Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

கேள்விக்குத் தவறாக பதில் சொன்னால் என்ன செய்ய வேண்டும்? - பாடம் எடுத்த மாணவனின் கதை! #MotivationStory

 
 

கதை

`புரியலை’... இப்போது தமிழகத்தில் அதிகம் புழக்கத்திலிருக்கும் ஒரு வார்த்தை. ஒருமுறை பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் நிருபர்கள் கேள்வி கேட்க, பதில் சொல்லிக்கொண்டிருந்தார் ஓய்வு பெற்ற அமெரிக்க பேஸ்கட்பால் விளையாட்டு வீரர் டென்னிஸ் ராட்மேன் (Dennis Rodman). ``புரியவில்லை’’ என்று நிருபர் திரும்பக் கேட்க, அதற்கு டென்னிஸ் ராட்மேன் இப்படிச் சொன்னார்... ``என்னோட பதில் உங்களுக்குப் புரியலைங்கிறது என்னோட பிரச்னையில்லை; உங்களோட பிரச்னை.’’ வெகு சாதாரணமாக இந்தக் கூற்றை நம்மால் கடந்துபோய்விட முடியாது. யாரிடமோ ஒரு கேள்வி கேட்கிறோம்; அதற்கான பதிலும் நமக்குத் தெரியும். ஆனால், நாம் முன்னரே தீர்மானித்துவைத்திருந்த பதிலைச் சொல்லாமல், அவர் வேறொன்றைச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம்... அவர்தான் தவறாகச் சொல்கிறார் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. வாழ்க்கை நம் ஒவ்வொருவருக்கும் உணர்த்தும் பாடம் இது. மற்றவரை தவறாக எடைபோடக் கூடாது; கண்ணுக்குத் தெரிவதை மட்டும் உண்மை என நம்பிவிடக் கூடாது; பிறரைச் சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது; நம்மிடம்தான் தவறு இருக்கிறது... என எத்தனையோ உண்மைகளை உணர்த்தும் பாடம் இது. அதிலும், பல நேரங்களில் குழந்தைகள் பெரியவர்களுக்குக் கற்றுத்தரும் பாடங்கள் அசாதாரணமானவை, அசரவைப்பவை.

 

அது ஓர் ஆரம்பப்பள்ளி. ஒன்றாம் வகுப்புக்குப் பாடமெடுக்கும் கணக்கு ஆசிரியை அவர். எளிதாகக் கணக்கைக் குழந்தைகளுக்குப் புரியவைத்துவிட வேண்டும் என்கிற மெனக்கெடல் அவரிடமிருந்தது. கிட்டத்தட்ட மழலையாகவே மாறி பாடமெடுப்பார். அன்றைக்கு ஆசிரியை ஒரு மாணவனை அழைத்தார். ``நான் உனக்கு ஒரு ஆப்பிள் (சுண்டுவிரலை உயர்த்தி), அப்புறம் ஒரு ஆப்பிள் (சுண்டுவிரலோடு மோதிர விரலை உயர்த்தி), கூட ஒரு ஆப்பிள் (ஆசிரியையின் நடுவிரலோடு சேர்த்து இப்போது மொத்தம் மூன்று விரல்கள் உயர்ந்திருந்தன) கொடுக்கிறேன்னு வெச்சுக்குவோம். உன்கிட்ட மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்?’’

நெகிழ்ச்சிக் கதை

மாணவன், ஆசிரியை உயர்த்திக் காட்டிய விரல்களைப் பார்த்தான். தன் விரல்களை ஒவ்வொன்றாக அதேபோல விரித்து எண்ணினான். பிறகு சொன்னான்... ``நாலு ஆப்பிள்.’’

ஆசிரியையின் முகம் ஏமாற்றத்தால் சுருங்கியது. ``உனக்குப் புரியலையா ராஜூ... நான் உனக்கு ஒரு ஆப்பிள் (பழையபடி விரல்களை உயர்த்தி), அப்புறம் ஒரு ஆப்பிள், கூட ஒரு ஆப்பிள் கொடுக்கிறேனுவெச்சுக்கோ. உன்கிட்ட மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்?’’

மாணவன் ஆசிரியையின் முகத்தைப் பார்த்தான். என்ன பதிலைச் சொன்னால் டீச்சர் நிம்மதியடைவார் என்றெல்லாம் யோசித்தான். பிறகு மறுபடியும் தன் விரல்களைப் பிரித்து எண்ணிப் பார்த்தான். தயங்கித் தயங்கி பதில் சொன்னான்... ``நாலு ஆப்பிள்.’’

ஆசிரியையின் முகம் கோபத்தால் சிவந்தது. ஆனால், அவனோ சிறுவன், குழந்தை... அவனிடம் கோபத்தைக் காட்ட முடியுமா? அப்போது திடீரென ஆசிரியைக்கு ஒருநாள் அந்த மாணவன், தனக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. `ஒருவேளை அவனுக்கு ஆப்பிள் பிடிக்காமப் போயி அதுக்காக தப்பா பதில் சொல்றானோ...’ என்றெல்லாம் யோசித்தார். இப்போது கேள்வியைக் கொஞ்சம் மாற்றிக் கேட்டார்... ``இப்போ நான் உனக்கு ஒரு சாக்லேட், அப்புறம் ஒரு சாக்லேட், கூட ஒரு சாக்லேட் கொடுக்கிறேன்... உன்கிட்ட மொத்தம் எத்தனை சாக்லேட் இருக்கும்?’’

அந்தச் சுட்டிப் பையன், ஆசிரியையின் மலர்ந்த முகத்தைப் பார்த்தான். விரல்களால் கணக்குப் போட்டான். பிறகு பதில் சொன்னான்... ``மூணு.’’

ஆசிரியையின் முகம் மகிழ்ச்சியடைந்தது. ``குட்... இப்போ பழைய கேள்விக்கு வருவோம். இப்போ சொல்லு... நான் உனக்கு ஒரு ஆப்பிள் (எண்ணிக்கையைக் காட்ட உயர்ந்த ஆசிரியையின் விரல்கள்), இன்னொரு ஆப்பிள், அப்புறம் இன்னொரு ஆப்பிள் கொடுக்கிறேன்... உன்கிட்ட மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்?’’

மாணவன் பதில் சொன்னான்... ``நாலு.’’

``அது எப்படி ராஜூ...’’ படபடக்கும் குரலில் ஆசிரியைக் கேட்டார்.

`நான்தான் ஏற்கெனவே ஒரு ஆப்பிளை பேக்குலவெச்சிருக்கேனே...’’

https://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சம்மர் லீவில் அட்ராசிட்டி செய்யும் குழந்தைகளை இப்படியும் சமாளிக்கலாம்! #GoodParenting

 

சம்மர்

 ``விட்டாச்சு லீவு" என்று குதூகலமாகக் கூவிக்கொண்டே, வீட்டை வலம் வரும் நாளுக்காகக் குழந்தைகள் காத்துகிடக்கின்றனர். அந்த மகிழ்ச்சியான தருணமும் இன்னும் சில நாள்களில் வந்துவிடும். சம்மர் லீவ் என்றால் குழந்தைகளின் அட்ராசிட்டியைத் (அட்ராசிட்டி - இது பெரியவர்களின் வார்த்தை, குழந்தைகளுக்கு அது கொண்டாட்டம்) தாங்க முடியாது என்று பெற்றோர் அலுத்துக்கொள்வார்கள். ஆனால், குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கவும் படிப்பு தவிர்த்த சிலவற்றை அவர்களோடு உரையாடவும் கற்றுக்கொடுக்கவும் பொருத்தமான காலம் கோடை விடுமுறை நாள்கள்தாம்.

 

குழந்தைகளை நெறிப்படுத்துவது என்றவுடனே அறிவுரைகளாக அள்ளி வழங்கிவிட வேண்டும் என்று யார் மனதிலாவது ஐடியா  தோன்றினால் உடனே அதை அழித்துவிடவும். நம்மைச் சுற்றியுள்ள பல விஷயங்களைக் குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றோருமே தெரிந்துவைத்திருப்பது இல்லை. அதனால், இந்த சம்மர் லீவில் குழந்தைகளோடு சேர்ந்து கற்றுக்கொள்ளவும் முயற்சி செய்யலாம். அதற்கான சில யோசனைகளே இவை.

சம்மர் குழந்தை

நூலகம் உருவாக்கல்: பள்ளி நாள்களில் நூலகத்திற்குச் செல்லும் பழக்கம் கொண்ட குழந்தைகளை, வீட்டுக்குள்ளே சிறு நூலகம் அமைக்க வைக்க ஏற்பாடு செய்து தரலாம். அருகிலுள்ள புத்தகக் கடைக்கு அழைத்துச்சென்று குழந்தைகளுக்குப் பிடித்த நூல்களை வாங்கிச் செய்யவும். பழைய புத்தகக் கடை என்றால் இன்னும் நல்லது. ஏனெனில், குறைவான தொகையில் ஏராளமான புத்தகங்களை வாங்கிவிட முடியும். வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கி, முடிந்தால் அலமாரிகள் வாங்கித் தரவும் அல்லது சின்ன மரப்பலகைத் துண்டுகளைக் கொண்டு அலமாரிகளை உருவாக்கக் கற்றுத்தரலாம். அதன்பின், புத்தகங்களைத் தலைப்பு வாரியாகப் பிரித்து அடுக்கச் செய்யவும். இது பள்ளி மற்றும் பொது நூலகத்தில் எவ்வாறு புத்தகங்களை அடுக்குகிறார் என்பதைக் குழந்தைகள் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு உதவும்.

சம்மர் டைரி

டைரி எழுதுதல்: டைரி எழுதுவது என்பது நல்ல பழக்கம் என்று சொல்லிக்கொடுத்திருப்போம். ஆனால், எப்படி எழுதுவது, என்னவெல்லாம் எழுதுவது என்று விரிவாகக் கூறியிருக்க மாட்டோம். இந்த விடுமுறையில் புதிய டைரியை வாங்கித் தந்து, அன்றைய தேதியில் நடந்தவற்றை மட்டுமல்லாமல், நண்பர்களோடு ஏற்பட்ட சண்டை, யார் மீது தவறு, ஆசிரியரிடம் கிடைத்த பாராட்டு, திட்டு உள்ளிட்டவற்றை எழுதப் பழக்கலாம். கூடவே, வீட்டைச் சுற்றி நிகழ்ந்துவரும் மாற்றங்களையும் எழுதச் சொல்லலாம்.

சம்மர்

வாகனம் சுத்தம் செய்தல்: வீட்டிலுள்ள சைக்கிள் / பைக்கினை முறையாகச் சுத்தம் செய்யப் பழக்கலாம். எந்தப் பகுதியில், எதனால் அதிகளவில் தூசு படியும் என்பதை இடையிடையே சொல்லித்தரலாம். முடிந்தால், வாகனங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை யூ டியூப் வீடியோக்களில் பார்க்கச் செய்து, அந்தப் பாகங்களை வாகனம் சுத்தம் செய்யும் படி காட்டி விளக்கலாம். பைக்கின் பின் சக்கரத்தில் எவ்வளவு காற்று இருக்க வேண்டும், முன் சக்கரத்தில் எவ்வளவு காற்று இருக்க வேண்டும் போன்ற விஷயங்களையும் கற்றுத்தரலாம்.

சம்மர்

சின்னச் சின்னத் தொழில்நுட்பங்கள்: பல்பு எரிவதன் அடிப்படை என்ன... ஃபேன் சுற்றுவது எப்படி... சாவி எப்படிப் பூட்டின் லாக்கை விடுவிக்கிறது... என்பது போன்ற சின்னச் சின்னத் தொழில்நுட்பங்களை அதன் துறை சார்ந்து பணிபுரிபவர்களிடம் அழைத்துச் சென்று கற்றுக்கொடுக்க வைக்கலாம். இப்படி ஒரு நாளில் நாம் அதிகம் பயன்படுத்தும் விஷயங்களின் அடிப்படைப் பற்றித் தெரிந்துகொண்டால், அந்த ஆர்வம் தொடர்ந்து பல விஷயங்களை நோக்கி உந்தித் தள்ளும்.

சம்மர்

கூட்டு ஓவியம்: வீட்டின் மையமான ஓரிடத்தில் பெரிய சார்ட்டை ஒட்டவும். அதில் தினமும் குறிப்பிட்ட அளவு நேரம் ஒதுக்கி குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து ஓவியம் வரையுங்கள். முதல் நாளில் மேகம் என நினைத்துத் தொடங்கிய ஓவியம், அடுத்த நாள் கட்டடமாக மாறும். அதற்கு அடுத்த நாள் மலை மீதுள்ள கட்டடமாக மாறும். இப்படி உருமாறும் ஓவியம் உங்கள் குழந்தைக்கு விரிவடைந்த கற்பனை ஆற்றலை வழங்கும்.

ஃபேமிலி ட்ரீ

வில்லேஜ் ட்ரீ: குழந்தைகள் ஃபேமிலி ட்ரீ வரைந்து பார்த்திருப்பார்கள். அவர்களுக்கு வில்லேஜ் ட்ரீ வரையக் கற்றுத்தரலாம். முதலில், உங்கள் வீட்டின் ஃபேமிலி ட்ரீயை வரைந்துகொள்ளவும். மறு நாள், அதன் அருகேயே பக்கத்து வீட்டின் ஃபேமிலி ட்ரீயும், அதற்கு அடுத்த நாள் இந்தப் பக்கம் உள்ள வீட்டினரின் ஃபேமிலி ட்ரீ என உங்கள் தெருவினர் மற்றும் ஊரிலுள்ளவர்களின் ஃபேமிலி ட்ரீயை வரையச் சொல்லலாம். இது சாத்தியமா என்று தோன்றலாம். ஆனால், இதைச் செய்யும்போது தான் வாழும் ஊரின் பெரும் பகுதியினர் பற்றிய முழு விவரத்தையும் உங்கள் குழந்தைகள் அறிந்துகொள்வர். இது அவர்களின் தொடர்புகொள்ளும் திறனை வளர்த்தெடுக்கும்.

 இவை மட்டுமல்லாது, ஒரிகாமியில் உருவங்கள் செய்தல், சிறுவருக்கான சினிமாக்களைப் பார்த்தல், கதைப் புத்தகங்கள் வாசித்தல், கதை எழுதுதல், புதிய விளையாட்டுகளைக் கற்றுக்கொள்தல் உள்ளிட்ட பலவற்றிலும் குழந்தைகளை ஈடுபடச் செய்வதன் மூலம் சோர்வில்லாமல் சம்மர் லீவைச் செலவழிப்பர்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: Text

ஏப்ரல் 4, 1975 - உலகின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தொடங்கப்பட்ட தினம் இன்று. #வரலாற்றில்_இன்று

  • தொடங்கியவர்

 

சிவிங்கைப்புலி திடீரென உங்கள் வாகனத்தில் நுழைந்தால் என்ன செய்ய வேண்டும்?

 

தான்ஸானியாவில் இந்த நபரின் கானுலாவில் சேர்ந்துகொள்ள சிவிங்கைப்புலி முடிவெடுத்தது.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நவீனன் said:

தான்ஸானியாவில் இந்த நபரின் கானுலாவில் சேர்ந்துகொள்ள சிவிங்கைப்புலி முடிவெடுத்தது.

மகள் புறுன்டியில் என் ஜீ ஓக்களுக்காக வேலை செய்த காலத்தில் மகனும் மகளின் கணவரும் தன்சானியா போய் சந்தித்தார்கள்.

அங்கே நின்ற காலத்தில் இப்படியான காடுகள் சுற்றி பார்க்க திறந்த வாகனத்தில் போயிருந்தனர்.

அந்த பயண காணெளியை பார்க்க மிகவும் பயங்கரமாக இருந்தது.பாதுகாப்பு குறைந்த பயணம்.பாதுகாப்புக்கு துப்பாக்கிகள் ஏந்தியிருந்தாலும் ஒரு குழுவாக ஏதேனும் மிருகங்கள் தாக்கினால் தப்புவதற்கு வழியே இல்லை.

  • தொடங்கியவர்

விராட் கோலியின் 4.5 கோடி ரூபாய் பென்ட்லி காரில் என்ன ஸ்பெஷல்?!

 
 

கோலிக்கு கிரிக்கெட் எவ்வளவு பிடிக்குமோ அதோ அளவுக்கு கார்களும் பிடிக்கும். வரிசையாக வீட்டில் பல ஆடி கார்களை அடுக்கிவைத்திருக்கும் விராட் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களும் வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட கார் காதலன் கோலியின் கலெக்‌ஷனில் லேட்டஸ்ட் பென்ட்லி.

கோலியின் திறமை உலகத்துகே தெரியும். அதேபோல, ஐபிஎல்-லின் காஸ்ட்லி டீம்களில் ஒன்றான பெங்களூரில் இருக்கும் விராட் போலவே பென்ட்லி நிறுவனத்தின் காஸ்ட்லி கார் இந்த கான்டினென்ட்டல் ஜிடி. இந்த காரின் விலை 4.5 கோடி ரூபாய். விராட்கோலி இந்த சீசன் பெங்களூரு அணிக்கு விளையாடுவதற்கான சம்பளம் 17.5 கோடி ரூபாய்.

விராட் கோலி

கோலி வாங்கியிருப்பது, மூன்றாம் தலைமுறை கான்டினென்ட்டல் ஜிடி. இந்த காரை வடிவமைக்க ஐந்து ஆண்டுகள் எடுத்துக்கொண்டது பென்ட்லி. காரைப்போலவே விராட் கோலியும் மூன்றாம் தலைமுறை ஸ்டார் என்கிறது கூகுள். முந்தைய தலைமுறைகளுக்கு கிரிக்கெட் காதலை வளர்த்தவர்கள் கவாஸ்கரும் சச்சினும் என்பது யாருக்குதான் தெரியாமல் இருக்கும்? இன்டர்நேஷனல் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த ஐந்து ஆண்டுகளிலேயே 2000 ரன்களை வேகமாகக் கடந்தவர். பெரிய கிரிக்கெட் பரம்பரையெல்லாம் இல்லை என்றாலும், விடா முயற்சியும் பயிற்சியும்தான் விராட்டை உருவாக்கியுள்ளன.

பிரிட்டிஷ் நாட்டு சொகுசு காரையும் காதலோடு கைகளால் மட்டுமே உருவாக்கியுள்ளது பென்ட்லி. 626bhp பவர் மற்றும் 90kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது கான்டினென்ட்டல் ஜிடி. இந்த விலைக்குக் கிடைக்கும் ஆடி, வால்வோ, ஆஸ்டன் மார்ட்டின், லம்போர்கினி போன்றவற்றைவிட பவர் கொஞ்சம் அதிகம். 0-100 கி.மீ வேகத்தைக் கடக்க இந்த காருக்கு 3.7 நொடியே போதும். மூன்று சொடக்குப் போட்டு நான்காவது சொடக்குப் போடும்போது கார் 120 கி.மீ வேகத்தைத் தொட்டிருக்கும். விராட் கோலி வேகமாக ஓடி ரன் சேர்ப்பவர் அல்ல. ஆனால், 4/6 அதிகம் இல்லாமல் க்ரீஸுக்கு ஓடி 100 ரன்னைக் கடந்த முதல் இந்திய வீரர் விராட் கோலி. 

பென்ட்லி கான்டினென்ட்டல் ஜிடி

இந்த காரில் 6 லிட்டர் W12 variable displacement technology கொண்ட ட்வின் டர்போ இன்ஜின் உள்ளது. சில நேரங்களில் இந்த இன்ஜின் விராட் கோலிபோல மேஜிக்கும் செய்யும். உதாரணம், ஜூலை 21, 2016. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட். முதல் இன்னிங்ஸ். 28-வது ஓவர், களமிறங்குகிறார் கேப்டன் கோலி. அந்த ஆன்டிகுவா இன்னிங்ஸில் கேப்டனாக தனது முதல் இரட்டைச்சதத்தை அடித்தார் விராட். 61 மாதங்களில் ஓர் இரட்டைச்சதம்கூட அடிக்காதவர், அடுத்த 16 மாதங்களில் ஐந்து இரட்டைச்சதங்களை விளாசினார். ஹூம்... மேஜிக் மேன் விராட்!

பென்ட்லியின் மேஜிக் என்ன தெரியுமா? 12 சிலிண்டர்கள்கொண்ட இந்த இன்ஜின் மிதமான வேகத்தில் போகும்போது, ஆறு சிலிண்டர்கள் மட்டுமே வேலைசெய்யும். கொஞ்சம் ஆக்ஸிலரேட்டரை அழுத்திப்பிடித்தால் 12 சிலிண்டர்களும் ஒன்றாக வேலைசெய்து விராட் கோலி போலவே உக்கிரமாக பவரை வெளிப்படுத்தும். கான்டினென்ட்டல் ஜிடி-யில் மூன்று ஏர் ஸ்பிரிங் உள்ளன. இதனால் கார் ஓட்டும்போது வேகம் மற்றும் ஹேண்ட்லிங் சிறப்பாக இருக்கும்படி தேவையான அளவு உயரத்தை காரே தேர்வுசெய்துகொள்ளும். 48V ஆக்டிவ் ரோல் கன்ட்ரோல் சிஸ்டம் எனும் தொழில்நுட்பம் கார் போகும் சாலையைப் பார்த்து அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும்.  கேப்டனானபோது கோலியும் தன்னை மாற்றிக்கொண்டார். வெறும் பேட்ஸ்மேனாக இல்லாமல், விளையாடிய 46 மேட்சில் 31 வெற்றி, 3 டிரா. 2017-ம் ஆண்டின் வெற்றிகரமான கேப்டனாக இருக்கிறார் விராட். அதுமட்டுமல்ல, விளையாடிய 31 போட்டிகளில் (45 இன்னிங்ஸ்கள்) 2,907 ரன் குவித்துள்ளார். 

விராட் கோலி கிரிக்கெட்

கான்டினென்ட்டல் ஜிடி-யின் அதிகபட்ச வேகம் 333 கி.மீ. எல்லா சாதனைகளையும் வேகமாக உடைத்து சாதனைக்கெல்லாம் சாதனை படைக்கும் விராட் கோலியின் சமீபத்திய டாப் ஸ்பீடு ரெக்கார்டு எது தெரியுமா? குறைந்த இன்னிங்ஸில் (363) 17,000 இன்டர்நேஷனல் ரன்னைக் கடந்த முதல் வீரர். கான்டினென்ட்டல் ஜிடி பழைமையும் புதுமையும் சேர்ந்தது. காரின் உள்ளே முழுவதும் மரவேலைப்பாடுகள், சாஃப்ட்டான லெதர் சீட்டுகள், க்ளாசிக் டிசைன், ஹை-டெக் கேபின், டேஷ்போர்டில் சாதாரண கைக்கடிகாரம்போல மூன்று டயல்கள்தான் இருக்கும். தேவையென்று வரும்போது, டயல்கள் உள்ளே சென்றுவிட்டு 12.3 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வெயியே வரும்.

இன்டீரியர் டிசைனில் சாதாரணம் என்ற வார்த்தைக்கே இடமில்லை. எல்லாமே பேட்டர்ன்கள்தான். பார்த்துப் பார்த்து கண்கள் பூத்துபோகாமல் இருக்க இந்த பேட்டர்ன்கள், நம் மூடுக்கு ஏற்றமாதிரி மாறும் மூடு லைட் செட்டப். 22 இன்ச் அலாய் வீல். அரை கிலோமீட்டருக்குமேல் வெளிச்சம் காட்டும் மேட்ரிக்ஸ் LED லைட்டுகள். ஜிடி-யின் அம்சங்கள் சொல்வதற்கு இந்தக் கட்டுரை பத்தாது.

போட்டியாளர்களான ரோல்ஸ் ராய்ஸ் wraith, வேகம் குறைவானது, ஆஸ்டன் மார்ட்டின் vanquish வேகம், வசதி இரண்டுமே குறைவானது, ஃபெர்ராரி முழுமையான ஸ்போர்ட்ஸ் கார் என்பதால், நம்ம ஊர் சாலைகளுக்கு செட் ஆகாது. எல்லாவற்றுக்கும்மேலாக பென்ட்லி இப்போது ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்திடம் இருக்கிறது. விராட் கோலியின் கார் பட்டியலில் இது ஆறாவது ஃபோக்ஸ்வாகன் கார். விராட் கோலியிடம் கார் பட்டியல்போல சில சாதனைப் பட்டியலும் இருக்கின்றன. 

  • சச்சினின் 49 செஞ்சுரிக்குப் பிறகு, கோலி அடித்த 34 ODI செஞ்சுரிகள்தான் ரெக்கார்டு. 

  • இந்திய கேப்டனாக இருந்து அதிக ODI செஞ்சுரிகளை அடித்தவர் கோலி. கங்குலியின் 11 செஞ்சுரிகளே ரெக்கார்டாக இருந்த நிலையில், 13 செஞ்சுரிகளை அடித்துள்ளார் கோலி.

  • டி-20-யில் குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்னைத் தொட்ட  கெவின் பீட்டர்சனின் ரெக்கார்ட்டை, அசால்ட்டாக முறியடித்துவிட்டார் கோலி. 

  •  கேப்டனாக ரிக்கி பாண்டிங் ஒரே ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் 1,426 ரன்களை அடித்துவிட்டுச் சென்றார். சரியாக பத்து வருடங்கள் கழித்து, விராட் கோலி 1,460 ரன்னை அடித்து அந்தச் சாதனையையும் உடைத்துவிட்டார்.

  • 205 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 9,000 ரன் அடித்த ஏபி டீவில்லியர்ஸின் சாதனையை, 194 இன்னிங்ஸிலேயே இவர் நொறுக்கிவிட்டார். 

  • சாதனைகளை உடைத்தால் மட்டும் போதாது, புதிய சாதனைகளை உருவாக்கினால்தானே அவர் ஹீரோ. வரலாற்றிலேயே அனைத்துவிதமான கிரிக்கெட் ஃபார்மட்டுகளிலும் ஆவரேஜ் 50 வைத்திருப்பவர் விராட் கோலிதான்.

  • இரண்டு அணிகளுக்குள் நடைபெறும் Bilateral ODI மேட்ச்களில் ஆறு முறை 300 ரன் அடித்துள்ளார். வேறு எந்த கிரிக்கெட் வீரரும் நான்கு முறைக்குமேல் இந்த ஸ்கோரை எட்டியதில்லை.

கோலி, பென்ட்லி இரண்டுமே கெத்துதான். 4.5 கோடி ரூபாய்க்கு பென்ட்லி வொர்த்தா என்ற கேள்வி இன்னும் இருக்கிறது. நட்சத்திர வீரர், இந்திய அணியின் கேப்டன், அதிவேக ரன் ஸ்கோரர் என்பதை வைத்துப்பார்க்கும்போது 17.5 கோடிக்கு விராட் கோலி வொர்த்தானவர்தான். ஒருவேளை இது ஒரு போட்டியாக இருந்திருந்தால் வின்னர் விராட் கோலிதான்.

பென்ட்லிக்கு வாழ்த்துகள் விராட் கோலி!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘இதயம் தெளிவாக அமைய வேண்டும்’
 

image_2cdf1d118a.jpgஎதிலும் பொறுப்பற்றுப் பேசுபவர்கள், மற்றவர்களின் பிரச்சினைகள் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வது, தமக்குத்தாமே கஷ்டங்களைத் தேடிக்கொள்பவர்களாகின்றனர். 

தங்களுடைய பேச்சுகள் தவறானது எனத் தெரிந்தும் பேசுபவர்கள் ஒரு ரகம். வேண்டுமென்றே, பிறர் மனம் புண்படப் பேசுவதால் திருப்திப்படுவது, அருவருப்பான காரியம் என உணர்வதே இல்லை. 

பேசும் மொழி சுத்தமாக இருக்க, இதயம் தெளிவாக அமைய வேண்டும். கறுப்பு இதயத்தின் வாயிலிலிருந்து நெருப்பாகவே வசனங்கள் வந்துவிழும். தயவுதாட்சண்யம், அன்பு இவர்களிடம் கிடையவே கிடையாது. 

குளிர் நிலவு போன்றநெஞ்சைக் கொள்ளை கொள்ள வைக்க, சுகந்த வாசனைப் பொடிகளை அன்புடன் தெளித்திடுக. 

நல்ல வார்த்தைகளுக்கா பஞ்சம்.தாராள மனசு வேண்டும். அது நல்ல இசையை உங்களுக்குள் சதா மீட்டியபடியே இருக்கும். 

  • தொடங்கியவர்

பூடான் பிரதமர் ஜிக்மி டோர்ஜி சுட்டுக்கொல்லப்பட்ட நாள்: ஏப்.5- 1964

பூடானில் 1952 முதல் பிரதமராக இருந்தவர் ஜிக்மி டோர்ஜி. இவர் 1964-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1804 - முதற்தடவையாக விண்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்காட்லாந்தில் பதிவானது. * 1879 - பொலிவியா மற்றும் பெரு மீது சிலி போரை அறிவித்தது. பசிபிக் போர் ஆரம்பமானது. * 1897 - கிரேக்கத்துக்கும் ஓட்டோமான் பேரரசுக்கும் இடையில் போர் ஆரம்பமானது. * 1930 - மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில்

 
பூடான் பிரதமர் ஜிக்மி டோர்ஜி சுட்டுக்கொல்லப்பட்ட நாள்: ஏப்.5- 1964
 
பூடானில் 1952 முதல் பிரதமராக இருந்தவர் ஜிக்மி டோர்ஜி. இவர் 1964-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1804 - முதற்தடவையாக விண்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்காட்லாந்தில் பதிவானது. * 1879 - பொலிவியா மற்றும் பெரு மீது சிலி போரை அறிவித்தது. பசிபிக் போர் ஆரம்பமானது. * 1897 - கிரேக்கத்துக்கும் ஓட்டோமான் பேரரசுக்கும் இடையில் போர் ஆரம்பமானது. * 1930 - மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பபயணத்தை முடித்தார். * 1936 - மிசிசிப்பியில் சுழற்காற்று தாக்கியதில் 233 பேர் கொல்லப்பட்டனர்.

* 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் போர்க்கப்பல்கள் இலங்கையைத் தாக்கின. * 1944 - இரண்டாம் உலகப் போர்: கிளெய்சோரா என்ற கிரேக்க நகரில் 270 உள்ளூர் மக்கள் ஜெர்மனியினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். * 1945 - பனிப்போர்: யோகொஸ்லாவியாவினுள் சோவியத் படைகள் தற்காலிகமாக நுழைவதற்கு அந்நாட்டு அதிபர் ஜோசப் டீட்டோ சோவியத் ஒன்றியத்துடன் உடன்பாடு செய்து கொண்டார்.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

பொம்மைகளின் கதை: ஜப்பானின் அடையாளம் ஹகடா

 

 
Desktop1jpg

தெற்கு ஜப்பானில் கியுஷூ தீவில் அமைந்திருக்கும் அழகிய நகரம் புகுவோகா. புகுவோகாவும் அருகில் உள்ள ஹகடா நகரமும் 1889-ல் இணைந்து, புகுவோகா என்றே அழைக்கப்படுகின்றன. இந்த நகரின் பெருமை மிக்க அடையாளம் ஹகடா பொம்மைகள்.

ஜப்பான் முழுவதுமே கைவினைக் கலைஞர்களுக்கும் பொம்மைகளுக்கும் புகழ்பெற்றது. ஹகடா பொம்மைகள் கொலு பொம்மைகளை ஒத்த வடிவுடையவை.

மெருகூட்டப்படாத பளிங்குக் களிமண்ணில் செய்யப்படும் ஹகடா பொம்மைகள், 400 ஆண்டுகள் தொன்மையுடையவை. கூரை ஓடு செய்யும் கைவினைஞரான சவுஹிச்சி மசாகிதான் இந்தப் பொம்மைகளைச் செய்யத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அதிக வண்ணங்கள் இல்லாமல் இருந்த பொம்மைகளுக்கு வண்ணம் கொடுத்தவர் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிச்சிபை நகானொகொ.

களிமண்ணை நீர் ஊற்றி நன்கு பிசைந்துகொள்வார்கள். கத்தி, கரண்டி கொண்டு செதுக்குவார்கள். பொம்மையின் உட்புறத்திலுள்ள களிமண்ணை நீக்கிவிடுவார்கள். அப்போதுதான் பொம்மை லேசாக இருக்கும். அந்தப் பொம்மையைப் பத்து நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். பின்னர் சூளையில் 900 டிகிரி வெப்பநிலையில் 8 மணி நேரம் சுடுவார்கள். சூடு குறைந்த பிறகு காய்கறி, தாவரச் சாறுகளிலிருந்து எடுக்கும் வண்ணங்களைப் பூசுவார்கள்.

மென்மையான மேற்பரப்பும் அற்புதமான கலைத்திறனும் கொண்டவை ஹகாடா பொம்மைகள். ஃபுமி என்ற அழகிய ஜப்பானிய பெண் பொம்மைகளும் சாமுராய் வீரர் பொம்மைகளும் ஹகடா பொம்மைகளாக உலகம் முழுவதும் வலம்வருகின்றன.

Doll-1

அரண்மனைகள், செல்வந்தர்களின் வீடுகளை அலங்கரிக்கும் ஆபரணங்களாகவும் ஹகடா பொம்மைகள் உள்ளன.

ஹகடா பொம்மைகளைச் செய்வதற்கு நுட்பமான கைத்திறனும் பொறுமையும் தேவைப்படும். ஹகடா பொம்மைகளை உருவாக்குவதற்கான அடிப்படைத் திறன்களில் தேர்ச்சி பெறுவதற்கே ஓரிரண்டு ஆண்டுகள் ஆகும். அதனால் இளைஞர்கள் தற்போது ஹகடாவைச் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனாலும் ஜப்பானிலும் உலக அளவிலும் ஹகடா பொம்மைகளுக்கு வரவேற்பும் மதிப்பும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

ஹகடா பொம்மைக் கலைஞரையும் ஹகடா பொம்மைகளையும் கவுரவிக்கும் மாதம் ஜூலை. புகுவோகா நகரத்தில் ஜப்பானின் மிகப் பெரிய திருவிழாவாக ஹகடா ஜியான் யமாகசா நடைபெறுகிறது. ஜூலை முதல் தேதி, கஜாரியமகாசா என்றழைக்கப்படும் சப்பரங்களில் ஒவ்வொரு தெருவிலும் ஹகடா பொம்மைகள் கொலுபோல் அடுக்கி வைக்கப்படும்.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

வளைகுடாவில் வளர்க்கப்படும் ஆலம், வேலம், அரச மரங்கள்! - ஆச்சர்யப்படுத்தும் அரபிகள்

 
 

த்தார் நாடு பாலைவன பூமி. எண்ணைய் வளம் அதிகம். செல்வச் செழிப்பு மிக்க நாடு. இந்தியர்கள் லட்சக்கணக்கில் வாழ்கின்றனர். சர்வசாதாரணமாக 45 டிகிரி செல்சியஸ் வெயில் வீசும். அனல் பறக்கும் காற்றில் ஏ.சி இல்லாத வாழ்க்கையை அங்கு யோசித்துப் பார்க்க முடியாது. கத்தார் உள்ளிட்ட வளைகுடா மக்களுக்குக் கண்ணுக்குக் குளிராகக் காட்சியளிப்பது ஈச்சமரங்கள்தாம்.

கத்தாரில் வேப்பம் மரம்

அண்மையில் நண்பர் ஒருவர் கத்தார் சென்று வந்தார். நாடு திரும்பியவர், ஆச்சர்யத்துடன் ஒரு செய்தியைப் பகிர்ந்துகொண்டார். ``கத்தார் தலைநகர் தோஹாவில் நான் சென்ற இடமெல்லாம் நம்ம நாட்டு மரங்களான ஆலம், வேலம், அரச மரங்களைப் பார்த்தேன். சாலையோரங்களில் எல்லாம் நம்ம நாட்டு மரங்களை நட்டு வைத்து வளர்த்து கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட மரக்கன்றுகள் இப்போது வளர்ந்து சாலையோரத்தில் குட்டி குட்டி மரங்களாகப் பச்சை பசேலென்று காட்சியளிக்கின்றன. மக்கள் கூட்டம் கூட்டமாக அதன் கீழ் ஓய்வு எடுக்கிறார்கள்'' என்றார். 

கத்தார் நாட்டில் அரச மரம்

மேலும், அவர் கூறுகையில், ``கத்தாரில் இது போன்ற மரங்களை வளர்க்க இந்தியர்கள்தாம் ஆலோசனை கூறியிருப்பார்கள். கத்தார் நாட்டில் பல்வேறு இடங்களில் செயற்கையாகக் காடுகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர். நம் நாட்டு மரங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதால் ஆலம், அரச, வேப்ப மரங்களை வளர்க்க முன்னுரிமை அளிக்கின்றனர்

கத்தாரில் வாதம் மரம்

 

ஆனால், நாம் சுற்றுச்சூழல் பற்றி எந்தப் புரிந்துணர்வும் இல்லாமல் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட விஷயங்களுக்கா மரங்களை அழித்து வருகிறோம். பாலைவன தேசத்தில் கூட நம் நாட்டு மரங்களின் அருமையைத் தெரிந்து வைத்துள்ளனர். ஒரு மரத்தை வெட்டினால் 10 மரம் நட்டு வளர்க்க வேண்டும். வளர்த்துக் காட்ட வேண்டும் என்கிற அளவுக்குத் தண்டனையைக் கடினமாக்க வேண்டும்'' என்றார். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

ரயில்வே தண்டவாளத்தில் செயல்படும் சந்தை

தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகே உள்ள மேக்லாங் சந்தை, ரயில் தண்டவாளத்திற்கு மிக அருகில் செயல்பட்டு வருகிறது.

  • தொடங்கியவர்

`அவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சம்பளம், உயர்பதவி?’ - பொருமுபவர்களுக்கு விளக்கம் சொல்லும் கதை #MotivationStory

 
 

உன்னை அறிந்தால்

`வேலையில் தரம், திறமை என்பதெல்லாம் ஒருபோதும் தற்செயலாகக் கிடைப்பதில்லை. புத்திசாலித்தனமான தொடர் முயற்சியால் மட்டுமே அது கிடைக்கும்’ - அழகாகச் சொல்லியிருக்கிறார் ஆங்கிலக் கலை விமர்சகர் ஜான் ரஸ்கின் (John Ruskin). எந்தத் தொழிலாக இருந்தாலும் எல்லோருக்கும் உயர்ந்த பீடம் கிடைத்துவிடுவதில்லை. உயரம் தொட்டவர்கள் அனைவருக்கும் அந்த இடம் தானாக வந்து சேர்வதுமில்லை. தொடர் முயற்சி, கடின உழைப்பு, புத்தி கூர்மை, சூழ்நிலைக்கேற்ப செயல்படும் சாதுர்யம் இவையெல்லாம்தான் ஒருவரைப் படிப்படியாக உயர்த்தி முன்னேற்றப் பாதையில் நடைபோடவைக்கும். உதாரணமாக வழக்கறிஞர் தொழிலை எடுத்துக்கொள்வோம்... ஒரு வழக்குக்கு சில ஆயிரம் ரூபாய்களை வசூல் செய்வரும் உண்டு; ஒரு மணி நேரத்துக்கு லட்சக்கணக்கில் ஃபீஸ் வாங்குபவரும் உண்டு. ஒரே துறை, ஒரே சட்டங்கள்... ஆனால் சிலர் மட்டும் மிக அதிகமாக சம்பாதிப்பது எப்படி?  திறமை... தொடர்ந்து தங்கள் புத்திசாலித்தனத்தால் பல முயற்சிகள் செய்து, போராடிப் பெற்ற திறமை. அதுதான் அவர்களுக்கு பணத்தோடு புகழையும் சேர்த்துக் கொடுக்கிறது. திறமைக்கு மரியாதை ஏன் தர வேண்டும் என்பதை உணர்த்தும் கதை இது. 

அது இங்கிலாந்திலுள்ள ஒரு பெரிய கப்பல் நிறுவனம். அதற்குச் சொந்தமாக பதினான்கு சரக்குக் கப்பல்கள் இருந்தன. ஐரோப்பாவிலுள்ள சில நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் அவை சரக்குகளை ஏற்றி, இறக்கிக்கொண்டிருந்தன. இரண்டு மாத காலமாக அவற்றில் ஒன்றே ஒன்றில் மட்டும் பிரச்னை. திடீரென்று ஒரு நாள் கப்பலின் இன்ஜின் ஓடாமல் நின்றுவிட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் நிறுவனத்தின் இன்ஜினீயர்களால் என்ன கோளாறு என்பதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. 

கப்பல்

அந்த நிறுவனத்துக்கு இரண்டு பேர் உரிமையாளர்கள். ஒரு சரக்குக் கப்பல் சரக்கை ஏற்றுவதற்காகவும் இறக்குவதற்காகவும் கரையில் நிற்கலாமே தவிர, சும்மா நிற்கக் கூடாது. அது நிறுவனத்துக்கு இழப்பு. கப்பல் கடலில் தொடர்ந்து பயணம் செய்தால்தான் நிறுவனத்துக்கு ஆதாயம். இப்போது பழுதாகி நின்றுபோன இன்ஜின் ஓடினால் போதும் என்றிருந்தது உரிமையாளர்களுக்கு. வேறு வழியில்லாமல் வெளியிலிருந்து இன்ஜினைச் சரிசெய்ய ஆட்களை வரவழைத்துப் பார்த்தார்கள். அவர்களும் வந்து என்னென்னவோ செய்து பார்த்தார்கள்; இன்ஜின் மட்டும் கொஞ்சம்கூட அசையாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தது. இன்ஜின் சரியாகவில்லையே என்கிற கவலையிலேயே நாளுக்கு நாள் நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு பிரஷர் எகிறிக்கொண்டே போனது.  

இந்தநிலையில்தான் ஓர் அதிகாரி தகவல் ஒன்றைத் தயங்கித் தயங்கிச் சொன்னார்... ``சார்... நார்விச் (Norwich) நகரத்துல வயசானவர் ஒருத்தர் இருக்காராம். சின்ன வயசுலருந்தே பல கப்பல் இன்ஜின்களைச் சரி பண்றதையே தொழிலா செஞ்சவராம். ஓடாம நிக்கிற எப்பேர்ப்பட்ட இன்ஜினையும் ஓடவெச்சுடுவாராம்... அவரை வேணா வரச் சொல்லலாமா?’’ 

ஓர் உரிமையாளர் கேட்டார்... ``ரொம்ப ஃபீஸ் வாங்குவாரோ?’’ 

``கொஞ்சம் அதிகமாத்தான் கேட்பாருனு சொல்றாங்க...’’ 

இன்னோர் உரிமையாளர் சொன்னார்... ``அதனால பரவாயில்லை. இன்ஜின் ஓடினா போதும். வரச் சொல்லுங்க.’’ 

அந்த முதிய இன்ஜினியரை அழைத்துவர நிறுவனத்திலிருந்து இரண்டு ஊழியர்கள் உடனே கிளம்பிப் போனார்கள். அடுத்த நாளே அவரும் வந்துவிட்டார். அவருடைய தோளில் ஒரு பெரிய பை தொங்கிக்கொண்டிருந்தது. பார்த்தாலே உபகரணங்களை வைத்திருக்கும் பை (Tool Bag) என்பது புரிந்தது. அவர் யாரிடமும் எதுவும் பேசாமல் நேராக கப்பல் இன்ஜினுக்கு அருகே போனார். இன்ஜினின் தலை முதல் கால் வரை அங்குலம் அங்குலமாக கவனமாக ஆராய்ந்தார். 

கதை

நிறுவனத்தின் உரிமையாளர்கள் இருவரும் அவரின் நடவடிக்கைகளையே கவனித்துக்கொண்டிருந்தார்கள். அவர் நடவடிக்கைகளைப் பார்க்கப் பார்க்க இன்ஜின் கோளாறை அவர் சரிசெய்துவிடுவார் என்றே அவர்களுக்குத் தோன்றியது. எல்லாவற்றையும் ஆராய்ந்த பிறகு அந்த முதியவர் தன் உபகரணப் பையைத் திறந்தார். அதிலிருந்து ஒரு சின்ன சுத்தியலை எடுத்தார். இன்ஜினின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுத்தியலால் லேசாக ஒரு தட்டுத் தட்டினார். உடனே சுத்தியலை பின்னுக்கு இழுத்தும்விட்டார். அவ்வளவுதான்... கப்பல் இன்ஜின் பழையபடி சீராக ஓடத் தொடங்கிவிட்டது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கப்பல் நிறுவன உரிமையாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் ஆச்சர்யம் தாங்கவில்லை. 

அந்த முதியவர் ``நான் வீட்டுக்கு போய் பில் அனுப்புறேன்...’’ என்று சொன்னார். கிளம்பிவிட்டார். 

கப்பல்

இரண்டே நாள்களில் அவர் இன்ஜினை சரி செய்ததற்கான பில் வந்தது. மொத்தம் 10,000 யூரோ பணம் கேட்டிருந்தார் அவர். கப்பல் உரிமையாளர்கள் அதைப் பார்த்துக் கடுப்பாகிவிட்டார்கள். பலரால் சரிசெய்ய முடியாத கோளாறுதான். ஆனால், ஒரு சின்ன சுத்தியலால் ஒரேயோர் இடத்தில் தட்டியதற்கு 10,000 யூரோ என்பது அதிகமில்லையா? இதை அப்படியே ஒரு கடிதமாக எழுதி, முதியவருக்கு அனுப்பி விளக்கம் கேட்டார்கள். 

அடுத்த இரண்டு நாள்களில் அந்த முதிய இன்ஜினியரிடமிருந்து பதில் வந்தது. ``நீங்கள் கேட்டிருக்கும் விளக்கம் நியாயமானதுதான். விளக்கம் இங்கே... சுத்தியலால் தட்டியதற்கு கூலி வெறும் 2 யூரோதான். ஆனால், எங்கே தட்ட வேண்டும் என்று நான் தெரிந்துவைத்திருப்பதற்கான கூலி 9,998 யூரோ.

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

இந்த மியூசியம்ல செல்ஃபி எடுக்க மட்டும்தான் அனுமதி! #MuseumofSelfies

 
 

இந்தக் காலத்து இளைஞர்களுக்கு செல்ஃபியும் ஒருவித கலைதான். ஒளி, ஆங்கிள் (Angle), பர்ஃபெக்‌ஷன் (Perfection), ஃபோக்கஸிங் (Focusing) எனப் பலவற்றை சரிபார்த்து எடுப்பதற்குள் அன்றைய தினத்தில் பாதி முடிந்துவிடும். ஆனால், லாஸ் ஏஞ்சலஸில் உள்ள `Museum of Selfies' எனும் அருங்காட்சியகத்தில் செல்ஃபி எடுக்க எந்த நேரக் கட்டுப்பாடுமில்லை. இது செல்ஃபி எடுப்பதற்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மியூசியம்.

செல்ஃபி

காலையில் எழுந்ததிலிருந்து குளிக்கும் முன்னர், குளித்தப் பிறகு, சாப்பிடும் முன்னர், சாப்பிட்டப் பிறகு, பேருந்துநிலையம் முன், அலுவலகம் முன், டிராஃபிக்கில் நிற்கும் நேரம்... இப்படி லிஸ்ட் நீண்டு, தூங்கும் முன்னர் வரை அனைத்தையும் செல்ஃபியில் கேப்ச்சர் செய்து மொபைல் மெமரியில் சேகரித்துக்கொள்கின்றனர் யூத்துகள். 40,000 ஆண்டுகளுக்கு முன்னரே நாம் `செல்ஃபி'க்கு அடிமை எனச் சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால், இதுவே உண்மை. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த `ரெம்பிரன்ட்' இதற்கு `குரு' என்றும் சொல்லலாம். இவர் ஓர் ஓவியர். நூற்றுக்கும் மேற்பட்ட, தன் சுய உருவப்படத்தை வரைந்து அழகு பார்த்தவர். இவரைத் தொடர்ந்து ஆல்பிரெட்ச் டியூரர் (Albrecht Dürer), Van Gogh Dozens போன்றோரும் தங்களின் உருவப்படத்தை தாங்களே வரைந்துகொண்டவர்கள். தற்போது பரவிவரும் செல்ஃபி வைரல்களுக்கு இவர்கள்தான் முன்னோடி.

இவர்களை போற்றும்வகையிலும், அந்த நாட்டில் அழிந்துவரும் பாரம்பர்யத்தைக் காப்பாற்றும் வகையிலும், இப்படி ஓர் அருங்காட்சியகத்தை உருவாக்கியுள்ளனர் டாமி ஹான்டன் மற்றும் மேமிடோவ். அருகாட்சியகம் என்றாலே, நினைவுகளின் ஆலயம் எனலாம். பொதுவாகவே அங்கே எந்தப் பொருளையும் தொடுவதற்கு அனுமதியிருக்காது. முக்கியமாக, புகைப்படங்களுக்கு மிகப்பெரிய `இல்லை' போர்டுதான் இருக்கும். ஆனால், இந்த செல்ஃபி மியூசியத்தில் உங்கள் இஷ்டம்போல எத்தனை புகைப்படங்கள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அதற்கேற்ப பல செயற்கை மாதிரிகள் இங்கே உண்டு.

Selfie

``இதுக்கெல்லாம் ஒரு மியூசியமா?'' என்று டாமி ஹான்டனிடம் அந்நாட்டு செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``செல்ஃபி என்பது இந்த நூற்றாண்டில் இருக்கும் ஒன்று என்ற தவறான எண்ணம் நமக்கு உண்டு. ஆனால், இது நம் ரத்தத்தில் ஊறிய ஒன்று. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்ததால் இன்று மொபைலில் பதிவுசெய்கிறோம். இதையேதான் அந்நாளில் கைப்பட வரைந்திருக்கிறார்கள். அதையும் நாங்கள் சேகரித்துவைத்துள்ளோம். வரலாற்றைத் திரும்பிப் பார்க்கவைத்த இது, முக்கியமான ஒன்றுதான்" என்று கூறியுள்ளார் டாமி.

Faux Skyscraper

சுமார் 8000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில், `faux skyscraper' - அதாவது 20 மாடிக் கட்டடம் மாதிரி 3D-யில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நிலத்தில் நின்றுகொண்டே உயரமான மாடியில் நின்று புகைப்படம் எடுப்பதுபோல் முகபாவனைகளைக்கொண்டு அசத்தல் செல்ஃபி எடுக்கலாம்.

Bathroom Selfie

பெண்கள் அதிக நேரத்தைச் செலவிடும் இடம், ஒப்பனை அறை. காரணம், அங்கு உள்ள கண்ணாடி மற்றும் கையில் உள்ள மொபைல்போன். தங்களை விதவிதமாக மெருகேற்றி டங் அவுட், பவுட் எனப் பலவிதமான முகபாவனைகளைச் செய்து `ஒப்பனை அறையை' செல்ஃபியின் பிறப்பிடமாகவே மாற்றிவிட்டனர். இந்த அருங்காட்சியகத்தில் பிரதிபலிப்பில்லாத மாயை உருவாக்கி, `பாத்ரூம் செல்ஃபி' ஏரியாவை உருவாக்கியுள்ளனர்.

Car Selfie

கார் பிரியர்களுக்காக சூப்பர் மாடல் `ஃபோக்ஸ்வேகன்  பீட்டில் (Volkswagen Beetle) காரின் மாதிரியும் வடிவமைப்பட்டுள்ளது. Darel Carey எனும் ஓவியரின் கைவண்ணத்தில் உருவான `ஆப்டிகல் எலெக்ட்ரிக்கல் டேப் இல்லூஷன்', வித்தியாசமான செல்ஃபி பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

Different Selfies

 

`செல்ஃபி எடுக்கிறதுல நான் ராஜா/ராணி' என்று சொல்பவர்களுக்கு, இங்கு சிம்மாசனமே உள்ளது. முழுக்க முழுக்க `Selfie Stick' மற்றும் மொபைல் போன்களைக்கொண்டு உருவான அரியணை இது. மேலும் விசித்திரமான சுவாரஸ்யமான சில உடைமைகளும் இங்கே உள்ளன.

`செல்ஃபி எடுக்கிறதுல நான் ராஜா/ராணி' என்று சொல்பவர்களுக்கு, இங்கு சிம்மாசனமே உள்ளது. முழுக்க முழுக்க `Selfie Stick' மற்றும் மொபைல் போன்களைக்கொண்டு உருவான அரியணை இது. மேலும் விசித்திரமான சுவாரஸ்யமான சில உடைமைகளும் இங்கே உள்ளன.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

சிரஞ்சீவியின் 151-வது படம் ‘சயீரா நரசிம்ம ரெட்டி’யைத் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். படத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி, அமிதாப்பச்சன், ஜெகதிபாபு, கிச்சா சுதீப் ஆகியோர் நடிக்கவுள்ளனர். முதன்முறையாக விஜய்சேதுபதி தெலுங்கில் நடிக்கும் இந்தப் படத்தில் அவர் தமிழராகவே நடிக்கிறார். அவருடைய கேரக்டர் பெயர் ‘ஒப்பாயா’. படம் முழுக்க சிரஞ்சீவியுடனே டிராவல் செய்யும் விதமாக இந்த கேரக்டர்  அமைக்கப்பட்டுள்ளதாம். ஒரு நல்லநாள் பார்த்து ஆரம்பிங்க!

p68a_1522835473.jpg


மீபத்தில் புதிய சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறது கேரளா. அங்கே பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பற்றிய புள்ளி விவரங்கள் அண்மையில் வெளியாகின. அதில் 1.24 லட்சம் மாணவர்கள் அட்மிஷனின்போது, ‘நாங்கள் எந்தச் சாதியோ மதமோ சாராதவர்கள்’ என்று பதிவு செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. அட்மிஷனில் சாதி, மதம் குறிப்பிடாமல் இருப்பதைக் கேரள இளைஞர்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்புகூட கேரளக் கால்பந்தாட்ட வீரர் சி.கே.வினித் தன் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும்போது இப்படிச் செய்திருந்தார். வாழ்த்துகள் சேட்டன்களே!


காரா பாலைவனம், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ந்துவருகிறது என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள். தெற்கு நோக்கி சூடானில் அதன் பரப்பளவு விரிவடைந்துவருகிறது. இத்தனை ஆண்டுகளும் விவசாயம் செய்துகொண்டிருந்த பல நிலங்களும் இன்று பாலைவனங்களாக மாறிவருகின்றன. இது சகஜமானதுதான், ஆனால் பாலைவனமாகும் வேகம்தான் பயமுறுத்துகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்! தமிழ்நாட்டுலயும்தான்!


p68b_1522835541.jpg

த்ரீனா கைஃபின் தங்கை இசபெல்லாவும் நடிக்க விருக்கிறார் என்ற தகவல் பல ஆண்டுக் காலமாக வலம் வந்து கொண்டி ருந்தது. இப்போது ‘டைம் டு டான்ஸ்’ எனும் இந்திப் படத்தில் சூரஜ் பச்சோலிக்கு ஜோடியாக நடிப்பது உறுதியாகி யிருக்கிறது. இதில் இசபெல்லா, லத்தீன் டான்சராகவும், சூரஜ் ஸ்ட்ரீட் டான்சராகவும் நடிக்கிறார்கள். டேன்ஸ் பேபி டேன்ஸ்!


p68c_1522835595.jpg

ஹேப்பி மூடில் இருக்கிறார் ராணிமுகர்ஜி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறார். ஆசிரியை கதாபாத் திரத்தில் நாயகியாக நடித்து வெளியாகியுள்ள  `ஹிச்கி’ பாலிவுட்டில் சூப்பர்ஹிட்.  `திருமணம், குழந்தை என்று சினிமா வாழ்க்கைக்குக் கொஞ்சம் கேப் விட வேண்டிய தாயிற்று. இனி சினிமாப் பயணத்தில் இடை வெளியே கிடையாது. சரவெடிதான்’ என சந்தோஷப் பேட்டி தட்டியிருக்கிறார் ராணி! வாம்மா மின்னல்!


p68d_1522835610.jpg

ன்.டி.ஆர் வாழ்க்கை வரலாறு திரைப் படமாகிறது. என்.டி.ஆர் கதாபாத் திரத்தில், அவரின் மகனான நந்தமுரி பால கிருஷ்ணாவே நடிக்க விருக்கிறார். சென்டி மென்டாக என்.டி.ஆர் கட்சி தொடங்கிய நாளான மார்ச் 29ஆம் தேதி படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார்கள். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிலேயே அச்சு அசல் என்.டி.ஆர் போலவே மாறி ஆந்திரா வையே அலற விட்டிருக் கிறார் பாலய்யா! அதிருந்தி அதிருந்தி!


தென்னிந்திய பாக்ஸ் ஆபீஸ் பாட்ஷா யார் என்பதில் போட்டி இருக்கலாம். ஆனால், ட்விட்டர் சூப்பர்ஸ்டார் மோகன்லால்தான். அதிகம் ட்வீட் செய்யாத ரஜினிக்கு 46 லட்சம் ஃபாலோயர்ஸ், ட்விட்டரி லிருந்து அரசியல் தொடங்கிய கமலுக்கு 45 லட்சம். ஆனால், மோகன் லாலுக்கு 50 லட்சம். தினமும் நடப்பதை யெல்லாம் ட்வீட் ஆக்கும் மோகன்லாலின் நகைச் சுவை உணர்வுக்கு மொழி கடந்தும் ரசிகர்கள் குவி கிறார்கள். லாலேட்டன்டா! 


p68e_1522835630.jpg

தர்வா அடுத்து நடிக்க விருக்கும் திரைப்படம் ‘பூமரங்’. கண்ணன் இயக்கும் இந்தப் படத்தில் அதர் வாவுக்கு மூன்று கெட்டப்பு களாம்.  இதற்காகத் தன்னையே உருக்கித் தயார் செய்து கொண்டிருக்கிறார். நியாயமாரே! 


p68f_1522835665.jpg

9000 கோடி ரூபாய் கடன் வாங்கி,  வெளிநாட்டுக்குத் தப்பியோடிய விஜய் மல்லையா, மூன்றாவது திருமணம் செய்யத் திட்டமிட்டிருக்கிறார். மல்லையாவின் விமான நிறுவனத்தில் விமானப் பணிப் பெண்ணாக இருந்த பிங்கி லவ்லாணியை மணக்கவிருக்கிறாராம். இங்கிலாந்திலேயே செட்டில் ஆகிவிட்ட விஜய்மல்லையா திருமணத்துக்குப் பிறகும் அங்கேயே இருந்துவிடத் தீர்மானித்திருக்கிறார். ரணகளத்துலயும் கிளுகிளுப்பு! 


p68g_1522835680.jpg

லாலா மீண்டும் பாகிஸ் தானுக்குத் திரும்பி யிருக்கிறார். 2012-ல் தாலிபன்களால் சுடப்பட்ட பிறகு அங்கிருந்து வெளி யேறியவர், ஆறாண்டு களுக்குப் பிறகு தன்னு டைய சொந்த ஊரான மிங்கோராவுக்குச் சென்றுள்ளார். “நான் ஒரு பாகிஸ்தானி, இங்கே வாழும் உரிமை எனக்கும் இருக்கிறது. படிப்பு முடிந்ததும் இங்கேயே நிரந்தரமாகத் தங்கப் போகிறேன்” எனப் பேட்டி கொடுத்திருக்கிறார். சல்யூட்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

சல்மான் கான் வேட்டையாடிய கலைமான் பற்றி உங்களுக்கு தெரியுமா?

 

அரிய வகை மானாக இந்தியாவில் காணப்படும் கலைமானை வேட்டையாடியதால் இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மான்கள்படத்தின் காப்புரிமைAFP

2 கலைமான்களை வேட்டையாடியதாக குற்றஞ்சாட்டப்பட்டு 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் இந்த தீர்ப்பு இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

இந்த அரிய வகை கலைமான்கள் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விபரங்களை இங்கு தொகுத்து வழங்குகின்றோம்.

கலைமான்கள் வாழும் இடங்கள்

ஆங்கிலத்தில் கறுப்பு மான் என்ற பொருளில் அழைக்கப்படும் கலைமான்கள் பொதுவாக இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், அமெரிக்கா, அர்ஜென்டினாவில் வாழ்கின்றன.

கலைமான்படத்தின் காப்புரிமைAFP

பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்ற இந்த வகை மான்கள், சில பகுதிகளில் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கின்றன.

இவை வாழ்ந்து வருகின்ற இடங்கள் தொடர்ந்து சுருங்கி வந்தாலும், இன்னும் சில இடங்கள் எஞ்சியுள்ளன.

வாழும் இடங்களில் ஏற்படும் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிகொள்கின்ற பண்பை இந்த மான்கள் பெற்றுள்ளன.

இருப்பினும், மக்கள்தொகை பெருக்கம், செல்ல விலங்குகள் அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவை இந்த வகை மான்களின் பெருக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடையும், எண்ணிக்கையும்

"விலங்குகளின் பட்டியல் 1ல் இடம்பெற்றுள்ள கலைமான்களை வேட்டையாடுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது" என்று உதய்பூர் தலைமை வனப்பாதுகாவலர் ராகுல் பாட்நகர் பிபிசியிடம் தெரிவித்தார்.

சால்மன் கான்படத்தின் காப்புரிமைAFP

இந்த வகை மான்கள் பொதுவாக சமவெளி மற்றும் பாலைவனப் பகுதிகளில் வாழ்கின்றன. இப்பகுதி மனிதர்கள் எளிதில் இனம் காண்பதால் இவை மிகவும் பாதிக்கப்படுகின்றன. எனவே, பாதுகாக்க கண்டிப்பான சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

ஆண் கலைமான்கள் 34 முதல் 45 கிலோ எடையுடையதாக இருக்கும். தோள் வரை 74 முதல் 88 சென்டிமீட்டர் வரை உயரம் கொண்டவை.

31 முதல் 39 கிலோ வரை எடையுடைய பெண் கலைமான்கள், ஆண் கலைமான்களைவிட சற்று உயரம் குறைவானவை.

ஆண்களை போல வெள்ளை நிறமுடைய பெண் கலைமான்களும் உள்ளன.

அவற்றின் இரண்டு கண்களை சுற்றியும், வாய், வயிறு, பாதத்தின் உள்பகுதியிலும் வெள்ளை நிறம் காணப்படுவது இவற்றின் தனித்தன்மை.

ஆண் மற்றும் பெண் கலைமான்களின் வேறுபாடு கொம்பு மட்டுமே. ஆண் கலைமான்களுக்கு நீளமான கொம்புகள் உள்ளன. பெண் கலைமான்களுக்கு கொம்பு கிடையாது.

நிறம் மாறும் மான்

மான்படத்தின் காப்புரிமைAFP

கலைமான்களின் நிறமும் மாறுபாடுவது மிகவும் முக்கியமானது.

பருவமழை முடிவில் ஆண் கலைமான்களின் நிறம் கறுப்பாக இருக்கும்.

குளிர் காலத்தில் இந்த நிறம் மெல்லிய கறுப்பாக மாறுகிறது. ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் பழுப்பு நிறமாக மாறுகிறது.

தென் இந்தியாவிலுள்ள இந்த வகை மான்கள் சில கறுப்பாக இருப்பதில்லை. ஆனால், பெண் மற்றும் குட்டி கலைமான்கள் விட கரும் நிறமுடையதாக ஆண் கலைமான்கள் உள்ளன.

புல்லை தின்று வாழும் கலைமான்கள் குறைவான மேய்ச்சல் நிலமுடைய மிதமான பாலைவனப் பகுதிகளில் அங்குள்ள மேய்ச்சல் நிலத்தை நம்பி வாழ்கின்றன.

பிரிட்டானியர் இந்தியாவை ஆண்டபோது, பல்லாயிரக்கணக்கில் கலைமான்கள் வாழ்ந்தன. இப்போது அவ்வாறில்லை என்று உதய்பூரை சோந்த வன விலங்கு நிபுணர் அராஃபா தெய்சின் பிபிசியிடம் தெரிவித்தார்.

அழிவின் விளிம்பில் உள்ளனவா?

மான்படத்தின் காப்புரிமைAFP

அடர்ந்த காடுகளில் வாழும் விலங்கல்ல என்பதால், கலைமான்கள் வாழும் பகுதிகள் மிகவும் குறைவே.

சமவெளிகளில் வாழும் விலங்காக இருப்பதால், மக்கள் தொகை பெருக்கத்தால் அவைகளின் இடங்கள் குறைந்து போய்விட்டன.

200 ஆண்டுகளுக்கு முன்னர் கலைமான்கள் மொத்தம் 40 லட்சம் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 1947ம் ஆண்டு 80 ஆயிரமாக குறைந்திருந்தன.

1970களில் கலைமான்களின் இந்த எண்ணிக்கை 22 முதல் 24 ஆயிரமாக குறைந்தது. 2000ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை வளர்ந்து 50 ஆயிரமாகிவிட்டன.

இந்தியாவில் ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் கலைமான்கள் காணப்படுகின்றன.

இந்தியாவுக்கு வெளியே 200 கலைமான்கள் நேபாளிலும், 8,600 அர்ஜென்டினாவிலும், 35 ஆயிரம் அமெரிக்காவிலும் வாழ்ந்து வருகின்றன.

துல்லியமான கணக்கெடுப்பு இல்லை என்பதால், கலைமான்களின் சரியான எண்ணிக்கையை குறிப்பிடுவது கடினமாகும்.

மான்படத்தின் காப்புரிமைAFP

விவசாய நிலங்களில் குடியேறி வாழும் தன்மை கலைமான்களிடம் உள்ளன. சில இடங்களில் பயிர்களை நாசம் செய்யும் விலங்காவும் இது உள்ளது. இருப்பினும், நீல்காய் மான்களை போன்று மிகவும் ஆபத்தானவை அல்ல கலைமான்கள்.

முற்கால முக்கியத்துவம்

இந்திய கலாசாரத்தில் கலைமான்களுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது.

சிந்து சமவெளி நாகரிகத்தில் கலைமான்கள் உணவு ஆதாரமாக இருந்துள்ளன,

டோலாவிரா மற்றும் மெஹர்கர் போன்ற இடங்களில், இதனுடைய எலும்புகளின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

16 முதல் 19ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த முகலாய மன்னர் காலத்தில், கலைமான்கள் பற்றிய சிறிய ஓவியங்கள் பல இருந்துள்ளன.

இந்தியாவிலும், நேபாளிலும் கலைமான்கள் புனிதமானவையாக பார்க்கப்படுவதால் அவற்றை யாரும் காயப்படுத்துவதில்லை. அவ்வாறு செய்வோர் கடுமையாக நடத்தப்படுகின்றனர்.

மான்கள்படத்தின் காப்புரிமைAFP

விஷ்நோய் போன்ற சமூகங்கள் கலைமான்களை ஏறக்குறைய வணங்குகின்றன. ஆந்திர பிரதேசம் கலைமான்களுக்கு மாநில விலங்கு என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது.

சமஸ்கிருதத்தில் கலைமான்கள் கருப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து புராணங்களில் கிருஷ்ணரின் தேரை கலைமான்கள் இழுத்துச் சென்றதாக குறிப்புகள் உள்ளன.

வாயு, சந்திரன் ஆகியோரின் வாகனமாகவும் கலைமான்கள் கருதப்படுகின்றன.

ராஜஸ்தானில் கலைமான்களின் பாதுகாவலராக கரானி மாதா கருதப்படுகிறார்.

http://www.bbc.com

 

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: Text

ஏப்ரல் 6, 1896 - முதலாவது நவீன கால ஒலிம்பிக் போட்டிகள் ஏதென்ஸில் தொடங்கிய தினம் இன்று. #வரலாற்றில்_இன்று

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

னுஷ்காவுக்குப் பிடித்தவற்றில் டாப், பைக் பயணம். ஓய்வு நேரம் கிடைத்தால் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு ஊர்சுற்றக் கிளம்பிவிடுவார். சமீபத்தில் லண்டன் நகர் முழுவதையும் பைக்கிலேயே சுற்றி வந்திருக்கிறார் தேவசேனா. அனுஷ்காவின் `எப்போதும் காதலர்’ புத்தகங்கள்தாம். அவருடைய ஹேண்ட்பேகில் எது இருக்கிறதோ இல்லையோ, கட்டாயம் ஒரு புத்தகம் இருக்கும். பாவ்லோ கொய்லோ எழுதிய `அல்கெமிஸ்ட்’ அனுஷ்காவின் ஆல்டைம் ஃபேவரைட். அந்த நூலை இதுவரை நூறுமுறைக்குமேல் வாசித்து சாதனை படைத்திருக்கிறாராம். வாசிப்போடு தன் மனதுக்கு நெருக்கமானவர்களைப்பற்றியும் அவ்வப்போது ஒன்றிரண்டு வரிகள் கவிதைபோலக் குறிப்பெழுதி வைப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

p21a_1522820350.jpg

p21b_1522820366.jpg

p21c_1522820380.jpg

p21d_1522820393.jpg


 காஜல் அகர்வாலுக்கு ஸ்வீட் என்றால் அவ்வளவு இஷ்டம். இத்தாலியன், சைனீஸ் இனிப்பு வகைகளை விரும்பிச் சாப்பிடுவார்.  கிரிக்கெட் விளையாடுவதிலும் ஆர்வமுள்ளவர் காஜல். பந்துகளை விரட்டி அடிக்கிற சிறந்த பேட்ஸ்மேனாம். வீட்டில் திருமணம் செய்துவைக்க துடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போதைக்கு நடிப்பில்தான் கவனம். பிரீத்தி ஜிந்தா என்றால் உயிர். ஒரு நடிகை ரசிகையாகிறார்!

p81a_1522839685.jpg

p81b_1522839696.jpg

  • தொடங்கியவர்
  • முயல்களின் தீவு!!
 

முயல்களின் தீவு!!

 

இரண்டாம் உலகப் போர் நடந்த போது நச்சு வாயு உற்பத்தி செய்யும் தீவாக இருந்தது ஜப்பானில் உள்ள ஒகுனோஷிமா. அந்தத் தீவு இன்று முயல்களின் சரணாலயமாக மாறி இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதுமட்டுமல்ல, ஒகுனோஷிமா என்ற தீவின் பெயர் ரேபிட் ஐலண்ட் (முயல் தீவு) என்றும் மாறிவிட்டது.

rabit-300x194.jpg

1929 முதல் 1945-ம் ஆண்டு வரை இந்த இடம், நச்சு வாயு தயாரிக்கக்கூடிய ரகசிய இடமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்துவதற்காக 6 ஆயிரம் டன் நச்சு வாயு ராணுவத்தினரால் இங்கே உற்பத்தி செய்யப்பட்டது. வாயுவை பரி சோதனை செய்வதற்காக முயல்களை இங்கே கொண்டு வந்து, வளர்த்துள்ளனர்.

ostrov-krolikov6-300x221.png

உலகப்போர் முடிந்ததும் எல்லாம் தலை கீழாக மாறியது. இங்குள்ள கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. அங்கே இருந்த சில குடும்பங்களை வெளியே அனுப்பிவிட்டனர்.

1452261287_4-300x225.jpg

ஜப்பானின் வரைப்படத்தில் இருந்தே ஒகுனோஷியா தீவு மாயமாகியிருந்தது. ஆனால், முயல்கள் மட்டும் தொடர்ந்து அந்தத் தீவிலேயே இருந்தன என்கிறார்கள் சிலர்.

128055256_14377035617501n-300x195.jpg

முயல்கள் இந்தத் தீவுக்கு எப்படி வந்தன என்பதற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் இன்று முயல்கள் ஒகுனோஷியா தீவை ஆட்சி செய்கின்றன. முயல்களின் அழகை ரசிப்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

123-300x271.jpg

தீவில் இறங்கி, முயல்கள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்தால் மனிதர்களை அவை சூழ்ந்துகொண்டுவிடுமாம். அவர்கள் கொண்டு வரும் உணவுப் பொருள்களை போட்டி போட்டுக்கொண்டு சாப்பிடுமாம். சுற்றுலாப் பயணிகள் தரையில் உட்கார்ந்தால் மடி, தலை மீது ஏறி ஜாலியாக சேட்டைகள் செய்யுமாம். சிலரை அப்படியே படுக்க வைத்து, அவர்கள் மீது ஏறி விளையாடி மகிழுமாம்.

rabit1-300x179.jpg

குறைந்த காலத்திலேயே ஏராளமான சுற்றுலாப் பயணிகளை தீவை நோக்கி வரவழைத்துவிட்டன இந்த அழகிய முயல்கள்!

http://newuthayan.com

  • தொடங்கியவர்

வால்ட் டிஸ்னி மிக்கி மௌஸின் படத்தை வரைந்த தினம்: ஏப்ரல் 7, 1928

உலகப் புகழ் பெற்ற ஓவியரும், மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியரும் வால்ட் டிஸ்னி தன்னுடைய கற்பனை கதாபாத்திரமான மிக்கி மௌஸ் படத்தை 1928 ஆண்டு இதே நாளில் வரைந்தார். இதையடுத்து அவர் டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றையும் உருவாக்கினார். மேலும் இதே தேதியில்

 
வால்ட் டிஸ்னி மிக்கி மௌஸின் படத்தை வரைந்த தினம்: ஏப்ரல் 7, 1928
 
உலகப் புகழ் பெற்ற ஓவியரும், மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியரும் வால்ட் டிஸ்னி தன்னுடைய கற்பனை கதாபாத்திரமான மிக்கி மௌஸ் படத்தை 1928 ஆண்டு இதே நாளில் வரைந்தார். இதையடுத்து அவர் டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றையும் உருவாக்கினார்.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்

* 1521 - பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சின் சேபு தீவை அடைந்தார்.

* 1795 - பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது.

* 1827 - ஆங்கிலேய வேதியியலாளர் ஜோன் வோக்கர் தான் கண்டுபிடித்த தீக்குச்சியை விற்பனைக்கு விட்டார்.

* 1906 - ஸ்பெயின், மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் மொரோக்கோ வந்தது.

•  1935- திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பிறந்த தினம்.

* 1946 - பிரான்சிடம் இருந்தான சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது.

* 1948 - சீனாவில் ஷங்காயில் பௌத்தமத தலம் ஒன்று எரிந்ததில் 20 புத்த குருக்கள் கொல்லப்பட்டனர்.

* 2001 - மார்ஸ் ஒடிசி விண்கலம் ஏவப்பட்டது.

* 2003 - அமெரிக்கப் படைகள் பக்தாத் நகரைக் கைப்பற்றினர். சதாம் உசேனின் அரசு இரு நாட்களின் பின்னர் வீழ்ந்தது.

உலக சுகாதார நாள்: ஏப்ரல் 7, 1950

உலகின் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக் கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே உலக சுகாதார அமைப்பின் நோக்கமாகும். இந்நிறுவனம் உலக பொது சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது. இந்நிறுவனம் 1948-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கப்பட்டது. இதன் தலைமை

 
உலக சுகாதார நாள்: ஏப்ரல் 7, 1950
 
உலகின் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக் கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே உலக சுகாதார அமைப்பின் நோக்கமாகும். இந்நிறுவனம் உலக பொது சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது.

இந்நிறுவனம் 1948-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ளது. இதன் முக்கிய வேலை திட்டம் தொற்றுநோய்கள் போன்ற நோய் நொடிகளுடன் போராடுதல் மற்றும் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் பொது சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதாகும். அந்த அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் 7-ம் தேதியை உலக சுகாதார தினமாக கொண்டாடுகின்றனர். 

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

``தம்பி... இங்க நோ செல்ஃபி!” - செல்ஃபி எடுக்க ஆபத்தான இடங்களை கண்டுபிடிக்குறாங்கப்பா

 

 

செல்ஃபி

புகைப்படம் என்பதே வாழ்வின் அழகிய தருணங்களைப் பதிவு செய்வதுதான். அப்படிப்பட்ட  அழகிய தருணங்களை ஆபத்து நிறைந்ததாக மாற்றியது செல்ஃபி என்ற விஷயம். மொபைலில் ஃபிரன்ட் கேமரா என்பது கவனிக்கப்படாத காலங்களில் செல்ஃபி என்ற வார்த்தையே மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், எப்பொழுது ஸ்மார்ட்போன்கள் பிரபலமாகத் தொடங்கியதோ அப்பொழுதிருந்து செல்ஃபி மோகம் மக்களிடையே படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக இளைஞர்கள் அதிகமாக செல்ஃபி என்ற விஷயத்திற்கு அடிமையானார்கள். காலையில் எழுவதிலிருந்து இரவு தூங்கச் செல்லும் வரைக்கும் செல்ஃபியாக எடுத்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்கள் பலவற்றில் அப்லோடு செய்வதை கடமையாகவே கடைப்பிடித்து வருகிறார்கள் . 

தொடர்ந்து அதிகரித்த விபத்துகள்

விபத்துக்கள்

செல்ஃபி எடுப்பவர்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்டிருந்த வரைக்கும் யாருக்கும் எந்த விதத்திலும் பிரச்னை ஏற்படவில்லை. ஆனால், அதன் மீதான பார்வை பொழுதுபோக்கு மனநிலையிலிருந்து மாறி சாகசமான விஷயமாகப் பார்க்கத் தொடங்கிய போதுதான் ஆரம்பித்தது பிரச்னை. ஆபத்தான இடங்களிலிருந்து செல்ஃபி எடுப்பது என்பதை சமூக வலைதளங்களில் சாகசமாகப் பார்க்கப்பட்டது. ஆபத்தான இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களுக்கு குவியும் லைக்குகளால் ஈர்க்கப்பட்ட பலர் அப்படிப்பட்ட செல்ஃபி எடுக்க விரும்பினார்கள். மிகவும் உயரமான இடங்கள், ஆபத்தான விலங்குகளின் அருகே, ஓடும் ரயிலின் அருகே என மக்கள் ஃசெல்பி எடுக்க விரும்பும் ஆபத்தான இடங்களின் பட்டியல் சற்றே நீளம்தான். செல்ஃபி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளைப் பொறுத்தவரையில் உயரமான இடத்திலிருந்து விழுந்தவர்கள்தாம் அதிகம். அதற்குப் பிறகு நீரில் மூழ்குதல், ரயிலில் அடிபடுதல் ஆபத்தான விலங்குகளுக்கு அருகே எனப் பல விதங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 

இந்தியாவுக்குத்தான் முதலிடம்

ஆபத்தான செல்ஃபி

தொடக்கத்தில் இது போன்று செல்ஃபி எடுக்கும் போது நிகழ்ந்த விபத்துகளைப் பற்றி செய்திகள் வெளியாகும்போது அந்த விஷயத்தை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால், தொடர்ச்சியாக உயிரிழப்புகள் ஏற்படத்தொடங்கிய போதுதான் உலகம் விழித்துக்கொண்டது. இதற்குப் பின்னால் இருக்கும் ஆபத்தை உணரத்தொடங்கியது. பல நாடுகளில் செல்ஃபியால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் பொருட்டு ஆபத்தான இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டன. சில இடங்களில் செல்ஃபி எடுப்பதற்குத்  தடை விதிக்கப்பட்டன. பல நாடுகளைப் போலவே இந்தியாவிலும் செல்ஃபி எடுக்கும் போது ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரிக்கத் தொடங்கியது. சில மாதங்களுக்கு முன்னால் கூட இளைஞர் ஒருவர் தண்டவாளத்தின் அருகிலிருந்து செல்ஃபி எடுக்கும் போது அவர் மீது ரயில் மோதுவதைப் போல எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவியது. இங்கே நமது ஊரில் கூட பல சம்பவங்கள் நிகழ்ந்தவாறுதான் இருக்கின்றன. உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது செல்ஃபியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக நிகழ்வதில் முதலிடம் இந்தியாவுக்குத்தான். பல வருடங்களாகவே இந்த விஷயத்தில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இங்கே அதைப் பற்றிய விழிப்புஉணர்வு போதிய அளவில் இல்லாததுதான் முக்கியமான அதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் குறைந்த பட்சம் ஆபத்தான இடங்களில் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்கும் படி எச்சரிக்கைப் பலகைகளை வைத்திருப்பார்கள். ஆனால், இந்தியாவில் அப்படி இருக்கும் இடங்கள் மிகக்குறைவுதான்        .

எச்சரிக்கை செய்யச் சொல்லும் மத்திய அரசு 

இந்நிலையில் மக்களவையில் செல்ஃபி எடுக்கும் போது ஏற்படும் உயிரிழப்புகள் பற்றிய ஒரு கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் பதிலளித்திருக்கிறார். அதன்படி சுற்றுலாத்தளங்களில் இனிமேல் ஆபத்தான பகுதிகளைக் கண்டறிந்து அந்த இடங்களில் செல்ஃபி எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மற்றும் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு இதிலிருக்கும் ஆபத்துகளைப் பற்றி விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் கடமை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். எனவே, இனிமேல் ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுப்பதைத் தடுக்கும் வகையில் அரசு எச்சரிக்கை செய்வதற்கு வாய்ப்புள்ளது. அதை மீறுபவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இது போன்று அரசு எடுக்கும் விழிப்புஉணர்வு நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் அபாயகரமான இடங்களில் செல்ஃபி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறையும் என நம்பலாம்.

ஆனால், இதற்கும் அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? நம் உயிர் நமக்கு முக்கியமில்லையா?

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இணைய உலா: இன்ஸ்டாகிராம் பாதி ஆடை மீதி!

 

 
BeFunky%20Collagejpg

விதவிதமான ஸ்டைகளில் உடை அணியும் பழக்கம் இளைஞர்களிடையே வேகமாகப் பரவி வருகிறது. திருமணம், பிறந்த நாள், பார்ட்டி என நிகழ்வுகளுக்குப் பொருத்தமாகத் தனித்தனியாக ஆடை அணியும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப நிகழ்வுகளுக்கென்று தனியாக ஆடை வடிவமைக்கும் ட்ரெண்டும் இன்று உருவாகிவிட்டது. புதுப் புது ட்ரெண்டுகளை ஆடை வடிமைப்பாளர்கள் உருவாக்கிவருகின்றனர். இதற்கு முக்கியக் காரணமாக இருப்பவர்கள் பிரபலங்கள்தாம்.

பெரும்பாலும் சினிமா பிரபலங்களே ஆடை தொடர்பான புதிய ஸ்டைலைப் படத்திலோ தனிப்பட்ட முறையிலோ வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார்கள். அந்த ஆடையுடன்கூடிய தங்களது ஒளிப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறார்கள். அந்த ஒளிப்படங்களிலிருந்து கிடைக்கும் ஸ்டைலையே யூத் ஐகான் ஆக மாற்றிவிடுகிறார்கள். அந்த வகையில், புதுப் புது ஸ்டைலில் அசத்தும் சில புகழ்பெற்ற பிரபலங்கள்:

 

தீபிகா படுகோன்

தீபிகா எப்போதுமே ஒரு ட்ரண்ட் செட்டர். புதுவிதமான ஆடை அணிவதிலும் ஆர்வம் கொண்டவர். அவரது ஒவ்வோர் ஆடையுமே இதற்கு முன்பு பார்த்திராத டிசைனாகத்தான் இருக்கும். அண்மையில் ‘ஆல் அபவுட் யூ’ என்ற பெயரில் ஆன்லைனில் ஆடை வடிவமைப்பைத் தொடங்கியிருக்கிறார்.

 

பிரியங்கா சோப்ரா

தமிழ், இந்தியில் எந்த அளவுக்கு இவரது ஸ்டைல் புகழ்பெற்றதோ, அதே அளவுக்கு ஹாலிவுட்டிலும் புகழ்பெற்றவர். தினந்தோறும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்த்தாலே இதைத் தெரிந்துகொள்ளலாம். பலவகையான ஆடைகள், அதற்கேற்ற மேக்கப்களையும் தொடர்ந்து பார்த்தால், புதிய ஸ்டைலான ஆடை அணியும் பழக்கத்தை இவரிடமிருந்து எளிதாகக் கற்றுக்கொள்ளலாம்.

 

shutterstock506008927
விராட் கோலி

பெண்கள் மட்டும்தான் மேக்கப்களில் கவனம் செலுத்துவார்கள் என்று நினைத்தால், அது முற்றிலும் தவறு. விளையாட்டு வீரர்களிலேயே தோற்றப் பொலிவுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வீரர்களில் ஒருவர் விராட் கோலி. புதுமையான ஆடை அணிவதிலும் சரி, சிகையலங்காரம் செய்துகொள்வதிலும் சரி, விராட் கோலிக்கே முதலிடம். அவரது இன்ஸ்டாகிராமைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு இது புரியும்.

 

ஜனனி

தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ஜனனிக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்கள் உண்டு. இவர் புதுமையான உடைகளில் எடுத்த ஒளிப்படங்களைப் பதிவிடுவதைத் தாண்டி, அவரது ஒவ்வோர் உடையை வடிவமைத்தவர்களின் தகவல்கள் முதற்கொண்டு அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுவருகிறார். இவரது ஸ்டைலில் பெரும்பாலும் தமிழ் கலாச்சாரம் பளிச்செனத் தெரியும். மேற்கத்திய, ஃப்யூஷன் ஸ்டைல் ஆடைகளையும் விரும்பி அணிபவர் ஜனனி.

 

விஜய் தேவாரகொண்டா

சமீபத்தில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் நாயகன்தான் விஜய் தேவாரகொண்டா. இளைய தலைமுறை நடிகர் என்பதற்கேற்ப, இவரது ஸ்டைலும் தனித்துவமாகத் தெரியும். இவர் அதிகமாக ஃப்யூஷன் ஸ்டைலைத்தான் பின்பற்றுகிறார். இவரது தோழி ஆடைகளை வடிவமைப்பதாக இன்ஸ்டாகிராம் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

நாவலில் எழுதியதுதான் 14 ஆண்டுகள் கழித்து நிஜத்திலும் நடந்தது... டைட்டானிக் மர்மம்!

 

சில விஷயங்கள் நம்மை ஆச்சயர்யப்படுத்தும், சில விஷயங்கள் நம்மை வியக்க வைக்கும், சில விஷயங்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும், சில விஷயங்கள் நம் அறிவுக்கு அப்பாற்பட்டு விளங்கும், சில விஷயங்கள் மர்மமாகவே தொடரும். 

டைட்டானிக் கப்பல் பிரமாண்டத்தின் உச்சம். ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், சரியாகச் சொல்ல வேண்டுமானால் ஏப்ரல் 15,1912 அன்று நள்ளிரவில் வடக்கு அட்லான்டிக்கில் ஒரு பனிப்பாறையின் மீது மோதி கடலில் மூழ்கியது. ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்ப்பட்ட பயணிகள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஆனால், விஷயம் அதுவல்ல. நிஜ டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ஒரு புதினத்தில் புனையப்பட்ட ஒரு கற்பனையான கப்பலுக்கும் நிஜ கப்பலுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு என்பதை நம்ப நமக்கு நிச்சயம் கால அவகாசம் தேவைப்படும்.கப்பல்கள் என்றாலே ஒற்றுமைகள் இருக்கும் என நினைக்கலாம். ஆனால், இந்த ஒற்றுமைகள் வேற லெவல்.

 Futility or The Wreck of The Titan:
1898 ம் ஆண்டு மார்கன் ராபர்ட்சன் (Morgan Robertson) எழுதிய Futility or The Wreck of The Titan புதினத்தின் கதைக்களத்தைச் சற்று சுருக்கமாகப் பார்ப்போம். நாயகன் பெயர் ஜான் ரோலண்டு ( John Rownald) அமெரிக்கக் கப்பல் படையின் அதிகாரி. மதுபான போதைக்கு அடிமையானதால் தன் வேலையை இழக்க நேரிடுகிறது. அதனால் டைட்டன் கப்பலில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறார். அப்போது ஓர் இரவு டைட்டன் கப்பல் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளான போது ஓர் இளம்பெண்ணைக் காப்பாற்றும் பொருட்டு இருவரும் சேர்ந்து கடலில் குதிக்கின்றனர். அந்த இளம்பெண் ஜானின் முன்னாள் காதலியின் பெண். பின்னர் இருவரும் ஒரு பயணிகள் கப்பலில் தஞ்சமடைகின்றனர். ஆனால், ஜான் காப்பாற்றிய பெண்ணின் தாயார் ஜான் தன் மகளைக் கடத்தியதாக அளித்த புகாரின் பேரில் ஜான் கைது செய்யப்படுகிறார். இருந்தாலும் நீதிபதி ஜானின் தரப்பில் நியாயம் உள்ளதை உணர்ந்து ஜானை விடுதலை செய்கிறார். மேலும், தன் மகளின் உயிரைக் காப்பாற்றியவரின் மேலேயே புகார் அளித்ததால் அப்பெண்ணின் தாயாரை எச்சரிக்கிறார். பின்னர், சிறிது வருடங்களிலேயே ஜானும் மரணமடைந்து விடுவதாக கதை செல்லும். டைட்டானிக் திரைப்படத்தைப்போலவே இப்புதினமும் சோக காவியம்தான். 

டைட்டானிக்

இப்போது கற்பனை கப்பலுக்கும் நிஜ கப்பலுக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பார்ப்போம்.

டைட்டானிக் கப்பல் எப்படி ஏப்ரல் மாதம் ஒரு நள்ளிரவில் பனிப்பாறையில் மோதியதோ அதே போன்று டைட்டன் கப்பலும் ஒரு ஏப்ரல் மாதத்தில் வடக்கு அட்லான்டிக்கில் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.

புதினத்திலும் சரி நிஜத்திலும் சரி அதிகப்படியான உயிர்ச் சேதத்திற்கு காரணம் போதுமான அளவு துணைப்படகுகள் (Lifeboats) இல்லாதது தான். டைட்டன் கப்பலில் மொத்தமே இருபத்துநான்கு துணைப்படகுகளே இருந்தன. அதேபோல் டைட்டானிக்கில் மொத்தமே பதினான்கு துணைப்படகுகள் இருந்தன.

இரு கப்பல்களுமே ``UNSINKABLE” அதாவது மூழ்கடிக்க முடியாதவை என்றே விளம்பரம் செய்யப்பட்டது.

மார்கன் ராபர்ட்சன்டைட்டன் கப்பல் ஏப்ரல் மாதம் நள்ளிரவில் வடக்கு அட்லான்டிக்கில் சுமார் மணிக்கு 25 knot வேகத்தில் பயணம் செய்து பனிப்பாறையில் மோதியது. newfounland-டிற்கு நானூறு மைல் தூரத்தில் விபத்து நடைபெற்றதாகப் புதினத்தில் கூறப்பட்டிருக்கும். அது போலவே நிஜ டைட்டானிக் கப்பல் வடக்கு அட்லான்டிக்கில் 221/5 knot வேகத்தில் பயணம் செய்து பனிப்பாறையில் மோதியது. newfounland-டிற்கு நானூறு மைல் தூரத்தில்தான் இந்த விபத்து நடந்தது.

மேலும், புதினத்தில் கூறப்பட்டிருந்த டைட்டன் கப்பலில் இரண்டாயிரத்து ஐந்நூறு பயணிகள் உயிரிழந்ததாகவும் பதின்மூன்று பேர் மட்டுமே உயிர் பிழைத்ததாகவும் கூறப்பட்டிருக்கும். டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த இரண்டாயிரத்து இருநூறு பயணிகளில் ஆயிரத்து ஐநூற்றுஇருபத்துமூன்று பேர் உயிரிழந்தனர். 705 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

இதன் விளைவாக நிஜ டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கிய பிறகு மக்கள் பலரும் புதினத்தின் ஆசிரியரான மார்கன் ராபர்ட்சனை இப்படி ஒரு விபத்து நடக்கும் முன்னரே யூகித்து புதினம் எழுதியதாகக் கூறினர். ஆனால், மார்கன் ராபர்ட்சன் அதனை மறுத்தார். மேலும், மார்கன் ராபர்ட்சன் ``கப்பல் கட்டுமானத்தில் தனக்கு இருக்கும் ஆற்றலினால்தான் இந்தப் புதினத்தை எழுதினேன்" எனத் தெரிவித்தார்.

 

எவ்வளவோ அறிவியலும் விஞ்ஞானமும் வளர்ந்தாலும் சில கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க முடியாமல் நாம் இருக்கிறோம். அப்படி தான் Futility புதினமும் இன்று வரை உள்ளது. இலக்கியம் என்பது காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்று கூறுவர். ஆனால், அக்கண்ணாடி எதிர்காலத்தையும் காட்டுமா என்பதுதான் இங்கு கேள்வி

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: பிரியாணி சாப்டா உண்ணாவிரதம்

memes%2015

mem%2010
mem%2011
mem%2012
meme%20new
mem%202
mem%203
mem%209
  • தொடங்கியவர்

முதல் மரண தண்டனை பெற்ற முதற்பெண்: ஏப்ரல் 8- 1899

 
அ-அ+

மார்த்தா பிளேஸ் என்ற பெண்மணிக்கு 1899-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி மின்இருக்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. உலகிலேயே முதன்முதலாக ஒரு பெண்ணுக்கு மின் இருக்கையில் தண்டனை பெற்றவர் இவர்தான். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள ராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக தூக்கிலிடப்பட்டான்.

 
 
 
 
முதல் மரண தண்டனை பெற்ற முதற்பெண்: ஏப்ரல் 8- 1899
 
மார்த்தா பிளேஸ் என்ற பெண்மணிக்கு 1899-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி மின்இருக்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. உலகிலேயே முதன்முதலாக ஒரு பெண்ணுக்கு மின் இருக்கையில் தண்டனை பெற்றவர் இவர்தான்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள ராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக தூக்கிலிடப்பட்டான்.
 
* 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானாவில் மான்ஸ்ஃபீல்ட் என்ற இடத்தில் கூட்டமைப்பு படைகள் கூட்டுப் படைகளை தோற்கடித்தன.
 
* 1866 - ஆஸ்திரியா- ஹங்கேரிக்கு எதிராக இத்தாலியும் புரூசியாவும் அணி திரண்டன.
 
* 1867 - முதலாவது உலக கண்காட்சி பாரிஸ் நகரில் ஆரம்பமானது.
 
* 1899 - மார்த்தா பிளேஸ் என்பவர் மின் இருக்கையில் மரண தண்டனை பெற்ற முதற்பெண்.
 
* 1919 - பஞ்சாபில் நுழையக்கூடாதென்ற தடையை மீறியதால் மகாத்மா காந்தி டெல்லி செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு பம்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

* 1929 - டெல்லி மத்திய அரசு கட்டிடத்தில் பகத் சிங், மற்றும் பத்துகேஷ்வர் தத் ஆகியோர் துண்டுப் பிரசுரங்களையும் குண்டுகளையும் வீசி தாமாகவே சரணடைந்தனர்.
 
* 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் பிலிப்பைன்சின் பட்டான் மாநிலத்தைக் கைப்பற்றினர்.
 
* 1950 - இந்தியாவும் பாகிஸ்தானும் லியாக்கட்-நேரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
 
* 1957 - எகிப்தில் சூயஸ் கால்வாய் மீளத்திறக்கப்பட்டது.

* 1973 - சைப்பிரசில் 32 குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன.
 
* 1985 - போபாலில் நச்சு வாயுக் கசிவினால் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்ட நிகழ்வுக்காக இந்தியா யூனியன் கார்பைட் நிறுவனத்துக்கெதிராக வழக்குத் தொடர்ந்தது.
 
* 2000 - அரிசோனாவில் அமெரிக்கக் கடற்படை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 19 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
 
* 2004 - சூடான் அரசுக்கும் இரண்டு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.
 

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

"ஒலிபெருக்கி தேவையில்லாத கர்ஜனை!".. 'இசை முரசு' நாகூர் ஹனிபா நினைவுகள்

 

நாகூர் ஹனிபா

‘உடன்பிறப்பே! கழக உடன்பிறப்பே! அண்ணாவின் வழியில் அயராது உழைக்கும், பொன்னான கலைஞர் கண்ணாக மதிக்கும் உடன்பிறப்பே!’ என்ற பாடல் தி.மு.க. கூட்டங்களில் ஒலிக்கத் தொடங்கியவுடன், கரை வேட்டியுடனும் தோளில் கறுப்பு சிவப்புத் துண்டுடனும் உற்சாகமாகத் தொண்டர்கள் ஓடிவரும் காட்சியைக் காணாத தமிழ்நாட்டுத் தெருக்கள் கிடையாது. திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களை ஊக்கப்படுத்தி ஏழு தசாப்தங்களாக ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த சிம்மக்குரலுக்குச் சொந்தக்காரர் ‘இசை முரசு’ நாகூர் ஹனிபா. ‘அழைக்கின்றார் அண்ணா’, ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி’ போன்ற தி.மு.க-வின் பிரசாரப் பாடல்களைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தவர் நாகூர் ஹனிபா. ஆனால், அவரை தி.மு.க. பிரசார பாடகர் என்று சுருக்கிவிட முடியாது. 

திராவிட இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே நாகூர் ஹனிபா ஒவ்வோர் ஊர் மேடைகளிலும் பாடியிருக்கிறார். அவரது பாடலை, தந்தை பெரியார் ரசித்துக் கேட்டிருக்கிறார். நாகூர் ஹனிபாவின் சிம்மக்குரலைச் சுட்டிக்காட்டி, ‘‘ஹனிபா அய்யாவுக்கு ஒலிபெருக்கி தேவையில்லை’’ எனக் கூறியதோடு மட்டுமல்லாமல், அவருக்கும் அந்தக் காலத்திலேயே ஒரு ரூபாய் பரிசும் அளித்து இருக்கிறார். பெரியாரிடம் பாராட்டும் பரிசும் வாங்கும் அரிய காட்சியை அன்றைய திராவிட இயக்கத் தோழர்கள் வியந்து இருக்கிறார்கள்.

ஹனிபா

இஸ்மாயில் முஹம்மது ஹனிபா, 25 டிசம்பர் 1925-ல் நாகூரில் பிறந்தவர். திருமண நிகழ்ச்சிகளில் பாடிப் பழகிய ஹனிபா, தன்னுடைய 15-ஆவது வயதிலேயே தனியாளாக இசைக் கச்சேரி நடத்தியவர். அந்த நிகழ்ச்சிக்கு 25 ரூபாய் அவருக்குக் கொடுக்கப்பட்டது. சிறுவயதில் இருந்தே சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார் ஹனிபா. 1937-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, நாகூர் வந்த ராஜாஜியை எதிர்த்து நான்கு பேர் கறுப்புக் கொடி காட்டினர். 13 வயதே ஆன ஹனிபாவும் அவர்களுள் ஒருவர். 

பின்னாள்களில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பாரதிதாசனின் பாடல்களான, ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’, ‘தமிழுக்கு அமுதென்று பெயர்’ முதலானவற்றை தம் கணீர்க் குரலால் பாடினார் ஹனிபா. ‘குடி அரசு’ இதழின் தீவிர வாசிப்பாளரான ஹனிபா, பெரியாரின்மீது பற்றுக்கொண்டு திராவிட இயக்கப் பாடல்களைப் பரப்பத் தொடங்கினார். பெரியார் பற்றிப் பல பாடல்களைப் பாடினார் ஹனிபா. ``பேரறிவாளர் அவர் பெரியார் என்னும் ஈ.வெ.ரா தூங்கிக்கிடந்த உன்னைத் தூக்கித் துடைத்தணைத்து தாங்கித் தரைமேல் இட்டார். தமிழர் தாத்தாவாம் ஈ.வெ.ரா-வே!'' என்று அவர் பாடிய பாடல்தான் முதன்முதலில் பெரியார் பற்றி இசைத்தட்டில் பதிவு செய்யப்பட்ட பாடல். 

திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியவுடன் ஹனிபா, அறிஞர் அண்ணாவுடன் இணைந்து செயல்பட்டார். 1953-ஆம் ஆண்டு கைத்தறி நெசவாளர்களின் வறுமையைப் போக்க தி.மு.க., தமிழ்நாடு முழுவதும் கைத்தறி துணிகளை விற்றது. அப்போது, அண்ணாவுடன் திருச்சிக்குக் கிளம்பினார் ஹனிபா. திருச்சி மக்களிடம் கைத்தறி துணியை விற்க, ஒலிபெருக்கி இல்லாமலேயே தன் வெண்கலக் குரலால் பாடி, மக்களைக் கவர்ந்தார் ஹனிபா.

அதே ஆண்டு, கோவையில் ஒரு மாநாடு நடந்தது. அண்ணா நடத்திவந்த ‘நம் நாடு’ நாளிதழில்.... அன்றைய நாள், ‘அழைக்கின்றார் அண்ணா’ என்ற பாடல் வெளியாகியிருந்தது. அந்த மாநாட்டில் கருணாநிதியின் வேண்டுகோளின் பெயரில், அந்தப் பாடலுக்கு இசையமைத்துப் பாடினார் ஹனிபா. அவர், இசையமைப்பதிலும் வல்லவர் என்பதை அந்த நிகழ்வு வெளிப்படுத்தியது. அண்ணா மறைந்தபோது, ‘பட்டுமணல் மெத்தையிலே... பூ மணக்கும் வேளையிலே... உறங்குகிறாய் உறங்குகிறாய் அண்ணா'  என்ற பாடலைப் பாடினார் ஹனிபா. தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார் ஹனிபா. தேர்தல் அரசியல் ஹனிபாவுக்குக் கைகூடவில்லை என்றாலும், கருணாநிதி ஆட்சியில் தமிழக வக்பு வாரியத்துக்குத் தலைவராக இருந்தார் நாகூர் ஹனிபா. 

ஹனிபா

நாகூர் ஹனிபா ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இஸ்லாமிய வழக்கங்களையும், வரலாற்றையும் அழகுத் தமிழில் பட்டிதொட்டியெங்கும் சேர்த்தன ஹனிபாவின் பாடல்கள். இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், ஹனிபாவின் பாடல்களை உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் கொண்டாடுகின்றனர். உதாரணமாக, ‘பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை’ என்ற பாடலில்,  பிலால் என்ற நபித்தோழர் அடிமையாக இருந்த வாழ்க்கையைப் பற்றிப் பாடியுள்ளார் ஹனிபா. ‘‘அது, தம்மைக் கண்கலங்கவைக்கும் பாடல்’’ எனப் பல மேடைகளில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார். 

65 ஆண்டுகள் தொடர்ந்து பல மேடைகளில் பாடி சாதனை படைத்தவர் ஹனிபா. நாகூர் ஹனிபா என்றால் பலருக்கும் நினைவுக்கு வரும் பாடல் – ‘இறைவனிடம் கையேந்துங்கள்! அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ என்பதுதான். மிக எளிமையான நடையில் அமைந்திருக்கும் இந்தப் பாடல் சாதி, மதம் கடந்து அனைவராலும் பாடப்படுகிறது. 

விட்டல்தாஸ் மகராஜ், மதுரை ஆதீனம் முதலான மதக் குருக்களும் இந்தப் பாடலைப் பொதுவெளியில் பாடி ஹனிபாவின் மத நல்லிணக்கப் பணியை வெளிபடுத்தியிருக்கின்றனர். இஸ்லாமியப் பாடல்களும் இயக்கப் பாடல்களும் மட்டுமல்லாமல், திரைத்துறையிலும் பாடியவர் ஹனிபா. 1961-ஆம் ஆண்டு, ‘பாவமன்னிப்பு’ திரைப்படத்தில், டி.எம்.செளந்தரராஜனுடன் இணைந்து ‘எல்லோரும் கொண்டாடுவோம்’ என்ற பாடலைப் பாடினார். 1992-ஆம் ‘செம்பருத்தி’ திரைப்படத்தில், இளையராஜா இசையில், ‘நட்ட நடு கடல் மீது’ என்ற பாடலும், 1997-ஆம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த ‘ராமன் அப்துல்லா’ திரைப்படத்தில், ‘உன் மதமா... என் மதமா? ஆண்டவன் என்ன மதம்?’ என்ற பாடலும் மிகவும் புகழ்பெற்றவை. 

ஹனிபா

தன் குரல்வளத்தால் தமிழ்ச் சமூகத்தைத் திரும்பிப் பார்க்கவைத்த நாகூர் ஹனிபா 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி  89-ஆவது வயதில் மரணமடைந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்ணீர் மல்க, ‘‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் எந்த ஒரு மாநாடும் நாகூர் ஹனிபாவுடைய இசையில்லாமல், தொடங்கியதும் இல்லை; முடிந்ததும் இல்லை. ஹனிபா பாடிப்பாடி மக்களைக் கவர்ந்த காட்சியை, அந்த மக்களில் ஒருவனாக நான் ரசித்து இருக்கிறேன். என் ஆருயிர் சகோதரனை இழந்து தவிக்கிறேன். ஹனிபா பாடிய பாடல்கள் என்றென்றும் நமது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். வாழ்க நாகூர் ஹனிபா!’’  என்றார்.

அந்த இசைக்கலைஞரின் நெருங்கிய நண்பர் கருணாநிதி சொன்னதில் உண்மை இருக்கிறது. திராவிட இயக்கம் இருக்கும்வரை அந்த ‘இசை முரசு’ நம் காதுகளில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்.  

 

 

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.