Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

பலே திருடர்களும், தோல்வியில் முடிந்த திருட்டும்! வைரலாகும் லைவ் வீடியோ!

 

 
burglerrrr

 

திருடனுக்குத் தேள் கொட்டிய கதையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?!

அதே தான்...  ஆனால் இங்கே தேள் கொட்டவில்லை கல்... செங்கல் நன்றாகப் பதம் பார்த்து விட்டது. திருடனைத் தேள் கொட்டினால் என்ன, செங்கல் பதம் பார்த்தால் என்ன? எப்படியோ திருட்டு நிகழாமல் தடுக்கப்பட்டால் சரி தானே?! 

இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் அந்த லைவ் திருட்டு வீடியோ இது தான்...

திரைப்படங்களில் தான் பெரும்பாலும் இப்படியான காட்சிகள் அரங்கேறி நம்மை குலுங்கிச் சிரிக்க வைக்கும். ஆனால், இப்போது நிஜமாகவே அப்படியொரு காட்சி அரங்கேறி இணையத்தில் வைரலாகி இருப்பதோடு சீனக் காவல்துறையினரையும் புன்னகைக்க வைத்திருக்கிறது. ஷாங்காய் நகரில் ஒரு பெரிய மாலின் கண்ணாடிக் கதவை செங்கல்லால் உடைத்துத் திறந்து அத்துமீறி உள்ளே நுழைய முயற்சித்திருக்கிறார்கள். அப்படி செங்கல்லை வீசும் போது துரதிருஷ்டவசமாக திருடனின் கூட்டாளியே தெரியாத்தனமாக குறுக்கே வந்து விட உடைந்தது கண்ணாடிக் கதவில்லை. அந்தக் கூட்டாளியின் மண்டை. இனி என்ன செய்வது? தலையில் ரத்தம் சொட்டச் சொட்டச் திருடும் அளவுக்கு அவர்கள் ஜெகஜ்ஜாலத் திருடர்கள் இல்லை போல... அடிபட்ட கூட்டாளியைக் காப்பாற்றும் நோக்கில் அவர்கள் இருவரும் தங்களது திருட்டு முயற்சியைக் கைவிட்டு விட்டு அங்கிருந்து அகல்வதைப் போலான காட்சி சர்வலைன்ஸ் கேமராவில் பதிவாகி இருக்கிறது. இதைக் கண்ட ஷாங்காய் காவலர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி. திருடர்கள் இப்படி  அதி புத்திசாலித்தனமாகத் திருடத் திட்டம் போட்டால், அப்புறம் காவல்துறையினர் ஓவர் டைம் பார்த்து நடு இரவில் வேலை செய்யத் அவசியமே இல்லாமலாகி விடக்கூடும். என்று கூறிச் சிரிக்கிறார்களாம் அவர்கள்! 

 

http://www.dinamani.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மகனின் சாகசத்தைப் பார்க்க 20 நாடுகளைக் கடந்து ஒரு ஆண்டு பயணம்

 

 

தமது மகன் கலந்துகொள்ளும் பனிச்சறுக்குப் போட்டியைக் காண, சுமார் ஒரு ஆண்டு காலம் இருபது நாடுகளைக் கடந்து 17 ஆயிரம் கிலோமீற்றர் சைக்கிளில் பயணம் செய்த பெற்றோர், பொருத்தமான நாளில் பியோங்சாங் நகரை அடைந்து மெய்சிலிர்க்க வைத்துள்ளனர்.

6_Parents.JPG

தென் கொரியாவில் பியோங்சாங் என்ற இடத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சுவிற்சர்லாந்தை சேர்ந்த மிஸ்சா கேசர் என்ற வீரர் கலந்துகொண்டார். அவரது பனிச்சறுக்கு விளையாட்டைக் கண்டு ரசிக்க அவரது தந்தை குய்டோ ஹுவீலர் (55), வளர்ப்புத் தாய் ரீட்டா ரியூடிமான் (57) ஆகியோர் சைக்கிள் பயணமாக தென் கொரியாவின் பியோங்சாங் சென்றடைந்தனர்.

சுவிற்சர்லாந்தின் சூரிச்  உள்ள ஓல்டன் நகரில் இருந்து கடந்த வருடம் பெப்ரவரி மாதம் சைக்கிள் பயணமாக தென்கொரியா நோக்கிப் புறப்பட்ட இவர்கள், ஓராண்டு காலம், 20 நாடுகள் வழியாக 17 ஆயிரம் கிலோ மீற்றர்  தூரம் பயணம் செய்து பியொங் சாங் நகரை அடைந்து, அங்கு தங்களது மகனின் பனிச்சறுக்கு சாகச விளையாட்டை கண்டு ரசித்தனர். 

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், எங்களது சைக்கிள் பயணம் கடுமையான சவால் நிறைந்ததாக இருந்தது. மத்திய ஆசிய நாடுகளைக் கடக்க 4 ஆயிரம் மீற்றர் உயரமான மேடுகளைக் கடக்க வேண்டியிருந்தது. இதனால் மிகவும் களைப்படைந்தோம் எனத் தெரிவித்தனர்.

எனினும், எதற்காக இவ்வாறான ஒரு பயணத்தை மேற்கொள்ள முடிவெடுத்தார்கள் என்பது குறித்து தகவல்கள் இல்லை.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

உங்களுக்குத் தெரியுமா?

உலகின் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் நடந்த சுவாரயஸ்மான தகவல்கள் குறித்த சிறப்பு தொகுப்பு

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, lächelnd

சிங்களத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகராகவும், மனித நேயமிக்க அரசியல்வாதியாகவும் விளங்கிய காலஞ்சென்ற விஜய குமாரதுங்கவின் நினைவு தினம் இன்று.

முன்னாள் இலங்கை ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இவரது மனைவியாவார்.

Bild könnte enthalten: 1 Person, Anzug

 

சர்வதேசத் துடுப்பாட்ட வீரர்கள் அனைவரையும் நடுநடுங்க வைத்த மேற்கிந்தியத் தீவுகளின் அதிவேகப் பந்துவீச்சாளர், தற்போதைய நேர்முக வர்ணனையாளர் மைக்கேல் ஹோல்டிங்கின் பிறந்தநாள் 
Happy Birthday Michael Holding = Legend!

  • தொடங்கியவர்

இலங்கையில் சிக்கிய மிகவும் அழகானதும் அரிய வகையானதுமான பாம்பு

இலங்கையில் உயிர்வாழும் பாம்பு இனங்களில் மிகவும் அழகானதும் அரிய வகையானதுமான பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“மல்சரா” என அழைக்கப்படும் “பொல்மல் கரவல” என்ற பாம்பு ஒன்று அண்மையில் குருவிட்ட, தெப்பானவ பிரதேசத்தில் கிடைத்துள்ளதாக தெஹிவளை விலங்கியல் பூங்காவின் கல்வி அதிகாரி நிஹால் செனரத் தெரிவித்துள்ளார்.

விஷத்தன்மை குறைந்த இந்த பாம்பை கண்டவுடன் சிலர் கொல்ல முயற்சித்து வருவதாகவும் இந்த பாம்பை கொல்ல வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மல்சரா என்ற இந்த பாம்பு இனம் மரங்களை தமது இருப்பிடங்களாக கொண்டுள்ளது.

சிகப்பு நிறமான பூ அடையாளம், மஞ்சள் மற்றும் கறுப்பு நிறமான சிறிய கோடுகளை பாம்பின் தோலில் காணமுடியும்.

வயிற்று பகுதியில் பச்சை மற்றும் மஞ்சள் நிற கலவையுடன் காணப்படும் எனவும் நிஹால் செனரத் குறிப்பிட்டுள்ளார்.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com

  • தொடங்கியவர்

சூயஸ் கால்வாய் வழியாக முதன்முதலாக கப்பல் போக்குவரத்து தொடங்கிய நாள் (பிப்.17, 1869)

 
அ-அ+

மத்திய தரைக்கடலையும், செங்கடலையும் இணைக்கும் விதமாக 163 கி.மீ. நீளமும், 300 மீ அகலமும் செயற்கையாக தோண்டப்பட்ட கால்வாய்தான் ‘சூயஸ் கால்வாய்’. இது எகிப்தில் அமைந்துள்ளது. இக்கால்வாய் 1867-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் கப்பல் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. இக்கால்வாய் வெட்டப்பட்டதன் மூலம் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான கப்பல் போக்குவரத்து மிகவும் இலகுவானது. அதன்முன்னர் கப்பல் ஆப்பிரிக்காவைச் சுற்றியே பயணிக்க வேண்டியிருந்தது.

 
சூயஸ் கால்வாய் வழியாக முதன்முதலாக கப்பல் போக்குவரத்து தொடங்கிய நாள் (பிப்.17, 1869)
 
மத்திய தரைக்கடலையும், செங்கடலையும் இணைக்கும் விதமாக 163 கி.மீ. நீளமும், 300 மீ அகலமும் செயற்கையாக தோண்டப்பட்ட கால்வாய்தான் ‘சூயஸ் கால்வாய்’. இது எகிப்தில் அமைந்துள்ளது.

இக்கால்வாய் 1867-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் கப்பல் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. இக்கால்வாய் வெட்டப்பட்டதன் மூலம் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான கப்பல் போக்குவரத்து மிகவும் இலகுவானது. அதன்முன்னர் கப்பல் ஆப்பிரிக்காவைச் சுற்றியே பயணிக்க வேண்டியிருந்தது.

பிரெஞ்சு நிறுவனம் ஒன்றால் 1859-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கால்வாய் வெட்டும் பணி 8 வருடகாலமாக தொடர்ந்து நடந்தது. 1867-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. இக்கால்வாயின் வெற்றி பிரான்ஸ் நாட்டினரை பனாமா கால்வாயை அமைக்கத் தூண்டியது.

இக்கால்வாய் வழியாக ஏறக்குறைய 15 ஆயிரம் கப்பல்கள் ஓரு ஆண்டில் கடக்கின்றன. ஒவ்வொரு கப்பலும் இக்கால்வாயை கடக்க 16 மணி நேரம் ஆகிறது.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-

* 1881 - இலங்கையில் இரண்டாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

* 1890 - பிரித்தானிய நீராவிக்கப்பல் ஒன்று சீனக் கடலில் மூழ்கியதில் 400 பேர் கொல்லப்பட்டனர்.

* 1933 - நியூஸ் வீக் முதலாவது இதழ் வெளிவந்தது.

* 1936 - சிறுவர்களுக்கான அதிமேதாவி மாயாவி முதற்தடவையாக வரைகதைகளில் தோன்றினார்.

* 1947 - வொயிஸ் ஒஃப் அமெரிக்கா தனது ஒலிபரப்புச் சேவையை சோவியத் ஒன்றியத்துக்கு விஸ்தரித்தது.

* 1957 - மிசூரியில் வயோதிபர் இல்லம் தீக்கிரையாகியதில் 72 பேர் கொல்லப்பட்டனர்.

* 2000 - விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது.

https://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

உலகில் தலைசிறந்த சொல் 'செயல்' - சிவகார்த்திகேயனுக்கு சாத்தியமானது எப்படி? #HBDSivakarthikeyan

 
 

75 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகம் பல்வேறு விதமான கலைஞர்களைச் சந்தித்து வருகிறது. நடிகர் திலகம், புரட்சித் தலைவர் என்று ஒரு காலத்தில் மக்கள் மனதில் கம்பீரமாக நின்று தங்கள் கலைப் பயணத்தை மேற்கொண்ட காலத்திற்குப் பிறகு, அடுத்த தலைமுறையினர் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி, நம் தமிழ்த் திரையுலகை வேற லெவலுக்கு அழைத்துச் சென்ற பெருமை ரஜினிகாந்துக்கும், கமல்ஹாசனுக்கும் உண்டு. அவர்களுக்குப் பிறகு, தமிழ் சினிமா யாரை நம்பி இயங்கப்போகிறது என்ற கேள்விக்குப் பதிலாய் தனக்கென்று ஒரு ஸ்டைலை வகுத்துக்கொண்டு களமிறங்கினார்கள் விஜயும், அஜித்தும்.
 

சிவகார்த்திகேயன்

 

இந்தத் தலைமுறையினரின் சிம்மசொப்பனமாக விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என ஒரு பட்டாளமே இயங்கி வந்தாலும், அடுத்த தலைமுறையினரின் 'மாஸ் ஸ்டார்' யார் என்ற கேள்விக்குப் பதில், சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதிதான்! ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா... எனப் பல முன்னணி நடிகர்களைப் பார்த்து வளர்ந்த இவர்கள்தாம், ஜென் Z-ன் 'ஃபர்ஸ்ட் சாய்ஸ்' நடிகர்கள். இந்த இருவரில் ஒருவரான, சிவகார்த்திகேயனுக்கு, இன்று பிறந்தநாள்!. இந்த பர்த்டே பேபியின் வளர்ச்சியைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்யலாமா?

விஜய் டிவி-யில் 'கலக்கப்போவது யாரு` நிகழ்ச்சி வந்தபிறகு யாராலும் அந்த நிகழ்ச்சியைப் பார்க்காமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு அதில் பங்கேற்பவர்களின் திறமைகள் இருந்தது, இருந்தும் வருகிறது. அதில், ஒரு சாதாரண பங்கேற்பாளராகத் தோன்றி, இன்று தமிழ்த் திரையுலகில் தவிர்க்கமுடியாத நாயகனாய் வலம் வந்துகொண்டிருக்கிறார், சிவகார்த்திகேயன். விஜய் டிவி-யில் இவர் எடுத்து வைத்த ஒவ்வோர் அடியும் இவர் வாழ்வைச் செதுக்கியது. பிறகு, தன் முயற்சியாலும் கடின உழைப்பினாலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளர் ஆனார். இவர் பேச்சுக்கும், இடையிடையே கொடுக்கும் காமெடி கவுன்ட்டர்களுக்கு ரசிகர்கள் உருவானார்கள். பட்டி தொட்டி எங்கும், 'தொகுப்பாளர்' சிவகார்த்திகேயனின் மாடுலேஷனுக்கு லைக்ஸ் குவிந்தது. அந்நிகழ்ச்சியில் இவரது செயல்பாடுகள், 'சிரிச்சாப் போச்சு' சுற்றில் வரும் கலைஞர்களுடன் சேர்ந்து இவர் செய்த அட்ராசிட்டிகளுக்கு இன்னும் யூ-டியூபில் ரிப்பீட் ஆடியன்ஸ் இருக்கிறார்கள்.

தன் திறமையை, திரைக்கு வரும் முன்பே மக்களுக்கு உணர்த்தி ஸ்டாராக ஜொலித்தவர். இவரது செயல்பாடுகளையும் திறமையையும் பார்த்து இயக்குநர் பாண்டிராஜ் 'மெரினா'வில் வாய்ப்பு கொடுத்தார். கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்தத் தொடங்கிய சிவா, இன்றுவரை தனக்கு வரும் வாய்ப்பினை கச்சிதமாகப் பயன்படுத்தி, தன்னை மெருகேற்றி, தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார்.  

 

சிவகார்த்திகேயன்

இவரின் முதல் படமான 'மெரினா'வில் செந்தில்நாதனாக இவரது யதார்த்த நடிப்பு அன்று பரவலாகப் பேசப்பட்டது. படத்தில், 'பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்' என்ற எஸ்.எம்.எஸ் படித்து, ஓவியாவை வெறுப்பேற்றி, அவரிடம் 'லைட்டா பசிக்குதா சொப்பனசுந்தரி?' எனக் கேட்ட இவரது காதல் வசனம், காதல் ஜோடிகளுக்குப் பிடித்தமானது. 'சினிமாவில் நடிச்சாச்சு' என்றில்லாமல், முதல் படத்தை முடித்த கையோடு பல நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக தன் பயணத்தைத் தொடர்ந்தது பாராட்டக்கூடிய ஒன்று. 'மெரினா' வெளியான சில மாதங்களில் தனுஷுடன் இணைந்து நடித்த '3' இவரை மேலும் ஒரு படி ஏறச்செய்தது. குமரனாக இவரது தோற்றம் இவரைத் தவிர யாருக்கும் பொருந்திருக்காது என்று பல விமர்சனங்களும் பாரட்டுகளும் குவிந்தன. 'சொல்லு நீ ஐ லவ் யூ' என்று தனுஷுடன் சேர்ந்து ஸ்கூல் யூனிஃபார்மில் இவரது ஆடிய டான்ஸூக்கு ஆடியன்ஸ் அதிகம். அதிலும், 'நானெல்லாம் ஸ்கூலுக்கு வர்றதே பெருசுடா.. என்னைப் போய் டியூசனுக்கெல்லாம் வரச் சொல்றியேடா` என்ற டயலாக் 'கடைசி பெஞ்ச் கார்த்தி' ரகங்களின் ஆல் டைம் ஃபேவரைட். 

அதே வருடத்தில் 'மனம் கொத்திப் பறவை'யில் மீண்டும் ஹீரோவாக தன் முத்திரையைப் பதித்து வெகுஜனங்களின் பார்வையை இவர் பக்கம் திரும்பச்செய்தார். இதில் வரும் கண்ணன் (சிவா), சூரி, சிங்கம்புலி என நகைச்சுவை நடிகர்களோடு நடித்த விதம், 'என்ன சொல்ல ஏது சொல்ல...' என ஆத்மியாவுடன் பாடிய டூயட், அந்தத் தருணத்தில் பலர் உதடுகளில் உச்சரித்த பாடல் வரிகள். இந்தப் படத்தின் மூலம் இவரது க்ராஃப்ட் அடுத்த படி ஏறியது. அடுத்ததாக 'கேடிபில்லா கில்லாடிரங்கா' படத்தில் விமலுடன் கைகோர்த்த இந்தப் பட்டை முருகன், பட்டையைக் கிளப்பினார். ஜெராக்ஸ் கடை 'பாப்பா'வின் பேச்சிற்கு, 'பட்டை முருகா... இப்படித்தான் பல பசங்களைக் குழியில தள்ளப்பாப்பாய்ங்க, லைக் பண்ணாத அன்லைக் பண்ணு' என்ற இவரது மைண்ட் வாய்ஸ், பல இளைஞர்களின் ஓபன் கமென்ட். விமலுடனும் சூரியுடனும் நடிப்பில் கில்லாடி ரங்காவாகத் தன்னை நிரூபித்தார் சிவகார்த்திகேயன்.
  

சிவகார்த்திகேயன்

அடுத்து நடித்த 'எதிர்நீச்சல்' அனைவராலும் பேசப்பட்டது. 'குஞ்சிதபாதம்' என்ற தன் பெயருக்காக ஓடிய மாரத்தான், இளைஞர்களை ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற மோடிவேஷனுக்கான திரி. படத்தில் இடம்பெற்ற 'ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்...' என்ற பாடலின் மூலம்,  தான் ஒரு ஹீரோ மெட்டீரியல் என்பதை உணர்த்தினார், சிவா. இவர் போட்ட எதிர்நீச்சலுக்குக் கிடைத்தது அடுத்த 'போஸ் பாண்டி' வாய்ப்பு. கிராமத்து இளைஞனாக இவரது அணுகுமுறை தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம மக்களின் மனதிலும் நாற்காலி போட்டு உட்கார வைத்தது. 'வருத்தப்படாத வாலிபர் சங்க' தலைவராக இவர் நடிப்பிலும், டயலாக் டெலிவரியிலும் மாஸ் காட்டி அதிரவைத்தார். சிவனாண்டி மாமனாரிடம் சீண்டி, லதா பாண்டியைக் காதலித்த இவரின் 'பாக்காதே... பாக்காதே...' பாடலைக் கேட்காத ஆட்களே இல்லை. இவர் கூறிய, 'பட்டப் பகலிலே, பங்குனி வெயிலிலே எனைப் பார்த்துச் சிரிக்கும் நிலா!' வசனம் ஒன்சைடு காதலர்களின் ஒரே சாய்ஸ். இதே படத்தில் இடம்பெற்ற 'ஊதா கலரு ரிப்பனி'ன் சாயல் இன்னும் போகவில்லை. 

இந்தப் படத்தின் வெற்றி இவருக்குத் தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றங்களை உருவாக்கியது என்றே சொல்லலாம். ஆகவே, 'மான் கராத்தே' படத்தின் டிரெய்லர் வெளிவந்த உடனே கொண்டாடித் தீர்த்தார்கள் சிவாவின் விழுதுகள். சிட்டி பையனாக இருந்த சிவாவின் நடனம் இந்தப் படத்தில் அடி தூள்ள்ள்... ராயபுரம் பீட்டராக இருந்த சிவா பாக்ஸர் பீட்டராகத் திரையரங்கில் தோன்றும்போது, வந்த விசில் சத்தமும், கைதட்டலும் கணக்கில் அடங்காதவை. முதல் முறையாக முன்னணி கதாநாயகி ஹன்சிகாவுடன் நடித்தபோது இவர் கையாண்ட விதம்தான், சிவாவின் கூடுதல் பலம். 'மான் கராத்தே' சிவாவின் சோலோ ஸ்டில், பல சிவகார்த்திகேயன் ரசிகர்களின் பீரோக்களை அலங்கரித்திருக்கிறது. 
 

சிவகார்த்திகேயன்

ஒரு பேட்டியில், 'அடுத்த படத்துல போலீஸ் கேரக்டர் பண்ணனும்னு சொல்லியிருக்கார் இயக்குநர்' என்று சொன்ன சிவா கேஷூவலாக 'ஐ எம் ஸோ கூல்' என்று படத்தை வெற்றிகரமாக முடித்து ரசிகர்களின் மத்தியில் மதிமாறனாக மணிமகுடம் சூட்டிக்கொண்டார். சிவாவின் அடுத்த படம் என்ன? கேள்வி பலர் மனதில் எழ, பல தடைகளைத் தாண்டி திரையைத் தொட்டது, 'ரஜினி முருகன்'. 'ஜிகிரு ஜிகிரு ஜிகிரே...' பாடலில் சிவாவின் குத்தாட்டத்திற்கு அரங்கம் அதிர, 'உன்மேல ஒரு கண்ணு' பாடல் காதலில் திளைக்க வைத்தது. 'நம்பி வாங்க... சந்தோசமா போங்க...' எனப் படத்திலும் நிஜத்திலும் சொல்லியவர்தான், இந்த எஸ்.கே!
 

பிறகு வந்த 'ரெமோ' சிஸ்டர், நம் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். சிவா - சதீஷின் காமெடி கெமிஸ்ட்ரி வழக்கம்போல மார்க் அள்ளியது. 'வாடி என் தமிழ்செல்வி` என்று இவர் ஆடிய ஆட்டத்திற்கு மயங்காத ஆட்கள் இல்லை. ஒரு ஹீரோவாக தன்னை முழுமையாக உணர்ந்து, நடனத்தில் இவரது கடின உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி அது. 

சிவகார்த்திகேயன்

 

'நீ வெறும் எட்டு மணி நேரம்தான் சேல்ஸ்மேன். மீதி இருக்கும் பதினாறு மணிநேரம் கன்ஸ்யூமர்', என்று கார்ப்பரேட்டின் முகத்திரையை 'அறிவு'ள்ள இளைஞனாகப் புரியவைத்த கலைஞன்.  ஒவ்வொரு கன்ஸ்யூமருக்கும் கார்ப்பரேட் உலகில் இருப்பவர்களுக்கும் எடுத்துக்காட்டிய காட்சிகளும், 'இனி விளம்பரங்களில் நடிக்கமாட்டேன்' என்று நிஜத்தில் இவர் எடுத்த முடிவும் சமூக அக்கறையுள்ள மனிதனாக இன்னும் ஒருபடி உயரத்தில் ஏற்றியது. 'கருத்தவன்லாம் கலீஜாம்' என்று திரையில் இவர் ஆட, திரைக்கு முன்னால் கொண்டாடித் தீர்த்தார்கள் சிவகார்த்திகேயன் ப்ரதர்ஸ். அன்று பல ஸ்டார்களின் படங்களுக்கு டிக்கெட் வாங்க வரிசையில் நின்றார் சிவகார்த்திகேயன். இன்று சிவகார்த்திகேயனின் கால்ஷீட்டிற்காகப் பலர் வரிசையில் காத்திருக்கின்றனர், என்பதில் இருக்கிறது சிவகார்த்திகேயனின் உழைப்பு!

வாழ்வில் மட்டுமல்லாமல், திரைத்துறையிலும் பல்வேறு விதமான இன்னல்களைச் சந்தித்து இன்று மக்கள் முன் 'நல்ல ஹீரோ' அடையாளத்தோடு வளர்ந்து நிற்கிறார், எஸ்.கே. சூப்பர் ஸ்டாருக்கும், உலக நாயகனுக்கும், தல தளபதிக்கும் கைத்தட்டி விசில் அடித்த இவரது கைகளில், சமீபத்தில் விஜய் கையால் விருது கிடைத்தது. 

ஒருமுறை கவிஞர் வைரமுத்து முன்னால், 'நீங்கள் மட்டும் கள்ளிக்காட்டில் பிறக்காமல் கலிஃபோர்னியாவில் பிறந்திருந்தால், ஹாலிவுட்டிலும் வைத்திருப்பார்கள் மறுக்காமல் ஆறு பாடல்கள்' என்று சிவா மிமிக்ரி செய்தபோது, வைரமுத்து சொன்னார், 'எப்போதும் நிஜத்தைவிட நகலுக்குத்தான் மவுசு அதிகம்' என்று. அந்த ஒன்றை தனது டிரேட் மார்க்காக கொண்டு ஆரம்பித்த இந்தக் கலைப்பயணம் இன்று பல வெற்றிகளைத் தாண்டி உச்சத்தை அடைய உத்வேகத்துடன் சென்றுகொண்டிருக்கிறது. 
     

சிவகார்த்திகேயன்

நிகழ்ச்சித் தொகுப்பாளராக 'தி நாமினீஸ் ஆர்...' என்று வாய் வலிக்க விருதுகளை அறிவித்தவர், இன்று நடிகராக விருதுகளை அறுவடை செய்துகொண்டிருக்கிறார். நடிகர் மட்டுமல்லாமல், பல இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். மக்களை மகிழ்விக்க சிவா ஓடும் இந்த மாரத்தான் ஓட்டம் என்றும் தொடரவும், அது இன்னும் பல மடங்கு பெருகவும் வேண்டும்.

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு, பொன்ராம் இயக்கத்தில் இவர் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், 'சீமராஜா' என டைட்டிலும் அறிவித்திருக்கிறார்கள். பொருத்தமான தலைப்புதான். 

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிவகார்த்திகேயன்!

https://cinema.vikatan.com

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

twitter.com/aysha_yusuff

மொபைல் சார்ஜ் போட்டவன் நிலைமையும் மனைவியைப் பிரசவ வார்டுக்கு அனுப்புனவன் நிலைமையும் ஒண்ணு.... ஒரு இடத்துல உட்காரவே மாட்டாங்க....

twitter.com/ajmalnks

அரிவாளை வைத்து கேக் வெட்டும் நிலையில் தமிழகம்... படித்தவர்கள் பக்கோடா விற்பதைப் பெருமையாகக் கருதும்நிலையில் மத்திய அரசு.

twitter.com/ItzRavi___

பிராய்லர் கோழி சாப்டக் கூடாது. ஒரு தமிழனா தமிழனின் வளர்ப்பான நாட்டுக்கோழிய இன்னைக்கு மதியத்துக்குச் சாப்டலாம்னு நினைச்சா, எதித்த வூட்டுக்காரன் கோழிய மேய விட்டுட்டு வாசல்ல காவலுக்குக் கூடவே நிக்குறான்.

சிஸ்டமே சரியில்ல!

p104a_1518520378.jpg

twitter.com/manipmp

தன் முடிவுக்கு எவன் ஒத்துவரலைனு கண்டுபிடிக்கவே ஆலோசனைகள் கேட்கப்படுகின்றன.

twitter.com/Kannan_Twitz

போண்டா மாதிரி ஒரே ஷேப்பில் இருந்த வாழ்க்கையை... இப்படி பக்கோடா மாதிரி டிசைன் டிசைனா மாத்தறதெல்லாம் வேற லெவல். #பக்கோடா.

twitter.com/sandy_offl17

சிலர் காயப்படுத்தும்போது வராத வலி, அதை நியாப்படுத்தும்போது வந்து விடுகிறது...

twitter.com/Kadharb32402180

என்னதான் கண் எதிரே 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டாலும்... பெட்ரோல் போட்டானா இல்லையானு லைட்டா டேங்கை ஆட்டி பாக்குறது எல்லாம் என்ன மாதிரி டிசைனோ!

twitter.com/manipmp

எளிதில் தீப்பற்றக் கூடியது... `வயிறு’!

p104e_1518520492.jpg

twitter.com/iam_susi

காங்கிரஸ் சரியாகப் பணியாற்றியிருந்தால்,  எங்களுக்கு இந்த அளவு சுமை இருந்திருக்காது #பிரதமர்_மோடி. அவங்க சரியா பணியாற்றி இருந்தால், உங்களுக்கு பிரதமர் பதவி கிடைச்சி இருக்காது #மக்கள்.

twitter.com/mufthimohamed1

இப்பல்லாம் டேட்டாவை ஆஃப் பண்ணி, பாக்கெட்ல மொபைலை வச்சாத்தான் ஊரே அமைதியா இருக்குற மாதிரி மனசுல எண்ணம் உருவாகுது.

twitter.com/Kozhiyaar

மகனுக்குத் தினமும் கேம்ஸ் பீரியட் இருந்தா பரவாயில்லை. மணல் விக்கிற விலைக்கு அவர் எடுத்துட்டு வர மணலை வச்சு ஒரு வீட்டச் சீக்கிரமா கட்டிக்கலாம்!!

twitter.com/Aruns212

உள்பாக்கெட் என்பது சட்டையின் பேட்டர்ன் லாக்! #சட்டைக்குச் சொந்தக்காரர் மட்டுமே ஓப்பன் பண்ண முடியும்!

p104c_1518520410.jpg

twitter.com/ungalhabeeb

வாழ்க்கைனு பேரு வச்சதுக்குப் பதிலா வாசிங்மெஷின்னு பேரு வச்சுருக்கலாம் நல்லா அடிச்சுத் தொவைக்குது...

twitter.com/sashi16481

யார் சார் நீங்க? ஏன் எங்க வீட்டுக்குள்ளே நுழையறீங்க?

நகருப்பா, நான் போற இடத்துக்கு கூகுள் மேப் இந்த வழிதான் காட்டுது!

twitter.com/var114

ருசிக்குச் சாப்பிட்டா கடைசிவாய்க்குச் சுவை அதிகம்!

பசிக்குச் சாப்பிட்டா முதல்வாய்க்குச் சுவை அதிகம்!!

twitter.com/yugarajesh2

‘தர்மயுத்தத்தை’ அரசியல்வாதியும்

‘உண்ணாவிரதத்தை’ ஆன்மிகவாதியும் காமெடியாக்கிட்டாங்க!

twitter.com/rnydeen

ஒருமுறையேனும் காதல் பழகுங்கள் ராஜாவை ரசிக்க, கவிதைகள் லயிக்க, தனிமையில் அழ, பசி மறக்க, கனவுகளில் மறக்க மற்றும் பின்னொரு நாள் இவற்றை அசைபோட!

p104d_1518520426.jpg

twitter.com/Kozhiyaar

டாய்லெட்ல சந்திச்சா பேசறதோட நிறுத்திக்கங்கப்பா, கையெல்லாம் கொடுத்துத் தர்மசங்கடப் படுத்தாதீங்க!

twitter.com/amuduarattai

புல்லட்டுக்கு ஹாரன், `தேவையில்லாத ஆணி’ என அறிக!

twitter.com/Kannan_Twitz

பகலில் வெயிலாய் அடித்து!

இரவில் குளிராய் அணைக்கிறாய்.

https://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆமை நடனம்... ஆம்லெட்... மெரீனாவில் 125 முட்டையிட்ட கடல் ஆமை... ஒரு லைவ் ரிப்போர்ட்!

 
 

நண்பருடன் இரவு உணவை முடித்துவிட்டு மெரினா கடற்கரையை நெருங்கியபோது மணி 8.30-ஐ தொட்டிருந்தது. கடலை நோக்கி நடந்து சென்றோம். வானில் நிலவைக் காணவில்லை. கடலின் உள்ளே தொலைவில் மீன்பிடிப்படகுகளின் விளக்குகள் விட்டுவிட்டு ஒளிர்ந்துகொண்டிருந்தன. ”எவ்வளோ நேரம் நிக்கிறது? கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு கிளம்புவோம்” என நாங்கள் மணலில் அமர்ந்த சற்று நேரத்திற்கெல்லாம் அந்த இடத்திற்குப் பக்கத்தில் மொபைல் ஃபிளாஷ் லைட்டுகள் மின்னத் தொடங்கின. அலைகள் தொட்டுவிட்டுப் போகும் இடத்தில் ஏழெட்டு பேர் கூடியிருந்தார்கள். அவர்கள் போட்டோ எடுத்துக்கொண்டிருந்த அந்த உருவம் மெதுவாக அசைந்ததைப் பார்த்தவுடன் எங்கள் இருவருக்குமே புரிந்து போனது. அது நிச்சயமாக ஒரு ஆலிவ் ரிட்லி ஆமைதான். ஏனென்றால் ஒரு வாரத்திற்கு முன்னால்தான் நீலாங்கரை கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் வரை இரவில் "ஆமைகளைக் காக்கும் நடை"-யில் கலந்துகொண்டிருந்தோம். ஆனால், அன்று இறந்துபோய் கரை ஒதுங்கிய ஆமைகளை மட்டுமே பார்க்க முடிந்தது. அன்றைக்கு நாங்கள் தெரிந்துகொண்ட தகவல் பெரும்பாலும் நள்ளிரவிற்கு மேல்தான் ஆமைகள் முட்டையிடுவதற்காகக் கரைக்கு வரும்.

 

ஆனால், அப்போது மணி ஒன்பதைக்கூட தாண்டவில்லை. சரி எதற்கும் போய்ப் பார்ப்போம் என்று யோசித்தவாறே அருகில் சென்று பார்த்தோம். ஓர் ஆமை கடலிலிருந்து மெதுவாக தவழ்ந்து கரையை நோக்கி வந்துகொண்டிருந்தது. அதைத்தான் வெவ்வேறு கோணங்களில் படம் பிடித்துக்கொண்டிருந்தது அந்தக் கூட்டம். அது மெதுவாக கரையேறிக்கொண்டிருக்கும்போதே கூட்டத்திலிருந்து ஒரு குரல்... "ஏ..வாங்கப்பா ஆளுக்கொரு பக்கமா பிடிங்க ஆமையைக் கடலுக்குள்ளே தூக்கி விட்டுருவோம்".

 

“என்னது கடலுக்குள்ள தூக்கி விடப்போறீங்களா... அட நீங்க வேற சும்மா இருங்க பாஸ் அது முட்டை போடத்தான் வெளியவே வந்துருக்கு” என நாம் சொன்னதும் அவர்கள் புரிந்துகொண்டார்கள். ’மொபைலிலிருக்கும் டார்ச்சை கொஞ்சம் ஃஆப் பண்ணிடுங்களே’ன்னு சொன்னதும் உடனே அணைத்துவிட்டு ஆமைக்கு வழிவிட்டார்கள். ஆமை சரியாக மணல் சரிவு தொடங்கும் இடத்திற்கு சற்று மேலே வந்து நின்றது. அது அடுத்ததாக என்ன செய்யப்போகிறது என்பதைப் பார்க்க அனைவரும் ஆவலோடு காத்திருந்தார்கள். 

ஆலிவ் ரிட்லி

ஆமை முட்டையிடுவதற்காக இடத்தைத் தேர்வுசெய்து சுத்தப்படுத்த ஆரம்பித்தது. கடலில் நீந்துவதற்காகப் பயன்படும் அதன் துடுப்புகளைத்தான் மணலைத் தோண்டுவதற்குப் பயன்படுத்துகிறது. தோண்டுகிறது என்பதைவிட மணலைத் துடுப்புகளால் வாரி இறைக்கிறது என்று வைத்துக்கொள்ளாலாம். அப்படியே கால்மணி நேரம் ஆகிவிட கூட்டம் கலைய ஆரம்பித்தது, ஒரே ஒருவரைத் தவிர. வேறு ஊரிலிருந்து வந்திருப்பார்போல. ’இவ்வளவு பெரிய ஆமையை பார்த்ததே இல்லை’ என்று கடைசிவரை சொல்லிக்கொண்டே இருந்தார். இடையில் அவருக்கு போன் வரவும் "நான் கொஞ்சம் பிஸி" என்று கூறிவிட்டு, ’இன்னைக்கு ஆமை முட்டை போடுறத பாக்காமல் இடத்தை விட்டு நகர்வதில்லை’ என்று தனக்குத்தானே கூறிக்கொண்டார். ஆமைக்கு அருகே நாங்கள் இருவரும் நின்றுகொண்டிருக்க ஆமை அமைதியாக மணலைத் தோண்டிக்கொண்டிருக்க, கடல் அலையின் இரைச்சலையும் மீறி அப்பொழுது அவர் கேட்ட கேள்வி தெளிவாக எங்கள் காதுகளை வந்தடைந்தது. "ஆமை முட்டையில ஆம்லேட் போடலாமா?" இந்தக் கேள்வியை அவர் கேட்டதும் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது, "இந்த ஆமை பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகளின் பட்டியலில் இருக்கிறது முட்டையை எடுத்தால் கைது செய்யப்படலாம்" என்று நாங்கள் கூறியதை அவர் சீரியஸாக எடுத்துக்கொண்டது போலவே தெரியவில்லை.

ஆமை கரைக்கு வந்து அரைமணி நேரத்திற்கு மேல் ஆகியிருந்தது. அதற்குள்ளாக ஆமை சுற்றியிருந்த மணலைத் தோண்டியிருந்தது, முன்புற துடுப்புகள் முன்பைவிட மெதுவாக அசைந்துகொண்டிருந்தன. அவ்வப்போது ஒரு பெருமூச்சு ஆமையிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. இதற்குள் நாங்கள் எங்களுக்குத் தெரிந்த ஒருவரிடம் இதைப்பற்றி தகவல் சொல்லவும், அவர் அந்தப் பகுதியில் ஆமை முட்டைகளை சேகரிப்பவர்களிடத்தில் தகவல் தெரிவித்திருந்தார், ஆமை முட்டைகளை சேகரிப்பவர்கள் உடனடியாக அங்கே கிளம்பி வந்துகொண்டிருந்தார்கள். சுற்றி இருந்த கடையும் மூடிவிட்டதால் அந்த இடத்தில் வெளிச்சம் குறைவாகவே இருந்தது. நாங்கள் இருந்த இடத்தைச் சுற்றி மக்கள் இருந்தாலும் அவர்களுக்கு அங்கே ஆமை இருப்பதே தெரியவில்லை.  திடீரென ஆமை அது தோண்டிய இடத்தை விட்டு நகரத் தொடங்கியது. நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் போனில் இருந்த டார்ச் மூலமாக குழியைத் தோண்டி முட்டையைத் தேடத் தொடங்கினார் அந்த ஆம்லெட் கேள்வியைக் கேட்டவர். ஆனால் அந்தக் குழியில் முட்டை எதுவுமே இல்லை, அவர் மொபைலில் இருந்துவந்த வெளிச்சத்தில் ஆமையைப் பார்த்த அருகில் இருந்த இளைஞர் கூட்டம் ஆமையை நோக்கி வரத்தொடங்கியிருந்தது.

திரும்பிப் போகும் ஆமை

ஆமைக்கு முதலில் குழி தோண்டிய இடம் திருப்தியாக இல்லை போலும். அது இன்னும் சற்று மேலே முன்னேறி வந்து மற்றொரு இடத்தில் குழி தோண்டத் தொடங்கவும், இளைஞர் கூட்டம் வந்து சேரவும் சரியாக இருந்தது. பத்துப் பதினைந்து பேர்களுக்கு மேல் இருந்த அவர்கள் செய்ததுதான் அதிர்ச்சியின் உச்சம். நெருங்கி வந்தவர்கள் இஷ்டத்திற்கு ஆமைக்கு அருகில் இருந்தவாறே பல செல்ஃபிகளை எடுத்துத் தள்ளினார்கள். அதுமட்டுமின்றி காலால் ஆமையை மிதித்துத்தள்ளுவதும், அதன் துடுப்புகளை இழுத்துப்பார்ப்பதுமாக இருந்தார்கள். "மச்சான் ஒடு கல்லு மாதிரி இருக்குடா... இதுல நம்ம பேர எழுதுவோமா", "ஆமை மேலே ஏறி அப்படியே ஒரு ரைடு போவோமா" எனப் பல விபரீத யோசைனைகளும் அவர்களிடமிருந்து வந்தன. கடைசிவரை ஆமையைத் தொந்தரவு செய்த வண்ணமே இருந்தது அந்தக் கூட்டம். ஏதோ தவறு நடக்கிறது; அங்கே இருப்பது தனக்கு ஆபத்து என்று ஆமை உணர்ந்திருக்கக்கூடும். மணலைத் தோண்டுவதை விட்டுவிட்டு கடலை நோக்கி நகர ஆரம்பித்தது. அப்படியும் அதை விடாமல் துரத்திய அந்தக் கூட்டம் ஆமை கடலில் சென்று மறையும் வரை  தொந்தரவு செய்துவிட்டுதான் கிளம்பியது. ஆம்லெட்டை எதிர்பார்த்துக் காத்திருந்தவரும் முட்டை இல்லாததால் ஏமாற்றத்தோடு வீட்டிற்குக் கிளம்பினார்.

அனைவரும் கிளம்பிவிட நானும் நண்பரும் மட்டும் ஆமை முட்டைகளை சேகரிப்பவர்களுக்காக அந்த இடத்தில் காத்திருந்தோம். சற்று நேரத்தில் அங்கே வந்த இரண்டு பேர், ஆமை தோண்டிய இரண்டு குழிகளையும் பரிசோதித்துப் பார்த்துவிட்டு முட்டை இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்கள். அங்கே நடந்த சம்பவங்களைக் கூறவும் வருத்தப்பட்டவர்கள் தொல்லை செய்யாமல் அமைதியாக இருந்திருந்தால் ஆமை முட்டை இட்டிருக்கும் என்று தெரிவித்தார்கள். அவர்களிடம்  சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக்கொண்டு ரூமிற்குக் கிளம்பினோம், சற்று தூரம் சென்றவுடனேயே கடந்த வாரம் கடற்கரையில் பார்த்த ஓர் ஆமை நினைவுக்கு வந்து சென்றது. நீலாங்கரைக்கும் பெசன்ட்நகருக்கும் இடைப்பட்ட இடங்களில் இறந்து கிடந்த நான்கைந்து ஆமைகளில் அதுவும் ஒன்று. முட்டையிடுவதற்காகக் கடலை நோக்கி வரும்பொழுது ஏதோ ஒன்றால் அது பலமாகத் தாக்கப்பட்டிருக்கக்கூடும், இருந்தாலும் கரையை நோக்கிய பயணத்தில் இருந்து பின் வாங்காத அந்த ஆமை கரையில் இருந்து சற்று மேலேறிய பின்னர் உயிரை விட்டிருக்கிறது. உடல் சிதைந்து வயிற்றில் இருந்து முட்டைகள் வெளியேறிக் கிடந்த அதை அந்த நிலைமையில் பார்ப்பதற்கே பாவமாக இருந்தது. இப்பொழுது முட்டையிட முடியாமல் திரும்பிச் சென்ற ஆமைக்கும் அது போன்ற ஒரு நிலைமை ஏற்பட்டுவிடுமோ என்று  யோசிக்காமல் இருக்க முடியவில்லை.  அரைமணி நேரம் கடந்திருக்கும். மெரினா கடற்கரையில் இருந்து அழைப்பு " சீக்கிரம் இங்க வாங்க இன்னொரு இடத்துல ஆமை முட்டை போடுது". கடந்த முறை  ஆமையின் மரணத்தை பார்த்த எங்களுக்கு ஒரு புதிய உயிர் பிறப்பதை பார்க்க இயற்கை அளித்த வாய்ப்புதான் இது. அடுத்த கால்மணி நேரத்தில் அங்கே இருப்பதாக உறுதியளித்துவிட்டு  பைக்கை  மீண்டும் மெரினாவிற்கே திருப்பினோம். 

முட்டை

அங்கே போனால் நாங்கள் பார்த்த அதே ஆமை முன்னால் இருந்த இடத்தை விட்டு சற்றுத் தள்ளிவந்து முட்டையிட்டுக்கொண்டிருந்தது. இங்கே அதைத் தொந்தரவு செய்வதற்கு யாருமே இல்லை. மணியும் பத்தைத் தாண்டிவிட்டதால் மக்கள் நடமாட்டம் இல்லவே இல்லை, தவிர ஆமை முட்டை இடத்தொடங்கியதுமே ஒரு விதமான மயக்க நிலைக்குச் சென்று விடுவதால் இடையூறு இருந்தாலும் அது அதை கண்டுகொள்வதில்லை. அசைவற்ற நிலை, அவ்வப்போது ஒரு பெருமூச்சு அவ்வளவுதான் ஆமை முட்டை இடும்பொழுது நமது வெளிப்பார்வைக்கு தெரிவது. ஆனால், அதன் பின்புறமாக ஒரே நேரத்தில் மூன்று முட்டை வரைக்கும் அது தோண்டிய குழிக்குள் விழுந்து கொண்டிருந்தன. சற்று நேரத்தில் முட்டைகளை இட்டு முடித்ததும் பின்புறத் துடுப்புகளால் மணலை இழுத்து குழியை மூட ஆரம்பித்தது ஆமை. அதன் பிறகு அதன் மேற்பரப்பைக் கடினமாக்கும் வகையில் அதன் உடலைத் தூக்கி மேலும் கீழுமாக அடிக்கிறது. அதற்கு "ஆமை நடனம்" (Turtle Dance) என்று பெயராம். முட்டைகளைப் பாதுகாப்பதற்காக தாய் ஆமை செய்யும் பாதுகாப்பு ஏற்பாடுதான். இதனால் முட்டைகள் இருக்கும் குழியின் மேற்புறம் கடினமாக ஆக்கப்படுகிறது, ஒவ்வொரு அடுக்குகளாக மணலை உட்புறமாக இழுத்து அதை கடினமாக்கும் பணியை செய்கிறது தாய் ஆமை.

முட்டை

 'ஆமை நடனம்' முடிந்த பிறகு மீண்டும் துடுப்புகளால் மணலை வாரி இறைத்து அப்படி ஒரு குழி ஏற்படுத்தியதற்கான தடயமே இல்லாமல் செய்கிறது. குழியை விட்டு சில அடிகள் தொலைவு வரைக்கும் அது வந்துபோன தடயமே இல்லாமல் இருக்கிறது. எல்லாவற்றையும் முடித்துவிட்டு மீண்டும் கடலை நோக்கித் திரும்பியது நாங்கள் பார்த்துக்கொண்டிருந்த ஆமை. அப்பொழுதும்கூட அது ஏற்படுத்திய குழிக்கு நேராகப் பயணிக்காமல் சற்று இடதுபுறமாகத் திரும்பி கடலை நோக்கி விரைந்தது, ஆனால், இந்த முறை வேகமாக நகர்ந்தது. கடல் அலையடிக்கும் இடம் வந்தவுடன் அலை வந்து ஆமை மேல் பட்டவுடன் அதற்கு இன்னும் புத்துணர்ச்சி கிடைத்தது. முன்னோக்கி நகர்ந்தது. தொடர்சியாக அலைகள் வந்து ஆமை மேல் படவும் மின்னல் வேகத்தில் கடலுக்குள் நீந்தித் சென்று மறைந்தது. ஆமை முட்டைகளை சேகரிப்பவர்கள் முட்டையிட்ட இடத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள். கடினமான மணல் பரப்பிற்குக் கீழே முட்டைகள் கொட்டிக்கிடந்தன.

turtle131_11427.jpg

முட்டையோடு வெளிப்படும் திரவம் கிருமிநாசினியாகச் செயல்படுவதால் முட்டைகளின் மேல் இருக்கும் மணலை உதிர்க்காமல் சேகரிக்கிறார்கள். முட்டைகளை எல்லாம் எடுத்த பிறகு ஆமை தோண்டிய இடத்தினுள் கைவைத்துப் பார்த்தால் முழங்கை வரை ஆழம் இருந்தது. ஆமை முட்டையை சேகரிக்க வந்தவர்கள் கூறியதுபோலவே வாய்ப்பகுதி குறுகியும் அதன் பிறகு சற்று பெரிய சுற்றளவுமாக அது ஒரு பானையின் வடிவத்தில் இருந்தது. மொத்தம் 125 முட்டைகள் இட்டிருந்தது ஆமை. அதை ஏற்கெனவே சேகரித்து வைத்திற்கும் முட்டைகளோடு சேர்த்து  பாதுகாத்து குஞ்சு பொறித்த பின்பு மீண்டும் பத்திரமாகக் கடலில் விட்டுவிடுவார்கள். அந்தக் குஞ்சுகள் இனப்பெருக்கத்திற்கான முதிர்ச்சியை எட்டுவதற்கு 10-லிருந்து 13 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு எந்த நிலத்தில் அது பிறந்ததோ, மீண்டும் அதே நிலத்திற்கு வந்துதான் முட்டையிடும். இது இயற்கையாகவே அந்தச் செயல்பாடு மூளையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இயற்கை அதன் அழகை எல்லா இடத்திலும் வெளிப்படுத்தும் என்று கூறிவிட முடியாது அப்படி வெளிப்படுத்தினால் அது நிச்சயமாக ஒரு பேரனுபவமாகத்தான் இருக்கும். எங்களுக்கு அன்று அது கிடைத்தது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

“நீங்களும் அகதிகளாக வாழ்ந்து பாருங்கள் எங்களின் வலிகள் புரியும்” உலகை உலுப்பும் அப்தல்லாவின் ஓவியங்கள்..

abdalla-al-omari01.jpg?resize=600%2C450

நமது உணர்வை வெளிப்படுத்த பல வழிகள் உண்டு. ஓவியர்கள் ஓவியங்கள் மூலமாகத்தான் வெளிப்படுத்துவார்கள். அப்படிப்பட்ட ஒரு அசாத்திய ஓவியர்தான் அப்தல்லா அல் ஒமரி (Abdalla al omar.)  இவர் சிரிய நாட்டுக்காரர். இவரது ஓவியங்கள் உலகின் மனச்சாட்சியை உலுப்புகிறது.

உலக நாடுகளின் தலைவர்களை அகதிகள் போல பார்க்க நேரிட்டால் அதிர்ச்சிதானே வரும். அதைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அப்தல்லா. சிரியாவின் வலியை, சிரிய நாட்டு மக்கள் சந்தித்து வரும் அவலத்தை அவர் உலகுக்கு மிக மிக எளிமையாக அதே சமயம், மிக பலமான பதிவினை தனது வித்தியாசமான ஓவியங்கள் மூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சிரியாவின் அவலத்தை ஓவியங்களாக வடிக்கும் இவர் பல புகழ் பெற்ற உலகத் தலைவர்களை அகதிகளாக சித்தரித்து தனது ஓவியங்கள் மூலம் சர்வதேச நாடுகளின் கவனம் ஈர்த்துக் கொண்டிருக்கிறார்.

5 ஆண்டுகளுக்கு முன்பு சிரியா பெரும் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவித்தது. லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறினர். அவர்களில் அப்தல்லாவும் ஒருவர். பிரஸ்ஸல்ஸ் போய் தஞ்சம் புகுந்தார் அப்துல்லா. அங்கு போன பின்பே அவருக்குள் ஆன்ம வேகம் வெளிக்கிழம்பியது. தனது இயலாமை, தனது மக்களின் துயரம் ஆகியவற்றை உலக நாடுகளிடம் கொண்டு செல்ல என்ன வழி என்று யோசித்தபோது கலை அவருக்குக் கை கொடுத்தது.

அதன் விளைவு அவர் சிரிய துயரத்தை ஓவியங்களாக வடிக்க ஆரம்பித்தார். உலகத் தலைவர்கள் பலரை அகதிகளாக தனது ஓவியத்தில் சித்தரித்து, சிரிய அகதிகளோடு அகதிகளாக அவர்களையும் கலந்து வரைய ஆரம்பித்தார். இப்படி வரைந்த ஓவியங்களை வைத்து “The Vulnerability Series” என்ற பெயரில் பிரஸ்ஸல்ஸில் கண்காட்சியும் நடத்தினார். அதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

abdalla-al-omari4.jpg?resize=600%2C450

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சிரிய அதிபர் பாஷர் அல் அஸ்ஸாத் ஆகியோரை அகதிகளாகப் பார்த்தவர்கள் அதிர்ச்சியும், அதேசமயம், சிரிய மக்களின் உணர்வுகளையும் உள்வாங்க ஆரம்பித்தனர். சிரிய நிலைமையை உண்மையாக விளக்கிய ஓவியங்களைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியுற்றனர், உண்மைகளை உணர ஆரம்பித்தனர்.

இதுகுறித்து ஓவியர் அப்தல்லா கூறுகையில் “தங்கள் கண் முன்பு நடப்பதை தடுக்கத் தவறிய தலைவர்கள் இவர்கள். எனவே இவர்களை சக்தி வாய்ந்தவர்களாக நான் கருத முடியவில்லை. எனவேதான் இப்படி ஓவியமாக மாற்றினேன்”, என்றார் அப்துல்லா.

இவரது ஓவியங்களில் டிரம்ப்பும் சரி, பிற தலைவர்களும் சரி அவர்களுக்குரிய கவர்ச்சியில் இருக்க மாட்டார்கள். அதிலிருந்து விலகி படு மோசமான நிலையில் உள்ள ஒரு அகதியாகவே காட்சி தருகிறார்கள். அந்த அளவுக்கு தனது கோபத்தையும், ஆதங்கத்தையும் இவர்களது ஓவியங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார் அப்தல்லா.

டிரம்ப் அழுக்கு டி சர்ட்டுடன், சோர்வடைந்த முகத்துடன், முதுகில் துணி மூட்டையை சுமந்தபடி, ஒரு சிறு பெண் குழந்தையை சுமந்தபடி காட்சி தருகிறார். பாஷர் அல் அஸ்ஸாத்தோ தண்ணீரில் பாதி முழ்கிய நிலையில் காணப்படுகிறார். சிரிய மக்களின் துயரத்திற்கு இன்னும் முடிவு கிடைத்தபாடில்லை. தீர்வு வரும் தான் தீட்டும் ஓவியங்களும் தொடரும் என்று சோக முகத்துடன் கூறுகிறார் அப்தல்லா.

abdalla-al-omari01-1.jpg?resize=600%2C45abdalla-al-omari1.jpg?resize=600%2C800abdalla-al-omari2.jpg?resize=600%2C450abdalla-al-omari3.jpg?resize=600%2C450abdalla-al-omari4-1.jpg?resize=600%2C450abdalla-al-omari5.jpg?resize=600%2C450abdalla-al-omari6.jpg?resize=800%2C450abdalla-al-omari7.jpg?resize=800%2C633abdalla-al-omari8.jpg?resize=800%2C419abdalla-al-omari10.jpeg?resize=768%2C533abdalla-al-omari11.jpg?resize=800%2C625abdalla-al-omari12.jpg?resize=800%2C419abdalla-al-omari13.jpg?resize=480%2C480abdalla-al-omari14.jpg?resize=231%2C218abdalla-al-omari15.jpg?resize=800%2C651abdalla-al-omari16.jpg?resize=800%2C600abdalla-al-omari17.jpg?resize=689%2C800  abdalla-al-omari19.jpg?resize=275%2C183abdalla-al-omari20.jpg?resize=500%2C443

http://globaltamilnews.net/

  • தொடங்கியவர்

இறந்த பின்பும் வாழ்க்கை; ஜேர்மன் வைத்தியர்கள்!

 

இறந்த பின்பும் வாழ்க்கை; ஜேர்மன் வைத்தியர்கள்!


இறந்த பின்பும் வாழ்க்கை உண்டு என்பதை ஜேர்மன் வைத்தியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மரணத்திற்கு பின்பும் வாழ்க்கை உண்டா? மரணத்திற்கு பின்பு என்ன நடக்கின்றது? போன்ற கேள்விகள் எல்லோர் மத்தியிலும் காணப்பட்டு வருகின்றது. இதனை பலர் கண்டறிய முற்பட்டு வழங்கிய விடைகள் ஏற்றுக்கொள்ள முடியாமல் காணப்பட்டுள்ளது.

இறந்த பின்பும் வாழ்க்கை; ஜேர்மன் வைத்தியர்கள்!

இந்நிலையில் ஜேர்மனை சேர்ந்த உளவியலாளர்கள் மற்றும் வைத்தியர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் மரணத்திற்கு பின்னர் வேறு வடிவில் வாழ்க்கை உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த ஆய்வானது மனிதன் இறந்த பின்பு அவருக்கு அருகாமையில் நவீன தொழில்நுட்பம் ஒன்றை பயனபடுத்தி கண்டறியப்பட்டுள்ளது. இவ் ஆய்வானது 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை இறக்கும் தருவாயில் இருந்த 944 பேரின் உடலில் முக்கிய மருந்து கலவையை செலுத்தி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இறந்த பின் ஒருவரது நிலை பற்றி முற்றுமுழுவதுமாக அறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மதம் சார்ந்த விடயம் உள்ளடங்குவதால் தமது முடிவு வெளியாகிய பின்னர் சர்ச்சைகள் எழும் எனவும் எதிர்பார்த்துள்ளனர்.

https://news.ibctamil.com/

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 4 Personen, Personen, die stehen

 

தற்போதைய தலைசிறந்த துடுப்பாட்ட வீரரும் தென் ஆபிரிக்காவின் முன்னாள் தலைவருமான A.B.டீ வில்லியர்சின் பிறந்த நாள் இன்று.

ஓட்டங்கள் குவிக்கும் இயந்திரமாக விளங்கும் AB, உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் விரும்பப்படும் ஒருவர்.
Happy Birthday AB de Villiers

 

அதிரடி சாதனை நாயகன் 360 டிகிரிக்கு இன்று பிறந்த நாள்

 

அதிவேக அரைசதம், சதம் மற்றும் 150 ரன்கள் போன்ற சாதனைக்கு சொந்தக்காரரான 360 டிகிரி என்று அழைக்கப்படும் ஏபி டி வில்லியர்ஸ் இன்று 34-வது வயதில் கால்பதிக்கிறார். #ABD

அதிரடி சாதனை நாயகன் 360 டிகிரிக்கு இன்று பிறந்த நாள்
 
தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன ஏபி டி வில்லியர்ஸ் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அறிமுகமானார். பின்னர் அதிரடி பேட்ஸ்மேனாக மாறினார். முதுகு வலி காரணமாக விக்கெட் கீப்பர் பணியை தவிர்த்து முழு நேர பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறது.

2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 31 பந்தில் சதம் அடித்து, அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அத்துடன் 16 பந்தில் அரைசதம், 64 பந்தில் 150 ரன்கள் என்ற சாதனையையும் பெற்றார். இவரது சாதனையை ஒருநாள் போட்டியில் முறியடிப்பது மிகக்கடினம் என்றே கூறலாம்.

களத்தில் இறங்கிவிட்டால், தீப்பொறியாக செயல்படும் இவரை செல்லமாக ‘360 டிகிரி’ என்று அழைப்பார்கள். கிரிக்கெட் வரையறைக்கு உட்பட்ட ஷாட்டுகளை ஆடாமல், தன் இஷ்டபடிக்கு விளையாடுவார். மைதானத்தில் எல்லா திசைகளுக்கும் பந்தை பறக்க விடுவார். இதனால் ‘360 டிகிரி’ என்று அழைப்பார்கள். இவர் இன்று தனது 33 வயது பூர்த்தி செய்து 34-வது வயதிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.

201802171456473881_1_abde-s._L_styvpf.jpg

டி வில்லியர்ஸ் ஒருநாள் போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் 2005-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார். இதற்கு முன்னரே டெஸ்ட் போட்டியில் 2004-ம் அண்டு டிசம்பர் மாதம் 17-ந்தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார்.

சுமார் 14 வருடமாக தென்ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடி வரும் டி வில்லியர்ஸ் தற்போதுவரை 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8338 ரன்கள் குவித்துள்ளார். 21 சதங்கள், 42 அரைசதங்களுடன் சராசரி 49.92 வைத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 278 ரன்னாகும்.

228 ஒருநாள் போட்டிகளில் 25 சதங்கள், 53 அரைசதங்களுடன் 9577 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 53.50 ஆகும். அதிகபட்ச ஸ்கோர் 176 ரன்னாகும். 78 டி20 போட்டியில் 10 அரைசதங்களுடன் 1672 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 79 ரன்னாகும்.
  • தொடங்கியவர்

இந்தியாவில் விமான அஞ்சல் சேவை அலகாபத்தில் தொடங்கப்பட்ட நாள் (பிப்.18-1911)

 

விமான அஞ்சல் சேவை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாமக ஆரம்பமான. நாள் இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1832 - இலங்கையின் பல இடங்களில் ஓர் அசாதாரண எரிமீன் (meteor) தோன்றியது. * 1861 - அலபாமாவில் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்கு தலைவரானார். * 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வில்லியம் ஷேர்மன் தலைமையிலான கூட்டுப் படைகள் தென் கரோலினாவின் மாநில அவையைத் தீயிட்டுக் கொழுத்தினர்.

 
 
 
 
இந்தியாவில் விமான அஞ்சல் சேவை அலகாபத்தில் தொடங்கப்பட்ட நாள் (பிப்.18-1911)
 
விமான அஞ்சல் சேவை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாமக ஆரம்பமான.

நாள் இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1832 - இலங்கையின் பல இடங்களில் ஓர் அசாதாரண எரிமீன் (meteor) தோன்றியது. * 1861 - அலபாமாவில் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்கு தலைவரானார். * 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வில்லியம் ஷேர்மன் தலைமையிலான கூட்டுப் படைகள் தென் கரோலினாவின் மாநில அவையைத் தீயிட்டுக் கொழுத்தினர். * 1929 - முதற்தடவையாக ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. * 1930 - கிளைட் டொம்பா ஜனவரியில் எடுத்த புகைப்படங்களை ஆராய்கையில் புளூட்டோவைக் கண்டுபிடித்தார். * 1932 - சீனக் குடியரசிடம் இருந்து மன்சூகுவோவின் விடுதலையை ஜப்பான் மன்னர் அறிவித்தார்.

* 1957 - கென்யாவின் போராளித் தலைவர் டெடான் கிமாத்தி பிரித்தானிய குடியேற்ற அரசினால் தூக்கிலிடப்பட்டார். * 1959 - நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. * 1965 - காம்பியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது. * 1979 - தெற்கு அல்ஜீரியாவில் சகாரா பாலைவனத்தில் முதற்தடவையாக பனி மழை பெய்தது. * 1991 - லண்டனில் ரெயில் நிலையங்களில் இரண்டு குண்டுகள் வெடித்தன.

* 2003 - தென் கொரியாவில் சுரங்கப் பாதை ஒன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி 200 பேர் வரை கொல்லப்பட்டனர். * 2004 - ஈரானில் ராசாயனப் பொருட்களை ஏற்றிச் சென்ற ரெயில் ஒன்று தீப்பற்றியதில் 295 பேர் கொல்லப்பட்டனர். * 2007 - தில்லியில் இருந்து பாகிஸ்தான் சென்றுகொண்டு இருந்த 'சம்ஜவுதா' விரைவு ரெயிலில் குண்டுகள் வெடித்து தீ பிடித்ததில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!

 

 
16CHLRDFORBES

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘ஃபோர்ப்ஸ்’ இதழ் ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களைத் தேர்ந்தெடுத்து கவுரவப்படுத்திவருகிறது. இந்தியாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த முக்கியமான முப்பது இளைஞர்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்டுள்ளது. ‘முப்பது வயதுக்குள் முப்பது பேர்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் இடம் பிடித்த இளைஞர்களில் சிலரைப் பார்ப்போம்.

   

 

வலைத்தள முகம்

ஃபேஸ்புக் பயன்படுத்தும் இளைஞர் மத்தியில் பிரபலமானவர், டெல்லியைச் சார்ந்த மிதிலா பால்கர் (24). இவர் முதன் முதலில் யூடியூப் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த ‘Cup song’ என்ற வீடியோ பிரபலமானது.

16chlrdfob%20Mithilaa
 

அதேபோல் மிதிலா முக்கிய கதாபாத்திரமாக நடித்த ‘Girl in the City’ என்ற வலைத்தொடர் புகழ்பெற்றது. இவரது இயல்பான நடிப்பு இவருக்குத் தனிச் சிறப்பைத் தேடிக்கொடுத்திருக்கிறது. தற்போது பல முன்னணி விளம்பரங்களிலும் இந்தித் திரைப்படங்களிலும் நடித்துவருகிறார் மிதிலா.

 

விண்வெளி ஆராய்ச்சி

ரோகன் எம். கணபதி (25), யஷஸ் கரணம் (23) ஆகியோர் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் புதுமையான கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர்கள். இவர்களில் ரோகன் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் கோவை. இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிக்ஸ் படித்தவர். கடந்த 2011-ல் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக இவர் எழுதி அனுப்பிய ஆய்வுக் கட்டுரை தனித்து அடையாளம் காட்டியது.

16chlrdrohan

ரோகன், யஷஸ் கரணம்

 

தொடர்ச்சியாகச் செயற்கைக்கோள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் ரோகனுக்கு அமெரிக்காவின் பிரபல ஐ.வி. லீக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மைசூருவில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மின்னியல் பொறியியல் படித்த யஷஸ் கரணம் ராக்கெட் தொடர்பான ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார். இருவரும் சேர்ந்து ‘பெல்லட்ரிக்ஸ் ஏரோஸ் பேஸ்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். இவர்களின் தொடர் ஆராய்ச்சி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் ஏற்கப்பட்டது. அடுத்த ஆண்டு இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ள ராக்கெட்டில் இவர்களின் தொழில்நுட்பம் சோதனை செய்யப்பட உள்ளது.

 

ஹாக்கி ராணி

சவிதா பூனியா (27), இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கோல் கீப்பர். இவரது லாகவமான கோல் தடுப்பு, கடந்த ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய மகளிர் ஹாக்கி கோப்பையை இந்தியாவுக்குப் பெற்றுக்கொடுத்தது.

16CHLRDSAVITHA-copy

இந்திய மகளிர் ஹாக்கி அணி இந்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடத் தேர்வானதற்கு முக்கியக் காரணமாக விளங்கியவரும் இவர்தான். ஹரியாணாவைச் சேர்ந்த இவர், “பெண்கள் குறித்து மிகவும் பிற்போக்குக் கருத்துகளைக் கொண்ட ஹரியாணாவில் என்னைப் போன்ற ஹாக்கி வீராங்கனைகள் உருவாவது மிகவும் சவாலான விஷயம்” என்று குறிப்பிடுகிறார்.

 

பூக்களின் வாசம்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த அங்கித் அகர்வால் (28), கரண் ரஸ்தோகி (29) ஆகிய இருவரும், கோயில்களில் பூஜை முடிந்த பின் வீணாகும் பூக்களைக்கொண்டு சோப்பு, ஊதுபத்தி, உரம் ஆகியவற்றைத் தயாரித்துவருகிறார்கள்.

பிரபல தனியார் நிறுவனத்தில் பார்த்துவந்த ‘சைபர் செக்யூரிட்டி’ வேலையை ராஜினாமா செய்துவிட்டு கோயில்களைச் சுத்தப்படுத்தப் போவதாக அகர்வால் கூறியபோது அவரின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்தனர்.

ஆனால், மற்றவர்களின் கேலியைக் காதில் வாங்காமல், அந்தப் பணியைத் தன்னுடைய நண்பரான கரண் ரஸ்தோகியுடன் இணைந்து அங்கித் அகர்வால் தொடங்கினார்.

இதற்காக 72 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட ‘ஹெல்ப் அஸ் கீரின்’ என்ற நிறுவனம் இரண்டே ஆண்டுகளில் இரண்டு கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. வீணாகும் பூக்களை வைத்து லாபகரமான தொழில் நடத்தும் இந்த வெற்றி ஜோடியின் ஐடியாவுக்கு வலுச்சேர்க்கும் விதமாகப் பல்வேறு நிறுவனங்கள் 4.2 கோடி ரூபாயைப் பூக்கள் வளர்ப்பதற்காக வழங்கியுள்ளன. இந்த நிதியைக் கொண்டு அங்கித் அகர்வால், கரண் ரஸ்தோகியும் வாரணாசி, மதுரா ஆகிய இடங்களில் பூக்கள் பயிரிடும் மையத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.

16chlrdflower

அங்கித் அகர்வால், கரண் ரஸ்தோகி.

 

குறைந்த செலவில் காற்று

வீடுகளில் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகிவிட்டது மின்விசிறி. மின்விசிறிகளால் அதிக மின்சாரம் செலவாவதால், ஒவ்வொரு மாதமும் மின்கட்டண உயர்வைச் சமாளிக்க முடியாமல் பலரும் திண்டாடுகிறார்கள். இதற்காக, குறைவான மின்சாரத்தில் இயங்கும் புதுமையான மின்விசிறியைக் கண்டுபிடித்தார் மனோஜ் மீனா (29).

16CHLRDATHER

ஸ்வப்நில், அருண் மேத்தா.

பொதுவாக வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்விசிறி இண்டக்ஷன் மோட்டாரால் இயக்கப்படுகிறது. இந்த மோட்டார் இயங்க 70 வாட்ஸ் மின்சாரம் தேவை. ஆனால், மனோஜ் மீனா கண்டுபிடித்த கொரில்லா மின்விசிறி (Gorilla fan) ‘நேர்த்திசை’ மின்சார மோட்டாரால் இயங்க வெறும் 28 வாட்ஸ் மின்சாரமே போதும்.

இதற்காக மனோஜ் தன்னுடைய நண்பர் சிபப்ரதா தாஸுடன் (27) இணைந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனம் சார்பில் தற்போது ஆண்டுக்கு ஒரு லட்சம் கொரில்லா மின்விசிறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

 

பெட்ரோல் தேவையில்லை

உயர்ந்துகொண்டே போகும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் திண்டாடிவருகிறார்கள். இந்நிலையில் சென்னை ஐ.ஐ.டி.யில் படித்த தருண் மேத்தா (28), ஸ்வப்நில் ஜெயின் (28) ஆகியோர் இணைந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளனர்.

ஒருமுறை சார்ஜ் செய்தால், சுமார் 70 - 80 கிலோ மீட்டர் தூரம் இந்த ஸ்கூட்டரில் பயணம் செய்ய முடியும். தருண் மேத்தா, ஜெயின் இருவரும் இணைந்து சொந்தமாக ‘அதர்’ என்ற நிறுவனத்தையும் தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

பேசும் படம்: 89 வயது டாக்டரின் அறுவை சிகிச்சை

 

 
18CHLRDALLA%203

வயதாகிவிட்டாலே பலரால் நடுக்கமில்லாமல் நடக்கக்கூட முடியாது. ஆனால், ரஷ்யாவில் வசிக்கும் 89 வயதான அறுவை சிகிச்சை நிபுணர் ஆலா லுவுஷ்கினா (Alla Levushkina) வாரத்துக்கு நான்கு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்துவருகிறார்.

18CHLRDALLA%205
           
 

இவர் மாஸ்கோவில் உள்ள ரயாசன் நகர மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக 67 ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறார். குடலிறக்கம், குடல்நோய் பிரிவில் நிபுணத்துவம் பெற்றுள்ள அவர், இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளைச் செய்திருக்கிறார்.

18CHLRDALLA%202
 

ஆயிரக்கணக்கானோருக்கு அறுவை சிகிச்சை செய்தபோதும் இதுவரை இவரது அறுவை சிகிச்சை தோல்வியடையவில்லை என்பது மருத்துவச் சாதனையாகக் கருதப்படுகிறது.

18chlrdalla
 

திருமணம் செய்துகொள்ளாத ஆலா, மாற்றுத்திறனாளியான தன் ஒன்றுவிட்ட மருமகனோடும் செல்லப் பிராணிகளான எட்டுப் பூனைகளுடனும் வசித்துவருகிறார்.

18CHLRDALLA%204
 

வரும் மே 5-ம் தேதி ஆலாவுக்கு 90-வது பிறந்தநாள்! தற்போதுவரை பணி ஓய்வு குறித்து அவர் யோசிக்கவில்லையாம்.

18CHLRDALLA%206
 

“என்னைப் பொறுத்தவரை மருத்துவராக இருப்பது ஒரு தொழில் மட்டுமல்ல; அது வாழ்க்கையோடு கலந்துவிட்ட ஒன்று. ஒருவேளை நான் வேலை செய்வதை நிறுத்திவிட்டால் வேறு யார் இந்த அறுவை சிகிச்சைகளைச் செய்வார்கள்?” என்று கேட்கிறார்.

18CHLRDALLA%207

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

காதலின் சின்னமான தாஜ்மகாலை கண்டு வியந்து போன கனடா பிரதமர்

இந்தியா சென்றுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்ற தாஜ்மகாலை தனது குடும்பத்துடன் சுற்றிப் பார்த்துள்ளார்.

ஒரு வார கால பயணமாக இன்று காலை விமானம் மூலம் டெல்லி வந்துள்ள ஜஸ்டின் ட்ரூடோவை இந்திய அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.

தொடர்ந்து ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை இன்று காலை குடும்பத்துடன் பார்வையிட்டு, அதன் அழகில் பிரம்மித்துப்போயுள்ளார்.

அத்துடன், தாஜ்மகாலின் கட்டட அமைப்புகள், தாஜ்மகாலின் வரலாறு ஆகியவற்றை ஜஸ்டின் விசாரித்து கேட்டுக்கொண்டார்.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றன.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com

  • தொடங்கியவர்

-65சி கடுங்குளிரில் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று தெரியுமா?

  • தொடங்கியவர்

கண் திருஷ்டியில் இருந்து பயிரைக் காக்க சன்னி லியோன் போஸ்டர் ஒட்டிய விவசாயி

சன்னி லியோன்

ஆந்திரப்பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலுள்ள பண்டாகிண்டபல்லே கிராமத்தை சேர்ந்த விவசாயியான செஞ்சு ரெட்டி, தனது வயல்வெளியை கடந்து செல்பவர்களின் கண்படாமல் இருப்பதற்காக அதன் முன்புறத்தில் பாலிவுட் நடிகையான சன்னி லியோனின் போஸ்டரை வைத்தது வைரலாகி வருகிறது.

பத்து ஏக்கர் விவசாய நிலத்தை வைத்துள்ள செஞ்சு கத்தரிக்காய், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், மிளகாய் மற்றும் வெண்டைக்காய் போன்றவற்றை பயிரிட்டு வருகிறார்.

இந்தாண்டு தனது பண்ணை சிறந்த சாகுபடியை பெற்றுள்ளதால் கிராமத்தினர் மற்றும் பண்ணையை கடந்து செல்பவர்களின் கவனத்தை பெற்றுவருவதாக அவர் கூறுகிறார்.

மேலும், கிராமத்தினர் மற்றும் பண்ணைய கடந்து செல்பவர்களின் கண்படாமல் இருப்பதற்காக "ஹே! என்னை பார்த்து அழாதீர்கள்" என்ற வாசகத்துடன் கூடிய சன்னி லியோனின் போஸ்டரை ஒட்டுவதற்கு முடிவெடுத்ததாக பிபிசியிடம் பேசிய செஞ்சு ரெட்டி கூறினார்.

சன்னி லியோன்

இந்த போஸ்டரை ஒட்டியதன் மூலம் பண்ணை மீதான மக்களின் கண்பார்வை திசைதிருப்பப்பட்டதாகவும், அது தனது சாகுபடியை பாதுகாப்பதற்கு உதவியதாகவும் கூறுகிறார்.

விவசாயியின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பகுத்தறிவாளரான கோகினேனி பாபு, "முற்றிலும் மூடநம்பிக்கை நிறைந்த செயலான இது, வேடிக்கையானது" என்று தெரிவித்துள்ளார்.

"தீய கண்பார்வை என்ற கருத்து உண்மையானதாக இருந்தால், அனைவரின் பார்வையும்படும் சன்னி லியோனுக்கு என்னவாகும் என்றும், இந்த விவசாயியின் செயலுக்காக அவர் மீது சன்னி லியோன் வழக்குப்பதிவு செய்தால் அவர் எப்படி எதிர்கொள்வார்" என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

'காதல்‘ - பிபிசி தமிழ் நேயர்களின் 'காதல்' புகைப்படங்கள்!

 

முகமது இர்ஷத், கோயம்புத்தூர் முகமது இர்ஷத், கோயம்புத்தூர் ஹெர்மாஸ், அமெரிக்கா ஹெர்மாஸ், அமெரிக்கா அரவிந்த் ரெங்கராஜ், திருச்சி அரவிந்த் ரெங்கராஜ், திருச்சி கணேஷ், சென்னை கணேஷ், சென்னை

 

இக்வான் அமீர், சென்னை இக்வான் அமீர், சென்னை அரவிந்தன், சென்னை அரவிந்தன், சென்னை ராதிகா, திருச்சி ராதிகா, திருச்சி மதிவாணன் கனகசபை, அமெரிக்கா மதிவாணன் கனகசபை, அமெரிக்கா ஹாரிஷ் ராகவ், ஈரோடு ஹாரிஷ் ராகவ், ஈரோடு சண்முகநாதன் விசாகன், இலங்கை சண்முகநாதன் விசாகன், இலங்கை கார்த்திக், சென்னை கார்த்திக், சென்னை

பிற செய்திகள்:

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

 

இந்த சீனப் புதிரை உங்களால் அவிழ்க்க முடியுமா?

இந்த புதிர் மாணவர்களின் பொது சிந்தனைத் திறனை அதிகரித்து, கல்விக்கு வெளியிலும் அவர்களது சிந்தனையை ஊக்குவிக்கும் முயற்சி என்கின்றனர் சீனாவின் கல்வித் துறையினர்.

  • தொடங்கியவர்

வைரலாகும் நடிகை சாயிஷாவின் அண்மைப் புகைப்படங்கள்!

 

 
s3

அண்மையில் ஜுங்கா படப்பிடிப்பின் போது நடிகை சாயிஷாவின் சில புகைப்படங்கள் வெளியானது. அது ரசிகர்களின் கவனத்தைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

latest.jpg

**

shoot_shot.jpg

**

sayesha-saigal.jpg

**

cute.jpg

**

v.jpg

 

s22.jpg

  • தொடங்கியவர்

2003 : ஈரா­னிய விமான விபத்தில் 275 பேர் பலி!

வரலாற்றில் இன்று…

பெப்ரவரி – 19

 

1600 : பெருவின் ஹுவாய்­நப்­பூட்­டினா என்ற எரி­மலை வெடித்­ததால் சுமார் 1500 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2003-iran-plane-copy.jpg1674 : இங்­கி­லாந்­துக்கும் நெதர்­லாந்­துக்கும் இடையில் சமா­தான உடன்­பாடு எட்­டப்­பட்­டதில் மூன்­றா­வது ஆங்­கி­ல -­டச்சு போர் முடி­வுக்கு வந்­தது. இதன்­படி டச்சு குடி­யேற்றப் பகு­தி­யான நியூ ஆம்ஸ்­டார்டாம் இங்­கி­லாந்­துக்குக் கொடுக்­கப்­பட்டு நியூயோர்க் எனப் பெயர் மாற்­றப்­பட்­டது.

1819 : பிரித்­தா­னி­யாவின் நாடுகாண் பயணி வில்­லியம் ஸ்மித் தெற்கு ஷெட்­லாந்து தீவு­களைக் கண்­டு ­பி­டித்தார்.

1878 : கிரா­ம­போனின் காப்­பு­ரி­மத்தை தோமஸ் அல்வா எடிசன் பெற்றார்.

1915 : முதலாம் உலகப் போரின்­போது கலி­பொலி சமர் ஆரம்­ப­மா­கி­யது.

1942 : இரண்டாம் உலகப் போரில் ஏறத்­தாழ 250 ஜப்­பா­னியப் போர் விமா­னங்கள் அவுஸ்­தி­ரே­லி­யாவின் வட மண்­ட­லத்தின் தலை­நகர் டார்வின் மீது குண்­டு­களை வீசி­யதில் 243 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1945 : இரண்டாம் உலகப் போரின்­போது 30,000 ஐக்­கிய அமெ­ரிக்க கடற்­ப­டை­யினர் இவோ ஜீமா தீவில் தரை­யி­றங்­கினர்.

katukurunda-boat-copy.jpg1959 : ஐக்­கிய இராச்­சி­யத்­தி­ட­மி­ருந்து சைப்­பிரஸ் சுதந்­திரம் பெற்­றது.

1968 : சைப்­பி­ரஸின் லனார்க்கா விமான நிலை­யத்தில் கடத்­தப்­பட்ட எகிப்­திய விமா­னத்தை விடு­விக்க சைப்­பி­ரஸின் முன் அனு­ம­தி­யின்றி தாக்­கு­தலில் ஈடு­பட்ட எகிப்­திய அதி­ரடிப் படை­களை சைப்­பிரஸ் இரா­ணு­வத்­தினர் தாக்­கி­யதில் 15 எகிப்­திய படையினர் கொல்­லப்­பட்­டனர்.

1985 : ஸ்பெயினில் போயிங் விமானம் ஒன்று ஓயிஸ் மலையில் மோதி­யதில் 148 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1986 : சோவியத் ஒன்­றியம் மீர் விண்­வெளி நிலை­யத்தை விண்­ணுக்கு ஏவி­யது.

2006 : மெக்­ஸி­கோவில் நிலக்­கரிச் சுரங்­க­மொன்றில் ஏற்­பட்ட விபத்­தினால் 65 பேர் பலி­யா­கினர்.

2003 : ஈரானில் இடம்­பெற்ற விமா­ன­மொன்று வீழ்ந்­ததால் 275 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2011 : சிங்­கப்பூருக்கு அருகில் மூழ்­கி­யி­ருந்த சீனாவின் டாங் வம்­சத்தின் புரா­தன கலைப்­பொ­ருட்கள் அடங்­கிய கப்பல் சிதை­வொன்றை அகழ்ந்­தெ­டுக்கும் நட­வ­டிக்கை ஆரம்­ப­மா­கி­யது.

2012 : மெக்­ஸிகோ சிறையொன்றில் ஏற்பட்ட வன்முறையில் 43 பேர் உயிரிழந்தனர்.

2017 : களுத்துறை மாவட்டத்தின் கட்டுக்குருந்தை கடற்பகுதியில் மத உற்சவமொன்றின்போது படகு கவிழ்ந்ததால் 16 பேர் உயிரிழந்தனர்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை #MotivationStory

 
 

கதை

 

`கிழ்ச்சியின் முழுமையான பலனை அனுபவிப்பதற்கு, நீங்கள் யாராவது ஒருவருடன் அதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்’ - இது, அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன்-ன் (Mark Twain) பொன்மொழி. பிறருக்குத் தொந்தரவு தருவது, சீண்டிப் பார்ப்பதே சிலரின் வேலையாக இருக்கும். அவர்களுக்கு சந்தோஷத்தின் மகத்துவம் புரிவதில்லை என்றுதான் அர்த்தம். ஒருவருக்கு நாம் செய்யும் உதவியால் அவருக்கு மட்டுமல்ல, நமக்குமே மகிழ்ச்சி கிடைக்கும். மற்றவருக்கு உதவி செய்ததால் வாழ்க்கையில் கெட்டுப்போனவர் என்று யாருமேயில்லை. இதுதான் இயற்கை நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கும் முக்கியமான பாடம். பெறுவதைவிட, கொடுப்பது எப்பேர்ப்பட்ட உயர்வான செயல் என்பதை எளிதாக உணர்த்தும் கதை இது.

 

 ஃபிரான்ஸில் இருக்கும் சின்னஞ் சிறிய ஊர் ஒன்றில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. இரண்டாம் கிரேடு படிக்கும் மாணவர்களின் வகுப்பாசிரியருக்கு ஒரு பழக்கம். தினம் ஒரு மாணவனை பள்ளியைவிட்டு எங்காவது வெளியே அழைத்துப்போவார். அந்த மாணவனுடன் பல விஷயங்களைப் பேசுவார்; அவன் குடும்பத்தை, அவன் படிப்பைப் பற்றி விசாரிப்பார். அந்த உரையாடலின் மூலமாக அவனின் குணம், திறமைகள், பொது அறிவு எல்லாவற்றையும் அறிந்துகொள்வார். ஒருநாள் அப்படி, அந்த ஆசிரியர் ஒரு மாணவனை அழைத்துக்கொண்டு வெளியே போனார்.

இருவரும் நடந்து நடந்து ஊரைத் தாண்டி வந்திருந்தார்கள். வயல்வெளி பெரிதாக விரிந்திருந்தது. வயல் வேலையை முடித்துக்கொண்டு வந்திருந்த ஒரு விவசாயி, அருகிலிருந்த வாய்க்காலில் மெதுவாக முகம், கை, கால்களைக் கழுவிக்கொண்டிருந்தார். அவருடைய ஷூக்கள் கரையில் கிடந்தன; பழசாகிப் போன, தேய்ந்துபோன ஷூக்கள். மாணவன், அவரையும் ஷூக்களையும் பார்த்தான். அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

``மாஸ்டர்... இந்த ஷூவை எடுத்து அந்தப் புதருக்குள்ள ஒளிச்சு வெச்சிடுவோமா? அதோ... ஓடையில முகம் கழுவிக்கிட்டிருக்காரே... அந்த விவசாயி கரைக்கு வருவாரு. ஷூவைத் தேடுவாரு... அதைக் காணாம அவர் முகம் படுற பாட்டை நாம ஒளிஞ்சிருந்து பார்க்க ஜாலியா இருக்குமில்லை?’’

ஷூ

இதைக் கேட்ட அந்த ஆசிரியரின் முகம் வேதனையால் வாடியது. ``இல்லப்பா... இப்படியெல்லாம் யோசிக்கிறதே தப்பு. அதுலயும் ஏழைகளோட வாழ்க்கையில விளையாடுறது ரொம்ப ரொம்பத் தப்பு’’ என்றவர் ஒரு கணம் யோசித்தார். ``நான் ஒண்ணு சொல்றேன்... அது மாதிரி செய்வோமா?’’

``சொல்லுங்க சார்...’’

``அந்த விவசாயியோட ஷூக்கள்ல என்கிட்ட இருக்குற கொஞ்சம் பணத்தையும் உன்கிட்ட இருக்குற காசுகளையும்வெப்போம். நாம போய் புதருக்குள்ள ஒளிஞ்சுக்குவோம். அதைப் பார்த்துட்டு அவர் முகத்துல என்ன ரியாக்‌ஷன் தெரியுதுனு கவனிப்போமா?’’

``சரி சார்.’’

ஆசிரியர் தன் பாக்கெட்டில் இருந்து கொத்தாகக் கொஞ்சம் கரன்ஸிகளையும், நாணயங்களையும் எடுத்தார். அந்த விவசாயியின் தேய்ந்த இரு ஷூக்களிலும் அவற்றைச் சரி பாதியாக வைத்தார். பிறகு இருவரும் புதருக்குள் போய் ஒளிந்துகொண்டார்கள். அதே நேரம், விவசாயி கரையேறினார். தன்னுடைய ஒரு ஷூவில் காலை நுழைத்தார். வித்தியாசமாக ஏதோ இருப்பதை உணர்ந்தார். ஷூவைக் கையிலெடுத்தார். அதற்குள் சில கரன்ஸிகளும் நாணயங்களும் இருந்தன. அவற்றை எடுத்தவர், இது யாருடையதாக இருக்கும் என்று அக்கம் பக்கம் பார்த்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தென்படவில்லை. அந்த ஏழை விவசாயி அவற்றை எடுத்து தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்.

அடுத்து இன்னொரு ஷூவில் காலை நுழைத்தார். அதில் காலை நுழைத்தவர், அதிலும் வித்தியாசமாக ஏதோ படுவதை உணர்ந்தார். ஷூவைக் கையிலெடுத்தார். அதற்குள்ளும் கரன்ஸிகளும் நாணயங்களும்! அசந்துபோனார் அந்த விவசாயி. அப்படியே மண்டியிட்டு தரையில் அமர்ந்தார். ஆகாயத்தைப் பார்த்துத் தன் இரு கைகளையும் விரித்துக்கொண்டார்.

``கடவுளே..! உன் கருணையே கருணை! வீட்டில் நோயில் படுத்த படுக்கையாகக் கிடக்குற என் மனைவிக்கு மருந்து வாங்க நான் என்ன செய்றது, இன்னும் ரெண்டு நாளைக்கு அப்புறம் குழந்தைகளோட பசி போக்க தானியம் வாங்க என்ன செய்யறதுனு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்... காலையில கடவுளே உன்னை நினைச்சு வேண்டவும் செஞ்சேன். கேட்டதைக் கொடுத்துட்டே சாமி....’’ அவர் கண்ணீர்விட்டு அழுதார். பிறகு தன் வீடு நோக்கிக் கிளம்பிப் போனார்.

மாணவன்

அவர் போனதும் ஆசிரியரும் மாணவரும் வெளியே வந்தார்கள். ஆசிரியர் கேட்டார்.... ``இப்போ சொல்லு... உனக்கு எது மகிழ்ச்சியாக இருந்திருக்கும்? அவரோட ஷூவை ஒளிச்சுவெச்சிருந்தாலா... இல்லை இப்போ அவருக்குப் பணம் கொடுத்தோமே... அதுவா?’’

``மாஸ்டர்... எனக்கு நல்ல பாடம் கத்துக் கொடுத்தீங்க. இதை என்னைக்குமே மறக்க மாட்டேன். பெறுவதைவிட கொடுப்பது எவ்வளவு பெருசுங்குறதுக்கு அர்த்தம் புரிஞ்சிடுச்சு. நன்றி மாஸ்டர்...’’

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

அன்னத்துடன் ஒரு பால் உறவில் வாழ்ந்த வாத்துக்கு நினைவுச் சின்னம்

ஆண் அன்னப்பறவையுடன் வாழ்ந்த தாமஸ் வாத்துபடத்தின் காப்புரிமைWBRT Image captionஆண் அன்னப்பறவையுடன் வாழ்ந்த தாமஸ் வாத்து

அன்பான வாழ்க்கைத்துணை மற்றும் அக்கறையுள்ள தந்தையாக வாழ்ந்து ஓரினசேர்க்கை சமூகத்தின் சின்னமாகத் திகழ்ந்த நியூசிலாந்தை சேர்ந்த வாத்துக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

40 வயதான தாமஸ் என்ற வாத்து கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி உயிரிழந்தது. அதனுடைய வாழ்க்கை துணை அருகிலேயே தாமசின் உடலும் புதைக்கப்பட்டது.

"தாமஸ் ஒரு அழகான மற்றும் நன்கு அறியப்பட்ட பறவை" என்று கூறுகிறார் வெலிங்க்டன் பறவைகள் மறுவாழ்வு அறக்கட்டளை நடத்தி வரும் க்ரைக் ஷெப்பர்ட். இந்த மறுவாழ்வு மையத்தில்தான் தாமஸ் தனது கடைசி காலத்தைக் கழித்தது என்கிறார் அவர்.

"தாமஸ் தனது பெரும்பங்கு வாழ்க்கையை கழித்த இடத்திலேயே புதைக்கப்படுவது அழகான ஒன்று" என்றார் க்ரைக்

ஒரு பால் சேர்க்கையாளர் இனத்தின் சின்னமாக தாமஸ் வாத்து மாறியது எப்படி?

முக்கோண காதல்

1990ஆம் ஆண்டு கருப்பு அன்னப்பறவை ஒன்று நியூசிலாந்தின் கபிடி கடற்கரையின் சிறிய நகரத்தில் உள்ள வைமனு நீர்பரப்பிற்கு பறந்து வந்தது. அதற்கு ஹென்ரிட்டா என பெயரிடப்பட்டது.

பின்பு அதன் சிறகுகள் சேதமடைந்ததால், மற்ற அன்னப் பறவைகளுடன் பறக்க முடியாமல் போக, தனிமையில் வாடியது. அப்போதுதான் தாமஸ் வாத்து அங்கு வந்தது.

ஹென்ரிட்டாவுக்கும் தாமசுக்கும் நல்ல உறவு ஏற்பட ஹென்ரிட்டாவை தாமஸ் பாதுகாத்து வந்தது.

18 வருடங்கள் இந்த இரு பறவைகளுமே ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், ஒரு புதிய பெண் அன்னப் பறவை அங்கு வந்தது. தாமசை விடுத்து, இந்த புதிய பெண் அன்னப் பறவையுடன் ஹென்ரிட்டா அதிகமாக தென்பட்டது.

இரண்டுமே பெண் பறவைகள் என்று நினைத்திருந்த பட்சத்தில், அந்த புதிய அன்னப் பறவை முட்டையிட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹென்ரிட்டா ஒரு ஆண் பறவை என அப்போதுதான் தெரிய வந்தது.

வாத்துபடத்தின் காப்புரிமைWBRT

"முதிர்ச்சியடைந்த அன்னப் பறவைகளின் பாலினத்தை கண்டறிவது கடினமான ஒன்று" என்கிறார் அந்த நீர்பரப்பு அமைந்திருக்கும் பகுதியில் உள்ள வைகனே முகத்துவாரத்தின் சுற்றுலா வழிகாட்டியான மைக்கெல் பெர்யர். "தாமஸ் வாத்தும் ஹென்ரிட்டா அன்னமும் 18 ஆண்டுகள் ஒரு பால் சேர்க்கையாளர்களாக உறவில் இருந்துள்ளன" என்றார் அவர்.

பின்பு, ஹென்ரிட்டா என்ற அந்த பறவையின் பெயரை ஹென்ரி என மாற்றி அமைத்தனர். முட்டையிட்ட புதிய பெண் அன்னப் பறவைக்கு ஹென்ரிட்டா என்று பெயர் சூட்டப்பட்டது.

தன்னுடன் 18 ஆண்டுகளாக இருந்த துணை தன்னை விட்டு சென்றது தாமசுக்கு சற்றும் பிடிக்கவில்லை.

"இதனால் மிகுந்த கோபமடைந்த தாமஸ், மற்ற அன்னப் பறவைகளை தாக்க ஆரம்பித்தது. ஆனால் குஞ்சுகள் பொறிக்கப்பட்ட பிறகு, முழுமையாக மாறிய தாமஸ், தன்னுடைய சொந்த குழந்தைகளைப் போல அவற்றை பாதுகாத்தது" என்று பெர்யர் தெரிவித்தார்.

அன்னப்பறவை குஞ்சுகளை வளர்த்த தாமஸ் வாத்துபடத்தின் காப்புரிமைWBRT Image captionஅன்னப்பறவை குஞ்சுகளை வளர்த்த தாமஸ் வாத்து

ஹென்ரியும் ஹென்ரிட்டாவும் அடுத்த ஆறு ஆண்டுகாலத்தில் 68 அன்னப் பறவை குஞ்சுகளை பெற்றெடுத்தன.

அவர்களுடனே வாழ்ந்து வந்த தாமஸ் வாத்து, அக்குஞ்சுகளை வளர்க்க உதவியது. எப்படி பறக்க வேண்டும், எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அவற்றுக்கு கற்றுத் தந்தது.

இரு வேறு இனங்கள் சேர்ந்து இவ்வாறு குஞ்சுகளை வளர்ப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று என்கிறார் பெர்யர்.

2009ஆம் ஆண்டு கருப்பு அன்னப்பறவையான ஹென்ரி உயிரிழக்க, ஹென்ரிட்டாவும் வேறு ஒரு பறவையோடு பறந்து போனது. மீண்டும் தனிமைக்கு தள்ளப்பட்ட தாமஸ், அங்குள்ள பெண் வாத்து ஒன்றுடன் இணைந்து 10 குஞ்சுகளை பெற்றெடுத்தது.

கண்பார்வை இழந்த தாமஸ்படத்தின் காப்புரிமைWBRT Image captionகண்பார்வை இழந்த தாமஸ்

கண்பார்வைத் திறன் குறைந்து, பின்பு முற்றிலும் பார்வையை இழந்த தாமஸ் 2013ஆம் ஆண்டு வெலிங்க்டன் பறவைகள் மறுவாழ்வு அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டது. அங்குதான் தன் கடைசி நாட்களை கழித்தது தாமஸ் வாத்து.

வாத்துடன் அன்னப்பறவை இணைவது கேள்விப்படாத விடயம் ஒன்றும் இல்லை என்று பெர்யர் கூறினார்.

பூச்சிகள் முதல் பாலூட்டிகள் வரை, விலங்குகளுக்கு இடையே ஓரினச்சேர்க்கை வாழ்க்கைமுறை என்பது பொதுவான ஒன்றே. ஆனால் ஒரு சில விலங்குகள் மட்டுமே தன் வாழ்நாள் முழுவதும் ஓரினச் சேர்க்கை இணையுடன் வாழும்.

தாமசுக்கு கண்ணீர் அஞ்சலி

ஹென்ரி மற்றும் ஹென்ரிட்டாவுடன் சேர்ந்து அவற்றின் குஞ்சுகளை வளர்த்த தாமசை பார்த்து பல சுற்றுலா வாசிகள் வியந்துள்ளனர்.

தாமஸ் உயிரிழந்த செய்தி அறிந்த பார்வையாளர்கள் பலர் அதற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். கனடா, நெதர்லான்ட் போன்ற நாட்டு பார்வையாளர்களிடம் இருந்தும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

"எனக்கு தாமசை மிகவும் பிடிக்கும். ஒரு பொன் மாலை பொழுதில் அவனுக்கு சோளம் ஊட்டிவிட்ட அழகான நினைவுகள் வந்து செல்கின்றன" என ஃபேஸ்புக்கில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

ஹென்ரி அன்னப்பறவை புதைக்கப்பட்ட இடத்திற்கு பக்கத்திலேயே தாமசின் உடலும் புதைக்கப்பட்டு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

"ஜீப் மேல சிறுத்தை... துரத்திய யானை... ஆப்பிரிக்காவில் 'திக் திக்' தருணங்கள்!" போட்டோகிராபர் உஷா

 

உஷா
 

 

  20 ஆண்டுகளுக்கு முன்பு. ஒரு சிறுமியாக கோயம்புத்தூர் மருதமலை மலையடிவாரப் பகுதியில் இயற்கைக் காட்சிகளைக் கண்களால் சிறைபிடித்தவர், உஷா. இன்றோ, ஆப்பிரிக்கக் காடுகளில் வனவிலங்குகளை கேமராவால் வலைக்கும் வைல்டுலைஃப் போட்டோகிராபர். இவரின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வனவிலங்குகளை அட்டகாசமாகக் காட்சிப்படுத்துகின்றன. தற்போது, கென்யாவில் வசித்துவரும் உஷா, வீடியோ காலில் உற்சாகமாகப் பேசுகிறார். 

 

உஷா

"சின்ன வயசுல மருதமலை மலையடிவாரப் பகுதியில் வசித்ததால், இயற்கை என்னோடு கலந்து இருந்துச்சு. சார்டர்ட் அக்கவுன்டன்ட் வொர்க்கில் இருந்தபோதும் பல சுற்றுலா தளங்களுக்குப் போய், என்னுடைய பேசிக் மாடல் கேமராவில் போட்டோஸ் எடுப்பேன். 2006-ம் வருஷம் கல்யாணமாச்சு. பின்னர் கணவருடன் கென்யா தலைநகர் நைரோபியில் செட்டில்ட் ஆனேன். ஒருமுறை 'மசாய் மாரா' வனவிலங்கு சரணாலயத்துக்குக் கணவருடன் போனேன். அங்கே எக்கச்சக்க விலங்குகளைப் பார்த்ததும் அளவில்லா மகிழ்ச்சி.

போட்டோகிராபி

தொடர்ந்து, பல சரணாலயங்களுக்கும் போய் என் பேசிக் மாடல் கேமராவிலேயே போட்டோஸ் எடுத்து, எனக்கே எனக்காக ரசிப்பேன். பையன் ஷாஸ்வத் ஹரிஷ் பிறந்தப்போ, சி.ஏ., வேலையிலிருந்து பிரேக் எடுத்தேன். அப்போ, போட்டோகிராபி ஃபீல்டில் அதிக ஆர்வம் உண்டாச்சு. அவ்வளவுதான்... முந்தைய வேலையை விட்டுட்டேன். முழுநேர வைல்டு லைஃப் போட்டோகிராபர் ஆகிட்டேன்" என்று சிரிக்கிறார் உஷா.  

போட்டோகிராபி

''ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல சரணாலயங்களுக்குக் குழுவாகவும் தனியாகவும் பயணம் செய்றேன். கடந்த நாலு வருஷத்தில் 50-க்கும் மேற்பட்ட சரணாலயங்களைப் பார்த்துட்டேன். வனவிலங்குகளின் இயல்பான, மூர்க்கமான, மகிழ்ச்சியான பல வித்தியாச தருணங்களை போட்டோ எடுக்கிறதே அலாதியானது. காலையில் 6 - 10 மணிவரை மற்றும் ஈவ்னிங் டைம்களில் விலங்குகள் உற்சாக மனநிலையில் இருக்கும். போட்டோஸ் எடுக்க அது சிறந்த நேரம். வெயில் நேரங்களில் மிருகங்கள் ஓய்வெடுக்க ஆரம்பிக்கும். அப்போ, போட்டோஸ் எடுக்கிறது சவாலானதுதான். 

உஷா

சிங்கம், புலி, சிறுத்தை போன்றவை இரையை வேட்டையாடிச் சாப்பிடும் ஆக்‌ஷன் காட்சிகளைப் பல மணி நேரம் காத்திருந்து புகைப்படம் எடுப்பேன். அந்தச் சவால், செம த்ரில்லிங்கா இருக்கும். நான் உட்கார்ந்திருக்கும் சஃபாரி ஜீப் மேலேயே சிறுத்தை நிற்கும் 'திக் திக்' நிமிடங்கள், துரத்தும் யானையிடமிருந்து தப்பிச்சது உள்ளிட்ட நிறைய சவால்களை எதிர்கொண்டிருக்கிறேன். என் அனுபவத்தில் சரணாலயங்களில் வசிக்கும் பெரும்பாலான விலங்குகளையும் பார்த்திருக்கேன். ஆனாலும், ஒவ்வொரு ஃபாரஸ்ட் ட்ரிப்புமே புது அனுபவத்தையும் உற்சாகத்தையும் கொடுக்குது. ஒவ்வொரு முறையும் அந்த விலங்குகளை வித்தியாசமான ரூபத்தில் பார்க்கிறேன்" என்கிற உஷா, 'ஈஸ்ட் ஆப்பிரிக்கன் வைல்டு லைஃப் போட்டோகிராபர் ஆஃப் 2016' மற்றும் 'ஷூட் தி ஃப்ரேம் இன்டர்நேஷனல் போட்டோகிராபி' விருதுகளை வென்றுள்ளார். 

போட்டோகிராபி

"எனக்கு எல்லா வகையான வனவிலங்குகளையும் பிடிக்கும். ஆனாலும், கொரில்லா மற்றும் வரிக்குதிரைகள் என் ஆல்டைம் ஃபேவரைட். உலகத்தில் 900 கொரில்லாக்கள் மட்டுமே இருக்கு. அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களில் இதுவும் ஒன்று. கிழக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தின் உகாண்டா, ருவாண்டா, காங்கோ நாடுகளில் மட்டுமே வசிக்கின்றன. மற்ற வனப்பகுதிக்குப் போகிற மாதிரி, இங்கெயெல்லாம் ஜீப்ல போகமுடியாது. கரடுமுரடான பாதையில் நடந்துதான் போகணும். கொரில்லாவும் நாமும் ஹை டு ஹை பார்க்கவே கூடாது. அது, கோபத்துடன் நம் பக்கத்தில் நெருங்கி வந்துட்டால், அசையாமல் நிற்கணும். எதுவும் செய்யாமல் போயிடும். அதிகக் கோபமான தருணங்களில் நம்மைத் தாக்கவும் செய்யும். 

போட்டோகிராபி

வைல்டு லைஃப் போட்டோகிராபி பயணத்தில் சஃபாரி ஜீப்பைவிட்டு யாரும் இறங்கக் கூடாது என்பது ரூல்ஸ். அடர்ந்த காடுகளில் இரவு சமயங்களில் தங்கமுடியாது. மீண்டும் வெளிப்பகுதிக்கு வந்து தங்கிட்டு, அடுத்த நாள் காலையில் காட்டுக்குள்ளே போவோம். விலங்குகளின் பார்வையில், மனிதர்களும் ஒரு விலங்குதான். காட்டு விலங்குகள் எப்போதும் மூர்க்கத்தனமானது. ஆனால், மனித மிருகத்தால் அவற்றுக்கு ஆபத்தும் தொந்தரவும் ஏற்படாத வரையில் அவற்றால் எந்தத் தொந்தரவும் வராது. 'விலங்குகளோடு செல்ஃபி எடுத்துக்கிறேன்'னு பலரும் தொந்தரவு செய்யும்போதும், உணவு கிடைக்காமல் அல்லது தனிப்பட்ட காரணங்களால் கோபமாக இருக்கும்போதும் மட்டுமே அவை நம்மைத் தாக்கும்" என்கிற உஷாவின் குரலில் நேசம் பிரகாசிக்கிறது. 

"இதுவரை பல நாடுகளின் வனவிலங்கு சரணாலயங்களுக்குப் போயிருக்கேன். இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா (உத்தரகாண்ட்), ரந்தம்பூர் தேசியப் பூங்கா (ராஜஸ்தான்), கபினி தேசியப் பூங்கா ஆகியவற்றுக்குப் போயிருக்கேன். வருஷத்துக்கு ஓரிருமுறை இந்தியா வருவேன். அப்போவெல்லாம் தவறாமல் ஒரு வனவிலங்கு சரணாலயத்துக்கு விசிட் அடிச்சுடுவேன். என் கணவரும் பையனும் கொடுக்கும் சப்போர்ட்டில்தான் வைல்டு லைஃப் போட்டோகிராபியில் சிறப்பா செயல்பட முடியுது. 

போட்டோகிராபி

ஆரம்பத்தில், 'பொண்ணா ஃபாரஸ்டுக்கு போறது சவாலானது. இதெல்லாம் வேண்டாம்'னு பெற்றோர் சொன்னாங்க. அவங்களுக்கு நம்பிக்கை கொடுத்துட்டு என் பயணத்தைத் தொடங்கினேன். சில ஃபாரஸ்ட் பயணத்துக்குப் பிறகு, பெற்றோருக்கு பயம் நீங்கிடுச்சு. என் ட்ரிப் பற்றியும், அங்கே நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகள் பற்றியும் ஆர்வமாகக் கேட்பாங்க. பரபரவென ஓடும் வாழ்க்கைப் பயணத்தில் பல விஷயங்களைத் தொலைக்கிறோம். அதிலிருந்து விடுபட ரொம்ப செலவழிக்க வேண்டாம். 

எல்லோரும் தங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு வனவிலங்கு சரணாலயத்துக்குக் குடும்பத்துடன் போய்ட்டு வந்தாலே போதும். மனதுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். இந்த உலகம் விலங்குகளுக்கும் சேர்த்துத்தான் என்ற உண்மையும் புரியும். என் ஆசையெல்லாம் ஒண்ணுதான். உலகில் எக்கச்சக்க வனவிலங்குகள் இருக்கு. அவற்றில் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் பார்த்து ரசிச்சுடணும். விதவிதமான போட்டோஸ் எடுக்கணும்" என்கிறார் உஷா பரவசத்துடன். 

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.