Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்!

 
 
 
மார்ச் 18 உலக தூக்க தினம்#

 

டைசியாக இரவு 9 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது என உங்களுக்கு நினைவிருக்கிறதா?p36b.jpg கடந்த 20 ஆண்டுகளில் நாம் தூங்கச்செல்லும் நேரத்தின் சராசரி அளவு தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதைக் கவனித் திருக்கிறீர்களா?

8 மணிக்குள் இரவு உணவு முடித்து, 8:30-க்கு வெளிச்சம் அணைத்து, பேசிக்கொண்டே படுக்கையில் விழுந்தால் 9 மணிக்குள் உறங்கிப்போவோம். அது ஒரு காலம். 9 மணித் தூக்கம் 10 மணியாகி, நள்ளிரவாகி, இப்போது அதிகாலை வரை வந்துவிட்டது. அதிகாலை 3 மணி, 4 மணி வரைகூட விழித்திருக்கிறார்கள். இரவு வேலையின் காரணமாக கண் விழிப்பது, என்றோ ஒருநாள் தூக்கம் வராமல் இப்படி ஆவது... என்பது எல்லாம் தனி. எந்த உடனடி காரணமும் இல்லாமல் தொடர்ந்து இரவுகளில் கண் விழிப்போர் பெருகிக்கொண்டிருக்கின்றனர். இதன் விளைவுதான், இந்த 20 ஆண்டுகளில் புதிது புதிதாகப் பெருகிப் பெருக்கெடுக்கும் நோய்கள். இரவுத் தூக்கம் தள்ளிப்போவதற்கும், நோய்களின் வருகைக்கும் நேரடித் தொடர்பு உண்டு. தவறான வாழ்வியல்முறைகளால் ஏற்படும் உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய், இதயநோய் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது.

நம் இரவுத் தூக்கம் எதனால் தள்ளிப்போகிறது...நமக்கு ஏன் தூக்கம் வருவதில்லை? இதற்கு `நமது உடல் பிரச்னைகள், மனக் கவலைகள்தான் காரணம்' என நினைக்கிறோம். இது முழு உண்மை அல்ல.

உண்மையில் நாம் உறக்கத்தைத் தள்ளிப்போடும் ஒவ்வொரு நிமிடத்திலும், பல நிறுவனங்கள் பல கோடிகளுக்கு வருமானம் பார்க்க ஆரம்பித்து விட்டன. இரவுச் சந்தையில்தான் இப்போது நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு `கோடி’கள் புரள்கின்றன. இரவுச் சந்தை என்பது, முழுக்க முழுக்க டிஜிட்டல் சந்தை. டிஜிட்டல் பொருட்களை நாம் சரியாக அணுகத் தெரியாமல் தடுமாறுவதையே வியாபாரம் ஆக்கிவருகிறார்கள்.

p36a.jpg

அதிகரித்துவரும் `காஸ்ட் ஆஃப் லிவிங்' மற்றும் குடும்பக் கடமைகளைச் சமாளிக்க, தனக்குப் பிடிக்காத வேலைகளையும் செய்தாக வேண்டும். அதுவும் தொழிலாளர் சட்டத்தை மதித்து 8 மணி நேர வேலை எல்லாம் கிடையாது. குறைந்தது 10 மணி நேரம் உழைக்க வேண்டும். அதில் டார்கெட்டை எட்டிப்பிடிக்க வேண்டும். மனஉளைச்சல் தரும் இந்த வேலையைச் செய்து விட்டு, வெளியே வந்தால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டும். சோர்வுடன் வீட்டுக்கு வந்து விழுந்ததுமே டி.வி-யை ஆன் செய்து விடுகிறார்கள். அந்த மாய உலகத்தில் விரியும் வண்ண வண்ணக் காட்சிகளில் மனம் மயங்குகின்றனர்.

முன்னர் எல்லாம் மாலை 6 முதல் 8 மணி வரை ப்ரைம் டைம். அதிகபட்சம் இரவு 10 மணி வரைதான் நிகழ்ச்சிகள் இருக்கும். அதற்குப் பிறகு பாடல்கள்தான் ஓடும். ஆனால் இப்போது ப்ரைம் டைம் என்பது, இரவு 11:30 மணி வரை நீண்டுவிட்டது. லேகிய வியாபாரிகளும், ஆண்மையை அதிகரிக்க குறிசொல்லும் போலி மருத்துவர்களின் பிரசாரங்களும் டி.வி-யை மொய்க்க ஆரம்பித்துவிட்டன. இரவு நீண்டநேரம் விழித்திருப்பவர்கள்தான் இவர்களின் டார்கெட்.

இளம்வயதினர் மட்டுமின்றி, பலரும் ஸ்மார்ட்போனில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என மூழ்க ஆரம்பித்துவிடுகிறார்கள். சமூக வலை தளங்கள் எனும் உலகத்துக்குச் சென்றுவிட்டால் அங்கு அதற்கான வேடம் தரித்து பலர் பிஸியாகிவிடுகிறார்கள். முன்னர் எல்லாம் இரவு உணவு முடித்ததும் திண்ணையில் ஓரிரு மணி நேரம் நண்பர்களோடு உட்கார்ந்து பேசிவிட்டே உறங்கச் செல்வார்கள். வீட்டுத் திண்ணை வாட்ஸ்அப் ஆனது. வாட்ஸ்அப் உரையாடலில் நேரம் போவதே தெரிவதில்லை.

சொந்த வீட்டில் இருப்பவர்களுடன்கூட, வீட்டில் இருந்துகொண்டே சமூக வலைதளங் களின் வழியே தொடர்புகொள்பவர்களும் இருக்கிறார்கள். தினமும் நள்ளிரவைத் தாண்டிய சாட்டிங்குக்குப் பிறகு `குட்மார்னிங்' சொல்லி விட்டுத்தான் படுக்கைக்குச் செல்கிறார்கள்.

11 மணிக்கு மேல் ஃபிளிப்கார்ட், அமேஸான் என ஆன்லைன் தளங்களில் ஷாப்பிங் செய்வது பலரின் பொழுதுபோக்காக மாறிக் கொண்டிருக்கிறது. நள்ளிரவு நேரங்களில் தான் பல ஆயிரங்களில் பணப்பரிவர்த்தனைகள் நடக்கின்றன.

இரவு உறங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென எழுந்து, `ஃபேஸ்புக்கில் போட்ட போட்டோவுக்கு எத்தனை லைக்ஸ், வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்திருக்கிறதா?' என அடிக்கடி செக் செய்து கொண்டே இருப்பதை `கம்பல்சிவ் பிஹேவியர்' எனச் சொல்லும் ஒருவகையான மன நலப் பிரச்னை என்றும், `கண்டிஷனல் இன்சோம்னியா' எனும் தூக்கமின்மை நோய் என்றும் மருத்துவர்கள் சொல்கிறார்கள். பலர் தினமும் காலையில் விழித்து எழுந்ததும் செய்யும் முதல் வேலை என்ன? தலையணை அருகே இருக்கும் மொபைலை எடுத்து இன்டர்நெட்டை ஆன் செய்து, வாட்ஸ்அப்பில் ஏதேனும் மெசேஜ் வந்திருக்கிறதா எனப் பார்ப்பதுதான். நாம் எவ்வளவு தூரம் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகிவருகிறோம் என்பதை உடனடியாக உணரவேண்டிய தருணம் இது.

p36c.jpg

டி.வி., சமூக வலைதளங்கள் ஆகியவற்றையும் தாண்டி இன்னொரு குரூப் இருக்கிறது. வேறு என்ன தமிழகத்தையே குடிகாரக் கூட்டமாக்கி வைத்திருக்கும் அரசின் டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு, நள்ளிரவைத் தாண்டி வீட்டுக்கு வருபவர்கள்தான். மது அருந்தினால் ஒருவித போதை மயக்கம்தான் வருமே தவிர, தூக்கம் வராது. கையில் காசு கம்மியாக இருந்தால் டாஸ்மாக், கொஞ்சம் எக்ஸ்ட்ரா இருந்தால் உயர்ரக பார், அல்ட்ரா லெவல் பணம் இருந்தால் பப், நைட் பார்ட்டி, பீச் ஹவுஸ் என இரவு கேளிக்கைக்குப் பஞ்சம் இல்லை.

டி.வி., ஸ்மார்ட்போன், மது, சினிமா என ஏதாவது ஒன்றுக்கு அடிமையாகாதவர்கள் சொற்பமாகத் தான் இருக்கிறார்கள். நாம் எல்லோருமே இரவில்தான் ஆட்டம் போடுகிறோம். பொழுதை உற்சாகமாகக் கழிக்க ஆரம்பித்திருக்கிறோம். அமெரிக்கா போன்ற சில நாடுகளில் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசமே இருக்காது. 24 மணி நேரமும் அங்கு கடைகள் திறந்தே இருக்கும். அதேபோல தூக்கமின்மை தொடர்பான `இன்சோம்னியா' போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் அங்கே அதிகம். இந்த நோய்கள் இப்போது நமக்கும் வர ஆரம்பித்துவிட்டன.

இரவுத் தூக்கம் தடைபடுவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, தூக்க சிறப்பு நிபுணர் ராமகிருஷ்ணனிடம் கேட்டேன்.

p36d.jpg

``நமது உடலுக்குள் மனசுழற்சிக் கடிகாரம் இருக்கிறது. பொதுவாக சூரிய உதயத்தின்போது எழுந்து உற்சாகமாக வேலைசெய்வதும், சூரியன் மறைந்த பின்னர் இரவு உணவை முடித்துவிட்டு உறங்கச் செல்வதும்தான் இயற்கையோடு இயைந்த வாழ்வு. ஏன் நாம் சூரிய வெளிச்சத்தில் மட்டும் இயங்க வேண்டும் என்பதற்கு அறிவியல் விளக்கமும் உண்டு. சூரியன் மறைந்த பிறகு, இருட்டு நேரத்தில்தான் மெலட்டோனின் முதலான பல ஹார்மோன்கள் நமது உடலில் சீராகச் சுரக்கும். நாம் இரவு நேரத்தில் உடலுக்கு ஓய்வு தந்து உறங்கும் போதுதான் மெட்டபாலிசம் எனும் வளர்சிதை மாற்றம் உடலில் சீராக நடக்கும். நமது உடல் வளர்ச்சிக்குத் தேவையான குரோத் ஹார்மோன், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டீரான் போன்ற  பிரத்யேக செக்ஸ் ஹார் மோன்கள் சமச்சீராகச் சுரக்கும். முறையற்ற இரவுத் தூக்கத்தால் ஹார்மோன்கள் சீராக உற்பத்திசெய்யப் படாமல் பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. கடந்த சில வருடங்களாக குழந்தைப் பேறின்மை பிரச்னை இளம் தம்பதிகளிடம் அதிகரித்துவருகிறது. பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, ஆண்களுக்கு விந்தணுக்களின் வீரியம் குறைவு ஆகியவற்றுக்கு, முறையற்ற இரவுத் தூக்கமே முக்கியக் காரணம்.

ஒழுங்கற்ற தூக்கத்தால் பயம், பதற்றம், சோர்வு ஆகியவை வருகின்றன. மனநலன் சார்ந்த பல பிரச்னைகள் வருவதற்கும் இதுதான் காரணம். இரவு நெடுநேரம் கழித்து உறங்குவதாலும், போதுமான நேரம் தூங்காததாலும், ஆழ்நிலை தூக்கம் அடையாமல் மேம்போக்காகத் தூங்கு வதாலும் மெள்ள மெள்ள உடற்பருமன், சர்க்கரை நோய், குறிப்பாக ரத்த அழுத்தம், ஸ்ட்ரோக் ஆகியவை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

எல்லோராலும் இயல்பாக உடனடியாகத் தூங்கிவிட முடிவதில்லை. ஒவ்வொருவருக்கும் தூக்கம் தடைபடுவதற்கு வெவ்வேறு காரணிகள் இருக்கின்றன. பொதுவாக, தூக்கத்தைப் பாதிக்கும் காரணி வெளிச்சம்தான். இருள்தான் மனிதர்களுக்குத் தூக்கத்தைத் தூண்டும். அதனால்தான் வெளிச்சத்தை அணைத்துவிட்டுத் தூங்குகிறோம். சமீப ஆண்டுகளாக இரவிலும் வெளிச்சம் கண்களைப் பறிக்கிறது. வீதிகளில் மட்டும் அல்ல, வீட்டுக்குள்ளும் இரவு வெளிச்சம் அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிட்டது. ஒரு காலத்தில் மின்சார விளக்கு மட்டும்தான் நமக்கு இரவு வெளிச்சம். பிறகு டி.வி வந்தது, கம்ப்யூட்டர், செல்போன், லேப்டாப், டேப்லெட் எல்லாம் வந்துவிட்டன. அனைத்தும் அதிஉயர் வெளிச்சத்தை உமிழ்கின்றன. இதனால் நமது தூக்கம் தள்ளிப்போகிறது. 

p36e.jpg

சென்னை போன்ற பெரு நகரங்களில் காலை 7 மணிக்குக் கிளம்பி ஆபீஸ் சென்றுவிட்டு, இரவு 7 மணிக்குத்தான் வீடு திரும்புகிறார்கள். பெரும்பாலான ஆபீஸ்களில் ஏ.சி போட்டு வைத்திருப்ப தால், ஜன்னல்களை அடைத்து விடுகிறார்கள். எது இரவு, எது பகல் எனத் தெரியாத செயற்கை விளக்கு வெளிச்சத்தில்தான் பலரும் வேலைசெய்கிறார்கள். நாம் வெப்ப மண்டலப் பகுதியில் வாழ்கிறோம். ஆனால், சமீப ஆண்டுகளாக நமக்கே விட்டமின்-டி குறைபாடு வர ஆரம்பித்துள்ளது. காரணம், சூரிய ஒளியே உடலில் படாமல் வாழ ஆரம்பித்திருப்பதுதான். இரவு வீட்டுக்கு வந்தவுடன், வீட்டில் பளிச் வெளிச்சம் தரும் விளக்குகளைத் தவிர்த்து வெளிச்சம் குறைந்த விளக்குகளைப் பயன் படுத்துங்கள். அரை மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு மேல் டி.வி., லேப்டாப் பார்க்காதீர்கள். மொபைல் வெளிச்சம் தூக்கத்துக்குக் கடும் எதிரி. பலர் அறை விளக்குகளை அணைத்துவிட்டு மொபைலில் நோண்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். கண்களுக்கு அருகில் வைத்து மொபைலைப் பயன்படுத்தும் போது, அந்த வெளிச்சம் நமது கண்களையும் மூளையையும் பாதிக்கும்; தூக்கத்தைத் தாமதப்படுத்தும். ஒவ்வொருவருக்கும் வேலை நேரம் என்பது வித்தியாசப்படும். வேலைக்கு ஏற்ப தங்களது வாழ்வியல்முறையை ஆரோக்கியமான வகையில் மாற்றிக்கொண்டால் பிரச்னை வராது.

பொதுவாக இரவு 9 முதல் 11 மணிக்குள் உறங்குவதும். காலை ஐந்து முதல் ஏழு மணிக்குள் எழுவதும்தான் சிறந்தது. அதிகத் தூக்கம் எப்படி ஆபத்தோ, அதுபோல குறைந்த தூக்கமும் ஆபத்தானது. இரவு தாமதமாக உறங்கினாலும் காலையில் அலாரம் வைத்து சீக்கிரமாக எழுந்துவிடுவது தவறு. அனைவருக்கும் ஆறு மணி முதல் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம் என்கிறார் ராமகிருஷ்ணன்.

p36g.jpg

நாம் அவசியம் நன்றாகத் தூங்கியே ஆக வேண்டும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம். நேர மேலாண்மையைச் சரியாகக் கையாளத் தெரியாதவர்கள் தடுமாறுகிறார்கள். நண்பர்களுக்கு, மொபைலுக்கு, டி.வி-க்கு என நேரம் ஒதுக்குவதில் தவறு இல்லை. உங்கள் உடலுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.

லைட்ஸ் ஆஃப் ப்ளீஸ்!


நைட் ஷிஃப்ட் - கவனிக்க

p36f.jpg

பி.பி.ஓ மட்டுமின்றி, பல்வேறு துறைகளிலும் 24 மணி நேரம் இயங்கும் அலுவலகங்கள் இருக்கின்றன. நைட் ஷிஃப்ட் வேலைக்குச் செல்லும் பலருக்கு, தூக்கம் மிகப் பெரிய பிரச்னை. இவர்கள் வாழ்வியல்முறையை மாற்றிக்கொள்வது அவசியம். உங்களின் உலகம் வேறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு இரவு என்பது உங்களுக்கு காலை நேரம்; மற்றவர்களுக்கு நள்ளிரவு என்பது உங்களுக்கு பகல்; மற்றவர்களுக்கு காலை என்பது உங்களுக்கு மாலை; மற்றவர்களுக்கு பகல் என்பது உங்களுக்கு இரவு. இந்தச் சுழற்சியைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப உணவு சாப்பிடும் முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். மாலை வேலைக்குச் செல்லும்போது வழக்கமாக காலை சாப்பிடும் உணவுகளையும், அலுவலகத்தில் நள்ளிரவு உணவு இடைவேளையில் வழக்கமாக மதியம் சாப்பிடும் லன்ச் உணவுகளைச் சாப்பிட வேண்டும். காலை நேரத்தில் வீட்டுக்கு வந்தவுடன் காபி, டீ போன்றவற்றைத் தவிர்த்து இரவு சாப்பிடும் உணவுகளைச் சாப்பிட்டுவிட்டு, படுக்கையறைக்குச் சென்று ஜன்னல்களைப் பூட்டி, அறையில் சூரிய வெளிச்சம் வருவதைத் தடுத்து, அறையை இருட்டாக்கி உறங்கி, மதியத்துக்கு மேல் எழ வேண்டும். வாழ்வியல்முறைகளை மாற்றியும் பலன் இல்லை எனில், இரவு வேலையைத் தவிர்ப்பதுதான் சிறந்த வழி!


பகல் தூக்கம் தவறா?

இரவுத் தூக்கம் போதுமான அளவில் இல்லாத பலரும், காலையில் தாமதமாக எழுவார்கள். அவர்களில் அநேகர், காலை உணவைத் தவிர்த்துவிடுகிறார்கள். விளைவு, மதிய உணவை வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு தூங்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இது தவறு. காலையில் ஆறு, ஏழு மணிக்கெல்லாம் எழுந்து வேலைக்குச் சென்று மிகுந்த உடல் உழைப்பு செய்பவர்களுக்கு மதியம் கொஞ்சம் நேரம் ஓய்வு தேவைப்படும். ஆனால், வேண்டும் என்றே இரவுத் தூக்கத்தைத் தாமதப்படுத்திவிட்டு, உடல் உழைப்பும் இன்றி தினமும் மதியம் தூக்கம்போட்டால் உடல்பருமன்தான் மிஞ்சும்.  

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
23 minutes ago, suvy said:

இருவர் மட்டும்தான்....!

விரும்பினால் அந்த இடத்துக்கு என்னைக் கூட்டிப் போகவும். அந்த இருவரை மட்டும் அழைத்து வரவும் ,நான் படமெடுத்துக் காட்டுகின்றேன்....!  tw_blush:

சுவிஸையும் பார்த்திட்டு வருவம்...!

அவர்கள் இருவரும் பெற்றோர்களுடன்தான் வருவார்களாம்.

  • தொடங்கியவர்

300 ஆண்டுகள் பழமை : கண்டுபிடித்தவருக்கு  4.5 கோடி ரூபா பரிசு 

300 ஆண்டுகளுக்கு முந்தைய கணிதப் புதிர் ஒன்றிற்கு விடை கண்டுபிடித்த இங்கிலாந்து பேராசிரியருக்கு, நோர்வே நாட்டு அறிவியல் அக்கடமி ரூபா 4.5 கோடியை பரிசாக வழங்கவுள்ளது. 

Fermat_s-Last-Theo_3595243b.jpg

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கணிதப் புதிர் ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால், அதற்கு யாராலும் விடை காண இயலவில்லை. 

தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகளாக அந்தக் கணிதப் புதிருக்கு விடை தேடப்பட்டு வந்தது. குறித்த கணித புதிருக்கு விடை கண்டு பிடித்தால் பரிசு வழங்கப்படும் என்று 1994 ஆம் ஆண்டு நோர்வே நாட்டு அறிவியல் அக்கடமி அறிவித்திருந்தது. 

Professor.gif

இந்நிலையில், இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ வில்ஸ், குறித்த புதிருக்கான விடையைக் கண்டுபிடித்துள்ளார். 

இந்நிலையில்,  நோர்வே நாட்டு அறிவியல் அக்கடமி அறிவித்தபடி, பேராசிரியருக்கு 4.5 கோடி ரூபா பரிசு வழங்க முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/4324

  • தொடங்கியவர்

நியூஸ் கஃபே!

 
 

tip_vc3.jpg

 ஓலா நிறுவனம்,  இயற்கை எரிவாயுவில் இயங்கக்கூடிய 5000 கார்களை டெல்லியில் அறிமுகப்படுத்த உள்ளது. டெல்லியில் டீசல் கார்களுக்கு தடை இருப்பதால் சிஎன்ஜி கார்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. 5000 கார்களை அடுத்த ஆறு மாதங்களில் இயக்க உள்ளதால், அதற்காக ரூ.200 கோடி நிதி திரட்ட உள்ளது. டெல்லியில் டீசல் கார்களை இயக்கக் கூடாது என நீதிமன்றம் அறிவித்த பிறகு, டாக்ஸி நிறுவனங்கள் டீசல் கார்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என முறையீடு செய்தது. ஆப் மூலமாகவும் டாக்ஸி நிறுவனங்கள் மார்ச் 1-ம் தேதிக்கு பிறகு டீசல் கார்களை இயக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளது.

tip_vc5.jpg


பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா. வடகொரியாவில் இருந்து ஜப்பான் வரை பாயும் திறன் கொண்டது இந்த ஏவுகணை

tip_vc7.jpg



80% க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஆன்டிபயாட்டிக் மற்றும் பெயின் கில்லர் என பரிந்துரைப்பது தடைசெய்யப்பட்ட மருந்துகளே என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது. இதை 60% க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் வரவேற்றுள்ளனர்.

tip_vc2.jpg



இ-கார்மஸ் துறையில் முன்னணியில் இருக்கும் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் சிஇஒ பின்னி பென்சலின் இ-மெயில் முடக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நிறுவனத்தின் சி எஃப்ஒவின் மெயிலுக்கு 80 ஆயிரம் டாலர்களை டிரன்ஸ்பர் செய்ய வேண்டும் எனவும் மெயில் வந்துள்ளது. இது குறித்து சைபர் க்ரைம் போலீஸ் விசாரணை நடத்தியதில் அந்த மெயில் போலியான முகவரியிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. அந்த மெயில் ஹாங்காங், கனடா சர்வர்களை ரஷ்யாவில் இயக்கி உள்ளதாகவும், சைபர் க்ரைம் போலீஸ் தெரிவித்துள்ளது.

tip_vc1.jpg

இங்கிலாந்தில் உள்ள பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோன் ஆப் ஆர்க்கின் 600 வருடம் பழமை வாய்ந்த மோதிரம் மீண்டும் பிரான்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது . இது பிரான்ஸ் நாட்டில் 15-ம் நூற்றாண்டில் நான்கு லட்சம் டாலர்கள் கொடுத்து இங்கிலாந்து அரசால் ஏலத்தில் எடுக்கப்பட்ட மோதிரம் என்பது குறிப்பிடத்தக்கது

tip_vc4.jpg



கோல்டு பாண்ட் திட்டத்தின் மூலமாக இந்த நிதியாண்டில் ரூ.15,000 கோடி திரட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் 9 சதவிகித அளவுக்குத்தான் பாண்டுகளை விற்பனை செய்ய முடிந்தது. அதன் மதிப்பு ரூ.1400 கோடியாகும். இதுவரை மொத்தம் மூன்று முறை பாண்டுகளை மத்திய அரசு விற்பனை செய்தது. 2015 நவம்பர் மாதத்தில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது ரூ.246 கோடி அளவுக்கும், 2016 ஜனவரி மாதத்தில் ரூ.798 கோடிக்கும், மார்ச் மாதத்தில் ரூ.1050 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வெறும் ரூ.400 கோடிக்கு மட்டும்தான் முதலீடுகள் பெறப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் வாங்கப்படும் பாண்டுகளுக்கு 2.75 சதவிகிதம் வட்டி வழங்கப்படும். முதலீட்டுக் காலம் 8 ஆண்டுகள். தனிநபர் 2-500 கிராம் வரை வாங்க முடியும்.

tip_vc6.jpg


கார்த்திக் சுப்புராஜ் அப்பா 'கபாலி"யில் ரஜினியுடன் நடித்து இருக்கிறார். ஒருநாள் படப்பிடிப்பில் 'என்மகன் கார்த்திக் உங்களை மனசுலவச்சு ஒரு கதையை ரெடி பண்ணி இருக்கான். டைம் இருந்தா கேட்டு பாருங்க..." என்று ரஜினியிடம் சுப்புராஜ் சொல்லி இருக்கிறார். சில வாரத்துக்கு முன்பு செளர்ந்தயா மூலமாக ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து கதையைச் சொல்லி இருக்கிறார் கார்த்திக். அதன்பின் ரஜினியை பார்த்த சுப்புராஜிடம்,  கார்த்திக் கதையை பாராட்டி இருக்கிறார். அநேகமாக கார்த்திக் படத்தை '2.0' படப்பிடிப்பின் கேப்பில் கிடா வெட்டுவார் ரஜினி என்று சொல்கிறார்கள்

vikatan

  • தொடங்கியவர்
கிறிஸ் கெய்லுடன் சல்மானின் ராசியான ஹீரோயின் ட்ரிங்ஸ், டான்ஸ், பார்ட்டி
 

Salman's girl parties with Chris Gayle

இருபதுக்கு  20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்திய மகிழ்ச்சி கொண்டாட்டத்தின் போது  பொலிவுட் நடிகை ஸ்னேகா உல்லால் உடன்  இணைந்து  மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடிவீரர்  கிறிஸ் கெய்ல்   ஆட்டம் போட்டுள்ளார்.

chris-gayle-dwayne-bravo.jpg

இருபதுக்கு  20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்திய வெற்றி கொண்டாட்டத்தில் பிராவோவின் சாம்பியன் பாடலுக்கு மேற்கிந்திய வீரர்கள் அனைவரும் குத்தாட்டம் போட்டுள்ளனர். 

chris-gayle-1.jpg

இங்கிலாந்துக்கு எதிராக இடம்பெற்ற இருபதுக்கு  20 உலக கிண்ண கிரிக்கட்  போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்டவீரான கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டத்தால் மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது. 

cartoon_17_03_2016.jpg

இந்த கொண்டாட்டத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை  பாலிவுட் நடிகை ஸ்னேகா உல்லா மற்றும் பிராவோ தமது  டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.

CdkDFxOUEAAXsUg.jpg

  • தொடங்கியவர்

1501013_1004380552943972_129619852365168

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் லொயிட் பிறந்தநாள்.
பின்னாளில் பயிற்றுவிப்பாளராகவும் விளங்கியவர். தற்போது முன்னணி நேர்முக வர்ணனையாளராக இருக்கிறார்.

  • தொடங்கியவர்

பென்சிலால் ஓவியம் வரைந்து, அதற்கு பிரெஷ் கொண்டு வண்ணம் தீட்டுவது வழக்கம். ஆனால் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஐரிஸ் ஸ்காட், பேனா, பென்சில், பிரெஷ் எதுவுமே இல்லாமல் தன் விரல்களாலேயே வண்ணங்களைக் கொண்டு அழகான ஓவியங்களை உருவாக்கி 'வாவ்' என்று பாராட்டைப் பெற்றுவருகிறார். இவருடைய விரல் ஓவியங்கள் இணையத்தில் வைரல் ஹிட்.

12096631_692398337529378_805630770623991

1918936_692398334196045_3961908471547729

1917552_692398354196043_7412632319884379

10271544_692398400862705_711390032038191

10592664_692398390862706_389290967601460

10474447_692398410862704_629737519898587

1928747_692398460862699_6569166124108055

1936522_692398557529356_3398709757341845

1233377_692398584196020_3235240936255085

10565151_692398564196022_828934626724742

vikatan

  • தொடங்கியவர்
சமந்தாவின் அதிரடி முடிவு
 
 

article_1458204413-samantha.jpg

தமிழ்த் திரையுலகத்தில் இன்னும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் வரவில்லை என்றாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. 

தெறி திரைப்படமும், 24 திரைப்படமும் அடுத்தடுத்து வந்த பிறகுதான் சமந்தாவின் தமிழ் மார்க்கெட் எப்படி இருக்கும் என்பது தெரிய வரும். அவரது நடிப்பில் இதற்கு முன் தமிழில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களான அஞ்சான், 10 எண்றதுக்குள்ள ஆகிய இரண்டும் கொடுத்த தோல்வி சமந்தாவை நிறையவே யோசிக்க வைத்துவிட்டதாம்.

தமிழில் தனக்கு ராசி வொர்க் அவுட் ஆகுமோ ஆகாதோ என்ற எண்ணத்தில் தெலுங்கில் பல புதியத் திரைபடங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்து வருகிறாராம். 

அதோடு, ராகுல் ப்ரீத்தி சிங்கால் ஏற்படும் போட்டியைச் சமாளிக்க தனது சம்பளத்தையும் அதிரடியாகக் குறைத்துவிட்டாராம். 

தெலுங்கிலும் பிரம்மோற்சவம், அ ஆ ஆகியத் திரைப்படங்கள் அடுத்தடுத்து வர உள்ளதாம். மேலும் சில புதியத் திரைப்படங்களுக்கான பேச்சு வார்த்தைகளையும் ஆரம்பித்துவிட்டாராம். 

அதிரடியாக சம்பளத்தையும் குறைக்க சம்மதித்துவிட்டதால், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் சமந்தாவையே தங்களது திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யவும் முன்வந்துள்ளார்களாம்.

//www.tamilmirror.lk/

Edited by நவீனன்

1425558_10208253404469369_30031843860486

  • தொடங்கியவர்

5388_1004375156277845_198052142848290347

டீசல் இயந்திரத்தைக் கண்டுபிடித்த பொறியியலாளர் ருடோல்ப் டீசல் அவர்களின் ஜனன தினம்.

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

 

`பெண்கள், தங்கள் திருமணத்தை தாமதமாகச் செய்துகொள்ள முன்வந்திருப்பது நல்ல விஷயம். உறவுகள் நேரத்தைத் தீர்மானிப்பது இல்லை. உறவுகளைக் கைபிடிப்பதற்கும் கால அளவு கிடையாது. சரியான நபரைத் தேர்வுசெய்கிறோமா என்பதுதான் முக்கியம். அது நடந்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். என் தோழிகள் இருவருக்கும் வாழ்த்துகள்' என்று 40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டிருக்கும் ப்ரீத்தி ஜிந்தா, ஊர்மிளா இருவரையும் பாராட்டி ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார் சுஷ்மிதா சென்!

p20a.jpg

p20b.jpg

`நான் பிறந்தபோது, `மறுபடியும் பெண் குழந்தையா?’ என என்னை ஏற்றுக்கொள்ள வீட்டில் தயங்கினார்கள். என் அக்காவுக்கு முன் ஓர் ஆண் குழந்தை பிறந்து, அவனுக்கு என் பெற்றோர் `ஹீரோ’ எனப் பெயர் வைத்தார்கள். ஆனால், பிறந்த 10 நாட்களிலேயே அந்தக் குழந்தை இறந்துவிட்டது. என் அக்காவுக்குப் பிறகு நானும் பெண்ணாகப் பிறந்துவிட, என்னை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அதை எங்கள் உறவினர்களிடமும் அடிக்கடி என் பெற்றோர் சொல்வார்கள். அந்த வலிதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது’ என தனது வருத்தத்தைப் பதிவுசெய்திருக்கிறார் கங்கனா ரனாவத்!

p20c.jpg

நான்கு வருட இடைவெளிக்குப் பின்னர், மீண்டும் இயக்குநராகக் களம் இறங்கியிருக்கிறார் கரண் ஜோஹர். ‘ஏ தில் ஹை முஷ்கில்’ என்ற படத்தில் ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா ஷர்மா என பெரிய ஸ்டார் பட்டாளமே நடிக்கிறது. இந்து பையனுக்கும் முஸ்லிம் பெண்ணுக்கும் இடையிலான காதல் போராட்டம்தான் கதை. படம் அக்டோபர் ரிலீஸ்!

p20d.jpg

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி, இசையமைத்து, தயாரிக்கும் `99 சாங்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தன்னுடைய ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் வெளியிட, பத்திக்கிச்சு பட்டாசு. காற்றில் ஊஞ்சலாடும் பியானோவைப் பிடித்தபடி இரண்டு டான்ஸர்கள் அந்தரத்தில் நிற்கும்படியான அந்த பொயட்டிக் போஸ்டர், ஏகப்பட்ட எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது. 2017-ம் ஆண்டு இந்தியில் வெளியாகும் இந்தப் படத்தை, விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். ஹீரோ, ஹீரோயின்... சஸ்பென்ஸ்!

vikatan

  • தொடங்கியவர்

மனதின் ஆற்றல் !

12801181_1090881974303925_16001889738532

 

மனதின் ஆற்றல் குறித்து விவேகானந்தர் கூறுகையில் ''ஒரு கருத்தை எடுத்துக்கொள். அந்தக்
கருத்தையே உனது வாழ்க்கைமயம் ஆக்கு... அதையே கனவுகாண். அந்தக் கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா! மூளை, தசைகள், நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும்! அந்த நிலையில் மற்ற எல்லா கருத்துகளையும் தவிர்த்துவிடு!

வெற்றிக்கு இதுதான் வழி!

சிந்தனையின் தொண்ணூறு சதவீத ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே, தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்துகொண்டே போகிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ, மனமோ ஒருபோதும் தவறு செய்வதில்லை.’ கூறுகிறார்

  • தொடங்கியவர்

983649_1904207256472342_8013804368531468

ரகுவரன் நினைவு நாள் இன்று...!

We remember the great Raghuvaran on this day!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களுள் ஒருவரான ரகுவரனின் நினைவு நாள் இன்று. ரகுவரனின் நடிப்பும், வாய்ஸ் மாட்யூலேஷனும் இன்றுவரை இந்திய சினிமாவில் ஒரு பெஞ்ச்மார்க்காக கருதப்படுகிறது. ஒரு விஷயம் தெரியுமா? இசையில் ரகுவரனுக்கு அலாதி ஆர்வம். மனதில் தோன்றியதை பாடி பதிவு செய்திருக்கிறாராம்! மிஸ் யூ...!

 

 

 

‘‘ரகுவரன் ஜெயிக்கிறதும் இல்லை.. தோக்குறதும் இல்லை!’’- ரகுவரன் நினைவுநாள் பகிர்வு

 
 

2008 ஆம் ஆண்டு இதே மார்ச் 19 ஆம் நாள் தமிழ்த்திரையுலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி மறைந்தார் காலத்தால் மறக்க முடியாக் கலைஞர் ரகுவரன். அவருடைய நினைவாக  அவர் கொடுத்த பேட்டி ஒன்றைப் பகிர்கிறோம்..

ஆனந்தவிகடன் 21-02-2007 புத்தகத்திலிருந்து......

நா ன் சென்னைக்கு வந்த புதுசு. வடபழனியில ரோட்டை க்ராஸ் பண்றதுக்காக நிக்கிறேன். உடம்பு நடுக்கத்தோடு, சரியா கண்ணும் தெரியாத கிழவி, ‘ரோட்டைத் தாண்டி விட்ருப்பா’னு கையைப் பிடிக்குது. ரோட்டைத் தாண்டி விட்டுட்டுத் திரும்பி நடக்கும்போது, ‘யப்பா... பத்திரமா போப்பா’ன்னு சொல்லுது. எனக்குக் கோபம். ‘இதுவே இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்குற கேஸ். இது நம்மளை பத்திரமா போகச் சொல்லி அட்வைஸ் பண்ணுதே’ன்னு ஒரு சின்ன எரிச்சல். இப்ப அந்த நினைப்பு ஏனோ வருது. அன்னிக்கு அது ‘பத்திரமா போன்னு சொன்னது ரோட்ல இல்லை’னு இப்போ புரியுது. அனுபவஸ்தனோட ஒவ்வொரு வார்த்தைக்குள்ளேயும் ஒரு பூங்கொத்து இருக்கு... ஒரு கத்தி இருக்கு! எல்லாம் லேட்டாதான் புரியுது!’’ - சிகரெட் புகை வளையங்களுக்கு நடுவே புன்னகைக்கிறார் ரகுவரன். சினிமாவில் தொலைந்து போவதும், திரும்ப வருவதும் அவரே நடத்துகிற விருப்ப விளையாட்டு. ஆனால், தமிழ் சினிமா எப்போதும் தேடுகிற நிஜக் கலைஞன்.

p79d.jpg

‘‘எதுவோ என்னைப் பிடிச்சுக் கட்டி வைக்குது. அப்புறம் அதுவே என்னை அவிழ்த்தும் விடுது. ஒவ்வொ ருத்தனுக்கும் அவன்தான் பெரிய ரகசியம். காலையில கழுவிவிட்ட மாதிரி இருக்குற மனசு சாயங்காலமே சாக்கடை மாதிரி ஆயிடுது. நிரந்தரம்னு எதை நினைக்கிறீங்க நீங்க? மனசு சொல்றதை புத்தி கேட்கும்போதெல்லாம் நான் தொலைஞ்சு போயிருக்கேன். புத்தி சொல்றதை மனசு கேட்கும்போதெல்லாம் திரும்பி வந்திருக்கேன். இங்கே புத்திக்கும் மனசுக்கும்தான் போட்டி. மத்தபடி ரகுவரன் ஜெயிக்கிறதும் இல்லை... தோக்குறதும் இல்லை!’’ - ஒரு ஞானி போலச் சிரிக்கிறார் ரகுவரன்.

ஒரு இடைவெளிக்குப் பிறகு ‘தீபாவளி’, ‘பீமா’, ‘சிவாஜி’ என மனிதர் மறுபடி பரபரப்பாக இருக்கிறார்.

‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. திரும்பவும் வரிசையா படம் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களே?’’

‘‘நடிப்பு எனக்கு அலுக்கவே இல்லை. தெருத் தெருவா அலைஞ்சாலும் திரும்ப நிலைக்கு வர்ற தேர் மாதிரி, எங்கே போனாலும் சினிமாவுல தான் வந்து நிக்குறேன். எப்பவும் யாராவது போன் பண்ணிட்டே இருக்காங்க. ‘இந்த ரோலை நீங்கதான் சார் பண்ணணும்’னு சொல்லாம கொள்ளாம வீட்ல வந்து நிப்பாங்க. நான் வேணாம் வேணாம்னு ஓடுற தும், அவங்க விடாம துரத்துறதுமான இந்த விளையாட்டு பத்து வருஷமா நடந்துட்டு இருக்கு. ‘பார்த்தியா, எனக்கு எவ்ளோ தேடுதல் இருக்கு’னு பெருமையில, திமிர்ல இதைச் சொல் லலை. கலை ஒரு கட்டம் வரைக்கும்தான் அடையாளம். அப்புறம் அதுவே அனுபவமா மாறிடுது. அந்தச் சமயத்துல கேரக்டர்களை யோசிச்சு தேர்ந்தெடுப்போம். லவ்வர் மாதிரி, பெண்டாட்டி மாதிரி கேரக்டர் மேல ஒரு பிரியமே வந்துடும்.

அபூர்வமா சில பேர் கதை சொல்லும் போது, ‘அட, ஆமாம்ல... நாமதான் இதைப் பண்ணணும்’னு மனசு அதுவாவே விழுந்துடும். அந்த நிமிஷமே உள்ளே இருக்கிற நடிகன் ஸ்பாட்டுக்கு நடிக்கக் கிளம்பிடுவான். அப்படி ஒரு அனுபவம்தான் ‘பீமா’. ‘ரன்’ல நான் பார்த்த லிங்குசாமி இப்ப இல்லை. வேற மாதிரி வளர்ந்து நிக்கிறார். படத்துல என் கேரக்டர் பேரே ‘பெரியவர்’. அந்தப் பெரியவருக்கு சரியான சவால் விடுறார் விக்ரம். இவரும் நான் ‘உல்லாச’த்தில் பார்த்த விக்ரம் இல்லை. விக்ரமுக்குள்ளே இருக்குற நெருப்பு இன்னும் பெரிய உயரத்துக்கு அவரைக் கொண்டுபோகும். அப்புறம் ‘சிவாஜி’...’’

p79c.jpg

‘‘ ஆமா... ரஜினிக்கும் உங்களுக்கும் ரொம்ப நாள் ஃப்ரெண்ட்ஷிப் உண்டு. இப்ப ‘சிவாஜி’அனுபவம் எப்படி இருக்கு?’’

‘‘ரஜினி ரொம்ப அபூர்வம். பணம், புகழ், அதிகாரம் அதெல்லாம் இல்லை விஷயம்... எப்பவுமே அவர்கிட்ட ஒரு நிதானத்தை, அமைதியைப் பார்த்துட்டே வர்றேன். அதான் நான் தேடுறதும்! நீங்க உங்களுக்கே நேர்மையா இருக்கிறது இருக்கே, அது பெரிய சவால். ரஜினி அந்த சவால்ல ஜெயிச் சவர்.

ரொம்பப் பரபரப்பா தளும்பி நின்ன ரஜினியையும் நான் பார்த்திருக்கேன். இப்போ ‘சிவாஜி’யில் நான் சந்திச்சது இன்னும் பக்குவமான ரஜினி. ஆழ்கடல் மாதிரி அமைதியான ரஜினி. தெளிவா... தீர்க்கமா மாறியிருக் கார். அவர்கிட்டே மாறாத விஷயம் நடிப்பு மேல இருக்குற துடிப்பு. ‘ரகுதான் இதைப் பண்ணணும்’னு ‘சிவாஜி’க்கு அவர்தான் என்னைக் கூப்பிட்டார். ஷங்கர் நுணுக்கமா செதுக் குறார். படம் ரொம்பப் பிரமாண் டமா வரும். படத்தைப் பத்தி இன்னும் பேசணும்னா ரஜினியோ ஷங்கரோ தான் பேசணும். எனக்கு இவ்வளவுதான் அனுமதி’’ என்று புன்னகைக்கிறார் ரகுவரன்.

p79b.jpg‘‘நடிப்பு தவிர, ரஜினியையும் என்னையும் இணைக்கிற பாலம் ஆன்மிகம். கடவுள், தியானம், வாழ்க் கையைப் பற்றிய அவரோட பார்வை என்னை ஆச்சரியப்படுத்துது. எனக்கும் அவருக்கும் இடையில் புரிபடாத ஒரு அலைவரிசை இருந்துட்டேயிருக்கு. ரஜினியும் நானும் ஃபீல்டுக்கு வந்து 25 வருஷமாகுது. இந்த வாழ்க்கையில நான் நிறைய தவறவிட்டிருக்கேன். ஆனா, எதையும் தவறவிடாம உழைக்கிறதுதான் ரஜினியோட சீக்ரெட். அவரை வீழ்த்த வேறு ஆளே இல்லை. அவ ராகவே ரிட்டையர் ஆனாதான் உண்டு. அதுவரைக்கும் அவர்தான் மாஸ்... அவர்தான் பாஸ்!’’

‘‘சரி, உங்க பர்சனல் லைஃப் எப்படிப் போயிட்டிருக்கு?’’

‘‘அன்னிக்கு ஒரு நாள் ராத்திரி காரை எடுத்துட்டு மயிலாப்பூர் சாயிபாபா கோயிலுக்குப் போயிருந் தேன். வாசல்ல ஒரு வயசான கிழவர் அழுக்கா படுத்திருக்கார். திடீர்னு முழிச்சு ‘எம் பொண்டாட்டியக் காண லையே’னு பதறித் திட்டுறார். கொஞ்ச தூரம் தள்ளித்தான் அவர் பொண்டாட்டி இருட்டுக் குள்ள உட்கார்ந்திருக்கு. பார்த்துட்டு, ‘தெரி யாமத் திட்டிட்டேன்டி’ன்னு புலம்பறார். ‘போய்யா! நீதான் சாப்பிடாம படுத் துட்ட’ன்னு கோவிக்குது அந்தக் கிழவி. அப்புறம் ரெண்டு பேரும் துணி மூட்டையைப் பிரிச்சு, சாப்பிட்டுட்டுப் படுத்துட்டாங்க. பார்க்கும்போதே மனசு மழை விழுந்த மாதிரி பூத்துப் போச்சு. நினைச்சுப் பார்த்தா, அதே மனசு பெரிய துயரமா கனக்குது. அடுத்த ஜென்மத்துல அந்தக் கிழவனா பிறக்கணும்னு மனசு ஏங்குது.

இன்னொரு நாள் சிக்னல்ல, கார்ல காத்திட்டிருக்கும்போது ஏழு வயசுக் குழந்தை இந்தியில பேசி சட்டையப் புடிச்சு இழுத்தது. ஏதோ நெனப்புல சட்டுனு குழந்தை கையைத் தட்டிட்டு வந்திட் டேன். ஏன்னு தெரி யலை... திரும்பத் திரும்ப அந்தக் குழந்தை முகமே ஞாபகத்துல வந்துட் டிருந்தது. மறுபடி காரெடுத்துப் போய்த் தேடினேன். அந்தக் குழந்தை யைக் காணோம். உடனே என் மகன் ரிஷிக்கு போன் பண்ணி, ‘உன்னைப் பாக்கணும் போல இருக்குடா. நாளைக்கு வர்றியா?’னு கேட்டு, வரச் சொல்றேன்.

p79a.jpgஇப்படித்தான் நான் இருக்கேன். எல்லாருக்குள்ளேயும் என்னைத் தேடுறேன். தனிமையில் மத்தவங்களைத் தேடுறேன். நடந்ததெல்லாம் கனவு மாதிரி இருக்கு. நினைவு மட்டும் நிஜம் போல நிக்குது. தனிமை சிலரை கெட்டவங்களா மாத்திடும். ஆனா, என்னை அழகா செதுக்கி வெச்சிருக்கு. துக்கத்தைத் தூக்கி உதற பழகிட்டேன். என் உலகத்தைச் சந்தோஷமா மாத்திக்கிற வித்தையைக் கத்துக்கிட்டேன். என் அப்பாவையும் அம்மாவையும் நினைச்சு பொசுக்குனு கண்ணீர் உடையுது. எவ்ளோ வருஷம் என்னை மாதிரி ஒரு ஆளை நெஞ்சில் சுமந்திருக் காங்க. இப்ப அவங்க கூடவே இருக் கேன். அப்புறம் என் பையன் ரிஷி. எப்பவும் எனக்கு அவன் ஞாபகம் தான். என் உலகத்தை அற்புதமாக்கு றான் ரிஷி. அப்புறம், இருக்கவே இருக் கார் என்னை அன்பால் ஆசீர்வதிச் சுட்டே வருகிற சாய்பாபா.’’

‘‘ஆமா... ஒரு மியூஸிக் ஆல்பம் பண்றீங்கள்ல..?’’

‘‘இசை எப்பவும் என்னை புதுசாக் கிட்டே இருக்கு. ‘காரணம் இன்றிக் கண்ணீர் வரும், உன் கருணை விழிகள் கண்டால்..’னு ரமண மாலை பாட்டைக் கேட்டால் இப்பவும் அழுகை வருது. உலகத்தின் மேல் அளவில்லாக் காதல் வருது. உலகத்தின் மீதான என் அன்பை வெளிப் படுத்துற மாதிரி நானே பாட்டெழுதி இசை அமைச்சு, ஆல்பம் ரெடி பண்ணிட்டு இருக்கேன். அப்புறம் ஒரு புத்தகம் எழுதிட்டு இருக்கேன். நான் உணர்ந்த விஷயங்களை, அனுபவிச்சு சொல்லிட்டுப் போகிற முயற்சி அது. சீக்கிரம் அதுவும் வெளிவரும்!’’ என்கிற ரகுவரன் கை குலுக்கிப் புன்னகைத்துச் சொல்கிறார்...

‘‘பார்த்து பத்திரமா போங்க!’’

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

535213_562710857224077_65594494713539708

இந்தியா பாகிஸ்தான் எல்லையை பிரிப்பதைப் பற்றி சிறிய கலந்துரையாடல் Boom Boom & virat

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைவர் அப்ரிடியினால் நான் 3 மாத கர்ப்பமாக உள்ளேன் - பாகிஸ்தான் பிரபல மாடல் அர்ஷி கான் பகிரங்க பேட்டி . அதிர்ச்சியில் அப்ரிடி ....
OMG ! Model Arshi Khan claims that she is three months pregnant of Afridi’s child ..

  • தொடங்கியவர்

வலைபாயுதே V 2.0

 

facebook.com/mani.pmp.5:

சலூன் கடைக்கு ஸ்மார்ட் போன் எடுத்துச் செல்லாததே ஆகச் சிறந்த கையறுநிலை.

Whatsapp:

ஆணின் உண்மையான முகம் தண்ணி அடிக்கும் போதும், பெண்ணின் உண்மையான முகம் தண்ணி பிடிக்கும் போதும் தெரியும்.

Whatsapp:

ஹெல்மெட்டுக்கும் மனைவிக்கும் பெரிய வித்தியாசம் இல்லைங்க! எப்போதும் தலையிலேயே தூக்கி வெச்சிருந்தீங்கன்னா, கண்டிப்பா நல்லா பொழைச்சுக்குவீங்க!

p104a.jpg

facebook.com/venkatesh.arumugam1:

ஃபேஸ்புக் கலாசாரத்துக்குப் பின் எதிர்கால ஊர்களின் பெயர்கள்...

இன்பாக்ஸ்பட்டி, சாட்டிங்பாளையம்
ஷேரானூர், கமென்ட்வாக்கம்
லைக்காம்பதி, டைம்லைன்பாக்கம்
ஸ்டேட்டஸ்புரம், ஃபேக் ஐடீஸ் காலனி
போக் அவென்யூ, ரிக்வெஸ்ட் நகர்
ஸ்கிரீன்ஷாட் லேஅவுட், ஃபேஸ்புக் மங்கலம்
நெட்பேக்மலை, அன்ஃப்ரெண்ட் பேட்டை
மெசெஞ்சர்புரி, லாக்அவுட்கோவில்
ஆப்ஸ்கிரி, ROFLகோட்டை
போஸ்ட்டூரணி, லாக்இன்குடி
செக் - இன்பாறை, குரூப்ஸ்ராபள்ளி
மியூச்சுவல்பட்டினம், லிங்க்சேரி.

twitter.com/MrElani: எப்பப் பாரு கிரிக்கெட் பத்தியே பேசுற, எப்பப் பாரு பாலிட்டிக்ஸ் பத்தியே பேசுற, எப்பப் பாரு சினிமா பத்தியே பேசுற... - வேற என்னதான்டா பேசச் சொல்றீங்க?

twitter.com/stalinsk50: `சட்டப்படி சந்திப்பேன்' என்பது, பணத்தின் மீது உள்ள நம்பிக்கைதான்.

twitter.com/navi_n: நாம் கழுவி வைத்த பாத்திரத்தை மறுபடியும் கழுவிவிட்டு உபயோகிப்பது எல்லாம், மனைவி போகிறபோக்கில் செய்யும் அவமானம்.

p104d.jpg

twitter.com/paidkiller: என்னை நானே கதறக்கதற அடிச்சு, மிதிச்சு, தரதரனு இழுத்துட்டுப்போறேன்... ஆபீஸுக்கு!

twitter.com/ItzDs: உயரம் போகப் போக, பள்ளத்தின் மீதான பயம் அதிகரிக்கும்.

twitter.com/urs_priya:  வெளியே சொல்ல முடியாத ரகசியம் ஒருவரிடம் உள்ளது எனில்... அது தன்னைப் பற்றியதாகத்தான் இருக்கும்.

twitter.com/settaikaaran: சமஸ்கிருதம் கட்டாயப் பாடம். அனைவரும் அர்ச்சகராக எதிர்ப்பு. என்னங்கடா உங்க லாஜிக்?

p104b.jpg

twitter.com/udaya_Jisnu: நாம கெத்தா நடக்கும்போது எல்லாம் நம்ம மனசுக்குள்ள `பில்லா’ தீம் மியூஸிக் கேக்கும். ஆனா, பார்க்கிறவனுக்கு `கரகாட்டக்காரன்’ மியூஸிக்தான் கேக்கும்.

twitter.com/Shiva__27: சாப்பிடும்போது `கடைசியில ரசம் ஊத்திக்கணும்’னு சொல்றது, தட்டை ஈஸியாக் கழுவுறதுக்காக ஏதோ ஒரு பொண்ணுதான் கண்டுபிடிச் சிருக்கணும்.

twitter.com/mekalapugazh:  சிவராத்திரிக்கு விடுமுறை அறிவிப்பது என்றால்... அடுத்த நாள்தானே விடணும்!

twitter.com/arattaigirl:  மூடநம்பிக்கைனு தெரிஞ்சாலும் யாராவது நமக்கு `கண்ணுபட்டுடும்'னு சொல்றப்ப குஷியா இருக்கு.

twitter.com/thoatta: எம்.எல்.ஏ-க்களை வெச்சிருந்தாத்தானே ஆளும் கட்சிக்காரங்க இழுப்பாங்க. அதான் எம்.எல்.ஏ-க்களே வேணாம்னு கேப்டன் தனித்துப் போட்டியிடுறாரு. # கேப்டன்டா!

twitter.com/kalasal: ரோடு கிராஸ் பண்றப்ப மூஞ்சியை எதிர்ப்பக்கமாத் திருப்பிக்கிட்டா வேகமா வர்ற வண்டி படக்குனு நின்னுடும்னு பெண்கள் நிஜமாவே நம்பிட்டு இருக்காங்கபோல.

p104c.jpg

twitter.com/VignaSuresh: ``இப்ப நீ சாப்பிடலைனா, அடி வாங்குவ’’ என்று குழந்தையை மிரட்டினால், சற்று நேரம், எந்தத் தண்டனை பெட்டர் என யோசிக்கிறது.

twitter.com/kkarthic: ஒவ்வொரு எடுக்கப்படாத போன்கால் பின்னும் எண்ணற்றக் கற்பனைகள் ஒளிந்திருக்கின்றன.

 twitter.com/Im_kaan_:  சொந்த தாய்மாமன் குடும்பம் நம்ம வீட்ல இருக்கும்போது, மத்தவங்ககிட்ட `கெஸ்ட் வந்திருக்காங்க’னு சொல்ற அளவுக்கு நம்ம சமூகம் வளர்ந்து நிக்குது.

facebook.com/ashok.george.9:

`அம்மா’ பேனர்களால் மறைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு இப்போது தெரிய ஆரம்பித்திருப்பதால், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என அவதானிக்கிறேன்.

p104e.jpg

facebook.com/ashok.george.9

எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு என்பதைத்தான் `அவருக்குக் கோபம் எல்லாம் வராது’ எனச் சொல்றாங்க!

facebook.com/Suba Barathi:

என்னமோ `Decision making... Decision making'னு பெருமையாப் பேசுறீங்களே!

எங்கே, ஒரே ஒரு வாரத்துக்கு நைட் டிபன் என்ன பண்ணலாம்னு decide பண்ணிருங்க. பார்க்கலாம்!

vikatan

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் வீரருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் கோலி!

 
 

விராட் கோலியை அனைவருக்கும் ஆக்ரோஷமான கேப்டன், எதிரணியினரை வம்புக்கு இழுத்து ஸ்லெட்ஜிங் செய்யும் வீரர் என்றுதான் தெரியும். ஆனால் மைதானத்துக்கு வெளியே அவர் கேப்டன் கூலை விட கூலானவர் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 83 ரன்களுக்கு சுருட்டினாலும்,  முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இந்தியா இழந்து தவித்தது.

அப்போது, கோலி ஒற்றை ஆளாக வெற்றிக்கு அழைத்து சென்றார். அந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்,  கோலி உட்பட அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களையும் கதறவிட்டார்.

vkafridifb-story_647_031816113933.jpg

ஆட்டநாயகன் விருது பெற்ற கோலி, ஆமீரின் பந்துவீச்சை பாராட்டினார். உலகக் கோப்பை போட்டியின் போது இந்தியா வரும் ஆமிருக்கு தனது பேட்டில் ஒன்றை பரிசளிப்பதாக கூறியிருந்தார். அதனை மறக்காமல் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டனில் பயிற்சியில் ஈடுபட்ட போது, ஆமிர் மற்றும் அப்ரிடி ஆகியோருடன் பேசிய கோலி, ஆமிருக்கு தனது பேட்டை பரிசாக அளித்தார். ஆமிரும் பதிலுக்கு நன்றி கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையே நடப்பது போட்டி அல்ல போர் என்றாலும், வீரர்களின் நட்பு போட்டியின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தியுள்ளது. என்னதான் போட்டிக்கு முன் கூலாக இருந்தாலும் மைதானத்தில் ஆமிரின் பவுன்ஸருக்கு கோலியும், கோலியின் ஷாட்டுக்கு ஆமிரும் பணிந்தே ஆக வேண்டும் என்பதுதான் எழுதப்படாத விதி.

vikatan

  • தொடங்கியவர்

12794852_1005553746159986_55076017963509

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழல்பந்து வீச்சாளரும், உலகின் மிகச்சிறந்த சுழல்பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்குபவருமான ரங்கன ஹேரத்தின் பிறந்தநாள்.
Happy Birthday Rangana Herath

  • தொடங்கியவர்

பாரீஸை சேர்ந்த 'Wezzoo' என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் பருவநிலை முன்கூட்டியே அறிய உதவும் 'Oombrella' எனப்படும் குடையைக் கண்டுபிடித்துள்ளது. ஸ்மார்ட் போனுடன் இணைக்கப்பட்டுள்ள இந்தக்குடை மழை பெய்வதற்கு 15 நிமிடங்கள் முன்னாடியே நம்மை அலர்ட் செய்கிறது.

 

  • தொடங்கியவர்

11094927_1005576796157681_41336135513471

இங்கிலாந்திலே பிறந்தாலும் இலங்கையர் என்ற பெருமையோடு இலங்கையிலே வாழ்ந்து, மறைந்த பிரபல விஞ்ஞான புனைகதை எழுத்தாளரும், ஆராய்ச்சியாளரும், கண்டுபிடிப்பாளருமான சேர்.
ஆர்தர் சி. கிளார்க் அவர்களின் நினைவு தினம்..

  • தொடங்கியவர்

பிகினியில் நடிக்க நயன்தாரா கேட்ட தொகை இவ்வளவா

Nayantara+New+Stills+in+Arrambam+_9_.JPG

சிரஞ்சீவியின் 150வது படம் எப்போது எனக் காத்துக்கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அதிகரப்பூர்வ தகவல் வந்துவிட்டது. வி.வி.வினாயக் இயக்க உள்ள இப்படத்தை ராம் சரண் லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

இப்படத்தின் நாயகி யார் என்ற கேள்வி அடுத்து பரவ, தமன்னா உட்பட பல ஹீரோயின்களின் பரிசீலனைக்குப் பிறகு நயன்தாரா தேர்வாகியுள்ளார். ஆனால் நயன்தாரா அப்படத்தில் நடிக்கக் கேட்ட தொகை 3 கோடியாம்.

  • தொடங்கியவர்

12719488_1005582729490421_90464344276925

 
 
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் ஆஷ்லி ஜைல்சின் பிறந்தநாள்.
Happy Birthday Ashley Giles
  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

1936014_1092423414149781_145733736534703

 
 
உறுதி மொழி!
உலகம் போற்றும் உன்னதத் தலைவர் விவேகானந்தர் அளித்த உத்வேக வரிகள்; ஒவ்வொன்றும் வாழ்வில் பின்பற்ற வேண்டிய வெற்றிக்கான படிக்கட்டுகள்!
  • தொடங்கியவர்

நகரும் கற்கள்!

p68c.jpg

உயிரற்ற கற்கள் தானாக நகர்கின்றன என்றால், ஆச்சர்யம்தான். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், ‘மரணப் பள்ளத்தாக்கு’ எனப்படும் இடத்தில் காணப்படும் கற்கள், ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு நகர்கின்றன. ஒரு வருடத்தில், 860 அடி தூரம் பயணிக்கும் கற்களும் உண்டு. இந்தக் கற்கள் எப்படி நகர்கின்றன என்ற ஆராய்ச்சிக்கு, இன்று வரை முழுமையான விடை கிடைக்கவில்லை. இந்தக் கற்களைக் காணவரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகின்றன.

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.