Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

12747432_989248054457222_835907071903066

தன் மிகச்சிறந்த நகைச்சுவை ஆற்றலால் தமிழ் சினிமா ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகர் கருணாசுக்கு இன்று பிறந்த நாள்.

தன் 12 வது வயதில் கானா பாடல்கள் பாட ஆரம்பித்து 'கானா கருணாஸ்' என்று அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் கருணாஸ் 2001 இல் 'நந்தா' திரைப்படம் மூலமாக 'லொடுக்கு பாண்டி' எனும் கதாபாத்திரத்தில் பேசப்பட ஆரம்பித்ததிலிருந்து தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் ஒருவராகிவிட்டார்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கருணாஸ்.
  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

100 வருடங்களுக்கு பிறகு இந்த உலகம் எப்படி இருக்கபோகிறது

  • தொடங்கியவர்

12697246_989251464456881_822920123490499

பரதேசி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் பெற்ற நடிகை வேதிகாவின் பிறந்த நாள் இன்று.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

 

வித்யா பாலன் நடித்த சூப்பர் ஹிட் படம் `கஹானி'. நிறைமாத கர்ப்பிணி, தொலைந்துபோன தன் கணவனை துர்கா பூஜையின்போது கொல்கத்தாவின் வீதிகளில் தேடி அலையும் த்ரில்லர்தான் கதை. 2012-ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தின் செகண்ட் பார்ட் விரைவில் தொடங்குகிறது. முதல் பாகத்தை இயக்கிய சுஜாய் கோஷ்தான் இதையும் இயக்குகிறார்!

p20a.jpg

p20b.jpg

p20e.jpg

2016-ம் ஆண்டின் முதல் ஹார்ட்-பிரேக்கிங் நியூஸ் விராட் கோஹ்லி - அனுஷ்கா ஷர்மா காதல் முறிவு. `விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும்' என அனுஷ்காவிடம் விராட் சொல்ல, அதற்கு அனுஷ்கா `ஏன் இப்போது அவசரம்?' என மறுத்ததுதான் பிரிவுக்குக் காரணமாம். `விராட் - அனுஷ்கா ஜோடி பிரிந்துவிட்டது' என மீடியா செய்தி வாசித்ததும், `ஹார்ட் புரோக்கன்' என சோக முகத்துடன் இன்ஸ்டாகிராமில் செல்ஃபி தட்டினார் கோஹ்லி. `அய்யோ பாவம்' என எல்லோரும் கமென்ட்டில் உச்சுக் கொட்ட, சில மணி நேரத்தில் படத்தை டெலிட் செய்ய... இதுவும் செய்தி யானது. `படத்தை டெலிட் செய்ததை ஏதோ குற்றம்போல உணர வைக்கிறார்கள். ஸாரி கய்ஸ்' என மீண்டும் அந்தப் படத்தை கேப்ஷன் மாற்றி வெளியிட்டார் விராட் கோஹ்லி!

p20c.jpg

இந்தியாவின் முதல் `மிஸ்டர் கூல் கேப்டன்' முஹமது அஸாருதீனின் வாழ்க்கை `அஸார்' என்ற பெயரில் சினிமா ஆகிறது. அஸாருதீனின் ஆரம்ப காலம், கல்யாணம், காதல், மேட்ச் ஃபிக்ஸிங், விளையாட தடை வரை அனைத்தையும் படமாக்குகிறார் டோனி டிஸோசா. அஸாருதீன் பிறந்த நாள் அன்று படத்தில் அஸாராக நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி, அஸார் கெட்-அப்பில் தனது படத்தை வெளியிட, சோஷியல் மீடியாவில் அதுதான் அன்றைய ட்ரெண்ட்!

p20d.jpg

`டர்ட்டி பாலிட்டிக்ஸ்' படத்துக்குப் பிறகு சைலன்டாக இருந்த மல்லிகா ஷெராவத், இப்போது திடீர் வைரலாகியிருக்கிறார். வைரலுக்குக் காரணம் ஒரு செல்ஃபி. அமெரிக்கா சென்று இருந்த மல்லிகா, ஒபாமாவுடன் நெருக்கமான செல்ஃபி ஒன்றை க்ளிக்கி ஃபேஸ்புக்கில் பதிவிட, ஹார்டின்களைப் பறக்கவிட்டிருக்கிறார்கள் ட்வீப்பிள்ஸ்!

vikatan

  • தொடங்கியவர்

12772049_989249567790404_769121603929675

இளசுகளைக் கொள்ளை கொள்ளும் இனிய குரல்வளத்தால் தமிழ் சினிமாவின் ஓர் தரமான பாடகனாக தன்னை நிலை நிறுத்தியிருக்கும் பாடகர் ரஞ்சித்துக்கு இன்று 39 வது பிறந்த நாள்.

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் பாடகர் ரஞ்சித்துக்கு வானலை முதல்வன் சூரியனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

  • தொடங்கியவர்

ரயிலைக் குலுக்காத கற்கள்!

 
 
train_2740228h.jpg
 

ரயில் தண்டவாளத்தில் கருங்கல் ஜல்லிகளைக் கொட்டி வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஏன், இப்படிக் கருங்கல் ஜல்லிகளைக் கொட்டியிருக்கிறார்கள் என்று என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா?

ரயில் பாதையில் செல்லும் ரயில்கள் அதிக எடை கொண்டவையாக இருக்கும். அது மட்டுமல்ல, ரயில் வண்டிகள் மிகவும் வேகமாகப் போகும். அப்படி வேகமாகப் போகும்போது அழுத்தம் அதிகமாகும். அந்த அழுத்தத்தைத் தாங்கிக்கொண்டு, தண்டவாளங்களின் மீது ரயில்கள் பாதுகாப்பாகப் போக கருங்கல் ஜல்லிகள் உதவுகின்றன.

ஸ்லீப்பர் கட்டைகளுக்கிடையே அடைத்து வைக்கப்பட்ட இந்தக் கற்கள், ரயில் வண்டிகளால் உண்டாகும் குலுங்கலையும், அதிர்ச்சிகளையும்கூடத் தாங்கிக்கொள்ளும். ரயில் வேகமாகச் சென்றாலும் பெரிதாக எந்தக் குலுங்கலும் இல்லாமல் போக கருங்கல் ஜல்லிகளே காரணம்.

கருங்கல் ஜல்லிகள் கிடைக்காத சில நாடுகளில் இறுகிப்போன எரிமலை லாவா (சாம்பல்) கற்களை ரயில் தண்டவாளங்களில் பயன்படுத்துகிறார்கள்.

tamil.thehind

  • தொடங்கியவர்

 துள்ளி விளையாடும் மீன்களின் அழகு

  • தொடங்கியவர்

12716406_989242041124490_191645839632544

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக விளங்கிய மைக்கல் சிலேட்டரின் 46 வது பிறந்த தினம் இன்று.

ஆஸ்திரேலிய அணிக்காக 74 டெஸ்ட் போட்டிகளிலும், 42 ஒருநாள் போட்டிகளிலும் பங்கெடுத்த இவர் பின்னாட்களில் ஒரு வர்ணனையாளராகவும் விளங்கியவர்.

#happy Birth Day Michael Slater

  • தொடங்கியவர்
பெண்களிடம் ஆண்கள் என்ன எதிர்பார்கிறாங்க??? கலகலப்பான நகச்சுவை பதில்கள் - வீடியோ
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நவீனன் said:
பெண்களிடம் ஆண்கள் என்ன எதிர்பார்கிறாங்க??? கலகலப்பான நகச்சுவை பதில்கள் - வீடியோ

மாடு மாதிரி மூசி மூசி வேலைசெய்துபோட்டு வாறவனுக்கு ....ஒரு கிளாஸ் சுடுதண்ணிக்கை ஒரு குட்டி தேயிலை பக்கற்றை அப்பிடி இப்பிடி ஆட்டி நனைச்சு  கலர்காட்டுற பொம்புளையளை எதிர்பாக்கிறன்.:cool:

  • தொடங்கியவர்
 

வரலாற்றில் இன்று....

பெப்ரவரி - 22

 

669varalaru-22-02-2016.jpg1658 : டச்சுப் படை­க­ளினால் மன்னார் கைப்­பற்­றப்­பட்­டது.

 

1819 :  புளோ­ரி­டாவை ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கு ஐந்து மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கு ஸ்பெயின் விற்­றது.

 

1847 : மெக்­ஸி­கோ -­அ­மெ­ரிக்கப் போரில் புவெ­னா-­விஸ்டா நகரில் இடம்­பெற்ற சமரில் 15,000 பேர் கொண்ட மெக்­ஸிகோ படையை 5,000 பேர் கொண்ட அமெ­ரிக்கப் படைகள் தோற்­க­டித்­தன.

 

1848 : பாரிஸில், லூயி பிலிப் மன்­ன­னுக்­கெ­தி­ராக புரட்சி வெடித்­தது. இரண்டு நாட்­களின் பின்னர் அவர் முடி துறந்தார்.

 

1853 : வொஷிங்டன் பல்­க­லைக் ­க­ழகம் எலியட் செமி­னறி என்ற பெயரில் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

 

1942 : இரண்டாம் உலகப் போர்: பிலிப்­பைன்ஸில் ஜப்­பா­னிய படை­களின் முன்­னேற்­றத்தை­ய­டுத்து, அமெ­ரிக்கத் தள­பதி டக்ளஸ் மெக் ஆர்த்­தரை வெளி­யே­று­மாறு அமெ­ரிக்க ஜனா­தி­பதி பிராங்­கிளின் ரூஸ்வெல்ட் பணித்தார்.

 

1943 : நாஸி ஜேர்­ம­னியில் வைட் ரோஸ் இயக்க உறுப்­பி­னர்கள் கொலை செய்­யப்­பட்­டனர்.

 

1948 : செக்­கோஸ்­லா­வாக்­கியாவில் கம்­யூ­னிசப் புரட்சி இடம்­பெற்­றது.

 

1958 : எகிப்தும் சிரி­யாவும் இணைந்து ஐக்­கிய அரபுக் குடி­ய­ரசை அமைத்­தன.

 

 1974 :  அமெ­ரிக்க ஜனா­தி­பதி ரிச்சர்ட் நிக்­ஸனை சாமுவேல் பிக் கொலை செய்ய மேற்­கொண்ட முயற்சி தோல்­வியில் முடிந்­தது.

 

1979 : சென் லூசியா, ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து விடு­தலை பெற்­றது.

 

2002 : இலங்கை அர­சாங்­கத்­துக்கும் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்கும் இடையில், நோர்வே அனு­ச­ர­ணை­யு­ட­னான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

 

2006 : பிரித்­தா­னி­யாவின் வரலாற்றில் மிகப் பெரும் கொள்ளை கெண்ட் நகரில் இடம்­பெற்­றது. 53 மில்­லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பணத்தை அறுவர் சேர்ந்து கொள்­ளை­யிட்­டனர்.

 

2014 : யுக்­ரைனில் ஜனா­தி­பதி விக்டர் யானு­கோ­விச்­சுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

 

2015 : பங்களாதேஷில் பத்மா நதியில் படகொன்று கவிழ்ந்ததால் 70 பேர் உயிரிழந்தனர்.

 
 New  0  0  0
- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=669#sthash.nSvJdriJ.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பிப்ரவரி 22: வனவிலங்கு ஆர்வலர் ஸ்டீவ் இர்வின் பிறந்த தினம் இன்று

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீவ் இர்வின் மிகச்சிறந்த இயற்கை ஆர்வலர். துணிச்சலாக வனவிலங்குகளுடன் பழகுபவர். சவால் நிறைந்த வனவிலங்குகள் டாகுமெண்டரி படங்களை எடுத்து புகழ் பெற்றவர். முதலைகளுடன் பழகுவது இர்வினுக்கு கை வந்த கலை. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வன உயிரின காட்சி சாலையும் நடத்தி வந்தார். கடல் வாழ் ஆபத்தான உயிரினங்கள் பற்றிய ஒரு குறும்படம் படம் எடுக்கும்பொழுது விஷமுள்ள பெருந்திருக்கை மீனால் கொட்டப்பட்டு உயிரிழந்தார் இர்வின்.

12742742_1077142469011209_11656498475007

  • தொடங்கியவர்
அலரி மாளிகையில் அழகுராணிகள்
 

மிஸ் டுவரிஸம் இன்டர்நெஷனல் அழகுராணி 2016 போட்டியில் பங்குபற்றும் அழகுராணிகள் கடந்த வெள்ளிக்கிழமை அலரி மாளிகைக்கு விஜ யம் செய்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந் தித்தபோது பிடிக்கப்பட்ட படங்கள்.

1506430.jpg

1506429.jpg

1506428.jpg

 

- See more at: http://www.metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

செல்ஃபி மோகத்தை கைவிட இதுவே தருணம்!

 

பாறை மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற மாணவி பலி, ஆற்றில் இறங்கி செல்ஃபி எடுக்க முயன்றபோது தண்ணீர் அடித்து சென்று கல்லூரி மாணவர்கள் பலி, மும்பையில் ரயில் பெட்டி மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்று கை தூக்கும்போது உயர் அழுத்த மின் கம்பியில் கை பட்டு உயிரிழந்த ஒன்பதாவது வகுப்பு மாணவன் பலி என எத்தனையோ  வகையான செல்ஃபி மரணங்களை கேள்விப்படுகிறோம்.

இந்த லிஸ்டில் சமீபத்திய சேர்க்கை,  அர்ஜெண்டினாவின் கடற்கரை பகுதியில் கரைக்கு வந்த ‘லா பிளேட்டா’ என்ற அரிய வகை டால்பின் குட்டி ஒன்றை,  கையில் பிடித்து செல்ஃபி எடுக்க சுற்றுலா பயணிகள் முயன்றபோது,  வெப்பம் தாங்க முடியாமல் குட்டி டால்ஃபின் உயிரிழந்த பரிதாபம்.

selfphy1.jpg

அன்றாடம் சாலைகளிலும், பேருந்து நிலையங்களிலும், சுற்றுலா தலங்களிலும் நடந்து சென்றுகொண்டிருப்பவர்கள்,  ‘மச்சான் ஒரு செல்ஃபி’ என சொல்லிக்கொண்டு வாகனங்கள், சாலைகளில் நடந்து வரும் selfphy4.jpgமனிதர்கள் என எதையும் பொருட்படுத்தாமல் திடீரென திரும்பி நின்று,  கைகளை உயர்த்தி செல்ஃபி எடுத்துக்கொள்வதை எத்தனை முறை பார்த்திருப்போம். இறந்து போன சித்தப்பாவோடு செல்ஃபி எடுத்து,  அதை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து, ‘சித்தப்பா டெட்,, பீலிங் சேட்’ என ஸ்டேட்டஸ் போடுபவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். கொடிய தொற்று நோய் போல டிஜிட்டல் உலக நெட்டிசன்களிடையே  பரவி கிடக்கிறது செல்ஃபி மோகம். தாங்கள் எடுக்கும் செல்ஃபிக்களையும், க்ரூப்பிகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்வதனால் கிடைக்கும் போலி போதைக்கு பலரும் அடிமையாக தொடங்கிவிட்டனர் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.

போனில் ‘பில்ட்டர்’ போட்டு ‘க்ளோஸ் அப்’பில் ‘டக் லிப்ஸ்’, ‘கியூட் போஸ்’ செல்ஃபி எடுத்து, பருக்களை நீக்கி, பற்களை வெள்ளையாக்கி, கண்களை பெருசாக்கி போலியான அழகை உருவகித்து,  செல்ஃபிக்களை சமூக வலைதளங்களில் அப்லோட் செய்து மகிழ்வது பெண்கள் மட்டுமல்ல.  தங்கள் சிக்ஸ் பேக் உடலை,  பாத்ரூம் கண்ணாடி முன்பு நின்றுகொண்டு பைசெப்களோடு செல்பி எடுத்துப் போடும் ஆண்களும் இதில் அடக்கம். இவ்வாறு எடுக்கப்படும் எத்தனை நூறு செல்ஃபிக்களை ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் அன்றாடம் தரிசிக்கிறோம் நாம். சும்மா ஃபேஸ்புக்கில் ‘செல்ஃபி’ என்ற ஹாஷ் டாகை தட்டி பார்த்தால், குப்பை போல வந்து கொட்டுகிறது செல்ஃபிக்கள்.

selfphy6.jpg


மில்லினியல்ஸ் தலைமுறையினர்தான் கல்லூரிகளிலும் வேலை செய்யும் இடங்களிலும் செல்ஃபி எடுத்துகொண்டு ‘அட்டேன்ஷன் சீக்கர்ஸ்’ ஆக இருக்கிறார்கள் என நினைத்தால்,  வயதானவர்களும் சளைத்தவர்கள் அல்ல. ஒவ்வொரு நொடியும் நடப்பவற்றை சுட்டுத் தள்ளி செல்ஃபிக்களாக பதித்து இவர்களும் ‘லெட்ஸ் டேக் எ செல்ஃபி’ எனதான் இருக்கிறார்கள். ஆனால் இந்த அதீத செல்ஃபி மோகம் ஒன்று ஒருவகையான போலி மிதப்பை தந்து விடும், இல்லையேல் காழ்ப்புணர்ச்சி தந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் மனோவியல் நிபுணர்கள்.

வெகுஜன மக்களிளிடம் மட்டுமில்லாமல் பிரபலங்களையும் இந்த செல்ஃபி மோகம்  விட்டு வைக்கவில்லை. எல்லன் டீஜெனரசின் ஆஸ்கர் செல்ஃபி தொடங்கி தமிழ்நாட்டின் மக்கள் நலக் கூட்டணி செல்ஃபி வரை வைரலாக பரவும் செல்ஃபிக்கள்தான் எத்தனை எத்தனை?  புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் டிக்‌ஷனரியின் 2013-ம் ஆண்டின் பிரபலமாக, அதிகம் பயன்படுத்திய வார்த்தையாக குறிப்பிடும் அளவுக்கு ‘செல்ஃபி’ பிரபலமாக உள்ளது என்பது சிந்தனைக்குரியது.

எது எப்படியோ.. அடுத்த நூறு ஆண்டுகளுக்கு பின் வரும் சந்ததியினர்,  'இது வீணாய் போன செல்ஃபி ஜெனரேஷன்’ என்று சொல்லிவிடுவார்களோ என்றுதான் சற்று பயமாக இருக்கிறது.

vikatan

  • தொடங்கியவர்

"என்னை விட்டு இன்னொருவனுடன் சென்றாய் " பாடல் வெளியிட்டார் ரோஹித: பேஸ்புக்கில் பதிவிட்டார் மஹிந்த

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  மகன் ரோஹித்த ராஜபக்ஷ "மங்முல வெலா " என்ற காணொளி பாடல் ஒன்றை பாடி வெளியிட்டுள்ளார். இந்த பாடலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளதோடு, பிள்ளைகளின் திறமை பெற்றோரின் மகிழ்ச்சிக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

"என்னை விட்டு இன்னொருவனுடன் சென்றாய் " என்ற வரிகளை கொண்ட இந்த பாடலை  தானே எழுதி பாடியுள்ளார் ரோஹித்த ராஜபக்ஷ.

இப் பாடலுக்கு பாசன் லியனகே தனது இசையமைப்பை செய்துள்ளார். இப்பாடலின்  வரிகள் அனைத்தும் காதல் தோல்வியின் வலியை உணர்த்தும் விதமாக அமைத்துள்ளது.

இப் பாடலை யு டியூப் தளத்தில் வெளியிட்டு இரண்டே நாட்களில்  11 இலட்சத்துக்கு அதிகமானோர்  பார்வையிட்டுள்ளனர். 

.virakesari

  • தொடங்கியவர்

 இசைக்கலைஞனின் தலைமுடி விலை ரூ. 24 லட்சம்!

 

'தங்களது இசையால் உலகத்தையே கட்டிப் போட்டவர்கள்' என்ற வார்த்தை இன்று பழங்கதையாகி beatles%281%29.jpgஇருக்கலாம். ஆனால், இந்த வார்த்தைகள் முதல் முதலாக பீட்டில்ஸ் இசைக் குழுவுக்காக எழுதப்பட்டதாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு ரசிகர்களை அவர்களுடைய காலத்திலும் சரி, இன்றும் சரி,  ஆச்சர்யமடைய வைப்பவர்கள். இந்தக் குழுவினர் பயன்படுத்திய கிட்டார், ட்ரம்ஸ் என்று பல பொருட்களை இன்றும் பல கோடிகளில் ஏலம் எடுப்பவர்கள் இருக்கிறார்கள். அப்படி சமீபத்தில் பீட்டில்ஸ் குழுவோடு சம்பந்தப்பட்ட ஒரு பொருள் பெரும் தொகைக்கு ஏலத்துக்குப் போய் இருக்கிறது.

பீட்டில்ஸ் இசைக்குழு,  இசையில் மட்டுமல்லாமல் எல்லாவிதமான கேளிக்கை ஆட்டங்களிலும் செமை ரகளை புரிந்தவர்கள். இன்று 'யோ யோ பாய்ஸ்' ஆட்காட்டி விரலையும் சுண்டு விரலையும் நீட்டிக்கொண்டு, மற்ற விரல்களை மடித்துக்கொண்டு போஸ் கொடுப்பார்களே... அதையும் முதலில் செய்தவர்கள் இவர்கள்தான். இன்றைய ராக் ஸ்டார் வரை எல்லோரும் முடியை நீட்டாக வளர்த்து நம்ம டிஆரைப் போல தலையை சிலுப்பிக் கொண்டு இருக்கிறார்களே... அதேப்போல அந்தக் காலத்தில் முடிவளர்த்து ஆட்டம் போட்டவர்கள் பீட்டில்ஸ் குழுவினர்.

'சண்டை எல்லாம் வேணாம் வாங்க காதல் பண்ணுவோம்'னு ரகளை செய்த பீட்டில்ஸ் குழுவை ஆரம்பித்தவர்களுள் ஒருவரான ஜான் லென்னானும்,  அது போல நீண்ட முடியும் தாடியுமாகத் திரிந்தவர்தான். 

“எல்லாம் சரி. ஆனா, இவங்க தலைமுடியை வெட்ட மறந்துட்டாங்களோ?” என்று ஒரு முறை அப்போதைய அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன், இங்கிலாந்து பிரதமர் சர் அலெக் டக்ளஸை (Sir Alec Douglas) பார்த்து கேட்டார்.

அவர் அப்படி சொன்னதற்காக இல்லாமல், 1966-ம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக அவரது முடியில் பத்து சென்டி மீட்டரை வெட்டி இருக்கிறார் ஜெர்மன் முடி திருத்துபவர் க்ளாஸ் ப்ராக். வெட்டிய பிறகு அந்த முடியை அவர் பத்திரப்படுத்தி இருக்கிறார். அப்போது வெட்டப்பட்ட அந்த முடியை இப்போது ஏலத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். பத்து சென்டிமீட்டர் நீளமுடைய இந்த முடிகளை நம்மூர் மதிப்பில் 24 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறார், பீட்டில்ஸ் பயன்படுத்தியப் பொருட்களைச் சேகரிக்கும் பால் ஃப்ரேஸர் என்பவர்.

lenon%20600.jpg

எதிர்பார்த்த தொகையை விட மூன்று மடங்குத் தொகைக்கு ஏலம் போயிருக்கிறது. இவ்வளவு தொகைக்கு முடி ஏலம் போவது பெரிய சாதனைதான். "இந்த அளவு தொகைக்கு அந்த முடி ஏலம் போனதற்கான காரணம், அது ஜான் லென்னானுடைய வாழ்க்கையின் முக்கிய காலக்கட்டத்தோடு தொடர்புடையது” என்பதால்தான் என்று ஹெரிட்டேஜ் ஆக்சன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கேரி ஷ்ரம் தெரிவித்திருக்கிறார்.

நம்ம ஏ.ஆர். ரஹ்மான் கூந்தலை வெட்டினப்போ யாரும் எடுத்து வச்சிருக்கீங்களா மக்களே...?!

vikatan

  • தொடங்கியவர்

106 வயது மூதாட்டி ஒபாமாவோடு நடனம்

  • தொடங்கியவர்

பாவம்.......... கடைசி வரைக்கும் சீட் கிடைக்கலையே..:grin:

  • தொடங்கியவர்

12743934_989967217718639_319214713731353

சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த பேடன் பவல் பிரபுவின் பிறந்த நாள் இன்று.

12771923_989977031050991_401244883281252

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டெவோன் மல்கமின் பிறந்தநாள்.
Happy Birthday Devon Malcolm

  • தொடங்கியவர்

பண்டைய சவப்பெட்டி மூடியில் 3,000 ஆண்டுகள் பழைமையான கைவிரல் அடையாளங்கள்

 

_88332148_untitled-1.jpg

பண்டைய எகிப்திய சவப்பெட்டியின் மூடியில் 3,000 ஆண்டுகள் பஐாமையான கைவிரல் அடையாளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய கேம்பிரிட்ஜ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நெஸ்பாவெர்ஷிபைட் என்ற மதகுருவின் சவப்டெ்டியின் மூடியிலேயே இந்த அரிய கைவிரல் அடையாளங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.

நெஸ்பாவெர்ஷிபைட் கிறிஸ்துவுக்கு முன்னர் 1,000 ஆம் ஆண்டில் மரணமடைந்திருந்தார்.

இந்நிலையில் அந்த சவப்பெட்டி மூடியை சீரி. ஊடுகாட்டும் கருவி பரிசோதனைக்கு உட்படுத்திய போது அதிலுள்ள கைவிரல் அடையாளங்கள் 3000 ஆண்டுகள் பழைமையானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

அந்த சவப்பெட்டியை தயாரித்தவர்கள் அதன் மேற்பூச்சு உலர்வதற்கு முன்னர் அதனை நகர்த்த முயற்சித்த போது அவர்களது விரல் அடையாளங்கள் அந்தப் பூச்சில் ஆழப் பதிந்துள்ளதாக நம்பப்படுகிறது.

virakesari

  • தொடங்கியவர்

12419121_989974851051209_853927071650831

உலகின் அதிவேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான, அவுஸ்திரேலிய அணியின் துரித வேகப்பந்துவீச்சாளர் ஷோன் டெயிட்டின் பிறந்தநாள்.
Happy Birthday Shaun Tait

12748095_989969214385106_563145030840024

பட்டிமன்றப் புகழ் பேராசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையாவின் பிறந்தநாள்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

போக்கிரி ராஜா - டிரெய்லர்!

  • தொடங்கியவர்

12783682_989976301051064_275339382290199

இயற்கை ஆர்வலரும், விலங்கியலாளரும், தொலைக்காட்சியில் விலங்குகள், குறிப்பாக மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் பற்றிய நிகழ்ச்சித் தொகுப்பாளராக விளங்கி, அதனாலேயே அகால மரணத்துக்குள்ளான ஸ்டீவ் இர்வினின் பிறந்தநாள்.

 

12717555_989966877718673_697151806233998

ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது குடியரசுத் தலைவரும், அமெரிக்க சுதந்திரப் போரை முன்னெடுத்த முக்கியமானவர்களில் ஒருவருமான ஜோர்ஜ் வொஷிங்டனின் பிறந்த நாள்.

  • தொடங்கியவர்
பண்டைய நூற்றாண்டுகளில் சிறப்பு பெற்ற கோவிந்தன் மலை..!
kovinthan%20malai.jpg


கொழும்பிலிருந்து கிழக்கே 341 கிலோமீற்றர் தூரத்தில் மொனராகலை மாவட்டம் சியம்பலாண்டுவ பிரதேச சபை பிரிவின் கீழ் 'கோவிந்தன் மலை' என்ற ஏறத்தாள 558 மீற்றர் உயரம் கொண்ட குன்று கிழக்கு மேற்காக சியம்பலாண்டுவ நகரிலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

'வெஸ்மினிஸ்டர் அபே ' என்று ஆங்கிலேயரால் அழைக்கப்பட்ட இக்குன்று பிரித்தானியரால் இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சிங்கள மக்களினால் 'கோவிந்த ஹெல' எனவும் 'கோவிந்திசீல' எனவும் அழைக்கப்படுகின்றது.

கருமைநிறம் கொண்ட கற்பாறையாக காட்சியளிக்கும் இதன் தோற்றத்தை வைத்து கர்ண பரம்பரைக் கதையொன்று வழக்கத்தில் இருந்து வருகின்றது.

ஒரு சதுர கிலோமீற்றருக்கு 49 பேர் என்ற சனத்தொகை அடர்த்தி கொண்டு காணப்படும் இந்தக் குன்றின் அடிவாரத்தில் பௌத்த ஆலயமும் பௌத்த மடமுமே கல்லாலான கட்டிடங்களாகக் காணப்படுகின்றன.

கோவிந்தன் மலையில் நுழைவாயிலில் பெரியதொரு அரசமரமும் அதனையடுத்து பௌத்த மடமும் ஸ்ரீ பரகும்பா விகாரையும் அமைந்திருக்கின்றன.

மலையடிவாரப் பிரதேசம் குளுகுளு என்று இதமாகவும் மிதமான காற்றும் வீசிக் கொண்டிருப்பதனால் மனதில் உற்சாகமும் ரம்மியமும் நிறைந்திருக்கும்.

இங்கு அடிக்கடி மழை பெய்வதால் நீர் நிலைகளில் எப்போதும் நீர் நிறைந்திருக்கும்.

kalaikesari

  • தொடங்கியவர்

மனிதனுக்கு இறப்பு நிச்சயமா? இதை பற்றி சுவாரசியமான புதிய தகவல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.