Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

புகைப்படக் கவிதை: உலகின் மிகப் பெரிய உப்புப் பாலைவனம்
-----------------------------------------------------------------------
தென்மேற்கு பொலீவியாவில் இருக்கிறது யூனி உப்புப் பாலைவனத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. இங்கே, அந்தி மங்கும் நேரத்தில் எது ஆகாயம், எது நிலம் என்று பிரித்துப் பார்ப்பதே கடினம்.

யூனியில் இருக்கும் இந்த உப்புப் பரப்புதான் உலகிலேயே மிகப் பெரியது. 12,000 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு விரிந்து பரந்திருக்கும் இந்த இடம் ஒரு மிகப்பெரிய கண்ணாடியைப் போல காட்சியளிக்கிறது.

இந்த விசித்திரமான நிலப் பகுதியைப் பார்ப்பதற்காக பெரும் எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள்.

லட்சக்கணக்கான அறுகோண வடிவங்களைச் சேர்த்துவைத்ததைப் போல இந்தப் பாலைவனம் காட்சியளிக்கிறது.

இங்கே எல்லாமே உப்பு மயம்தான் என்றாலும் செங்கால் நாரைகள் இங்கே வந்து செல்கின்றன. பிரம்மாண்டமான சப்பாத்திக் கள்ளிச் செடிகளையும் இங்கே பார்க்க முடியும்.

பொலீவியாவையும் சிலியையும் இணைக்கும் ரயில் தடத்தில் இருக்கிறது யூனி. தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் தோண்டப்பட்டு ரயில் மூலமாக இந்த வழியாகத்தான் பசுபிக் துறைமுகமான அன்டோஃபகஸ்டாவுக்குச் செல்லும்.

ஆனால், இப்போது அந்தப் பாதை பயனற்றுப் போனதால் பாதியில் நிற்கும் ரயில் வண்டி ஒன்றையும் இந்தப் பகுதியில் பார்க்க முடியும்.

பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இங்கு சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கவே வருகிறார்கள். இந்தப் பாலைவன நிலப்பரப்பில் சூரியன் மறையும்போது ஆகாயமும் நிலமும் பல வண்ணங்களைப் பிரதிபலிக்கின்றன.

இந்தப் பாலைவனப் பரப்பிற்கு டாலியின் பாலைவனம் என்ற பெயரும் உண்டு. பிரபல சர்ரியலிச ஓவியரான சல்வடோர் டாலியின் ஓவியங்களில் வரும் பாறைகளைப் போலவே இங்கிருக்கும் பாறைகளும் இருப்பதால் இந்தப் பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.

12573721_10153227346510163_4932253606648

12572964_10153227346535163_4501568414464

12592486_10153227346530163_3223414592650

12509626_10153227346580163_8675587257421

12645107_10153227346595163_3142905603705

12644686_10153227346700163_1550873304986

12592495_10153227346665163_8067602907957

BBC

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

12646873_978892265492801_196244692777035

ஹிந்தியின் கம்பீரமான கலக்கல் நடிகர் ஜாக்கி ஷெராபின் பிறந்தநாள்.
தமிழிலும் சில முக்கியமான திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார் இந்த ஜாம்பவான்.
Happy Birthday Jackie Shroff

  • தொடங்கியவர்

மழை - வெள்ளம்... இசைப் புயல்!

 

 

மீபத்தில் சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ-வில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் ‘நெஞ்சே எழு’ இசை நிகழ்ச்சி, மியூசிக்கல் ட்ரீட். கடந்த ஆண்டின் மிகப்பெரிய இயற்கைப் பேரிடரான மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டும் நோக்கத்துக்காக இந்நிகழ்ச்சியை முன்னெடுத்த இசைப் புயல், பார்வையாளர்கள் அனைவரையும் சுழற்றி அடித்து, தன் இசையோடு இழுத்துச் சென்றார். அந்நிகழ்வின் ஹைலைட்ஸ் இங்கே...

p110a.jpg

red-dot%282%29.jpg `மரியான்’ படத்தின் ‘நெஞ்சே எழு’ பாடலைப் பாடியபடியே, மேடையின் ஸ்பாட்-லைட்டில் தோன்றினார் ரஹ்மான். மக்களின் ஆரவாரம் அந்த முதல் நொடியில் இருந்தே அதிரத் தொடங்கியது.

red-dot%282%29.jpg ‘எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே’, ‘தீ... தீ...’ என்று தன் ஹிட் நம்பர்களைப் பாடிய ரஹ்மான் அன்று வழக்கமான, தன் அமைதியான பிரசன்டேஷனை தள்ளிவைத்துவிட்டு உற்சாகத்தில் ஹெட்-பேங் செய்ய, ‘தலைவர் ஹெட்-பேங் எல்லாம் பண்றாருடா’ என ஆடியன்ஸுக்கு ஆச்சர்யமும் சந்தோஷமும். மேலும் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு காஸ்ட்யூம் என்று அதகளப்படுத்தினார், மிஸ்டர் அமைதி!

p110b.jpg

p110c.jpg

red-dot%282%29.jpg `‘இவங்க அம்மா 1989-ல் எனக்கு இந்தப் பாட்டை பாடிக்கொடுத்தாங்க. இப்போ மகள் பாடுறது எனக்கு ரொம்ப சந்தோஷம்’’ என்று ஸ்வேதா மோகனை, ரஹ்மான் மேடைக்கு அழைக்க, `‘நேற்று இல்லாத மாற்றம்’’ பாடி சொக்கவைத்தார் ஸ்வேதா.

red-dot%282%29.jpg `‘ஒரு புது சிங்கரை உங்களுக்கு அறிமுகப் படுத்தப் போறேன்...’’ என்று ரஹ்மான் சொல்ல, p110h%281%29.jpgபார்வையாளர்கள் புருவங்களை உயர்த்தியபடி காத்திருந்தனர். தன் மகன் அமீனை மேடைக்கு அழைத்து, `‘ஹாய் சொல்லு எல்லோருக்கும்’’ என்றவர், `‘அவருக்கு ஸ்டேஜ் ஃபியர் போகத்தான் இந்த அறிமுகம்’’ என்றபோது, கூட்டத்தில் ரசிப்பும் சிரிப்பும்.

red-dot%282%29.jpg மேடை நடுவில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், ஹரிசரண், கார்த்திக் ஆகியோரை சோபாவில் அமரவைத்த ஏ.ஆர்.ஆர், `‘நான் உங்களை இன்டர்வியூ பண்ணப்போறேன். உங்களோட முதல் காதல் யாருன்னு ஒவ்வொருத்தரா சொல்லுங்க’’ என்றபோது, நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கூடிப்போக,

red-dot%282%29.jpg `‘என்னோட முதல் காதல் உங்க இசைதான். அதில் பாடணும் என்பதுதான் என் ஆசையா இருந்தது’’ என கார்த்திக் சொல்ல, சிரித்துவிட்டார் ஏ.ஆர்.ஆர். அனைவரும் இணைந்து ‘பெண்ணல்ல பெண்ணல்ல’ பாடலை ஹார்மோனைஸ் செய்தது, அவ்வளவு அழகு!

இசையில் நனைந்து கரைந்தது இரவு!

vikatan

  • தொடங்கியவர்

12594018_978891332159561_847073051101955


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் அஜய் ஜடேஜாவின் பிறந்தநாள்.
போட்டி நிர்ணயக் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட நபர்களில் இவரும் ஒருவர்.
Happy Birthday Ajay Jadeja

  • தொடங்கியவர்
1989 : ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படைகள் வெளியேறின
2016-02-02

வரலாற்றில் இன்று...

பெப்ரவரி - 02 

 

657varalaru2.jpg1509 : போர்த்­துக்­க­லுக்கும் துருக்­கிக்கும் இடையில் இந்­தி­யாவின் தியூ என்ற இடத்தில் கடற்­சமர் மூண்­டது.

 

1812 : கலி­போர்­னி­யாவின் கரை­யோ­ரங்­களில் ஃபோர்ட் ரொஸ் என்ற இடத்தில் தோல் வர்த்­தக குடி­யேற்­ற­மொன்றை ரஷ்யா அமைத்­தது.

 

1822 : இலங்­கையின் ஆளு­ந­ராக சேர் எட்வேர்ட் பஜெட் நிய­மிக்­கப்­பட்டார்.

 

1848 : மெக்­ஸி­கோ­வுக்கும் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்­பாடு எட்­டப்­பட்­டது.

 

1848 : கலி­போர்­னி­யாவில் தங்கம் தேடு­வ­தற்­காக சீனர்கள் கப்­பலில் சான் பிரான்­சிஸ்கோ நகரை சென்­ற­டைந்­தனர்.  

 

1878 : துருக்­கிக்கு எதி­ராக கிரேக்கம் போர்ப் பிர­க­டனம் செய்­தது.

 

1899 : அவுஸ்­தி­ரே­லி­யாவின் தலை­ந­கரை சிட்­னிக்கும் மெல்­பேர்­னிற்கும் இடையில் கன்­ப­ராவில் அமைப்­ப­தென முத­ல­மைச்­சர்கள் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

 

1901 : விக்­டோ­ரியா மகா­ரா­ணியின் இறுதி நிகழ்­வுகள் இடம்­பெற்­றன.

 

1920 : எஸ்­தோ­னி­யா­வுக்கும் ரஷ்­யா­வுக்கும் இடையில் சமா­தான உடன்­பாடு எட்­டப்­பட்­டது.

 

1933 : ஜேர்­ம­னியின் நாடா­ளு­மன்­றத்தை ஹிட்லர் கலைத்தார்.

 

1943 : இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்­கிராட் போரின் பின்னர் கடைசி ஜேர்­ம­னியப்படைகள் சோவியத் ஒன்­றி­யத்­திடம் சர­ண­டைந்­தன. 91,000 பேர் உயி­ருடன் பிடிக்­கப்­பட்­டனர்.

 

1946 : ஹங்­கே­ரியக் குடி­ய­ரசு அமைக்­கப்­பட்­டது.

 

1971 : உகாண்­டாவில் ஜனா­தி­ப­தி­யாக இடி அமீன்  தன்னைப்பிர­க­ட­னப் ­ப­டுத்­தினார்.

 

1972 : அயர்­லாந்தின் தலை­நகர் டப்­ளினில் பிரித்­தா­னிய தூத­ரகம் தேசி­ய­வா­தி­களால் தாக்கி அழிக்­கப்­பட்­டது.

 

1982 : சிரி­யாவின் ஹமா நகரில் சிரிய அரசு மேற்­கொண்ட தாக்­கு­தல்­களில் ஏற­ழத்­தாழ10,000 பேர் வரையில் கொல்­லப்­பட்­டனர்.

 

1989 : ஒன்­பது ஆண்டு கால முற்­று­கையின் பின்னர் கடைசி ரஷ்யத் துருப்­புக்கள் ஆப்­கா­னிஸ்­தானில் இருந்து வெளி­யே­றின.

 

1989 : செய்­மதித் தொலைக்­காட்சிச் சேவை ஸ்கை தொலைக்­காட்சி ஆரம்­பிக்­கப்­பட்­டது.

 

2012 : பப்­புவா நியூகினிக்கு அருகில் எம்.வி. ரபாவுல் குயின் எனும் கப்பல் கவிழ்ந்ததால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 

 

2014 : மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைவராக அனுரகுமார திசாநாயக்க தெரிவானார்.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=657#sthash.I37u12A5.dpuf
  • தொடங்கியவர்

சிறுமிக்கு உயிர் கொடுத்த 7 மாத குழந்தை : இதய துடிப்பை கேட்டு கதறிய தாய் (வீடியோ )

 

மெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில், கடந்த 2013ஆம் ஆண்டு என்ற 7 மாத குழந்தை  லூகாஸ் கிளார்க், மூளைச்சாவு அடைந்தான். லூகாசின் தாய், அவனது இதயத்தை  தானமாக அளிக்க முன்வந்தார். இதயநோயால் அவதிப்பட்டு வந்த,  4 வயது நிரம்பிய ஜோர்டான் ட்ரேக் என்ற சிறுமிக்கு லூகாசின் இதயம் பொருத்தப்பட்டது. சிறுமி ஜோர்டன் லூகாஸ் மூலம்  உயிர் பெற்றார்.
 

         

சமீபத்தில் அந்த சிறுமியை லூகாசின் தாயார் சந்தித்தார். அப்போது மருத்துவர்கள், சிறுமிக்குள் துடித்துக் கொண்டிருக்கும் லூகாசின் இதயதுடிப்பை ஸ்டெதஸ்கோப் மூலம் அவரது தாயை கேட்க வைத்தனர். மகனின் இதயதுடிப்பை கேட்டு தாய் கதறி அழும் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

vikatan

  • தொடங்கியவர்

12622036_979397245442303_598121603985376

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட நட்சத்திரம் உபுல் தரங்கவின் பிறந்தநாள்.
ஒருநாள் போட்டிகளில் ஓட்டங்கள், சதங்கள் குவிப்பு என்று திறமை காட்டி வந்தாலும் நிரந்தர இடத்தைத் தக்கவைக்க முடியாமல் இருக்கும் தரங்கவுக்கு இவ்வருடம் மாற்றம் கொடுக்குமா?

12593670_979398295442198_269413327141107

ஹிந்தி நடிகை ஷமிதா ஷெட்டியின் பிறந்தநாள்.
Happy Birthday Shamita Shetty

 
  • தொடங்கியவர்

குஷ்வந்த் சிங்... அவர் அப்படி தான்!

 

kushwanth%20singh%20300.jpgகுஷ்வந்த சிங், வயதில் முதுமையை கூட்டிக்கொண்டு எழுத்தில் இறுதிவரை இளமையை படரவிட்ட மாபெரும் எழுத்தாளர். இங்கு ஒரு எழுத்தாளனுக்கென்று ஒரு பிரத்யேக அடையாளம் இருக்கும் அல்லவா... அவர் நகைச்சுவையாக எழுதுவார், இவருக்கு அரசியல் கட்டுரைகள் எழுத நன்கு வரும், அதிதீவிர எழுத்துகளுக்கு அவர் சொந்தக்காரர் என இங்கு ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு எழுத்துநடையும் அது சார்ந்த அடையாளமும் இருக்கும்.

ஆனால், இவருக்கு அப்படிப்பட்ட எந்த அடையாளும் இருந்ததில்லை. ஒரு நாள் தீவிரமாக நெருக்கடி நிலையை ஆதரித்து எழுதுவார், மறுநாள் முத்தத்தை பற்றி எழுதுவார், மற்றொரு நாள் குளித்தல் ஆன்மாவை குளிர்விக்கிறது என்று அடர்த்தியாக ஒரு கட்டுரை எழுதுவார். ஆம். குஷ்வந்த் சிங் அப்படி தான். இவரின் எழுத்துகள் நிர்வாணமானது, எந்த ஒரு அரிதாரமும் பூசாமல், மனதிலிருந்து பேசக்கூடிய இவரது எழுத்துகள், வாசகர்களுக்கு நெருக்கமானது.

பிரிவினை துவங்கி இந்தியாவின் அனைத்து முக்கிய நிகழ்விற்கும் சாட்சியாக இருந்தவர் குஷ்வந்த். அவரே பிரிவினையால் பாதிக்கப்பட்டவரும் கூட. வழக்கறிஞராக தன் வாழக்கையை இன்றைய பாகிஸ்தானில் துவங்கி, பிரிவினைக்கு பின் கனடா, லண்டனில் இந்தியாவின் உயர் தூதர அதிகாரியாக பெரும் பொறுப்பிலிருந்து, பின்பு ஆல் இந்திய ரேடியோவில் பத்திரிக்கையாளனாக பணியில் சேர்ந்து என இவரது எழுத்துகளை போல இவர் வாழ்க்கையும் சுவாரஸ்யமானது.

என் நடுத்தர வயது வட இந்திய நண்பர்கள் சொல்லி கேட்டு இருக்கிறேன், இவர் ஆசிரியராக இருந்த Illustrated weekly இல் இவரது எழுத்துகளை படிக்க, மொத்த குடும்பமும் காத்து இருக்குமாம். ஆம். அறுபதாயிரம் பிரதிகள் மட்டுமே விற்ற அந்த பத்திரிக்கை, இவரது வருகைக்கு பின்பே நான்கு இலட்சப் பிரதிகளை தாண்டியது.

இவரது எழுத்தாளுமையை முழுவதுமாக உணர வேண்டுமானால் 'Train to Pakistan' படியுங்கள். இந்திய பிரிவனையை ரத்தமும் சதையுமாக எழுதி இருப்பார். நிறுவனமயப்பட்ட மதங்களை எதிர்த்தார். சொர்க்கம், நரகம் வெறும் புனைவு என்றார். மனிதர்களின் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கும் தட்டை பார்வை இவருடையதல்ல, மனிதர்களை அனைத்து பரிமாணங்களிலும் பார்த்து புரிந்து கொண்டு எழுதியவர். இவரது எழுதுக்களில், காந்தி, ஜின்னா, அத்வானி வேறு வடிவத்தில் நமக்கு தெரிவார்கள்.

indira%20with%20kushwanth%20singh%20600.

யாரும் எதிர்பாராத வண்ணம், இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர நிலையை ஆதரித்தார். அப்போது அவசர நிலைக்கு எதிராக தீவிரமாக போராடி கொண்டிருந்த ஜெயபிரகாஷ் நாராயணனின் நிலைப்பாட்டை எதிர்த்து ஒரு நீண்ட கடிதம் எழுதினார். அவசர நிலை கொண்டுவரவில்லை என்றால் இந்தியா சிதைந்திருக்கும் என்றார். அதே நேரம், பிரதமர் இந்திரா காந்தியை நேரில் சந்தித்து, பத்திரிக்கைகளை தணிக்கை செய்ய கூடாது என்று தைரியமாக வாதிட்டார்.

தீவிர புத்தக வாசிப்பாளர், நூறு புத்தகங்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இது குறித்து அவரே கூறியது, நான் வாசிக்க விரும்புகிறேன். என் விழிகள் என்னை கைவிடும் வரை, அனைத்து விதமான புத்தகங்களையும் வாசிக்க விரும்புகிறேன். என் பேனா என் கைகளிலிருந்து சரியும் வரை எழுத விரும்புகிறேன். நான் தொடர்ந்து எழுத விரும்புகிறேன். ஆம். அப்படி தான் எழுதவும் செய்தார். இவர் எழுதுவதற்கு எந்த பெரிய விஷயமும் தேவைப்படவில்லை. இவர் எழுதிய பின் தானாக அந்த விஷயம் பெரிய விஷயமானது.

kalam%20with%20kushwanthsingh.jpg

ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். எழுத்தில் மட்டுமல்ல, விருதுகளை திருப்பி தருவதிலும் இவரே முன்னோடி. 1974-ல் பத்ம பூஷண் விருது பெற்ற இவர், 1984ல் பொற்கோவில் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதை திருப்பி கொடுத்தார். மீண்டும் 2007ல் இந்திய அரசாங்க பத்ம விபூஷண் விருது அளித்தது. 

நாட்டின் அனைத்து முக்கிய தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தும், இவர் மிக எளிமையானவராகவே இருந்திருக்கிறார். இவரது எழுத்துகளை தொகுத்த ஊடகவியலாளர் ஷீலா ரெட்டி, “இவரது வீட்டில் இரவு ஏழு மணிக்கு நடக்கும் பார்ட்டி அவ்வளவு பிரபலம். அனைத்து முக்கிய தலைவர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள், நடிகைகள் என பலரை காணலாம். ஆனால், அவர் அப்போதும் கரைப்படிந்த சல்வாரில் தான் இருப்பார்.”

ஆம், அவர் அப்படி தான்.

(பிப்ரவரி 2, குஷ்வந்த் சிங் பிறந்த நாள்)

VIKATAN

  • தொடங்கியவர்

பசிஃபிக் பெருங்கடலை துடுப்பு போட்டே கடந்த பிரிட்டிஷ் மங்கையர்
===========================================================

பசிஃபிக் பெருங்கடலை துடுப்புப் படகில் கடந்த, உலகின் முதல் நால்வர் அணி என்ற சாதனையை பிரிட்டிஷ் பெண்கள் குழு ஒன்று படைத்துள்ளது.

கடலில் பதிமூவாயிரத்து அறுநூறு கிலோ மீட்டர்கள் தூரத்தை துடுப்பு போட்டே கடந்து வந்த இந்தப் பெண்கள், இன்று காலை தமது பயணத்தை நிறைவு செய்துள்ளனர்.

 

BBC

  • தொடங்கியவர்

12670583_979398565442171_425979844816483

பிரபல கொலம்பிய பொப் பாடகியும் நடிகையுமான ஷாகிராவின் பிறந்தநாள்.

Happy Birthday Shakira

 

 

  • தொடங்கியவர்

ஐபோன் 6 ப்ளஸ் -ல் எடுக்கப்பட்ட திருமண ஆல்பத்தில் என்ன சிறப்பு?

 

கிழ்ச்சியான விஷயங்களை அந்தந்த கணத்தில் அனுபவிப்பதோடு செல்ஃபிக்களாலும்,  புகைப்படங்களாகவும் வருங்காலத்துக்கு பதிவேற்றம் செய்வதில் இன்றைய தலைமுறையினர் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர், குறிப்பாக திருமண வைபோகங்கள். சமூக வலைதளங்களில் பகிர்வதற்காகவே  மெனக்கெட்டு வித்தியாசமாகவும்,  விலையுயர்ந்த கேமராக்கள் கொண்டும் படங்கள் எடுக்கின்றனர்.

இதற்கிடையில் சற்று வித்தியாசமாக, இஸ்ரேலை சேர்ந்த புகைப்பட கலைஞர் செபி பெர்கர்சன்,  உதய்ப்பூரில் மூன்று நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தில்,  ஐபோன் 6S ப்ளஸ் மட்டுமே பயன்படுத்தி முழு திருமண நிகழ்ச்சியையும் படம் பிடித்துள்ளார். சாதாரணமாக DSLR கேமராக்களில் எடுக்கும் புகைப்படங்களை போல அல்லாமல், ஐபோனில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படங்கள் ஓவியங்களை போல மிளிர்கின்றன.

 

 

ஒரு முழு திருமண நிகழ்வையும் பெரிய கேமராக்கள் இல்லாமல் ஐபோனின் கேமராவை மட்டும் கொண்டே படம் பிடிக்கவேண்டும் என்பது இவரது கனவாக இருந்து வந்துள்ளது.

“DSLR கேமராக்களில் புகைப்படம் எடுக்கப்படும்போது படம் எடுக்கப்படும் பொருட்களுக்கும், போட்டோ எடுப்பவருக்கும் இடையே ஒருவித தடை ஏற்பட்டுவிடுகிறது. போனின் கேமராவில் எடுக்கும்போது போட்டோ எடுப்பவரும் அந்த frame- னுள்ளே வந்துவிடுவது போன்றதொரு உணர்வு ஏற்பட்டுவிடுவதால் ரசித்து ரசித்து,  வித்தியாசமான ஆங்கிள்களில் எடுக்க முடிகிறது.  ஐபோனை மற்ற கேமராக்களை போல கண்ணுக்கருகே வைத்து படம் பிடிக்க தேவை இல்லாததால் போட்டோ பிடிக்கப்படும் பொருட்களோடும் ஆட்களோடும் eye contact கிடைக்கிறது” என்கிறார் செபி.
 
மணமக்கள் அபிஷேக்கும் ஆயூஷியும் தன்னை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைத்ததாலேயே, இது சாத்தியமானது என்று கூறும் செபி, "இப்படி ஐபோனில் ப்ரொபஷனலாக படங்கள் எடுப்பதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. குறிப்பாக மங்கலான ஒளியில் எடுக்கும்போது கூடுதல் சிரமம்” என்கிறார்.

திருமண நடன மேடையில் படங்கள் எடுக்கும்போது,  இதற்காகவே கையில் ஒரு LED லைட் பிடித்துக்கொண்டு படம் எடுத்ததாகவும்  கூறுகிறார்.

"இப்படி செல்போன் கேமராவில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சின்ன சைசில் பார்க்கும்போது நன்றாக இருக்கிறது. ஆனால் பிரிண்ட் செய்து பார்த்தால் தெளிவாக இருக்காது" என்று குறை கூறுபவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், கலைத்துவமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த வண்ணமையமான புகைப்படங்கள் பார்ப்பவரை மெய் மறக்கத்தான் செய்கின்றன.

vikatan

  • தொடங்கியவர்

12642999_979398825442145_171723410646030

கூர்ப்புக் கொள்கையின் தந்தை, பரிணாம வளர்ச்சி தத்துவங்களை வெளியிட்ட ஆராய்ச்சியாளர் சார்ல்ஸ் டார்வினின் பிறந்தநாள்.
Charles Darwin

  • தொடங்கியவர்

 

 

 

 

இது நம்ம ஆளு டிரெய்லர்!

பாத்ததுக்கே ஃபுல் அடிச்ச மாதிரி இருக்குடா!
கல்யாணத்துக்கு அப்பறம் பாரு
அப்படியே பேயடிச்ச மாதிரியே இருக்கும்!

Edited by நவீனன்

32 minutes ago, நவீனன் said:

கூர்ப்புக் கொள்கையின் தந்தை, பரிணாம வளர்ச்சி தத்துவங்களை வெளியிட்ட ஆராய்ச்சியாளர் சார்ல்ஸ் டார்வினின் பிறந்தநாள்.

குரங்கில இருந்து மனிதன் வந்திட்டான். அப்ப எங்கே அந்த missing link. ஏன் மிச்ச குரங்கெல்லாம் மனுசனா மாறவே மாட்டன் எண்டுதுகள் - பிடிக்கேல்லையோ. 

எங்கேயோ உதைக்குது.

  • தொடங்கியவர்

944058_979396448775716_71729916755778868

ஈழத்து நாடகக்கலை முன்னோடிகளில் ஒருவரான அமரர் நடிகமணி V.V.வைரமுத்துவின் பிறந்த தினம் இன்றாகும்

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

 

 

 

ஷாக் ட்ரீட்மென்ட்

p28_1.jpg

``சின்னப் பிரச்னைதான், ஸ்கேன் ரிப்போர்ட்ல பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்லை’’ என்று சொன்ன டாக்டர், ``முப்பதாயிரம் ரூபாய்க்குள்ள முடிஞ்சிடும்’’ என்றார்!



கொண்டாட்டம்

p28_2.jpg

என்ன ஆச்சுன்னு தெரியலை... காலையிலேர்ந்து கரன்ட்டே இல்லை. ஒரு டி.வி புரோகிராம்கூடப் பார்க்க முடியலை. இந்தப் பொங்கல், பொங்கல் மாதிரியே இல்லை’’ - அலுத்துக்கொண்டாள் மாளவிகா!

 

p28_3.jpg

மகனுக்கு ஆக்ஸிடென்ட் ஆனதைக் கேட்டு, ``என்னாச்சுப்பா..?’’ எனக் கனிவோடு விசாரித்த அப்பாவிடம் ``மொபைல்ல லேசா ஸ்க்ராட்ச், லேப்டாப்புக்கு ஒண்ணும் ஆகலை. ஹெட்போன்தான் அறுந்துருச்சு’’ என்றான் விக்னேஷ்!
 


இது டாப் 10 அல்ல..!

p28_4.jpg

தீபாவளிக்கு வெளியான படத்தை ‘தேறாது’ என விமர்சனம் செய்த டி.வி-யில், மூன்று மாதத்துக்குள் ‘புத்தம் புதிய அதிரடி நகைச்சுவை படம்’ என்ற அறிவிப்போடு அதே படம் ஒளிபரப்பானது!



விளக்கவுரை

p28_5.jpg

ஆசிரியர்: ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ - இந்தக் குறளுக்கு அர்த்தம் தெரியுமா?

மாணவன்: ஓ... ‘வைஃபை’ சார்!

 

வாழப் பழகாதவர்!

p28_6.jpg

தன் வாழ்நாளில் லஞ்சமே வாங்காத கந்தசாமியின் உடல், ஆயிரம் ரூபாய் அழுத பின்னர்தான் குடும்பத்துக்குக் கிடைத்தது!



நிழல்

p28_7.jpg

``உன்னைப் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகிட்டே உன் ஃபேஸ்புக் ஐ.டி எல்லாம் சொல்லாதே. உன் ஃப்ரெண்ட்ஸ் யார் யார் எல்லாம் என்னென்ன கமென்ட் அடிச்சாங்கனு செக் பண்ணிட்டு இருப்பாரு.’’

``சரிம்மா. ஆனா, ஆல்ரெடி அவர் என்னோட ஃபாலோயரா இருந்தா?” என்றாள் மகள்!



கனவுகளே...

p28_8.jpg

``ஃபாலோ யுவர் ட்ரீம்ஸ்’’ என்றேன்.

``அதைத்தான் செய்றேன். கண்டுக்கவே மாட்றா’’ என்றான் நண்பன்!



கடிதல்

p28_9.jpg

`` `ஹோம்வொர்க் செய்யும்போது டி.வி பார்க்கக் கூடாது’னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?’’ எனக் கடிந்துகொண்டாள் திவ்யா, தன் அம்மாவை!



ஸ்கூப் நியூஸ்

p28_10.jpg

மூன்று பேர் காணாமல்போன வழக்கில் தலைவரை விசாரிக்க வந்த அதிகாரிகளின் வாகனம், அவரது பண்ணை வீட்டில் மூன்று இடங்களில் ஸ்பீடு பிரேக்கர்களை ஏறிக் கடந்தது!

விகடன்

  • தொடங்கியவர்

12622476_979400358775325_429991893291473

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டவீரர் இம்ருல் கயேசின் பிறந்தநாள்
Happy Birthday Imrul Kayes

12593670_979398295442198_269413327141107

ஹிந்தி நடிகை ஷமிதா ஷெட்டியின் பிறந்தநாள்.
Happy Birthday Shamita Shetty

  • தொடங்கியவர்

இன்று அன்று | 2 பிப்ரவரி 1971: அதிர வைத்த அதிபர்!

 

idi_ameen_2720604f.jpg
 

இடி அமீன். கேட்டாலே அதிர வைக்கும் பெயர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவை 9 ஆண்டுகள் ஆட்டிப் படைத்த சர்வாதிகாரி. ‘கிங்ஸ் ஆப்பி ரிக்கன் ரைபிள்ஸ்’ படையில் சமையல் உதவியாளராகச் சேர்ந்த இடி அமீன், படிப்படியாக உயர்ந்து மேஜர் ஜெனரலானார். உகாண்டாவின் அப்போதைய பிரதமர் மில்ட்டன் ஒபோட்டேயுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு உருவானது.

தன்னைக் கைதுசெய்ய ஒபோட்டே திட்டமிடுவதாகச் சந்தேகித்த இடி அமீன், அவர் சிங்கப்பூருக்குப் பயணம் சென்றிருந்தபோது, அதாவது 1971 ஜனவரி 25-ல் ராணுவப் புரட்சியின் மூலம் அவரது ஆட்சியைக் கவிழ்த்தார். பிப்ரவரி 2-ல் உகாண்டாவின் அதிபராகத் தன்னை அறிவித்துக்கொண்டார். 1979-ல் தான்சானியா படைகள் உகாண்டா வைக் கைப்பற்றியபோது லிபியாவுக்குத் தப்பிச் சென்றார். சவூதி அரேபியாவில் அடைக்கலம் புகுந்த இடி அமீன், 2003-ல் தனது 78-வது வயதில் மரணமடைந்தார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்
கோஹ்லியுடனான காதலுக்கு சொந்த செலவில் சூனியம் வைத்த நடிகை அனுஷ்கா
02-1454400087-virat-kholi-anushka-sharma
 
மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லையாம். அவர்கள் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர். ஊரெல்லாம் அடங்கிய பிறகு இரவு நேரத்தில் மும்பையை காரில் வலம் வந்தனர். பொது நிகழ்ச்சிகளில் ஜோடி போட்டு கலந்து கொண்டனர். அவர்கள் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்பட்டது.
 
கோஹ்லி
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கோஹ்லி அனுஷ்காவிடம் கேட்டாராம். அதற்கு அனுஷ்காவோ என் சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் தற்போதைக்கு திருமணம் செய்ய முடியாது என்று தெரிவித்துவிட்டாராம்.
02-1454400077-virat-anushka-sharma-121-6
பேச்சு இல்லை
அனுஷ்கா திருமணத்திற்கு மறுப்பு கூறியதை அடுத்து கோஹ்லி அவர் மீது கோபத்தில் உள்ளாராம். இதனால் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தையே இல்லையாம்.
 
ட்விட்டர் அனுஷ்கா நோ சொன்ன கடுப்பில் கோஹ்லி இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் அவரை ஃபாலோ செய்வதை நிறுத்திவிட்டார்.
 
 
தாடி கோஹ்லியின் குடும்ப வழக்கப்படி திருமணம் செய்வோர் தாடி வளர்க்க வேண்டும். அதற்காக கோஹ்லி தாடி வளர்த்துள்ளார். ஆனால் அனுஷ்காவின் பேச்சால் அவர் தாடியை ட்ரிம் செய்துவிட்டார்.
 
 
 
  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று.......

பெப்ரவரி - 03

 

658varalaru.jpg1575 : இந்­தி­யாவின் முக­லாயப் பேர­ரசர் அக்பர், வங்­காளப் படை­களைத் தோற்­க­டித்தார்.

 

1857 : பிரான்ஸ_ம் ஐக்­கிய இராச்­சி­யமும் சீனா­வுக்கு எதி­ராக போர்ப் பிர­க­டனம் செய்­தன.

 

1878 : ஓட்­டோமான் பேர­ரசின் கீழ் பல்­கே­ரியா சுதந்­திரம் பெற்­றது.

 

1913 : அமெ­ரிக்­காவின் வாஷிங்டன் நகரில் வாக்­க­ளிப்பு உரிமை கோரி ஆயி­ரக்­க­ணக்­கான பெண்கள் ஊர்­வலம் சென்­றனர்.

 

1918 : முதலாம் உலகப் போரில் ரஷ்­யாவின் பங்­க­ளிப்பை முடி­வுக்குக் கொண்­டு­வர ஜேர்­மனி, ஆஸ்­தி­ரியா மற்றும் ரஷ்யா ஆகி­யன உடன்­பாட்­டிற்கு வந்­தன.

 

1933 : ஜப்­பானில் ஹொன்ஷ என்ற இடத்தில் பூகம்பம் மற்றும் சுனாமி கார­ண­மாக 3,000 பேர் வரையில் இறந்­தார்கள்.

 

1938 : சவூதி அரே­பி­யாவில் எண்ணெய் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

 

1939 : மும்­பாயில் மகாத்மா காந்தி, ஆதிக்­க­வா­தி­க­ளுக்கு எதி­ராக உண்­ணா­நோன்பை ஆரம்­பித்தார்.

 

1942 : இரண்டாம் உலகப் போர்: மேற்கு அவுஸ்­தி­ரே­லி­யாவில் புரூம் என்ற நகரில் ஜப்­பானின் பத்து போர் விமா­னங்கள் குண்டுத் தாக்­கு­தலில் ஈடு­பட்­டதில் நூற்­றுக்கும் அதி­க­மானோர் கொல்­லப்­பட்­டனர்.

 

1943 : இரண்டாம் உலகப் போர்: லண்­டனில் விமானக் குண்­டுத்­தாக்­கு­தலின் போது சுரங்க ரயில் நிலை­யத்தில் ஒதுங்­கிய 173 பேர் நெரி­சலில் சிக்கி இறந்­தனர்.

 

1966 : பிரித்­தா­னிய போயிங் 707 பய­ணிகள் விமானம் ஒன்று ஜப்­பானின்  ஃபியூஜி மலையில் விபத்­துக்­குள்­ளா­னதில் 124 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1969 : நாசாவின் அப்­பலோ – 9 விண்ணில் ஏவப்­பட்­டது.

 

1971 : இந்­திய – பாகிஸ்தான் போர் ஆரம்­ப­மா­னது.

 

1974 : பிரான்ஸின் பாரிஸ் நகரின் அருகில் துருக்­கிய விமானம் ஒன்று வீழ்ந்து மோதி­யதில் அதில் பயணம் செய்த 346 பேரும் கொல்­லப்­பட்­டனர்.

 

1991 : சோவியத் ஒன்­றி­யத்தில் இருந்து பிரிந்து செல்ல ஆத­ர­வாக லத்­வி­யாவின் 74 சத­வீத மக்­களும் எஸ்­தோ­னி­யாவின் 83 சத­வீத மக்­களும் வாக்­க­ளித்­தனர்.

 

2005 : ஸ்டீவ் பொசெட் என்­பவர், விமா­ன­மொன்றை எங்கும் நிறுத்­தாமல், மீள் எரி­பொருள் நிரப்­பாமல் தனி­யாக உலகை சுற்றிவந்த முதல் மனிதரானார்.

 

2013 : பாகிஸ்தானின் கராச்சி நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 45 பேர் உயிரிழந்ததுடன் 180 பேர் காயமடைந்தனர்.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=658#sthash.5z6mXSv2.dpuf
  • தொடங்கியவர்

12605343_979628518752509_273686905502107

இளம் தலைமுறை நடிகர்களில் சகலதுறையாளர் நடிகர் சிலம்பரசன் - சிம்புவுக்கு இன்று பிறந்தநாள்.

நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், நடனக்கலைஞர் என்று பல்வேறு திறமைகள் கொண்ட இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதிலும் கெட்டிக்காரன்.

Happy Birthday Simbu

  • தொடங்கியவர்

இவர் பெயர் Jamie Keeton. அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகானத்தைச் சேர்ந்தவர். ஆச்சர்யம் என்ன வென்றால், ஜேமி தலையில் சோடா பாட்டில், தண்ணீர் பாட்டில், பேப்பர் கப், கோக் கேன்கள் என எது வைத்தாலும் கீழே விழாமல் ஒட்டிக்கொள்கிறது. இந்த அதிசயத்தைப் பார்க்கவே, மக்கள் பெருமளவில் கூடிவிடுகிறார்கள். செல்ஃபி எடுத்துக்கொள்ளவும் போட்டிபோடுகிறார்கள்.

12646621_674327426003136_549593866223763

12647364_674327436003135_175265794682813

12661774_674327459336466_767366963177478

12662556_674327506003128_897287867415778

12694757_674327552669790_825333898973945

vikatan

  • தொடங்கியவர்

'ஒரு ஜெர்சிக்கா இத்தனை அக்கப்போரு ': சிறுவனை தேடி ஆப்கானிஸ்தான் வந்த மெஸ்சி நண்பர்கள்!

 

ப்கானிஸ்தானில் காபூல் அருகே ஜகோரி என்ற கிராமத்தை சேர்ந்த சிறுவன் மொர்டஷா அகமதி, தனது தந்தையிடம் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயனல் மெஸ்சியின் ஜெர்சி வாங்கித் தருமாறு கேட்டு அடம் பிடித்தான்.

messi%201.jpg

மெஸ்சியின் ஜெர்சியை வாங்கிக் கொடுக்க இயலாத அவனது தந்தை,  பிளாஸ்டிக் பையில் அர்ஜென்டினாவின் புளு மற்றும் வெள்ளை நிறத்தை வரைந்து அதில் மெஸ்சி - 10 என வரைந்து கொடுத்து விட்டார். சிறுவன் அகமதி அந்த பிளாஸ்டிக் ஜெர்சியை அணிந்து கால்பந்து விளையாடுவது போன்ற படங்கள் மற்றும் செய்திகள் இணையங்களில் வைரல் ஆனது.

இந்த தகவல் பார்சிலோனா வரை பரவியது.  தொடர்ந்து பார்சிலோனா அணி,  லயனல் மெஸ்சியை அந்த சிறுவனுடன் சந்திக்க ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கிடையே மெஸ்சியின்  பி.ஆர். நிறுவனத்தை சேர்ந்த சிலர், அந்த சிறுவனை தேடி ஆப்கானிஸ்தான் வந்தனர். ஆப்கானிஸ்தான் கால்பந்து சங்கம் சார்பில், சிறுவன் அகமதியை அவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
 

messi.jpg

அப்போது லயனல் மெஸ்சியின் சிறப்பு பரிசாக குட்டி அகமதிக்கு, பார்சிலோனாவின் மெஸ்சி ஜெர்சி 'கிட்' வழங்கப்பட்து. இதுவரை பஞ்சரான பந்தில் கால்பந்து  விளையாடிக் கொண்டிருந்த அகமதிக்கு புதிய கால்பந்துகளும் பரிசாக வழங்கப்பட்டன. தொடர்ந்து காபூல் நகரில் உள்ள மைதானத்தில், சிறுவன் அகமதி பார்சிலோனாவின் மெஸ்சி ஜெர்சி அணிந்து விளையாடினான். லயனல் மெஸ்சியின் கிட்டை அணிந்த அகமதி , பிளாஸ்டிக் ஜெர்சியை மேலே அணிந்ததுதான், பலருக்கும் சிரிப்பை வரவழைத்தது. 

தற்போது இந்த படங்களும் இணையங்களில் வைரல் ஆகியுள்ளன.விரைவில் லயனல் மெஸ்சி, சிறுவன் அகமதியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே ஒலிம்பிக் போட்டிக்கான அர்ஜென்டினா அணியில் லயனல் மெஸ்சி இடம் பெறமாட்டார் என அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் ஜெரார்டோ மார்ட்டினோ தெரிவித்துள்ளார்

vikatan

  • தொடங்கியவர்

12615335_979629392085755_387484252643387

நியூசீலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர், தற்போது சுவாரஸ்யமான, குறும்புக்கார நேர்முக வர்ணனையாளர் டனி மொரிசனின் பிறந்தநாள்
Happy Birthday Danny Morrison

  • தொடங்கியவர்

மன்னன் ராஜவிக்கிரம மகா சிங்!

மன்னர்கள் என்றாலே நினைவுக்கு வருவது பழைய காலங்கள் அக்கக்காலத்தில் வாழ்ந்த ஆட்சி புரிந்த மன்னரான இலங்கையை ஆண்டா கடைசி தமிழ் மன்னன் ராஜவிக்கிரம மகா சிங்கின் 185 வது
நினைவு தினம் வேலூரில் உள்ள அவரது முத்து மண்டபத்தில் 1800 களில் இலங்கையின் தமிழ் நிலமான கண்டி பகுதியை ஆண்ட தமிழ் மன்னர் ராஜ விக்கிரம மகா சிங்கின் 185 வது நினைவு தினம் வேலூர் பாலாற்றங்கறையில் அமைந்துள்ள மன்னர் மற்றும் அவரது குடும்பத்தினரின் முத்து மண்டபத்தில் மன்னரின் வாரிசுகள் மற்றும் பொது வேலூர் மாவட்ட அனைத்து நாயுடுகள் சங்கம், அகில இந்திய தெலுங்கர் கூட்டமைப்பு சார்பில் அனுசரிக்கப்பட்டது. ராஜ விக்கிரமசிங் சுமார் 1800 களில் இலங்கையில் ஒரு பகுதியான கண்டி எனும் தமிழ் பகுதியை ஆண்ட கடைசி மன்னர் ஆவார். அதன் பின்னர் ஆங்கிலேயரால் மன்னர் மற்றும் மன்னரது மனைவி, உறவினர்கள் சிறைபிடிக்கப்பட்டு வேலூரில் சுமார் 16 ஆண்டுகள் அடைக்கப்பட்டனர். பின்னர் சிறையிலேயே உயிரிழந்த ராஜ விக்கிரமனின்
உடல் வேலூர் பாலாற்றங்கறையில் புதைக்கப்பட்டது. பின்னர் அவ்விடத்தில் முத்து மண்டபம் அமைக்கப்பட்டு ஆண்டு தோறும் நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டு வருகிறது.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.