே துப்பும் பொழுது தவளையின் உடல் மொழி மிகப் பெரிய துயரத்தில் இருப்பதாகக் காட்டுகிறது. வெளியே வந்த 16 வண்டுகள் உயிரோடும் நடமாடும் திறனுடனும் இருக்கின்றன. அவற்றில் 15 வண்டுகள் இரண்டு வாரங்களுக்கு மேலாக உயிர் வாழும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட தவளைகள் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் இருப்பதால் ஆய்வுக்குப் பிறகு ஆய்வகப் பகுதியின் அருகில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டன.  

வண்டு தன்னுடைய உடலிலுள்ள மொத்த வாயுக்களையும் வெளியேற்றும் பட்சத்தில் தவளை உயிரிழக்க நேரிடலாம். ஏனெனில் வெளியேறும் வாயு அவ்வளவு விஷத்தன்மை கொண்டது. இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் ஒரு வகையில் பிரமிப்பாகவே இருக்கிறது.  

 

 

 

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

யார் இந்த ‘கியூபிட்’? கிரேக்க மன்மத கடவுளான கியூபிட்டின் காதல் கதை உங்களுக்குத் தெரியுமா!

 

 
kjk

 

நமக்கு ஒருவர் மேல் காதல் வருவதற்கு இந்த ‘கியூபிட்’ விடும் காதல் அம்புதான் காரணம்னு பல கதைகளை கேட்டு இருப்போம். அதனாலேயே எப்போதும் கையில் வில்லும் அம்புமாக, ரெக்கையுடன் பறந்து கொண்டிருக்கும் இந்த கியூபிட்டின் உருவத்தைக் காதலின் ஒரு முக்கிய சின்னமாகவே பலரும் பார்க்கிறோம். 

யார் இந்த கியூபிட்? காதலுக்கும் இவனுக்கும் என்ன தொடர்பு? அப்படினுலாம் என்னைக்கினா யோசித்து இருக்கிங்களா? எப்பவும் மத்தவங்கள காதல் வலையில் விழ வைக்கிற இந்த கியூபிட் பையனுக்கும் ஒரு அழகான காதல் கதை இருந்து இருக்குங்க, அது என்னனு பார்ப்போம் வாங்க.

கிரேக்க கடவுளான இந்த கியூபிட் (Cupid) வேற யாரும் இல்லைங்க நம்ம ஊரு பாஷைல சொல்லனும்னா மன்மதன். யார்? எப்போ? எங்கே? யாரை? காதலிக்கனும்னு முடிவு பன்றது இவர்தான். கிரேக்கர்களின் புராண இதிகாசங்களின் படி பார்த்தால் இவர் தான் காதல், ஆசை, காமம் மற்றும் அன்பிற்கான கடவுள். அழகின் கடவுளான வீனஸ் அவர்களின் இரு மகன்களுள் ஒருவர். இப்படி எல்லாரையும் காதல் வசப்பட வைக்கிற இந்த கியூபிட்டுக்கும் ஒரு அழகான காதல் கதை இருந்திருப்பதா கிரேக்க வரலாறு சொல்லுகிறது. இந்தக் காதலர் தினத்துக்குக் காதல் கடவுளுடைய காதல் கதையை தெரிஞ்சிப்போம்!

ஆபத்தில் தள்ளிய அழகு:

never_after_by_dark_spider.jpg

முன்னொரு காலத்தில் ரோமின் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆண்டு வந்த ராஜாவுக்கு 3 மிகவும் அழகான மகள்கள், அவர்களில் பேரழகியாக இருந்தவள் சைக் (Psyche). சைக் என்பதற்குத் தமிழில் ஆன்மா எனப் பொருள். இவளை அனைவரும் அழகின் கடவுளான வீனஸின் மறு உருவமாகவே பார்த்தனர். காலப் போக்கில் பலரும் வீனஸை மறந்து வாழும் கடவுளாகவே சைக்கை வழிப்பட்டனர். இதனால் ஆத்திரமும், பொறாமையும் அடைந்த வீனஸ், அவள் அழகைக் கண்டு வியக்கும் எவருக்கும் அவள் மீது காதல் வராதபடி செய்து விடுகிறார். தனது மற்ற இரு மகள்களுக்கும் திருமணம் ஆன பிறகும் மூன்றாவது மகளுக்கு மட்டும் திருமண வரன் ஏதும் வராததால் கவலையடைந்த சைக்கின் தந்தை ஒளியின் கடவுளான புளூடோவிடம் சென்று வேண்ட, “உன் மகளை மலையின் உச்சியில் தனியாக விட்டு விட்டு வா” என்று கடவுள் உத்தரவிட்டதைக் கேட்டு சைக்கின் தந்தையும் வலுக்கட்டாயமாக அவளை அழைத்துச் சென்று மலையின் விளிம்பில் நிக்க வைத்து விட்டு வருகிறார்.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன் படுத்த நினைத்த வினஸ் தனது மகன் கியூபிட்டை அழைத்து இந்த உலகிலேயே மிகவும் கொடூரமான, பார்க்கவே பயங்கரமாக இருக்கும் பாம்பு உடல் கொண்ட ஒரு அரக்கனுக்கு இவள் மேல் காதல் வரும்படி செய்துவிடு என்று உத்தரவிடுகிறார். தாயின் கட்டளையை ஏற்று கியூபிட்டும் சைக் தனியாக நின்று கொண்டிருக்கும் மலையின் விளிம்பிற்குச் செல்கிறான். திடீரென்று மேற்கில் இருந்து வீசிய தென்றல் சைக்கை அப்படியே காற்றில் தூக்கிச் செல்கிறது. காற்றில் மிதந்தவாறே சில தூரம் பயணித்த பிறகு ஒரு பிரம்மாண்டமான கோட்டையின் வாசலில் அவளைக் கீழே இறக்குகிறது. அந்தக் கோட்டையை பார்த்து வியந்தபடியே நின்று கொண்டிருந்த சைக்கிற்கு ஒரு அசரீரி கேட்கிறது, “இனி இதுதான் உன் வீடு, உள்ளே செல்” என்று அந்தக் குரல் சொல்லியது.

மர்ம காதலன்:

cvbdf.jpg

அந்தக் கோட்டை முழுவதும் விலை மதிக்க முடியாத போருட்களால் உருவாகி இருப்பதைக் கண்டு சைக் வியந்து போகிறாள். நடக்கும் தரை முழுவதும் தங்கத்தால் இழைக்கப்பட்டு, சுவர்கள் எல்லாம் வைரம், வைடூரியம், ரூபி, எமரால்ட் போன்ற விலையுர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. அப்போது ஒரு அறை அவள் கண்ணில் படுகிறது, மீண்டும் அசரீரி ஒலிக்கிறது, உள்ளே செல் என்று. அதைக் கேட்டு சைக்கும் உள்ளே சென்றால் அறை முழுவதும் இருள் சூழ்ந்து துளி வெளிச்சம் கூட இல்லாமல் இருந்தது. அந்த இருளில் யாரோ தன்னை தொடுவதை சைக் உணர்கிறாள். அந்த உணர்வை வைத்தே தன்னை தொடுவது ஒரு ஆண் என்பது அவளுக்குத் தெரிகிறது, அந்த ஆண் அவளிடம் “நான் உன்னை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறேன், உனக்கு எந்தக் குறையும் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாகப் பார்த்து கோள்வேன் உனக்கு என் மேல் நம்பிக்கை இருந்தால் நான் சொல்வதை நம்பு, அதே சமயம் என்றுமே நான் யார் என்பதை நீ தெரிந்து கொள்ள முயலக் கூடாது, மேலும் என் முகத்தைப் பார்க்கவும் நீ என்றுமே ஆசைப் படக்கூடாது” என்று மிகவும் கவர்ச்சிகரமான அந்தக் குரலுக்கு சைக்கும் சற்றும் யோசிக்காமல் ஒப்புக் கொள்கிறாள். 

kdja.jpg

தினமும் இரவில் மட்டும் சைக்குடன் நேரத்தை அந்த இருட்டு அறையிலேயே கழித்துவிட்டு காலைச் சூரியன் உதயமாகுவதற்கு முன்பே ஜன்னலின் வழியாக வெளியே செல்வதே சைக்கின் காதலனது வழக்கம். இப்படியே பல நாட்கள் கழிகிறது பின்பு ஒரு நாள் சைக் கர்ப்பமாகிறாள், தனது கணவன் யார் என்றே தெரியாத நிலையில் எப்படி ஒரு குழந்தைக்கு தாய் ஆவது என்ற கவலையில் அவளை அந்தக் கர்ப்ப செய்தி ஆழ்த்துகிறது. சைக்கின் இந்தப் பிரம்மாண்டமான வாழ்க்கையைப் பார்த்து பொறாமை அடைந்த அவள் சகோதரிகள் இருவரும் ஏற்கனவே குழப்பத்தில் உள்ள சைக்கை மேலும் பயமுறுத்துகிறார்கள். “ஒரு வேளை நீ யாருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாயோ அவர் மிகவும் பயங்கரமான ஒரு பாம்பாக இருந்தால் என்ன செய்வாய் நீ?” என்று அவளை தங்களது பேச்சால் தூண்டி தனது கணவனின் பேச்சை மீறிச் செயல்பட தூண்டுகிறார்கள்.

சத்தியத்தை மீறியதால் கணவனைப் பிரியும் சைக்:

psyche__s_discovery_by_nanashi.jpg

தனது சகோதரிகளின் பேச்சைக் கேட்ட சைக்கும் அடுத்த நாள் விடிவதற்கு முன் கையில் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு ஒரு வேளை அவர்கள் சொன்னது போல் கொடூரமான ஒரு அரக்கனாக இருந்தால் என்ன செய்வது என்கிற பயத்தோடு அறையினுள் நுழைகிறாள். விளக்கை உயர்த்தி தனது கணவனின் முகத்தை வெளிச்சத்தில் பார்த்து உறைகிறாள். இந்த உலகிலேயே மிகவும் அழகான ஆண் என்று சொல்லும் அளவிற்கு கியூபிட் படுத்திருப்பதை பார்க்கிறாள். அந்த மகிழ்ச்சியில் கை நழுவ, அந்த விளக்கில் இருந்த எண்ணெய் கியூபிட்டின் மேல் பட்டு காயத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தூக்கத்தில் இருந்து விழித்த கியூபிட் “நீ என் வார்த்தையை மீறிவிட்டாய், இனி என்னால் உன்னுடன் வாழ முடியாது” என்று கோவத்துடன் ஜன்னல் வழியாகப் பறந்து செல்கிறான். 

தனது தாயின் பேச்சைக் கேட்டு சைக்கிற்கு ஒரு அரக்கன் மீது காதல் வரச் செய்ய சென்ற கியூபிட் அவளது அழகில் மயங்கி அந்த அம்பில் தன்னை தானே குத்தி சைக்கின் மீது காதல் வயப்படுகிறான்.

gfhrsg.jpg

தனது கணவனிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் அவருடன் சேர்ந்து விட வேண்டும் என்ற முடிவு எடுத்து சைக், கியூபிட்டை தேடி செல்கிறாள். வழியில் கியூபிட்டின் தாய் அவளைத் தடுத்து “உனக்கு என் மகனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் நான் வைக்கும் சில சோதனைகளில் நீ தேர்ச்சி பெற வேண்டும்” என்று நிபந்தனை போடுகிறார். அதற்கு சைக்கும் ஒப்புக் கொள்கிறாள்.

காதலை நிரூபிக்க 3 பரீட்சைகள்:

முதலாவதாக ஒரு பல வகையான விதைகள் ஒன்றாகக் கலந்து மலை போல் உயர்ந்திருக்கும் ஒரு குவியலை காட்டி இன்று இரவுக்குள் இதில் இருக்கும் ஐந்து வகையான விதைகளையும் தனி தனியே பிரிக்க வேண்டும் என்று சொல்கிறார், சற்றும் சாத்தியம் இல்லாத அந்த முயற்சியில் சைக் படும் கஷ்டத்தைப் பார்த்த ஒரு எறும்பு கூட்டம் அதை அவளுக்குப் பிரித்து தருகிறது. இதனால் முதல் பரீட்சையில் சைக் வெற்றி பெறுகிறாள். 

fdgsff1.jpg

அடுத்ததாக மிகவும் முரட்டுத் தனமான தங்க ரோமங்களை உடைய ஆட்டின் உடலில் இருந்து அந்தத் தங்கத்தை எடுத்து வருமாறு சொல்கிறார். அங்கும் ஆற்றின் கடவுள் அவளுக்கு உதவி செய்து ஆட்டின் தங்க ரோமங்களை அவளுக்குத் தருகிறார், இதனால் இரண்டாவது பரீட்சையிலும் சைக் தேருகிறாள்.

vbvds.jpg

இறுதியாக மரண உலகம் என்று சொல்லப்படும் பாதாளத்திற்குச் சென்று இறப்பின் ராணியிடமிருந்து சிறிது அழகை ஒரு பெட்டியில் வாங்கி வர வேண்டும் என்று வீனஸ் சொல்கிறார். எப்படி அங்குச் செல்வது என்று சைக் தவித்து நிற்கும் நிலையில் மீண்டும் அசரீரி ஒலிக்கிறது, சில கேக் துண்டுகளையும், வெள்ளி நாணயங்களையும் எடுத்துக் கொண்டு இந்தத் திசையில் செல் என்கிறது. அதன்படி சைக்கும் செல்ல மரண உலகமான பாதாள உலகத்தின் நுழைவாயிலைப் பாதுகாக்கும் மூன்று தலை நாய்களுக்கு கேக் துண்டை கொடுத்து அதைக் கடந்து உள்ளே செல்கிறாள். பின்னர் அங்கிருக்கும் ஆற்றைக் கடக்க படகோட்டியிடம் வெள்ளி நாணயங்களைக் கொடுத்து மரணத்தின் ராணியிடமிருந்து அழகைப் பெட்டிக்குள் வைத்து மிகவும் பத்திரமாக கொண்டு வருகிறாள்.

jkhjk.jpg

முடிவில்லா உறக்கம்:

வினஸின் கோட்டை அருகே வந்த சைக் அந்தப் பெட்டிக்குள் இருக்கும் அழகைத் தானும் கொஞ்சம் எடுத்துக் கொள்வோம் என்கிற ஆசையோடு பெட்டியை திறக்கிறாள், ஆனால் அந்தப் பெட்டிக்குள் முடிவில்லா தூக்கம் மட்டுமே இருக்கிறது, அதனால் மயங்கி விழுந்த சைக் ஆழ்ந்த உறக்கம் செல்கிறாள். அந்த நேரத்தில் காயங்கள் குணமடைந்து தான் செய்தது தவறு என்பதை உணர்ந்த கியூபிட் மீண்டும் தனது மனைவியான சைக்குடன் சேர்ந்து வாழ முடிவு செய்து அங்கு வந்த கியூபிட் கர்ப்பவதியான தனது மனைவி மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். பின்னர் கடவுள்களின் அமரத்துவத்திற்குக் காரணமான அமிழ்தத்தை சைக்கிற்கு கொடுத்து அவளைத் தூக்கத்தில் இருந்து மீட்கிறான். பின்னர் அனைத்துக் கடவுள்களின் ஆசியுடன் இவர்கள் இருவரது திருமணம் மிகப் பிரம்மாண்டமாக நடக்கிறது.

jklhuiyuh.jpg

இவர்கள் இருவருக்கும் அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது, அதற்கு ‘பிளெஷர்’ (Pleasure)  எனப் பெயரிடுகிறார்கள். கியூபிட் அன்பு மற்றும் ஆசையின் வடிவமாக, சைக் ஆன்மாவின் வடிவமாக, இவர்களின் மகள் பிளேஷர் அதனால் கிடைக்கும் இன்பத்தின் வடிவமாகப் பார்க்கப்பட்டு, இந்த மூன்றும் சேர்ந்ததே காதலாகி உலகில் உள்ள அனைவரது காதல் வாழ்க்கைக்கும் காரணமாக அமைந்துள்ளது.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

2013 : ரஷ்­யாவில் விண்கல் வெடித்­ததால் 1500 பேர் காயம்

வரலாற்றில் இன்று….

பெப்ரவரி – 15

 

கி.மு 399 : கிரேக்க தத்­து­வ­ஞானி சோக்­கி­ரட்­டீ­ஸுக்கு மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

590 : பார­சீ­கத்தின் மன்­ன­னாக இரண்டாம் கொஸ்­ராவு முடி சூடினார்.

1637 : ரோம் பேர­ரசின் மன்­ன­ராக மூன்றாம் பேர்­டினண்ட் முடி சூடினார்.

varalaru-15-02-2016-copy.jpg1898 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் கடற்­படைக் கப்பல் யூ.எஸ்.எஸ். மெய்ன், கியூ­பாவில் ஹவானா துறை­மு­கத்தில் வெடித்து மூழ்­கி­யதில் 260 பேருக்கு மேல் கொல்­லப்­பட்­டனர். இந்­நி­கழ்­வை­ய­டுத்து ஸ்பெயி­னுக்கு எதி­ராக அமெ­ரிக்கா போர்ப் பிர­க­டனம் செய்­தது.

1942 : இரண்டாம் உலகப் போர்: சிங்­கப்பூர் ஜப்­பா­னிடம் வீழ்ந்­தது. இந்­திய, ஐக்­கிய இராச்­சியம் மற்றும் அவுஸ்­தி­ரே­லியா நாடு­களைச் சேர்ந்த சுமார் 80,000 படை­யினர் போர்க் கைதி­க­ளாக்­கப்­பட்­டனர்.

1946 : ENIAC எனும் முதல் தலை­முறைக் கணினி, அமெ­ரிக்­காவின் பெல்­சில்­வே­னியா பல்க­லைக்­க­ழ­கத்­தினால் அறி­மு­க­மா­னது.

1950 : சோவியத் ஒன்­றியம், மக்கள் சீனக் குடி­ய­ரசு ஆகி­யன பாது­காப்பு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டன.

1961 : பெல்­ஜி­யத்தில் விமானம் ஒன்று வீழ்ந்­ததில் அதில் பயணம் செய்த 73 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1970 : டொமி­னிக்கன் குடி­ய­ரசு விமானம் ஒன்று சாண்டோ டொமிங்­கோவில் கடலில் மூழ்­கி­யதில் 102 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1989 : ஒன்­பது ஆண்டுகால ஆக்­கி­ர­மிப்­புக்குப் பின் ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து அனைத்து சோவியத் படை­களும் வெளி­யே­றி­ய­தாக அறி­விக்­கப்­பட்­டது.

1996 : சீனாவின் இண்­டெல்சாட் செய்மதி ஒன்று ஏவி­ய­வு­ட­னேயே கிராமம் ஒன்றில் வீழ்ந்­ததில் பலர் கொல்­லப்­பட்­டனர்.

1999 : குர்­திஸ்தான் உழைப்­பாளர் கட்சி எனும் அமைப்பின் அப்­துல்லா ஓக்­கலன் துருக்­கிய இர­க­சியப் படை­க­ளினால் கென்­யாவில் வைத்து கைது செய்­யப்­பட்டார்.

2013 : ரஷ்ய வான் பரப்பில் விண்கல் ஒன்று வெடித்துச் சிதறியதால் கட்டடங்கள் அதிர்ந்து ஜன்னல்கள் உடைந்தன. இதனால் சுமார் 1500 பேர் காயமடைந்தனரென அறிவிக்கப்பட்டது.

http://metronews.lk

  • தொடங்கியவர்

தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம்! - யதார்த்தம் உணர்த்தும் கதை! #MotivationStory

 
 

கதை

 

ருவரைச் சரியாக எடைபோடும் திறமை அனுபவத்திலிருந்து கிடைக்கும்; ஒருவரைத் தவறாக எடைபோடும்போதுதான் அனுபவம் கிடைக்கும்’ - அமெரிக்காவின் கம்ப்யூட்டர் சயின்டிஸ்ட் ஜிம் ஹார்னிங் (Jim Horning) அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். வாழ்க்கை நமக்குப் பல அனுபவங்களைத் தருகிறது. அவற்றில் சில அதிர்ச்சி தரும்; சில ஆச்சர்யப்படுத்தும். அந்த அனுபவங்களில் மிக முக்கியமானது, பிறரைத் தவறாக நினைக்கும் சுபாவம். கோபம், ஆத்திரம், ஏமாற்றம், விரக்தி போன்றவற்றால் ஒருவரைத் தவறாக எடைபோட்டுவிடுவோம். அதை வெளிப்படுத்தியும்விடுவோம். பிறகு அதை நினைத்துக் குறுகிப்போய் நிற்போம். இந்த அனுபவம் எல்லோருக்குமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கிடைத்திருக்கலாம். ஆனால், இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால், அவருக்கு நாம் நம்மால் முடிந்த நல்லதைச் செய்ய வேண்டும். அந்தச் சமயத்தில் நேசத்தைக் கொட்டலாம்; பெருந்தன்மையோடு நடந்துகொள்ளலாம். உங்களுடைய தவறிலிருந்து மற்றவரைப் பாராட்ட, போற்ற, கொண்டாடக் கற்றுக்கொள்ளும் பாடம் அது. இந்த யதார்த்தத்தை உணர்த்தும் கதை ஒன்று...

 

அது லண்டனிலிருக்கும் புறநகர்ப் பகுதி. காலை நேரம். ஜான் ஒரு புழுதிபடிந்த சாலையில் நடந்துகொண்டிருந்தான். மென்மையான சுபாவம் கொண்டவன், பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணமுள்ளவன், பிரதி பலன் பார்க்காமல் யாருக்கு வேண்டுமானாலும் உதவுபவன். சாலையோரத்தில் ஒரு பர்ஸ் கிடப்பதைப் பார்த்தான் ஜான். அதை எடுத்தான். திறந்தான். உள்ளே ஒன்றுமில்லாமல் காலியாக இருந்தது.

``என் பர்ஸ்... என் பர்ஸ்...’’ என்று ஒரு குரல் கேட்டது. ஒரு நடுத்தர வயதுள்ள பெண்மணி அவனுக்கு எதிரே நின்றுகொண்டிருந்தாள். அவளுடன் ஒரு போலீஸ்காரரும் இருந்தார்.

``சார்... இது என் பர்ஸ்தான் சார்...’’ என்று போலீஸ்காரரிடம் சொன்னாள் அந்தப் பெண். ஜான், பர்ஸை அவளிடம் கொடுத்தான். அதை அவசரமாகத் திறந்து பார்த்தவள் கலங்கி அழ ஆரம்பித்தாள்.

பயம்

``சார்... இதுல பணம்வெச்சிருந்தேனே... அது எங்கே? கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் சார்... என் மகனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்னு எடுத்துட்டு வந்தேன். அப்பா இல்லாத பிள்ளை அவன். தயவு செஞ்சு குடுத்துடுங்க சார்... நான் ஸ்கூல்ல போய் ஃபீஸ் கட்டிட்டு, அப்புறம் ஆபீஸ் போகணும்...’’ அவள் அவன் காலில் விழாதகுறையாக புலம்பினாள்.

ஜான், வேறு எதுவும் பேசாமல் தன் பையில் வைத்திருந்த பணத்தையெல்லாம் எடுத்து அவளிடம் கொடுத்தான். ``மன்னிச்சிருங்க... சீக்கிரம் போங்க!’’ என்றான். அவள் பணத்தோடு திரும்பிப் போனாள். போலீஸ்காரர், ஜானை விசாரிப்பதற்காக அழைத்துப் போனார்.

அந்தப் பெண் தன் மகன் படிக்கும் பள்ளிக்குச் சென்று பணத்தை எண்ணிப் பார்த்தபோதுதான், அவள் வைத்திருந்த தொகையைவிட அதிகமாக இருந்தது தெரிந்தது. ஒரு கணம் அவள் அதிர்ந்துபோனாள். மகனின் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு வந்தவள், அதோடு அந்தச் சம்பவத்தை மறந்தே போனாள்.

***

அடுத்த மாதம் அதேபோல ஒரு தினம்... அதே பெண்மணி. சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தாள். சற்று தூரம் சென்றதும் உள்ளுணர்வு உறுத்த திரும்பிப் பார்த்தாள். சற்று தூரத்தில் ஒருவன் அவளைப் பின்தொடர்ந்து வருவதுபோலத் தோன்றியது. சாலையோரமாக நின்றாள். அவனும் நின்றான். அவள் சற்று வேகமாக நடந்தாள்... அவனும் வேகமாக நடந்து வந்தான். அந்த மனிதன் தன்னைத்தான் பின்தொடர்ந்து வருகிறான் என்பது அவளுக்கு உறுதியாகத் தெரிந்தது. தன் கைப்பையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். `ஐயோ... அந்த ஆள் என்னை வழிமறிச்சு பணத்தைப் பிடுங்கிட்டா என்ன செய்யறது?’ - பயம் தொற்றிக்கொள்ள அக்கம் பக்கம் யாராவது உதவ மாட்டார்களா என்று பார்த்தபடியே நடந்தாள்.

சற்று தூரத்தில் ஒரு போலீஸ்காரர் தெரிந்தார். விரைந்து அவரருகே போனாள். அவர், கடந்த மாதம் அவளுடன் வந்திருந்த அதே போலீஸ்காரர். அவள், அவரிடம் ``என்னை ஒருத்தன் ஃபாலோ பண்றான் சார். எனக்கு பயமா இருக்கு... அங்கே பாருங்க...’’ என்று பின்னால் கையைக் காட்டினாள்.

அதே நேரத்தில் அவளைப் பின்தொடர்ந்து வந்த மனிதன் சுருண்டுபோய் சாலையிலேயே விழுந்துவிட்டான். போலீஸ்காரரும் அந்தப் பெண்ணும் அவனருகே ஓடினார்கள். அவன், அதே ஜான். போலீஸ்காரர் அவனைக் கைகொடுத்து தூக்கிவிட்டார்.

பிந்தொடர்தல்

``என்ன ஆச்சுப்பா?’’ காவலர் விசாரித்தார்.

``நல்ல ஜுரம் சார்.. தலை சுத்துற மாதிரி இருந்தது. கீழே விழுந்துட்டேன்...’’

இப்போது போலீஸ்காரர் அந்தப் பெண்ணிடம் திரும்பினார்... ``மேடம்... அன்னிக்கி இவர் உங்ககிட்ட கொடுத்தது உங்களோட பணம் இல்லை; இவரோடது. இவர் திருடனில்லைங்கிறது விசாரிச்சப்போதான் தெரிஞ்சுது. நீங்க உங்க மகனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்னு அழுது புலம்பினதைத் தாங்காம தன்னோட பணத்தைக் கொடுத்திருக்கார்...’’

அந்தப் பெண் ஆச்சர்யத்தோடு கேட்டுக்கொண்டிருந்தாள். போலீஸ்காரர் ஜானின் பக்கம் திரும்பினார். ``சரிப்பா... இன்னிக்கி எதுக்கு இந்த அம்மா பின்னாலயே வந்தே?’’

``இல்லை சார்... எப்படியும் இன்னிக்கோ, நாளைக்கோ இவங்க மகனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டவேண்டியிருக்கும். அப்போ யாராவது இவங்க பணத்தைத் திருடிட்டுப் போயிடக் கூடாதுல்ல? அதனாலதான் பின்னாலயே துணைக்கு வந்தேன்...’’

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

முதன் முறையாக தமிழில் பாடல் பாடி அசத்தும் மஹிந்தவின் புதல்வர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி மகன், தமிழ் மொழியில் பாடல் பாடி அசத்தியுள்ளார்.

ரோஹித ராஜபக்ஷ பாடல் பாடி இசை அல்பங்களை வெளியிடுவதில் திறமையான ஒருவராகும்.

அவரால் இவ்வாறு பல பாடல்கள் வெளியிடப்பட்டுள்ள இணையத்தளங்களில் பிரபல்யமடைந்துள்ளன.

இந்நிலையில் முதல் முறையாக அவர் புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளார். தமிழ் மொழியில் பாடல் ஒன்றை பாடி தனது யூடியுப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த பாடல் தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “நீண்ட காலமாக தமிழ் பாடல் ஒன்றை பாட வேண்டும் என்ற ஆசையில் இருந்தேன். இந்த பாடலை கேட்டுப்பாருங்கள். தமிழ் மொழி உச்சரிப்பில் குறைகள் இருந்தால் கோபப்படாதீர்கள். பரீட்சிக்கும் விதமாக இந்த வேலை செய்யப்பட்டது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

http://www.tamilwin.com

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: காதலர் தினம்- ஆதலால் காதல் செய்வீர்

 
 
klopng

பிப்ரவரி காதலர் தினத்தையொட்டி நெட்டிசன்கள் தங்கள் கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றைப் பற்றிய தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸீல்...

ப்ரீத்தி ஜெயராமன்

குறும்பார்வை வேண்டும்

குறுஞ்செய்தி அல்ல

கைப்பேசி வீசி நாம்

கை வீசிச் செல்வோம்

தூரத்துக் காதல் என் கோப்பைத் தேநீர் அல்ல...

மின்முத்தம் ஏதும் உன் மெய்முத்தம் போலே அல்ல

நேரில் நீ நிற்பாயா

என் ஆசை எல்லாம் கேட்பாயா?

என் கை கோப்பாயா?

குறும்பார்வை வேண்டும் உன் குறுஞ்செய்தி அல்ல...

கைப்பேசி வீசி நாம் கைவீசிச் செல்ல”

திவ்ய பாரதி

எங்கெங்கு சுற்றி பறந்தாலும் இறுதியில் இளைப்பாற உன்னை தேடி வந்து விடுவேன்...!

அவ்வளவு தான் நாமிருவரும்...!

செல்லப்பா நம்பி

முதல் காதல் முறிந்தபோது நொறுங்கிப்போனான்

அடுத்த காதல் முறிவு அதிர்ச்சி தந்தது

அடுத்தடுத்த காதல் முறிவுகள் ஆசுவாசப்படுத்தின

இப்போதெல்லாம் சுவாசிப்பது போல்

இயல்பாகக் காதலிக்க முடிகிறது.

துஷ்யந்தன்

‏எதையுமே தேடும் போதுதான் ஆர்வம், சந்தோஷம் அதிகமாக இருக்கும்..... கிடைத்தபின் ஆர்வம் குறைந்து விடும். #single ஆக இருப்பதுதான் சுகமே.

Muralikrishnan Chinnadurai

சொல்லாத காதல்களும் சுகம் தான்...

RìojeevA

‏இருக்குறவனுக்கு சாதாரண நாளும்

#ValentinesDay தான்

இல்லாதவனுக்கு #ValentinesDay கூட

இன்னொரு சாதாரண நாளே...

சேதுபதி 

‏ஆதலால் காதல் செய்வீர்...

பிகிலு

‏உக்கிரமான கனவு போல் பலர் வாழ்க்கையில் வந்து போகிறது காதல்...  #HappyValentinesDay #ValentinesDay

ரமேஷ் ஆர்

காதல்

நறுமண மலர்களையும்

நறுக்கென்ற முட்களையும்

கொண்ட வாழ்வில்

சட்டென வந்த மின்னல்

காதல்.

புத்தன்

இந்த #ValentinesDay வை வெறும் Wednesday வாக கடப்பவர்கள் ஆர்டி செய்யவும்.

மெத்த வீட்டான்

‏காதலை சொல்ல பயப்படுறவங்க பயப்படாமல் காதலை சொல்வதற்காக டெவலப் பண்ணி கொண்டு வந்ததுதான் காதலர் தினம் !

விடியலைதேடி

‏என்னவளே நாம் சந்திக்கும் ஒவ்வொரு தினமும் காதலர் தினமே.

ஜானகிராமன்

‏இந்தக் காதல் கவிஞர்கள் எல்லோரும்,

கல்யாணம் ஆனவுடன் காலி டப்பா ஆகி விடுவார்கள்.

vadipng
 

லதா கார்த்திகேசு

காதலை பார்த்து பயமில்லை  

காதல் தரும் வலிகளை எண்ணியே பயம்

Untitledpng

ஜிம்பலக்கடி பம்பா

துனைவியார்க்கு இன்னைக்கி என்ன கிப்டு வாங்கி குடுக்கலாம்?? அதான் என்னையே கிப்டா குடுத்திட்டேனே இதுக்கு மேலயா ஒரு கிப்ட்?

அசால்ட் Ledger

‏காதலர்கள் தினத்துல கையில அதிகமா காசு இருந்தா எதும் ஆனாதையா , பசிபட்டினியோட இருக்குறவங்ளுக்கு உதவி செய்துவாழ்வோமாக...

நிழலைநேசித்தவன்

‏வருடம்தோறும் வரும் துக்கமான நாள் இது சிங்கில்சுக்கு #காதலர்தினம்

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

வியட்நாம்-வடகொரிய ஜோடியின் உள்ளத்தை உருக்கும் காதல் கதை

எல்லைகளைத் தகர்த்து இதயங்கள் இணைந்த வியட்நாம்-வடகொரிய ஜோடியின் உள்ளத்தை உருக்கும் காதல் கதை.

  • தொடங்கியவர்

புதுச்சேரியில் தெருவோர கடையில் டீ ஆற்றிய அமெரிக்க தூதர்

1000433072708651b-0766-4a1b-854a-14f7792

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் புதுச்சேரியில் ஒரு தெருவோர டீ கடையில் டீ ஆற்றிய புகைப்படம் சமூக ஊடகங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

63 வயதாகும் கென்னத் ஜஸ்டர் கடந்தாண்டு நவம்பர் மாதம் இந்தியாவின் அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டார்.

டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதையடுத்து சர்வதேச பொருளாதார விவகாரங்களுக்கான அதிபரின் உதவியாளர் பொறுப்பில் கென்னத் ஜஸ்டர் நியமிக்கப்பட்டிருந்தார்.

கடந்த 12 ஆம் தேதி சென்னை வந்த ஜஸ்டர், மெரினா கடற்கரைக்கு அருகே இருக்கும் விவேகானந்தர் இல்லத்தை பார்வையிட்டார்.

தொடர்ந்து, தலைமை செயலகம் சென்ற அவர் மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். அதன்பிறகு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தையும் சந்தித்துள்ளார்.

சுற்றுலா தளமான மாமல்லபுரம் சென்ற அவர் கடற்கரை கோயிலை பார்வையிட்டுள்ளார்.

''கடற்கரை கோயிலின் வரலாறு மற்றும் கட்டுமானம் என்னை ஈர்க்கிறது '' என்று ட்விட்டரில் சிலாகித்துள்ளார் கென்னத் ஜஸ்டர்.

மாமல்லபுரத்தை தொடர்ந்து புதுச்சேரிக்கு பயணப்பட்ட அவர் ஃபிரஞ்சு நாகரீகத்தின் மிச்சங்களை கொண்டிருக்கும் வைட் டவுன் வீதிகளை சுற்றிப்பார்த்தார். அதன்பிறகு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதல்வர் நாரயணசாமியையும் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

தொடர்ந்து நகரை சுற்றிப்பார்த்த கென்னத், தெருவோர கடையில் டீ ஆற்றும் முறையை பார்த்து அதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார்.

ரயில் நிலையம் அருகே இருந்த டீக்கடைக்கு அவரை அதிகாரிகள் அழைத்து சென்றனர். அங்கு டீ ஆற்றப்படும் முறையை கண்டு வியந்த கென்னத் ஜஸ்டர் தானும் அதை செய்துபார்க்க வேண்டும் என்று கூறி டீ ஆற்றியுள்ளார்.

நேர்த்தியாக டக் இன் செய்யப்பட்ட சட்டை, கழுத்தில் டை, கையில் டீ பாத்திரங்களுடன் அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டரின் டீ ஆற்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

http://tamil.thehindu.com/bbc-tamil

  • தொடங்கியவர்

கேட்டாலே இனிக்கும் காதல் பாடல்கள்!

 

 
k3jpg

'வசந்த மாளிகை' படத்தில் சிவாஜி, வாணிஸ்ரீ

காதலிக்காதவர்கள் கூட இருக்கலாம். ஆனால் காதல் பாடல்களைக் கேட்டுக் கிறங்காதவர்களும் பாடிக் கிறங்காதவர்களும் இல்லையென்றே சொல்லலாம்!

காதலுக்கும் காதலர்களுக்கும் உள்ள சம்பந்தத்தைப் போல, காதலுக்கும் பாடல்களுக்கும் ரொம்பவே சம்பந்தம் உண்டு. ஆயிரக்கணக்கான காதல் பாடல்கள் இருக்கின்றன. அத்தனையையும் இதற்குள் அடைத்துவிட முடியாது... காதலைப் போலவே!

   

அப்போதெல்லாம் விவித்பாரதியில் (ரேடியோவில்), சிலோன் வானொலியில், பாடல்கள் கேட்பது இருந்துவந்தது. ஒருகட்டத்தில், அந்தப் பாடல்கள் தன் மனதின் காதலுக்கு மருந்தாகவே அமைந்தன. இன்னொரு கட்டத்தில்... காதல் ஜோஸ்யம் பார்த்தவர்களும் உண்டு.

அதாவது, நமக்குப் பிடித்த அந்தக் காதல் பாடல், இன்றைக்கு ஒலிபரப்பானால், நம் காதல் வெற்றி அடையும் என்று அர்த்தம் என்று இவர்களே ஒரு கணக்குப் போட்டு, பாட்டுக் கேட்டு பரவசம் அடைந்தார்கள்.

‘உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...’ எனும் இதயக்கமலம் பாடலைக் கேட்டுக் கொண்டே, தலையணையை நனைத்த ரகசியக் காதல்களும் காதல் ரகசியங்களும் காதல் ஏக்கங்களும் துக்கங்களும் அதிகம்.

 

‘நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்’ என்று குதூகலத்துடன் காதலைக் கடந்தவர்களும் இருக்கிறார்கள். ‘எங்கோ நீயோ நானும் அங்கே உன்னோடு...’ என்று சுசீலாவின் குரலைக் கேட்டுக் கொண்டே, தங்கள் காதலை வெளிப்படுத்திய ஆண்கள், இந்தப் பாடலையெல்லாம் மறக்கவே மாட்டார்கள். ‘என்னை முதன்முதலாகப் பார்த்த போது என்ன நினைத்தாய்’ என்ற பாடலைப் பாடி காதலை டிக்ளேர் செய்து, காதலில் வெற்றி கண்டவர்கள்... ‘எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன்’ என்று தோல்வியை பாடலாகப் பாடி அழுது கலங்கியவர்கள்... பாடல்களைப் போலவே காதலில் தனித்தனி ரகம்!

 

 

 

’முத்துகளோ கண்கள்’ பாடலும் ‘பூமாலையில் ஓர் மல்லிகை’ பாடலும் காதலை அழகாகச் சொல்லி, மனதுக்குள் மயிலிறகு தடவுவதை, காதலிக்காதவர்கள் கூட உணர்ந்துகொள்ள முடியும்.

‘நீ எங்கே... என் நினைவுகள் எங்கே’ என்ற பாடல் காதல் சுகத்தைச் சொல்லியும் பின்பு காதலின் சோகம் சொல்லியும் அமைந்த பாடல். படத்தில் இரண்டு மூன்று முறை, வெவ்வேறு மெட்டுகளில் இந்தப் பாடல் ஒலிபரப்பாகும். அந்த இசைவித்தையிலும் வார்த்தைநேர்த்திகளிலும் கட்டுண்டுபோனார்கள் காதலர்கள்.

k4jpg

P.B.ஸ்ரீனிவாஸ் | கோப்புப் படம்.

 

அதென்னவோ... பிபிஎஸ் குரலுக்கும் காதலுக்கும் அப்படியொரு பொருத்தம். அவரின் பாடல்கள், ஏனோ காதலைத் தூண்டும். மென்மைப் பக்கங்களை குரல் வழியே நமக்குக் கடத்தும். ‘நிலவே என்னிடம் நெருங்காதே... நீ நினைக்கும் இடத்தில் நானில்லை’, ‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘பாடாத பாட்டெல்லாம் பாடவந்தாள்’, ‘ரோஜா மலரே ராஜகுமாரி’ என்று காதலையும் இந்தப் பாடலையும் பிபிஎஸ் குரலையும் சேர்த்தே கொண்டாடினார்கள்.

அதேபோல், ஏஎல்ராகவனின் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ காதல் தோல்வியின் பாஸிடீவ் பக்கங்களுக்கு நம்மை நகர்த்திக் கரை சேர்த்தது என்றே சொல்லலாம்.

அதேபோல டிஎம்எஸ் குரலில், ‘அன்னத்தைத் தொட்ட கைகளில் நான் மதுக் கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன்’ என்று வசந்தமாளிகையில் இந்தப் பாடல் வரி வரும்போது, தியேட்டரில் கைதட்டிய இளைஞர்கள் உண்டு. இதைச் சொல்லி காதலியருக்கு சத்தியம் செய்தவர்கள் அவர்கள்!

அதேபாடலில், ‘இரண்டு மனம் வேண்டும்’ என்று சிவாஜி கேட்பதாகவோ கண்ணதாசன் கேட்பதாகவோ டிஎம்எஸ் கேட்பதாகவோ நினைக்கவில்லை. ‘அட... ஆமாம்பா ஆமாம்’ என்று அவர்கள் கேட்பதாகவே உணர்ந்த காதல் தோல்வியாளர்களின் ஆறுதல் பாடல் இது.

‘காதலின் பொன்வீதியில்...’ மாதிரியான பாடல்கள் தனி ஆலாபனையே நிகழ்த்தின.

எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் நிறைவிலுமாக இளையராஜாவும் டி.ராஜேந்தரும்தான், காதலர்கள் காதுகளில் தேன் வார்த்த இசைத்தேனீக்கள். டி.ராஜேந்தரின் ‘அமைதிக்குப் பெயர்தான் சாந்தி’ பாடல் அப்படியொரு பாடல் வகைதான். காதல் வகைதான். ‘வைகைக் கரைக் காற்றே நில்லு’ ‘அடப் பொன்னான மனமே பூவான மனமே...’, ‘தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைதான் யாரறிவார்’ என காதலிக்காதவர்களைக் கூட, இந்தப் பாடல்களால் இசையைக் காதலிக்கச் செய்திருப்பார் டி.ராஜேந்தர்.

k2jpg

இளையராஜா | கோப்புப் படம்.

 

இளையராஜாவின் காதல் சாம்ராஜ்ஜியம் அளவிடவே முடியாதது. ‘அன்னக்கிளியே உன்னைத் தேடுதே’ என்று ஆரம்பித்த காதல், பூங்கதவே என்று நிழல்களிலும் காதல் ஓவியத்தின் எல்லாப் பாடல்களிலும் கரைபுரண்டது. குறிப்பாக, அலைகள் ஓய்வதில்லையின் விழியில் விழுந்து இதயம் நுழைந்து..., காதல் ஓவியம் பாடும் காவியம், ஆயிரம் தாமரை மொட்டுகளே... என்றெல்லாம் காதலின் சோகத்தையும் சுகத்தையும் சேர்த்துச் சேர்த்து புகட்டினார். நிறம் மாறாத பூக்களின் ஆயிரம் மலர்களேவும் உல்லாசப் பறவைகளின் தெய்வீக ராகமும் கல்லுக்குள் ஈரத்தின் சிறுபொன்மணியும் காதல் உணர்வை உசுப்பிவிட்டன.

ஒரேநாள் உனை நான்..., ரோஜாவைத் தாலாட்டும் தென்றல், ஈரமான ரோஜாவே, இதயம் ஒரு கோவில், வைகரையில்... வைகைக் கரையில் என்றெல்லாம் பாடாத காதலர்களே இல்லை.

ரேடியோவில் பாடல் கேட்பது குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே. பாட்டுப் புத்தகம் கொடிகட்டிய காலம் அது. டிஎம்எஸ், எஸ்பிபி, பிபிஎஸ், சுசீலா, எம்எஸ்வி, இளையராஜா, எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, மோகன் வரை காதல் ஹிட்ஸ் என்று தனிப்பாட்டுப் புத்தகங்கள், கல்லா கட்டின.

டேப் ரிக்கார்டுகள் புழக்கமும் வந்த காலம் அது. விரும்பிய பாடல்களைப் பதிவு செய்ய மியூஸிகல்ஸ் கடைகள் இருந்தன. ’ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு’, ’உன்ன நெனைச்சேன் பாட்டுப் படிச்சேன்’, உன்னைக் காணாத நாளேது, பொத்தி வச்ச மல்லிகை மொட்டு, காதலின் தீபம் ஒன்று என்றெல்லாம் பிடித்த பாடல்களைப் பட்டியலிட்டு, பதிவு செய்து, பாடல்கள் கேட்டு, கூடவே பாடிக் கிறங்கிப் போன ரசிகர்கள் உண்டு. ‘நிலவு தூங்கும் நேரம், நிலாவே வா, சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்று பாடல்களில் கரைந்து போனார்கள் காதலர்கள்.

சங்கர்கணேஷின் ‘யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போனது’ பாடலும், ‘மேகமே மேகமே’ பாடலும் எவர்கிரீன் லவ் சாங்க்ஸ்!

எண்பதுகளில் வந்த எம்எஸ்வியின் ’கனா காணும் கண்கள் மெல்ல’ பாடல் கணவன் மனைவிக்குமான பாடல்தான் என்றாலும் காதலுக்கான வரிகள் போல் எடுத்துக் கொண்டார்கள் காதலர்கள்.

ஏஆர்.ரஹ்மானின் ’ஒரு வெள்ளை மழை’ பாடலும் ’வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடலும், ’பூங்காற்றிலே உன் சுவாசத்தை’யும் ’காற்றே என் வாசல் வந்தாய்’ என்கிற ரிதம் பாடலும் காதலின் சரிகமபதநியைச் சொல்லின. ‘என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்’, ‘என்னவளே... அடி என்னவளே’ பாடலும் மாதிரியான ரஹ்மான் பாடல்கள், புதுவரவுக் காதலர்களுக்கு புதுவரவாகவும் உறவாகவும் அமைந்தன.

கவுதம் வாசுதேவ் மேனன் படங்களும் ஹாரீஸ் ஜெயராஜ், தாமரை கூட்டணியும் இன்னும் காதலைச் சொல்லும் பாடல்களைத் தந்தன. முணுமுணுக்கச் செய்தன. செல்போன்களின் காலமும் ரிங்டோன்களின் பெருக்கமும் அதிகரித்த சூழலில், இவர்களின் பாடல் வரிகள் ஏகப்பட்ட பேரின் காதல் ரிங்டோன்களாக, டிரெண்டிங்கில் இருந்தன என்றெ சொல்லலாம்.

காதல் பாடல்கள், காதலர்கள் வாழ்வில் மட்டுமின்றி, நம்மிலும் கூட இரண்டறக் கலந்தவைதான். ‘விழியே கதை எழுது’ என்று சொல்லும்போதே காதலின் சோகத்தையும் மென்மையையும் யோசிக்கத் தொடங்கிவிடுவோம்.

‘எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம். உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்’ என்று சசிரேகா பாடி முடிக்கும் போது, நம் உயிருக்குள்ளிருந்து ஒரு வலி கிளம்பி ஊடுருவுமே... அதுதான் காதல் இசை. இசையின் காதல்!

  • தொடங்கியவர்

யுவன் இசையில் பியார் பிரேமா காதல் படத்தின் `ஹை ஆன் லவ்’ சிங்கிள் டிராக்!

 
 

காதலர் தினத்தை முன்னிட்டு யுவன் ஷங்கர் ராஜா இசையில் பியார் பிரேமா காதல் படத்திலிருந்து ’ஹை ஆன் லவ்’ சிங்கிள் டிராக் வெளியிடப்பட்டுள்ளது. 

 

ஹை ஆன் லவ் 

 

 

`பிக்பாஸ்’ புகழ் ஹரிஷ் கல்யாண், ரைஸா நடித்துள்ள படம் 'பியார் பிரேமா காதல்'. இளன் எனும் புதுமுக இயக்குநர் இயக்கியுள்ள படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். மேலும், இந்தப் படத்தை ஒய்.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ் சார்பில், அவரே தயாரித்தும் வருகிறார். இதனால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காமெடி கலந்த காதல் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தநிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு படத்திலிருந்து 'ஹை ஆன் லவ்' என்ற பாடலை யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். நிரஞ்சன் பாரதி எழுதியுள்ள அந்தப் பாடலை சித் ஶ்ரீராம் பாடியுள்ளார். 

 

 
  • தொடங்கியவர்

 

உலகின் மிகவும் கருமையான கட்டடம்

உலகிலேயே மிகக் கருமையான கட்டடத்தை வடிவமைத்து, பிரம்மிக்க வைத்த பிரிட்டன் விஞ்ஞானிகள்.

  • தொடங்கியவர்

மதவாதிகளின் சிம்மசொப்பனமாக விளங்கிய விஞ்ஞானி! - கலீலியோ கலிலி பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

 

கலீலியோ கலிலி... இந்த இத்தாலிய மேதைதான் அறிவியலின் மறுமலர்ச்சிக்குக் காரணம். முதலில் கணிதம் மேல் ஆர்வம்கொண்ட இவர் மெல்ல மெல்ல வானியல் மேல் ஆர்வம்கொண்டு வானியல் ஆய்வுகளை மேற்கொண்டார். கலீலியோவின் ஆய்வுக்கு அவர் உருவாக்கிய தொலைநோக்கிப் பெரும் உதவிகரமாக இருந்தது. கலீலியோ முதலில் 3x அளவுக்குப் பெரிதுபடுத்திப் பார்ப்பதற்கு ஏதுவாக உள்ள தொலைநோக்கிகளை உருவாக்கினார், பின்னர் 3௦x அளவுக்குப் பெரிதுபடுத்தி பார்க்கக்கூடிய தொலைநோக்கிகளை உருவாக்கினார்.கடலில் வாணிபம் செய்பவர்களுக்கு அதற்கேற்ற தொலைநோக்கிகள் செய்து கொடுத்தார் .1610-ம் ஆண்டு ஜனவரியில் இவர்  கண்டுபிடித்த தொலைநோக்கிகள் மூலம் இவர் வியாழனின் துணைக்கோள்களைக் கண்டறிந்தார். அவை வியாழனை மையம் கொண்டு நகர்கிறது என்று அவர் கண்டுபிடிக்க சில நாள்கள் எடுத்துக்கொண்டார்.   இவர் கண்டுபிடித்த திசைகாட்டியும் ஆய்வுகளுக்குப் பெரிதும் உதவிகரமாக இருந்தது.

 

கலீலியோ கலிலி

 

இது மட்டுமின்றி பல வானியல் நிகழ்வுகளைத் தொலைநோக்கி மூலம் கண்டறிந்து உறுதிபடுத்தினார். 1610-ம் ஆண்டு வெள்ளி, நிலவு போல் பல்வேறு விதமான பரிமாணங்களில் தோன்றுவதையும் மறைவதையும் கண்டார். சனி கோளை சுற்றியுள்ள வளையத்தைக் கண்டறிந்தார், ஆனால், அவர் அதை வேறொரு கிரகமாகத் தவறாகக் கணித்துக்கொண்டார், பின்னர் அது சனி கோளை சுற்றியுள்ள வளையம் என்று கண்டறிந்தார். பின்னர் நெப்டியூன் கோளை கண்டறிந்தார், ஆனால், அதை அவர் நட்சத்திரம் என எண்ணினார்.  சூரியனின் கரும்புள்ளிகளை ஆய்வு செய்தார்.

பைசாவின் சாய்ந்த கோபுரத்தின் மேல் நின்று இவர் நிகழ்த்திய விழும் பொருள்கள் குறித்த ஆய்வு, பல காலமாக அரிஸ்டாட்டில் கூறிய கருத்தை உடைத்தது. “ஒரே நேரத்தில் கனமான பொருள் கனமில்லா பொருள் ஆகியவற்றை விழச்செய்யும்போது கனமான பொருள் முதலில் கீழே விழும், பின்னர்தான் கனமில்லா பொருள் கீழே விழும்” என்பது அரிஸ்டாட்டில் கூற்று. இவர் சாய்ந்த கோபுரத்தின் மேல் நின்று வெவ்வேறு நிறைகளையுடைய பொருள்களைக் கீழே விழச்செய்து, பொருள்கள் கீழே விழும் நேரத்திற்கும், அதன் நிறைக்கும் தொடர்பில்லை என்று கூறினார்.

அவர் வாழ்ந்த காலம் வானியல், பூமி அமைப்பு என அறிவியல் துறைகள் அனைத்துமே மதத்துடன் பின்னிப்பிணைந்திருந்தது. புதிய கோட்பாடு, புதிய எண்ணங்கள், புதிய கருத்துகள் எனப் புதிதாக யார் எதை முன்வைத்தாலும் அவை மதத்திற்கு எதிரானவை என அதனை முன்மொழிந்தோர் தண்டிக்கப்பட்டனர். பூமிதான் அண்டத்தின் மையம் என்றும் அதனைச் சுற்றித்தான் பிற கோள்கள் வலம் வருகின்றன என்று கூறப்பட்டு அது மத நம்பிக்கையாகவும் பின்பற்றப்பட்டு வந்தது. இந்த புவிமையக்கோட்பாடு (ஜியோ சென்ட்ரிக்)தான் பல நூற்றாண்டுகளாகக் (கிட்டத்தட்ட 1500 ஆண்டுகள்) பின்பற்றப்பட்டு வந்தது.

       கலீலியோ கலிலி

3-ம் நூற்றாண்டில் அரிஸ்டாட்டில் என்கிற கிரேக்க வானியலாளர் முதன்முதலாகப் புவி சூரியனைச் சுற்றிவருகிறது என்று தன் கோட்பாட்டை முன்வைத்தார், ஆனால், அது அப்போது நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பின்னர் 16-ம் நூற்றாண்டில் கோபர்நிக்கஸ் என்கிற வானியலாளர் புவிமையக்கோட்பாட்டை முன்வைத்தார். இவரின் கருத்தையும் அப்போது யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. இதை எதிர்த்த மத நம்பிக்கையுடைய மற்ற வானவியலாளர்கள் வெவ்வேறு கோட்பாட்டை முன்வைத்தனர். ஏனென்றால் பைபிளிள் “உலகம் நிலையானது, அசையாதது” எனக் கூறப்பட்டது. டைக்கோ பிராஹே என்கிற வானவியலாளர் கோபர்நிக்கஸின் புவிமையக்கோட்பாட்டை ஆதரித்தார், ஆனால், மத நம்பிக்கையுடைய  அவரால் அதை முழுதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சூரியனும் நிலவும் பூமியைச் சுற்றி வருகின்றன, மீதமுள்ள கோள்கள் சூரியனை வேறொரு பாதையில் சுற்றிவருகின்றன என்றார்.

 

இவ்வாறாக அண்ட அமைப்பை பற்றியும் புவியின் அமைப்பைப் பற்றியும் பல விதமான குழப்பங்கள் இருந்த நிலையில், கலீலியோ கண்டுபிடித்த தொலைநோக்கிகள் மூலம் பல குழப்பங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். சூரியமையக்கோட்பாட்டை ஆதரித்ததால், அது கிறித்துவ மதச்சமயத்துக்கு எதிரானது எனவும், மதநம்பிக்கைக்கு எதிராகச் செயல்பட்டதைக் குற்றம் எனவும் கருதி கத்தோலிக்க திருச்சபையால் அவர் 1633-ம் ஆண்டு முதல் சாகும் வரை வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். 1642-ம் ஆண்டு இருதயக் கோளாறு காரணமாக இயற்கை எய்தினார். சிறைவைக்கப்பட்ட கடைசி ஒன்பதாண்டுக் காலத்தில்தான் ஆரம்ப காலத்தில் மேற்கொண்ட பொருள்களின் இயக்கம் குறித்த சோதனைகளை (Motion Of Experiments) எழுதி வைத்தார். அவரின் குறிப்புகள் அறிவியலின் மறுமலர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருந்தது. அந்த மேதையின் பிறந்தநாள் இன்று. (15-02-1564).

https://www.vikatan.com

Bild könnte enthalten: 1 Person, Bart und Text

  • தொடங்கியவர்

``அப்பா... கடவுள் நம்மைப் பார்த்துக்கிட்டிருக்கார்!’’ - மகன் சொன்ன நீதிக்கதை! #MotivationStory

 
 

கதை

 

`என்னுடைய பெற்றோர்தான் என் கதாநாயகர்கள். அவர்களைத் தவிர வேறு ஒருவரைக்கூட என்னால் ஹீரோவாகப் பார்க்க முடியவில்லை’ - ஒரு பேட்டியில் முன்னாள் அமெரிக்க பேஸ்கெட் பால் வீரர் மைக்கேல் ஜோர்டன் (Michael Jordan) உணர்ச்சி பொங்கச் சொன்ன வாக்கியம் இது. சிறு வயதில் நம் குழந்தைகளுக்கு நாம் எதையெல்லாமோ சொல்லித் தருவோம். அவற்றை மறந்தும்விடுவோம். ஆனால், பிள்ளைகள் அவற்றை அப்படியே நினைவில் வைத்திருப்பார்கள்; கடைப்பிடிக்கவும் செய்வார்கள். அதோடு நாம் கற்றுக் கொடுக்கும் விஷயங்களை முதலில் நாம் கடைப்பிடிக்கிறோமா என்றும் கவனித்துக்கொண்டிருப்பார்கள். சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், தவறு செய்வதற்குத் துணிந்துவிடுவோம். அப்போதெல்லாம் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்த நல்லவற்றை நினைவில் கொண்டு வந்தாலே போதும்... தவறு செய்ய மாட்டோம். இந்த நீதியை எளிமையாக எடுத்துச் சொல்லும் கதை இது.

 

அது ஸ்பெயினிலிருக்கும் ஒரு கிராமம். அங்கே ஒரு விவசாயி இருந்தார். அவருக்கு ஒரே மகன். அவருக்கு ஒரு நல்ல பழக்கம் இருந்தது. ஒவ்வொரு நாள் இரவும் உறங்கப் போவதற்கு முன்னர் மகனை அழைப்பார். ஏதாவது ஒரு கதை சொல்வார். அவ்வப்போது சில நீதிகளையும் கற்றுக் கொடுப்பார்.

ஒருநாள் இரவு, வழக்கம்போல் அந்த விவசாயி தன் மகனுக்குக் கதை சொன்னார். சொல்லி முடித்ததும், ``கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். அவர் ஒவ்வொருவரையும், நாம் செய்யும் ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டேயிருக்கிறார். அவரிடமிருந்து எதையும் மறைக்க முடியாது...’’

மகன் கேட்டான்... ``அப்பா... கடவுள் எல்லா இடத்துலயும் இருக்கார்னு சொல்றீங்க... ஆனா, என்னால அவரை எங்கேயுமே பார்க்க முடியலையே..!’’

``அது அப்படித்தான் மகனே... நம்மால் கடவுளைப் பார்க்க முடியாது. ஆனா, அவர் நம்மையும் நாம செய்யற எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு இருக்கார்...’’

அந்தச் சிறுவனின் மனதில் இந்த விஷயம் ஆழமாகப் பதிந்துவிட்டது. அதற்குப் பிறகு அவன் அவரிடம் எதையும் கேட்காமல் உறங்கிவிட்டான்.

***

தந்தை - மகன்

சில மாதங்கள் கழிந்தன. பஞ்சம் வந்து மக்களை வாட்டியெடுத்தது. ஸ்பெயினில் அந்த விவசாயி இருந்த கிராமத்திலிருந்து பலர் பஞ்சம் பிழைக்க வெளியூர்களுக்குக் கிளம்பிப் போனார்கள். அந்த விவசாயிக்கு மட்டும் ஊரைவிட்டுப் போக மனமில்லை. கையில் வைத்திருந்த தானியங்களைச் சிக்கனமாகச் செலவழித்து எப்படியோ குடும்பத்தை ஓட்டினார். ஒரு கட்டத்தில் தானியங்களும் தீர்ந்து போயின. அடுத்த நாள் உணவுக்கு வழியே இல்லை.

பக்கத்து ஊரிலிருந்த ஒருவரின் வயலில் மட்டும் சோளம் செழிப்பாக விளைந்திருப்பதாகக் கேள்விப்பட்டார் விவசாயி. அன்று இரவு, ஊர் அடங்கிய பிறகு ஒரு அரிவாளையும் ஒரு சாக்குப் பையையும் எடுத்துக்கொண்டார். விழித்திருந்த மகன் ``எங்கேப்பா போறீங்க..?’’ என்று திரும்பத் திரும்பக் கேட்டு அனத்தியதால், அவனையும் அழைத்துக்கொண்டார். மெள்ள நடந்து இருவரும் பக்கத்து கிராமத்துக்குப் போனார்கள்.

ஊருக்கு வெளியே அந்தக் குறிப்பிட்ட வயல்வெளி தெரிந்தது. விவசாயி, ஒரு மரத்தில் ஏறிக்கொண்டார். தன் மகனையும் கையைப் பிடித்து ஏற்றி, ஒரு கிளையில் உட்காரவைத்தார்.

``என்னப்பா பண்றீங்க?’’

``ஸ்... பேசாதே...’’ என்ற விவசாயி சுற்றிலும் பார்த்தார். ஜன சந்தடி எதுவுமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டார். பிறகு மெதுவான குரலில் சொன்னார்... ``நான் கீழ இறங்கி சோளப் பயிரை அறுக்கப் போறேன்... நீ கவனமா எல்லா பக்கமும் பார்த்துக்கிட்டே இரு. யாராவது வந்தாங்கன்னா எனக்கு விசிலடிச்சு சிக்னல் கொடு...’’ என்று சொல்லிவிட்டு மரத்திலிருந்து கீழே இறங்கினார். வயலுக்குள் அவர் நுழையப் போகும் சமயத்தில் பையன் குரல் கொடுத்தான்... ``அப்பா... கொஞ்சம் இருங்கப்பா...’’

மகனின் குரல் கேட்டு அவர் பதறிப்போனார். ``என்னாச்சு... ஏன் கூப்பிடுறே?’’

``ஒருத்தர் நம்மைப் பார்த்துக்கிட்டிருக்காருப்பா...’’

விவசாயி, அவசர அவசரமாக மரத்தின் மேல் ஏறினார். சுற்றிலும் தன் பார்வையை ஓட்டினார். அவர் கண்ணுக்கு யாருமே தெரியவில்லை.

``யாருப்பா நம்மைப் பார்க்கிறாங்க... எனக்கு யாரையும் பார்க்க முடியலையே...’’

மகன்

``கடவுள்... அப்பா நீங்க சொன்னீங்கல்ல? கடவுள் எல்லா இடத்துலயும் இருக்கார். நம்மை கவனிச்சுக்கிட்டே இருக்கார்னு. அப்படின்னா, இப்போ நீங்க திருடப் போறதையும் அவர் பார்த்துக்கிட்டுதானே இருப்பார்?’’

விவசாயி தலைகுனிந்தார். மகனை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

நம்புங்க… இந்த இயற்பியல் ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியது 7 வயது பூனை!

 

பூனைகள் என்ன செய்யும்? பூனை வளரப்பவர்களிடம் இதைக் கேட்டால், “அது என்னங்க பண்ணுது? சும்மா பாலைக் குடிச்சிட்டு, அங்க இங்க ஓடும். நல்லா தூங்கும். அவ்ளோதான்” என்பார்கள். பூனை, நாய்போல இல்லைதான். நாயைப்போல அன்பு செலுத்தாது, நன்றியுடன் இருக்காது. “எஜமானன், நமக்கு உணவு அளிக்கிறான். அவன் நம் கடவுள்” என்பது நாய்களின் எண்ணம் என்றால், பூனைகளுக்கு, “எனக்கு எஜமானனே உணவு அளிக்கிறான். நான்தான் கடவுள்” என்ற எண்ணம் இருக்கும். பூனைகள் தங்களின் குடும்ப உறுப்பினர்களான சிங்கம், புலி, சிறுத்தை போன்று தைரியசாலிகள். எதிரியைக் கண்டு கொஞ்சமும் அஞ்சாமல் சீறும் குணம் படைத்தவை. அது சரி, அறிவு? இருக்கிறது. மிருகங்களுக்கு எவ்வளவு தேவையோ, அவ்வளவு இருக்கிறது. ஆனால், ஓர் இயற்பியல் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் அளவிற்கு இருக்கிறதா? அறிவியலின் பல கிளைகளில் கடினமான சிலவற்றுள், இயற்பியலும் ஒன்று. அதில் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையை பூனை எழுதுவது எல்லாம் எப்படி சாத்தியம்? ஆனால், இருக்கிறது!

 

பூனை எழுதிய இயற்பியல் ஆராய்ச்சிக் கட்டுரை

 

2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியில், அமெரிக்காவின் ஃபிஸிக்கல் சொசைட்டி (American Physical Society) ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அந்தச் சமூகத்தின் புதிய கொள்கை ஒன்று, அன்றிலிருந்து அமலுக்கு வருவதாகவும், அதன்படி, பூனைகள் எழுதிய அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனைத்தும் இலவசமாக அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளதாகக் கூறியது. 1975-ம் ஆண்டிலேயே பூனை ஒன்று எழுதிய கட்டுரையை அவர்கள் பிரசுரித்ததாகவும், F. D. C. Willard என்று அந்தப் பூனையின் பெயரிலேயே அது வெளியானதாகவும் விளக்கம் அளித்தது. விரைவில், கோரைப்பற்கள் கொண்ட அனைத்து மிருகங்கள் எழுதும் கட்டுரைகளும் பிரசுரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டது.

பதற்றம் அடைய வேண்டாம். அறிவிப்பு வெளியான தேதியைக் கவனியுங்கள். இது ஏப்ரல் ஃபூல் செய்திதான். முட்டாள்கள் தினத்தன்று வந்திருக்கிறது. இந்த அறிவிப்பு வேண்டுமானால் பொய்யாக இருக்கலாம். ஆனால், F. D. C. Willard என்ற பூனை எழுதியதாக வந்த கட்டுரை முற்றிலும் உண்மை. இயற்பியலில் இரண்டே பூனைகள்தான் பிரபலமானது. ஒன்று குவாண்டம் இயற்பியலை விளக்கப் பயன்படும் சிந்தனைப் பரிசோதனையில் வரும் ஷ்ரோடிங்கர் பூனை (Schrödinger's cat), மற்றொன்று இந்த ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிய பூனை. அறிவியல் ஆய்வாளர்கள் மத்தியில் F.D.C.Willard என்று அறியப்பட்டாலும், இதன் இயற்பெயர் செஸ்டர் (Chester). மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர் ஜேக் ஹெத்தெரிங்டன் (Jack Hetherington) எழுதிய ஆய்வுக் கட்டுரையில் அவர் பெயருடன் சேர்த்து இந்தப் பூனையின் பெயரும் வெளியானது. ஹீலியம் -3 ஐசோடோப்புகளின் குறைந்த வெப்பநிலை இயற்பியல் குறித்து அலசும் இந்தக் கட்டுரை ஜேக் போன்ற ஆராய்ச்சியாளர் எழுதியிருப்பார் என நிச்சயம் நம்பலாம். நம் செஸ்டர் பூனை எப்படி அவருடன் இணைந்து இதை எழுதியிருக்கும்? யோசிக்கத் தேவையில்லை. ஒரு சின்ன இலக்கணப் பிழையைச் சரி செய்ய மட்டுமே, அந்தப் பூனையின் பெயர், கட்டுரை ஆசிரியரின் பெயருடன் இணைக்கப்பட்டது.

ஜேக் ஹெத்தெரிங்டன் (Jack Hetherington)

இந்த ஆய்வுக் கட்டுரையை ஜேக் முடித்துவிட்டு, அகாடமிக்கு அனுப்பும் தருவாயில்தான் அதில் ஒரு பெரும் இலக்கணப் பிழை இருப்பதை அவருடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன் ஆசிரியராக ஜேக் தன் பெயரை மட்டும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், உள்ளே கட்டுரையில், ஒவ்வொரு இடத்திலும், ‘நாங்கள் இந்தப் பரிசோதனையை செய்தோம்’, ‘நாங்கள் இவ்வாறு ஆராய்ந்தோம்’ என்று எல்லாவற்றையும் பன்மை விகுதியில் குறிப்பிட்டிருந்தார். (அதாவது ‘I’ பயன்படுத்துவதற்குப் பதிலாக ‘We’ என்றே எழுதியுள்ளார்). இது ஜார்னல் (Journal) விதிமுறைகளின்படி தவறானது. ஆய்வைச் சமர்ப்பிக்க வேண்டிய நாள் நெருங்கிவிட்டதால், இந்தப் பிழையை சரி செய்ய நேரமில்லை. காரணம், இது டைப் செய்யப்பட்ட கட்டுரை. பிழைகளைத் திருத்தி மீண்டும் டைப் செய்ய அவகாசம் போதாது. எனவே, இதைச் சரி செய்ய பல்வேறு வழிமுறைகளை யோசிக்கத் தொடங்கினார் ஜேக். அன்று மாலை, ஜாக்கிற்கு ஒரு யோசனை உதித்தது. தன் உதவியாளரை அழைத்து, ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர் பெயரில் தன் வீட்டுப் பூனையின் பெயரையும் சேர்க்கச் சொல்லிவிட்டார்.

F. D. C. Willard/Chester பூனையின் கையொப்பம்பூனையின் பெயர் செஸ்டர் என்றாலும், அதிலும் ஒரு மாற்றம் செய்தார். Felix Domesticus என்பது வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளை குறிக்கும் அறிவியல் பெயர். அதனுடன் செஸ்டர் பூனையின் தந்தை பூனையான வில்லர்ட் (Willard) என்ற பெயரை, பின் பெயராகச் சேர்த்து F. D. C. Willard என்று வைத்துவிட்டார். அது அப்படியே, நவம்பர் 24, 1975-ம் வருடம் பிஸிக்கல் ரிவியூ லெட்டர்ஸின் (Physical Review Letters) 35-வது பதிப்பில் வெளியானது. இந்த விஷயம் அவரின் நண்பர்கள் பலருக்கும் தெரியும் என்பதால், யாரும் எதுவும் கேட்கவில்லை. ஆனால், இந்த உண்மை பெரிய அளவில் வெளியே கசிந்தது, ஒரு மாணவன் செய்த செயலால்தான். அந்த ஆய்வுக் கட்டுரையை படித்துக்கொண்டிருந்த அவன், அதில் சந்தேகம் வரவே, ஜேக்கைச் சந்திக்கச் சென்றிருக்கிறான். அவர் அலுவலகத்தில் இல்லையெனக் கூறப்பட்டதும், ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியரான, F. D. C. Willard அவர்களிடமாவது பேச முடியுமா என்று அவன் கேட்க, அனைவரும் சிரித்துள்ளனர். அவனுக்கு உண்மையை அவர்கள் கூற, பின்பு அது எல்லோருக்கும் பரவியது.

சரி, அந்த ஒரு கட்டுரையோடு, நம் செஸ்டர் பூனை அறிவியல் ஆராய்ச்சிகளில் இருந்து விலகிவிட்டதா என்று கேட்டால் அதுதான் இல்லை. அதன் பிறகு, பல வருடங்கள் கழித்து ஹீலியம் 3 குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்று பிரெஞ்சு மொழியில், நம் F. D. C. Willard பெயரில் வெளியானது. காரணம், அதை உருவாக்கிய ஆய்வாளர்கள், அவர்கள் செய்த ஆராய்ச்சி குறித்த ஒருமித்த கருத்தை எட்டவே முடியவில்லை. இருந்தும் அதுவரை அவர்கள் செய்த ஆராய்ச்சியைவிட, அவர்களுக்கு மனம் வரவில்லை. எனவே, அதை ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையாகத் தொகுத்து ஏதோ ஒரு பெயரில் வெளியிட முடிவு செய்தனர். எதற்கு ஏதோ ஒரு பெயர்? அதுதான் அமெரிக்காவின் புகழ்பெற்ற இயற்பியல் பூனை F. D. C. Willard இருக்கிறாரே என, அதன் பெயரிலேயே வெளியிட்டனர். அது மிகப்பெரிய வெற்றியடைந்து சுமார் 50 முறை பல்வேறு ஆராய்ச்சிகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

பூனை எழுதிய இயற்பியல் ஆராய்ச்சிக் கட்டுரை

நம் செஸ்டர் பூனைக்குப் பிறகு பல்வேறு மிருகங்களின் பெயர்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் அவ்வப்போது வெளிவரத் தொடங்கின. 1978-ம் ஆண்டு, நோய் எதிர்ப்பியல் வல்லுநர் (Immunologist) பாலி மேட்ஸிங்கர் (Polly Matzinger), தன் செல்லப்பிராணியான ஆப்கன் வேட்டை நாயின் பெயரான கலட்ரியல் மிர்க்வுட் (Galadriel Mirkwood) என்ற பெயரை, தன் கட்டுரையின் இணை ஆசிரியராக இணைத்துக்கொண்டார். சமீபத்தில், 2001-ம் ஆண்டு, கைரோஸ்கோப்கள் (Gyroscope) குறித்து ஆய்வு ஒன்றைச் சமர்ப்பித்த A.K.Geim என்ற ஆராய்ச்சியாளர் H.A.M.S. ter Tisha என்ற பெயரை இணை ஆசிரியராக இணைத்துக்கொண்டார். இது அவர் வளர்த்த வெள்ளெலி ஒன்றின் பெயர்! இதே A.K.Geim அவர்கள்தான், 2010-ம் ஆண்டு கிராஃபீன் (Graphene) கண்டறிய உதவி செய்ததற்காக நோபல் பரிசு பெற்றார்.

 

என்னமோ போங்க பாஸ்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

காதலர் தினத்தில் வானில் இதயம் வடிவில் பறந்த விமானம்

 

 
flightpng

இதய வடிவில் விமான பறந்த வழித்தடத்தை காட்டும் புகைப்படம்

 காதலர் தினத்தையொட்டி வெர்ஜின் அட்லாண்டிக் விமானம் ஒன்று வானில் இதய வடிவிலான வழிதடத்தில் பயணம் செய்துள்ளது.

உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி 14-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையடுத்தும் வித்தியாசமான முறையில் உலகெங்கிலும் காதலர்தினம் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

அந்த வகையில் வெர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் வானத்தில் இதய வடிவில் வழித்தடத்தில் பயணம் மேற்கொண்டுள்ளது.

லண்டனின் கார்விர்க் விமான நிலையத்திலிருந்து A330 விமானம் காலை 11.30 மணியளவில் புறப்பட்டது. இந்த விமானம் சுமார் இரண்டு மணி நேரம் 100 மைல்கள் பயணம் கொண்டு இதயம் வடிவில் வடிவிலான வழித்தடத்தில் பயணத்தை முடித்துள்ளது.

A330 விமானம் வானில் பறக்கும்போது விபத்துகள் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து ரேடாரில் கண்காணிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெர்ஜின் அட்லாண்டிக் ட்விட்டர் பக்கத்தில்,

"காதலர் தினத்துக்காக பயிற்சி விமானமே பறக்கவிடப்பட்டது. இதய வடிவத்தில் விமானம் பறக்க விமான பாதையை மாற்றினோம்”  என்று கூறப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

35 வருட சினிமா வாழ்க்கையில் 26-வது படம் இயக்கத் தயாராகிவிட்டார் மணிரத்னம். ‘செக்கச்சிவந்த வானம்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் பாதி கோலிவுட்டே நடிக்கிறது. விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, ஜோதிகா, அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், நடிகர் பிரசாந்த்தின் அப்பா தியாகராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள். வடசென்னையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படத்தில் போலீஸாக நடிக்கிறார் விஜய் சேதுபதி.
வானம் வசப்படட்டும்!

p56a_1518501532.jpg

கேட்டி ஹோம்ஸுடனான விவகாரத்துக்குப் பிறகு நிறைய பேருடன் கிசுகிசுக்கப்பட்ட டாம் க்ரூஸுக்குப் புது மனைவியைக் கண்டுபிடித்துக்கொடுத்துவிட்டது ஹாலிவுட். யோலண்டா பெகோராரோ (Yolanda Pecoraro) என்ற நடிகையை டாம்க்ரூஸ் விரைவில் மணக்க இருக்கிறார். நீண்டகால ஃப்ரெண்ட்ஷிப் திருமணத்தில் முடிகிறதாம்! மிஷன் மேரேஜ்!

p56b_1518501546.jpg

முழுக்க முழுக்க கால்பந்தையும் வடசென்னையையும் மையமாக வைத்து அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார் `அறம்’ இயக்குநர் கோபி நயினார். நிறைய ஹோம்-ஒர்க், பக்கா டீட்டெய்லிங்கோடு அவர் எழுதிக்கொண்டிருக்கும் இந்தக் கால்பந்துக் கதையில்  ஹீரோ ஜி.வி.பிரகாஷ். அடிச்சு விளையாடுங்க!

ரசியல் மேடைகளில் மட்டுமல்ல வீட்டிலும் சீமானின் காரம் அதிகம். எவ்வளவு அரசியல் பரபரப்புகள் இருந்தாலும் திடீர் திடீரென வீட்டின் கிச்சனுக்குள் நுழைந்து அதகளம் செய்வது சீமான் ஸ்டைல். உப்புக்கறி,  வான்கோழி பிரியாணி, கோழிக் குழம்பு, மீன் வறுவல் என வெரைட்டி மெனுக்களில் சமைத்து மனைவியிடம் லைக்ஸ் வாங்குவது சீமானின் சீரியஸ் ஹாபி. தம்பிமார்களும் பின்பற்றணும்!

p56c_1518501582.jpg

ங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் 2019 கிரிக்கெட் உலகக்கோப்பை யாருக்கு என்கிற விவாதங்கள் இப்போதே அனல் பறக்கிறது. ``இங்கிலாந்து அல்லது இந்தியாவுக்குத்தான் 2019 உலகக்கோப்பை’’ எனக் கணித்திருக்கிறார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத். ‘`இங்கிலாந்து செம ஃபார்மில் இருக்கிறது.   அந்த அணி கடைசியாகத் தங்கள் சொந்த மண்ணில் விளையாடிய 22 ஒருநாள் போட்டிகளில் 19-ல் வெற்றிபெற்றிருக்கிறது. இதே ஃபார்மில் போனால் இங்கிலாந்து ஈஸியாக உலகக்கோப்பையை வென்றுவிடும். இந்தியாவுக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், கேப்டனாக கோலிக்கு அதிக ஸ்ட்ரெஸ் இருக்கிறது. அது இங்கிலாந்தின் பேட்ஸ்மேன் ஜோ ரூட்டுக்கு இல்லை. அதனால் அவர் ப்ரெஷர் இல்லாமல் ஆடுவார்’’ எனச் சொல்லியிருக்கிறார் மெக்ராத். நீங்க சொன்னா சரிதான் ப்ரோ

p56d_1518501598.jpg

துல்கர் சல்மானின் கனவு வித்தியாசமானது. அது தற்போது நிறைவேறப்போகும் உற்சாகத்திலிருக்கிறார் துல்கர். ``நடிப்பில் அப்பா மம்மூட்டியைவிட  மோகன்லால் சாரின் நடிப்பு ரொம்பப் பிடிக்கும்’’ என்று ஓப்பனாகவே சொல்லும் துல்கர், விரைவில் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரமாண்ட மலையாளப் படத்தில் மோகன்லால் வாரிசாக நடிக்கிறார். மோகன்லால் - துல்கர் காம்போவுக்காக மலையாள சினிமா ஃபேன்ஸ் வெறித்தன வெயிட்டிங்கில் இருக்கிறார்கள். சூப்பரப்பு!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person

 

பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த சாதனை நீச்சல் வீரர் கு.நவரத்தினசாமி அவர்களின் பிறந்தநாள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.