Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

பேசும் படம்: ஒளி வண்ணங்கள்!

2jpg

 

4jpg
 

 

 

5jpg

 

 

 

1jpg

 

 

 

 

 

 

3jpg
 

https://tamil.thehindu.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

`அரசியல்வாதிகள் நேர்மையாக சமரசம் பேசினாலே தீவிரவாதம் ஓடிப்போய்டும்’ -விஸ்வரூபம் 2 படத்தின் இரண்டாவது ட்ரெய்லர்

 
 

கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்தின் இரண்டாவது  ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. 

விஸ்வரூபம் 2

கமல்ஹாசன் இயக்கி, நடித்த `விஸ்வரூபம்' திரைப்படம், பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த 2013-ல் வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகம் எடுக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான 40 சதவிகித படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகக் கூறப்பட்டது. படத்துக்கான பணிகள் முடிவடைந்த நிலையில் ஜூன் மாதம் 11-ம் தேதி விஸ்பரூபம் 2 படத்தின் முதல்  ட்ரெய்லர் வெளியானது. இந்தநிலையில், விஸ்வரூபம் 2 படத்தின் இரண்டாவது  ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த பாகத்தின் முடிவை முன்னுரையாகக் கொண்டு, இந்த  ட்ரெய்லர் தொடங்குகிறது. இந்த  ட்ரெய்லர்  முழுவதும் கமல் மற்றும் ஆண்ட்ரியாவின் ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விஸ்வரூபம் 2 படம், வரும் ஆகஸ்ட் மாதம் 10 -ம் தேதி வெளியாகும் என முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

  • தொடங்கியவர்

`ஷாப்பிங் கூட்டிட்டுப் போனாதான் காதலா?' - கணவன் - மனைவி ரிலேஷன்ஷிப் கோல்ஸ்

3277_thumb.jpg
 

உங்கள் ஆரோக்கியமான உறவுக்கு இவற்றைப் பின்பற்றினாலே போதும்.

`ஷாப்பிங் கூட்டிட்டுப் போனாதான் காதலா?' - கணவன் - மனைவி ரிலேஷன்ஷிப் கோல்ஸ்
 

`எப்போதாவது சண்டைனா ஓகே! எப்போதுமே சண்டைனா எப்படி மச்சான்! இன்னொரு குவார்ட்டர் சொல்லேன்' என்று நண்பர்களுக்கு தொல்லைகொடுக்கும் திருமணமான தேவதாஸ்கள் ஒருபக்கம் புலம்பிக்கொண்டிருக்க, 'வாழ்க்கைல நிம்மதியே இல்ல. உன்ன கல்யாணம் பண்ணுனதுக்கு ஒரு ...ய கல்யாணம் பன்னிருக்கலாம்' என்று கண்ணெதிரே நிம்மதி இருந்தும், பிரச்னைகளை மட்டுமே மனதில் சுமக்கும் பார்வதிகள் மறுபுறம் வெடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் கனவுகளோடு இல்லற வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கும் ஆண்-பெண் இருவரும், ஏதோ ஒரு வகையில் கசப்பான நாள்களைக் கடக்க வேண்டியதாய் அமையும். இது தவிர்க்கமுடியாத ஒன்று. முதல் பார்வை, முதல் தீண்டல், முதல் முத்தம் என ரசித்து வாழ்ந்த நாள்கள் அனைத்தும் பச்சை பாவக்காயை வெறும் வயிற்றில் கடித்ததுபோல் கடுப்பு கலந்த கசப்பான அனுபவமாய் தோன்றுவதற்கு காரணம் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிப்படை புரிதல் இல்லாமல் இருப்பதே காரணம். உங்கள் ஆரோக்கியமான உறவுக்கு இவற்றைப் பின்பற்றினாலே போதும்.

கணவன் மனைவி

பழைய பூராணம் பாடாதீங்க:

 

 

கணவன் மனைவிக்கிடையே சின்னச்சின்ன சண்டைகள் வருவது இயல்பு. சண்டையின்போது பொறுமை இழந்து பாத்திரங்கள் உடைவதும் சகஜம்தான். ஆனால், நலிந்த உடைந்த பாத்திரத்தை வைத்து காலம் முழுவதும் புராணம் பாடுவது மிகவும் தவறான செயல். அன்றைய பிரச்னைகளை உடனுக்குடன் சரிசெய்வது நல்லது. என்றைக்கும், பிரச்னைக்கான தீர்வுகளை தள்ளிப்போடாதீர்கள். அதிகபட்சம், தூங்குவதற்கு முன்பு மனம்விட்டுப் பேசி, அத்துடனே அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள். விடியும் நேரம் புன்னகையோடு விடியும்.

நீ என்ன பெரிய ஒழுங்கா!

இந்த உலகத்தில் யாரும் 'பெர்ஃபெக்ட்' இல்லை என்பதை இருவரும் புரிந்துகொள்ள வேண்டும். சிலர் தங்களின் காதல் உணர்வுகளை உடனுக்குடன் வெளிப்படுத்திவிடுவார்கள். அவற்றை 'சர்ப்ரைஸ் டின்னர்', 'ஸ்பெஷல் பார்ட்டி' போன்ற நிகழ்வுகள் மூலம் வெளிப்படுத்துவார்கள். சிலரால் இப்படி 'ஃபேன்சி' ஸ்டைலில் வெளிப்படுத்த முடியாது. அதற்காக அவருக்கு உங்கள்மீது காதல் இல்லை என்று அர்த்தமாகிவிடாது. நீங்கள் நினைத்ததைவிட பல மடங்கு உங்களைக் காதலித்துக்கொண்டிருப்பார். ஷாப்பிங் மால், பீச், பார்க் போன்ற இடங்களுக்கு அழைத்துச்செல்லாமல் இருப்பதால், உங்கள்மீது காதல் இல்லை என்றாகிவிடுமா? எப்போதும் ஏதாவது குறை கூறிக்கொண்டே இருப்பதால் அன்பு குறைந்துவிட்டது என்றாகிவிடுமா? உங்கள் விருப்பு வெறுப்புகளை சொன்னால்தானே, எதிரே உள்ளவர்களுக்கு புரியும். அதைப் புரிய வைக்க ஒருவருக்கொருவர் பழி சொல்லாமல், காதலோடு பழகிப் பயணியுங்கள்.

கணவன் மனைவி

ஆரம்பம் வரைக்கும் போய் அலசி ஆராய்ந்து பார்க்கணும்:

'எப்போ பார்த்தாலும் பிரச்னை' என்று ஆரவாரம் செய்துகொண்டிருந்தால் மட்டும் பிரச்னை தீர்ந்துவிடுமா? இருவருக்கும் பிரச்னை எதனால் உருவாகிறது? ஏன் கோபத்தின் உச்சத்துக்கு செல்கிறோம்? இதுபோன்ற கேள்விகளை என்றைக்காவது உங்களுக்குள் கேட்டுக்கொண்டிருக்கிறீர்களா? தவறு செய்வது மனிதனின் இயல்பு. இதை இருவரும் புரிந்துகொண்டு, அதே தவறை மீண்டும் செய்யாமல் இருந்தாலே, நிம்மதி என்றைக்கும் நிலைத்து இருக்கும்.

ஹலோ! நான் இங்க இருக்கேன்!

அலுவலக வேலைகளை முடிந்தவரை வீட்டுக்கு கொண்டுவராதீர்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் செய்யலாம். அதற்கும் ஒரு எல்லையுண்டு. வீடு திரும்பியதும் லேப்-டாப்பை மடியில் வைத்துக்கொண்டு, மனைவியின் முகத்தைக்கூட பார்க்க நேரமில்லாமல் பணியில் மூழ்கி இருப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்லதல்ல. உங்களின் வருகைக்காகவே காத்துக்கொண்டிருக்கும் மனைவியின் எதிர்பார்ப்பப்பைப் பற்றி என்றைக்காவது யோசித்ததுண்டா? வீட்டில் இருப்பவர்களிடம் மனம்விட்டுப் பேசி, சிரிப்பது மிகவும் அவசியம். சுவிட்ச் தட்டினால் சிரிப்பதற்கும், அழுவதற்கும் நாம் லேப்-டாப் போன்ற இயந்திரம் அல்ல. உணர்ச்சிமிக்க மனிதர்கள் என்பதைப் புரிந்து நடந்தால், அடி உதைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்!

இப்படி சில்லறை பிரச்னைகளையெல்லாம் பெரிதாக்காதீர்கள். சில்லறைகளிலே முடித்துக்கொள்வது பெட்டர்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது (01-08-1960)

 
பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது (01-08-1960)
 
பாகிஸ்தானின் வடமேற்கில் இஸ்லாமாபாத் பிரதேசம் அமைந்துள்ளது. 1960-ல் பாகிஸ்தானில் தலைநகரான கராச்சிக்குப் பதிலாக புதிய தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. இந்நகரத்தின் பரப்பளவு 406 சதுர கிலோமீட்டர்.

மேலும் இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1820 - லண்டனில் ரீஜண்ட் கால்வாய் திறக்கப்பட்டது.

*  1831 - புதிய லண்டன் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

* 1876 - கொலராடோ ஐக்கிய அமெரிக்காவின் 38-வது மாநிலமாக ஏற்கப்பட்டது.

* 1894 - கொரியா தொடர்பாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் போர் தொடங்கியது.

*  1902 - பனாமா கால்வாயுக்கான உரிமையை ஐக்கிய அமெரிக்கா பிரான்சிடம் இருந்து வாங்கியது.

* 1902 - ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வொலொங்கொங் நகரில் சுரங்கம் ஒன்றில் நடந்த வெடிவிபத்தில் 100 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

*  1907 - சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிரௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகஸ்ட் 9 வரை நீடித்தது.

*  1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி ரஷ்யாவுடன் போர் தொடுத்தது

*  1914 - இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர ரெயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

 

 

பராகுவேயில் பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 396 பேர் பலி : 01-08-2004

 
அ-அ+

பராகுவேயில் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 396 பேர் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர்.

 
 
 
 
பராகுவேயில் பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 396 பேர் பலி : 01-08-2004
 
பராகுவேயில் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 396 பேர் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

*  1927 - சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் கொமிந்தாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் நான்சாங் என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.

*  1936 - பெர்லினில் 11-வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.

*  1941 - முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.

*  1944 - போலந்தில் வார்சா நகரில் நாசிகளுக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.

*  1952 - தந்தை பெரியார் ரெயில் நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.

*  1960 - டஹோமி (பெனின்) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

*  1960 - பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது

*  1964 - பெல்ஜிய கொங்கோவின் பெயர் கொங்கோ குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.

*  1967 - கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது.

*  1980 - அயர்லாந்தில் இடம்பெற்ற ரெயில் விபத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

*  2002 - தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

*  2006 - இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

*  2007- யாழ்பல்கலைக்கழக மாணவன் ச.நிலக்சன் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

`ப்ளீஸ் இதை வீட்டில் ட்ரை பண்ணுங்க' - சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட தோனி!

 

தோனி

 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக, இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இந்திய கிரிக்கெட் வீரர் தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுவிட்டதால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாமல் உள்ளார். இதனால் தனது விடுமுறை நாள்களை வெளி இடங்களுக்கு செல்வது, பைக் ரைடிங் என ஜாலியாக பொழுதைப்போக்கிவருகிறார். அவ்வாறு ஜாலியாக விளையாடும் வீடியோ ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகிவருகிறது. `ப்ளீஸ், இதைக் கொஞ்சம் வீட்டில் ட்ரை பண்ணுங்க' என்ற வேண்டுகோளுடன் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். 

 

 

அதன்படி, மழையில் நனைந்தவாறு ஒரு சிறிய சைக்கிளில் உட்கார்ந்து, ஸ்டைலாக கண்ணாடி அணிந்துகொண்டு ஒரு குச்சியை எடுத்து வாயில் கவ்விக்கொள்கிறார். ஹெட்போன் சகிதமாக சைக்கிளைச் சுற்றி சதுர வடிவிலான கம்பியை மாட்டிக்கொண்டு, சைக்கிளை உந்தித் தள்ளுகிறார். மேட்டில் இருந்து கீழே இறங்குகிறார். இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வித்தியாசமாக இருக்கும் இந்த வீடியோவைப் பலரும் பகிர்ந்துவருவதால், லைக்ஸை குவித்துவருகிறது. அதே நேரத்தில், பலரும் இந்த சைக்கிள் சாகசம் குழப்பமாக உள்ளதாக கமெண்ட்ஸ் தெரிவித்துவருகின்றனர். 

 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

அமேசான் காட்டில் தன்னந்தனியாக 20 வருட வாழ்க்கை! பிரமிக்கவைக்கும் கடைசி இன மனிதர்

 
 

பிரேஸில் நாட்டில் உள்ள ரோண்டோனியா பகுதியில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர், கடந்த 20 ஆண்டுகளாகத் தனியாக வசித்து வந்துள்ளார்.

பிரேசில்

உங்கள் மொழியைப் பேசுவதற்கு நீங்கள்தான் கடைசி நபர். உங்களுக்கும் வெளி உலகத்துக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டு தீவு ஒன்றில் தனித்து விடப்பட்டால், உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? அந்தக் காடுதான் உங்கள் வீடு. அங்கு கிடைப்பவைதான் உங்கள் உணவு குழிகள்தான் உங்கள் வசிப்பிடம். இந்தச் சூழலில் நீங்கள் இருக்க முடியுமா? 

 

 

ஆம், இப்படி ஒரு சூழலில்தான் பிரேஸிலில் உள்ள ரோண்டோனியாவில் ( Rondonia), பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர், அமேசான் காடுகளில் தன்னந்தனியாக வசித்து வருகிறார். 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுகொண்ட அந்தக் காட்டில், கடந்த 20 வருடங்களாக தன்னந்தனியாக வசித்துவருகிறார். இவர், 1950-60-களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பிறந்திருப்பார் என மானுடவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இவருடன் இருந்த மற்ற பழங்குடியின மக்களை கிராம வாசிகள் கொலை செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து, தற்போது காட்டில் தனியாக வசித்துவருகிறார்.  காடுகளையும் தன் முயற்சியால் சீர்படுத்திவருகிறார். சோளம் மற்றும் பப்பாளி விளைவித்து வருகிறார். தான் வைத்திருக்கும் கோடரியைக்கொண்டு மரம் வெட்டுகிறார். இதன்மூலம், விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடி உணவாக உட்கொள்கிறார். நிலத்தில் குழிகளை  வெட்டிவைத்து, விலங்குகளை வேட்டையாடுகிறார். தன் வாழ்விடமாக அந்தக் குழிகளையே பயன்படுத்துகிறார்.  ஆறு அடியில் இந்தக் குழிகள் அமைந்துள்ளன. இந்தக் குழிகளை மனிதர்களிடமிருந்து தப்பித்து பதுங்கிக்கொள்வதற்காகப் பயன்படுத்துகிறார். தான் பேசும் ஒரு மொழி, தன்னைத் தவிர வேறு யாருக்கும் அறியாதபோது, அவரால் என்ன செய்ய முடியும். 

 

 

பழங்குடியினர்

அந்த நபர் குறித்த வீடியோ பதிவை தன்னார்வத் தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது, 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. இந்த வீடியோவும் மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காகவே, 7 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது என்கின்றனர். தற்போது, இவரை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை பிரேஸில் அரசு மேற்கொண்டுள்ளது. இவரை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக பிரேஸிலில் உள்ள சர்வதேச இந்தியத் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

'அமேசான் பகுதியில் வசிக்கும் இந்தப் பழங்குடிகள் எங்கிருந்து வந்தவர்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.தொடர்புகொள்ள இயலாத இந்தப் பழங்குடிகளைப்  பாதுகாப்பது அரசுக்கு சவாலான பணியாக இருக்கிறது' என்கிறார்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

குழந்தை பிறந்தால் குளிக்கக்கூடாது - மரபை மாற்றும் சீனப் பெண்கள்

ஒரு மாதம் முழுக்க குளிக்காமல் உங்களால் இருக்க முடியுமா?

  • தொடங்கியவர்

பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும்போது சில பெயர்களை தவிருங்கள் ! இல்லையேல் தண்டனை !

 

 

ஒரு மனிதனை அடையாளப்படுத்தக் கூடியது அவனது பெயர்.  அப்படிபட்ட பெயரில் குறிப்பிட்ட சில பெயர்களை வைத்தால் சில உலக நாடுகள் தண்டனை வழங்கும்.  அவ்வாறு தண்டனை வழங்கப்படும் பெயர்களும் அதற்கான காரணமும் 

name-l.jpg

 

01- அடொல்ப் ஹிட்லர் ( adolf hitler )

hitler.jpg

ஜெர்மனியின் சர்வாதிகாரியான அடொல்ப் ஹிட்லர், இவருடைய பெயரை வைப்பதற்கு 1943 ஆம் ஆண்டு ஜெர்மன் மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. அதனையும் மீறி பெயர் வைத்தல் உடனடியாக அப்பெயரை மாற்றிவிட வேண்டும் இல்லையென்றால் தண்டனை வழங்கப்படும். மேலும் ஹிட்லர் இறப்பதற்கும் காரணமாக இருந்த சயனைட் மாத்திரையின் (Cyanide) பெயரையும் பல உலக நாடுகளில் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

02- மெசியா (Messiah)

massiah.jpg

2013 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு ஏழு வயது சிறுவனிற்கு மெசியா என்ற பெயரை அவனது பெற்றோர்கள் அவனுக்கு வைத்தனர். பின் இந்த பெயர் வைத்ததற்காக அச் சிறுவனின் பெற்றோர் மீது அமெரிக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  காரணம் மெசியா என்பது இயேசுக் கிறிஸ்துவின் பெயராகும் எனவே அந்த பெயரை மற்றுமொருவருக்கு சூட்டுவதற்கு முடியாது என நீதிமன்றத்தினால்  தடை விதிக்கப்பட்டது. மெசியா என்னும் பெயர் குறிப்பாக கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் ஆகிய சமயம் சார்ந்த பெயர் ஆகும், மெசியா என்றால் ஒரு கூட்டத்தினருக்கு விடுதலை அளிப்பவர் என்று பொருள்படும்.

 

03- அகுமா (akuma)

akuma.jpg

ஜப்பானில் இரு தம்பதியினர் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு அகுமா என்று பெயர் வைத்தனர். பின்னர் அயலவர்கள் உறவினர்களுக்கு இதை கூறியதும்  அவர்கள் பயந்து ஜப்பான் நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்தனர். விசாரித்த பின் அகுமா என்கின்ற பெயரை இனி ஜப்பானில் யாரும் வைக்கவும் கூடாது என்று நீதிமன்றத்தில் தடை சட்டம் உத்தரவிடப்பட்டது. குழந்தையின் பெயரும் மாற்றி வைக்கப்பட்டது.

அகுமா என்றால் ஜப்பானிய கதைகளில் வரக்கூடிய   இராட்சத பேய் ஆகும். மேலும் ஸ்ட்ரீட் பயிட்டர் விளையாட்டில் வரக்கூடிய பிரசித்தி பெற்ற கதாப்பாத்திரமும் ஆகும்.

 

04- ஹரி பொட்டர்

harry_potter.jpg

நாம் அனைவரும் அறிந்த பிரசித்தி பெற்ற இந்த பெயரை மெக்ஸிகோ நாட்டில் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுஉள்ளது இது மட்டும் அல்லாது பல நகைச்சுவை, திரைப்படங்கள் மற்றும் கார்ட்டூன்களில் வரக்கூடிய பல பெயர்களை வைப்பதற்கு இந்நாட்டில் தடை.

 

05- மலக் 

angel.jpg

சவுதி அரேபியாவில் மலக் என்கிற பெயரை வைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மலக் என்றால் தேவதை, வானவர்கள் என்று பொருள்படும் எனவே இந்த பெயரை சவுதி அரேபியாவில் வைப்பதற்கு தடை. மீறி வைத்தல் கடுமையான தண்டனை மட்டும் கிடைக்கும்.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

 

80 வயதில் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு

தேவதாசி முறை சென்னை மாகாணத்தில் 1947ம் ஆண்டு ஒழிக்கப்பட்டபோது அந்த முறையின் கீழ் கோயில்களில் நடனமாடி வந்தவர்களில் ஒருவர் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளார். அவர்தான் 80 வயதான முத்துக்கண்ணம்மாள். விராலிமலையைச் சேர்ந்த முத்துக் கண்ணம்மாள் உடலில் வயதுக்கான தளர்வு இருந்தாலும் சதிர் நடனத்தின் மீதான ஆர்வமும் பற்றும் அவரை இன்றும் ஆடத் தூண்டுகின்றன. தாளத்திற்கு பாடிக்கொண்டே ஆடுகிறார்.

  • தொடங்கியவர்

பூக்கள் அறிவோம்
Borage (Borago officinalis)

ஐந்து முனைகளுடன் நட்சத்திர வடிவில் இருப்பதால் இப்பூக்களுக்கு நட்சத்திரப்பூக்கள் (star flower) என்றும் தேனீக்கள் எப்போதும் வட்டமிட்டுக் கொண்டிருப்பதால் தேனீக்களின் பிரெட் (bee bread) என்றும் பெயர். மலரத் தொடங்கும்போது பிங்க் நிறத்தில் இருக்கும் பூக்கள் நன்கு மலர்ந்த நிலையில் நீலநிறமாகிவிடும். இத்தாவரம் மத்தியத்தரைக்கடல் நாடுகளைத் தாயகமாகக் கொண்டது.

மெல்லிய சுணப்புடன் காணப்படும் இச்செடியைக் கையாள்கையில் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும். இதன் இலை, பூ, காய் மற்றும் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் அனைத்தும் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகின்றன. இதன் எண்ணெய் சரும நோய்களுக்கு நல்ல மருந்து என்பதால் சரும அழகுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. மூட்டுவலி, நீரிழிவு, நுரையீரல் நோய், இதயநோய், வலி, வீக்கம் போன்றவற்றிற்கான சகலரோக நிவாரணியாகவும் செயல்படுகிறது. பூக்களை சர்க்கரைப்பாகில் நனைத்து கேக்குகளின் மேல் அலங்காரத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

பண்டைய ரோமானியர் காலத்திலிருந்தே ஐரோப்பாவில் பயன்பாட்டில் உள்ளது இம்மூலிகை. ரோமானியப் போர்வீரர்கள் போருக்குச் செல்வதற்குமுன் இந்த மூலிகைத் தேநீரையும் ஒயினையும் கலந்து குடித்து தங்களைப் பலப்படுத்திக்கொள்வார்களாம். திராட்சைமதுவுடன் கலந்து குடித்தால் மறதி ஏற்படும் என்று ஹோமர் குறிப்பிடும் Nepenthe மூலிகை இதுதான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பூக்களையும் இலைகளையும் உண்பது மனத்தை உற்சாகமாக்கும், கவலையை மறக்கச்செய்யும், நோய் தீர்க்கும், மன அழுத்தம் குறைக்கும் என்கிறார் தாவர வல்லுநர் ஜான் ஜெரால்டு.

 

Bild könnte enthalten: Pflanze, Blume, im Freien und Natur
  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று : ஓகஸ்ட் 02
 

image_a44cb6af8e.jpg1903 : ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக மசிடோனியர்களின் கிளர்ச்சி தோல்வியில் முடிந்தது.

1914 : ஜேர்மனியப் படையினர் லக்சம்பேர்கை முற்றுகையிட்டன.

1916 : முதலாம் உலகப் போர் - லியனார்டோ டாவ்வின்சி என்ற இத்தாலியப் போர்க்கப்பல் ஆஸ்திரியாவினால் மூழ்கடிக்கப்பட்டது.

1918 : முதலாம் உலகப் போரை அடுத்து சைபீரியாவுக்கு தனது படைகளை அனுப்பப்போவதாக ஜப்பான் அறிவித்தது.

1931 : இராணுவ வேலைகளை நிராகரிக்குமாறு அறிவியலாளர்களுக்கு ஐன்ஸ்டைன் அழைப்பு விடுத்தார்.

1932 : பொசித்திரன் (இலத்திரனின் எதிர்த்துணிக்கை) கார்ல் ஆண்டர்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1934 : அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார்.

1939 : அணு ஆயுதத்தை தயாரிக்க அறிவுறுத்துமாறு ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டிற்குக் கடிதம் எழுதினார்கள்.

1943 : போலந்தில் திரெபிலிங்கா வதை முகாமில் நாசிகளுக்கு எதிராகக் கிளர்ச்சி இடம்பெற்றது.

1945 : இரண்டாம் உலகப் போர் - தோல்வியடைந்த ஜேர்மனியின் எதிர்காலம் குறித்து விவாதித்த நட்பு அணி நாடுகளின் பொட்ஸ்டாம் மாநாடு நிறைவடைந்தது.

1968 : பிலிப்பீன்சில் கசிகுரான் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி, 270 பேர் உயிரிழந்தனர்.

1973 : மான் தீவில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில், 51 பேர் கொல்லப்பட்டனர்.

1980 : இத்தாலியில் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப்பட்டனர்.

1989 : யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

1990 : ஈராக் குவைத்தின் மீது படையெடுத்தது.

1994 : பலாலி இராணுவத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியதில் உலங்கு வானூர்தி, கவச வண்டி தாக்கியழிக்கப்பட்டன.

2006 : திருகோணமலை மாவட்டத்தில் மகிந்தபுர, கிளிவெட்டி, பாலதோப்பு, பச்சனூர் இராணுவ முகாம்களைத் தாக்கி, மூதூர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகள் உள்நுழைந்தனர்.

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

புன்னகைக்க எல்லோராலும் முடியும், மனதார சிரிப்பது ஒரு சிலரால் மட்டுமே முடியும்! #Motivation

3277_thumb.jpg
 

சிரிப்பு' என்பது உங்கள் வாழ்வின் வலிமையான ஆயுதம் என்பதை என்றைக்காவது உணர்ந்திருக்கிறீர்களா? 

புன்னகைக்க எல்லோராலும் முடியும், மனதார சிரிப்பது ஒரு சிலரால் மட்டுமே முடியும்! #Motivation
 

கோடிக்கணக்கான மக்களில், உங்களின் இறுதி நாள் வரை உங்களுடனே பயணிக்கப்போவது என்னவோ ஒருவர் மட்டுமே. இளமை உள்ள வரை ஓடி ஓடி உழைத்து, சொத்து சேர்த்தும் சேராமலும் வைத்து (லோன் இருக்குமே), இறுதியில் ஓரளவுக்கு வங்கிக்கணக்கில் ஆறு டிஜிட் தொகை இருக்கும் நேரத்தில், அதை அனுபவிக்க முடியாமல் (குழந்தைகள் இருக்கிறார்கள் அல்லவா!) ஏங்கும் எத்தனையோ யூத்துகள் இருக்கத்தான் செய்கிறார்கள். பணத்தைச் சேர்த்துவைத்திருக்கும் தோழர்களே, உங்களில் எத்தனை பேர் உங்கள் அன்பென்னும் வங்கியில் குடும்பத்தாரின் பாசத்தையும், நண்பர்களின் நேசத்தையும், உறவினர்களின் ஆசியையும் சேமித்துவைத்திருக்கிறீர்கள்? இதன் முதலீடு `சிரிப்பு' என்பது உங்களுக்குத் தெரியுமா?

சிரிப்பு

எல்லோராலும் புன்னகைக்க முடியும். ஆனால், சிரிக்க முடியாது. உங்களால் சிரிக்க முடியுமென்றால், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். நீங்கள் மனம்விட்டுச் சிரித்து எத்தனை மாதங்கள் ஆகின்றன என்பது உங்கள் நினைவில் இருக்கிறதா? சிலருக்கு `ஆண்டுகள்' ஆகியிருந்தாலும் ஆச்சர்யமில்லை! ஏற்றத்தாழ்வு நிறைந்ததுதான் வாழ்க்கை. இதைப் புரிந்துகொள்ளாதவர்கள், வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கிக்கொள்கின்றனர். பலர், பல நேரங்களில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரியாமல், பிரச்னைகளை வளரவிட்டு அதன் தீர்வுக்கான வழி தெரியாமல் விழிக்கிறார்கள். ஆனால், `சிரிப்பு' என்பது உங்கள் வாழ்வின் வலிமையான ஆயுதம் என்பதை என்றைக்காவது உணர்ந்திருக்கிறீர்களா? 

 

 

வாய்விட்டுச் சிரித்தால் நோய் மட்டுமல்ல மற்ற துன்பங்களும் போய்விடும். உங்கள் எதிரியை வீழ்த்த கோபப்பட்டு முறைக்கிறீர்களே, சற்று நிதானமாக நின்று வெற்றியைக் கொண்டாடுபவர்களைப் பார்த்துச் சிரித்துப்பாருங்கள். உங்கள் சிறிய தோல்வி முன், உங்கள் எதிரி வலுவிழந்து காணப்படுவான். யாருக்குத் தெரியும் பிற்காலத்தில் அவர் உங்கள் நண்பராகக்கூட ஆகலாம். உங்களையும் மீறி உங்கள் மனதுக்கு வலு சேர்ப்பது சிரிப்பு மட்டுமே. அப்படிப்பட்ட வலிமையான ஆயுதத்தை, ஏன் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடாது? உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு மட்டுமல்ல உங்கள் உடல் நலத்துக்கும் இது மிகவும் நல்லது.

 

 

எந்த உறவாக இருந்தாலும் பிரச்னைகள் வருவது சகஜமான ஒன்று. பிரச்னை ஏற்படும்போது ஒருவர்மேல் ஒருவர் பழி சொல்லிக்கொள்ளாமல், பிரச்னைக்கான தூண்டுதலைப் பார்த்து சரிசெய்வதில்தான், உங்கள் உறவின் முதிர்ச்சி இருக்கிறது. அப்படிச் செய்யாமல், `உன்னாலதான் எல்லா பிரச்னையும்' என்று அர்த்தமற்ற வாக்குவாதம் செய்வதால் எந்தவிதமான பிரயோஜனமும் கிடையாது. உறவு முக்கியமா, வாக்குவாதத்தில் வெற்றி பெறுவது முக்கியமா எனத் தீர்மானிக்கவேண்டியது நீங்கள்தான்.

நண்பர்களுடன் சிரித்துப் பேசும் பலர், வீட்டில் உள்ளவர்களிடம் சினம்கொண்ட சிங்கம்போல் கர்ஜிப்பார்கள். வெளியில் சிதறும் அதே சிரிப்பு, வீட்டிலும் சிதறினால் சந்தோஷமான வாழ்வு எளிதில் உங்களுடையதுதானே! மனம்விட்டுப் பேசி வாய்விட்டுச் சிரித்துப்பாருங்கள், உங்கள் உறவு மேலும் வலுவாகும். எந்தச் சமயத்திலும் உங்களைக் கைவிடாத உறவுக்கு உங்களின் அணுகுமுறை முக்கியக் காரணம். அதற்கு அங்கே மகிழ்ச்சியான தருணம் அவசியம்.

Smile

துன்பம் வரும் வேளையிலும் சிரிக்கத் தெரிந்தவன், எத்தனை கடினமான நிலையையும் சமாளிக்கத் தெரிந்தவன். இப்படிச் செய்தால், `பைத்தியக்காரன்' என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்பது பலரின் மனக்குரல். பிறர் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதை இதுபோன்ற சமயங்களில் எண்ணாதீர்கள். வேதனையைத் தோல்வியடைய செய்வதற்கு உங்களின் சிரிப்பால் மட்டுமே முடியும். அதேசமயம் எந்தக் காலகட்டத்திலும் `எதிர்மறையான' உணர்ச்சிக்கு அடிமையாகிவிடாதீர்கள். அதாவது, உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்வது, தண்டித்துக்கொள்வது போன்ற தவறுகளைச் செய்யாதீர்கள். அதிகப்படியான கோபம், அழுகை, அழுத்தம் அனைத்தும் ஆபத்து. `நிதானம்' என்பது எல்லா நேரங்களிலும் அவசியம். பெரும்பாலான நேரங்களில் ஆண்களைவிட பெண்களே தங்களைத் தாழ்வாக நினைத்துக்கொள்கிறார்கள். இதுபோன்ற நேரங்களில், பெண்களோடு உறுதுணையாக இருப்பது அவசியம்.

 

 

இக்கட்டான சூழ்நிலையில் தோள்கொடுத்து, அவர்களை கலகலகலவென சிரிக்கவைத்துப் பாருங்கள், முடிந்தால் கண்களில் நீர் வரும் அளவுக்குச் சிரிக்கவையுங்கள். ஆனால், நடிகர் விஜய்  சொல்வதுபோல், `மத்தவங்கள வேதனைப்படுத்துற ஒரு சின்ன ஸ்மைல்கூட தப்புதான்' என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

படமும் கதையும்: ஜப்பானிய நாடோடிக் கதை

 

 
kadhaijpg
story%20explainjpg
1jpg
 
2jpg
3jpg
4jpg
 
 
 
 

https://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

கண்டுபிடிப்புகளின் கதை: சிப்ஸ்

 

 
chipsjpg

ஒரு காலத்தில் அமெரிக்கர்கள், ஐரோப்பியர்களின் விருப்பமான சிற்றுண்டியாக இருந்த உருளைக் கிழங்கு சிப்ஸ், இன்று உலக மக்களின் விருப்பத்துக்கு உரிய சிற்றுண்டியாக மாறிவிட்டது. தனியாகவும் உணவுடன் சேர்த்தும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

உருளைக் கிழங்கு சிப்ஸின் ருசியைப் போலவே அது கண்டுபிடிக்கப்பட்ட கதையும் சுவையானது. 1817-ம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளரும் இசைக் கலைஞருமான வில்லியம் கிட்ச்னர், சமையல் புத்தகம் ஒன்றை வெளியிட்டார். இதில் உருளைக் கிழங்கு துண்டுகளை எண்ணெயில் பொரித்த உணவு வகைகள் இடம்பெற்றிருந்தன.

 

இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் இந்தப் புத்தகம் அதிகமாக விற்பனையானது. உருளைக் கிழங்கின் தோலை நீக்கி, கால் அங்குல தடிமனில் உப்புச் சேர்த்துப் பொரிக்கப்பட்டன. 1824-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மேரி ரான்டோல்ப், 1832-ம் ஆண்டு என்.கே.எம். லீ இருவருடைய சமையல் புத்தகங்கள் வெளிவந்தன. இவற்றிலும் பொரிக்கப்பட்ட உருளைக் கிழங்குகள் இடம்பெற்றன.

1853-ம் ஆண்டு ஆப்பிரிக்க அமெரிக்கப் பழங்குடியினரான ஜார்ஜ் க்ரம், ஓர் உணவகத்தில் சமையல் கலைஞராக வேலை செய்துவந்தார். வாடிக்கையாளர் ஒருவர், பொரிக்கப்பட்ட உருளைக் கிழங்கு வேண்டும் என்றார். அதைக் கொடுத்தபோது, அவருக்குப் பிடிக்கவில்லை. உடனே வேறு விதமாகச் செய்து கொடுக்கும்படி கேட்டார். மீண்டும் செய்து கொடுத்தார் ஜார்ஜ்.

georgejpg

ஜார்ஜ் க்ரம்

அதுவும் அவர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அதனால் உருளைக் கிழங்கை மிக மிக மெல்லியதாகச் சீவி, அதைப் பொரித்து, உப்புத்தூள் சேர்த்துக் கொடுத்தார். அதைச் சுவைத்தவர்கள் ஆச்சரியமடைந்தனர். மிகவும் சுவையாக இருப்பதாகச் சொன்னார்கள். ஜார்ஜுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இப்படித்தான் உருளைக் கிழங்கு சிப்ஸ் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

சரகோட்டா ஸ்பிரிங்ஸ் என்ற நகரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததால், ‘சரகோட்டா சிப்ஸ்’ என்ற பெயரில் விற்பனைக்கு வந்தது. 1860-ம் ஆண்டு ஜார்ஜ், ‘க்ரம்ப்ஸ் ஹவுஸ்’ என்ற பெயரில் ஓர் உணவகத்தை ஆரம்பித்தார். ஒவ்வொரு மேஜையிலும் ஒரு பாத்திரம் நிறைய உருளைக் கிழங்கு சிப்ஸ் வைக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்புக்காக ஜார்ஜ் காப்புரிமை கோரவில்லை. அதற்கான எந்தப் பலனையும் அவர் அனுபவிக்கவே இல்லை.

மாட்டிறைச்சியும் சாசேஜையும் தயாரித்துக் கொண்டிருந்த டேனியல் டபிள்யூ மைக்செல், 1910-ம் ஆண்டு சரகோட்டா சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்தார். இதுவே அமெரிக்காவின் மிகப் பழமையான உருளைக் கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனமாக இருக்கிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்மித்ஸ் உருளைக் கிழங்கு சிப்ஸ் நிறுவனம், 1920-ம் ஆண்டு, காகிதப் பையில் சிப்ஸை விற்பனைக்குக் கொண்டுவந்தது. சீஸ், வெங்காயம், உப்பு, வினிகர் கலந்த சிப்ஸ் வகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

காகிதத்தில் சிப்ஸ் எளிதாக நமுத்துவிடுவதால், அவற்றை டின்களில் அடைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தனர். பிறகு மெழுகுத்தாள், பிளாஸ்டிக் தாள்களில் சிப்ஸ் பாக்கெட்கள் வெளிவந்தன.

இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு என்று பல்வேறு சுவைகளில் சிப்ஸ் வந்துவிட்டன. சிப்ஸை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் சோடியம் அளவு அதிகமாகி, ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அளவோடு சாப்பிட்டால் பிரச்சினை இல்லை.

உருளைக் கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதில் கண்டுபிடித்த அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, எகிப்து, பிரேசில் நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருக்கும் சீனா, 8-வது இடத்தில் இருக்கிறது. 150 ஆண்டுகளுக்கு முன்பு, தன்னுடைய கண்டுபிடிப்பு உலகப் புகழ் பெறும் என்று ஜார்ஜ் க்ரம் நினைத்திருக்க மாட்டார். இனி சிப்ஸ் சாப்பிடும்போது அவரை நினைத்துக்கொள்வோமா?

(கண்டுபிடிப்போம்)

https://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

``4 ஆண்டுகள், 60 நாடுகள், 500 கண்கள்!”- இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை மிஸ் பண்ணாதிங்க

 
 
``4 ஆண்டுகள், 60 நாடுகள், 500 கண்கள்!”- இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை மிஸ் பண்ணாதிங்க
 

ஒரு நாளைக்கு எத்தனை முகங்களை, அதன் கண்களை நாம் கடந்து செல்கிறோம்? கிண்டி ரயில் நிலைய வாசலில் யாசகம் கேட்டு நிற்கும் பாட்டியின் கண்களில் ஆரம்பித்து, ஐடி கார்ட் மாட்டியிருக்கும் ஐ.டி பெண்கள் வரை ஒரு நாளைக்குக் குறைந்தது பத்துக் கண்களையாவது நான் கடந்துகொண்டிருக்கிறேன். ஐந்து ரூபாய் டிக்கெட்டிற்கு நூறு ரூபாய் கொடுத்ததும் எழுத முடியாத வார்த்தைகளில் திட்டி, என்னைப் பேருந்திலிருந்து இறங்கச் சொன்ன நடத்துநரிடம் எனக்காக ஐந்து ரூபாய் கொடுத்த பெயர் தெரியாத அந்த அக்காவின் பார்வையை என்னால் மறக்கவே முடியாது. வலி, துக்கம், சந்தோஷம், காதல், பரிதவிப்பு, வெற்றி எனச் சொல்லாத கதைகளையெல்லாம் அவர்களுடைய கண்கள் சொல்லிவிடும். பொதுவாகவே கண்கள் எப்போதும் எதையாவது தேடிக்கொண்டேயிருக்கும். அப்படி ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிற பெண்களின் கண்களைப் புகைப்படம் எடுக்கவும், அதற்குள் ஒளிந்திருக்கும் கதைகளை தேடியும் உலகம் முழுமைக்கும் பயணித்த ஒரு பெண் முகத்தைப் பற்றிய கதை இது. 

நோரோக்

அவள் பெயர் அனியா. 26 ஆண்டுகளுக்கு முன்னர் போலந்து நாட்டின் ஒரு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்தவள். பிறக்கும் பொழுதே வலது காலை இழந்து பிறந்திருந்தாள். கால் இல்லாமல் பிறந்த அனியாவை அவருடைய தாயார் மகப்பேறு மருத்துவமனையிலேயே விட்டு விட்டுச் சென்றுவிடுகிறார். தாய் திரும்பி வருவாள் என்கிற நம்பிக்கையில் மருத்துவமனை ஊழியர்கள் அனியாவைப் பராமரிக்கிறார்கள். ஆனால், அனியாவுடைய தாய் திரும்பி வரவே இல்லை.சில நாள்களுக்குப் பிறகு அனியாவை மருத்துவமனை நிர்வாகம் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார்கள். அங்கு அனியா வளர ஆரம்பிக்கிறாள். அனியா பிறந்து 19 மாதங்கள் கழித்து பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தத்து எடுத்துக்கொள்கிறார்கள். அனியா போல பல குழந்தைகளை அவர்கள் தத்தெடுத்திருந்தனர். பெல்ஜியத்தில் இயற்கைச் சூழ்நிலையில் அனியா வளர்கிறாள். 

 

 

அவளோடு சேர்ந்து ஒரு கனவும் வளர ஆரம்பித்தது. செயற்கைக் காலைப் பொருத்திக்கொண்டு தினமும் கனவில் ஓட ஆரம்பித்தாள். அவளுடைய கனவு பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வெல்வதாக இருந்தது. அனியாவின் கால்களும், கண்களும் அதற்காக உழைக்க ஆரம்பித்தன. பதக்கம் வெல்வது மட்டுமே அனியாவின் கனவல்ல, அதையும் தாண்டிய ஒரு காரணம் இருந்தது. பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றால் உலகம் முழுமைக்கும் இருக்கிற ஊடகங்கள் அனியாவின் முகத்தை உலகத்திற்குக் காட்டும். அதன் மூலம் பிறந்தவுடன் விட்டு விட்டுப் போன அம்மாவை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம் என அனியா கனவு காண ஆரம்பித்தாள். அனியாவின் கனவின் கிளைமாக்ஸ் உணர்வுபூர்வமாக இருந்தது. கண்டுபிடித்த அம்மாவைப் பார்த்து ``நீங்க என்னை விட்டு விட்டுப் போனதில் எனக்கு கோபம் எதுவும் இல்லை” எனச் சொல்ல  வேண்டும் என்பதுதான் அனியாவின் கனவாக இருந்தது. அது மட்டுமே அனியாவின் கண்களிலும் இருக்கிறது. அனியாவின் கனவும், அந்தக் கண்களும் இடம்பெற்றிருக்கிற புத்தகத்தின் பெயர் ``அட்லஸ் ஆப் பியூட்டி”. அட்லஸ் ஆப் புயூட்டி” புத்தகத்தை எழுதியவர் நோரோக் ( Mihaela Noroc) என்கிற 33 வயது ரோமானிய பெண். இவர்தான் இந்தக் கதையின் நாயகி.

 

 

அனியா

உலகம் முழுவதும் 60 நாடுகளுக்கும் மேலாகப் பயணித்து 500 பெண்களைச் சந்தித்து அவர்களுடைய கதைகளை புத்தகத்தைப் படங்களுடன் வெளியிட்டிருக்கிறார். புத்தகத்தில் 500 பெண்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு படத்திற்காகவும் நான்கு ஆண்டுகள் பயணித்திருக்கிறார். அகதி முகாம்கள், வீதிகள், வீடுகள், அமேசான் காடுகள், விலை நிலங்கள், நாடுகளின் எல்லைகள், பழங்குடி கிராமங்கள் என அவர் பயணித்து எடுத்திருக்கிற ஒவ்வொரு பெண்களின் கண்களும் ஒரு கதை சொல்கின்றன. 16 வயதாக இருக்கும் பொழுது நோரோக் கேமராவை கையில் எடுத்திருக்கிறார். அப்போது அவருக்கு மாடலாக இருந்தது அவருடைய அம்மாவும், தங்கையும்தான். அதன் பிறகு புகைப்படம் தொடர்பான கல்லூரியில் சேர்ந்து புகைப்படம் குறித்து படிக்க ஆரம்பித்தார். 2000 ஆண்டு டிஜிட்டல் உலகின் வளர்ச்சி காலம் என்பதால் புகைப்படம் குறித்துப் படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லோருமே கேமரா வாங்கி புகைப்படம் எடுக்க ஆரம்பித்தனர். பத்தோடு பதினொன்றாகப் புகைப்படத் துறையில் இருக்க நோரோவுக்கு விருப்பமில்லாமல் போகவே படிப்பைப் பாதியில் விட்டு விட்டு வேறு ஒரு வேலைக்குச் சென்று விடுகிறார். அதன் பிறகு பெரிதாக கேமராவுடன் ஈர்ப்பு இல்லாமல் இருந்த நோரோக் வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டார். ஆனால், எந்த வேலையிலும் அவரது மனம் ஈடுபாடாக இல்லை. 27 வயதில் 2013 ம் ஆண்டு எத்தியோப்பியாவுக்குச் சென்ற நோரோக் அங்கிருந்த பல பெண்களைப் புகைப்படம் எடுத்திருக்கிறார். அதில் ஒரு புகைப்படம்தான் நோரோகின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. அப்போது தன்னுடைய வேலையை உதறிவிட்டு ரோமானியாவில் உள்ள பெண்களின் பன்முகத்தன்மையையும் அவர்களின் முகங்களையும் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார். இங்கிருந்துதான் அட்லஸ் ஆப் பியூட்டியின் பயணம் தொடங்கியது. இந்தப் பயணத்தின் முக்கிய தருணங்களை இந்த இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்டில் பதிவு செய்து வருகிறார் நோரோக்

வாரணாசியில் எடுத்த புகைப்படம்

பயணம்  குறித்து ஒரு பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் ``திடீரென ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் புகைப்படம் எடுத்து விட இயலாது. அதில் மிகப் பெரிய சவால் இருக்கிறது. உயிர்ப்போடு இருக்கிற ஒரு புகைப்படத்தை எடுக்க வேண்டுமானால் அவர்களோடு பயணித்தாக வேண்டும். எதேச்சையாக எந்த ஒரு பெண்ணையும் புகைப்படமாக எடுத்துவிடலாம். கேமராவை நேருக்கு நேர் பார்க்கும் பொழுது மனித உணர்வுகளை அப்படியே கொண்டு வர வேண்டுமானால் அதற்கு அசாத்திய பொறுமையும் திறமையும் வேண்டும். 
ஒவ்வொரு நாட்டிலுள்ள பெண்களும் வெவ்வேறு இனம், கலாசாரம், மொழியைக் கொண்டவர்கள் அவர்களோடு பயணித்தது உண்மையில் சவாலாக இருந்தது. பல நாடுகளில் மொழி தெரியாமல், என்னுடைய உடல் மொழியைப் பயன்படுத்தி மட்டுமே புகைப்படங்களை எடுத்திருக்கிறேன். அழகு எல்லை இல்லாதது. அது பணம், அந்தஸ்து, இனம், அழகுச் சாதனப் பொருள் சார்ந்தது அல்ல” என்கிறார்.

 

 

அழகு என்பது நாம் நாமாக இருப்பதுதான் என்பதை நோரோக் அடிக்கடி குறிப்பிடுகிறார். 60 நாடுகளுக்கும் மேலாகப் பயணித்து அவர் உருவாக்கிய அட்லஸ் ஆப் ப்யூட்டி புத்தகத்தின் அட்டைப் படத்தில் இருப்பது ஓர் இந்தியப் பெண். வாரணாசியில் கங்கை நதியின் கரையில் அந்தப் படத்தை எடுத்திருக்கிறார். ராஜஸ்தானில் தூசி நிறைந்த பாலைவனத்திலிருந்து, மும்பையின் வீதிகளில், கங்கை ஆற்றின் கரையிலும் பல பெண்களை சந்தித்துப் புகைப்படம் எடுத்திருக்கிறார். இந்தியா குறித்து அவர் கூறும் போது ``இந்தியாவில் வாழும் பல பெண்கள் பெரும் சவால்கள் மற்றும் பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர். ஆனால், இந்தியப் பெண்கள் பலத்திலும், அழகிலும் அசாதாரண உதாரணமாக இருக்கிறார்கள். இந்தியப் பெண்களின் கண்களிலும் அவர்களின் ஆன்மாவிலும் ஓர் அரவணைப்பு இருப்பதை உணர்ந்திருக்கிறேன்”  என்கிறார். 

தோளில் ஒரு பை, அதில் சில அத்தியாவசியப் பொருள்கள் ஒரு கேமரா எடுத்துக்கொண்டு உலகம் சுற்றி வரும் நோரோக் தேடிக் கொண்டிருப்பது உயிர்ப்புள்ள கண்களையும் அர்த்தமுள்ள கதைகளையும்தாம். பெண்கள் மகத்தானவர்கள் பன்முகத் தன்மை கொண்டவர்கள் என்பதை மீண்டும் உலகுக்குச் சொல்ல இந்த வருட செப்டம்பர் மாதம் அவருடைய ``அட்லஸ் ஆப் ப்யூட்டி” இரண்டாவது  புத்தகம் வெளியாக இருக்கிறது.

உலகின் அற்புதமான பெண்களையும், கண்களையும் காட்டுவதற்கு காலம் காத்திருக்கிறது….

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

சூரிய ஆற்றலில் இயங்கும் ஸ்கூட்டர் கிரைண்டர்

கிரைண்டராகவும் ஸ்ப்ரே பெயின்டிங் இயந்திரமாகவும் செயல்படும் பல்நோக்கு ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளார் ஜஹாங்கிர் ஷேக் என்பவர்.

  • தொடங்கியவர்

கொழும்பு செட்டியார்தெரு கதிரேசன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட வெள்ளி தேர், பம்பலப்பிட்டி கதிரேசன் கோவில் வரை வீதி உலா சென்றது.

வருடாந்தம் நடைபெறும் ஆடிவேல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதன்போது பல்வேறு ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பம்பலப்பிட்டிய ஆலயத்தை தேர் அண்மித்த போது, கேளர கலைஞர்களால் இசைக்கப்பட்ட இசை பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெஹிவளை ஆகிய பகுதியை சேர்ந்த பெரும் திரளான பக்கதர்கள் இதன்போது கந்தன் அருள்பெற காத்திருந்தனர்.

இந்நிலையில் கேரள கலைஞர்களால் இசைக்கப்பட்ட பாரம்பரிய இசை அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழத்தியுள்ளது.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

 

  • தொடங்கியவர்

மொரோக்கோவில் விமானம் மலை மீது மோதி 188 பேர் பலியான நாள்: 3-8-1975

 

மொரோக்கோவில் போயின் 707 வகை விமானம் மலை மீது மோதியதில் 188 பேர் பலியானார்கள். மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் மலை மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1949 - தேசிய கூடைப்பந்து சங்கம் ஐக்கிய அமெரிக்காவில் அமைக்கப்பட்டது. * 1960 - நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. * 1976 - காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

 
 
மொரோக்கோவில் விமானம் மலை மீது மோதி 188 பேர் பலியான நாள்: 3-8-1975
 
மொரோக்கோவில் போயின் 707 வகை விமானம் மலை மீது மோதியதில் 188 பேர் பலியானார்கள். மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் மலை மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

*  1949 - தேசிய கூடைப்பந்து சங்கம் ஐக்கிய அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.

*  1960 - நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. *  1976 - காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

*  1990 - காத்தான்குடித் தாக்குதல் 1990: கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் முஸ்லிம் பள்ளிவாசலில் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.

*  2005 - மவுரித்தேனியாவில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் அதிபர் மாவோயா ஊல்ட் தாயா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

*  2006 - திருகோணமலை தோப்பூர் அல் நூராப் பாடசாலையில் தங்கியிருந்த அப்பாவிப் பொதுமக்கள் 12 பேர் ஏவுகணை வீச்சில் கொல்லப்பட்டனர்.

https://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

உலகிலுள்ள விசித்திரமான சந்தைகள் ; பெண்களும் விற்பனை ?

 

உலகத்தில் நம்ப முடியாதளவில் அரிய சில சந்தைகள் காணப்படுகிறன. அதிலும் சில சந்தைகள் வியப்பூட்டும் வகையில் அமைந்திருக்கிறது. நாம் கேள்விப்படாத கண்டிராத அப்படிபட்ட ஐந்து முக்கிய சந்தைகளின் விபரங்களை பார்த்தால்,

main.jpg

 

01 - gypsy brides market

 

market_01.jpg

 

பல்கெரியாவில் காணப்படக்கூடிய ஒரு விசித்திரமான சந்தை தான் இது. ஏனென்றால் இங்கு விற்கப்படுவது பெண்கள். குடும்பத்திலுள்ள ஆண்களினால் வீட்டில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட கன்னிப்பெண்கள் இங்கு விற்கப்படுகின்றனர். இந்த சந்தையில் ஒரு ஆணுக்கு பெண் ஒருவரை விருப்பப்பட்டால் பெண்ணின் தந்தையிடம் பேசி பின் பெண்ணுக்கும் அந்த நபரை பிடித்து இருந்தால் ஒப்பந்தம் செய்து கொண்டு பணத்தை செலுத்தி அந்த பெண்ணை வாங்கி கொள்ளலாம். 

 

02 - donghuamen night market

 

market_02.jpg

 

சீனாவின் வடக்கு பகுதியில் இருக்கக் கூடிய ஒரு இரவுச் சந்தைதான் இந்த டாங்ஹுவாமென் தொடர் சந்தை, இரவில் மட்டும் நடைபெறும் இந்த சந்தை அசாதாரண உணவுவகைகளுக்கு பெயர்போன இடமாக இது சீனாவில் விளங்குகிறது, சீன உணவு வகைகளும் மற்றும் வினோதமான உணவுகளும் இங்கு கிடைக்கப்படும். 

குறிப்பாக நாய், குரங்கு, கடல்குதிரை, எட்டுக்கால் பூச்சிகள், பூரான், தேள், பட்டுப்புழுக்கள், மற்றும் பல்லிகள் போன்று பல வகையான உணவுகளை இங்கு சமைத்தும், வறுத்தும், பச்சையாகவும் விற்பனை செய்வார்கள்.

 

03 - spider market

 

market_03.jpg

கம்போடியாவில்  பிரசித்தி பெற்ற உணவுகளில் ஒன்று தான் வறுத்த சிலந்தி, இதற்கென கம்போடியாவில் ஸ்குவான் நகரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சந்தையொன்றும் இருக்கிறது. அது தான் இந்த சிலந்தி சந்தை, மேலும் இச் சந்தை ஸ்குவான் நகரத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு மிகவும் பிரபலமான ஒன்றாகும். 

 

04 - Deyrolle taxidermy shop

 

market_04.jpg

 

பாரிஸ் நகரில் காணப்படும் இந்த சந்தையில் அநேகமான விலங்குகள் பதப்படுத்தப்பட்டு விற்கப்படுகிறது. விலங்குகள் மிகவும் உயிருள்ளவை போன்று காட்சியளிப்பது மிகவும் கவர்ச்சிகரமானது. யானை, சிங்கம், புலி, கரடி, ஒட்டகம், முதலை,பாம்பு, முயல், ஆமை, கிளி, புறா போன்ற மிருங்கள் மற்றும் காட்டு மிருங்கள், செல்லப் பிராணிகள் என்று பல வகைப்பட்ட  விலங்கினங்கள் இங்கு காணப்படுகிறது. ஆனால் இவற்றின் விலை தான் சற்று அதிகம் சாதாரண முயல் கூட இங்கு ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் விற்கப்படுகிறது 

 

05 - Akodessawa Fetish Market 

 

market_05.jpg

உலகின் மிகப்பெரிய பவள சந்தையான (voodoo market) இது ஆபிரிக்காவின் டோகோ நாட்டில் அமைந்துள்ளது. இங்கு மனித மண்டை ஓடுகள், மிருகங்களின் மண்டை ஓடுகள் என பல வகைப்பட்ட மண்டையோடுகள் கிடைக்கும். மேலும் நுகர்வோருக்கு ஏற்ப புதிதாய் மண்டையோடுகளும் இங்கு விற்கப்படும், அத்தோடு குரங்குகளின் தலைகள், இறந்த பறவைகள், முதலைகள், தோல்கள் மற்றும் இறந்த விலங்குகளின் ஏனைய பொருட்கள் ஆகியவற்றை சந்தைப்படுத்துகிறது. இங்கு பில்லி சூனியம் போன்றவைகளுக்கான மண்டையோடுகள், எலும்புகளும்  விற்கப்படுகிறது.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

ஜெஸ்ஸி ஓவன்ஸ் - ஹிட்லரின் கோட்டையில் தங்க வேட்டையாடிய கறுப்பு வைரம்! ’#OnThisDay

 

நிறவெறியையும் இனவெறியையும் எதிர்த்து தன் மக்களுக்கான அங்கீகாரத்தைக் கிடைக்கச் செய்த ஜெஸ்ஸி ஓவன்ஸ் தன் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற வரலாற்று நாள் இன்று

ஜெஸ்ஸி ஓவன்ஸ் - ஹிட்லரின் கோட்டையில் தங்க வேட்டையாடிய கறுப்பு வைரம்! ’#OnThisDay
 

கறுப்பு, அவமானம் அல்ல... அடையாளம். கறுப்பின தங்கமகன் ஜெஸ்ஸி ஓவன்ஸ் வெற்றிக் கதை!

1933-ம் ஆண்டு, உலகின் சர்வாதிகார நாடாக ஹிட்லரின் கீழ் ஜெர்மனி உருவெடுத்தது. அப்போது உலகின் மற்ற நாடுகள் மத்தியில், `ஜெர்மனியால் விளையாட்டு நெறி தவறாமல் ஒலிம்பிக் போட்டியை நடத்த முடியுமா?' என்ற கேள்வி எழுந்தது. இதன் பிறகு ஒலிம்பிக் கமிட்டி ஜெர்மனியிடம், நிற இன பேதமின்றி போட்டியை நடத்துமாறும் கறுப்பின வீரர்களின் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் ஒப்பந்தம் செய்தது.

ஜெஸ்ஸி ஓவன்ஸ்

 

 

இதற்குப் பிறகும் பல வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு வரத் தயங்கினர். 1935 டிசம்பர் 14-ம் தேதி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு யூலேஸ் பீக்காக், ஜெஸ்ஸி ஓவன்ஸ், ரால்ஃப் போன்ற 18 தடகள வீரர்கள் முதன்முதலாகத் தேர்வாகினர். இந்த 18 பேரில் ஒருவருக்கு ஒரு பதக்கம் கிடைத்தாலும் அது ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சிக்கும் நிற இன வெறிக்கும் கிடைத்த சம்மட்டி அடி எனக் கருதினர். ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் ஜெர்மானிய வீரர்கள் தவிர யாருடனும் கை குலுக்காமல் சென்றார் ஹிட்லர். இது, கறுப்பின வீரர்களுக்கு மிகுந்த தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியது.

போட்டி தொடங்கி இரண்டு நாள் சென்ற நிலையில், கறுப்பின வீரர்கள் ஒருவரும் பதக்கம் வெல்லவில்லை. ஆகஸ்ட் 3-ம் தேதி மாபெரும் திருப்புமுனை அமைந்தது. 23 வயதான கறுப்பின இளைஞர் ஜெஸ்ஸி ஓவன்ஸ், 100மீ (10.3s) ஓட்டத்தில் முதலாவதாக வந்து தங்கப் பதக்கத்தை வென்றார். இந்த வெற்றியோடு மட்டும் அவர் நிற்கவில்லை, 200மீ ஓட்டம் (20.7s), நீளம் தாண்டுதல் (8.06 m), 400மீ தொடர் ஓட்டம் (39.8 s) என அடுத்தடுத்து, தான் பங்கேற்ற நான்கு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடி தங்கவேட்டையாடினார். இவரோடு சேர்ந்து பங்கேற்ற 18 வீரர்களில் 10 வீரர்கள் பதக்கம் வென்றனர். இது கறுப்பின மக்களின் வரலாற்று வெற்றியாகப் பார்க்கப்பட்டது. இதன்மூலம் கறுப்பினத்தவர், ஒலிம்பிக்கில் தங்களின் இருப்பை மற்றவர் முன்னிலையில் நிலைநாட்டினர்.

ஜெஸ்ஸி ஓவன்ஸ்

ஆனால், இந்த வெற்றியின் மீதுகொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஹிட்லர் `கறுப்பினத்தோர் ஆதிவாசிகள் இன்னும் அவர்களின் உடல் முழுவதுமாகப் பரிணாம வளர்ச்சி அடையவில்லை. எனவே, அவர்களை மற்ற வீரர்களோடு விளையாடத் தடை விதிக்க வேண்டும்' என்று கூறியதாக, பத்திரிகையாளர் ஆல்பர்ட் ஸ்ட்ரீ பதிவுசெய்துள்ளார். மேலும், வெற்றி பெற்ற அமெரிக்கக் கறுப்பினத்தவர்களை மரியாதை நிமித்தமாகக்கூட அப்போதைய  அமெரிக்க அதிபர் ஃபிராங்களின் டி ரூஸ்வெல்ட் சந்திக்கவில்லை.  ஆனால் இன்று, அமெரிக்காவின் பதக்கங்களே அந்தக் கறுப்பு வீரர்களை நம்பித்தான் உள்ளன.

இந்த வெற்றியின் நாயகன் ஜெஸ்ஸி ஓவன்ஸின் பால்ய காலமும் இனவெறி மிகுந்ததாக இருந்தது. அவரின் முன்னோர்களெல்லாம் வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாகப் பணிபுரிந்தனர். இதனால் ஏற்பட்ட தாக்கமே அவரின் இந்த வெற்றிக்கு ஊன்றுகோலாய் விளங்கியது.

jesse owens

அன்றைய ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வில்மா ரூடால்ஃபிலிருந்து தடகளத்தில் இன்று உலக சாதனை புரியும் உசைன் போல்ட் வரை  அனைவரும் தங்களது வெற்றியை ஜெஸ்ஸி ஓவன்ஸுக்காக அர்ப்பணித்து வருகின்றனர். தன் இனத்துக்காக ஓடிய ஓவன்ஸின் வெற்றி, ஒரு சுடர் அல்ல; ஜுவாலை. அவர்களின் தாழ்வு மனப்பான்மையை எரித்த ஜூவாலை!

நிறவெறியையும் இனவெறியையும் எதிர்த்து தன் மக்களுக்கான அங்கீகாரத்தைக் கிடைக்கச்செய்த ஓவன்ஸ், தன் முதல் தங்கப்பதக்கத்தை வென்ற வரலாற்று நாள், இன்று (ஆகஸ்ட்-3).

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

 

38p1_1533111979.jpg

ளையராஜாவின் இசையை மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் முயற்சியை சிங்கப்பூரில் உள்ள பிரபல மௌண்ட் எலிசபெத் மருத்துவமனை கையில் எடுத்திருக்கிறது. அவருடைய ஆல்பங்கள், சில திரைப்படப் பாடல்கள் பற்றி விரிவாக ஆராய்ச்சிகள் போய்க்கொண்டிருக்கின்றன. சில இசைக்கோப்புகளை பிரத்யேகமாக இந்தத்  தொகுப்புக்காகப் போட்டுக் கொடுத்திருக்கிறார்  இசைஞானி! விருந்தே மருந்து!


38p2_1533111994.jpg

பிரபல  நட்சத்திர ஆடை வடிவமைப்பாளர் ஜோடி ஃபால்குனி, ஷேன் பீக்காக் சமீபத்தில் டெல்லியில் நடந்த INDIA COUTURE WEEK 2018-ல் கலந்துகொண்டார்கள். தங்கள் நிகழ்ச்சியின் இறுதி அலங்கார அணிவகுப்பில் கரீனா கபூரை இறக்கினர். அரங்கம் அதிர கரீனா உலோக வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு பொன் நிற ஆடையை அணிந்து வந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அவர் அணிந்து வந்த ஆடை மொத்தம் 30கிலோ எடையைக் கொண்டது. தங்கத்தாரகை!


38p3_1533112058.jpg

`குலேபகாவலி’ படம் காமெடியிலும் ‘மெர்க்குரி’ நடிப்பிலும் நல்ல பெயர் வாங்கிக்கொடுத்த உற்சாகத்தில் சற்று வெயிட் போட்டிருக்கிறார் பிரபுதேவா. ஷூட்டிங்கில் இருக்கும் `யங் மங் சங்’, `சார்லி சாப்ளின் 2’-ல் காமெடி ட்ராக் அதிரிபுதிரியாம். அதோடு அறிமுக இயக்குநர் முகிலின் `பொன் மாணிக்கவேல்’ படத்தில்  முதல்முறையாக போலீஸ் யூனிஃபார்ம் மாட்டியிருக்கிறார். அதோடு இரண்டு இந்திப்படங்களுக்கும் ஹீரோவாக கால்ஷீட் தந்திருக்கிறார். மாஸ்டர் இனிமேல் பிஸியோ பிஸிதான். ப்ளாஸ்டர்!


38p4_1533112086.jpg

பார்பரா மோரியை ஞாபகம் இருக்கிறதா? 2010‍-ல் ரிலீஸான பாலிவுட் படம் `கைட்’டில் ஹ்ரித்திக் ரோஷனுக்கு ஜோடி போட்டு பிரெஞ்சு கிஸ் கொடுத்தவர்.  மெக்ஸிகோவில் தற்போது செட்டில் ஆகியிருக்கும் இவருக்கு 2010‍‍-ம் வருடம் கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக விழிப்பு உணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டு கவனம் ஈர்க்கிறார்  பார்பரா. அமெரிக்க வாழ் இந்திய நடிகை நம்ரதா சிங் குஜ்ரால் ‘1 எ மினிட்’ என்ற ஆங்கில ஆவணப் படம் ஒன்றை எடுத்துள்ளார். அதில் பாசிட்டிவாக கேன்சர் சிகிச்சையை அணுகுவது குறித்துப் பேசியுள்ளனர். உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட நடிகைகளுடன் பேசி எல்லோரையும் ஒருங்கிணைத்தவர்தான் இந்த பார்பரா மோரி. சொல் அல்ல செயல்!


38p5_1533112103.jpg

ந்திராவின் முன்னாள் முதல்வரும் தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டாருமான என்.டி.ராமராவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. என்.டி.ஆர் கதாபாத்திரத்தில் அவர் மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். என்.டி.ஆரின் மனைவி வேடத்தில் பிரபல இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.படத்தின் இரண்டு பாடல் காட்சிகளில் வித்யாபாலன் ஹார்மோனியம் வாசிக்க வேண்டிய சூழல் இருப்பதால், அவர் தற்போது தீவிரமாக ஹார்மோனியம் வாசிக்கும் பயிற்சி எடுத்துவருகிறார்.  பலே பயோபிக்!


‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்துவரும் விக்ரம் அடுத்து ‘தீரன்’ எச்.வினோத் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார். விஜய், அஜித் இருவரில் யாருக்கு வினோத் படம்  இயக்குவார் என்ற எதிர்பார்ப்புகளுக்கு இடையே, ஹை-ஆக்‌ஷன் த்ரில்லர் ஒன்றை விக்ரமுக்காக இயக்கவிருக்கிறார் எச்.வினோத். படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. இப்படத்தைத் தொடங்குவதற்கு முன், ராஜேஷ். எம்.செல்வா இயக்கத்தில் அக்‌ஷராவுடன் இணைந்து நடிக்கிறார் விக்ரம்.  சீயான் அதிகாரம்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

சர்வதேச பீர் தினம் - உடல் முதல் உள்ளம் வரை பீரால் இத்தனை நன்மைகளா?

 
அ-அ+

சர்வதேச பீர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், உடல் ஆரோக்கியம் முதல் மனமகிழ்ச்சி வரை பீரால் கிடைக்கும் நன்மைகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள். #InternationalBeerDay

 
 
 
 
சர்வதேச பீர் தினம் - உடல் முதல் உள்ளம் வரை பீரால் இத்தனை நன்மைகளா?
 
 
கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி சர்வதேச பீர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை ஒட்டி உலகம் முழுவதும் உள்ள நட்சத்திர சொகுசு விடுதிகள் பீர் சார்ந்த பல்வேறு போட்டிகளை நடத்துகிறது. பீர் ஆல்கஹாலை சேர்ந்த ஒரு போதைப்பொருளாகவே இந்தியாவில் பார்க்கப்படும் நிலையில், ஆல்கஹால் கலப்பு இல்லாமலும் பீர் வகைகள் கிடைக்கின்றன.
 
உடல் ஆரோக்கியம் முதல் மனமகிழ்ச்சி வரை பீரால் கிடைக்கும் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 
 
பீர் குடிப்பது மன அழுத்தத்தை குறைக்கிறது. பொதுவாக அளவான ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது மனநிலையை இயல்பான, மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கிறது.
 
பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது.  சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர் அருந்தும் பழக்கமுள்ளவர்களுக்கு 20 - 50 சதவீதம் இதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு.
 
பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. பீர் உடலுக்கு தேவையான கொழுப்பை Good Cholesterol (H D L - High Density Lipoprotein ) தருகிறது. எனவே, இது இரத்தம் தன பாதைகளில் கெட்டியாவதை தடுக்கிறது.
 
பீரில் நிறைய நார் சத்து உள்ளது. இந்த நார் சத்தானது மால்டட் பார்லியில் இருந்து கிடைகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக நம் உடலுக்கு தேவையான நார் சத்தில் சுமார் 60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடைத்து விடுமாம். இப்படி எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும் நார் சத்து இருதய நோயிலிருந்து நம்மை காக்கும்.
 
பீர் விட்டமின் செறிந்தது. பீரிலிருந்து பல வகை விட்டமின்கள் கிடைகின்றன. மக்னீசியம், செலினியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், பயோட்டின், போலேட் மற்றும் விட்டமின் B6 , விட்டமின் B12 என பல விட்டமின்கள் பீரில் உள்ளன.
 
201808031739466340_1_beer2._L_styvpf.jpg
 
பீர் உங்கள் மூளையை இளமையாக வைக்கிறது. 2001 டிசம்பரில் இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்சிகளின் படி, அளவான மது பழக்கம் உள்ள ஆண் , பெண்கள் அனைவருக்கும் மூளை சிதைவு, மூளை தளர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாதவர்களை விட 40% குறைவாக உள்ளது .
 
பீர் நமது கல்லீரலுக்கு நல்லது. மிதமான பீர் கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்தக்குழாய்களைஅகலப்படுத்துவதால் அங்கு நடைபெறும் வளர் சிதை மாற்றம் காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன.
 
பீர் தூக்கம் இன்மையை அகற்றும். லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில் இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக செயல்படுவதால் நல்ல உறக்கம் கிடைகிறது. 
 
பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது. நியூகாஸ்டில் பல்கலை பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதை தடுக்கிறது. பீர் அதிகமான சிலிக்கானை கொண்டுள்ளது, இது எலும்பை உருவாக்கும் செல்கள் ஊக்குவிப்பதன் மூலம் நல்ல எலும்பு ஊக்குவிப்பதில் உதவுகிறது. 
 
மிதமான பீர் அருந்துதல் சிறுநீரக ஆரோக்கியத்தை நல்லபடியாக வைத்துகொள்ள உதவுகிறது. சிறுநீரக கற்களைக் கையாளுவதில் பெரும் பங்காற்றுகிற்றது. ஆனால், அருந்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது அவசியம் என்பதை மரத்து விட வேண்டாம்.
 
மேற்கண்ட அனைத்து நன்மைகளும் அளவாக பீர் அருந்தும் நபர்களுக்கு மட்டுமே. என்நேரமும், மதுவில் மூழ்கிக்கிடப்பவர்களுக்கு மேற்கண்ட அனைத்தும் ரிவர்சில் நடக்கும் என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

ஓசியானோஸ் கப்பல் கடலில் மூழ்கியது: பயணிகள் அனைவரும் காப்பாற்றப்பட்ட நாள்- 4-8-1991

ஓசியானோஸ் என்ற கிரேக்க கப்பல் தென்ஆப்பிரிக்கா கடல் பகுதியில் மூழ்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அதில் பயணம் செய்த 571 பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.

 
 
 
 
ஓசியானோஸ் கப்பல் கடலில் மூழ்கியது: பயணிகள் அனைவரும் காப்பாற்றப்பட்ட நாள்- 4-8-1991
 
ஓசியானோஸ் என்ற கிரேக்க கப்பல் தென்ஆப்பிரிக்கா கடல் பகுதியில் மூழ்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அதில் பயணம் செய்த 571 பயணிகள் காப்பாற்றப்பட்டனர். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1902 - தேம்ஸ் ஆற்றின் கீழாக கிரீனிச் நடை சுரங்கம் அமைக்கப்பட்டது. * 1906 - சிட்னியில் மத்திய ரெயில் நிலையம் திறக்கப்பட்டது.


ஓசியானோஸ் என்ற கிரேக்க கப்பல் தென்ஆப்பிரிக்கா கடல் பகுதியில் மூழ்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அதில் பயணம் செய்த 571 பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

*  1902 - தேம்ஸ் ஆற்றின் கீழாக கிரீனிச் நடை சுரங்கம் அமைக்கப்பட்டது.

*  1906 - சிட்னியில் மத்திய ரெயில் நிலையம் திறக்கப்பட்டது.

*  1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மன் பெல்ஜியத்தின் மீது படையெடுத்தது. இதன் காரணமாக ஐக்கிய பிரிட்டன் ஜெர்மனியின் மீது போரை அறிவித்து உலகப் போரில் முதன் முறையாகக் குதித்தது.

*  1916 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனியுடன் லைபீரியா போர் தொடுத்தது.

*  1936 - கிரேக்க தளபதி இயோனிஸ் மெட்டாக்சஸ் நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்து தன்னை நாட்டின் தலைவனாக அறிவித்தார்.

* 1946 - வடக்கு டொமினிக்கன் குடியரசில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100 பேர் பலியானார்கள்.  2 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர்.

*  1964 - ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை ஆர்வலர்களான மைக்கல் ஷ்வேர்னர், ஆண்ட்ரூ குட்மன், ஜேம்ஸ் சானி ஆகியோர் மிசிசிப்பியில் மர்மமாக இறந்து கிடந்தனர். இவர்கள் ஜூன் 21 இல் காணாமல் போயிருந்தனர்.

 

 

 

ஈழ கலைஞர் பொன். கணேசமூர்த்தி யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நாள்: 4-8-2006

 

 
 

பொன். கணேசமூர்த்தி தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக சாத்வீக வழியில் தன் சிறுவயது முதல் அயராது உழைத்து வந்து விடுதலை வரலாற்றில் இடம்பிடித்தவர்.

 
 
 
 
ஈழ கலைஞர் பொன். கணேசமூர்த்தி யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நாள்: 4-8-2006
 
பொன். கணேசமூர்த்தி தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக சாத்வீக வழியில் தன் சிறுவயது முதல் அயராது உழைத்து வந்து விடுதலை வரலாற்றில் இடம்பிடித்தவர். பல்துறை கலை ஆற்றல் கொண்ட இவர் இலங்கை மண், வைகறை ஆகிய தொடர் நாடகங்களையும் தனி நாடகங்களையும் உருவாக்கி வழங்கியிருந்தார்.

விடுதலைக் கருத்துக்களை விதைப்பதற்காக அரங்க நாடகங்களும் பொன். கணேசமூர்த்தியினால் பாடசாலைப் பருவம் முதல் அரங்கேற்றப்பட்டுள்ளன. இன எழுச்சி சஞ்சிகையின் ஆசிரியராக செயற்பட்டவர். வரலாறு சொல்லும் பாடம் என்ற நூலை உருவாக்குவதில் தீவிரமாக உழைத்து வந்தார். மண்ணுக்காக என்ற வீடியோ திரைப்படத்தையும் இவர் உருவாக்கினார். வில்லிசை, உரைவீச்சு உட்பட்ட பல்வேறுபட்ட வானொலி நிகழ்ச்சிகளை படைத்திருந்த இவர் பெருமளவிலான விடுதலைப் பாடல்களையும் உருவாக்கியுள்ளார். வானொலி, அரங்க திரைப்பட நடிகனாகவும் செயற்பட்ட இவர், பாடலாசிரியராகவும் நாவலாசிரியராகவும் கவிஞராகவும் பாடகராகவும் வில்லிசைக் கலைஞராகவும் சிறப்பாக செயற்பட்டு வந்தார்.

இவர் ஆகஸ்ட் 4, 2006-ல் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொள்ளப்பட்டார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்புக்கு மதிப்பளித்து, படுகொலை செய்யப்பட்ட பொன். கணேசமூர்த்திக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மார்ச் 15, 2008-ல் மாமனிதர் விருது வழங்கி மதிப்பளித்தார்.

இதே தேதியில் நடந்த முக்கிய நிகழ்வுகள்:-

*  1975 - மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஜப்பானிய செம்படையினர் ஏ.ஐ.ஏ. கட்டிடத்தைத் தாக்கி அமெரிக்கத் தூதுவர் உட்பட 50 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். பின்னர் இப்பயணக்கைதிகளை விடுவித்து சிறைக்கைதிகளாயிருந்த தமது 5 தோழர்களுடன் லிபியா பயணமாயினர்.

* 1984 - அப்பர் வோல்ட்டா ஆபிரிக்கக் குடியரசு புர்கினா பாசோ எனப் பெயர் மாற்றம் பெற்றது.

*  1987 - விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலையில் முதன் முதலில் மக்கள் முன் தோன்றி உரையாற்றினார்.

*  2006 - நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் அறிவிக்கப்பட்டார். இவர் ஆகஸ்ட் 23 இல் பதவியேற்றார்.

*  2006 - ஈழ கலைஞர் பொன். கணேசமூர்த்தி யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

*  2006 - வறுமைக்கு எதிரான அமைப்பு என்ற அரச சார்பற்ற அமைப்பின் 15 பணியாளர்கள் மூதூரில் இலங்கை ராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

*  2007 - நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் ஏவப்பட்டது.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

அன்புக்கு ஏங்கியவர்... அருமையான ஆசிரியர்... லவ் யூ ஒபாமா! #HBDObama

 

12 ஆண்டுகள் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சிறந்த பேராசிரியராக பணியாற்றியவர், இந்தப் பெருமைகளையெல்லாம் தாங்கி நிற்கும் அந்தப் பெயர் பாரக் ஹூசைன் ஒபாமா. அமெரிக்க அதிபராக 8 ஆண்டுகள் மக்கள் மனதில் அழியாத இடம் பிடித்தவர்.

அன்புக்கு ஏங்கியவர்... அருமையான ஆசிரியர்... லவ் யூ ஒபாமா! #HBDObama
 

வெள்ளை மாளிகைக்கு முன்பு 20 லட்சம் பேர் 2.4 டிகிரி செல்சியஸ் குளிரில் நின்று இந்த மனிதர் அதிபராக பதவியேற்பதைப் பார்த்து ரசித்தார்கள். இது எந்த ஒரு அமெரிக்க அதிபருக்கும் இன்று வரை கிடைக்காத வரவேற்பு. 6 அடி 2 அங்குல உயரம். இவரது பேச்சு எல்லாரையும் வசியப்படுத்தும், இவர் பேசினால் தன்னம்பிக்கை ததும்பும். 12 ஆண்டுகள் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சிறந்த பேராசிரியராக பணியாற்றியவர், இந்தப் பெருமைகளையெல்லாம் தாங்கி நிற்கும் அந்தப் பெயர் பாரக் ஹூசைன் ஒபாமா. அமெரிக்க அதிபராக 8 ஆண்டுகள் மக்கள் மனதில் அழியாத இடம் பிடித்தவர். 2016-ல் அதிபர் பதவி முடிந்தும் இன்னும் மக்கள் மனதில் மக்களின் அதிபராக வாழ்கிறார். அரசு சிக்கல் தரும்போதெல்லாம் அமெரிக்கா 'மிஸ் யூ ஒபாமா'' என்கிறது. 

அமெரிக்கா ஹவாய் மாகாணத்தின் ஹோனோலுலுவில் 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி பிறந்தார். ஹார்வர்டு மற்றும் கொலம்பியா பல்கலைகழகங்களில் பட்டம் பெற்றார். சிகாகோ சட்டப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்றபோது அறிமுகமான மிஷேலைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். மலியா, நடாஷா (எ) சாஷா என்று இரண்டு தேவதைகளுக்கு தந்தையானார்.  1997-ம் ஆண்டு இலினோய்ஸ் மாகாணத்தின் செனட் உறுப்பினரானார். அங்கு ஹெல்த் கேர் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்தார். 2004-ம் ஆண்டு இந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமெரிக்க செனட் பதவிக்குப் போட்டியிட்டார். அதிலும் வெற்றி பெற்ற ஒபாமா 2008-ம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர்.

ஒபாமா

 

 

அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒபாமா 2009-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். நான் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவ‌ன் என்றெல்லாம் கூறாமல் சாமானிய அமெரிக்கர்களின் பிரச்னைகளான ஊதிய உயர்வு, மருத்துவச் செலவு, கல்விவசதி போன்றவற்றை மேம்படுத்துவேன். மாற்றம் வேண்டும் அதை ஏற்படுத்தும் நம்பிக்கை என்னிடம் உள்ளது என்று உரை மூலம் தன்னை மக்களின் அதிபராக நிலைநிறுத்திக்கொண்டார் ஒபாமா.

 

 

இன்றைக்கும் மோடியின் அச்சே தீன், அன்புமணியின் `மாற்றம் முன்னேற்றம் அன்புமணி', ஸ்டாலினின் `முடியட்டும் விடியட்டும்' போன்ற தேர்தல் பிரசாரங்களின் சாயல் ஒபாமாவின் ஹோப், எஸ் வீ கேன் வாசகங்களைப் போன்றவைதான். பிரசார நேரங்களில் இராக் போரை ஆதரித்துப் பேசிய குடியரசுக் கட்சியை, ‘அமெரிக்கா போரை விரும்பும் நாடு அல்ல!’ என்று ஒற்றை வரியில் காலி செய்தார். அதனால்தான் அமெரிக்காவில் பிறக்காத, கறுப்பர் இனத் தலைவர் ஒருவரை அமெரிக்கா அதிபராக்கியது.

ஒபாமா அதிபராக பதவியேற்றதும் பிரசாரங்களில் சொன்ன விஷயங்களைப் படிப்படியாக செய்யத் தொடங்கினார். இராக்கிலிருந்து படிப்படியாக படைகளை திரும்பப் பெற்றது;  ஒபாமா ஹெல்த் கேர் என்ற மருத்துவ வசதிகளை வழங்கியது; அனைத்து நாடுகளுடன் நல்ல நட்புறவு என்பதில் துவங்கி பருவ நிலை மாற்றத்துக்கான முதல் குரலை எழுப்பி உலகையே பருவநிலை மாற்றத்துக்காக முக்கிய முடிவுகளை எடுக்கச் செய்தது வரை, பல விஷயங்களுக்கு முன்மாதிரியாக விளங்கினார். ஆனால், இவையெல்லாம் தற்போது ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததும் முற்றிலுமாக அகற்றப்பட்டன. அப்போதும் அமெரிக்காவின் குரல் `மிஸ் யூ ஒபாமா' என்றுதான் ஒலித்தது. 

ஒபாமா - மிச்சேல் ஒபாமா

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரங்களில் அவரின் மனைவி மிச்சேல் ஒபாமாவின் பங்கு அளப்பரியது. 2008-ம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் மிச்சேல் ஆற்றிய, ``ஏன் என் க‌ணவரை அதிபராக்க வேண்டும்?'' என்ற உரை அமெரிக்க தேர்தல் பிரசார வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.  2012-ம் ஆண்டு இரண்டாவது முறையாக அதிபராக்கப்பட்ட போதும் ``ஒரே நாடு, ஒரே மக்கள். கறுப்பு, வெள்ளை பேதம் இங்கு இல்லை'' என்று முழங்கினார் ஒபாமா. 

ஒபாமா விமர்சனங்களுக்கு சளைக்காத நபர். தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களைத் தைரியமாக எதிர்கொண்டு தனது செயல்களால், அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஒபாமா, கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். ஆனால், நியூஸ் வீக் பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் இவர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என 12 சதவிகித அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இவரது கைக்கடிகாரம் மூலம், அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. அவருக்கு ரகசியத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் என்று ஒரு தகவல் உண்டு. இப்படி ஆயிரம் செய்திகள் ஒபாமாவை சுற்றிக்கொண்டே இருக்கும். 

 

 

`ஒபாமாவுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறது' என்று குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, 'உண்மையான அன்புக்காக சிறு வயதில் ஏங்கியவன் நான். போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து மீண்டவன்!' என்று இவர் தனது சிறு வயது நினைவுகளை மனம் திறந்து பகிர்ந்துகொண்டது அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் இவருக்கு பெரிய அளவில் மதிப்பை ஏற்படுத்தியது. 2009-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது. ``அந்தப் பரிசுக்கு ஒபாமா தகுதியானவரா என்பது ஒருபுறம் இருக்கட்டும்... இந்தப் பரிசை அளித்ததன் மூலம் அமெரிக்கர்களைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டது நோபல் கமிட்டி. பதவி ஏற்ற ஒன்பதே மாதங்களில் அவருக்கு அளிக்கப்பட்ட இந்த அங்கீகாரம் மிகவும் பிரமாண்டமானது!' என தலையங்கம் எழுதியது அமெரிக்காவின் மனசாட்சியான 'தி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்' பத்திரிகை.

வெள்ளை மாளிகை

அமெரிக்காவை நடுங்கச் செய்த 9/11 தாக்குதலை நடத்திய ஒசாமா பின்லேடனை வீழ்த்தி, சர்வதேச தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்காவால் சரியான பதிலடி கொடுக்க முடியும் என்பதையும் உணர்த்தினார் ஒபாமா. இவர் அமெரிக்க அதிபர் என்பதைத் தாண்டி அன்பானவர் என்பதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம். அமெரிக்காவின் வெள்ளை மாளிகை பூங்காக்களில் அமெரிக்க சிறுவர்களுடன் உரையாடுவது,  கடிகாரத்தில் வெடிகுண்டு தயாரித்தான் என்று தவறாக கணித்து கைது செய்யப்பட்ட‌ சிறுவனை ‘அஸ்ட்ரானமி நைட் டின்னரு’க்கு அழைத்து, ‘நீ எப்போது வேண்டுமானாலும் வெள்ளை மாளிகைக்கு வரலாம்!’ என அன்பு காட்டியது என்று ஒபாமாவின் இன்னொரு முகத்தைக் காட்டும் செயல்கள் பல. அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில் ஒபாமா வெள்ளை மாளிகைக்குள் செய்த சேட்டைகளின் புகைப்படத் தொகுப்பும் நெட்டில் வைரல். ‘அமெரிக்க அதிபரானால் என்ன நானும் ஒரு மனிதன்தான்’ என்று  இருந்த இவரது இந்தக் குறும்புகள் இளைஞர்கள் மத்தியில் லைக்ஸ் அள்ளியது.

அமெரிக்க அதிபர் பதவிக்காலம் முடிந்ததும் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய ஒபாமாவை கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தது அமெரிக்கா. ஒபாமா அறக்கட்டளை மூலம் மக்களுக்கு உதவுகிறார். பல்கலைக் கழகங்களில் உரையாற்றுகிறார். அமெரிக்க அதிபர் செய்யும் தவறுகளுக்கு எதிர்ப்புக்குரல் தருகிறார். அன்பால் உலகை ஆள்கிறார். அன்று அன்புக்கு ஏங்கியவர் இன்று அன்பின் அடையாளம்... அருமையான ஆசிரியர்... அமெரிக்காவுக்கு மிஸ் யூ ஒபாமா... ஒட்டுமொத்த உலகமும் லவ் யூ ஒபாமா...

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

படங்களில் வாழ்பவர்கள்

 

 
padangaliljpg

வீட்டை அலங்கரிக்கும் வழக்கங்களுள் ஒன்று, சுவரில் ஒளிப்படங்களை மாட்டுவது. பத்திருபது வருஷங்களுக்கு முன்பு எல்லார் வீட்டுகளிலும் ஒளிப்படங்கள் கண்டிப்பாக இருக்கும். அந்தக் குடும்பத்தின் முக்கியமான நிகழ்வுக்குச் சாட்சியாகவும் அடுத்த தலைமுறைக்கு முந்தைய தலைமுறையை அறிமுகப்படுத்தும் விதமாகவும் அவை மாட்டப்பட்டிருக்கும். இடையில் ஒளிப்படங்கள் மாட்டும் வழக்கம் சற்று குறைந்துபோனது. இப்போது மீண்டும் புதிய பாணியில் வந்திருக்கிறது. ஒளிப்படங்களை ‘குடும்பச் சித்திரம்’ (Family Tree) பாணியில் மாட்டிவைக்கலாம்.

இப்படியான குடும்பச் சித்திரங்களை உருவாக்கி வருபவர்தான் கியோஹூஸா நோஸூ.

 

ஜப்பானைச் சேர்ந்த இவர், ஒருவரின்  இறப்புக்கு முந்தையை  ஒளிப்படங்களை (pre death photos) எடுத்து வருகிறார். இவரின் இந்த வித்தியாசமான அணுகுமுறை ஜப்பான் நாட்டில் உள்ள வயதானவர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தாங்கள் இறந்த பிறகு தங்களின் ஒளிப்படம் எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சம்பந்தப்பட்டவர்களே தேர்வுசெய்து வருகிறார்கள்.

padangalil%202jpg

 தந்தையால்  கிடைத்த  யோசனை

 “ஒருமுறை என்னுடைய அப்பாவை  நான் ஒளிப்படம் எடுத்தேன். அந்த படம் பார்க்க மிக அழகாக இருந்தது.  அவரின் உன்மையாக மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக அந்தப் படம் இருந்தது. அந்தப் படத்தை அப்பாவிடம் காட்டி நீங்கள் இறந்தபிறகு இந்தப் படத்தை உங்கள் நினைவாக வைத்துக்கொள்வேன் என்றேன். அதைக் கேட்ட என் அப்பா என்னை அணைத்துக் கொண்டு ‘இன்னும் எவ்வளவு படங்கள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்றார். அப்போதுதான் எனக்கு இறப்புக்கு முந்தைய படத்தை எடுக்க வேண்டும் என்ற யோசனை தோன்றியது” என்கிறார் அவர்.

டோக்கியோவில் ஒளிப்பட நிறுவனம் நடத்திவரும்  கியோஹூஸா,   நான்காயிரத்துக்கும் மேற்பட்ட  இறப்புக்கு முந்தைய  படங்களை எடுத்துள்ளார். இவரின் வாடிக்கையாளர் பெரும்பாலும் எழுபது முதல் என்பது வயதுடையவர்களாக உள்ளனர்.

‘நாம் இறந்த பிறகு ஏதோ ஒரு படத்தை வைத்துக்கொண்டு எதிர்காலச் சந்ததியினரிடம் இவர்தான் உன்னுடைய தாத்தா, பாட்டி என்று சொல்வதைவிட நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதை வெளிப்படுத்தும் விதமாகத்தான்  ஒளிப்படங்கள் இருக்க வேண்டும்.  படம் எடுக்கும்போது யாரையும் சிரியுங்கள் எனச் சொல்ல மாட்டேன். அதற்கு மாறாக  உங்களுடைய பொழுதுபோக்கு என்ன எனப் பேச்சுக்கொடுத்துக்கொண்டே அவர்களின்  இயல்பான சிரிப்பை வரவழைத்து அதைப் படமாக எடுப்பேன்’ என்கிறார் அவர்.

மற்றவர்களைப் படம் எடுக்கும்  கியோஹூஸா நோஸூ தன்னையும் இறப்புக்கு முந்தை ஒளிப்படம் எடுத்து வைத்துள்ளார். “என்னுடைய இறப்புக்கு முந்தைய ஒளிப்படங்கள் இரண்டு வைத்திருக்கிறேன். ஒன்று என்னுடைய  நண்பன் எடுத்தது, இன்னொன்று என்னுடைய மனைவி எடுத்தது” என்கிறார் அவர்.

padangalil%203jpg
 

ஒளிப்படங்கள் என்பது வீட்டின் பெட்டிகளில் வைப்பதல்ல. ஒருவரின் இறப்புக்குப் பிறகு வீட்டில் வைக்கப்படும் அவை, குடும்பத்துப் பெரியவர்களின் நினைவுகளை தலைமுறை தாண்டி எடுத்துச் செல்பவை.

https://tamil.thehindu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.