Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்த நாள்: 14-7-1958

அ-அ+

ஈராக்கில் 1921 முதல் 1958 வரை மன்னராட்சி நடைபெற்றது. அதற்கு எதிரான நடந்த புரட்சியில் 14-7-1958-ல் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அதன்பிறகு அப்துல் கரீம் காசிம் ஈராக்கின் புதிய தலைவரானார். 1921 முதல் 1933 வரை ஹசிம் குடும்பத்தைச் சேர்ந்த பைஷல் I மன்னராக இருந்தார். இவரது முழுப்பெயர் அலி அல்-ஹாசிமி. 1933 முதல் 1939 வரை காஜி I மன்னராக இருந்தார். அதன்பின் 3-வது மன்னராக 1939 முதல் 1958 வரை பைஷல் II மன்னராக இருந்தார். இவர் காஜியின் மகன் ஆவார். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் * 1933- ஜெர்மனியில் நாசிக் கட்சி தவிர்த்து

 
 
 
 
ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்த நாள்: 14-7-1958
 
ஈராக்கில் 1921 முதல் 1958 வரை மன்னராட்சி நடைபெற்றது. அதற்கு எதிரான நடந்த புரட்சியில் 14-7-1958-ல் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அதன்பிறகு அப்துல் கரீம் காசிம் ஈராக்கின் புதிய தலைவரானார்.

1921 முதல் 1933 வரை ஹசிம் குடும்பத்தைச் சேர்ந்த பைஷல் I மன்னராக இருந்தார். இவரது முழுப்பெயர் அலி அல்-ஹாசிமி. 1933 முதல் 1939 வரை காஜி I மன்னராக இருந்தார். அதன்பின் 3-வது மன்னராக 1939 முதல் 1958 வரை பைஷல் II மன்னராக இருந்தார். இவர் காஜியின் மகன் ஆவார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

* 1933- ஜெர்மனியில் நாசிக் கட்சி தவிர்த்து அனைத்து அரசியற் கட்சிகளும் தடை செய்யப்பட்டன.

* 1948 - இத்தாலியின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பல்மீரோ டொக்ளியாட்டி பாராளுமன்றத்துக்கு முன் வைத்து சுடப்பட்டார்.

* 1966 - குவாத்தமாலா நகரில் மனநோய் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 225 பேர் பரிதாபமாக இறந்தனர்.

* 1967 - நாசாவின் 'சேர்வெயர் 4' என்ற ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது. * 1989 - பிரெஞ்சுப் புரட்சியின் 200-வது ஆண்டு நிறைவை பிரான்ஸ் கொண்டாடியது.

* 1995- MP3 பெயரிடப்பட்டது.

* 1995 - இலங்கையின் புக்காரா ரக விமானம் ஒன்றை விடுதலைப்புலிகள் சுட்டு வீழ்த்தினர்.

* 2002 - பாஸ்டில் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரெஞ்சு அதிபர் ஜாக் சிராக் கொலை முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பினார்.

* 2007 - ஐரோப்பாவில் மரபுவழி இராணுவப் படைகள் குறித்த உடன்பாட்டில் இருந்து ரஷ்யா விலகியது.
 

 

 

மரைனர்-4 விண்கலம் முதன்முதலாக செவ்வாய் கிரணத்தை அருகில் சென்று படம் பிடித்த நாள்: 14-7-1965

 
 அ-அ+

அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து 1964-ம் ஆண்டு நவம்பர் 28-ந்தேதி 'மரைனர் 4' என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

 
 
 
 
மரைனர்-4 விண்கலம் முதன்முதலாக செவ்வாய் கிரணத்தை அருகில் சென்று படம் பிடித்த நாள்: 14-7-1965
 
அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து 1964-ம் ஆண்டு நவம்பர் 28-ந்தேதி 'மரைனர் 4' என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட இது, 1965-ம் ஆண்டு ஜுலை 14-ந்தேதி செவ்வாய் அருகில் சென்று துல்லியமாக படம் எடுத்து பூமிக்கு அனுப்பியது. இதனால் செவ்வாய் கிரகத்தை அருகில் சென்று படம் பிடித்த முதல் விண்கலம் இது என்று 'மரைனர் 4' பெயர் பெற்றது.

இதற்குமுன் எந்த விண்கலமும் செவ்வாயை இதுபோல் அருகில சென்று படம் பிடிக்கவில்லை.

https://www.maalaimalar.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கை இல்லை; கால் இல்லை... ஆனால், போட்டோகிராபியில் அசத்தும் அஹ்மத் ஜுல்கர்னைன்!

 

எப்போதும்  உங்கள்  நம்பிக்கையின் வெளிச்சம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சிறந்த விஷயங்களை நம்புங்கள். அதை நோக்கி உழையுங்கள். 

கை இல்லை; கால் இல்லை... ஆனால், போட்டோகிராபியில் அசத்தும் அஹ்மத் ஜுல்கர்னைன்!
 

``என் பணிகளை நானே செய்துகொள்ள என்னிடம் தனி வழி இருக்கிறது. நான் மகிழ்ச்சியோடு அதைச் செய்கிறேன்" தன் புகைப்படங்கள் குறித்தும் தன்னைக் குறித்தும் யாராவது கேட்கும்போது, சிறு புன்னகையுடன் அஹ்மத் ஜுல்கர்னைன் கூறும் வார்த்தைகள் இவை. சின்னச் சின்னத் தடுமாற்றங்களுக்கே சோர்ந்துபோய் நம்பிக்கை இழப்பவர்களுக்கு, அஹ்மத்தின் வாழ்வு நம்பிக்கையின் முடிச்சுகளை இறுக்கி, தேடலை நோக்கித் தள்ளும். 

இந்தோனேஷியாவைச் சேர்ந்த அஹ்மத் ஜுல்கர்னைன், ஒரு புகைப்படக் கலைஞர். தனது நேர்த்தியான புகைப்படங்கள் மற்றும் வித்தியாசமான போட்டோ ஷூட்கள் மூலம் கவனம் ஈர்ப்பவர். அஹமத்தின் புகைப்படங்களைப் பார்த்து பிரமிப்பவர்கள், அதை எடுத்தவர் யார் எனக் கேட்டு அஹமத்தைப் பார்க்கும்போது ஒரு கணம் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். ஆம், அஹமத் பிறவியிலேயே முழங்கைக்குக் கீழே கைகளும், இரண்டு கால்களும் இல்லாதவர். 1992-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் பிறந்த இவருக்கு, பிறவியிலேயே இந்தக் குறைபாடு இருந்துள்ளது. அவர் வளர வளர, அவரது அன்றாட வேலைகளைச் செய்வதே  அவருக்கு சிரமமாக இருந்தது. ஆனால், அஹமத் தன் பெற்றோருக்கு எந்தவிதமான சிரமமும் கொடுக்காமல், தானே தன்னுடைய அன்றாடப்  பணிகளைச் செய்ய ஆரம்பித்தார். 

அஹ்மத்

 

 

தனது உடல்சார்ந்த எந்தவித அவநம்பிக்கையும்கொள்ளாமல் வாழ்க்கையைத் தனக்குப் பிடித்தமானதாக வடிவமைத்துக்கொண்டார். தன் நண்பர்களுடன் இன்டர்நெட் கபேவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது புகைப்படம் பற்றிப் பேச்சு எழுந்துள்ளது. அதுதான் அஹமத்துக்கு புகைப்படம்குறித்த எண்ணம் தொடங்கிய கணம். அதன் பிறகு தனது விடாமுயற்சியின் வழியே கேமராவைக் கையாளத் தொடங்கி, தற்போது அசத்தலான புகைப்படங்களை எடுத்துவருகிறார். புகைப்படம் எடுப்பதோடு நிற்காமல், அதை எடிட் மற்றும் ரீ-டச் செய்வதையும் அவரே மேற்கொள்கிறார்.

 

 

அஹ்மத் புகைப்படம் எடுக்கும் முறையைக் காண்பவர்கள் அதிசயித்துப் பார்ப்பார்கள். தனது முகத்துக்கு நேராக கேமராவை வைத்தபடி ஆன்/ஆப் பட்டனை தனது வாயைப் பயன்படுத்தி இயக்குகிறார். தனது முழங்கையில் அதிகப்படியாக வளர்ந்துள்ள சதையைப் பயன்படுத்தி ஷட்டர் ஸ்பீடை சரிசெய்கிறார். இதைப் பார்த்து மற்ற புகைப்படக்காரர்கள் அதிசயித்துப்போகிறார்கள். இவரது `DZOEL' என்ற புகைப்பட நிறுவனம் மூலம் புகைப்படம் எடுப்பதோடு நில்லாமல், புகைப்படக் கலையைப் பிறருக்குப் பயிற்றுவிக்கவும் செய்கிறார். பல்வேறு இடங்களுக்குப் பயணித்து புகைப்படம் எடுப்பதற்கு ஏதுவாக அவரே ஒரு வாகனத்தையும் உருவாக்கியுள்ளார். தனது தேவைக்கேற்ப வாகனத்தை டிசைன் செய்த அஹமத், அந்த வண்டியை தனது நண்பர்கள் மற்றும் பெற்றோரின் உதவியுடன் உருவாக்கி முடித்துள்ளார். 

அஹ்மத்

தன்னைச் சுற்றியுள்ளவர்களை எப்போதும் மகிழ்ச்சியுடன் வைத்திருப்பது அஹமத் ஜுல்கர்னைனின் இயல்பு. `இவ்வளவு தன்னம்பிக்கையுடன் எப்படி இருக்கிறீர்கள்?' என ஆங்கிலப் பத்திரிகை ஒன்று கேட்டதற்கு, அஹமத்  ``மூன்று விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்'' என்கிறார். 

அஹ்மத்

அவை,

1) சூழ்நிலைகளை எளிதில் தாண்டிச் செல்ல வேண்டும். மோசமான சூழ்நிலைகள் காரணமாக முடங்கிப்போகக் கூடாது. அவற்றைக் கடந்துச் செல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.

2) உங்களிடம் எலுமிச்சம்பழம் இருக்கிறது எனக் கவலைப்படாதீர்கள். அதைக் கொண்டு எலுமிச்சம் பழச்சாறு தயார்செய்ய கற்றுக்கொள்ளுங்கள். உங்களிடம் இல்லாதவற்றைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். உங்களிடம் இருப்பதை வைத்து எதை உருவாக்க இயலுமோ, அதைச் சிறப்பாகச் செய்யுங்கள். 

3) நம்பிக்கையுள்ளவராக இருங்கள். சிறந்தவற்றையே நம்புங்கள். எப்போதும்  உங்கள்  நம்பிக்கையின் வெளிச்சம் குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சிறந்த விஷயங்களை நம்புங்கள். அதை நோக்கி உழையுங்கள். 

அஹமத் ஜுல்கர்னைன் போல தன்னம்பிக்கையுடைய பலரும் `குறைபாடு' என்ற ஒரு வார்த்தையை தேவையில்லாத ஒன்றாக்கி, அனைத்தையும் அசாத்தியத் துணிச்சலுடன் எதிர்கொள்கிறார்கள். அந்த நம்பிக்கை ஔியில் எல்லோருக்குமான விடியலும் இருக்கிறது. 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பேசும் படம்: வண்ணங்களின் சங்கமம்!

 

 
pesum%206

 

pesum%201
       
 
 
pesum%202
 

 

pesum%203
 
pesum%204
 
  • தொடங்கியவர்

 

உலகின் பயங்கரமான தொங்கு நடைபாதை

ஸ்பெயினில் உள்ள கிங்ஸ் பாத் நடைபாதை 3 கிலோ மீட்டர் நீளம், 100 மீட்டர்களுக்கும் அதிகமான உயரம் கொண்டது.

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: குரூப்ல டூப்பு

 

 
mem%205
mem%201
mem%2010
 
mem%203
mem%206
mem%209
  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

facebook.com/karthekarna

பாஸ்ட்புட் கடைல லேட்டாகுது, எனக்கு எப்ப போடுவனு பொலம்பாம பொறுமையா போனை நோண்டிட்டு நின்னோம்னா மாஸ்டர், கூட ரெண்டு பீஸ் சிக்கன் போடுறார். #Verified

facebook.com/rjthamilan

பரிணாம வளர்ச்சி என்பது துணி துவைப்பதற்கெல்லாம் motivational song கேட்பது.

106p1_1531224436.jpg

facebook.com/samuthiram.ramar.75

எவ்வளவு தூரம் போய் யோசிச்சுப் பார்த்தாலும் சந்தான பாரதி முகமும் ஜண்டா மாத்ரே முகமும்தான் வருதேயொழிய அமித்ஷா மூஞ்சி... ம்ஹூம்!

facebook.com/seshathiri.d

சுடுகாடு சுடுகாடுனு கேவலமா பேசாதீங்க, அங்க போறதுக்குத்தான் அவனவன் செத்துக்கிட்டிருக்கான்.

twitter.com/Kozhiyaar

‘நான் கேட்கிறதுக்கு மறைக்காம உண்மையைச் சொல்லுவீங்களா?’ என்ற கேள்வி எழும்போதே ‘என்ன பொய் சொல்லலாம்’னு யோசிக்கத் தொடங்கிடுது மனசு!

106p2_1531224480.jpg

twitter.com/amuduarattai

பல நாய்களின் பட்டினிச் சாவுக்கு காரணம் ஃபிரிட்ஜுகளே.

twitter.com/Railganesan

நியாயத்தைப் பேசும் ஆண்களுக்கு “போராளி” எனவும், பெண்களுக்கு “வாயாடி” எனவும் சமூகம் பெயர் வைத்திருக்கிறது!

twitter.com/Aruns212

பெண்கள் கற்றுக்கொண்ட முதல் தற்காப்புக்கலைக்கு ‘அண்ணா’ என்று பெயர்.

106p3_1531224499.jpg

twitter.com/kumarfaculty

ஒன்றுக்கு மேற்பட்ட சட்டைகளுக்கு மேட்ச் ஆகிற மாதிரி பேன்ட் துணி எடுப்பவன் சந்தேகமே இல்லாமல் மிடில் கிளாஸ்தான்.

twitter.com/Akku_Twitz

சிட்னி நகர் போல மதுரை மாநகர் மாறும்! -செல்லூர் ராஜூ 

#அதுக்கு நீங்க சிட்னிக்குதான் மதுரைனு பேரு வெக்கணும்.

106p4_1531224513.jpg

twitter.com/thoatta

ஒருவேளை தமிழிசைய மாத்தினா, தமிழிசை கட்சி ஆபீஸ் விட்டுப் போறப்ப, மீம் கிரியேட்டர்ஸ் எல்லாம் தற்போதைய ட்ரெண்டுபடி ‘டீச்சர், எங்கள விட்டுப் போகாதீங்க’ன்னு குறுக்க நின்னு அழுவாங்கன்னு நினைக்கிறேன்.

twitter.com/gowrisa28263028

பகல் உறக்கம் என்பது அவ்வளவு சாதாரணமானதல்ல, அதற்கு இரவில் விழித்திருக்க வேண்டும்.

twitter.com/kumarfaculty:

அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்ல ஒரே ஒரு வெற்றி போதுமானதாக இருக்கிறது.

106p5_1531224550.jpg

twitter.com/rahimgazali

முன்பெல்லாம் மீன், இறைச்சி வாங்க, பனையோலைதான். மளிகைப் பொருள்கள் வாங்க, துணிப்பைதான். எண்ணெய் வாங்க, பழைய ஹார்லிக்ஸ் பாட்டில்தான். டீ வாங்க, தூக்குவாளிதான். ஆனால், இதையெல்லாம் ஒழித்துவிட்டு நாகரிகம் என்ற பெயரில் பிளாஸ்டிக் பைகளுக்கு வழி விட்டதுதான் நாம் செய்த மிகப்பெரிய தவறு.

www.facebook.com/naaraju0

அவனவன் அடுத்த வாரத்துக்குப் பெட்ரோல் (பெட்ரோல்ன்னா, வண்டிக்கு ஊத்துற பெட்ரோல்!) வாங்க பெர்சனல் லோன் போடலாமான்னு யோசிச்சுட்டு இருக்கான். இந்த இந்து மக்கள் கட்சி, அனுமான் சேனா, இராமர் வானரா மாதிரி பாஜக’வோட பிரதர், சிஸ்டர் & கசின் கன்சர்ன்கள் என்னாடான்னா, பெட்ரோல்ல வெடிகுண்டு செய்றதோட இல்லாம, அதை அவிய்ங்க வீட்டுக்குள்ளயே போட்டு வேற விளையாடிக்குறாய்ங்க..... பகுமானக் கோழி, பறந்துக்கிட்டே முட்டை போடும்ன்றது வாஸ்தவம்தான். அதுக்காக, ஏரோபிளேன்ல போயா போட்டு வைக்கும்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

கால்பந்து ரசிகையை உலக பிரபலமாக்கிய ’ஹனி ஷாட்’

2014 உலகக்கோப்பை போட்டியின்போது மக்கள் கூட்டத்தின் மத்தியில் இருந்து கேமராக்களால் படம் பிடிக்கப்பட்ட நடாலியா பெட்டன்கோர்ட், எதிர்பாராத வகையில் உலக அளவில் பிரபலம் அடைந்தார்.

சித்தரிப்பு படம்

உலகக்கோப்பை போட்டி ஒன்றில் மக்கள் கூட்டத்தில் இருந்து ”கவர்ச்சிகரமான பெண்” ஒருவர் கேமராக்காளல் படம் பிடிக்கப்படுவது "ஹனி ஷாட்" என்று அறியப்படுகிறது.

இந்த உலகக்கோப்பை நடைபெற தொடங்கியபோது இந்த விவகாரம் விவாதப் பொருளானது.

மக்கள் கூட்டத்தில் ”கவர்ச்சிகரமான பெண்களை” இலக்கு வைத்து ஒளிபரப்பாளர்கள் படம் பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று ஃபிஃபா கூறியது.

2014ம் ஆண்டு கொலம்பியாவுக்கும், பிரேசிலுக்கும் இடையில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியின்போது, நடாலியா பெட்டன்கோர்ட் "ஹனி ஷாட்" சம்பவம் நிகழ்ந்தது.

அந்த சில வினாடிகள் படம் பிடிக்கப்பட்டு திரைகளில்தெரிந்த தருணம் அவரை மாடல் அழகியாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவும் மாற்றிவிட்டது.

"கேமராக்கள் என்னை இலக்கு வைத்து படம்பிடிக்கும் என்று எனக்கு தெரியாது" என்று 100 பெண்கள் கட்டுரை தொடருக்காக பிபிசியிடம் பேசிய நடாலியா, "அதிலிருந்து தொடங்கி இவ்வாறு எல்லாம் நிகழும் என்று எனக்கு எந்த எண்ணமும் ஏற்படவில்லை" என்று கூறினார்.

இவரது படத்தை பார்த்த பாடகர் ரிஹான்னா, மக்கள் கூட்டத்தில் இருந்த நடாலியாவை "கொலம்பிய அழகி" என்று குறிப்பிட்டு பகிர்ந்தார்.

"அதுவொரு வேடிக்கையான தருணம். அதுவே, அந்த சில வினாடிகளே பிரபலம் அடைவதற்கான தருணமாக அமைந்தன. நான் விரும்புகின்ற பாப் இசை நட்சத்திரமிடம் இருந்து நல்லதொரு டுவிட்டர் செய்தி பரிமாற்றமும் நடைபெற்றது" என்று நடாலியா கூறினார்.

நடாலியா பெட்டன்கோர்ட்படத்தின் காப்புரிமைNATALIA BETANCOURT Image captionரஷ்யாவில் நடைபெறும் 2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டியிலும், மக்கள் கூட்டத்தில் இருந்து எல்லா நாடுகளை சேர்ந்த ரசிகர்களையும் புகைப்படக் கலைஞர்கள் படம் படித்துள்ளனர்.

பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் இருந்து நடாலியா கொலம்பியாவுக்கு திரும்பியபோது, அடுத்து நடக்க போகும் நிகழ்வுகளுக்கு அவர் தயாராகவே இல்லை.

"அந்த புகைப்படம்தான் ஊடகங்களுக்கான கதவை எனக்கு திறந்தது" என்று அவர் விளக்குகிறார்.

"அதற்கு முன்னால், ஊடகங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னுடைய காதலரோடு ஒரு கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தேன்" என்று அவர் குறிப்பிட்டார்.

சில மாதங்களில், ஆண்களுக்கான பத்திரிகைகளின் முன்அட்டை படமாக அவர் புகழ்பெற்றார்.

ஒரு மீட்புதவியாளர் இறந்த நிலையில் குகையில் சிக்கிய சிறாரை மீட்கும் பணிகள் தீவிரம்

 

"டான்ஸிங் வித் த ஸ்டார்ஸ்" என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியின் கொலம்பிய பதிப்பில் நான் பங்கேற்றேன் என்று கூறும் நடாலியா, "அது தான் திருப்புமுனை. அதன் பின்னர் ஊடகங்களின் பார்வையில் இருப்பது வசதியாகவும், பதற்றமில்லாமலும் தோன்ற தொடங்கியது" என்று அவர் குறிப்பிடுகிறார்.

அதுமுதல் பல கொலம்பிய வணிக பிராண்டுகளில் பணிபுரிந்துள்ள இவர், இப்போது சர்வதேச தலைமுடி பராமரிப்பு நிறுவனம் ஒன்றின் மாடல் அழகியாக இருந்து வருகிறார்.

"இன்னும் என்னுடைய காதலரோடு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறேன். 2014ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு என்னோடு வந்ததும் அவர்தான். நாங்கள் 13 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்" என்று அவர் தெரிவிக்கிறார்.

மக்கள் கூட்டத்தில் இருந்து படம் பிடிக்கப்பட்டு பிரபலமானது குறித்து சமூக ஊடகங்களில் சில எதிர்மறை விமர்சனங்களும் எழுந்தன

"நல்ல கருத்துகள் அதிகமாக இருந்தபோதிலும், காயப்படுத்தி எழுதியோரை கண்டுகொள்ளமால் இருப்பது மிகவும் கடினமானது" என்கிறார் நடாலியா.

பெல்ஜியம் ரசிகைபடத்தின் காப்புரிமைREUTERS

எல்லா கால்பந்து போட்டிகளிலும், "கவர்ச்சியான பெண்களை" படம் பிடிப்பதை ஒளிபரப்பாளர்கள் நிறுத்த வேண்டுமென கேட்டுகொள்ளப்பட்டுள்ளதாக ஃபிஃபாவின் பன்முகத்தன்மை தலைவர் இந்த வாரம்தான் தெரிவித்திருக்கிறார்.

"இதனை நாங்கள் ஒளிப்பாரப்பாளர்களிடம் தெரிவித்துள்ளோம். போட்டியை நடத்துகின்ற ஒளிபரப்பு சேவைகளிடமும் கூறியுள்ளோம்" என்று ஃபெடெரிகோ அடிடியி குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா 2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின்போது, புகைப்பட முகமையான 'கெட்டி இமேஜஸ்'(getty images) "உலகக்கோப்பை போட்டிகளில் கவர்ச்சியான ரசிகைகள்" என்ற தலைப்பில் இளம் பெண்களை மட்டுமே கொண்ட புகைப்படத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

"வருத்தத்திற்குரிய தவறான முடிவு" என்று கூறி இந்த நிறுவனம் அதனை அகற்றிவிட்டது. "ஹனி ஷாட்" என்கிற இந்த நிகழ்வு புதிதான ஒன்றல்ல.

இங்கிலாந்து பெண் ரசிகைகள்படத்தின் காப்புரிமைTHIS FAN GIRL Image captionஇங்கிலாந்து ரசிகர்களின் இந்த 5 புகைப்படங்களும் இணையதளத்தில் தேடினால் வழங்கப்படும் ஆபாசமான பெண் புகைப்படங்களுக்கு பதிலாக அமையும் என்று பரப்புரையாளர்கள் நம்புகின்றனர்.

"நான் எப்போதும் ஒரு கால்பந்து ரசிகைதான்" என்கிறார் நடாலியா.

"கால்பந்து போட்டிகளை பார்க்க நான் விரும்புகிறேன். உலகக்கோப்பை விளையாட்டு சூழலை நான் நேசிக்கிறேன். பிரேசிலில்தான் முதல் முறையாக உலகக்கோப்பை விளையாட்டுக்களை பார்த்தேன். அதன் பின்னர் எந்த உலகக்கோப்பை விளையாட்டுக்களையும் பார்க்காமல் விட்டுவிட கூடாது என்று உறுதி எடுத்துள்ளேன்" என்று அவர் கூறுகிறார்,

நடாலியா போல வேறு சில பெண்களும் இவ்வாறான "ஹனி ஷாட்" மூலம் பிரபலம் அடைந்துள்ளனர்.

குறிப்பிடும்படியாக, பமிலா அன்டர்சனை கூறலாம். கனடாவில் உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்றில் மக்கள் கூட்டத்தில் இருந்து, கேமரா கண்களால் அவர் படம் பிடிக்கப்பட்டார்.

"ஹனி ஷாட்" என்றால் என்னவென்று எனக்கு தெரியாது" என்கிறார் நடாலியா.

இதனை குற்றம் அல்லது பெண்களை பொருளாக பாவிப்பது என்று கூறமாட்டேன். ஒரு வகையில் இது நல்லது என்று எண்ணுகிறேன். ஆண்களுக்கும், பெண்களுக்குமான விளையாட்டு கால்பந்து என்பதை இது காட்டுகிறது" என்பது அவரது கருத்தாக உள்ளது.

நடாலியாவின் "ஹனி ஷாட்" கதை இதோடு முடியவில்லை.

சில வாரங்களுக்கு முன்னால், உலகக்கோப்பை கால்பந்து வினையாட்டை பார்ப்பதற்கு அவர் ரஷ்யாவுக்கு சென்றுள்ளார்.

"கொலம்பியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது என்னை படம் பிடித்தனர். அது எனக்கு பெருமகிழ்ச்சியை அளித்தது" என்று அவர் கூறுகிறார்.

பிரேசிலில் நான் புன்னகையோடும், உணர்ச்சி பெருக்கோடும் இருந்தேன். இந்நேரத்தில் நான் கேமராவில் கவலையுடனும், சேகமாகவும் காணப்படுகிறேன்" என்று இந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்து அரையிறுதியில் வெளியேறியபோது நடாலியா தெரிவித்திருக்கிறார்.

(அமிலியா மற்றும் வலேரியா பெராஸ்சோவால் இந்த கட்டுரை எழுதப்பட்டது)

https://www.bbc.com

  • தொடங்கியவர்

பழமையான லார்ட்ஸ் மைதானத்தில் பசுமையாக மலர்ந்த காதல்!

 

லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிக்கு இடையே ஒரு காதல் காட்சி தனது கிளைமாக்ஸை எட்டியுள்ளது.

காதல்

Photo Credit: https://twitter.com/Sassy_Soul_

 

 

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பழம்பெருமைக் கொண்ட லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிக்கொண்டிருந்தது. இந்தக்காட்சிகளை படம் பிடித்துக்கொண்டிருந்த கேமராமேன் தனது கேமராவை சற்று ஸ்டேடியம் பக்கம் திரும்பினார். அங்கு ஒரு காதல் காட்சி தனது கிளைமாக்ஸை எட்டிக்கொண்டிருந்தது. மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் திடீரென காட்டப்பட்ட காதல் காட்சியில் ஆர்வமாகினர்.  இளைஞர் ஒருவர் தோழியிடம் தனது காதலை தெரிவித்துக்கொண்டிருந்தார். மண்டியிட்டு காத்திருந்த அந்த இளைஞருடன் மைதானத்தில் கூடியிருந்த அனைவரும் பதிலுக்காக காத்திருந்தனர். அந்தப்பெண் பச்சைக்கொடி காட்டிவிட்டார். ஆரத்தழுவி கட்டியணைத்து தனது சம்மதத்தை தெரிவித்தார். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள் இவர்களது திருமணம் லார்ட்சில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் பரவத்தொடங்கியது. இவர்களுக்கு ஏராளமானோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

 

கிரிக்கெட்டை நேசிக்கும் ஒருவனுக்கு 200 வருட பாரம்பரியம் கொண்ட லார்ட்சில் காதல் நிறைவேறியது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது போல். வெற்றி, தோல்வி, கண்ணீர், கொண்டாட்டம் இவைகளுடன் இந்தப் பசுமையான காதலையும் லார்ட்ஸ் சுமந்து நிற்கிறது. 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

கண்டுபிடிப்புகளின் கதை: உலகைக் கவர்ந்த சைக்கிள்

 

 
 
 
Bicycle%20-2
BicyclePlymouthjpg
 
 

குழந்தை நடக்க ஆரம்பிக்கும்போதே அறிமுகமாகிவிடும் வாகனம் சைக்கிள். சிறுவர் முதல் பெரியவர்வரை உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனமும் சைக்கிள்தான். சைக்கிளுக்கு எரிபொருள் தேவை இல்லை. அதனால் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து இல்லை. மற்ற வாகனங்களைவிட விலையும் குறைவாக இருப்பதால் எளிய மக்களின் விருப்பமான வாகனமாக இருந்துவருகிறது.

   
 

சைக்கிள் கண்டுபிடிப்பு நீண்ட காலத்துக்கு முன்பே சீனாவிலும் ஐரோப்பாவிலும் ஆரம்பித்துவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இருக்கின்றன. 1790-ம் ஆண்டு பிரான்சில் வசித்த கோம்டி மீடி சைவ்ராக், மரத்துண்டுகளைச் செதுக்கிக் கொண்டிருந்தபோது தற்செயலாக சைக்கிள் போன்ற வாகனத்தை உருவாக்கினார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உழைத்து முதல் சைக்கிளைக் கொண்டுவந்தார். இந்த சைக்கிளில் அமர்ந்து, கால்களால் தரையில் உந்திச் செல்ல வேண்டும். இதை அறிஞர்கள், பொதுமக்களுக்கு அறிமுகமும் செய்தும் வைத்தார்.

1816-ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த பாரன் கார்ல் வோன் ட்ரைஸ், கோம்டி உருவாக்கிய சைக்கிளின் மாதிரியை அடிப்படையாக வைத்து, புதிதாகப் பல விஷயங்களைச் சேர்த்தார். ஆணிகளைத் தவிர, சைக்கிளின் அனைத்து பாகங்களும் மரத்தால் செய்யப்பட்டன. முன் சக்கரமும் பின் சக்கரமும் இணைக்கப்பட்டிருந்தது. முன் சக்கரம் திருப்பும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. பெடல் மட்டும்தான் இந்த சைக்கிளில் இல்லை. இதுதான் இன்று நாம் பயன்படுத்தும் நவீன சைக்கிள் போன்று இருந்தது. 30 கிலோ எடை கொண்ட சைக்கிளுக்கு 1818-ம் ஆண்டு காப்புரிமையும் பெற்றார். அது ஐரோப்பா முழுவதும் பரவியது.

800px-Bicycletwo1886jpg
 

லண்டனைச் சேர்ந்த டென்னிஸ் ஜான்சன், பாரன் கார்ல் சைக்கிளை மேலும் எளிதாகப் பயன்படுத்தும் விதத்தில் மாற்றினார். மரத்துக்குப் பதிலாக உலோகங்களைப் பயன்படுத்தினார். இதனால் சாலையில் சைக்கிள் எளிதாகவும் சற்று வேகமாகவும் சென்றது. ஹாபி ஹார்ஸ் என்று அழைக்கப்பட்ட இந்த சைக்கிள்கள் மிகவும் பிரபலமாகின. ஆனால் அருகில் நடந்து செல்பவர்களுக்கு ஆபத்தை விளைவித்ததால், 1820-ம் ஆண்டு பயன்பாடு குறைந்துவிட்டது.

1839-ம் ஆண்டு முதலில் மிதிக்கக்கூடிய பெடல் வைத்த சைக்கிளை உருவாக்கினார் கிர்க்பாட்ரிக் மெக்மில்லன். இன்றைய நவீன சைக்கிளில் இருந்த அத்தனை அம்சங்களும் இதில் இருந்தன. முன் சக்கரத்தைவிடப் பின் சக்கரம் சற்றுப் பெரிதாக இருந்தது. அதனால்தான் சைக்கிள் என்றதும் மெக்மில்லனின் நினைவு நம் எல்லோருக்கும் வந்துவிடுகிறது.

பிரான்ஸைச் சேர்ந்த ஏர்னஸ்ட் மிசாக்ஸ், 1863-ம் ஆண்டு பால் பேரிங், கிராங்ஸ் போன்றவற்றை இணைத்து சைக்கிளை இன்னும் எளிதாக மாற்றினார். இவரே வணிக ரீதியில் சைக்கிள்களை விற்பனைக்குக் கொண்டுவந்தவர். 1870 முதல் 1880வரை பென்னி ஃபார்திங் என்ற இங்கிலாந்துக்காரர் தயாரித்த, மிகப் பெரிய பின் சக்கரமும் மிகச் சிறிய முன் சக்கரமும் கொண்ட சைக்கிள்கள் பிரபலமாக இருந்தன. இவை இவரது பெயரிலேயே அழைக்கப்பட்டன.

Johnson-londonjpg
 

1886-ம் ஆண்டு ஜான் கெம்ப் ஸ்டார்லி இரு சக்கரங்களும் ஒரே அளவில் இருக்கும் சைக்கிளை உருவாக்கினார். இது பயணம் செய்ய மிகவும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருந்தது. இவரே நவீன சைக்கிளின் தந்தையாகக் கருதப்படுகிறார்.

ரிம், பற்சக்கரம், சங்கிலி, ரப்பர் டியூப், டயர்கள், பிரேக் என்று முன்னேற்றங்கள் வந்தன. ஜான் கெம்ப் ஸ்டார்லியுடனும் டான் பாய்ட் டன்லப்புடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, சர் எட்மண்ட் கிரேன் இங்கிலாந்தில் ’ஹெர்குலிஸ்’ என்ற சைக்கிள் உற்பத்தி நிறுவனத்தை ஆரம்பித்தார். பத்தே ஆண்டுகளில் உலகம் முழுவதும் இந்த சைக்கிள்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. 1910 முதல் 1950வரை உலகின் சாலைகளில் முதன்மையான வாகனமாக சைக்கிளே இருந்தது.

இன்று குழந்தைகள் சைக்கிள், பெண்கள் சைக்கிள், பந்தய சைக்கிள், மலையேற்ற சைக்கிள் என்று பலவும் வந்துவிட்டன. 2010-ம் ஆண்டு கணக்கின்படி உலகம் முழுவதும் 12,500 முதல் 13,000 கோடி சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்பட்டன!

(கண்டுபிடிப்போம்)

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பெயர் ஷிவ் ஷங்கர் பத்ரா; ஊர் மேற்கு வங்கம்.. அடையாளம் மெஸ்ஸியின் தீவிர ரசிகர்


 

 

fifa-fever-love-for-messi-makes-bengal-fan-paint-house-in-argentina-colours

 

உலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது. கால்பந்து ஆர்வலர்களை விளையாட்டுக் காய்ச்சல் தொற்றிக் கொண்டிருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை இந்த கால்பந்து ரசிகர்கள். இவர்களும் தங்கள் அன்பை ஆர்வத்தை வித்தியாசமாக வெளிப்படுத்துவதில் வல்லவர்கள்தான். அந்த வகையில் கொல்கத்தாவின் ஷிவ் சங்கர் பத்ரா ஒரு தீவிர மெஸ்ஸி ரசிகர்.

எவ்வளவு பெரிய ரசிகர் என்றால் தனது டீக்கடைக்கும் வீட்டுக்கும்  அர்ஜென்டினா கொடியின் நிறம் பூசியிருக்கிறார்.
ரஷ்யாவுக்குச் சென்று நேரில் கால்பந்து போட்டியைக் காண்பது என்பது ஷிவ் சங்கர் பத்ராவின் பொருளாதார நிலைக்கு சாத்தியமில்லை. ஆனால், மெஸ்ஸி மீதான அன்பை அவரால் இப்படி வெளிப்படுத்த முடியும்.

 

பத்ரா ஒரு வெளிநாட்டு சுற்றுலா ஏஜெண்டை அணுகி தன்னை ரஷ்யா அனுப்புமாறு கோரியுள்ளார். செலவு ரூ.1.5 லட்சமாகும் என அவர் கூறியிருக்கிறார். பத்ராவிடம் இருந்ததோ ரூ.60,000 மட்டுமே.

உடனே பத்ரா வீட்டுக்கு அர்ஜென்டினா கொடியின் நிறம் பூசியிருக்கிறார்.

இது குறித்து பத்ரா, "எனக்கு சிகரெட், மதுப் பழக்கம் இல்லை. ஆனால் ஒரேஒரு போதை இருக்கிறது. அது மெஸ்ஸி மீதும் அர்ஜென்டினா அணி மீதுமான போதை. எனது வருமானம் குறைவுதான். ஆனால், ஒவ்வொரு முறை உலகக்கோப்பை போட்டி நடக்கும் போதும் எனது வீடு இப்படி ஜொலிக்கும். வீட்டின் வெளிப்புற சுவர் மட்டுமல்ல வீட்டின் அறைகளும் அர்ஜென்டினா கொடி நிறத்தில் தான் உள்ளன" என்றார்.

பத்ரா மட்டுமல்ல பத்ராவின் மனைவி, குழந்தைகளும் மெஸ்ஸியின் தீவிர ரசிகர்கள் என்பதே உச்சபட்ச ருசிகரம். உலகக் கோப்பை போட்டியின்போது அர்ஜென்டினா அணி விளையாடும் எல்லா நாட்களிலும் டீ, சமோசா இலவசமாக வழங்குகிறார்.
ஒவ்வோர் ஆண்டும் மெஸ்ஸின் பிறந்தநாளன்று ரத்த தான முகாம் நடத்துவது ஷிவ் ஷங்கரின் வாடிக்கை. இந்த ஆண்டு மெஸ்ஸியின் பிறந்தநாளன்று உலககோப்பை போட்டி நடைபெறுவதால் 30 பவுண்ட் எடையுள்ள கேக்கை வெட்ட பத்ரா முடிவு செய்துள்ளார். தன் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மெஸ்ஸியின் புகைப்படம் அச்சிடப்பட்ட டிஷர்ட் வழங்கவிருக்கிறார்.
பத்ராவைப் போல் மேற்குவங்க மாநில மக்களுக்கு கால்பந்து என்றால் அலாதிப் பிரியம்.

https://www.kamadenu.in

  • தொடங்கியவர்

பிபிசி தமிழ் நேயர்களின் பிரமிக்கும் ‘குறிஞ்சி’ நில படங்கள் ##BBCTamilPhotoContest

 

விக்னேஷ் - தஞ்சாவூர் Image captionவிக்னேஷ் - தஞ்சாவூர் வளசுப்ரமணியம் என் Image captionவளசுப்ரமணியம் என் ஷேக் அப்துல் காதர் Image captionஷேக் அப்துல் காதர் ரவீந்திர பெருமாள் Image captionரவீந்திர பெருமாள் முகமது இர்ஷாத் Image captionமுகமது இர்ஷாத் இக்வான் அமீர் Image captionஇக்வான் அமீர் ந. துளசி வர்மா - புதுச்சேரி Image captionந. துளசி வர்மா - புதுச்சேரி

 

https://www.bbc.com

  • தொடங்கியவர்
’ஸ்விம்’ ஷோ - 2018
 

image_9effb4ea3e.jpg

 

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற “ஸ்விம்” பெஷன் ஷோவின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு: மனோஜ் ரத்நாயக்க, வருண வன்னியாரச்சி, நிசல் பதுகே, பிரதீப் தில்ருக்ஷன)

image_9c477d31eb.jpg

image_74ef801403.jpgimage_6f4dd996e7.jpgimage_d622e448fd.jpgimage_20571baeeb.jpgimage_a2646c8814.jpgimage_052a53e921.jpgimage_8b3787813a.jpgimage_371f257a42.jpg

  •  

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

பெண்கள் 360: நம்பிக்கையே வாழ்வு

 

 
15CHBRIDIPA

நம்பிக்கையே வாழ்வு

 

புற்றுநோயில் இருந்து மீண்டவர்களின் கதைகளை என்னுடன் பகிர்ந்துகொண்டவர்களுக்கு நன்றி. வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டமே. நமது போராட்டத் திறனின் உச்சத்தைத் தீர்மானிப்பவை நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளே. நானும் எனது வெற்றிக்கதையை ஒரு நாள் உங்களுடன் விரைவில் பகிர்ந்துகொள்வேன்’ என்று அவர் கடந்த புதன் அன்று தெரிவித்தார். நம்பிக்கைதானே நோய்க்கு முதல் மருந்து.      

 

தலர் தினம்’ படத்தின் நாயகி சோனாலி பிந்த்ரேயை எளிதில் மறக்க முடியாது. ‘சற்றும் எதிர்பார்க்காத தருணத்தில் வாழ்க்கை நம் மீது தாங்க முடியாத அதிர்ச்சியைத் தூக்கிப் போடுகிறது. எனக்கு முற்றிய நிலையில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது’ என்று அவர் ட்வீட் செய்திருந்தார். நாடு முழுவதுமிருந்து பிரார்த்தனைகள் குவிந்தன. ‘உங்களுடைய அன்பு எனக்கு நெகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது.

sonali-bendre
புற்றுநோயில் இருந்து மீண்டவர்களின் கதைகளை என்னுடன் பகிர்ந்துகொண்டவர்களுக்கு நன்றி. வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டமே. நமது போராட்டத் திறனின் உச்சத்தைத் தீர்மானிப்பவை நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளே. நானும் எனது வெற்றிக்கதையை ஒரு நாள் உங்களுடன் விரைவில் பகிர்ந்துகொள்வேன்’ என்று அவர் கடந்த புதன் அன்று தெரிவித்தார். நம்பிக்கைதானே நோய்க்கு முதல் மருந்து.

கருணையற்ற குற்றம்

செ

ன்னை முகலிவாக்கத்தில் ஏழு வயதுக் குழந்தையை வல்லுறவு செய்து கொலைசெய்த குற்றத்துக்காக 27 வயது தஷ்வந்துக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்றம் அந்தத் தண்டனையை இந்த வாரம் உறுதி செய்தது. ‘குற்றவாளியின் மனிதத் தன்மையற்ற கொடூரச் செயலை விவரிக்க வார்த்தைகளே இல்லை. கருணைக்கும் பரிதாபத்துக்கும் எள்ளவுக்குக்கூட இவர் தகுதியற்றவர். இறந்த குழந்தையின் உடலை இவர் கையாண்ட விதம், அந்தக் குழந்தைக்கு அவர் இழைத்த கொடூரத்தைவிடக் குரூரமாக இருந்தது. மரண தண்டனைகூட இவருக்குக் குறைந்தபட்ச தண்டனைதான்’ என்று அந்தத் தீர்ப்பை அளித்த நீதியரசர் விமலா தெரிவித்துள்ளார்.

Judgement%202
 

தங்கம்வென்ற தீபா

தீபா கர்மாகர் இந்தியாவின் முன்னணி ஜிம்னாஸ்டிக் வீராங்கனை. ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை அவர் நூலிழையில் தவறவிட்டார். காலில் ஏற்பட்ட காயத்தால் இரண்டு ஆண்டுகளாக ஜிம்னாஸ்டிக் போட்டிகளிலிருந்து விலகியிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் துருக்கியில் மெர்ஸின் நகரில் நடைபெற்ற ‘மெர்ஸின் உலக சேலஞ்ச் கப்’ போட்டியில் பங்கேற்றார். தகுதிச் சுற்றில் சற்றுச் சிரமத்துடன் 11.85 புள்ளிகளை மட்டுமே பெற்றார். ஆனால், அதற்குப் பிறகு அவர் வெளிப்படுத்திய ஆட்டத்தில் நளினமும் நுணுக்கமும் நிறைந்திருந்தன. இறுதியில் 14.5 புள்ளிகள் பெற்று அவர் தங்கப்பதக்கம் வென்றார். தீபாவின் அடுத்த இலக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்வது.

isabel
 

இசையின் அரசி

பாடகரும் கிடாரிஸ்ட்டுமான மரியா இசபெல், ஈக்வெடார் நாட்டைச் சேர்ந்தவர். அவரது உணர்வுபூர்வமான பாடல்கள் அந்நாட்டு மக்களின் அன்றைய உணர்வுகளை இன்றும் உயிர்ப்புடன் வைத்துள்ளன. 1904-ல் குக்கிராமத்தில் அவர் பிறந்தார். அவருடைய மாமா அவருக்கு கிடார் வாசிக்கக் கற்றுக்கொடுத்தார். மரியாவின் திறமையால் கவரப்பட்ட ரஃபேல் அவரைத் தன் குழுவில் சேர்த்துள்ளார்.

1935 முதல் மரியா தனியாகப் பாடத் தொடங்கியுள்ளார். அவரது பாடல்கள் முழுவதிலும் மகிழ்வும் துயரமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும். வானொலியில் அவர் பாடிய பாடல்கள் அன்றைய காலகட்டத்து ரசிகர்களைக் கிறங்கடித்தன. அவரது 114 வயதைக் கொண்டாடும் விதமாக கூகுள் கடந்த திங்கள் அன்று சிறப்பு டூடுலை வெளியிட்டது.

iran
 

நடன ஆயுதம்

17 வயது நிரம்பிய மேதேஹ் ஹோஜப்ரி ஈரானைச் சேர்ந்தவர். அவர் ஆடியதற்காக, அதுவும் படுக்கையறையில் ஆடியதற்காக ஈரானிய அரசு அவரைக் கைது செய்தது. ஈரானிய அரசின் இந்த முறையற்ற செயல் அங்குள்ள பெண்களைக் கோபப்படுத்தியது. பொங்கியெழுந்த பெண்கள் அந்தக் கைதுக்கு எதிராகத் தாங்களும் ஆடி, அந்த வீடியோவைச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவருகிறார்கள். DancingIsNotACrime, DanceToFreedom போன்ற ஹேஷ்டேக்குகள் அங்கு இப்போது வைரலாகிவருகின்றன. பெண்கள் நினைத்தால் நடனமும் ஆயுதமே.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

அமெரிக்கா முதல் அணுகுண்டு சோதனை செய்த நாள்: 16-7-1945

 
அ-அ+

அமெரிக்கா தனது முதல் அணுகுண்டு சோதனையை 1945-ம் ஆண்டு இதே தேதியில் நிகழ்த்தியது. மேலும் இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள்:- * 1930- எதியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை அதன் மன்னர் ஹைல் செலாசி வெளியிட்டார் * 1942- பிரெஞ்சு அரசு நாட்டில் உள்ள அனைத்து யூதர்களையும் சுற்றி வளைத்து கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது. * 1945- மான்ஹட்டன் திட்டம்: முதலாவது அணுகுண்டு சோதனையை ஐக்கிய அமெரிக்கா நியூ மெக்சிகோ அலமொகோத்ரோவுக்கு அருகில் உள்ள பாலைவனத்தில் வெற்றிகரமாகச் சோதித்தது.

 
 
 
 
அமெரிக்கா முதல் அணுகுண்டு சோதனை செய்த நாள்: 16-7-1945
 
அமெரிக்கா தனது முதல் அணுகுண்டு சோதனையை 1945-ம் ஆண்டு இதே தேதியில் நிகழ்த்தியது.

மேலும் இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள்:-

* 1930- எதியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை அதன் மன்னர் ஹைல் செலாசி வெளியிட்டார்

* 1942- பிரெஞ்சு அரசு நாட்டில் உள்ள அனைத்து யூதர்களையும் சுற்றி வளைத்து கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது.

* 1945- மான்ஹட்டன் திட்டம்: முதலாவது அணுகுண்டு சோதனையை ஐக்கிய அமெரிக்கா நியூ மெக்சிகோ அலமொகோத்ரோவுக்கு அருகில் உள்ள பாலைவனத்தில் வெற்றிகரமாகச் சோதித்தது.

* 1948- இயேசு கிறிஸ்து வாழ்ந்த நசரெத் நகரத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.

* 1950- உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் உருகுவே, பிரேசிலை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.

* 1955- டிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது.

* 1965- பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது.

* 1979- ஈராக் அதிபர் ஹசன் அல்- பாக்ர் பதவியைத் துறந்ததை அடுத்து சதாம் உசேன் அதிபராகப் பதவியேற்றார்.

* 1989- புளொட் அமைப்பின் தலைவர் உமா மகேஸ்வரன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

* 1990- பிலிப்பைன்சில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1600 பேர் பலியானார்கள்

* 1994- ருவாண்டாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. * 1995- காங்கேசன்துறையில் விடுதலைப் புலிகளால் இலங்கை கடற்படையின் எடித்தாரா கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

* 1994- ஷூமேக்கர்-லெவி 9 என்ற வால்வெள்ளி வியாழனுடன் மோதியது.

* 2004 - மிலேனியம் பூங்கா சிக்காகோவில் அமைக்கப்பட்டது.

* 2006 - தென்கிழக்கு சீனாவில் இடம்பெற்ற கடற் சூறாவளியினால் 115 பேர் கொல்லப்பட்டனர்.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

`அன்புள்ளம் கொண்ட மகளுக்கு அம்மா எழுதும் கடிதம்...’ - நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

 
`அன்புள்ளம் கொண்ட மகளுக்கு அம்மா எழுதும் கடிதம்...’ - நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory
 

நெகிழ்ச்சிக் கதை

`நாற்பது என்பது இளமையின் முதுமை வயது; ஐம்பது என்பது முதுமையின் இளமை வயது’ என்று குறிப்பிடுகிறார் ஃப்ரெஞ்ச் கவிஞரும் நாவலாசிரியருமான விக்டர் ஹியூகோ (Victor Hugo). உலகம் முழுக்க எத்தனையோ அறிஞர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் `முதுமையைக் கொண்டாட வேண்டும், முதியவர்கள் இயல்பான வாழ்க்கை வாழ உதவ வேண்டும்’ என்று வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் முதியவர்களைப் புறக்கணிக்கும் போக்கு நின்றபாடில்லை. தனக்கும் ஒரு நாள் முதுமை வரும் என்று அறிந்திருந்தும், மனிதர்கள் முதியோரை ஏளனம் செய்கிறார்கள்; தட்டிக் கழிக்கிறார்கள்; ஒதுக்கிவைக்கிறார்கள். வயதாவதென்பது நோயல்ல, இயற்கை. வாழ்ந்த வாழ்க்கையை நிதானமாக அசைபோடும் பருவம். அந்த முதிர்ச்சியின் முக்கியத்துவத்தைக் கடிதம் மூலமாக ஒரு தாய், தன் மகளுக்கு உணர்த்தும் கதை இது... 

தாய் - மகள்

 

 

ஸ்பெயினிலிருக்கும் சிறு நகரத்தில் வசிக்கிறார் அந்த மூதாட்டி. அவர், தன் மகளுக்கு எழுதிய கடிதம் இது. ``அன்பு மகளே... இன்று, நீ  என்னைப் பார்க்கும்போது வயதானவளாகத் தெரிகிறேன். கொஞ்சம் பொறுமையாக இரு என் செல்லம். அதைவிட முக்கியம், என்னுடைய இந்த வயதில் என்னை நீ புரிந்துகொள்ள முயற்சி செய். அதுதான் என் விருப்பம்.  நாம் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரே விஷயத்தை ஆயிரமாவது முறையாக நான் திரும்பவும் சொல்லிக்கொண்டிருப்பேன். உடனே இடை மறித்து, `இப்போதாம்மா ஒரு நிமிஷத்துக்கு முன்னாடி இதைச் சொன்னே...’ என்று சொல்லாதே. தயவுசெய்து இதைக் கேளேன்... நீ சிறு குழந்தையாக இருந்த காலத்தை நினைவில் கொண்டு வா. அப்போதெல்லாம், ஒரே கதையில் உன் கண்கள் உறக்கத்தைத் தழுவும் வரை ஒவ்வொரு நாள் இரவும் நான் உனக்குச் சொல்வேன். அது மாதிரிதான் இதுவும். 

 

 

எனக்கு குளிக்க விருப்பமில்லாத நாள்களில், அதற்காக என்னைப் பைத்தியமாக அடிக்காதே, சங்கடப்படுத்தாதே! உனக்கு நினைவிருக்கிறதா... நீ சிறு பெண்ணாக இருந்தபோது, நீ குளிக்க வராமல் ஓடுவாய்... நான் உன்னைத் துரத்திப்பிடித்துக் குளிக்க அழைத்துப் போவேன்... அது மாதிரிதான் இதுவும். 

இன்றைக்கு எல்லாவற்றிலும் புதிது புதிதாகத் தொழில்நுட்பம், அதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அப்பாவியாக நான்... அப்படித்தானே என்னை நினைக்கிறாய் என் மகளே! அவற்றையெல்லாம் கற்றுக்கொள்ள கொஞ்சம் அவகாசம் கொடு. அதைவிட்டுவிட்டு என்னை அப்படி ஒரு பார்வை பார்க்காதே! என் கண்ணே... உனக்கு நினைவிருக்கிறதா... எப்படி முறையாகச் சாப்பிடுவது, அழகாக உடை உடுத்துவது, தலை வாருவது... என்று எத்தனை விஷயங்களை, தினமும் மிகப் பொறுமையாக நான் உனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறேன். அது மாதிரிதான் இதுவும்.  

அம்மா

இன்று, நீ என்னைப் பார்க்கும்போது வயதானவளாகத் தெரிகிறேன். கொஞ்சம் பொறுமையாக இரு என் செல்லம். அதைவிட முக்கியம், என்னுடைய இந்த வயதில் என்னை நீ புரிந்துகொள்ள முயற்சி செய். அதுதான் என் விருப்பம். 

நாம் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த விஷயத்தை விட்டுவிட்டு நான் வேறு ஒன்றுக்குத் தாவலாம்; மாறலாம். பேசியதை நினைவுக்குக் கொண்டு வர எனக்கு நேரம் கொடு மகளே. அந்த விஷயத்துக்கு என்னால் வர முடியவில்லையென்றால் உணர்ச்சிவசப்படாதே, பொறுமையை இழக்காதே, கோபப்படாதே. மிக முக்கியமான ஒரு விஷயம், உன் இதயத்துக்குத் தெரியும். அது, நான் உன்னுடன் இருக்கிறேன். அதுதான், அது ஒன்றுதான் இப்போது முக்கியம். 

இப்போது வயதாகிவிட்டது. முன்புபோல என் வயதான, தளர்ந்த கால்களை எட்டுவைத்து உன் வேகத்துக்கு என்னால் நடக்க முடியாது மகளே. இந்த சந்தர்ப்பத்தில், நீ முதன்முதலில் நடை பழகியபோது நான் எப்படி என் கரங்களை உனக்கு உதவுவதற்காக நீட்டினேனோ, அப்படி உன் கைகளை எனக்குக் கொடுத்து உதவு  கண்ணே! 

இந்த நாள்களில் துயரம் கொள்ளாதே... என்னுடன் இரு... நான் என் வாழ்க்கையை மகிழ்ச்சியாக முடித்துக்கொள்ளப்போகிறேன் என்பதைப் புரிந்துகொள். நீ எனக்கு பரிசாகத் தந்திருக்கும் நேரத்தையும் மகிழ்ச்சியையும் நான் என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன் மகளே... அதற்காக உனக்கு நான் நன்றி சொல்கிறேன். 

மன நிறைவோடு, மலர்ந்த சிரிப்போடு உனக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன் மகளே... `ஐ லவ் யூ.’ 

நேசத்துடன் 

அம்மா  

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி நவீனன் .....முதுமையானவர்களின் மன ஏக்கத்தை என்போன்ற எல்லோருக்கும் எளிமையாக புரிந்து கொள்ளும் படியான நல்ல கதை......!  tw_blush:  யார் அது அங்கால செருமுறது....!

  • தொடங்கியவர்

 

உடலா? ஓவியமா?

தெற்கு ஆஸ்திரியாவில் நடைபெற்ற சிலிர்க்க வைக்கும் உடலோவியத் திருவிழா
  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…. ஜூலை 16 நிகழ்வுகள்…!

 
 

622 : முஹ­மது நபிகள் நாயகம் மக்­கா­வி­லி­ருந்து மதீ­னா­வுக்கு பயணம் ஆரம்­பித்தார். இது இஸ்­லா­மிய நாட்­காட்­டியின் தொடக்­க­மாகும்.

1661: ஐரோப்­பாவின் முத­லா­வது நாணயத் தாள் சுவீ­டனில் வெளி­யி­டப்­பட்­டது.

1930: எத்­தி­யோப்­பி­யாவின் முத­லா­வது அர­சி­ய­ல­மைப்பை அதன் மன்னர் ஹைல் செலாசி வெளி­யிட்டார்.

1945: மான்­ஹட்டன் திட்டம்: முத­லா­வது புளுட்­டோ­னியம் அணு­குண்டு சோத­னையை ஐக்­கிய அமெ­ரிக்கா நியூ­மெக்­ஸிகோ மாநி­லத்தின் அல­மொ­கோத்­ரோ­வுக்கு அருகில் உள்ள பாலை­வ­னத்தில் வெற்­றி­க­ர­மாகச் சோதித்­தது.

1948: இயேசு கிறிஸ்து வாழ்ந்த நசரெத் நக­ரத்தை இஸ்ரேல் ஆக்­கி­ர­மித்­தது.

1950 : உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட இறுதிப் போட்­டியில்; பிரே­ஸிலை 2:1 என்ற கோல் கணக்கில் உரு­குவே வென்­றது.

1955: அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநி­லத்தில் டிஸ்­னி­லாந்து பூங்கா அமைக்­கப்­பட்­டது.

1965 : பிரான்­ஸையும் இத்­தா­லி­யையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்­கப்­பட்­டது.

1969: அப்­பலோ 11 விண்­கலம் அமெ­ரிக்­காவின் புளோ­ரி­டாவில் இருந்து ஏவப்­பட்­டது. இதுவே சந்­தி­ரனில் இறங்­கிய முத­லா­வது மனி­தரை ஏற்றிச் சென்ற விண்­கலம் ஆகும்.

1979: ஈராக் ஜனா­தி­பதி ஹசன் அல்-பாக்ர் ராஜி­னாமா செய்­த­தையடுத்து, ஜனா­தி­ப­தி­யாக சதாம் ஹுசைன் பத­வி­யேற்றார்.

1981: மலே­ஷி­யாவின் 4 ஆவது பிர­த­ம­ராக மஹதிர் முஹமட் பத­வி­யேற்றார். அவர் 22 வரு­ட­காலம் இப்­ப­த­வி­யி­லி­ருந்தார்.

1989: தமி­ழீழ மக்கள் விடு­தலைக் கழ­கத்தின் (புளொட்) தலைவர் உமா ­ம­கேஸ்­வரன் கொழும்பில் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

1990: பிலிப்­பைன்ஸில் 7.7 அளவு நில­ந­டுக்கம் ஏற்­பட்­டதால் 1600 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1990: சோவியத் யூனியனின் ஒரு குடி­ய­ர­சாக இருந்த உக்ரைன் சுயாட்சி பிர­க­டனம் செய்­தது. 1994: ருவாண்­டாவில் உள்­நாட்டுப் போர் முடி­வுக்கு வந்­தது.

1994: “ஷுமேக்­கர்-­லெவி 9” என்ற வால்­வெள்ளி வியா­ழ­னுடன் மோதி­யது.

1999: ஜோன் எவ் கென்­ன­டியின் மக­னான ஜோன் எவ். கென்­னடி ஜூனி­யரும் அவரின் மனை­வியும் விமான விபத்­தொன்றில் கொல்­லப்­பட்­டனர்.

2004: தமிழ்­நாடு கும்­ப­கோ­ணத்தில் பாட­சாலை ஒன்றில் இடம்­பெற்ற தீ வி­பத்தில் 94 பிள்­ளைகள் தீயில் கருகி மாண்­டனர்.

2006: தென் கிழக்கு சீனாவில் இடம்­பெற்ற கடற் சூறா­வ­ளி­யினால் 115 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2008: சீனாவில் கலப்­படம் செய்­யப்­பட்ட பால்­மாவை உட்­கொண்ட 16 குழந்­தை­க­ளுக்கு சிறு­நீ­ரக கல் நோய் ஏற்­பட்­டது. இப்­பால்­மா­வினால் சுமார் 3 லட்சம் குழந்­தைகள் பாதிக்­கப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது.

2016: யாழ். பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் இடம்பெறவிருந்த கலாசார நடனம் தொடர்பாக மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்களில் பலர் காயமடைந்ததையடுத்து பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

http://metronews.lk

  • தொடங்கியவர்

பேசும் படம்

 

 
15CHBRIHIMADAS

ஃபின்லாந்தில் நடந்த 20 வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேசத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் (டிராக்கர்) ஓட்டப் பிரிவில் இந்தியாவின் ஹிமா தாஸ் முதல் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

உள்ளூர் முதல் உலகம்வரை பெண்கள் சார்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. துயரமும் மகிழ்ச்சியும் பெருமிதமும் நிறைந்த உணர்வுகளின் கலவையான ஒளிப்படத் தொகுப்பு இது:

15CHBRITHAILAND

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிக்கொண்ட கால்பந்தாட்டச் சிறுவர்களும் அவர்களுடைய பயிற்சியாளரும் மீட்கப்பட்டனர். அவர்கள் அனுமதிக்கப் பட்டிருக்கும் மருத்துவமனைக்கு முன் கூச்சலிட்டுத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பள்ளிக் குழந்தைகள்.

 
15CHBRINIRBHAYA

டெல்லியில் 2012-ல் நடந்த நிர்பயா பாலியல் வன்முறை வழக்கில் குற்றவாளிகள் மூவரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்துத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நிர்பயாவின் பெற்றோர்.

15CHBRIBAMBOOWORKERS

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பூர்ணா மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த பெண்களின் வாழ்வாதாரம் மூங்கிலை நம்பியே இருக்கிறது. மூங்கிலில் பலவிதமான பொருட்களைச் செய்து அவர்கள் பொருளீட்டிவருகின்றனர்.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

பப்புவா நியு கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: ஜூலை 17- 1998

 
பசுபிக் பெருங்கடல் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடு பப்புவா நியூ கினியா. இங்கு கடந்த 1998 ஆம் வருடம் ஜுலை 17-ந் தேதி மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கடும் சுனாமி ஏற்பட்டது. இதில் 10 கிராமங்கள் அழிந்தன. இந்த சுனாமி தாக்கியதில் 3,183 பேர் வரை கொல்லப்பட்டனர்.
 
 

போயிங் விமானம் வெடித்து சிதறியது: 230 பேர் உயிரிழப்பு ஜூலை 17- 1996

 
அ-அ+

கடந்த 1996-ஆம் ஆண்டு இதே தேதியில் போயிங் 747 என்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென வெடித்துச் சிதறியது. இதில் பயணித்த 230 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 
 
 
 
போயிங் விமானம் வெடித்து சிதறியது: 230 பேர் உயிரிழப்பு ஜூலை 17- 1996
 
கடந்த 1996-ஆம் ஆண்டு இதே தேதியில் நியூயார்க்கின் லாங் தீவில் இருந்து பாரிஸ் நோக்கி போயிங் 747 என்ற விமானம் புறப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென வெடித்துச் சிதறியது. இதில் பயணித்த 230 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இதே நாளில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்

2007 - பிரேசிலில் விமானம் ஒன்று தரையில் மோதியதில் 199 பேர் கொல்லப்பட்டனர்.

1941 - தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பிறந்தார்.

1981 - மிசூரியில் கன்சாஸ் நகரில் நடைப்பாலம் ஒன்று இடிந்ததில் 114 பேர் கொல்லப்பட்டனர்.

1967 - நாசாவின் ஆளில்லா விண்கலம் சந்திரனில் சைனஸ் மெடை என்ற இடத்தில் மோதியது.
 
https://www.maalaimalar.com
 
 
  • தொடங்கியவர்

கேட்ரீனா கய்ஃப்பின் சுவாரஷ்ய வாழ்க்கை பற்றி….!

 
 

 

fdjhhfjkb-1.jpg

கேட்ரீனா கய்ஃப் ஜூலை 16, 1984 இல் பிறந்தார். ஹொங்கொங்கில் கேட்ரீனா கய்ஃபின் தந்தை, முகம்மது கய்ஃப் ஒரு காஷ்மீர்க்காரர், அவரது தாயார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவர் பின்னர் அறக்கட்டளைப் பணிகளில் ஈடுபட்டார். கேட்ரீனா இளம் வயதாக இருந்த போதே பெற்றோர் விவாகரத்து பெற்று தனித்தனியாகப் பிரிந்துவிட்டனர். ஹொங்கொங்கில் வளர்ந்த கய்ஃப் பின்னர் அவரது அம்மாவின் தாய்நாடான இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்தார். கேட்ரீனாவுடன் பிறந்தவர்கள் ஏழுபேர்.

kk-ad-4-1-246x300.jpg

தனது பதினான்காம் வயதில் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்ததன் மூலம் விளம்பர உலகத்தில் தனது முதல் பயணத்தை தொடங்கினார். லண்டனில் ஒப்பந்த அடிப்படையில் மொடல்ஸ் 1 என்னும் முகமை மூலம் மொடலிங் பணியைத் தொடர்ந்த அவர் லா சென்ஸா மற்றும் அர்காடியுஸ் போன்ற நிறுவன விளம்பரங்களில் தோன்றினார், இவ்வாறு லண்டன் ஃபெஷன் வீக் நிகழ்வுகளிலும் இடம் பெற்றார்.

கேட்ரீனாவின் மொடலிங் பணியைப் பார்த்து ரசித்த லண்டனைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் கெய்ஸாத் கஸ்டாட், அவரைத் திரைப்பட நட்சத்திரமாகக் கண்டெடுத்து தனது திரைப்படமான பூம் (2003) படத்தில் வாய்ப்புக் கொடுத்தார். இதன் பிறகு மும்பைக்கு இடம் பெயர்ந்த கேட்ரீனாவுக்கு ஏராளமான மொடலிங் வாய்ப்புகள் குவிந்தன. எனினும் கேட்ரீனாவுக்கு ஹிந்தி பேசத்தெரியாது என்ற காரணத்தால் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அவரைத் தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய சிறிது தயங்கினார்கள்.

pics-21.jpg

2005 ஆம் ஆண்டில் வெளியான சர்க்கார் படத்தில் அபிசேக் பச்சனின் தோழியாக சிறுவேடத்தில் நடித்ததன் வாயிலாக கேட்ரீனா தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடர்ந்தார். அவரது அடுத்த படமான மைனே ப்யார் க்யூன் கியாவில் (2005), சல்மான்கானின் இணையாக நடித்தார்.

658016.jpg

2007 ஆம் ஆண்டு நமஸ்தே லண்டன், படத்தில் பிரிட்டிஷ்-இந்தியப் பெண்ணாக அக்ஷய் குமாரின் ஜோடியாக நடித்த இரண்டாவது படமும் வெற்றிப்படம் ஆனது. அதற்கு முன் இதே ஜோடி நடித்த ஹம்கோ தீவானா கர் கயே (2006) திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி நடைபோட்டது. அதன்பின்னர், அவர் நடித்த அப்னே, பார்ட்னர், வெல்கம் போன்ற அனைத்துப் படங்களும் வெற்றிப் படங்களாகத் திகழ்ந்தன.

2008 ஆம் ஆண்டில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் முதன்முதலாக இவர் நடித்த அப்பாஸ் முஸ்தான் தயாரித்த அதிரடித் திரைப்படம் ரேஸ் வெற்றிப்படமாயிற்று. இப்படத்தில் சயிஃப் அலிகானின் செயலாளராகவும், எதிர்கோஷ்டியைச் சேர்ந்த சயிஃபின் சகோதரர் அக்ஷய் கன்னா மீது காதல் வயப்படுபவராகவும் அவர் நடித்தார்.

Sexy-Katrina-Kaif-in-Race-Movie-1024x576

2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கேட்ரீனா ஜான் ஆப்ரஹாமுடன் நடித்த நியூயோர்க் வணிக அளவில் பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் கேட்ரீனாவின் நடிப்பைத் திறனாய்வாளர் தாரன் ஆதர்ஷ் பின்வருமாறு பெரிதும் பாராட்டினார்: “கேட்ரீனா இப்படத்தில் பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கிறார். கவர்ச்சி வேடத்தில் மட்டுமே நடித்த அவர், தற்போது இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்கள் எதிர்பார்க்கும் நடிப்பைத் தன்னால் வெளிப்படுத்த முடியும் என இவ்வேடத்தின் வாயிலாக மெய்ப்பித்துள்ளார்.

இதையடுத்து கேட்ரீனா பல நட்சத்திரங்கள் நடித்த அதிரடித் திரைப்படமான ப்ளூவில், சிறுவேடத்தில் தோன்றினார். இது இந்தியாவிலேயே முதன் முறையாக தயாரிக்கப்பட்ட ஆழ் கடல் திகில் படமாகும். இது வர்த்தகரீதியாக சிறிய வெற்றியை மட்டுமே பெற்றது. இது ஒரு வெற்றிப்படமாக கருதப்படவில்லை.

அவ்வருடத்தின் இறுதியில், ரன்பீர் கப்பூருடன் இணைந்து அஜப் பிரேம் கி காசாப் கஹானி மற்றும் அக்ஷய் குமாருடன் இணைந்து தே தான தன் ஆகிய படங்களில் நடித்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் வர்த்தகரீதியாக வெற்றிப்பெற்றன.

jagga-jasoos-instagram_640x480_515005400

 

2010 இல் இவரது முதல் படமான ராஜ்நீதியில் ரன்பீர் கப்பூருடன் இணைந்து நடித்தார். இப்படம் பொக்ஸ் ஓபிஸில் மிகப்பெரும் வெற்றி பெற்றது. 2010 செப்டம்பரில், ஒரு செய்தித்தாளில் வெளியான செய்தியில் பொலிவுட்டின் மிகச்சிறந்த ஆறு நடிகைகளில் கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன் மற்றும் கங்கனா ரணவத் ஆகியோருடன் பட்டியலிடப்பட்டார்.

salman-katrina_640x480_81490174046.jpg

நடிகர் சல்மான்கானுடன் 2003 ஆம் ஆண்டு தொடங்கி நெருக்கமான நட்பை கேட்ரீனா பேணிவருகிறார். கேட்ரீனா இங்கிலாந்திலிருந்து வெளியாகும் ஈஸ்டன் ஐ பப்ளிகேஷன் 2008 ஆம் ஆண்டில் நடத்திய வாக்கெடுப்பில் ஆசியாவின் இனக்கவர்ச்சி மிக்க பெண்ணாகவும், அதே 2008 ஆம் ஆண்டில் கூகுள் இந்தியா இணையத்தில் அதிகமாக வலைதளத்தில் தேடிய நபராகவும் அறியப்பட்டார்.

57abbd690efbc.image_.jpg

அண்மையில் நியூயோர்க் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் ரியாலிட்டி ஷோவான தஸ் கா தம் நிகழ்ச்சியில் நீல் நிதின் முகேஷ் உடன் தோன்றினார். தான் நடித்த யுவராஜ் படத்தை விளம்பரப்படுத்தும் பாட்டுப்போட்டித் திறன் நிகழ்ச்சியான ஸரிகமபவில் சல்மான்கானுடன் தோன்றினார். செப்டம்பர் 2009 ஆம் ஆண்டில் வெளியான மேட்டல்’ஸ் பொலிவுட் பொம்மை விளம்பரத்திலும் கேட்ரீனா மாடல் ஆகத் தோன்றியுள்ளார்.

இவர் பெற்ற விருதுகள்:
2006: ஒட்டுமொத்த நடிப்பிற்கான ஸ்டார்டஸ்ட் விருது (பெண்), மைனே ப்யார் க்யூன் கியா?
2008: ஸீ சினிமா விருதுகள், பிரித்தானிய இந்திய நடிகருக்கான விருது 2008
2008: ஐ ஐ எஃப் ஏ விருதுகள் அந்த ஆண்டின் ஸ்டைல் தோற்றத்திற்கானது.
2008: சப்சே ஃபேவரிட் கான் விருதுகள், சப்சேவின் அபிமான கதாநாயகி, சிங் இஸ் கிங்
2009: ராஜிவ் காந்தி விருது

இப்படி இந்தி பட உலகின் ஒரு மிகச்சிறந்த நட்சத்திரமாக மின்னும் கேட்ரீனா கய்ஃப்புக்கு இன்று பிறந்த நாள். பல வெற்றி வாகைகளை சூட வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

djvfd-300x276.jpg afefsfd-248x300.jpg

TZH.jpg

http://metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் பலரதும் கவனத்தை ஈர்த்த இரு தலைவர்கள் 

 

நடைபெற்று முடிந்த உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் மற்றும் குரோசியாவின் ஜனாதிபதி கொலின்டா கிறபர் ஆகிய இரு நாட்டுத் தலைவர்களின் செயற்பாடுகளும் பலரையும் பேச வைத்துள்ளது.

 

fra.jpg

உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தின் இறுதித் தருணங்களை எவரும் தமது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டதைவிட இவர்கள் இருவரின் செயற்பாடுகளையுமே பதிவிட்டதைக் காணக் கூடியதாகவிருந்தது.

 

 

 

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் கிண்ணத்தை சவீகரித்த பிரான்ஸ் அணியின் வெற்றிக் கொண்டாட்டததை அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் வீரர்களுடன் மழையில் நனைந்தவாறு மிகவும் ஆவேசத்துடனும் பரபரப்பாகவும் கொண்டாடினார். 

37238844_268198440602357_359532896900140

கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவில் இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் எவருமே எதிர்பார்க்காத வகையில் குரோசியா மற்றும் பிரான்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து பலப்பரீட்சை மேற்கொண்டன. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.

 

 

இந்நிலையில் லீக் சுற்று ஆட்டங்களில் பிரான்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அரையிறுதிப் போட்டியை காண்பதற்காக பிரான்ஸ் நாட்டின்  ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்திய பிரான்ஸ் ஜனாதிபதி, இறுதிப்போட்டியில் அவரது மனைவியுடன்  அரங்கிற்கு சென்றிருந்தார்.

37187501_268198480602353_282782052940932

இந்நிலையில் பிரான்ஸ் அணி போட்ட ஒவ்வொரு கோல்களுக்கும் அவரது செயற்பாடுகள் அனைவரையும் திரும்பிப்பார்க்கும் படியாக அமைந்திருந்தது.

 

இறுதியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில் அவர் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து அருகில் பலர் இருந்த போதும், முன்னால் இருந்த மேசையின் மேல் ஏறி கையை உயர்த்தி ஆக்ரோசமாக தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 

 

சம்பவம் இடம்பெற்ற போது அருகில் பிபா கால்பந்தாட்ட தலைவர் , ரஷ்யாவின் ஜனாதிபதி புட்டின், குரோசியா ஜனாதிபதி  கொலின்டா கிறபர் ஆகியோருடன் மழையில் நனைந்தவாறு  தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

37137003_1768343736565911_46100635988262

இறுதிப் போட்டியின் போது குரோசியா ஜனாதிபதி  மற்றும் மெக்ரான் இருவரும் முத்தமிட்டு கட்டியணைத்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

 

குரோசியா அணி வீரர்கள் இருக்கும் அறைக்கு சென்ற பிரான்ஸ் ஜனாதிபதி, அங்கிருந்த குரோசியா நாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தமை விசேட அம்சமாகும்.

இந்நிலையில் குறித்த  இருநாட்டு ஜனாதிபதிகளும் இவ்வாறு நடந்து கொண்டமை அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்ததுடன்  உலகக்கிண்ண போட்டியை விட இருவரதும் செயற்பாடுகள் சமூகவலைத்தளங்களில் பெருமளவில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

திருக்கை மீன்களின் சாகசங்கள்!

 

 
thirukkaijpg

மிதமான வெப்பமண்டலப் பகுதிகளில் வாழக்கூடிய இந்த மீனின் பெயர் ‘மொப்யூலா ரே’. தமிழில், திருக்கை மீன் என்றழைக்கப்படும் இதன் ஆயுட்காலம் 40–50 ஆண்டுகள். இறகுகள் போன்ற துடுப்புகள் 17 அடி வரை பிரம்மாண்டமாக வளரக்கூடியவை. கடல் மட்டத்துக்கு மேல் 6 அடி வரை தாவக்கூடிய இயல்புடையவை. அறிவியலாளர்களுக்கு இந்த வினோதமான தாவல்கள் இப்போதும் மர்மமானதாகவே இருக்கின்றன. தாவல்களுக்கு நிகராக நீந்துவதிலும் இவை கில்லாடிகள். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் கூட்டமாகச் சந்தித்திக்கொள்ளும் வழக்கம் திருக்கைகளுக்கு உண்டு. சமீபத்தில், கலிஃபோர்னியா வளைகுடா பகுதியில் வரலாறு காணாத சந்திப்பை நிகழ்த்தியிருக்கின்றன. லட்சக்கணக்கான திருக்கைகள் ஒருசில நொடிகளில் ஒன்றுகூடி, தமது சாகசங்களைக் காட்டிவிட்டு அடுத்த சில நொடிகளில் மறைந்துவிட்டன.

https://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

24 மணி நேரத்தில் நூறு சிற்பங்கள்! - யுனிவர்சல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் கோவை இளைஞர்

 

சோப்பில் 50 சிற்பம், பென்சிலில் 30 சிற்பம், சாக்பீஸில் 10 சிற்பம், காய்கறி மற்றும் பழங்களில் 10 சிற்பம் என மொத்தம் நூறு சிற்பங்களை 24 மணி நேரம் தொடர்ச்சியாக செய்து சாதனை செய்திருக்கிறார் இவர்.

24 மணி நேரத்தில் நூறு சிற்பங்கள்! - யுனிவர்சல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் கோவை இளைஞர்
 

ம் கையில் ஒரு பென்சிலைக் கொடுத்தால் என்ன செய்வோம்? மனம் போன போக்கில் ஏதாவது வரைவோம். ஆனால், இந்த இளைஞரிடம் பென்சிலைக் கொடுத்தால், அதை நுனியை கண்கவரும் சிற்பமாக மாற்றி நம் கைகளில் தருவார். ஆம், கோவையைச் சேர்ந்த சவித்ருவிடம் பென்சில் மட்டுமல்ல சாக்பீஸ், மரக்கட்டை, கற்கள் என எதைக் கொடுத்தாலும் சிற்பமாக மாற்றி அசர வைக்கிறார். ஃபேஸ்புக்கில் இவரது பக்கத்தில் உள்ள பென்சில் சிற்பங்கள் எல்லாம் 'வாவ்' ரகம். சே குவாரா பிறந்த நாளுக்கு அவரின் உருவத்தை பென்சிலில் பொறித்திருக்கிறார். முக்கியமாக சதுரங்கத்தில் உள்ள 32 காய்களையும் சின்னச் சின்ன பென்சில் கிராஃபைட்டில் செதுக்கி ஒரு ரூபாய் காய்ன் அளவில் ஒரு சதுரங்க பெட்டியே செய்திருக்கிறார். 

சவித்ரு'விரல்ல இவ்ளோ வித்தை வச்சுருக்காரே' என இன்பாக்ஸில் தொடர்புகொண்டோம், ``நான் முதலில் காய்கறிகள், சோப்புலதான் சிற்பங்கள் வடிச்சுட்டு இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமா இந்தக் கலைல இருக்கிற நுட்பங்கள் புரிய ஆரம்பிச்சதும் சாக்பீஸ், மரக்கட்டைனு கிடைக்கற எல்ல பொருள்கள்லயும் சிற்பம் செதுக்க ஆரம்பிச்சேன். அப்புறம் வெளிநாடுகள்ல பென்சில்ல இருக்கிற கிராஃபைட்ல சிற்பம் செதுக்குறாங்கனு தெரிஞ்சுது. ஒரு சின்ன பென்சில் சிற்பத்துக்கு 40,000 ரூபாயிலிருந்து 50,000 வரை விலை போகுது அங்கெல்லாம். சரி நாம ஏன் பென்சில்ல சிற்பங்கள் செய்ய முயற்சி பண்ண கூடாதுனு ட்ரை பண்ணேன். பெரிய பொருள்கள்ல சிற்பம் செஞ்சுட்டு சின்ன பொருள்ல சிற்பம் செய்றது கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு! ஆனா, போகப் போக பழகி இப்போ குறைந்த நேரத்துலேயே சிற்பத்தை செஞ்சு முடிக்க கத்துக்கிட்டேன்." என்றவரிடம் சிற்பம் செய்றதுலயே ஏதாவது சாதனை செஞ்சுருக்கீங்களா என்ற கேள்விக்கு, `24 மணி நேரத்துல நூறு சிற்பம் செஞ்சு 'யுனிவர்சல் ஃபுக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'ல இடம் பிடிச்சிருக்கேன்' என்றார். சோப்பில் 50 சிற்பம், பென்சிலில் 30 சிற்பம், சாக்பீஸில் 10 சிற்பம், காய்கறி மற்றும் பழங்களில் 10 சிற்பம் என மொத்தம் நூறு சிற்பங்களை 24 மணி நேரம் தொடர்ச்சியாக செய்து சாதனை பண்ணிருக்கேன்" என்றார்.

இதெல்லாம் எங்க கத்துக்கிட்டீங்க என்ற கேள்விக்கு அவர் தரும் பதில் அவரின் யுனிவர்சல் ரெக்கார்ட்டைவிட ஆச்சர்யமளிக்கிறது. ``யாரிடமும் இல்ல, நானே சுயமா கத்துக்கிட்டது இது எல்லாமே" என்கிறார் கூலாக! இவ்வளவு சிற்பங்கள் செய்து அசத்தும் இவர் படித்தது பி.டெக் ஃபேஷன் டெக்னாலஜி. 

 

 

சிற்பங்கள்   

எல்லா இன்ஜினீயர்களும் கடந்துபோகும் அதே அனுபவத்தை ஃபேஷன் டெக்னாலஜி படித்த இவரும் கடந்து வந்திருக்கிறார். ``படிச்சு முடிச்சிட்டு சிற்பம் செய்யலாம்னு வீட்ல ஏதாவது செஞ்சிட்டு இருப்பேன். கொஞ்ச நாள் பார்த்தாங்க. அப்புறம் திட்ட ஆரம்பிச்சுட்டாங்க 'இது வேண்டாத வேலை! தேவை இல்லாம எதுக்கு இதெல்லாம் பண்ற'னு. அப்புறம் வீட்டை விட்டு வந்து சொந்த ஊர்லயே தனியா இருந்தேன். ஒரு வருஷம் வேற எதுலயுமே கவனம் செலுத்தாம இதுல மட்டுமே கவனமா இருந்தேன், அதுக்கு நல்ல பலன் கிடைச்சிருக்கு. அந்த 24 மணி நேரத்துல 100 சிற்பம்னு சாதனை பண்ணதுக்கு அப்புறம்தான் வீட்டுக்குப் போனேன். சரி இவனுக்குள்ளையும் ஏதோ இருக்கு, நல்லா வந்துருவான்னு அவங்களுக்கும் ஒரு சின்ன நம்பிக்கை வந்திருக்கு. இப்போ இதையே கமர்ஷியலா கொண்டு போலாம்னு இருக்கேன்" என்றார். 

 

 

சிற்பங்கள் செய்வது மட்டுமின்றி, பென்சில் கிராஃபைட்டில் திருக்குறள்கள் எழுதியும் அசர வைக்கிறார். நேரம் கிடைக்கும்போது அவரின் ஃபேஸ்புக் பக்கத்துக்கு ஒரு ரவுண்டு வாருங்கள்! இப்போது லைக்குகள்தானே அவர்களுக்குக் கிடைக்கும் முதல் அங்கீகாரம்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

சின்ன சின்ன வரலாறு : பல்பு  வாங்கிய கதை அல்ல! பல்பின் கதை!

 

 
3729172917199068747932653019777542878920

பல்பைக் கண்டுபிடித்தது யார் என்று கேட்டால், நீங்கள் தாமஸ் ஆல்வா எடிசன் என்று சொல்லி பல்பு வாங்குவீர்கள். ஆமாம்... ஆனால் அது தவறு என்கிறார் கம்ப்யூட்டர்ஜி.

1879ம் ஆண்டு எடிசன் லைட் பல்ப் கண்டுபிடித்து பேடண்ட் செய்தார். ஆனால் இதற்கு முன் இருபது கண்டுபிடிப்புக்கள் இருந்திருக்கின்றன.

 

இந்த பல்புகளின் முதல் கண்டுபிடிப்பு ஹம்ப்ரி டேவி என்பவரால் 1802ம் ஆண்டில் நடந்தது. இது ஒரு எதிர்பாராத கண்டுபிடிப்பு.

அவர் தான் கண்டுபிடித்த மிகவும் சக்தி வாய்ந்த பாட்டரியை சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவேளையில், அகஸ்மாத்தாய் ஒரு கார்பன் துண்டை  பாட்டரிமேல் போட.... இதுதான் பளிச் பல்ப் உருவான கதை.

இதற்கு எலக்ட்ரிக் ஆர்க் லாம்ப் என்று பெயர் சூட்டப்பட்டு, மிகவும் பளிச்சென்று கண்களைக் கூச வைத்ததால் உபயோகமற்றுப் போயிற்று.

இதற்குப்பின் நிறையக் கண்டுபிடிப்புக்கள். ஆனால் இவை ஏதும்  உபயோகப்படும் வகையில் இல்லை.

1840களில் வாரன்டி லா ருயி எனும் பிரிட்டிஷ் சோதனையாளர் நாம்  தற்போது உபயோகிக்கும் வேக்கம் பல்புகளின் முன்னோடியாக ப்ளாட்டினம் காயில்கள் கொண்டு செய்து அசத்தினார்.

ஆனால் இதுவும் நிலைக்காமல் போனது. காரணம் ப்ளாட்டினத்தின் அதி பயங்கர விலையால் பல்புகளின் விலையும் ஏறக்குறையச் சூரியனுக்கு மிக அருகில் வந்ததால், பல்பு உற்பத்தி பல்பு வாங்கியது. ஆர்வம் மிகுந்தோ அல்லது ஆசை மிகுந்தோ மனைவி அல்லது காதலிக்கு ப்ளாட்டினம் பாண்ட் வாங்கி கையை சுட்டுக்கொண்டவர்களுக்கு இதன் விலை நன்றாகவே புரியும்.

ஆனால் 1860களில் ஜோஸப் வில்சன் ஸ்வான் என்பவர் இந்த ப்ளாடினத்தைக் கடாசி விட்டு அதற்குப் பதில் கார்பன் பேப்பர்களை

ஃபிலமெண்ட்டாக உபயோகித்து வேக்கம் அதாவது வெற்றிடமாக உள்ள பல்புகளில் எரியச் செய்து முதல் பல்பர் ஆனார். தி ஸ்வான் எலெக்ட்ரிக் லைட் கம்பெனி லிமிடட் தான் உலகிலேயே முதலில் ஆரம்பிக்கப்பட்ட பல்ப் உற்பத்தி நிலையம். லண்டனின் அதி நவீன தியேட்டரான   ”தி சவாயின் தான் பல்புகளை எரியவிட்ட கம்பெனி.

இதற்கு அடுத்த தயாரிப்பு 1874களில் ஹென்றி உட்வார்ட் மற்றும்

மாத்யூ ஈவான்ஸ் என்ற இருவரால் நைட்ரஜன் நிரப்பப்பட்ட  குடுவைகளில் கார்பன் கம்பிகள் மற்றும் மின் கம்பிகள் பொருத்திச் செய்யப்பட்ட பல்புகள் மிகவும் பிரசித்திபெற்றன. ஆனால் இவர்கள் இதை நிறுவனம் செய்ய இயலாது அமெரிக்காவில் செய்யப்பட்ட பேடண்ட் உரிமைகளை தாமஸ் ஆல்வா எடிசனிடம் விற்று விட்டனர். இவ்வளவு நடந்த பின் தான் எடிசன் கதைக்குள் வருகிறார். ஆனால் இவரின்அதிர்ஷ்டம் , இவர்தான் சாதனையாளராக பேசப்படுகிறார்.

ஆனால் இவரை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. இவர் தன் கண்டுபிடிப்பின் மூலம் இதுநாள் வரையில் பல்ப் உற்பத்தி விலையை

அதள பாதாளத்திற்கு கொண்டுவந்து, அதன் ஆயுள் நீடிப்பையும் செய்து எல்லோரும் உபயோகிக்கத் தகுந்ததாக மாற்றினார்.

ஆனால் இந்த வகை ஒளிரும் விளக்குகளிலிருந்து நமக்கு ஒரு 10% வரைதான் மின்சக்தி ஒளியாக மாற்றப்படுகிறது. மற்ற 90% இந்த பல்புகளின்  ஃபிலமெண்ட்டை சூடேற்ற உபயோகப்படுகிறது. அதனால் விலை

குறைவாக இருந்தாலும் மின்சக்தி ஆற்றல் நாம் உணராமலேயே வீணாகிறது.

இந்தக்காரணங்களே இந்தத்தொழிலில் முன்னேற்றம் பார்க்கக் காரணம். ஃப்ளோரசெண்ட், ஹாலோஜென், க்வார்ட்ஸ், உலோக ஹைலைட் கடைசியாக தற்போது உள்ள Led இப்படி நிறையப் புதுமைகளை சந்தித்திருக்கிறது இந்தத் தொழில். அமெரிக்கா போன்ற நாடுகள் இந்த மின்சக்தி வீணடிக்கப்படும் காரணத்தால் இந்த வகை இன்காண்டசெண்ட் பல்புகளை தடை செய்திருக்கிறது.

இந்த வகை பல்புகளை பின் தள்ளி தற்போது Led வகை லைட்கள் வந்துவிட்டன. இந்த Ledயும் ஒரு தற்செயல் கண்டுபிடிப்புதான்! நிக் ஹோலோனக் என்பவர் 1960களில் லேசர் ஒன்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்த லைட் எமிடிங் டியோட்சைக் கண்டுபிடித்தார். இதன் தொடர்ச்சியாக மஞ்சள் மற்றும் பச்சை வண்ண Ledக்களும் கண்டு பிடிக்கப்பட்டு, இப்போது நீலவண்ணமும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இப்போது ஸ்டாக் ஸ்மார்ட் பல்புகளும் வரத்தொடங்கி விட்டன. நம்  வீட்டில் உள்ள மிகப்பெரிய குறை என்ன..... விளக்கைப்போடுவோம் ஆனால் ரூமை விட்டு வந்தபின்னும் அது எரிந்து கொண்டே இருக்கும். இதற்கு நிவர்த்திதான் இந்த ஸ்மார்ட் பல்புகள். உள்ளே வெளியே நடமாட்டத்தை வைத்துத் தானாகவே எரியும்; அணையும். ரூமில் உள்ள வெளிச்சத்திற்கு ஏற்றபடி தன் வெளிச்சத்தைக் குறைக்கவோ அதிகப்படுத்தவோ செய்யும். நம் மொபைல் கைப்பேசிவழியே இந்த வகை கட்டுப்பாட்டுக்களை செய்ய இயலும். AI எனப்படும் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் வழி இது சாத்தியமாகிறது!

இந்த வகை பல்புகள் LED பல்புகளை விட நிறைய ஆயுட்காலம் கொண்டவை என்றும் குறைவான மின்னாற்றல் போதுமானது என்றும் கூறப்படுகிறது.

ஆனால் காதோடு ஒரு ரகசியம். எம் ஐ டி ஜர்னல் வெளியிட்ட தகவலின் படி நாம் முதல் முதல் உபயோகித்த எடிசன் பல்புகள்தான் எதிர்காலத்தில் திரும்பவும் உபயோகிக்கப்படுமாம். நானோ டெக்னாலஜியின் உபகரணத்தால் ஆற்றல்கழிவு சுத்திகரிக்கப்பட்டு, தற்போதுள்ள Led பல்புகளை விட இன்னும் திறன் அதிகம் உள்ளதாக இவை மாற்றப்படுமாம்.

என்னவோ போ...ஓல்ட் இஸ் கோல்ட் என்று சும்மாவா சொன்னார்கள்! 

https://tamil.thehindu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.