Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

பிராண்டோவே ஆஸ்கரை தூக்கியெறிந்தபோது!

That time when Marlon Brando himself refused the Oscar Award!

1973-ம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில், தி காட்ஃபாதர் படத்துக்கான சிறந்த நடிகர் விருதை மர்லன் பிராண்டோ நிராகரித்தது மீண்டும் பேசப்படுகிறது. அமெரிக்க பூர்வகுடிகளை ஹாலிவுட் நடத்திய விதத்தை எதிர்க்கவே அப்படிச் செய்தார் பிராண்டோ. இந்த ஆண்டு ஆஸ்கர் நிகழ்ச்சியும் இனச்சர்ச்சையில் சிக்கியுள்ளது.

 

 

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஏன் எங்களால் முடியாதா???

  • தொடங்கியவர்

பிப்ரவரி 28: தேசிய அறிவியல் தினம் (சர்.சி.வி. ராமன் விளைவு வெளியிட்ட நாள்) சிறப்பு பகிர்வு..

 

உனக்குள்ளே ஒரு விஞ்ஞானி !

திருவானைக்காவலில் பிறந்து, உலக அறிவியல் அறிஞர்கள் பட்டியலில் இடம்பிடித்த அற்புதத் தமிழர்,  சர் சி.வி.ராமன். படிப்பில் படு சுட்டி. ஆங்கிலத்திலும் இயற்பியலிலும் தங்கப் பதக்கம் பெற்றவர். மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்ல நினைத்தார். ஆனால், இவருடைய உடல்நிலை அதற்கு ஏற்றதாக இல்லை. வெளிநாடு செல்ல மருத்துவர்கள் இவருக்கு 'உடல்நிலை தகுதிச் சான்று’ அளிக்கவில்லை. sirvcraman.jpgஎனவே இந்தியாவில் இருந்தபடியே அறிவியலில் பல்வேறு சாதனைகள் செய்து, நோபல் பரிசை வென்றார் ராமன்.

அவரிடம் நாம் கற்கவேண்டிய அற்புத விஷயங்கள்...

வாசிப்பை நேசி!

அப்பாவின் அலமாரியில் இருந்து எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை எடுத்து, ஓயாமல் வாசிப்பார்.  மூன்று நூல்கள் அவரை மிகவும் ஈர்த்தன. எட்வின் அர்னால்டின் ஆசிய ஜோதி, யூக்லிட் எழுதிய ‘The elements’மற்றும் ஹெர்மான் ஹெல்ம்ஹோல்ட்ஸ் எழுதிய ‘The Sensations of Tone’ஆகிய நூல்களே அவை. வெவ்வேறு துறைகளில் ஆர்வம் இருந்ததால், அறிவியலில் அவரின் ஆய்வுகளும் பல்வேறு துறைகள் சார்ந்து இருந்தன.

பிடித்ததில் பிணைந்திடு!

இந்தியாவில் அறிவியல் வேலைவாய்ப்புகள் குறைவாகவே இருந்த காலத்தில், கொல்கத்தா சென்று நிதித் துறையில்  வேலை பார்த்தார். கிடைத்த சொற்ப வருமானத்தில், பெரும்பாலான பணத்தை, ஆய்வுகள் செய்யவே பயன்படுத்திக்கொண்டார். ஒருநாள், 'பவ்பஜார்’ எனும் பகுதியின் வழியாகச் சென்றபோது, 'இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்’ என்ற பெயர் பலகையைப் பார்த்தார். அன்று முதல், மாலை நேரங்களில் அங்கே ஆய்வுகள் செய்தார். பிறகு, நிதித் துறை வேலையை முழுவதும் துறந்துவிட்டு, முழு நேர ஆய்வுகளில் ஈடுபட்டார்.

சிக்கனம் செய்!

அப்போதெல்லாம் அறிவியல் ஆய்வகத்துக்கான முக்கியக் கருவிகளை வெளிநாட்டில் இருந்துதான் வாங்குவார்கள். ஆனால், ராமன் அதிலும் சிக்கனமானவர். ஹெளராவில் இருக்கும் மார்க்கெட்டில் இருந்து பொருட்களை வாங்கி, ஆய்வுக்கான கருவிகளைத் தானே தயாரிப்பார். ராமன் விளைவுக்கான பெரும்பாலான ஆய்வுகளை 300 ரூபாயில் முடித்து விட்டார் ராமன். இறுதியில், ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி தேவைப்பட்டபோது, 'இதை மட்டும் வாங்கித் தாருங்கள்’ என்று பிர்லாவுக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கருவியைக் கொண்டு முழுமையாக ஆய்வுகளை முடித்தார்.

உலகை உற்றுக் கவனி!

மெடிட்டரேனியன் கடல் (Mediterranean Sea) என்று சொல்லப்படும் நடுநிலக் கடல் வழியாகப் பயணம் சென்றபோது, 'கடல் மற்றும் வானம் நீல நிறமாக இருப்பது ஏன்?’ என்று யோசித்ததின் விளைவாக எழுந்ததே, ராமன் விளைவு. கப்பல் பயணத்திலும் சுற்றி இருப்பனவற்றைக் கவனித்துக்கொண்டு இருந்தார் ராமன்.

நம்பிக்கையோடு முன்னேறு!

இயற்பியலாளர் ஆர்தர் காம்ப்டன், எக்ஸ் கதிர்கள் சிதறலைப் பற்றி ஆய்வுசெய்து, நோபல் பரிசு பெற்றதாக இவரின் மாணவர் சொன்னார். 'அது, கண்களுக்குப் புலப்படும் ஒளியிலும் இருப்பதற்கு சாத்தியம் உண்டல்லவா?’ என யோசித்தார். அந்தப் பாதையில் நம்பிக்கையோடு ஆய்வுகள் செய்து சாதித்தார்.

கற்றல் முடிவில்லாதது!

ராமன், ஏதேனும் ஆய்வுகளைத் தன்னுடைய மாணவர்களோடு இணைந்து வெளியிட்டாலும் அதில் அவர்களின் பெயரையே முன்னிலைப்படுத்தி வெளியிடுவார். ''அறிவியலைக் கற்பது என்பது, சூத்திரங்களையும் தரவுகளையும் கற்பது அல்ல, படிப்படியாகக் கேள்விகள் கேட்டு அறிந்துகொள்வதே'' என்பார். அப்படியே பாடம் நடத்தி, மாணவர்களுக்கும் வழிகாட்டினார்.

பகுத்து அறி!

''கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று ஒருமுறை கேட்டபோது, அந்தக் கேள்வியை அவர் தவிர்த்தார். மீண்டும் கேட்கவே, ''கடவுள் இருக்கிறார் என்றால், டெலஸ்கோப்பை வைத்துக்கொண்டு பிரபஞ்சம் முழுக்கத் தேடு. வெறும் யூகங்களை  வைத்துக்கொண்டு நேரத்தை வீணாக்காதே'' என்றார் ராமன்.

துணிவு கொள்!

ஆங்கிலேய அரசு, அவரை நோபல் பரிசு வாங்கவிடாமல் தடுக்க நினைத்தது. அவருக்கு வர வேண்டிய தந்தியை மூன்று முறை தடுக்கவும் செய்தது. பிறகு தடைகளை மீறி அது, அவர் கைக்குப் போய்ச் சேர்ந்தது. 'ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது’ என்று எச்சரித்தே நோபல் பரிசு வாங்க அவரை அனுப்பினார்கள். அங்கே சென்றவர், ''ஆங்கிலேயரின் அடிமைப்படுத்தலைத் தொடர்ந்து எதிர்க்கும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, இந்த விருது சமர்ப்பணம்' என்று கம்பீரமாக ஆரம்பித்தே  தன்னுடைய உரையை வழங்கினார் ராமன்.

உனக்குள்ளே ஒரு விஞ்ஞானி!

 

''ஐந்து வயதில் இருந்தே பிள்ளைகளை விஞ்ஞானிகளாக நடத்த வேண்டும். அவர்களின் கேள்விகளை மதித்து, பதில் சொல்ல வேண்டும். அவர்கள் கற்றல் அனுபவம், புத்தகங்களோடு தேங்காமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அறிவியலில் நாம் ஒளிர முடியும்'' என்றார் ராமன். அவர், ராமன் விளைவைக் கண்டுபிடித்த நாளே, நம் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

vikatan

 

  • தொடங்கியவர்

உலகின் உயரமான ராட்டினம்

 
 
Desktop_2753847f.jpg
 

உலகின் மிக உயர்ந்த கட்டிடத்தைக் கொண்ட பெருமை ஐக்கிய அரபு நாடுகள் நாட்டுக்குச் சொந்தமானது. அந்நாட்டின் துபாய் நகரில் உள்ள அந்தக் கட்டிடம் 828 மீட்டர் உயரம் கொண்டது. 160 மாடிகளைக் கொண்டது. அது மட்டுமல்லாமல் உலகின் மிக உயரமான பார்வையாளர் தளம் என்ற பெருமையும் இந்தக் கட்டிடத்துக்கு உண்டு. இந்தக் கட்டிடத்துக்குப் போட்டியாக சவுதி அரேபியாவும் கிங்டம் என்ற பெயரில் ஒரு கட்டிடத்தைக் கட்டவுள்ளது. இது கட்டப்பட்டுவிட்டால் உலகின் மிக உயரமான கட்டிடம் உள்ள நாடு என்ற பெருமையை ஐக்கிய அரபு நாடுகள் இழக்கும்.

இதற்கிடையில் இங்கிலந்து உலகின் மிகக் குறுகிய விட்டம் கொண்ட கோபுரத்தைக் கட்டியுள்ளது. இதுதான் உலகின் மிகக் குறுகிய விட்டம் கொண்ட உயரமான கோபுரம் என உலக கின்னஸ் அமைப்பும் அங்கீகாரம் அளித்துள்ளது. 160.4 மீட்டர் உயரம் கொண்ட இந்தக் கோபுரத்தின் விட்டம் 3.9 மீட்டர் ஆகும். இது பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானது. மார்க் பார்ஃபீல்டு என்னும் கட்டுமான நிறுவனம்தான் இந்தக் கோபுரத்தைக் கட்டியுள்ளது. இது ராட்டினத்தைப் போன்றதுதான். இந்த கோபுரத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிக் கூடை மேலேயும் கீழேயும் ஏறி இறங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

‘லண்டன் ஐ’ என்னும் பிரம்மாண்டமான ராட்சத ராட்டினத்தையும் இந்த நிறுவனம்தான் வடிவமைத்தது. தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ராட்டினமும் பிரிட்டிஷ் ஏர்வேஸுக்குச் சொந்தமானதுதான். 120 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராட்டினத்தின் கூடை கண்ணாடியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கூடை அதன் உயரத்துக்குச் செல்லும்போது லண்டன் நகரையே பார்க்க முடியும். அதனால்தான் இது லண்டன் ஐ என அழைக்கப்படுகிறது.

tamil.thehindu

  • தொடங்கியவர்
10 hours ago, குமாரசாமி said:

வணக்கம் நவீனன்! 
விதம் விதமாக செய்திகளை இணைக்கின்றீர்கள். அத்தனையும் அலுப்புத்தட்டாமல் வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது. செய்திகளை தேடி வாசிக்கும் என் போன்றவர்களுக்கு மன உழைச்சல்  இல்லாமல் ஒரே இடத்தில் சகல செய்திகளையும் வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது.
நன்றிக்கடனுடன்
குமாரசாமி

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..:)

நீங்கள் இந்த திரி பற்றிதான் சொல்கிறீர்கள் என நம்புகிறேன். பல தரப்பட்ட செய்திகளையும் பல்சுவையாக தருவதே நோக்கம்.

எல்லோரையும் திருப்திபடுத்துவது என்பது இலகுவான விடயம் அல்ல.. ஏதோ என்னால்  இயன்றது.

கண்ணுக்குள் எண்ணை ஊத்தி ஒவ்வொரு வரியாக வாசிக்கும் சிலரும் ஜீவன் இருக்கும்போது மிக கவனமாக இருக்க வேணும் இங்கு இணைக்கும்போது.

அதுகூட ஒரு சந்தோசம்தான் இவ்வளவு கவனமாக  வாசிக்கிறார்கள் என்னும்போது. அதே நேரம் நானும் கூடிய கவனம் செலுத்த வேண்டி வருகிறது ஒரு விடயத்தை இங்கு இணைக்க முதல்.

அதே நேரம் சிலர் இங்கு தங்கள் கருத்துகளை பதிந்தாலும்  எல்லா நேரமும் பதில் தர நேரம் இருப்பதில்லை. அதைவிட இங்கு பச்சை தந்து ஊக்கம் தருபவர்களுகும் கருத்து இடுபவர்களுக்கும், வாசித்து விட்டு மௌனமாக போகின்றவர்களுக்கும் நன்றி...:)

இது போன்ற பெரிய வார்த்தைகள் தேவை இல்லை குமாரசாமி.. ஏதோ யாழ்க்கு ஆக செய்வது

ஜீவன், ஒரு சில நாட்களுக்கு முன் நீங்கள் சுட்டிகாட்டிய  ஓஸ்கார் விருதுகள் பற்றிய செய்தி அது 3 வருடத்திற்கு முன்பான செய்தி..:grin:.. மன்னிக்கவும்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் வரலாற்று மாதமாக ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தைக் கொண்டாடுவார்கள். அப்படி இந்த ஆண்டு அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் எப்படிச் சுட்டிகளைக் கவர்ந்திருக்கிறார் என்பதை உலகம் தெரிந்து கொள்ள எல்லோரும் தங்களிடம் இருக்கும் ஒபாமா மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். இந்தப் படங்களை எல்லாம் பார்க்கும் போது ஒபாமா அந்த ஊர் நேரு மாமாவாக இருப்பார் போல.

12719413_682365351866010_755733393765292

12747377_682365391866006_797576732806916

12778929_682365475199331_518451454149933

12778930_682365598532652_223561267479726

12778719_682365751865970_854331933679318

12764876_682365825199296_324444898606941

12778978_682365831865962_823590231188400

12764739_682365911865954_920419826744712

12764512_682365921865953_687082224389232

vikatan

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

 

`சிங்கிளாக இருப்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது. ஆனால், இந்தப் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது’ - நீண்டகால பேச்சுலரான சல்மான் கானின் சமீபத்திய ஸ்டேட்மென்ட் இது. `50 வயது ஆகிவிட்டது. இனிமேல் திருமணம் சாத்தியமா எனத் தெரியவில்லை. ஆனால், எனக்கு இரண்டு - மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை. திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரியும். ஆனால் நான் மேனேஜ் செய்வேன்’ என ஃபீலிங் ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார் சல்மான்.  என்னதான் உங்க பிரச்னை ப்ரோ!

p20a.jpg


p20b.jpg

`நான் ஒரு நடிகை. என் வேலை நடிப்பது. சல்மான் கான், ஷாரூக் கான், அர்ஜுன் கபூர் என எல்லோருடனும் நடிப்பேன். அந்தக் கதைக்கு யார் பொருத்தமோ, அவரைத்தான் இயக்குநர் தேர்வுசெய்வார். அதை விட்டுவிட்டு கணவனை மதிக்காத மனைவியாக நடிக்கிறேன், என்னைவிட வயது குறைவானவருடன் நடிக்கிறேன், கலாசாரத்துக்கு எதிராக நடிக்கிறேன்... என்றெல்லாம் என் மீது குற்றம் சொல்வது அபத்தம்’ எனப் பொங்கியிருக்கிறார் கரீனா கபூர். பால்கி இயக்கத்தில் கரீனா - அர்ஜுன் கபூர் நடிக்கும் படம் `கி - கா’. இதில் வேலைக்குப் போகும் பெண்ணாக கரீனாவும், வீட்டு வேலைகளைக் கவனிக்கும் ஆணாக அர்ஜுன் கபூரும் நடித்திருப்பதுமே கலாசாரக் காவலர்கள் களத்தில் இறங்கக் காரணம்.

செம கான்செப்ட் தல!


p20c.jpg

ஃபஹத் ஃபாஸிலை ரீசார்ஜ் செய்து ஃப்ரெஷ்ஷாக்கியிருக்கிறது `மகேஷிண்டே பிரதிகாரம்'. `பெங்களூர் டேஸ்' படத்துக்குப் பிறகு வெளியான எந்தப் படமும் எதிர்பார்த்த அளவு வெற்றி  அடையாத வருத்தத்தில் இருந்த ஃபஹத்துக்கு இந்த வெற்றி உற்சாக டானிக். தெருச் சண்டையில் ஒருவர் ஃபஹத்தை அடித்துவிட, `அடித்தவனைத் திருப்பி அடிக்கும் வரை செருப்பு போட மாட்டேன்’ எனக் காத்திருந்து பழிவாங்கும் ஜாலி - கேலி சம்பவங்கள்தான் படத்தின் கதை. இயக்குநர்  திலேஷ் போத்தனுக்கு இது முதல் படம். மனுஷன் காமெடியில் தெறிக்கவிட்டிருக்கிறார்! 


`அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார்?' என்ற கேள்விதான் ஹாலிவுட்டில் இப்போதைய சஸ்பென்ஸ் த்ரில்லர். `கேஸினோ ராயல்’, `குவான்டம் ஆஃப் சோலஸ்’, `ஸ்கைஃபால்’ படங்களில் பாண்டாக நடித்த டேனியல் க்ரெய்க், 007 வேடத்தைக் கலைக்கிறார். ``ப்யூரிட்டி' என்ற அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடரில் நடிப்பதற்காக பாண்ட் படங்களில் இருந்து விலகுகிறேன்’ என அறிவித்திருக்கிறார் டேனியல். அடுத்த பாண்ட் யார்?

p20d.jpg

இன்னமும் நம்புதா ஊரு?


p20e.jpg

பாகிஸ்தானின் பிரபல வீஜே  மஹிரா கானுக்கு அடித்திருக்கிறது ஜாக்பாட். பாலிவுட் பாட்ஷா ஷாரூக் கானுடன் இணைகிறார் மஹிரா. `ஃபேன்' படத்துக்கு அடுத்து ஷாரூக் கான் நடிக்கும் `ராயீஸ்'-ல் மஹிராதான் ஜோடி!


p20f.jpg 

`மெளலா வா சல்லீம்’ பாடல் மூலம் எல்லோரையும் கரையவைத்த அமீன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது இரண்டாவது பாடலைப் பாடியிருக்கிறார். படத்துக்கு இசை அப்பா ஏ.ஆர்.ரஹ்மான் இல்லை. நாகார்ஜுனா தயாரித்து, நடித்திருக்கும் `நிர்மலா கான்வென்ட்' படம்தான் அமீனுக்கு தெலுங்கு என்ட்ரி கொடுத்திருக்கிறது. படத்துக்கு இசை ரோஷன் சலூர். `கொத்த கொத்த பாஷா... கொத்த ப்ரேம பாஷா' எனத் தொடங்கும் இந்தப் பாடல் யூடியூபில் செம ஹிட் அடிக்க, சீனியர் - ஜூனியர் ரஹ்மான்கள் இருவருமே செம ஹேப்பி!

vikatan

  • தொடங்கியவர்

12805887_1060474593994306_64107454034904

 

திருக்குறளைப் பயன்படுத்தி வரைந்த திருவள்ளுவர் ஓவியம்

  • தொடங்கியவர்

ஸ்மார்ட் கிளாஸ்

 

 

ஹலோ ரைட்டர்!

p22a.jpg

உங்கள் கற்பனைத்திறனில் நீங்கள் எழுதிய கதையை, அதற்குரிய படங்களோடு சேர்த்து, ஒரு மின் புத்தகமாக (e-book) உருவாக்கினால் எப்படி இருக்கும்? அதற்கான அட்டகாசமான ஆப், Book Creator.நீங்கள் உருவாக்கிய புத்தகத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளலாம். சுட்டி எழுத்தாளர்களுக்கான ஆப் இது.

சீனியர் ஜூனியர்!

p22b.jpg

ஒரு புதிர்ப் பாதையில் இருக்கும் கணிதப் புதிர்களை, கோலிகளை நகர்த்தித் தீர்க்க வேண்டும். புதிர்ப் பாதையில் இருந்து வெளியேறுவதற்கான சிந்தனை, கணிதப் புதிரைத் தீர்க்கும் கணித அறிவு என கலவையாக அறிவை வளர்க்கிறது Marble math என்ற சூப்பர் ஆப். ஐந்து வயதுச் சுட்டிகளுக்காக Marble math junior என்ற செயலியும் இருக்கிறது.

ஆஹா அறிவுக்கொழுந்து!

p22c.jpg 

நுண்ணறிவை அளவிட உதவும் IQ கண்டறிவதற்கான சோதனைகள், புதிர்கள் போன்றவை அடங்கிய What’s My IQ? ஆப், உங்களைச் சுண்டி இழுக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நீங்கள் அளிக்கும் விடைகளையும், வழக்கத்துக்கு மாறாக நீங்கள் சிந்திக்கும் திறனையும் மதிப்பிட்டு, உங்களுடைய நுண்ணறிவு அளவிடப்படும்.

துடிப்பாக கண்டுபிடி!

p22d.jpg

ஏழு ஆங்கில வார்த்தைகள் பாதிப் பாதியாகப் பிரிக்கப்பட்டு கீழே சிதறிக்கிடக்கும். இந்த ஏழு வார்த்தைகளையும் கண்டுபிடிக்க, ஏழு குறிப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த இரண்டையும் வைத்து, அந்த ஏழு வார்த்தைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் little words என்ற ஆப் நமக்குக் கொடுக்கும் சவால். செம ஜாலியாகத் துப்பறிந்து விளையாடலாம்.

vikatan

  • தொடங்கியவர்

மெக்சிக்கோவில் பட்டாம்பூச்சிகளின் வனம் (Photos)

 


மெக்சிக்கோவில் பட்டாம்பூச்சிகளின் வனம் (Photos)

மெக்சிக்கோவிற்கு இடம்பெயரும் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளதால் அங்குள்ள வனம் ஒன்று பட்டாம்பூச்சிகளின் சொர்க்கமாக  உருவெடுத்துள்ளது.

ஓரஞ்ச் மற்றும் கறுப்பு நிறம் கொண்ட மொனார்ச் என்று அழைக்கப்படும் ராஜா  பட்டாம்பூச்சிகள் அமெரிக்காவில் இருந்து பல ஆயிரம் கிலோமீற்றர் தூரம் பறந்து இடம்பெயர்கின்றன. எனவே, மெக்சிக்கோவில் 4 ஹெக்டர் பரப்பளவில் அழகிய வனம் ஒன்று அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

1996 இல் நூறு கோடி பட்டாம்பூச்சிகள் அந்த வனத்திற்கு வந்து தங்கின.

பின்னர் அதிகபட்சமாக 2013 ஆம் ஆண்டில் மூன்றரைக்கோடி பட்டாம்பூச்சிகள் இந்த ராஜ்யத்தில் ஐக்கியமாகின.

இந்த நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாம்பூச்சிகளின் வரத்து 255% அதிகரித்துள்ளது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இங்கு கூட்டம் கூட்டமாக வரும் பட்டாம்பூச்சிகள் தங்களது மூதாதையர்கள் அமர்ந்த அதே மரங்களில் தான் இன்றும் அமர்ந்து முட்டையிடுகின்றன.

0,,17455028_303,00

Monarch-Butterfly-Migration-WINTER1215

Monarch Butterflies mass in the Sierra Pellon mountain at the Monarch Butterfly Biosphere Reserve in Sierra Pellon central Mexico in Michoacan State. Each year hundreds of millions Monarch butterflies mass migrate from the U.S. and Canada to Oyamel fir forests in the volcanic highlands of central Mexico. North American monarchs are the only butterflies that make such a massive journeyup to 3,000 miles (4,828 kilometers)....D3PXBB Monarch Butterflies mass in the Sierra Pellon mountain at the Monarch Butterfly Biosphere Reserve in Sierra Pellon central Mexico in Michoacan State. Each year hundreds of millions Monarch butterflies mass migrate from the U.S. and Canada to Oyamel fir forests in the volcanic highlands of central Mexico. North American monarchs are the only butterflies that make such a massive journeyup to 3,000 miles (4,828 kilometers).

059914-butterflies

Cloud of Monarch butterflies (Danaus plexippus) flying, overwintering colony, Michoacan, Mexico

monarchs_drinking_naturepl

MonarchButterflies_20090910

Michoacan1

monarch-butterflies-mexico_28112_990x742

10287217

FILE - In this Jan. 4, 2015 file photo, a kaleidoscope of Monarch butterflies cling to tree branches, in the Piedra Herrada sanctuary, near Valle de Bravo, Mexico. Monarch butterflies have made a big comeback in their wintering grounds in Mexico, after suffering serious declines, investigators said Friday, Feb. 26, 2016. (AP Photo/Rebecca Blackwell, File)

http://newsfirst.lk/

 

  • தொடங்கியவர்
 

ஆஸ்கரில் பிரியங்கா சோப்ரா…!

2016 ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருதுகளில், தன் முதல் விருதை ரெவனண்ட் பெற்றுள்ளது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை "ரெவனண்ட்" திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் எம்மானுவல் லுபெஸ்கி பெற்றார். இவர் ஏற்கனவே 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் "க்ராவிடி" மற்றும் "பேர்ட்மேன்" திரைப்படத்திற்காக இவ்விருதை பெற்றுள்ளார்.   

oscor_vc6.jpg



சிறந்த படத்தொகுப்புக்கான விருதை, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அறிவித்தார். இந்த விருதை, "மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்" திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் மார்கரெட் சிக்ஸல் வென்றார்.

oscor_vc3.jpg


சிறந்த ஒலித் தொகுப்புக்கான விருதை "மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்" திரைப்படத்திற்காக, மார்க் மாங்கினி மற்றும் டேவிட் வொயிட் பெற்றனர். சிறந்த ஒலிக் கலப்புக்கான விருதையும் "மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்" தட்டிச் சென்றது.

oscor_vc1.jpg



சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸுக்கான விருதை "எக்ஸ் மஷீனா" திரைப்படம் வென்றது. இதுவரை வழங்கப்பட்டுள்ள பத்து விருதுகளில், "மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்", ஐந்து விருதுகளை வென்றுள்ளது.

Vikatan
  • தொடங்கியவர்
1996 : பெரு விமான விபத்தில் 123 பேர் பலி!
2016-02-29

வரலாற்றில் இன்று....

பெப்ரவரி - 29

 

674small-photo1.jpg1704 : பிரெஞ்சுப் படைகளும் ஐக்கிய அமெரிக்காவின் பழங்குடி இந்தியர்களும் இணைந்து மசாசுசெட்ஸ் இல் டியர்ஃபீல்ட் என்ற இடத்தில் ஆங்கிலக் குடியேறிகளைத் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 100 பேர்கள் கொல்லப்பட்டனர்.

 

1712 : சுவீடனில் சுவீடன் நாட்காட்டியில் இருந்து ஜூலியன் நாட்காட்டிக்கு மாறுவதற்காக பெப்ரவரி 29 ஆம் நாளுக்குப் பின்னர் பெப்ரவரி 30ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

1940 : சோவியத் ஒன்றியத்துடனான குளிர்காலப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பின்லாந்து  அமைதி முயற்சிகளில் இறங்கியது.

 

1960 : மொரோக்கோவில் இடம்பெற்ற பூகம்பத்தில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

 

1964 : அவுஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை டோன் பிரேஸர்–சிட்னியில் 100 மீற்றர் நீச்சலில் 58.6 விநாடிகளில் நீந்தி புதிய உலக சாதனை படைத்தார்.

 

1972 : வியட்நாம் போரில் தென் கொரியா தனது  48,000 படையினரில் 11,000 பேரை வியட்நாமில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டது.

 

1988 : தென் ஆபிரிக்காவின் ஆயர் டெஸ்மண்ட் டூட்டு உட்பட 100 மதகுருமார் கேப் டவுன் நகரில் கைது செய்யப்பட்டனர்.

 

1996 : பெரு விமானம் ஒன்று அண்டீஸ் மலையில் மோதியதில் 123 பேர் கொல்லப்பட்டனர்.

 

2004 : ஹெய்டியின் ஜனாதிபதி ஜேன் ஆர்டிஸ்டைட், புரட்சி மூலம் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

 

2008 : பிரித்தானிய இளவரசர் ஹரி, ஆப்கானில் இராணுவப் பணியாற்றுவது தொடர்பான தகவல் ஊடகங்களில் வெளியானபின் அவரை அங்கிருந்து வாபஸ் பெறுவதற்கு பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்தது. 

 

2012 : உலகின் உயரமான கோபுரமும், புர்ஜ் கலீபாவுக்கு அடுத்ததாக மனிதரால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது மிக உயர்ந்த நிர்மாணமுமான டோக்கியோ “ஸ்கை ட்றீ” நிர்மாணித்து முடிக்கப்பட்டது.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=674#sthash.qmSF7ec5.dpuf
வரலாற்றில் இன்று: பெப்ரவரி 29
 
29-02-2016 12:00 AM
Comments - 0       Views - 4

article_1456719675-rukmini2.jpg.jpg1704: பிரெஞ்சுப் படைகளும் ஐக்கிய அமெரிக்காவின் பழங்குடி இந்தியர்களும் இணைந்து மசாசுசெட்ஸ் இல் டியர்ஃபீல்ட் என்ற இடத்தில் ஆங்கிலக் குடியேறிகளைத் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 100பேர் கொல்லப்பட்டனர்.

1712: சுவீடனில், சுவீடன் நாட்காட்டியில் இருந்து ஜூலியன் நாட்காட்டிக்கு மாறுவதற்காக பெப்ரவரி 29ஆம் நாளுக்குப் பின்னர் பெப்ரவரி 30ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1896: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்தநாள். இவர் 1995இல் உயிரிழந்தார்.

1904: பிரபல பரதநாட்டியக் கலைஞர் ருக்மணி தேவி அருண்டேல், பிறந்ததினம். அவர் 1986இல் உயிரிழந்தார்.

1940: பின்லாந்து குளிர்காலப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதி முயற்சிகளில் இறங்கியது.

1944: இரண்டாம் உலகப் போர்: ஆட்மிரால்ட்டி தீவுகள் ஐக்கிய அமெரிக்காவினால் முற்றுகைக்குள்ளாகியது.

1960: மொரொக்கோவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1972: வியட்நாம் போர்: தென் கொரியா தனது மொத்தமுள்ள 48,000 படையினரில் 11,000 பேரை வியட்நாமில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டது.

1988: தென்னாபிரிக்காவின் ஆயர் டெஸ்மண்ட் டூட்டு உட்பட 100 மதகுருமார் கேப் டவுன் நகரில் கைது செய்யப்பட்டனர்.

1996: பெரு விமானம் ஒன்று அண்டெஸ் மலையில் மோதியதில் 123 பேர் கொல்லப்பட்டனர்.

2004: தென்னாப்பிரிக்காவின் துடுப்பாட்ட வீரர் லோரி வில்மோட் உயிரிழந்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/167095/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0-#sthash.iymDY1Hc.dpuf
  • தொடங்கியவர்

அரிய நாளான லீப் வருடம் கொண்டாடும் கூகுள் டூடுள்

 

leap-year-2016-5690429188079616-hp2x.gif

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அரிய தினமான பெப்ரவரி 29 லீப் வருடத்தை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது.

லீப் ஆண்டில் வரும் பிப்ரவரி 29ஆம் திகதியை உலகம் முழுவதிலும் அரிதான நாளாக கருதப்படுகிறது. 

பூமியானது சூரியனை சுற்றிவர 365 நாட்களையும், 5 மணிநேரம், 49 நிமிடங்கள், 19 விநாடிகளை எடுத்துக்கொள்கிறது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அது கணக்கிடப்பட்டு லீப் வருடமாக ஒரு வருடத்திற்கு 366 நாட்களாக கணக்கிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெப்ரவரி 29 ஆம் திகதியான இன்றைய நாள் உலகம் முழுவதும் அரிய நாளாக கொண்டாடப்படுகிறது.

virakesari

  • தொடங்கியவர்

பிரியங்கா சொப்ரா ஆடையால் அதிர்ந்த ஆஸ்கர் அரங்கம்

priyanka_chopra.jpg

பொலிவூட் திரையுலகில் கவர்ச்சி நாயகியாக இன்னமும் வலம்வரும் பிரியங்கா சொப்ரா இவ்வருடம் நடைபெற்ற வருகின்ற உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு விசேட அழைப்பின் பெயரில் கலந்துக்கொண்டார்.

அவர் தனது மேனி தெரியும் வகையில் அணிந்து வந்த ஆடையில் ஆஸ்கர் விருதுடன் சேர்து அரங்கம் கலைக்கட்டியது. 

priyanka-chopra-at-oscar-2016-2.jpg

 

 

ஒஸ்கார் விருது விழாவில் கண்ணாடி உடையில் கலக்கிய பிரியங்கா சோப்ரா.

10350634_1141900695820660_81842085224977

12799442_1141900772487319_74144640577206

12790905_1141900815820648_60617670314301

10660128_1141900865820643_33869205915139

12805926_1048958945163119_70694168489599

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

...

மாற்றுத்திற­னா­ளிகளுக்காக கடற்­கரை

 

இந்­தி­யாவில் முதன் முறை­யாக மாற்றுத்திற­னா­ளி­களின் மகிழ்ச்­சிக்­காக, யார் துணையும் இல்­லாமல் அவர்கள் சுற்­றிப்­பார்க்கும் வகையில் குஜ­ராத்தில் உள்ள தித்தல் கடற்­கரை (“Tithal Beach”) வடி­வ­மைக்­கப்­ப­டு­கி­றது.

கடற்­கரை மாநி­ல­மான குஜ­ராத்தின் வல்சட் மாவட்­டத்தில் உள்ள புகழ்­பெற்ற தித்தல் கடற்­கரையில் (Tithal Beach) 3 கி.மீ.க்கு இக் கடற்­க­ரையை வடி­வ­மைக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

முதல்­கட்­ட­மாக, ஒரு கி.மீ.க்கு மட்டும் வடி­வ­மைக்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த ஆண்டின் ஜுன் மாதத்தில் பார்­வை­யா­ள­ருக்கு திறப்­ப­தற்­காக துரி­த­ப­ணிகள் நடை­பெற்று வரு­கி­றது.

மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் யார் துணையும் இல்­லாமல் அவர்கள் வழக்­க­மாக உப­யோ­கிக்கும் சக்­கர நாற்­கா­லி­களில் கட­லுக்கு நேர­டி­யாக நெருக்­க­மாக சென்று ரசிக்­கும்­ப­டி­யாக சாய்வு தளங்கள் அமைக்­கப்­ப­டு­கி­றது.

கடற்­க­ரையில் அவர்­களே உண­வுகள் வாங்­குவதற்கும் உண்­ணு­வதற்கும் வச­தி­யான தாழ்வு முற்­றங்கள் அமைக்­கப்­ப­டு­கி­றன. பொழு­து­போக்கில் ஈடு­ப­டு­வ­தற்கும் அவர்­க­ளுக்­கென சிறப்பு வச­திகள் செய்­யப்­ப­டு­கி­றது.

அவர்கள் புரிந்­து­கொள்ளும் அளவில் குறி­யீடு மற்றும் வாச­கங்கள் கொண்ட பதா­கைகள், சமிக்­ஞைகள் வைக்­கப்­ப­டு­கி­றன.

வீட்டில் உற­வி­னர்கள் மாற்றுத் திற­னா­ளி­க­ளிடம் அன்பு காட்­டி­னாலும், பொது இடங்­களில் அவர்கள் உதா­சீ­னப்­ப­டுத்­தப்­ப­டு­வதால், ஏற்­படும் தாழ்­வு­ம­னப்பான்மையால் சுற்­று­லா­த­லங்­க­ளுக்கு வரு­வதை பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை.ஆனால், தித்தல் கடற்கரை (TithalBeach) போன்ற திட்டங்கள் அவர்களை நிச்சயம் தலை நிமிரச்செய்யும் என நம்பிக்கை வெளியிடப்படுகின்றது.

virakesari.

  • தொடங்கியவர்

12806062_1048861628506184_73591870311687

88வது ஆஸ்கர் விருதுவிழா படம்

12803298_1048813198511027_71128486955702

12718323_1048803761845304_23606562464508

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

 

dot1.jpg  சிரஞ்சீவி நடிக்கும் ‘கத்தி’ ரீமேக், பவன் கல்யாண் நடிக்கும் ‘வேதாளம்’ ரீமேக், ராம் சரண் நடிக்கும் ‘தனி ஒருவன்’ ரீமேக், அல்லு அர்ஜுனின் புதிய படம் என சிரஞ்சீவி குடும்பத்தின் மொத்தப் படங்களுக்கும் ஒரே நாயகி ரகுல் ப்ரீத் சிங். கொஞ்சம் சம்பளம், நிறைய கிளாமர் என்ற ரகுலின் ஃபார்முலா பிடித்துப்போக, குவிந்துகொண்டே இருக்கிறதாம் படங்கள். கிளாமர் கிராமர்!

p58a.jpg

dot1.jpg  ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தன் வீட்டைப் பாதுகாக்க, 16 பாடிகார்டுகளை நியமித்திருக்கிறார். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்கிறீர்களா? திடீரென இப்படி நியமிக்கக் காரணம், தினமும் மார்க்குக்கு ஃபேக் ஐடிகளிடம் இருந்து, கொலை மிரட்டல்கள் வந்துகொண்டே இருக்கின்றனவாம். ஆன்லைன் வழியாக தினமும் வரும் மிரட்டல்களோடு, ஃபேஸ்புக்கால் பிரேக் அப், விவாகரத்து போன்ற சொந்தப் பிரச்னைகளுக்கு ஆளானவர்கள் விடுக்கும் மிரட்டல்களும் சேர்ந்துவர, உஷாராகி, பாதுகாப்பைப் பலப்படுத்தியிருக்கிறர் மார்க். பிளாக் பண்ணுங்க ப்ரோ!

dot1.jpg  தெலுங்கில், `யார் அதிக பட்ஜெட்டுக்கு செட் போட்டு படம் எடுக்கிறார்கள்?’ என்ற போட்டாபோட்டி தொடங்கியிருக்கிறது. ஜூனியர் என்.டி.ஆர்-ன் அடுத்தப் படம் `ஜனதா கேரேஜ்'. படத்தை இயக்குவது, மகேஷ்பாபுவை வைத்து, `ஸ்ரீமந்துடு' மெகா ஹிட் கொடுத்த கொரடலா சிவா. இந்தப் படத்தில் வருகிற ஒரு கேரேஜை, மூன்று கோடி ரூபாயில் செட் போட்டிருக்கிறார்கள். இந்த செட்டில் நிறுத்தி வைக்க விலை உயர்ந்த கார்களையும் சில கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்கள். `அல்லு அர்ஜூன் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் `சரைனோடு' படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக ஒன்றரை கோடி ரூபாயில் செட் போட்டார் என்பதற்காகத்தான், ஜூனியர் என்.டி.ஆர் இப்படி ஒரு செட்டைப் போடுகிறார்’ எனக் கிசுகிசுக்கிறது டோலிவுட். செட்டு செட்டா அடிக்கிறாய்ங்க.

dot1.jpg  சிக்கலில் சிக்கியிருக்கிறார் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார். 2011-13 காலகட்டத்தில் `ஒழுங்காக வரி செலுத்தவில்லை’ எனச் சொல்லி, அவரது 310 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியிருக்கிறது பிரேசில் நீதிமன்றம். முடக்கப்பட்ட சொத்துக்களில் அவரது சொகுசுப் படகும் விமானமும் அடக்கம்! வரி கட்டுங்கஜி... வாழ்க்கை நல்லா இருக்கும்!

dot1.jpg  28 ஆண்டுகளுக்குப் பிறகு தன் டிகிரி சர்டிஃபிகேட்டை வாங்கியிருக்கிறார் ஷாரூக் கான். டெல்லி பல்கலைக்கழகத்தில் 1988-ம் ஆண்டு எக்கனாமிக்ஸ் முடித்தார் ஷாரூக் கான். ஆனால், நடிப்பு ஆர்வத்தில் இருந்தவர் படிப்பை முடித்தும் சான்றிதழ் பெறவே இல்லை. சமீபத்தில் `ஃபேன்' பட புரொமோஷனுக்காக டெல்லி பல்கலைக்கழகத்துக்குச் சென்றபோது அவரின் டிகிரி சான்றிதழைக் கொடுத்தது பல்கலைக்கழகம். `இந்த இடத்தில் என் குழந்தைகள் இருந்திருக்க வேண்டும். அவர்களை அழைத்துக்கொண்டு கல்லூரியின் அத்தனை மூலைகளுக்கும் போய் வர ஆசைப்படுகிறேன்' என எமோஷனல் ஆனார் ஷாரூக். ஷாரூக் கான் பி.ஏ.

p58b.jpg

dot1.jpg  `என்னதான் விதவிதமான காஸ்ட்யூம்கள் இருந்தாலும், சேலை கட்டும்போது இருக்கிற சந்தோஷம் வருமா?’ எனக் கேட்கிறார் நடிகை வித்யா பாலன். தற்போது வித்யா எங்கு சென்றாலும் பாரம்பர்யமான சேலைகள்தான் காஸ்ட்யூம். `எதுவும் விளம்பரமா?’ எனக் கேட்டால், `எனக்கு இந்த உடை மிகவும் பிடித்திருக்கிறது. புடவை கட்டும்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன். என்னைப் பார்த்து இன்னும் நிறையப் பெண்கள் புடவைகளுக்கு மாறுகிறார்கள். மற்றபடி இதில் எந்த விளம்பரமும் இல்லை’ என்கிறார் வித்யா. சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு!

dot1.jpg  `` `சென்னையை மறந்து, புனே வீரனாகிவிட்டேன்’ என்று நான் சொன்னால் அது பொய். 8 வருடங்களாக சென்னை அணியில்  உணர்வுபூர்வமாக இணைந்திருந்தேன். `புதிய அணிக்கு விளையாடுவது உற்சாகம் அளிக்கிறது’ என்று சொன்னால், சென்னை ரசிகர்கள் எங்கள் மீது காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் மதிப்பு அளிக்காததுபோல இருக்கும். சென்னையை மறக்க முடியாது என்றாலும் ஒரு விளையாட்டு வீரனாக புனே அணிக்கு எனது முழுப் பங்களிப்பை வழங்குவேன்' என ஃபீல் ஆகியிருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் தோனி. ஐ.பி.எல்-ல் சென்னை இல்லாததால் இந்த ஆண்டு புனே அணிக்காக விளையாடுகிறார் தோனி! விசில் போடு!

p58c.jpg

p58f.jpg

dot1.jpg   மைதானத்தில் மட்டும் அல்ல, மைக் பிடித்தாலும் அதிரடியில் இறங்கிவிடுகிறார் கோஹ்லி. சமீபத்தில் வெளிநாட்டு வாட்ச் ஒன்றை அறிமுகப்படுத்தும் விழாவில் கலந்துகொண்டார். அங்கே இருந்த பத்திரிகையாளர் ஒருவர், அனுஷ்கா ஷர்மா உடனான பிரேக்அப் பற்றி மறைமுகமாகக் கேட்க நினைத்து, `உறவுகள் பத்தி என்ன பாஸ் நினைக்கிறீங்க?' எனக் குசும்பாகக் கேட்க, கோஹ்லி `அதை ஏங்க எங்கிட்ட வந்து கேட்கிறீங்க, என்னைப் பார்த்தா ரிலேஷன்ஷிப் கவுன்சிலர் மாதிரி இருக்கா?' என பதிலடி கொடுத்தார். ஓயாத அந்த வேதாள நிருபர், `இந்த காஸ்ட்லி வாட்ச்சை பாலிவுட்ல யாருக்கு கிஃப்ட் பண்ணுவீங்க?' எனக் கொக்கியைப்போட, கோஹ்லி `நான் ஏன் பாலிவுட்காரங்களுக்கு கிஃப்ட் கொடுக்கணும்? எனக்குக் குடும்பம் இருக்கு. முதல்ல அவங்களுக்குத்தான் கொடுப்பேன்' என ஒரே போடாகப் போட்டார். நீ நடத்து கோஹ்லி!

p58d.jpg

dot1.jpg  இந்தி பாடலாசரியர் சமீர் அஞ்சன், யாரும் தொட முடியாத கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். இதுவரை 650 படங்களில் 3,524 பாடல்கள் எழுதி முடித்திருக்கிறார் இந்தக் கவிதை மன்னர். கின்னஸில் இதுவரை இப்படி ஒரு கேட்டகரியே கிடையாதாம். இவருக்காகவே `அதிகப் பாடல்களை எழுதிய கவிஞர்’ என்ற பிரிவைத் தொடங்கியிருக்கிறார்கள்.

p58e.jpg

1983-ம் ஆண்டில் தன் முதல் பாடலை எழுதியவர் 33 ஆண்டுகளில் இந்தச் சாதனையை எட்டிப்பிடித்திருக்கிறார். `குச் குச் ஹோத்தா ஹை’ பாடல்கூட சமீரின் கைவண்ணம்தான். ஆல் இண்டியா கவிப் பேரரசுக்கு ஆல் த பெஸ்ட்!

vikatan

  • தொடங்கியவர்

ஷாருக்கான் நடிக்கும் ஃபேன் டிரெய்லர்

  • தொடங்கியவர்

மொரார்ஜி தேசாய்

 
 
deasai_2756371f.jpg
 

நேர்மையான அரசியல் தலைவர், முன்னாள் பிரதமரான மொரார்ஜி தேசாய் (Morarji Desai) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* பம்பாய் மாகாணத்தின் பல்சார் மாவட்டத்தில் உள்ள பதேலி கிராமத்தில் (தற்போது குஜராத்தில் உள்ளது) 1896-ல் பிறந்தார். தந்தை பள்ளி ஆசிரியர். கடின உழைப்பையும், நேர்மை தவறாத கண்ணியத்தையும் அவரிடம் கற்றார்.

* சிவில் சர்வீசஸ் தேர்வில் 1918-ல் வெற்றி பெற்று துணை ஆட்சியராக 12 ஆண்டுகள் பணிபுரிந்தார். 1930-ல் வேலையை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். விடுதலை இயக்கப் போராட்டங்களில் பங்கேற்றார்.

* மாகாண தேர்தல்களில் 2 முறை வெற்றி பெற்று, வருவாய், உள்துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார். 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். பல ஆண்டுகள் சிறையில் கழித்தவர்.

* பம்பாய் மாகாண முதல்வராக 1952-ல் பொறுப்பேற்றார். ஜவஹர்லால் நேருவின் அழைப்பை ஏற்று மத்திய அரசில் வணிகம், தொழில் துறை அமைச்சராகவும், பின்னர் நிதியமைச்சராகவும் பணியாற்றினார். இந்திரா காந்தியின் ஆட்சியில் துணை பிரதமராகப் பணியாற்றினார்.

* காங்கிரஸ் கட்சி பிளவுபட்டபோது ஸ்தாபன காங்கிரஸில் இணைந்தார். 1975-ல் அவசர நிலையை எதிர்த்ததால் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலைக்குப் பிறகு, ஜெயபிரகாஷ் நாராயணின் தலைமையை ஏற்று ஜனதா கட்சியில் இணைந்தார்.

* நாட்டின் 4-வது பிரதமராக 1977-ல் பொறுப்பேற்றார். ஜனநாயகத்தை நிலைநாட்ட முழு முயற்சி மேற்கொண்டார். அடிப்படை உரிமைகள், பத்திரிகை சுதந்திரம், அரசியல் கட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு, தனிநபர் சுதந்திரத்தை நிலைநாட்டினார்.

* விவசாயத் தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். நிலவரிக் குறைப்பு, மானியம் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டுவந்தார். விவசாய விளைபொருட்களை நாடு முழுவதும் கொண்டுசெல்ல வகைசெய்து, நல்ல விலை கிடைக்கச்செய்தார். கட்டாய வேலைவாய்ப்பு மூலம் கிராமங்களில் சாலை போடுதல், பாசன வசதி போன்ற பணிகள் செய்யப்பட்டன. இதில் பணியாற்றிய மக்களுக்கு சம்பளத்துக்கு பதில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

* ‘ஜனதா’ சாப்பாடு திட்டம் மூலம் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு கிடைத்தது. தங்கத்தின் விலையைக் கட்டுக்குள் வைத்து நாட்டின் பொருளாதார நிலையை சீரமைத்தார். உள்நாட்டு சிறு தொழில், வணிகத் துறைகளை ஊக்கப்படுத்தினார். அண்டை நாடுகளுடன் நல்லுறவை நிலைநாட்டினார். ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கியது இவரது மாபெரும் சாதனை.

* சில அரசியல் விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள விரும்பாததால் இரண்டே ஆண்டுகளில் இவரது அரசு கவிழும் நிலை ஏற்பட்டது. இதனால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இருந்தே விலகினார். தனது சித்தாந்தங்கள், கொள்கைகளை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தவர்.

* இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ இவருக்கு வழங்கப்பட்டது. பாகிஸ்தானில் இதற்கு இணையாக கருதப்படும் ‘நிஷான் இ பாகிஸ்தானி’ விருதும் பெற்றவர். இந்த 2 விருதுகளையும் பெற்ற ஒரே இந்தியர் இவர் மட்டுமே. பொது வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் நேர்மையுடன் செயல்பட்ட கறைபடாத அரசியல் தலைவரான மொரார்ஜி தேசாய் 99-வது வயதில் (1995) மறைந்தார்.

tamil.thehindu.

  • தொடங்கியவர்

வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இந்திய வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது அங்கு நடந்த பாட்டு கச்சேரியில் இந்திய துணை அணித்தலைவர் கோலி தனக்கு பிடித்த ஹிந்திப் பாடலை பாடி அசத்தியுள்ளார். அப்போது இதை சக இந்திய வீரரான யுவராஜ் சிங் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

  • தொடங்கியவர்

அரசியல் கட்சிகளின் பிரசாரத்தில் இடம்பிடித்த ‘மீம்ஸ்கள்’... நெட்டிசன்களின் கருத்து என்ன...?

 

முன்பெல்லாம் ஒரு விஷயத்தை கிண்டல் செய்ய பக்கம்பக்கமாக எழுதுவார்கள்... பின்பு அது நான்கு வரி ஜோக்குகள் ஆனது... இப்போது அதுவும் சுருங்கி மீம்ஸ்களாக அப்டேட் ஆகி உள்ளது. இதில் சமீபத்திய ஆச்சரியம், இளம் தலைமுறை வாக்காளர்களை கவர, அரசியல் கட்சிகளும் ‘மீம்ஸ்’களை பிரசார ஆயுதமாக பயன்படுத்த துவங்கி இருப்பது... தெருவோர மேடைகளில் சைதை தமிழ்செல்விகள் நீட்டி முழங்குவதை, இந்த மீம்ஸ்கள் செய்து விடுகின்றன. பல கோடி விளம்பரங்களால், ‘மீம்ஸ்’கள் இப்போது மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாறியுள்ளது.

சரி... எல்லாவற்றிலும் ஒரு கருத்து வைத்திருக்கும் நெட்டிசன்கள், இந்த மீம்ஸ்கள் குறித்து வைத்திருக்கும் கருத்துகள் என்ன...? தி.மு.க, அ.தி.மு.க மாற்றி மாற்றி மீம்ஸ்களால் கலாய்த்து கொள்வதை இந்த தலைமுறை ரசிக்கிறதா...?

நாங்க என்ன மீம்ஸ் பார்த்து வாக்களித்து விடுவோமா...? இதற்காக இவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டுமா...? வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு கோடி தருகிறார்கள்... ஆனால், மீம்ஸுக்கு பத்து கோடி செலவு செய்கிறார்கள்...!!! யாரு யாரை கலாய்ச்சா எங்களுக்கு என்ன, எங்களுக்கு செம எண்டர்டயன்மெண்டாக இருக்கிறது... மீம்ஸ்களுக்கான ரெஸ்பான்ஸ் கலவையாக இருக்கிறது...

  • தொடங்கியவர்
ஆஸ்கர் விழாவில் ஹாலிவுட்டின் நிறவெறியை வெளுத்த Chris Rock
 
 
உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்த ஆஸ்கர் விருது விழாவைத் தொகுத்து வழங்கும் பணியை இரண்டாவது முறையாகப் பெற்ற ஹாலிவுட்டின் பிரபல காமெடி நடிகர் Chris Rock வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல, ஹாலிவுட்டில் நிலவும் நிற வெறியை தோலுரித்துக் காட்டிவிட்டார்.
 
இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுப் பட்டியலில் கருப்பினத்தைச் சேர்ந்த எந்தக் கலைஞருக்கும் விருதளிக்கப்படவில்லை. விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியானதிலிருந்தே பலரும் முணுமுணுத்த இந்த விஷயம், விழா நெருங்க நெருங்க பெரும் விவாதமாகவே மாறிவிட்டது. வெள்ளைக் கோட், கறுப்பு பேண்ட் அணிந்து நிறவேற்றுமையை குறிப்பாலுணர்த்தியபடி மேடையில் தோன்றிய Chris Rock, 'நல்ல வேளை, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்களை வெள்ளையர்கள் யாரும் தேர்வு செய்யவில்லை.அப்படிச் செய்திருந்தால் எனக்கு இந்த வாய்ப்புக் கூடக் கிடைத்திருக்காது!' என அதிரடியாய்ச் சொல்ல, அரங்கம் அதிர்ந்தது. இந்த ஆஸ்கர் விழாவை பல பிரபலங்கள் புறக்கணித்துவிட்டனர்.
 
 
குறிப்பாக வில் ஸ்மித், ஜாடா பிங்கெட் ஸ்மித் போன்றோர். காரணம் இந்த நிறவெறிதான். க்றிஸ் ஹாரிஸ் மட்டும் ஏன் புறக்கணிக்காமல் நிகழ்ச்சி நடந்தது வந்தது ஏன்? அதற்கு அவர் அடித்த கமெண்ட்: "எப்படியும் ஆஸ்கர் விருது விழா நடக்கத்தான் போகிறது. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளியும் இருக்காது. கிடைத்த இந்த வேலையையும் ஒரு வெள்ளைக்காரனுக்கு விட்டுவிட வேண்டாமே என்றுதான் வந்தேன்" என்றார்.

Read more at: http://tamil.filmibeat.com/news/oscars-the-best-five-jokes-from-chris-rock-s-monologue-039060.html
 
 
  • தொடங்கியவர்

சிறுவயதில் நாம் விளையாட்டிற்காக கட்டிய வீடு போன்ற ஒன்றில் நிரந்தர வாழ்க்கை......... நிலவின் உதவியுடன் இராக்காலங்களை கழிக்கும் சூசைப்பிள்ளை தம்பதி.......... சான்று பகிரும் தெல்லிப்பளை தையெட்டி தெற்கு கிராமம்

  • தொடங்கியவர்
2014 : சீன ரயில் நிலையத்தில் 29 பேர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டனர்
2016-03-01

வரலாற்றில் இன்று....

மார்சி - 01

 

675varalru.jpg1562 : பிராஸில் ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட புரட்­டஸ்­தாந்­தர்கள் கத்­தோ­லிக்­கர்­களால் கொல்­லப்­பட்­டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்­ப­மா­னது.

 

1565 : பிரே­ஸிலின் ரியோ டி ஜெனெய்ரோ நகரம் அமைக்­கப்­பட்­டது.

 

1700 : சுவீடன் தனது புதிய நாட்­காட்­டியை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

 

1815 : இத்­தா­லியின் தீவான எல்பா தீவில் நாடு கடத்­தப்­பட்ட நிலையில் வாழ்ந்த நெப்­போ­லியன் பொனபார்ட் பிரான்ஸ் திரும்­பினார்.

 

1873 : பாவ­னைக்­கு­கந்த முத­லா­வது தட்­டச்சுப் பொறியை ஈ. ரெமிங்டன் சகோ­த­ரர்கள் நியூயோர்க்கில் தயா­ரித்­தனர்.

 

1896 : ஹென்றி பெக்­கெரல் கதி­ரி­யக்­கத்தைக் கண்­டு­பி­டித்தார்.

 

1901 : இலங்­கையில் நான்­கா­வது மக்கள் தொகைக் கணக்­கெ­டுப்பு இடம்­பெற்­றது. மொத்த மக்கள் தொகை 3,565,954 பேர் பதி­வா­யினர்.

 

1912 : முதன் முதலில் பறக்கும் விமானம் ஒன்­றி­லி­ருந்து அல்பேர்ட் பெரி என்­பவர் பார­சூட்டில் இருந்து குதித்தார்.

 

1953 : ஜோசப் ஸ்டாலி­னுக்கு மார­டைப்பு ஏற்­பட்­டது. (நான்கு நாட்­களின் பின்னர் அவர் இறந்தார்.

 

1954 : ஐக்­கிய அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற கட்­டடம் மீது புவேர்ட்டோ ரிக்கோ தேசி­ய­வா­திகள் நடத்­திய தாக்­கு­தலில் ஐந்து காங்­கிரஸ் உறுப்­பி­னர்கள் காய­ம­டைந்­தனர்.

 

1954 : பசுபிக் சமுத்­தி­ரத்­தி­லுள்ள பிகினி அட்டோ தீவில் அமெ­ரிக்கா ஐத­ரசன் குண்டு பரி­சோ­தனை நடத்­தியது.இதனால், அதி­க­ளவு கதிர்­வீச்சு மாசு ஏற்­பட்­டது.

 

1966 : சோவி­யத்தின் வெனேரா 3 விண்­கலம் வெள்ளி கோளில் மோதி­யது. வேறொரு கோளில் இறங்­கிய முத­லா­வது விண்­கலம் இது­வாகும்.

 

1973 : சூடானில் சவூதி அரே­பி­யாவின் தூத­ர­கத்தை கறுப்பு செப்­டம்பர் இயக்­கத்­தினர் தாக்கி மூன்று வெளி­நாட்டு தூது­வர்­களைப் பண­யக்­கை­தி­க­ளாக்­கினர்.

 

1975 : அவுஸ்­தி­ரே­லி­யாவில் வர்ணத் தொலைக்­காட்சி சேவை ஆரம்­பிக்­கப்­பட்­டது.

 

1981 : ஐரிஷ் குடி­ய­ரசு இரா­ணுவ உறுப்­பினர் பொபி சான்ட்ஸ் வட அயர்­லாந்து சிறையில் சாகும்­வரை உண்­ணா­நிலைப் போராட்­டத்தை ஆரம்­பித்தார்.

 

1992 : யூகோஸ்­லா­வி­யா­விடம் இருந்து பிரி­வ­தாக பொஸ்­னியா ஹேர்­ஸ­கோ­வினா பிர­க­டனம் செய்­தது. 

 

2002 : ஸ்பெயினில் யூரோ நாணயம் பாவனைக்கு வந்தது.

 

2014 : சீனாவின் குன்மிங் நகர ரயில் நிலையத்தில் 29 பேர் தீவிரவாதிகளால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதுடன் சுமார் 130 பேர் காயமடைந்தனர்.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=675#sthash.YR7lHULF.dpuf
  • தொடங்கியவர்

12717825_993986427316718_282845550552551

புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் காலஞ்சென்ற மேஜர் சுந்தர்ராஜன் அவர்களது பிறந்ததினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.