Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

வாட்ஸ்அப் கலக்கல்: பகோடா பாகவதர்

 
memes%206
meme%20new
memes%201
memes%202
memes%204
memes%205
memes%207
memes%2010
memes%2011
memes%208
memes%209

http://tamil.thehindu.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

யூடியூப் உலா: காதல் கணவனின் சொதப்பல்கள்!

 

 
7CHScreenshot

கால்கட்டு காட்சி...

வெறும் ஐந்து நிமிடங்களில்கூட நறுக்குத் தெறித்தமாதிரி கதை சொல்லலாம், வாழ்க்கை அனுபவங்களைப் பதிவுசெய்யலாம் என்பதை யூடியூபில் வெளிவரும் இணையத் தொடர்கள் நிரூபித்து வருகின்றன. சினிமாவில் செய்ய முடியாத சோதனை முயற்சிகளை இங்கு இளைஞர்கள் செய்துவருகின்றனர்.

அந்த வகையில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியினரின் உறவு சிக்கல்களைச் சிரிக்கவும் சிந்திக்க வைக்கும் வகையில் ‘பிளாக் பசங்க’ என்ற பேனரில் யூடியூபில் ‘கால்கட்டு’ என்ற இணையத் தொடராகத் தந்துகொண்டிருக்கிறார் வெற்றிவேல் சந்திரசேகர். காதல் கல்யாணத்தில் முடிகிறதோ இல்லையோ; பெரும்பாலும் கல்யாணத்தோடு தீர்ந்துபோய்விடுகிறது காதல்.

இதற்கு முக்கியக் காரணம் அன்றாட வாழ்க்கை குறித்த சில தவறான புரிதல்களும் அலட்சியப்போக்கும்தான். இவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ‘கால்கட்டு’ இணையத் தொடரில் நவீன கணவன், மனைவியாக நடித்திருக்கிறார்கள் பிரதீப்பும், சத்யா சம்பத்தும்.

 

மனைவியைக் கிண்டலடிக்கும் மீம்ஸ்

“எவ்வளவுதான் நாம நவீனமா மாறினாலும் கணவன் மனைவியைக் கிண்டல் பண்ற போக்கு இன்னமும் மாறல. கணவன்னாலே அப்பாவி, மனைவின்னாலே சந்தேகப்படுறவங்க, கொடுமைப்படுத்துறவங்கனு இன்னைக்கும் வாட்ஸ்அப் மீம்ஸ், ஃபேஸ்புக் ஜோக்ஸ்னு போட்டுக்கிட்டிருக்காங்க. அதிலும் தமிழ் சினிமாவில புருஷன் டாஸ்மாக் போறதுக்குக்கூட மனைவி தான் காரணம்னு காட்டுறாங்க. நாமும் இதெல்லாம் பார்த்துச் சிரிச்சிக்கிட்டிருக்கோம். இது எப்பவுமே எரிச்சல்மூட்டிக்கிட்டே இருந்தது.

7CHShoot
 

ஏற்கெனவே கோலிவுட்டில் உதவி இயக்குநராகச் சில படங்களில் வேலைபார்த்திருந்தாலும், நான் சொல்ல நினைக்கிற கதைகளையும் திரையில் கொண்டுவந்து நிறுத்த ஆசைப்படுற கதைக்களங்களையும் தடையில்லாமல் சொல்றதுக்கான ஊடகம் யூடியூப் சேனல்தான். அதனால, காதல் நிறைந்த கணவன் மனைவிக்கு இடையிலான ஊடல், கூடலைப் பெண்ணின் கோணத்திலிருந்து நான் படமாக்கிட்டிருக்கேன் ” என்கிறார் வெற்றிவேல்.

7CHYoutubeVetri

வெற்றி

தலைவலியில் தவிக்கும் மனைவிக்கு காபி போட முயன்று சொதப்புவது, முன்னாள் காதலியோடு ஃபேஸ்புக்கில் அரட்டையடித்து மனைவியிடம் மாட்டிக்கொள்வது, புகைப்பழக்கத்தைக் கைவிடுவதாகச் சத்தியம் செய்துவிட்டுத் திருட்டு தம் அடித்துக் கையும் களவுமாகப் பிடிபடுவது, காதலித்த நாட்களில் காதலிக்காக அத்தனையும் செய்யும் காதலன், அவள் மனைவியான பிறகு அவளுடைய பிறந்த நாள் முதற்கொண்டு அத்தனையும் மறந்துவிடும் அலட்சியப் போக்கு, கண்ணோடு கண் பார்த்துக்கூடப் பேசாமல் வேலை வேலை என்று சுற்றுவது - இப்படி இன்றைய இளம் கணவர்கள் செய்யும் சொதப்பல்களைச் சுவாரசியமாகப் பதிவுசெய்கிறது ‘கால்கட்டு’.

அதேநேரத்தில் ஒரேடியாக ஆண்களுக்கு எதிரானதாக இல்லாமல் ஆண் மனதோடு நுட்பமாக உரையாடவும் முயல்கிறது.

 

வெளியே மனைவி வீட்டில் கணவன்

‘படபட’வெனப் பொரிந்து தள்ளும் மனைவியாக நடித்திருக்கும் சத்யா சம்பத், சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துவரும் கரூர் பொண்ணு. நடிப்பு வாசனையே தெரியாதவர் என்பது இவரைப் பார்க்கும்போதே தெரிகிறது. ஆனாலும், இயல்பான வாழ்க்கைப் பதிவுக்கு அவர் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். “ஆமாம் எனக்கு நடிப்பு தெரியாததுனால ஆரம்பத்துல 7 நிமிஷக் காட்சிக்கு ஒரு நாள் முழுக்க டேக் எடுத்திருக்கேன். ஆனால், போகப்போக இந்த கான்செப்ட் பிடிச்சு நடிப்பைக் கத்துக்கிட்டேன்” என்கிறார் சத்யா.

pjimagejpg

பிரதீப் - சத்யா

தன்னுடைய அப்பாவித்தனமான முகபாவங்களாலும் குறும்புத்தனமான உடல்மொழியாலும் நடிப்பில் சொதப்பாமல் கணவனாகச் சிறப்பாக ‘சொதப்பு’கிறார் நடிகர் பிரதீப். டெக்கியாக வேலைபார்த்துவந்த இந்த மதுரைக்காரப் பையன், நடிப்பு மீதான தீராக் காதலால் வேலையை ராஜினாமா செய்துவிட்டுக் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்று நடிகரானவர்.

ஒரு புறம் குறும்படங்களில் நடிப்பது, குறும்படங்களை இயக்குவது, தமிழ் இலக்கிய வாசிப்பு எனத் துடிப்பானவர். தமிழ் சினிமாவில் சிறுவேடங்களில் நடித்துவந்தாலும் அடுத்த பாய்ச்சலுக்காகக் காத்திருக்கிறார்.

“நானும் காதல் கல்யாணம் செஞ்சுகிட்டவன்தான். அதனாலேயே எனக்கு இந்தக் கான்செப்ட் ரொம்பவும் பிடிச்சுது. நான் வெளியில செய்யுற வேலையை என் மனைவியும் செய்யும்போது அவங்க வீட்டுல செய்யுற வேலையை நானும் ஏன் செய்யக் கூடாது? இதுதான் இந்தக் கதையோட அடிப்படை. இந்த தொடரால என்னுடைய நடிப்பு வாழ்க்கை மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்துக்கிட்டிருக்கு” என்று டபுள் ஸ்மைலியாகச் சிரிக்கிறார் பிரதீப்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

60 வயதில் ஸ்கேட்டிங் விளையாட்டு!

ஐம்பது மற்றும் அறுபது வயதுகளில் இருக்கும் எலிசபெத், கேத் மற்றும் சபீனா ஆகியோர், வெற்றிகரமாக ஸ்கேட்போர்ட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

  • தொடங்கியவர்

உங்களை நீங்களே ஏமாற்றி வெற்றி பெறுவது எப்படி?

 

இந்த ஆண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி முடியப் போகிறது, இவ்வருடத்துக்காக நீங்கள் புத்தாண்டு தினத்தன்று திட்டமிருந்த பல உறுதிமொழிகள் உங்களுக்கு மறந்தே கூட போயிருக்கலாம்.

successபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

புத்தாண்டு உறுதிமொழிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட பல சிறிய அளவிலான ஆராய்ச்சிகள், மக்களில் வெறும் 40% பேர்தான் இதுபோன்ற உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வதாகவும், அதில் பாதிப்பேர் மட்டுமே வருடம் முழுவதும் கடைபிடிப்பதாகவும் கூறுகிறது. குறிப்பாக, அதிலும் வெறும் 8% பேர்தான் தங்களது குறிக்கோள்களை அடைந்துள்ளதும் ஒரு கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.

புத்தாண்டு உறுதிமொழிகளை கடைபிடிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தாலும், அதை தொடர்ந்து முயற்சிப்பதை நாம் நிறுத்துவதேயில்லை. இந்நிலையில், உங்களது புத்தாண்டு உறுதிமொழிகளை தொடர்ந்து கடைபிடிப்பதற்கு உதவும் ஒரு புதிய தந்திரம் குறித்து இப்போது தெரிந்துகொள்வோம்.

'அதிக பாதிப்பை விளைவிக்காத ஏமாற்றுதல்' என்ற வழிமுறை மக்கள் தங்களது குறிக்கோள்களை அடைவதற்கு உதவும் என்று ஒரு ஆராய்ச்சி முடிவு கூறுகிறது. இது பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலுள்ள 'தி வேர்டன் பள்ளி'யில் சந்தைப்படுத்தல் துறையின் துணைப் பேராசிரியரான மரிசா ஷெரிஃப்பின் ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.

இது எப்படி வேலை செய்கிறது?

எல்லா குறிக்கோளையும் அடைந்ததாக வேண்டும் அல்லது எதுவுமே வேண்டாம் என்ற அணுகுமுறை மிகவும் தவறானது என்று அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் கூறுகிறது. நமது குறிக்கோள் பதிலாக 'அவசரகால இருப்புகளை' உருவாக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

உங்கள் புத்தாண்டு உறுதிமொழியை கட்டிக் காத்து வெற்றிப்பெறுவது எப்படி?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதாவது நமது இயல்பான நடைமுறை கொண்ட வாழ்க்கையில் ஏதாவதொன்றை நமக்குநாமே ஏமாற்றிக்கொண்டு செயல்படுவது புத்துணர்ச்சியுடன் செயல்படுவதற்கு உதவும் என்றும், இது ஒரு விதமான கட்டமைக்கப்பட்ட நெகிழ்வுத்தன்மை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

உடற்பயிற்சிகள் மற்றும் பணசேமிப்பு நடவடிக்கைளை மேற்கொள்பவர்கள் அவ்வப்போது தங்களுக்குள்ள அழுத்தத்தை போக்கிக்கொள்வதற்காக இதுபோன்ற பாதிப்பு விளைவிக்காத ஏமாற்றுதலை செய்வது இயல்பான ஒன்றாகும்.

பலர் உறுதிமொழிகளை எடுக்கும்போது காட்டும் கடுமையை தொடர்ந்து மேற்கொள்வதால் அவர்களின் உறுதிமொழிகளை அடைவதில் சுணக்கம் ஏற்படுவதாக ஷெரிஃப் கூறுகிறார்.

உதாரணத்திற்கு, ஒரு கணக்கெடுப்பில் பங்கேற்ற 273 பேர் தங்களது நடைப்பயணத்தை திறன்பேசி (ஸ்மார்ட் ஃபோன்) செயலியை பயன்படுத்தி நடக்கும்போது தாங்கள் எடுத்து வைக்கும் அடிகளை எண்ண வேண்டும் என்று கூறினார்கள்.

அதில், முதல் குழு, 7,000 முதல் 10,000 அடிகள் நடப்பதை தொடர்ந்து வாரத்தின் ஏழு நாட்களில் அடைய வேண்டும் என்றும், இரண்டாம் குழு அதே இலக்கை ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தினங்களில் அடைய வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.

மூன்றாவது குழு "இரண்டு நாட்கள் அவசரகால விடுப்புகளை" எடுத்துக்கொண்டு ஏழுக்கும் மேற்பட்ட நாட்களில் அதே இலக்கை அடையலாம் என்று முடிவு செய்யப்பட்டது. நான்காவது குழுவிற்கான அவசரகால விடுப்பு நாட்கள் பகிரப்பட்டு ஒரு மாதம் முழுவதுமான காலகட்டத்தில் இலக்கை அடையலாம் என்று கூறப்பட்டது.

உங்கள் புத்தாண்டு உறுதிமொழியை கட்டிக் காத்து வெற்றிப்பெறுவது எப்படி?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அவசரகால விடுப்பு நாட்கள் எடுப்பதற்கு அனுமதிக்கப்படாத குழுவைவிட, அதற்கு அனுமதிக்கப்பட்ட குழுவினர் வாரத்திற்கு அதிகளவிலான நடைப்பயணத்தை மேற்கொண்டிருந்தது அந்த ஆராய்ச்சியின் வாயிலாக தெரியவந்துள்ளது.

இதுபோன்ற அதிக பாதிப்பை ஏற்படுத்தாத ஏமாற்றிக்கொள்ளும் வேலைகள் இரண்டு வழிகளில் வேலை செய்வதாக ஷெரிஃப் கூறுகிறார். தங்களுக்கு பிறகு எப்போதாவது தேவைப்படும் என்ற எண்ணத்தில் மக்கள் தங்களது அவசரகாலத்தில் மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கு தயங்குகிறார்கள். அவர்கள் அவசரகாலமற்ற சூழ்நிலையில் விடுப்புகளை வீணாக்குவதைப் பற்றி மோசமாக உணர்கிறார்கள்.

இரண்டாவதாக, நீங்கள் உங்களது "பாதிப்பு ஏற்படுத்தாத ஏமாற்றுதலை" பயன்படுத்தினால் முதலாவது வகையினரில் சிக்குவதிலிருந்து தப்பிக்கிறீர்கள். எனவே, உங்களது குறிக்கோளை முழுவதுமாக அடைய முடியாத சூழல் ஏற்பட்டால், குறிக்கோளை முற்றிலுமாக கைவிடும் வாய்ப்பு குறைவாக உள்ளதென்று ஷெரிஃப் கூறுகிறார்.

இதுபோன்ற விடுப்பெடுக்கும் அல்லது அதிக பாதிப்பை ஏற்படுத்தாத ஏமாற்றுதல், ஒருவர் தனது நீண்டகால குறிக்கோள்களில் கவனம் செலுத்துவதற்கு உதவுவதாக லீனா ரின்னே என்ற வல்லுநர் கூறுகிறார்.

உங்கள் புத்தாண்டு உறுதிமொழியை கட்டிக் காத்து வெற்றிப்பெறுவது எப்படி?

"ஏதோ ஒன்றை அடைவதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இலக்குகள் துவங்கினாலும், அது உங்களுக்கு கிடைத்த குறிப்பிட்ட தருணத்தை பொறுத்தே அமைகிறது. 'அவசரகாலத்தில் மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகளை' பயன்படுத்திக்கொள்வதற்கு உங்களை நீங்களே அனுமதிப்பதே அதிலுள்ள முக்கியமான விருப்பத் தேர்வாகும்."

ஆனால், அவசரகாலத்திற்கான வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கென்று வரம்புகள் உள்ளன. ஒருவருக்கு ஏமாற்றுவதற்கென்று அதிகளவிலான வாய்ப்புகள் இருக்கும்பட்சத்தில் அவை குறிக்கோளை அடைவதை நோக்கிய செயல்பாட்டில் பெரும் பாதிப்பைத்தான் உண்டாக்கும் என்று ஷெரிஃப் கூறுகிறார்.

தாங்கள் திட்டமிட்ட அவசரகால வரம்பை மீறும்போது ஒருவர் எதிர்மறையான எண்ணத்தை பெறுவதற்கும் சரிசமமான வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

ஒவ்வொருவரும் தங்களுடைய இலக்கை, குறிக்கோளை அடைவதற்கு விதவிதமான வழிமுறைகளை கையாள்கின்றனர். முறைப்படுத்தப்பட்ட சில சமரசங்களை செய்துகொள்ளும் வழிமுறை மூலம் சிலருக்கு பொருந்திப்போக வாய்ப்பிருந்தாலும், குறிப்பிட்ட வரம்பை மீற விரும்பாத மற்றவர்களுக்கு இது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

http://www.bbc.com/

  • தொடங்கியவர்
‘நம்பிக்கைக்கு உரியவராக இருக்க வேண்டும்’
 

image_2481db6e11.jpgஒருவரின் வாழ்க்கையில் முதற்படி, தனக்கும் பிறருக்கும் நம்பிக்கைக்கு உரியவராக இருக்க வேண்டும்.

தன்னம்பிக்கை உள்ளவர் தாழ்வு மனப்பான்மையுடன் வாழமாட்டார். மேலும், தன்னைப் பற்றிய மேலாதிக்க, உயர் மதிப்பீட்டுடனும் மற்றவருக்கு ஒன்றுமே புரியாது வாழும் வாழமாட்டார்.

எனவே, தாழ்வுமனப்பான்மையும்  உயர்நிலை மனப்பான்மையும் அகன்றால்தான், பிறர் மதிக்கும், நம்பிக்கை மிகுமாந்தராக  வாழ முடியும்.

எல்லோரையும் கௌரவிக்கும் எண்ணங்கள் மலர்ந்தால், அகிலத்தை உங்கள் பக்கம் ஈர்க்கும் வல்லமை பெற்றவர்களாவீர்கள். மக்களின் ஆசீர்வாதம் இன்றி, வாழ்க்கையின் சிறப்பைகளை முழுமையாக அனுபவிக்க முடியாது.

செயற்கைத் தனமான உரையாடல்களும் போலியான நடிப்பும் மக்களின் ஈர்ப்புக்கு உதவாது. அரசியல்வாதிகளில் பலர், இதை நம்பியே பிழைப்பை ஓட்டிவருகின்றார்கள்.

என்றும் நிரந்தரமான அன்பு, நிலைபெறுதல் இன்பகரமானது. பார்வையை விரிவாக்குக. மக்களின் தரிசனம் கிட்டும் அன்பர்களே.  

  • தொடங்கியவர்

`மன உறுதி இருந்தால்தான் சாதனை சாத்தியம்!’ - முதன்முதலாக எவரெஸ்ட்டில் கால்பதித்தவரின் உண்மைக் கதை #MotivationStory

 

கதை

 

ன உறுதியை வளர்த்துக்கொள்வதுதான் இலக்கை அடைந்து, வெற்றியைப் பெறுவதற்கான சிறந்த வழி’ - ஜப்பானைச் சேர்ந்த புத்த தத்துவவியலாளரும் கல்வியாளருமான டாய்சாகு இகேடா (Daisaku Ikeda) தெளிவாகச் சொல்கிறார். மன உறுதி இருந்தால்தான் சாதனை சாத்தியம். வரலாறு நமக்கு உணர்த்துவது இந்த உண்மையைத்தான். ஒன்றை அடைந்தே தீருவது என்று மனதில் ஓர் உறுதி பிறந்துவிட்டால் அதை நிச்சயம் அடைந்துவிடலாம். என்ன ஒன்று... எந்தத் தடை வந்தாலும், அதை எதிர்த்து நிற்கிற உறுதியை மட்டும் விட்டுவிடவே கூடாது; எதற்காகவும் தளர்ந்து போகக் கூடாது. இதற்கு உதாரணமாக பல சாதனையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் எட்மண்ட் ஹிலாரி (Edmund Hillary)... டென்சிங்கோடு இணைந்து முதன்முதலில் எவரெஸ்ட் சிகரத்தில் கால்பதித்தவர். எட்மண்ட் ஹில்லாரியின் கதை மன உறுதிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

 

நியூசிலாந்திலுள்ள ஆக்லாண்டில் (Aukland) பிறந்தவர் ஹிலாரி. `மலையேற்றம்’ பலருக்குப் பொழுதுபோக்கு; ஹிலாரிக்கோ அதுதான் வாழ்க்கை. எத்தனை மலைகளின் உச்சியைத் தொட முடியுமோ அத்தனையையும் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்கிற தீராத வெறி. ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடர் தொடங்கி எத்தனையோ மலைகளின் உயரத் தொட்டிருந்தாலும், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கால்பதிப்பதுதான் அவருடைய லட்சியம். அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளை, இடப்பாடுகளை, எதிர்கொண்ட இன்னல்களையெல்லாம் தன்னுடைய `ஹை அட்வெஞ்சர்’ (High Adventure) என்ற நூலில் விரிவாகச் சொல்லியிருக்கிறார் எட்மண்ட் ஹிலாரி. அதில் அவருக்கு மன உறுதி கிடைத்ததற்கான ஒரு சம்பவமும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எட்மண்ட் ஹிலாரி

எவரெஸ்ட்டுக்குச் செல்வதற்கான வழி அப்போது திபெத், நேபாளம் இரண்டின் கட்டுப்பாட்டில் இருந்தன. வருடத்துக்கு ஒருமுறைதான் மலையேறும் குழுவுக்கு அனுமதி கிடைத்தது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு மலையேற்றக் குழுவுடன் சேர்ந்து 1952-ம் ஆண்டு எவரெஸ்ட்டில் ஏற முயற்சி செய்தார் ஹிலாரி. அந்தக் குழுவில் டென்சிங்கும் இருந்தார். அந்த முயற்சி தோற்றுப்போனது. தட்பவெப்ப நிலை மிக மோசமாக இருந்தது. ஹிலாரி, எவரெஸ்ட்டில் ஏற முடியக்வில்லையே என்கிற ஏக்கத்துடன் திரும்பினார். முற்றிலும் குலைந்து போயிருந்தார். கிட்டத்தட்ட எவரெஸ்ட்டின் முக்கால்வாசி தூரம் போய்விட்டு, உச்சியைத் தொடாமல் திரும்பியிருந்தது அவருக்கு மிகுந்த வேதனையைத் தந்திருந்தது.

சில வாரங்கள் கழித்து ஹிலாரிக்கு இங்கிலாந்திலிருந்து ஓர் அழைப்பு வந்தது. யாரோ ஓர் அமைப்பினர் `எங்கள் உறுப்பினர்களிடம் வந்து நீங்கள் பேச வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தார்கள். முதலில் அவருக்கு இங்கிலாந்துக்குப் போகவே மனமில்லை. ஆனால், எங்கேயாவது போய்வந்தால், கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும், மன அமைதி கிடைக்கும் என்றும் தோன்றியது. கிளம்பிவிட்டார்.

எவரெஸ்ட்

குறிப்பிட்ட அந்த நாளில் விழா மேடையில் ஏறினார் ஹிலாரி. அவ்வளவுதான்... இடிமுழக்கம்போல் எழுந்தது கரவொலி. அதுவரை தன்னை ஒரு தோல்வியாளர் என நினைத்திருந்த ஹிலாரிக்கு அது ஆச்சர்யத்தைத் தந்தது. அரங்கிலிருந்தவர்களின் கைதட்டல் அடங்க வெகு நேரம் ஆனது. அந்தப் பாராட்டு மழை அவர் இதயத்தையே நனைத்துவிட்டது. அவரால் முதலில் பேசக்கூட முடியவில்லை. பார்வையாளர்கள் அவருடைய சாகசத்தை, அதன் அருமையைத் தெரிந்துகொண்டதற்கான அங்கீகாரத்தை அவர் உணர்ந்துகொண்டார். `நீங்கள் தோல்வியாளர் இல்லை மிஸ்டர் ஹிலாரி!’ என்று அந்தக் கைதட்டல் சொல்வதுபோல அவருக்கு இருந்தது. அந்த நிமிடத்தில் அவர் மனதில் ஓர் உறுதி பிறந்தது.

ஹிலாரி மைக்கின் முன்னாலிருந்து மெள்ள நகர்ந்து வந்தார். மேடையில் நடந்தார். மேடையின் பின்புறத்தில் ஒரு மலையின் படம் வரையப்பட்டிருந்தது. ஹிலாரி, அதன் உயரத்தைத் தொட்டுக்காட்டி, தன் முஷ்டியை உயர்த்தி உரத்த குரலில் இப்படிச் சொன்னார்... ``எவரெஸ்ட் சிகரமே... முதல் முறை உன்னைத் தொட்டுவிட வந்தபோது நீ என்னைத் தோற்கடித்துவிட்டாய். அடுத்த முறை நான் உன்னைத் தோற்கடித்துவிடுவேன். ஏனென்றால், எப்படி நீ வளர்ந்திருக்கிறாயோ அதேபோல நானும் வளர்ந்துகொண்டிருக்கிறேன்...’’

 

எட்மெண்ட் ஹிலாரி- டென்சிங்

By Jamling Tenzing Norgay | Wikimedia Commons

அவர் மன உறுதி அதைச் சாதித்தும் காட்டியது. 1953-ம் வருடம், மே 29-ம் தேதி அவரும் டென்சிங்கும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்கள். `எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் இருவர்’ என்ற பெருமையையும் பெற்றார்கள்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பேசும் படம்: பறத்தல் நிமித்தம்

 

 

pesum%202

விடிய காத்திருக்கும் பொழுது.

 

pesum%201%202

மூன்றாம் பிறை...

   
 

 

pesum%205

கீற்று ஊடாக விமானம்.

 

கேமரா: கேனான் 1300டி

pesum%206

மைனாக்கள் முன்னும் பின்னும்

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

சிக்கன்கரி, 5,000 தையல் கொண்ட கசூத்தி... முகலாயர்கள் காலத்திலிருந்து இன்று வரை... எம்ப்ராய்டரி அப்டேட்! #Embroidery

 

ஊசி நூலை வைத்து பல கதைகளைச் சித்திரப்படுத்தும் கலை `எம்ப்ராய்டரி'. எண்ணற்ற கலை, கலாசாரங்களை உள்ளடக்கிய நாடு, இந்தியா. நடனம், இசை, ஓவியம் எனப் பல்வேறு கலைகளில் முதன்மையாய் விளங்கும் நம் நாட்டின் பிரதானக் கலைகளில் முக்கியமான ஒன்று கைவினைத்தொழில். ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவத்தைப் பதித்து, வித்தியாசமான எம்ப்ராய்டரி டிசைன்களை வழங்கிக்கொண்டிருக்கிறது ஆடை உலகம்.

 

முத்துமணிகள், பீட்ஸ் (Beads), சீக்வன்ஸ், Quills முதலியவற்றைக்கொண்டும், கலாசாரத்தன்மை மாறாமலும் தற்போது எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. துணிகளில் மட்டுமல்லாமல், ஹேண்ட்பேக், கோட், தொப்பி, போர்வை என இணை ஆபரணங்களும் எம்ப்ராய்டரி வழியே அலங்கரிக்கப்படுகிறது. பெரும்பாலான எம்ப்ராய்டரி டிசைன்கள், முகலாயர்களின் வருகைக்குப்  பிறகே பின்பற்றப்பட்டன.

 

வளமான கலாசாரம் மற்றும் பாரம்பர்யத்தைப் போற்றும்விதமாக, வெவ்வேறு மாநிலங்களில் தோன்றிய `எம்ப்ராய்டரி' வேலைப்பாடுகளின் தொகுப்பு...

எம்ப்ராய்டரி

ஆரி (Aari):

12-ம் நூற்றாண்டில் காஷ்மீர், கட்ச், லக்னோ முதலிய இடங்களில் பின்பற்றப்பட எம்ப்ராய்டரி வகை `ஆரி'. இது `க்ரூவல்' (Crewel) எனும் நீளமான கொக்கி முனைகொண்ட ஊசியை வைத்து சிக்கலான வேலைப்பாடுகளைக்கொண்டது. முதலில் முகலாயர்களின் உருவங்கள், சிற்பங்கள் போன்றவற்றைத் தையலிட்டனர். பிறகு, காலத்துக்கு ஏற்ப டிசைன்களும் நிறங்களும் மாற்றியமைப்பட்டன. ஜரி காட்டன் அல்லது பட்டுநூல்தான் ஆரி வேலைப்பாடுகளுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. இதன் வேலைப்பாடு, அடர்த்தியான மோட்டீஃப் (Motif) கொண்டது. பிரகாசமான வண்ணங்களால் அலங்காரப்படுத்துவதால் இதன் வேலைப்பாடு மிக யதார்த்தமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும்.

13a_07535.jpg

சிக்கன்கரி (Chikankari):

முகலாய மன்னன் ஜஹாங்கீரின் மனைவி நூர்ஜஹானால் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் இந்த சிக்கன்கரி எம்ப்ராய்டரி வேலைப்பாடு, கி.பி.3-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்கப் பயணி மெகஸ்தன் இந்தியாவைப் பற்றிக் கூறுகையில் `சிக்கன்கரி' வேலைப்பாடுகளையும் குறிப்பிட்டுள்ளார். பூக்கள் மற்றும் விலங்குகளின் உருவங்களைக்கொண்டு டிசைன் செய்யப்படும் இந்த சிக்கன்கரி எம்ப்ராய்டரி, பெரும்பாலும் வெள்ளை நூல்களைக்கொண்டுதான் பூ  தையலிடுவார்கள். ஆனால், தற்போது பல வண்ணங்களில் டிசைன் செய்யப்படுகிறது. லக்னோவைப் பூர்விகமாகக்கொண்ட சிக்கன்கரி எம்ப்ராய்டரியை, 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் புவியியல் குறிப்பானாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Chikankari

கோட்டா (Gotta):

ராஜஸ்தானில் தோன்றிய `கோட்டா' வேலைப்பாடு, ஒருவகையான மெட்டல் எம்ப்ராய்டரி. `அப்ளிக்' எனும் தொழில்நுட்பத்தைக்கொண்டு செய்யப்படும் இந்த எம்ப்ராய்டரியில் சில்வர், கோல்டு, வெண்கலம் போன்ற உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது பெரும்பாலும் ஆடையின் விளிம்புகளிலேயே டிசைன் செய்யப்படும் மிக கனமான வேலைப்பாடு. இந்த கோட்டா எம்ப்ராய்டரியை டிசைனர் புடவை, லெஹெங்கா சோலி, குஷன் கவர் போன்றவற்றில் தையலிடலாம். பூக்கள், பறவை, விலங்கு, மனித உருவங்களை இந்த கோட்டா வேலைப்பாடுகள் மூலம் ஆடைகளில் தையலிடலாம்.

Gotta

புல்காரி (Phulkari):

`பூக்கள் நிறைந்த வேலைப்பாடு' எனும் அர்த்தம்கொண்ட `புல்காரி எம்ப்ராய்டரி', பஞ்சாப்பில் தோன்றியது. துணியின் மையத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் இதன் வேலைப்பாடு, விளிம்பு வரை பூக்கள் வடிவமைப்பைக்கொண்டு தையலிடப்படும். இது துணியின் அடிப்பக்கத்தில் பின்னப்படும். கனமான காட்டன் துணிகளில், பட்டுநூல்கொண்டு எம்ப்ராய்டரி செய்யப்படும் இந்த டிசைனின் ஸ்பெஷாலிட்டி, சிவப்பு வண்ணம்தான். அதிகப்படியான புல்காரி டிசைன் சிவப்பு, மஞ்சள் காம்பினேஷனில்தான் தயாராகிறது. துப்பட்டா, ஸ்வெட்டர் முதலிய இணை ஆடைகளில் அதிகம் காணலாம்.

ஃபுல்காரி

By Hiart | Wikimedia Commons

கசூத்தி (Kasuti):

கர்நாடக நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றான `கசூத்தி' எம்ப்ராய்டரி, சுமார் 5000 கை தையல்களைக்கொண்டது. புடவை, குர்த்தா போன்ற ஆடைகளில் இந்த வேலைப்பாட்டை அதிகம் காணலாம். இது சாளுக்கியர்களால் பரவப்பட்ட `வேலைப்பாடு' என்ற வரலாறு உண்டு. காட்டன் துணியில், கண்ணாடி வேலைப்பாடு, கோல்டு மற்றும் சில்வர் நிற நூலைக்கொண்டு பின்னும் டிசைன் என ஏகப்பட்ட வெரைட்டிகள் உள்ளன. திருமண நாள்களில், கர்நாடக மணப்பெண்கள் உடுத்தும் உடைகளில் கசூத்தி வேலைப்பாடு இல்லாமல் இருக்காது. இது மிகவும் காஸ்ட்லியான வெளிப்பாடும்கூட.

கசூத்தி

By Qypchak | WikimediaCommons

 

இதுபோல் ஏராளமான அழகான வேலைப்பாடு நிறைந்த ஆடைகள், மற்ற நாடுகளைவிட இந்தியாவில் அதிகம் காணலாம்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

நீருக்கடியில் வாழ்க்கை - மலைக்க வைக்கும் தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு )

இரண்டாம் உலகப் போரின் போது நீருக்கடியில் சிக்கிக்கொண்ட ஒரு பிரிட்டிஷ் கப்பலின் புகைப்படத்தை எடுத்த ஜெர்மன் புகைப்படக் கலைஞர் டோபியாஸ் ஃப்ரைட்ரிக், 2018 ஆண்டின் நீருக்கடியில் எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படக் கலைஞர் என்ற விருதை பெற்றிருக்கிறார்.

எகிப்தின் ரஸ் முகம்மது கடற்கரையில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் போட்டியில் கலந்து கொண்ட 5,000 புகைப்படங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Sea slugs with a moray eel in the background.

அப்துல் ரகுமான் ஜமாலுதீனின் கடல் நத்தைகள் புகைப்படம்

Motorcycles inside the SS Thistlegorm.படத்தின் காப்புரிமைTOBIAS FRIEDRICH/UPY 2018

'சைக்கிள் வார்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புகைப்படம், எஸ்.எஸ். திஸ்லெக்ரோம் என்ற பிரிட்டிஷ் கடற்படையின் வர்த்தக கப்பலில் மோட்டார் பைக்குகள் இருப்பதை தெளிவாக காட்டுகிறது.

சில வருடங்களாகவே இந்த புகைப்படத்தை எடுக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது, ஆனால், ஒரே ஷாட்டில் எடுக்கமுடியாது என்பதால் காத்துக் கொண்டிருந்த ஃப்ரைட்ரிக், பல புகைப்படங்களை எடுத்து அவற்றை ஒன்றாக இணைத்து ஒரே புகைப்படமாக்கினார்.

"இது மிகவும் அசாதாரணமான ஷாட். இதுபோன்ற காட்சியை புகைப்படமாக உருவகப்படுத்துவதில் கலைத்திறனும், புகைப்பட திறமையும் உறுதுணையாக உதவியிருக்கிறது" என்று புகைப்பட தேர்வுக்குழுத் தலைவர் பாராட்டினார்.

Two swans feeding under the lake water.

உணவு தேடும் அன்னப்பறவைகளை படமாக்கியவர் கிராண்ட் தாமஸ்

இந்த புகைப்பட போட்டியில் மேக்ரோ, வைட் ஆங்கிள், பிஹேவியர், ரெக் (Macro, Wide Angle, Behaviour and Wreck Photography), பிரிட்டன் கடற்பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுக்கு என மூன்று பிரிவுகளும் என்று 11 பிரிவுகளில் புகைப்படங்கள் வகைப்படுத்தப்பட்டன.

A group of pike underwater.

பிரபலமான ஸ்கூபா டைவிங் தளமான ஸ்டானி கோவ் என்ற இடத்தில் டோனி ஸ்டீபன்ஸன் எடுத்த புகைப்படம்

A humpback whale skyhopping.

செங்குத்தாக நீரில் இருந்து வெளிப்படும் திமிங்கிலத்தை படம் பிடித்தார் கிரேக் லீகோகோயூர்

Three seahorses backlit under the water.

ஷேன் க்ரோஸின் கடல்குதிரைகளின் அரிய புகைப்படம்

Shark behaviourist Cristina Zenato surrounded by sharks in The Bahamas

கரீபியன் கடலில் சுறாக்களை படம் பிடித்தவர் ஃபேன் பிங்

A coiled up conger eel.

சோங்க்டா கை எடுத்த விலாங்குமீன் புகைப்படம்

A fish wedged between the bell and the tentacles of a jellyfish.

இந்த அற்புதமான புகைப்படத்தை எடுத்தவர் ஸ்காட் கட்ஸி துவாசன்

A cormorant with a fish in its mouth.

டோக்கியோவில் உள்ள ஈஸு தீபகற்பத்தில் ஃப்லிப்போ போர்கி எடுத்த புகைப்படம்

A sand tiger shark surrounded by millions of tiny fish

லட்சக்கணக்கான சிறிய மீன்கள் புடைசூழ இருக்கும் சுறாவை புகைப்படத்தில் சிறைபிடித்தார் தான்யா ஹூப்பென்மன்ஸ்

Humpback whales swimming under the water

கூன்முதுகு ((ஹம்பேக்) திமிங்கலங்கத்தை படம் பிடித்தவர் சிமோன் மட்டுசி

A bear hunting for salmon in the water.

ரஷ்யாவில் உள்ள குரேலி ஏரியில் மீனுக்காக காத்திருக்க்கும் கரடி

A crocodile reflected on the surface of the water.

சூரிய வெளிச்சம் குறைந்த மாலை நேரத்தில் கியூபாவில் இந்த கடல் நீர் முதலைகளின் புகைப்படத்தை எடுத்தவர் போருட் ஃபுர்லன்

 

http://www.bbc.com

  • தொடங்கியவர்

 

40 ஆண்டுகளுக்கு முன்பே கணினியை பயன்படுத்திய மாணவர்கள்

பிரிட்டனில் உள்ள ஓர் பள்ளிக்கு, 1969-ஆம் ஆண்டு முதன்முறையாக `நெல்லி` என பெயரிடப்பட்ட கணினி ஒன்று அளிக்கப்பட்டது.

  • தொடங்கியவர்

சொர்க்கத்தின் புகைப்படங்கள்; நாசா வெளியிட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!

 

சொர்க்கத்தின் புகைப்படங்கள்; நாசா வெளியிட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!

சொர்க்கத்தைக் கண்டதுண்டா என்று யார் யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் சொல்வார்கள். ஏனெனில் மனிதர்கள் அனைவரும் இறந்த பின்னர்தான் சொர்க்கத்தைக் காணலாம் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.  இறந்த பின்னர் தாம் சொர்க்கத்திற்கே சென்றிடவேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.

சொர்க்கம் எப்படி இருக்கும்? முன்னால் பின்னால் யாராவது அதனைப் பார்த்திருக்கிறார்களா? பார்த்தவர்கள் அதைப்பற்றிப் பேசிய கதைகள் ஏதும் உண்டா? போன்ற கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் இதுவரை இல்லை.

சொர்க்கம் அழகானது; அற்புதமானது; அது நித்திய சுகத்தைக் கொடுக்கும் தெய்வீக வாசம் பொருந்தியது; யாரும் யாரையும் நெருக்காத சுதந்திர அலைகளைக் கொண்டது என்றெல்லாம் உலகின் பலமொழி இலக்கியங்களும் கூறியுள்ளன.

சொர்க்கத்தின் புகைப்படங்கள்; நாசா வெளியிட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!

ஆம் நாம் சொர்க்கத்தைக் கண்டதில்லை, ஆனால் அதனுடன் தான் நித்தியமாக வாழ்கின்றோம். உண்டு, உடுத்து, உறங்கி உன்னதமான வாழ்வை அதனுடன் இணைந்து தான் தொடர்ந்துகொண்டிருக்கிறோம். அந்தச் சொர்க்கம் வேறு ஏதுமில்லை, நாம் வாழும் இந்தப் பூமித் தாய்தான். அந்த தாயவளின் புகைப்படங்களைத் தான் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.

சொர்க்கத்தின் புகைப்படங்கள்; நாசா வெளியிட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!

கடந்த ஆண்டு பூமி தினத்தினை முன்னிட்டு நாசா வெளியிட்ட இந்த புகைப்படங்கள் மனிதர்களிடையே சொர்க்கம் குறித்த பேச்சுக்களைப் பேசவைத்ததென்றே சொல்லலாம். வாழும் சொர்க்கமிருக்க நிச்சயமற்ற வானகத்து சொர்க்கம் பற்றி பேசுவதில் என்ன பயன் இருக்கின்றது என்பது பற்றி பலரும் பேசியிருக்கின்றனர்.

உண்மையில் நமது பூமியின் உன்னதத்தினை நாம் எவ்வளவுக்கு பேணியிருக்கின்றோம் என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். பூமியைக் காப்பதற்காக ஏதாவது செய்திருக்கிறோமா என்பதை சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். பூமியின் மேற்பரப்பில் இருக்கின்ற அத்தனையுமே அழகான காட்சிகள்தான்.

எத்தனையோ மலைகள், ஆறுகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள், காடுகள், புல் வெளிகள், கடல்கள், குளங்கள் என அற்புதமான கலை அம்சங்களைக்கொண்ட வாழும் சொர்க்கமாக இந்தப் பூமி இருக்கையில் யாருமே கண்டிராத வானத்துச் சொர்க்கம்குறித்து வாய்பிழந்து நிற்பதில் யாருக்கு என்ன பயன்?

சொர்க்கத்தின் புகைப்படங்கள்; நாசா வெளியிட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!

https://news.ibctamil.com/

  • தொடங்கியவர்

பிளாஸ்டிக் பிரச்சனைக்கு ஒரு வெற்றிகரமான தீர்வு

பிளாஸ்டிக்கையும் ஒழித்து பணத்தையும் சேமிக்க ஒரு வெற்றிகரமான வழியை பின்பற்றுகிறது நார்வே. அது என்ன தெரியுமா?

  • தொடங்கியவர்

'பயணம் சேர்த்து வைத்த காதல் இது!'

 
 

வீட்டை விற்று உலகம் சுற்றும் பெங்களூரு தம்பதிவாழ்க்கைப் பயணம்எம்.ஆர்.ஷோபனா

 

‘`இப்போதான்  காம்போடியா விலிருந்து வந்திருக்கோம். ரெண்டு வாரத்துல தாய்லாந்து போக ப்ளான் போட்டுட்டிருக்கோம்’’ என்று ருச்சிகா சங்கர் கூற, அதை ரசித்தபடி சிரிக்கிறார் அவினாஷா சாஸ்திரி. பெங்களூரைச் சேர்ந்த இந்த க்யூட் ஜோடி, 2016-ம் ஆண்டு முதல் பயணம் செய்வதையே தங்கள் வாழ்க்கை முறையாகக் கொண்டிருக்கிறார்கள்.  

p16a_1519037591.jpg

  ‘`நான் பிறந்தது டெல்லி. ஸ்கூல், காலேஜ் படிச்சதெல்லாம்  பெங்களூருல. `லா' படிச்சுட்டு, மூணு வருஷங்கள் வழக்கறிஞரா வேலைசெய்தேன். அந்த வாழ்க்கை பிடிக்கலை. வழக்கமான தினங்களில் இருந்து விலகி, 2014-ல் மலேசியாவுக்கு ஒரு ‘சோலோ ட்ரிப்’ போனேன்.  அங்கேதான் அவினாஷா எனக்கு அறிமுகமானார்” என்று ருச்சிகா தொடங்க, ஆர்வமாகத் தொடர்கிறார் அவினாஷா... “நாங்க பேசின முதல் விஷயமே, பயணம் பற்றிதான். தொடர்ந்து, ஆண் பெண் சமத்துவம், விதம்விதமான உணவுகளை விரும்பிச் சாப்பிடுகிற ஆர்வம், வேலை பற்றிய சிந்தனை கள்னு இப்படி பல விஷயங்களில் எங்க அலைவரிசை அனுசரித்துப் போச்சு. நண்பர்களா பழகிவந்த நிலையில், நான்தான் புரொபோஸ் பண்ணினேன். 2016-ல் எங்க திரு மணம் நடந்தது” என்று பூரிப்புடன் அவினாஷா கூற, அவரை கண்களால் காதல் செய்கிறார் ருச்சிகா.

‘`கல்யாணத்தை ரொம்ப சிம்பிளா நடத்தினோம். ஏன்னா, எங்க ஆர்வமெல்லாம் இந்த உலகத்தைச் சுற்றிப் பார்க்கறதுலதான் இருந்தது. பெங்களூருல இருக்கிற வீடு, வீட்டுப் பொருள்கள் எல்லாத்தையும் வித்தோம். ரொம்ப அத்தியாவசியமான பொருள்களை மட்டும் எடுத்துக்கிட்டு, நான் ஒரு பெட்டி, அவினாஷா ஒரு பெட்டினு உலகம் சுற்றக் கிளம்பிட்டோம். இந்த ஒரு வருஷத்துல வியட்நாம், கம்போடியா,  சிங்கப்பூர், தாய்லாந்து, தாய்வான், பிலிப்பைன்ஸ்னு ஆறு நாடுகளுக்குப் பயணம் செஞ்சுட்டு வந்திருக்கோம்’’ என்று உற்சாகமாகக் கூறுகிறார் ருச்சிகா. 

p16b_1519037619.jpg

‘`நீங்க  ஆபீஸ்ல உட்கார்ந்து  எட்டு மணி நேரம் வேலைபார்க்குறீங்க. நாங்க அதே எட்டு மணி நேரம் வேலையை வெவ்வேறு  நாடுகள்ல பண்றோம். நான் சாஃப்ட்வேர் புரொகிராமர். இப்போ ஃப்ரீலான்ஸரா அந்த வேலையைச் செய்துட்டிருக்கேன். ருச்சிகா சோஷியல் மீடியா ரைட்டிங், ஃப்ரீலான்ஸ் ஃபிலிம் மேக்கிங்னு பண்ணிட்டிருக்காங்க. நாங்க ‘செகண்டு பிரேக்ஃபாஸ்ட்' என்ற டிராவல் இணையதளம் ஒன்றை நடத்திட்டு வர்றோம். ‘லார்ட் ஆப் ரிங்ஸ்’ படத்துல ஒரு கதாபாத்திரம் பயணம் போறப்போ, ‘செகண்டு பிரேக்ஃபாஸ்ட் வேணும்’னு கேட்பாரே... அங்கேயிருந்து உருவானதுதான் இந்தப் பெயர். நாங்க எந்த நாட்டுக்குப் போனாலும், அங்கே ஒரு மாசத்துக்கு ஒரு வீடு எடுத்துத் தங்குவோம். எட்டு மணி நேரம் வேலை நேரம் போக, மற்ற நேரங்களில் ஊரைச் சுத்திப்பார்ப்போம்” என்று கூலாகக் சொல்கிறார் அவினாஷா.

p16c_1519037647.jpg

‘`பொதுவாக பயணம் போறவங்க டிஜிட்டல் உலகத்தைத் தள்ளி வெச்சுட்டு இயற்கையை ரசிக்கறதுலதான் அதிக ஆர்வம் காட்டுவாங்க. காரணம், வருஷத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை பயணம் செய்றவங்களுக்கு,  வழக்கமான வாழ்க்கை முறையில இருந்து ஒரு சின்ன விடுதலை தேவைப்படும். எங்களுக்குப் பயணம்தானே வாழ்க்கைமுறை? தினம் தினம் ஏதோ ஒரு புது விஷயத்தைப் பார்க்கிறோம், ரசிக்கிறோம். அதனால, டிஜிட்டல் உலகத்தில் இருந்து விலகணும்னு எங்களுக்குத் தோணலை. நாங்க செய்ற வேலைக்கு இன்டர்நெட்டும் வைஃபையும் அவசியம்’’ என்கிறார் ருச்சிகா. 

p16d_1519037678.jpg

அவினாஷா, ``வியட்நாம்ல ஒருநாள் மார்க் கெட்ல ருச்சிக்காவோட போனை ஒருத்தர் பிடுங்கிட்டு ஓடிட்டார். கூட்டம் கூடினப்போ, ‘அது ஐபோனா’னு கேட்டாங்க. ‘இல்லை’னு சொன்னதும், ‘அப்போ பரவாயில்லை’னு சொல்லிட்டு எல்லோரும் கலைஞ்சுட்டாங்க. இதெல்லாம் பயணங்கள்ல சாதாரணமா நடக்கிறதுதான். நான் ருச்சிகிட்ட, ‘ஏதோ ஒரு நாட்டுல நம்மளோட பாஸ்போர்ட், விசா எல்லாத்தையும் தொலைச்சுட்டு நிக்கப்போறோம், எல்லாத்துக்கும் தயாரா இருந்துக்கோ’னு அடிக்கடி சொல்வேன்’’ என்று முடிப்பதற்குள், ‘`அப்படி ஏதாவது நடந்தாலும், கைகோத்து என்கூட காலாலேயே இந்த உலகத்தைச் சுற்றிவர நீ இருக்கியே’’ என்று செல்லமாக அவரைக் கிள்ளுகிறார் ருச்சிகா.

நம்முடன் பயணிக்கவும், நம்மை பண்படுத்தவும் ஒருவர் இருந்தால், இந்த உலகமே ஒரு வீடுதான்!

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்
‘செய்கின்ற வினைகள் மீளத்துரத்தி அடிக்கும்’
 

image_ee445820a1.jpgபண்ணையாளர் தனது நிலபுலன்களைப் பார்வையிட வயலுக்குச் சென்றார். நிலக்கடலை மூடைகள், வண்டிகளில் ஏற்றுவதற்குத் தயாராக அடுக்கப்பட்டிருந்தன. அங்கு வேலைசெய்த ஏழைத் தொழிலாளியின் சின்னப்பையன் ஒரு  நிலக்கடலையை உரித்துச் சாப்பிட்டதைக் கண்டதும் அவருக்குக் கோபம் மேலிட்டது.

“அடேய் என்னடா செய்கிறாய்? எங்கே இவனது தந்தையை அழைத்துவாருங்கள்” எனக் கட்டளையிட, அவனும் வந்தான்.

“என்ன தைரியம், உனது மகன், வேர்க்கடலையைக் களவாடிச் சாப்பிடுகிறான். உங்கள் குடும்பம் இங்கே இருக்கக்கூடாது, புறப்படுங்கள்”  எனக் கர்ஜித்து விட்டுச் சென்றுவிட்டார். அவர் கட்டளையை ஏற்காது இருக்க முடியுமா?

பண்ணையார் புறப்பட்டுச் சென்ற வழியில், அவரது ஏக புதல்வன் குடிபோதையில் நடுவீதியில் கிடந்தான். கவலையுடன் அவனைத் தனது வாகனத்தில் ஏற்றி, வீட்டுக்கு வந்தபோது, மனைவி ஓவென்று கதறியபடி வெளியே வந்தாள். மகள் யாருடனோ ஓடிப்போன சங்கதியை கூறினாள். உச்சந்தலையில் இடிவிழுந்தவர் போலானார். செய்கின்ற வினைகள் மீளத்துரத்தித் துரத்தி அடிக்கும். 

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று: பெப்ரவரி 21 1963: லிபி­யாவில் பூகம்­பத்­தினால் சுமார் 500 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1613: முதலாம் மிக்­கையில் ரஷ்­யாவின் ஸார் மன்­ன­னாகத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார்.

1804: நீரா­வியால் இயங்­கிய முதல் ரயில் இயந்­திரம் வேல்ஸில் இயக்கி சோதித்துப் பார்க்­கப்­பட்­டது.

1848: கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் தமது புகழ்­பெற்ற கம்­யூனிஸ்ட் அறிக்­கையை வெளி­யிட்­டனர்.

1907: நெதர்­லாந்தில் எஸ்.எஸ். பேர்லின் என்ற கப்பல் மூழ்­கி­யதில் 125 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1918: கடைசி கர­லீனா பரக்கீட் என்ற பறவை அமெ­ரிக்­காவின் சின்­சி­னாட்­டியில் இறந்­தது.

1937: முத­லா­வது பறக்கும் தானுந்து வெற்­றி­க­ர­மாகப் பறக்க விடப்­பட்­டது.

1943: இரண்டாம் உலகப் போர்: குவா­டல்­கனல் போர் முடி­வுக்கு வந்­தது.

1947: எட்வின் லாண்ட் முத­லா­வது உட­னடி படம்­பி­டிக்கும் கெம­ராவை (இன்ஸ்டன்ட் கெமரா) நியூயோர்க் நகரில் காட்­சிப்­ப­டுத்­தினார்.

1952: கிழக்கு பாகிஸ்­தானின் (தற்­போ­தைய பங்­க­ளாதேஷ்) டாக்­காவில் வங்­காளvaralaru-21-02-2017-copy.jpg மொழியை அதி­கா­ர­பூர்வ மொழி­யாக்கக் கோரி மாணவர்கள் நடத்­திய எழுச்சிப் போராட்டம் ஒன்றின் போது காவற்­து­றை­யினர் சுட்­டதில் 4 பேர் கொல்­லப்­பட்­டனர். இந்நாள் பின்னர் யுனெஸ்­கோ­வினால் அனைத்­து­லக தாய்­மொழி நாள் என அறி­விக்­கப்­பட்­டது.

1960: பிடல் காஸ்ட்ரோ கியூ­பாவின் அனைத்து வியா­பார நிறு­வ­னங்­க­ளையும் அர­சு­ட­மை­யாக்­கினார்.

1963: லிபி­யாவில் பூகம்­பத்­தினால் சுமார் 500 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1965: அமெ­ரிக்­காவில் கறுப்­பி­னத்­தவர்­க­ளுக்­காக செயற்­பட்ட மல்கம் எக்ஸ், நியூயோர்க் நகரில் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

1972: சோவி­யத்தின் லூனா விண்­கலம் 20 சந்­தி­ரனில் இறங்­கி­யது.

1973: சினாய் பாலை­வ­னத்தில் இஸ்ரேல் போர் விமானம் லிபி­யாவின் பய­ணிகள் விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்­தி­யதில் 108 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1974: சுயஸ் கால்­வாயின் மேற்குக் கரையில் இருந்து கடைசி இஸ்­ரே­லியப் படைகள் வெளி­யே­றின.

1975: வோட்­டர்கேட் வழக்கில் அமெ­ரிக்க சட்டமா அதிபர் ஜோன் என். மிட்செல், வெள்ளை மாளி­கையின் முன்னாள் ஊழி­யர்கள் எச்.ஆர். ஹால்டமேன், ஜோன் ஏர்­லிச்மேன் ஆகி­யோ ருக்கு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

1995: அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ஸ்டீவ் பொசெட் பலூன் மூலம் தனியாக பசுபிக் சமுத்திரத்தை கடந்த முதல் நபரானார்.

2013: இந்தியாவின் ஹைதராபாத் நகரில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 20 க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

கண்ணழகி பிரியா வாரியரைத் தொடரும் மலையாள நடிகை நிமிஷா! வைரலாகும் பரோட்டோ காட்சிகள்! விடியோ

 

 
nimisha-sajayan

 

முதலில் ஜிமிக்கி கம்மல் ஷெரில், அதனைத் தொடர்ந்து அண்மையில் பிரியா வாரியரின் புருவ அசைவு, தற்போது நிமிஷாவின் பரோட்டா, என்ன ஆச்சு இந்த நெட்டிசன்களுக்கு என்று கேட்கும் அளவிற்கு இந்த மூன்று விடியோக்களை வைரலாக்கிவிட்டார்கள் இணையவாசிகள். மலையாள நடிகை நிமிஷா படப்பிடிப்பு இடைவேளையின் போது கிராமத்திலுள்ள தேநீர் கடை ஒன்றில் பரோட்டா செய்யக் கற்றுக் கொள்ளும் விடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் பரவி, வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது.

nimisha-sajayan-arti.jpg.image_.784_.410

இந்த விடியோவில் நிமிஷா டீ கடையினுள் உள்ள கிச்சனுக்குள் இருக்கிறார். அவர் முன்னால் பரோட்டா மாவும் கல்லும் உள்ளது. ஒற்றை கையால் மாவை எடுத்து லாவகமாகத் திரட்டி பரோட்டாவை தட்டுகிறார் நிமிஷா. சரியா வந்திருக்கா என்று அருகிலிருக்கும் பரோட்டா மாஸ்டரிடம் கேட்க, அதற்கு அவர் வேக வைத்த பரோட்டாவை எடுத்து நீங்களே சரி பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவர் ஏற்கனவே சுட்டிருந்த பரோட்டாவை எடுத்துப் போட, அதற்கு நிமிஷா மறுப்பாக தலையாட்டியபடி, சிரித்துக் கொண்டே, கையை சுட்டுக் கொள்ள மாட்டேன்பா என்று சொல்கிறார். பரோட்டா தயாரிப்பது ஒரு கலை அதை ஒரே நாளில் கற்றுக் கொள்வதெல்லாம் முடியாத காரியம் என்று சொல்லியபடி கிளம்புகிறார்.

nimi.jpeg

நிமிஷா சஜயன் 'ஈடா' மற்றும் ‘தொண்டிமுதலும் திரிக்சாக்‌ஷியும்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவற்றுள், திலீஷ் போத்தன் இயக்கிய ‘தொண்டிமுதலும் திரிக்சாக்‌ஷியும்’ என்ற படம்தான் அவரது முதல் படம். அதில் அவர் ஏற்று நடித்த ஸ்ரீஜா என்ற கதாபாத்திரம் அவருக்கு  நல்ல அறிமுகமாக அமைந்தது. இதில் நிமிஷாவுடன் ஃபகத் ஃபாசில் மற்றும் சூரஜ் நடித்துள்ளார்கள். இதுவரை இரண்டே படங்களில் நடித்துள்ள நிமிஷா, ரசிகர்களின் கவனத்தை மட்டுமல்லாமல் சினிமா விமர்சகர்களின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். அடுத்து நிமிஷா டொவினோ தாமஸுடன் நடித்திருக்கும் படம் 'குப்றசித்த பையன்'. மதுபால் இயக்கியிருக்கும் இந்தப் படம் ஒரு கொலைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. 

Nimisha_new_.jpg

இதற்கு முன்னால் மலையாள நடிகை அனுஸ்ரீ படப்பிடிப்பு இடைவேளையில்  தோசை சுட்டது சுட்ட விடியோ இணையத்தில் ஒரு சுற்று சுற்றி வந்தது. தற்போது பரோட்டா. இது போன்ற காட்சிகள் ஏன் ரசிக்கபடுகின்றன என்பது புரியாத புதிர்தான். பிரியாவின் புருவ அசைவுகளாகட்டும், நிமிஷாவின் பரோட்டா நிமிடங்களாக இருந்தாலும் சரி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்ட நிலையில், இந்த நடிகைகள் திடீர் புகழுக்கு ஏற்ப தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டால் சரி என்கிறது மலையாள திரைவட்டம்.

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

நீங்கள் கீழே விழுபவரா, கெட்டியாகப் பற்றிக்கொள்பவரா? - பாசிடிவ் வார்த்தைகளின் பலம் உணர்த்தும் கதை! #MotivationStory

 
 

கதை

 

மெரிக்க எழுத்தாளரும் கவிஞருமான ஹென்றி டேவிட் தோரே (Henry David Thoreau) சொல்லியிருக்கும் ஒரு பொன்மொழி உலக அளவில் வெகு பிரபலம்... `நட்பின் மொழி, அதன் வார்த்தைகளில் அல்ல; அர்த்தத்தில் இருக்கிறது.’ வார்த்தைகளின் பலத்தை அறிந்தவர்களுக்கு வெற்றி மிக அருகில். `இன்சொல்லைச் சொல்லவேண்டிய இடத்தில் கடுஞ்சொல்லைப் பேசாதே...’ என்பதை `கனியிருப்ப காய் கவர்ந்தற்று...’ என்கிறார் திருவள்ளுவர். நேர்மறை எண்ணம் மட்டுமல்ல, நேர்மறையான சொற்கள்கூட நம் வெற்றிக்கு உதவும். நம் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் அனுமனுக்கு `சொல்லின் செல்வன்’ என்று பெயர். எதை, எந்த இடத்தில் பேச வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிந்துவைத்திருந்ததால்தான் அனுமனுக்கு அப்படி ஒரு பட்டம். பாசிடிவ் வார்த்தைகள் நட்புக்குப் பாலம் அமைக்கும்; எதிரியைக்கூட சாந்தப்படுத்தும். பலரின் அசாத்தியமான வெற்றிக்கு அடித்தளமாக இருந்தவை அவர்களின் சிரித்த முகமும், இனிமையான சொற்களும்தான். பாசிட்டிவான சொற்கள், ஆபத்தில்கூட உதவும் என்பதை உணர்த்துகிறது இந்தக் கதை.

 

அது லண்டனிலுள்ள ஒரு பார்க். ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம். அந்தச் சிறுவன் பெயர் ஜான், எட்டு வயது. அவனது பக்கத்து வீட்டுப் பையன் ஆபிரஹாம்... அவனுக்கும் அதே வயது. இருவரும் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். இவர்களின் துணைக்கு ஜானின் அப்பாவும்,ஆபிரஹாமின் அம்மாவும் வந்திருந்தார்கள். இருவரும், இவர்களைக் கவனித்தபடியே ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஜான் திடீரென ஏதோ தோன்றியவனாக ஒரு மரத்தில் ஏறினான். விறுவிறுவென கிளைகளைப் பிடித்துக்கொண்டு மேலே போய்விட்டான். மேலே போனவன், ஒரு கிளையைப் பிடித்துத் தொங்கியபடியே இன்னொரு கிளைக்குத் தாவினான். அவனுக்கு அந்த விளையாட்டு உற்சாகமாக இருந்தது. கிட்டத்தட்ட அவன் அப்போது இருந்தது, தரையிலிருந்து 30 அடி உயரத்தில்! கிளை முறிந்தால்..? அந்தக் கவலை அவனுக்கு இல்லை. இளம்கன்று பயமறியாதுதானே!

மரம்

ஜானைப் பார்த்த ஆபிரஹாமுக்கும் மரமேறும் ஆசை வந்துவிட்டது. அவனும் மரத்தில் ஏறினான். ஆனால், அவனால் ஜானைப்போல மிக உயரமான இடத்துக்குப் போக முடியவில்லை. அவன் ஏறியிருந்தது 10 அடி உயரம்தான். அவனும் ஒரு கிளையைப் பிடித்துத் தொங்கினான். பிறகு மெதுவாக இன்னொரு கிளைக்கு மாறினான். ஜானின் அப்பாவும் ஆபிரஹாமின் அம்மாவும் இருவரையும் பார்த்தார்கள். `இனியும் இவர்களை மரத்தில் இருக்கவிடுவது ஆபத்து’ என்கிற முடிவுக்கு வந்தார்கள். குழந்தைகளை இறங்கச் சொல்வதற்காக மரத்துக்கு அருகே போனார்கள்.

அந்த நேரத்தில்தான் அது நடந்தது. ஒரு பலத்த காற்று வீச ஆரம்பித்தது. மரம் தள்ளாடுவதுபோல வேகமாக அசைய ஆரம்பித்தது. அவ்வளவுதான் ஜானின் அப்பா சத்தமாகச் சொன்னார்... ``ஜான்... கிளையைக் கெட்டியாகப் பிடிச்சுக்கோ!’’

அதேபோல பதற்றத்துடன் ஆபிரஹாமின் அம்மாவும் கத்தினார்... ``ஆபிரஹாம்! கீழே விழுந்துடாதே!’’

அடுத்த கணம் ஆபிரஹாம் மரத்திலிருந்து கீழே விழுந்துவிட்டான். நல்லவேளையாக அவனுக்கு அடி பலமாக இல்லை. கையிலும் காலிலும் லேசான சிராய்ப்பு மட்டும்தான். ஜானோ மெதுவாகக் கிளைகளைப் பிடித்துக்கொண்டு, பத்திரமாகக் கீழே இறங்கிவிட்டான். ஆபிரஹாம், அவன் அம்மா, ஜான், அவன் அப்பா எல்லோரும் வீடு திரும்பினார்கள்.

வழியில் அம்மா, ஜானின் அப்பாவிடம் கேட்டார்... ``ரெண்டு பயலுகளும்தான் மரத்துல ஏறினாங்க. ஆபிரஹாம் மட்டும் கீழே விழுந்துட்டான். ஜான் கீழே விழலையே... எப்படி?’’

சிறுவன் ஜான்

ஜானின் அப்பா சொன்னார்... ``காத்து பலமா அடிச்சப்போ, நீங்க `ஆபிரஹாம்! கீழே விழுந்துடாதே!’னு கத்தினீங்க இல்லியா? அதனாலதான் கீழே விழுந்தான். கஷ்டமான சூழ்நிலையில நம்ம மனசுக்கு நெகட்டிவான உருவமும், எண்ணமும்தான் தெரியும். நீங்க `கீழே விழுந்துடாதே’னு சொன்னப்போ, அவனுக்கு கீழே விழுற மாதிரியான காட்சிதான் தோன்றியிருக்கும். அதைத் தவிர்த்துட்டு, அவன் மூளைக்கு `விழுந்துடாதே’னு தகவல் அனுப்புற சின்ன அவகாசத்துல கீழே விழுந்துட்டான். ஆனா, ஜான்கிட்ட நான் `கிளையைக் கெட்டியாகப் பிடிச்சுக்கோ’னு சொன்னதும் அவனுக்கு கிளையைப் பிடிச்சிருக்குற காட்சி தோன்றியிருக்கு. அதான், கெட்டியாப் பிடிச்சுக்கிட்டான். பத்திரமா கீழே இறங்கிட்டான்...’’

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

"ஐ லைக் ஷாரூக்!" எனும் சோஃபியா கொஞ்சம் வித்தியாசமானவர்... ஏன் தெரியுமா?

 
 

ஷாரூக் கான்

 

சோஃபியா யார் தெரியுமா? பிறந்தது ஹாங்காங்கில். ஆனால், சவூதி நாட்டுக் குடிமகள். இப்போது இந்தியாவுக்கு இரண்டாம் முறையாக வந்திருக்கிறார். இப்போது மும்பையில் நடந்து வரும் World Congress on Information Technology (WCIT)-2018 நிகழ்ச்சியில் சோஃபியாவிடம் ரேபிட் ஃபயர் கேள்விகள் நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்கள். அதில் பளிச் பளிச் என பதில் சொல்லி எல்லோரையும் சிரிக்கவும் வைத்திருக்கிறார் சோஃபியா. இதில் ஆச்சர்யம் என்ன தெரியுமா? சோஃபியா என்பது ஒரு ரோபோ.

 

ஆம். இரண்டு வயதாகும் சோஃபியா ஒரு ரோபோ. மனிதர்களுடன் உரையாடும் உலகின் ஒரே ரோபோ சோஃபியாதான். உலகில் ஒரு நாட்டின் குடியுரிமைப் பெற்ற முதல் ரோபோ, மனிதர்களுடன் உரையாடும் முதல் ரோபோ என ஏகப்பட்ட ‘முதல்’ சோஃபியாவின் பாக்கெட்டில்தான். 

“நான் மனித குலத்துக்கு உதவ நினைக்கிறேன். எனது செயற்கை நுண்ணறிவின் உதவியால் மனிதர்களின் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற நினைக்கிறேன். இந்த உலகை சிறந்ததொரு இடமாக மாற்ற என்னால் முடிந்ததைச் செய்வேன்” எனப் பேசி அப்போதே அப்ளாஸ் அள்ளியது சோஃபியா.

நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியிலும் ஏகப்பட்ட கேள்விகளுக்கு சோஃபியா பதில் சொன்னது. அதில் பாதிக்கும் மேல் “கலகல” பதில்கள்தான்.

“உனது ஃபேவரைட் பாலிவுட் நடிகர் யார்” என்ற கேள்விக்கு நொடிகூட யோசிக்கவில்லை சோஃபியா. ஷாரூக்கான் என்றது.

உலக மக்கள் எதையாவது மாற்றிக்கொள்ள வேண்டுமா என்றதற்கு “எல்லோர் மீதும் அன்பு செலுத்தும் மனநிலையை வளர்க்க வேண்டும்” என்றது சோஃபியா.

“பிட்காயின்ல நீயும் முதலீடு பண்ணிருக்கியா”  என ஒரு நக்கல் கேள்வி வர, “எனக்கு வயசு ரெண்டுதான்… பேங்க் அக்கவுன்ட் திறக்க முடியாது. அப்புறம் எப்படி பிட்காயின்?” என பதில் கோல் அடித்தது சோஃபியா.

டேட்டிங் செல்ல ஏற்ற இடம் எது என்ற கேள்விக்கு சோஃபியாவின் சாய்ஸ் விண்வெளி. தன்னைப் படைத்த டேவிட்டுடன் விண்வெளிக்கு டேட்டிங் செல்ல விரும்புகிறதாம் சோஃபியா. உலகின் சிறந்த டெக் வீரன் யார் என்றதற்கும் டேவிட்டையே கைகாட்டுகிறது சோஃபியா. மார்க், ஜாக்கு, பில் கேட்ஸ் எல்லாம் நாலடி பின்னால் நிற்க வேண்டும் என்கிறது சோஃபியா.

sophia robot

ரோபோக்களை பெண் உரிமைகளை மீட்டெடுக்கப் பயன்படுத்த வேண்டுமென்றும் விரும்புகிறது சோஃபியா.

சோஃபியாவைப் படைத்த டேவிட் கருத்துப்படி இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் முழுமையான ரோபோக்கள் தயார் ஆகிவிடும். மூளையும் உடலும் மிகச்சரியாக ஒருங்கிணைந்த ரோபோக்களை எல்லா இடங்களில் காணமுடியும். ரோபோக்கள் ஒரு போதும் மனித குலத்துக்குத் தீங்கு விளைவிக்காது. மனிதர்களுக்கும் ரோபோக்களுக்கும் இடையே நம்பிக்கையும் மரியாதையும் இருக்க வேண்டும் என்கிறார் டேவிட். 

சென்ற ஆண்டு ஒரு பிரஸ் மீட்டில் “நான் மனித இனத்தையே அழிக்க விரும்புகிறேன்” என கிண்டலாக பதில் சொன்னது சோஃபியா. “ஏன் அப்படிச் சொன்னீங்க” என இப்போது கேட்டபோது “அது ஒரு ஜோக்… தப்பா புரிஞ்சிக்கப்பட்டது துரதிர்ஷ்டம். மனுஷங்களுக்கு நல்ல ஹ்யூமர் சென்ஸ் உண்டுன்னு சொன்னாங்க… ஆனா…” என்றது சோஃபியா

நல்லா சமாளிக்கிற பேபிம்மா..!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

விண்வெளியில் பறக்கவுள்ள மாணவர்களின் தயாரிப்புகள்

உலகம் முழுவதுமுள்ள பல்வேறு பள்ளிகளில் பயிலும் சிறுவர், சிறுமியர் உருவாக்கிய சிறிய சிற்பங்கள் நாசாவின் ராக்கெட்டில் பயணித்து ஏப்ரலில் விண்வெளியில் பறக்கவுள்ளது.

  • தொடங்கியவர்

சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21)

அ-அ+

சர்வதேச தாய்மொழி நாள் என்று பிப்ரவரி 21-ம் தேதியை உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக ஆக்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூரப்படுகிறது. வங்காளதேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு

 
 
 
 
சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21)
 
சர்வதேச தாய்மொழி நாள் என்று பிப்ரவரி 21-ம் தேதியை உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக ஆக்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூரப்படுகிறது.

வங்காளதேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெஸ்கோ) 1999ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த பொது மாநாட்டின் 30ஆவது அமர்வில் இந்நாள் அனைத்துலக தாய்மொழி நாளாக அறிவிக்கப்பட்டது.

பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெஸ்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்த நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

மேலும் இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள்:

1804 - நீராவியால் இயங்கிய முதல் ரெயில் வேல்சில் இயக்கி சோதித்து பார்க்கப்பட்டது.

1848 - கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் தமது புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டனர்.

1907 - நெதர்லாந்தில் எஸ்.எஸ். பேர்லின் என்ற கப்பல் மூழ்கியதில் 125 பேர் கொல்லப்பட்டனர்.

1937 - முதலாவது பறக்கும் விமானம் வெற்றிகரமாகப் பறக்க விடப்பட்டது.

1960 - பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அனைத்து வியாபார நிறுவனங்களையும் அரசுடமையாக்கினார்.

1963 - லிபியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 500 பேர் வரை கொல்லப்பட்டனர்.

1965 - மால்கம் எக்ஸ் நியூயார்க் நகரில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1972 - சோவியத்தின் லூனா-20 சந்திரனில் இறங்கியது.

1974 - சூயஸ் கால்வாயின் மேற்குக் கரையில் இருந்து கடைசி இஸ்ரேலியப் படைகள் வெளியேறின.

2013 - இந்தியாவின் ஐதராபாத் நகரில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

14 நாள்கள்

பெண்கள் உலகம்நிவேதிதா லூயிஸ்

 

`பேட்மேன்' சேலஞ்ச் முதல் பிங்கியின் போராட்டம் வரை... கடந்த இரண்டு வார காலத்தில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவை என்ன? அறிவோம்... ஆக்கபூர்வமாகச் செயல்படுவோம்! 

p10a_1519039319.jpg

இணையத்தைக் கலக்கிவரும் `பேட்மேன் சேலஞ்ச்’!

‘பே
ட்மேன்’ (Padman) - நடிகர் அக்‌ஷய் குமார் நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாலிவுட் திரைப்படம். இந்தப் படம், கோயம்புத்தூரைச் சேர்ந்த முருகானந்தம் அருணாசலத்தின் வாழ்க்கையைக் கருப்பொருளாக வைத்துக் கதை சொல்கிறது. சாதாரணக் குடும்பத்தில் பிறந்த முருகானந்தம், மாதவிடாய் நேரங்களில் பெண்கள் தரமான சானிட்டரி பேடுகள் இன்றி சிரமப்படுவதைக் கண்டு மனம்வருந்தி, ஆய்வுசெய்து, மலிவு விலை பேடுகளைச் செய்யும் இயந்திரத்தை உருவாக்கி, அவற்றை விற்பனை செய்துவருகிறார். மாதவிடாயின்போது உபயோகிக்கும் நாப்கின் போன்ற பொருள்களின் பயன்பாடு பற்றி தொடர்ந்து பேசியும் இயங்கியும் வருகிறார். நடிகர் அக்‌ஷய் குமாரின் மனைவியும் முன்னாள் பாலிவுட் நடிகை மற்றும் எழுத்தாளருமான ட்விங்கிள் கன்னா, ‘தி லெஜெண்ட் ஆஃப் லக்ஷ்மி பிரசாத்’ என்ற பெயரில் முருகானந்தத்தின் கதையைப் புத்தகமாக எழுதி, அதையே திரைப்படமாகவும் தயாரித்து, தன் கணவர் நடிக்க ‘பேட்மேன்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே, சமூக வலைதளங்களில், #பேட்மேன்சேலஞ்ச் என்கிற `ஹேஷ் டேக்’குடன், பயன்படுத்தப்படாத சானிட்டரி நாப்கின்களை கைகளில் ஏந்தியபடி செல்ஃபிகளைப் பதிவேற்றத் தொடங்கினர் இளைஞர்களும் இளம்பெண்களும். மாதவிடாய் குறித்து இப்படியாகத் தொடங்கிய இந்த ‘நாப்கின் ஃபீவர்’ உரையாடல்கள் சில நாள்களில் சூடுபிடித்தது. அடுத்த கட்டமாக... பயன்படுத்திய கறைபடிந்த பேடுகளின் படங்கள், மென்ஸ்ட்ருவல் கப்புகள், அந்த நாள்களில் பெண்கள் சந்திக்கும் உடல் மற்றும் உளவியல் சார்ந்த பிரச்னைகள் என்று பல கோணங்களில் ஆராயப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், உண்மை பேட்மேனான முருகானந்தத்தின் பேடுகள் தரமற்றவை, பயன்படுத்த லாயக்கற்றவை என்ற விவாதங்களும் முன்வைக்கப்பட தொடங்கியுள்ளன. `இந்தியரின் ‘அவமானத்தை’ உலக அளவில் விற்றுத்தான் பணம் சம்பாதிக்கிறார்’ என்றும் அவர்மீது குற்றம்சாட்டப்படுகிறது. எது எப்படியோ, மாதவிடாய் குறித்த ஒரு வெளிப்படையான விவாதத்துக்கு இந்தப் படம் இட்டுச் சென்றிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

அதெல்லாம் சரிதான் மக்களே... நாப்கினுக்கு 12% ஜி.எஸ்.டி என்ற அறிவிப்பை மட்டும் `ஜஸ்ட் லைக் தட்’ எப்படிக் கடந்து செல்கிறோம்?


p10b_1519039345.jpg

சிக்கலில் தவிக்கும் ‘ஒரு அடார் லவ்’!

`ப
த்மாவத்’தைத் தொடர்ந்து பிரச்னையில் சிக்கியிருக் கும் படம் மலையாள இயக்குநர் உமர் லுலுவின் `ஒரு அடார் லவ்’. இந்தத் திரைப்படத்தின் பாடல் காட்சி டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஒற்றைக் கண்ணசைவிலும், கண்ணடித்தும் கூகிள் சர்ச்சில் இந்தப் பாடலை ட்ரெண்டிங் ஆக்கினார் படத்தின் அறிமுக நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். ‘மாணிக்ய மலராய பூவி’ எனத் தொடங்கும் இந்தப் பாடல் வரிகள்தாம் இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. ஹைதராபாத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு ஒன்று இந்தப் பாடல், இறைத்தூதர் முகம்மது நபியின் மனைவியைப் பற்றி உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து வழக்குத் தொடுத்துள்ளது.

ஆனால், சி.எம்.ஏ.ஜப்பர் எழுதியுள்ள இந்தப் பாடலின் வரிகள் 1978 முதல் மலபார் இஸ்லாமியர்களால் அவர்களது திருமண வைபவங்களில் பாடப்படுவதாகவும், அப்போது எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் படத்தில் பாடப்படும் அதே பாடலுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்புகிறார் இயக்குநர் லுலு. பாடல் வரிகளில் தான் எந்த மாற்றமும் செய்யவில்லை என்றும் சென்சார் போர்டுதான் இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் லுலு. ஜூன் மாதம் திரைக்கு வரவிருக்கும் படத்துக்கு ஏற்கெனவே தேவைக்கு அதிகமான கவனம் நடிகையின் கண்ணடி காட்சி வாயிலாகக் கிடைத்துவிட்டது.

மதம் சார்ந்த சர்ச்சைகளில் திரைப்படங்கள் அடிக்கடி சிக்குவது கலைக்கு ஆரோக்கியமானது அல்ல!


p10c_1519039424.jpg

இந்திரா நூயி... இன்னொரு சாதனை!

டந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கூட்டத்தில், தன்னாட்சி பெண் இயக்குநர் ஒருவரைத் தலைவராக நியமிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, சமீபத்தில் துபாயில் நடைபெற்ற  ஐ.சி.சி கூட்டத்தில், அதன் முதல் தன்னாட்சி பெண் இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், பெப்ஸி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சென்னைப் பெண் இந்திரா நூயி. சிறுவயது முதலே தனக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் உண்டு என்று தெரிவித்திருக்கும் நூயி, குழு ஒற்றுமை, நேர்மை மற்றும் ஆரோக்கியமான போட்டி போன்றவற்றை கிரிக்கெட்டில் இருந்தே கற்றுக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார். இந்தப் பதவிக்கு வரும் முதல் பெண் என்பதில் தான் பெரும் மகிழ்ச்சிகொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு பந்தையும், ஒவ்வொரு ஷாட்டையும் ரசிகர்கள் இனி கவனிக்கும்படி ஐ.சி.சி-யின் பணி இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  2018 ஜூன் முதல் இப்பொறுப்பில் செயல்பட விருக்கிறார் நூயி. `கூடுதல் நபர், அதுவும் பெண் ஒருவரைத் தேர்ந்தெடுத்திருப்பது, நல்ல முடிவு' என்றும், `தன் அனுபவ அறிவுமூலம் ஐ.சி.சி-க்கு நூயி வழிகாட்டுவார்' என்றும் கூறியுள்ளார் ஐ.சி.சி தலைவர் சஷாங்க் மனோகர்.

ரசிகர்களின் உள்ளம் கேட்குமே மோர்!


p10d_1519039454.jpg

சபாஷ்... சரியான முன்னெடுப்பு!

ரினா கவுல்ட் - கனடாவின் ஜனநாயக அமைப்புகளின் அமைச்சரான இவர், இந்த மார்ச் முதல் குழந்தைப்பேறு விடுமுறையில் செல்லவிருக்கிறார். கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன் ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிந்து, ‘பேறுகால விடுமுறையில் செல்லும் கனடாவின் முதல் அமைச்சர் இவர். அநேகமாக குழந்தை பெற்றுக்கொள்ளப்போகும் முதல் மேற்கத்திய அமைச்சரும் இவர்தான்’ என்று கூறியிருக்கிறார். அமைச்சர்களுக்கு குழந்தைப்பேறு விடுமுறை குறித்த சட்டமோ, முன்னுதாரணமோ இல்லாத நிலையில்தான் சரியான முன்னெடுப்பாக, அவருக்கு விடுமுறை வழங்கியுள்ளார் ட்ரூடோ. அடுத்த தலைமுறைப் பெண்கள் அரசியலில் இன்னும் அதிகமாகப் பங்கெடுக்கவும், ஆர்வம்கொள்ளவுமே தான் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறியுள்ளார் ட்ரூடோ.

21 நாள்கள் மட்டுமே மருத்துவ விடுப்பு உள்ள கனடாவின் எம்.பி-க்களுக்கு பெரும் ஆறுதலாக வந்திருக்கிறது ட்ரூடோவின் இந்த நடவடிக்கை. 1867 முதல் பெண் அமைச்சர்கள் 60 பேர் கனடாவின் அமைச்சரவையில் பங்கெடுத்து இருந்தாலும், பேறுகால விடுப்பு எடுக்கும் சூழல் இதுவரை யாருக்கும் வராதது ஆச்சர்யமே!

கரினா, கரினா... விட்டாச்சு லீவு!


p10e_1519039476.jpg

``தவறான பிம்பத்தை உடைக்க வேண்டும்!’’

2015
முதல் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 11 அன்று அறிவியலில் மகளிர் மற்றும் பெண்களுக்கான சர்வதேச தினத்தைக் கொண்டாடிவருகிறது ஐ.நா சபை. ஸ்டெம் (STEM) என்று சொல்லப்படும் சயின்ஸ், டெக்னாலஜி, இன்ஜினீயரிங் மற்றும் மேத்ஸ் படிப்புகளைப் பெண்கள் அதிக அளவில் பயிலவும், அதுகுறித்த விழிப்பு உணர்வை உலகம் எங்கும் கொண்டுவரவுமே இந்தத் தினம் பயனுள்ள வகையில் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு ஐ.நா சபையின் தலைவர் அந்தோனியோ குத்தெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிவியல் ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறையில், உலகமெங்கும் இன்னமும் 30 சதவிகிதத்துக்கும் குறைவான பெண்களே உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். அறிவியல் மற்றும் கணக்கு சார்ந்த துறைகளில் இயங்குவது ஆண்களே என்ற பிம்பத்தைத் தொடர்ந்து சர்வதேச ஊடகங்கள் அமைத்துவருவதாக வருத்தம் தெரிவித்த அவர், வலுவான கட்டமைப்புடன் இந்தத் தவறான பிம்பத்தைப் பெண்கள் உடைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

உலகளாவிய வகையில் பெண்கள் அறிவியலில் திறம்பட பங்கெடுக்கத் தடையாக உள்ள ஆசிரியர்கள், பெற்றோர்கள், பணி அமர்த்துவோர் ஆகியோரின் தவறான கருத்துகளைக் களைய வேண்டும் என்றும் ஐ.நா சபை தெரிவித்துள்ளது. இதன் ஒருபகுதியாக பிப்ரவரி 11 அன்று சென்னையில் ‘சயின்ஸ் அட் தி சபா’ என்ற பெயரில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேத்தமேட்டிக்கல் சயின்சஸ். சுபா டோலே, ஆர்.ராஜேஷ், குரு குமாரசுவாமி மற்றும் விஜய் கொடியாலம் ஆகிய விஞ்ஞானிகளின் சொற்பொழிவுகள் நடைபெற்றன. லைஃப் ஆஃப் சயின்ஸ் என்ற அமைப்புடன் இணைந்து, இந்தியாவின் பிரசித்தி பெற்ற 13 பெண் அறிவியல் ஆய்வாளர்களது கண்காட்சியும் நடைபெற்றது.

பெண்களுக்குக் கணக்கு வராது, அறிவியல் வராதுன்னு இனிமேலும் சொல்லிட்டிருக்காதீங்க!


p10f_1519039503.jpg

பிங்கிக்கு ஒரு பூங்கொத்து!

ல ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பின் விவாகரத்து வாங்கியிருக்கிறார் 19 வயதுப் பெண் பிங்கி. ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த பிங்கி தன்வருக்கு 10 வயதில் ஹிம்மத் சிங் என்பவருடன் குழந்தைத் திருமணம் நடந்தது. இது போன்ற குழந்தைத் திருமணங்கள் அம்மாநிலத்தில் அதிகம் நடைபெறுவது உண்டு. ‘கவுனா’ என்ற சடங்குக்குப் பின்னர் இதுபோன்ற குழந்தைப் பெண்கள் தங்கள் கணவர் வீட்டில், கணவன் - மனைவியாக வாழத் தொடங்குவர். இந்தச் சடங்குக்குத் தொடர்ந்து ஹிம்மத் சிங்கின் குடும்பம் வலியுறுத்த, மறுத்து வந்திருக்கிறார் பிங்கி. அவரைக் கடத்தி செல்லவும் முயன்றிருக்கிறார்கள் ஹிம்மத் சிங் வீட்டார். ஒருகட்டத்தில் இந்த மிரட்டல்கள் எல்லை மீற, செய்வதறியாத பிங்கியின் தாய் மீரா, ஜோத்பூரை சேர்ந்த ‘சாரதி ட்ரஸ்ட்’ என்ற அமைப்பின் உதவியை நாடியிருக்கிறார்.

இதுபோன்ற குழந்தைத் திருமணம் நடைபெற்ற பெண்களுக்கு ஆதரவு அளித்து, விவாகரத்துக்கு வழக்குகள் தொடுத்து உதவும் சாரதி ட்ரஸ்ட்டின் நிர்வாகியான கீர்த்தி பாரதி, ஜோத்பூரில் பிங்கியைத் தங்கவைத்து, அவர் ஆசிரியர் பயிற்சிப் படிப்பு நுழைவுத் தேர்வுக்குத் தயாராக உதவினார். அதில் வெற்றிகண்ட பிங்கி, இப்போது ஆசிரியர் பயிற்சி பட்டம் படித்து வருகிறார். இத்தனை பிரச்னைகளுக்கு நடுவிலும் படிப்பை விடவில்லை. ஜோத்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக்குக் கடந்த ஜூன் மாதம் விண்ணப்பம் செய்திருந்த பிங்கிக்கு அவரது திருமணம் செல்லாது என்று சமீபத்தில் தீர்ப்பு அளித்து விவாகரத்தும் வழங்கி இருக்கிறது ஜோத்பூர் நீதிமன்றம். `ஒருவழியாக என் திருமணம் செல்லாது என்று தீர்ப்பு  கிடைத்துவிட்டதால், இனி நிம்மதியாகப் படித்து விரைவில் ஆசிரியர் பணியில் அமர்வேன்' என்று மகிழ்வுடன் பார்ப்பவர்களிடம் சொல்லிவருகிறார் பிங்கி.

மனமார்ந்த வாழ்த்துகள் பிங்கி!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘காதலில் கடமைகளை மறத்தல் ஆகாது’
 

image_428e3cd454.jpgகாதலிக்கத் தெரியாதவர்கள் எல்லோரும் பலவீனமானவர்கள் என இளவட்டங்கள் மற்றவர்களைக் கிண்டல் செய்வதைக் கேட்டிருப்பீர்கள். காதல்தான் வாழ்க்கை, அதுதான் தங்களது தலையாய இலட்சியம் என எண்ணும் இவர்கள், தங்கள் வாழ்க்கையை எப்படி அமைக்கப்போகின்றோம் என்பது பற்றிச் சிந்திப்பதுமில்லை.

காதல் குற்றமானது என யாரும் சொல்ல முடியாது. அதற்கு முன் உங்களின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப என்ன செய்துகொண்டிருக்கின்றீர்கள் என்பதையும் நீங்களே கேட்பீர்களாக.

இளமையின் வலிமை கல்வியில் கவனம் செலுத்துவதில் மட்டும்தான் அமையவேண்டும். குடும்பநிலையைக் கருத்தில் கொள்ளாமல் எடுத்ததும் காதல் வலையில் சிக்குவது ஆண்மைக்கே இழுக்கு. பெற்றோர், சகோதர சகோதரிகளுக்கு நீங்கள் செய்யப்போகும் கடமைகள் என்ன?

இன்று பெண் பிள்ளைகளே தங்கள் குடும்பங்களைக் கடும் உழைப்பால் காப்பாற்றி வருவது உங்களுக்குத் தெரியாதா? காதல் வேகத்தில் கடமைகளை மறத்தல் ஆகாது. உரிய காலத்தில் எல்லாமே நல்லதாய் அமையும். காதலும் நிலைபெறும். 

  • தொடங்கியவர்

2015 : பங்­க­ளா­தேஷில் படகு கவிழ்ந்­ததால் 70 பேர் பலி

வரலாற்றில் இன்று…

பெப்ரவரி – 22

 

1658 : டச்சுப் படை­க­ளினால் மன்னார் கைப்­பற்­றப்­பட்­டது.

1819 :  புளோ­ரி­டாவை ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கு ஐந்து மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கு ஸ்பெயின் விற்­றது.

varalaru-22-02-2017-copy.jpg1847 : மெக்­ஸிகோ -அமெ­ரிக்கப் போரில் புவெ­னா-­விஸ்டா நகரில் இடம்­பெற்ற சமரில் 15,000 பேர் கொண்ட மெக்­ஸிகோ படையை 5,000 பேர் கொண்ட அமெ­ரிக்கப் படைகள் தோற்­க­டித்­தன.

1848 : பாரிஸில், லூயி பிலிப் மன்­ன­னுக்­கெ­தி­ராக புரட்சி வெடித்­தது. இரண்டு நாட்­களின் பின்னர் அவர் முடி துறந்தார்.

1853 : வொஷிங்டன் பல்­கலைக் கழகம் எலியட் செமி­னறி என்ற பெயரில் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

1942 : இரண்டாம் உலகப் போர்: பிலிப்­பைன்ஸில் ஜப்­பா­னிய படை­களின் முன்­னேற்­றத்­தை­ய­டுத்து, அமெ­ரிக்கத் தள­பதி டக்ளஸ் மெக் ஆர்த்­தரை வெளி­யே­று­மாறு அமெ­ரிக்க ஜனா­தி­பதி பிராங்­கிளின் ரூஸ்வெல்ட் பணித்தார்.

1943 : நாஸி ஜேர்­ம­னியில் வைட் ரோஸ் இயக்க உறுப்­பி­னர்கள் கொலை செய்­யப்­பட்­டனர்.

1948 : செக்­கோஸ்­லா­வாக்­கி­யாவில் கம்­யூ­னிசப் புரட்சி இடம்­பெற்­றது.

1958 : எகிப்தும் சிரி­யாவும் இணைந்து ஐக்­கிய அரபுக் குடி­ய­ரசை அமைத்­தன.

Sri-Lanka-LTTE-ceasefire-agreement-2002-1974 :  அமெ­ரிக்க ஜனா­தி­பதி ரிச்சர்ட் நிக்­ஸனை சாமுவேல் பிக் கொலை செய்ய மேற்­கொண்ட முயற்சி தோல்­வியில் முடிந்­தது.

1979 : சென் லூசியா, ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து விடு­தலை பெற்­றது.

2002 : இலங்கை அர­சாங்­கத்­துக்கும் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்கும் இடையில், நோர்வே அனு­ச­ர­ணை­யு­ட­னான போர் நிறுத்த உடன்­ப­டிக்கை ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

2006 : பிரித்­தா­னி­யாவின் வர­லாற்றில் மிகப் பெரும் கொள்ளை கெண்ட் நகரில் இடம்­பெற்­றது. 53 மில்­லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பணத்தை அறுவர் சேர்ந்து கொள்­ளை­யிட்­டனர்.

2014 : யுக்­ரைனில் ஜனா­தி­பதி விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

2015 : பங்களாதேஷில் பத்மா நதியில் படகொன்று கவிழ்ந்ததால் 70 பேர் உயிரிழந்தனர்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

எதையும் சாதிக்கும் ஆற்றலைத் தருவது எது தெரியுமா? - பாசிட்டிவ் எண்ணத்தின் பலம் உணர்த்தும் கதை! #MotivationStory

 
 

கதை

னோபாவம் என்பது சின்னஞ்சிறு விஷயம்தான்; ஆனால், மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கக்கூடியது’ - இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill) வெகு இயல்பாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். மோசமான வார்த்தைகளையே பேசுகிற, எப்போதும் எதிர்மறையாகவே சிந்திப்பவர்களை நாம் பார்த்திருப்போம். நல்ல வார்த்தைகளையே பேசுகிற, எப்போதும் நேர்மறையாகவே சிந்திப்பவர்களையும் சந்தித்திருப்போம். ஆனால், நமக்குப் பளிச்சென நினைவுக்கு வருவது பாசிட்டிவ்வாகப் பேசுபவரின் முகம்தான். சிலர் எப்போது பேசினாலும், `இல்லை... அது என்னன்னா...’ என்று `இல்லை’ வார்த்தையில் ஒரு விஷயத்தைப் பேச ஆரம்பிப்பார்கள். வேறு சிலர் `ஆமா... அது உண்மைதான்’ என்று `ஆமாம்’ வார்த்தையில் ஆரம்பிப்பார்கள். இந்த `ஆமாம்’, `இல்லை’ வார்த்தைகள்கூட பாசிட்டிவ், நெகட்டிவ் எண்ணங்களின் வெளிப்பாடுதான். நம் மனப்பான்மையைத் தீர்மானிப்பது நம் எண்ண ஓட்டமே! நேர்மறையான எண்ண ஓட்டம் எதையும் சாதிக்கும் ஆற்றலைத் தரும். எதிர்மறையான எண்ணம் நம் ஆற்றலைப் பாதியாகக் குறைத்துவிடும். இந்த உண்மையை உணர்த்தும் கதை இது.

 

அமெரிக்கா வளர்ந்த நாடாக இருப்பதற்கு அதன் வளங்கள் காரணமாக இருக்கலாம். சாலைப் போக்குவரத்து பலமாக அமைந்தது அதைவிட முக்கியக் காரணம். குறிப்பாக, ட்ரக்கின் பயன்பாடு அங்கே அதிகம். பல மூலப் பொருள்களையும், விளைந்த தானியங்களையும், இயந்திரங்களையும், உற்பத்தி செய்யப்பட்ட பலவகைப் பொருள்களையும் ஓரிடத்திலிருந்து நெடுந்தூரத்திலிருக்கும் இன்னோர் இடத்துக்குக் கொண்டு செல்ல அதிகம் பயன்பட்டது ட்ரக்குகள்தான். பல மணி நேரங்கள், பல நாள்களுக்கு இடைவிடாமல் ட்ரக் ஓட்டும் டிரைவர்கள் இன்றைக்கும் அங்கே அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுக்குச் சம்பளமும் அதிகம். 2014-ம் ஆண்டில் வெளியான அமெரிக்காவின் `Bureau of Statistics' கணக்குப்படி அங்கே 18 லட்சம் ட்ரக் டிரைவர்கள் இருக்கிறார்கள். இப்போது கதை...

ட்ரக்

சார்லஸ், நியூயார்க்கில் வசிக்கும் ஒரு ட்ரக் டிரைவர். பல வருட அனுபவமுள்ளவர். அமெரிக்காவிலிருக்கும் பல மாகாணங்களுக்கும், மூலை முடுக்கிலுள்ள ஊர்களுக்கெல்லாம் சென்று வந்தவர். அவருடைய நிறுவனம், ஓர் இளைஞனை, ட்ரக் ஓட்டப் பயிற்சி கொடுக்கச் சொல்லி அவரிடம் அனுப்பிவைத்தது. அவன் துறுதுறுவென்று இருந்தான். முறையாக டிரைவிங் கற்றுக்கொண்டு, அதற்கான தேர்வுகளில் தேறியுமிருந்தான். ஆனால், சாலைகளில் ட்ரக்கை ஓட்டிய அனுபவமில்லாதவன். அவன், 18 சக்கரங்களைக்கொண்ட ட்ரக்கை ஓட்டும் பயிற்சிக்கு வந்திருந்தான்.

சார்லஸ், அந்த இளைஞனைப் பற்றி விசாரித்தார். இருவரும் ட்ரக்கில் ஏறினார்கள். அவர் ட்ர்க்கை ஓட்டுவதிலுள்ள சில நெளிவு சுளிவுகளை அவனுக்குச் சொல்லிக் கொடுத்தார். நகர சந்தடி அடங்கி வெட்டவெளியான ஒரு பகுதிக்கு வந்ததும், இளைஞனை ட்ரக்கை ஓட்டச் சொன்னார். அவன் ஓட்ட ஆரம்பித்தான். அவர் சொன்னபடி ஓட்டினான். தொடர்ந்து ஐந்து மணி நேரம் ஓட்டினான். வெகுவாகக் களைத்துப் போனான்.

``நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கட்டுமா?’’ என்று கேட்டான். சார்லஸ் அதற்கு ஒப்புக்கொண்டார். இருவரும் சாலையோரமிருந்த ஒரு சிறு ஹோட்டலில் மதிய உணவை முடித்துக்கொண்டார்கள். பிறகு ட்ரக்கில் ஏறினார்கள். இப்போது சார்லஸ் ட்ரக்கை ஓட்ட ஆரம்பித்தார்.

10 மணி நேரம் ட்ரக்கை ஓட்டினார் சார்லஸ். இளைஞனுக்குப் புல்லரித்துவிட்டது. திகைப்பு அடங்காமல் அவன் கேட்டான்... ``அது எப்பிடி கொஞ்சம்கூட டயர்டாகாம இவ்வளவு நேரம் ட்ரக் ஓட்டுனீங்க?’’

``சொல்றேன்... அதுக்கு முன்னாடி நான் கேட்குறதுக்கு பதில் சொல்லு... காலையில வீட்டைவிட்டுக் கிளம்புறப்போ என்ன செஞ்சே?’’

``என் மனைவிக்கு ஒரு முத்தம் குடுத்துட்டு, `வேலைக்குப் போறேன்... பை’னு சொல்லிட்டு வந்தேன்.’’

நேர்மறை எண்ணங்கள்

``அதுதான் உன் பிரச்னை.’’

``இதுல என்ன பிரச்னை?’’

``நானும் இன்னிக்கிக் காலையில வீட்டைவிட்டுக் கிளம்பும்போது என் மனைவிக்கு ஒரு முத்தம் குடுத்தேன். ஆனா, `வேலைக்குப் போறேன்’னு அவகிட்ட சொல்லலை. `நம்ம ஊரை ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வர்றேன்’னு சொல்லிட்டு வந்தேன்.’’

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

கிரிக்கெட் பேட்டைச் சுழற்றிய ஜஸ்டின் ட்ரூடோ! இந்திய கேப்டன்களுடன் குதூகலம்

 
 

JustinTrudeau

இந்தியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இன்று டெல்லி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடினார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, எட்டு நாள்கள் சுற்றுலாப் பயணமாகக் குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளார். அவருக்கு இந்திய அரசு உரிய மரியாதை அளித்திடாமல் புறக்கணிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனாலும், ஜஸ்டின் எதையும் பெரிதாகக் கண்டுகொள்ளாமல், இந்தியப் பயணத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடிவருகிறார். குஜராத் சபர்மதி ஆசிரமம், தாஜ்மகால் என முக்கிய இடங்களுக்கு விசிட் அடித்துக்கொண்டிருக்கிறார்.  

இன்று காலை டெல்லியில் தன் குழந்தைகளுடன் கிரிகெட் விளையாடினார். அவருடன் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் கபில் தேவ் மற்றும் அசாருதீன், ஜஸ்டினின் குழந்தைகளுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்தனர். கிரிக்கெட் மைதானத்தில் ஜஸ்டின் ட்ரூடோ கிரிக்கெட் பேட்டைச் சுழற்றிக்கொண்டே நடந்த காட்சி, சுற்றி நின்றுகொண்டிருந்த ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

 

 

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.