Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

உன்னோடு போனதே அண்ணா...!

 

'அ'... மொழிக்கு முதல் எழுத்து. அண்ணா... பல கட்சிகளுக்கு முன்னெழுத்து. இன்றைய அரசியல்வாதிகள் பலருக்கும் அவர்தான் தலையெழுத்து!

இன்றும் அந்த மனிதரைக் கொண்டாடுவதற்கு, அவரது பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மட்டும்தான் காரணமா? இல்லை, அத்துடன் அவரிடம் இருந்த அரசியல் நாகரிகமும் பண்பாடும்தான் காரணம். தனக்குக் கீழே இருந்த தம்பிகளை மதித்தார். அதிகாரத்தைப் பங்கிட்டுக்கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர்களை அரவணைத்தார். குடும்பம் வேறு, கட்சி வேறு என்று நினைத்தார். அவர் வளர்த்த நாகரிகம் இன்றைய அரசியல்வாதிகளால் பின்பற்றப்பட்டால், சமூகமே மேம்படும்!

anna_03_2%282%29.jpg

anna_03_5%281%29.jpg

அண்ணாவின் கதையைத் தேடினால், 'உன்னோடு போனதே அண்ணா!' என்றுதான் சொல்லத் தோன்றும். அந்த ஏக்க காலத்தின் சில சொச்சங்கள் மட்டும் இங்கே...

பழிக்குப் பழி!: தி.மு.க. அப்போது எதிர்க்கட்சி. அறிவிக்கப்பட்ட போராட்டத்தை அடக்குவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா, நெடுஞ்செழியன், சம்பத், என்.வி.நடராஜன், மதியழகன் ஆகிய ஐந்து பேரை போலீஸ் கைது செய்தது. வண்டியில் ஏற்றும்போது அண்ணாவின் தோளில் கிடந்த துண்டு கீழே விழுந்தது. அந்த அதிகாரி தனது கையில் வைத்திருந்த தடியால் துண்டைத் தூக்கிஎறிந்தார். குனிந்து எடுத்த அண்ணா, கோபத்தைக் காட்டாமல் தோளில் போட்டுக்கொண்டார். கமிஷ னர் அலுலலகம் அழைத்து வரப்பட்ட அண்ணாவை சேரில் உட்கார்ந்து சிகரெட் பிடித்தபடியே விசாரித்தார் அந்த அதிகாரி. அப்போதும் அமைதியாகவே இருந் தார் அண்ணா.

சில ஆண்டுகளிலேயே தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது. அண்ணா, முதலமைச்சர் ஆனார். அந்த அதிகாரிக்கு பயம் வரத்தானே செய்யும். தனது பதவியை ராஜினாமா செய்தார். அண்ணா அதைஏற்க வில்லை. ''எந்த ஆட்சி வந்தாலும் போனாலும், அதிகாரிகள் நிரந்தரமானவர்கள். விலகத் தேவைஇல்லை'' என்று அந்த அதிகாரியை வரச் சொன்னார். வெட்கப்பட்டபடியே அவரும் வந்தார்.

சில மாதங்களுக்கு பிறகு... தி.மு.க-வின் முன்னாள் மேயர் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய், தான் சொல்வதைத்தான் இன்ஸ்பெக்டர் செய்ய வேண்டும் என்று கட்டளை போட்ட தகவல் அந்த உயரதிகாரிக் குத் தெரிய வந்தது. அண்ணாவின் காதுக்குத் தகவலை கொண்டுபோனார். ''இப்படி ஒருவர் செய்தால், நீங்கள் என்ன செய்வீர்களோ... அதையே செய்யுங்கள். இனி, என்னைக் கேட்க வேண்டாம்'' என்று உத்தரவு போட்டார் அண்ணா!

anna_03_4.jpg

அண்ணன் குரல்: அதிகாரிகளை கட்சிக்குஅப்பாற் பட்டவர்களாகப் பார்க்க வேண்டும். அவர்களும் அப்படியே நடக்க வேண்டும்!

கட்சி வேறு, ஆட்சி வேறு!: தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது அண்ணா வெளியிட்ட ஓர் அறிக்கை, ஆட்சியாளர்களின் சட்டப் புத்தகமாக அமையும் அளவுக்கு முக்கியமானது.

''கட்சி என்பது ஒன்று; சர்க்கார் என்பது வேறு ஒன்று; நாடு என்பது இன்னொன்று. கட்சியைவிட சர்க்கார் நிரந்தமானது. சர்க்காரைவிட நாடு நிரந்தரமானது. கட்சிகள் தோன்றலாம், மறையலாம், மாண்டும் போகலாம். ஆனால், சர்க்கார் நிரந்தரமானது. ஆகவே, கட்சிக் காரியங்களுக்கு சர்க்காரைப் பயன்படுத்தும் anna_03_3.jpgஎண்ணத்தை விட்டுவிட வேண்டும். கட்சியும் சர்க்காரும் தனித்தனியாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மோதுதல் இருக்கக் கூடாது, இணைந்தும் போய்விடக் கூடாது. தனித்தனித் தன்மையுடன் தனித்தனியாக இயங்க வேண்டும். அதிகாரிகளை நேரடியாக அணுகிக் காரியம் சாதிக்கும் முறை நமது ஆட்சியில் இருக்கக் கூடாது'' என்றார்.

அண்ணன் குரல்: ஆளுங்கட்சி என்பதால் கட்சிக்காரர்கள் அனைவரும் அதிகாரம் செலுத்தக் கூடாது!
குடும்பமா... கிட்ட வராதே!: முதலமைச்சராகப் பதவிஏற்கும் நிகழ்ச்சிக்கு உறவினர்கள் யாரும் வரக் கூடாது என்று சொல்லிவிட்டார் அண்ணா. ஆனால், அவரின் மனைவி ராணிக்கு அந்தக் காட்சியைப் பார்க்க ஆசை. புறப்படும்போது அண்ணா அழைத்துப் போவார் என்று நினைத்தார். ஆனால், அண்ணா அமைதியாக கார் ஏறிவிட்டார்.

மறுநாள் நுங்கம்பாக்கத்தில் அண்ணாவின் வீட்டுக்கு அரசு அலுவலர்கள் புதிய நாற்காலிகள், சோபாக்களை கொண்டுவந்து வைத்தார்கள். அதை எங்கே வைக்க வேண்டும் என்று ராணி சொல்லிக்கொண்டுஇருக்கும் போது வீட்டுக்குள் நுழைந்த அண்ணா, ''எல்லாத்தையும் எடுத்துட்டுப் போங்க'' என்றார். விதிமுறைப்படிதான் செய்கிறோம் என்று அலுவலர்கள் சொன்னபோதும் தேவையில்லை என்று அனுப்பிவைத்த அண்ணா, ''ராணி... எனக்கு இந்தப் பதவி நிரந்தரமல்ல. நாளைக்கே ஆட்சி போய்விடும். அப்போது இவர்களே வந்து சோபாவை எடுத்துட்டுப் போயிடுவாங்க. அப்ப உன்னோட மனசுதான் வருத்தப்படும். நமக்கு இந்த நாற்காலியே போதும்'' என்று பக்கத்தில் இருந்த மூங்கில் நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தார்.’

அண்ணன் குரல்: குடும்பம் வேறு, கட்சியும் ஆட்சியும் வேறு!

அரசியல் வேண்டாம்!: தி.மு.க. வேர் பிடிக்க ஆரம்பித்த காலம். செ.அரங்கநாயகம் அப்போது பள்ளிக்கூட ஆசிரியர். ''தி.மு.க. சார்பு ஆசிரியர்களை ஒன்றுசேர்த்து ஒரு சங்கம் ஆரம் பிக்கலாமா?'' என்று கேட்க, அண்ணா மறுத்தார்.

''கல்வி அனைவருக்கும் பொதுவானது. அதில் அரசியலைப் புகுத்தக் கூடாது'' என்ற அண்ணா, மாணவர்கள் அரசியலுக்கு வருவதையும் விரும்பவில்லை. ''அரசியல் ஈடுபாடு இருக்கலாம். ஆனால், படித்து முடித்ததும்தான் பங்கேற்க வேண்டும். அரசியல் என்பது அத்தை மகள் மாதிரி. திருமணத்துக்கு முன் சுத்திச் சுத்தி வரலாமே தவிர, தொட்டுவிடக் கூடாது'' என்றார்.

அண்ணா முதல்வரானதும், ஒரு கோயிலில் அறங்காவலர் விஷயத்தில் சர்ச்சை எழுந்தது. ''கட்சிக் காரர்களை கோயில் அறங்காவலர்களாகப் போடக் கூடாது'' என்று உத்தரவிட்ட அண்ணா, அதற்கு இரண்டு காரணங்களும் சொன்னார்.

''கட்சிக்காரங்களுக்கு கோயில் ஐதீகம், விதிமுறைகள் தெரியாது. இது கோயிலுக்கு இழப்பு. கட்சிக்காரர்களை அறங்காவலராப் போட்டா, அவங்க கோயில்ல தர்ற பொங்கலைச் சாப்பிட்டுட்டு, அங்கேயே தூங்கிடுவாங்க. இது கட்சிக்கு இழப்பு!'' என்றார்.

அண்ணன் குரல்: அரசியல் லாபங்களுக்காக யாரையும் பலியிடக் கூடாது!

பதவி ஆசையில்லை!: தி.மு.க. ஆரம்பித்தபோது தலைமைப் பதவியை பெரியாருக்காக காலியாக வைத்திருப்பதாகச் சொல்லி பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் அண்ணா.
அந்தப் பதவியையும் தானே கடைசி வரை வகிக்கக் கூடாது என்று நினைத்து ''சுற்று முறையில் பதவி அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்'' என்றார். இரண்டு ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்தவர், நெடுஞ்செழியனைக் கட்சியின் பொதுச் செயலாளராக ஆக்கினார். ''தம்பி வா! தலைமை ஏற்க வா! உன் ஆணைக்குக் கட்டுப்பட நான் தயாராக இருக்கிறேன்'' என்று அறிவிக்கும் அளவுக்கு பக்குவப்பட்டு இருந்தார். நெடுஞ்செழியனுக்கு அடுத்தது யார்... மதியழகனா, என்.வி.நடராஜனா என்ற சிக்கல் தி.மு.க-வில் பலத்த சலசலப்பை ஏற்படுத்த, வேறு வழியில்லாமல்தான் மீண்டும் பொதுச் செயலாளரானார் அண்ணா.

1967... ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் எதிர்ப்பு. தி.மு.க. கூட்டணிதான் ஆட்சியைக் கைப்பற்றும் என்ற நிலை. தான் சட்டமன்றத்துக்குப் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வானால்தான் முதல்வராக முடியும் என்ற நினைப்புகூட இல்லாமல் தென்சென்னை எம்.பி. பதவிக்குப் போட்டியிட்டார் அண்ணா!

அண்ணன்குரல்: அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். பதவியை எதிர்பார்த்தே எப்போ தும் கணக்குப் போடக் கூடாது!

தனது குறைபாட்டை தானே சொன்னார்!: 'யாருக்கும் பயப்பட மாட்டேன்... எதிர்ப்பு எனக்கு தூசு!' என்றுதான் தலைவர்கள் பேசுவார்கள். தலைவர்கள் யாரும் தங்களின் குறைபாட்டை மறந்தும் சொல்ல மாட்டார்கள். அண்ணா அதற்கு நேர் எதிர்!

''எனக்கு நிறையக் குறைகள் உண்டு. சொகுசாக இருப்பது மாதிரி நிறையக் கனவுகள் காண்பேன். சிறுசங்கடம் வந்தாலும், பெரும் குழப்பம் புகுந்துவிடும். எதிரிகள் பிரமாண்டமானவர்கள் என்ற அச்சம் எனக்கு எப்போதும் உண்டு. ஊர்வலம் என்றாலே எனக்குப் பிடிக்காது. என்னிடம் வந்து பலரும் பல விஷயங்களைச் சொல்கிறார்கள். ஆனால், அதைக் கேட்டுக்கொள்வது போல நான் பாவனைதான் anna_03_1.jpgகாட்டுகிறேன். பலவற்றை கேட்டுக்கொண்டதே இல்லை. அசகாயசூரத்தனமாகப் பேசுவது என்றாலே எனக்கு அச்சமாக இருக்கிறது'' என்றார்.


அண்ணன் குரல்: பொது வாழ்க்கையில் இருப்பவர் தனது குறைபாடுகளைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும்!


நோயை ஒப்புக்கொண்டார்!: தலைவர்கள் இப்போதெல்லாம் சாதாரணமாக மருத்துவமனைக்குப் போனால்கூட, அது வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள். நடிகர்களைவிட தலைவர்கள்தான் 'இமேஜ்' பற்றி அதிகமாகக் கவலைப்படுகிறார்கள். ஆனால், அண்ணா தனது உடல்நலம் பற்றி பகிரங்கமாக எழுதினார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அண்ணா மறைந்தது 1969-ல். ஆனால், அதற்கான அறிகுறிகள் பத்தாண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. இதற்கான அறிகுறி வந்து, டாக்டரைப் போய் பார்த்துவிட்டு வந்ததும் பக்கம்பக்கமாக திராவிட நாடு பத்திரிகையில் எழுதி னார். 'உன்னிடமின்றி வேறு யாரிடம் சொல்லப் போகிறேன்' என்ற பீடிகையுடன் ஆரம்பித்த அண்ணா, கழுத்தின் பின்புறத்தில் கட்டி இருப்பதைச் சொன்னார். ''இடது தோளில் எலும்புக்கும் சதைக்கும் இடையில் உள்ள மெல்லிய பாகம் தடித்துப்போய் என்னால் கையைத் தூக்க முடியவில்லை'' என்று சொன்னார். ''என்னுடைய உடலமைப்பே அதிக அளவு அலைந்து கட்சி வேலை பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது'' என்றார்.

அண்ணன் குரல்: தலைவர்களின் வாழ்க்கை பகிரங்கமாகச் சொல்லவேண்டியது. அதை கட்சிக்காரர்களும் பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும்!

மாற்றார் மீதும் மதிப்பு!: ''தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். ஆனால், மற்ற கட்சித் தலைவர்கள் அனைவரும் சட்டமன்றத்துக்குள் வர வேண்டும்'' - 1967 தேர்தல் பிரசாரத்தின்போது அண்ணா சொன்னது.

தேர்தல் முடிவுகளை டிரான்சிஸ்டர் வைத்துக் கேட்டுக்கொண்டு இருந்தார் அண்ணா. முதல் முடிவு, பூங்கா நகர். கூட்டணிக் கட்சியான சுதந்திரா வேட்பாளர் ஹண்டே வெற்றி. மகிழ்ச்சி அடைந்தார். அடுத்ததாக, மாயவரம் தி.மு.க. வேட்பாளர் கிட்டப்பா வெற்றி. துள்ளிக் குதித்தார். அடுத்ததாக விருதுநகர் காமராஜர் தோல்வி. துவண்டுபோனார் அண்ணா.

''காமராஜர் எல்லாம் தோற்கக் கூடாதுய்யா!'' என்று கலங்கினார். ''ஜெயிச்சது நம்ம கட்சிதானே'' என்று பக்கத்தில் இருந்த கவிஞர் கருணானந்தம் கேட்க, ''காமராஜ் தோற்கக் கூடாதுய்யா.நாட்டுக்காக உழைச்சவரை எப்படித் தோற்கடிக் கலாம்?'' என்றார் அண்ணா. பதவியேற்றதும், ''காமராஜர் எங்களுக்கு ஆலோசனை சொல்ல வேண் டும்'' என்று அவரை நேரில் பார்க்கப் போனார். யாரை வீழ்த்தி தி.மு.க. வெற்றிபெற்றதோ, அந்த முதலமைச்சர் பக்தவத்சலத்தைப் பார்த்து ஆசி வாங் கினார்.

அரசியல் அதிசயமாக நடந்த சம்பவம், பெரியாரையும் பார்க்கப் போனதுதான். பெரியாரிடம் இருந்து பிரிந்த அண்ணா, 18 ஆண்டுகள் அவரை எதிர்த்து கட்சி நடத்தினார். இரண்டு இயக்கங்களும் தகுதி குறைந்த விமர்சனங்களைக்கூட செய்துகொண்டன. தேர்தலில் தி.மு.க-வை எதிர்த்து பெரியாரே பிரசாரம் செய்தார். ஆனால், வெற்றி பெற்ற அண்ணா, ''இந்த ஆட்சியே உங்களுக்குக் காணிக்கை!'' என்றபோது பெரியாரால் பேச முடியவில்லை. 'அண்ணா வந்து பார்த்தபோது கூச்சத்தால் குறுகிப்போனேன்' என்றுதான் பெரியாரால் சொல்ல முடிந்தது.

அண்ணன் குரல்: அனைவரிடமும் அன்புசெலுத்து. நன்றியை நெஞ்சில் நிறுத்து!

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

placeholder

placeholder

placeholder

placeholder

நந்திதா

  • தொடங்கியவர்

எவ்ளோ ஹீரோ இருந்தாலும் சிம்புவை ஏன் மிஸ் பண்ணுவோம் தெரியுமா?

 

குழந்தை நட்சத்திரமாக உறவைக் காத்த கிளியில் ஆரம்பித்து சிம்புவின் திரையுலக வாழ்க்கை. நம் மக்களுக்கு குழந்தை நட்சத்திரங்கள் என்றாலே ஒருவித அன்பு பெருகி, கொண்டாடுவார்கள். கமலஹாசன் தொடங்கி, அஞ்சு, மாஸ்டர் கணேஷ், மாஸ்டர் மகேந்திரன், ஷாலினி, ஷாமிலி, என்று இன்றைய சாரா வரை நம் வீட்டுப் பிள்ளைகள் வளர்வது போல மகிழ்வார்கள். சிம்புவின் வளர்ச்சியும் அப்படித்தான் இருந்தது. 1984ல் உறவைக்காத்த கிளியில் ஆரம்பித்து கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேலாக சிம்புவை மக்கள் கவனிக்கத் தொடங்கி, ரசிக்கவும் தொடங்கியிருந்தார்கள். அதுவும் 1989ல் வெளியான சம்சார சங்கீதம் படத்தில் சிம்பு ஆடிய ‘ஐ ஆம் எ லிட்டில் ஸ்டார்’  பாடலை அப்படி ரசித்தார்கள். simbu.jpg

அதன்பின் 2002ல் காதல் அழிவதில்லை படம் மூலமாக சிம்புவை, கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார் அவர் தந்தை டி.ராஜேந்தர். தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்துக் கொண்டிருந்த டி.ராஜேந்தர், அடுத்த தலைமுறை மக்களின் ரசனை மாறலுக்கு ஈடு கொடுக்க முடியாமல், தன்னை நிரூபிக்க வேண்டி சிலம்பரசனை களத்தில் இறக்கிய படம் காதல் அழிவதில்லை. தாங்கள் ரசித்து வந்த ஒரு குழந்தை நட்சத்திரத்தின் முதல் படம் என்ற வகையிலான ஆவரேஜ் ஓபனிங் கிடைத்தது அந்தப் படத்திற்கு. ஆனால் அந்தப் படத்தின் இண்ட்ரோ பாடலில்  (வெரலு...விசிலு..) ‘விஜய்னா ஃபைட் வரும், அஜித்னா துடிப்பு வரும், விக்ரம்னா நடிப்பு வரும்.. விவேக்னா காமெடி வரும்.. சிம்புன்னு சொன்னா புது ஸ்டைலே வரும்’ என்றதை ரசிக்கவில்லை மக்கள். ‘பெரிய ரஜினின்னு நெனைப்பு’ என்ற கமெண்ட்ஸ்களும், விரல் நடிகர் என்ற எள்ளல் பட்டமுமே கிடைத்தது. என்ன இருந்தாலும், மக்கள் ரஜினிக்கு கொடுத்த இடத்தை அவ்வளவு சுலபத்தில் விட்டுக் கொடுப்பதில்லை என்பதாக அது அமைந்ததோடு, ஒரு ஆரம்ப சறுக்கலாகவும் சிம்புவுக்கு அமைந்தது.

அதன்பின் வெளியான தம், அலை, கோவில் எல்லாமே தோல்விப்படங்களாகவே அமைய, ’குத்து’ மட்டும் ஆவரேஜாக கவனிக்கப்பட்டது. அதற்கடுத்து யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் ஹிட் ஆகிவிட,  பெரிய எதிர்பார்ப்புடன் ரொமாண்டிக் த்ரில்லரான ”மன்மதன்” வெளியானது. சிம்புவின் கதையில் வெளியான இந்தப் படம் ஒரு ஹிட்.. அதன்பிறகு தொட்டி ஜெயா, சரவணா போன்ற கவனிக்கப்படாத படங்களுக்குப் பிறகு, மீண்டும் சிம்புவே கதை எழுதி, சிம்புவின் இயக்கத்திலேயே வல்லவன் வெளியாகிறது. இதிலும் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் கைகொடுக்க, ஓரளவு தப்பிக்கிறது படம். ஆனாலும் சிம்பு, மக்கள் மனதில் நெருக்கமானவாராக இல்லை என்பது கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் தொடங்கியிருந்தது.. காரணம் அவர் சர்ச்சைகளின் நாயகனாக இருந்ததால்.

simbu_Reemasen.jpg

ஆம்.. காரணம் அப்பாவின் இயக்கத்திலேயே நடித்துக் கொண்டிருந்த சிம்பு, இயக்குநர்களுக்கு கட்டுப்பட்ட நடிகரல்ல என்பது சினிமாத்துறையின் ஊரறிந்த ரகசியமாக பேசப்பட்டு வந்தது. அதற்குத் தகுந்தாற்போலவே, மன்மதன் படத்தின் இயக்குநர் முருகன் சிம்புவின் இடையூறுகளால் வெறுப்படைந்த சம்பவங்களெல்லாம் நடந்தன. இது, இதுநம்ம ஆளு பாண்டிராஜ் வரை தொடர்கிற ஒன்றாக இருக்கிறது.சக நடிகர் நடிகைகளுடனும் இவருக்கு நல்ல நட்பு இருக்கவில்லை. தனுஷுக்கும் இவருக்கும் இருக்கும் பனிப்போர் பரவலாகப் பேசப்பட்டதும், தனுஷின் கொலவெறி பாடல் வெளியான உடனேயே, சிம்பு Love Anthem வெளியிட்டதும் நடந்தது. அதைப் போலவே நயன்தாரா உடனான ப்ரேக் அப்பிற்குப் பிறகு இருவரும் நெருக்கமாக இணைந்திருக்கும் புகைப்படம், ஹன்சிகாவுடனான ப்ரேக் அப்பிற்குப் பிறகு அவருடன் இணைந்திருக்கும் புகைப்படம் வெளியானதும், வீடியோக்கள் வெளியாவதும், விஜய் டிவி நிகழ்ச்சியில் ப்ரித்விராஜுடன் சண்டையிட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது என இவர் மீது துறையிலும், மக்களிடமும் இவர்மீதான கசப்புணர்வை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தன.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல, பீப் சாங் வெளியாக ‘அட.. என்னப்பா இது’ என்று வெறுப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர் மக்கள். அப்போதும் ஒரு வருத்தமோ, மன்னிப்போ எதுவுமின்றி ’நான் என்ன வேணா பண்ணுவேன்’ ரேஞ்சுக்கு இவர் பேட்டி கொடுக்க பெரும்பாலானோர், இவர்மீது கோபத்திலேயே இருக்க நேர்ந்ததுஆனால், தோல்விகள் சர்ச்சைகள் இதையெல்லாம் மீறி, சிம்பு எப்போதும் லைம் லைட்டிலேயே இருப்பதற்கும், எப்போது வந்தாலும் அவருக்கு ஒரு ஓபனிங் இருப்பதற்கும் என்ன காரணம்? இனியாவது சிம்பு மக்களின் அன்பிற்கு உரியவராக வலம்வர என்ன செய்யலாம்? சுருக்கமாக அலசலாம்;

கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா. ‘நான் அவன்டா.. இவன்டா’ என்ற எந்த பந்தாவும் இல்லாமல் சிம்புவை ஒரு நடிகனாக நிலைநிறுத்திய படம். ‘ஷூட்டிங்ல இவர் பங்க்சுவல் இல்ல. ஆனா, நாம மிஸ் பண்ணக்கூடாத நல்ல ஆக்டர்’ என கௌதமால் பாராட்டப்பட்ட சிம்புவை மக்களும் அந்தப் படத்தில் கொண்டாடினார்கள். அந்தப் பட வெற்றிதான் வானம் படத்திலும் சிம்புவை ஓரளவு மக்களை ரசிக்க வைத்தது. ஆனால் திரும்ப ஒஸ்தியில் தன் பழைய ட்ராக்கில் பயணிக்கலானார் சிம்பு. போலவே தனுஷ் - சிம்புவுக்கு இடையான பனிப்போர் மறைந்து,தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த காக்காமுட்டையில் கெஸ்ட் ரோலில் நடித்த சிம்புவுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. போலவே டான்ஸ் ஆடும் திறமை. பீப் சாங்கிற்குக் கொடுத்த விளக்கத்தில் ’நான் மக்களுக்காக முட்டி தேய டான்ஸ் ஆடறேன்’ எனச் சொன்னது நகைப்புக்குள்ளானாலும், இவரது டான்ஸிற்கு என்று நல்ல ரசிகர்கள் உண்டு.

Untitled-3.jpg

அதைப்போலவே, பாடகராகவும் சிம்புவுக்கு நல்ல பெயர்தான். ஈகோ இல்லாமல் ஜீவா, ஜெயம் ரவி என்று சக நடிகர்களுக்காக இவர் பாடுவது வரவேற்கத்தக்க ஒன்று. ஹீரோவுக்கான முழு லட்சணமும் பொருந்திய, குரல்வளம், மாடுலேஷன், டான்ஸ், நடிப்பு என அனைத்தும் ஒருங்கே பெற்ற நடிகர் சிம்பு என்பது பரவலான சினிமா ரசிகர்களின் கருத்து. ஆனால் இவர், எந்த இடையூறும் செய்யாமல் தன்னை முழுமையாக இயக்குநரை நம்பி ஒப்படைத்தாக வேண்டும். போலவே, இவரை கையாளத் தகுந்த ஒருவர் இவரை இயக்க வேண்டும். இரண்டும் ஒருங்கே நடந்தால், சிம்பு அமைதி காத்தால்.. இன்னும் பல வி தா வ-க்கள் வெளிவரலாம்.வரவேண்டும் என்பதே இந்தப் பிறந்தநாளில் அவரது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு.

'ஸ்டைலிஷ் பாடி லேங்க்வேஜ்’

‘ஸ்க்ரீன் ப்ரசென்ஸ்'

'அவரு ஹீரோயின்ட்ட லவ் சொல்றப்ப, கண்ல உண்மையான லவ் தெரியும். லவ்வபிள் இடியட்!’

‘டான்ஸ்’

‘பன்முகத் திறமை. டைரக்‌ஷன்.. நடிப்பு, பாட்டுன்னு எல்லாத்துலயும் எறங்கி அடிப்பாரு’

’வாயை மட்டும் கொறச்சுட்டா, சிம்பு என்னைக்கோ டாப்ல வந்திருக்க வேண்டிய ஆளு’

simbu-1.jpg

’என்ன இல்லை அவர்கிட்ட? கம்ப்ளீட் ஆர்ட்டிஸ்ட்ங்க சிம்பு!”

“ஃபீல்ட்ல எத்தனையோ ஹீரோ இருந்தும் உங்களுக்கு ஏன் சிம்புவ பிடிச்சிருக்கு?” என நாம் கேட்டதற்கு சிலரின் பதில்கள்தான் மேலே..
 
இப்பொழுதும் ‘இது நம்ம ஆளு’ என உங்களை அரவணைத்துக் கொள்ள ரசிகர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள் ப்ரோ! 


ஹேப்பி பர்த்டே டு யூ கார்த்திக்... ஸாரி.. சிம்பு!

vikatan

12669494_979891682059526_926949160655023

  • தொடங்கியவர்

12654522_1881749018718166_81267909491217

பிரகாஷ்ராஜ் - போனி வர்மாவுக்கு ஆண் குழந்தை

 

நடிகர் பிரகாஷ் ராஜ் - போனி வர்மா தம்பதிக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி பிரகாஷ் ராஜ் மற்றும் போனி வர்மாவுக்கு திருமணம் நடந்தது. போனி வர்மா பிரபல பாலிவுட் நடன இயக்குனர். சினிமா உலகம் பிரகாஷ் ராஜுக்கும், போனிக்கும் வாழ்த்துகளை கூறி வருகிறது.

  • தொடங்கியவர்

 

19 வயதுக்கு உட்பட்ட உலக கிண்ண தொடரில் விளையாடி வரும் இலங்கை வீரர் கமிந்து மென்டிஸ்

இவர் இரண்டு கைகளாலும் பந்து வீசும் திறன் படைத்தவர்.  அது மட்டுமன்றி சகலதுறை ஆட்டகாரரும்   கூட.          

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 
 

 

பாலிவுட்டில் நுழைந்ததில் இருந்தே சன்னி லியோனைச் சுற்றி சர்ச்சைதான். இந்த முறை சர்ச்சையில் சிக்கியிருப்பது சன்னி லியோனை பேட்டி எடுத்த நிருபர். ‘நீங்க சினிமாவில் நடிக்கவந்ததுக்குப் பிறகுதான் இந்தியாவில் `பலான' படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாமே?’ `நீங்க ஆசைப்பட்டாலும் அமீர்கான் உங்களோடு நடிப்பாரா?’ `உங்களைப் பேட்டி எடுப்பதால் நானும் ஒழுக்கம் தவறியவன் ஆகிவிடுவேனா?’ எனத் தொடர்ந்து கேள்விகள் கேட்க... எல்லா கேள்விகளுக்கும் நிதானமாகப் பதில் சொல்லி அப்ளாஸ் வாங்கிவிட்டார். இந்தப் பேட்டி ஒளிபரப்பான கொஞ்ச நேரத்திலேயே, அமீர்கான் ‘சன்னி... உங்கள் கடந்த காலம் பற்றி பிரச்னை இல்லை. உங்களுடன் இணைந்து நடிப்பது எனக்கு மகிழ்ச்சி’ என ட்வீட் தட்ட, சன்னி செம ஹேப்பி!

p24a.jpg

அரசியல் மேடைகளில் எதிரும் புதிருமாகச் சண்டைபோட்டாலும், பிரதமர் மோடியும் மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், ட்விட்டரில் நட்பு பாராட்டுகிறார்கள். `மம்தாஜியிடம் இருந்து ரொம்ப டச்சிங்கான புத்தாண்டு வாழ்த்து, அதுவும் என் தாய்மொழியான குஜராத்தியில் வந்திருக்கிறது. மிகுந்த நன்றி’ என  மோடி ட்வீட் தட்ட, பதிலுக்கு `நன்றி... நீங்கள் பெங்காலியில் அனுப்பிய பதில் வாழ்த்தும் கிடைத்தது’ என மம்தாவும் ட்வீட் தட்டினார். மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால், `இது என்ன புதுசா?’ எனக் குழம்புகிறார்கள் திரிணமுல் - பா.ஜ.க தொண்டர்கள்!

p24b.jpg

p24c.jpg

யூடியூப் இணையதளத்துக்கு சமீபத்தில் ஸ்பெஷல் பேட்டி அளித்திருந்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா. அதில் `என் சட்டைப்பையில் சில பொருட்களை எப்போதும் வைத்திருப்பேன். மனச்சோர்வு ஏற்படும்போது அவற்றை எடுத்துப் பார்த்துக்கொள்வேன்’ எனக் காண்பித்தார் ஒபாமா. அதில் போப் பிரான்சிஸ் அளித்த ஜெபமாலை, சிறிய புத்தர் சிலை, அனுமார் சிலை, எத்தியோப்பியா சென்றபோது அளிக்கப்பட்ட சிலுவை உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. `இவை மிகவும் சக்தி வாய்ந்தவை என்பதற்காக, இந்தப் பொருட்களை நான் வைத்திருக்கவில்லை. மனச்சோர்வு அடையும் சமயத்தில் இந்தப் பொருட்களைப் பார்க்கும்போது, இவை எப்படி என் கைக்கு வந்தன என்ற நிகழ்வுகள் நினைவில் வரும். அப்போது என்னுள் இருக்கும் மனச்சோர்வு நீங்கும். உடனடியாக அடுத்த வேலை பற்றி யோசிப்பேன்’ என  ரிலாக்ஸ் டிப்ஸ் கொடுத்திருக்கிறார் ஒபாமா!

p24d.jpg

`மொட்டைமாடி கல்பனா’ உண்மையில் செல்போன் நிறுவன உரிமையாளரையே திருமணம் செய்துவிட்டார். 39 வயதான மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவுடன், நடிகை அசினுக்கு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி கடந்த வாரம் திருமணம் நடந்தது. முக்கியமான உறவினர்களுக்கு மட்டுமே திருமண அழைப்பிதழ் கொடுத்திருந்தார்கள். அக்‌ஷய் குமார் மூலம்தான் ராகுல் ஷர்மாவோடு, அசின் நட்பு ஆனார் என்பதால், அவர் மட்டுமே திருமணத்துக்கு வந்த ஒரே சினிமா பிரபலம். பாலிவுட், கோலிவுட், மல்லுவுட்... சினிமா நண்பர்களுக்கு மட்டும் தனி ரிசப்ஷன் நடத்த இருக்கிறார்கள் அசின் - ராகுல் ஜோடி!

p24e.jpg

பாபா ராம்தேவ் - ஷில்பா ஷெட்டி யோகாதான் சமீபத்திய வைரல் ஹிட் வீடியோ. மும்பையில் ஐந்து நாட்கள் யோகா திருவிழாவை பாபா ராம்தேவ் நடத்த, அதில் சர்ப்ரைஸ் என்ட்ரி ஷில்பா ஷெட்டி. இருவரும் மேடையில் போட்டிபோட்டு யோகா செய்ய, ஒரு கட்டத்தில் ஷில்பா `என்னால் முடியவில்லை’ என ஒதுங்க, தனியாக ஸ்கோர்செய்தார் பாபா. கூட்டத்தில் இருந்தவர்கள் பாபா - ஷில்பாவின் போட்டி யோகா சாகசங்களை வீடியோ எடுத்து, உடனே ஆன்லைனில் பரப்ப, பல ஆயிரம் மீம்ஸ் முளைத்து கலகலப்பானது  சோஷியல் மீடியா! 

vikatan

  • தொடங்கியவர்

 

கதகளி நடனத்தின் எதிர்காலம்?

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று..... 

பெப்ரவரி - 04

 

659varalaru2.jpg1783 : ஐக்­கிய அமெ­ரிக்கா மீது தனது அனைத்துத் தாக்­கு­தல்­க­ளையும் நிறுத்­து­வ­தாக பிரிட்டன் அறி­வித்­தது.

 

1789 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் முத­லா­வது ஜனா­தி­ப­தி­யாக ஜோர்ஜ் வோஷிங்டன் ஏக­ம­ன­தாகத் தெரிவு செய்­யப்­பட்டார்.

 

1794 : பிரெஞ்சுக் குடி­ய­ரசு முழு­வதும் அடிமைத் தொழில் சட்­ட­வி­ரோ­த­மாக்­கப்­பட்­டது.

 

1810 : கரீ­பியன் தீவு­க­ளான குவாட்லூப், பிரித்­தா­னியக் கடற்­ப­டை­யி­னரால் கைப்­பற்­றப்­பட்­டது.

 

1859 : கிரேக்க பைபிளின் 4ஆம் நூற்­றாண்டுக் கையெ­ழுத்­துப்­படி ஒன்று எகிப்தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

 

1899 : பிலிப்பைன்ன்ஸ், அமெ­ரிக்கப் போர் ஆரம்­ப­மா­னது.

 

1932 : இரண்டாம் உலகப் போரில் சீனாவின் ஹார்பின் நகரை ஜப்பான் கைப்­பற்­றி­யது.

 

1936 : முதற்­த­ட­வை­யாக ரேடியம்  என்ற செயற்கைக் கதி­ரி­யக்க மூலகம் உரு­வாக்­கப்­பட்­டது.

 

1943 : இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்­கிராட் போர் முடி­வுக்கு வந்­தது.

 

1945 : இரண்டாம் உலகப் போர்: அமெ­ரிக்க ஜனா­தி­பதி பிராங்­கிளின் ரூஸ்வெல்ட், பிரித்­தா­னிய பிர­தமர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்யத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் உக்­ரேனில் யால்ட்டா மாநாட்டில் சந்­தித்­தனர்.

 

1948 : பிரிட்­ட­னி­ட­மி­ருந்து இலங்கை சுதந்­திரம் பெற்­றது.

 

1957 : திரு­கோ­ண­ம­லையில் கறுப்புக் கொடியைக் கட்ட முயன்ற திரு­மலை நட­ராசன் பெலிஸாரினால் சுட்டுக் கொலை­செய்­யப்­பட்டார்.

 

659varalaru-1---mark_zuckerberg.jpg1966 : ஜப்பான் போயிங் விமானம் டோக்­கி­யோவில் வீழ்ந்­ததில் 133 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1969: பலஸ்­தீன விடு­தலை இயக்­கத்தின் தலை­வ­ராக யஸிர் அரபாத் பத­வி­யேற்றார்.

 

1976 : குவாத்­த­மாலா மற்றும் ஹொண்­டுராஸ் பூகம்­பத்­தினால் சுமார் 22,000 பேர் இறந்­தனர்.

 

1978 :  இலங்­கையின் முத­லா­வது நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­யாக ஜே. ஆர். ஜெய­வர்த்­தனா பத­வி­யேற்றார்.

 

1997 : இஸ்­ரேலில் இரண்டு ஹெலி­கொப்­டர்கள் வானில் மோதி­யதில் 73 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1998 : ஆப்­கா­னிஸ்­தானில் இடம்­பெற்ற 6.1 ரிச்டர் அளவு பூகம்­பத்­தினால் சுமார் 5,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

2003 : யூகோஸ்­லா­வியா அதி­கா­ர­பூர்­வ­மாக 'சேர்­பியா மற்றும் மொண்­டெ­னே­குரோ' எனப் பெயர் மாற்றம் பெற்­றது.

 

2007 : ஒலியை மிஞ்­சிய வேகத்தில் செல்லும் ரஷ்­ய-­இந்­திய 'பிரமாஸ்' ஏவு­கணை ஒரிசா ஏவு தளத்தில் இருந்து வெற்­றி­க­ர­மாக ஏவப்­பட்­டது.

 

2004 : உலகின் மிகப்­பெ­ரிய சமூக வலைத்­த­ள­மான பேஸ்புக், மார்க் ஸூகர்­பேர்­கினால் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

2006 : பிலிப்பைன்ஸின் மணிலா நகரிலுள்ள அரங்கொன்றில் ஏற்பட்ட சன  நெரிசலினால் 71 பேர் உயிரிழந்தனர்.

 

2015 : தாய்வானில் விமானமொன்று நதியொன்றில் வீழ்ந்ததால் அதிலிருந்த 58 பேரில் 31 பேர் உயிரிழந்தனர்.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=659#sthash.OfbQjxAn.dpuf
  • தொடங்கியவர்

நண்பர்களையும் நம்மையும் இணைக்கும் Facebookக்கு பிறந்தநாள்: ஹேப்பி பர்த்டே ஃபேஸ்புக்!

 

facebook350.jpgள்ளித் தோழர்கள், அலுவலக நண்பர்கள், ரொம்ப காலம் முன்பு நம் தெருவில் குடியிருந்தவர்கள், ஏதோ ஒரு வசந்த காலத்தில் நம் கண்ணோடு கண் பேசியவர்கள், நாம் நேரில் பேச நினைத்தாலும் பேச முடியாதவர்கள் என அனைவரோடும் நம்மை இணைக்கும் ஒரு மாபெரும் பாலம் ஃபேஸ்புக். கேண்டி கிரஷ் ரெக்வஸ்டில் ஆரம்பித்து கே.எஃப்.சியில் புரோபசல் வரை பல உறவுகளைக் கொண்டு சென்று சேர்த்த ஃபேஸ்புக், பலநாள் பேசாத பல உறவுகளையும் ஒன்று சேர்த்துள்ளது.

நேரிலோ, கடிதத்திலோ, கிரீட்டிங் கார்டு மூலமாகவோ வாழ்த்துச் சொன்னதெல்லாம் இப்போது அவுட்-டேட். நாலு வார்த்தை டைப் செய்து கூட ஒரு ஸ்மைலி. தட்ஸ் ஆல். விஷ் ஓவர். இப்படி வாழ்த்துகளுக்குத் தூது போகும் ஃபேஸ்புக்கிற்கு இன்று பிறந்த நாள்.

ஆம், 12 வருடங்களுக்கு முன்பு 2004-ல் ஹார்வேர்டு பல்கலைக்கழக மாணவர் மார்க் சக்கர் பெர்க்மற்றும் அவரது நண்பர்களின் சிந்தையினால் உதித்த குழந்தை தான் ‘தி ஃபேஸ்புக்’. தொடக்கத்தில் நல்ல வரவேற்பு, சில சர்ச்சைகள் என அனைத்தையும் கடந்து வெறுமனே ஃபேஸ்புக் என்று பெயர் மாற்றம் கொண்டு இன்று கோடிக்கணக்கானோரின் செல்லக்குழந்தையாய் வளர்ந்துள்ளது. தினமும் மணிக்ணக்காக ஃபேஸ்புக் யூஸ் செய்கிறோமே அதைப் பற்றி நமக்கு எந்த அளவிற்குத் தெரியும்?

ஃபேஸ்புக் பற்றிய சில சிறப்புகள் இங்கே.

பர்த் ஸ்டோரி

இன்று நாம் ஜாலியாய் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஃபேஸ்புக் உருவாக பல போராட்டங்கள் பின்னனியில் உள்ளன. தான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ‘ஃபேஸ்மேஷ்’ என்ற புராஜெக்டைத் தொடங்கினார் சக்கர் பெர்க். பின்னர் நாளடைவில் அதை மெருகேற்றி ‘தி ஃபேஸ்புக்’ உருவானது. தொடக்கத்தில் இது ஹார்வார்டு பல்கலைக்கழக மாணவர்களின் பயன்பாட்டிற்கு மட்டுமே இருந்து வந்தது. பின்னர் உலக அளவில் பயன்பாட்டிற்கு வந்தது. தனது புராஜெக்டின் போது, பல்கலைக்கழக டேடா பேசில் அனுமதியின்றி ஊடுருவியதால்சக்கர் பெர்க் எச்சரிக்கவும் தண்டிக்கவும் பட்டார். மேலும், தன் புராஜெக்டில் தீவிரம் காட்ட உலகப் புகழ் வாய்ந்த ஹார்வேர்டு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினார் மார்க். சீனியர் மாணவர்கள், சக்கர் பெர்க் தங்களை தவறாக பயன்படுத்திக் கொண்டதாக வழக்குத் தொடர, அது சில ஆண்டுகள் கழித்து பைசல் செய்யப்பட்டது.

fb142.jpg



ஏன் நீலம்?

ஃபேஸ்புக் பக்கத்தில் பெரும்பாலம் நீல நிறமே இருக்கக் காரணம் என்ன? ஏனெனில் ஃபேஸ்புக் நிறுவனர் சக்கர் பெர்க்கிற்கு நிறக்குருடுப் பிரச்னை உள்ளது. அவருக்கு பச்சை மற்றும் சிவப்பு வண்ணங்கள் தெரியாது. “என் உலகம் (ஃபேஸ்புக்) எனக்கு வண்ணமயமாகத் தெரிய வேண்டும். அதனால் தான் நீல நிறம் கொட்டிக் கிடக்கிறது” என்கிறார் மார்க்.

இங்கெல்லாம் ஃபேஸ்புக் இல்லை

ஒருசில அரசுகள் ஃபேஸ்புக்கை தங்கள் நாடுகளில் தடை செய்துள்ளன. அரசியல் எதிர்ப்புக் காரணங்களால் சீனா, வங்கதேசம், ஈரான், எகிப்து, வட கொரியா, தஜிகிஸ்தான் முதலிய நாடுகள் இதுவரை ஃபேஸ்புக்கை தடை செய்துள்ளன. சில நாடுகள் தடையை நீக்கினாலும், ஒருசில நாடுகளில் இன்னும் அது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சீனாவில் ஃபேஸ்புக் தடை செய்யப்பட்டிருந்தாலும், தற்சமயம் சுமார் 10 கோடி பேர் ஃபேஸ்புக்கை தெரியாமல் பயன்படுத்தி வருகின்றனர்.

போலிகள் ஜாக்கிரதை

fb142a.jpg ஃபேஸ்புக் வலைதளத்தை ஹேக் செய்ய ஒரு நாளுக்கு 6 லட்சம் முயற்சிகள் நடக்கின்றன. தற்சமயம் மட்டும் சுமார் 87 லட்சம் பொய்யான புரொஃபைல்கள் ஃபேஸ்புக்கில் வலம் வருகின்றனர்.

வாட் ஏன் ஐடியா சர்ஜி

கிரிஸ் புட்னாம் என்ற இளைஞர் 2006-ம் ஆண்டு ஃபேஸ்புக்கின் இணையதளத்தை தனியாளாக ஹேக் செய்தார். அப்படி அசாத்திய செயல் புரிந்த அந்த திறமைசாலி(!) இளைஞர் மீது புகார் கொடுக்காமல், அவருக்கு அங்கேயே வேலை கொடுத்து பணியிலமர்த்திக் கொண்டது ஃபேஸ்புக் நிறுவனம்.

மார்க்கின் சம்பளம் என்ன?

ஃபேஸ்புக் நிறுவனர்களுள் ஒருவரான மார்க் சக்கர் பெர்க் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். அப்பொறுப்பில் உள்ள அவருடைய மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெறும் ஒரு அமெரிக்க டாலர் தான்!

அரசியல் புரட்சி

பல நாடுகள் அரசியல் காரணங்களுக்காக ஃபேஸ்புக்கைப் புறக்கணிக்கும் நிலையில், ஐஸ்லாந்து அரசு ஃபேஸ்புக்கை அபாரமாக பயன்படுத்தியுள்ளது. தனது அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்க முடிவெடுத்த ஐஸ்லாந்து அரசு, மக்களின் கருத்துகளை அரிய நினைத்தது. மக்களோடு தொடர்பில் இருக்க ஃபேஸ்புக் தான் சரியான தளம் என்று உணர்ந்து ஃபேஸ்புக் பக்கத்தில் மக்களின் கருத்துகளைக் கேட்டு அதை நடைமுறைப்படுத்தியது அந்நாடு. உலக அரசியலில் இது ஒரு புரட்சியாய் அமைந்தது.

இத்தனை போட்டோக்களா?

சராசரியாக ஒவ்வொரு ஃபேஸ்புக் யூசரும் நாள் ஒன்றுக்கு 40 நிமிடமாவது ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு நிமிடத்திற்கு 18 லட்சம் லைக்குகள் ஃபேஸ்புக்கில் பதிவாகின்றன. மாதம் ஒன்றிற்கு சுமார் 250 கோடி போட்டோக்கள் இங்கு அப்லோட் செய்யப்படுகிறதாம்.

குழந்தைகளுக்காக…

தனது மகள் பிறந்ததை முன்னிட்டு ஃபேஸ்புக் நிறுவனத்தின் சொத்தில் 99 சதவிகிதத்தை தனது அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார் சக்கர் பெர்க். வருங்கால குழந்தைகளின் நலனுக்காக அந்தப் பணம் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இதன் மூலம் உலகிலேயே, அறக்கட்டளைகளுக்கு அதிகம் வழங்கிய நபர் என்ற நன்மதிப்பைப் பெற்றார்.

fb5.jpg



நோ பிளாக்கிங்

நமக்குப் பிடிக்காத நபர்களை நாம் என்ன செய்வோம். அன்ஃப்ரென்ட் செய்வோம். இல்லையென்றால் பிளாக் செய்வோம். ஆனால், சக்கர் பெர்க்கை நம்மால் பிளாக் செய்ய முடியாது. நிறுவனர் ஆதலால் தனக்கென்று ஸ்பெஷல் புரொஃபைலை கிரியேட் செய்துள்ளார் மார்க். நம்ம யூத் பாய்சும் அப்படி ஒன்னு எதிர்பாப்பாங்களே…

நல்லதோர் குடிமக்கள்

கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தவர்களைவிட, ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம் என்கின்றது ஒரு சர்வே. 26 வயதுக்குள்ளானவர்களை விட, அதற்கு மேற்பட்டோர் தான் மிகவும் ஆக்டிவாக ஃபேஸ்புக்கை யூச் செய்கிறார்களாம்.

என்ன கொடுமை சார் இது

கடந்த 2011-ம் ஆண்டின் அறிக்கையின்படி, அமெரிக்காவில் பதிவாகும் விவாகரத்து கேட்போரில், மூன்றில் ஒரு பகுதி வழக்குகளில் ‘ஃபேஸ்புக்’ என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளதாம்.

‘ஃபேஸ்புக் நல்லதா? கெட்டதா?’, ‘அது நம்மை சோம்பேறி ஆக்குகிறது’, என்றெல்லாம் வாதிடாமல் பல கோடிக்கணக்கான வாழ்த்துக்களை நமக்காக சுமந்து வரும் ஃபேஸ்புக்கின் பிறந்த தினத்துக்காக, நாமும் அதற்கு வாழ்த்துச் சொல்வோம். மணிக்கணக்கில் பயன்படுத்தும் நாம் தானே அதற்கு சொந்தம், பந்தம் எல்லாம்.

ஹேப்பி பர்த்டே எஃப்.பி!

vikatan

  • தொடங்கியவர்

இந்தியாவிற்குப் பெருமை, கெத்து காட்டும் பிரியங்காசோப்ரா!

 

சென்ற வருடம் தனது "குவண்டிகோ" சீரியல் மூலம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பிரியங்காவிற்கு , 2016 வருடம், மக்கள் சாய்ஸ் விருது மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றுத் தந்து அவரது வெற்றிப் பயணத்தைத் துவக்கி வைத்தது. தற்போது ஆஸ்கார் விருதும் பிரியங்காவை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது

priyanka.jpg

கலிபோர்னியாவில், பிப்ரவரி 28ம் தேதி நடைபெறவுள்ள, 88வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில், பிரியங்கா ஆஸ்கார் விருதினை வழங்க உள்ளார். ஆஸ்கார் விருதுகளின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அதற்கான பட்டியல் வெளியாகி உள்ளது.

அதில் ஸ்டீவ் கேரல், குயின்சி ஜோன்ஸ், பியுங் -ஹுன் லீ, ஜேர்ட் லிட்டோ, ஜூலியன் மூர், ஒலிவியா முன், மார்கட் ரோப்பி, ஜாசன் சீகல், ஆண்டி செர்கிஸ், JK சைமன்ஸ், கெர்ரி வாஷிங்டன், ரீஸ்விதர்ஸ்பூன் போன்றோரின் பெயரோடு பிரியங்கா சோப்ராவின் பெயரும் இடம் பிடித்துள்ளது. அதில் பிரியங்கா சோப்ராவின் பெயர் இரண்டாவதாக இடம்பிடித்துள்ளதுடன் அவர் குறித்த விபரங்கள் மற்றும் குவண்டிகோ சீரியல்களின் தொகுப்புகளும் இணைந்து ஒரு தனிப் பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தனது நடிப்புத் திறமையின் மூலம் உலகளவில் மறக்கமுடியாத ஒரு அனுபவத்தைத் தந்த நடிகர்களிலிருந்து, குறிப்பிட்ட சிலரை நாங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டோம் என ஆஸ்கார் தயாரிப்பாளர்கள் டேவிட் ஹில் மற்றும் ரெஜினால்ட் ஹட்லின் ஆகியோர் கூறியுள்ளனர். ஆஸ்காரின் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான பிரிவில், இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட "கோர்ட்" அந்த வாய்ப்பினை இழந்தது குறிப்பிடத்தக்கது

priyankaoscar.jpg

எனினும் இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விருது வழங்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட ஒரே நபர் பிரியங்கா என்பதில் நிச்சயம் பெருமையே.

பாலிவுட்டின் பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்களிடமிருந்தும் பிரியங்காவிற்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. பிரியங்காவும் தான் ஆஸ்கார் விருதுகளில் கலந்து கொள்ளப் போவதைக் குறித்து  ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்கார் விருதுள் வழங்கும் விழாவினை பிரபல நடிகர் கிரிஸ் ராக் தொகுத்துவழங்க உள்ளார்.ஆஸ்கர் விழாவில் ஐஸ்வர்யாராய் கலந்துகொண்டார், ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார். ஆனால் இன்னொருவருக்கு ஆஸ்கரைக் கொடுக்கும் வாய்ப்பு முதல் முறையாக ஒரு இந்தியருக்குக் கிடைத்துள்ளது எனில் அது பிரியங்கா சோப்ராவிற்கு மட்டுமே எனலாம்!. 

vikatan

  • தொடங்கியவர்

 

தமிழ் மொழியில் தேசிய கீதம்

  • தொடங்கியவர்

12654668_1066692223389567_51294836366569

பிப்ரவரி 4: உலக புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம்

'உலக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் புற்றுநோயாக முதல் இடத்தில் மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. புகையிலைப் பொருட்களால் ஏற்படக்கூடிய புற்றுநோய், ஆண்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

''எந்த ஓர் அறிகுறியுமின்றிப் புற்றுநோய் தாக்கும், புற்றுநோயை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது'' என்பது போன்ற தவறான நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. இவற்றைக் களைந்து, புற்றுநோய் தொடர்பான விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.

நம்மால் முடியும்! என்னால் முடியும்!

 

பிப்ரவரி-4, உலக புற்றுநோய் தினம்

 

லகம் முழுவதும் மக்களை அச்சுறுத்திவரும் நோய்களில் முக்கியமானது புற்றுநோய். புற்றுநோய் பற்றிய விழிப்புஉணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4-ம் தேதி ‘உலக புற்றுநோய் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. ‘நம்மால் முடியும்’, ‘என்னால் முடியும்’ என்ற அடிப்படையில் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.

புற்றுநோய் என்பது என்ன?

நமது உடலில் பல்லாயிரம் கோடி செல்கள் இருக்கின்றன. ஏதேனும் ஒரு செல்லில் இருந்துதான் புற்றுநோய் செல் வளர ஆரம்பிக்கிறது. நாம் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்காமல், அலட்சியப்படுத்தும்போதுதான் புற்றுசெல்கள் பல்கிப் பெருகி, உடலில் கட்டிகள் உருவாகின்றன. புற்றுநோயை நாம் தடுக்க முடியும், தவிர்க்க முடியும். புற்றுநோயைத் தடுக்க நாம் பெரிதாகச் செலவுசெய்து, மாத்திரை மருந்துகள் வாங்கிச் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாழ்வியல்முறை மாற்றம் மூலமாகவே பெரும்பாலான புற்றுநோய்களைத் தடுத்துவிட முடியும்.

புற்றுநோயை வெல்ல 10 வழிகள்

1.உயரத்துக்கு ஏற்ற சரியான உடல் எடையைப் பராமரிக்க  வேண்டும்.

2. பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படாத ஆர்கானிக் உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

3.மாசு நிறைந்த சுற்றுச்சூழலைத் தவிர்த்து, தூய்மையான இடங்களில் வசிப்பது நல்லது.

4.புகைபிடிக்கவும் கூடாது; புகைபிடிப்பவர்கள் அருகில் நிற்கவும் கூடாது.

5.மது, மோசமான அரக்கன். மதுவைத் தவிர்த்தாலே, கல்லீரல் புற்றுநோய் வருவதைப் பெரும்பாலும் தவிர்த்துவிட முடியும்.

6.உடல் உழைப்பு அவசியம். அளவான உடற்பயிற்சியை தினமும் சீராகச் செய்ய வேண்டும்.

7.எண்ணெயில் வறுத்த உணவைத் தவிர்க்க வேண்டும். மீண்டும் மீண்டும் எண்ணெயைச் சூடுபடுத்தக் கூடாது.

8.கதிர்வீச்சு நிறைந்த பகுதிகளில் வசிப்பதையோ, கதிர்வீச்சு நிறைந்த அறையில் வேலை செய்வதையோ தவிர்க்க வேண்டும்.

9. தவறான உடலுறவைத் தவிர்ப்பதன் மூலம் ஹுயுமன் பேப்பிலோமா வைரஸ் பரவாமல் தடுக்க முடியும். ஹெபடைடிஸ் பி வைரஸ் தடுப்பூசிகளை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும்.

10.வெயில் காலங்களில் பல மணி நேரம் சூரிய ஒளி உடலில்படுமாறு நிற்பதையோ, வேலை செய்வதையோ தவிர்க்க வேண்டும்.

மூன்றில் ஒரு புற்றுநோயாளிக்கு, புற்றுநோய் வருவதற்கு ஐந்து முக்கியமான காரணங்கள் உள்ளன. அவை...

p14a.jpg

*உடல் பருமன்.

*காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைவாகச் சாப்பிடுவது.

*உடல் உழைப்பு இன்மை.

*புகைபிடித்தல் மற்றும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துதல்.

*மது அருந்துதல்.

இந்த ஐந்து விஷயங்களையும் தவிர்த்தால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை 30 சதவிகிதம் வரை குறைக்க முடியும்.


உலகம் முழுவதும் மரணிப்பவர்களில் 100-ல், 13 பேர் புற்றுநோய் காரணமாகவே இறக்கின்றனர். 2012- ம் ஆண்டு கணக்குப்படி, ஒவ்வோர் ஆண்டும் மோசமான முதல் 5 புற்றுநோய்களால் மரணமடைபவர்களின் புள்ளிவிவரம்:

p14b.jpg


உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் புதிதாக 1.41 கோடி பேருக்கு
புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்படுகிறது.

p15a.jpg

ஒவ்வொரு வருடமும் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை  - 80.2 லட்சம்.

30 - 69 வயதில் புற்றுநோய் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை
40 லட்சம்.

p15b.jpg

அடுத்த 20 வருடங்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட இருப்பவர்களின் எண்ணிக்கை 70 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


ஆண்களுக்கு ஐந்து விதமான புற்றுநோய்களும், பெண்களுக்கு ஐந்துவிதமான புற்றுநோய்களும் பெருமளவு காணப்படுகின்றன.

p15c.jpg

உலகம் முழுவதும் புற்றுநோயால் மரணம் அடைபவர்களில் 20 சதவிகிதம் பேர் நுரையீரல் புற்றுநோய் வந்தவர்கள். நுரையீரல் புற்றுநோய் வருபவர்களில் 70 சதவிகிதம் பேர் மரணத்தைத் தழுவுகின்றனர்.*

*உலக சுகாதார நிறுவன அறிக்கை

vikatan

  • தொடங்கியவர்
ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறி மில்லியன் கணக்கானோரை வசீகரித்த நடிகை
 

தாய்லாந்தைச் சேர்ந்த இளம் நடிகையொருவர், தென் கிழக்காசியாவில் மில்லியன் கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.  

 

1464638.jpg

 

யோஷி ரின்ரடா எனும் இந் நடிகையின் வசீகரமான தோற்றம் பலரையும் கவர்ந்துள்ளது. ஆனால், இவர் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

பால் மாற்றம் செய்தவர்களுக்கான அழகுராணி போட்டியொன்றில் வெற்றி பெற்றதன் மூலம் யோஷி ரின்ரடா கவனத்தை ஈர்க்கத் தொடங்கினார்.

 

14646Untitled-3.jpg;-lllllllllll.jpg

 

பின்னர் மொடலிங்கில் ஈடுபட ஆரம்பித்த அவர், தொலைக்காட்சித் தொடர்கள் பலவற்றில் நடித்துள்ளார். 

 

சஞ்சிகைகளின் அட்டைப் படங்களில் பல தடவைகள் இடம்பெற்ற யோஷியை தமது விளம்பரங்களில் நடிக்க வைப்பதற்கு நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. 

 

இன்ஸ்டாகிரம் சமூக வலைத்தளத்தில் யோஷி ரின்ரடாவுக்கு 5 இலட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=gossips&news=14646#sthash.FZdBvoko.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12651260_1066687326723390_52922026276961

 

10 செகண்ட் கதைகள் - பக்திமான்

மொபைலில் டெம்பிள் ரன்னில் எப்போதும் மூழ்கியிருக்கும் மகனைப் பார்க்கும்போது ஜோதிடர் சொன்னது நினைவுக்கு வந்தது, 'உங்க மகன் கோயில் கோயிலா ஏறி இறங்குவான்!’

vikatan

  • தொடங்கியவர்

 

நவீன முறையில் ஆஞ்சநேயர் வழங்கும் பிரசாதம் !

  • தொடங்கியவர்

நியூ இங்கிலாந்து வனத்தின் வண்ணக் கோலங்கள்: புகைப்படங்கள்
-----------------------------------------------------------------------------------
பிபிசியின் புதிய தொடரான எர்த்ஸ் கிரேட்டஸ்ட் ஸ்பெக்டகிள்ஸ் தொடருக்காக உலகில் ஒவ்வொரு பருவத்திற்கேற்பவும் வியக்கத்தக்க வகையில் மாற்றங்களை வெளிப்படுத்தும் ஸ்வல்பார்ட், ஒகவங்கோ, நியூ இங்கிலாந்து ஆகிய இடங்கள் தேர்வுசெய்யப்பட்டிருக்கின்றன.

இதன் முதல் பாகம், அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்திருக்கும் நியூ இங்கிலாந்தின் வண்ணமயமான காடுகளை படம் பிடித்துக் காட்டுகிறது.
கோடைகாலத்தின் பசுமை மாறி, இலையுதிர் காலத்தின் தங்க நிறமும் சிவப்பு நிறமும் காட்டை மூடியிருக்கின்றன.

எத்தனையோவிதமான மிருகங்கள், பூச்சிகளை இந்தக் காட்டில் பார்க்க முடிகிறது. இயற்கையின் இத்தனை வண்ணங்களை உருவாக்குவதற்கு எல்லா உயிரினங்களுக்கும் பங்கிருக்கிறது.

12646932_10153236744210163_7065975304787

12661860_10153236744195163_6375785869498

12662532_10153236744175163_4378836696065

12651025_10153236744215163_2870518589542

12646997_10153236744235163_8749782642586

12654631_10153236744305163_3009080247194

12644977_10153236744375163_1082699906809

BBC

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

dot1.jpg   ``அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றிபெற்றால் தற்போதைய ஜனாதிபதியான ஒபாமாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க முயற்சிசெய்வேன்'' என்கிறார் ஹிலாரி கிளின்டன். அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் ஹிலாரி, `ஒபாமாவுக்கு நீதிபதியாகும் அனைத்து தகுதிகளும் இருக்கின்றன. எந்த விஷயமாக இருந்தாலும், அதைச் சிறப்பாக விவாதித்து வெற்றிபெறும் திறமை அவரிடம் இருக்கிறது'' என்று சொல்லியிருக்கிறார். நீதிபதி ஒபாமா வாழ்க!

p36b.jpg

dot1.jpg   `தங்க நகைகள், வைரங்கள் மற்றும் பணத்துக்காக நான் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன். குழந்தை பெற்றுக்கொள்ளும் காரணத்தைத் தவிர, வேறு எதற்காகவும் என் வாழ்வில் ஆண் தேவை இல்லை. திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்வதை நம் சமூகம் ஏற்றுக்கொள்ளாது. அதனால் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக மட்டுமே நான் திருமணம் செய்துகொள்வேன். என் திருமணம் காதல் திருமணமாகத்தான் இருக்கும். அதுவும் இந்தியர் ஒருவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன்' என, திருமணம் பற்றி முதல்முறையாகப் பேசியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. #அதிரடின்னா இதுதான்!

p36c.jpg

dot1.jpg  பிரேசிலில் ஜூலை மாதம் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்காகத் தயாராகிவருகிறார் உசேன் போல்ட். '200 மீட்டர் போட்டியில் 19 விநாடிகளுக்குள் ஓட வேண்டும் என முடிவுசெய்திருக்கிறேன். இதுவரையிலும் எந்த மனிதனும் செய்யாத சாதனை அது. அதைப் பார்த்துவிட்டுத்தான் அடுத்தடுத்த முடிவுகளை எடுப்பேன்’ என தம்ஸ்அப் காட்டியிருக்கிறார் போல்ட். போல்டான போல்ட்!

vikatan

  • தொடங்கியவர்

ஒரு மணி நேரம் பறக்க ஒரு கோடி செலவு: ஏர்ஃபோர்ஸ் ஒன் ஏன் பிரமிக்க வைக்கிறது?

 

மெரிக்க அதிபரின் உலக சுற்றுப்பயணத்திற்காக பயன்படுத்தப்படும் பிரத்யேக ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் உலகப்புகழ்பெற்றது. இதனை ஒரு குட்டி வெள்ளை மாளிகை எனவும் சொல்லலாம். அத்தனை வசதிகளும் இதில் உண்டு.

        

தற்போது ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானமாக 747-200 ரக போயிங் டபுள் டக்கர் விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.   கடந்த 1985ஆம் ஆண்டு ரொனால்ட் ரீகன் காலத்தில் ஆர்டர் செய்யப்பட்டு, ஆர்டர் செய்யப்பட்டு, 1990 ஆம் ஆண்டு ஜார்ஜ். டபிள்யூ.புஷ் காலத்தில் ஏர்ஃபோர்ஸ் விமானம் அமெரிக்க அரசுக்கு வழங்கப்பட்டது.சுமார் 25 வருடங்கள் பணியில் இருந்துள்ளது.

எனவே அதனை மாற்றி விட்டு, வேறு இரு ஏர்ஃபோர்ஸ் விமானங்களை வடிவமைக்க அமெரிக்க விமானப்படை முடிவு செய்துள்ளது. போயிங்கின் நவீன தயாரிப்பான 747-8 ரக விமானத்தை இனி ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இரு ஏர்ஃபோர்ஸ் விமானங்கள்,  2024-ம் ஆண்டுக்குள் அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது. முதல் விமானம் 2020-ம் ஆண்டுக்குள் ஒப்படைக்கப்படும்.

ஏர்ஃபோர்ஸ் ஒன் ஏன் பிரமிக்க வைக்கிறது!

இது பார்க்கதான் சாதாரண விமானம். ஆனால் ஒரு ராணுவ விமானத்திற்குள்ள அத்தனை திறனும் உண்டு. அதனால்தான் இதற்கு ஏர்ஃபோர்ஸ் ஒன் என பெயரிடப்பட்டுள்ளது. மற்ற விமானங்களிடம் இருந்து இதனை வேறுபடுத்தவே  இந்த பெயர்.

அமெரிக்க அதிபர் ராணுவ விமானத்தில் பறந்தால் அது 'ஆர்மி ஒன் 'என்றும் ஹெலிகாப்டரில் கால் வைத்தால் 'மரைன் ஒன்' என்றும் அழைக்கப்படும்.

air.jpg

தற்போது ஏர்ஃபோர்ஸ் ஒன்னாக பயன்படுத்தப்பட்டு வரும்  போயிங் 747- 200 ரக  விமானங்கள், 8 லட்சத்து 33 ஆயிரம் பவுண்ட் எடை கொண்டவை. இதன் பெட்ரோல் டாங்குகள் சுமார் ஒன்றரை லட்சம் லிட்டர் பெட்ரோல் கொள்ளவு கொண்டவை. இதனை கொண்டு உலகத்தில் பாதி அளவுக்கு சுற்றி வந்து  விடலாம். இந்த விமானம் மணிக்கு 700 மைல் வேகத்தில் 45 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது.

வெளியே இருந்து பார்க்க  விமானம் போல இருக்கும். ஆனால் உள்ளே 4 ஆயிரம் சதுர  அடி  பரப்பளவு இடம் கொண்டது.  ஐந்து நட்சத்திர ஹோட்டல் போலவே உள் அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கும்.

அதிபருக்கு என்று தனி படுக்கை அறை, குளியல் அறை, ஓய்வறைகள் உண்டு. வெள்ளை மாளிகை முக்கிய அதிகாரிகளுக்கும் ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் தனி அறைகள் உண்டு. ஆலோசனை நடத்த தனியாக கூடமும் இருக்கிறது.

ஏர்போர்ஸ் ஒன்னில் 3 கதவுகள் உண்டு. முதல் கதவு வழியாக அதிபர் பிரவேசிப்பார். அவருடன் பயணிக்கும் செய்தியாளர்கள் பின் வாசல் வழியாக உள்ளே அழைத்து செல்லப்படுவார்கள். அவர்களுக்கு விமானத்தின் மற்ற பகுதிகள் தெரியாது.

air%20.jpg

சில சமயங்களில் அதிபர் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியது இருக்கும். இதனால் ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் எந்த சமயத்திலும் உணவு தயாரிப்பதற்கு தயார்நிலையில் உள்ள சமையலறை உண்டு. ஒரே சமயத்தில் 2 ஆயிரம் பேருக்கு கூட உணவு தயாரிக்க முடியும்.  டபுள் டக்கரான இந்த விமானத்தில், சமையல் அறை கீழ் பகுதியில் இருக்கிறது. குறைந்தது ஒரு வேளை 100 பேருக்காவது உணவு தயாரிக்கப்படும்.

ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் எப்போதும் தனி மருத்துவக்குழு இயங்கும். அதிபர் எங்கு பயணம் மேற்கொண்டாலும் இந்தக் குழு அதிபருடன் பயணம் மேற்கொள்ளும்.

ஏர்ஃபோர்ஸ் ஒன்  விமானத்திற்கென்றே பிரத்யேக தரையிறங்கும் படிகள் உள்ளன. இதனால் எந்த விமான நிலையத்திலும் இதற்கென்று தனியாக இறங்கு படிகள் தேவையில்லை.

இந்த விமானத்தில் 85 டெலிபோன்கள் இணைப்புகள் உள்ளன. 19 தொலைகாட்சிகள், ஃபேக்ஸ் மெஷின்கள் என பிற வசதிகளும் உண்டு.

ஏர்ஃபோர்ஸ் ஒன் தரையே இறங்காமல் பல மணி நேரம் வானத்தில் சுற்றிக் கொண்டேயிருக்க முடியும். ஏனென்றால் பறக்கும் போதே இதில் பெட்ரோல் நிரப்பவும் வசதி உண்டு.

எதிரிகளின் ரோடரில் ஏர்ஃபோர்ஸ் ஒன் தெரியாமல் இருக்கவும்  வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதாவது ரேடார் ஜாம் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

1943-ம் ஆண்டே அமெரிக்க ஜனாதிபதிக்கென்று பிரத்யேக விமானங்கள் பயன்பாட்டுக்கு வந்து விட்டன.  ஆனால் 1956-ம் ஆண்டு போயிங் 707 வந்த பிறகுதான் நவீனமடைந்தன. தொடர்ந்து 1990-ம் ஆண்டு முதல் தற்போது வரை 747 ரக போயிங் விமானம்தான் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானமாக மாற்றப்பட்டு வருகிறது.

ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம்,  ஒரு மணி நேரம் வானத்தில் பறக்க வேண்டுமென்றால் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவாகும். இந்த விமானத்தில் அதிபருடன் , அதிகாரிகள் அவரது பாதுகாவலர்கள் என பயணிப்பார்கள்.

vikatan

  • தொடங்கியவர்

 

"தமிழ் இனி" குறும்படம்

நன்றி ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

குறிக்கோள்!

நீ உன் குறிக்கோளில் வெற்றியடைய வேண்டுமானால் அதைப் பற்றிய எண்ணம் உன் உடல் முழுவதும் பரவி இருக்க வேண்டும். உங்களுக்குத் தேவையான எல்லா வலிமைகளும் உங்களுக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன என நம்புங்கள். நமது நெற்றியில் சுருக்கங்கள் விழட்டும்; ஆனால் இதயத்தில் சுருக்கம் விழவேண்டாம். ஏனெனில் இதயம் கிழடு தட்டக்கூடாது. இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும்.

12572983_1062643130461143_87393856890204

  • தொடங்கியவர்

ஹீரோயின் இல்லன்னா என்ன? மூன்று கெட்டப் விஜய் போதும் - தெறி டீஸர் விமர்சனம்

 

பல தள்ளிப்போடுதலுக்குப் பிறகு மாஸ் கிளாசாக இறங்கியுள்ளது தெறி டீஸர். விஜய்யின் கண்களும், முகமும் வருவதற்கு முன்பாகவே வந்து நிற்கிறது போலீஸ் ஜீப், பூட்ஸ் காலும், கையில் துப்பாக்கியும்.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் தெறி. படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார். படத்தின் கலர்ஃபுல்லாக இரண்டு நாயகிகள் இருப்பினும் டீஸரில் இடம்பெறும் பாக்கியம் என்னவோ மீனாவின் மகள் நைனிகாவிற்குதான்.

theri3.jpg

மூன்று விஜய் டீஸரில், என்ன மூன்று விஜய்யா?, நாங்கள் இரண்டு கெட்டப்பைத் தானே பார்த்தோம் என்றால் மீண்டும் ஒருமுறை ரீவைண்ட் செய்து பார்க்கவும் மொட்டையடித்த விஜய் மோட்டார் பைக்கில் கெத்துக் காட்டுவார். போலீஸுக்கான மிடுக்கு, சாட்டை போன்ற உடல்வாகு என்றால் கண்டிப்பாக விஜய் மாஸ் தான். அந்த வகையில் ‘டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்’ என சொல்லிக்கொண்டே பிரம்பால் டேபிளில் அடிக்கும் காட்சிகள் கண்டிப்பாக நாடி நரம்பெல்லாம் விஜய்யின் பெயர் ஓடும் ரசிகனுக்கு விருந்தான காட்சிதான்.

vijay4.jpg

இந்த டுவிங்கிள் டுவிங்கிள், சற்றே வேதாளம் ‘கண்ணா மூச்சி ரே ரே’ மொமெண்டை நினைவுக்குக் கொண்டு வந்தாலும் ’வேதாளம்’ வசனம் ஆக்ரோஷத்தின் உச்சத்தில் பழி வாங்கும் வெறியைக் காட்டும். ஆனால் தெறி வசனம், படத்தின் டீஸர் காட்சிகளிலேயே அவர் ஒரு குழந்தையுடன் அப்பாவாக தோன்றுகிறார் , வில்லன்களை சுளுக்கெடுக்கும் தருவாயில் கூட குழந்தையுடன் பழகிய பாடலுடன் இருப்பது கேரக்டரை அட்லீ கொஞ்சம் நிதானமாகவே படைத்துள்ளது தெரிகிறது. மேலும் குழந்தைகளுக்குப் பிடித்தாற் போல் வந்தால் தான் அது விஜய்.

எல்லாம் சரி இந்த புகைக்குள்ளிலிருந்து விஜய் வருவதும், அல்லது அரை இருட்டில் விஜய்யைக் காட்டுவது ஏற்கனவே பார்த்த துப்பாக்கி, கத்தி டீஸர்களின் பாதிப்பு டக்கென மண்டைக்குள் வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை. ப்ளீஸ் அடுத்த விஜய் டீஸரிலாவது எடிட்டர்கள் நோ ஸ்மோக்கிங்கை ஃபாலோ பண்ணுங்க,அதே போல் துப்பாக்கியின் பாதிப்பு சில இடங்களில் பளிச்சென தெரிகிறது, ராஜேந்திரனின் ஐயம் வெயிட்டிங், துப்பாக்கியுடன் விஜய் கொடுக்கும் போஸ் என கொஞ்சம் ரிபீட் ரகம். பின்னணி ஜி.வி.தெரியாமல் அனிருத் லைட்டாகத் தெரிகிறார். விடுங்க பாஸ்....ஏழு ஸ்வரங்கள் தானே இருக்கு என மனதைத் தேற்றிக் கொள்ளலாம். 

theri.jpg

ஸ்கூல் வேன் கவிழ்ந்து விழும் இடத்தில் தெறி போட்ட எடிட்டர் ரூபெனுக்கும், இயக்குநர் அட்லீக்கும் சபாஷ் போடலாம். பல மாஸ் ஹீரோக்களின் டீஸர்களில் ஹீரோக்களின் டயலாக் முடிவிலோ, அல்லது பன்ச்களிலோ தான் பெயர் விழும். இங்கே ஸ்கூல் வேன் விழுவதிலேயே கதைக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் தன்மை தெரிகிறது. 

மேலும் செண்டிமெண்ட் காட்சிகள் தாய்க்குலங்களுக்கு பல்க்காக படத்தில் இருப்பதும் புரிகிறது. என்னப்பா ரெண்டு நாயகிகள் இருந்தும் கடுகளவு கூட காட்டவில்லையே என்ற வருத்தம் ஒரு பக்கம் இருப்பினும், விஜய் வந்தா மட்டும் போதும் என்கிற ரசிகர்களின் மனதை அட்லீ நன்கு புரிந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. மொத்தத்தில் தெறி மாஸ்.

theri2.jpg

இப்படி டீஸர் குறித்து கருத்து சொல்வதற்குள், டீஸர் எங்க பாஸ் என கதற வைத்துவிட்டனர் இணைய விஷமிகள். ஆரம்பமே தெறி’க்கு சோதனை வந்தாலும், விஜய் பாணியில் ஆல் ஈஸ் வெல் சொல்லிவிட்டு அதே லின்க்கில் மீண்டும் டீஸர் தோன்றியுள்ளது. 

 

12688300_1035648399827507_47431085872054

  • தொடங்கியவர்

12687826_980807815301246_889517719649200

இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமை பூண்டுள்ள
இலங்கையின் சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு அனுபவம்வாய்ந்த வழிகாட்டியாக விடிவுக்கு நம்பிக்கை தரும் இரா.சம்பந்தன் அவர்களின் பிறந்தநாள்.

 

  • தொடங்கியவர்

நயன்தாராவுக்கு மலேசியாவில் என்ன நடந்தது?

 

நயன்தாரா என்றாலே சர்ச்சைதான். இப்போதும் ஒரு குபீர் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் நயன். மலேசியா சென்றிருந்த நயன்தாராவிடம், பாஸ்போர்ட் தொடர்பாக அந்நாட்டு காவல்துறை விசாரித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

nayan_vc1.jpg


என்ன நடந்தது என்று மலேசிய இணையதள நண்பர்களிடம் விசாரித்த போது, "இரண்டு நாட்களுக்கு முன்பு நயன்தாரா மலேசியா வந்தபோது அவரது பாஸ்போர்ட்டில் உள்ள பெயருக்கும், அவரது டிக்கெட்டில் உள்ள பெயருக்கும் வித்தியாசம் இருந்ததால் அவரை மலேசிய விமான நிலைய காவலர்கள் சிறிது நேரம் விசாரித்து விட்டு அனுப்பி விட்டார்கள். அந்த போட்டோக்கள்தான் இப்போது வைரலாக பரவுகிறது.

சமீபத்தில் விக்ரம் நடிக்கும் படத்தின் காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டது. அதில் நயன்தாரா ரகசிய ஏஜெண்டாக வருவார். அந்த காட்சியும் மலேசிய விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது. அந்த போட்டாவாக கூட இருக்கலாம். ஆனால் அவரின் பாஸ்போர்ட் பெயரும், டிக்கெட்டில் உள்ள பெயருக்கும் வித்தியாசம். அதனால் உயர் அதிகாரியின் சீல் வைக்கவில்லை என்பதால் அவரிடம் விசாரணை நடந்தது. அந்த போட்டோக்கள்தான் இப்போது வைரலாக வருகிறது. இதெல்லாம் நயனுக்கு புதியது இல்லை" என்றார்.

நயன்தாராவின் உண்மையான பெயர் டயானா மரியம் குரியன். ஆனால், படத்துக்காக தனது பெயரை நயன்தாரா என்று மாற்றினார். இந்நிலையில், மலேசியா சென்ற நயன்தாராவிடம், பாஸ்போர்ட்டில் இருந்த பெயர் குறித்து விசாரணை நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

பாஸ்போர்ட்டில், நயன்தாரா குரியன்  என்றும், பிறந்த ஊர் கர்நாடகா மாநிலம் பெங்களூரு என்றும் இருக்கிறது. ஆனால் நயன்தாராவின் சொந்த ஊர் கேரளா. ஆனால் இந்த போட்டோ படத்துக்காக எடுக்கப்பட்டதாக என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

vikatan

  • தொடங்கியவர்

12633697_980810935300934_896635089437933

உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக விளங்கும், போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர், ரியல் மாட்ரிட் கழகத்தின் கலக்கல் கோல் குவிப்பாளர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பிறந்தநாள்.
Happy Birthday Cristiano Ronaldo

  • தொடங்கியவர்

சீனாவில் ஒருவருக்காகப் பறந்த விமானம்
-----------------------------------------------------
சீனாவில், குவாங்ஸு மாகாணத்திற்குச் செல்லும் பயணிகள் விமானமொன்றில் ஒரே ஒரு பயணிமட்டுமே பயணம் செய்துள்ளார்.

அந்தக் குறிப்பிட்ட விமானம் தாமதமானதால் எல்லாப் பயணிகளும் அதற்கு முந்தைய விமானங்களுக்கு பயணச் சீட்டை மாற்றிக்கொண்டு சென்றுவிட, ஸாங் என்ற பெண் இந்தக் குறிப்பிட்ட விமானத்தில் தனியாகப் பயணம் செய்தார்.

குவாங்ஸுவில் கடுமையாகப் பனி பெய்துவருவதால் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், மத்திய உஹானிலிருந்து குவாங்ஸுவிற்குச் செல்ல சிஇஸட்833 என்ற விமானத்தில் பயணச் சீட்டை எடுத்திருந்தார்.

இந்த விமானம் தாமதமாகப் புறப்படும் என்பதால், முந்தைய விமானத்தில் பயணம் செய்யும் வாய்ப்பை இந்த விமான நிறுவனம் அளித்தது. எல்லாப் பயணிகளும் முந்தைய விமானங்களில் ஏறிச்சென்றுவிட, ஸாங் மட்டும் இதே விமானத்தில் பயணம் செய்ய விரும்பினார். பிறகு, ஸாங்கை மட்டும் ஏற்றிக்கொண்டு அந்த விமானம் புறப்பட்டது.

அந்த விமானத்தில் அவர் மட்டுமே பயணம் செய்ததால், விமான பணியாளர்களும் விமானியும் அவருக்கு தனிப்பட்ட சேவையை அளித்தனர்.

இப்படி, ஒரு பயணிகள் விமானத்தில் தனியாக பயணம் செய்த அனுவத்தை சீன சமூக வலைதளமான வெய்போவில் பகிர்ந்துகொண்டார் ஸாங்.

தான் ஒரு ராக் நட்சத்திரத்தைப் போல உணர்ந்ததாக பிபிசியிடம் ஸாங் கூறினார்.

சமூக வலைதளங்களில் இவருடைய பதிவுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் விருப்பக் குறிகளை அளித்துள்ளனர். கருத்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

ஒருவருக்காக ஒரு விமானம் புறப்பட்டுச் செல்வது ரொம்பவுமே ஆடம்பரமானது என சிலர் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

அந்த விமானம் இன்னும் சிறிது நேரம் காத்திருந்து மேலும் சில பயணிகளையும் ஏற்றிச் சென்றிருக்க வேண்டுமெனவும் விமான எரிபொருளை இப்படி வீணாக்கியிருக்கக்கூடாது என்றும் சிலர் கூறியிருக்கின்றனர்.

இந்தப் பயணத்திற்கான பயணச் சீட்டின் விலை சுமார் 12 ஆயிரத்து அறநூறு ரூபாயாக இருக்கலாம் என்கிறார் ஸாங். அவருக்கு உறுதியாகத் தெரியவில்லை. காரணம், பயணச்சீட்டுக் கட்டணத்தைச் செலுத்தியது அவர் வேலைபார்க்கும் நிறுவனம்!

12670243_10153235540675163_4568455741583

12661999_10153235540665163_801178187598212670448_10153235540670163_7144672445273

BBC

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.