Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

வெள்ளை மாளிகையின் கறுப்பு கம்பீரம்!

 
மகளிர் தின ஸ்பெஷல்

 

1989...

மெரிக்க நகரம் சிகாகோவில் ஒரு மார்க்கெட்டிங் நிறுவனத்தில் அந்தப் பெண் பணிபுரிந்து a%2820%29.jpgகொண்டிருந்தார். அப்போது, அவர் நிறுவனத்துக்கு கோடைகால இன்டர்ன்ஷிபபுக்காக ஓர் இளைஞர் வந்தார். அவருக்கு அந்தப் பெண்தான் பாஸ். ஒருநாள் அந்த இளைஞர், தன்னுடைய பாஸை டின்னருக்கு அழைத்தார். இருவருக்கும் இடையே சின்ன கெமிஸ்ட்ரி இருந்தாலும், இதனால் அலுவலக வேலை பாதிக்கப்படுமோ என்ற பயம், அந்தப் பெண்ணுக்கு! ஆனால், சில மாதங்களில் எல்லா தடைகளையும் உடைத்து கெமிஸ்ட்ரி வென்றது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அந்த இளைஞர், இன்றைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அந்தப் பெண், மிஷல் ஒபாமா.

p72a.jpg

1964-ம் ஆண்டு சிகாகோ நகரில் பிறந்தார் மிஷல். ‘கல்விதான் நமது எதிர்காலம்’ என்று தன் இரண்டு பெண் குழந்தைகளிடமும் சொல்லி வளர்த்தார், மிஷலின் அப்பா ஃப்ரேஸர் ராபின்சன். இன்று மிஷல் ஒபாமா கல்விக்காக எதையும் செய்யலாம் என உலகப் பெண்களை உற்சாகமூட்டும் அக்கறைக்கு, அவரின் தந்தை அவர் மனதில் ஆழ ஊன்றிய அந்த விதைதான் காரணம்.

சோஷியாலஜி பிரிவில் பட்டம் பெற்ற பின், சட்டம் படிக்க ஹார்வர்டு சட்டக் கல்லூரியில் சேர்ந்தார் மிஷல். வழக்கறிஞரான பின்னர், சிட்லி ஆஸ்டின் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு தான் ஒபாமாவைச் சந்தித் தார். காதல், திருமணம் என எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருந்தது. மிஷலுக்கு சேவை மனப்பான்மை அதிகம். அதனால் நல்ல வேலையை உதறிவிட்டு, சிகாகோ மாநகர மேயருக்கு உதவியாளராகச் சேர்ந்தார். பின், சிகாகோ மாநகர திட்ட மற்றும் மேம்பாட்டு துறையில் உதவி ஆணையராக உயர்ந்தார்.

p72b.jpg

2007-ல் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒபாமா வேட்பாள ராக அறிவிக்கப்பட, தனது வேலையை கணவருக்காக உதறி னார் மிஷல். குழந்தைகளை தன்னுடைய அம்மா மரியானி டம் விட்டுவிட்டு, ஊர் ஊராகப் பிரசாரத்துக்குக் கிளம்பினார். உலகின் அதிகார மையமான வெள்ளை மாளிகையில் கறுப்பினக் குடும்பம் குடியமர்ந்ததை... ஆச்சர்யமும், ஆனந்தமுமாகப் பார்த்தது உலகம். ஒபாமாவின் வெற்றியில், மிஷலின் அயராத உழைப்பும் அடக்கம் என்பதை அவரே பெருமையுடன் பகிர்ந்துகொள்வார்.

மிஷல், சிறந்த மேடைப்பேச்சாளர். அமெரிக்கா முழுவதும் பல மேடைகளில் பேசி இருக்கிறார். 2012-ம் ஆண்டு இரண்டாவது முறையாக ஒபாமா அதிபரானபோது மிஷல் பேசிய பேச்சு மிகவும் பிரபலம். ‘ஒவ்வொரு நாளும் நான் சந்திக்கும் நபர்கள் என்னை இன்ஸ்பையர் செய்கிறார்கள். என்னைப் பெருமைகொள்ளச் செய்கிறார்கள். உலகின் மிகச்சிறந்த நாட்டில் வாழ்கிறோம் என்ற சந்தோஷத்தைத் தருகிறார்கள்’ - இப்படி ஆரம்பித்து, அமெரிக்கா பற்றி ஒபாமாவுக்கு இருக்கும் கனவை அவர் விவரிக்க, மாஸ் அண்ட் கிளாஸ் மிஷலைக் கொண்டாடியது.

p72c.jpg

அமெரிக்காவின் முதல் குடிமகள் ஆனதும் தனக்கு இருக்கும் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட ஆரம்பித்தார் மிஷல். ராணுவ வீரர்களின் குடும்பங்கள் சந்திக்கும் பிரச்னைகளை அலசி, துரித நடவடிக்கைகளை மேற்கொண்டார். பெண்கள் தங்களின் வேலை மற்றும் பெர்சனல் வாழ்க்கையை சமன்செய்துகொள்ள விழிப்பு உணர்வை ஏற்படுத்திவருகிறார்.  அமெரிக்கப் பள்ளிகளில் ஆரம்பித்து, உலக நாடுகளின் பள்ளிகள்வரை பயணித்து கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசிவருகிறார். குறிப்பாக,பெண்களின் விடுதலைக்கு கல்வி அவசியம் என்ற தனது ஆழமான நம்பிக்கையை உலகமெங்கும் விதைக்கச் செயல்பட்டுவருகிறர்.

p72d.jpg

ஆரோக்கியம் மற்றும் உணவு விஷயங்களில், மிஷல்   ஸ்ட்ரிக்ட் ஆபீஸர். வெள்ளை மாளிகை யின் கிச்சனில் ஆர்கானிக் உணவுகளுக்கு மட்டுமே அனுமதி. ஒபிஸிட்டி பிரச்னை அமெரிக்கக் குழந்தைகளிடம் அதிகரித்து வருவது தெரிந்ததும், ஜங்க் உணவுகள் குறித்த விழிப்பு உணர்வை மாணவர்கள் இடையே தொடங்கி, வெற்றிகரமாக பதியவைத்துள்ளார்.  ஆரோக்கிய வாழ்வை வலியுறுத்தி `American Grown: The Story of the White House Kitchen Garden and Gardens Across America’ என்ற புத்தகத்தை எழுதினார். குழந்தைகளுக்கான புதிய ஃபிட்னஸ் புரோகிராமையும் அறிவித்தார்.

p72e.jpg

ஒபாமாவுக்கும், மிஷலுக்கும் மகள்கள் மலியாவும், சாஷாவும்தான் முதல் உலகம். மகள்களின் படிப்புக்கு உதவுவது,  ஆரோக்கிய உணவு கொடுப்பது, சரியான நேரத்தில் அவர்களை உறங்கவைப்பது என மிஷல் பொறுப்பான அம்மா. அதிபரின் மனைவி என்ற அந்தஸ்து வந்த பின், மிஷலின் குணத்தில் எந்த மாறுதலும் இல்லை என்றாலும், ஃபேஷன் விஷயங்களில் கூடுதல் கவனம் உண்டு. இதனாலேயே அமெரிக்க  ஃபேஷன் ஐகான்எனப் பார்க்கப்படுகிறார் மிஷல்.  ‘வேனிட்டி’, ‘பீப்பிள்’ போன்ற பிரபல பத்திரிகைகள் வெளியிடும் ‘சிறந்த உடைகள் அணிபவர்கள்’ (Best dressed) என்ற பட்டியலில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இடம்பிடித்தார். தன்னுடைய மகள்களின் உடைகளையும் தானேதான் தேர்ந்தெடுப்பார் இந்த ஸ்வீட் மம்மி.

‘உருவாக்கப்பட வேண்டிய வரலாறு இன்னும் நிறைய இருக்கிறது. அதற்கு நான் எப்போதும் தயார்’ - மிஷல் ஒபாமா சொல்லும்   புகழ்பெற்ற வாசகம் இது.

p72f.jpg

இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு பெண் ணின் வாழ்க்கையும் போற்றத்தக்கதுதான். அதை உலகம் போற்றும் வரலாறாக மாற்றுவது நம் கையில்தான் இருக்கிறது!

கார்க்கிபவா


மிஷல் ஸ்பார்க்ஸ்!

p72g.jpg

red-dot%284%29.jpg ஒரு ஆப்பிரிக்க - அமெரிக்கப் பெண், அமெரிக்காவின் முதல் குடிமகள் ஆன வரலாற்றை எழுதியவர் மிஷல்.

red-dot%284%29.jpg மேடைப்பேச்சுக்கு பெயர் பெற்ற மிஷலின் பேச்சுகள் அனைத்தையும் எழுதுபவர்... அவரே!

red-dot%284%29.jpg 2008-ல் ஒபாமா அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, பிரசார பணிகளுக்காக மிஷல் தனது வேலையை ராஜினாமா செய்தபோது அவரின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள்.

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
1876 : உலகின் முதல் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டது
 

வரலாற்றில் இன்று.....

மார்ச் - 10

 

682varalaru.jpg1629 : இங்­கி­லாந்தின் முதலாம் சார்ள்ஸ் மன்­னனால் நாடா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டது. அதை­ய­டுத்த பதி­னொரு ஆண்­டு­க­ளுக்கு நாடா­ளு­மன்றம் இயங்­க­வில்லை.

 

1735 : ரஷ்­யாவின் முதலாம் பவுல் மன்­ன­னுக்கும் ஈரானின் நாதிர் ஷாவுக்கும் இடையில் செய்­து­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தத்­தின்­படி ரஷ்யப் படைகள் அஸர்­பை­ஜானின் பக்கூ நகரிலிருந்து வெளி­யே­றினர்.

 

1801 : பிரித்­தா­னி­யாவில் முத­லா­வது மக்கள் தொகை கணக்­கெ­டுப்பு இடம்­பெற்­றது.

 

1804 : லூசி­யானா மாநி­லத்தை அதி­கா­ர­பூர்­வ­மாக பிரான்­ஸிடமிருந்து ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்குக் கைய­ளிக்கும் நிகழ்ச்சி நடை­பெற்­றது.

 

1814 : பிரான்ஸில் லாவோன் என்ற இடத்தில் நெப்­போ­லியன் போன­பார்ட்டின் படைகள் தோற்­க­டிக்­கப்­பட்­டன.

 

1876 : பிரித்­தா­னிய விஞ்­ஞானி அலெக்­ஸாண்டர் கிரஹம் பெல் உலகின் முதல் தொலை­பேசி அழைப்பை மேற்­கொண்டார். 

 

1893 :  ஐவரி கோஸ்ட், பிரெஞ்சுக் குடி­யேற்ற நாடா­கி­யது.

 

1902 : துருக்­கியின் டோச்­சாங்­கிரி என்ற நகர் பூகம்­பத்­தினால் முற்­றாக அழிந்­தது.

 

1906 : வடக்கு பிரான்ஸில் குரி­யேரெஸ் என்ற இடத்தில் இடம்­பெற்ற நிலக்­கரிச் சுரங்க விபத்தில் 1,099 தொழி­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டனர்.

 

1922 : கிளர்ச்­சியைத் தூண்­டினார் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் மகாத்மா காந்தி ஆறாண்டு கால சிறைத்­தண்­டனை பெற்றார். ஆனாலும்,இரண்­டாண்­டு­களில் சுக­வீனம் கார­ண­மாக விடு­த­லை­யானார்.

 

1933 : அமெ­ரிக்­காவின் கலி­போர்­னி­யாவின் லோங் கடற்­க­ரையில் இடம்­பெற்ற பூகம்பம் கார­ண­மாக 120 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1952 : கியூ­பாவில் ஃபுல்­ஜென்­சியோ பட்­டீஸ்டா தலை­மையில் புரட்சி வெற்றி பெற்­றது.

 

1959 : திபெத்தில் பத்­தாண்டு கால சீன ஆக்­கி­ர­மிப்பை எதிர்த்து லாசா நகரில் நடத்­தப்­பட்ட போராட்டம் தோல்­வியில் முடிந்­தது. ஆயி­ரக்­க­ணக்­கானோர்­ சீன இரா­ணு­வத்­தி­னரால் படுகொலை செய்­யப்­பட்­டனர்.

 

1970 : வியட்நாம் போர்: அமெ­ரிக்க இரா­ணு­வதத் தள­பதி ஏர்னெஸ்ட் மெடினா மீது வியட்­நாமில் 1968 இல் நிகழ்த்­திய ‘மைலாய்’ படு­கொ­லை­க­ளுக்­காக குற்றம் சுமத்­தப்­பட்­டது. 

 

1977 : யுரேனஸ் கோளைச் சுற்­றி­யுள்ள வளை­யங்­களை வானி­ய­லா­ளர்கள் கண்­டு­பி­டித்­தனர்.

 

1990 : ஹெயிட்­டியில் இடம்­பெற்ற இராணுவப் புரட்சியில் ஜனாதிபதி பதவியிலிருந்து புரொஸ்பர் அவ்ரில் அகற்றப்பட்டார்.

 

2006 : நாசாவினால் அனுப்பப்பட்ட மார்ஸ் ரெக்கனைசன்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்தது.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வேவ்வேறு வழிகளில் ஒரு ரப்பர் பேண்ட் பயன்படுத்த டிப்ஸ்

  • தொடங்கியவர்

ஜெயலலிதா ஹிந்தி பாட்டு பாடுகிறார்

  • தொடங்கியவர்

12804803_999090456806315_341150672141943

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் சுரங்க லக்மாலின் பிறந்தநாள்.
Happy Birthday Suranga Lakmal

இந்த வருடம் இலங்கையின் முதற்தர கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் சம்பியனான தமிழ் யூனியன் கழகத்தின் தலைவரான லக்மால், உலக T 20 அணியிலும் இடம்பிடித்துள்ளார்.

  • தொடங்கியவர்

விஸ்வரூப மங்கைகள்!

 

மகளிர் தின ஸ்பெஷல்

 

உலகம் கவனிக்கும் இரண்டு பெண் ஆளுமைகளின் அறிமுகம், இங்கே...

‘சின்னப் பெண்’ணின் விஸ்வரூபம்!

‘டைம்ஸ் பெர்சன் ஆஃப் த இயர்’ – உலகம் உன்னிப்பாக கவனிக்கும் ஓர் அங்கீகாரம் இது. 2015-ம் ஆண்டு அந்த கௌரவத்தைப் பெற்றவர், ஒரு பெண். ஜெர்மனியின் சான்ஸ்லர் (நாட்டின் அதிபர்) ஏஞ்சலா மெர்க்கெல். ஐரோப்பா முழுவதும் பொருளாதார மந்தநிலை இருந்தபோது, ஜெர்மனியைக் காப்பாற்றியவர் என போற்றப்படுபவர். புகழ்பெற்ற ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையின் பட்டியலிலும் 2015-ம் ஆண்டு இரண்டாவது இடம் பிடித்தார் மெர்க்கெல். இதுவரை எந்தப் பெண்ணுக்கும் கிடைக்காத அங்கீகாரம் இது.

p77a.jpg

ஏஞ்சலா பிறந்தது, ஜெர்மனியில் ஒரு சாதாரண குடும்பத்தில். கெமிஸ்ட்ரி ஆராய்ச்சிக்காக டாக்டர் பட்டம் பெற்றவர், பின்னாளில் தீவிர அரசியலில் இறங்கினார். 1989-ம் ஆண்டில் ஜெர்மனியின் ‘ஜனநாயக a%2823%29.jpgஇயக்க’த்தில் தன்னை இணைத்துக்கொண்டார். பெண்கள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் துறை அமைச்சர் என படிப்படியாக வளர்ந்து, ஜெர்மனியின் முதல் பெண் வேந்தராக முன்னேறினார்.

‘தஸ் மாட்ச்சென்’ - ஏஞ்சலா மெர்க்கெல், முதன் முதலில் அமைச்சராகி அவைக்குள் நுழைந்தபோது, சக அமைச்சர்கள் அவரை இப்படித்தான் அழைத்தார்களாம். ஜெர்மன் மொழியில் அதற்கு ‘சின்னப் பெண்’ என்று அர்த்தம். இன்று அவர்தான் உலகின் சக்திவாய்ந்த ‘நம்பர் 1’ பெண்மணி!

ஸ்திரமான தலைமை, துணிச்சலான நடவடிக்கை, மிகச்சரியான முடிவுகளை எடுக்கும் திறன் என ஏஞ்சலாவை, மார்கரெட் தாட்சரோடு ஒப்பிடுகிறார்கள் ஜெர்மானியர்கள்.

‘தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சரி, சமூகத்துக்கும் சரி... பயம் ஒரு நல்ல துணை கிடையாது’ என்பார் மெர்க்கெல். ஒவ்வொரு பெண்ணும் மனதில் எழுத வேண்டிய வரி!

கலை மூலம் அரசியல் பேசும் பெண்!

கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற தனுஷ், அடுத்து ஹாலிவுட்டில் நடிக்கவிருக்கிறார். ‘த ஃபகிர்’ என்ற அந்தப் படத்தின் பெரிய ஆச்சர்யம், தனுஷ் அல்ல. அதன் இயக்குநர் மார்ஜனா சத்ரபி என்ற பெண்.

ஈரானில் பிறந்த சத்ரபியின் பெற்றோர், மார்க்சிஸ்ட் ஆதரவாளர்கள். 1979-ல் ஈரானில் ஆட்சிக்கு வந்த அடிப்படைவாதிகளால் கைது, கொலை என்று சத்ரபியின் நண்பர்கள் சிதைக்கப்பட, அந்தச் சூழலில் சத்ரபியின் நிஜ ஹீரோவாக இருந்தார் அவருடைய மாமா அனூப். அரசியல் குற்றவாளியான அவர் நாட்டைவிட்டு வெளியே வாழ்ந்துவந்தார். ஒருநாள் அனூஷ் கைது செய்யப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டபோது, அதற்கு முன் அவர் ஒரே ஒருவரை மட்டும் சந்திக்கலாம் என சொல்லப்பட, அவர் பார்க்க விரும்பியது சத்ரபியை. அப்போது டீன் ஏஜில் இருந்த சத்ரபியை, அனூஷின் மரணம் வெகுவாக பாதித்தது.

p77b.jpg

சத்ரபியின் பெற்றோர் அவரை படிப்பதற்காக ஆஸ்திரியா அனுப்பினார்கள். அப்போது முதல் ஐரோப்பாவிலேயே செட்டில் ஆகிவிட்டார் சத்ரபி. அடிப்படையில் அவர் ஒரு கிராஃபிக்ஸ் நாவல் கலைஞர். 2003-ம் ஆண்டு அவர் வெளியிட்ட ‘பெர்ஸ்போலீஸ்’ என்ற கிராஃபிக்ஸ் சுயசரிதை உலகின் கவனம் ஈர்த்தது. ஈரான் புரட்சியின்போதும், அதன் பின்னான ஈரான் பற்றியும் தனது நாவலில் நேரடி அனுபவங்களோடு படைத்திருந்தார் சத்ரபி. அந்த நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, அதே பெயரில் படமாகி, கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘ஸ்பெஷல் ஜூரி’ விருதும் பெற, சத்ரபி உலகப் பிரபலமானார். தொடர்ந்து சத்ரபி இயக்கிய ‘கேங் ஆஃப் ஜோட்டாஸ்’, ‘த வாய்ஸ்’ ஆகிய படங்கள் அவர் திறமைக்கு சாட்சியாக விளங்க, இப்போது ‘த எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ என்ற நகைச்சுவை நாவலைத் தழுவி ‘த ஃபகிர்’ படத்தை இயக்குகிறார்.

தன் கலை மூலம், தான் பேச விரும்பும் அரசியலை பேசும் உன்னத வரலாற்றுக் கலைஞர்களின் வரிசையில், கம்பீர பெண் ஆளுமையாக இடம்பிடித்திருக்கிறார் சத்ரபி!

vikatan

  • தொடங்கியவர்

தனுஷைப் பார்த்ததும் என்ன நடக்கும்? ஜாக்குலின் கலகல கலாய் பேட்டி!

 

கலக்கப்போவது யாரு’ ஷோவில் எல்லோரையும் கலாய்க்க விட்டு, தானும் கலாய்த்து நிகழ்ச்சியைக் கலகலப்பாக்குபவர்  ஜாக்குலின்.

”ஏங்க.. விஸ்காம் ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ன்னு ஏமாத்திட்டு இருக்கீங்க?” என்று கேட்டால், “நெஜம்மாங்க.. வேணும்னா ஐடிகார்ட் காட்டவா?’ என்று காட்டுகிறார். ‘நடுவுல ரெண்டு வருஷம் ஏர் ஹோஸ்டஸ்க்கு படிச்சேன். ஆக்சுவலா நான் டாக்டருக்குத்தான் படிக்க நெனைச்சேன் என்று டரியல் கொடுக்கிறார்.

அவருடனான ஒரு கலாய்ப் பேட்டியின் சில பகுதிகள்..

jack.jpg

“ஆஸ்கர் 2016 வாங்கின நடிகர் யார்?”

முதலில் இந்தக் கேள்விக்கு ‘ஐயையோ க்ரூப்ல அனுப்ச்சாங்களே.. நாந்தான் பாக்காம விட்டுட்டேனே’ என்று பதறியவர்.. தொடர்ந்து சொன்னார்:

‘ஆங்.. டைட்டானிக் ஹீரோ. அந்தப் படத்துல கூட அவருக்கு என் பேர்தான் ஜாக்”

அவர் எந்தப் படத்துக்கு ஆஸ்கர் வாங்கினார்னு தெரியுமா என்று கேட்க நினைத்தோம்.. அடுத்ததாக கேட்ட, ‘இந்தியாவுல யாருக்கு ஆஸ்கர் கிடைக்கணும்னு நெனைக்கறீங்க?’ என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதிலால் விட்டுவிட்டோம்.

”ஏங்க.. நான் விஜய் டிவி ஆங்கர். என்னை அடுத்த விஜய் அவார்ட்ஸ்லயே உள்ள விடுவாங்களான்னு தெரியல. என்கிட்ட போய் ஆஸ்கர் யார் வாங்குவா, ஹாலிவுட் ஹீரோ யாரு’ன்னெல்லாம் கேட்டா நியாயமாங்க?” என்றார்.

jack%201.jpg

“விஜய் டிவிக்கு எப்டி வந்தீங்க?”

“கிட்டத்தட்ட 8000 பேர் கலந்துகிட்ட ஒரு ஆடிஷன்ல, நம்பமாட்டீங்க.. டாப் டென்ல வந்து செலக்ட் ஆனேன்”


“உங்க குரலை கிண்டல் பண்ணினப்ப எப்டி எடுத்துகிட்டீங்க?”

“நானே கிண்டல்பண்ணிக்குவேனே.. அப்பறம் என்ன மத்தவங்க பண்றது?”

தொடர்ந்து அவர் எங்களின் ஜாலியான கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்களை... வீடியோவில் காண....

vikatan

  • தொடங்கியவர்

மகளிர் தினத்தில் மது அருந்திவிட்டு ரயிலில் ரகளை செய்த பெண்கள்(வீடியோ)

 

புதுடெல்லி: உலக மகளிர் நாளன்று, மது அருந்திவிட்டு டெல்லி மெட்ரோ ரயிலில் ஆண் பயணிகளிடம் ரகளை செய்து அதிர்ச்சியை ஏற்படுத்திய இளம் பெண்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

கடந்த 8-ம் தேதி சர்வதேச மகளிர் கடைப்பிடிக்கப்பட்டது. இதனை ஒட்டி உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துச் செய்திகளை பரிமாறினர். அதேபோல உலக அளவில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்நிலையில் மகளிர் தினத்தன்று, டெல்லி மெட்ரோ ரயில் பெட்டி ஒன்றில் மது அருந்திவிட்டு பயணித்த இளம்பெண்கள் சிலர்,  ஆண் மற்றும் பெண் பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

 

     

vikatan

  • தொடங்கியவர்

உலகிலேயே அதிக செலவு பிடிக்கும் நகரம் சிங்கப்பூர்: பெங்களூரு செலவு குறைந்த நகரம்!

 

'எக்கனாமிக்ஸ் இன்டெலிஜென்ட் யூனிட்'  உலகளவில் நடத்திய ஆய்வில், அதிக செலவு பிடிக்கும் நகரங்கள் பட்டியலில்  சிங்கப்பூர் 116 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் தொடர்ந்து 3-வது ஆண்டாக சிங்கப்பூர் முதலிடத்தை பெறுகிறது.

sing.jpg

இரண்டாவது இடத்தை ஸ்விட்சர்லாந்தின் ஜுரிச் நகரம் 114 புள்ளிகளுடன் பெறுகிறது. 3-வது இடத்தை ஹாங்காங்  நகரமும், 4-வது இடத்தை சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவும் பிடிக்கின்றன. பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் 5-வது இடத்தை பெற்றுள்ளது. லண்டன் 6-வது இடத்தையும்,  நியூயார்க் 7-வது இடத்தையும் பிடிக்கின்றன.

உலகளவில் அதிக செலவு வைக்கும் நகரங்கள் பட்டியலில் பல முறை முதலிடத்தை பிடித்துள்ள ஜப்பான் தலைநகர் டோக்கியோ, இந்த முறை முதல் 10ல் இடம் பெறவில்லை. சீனாவின் பொருளாதாரத் தலைநகரான ஷாங்காய் இந்த முறை டோக்கியோவை விட அதிக செலவு பிடிக்கும் நகரங்கள் பட்டியலில் முந்தியுள்ளது.

bang.jpg

உலகிலேயே மலிவான நகரமாக ஜாம்பியாத் தலைநகர் லுசாகா இடம் பெற்றுள்ளது. உலகளவில் குறைவான செலவு பிடிக்கும் நகரங்கள் பட்டியலில் பெங்களூருவுக்கு 2வது இடம். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவிலேயே மிகவும் காஸ்ட்லியான நகரமாக பார்க்கப்படும் மும்பை, 
உலகளவில்  செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்திருப்பதுதான்.

கடந்த 12 மாதங்களில்,  133 நகரங்களில்  நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு இன்று வெளியிடப்பட்டது.

vikatan

  • தொடங்கியவர்

தூய்மைக்கு மறுபெயர் ‘கமிகட்ஸு’!

 
கார்க்கிபவா

 

வ்வொரு சென்னைவாசியும் ஒரு நாளில் முக்கால் கிலோ குப்பையை உருவாக்குகிறார்கள். இந்த விஷயத்தில் இந்தியாவிலேயே சென்னைக்குத்தான் முதலிடம். ஆனால், ஜப்பானின் கமிகட்ஸு நகரமோ வேறொரு விஷயத்தில் உலகிலேயே முதலிடத்தில் இருக்கிறது. `உலகின் முதல் `ஜீரோ வேஸ்ட்’ கம்யூனிட்டி' என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது இந்தத் தூய்மை நகரம்.

இந்த நகரத்தில் வாழும் 1,700 பேருமே குப்பைகளைக் கையாள்வதில் செம எக்ஸ்பெர்ட் கில்லாடிகள். `Reduce, Reuse, Recycle’ - அதாவது குப்பைகள் உருவாக்குவதைக் குறைப்பது, பழைய பொருட்களை மீண்டும் பயன்படுத்துவது, மறுசுழற்சிக்கு உள்ளாக்குவது... இவையே இந்த நகரவாசிகளின் தூய்மைத் தாரக மந்திரம். அப்படி என்னதான் செய்கிறார்கள் கமிகட்ஸு நகரத்தில்?

dot4.jpg 34 வகையான குப்பைத்தொட்டிகள் வைத்திருக்கிறார்கள். பேப்பர், பிளாஸ்டிக் தொடங்கி செல்போன், இரும்பு வரைக்கும் அனைத்துக்கும் தனித்தனிக் குப்பைத் தொட்டிகள். ஒரு கன்டெய்னரில் இருந்தே பொருட்களைப் பிரித்தெடுக்க உலகம் திணறும்போது, ஒரு நகரத்தின் குப்பையை இவ்வளவு துல்லியமாகப் பிரித்து கையாள்வதுதான் கமிகட்ஸு மக்களின் சிறப்பு.
 
dot4.jpg  இப்போது ஊரின் மொத்த குப்பையில் 20 சதவிகிதம் மட்டுமே நிலத்தில் கொட்டப்படுகின்றன. மற்றவை அனைத்தும் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன. 2020-ம் ஆண்டுக்குள் இந்த 20 சதவிகிதத்தையும் ஜீரோ நிலைக்குக் கொண்டுவர திட்டம் இருக்கிறதாம். `அது சாத்தியமானால், கமிகட்ஸு  உலகின் சொர்க்கம்' என்கிறார்கள்.

p62b.jpg

dot4.jpg  ஊர் நிர்வாகம், குப்பைகளைப் பிரிக்கும் எந்த ஒரு வேலையையும் செய்வது இல்லை. காரணம், ஒவ்வொரு வீட்டில் இருந்தும் குப்பைகள் பிரிக்கப்பட்டே வருகின்றன.

dot4.jpg  நகரின் எல்லைக்குள் ஒரு தொழிற்சாலை கட்டி, குப்பைகளை மறுசுழற்சிக்கு எடுத்துக்கொண்டு, அதில் இருந்து உடைகள், பரிசுப்பொருட்கள் போன்றவற்றைத் தயாரிக்கிறார்கள்.

dot4.jpg பயன்படுத்தப்படாத பொருட்களை வீட்டுக்குள்ளேயே அடைத்துவைக்கவேண்டியது இல்லை. உடனே நகர நிர்வாகத்தின், `கிரேய்க் லிஸ்ட்’டில் சேர்த்துவிடலாம். வேண்டியவர்கள் அதை வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஒரு பொருளின் மதிப்பு எந்த வகையிலும் குறையாமல் இந்த சிஸ்டம் பார்த்துக்கொள்கிறது.

dot4.jpg  13 ஆண்டுகளாக இதை வெற்றிகரமாக நடத்திவரும் கமிகட்ஸு நகருக்கு, உலகமெங்கிலும் இருந்து மாணவர்கள் வந்து வேஸ்ட் மேனேஜ்மென்ட் பற்றி பாடம் கற்கிறார்கள்.  இதற்காகவே இங்கு ஒரு அகாடமி நடத்தப் படுகிறது. `ஒவ்வொரு வீட்டில் இருந்தும் மாற்றத்தைத் தொடங்கினால் மட்டுமே இந்தத் தூய்மைத் திட்டம் சாத்தியம்’ என்கிறது கமிகட்ஸு அகாடமி.

dot4.jpg  வீடு கட்டத் தேவையான பொருட்களைக்கூட, பழைய கழிவுகளில் இருந்தே தயாரிக்கிறது கமிகட்ஸு நகரம்.

p62a.jpg

நகரத்தின் கழிவு மேலாண்மையை `ஜீரோ வேஸ்ட் அகாடமி’ கண்காணிக்கிறது. இந்த அகாடமி, உலகமெங்கும் இருந்துவரும் பார்வையாளர்களுக்கு என, தனி பயணத் திட்டங்களையும் நடத்துகிறது. இரண்டு இரவுகள் + மூன்று பகல்கள் நம்மை ஜப்பானில் இருக்கும் கமிகட்ஸு நகரத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். அந்த நகரின் சிறப்புகளை விவரித்து, பார்வையிடவும் அனுமதிக்கிறார்கள். ஆண்டு முழுவதும் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் கமிகட்ஸுக்கு வந்து கழிவு மேலாண்மையைப் பற்றி அறிந்துகொண்டு செல்கிறார்கள்.

குப்பைகள் உருவாவதைத் தவிர்ப்பது நவீன உலகில் சாத்தியம் இல்லை. உருவாகும் குப்பைகளை வெற்றிகரமாகக் கையாள்வதில் இருக்கிறது தூய்மையின் சூட்சுமம். அதற்கு `தூய்மை இந்தியா' எனப் பெயர் வைத்தால் மட்டும் போதாது. செயல்படவும் வேண்டும். எப்படிச் செயல்பட வேண்டும் எனத் தெரிய வேண்டும் என்றால், எங்கெங்கோ செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, கமிகட்ஸுக்கு ஒருமுறை சென்று வரட்டும்.

vikatan

  • தொடங்கியவர்

12790834_999090850139609_724717956897389

பிரபல ஹொலிவூட் நடிகை ஷரோன் ஸ்டோனின் பிறந்தநாள்.
Happy Birthday Sharon Stone

  • தொடங்கியவர்

போர் வரலாறுகளை தெரிந்துகொள்ள இணைய தளத்தில் எளிய வசதி!

 

giphy%20left.jpgடந்த நான்காயிரம் வருடங்களில் நடந்த போர்களைப் பற்றி விக்கிப்பீடியாவில் இருக்கும் தகவல்களைப் படிக்க,  உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும். படித்துக் கொண்டே போகப் போக கொட்டாவி விட  ஆரம்பித்து விடுவோம்.

ஆனால், இந்தத் தகவல்களை எல்லாம் ஒரு உலக வரைபடத்தில் எந்த போர் எங்கு நடந்தது, எப்போது நடந்தது என்பதை எல்லாம் குறித்து வைத்தால் எப்படி இருக்கும். நமக்கு புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்தானே.

தகவல்களை படங்களாகக் குறித்து வைத்து விளக்குவதற்குப் புகழ் பெற்ற நோட் கோட் (Node Goat)  என்ற இணையதளம், உங்களுக்கு இந்த வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. இது போன்று ஏற்கனவே பல தகவல்களை இப்படி வழங்கி பிரபலமடைந்த இணையதளம் இது.

இப்போது விக்கிப்பீடியா (Wikipedia) மற்றும் டிபிபீடியா (Dbpedia.org) ஆகிய தளங்களில் இருந்து போர்களைப் பற்றியத் தகவல்களை இப்படி உலக வரைபடத்தில் பதிவு செய்து உள்ளதோடு, நாம் இந்த ஆண்டில் இருந்து இந்த ஆண்டு வரை நடைபெற்ற போர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், அப்படி ஆண்டுகளை தேர்ந்தெடுக்கும் வசதியையும் தந்திருக்கிறார்கள். 

உதாரணமாக, முதல் உலகப் போர் நடந்த இடங்களைப் பார்க்க வேண்டுமானால்,  வருடங்களை 1914 முதல் 1918 வரை மாற்றிக் கொண்டால், அந்தக் காலகட்டத்தில் நடந்த போர்கள் மட்டும் உலக படத்தில் குறிக்கப்பட்டு இருக்கும்.

இப்படி ஆண்டு வாரியான வசதியை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற வசதியோடு அவர்களே கிபி 200 ல் இருந்து கிபி 1500 வரையிலான போர்களுக்கு ஒரு நிறம், 1500-ம் ஆண்டில் இருந்து 1914-ம் ஆண்டு வரை ஒரு நிறம், முதல் உலகப் போர் காலகட்டத்துக்கு ஒரு நிறம், முதல் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் இடைப்பட்ட காலத்துக்கு ஒரு நிறம், இரண்டாம் உலகப் போர் காலகட்டத்துக்கு ஒரு நிறம், அதற்குப் பிறகான காலத்தில் இருந்து இன்று வரை ஒரு நிறம் என்று வசதியாக வகைப்படுத்தி வைத்து இருக்கிறார்கள்.

war%20map%20600%202.jpg

போர்களை நாம் ஆதரிக்காவிட்டாலும், போர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்கு அவசியமானது. கடந்தகால வரலாற்றை மறந்த சமுதாயம் வளமான வருங்காலத்தைப் படைக்க முடியாது என்ற மேற்கோளை மனதில் வைத்துப்பார்த்தால் இந்தத் தகவல் அற்புதமானது.

இந்த உலக வரைபடத்தை இங்கு பார்க்கலாம் http://battles.nodegoat.net/viewer.p/23/385/scenario/1/geo/fullscreen%EF%BB%BF%EF%BB%BF

vikatan

  • தொடங்கியவர்

12798902_10153257898620870_3405958824310

T20 உலக கிண்ண போட்டிகளுக்காக  முகநூலில் புதிய stickers

2 hours ago, நவீனன் said:

பிரபல ஹொலிவூட் நடிகை ஷரோன் ஸ்டோனின் பிறந்தநாள்.
Happy Birthday Sharon Stone

அட நம்ம Basic Instinct அக்கா. மறக்க முடியுமா?

 

 

  • தொடங்கியவர்

12804782_999091170139577_906710031693646

பிரபல ஹொலிவூட் நடிகர், இயக்குனர் சக் நொரிசின் பிறந்தநாள்.
இவரது அதிரடி சாகச, cowboy திரைப்படங்கள் இன்றும் ரசிக்கப்படுகின்றன.
Happy Birthday Chuck Norris

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

 

ஓவியங்கள்: செந்தில்

 

பங்கு 

p32_1.jpg

``இது உனக்கு, இது எனக்கு, இது கோயிலுக்கு, இது போலீஸுக்கு'' - பணத்தைப் பங்கு பிரித்தார்கள், கொள்ளையர்கள்!

- அஜித்

அம்மா

கோபத்தில் அம்மாவைத் திட்டிவிட்டு, வெளியே செல்ல பைக் எடுத்தபோது அம்மா சொன்னாள்...

p32_2.jpg

``ஹெல்மெட் எடுத்துக்கிட்டியா?’’

 - ரமேஷ்

இது இலவச வழி அல்ல!

p32_3.jpg

டிராஃபிக் சிக்னலில் `நோ ஃப்ரீ லெஃப்ட் டர்ன்’-ல் திரும்பியவனை நிறுத்தி, 500 ரூபாய் கறந்துவிட்டார் போலீஸ்காரர்!

- நந்த குமார்

அன்புடன் அழைக்கிறோம்...

``டாடி... அக்கா மேரேஜுக்கு என் ஃப்ரெண்ட்ஸ் முப்பது பேரைக் கூப்பிடணும்’’ என்ற மகனிடம்,

p32_4.jpg

``அப்ப எக்ஸ்ட்ரா ஐம்பது இன்விட்டேஷன் பிரின்ட் பண்ணவா?’’ - கேட்டார் அப்பா.

``வேணாம் டாடி... வாட்ஸ்அப்ல இன்வைட் பண்ணிடுறேன்’’ என்றான் பையன்!

- பர்வீன் யூனுஸ்

சந்தேகம்

p32_5.jpg

`தேர்தல்ல ஸீட் கிடைக்குமா?’ என்ற சந்தேகத்தில் காத்திருந்தவருக்கு ஸீட் கிடைத்ததும், `ஓட்டு கிடைக்குமா?’ என்ற புது சந்தேகம்

வர ஆரம்பித்தது!

 - ஜிடி.ரமேஷ்குமார்

ஞாபகம் வரா(ரு)தே...

p32_6.jpg

காணாமல்போன ஆட்டோகிராஃப் புத்தகத்தைத் தேடி எடுத்து, வாட்ஸ்அப்பில் புதுப்பிக்க நினைத்தேன். `ஆருயிர் நண்பனுக்கு...’, `என்றும் உன்னை மறவாத...’ என எழுதியிருந்தவர்கள் யாருமே இன்று ஞாபகத்தில் இல்லை!

- பெ.பாண்டியன்

பாதுகாப்பு!

p32_7.jpg

பாதுகாப்பு, தரம், உறுதி போன்றவற்றை தீர ஆராய்ந்து வாங்கிய ஹெல்மெட்டை பைக்கின் பின்புறம் மாட்டிக்கொண்டு, ஹாயாகப் பறந்துசென்றான்!

 - பாலூர் பிரேம்பிரதாப்.

நலமா?

``நல்லா இருக்கீங்களா?’'

p32_8.jpg

``ஓ... நல்லா இருக்கேன்!’'

 - சிகிச்சைக்கு வந்தவர்கள், ஒருவரையொருவர் நலம் விசாரித்துக்கொண்டார்கள்!

- கே.அருணாசலம்

விளம்பரம்... வியாபாரம்!

251 ரூபாய் ஸ்மார்ட்போன், லட்சக்கணக்கில் விற்றுத் தீர்ந்தது. `ஏர் வாய்ஸ்' உரிமையாளர், ஸ்மார்ட்போன் அதிபரிடம் சொன்னார்...

p32_9.jpg

``புதுசா பத்து லட்சம் சிம் கார்டு வித்திருக்கோம், நம்ம பிளான் சக்சஸ்!’

 - ஜெ.கண்ணன்

தலைமை

p32_10.jpg

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களை இருக்கையில் இருந்து கூட்டத்தொடர் முழுவதும் வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர், முதலமைச்சருக்குப் பயந்தபடி தன் இருக்கையின் நுனியிலேயே அமர்ந்திருந்தார்!

  • தொடங்கியவர்

சிறு பல்லும் சாதனை புரிய உதவும்; பற்கள் சேகரிப்பில் லிம்கா சாதனை புரிந்த மருத்துவர்!

 

teeth%20collctiion%20300.jpgமதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் பல் மருத்துவப் பிரிவு தலைமை நிபுணர் டாக்டர் ஜிப்ரீல். பல்லில் ஏற்படும் வீக்கம், ஈறுகளில் தொற்றுக் கிருமிகள் தாக்கம், ஈறுகளை முறையாக பராமரிக்காதது போன்ற காரணங்களால் பாதிப்படைந்த 10000 பற்களை பல ஆண்டுகளாக சேகரித்து லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பெற்றுசாதனை படைத்துள்ளார்.

மருத்துவர் ஜிப்ரீலிடம் பேசினோம்., “ பற்களை நான் சேகரித்தது விருதுகளை எதிர்பார்த்து அல்ல. சிறு வயதிலிருந்தே எனக்கு சேமிக்கும் பழக்கம் உண்டு. எந்த பொருட்களையும் எளிதில் தூக்கி எறியமாட்டேன். பின்னாளில் பல் மருத்துவராக ஆனபின்பு மருத்துவத் தொழிலில் பணம் சம்பாதிப்பது மட்டும் தான் நம் நோக்கமா வேறு ஏதேனும் மக்களுக்காக செய்யவேண்டும் என்று நினைத்தேன்.

பல் மருத்துவமனை மாணவர்களின் ஆய்விற்கும், பற்கள் பற்றிய விழிப்புணர்வின்றி அறியாமையினால் பற்களை முறையாக பராமரிக்காமல் போனால் இத்தகைய பாதிப்புகள்தான் ஏற்படும் என்பதை எடுத்துக்கூறி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவெடுத்தேன். நோயாளிகளிடம் இருந்து கண்டிப்பாக இதனை பிடுங்கியே ஆக வேண்டும் என்ற நிலையில் இருந்த பற்களை பிடுங்கியபின் அவற்றை வீசி எறிந்திடாமல் சேகரித்தேன். ஒவ்வொரு பற்களுக்கும் அதன் விபரங்களை பதிவுசெய்தேன். யாருடைய பல், எப்போது பிடுங்கப்பட்டது, என்ன நோய் தாக்குதளினால் பிடுங்கப்பட்டது போன்ற முழு விபரமும் இருக்கும் படி சேகரித்தேன்.

என் சேகரிப்பை பார்த்து என் மகள்தான் ஒருநாள் இதை நீங்கள் லிம்கா சாதனை புத்தகத்திற்கு விண்ணப்பிக்கலாமே என்றாள். பொதுவாக பல் மருத்துவர்கள் அவசியம் ஏற்படும் போது மட்டுமே பற்களை பிடுங்குவார்கள். ஆனால் யாரும் அந்த பற்களை சுத்திகரித்து சேகரிக்கமாட்டார்கள். சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பார்கள். இங்கு எனக்கு தூக்கிப்போடும் பற்களே சாதனைக்கு உதவிசெய்துள்ளது” என்றார்.

'பற்கள்தானே என்று நீங்கள் உங்கள் பற்கள் பராமரிப்பில் மெத்தனம் காட்டினால் அது உங்கள் இதயப்பிரச்னை சிறுநீரகப்பிரச்னைவரை கூட கொண்டுசென்றுவிடும்' என்று பற்களின் பாதுகாப்பு குறித்து பேசிய டாக்டர் ஜிப்ரீல், “ மனிதனின் மொத்தம் 32 நிலைப்பற்கள். சிறுவயதில் தோன்றி வாழ்நாள் முழுவதும் இவை நிலைத்திருக்கும் தாடையில் மையக்கோட்டை நீட்டி இருக்கும் பற்கள் வெட்டும் பற்கள். தொடர்ந்து பக்கவாட்டில் கோரைப்பற்கள், முன்கடைவாய்ப்பற்கள், பின்கடவாய்ப்பற்கள் என நான்கு வகை உள்ளது. தாங்க முடியாத வலி, வீக்கம், உண்ண முடியாமை, விழுங்க முடியாமை நாக்கு நீட்ட முடியாமை, ஈறுகளில் இரத்தக்கசிவு போன்ற தொல்லைகள் வாயிலும், பற்களிலும் தோன்றும். இதனால் ஏற்படும் நச்சுப்பொருட்கள் உடலெங்கும் பரவி இதயம், சிறுநீரகம், இரைப்பை மூட்டுகள், தொண்டை முதலிய உறுப்புகளை பாதிப்படையச் செய்யும்.

teeth%20collction%20600%201.jpg

பற்களில் படியும் பற்படலத்தை அகற்ற வேண்டும். நாளடைவில் அது பற்கரையாய் மாறி, உறுத்தலினால் சிவந்து வீங்கி இரத்தம் கசியும் நிலை உருவாகும். ஈறுகள் காயமடையும் போதும் பிறபொருள்கள் உறுத்தும்போது, நுண்ணுயிர்க் கிருமிகள் ஈறுகளை தாக்கும்போது ஈறுகள் தடித்து புண்ணாகி இரத்தம் கசியும். இதனால் வாயில் துர்நாற்றம் ஏற்படும். பற்களைப் பெருமளவில் தாக்கும் நோய் பற்சொத்தை நோயாகும். இது ஒரு சிதைவு நோய், பற்களை நாள்தோறும் சரிவரத் துலக்காத போது உண்ணும் உணவில் உள்ள சர்க்கரைப் பொருட்களும் , சாக்லேட் ஐஸ்கீரிம், பிஸ்கட், மிட்டாய் போன்ற திண்பண்டங்கள் பற்களின் இடைவெளிகளிலும், பற்களின் குழிகளிலும் தங்குகின்றன. அவைகளை உமிழ்நீர் தாக்குகின்றன.

இந்த அமிலம் பற்களில் தங்கி பற்சிப்பியை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கிறது. இச்சிதைவே நாளடைவில் பற்சொத்தையாக வடிவெடுக்கிறது. குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது தவறாமல் தக்க பல் மருத்துவரிடம் பற்களை பரிசோதனை செய்திட வேண்டும் அப்போது தான் பற்களை பாதுகாக்க முடியும்” என்கிறார்.

teeth%20collction%20600%2022.jpg

பல்நலம் குறித்த விழிப்புணர்விற்காக இவர் மேற்கொண்ட இந்த சேகரிப்பு இந்திய சாதனை புத்தகம் மற்றும் ஆசிய சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றிருப்பதோடு தற்போது கின்னஸ் சாதனைக்கும் பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

vikatan

  • தொடங்கியவர்
2014 : கிரைமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது
 

வரலாற்றில் இன்று..... 

மார்ச்-11

 

683varalaru-2014.jpg1801 : ரஷ்யாவின் முதலாம் பவுல் கொல்லப்பட்டதால் அவரின் மகன் முதலாம் அலெக்ஸாண்டர் மன்னரானார்.

 

1861 : அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது.

 

1864 : இங்கிலாந்து ஷெஃபீல்ட் நகரில் இடம்பெற்ற செயற்கை வெள்ளப் பெருக்கினால் 250 பேர் கொல்லப்பட்டனர்.

 

1897 : அமெரிக்காவின் மேற்கு வேர்ஜீனியா மாநிலத்துக்கு மேலாகப் பறந்த எரிவெள்ளி ஒன்று வெடித்து சிதறியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.

 

1917 : முதலாம் உலகப் போரில் ஈராக்கின் பக்தாத் நகரம் ஜெனரல் ஸ்டான்லி மோட் தலைமையிலான ஆங்கிலோ – இந்தியப் படைகளிடம் வீழ்ந்தது.

 

1918 : ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மொஸ்கோவுக்கு மாறியது.

 

1931 : சோவியத் ஒன்றியத்தில் “வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு" என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

 

1978 : இஸ்ரேலில் பஸ்  ஒன்று கடத்தப்பட்டு 37 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

 

1985 : மிகைல் கொர்பச்சோவ், சோவியத் யனியனின் தலைவரானார்.

 

1990 : சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிவதாக லித்துவேனியா பிரகடனம் செய்தது.

 

2004 : ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் இடம்பெற்ற தொடர் ரயில் குண்டுவெடிப்புகளில் 192 பேர் கொல்லப்பட்டனார்.

 

2006 : சிலியின் முதலாவது பெண் ஜனாதிபதியாக  மிஷெல் பச்லெட் பதவியேற்றார்.

 

2011 :  ஜப்பானின் டோஹோகு பிராந்தியத்தில்  9.0 ரிச்டர் அளவிலான பாரிய பூகம்பத்தையடுத்து  சுனாமி அலைகளும்  ஜப்பானிய கிழக்கு கரையோரங்களை தாக்கின. இதனால் 15,889 இபேர்  அதிகமானோர் உயிரிழந்ததுடன் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கட்டடங்கள் முற்றாக சேதமடைந்தன. வரலாற்றின் இரண்டாவது மிகப்பெரிய அணுக்கசிவு விபத்தும் இதனால் ஏற்பட்டது.

 

2012 : ஆப்கானிஸ்தானில் கந்தகார் அருகே அமெரிக்க சிப்பாய் ஒருவரால் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 

 

2014 : யுக்ரைனின் ஒரு பிராந்தியமாக இருந்த கிரைமியா தீபகற்பத்தை ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது

 

www.metronews

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான பல்லவர்களின் நகருக்கு செல்வோம் வாருங்கள்
 
பண்டைய காலத்தில் தமிழகமெங்கும் பல்வேறு மன்னராட்சிகளின் கீழ் ஒன்றோடு ஒன்று வேறுபட்ட, தனெக்கென தனி அடையாளத்தை கொண்ட மன்னராட்சிகள் தோன்றி மறைந்திருக்கின்றன. கி.மு 3 ஆம் நூற்றாண்டில் மதுரையில் வைகை நதிக்கரையில் முற்கால பாண்டியர்களின் ஆட்சி, பின் மூன்றாம் நூற்றாண்டில் காஞ்சீபுரத்தை தலைநகராக கொண்டு தோன்றிய பல்லவர் ஆட்சி, 10ஆம் நூற்றாண்டு காலத்தில் தஞ்சையில் தோன்றிய சோழ வம்சத்தினரின் ஆட்சி, பின்னர் வந்த சோழர்கள், நாயக்கர்கள் போன்ற அனைவரது ஆட்சி காலத்தின் போதுமே கலைகள் போற்றி வளர்க்கப்பட்டிருக்கின்றன.
 
குறிப்பாக பல்லவர்களின் ஆட்சி காலத்தில் கற் சிற்பக்கலை அதன் உச்சத்தை அடைந்திருக்கின்றது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு பல்லவர்களின் காலத்தில் மாமல்லபுரத்தில் வடிக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் கோயில்கள் இன்றும் அவர்களின் கலை மாட்சிமையை உலகுக்கு பறைசாற்றி வருகின்றன. யுனெஸ்கோ அமைப்பினால் உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுக்காப்படும் மாமல்லபுரம் கோயில்களுக்கு போகலாம் வாருங்கள்.
 
20-1440069464-26.jpg
 
மாமல்லபுரம்:
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி அமைந்திருக்கிறது மாமல்லபுரம் நகரம். தமிழகத்தில் இருக்கும் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றான இதன் வரலாறு கி.பி ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து துவங்குகிறது.
 
20-1440069451-24.jpg
 
மாமல்லபுரம்: 'பெரிப்லுஸ்' என்ற பழமையான கிரேக்க குறிப்பேட்டில் கி.பி 1ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் மாமல்லபுரத்தில் துறைமுகம் அமைத்து கப்பல்கள் மூலம் வாணிபர்கள் கடல் மார்கமாக தெற்காசிய நாடுகளுக்கு சென்று வர்த்தகத்தில் ஈடுபட்டதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன.
 
20-1440069421-19.jpg
மாமல்லபுரம்: இந்த மாமல்லபுரம் நகரம் மூன்றாம் நூற்றாண்டில் தோன்றி வலுப்பெற்ற பல்லவர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. கிட்டத்தட்ட 600 வருடங்கள் பல்லவர்களின் ஆட்சியின் கீழ் இந்நகரம் இருந்திருக்கிறது. அந்நாட்களில் தான் மாமல்லபுரம் எங்கும் பாறைகளில் குடையப்பட்ட கோயில்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன. அந்த கோயில்கள் ஒவ்வொன்றைப்பற்றியும் சற்றே விரிவாக காண்போம் வாருங்கள்.
 
20-1440069415-18.jpg
கடற்கரை கோயில் : முழுக்க முழுக்க கிரானைட் கற்களை கொண்டு 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது வங்காள விரிகுடாவை பார்த்தபடி இருக்கும் மாமல்லபுரம் கடற்கரை கோயில். இந்த கோயில் தான் தென்னிந்தியாவில் இருக்கும் மிகப்பழமையான கற்கோயில் ஆகும்.
 
20-1440069373-11.jpg
 
கடற்கரை கோயில் : ஒரு பெரிய கோயிலையும், இரண்டு சிறிய கோயில்களையும் கொண்டுள்ள இந்த கோயில் வளாகமானது இரண்டாம் நரசிம்ம வர்மனின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டிருக்கிறது.
 
20-1440069360-8.jpg
 
கடற்கரை கோயில் : இங்கு மொத்தம் 7 கோயில்கள் கட்டப்பட்டதாகவும், அவை காலப்போக்கில் வெள்ளத்தாலும், கடலில் மூழ்கியும் அழிந்து போனதாக சொல்லப்படுகிறது. இங்குள்ள மூன்று கோயிலில்களில் ஒன்றில் கோயிலில் சிவ பெருமானும், மற்ற இரண்டு கோயில்களில் விஷ்ணுவும் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

20-1440071441-.jpg
 
கடற்கரை கோயில் : மேலும் இந்த கோயில் வளாகத்தில் ஒற்றைக் கல்லினால் வடிக்கப்பட்ட சிங்கத்தின் சிற்பம் ஒன்று உள்ளது. இந்த சிற்பத்தில் சிங்கத்தின் மேல் பார்வதி தேவி மகிஷாசுரமர்தினியாக அமர்ந்திருப்பது போன்று வடிக்கப்பட்டிருக்கிறது.
 
20-1440069329-3.jpg
 
பஞ்ச ரதங்கள் : பஞ்ச ரதங்கள் அல்லது பாண்டவ ரதங்கள் என்று அழைக்கப்படும் ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிற்பத் தொகுப்புகள் இந்தியாவில் ஒற்றைக்கல் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுகின்றன. இங்கு ஒற்றைக்கல்லில் வடிக்கப்பட்ட ஐந்து மிகப்பெரிய சிறப்பங்கள் இருக்கின்றன.
 
20-1440069317-1.jpg
 
பஞ்ச ரதங்கள் : மகாபாரத்தில் வரும் பஞ்ச பாண்டவர்களையும் அவர்களின் மனைவியான திரௌபதியையும் குறிக்கும் விதமாக இந்த ஐந்து சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன. இந்த ரதங்கள் ஒவ்வொன்றும் தர்மராஜா ராஜா ரதம், பீமன் ரதம், அர்ஜுனன் ரதம், நகுல சகாதேவன் ரதம் மற்றும் திரௌபதி ரதம் என அழைக்கப்படுகின்றன.
 
பஞ்ச ரதங்கள் : இவை பார்பதற்கு கோயில்கள் போல தோன்றினாலும் உண்மையில் இக்கோயில் கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே பல்லவ அரசன் முதலாம் நரசிம்மவர்மன் இறந்துவிட்டதால் கட்டுமானப்பணிகள் கைவிடப்பட்டது. ஆயிரம் வருடங்கள் கடந்தும் இன்றும் கட்டிமுடிக்கப்படாமலேயே இந்த பஞ்ச ரத சிற்பங்கள் இருக்கின்றன.
20-1440069451-24.jpg
வராக குகை கோயில்கள் : பஞ்ச ரதங்கள் மற்றும் கடற்கரை கோயில் அமைந்திருக்கும் இடத்தில் இருந்து நான்கு கி.மீ தொலைவில் இருக்கிறது பல்லவர்களின் புகழ்பெற்ற குடைவரை கோயிலான வராக குகை கோயில்கள். மற்ற இரண்டு இடங்களை போலவே ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த குகைகள் பண்டைய கால விஸ்வகர்மா ஸ்தபதிகளின் திறமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.
20-1440069391-14.jpg
வராக குகை கோயில்கள் : இங்குள்ள குகையில் அத்தனை தற்செயலாக தோற்றமளிக்கும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இங்கே வராக பகவான் பூமா தேவியை தன் கொம்புகளில் தூக்கி வைத்துக்கொண்டு இருப்பது போன்ற சிற்பம் நம்மை நிச்சயம் பிரம்மிப்பில் ஆழ்த்தும்.
 
20-1440069457-25.jpg
 
கடற்கரை : இந்த கோயில்களை தாண்டி மாமல்லபுரத்தில் அற்புதமான அசுத்தம் இல்லாத கடற்கரை ஒன்றும் இருக்கிறது. இந்த கடற்கரையை ஒட்டி சுவையான கடல் உணவுகள் கிடைக்கும் உணவகங்கள் இருக்கின்றன. வார விடுமுறையில் வர இந்த மாமல்லபுரம் மிகச்சிறந்த இடமாகும்.
21-1440134644-9.jpg
அர்ஜுனன் தபசு பாறை : மாமல்லபுரத்தில் பஞ்ச ரத சிற்பங்களுக்கு அருகில் இருக்கும் 43அடி உயரம் கொண்ட திறந்தவெளி பாறை புடைப்பு சித்திரங்கள் தான் அர்ஜுனன் தபசு பாறைகள் என்று அழைக்கப்படுகின்றன. இரண்டு பகுதிகளாக இருக்கும் இந்த சித்திரங்களில் புராண கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கின்றன.
21-1440134638-6.jpg
அர்ஜுனன் தபசு பாறை : இந்த பாறை சித்திரங்களின் ஒரு பகுதியில் அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் வேண்டி தவம் செய்யும் காட்சியும் மற்றுமொரு பகுதியில் பகீரத மன்னன் புனித நதியான கங்கையை பூமிக்கு வரவழைக்க வேண்டி தவம் செய்யும் காட்சியும் வடிக்கப்பட்டிருக்கிறது.
 
Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/mamallapuram-the-great-city-pallavas-000514.html
  • தொடங்கியவர்
பிரித்தானிய அரச குடும்பத்தினர் தங்குவதற்கு அறை காலியில்லை எனக் கூறிய ஹோட்டல்
 

1546943.jpgபிரித்­தா­னிய முடிக்­கு­ரிய இள­வ­ரசர் வில்­லி­யமும் அவரின் குடும்­பத்­தி­னரும் தமது வாடிக்­கை­யா­ள­ராக வரு­வதை எவரும் மிகப் பெரு­மைக்­கு­ரி­ய­தாக கரு­துவர்.

 

ஆனால், இள­வ­ரசர் வில்­லி­யமின் குடும்­பத்­தினர் தங்­கு­வ­தற்கு தனது ஹோட்­டலில் அறைகள் இல்லை என பிரான்­ஸி­லுள்ள ஐந்து நட்­சத்­திர ஹோட்­ட­லொன்று தெரி­வித்­துள்­ளது. 

 

உத்­தி­யோ­க­பூர்வ வைப­வ­மொன்றில் பங்­கு­பற்­று­வ­தற்­காக, பிரான்ஸின் வட­பகு­தி­யி­லுள்ள ஏமீன்ஸ் நக­ருக்கு எதிர்­வரும் ஜூலை மாதம் தனது மனைவி கேட் மற்றும் பிள்­ளை­க­ளுடன் இள­வ­ரசர் விஜயம் செய்­ய­வுள்ளார். 

 

இதன்­போது இள­வ­ரசர் வில்­லி­யமின் குடும்­பத்­தினர் தங்­கு­வ­தற்கு ஏமீன்ஸ் நக­ரி­லுள்ள மெரோட் ஹோட்­டலில் அறை­களை முன்­பதி­வு­ செய்­வ­தற்கு பிரெஞ்சு வெளி­வி­வ­கார அமைச்­சினால் முயற்­சிக்­கப்­பட்­டது. எனினும், அறைகள் காலி­யில்லை என கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பதி­ல­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

 

மேற்­படி ஹோட்­டலில் 12 ஆடம்­பர அறைகள் உள்­ளன. இது குறித்து அந்த ஹோட்­டலின் முகா­மை­யா­ள­ரான ஒலிவர் வோல்ட்டி கூறு­கையில், “ஹோட்­டலில் எந்த வகை­யான அறைகள் உள்­ளன என எம்­மிடம் கேட்­கப்­பட்­டது. அனைத்து அறை­களும் நிறைந்­துள்­ளன என  நாம் தெளி­வாகக் கூறினோம்” என்றார்.

 

1546949.jpg

 

“இந்தக் கோரிக்கை எமக்கு மிக கௌர­வ­ம­ளிப்­ப­தாக நாம் கரு­து­கிறோம். அதே­வேளை அரச குடும்­பத்­தினர் தங்­கு­வ­தற்கு 4 அறை­களை இந்­த ­ஹோட்­டலில் பெற்­றுக்­கொள்ள முடி­யாது என்­பது பிரெஞ்சு வெளி­வி­வ­கார அமைச்­சுக்குத் தெரியும்.

 

இங்­குள்ள 12 அறை­களும் ஒரு வரு­ட­ கா­லத்­துக்கு பதி­வு ­செய்­யப்­பட்­டுள்­ளன” எனவும் ஒலிவர் வோல்ட்டி தெரி­வித்­துள்ளார். 

 

1916 ஆம் ஆண்டு, முதலாம் உலக யுத்­தத்­தின்­போது நடைபெற்ற சோம் சமரின் 100 ஆண்டு நினைவு தின நிகழ்வில் கலந்­து­கொள்­வ­தற்­கா­கவே ஜூலை முதலாம் திகதி எமீன்ஸ் நகருக்கு இளவரசர் வில்லியம் விஜயம் செய்யவுள்ளார்.

 

அங்கு சுமார் 153,000 மக்கள் வசிக்கின்றனர். அந் நகரிலுள்ள ஹோட்டல்களில் மொத்தமாக 800 படுக்கைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

metronews.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தன்னை காப்பாற்றியவரை 5 ஆயிரம் மைல் பயணித்து பார்க்க வரும் பென்குயின்! (வீடியோ)

 

பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் அன்றையை தினம் கடலில்  அலைகளின் வேகம் அதிகமாக இருந்தது. ஏராளமான பென்குயின்கள் நீந்த முடியாமல் திணறின. ஆண் பென்குயின் ஒன்று  கடற்பாறையில் சிக்கிக் கொண்டு தவித்தது. அதனை பார்த்த  ஜோ ஃபெரைரா என்ற மீனவர் பென்குயினை பாறை இடுக்கில் இருந்து மீட்டு வீட்டுக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்து உயிர் பிழைக்க வைத்தார். அதற்கு 'டின்டிம் ' என்றும் பெயர் சூட்டினார்.
     

டின்டிமின் உடல் பகுதியில் இருந்த அழுக்கு படிமங்களை அகற்றி வீட்டில் வைத்தே பராமரித்தார் ஜோ.  கடலில் நீந்தும் அளவுக்கு டின்டிமின் உடல்நிலை முன்னேற்றம் கண்டதும், ஜோ மீண்டும் அதனை கடலில் கொண்டு போய்  விட்டார். கடந்த 2011ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றது. டின்டிம் கடலுக்கு திரும்பி சில மாதங்கள் ஆகியிருக்கும்.

ஒரு நாள் ரியோடி ஜெனிரோ அருகில் அந்த மீனவர் வசிக்கும் தீவுக்கு டின்டிம் மீண்டும் வந்தது. வந்ததுடன் நிற்கவில்லை . நேரே... ஜோவின் வீட்டை கண்டுபிடித்து அவர் முன் போய் நின்றது. ஜோவுக்கோ தன் கண்களையே நம்பவே முடியவில்லை. இது எப்படி நம்ம வீட்டை கண்டுபிடித்தது வந்தது என்று ஒரே ஆச்சரியம்.  இருவரும் ஆரத்தழுவிக் கொண்டனர். கண்களால் குசலம் விசாரித்துக் கொண்டனர். அந்த சந்திப்புக்கு பின், டின்டிம் ஜோவுடனேயே தங்கி விட்டது.

இனப் பெருக்கத்திற்காக மட்டும் அர்ஜென்டினா, சிலி நாடுகளுக்கு டின்டின் செல்லும். இனபெருக்கம் முடிந்தவுடன் அங்கிருந்து 5 ஆயிரம் மைல்  பயணித்து மீண்டும் ஜோவிடம் வந்து சேர்ந்ந்து கொள்ளும்.

இந்த அதிசய நிகழ்வு குறித்து  ஜோ கூறுகையில், '' டின்டிம் எங்கேயிருந்தாலும் ஒவ்வொரு  ஜூன் மாதமும் என்னிடம் வந்து  விடும். பிப்ரவரியில் இனப்பெருக்க சமயத்தில் மட்டும்தான் என்னை விட்டு பிரிந்து செல்லும். ஒவ்வொருமுறையும் டின்டிம் இனிமேல் திரும்ப வராது  என எனது நண்பர்கள் சொல்வார்கள். என்னோட டின்டிம் ஒவ்வொரு முறையும் எனது நண்பர்களின் கருத்தை  பொய்யாக்கி விடுகிறது ''என சிலாகிக்கிறார் .

சக உயிர்கள் மீது வைக்கும் காதலும் அன்பும் பரிவும்தானே உயிர்களை உயிர்ப்புடன் ஓட வைக்கிறது!
vikatan

  • தொடங்கியவர்

10575263_999643803417647_166907293330339

இலங்கை கிரிக்கெட் அணியின் மாயாஜால சுழல்பந்து வீச்சாளர் அஜந்த மென்டிஸ் பிறந்தநாள்.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை குறைந்தளவு போட்டிகளில் வீழ்த்திய சாதனை அஜந்த மென்டிசிடமே இன்னும் இருக்கிறது.

Happy Birthday Ajantha Mendis

  • தொடங்கியவர்

எலி வேட்டை : மட்டக்களப்பு மாணவி புதிய கண்டுபிடிப்பு

( சசி)

மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும்  மாணவி புதிய கண்டுபிடிப்பு ஒன்றினை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

 

12825674_1275479885813302_2051721646_n.g

என்சளிட்டா என்னும் மாணவி ஒரே தடவையில் அதிகமான எலிகளை வேட்டையாடும் எலிப்பொறியொன்றை கண்டுபிடித்துள்ளார்.

இதன் மூலம் எலி பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என  அம் மாணவி தெரிவித்துள்ளார் .

12825383_1275479872479970_1942804743_n.g

இந்த இயந்திரமானது எவ்வித செலவுகளுமில்லாத, பாவனைக்கு உதவாத கழிவுப்  பொருட்கள் மூலமே தயாரிக்கப்பட்டுள்ளது .

 

குறித்த மாணவி தனது கண்டுபிடிப்பின் மூலம்  மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற  கண்காட்சியில் இரண்டாம் இடத்தினையும் மட்டக்களப்பில் இடம்பெற்ற போட்டியில் முதலாம்  இடத்தையும் பெற்றுள்ளார்.

12784301_1275480129146611_1562378854_n-_

அண்மைக் காலமாக  எலிக்காச்சல் மூலம் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்ட நிலையில் இச் சிறுமியின் கண்டுபிடிப்பின் மூலம் பல எலிகளை வேட்டையாட முடியும் என பலர்  தெரிவித்துள்ளார் .

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

நீருக்கு அடியில் சென்று அதிரடியாக மீனை பிடித்து செல்லும் கழுகு

  • தொடங்கியவர்

12802831_999646290084065_530859120023791

நீரிழிவு நோயெதிர்ப்பு சிதைநொதியைக் கண்டுபிடித்த சேர். அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் அவர்களின் நினைவு தினம்.

பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானி அலெக் ஸாண்டர் ஃப்பௌமிங் இதன் மூலம் நோபெல் பரிசையும் வென்றெடுத்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.