Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

நெஞ்சை அள்ளும் டிஸ்னி தேவதைகள்!

 

 

வால்ட் டிஸ்னி படங்கள் என்றாலே, கொண்டாட்டம்தான். அதிலும் ஸ்பெஷல், டிஸ்னியின் குட்டித் தேவதைகள். பீட்டர் பேன் (Peter Pan) நாவலை எழுதிய ஜே.எம்.பேரியின் (J.M.Barrie) யோசனையில் தோன்றிய இந்தத் தேவதைகள் பற்றி் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?

டிங்கர் பெல் (Tinker Bell): 1904-ல் உருவாக்கப்பட்ட பீட்டர் பேன் (Peter Pan) நாவலில், முக்கிய கேரக்டராக அறிமுகமான தேவதை. இலைகளால் செய்த பச்சை நிற உடை, குறும்பு கொப்பளிக்கும் நீலக் கண்கள், தங்க நிறத்தில் இறக்கைகள் என மனதை அள்ளும் டிங்கர் பெல், டிஸ்னி தேவதைகளில் ஹீரோயின். தொலைக்காட்சி சீரியல்களில் சக்கைப் போடு போட்ட டிங்கர் பெல்,  திரைப்படங்களாகவும் வந்துள்ளன. கடைசியாக டிசம்பர் 2014-ல் வந்த ‘டிங்கர் பெல் அண்டு த லெஜெண்ட் ஆஃப் த நெவர்பீஸ்ட்’ (Tinker Bell and the Legend of the Neverbeast), 87 லட்சம் டாலர் வசூலைக் குவித்தது.

p68a.jpg

ரோஸெட்டா (Rosetta): பூக்கள், செடிகளைப் பராமரிக்கும் கார்டன் ஏஞ்சல். டிங்கர் பெல்லுடன் இணைந்து, தேவதைகள் உலகத்துக்கு வரும் ஆபத்தை, பூக்கள் மற்றும் தாவரங்கள் உதவியோடு சரிசெய்யும் தேவதை.

விடியா (Vidia): வேகமாகப் பறக்கும் ஏஞ்சல். பர்பிள் கலர் டாப், பேண்ட், கறுப்பு கலரில் நீளமான போனி டெயில் ஹேர் ஸ்டைல். இதுதான் விடியா. கொஞ்சம் கோபக்காரி. எந்தக் காரியத்தையும் வேகமாகச் செய்துவிடும் தேவதை.

சில்வர்மிஸ்ட் (Silvermist): நீல நிற லில்லிப் பூ இதழ்களால் ஆடை அணிந்தவள். ஆறு, ஏரி, கடல், ஆகியவற்றைப் பராமரிக்கும் நீர்த் தேவதை.

இரிடெஸ்ஸா (Iridessa): வெளிச்ச தேவதை. சூரிய ஒளி, வானவில் ஆகியவற்றைப் பராமரிப்பவள். சூரியகாந்தி இதழ் ஆடை, கறுப்பு நிற முடி, ப்ரௌன் கண்கள்.

p69a.jpg

இந்த கேரக்டர்கள்தான் டிஸ்னி தேவதைகளில் பிரதானமானவை. இது தவிர, 500-க்கும் மேற்பட்ட தேவதைகள் உள்ளன. இந்தத் தேவதைகளுக்காகவே http://disney.in/DisneyOnline/fairies/  என்ற தளத்தை உருவாக்கி இருக்கிறது, டிஸ்னி நிறுவனம்.

இந்தத் தளத்தில் டிஸ்னி தேவதைகள் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதோடு, நீங்களே புதிய தேவதைகளை உருவாக்கி விளையாடலாம். அதற்காக, போட்டிகளும் நடத்தப்படுகின்றன.  கோடை விடுமுறையில், உங்கள் திறமைக்கு சவால். வீட்டுக்குள் இருந்தவாறு டிஸ்னி தேவதைகளை உருவாக்கி, ‘குட்டி பிரம்மா’ எனப் பெயர் எடுங்கள்.

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

'கருப்பாக இருப்பவர்கள் வேற்றுக்கிரகவாசிகள் அல்ல!'

 

unveil%20leftttt%281%29.jpgன்னதான் நாம் நவநாகரீக மனிதர்களாக மாறி இருந்தாலும், நமது உடையும் பேச்சும் மாறி இருக்கும் அளவுக்கு நமது மனநிலை மாறவில்லை என்பதே உண்மை. அதில் முக்கியமானது இந்த நிறம். 'சிவிலைஸ்டு சொசைட்டி' ( Civilized Society )  என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் நாம், உண்மையில் நிறம் என்ற ஒன்றை காட்டுமிராண்டி தனமாக தூக்கிப் பிடித்துக்கொண்டுதான் நிற்கிறோம். அதுவும் இன்றைய இளைஞர்கள் மத்தியில் நிற வேறுபாடு குறித்த எண்ணம் ஆழமாக வேறூன்றி கிடக்கிறது.

சிறிது நிறம் குறைவான பெண் என்றால் அதிகமான வரதட்சணை கேட்பது தொடங்கி, நிறம் குறைவானவர்களின் மீதான நம்பகத்தன்மை வரை நிறம் தொடர்பான நமது பிற்போக்கான  எண்ணம் விரவிக்கிடக்கிறது. இன்னொருபுறம்  நிறத்தின் பின்னே நம்மை ஓட வைக்கின்றன சில பெரு நிறுவனங்கள். உண்மையில் இன்றைய மாணவர்கள் நிறத்தினால் பல இடங்களில் உளவியல் ரீதியாக பலத்த மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். இதில் பெண்களின் நிலைதான் மிகவும் மோசம். இந்த நவீன உலகத்தின் நிற வேறுபாட்டைப் பற்றிதான்,  விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளனர் சென்னை கிறித்துவக் கல்லூரி இதழியல் துறையைச் சேர்ந்த மாணவர்கள்.

“எனக்கு 'ரேம்ப்வாக்' ( Ramp walk) ரொம்ப பிடிக்கும். நான் கல்லூரி அளவுல முதல் ஆண்டு சிறந்த மாடலா செலக்ட் ஆனாலும், அடுத்த நிலைக்குப் போக என்னுடைய நிறம் எனக்கான மிகப் பெரிய சவாலா இருந்தது. ஒரு மெட்ரோபாலிட்டன் சிட்டில, நான் என் நிறத்துக்காக ஒதுக்கப்படுறத என்னால ஏத்துக்க முடியல. இது எவ்வளவோ மக்கள் மனசுல பொதஞ்சி இருக்கு. இத எப்படியாவது மாத்தணும்” என்கிறார் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான தலைமைக்குழுவைச் சேர்ந்த ஸ்ரீவர்த்தினி.

unveil%20rakshana.jpgபிறந்தது முதலே தொடங்கும் இந்த நிறம் சார்ந்த பிரச்னை  பிள்ளை களின் மனதில் முழுமையாக பதிவது பள்ளி நாட்களில்தான். எப்படி மதத்தையோ, ஜாதியையோ நாம் தீர்மானிக்காமலேயே நம் மீது முத்திரை குத்தப்படுகிறதோ அது போன்றதுதான் இந்த நிறமும், நாம் பிறக்கும் முன்னே நம்மில் ஏறிக்கொள்கிறது.  தான் தீர்மானிக்காது தன் மீது குத்தப்பட்ட முத்திரைக்கு பிள்ளைகள் கொடுக்கும் விலை மிகப்பெரியது. தொடர்ந்து பெண்கள் என்னதான் அதிகமாக பாதிக்கப்பட்டாலும்,  ஆண்களும் இந்த நிற வேறுபாட்டால் போராட்டங்களை சந்திக்கவேண்டி உள்ளது.

 “என்னை முத்தல்ல எல்லாரும் ஒரு வேற்றுக் கிரக மனுஷன் மாறிதான் பாக்குறாங்க. அதுக்கு என் நிறமும் ஒரு காரணம்னு எனக்கு புரியுது. இந்த கலரால நிறைய இடங்கள்ல அவமானங்கள சந்திச்சி இருக்கேன். ஆனா, அது என் தப்பில்லையே?” என்று கேட்கிறார் அஸ்வந்த்.

‘தன்னை ஏற்றுக் கொள்ளுதல்’ என்ற முதிர்ச்சி பெரியவர்களுக்கே இல்லை என்னும்போது சிறு பிள்ளைகளின் நிலை எண்ணிப்பார்க்க முடியாததாகவே உள்ளது. சிறுவயதில் இருந்தே மிகப் பெரும் மன உளைச்சலை சுமந்து வருவது மிகவும் வலியைத் தரக்கூடிய ஒன்று.

unveil%20srivarhini.jpg“நான் ஸ்கூல் படிக்கும் போது இன்னும் குண்டா இருந்தேன். அப்போ ரெண்டுத்துக்கும் சேத்து வச்சி மோசமா கமென்ட் பண்ணுவாங்க. இப்போவும் என் கலர் பத்தி ‘அட்டு ஃபிகரு’ மாறி நெறையா கமெண்ட்ஸ் வரும். சில நேரங்கள்ல பெருசா தெரியாது. சில நேரங்கள்ல ரொம்ப கஷ்டமா இருக்கும். அவங்களுக்கு அவ்ளோதான் அறிவு இருக்குனு விட்டுடுவேன்” என்கிறார் ரக்ஷானா.

" வெப்ப மண்டல பகுதியைச் சேர்ந்தவன் கருப்பாகத்தான் இருப்பான். இருப்பினும் கருப்பின் மீதான இந்த ஒவ்வாமை என்பது எங்கிருந்து வந்தது என்று பார்த்தால், உண்மையில் அது தொடங்கியது தமிழ் மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகுதான். அவர்களுக்கு பின்னர் வந்த  அனைத்து ஆட்சியாளர்களுமே தமிழர்களை விட சற்று அதிகமான வெள்ளை நிறத்தைக் கொண்டவர்கள்; அதிகாரம் அவர்கள் கையில் இருந்தது. வெள்ளை நிறம் அதிகாரமும் ஆன்மீகமும் நிறைந்ததாகக் காட்டப்பட்டது; கருப்பு நிறமுடையவர்கள் ஆளப்படுபவர்களாகவும், அழகற்றவர்களாகவும், அதிகாரத்திற்கு தகுதி அற்றவர்களாகவும் கருதப்பட்டனர்" என்கிறார் பேராசிரியர் தொ.ப.

உலகமயமாக்கலின் மூலம் இங்கு நுழைந்த கார்ப்பரேட் பேய்கள்,  கருப்பினை நமக்கு அசிங்கமானதாக மூளைச் சலவை செய்து வெள்ளை நிறத்தைப் பெற களிம்புகளை நோக்கி ஓட வைத்தன. கருப்பாக இருக்கும் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வினை ஏற்படுத்தி இருப்பவை இந்த காஸ்மெடிக்ஸ். ஏழு நாட்களில் சிகப்பழகு என்ற விளம்பரம் பொய் என்று தெரிந்தும் அதனை வாங்க வைத்திருப்பதன் மூலம் நம்மை ஏமாளிகளாக்கி கொழுத்து பெருத்திருக்கின்றன இந்தப் பெருநிறுவனங்கள்.

இந்த நிற வேறுபாடு என்பது சமூகத்தில் இருக்கும் ஒரு நோய். அந்நோய் இளைஞர்களையும் விட்டு வைக்கவில்லை. இந்த பிரச்சாரத்தின் மூலம் இளைஞர்கள் இடத்தில் ஒரு சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது குறிக்கோள். இதற்கு எங்கள் துறையில் இருந்தும் முழு ஆதரவு கிடைக்கிறது” என்கிறார்கள் இந்த மாணவர்கள்.

unveil%20600%201.jpg

பிறந்ததில் இருந்து நமது குணத்தை தீர்மானிப்பதில் இருந்து (வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டன் டா), நமது இடத்தை அல்லது நிலையை தீர்மானிப்பது வரை இந்த நிறம் அதனது ஆதிக்கக்கரங்களை செலுத்துகிறது. இன்றைக்கும் நிற வேறுபாடு என்பது சமூகத்தில் இயங்கிக் கொண்டு இருப்பது அதன் உண்மை நிலையை விளக்குகிறது.


திற அல்லது திரை நீக்கு என்று பொருள்பட அன்வெய்ல் (Unveil) என்று இந்த நிகழ்விற்கு பெயர் வைத்துள்ளனர். 'கான்ஃபிடன்ஸ் இன் அப்பியரன்ஸ்' ( Happiness in appearance)  என்ற டேக் லைனுடன்,  டார்க் அண்ட் லவ்லி ( என்ற ஹாஷ் டேக்கையும் தீர்மானித்துள்ளனராம். இந்த விழிப்புணர்வு பிரச்சார நிகழ்வில் பெசன்ட் நகர் கடற்கரையில் பேரணி, வீதி நாடகம் மற்றும் பிரபலங்களுடன் விவாதித்தல் என்று பல்வேறு நிகழ்வுகளை செய்ய உள்ளனராம். இதற்கான முன்னோட்டமாக ஒரு வீடியோ ஒன்றையும் இவர்கள் யூ டியூபில் வெளியிட்டுள்ளனர்.

vikatan

  • தொடங்கியவர்

12705675_680264718742740_602539929225239

இன்டெர்நெட் சூப்பர் ஸ்டார்!

இபோது இன்டெர்நெட் சூப்பார் ஸ்டார் இந்தப் பூனைதான். கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு செம ஸ்டைலா உலாவருது. பார்ப்பவர்கள் எல்லோரும் செல்போன்களில் க்ளிக் செய்து நெட்டில் பரப்பிவருகிறார்கள். ஏன் 'சன்கிளாஸ்' போட்டுக்கொண்டுள்ளது தெரியுமா? இந்தப் பூனை கண் இமைகள் இல்லாமல் பிறந்துள்ளது. வெயிலையும் தூசியையும் சமாளிக்கவே இப்படி சன்கிளாஸ் அணிவித்து வெளியே கூட்டி வருகிறார் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த இதன் எஜமான் Karen McGill.

  • தொடங்கியவர்

12729178_987573727957988_144200768752243

 
 
மாபெரும் மராட்டிய - இந்து சாம்ராஜ்யத்தை இந்தியாவில் ஸ்தாபித்த மகா சக்கரவர்த்தி சத்ரபதி சிவாஜியின் பிறந்த தினம்.
  • தொடங்கியவர்

உலகில் சிறந்த விளம்பரத்திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.......606 முறை ஒத்திகை பார்க்கபட்டு, 607 முறை எடுக்கப்பட்டது...... உலகிலேயே 6.2 மில்லியன் டாலர் செலவழித்து எடுக்கப்பட்ட 2 நிமிட முதல் விளம்பரத்திரைப்படம் ஆகும். இது கிராப்பிக்ஸ் கலக்கப்படாத உண்மை விளம்பரத்திரைப்படம்......

  • தொடங்கியவர்

placeholder

placeholder

placeholder

ஷாக்‌ஷி அகர்வால்

  • தொடங்கியவர்

சொல்வனம்

 

நெல் வயலின் மகசூலை அதிகரிப்பவள் 

கம்மாயில் நீர் இறைப்பவர்கள்

பிடித்து கரையில் போட்டிருந்த

வெண் கெண்டைமீன்களைக்

கொத்திப் பறந்த நாரை

நீ களை பறித்த வயலின்

வரப்பில் அமர்ந்தபோது

தலையுயர்த்திப் பார்த்தாய்.

மடை மாற்றி நீர் பாய்ச்ச

அதே வரப்பில் காத்திருந்த நான்

வாய்க்காலில் ஓடும் சிறு மீன்களென

உன் கண்களைச் சந்தித்தேன்.

பச்சைப் பயிர்களுக்கிடையே

ஊடாடும் உன் கைகளில்

மரகதப்பச்சை வளையல்களின் சிணுங்கல்கள்.

சலசலவென நீர் பாயும் பாத்திகளில்

கெண்டைக்கால் வரை சகதியில் மூழ்க

களையெடுப்பில் முந்திப் போகிறாய்.

உன் உரசல் கசியவிடும் சுகத்தில்

பொன்னியின் மகசூல் கூடும் என்பதை

கண்ணெட்டும் தூரம் வரை

பசேலென இருக்கும் வயலுக்கு

யாரும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

அறுவடைக் காலத்தில்

நீ களை பறித்த வயலைப் பார்ப்பவர்கள்

குமைந்துபோய் நிற்பதை

வயலின் உரிமையாளன்

என்னவென்று புரிந்துகொள்வானோ!

- மௌனன்

p60a.jpg

யானை நிறத்தவள்

ஒரு பயணத்தின்போது உடனிருந்த அவள்

தூய இருளைப் போலிருந்தாள்

ஆதிக் கருவறையின் நினைவூட்டினாள்

போட்டான்கள் பிறந்தே இருக்காத

பெருவெடிப்பின் முந்தைய நொடியவள்

இரவுக்கடலின் வெள்ளிக் கப்பல்களாய்

அகண்ட இமைகளில் பொதிந்த கண்கள்

வேட்டை விலங்கின் தோலுரிக்கும்

வலிமையான கரங்கள் அவளுக்கு

ஒளியை விழுங்கிச் செரித்திருக்கும்

துங்கக் கரியின் தூய நிறத்தவள்

அதீதமான உதடுகள் உதிர்த்த

அதிர்ந்த சொற்களில் அலட்சிய பாவம்

அழகுப் போட்டிகள் நிராகரிப்பதை

காதல் கவிஞர்களின் புறக்கணிப்பை

திரைப்படங்களின் தீரா அவமதிப்பை

விளம்பரங்கள் விலக்கிவைப்பதை

திருமணங்கள் தள்ளிப்போவதை

மின்னும் பற்களிடையே நிறையப் பேசினாள்

ஒரு கருமாரி அம்மன் கோயில் நிறுத்தத்தில்தான்

இறங்கி கண் நிறைந்துபோனாள்.

- ஷான்

 

ஓ... கேண்டி க்ரஷ் பெண்ணே!

வார்த்தைகளை இனிப்பாக்கிக்

கொஞ்சம் வாசமும் சேர்த்துவிடுகிறாள்

பன்னீர் இதழ்கள்கொண்டு

புள்ளிகளுக்குப் பதிலாக

முத்தங்களைத் தூவுகிறாள்

சோகம் இழையோடும் ஸ்டேட்டஸ்களுக்கு

மாற்றாக நேசம் கிளறும் கவிதைகளை

டிஸ்பிளே பிக்சர் ஆக்குகிறாள்

சொர்க்கத்தின் நிறத்தை அப்புகிறாள்

ரிப்ளைகளின் வழியாக

சுவாசங்களின் சத்தங்களைப்

பாடலாகப் பதிவுசெய்கிறாள்

அவ்வப்போது புன்னகைக்கும்

புகைப்படங்களும்கூட தரவிறங்குகிறது

வனாந்திர நிலமாகிக் கிடந்த

எனது வாட்ஸ்அப்

ஸ்மைலிகளின் கூடாகிறது

ஓ... கேண்டி க்ரஷ் பெண்ணே

உன்மீது இப்படித்தான் நான்

காதல்கொண்டேன்!

 -  விக்னேஷ் சி செல்வராஜ்

vikatan

On 17/02/2016 at 10:40 PM, நவீனன் said:

p88_3.jpg

முயல், மொபைல் அலார்மை பத்தாவது முறையாக ஸ்நூஸ் செய்து, பின் திடுக்கிட்டு கண் விழித்துப் பார்த்தபோது, ஆமை ஃபினிஷிங் லைன் அருகே நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தது!

சிரிச்சு சிரிச்சு வயுத்துக்குள்ள குத்துது.

  • தொடங்கியவர்

பிப்ரவரி 19: தமிழ்த் தாத்தா உ.வே.சா பிறந்த தினம் இன்று.

பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.

12729082_680302242072321_944491737215520

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

 

கரிசனம்... காரணம்!

p88_4.jpg

``பரவாயில்லை சார். ஷூவைக் கழட்ட வேணாம். நம்ம வீடுதானே!’’ - மேலதிகாரியை பவ்யமாக வீட்டுக்குள் அழைத்த மனோகரனுக்கு, கடந்தமுறை அவர் வீட்டுக்கு வந்தபோது அடித்த சாக்ஸ் நெடி இன்னும் மூக்கிலேயே இருந்தது!

- அஜித்

ஆறுதல்

p88_5.jpg

எக்ஸாம் முடிவுகள் பாதகமாக வரவும், கண்ணீர்விட்டுக் கதறி அழுத கவிதாவின் தலையை வருடிவிட்டபடி அம்மா சொன்னாள், “கவலைப்படாதே செல்லம்... வொயில்ட் கார்டு ரவுண்ட்ல பார்த்துக்கலாம்!”

-கே.லக்‌ஷ்மணன்

சர்ச் இன்ஜின்

p88_6.jpg

``கார்லயா சாவியை விட்டுட்டுப் போவீங்க? வண்டி நம்பர், மாடல், உங்க அட்ரஸ் எல்லாம் தந்துட்டுப் போங்க” என்ற இன்ஸ்பெக்டர், ரவியிடம் “எங்க வேலைசெய்றீங்க?” என்றார். ``கூகுள் சார்’’ என்றான் ரவி!

- மணீஷ்

எது தப்பு?

p88_7.jpg

``தப்பு பண்ணினா... சாமி கண்ணைக் குத்திடும்’’ என்ற பாட்டியிடம், ``இப்படி பொய் பேசறது தப்பு இல்லையா பாட்டி?” என்றான் பேரன்!

- பாப்பனப்பட்டு வ.முருகன்

விடாத பழக்கம்

p88_8.jpg

தன் கணவன் பெயரையும் சேர்த்துக் கையெழுத்திட்டாள் `மீனாட்சி சரவணன்’ என, விவாகரத்துப் பத்திரத்தில்!

- பெ.பாண்டியன்

படிப்பினை

p88_9.jpg

``ராணி காலேஜ்ல சேர்ந்தா, வேலை நிச்சயம்!” என டி.வி-யில் நடிகை சொன்னதைக் கேட்டதும், பன்னிரண்டாவது படிக்கும் மஞ்சுளாவுக்கு ஆசை வந்தது, நடிகை ஆக!

- கெளதம்

ஒரே கேள்வி

p88_10.jpg

 

வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலில் எல்லோரிடமும் ஒரே ஒரு கேள்விதான் கேட்டார்கள், ``எவ்வளவு செலவு பண்ணுவே?’’

- ஜெ.கண்ணன்

vikatan

  • தொடங்கியவர்

 Chennai Super Kings Fans

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இன்று அவுஸ்ரெலியா அணிக்கெதிராக 2வது டெஸ்ட் போட்டியில் மெக்கலம் 54 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை புரிந்தார்

கிரிக்கட் வாழ்கையில் பிரென்டன் மெக்கலத்தின் உணர்வுகள் கலந்த இறுதி சர்வதேசப் போட்டியில் அவர் இன்று 79 பந்துகளில் விளாசிய 145 ஓட்டங்கள்

10468373_971875849526275_902181480287457

12710819_1180070782012016_97464431397480

12747859_1180084382010656_29096801531424

  • தொடங்கியவர்
அசாமின் கண்கவரும் "பாகுரம்பா" நடனம்...!

 

1stpagedance.jpg

 

 

இந்­தி­யாவின் அசாம் மாநிலம் பாரம்­ப­ரிய பழக்­க­வ­ழக்கங் களுக்கு பிர­சித்தி பெற்­ற­தாகும்.
இந்த மாநி­லத்தில் வசிக்­கின்ற மக்கள் பல பிரி­வு­க­ளாக இருந்த போதிலும் திரு­விழாக் காலங்­களில் செய்­யப்­ப­டு­கின்ற கொண்­டாட்­டங்­களில் இவர்கள் அனை­வரும் ஒன்­று­பட்டு விடு­கின்­றார்கள்.

நாட்­டியம், கலை நிகழ்ச்­சிகள் முத­லி­ய­வற்றில் அசாம் மாநில மக்கள் முழு ஈடு­பாட்­டுடன் செயல்­ப­டு­கின்­றார்கள். மங்­கோ­லாய்டு, இன்தோ பர்மீஸ், இந்தோ ஈரா­னியன், ஆரியன், ராபா, போடோ, கச்­சாரி, கார்பி, மிசிங், சோனோவால் கச்­சாரீஸ் மற்றும் மிசிமி ஆகி­யவை இங்­குள்ள மக்கள் குழுக்­களின் அடை­யா­ளங்­க­ளாக திகழ்­கின்­றன. இவர்கள் அனை­வருடைய கலா­சா­ரங்களும் ஒன்­றி­ணைந்து அசாம் கலா­சாரம் என்று உரு­வெ­டுத்­துள்­ளது.

அசாம் மாநி­லத்தில் வாழு­கின்ற மக்­களை ஆக்­சோ­மியா என அழைக்­கின்­றார்கள். அசாம் மாநி­லத்தில் வசந்த காலத்தின் போது கிரா­மிய நட­னங்­க­ளான பிஹு மற்றும் பாகு­ரம்பா நட­னங்கள் பெண்­களால் நடத்­தப்­ப­டு­கின்­றன. இதைத் தவிர இந்த மாநி­லத்தில் போர்ட்டல் நடனம் மற்றும் ஓஜா­பாலி நடனம் முத­லி­ய­வையும் நிகழ்த்­தப்­ப­டு­கின்­றன. 

அசாம் மாநி­லத்தில் ஆதி­வா­சி குழுக்கள் மாநிலம் எங்கும் நிறைந்து காணப்­ப­டு­கின்­றார்கள். இவர்கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் ஒரு தனி மொழி பிரத்தி­யே­க­மாக இருக்­கின்­றது. இருந்த போதிலும் அசா­மி­யர்­க­ளுக்கு பொது­வான மொழி­யாக அசாம் மொழி  இருக்­கின்­றது.

அசாம் மாநி­லத்தில் முக்­கி­ய­மான நிகழ்­வு­களை குறிக்கும் வித­மாக அடிக்­கடி கண்­காட்­சி­களும் திரு­வி­ழாக்­களும் நடை­பெ­று­வது வழக்­க­மாக இருந்து வரு­கின்­றது. பெரும்­பாலும் ஆதி­வா­சி­க­ளுக்­கான திரு­விழாக்களும் கொண்­டாட்­டங்­களும் வசந்த காலத்­தி­லேயே செய்யப்படு­கின்­றன. 

இங்­குள்ள ஆதி­வா­சிகள் விவ­சாய அறு­வடை நிகழ்ச்­சி­க­ளையும் சிறப்­பாக கொண்­டா­டு­கின்­றார்கள்.

இந்த மாநி­லத்தில் கொண்­டா­டப்­படும் திரு­வி­ழாக்­களில் முக்­கி­ய­மா­ன­து பிஹு விழா­வாகும். இந்த விழா­வா­னது அசா­மிய மக்கள் அனை­வ­ரையும் பின்­பு­லங்கள் எது­வாக இருந்த போதிலும் அவை அனைத்­தையும் பின் தள்ளி ஒற்­று­மை­யுடன் ஒன்­றி­ணைப்­ப­தாக உள்­ளது. 

அசாம் மற்றும் வட­கி­ழக்கு இந்­தி­யாவின் பாரம்­ப­ரிய மற்றும் உள்­நாட்டு நட­ன­மாக இருப்­பது போடோ ஆதி­வா­சி­களின் பாகு­ரம்பா நட­ன­மாகும். இது ஏப்ரல் மாத மத்­தியில் பிசுபா சங்­க­ராந்தி காலத்தில் பிவி­சாக்கு திரு­வி­ழாவின் போது நடத்­தப்­ப­டு­கின்­றது.

இந்த நடனம் “பட்­டாம்­பூச்சி நடனம்” என்றும் அழைக்­கப்­ப­டு­கின்­றது. ஏனெனில் பட்­டாம்­பூச்­சியின் அசை­வு­களை ஒத்­த­தாக இருக்­கின்­றது. மேலும் இந்த நட­னத்தின் போது பெற்­றோ­ரையும் மூத்­தோ­ரையும் தாழ்­ப­ணிந்து விழுந்து வணங்­கு­வது போல் மரி­யா­தை­யுடன் நடன அசைவின் மூல­மா­கவே செய்து காட்­டப்­ப­டு­கின்­றது.  

கடவுள் வழி­பா­டு­க­ளுக்கு பிறகு, பிசுபா சங்­ராந்தி விழாவின் போது கட­வு­ளுக்கு அசைவ உணவு பதார்த்­தங்கள் படை­ய­லாக செய்­யப்­ப­டு­கின்­றன.

இந்த தினத்தில் போடோ பெண்கள், தோக்னா, ஜும்­கரா மற்றும் அரோணை ஆகிய விசேட விழா உடை­களை தரித்­தப்­படி பாகு­ரம்பா நட­னத்தை காண்போர் வியக்கும் வண்ணம் அழ­காக ஆடு­கின்­றார்கள். இந்த நட­னத்தின் போது செர்ஜா, சைபங், தர்கா, மடால், ஜோட்டா மற்றும் கங்­கோனா ஆகிய விசேட வாத்­தி­யங்கள் நட­னத்­திற்கு ஏற்றாற் போல் அற்­பு­த­மாக வாசிக்­கப்­ப­டு­கின்­றன. 
இந்த திரு­வி­ழாவின் பாகு­ரம்பா நட­னங்கள் போடோ இனத்­தவர் வசிக்­கின்ற உதால்­குரி, கோக்­ரஜார், பக் ஷா, சிராங், பொனே­காவோன், நல்­பாரி, தராங் மற்றும் சொனித்­துபூர் ஆகிய இடங்களிலும் மற்றும் நேபாளம் பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளிலும் நடை பெறுகின்றன.

பாகுரம்பா நடனம் முடிந்தவுடன் மீண்டும் கர்ஜாசாலி என்ற இடத்தில் ஒரு வழிபாட்டுடன் விழா முடிவடைகின்றது.

புகழ்பெற்ற இந்த பாகுரம்பா நடனத்தை உள்ளூர் வாசிகளும், சுற்றுலா பயணிகளும் மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கின்றார்கள். 

kalaikesari

 

  • தொடங்கியவர்

மாதுளை நன்மைகள் !

மாதுளை மணப்பாகு: மாதுளையைக் கொட்டையுடன் சேர்த்து அரைத்து, வடிகட்ட வேண்டும். இதனுடன் சர்க்கரைப்பாகு கலந்தால், மாதுளை மணப்பாகு (மாதுளை சிரப்) ரெடி. இதை, குழந்தைகளுக்குக் கொடுத்துவந்தால், ரத்தசோகை குணமடையும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி பிரச்னைக்கு மாதுளை மணப்பாகு நல்ல தீர்வு.

நுண்ஊட்டச் சத்துக்கள் நிறைந்த பழம் மாதுளை. ரத்தக் குழாய்கள் தடிப்பதால் ஏற்படும் இதயநோய்களைத் தடுக்கும் ஆற்றல் மாதுளைக்கு உண்டு.

அனைத்து வகை புற்றுநோய்க்கும் சிறந்த மருந்து மாதுளை. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. குறிப்பாக, ஆண்களுக்கு வரும் ப்ராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும்.

கரு நன்றாக வளர மாதுளை உதவும். எனவே, கர்ப்ப காலத்தில் அவ்வப்போது மாதுளம் பழம் சாப்பிடுவது நல்லது.

ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் ஆற்றல் மாதுளைக்கு உண்டு. உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, அதன் அளவைக் குறையச் செய்யும்.

12718284_1075197579205698_90520885293147

vikatan

  • தொடங்கியவர்

12729194_1264923433524065_53898743163308

தென்னமர ஹேர்ஸ்டைல் அசத்தும் குட்டிப்பாப்பா!

  • தொடங்கியவர்

உலக ஆசிரியருக்கான விருது - இந்தியாவில் இருந்து ராபின்

 

ஆசிரியர்களுக்கான நோபல் பரிசு என போற்றப்படும் உலகின் மிக உயரிய விருதான ‘குளோபல் டீச்சர்’ பரிசின் இந்தாண்டு இறுதி சுற்றிற்கு தகுதி பெற்றுப்பவர்களின் பட்டியலை விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் சமீபத்தில் வெளியிட்டார்.  உலகின் 148 நாடுகளில் இருந்து வந்திருந்த 8000 துக்கும் அதிகமான பரிந்துரைகளிலிருந்து பத்து ஆசிரியர்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த ஒருவரும் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த பரிசை தட்டி செல்பவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு தொகை காத்துக்கொண்டிருக்கிறது. துபாயில் மார்ச் மாதம் 13 ஆம் தேதி நடக்கவிருக்கும்  உலகளாவிய கல்வி மற்றும் திறன் குறித்த மாநாட்டில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

2012 இல் நிறுவப்பட்ட இந்த விருது எல்லா குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கோடும் தன்னலமற்று சேவை புரிந்து வரும் ஆசிரியர்களை கவுரவிப்பதற்கும் வார்க்கி எனப்படும் நிறுவனத்தால் நிறுவப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பரிந்துரைகளிலிருந்து தேர்வு பெரும் தலைச்சிறந்த ஆசிரியர்களின் கதைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதனால் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தமுடியும் என நம்பப்படுகிறது.

girlslsls_vc1.jpg



வார்க்கி நிறுவனத்தின் நிறுவனர் சன்னி வார்க்கி கூறுகையில் “மாணவர்களின் வளர்ச்சியிலும்  சமுதாயத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் ஆசிரியர்களின் மகத்தான பங்களிப்பிற்கு ஒவ்வொரு வருடமும் உலகின் மூலை முடுக்குகளில் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான விண்ணப்பங்களே சாட்சி’ என்றார். இந்த வருட பரிசின் சிறப்பு என்னவெனில் இறுதி சுற்றிற்கு தேர்வாகியிருக்கும் பத்து பைனலிஸ்ட்களை உலக புகழ் பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அறிமுகப்படுத்தியது தான். தாலிபான்களிடம் இருந்து உயிர்பிழைத்து தப்பித்து வந்து வாடகைக்கு எடுத்த ஒரு சிறிய டென்ட் கொட்டகையில் பாகிஸ்தான் இளம் பெண்களுக்கு பாடம் சொல்லிகொடுத்து வரும் அகீலா அசிபி தொடங்கி கடினமான கணக்கு பாடத்தை
சுலபமாக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டி வரும் காலின் ஹெகர்ட்டி வரை இறுதிசுற்றில் இருக்கும் ஒவ்வொருவரும் தாங்கள் மேற்கொண்டு வரும் ஆசிரியப் பணியில் பெரிய அளவில் சாதனைகள் புரிந்து வருகின்றனர்.

இந்தியாவில் இருந்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும் மும்பையை சேர்ந்த ராபின் சவுராசியா ‘ரெட் லைட்’ மாவட்டம் என்றழைக்கப்படும் கமத்திபுரா மாவட்டத்தில் சமுதாயத்தின் விளிம்பு நிலையில் வாழும் பெண் குழந்தைகளுக்கு கல்வியுடன், தங்களுக்காக சொந்தமாக யோசிக்கக்கூடிய அளவு தன்னம்பிக்கையையும் சேர்த்து கொடுத்துவருகிறார். இதுவரை கிட்டத்தட்ட ஒரு
லட்சம் மக்கள் இவரின் சேவையால் பயனடைந்துள்ளனர். ராபின் இந்த பரிசை வெல்லுவாரா என பொறுத்திருந்து பார்போம்.

vikatan

  • தொடங்கியவர்

கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் 'தோழா' டீஸர்

  • தொடங்கியவர்

பாலி இந்தோனேசியா

  • தொடங்கியவர்

ஆர்கானிக் ஸ்விம்மிங் பாட்டி வைத்தியம்

 

கீர்த்தி சுரேஷ் பியூட்டி சீக்ரெட்

 

‘ரஜினிமுருகன்’ ஹிட் அடித்த மகிழ்ச்சியில் இருக்கிறார், கீர்த்தி சுரேஷ். இன்று, ஏ,பி,சி என ஆல் சென்டர் ஆடியன் ஸின் வைரல் தேவதை. தன் க்யூட்டான எக்ஸ்ப்ரஷன்களால் தமிழ் இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்திருக்கும் இந்த ஹோம்லி லுக் ஏஞ்சலின்  ஃபிட்னெஸ், பியூட்டி சீக்ரெட்ஸ் என்னென்ன..?

டயட்

“ஃபிட்னெஸுக்காக நான் அதிகம் மெனக்கெடுவது இல்லை. தினமும் காலையில் எழுந்ததும் வெந்நீர் ஒரு கிளாஸ் குடிப்பேன். பிறகு, கிரீன் டீ. என்ன பிஸியா இருந்தாலும் பிரேக்ஃபாஸ்ட்டைத் தவிர்ப்பதே இல்லை. காலை டிஃபனில், ஓட்ஸ், பருப்புகள், நட்ஸ், டிரை ஃப்ரூட்ஸ் என எல்லாம் கலந்து இருக்கும். ஒரே நேரத்தில் ஹெவியா எடுத்துக்க மாட்டேன். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கொஞ்சம்கொஞ்சமாக சாப்பிடுவேன். பிரேக்ஃபாஸ்ட் முடிந்த ஒரு மணி நேரத்தில், ஏதாவது ஒரு காய்கறி ஜூஸ். அடுத்த ஒரு மணி நேரம் கழித்து ஃப்ரெஷ் ஃப்ரூட் ஜூஸ் எடுத்துக்குவேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் இளநீர் அல்லது  மோர். இது எல்லாமே அளவோடுதான். நான் வெஜிட்டேரியன்கிறதால எனர்ஜி கிடைக்க இப்படி ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை ஏதாவது காய்கறி, பழ ஜூஸ் எடுத்துக்கிறது ஹெல்ப்ஃபுல்லா இருக்கு. நிறைய நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கிறதால, ஸ்கின் குளோ கிடைக்கும். நம்ம சருமம் ஃப்ரெஷ்ஷாவும் இருக்கும். மதியம், ஓட்ஸ்ல சாதம் மாதிரி செய்து கொஞ்சமா எடுத்துக்குவேன். ஒரு கப் நிறைய வேகவைத்த காய்கறிகள் சாப்பிடுவேன். அப்புறம், மாலை 4 மணிக்கு பாதாம், முந்திரி, திராட்சை, பிஸ்தா, கிஸ்மிஸ்னு கொஞ்சமா நட்ஸ் - டிரை ஃப்ரூட்ஸ் எடுத்துக்குவேன். இரவு, கோதுமை தோசை, சூப்னு ரொம்ப லைட்டா சாப்பிடுவேன்.

p14a.jpg

டைம் மேனேஜ்மென்ட்

எல்லாத்துக்கும் மேல,  நேரத்துக்குச் சாப்பிடுவேன். பிரேக்ஃபாஸ்ட்டை காலை ஒன்பது மணிக்குள்ளயும், லஞ்ச்சை மதியம் ஒன்றரை மணிக்குள்ளும், டின்னரை  இரவு எட்டு மணிக்குள்ளும் சாப்பிட்டுடுவேன். ஆரோக்கியமான உணவை, சீரான இடைவெளியில்  எடுத்துக்கிட்டாலே ஹெல்த்தியாக இருக்கலாம்.

தினமும் நீச்சல்

என் அம்மாவும் சிஸ்டரும் தினமும் காலையில் எழுந்ததும் யோகா செய்வாங்க. டைம் இருக்கும்போது அவங்களோடு சேர்ந்து நானும் யோகா செய்வேன். ஜிம் வொர்க் அவுட்ஸ் ரொம்ப செய்றது இல்லை. ஷூட்டிங் இல்லாத நேரத்தில்  கொஞ்சம் வொர்க்அவுட்ஸ் செய்வேன் அவ்வளவுதான். நான் டென்னிஸ் ப்ளேயர். எனக்கு அதை ரொம்பப் பிடிக்கும். ஆனா எப்போதாவதுதான் டென்னிஸ் விளையாடுவேன். நீச்சலும் எனக்குப் பிடிக்கும். தினமும் நேரம் கிடைக்கும்போது எல்லாம் நீச்சல் பயிற்சி செய்வேன். எல்லா பயிற்சிகளையும்விட ஃபிட்டா இருக்க, நீச்சல்தான் பெஸ்ட் எக்சர்சைஸ். ஸ்கூல் படிக்கும்போது ஃப்ரீ ஸ்டைல் ஸ்விம்மிங்ல வெள்ளிப் பதக்கமும், பேக்ஸ்ட்ரோக்ல வெண்கலப் பதக்கமும் வாங்கியிருக்கேன்.

எல்லாம் ஆர்கானிக்

நம்முடைய ஆரோக்கியத்துக்கு உணவு, உடற்பயிற்சி எந்த அளவுக்கு முக்கியமோ,  அதுபோலத்தான் தூக்கமும். கண்டிப்பா ஏழு மணி நேரமாவது தூங்கணும். அப்போதுதான் அடுத்த நாள் ஃப்ரெஷ்ஷா ஃபீல் செய்வோம். நான் எந்த ஒரு காஸ்மெட்டிக்ஸையும் யூஸ் பண்ண மாட்டேன். ஸ்கின் டாக்டரை கன்சல்ட் செய்து, அவர் ரெக்கமெண்ட் செய்வதைத்தான் பயன்படுத்துறேன். சருமத்துக்கு ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. மூலிகை, ஆர்கானிக் பொருட்களைப் பயன்படுத்துவதுதான் நல்லது. மாதத்துக்கு இரண்டு முறை பியூட்டிபார்லர் போவேன். தவிர, கேரளாவில் எனக்கு ஸ்கின்னுக்கு ஆயில், கூந்தலுக்கு ஆயில் தயார்செய்து தருவாங்க. வீட்டில் இருக்கும்போது மட்டும் அதைப் பயன்படுத்துவேன். முடிக்கு தேங்காய் எண்ணெய் உபயோகிப்பேன். அதை, வீட்டிலேயே எங்க பாட்டி தயார் செய்வாங்க.

கேரளாவுல கேந்திரிய வித்யாலயா ஸ்கூல்லதான் நான் படிச்சேன். பிறகு, ‘பியர்ல் அகா டமி’யில், ஃபேஷன் டிசைன் படிச்சேன். படிப்புல ஆவரேஜ்தான். ஆனா, டிராயிங், கர்னாடிக், லைட், ஹிந்துஸ்தானின்னு எல்லா இசை வகுப்பும் போயிருக்கேன். நல்லா டான்ஸ் ஆடுவேன். தவிர, அபாகஸ், கீபோர்டு, வயலின் கத்துக்கிட்டேன். இதுஎல்லாம் நம்மை ரிலாக்ஸா, ஃபப்ரெஷ்ஷா வைத்திருக்க உதவக்கூடியது” எனப் புன்னகைக்கிறார் கீர்த்தி. 

vikatan

  • தொடங்கியவர்

நம்ப முடிகிறதா? - இதுவும் வேதியியல்தான்

 
 
chemistry_2740232h.jpg
 

± முகப்பவுடர்களில் பயன்படுத்தப்படும் டால்க் தான் இதுவரை கண்டறியப்பட்ட வேதிப்பொருட்களில் மிகவும் மிருதுவானது.

± காலியம் என்ற உலோகம் மிகக் குறைந்த உருகும் நிலையைக் கொண்டிருப்பதால் கைகளில் வைத்தாலே (29.76 °செல்சியஸ்) உருகிவிடும். ஏனென்றால், நமது உடல் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

± மிக அதிக உருகுநிலை கொண்ட தனிமம் டங்க்ஸ்டன் -3,410 டிகிரி செல்சியஸ். அதனால்தான் பல்பு இழை அதில் செய்யப்பட்டது.

± கலிஃபோர்னியம் என்ற தனிமம்தான் உலகிலேயே மிக அதிக விலை கொண்டது. அதன் ஒரு கிராம் விலை ரூ. 35,000 கோடி.

± பூமியின் மேல்அடுக்கில் மிக அதிகமுள்ள தனிமம் ஆக்சிஜன். இது தண்ணீரிலும் வளிமண்டலத்திலுமாக மொத்தம் 49.5 சதவீதம் உள்ளது.

± பூமியின் மேல் ஓட்டில் மிக அதிக அளவில் இருப்பது அலுமினியம் (கிட்டத்தட்ட 8 சதவீதம்).

± நமது உடலிலுள்ள கார்பனைக் கொண்டு 9,000 பென்சில்களைச் செய்துவிடலாம்.

± தனிம வரிசை அட்டவணையில் முதலிடத்தில் உள்ள தனிமம் ஹைட்ரஜன். அதில் ஒரேயொரு அணு மட்டுமே இருப்பதால், அது முதலிடத்தைப் பிடித்தது.

± தனிம வரிசை அட்டவணையில் இல்லாத ஒரேயொரு ஆங்கில எழுத்து ஜே.

± கிராஃபைட், வைரம், நிலக்கரி எனப் பல்வேறு வடிவங்கள் கொண்டது கார்பன்.

± ஒரு வளர்ந்த சராசரி மனிதரின் உடலில் 250 கிராம் உப்பு இருக்கிறது.

± பிரபஞ்சத்தில் மிகவும் அதிகமாக உள்ள தனிமம் ஹைட்ரஜன், அதாவது 75 சதவீதம்.

± தனிமங்களிலேயே ஹீலியம் மட்டும்தான் எந்த வெப்பநிலையிலும் திடமாக மாறுவதில்லை. வாயுவாகவே இருக்கிறது.

± அறை வெப்பநிலையில் திரவ நிலையில் இருக்கும் ஒரே தனிமம் பாதரசம்.

± அஸ்டாடைன் என்ற தனிமம்தான் பூமியில் மிகவும் அரிதானது. பூமியின் ஒட்டுமொத்த மேற்பரப்பில் இது வெறும் 28 கிராம் மட்டுமே இருக்கிறது.

tamil.thehindu

  • தொடங்கியவர்

இந்திய அரச குடும்பங்களின் பெண்கள்: சில புகைப்படங்கள்

160216063303__88026448_mh10wr59.jpg

 திருவாங்கூர் சமஸ்தானத்தின் ராணி சேது பார்வதி பாயி மற்றும் ராணி லக்ஷ்மி பாயி. புகைப்படக் கலைஞர் தெரியவில்லை.

1947ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது, பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு வெளியில் இயங்கிவந்த சமஸ்தானங்களும் தங்கள் அதிகாரத்தை இழந்தன. இருந்தபோதும், இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆட்சிசெய்த இந்த ராஜாக்கள், ராணிகள் மீதான ஈர்ப்பு தொடர்ந்து நீடித்தது.

160216063434__88026452_mh10wr65.jpg

குஜராத்தில் இருந்த கோட்டா   சங்கணியின் தகோரணி விஜயலக்ஷ்மி தேவி சஹிபா, 1941 -42. புகைப்பட உதவி: ஊர்மிளா தேவி/தஸ்வீர் 160216063346__88026450_mh10wr62.jpg  பாடியாலாவின் ராணி யஷோதா தேவி. லண்டனில் உள்ள வாண்டைக் ஸ்டுடியோஸில் 1930களில் எடுக்கப்பட்ட புகைப்படம். புகைப்பட உதவி: எம்ஏபி/தஸ்வீர்

இந்த சமஸ்தானங்களை ஆட்சி செய்த மகாராஜாக்களே பெரும்பாலும் கவனத்திற்கு உரியவர்களாக இருந்தனர் என்றாலும் சில சமஸ்தானங்களில் ராணிகளும் மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தனர்.

160216063227__88026446_mh10wr58.jpg  கபூர்தலாவின் ராணி ப்ரேம் கவுர் ஷஹிபா. ஸ்பெயினில் அனிடா டெல்கடோ பிரியோன் என்ற பெயரில் வளர்ந்தவர், பிறகு கபூர்தலாவுக்கு வந்தார். இந்தப் புகைப்படம் ஹைதராபாதில் உள்ள ராஜா தீன் தயாள் அண்ட் சன்ஸினால் 1915ல் எடுக்கப்பட்டது. புகைப்பட உதவி: எம்ஏபி/தஸ்வீர் 160216063131__88026392_mh10wr45.jpg  ராம்பூர் இளவரசி ரஃபட் ஜமானி பேகம். நஜியாபாத் குடும்பத்தைச் சேர்ந்தவர். தில்லியில் உள்ள கின்ஸி ஸ்டுடியோஸில் 1960களில் எடுக்கப்பட்ட படம். புகைப்பட உதவி: எம்ஏபி/தஸ்வீர்

குறிப்பாக ஜெய்ப்பூரின் அரசியான மகாராணி காயத்ரி தேவி போன்றவர்கள், இந்தியாவில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றினார்கள்.

160216062850__88026386_mh10wr05.jpgகபூர்தலாவின் ராணி சீதா தேவி, காஷிப்பூர் குடும்பத்தைச் சேர்ந்தவர். புகைப்படம் எடுத்தவர் ஆந்த்ரு தஸ்த், 1934. புகைப்பட உதவி: எம்ஏபி/தஸ்வீர் 160216062919__88026388_mh10wr15.jpg பரோடாவின் மகாராணி இரண்டாம் சிம்னாபாய். லாலா தீன் தயாள் என்பவரால் 1891ல் எடுக்கப்பட்ட புகைப்படம். புகைப்பட உதவி: எம்ஏபி/தஸ்வீர்

ஆனால், மிகப் பெரும்பாலான அரச குடும்பத்துப் பெண்கள் யார் கவனத்தையும் பெறவில்லை. அவர்களைப் பற்றி வெளியுலகிற்குத் தெரிந்ததும் குறைவே.

160216062752__88025680_mh10wr02.jpg  நேபாளத்தின் காஞ்சி படா மகாராணி பால்குமாரி தேவி ராணா. 1908ல் திர்கா மன் சித்ரகாரால் எடுக்கப்பட்ட புகைப்படம். புகைப்பட உதவி: எம்ஏபி/தஸ்வீர்

இந்தியாவில் உள்ள தஸ்வீர் என்ற புகைப்பட ஸ்டுடியோ தனது பத்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி இந்திய மகாராணிகள், இளவரசிகள் ஆகியோரது புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியை Maharani: Women of Royal India என்ற பெயரில் நடத்துகிறது.

160216063040__88026390_mh10wr21.jpg  ஜெய்ப்பூர் மகாராணி காயத்ரி தேவி. கூச் பெஹரின் இளவரசி ஆயிஷா என்றும் அறியப்பட்டவர். 1951ல் டேரக் அட்கின்ஸினால் எடுக்கப்பட்ட புகைப்படம். புகைப்பட உதவி: எம்ஏபி/தஸ்வீர்

இந்தக் கண்காட்சிக்கான புகைப்படங்கள் மியூசியம் ஆஃப் ஆர்ட் அண்ட் ஃபோட்டோகிராஃபி, விக்டோரியா அண்ட் ஆல்பர்ட் மியூசியம், லண்டனில் உள்ள நேஷனல் போர்ட்ரெய்ட் கேலரி, ஜம்முவில் உள்ள அமர் மஹால் மியூசியம் அண்ட் லைப்ரரி உள்ளிட்ட இடங்களிலிருந்து பெறப்பட்டவை என்கிறார் தஸ்வீர்.

BBC

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நாலுகால் உதைபந்தாட்ட நட்சத்திரம்.

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: பெப்ரவரி 21
 
 

article_1456029398-2061424356_698333ef701848: கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக்ஸ் ஏங்கல்ஸ் ஆகியோர் 'கம்யூனிஸ விஞ்ஞாபனம்' எனும் நூலை வெளியிட்டனர்.

1878: உலகின் முதல் தெலைபேசி விபரக்கொத்து அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் வெளியிடப்பட்டது. 50 சந்தாதாரர்களின் விபரங்கள் அதில் அடங்கியிருந்தன.

1947: உடனடியாக புகைப் படங்களை வழங்கும் முதல் கமெராவை (இன்ஸ்டன்ட் கமெரா) நியூயோர்க்கில் எட்வின் லான்ட் என்பவர் செயற்படுத்திக்காட்டினார்.

1952: பிரிட்டனில் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமையிலான அரசாங்கம் அடையாள அட்டை சட்டத்தை நீக்கியது.

1952: கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய பங்களாதேஷ்) வங்காள மொழியை உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். பின்னர் இத்தினம் சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோவினால் பிரகடனப்படுத்தப்பட்டது.

1953: பிரான்ஸிஸ் கிறிக், ஜேம்ஸ் டி வட்ஸன் ஆகியோர் டி.என்.ஏ. மூலக்கூறு கட்டமைப்பை கண்டுபிடித்தனர்.

1958: ஜெரால்ட் ஹோல்டம் என்பவரால் சமாதான சின்னம் உருவாக்கப்பட்டு, அணுவாயுத ஒழிப்பு பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டது.

1970: சுவிஸ் எயார் விமானம் சுவிட்ஸர்லாந்தில் விபத்துக்குள்ளானதால் 38 பேர் பலி.

1970: அமெரிக்க ஜனாதிபதி நிக்ஷன் சீனாவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றை மேற்கொண்டார்.

1973: லிபிய பயணிகள் விமானமொன்றை  சினாய் பாலைவனத்திற்கு மேலாக இஸ்ரேலிய போர் விமானமொன்று சுட்டுவீழ்த்தியதால் 108 பேர் பலி.

2004: ஐரோப்பாவின் முதலாவது அரசியல் கட்சியான ஐரோப்பிய பச்சை கட்சி ரோம் நகரில் உருவாக்கப்பட்டது.

- See more at: http://www.tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உடல் எடை குறைய வேண்டுமா ? சிம்பிள் டயட் .

12743653_1075185245873598_15789296407196

 

ஆனா சீரியஸா பாலோ பண்ணுங்க ..

ஒரு நாள் உணவு!

காலையில் எழுந்ததும், 10 நிமிடங்கள் வார்ம் அப். பிறகு இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீர்.

அரை மணி நேர நடைப்பயிற்சி.

வீடு திரும்பியதும் கொழுப்பு நீக்கிய பால் ஒரு கப். (சர்க்கரை சேர்க்காமல்)

புரதச் சத்து நிறைந்த முளைகட்டிய பயறு சாலட் போன்ற மிதமான பிரேக் ஃபாஸ்ட். (100 கிராம்)

10 மணிக்கு மோர்

11 மணிக்கு எலுமிச்சை ஜூஸ்

12 மணிக்கு இளநீர்

மதியம் ஒரு மணிக்கு 150 கிராம் அரிசி சாதம்.
வளரும் குழந்தைகளுக்கு 200 கிராம் சாதம். (இந்த சாதத்தை மூன்றாகப் பிரித்து, கீரை, காயுடன் ஒரு பங்கு, அடுத்து மிளகு, பூண்டு ரசம், கடைசிப் பங்கு தயிர் / மோர் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.)
200 கிராம் பருப்பு மற்றும் காய்கறிகள். துளியும் எண்ணெய் சேர்க்கக்கூடாது. அதிகம் வேக வைக்கவேண்டியதும் இல்லை.
நான்வெஜ் பிரியர்கள் இரண்டு துண்டு மட்டன் / சிக்கன், முட்டையின் வெள்ளைப்பகுதி மட்டும்.
வீட்டில் இருக்கும் பெண்கள் மதிய தூக்கத்தைத் தவிர்க்கவும்.

நான்கு மணிக்கு ஒரு கப் பப்பாளி.

ஐந்து மணிக்கு புரதம், நார்ச் சத்து நிறைந்த வேகவைத்த ஏதேனும் சுண்டல் ஒரு கப்.
காபி பிரியர்கள், ஒரு சின்ன கப்பில் காபி எடுத்துக்கொள்ளலாம். கொஞ்சம் கொஞ்சமாக காபியைக் குறைத்து க்ரீன் டீ குடிக்கலாம்.

இரவு எட்டு மணிக்குள் இரண்டு சப்பாத்தி அல்லது இரண்டு இட்லி, எண்ணெய் இல்லாத இரண்டு தோசை, தொட்டுக்கொள்ள சாம்பார் அல்லது சட்னி.

தூங்கப் போவதற்கு முன்பு கொழுப்பு நீக்கிய பால் ஒரு கப்.

 (டாக்டர் விகடன் டிப்ஸ்)
  • தொடங்கியவர்

இன்று உலக தாய்மொழித் தினம்

இன்று உலக தாய்மொழித் தினம்

உலக தாய் மொழித்தினம் இன்றாகும்.

நடைமுறைக் கல்வி, வழிக்காட்டல் மற்றும் கல்வியின் பிரதிபலன் என்பதே இந்த வருடத்திற்கான தொனிப்பொருளாக காணப்படுகின்றது.

அனைத்து மொழிகளினதும் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு என்பதை நோக்காக கொண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் 2007 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய இன்றை நாள் உலக தாய்மொழித் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் வங்காள மொழியை அரச மொழியா பிரகடனப்படுத்த கோரி 1952 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து தாய்மொழித் தினம் கொண்டாடப்படுகின்றது.

உலகில் தற்போது 7000 இற்கும் அதிகமான மொழிகள் பயன்படுத்தப்படுவதாகவும் அவற்றில் 50 வீதமான மொழிகள் அழிந்து செல்லும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலத்தின் மாற்றத்திற்கு அமைய தாய்மொழி மாற்றம் அடைய வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜே.பீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

உலக தாய் மொழித்தினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.